PDA

View Full Version : மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 [16]

vasudevan31355
11th September 2015, 03:20 PM
அப்புறம் முக்கியமான ஒண்ணு..

பாட் போட்டதுக்கு தாங்க்ஸ்.. :)

இந்த வேண்டும் வேண்டும் ஏன் நீர் அனலைஸ் பண்ணலை இன்னும்..நீர் செந்தில்வேலைக் கேட்ட நினைவு.. சரியா..அதுவும் அழகான பாடல்.. ந.தி..ஸ்ரீப்ரியா..

ஏன் எடுத்துட்டீங்க. மாட்டுனீரா. நாங்கல்லாம் யாரு?:)

vasudevan31355
11th September 2015, 03:21 PM
//ஆமாம் இந்த சுபாஷிணி என்ன ஆனார்..பேசியாச்சா?//

பேசுவோம் பேசுவோம் சின்னா! :)

vasudevan31355
11th September 2015, 03:25 PM
பேசறதுக்கு முன்னாடி இதைப் பார்த்து ரசிச்சுகிட்டு இருங்க.:)

http://i.ytimg.com/vi/WnM3lCqwwQ4/maxresdefault.jpg

chinnakkannan
11th September 2015, 03:41 PM
ஏன் எடுத்துட்டீங்க. மாட்டுனீரா. நாங்கல்லாம் யாரு// புரியலையே..நிஜமாவே வேறஎதுவும் நான் எழுதலையே..

ஹச்சோவ்...இந்த பழைய பக்கெட்லாம்மாத்துங்கன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்..ஜெ.சு தங் தானே சுபாஷிணி

vasudevan31355
11th September 2015, 03:44 PM
நான் போட்டிருக்கும் குழந்தை உள்ளத்தில் வாணிஸ்ரீயுடன் பாடியிருப்பது யாருங்கோ ?




நல்ல வேளை. என்ன அண்ணா இப்படி ஒரு கேள்வி கேட்டுபூட்டாரே என்று 'அது சௌகார் ஜானகி' என்று பதில் சொல்லி விடலாமா என்று யோசித்தேன். இருந்தாலும் ஏற்கனவே அனுபவம் இருந்ததாலே:) இன்னொரு தபா உங்க பதிவை நிறுத்தி படிச்சதும்தான் சின்னாவை 'பாடியிருப்பது யாருங்கோ? என்று நீங்கள் ரவுசு பண்ணியிருப்பது புரிஞ்சிட்டுது. நிறுத்திபுட்டேன்.:) வாழ்க தமிழ்.:) நீடூடி வாழ்க எங்கள் மதுண்ணா!

vasudevan31355
11th September 2015, 03:45 PM
//ஜெ.சு தங் தானே சுபாஷிணி//

ஹக்காங்.

vasudevan31355
11th September 2015, 03:48 PM
//ஹச்சோவ்...இந்த பழைய பக்கெட்லாம்மாத்துங்கன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்//

http://i.ytimg.com/vi/RV5mvjfbu68/maxresdefault.jpg:)

chinnakkannan
11th September 2015, 03:51 PM
ஐயன்மீர் வாசு.. தாங்கள் ஃபுல் ஃபார்மில் இருப்பதாகப் படுகிறது..அடியேனுடைய இன்னொரு குறையைத் தீர்த்து வைப்பீர்களா..கிருஷ்ணாஜி என்று ஒரு நல்ல ரசிகர் - உங்களுடைய கோ-பக்கெட் எனச் சொல்லலாம் - :) தேடித்திரிந்து தகவல்கள் தருவதில் வல்லுனர் .. அவர் நலமாக இருக்கிறாரா..அவரை வரவழையுங்களேன்..

chinnakkannan
11th September 2015, 03:52 PM
சுபாஷிணீ தமிழில் நடித்த படங்கள் ஒண்ணு அ.உ.ஆ இரண்டு ஜானி..மூணு நாலு ஏதாவது இருக்கா..


புதிய பக்கெட்ற்கு தாங்க்ஸ்.. :)

vasudevan31355
11th September 2015, 03:54 PM
சின்னா

கூலா சுபாஷினி பாட்டு ஒன்னு பாருங்க. நம்ம மைக் மோகன் சுபாஷியோடு 'ஓ செலி' பாடுவார் பாடுவார். வித்தியாசமான ஜோடி


https://youtu.be/etSRTrPJIvo

vasudevan31355
11th September 2015, 03:59 PM
ஐயன்மீர் வாசு.. தாங்கள் ஃபுல் ஃபார்மில் இருப்பதாகப் படுகிறது..அடியேனுடைய இன்னொரு குறையைத் தீர்த்து வைப்பீர்களா..கிருஷ்ணாஜி என்று ஒரு நல்ல ரசிகர் - உங்களுடைய கோ-பக்கெட் எனச் சொல்லலாம் - :) தேடித்திரிந்து தகவல்கள் தருவதில் வல்லுனர் .. அவர் நலமாக இருக்கிறாரா..அவரை வரவழையுங்களேன்..

நல்லா இருக்கார். நல்லா இருக்கார். பேசிக்கிட்டுதான் இருக்கேன். எனக்கு துணை பக்கெட் இருந்தா உங்களைவிட எனக்குதானே ரொம்ப நல்லது? எனக்கு கொஞ்சம் சுமை குறையுமே! நிறைய தடவை வரச் சொல்லி கேட்டேன். வரேன் என்கிறார். அதற்குள் ஏதாவது பர்சனல் வேலை அவருக்கு வந்து விடுகிறது. என்ன பண்ணட்டும்? அடுத்த பாகத்தில் கண்டிப்பாக இழுத்துட்டு வந்துடறேன்.

பதிலுக்கு ஒன்னு பண்ணுங்க.

ஹி ஹி ன்னு சிரிச்சிட்டுப் போயிடற ஜியை இன்னைக்கு கொஞ்சம் உங்க சார்பா கவனிங்க.:) வணக்கம் மட்டும் போட்டுட்டு போயிடறார்.:)

vasudevan31355
11th September 2015, 04:01 PM
//ஐயன்மீர் வாசு.. தாங்கள் ஃபுல் ஃபார்மில் இருப்பதாகப் படுகிறது//

புரியல. ஆனால் புரியுது ஐயா:)

chinnakkannan
11th September 2015, 04:04 PM
//சின்னா

கூலா சுபாஷினி பாட்டு ஒன்னு பாருங்க. நம்ம மைக் மோகன் சுபாஷியோடு 'ஓ செலி' பாடுவார் பாடுவார். வித்தியாசமான ஜோடி // வித்தியாசமான ஜோடி மட்டுமில்லை.. நல்ல மெலடி பாட். இந்தத் தெலுகிலேயே மெலடிஸ் நன்னாயிட்டு இருக்கும்..புரியத்தான் புரியாது..அப்பப்ப ஒரு அனுராகமேவி ந்னு ஒண்ணு வந்துடும்..தாங்க்ஸ்ங்க..

முதல் சீன் வெள்ளை டிரஸ்ல கொஞ்சம் தேவலோக இந்திரனோட ஐராவதம் நினைவுக்குவந்தது..ஐராவதம்..இந்த்ராஸ் வொய்ட் எலிஃபெண்ட்டாக்கும் :) க்ளோஸப்ஸ் பயம்மா இருக்கு..:)

chinnakkannan
11th September 2015, 04:06 PM
ஹி ஹி ன்னு சிரிச்சிட்டுப் போயிடற ஜியை இன்னைக்கு கொஞ்சம் உங்க சார்பா கவனிங்க// நீங்க மதுண்ணா ஒரு போஸ்டில் சொன்னதை கவனிக்கலைன்னு நினைக்கறேன்..அவரும் செப்டம்பர் மாதம் என்னை மாதிரி வாழ்வில் துன்பத்தை தொலைத்தவர் :) சொல்லிட்டீங்கள்ள இந்த சிஷ்யப் புள்ள எதுக்கு இருக்கேன்..இட்டாந்துடலாம்.. :)

vasudevan31355
11th September 2015, 04:06 PM
சுபாஷிணீ தமிழில் நடித்த படங்கள் ஒண்ணு அ.உ.ஆ இரண்டு ஜானி..மூணு நாலு ஏதாவது இருக்கா..




'கரும்பு வில்' இருக்கே சின்னா! மறந்துட்டீரா? இன்னொரு 'ஆசையைக் காத்துல தூது விட்டு' மாதிரி 'மீன்கொடி தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான்'


https://youtu.be/QIZnYfA6crA

vasudevan31355
11th September 2015, 04:11 PM
அவரும் செப்டம்பர் மாதம் என்னை மாதிரி வாழ்வில் துன்பத்தை தொலைத்தவர் :)

அதெல்லாம் கவனிச்சேன். அது கிடக்கட்டும்.

ஏனய்யா! மாசம் முழுசுமா கொண்டாடுவீர்?:):) நீர் தான் அப்படி என்றால் அவருமா? நாராயணா! நாராயணா! கொடுத்து வச்ச மகராசனுங்க.:) ம்.:sad:

chinnakkannan
11th September 2015, 04:11 PM
ஓஹ்.. எப்படி மறந்தேன்.. எனக்குப் பிடித்த பாடல்களில் ஒன்று..அடிக்கடி ரேடியோ சிலோனில் போட்டுப் போட்டு டேப் எல்லாம் தேய்ந்துபோயிருக்கும்..( இந்தப் படம்பார்த்ததில்லை..ஆனால் சிலோன் ரேடியோல படிப்பினை ஊட்டும் குடும்பச் சித்திரம் எனக் கேட்டதாக நினைவு..)

தாங்க்ஸ் அகெய்ன் என்று சொல்லவும் வேண்டுமோ :)

பாடல்ல ஹீரோயின் ஸோ ஸோவா இருப்பார் பாடல் சூப்பராக இருக்கும் அப்படி ஒரு பாட்டு என் நினைவுக்கு வருகிறது..

மாந்தளிரே மயக்கமென்ன உன்னை பூந்தென்றல் தீண்டியதோ..


ரெண்டாவது எல்லாரும் அறிந்த ஒன்று..

தமிழ் ச் சங்கத்தில் பாடாத கவிதை அங்கத்தில் யார் தந்தது ( காட்சியும்கொஞ்சம் பல்லிளிக்கும் இல்லியோ)

vasudevan31355
11th September 2015, 04:12 PM
அப்புறம் சுபாஷினி பத்தி இன்னொரு ரகசியம் அப்புறமா சொல்றேன். ஆடிப் போயிடுவீர் ஆடி.:)

chinnakkannan
11th September 2015, 04:14 PM
ஏனய்யா! மாசம் முழுசுமா கொண்டாடுவீர்? நீர் தான் அப்படி என்றால் அவருமா? நாராயணா! நாராயணா! கொடுத்து வச்ச மகராசனுங்க// அப்படில்லாம் இல்லீங்காணும்..ச்சும்மா வருஷத்துல ஒரு நாள் நெனச்சுக்கப்படாதா (வூட்ல சொல்லிடாதீரும்) உமக்கு எந்த மாதம்?

chinnakkannan
11th September 2015, 04:15 PM
அப்புறம் சுபாஷினி பத்தி இன்னொரு ரகசியம் அப்புறமா சொல்றேன். ஆடிப் போயிடுவீர் ஆடி.:)

ஓய் ஆடி போய் ஆவணி ல்லாம் வந்தாச்.. தைர்யமா மனசைத் திடப்படுத்திக்கறேன்..(அக்கம் பக்கம் யாருமே இல்லை.. கன்ஃபர்ம் பண்ணிக்கிட்டேன்) சொல்லுங்க..!

vasudevan31355
11th September 2015, 04:16 PM
தமிழ் ச் சங்கத்தில் பாடாத கவிதை அங்கத்தில் யார் தந்தது ( காட்சியும்கொஞ்சம் பல்லிளிக்கும் இல்லியோ)

அவ்வு..


https://youtu.be/eEQa7c4UAx4

vasudevan31355
11th September 2015, 04:17 PM
ஏனய்யா! மாசம் முழுசுமா கொண்டாடுவீர்? நீர் தான் அப்படி என்றால் அவருமா? நாராயணா! நாராயணா! கொடுத்து வச்ச மகராசனுங்க// அப்படில்லாம் இல்லீங்காணும்..ச்சும்மா வருஷத்துல ஒரு நாள் நெனச்சுக்கப்படாதா (வூட்ல சொல்லிடாதீரும்) உமக்கு எந்த மாதம்?

3. இங்க்லீஷு:)

vasudevan31355
11th September 2015, 04:19 PM
ஓய் ஆடி போய் ஆவணி ல்லாம் வந்தாச்.. தைர்யமா மனசைத் திடப்படுத்திக்கறேன்..(அக்கம் பக்கம் யாருமே இல்லை.. கன்ஃபர்ம் பண்ணிக்கிட்டேன்) சொல்லுங்க..!

அசுக்கு புசுக்கு

chinnakkannan
11th September 2015, 04:19 PM
குட் அப்படியே தேதியும் பிஎம்ல சொல்லிப்புடும்..( அது நான் பொறந்த மாசம்னா..ஆனா நான் மன் த் எண்ட்) :)

vasudevan31355
11th September 2015, 04:21 PM
//ச்சும்மா வருஷத்துல ஒரு நாள் நெனச்சுக்கப்படாதா//

அது கூட நினச்சுக்கத்தான் வேணுமா?:) அடப் பாவமே! த்சொ.. த்சொ..த்சொ

chinnakkannan
11th September 2015, 04:23 PM
மாந்தளிரே மயக்கமென்னன்னு போட்டு சர்ச் பண்ணினா எம்.எம்.கே 1 பார்ட் பேஜ் 41 வருது..அதுலயும் நானே எழுதி இருக்கிறேன்! ஆனா பாட் போடலை..

தமிழ்ச்சங்கத்தில் பாட்கு நன்றி..எப்ப வேணும்னாலும் கேக்கலாம்..

தமிழ்ச்சங்கம் கொடுத்த தயா வாசுவே..உமக்கு மாந்தளிர்..

https://youtu.be/nVdlxzt_sik

vasudevan31355
11th September 2015, 04:24 PM
குட் அப்படியே தேதியும் பிஎம்ல சொல்லிப்புடும்..( அது நான் பொறந்த மாசம்னா..ஆனா நான் மன் த் எண்ட்) :)

லைப்பே எண்டுக்கு வந்த நாளைப் போய் கேட்கிறீரே!:) March 11

vasudevan31355
11th September 2015, 04:26 PM
பாட்டு போட்டீரே! நாயகி யாருன்னு சொல்லலியே? நைஸா நழுவிட்டீரே!

chinnakkannan
11th September 2015, 04:31 PM
லைப்பே எண்டுக்கு வந்த நாளைப் போய் கேட்கிறீரே!:) March 11

அப்படி எல்லாம் சொல்லப்படாது..(இதை அப்படியே கட் பேஸ்ட் எடுத்து கைல வச்சுக்கறேன்..சமயத்துல உபயோகப் படும் :) )

நாயகி தேடணுமே.. தேடிப் பாக்கேன்..இல்லைன்னா இருக்கவே இருக்கார் ஆபத்பாந்தவ மதுண்ணா..

vasudevan31355
11th September 2015, 04:37 PM
:) )

நாயகி தேடணுமே.. தேடிப் பாக்கேன்..இல்லைன்னா இருக்கவே இருக்கார் ஆபத்பாந்தவ மதுண்ணா..

ஓய்! அப்போ என் மேல நம்பிக்கை இல்லையா?:) உம்மைக் கேட்டா எனக்குத் தெரியலன்னு அர்த்தமா?:)

madhu
11th September 2015, 04:38 PM
மாந்தளிரே மயக்கமென்னன்னு பாடுவது லாவண்யா. இது வாசுஜிக்கு தெரியாதா என்ன ?

chinnakkannan
11th September 2015, 04:40 PM
அப்படிப் போடுங்க அரிவாளை மதுண்ணா :) தாங்க்ஸ்

வாசு,உங்களுக்குத் தெரியாதுன்னு நான் சொல்லவில்லையே..ஷமிக்கணும்..பய டேட்டா டைப்போ பயோடேட்டா ப்ளீஸ்..

vasudevan31355
11th September 2015, 04:48 PM
நண்பர்களே!

சரி! விஷயத்துக்கு வருகிறேன். 'மனதை மயக்கும் மதுர கானங்கள்' நான்காம் பாகம் முடிய இன்னும் 22 பக்கங்களே உள்ளன. அடுத்த பாகம் விரைவில் தொடங்கி விடும்.

எனவே 5 ஆம் பாகம் தொடங்க நமக்கெல்லாம் வழிகாட்டியாக விளங்கும், திரைப் பாடல்களைப் பற்றிய பல விவரங்களை, அரிய தகவல்களை, பாடல்களோடு அள்ளித் தரும் நம் எல்லோர்க்கும் சகோதரரான அருமை

மது அண்ணாவை

'மனதை மயக்கும் மதுர கானங்கள்'

பாகம் ஐந்தை தொடக்கி வைக்க முன்மொழிகிறேன்.

நண்பர்கள் அவரவர்கள் கருத்துக்களைக் கூறலாம்.

chinnakkannan
11th September 2015, 04:52 PM
வதுவை கொளப்போகும் வஞ்சியின் நெஞ்சாய்
மதுவும் மயக்குவார் வா



சதிராடும் தென்றலாய் தக்கபடி ஆடும்
மதுரங்கொள் பாட்டில் மது..


நான் வாசு அவர்களை வழி மொழிகிறேன்.. ( மதுண்ணா ஒத்துக் கொள்ள வேண்டுமே)

vasudevan31355
11th September 2015, 05:01 PM
வதுவை கொளப்போகும் வஞ்சியின் நெஞ்சாய்
மதுவும் மயக்குவார் வா



சதிராடும் தென்றலாய் தக்கபடி ஆடும்
மதுரங்கொள் பாட்டில் மது..


நான் வாசு அவர்களை வழி மொழிகிறேன்.. ( மதுண்ணா ஒத்துக் கொள்ள வேண்டுமே)

கண்டிப்பாக ஒத்துக் கொள்வார் சின்னா!.

madhu
11th September 2015, 05:02 PM
அட வாசுதேவா...ஜீஈ....

நான் அடுத்த வாரம் முதல் ஒரு டிரீட்மெண்ட் எடுத்துக் கொள்ளப் போகிறேன் என்பதாலும், என் நண்பர் ஒருவர் ஊரிலிருந்து வரப்போவதாலும் ஒரு மாதம் வரை ஒழுங்கா வர மாட்டேன் என்று போஸ்ட் செய்யணும் என்று இப்போதான் நினைத்தேன்.

எல்லோரும் மன்னித்து விடுங்க... இந்த நிலைமையில் என்னால் சமாளிக்க முடியாது... தல இருக்க விரல் ஆடலாமா ? இங்கே நான் ஒரு அணில் ( கும்ப்ளே அல்ல )... அப்பப்போ வந்து பதிகிறேனே... ப்ளீஸ்

madhu
11th September 2015, 05:05 PM
மதுரங்கொள் பாட்டில் மது..


எல்லோரும் மது விலக்கு வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் "பாட்டில்" என்றும் "மது" என்றும் எழுதுவது தவறல்லவா ?

Russellxor
11th September 2015, 05:11 PM
ராஜா யுவராஜா

ஆரம்ப இசையே படு உற்சாகத்தை தரும் இந்த பாடல்.பாடலுக்கு முன் துவங்கும் அந்த துள்ளளலான இசைபாடல் முடியும் வரை சரவெடி சரமாய் இருக்கும்.
நீச்சல் குளத்தில் நடந்து வரும் ஸ்டைல் ரசிகர்களுக்கு நல்ல விருந்து.வெறி பிடித்த ரசிகர்கூட்டத்திற்கு அந்த நடைக்காட்சி மேலும் ஆரவாரத்தை செய்ய வைப்பதாகவும்,
கைதட்டல் விசில் மூலம் ரசிக்கும் கூட்டத்திற்கு மேலும் கை வலிக்கும் அளவுக்கு கை தட்டும் உணர்ச்சிகளை தூண்டுவதாகவும்,
அமைதியாக ரசிக்கும் ரசிக்கும் ரசிகர்கூட்டத்தையே "சபாஷ்"என்று வாய்விட்டு சொல்லவைக்கும் .
திடீரென்று புதருக்குள் இருந்து ஒரு புலி வெளிவந்து நடந்தால் எப்படி இருக்கும்?இரை தேடி அலையும் பசித்த புலியின் நடையல்ல.இரை முடித்த ஒரு புலி எதையும் சட்டை செய்யாது.அதற்கு எதுவும் ஒரு பொருட்டல்ல.அது போல எதையும் பொருட்படுத்தாதது போன்றும்,எதைப்பற்றியும் கவலைப்படாத உணர்ச்சிகளை வெளிப்படுத்ததுவதாகவும் அதே சமயம் கம்பீரமாயும் அமைந்திருக்கும் அந்த நடை ரசிகர்களாலால் எப்போதும் ஆரவாரமாய் கொண்டாடப்படும்.
எதிரில் வரும் பெண்ணை பார்வையால் அளக்கும் பாவனை ஜோர்.உடம்மை மெதுவாக சாய்த்துமோகனப்புன்னகை செய்து கடந்து செல்லும் அந்த ஷாட் பாடலைத்தூக்கி செல்லும் ஆரம்ப முத்திரை.
ராஜா யுவராஜா என்று இழுப்பதில் ஆரம்பித்துநாள்தோறும் என்பதில் 'ம்ம்ம்ம் 'ஐ தொண்டையில் இருந்து நெஞ்சு வரை காற்றை அடைத்து சப்தமாய் வெளிவிடும் அழகே அழகு.
உதட்டைச் சுழித்து கண்ணை சிமிட்டி ரோஜாவை முடிப்பது செயலும் பாடலும் அட்சரம் பிசகாதஅழகு.
நித்தம்ஒரு புத்தம் எனும் போது மெல்ல துள்ளி ஆடும் அந்த சிறப்பு அவரிடம் மட்டுமே காண முடியும் மேனரிசம்.


அடிக்கடி வலதுகண் துடிக்குது எனத் தொடங்கும் வரிகளின் போது பின்னோக்கி ஆடிக்கொண்டே செல்வது போன்று படம்பிடித்திருப்பது புதுமை.அருமையான டான்ஸ் மூவ்மென்ட் .பாட்டின் ஹைலைட் டான்ஸ் ஸ்டைல்.


புளு கலர்சபாரி
கடற்கரை
கூலிங்கிளாஸ்
காம்பினேசன் அருமை.
பாடல் முழுவதும் ஸ்டைல்களாக தூள் பரத்திக்கொண்டு வருபவர் இந்தக் காம்பினேசன் கிடைத்தால் விடுவாரா என்ன?நடந்து வந்து நின்று சிகரெட்டை தூக்கி எறியும்
ஸ்டைல்அட்டகாசம்.

நடிப்பிலே எவரையும் மயக்குவேன்.
கூறவே தேவையில்லை.மேலே தூக்கி விரல்களைசொடக்கும்அந்தக் கையசைவு அசத்தலான அழகு ஸ்டைல்.நடிப்பில் மட்டுமல்ல ஸ்டைல்களிலும் தனிக்காட்டு ராஜா இந்த ராஜா யுவராஜா.

வான் வெடிகள் வானில் வெடித்து ஒளிச்சிதறல்களாய் பிரிவதைப்போல
நடிகர்திலகத்தின் ஸ்டைல்கள் சிதறல்களாய் பாடல் முழுவதும் வெளிப்பட்டிருக்கும்.

ராஜா யுவராஜா நாள்தோறும் ஒரு ரோஜா
ராஜா யுவராஜா நாள்தோறும் ஒரு ரோஜா

சரோஜா ரீட்டா கங்கா ரேகா
சரோஜா ரீட்டா கங்கா ரேகா பாமா

ராஜா யுவராஜா நாள்தோறும் ஒரு ரோஜா

நித்தம் ஒரு புத்தம் புது நெஞ்சில் உறவாடும் பழக்கம் எனதல்லவா
நேரம் ஒரு ராகம் சுகபாவம் அதில் நாளும் மிதக்கும் மனதல்லவா

தினம் ஒரு திருமணம் நடக்கலாம் சுகம் அதில் உலகினை மறக்கலாம்
என் தேவை பெண் பாவை கண் ஜாடை
ராஜா யுவராஜா நாள்தோறும் ஒரு ரோஜா

தங்கம் அது தங்கும் உடல் எங்கும் அதை கண்டால் கடத்தும் நினைவு வரும்
தஞ்சம் இளநெஞ்சம் ஒரு மஞ்சம் அது தந்தால் எதிரில் சொர்க்கம் வரும்

அடிக்கடி வலதுகண் துடிக்குது புது புது வரவுகள் இருக்குது
எந்நாளும் என் மோகம் உன் யோகம்

ராஜா யுவராஜா நாள்தோறும் ஒரு ரோஜா

ஒன்றா அது ரெண்டா அது சொன்னால் ஒரு கோடி ரசித்து சுவைத்தவன் நான்
உன்போல் ஒரு பெண்பால் விழி முன்னால் வரக்கண்டால் மயக்கிப்பிடிப்பவன் நான்

நடிப்பிலே எவரையும் மயக்குவேன் அணைப்பிலே கலைகளை விளக்குவேன்
என் ராசி பெண் ராசி நீ வா வா

ராஜா யுவராஜா நாள்தோறும் ஒரு ரோஜா

eehaiupehazij
11th September 2015, 06:11 PM
நானும் ரவுடிதான்.... நானும் ரவுடிதான்:) ச்சும்மா சின்னா! இதுக்கும் கோவிச்சுக்காதேயும்.:) ஜாலி:)

Ravi Jee!

Come and Join our Kalaai Club for married bachelors!!
If you dont come back you lose so many jolly rides of life!!

