PDA

View Full Version : மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 [15] 16

vasudevan31355
7th September 2015, 08:38 PM
(

சுமைதாங்கியையும் சேர்த்துக் கொள்ளலாம் ....மனிதன் என்பவன் தெய்வமாகலாம்.....

[url]https://www.youtube.com/watch?v=1LoJDdeO3lQ

அதை உங்களுக்காகவே விட்டு வைத்தேன் செந்தில் சார்.:)

chinnakkannan
7th September 2015, 08:40 PM
துலங்கிடும் எண்ணத்தை தூக்கி நிறுத்தி
விளக்கிட வந்த விளக்கு

ஆஹா எத்தனை விளக்குப் பாடல்கள்.. அனைவருக்கும் நன்றி..

ஒரு கூடை சன்லைட் ஒரு கூடை மூன்லைட் நு இருக்கு ஆனா லைட்ங்கறது ஒளி என்பது போல வருதே.. சரி லைட் பாடல் யாரும் சொல்ல மாட்டாங்களா என்ன..:)

vasudevan31355
7th September 2015, 08:42 PM
வாசு ஜி...

காதல் மன்னன் நடித்த "விளக்கு எரிகின்றது" பாடலைச் சொல்லிட்டீங்களா ? நான் எதிர்பார்த்தது வேறு பாட்டல்லவோ ?



மது அண்ணா!

'விளக்கு எரிகின்றது' டைட்டிலிலேயே ஞாபகம் இருந்ததால் அதே பெயரில் பாடல் பதிவு செய்ய நேரிட்டது. நிஜமாகவே சிகப்பு விளக்கு ஞாபகம் வரவில்லை.:) நினைவு படுத்தியதற்கு நன்றி.

vasudevan31355
7th September 2015, 08:43 PM
துலங்கிடும் எண்ணத்தை தூக்கி நிறுத்தி
விளக்கிட வந்த விளக்கு

ஆஹா எத்தனை விளக்குப் பாடல்கள்.. அனைவருக்கும் நன்றி..

ஒரு கூடை சன்லைட் ஒரு கூடை மூன்லைட் நு இருக்கு ஆனா லைட்ங்கறது ஒளி என்பது போல வருதே.. சரி லைட் பாடல் யாரும் சொல்ல மாட்டாங்களா என்ன..:)

இருங்கப்பா! ஒவ்வொன்றாகத்தானே முடிக்க வேண்டும். அதுக்குள்ளே அவசரப்பட்டா? அதுக்குள்ளே இன்னொரு டைட்டிலா?

chinnakkannan
7th September 2015, 08:57 PM
ஒவ்வொண்ணா முடியுமேன்..யாரு வேணாம்னா..ஆனாலும் இப்பல்லாம் நீர் ரொம்ப ஸ்ஸ்ஸ்லோ (சுலோச்சனா யாருன்னுல்லாம்கேக்கப் படாது :) )

ராகவேந்தர் விளக்கு எரிகின்றது பற்றியா எழுதியிருந்தார்..எனக்கென்னமோ நான் முன்னாடி செலக்ட் பண்ணி வச்சுருந்து அவர் போட்ட பின்னர் சும்மா இருந்த பாட்டு தான் நினைவுக்கு வந்தது

ஞாயிறும் திங்களும்..சரிதானா..



https://youtu.be/ZjiRKDmIDjk

பட்டிலும் மெல்லிய பெண்ணிது
தொட்டதும் மெல்லிடை துள்ளுது..
தட்டிய தங்கத்தில் செய்தது
தாமரைப் பூவில் நெய்தது..

வெண்ணிலாவின் சாறு கண்டு
வெள்ளிக்கிண்ணம் நூறு கொண்டு
பெண்ணுலாவ வந்ததென்று
பேச வந்த வார்த்தை என்ன

ஒன்று கேட்டு ஒன்று தந்து
ஓடம்போகும் ஆறு கண்டு
தென்றல் போகும் பாதை எங்கும்
சேர்ந்து போக ஆசை உண்டு

(ஆடியோ தான் கிடைச்சது)

vasudevan31355
7th September 2015, 08:58 PM
மதுண்ணா!

'நியாயம் கேட்கிறோம்' படத்தில் இருந்து இன்னும் இரண்டு பாடல்கள். 'சுக்ரா'வில் நண்பர் திருநாவுக்கரசு நான் கேட்டிருந்ததின் பேரில் அளித்திருந்தார். அவருக்கு என் உளமார்ந்த நன்றி! நீங்கள் கேட்டு விட்டு கேட்டிருக்கிறீர்களா இல்லையா என்று சொல்லுங்கள்.


'அப்படியும் வாழலாம்
இப்படியும் வாழலாம்
எப்படியும் வாழலாம் பூமியிலே
எந்த வழி போனாலும் கேள்வியில்லே'

சுசீலா பாடல். எனக்கு லேசாக கேட்ட நினைவு இருக்கிறது.

http://www.mediafire.com/download/19kqu1j1uvzq41x/Niyayam+Ketkirom+-+Appadiyum+Vazhalam.mp3


அடுத்த பாடல்

உள்ளம் தெரியும்
உருவம் தெரியும்
உங்கள் பார்வை கொஞ்சம் புரியும்
உலகம் தெரியாது
இந்த வெள்ளை மனதில் உங்கள் உருவம்
விலக முடியாது

இதுவும் சுசீலா பாடலே. இந்தப் பாடலை நான் கேட்ட ஞாபகம் இல்லை.

http://www.mediafire.com/download/ekb94ausyefeux2/Niyayam+Ketkirom+-+Ullam+Theriyum+1.mp3

vasudevan31355
7th September 2015, 09:00 PM
//ஒவ்வொண்ணா முடியுமேன்..யாரு வேணாம்னா..ஆனாலும் இப்பல்லாம் நீர் ரொம்ப ஸ்ஸ்ஸ்லோ//

அடப் பாவி மனுஷா!:)

vasudevan31355
7th September 2015, 09:03 PM
//ராகவேந்தர் விளக்கு எரிகின்றது பற்றியா எழுதியிருந்தார்..எனக்கென்னமோ நான் முன்னாடி செலக்ட் பண்ணி வச்சுருந்து அவர் போட்ட பின்னர் சும்மா இருந்த பாட்டு தான் நினைவுக்கு வந்தது

ஞாயிறும் திங்களும்..சரிதானா..//

சுய நினைவில்தான் இருக்கிறீரா? கிள்ளிப் பார்த்துக் கொள்ளும். கொல்லும்.:)

vasudevan31355
7th September 2015, 09:08 PM
//ஆனாலும் இப்பல்லாம் நீர் ரொம்ப ஸ்ஸ்ஸ்லோ//

மாங்கு மாங்குன்னு உக்காந்து யோசிச்சி யோசிச்சி பதிவு போட்டா ஸ்லோன்னா சொல்றீரு. விஜயகுமாரி பாட்டை ஏத்கிட்டே போறீர்ங்காணும்.:) அப்புறம் தாங்க மாட்டீர்.:)

vasudevan31355
7th September 2015, 09:09 PM
சின்னா!

2 ரேர் பாட்டு தந்திருக்கேன். ஒழுங்கா ஹோம் ஒர்க் பண்ணும்.:)

chinnakkannan
7th September 2015, 09:10 PM
சுய நினைவில்தான் இருக்கிறீரா? கிள்ளிப் பார்த்துக் கொள்ளும். கொல்லுm// புரியலைங்களே..தப்பா..

சரி
.. சச்சுவ விட்டு உங்களுக்கு... சொல்றேன்.. எனக்கு விளக்கிச் சொல்லுங்க!



https://www.youtube.com/watch?v=tppLDgyTvXk&feature=youtu.be

vasudevan31355
7th September 2015, 09:16 PM
எனக்கெதுக்குப்பா 1000 முத்தம். செப்டெம்பர் 3 ஞாபகம் வந்துடுச்சா?:)

vasudevan31355
7th September 2015, 09:19 PM
//புரியலைங்களே..தப்பா.. //

'நம் முரளி சார் கூட நடிகர் திலகம் திரியில் இதுபற்றி முன்பொருமுறை அற்புதமான பதிவு ஒன்றை இட்டிருந்தார்' அப்படின்னுதானே எழுதியிருக்கேன். ராகவேந்திரன் சார்னு எழுதலையே. இப்போ புரியுதா?:)

vasudevan31355
7th September 2015, 09:23 PM
சின்னா!

ஒரு அருமையான ராஜாவின் விளக்கு பாடலை விட்டுட்டோமே! 'ஆத்மா' படத்திலிருந்து. உமக்குப் பிடித்த விசித்ரா.

'விளக்கு வைப்போம்
விளக்கு வைப்போம்
குலம் விளங்க
விளக்கு வைப்போம்'


https://youtu.be/GaQRrE9gCjs

vasudevan31355
7th September 2015, 09:25 PM
குத்து விளக்கெரிய
கூடமெங்கும் பூ மணக்க
மெத்தை விரித்திரிக்க
மெல்லியலாள் காத்திருக்க (ஆஹா!)


https://youtu.be/Gprz9oXErV0

vasudevan31355
7th September 2015, 09:35 PM
'விளக்கிலாமல் கணக்கெழுதி என்
வாழ்க்கை அமைத்தாயா?'

ராஜபாண்டியனின் சோகம். 'தாலாட்டு' படத்தில். அருமையான பாட்டு.


https://youtu.be/N2z8GvZEJSg

RAGHAVENDRA
7th September 2015, 09:42 PM
ஹ்ம்... இருக்கிற இத்துனூண்டு மண்டையையும் ஆளாளுக்கு இப்படிப் போட்டு உருட்டினா என்னத்துக்காகிறது..

அந்தக் காலத்திலேருந்து இந்தக் காலம் வரைக்கும் சாயங்காலமானா 6 மணி வாக்குலே தெரு விளக்கெல்லாம் எரியும் படி அரசாங்கம் வழி வகுத்திருக்கிறது. அதை ஞாபகம் வைத்து இப்பாடலைக் கவிஞர் எழுதினாரான்னு தெரியலே.. காதலியைப் பார்த்தால் இவருக்கு மணி விளக்கு தான் ஞாபகம் வருதாம். ஒரு வேளை சாயங்காலம் 6 மணிக்கு போடும் தெரு விளக்கு ஞாபகமோ

https://www.youtube.com/watch?v=3E22nriko7U

chinnakkannan
7th September 2015, 09:44 PM
வாசுங்ணா.. :) ஓய் ஏதோ காத்தடிச்சது இளம் தென்றலாக ந்னு கவித்துவமா சொன்னா இப்படியா அவையில் கேக்கறது..

தென்றல் என்னை முத்தமிட்டது..
இதழில் இனிக்க இதயம் கொதிக்க
எல்லோரும் பார்க்க

அப்படித் தானே சொன்னேன்!

chinnakkannan
7th September 2015, 09:46 PM
ஆஹா..ஈ பாட்டை ஞான் எப்படி மறன்னு.. தாங்க்ஸ் ராகவேந்திரரே..( இங்க்லீஷ்லாம் கத்துக்கலாம் ! இங்க்லீஷ் வருமோன்னோ..சரி கேட்டுப் பார்க்கிறேன்!)ம்ம் இப்ப கேக்க முடியலை..இங்க்லீஷ் வார்த்தைகள் வராதுன்னு நினைக்கறேன்..

அப்புறம் யுவர் ஹானர்.. அந்தக் கால அந்தப்புரங்களில் தூண்களின் மேல் மணி போல ச் சிற்பங்கள் செய்து அதன் மேல் அகல் விளக்கை வைத்திருப்பார்கள் என்று வீரராஜேந்திரன் காலக்கல்வெட்டு காஞ்சிபுரம் பக்கத்திலிருக்கும் திருவிளக்காவூர் என்ற ஊரிலுல்ல கல்வெட்டில் எழுதியிருப்பதாகத் தெரிகிறது! அது தான் மணிவிளக்காக் இருக்கும் என்பது என் அபிப்ராயம்..ஓவர் டு..ப.பி வாசு..!

eehaiupehazij
7th September 2015, 09:53 PM
புதியன காணலும் பழையன பேணலும்

புதுமைகள் பல்கிப் பெருகி வரும் யுகத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க பழைமையும் போற்றிப் பாதுகாத்திடல் அவசியமே!

காணற்கரிய பழைமைச் சிறப்பு மிக்க பொருட்களின் பின்னணியில் பொங்கிப் பெருகிய மதுர கானங்கள்

PART 2
டெலிபோன் ஹலோ இரட்டையர் ஆட்டம்!



வகைவகையான செல்போன்கள் சந்தைக்கு வந்து இன்று மனித சமூக நாகரிக வாழ்வின் கவசகுண்டலமாக மாறிவிட்ட போதும் பட்டனை அமுக்கும் விரல்விட்டு எண்வளையம் சுற்றும் ஆரம்பகால லேண்ட்லைன் போன்களே வேண்டும் என்று அடம் பிடித்தால் எப்படி?! அந்த போன்கள் எப்படி இருக்கும் (பார்த்து ரசிக்க : புதிய பறவை / சிவந்த மண்) என்பதை அதன் மதுரகான பாடல் பரிமாற்ற பயன்பாடுகளை இந்தத் தலைமுறையினரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே நமது திரை நாயகரின் தீர்க்கதரிசனமான நோக்கம்!

என்னதான் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் நம்மை ஆகர்ஷித்து ஆட்டுவித்தாலும் அம்மாவை அப்பா எண்டும் அப்பாவை அம்மா என்றும் மாற்றிக் கூப்பிட முடியாதே!
(உபயம் : ஒருவிரல் கிருஷ்ணாராவ் சின்னத்தம்பி படத்தில் மாலைக்கண்ணர் கவுண்டமணியுடன் !)
அதேமாதிரி என்னதான் செல்போன் வாட்ஸ் அப் என்று தூள் கிளப்பிக் கொண்டிருந்தாலும் செல்போன் எடுத்தவுடன் யாரும் விளிப்பது டெலிபோன் காலத்திய'ஹலோ' என்ற வார்த்தையே!! ஒருநாளைக்கு நாம் அதிகம் உச்சரிப்பது நச்சரிப்பது இந்த வார்த்தையைப் பயன்படுத்தியே!!
இந்த மந்திர வார்த்தை எப்படிப் புழக்கத்திற்கு வந்தது என்பது புரியாத புதிரே! டெலிபோன் / செல்போன் இல்லா விட்டாலும்உலகின் அனைத்து மொழி மக்களுக்கும் பொதுச்சொல் 'ஹலோ'வே!!



Telephone and Hello related songs!

டெலிபோன் ஹலோ இரட்டையர் ஆட்டப் பிரிவில் நடிகர்திலகம் - விஜயா Vs மக்கள் திலகம் - சரோஜாதேவி

டெலிபோனை வரலாற்றுச்சின்னமாக்கிய திரிசூலத்தில் ...

https://www.youtube.com/watch?v=HdnpiKZBpAs

செல்போன் கடலை போடுவதற்கு முன்னோடி டெலிபோனில் காதலை பாடி பில்லை ஏற்றி வரலாறு படைத்தவர்கள்!! தர்மம் தலை காத்திட....

https://www.youtube.com/watch?v=qqEFpc7V4kY

அழகன் மம்முட்டி பானுப்ரியா கடலையால்தான் டெலிபோனுக்கு மாற்றாக செல்போன் கண்டுபிடிக்கப் பட்டதாக ஒரு வரலாற்றுப் பிழை ?!

https://www.youtube.com/watch?v=M6HZP5IMRRQ


cOMING uP nEXT!

Antiques like Gramophone, Megaphone, Watches, Cars, Bikes, Scooters, ......many more!

Marching towards ending up this thread soon! wishes!!

rajraj
7th September 2015, 10:22 PM
From manamuLLa maruthaaram(1958)

thiruviLakku veettuukku alankaaram thirumaangalayam peNgaLukku jeevaadhaaram......

http://www.youtube.com/watch?v=a5oRTH4NreI

eehaiupehazij
7th September 2015, 11:22 PM
ராஜ்ராஜ் சார் இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள் !

https://www.youtube.com/watch?v=IEFJOdG_O-k

chinnakkannan
7th September 2015, 11:45 PM
ஹல்லோ மிஸ்டர் ஜமீந்தார் ஹெள டூ யூ டூ ஓகே டீச்சர் ஓ.கே ஹெள்டூ யூடூ

ஹல்லோ மைடியர் ராங்க் நம்பர் கற்பனை ஓராயிரம் ஒருமுறை பார்த்தால் என்ன..

ஹல்லோ மிஸ் ஹல்லோ மிஸ் எங்கே போறீங்க

ஹலோ ஹலோ சுகமா ஆமா நீங்க நலமா

ஹலோ மை டார்லிங்க் இப்பக் காதல் வந்தாச்சு

ஹலோ ஸ்ஸார் குட்மார்னிங்க் மை நேம் இஸ் கீதா வாட் கேன் ஐ டூ ஃபார் யூ சார்

ஹலோ ஓ ஹலோ..ஓ (சிம்பு பாட் நடுவில் வரும்)

ஹலோ ஹலோ கமான் க்மான் கோமானே..

ஹல்லோ மிஸ்டர் எதிர்க்கட்சி
கேள்விக்கு பதிலும் என்னாச்சு
பாத்துப் பாத்து நாளாச்சு பதினெட்டு வயசாச்சு...

https://youtu.be/sg7-Kuy3ZY0


அட ஆமா..பார்த்துத் தான் நாளாச்சு :) ஆனாக்க மலையாளமா தெலுங்கா தெரியலையே!

இன்னும் ஹலோ இருக்குமே!

eehaiupehazij
8th September 2015, 02:30 AM
ஹலோ சி க !
ஹலோ மை டியர் ராமி ...Chandrababu song
ஹலோ ஹலோ .ஹல்லல்லோ.........பிரபா ஒயின்ஸ் ஓனரா பேசறது.....வடிவேலு காமெடி!
ஹலோ ...நான் ரொம்ப பிசி....டெலிபோன் ஒயரைப் பிடுங்கி மூணு நாளாச்சு....கவுண்டமணி காமெடி!
ஹலோ .....நீங்க வெறும் தாஸா...லார்டு லபகதாசா? விவேக் காமெடி....

madhu
8th September 2015, 05:40 AM
வாசு ஜி..

நியாயம் கேட்கிறோம் சுசீலா பாடல்கள் இரண்டும் நான் கேட்டிருக்கிறேன்.

சிக்கா..

ஞாயிறும் திங்களும் படம்தான் வெளியாகவில்லையே... வீடியோ எப்படி கிடைக்கும் ?

eehaiupehazij
8th September 2015, 07:44 AM
வாசு /சிக /மது /ராஜ்ராஜ்/ ராகதேவ் /ராகவேந்தர்/ ரவி ஜீஸ் !!
சிறார்கள் விளையாடி மகிழும் தீப்பெட்டி டெலிபோன் பின்னணி கீதங்கள் ஏதும் இருக்குமா ?!

rajraj
8th September 2015, 09:08 AM
vaNakkam from Bellevue(Seattle), WA ! :)

RAGHAVENDRA
8th September 2015, 10:09 AM
பாட்டு மட்டுமல்ல, படத்தின் பேரே ஹலோ யார் பேசறது ...

https://www.youtube.com/watch?v=f90sop45GgA

RAGHAVENDRA
8th September 2015, 10:10 AM
வாசு /சிக /மது /ராஜ்ராஜ்/ ராகதேவ் /ராகவேந்தர்/ ரவி ஜீஸ் !!
சிறார்கள் விளையாடி மகிழும் தீப்பெட்டி டெலிபோன் பின்னணி கீதங்கள் ஏதும் இருக்குமா ?!

அதான் வந்துடுச்சே..

https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f2/Landline_text_messaging.JPG/200px-Landline_text_messaging.JPG

RAGHAVENDRA
8th September 2015, 10:12 AM
வாசு /சிக /மது /ராஜ்ராஜ்/ ராகதேவ் /ராகவேந்தர்/ ரவி ஜீஸ் !!
சிறார்கள் விளையாடி மகிழும் தீப்பெட்டி டெலிபோன் பின்னணி கீதங்கள் ஏதும் இருக்குமா ?!

இதை வெச்சு வசனம் மட்டும் ஞாபகம் இருக்கு..

நீ இதயத்தைக் குடு, நான் குங்குமத்தைத் தர்றேன்.,..

madhu
8th September 2015, 10:17 AM
வாசு /சிக /மது /ராஜ்ராஜ்/ ராகதேவ் /ராகவேந்தர்/ ரவி ஜீஸ் !!
சிறார்கள் விளையாடி மகிழும் தீப்பெட்டி டெலிபோன் பின்னணி கீதங்கள் ஏதும் இருக்குமா ?!

வெறும் கையே தொலைபேசியாக இதயத்தின் ஒலியை வெளிப்படுத்தும் ஹிந்தி பாடல் இது... படம் சர்கம்.. நம்ம சிரி சிரி முவ்வாவேதான்..

https://www.youtube.com/watch?v=lW74yFcxnMA

madhu
8th September 2015, 10:18 AM
ஹலோ ஹலோ ஹலோ.... ( சிக்கா... ஷாஜஹான் இல்லீங்க.. மும்தாஜ் மட்டும் )

https://www.youtube.com/watch?v=vIkroF5H0Rk

chinnakkannan
8th September 2015, 10:24 AM
ஹாய் குட்மார்னிங் ஆல்..

சி.செ.. வண்ணக் கோலங்கள் எஸ்.வி.சேகர் சீரியல் நினைவிருக்கிறதா..அதில் டெலிஃபோன் இலவசம் என வரும் ஒரு குறுக்கெழுத்துப் போட்டிக்கு மாய்ந்து மாய்ந்து சேகர் குட்டி பத்மினி அப்புறம் அந்த கணக்கு வாத்தியார் எல்லாம் ஃபில்லப்பண்ணி அனுப்புவார்கள்..பரிசாக் இந்த தீப்பெட்டி டெலிஃபோன் கிடைக்கும்..(அதெல்லாம் டெலிஃபோன் கனெக்*ஷன் சுலபமாகக் கிடைக்காமல் இருந்த காலம்)


மதுண்ணா.. இந்த சிரி சிரி முவ்வா பத்திப் போட்டாச்சா போடவில்லையெனில் போடுங்களேன்.. மதுரையில் ஸ்ரீதேவி ரிலீஸ் தான்..ஆனால் வெகு சின்னவயதிலும் சரி தற்போதும் சரி நான்பார்த்ததில்லை..

eehaiupehazij
8th September 2015, 12:40 PM
ஹலோ ஹலோ ஹலோ.... ( சிக்கா... ஷாஜஹான் இல்லீங்க.. மும்தாஜ் மட்டும் )

[url]https://www.youtube.com/watch?v=vIkroF5H0Rk

Brilliant Madhuji!

madhu
8th September 2015, 12:43 PM
தமிழ் ஸ்கூல் மாஸ்டர் படத்தில் ஜெமினியையும் சௌகாரையும் அவர்கள் பிள்ளைகள் பங்கு போட்டு பிரித்துக் கொண்டு போக கணவரிடம் பேசத் துடிக்கும் சௌகாருக்கு பேத்தி டெலிபோனில் டிரங்க் கால் புக் செய்து கொடுத்து பாடும் பாட்டு ஒன்று உண்டு...

பாத்தா சிறுசுதான் பாட்டி... இது தாத்தாவைக் கொண்டு வரும் கூட்டி
காதோரம் மெல்ல மெல்ல மாட்டி.. சேதி தருவதே இது செய்யும் டியூட்டி

புஷ்பலதா பாடிய பாடல்.... கேட்டே நாளாச்சு... இதுல வீடியோவுக்கு எங்கே போவது ?

eehaiupehazij
8th September 2015, 12:59 PM
ராகவேந்தர் சாரின் அபார ஞாபக சக்த்தியை வியந்து இப்பரிசு ...தீப்பெட்டி டெலிபோன்....புதியவார்ப்புக்கள் படத்திலிருந்து

என்ஜாய் 9 : 50 லிருந்து!

https://www.youtube.com/watch?v=nHvT2yAbb9U

chinnakkannan
8th September 2015, 02:37 PM
சொன்னாற்போலவே ராகவேந்தர் சொன்ன போது சரி ச்சும்மா இதயம்குங்குமம்னு கோட் செய்கிறார் என நினைத்துவிட்டேன்.. நீங்கள் படக்காட்சி போட்ட பிறகு தான் பு.வார்ப்புகள் இலிருந்து அந்தக் காட்சி என நினைவுக்கு வந்தது..உங்களுக்கும் அபாரமான ஞாபக சக்தி சி.செ.

ஃபோனாட முக்கியத்துவம் க்ளைமாக்ஸ்ல சர்ரூக்காக கே.பி பயன்படுத்தியிருப்பார்..

”பங்கஜம் என்ன பண்றான்னா தூக்க மாத்திரையை எண்ணறா” சர்ரூ...

“சரிங்க அப்புறம் என்ன ஆகிறது” கதை கேட்கும் சுவாரஸ்யத்தில் நாகேஷ்..

:அப்ப என்ன ஆச்சுன்னா” காட்சி சர்ரூவிற்கு மாற ஒரு பூனை வந்து கண்ணாடித்தம்ளரை த் தட்டி விடுகிறது ச்ச்சிலீர் சத்தம்..

கடகடவென சிரிக்கும் சர்ரூ “ என்ன ஆச்சுன்னாக்க பூனை வந்துஅவளோட தம்ளரை த் தட்டி விடறது அவ இன்னொரு கிளாஸை எடுக்கறா” எனச் சொல்ல கேட்கும் நாகேஷூக்கு உறைக்கிறது..

”கதைல தானே கண்ணாடி டம்ளர் உடையும்..இங்க நெஜமாவே சத்தம் கேட்குதே ஒருவேளை” எனத் தடுமாறி யூகித்து “ஹலோ.. ஹலோ பங்கஜம் சாகக் கூடாதுங்க.. நான் கேக்கறது உங்களுக்குக் கேக்குதா ஹலோ ஹலோ”

ஃபோன் சர்ரூ கையிலிருந்து நழுவப் பார்க்க அதைப் பிடித்த படி சர்ரூ கலங்கி க் கலங்கி “ நெள இட் இஸ் டூ லேட் நாராயண்.. பங்கஜம் எல்லா மாத்திரையும் சாப்பிட்டுட்டா.. அவ கதை முடிஞ் போச்” எனக் குழறிச் சொல்லி மறுபடியும் டம்ளர் தரையில் படார்.. டெலிஃபோனும் நழுவ மறுமுனையில் பதற்ற நாராயண நாகேஷ் “ஹலோ ஹலோ “ வெனக் கதறுவார்..

படம் தாமரை நெஞ்சம் எனச் சொல்லவும் வேண்டுமோ :)

vasudevan31355
8th September 2015, 02:51 PM
தமிழ் ஸ்கூல் மாஸ்டர் படத்தில் ஜெமினியையும் சௌகாரையும் அவர்கள் பிள்ளைகள் பங்கு போட்டு பிரித்துக் கொண்டு போக கணவரிடம் பேசத் துடிக்கும் சௌகாருக்கு பேத்தி டெலிபோனில் டிரங்க் கால் புக் செய்து கொடுத்து பாடும் பாட்டு ஒன்று உண்டு...

பாத்தா சிறுசுதான் பாட்டி... இது தாத்தாவைக் கொண்டு வரும் கூட்டி
காதோரம் மெல்ல மெல்ல மாட்டி.. சேதி தருவதே இது செய்யும் டியூட்டி

புஷ்பலதா பாடிய பாடல்.... கேட்டே நாளாச்சு... இதுல வீடியோவுக்கு எங்கே போவது ?

புரியுது மதுண்ணா! நல்லா புரியுது.:)

vasudevan31355
8th September 2015, 02:52 PM
//படம் தாமரை நெஞ்சம் எனச் சொல்லவும் வேண்டுமோ//

நெஞ்சம் மறப்பதில்லை:)

chinnakkannan
8th September 2015, 02:53 PM
கறுப்பு பச்சை சிவப்பு மஞ்சள்(?) டெலிஃபோன்களுக்கிடையில் ந.தி அலைபாயும் வரலாற்றுப் படம் நினைவிருக்கா வாசுசார்..:)

chinnakkannan
8th September 2015, 02:59 PM
//அழகன் மம்முட்டி பானுப்ரியா கடலையால்தான் டெலிபோனுக்கு மாற்றாக செல்போன் கண்டுபிடிக்கப் பட்டதாக ஒரு வரலாற்றுப் பிழை ?!// சி.செ.. :) :)


ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்
டெலிஃபோன் குயிலே வேண்டும் உன் தரிசனம்

இந்த்ப் பாட் நினைவுக்கு வந்துச்..:)

vasudevan31355
8th September 2015, 03:00 PM
டெலிபோன் மணி போல் சிரிப்பவள் இவளா

eehaiupehazij
8th September 2015, 03:21 PM
காசேதான் கடவுளடா திரைப்படத்தில் இந்தப் பாடல் காட்சியில் அந்தக்கால பூங்காக்களில் வைத்திருக்கும் ஒலி பெருக்கி மற்றும் பழைய விரல் சுழற்றும் கருப்பு டெலிபோன்..பெரிய செட் சைசில் பார்க்கலாம்....லட்சுமியுடன் முத்துராமன் கொறிக்கும்....மதுரகானம்..மெல்லப் பேசுங்கள்!

https://www.youtube.com/watch?v=DvxHybjxzRc

vasudevan31355
8th September 2015, 03:58 PM
'வைர நெஞ்சம்'

'Gehri chaal'

பாடல்கள் ஒப்பீடு

'நடிகர் திலகம்' நடித்து வெளிவந்த ஸ்ரீதரின் படம் 'வைர நெஞ்சம்' என்பது எல்லோருக்கும் தெரியும். இதையே ஸ்ரீதர் அதே சமயத்தில் இந்தியிலும் எடுத்தார். படத்தின் பெயர் 'gehri chaal'. சில பல காரணங்களால் 'ஹீரோ 72' என்று பெயரிடப்பட்டு தாமதமாக 'வைர நெஞ்ச'மாக மாறி 1975 ல் ஒருவழியாக தீபாவளிக்கு தமிழில் வெளிவந்தது. இதே நாளில் நடிகர் திலகத்தின் 'டாக்டர் சிவா' படமும் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்தியில் சிக்கல்கள் இல்லாத காரணத்தால் 'gehri chaal' 1973-ல் வெளி வந்துவிட்டது.

இந்தியில் 'நடிகர் திலகம்' தமிழில் ஏற்று நடித்த நாயகன் பாத்திரத்தை ஜிதேந்திராவும், முத்துராமன் ரோலை அமிதாப் பச்சனும், பத்மப்ரியா வேடத்தை அழகுப் பெட்டகம் ஹேமாமாலினியும் செய்திருந்தனர்.

எந்த ஹேமாமாலினியை தமிழில் முகவெட்டு நன்றாக இல்லை என்று ஸ்ரீதர் ஒதுக்கினாரோ அதே ஹேமாவை இந்தியில் கதாநாயகியாக ஸ்ரீதர் போட வேண்டிய கால மாற்றம் ஆயிற்று. சில நண்பர்கள் ஸ்ரீதர் படத்தில் ஹேமா நடித்ததில்லை என்று என்னிடம் கூறுவார்கள். ஆனால் அது உண்மை இல்லை.

சரி! இப்படத்தின் பாடல்களைப் பார்த்து விடலாமா?

எல்லாப் பாடல்களுமே தமிழில் 'மெல்லிசை மன்னரி'ன் அதிரடி இசையில் சூப்பரோ சூப்பர். இந்தியில் லக்ஷ்மிகாந்த் பியாரிலால் இசையில் எல்லாப் பாடல்களுமே சுமார் ரகமே.

'நடிகர் திலகம்' பத்மப்ரியாவைக் கலாய்த்து,

'ஹே ஹே மை ஸ்வீட்டி' என்று டி.எம்.எஸ்.குரலில் ரகளை பாடல் ஒன்று பாடுவாரே. அது இந்தியில் 'Ae Bhai Tu Kahan' என்று ஒலித்தது. இரண்டையும் பாருங்கள். தமிழ் எவ்வளவு டாப் என்று தெரியும்.

தமிழில் அழகான ஸ்லிம்மான 'நடிகர் திலகம்'. இந்தப் பாடலின் ஷூட்டிங்கை நான் பார்த்தேனாக்கும். 'நடிகர் திலக'த்திடம் பேச முடியவில்லை. ஆனால் பதமப்ரியாவுடன் சிறிது நேரம் உரையாடினேன்.


https://youtu.be/uGPfXFx6S7w

இந்தியில் ஜிதேந்திராவின் குதிப்பு. ஹேமா ஆறுதல். 'Ae Bhai Tu Kahan'


https://youtu.be/UAP15bOlmkc

vasudevan31355
8th September 2015, 03:59 PM
சி.ஐ.டி சகுந்தலாவை ஏமாற்ற கழைக் கூத்தாடிகள் போல வேடமிட்டு நடிகர் திலகமும் பத்மப்ரியா குழுவினரும் ஆடிப் பாடும் 'கார்த்திகை மாசமடி...கல்யாண சீசனடி' பாடல்.


https://youtu.be/CGrbrkvDnxM

அதுவே இந்தியில் Jaipur Ki Choli ஆக. (இதிலும் 'சோளி கே பீச்சே' உண்டு) சகுந்தலாவுக்கு பதிலாக இந்தியில் கவர்ச்சி பிந்து


https://youtu.be/ZZm45CZGH10

vasudevan31355
8th September 2015, 03:59 PM
தமிழில் வாணி ஜெயராம் மிக மிக அற்புதமாகப் பாடிய சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்

'நீராட நேரம் நல்ல நேரம்' நடிகர் திலகத்தின் செம ஸ்டைல் போஸ்களில். வியக்க வைக்கும் ஸ்மோக் ஸ்டைல்களில்.


https://youtu.be/uvknaw6In7Q

இந்தியிலும் நல்ல பாடலே. ஆனாலும் தமிழை நெருங்க முடியாது. பிந்து ஆடும் 'Sham Bheegi Bheegi' பாடல்.


https://youtu.be/5Jh8oWYC60Y

vasudevan31355
8th September 2015, 04:00 PM
'அம்மான் மகன்... எங்கே அவன்? பத்மப்ரியாவின் காபரே. ராட்சஸியின் ரகளை. நடிகர் திலகத்தின் கூலிங் கிளாஸ் ஸ்டைல்.


https://youtu.be/0MAUDabbuBE

இந்தியில் ஹேமாவின் கேபரே. பத்மப்ரியா அளவுக்கு கவர்ச்சி இல்லை.


https://youtu.be/ZUHZSYaOU7I

vasudevan31355
8th September 2015, 04:01 PM
இந்தியில் இரண்டு பாடல்கள் எக்ஸ்ட்ராவாக சேர்த்திருப்பார்கள். படத்தின் டைட்டில் காட்சியில் ஹேமா தோழிகளுடன் டென்னிஸ் கோர்ட்டில் ஆடிப் பாடும் ஒரு பாடல். 'De Tali Badi Zor' என்று லதாவின் குரலில் இப்பாடல் அருமையாக இருக்கும். லதா அற்புதமாக பாடியிருப்பார். ஹேமா டென்னிஸ் டிரெஸ்சில் கொள்ளை அழகு. இந்த இரண்டு பாடல்களிலும் நம் ஆடலழகி ஜெய்குமாரி ஹேமாவுடன் சேர்ந்து ஆடுவதை கவனியுங்கள்.:)


https://youtu.be/qi3dxa2kOek

ஜிதேந்திராவை ஹேமா ப்ளஸ் தோழிகள் கிண்டல் செய்து பாடும் ஒரு பாடல். 'Kukdoo Ko Bada Pyara'.


https://youtu.be/hNFUtjr_ZTk

madhu
8th September 2015, 04:22 PM
என்னதான் ஹிந்தி படம் முன்னாடியே ரிலீஸ் ஆகியிருந்தாலும் செந்தமிழ் பாடும் சந்தனக் காற்றுக்கு ஈடாகுமா வாசுஜி ?

vasudevan31355
8th September 2015, 04:22 PM
பாடல்களின் ஒப்பீட்டிற்காக இரண்டு படங்களின் வீடியோப் பாடல்களின் எண்ணிக்கை ஜாஸ்தியாகி விட்டது. வேறு வழியில்லை. மன்னிக்கவும்

vasudevan31355
8th September 2015, 04:29 PM
என்னதான் ஹிந்தி படம் முன்னாடியே ரிலீஸ் ஆகியிருந்தாலும் செந்தமிழ் பாடும் சந்தனக் காற்றுக்கு ஈடாகுமா வாசுஜி ?

உண்மை மது அண்ணா!

இந்தியில் அப்படி பாடலே இல்லை என்று நினைக்கிறேன். எல்லாப் பாடல்களுமே தமிழில் கேட்க அவ்வளவு டாப்.

பாடகர் திலகத்தின் கிளாஸ் குரல். 'ஸ்வீட்டி' பாடலில் 'ஹாஹா ஹா... டான்டடான், ஹே! டரட டடம்' அமர்க்களமான அமர்க்களமல்லவா!

vasudevan31355
8th September 2015, 04:32 PM
மது அண்ணா!

உங்களுக்காக செந்தமிழ் பாடி வீசும் சந்தனக் காற்று உங்கள் நேரினில் வருகின்றது.


https://youtu.be/WiQsVl5KkEc

RAGHAVENDRA
8th September 2015, 04:36 PM
வாசு சார்
தங்கள் ரூட்டே தனி, கிட்டே யாரும் நெருங்க முடியாது. தூள் கிளப்புங்க..

கேஹ்ரி ச்சால் படத்தைப் பொறுத்த மட்டில் ஷாம் பீகி பீகி பாட்டு சூப்பர் டூப்பர் ஹிட். தினமும் இரவு 10.30 மணிக்கு விவித்பாரதியில் ஒலிபரப்பாகும் மன்சாஹே கீத் நிகழ்ச்சியில் அடிக்கடி இடம் பெறும். அதே போல் 7.15 மணிக்கு ஒலிபரப்பாகும் ஜவான்களுக்கான ஜெய்மாலா நிகழ்ச்சியிலும் இப்பாடல் அடிக்கடி இடம் பெறும். ஜவான்களுக்கு இப்பாடல் மிகவும் பிடிக்கும் என, ஒரு முறை ஹிந்தி டெக்னீஷியன் ஒருவர் சிறப்பு ஜெய்மாலா நிகழ்ச்சியில் கூறிய ஞாபகம்.

மற்றபடி சொல்லிக்கொள்ள ஏதுமில்லா படம் கேஹ்ரி ச்சால்.

தமிழிலும் ஹேமமாலினியைத் தான் அணுகினார்கள். கால்ஷீட் பிரச்னை காரணமாக நடிக்க முடியவில்லை. இதைப்பற்றி ஹேமாவே ஒரு பத்திரிகையில் (சித்ராலயா என்று நினைக்கிறேன்) சொல்லியிருந்தார். இரண்டு மூன்று படங்களுக்கு மேல் கால்ஷீட் காரணத்தால் நடிகர் திலகத்துடன் நடிக்கும் வாய்ப்பு நழுவிப்போனதை மிகவும் வருத்தப்பட்டுச் சொல்லியிருந்தார்.