Come Ravi! enjoy our times....hermits are not permitted!!

senthil

eehaiupehazij
11th September 2015, 06:14 PM
I second and third MADHUJI as proposed by our search engine VasuVasu! Hope our forthcoming threads would also be eco friendly jolly rides without ego clashes !!
senthil

vasudevan31355
11th September 2015, 06:32 PM
மதுண்ணா!

நீங்கள் நலமுடன் இருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். நீங்கள் தாரளமாக டிரீட்மெண்ட் எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்த வாரம்தானே! அதற்குள் பாகம் தொடங்கி விடும். நீங்கள் தொடங்கி வைத்து விட்டு செல்லுங்கள். பின் சிகிச்சை நல்லபடியாக முடிந்து வந்து தொடரலாம். நீங்கள்தான் அடுத்த ஐந்தாம் பாகத்தை தொடங்க வேண்டும் என்பது ஏற்கனவே பிக்ஸ் செய்யப்பட்ட ஒன்று. அதில் மாறுதல் வேண்டாம். இது ஒட்டுமொத்த மதுரகான நண்பர்களின் வேண்டுகோள். தயை கூர்ந்து சம்மதித்து எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தவும். வேறு எதுவும் சொல்ல வேண்டாம். ப்ளீஸ்.

eehaiupehazij
11th September 2015, 06:37 PM
The sound of MUSIC is a CATALYST!
கருவிலிருக்கும் குழந்தைக்கும் இசையின் நாதம் ஒரு கிரியா ஊக்கியே !!


இசை கேட்டால் புவி அசைந்தாடும்... இசை என்னும் இன்ப வெள்ளத்தில் நீந்த ஓடோடி வந்தேன்... இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை ......

நல்ல இசையின்பத்தை அனுபவிக்கும் குழந்தைகள் சீரான மனப் பக்குவம் பெறுவர் !
இனிய இசைப் பரவல் பயிர்களின் விளைச்சலைப் பெருக்கும் பசுக்களின் பாலையும் பெருக்கும் !
இப்படியெல்லாம் ஒரு கிரியா ஊக்கியான இசையைக் கருவிலேயே குழந்தை கேட்டால்தான் அது ஜனன உருவிலே மாசுமருவின்றி உதிக்கும் என்பதை உணர்ந்ததாலேயே கர்ப்பிணிப் பெண்டிருக்கு சீமந்தம்/வளைகாப்பு என்ற சடங்கை நமது முன்னோர் நடைமுறைப் படுத்தினர்!!

வளையோசை குலுங்கும் போது கருக்குழந்தையின் செவிகூராகிறது... பாடல்களையும் இசையையும் செவி மடுக்கும் போது மூளை சீராகி மனமும் நேராகிறது!!

https://www.youtube.com/watch?v=jTri6dPZkWQ

https://www.youtube.com/watch?v=gCx-8SwvAe8

My quota limited to two videos only!! I am self disciplined!!!

ஆடுமடி தொட்டில் இன்னும் ஐந்து திங்கள் போனால்
[url]https://www.youtube.com/watch?v=hhRiJ_8AkJI

rajraj
11th September 2015, 08:04 PM
Senthil: Researchers in a leading university have concluded music and mathematics are related. Children who are learning music do well in mathematics. Learning music teaches them team work leadership and other skills. Unfortunately, parents in Tamilnadu don't give children to learn music ! :(

eehaiupehazij
11th September 2015, 08:29 PM
Mathemagicians or Mathemusicians?!:confused2:


Senthil: Researchers in a leading university have concluded music and mathematics are related. Children who are learning music do well in mathematics. Learning music teaches them team work leadership and other skills. Unfortunately, parents in Tamilnadu don't give children to learn music ! :(

music is a sort of orchestration of notes, I presume! It integrates all the differential fractions and synthesizes the energy levels towards the bull's eye! That's why music loving kids grow up well too both physically and mentally eventually culminating into mathemagicians!!:goodidea:
regards Raj sir,
senthil

chinnakkannan
11th September 2015, 08:40 PM
அட வாசுதேவா...ஜீஈ....

நான் அடுத்த வாரம் முதல் ஒரு டிரீட்மெண்ட் எடுத்துக் கொள்ளப் போகிறேன் என்பதாலும், என் நண்பர் ஒருவர் ஊரிலிருந்து வரப்போவதாலும் ஒரு மாதம் வரை ஒழுங்கா வர மாட்டேன் என்று போஸ்ட் செய்யணும் என்று இப்போதான் நினைத்தேன்.

எல்லோரும் மன்னித்து விடுங்க... இந்த நிலைமையில் என்னால் சமாளிக்க முடியாது... தல இருக்க விரல் ஆடலாமா ? இங்கே நான் ஒரு அணில் ( கும்ப்ளே அல்ல )... அப்பப்போ வந்து பதிகிறேனே... ப்ளீஸ்

மலேசிய வேலனைத் தானே சொல்கிறீர்கள்..அவரிடம் ஒரு வார்த்தை சொன்னால் போதும்.கொய்ங்க் என்று வந்துஒரு போஸ்ட் போட்டு - கேன் யூ ஸ்டார்ட் நியூ த்ரெட் என்று விடுவார்.. நீங்கள் நாளை அல்லது நாளை மறு நாளும் ஆரம்பிக்கலாம்..

ம்ம்.. ஜாலியா அவருடன் எஞசாய் பண்ணுவீர்கள் என நினைத்தால் ட்ரீட்மெண்ட் அது இது என பயமுறுத்துகிறீரே.. ம்ம் எல்லாம் நல்லபடியாக நடக்கும்.. எங்கள் அனைவரின் ப்ரார்த்தனைகளும் உங்களோடு..( எனக்கு உடல் நிலை சரியில்லை என்று நேற்று சொல்லியிருந்தேன்.. வாசு தான் மாத்திரை சாப்பிடுவதாக நேற்று சொல்லியிருந்தார் பி.எம் மில் :) இப்போ ஐயாம் ஓ.கே. (சாப்பிட்டாரா இல்லையா எனத் தெரியாது!))

ம்ம் ஹப்பர் ஸ் மீட் வேறு இருக்கிறது இல்லையா.. அடுத்த தடவையாவது எல்லோரையும் பார்க்க வேண்டும்..வேலன், திருமாறன், முரளி யைக் கேட்டதாகச் சொல்லவும்..

eehaiupehazij
11th September 2015, 08:42 PM
Gap filler / Pag efiller / Monotony breakers!!

Enjoy the best flick of bed time lullabies for babies to get into sleep!

https://www.youtube.com/watch?v=tbfWL88Skak

eehaiupehazij
11th September 2015, 08:59 PM
நகமும் சதையும் எதிரும் புதிரும் ஆகும்போது ?! When Water becomes thicker than Blood!


மனித மனம் ஒரு விசித்திரமான உளவியல் கலவையே ! Sigmund Freud or Hitchcock only could sort out the inherent variants of mind!!

ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்பாயினும் உயிருக்கு உயிரான நண்பரேயாயினும் டைட்ரேஷன் பிராசெஸ்சில் இறுதியில் கலர் மாறுவது போல ஏதோ ஒரு தருணத்தில் புரிதலின்மையால் எலியும் பூனையுமாக கீரியும் பாம்புமாக மாறுவது இயல்பே !!
சரியான புரிதல் மனதில் உறைக்கும் போது பிரிந்தவர் கூடுவதும் இயல்பே ...

https://www.youtube.com/watch?v=9ZghfWkD8gA


https://www.youtube.com/watch?v=DDnRakNvBKk

chinnakkannan
11th September 2015, 09:03 PM
செளகார் :sad: பிரகலாதனை - தசாவதாரம் பழைய படத்தில்- வயிற்றுக்குள் சுமந்திருக்கும் போது- சீர்காழி பாடும் பாசுரம் குலம் தரும் செல்வம் தந்திடும்..அதைக் கேட்டு பிரகலாதன் வெளிவந்து தந்தை எம்.ஆர். ராதாவுடன் ஆர்க்யூ வெல்லாம் பண்ணுவார்.. நன்றாக இருக்கும்..

சி.செ. ஹெர்மிட் என்பதற்கு இரு அர்த்தங்கள் :a person living in solitude as a religious discipline.; a hummingbird found in the shady lower layers of tropical forests, foraging along a regular route. என்று போட்டிருக்கிறது.. ஏன் அவங்க வரக்கூடாது? என்னமோ போங்க :)

chinnakkannan
11th September 2015, 09:09 PM
ஒரு நண்பனின் கதையிது..

ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் உலகை ப் புரிஞ்சுக்கிட்டேன் கண்மணி..

அண்ணன் என்னடா தம்பி என்னடா..

நிறைய இருக்கா என்ன..

eehaiupehazij
11th September 2015, 09:09 PM
சி க
இந்தத்திரி காதல் சந்நியாசிகளுக்கு உகந்தது அல்லங்கானும் !
நம்மைப்போல சம்சார சாகரத்திலிருந்து அவ்வப்போது தப்பித்து திரித்தீவுகளுக்கு ஓடுபவர்களுக்கே முக்தி கொடுக்கும் !
செந்தில்

RAGHAVENDRA
11th September 2015, 09:38 PM
நீங்கள்தான் அடுத்த ஐந்தாம் பாகத்தை தொடங்க வேண்டும் என்பது ஏற்கனவே பிக்ஸ் செய்யப்பட்ட ஒன்று. அதில் மாறுதல் வேண்டாம். இது ஒட்டுமொத்த மதுரகான நண்பர்களின் வேண்டுகோள். தயை கூர்ந்து சம்மதித்து எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தவும். வேறு எதுவும் சொல்ல வேண்டாம். ப்ளீஸ்.

அதே அதே சபாபதே

https://www.youtube.com/watch?v=1fRFqdTMefw

eehaiupehazij
11th September 2015, 10:07 PM
கல் / Stone
உங்க மனசென்ன கல்லா ?
கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ...
சொல்லாலடிப்பதை விட கல்லாலடிப்பதே மேல் !
கல்லடி பட்டாலும் படலாம் கண்ணடி படக்கூடாது !
கல்லுக்குள் உறையும் தேரை !
ஒரேகல்லில் ரெண்டு மாங்காய் !
இப்படிக் கல்லின் மகாத்மியம் சொல்லிக்கொண்டே போகலாம் !
திரைப்பாடல்களில் .....?! கல்லின் பயன்பாடு!
கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா ?.....நடிகர்திலகத்தின் பார்வையில்...
https://www.youtube.com/watch?v=gLiZFaAbWb8
கடவுள் ஏன் கல்லானார் ?.....மக்கள்திலகத்தின் கணிப்பில்
https://www.youtube.com/watch?v=DrtNhx9XcKM
கல்லுக்கு நீதி சொல்ல முடியாது ...காதல் மன்னரின் தீர்ப்பில்
https://www.youtube.com/watch?v=yfx1kel88PE

கல்லிலே கலைவண்ணம் கண்டான் ...
[url]https://www.youtube.com/watch?v=CtaUn2jlpYY
கல்லும் கனியாகும் ...
[url]https://www.youtube.com/watch?v=wLcddb8O4M4

vasudevan31355
11th September 2015, 10:30 PM
ராகவேந்திரன் சார், சின்னா, மது அண்ணா, சிவாஜி செந்தில் சார், ஜி, ரவி சார், வாசுதேவன் சார், ராக தேவன் சார், வினோத் சார், கலை சார், குமார் சார், யுகேஷ் சார், செந்திவேல் சிவராஜ் சார், கோபால், முரளி சார், சிவா சார், ஆதிராம் சார், கோபு சார், நண்பர் கல்நாயக், கிருஷ்ணா சார், ராஜ்ராஜ் சார், கார்த்திக் சார், ரவிகிரண் சூர்யா சார், மற்றும் விட்டுப் போன அனைத்து நண்பர்களுக்கும்.

நாளை, மறுநாள் ஊர்ப்பயணம். அதற்குள் பாகம் முடிவடைந்து விட்டால் மது அண்ணா அடுத்த பாகத்தைத் தொடக்க வேண்டும் என்பது இந்த அடியேனின் வேண்டுகோள். மதுண்ணா செவி சாய்க்க வேண்டும்.

வழக்கம் போல் மனதை மயக்கும் மதுர கானங்கள் பாகம் நான்கிற்கு ஆதரவளித்த நண்பர்களுக்கும், பங்களிப்பு செய்த உயிரினும் மேலான சகோதரர்களுக்கும், வெளிப் பார்வையாளர்களுக்கும், மாடரேட்டேர்களுக்கும், மற்ற திரி நண்பர்களுக்கும் கோடானு கோடி நன்றிகள்.

திங்களன்று சந்திப்போம்.

vasudevan31355
11th September 2015, 10:34 PM
செந்தில் சார்,

கல்லாய் வந்தவன் கடவுளம்மா
அதில் கனியாய் கனிஞ்சவ தேவியம்மா
புல்லாய் மொளச்சவ சக்தியமா
அதில் பூவா மலர்ந்தவ காளியம்மா

மகா நடிகர் மகாகவி காளிதாஸாய் வாழ்ந்த படம்.

புல்லாங்குழல் வாசிக்கும் அழகு கோடி பெறும்.


https://youtu.be/9mzZVgQRzwg

chinnakkannan
11th September 2015, 10:41 PM
அடியேனை ஆரம்பிக்க வைத்து இவ்வளவு பக்கங்கள் விரைவாக சுவாரஸ்யமாக அமோகமாக இன்னும் என்னவெல்லாமோவாக க் கொண்டு சென்ற அனைத்து நண்பர்களுக்கும்..
என் நன்றிகள் + வணக்கங்கள்

எத்துணை எத்துணை விஷயங்கள்..ம்ம் எல்லாம் வெகு அழகு..சொல்ல வார்த்தைகளில்லை..

வழக்கம் போல் அனைவரும் பாகம் ஐந்தில் வந்து மதுண்ணாவுடன் சேர்ந்து பரிமளாக்க அச்சோ இது தேவிகா பெயரோன்னோ.. பரிமளிக்க வைக்க வேண்டுகிறேன்..

இன்று நமதுள்ளமே பொங்கு பெருவெள்ளமே..

vasudevan31355
11th September 2015, 10:46 PM
//நகமும் சதையும் எதிரும் புதிரும் ஆகும்போது//


https://youtu.be/AGM0KqoK3lY

chinnakkannan
11th September 2015, 11:01 PM
அஞ்சு பாகத்துக்கு புச்சா ஒரு தொடர் ஆரம்பிக்கணுமே..மக்கள்ஸ் ஒரு நல்ல தலைப்பா தாங்களேன் :)

vasudevan31355
11th September 2015, 11:10 PM
நிஜம் சின்னா!

எவ்வளவு தகவல்கள்! எவ்வளவு சுவாரஸ்யங்கள், எத்தனை விதவிதமான தலைப்புகள், எவ்வளவு அரிதான பாடல்கள், எவ்வளவோ தலைப்புகள், எவ்வளவு குட்டி குட்டி சண்டைகள், எவ்வளவு பெரிய சண்டைகள், படங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், தொடர்கள். நிஜமாகவே பிரம்மிப்பாய் இருக்கிறது. படித்து மகிழ நேரம் போதுமோ!

நன்றி சின்னா!

chinnakkannan
11th September 2015, 11:13 PM
*
பிறக்கும் போதே சொல்லிவிட்டார்
..பேதை நானும் உனக்கென்று
அடடா அழகுப் பூஞ்சிரிப்பு
…அழகி இவளும் உனக்கென்று
பதமாய்ச் சொன்னார் உன் அம்மா
…பார்க்க மறுத்தீர் சிறுவயதில்
இதமாய் இளமை பூத்திருக்க
…இனிதாய்ப் படித்தேன் வளர்ந்துவிட்டேன்

வந்தேன் மாமா உமைத்தேடி
..வாகாய்ப் பேச வரச்சொன்னால்
செந்தேள் கொட்டாய் ஒருபார்வை
…சேர்த்துக் கோர்த்த ஒருசிரிப்பு
பெண்ணில் நானும் அழகிலையா.
..பெரிய படிப்புப் படிக்கலையா
எண்ணந் தன்னில் இன்னொருத்தி
..எளிதாய் உமக்கு அமைந்ததுவா..

செல்லக் கிளியாய் சின்னத் திமிராய்
.கள்ளச் சிரிப்பாய் கனிவாய்ச் சிவப்பாய்
வெல்லத் துளியாய் வேகங் கூட்டி
..மெல்ல இங்கே அழைத்தாய் பெண்ணே
பொய்யோ என்னும் இடையா என்றால்
…மெய்யே என்னும் பார்வை வீச்சு
சில்லாய்த் தெறித்த தேங்காய் வெண்மைத்
..தூக்கல் தெரியும் பற்கள் தன்மை

வந்தால் எண்ணம் ஆட்டங் காண
.;..மனதைத் திறந்து சொன்னாய் கண்ணே
உன்னை மறந்தே இருப்பது என்றால்
..ஊரை என்னை மறந்தாற் போல
திண்ணம் வேலை சிலமா தத்தில்
..திகைந்தால் நானும் வருவேன் உன்னூர்
கண்ணில் நெஞ்சில் கலக்கம் விட்டு
…கனிவாய், கனிவாய் கொடுப்பாய் முத்தம்…!

*


https://youtu.be/5w_FnW6C66k

கால்கள் நின்றது நின்றது தான்.. முத் ராமன் மணிமால்ஸ்..

chinnakkannan
11th September 2015, 11:22 PM
நிஜம் சின்னா!

எவ்வளவு தகவல்கள்! எவ்வளவு சுவாரஸ்யங்கள், எத்தனை விதவிதமான தலைப்புகள், எவ்வளவு அரிதான பாடல்கள், எவ்வளவோ தலைப்புகள், எவ்வளவு குட்டி குட்டி சண்டைகள், எவ்வளவு பெரிய சண்டைகள், படங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், தொடர்கள். நிஜமாகவே பிரம்மிப்பாய் இருக்கிறது. படித்து மகிழ நேரம் போதுமோ!

நன்றி சின்னா!

சண்டைகள் எல்லாம் ஒன்றுமே இல்லை..அதைப் பற்றி நீங்கள் கவலையே கொள்ள வேண்டாம்..அதெல்லாம் பாஸிங்க் க்ளெவ்ட்ஸ்.. விரைவில் கலைந்து விடும்..

பட் நான் இன்னும் ஹோம் ஒர்க் செய்யவில்லை..அதைச் செய்யவேண்டும்,..ஒரு ஷார்ட் ரிவ்யூ கொடுக்கவேண்டும்..என நினைத்திருந்தேன்..முடியுமா தெரியவில்லை..

உங்களது பாடல்கள் வைர நெஞ்சம், ஒரே சாட்சிமற்றும் இன்னும் நிறைய பாடல்கள் கேட்கவில்லை வாஸூ..அது தான் எனக்கு வருத்தம்..பட் கேட்கவேண்டும்..

நிறைய புத்தகங்கள் படிக்கவேண்டும் என டைம்டேபிள் வைத்துக் கொண்டு படிக்கிறேன்.. நிறைய எழுத வேண்டும் என்று ஆசை..இங்கும், இன்னும் மற்ற ஆன்மிகம், சிறுகதைகள் என்று.. ஆனால் அதெல்லாம் ஏனோ தயங்கிக் கொண்டே தாமதமாகிறது.. ஆனால் எழுதுவேன் கண்டிப்பாக

உங்களைப் போன்ற உழைப்பாளி- தேடி எடுத்து ப் பாடலக்ள் போட்டும் - பாடல்களை உள்ளாழ்ந்து ரசிக்கும் தன்மையும் எனக்குக் கிடையாது..மேக்ஸிமம் பாடல் வரிகள்..எங்கு இருக்கிறது எங்கிருந்து சுட்டிருக்கிறார்கள் அக நானூறா புற நானுறா குறளா நாலடியா என்று தான் எண்ணம் செல்லும்..சில வரிகள் பிடித்திருப்பின் அதில் விழுந்துவிடுவேன்

கூடிய வரை சுவாரஸ்யமாக இன்றைக்கென்று எழுதாமல் என்று படித்தாலும் நன்றாக இருக்கவேண்டும் என்றபடி என் எழுத்து இருக்கவேண்டும் என்பதே என் ஆவல்..அதற்காகவே நான் முயற்சித்துக் கொண்டே இருக்கிறேன்..

இன்னும் நல்ல விதமாக எல்லோருக்கும் பிடிக்கும் வண்ணம் எழுத வேண்டும் என்பதே என் ஆசை..ஆண்டவன் அருளும் உங்கள் சி.செ மதுண்ணா ராஜ் ராஜ், ராகதேவன்,ராகவேந்தர் போன்ற பெரியவர்களின் ஆசியும் எனக்கு வேண்டும்..

ஏதாவது வாசக தோஷமாய் எழுதியிருந்தால் மன்னித்து மறந்து விடக் கேட்டுக்கொள்கிறேன்..

அன்புடன்

சி.க.

eehaiupehazij
11th September 2015, 11:29 PM
இசை ஓர் ஆலமரம் போல அழிவில்லாதது சி க !
ஆயிரங்காலத்து உயிராக விழுதுகள் பூமியில் விழுந்து வேராக ஊன்றி தாங்கிக் கொண்டேயிருக்கும் !!
அதுபோலவே இசைவரலாற்றில் புதுப் புது பரிணாமங்களும் பரிமாணங்களும் காலப் போக்கில் உருமாறிக் கொண்டே செவிகளுக்கு விருந்து பரிமாறிக் கொண்டேயிருக்கும் !!
இறவாப் புகழ் இசை விழுதுகள் !! Immortal Musical Genies !!
திரை இசை / நடன பரிணாம வளர்ச்சிக்கு வித்திட்ட இசை சித்தர்கள் / இந்திரஜித்துக்கள் / ஜாம்பவான்களின் இசை / நடன வர்ணஜாலங்களின் தனித்தன்மைகள் குறித்து தொடர் தொடரலாமே!!
செந்தில்

RAGHAVENDRA
11th September 2015, 11:31 PM
மனதைக் கொள்ளை கொண்ட மதுர கானங்கள் திரியின் 4வது பாகம் வெற்றிகரமாக முழுமையடைந்து இன்னும் ஓரிரு நாட்களில் 400 பக்கங்களைக் கடந்து விடும். இந்நேரம் ஒவ்வொருவரும் ஒவ்வொருவருக்கும் பரிசு தர எண்ணுவோம்.

என்ன தரலாம்..

இதோ நமக்காக இவர்கள் ஆலோசிக்கிறார்கள்..

https://www.youtube.com/watch?v=OKU8jpVaxv8

RAGHAVENDRA
11th September 2015, 11:37 PM
நிலவுப் பெண் முகம் பார்த்த நீலமேகம் கண்ணாடி

பால் மனம் படத்திலிருந்து ஆர் பார்த்தசாரதி இசையில்..

நெஞ்சைக்கொள்ளை கொள்ளும் கானம்..

https://www.youtube.com/watch?v=7EO_17Y3Dpc

RAGHAVENDRA
11th September 2015, 11:38 PM
தாயறிந்த ஒரு பாட்டு ...

நாமும் தான்...

இந்த தாலாட்டை நாம் மறப்போமா..என்ன...

https://www.youtube.com/watch?v=iFsBggVHIzU

தாலாட்டிற்கு சிறந்த உதாரணப் பாடல்களில் ஒன்று

rajraj
12th September 2015, 01:18 AM
Bhakthi seems to have disappeared with Rajesh ! :)

Here is a bhakthi song from Sri VaLLi witth T.R.Mahalingam in the lead:

yaar undhanaipol enai aadharippavar aaRumukatharase.....

http://www.youtube.com/watch?v=ZPTiggMPaho

Iposted another song for 6.

eehaiupehazij
12th September 2015, 09:38 AM
காதல் வாகன மோகன கானங்கள் !


எத்தனை முறைதான் பூங்காக்களிலும் அணைக்கட்டுப் பகுதிகளிலும் மலைக்காடுகளிலும் வயல்வெளிகளிலும் மரங்களைச் சுற்றி சுற்றி காதலர்கள் வேர்த்து விறுவிறுத்து பாடி ஆட முடியும் ?
சைக்கிளில் ஆரம்பித்து ஸ்கூட்டர் பைக் கார் ...எத்தனை வகை காதல் வாகனங்கள் மோகன கீதங்கள்!
சைக்கிளை நிறைய அக்குவேறு ஆணிவேறாக கல்யாணபரிசு, பாசம், பாவமன்னிப்பு, சித்தி.....அலசிவிட்டோம்! ஸ்கூட்டரில் ஆரம்பிப்போம்!
அந்தக் கால சமூக திரைப்படங்கள் நல்ல நல்ல குடும்பக் கதைகளை பின்னி எடுத்தாலும் காதல் தேன் சுவை இல்லையெனில் படங்களை ரசிப்பது கடினமே !
அந்த வகையில் ஸ்கூட்டரை காதல் வாகனமாக்கி நாயக நாயகியர் ஆடாமல் ஓடாமல் ஸ்கூட்டரை மட்டும் ஆட்டி ஓட்டி காதல் புரிந்த கண்கொள்ளா காட்சிகள் !!
அப்போதெல்லாம் காதலி பின்சீட்டில் பில்லியன் ரைடராக அமர்ந்து காதலனைக் கட்டிக்கொண்டு கிளுகிளுப்பேற்ற சேலை உடை வழி செய்யாததால்
ஸ்கூட்டரில் ஒரு பக்கத்து கூண்டு இருக்கை சேர்க்கப்பட்டிருக்கும்! Tandem seat என்று அழைக்கப்படும். ஸ்கூட்டர்கள் / spaghetti இத்தாலியை மூலமாகக் கொண்டவை.! ரோமன் ஹாலிடே, கம் செப்டம்பர் படங்களில் இணைப்பில்லாத ஸ்கூட்டர்களும் போரை அடிப்படியாகக் கொண்ட பல படங்களில் இணைப்புடன் கூடிய ஸ்கூட்டர்கள் பைக்குகளையும் காணலாம்! இப்போதெல்லாம் சூரிதாருக்கு மாறி விட்டதால் இரண்டுபக்கமும் கால்களைப் போட்டுக் கொண்டு குண்டுகுழிகளில் வேண்டுமென்றே காதலன் ஏற்றி இறக்கும்போது பயப்படுவது போல பாவலா பண்ணி கட்டிப்பிடித்து கிளுகிளுப்பேற்றும் பார்ப்பவர்க்கு கடுப்பேற்றும் காதலியரே அதிகம்!!