அதுவும் ஹே.ஹே. மை ஸ்வீட்டி பாடலில் ஹேமாவை இருத்திப் பார்த்தால் ... மனம் கொள்ளை கொள்ளும்.. ஜோடி அம்சமாயிருந்திருக்கும்.

பத்மப்ரியாவைப் பொறுத்த மட்டில் ந.தி.யுடன் ஏழு படங்கள் கை நழுவிப்போனது (ஸ்ரீதரின் புண்ணியத்தால்). அவை அனைத்தும் மஞ்சுளாவுக்குப் போயின.

அவன் ஒரு சரித்திரம்
மன்னவன் வந்தானடி
எங்கள் தங்க ராஜா
என் மகன்
டாக்டர் சிவா
அவன் தான் மனிதன்
உள்ளிட்ட ஏழு படங்கள்.

vasudevan31355
8th September 2015, 04:52 PM
ராகவேந்திரன் சார்!

மேலதிக தகவல்கள் அருமையிலும் அருமை. பதிவிற்கே பெருமை சேர்த்து விட்டது தங்கள் பதிவு. நானும் அப்போது அம்மாவின் புண்ணியத்தில் 'ஷாம் பீகி பீகி' பாடலை ரேடியோவில் கேட்டிருக்கிறேன். இப்போது உங்கள் நினைவு படுத்தலால் ஜெயமாலா நிகழ்ச்சி அப்படியே மனதில் ஓடுகிறது. 7.15 முடிந்து மணி எப்போது எட்டாகும் என்று தமிழ்ப் பாடல்களுக்காக வெயிட் செய்ததும் லேசாக நினைவிருக்கிறது. சரியா என்று தெரியவில்லை.


//பத்மப்ரியாவைப் பொறுத்த மட்டில் ந.தி.யுடன் ஏழு படங்கள் கை நழுவிப்போனது (ஸ்ரீதரின் புண்ணியத்தால்). அவை அனைத்தும் மஞ்சுளாவுக்குப் போயின.

அவன் ஒரு சரித்திரம்
மன்னவன் வந்தானடி
எங்கள் தங்க ராஜா
என் மகன்
டாக்டர் சிவா
அவன் தான் மனிதன்
உள்ளிட்ட ஏழு படங்கள். //

கொஞ்சம் கஷ்டமாய் இருந்தாலும் படங்கள் எ(ங்கள்)ன் ஆளுக்குப் போனதில் பெரும் ஆறுதல் ராகவேந்திரன் சார். மஞ்சுளா தலைவர் ஜோடின்னாலே அது தனிதான்.:)

vasudevan31355
8th September 2015, 05:00 PM
இந்த ஒரு பாடல் போதும் சார் இந்த அற்புத ஜோடிக்கு. வாவ்! என்ன ஒரு சாங்! என்ன ஒரு ஸ்டைல்! மஞ்சுளா என்ன ஒரு அழகு! தலைவர் அதற்கும் மேல். தேக்கடி யானைக் கூட்டங்களுக்கு நடுவில் ரதி, மன்மதனே டூயட் பாடுவது போல. ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து.

'காதல் சரித்திரத்தைப் படிக்க வாருங்கள்
ஆசை அரங்கேறி நடிக்க வாருங்கள்'

என் உள்ளம் கொள்ளை கொண்ட பாட்டு.

பார்த்ததீர்களா ராகவேந்திரன் சார்! இயற்கையாக 'வைர நெஞ்சம்' பாடல் வந்தவுடனேயே பின்னாலேயே நம் 'டாக்டர் சிவா'வும் வந்து விட்டார். இதுதான் சார் நம் தலைவர் என்பது. இந்தக் கொடுப்பினை நமக்கு மட்டுமே சொந்தம். தலைவர் நடையே தனி.


https://youtu.be/U0rPHDMD0tU

chinnakkannan
8th September 2015, 05:25 PM
பேச்சு எங்கிட்டில்லாமோ போய்க்கிட்டு இருக்கு..ப.பி பத்தி அப்ப்புறம் பேசலாம்..இந்த மஞ்ச்ச் ந.தி சோடி இருக்கே..

எனக்குப் பிடித்தபாடல்கள்.. இரவுக்கும் பகலுக்கும் இது என்ன வேளை, பொண்ணுக்கென்ன அழகு..

இன்னொண்ணும் பிடிக்கும்..தாஜா செஞ்சாதான் இந்த ரோஜாக்குப் பிடிக்கும் நான் தாஜா பண்ணுவேன்..இந்த கீதாவுக்குக்கோபமுன்னா நான் என்ன பண்ணுவேன்..(டாக்டர் சிவா படம் மட்டும் ரொம்ப ஸோ ஸோ தான்)

இப்ப வாசு கிளறி விட்டதுனால ரொமாண்டிக் லிரிக்ஸோட ரொமாண்டிக் பொண்ணுக்கென்ன அழகு- ந.தி மஞ்சுளா..


https://youtu.be/PN5Zqppyp8E

vasudevan31355
8th September 2015, 05:26 PM
செந்தில் சார்,

'பட்ஜெட் பத்மநாபன்' படத்தில் விவேக் தீப்பெட்டி டெலிபோனில் மாடியில் இருக்கும் பாம்:) புவனேஸ்வரியுடன் பேசி 'ஜொள்' விடுவாரே! ஞாபகம் இருக்கா? இல்லைன்னா இப்போ பார்த்துக்கோங்க.


https://youtu.be/6m7I5ZwCMIk

vasudevan31355
8th September 2015, 05:30 PM
//இந்த கீதாவுக்குக்கோபமுன்னா நான் என்ன பண்ணுவேன்//

'இந்த கீதாவுக்கு தோதா இப்போ ஏதாவது சொல்லனுன்னா என்ன பண்ணுவேன்'

பாட்டை தப்பா எழுதினா நான் என்ன பண்ணுவேன்?:)


https://youtu.be/V6Lc39ktGks

vasudevan31355
8th September 2015, 05:36 PM
//(டாக்டர் சிவா படம் மட்டும் ரொம்ப ஸோ ஸோ தான்)//

சின்னா! இப்போ ஒருதரம் பார்த்துட்டு சொல்லுங்கோ. இப்போ பார்க்க நல்லாவே இருக்கு. எனக்கென்னவோ அப்போதிலிருந்தே இந்தப் படம் பிடிக்கும். காரணம் உங்களுக்கே தெரியும்.

ஆனா இன்னொரு பாட்டு. திலகம் நடனத்தில் கலக்கி விடுவார் கோவை சௌந்தரராஜன் குரலில். செம பாட்டு.

'கன்னங் கருத்த குயில் நிறத்தவளே'

இந்தப் பாடலில் நடிகர் திலகத்தின் மூவ்மென்ட்களை வேறு எந்தப் பாடலிலும் பார்க்க முடியாது. அவ்வளவு வித்தியாசம். கூட உங்கள் ஜெயமாலினி வேறே சின்னப் பொண்ணா ஆடுவார். இப்போ பிடிக்குமே.:)

chinnakkannan
8th September 2015, 05:41 PM
ஏதோ நெனவுல எழுதிப்புட்டேன்..அடடடா.. மஞ்ச் ரசிகர்னு மறந்த் போச்..எம் எம் கே யே ஸ்டார்ட்டட்வித் மறுபிறவி இல்லியோ..

சங்க்ர் சலீம் சைமனில் ரஜினி ஜோடி தானே மஞ்சுளா..

ம.தி - மஞ்சுளா பாடல்களில் ரொம்பப் பிடித்தது பாடும் போது நான் தென்றல் காற்று எஸ்.பி.பி தானே..

விஜயகுமார் மஞ்சுளா இளையவயதில் ஜோடியாக நடித்தார்களா என்ன..

சத்யத்தில் அம்மானைஅழகுமிகும் பெண்மானை கமல் மஞ்சுளா நல்லா யிருக்கும்.. எனச் சொல்லும் போது
இன்னொரு பாடல் நினைவுக்கு வருகிறது.. கல்யாணமே ஒரு பெண்ணோடு தான் கமல் மஞ்சுளா(கன்னடம்) ஆ கமல் சுமித்ராவா (லலிதா) மறந்து போச்..

chinnakkannan
8th September 2015, 05:44 PM
//(டாக்டர் சிவா படம் மட்டும் ரொம்ப ஸோ ஸோ தான்)//

சின்னா! இப்போ ஒருதரம் பார்த்துட்டு சொல்லுங்கோ. இப்போ பார்க்க நல்லாவே இருக்கு. எனக்கென்னவோ அப்போதிலிருந்தே இந்தப் படம் பிடிக்கும். காரணம் உங்களுக்கே தெரியும்.

ஆனா இன்னொரு பாட்டு. திலகம் நடனத்தில் கலக்கி விடுவார் கோவை சௌந்தரராஜன் குரலில். செம பாட்டு.

'கன்னங் கருத்த குயில் நிறத்தவளே'

இந்தப் பாடலில் நடிகர் திலகத்தின் மூவ்மென்ட்களை வேறு எந்தப் பாடலிலும் பார்க்க முடியாது. அவ்வளவு வித்தியாசம். கூட உங்கள் ஜெயமாலினி வேறே சின்னப் பொண்ணா ஆடுவார். இப்போ பிடிக்குமே.:)

ஓய்.. நானும் பார்த்துக்கிட்டே இருக்கேன் ..உங்கள் விசித்ரா..உங்கள் ஜெயமாலினின்னு என்னமோ நான் தான் அவங்களை “கொஞ்சம் நடிங்கம்மா” ந்னு சொன்ன மாதிரி.. சொல்றேள்.. :) ஜெயமாலினி ரொம்பச் சின்னப் பொண்ணாகத் தெரிவார்..

மலரே குறிஞ்சி மலரே என்னோட ஆல் டைம் ஃபேவரிட்.. கன்ன்ங்க்ருத்த குயில் நிறத்தவளே மறுபடிபார்க்கணும்.. இந்த வசந்த மாளிகைல கூட மழைக்கு ஒரு டான்ஸ் பாட் இருந்ததா என்ன.. அல்லது வெறும் மழை மட்டுமா ( நான் சொல்லும் காட்சி நினைவிருக்கும்னு நினைக்கறேன்)

இப்ப பார்த்துச் சொல்கிறேன்..என்னமோ இந்த நோய் பத்தி எடுத்ததுல்ல அவ்ளோ ஆழம் இல்லாம இருந்த மாதிரி தெரிஞ்சது முன்பு பார்த்த போது..ப்ள்ஸ் கொஞ்சம் முகம் சுளிக்கவும் வைத்த நினைவு..

vasudevan31355
8th September 2015, 05:55 PM
'டாக்டர் சிவா'வுல நடிகர் திலகத்திற்கு அப்பாவா தொழுநோயாளியா நடிப்பவர்தான் நேற்று போட்ட பாடலான 'தாலாட்டு' படத்தின் 'விளக்கில்லாமல் கணக்கெழுதி' பாடலுக்கு நடித்தவர். ராஜபாண்டியன்.

vasudevan31355
8th September 2015, 05:58 PM
ஓய்.. நானும் பார்த்துக்கிட்டே இருக்கேன் ..உங்கள் விசித்ரா..உங்கள் ஜெயமாலினின்னு என்னமோ நான் தான் அவங்களை “கொஞ்சம் நடிங்கம்மா” ந்னு சொன்ன மாதிரி.. சொல்றேள்.. :) ஜெயமாலினி ரொம்பச் சின்னப் பொண்ணாகத் தெரிவார்..



நல்ல வேளை. சிரிப்புப் படம் போட்டு கோவத்தையும் காட்டி விட்டீர். இனிமே உங்க 'பறவை முனியம்மா' பற்றியே எழுதறேன்.:)

vasudevan31355
8th September 2015, 06:06 PM
சத்யத்தில் அம்மானைஅழகுமிகும் பெண்மானை


அது 'சத்யம்' இல்லை சின்னா! 'அவன் ஒரு சரித்திரம்'. புரிஞ்சுதோ!

madhu
8th September 2015, 06:06 PM
ஏதோ நெனவுல எழுதிப்புட்டேன்..அடடடா.. மஞ்ச் ரசிகர்னு மறந்த் போச்..எம் எம் கே யே ஸ்டார்ட்டட்வித் மறுபிறவி இல்லியோ..

சங்க்ர் சலீம் சைமனில் ரஜினி ஜோடி தானே மஞ்சுளா..

ம.தி - மஞ்சுளா பாடல்களில் ரொம்பப் பிடித்தது பாடும் போது நான் தென்றல் காற்று எஸ்.பி.பி தானே..

விஜயகுமார் மஞ்சுளா இளையவயதில் ஜோடியாக நடித்தார்களா என்ன..

சத்யத்தில் அம்மானைஅழகுமிகும் பெண்மானை கமல் மஞ்சுளா நல்லா யிருக்கும்.. எனச் சொல்லும் போது
இன்னொரு பாடல் நினைவுக்கு வருகிறது.. கல்யாணமே ஒரு பெண்ணோடு தான் கமல் மஞ்சுளா(கன்னடம்) ஆ கமல் சுமித்ராவா (லலிதா) மறந்து போச்..

சிக்கா....

டோட்டல் கன்பீசன்ல இருக்கீங்க போலிருக்கே...

சங்கர் சலீம் சைமனில் ரஜினியின் ஜோடி லதா... விஜயகுமாருக்குத்தான் மஞ்சுளா..."வந்தாளே ஒரு மகராசி.. வம்பேதான் இவ கைராசி" அப்படின்னு ஒரு பாட்டு இருக்கு...

அம்மானை அழகுமிகும் பாட்டு அவன் ஒரு சரித்திரத்தில் ந.தி.யுடன்...

கல்யாணமே ஒரு பெண்ணோடுதான் பாட்டு சுஜாதா ஜெமினிக்காக.... லலிதா படத்தில் மஞ்சுளா நடிக்கவே இல்லீங்கோ...

madhu
8th September 2015, 06:08 PM
சிக்காவுக்காக... சங்கர் சலீம் சைமன்

https://www.youtube.com/watch?v=6gi_Myp8ZnY

vasudevan31355
8th September 2015, 06:08 PM
ஏதோ நெனவுல எழுதிப்புட்டேன்..அடடடா.. மஞ்ச் ரசிகர்னு மறந்த் போச்..எம் எம் கே யே ஸ்டார்ட்டட்வித் மறுபிறவி இல்லியோ..



சின்னாவா! கொக்கான்னானாம்.:) ஜெயசங்கர் ரேஞ்சுக்கு கண்டு பிடிச்சுட்டீரே!:) ஆனா மஞ்சுளாவை அம்மாவாகத்தான் முதல்ல காட்டியிருப்பேன். தப்பிச்சேன்டா சாமி.:)

காவேரி மாந்தோப்புக் கனியோ!
கண்கள்
கல்யாண மண்டபத்து மணியோ!
நல்ல பாவேந்தர் பாராட்டும் மொழியோ!
பண்பாடும் தென்பாங்கு கிளியோ!

vasudevan31355
8th September 2015, 06:09 PM
சிக்கா....

டோட்டல் கன்பீசன்ல இருக்கீங்க போலிருக்கே...



:):):):):)

vasudevan31355
8th September 2015, 06:11 PM
சின்னா! நானும் ஒன்னு தாரேன். ஆனால் மிடில் ஏஜ்.


https://youtu.be/kCdOJDdc538

eehaiupehazij
8th September 2015, 07:06 PM
புதியன காணலும் பழையன பேணலும்

புதுமைகள் பல்கிப் பெருகி வரும் யுகத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க பழைமையும் போற்றிப் பாதுகாத்திடல் அவசியமே!

காணற்கரிய பழைமைச் சிறப்பு மிக்க பொருட்களின் பின்னணியில் பொங்கிப் பெருகிய மதுர கானங்கள்

part 3 piano / பியானோ

மனம் அலைபாயும் போதோ மகிழ்வில் ஊறித் திளைத்திருக்கும் போதோ அதை நிலைப்படுத்தி சமன் செய்திட உதவும் இசைக் கருவிகளில் பிரதானமானது பியானோ என்றால் அது மிகையாகாது. அந்த அளவுக்கு நமது திரைப்படங்களில் வரலாற்றுப் பழமை வாய்ந்த பியானோ ஆதிக்கம் செலுத்தியிருக்கிறது
ஆனால் எனக்கு ஒரு டவுட்டு ...!

தமிழ்நாட்டில் பியானோ எத்தனை இல்லங்களில் இசை சாம்ராஜ்யம் நடத்தியிருக்க முடியும்? ஒரு மேல்தட்டு வர்க்கத்தின் இசைக்கருவியாகவே நமது
மனங்களில் பதிந்து விட்டது !

காரணம் படாடோப வாழ்க்கைக்கு மாறியதும் பாசமலர் முதலாளி ராஜசேகர் பியானோ வாசித்து ஒரு பாவையின் மனதை வசீகரித்த குதூகலமான காட்சிதான்!! எனக்குத் தெரிந்து நடிகர்திலகமே அதிக படங்களில் வெவ்வேறு மனநிலைகளில் பியானோ வாசிப்பில் முன்னணியில் உள்ளார்.எங்கமாமாவில் சோகரசம், கௌரவத்தில் காதல் ரசம்.....

இக்காட்சிகளில் அவரது உடல்மொழி முகபாவனைகள் பியானோ கற்றுக்கொள்பவர்க்கும்
கற்றுத்தருபவர்க்கும் பாடமே !!

காலமாற்றங்களில் பியானோ பழமை சின்னமாகி அளவற்ற எலெக்ட்ரானிக் உபகரணங்கள் நமக்கு இசையை இன்று அள்ள்ளித் தெளித்த போதும் நடிகர்திலகம் பியானோ வாசிக்கும் அழகில் லாவகத்தில் ஸ்டைலில் மனம் இன்றும் ஈர்க்கப் படுகிறதே !!


https://www.youtube.com/watch?v=MGs4AYN3IaM

எங்கமாமா : சுகல்பந்திக்கு ஷம்மிகபூரின் பிரம்மச்சாரி!

[url]https://www.youtube.com/watch?v=vo00ogHbydI

கௌரவம் சாந்தசொரூபி கண்ணன் காதலிக்காக மெழுகுவர்த்தியாக உருகும் ..

[url]https://www.youtube.com/watch?v=4xeW8ITF2y8

ஒரு மாறுதலுக்கு காஞ்சனா பியானோ வாசிக்க பார்த்து ரசிக்கிறார் விளையாட்டுப் பிள்ளையாக நடிகர்திலகம் !

https://www.youtube.com/watch?v=ZYNefw7g1wI

chinnakkannan
8th September 2015, 08:05 PM
மதுண்ணா வாசு..

மஞ்ச் அல்லது மஞ்சுன்னா தமிழ்ல மேகம்னு அர்த்தம்..

மலையின்கண் மஞ்சுவந்து மோதுதற்போல் மங்கை
கலையழகில் மூடிய கண்..!

மலைமுகட்டில் மேகம் வந்து மலையையே மறைக்கறாப்போல அவங்களோட சின்ன வயது அழகுல என் கண் மறையக் கண்டேன் என்பார் ஆன்றோர்கள்! :)

ஆமாம் ..கொஞ்சம் கன்ஃபீசன் தான்.. மஞ்ச்ளான்னவுடனே சி.வயசுல அழகா இருந்த அவங்க இருந்த படங்கள் நினைவுக்கு வந்ததா..சத்யமும் நினைவுக்கு வந்தது.. என்ன எனக்கு எப்பவும் அம்மானை பாட்டும் இன்னொரு பாட்டும் ரொம்பப் பிடிக்கும்.. சத்யத்துலயும் மஞ்சுளா இருக்காங்களா (ஃபுல் படம் பார்த்துக் கன்பர்ம் பண்ணிக்கிட்டேன்..அஃப்கோர்ஸ் ஓட்டி ஓட்டி (படம் நல்ல படம் ந.தி.பிடிக்கும் தேவிகா பாவம்..)

நான் நினைச்சது இந்தப் பாட்டுஇல்லை! ஆனால் இதுவும் அழகான பாடல்..

அழகாம் கொடி சிறிது அதிலும் கொஞ்சம் இடை சிறிது

கமல் ஜெயசித்ரா சத்யம்

https://youtu.be/_gDV6-TNxTg

ஆனா இந்தப் பாட்டு.. அம்மானை பாட்டோட ஸ்லைட்டா சிங்க் ஆகி என்னைக் குழம்ப வைக்கும் ரெண்டுமே செம மெலடி..

கல்யாணக் கோவிலில் தெய்வீக க் கலசம்
கண்களில் தெரியுது தெளிவாக

கமல் ஜெயசித்ரா சத்யம்..

https://youtu.be/XFN78rLs80w

வானப் பட்டு மேகம் காதல் தட்டில் ஏறி
ஆடட்டும் ஓடட்டும் ஆனந்தம் பாடட்டும் கண்ணே

*
அப்புறம் சங்கர் சலீம் சைமன்லயும் குழம்பிட்டேன்.. முழுப்படம் பார்த்தது கிடையாது..மஞ்சுளா மூணாம்கிளாஸ் படிப்பாங்க.. ந்னு மட்டும் ஜோக் நினைவு..

உன்னை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை ரொம்பப் பிடித்த சாங்க்..

*

லலிதால்ல இன்னொரு ஜோடி உண்டுங்க.. கமல் சுமி ந்னு தான் நினைக்கறேன்.. ச்சும்மா கல்யாணமாகாமலேயே கல்யாணம் பண்ணிக்கிட்ட மாதிரி நடிப்பாங்க..அவங்களுக்குஒரு பாட்டு உண்டு அதுவும் கல்யாணம் நு தான் ஆரம்பிக்கும்னு நினைப்பு.. சரி அந்தப் படமும் பார்க்கறேன்..

ம்ம் அந்தப் படம் இல்லை யூட்யூபில

சரி பாடல்களுக்கெல்லாம் நன்றி..இப்ப பாக்கப் போறேனே!

chinnakkannan
8th September 2015, 08:07 PM
சி.செ. பியானோ பாட்டுப் போட்டு ஜமாய்ச்சுட்டீர்.. இன்னும் நிறைய இருக்குன்னு இதோ மக்கள்ஸ் வருவாங்க..சரி யாழ்ல பாட்டு ஏதும் இருக்கா..

RAGHAVENDRA
8th September 2015, 08:40 PM
யாழ்லே பாட்டு இருக்கான்னு தெரிஞ்சுக்க சிலோனுக்கு இல்லே போகணும்

RAGHAVENDRA
8th September 2015, 08:41 PM
https://www.youtube.com/watch?v=7EHgb4e_L_w

சி.க. சார் இதுவா பாருங்க யாழ்

chinnakkannan
8th September 2015, 08:48 PM
யாழ்லே பாட்டு இருக்கான்னு தெரிஞ்சுக்க சிலோனுக்கு இல்லே போகணும்

ககக்னு சிரிக்க வெச்சுட்டீங்க ராகவேந்தர் சார்.. :) யெஸ் இதே தான் யாழ்..!

vasudevan31355
8th September 2015, 09:34 PM
பியானோ பாடல்களில் எனக்கு ரொம்ப பிடித்த பாட்டுக்கள் ('எங்க மாமா'வை எல்லாம் விட்டுடுவோம்)


என்ன என்ன வார்த்தைகளோ-----------வெண்ணிற ஆடை

உன்னிடம் மயங்குகிறேன்...... உள்ளத்தால் நெருங்குகிறேன்----------தேன் சிந்துதே வானம்

பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்--------கண்ணன் என் காதலன்

என் வானிலே ஒரே வெண்ணிலா-------ஜானி

எனக்கொரு காதலி இருக்கின்றாள்-------முத்தான முத்தல்லவோ

பொன்னை நான் பார்த்ததில்லை---------கண்ணாமூச்சி

ஓராயிரம் கற்பனை..... நூறாயிரம் சிந்தனை---------ஏழைக்கும் காலம் வரும் (சுசீலா மற்றும் பாலா தனித்தனியே)

பார்த்த ஞாபகம் இல்லையோ (அதிர்ச்சி)----------புதிய பறவை

அவன் நினைத்தானா இது நடக்குமென்று---------செல்வ மகள்

எங்கே எந்தன் காதலி--------எனக்குள் ஒருவன்

கல்யாணம்.... வைபோகம்.... என்றென்றும் வாழ்க--------நான் மகான் அல்ல

இன்னும் இன்னும் நிறைய

eehaiupehazij
8th September 2015, 09:37 PM
விட்டுப்போன பியானோ வாசிப்புக்கள்

காதல் மன்னருடன் பழகத் தெரிய வேண்டும்! ...மிஸ்ஸியம்மா!
இதுவும் குட்டி பியானோவா ?!
https://www.youtube.com/watch?v=HG6DaH_5MN0
பார்த்த ஞாபகம் இல்லையோ ...பழைய பறவையால் மெர்சலாகும் நடிகர்திலகம்!!
https://www.youtube.com/watch?v=VwZc1nQTWzQ[
கண் போன போக்கிலே கால் போகலாமா
https://www.youtube.com/watch?v=I_8KVZTuPcE
தொட்ட்டுக்காட்டவா மேலைநாட்டு சங்கீதத்தை தொட்டுக்காட்டவா ?
https://www.youtube.com/watch?v=hfMBIAuJmY0

vasudevan31355
8th September 2015, 09:43 PM
சின்னா!

http://4.bp.blogspot.com/-IID5TG3THlA/UxrqFm2N5BI/AAAAAAAAAaQ/y-KTzu0k1sM/s1600/yazh.jpg

இந்தாங்க. எம்.ஜி.ஆர் மகர யாழ் வாசிக்க ஜி.சகுந்தலா ஆடுகிறார் 'மந்திரி குமாரி' படத்தில். எம்.ஜி.ஆர் அவர்கள் கிடார் வாசிப்பது போல மகர யாழ் வாசிப்பார். இந்தப் பாடல் ஸ்ரீவித்யாவின் தாயார் பாடியது.


https://youtu.be/L-lnWktJGlI

vasudevan31355
8th September 2015, 09:48 PM
செந்தில் சார்,

உங்கள் யூ டியூப் URL ஐ smiley பக்கத்தில் இருக்கும் லிங்க் ஐ கிளிக் செய்து அதில் வரும் கட்டத்தில் பேஸ்ட் செய்யுங்கள். நாங்கள் ஈஸியாகக் 'கிளிக்'கிக்கலாம்.

rajraj
8th September 2015, 09:50 PM
இதுவும் குட்டி பியானோவா ?!


It is known as Upright Piano! The other type you see in some songs is Grand Piano. Smaller version of Grand Piano is Baby Grand ! :)

vasudevan31355
8th September 2015, 09:51 PM
ஏ.வி.எம்.ராஜன் எம்மாம் பெரிய ஆளுயர யாழை பார்த்தேன் சிரித்தேன் என்று பாடி வாசிக்கிறார்.:)


https://youtu.be/7EHgb4e_L_w

eehaiupehazij
8th September 2015, 09:54 PM
ரவி சார்
நீங்கள் மோப்பக் குழையும் அனிச்சமலராகவும் கொஞ்சம் தொட்டாற்சிணுங்கியாகவும் திரியை மறந்து துறந்து நிற்பது வருத்தமாக இருக்கிறது.
நானும் கொஞ்சம் துவண்ட காலகட்டத்தில் நீங்கள் எனக்கு அளித்த ஆறுதலான வார்த்தைகளையும் வழிகாட்டுதலையும் இன்றளவும் நன்றியுடன் நினைவு
கூர்கிறேன். இது நமது மனமகிழ் மன்றம் உங்கள் மேலான கருத்தாழமிக்க பதிவுகளுக்காகக் காத்திருக்கிறோம் விரைவில் இத்திரி நிறைவினை அடையும் நிலையில் உங்கள் பங்களிப்பும் பெருமைக்குரியதே. ஒரு உரிமையில் அழைக்கிறேன் அன்புள்ள நண்பரே !
செந்தில்

https://www.youtube.com/watch?v=GUhQn2An64s

vasudevan31355
8th September 2015, 09:55 PM
'இசை என்னிடம் உருவாகும்' என்று நடிகர்களின் திலகம் இந்த யாழ் அருகில் அமர்க்களப்படுத்துகிறாரே.


https://youtu.be/DClZydALE3g

vasudevan31355
8th September 2015, 10:00 PM
ரவி சார்!

செந்தில் சார் கூறுவது போல நீங்கள் திரிக்கு திரும்ப வாருங்கள். சகோதரர்களுக்குள் சின்ன சின்ன செல்ல சண்டைகள், வாக்குவாதங்கள் வருவது சகஜம். நீங்களே எங்களுக்கு எவ்வளவு ஆறுதல், புத்திமதிகள் சொல்லியிருக்கிறீர்கள்? எவ்வளவு நியாயக் கதைகள் சொல்லி மகிழ்வடையச் செய்திருக்கிறீர்கள்? இப்போது நீங்களே இப்படி செய்யலாகுமா? திரும்ப வாருங்கள். உங்கள் நல்ல கருத்துள்ள சின்ன சின்ன குட்டிக் கதைகளுக்கு அனைவரும் வெயிட்டிங்.

vasudevan31355
8th September 2015, 10:01 PM
//நானும் கொஞ்சம் துவண்ட காலகட்டத்தில் நீங்கள் எனக்கு அளித்த ஆறுதலான வார்த்தைகளையும் வழிகாட்டுதலையும் இன்றளவும் நன்றிய்டன் நினைவு
கூர்கிறேன்//

இது எனக்கும் பொருந்தும் செந்தில் சார். இதை ரவி சாரிடமே பலமுறை போனிலும், திரி மூலமும் தெரிவித்திருக்கிறேன்.

eehaiupehazij
8th September 2015, 10:08 PM
செந்தில் சார்,

உங்கள் யூ டியூப் URL ஐ smiley பக்கத்தில் இருக்கும் லிங்க் ஐ கிளிக் செய்து அதில் வரும் கட்டத்தில் பேஸ்ட் செய்யுங்கள். நாங்கள் ஈஸியாகக் 'கிளிக்'கிக்கலாம்.
I followed what u said sir but...

vasudevan31355
8th September 2015, 10:20 PM
I followed what u said sir but...


but? what but? it athu butt aanaal what enna?:)

eehaiupehazij
8th September 2015, 10:25 PM
it again shows the video only! You can just highlight the URL and double click...your video comes!!

RAGHAVENDRA
8th September 2015, 10:29 PM
Grand Piano

http://www.musicgalleryclearwater.com/images/EGP-173.png


Upright Piano

http://www.besbrodepianos.com/photo149/steinhoven-128-upright-piano-BIG.jpg

Baby Grand Piano

http://i.ebayimg.com/00/s/OTAwWDY0MA==/z/y~cAAOxytBZSQIAl/$(KGrHqV,!rUFJ!LBWuIdBSQI!lD8mQ~~60_35.JPG

chinnakkannan
8th September 2015, 10:34 PM
ரவி சார்
நீங்கள் மோப்பக் குழையும் அனிச்சமலராகவும் கொஞ்சம் தொட்டாற்சிணுங்கியாகவும் திரியை மறந்து துறந்து நிற்பது வருத்தமாக இருக்கிறது.
நானும் கொஞ்சம் துவண்ட காலகட்டத்தில் நீங்கள் எனக்கு அளித்த ஆறுதலான வார்த்தைகளையும் வழிகாட்டுதலையும் இன்றளவும் நன்றியுடன் நினைவு
கூர்கிறேன். இது நமது மனமகிழ் மன்றம் உங்கள் மேலான கருத்தாழமிக்க பதிவுகளுக்காகக் காத்திருக்கிறோம் விரைவில் இத்திரி நிறைவினை அடையும் நிலையில் உங்கள் பங்களிப்பும் பெருமைக்குரியதே. ஒரு உரிமையில் அழைக்கிறேன் அன்புள்ள நண்பரே !
செந்தில்



சி.செ சார்.. பீஷ்மர் போனால் ஆட்டோமேடிக்கா கர்ணன் வந்துடுவார்..:) இன்னும் நாற்பதுபக்கம் அதுவரை என்னையும் பொறுத்துக்கொள்ளுங்கள்..

உங்களுக்கு தெரியுமா தெரியாதான்னு எனக்குத் தெரியாது.. நான் எதுவும் என் மனதுக்குத் தெரிந்து தவறு எதுவ்ம் செய்யவில்லை.. இது உங்க்ளுக்காகச் சொல்கிறேன்.. இன்ஃபேக்ட் எல்லாரையும் நன்கு சுவாரஸ்யமாக எழுதுங்கள் என்று சொல்லி ஊக்குவித்தவன் தான் நான்..உங்களுக்கே தெரியும்..

சின்னவயதில் கூட இவ்ளோ ஹோம் வொர்க் செய்திருப்பேனா எனக்குத் தெரியாது..பட் இந்த நான்கு பாகங்களிலும் கொஞ்சம் வீ.பா செய்து பாஸ் மார்க் வாங்கியிருக்கிறேன் என நினைக்கிறேன்.. :)

RAGHAVENDRA
8th September 2015, 10:35 PM
A vintage upright piano (100 years old .. the host explains)

https://www.youtube.com/watch?v=FaGOyzlbiO0

RAGHAVENDRA
8th September 2015, 10:38 PM
Learn basics of Piano here in Indian svaras:

http://aboutindianmusic.com/2011/11/raga-mayamalavagowla-1/

chinnakkannan
8th September 2015, 10:39 PM
ரவி சார்!

செந்தில் சார் கூறுவது போல நீங்கள் திரிக்கு திரும்ப வாருங்கள். சகோதரர்களுக்குள் சின்ன சின்ன செல்ல சண்டைகள், வாக்குவாதங்கள் வருவது சகஜம். நீங்களே எங்களுக்கு எவ்வளவு ஆறுதல், புத்திமதிகள் சொல்லியிருக்கிறீர்கள்? எவ்வளவு நியாயக் கதைகள் சொல்லி மகிழ்வடையச் செய்திருக்கிறீர்கள்? இப்போது நீங்களே இப்படி செய்யலாகுமா? திரும்ப வாருங்கள். உங்கள் நல்ல கருத்துள்ள சின்ன சின்ன குட்டிக் கதைகளுக்கு அனைவரும் வெயிட்டிங்.


வாசு.. சி.செக்குச் சொன்னதே உங்களுக்கும்..

தவறும் செய்துவிட்டு வரமாட்டேன் என்று ஒதுங்கி விட்டவரை வாருங்கள் என்று சொல்லும் உங்கள் பெருந்தன்மை வியக்க வைக்கிறது..

கொஞ்சம் பொறுங்கள் இந்த பீஷ்மன் ( வயசானதுனால சொல்றேன் ஓய் அப்படி..மத்தபடி எனக்கு ஒண்ணும் தெரியாது) ஓய்வு பெறும் காலம் நெருங்கிவிட்டது.. போனதும் அவர் தானாகவே வந்து உங்களிடம் வழக்கம் போலப் பேசுவார்..(கூடவே நிம்மதிப் பெருமூச்சும்..) என்னைப் போட்டியாக நினைத்த பெருந்தகை அவர்..

அன்புடன்

சி.க :)

RAGHAVENDRA
8th September 2015, 10:44 PM
Top 5 classical Piano songs:

https://www.youtube.com/watch?v=qQTQ0msOUCc

chinnakkannan
8th September 2015, 10:45 PM
//நானும் கொஞ்சம் துவண்ட காலகட்டத்தில் நீங்கள் எனக்கு அளித்த ஆறுதலான வார்த்தைகளையும் வழிகாட்டுதலையும் இன்றளவும் நன்றியுடன் நினைவு
கூர்கிறேன்.//

எனக்கு மனம் நொந்த சமயத்தில் ஆறுதல் அளித்த கோபால், வாசு, ராகவேந்தர், ராஜ்ராஜ், ராஜேஷ்,மதுண்ணா + சி.செ நீங்கள் - அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றி..

ஏன் திடீர்னு கண்ணா bad மற்ற தவறு செய்தவர் good ஆனார்னு எனக்குப் புரியலை..:sad: Its alright. மற்றவர் எழுதியிருந்ததையே காப்பி அடிக்கிறேன்.. இதுவும் கடந்து போகும்..:)

இன்னும் முப்பது பக்கம் வந்துவிட்டு எல்லாவற்றுக்கும் ஒரு ஓவரால் வியூ எழுதிவிட்டு நின்று கொள்கிறேன்..

மிக்க நன்றி.. எல்லாவற்றிற்கும்..

vasudevan31355
8th September 2015, 10:57 PM
சின்னா!

யாருமே ஒதுங்க வேண்டாம். யாருமே மனவருத்தப்பட வேண்டாம் என்பதுதான் எங்கள் ஆசை. நண்பர்கள் யாருமே விலகுகிறேன் என்ற வார்த்தையே தயவு செய்து கூற வேண்டாம். பிடிக்க வில்லையா....அவரவர்கள் விமர்சனங்களைத் தவிர்த்து தங்கள் பதிவுகளை இட்டுக் கொள்ளலாமே! மீண்டும் கேட்டுக் கொள்கிறேன். யாரும் தயவு செய்து உணர்ச்சிவசப்பட வேண்டாம். எல்லாத் திரிகளிலும் இருப்பது போல இங்கும் சில சலலசலப்புக்கள் உண்டு. அதுவே சண்டை சச்சரவுகளில் முடிய வேண்டாம் என்பதே என் விருப்பம். நீங்கள் இந்தப் பாகத்துடன் நிறுத்திக் கொள்கிறேன் என்று சொல்வதை எங்களால் ஏற்க முடியாது. மதுர கானங்கள் மனமகிழ்வுக்கான திரிதானே! இங்கு இன்னாருக்கு முக்கியத்துவம் இன்னாருக்கு அது இல்லை என்ற கதை எல்லாம் இல்லை. அனைவருமே இங்கு சமம் என்பது ஹப்பில் உள்ள எல்லோரும் அறிந்ததே. மதுண்ணா, ராஜ்ராஜ் சார், ஜி, ராகவேந்திரன் சார் மற்றும் நீங்கள் போன்ற சீனியர்கள் எங்களையும், இந்தத் திரியையும் வழி நடத்திச் செல்ல வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். இதில் கண்டிப்பாக மழுப்பலோ அல்லது எந்த சுயநலமோ எதுவும் இல்லை.

chinnakkannan
8th September 2015, 11:00 PM
வாசு, மகர யாழ் என்னது இவ்வளவு சின்னதாய் இருக்கிறது.. மகரயாழ் மங்கை என ஜெகச்சிற்பியன் எழுதிய கதை படித்திருக்கிறேன்..கொஞ்சம் பெரிதாய் இருக்கும் என எழுதியிருந்த நினைவு.. மிக்க நன்றி

vasudevan31355
8th September 2015, 11:01 PM
//ஏன் திடீர்னு கண்ணா bad//

சின்னா!

இப்படி யார் சொன்னார்கள்? உங்களுக்கு எப்படி இப்படி ஒரு நினைப்பு வந்தது?:confused2: உங்களை bad என்று மறைமுகமாகவோ, அல்லது நேரிடையாகவோ சொன்னது யார் என்று நீங்கள் தயவு செய்து சொல்ல முடியுமா?

நிச்சயம் உங்கள் மனம் புண்பட்டிருப்பது புரிகிறது. அது இன்னும் ஆறவில்லை என்றும் தெரிகிறது. ரவி சாரிடமும் இது பற்றி கண்டிப்பாக பேசுவேன்.

vasudevan31355
8th September 2015, 11:03 PM
சின்னா!

நீங்கள் mgr அவர்கள் வாசிக்கும் மகர யாழை சொல்கிறீர்களா? கிடாரில் சின்னதும் உண்டு. பெரிசும் உண்டே! அது போலத்தான்

chinnakkannan
8th September 2015, 11:05 PM
வாசு.. துவக்கியவர், துவளாமல்கொண்டு செல்பவர் என்ற லீடர் ஷிப் க்வாலிட்டி உங்களிடம் இருக்கிறது..

அனைவரும் வெகு ஆழ்ந்த அறிவுதிரையிசையில், ராகங்களில் கொண்டவர்கள்.. ஸோ கவலை வேண்டாம்..

எவ்ரிதிங்க் வில் பி ஆல்ரைட் ஸூன்..

vasudevan31355
8th September 2015, 11:07 PM
சின்னா!

நிம்மதியாக உறங்குங்கள். நானும் உறங்க செல்கிறேன். கண்டதையும் போட்டு மனதைக் குழப்பிக் கொள்ள வேண்டாம். எல்லாம் சரியாகிவிடும். நாளை சந்திப்போம். குட்நைட்.

chinnakkannan
8th September 2015, 11:07 PM
சின்னா!

நீங்கள் mgr அவர்கள் வாசிக்கும் மகர யாழை சொல்கிறீர்களா? கிடாரில் சின்னதும் உண்டு. பெரிசும் உண்டே! அது போலத்தான்

ஓ..வெரி நைஸ்..

chinnakkannan
8th September 2015, 11:11 PM
குட் நைட் வாசு. லட்டு, குலோப்ஜாமூன், பாதுஷா, பால்கோவா போன்றவை கனவில் வரட்டும்.. ஸ்வீட் ட்ரீம்ஸ்..:)

vasudevan31355
8th September 2015, 11:23 PM
//வாசு.. துவக்கியவர், துவளாமல்கொண்டு செல்பவர் என்ற லீடர் ஷிப் க்வாலிட்டி உங்களிடம் இருக்கிறது..//

எந்தக் காலத்திலும் எப்போதுமே நான் அப்படி நினைத்ததில்லை சின்னா! நான் என்ன செய்து விட்டேன்? எல்லாமே உங்களைப் போன்ற நண்பர்கள்தானே! தீபம் ஏற்றி வைப்பது பெரிய காரியம் அல்ல. அதை அணையாமல் நண்பர்கள் அத்தனை பெரும் ஒருவர் விடாமல் கண்ணும் கருத்துமாக பாதுகாக்கிறீர்களே! அதுதான் மிகப் பெரிய விஷயம் சின்னா! நீங்கள் கோபத்தின் உச்சியில் இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அதனால் நீங்கள் சொல்வது எதுவுமே என் காதில் விழாது. நாளை ஆற அமர பேசலாம். ரவி அப்படி சொன்னது எனக்கே மிக வருத்தம்தான். இன்னும் அவருடன் நான் பேசவில்லை.

//உங்களுக்கு நாலெழுத்துக் கண்ணாவை விட (எட்டெழுத்தோ!) மூன்றெழுத்து , இரண்டெழுத்து நபர்களிடம் ப்ரியம் அதிகமாக இருப்பது இயற்கையே..பார்த்தறிந்தவர்கள் ஆயிற்றே..( நானும் பார்ப்பேன் உங்களை ஒரு நாள்) ஸோ கவலைல்லாம் படாதீங்க//

ஆனால் இன்னொருமுறை பிரியம் காட்டுவதில் நான் வித்தியாசம் காட்டுபவன் என்று மட்டும் கூறி விடாதீர்கள். பார்த்தறிந்தால் ஒரு பிரியம்... பார்க்காமல் இருந்தால் வேறு பிரியம் என்றெல்லாம் இருக்கிறதா என்ன? உங்களைப் பார்த்து விட்டால் பிரியம் ஜாஸ்தியாகுமா? 'ஜி' யை இன்னும் நான் பார்க்கவே இல்லை. அவர் மேல் பிரியம் கம்மி ஆகி விடுமா? என்ன சின்னா இது? குழந்தை மாதிரி! நன்கு தூங்கி எழுந்து ரிலாக்ஸாக உங்களுடைய 3600 எண்ணுள்ள பதிவைப் படித்துப்பாருங்கள். உங்களுக்கே சிரிப்பு தாங்காது.:) ஒரு சின்ன கண்டிஷன். பதிவை நீங்கள் எடுக்கக் கூடாது.:) உங்களை இப்போது பார்த்தால் ஒரு வயதுக் குழந்தை கோபித்துக் கொண்டால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது. எனக்கு ரொம்ப செல்லமாகப் படுகிறது. ஒரு குழந்தையாகத்தான் இப்போது என் கண்களுக்கு நீங்கள் தென்படுகிறீர்கள். பேசாமல் கம்மென்று கண் மூடி விஜயகுமாரியை நினைத்துக் கொண்டு படுங்கள்.:) துக்கம் திசை மாறும். நல்ல பிள்ளைதானே! நாளைக்கு கேட்பரீஸ் வாங்கித் தரேன்.:) வரவா?

eehaiupehazij
9th September 2015, 12:00 AM
சி க வுக்கும் ஒரு ரே மம்மா ரே மம்மா போட்டுவிட வேண்டியதுதான் வாசு சார் !!

eehaiupehazij
9th September 2015, 12:19 AM
சி க !

நீங்கள் என்றுமே ஒரு அன்புப் படுக்கை பீஷ்மரே ! அவசரக் குடுக்கை பீமர் அல்லவே!!

நானெல்லாம் வாழ்க்கையில் மிகவும் அடிபட்டு மனம் மரத்துப்போய் ஒரு வழியாக ஒருவகை நிதானம் மற்றும் மனமுதிர்ச்சியடைவதர்க்கு இவ்வளவு காலம்
தேவைப் பட்டிருக்கிறது !

நீங்கள் வாசு ரவி எல்லோருமே உங்கள் எழுத்து வன்மையால் எனக்குள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி நானும் பதிவுப் படிக்கட்டுகளில் மெதுவாக ஏறி வர முன்னோடிகளாக இருந்தவர்கள் ஆனால் நீங்களே மனம் குலைவதை என்னால் நம்ப முடியவில்லை!!

நடந்தவை பாடமாக நடப்பவை மகிழ்வின் பீடமாக மறதி என்னும் இறைவன் அளித்த டோக்கனை பயன்படுத்தி பெருந்தன்மை விதைத்திட ஒரு எளியவனாக வேண்டிக் கொள்கிறேன் மதுரம் மனதிலும் பரவட்டுமே!

செந்தில்

madhu
9th September 2015, 03:54 AM
இந்தாங்கோ.... எல்லோருக்கும் மொத்தமா ஒரு பெர்ர்ர்ரிய சாக்லேட்..

ஆளுக்கு ஒரு பக்கமா கடிச்சுக்கணும்.. சண்டை போடப்படாது.. ஓகேவா...?

( வாத்தியாரையாவுக்கு காடிவா சாக்லேட் நினைவு வந்தால் நான் பொறுப்பில்லை )

http://ww2.hdnux.com/photos/30/21/55/6363969/3/960x540.jpg

madhu
9th September 2015, 03:55 AM
பியானோ பாடல்களில்...

மங்கல நாயகியின் "கண்களால் நான் வரைந்தேன்"
கண்ணன் என் காதலனின் "பாடுவோர் பாடினால்"
அறிவாளியின் "கூவாத இன்பக் குயில்"
இதெல்லாம் கூட எனக்குப் பிடிக்குமே !

eehaiupehazij
9th September 2015, 07:49 AM
பியானோவைப் பற்றி ஆரம்பிக்கப் போய் எத்தனை சங்கதிகள் வந்து விழுகின்றன !
ராஜ்ராஜ் சாரும் ராகவேந்தர் சாரும் வாசு சாரும் சிக சாரும் தந்திருக்கும் படங்களும் யாழ் பற்றிய விவரங்களும் மதுரமே !
ஹிந்தி திரைப்படங்களில் பியானோவின் ஆதிக்கம் மிக மிக அதிகமே ! ஒரு காலகட்டத்தில் பியானோவும் கித்தாரும் அக்கார்டினும் இல்லாத இந்திப் படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம்! ஸ்ரீதர் பாணி முக்கோணக் காதலின் சங்கம் திரைப்படம் ஷங்கர் ஜெய்கிஷன் மியூசிக்கில் ஒரு மிகச்சிறந்த இசைப் படமாகும்!!
அதில் வரும் ஒரு பியானோ சார்ந்த / அக்கர்டின் சார்ந்த மறக்க முடியாத முகேஷ் குரலில் ராஜ்கபூருக்கான மதுர கீதங்கள் !

நடிகர்திலகமும் எங்க மாமா திரைப்படத்தில் சொர்க்கம் பக்கத்தில் பாடலுக்கு அக்கார்டின் வாசிப்பார் !

Rajkapoor and NT with Akkaardin!

https://www.youtube.com/watch?v=mj7mr6f2xOo

https://www.youtube.com/watch?v=YfZiMFE66pY

Rajkapoor with an upright Piano?

https://www.youtube.com/watch?v=PY5AMJtMY3A

rajraj
9th September 2015, 08:35 AM
From Avan(1953)

un pErai kEttEn........

http://www.youtube.com/watch?v=UmO_WyHGwK4

What you see is a Grand Piano. It takes a lot of space. Suitable for big houses with big living or family room.

We have an Upright Piano in the living room, bought about 35 years back when the children were learning piano. Even now, when they visit us they play the piano. It is an attraction for young kids visiting us. They will press a few keys and smile at us ! :)

JamesFague
9th September 2015, 08:54 AM
Mr C K


Don't worry Be happy Do contribute as usual with your humourus postings.

vasudevan31355
9th September 2015, 10:00 AM
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்

35 ஆவது சிறப்புப் பதிவு

http://2.bp.blogspot.com/-HRNJSnA1-84/TenskpB9duI/AAAAAAAAAuY/mP0R6cDrGMY/s320/spb.jpg

(நெடுந்தொடர்)

35

பாகம் 1

'தொடுவதென்ன தென்றலோ மலர்களோ'

'சபதம்'

http://cf-images.emusic.com/music/images/album/153/831/15383194/600x600.jpg

இன்றைய பாலாவின் தொடரில் சிகரங்களைத் தொட்ட பாடல். என்றுமே சிரஞ்சீவித்துவம் நிறைந்து மனமெல்லாம் சுகந்த தென்றலை இனிமையாக வீசச் செய்யும் பாடல். மிகச் சிறந்த தமிழ்ப் பாடல்களின் வரிசையில் முன்னால் நிற்க போட்டி போடும் பாடல். நீங்கள் எவ்வளவு சோகத்தில் இருந்தாலும் இந்த பாட்டை ஒருமுறை கேளுங்கள். பிளாட் ஆகி விடுவீர்கள். குரலினிமையா... குழலினிமையா என்று போட்டி வைத்தால் பாலாவின் குரல்தான் இனிமை என்று ஒட்டுமொத்தமுமே கூக்குரல் எழுப்பும் அளவிற்கு அவரது வசந்த சுகந்த குரலால் பாராட்டு பெற்ற பாடல். 'சபத'மிட்டு சொல்கிறேன்.

ஆமாம். 'சபதம்' (1971) படத்தில் பாலா பாடிய

'தொடுவதென்ன தென்றலோ மலர்களோ' பாடல்தான் அது.

அதற்கு முன் 'சபதம்' படத்தைப் பற்றி ஒரு முன்னோட்டம் பார்த்து விடுவோம். அதனால் இந்தத் தொடரை உங்கள் வசதிக்காக இரண்டு பாகமாகப் பிரித்து தனித்தனியே தருகிறேன். படம், கதை பற்றிய விவரங்களை ஒரு பாகமாகவும், பாடல் பற்றிய சிறப்பம்சங்களை இன்னொரு பாகமாகவும் தருகிறேன்.

தேவநாயகி பிலிம்ஸ் 'சபதம்' ஓர் அருமையான ஒரு படம். ரவிச்சந்திரன், கே.ஆர்.விஜயா, நாகேஷ், டி கே.பகவதி, வி.கே.ராமசாமி, சஹஸ்ரநாமம், அஞ்சலிதேவி, பண்டரிபாய் நடித்த இத்திரைப்படம் கதாநாயகிக்கு மிகவும் முக்கியத்துவம் அளித்த ஒரு படம். நடனத்தை சலீம் அமைத்திருப்பார். நமது பி.என்.சுந்தரம் ஒளிப்பதிவு இயக்குனராக பணியாற்றி இருப்பார். இயக்கம் நமது பிரிய பி.மாதவன்.

கதை

http://i.ytimg.com/vi/yPRAkU6T8zk/0.jpg

மிக நல்லவரான பெரிய மனிதர் செல்வநாயகத்திற்கு (டி கே.பகவதி) அவரைப் போலவே உருவ ஒற்றுமையும், குரல் ஒற்றுமையும் கொண்ட துரைசிங்கம் (டி கே.பகவதி) என்ற தறுதலை தம்பி. அண்ணனிடமிருந்து சொத்தை பாகம் பிரித்துக் கொண்டு குடி, காமம் என்று சொத்தை அழிக்கிறான் அவன். தம்பியின் போக்கு கண்டு, மனம் நொந்து, மறுபடியும் அவனைத் தன்னுடன் சேர்த்துக் கொள்கிறார் செல்வநாயகம். தன் மனைவி கண் தெரியாத ராஜேஸ்வரி (அஞ்சலிதேவி), மகன் முத்து மேல் அதிக பாசம் அவருக்கு. தம்பி துரைசிங்கத்திற்கு லஷ்மி (பண்டரிபாய்) என்ற பண்பான மனைவி.


வியாபார விஷயமாக அண்ணனும் தம்பியும் வெளியூர் புறப்பட, அந்த சந்தர்ப்பத்தைத் தனக்கு சாதமாக்கிக் கொள்கிறான் தம்பி. உருவ ஒற்றுமையைப் பயன்படுத்தி, அண்ணனைக் கொன்றுவிட்டு, அண்ணன் வேடத்தில் வந்து நல்லவன் போல ஊரில் கபடமாடுகிறான் துரைசிங்கம். ஊரும் அவனை செல்வநாயகம் என்று பரிபூரணமாக நம்பி ஏமாறுகிறது. குழந்தையுடன் இருக்கும் தன் அண்ணியை பைத்தியம் என்று பட்டம் கட்டி அவள் வீட்டை விட்டு ஓடும்படி செய்கிறான் செல்வநாயகம்.


தன் கணக்கப்பிள்ளை வள்ளிமுத்துவின் (சஹஸ்ரநாமம்) மகள் சிவகாமி (கே.ஆர்.விஜயா) என்ற பெண்ணின் மீது காமப் பித்து பிடித்து அலைந்து, அவளை ஆசைநாயகியாய் வைத்துக் கொள்ள வள்ளிமுத்துவிடமே அனுமதி கேட்கிறான். இல்லையென்றால் கொன்று விடுவதாக பயமுறுத்துகிறான். அவன் சுயரூபம் தெரிந்து கொண்ட வள்ளிமுத்து செய்வதறியாமல் திகைத்து தூக்கில் தொங்குகிறான். (உண்மையில் துரைசிங்கத்தால் தூக்கில் தொங்கவிடப் படுகிறான்) வெளியூரில் படிக்கும் சிவகாமி தன் தந்தை இறந்த சேதி கேட்டு துடிதுடித்துப் போகிறாள். தன் தந்தையின் கடிதம் மூலம் செல்வநாயகம் ஒரு காமுகன் என்று புரிந்து கொள்கிறாள். தந்தை சாவுக்குக் காரணமானவனை பழி வாங்கத் துடிக்கிறாள். ஆனால் செல்வநாயகம் போர்வையில் இருக்கும் துரைசிங்கம் ஊர்மக்களை அப்படியே தன்னை நல்லவன் என்று நம்பும்படி செய்திருக்கிறான். இதனால் சிவகாமி துரைசிங்கம் கெட்டவன் என்று ஆதாரத்துடன் ஊர் மக்களிடம் நிரூபித்தாலும் தன் சாமர்த்தியப் பேச்சாலும், பசுத்தோல் போர்த்திய புலி நடிப்பாலும் சிவகாமியின் ஆதாரங்கள் ஒவ்வொன்றையும் உடைத்தெறிகிறான் துரைசிங்கம். அவனை அயோக்கியன் என்று ஊர் மக்கள் முன்னிலையில் விரைவில் நிரூபிப்பதாக துரைசிங்கத்திடம் 'சபதம்' போடுகிறாள் சிவகாமி.


வீட்டை விட்டு ஓடிப்போன ஓடிப்போன ராஜேஸ்வரியின் மகன் முத்து (ரவிச்சந்திரன்) வளர்ந்து பெரியவனாகி எல்லா உண்மையையும் தன் தாயின் மூலம் அறிகிறான். முத்து சிவகாமியைக் காதலித்து துரைசிங்கம் மூலம் சிவகாமி பட்ட துயரங்களை அறிந்து கொள்கிறான். பாதிக்கப்பட்ட சிவகாமி, முத்து இருவரும் கூட்டணி அமைத்து, திட்டம் போட்டு துரைசிங்கம் வீட்டில் தம்பதிகளாக நுழைகிறார்கள். இவர்களுடன் துரைசிங்கத்தின் மகன் நாகேஷும் தன் தந்தையின் கபட நாடகத்தைத் தெரிந்து கொள்ள, மூவரும் துரைசிங்கத்துடன் ஆடு புலி ஆட்டம் விளையாட ஆரம்பிக்கிறார்கள். அவனுக்கெதிரான ஆதாரங்களைத் திரட்டி அவனை நிலைகுனிய வைத்து ஊருக்கு 'அவன் துரைசிங்கம்தான்...செல்வநாயகம் இல்லை' என்று புரிய வைக்கிறார்கள். இறுதியில் இறந்து போன செல்வநாயகமே உயிருடன் திரும்ப நேரில் வர, அதிர்ச்சியடைந்து தான் வாயாலேயே தன் அண்ணன் செல்வநாயகத்தைக் கொன்றதாக தன்னையுமறியாமல் ஊர் மக்கள் முன்னிலையில் கூறி காவலர் வசம் மாட்டிக் கொள்கிறான் துரை சிங்கம். ('புதிய பறவை' கோபால் போல) ஆனால் வந்தது உண்மையான அண்ணனா?..


இறுதியில் தன் 'சபத'த்தில் மாபெரும் வெற்றி காணுகிறாள் சிவகாமி.


'புன்னகை அரசி'க்கு இந்த மாதிரி சிவகாமி.ரோல் அல்வா சாப்பிடவது போல. கலக்கிவிடுவார். டி .கே.பகவதி நல்ல அண்ணனாகவும், கெட்ட தம்பியாகவும் அருமையான நடிப்பைத் தந்திருப்பார். படம் நெடுக கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் அமைதியாகச் சிரித்தபடியே வில்லத்தனம் புரிவது ஏ.ஒன். இந்தப் படம் சென்னையில் பாரகன், கிரௌன், புவனேஸ்வரி ஆகிய தியேட்டர்களில் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது.

தொடரும்

vasudevan31355
9th September 2015, 10:01 AM
பாகம் 2

http://www.stephenprayog.com/image/gkvenkatesh.jpg

இந்தப் படத்தின் மிகப் பெரிய பலமான தூண் இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ். என்ன ஒரு திறமை! இவர் நம் திரையுலகிற்குக் கிடைத்த ஒரு குறிஞ்சி மலர். இசையமைப்பதோடு மட்டுமல்லாமல் வித்தியாசமான குரல் வளம் கொண்ட பாடகரும் கூட.

https://i.ytimg.com/vi/BAlryz7Jl2Q/hqdefault.jpg

இப்படத்தில் இடம் பெற்ற எஸ்.பி.பாலா தங்கக் குரலில் பாடிய சூப்பர் டூப்பர் ஹிட் பாடலான,

'தொடுவதென்ன தென்றலோ மலர்களோ'

பாடல் ஒன்று போதும் ஜி.கே.வெங்கடேஷ் அவரின் திறமையை காலம் முழுதும் பறைசாற்ற. நமக்கு இறப்பு என்று ஒன்று வரும்போது இந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டே கண் மூடினால் கண்டிப்பாக சொர்க்கம் கிடைக்கும்.

இந்தப் பாடலின் 19 வினாடி துவக்க இசை இருக்கறதே! வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத இந்திரஜால இசை அது. அதைக் கேட்கும் போதெல்லாம் உடல் சில்லிட்டுத்தான் போகும். உடலின் ஒவ்வொரு அணுவிலும் அதிர்வுகளை ஏற்படுத்தும் உன்னதம் அது.

பாலாவின் இளநீர்க் குரல் அப்படியே நம்மைக் குளிர்விக்கும். அவ்வளவு மென்மையாக இப்பாடலை அவர் ரசித்து அனுபவித்துத் தந்திருப்பார். நானெல்லாம் பாலா பைத்தியமானதற்கு முழு முதற் காரணமே இந்தப் பாடல்தான் என்று சொல்லலாம். இந்தப் பாடலைக் கேட்டால் சப்த நாடியும் ஒடுங்கிப் போய் அமர்ந்து விடுவேன். இந்தப் பாடலை நான் கேட்கும் போது எனக்கு எந்த இடைஞ்சலும் இருக்கவே கூடாது. இந்தப் பாடல் ஒலிக்கும் போது வீடு அப்படியே நிசப்தமாகி விடும். பாலா பாடுவது போல் அவர் வாயிலிருந்து வருவது தென்றலா, மலர்களா, கனிகளின் இனிமையோ,தேன் துளிகளின் சுவையோ என்று நமக்குள் ஒரு பெரும் குழப்பமே ஏற்பட்டுவிடும்.

பாடல் முழுக்க பாடலுடனேயே இணைந்து வரும் அந்த கிடாரின் மெல்லிய சுகம் வலியது. (டிடிங்... டிடிங்... டிங் டிங் டிங் டிங் டிங்க் என்று ஒலிக்கும்போது நாம் உணரும் சுகங்களை எழுத்தில் வடித்து விட முடியாது.) சரணங்களுக்கு முன் இடையிசை வரும்போது ஒவ்வொரு முறையும் மிகப் பொருத்தமாக இந்த இசை தொடர்வது இப்பாடலுக்கே மிக அழகும், இனிமையும், பெருமையும் சேர்க்கிறது. அதே போல எப்படி அந்த இனிமையான ஓசையுடனேயே இந்தப் பாடல் துவங்குமோ அதே இனிமையான இசையுடன் வெகு சுகமாக முடிவடையும்.

'தேரில் ஏறி தேவதை வந்து
இங்கு நீரிலாடும் என்னுடன் நின்று'

என்று பாலா அட்டகாசம் பண்ணிவிட்டு திடுமென்று

'உடல் தேய்த்து விட்டாளோ
முகம் பார்த்து விட்டாளோ'

என்று வேகம் எடுப்பாரே! வாவ்! கிரேட்! அது மட்டுமா? திரும்ப அதே வரிகளை பாடும் போது 'விட்டாளோ' என்னும் போது அந்த 'ளோ' வுக்கு ஒரு நடுக்கம் கொடுப்பார் பாருங்கள். அடடா! ஹேட்ஸ் ஆப் பாலா!

http://i4.tinypic.com/15dvsie.jpg

அதே போல

'இன்று சித்திர முத்தங்கள் சிந்திய ரத்தினம் யாரோ
அவள் யா........ரோ'

இரண்டாம் முறை அந்த 'யாரோ' வை 'யாஆ ஆ ஆஆரோ' என்ற ரீதியில் அவர் பாடும் போது இவன்தான் பாடகன் என்று உரக்கக் கத்தத் தோணும்.

பாடல் முழுக்க மென்மையான இசையும், பாலாவின் மென்மையான குரலும் பலத்த போட்டியிலேயே இருக்கும். இதனால் காலத்தால் அழியாத இன்ப சுகம் நமக்குக் கிடைத்துக் கொண்டே இருக்கும்.

'ம் ம் ம் ம்....ஆ ஆ ஆ'.. ஆனந்த இன்ப அதிர்ச்சி! வார்த்தைகள் வரவில்லை அந்த இன்பத்தை எழுத.

பாடலின் வரிகள் பின்னிப் பெடலெடுக்கின்றன. பாருங்கள்.

'இன்று சித்திர முத்தங்கள்
சிந்திய ரத்தினம் யாரோ'

'இளம் சிட்டுமுகம் கொண்ட
பொட்டு குலம் அவள் யாரோ'

இது போன்ற அற்புதமான பாடல்களை படமாக்குவதில் கோட்டை விட்டு விடுவார்கள். ஆனால் இந்தப் பாடல் விதிவிலக்கு. பாடலின் தன்மை கொஞ்சமும் கெடாமல் அதியற்புதமாகப் படமாக்கியிருப்பார்கள். இதற்காக 'சபதம்' பட யூனிட்டிற்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கலாம். அவ்வளவு அற்புதம்.

http://i60.tinypic.com/2vt37fs.jpghttp://oi62.tinypic.com/vo8lya.jpg

பல்லவி வரிகளுக்கு துண்டு கட்டிக் கொண்டு கிணற்றடியில் ரவி குளிக்க, வெகு சிம்பிளாக புன்னகை அரசி டிஸ்டன்ஸ் மெயின்டெயின் பண்ணி டிரேட் மார்க் சிரிப்புடன் வெட்கி, நாணி பாவம் காட்டுவது டாப்.

ஒவ்வொரு வரியையும் அனுபவித்து எடுத்திருப்பார்கள். பாடலைப் போலவே மிக மென்மையான சோப்புக் குமிழ்கள் பறக்கும் மிக எளிமையான செட் தான். ரவி தூக்கி வாரிப் படிய சீவிய சிகை அலங்கார 'விக்'கில் அட்டகாசமாக இருப்பார். மிக அழகாகப் பண்ணியிருப்பார். பாலா குரல் பாந்தமாக இவருக்குப் பொருந்தும். குளோஸ்-அப் காட்சிகளில் குறிப்பாக சைட் போஸ்களில் நடிகர் திலகத்திற்குப் பிறகு அம்சமாக காமிராக் கோணங்களுக்குப் பொருந்தக் கூடியவர் ரவி ஒருவர் மட்டுமே.

'அதை நடக்க விட்டாளோ
எனை மிதக்க விட்டாளோ'

வரிகளுக்கு மனிதர் சைட் வாங்கியபடி பக்கவாட்டில் நளினமாக லேசான பெண்மைத் தன்மையுடன் நெளிந்தபடி ஒரு நடை நடப்பார் பாருங்கள். சும்மா அள்ளும். பாடல் ஒரு பக்கம் பட்டை கிளப்பும் என்றால் ரவி வேறு அவர் பங்குக்கு அட்டகாசம் செய்வார். இந்த ஒரு பாடலில் எவ்வளவு இனிமைகளைத்தான் தாங்குவது?

இதுவரை பாலா தொடர்களில் எழுதிய பாடல்கள் மட்டுமல்லாமல் இனி எழுதப் போகும் பாலா பாடல்களுக்கும் சேர்த்து இதுதான் என்றும் முதலிடம் பெற்ற முழுமையான பாடல். இந்தப் பாடலுக்குப் பிறகுதான் பாலாவின் மற்ற பாடல்கள் எதுவாயிருந்தாலும். இதில் மாற்றமேதும் கிடையாது.

https://i.ytimg.com/vi/tZng3eguV2c/hqdefault.jpg

தொடுவதென்ன தென்றலோ மலர்களோ
பனியில் வந்த துளிகளோ கனிகளோ
தொடுவதென்ன தென்றலோ மலர்களோ
பனியில் வந்த துளிகளோ கனிகளோ
உடலெங்கும் குளிராவதென்ன
என் மனமெங்கும் நெருப்பாவதென்ன

தொடுவதென்ன தென்றலோ மலர்களோ
பனியில் வந்த துளிகளோ கனிகளோ

தேரில் ஏறி தேவதை வந்து
இங்கு நீரிலாடும் என்னுடன் நின்று
தேரில் ஏறி தேவதை வந்து
இங்கு நீரிலாடும் என்னுடன் நின்று

உடல் தேய்த்து விட்டாளோ
முகம் பார்த்து விட்டாளோ
உடல் தேய்த்து விட்டாளோ
முகம் பார்த்து விட்டாளோ

இன்று சித்திர முத்தங்கள்
சிந்திய ரத்தினம் யாரோ
அவள் யா........ரோ
ம் ம் ம் ம்....ஆ ஆ ஆ..

தொடுவதென்ன தென்றலோ மலர்களோ
பனியில் வந்த துளிகளோ கனிகளோ

காமதேனு பால் கறந்தாளோ
அதில் கன்னி மங்கை தேன் கலந்தாளோ
காமதேனு பால் கறந்தாளோ
அதில் கன்னி மங்கை தேன் கலந்தாளோ

அதை நடக்க விட்டாளோ
எனை மிதக்க விட்டாளோ
அதை நடக்க விட்டாளோ
எனை மிதக்க விட்டாளோ

இளம் சிட்டுமுகம் கொண்ட
பொட்டு குலம் அவள் யாரோ
அவள் யா.........ரோ..!
ம் ம் ம் ம் ஆ ஆ ஆ..!!

தொடுவதென்ன தென்றலோ மலர்களோ (பாலாவின் சிரிப்பு அட்டகாசம்)
பனியில் வந்த துளிகளோ கனிகளோ

உடலெங்கும் குளிராவதென்ன
என் மனமெங்கும் நெருப்பாவதென்ன
ஆ ஆ ஆ ஆ..!

தொடுவதென்ன தென்றலோ மலர்களோ
பனியில் வந்த துளிகளோ கனிகளோ


https://youtu.be/BAlryz7Jl2Q

JamesFague
9th September 2015, 10:04 AM
From Facebook

மகாராஜன் உலகை ஆளலாம்..
படம் : கர்ணன் (1964)
நடிப்பு : சிவாஜி கணேசன் & தேவிகா
பாடியவர்கள் : டி.எம்.சௌந்திரராஜன் & பி.சுசீலா
இசை : மெல்லிசை மன்னர்கள்
பாடல்கள் : கவியரசு கண்ணதாசன்
இயக்கம் : பி.ஆர்.பந்துலு
https://www.youtube.com/watch?v=DBVdIzzgwgc

vasudevan31355
9th September 2015, 12:30 PM
தெலுங்கிலும் 'சபதம்'

http://images.boxtv.com/clips/4/3004/player_crop_1000x563_23428_3004_q80.jpg

சூப்பர் பாடலான 'தொடுவதென்ன தென்றலோ மலர்களோ' பாடல் அதே மெட்டில் தெலுங்கிலும் அற்புதமாக நமது பாலாவின் குரலில் ஒலித்தது. தெலுங்கிலும் நமது 'புன்னகை அரசி' தான் நாயகி. ரவிக்கு பதில் தெலுங்கு 'சூப்பர் ஸ்டார்' கிருஷ்ணா.படத்தின் பெயர் 'கோடலு பிள்ளா'

'நன்னுதாக்கரெவ்வரோ எவ்வரோ' என்று அதே சிச்சுவேஷனில் ஒலிக்கும் பாடல். காட்சியமைப்புகள் தெலுங்கிலும், தமிழிலும் ஒன்றே. இதே 'சபதம்' படம்தான் தெலுங்கிலே 'கோடலு பிள்ளா' ஆனது. ஆனால் வெளியான ஆண்டு 1972. விஜயா 'சபதம்' படத்தை விட இன்னும் குண்டடித்திருப்பார். நன்றாகத் தெரியும். தமிழில் டி.கே.பகவதி நடித்திருந்த இரட்டை வேடத்தை தெலுங்கில் நாகபூஷணம் ஏற்று நடித்திருந்தார். தமிழிலும், தெலுங்கிலும் அதே அஞ்சலிதேவி. நாகேஷுக்கு பதிலாக ராஜ்பாபு. இசை இனிமை நாயகர் ஜி.கே.வெங்கடேஷ்தான்.


https://youtu.be/univNcTN7l0

eehaiupehazij
9th September 2015, 01:03 PM
வாசு சார்

தெலுங்கு சூப்பர்ஸ்டார் கிருஷ்ணா நமது ரவிசந்திரனின் பிம்பம்தான்!
டப்பிங் பட போஸ்டர்களில் கிருஷ்ணா ரவியைப் போலவே இருப்பார் !!
குழந்தைக்காக தமிழ் படத்தின் ஆரம்பத்தில் கிருஷ்ணா ஆடும் ஸ்டெப்புலு டான்சை அதன் தெலுங்கு ஆக்கத்தில் ரவிச்சந்திரன் ஆடியிருப்பார்!!

vasudevan31355
9th September 2015, 01:11 PM
வாசு சார்


'குழந்தைக்காக' தமிழ் படத்தின் ஆரம்பத்தில் கிருஷ்ணா ஆடும் ஸ்டெப்புலு டான்சை அதன் தெலுங்கு ஆக்கத்தில் ரவிச்சந்திரன் ஆடியிருப்பார்!!

புரியல செந்தில் சார்.

'குழந்தைக்காக' படத்தில் கிருஷ்ணா, ரவி எல்லாம் ஏது? கிருஷ்ணா இருக்காரா என்ன? அது பத்மினி, மேஜர், மனோகர், ராமதாஸ், பேபி ராணி நடித்தாயிற்றே! வேற எதையோ சொல்றீகளா?:-)

eehaiupehazij
9th September 2015, 01:19 PM
படத்தின் ஆரம்பத்தில் ஒரு டான்ஸ் வருமே வாசு சார்! கிருஷ்ணா ஆடி முடித்ததுடன் கொல்லப்பட்டு பேபி ராணி அனாதையாகி விடுவார் என்று
ஞாபகம் ...!!
இந்த டான்சை தெலுங்கில் எடுக்கும்போது ரவிச்சந்திரன் கஸ்ட் ஸ்டாராக ஆடியிருப்பார் ....எதற்கும் வெரிபை பண்ணிப் பார்க்கிறேன்!!

chinnakkannan
9th September 2015, 04:30 PM
ஹாய் குட் ஆஃப்டர் நூன் ஆல்..

காலையிலிருந்து ஒரே மீட்டிங்க்ஸ்லில் பொழுது போனதினால் வர முடியவில்லை..

வாசு, சி.செ ஸாரி..மன்னிச்சுக்கோங்கோ ஷமிக்கணும் என்னுடைய குழந்தைத்தனமான கோபத்திற்கு..

மதுண்ணா சாக்லேட்டிற்கு நன்றி அச்சோ நான் டயட்ல இருக்கேனே

எஸ். வாசு தேவன் தாங்க்யூ..

eehaiupehazij
9th September 2015, 05:38 PM
BAGPIPER music and songs!

பேக்பைபெர் என்றதும் அந்தக்கால உற்சாகபானமான விஸ்கி ஞாபகத்துக்கு வந்தால் உங்களுக்கு வயது 40க்கு மேல்...அது ஒரு காற்றடைத்த பையை இசைக்காக வெவ்வேறு துவாரக் குழாய்கள் வழியாக முறையாக காற்றை வெளியேற்றும் இசைக்கருவி என்று மனதில் பட்டால் உங்கள் வயது 80க்கு மேல்தான்!! அது என்னவென்றே தெரியாதென்றால் நீங்கள் இந்த இளைய தலைமுறை சார்ந்தவரே!!

இந்த இசைக்கருவியை வாசித்துத்தான் யாரோ ஒருவர் எலிகளை எல்லாம் தன பின்னால் வரவைத்து கடலில் முக்கினாராம் கதை ! எப்போதோ கேட்ட கதை!

சங்கம் இந்திப்படத்தில் நான் இந்த இசைக்கருவியை முதல்முதல் பார்த்து இசையில் லயித்தேன் !!

https://www.youtube.com/watch?v=9a-ONy8iGNQ

chinnakkannan
9th September 2015, 09:28 PM
உடல் நிலை சரியில்லாததால் அலுவலகத்திலிருந்து சீக்கிரமாக - இங்கேபோஸ்ட் போட்ட கையோடு கிளம்பி வந்து- ஒரு தூக்கம் தூங்கி இப்பத் தான் எழுந்தேன்..

சபதம் ஏற்கெனவே எழ்தியிருக்கிறிர்க்ள் இல்லியோவாசு..வேறு பாடல் என நினைக்கிறேன். தொடுவதோ தென்றலோ மலர்க்ளோ எனக்குப் பிடிக்கும்..

போல் ராதா போல் எனக்கும் பிடிக்கும்.ஹிந்திபழைய கானங்கள் என்றால் ரெண்டு நினைவுக்கு வரும்..ஆஜா ஆஜா..அஹ்ஹ் ஆஜா...ஆ.. (தீஸ்ரி மன்ஸில்) இன்னொரு பாட்டு வஹிதாவின் துள்ளலுடன் கூடிய கானம் நேற்றிலிருந்து யோசித்துப் பார்க்கிறேன் நினைவில் வர மாட்டேன் என்கிறது..காரில் இருந்தோ லாரியில் இருந்தோ பாடுவார் ஒரு துள்ளல் பாட்டு..காரணம் முக நூலில் நேற்று போட்டது..:


வஹிதா நடிகையின் வண்ணமயத் துள்ளல்
வஹிபா மணற்துகளில் வந்தே - தகித்திடும்
வெயிலில் அனைவருமே வேகமாய்ச் சூரியனின்
மறைவினைப் பார்க்கலாம் வா..

Sur என்னும் இடத்தை த் தாண்டி கொஞ்ச தூரம் போனால் கண்ணுக்கெட்டியவரை
செம்மாந்து சிவந்த நிறத்தில் பாலை வனம்... நட்ட நடுவில் காட்டேஜஸும் உண்டு
தங்குவதர்கு.. டிசம்பர் ஜனவரியில் இரவுகளில் குளிரும்.. கேம்ப் ஃபயர் போட நேரிடும்..
சமர்த்தாய் எழுந்து மணல் மலையில் ஏறி சூர்ய உதயமும் பார்ப்பார்கள்.. நான் கேம்ப்பில்
தங்கியதுடன் சரி.. மற்றவர் போய்வர கீழிருந்தேன்.. பட் டெஸர்ட் ட்ரைவ் ஒரு த்ரில்
அனுபவம்..