தமிழில் ஸ்கூட்டரைப் பிரபலமாக்கியவர் காதல் மன்னரே ! பிறகு டி ஆர் ராமச்சந்திரன்...தொடர்கதை..!! பழைய லேம்ப்ரட்டா, பஜாஜ் வகை ஸ்கூட்டர்கள் பிரபலம்!

ஹலோ மிஸ்டர் ஜமீன்தாரில் ஜெமினி சாவித்திரி இதமான காதல் ஜோடி ! (இது ஸ்கூட்டரா பைக்கா?)!

https://www.youtube.com/watch?v=Xo0jvOT0kbA

பக்கத்திலே கன்னிப் பெண்ணிருக்கு ...TRR-CID சகுந்தலா!

https://www.youtube.com/watch?v=yZ3Y2HCj2zs

ஷோலேயில் தர்மேந்தர் அமிதாப் , இந்தியானா ஜோன்ஸில் ஹாரிசன் போர்டு ஷான் கானரி......நிறைய இருக்கின்றன!

From Roman Holiday and Come September...

[url]https://www.youtube.com/watch?v=nXgnl6qMh0c

[url]https://www.youtube.com/watch?v=9j3vxhzM8MY

eehaiupehazij
12th September 2015, 12:56 PM
மாற்றார் தோட்ட மதுர கானங்கள்
part 40

The man who knew too much / Que sera sera song! (Whatever will be will be)!

ஹிட்ச்காக்கின் புகழ்பெற்ற திகில் சஸ்பென்ஸ் மர்மப் படங்களில் ஒன்றான தி மேன் ஹூ ந்யூ டூ மச் திரைப்படத்தில் வரும் டோரிஸ்டே பாடும் பிரெஞ்சு மொழிப் பாடலான கே சேரா சேரா மிகவும் பிரபலமானது !

Dont miss this song ...and the movie too!!

https://www.youtube.com/watch?v=3FKA-3uRdQY

eehaiupehazij
12th September 2015, 01:03 PM
ஜெமினி சாவித்திரி இருவருமே காரோட்டுவதில் வல்லவர்கள்! ! இருவருக்குமே பேக் ப்ரொஜெக்ஷன் தேவைப்படாது
பாசமலரில் ஜெமினியும் காத்திருந்த கண்களில் சாவித்திரியும் தேரோட்டுவது போல காரோட்டும் அழகு !

https://www.youtube.com/watch?v=6e_llk_6_7g

https://www.youtube.com/watch?v=epP_PlwbiWE

eehaiupehazij
12th September 2015, 01:06 PM
காதலியரை அருகமர்த்தி படகு வலிப்பதிலும் கட்டை வண்டி ஓட்டுவதிலும் காதல் மன்னர் திறமைசாலியே !

சுட்டிக் குட்டிப் பெண்ணாக வருபவர் கமலஹாசனாமே !குட்டி ஔவை ஷண்முகி !?!

சி க !விஜயகுமாரி பாட்!!

https://www.youtube.com/watch?v=sHb4MQO8dYI

eehaiupehazij
12th September 2015, 01:30 PM
விநாயகர் சதுர்த்தியில் திரியின் அடுத்த பாகம் ?

eehaiupehazij
12th September 2015, 02:08 PM
ஜெமினி கணேசனுக்கான எனது மலரும் நினைவலைகள் !


ஒரு சிவாஜி ரசிகன் ஜெமினிக்காக தனி ஒருவன் ஆன கதை !

1973ல் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் கோவையில் கிராமப்புற மாணவனாக வேளாண்மைப் பொறியியல் பட்டப் படிப்புக்காக அடியெடுத்து வைத்த மறக்க முடியாத தருணம் !

ராகிங் என்று சொல்ல முடியாது ஆனால் திகில் பாண்டிகளான சீனியர்களின் பிடியில் நண்பர்கள் கும்பலோடு நானும் சிக்கிக் கொண்ட அனுபவம் !!

வழக்கமான கேள்விகளுக்குப் பிறகு முக்கியமான கேள்வி நீ யார் ரசிகன் என்பதே !
அப்போதைய காலகட்டத்தில் கேம்பஸில் இரண்டு குரூப் ரசிகர்கள்தான் : நடிகர்திலகம் மக்கள்திலகம் !
வார இறுதியில் சனிக்கிழமை இரவு கீரைஸ் சாப்பிட்டு விட்டு ஆடிடோரியம் சென்றால் கொஞ்சம் திகிலாகவே இருக்கும்... அந்த அளவு சிவாஜி எம்ஜீயார் மோதல்கள் !

எனக்கு அடிப்படையில் நடிகர்திலகம் ரசிகன் என்றாலும் ஜெமினியையும் ஜேம்ஸ் பாண்ட் சீன்கானரியையும் ரொம்பவே பிடிக்கும் ! மேலும் பள்ளியிலும் பியூசி படிக்கும்போது கல்லூரியிலும் எனது குரல் சற்று ஏ எம் ராஜாவையும் பிபி சீனிவாசையும் ஒத்திருந்ததால் ஜெமினி பாடல்களை நிறையப் பாடியிருக்கிறேன்! (nambunga boss!) பாட்டுப் பாடவா...என் பேவரிட் சாங் ! அப்புறம் நிலவுக்கு என்மேல்.....

தர்மசங்கடமான சூழ்நிலையில் தப்பிக்க எண்ணி நான் ஜெமினி ரசிகன் என்று சொல்லிவிட்டேன்!

...ஆரம்பித்தது எனக்கு 7.5 (சட்னி சாம்பார் ) அர்ச்சனை அபிஷேகங்கள்...

சிவாஜி எம்ஜீயார் ரசிகர்கள் இந்த விஷயத்தில் ஒற்றுமையாகக் கைகோர்த்து எனக்கு டின் கட்டிவிட முடிவு செய்து விட்டார்கள் !

தொடரும் ... Please visit GG island ...Gemini Ganesan the Romance King thread...for furtherance!

RAGHAVENDRA
12th September 2015, 02:46 PM
ஹிட்ச்காக்கின் புகழ்பெற்ற திகில் சஸ்பென்ஸ் மர்மப் படங்களில் ஒன்றான தி மேன் ஹூ ந்யூ டூ மச் திரைப்படத்தில் வரும் டோரிஸ்டே பாடும் பிரெஞ்சு மொழிப் பாடலான கே சேரா சேரா மிகவும் பிரபலமானது !

Dont miss this song ...and the movie too!!

https://www.youtube.com/watch?v=kGPO7CCU8eA

eehaiupehazij
12th September 2015, 03:17 PM
[url]https://www.youtube.com/watch?v=kGPO7CCU8eA


அபாரம் குருஜி !
கே சேரா செராவை அப்படியே அடியொற்றிய ஆரவல்லி (நாயகி வி என் ஜானகியாரா) > மதுர கானம்தான் !! நன்றிகள்!!
செந்தில்

chinnakkannan
12th September 2015, 04:06 PM
//ஒரு சிவாஜி ரசிகன் ஜெமினிக்காக தனி ஒருவன் ஆன கதை !// சி.செங்காணும்.. ஓய்.. சூப்பரா இருக்கு டைட்டில்.. நினைவலைகள்..இப்படி அங்க வரச் சொல்லிட்டீங்களே நியாயமா..

க்யூ செரா செரா.. பாட்டு மட்டும் கேட்டிருக்கிறேன். படம் பார்த்ததில்லை...

வினாயகர் சதுர்த்தி எப்போ?

ஜெய்ஷங்க்கர் எல்.விஜயலஷ்மி காதலோட்டிக் காரோட்டும் கானம் ஒன்று உண்டு..போன பாகத்தில் போட்டிருந்தேன்..

வி.கு பாட்டுக்குத் தாங்க்ஸ்.. அவர்ர்ர்ர்ர் என்று இழுப்பது பிடிக்கும்..

chinnakkannan
12th September 2015, 04:11 PM
இறவாப் புகழ் இசை விழுதுகள் !! Immortal Musical Genies !!
திரை இசை / நடன பரிணாம வளர்ச்சிக்கு வித்திட்ட இசை சித்தர்கள் / இந்திரஜித்துக்கள் / ஜாம்பவான்களின் இசை / நடன வர்ணஜாலங்களின் தனித்தன்மைகள் குறித்து தொடர் தொடரலாமே!!// சி.செ அண்ணாவ்... நான் ரொம்பச் சின்னப்பையன்.. இசை ஞானம்லாம் கொஞ்சம் நிறையவே கம்மி.. ரசிக் ரசிக் ரசிக்கமட்டும் தான் தெரியும்..

ஏதோ எனக்குத் தெரிந்த கொஞ்சம் தமிழை வைத்து ஓட்டிக்கொண்டிருக்கிறேன் நாட்களை.. :)

ஐடியாக்களுக்கு நன்றி.. வெகு அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்..அதற்கும் ஒரு நன்றி+ஓ

eehaiupehazij
12th September 2015, 05:03 PM
sika
17.09.2015 vinaayakar sthurthi?

RAGHAVENDRA
12th September 2015, 05:21 PM
தலைப்பில்லா எழுத்துக்கள்...

இப்படி ஒரு தலைப்பு வெச்சா அதைப் பற்றி ரெண்டு பேர் சூப்பரா எழுதுவாங்க..

சி.க. அண்ட் சி.செ.

சிறு கதைகள் அதற்குள் சிறப்பு செய்திகள்

chinnakkannan
12th September 2015, 06:02 PM
ராகவேந்திர சார் :) :)

ஹை.. தலைப்புன்னாலே செய்தியைத் தவிர புடவைக்குத்தானே இருக்கு

என்னெல்லாம் பாட் இருக்கு

பட்டு சேலை காத்தாட..

காஞ்சிப் பட்டுடுத்தி

சேலை குடை பிடிக்க காத்து...

முந்தானை பந்தாட அம்மானை ஆடுங்கடி

ஹப்புறம்..

rajraj
12th September 2015, 10:18 PM
que sera sera (ke sera sera) is Spanish/corrupted Italian ! I posted it and chinnappeNNaana podhile in one jugalbandi ! :)

eehaiupehazij
13th September 2015, 08:36 AM
Gap filler / Monotony breaker

Shammi Kapoor the Indian Gene Kelly!


ஹிந்தி நடிகர்களில் ஷம்மிகபூர் சற்றே வித்தியாசமானவர். ராஜ்கபூர், தேவ் ஆனந்த், திலீப் குமார் சாம்ராஜ்யத்தில் அவர்கள் யாரும் நெருங்க முடியாத அளவுக்கு இந்தியாவின் ஜீன் கெல்லியாக நடன நளின அசைவுகளில் இனிமையான பாடல் காட்சிகளில் முகமது ரபியை உள்வாங்கி அசத்தியவர் !

கொஞ்சம் பெண்மையின் நளினப் பூச்சுடன் ..!

காஷ்மீர் கி காளி படத்தில் குதூகலமான நடனக் குலுக்!

with Sharmilaa Tagore of Aradhana fame...an upcoming damsel of tinsel town at that time!!

https://www.youtube.com/watch?v=9ZeD6iG7dr8

தும்சே அச்சா கோன் ....உன்னைவிட சிறந்தவர் யார்! ஜான்வர் 1965 படத்தில்

With Raajshree...again they joined hands for his ace movie Brahmachaari remade as one of the mind lingering movies of NT Enga Mama!!

https://www.youtube.com/watch?v=Ezokd1JCVpc

rajraj
13th September 2015, 09:00 AM
M.S.Subbulakshmi's birthday is on September 16th. I thought I should post a few of her movie songs.

From Meera (Tamil)(1945)

kaNNan LeelaigaL seivaane......

http://www.youtube.com/watch?v=R3danDjegYw

From the Hindi version Meera(1947)

Chakar Rakhoji........

http://www.youtube.com/watch?v=ksqMGF5bX0w

I attended a couple of her concerts. One was in Chicago when I was a student. They distributed a booklet of songs she sang in concerts in the US. She autographed one of those for me. I still have it. Fond memories ! :)

eehaiupehazij
13th September 2015, 09:05 AM
Nostalgia / Gap filler / Monotony breaker!


The song sequence that catapulted GG to the status of the unreigned King of Romance in Indian films!! Missiammaa's moonlight melody with his lucky charm pair Saaviththiri! This film always remains a crowd puller for its neat story line, enchanting music and captivating songs, subtle acting of all charachters making us feel that we also move with them in the screen proceedings, GG's handsome personality....

https://www.youtube.com/watch?v=oRrnQg4SboQ

eehaiupehazij
13th September 2015, 09:10 AM
Rajraj Sir
Though I have not seen many a movies of MS I always cherish in my memory this haunting and enchanting immortal melody காற்றினிலே வரும் கீதம்! Joining hands with you on the occasion of the birthday remembrances of the Nightingale of India Bharat Rathnaa MS!


Madurai Shanmukhavadivu Subbulakshmi (Tamil: மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி, Madurai Shanmukhavadivu Subbulakshmi ( 16 September 1916 – 11 December 2004), also known as M.S., was a renowned Carnatic vocalist.

She was the first musician ever to be awarded the Bharat Ratna, India's highest civilian honour.She is the first Indian musician to receive the Ramon Magsaysay award, often considered Asia's Nobel Prize,in 1974 with the citation reading "Exacting purists acknowledge Srimati M. S. Subbulakshmi as the leading exponent of classical and semi-classical songs in the carnatic tradition of South India.

Source : Wikipedia

https://www.youtube.com/watch?v=PCiqqFVY4Xw

https://www.youtube.com/watch?v=2iwMBHNjzl8

rajraj
14th September 2015, 12:14 AM
http://www.dinamalar.com/mssubbulakshmi/


Thanks senthil. They have started the centenary celebration in Shanmukanandha Hall in Bombay. I have not heard anything from Madras!

rajraj
14th September 2015, 05:49 AM
senthil: MS acted only in five movies - Sevasadhanam, Savithri, Sakuntalai, Meera(Tamil) and Meera(Hindi). I will post at least one song from each of those movies.

Here is one from Sevasadhanam(1938)

maa ramaNan uma ramaNan........, A composition by Papanasam Sivan in Hindholam(one of my favorite ragas)

http://www.youtube.com/watch?v=5qmPLBiNB_I

vasudevan31355
14th September 2015, 10:05 AM
ஜெமினி கணேசனுக்கான எனது மலரும் நினைவலைகள் !



1972ல் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் கோவையில் கிராமப்புற மாணவனாக வேளாண்மைப் பொறியியல் பட்டப் படிப்புக்காக அடியெடுத்து வைத்த மறக்க முடியாத தருணம் !

ராகிங் என்று சொல்ல முடியாது ஆனால் திகில் பாண்டிகளான சீனியர்களின் பிடியில் நண்பர்கள் கும்பலோடு நானும் சிக்கிக் கொண்ட அனுபவம் !!

வழக்கமான கேள்விகளுக்குப் பிறகு முக்கியமான கேள்வி நீ யார் ரசிகன் என்பதே !
அப்போதைய காலகட்டத்தில் கேம்பஸில் இரண்டு குரூப் ரசிகர்கள்தான் : நடிகர்திலகம் மக்கள்திலகம் !
வார இறுதியில் சனிக்கிழமை இரவு கீரைஸ் சாப்பிட்டு விட்டு ஆடிடோரியம் சென்றால் கொஞ்சம் திகிலாகவே இருக்கும்... அந்த அளவு சிவாஜி எம்ஜீயார் மோதல்கள் !

எனக்கு அடிப்படையில் நடிகர்திலகம் ரசிகன் என்றாலும் ஜெமினியையும் ஜேம்ஸ் பாண்ட் சீன்கானரியையும் ரொம்பவே பிடிக்கும் ! மேலும் பள்ளியிலும் பியூசி படிக்கும்போது கல்லூரியிலும் எனது குரல் சற்று ஏ எம் ராஜாவையும் பிபி சீனிவாசையும் ஒத்திருந்ததால் ஜெமினி பாடல்களை நிறையப் பாடியிருக்கிறேன்! (nambunga boss!) பாட்டுப் பாடவா...என் பேவரிட் சாங் ! அப்புறம் நிலவுக்கு என்மேல்.....

தர்மசங்கடமான சூழ்நிலையில் தப்பிக்க எண்ணி நான் ஜெமினி ரசிகன் என்று சொல்லிவிட்டேன்!

...ஆரம்பித்தது எனக்கு 7.5 (சட்னி சாம்பார் ) அர்ச்சனை அபிஷேகங்கள்...

சிவாஜி எம்ஜீயார் ரசிகர்கள் இந்த விஷயத்தில் ஒற்றுமையாகக் கைகோர்த்து எனக்கு டின் கட்டிவிட முடிவு செய்து விட்டார்கள் !

தொடரும் ... Please visit GG island ...Gemini Ganesan the Romance King thread...for furtherance!

செந்தில் சார்!

நிஜமாகவே சிரித்து சிரித்து வயிறு புண்ணாகி விட்டது. அருமை! அருமை!

vasudevan31355
14th September 2015, 10:08 AM
//
ஜெய்ஷங்க்கர் எல்.விஜயலஷ்மி காதலோட்டிக் காரோட்டும் கானம் ஒன்று உண்டு..போன பாகத்தில் போட்டிருந்தேன்..


சின்னா! பாடல் உங்களுக்கு பழசு. ஆனால் என்றும் எங்களுக்கு புதுசு.


https://youtu.be/GLiBAN4fZF8

vasudevan31355
14th September 2015, 10:16 AM
செந்தில் சார்,

பட்டாம்பூச்சி செட்டுக்கு அருகில் பட்டாம்பூச்சிகள் சேர்ந்து ஆட ஷம்மி ஆஷா பரேக்கை நோக்கி

'தும்னே முஜே தேக்கா ஹோ கர் மெஹருபான்'

'தீஸ்ரி மன்ஜில்' சாங் எனக்கு மிகப் பிடிக்கும். குறிப்பாக இனிமையான பியானோ. வழக்கத்தை விட ஷம்மி இந்தப் பாடலில் நன்றாக இருப்பார். ஆஷா வட இந்திய தேவிகா. கொள்ளை அழகு.


https://youtu.be/gEMle0bksuE

vasudevan31355
14th September 2015, 11:28 AM
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்

http://2.bp.blogspot.com/-HRNJSnA1-84/TenskpB9duI/AAAAAAAAAuY/mP0R6cDrGMY/s320/spb.jpg

(நெடுந்தொடர்)

36

'பேசு மனமே பேசு'

'புதிய வாழ்கை' (1971)

பாலாவின் தொடரில் அடுத்து வருவது இன்னொரு சூப்பர் ஹிட் பாடல். இபாடலைத் தெரியாதவர்களும் இருக்கவே முடியாது. ஆனால் என்ன படம் என்று கேட்பார்கள். அது 'புதிய வாழ்கை' என்று பலருக்கு சொல்லித்தான் தெரியும். அப்படி ஒரு படமா என்று கூடக் கேட்டு விடுவார்கள்.

http://i.ytimg.com/vi/8Aa5R-9_njI/hqdefault.jpg

ஜெய், ஜெயசுதா, மலையாளக் கரை ஜெயபாரதி நடித்தது. ஆனால் இப்படம் நான் பார்த்ததில்லை. பாடலோ அருமை. பாலாவின் ஏராளமான முத்திரைகளில் இதுவும் ஒன்று. பெண்மையின் கடமையையும், உயர்வினையும் பெருமை பேசும் பாடல். ஜெய், மற்றும் ஜெயபாரதி பங்கு கொண்டிருப்பார்கள்.

கடற்கரையில் இயல்பாக இப்பாடல் காட்சி படமாக்கப்பட்டிருக்கும். எங்கோயோ பிறந்த ஒன்று வேறு எங்கேயோ சேர்ந்து சொந்தங்கள் ஆகிவிடுவதை உதாரணங்களுடன் கவிஞர் வெகு அற்புதமாக எடுத்துரைக்கிறார்.

பாருங்கள்.

'கொடியோடு தோன்றிய மலர்கள்
குழலோடு சேருவதென்ன
ஒரு வீட்டில் தோன்றிய பெண்கள்
மறுவீடு தேடுவதென்ன'

பாலா ஒரே மாதிரி சீராகப் பாடி தூள் பரத்தியிருப்பார். அதே போல வேகம் எடுக்கும் இடங்களிலும் 'சபாஷ்' கூற வைப்பார். இப்பாடலின் மூன்றாவது சரணம் 'மலை போல தோன்றிய துன்பம்' ஒளிக் காட்சியில் மட்டுமே காணமுடியும். ஆடியோவில் இது கட். இரண்டு சரணங்களோடு சரி.

படத்தில்,

'இது ஒரு தனி உலகம்...இளமையில் இது சகஜம்'

'பாடத் தெரிந்தவர் பாடுங்கள்'

'பேசு மனமே பேசு'

என்று பாடல்கள். இயக்கம் சி.வி.ராஜேந்திரன். இசை 'திரை இசைத் திலக'மாம்

http://i.ytimg.com/vi/cK6alOHRaeA/hqdefault.jpghttp://i.ytimg.com/vi/v7Fl8GC3ReI/hqdefault.jpg

பேசு மனமே பேசு... பேதை மனமே பேசு
நாலு வகை குணமும் நிறைந்தே நடை போடு
நாலு வகை குணமும் நிறைந்தே நடை போடு
பேசு மனமே பேசு... பேதை மனமே பேசு
நாலு வகை குணமும் நிறைந்தே நடை போடு
நாலு வகை குணமும் நிறைந்தே நடை போடு

கரையேறி ஆடிடும் அலைகள்
கடலோடு மறுபடி ஓடும்
கரையேறி ஆடிடும் அலைகள்
கடலோடு மறுபடி ஓடும்
அலை கூட நாணம் கொண்டாடும்
அது போல பெண்மை கொண்டாடும்
மூடிய ஆடையும் நாணிய பார்வை நாடகமும்
மௌனமும் பெண்மையின் சீதனச் செல்வமன்றோ

பேசு மனமே பேசு... பேதை மனமே பேசு
நாலு வகை குணமும் நிறைந்தே நடை போடு
நாலு வகை குணமும் நிறைந்தே நடை போடு

கொடியோடு தோன்றிய மலர்கள்
குழலோடு சேருவதென்ன
கொடியோடு தோன்றிய மலர்கள்
குழலோடு சேருவதென்ன
ஒரு வீட்டில் தோன்றிய பெண்கள்
மறுவீடு தேடுவதென்ன
பந்தமும் பாசமும் நேசமும் அன்னை இல்லத்திலே
சொந்தமும், காதலும், இன்பமும் கொண்ட உள்ளத்திலே

பேசு மனமே பேசு... பேதை மனமே பேசு
நாலு வகை குணமும் நிறைந்தே நடை போடு
நாலு வகை குணமும் நிறைந்தே நடை போடு

மலை போல தோன்றிய துன்பம்
பனி போல மாறுவதுண்டு
மலை போல தோன்றிய துன்பம்
பனி போல மாறுவதுண்டு
கனவாகத் தோன்றிய வாழ்வு
நினைவாகக் காணுவதுண்டு
போனது போகட்டும் பார்வையை
இன்று மாற்றிவிடு
பூமியில் இன்னொரு ஆனந்த தீபம் ஏற்றிவிடு

பேசு மனமே பேசு... பேதை மனமே பேசு
நாலு வகை குணமும் நிறைந்தே நடை போடு
நாலு வகை குணமும் நிறைந்தே நடை போடு



https://youtu.be/v7Fl8GC3ReI

vasudevan31355
14th September 2015, 12:22 PM
மதுண்ணா!

பி.எம்.போட்டிருக்கேன். பார்த்துக்கோங்கோ.

eehaiupehazij
14th September 2015, 08:51 PM
Gap filler / Page filler / Monotony breaker!!

ஜெமினி கணேசனுக்கான எனது மலரும் நினைவலைகள் !


ஒரு சிவாஜி ரசிகன் ஜெமினிக்காக தனி ஒருவன் ஆன கதை !

part 2



இதில் என்ன பிரச்சினைன்னா கேள்வி கேட்கும் குரூப் சிவாஜியா எம்ஜியாரான்னு தெரியாது எந்தப் பக்கம் சாய்ஞ்சாலும் மற்ற குரூப் வேட்டையாடி விளையாண்டு விடும்!!

இப்ப நான் போட்ட போட்டிலே வாழ்நாள் வைரிகளான ரெண்டு க்ரூப்பும் ஒண்ணா சேர்ந்ததுதான் சாதனை எனக்கு சோதனை தலை வேதனை !!

எனக்கும் சாம்பார் என்றே செல்லப் பெயரை டிக்ளேர் பண்ணி படுத்தியெடுத்து விட்டார்கள்! சாம்பாரில் எத்தனைவகை என்று ஆரம்பித்து.....
ஏன் சிவாஜி எம்ஜியார் பிடிக்கவில்லை ...
ஒருவழியாக நான் மூர்ச்சையாகும் நிலை வந்ததும்தான் க்ளைமாக்ஸ்..அவளுக்கென்று ஒரு மனம் படத்தில் காஞ்சனா தொட்டதற்கே உங்க ஆள் மழையிலே குதியாட்டம் போட்டாரே .இப்ப நீ அதேமாதிரி ஆடணும்னு எனக்கு ஜெமினி மீசை மாதிரி பென்சில் மீசை போட்டுவிட்டார்கள்!