வஹிதா நடிகை - வஹிதா ரஹ்மான்..அது என்ன ஒரு துள்ளல் பாட்டு.. நெஞ்சுக்குள்ற இருக்கு
வரமாட்டேங்குது..

https://www.google.com/search?q=wahiba+sands+oman&espv=2&biw=1024&bih=677&tbm=isch&tbo=u&source=univ&sa=X&ved=0CDkQ7AlqFQoTCLiruIaN58cCFUU8Ggod5YkG7g


பாலைவனம் பற்றி பாடல்கள் தமிழில் எப்போது ஆரம்ப மானது..

eehaiupehazij
9th September 2015, 10:10 PM
புதியன காணலும் பழையன பேணலும்

PART 3 : HIS MASTERS' VOICE (HMV) EMBLEM : The Gramophone with the Disc கிராமபோன்!


பாடல்கள் இசைத் தட்டுக்களில் காந்தக் குறியீடுகளாக சுழல் வட்டமாகப் பதிக்கப் பட்டு வெளிவந்த காலத்தில் HMV கம்பனி பிரசித்தம்! இசைத்தட்டு வைக்கப்பட்ட கிராமபோனின் முன்னால் நன்றிமிக்க நாய் தனது எஜமானனின் குரலைக் கேட்கக் காதுகளைத் தீட்டிக் கொண்டு ஏக்கத்துடன் மோனாலிசா போஸில் காத்துக் கொண்டிருக்கும் எம்ப்ளமும் மிகப்பிரபலம் !!

காந்த ஊசி பொருத்தப் பட்டு கிராபைட் தட்டின் சுழல் வட்டப்பாதையில் குறிப்பிட்ட கட்டுப்பாடான வேகத்தில் ஊசி பயணிக்கும்போது காந்தப் பதிவுகள் ஒலி அலைகளாக மாறி கீதங்கள் இசைக்கப்பட்டு ஒலிபெருக்கி வாயிலாக அதைக் கேட்கும் சுகமே அலாதி !

இன்று கிராமபோனும் பெட்ரோமாக்ஸ் லைட் போல ஒரு பசுமையான நினைவுச் சின்னமே !

கிராமபோன் பின்னணிப் பாடல் என்றதும் முதலில் நினைவுக்கு வருவது ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை வண்ண சித்திரத்தில் கிருஷ்ணகிரி கிட்டப்பாவாக பின்னணியில் விசுவநாதன் ராமமூர்த்தி இயங்க நாகேஷுடன் சச்சு துள்ளித் துள்ளி வேகமாக ஆடும் ஆட்ட பாட்டமே ! மலரென்ற முகம்....

https://www.youtube.com/watch?v=5GtS0q2UOGE

அப்புறம் அதே நாகேஷ் படகோட்டியில் கிராமபோன் இசைத்தட்டு போட்டவுடன் காட்டும் வீரமும் இசைத்தட்டு வேகமிழந்ததும் இவரும் பலமிழந்து சரிந்து விழுவதும்...

https://www.youtube.com/watch?v=ai_7HEXRplI

chinnakkannan
9th September 2015, 10:22 PM
சி.செ. புதியன காணலும் பழையன பேணலும்.. கிராம ஃபோன் என்றதும் நினைவுக்கு வருவது சுஜாதா எழுதிய ஸ்ரீரங்கத்து தேவதைகள் தொகுப்பில் வரும் ஒரு கதை.. அந்தக் காலத்தில் பக்கத்து வீட்டு பத்ம நாபன் வீட்டிற்குச் செல்லும் சிறுவன் அந்த கிராமஃபோனை இயக்கத் தெரியாமல் இயக்கி உடைத்துவிட அவரிடம் திட்டு வாங்குவோம் என நினைக்கையில் சரி போனாப் போறது என்று சொல்லிவிடுவார் பதமனாபன்.. நல்ல கதை..

கிராமஃபோன் வைத்து கமல்ஸ்ரீதேவியிடம் நல்ல மனம் வாழ்க ஜேசுதாஸ் பாட்டு ஆசையாய் இசைத்தட்டு போட அது ந...ல்...ல.. ம...ன..ம் வா..ழ்க.. என இழுத்து இழுத்துப் பாடும் மூன்று முடிச்சுக் காட்சி நினைவுக்கு வருகிறது..

rajraj
9th September 2015, 10:38 PM
Today I complete 50 years in America (US). I never thought I would stay that long in a foreign country. Now it is my home ! :) That is life ! :lol:
The America I came to in 1965 is not there any more! :( Greed and selfishness have taken over! Sad ! :(

chinnakkannan
9th September 2015, 10:39 PM
பகலில் பெளர்ணமி - சிவகுமார் நடித்த பேய்ப் படம் என்று படித்தேன்..தேடினால் எதுவும் கிடைக்கவில்லை..யாருக்காவது தெரியுமா ஏதாவது பாடல்கள் இருக்கின்றதா..

chinnakkannan
9th September 2015, 10:41 PM
Today I complete 50 years in America (US). I never thought I would stay that long in a foreign country. Now it is my home ! :) That is life ! :lol:
The America I came to in 1965 is not there any more! :( Greed and selfishness have taken over! Sad ! :(

வாவ்..கங்க்ராட்ஸ் ராஜ் ராஜ் சார்..உங்கள் அந்தக்கால நினைவலைகளைப் பகிரலாமே இங்கு..டெஃபினட்டா அது ஒரு அஸெட்டா இருக்குமே..இங்கில்லை எனில் தமிழ் இலக்கிய அல்லது ஆங்கில இலக்கிய செக் ஷனில் ஒரு தொடர் கட்டுரை போல (20அத்தியாயஙக்ள்) எழுதுங்களேன்.. நன்றாக இருக்கும்..

eehaiupehazij
9th September 2015, 11:28 PM
Hearty Congratulations for your Golden Jubilee residential feat in USA Rajraj Sir!!
Congratulations too for having your virtual feet in India by your interactions in this thread!!
senthil

chinnakkannan
10th September 2015, 12:01 AM
பாட்டில் வரும் வார்த்தை யைக் கொடுத்தால் சர்ச் பண்ணிக் கண்டு பிடிக்கலாம்.. இப்படி இசைக்கருவி கொடுத்தால் நினைவுகளில் சர் ச் செய்ய வேண்டியிருக்கிறது..இருந்தும் தப்பி விடுகிறது.. சி.செ.. நீங்கள் சொன்ன இரண்டு காட்சிகளும் மலரென்ற முகமிங்கு, நாகேஷ்.. முத்திரை பதித்த காட்சிகள் சட்டென நினைவுக்கு வராமல் போய்விட்டது.. நன்றி..இன்னும் கிராமஃபோன்..ம்ம் நினைவுகளில் தேட வேண்டும்..

eehaiupehazij
10th September 2015, 02:12 AM
அன்பார்ந்த திரி நண்பர்களே
நிறைந்த மனதுடன் பெறும் வாழ்த்துக்கள் உடனே பலித்து விடும் என்பது எவ்வளவு உண்மை ....!
என் ஆராய்ச்சி மாணவர்கள் எனக்குப் பெருமை சேர்ப்பார்கள் என்று அன்புள்ளத்தோடு எனக்கு கல்விப்பணி ஓய்வு வாழ்த்துக்களைத் தெரிவித்தீர்கள் ...
இப்போது எனது வழிநடத்துதலில் பி எச் டி முடித்த இரு மாணவர்கள் :
ஒருவர் Dr AC MATHEW தற்போது கேரளா கசரகோடில் உள்ள மலைத்தோட்டப்பயிர்கள் ஆராய்ச்சிக் கேந்திரத்தில் முதல்நிலை விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார்
இன்னொருவர் Dr Manoj சாமுவேல் தற்போது ஹைதராபாதில் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் முதன்மை விஞ்ஞானியாகப் பணியாற்றி வருகிறார்
முனைவர் பட்டம் சார்ந்த ஒரு ஆய்வுக்கட்டுரையை சிகாகோவில் செயல்படும் உலக நீர்சூழல் அமைப்புக்கு சமர்பித்து சிறந்த ஆய்வுக்கான பரிசினை தட்டி
வந்து எனக்கும் எனது பல்கலைக்கழகத்துக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்த்திருக்கிறார்கள்!. மகிழ்ச்சியை உங்களனைவருடனும் பகிர்வதில் பெருமை
கொள்கிறேன் !!
செந்தில்


FOR IMMEDIATE RELEASE 20 August 2015

Indian Scientists to Receive Prestigious Water Quality Award

ALEXANDRIA, Va. – Indian Scientists Dr. Manoj P. Samuel (Principal Scientist, Indian Council of Agricultural Research- National Academy of Agricultural Research Management, Hyderabad), Dr. S. Senthilvel (Professor(Agricultural Engineering)), Tamil Nadu Agricultural University, Coimbatore and Dr. A.C. Mathew (Principal Scientist, Indian Council of Agricultural Research-Central Plantation Crops Research Institute, Kasaragod, Kerala) will receive the prestigious McKee Groundwater Protection, Restoration, or Sustainable Use Award- 2015 from the Water Environment Federation (WEF), an international not-for-profit technical and educational water quality organization. The award will be presented during a ceremony at the organization’s 88th Annual Technical Exhibition and Conference this fall in Chicago, Ill. www.weftec.org.
This award is considered to be one of the most prestigious awards in the area of water resources and environmental engineering and being conferred to Indian scientists for the first time.
McKee Groundwater Protection, Restoration or Sustainable Use recognizes significant contributions to groundwater science or engineering research published peer reviewed journals worldwide. The award is in honor of Dr. Jack McKee, the 1962-63 president of the Water Environment Federation, a founder of the consulting firm of Camp, Dresser and McKee, Inc., and a long-time professor at the California Institute of Technology.

madhu
10th September 2015, 04:19 AM
கங்கிராஜுலேஷன்ஸ் வாத்தியாரையா... அமெரிக்காவின் ஆதி குடிமகனே (செவ்) இந்தியர்கள்தானே !

madhu
10th September 2015, 04:21 AM
சிக்கா...

நீங்க கேட்ட வஹிதா பாட்டு இதுவா ? கைடு படத்தில் வருதே !

ஆஜ் பிர் ஜீனே கி தமன்னா (?) ஹை... ஆஜ் பிர் மர்னே கா இராதா (?) ஹை...

https://www.youtube.com/watch?v=1odcNKyfZJU

madhu
10th September 2015, 04:28 AM
கிராமபோன் ரிகார்டு பாட்டுன்னா இதெல்லாம் நினைவுக்கு வருது

ஆத்தா.. ஆத்தோரமா வாரியா

https://www.youtube.com/watch?v=FkTJXOAuld4

madhu
10th September 2015, 04:53 AM
மௌண்ட் ரோடு சரஸ்வதி ஸ்டோர்ஸ்., பாண்டி பஜார் சௌத் இந்தியா மியூசிக் எம்போரியம், உஸ்மான் ரோடு லக்ஷ்மி மியூசிகல்ஸ் என்று அலைந்து எஸ்.பி, ஈ.பி, எல்.பி என்று கலைத்துப் போட்டு வாங்கி அழகாக போட்டோ ஆல்பம் போல இருக்கும் ஆல்பத்தில் வரிசையாக அடுக்கி வைத்து அப்பப்போ ஃப்ரீ டைமில் என் அண்ணனை அழைத்து ( வேறு யாராவது அந்த hmv கிராமபோனைத் தொட்டால் சாமியாடி விடுவாராக்கும்) பாட்டு லிஸ்ட் கொடுத்தால் வரிசையாக இசைத்தட்டுகளை எடுத்துப் போட ரசித்த நாட்கள்...

காசெட் பிளேயர் வந்ததும் இது காணாமல் போக... ஒரே ஒரு ரிகார்டை எடுத்து ஒளித்து வைத்திருந்தேன்.. அது எட்டு துண்டுகளாக கிடைத்தபோது :(

டேப் போயி, காசெட் போயி.. சிடி போயி... டிவிடி போயி... எம்.பி எண்கள் எல்லாம் போயிகிட்டே இருக்கு... அடுத்ததாக நம்ம தலையில் ஒரு சிப் பதிச்சு அதில் அப்பப்போ பாட்டு பதியலாம் என்று வரப்போகுதாம்...

மூக்கடைத்த குரலில் மனதை மயங்க வைக்கும் குலாம் அலியின் குரலில் இந்த நிக்காஹ் படப்பாடலைக் கேட்கும்போது யாத் ஆ ரஹா ஹை...

https://www.youtube.com/watch?v=38_AJgdtXm4

rajraj
10th September 2015, 04:56 AM
Thanks madhu,senthil and chinnakkaNNan ! :)

madhu: I think Columbus mistook them for Indians. They are now knoown as native Americans. We are known as Asian Indians ! :)

chinnakkaNNan: I was planning to write a book with the title, "Idiot America". I usually go for a cup of mocha around 3 pm and browse the book store next door. One day I found a book with the same title (Idiot America) displayed prominently. I thought of picking up the book after making my rounds. By the time I finished browsing and went to pick up that book it was gone. Now, I am looking for another title ! :lol: A couple of years back I posted some of my views iin some thread. Some hubbers wanted me to continue. If I locate that thread I will continue.

Senthil: Congratulations. If you visit Chicago for the conference please call me. Thanks.



கங்கிராஜுலேஷன்ஸ் வாத்தியாரையா... அமெரிக்காவின் ஆதி குடிமகனே (செவ்) இந்தியர்கள்தானே !

RAGHAVENDRA
10th September 2015, 06:28 AM
https://www.youtube.com/watch?v=OZ9qKfOoFxc

ராஜ் ராஜ் சார் கூறிய upright பியானோ.. இப் பாடல் காட்சியில் இடம் பெற்றுள்ளது.

RAGHAVENDRA
10th September 2015, 06:30 AM
மது,
இன்னும் கூட சில கிராமஃபோன் ரிக்கார்டுகள் என்னிடம் உள்ளன. 78 rpm, EP, LP என மூன்று வகை இசைத்தட்டுகளும் மாதிரிக்கு வைத்திருக்கிறேன். ஆனால் ப்ளேயர் தான் இல்லை.
அதே போல ஒலி நாடாக்களும் சிலவற்றைப் பாதுகாத்து வருகிறேன்.

RAGHAVENDRA
10th September 2015, 06:39 AM
இசைத்தட்டுக்களைப் பொறுத்த மட்டில் புரசைவாக்கம் ராஜா மியூஸிக்கல்ஸ், மிகவும் பிரபலமானது. அவருடைய சகோதரர் மோகன் அண்ணா சாலை ரேடியோ மார்க்கெட்டில் ஓரிரு கடைகளை வைத்திருந்தார். மோகனுடன் அவருடைய இன்னோர் சகோதரர் சரவணனும் உடனிருந்து இசைத்தட்டு விற்பனை செய்து வந்தார்கள். ஒலிநாடாக்கள் வந்தபின்னர் இவை வெகுவாக மறையத்தொடங்கின. இளையராஜா அவர்களின் பாடல்கள் காலம் வரை இசைத்தட்டு பரவலாக விற்பனையாகி வந்தது. ஏ.ஆர்.ரகுமான் நுழைவிற்குப் பின்னர் அத்தனையும் மாறிப்போனது. எக்கோ ரிக்கார்டிங் கம்பெனியின் மூலமாகத் தான் பெரும்பாலான இளையராஜா படங்களின் இசைத்தட்டுக்கள் வெளியிடப்பட்டன. இவையன்றி லஹரி, இன்ரிக்கோ, அவ்வப்போது ஹெச்எம்வி என வெளியிடப்பட்டன.

http://polkacafe.s3.amazonaws.com/articles/thumbs/ti_725_9261.9674658241.jpg

டெல்லியில் ஒரு இசைத்தட்டு விற்பனைக்கூடம்

rajraj
10th September 2015, 07:14 AM
madhu: What is shown in the video clip is a record player, not a gramaphone. Gramaphone has a horn and the pick up arm is heavy. Record players are coming back with new technology enhancements. LPs are also coming back.




கிராமபோன் ரிகார்டு பாட்டுன்னா இதெல்லாம் நினைவுக்கு வருது

ஆத்தா.. ஆத்தோரமா வாரியா

https://www.youtube.com/watch?v=FkTJXOAuld4

RAGHAVENDRA
10th September 2015, 07:34 AM
Raj Raj Sir
I learnt that the record players (incl gramaphone records of 78 rpm) are being manufactured with the latest technology including USB drives, so as to record them live and store them. It is also available in India (of course online sales, I presume). It seems they work under magnetic reading capability 0r magnetic stylus or something of that kind, with which we can play around and upto 10000 records.
Can you elaborate on this?

rajraj
10th September 2015, 07:58 AM
Raghavendra: I don't think they use magnetic pick up in turn tables/record players. But, USB connection, wireless, pre amplifiers are common. They used to make these record players only for LP records. Now it is 33 rpm, 45 rpm and 78 rpm records. I have not followed the developments closely. In fact, I have to transfer all my LP records and audio cassettes collected over the last 50 years to CDs or memory cards. Then comes all the movies I took - 8mm film,VHS tape and 8mm tape and negatives and slides ! Big project ! :) I hope my movie projector works ! :)

vasudevan31355
10th September 2015, 08:12 AM
//பேக்பைபெர் என்றதும் அந்தக்கால உற்சாகபானமான விஸ்கி ஞாபகத்துக்கு வந்தால் உங்களுக்கு வயது 40க்கு மேல்...அது ஒரு காற்றடைத்த பையை இசைக்காக வெவ்வேறு துவாரக் குழாய்கள் வழியாக முறையாக காற்றை வெளியேற்றும் இசைக்கருவி என்று மனதில் பட்டால் உங்கள் வயது 80க்கு மேல்தான்!! அது என்னவென்றே தெரியாதென்றால் நீங்கள் இந்த இளைய தலைமுறை சார்ந்தவரே!!

இந்த இசைக்கருவியை வாசித்துத்தான் யாரோ ஒருவர் எலிகளை எல்லாம் தன பின்னால் வரவைத்து கடலில் முக்கினாராம் கதை ! எப்போதோ கேட்ட கதை!//

http://i.ytimg.com/vi/p6PIV44RhJE/hqdefault.jpg

செந்தில் சார்,

'புதிய பூமி' படத்தில் எம்.ஜி.ஆர் அவர்கள் அருகில் இருக்க, ஜெயா மேடம் ஆடும்

நெத்தியிலே பொட்டு வச்சேன்
நெஞ்சை அதில் தொட்டு வச்சேன்

என்ற பாடலுக்கு எம்.ஜி.ஆர் வாசிப்பதும் பேக் பைப்பெர்தானே?

http://i.ytimg.com/vi/RGqKPr5f4lA/hqdefault.jpg

சுசீலா அம்மாவின் அருமையான பாடல் இது. ஆனால் பெற வேண்டிய அளவுக்கு புகழ் பெற வில்லை. மேடத்தின் கலக்கல் நடனம் வேறு.

'குங்குமாஜம் குங்குமாஜம் குங்குமாஜம் குங்குமாஜம்'

எனக்கு நிரம்ப பிடித்த பாடல்.


https://youtu.be/jhq-fxckcA0

madhu
10th September 2015, 08:20 AM
வாத்தியாரையா... விளக்கத்துக்கு நன்றி.. நான் ரெண்டும் ஒன்று என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன்.. ஒன்று நகரபோன் என்று புரிந்து கொண்டேன் :)

ராகவ் ஜி... எங்க வீட்டில் நவராத்திரிக்கு வெற்றிலை பாக்கு வைத்துக் கொடுக்க மூர்மார்க்கெட்டில் இருந்து 78 rpm ரிகார்டில் ஓரத்தை வளைத்து வளைத்து செய்த தட்டு வாங்கி வச்சிருப்பாங்க... அதை ப்ளேயரில் போட்டு பார்க்க ஆசைப்பட்டு அப்பாவிடம் அடி வாங்குமுன் தப்பியதுண்டு.

வாசு ஜி... எம்.ஜி.ஆர். ஏதோ ஒரு படத்தில் வாசிப்பாரே என்று யோசித்து ( ஜெயலலிதா என்ற நினைவும் இருந்ததால்... தேடி வந்த மாப்பிள்ளையின் தொட்டுக் காட்டவா பாட்டில் தேடினேன்.. கிட்டவில்லை.. ) யோசித்து யோசித்துக் கொண்டே இருக்கும்போது நீங்க சட்டுனு கொண்டு வந்து தட்டில் வைத்து காட்டி விட்டீர்கள்.. தாங்கஸ்

eehaiupehazij
10th September 2015, 08:40 AM
வாசு சார்
இந்த பேக்பைபரை தமிழ் சினிமாவில் எங்கோ எப்போதோ பார்த்திருக்கிறேனே என்று நினைவலைகள் முட்டி மோதி தேடும்போது பளீரென்று உங்களின் பதிவு மின்னல் கீற்றோளியில் ...... ...கண்டுகொண்டேன்...கண்டுகொண்டேன்! .....நன்றிகள்
குழந்தைக்காக திரைப்படம் தேடிக்கொண்டிருக்கிறேன் ....தேடுதல் சுகமான சுமையே!! பலன் கிட்டினால் சுவையான பழமே!
செந்தில்

eehaiupehazij
10th September 2015, 08:53 AM
கிராமபோன் ரிகார்டு பாட்டுன்னா இதெல்லாம் நினைவுக்கு வருது

ஆத்தா.. ஆத்தோரமா வாரியா

[url]https://www.youtube.com/watch?v=FkTJXOAuld4

சூபர்ப் மதுஜி !!
பழமைப் பொக்கிஷங்களான கிராமபோன் ரெகார்ட் பிளேயர் மட்டுமன்றி பழைய கால டூ இன் ஒன் டிரான்சிஸ்டர், பழைய ஒலிபெருக்கி (in english ? forgotten the name!) மனிதனை மனிதன் இழுக்கும் சைக்கிள் ரிக்ஷா, டால்டா டின் மறக்காத குறவன் குறத்தி ஆட்டம், மைக்காட்டம் போடும் மைக் மோகன், குத்தாட்டத்திற்கு வித்திட்ட தவக்களை ....எல்லா பழமையும்
பேணிக் காத்திட செய்து விட்டீர்களே !!

rajraj
10th September 2015, 09:03 AM
குழந்தைக்காக திரைப்படம் தேடிக்கொண்டிருக்கிறேன் ....தேடுதல் சுகமான சுமையே!! பலன் கிட்டினால் சுவையான பழமே!
செந்தில்

anjali is one movie. avvai shanmuki, copy of Mrs Doubtfire, is another. I am sure there are others.

vasudevan31355
10th September 2015, 09:25 AM
'ஆயிரத்தில் ஒருத்தி' புன்னகை அரசிக்கு பருமன் பாலாஜி குடிகாரக் கணவராய் இருந்து சகுந்தலாவுடன் கூத்தடிக்க, விஜயா மனம் நொந்து பாடும் பாடல் பாடல் அரசியின் குரலில். அருமையோ அருமை.

கோவில் நல்ல கோவில்
தெய்வம் எந்தன் தெய்வம்
பூஜை செய்யு ம் நேரம்
ஆசை கொண்டு வந்தேன்
என்ன சொல்லிப் பாட
யாரை எண்ணிப் பாட

குறிப்பாக

பாவப்பட்ட ஜென்மம்
காண வந்த தர்மம்

நெகிழ்வு.


https://youtu.be/WwJW06QYFfk

vasudevan31355
10th September 2015, 09:35 AM
செந்தில் சார், மதுண்ணா,

கிராமபோன் ரிகார்ட் தட்டுக்கள் பாடலுக்கு மட்டுமில்லை. கதாநாயகன் வில்லனை சமாளிக்க அடுக்கி வைக்கப் பட்டிருக்கும் கிராமபோன் தட்டுக்களை ஒவ்வொன்றாகத் தூக்கி வில்லன் மேல் வீசுவானே!

RAGHAVENDRA
10th September 2015, 09:43 AM
மைக்காட்டம் போடும் மைக் மோகன்

சார், மைக் மோகனுக்கென்று ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. யாராவது படித்து விடப் போகிறார்கள். அவ்வளவு பழசாகவா ஆகிவிட்டார்..ஈரேழு உலக .. அதல பாதாள,,, மேல் லோக, சொர்க்கம் நரகம் இத்தியாதி இத்தியாதி இடங்களில் உள்ள அனைத்து மோகன் ரசிகர்கள் சார்பாக உங்களுக்கு கண்டனங்கள். இதற்கு தண்டனையாக தொடர்ந்து ஐந்து விஜயகுமாரி காட்சிகள், ஏழு கே.ஆர்.விஜயா காட்சிகளைத் தொடர்ந்து பார்க்கக் கடவது...

rajraj
10th September 2015, 09:45 AM
பழைய ஒலிபெருக்கி (in english ? forgotten the name!)

Did you mean 'amplifier'. They are still useful. They are very expensive now.

I think you meant megaphone ! :)

vasudevan31355
10th September 2015, 09:46 AM
இந்தாங்கோ! கிராமபோன் ரிகார்டுல நம்ம பாகவதரின் 'மன்மத லீலையை வென்றார் உண்டோ' பாட்டு ஓடுது பாருங்க. நல்லா கிரைண்டர் சுத்துற மாதிரி பிளேயர் சுழலுது.:)


https://youtu.be/jCMQ49zItso

vasudevan31355
10th September 2015, 09:48 AM
//பழைய ஒலிபெருக்கி//

அது ஆம்ப்ளிபையர் இல்லை ராஜ்ராஜ் சார். ஸ்பீக்கர். (சட்டசபை ஸ்பீக்கர் இல்ல):)

eehaiupehazij
10th September 2015, 09:56 AM
Did you mean 'amplifier'. They are still useful. They are very expensive now.

I think you meant megaphone ! :)

Now I got it !! It was called 'loud speaker'! Some white flowers also resemble this shape!!
ரேடியோப்பூ என்று சிறுவயதில் பேசிக்கொள்வோம் !

eehaiupehazij
10th September 2015, 10:01 AM
அதிகாலையில் செல்பேசியில் வெகுநாட்கள் கழித்து வாழ்த்துக்கள் நிறைந்த உங்கள் குரல் கேட்டு மகிழ்ந்தேன் ரவி சார் !!
மாபெரும் மதுர கானக் கடலில் வகை வகையான பொக்கிஷங்களை தேடி எடுக்க மீண்டும் வருக என்று கேட்டுக்கொள்கிறேன் !!
ஈகோக்கள் இல்லாத மனமகிழ் திரியில் அகமகிழ்வுடன் முகமலர்வுடன் பணியைத் தொடர்வோம் நண்பரே !!
அன்புடன் செந்தில்

summaa for a change Ravi Sir...enjoy!

https://www.youtube.com/watch?v=aNL3POV6OoI

vasudevan31355
10th September 2015, 10:05 AM
என்ன ஒரு அட்டகாசமான பாடல்!

கணீரென்று அமர்க்களமான பாவங்களுடன் உணர்ச்சிமயமாக டி.எம்.எஸ். பாட நமக்கு மெய் சிலிர்க்கிறது. அந்த கம்பீரக் குரல் நம்மைக் கட்டிப் போட்டு ஆள்கிறது. இன்னிசை வேந்தர்கள் பாடகர் திலகத்தை வேகமாகப் பாட வைப்பதில் வல்லவர்கள். அது போல பாடல் ரிகார்டிங்கும் தெள்ளத் தெளிவு. போலீஸ் ஜீப்பில் ராஜனும், மேஜரும். இனால் மறக்க முடியாத பாடல்.

சாட்சி ஒரே சாட்சி
அது கோர்ட்டுக்கு வாராதது
எந்தக் கூண்டிலும் ஏறாதது
உன் காட்சிக்கு வராமல் சாட்சி
சொல்லும் கடவுள் தானது

உலகம் அவனது அரசாட்சி
அவன் உருவம்தான் உன் மனசாட்சி
உள்ளம் என்றும் தெய்வம் அது
சொல்லுவதில்லை பொய் சாட்சி

(சாட்சி)

காதலுக்கிரண்டு கண் சாட்சி
அந்தக் கண்களின் தவறுக்கு பெண் சாட்சி
அம்மா உந்தன் வழக்கைத் தீர்க்க
காலம் செய்வது ஆராய்ச்சி

(சாட்சி)

1000 இருக்கும் ஊர் சாட்சி
இதில் உண்மை என்பது யார் சாட்சி
சிறுவன் இந்த ஒருவன் தானே
சட்டம் தேடும் மெய்சாட்சி
சட்டம் தேடும் மெய்சாட்சி

(சாட்சி)


https://youtu.be/Nx3Utpl4vEw

chinnakkannan
10th September 2015, 10:14 AM
ஹாய் குட் மா...ர்...னி...ங்... ஆல்ல்....:)

ரொம்ப ஹேப்பி யா இருக்கு... சில விஷயங்கள்..

ஒண்ணு.. கங்க்ராட்ஸ் சிவாஜி செந்தில் சார்.. நிஜம்மாகவே படிக்க மிக மகிழ்ச்சியாக இருந்தது..இன்னும் பல சாதனைகள் நீங்கள் படைப்பீர்கள்..உங்களுக்கு இறைவன் எல்லா நலமும் எல்லாகான்செப்டுகளும் தருவான்..

இரண்டு.. வஹிதா பாட்டு என்று ஜஸ்ட் லைக் தட் மட்டும் தான் சொன்னேன்.. இந்தப் பாட்டை நானும் தேடித் தேடிப் பார்த்தேன்..முதல் வரி வராததினால்(மனதுள்) கண்டுபிடிக்க இயலவில்லை.. ஒரே மாதிரி யோசிக்கும் நண்பர் எனக் காட்டியமதுண்ணாக்கு நமஸ்கார் தாங்க்யூ நன்றி..இன்னும் வேறு மொழிகளிலும்..

மூன்று..வாஸ்ஸீ .. பேக் பைப்பர் இன்ஸ்ட்ருமெண்ட்.. நீங்கள் பைட் பைப்பர் கதை தானே சொல்கிறீர்கள் படம் வந்து ஒரு நாதஸ்வரக் குழாய் மாதிரித் தானே இருக்கும்…. அப்புறம் விளம்பரங்களில் எல்லாம் பேக் பைப்பர் சோடா என்று தான் சொல்வார்கள் இல்லியோ..

நான்கு.. ராஜ் ராஜ்சார்.. எழுதுங்கள்.. இட் வில் பி இண்ட்ரெஸ்டிங்க்..

ஐந்து.. ராகவேந்திரா சார்.. மைக் மோகனுக்கு ஆண் ரசிகர்களை விட பெண் ரசிகர்கள் தான் ஜாஸ்தி எனக் கேள்வி..அதிர்ஷ்டத்திற்கு உதாரணமும் அவரே.. எதிர்மறைக்கும் அவரே உதாரணம்..

**

ஆறு..உடல் நலம் கொஞ்சம் நிறையவே முடியவில்லை..எனில் ஆஃபீஸூக்குச் சுட்டி..பதினொன்றரைக்கு முடிந்தால் டாக்டரிடம் (அப்போது தான் வருவார்) போக வேண்டும்..
*

இனி.. வஹிதா பாட்டு தமிழ்ப் - படுத்தல்..

*

என் முந்தானையிலிருந்து முட்களை எடுத்துவிட்டேன்..
எல்லாத் தளைகளையும் உடைத்துவிட்டேன்..
என் பொங்கும் இதயத்தை தடுக்காதீர்க்கள்.. இதோ இதோ என் இதயம் போகிறது..

**
இன்று நான் மறுபடியும் வாழ விரும்புகிறேன்..

இன்று நான் மறுபடியும் சாக விரும்புகிறேன்..

*

என் உணர்வுகள் என்னிடம் இல்லை…

நான் ஓரிடத்தில் என் இதயம் வேறிடத்தில்..
*
நான் குடித்திருக்கிறேனா அல்லது ஒரு புயல் எனக்குள் புகுந்து விட்டதா..
யாராவது சொல்லுங்களேன்.. நான் எங்கே இருக்கிறேன்..

*

நேற்றின் இருளிலிருந்து விலகி விட்டேன்..
கொஞ்சம்பயமாகத்தானிருக்கிறது..
போகும் பாதை புதிது..ம்ம் அதனால் என்ன..
மெல்ல மெல்லக் கண் திறந்தால் வழியெங்கிலும் பூக்கள்..
ஆஹா வந்துவிட்டது வசந்தம்…

..
ஆஜ்…

வெகு அழகான பாடல்..கொஞ்சம் யோசித்தால்..காற்றுக்கென்ன வேலியும் அதே டைப் தானில்லை..

*
ஹிந்திலிரிக்ஸும்..ஆங்கில ட்ரான்ஸ்லேஷனும்..( வலையில் தான் சுட்டது)

*

kaanton se khinch ke ye aanchal

After pulling my sari fringe from the thorns

tod ke bandhan baandhe paayal
I broke all the ties and wore my anklet

koi na roko dil ki udaan ko
don't any one stop the my soaring heart

dil vo chalaa ha ha haa haa haa haa
Here goes my heart

(aaj phir jine ki tamannaa hai
Today i want to live again

aaj phir marane kaa iraadaa hai) - 2
today I again want to die


apne hi bas main nahin main
I am not in self control

dil hai kahin toh hoon kahin main, o o
My heart is somewhere else and I am elsewhere


jaane kyaa paa ke meri zindagi ne
Don't know what my life found and

hans kar kahaa, ha ha, ha ha, aa a
laughingly said

aaj phir jine

main huun khumaar (ghubaar) yaa tuufaan huun
Am I drunk or a rebelious storm is rising in me

koi bataae main kahaan huun
Some one tell me, where I am?

dar hai safar men kahin kho na jaauun main
I scared that I may not get lost in my travel

rastaa nayaa a a aa aa aa aa
Since the road I am taking is new

aaj phir jine

kal ke andheron se nikal ke
Escaping from the darkness of yesterday

dekhaa hai aankhen malake malake
I am slowly opening my eyes

phuul hi phuul zindagi bahaar hai
I see flowers everywhere, the life has turned into the spring time

tay kar liyaa a a aa aa aa aa
I have decided

vasudevan31355
10th September 2015, 10:26 AM
http://i.ytimg.com/vi/QsXTCxLZyws/maxresdefault.jpg

மதுண்ணா!

'ஒரே சாட்சி' படத்தில் இன்னொரு அமர்க்களமான பாட்டு ஒன்று உண்டு. மனோகர் போதை மயக்கத்தில் இருக்க எம்.பானுமதி பாடி ஆடுவார். சுசீலா குரல் கொடுத்திருப்பார்.

விலை பேசும் கண்கள் அல்லவோ
கண்ணா விளையாட வா என்று
இன்னும் சொல்லவோ

இப்போது அப்படியே டிராக் மாறும். இப்போ ராட்சஸி டைம். ஆடுபவர் வழக்கம் போல சி.ஐ.டி.சகுந்தலாதான். சும்மா தானே புயல் மாதிரி குரல் விறுவிறுவென பறக்கும்.

அந்த மங்கையா இந்த மங்கையா
இருவரில் யார் வேண்டும்
இங்கே இருவரில் யார் வேண்டும்
பக்கம் வந்ததும் சொர்க்கம் என்பது
என்னிடம்தான் தோன்றும்
சுகம் என்னிடம்தான் தோன்றும்.

இப்போ ஈஸ்வரி கலக்குவார் பாருங்க

பொண்ணு தேவையா ஜின்னு தேவையா
இரண்டிலும் சரிபாதி போதை
இரண்டிலும் சரிபாதி

கன்னம் தேவையா கிண்ணம் தேவையா
இரண்டுமே ஒரு ஜாதி இங்கே இரண்டுமே ஒரு ஜாதி
கையிலே ஏந்தலாம் காதலில் நீந்தலாம்

அடுத்து நக்கல் சிரிப்புடன் சுசீலா ஆரம்பிப்பார். பிறகு ஈஸ்வரி தொடர்வார் போட்டியாக.

சங்கர் கணேஷ் பின்னுவார்கள். ஈஸ்வரி எல்லாரையும் விட கலக்கல்.

http://www.inbaminge.com/t/o/Ore%20Satchi/Vilai%20Pesum%20Kangal%20Allavo.vid.html

rajeshkrv
10th September 2015, 10:30 AM
வணக்கம்

vasudevan31355
10th September 2015, 10:33 AM
செந்தில் சார்.

தங்களது மாணவர்கள் தங்களுக்கு பெருமை சேர்த்து உங்களை சந்தோஷப்படுத்தி எங்களையும் சந்தோஷப்படுத்தி விட்டனர். அந்த தங்கங்களுக்கு நம் வாழ்த்துக்கள். உங்கள் சந்தோஷத்திலும், பெருமையிலும் மதுரகான நண்பர்களும் பங்கு கொள்கிறோம். மதுண்ணா சொல்வது போல பிரார்த்தனைகளும், வாழ்த்துக்களும் என்றுமே பலன் அளிக்கக் கூடியவை. தங்களுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

vasudevan31355
10th September 2015, 11:23 AM
வணக்கம்

ஜி! வணக்கம். எங்கே காணவே காணோம்? பிஸியா? நலம்தானே! தலையை காண்பித்து வாலைக் காண்பித்து பின் காணாமல் போய் விடுகிறீர்களே! கியா சமாச்சார்?:)

RAGHAVENDRA
10th September 2015, 11:41 AM
வாசு சார்
ஒரே சாட்சி... அருமையான பாடல்கள்.. அபூர்வமான பாடல்களும் கூட..
தேடிக் கொண்டு வாருங்கள் இது போன்ற பொக்கிஷப் புதையல்களை..
ஆவலுடன் காத்திருக்கிறோம்.

RAGHAVENDRA
10th September 2015, 11:43 AM
ஒலி - sound
பெருக்கி - multiplier

Sound multiplier - சரியா..

பாருங்க.. தமிழிலேருந்து இங்கிலீஷூக்கு கஷ்டப்பட்டு மொழி பெயர்த்திருக்கிறேனாக்கும்..

Russellmai
10th September 2015, 12:01 PM
பழைய கிராமபோன் இசைத்தட்டுகள் கொலம்பியா நிறுவனத்தாலும் வெளியிடப்
பட்டதாக ஞாபகம்.நண்பர்கள் எவரேனும் இதனைத் தெளிவு படுத்துங்கள்.
அன்புடன் கோபு.

vasudevan31355
10th September 2015, 12:19 PM
ஆமாம் ராகவேந்திரன் சார்!

'ஒரே சாட்சி' போன்று பல வெளியே தெரியாத படங்களின் பாடல்கள் அனைத்தையும் கொண்டு வரவேண்டும் என்பதே என் நெடுநாள் விருப்பம். இதற்கு உங்கள், மதுண்ணா, ஜி மூவரின் ஒத்துழைப்பும், உதவியும் வழக்கம் போல நிச்சயம் தேவை. எந்தப் பாடல் அளித்தாலும் அதைப் பற்றி யாருக்கும் தெரியாத பல அரிய மேலதிக தகவல்களை தந்து அசத்தும் நீங்கள்....பாடல்களின் நடுவரிகளைத் தந்து என்னைத் தூங்க விடாமல் செய்யும் மதுண்ணா,:) திடுமென 'குழந்தைக்காக' படத்தில் கிருஷ்ணா உண்டு என்ற உண்மையைச் சொல்லி என்னை திகைக்க வைத்த சுனாமி செந்தில் சார் என்று அபூர்வ விஷயங்களில் என் மனம் கவர்ந்தவர்கள் நீங்கள். அனைவருக்கும் என் நன்றிகள்.

vasudevan31355
10th September 2015, 12:21 PM
ஒலி - sound
பெருக்கி - multiplier

Sound multiplier - சரியா..