பேண்ட் ஷர்ட் இல்லாமே ஜட்டியோடு ஹாஸ்டல் போர்டிகோ பக்கத்தில் நிற்க வைத்து பூவாளிகளில் நீர் நிரப்பி என்மேல் மழையாக தெளித்து ஆட விட்டார்கள்
கையை இடுப்பிலே வைடா.... அந்தப் பூவைப் பறித்து சுண்டி விடுடா ...கமேண்டுகளோடு ஒருவழியாக நானும் குதித்து குளித்து முடித்தேன்!

ஆனாலும் எமகாதகர்களுக்கு என் மேல் அவ நம்பிக்கையே ! கள்ளனை நம்பினாலும் உன் மாதிரி குள்ளனை நம்ப முடியாதுடா... ஜெமினி மாதிரி பாடு என்று அடுத்த லெவல் டெஸ்டுக்கு தள்ளினார்கள் ...பாட்டுப் பாடவா பாடலை ஸ்கூல் மணம் மாறாமல் அட்டென்ஷனில் கைகட்டிக்கொண்டு ஜெமினியை நினைத்துக் கொண்டு பிசிறில்லாமல் பாடியதை நம்ப முடியாமல் வைத்த கண் வாங்காமல் பார்த்து ரசித்து என் முதுகில் வீங்குமளவுக்கு தட்டியெடுத்து விட்டார்கள் ! அப்புறம்தான் தெரிந்தது காலேஜ் ஆர்கெஸ்ட்ராவுக்கு ஆள் பொறுக்க இந்த முறையைப் பின்பற்றுகிறார்கள் என்று!
அப்புறமென்ன ...நீங்க நினைக்கிறமாதிரி என்னை உடனே ரிலீஸ் செய்யாமல் விடியவிடிய சாம்பார் வைக்க வைத்துவிட்டார்கள்! தொண்டை கட்டிக் கொண்டாலும் அடுத்த நாள் முதல் ஆர்கெஸ்ட்ரா பிராக்டிஸ்தான் ஓரியண்டேஷன் டே வரை! ஜெமினிதான் மறுபடியும் உடம்பு வீங்காமல் என்னைக் காப்பாற்றினார் ! அடுத்த ஐந்து வருடமும் ஐயாதான் கேம்பசின் சாம்பார் பாடகர்!!

அடுத்த சோதனை எனக்கு ஆடிட்டோரியத்தில் ஜெமினி படக் கிளிப்பிங்குகள் இடைவேளையில் போடும்போது வந்தது ...

தொடரும்

eehaiupehazij
14th September 2015, 08:55 PM
Nostalgia / Gap filler / Monotony breaker!


The song sequence that catapulted GG to the status of the unreigned King of Romance in Indian films!! Missiammaa's moonlight melody with his lucky charm pair Saaviththiri! This film always remains a crowd puller for its neat story line, enchanting music and captivating songs, subtle acting of all charachters making us feel that we also move with them in the screen proceedings, GG's handsome personality....

https://www.youtube.com/watch?v=oRrnQg4SboQ

eehaiupehazij
14th September 2015, 08:58 PM
ஜெமினி கணேசனுக்கான எனது மலரும் நினைவலைகள் !


ஒரு சிவாஜி ரசிகன் ஜெமினிக்காக தனி ஒருவன் ஆன கதை !


Part 3

எங்கள் பலகலைக் கழகத்தின் அறிஞர் அண்ணா ஆடிடோரியம் நகரிலேயே அனைத்துக் கல்லூரிகளின் அரங்கங்களை விட சிறப்பாக ப்ரொஜெக்டர் வசதியுடன் ஒரு மினி தியேட்டரைப் போலவே வடிவமைக்கப் பட்டதாகும். எங்கள் பலகலைகழக நாடக மன்றத்தின் சார்பில் ஒவ்வொரு வாரமும் (தேர்வுகாலங்கள் நீங்கலாக) கோவை திரைப்பட விநியோகஸ்தர்களுடன் பேசி நல்ல திரைப்படங்களை மாணவர்களுக்கான குறைந்த ரேட்டில் பெற்று திரையிடுவோம். பெரும்பாலும் சிவாஜி எம்ஜியார் படங்கள் பிறகு அத்தி பூத்தாற்போல ஜெமினி ஜெய் ரவி பிற இயக்குனர்கள் படங்கள் நல்ல இந்தி ஆங்கில திரைப்படங்களும் சனிக்கிழமை இரவு 8 மணிக்கு திரையிடப்படும் ! இடைவேளையில் Enjoy the Trailers/songs என்று பிற படங்களின் தேர்வு செய்யப்பட்ட காட்சிகளும் பாடல்களும் ஒரு அரைமணி நேரம் திரையிடப்ப்படும்போதுதான் ரசிககண் மணிகளின் குத்தாட்ட அலப்பறைகள் அதிரவைக்கும்!! (அந்த காலகட்டத்தில் கோ எஜுகேஷன் கிடையாது என்பது கொஞ்சம் ஆதங்கமான விஷயமே!!) சனிக்கிழமை மட்டுமே விளையாட்டு மைதானத்தில், ஜிம்மில் சாயந்திரம் கூட்டம் அலைமோதும்....நல்ல பசியெடுத்து கீரைஸ் சிக்கன் ஆனியன் பச்சடியுடன் சிப்ஸ் சேர்த்து ஒரு கட்டு கட்டுவார்கள்!
அந்த எனர்ஜி எல்லாம் ஆடிடோரியத்தில் ஆட்டபாட்டத்தில் கரைக்கத்தான் !!
பெரும்பாலும் நடிகதிலகத்தின் பாடல் காட்சிகளும் மக்கள்திலகத்தின் பாடல் காட்சிகளும் போட்டிபோட்டு ஆட்ட பாட்டத்துடன் ரசிக்கப்படும். ஜெமினி பாடல் காட்சிகளில் அரங்கம் அமைதியாகி விடும்! இருந்தாலும் சீனியர் நண்பர்கள் புன்னகையுடன் என் ரியாக்ஷனை கவனிப்பார்கள்!! திடீரென்று நாடகமன்ற செயலர் ஒரு சிலைடு போட்டார்....இந்தப் பல்கலைக் கழகத்தின் ஒரே ஒரு ஜெமினி ரசிகனுக்காக...என்று..மறுபடியும் எனக்கு 7.5 ஆரம்பித்தது!'

இனிய அதிர்ச்சியாக சாந்திநிலையம் படத்தின் இயற்கை என்னும் இளைய கன்னி பாடல் ஓட்டப்பட்டது! அப்போது அமைதிதான்!! அடுத்தது அவளுக்கென்று ஓர் மனம் ஜெமினி மழையில் நனையும் ஆயிரம் நினவு பாடல் போட்டவுடன் ஒரு கும்பல் கடுப்பாகி டக்கென்று என்னை தூக்கி திரையின் மேடையில் இறக்கி விட்டு கானா மூனாவென்று ஆட வைத்துவிட்டார்கள் !! கொஞ்சநேரம் களேபரம்தான்....அதற்கடுத்த வாரம் ஓரிஎண்டேஷன் டே ! வழக்கமாக இந்த நாளில் சீனியர் ஜூனியர் எல்லோரும் ராகிங் முடிந்து விட்டதை அறிவிக்க கலந்து நிறைய ஆடல் பாடல் நாடக நிகழ்ச்சிகளைத் தருவார்கள்!! எனக்கும் ஆர்கெஸ்ட்ராவில் "பாட்டு பாடவா''ஒரு பாடல் மட்டும் வாய்ப்பளித்தார்கள்!!

contd.,

eehaiupehazij
14th September 2015, 09:04 PM
ஜெமினி கணேசனுக்கான எனது மலரும் நினைவலைகள் !


ஒரு சிவாஜி ரசிகன் ஜெமினிக்காக தனி ஒருவன் ஆன கதை !


Part 4

இந்த ஓரிஎண்டெஷன்டே வரும் வரை ஒவ்வொரு இரவும் சுடுகாட்டில் விட்டலாச்சாரியாரின் வெள்ளை லெக்கிங்க்ஸ் போட்ட அடுப்புக்குள் கால் வைத்து விறகாக எரிக்கும் ஜெகன்மோகினி பேய்களுக்கு நடுவில் கும்மியடிப்பது போலத்தான்!

ராகிங் கடமையில் கொஞ்சம் கண்ணியமும் கட்டுப்பாடும் உண்டு!! எப்படி என்றால் இரண்டாமாண்டு மாணவர்கள் உச்ச கட்ட வெறியில் எங்களைப் பந்தாடும்போது மூன்றாமாண்டு சீனியர் அந்த வழியே வந்தால் இரண்டாமாண்டு மாணவர் எழுந்து நின்று தனது மரியாதையை தெரிவிப்பார். அது கட்டுப்பாடாம்! மூன்றாமாண்டு பெருசு உடனே எங்களைப் பரிதாபமாக ஒரு லுக் விட்டுவிட்டு 'ம்ம் நடத்துடா மாப்பிள்ளே'என்று விடை பெற்றுக் கொள்வார். அதுதான் கண்ணியமாம் !! இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்ப் போல இப்போதைய பாலா படங்களின் கேரக்டர்களின் மேக்கப்பில்தான் மீசையில்லாமல் அறை குறைக் கரண்டல் கிராப்புடன் ஷர்ட் இன் பண்ணாமல் ஷூ போடாமல் வெறும் பாத்ரூம் செப்பலுடன் ஒரு மார்க்கமான அடையாளத்துடன் திரிந்து கொண்டிருந்தோம்! விடியல் வந்தது!! எங்கள் வாழ்விலும் விடிவெள்ளி முளைத்தது ஒரிஎண்டேஷன்டே வடிவில்!!
பெண்வாசமே இல்லாத கேம்பஸ் ! அதனால் நிகழ்ச்சிகளின் மங்களம் கருதி ஒல்லிப்பிச்சான் வெண்ணை தேக முதலாமாண்டு மாணவர்களுக்கு டிராமாவுக்கு ஆளேடுக்கிறோம் என்ற சாக்கில் பெண்ணாக அரிதாரம் பூசி விடுவார்கள்!! இந்தநாள் எங்கள் கல்லூரி வளாக வாழ்க்கையில் மறக்க முடியாத 'நாங்கள் வயசுக்கு வந்த' டே ! ஆடிடோரியத்தில் விழா ஆரம்பிக்கும் முன்னர் கெட் டுகெதர் Buffet பீஸ்ட் புல்வெளியில்!!

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு என் ஆசிரியப் பெருந்தகைகளும் எனக்கு ஜெமினி முத்திரை குத்தி அடுத்த நான்கு வருடங்களிலும் முக்கியமான கலை நிகழ்ச்சிகளில் ஏ எம் ராஜா / பிபி ஸ்ரீனிவாஸ் பாடல்களை பாடச்சொல்லி .........ஒரே அன்புத் தொல்லைதான் போங்கள்!!

இன்னொரு நிகழ்ச்சியில் எனது சக நண்பர் ராமசாமி டிஎமெஸ் வாய்சில் என்னுடன் அவள் பறந்து போனாளே பாடும்போது ...ஒரே பேப்பர் அம்பாகப் பறந்து வந்து விழுந்து மேடை நிறைந்தது குப்பையால் .தனிக்கதை! எப்படியோ இந்தக் குட்டித் தீவு வாழ்க்கையில் நான் ஜெமினி வாய்ஸாக செட்டாகி விட்டேன் !!

1977ல் எங்கள் பல்கலைக்கழகத்தில் முத்தமிழ் விழாவில் காதல் மன்னர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு விவசாயம் பற்றி அசத்தியடித்த
கதை ..அவருக்கே நான் பாட்டுப்பாடவா பாடிக் காண்பித்தது....வரும் பகுதிகளில்...


Bye Friends for a short break till Vinaayakar Chadhurththi the day on which I presume we pass on to the new Part 5 of this thread!!Sorry for dumping my postings in haste...I join you all for Part 5 scheduled to be inaugurated by our beloved Madhuji!!

chinnakkannan
14th September 2015, 09:23 PM
சின்னா! பாடல் உங்களுக்கு பழசு. ஆனால் என்றும் எங்களுக்கு புதுசு.

[eo]


ஆஹா வாசு.. நன்றி.. இதான் கேட்டதும் கொடுப்பவர்ங்கறது..

*

chinnakkannan
14th September 2015, 09:30 PM
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்



ஜெய், ஜெயசுதா, மலையாளக் கரை ஜெயபாரதி நடித்தது. ஆனால் இப்படம் நான் பார்த்ததில்லை. பாடலோ அருமை. பாலாவின் ஏராளமான முத்திரைகளில் இதுவும் ஒன்று. பெண்மையின் கடமையையும், உயர்வினையும் பெருமை பேசும் பாடல். ஜெய், மற்றும் ஜெயபாரதி பங்கு கொண்டிருப்பார்கள்.

கடற்கரையில் இயல்பாக இப்பாடல் காட்சி படமாக்கப்பட்டிருக்கும். எங்கோயோ பிறந்த ஒன்று வேறு எங்கேயோ சேர்ந்து சொந்தங்கள் ஆகிவிடுவதை உதாரணங்களுடன் கவிஞர் வெகு அற்புதமாக எடுத்துரைக்கிறார்.

பாருங்கள்.

'கொடியோடு தோன்றிய மலர்கள்
குழலோடு சேருவதென்ன
ஒரு வீட்டில் தோன்றிய பெண்கள்
மறுவீடு தேடுவதென்ன'

பேசு மனமே பேசு... பேதை மனமே பேசு
நாலு வகை குணமும் நிறைந்தே நடை போடு
நாலு வகை குணமும் நிறைந்தே நடை போடு[/COLOR][/B]




வாசு..வெகு அழகான நான் ரசித்துக் கேட்கின்ற பாடல்.. இப்போ தான் வீடியோ பார்க்கிறேன்..புதிய வாழ்க்கை என்று தெரியாது..ஏதோ ரவி படமோ என எண்ணிவிட்டேன்.. தாங்க்ஸ் ஃபார் த படம் அண்ட் பதிவு..


தீஸ்ரி மன்சிலில் எனக்கு இந்தப் ப் பாட்டும் பிடிக்கும்.. ஆஜா..ஆஜா.. பாட்டு ரொம்பப் பிடிக்குமாக்கும்..

chinnakkannan
14th September 2015, 09:33 PM
//Bye Friends for a short break till Vinaayakar Chadhurththi the day on which I presume we pass on to the new Part 5 of this thread!!Sorry for dumping my postings in haste...I join you all for Part 5 scheduled to be inaugurated by our beloved Madhuj// ஹச்சோ சி.செ.. என்னாச்சு நல்லாத் தானே போய்க்கிட்டிருந்தது..

ரொம்ப நல்லா இருக்கு.. அடுத்த எபிசோட்க்குக் காத்திருக்கணுமா.. ம்ம் தேவனின் கோவில் மூடிய நேரம்..

தேவனின் கோவில் மூடிய நேரம்
நான் என்ன கேட்பேன் தெய்வமே
இன்று என் ஜீவன் தேயுதே
என் மனம் ஏனோ சாயுதே


வெகு அழகான வாணி ஜெயராமின் பாடல் தான் நினைவுக்கு வருகிறது..

https://youtu.be/Hv4Yr7m6V5s

eehaiupehazij
14th September 2015, 09:40 PM
Pension formalities and farewell functions from my old students and present colleagues Si Ka! I will be back on 17th to participate our new part 5 inauguration postings and then I can be back only during the second week of October, after deciding my new assignments!!
with regards to all our friends,
senthil

chinnakkannan
14th September 2015, 09:54 PM
ஷ்யூர். நோ ப்ராப்ளம் செந்தில். உங்கள் வேலைகளை முடித்துவிட்டு வாருங்கள்.. நாங்கள் அதுவரை காத்திருக்கிறோம்...:)

இப்போ என்ன பண்றது..எண்ணங்களை அலை பாய விடலாம்...:) பிடித்த அழகிய பாடல்.. எனக்குப் பிடித்த ந.தி..வாசு உங்களின் ஜெயசுதா!!! (ஹைய்யா..கண்ணாக்கு ஒரு காலம் வந்துடுச்சு :) )

https://youtu.be/w-l5vYDIh8U?list=RDfBfCNpRS4Ho

chinnakkannan
14th September 2015, 10:02 PM
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு என் ஆசிரியப் பெருந்தகைகளும் எனக்கு ஜெமினி முத்திரை குத்தி அடுத்த நான்கு வருடங்களிலும் முக்கியமான கலை நிகழ்ச்சிகளில் ஏ எம் ராஜா / பிபி ஸ்ரீனிவாஸ் பாடல்களை பாடச்சொல்லி .........ஒரே அன்புத் தொல்லைதான் போங்கள்!!// இப்போதும் பாடுகிறீர்களா.சி.செ...ஒரு ஆடியோஃபைல் எடுத்து விடுமேன்..

vasudevan31355
14th September 2015, 10:28 PM
வெகு அழகான வாணி ஜெயராமின் பாடல் தான் நினைவுக்கு வருகிறது..



சின்னா!

எனக்கு உயிரான அந்தப் பாடலைப் பாடியது சித்ரா அல்லவா? வாணி ஜெயராம் இங்கு எங்கிட்டு வந்தார்? எனிவே எனக்கு மிக மிக மிக மிக மிக மிக பிடித்த பாடலுக்கு நன்றி!

vasudevan31355
14th September 2015, 10:31 PM
ஷ்யூர். நோ ப்ராப்ளம் செந்தில். உங்கள் வேலைகளை முடித்துவிட்டு வாருங்கள்.. நாங்கள் அதுவரை காத்திருக்கிறோம்...:)

இப்போ என்ன பண்றது..எண்ணங்களை அலை பாய விடலாம்...:) பிடித்த அழகிய பாடல்.. எனக்குப் பிடித்த ந.தி..வாசு உங்களின் ஜெயசுதா!!! (ஹைய்யா..கண்ணாக்கு ஒரு காலம் வந்துடுச்சு :) )



பிடிக்கும் சின்னா! ஜெயசுதா கள்ளமில்லா பிள்ளை போல் கொள்ளை அழகு. நீர் பார்த்து பயந்த சுபாஷிணியும் பிடிக்கும். ஆனால் எல்லோருமே மஞ்சுளாவிற்குப் பிறகுதான்.

vasudevan31355
14th September 2015, 10:35 PM
ஜெயசுதா என்று சொல்லி விட்டீர். இந்தாருங்கள். 'பிராயச்சித்தம்' படத்தில் அழகு ஜெயசுதாவும், ஜெய்சங்கரும் பாடும் அதிகம் பாப்புலர் ஆகாத டூயெட்.

'தக்கிடத்தா ஓஹோய் திக்கிடதா

தத்தி தத்திப் போறா குயிலக்கா'


பாடகர் திலகமும், ராட்சஸியும் பாடும் பாடல். வழக்கமான ஜெய் பாடல். சுதா டிரெஸ் கலக்கல்.


https://youtu.be/csljOEQK31Y

vasudevan31355
14th September 2015, 10:37 PM
சிவாஜி செந்தில் சார்

பணிகளை எல்லாம் சிறப்பாக முடித்து விட்டு வாருங்கள்.

rajraj
14th September 2015, 10:47 PM
From Savithri(1941)

maname kaNamum maravaadhe jagadeesan malar padhame..........

http://www.youtube.com/watch?v=ZwsgfnfPauE


Have fun senthil! Don't take on too much. Relax for a while ! :)

vasudevan31355
14th September 2015, 10:50 PM
அதே பிராயச்சித்தம் படத்தில் சுசீலா பேபி ராணிக்காக பாடிய அற்புதமான பாடல் ஒன்று. ராணி வளர்ந்து கொஞ்சம் பெரிய சிறுமியாகத் தெரிவார். உடன் மாஸ்டர் பிரபாகரன். அவரும் வளர்ந்து வரும் பையனாக தெரிவார். இது ஒரு மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்புப் படம்.

மயங்குகிறாள் இந்த மதுரை மீனாட்சி
மாயவன் அண்ணனைக் காணவில்லை என்று

அண்ணன் பெரிதானதும் ஜெய். தங்கை யார் சொல்லுங்கள் பார்ப்போம்.


https://youtu.be/USxzzkJVfx0

rajraj
15th September 2015, 02:26 AM
From Sakuntalai(1941)

engum nirai nada brahmam.........

http://www.youtube.com/watch?v=aNcfPoTj1wQ


(no video clip available)

madhu
15th September 2015, 05:16 AM
அண்ணன் பெரிதானதும் ஜெய். தங்கை யார் சொல்லுங்கள் பார்ப்போம்.


இப்படி ஒரு லட்சியம் இருந்தால் லக்கு இருப்பவர்கள் இலக்கை எட்டி விடுவார்கள். me too.

eehaiupehazij
15th September 2015, 08:18 AM
Silhouettes and Shadows too can sing and dance!!
நிழலும் நிழல் படிவங்களும் கூட நடிக்க முடியும் மதுர கீதங்களில் !!


இயக்குனரின் கண்ணான ஒளிப்பதிவாளர் கற்பனைத் திறன் மிக்கவரென்றால் நிழலும் நிழல் படிவங்களும் கூட ஒரு நடிகரின் நடிப்புப் திறமையை வெளிப்படுத்தும்.

ஸ்ரீதர் பாலசந்தர் போன்ற முன்னோடி புதுமை இயக்குனர்கள் பாடல் காட்சியின் கருத்தாழத்திற்கேற்ப ஒளிப்பதிவாளரின் லைட்டிங் சென்ஸ் சரியான முறையில் பயன்படுத்தி ரசிகர்களின் கண்களுக்கு புதுமையான கோணங்களில் விருந்தளித்தனர் !

நிழல்படிவ / நிழல் பாடல் 1
மயக்கமா கலக்கமா...சுமைதாங்கியில் அற்புதமான கோணங்களில் ஜெமினியின் உருக்கையும் உருக வைக்கும் உச்ச நடிப்பு!

https://www.youtube.com/watch?v=gFcOsnk8DM0

பாடல் 2
பாதகாணிக்கை பூஜைக்கு வந்த மலரே வா !

https://www.youtube.com/watch?v=lyN5063Umtg

பாடல் 3 :
நூற்றுக்கு நூறு / நித்தம் நித்தம் ஒரு புத்தம் புதிய சுகம்

https://www.youtube.com/watch?v=tlk8SJAjgn4

eehaiupehazij
15th September 2015, 08:23 AM
வாசு சார்
நடிகர்திலகம் அவரது உன்னதமான உச்சகட்ட வாழ்க்கைத் தத்துவப் பாடல் ஒன்றில் கடற்கரையில் அப்படியே நிழல் படிவமாகத் திரும்புவார் !
அது நடிகர்திலகம்தான் என்பதை பள்ளிக்குழந்தையும் சொல்லிவிடும் !!
அப்பாடலின் நிழல் படிவக் காட்சியும் ஏனைய நடிகர்திலகம் சார்ந்த நிழல் காட்சிகளும் உங்களது வர்ணிப்பில்தான் உயிர்பெறும் ! ப்ளீஸ்....

RAGHAVENDRA
15th September 2015, 09:20 AM
https://www.youtube.com/watch?v=6VRWo6OHR08

சன் டிவிக்கு உளமார்ந்த நன்றியும் பாராட்டுக்களும். மிக மிக அபூர்வமான ஆவணமாக ஆகி விட்ட இந்த வீடியோவில் தமிழ்த்திரையுலகின் சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவரான திரு டி.ஜி. லிங்க்ப்பாவின் சிறப்புரை இடம் பெற்றுள்ளது. இன்றைய தொலைக்காட்சி இசை நிகழ்ச்சிகளுக்கெல்லாம் ஒரு முன்னோடியாகத் திகழ்ந்த சன் டிவியின் பஜாஜ் சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சியை ஏவி.ரமணன் நடத்தி வந்து நாடெங்கும் புகழ் பெற்றது. ஞாயிற்றுக்கிழமை காலைகளில் அனைவரும் தவறாமல் ஆஜராகும் தொலைக்காட்சி நிகழ்ச்சியாக பிரபலமானது. இதை நல்ல தெளிவான காணொளியாகத் தரவேற்றிய சன் டிவிக்கு மிண்டும் பாராட்டுக்கள்.

RAGHAVENDRA
15th September 2015, 09:24 AM
https://www.youtube.com/watch?v=HZvCBGRfO28

பி.எஸ்.சசிரேகா அவர்கள் கலந்து கொண்ட சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சி

chinnakkannan
15th September 2015, 10:15 AM
வாசு சார்
நடிகர்திலகம் அவரது உன்னதமான உச்சகட்ட வாழ்க்கைத் தத்துவப் பாடல் ஒன்றில் கடற்கரையில் அப்படியே நிழல் படிவமாகத் திரும்புவார் !
அது நடிகர்திலகம்தான் என்பதை பள்ளிக்குழந்தையும் சொல்லிவிடும் !!
அப்பாடலின் நிழல் படிவக் காட்சியும் ஏனைய நடிகர்திலகம் சார்ந்த நிழல் காட்சிகளும் உங்களது வர்ணிப்பில்தான் உயிர்பெறும் ! ப்ளீஸ்....

hi good morning all

kanavugaLE kanavugaLE song from uththaman?

RAGHAVENDRA
15th September 2015, 10:24 AM
சி.க. சார்

https://www.youtube.com/watch?v=5w7hvimVl50

chinnakkannan
15th September 2015, 10:49 AM
ஆஹா..ராகவேந்தர் சார்.. மிக்க்க நன்றி..கொஞ்சம் யோசித்துக் கொண்டே இருந்தேனா.. அகெய்ன் தாங்க்ஸ்

eehaiupehazij
15th September 2015, 10:59 AM
Aaru maname aaru si ka!

eehaiupehazij
15th September 2015, 12:44 PM
ஜெமினி கணேசனுக்கான எனது மலரும் நினைவலைகள் !