பாருங்க.. தமிழிலேருந்து இங்கிலீஷூக்கு கஷ்டப்பட்டு மொழி பெயர்த்திருக்கிறேனாக்கும்..

:):):):)

vasudevan31355
10th September 2015, 12:23 PM
பழைய கிராமபோன் இசைத்தட்டுகள் கொலம்பியா நிறுவனத்தாலும் வெளியிடப்
பட்டதாக ஞாபகம்.நண்பர்கள் எவரேனும் இதனைத் தெளிவு படுத்துங்கள்.
அன்புடன் கோபு.

கோபு சார்,

உண்மை. இதுவா பாருங்க.

http://www.mustrad.org.uk/graphics/columbia.jpg

https://londonjazzcollector.files.wordpress.com/2012/11/columbia-uk-1965-800-stantracey-jazzsuite-milkwood.jpg

Russellrqe
10th September 2015, 12:40 PM
MANJULA- CHANDRAKALA-JAYASUDHA- LATHA
http://i60.tinypic.com/2nhi4ci.jpg

vasudevan31355
10th September 2015, 12:48 PM
செந்தில் சார்,

நீங்களே தலைப்பு தந்தால் எப்படி?:)

எங்களுக்கும் கொஞ்சம் சான்ஸ் கொடுக்கறது.:)

http://www.thehindu.com/multimedia/dynamic/00948/DE12_RAMA_PERISCOPE_948703g.jpg

படத்திலே 'பயாஸ்கோப்பு' படம் காட்டிய நாயகன், நாயகி, காமெடியன்கள் உண்டு. தலையில் துணி போட்டு மூடி லென்ஸ் துவாரம் மூலம் பயாஸ்கோப்பு வழியே படம் பார்த்த அனுபவங்கள் சுவையானவை. 'நீதி' படத்தில் ஜெயலலிதா பயாஸ்கோப் காட்டும் பெண்ணாக வருவார்.

'இந்தப் பொட்டி மேலே கண்ணப் போடுங்க
சின்னப் பொண்ணு கையில் காசப் போடுங்க'

என்று 'ஓடுது பார் நல்ல படம்...கர்மவீரர் பக்கம் நிற்கும் சிவாஜி பாருங்க' காட்டுவார். அதே போல தங்கவேலு 'குருதட்சணை 'யில் 'பாரு பாரு நல்லா பாரு... பயாஸ்கோப்பு படத்தப் பாரு' என்று பள்ளிக் குழந்தைகளுக்கு படம் காட்டுவார். இதிலும் மராட்டிய சிவாஜியைக் காட்டி புகழும் சாக்கில் மறைமுகமாக 'நடிகர் திலகம்' புகழப்படுவார்.

'படிக்காத வீரனப் பாரு
சிவாஜி படிச்சுபுட்டா பேரு பெத்தாரு' (பெற்றாரு)

இதுபோல வேறு பாடல்கள் உண்டா?

மதுண்ணா!

மேலே சொன்ன 'குருதட்சணை' பயாஸ்கோப் பாட்டு வீடியோவில் கிட்டுமா? ப்ளீஸ்.

chinnakkannan
10th September 2015, 12:59 PM
எங்களுக்கும் கொஞ்சம் சான்ஸ் கொடுக்கறது.// தலைப்பு சொல்லாம இருந்தா எப்படி..

சுயத்தை மறக்க வைத்த பயாஸ்கோப்புக்கள்.. :) பட் இன்றைய யங்கர் ஜெனரேஷன்க்கெல்லாம் இதெல்லாம் தெரியவே தெரியாது..

இந்த ஃபில்ம் சுருள்ல சில பல துண்டு ஃபிலிமெல்லாம் விப்பாங்க..அதெல்லாம் 3 பைசா 5 பைசான்னு வாங்கினா ஒரு ஃப்ரேமிற்கும் ஒரு காட்சி இருக்கும்.. ந.தி, ம.தின்னு லேட்டஸ்ட் (அப்போ வந்த லேட்டஸ்ட்) படங்க விப்பாங்க..ஒரு குட்டி செவ்வகக் கவ்ர்ல இருக்கும்.. வாங்கித்தான்பார்க்க முடியும்.. மூணு ஃபிலிம்ல ரெண்டு பிலிமில் ந.தி., ம.தி தெரிவார்..மூன்றாவது முதுகு என்பது போல் இருக்கும்.. உங்களுக்கு வாங்கிய அனுபவம் இருக்கிறதா..

chinnakkannan
10th September 2015, 01:01 PM
இதோ..


https://youtu.be/FFxF9TD_COo

chinnakkannan
10th September 2015, 01:07 PM
குட்டிப் பாட்டு நல்லா இருக்கே..


https://youtu.be/sn5qeeTKxFQ

chinnakkannan
10th September 2015, 01:56 PM
அந்தக்காலப் படங்களில் எல்லாம் பாடல்கள் கொலம்பியா கேட்டு மகிழுங்கள் எனப் பார்த்த நினைவு.. உதாரணம் வேதாள உலகம், சிவகவி..

eehaiupehazij
10th September 2015, 02:10 PM
வாசு சார்
பயாஸ்கோப்பு பார்த்து புளகாங்கிதமடைந்த அனுபவ அலைகளை எழுப்பி விட்டீர்களே !
இதெல்லாம் இப்போது பம்பாய் மிட்டாய் ரிஸ்ட் வாட்சு மோதிரம் மாதிரி தேடினால்கூட கிடைக்காதே!
மேரா நாம் ஜோக்கர் திரைப்படத்திலிருந்து .....
பயாஸ்கோப்பு காட்டும் ராஜ்கபூர் !
https://www.youtube.com/watch?v=DeRDKvfDenk

நீதி யின் மூலப்படமான ஹிந்தி துஷ்மனில் ராஜேஷ் கன்னா மும்தாஜ் இணைவில்..

https://www.youtube.com/watch?v=FKSMCp87qIc

madhu
10th September 2015, 02:30 PM
வாசு ஜி...

மொத்தமா ஒரே சாட்சி படத்தைப் பார்த்துக்குங்க.... உங்க பாட்டு 34.04ல் தொடங்குது...

அம்மாவில் தொடங்குது பிறப்பு....வாணி ஜெயராம் பாட்டு கூட இருக்கே..

https://www.youtube.com/watch?v=QsXTCxLZyws

chinnakkannan
10th September 2015, 02:39 PM
சி.செ. Under water firing Thuder ball clipping க்கு தாங்க்ஸ்..

நீருக்கடியில் இருக்கும் காட்சி எனப்பார்த்தால் அவளொரு நவரச நாடகம் பாட்டு தான் நினைவுக்கு வருகிறது..மலர் எது வில் கொஞ்சம் பாதிப்பாதி வரும்..

அப்புறம் கொசுவர்த்திச்சுருள் புகையில் பின்னால் போனால்.. முத்து காமிக்ஸ் ஜானி ஸ்டெல்லா ( என்ன கதை என நினைவிலில்லை) , காற்றில் கரைந்த கப்பல்கள் லாரன்ஸ் டேவிட், சிலையைத் தேடி நீலா ( ஜெயராஜ் முதன் முதலில் சித்திரக் கதைக்குப் படம் போட்டது என நினைக்கிறேன்..) நினைவுக்கு வருகிறது..புஷ்பா தங்கதுரையின் கடலுக்குள் ஜூலி..யும் தான்..

madhu
10th September 2015, 02:39 PM
கொலம்பியா, ஓடியன், பாலிடார் என்று பல கம்பெனிகளின் ரிகார்டுகள் என்னிடம் இருந்தன... இன்னும் ஏஞ்சல் என்று கூட ரெண்டு மூணு இசைத்தட்டு இருந்தது.

https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/60/Columbia1116D.jpg/220px-Columbia1116D.jpg

http://www.cvinyl.com/images/labels/odeonind1.jpg

http://www.recordsindia.com/images/polydor.jpg

madhu
10th September 2015, 02:42 PM
வணக்கம்

கல்யாண நாள் கொண்டாடிவிட்டு ஓய்ந்து போயிருக்கீங்களோ ? ஓகே ... இன்னைக்கு ரெஸ்ட் எடுத்துகிட்டு
நாளைக்கு சுறுசுறுன்னு வந்திடுங்க பார்க்கலாம்...

madhu
10th September 2015, 02:52 PM
இது வாசு ஜிக்காக ஸ்பெஷல் பாட்டாக்கும்...

உங்களை தேடி வந்த லட்சுமியை பிடிச்சிருக்கானு சொல்லுங்க.... இதை ஜில்பானா ஜில்பானா என்று தலைப்பு கொடுத்திருக்காங்களே,.. அது ஜிம்கானா இல்லையோ ? வார்த்தைகளை கண்டு பிடிச்சு சொல்லுங்க பார்க்கலாம் ?

( சிக்கா கிட்ட கேட்டா... ஜி..கா.. ஜி..கா.. என்க் உண்ட்... தம்.. தம்.. என் க் உ ண் ட் அப்படின்னு சொல்லிடுவார்.. இல்லாட்டி

அல்வா துண்டாட்டம் அசைந்தாடும் சிஐடி
பல்லை காட்டத்தான் வைத்தார் - சொல்லை
இசையோடு பாடும் எல்லார் ஈஸ்வரியோ
பசை போட்டு விட்டாரே பார்...

அப்படின்னு ஒரு வெண்பா சொல்லிடுவார்.. ( சிக்கா குண்டாந்தடியோடு வரதுக்கு முன்னாடி நான் எஸ்கேப் )

https://www.youtube.com/watch?v=uwugyVTcvmI

eehaiupehazij
10th September 2015, 03:10 PM
சி.செ. Under water firing Thuder ball clipping க்கு தாங்க்ஸ்..

நீருக்கடியில் இருக்கும் காட்சி எனப்பார்த்தால் அவளொரு நவரச நாடகம் பாட்டு தான் நினைவுக்கு வருகிறது..மலர் எது வில் கொஞ்சம் பாதிப்பாதி வரும்..

si ka

Thunderball remains the best ever Bond movie with fantastic picturizations underwater with original stunts performed by Connery/Bond, as Connery was a former sea man in Navy!

In indian movies, underwater photography still remains a white elephant!

அவளொரு நவரச நாடகம் பாடல் பின்னணியில் வருவது புத்திசாலித்தனமாக் இணைக்கப்பட்ட ஒரு தாய்லாந்து இசை ஆல்பத்தின் காட்சிகளே !
ஸ்ரீதர்... அவளுக்கென்று ஒரு மனம் படத்தில் ஜெமினியை கரையில் சும்மா அங்குமிங்கும் நடக்கவிட்டு பாரதியை நீரில் முங்க வைத்தார்..அவ்வளவே!
ஜேம்ஸ் பாண்ட் படங்களிலேயே ஓடோ ஓடென்று ஓடி பணம் கொட்டோகொட்டென்று கொட்டிய தண்டர்பாலை அண்டெர்வாடர் போடோக்ராபியில்
முறியடிக்க இதுவரை வேறுபடம் ஏதுமில்லை !!

senthil

RAGHAVENDRA
10th September 2015, 03:46 PM
இதை ஜில்பானா ஜில்பானா என்று தலைப்பு கொடுத்திருக்காங்களே,.. அது ஜிம்கானா இல்லையோ ? வார்த்தைகளை கண்டு பிடிச்சு சொல்லுங்க பார்க்கலாம் ?

ஒரு வேளை தேங்காய் சீனிவாசன் பாட்டை எழுதியிருப்பாரோ...

RAGHAVENDRA
10th September 2015, 03:50 PM
Objection Senthil Sir

யூ.ராஜகோபால் மிகவும் பிரயத்தனப்பட்டு எடுத்த பாடல் காட்சி அவளுக்கென்று ஓர் மனம் மலர் எது பாடல் காட்சி. அந்தக் காலத்திலேயே நீச்சல் குளத்தின் அருகில் தரையில் பள்ளம் தோண்டி தண்ணீர் மட்டத்திற்குள் காமிராவால் ஒளிப்பதிவு செய்ய ஏதுவாக சுவற்றில் ஓர் துளையை ஏற்படுத்தியும், அதே போல் பிரத்யேகமாக ஆக்ஸிஜன் பொருத்தப்பட்ட சிலிண்டரை உடலுடன் கட்டிக்கொண்டு முகத்தை மூடிக்கொண்டு தண்ணிருக்குள்ளே ஊடுருவியும் எடுக்கப்பட்ட பாடல் காட்சி. இதைப் பற்றி யூ.ராஜகோபால் அப்போது வெளிவந்த ஒரு சினிமா பத்திரிகையில் எழுதியுள்ளார். பேசும் படமோ பொம்மையோ இல்லை.

RAGHAVENDRA
10th September 2015, 03:54 PM
https://www.youtube.com/watch?v=b-ZNNHnNlRQ

0.30 மற்றும் 1.34 விநாடிகளில் கவனித்தால் தெரியும். தண்ணீர் மட்டத்திற்கு மேலேயும் தண்ணிர் மட்டத்திற்குள்ளேயும் காட்சி படமாக்கப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். இது உதாரணத்திற்கு மட்டுமே. இன்னும் பாடல் காட்சியில் அங்கங்கு காணலாம்.

eehaiupehazij
10th September 2015, 06:07 PM
Gap filler / Monotony breaker

தமிழ் கௌபாய் / கௌகேர்ல் பாடல்கள் !!

கௌபாய் என்றவுடன் அழுக்கான ஜீன்ஸ் முள்சக்கரம் வைத்த ஷூஸ், கைகளில் சுழலும் துப்பாக்கிகள் சகிதம் குதிரையேறும் கிரிகரி பெக், கிளின்ட் ஈஸ்ட்வுட், டெரன்ஸ் ஹில் ...ஜெய் சங்கரின் 'கர்ண' காமிரா படங்களெல்லாம் மனதில் ஓடியிருக்குமே!!

தமிழ் கௌபாய் என்பது (தொழில்நுட்ப ரீதியாக பால் கறக்கவும் சக்கர் மெஷின்கள் வந்துவிட்ட போதும்) வெற்றுடம்புடன் வெறும் அரைக்கால் டிரவுசர் யூனிபார்மில் முதலில் கன்று வயிறுமுட்டக் குடிக்கவிட்டு ஆடுகிற மாட்டை ஆடிக் கறக்கும் பாடுகிற மாட்டைப் பாடிக் கறக்கும் செண்பகப் பசுநேசர் ராமராஜனையே குறிக்கும்! கோமாதா அவர் குலமாதா!

Pasu Nesan's Nation!!

https://www.youtube.com/watch?v=ufykpOeA4NA

ராமராஜி பிரமீளா ...

https://www.youtube.com/watch?v=c0NoKASqVUk

கோமாதா எங்கள் குலமாதா .....

[url]https://www.youtube.com/watch?v=IX1s1_Et1Cs

ஆடுகிற மாட்டை ஆடிக் கறக்கும் பாடுகிற மாட்டைப் பாடிக் கறக்கும் அறிவாளி !

[url]https://www.youtube.com/watch?v=6vyVE5HfOZs

chinnakkannan
10th September 2015, 07:29 PM
மதுண்ணா :) :)

//( சிக்கா கிட்ட கேட்டா... ஜி..கா.. ஜி..கா.. என்க் உண்ட்... தம்.. தம்.. என் க் உ ண் ட் அப்படின்னு சொல்லிடுவார்.. இல்லாட்டி

//அல்வா துண்டாட்டம் அசைந்தாடும் சிஐடி
பல்லை காட்டத்தான் வைத்தார் - சொல்லை
இசையோடு பாடும் எல்லார் ஈஸ்வரியோ
பசை போட்டு விட்டாரே பார்...

அப்படின்னு ஒரு வெண்பா சொல்லிடுவார்.. ( சிக்கா குண்டாந்தடியோடு வரதுக்கு முன்னாடி நான் எஸ்கேப் )//

மதுண்ணா.. வெண்பா அல்மோஸ்ட் ஓ.கே


அல்வாவின் துண்டாய் அசையும் சிஐடி
பற்களைக் காட்டுதற்குப் பாடவே - சொல்லை
இசையோடு பாடிடும் எல்லார் ஈ நெஞ்சில்
பசைபோட்டு விட்டாரே பார்..
.
நு மாத்திக்கலாம்.. எல்லார் ஈ, சிஐடி எல்லாம் ஆங்கில எழுத்துக்கள்..

வெரி நைஸ்..உங்க்.. வெண்பா வில் கம் நன்ற்.. :)

*
//ஜேம்ஸ் பாண்ட் படங்களிலேயே ஓடோ ஓடென்று ஓடி பணம் கொட்டோகொட்டென்று கொட்டிய தண்டர்பாலை அண்டெர்வாடர் போடோக்ராபியில்
முறியடிக்க இதுவரை வேறுபடம் ஏதுமில்லை !!//

சி.செ.. மதுரை தங்கம் தியேட்டரில் ஸ்கூல் படித்த சமயத்தில் The Deep என்றுபார்த்த ஒருபடம்மனதில் நிழலாடுகிறது.. நன்றாக ஓடியதா எனத் தெரியாது..அதுவும் முக்கால் வாசி தண்ணீர்க்குள்ற தான் இருக்கும்.. கதை யார் நடித்தார் என்பதெல்லாம் மறந்த் போச்..

அவள் ஒரு நவரச நாடகம் பாடல் பற்றிய விவரங்களுக்கு நன்றி..சிந்தாமணியில் அரை டிராயர் சி.க ஆவென்று பார்த்தபடம் அது!

//யூ.ராஜகோபால் மிகவும் பிரயத்தனப்பட்டு எடுத்த பாடல் காட்சி அவளுக்கென்று ஓர் மனம் மலர் எது பாடல் காட்சி. அந்தக் காலத்திலேயே நீச்சல் குளத்தின் அருகில் தரையில் பள்ளம் தோண்டி தண்ணீர் மட்டத்திற்குள் காமிராவால் ஒளிப்பதிவு செய்ய ஏதுவாக சுவற்றில் ஓர் துளையை ஏற்படுத்தியும், அதே போல் பிரத்யேகமாக ஆக்ஸிஜன் பொருத்தப்பட்ட சிலிண்டரை உடலுடன் கட்டிக்கொண்டு முகத்தை மூடிக்கொண்டு தண்ணிருக்குள்ளே ஊடுருவியும் எடுக்கப்பட்ட பாடல் காட்சி. இதைப் பற்றி யூ.ராஜகோபால் அப்போது வெளிவந்த ஒரு சினிமா பத்திரிகையில் எழுதியுள்ளார். பேசும் படமோ பொம்மையோ இல்லை.// தாங்க்ஸ் ஃபார் த தகவல் ராகவேந்தர் சார்..

*

சி.செ. மாட்டுக்கார வேலன் இருக்கே.. சத்தியம் நீயே தர்மத் தாயே குழந்தைவடிவே தெய்வ மகளே..ட்ரியோ..

மணப்பாறை மாடுகட்டி மாயவரம் ஏரு பூட்டி வயக்காட்டில் உழுது போடு செல்லக்கண்ணு.. இருக்கே..

தம்பிக்கு எந்த ஊரில் பால்கறக்கும் மாட்டிடம் கராத்தே போல ஏதோபேசி உதை வாங்கும் ரஜினி..

தி.ஜானகி ராமனின் எருமைப் பொங்கல் கதை நினைவுக்கு வருகிறது..

*

eehaiupehazij
10th September 2015, 08:12 PM
Dear Si Ka...

About the film The Deep....my nostalgia with data and information from reliable sources like Wikipedia and IMDB :(by Courtesy)

The Deep is a 1977 adventure film directed by Peter Yates and based on Peter Benchley's novel of the same name. The film stars Robert Shaw, Jacqueline Bisset, and Nick Nolte.

Storyline :

While scuba-diving near shipwrecks off Bermuda, vacationing couple David Sanders (Nick Nolte) and Gail Berke (Jacqueline Bisset) recover a number of artifacts, including an ampoule of amber-colored liquid and a medallion bearing the image of a woman and the letters "S.C.O.P.N." (meaning "Santa Clara, ora pro nobis" or "Saint Clara, pray for us") and a date, 1714. Sanders and Berke seek the advice of lighthouse-keeper and treasure-hunter Romer Treece (Robert Shaw) on the origin of the medallion, who identifies the item as Spanish and takes an interest in the young couple. The ampule is noticed by the man who had rented diving equipment to Sanders and Berke, which in turn attracts the attention of Henri Cloche (Louis Gossett, Jr.), a local drug kingpin for whom the shop owner works, who unsuccessfully tries to buy the ampoule and then begins to terrorize the couple with Haitian black magic. The ampule contains medicinal morphine from the Goliath, a ship that sank during World War II with a cargo of munitions and medical supplies. The wreck of the Goliath is considered dangerous and is posted as off-limits to divers due to the danger of explosions. Treece concludes that a recent storm has exposed her cargo of morphine and unearthed a much older wreck containing Spanish treasure.

Through research in Treece's library, they reconstruct the history of the lost treasure ship, locate a list of valuable items, including a metallic jar with the letters "EF" engraved on it, and learn the identity of the noblewoman (Elizabeth Farnese) for whom they were made by the king of Spain. Sanders is determined to locate at least one item on the list to establish provenance; since without it there is no value to the treasure. Treece wishes to destroy the Goliath to put the morphine out of reach of Cloche; and Cloche interferes with their efforts so that he can recover the morphine for himself. During a running series of conflicts Treece's friend Kevin (Robert Tessier) is murdered by one of Cloche's henchmen and Adam betrays them and is killed when he triggers a booby-trap while trying to steal the recovered morphine. A climactic battle during the final dive ensues, with Cloche and his divers being killed in the destruction of the Goliath and the recovery of a gold dragon necklace that will provide the needed provenance of the treasure.


https://www.youtube.com/watch?v=Dbc3wAB8lEM

Music

The film's score was composed by John Barry, who at the time was most famous for his work on the James Bond film series. In the same manner of a Bond film, Barry collaborated with a high profiled singer for the film's theme song. American singer Donna Summer teamed up with Barry for the film's signature song entitled "Down Deep Inside (Theme From The Deep)". Summer was a singer under contract to the film production company, Casablanca Record&FilmWorks. The song was nominated for a Golden Globe Award and a hit on the U.S. Dance Chart, as well as a top-five singles hit in the UK, and a top-forty hit in the Netherlands.

https://www.youtube.com/watch?v=-LQzTL2RZyY

Though technically the movie was ok, box office sagged soon and collected a lukewarm response only.

senthil

eehaiupehazij
10th September 2015, 08:51 PM
Monotony breaker!

Cartoon Charachters dancing with human beings !

Front and Back Light Animation Matte Process!!

கார்டூன்கள் மாந்தருடன் இணைந்து நடனமாடினால் ..?!


நடனம் என்பதே மனிதர்களுக்கும் முறையான பயிற்ச்சியினால் மட்டுமே ஆளுமை கொள்ளக்கூடிய அற்புதமான கலை

குழந்தைகளைக் குதூகலிக்க வைக்கும் கார்டூன்களும் மனிதருடன் இணைந்து நடனமாடினால் ....

https://www.youtube.com/watch?v=UjRQFSYFuaI

https://www.youtube.com/watch?v=ZlwbfOYqboM

Though we are now in the state of the art motion capturing era, imagine how this could be achieved in 1945 that is 70 years back?!!!!

chinnakkannan
10th September 2015, 09:47 PM
சி.செ.. தி டீப் படத்தைப் பற்றி விரிவான கதைக்கும், தகவல்களுக்கும் நன்றி.. நான்பார்க்கிறேன்..யெஸ் அந்த முகமிப்போது நினைவில்..தங்கத்தில் பார்த்த போது முழுக்கப் பார்த்துவிட்டு கதை புரியவில்லைஎனச் சொல்லிக்கொண்டு வந்தது நினைவில்..பட் கூட்டம் இருந்த நினைவு.. தாங்க்ஸ் அகெய்ன்..

vasudevan31355
10th September 2015, 10:58 PM
'அவளுக்கென்று ஓர் மனம்' படத்துக்கு முன்பாகவே சிஷ்யன் 'ஜில்லென்று காற்று வந்ததோ' என்று ஜெய்சங்கரையும், பாரதியையும் நீச்சல் குளத்திலே முக்க வைத்து, நின்று கவனித்து காதலிக்க வைத்து விட்டாரே. அண்டர் வாட்டரிலேயே சில காட்சிகளும் உண்டே. மறந்தாச்சோ! இல்லை நான்தான் கவனிக்காமல் சொல்கிறேனா?


https://youtu.be/yy2AkmOmJ3E

chinnakkannan
11th September 2015, 01:34 AM
சில மீள் பதிவுகள் இடலாமென்றிருக்கிறேன்..சுவாரஸ்யக் குறைவின் கண்டிப்பாகச் சொல்லவும்..

*

chinnakkannan
11th September 2015, 01:36 AM
பாடினார் கவிஞர் பாடினார்..

**

அத்தியாயம் ஒன்று

**
கோவிலில் சென்றால் தெய்வத்தைக் கும்பிடவேண்டும் என்பது நியதி..அந்த வாலிபனுக்கும் அவ்வண்ணமே நினைப்பு தான்..இருப்பினும் அவனோர் கவிஞன்..கவிஞன் கண்களில் கட்டெறும்பு தட்டுப்பட்டால் என்னாகும்

விட்டுவிட்டுச் செல்லாமல் வேகத்தைக் கூட்டியே
எட்டிநீ செல்வதெங்கு ஏஎறும்பே – வட்டிலிட
பெண்ணொன்று காத்திருக்க பேதைநீ செல்வதைக்
கண்ணிலே கண்டுவிட்டேன் காண்..

இப்படி எறும்பைக்கூட கவியாக்கும் சின்னக் கவிஞர்கள்(ம்க்கும்.. நான் தான்) இருக்கையில் அந்த இளைஞனோ மகாகவி.. கண்ணில் தட்டுப் படுகிறாள் ஒரு நங்கை.. உடன் ஒரு மங்கை..உடன் ஒரு ஆள்.. முறையே மான் மயில் நரியெனச் சென்றாலுங் கூட முதல் நங்கையின் எழில் முகம் மனதில் பல அலைகளை எழுப்பிப் பொங்க வைத்துக் கவியாக வெளிப்படுகிறது..

தங்கமே தாமரை மொட்டுகளாகி தலையெடுக்க
குங்குமம் தோய்ந்த முகப்பினில் வண்டு கொலுவிருக்க
பங்கயன் விந்தைப் படைப்பாகி நிற்கும் பசுங்கொடிமேல்
பொங்கியேபூத்த முழுநிலா வண்ணம் புறப்பட்டதே!

மரபுக்கவிஞன் தான் மகாகவி காளிதாஸன்.. பெண்ணுக்காக கொஞ்சம் மரபை மீறி மரபுக்குள்ளேயே கவிதை பாடிவிட்டான்..அதுவும் என்ன மரபு.கட்டளைக் கலித்துறை..கொஞ்சம் சிரமமான விஷயம் தான்..

வெண்டளை பயில வேண்டும் நேரசையில் ஆரம்பித்தால் ஒவ்வொரு வரியிலும் 16 எழுத்துக்கள் (புள்ளி வைத்த எழுத்துக்களை கணக்கிலெடுத்துக் கொள்ளக் கூடாது) முடியும் போது ஏகாரத்தில் முடியவேண்டும்.. இதை எல்லாம் எழுதிப்பார்க்க பேனா பேப்பர் (அந்தக்காலம்) ஒரு கம்ப்யூட்டர் எம் எஸ் வேர்ட் அண்ட் தமிழ் ஃபாண்ட் ப்ளஸ் விரல் (இந்தக்காலம்) வேண்டும்..

என இருக்கையில் ,மனதுள் உதித்துப் பாடினால் எப்படி இருக்கும்..அதுவும் இரண்டு விதமாய்த் தென்படும் வண்ணம்..

ஒரு விளக்கம்: ”அடி பெண்ணே.. இந்த உலோகம் தங்கம் இருக்கிறதே அதுவே தாமரை மொட்டுக்கள் போல ஆனது போன்ற நிறத்தில் உனது நகில்கள் நிமிர்ந்து நிற்க, குங்குமச் சாறு ஊறியதாற்போன்ற சிவந்த நிறங்கொண்ட உன் முகத்தில் குறு குறுவென இருக்கும் கருவண்டுகள் என உன் கண்கள் காட்சியளிக்க தாமரை மலரின் மேல் அமர்ந்திருக்கும் பங்கய னான பிரம்மனின் வியப்புக்குரியதான படைப்பாகி பசுங்கொடி போல் துவண்டிருக்கும் நீ – உன் மேல் பகுதியில் அப்படியே பொங்கியே பூரித்து புறப்படு வரும் முழு நிலவென உன் முகம் இருக்குதடி.. நீயும் புறப்பட்டு விட்டாய்..”

இன்னொரு விளக்கம்” “ஓ நிலவே..தங்கமே தாமரை மொட்டுகளாகி தலையெடுத்து நிற்க குங்கும நிறம் போன்ற மின்னும் தாமரை மலர் முகப்பினில் கருவண்டுகள் சுற்றிச் சுழன்று கொண்டிருக்க, தந்தைத் தாமரையின் மகளாகிய பெண் தாமரை எழுகிறது..அதன் மேல் நீயும் பொங்கி எழுந்து புறப்படுகிறாய்..”

கேட்ட வனிதை அதிர்ச்சியில் நிற்க அவளைத்தவிர அந்தப் பாடலைக் கேட்டது இன்னொருவர்..அரசன்..அவனும் கவிஞன்..

இந்தக் கவிஞர்களுடைய சுபாவமே கவிதை நன்றாக இருந்தால் ரசித்துவிட்டு மெளனமாக இருப்பார்கள்.. கொஞ்சம் ஏதாவது தென்பட்டால் உண்டு இல்லை தான் ஆக்கிவிடுவார்கள்..

அது போல அந்த அரசனான கவிஞனுக்கும்.. “ ஓய்..பாடல் நன்னாத் தான் இருக்கு”

காளிதாஸன் வணங்கி “ நன்றி “

“ஆனாக்க ஒம் பாட்டில ஒரு பிழை இருக்கும் ஓய்..”

“என்ன அது”

“ கவி முரண் இல்லியோ.. பாடறது நிலாபத்தி அப்படியே தாமரையையும் கோத்து விட்டிருக்கீங்களே.. தாமரை பகல்லன்னா மலரும்..

“ இல்லீங்க்ணா.. தாமரைன்னு சொல்லலியே தாமரை மொட்டுன்னா சொன்னேன்..”

மன்னனுக்கு உடன் தன் பிழை புரிந்தாலும் உடனிருந்தவர்கள் ஒப்பாமல் டெஸ்ட் வைக்க அதில் காளிதாஸன் பாஸானது வேறு கதை..

இந்த கட்டளைக் கலித்துறைப்பாடலை எழுதியவர் கு.மா.பாலசுப்ரமணியம்..

மகாகவி காளிதாஸில் வரும் அனைத்து மரபு க் கவிதைகளும் எழுதியவர் அவர். பிறந்தது 1920 அண்ட் காலமானது 2004.. திரைப்பாடலில் மரபுக்கவிதையைப் புகுத்தியவர்களுள் ஒருவர் எனலாம்.. வெகு அழகான பல பாடல்கள் எழுதியிருக்கிறார்.. சிலம்புச் செல்வர் ம.பொ.சியின் தமிழரசு கழகத்தில் இருந்தவர்.. பாரதிதாசன் மீது மிகப் பற்று வைத்திருந்தவர்..

வீரபாண்டிய கட்டபொம்மனில் அனைத்துப் பாடல்களும் எழுதியவர் இவர் தான்..
மற்ற பாடல்கள்
யாரடி நீ மோகினீ
சித்திரம் பேசுதடி
அமுதைப் பொழியும் நிலவே
நெஞ்சினிலே நினைவு முகம்
இன்பம் பொங்கும் வெண்ணிலா

இன்னும் பல..

அவற்றில் ஒரு பாடல்

நாதஸ்வரத்தில் வாசிக்கப் பட்டிருந்த அந்த தேவாரப் பாடலைப் பாடப் பலரையும் அணுகினார் இசையமைப்பாளர் எஸ் எம் சுப்பையா நாயுடு.வருடம் 1962..அந்த தேவாரப் பாடல் மந்திராமவது நீறு

அந்தப் பாடலை நாதஸ்வரத்தில் வாசித்திருந்தவர் திருநெல்வேலியிலிருந்து இருபது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காருகுறிச்சி என்ற கிராமம் உலகப் புகழ் பெறுவதற்குக் காரணமாயிருந்த நாதஸ்வர மேதை அருணாசலம்.

இப்படித் தேடுகையிலேயே ஒன்று தோன்றியது எஸ்.எம்.சுப்பையா நாயுடுவிற்கு..இதற்கு – இந்த நாதஸ்வர இசைக்கு ப் பொருத்தமாக வேறு பாடல் எழுதினால் என்ன..

அப்படியே கவிஞரைக் கூப்பிட கவிஞரும் எழுதிக் கொடுக்க பல பேரைப் பாடவைத்தால்..என்னமோ.. அந்த மரபிசைப் பாடலுக்கும் நாதஸ்வர இசைக்கும் அந்தப் பாடகிகளின் குரலுக்கும் ஏதோ ஏதோ.. நல்லாத் தான் இருக்கு ஆனால்..
கடைசியில் அப்போது அவ்வளவு பிரபலமாயிராத எஸ்.ஜானகியைப் பாட வைத்தார் .

கொஞ்சும் சலங்கை படத்தில் வந்த இன்றும் அழியாப் புகழுடன் விளங்கும் 'சிங்கார வேலனே தேவா ' என்ற பாடல் அது.
'ஆபேரி' ராகத்தில் அமைந்திருந்த அந்தப் பாடல் அந்த ராகத்தில் அமைந்துள்ள எல்லாப் பாடல்களுக்கும் சிகரம் வைத்தாற்போல் அமைந்தது.இப்பாடலை எழுதிய கவிஞர் கு.மா.பாலசுப்பிரமணியம்
கு.மா.பாலசுப்பிரமணியத்தின் க.க து பாடல்காட்சி – மகாகவி காளிதாஸ்..


https://www.youtube.com/watch?feature=player_embedded&v=gr7jj-RtXLE

இனி என்ன ..இன்னொரு காதல் பாட்டு தான்..

ஆமாம் காதல்னா என்னங்க.. காதலே மாயை..ஒரு சின்னக் கனாலோகம் தானே..
கனவின் மாயா லோகத்திலே நாம்
கலந்தே உல்லாசம் காண்போமே நாம்
கலந்தே உல்லாசம் காண்போமே

தீங்கனியே உன்னாசை போலே நாம்
இணைந்தாடுவோம் இந்நாளே

ரொம்ப எளிமையாக கு.மா.பாலசுப்பிரமணிய ம் எழுத பாடியவர்கள் டி.எம்.எஸ் பி.சுசீலா..இளமை ந.தி, நடிகையர் திலகம் சாவித்ரி ( ஒல்லியாய் இருக்கிறார்) படம் அன்னையின் ஆணை..

https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=wzkXoR41lOE

**

அடுத்து வரும் கவிஞர் தாவணி போன்ற ஒன்றைப் பற்றியும் எழுதியிருக்கிறார்..கொஞ்சம் யூனிக்கான கவிஞர்.. தனக்குப் பிடித்தவருக்காக தன் பெயரையே மாற்றிக் கொண்டவர்..

அவர் யாரென்றால்….

(ஹி ஹி..இன் நெக்ஸ்ட் அத்யாயம்)

தொடரும்..

chinnakkannan
11th September 2015, 01:38 AM
*
பாடினார் கவிஞர் பாடினார் – 2

**

ஹாய் ஆல் செளக்கியமா…

ஓ..ரொம்ப இடைவெளி கொடுத்துட்டேனா ஸாரி ( அதனால பரவாயில்லைங்கறீங்களா.. தாங்க்யூ)

போன தடவை ஒரு யூனிக் கவிஞர் பத்தி –பார்க்கலாம்னு சொல்லியிருந்தேன்..ஆனாக்க அப்படிச் சொன்னதும் தப்பு தான்.. ஏனெனில் கவிஞராய் இருந்து பாடலாசிரியராக மாறிய ஒவ்வொருவருமே அவங்க அவங்க எழுத்துல யூனிக் தான்..
**
முதலில் இந்தக் கவிஞர் சில பல பாடல்கள் திரையில் எழுதி பிரபலமாகியிருந்த காலம்..

சினிமா என்பதே தொழில் தானே.. தயாரிப்பாளர் இன்னொரு கவிஞர் உடுமலை நாராயணகவியிடம்.. “ நாராயணரே..எனக்கு இந்தப் பாட்டு (அந்தப் பாட்டைச் சொல்லி) அதே போல் எனக்கு இன்னொரு பாட்டு வேண்டுமே..

உடுமலைக்\கோ கொஞ்சம் கோபம் ப்ளஸ் வருத்தம்.. சரி போ இதான் லைஃப் இதான் வேர்ல்ட் என க் கொஞ்சம் மனதிற்குள் குமுறி “ஒன் மீட் ஓய் ப்ரொட்யூசர்..இதோ வந்துட்டேன்” என்று வெளிச் சென்று விட்டார்..
பின் திரும்பி வந்த போது ப்ரொட்யூஸர் கேட்ட – இது போன்ற பாட்டை எழுதிய கவிஞரையே முன்னிறுத்தி “இந்தாங்க.. இவர் கவிஞர் சுரதா.. நீங்கள் எழுதிய அமுதும் தேனும் எதற்கு எழுதியவர் இவர் தான்..இவரையே வைத்து அதே டைப்பில் பாட்டு எழுதிக் கொள்ளுங்கள்”

“ நாராயணர்வாள் ஷமிக்கணும்”

“”கோபம்லாம் இல்லைங்காணும்.. “

சரி என்று கவிஞர் சுரதாவை இசையமைப்பாளர் கேவி மகாதேவனிடம் கொண்டு விட..கனஜோராய்ப் பாடலின் முதல்வரிகள் எழும்பின..

பின்
முதல் மூன்று வரிகள் வந்துவிட அதற்கப்புறம் தான் நானகைந்து வரிகளைக் கவிஞர் சொன்னாலும் இசையமைப்பாளர் கே.வி.எம்க்கிற்கு ஏனோ பிடிக்கவில்லை.. இன்னொண்ணு சொல்லுமேன்.. எனக் கேட்க சுரதாவிற்கோ முணுக் கென்று கோபம் வந்து எழுந்து சென்றுவிட்டார்..

மறுபடியும் தயாரிப்பாளர் உடுமலை நாராயண கவியைப் பிடிக்க, அவர் சரி நோப்ராப்ளம் பேலன்ஸ் நான் எழுதறேன்..ஆனா டைட்ட்டில்ல மறக்காம சுரதா பேரையும் போடணும்.. ஓகே சொல்லி எழுதப்பட்ட பாடல் தான் கீழே இருப்பது..

ஒரு கவிதை இருகவிஞர்கள் எழுதும் போது எப்படி வித்தியாசப் படுகிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்..

வெண்ணிலா குடைபிடிக்க
வெள்ளீ மீன் தலையசைக்க
விழிவாசல் வழி வந்து இதயம் பேசுது
இனி நீ என் வசமே
இனி நான் உன் வசமே
இணையாய் நாம் காணும் ஆனந்தம் நேசமே

கொல்லாமல் கொல்லுகிறாய் கோமளமே விழியாலே
சொல்லாமல் சொல்லுகிறாய் சுத்தத் தமிழ் மொழியாலே
ஒண்ணுமே புரியலையே எண்ணமே சரியிலையே
சரியாக இது வேளை தனிமை வேண்டுமே

: பழமும் பழுத்திருக்க பருவம் அமைந்திருக்க
பசி நோய் தீராமல் பார்த்தாலே போதுமா..


எழிலிற்கிருப்பிடமே எனக்கில்லை மனத்திடமே
எளியேன் மேலிந்த ஏனிந்த கோபமே

http://tamilmp3songs.mobi/mp3/load/320%20kbps/Classic%20Hits/Super%20Hit%20Songs%20Of%20The%20Year%201959/Vennila%20Kudai%20Pidikka%20-%20Tamilanda.com.mp3

இந்தக் கவிஞர் சுரதா இருக்காரே..அவருக்கு இன்னொரு கவிஞர் மேல ரொம்ப மரியாதைகுருபக்தி, ரொம்பப் பிடிக்கும்.. அந்தக் கவிஞருக்கு இன்னொரு மகாகவி மேல பக்தி ..ஸோ அந்த மகாகவிக்கே தாஸனா தன் பெயரை மாற்றிக் கொண்டுவிட்டார்..

அவர் பாரதி தாசன் தன்னுடைய இயற்பெயரான சுப்பு ரத்தினத்தை பாரதி தாசன் என மாற்றிக் கொண்டு விட்டார்.. இந்த கவிஞருக்கு என்ன பண்றது.. பாரதி தாசன் ரொம்பப்பிடிக்கும்..ஆனா பெயர் எப்படி மாத்திக்கறது..பாரதி தாச தாசனா.. எங்கயோகொஞ்ச்ம் இடிக்குதே.. சரி என்று தனது சொந்தப் பெயரான ராஜகோபாலனை விடுத்து சுப்பு ரத்தின தாசன் சுரதா என்று மாற்றிக்கொண்டு விட்டார்..

இவர் எழுதிய ..திரைப்பாடல்கள் என்று பார்த்தால் 22 வருடங்களில் சுமார் 30 தான் இருக்கும்.. ஆனால் கலந்துகொண்ட கவியரங்கங்கள் அளவிடற்கரியவை..1990இல் த்மிழக அரசு வழங்கிய பாவேந்தர் விருது பெற்ற முதல் கவிஞர் இவர் தான்..பிறந்தது 1921 மறைந்தது 2006
சில்பாடல்கள்

கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே
விண்ணுக்கு மேலாடை..
அமுதும் தேனும் எதற்கு நீஅருகினில் இருக்கையிலே
புரியாது புரியாது வாழ்க்கையின் ரகசியம் புரியாது
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
நெருங்கி நெருங்கிப் பழகும் போது..

*
எனக்குப் பிடித்த பாடல் விண்ணுக்கு மேலாடை..
விண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம்
வீணைக்கு மேலாடை நரம்புகளின் கூட்டம்
கண்ணுக்கு மேலாடை காக்கும் இரு இமைகள்
கனவுக்கு மேலாடை தொடர்ந்து வரும் தூக்கம்
விண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம்

மண்ணுக்கு மேலாடை
ம் ம் ம் ..மண்ணுக்கு மேலாடை ரா ரா ரா
மண்ணுக்கு மேலாடை மரத்தின் நிழலாகும்
ஹையே
மண்ணுக்கு மேலாடை வண்ண மயில் இருட்டு
மனதிற்கு மேலாடை
வளர்ந்து வரும் நினைவு

பத்துக்கு மேலாடை
பத்துக்கு மேலாடை..ஆ ஆ ஆ ஆ ஆ
ஆஹா
ஆ ஆ ஆ ஆ
நிறுத்து..ராகம் பாடாதே..பதிலைச் சொல்லு
பத்துக்கு மேலாடை
தெரியலையா? ம் சொல்லட்டுமா?
பத்துக்கு மேலாடை பதினொன்றேயாகும்
பக்கத்தில் நீ இருந்தால் பல கதை உருவாகும்

விண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம்
வீணைக்கு மேலாடை நரம்புகளின் கூட்டம்

காலத்தின் அடையாளம் பருவங்களேயாகும்
காதலர்கள் நடத்துவது கண் சேர்தல் ஆகும்
காதலர்கள் நடத்துவது கண் சேர்தல் ஆகும்
இது வரையில் புது உலகம் நாம் கண்டதுமில்லை
எது வரையில் சென்றாலும் எல்லை இதற்கில்லை
*
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=1lyf-YEM2_8
வெகு அழகிய பாடல்..
**
நிலவு நம்மை எட்டிப் பார்க்கும்
நேரமல்லவா
நீயும் நானும் கொண்ட காதல்
அமுதமல்லவா

தலையை நீட்டும் இந்த நிலவு
தலைமை தாங்கட்டும்

தழுவும் போது வீசும் தென்றல்
விலகி ஓடட்டும்
https://www.youtube.com/watch?v=ot60UbsBXjs&feature=player_detailpage

அடுத்த கவிஞர் எழுதிய ஒரு அடிமைப் பாடலுக்கு அடிமையாகாதார் யார்..

பின்ன வாரேன்.

(

chinnakkannan
11th September 2015, 01:40 AM
பாடினார் கவிஞர் பாடினார் – 3
*
வணக்கம்”

நிமிர்ந்து பார்த்த இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷிற்கு ஆச்சர்யம்.. “வாங்க பால முருகன்.. என்ன இந்தப் பக்கம்”

“சும்மாத் தான் வெங்கடேஷ்ங்க்ணா.. ஜஸ்ட் பார்க்க வந்தேன்..வழக்கம் போல பிஸியா..’

“மியூசிக்கே மூச்சா இருக்கறவனோட பிஸியைக் கேக்கணுமா என்ன.. ஒரு டியூனை என்னோட அஸிஸ்டெண்ட் போட்டுட்டாரு..பாட்டுக்கு யாரைப் போடலாம்னு யோசனையில இருக்கேன்…சொல்லுங்க”

“இதோ” கூடவந்தவரைக் காண்பித்தார் பாலமுருகன் “இவரும் கொஞ்சம் நல்லாவே பாட்டு எழுதுவார்.. டென் த் படிக்கறச் சொல்லவே ஒரு கவிதைத் தொகுப்பு வெளியிட்டிருக்காராக்கும்..பாரதிதாசனே முன்னுரை எழுதியிருக்கார்”

“ஐ ஸீ” என்று சற்றே அசுவாரஸ்யத்துடன் பார்த்தார் இசையமைப்பாளர்.. ரொம்ப யங்கா இருக்க்காரே நல்லா எழுதுவாரா.. நான் நம்ம கவிஞரையே (கண்ணதாசன்) இன்னொரு பாட்டும் எழுதச் சொல்லிடலாம்னு ப்ரொட்யூஸர்கிட்டக்க சொல்லியிருந்தேன்..ம்ம் சரி.. டைரக்டர் மாதவன் சொல்லியிருந்தவர் தானே இவர்.. டைரக்டரே ஒரு சிச்சுவேஷன் சொல்லியிருக்கார்.. என்ன கேக்கறீங்களா..”

ஆஹா “ என்றார் பாலமுருகன்.. கூடவே தலையாட்டினார் வந்திருந்த கவிஞர்.

சிச்சுவேஷன்னு ஒண்ணும் இல்லை.. ஹீரோயின் காலேஜ்ல படிச்சவ ஆனாலும் கிராமத்துப் பொண்ணு

“ஆஹா”

“என்னக் கிண்டல் பண்றா மாதிரி இருக்கு ..சரி விடுங்க.. அவளோட ஹஸ்பெண்ட் நிலத்துல கிணறு தோண்டறான்..ஆழம் ஆழமாத் தோண்டினாலும் தண்ணி வரலை..கட்டக்கடோசில தண்ணிவருது..ஹீரோ மயக்கமாயிடறார்.. ஹீரோயின் அந்தத் தண்ணியையே ஹீரோ மொகத்துல தெளிக்கறார்..அடுத்த சீன் பாட்டு வரணுமாம்..”

“டூயட்டா”

“ஏங்க ஹீரோ நிலத்துல பாடுபட்டு முன்னேறுகிற மாதிரி கதையாம்.. டூயட்லாம் நம்ம கவிஞரே சூப்பராப் போட்டுக் கொடுத்துட்டார்.. இது கிராமக் கூத்து மாதிரி..ரெண்டு பொண்ணுங்களுக்குள்ள சண்டை வர்ற மாதிரி இருக்கணுமாம்..”

“மூணு பொண்ணு வச்சுக்கலாமா” உடன் வந்திருந்த கவிஞர் கேட்க “பரவாயில்லையே சரி யாருக்குள்ள சண்டை வைக்கறாமாதிரி” என்றார் இசையமைப்பாளர்..

“மூணு பொண்ணுன்னா திரிவேணி சங்கமமா வெச்சுக்கலாம் கங்கை யமுனை சரஸ்வதி..ஆனாக்க இது தமிழ்க் கிராமம் ஆச்சுதுங்களே.. காவேரி வைகை அப்புறம் ம்ம் கங்கையையே கொண்டுவந்துடலாம்..


“கொஞ்சம் இருங்க..என் உதவியாளரைக் கூப்பிடறேன்..ராஜா” உதவியாளர் வந்தார் (பிற்காலத்தில் இளையராஜா எனப் பிரபலமானவர்).. “ நீங்க ஒரு மெட்டுப் போட்டீங்கள்ள..அதப் போட்டுக் காட்டுங்க..இவர் எப்படி பாட்டு தர்றார்னு பார்ப்போம்”

ராஜா மெட்டுப் போட அந்தப் கவிஞரின் பயணம் அந்தப்பாட்டிலிருந்து துவங்கியது.. அந்தக் கவிஞரின் பெயர் முத்துலிங்கம்.. பாடல்.. தஞ்சாவூரு சீமையிலே நான் தாவி வந்தபொன்னியம்மா..

சைலண்ட்டாக ஆரம்பிக்கும் பாடல் பொன்னி வைகை கங்கை என கச்சைகட்டிக்கொண்டு மூன்று நதிகளும் சண்டை போடுவது சுவாரஸ்யமாகவே இருக்கும்..(உரையாடல் எல்லாம் என் கற்பனையூரில் நடந்தது!)

https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Uo7QPV9J8YQ

*
சிவகங்கை மாவட்டம் கடம்பங்குடி கிராமத்தில் பிற்ந்தவர் முத்துலிங்கம்..பத்தாம் வகுப்பு வரை படிப்பு வரவில்லை..ஆனால் கவிதை வந்தது.. பத்தாம் வகுப்பையே தனிக்கல்வி முறையில் படித்துத் தேறினார் அவர். பின்னர் முரசொலியில் வேலை வாய்ப்பு..

பட்டிக்காடா பட்டணமா வசனகர்த்தா பாலமுருகனின் பழக்கம் ஏற்பட்டு பின் பொண்ணுக்குத் தங்கமனசில் முதல்பாடல்.. ம.தியின் உழைக்கும் கரங்களில் கந்தனுக்கு மாலையிட்டாள் பாடல் எழுத வாய்ப்பு வந்தது..
தேவனைத் தேடிச் சென்றேன்
தேவியுடன் அவன் இருந்தான்
வீணையுடன் நானிருந்தேன்
விதியை எண்ணிப்பாடுகின்றேன்.. என வாணி ஜெயராமின் உருக்கமான குரலில் வீணை நாதமும் சேர்ந்து கொண்டு மிக அழகாக அமைந்தது அந்தப் பாடல்
அது ஹிட் ஆக தொடர்ந்து ம.தி படங்களில் எழுத ஆரம்பித்தார்..

மீனவ நண்பன் என்ற படம்..ஸ்ரீதர் இயக்கி ம.தி நடித்து முழுவதும் ஷீட் செய்யப்பட்ட நிலை..திடீரென்று எம்.ஜி.ஆருக்கு ஒரு சிந்தனை.. நம்ம முத்துலிங்கத்துக்குப் பாட்டு கொடுத்தீங்களா.. இல்லீங்க..

சரி சரி..அவரை டூயட் எழுதச் சொல்லுங்க

படமே முடிஞ்சாச்சேங்க

பரவால்லை..கனவுக்காட்சியில சேர்த்துக்கலாம்..
அப்படி எழுதியபாடல் தான்

தங்கத்தில் முகமெடுத்து,
சந்தனத்தில் உடலெடுத்து
மங்கை என்று வந்திருக்கும் மலரோ
நீ மாலை நேர பொன் மஞ்சள் நிலவோ

முல்லை மலர் செண்டுகள் கொண்டு கொடி ஆடுது
தென்றல் சதிராடினால் அந்த இடை தாங்குமா?
இந்த இடை தாங்கவே கைகள் இருக்கின்றது
கொஞ்சி உறவாட மலர் மஞ்சம் அழைக்கின்றது
மலர்ந்து கனிந்து சிரித்து குலுங்கும் கனியாகவோ
*
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Uo7QPV9J8YQ
*
இன்று போல் என்றும் வாழ்க படத்திற்கு இவர் எழுதிய அன்புக்கு நான் அடிமை பாடலும் மிகப் பிரபலம்..

அதுவந்த கதையும் கொஞ்சம் சுவாரஸ்யம் தான்.. பாடல் எழுதுகையில் தயாரிப்பாளர் ஏதோ சொல்லிவிட்டாராம்.. கவிஞர்கள் எல்லாம் கொஞ்சம்கோபக்காரர்கள் போல.. எனில் இவருக்கும் சுர்ரென்று கோபம் வந்துவிட்டது..எழுந்து சென்று விட்டாராம். பின் எம்.எஸ்.வியும் டைரக்டரும் தான் அவரை சமாதானப் படுத்தி அழைத்துவந்தார்களாம்..அதற்காக போட்ட வரிகள் – அன்புக்கு நான் அடிமை தமிழ்ப் பண்புக்கு நான் அடிமை..

ம.தி பாடுவதாக எடுக்கப் பட இன்ஸ்டண்ட் ஹிட்..

**
இவர் எழுதிய மேலும் சில பாடல்கள்
ராகதீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ – பயணங்கள் முடிவதில்லை
மணியோசை கேட்டு எழுந்து –அதே படம்
சங்கீத மேகம் தேன்சிந்தும் நேரம் – உதய கீதம்
மாஞ்சோலை கிளிதானோ மான் தானோ – கிழக்கே போகும் ரயில்
சின்னச் சின்ன ரோஜாப்பூவே – பூவிழி வசலிலே
இதழில் கதை எழுதும் நேரமிது – உன்னால் முடியும் தம்பி
இதயம் போகுதே –புதிய வார்ப்புக்கள்..
பொன்மானைத் தேடி நானும் பூவோடு வந்தேன் – எங்க ஊரு ராசாத்தி
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம் – தூறல் நின்னு போச்சு
பட்டுக்கன்னம் தொட்டுக்கொள்ள ஒட்டிக் கொள்ளும் (ஈரமா இருந்திருக்குமோ)
8
நாம் பார்க்கப் போவது

ஆறும் அதுஆழம் இல்லை..அது சேரும் கடலும் ஆழமில்லை
ஆழம் எது அய்யா
அது அந்த சின்ன ரம்யா கிருஷ்ணன் மனசு தான்யா 
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=7oEyzJmlE9k
**

அடுத்த பாடலாசிரியர் கவிஞர் என்பதை விட நாவலாசிரியர் , அஸிஸ்டெண்ட் டைரக்ஷன், நடிப்பு எனப் பிரபலமானவர்..

அவர்ர்ர்ர்..

(அப்புறமா வாரேன்) :)

chinnakkannan
11th September 2015, 01:41 AM
பாடினார் கவிஞர் பாடினார்…- 4

**

ஆயிரம் சொல்லுங்கள்..இந்த கிராமப் புறங்களில் பாடப்படும் நாட்டுப்புறப்பாடல் இருக்கிறதே.. அது கேட்கும் போது மென்மையாய் வரும் தென்றல்பட்டு சலசலக்கும் அருவி, படபடக்கும் இலைகள், தலையாட்டும் மலர்கள், கொஞ்சம்மெல்லத் துள்ளி எங்கும் பறக்க முடியாமல் துவண்டு தரையில் விழும் உதிர்ந்த பூக்க்ள் போன்றவற்றைப் பார்க்கும் போது உண்டாகும் மகிழ்ச்சி வரும்..இல்லியோ..

அடியேனும் முன்பு ஒரு நாட்டுப்புறப் பாட்டு எழுதிப் பார்த்தேன்..(பின்ன இப்படிப் போட்டாத்தான் உண்டு! 

சொல்லிவிட வேணு மின்னு
...சுறுசுறுப்பாய்த் தானி ருந்தேன்
அல்லிமலர்க் கால வெச்சு
..அன்றவளும் போகை யிலே
மெல்லமெல்ல வேகங் கூட்டி
..மேவிமுன்னால் சென்று நிக்க
கள்ளவிழி பாத்த பின்னால்
...காணாமப் போச்சு வார்த்தை..

என்ன..அவ்வளவு கிராமியமா இல்லைங்கறீங்களா..என்ன பண்றதுங்க.. பிறந்து வளர்ந்ததெல்லாம் மதுரை சிட்டில.. ஸோ அங்கிட்டு சாயல் கொஞ்சம்கொஞ்சம் வரும்.. இன்னும் எழுத எழுதப் பழகிடுவேன்னு நெனைக்கேன்..

அதுல பாருங்க ஒரு சினிமால வந்த நாட்டுப் புறப் பாட்டை இப்ப பாக்கலாமா..

ஆத்தோரம் கொடிக்காலாம்
அரும்பரும்பா வெத்திலையாம்
போட்டா சிவக்குதில்லே
பொன்மயிலே உன் மயக்கம்
வெட்டி வேருவாசம் அதிலே வெடலப் புள்ள நேசம்..
வெடலப் புள்ள நேசம்

இத எழுதின கவிஞரைப் பத்திச் சொல்லணும்னா ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக் சொல்லியே ஆகணும்..
*

“ மகாலிங்கம்.. ஒண்ணு சொல்லட்டுமா..தப்பா நெனைக்க மாட்டேளோன்னோ””

:உங்களை ஏன் ஓய் நான் தப்பா நெனைக்கப் போறேன்..என் சகோதரியின் ஆம்படையான் வேற.. சொல்லுங்கோ..” இப்படிச் சொன்னவர் கன்னரியேந்தல் மகாலிங்கம்..

“ஒம்ம பையன் சுப்பிரமணிக்கும் வயசாச்சு..என் பொண்ணுக்கும் கல்யாணப் பருவம் வந்தாச்சு.. நல்ல நாள் பாக்கலாமா..”

:பாக்கலாந்தான்..ஆனா மாமா”

“ஷ்.. நமக்கு நெலம் நீச்சுல்லாம் இருக்கு..இருந்தாலும் பிள்ளை வேலை பார்த்தா நன்னா இருக்கும்னு அபிப்ராயப் படற..சரி செஞ்சு புடலாம்.. எனக்குத் தெரிஞ்ச ஒரு பெரிய பணக்கார வெயாபாரி நம்ம ஊர்லயே இருக்கான்..அவன் கூட கணக்குக்கு நம்பிக்கையா ஆள் வேணும்னு கேட்டான்..அதனால கல்யாணம் கட்டிக்கிட்டு நம்ம ஊர்லயே வேலையும் பாக்கட்டும்..என்ன சொல்றீங்க..”

“பேஷா” ஆவுடையார்கோவில்க்கருகே உள்ள கன்னரியேந்தல் கிராமத்தில் பிறந்த சுப்பிரமணியன் பெரியவர்களால் நிச்சயிக்கப் பட்டு தன் அத்தை பெண்ணையே திருமணம் செய்து மாமனார் ஊருக்கே ட்ரான்ஸ்ஃபர் (பின்ன எப்படிச் சொல்றது) ஆனார்..அங்கு ஒருகடையில் கணக்கு உத்தியோகமும்(மாதச்சம்பளம் பத்து ரூபாய்) பார்த்தார்..

பின் அந்தக்காலத்தில் நாடகங்களின் மீது ஆர்வமேற்பட அப்பாவிடம் சம்மதம் வாங்கி (அந்தக்காலங்க) நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார் சுப்பிரமணியம்..

பின் பின் என்ன ..சினிமா என்று ஒன்று வந்து அதிலும் ஆர்வம் ஏற்பட்டு நடிப்பதற்கும் கதை எழுதுவதற்கும் ஆசை வந்தது சுப்பிரமணியத்திற்கு..


இவரெழுதிய சில நாடகங்கள் வானொலியில் ஒலிபரப்பப் பட, அவற்றில் சிலவற்றிற்கு கல்கி பாராட்டி விமர்சனம் எழுத சுப்புவின் பெயர் பிரபலமாயிற்று..சொல்ல மறந்துவிட்டேனே.. மாமனாரின் ஊர் கொத்தமங்கலம்.. சுப்பிரமணியம் வாழ்க்கையைத் துவங்கிய இடம்.. எனில் கொத்தமங்கலம் சுப்பு என்றே அறியப்பட்டார்..

அப்புறம் சந்திர மோகனா என்ற திரைப்படத்துக்குக் கதை எழுதி (1936) நடிக்கவும் செய்தார்..

கொத்தமங்கலம் சுப்பு பின் ஜெமினி கம்பெனியில் மாதச்சம்பளம் 300 ரூபாய்க்குச் சேர அவரது கனவும் ஓரளவிற்கு நனவானது எனலாம்.. கதைஇலாகாவில் பிரதான எழுத்தாளர், நடிகர், இயக்குனர் ( போன தொடர் இறுதியில அசிஸ்டெண்ட் டைரக்ஷன்னு தவறாய் எழுதியிருந்தேன்),கதாசிரியர் , வில்லிசைக் கலைஞர் , நாவலாசிரியர் எனப்பன்முகத் திறன் இருந்தாலும் கூட இவர் கவிஞராக – பாடலாசிரியராக எழுதிய சில பாடல்கள் மறக்கவொண்ணாதவை (ஹை..என்ன தமிழ்!)

நாவல்னு பார்த்தீங்கன்னா ந.தி நடித்த தில்லானா மோகனாம்பாள் நாவலா இரண்டரை வருடங்க்ளுக்கும் மேலாக விகடனில் வெளிவந்தது.. கோபுலுவின் சித்திரங்கள் மனதைக் கொள்ளைகொள்ளும்.. நாம் படத்தில் பார்த்திருக்கும் ஒவ்வொரு பாத்திரமும் எக்டெண்டட் வெர்ஷனில் இன்னும் வெகு அழகாய் கண் முன் மிளிர்வார்கள்..

சிக்கல் ஷண்முக சுந்தரம் வாசிக்க மோகனாம்பாள் ஆடும் போட்டி – ஆஹா பைண்ட் செய்யப் பட்ட அந்தப் புத்தகத்தில் படங்களுடன் வாசித்தது இன்னுமெனக்குச் சிலிர்ப்பாய் இருக்கிறது..

வடிவாம்பாள் திருந்துவாள், மோகனா ஷண்முக சுந்தரம் திருமணம் செய்து கொள்வர் (இதற்குக் கல்யாணப்பத்திரிகையும் விகடன் அடித்திருந்த நினைவு)
பின் ஒரு குழந்தையும் பிறக்கும்..இருவரும் கப்பல் பயணம் மதன்பூருக்குச் செல்வர் எனப் போகும் நாவல்.. முடிவு நினைவிலில்லை..

தி.மோ தான் திரைப்படத்தில் வந்து இன்னும் நம் நெஞ்சில் இருக்கிறதே..அந்த ச்சிக்கலாருக்கும், மோகனா, தருமன், முத்துராக்கு வடிவாம்பாள், சவடால் வைத்தி என எல்லாருக்கும் முதன் முதல் நாவலில் உயிர் கொடுத்த கொத்தமங்கலம் சுப்பு – விகடனில் வெளியானபோது கலை மணி என்ற பெயரில் எழுதினார்..

இவர் எழுதிய ராவ் பகதூர் சிங்காரம் ஜெமினியே தயாரித்தது..விளையாட்டுப்பிள்ளை என்ற பெயரில்.. ந.தி, பத்மினி, காஞ்ச்..

பட் இவரதுகவிதா உள்ளத்தைச் சொல்லவில்லையே.. ஹை..சொல்லாமல் தெரியவேண்டுமே..

இல்லை இல்லை..சொ.தெ.வே பாடலைஎழுதியவர் இவரில்லை.. இவர் எழுதியபாடல் இன்னும்பல வருடங்களுக்குப் பின்னும் பார்க்க உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும்..அது போல மறுபடி வருமா எனச் சந்தேகமே..

ஆறு பெருகி வரின் அணை கட்டலாகும்
அன்பின் பாதையில் அணையிடலாமோ
பேதைமையாலே மாது இப்போதே
காதலை வென்றிட கனவு காணாதே

சாதூர்யம் பேசாதடி
என் சலங்கைக்குப் பதில் சொல்லடி
நடுவிலே வந்து நில்லடி..
நடையிலே சொல்லடி

ஆடுமயில் எந்தன் முன்னே என்ன
ஆணவத்தில் வந்தாயோடி?
பாடுங்குயில் கீதத்திலே பொறாமை கொண்டு
படமெடுத்து ஆடாதேடி நீ படமெடுத்து ஆடாதேடி

யெஸ்.. வஞ்சிக் கோட்டை வாலிபனில் கண்ணும் கண்ணும்கலந்து எழுதியவர் இவரே.. என்னா பாட்டு என்னா ஆட்டம் என வியக்காதவர் யாருமில்லை அந்தக்காலத்தில்.. இந்தக் காலத்திலும்.

ராஜாமகள் ரோஜாமலர் – இதுவும் கொத்தமங்கலம் சுப்புவின் கைவண்ண்ம் தான்..
பலபடங்களில் தன்னுடன் நடித்த சுந்தரிபாய் என்ற மராத்தியப் பெண்மணியைக் காதலித்து இரண்டாவது மனைவியாக்கிக் கொண்டார் ( நிழல் நிஜமாகிறதில் வரும் அனுமந்தின் அம்மா) இருவருமே ஜோடியாக பல படங்களில் நடித்திருக்கின்றனர்..

கலைமாமணி, பத்மஸ்ரீ எல்லாம் இவர் பெற்ற பட்டங்கள்..

ஹிந்தோள ராகத்தில் இவர் எழுதிய பாடல் மோட்டார் சுந்தரம் பிள்ளையில் வரும்..என்னவாக்கும் அது…

மனமே முருகனின் மயில்வாகனம்
மானிட தேகமே குகனாலயம்
குரலே செந்தூரின் கோவில் மணி – அதுகுகனே ஷண்முகனே
என்றொலிக்கும் இனி….

ம்ம் செளகாரும் ஒல்லி ஒல்லி மணிமாலாவும் இணைந்து பாடும் பாடல் (மணிமாலா ரொம்ப அழகா இருப்பார் என என் சித்தப்பா சொல்லக் கேட்டிருக்கிறேன்!)

வழக்கம் போல அந்தக் காலத்திலும் கரெக்ஷன் உண்டு… மானிட தேகமே என்றால் ஒருமாதிரியோ என்னவோ நினைத்தார்களோ..அல்லது பாடுவது பெண்கள் என்பதால் – மாந்தளிர் மேனியே குகனாலயம் –என மாற்றிவிட்டார்கள் – சுப்புவின் அனுமதி பெற்று..

பாட். இதோ.. இதில் வரும் வீணை இசையை மறக்க முடியுமா என்ன..

https://www.youtube.com/watch?v=-uKUXueJYDc&feature=player_detailpage

குபுகுபு குபுகுபு நான் இஞ்ஜின் டகடக டக டக நான் வண்டி.. நகைச்சுவைப்பாடலையும் எழுதியவர் இவர் தான்..

பாடல்களில் எளிய சொற்களைக் கையாள்வது இவருக்கு மிகப் பிடிக்கும்..இவரது பாணி என்று கூடச் சொல்லலாம்..

ஒளவையார் என்று ஒருபடம்.

கே.பி.எஸ் நடிக்க ஸ்டார் ஆக்ஷன் சொல்லப்பட

ஒளவையார் – அதியமான் அள்ளி அள்ளிக் கொடுத்தார் –என்பது போல பேசவேண்டும்.. கே.பி.எஸ் ஏதோ நினைவில் – அதியமான் அள்ளிக் கொடுத்தார் – என்றுமட்டும் சொல்லிவிட …கட்ட்.ட்

டைரக்டர்..- பசின்னா கண்டதையும் சாப்பிடக் கூடாது..இப்படி அல்லிய முழுங்கிட்டீங்களே – என ச் சொல்ல செட்டில் அனைவரும் சிரித்தார்களாம்.. டைரக்டர்… கொத்தமங்கலம் சுப்பு (இது பலவருடங்களுக்கு முன் என் பள்ளி ஆசிரியர் சொன்ன நிகழ்வு- தவறாகக் கூட இருக்கலாம்). ஒளவையாரில் ஒரு முக்கிய கதா பாத்திர்மாகவும் நடித்திருந்தார் கொத்தமங்க்லம் சுப்பு..

இப்படி எல்லாவகையிலும் மறக்கமுடியாத கவிஞர் கொத்தமங்கலம் சுப்பு (மறைந்தது 1974) எழுதிய நாட்டுப் புறப்பாடல் வந்த படம் சந்திரலேகா..
ஆத்தோரம் கொடிக்காலாம்
அரும்பரும்பா வெத்திலையாம்
போட்டா சிவக்குதில்லே
பொன்மயிலே உன் மயக்கம்

மாடுகளைக் கட்டிப்போட்டு வெகுநேரமாச்சு
மானமிருண்டு போச்சு
ஆருக்களவாணிகண்டா வந்து வந்து போக்கிடுவார்

மாட்டைப் பார்த்து..: மாமியா வீட்டுக்குப் போறாப்புல
மசமசன்னு நடக்குற
கழனிவெக்கிற நேரமாச்சு வேகமாக ஓட்டு
(கொஞ்சம் வேகமாகஓடும் பாடல் வேகமாக டைப் அடிக்க இயலவில்லை..

https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=05jFqxsPT2w

*
அடுத்து வரப்போகும் கவிஞர் எழுதிய கணீர்க்குரல் அருவிப்பாட்டு ரொம்பப் பிரபலம் தான்..

அவர்ர்ர்ர்ர்ர்

(அப்புறம் வாரேன்)

chinnakkannan
11th September 2015, 01:43 AM
பாடினார் கவிஞர் பாடினார் - 5

*
ஸ்டார்ட்

டேப் சுழல ஆரம்பிக்க – மெட்டு – தானனா தன தானனா – என்பதற்கேற்ப எழுதப் பட்ட பாடலைப் பார்த்து பாடகர் பாட ஆரம்பிக்க – டபக்… இருள்.. கரெண்ட் கட்..

யாரங்கே..

அந்த யாரங்கேயும் எதுவும் செய்ய இயலவில்லை.. இருபது நிமிடம் கடந்து தான் வந்தது கரண்ட்.

இசையமைப்பாளருக்கோ எரிச்சல்.. என்னையா இது காலைலருந்து ஒழுங்கா நடக்க மாட்டேங்குது..

என்ன ஆச்சுதுங்க

அதையேன் கேக்கற போ..இட்லிக்குத்தொட்டுக்க வித்யாசமா ஒரு வடகறியோ என்னவோ புதுசா ப்ண்ணியிருந்தா வீட்டுக்காரி..ஏதோ மசாலா தூக்க்லோ என்னவோ.. ஒரே கலக்கல்.. இப்ப பரவாயில்லை இங்க வந்தா கரெண்ட் கட்.. இதோ வந்துடுச்சே.. எங்கே செளந்தர்ராஜன்..

செளந்தர்ராஜன் என விளிக்கப் பட்ட டி.எம்.எஸ். இல்லை.. எதற்கோ அல்லது அருகிலோ தொலைபேசி பண்ணிவிட்டு வருவதாகத் தகவல் வர, இசையமைப்பாளருக்கு மறுபடிகோபம்..அடச் சே. ரிகர்ஸல்பண்ணனுமா மறுபடியும்.. எல்லாம் இந்தப் புதுசா பாட்டெழுத வந்தவனால…

ஒல்லி ஒல்லியாய்க் கண்ணில் கனவு மின்ன அமர்ந்திருந்த புதுப்பாடலாசிரியருக்கு ஒரு மயக்கம்.. நாமென்ன தவறு செய்தோம்..

ஆரம்பிச்சதுலருந்தே சகுனம் சரியில்லை – என்றார் இசை.. என்ன பண்ணலாம்.. பேசாம இந்தப் பாட்ட நமக்குத் தெரிஞ்ச பிரபலகவிஞர்கிட்டயே கொடுத்துடலாமா என்ன சொல்றீங்க ப்ரொட்யூஸ்..

ப்ரொட்யூஸர் பவ்யமாய் ‘ நீங்க சொன்னா சரிண்ணா”

அவருக்கு ஒரு ஃபோனைப் போடும் )கேட்டுக் கொண்டிருந்த புதிதாய்ப் பாடல் எழுதவந்த கவிஞருக்கு பக் பக்) ஓ.. நூறு ஆயுசு அவரே வந்துட்டாரே..

ரொம்ப சிம்ப்பிளாய் ஒரு ஆட்டோவில் வந்து இறங்கிய பழகியபாடலாசிரியரிடம் இசை சொன்னார்.. இதாங்க மெட்டு ஒரு பாட்டுப் போட்டுத்தாங்களேன்..

“பேஷா..” என்ற ப.பா “இது யாரு பையன்..”

ப்ரொட்யூஸர் “ இவரு ஒரு பாட்டுப் போட்டாரு.. என்ன காரணமோ இசைக்குப் பிடிக்கலை”

“எங்கே.. அந்தப் பாட்டைக் கொடும்” புது ப் பாடலாசிரிய இளைஞன் பவ்யமாய் தான் எழுதிய பாடலைக் கொடுக்க ரசித்துப் படித்து – மலர் மழை போலே மேனியின் மீதே குளிர் நீரலைகள் கொஞ்சிடுதே..வாவ். நன்னா எழுதியிருக்கயேப்பா “ (இளைஞன் முகத்தில் மலர்ச்சி) எங்கே இசைப்பாப்பா..

இசையமைப்பாளர் டி.ஆர்.பாப்பா – என்னங்க

இந்தப்பாட்டே நல்லாத் தான் இருக்கு இதை வச்சுக்கும் – நான் அப்புறமா வர்றேன்.. எனச் சொல்லி பெரிய கவிஞர் (மனதால்) புறப்பட பு.பா.எ.வ கவிஞருக்குக் கண்ணில் நீர் முட்டியது..

நிற்க நாம் சொல்லப் போவது அந்தக் காலத்தில் புதிதாய்ப் பாடல் எழுதவந்த கவிஞர்.. பிற்காலத்தில் வாலி என அறியப்பட்டவர் – அவரைப் பற்றி இல்லை..

வாலியின் பாட்டை எடுத்துக்கொள்ளுங்கள் நன்றாக எழுதியிருக்கிறார –எனப் பெருந்தன்மையுடன் சொல்லிச் சென்ற கவிஞர் பற்றி..

வாலி எழுதிய பாடல் – சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள் (படம் நல்லவன் வாழ்வான்)-

(நிகழ்வின் வர்ணனை என் கற்பனையூர்)
அவர்…மருதகாசி..

*
திருச்சி மாவட்டம் கொள்ளிடக் கரையில் உள்ள மேலக்குடிகாடு என்ற கிராமத்தில் கிராம அதிகாரியான அய்யம்பெருமாளுக்கும் மிளகாயி அம்மாளுகும் பிறந்தவர் மருதகாசி (1920) பிறந்து வளர்ந்து குடந்தையில் கல்லூரி.. சிறுவயது முதலே கவிதை எழுதத்தேர்ந்தவர்.. பின் நாடக் ஆர்வம்.

சேர்ந்தது குடந்தை தேவி நாடக சபை.. திருச்சி லோக நாதனின் இசைக்கு இவர் எழுதிய நாடகப் பாடல்கள் பேசப்பட கதவைத்தட்டியது சினிமா வாய்ப்பு..

ஜி. ராமனாதனின் இசையில் பெண் எனும்மாயப் பேயாம் (படம் மாயாவதி தயாரிப்பு மாடர்ன் தியேட்டர்ஸ்) எனும் பாடலே முதல் பாடல்..

மெட்டுக்குத் தக்கபடி வார்த்தைகள் இவருடைய விரல்களில் சுற்றிச் சுற்றிச் சுழன்றோடி வந்து டபக்கென ஆங்காங்கே அமர்ந்து கொண்டன.. இவரது திறமையில் அழைப்புகளும் தானே வந்தன..

சுமார் 250 படங்களில் 4000 பாடல்கள் இவர் எழுதியிருக்கிறார் என்றால் கொஞ்சம் நம்புதற்குச் சிரமம் தான்..ஆனால் தெரிந்த பாடல்களைப் பார்க்கும் போது இவரா என ஆச்சர்யப்படாமல் இருக்க முடியவில்லை..

தூக்குத்தூக்கியில்…
இதுவும்,

சுந்தரி சௌந்தரி நிரந்தரியே!
சூலியெனும் உமையே!
சூலியெனும் உமையே குமரியே!
குமரியே சூலியெனும் உமையே குமரியே

சீலமும் வீரமும் சீரும் செல்வமும்
தேர்ந்த கலைஞானம் கானம் நிதானம் - நிதானம்
மாந்தரின் மானம் - மானம் காத்திட வேணும் - வேணும்
கண்காணும் தெய்வமே கண்காணும் தெய்வமே!


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=VlULJclM6IQ

*
கண்ணொளி புகுந்து கருத்தினில் கலந்த மின்னொளியே ஏன் மெளனம்.. பாடலும் இவர் தான்..

*
இவர் எழுதிய பாடல்களில் எதைச்சொல்ல எதைவிட எனத் தெரியவில்லை..எல்லாமே எனக்குப் பிடித்த பாடல்கள் தான்..இருந்தாலும் கொஞ்சம் செலக்ட் செய்ததில்..