ஒரு சிவாஜி ரசிகன் ஜெமினிக்காக தனி ஒருவன் ஆன கதை !


Part 5


தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் BSc வேளாண்மை/தோட்டக்கலை BE வேளாண்மைப் பொறியியல்...என்று
பல்வேறு பிரிவுகளில் நாங்கள் சேர்ந்திருந்தாலும் ஹாஸ்டலில் அறைகளில் கலந்தே இடம் போடுவார்கள் ... மாணவர்கள் ஒற்றுமை வேண்டி!

பிராக்டிகல் வகுப்புக்கள் காலை 7 மணிக்கே ஆரம்பித்துவிடும்! எல்லாப் பிரிவினருக்கும் முதலாண்டு பாடப்பிரிவுகள் பொதுவானவையே! நாங்களும் பாடனி ஜுவாலஜி எல்லாம் படிக்க வேண்டியிருந்தது எங்களுக்கும் 5 சென்ட் நிலத்தில் பல்வேறு பயிர்களை வளர்த்துக்காட்டும் பயிற்ச்சிகளும் பூச்சி பிடித்தலும் உண்டு முதலாமாண்டில் நாங்கள் அனைவருமே சீனியர்களின் நிலங்களில் பாடுபட்டு உழைத்து அவர்களுக்கு உதவுவோம் யாரால் நாங்கள் அவதிக்குள்ளானோமோ அதே சீனியர்கள்தான் அடுத்த நான்கு வருடங்களுக்கும் நல்ல வழிகாட்டிகளாக இருந்து புரபெஷனல் மேன்னர்ஸ் எல்லாம் கற்றுக்கொடுத்தனர்! இன்றுவரை அந்த நல்லுறவு தொடரவே செய்கிறது !! இந்தவிதமாக கலகலப்பாகவும் சுறுசுறுப்பாகவும் வாழ்க்கைசக்கரம் ஓடிக்கொண்டிருந்தது!

ஒவ்வொரு வருடமும் நாடகமன்றத்தின் சார்பாக மூன்று நாட்கள் இயல் இசை நாடக முத்தமிழ் விழா நடத்தப் படும். 1977ல் இறுதியாண்டு பயில்கையில் நானும் மாணவர் மன்ற இணை செயலராக இஞ்சினியரிங் சார்பாக தேர்ந்தெடுக்கப் பட்டேன், நாடகவிழாவுக்கு பெரும்பாலும் புகழ் பெற்ற திரைநட்சத்திரங்கள் தலைமை தாங்க அழைக்கப்பட்டு அவர்களது கலையுலக அனுபவங்களை பகிர்ந்து கொள்வார்கள் அந்த வகையில் எனது சிறுமுயற்சியால் அந்தமுறை காதல்மன்னரையும் சாவித்திரியம்மாவையும் அழைக்க முடிவுசெய்யப்பட்டது ! சென்னையில் சென்று சந்தித்தபோது மிகமிக மகிழ்வுடன் ஒப்புக்கொண்டார் ஜெமினி!! சாவித்திரியால் வர இயலவில்லை!!

ஏர்போர்ட்டிலிருந்து எங்கள் பல்கலைக்கழகக் காரில் ஜம்மென்று கோட்சூட்டில் நிஜ ஹீரோவாக பளீரென்ற புன்னகையுடன் வந்திறங்கியவரை வளாக விருந்தினரில்லத்துக்கு அழைத்துச் சென்றோம் ! எப்பேர்ப்பட்ட கனவானுடன் உரையாடுகிறோம் என்பதை அறிவுபூர்வமாக அவர் அளவளாவியதிலிருந்து உணர்ந்து கொண்டோம்!!

கொஞ்சநேர இடைவெளியில் அவரது ரசிகன் என்ற முறையில் அவரது நடிப்பு பாடல்கள் பற்றி உரையாடினோம் ! அவரது பாட்டுப்பாடவா நான் இரண்டு ஸ்டான்சா பாடியதும் அவரும் மகிழ்வுடன் கலந்துகொண்டார் !! வந்த இடத்தில் அவரது திரைக் குரலில் ஒருவர் பாடியதைக் கேட்ட மகிழ்வை அவரால் மறைக்க இயலவில்லை.... மலரும் நினைவுகளில் கொஞ்சம் மூழ்கினார் !! ஜென்டில்மேன் ஜெமினி....என்னவொரு பொருத்தமான அடைமொழி!!

நிகழ்ச்சி ஆரம்பித்தது ....அங்கொன்றும் இங்கொன்றுமாக எப்போதும்போல சில அவலக்கூப்பாடுகள் அவரை சாம்பார் என்று விளித்தன! மனமுதிர்ச்சியும் கல்விப் பண்பும் கொண்ட ஜெமினி புன்னகையுடன் கேட்டுக் கொண்டார் ..பிறகு நடந்தது ....மாயாஜாலம்!! அவர் எப்பேர்ப்பட்ட அறிவுஜீவி என்பதை ஆணியடித்தாற்போல ஒரு லெக்சர் அதிரடியாகப் போட்டுத்தாக்கினார்!! கூக்குரல்கள் வலுவிழந்து அவர் பேச்சுக்கு அடிமையாகி கூட்டமே மகுடிக்குக் கட்டுப்பட்ட நாகமாக அதிர்ச்சியில் உறைந்து அவர் பேச்சை ஆரவாரத்துடன் ரசிக்க ஆரம்பித்த விந்தை !! எந்தவிதமான குறிப்புக்களுமின்றி ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக வேளாண்மை தோட்டக்கலை பொறியியல் நுட்பங்களைக் கோடிட்டு அவர் ஆற்றிய உரை அவர் ஒரு தேர்ந்த விரிவுரையாளர் என்பதை அறுதி செய்தது !

இடையிடையே அவரது படங்களிலிருந்து மோனோ ஆக்டிங்கில் கலக்கினார் ! ஆங்கிலத்திலும் தமிழிலும் தங்குதடையற அவர் ஆற்றிய சிறப்புரை பல்கலைக் கழக மனமகிழ் மன்ற வரலாற்றிலேயே வேறு எந்த ஒரு திரைக்கலைஞரும் நெருங்கமுடியாவண்ணம் அவ்வளவு வரவேற்பைப் பெற்றதாகும்! எம்ஜியார் சிவாஜியை மட்டுமே முன்னிறுத்தி வந்த எங்கள் வளாகத்தில் அனைத்துத் தரப்பினரையும் இந்த நிகழ்ச்சி மூலம் மனம் கவர்ந்து இதயங்களில் நிறைந்தார் காதல் மன்னர் ! அடுத்த நாள் ஆசிரியர் மாணவர் பணியாளர் அனைத்துத் தரப்பிலிருந்தும் எனக்கு நன்றிகலந்த வாழ்த்துகள் வந்தன !
ஒரு நல்ல திரைக்கலைஞருக்கு என்னால் முடிந்த மரியாதையை செலுத்தும் பேறு பெற்றமைக்காக மகிழ்ந்தேன் !!

தொடர் நிறைவு பெற்றது

chinnakkannan
15th September 2015, 02:53 PM
சி.செ.. ரொம்ப்ப ஷார்ட் அண்ட் ஸ்வீட்டா முடிச்சுட்டீங்க.. வெகு அழகு..இன்னும் எழுதியிருக்க்லாம்..

இது தாங்க நான் / நாம் எதிர் பார்த்தது/பார்க்கறது..இன்னொவேட்டிவ்.. ஜஸ்ட் லைக் தட் ததும்பும் நகைச்சுவை எல்லாம் எப்படி உங்களுக்கு - அந்தக்கால இளவரசிகள் அணியும் ஆடைகள் போல - கச்சைகட்டிக் கொண்டு உடன் வந்தன..!

சிம்பிள் அண்ட் ஸ்வீட் ரொம்ப தாங்க்ஸ்..

இதைத்தான் நான் சொல்லி வந்தேன்..

அதுக்காக இப்படியே விட்டுட மாட்டோமாக்கும்.. அஞ்சாம் பாகத்துல ஒரு மினி மேக்ஸி தொடர் எழுதி எங்களை மகிழ்விக்கவேணுமாய்க் கேட் கொள்..கிறேன் :)

vasudevan31355
15th September 2015, 03:00 PM
ராகவேந்திரன் சார், செந்தில் சார், சின்னா!

நிழலுருவத்தோடு நிற்கும் இந்தத் 'திருடனி'ன் போஸை எவரால் மறந்து விட முடியும்? எவரால் இப்படியெல்லாம் நினைத்துப் பார்க்க இயலும்? (என்னுடைய சேமிப்பிலிருந்து)

http://i60.tinypic.com/1zx8a55.jpghttp://i60.tinypic.com/167m93p.jpg
http://i58.tinypic.com/xd8gsz.jpghttp://i59.tinypic.com/mta6nd.jpg

vasudevan31355
15th September 2015, 03:03 PM
செந்தில் சார்,

ஜெமினியுடனான தங்கள் அனுபவங்கள் சுவையோ சுவை. ஷிப்டிலேயே படித்து ரசித்து விட்டேன்.

vasudevan31355
15th September 2015, 03:16 PM
'மணிப்பயல்' படத்திலிருந்து ஒரு அருமையான பாடல். மாஸ்டர் சேகர் பாடும் பாடல். இன்று அறிஞர் அண்ணா பிறந்த தினம். அதையொட்டி இந்தப் பாடல். (இதே படத்தில் 'காஞ்சியிலே ஒரு புத்தன் பிறந்தான்' என்று அண்ணா புகழ் பாடும் இன்னொரு பாடலும் உண்டு)


நான் உள்ளே இருந்து வெளியே வந்தேன் உலகம் தெரிஞ்சுதடா
அட நல்லது கெட்டது நாளும் எனக்கு நல்ல்லாப் புரிஞ்சுதடா
அம்மா வயித்துல சும்மாக் கிடந்தேன் ஆபத்து இல்லையடா
அட பத்தாம் மாசம் பெத்துப் போட்டா ஆயிரம் தொல்லையடா

நான் அண்ணா போலே
அறிஞர் அண்ணா போலே பண்புடையோர்க்கு
செருப்பாய் இருப்பேன்டா
இங்கு அடுத்தவர் குடியை கெடுத்திடும் பேர்க்கு
நெருப்பாய் இருப்பேன்டா

சின்னாவுக்கு மட்டும் ஒரு கேள்வி. சேகருக்கு பாடலைப் பாடும் பின்னணிப் பாடகரோ பாடகியோ அது யார்?


https://youtu.be/gMT0fBwNsWc

chinnakkannan
15th September 2015, 03:19 PM
//சின்னாவுக்கு மட்டும் ஒரு கேள்வி. சேகருக்கு பாடலைப் பாடும் பின்னணிப் பாடகரோ பாடகியோ அது யார்?// அன்பின் வாசு, ஜெ.சு பாட்டும் இந்தப் பாட்டும் ஈவ்னிங்க் தான் பார்த்துச் சொல்வேன்..ஷமிக்கணும்..:)

ஜெ.சு இரு நிலவுகள்ல நன்னாயிட்டு இருந்ததா நினைவு இல்லியோ..வேறென்ன குட் ஜெ.சு. மூவீஸ்..

vasudevan31355
15th September 2015, 03:20 PM
http://pre05.deviantart.net/d3fd/th/pre/i/2012/240/0/0/c__n__annadurai_by_kleioamon-d5cpva9.jpg

http://i.ytimg.com/vi/NnHl_unea74/hqdefault.jpg

எங்கள் தமிழன்னை எத்தனையோ தவமிருந்து
திங்களாய் செங்கதிராய்
திருநாட்டின் ஒளி விளக்காய்
வள்ளுவன் குரல் போல
வடிவமோ சிறிதாக
உள்ளமோ இந்த உலகினும் பெரிதாக

காஞ்சியிலே ஒரு புத்தன் பிறந்தான்
கொண்ட கருணையினால் எங்கள் நெஞ்சில் நிறைந்தான்
காஞ்சியிலே ஒரு புத்தன் பிறந்தான்
கொண்ட கருணையினால் எங்கள் நெஞ்சில் நிறைந்தான்

அண்ணாவென்றேல்லோரும் அழைக்க வந்தார்
ஆயிரம் தலைமுறை தழைக்க வந்தார்
அண்ணாவென்றேல்லோரும் அழைக்க வந்தார்
ஆயிரம் தலைமுறை தழைக்க வந்தார்

அண்ணா அண்ணா அண்ணா
எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா
அண்ணா அண்ணா அண்ணா
எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா

எதையும் தாங்கும் இதயம் கொண்டு
தன்னை எதிர்ப்பவர் மீதும் கனிவு கொண்டு
எதையும் தாங்கும் இதயம் கொண்டு
தன்னை எதிர்ப்பவர் மீதும் கனிவு கொண்டு
வைதவர் யாவரும் வாழட்டும் என்றே
வாழ்த்திய இதயம் அதுவல்லவா
அது வள்ளுவன் காட்டிய வழியல்லவா

மாற்றான் தோட்டது மல்லிகைக்கும்
நல்ல மனம் உண்டு என்றே சொல்லியவர்
மாற்றான் தோட்டது மல்லிகைக்கும்
நல்ல மனம் உண்டு என்றே சொல்லியவர்
கடமை கண்ணியம் கட்டுப்பாடுதான்
தாரக மந்திரம் ஆக்கியவர்
நம் தாழ்வுகள் எல்லாம் போக்கியவர்

அண்ணா அண்ணா அண்ணா
எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா

மானத்தை காத்திடும் நெசவாளர்
அந்த மக்களின் கண்ணீர்தனை பார்த்தார்
நாடெங்கும் துணிகளை தோள்களில் சுமந்து
நலிந்திடும் ஏழைக்கு வாழ்வளித்தார்
மக்கள் நலம் பெறவே ஒரு வழி வகுத்தார்

அண்ணா அண்ணா அண்ணா
எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா

ஏழைகள் சிரித்திட அரசமைத்தார்
அதில் இறைவனை காண்போம் என உரைத்தார்
எரிந்திடும் குடிசையில் வருந்திடுவோர்ற்கு
எரியா வீடுகள் அமைத்தளித்தார்
அங்கு எரியும் விளக்காய் அவர் இருந்தார்

சென்னை என்று ஒரு பெயர் மாற்றி
அதை செந்தமிழ் நாடென பெயர் சூட்டி
சென்னை என்று ஒரு பெயர் மாற்றி
அதை செந்தமிழ் நாடென பெயர் சூட்டி
பாரதி பாடிய பைந்தமிழ் நாட்டை
பாரினில் மீண்டும் காட்டியவர்
நம் பழிகள் அனைத்தையும் மாற்றியவர்

எல்லோர்க்கும் அண்ணன் அவன்
இல்லார்க்கு செல்வ மகன்
நல்லோர்கள் உள்ளம் எல்லாம்
நாள்தோறும் வாழ்பவன்

சொன்னால் மனம் பதைக்கும்
சொல்லவோ வாய் பதைக்கும்
தன்னந் தனிமையிலே
தானுறங்க போனானோ

வாங்க கடல் அலையே
வாய் மூடி தூங்கும் எங்கள்
தங்கத் தமிழ் மகனை
தாலாட்டி பாடினையோ

பாடு நீ பாடு
பைந்தமிழர் நாடென்று
ஓடி உழைத்த மகன்
உறங்கட்டும் அமைதியிலே
ஓடி உழைத்த மகன்
உறங்கட்டும் அமைதியிலே
அமைதியிலே

அண்ணா அண்ணா அண்ணா
எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா

காஞ்சியிலே ஒரு புத்தன் பிறந்தான்
கொண்ட கருணையினால் எங்கள் நெஞ்சில் நிறைந்தான்
அண்ணாவென்றேல்லோரும் அழைக்க வந்தார்
ஆயிரம் தலைமுறை தழைக்க வந்தார்

அண்ணா அண்ணா அண்ணா
எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா

chinnakkannan
15th September 2015, 03:22 PM
//நிழலுருவத்தோடு நிற்கும் இந்தத் 'திருடனி'ன் போஸை எவரால் மறந்து விட முடியும்? எவரால் இப்படியெல்லாம் நினைத்துப் பார்க்க இயலும்? (என்னுடைய சேமிப்பிலிருந்து) // குரு.. இந்த நீலவானம் கடைசி ஷாட் பொம்மையோட போவாகளே ந.தி.அதுல நிழல் வருமா என்ன..

chinnakkannan
15th September 2015, 03:23 PM
//காஞ்சியிலே ஒரு புத்தன் பிறந்தான்
கொண்ட கருணையினால் எங்கள் நெஞ்சில் நிறைந்தான்// இந்த ப்பாட்டு..சின்ன வயதில் வீட்டின் முக்கில் ஒவ்வொரு மீட்டிங்கின் போதும் போடுவார்கள்.. ரொம்ப நாளைக்கு இது கட்சிப் பாடல் என்றே எண்ணியிருந்தேன்.

vasudevan31355
15th September 2015, 03:36 PM
//நிழலுருவத்தோடு நிற்கும் இந்தத் 'திருடனி'ன் போஸை எவரால் மறந்து விட முடியும்? எவரால் இப்படியெல்லாம் நினைத்துப் பார்க்க இயலும்? (என்னுடைய சேமிப்பிலிருந்து) // குரு.. இந்த நீலவானம் கடைசி ஷாட் பொம்மையோட போவாகளே ந.தி.அதுல நிழல் வருமா என்ன..

இல்லை சிஷ்யா!:) வராது. ஏர்போர்ட் ரன்வே போல இருக்கும் ரோட்டில் நடிகர் திலகம் சிறு புள்ளியாய் மறையும் வரை நிழல் இருக்காது. ஆனால் அதற்கு முன் சகஸ்ரநாமத்திடம் பேசி விட்டு செல்லும்போது அந்த இருட்டில் விளக்கின் வெளிச்சம் இவர் மீது மட்டும் கவிழ்ந்து பட, அந்த பொம்மையை ஏந்திக் கொண்டு இவர் செல்லும்போது அப்போது நிழலுருவம் தெரியும். பார்க்கரீயளா?

http://i57.tinypic.com/29pc38m.jpg

chinnakkannan
15th September 2015, 03:44 PM
:) nice vasu..ரசிகர் என்றால் நீரல்லவோ ரசிகர்.. ந.தி. முதல் இயற்கை நதி வரை என்று உங்களை வைத்தே நீங்கள் ரசிப்பதை வைத்தே கட்டுரைத் தொடர் எழுதலாம் போல இருக்கே.. தாங்க்ஸ்..ஃபடக் ஃபடக் நு பக்கெட் கொடுக்கற வேகத்தைப் பார்த்தா பாக்கெட்லயே வச்சுருக்கிறீர் பக்கெட்ஸ்போல இருக்கே :)

chinnakkannan
15th September 2015, 03:45 PM
ஆனா சுபாஷிணி மேட்டர் இன்னும் சொல்லவில்லை..சொல்லாமல் ஊருக்குப் போய்விட்டு வந்த பிறகும் கூட வாயைத் திறக்கவில்லை என இந்த சிஷ்யனுக்கு வருத்தம் என ஆன்றோர்கள் சொல்வார்கள் பிற்காலத்தில்! (ஹப்ப்ப்பா எவ்ளோ காம்ப்ளிகேட்டட் வாக்கியம்!)

RAGHAVENDRA
15th September 2015, 04:24 PM
(ஹப்ப்ப்பா எவ்ளோ காம்ப்ளிகேட்டட் வாக்கியம்!)

இதை விட ஆயிரம் மடங்கு காம்ப்ளிகேடட் வாக்கியங்களெல்லாம் சட்டசபையிலேயே பேசியாச்சாக்கும்... இதற்கு அந்த அண்ணாவே சாட்சியாக்கும்...

RAGHAVENDRA
15th September 2015, 04:27 PM
இத்தனை சிறிய மனிதனின் தலையில் எத்தனை சுமைகளடா..

இந்த வரிகளின் போது சுற்றிலும் நிழல் கப்பி, ந.தி.யை மட்டும் காமிரா ஃபோகஸ் பண்ணும்.

வாசு சார்.. என்ன அருமையான ஷாட்.. தியேட்டர் ரெண்டாயிடுமே..

ஷேடோ ஃபோகஸில் கை தட்டல் வாங்கியவரும் நம்ம தலைவராச்சே.. எதைத் தான் விட்டு வைத்தார்...

https://www.youtube.com/watch?v=56JMIqJZ5xY

chinnakkannan
15th September 2015, 05:30 PM
நிழல் பாட்டுக்கள் என்றாலே முதலில் நினைவுக்குவருவது சின்னத்திரையிலிருந்து ஒரு பாடல்.. ரயில் ஸ்னேகம் சீரியல்.. அந்த வீணைக்குத் தெரியாது அதை ச் செய்தவன் யாரென்று..

**

அவளோ வாழ்க்கையில் காதலனிடம் ஏமாந்தவள்.. தற்கொலை செய்ய முயற்சிக்கையில் ஒரு வாலிபனால் காப்பாற்றப் படுகிறாள்.. அவனிடம் காதலனிடம் ஏமாந்துவிட்டேன், இப்போது இன்னொரு உயிர் வளர்கிறது எனச் சொல்லி அதனால் தான் இறக்க முயன்றேன் எனும்போது அந்த வாலிபன் - நிழல்கள் ரவி - தற்கொலை செய்வது கோழைத்தனம் அமுதா (இவரும் நிழல்களில் அறிமுகமான்வர்)..வேண்டுமானால் நான் ஒரு ஊருக்குப் ப்ராஜக்ட் ஒன்றுக்காகப் போகிறேன்.. நான் ஒரு அனாதை..சோ நோ ப்ராப்ளம்..உனக்குக் குழந்தைபிறக்கும் வரை என்னிடம் தங்கு..பின் ஒரு வேலைவாங்கித்தருகிறேன்..அந்தக் குழந்தையை வளர்..துணிச்சலாக..ஓ.கேவா.. நோ எமோஷனல் அட்டாச் மெண்ட் “ என்று சொல்ல அவளும் அவனுடன் வந்து அட்டகட்டி என்னும் இடத்தில் தங்குகிறாள்..

அவளுக்குக் குழந்தையும் பிறக்கிறது..

ஏதோ ஒரு மனஸ்தாபம் ஆர்க்யூமெண்ட் டால் அவனுக்கு மூட் அவுட் ஆகி நண்பனுடன் சென்று குடித்துவிட்டு வருகிறான்..வீட்டில் வந்து உறங்கியும் விடுகிறான்.. விடிந்து பார்த்தால்- எனக்கு உங்கள் மீது நம்பிக்கை போய்விட்டது என ஸ்லேட்டில் எழுதியிருக்க.பின் தேடுகிறான்..மாடியில் தான் இருக்கிறாள்..அந்த சந்தர்ப்பத்தில் குழந்தையை வைத்து அவன் பாடுகிறான்..

இந்த வீணைக்குத் தெரியாது.. என்று (பாடலில் ஸ்லேட்டில் என்னை மன்னிக்கவும் என்று எழுதிவைத்திருக்கிறான்..பாடலின் முடிவில் அவளும் வந்து எழுத..அது என்னையும் மன்னிக்கவும் என மாறியிருக்கும்..கே.பி.டச்)

என்னை மிகக் கவர்ந்த பாடல்..இதில் நிழ்லும் அழகாக் இருக்கும்..

https://youtu.be/-JOM2WweBi8


சித்ரா வெர்ஷனும் அழகாக இருக்கும்..

https://youtu.be/RmCNuf2JuoQ

vasudevan31355
15th September 2015, 05:44 PM
ஆனா சுபாஷிணி மேட்டர் இன்னும் சொல்லவில்லை..சொல்லாமல் ஊருக்குப் போய்விட்டு வந்த பிறகும் கூட வாயைத் திறக்கவில்லை என இந்த சிஷ்யனுக்கு வருத்தம் என ஆன்றோர்கள் சொல்வார்கள் பிற்காலத்தில்! (ஹப்ப்ப்பா எவ்ளோ காம்ப்ளிகேட்டட் வாக்கியம்!)

சின்னா!

இதுல மட்டும் எப்படி இவ்ளோவ் ஞாபக சக்தி?:)

vasudevan31355
15th September 2015, 05:50 PM
சிலேட், சாக்ஸ் இல்லாம பாலச்சந்தர் எதுங்காணும்.:) நல்லா எழுதியிருக்கீர் ஒய்! நான் எந்த டிவி சீரியலும் பார்த்தது கிடையாது எக்செப்ட் நடிகர் திலகம் நடித்த 'மீண்டும் கௌரவம்'. ஆங்! மறந்துட்டேன். 'மர்ம தேசம்' மட்டும் முச்சூட பார்த்திருக்கேன். ஸ்ப்ளிட் பெர்சனாலிட்டி. அன்னியனுக்கு முன்னோடி. சரியா? மத்தபடி சீரியல்னா 5 கிலோமீட்டருக்கு அந்தாண்டை இருப்பேன்.

chinnakkannan
15th September 2015, 06:10 PM
//சீரியல்னா 5 கிலோமீட்டருக்கு அந்தாண்டை இருப்பேன்.// Me Too.. vasu. இந்த ரயில் சினேகம் துபாய்ல இருக்கறச்சே வீடியோ கேசட்டா வந்தது..அப்பப் பார்த்தது..அப்புறம் லேடஸ்டா டிவிடி ரெண்டுவருஷத்துக்கு முன்னால வாங்கினேன்.. நல்லா இருக்கும்.. நீங்க 5 கிமீ அந்தண்டை இருப்பீங்கன்னா நான் சேனல் மாத்தறச்சே கண்ல பட்டுச்சுன்னா கைல பாய்ல்ஸ் - கொப்புளங்கள் வரும்..அந்தளவுக்கு அதிர்ச்சி..