"அடிக்கிற கைதான் அணைக்கும், அணைக்கிற கைதான் அணைக்கும்" (வண்ணக்கிளி, 1959)
"அன்பினாலே உண்டாகும் இன்பநிலை - அதை அணைந்திடாத தீபமாக்கும் பாசவலை " (பாசவலை, 1954)
"அன்பே அமுதே அருங்கனியே ஆனந்த வாழ்வை காண்போம் நாமினிதே" (உத்தமபுத்திரன், 1958)
"ஆடாத மனமும் உண்டோ! நடை அலங்காரமும் அழகு சிங்காரமும் கண்டு" (மன்னாதி மன்னன், 1960)
"ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே குற்றால அழகை நாம் காண்பதற்கு வண்ணக்கிளியே" (பாவை விளக்கு, 1960)
"இன்பமெங்கே இன்பமெங்கே என்று தேடு - அது எங்கிருந்த போதும் அதை நாடி ஓடு" (மனமுள்ள மறுதாரம், 1958)
"உலவும் தென்றல் காற்றினிலே ஓடமிதே நாம் மகிழ ஊஞ்சலாடுதே"
(மந்திரி குமாரி, 1950)
"எந்நாளும் வாழ்விலே! கண்ணான காதலே! என்னென்ன மாற்றமெல்லாம் காட்டுகின்றாய் ஆசை நெஞ்சிலே!" (விடிவெள்ளி, 1960)
"என் வாழ்வில் புதுப்பாதை கண்டேன்" (தங்கப்பதுமை, 1958)
"என்னை விட்டு ஓடிப்போக முடியுமா? இனி முடியுமா?" (குமுதம், 1960)
"ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லே! என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லே!" (பிள்ளைக் கனியமுது, 1958)
"ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே! வேற்றுமையை வளர்ப்பதனாலே விளையும் தீமையே!" (பாகப்பிரிவினை, 1959)
"கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி" (விவசாயி, 1967)
"கண் வழி புகுந்து கருத்தினில் கலந்த மின்னொளியே ஏன் மௌனம்?" (தூக்கு தூக்கி, 1954)
"கண்களால் காதல் காவியம் செய்து காட்டும் உயிர் ஓவியம்" (சாரங்கதாரா, 1958)
"கண்ணாலே நான் கண்ட கணமே உயிர்க் காதல் கொண்டதென் மனமே" (பார்த்திபன் கனவு,1960)
"காவியமா? நெஞ்சின் ஓவியமா? அதன் ஜீவியமா? தெய்வீக காதல் சின்னமா?" (பாவை விளக்கு, 1960)
"கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதிமயக்கும்! வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்!" (கைதிகண்ணாயிரம், 1960)
"கொடுத்துப் பார் பார் பார் உண்மை அன்பை!" (விடிவெள்ளி, 1960)
"சத்தியமே லட்சியமாய் கொள்ளடா தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா" (நீலமலைத்திருடன், 1957)
"சந்திரனைக் காணாமல் அல்லி முகம் மலருமா?" (குலமகள் ராதை, 1963)
"சித்தாடை கட்டிக்கிட்டு சிங்காரம் பண்ணிக்கிட்டு" (வண்ணக்கிளி, 1959)
"தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும்" (பெற்ற மகனை விற்ற அன்னை, 1958)
"தேவியின் திருமுகம் தரிசனம் தந்தது" (வெள்ளிக்கிழமை விரதம், 1974)
"நீல வண்ணக் கண்ணா வாடா! நீ ஒரு முத்தம் தாடா!" (மங்கையர் திலகம், 1955)
"நேரம் வந்தாச்சு நல்ல யோகம் வந்தாச்சு" (தாய் மீது சத்தியம், 1978)
"மணப்பாறை மாடு கட்டி, மாயவரம் ஏரு பூட்டி" (மக்களைப் பெற்ற மகராசி, 1957)
"மனுஷன மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே! இது மாறுவதெப்போ? தீருவதெப்போ நம்மக் கவலே" (தாய்க்குப்பின் தாரம், 1956)
"மாசிலா உண்மைக் காதலே மாறுமோ செல்வம் வந்த போதிலே" (அலிபாபாவும் 40 திருடர்களும், 1955)
"மாட்டுக்கார வேலா! ஒம் மாட்டைக் கொஞ்சம் பார்துக்கடா!" (வண்ணக்கிளி, 1959)
"மாமா.. மாமா.. மாமா ...சிட்டுப் போல பெண்ணிருந்தால் வட்டமிட்டு சுத்திசுத்தி" (வண்ணக்கிளி, 1959)
"மியாவ் மியாவ் பூனைக்குட்டி" (குமுதம், 1961)
"முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே உள்ளம் உறவாடுதுங்கள் அன்பாலே" (உத்தமபுத்திரன், 1958)
"வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் வெண்புறாவே" (சாரங்கதாரா, 1958)
"வண்டி உருண்டோட அச்சாணி தேவை" (வண்ணக்கிளி, 1959)
"வண்டு ஆடாத சோலையில் மலர்ந்து வாடாமல் இருக்கும் பூ என்ன பூ?" (எங்கள் குலதேவி, 1959)
"வண்ணத் தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்!" (பாவை விளக்கு, 1960)
"வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே! ஏனோ அவசரமே எனை அழைக்கும் வானுலகே!" (மல்லிகா, 1957)
"வாராய் நீ வாராய்! போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய்" (மந்திரி குமாரி, 1950)


ஸாரிங்க..லிஸ்ட் கொஞ்சம் நீளமாய்டுத்து.. இருந்தாலும் அந்த அருவிப்பாட்டு..

வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடுகொஞ்சும்
மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும் என்னும் குற்றாலக் குறவஞ்சிப்பாட்டு தான் நினைவுக்கு வரும்.. சி.எஸ் ஜெயராமன்,தோற்ற்ப்பொலிவுடன் ந.தி இன் பாவை விளக்கு..

பாடல் முடிந்தவுடன் கொய்ங்க் கொய்ங்க் என்று ஒயிலாக அசைவதாக நினைத்து அசைந்தவண்ணம் :”எண்ணக்கிளி வண்ணக் கிளியிடம் சொல்லுதோ” என ந.தியிடம் கேட்பார் எம்.என். ராஜம்

ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே
குற்றால அழகை நாம் காண்பதற்கு வண்ணக்கிளியே..

https://www.youtube.com/watch?v=vW-5iFAOM7c&feature=player_detailpage

*
1949 இலிருந்து 1960 வரை பறந்த மருதகாசியின் கொடி கண்ணதாசனின் வரவிற்குப் பிறகு கொஞ்சம் இறங்கியது எனத் தான் சொல்லவேண்டும்.. இவரது குடும்பம் விவசாயக் குடும்பம் எனில் ஊருக்கே சென்றுவிட்டார்..பின் மறுபடி வந்து பாடல்கள் எழுதி..பின் 1989 இல் மறைந்தார்.

கவிஞர் வாலி தனது இரங்கற்பாவில் இவரைப் பற்றிக் குறிப்பிட்டது:
எளிய சந்தமும் எழுச்சிப் பொருளும்
இணைந்த பாடல் இவரது பாடல்;
எளியேன் போன்றோர் இசைக்குப் பாடல்
எழுதுவதற் கிவரே இலக்கண மானார்!

பாக்களின் மேன்மை படித்தால் புரியும்;
பாமரன் என்னால் புகலத் தரமோ?
செய்யநற் றமிழின் சீர்த்திக ளனைத்தும்
சிந்துகள் மூலம் செப்பிய மேதை
உண்மை தான்..
**
இன்னொரு பாட்டுப் போட்டுக்கறேனே..

சிட்டுப் போலப் பெண்ணிருந்தா வட்டமிட்டு சுத்தி சுத்தி
கிட்டக் கிட்ட ஓடி வந்து தொடலாமா? தாலி
கட்டுமுன்னே கை மேலே படலாமா?

மாமா மாமா மாமா மாமா மாமா மாமா

வெட்டும் விழிப் பார்வையினால் ஒட்டுறவாய்ப் பேசிவிட்டு
எட்டி எட்டி இப்படியும் ஒடலாமா? கையைத்
தொட்டுப் பேச மட்டும் தடை போடலாமா?
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=JoyCPyBySrc
*
அடுத்து வரப்போகும் கவிஞர் ஒரு சமூகப் படத்திற்காக எழுதிய சோழன் பாட்டு பிரபலமான ஒன்று..

அவர்ர்ர்ர்ர்

(அப்புறம் வாரேன்)

chinnakkannan
11th September 2015, 01:44 AM
**
பாடினார் கவிஞர் பாடினார் - 6

*
மனதுள் பொதிந்து
மலர நினைக்கும்
வார்த்தை அரும்புகளின் மணம்
வெளிவிழுந்து வாடிய மலர்களை விட
மேலானது..
*
ஹலோ.. ஏன் மெளஸ க் கீழ தள்ளறீங்க.. இது நா எழுதினதுங்க்ணா..அதுவும் இப்ப..
சரீ ஈ..இப்போ ஒரு நிகழ்வு (கற்பனையூர் தான்!)
*
நமஸ்காரம்

நமஸ்காரம்..

இவர்…. இன்னவர்… கல்லூரியில் பேராசிரியரா இருக்கார்…

ஓஒ…. அந்த… எழுதினது இவர் தானே.. கேள்விப் பட்டிருக்கேன்.. – என்றார் இசையமைப்பாளர்.. சரி பாட்டு எழுதறீங்களா.. தைரியமா எழுதுங்க..இப்பக்கூட இந்தப் புதுப்படத்துக்குத் தான் ட்யூன் போட்டிருக்கேன்..கிராமியக் காதல் கதை.. கிராமத்துப் பொண்ணு ஹீரோயின் ஹீரோ – டூயட்.. பொண்ணு பாடறா மாதிரி ஸ்டார்ட் ஆறது..இந்த…”

சொல்லிக்கொண்டு போன இசையை மறித்தார் பேராசிரியர்.. இது சரியா பாருங்க..
காத்து வீசுது புது காத்து வீசுது
இங்கே
கதிர்கள்கூட வயல்வரப்பில்
காதல் பேசுது

“வாவ்..” என்றார் இசை.. கவிஞரோன்னோ அதான் வார்த்தைகள் குளத்து மீன்களாட்டம் துள்ளி வருது ஸீ.. உங்க கவிதையக் கேட்டும் எனக்கு இப்படி ப் பேசற வர்றது.. சரி..ப்ரொபஸர் சார்..இந்த மெட் கேளுங்க..

தானனா தானேனா தனனனானே தானேனா.. இந்த பாருங்க..இதுக்கு நானும் குட்டியா எழுதியிருக்கேன்.. சின்னம்மா பொன்னம்மா ஆத்தோரம் போய்ட்டு வரலாமாம்மா.. இந்த மாதிரி வார்த்தை போடப் பாருங்க..”

கேட்ட பேராசிரியருக்கு நெற்றிக்குள் சுர்ர்ர்ர்.. மன்னிக்கவும்..எனக்கு இப்படி வராதுன்னு நினைக்கறேன்..

ஓ.. நீங்க கோச்சுக்கிட்டீஙன்னு நினைக்கறேன்.. ஒங்க காத்து வரியை அப்படியே வெச்சுக்கிட்டு ஆரம்பிக்கலாம்.. ஆனா இந்த மாதிரி பாட்டுக்கள் தான் ஜனங்களுக்குப் பிடிக்குது..இப்ப பாருங்க.. வீட்ல வீட்டுக்காரி நமக்காக வார்த்துக்கொடுக்கற தோசை சட்னி எல்லாம் நாம சாப்பிடுவோம். நம்ம ஃப்ரெண்ட்ஸூக்கு வீட்டுக்கு வர்றச்சே கொடுப்போம்.. இதுவே வஸந்தபவன் பார்த்தீங்கன்னா ஹோட்டல்…அது பிஸினஸ்..வர்ற எல்லாருக்கும் பிடிச்சா மாதிரி பண்ணனும்.. அப்பத் தான் நிறையபேர் சாப்பிட வருவாங்க..அதே மாதிரி தான் சினிமாவும்..

இங்க காதல், சோகம், பாசம், நேசம், துரோகம்,, சண்டை எல்லாமே விஷூவல்ல தூக்கலாத்தான் காட்டப் படும்..ஏன்னாக்க பிஸினஸ்ங்க.. உட்காருங்க எழுதுங்க..”

பேராசிரியர் அரைமனதாய் எழுதினார்.. செல்லம்மா சின்னம்மா ஒம்மேல ஆசை இருக்குதம்மா.. அப்படியும் அவருக்கு அவருடைய வரிகள் வந்து விழுந்தன..
ஆத்தங்கரையில் மஞ்சவரப்பில்
ஒன் ஆசைய உடம்புல பூசிக் குளிச்சேன்.

பாடல் எழுதி முடித்து படம் பேர் என்னங்க.. அனிச்ச மலர்..ம்ம் தொட்டால் சுருங்கிவிடும் மலர்னு பேர்..எப்படி வரப்போகுதோ சுருங்காம இருந்தா சரி.. “ என மனதுள் ஒரு எண்ணம்..

அது போலவே அந்தப் படம் பிரபலமடையவில்லை.. கவிஞரின் முதல் பாடல் இடம்பெற்ற படம் என்ற பெருமையை மட்டும் பெற்றது..

http://freetamilmp3.in/load/A%20to%20Z%20Tamil%20Mp3/A/Anicha%20Malar/Kaathu%20Veesuthu%20Puthu.mp3
*
இப்ப ஒரு ஃப்ளாஷ்பேக் சொல்லியே ஆகணும்

மன பி.எம்.டபிள்யூ காரை டபக்கென ரிவர்ஸ் கியர் எடுத்து முன்னால் ஸ்க்ரீனில் பார்த்தபடியே பலவருடங்கள் தள்ளிப் பின்போனால்..

தெரியுமே.. தலைகீழ்ப் ப மீசை.. கொஞ்சம் காதைத்தாண்டி நீண்டிருக்கும்கிருதா, ஒல்லி ஒல்லி உடம்பு பளீர் மின்னற்கண்கள்.. வெள்ளை மனசு, வெளிர் கருமை உதடு என அழகாய் இருக்கும் இளைஞனான கல்லூரிக் கண்ணன் என்பீர்கள் தானே..

எஸ்.. அவனுடைய கையில் உள்ள நோட்புக்கில் முதற்பக்கத்தில் ச்சும்மா மனசுல பதிந்ததுஎன எழுதப்பட்டிருப்பது என்ன..

என் இதயத் தோட்டத்தில்
ரோஜாக்களினால் பதியனிட்டேன்
அறுவடை செய்ய
உனை அழைத்தேன்
நீ அரிவாளோடு வந்த பிறகு தான்
என் தவறு எனக்குப் புரிந்தது..

இதை எழுதியவர் கவிஞர் மு. மேத்தா.. அவரது கண்ணீர்ப் பூக்கள் கவிதைத்தொகுப்பில் மயக்காத கல்லூரி இளைஞரில்லை இளைஞியில்லை..

எனக்கு மிகப்பிடித்த கவிஞர்.. இவரது தேசப்பிதாவிற்கு ஒரு தெருப்பாடகனின் அஞ்சலி பாடல் தமிழ் அன்சிலியரியில் பாடமாக வந்தது..

விழிகள் நட்சத்திரங்களை
வருடினாலும்
விழிகள் என்னவோ
ஜன்னல் கம்பிகளுடன் தான்

என்ற வரிகள்பேசும் கதை தான் எத்தனை எத்தனை..

ச்ரி சரி ..தலைகீழ்ப் ப மீசை குட்டிக்கண்ணனைத்தவிக்க விடுவானேன்.. அந்தக் காலகட்டத்தில் சினிப்ரியாவில் கல்லூரியை விட்டுப் போய்ப்பார்த்த படம் என நினைக்கிறேன்.. என் கூட இருந்த நண்பன் மிஸாணஷ்ருகி (கிஷ்ணஸ்வாமியின் தலைகீழ்) என்னடா இந்தப் படம்பார்க்கலாம் என்கிற..

படம் சுமார் தான்… ஆனால் கேள்விப்பட்டது மு.மேத்தா பாட்டு எழுதுகிறார் என்று.. போனால் முன்னுக்கு வந்துகொண்டிருந்த – பக்கத்துவீட்டுப் பெண் சாயல் எனப் பேசப்பட்ட சுகாசினி அவரது ஸோ ஸோ நடனம் – பரப்ப்ரம்மமே என ப் பாடும் கார்த்திக் எல்லாம் ஈர்க்கவில்லை பாடல்..பாட்டு வரிகள்.. தனியாய்த்தெரிந்தன..

அவை..
தீம் திரனனன்

தேனருவியில் நனைந்திடும் மலரோ.. தொடரும் கதையோ
எது தான் விடையோ
மன வீணை நான் இசைத்திட..

முக வாசல் மீது தீபம் இருகண்கள் ஆனதோஓஒ ம்ம்.
மனவாசல் கோலமே தினம் போடுதோ
துறையாகும் தேவியை க் கொடி தேடுதோ
புன்னகையோ பூமழையோ
உன் நடையோ தேர்ப்படையோ
வரமோ அறமோ நான் வளம் பெற

நாளும் ஒவ்வொரு நாடகமோ இது மேடையோ
இனி மைவிழி நாட்டியமோ எனை வாட்டுமோ
ஏன் தொலைவோ நீ நிலவோ
தனிமை கொடுமை எனதுயிர் அழைத்திட
தீம் திரனன
தேனருவியில் நனைந்திடும் மலரோ (பாட் கேட் பிடிச் வரி அடிக்கறதும் ஒரு இன்பம்).
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=lrCmn2WdRSE
ஸோ இவ்ளவு அழகாப்பாடல் எழுதின மு மேத்தா அப்புறம் என்ன ஆச்சு…..

*
அனிச்ச மலருக்கப்புறம் வெகு நாட்களாக எழுதவில்லை.. பின் ஆகாய கங்கை.. பாடல் பிரபலமானாலும் படம் பிரபலமாகவில்லை ( இப்பொழுது நகைச்சுவையில் தனியாகத் தெரியும் மனோபாலா இயக்கியபடம்)

அதன் பிறகு பாலச்சந்தர்.. வேலைக்காரனில் பாட்டு..

படம் பார்த்த போது இவர் எழுதியிருக்கிறார் என்பதைப் பார்க்கவில்லை நான்.. (சொர்ண புஷ்பம் இருக்கே) .. ஆனால்

தோட்டத்துல பாத்தி கட்டி
பாத்திருக்கேன் பாத்திருக்கேன்
சோத்துக்குள்ள பாத்தியைக் கட்டுற பட்டணம் பட்டணமே
மனம்
கெட்டியாக இல்லாட்ட மனசு கெட்டுடும் கெட்டுடுமே வரிகள் நிமிரவைத்தன என்றால் வா வா வா கண்ணா வா… வும் ஈர்த்தது..

அதில் சில வரிகள்..
காளிதாசன் காண வேண்டும்
காவியங்கள் சொல்லுவான்
கம்பநாடன் உன்னைக் கண்டால்
சீதை என்று துள்ளுவான்

தாஜ்மகாலின் காதிலே
இராம காதை கூறலாம்
மாறும் இந்தப் பூமியில்
மதங்கள் ஒன்றுசேரலாம்
**
உதய கீதத்தில் இளையராஜாவின் இசை.. பாடல் பாடு நிலாவே.

எழுத ஆரம்பித்தார் கவிஞர்..

பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர
உன் பாடலை நான் கேட்கிறேன்.. என எழுதிவிட்டு ஆண்பாடும் பாட்டிற்கும்
அதே வரி போட.. இளையராஜா.. கவிஞரே.. இது கொஞ்சம் இயல்பா இல்லையே..

என்ன .

இந்தப் பொண்ணு பாடுது தன்னோட எண்ணத்தை. அந்தப் பாட்டக் கேட்டு ஹீரோபாடறான்..இல்லியோ

ஆமம்

இந்தப் பொண்ணு பாடறது நிலாவப் பாத்து அதுவும் ஹீரோக்கு கேக்கணும்னு பாடுது.. ஆனா ஹீரோ இவபாட்டைக் கேட்டுட்டுத் தானே பாடறான்..அதனாலே.

கவிஞருக்குப் புரிய..சரி பாடும் நிலாவேன்னு ஹீரோபாடறதா வெச்சுக்கலாமா..உங்களுக்கு ஆட்சேபணையில்லியே..

ஷ்யூர் என்றாராம் மேத்தா..

இவர் எழுதிய இன்னும் சில பாடல்கள்..

நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது
வா வா வா கண்ணா வா
வேலை இல்லாதவன் தான் வேலை தெரிந்தவன் தான் வீரமான வேலைக்காரன்
யார் வீட்டில் ரோஜா பூப் பூத்ததோ
கற்பூர பொம்மை ஒன்று
பொன் மானே சங்கீதம் பாடிவா

*
எதற்காகப் பாலச்சந்தரிடம் போனாராம்.. கவிதைகள் எழுதினால் சிலபேரை மட்டும் சென்றடைகிறது..திரைப்பாடல்களின் ரீச் எல்லாரையும் சென்றடைகிறதே.. – என்கிறார் கவிஞர்..

இளையராஜா பாடலுக்கு பல பல்லவிகள் கொடுக்க இளையராஜா தேர்ந்தெடுத்தபல்லவி ஒரு பாடலுக்கு என்ன தெரியுமா..

ராஜ ராஜ சோழன் நான்
நான் வாழும் காதல் தேசம் நீதான்..
உல்லாச மேடை மேலே
ஓரங்க நாடகம்..
இன்பங்கள் பாடம் சொல்லும்
என் தாயகம்.
கள்ளூரப் பார்க்கும் பார்வை
உள்ளூரப் பாயுமே
துள்ளாமல் துள்ளும் உள்ளம்
சல்லாபமே
வில்லோடு அம்பு ரெண்டு
கொல்லாமல் கொல்லுதே
பெண்பாவை கண்கள் என்று
பொய் சொல்லுதே.

மனதை வருடும் மெல்லிசை, வெகு அழகியபிக்சரைசேஷன் , மின்னற் வரிகள் என்றும் மறக்காது..

https://www.youtube.com/watch?v=7f1kEtA-xRM&feature=player_detailpage

*

அவரது வரிகள் தனியாகத் தெரிவது தான் ஸ்பெஷாலிட்டி மு.மேத்தாவிடம்..

மரபுக்கவிதையில் தேர்ந்த அவர் எளிமையாகச் சொல்லப்படும் புதுக்கவிதை மூலம் மரபிற்கும் பாலம் கட்டினார் எனலாம்

அவர் எழுதிய ஒரு மரபு க்கவிதை..
வ்ரலாறு என்பது தலைப்பு..

சரித்திரம் என்பது விளம்பர மனிதரின்
சாகச முத்திரைகள் - கடல்
தெறித்திடும் போதினில் புகைப்பட மாகிடும்
சிற்சில நீரலைகள்!

ஆயிரங் கோடி மனிதரில் ஒருசிலர்
அடைகிற பிரபலங்கள் - பல
ஆயிர மாயிரம் பெயரை மறைத்திடும்
அற்புதப் புதைகுழிகள்!

வையத்து மாந்தர் நடந்துசென் றேகிய
வழிகளின் ஓவியங்கள் - சில
பொய்யையும் தூக்கி மெய்யென ஆக்கிப்
புகன்றிடும் மூலங்கள்!

செப்டம்பர் 5 வந்தால் எழுபது வயதாகிடும் கவிஞர் இன்னும் திரைப்பாடல் எழுதவேண்டும் என்பது என்னுடைய உள்மன ஆசை..

**
அடுத்து வரப்போகும் கவிஞர் இந்தப் பாட்டெல்லாம் இவரா எழுதினார் என ஆச்சரியப்பட வைத்தவர்..அவரும் ஒரு இசையமைப்பாளர், டைரக்டர்..

அவர்ர்ர்ர்ர்ர்……

(அப்புறம் வாரேன்)
**

chinnakkannan
11th September 2015, 01:46 AM
**
பாடினார் கவிஞர் பாடினார் – 7

ஹாய் ஆல்.. ரொம்ப நாளாச்சா இந்த த் தொடரைக் கண்டின்யூ பண்ணி..

எனில் ஆறாம் அத்தியாயத்தின் இறுதி வரி…

//அடுத்து வரப்போகும் கவிஞர் இந்தப் பாட்டெல்லாம் இவரா எழுதினார் என ஆச்சரியப்பட வைத்தவர்..அவரும் ஒரு இசையமைப்பாளர், டைரக்டர்..

அவர்ர்ர்ர்ர்ர்……//

**

சரி அந்தக் கவிஞரைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்னால் அவரைப் பற்றிய ஒரு தகவல் தெரிவதற்கு திருமூலரை அழைப்போம். திருமூலர்? யெஸ் .
*
ஒருபாடல் திருமந்திரத்திலிருந்து…


வழுதலை வித்திடப் பாகல் முளைத்தது
புழுதியைத் தோண்டினேன் பூசணி பூத்தது
தொழுதுகொண் டோடினார் தோட்டக் குடிகள்
முழுதும் பழுத்தது வாழைக் கனியே

என்னவாக்கும் அர்த்தம்?.

இறைவா என் நெஞ்சில் உனை எண்ணிக் கசிந்துருகும் வண்ணமிருக்கும் யோகப் பயிற்சியை வித்திட்டேன்.. பாகல் எனச் சொல்லப் படும் வைராக்கியம் முளைத்தது.

.கண்ணை மறைக்கும் புழுதியைப் போல கண்களை மறைத்து உண்மையைக் கூற மறுக்கும் தத்துவங்களை ஆராய்ச்சி செய்தேன்.. பலன் பெரிய பெரிய காய்களைக் கொண்ட பூசணியைப் போல என்னுள்ளே இருந்த சிவமாகிய இறைத் தன்மை வெளிப்பட்டது..

என்னுள் இருக்கும் இந்திரிய விஷயங்களைத் தொழுது அவற்றை அடக்கி உன்னடி சேர்வதற்குப் பயிற்சியும் செய்தேன்..ஓ. காட்.. என்னாச்சு தெரியுமா.. எனக்கு வாழைப்பழத்தைப் போன்ற சுவைகொண்ட --ஆனால் அவற்றை முன்பின் அறியாமல் இருந்த எனக்கு மிகப்பெரிய ஆன்ம லாபம்..உன்னை அடைவதால் கிடைக்கும் பயன் கிடைச்சதுப்பா..தாங்க்யூ..!

(சைவப் பெரியார் துடிசைக் கிழார்ங்கறவர் எழுதின உரையைக் கொஞ்சம் எனக்குப் புரிந்த வகையில் எழுதிப் பார்த்தேன்.)

ஆனா பார்த்தீங்கன்னா…இதைத் தழுவி ரொம்ப ஸிம்ப்பிளா நாம் பார்க்கப் போகும் கவிஞர் அன்றே எழுதியிருக்கிறார் என்று சொல்வதற்கு முன் ஒரு காட்சி..
(ஆரம்பிச்சுட்டான்யா ஆரம்பிச்சுட்டான்!)
*
பாட்டுக்கு மெட்டு போட்டுட்டயா.. எங்கே…

கேட்டவர் அந்த ஓரிருபடத்திற்கு இசையமைத்திருந்த புது இசையமைப்பாளரின் நண்பர்..அந்தப் புதுப்படத்தின் புது இயக்குனர்..

போட்டுட்டேனே.. இதோ ஒரு பாடகியை வச்சு சில வார்த்தைகள் போட்டு பாடச்சொல்லியிருக்கேன்..

எங்கே சொல்லு..

தானான தான்னா ஆ ஆ
தானேனா தான்னா தனனானே தானானா..

யோவ் மெட்டு எதுக்குய்யா வார்த்தை…

சொன்னார் இசையமைப்பாளர்.. நல்லா இருக்கே.. எந்தக் கவிஞர்… நம்ம பெரியவரா..

இல்லீங்காணும்.. என்னோட அஸிஸ்டெண்ட்டா இருக்கானே…” தூரத்தில் வெடவெடவென ஒல்லியாக இருந்த ஒரு இளைஞனைக் காண்பித்தார் இசை..

“டேய்” அடா புடா நண்பர்கள் தான் இசையும் இயக்கமும்.. “அது உன் தம்பியில்லையா”

“தம்பியே தான்..அமர்..”

நல்லா இருக்கு..அவனையே முழுப்பாட்டையும் எழுதச் சொல்..

அப்படி இளையராஜா என்ற இசையமைப்பாளரின் தம்பியான அமர் என்கிற கங்கை அமரனை ப் பாடல் எழுதச் சொன்னது பாரதிராஜா என்ற புது டைரக்டர்..அந்தக்காலத்தில்..

அப்படி கங்கை அமரன் எழுதிய பாடல் செந்தூரப் பூவே…. தேசிய விருது எஸ்.ஜானகிக்கு ப் பெற்றுத் தந்த பாடல்..

தென்றலைத் தூது விட்டு மறு சேதிக்குக் காத்திருப்பேன்
கண்களை மூடவிட்டு இன்பக் கனவினில் நான் மிதப்பேன்
கன்னிப்பருவத்தில் வந்த கனவிதுவே
எண்ண இனிக்குது அந்த நினைவதுவே - ஸீ இதை நினைவிலிருந்து என்னால் டைப் செய்ய முடிகிறது என்றால் காரணம் கவித்துவமிக்க வரிகள்..

கவிஞர்கள் அனைவருக்கும் இசைஞானம் உள்ளது என்று சொல்ல முடியாது..இசைஞானம் அவ்வளவாக இல்லாத கவிஞர்கள் ,என் போன்ற கவிதை எழுத முயற்சிப்பவர்கள் நிறையவே உண்டு..

இசைஞானம் உள்ளவருக்கு , இசையமைக்கும் திறமை கொண்ட நபருக்கு , கவித்துவ உள்ளம் கண்டிப்பாக இருக்கும்.. அப்பொழுது தான் மெட்டுக்கள் பொங்கி வரும்..

அந்தமாதிரிப்பட்டவர் கங்கை அமரன்..

சிலபாடல்கள் அவர் எழுதியவை என்றால் வெகு ஆச்சர்யமாக இருக்கும்..
*
இன்னொரு சம்பவம்..

இளையராஜாவின் இன்னொரு படம்..இந்தாடா தம்பி.. இந்த மெட்டு.. நான் பாட்டுப்போட்டு இருக்கேன் பாரு..

அரண்மனைக்கிளி அழகுப் பைங்கிளி
அரங்கில் வந்ததம்மா.. நல்லா இருக்கா நீ எழுது… என கங்கை அமரனைக் கேட்க
அவர் எழுதிய பாடல்..

அரைச்ச சந்தனம் மணக்கும் குங்குமம்
அழகு நெத்தியிலே..
**

என்ன பாடல்களில் மட்டுமே கவனம் செலுத்தவில்லை ..இசை.. பின் திரைக்கதை டைரக்ஷன் என எல்லாத் துறைகளிலுமே கால் வைத்தார்.. வழுக்கவில்லை என்று தான் சொல்லவேண்டும்..

ஆனால் பாடலாசிரியராக சிலசமயங்களில் சிற்சில கமர்ஷியல் எனச்சொல்லப்படும் பாடல்களையும் எழுத வேண்டியிருந்தது.. எஸ் ஓரம்போ ஓரம்போ , அண்ணே அண்ணே சிப்பாயண்ணே.. நம்ம ஊர் நல்ல ஊர் இப்ப ரொம்ப கெட்டுப்போச்சன்னே, வாடி என் கப்பக் கிழங்கே.. என்பன சில எக்ஸாம்பிள்கள்..

கவிஞர் கங்கை அமரனின் என் மனங்கவர்ந்த சில பாடல்கள்..
சீர் கொண்டுவா வெண்மேகமே..
இது இனிய வசந்த காலம்
இலைகளில் இளமை துளிரும் கோலம்..
*
காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே

*
உன்பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே
*
சிறுபொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும்

*
தம்தன தம்தன தாளம் வரும் புது ராகம் வரும் புது தாளம்வரும்
அதில் சந்தன மல்லிகை வாசம் வரும்..
மணமாலைவரும் சுப வேளை வரும்
மண நாள் திரு நாள் சுப நாள்..

*
ஊரு சனம் தூங்கிருச்சு ஊதக் காத்தும் அடிச்சுருச்சு
பாவிமனம் தூங்கலையே அதுவும் ஏனோ தெரியலையே

**
ஆசையக் காத்துல தூதுவிட்டு
*
நீ எப்போதும் பார்த்த புள்ள உன்னை அடையாளம் தெரியவில்லை

*
மஞ்சக் குளிச்சு அள்ளி முடிச்சு
*
மண்ணிலிந்தக் காதல் அன்றியாரும் வாழ்தல் கூடுமோ
*
இந்த மான் உன் சொந்தமான்பக்கம் வந்து தான்
சிந்து பாடும்..
*
பூ மாலையே தோள் சேரவா..

*
பூங்கதவே தாழ் திறவாய், பூவாய் பெண்பாவாய்
*
புத்தம்புதுக்காலைபொன்னிற வேளை
என் வாழ்விலே தினம் தோறும் தோன்றும்
சுப ராகம் கேட்கும் என்னாளும் ஆனந்தம்
*
இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே
இன்பத்திலாடுது என் மனமே
*
அடியே.. மனம் நில்லுன்னா நிக்காதடி..
கொடியே… எனைக் கண்டு நீ சொக்காதடி
*
நான் என்பது நீயல்லவோ தேவ தேவி
*
செண்பகமே செண்பகமே தென் பொதிகைச் சந்தனமே
*
ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொண்ணும்கவலையில்லே
*
ஆனந்த ராகம் கேட்கும் காலம் கீழ்வானிலே ஒளி மின்னல் தோன்றுதே
*

இன்னும் நிறையச் சொல்லலாம்..

இங்கு ரெண்டே ரெண்டு..

தம்தனதம்தன தாளம் வரும்
சில்லென மெல்லிய தென்றலும் வந்திசை சொல்லியது
சுவை அள்ளியது
மனம் நில்லென சொல்லியும் துள்ளியது

பெண் மனம் பூவினும் மெல்லியது தவிக்கும் நினைவோ எனைக் கிள்ளியது
மல்லிகை முல்லையில் பஞ்சணையோ
மன்னவன் கொண்டது நெஞ்சணையோ
மின்னிய மின்னலும் கன்னியின் எண்ணங்களோ
இனிக் கனவுகள் தொடர்ந்திட –

தம்தன நம்தன தாளம் வரும் பல பாவம் வரும்
அதில்: சந்தன மல்லிகை வாசம் வரும்
மண மாலை வரும்.. சுப வேளை வரும்.. மண நாள்.. திருநாள்.. புது நாள்.. உனை அழைத்தது

https://youtu.be/QixSF2OUiek?list=PLn4GJpNVAHex-BOgiP11QWqCcoPrVtCoU

எப்போதுகேட்டாலும் எனக்கு மெய்மறக்கும் மேலுள்ள பாடல்.. (பிக்சரைசேஷன் எனக்குப் பிடிக்கவில்லை..ஆனால்பாடலைக் கண்மூடிக் கேட்டால் எங்கோ செல்லலாம்…)

கீழ்வரும் பாடலும் அப்படியே..

சிறு பொன்மணி அசையும்
அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன் இமைகளில் தாளலயம்
நிதமும் தொடரும் கனவும் நினைவும் இது மாறாது
ராகம் தாளம் பாவம் போல
நானும் நீயும் சேர வேண்டும்


விழியில் சுகம் பொழியும்
இதழ் மொழியில் சுவை வழியும்
எழுதும் வரை எழுதும்
இனி புலரும் பொழுதும்

தெளியாதது எண்ணம்
கலையாதது வண்ணம்
அழியாதது அடங்காதது
அணை மீறிடும் உள்ளம்
வழி தேடுது விழி வாடுது
கிளி பாடுது உன் நினைவினில்
https://youtu.be/9wCz9LBwE3I
**
இப்போதும் இன்றும்படங்களுக்குபாடல்கள் எழுதிக்கொண்டிருக்கிறார் கங்கை அமரன்.. இன்னும் கவித்துவமாக அவர் எழுதி நல்ல மெலடி கேட்கவேண்டுமென்பதே என் போன்ற சிறு ரசிகனின் ஆசை..

*
அடுத்து வரும் கவிஞரின் வாழ்வில் நடந்ததாகக்கூறப்படும் ஒரு சம்பவத்தை வைத்து இன்னொரு இந்தக்காலக் கவிஞர் அழகாகச் சிறுகதையும் எழுதியிருக்கிறார்..

அப்படி அந்தக்காலக் கவிஞர் யார் என்றால்…ஜஸ்ட் வெய்ட் ஃபார் நெக்ஸ்ட் எபிஸோட்..
*
ஏதோ மிஸ் பண்ணிட்டேனா..

ஆமா..ஆரம்பத்துல திருமூலர் பாட்டு அதுக்கும் கங்கை அமரனுக்கும் என்ன தொடர்பு..


(ரொம்ப சிம்ம்பிளா கங்கை அமரன் (?!) அன்னிக்கே சொல்லிட்டார்..அதுக்கெல்லாம் ஞானம் வேணும் ஞானம் வேணும் டோய்னு. இல்லியோ 

எஸ்ஸ்கேப்..

பின்ன வாரேன் :)

chinnakkannan
11th September 2015, 01:47 AM
பாடினார் கவிஞர் பாடினார் – 8

**

சிலோனில் ஒரு டீக்கடை..

அந்த டீக்கடையினுள்ளே ஒரு ரேடியோ.. ஆக சிலோன் ரேடியோ.. அதற்குள் ரேடியோ சிலோன்…!
ஒரு சாய் போடுங்க..

வந்த் இளைஞனுக்கு இருபத்திரண்டு வயதிருக்கலாம். கொஞ்சம் முரடான முகம் கலைந்த தலை.. கொஞ்சம் சற்றே சிவந்த கண்கள்..அழுக்கான உடை..

.மத்தியானம் நான்கு மணி ஆனதினால் இசைக்கல்ளஞ்சியம்..

பேப்ரபேங்க் என்று மியூசிக்..படிக்காத மேதையில் வரும் சீவிமுடிச்சு சிங்காரிச்சு பாட்டிற்கு முன் வரும் மியூசிக்.. முடிந்து இசைக்களஞ்சியம்..

தொபக்கென வடிகட்டியில் ஊறியிருந்த தேனீருடன் தள தள தள தள என -இளம்பெண்ணைப் பார்க்கும் இளந்தாரி மனசைப் போல- கொதித்துக் கொண்டிருந்த பாலைக் கொஞ்சூண்டு நாசுக்காய் ஒருகிளாஸில் விட்டு இன்னொரு கிளாஸை எடுத்து சர் சர்ரென நுரை பொங்க ஆற்றி பெஞ்சில் உட்கார்ந்திருந்த இளைஞனிடம் கடைக்காரர் கொடுக்கவும் இசைக்களஞ்சியத்தில் முதல்பாடல் இது இன்ன படத்தில் எழுதியவர்…எனச் சொல்லி அறிவிப்பாளர் கே.எஸ்.ராஜா பாட்டை ப் போட…

சூடு சூடாய் நல்லமரக்கலரில் நுரைபொங்க இருந்த டீயை ஒரு முறை சிப்பிய இளைஞன் நிறுத்திவிட்டான்.. பின் முழுப்பாடலையும் கேட்டான்..