இந்த மர்ம தேசம் நீங்க சொல்றது விடாது கருப்பு..ம்.தே 2 - அது டிவில வர்றச்சே வீடியோல ரெகார்ட் பண்ணி வச்சுருப்பாங்க வீ.கா. ஆபீஸ்லருந்து வந்ததும் அதைப் பார்ப்போம்..துபாயில் இருந்த போது.. ம.தே 1 - ரகசியம் அது டிவிடில வாங்கி ஒரு பத்து நாள் பார்த்து முடிச்சேன்.. அது நல்லா இருந்தது..யூ ட்யூபிலும் இருக்கு..முடிஞ்சா பாருங்க..

இந்த ரயில் சினேகத்தோட கதையையே இன்னும் விரிவாக டி.எஸ்.ஸி ஃபாண்ட்ல 2004 ல எழுதியிருக்கேன்.. ஒரு பத்து பதினைந்துபக்கமாவது வரும்..என்கிட்ட ஹார்ட் காப்பி தான் இருக்கு..ஸாஃப்ட் காப்பி இல்லை :sad:

chinnakkannan
15th September 2015, 06:11 PM
இதுல மட்டும் எப்படி இவ்ளோவ் ஞாபக சக்தி?// ஜெனரல் நாலெட்ஜ் கூட்டற விஷயங்களை மறக்க மாட்டேனாக்கும் :)

vasudevan31355
15th September 2015, 06:17 PM
ஜெயசுதா பத்தி கேட்டிருந்தீங்களே!

பாரத விலாஸ்ல வருவாரே!

http://i.ytimg.com/vi/e07i8bKC0vM/hqdefault.jpg

அப்புறம் செம கிளாமரா சிவக்குமார் நடிச்ச பட்டிக்காட்டு ராஜா

http://cdn.spicyonion.com/cache/images/profile/movie/1974/pandhattam-225x300.jpg

ம்...அப்புறம் ஜெய் கூட பந்தாட்டம்னு நினைக்கிறேன். பிராயச்சித்தம் உண்டு.

http://i.ytimg.com/vi/q_CcCxo1iVE/maxresdefault.jpg

அப்புறம் முத்தினதுக்கு அப்புறம் பாண்டியன் படத்துல ரஜினிக்கு அக்கா

https://i.ytimg.com/vi/uTFsasGE8XA/hqdefault.jpghttps://i.ytimg.com/vi/hoGfzZi5KoQ/mqdefault.jpghttps://i.ytimg.com/vi/fM-OKBqsE-s/hqdefault.jpg

உங்களுக்குத் தெரியும் பாலச்சந்தர் படத்துல நடிச்சிருப்பார். அபூர்வ ராகங்கள், சொல்லத்தான் நினைக்கிறேன், அரங்கேற்றம் (மூத்தவள் நீ கொடுத்தாய்) இப்படி. 'நினைத்தால் இனிக்கும்' படத்துல இருப்பாரோ? நினைவு இல்லை. மறந் போச்.

மன்னவன் வந்தானடி பார்த்தாச்சு.

http://i.ytimg.com/vi/TDZedx1ajRc/hqdefault.jpg

வேற....ம்...ஆங்... வெள்ளியில வில்லி இல்ல? சசி கூட நடிப்பாரே! கண்டு பிடிச்சுக்கும் சாரே!


https://youtu.be/n1_2QLVzs-8

https://antrukandamugam.files.wordpress.com/2014/01/jayasudha-ravichandran-baghdad-perazhagi-1973.jpg?w=479&h=348

பாக்தாத் பேரழகியில ரவி கூட. தங்கையாகன்னு நினைக்கிறேன்.

http://i.ytimg.com/vi/Vs8pipAGFKY/hqdefault.jpg

நான் அவனில்லை பழசுல ஜெமினிகிட்ட ஏமாறும் கோபிகாஸ்திரி.

eehaiupehazij
15th September 2015, 06:21 PM
ஆறு மனமே ஆறு பாடலில் ஒரே ஒரு சிறிய ஷாட்டில் நடிகர்திலகம் கடற்கரையில் திரும்பி நடப்பது நிழல்படிவமாக காட்டப்படும் அது ஒரு உன்னதமான கலைஞனின்
அசைவுகளை நாம் உணரும் வண்ணம் படம் பிடிக்கப் பட்டிருக்கும் வாசு சாரின் வர்ணனை......

https://www.youtube.com/watch?v=LTwHc4UBbM0

eehaiupehazij
15th September 2015, 06:25 PM
Welcome SSS sir!
Eager to have your contributions from your angle of perseverance on our honey filled songs!

chinnakkannan
15th September 2015, 06:28 PM
வரும் சி.செ.. எய்துவார்..இப்பத் தான்...

கண்களில் பார்த்த கனிந்தழகு ஜெய்சுதாவை
கண்ணனும் கேட்டிடக் காட்சியாய் - வெண்மைத்
திரையிலே ஓவியமாய்த் தீட்டுகின்ற வேலை
விரைவாகச் செய்கிறார் ஆம்..

(வெண்மைத் திரை - நெட்)

எனில் இப்போ எழுதிடுவார்..அப்படி இல்லைன்னா நான் ஆ.க படம் முச்சூட எழுதிடுவேன் உஷார்னு மிரட்டினா போதும் தானாவே எழுதுவார்..:)

வாசு.. ரொம்ப தாங்க்ஸ்.. பக்கெட் ஃபுல் ஆஃப் தாங்க்ஸ்.. கொஞ்சம் அபூர்வ ராகங்கள் மற்றும் நான்.அவனில்லையில் நன்றாக இருப்பாரென்று நினைவு.. பட்டிக்காட்டு ராஜாவும் தான்..

பாக்தாத் பேரழகி பார்த்ததில்லை.. அகெய்ன் தாங்க்ஸ்

vasudevan31355
15th September 2015, 06:31 PM
http://i.ytimg.com/vi/fvV52vPylDg/maxresdefault.jpg

vasudevan31355
15th September 2015, 06:33 PM
http://i.ytimg.com/vi/WfHvQGS_z6E/maxresdefault.jpg

vasudevan31355
15th September 2015, 06:33 PM
http://i.ytimg.com/vi/WfHvQGS_z6E/hqdefault.jpghttp://i.ytimg.com/vi/cdGxzmcNq6Y/hqdefault.jpg

eehaiupehazij
15th September 2015, 06:37 PM
Shaken but not stirred ...water images!

ஆடா நீரில் ஆடும் பிம்பங்கள்!!
குளத்தங்கரையோரமாக சோகப்பதுமையாக காதலனுக்காக வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கும் காதலியின் பிம்பத்தை திறமையான ஒளிப்பதிவாளர் அலைகளால் ஆடும் நீரிலும் ஆடாத பிம்பங்களாகப் படம் பிடிக்க எவ்வளவு பிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கிறது ..

கௌரவம் திரைப்படத்தில் ரசனைக்குரிய நீர் பிம்ம்பங்களாக நடிகர்திலகமும் உஷா நந்தினியும்

வாசுபாலா சுசீலா குரல் குழைவில்
https://www.youtube.com/watch?v=ppy75ti0WtA

eehaiupehazij
15th September 2015, 07:02 PM
ஒரு பாடல் காட்சி ஸ்லோ மோஷனில் எடுக்கப் படும்போது கவிதையாகிறது!அதுவே பாஸ்ட் மோஷனில் எடுக்கப்படும்போது காமெடியாகிறது!!

https://www.youtube.com/watch?v=ipjrLKWwJXM

https://www.youtube.com/watch?v=v7MjyWe5ztY

சிலசமயம் கவிதையும் காமெடியும் சேர்ந்து கலக்கினால் நமக்கு ......!

eehaiupehazij
15th September 2015, 08:07 PM
எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள் ஜெயசுதா ..நடிகர்திலகத்துடன் ரம்மியமான பாடல்...டைட்டிலில் பட்டாக்கத்தியெல்லாம் இருந்தாலும்!!

[url]https://www.youtube.com/watch?v=w-l5vYDIh8U

chinnakkannan
15th September 2015, 08:56 PM
அப்புறம் செம கிளாமரா சிவக்குமார் நடிச்ச பட்டிக்காட்டு ராஜா //?! :)

eehaiupehazij
15th September 2015, 09:29 PM
மனங்கவர் ம(ன)ரங்கொத்திகள் / Wood Peckers!


கோட்டு சூட்டு பெல்ட்டு ஷூ டை தொப்பி கறுப்புக் கண்ணாடியெல்லாம் நமது சீதோஷ்ண நிலைக்கு உகந்த உடைத்தானா என்ற கேள்வி எழுந்தாலும் நமது மனங்கவர் மரங்கொத்திகளை அந்த கெட்டப்பில் ஆட்ட பாட்டங்களுடன் பார்க்கும் போது சந்தோஷமே!

https://www.youtube.com/watch?v=9YiNDzAL3P4

https://www.youtube.com/watch?v=hfMBIAuJmY0

chinnakkannan
15th September 2015, 09:50 PM
சி.செ.. ஆறு மனமே ஆறு பாடலைச் சொல்லி ஆண்டவன் கட்டளை பட நினைவுகளைத்தூண்டி விட்டு விட்டீர்கள்..

எனில் இது பற்றி முன்பெழுதியிருந்த இரு பதிவுகள்..(துன்பம் னுல்லாம் சொல்லப்படாது :) )

மீள்பதிவு..1

*****


அவர் வெளி நாடுகளில் எல்லாம் சென்று மெத்தப் படித்தவர்..கல்லூரியில் டிபார்மெண்டல் ஹெட்.. சுயக்கட்டுப்பாடு, ஒழுக்கம் நேரம் தவறாமை தொழில் பக்தி கொண்ட பேராசிரியர்.. ஆண் பெண் இணைந்து படிப்பது அபூர்வமாக இருந்த அந்தக் கால கட்டத்தில் அப்படி இருந்த ஒரு் கல்லூரியில் வேலை பார்ப்பவர்..

சீரிய நீரோடை போல இருந்த அவர் வாழ்வில், கறந்த பாலைப் போலத் தூய்மையான உள்ளம் படைத்த அவர் மனதில் - கலக்கம் வருகிறது.காரணம்.. பெண்..

கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள

ஐம்புலன்களும் ஒரு கொடிபோன்ற மெல்லியலாள் ஆன பெண்ணிடம் உள்ளது என்று திருவள்ளுவரும்

மாயத்தைச் செய்திடுவாள் மங்கையும் ஆடவரின்
காயத்தின் உள்ளேதான் காண்

என வேறு பெரியவர்களும் (ம்க்கும்) எழுதியதை அவர் அறிந்தவர் தான். இருந்தும் என்ன.

ஒரு கேள்வியை உன்னிடம் கேட்டுவிட்டேன் நான் கேட்டதை எங்கே போட்டுவிட்டாய்
என்ன தேடுகிறாய் எங்கே ஓடுகிறாய்
உன் தேவைகளை ஏன் மூடுகிறாயு

எனக் கேட்கிறாள் அவர் மனதைக் கலைத்த மாயக்காரி...

ப்ரொபசர் குழம்புகிறார்..கொந்தளிக்கிறார். ஏன் ஏன் ஏன் எனக்கு இப்படி ஆகிறது.கட்டுக் கோப்பு நிறைந்த
வாழ்க்கை அல்லவா நான் வாழ்வது.அவள் யார். என் மாணவி. நான் அவளை வேறு கண் கொண்டு பார்க்கலாகுமா
தவறல்லவா..

அதற்கும் அவளே பதில் தருகிறாள்.

ஒரு மொழியறியாத பறவைகளும் இந்த வழியறியும் இந்த உறவறியும்
நம் முன்னவர்கள் வெறும் முனிவரில்லை..

அசடே.. நீ என்ன படித்தால் என்னா. இளமைப் பருவத்தில் தான் இணையுடன் இருக்க வேண்டும்.இன்ப வாழ்க்கை வாழ வேண்டும் அதில் ஒன்றும் தவறில்லை.தப்பொன்றுமில்லையடா

இருந்தும் ஏக மனப் போராட்டத்திற்கப்புறம் மனதில் மீண்டும் மீண்டும் அவளது உருவம் மனதில் எழுந்து காதல் உணர்வு ஆக்கிரமிக்க. அவளும் தேடி வருகிறாள்.அவளுக்கும் அதே அவரை மறக்க இயலாத நிலைமை.

காதல் பூத்து மணம்பரப்பி வீசுகின்ற பொழுதில்..உலகம் வேறு விதமாய்ப் பார்க்கிறது.

அவர் இது வரை கடைப்பிடித்த ஒழுக்கம் எல்லாம் ச்சும்மா டுபாக்கூர் போங்கு எனச் சொல்கையில்
காதலரிருவருக்கும் குழப்பம்.காதலைத் துறக்க வேண்டுமா

முகம் உதடு உடல் மனம் இருவருக்கும் துடிக்கிறது. ப்ரொபசர் காதலியின் செந்தாமரை முகத்தைத் தொட்டு பட்டுக் கன்னங்களைப் பிடித்துக் கேட்கிறார் - காதல்னா தானே திட்டறாங்க. நாம கல்யாணம் பண்ணிக்கலாமா.

கபகபவெனப் பசிக்கையில் எதுவும் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்த ஒருவனுக்கு பலவித காய்கறிகள் கூட்டு சாம்பார் பொரியல் அவியல் என நள பாகத்தில் கல்யாண விருந்து கிடைத்தால் எப்படி இருக்குமோ அது போல ஆகிறது அவளுக்கு.

மனம் முகம் எல்லாம் பூரிக்க - தாங்க்ஸ்டா செல்லம் என்று சொல்ல- இப்ப என்ன செய்யலாம் பாடலாம் என
இருவரும் பாடுவது தான். அமைதியான நதியினிலே ஓடம்.(அப்பாடா விஷயத்துக்கு வந்துட்டேன் :) )

//காற்றினிலும் மழையினிலும் , கலங்கவைக்கும் இடியினிலும் கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும் - ஹோய் ஹோய்//

அடி பெண்ணே நாம் காதல் என்னும் ஆற்றினிலேயே நீந்திக் கொண்டிருக்க முடியாது. கல்யாணம் என்று கட்டுக்குள் வந்து விட்டால் யாரும் எதுவும் சொல்ல இயலாது.

//நாணலிலே கால் எடுத்து நடந்து வந்த பெண்மை இது , நாணம் என்னும் தென்றலிலே தொட்டில் கட்டும் மென்மை இது
அந்தியில் மயங்கி விடும் காலையில் தெளிந்து விடும் -அன்பு மொழி கேட்டு விட்டால் துன்ப நிலை மாறிவிடும் /

ஏதோ நீங்க சொல்லிட்டீங்க மாமா. எனக்குப் புரியறது.ஒண்ணு தெரிஞ்சுக்கங்க.ஒங்க பேச்சு தான் என்னோட ஜீவன்.உங்க அன்பு தான் என்னோட உசுரு..ம்ம் எனக்கு இப்போ தெளிவாய்டுச்சு மாமா.

**
வெகு அழகிய நடிப்பில் நடிகர் திலகம் இணையாக தேவிகா..ம்ம் எவ்ளோ அழகிய ரொமாண்டிக் ஸாஃங்க். எத்தனை முறை கேட்டிருப்பேன்.எத்தனை முறை பார்த்திருப்பேன்.
**

https://youtu.be/c9H29YbSK7g


சோகப் பாட்டில் உணர்ச்சி மயமாக ந.தி..ஸிம்ப்பிள் அழகு ஜொலிப்பாய் தேவிகா..

https://youtu.be/Jngi00QQ6N0

chinnakkannan
15th September 2015, 09:56 PM
மீள் பதிவு - 2

நடிகர் திலகத்தின் நடை
*
4. மிடுக்கும் துடுக்கும்
*
24.07.72
ஷேமம்…
*
அன்புள்ள நீலாவிற்கு.,

நலம் நலமறிய ஆவல்.. எப்படி இருக்கிறாய்.. நேத்துத் தான் ஒண்ணா சினிமா பாத்தோம்..இன்னிக்கு என்ன இன்லேண்ட் லெட்டர் என நீ திகைப்பது தெரிகிறது..உனக்கு ஃபோன் செய்ய வேண்டுமென்றால் பக்கத்து மளிகைக் கடைக்குப் பண்ண வேண்டியதாய் இருக்கிறது..அவன் ம்ம் இருங்கன்னு சொல்லிட்டு யாரிடமோ க.ப 2 கிலோ உ.ப ரெண்டு கிலோ என கடைக் கணக்கைச் சொல்ல ஆரம்பித்து விடுகிறான்..

*

அப்புறம் நீ ஆடி அசைந்து வந்து ஃபோன் எடுத்து குரலெழும்பாமல் வேறு பேசுகிறாய்..நாமென்ன லவ்வர்ஸா.. ஹஸ்பெண்ட் வைஃப் தானே..கொஞ்சம் சத்தமா ஃப்ரீயா பேசவேண்டியது தானே..ம்ம்.

*

ஒண்ணும் கேக்காம இருந்ததா.. அதான்.. ரொமான்ஸே மறந்து போகப் போகுதுன்னு வரச்சொன்னேன்..உங்கப்பாவை யாரு அண்ணா நகர்லாம் தாண்டி வீடு கட்டிவைக்கச் சொன்னார்.. நானிருக்கறது மதுரை டவுன்..உன்னை வந்து என்னோட பஜாஜ் சேட்டக்கில் கூட்டிச் செல்லலாம் என்றால் அதுக்கும் உன் கிட்ட ஆயிரத்தெட்டு வெக்கம். பஸ்ஸிலேயே வருகிறேன் என்று சொல்கிறாய்...அடி போடி இவளே..ம்ம் ஒரு மாசம் அதுவுமிந்த ஆடி மாசம் எப்படிப் போகப் போறதோ தெரியலை..

*

நேத்துப் பார்த்த படம் ஆண்டவன் கட்டளை எப்படி இருந்துச்சு..ஒருவார்த்தை சொல்லவே இல்லை..பழைய படம் கூட்டமே இருக்காதுன்னு பார்த்தா நல்ல கூட்டம்.. அப்பப்ப உன்னைப்பார்த்தாக் கூட சீரியஸா ஸ்க்ரீனையே பாத்துக்கிட்டு இருந்தாய்.. நல்ல படம் தான் இல்லையா..

*

அதுவும் சிவாஜி முதல் காட்சியில் வெகு மிடுக்காய் கோட் சூட் போட்டுக் கொண்டு விசுக் விசுக்கென நடக்கற நடை இருக்கே..அதுவும் ட்ராஃபிக் எல்லாம் ஸ்தம்பித்து குறுக்கே ஒரே விதமாய் நடந்து செல்வாரே வாவ்

*

இந்த தேவிகாப் பொண்ணு கூட கொஞ்சம் நல்லாருக்குல்ல.. ந\ன்னா ஜீரால ஊறின கொழு கொழு குலோப் ஜாமூன் மாதிரி ( நீ சாப்பிட்டிருக்கியோ..இல்லைன்னா ஆரியபவன் – இந்த மாசம் முடிஞ்சு வந்ததும் கூட்டிக்கிட்டுப் போறேன்)

*

அந்த தேவிகாப் பொண்ணு கிட்ட காதல் வலைல்ல விழுந்துட்டு ஆளே மாறிப்போக – முதல்ல காலேஜீக்கு வருவார் சிவாஜி..அந்த சீன் சூப்பர் இல்லை..ரொம்ப அழகிய யூத் நடை..

*

கலக்கலா டிரஸ் பண்ணிக்கிட்டு குட்மார்னிங்க் பாய்ஸ் குட்மார்னிங்க் கேர்ள்ஸ்னு வருவாரே வாவ் நன்னா இருக்குமில்லை..

*

அம்பிகாபதி மாண்டான் – என சந்திரபாபு சொல்ல சிவாஜி அது காதலின் தத்துவம்னு சொல்றச்சே உன்னோட கண்ணு கொஞ்சம் வெளிய வந்து அழகா இருந்துச்சு..கொஞ்ச வெளிச்சத்துல பார்த்தேன்..

*

குட்டியா டச்சிங் டச்சிங்க் கூட பண்ண விடமாட்டேங்கற..ம்ம் நேர்ல வா பார்த்துக்கறேன்

*

மொத்தத்துல படம் ஓகேதான்..ஆனா வீட்டுக்கு பஸ்ஸிலேயே போய்க்கிறேன்ன பாரு அதான் எனக்குப் பிடிக்கலை..பத்திரமாப் போய்ச் சேர்ந்தியா..முடிஞ்சா மளிகைக் கடைக் காரர் ஃபோன்ல எனக்கு பேங்க்குக்கு ஃபோன் பண்ணு..

*

சீக்கிரம் வீட்டுக்கு வந்துடு..ஓ.கே..ஐ மிஸ் யூ டா..

*

உன் அன்புள்ள
மாதவன்..


25.07.72

அன்புள்ள இவருக்கு.,


யோவ்.. என்ன ஒரு துணிச்சல் இருந்துச்சுன்னா தேவிகாவை குலோப் ஜாமூன்லாம் சொல்லுவ.. அதுவும் என் கிட்டயே....இன்னும் இருபது நாள் தான்..நேர்ல ஒங்களை வெச்சுக்கறேன்..அடுத்த வாரம் படத்துக்குக் கூப்பிட்டீங்கன்னா வரமாட்டேன்..

அன்புடன் – நற நற – I didn’t miss you..daa..

நீலா மாதவன்..


https://youtu.be/3lIpebdRTw0?list=RDJngi00QQ6N0// அழகே வா அருகே வா..

vasudevan31355
15th September 2015, 10:08 PM
தாஸேட்டன் பாடல் போட்டு நாளாகி விட்டது. சிவக்குமார், ரதி நடித்த 'காதல் கிளிகள்' படத்தில் இருந்து ஒரு பாடல். எஸ்.பி.ஷைலஜா உடன் பாடியிருப்பார். அருமையான பாடல். ஆனால் படம் ரொம்ப சோகமாம்.

நதிக்கரையோரத்து நாணல்களே
என் நாயகன் புகழை கேளுங்களேன்
காலையில் பூத்த புஷ்பங்களே
எங்கள் காதலை வாழ்த்தி பாடுங்களேன்


https://youtu.be/SV6h-0m1CyY

chinnakkannan
15th September 2015, 10:13 PM
வெகு நல்ல பாடல்.. ஹை.. போட்டாச்..பட் இருந்தாலும் தாங்க்ஸ் வாசு..:) எனக்குப் பிடிக்குமே..

chinnakkannan
15th September 2015, 10:21 PM
சின்னாவுக்கு மட்டும் ஒரு கேள்வி. சேகருக்கு பாடலைப் பாடும் பின்னணிப் பாடகரோ பாடகியோ அது யார்?// எல்.ஆர். ஈஸ்வரி.. சரிதானா?

rajraj
15th September 2015, 10:42 PM
CNA or Anna (Annadurai) wrote story and dialog for a few movies. Velaikkari was one. Here is a song from Velaikkari.

innamum paaraamukam yenammaa.........

http://www.youtube.com/watch?v=Ia_q9iGv1iQ

eehaiupehazij
16th September 2015, 11:19 AM
seasonless sweeties!
பருவகாலங்கள் பருக கானங்கள் !


கோடை, குளிர், மழை, வசந்தம் என நான்கு பருவங்கள் நமது வருடாந்திர வாழ்க்கை மூடை தீர்மானிக்கின்றன!
வசந்தகாலம் தவிர்த்து ஏனைய பருவங்கள் நமது சிந்தனைகளை ஒருமுகப்படுத்த இயலாமல் சிதறடித்து விடுகின்றன!!
கோடை வெப்பம் மழையின் நசநசப்பு குளிரின் ஊடுருவல் ....சிந்தனைகள் சிதறுவது இயல்பே!
வசந்தகாலம் மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்ச்சி ஊட்டி மகிழ்வை முகிழ்வித்து எண்ணங்களை ஒருமுகப் படுத்தி இதமான சூழலை உருவாக்குகிறது!!
Spring Season எனப்படும் வசந்தகாலத்தை நினைவுகூர்ந்திடும் மதுர கான வரிசை ....!!

வசந்தகாலமும் காதலியை மைய்யப் படுத்தும் போதுதான் மெய்யாகிறது !
https://www.google.co.in/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=4&cad=rja&uact=8&ved=0CDEQuAIwA2oVChMItZPCne76xwIVxnGOCh1MDQ5R&url=http%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3D52k DVborPjQ&usg=AFQjCNG0aqjPlhNO-TTkv00-E_0JFivOhA&bvm=bv.102829193,d.c2E
வசந்தகாலம் கசந்தகாலமானால்
https://www.google.co.in/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=1&cad=rja&uact=8&ved=0CB0Q3ywwAGoVChMI8-qltO76xwIViB2OCh3bMQnJ&url=http%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3DPuV 8Hemr_l8&usg=AFQjCNERobPnK5zVKtzFcZVAr1tIg8CEmA&bvm=bv.102829193,d.c2E

chinnakkannan
16th September 2015, 11:52 AM
ஹாய் குட்மார்னிங் ஆல்..

வசந்த காலம் பத்தி ஆரம்பிச்சுருக்கறதுக்கு தாங்க்ஸ்

டபக்குன்னு காதுக்குள் ஒலிக்கும்குரல்..

சுசீலாம்மா.. வசந்த காலம் வருமோ நிலை மாறுமோ..இஸிட்..என்னா படம்..

வசந்த்ம் பாடிவர வைகை கூடிவர...

வா வா வசந்த்மே..

ஓ..வசந்த ராஜா தேன் சுமந்த ரோஜா

வசந்தத்தில் ஓர் நாள் மணவறை ஓஓஒரம் வைதேகி காத்திருந்தாளோ

வசந்தங்கள் வாழ்த்தட்டும்..

வந்தது வசந்த காலம்..

வக்கீலாத்து வசந்தா..உன் எழிலை எந்தன் வசந்தா (ஓ இது வேறு வசந்தமோ :) )

chinnakkannan
16th September 2015, 12:31 PM
வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் பெண்புறாவே

வசந்த முல்லை..போல வந்து அசைந்து ஆடும் புறா..


வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது..

madhu
16th September 2015, 02:07 PM
சுசீலாம்மா.. வசந்த காலம் வருமோ நிலை மாறுமோ..இஸிட்..என்னா படம்..


அடடா... அந்தப் படத்தை மறக்க முடியுமா சிக்கா ?

madhu
16th September 2015, 02:11 PM
வசந்த கால தென்றலில் ஒரு வண்டு - கொஞ்சும் சலங்கை
வசந்தங்கள் வரும் முன்னே வெயில் வந்ததே - லலிதா
வசந்த காலம் இத்தனைதானா - பொம்மை கல்யாணம்
வசந்தமே அருகில் வா - அமரன்
வசந்தமும் நீயே மலர்களும் நீயே - கண்ணீர்ப் பூக்கள்

chinnakkannan
16th September 2015, 02:31 PM
வாங்க மதுண்ணா.. அதானே மறக்க முடியுமா.. மறந்துட்டேனே..ஆக்சுவலா நான் மறக்க முடியுமா படம் முழுக்க ப் பார்த்ததில்லை.. நமக்கு வாழ்க்கையே சோகமா இருக்கறச்சே படத்துல கொஞ்சம் அவாய்ட் பண்ணுவேன்..

ஆனா நீங்களும் ஒண்ணு மறந்துட்டீஙக்

வசந்த கால நதிகளிலே..வைரமணி நீரலைகள்..

இரண்டாவதும் இருக்கே..இந்த மாளிகை வசந்த மாளிகை..

madhu
16th September 2015, 02:47 PM
chikkaa..

naan marakkavillai.. But inge voltage fluctuation. ( நாளைய பண்டிகைக்கு பந்தல் கட்டி லைட் போட நேரடியாக எலக்டிரிசிடி திருட்டு நடக்குது ) so paathi post seyyumbodhu power cut.

chinnakkannan
16th September 2015, 02:58 PM
eppodhum m.s word la use panni save pannikkonga. That will be better.

vasudevan31355
16th September 2015, 03:03 PM
வசந்தங்கள் வாழ்த்துச் சொல்ல அன்புத் தங்கை மலர்ந்தாளே

வசந்த கால கோலங்கள்

வசந்த விழா வசந்தத் திருவிழா

காலங்களில் அவள் வசந்தம்

வசந்த ஊஞ்சலிலே அசைந்த பூங்கொடியே

ஒ வசந்தமாமே

வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்

vasudevan31355
16th September 2015, 03:05 PM
ஹாய் சின்னா! ஹலோ மதுண்ணா!

கலக்குறீங்க. எங்கே ஜி யைக் காணோம்?

vasudevan31355
16th September 2015, 03:09 PM
'நடிகர் திலகம்' படத்தில் இல்லாத வசந்தமா?

'வசந்த காலம் இத்தனைதானா?
ஏழை எந்தன் வாழ்கை இன்பம் நீ சொல்லித்தானா?'

ஜமுனாவின் கலைந்து போன வசந்தகாலம். 'பொம்மைக் கல்யாணம்' படத்திலிருந்து. கிருஷ்ணவேணி பாடியது


https://youtu.be/VnbCXKF_nWw

vasudevan31355
16th September 2015, 03:27 PM
சத்யராஜ் நடித்த 'நடிகன்' படத்தின் மூலம் 'புரொபெசர்' இந்திப் படம். நமக்குப் பிடித்த ஷம்மி நடித்தது. இது ரவி நடித்து 'நாலும் தெரிந்தவன்' என்று தமிழில் முன்னம் வெளிவந்தது. பின்தான் ஒன்றுமே யாருக்கும் தெரியாது என்று 'மணிச்சித்திரதாழ்' படத்தை காப்பி அடித்து 'சந்திரமுகி' எடுத்து அப்படியே இல்லை என்று கப்சா விட்ட பி.வாசு அதற்கு முன் அதே போல 'நாலும் தெரிந்தவ'னை அப்படியே கார்பன் காப்பி எடுத்து 'நடிகன்' என்று ஏமாற்றினார் நாலும் தெரிந்த சிலர் இருப்பார்கள் என்ற கவலையே இல்லாமல்.

அதிலிருந்து ஒரு பாடல். காஞ்சனா கும்பல் ரவியை மழையில் நனையவிட்டு பாதிப்பாடல் வரை வெறுப்பேற்ற கொஞ்சம் கூட தடம் புரளாத நம் தமிழ்ப்பட நாயகன் பாதிப் பாடலுக்கு மேல் தமிழ்ப்பட இலக்கணம் மாறாமல் திருப்பிப் போட்டுத் தாக்குவது என்பது சிச்சுவேஷன்.

கோவர்த்தனகிரியை குடையாய் பிடித்த
அந்த கோபாலகிருஷ்ணன் இவர்தானோ
கோபியர் புடை சூழ புல்லாங்குழல் எடுத்து கொடுப்பாரோ
இசை படிப்பாரோ

பூவா பூவா உதிருதடி
பொங்கும் பெருமழை பெய்யுதடி
வாலிப உடம்பு நடுங்குதடி
வாத்தியார் மனம் குளிருதடி


https://youtu.be/8kg0iN6FhA4

vasudevan31355
16th September 2015, 03:36 PM
மதுண்ணா!

அதே 'நாலும் தெரிந்தவன்' படத்தில் குழந்தைகள் பாடும் பாடல் ஒன்று உடன் ரவியும் பாடி ஆடுவார் மிலிட்டரி மாமா மனோகர் மனம் குளிர. மிகவும் வித்தியாசமான பாடல். பாடலும் நன்றாக எடுக்கப்பட்டிருக்கும். ஆமாம்! ரவிக்குக் குரல் தந்திருப்பது யார் மதுண்ணா? பாடகர் திலகம் பாடும் முன் வேறு ஒரு குரல் கேட்கும் ("சிங்கம் போலே இவர் குரலிருக்கும்")

'செல்ல மாமா ஒன்று சொல்லலாமா
ஊருக்கெல்லாம் புத்தி சொல்ல வயசு பத்தல
ஊமையாக இருப்போமுன்னா மனசு கேக்கல.

கோரஸ் அருமை. காந்தி, நேரு, அண்ணா புகழ் பாடலும் உண்டு.


https://youtu.be/aelucB1wYV0

vasudevan31355
16th September 2015, 03:46 PM
ஒரிஜினல் 'புரொபஸர்' படத்தில் ஷம்மியை நாயகி கும்பல் கிண்டல் பண்ணிப் பாடும் பாடல்


https://youtu.be/O-wHkvCkC9s

vasudevan31355
16th September 2015, 03:49 PM
கார்பன் காப்பி 'நடிகன்' படத்தில் சத்யராஜ், மற்றும் கோஷ்டி பாடுவது

'ஆட்டமா பாட்டமா பார்த்துக்கோ வேஷம் ஆ...ரம்..பம்'


https://youtu.be/baXf067BqH4

madhu
16th September 2015, 04:01 PM
வாசு ஜி..

ரவிக்கு குரல் கொடுத்திருப்பது பொன்னுசாமி என்ற பாடகர்.

.... அந்தக் காலத்தில் நரி ஒன்று சிரிக்கின்றது என்ற பாடலைக் கேட்டு என் அண்ணனை நரி எப்படி சிரிக்கும் என்று வடிவேலு போல பிடுங்கி எடுத்து அலற வைத்தது நினைவுக்கு வருது....

vasudevan31355
16th September 2015, 04:06 PM
வாசு ஜி..

ரவிக்கு குரல் கொடுத்திருப்பது பொன்னுசாமி என்ற பாடகர்.

.... அந்தக் காலத்தில் நரி ஒன்று சிரிக்கின்றது என்ற பாடலைக் கேட்டு என் அண்ணனை நரி எப்படி சிரிக்கும் என்று வடிவேலு போல பிடுங்கி எடுத்து அலற வைத்தது நினைவுக்கு வருது....

https://s-media-cache-ak0.pinimg.com/236x/b8/af/56/b8af56907e7261d8ffcdffd21d347da3.jpg

chinnakkannan
16th September 2015, 05:01 PM
பாக்கெட்ல என்னெல்லாம் பக்கெட் வச்சுருக்கீங்களோ.. நரி சிரிக்கும் புகைப்படம் ரியல்லா சிரிக்கற மாதிரி இருக்கு..

முன்ன ஒரு காலத்துல முருஙக்மலைக்காட்டுக்குள்ளே தந்திரம் மிகுந்த நரி வாழ்ந்துவந்துச்சாம்

நரி ஒன்று சிரிக்கிறது..

அப்புறம் வேறென்ன நரி ப்பாடல்கள்..

ஹப்புறம்..அஞ்சாம் பாகம் நாளைக்கு ரிலீஸா..

chinnakkannan
16th September 2015, 05:04 PM
நடிகன் பார்த்தப்பவே வித்யாசமா இருக்கேன்னு நினைச்சேன்..நீங்க சொல்லித்தான் தெரியும் அது நாலும் தெரிந்தவன்காப்பி என.. அந்தப் படம் பார்த்ததில்லை..

vasudevan31355
16th September 2015, 06:17 PM
நடிகன் பார்த்தப்பவே வித்யாசமா இருக்கேன்னு நினைச்சேன்..நீங்க சொல்லித்தான் தெரியும் அது நாலும் தெரிந்தவன்காப்பி என.. அந்தப் படம் பார்த்ததில்லை..

இன்னும் 7 பக்கம் பாக்கி இருக்கு சின்னா! அதனால் நாளை அல்லது நாளை மறுநாள் இருக்கலாம். மதுண்ணா ரெடியாக இருக்கலாம். விநாயகர் சதுர்த்தி அன்று துவங்கினால் இன்னும் சிறப்பாக இருக்கும். பார்ப்போம்.

vasudevan31355
16th September 2015, 06:20 PM
அதே போல 'பொல்லாதவன்' ரஜினி நடிச்ச படம் 'ஜஸ்டிஸ் விஸ்வநாதன்' படத்தின் அட்டை காப்பி. ரஜினிக்கு பதில் அதில் மேஜர். லஷ்மிக்கு பதில் அதில் சி.ஐ.டி.சகுந்தலா. மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பு.

vasudevan31355
16th September 2015, 06:23 PM
நடிகர் திலகம் பரதேசி (அவருடைய 3 ஆவது தெலுங்குப் படம்) பின்னல் அந்தமான் காதலியாயிற்று. அந்தமான் காதலி நடிகர் திலகத்திற்கு பதில் தெலுங்கில் நாகேஸ்வரராவ். சந்திரமோகனுக்குப் பதில் தெலுங்கில் நடிகர் திலகம். இன்னொரு விசேஷம். இது 'பூங்கோதை' என்று தமிழிலும் வெளிவந்தது.

vasudevan31355
16th September 2015, 06:25 PM
'கண்கண்ட தெய்வம்' கே.எஸ்.ஜி படம். இது பின்னாளில் நடிகர் திலகம் நடிக்க 'படிக்காத பண்ணையார்' ஆயிற்று. பழசில் ரங்காராவ். சுப்பையாவுக்கு பதில் புதுசில் தேங்காய். அதில் பத்மினி. இதில் விஜயா.

vasudevan31355
16th September 2015, 06:29 PM
'எங்கம்மா சபதம்' என்ற படம் முத்துராமன், சிவக்குமார், விதுபாலா, ஜெயசித்ரா நடிக்க வெளிவந்தது. அதுவே கேயாரால் உல்டா பண்ணப்பட்டு குஷ்பு, மோகினி, ராம்கி, நெப்போலியன் நடிக்க 'வனஜா கிரிஜா' ஆனது. அது போலவே 'வீட்டுக்கு வீடு' படம் இராம நாராயணன் புண்ணியத்தில் 'விஸ்வநாதன் ராமமூர்த்தி' ஆனது.

இது போல இன்னும் இருந்தால் நண்பர்கள் கூறலாம். அதுவரைக்கும் நான் ஒரு வாக்கிங் போயிட்டு வந்துடறேன். :)

chinnakkannan
16th September 2015, 08:28 PM
ஆஹா வாசு.. இவ்வளவு காப்பி கொடுத்தீங்கன்னா என் வயிறு என்னாகிறது !

ம்ம் உங்களுக்காக ஒரு சோக்கு..

**

”என்னது... நாளைக்கும் அண்ணாக்கு பர்த்டேயா? எப்படி...”

“ஹி.ஹி.முருகா.. நாளைக்கு உங்க அண்ணாக்கு பர்த்டே!”

*

https://youtu.be/rtMy63lj-d0


:)

chinnakkannan
16th September 2015, 08:30 PM
பழைய ரஜினி தில்லுமுல்லுவையே புதிதாய் அதே பெயரில் எடுத்துக் கொலை பண்ணியிருப்பார்கள்..

madhu
16th September 2015, 09:18 PM
இன்னும் ஏழு பக்கம் இருக்கு.. நாளைக்கு முடிந்தாலும் இந்த திரியைப் பூட்டாமல் அடுத்த திரியை திறக்கலாமோ ? அதைச் செய்ய வேண்டியவர் வலையை விட்டு விலகி இருக்கிறாரே... எனவே நானூறு தாண்டிப் போகவும் வாய்ப்பு இருக்கு என்று நினைக்கிறேன்.. அந்த பிள்ளையார் என்ன நினைக்கிறாரோ அதன்படி நடக்கும்.... ஞான் காத்திருக்குன்னு...

( அதான் பெருசா ஒண்ணும் கவலைப் பட வேண்டாம்னு படைக்கஞ்சாத் துணைவர் சொல்லிட்டாரே )

chinnakkannan
16th September 2015, 09:18 PM
விடாரென எண்ணினால் விட்டுவிட்டார் செந்தில்
கிடாரை எழுதவில்லை கேள்..!

அதானே.. (இல்லை எழுதியாச்சா?!)

பாஸ்..இவர் வேற முருகன்ங்க..!

https://youtu.be/ZjwxslN8y7w?list=RDrtMy63lj-d0

சுராலியா..

கொஞ்சம் தமிழ்ப் ‘படுத்தி”ப் பார்த்தேன்!

*
திருடினாய் கண்ணா என்னிதயத்தை இங்கே..
பார்வையை மட்டும் திருடாதே நீ…

வாழ்வில் எனக்கு மாற்றம் தந்தாயே
மாற்றிவிடாதே அதையேதான் நீ…

ஓஒ நீ தான் என் இதயந்தான்
எடுத்து எடுத்து எடுத்து…விளையாடாதே நீ..

திருடினாயே....

வசந்தமாய் மாறி நானும் உந்தன் உலகினில் வருவேனே
வஞ்சி எந்தன் வார்த்தை ஒன்றில் இந்நாளும் முடியாதே..

என்னுடையவன் நீ
என்னுடையவன் நீ
இன்று நான் சத்யம் சொல்லிச் செல்வேன் கண்ணா..

திருடினாயே..

அவன்:
ஓ..மாதவிக் கொடியின் உடலை நான் விதமாய் அழகுசெய்வேன்
ஹ்ருதய ரத்தம் உன்னிதழில் என்றும் இட்டபடி இருப்பேனே..

என்னுடையவள் நீ..
என்னுடையவள் நீ..
திருடினாய் கள்ளி எந்தன் இதயத்தை இங்கே
திருடினாயே..

(ஹி.ஹி..மெட்டுக்கு அர்த்தம் கெடாமல் பாட்டெழுதிப் பார்த்தேன்..!) ஒழுங்கா ஃபிட் ஆகுதா..வேற வார்த்தை வேணும்னா போட்டுக்கலாம்!) :)

madhu
16th September 2015, 09:20 PM
கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் ஜெமினி தயாரித்து நடித்த நான் அவனில்லை அதே பெயரில் நமீஈஈஈதா முதற்கொண்டு நடிக்க மீண்டும் வரவில்லையா ?
அஞ்சலிதேவியின் பால நாகம்மா ஸ்ரீதேவி நடித்து வந்ததே...
விசுவின் உறவுக்கு கை கொடுப்போம் நாடகம் சௌகார் நடித்து வெளியாகி தோல்வியைத் தழுவி லட்சுமி நடித்து சம்சாரம் அது மின்சாரமாக வெற்றியைக் கட்டிப் புடிடா என்று பாடியது.

chinnakkannan
16th September 2015, 09:21 PM
இன்னும் ஏழு பக்கம் இருக்கு.. நாளைக்கு முடிந்தாலும் இந்த திரியைப் பூட்டாமல் அடுத்த திரியை திறக்கலாமோ ? // செய்யலாம் மதுண்ணா.. இது பூட் போடணும்னு அவசியமில்லை..அவிய மதுரைலருந்து மலாய் வந்தவுடனே செஞ்சுக்குவாஹ..வாக் போயிக்காகல்ல நம்ம வாஸ்ஸூ அவுக என்ன சொல்றாகன்னு பாப்போம்..:)

eehaiupehazij
16th September 2015, 09:27 PM
நடிகன் படத்தில் சத்தியராஜின் மேக்கப் காதலிக்க நேரமில்லையில் முத்துராமனின் வயதான கெட்டப்பில் இருக்கும்!

eehaiupehazij
16th September 2015, 09:32 PM
நளினமான நடன அசைவுகளில் ஷம்மி கபூருக்கு அடுத்து இந்தியில் கலக்கியவர் Jumping Jack ஜிதேந்திரா !!
காரவன் திரைப்படம் அவரது நடனத் திறமைக்கு சிறந்த சான்றாகும்
நடிகர்திலகம் ரோலில் இந்தி வைரநெஞ்சத்திலும் Gehri Chal திருடனிலும் Himmat ஜிதேந்திரா நடித்திருப்பார் !

with Asha Parek...

https://www.youtube.com/watch?v=S1W076F6QMM

https://www.youtube.com/watch?v=OoatG-3MOf8

Bonus : Uththamapuththiran's Helen! the most famous song kicking!

நடுநிசிப் பேயாட்டம் !!
https://www.youtube.com/watch?v=DBCZWNfoR3k

vasudevan31355
16th September 2015, 09:48 PM
ஓ....மடல் வாசிச்சாச்சா! அப்பாடி!

// நாளைக்கு முடிந்தாலும் இந்த திரியைப் பூட்டாமல் அடுத்த திரியை திறக்கலாமோ//

தாராளமா. நாளைக்கு 400 எட்டியவுடனேயே பூட்டினாலும் சரி! பூட்டாட்டாலும் சரி! புதுசை ஒப்பன் பண்ணிடலாம்.

//அந்த பிள்ளையார் என்ன நினைக்கிறாரோ அதன்படி நடக்கும்//

வாஸ்தவம். கில்லாடி ஆளு இல்ல ஆண்டவன்.

//ஞான் காத்திருக்குன்னு//

நன்றி! நன்றி!

//( அதான் பெருசா ஒண்ணும் கவலைப் பட வேண்டாம்னு படைக்கஞ்சாத் துணைவர் சொல்லிட்டாரே )//

சுத்தமாவே கவலைப்பட வேணாம். கூந்தல் கருப்பு குங்குமம் சிகப்பு மாதிரி செம ஈஸி.:)

vasudevan31355
16th September 2015, 09:52 PM
கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் ஜெமினி தயாரித்து நடித்த நான் அவனில்லை அதே பெயரில் நமீஈஈஈதா முதற்கொண்டு நடிக்க மீண்டும் வரவில்லையா ?
அஞ்சலிதேவியின் பால நாகம்மா ஸ்ரீதேவி நடித்து வந்ததே...
விசுவின் உறவுக்கு கை கொடுப்போம் நாடகம் சௌகார் நடித்து வெளியாகி தோல்வியைத் தழுவி லட்சுமி நடித்து சம்சாரம் அது மின்சாரமாக வெற்றியைக் கட்டிப் புடிடா என்று பாடியது.

அதெல்லாம் தெரிஞ்சே வந்தது. சிலதெல்லாம் நம்மை ஏமாளிகள் என்று நினைத்து ஏமாற்றியது.

eehaiupehazij
16th September 2015, 10:00 PM
விடாரென எண்ணினால் விட்டுவிட்டார் செந்தில்
கிடாரை எழுதவில்லை கேள்..!

அதானே.. (இல்லை எழுதியாச்சா?!) Si Ka

கிடார் இசையில் எனக்கு மிகவும் பிடித்தது கம் செப்டம்பரில் டைட்டில் மியூசிக்கும் பாபி டாரின் பாடும் மல்டிப்ளிகேஷன் பாடலும் !

https://www.youtube.com/watch?v=te7I_ta7Vzc

https://www.youtube.com/watch?v=C71JAXzPke0

vasudevan31355
16th September 2015, 10:06 PM
இன்னும் ஏழு பக்கம் இருக்கு.. நாளைக்கு முடிந்தாலும் இந்த திரியைப் பூட்டாமல் அடுத்த திரியை திறக்கலாமோ ? // செய்யலாம் மதுண்ணா.. இது பூட் போடணும்னு அவசியமில்லை..அவிய மதுரைலருந்து மலாய் வந்தவுடனே செஞ்சுக்குவாஹ..வாக் போயிக்காகல்ல நம்ம வாஸ்ஸூ அவுக என்ன சொல்றாகன்னு பாப்போம்..:)

இங்க மதுர கானங்களுக்கு மாடரேட்டர் nov சாருன்னு நினைக்கிறேன்.

vasudevan31355
16th September 2015, 10:09 PM
சுராலியா தந்த தமிழ்ச் சுரங்கமே

நீ

திருடினாய் கண்ணா என்னிதயத்தை இங்கே.

(ஆனா ரத்தம் வழியுது):)

vasudevan31355
16th September 2015, 10:21 PM
வாசு ஜி..

ரவிக்கு குரல் கொடுத்திருப்பது பொன்னுசாமி என்ற பாடகர்.

.... அந்தக் காலத்தில் நரி ஒன்று சிரிக்கின்றது என்ற பாடலைக் கேட்டு என் அண்ணனை நரி எப்படி சிரிக்கும் என்று வடிவேலு போல பிடுங்கி எடுத்து அலற வைத்தது நினைவுக்கு வருது....



'காதலன் வந்தான்' பாட்டுக்கு 'ம்ஹூம்' ஹம்மிங்.

'இரவில் வந்த குருவிகளா' டி.எம்.எஸ்ஸுடன் 'வழியில்லே... வழியில்லே' 'முசாபிரி கானா என் முத்து முத்து மைனா'

'நான்கு கில்லாடிகள்' படத்துல 'பூக்கடப் பக்கம் டீக்கடையோரம்'

'ஞாயிறும் திங்களும்' படத்துல 'பன்னீர்ப் பூவே'

சரியா மதுண்ணா! அப்புறம் வேற என்னென்ன இருக்கு?

vasudevan31355
16th September 2015, 10:23 PM
சின்னா!

பி.எம்.பார்த்துடுங்க.

eehaiupehazij
16th September 2015, 10:24 PM
MTV சுப்புலக்ஷ்மிக்கே

Enjoy this sizzler song dance sequence by Kannada super dancer Upendhra!!

https://www.youtube.com/watch?v=KKYydVPnn84

vasudevan31355
16th September 2015, 10:28 PM
கல்மனம் கடலூர் நண்பர் 'லைக்' எல்லாம் போடறதுனாலே இங்கதான் சுத்திகிட்டு இருக்கிறார்னு நினைக்கிறேன். பாகம் 5 லேயாவது கல்மனம் கரையுதான்னு பார்ப்போம். வரட்டும். பார்த்துக்கிறேன்.

அப்புறம் முக்கியமான நேரத்துல 'ஜி' யைக் காணல. எங்கிட்டுப் போனார்? இன்னைக்காவது வர வேண்டாமோ? சரி! விநாயகர் நாளைக்கு அழைச்சுண்டு வந்திடுவார்.

vasudevan31355
16th September 2015, 10:30 PM
செந்தில் சார்,

அமர்க்களம் பண்ணிட்டீங்க. 'காரவான்' பாடல்கள்னா உயிர். ஆஷா பரேக் என்றால் ரொம்பப் பிடிக்கும். உங்க போனஸ் பாடல் பிடிக்காதார் உண்டோ! அடுத்த பாகத்தை நிறைய ஹிந்திக்கு ஒத்துக்குவோமா? பேச நிறைய இருக்கு.

RAGHAVENDRA
16th September 2015, 10:31 PM
வாசு, சிக, மது, சிசெ.. இன்னும் யாராவது விட்டுப் போயிடுச்சின்னா கீீழே இருக்கிற கோட்டுலே உங்க பேரைப் போட்டுக்குங்க....

--------------------

அந்தரிகி வந்தனமு...


வசந்த கால நரிகளிலே..

சாரி .... சாரி....

இரண்டு மூணு பக்கத்தை சேந்தாப்பலே படிச்சால இப்படித்தான்...

பதிவு போட்ட வுடனே படிச்சுடணும்கிறது இதுக்குத்தான்...

RAGHAVENDRA
16th September 2015, 10:35 PM
வாசு சார்
தர்மம் எங்கே படத்தில் மெல்லிசை மன்னர் தலைவரைப் பாராட்டும் விதமாக நான்கு காலங்களையும் அவருடன் ஒப்பிட்டு அருமையான பாடலைத் தந்திருப்பார். ஒவ்வொரு காலத்திற்கும் உண்டான சூழ்நிலைக்கேற்றவாறு வாத்தியக்கருவி, ராகம், மெட்டு என மிகச்சிறப்பாக அமைத்திருப்பார்.

பாடல் மட்டும் தனியாக வீடியோ இருக்கிறதா தெரியவில்லை. முழுப்படம் தான் இருக்கிறது.

rajraj
16th September 2015, 10:39 PM
Today (Sep 16) is the 100th birthday of MS. Here are a few of her carnatic compositions she rendered.

kurai ondrum illai marai moorthi kaNNaa in ragamaligai, a composition by Rajaji

http://www.youtube.com/watch?v=N4eN1nrohkE

Rangapura vihara in Brindavana Saranga by Muthuswami Dikshithar

http://www.youtube.com/watch?v=f2eG7qbburA

ninnuvina namadendhu in Navarasakannada by Thyagaraja

http://www.youtube.com/watch?v=wuCma3Ab7Rw

Saroja dhaLa nethri in SankarabharaNam by Shyama Sastri

http://www.youtube.com/watch?v=w41mgPNpwiE

...

vasudevan31355
16th September 2015, 10:40 PM
வாசு சார்
தர்மம் எங்கே படத்தில் மெல்லிசை மன்னர் தலைவரைப் பாராட்டும் விதமாக நான்கு காலங்களையும் அவருடன் ஒப்பிட்டு அருமையான பாடலைத் தந்திருப்பார். ஒவ்வொரு காலத்திற்கும் உண்டான சூழ்நிலைக்கேற்றவாறு வாத்தியக்கருவி, ராகம், மெட்டு என மிகச்சிறப்பாக அமைத்திருப்பார்.

பாடல் மட்டும் தனியாக வீடியோ இருக்கிறதா தெரியவில்லை. முழுப்படம் தான் இருக்கிறது.

ஆமாம் ராகவேந்திரன் சார். மறக்குமா? நினைவோடு கலந்து விட்டது.

வசந்தம் வாழ்கவே!
எங்கள் தலைவன் வாழ்கவே!

இந்தாங்க தலைவர் புகழ் பாடும் நான்கு காலங்கள்.


https://youtu.be/OF1use05M2Q

eehaiupehazij
16th September 2015, 10:40 PM
Enjoy Telugu Super actor dancer Prince Makesh Babu's (Superstar Krishna's son) childhood dancing!

https://www.youtube.com/watch?v=tab2bbANnM8

vasudevan31355
16th September 2015, 10:45 PM
ராஜ்ராஜ் சார்,

அடுத்த பாகத்துக்கு உங்க ஆசீர்வாதம் தேவை. உங்களுடைய அருமையான பதிவுகளும் தொடர வேண்டும்.

RAGHAVENDRA
16th September 2015, 10:46 PM
காலத்தைக் கடந்தவனின்
புகழைப் பாடக்
காலங்களை வைத்தே பாட்டமைத்த
கவியரசர் வாழ்க...
மெட்டமைத்த விஸ்வநாதன் வாழ்க
பாடிய பாடகியர் வாழ்க... எல்.ஆர். ஈஸ்வரி, எஸ்.ஜானகி குழுவினர்
கேட்டு மகிழ்ந்த அத்தனை ரசிகர்களும் வாழ்க..

இப்போது இந்தப் பாட்டை பகிர்ந்து கொண்ட வாசு
வாழ்க வாழ்கவே..

vasudevan31355
16th September 2015, 11:03 PM
செந்தில் சார்!

என்ன திடீரென்று கிருஷ்ண பரம்பரை விஸ்வரூபம்?:) பத்மாலயா தியாகி பரம்பரை ஆச்சே!

eehaiupehazij
16th September 2015, 11:45 PM
செந்தில் சார்!

என்ன திடீரென்று கிருஷ்ண பரம்பரை விஸ்வரூபம்?:) பத்மாலயா தியாகி பரம்பரை ஆச்சே!

நண்பர்கள் என்னிடம் உசுப்பேத்தியிருக்கிரார்கள் !
நான் திடீரென்று பார்க்கும்போது ஜாக்பாட் ஜாங்கோ / மோசகாடுக்கு மோசகாடு கிருஷ்ணா மாதிரி இருக்கிறேன் என்று!!:yes:

https://www.youtube.com/watch?v=YW0gzTHMhhU

rajraj
16th September 2015, 11:53 PM
Thanks vasu ! I will be there to keep 'bhakthi' alive unless Rajesh returns with more 'bhakthi'. Also to remind your generation about MKT,PUC,KRR and other old timers ! :lol: I have always been a well wisher for younger generation! :)



ராஜ்ராஜ் சார்,

அடுத்த பாகத்துக்கு உங்க ஆசீர்வாதம் தேவை. உங்களுடைய அருமையான பதிவுகளும் தொடர வேண்டும்.

chinnakkannan
17th September 2015, 12:39 AM
*
பாவந்தேன் இல்லேங்கல
பின்ன
நெதக்கும் இந்தக் குடிகுடிச்சுட்டு
புச்சு புச்சா
வெஞ்சனம் வேணுமின்னு
துட்டு கொடுக்காம
ஆர்ப்பாட்டம் பண்ணா
நா இன்னா செய்வேன்

அது இன்னா..பொரிமை
அதுக்கும் லிமிட் உண்டுல்ல

இன்னிக்கு வுட்டேன் பாரு ஒரு அடி
தாவாங்கட்டைல
சுருண்டுடுச்சு
கொஞ்சம் முழிச்சுட்டு
சர்த்தான் புள்ள நாளக்கி பாக்கலாம்னு
சொல்லிப்போட்டு
பாயப்போட்டு தூங்கிடுச்சு

குடிச்சுட்டு கொட்டிக்காம தூங்கினா
கொடல் என்னத்துக்காவாங்காட்டியும்
எய்ப்பினா ம்க்கும் எந்திரிக்கலையே

சரி சரி
நாளைக்கு வெரசா எந்திருச்சு
மார்க்கெட் போய் மீனு வாங்கி
இட்லி மாவும் அய்ர்வூட்ல வாங்கி
இட்லியும் மீன்கொயம்பும் கொடுக்கலாம்
பாவி மனுஷனுக்கு…

இன்னாங்கற…..

*

பொருத்தமா என்ன பாட் போடலாம் :)

*


https://youtu.be/Ib7tjERO95g

rajraj
17th September 2015, 03:33 AM
From Naanum oru peN(1963)

kaNNaa karumai nira kaNNaa......

http://www.youtube.com/watch?v=xO1RW80P8YU

From the Hindi version Main bhi ladki hoon (1964)

krishna o kale krishna......

http://www.youtube.com/watch?v=DH9YfoQk_RI

From the Telugu version naadi aade janma (1964)

krishnayya nallani krishnayya......

http://www.youtube.com/watch?v=swk0_njcFp4

eehaiupehazij
17th September 2015, 07:12 AM
பிரணவப் பொருளே ஐங்கரனே அனைத்து திரிகளிலும் சகோதரத்துவமும் நேசமும் நிலவி அன்பான பண்பான பதிவுகள் நிறைந்திட முதல்வனே அருள்வாய் !
விநாயகர் சதுர்த்தி வேண்டுதல்களும் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களும் !

https://www.youtube.com/watch?v=UjbH5oqWMac

rajraj
17th September 2015, 07:24 AM
During my days in India most carnatic concerts began with ''vathapi ganapathim bhajeham". Here is Papanasam Sivan song in Hamsadhwani in praise of Vinayaka.

Moolaadhara moorthi.....

http://www.youtube.com/watch?v=g9rgoxyCDro


Enjoy PiLLaiyar Chathurthi with all the 'kozhukkattai' you can have ! :)

eehaiupehazij
17th September 2015, 07:54 AM
சென்ற ஆண்டின் கோலாகல மும்பை விநாயகர் விசர்ஜன ஊர்வலம் சிறப்புக் காணொளி !


https://www.youtube.com/watch?v=GjDK0cEupvc

eehaiupehazij
17th September 2015, 08:03 AM
கொழுக்கட்டை ரெசிபி !

https://www.youtube.com/watch?v=WhSLpSK-dcA

RAGHAVENDRA
17th September 2015, 08:48 AM
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சமீபத்தில் ஒளிபரப்பான என்றும் எம்எஸ்வி நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பு 17.09.2015 இன்று காலை 9 மணிக்கு.

இதுவரை பார்க்காதவர்கள் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

eehaiupehazij
17th September 2015, 09:40 AM
https://www.youtube.com/watch?v=130XblhrGuM

vasudevan31355
17th September 2015, 10:04 AM
மதுர கான நேயர்கள் அனைவருக்கும் விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.

http://www.festivalspics.com/wp-content/uploads/2015/09/Cute-Baby-Ganesh-Chaturthi-wallpapers-Images-download-2.jpg

vasudevan31355
17th September 2015, 10:09 AM
ஓம்கார ரூபத்தில் உருவானவன்
அந்த ஓசைக்குள் வேதத்தின் பொருளானவன்


https://youtu.be/hBvQoBWVpGE

madhu
17th September 2015, 10:19 AM
இன்னைக்கு இன்னும் மூணு பக்கம் நிரம்பி வழிந்தால்தான் அடுத்த பாகத்தைப் பற்றி யோசிக்க முடியும்....

பிள்ளையார் பிடிக்கணும் என்றால் அனுமாரை நினைக்கணும்...

சிக்கா.... குரங்குப் பாடல்கள் போடலாமா ?

chinnakkannan
17th September 2015, 10:28 AM
ஹாய் குட் மார்னிங்க் ஆல்..

ஹாப்பி வினாயக சதுர்த்தி டு ஆல்...


தாங்க்ஸ் ஃபார் தெ பியூட்டி ஃபுல் சாங்க்ஸ்.. ஹச்சோ ஒரு நினைவலை இடணுமே டைம் இல்லையே என்ன செய்வேன்..

குரங்குப் பாட்டுன்னா மதுண்ணா ஃபர்ஸ்ட்டா நினைவுக்கு வருவது..


குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்...கொம்பேறித் தாவும் கு இலிருந்து பிறந்தவன் மனிதன்..

ஹப்புறம்..

ஆயிரம் ஆயிரம் ஆண்டினிலே அய்யா உன்னை நெனச்சேனே
அர்ச்சுனன் போல அழகிருக்க
அனுமார் சாதியை நினச்சேனே..

ஹப்புறம்.. அதான் நீங்க தரப் போறீங்களே :)

eehaiupehazij
17th September 2015, 11:45 AM
மனம் ஒரு குரங்கு! ...பிள்ளையாரே!


https://www.youtube.com/watch?v=e4kMBThpmdE

eehaiupehazij
17th September 2015, 11:48 AM
குரங்குகள் போலே மரங்களின் மேலே தாவித் திரிந்தோமே ....மதுஜி/சிக!!

eehaiupehazij
17th September 2015, 12:04 PM
குரங்கு வரும் தோட்டமடி பழத்தோட்டம் ...
https://www.youtube.com/watch?v=AeBYLgY64zM

eehaiupehazij
17th September 2015, 12:21 PM
மந்திஎல்லாம் மாங்கனியைப் பந்தாடிப் பல்லிளிக்கும்.......ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே!

https://www.youtube.com/watch?v=vW-5iFAOM7c

madhu
17th September 2015, 12:33 PM
மனம் ஒரு குரங்கு... மனித மனம் ஒரு குரங்கு

https://www.youtube.com/watch?t=8&v=130XblhrGuM

madhu
17th September 2015, 12:44 PM
அந்தப் புத்தி போகவில்லை சொந்தப் புத்தி மாறவில்லை
அவளுக்கும் குரங்குக்கும் பேதம் எனத் தோன்றவில்லை ஹோய்ய்ய்ய்ய்யா...

https://www.youtube.com/watch?v=R6DxEYEaLs0

eehaiupehazij
17th September 2015, 12:53 PM
Madhuji/si ka this movie is a not to miss entertainer to be enjoyed with family!!

https://www.youtube.com/watch?v=FjPueQfeQLs

vasudevan31355
17th September 2015, 01:00 PM
'மும்பை எக்ஸ்பிரஸ்' படத்திலிருந்து

குரங்கு கையில் மாலை
கொடுத்ததாரு வேலை
தொடுத்து வச்ச நாரும்
தேறாதுடா

கமல் பாடியது


https://youtu.be/hdjr7slf4Xs

madhu
17th September 2015, 01:05 PM
அந்தப் புத்தி போகவில்லை சொந்தப் புத்தி மாறவில்லை
அவளுக்கும் குரங்குக்கும் பேதம் எனத் தோன்றவில்லை ஹோய்ய்ய்ய்ய்யா...

https://www.youtube.com/watch?v=R6DxEYEaLs0

vasudevan31355
17th September 2015, 01:07 PM
'மனிதரில் மாணிக்கம்' படத்தில் ஏ .வி.எம்.ராஜன் திருடனாக இருந்து திருந்தி குரங்காட்டம் காட்டி பிழைப்பார். உடன் 'மாஸ்டர்' ராமு.

திரிகடதானா திரிகடதானா திரிகடதானா ராமையா
திரிகடதானா திரிகடதானா திரிகடதானா சோமையா

ஒரு பயல நம்பி வயத்த வளர்க்க வேணாண்டா

ராமா! கடலைத் தாண்ட்றா

புடிச்சா புடிச்சுது கொரங்கு புத்தி
கடிச்சா கடிச்சது நாயி புத்தி
எந்த நேரம் புடிக்கும்
இது எந்த நேரம் கடிக்கும்
அட யாருக்கடா தெரியும்
குரங்கைவிட கேவலம் மனுஷனின் புத்தி


https://youtu.be/1yA0KiO99D0

eehaiupehazij
17th September 2015, 01:09 PM
Enjoy this entertaining tarzan type jungle musical movie trailer starring Brendan Frazer!

https://www.youtube.com/watch?v=opqC7DhdaTM

vasudevan31355
17th September 2015, 01:10 PM
மதுண்ணா!

வாழ்த்துக்கள். செகண்ட் ஷிப்ட் கிளம்பறேன். தூள் கிளப்புங்கோ. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

madhu
17th September 2015, 01:15 PM
இனிமேல் தங்கம் தியேட்டரை படத்தில் மட்டுமே காண முடியும். மதுரையின் நினைவுச்சின்னம் ஒன்று காணாமல் போனது.

ஆசியாவிலேயே மிகப்பெரும் திரையரங்கம் என்றழைக்கப்பட்டது இந்த தங்கம் திரையரங்கம்.

இந்த தியேட்டரில் ஒரே நேரத்தில் 2563 பேர் அமர்ந்து படம் பார்க்கலாம். !

ஏனெனில்

இன்று முதல் சென்னை சில்க்ஸ் புதிய பிரமாண்டமான மால் மதுரையில் திறக்கப்பட்டுள்ளது..இது இங்குள்ள போத்திஸ் விட மிக பெரியது

https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-0/s526x395/12009634_720380038106078_1282877886703086455_n.jpg ?oh=7379a5f5c2ac27ae7d6673007f829289&oe=56AB02BB

chinnakkannan
17th September 2015, 02:31 PM
மதுண்ணா.. So sad. தங்கம் நினைவுச் சின்னம் தான்..

பார்த்த படங்கள் என்று கொஞ்சம் வேகமாக ஓட்டிப் பார்த்ததில் தூறல் நின்னுபோச்சு, காற்றினிலே வரும் கீதம், ஸ்பை ஹூ லவ்ட் மி, முகமது பின் துக்ளக்,மகாலஷ்மி இன்னும் நிறைய.. சட்னு நினைவுக்கு வர மாட்டேங்குது (எங்கே முரளி) ஒவ்வொரு ஷோவுமே ஒரு திருவிழா மாதிரி இருக்கும்..ம்ம் விரிவாய் எழுதணும் முடிந்தால் நாளை..

chinnakkannan
17th September 2015, 02:33 PM
டங்க்ஸ்டன் செக்ஸ் இன். .ஹிலாரியஸ் படம் சி.செ.. சிரித்து சிரித்து வயிறு வலிக்கும்..அதுவும் அந்த சுட்டிக் குரங்கு போய் மஸாஜ் செய்யுமே..ம்ம் முடிந்தால் நாளை பார்க்கணும்..ஆமாம் சி.செ எரின் ப்ராக்கோவிச் யூட்யூபில் பார்க்கக்கிடைக்கிறதா..

eehaiupehazij
17th September 2015, 02:41 PM
As I am suffering from fever ...songs!!

காய்ச்சலிலும் காதல் பாய்ச்சல் கீத மருந்துகள் !!


கடிதம் எழுதுவதென்பது யாருக்கும் கைவந்த கலையாவதற்கு கடினமான எழுத்துப் பயிற்சி மனம்தளராத முயற்சி தேவையே !!
உலகில் பிறந்த எந்தவொரு மனிதருக்கும் கடித அரிச்சுவடி லீவ் லெட்டரும் லவ் லெட்டரும்தானே !!
லீவ் லெட்டர் என்றாலே பஞ்ச் டயலாக் போல இளம் மனதில் பசுமரத்தாணியாகப் பதிந்த வரிகள் :
As I am suffering from fever I may please be granted one day leave .....என்பதே! ஸ்கூலிலிருந்து ஆரம்பித்து ரிடையராகும்வரை மாற்றமில்லாதது இதுவே!

இதை எழுதிஅனுப்பிவிட்டு ஓய்வில் நமது காதல் மன்னர் என்ன செய்கிறாரென்றால் ......பார்ப்போமே!!

சி க double ஹேப்பி அண்ணாச்சிகளே !
https://www.youtube.com/watch?v=XupZjuPB_fU

எஸ் எஸ் ஆருக்கு டபுள் தமாக்கா !!ஒரு கப்சா சரடு !!


காதல்மன்னர் இப்படி என்ஜாய் பண்ணுவதைக் கேள்விப்பட்டு அவரது கிளாஸ் நண்பரான எஸ் எஸ் ஆரும் இந்த லீவ் லெட்டரை அப்படியே ஈயடிச்சான் காப்பியாக எழுதி அனுப்பிவிட்டு தானும் காய்ச்சலாகி படுத்துக் கொள்கிறார் ! பொறுக்க முடியாமல் ஜெமினியிடமிருந்து எஸ்ஸாகி விஜயகுமாரி எஸ்எஸ்ஆரைக் கவனிக்க ஓடி வருகிறார் !

ஜெமினியின்காதலி சரோஜாதேவிக்கு இதைப் பார்த்து மனம் கொதித்து சொல்லாமல் கொள்ளாமல் போட்டிக்கு நானும் எஸ்எஸ்ஆரைத் தூங்கவைக்கிறேன் என்று கிளம்பிவிடுகிறார் ! ஜெமினி என்ன செய்வார்?! கல்யாணப் பரிசு சைக்கிளை எடுத்துக்கொண்டு சாவித்திரியின் காருக்குப் பின்னே காதல் துரத்தலுக்குப் போய் விடுகிறார்>>>>அப்புறம் க(ழு)தை எங்கெங்கோ காகிதம் மேயப் போய்விடுகிறது...எனக்கும் யாரோ தண்ணீர் தெளித்து கனவை சிதைத்துக் காப்பாற்றி விடுகிறார்கள் !!

https://www.youtube.com/watch?v=J-N6xTuQb88

https://www.youtube.com/watch?v=epP_PlwbiWE

கப்சாக்கதை முற்றும்.

eehaiupehazij
17th September 2015, 03:14 PM
Erin Brokkovich for si ka !!

https://www.youtube.com/watch?v=KEnxcGfGoCI

madhu
17th September 2015, 03:18 PM
சி.செ.ஜி..

கப்சாக் கதை நல்லாவே இருக்கே... இது கூட நல்ல ஐடியாதான்

ரேடியோ சிலோனில் பாட்டும் பதமும் வைப்பாங்க. அது போல ஒரு கப்சா கதைக்கு தகுந்த மாதிரி சில பாட்டுகளை செலக்ட் செஞ்சு போடலாம்

பழங்கால கதைகளுக்கு வாத்தியாரையா இருக்கவே இருக்கார்.

சிக்காவின் சிக்கன ஹைக்கூக்கள் சிறு தொடராக வரலாம்..

madhu
17th September 2015, 03:19 PM
டங்க்ஸ்டன் செக்ஸ் இன். .ஹிலாரியஸ் படம் .

ஹி ஹி... தமிழில் எழுதும்போது வேற மாதிரி இருக்கே சிக்கா...

chinnakkannan
17th September 2015, 03:19 PM
கப்சாக் கதைக்கு தாங்க்ஸ் சி.செ..ஆல்ஸோ ஃபார் எரின் ப்ராக்கோவிச்.. எனது நண்பர் ஒருவர் எனது எரின் ப்ரக்கோவி்ச் ரைட்டப்பை போனவாரம் சிலாகித்தார்.. பட் அவர் படம் பார்த்ததில்லையாம்.. எனில் கேட்டேன் உங்களிடம்..

கடிதம் என்று பார்த்தால்

நான் அனுப்புவது கடிதம் அல்ல

அன்புள்ள மான் விழியே ஆசையில் ஓர் கடிதம்..

என்ன சொல்லி நான் எழுத என் மன்னவனின் மனம் குளிர
மேலாடைக்குள் நான் போராடினேன்..

காதல் கடிதம் வந்ததா..

இப்பல்லாம் ஈமெய்ல் வாஸ்ஸப் ட்விட்டர் தானே..

chinnakkannan
17th September 2015, 03:20 PM
ஹி ஹி... தமிழில் எழுதும்போது வேற மாதிரி இருக்கே சிக்கா...

:) :) குறும்புக்கார அண்ணா :)

chinnakkannan
17th September 2015, 03:24 PM
சி.செ.ஜி..

கப்சாக் கதை நல்லாவே இருக்கே... இது கூட நல்ல ஐடியாதான்

ரேடியோ சிலோனில் பாட்டும் பதமும் வைப்பாங்க. அது போல ஒரு கப்சா கதைக்கு தகுந்த மாதிரி சில பாட்டுகளை செலக்ட் செஞ்சு போடலாம்

பழங்கால கதைகளுக்கு வாத்தியாரையா இருக்கவே இருக்கார்.

சிக்காவின் சிக்கன ஹைக்கூக்கள் சிறு தொடராக வரலாம்..

அப்ஜெக்*ஷன் யுவர் ஹானர்..

நான் மனசுல வச்சுருந்த தொடர் இதாக்கும்.. ரேடியோ சிலோனில் பாட்டும் பதமும் என்பது..

மதுரை கண்ணன் மயங்கி இருக்கும் மாலை..

அப்படின்னு ஆரம்பிச்சு
மதுரையில் பிறந்த மீன் கொடியே
கண்ணன் வருவான் கதை சொல்லுவான்
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
இருக்கும் இடத்தை விட்டு
மாலை சூடும் மண நாள்

எனப் பாடல்கள் வரும்..

இன்னொண்ணு உண்டு.. இசையும் கதையும்..

ஓஹ் என்று சூறைக்காற்று அடித்துக் கொண்டிருந்த பொழுது..
அவள் கண்கள் கொஞ்சம் அழுகையில் பெரிதாகி, கண்ணீர் தண்ணீர் லாரியில் தளும்பும் தண்ணீர்
போலக் கொட்டிக் கொண்டிருக்க
அந்த இருள்
இடி மின்னலில் அந்தக் கானகத்தில்
அவள் மெல்ல மெல்ல நடந்து கொண்டிருக்க
அவளது துக்கமும் அவளுடன் சுமையாய் நடந்துகொண்டிருந்தது..

பாவையின் மனப் போராட்டத்திற்கு என்ன காரணம்

எனக் கேட்டு விட்டு

என்னை மறந்ததேன் தென்றலே என்று போடுவார்கள்..

நானும் அடுத்த பாகத்தில் இசையும் கதையும் ஆரம்பிக்கலாம் என நினைத்திருந்தேன்..இதுபற்றி விரிவாகவே பேசலாம்..

madhu
17th September 2015, 05:45 PM
சிக்கா....

நானும் கூட அப்படி ஒரு தொடர் ஆரம்பிக்கலாமாஆஆஆஆஆ... என்று யோசித்துக் கொண்டே இருந்தேன். தொடர் என்றால் உருப்படியாக தொடர வேண்டிய அவசியம் உண்டு. என் உடல் நிலை அதற்கு ஒத்துழைக்காமல் புது நாடகத்தில் சில நாள் மட்டும் நடிக்க வந்த அனுபவம் இல்லாத புதுமுக மாது போல தன் இஷ்டத்துக்கு போகும்..

அதற்கு பயந்துதான் தொடராக எதையும் தொடவில்லை...

இசையும் கதையும் ஆரம்பிங்க... ரொம்ப நாளாச்சு கதை படிச்சு...

madhu
17th September 2015, 05:51 PM
இந்த பாகம் இன்னைக்கு முடியுமா என்று தெரியவில்லை.. இன்னும் ஒரு பக்கம் வரணுமே !

நான் நாளை முதல் ஞாயிறு வரை லீவு....

எல்லாம் அவர் செய்வது.... இந்த தொகுப்பு.... பல திரிகள்
இன்று அவராலே உருவானது..
அது அட்மின் எனும் பெயரானது.....
வாப்பா.... கொஞ்சம் வாப்பா..
( கொஞ்சம் இஸ்லாமிய அழைப்பாக இருக்கே )

இந்தப் பாட்டு நல்லா இருக்கும்னு அப்போதே சொன்னேனே கேட்டியா ?

https://www.youtube.com/watch?v=540dut8t79M

NOV
17th September 2015, 06:08 PM
Please go here for the 5th part


http://www.mayyam.com/talk/showthread.php?11536-%26%232990%3B%26%232985%3B%26%232980%3B%26%233016% 3B%26%232965%3B%26%233021%3B-%26%232965%3B%26%232997%3B%26%232992%3B%26%233009% 3B%26%232990%3B%26%233021%3B-%26%232990%3B%26%232980%3B%26%233009%3B%26%232992% 3B-%26%232965%3B%26%233006%3B%26%232985%3B%26%232969% 3B%26%233021%3B%26%232965%3B%26%232995%3B%26%23302 1%3B-%26%232986%3B%26%233006%3B%26%232965%3B%26%232990% 3B%26%233021%3B-5