டீ கிளாஸ் கையிலேந்திய படியே… குடிக்காமல்.. பாடல் கேட்கக் கேட்க கண்கள் கலங்கியன.. பொசுக்கெனப் பொங்கிடும் வெள்ளம் போலக் கண்களில் நீர்.. சொய்ங்க் என வழுக்கிக் கன்னத்தில் வீழ, “ஏன் கரையறீயள்” எனக் கேட்டார் திகைத்துப் போன கடைக்காரர்..

உஷ்.. என்றான் இளைஞன்..பாடலை முழுக்கக் கேட்டுவிட்டு, “இந்தப் பாட்டு எழுதினதுயாரு..”

“இவர்..ப்பா.. என்ன விஷயம்..ஏன் அழறே”

“எனக்கு என்னோட அம்மா நினைவுக்கு வந்துடுச்சு..பாவி நான்.. போகாதேன்னு சொல்லிச்சு.. இந்தவூர்லயே இருன்னு சொல்லிச்சு..எனக்கு கண்டி ஊரு.. அதவுட்டுட்டு..அவளயும் விட்டுட்டு இந்தக் குன்னாகத்துக்கு வந்துட்டேன்.. அது அப்பா இல்லாம எவ்ளோ கஷ்டப் பட்டிருக்கும் என்ன வளக்க…ஆளாக்க.... பாவி நான் பாவி..”

“இதுவே பழையபாட்டாச்சுதே..இப்பத்தான்கேக்குறியள்”

“ஓமம்..ம்ம் நான் ஒடனேபஸ்ஸ்டான் போய் ஊருக்குப் போறன்” சொன்ன இளைஞன் டீக்காசுகொடுத்துவிட்டு நடந்தான் டீயைக் குடிக்காமலேயே..

அந்தப் பாடலைப் பற்றிச் சொல்லுமுன்…

**
”அஸ்ஸலாமு அலைக்கும்..

அலைக்கும் அஸ்ஸலாம்..”

“செளக்கியமா பாய்..”

“செளக்கியம்..சொல்லுங்கள்..”

“ராமாயணக் கதையை முழுக்கப்படம் எடுக்கறோம்..உங்களுக்குத் தெரிஞ்சுருக்கும்..”

“ஆமாம்..”

“அதுல ராவணன் அரசவைல்ல பாடற மாதிரி பாட்டு வருது”

“சரி”

”அதுக்கு ஒங்க தோஸ்த் மருத காசி கிட்ட பாட்டுக் கேட்டோம்”

“சரி” மெல்லப் புருவம் உயர்ந்தது

“அவர் சொன்னார்..அவரும் எழுதுவாராம்.. நீங்களும் எழுதணுமாம்..ரெண்டு பேருக்கும் வேறவேற மெட்டு..ரெண்டுல மிகச் சிறந்ததா இருக்கறத படத்துல உபயோகப் படுத்திக்கலாம்னு சொன்னார்.. பாய்..கோச்சுக்கப் படாது.. அவருக்கு என்ன பேமண்ட் தர்றோமோ அதையே உங்களுக்கும் தந்திடறோம்..ஆனா படத்துல வரலைன்னா கோபிச்சுக்கவும் கூடாது”

“இது என்ன..பிரம்மாண்டமா படம் எடுக்கறீங்க..அதுவும் உங்க இதிகாசத்த..சிறந்ததில் சிறந்தது வரணும்னு ஆசைப்படறதுல தப்பில்லையே.. ஸ்டூடியோக்கு நான் வரணுமா.. கொஞ்சம் உடல் நிலை சரியில்லையே..எப்போ வரணும்..”

“அந்த சிரமம் உங்களுக்கு வேண்டாம்..இதோ டேப்ரெகார்டர் கொண்டு வந்துருக்கோம்.. அதுல மெட்டு பதிஞ்சுக்கிட்டு வந்துருக்கோம்.. ஐயா கேட்டு எழுதித் தந்தீங்கன்னா ஸ்டூடியோ போய் ரிகார்ட் பண்ணிடுவோம்..”

“சரி..வந்தது வந்தீங்க.. நம்ம வீட்டு வெஜிடபிள் பிரியாணியைச் சாப்பிட்டுப்பாருங்க..”

“வெஜிடபிள் பிரியாணியா” வந்திருந்தவர்கள் புருவம் உயர்த்த கவிஞர் புன்சிரித்தார்.. “ ஆமாம் நான் வெஜிடேரியன் தான்.. நான்வெஜிடேரியனில்லை..”

வந்த பிரியாணிக்கும் கவிஞரின் மனம் போலே சுவை..

பின்னர் கவிஞர் எழுதிக் கொடுத்த பாடல் என்னாயிற்று..

அதைப் பார்க்குமுன் கவிஞர் யாரெனத் தெரிந்து கொள்ளலாம்..கவி கா.மு.ஷெரிஃப்..

தன்னைப் பற்றிஅந்த மகா கவிஞர் என்ன சொல்கிறார்..

சிந்தனை என்ற கலப்பை கொண்டு
செய்ய தமிழாம் நிலமதனை
வந்தனை செய்தே உழுதுழுது
வார்த்தை களென்ற எருவுமிட்டு
நிந்தனை யற்ற எதுகை மோனை
நீண்ட வரப்பும் எடுத்துக் கட்டி
அந்தம் மிகுந்த கவிதைப்பயிர்
ஆக்கும் ஏழைப் பாட்டாளி நான்.

மிகப் பழகுதற்கு எளியவர் கவி கா.மு ஷெரிஃப். கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாளர், பதிப்பக உரிமையாளர், அரசியல்வாதி, ஆன்மிகவாதி எனப் பன்முகத் தன்மை கொண்டவர். (1914-1994) முதலில் பாட்டெழுதிய படம் பொன்முடி. பின் மந்திரி குமாரியில் வாராய் நீ வாராய் போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய்.. மேலும் பாடல்கள் பார்க்குமுன்..

*

ராமாயணப் படத்திற்காக மெட்டுக்குப் பாட்டெழுதிக் கொடுத்தார் கவி.கா.மு.ஷெரீஃப்.. ஆனால் சம்பூர்ண ராமாயணத்தில் அது இடம்பெறவில்லை.. மருதகாசி ராவணனுக்காக எழுதிய வீணைக் கொடியுடைய வேந்தனே இடம் பெற்றது..கவிஞர் கோபமெல்லாம் கொள்ளவில்லை..எனக்குக் கிடைத்தால் என்ன என் நண்பன் பெற்றாலென்ன என்ற உயர் பண்பு.

பல வருடங்கள் கழிந்தன.. ஒரு தயாரிப்பாளர் கவி.கா.மு ஷெரீஃபிடம் வந்தார்..

“சொல்லுங்க”

“சிவனோட விளையாடல்கள் பற்றிப் படமெடுக்கிறோம்”

“சரி”

“எல்லாப் பாடல்களும் கண்ணதாசன் எழுதிட்டார்.. ஒரே ஒரு பாட்டு பாக்கி..”

“ம்ம்..அதுக்கு நான் எழுதணுமா”

“இல்லை நீங்க ஏற்கெனவே எழுதிட்டீங்க”

“ நானா..” வியந்தார் கவிஞர்..
“ஆமாம்..சம்பூர்ண ராமயணத்திற்காக ராவணன்பாடற மாதிரி இருக்கற பாட்டு..இங்கே எங்க படத்துல சிவன் பாடற மாதிரி இருந்தா நல்லா இருக்கும்”

:”சிவனடியான் பாடற பாட்ட சிவன் பாடறாரா..யா.அல்லாஹ்.. சரி”

வந்தவர் மகிழ்ந்தார்..”இன்னும் ஒன்று..”

“சொல்லுங்க”

“:இது சொல்லக் கஷ்டமா இருக்கு.. எல்லாப்பாட்டும் கண்ணதாசன் எழுதியிருக்கார்..இந்த ஒருபாட்டுக்கு ஒங்க பேர ப்போடறதுக்குப் பதிலா கண்ணதாசன் பேரையே போட்டுடலாம்னு எனக்கு ஒரு சின்ன எண்ணம்..”

“சின்ன எண்ணம் ம்ம்”

“நான் கண்ணதாசன் கிட்ட கேட்டுட்டேன்.. ஷெரீஃப் அண்ணனுக்குச் சரின்னா எனக்கும் சரின்னுட்டார்.. நீங்க தான் சொல்லணும்..”

“அதுக்கென்ன சரி.. என்னது இது..”

அழகாய் எவர்சில்வர் தட்டினில் பணக்கட்டுகள் கூடவே வெற்றிலை பாக்கு பழம்..

இந்தப் பாட்டுக்கான சன்மானம்..

“என்னங்க நீங்க..” கவிஞர் சிரித்தார்.. ஒரே பாட்டுக்குல்லாம் ரெண்டு தடவை சன்மானமா.. ம்ஹூம் வேண்டாம்..

ரெண்டு தடவையா..

ஆமா.. மொததடவையே வாங்கிட்டேனே அந்தத் தயாரிப்பாளர் கிட்ட.. ஸோ.. நீங்க பாட்டை உபயோகப் படுத்திக்குங்க படத்துல..அப்புறம் கண்ணதாசன் தம்பி பேரையே போட்டுக்கிடுங்க..பணம் நீங்களே வச்சுக்குங்க..

வந்தவர்கள் அதிர்ந்து பின் ஏதும் பேசாமல் வெளியேறினர்.

அந்தப் பாடல் திருவிளையாடல் படத்தில் இடம்பெற்ற”பாட்டும் நானே பாவமும் நானே”

//எந்த அளவுக்கு இந்தச் சம்பவம் உண்மை எனத் தெரியாது.. வலையிலும், நண்பர்களிடமும் கேட்டு அவர்கள் உண்மை என்று சொன்னதினால் எழுதியிருக்கிறேன்// அப்புறம் எழுதிய சம்பவங்களின் வர்ணனை எல்லாம் என் கற்பனை//

இதே சம்பவத்தை வைத்து சமீபத்தில் குமுதம் இதழில் சிறுகதை ஒன்றைச் சிறப்பாக எழுதியிருந்தார் கவிஞர் வைரமுத்து.. மார்க்கம் என்ற தலைப்பில்.. அதில் வரும் பாடலாசிரியரின் பெயர் கவி.அப்துல்லா..

*
டீக்கடையில் டீ அருந்திய இளைஞனின் மனதைத் திருந்த வைத்த பாடல் அன்னையின் ஆணை படத்தில் வரும்
பத்துமாதம் சுமந்திருந்து பெற்றாள்
பகலிரவாய் விழித்திருந்து வளர்த்தாள்
வித்தகனாய் கல்விபெற வைத்தாள்
மேதினியில் நாம் வாழச் செய்தாள்!

அன்னையைப் போலொரு தெய்வமில்லை - அவள்
அடிதொழ மறப்பவர் மனிதரில்லை, மண்ணில் மனிதரில்லை
துன்பமும் தொல்லையும் ஏற்றுக்கொண்டே நம்மை
சுகம்பெற வைத்திடும் கருணை வெள்ளம்!

நாளெல்லாம் பட்டினியாய் இருந்திடுவாள் - ஒரு
நாழிகை நம்பசி பொறுக்கமாட்டாள்
மேலெல்லாம் இளைத்திடப் பாடுபட்டே
மேன்மையாய் நாம் வாழச் செய்திடுவாள்!

வெகு எளிய வரிகள்..பெற்றெடுத்த அன்னையைப் பற்றி வெகு சிறப்பாகப் போற்றும் வரிகள் எளிதில் மறக்கவொண்ணாத வரிகள்..எனில் முழுதாய்க் கொடுத்திருக்கிறேன்..

கவி.கா.மு.ஷெரீஃபின் மற்ற பாடல்களும் எளிமை எளிமை தான்..அவரைப் போலவே..

சில பிரபலமான பாடல்கள்...இதைப் பார்த்தாலே தெரியும்..எவ்வளவு எளிய வரிகள் கொண்டவை என்று..

சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?
, வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா,
பணம் பந்தியிலே குணம் குப்பையிலே
நான் பெற்ற செல்வம் நலமான செல்வம்
ஏரிக்கரையின் மேலே போறவளே பெண் மயிலே
ஒன்றுசேர்ந்த அன்பு மாறுமா உண்மைக் காதல் மாறிப்போகுமா?
அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை,
பொன்னான வாழ்வு மண்ணாகிப் போமா
உலவும் தென்றல் காற்றினிலே

அதுவும் வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா..

இன்றும் எவ்வளவு பொருந்துகிறது..,
*
“கவிஞன் என்பவன் ஒரு தாய் மாதிரி பத்தியம் இருக்கணும்; ரசிகனை அவன் புள்ள மாதிரி நேசிச்சு எதைக் கொடுக்கணும், எதைக் கொடுக்கக் கூடாதுங்கிற பொறுப்புணர்வோட எழுதணும்” – இது கவி. கா.மு.ஷெரீப் சொன்ன முத்து.

எந்த நிலையிலும் யாரிடமும் போய் நிற்காதவர் கவிஞர்..வாழ்க்கையின் சவால்களை அதன் வழியிலேயே ஏற்றுக் கொண்டவர்..சிறந்து வாழ்ந்து அழகிய பல நூல்கள் படைத்து குணச்செம்மலாய் இருந்து மறைந்தவர்.கவி.கா.மு.ஷெரீஃப்.

*
என்ன பாடல் போடலாம்..

பெண்ணைப் பார்ப்பது மையல் கொள்வது எக்காலத்திலும் இருப்பது தான்..அது எல்லாருக்கும் புரியும் வண்ணம்பாடலில் கொண்டு வரவேண்டும்..

இந்தப்பாடலைக் கேட்டாலே தெரியும்..

தூக்கம் கண்ணைக் சொக்கக் கண்டேன்
தூங்கும் போது கனவு கண்டேன்..
கனவிலேயும் அந்தப் பெண்ணே
கண்ணெதிரே நிற்கக் கண்டேன்

வானில் முழு மதியைக் கண்டேன்
வனத்தினிலே பெண்ணைக் கண்டேன்..

(யார் நடிகர் நடிகையர் தெரியவில்லை/ க. நா. கோச்சுக்காதீங்க..)

வானில் முழுமதியைக் கண்டேன்… வனத்திலொரு பெண்ணைக் கண்டேன்,

https://youtu.be/8SoZcfZLAhA

*
அடுத்ததாக வரப்போகும் கவிஞர் பிறைசூடனுக்கு என்னாயிற்று..

இளையராஜா பாட்டிற்குப் பாட்டெழுத வேண்டும். மெட்டெழுதுவதற்குக் காஸெட் ஒரு நாள் முன்னமே வந்தாயிற்று.. ஆனாலும் ரெகார்டிங்கிற்காக டாக்ஸியில் கிளம்பி பாதி தூரம் போகும் வரை அவருக்கும் ஒன்றும் தோன்றவில்லை..அப்புறம் என்ன செய்தார்..

அடுத்த எபிசோட்ல சொல்றேனே..

அப்புறம் வாரேன் :)

chinnakkannan
11th September 2015, 01:49 AM
பாடினார் கவிஞர் பாடினார் – 9

*
ரொம்ப நாள் ஆனதினால recap மாதிரி போன அத்தியாயத்தின் இறுதிப் பகுதி

*
அடுத்ததாக வரப்போகும் கவிஞர் பிறைசூடனுக்கு என்னாயிற்று..

இளையராஜா பாட்டிற்குப் பாட்டெழுத வேண்டும். மெட்டெழுதுவதற்குக் காஸெட் ஒரு நாள் முன்னமே வந்தாயிற்று.. ஆனாலும் ரெகார்டிங்கிற்காக டாக்ஸியில் கிளம்பி பாதி தூரம் போகும் வரை அவருக்கும் ஒன்றும் தோன்றவில்லை..அப்புறம் என்ன செய்தார்..

*
இனி
*
தானானா தானேனா தான தானா…

கால் டாக்ஸி தான்.. கம்பெனி செலவு.. நல்ல ஏஸி.. குளிரக் குளிர பின்சீட்டிலும் அடித்தது..ஆனால் அதை மீறியும் கவிஞர் பிறைசூடனுக்கு வியர்த்தது..

எழுத வேண்டியது டூயட் பாடல்.. தானானா தானேனா தான தானா…

அரை மணி நேரம் தாண்டியவுடன் சட்டென்று யோசனை..

ஒரு டீக்கடையோரம் நிறுத்தப்பா

நிறுத்தினார் டிரைவர்..இறங்கி ஒரு டீ போடுங்க என்று கேட்கும் போதே கவிஞரின் நெற்றி முடிச்சுகள் இயல்பு நிலைக்கு வந்தன.. ஏனெனில் அந்தக் கடையில் ஒலித்த பாடல் தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா..

ஆஹா.. ஒரு பாடல் அவருடைய திரை வாழ்க்கைக்கான முதல் பாடலைப் பிரசவிக்கக் காரணமாயிருந்தது..

ட்ரைவர் பேப்பர் பேனா இருக்காப்பா

பேனா இருக்குங்க பேப்பர்..

டீக்கடைக்காரரே இருக்குங்களா..

இந்தாங்க கணக்கு எழுதற் நோட்புக் .. நீங்களே கிழிச்சுக்குங்க

கிழிக்காமல் மணி மணியாய் வரி வரியாய் வரிகள் பெஞ்சில் உட்கார்ந்தவாறே எழுதி விட்டார் முழுப்பாடலையும்..

தென்றல் தான் திங்கள் தான் நாளும் சிந்தும்
உன்னில் தான் என்னில் தான் காதல் சந்தம்
ஆடும் காற்று நெஞ்சில் தாளம் போட
ஆசை ஊற்று காதில் கானம் பாட
நெஞ்சோடு தான் வா வா வா கூட
*
இதைக் கிழிச்சுக்குவாங்க..

நீங்க யாரு..

கவிஞன்..சினிமாப் பாட்டுக்கு எழுதப் போறேன்..

டீக்கடைக் காரர் முகத்தில் புன்னகை.. நினச்சேன்..சூழ்நிலை வெயில் எதுவும் பொருட்படுத்தாம வேக வேகமா எழுதினீங்களே.. நல்லதுங்க..அந்த நோட்புக்ல நா எதுவும் பெரிசா எழுதலை.. நான் எழுதினதைக் கிழிச்சுக்கறேன்.. நீங்களே நோட் வச்சுக்கங்க..என்னைக் கொஞ்சம் நினைவும் வச்சுக்கங்க..அதென்னங்க இங்க்லீஷ்ல சொல்வாங்களே.. ஆல் தி பெஸ்ட் சார்..

ஒரு கணம் வியப்பு, மறுகணம் மகிழ்ச்சி..பரபரவென அவர் கேட்ட காகிதங்களைக் கிழித்துக் கொடுத்து நோட்புக்குடன் டாக்சி ஏறி ஸ்டூடியோ சென்று இசையமைப்பாளர் இளையராஜாவிடம் சென்று கொடுத்தால் படித்த ராசாவின் நெற்றிச் சுருக்கங்கள் முதலில் தோன்றி மெல்ல மறைய புன்னகை மலர..எங்கே என தனது டீம் ஐக்கூப்பிட்டு பாடச் சொல்லி… ரீ ரெகார்டிங்க் அன்றே அப்பொழுதே..

இப்படித் தான் ஆரம்பித்தது பிறைசூடனின் திரைப் பயணம்.. இருப்பினும் தொடர்ச்சியாக இல்லை..சற்றே பிடிவாதக் குணம் கொண்டவராம்..திரைப்பாடல்களில் ஆழ்ந்த ஞானம்..

இவரைப் பார்த்தது முதன் முதலில் கலைஞர் டிவியில் வந்த ஒரு இசை நிகழ்ச்சி..பாடலாம் டூயட் பாடலை.. ஒவ்வொருபாட்டுக்கும் அதன் சூழலை வெகு அழகாக விளக்கியிருந்தார்.பிறைசூடன்.
சில பல நல்ல பாடல்களுக்குச் சொந்தக் காரர்…
மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா – ராஜாதி ராஜா..ச்
என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேருமென்னடி – உன்னை நெனச்சேன் பாட்டுப் படிச்சேன் ( எனக்கு மிகப் பிடித்த பாடல்களில் ஒன்று)
சோலைப் பசுங்கிளியே – என் ராசாவின் மனசுல

கலகலக்கும் மணியோசை - ஈரமான ரோஜாவே
காதல் கவிதைகள் படித்திடும் நேரம் - கோபுர வாசலிலே
*
செம்பருத்தி ஆர்.கே செல்வமணியின் முதல், ரோஜாவின் முதல் படம் என நினைக்கிறேன்.. பானுமதியின் பேரன் பிரசாந்த்.. சோகமாய்ப்பாடும் பாடல் இவர் எழுதியது தான்..
*
நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி
படுத்தால் ஆறடிபோதும்
இந்த நிலமும் அந்த வானமும்
அது எல்லோருக்கும் சொந்தம்
அடி சொல்லடி ஞானப்பெண்ணே
உண்மை சொல்லடி ஞானப்பெண்ணே

இறக்கை உள்ள குஞ்சு இது
கூடு ஒண்ணும் தேவையில்லை
புத்தியுள்ள பிள்ளை இது
கெட்டு நிற்கப்போவதில்லை
தாயொருத்தி இருந்தா ஒரு தந்தை உண்டு கேளம்மா
தந்தை ஒண்ணு இருந்தா பெத்த பாட்டி இன்றி போகுமா
தெருவோரம் கிடந்தும் அநாதை இல்லை
உறவென்னை வெறுத்தால் தினம் தருவேன் தொல்லை
கெட்டாலும் பட்டாலும் உன் பேரன் தான்
என்னடி ஞானப்பெண்ணே - உண்மை
சொல்லடி ஞானப்பெண்ணே

ஆனைகட்டி போரடித்த அப்பன் சுப்பன் காணவில்லை
அன்று முதல் இன்று வரை அக்கரமும் வாழவில்லை
வெட்ட வெட்ட வாழைதான் - அது
அள்ளித்தரும் வாழ்வைத்தான்
வெட்டி போட்ட மண்ணு தான்
அதை கட்டிக்காத்தா பொண்ணுதான்
நாம் வாழும் வாழ்வே அது சிலகாலம் தான்
உறவோடு வாழ்ந்தால் அது பூக்கோலம் தான்
கெட்டாலும் பட்டாலும் உன் பேரன் தான்
என்னடி ஞானப்பெண்ணே - உண்மைபா
சொல்லடி ஞானப்பெண்ணே

https://youtu.be/7CIew1Q45LM

*
பாட்டியைப் பற்றி பேரன் நினைந்து பாடும் பாடல் வெகு அழகாக இருக்கிறது தானே..

இவர் பாட்டெழுதிய இன்னொரு அழகான பாடல் அதுவும் ப்ரஷாந்த் தான்.. கூட 36 வயது அப்போது ஆகாத ஜோதிகா..

ம்...ரசிகா ரசிகா என் ரசிக ரசிக பெண் ரசிகா
திரு ரசிகா ரசிகா எனை திருடி போன திரு ரசிகா

அதில் எனக்குப் பிடித்த வரிகள்:
உளி தேடல்கள் இல்லாமல் சிலையே இல்லை
விழி தேடல்கள் இல்லாமல் காதல் இல்லை

மழை தூறல்கள் தேடல்கள் மண்ணை தொடும்
மன வேர் தேடும் தேடல்கள் பெண்ணை தொடும்
தனக்குள்ளே ஓர் தேடல்கள் ஞானம் தரும்
பேனா மை கொண்ட தேடல்கள் கவிதை தரும்...

நமது தேடல்கள் தான் என்று முடிந்திருக்கிறது..எப்போதும் தொடர்ந்து கொண்டுதானே இருக்கிறதுவாழ்வின் இறுதிவரை..
https://youtu.be/qlBPPRGX_4U
சுஜாதா எஸ்.பி.பி படம் ஸ்டார்..

இன்னும் இவர் எழுத வேண்டும் என்பதே என் விருப்பம்..ம்ம்

(முற்றும்..தற்காலிகமாக)

chinnakkannan
11th September 2015, 01:52 AM
மேற்கண்டவை வெவ்வேறு காலகட்டத்தில் எழுதியவை...கொஞ்சம் சிலபலபுத்தகங்கள், சில வலைப்பூக்கள், சிறிதே சிறிது கற்பனை கலந்து எழுதிப் பார்த்தவை..சுவாரஸ்யக் குறைவின் அது என் தவறு தான்..

ஒரேயடியாகப் படித்தால் நன்றாக இருக்கும் என்பது என் எண்ணம்..அதனால் தானிட்டேன்.. வாசக தோஷஹ சந்தவ்யஹ..

இன்னும் நிறைய கவிஞர்கள் இருக்கிறார்கள்..இந்த முறை திரு.கோபால் சொன்ன வாமனன் திரைப்பாடலாசிரியர் புத்தகம் தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை..

பிறிதொரு சமயம் எழுத முயற்சிக்கிறேன்.. நன்றி..

chinnakkannan
11th September 2015, 02:14 AM
இந்த மீள்பதிவு இடுவதற்கு ஒரு காரணம் உண்டு....


-
வாழ்க்கையில் சில அவஸ்தையான தருணங்கள் தமிழில் அன்கம்ஃபர்டபிள் சிச்சுவேஷன்ஸ் எப்போதும் உண்டு.. உடல் உபாதையால் வரும் அவஸ்தையை விடுங்கள்…வேறு என்ன அவஸ்தைகள்..பெரிய லிஸ்டேபோடலாம்..

உன்னை அறிந்தால் உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் ..போன்ற பாடலகள் மனதிற்கு என்ன கொடுக்கின்றன....யா மோடிவேஷனல் தாட்ஸ்.. சற்று மனதை உயர்த்தி விடுகின்றன..உயர்த்தி? யெஸ் லிஃப்ட். செய்கின்றன தானே..அதுவும் இந்த லிஃப்டில் செல்லும் தருணங்கள் இருக்கிறதே..வெகுகுறுகிய நிமிடங்கள்..

உடன் வருவது யார் என்று தெரியாது..யாரும் புன்னகைக்கக் கூட மாட்டார்கள்..அதுவும் நேரத்தைப் பொறுத்து.. காலை நேரம் என்றால் என்னவோ உலகமே இவர்கள் தலையில் இயங்குவது போன்ற நினைப்பு..ஆணென்றால் டையை அட்ஜஸ்ட் செய்துகொண்டு லிஃப்ட் எண்களில் கண் இருக்கும்.. பெண் என்றால் என்னவோ கண்ணகியின் ஒன்று விட்ட அக்கா அல்லது தங்கை போல கொஞ்சம் ஒதுங்கி.. நீயார் நான்யார் என்று அலட்சியப்பார்வை..அலலது என்ன விதமான எண்ணங்கள் எனக் கண்டே பிடிக்க முடியாது..
ஒரு பெண் என்ன சொல்கிறாள்..

நீ யாரோ என்னவோ
தெரியாது..
நீ என்னைப் பார்க்கிறாயா..
நான் உன்னைப் பார்க்கவில்லை..
மேலிருக்கும் விளக்கில் எவ்வளவு தூசி..
நடுவில்
சரியாய் அழுத்திய
ஆறு புன்னகைக்க, ஓ
நீ எட்டா.
. நல்ல எண் இல்லையேப்பா..
கீழே பார்த்தால்
கறுப்பு ஷூ தான் சற்றே வெளுப்பாய்..
சோம்பேறியோ..
என்ன செண்ட் பார்ஷேவா பாய்சனா..
நம் மூச்சுக் காற்றுக்கள்
நட்புடன் சற்றுத் தள்ளியே கலந்து
ககன வெளியில் செல்கின்றன..

ஓரக்கண்ணால் நீலச்சட்டை எனத் தெரிகிறது..
கடங்காரா
தனியாக வந்திருந்தால்
கண்ணாடியில் முகம் திருத்தியிருப்பேன்..
லேசாய் முகம் பார்க்கையில்
கடுகடுவென இருக்கே..
ஆஃபீஸ்ல நல்ல டோஸா..
வேணும் உம்மணா மூஞ்சிக்கு..
டபக்கென லிஃப்ட் திறக்க
தொலைந்து போடா டெம்ப்ரவரி நண்பா..!


*

மனக் குதிரையைப் புல்மேயவிடாமல் ஷ்ஷீ வா பா பா எனக் கூப்பிட்டு சமர்த்தோன்னோ கொஞ்சம் பின்னால் ஓடுப்பா என வேலை வாங்கி பல வருடங்கள் பின்னால் சென்றால்…

மதுரை அபிராமி தியேட்டர்..அந்த ஹிந்திப் படம் .. ஹிந்திப் படமெல்லாம் வம்படியாய்ப் பார்க்க வைத்தது என் நண்பன் ரகுராமன்.. அழைத்துச் சென்ற படம் இது..அதற்குப் பிறகு அதே படத்தை க் குறைந்த பட்சம் இருபது தடவையாவது பார்த்திருப்பான் ஓரிரு வருடங்களில்.. ஏனெனில் அவன் அப்போது காதல் வயப்பட்டிருந்தான்..

அதில் வரும் லிஃப்ட் பாட்டு..

இளம் இளம் வாலிப கமலஹாசன்.. கொஞ்சம் ஷார்ப் மூக்கு ஷார்ப் கண்ணு ஷார்ப்… ம்ம் உடல் என இருந்த ரத்தி அக்னிஹோத்ரி..ஏக் துஜே கேலியே.. (ஹப்பா பாட்டுக்கு வந்தாச்சு..)

மேரே ஜீவன் ஸாத்தி ப்யார்கியே ஜாய் ஜவானி திவானி
கூப் சூரத் ஸித்தி படோசன் சத்யம் சிவம் சுந்தரம் பென்ஹர்..(ஓ இங்க்லீஷ்)

என அவன் பாடிப் பாடி எனக்கு மனப்பாடம் ஆகி விட்டது..! விடேண்டா என்று நழுவி ஓடியிருக்கிறேன்..

பாட்டு நன்றாகத் தான் இருந்தது சல்திகா நாம் காடி பர்திகா நாம் தாடி மேப்யார்கிஸிஸோ..ஹோகயே ஜானேமன் பந்தன் ..எனப் பாடும் போது விழுந்து விழுந்து கண்ணாடித் தம்ள்ர்களில் விழுந்த பனிக்கட்டிகளைப் போலக் குலுங்கிக் குலுங்கி ரத்திப்பெண் சிரிக்கும் சிரிப்பு.. அழகு தான்..

பாடலில் ஒன்ற முடிந்ததற்கு இன்னுமொரு காரணம் எஸ்.பி.பி.. படம் ஏக் து ஜே கேலியே..பாலச்சந்தர் டைரக்ஷ்ன்..


ஆனால் அந்தப் படத்தில் எனக்கு ஹம்தும் தோனோ ஜப் மில் ஜாயேங்கே பிடிக்கும் நயா இதி ஹாஸ் பனாயேங்கே எனப் பாடி நிறுத்தி இதுல ஏண்டா ஹார்ஸ் வருது அதுவும் இதி ஹார்ஸ்னா என்ன என ரகுவிடம்கேட்டு அவன் தலையில் அடித்துக் கொண்டு..ஹார்ஸ்லாம் இல்லை இதிஹாஸ்..இதிகாசம் நயா இதிகாஸ் புது இதிகாசம் எனச் சொல்லியிருக்கிறான்..!

லிஃப்ட் பாடல்கள் என்று பார்த்தால் விரல் தான் விட முடியும்..எண்ணுவதற்கு.. போன டிகேட் பஞ்ச தந்திரம் என்னோடு காதலென்று சொல்லி வைத்தது நீயா இல்லை நானா வில் கொஞ்சூண்டு லிஃப்ட் வரும்..பாடலிலும் வரும். பாடல் வெகுசுமார்..

தேரேமேரே பீச் மே.. மே ப்யார்கலி..சலாம், எல்லாம் நல்ல பாடல் ஏக்துஜே கேலியேவில்.. ஆனால் சிலமாதங்க்ளுக்கு முன் அதைப் பார்த்த போது ஏனோ முழுக்கப் பார்க்கத் தோன்றவில்லை..ஒருவேளை எனக்கும் ரத்திக்கும் வயதானது காரணமாய் இருக்கலாம்!

*

ஜெய்ஷங்கர் கே.ஆர்.விஜயாவா என்ன தெரியவில்லை ஒரு லிஃப்ட் பாடல் ஒன்று உண்டு..நினைவுக்கு வர மாட்டேன் என்கிறது :)

madhu
11th September 2015, 04:37 AM
ஜெய்ஷங்கர் கே.ஆர்.விஜயாவா என்ன தெரியவில்லை ஒரு லிஃப்ட் பாடல் ஒன்று உண்டு..நினைவுக்கு வர மாட்டேன் என்கிறது

https://www.youtube.com/watch?v=S4MOnllw4B4

eehaiupehazij
11th September 2015, 07:17 AM
என்ன சி க !
திடீரென்று வானம் மேகமூட்டத்தில் திரண்டு இடி மின்னலுடன் பெய்யெனப் பெய்யும் பருவமழையாக இதயங்களை குளிர்வித்து உங்களை நினைத்து உவகையில் நனைய வைத்து விட்டீர்கள்!! பாடினார் கவிஞர் பாடினார்....நாடினார் சிகவை நாடினார்.....
செந்தில்

https://www.youtube.com/watch?v=s5M5mQZNUuM

rajraj
11th September 2015, 07:34 AM
chinnakkaNNan: Old wine in a new bottle? Or 'pazhaiya kaLLu pudhiya mondhaiyil" ?
I don't drink. Just joking ! :)

eehaiupehazij
11th September 2015, 07:40 AM
LULLABY CASTLES IN THE AIR!

அம்சதூளிகா மஞ்சங்கள் !
தாலாட்டுத் தூரிகளும் தவழும் தொட்டில்களும் !!


பால் மணக்கும் பருவத்தில் பட்டாடை தொட்டிலிலே சிட்டுப் போல் கிடந்த அனுபவம் பெரும்பாலும் வளர்ந்தவுடன் நாம் மறந்து விடுவோம்! ஆனால் நமது கண் முன்னே பச்சிளம் குழந்தைகள் தொட்டிலில் கிடத்தப் பட்டு செவ்வாயில் வடியும் ஜொள்ளுடன் காற்றிலே கைகால் அசைத்து அவை மிழற்றுவதைக் கண்ணுறுகையில் அந்தக் குழந்தையாக நாம் மாறி விடக்கூடாதா என்று ஒரு ஏக்கம் மனதில் நிரவிப் பரவும் அனுபவம் நம் எல்லோருக்குமே கிடைத்திருக்கும் !!

தூரியில் கிடக்கும்போது வெளியில் நடப்பது தெரியாது வாயில் விரலை அல்லது பீடிங் பாட்டில் ரப்பரை வைத்து சப்பிக் கொண்டு அன்னையின் ஆனந்தத் தாலாட்டில் காலாட்டிக் கொண்டே தூங்கியிருப்போம் !

பிறக்கும்போதே வெள்ளி ஸ்பூனுடன் பிறந்திருந்தால் அம்சதூளிகா மஞ்சங்களான ஆடும் தொட்டில்களில் உருண்டு புரண்டு உறங்கி மகிழ்ந்திருப்போம் !
துரியோ தூளியோ கட்டிலோ மஞ்சமோ ....தாலாட்டுக் கேட்டுத் தூங்குவதற்கும்....நனைத்து வைப்பதற்குமே!!

தூங்கி எழுந்து சிணுங்கும்போது ஓடோடி வந்து அள்ளியெடுத்து அணைத்து உச்சிமுகரும் அன்னையின் ஸ்பரிசம் ஆனந்த அனுபவமே!

ஆடும் தொட்டிலும் அம்சதூளிகா மஞ்சமும் : உத்தம புத்திரன் Silver Spoon விக்கிரமன் Finger Linger பார்த்திபன்!

https://www.youtube.com/watch?v=bRHVR0yKWM8

சீமான் வீட்டுச் செல்வச் செழிப்பில் தாலாட்டி சீராட்டப்படும் செல்வங்கள் !
https://www.youtube.com/watch?v=0Ded74fqkOA
சிலசமயங்களில் முழங்கால் மடித்து மல்லாந்து குழந்தையை கால்களில் தாங்கி தாலாட்டும் சுகமும் அலாதியே !
https://www.youtube.com/watch?v=c8UIq19_dY4
பாசமலர்கள் தாலாட்டிய தொட்டில்கள் !
[url]https://www.youtube.com/watch?v=Lp3ASBROf2U

தூளியிலே ஆடவந்த வானத்து மின்விளக்கே..
https://www.youtube.com/watch?v=ntCDZdRA1iA

madhu
11th September 2015, 07:49 AM
சி.செ.ஜி... உங்க பதிவைப் படித்து விட்டேன். ஒருவேளை நீங்க பாடல்களின் லிங்க் கொடுக்கும் முன் தாலாட்டில் தூங்கினாலும் தூங்கிடுவேன் என்றுதான் என் பாராட்டுகளை இப்போதே பதிந்து விட்டேன். உத்தம புத்திரனில் ரெண்டு வகை தாலாட்டும் உண்டல்லவோ... ( பூமரத்து நிழலும் உண்டு.. தங்க மணித் தொட்டிலுண்டு :) )

https://www.youtube.com/watch?v=bRHVR0yKWM8

vasudevan31355
11th September 2015, 07:55 AM
சின்னா!

மீள்பதிவாய் இருந்தாலும் 'பாடினார் கவிஞர் பாடினார்' பதிவுகளை படித்து ரசித்துக் கொண்டிருக்கிறேன். கிளப்பும்.

RAGHAVENDRA
11th September 2015, 08:01 AM
சினா கனா சார்
மீள்பதிவாயிருந்தாலும் மீள்நினைவூட்டுகிறதே.
படிக்கப் படிக்க சுவையாக உள்ளது.

இதோ உங்களுக்காக

https://www.youtube.com/watch?v=6JdqGWDyHNw

vasudevan31355
11th September 2015, 08:12 AM
மதுண்ணா!

நீங்கள் அளித்த ஸ்பெஷல் பாட்டுக்கு நன்றி!

'ஜிம்கானா ஜிம்கானா எனக்குள் உண்டு
தம் மேரா தம்மெல்லாம் எனக்கும் உண்டு'

'ஜிம்கானா'தான். 'அதில் சந்தேகமென்ன?' என்று பாலையா பாணியில் கேட்டு விட வேண்டியதுதான். ஏகப்பட்ட தவறுகள் இணையத் தகவல்களில் கொட்டிக் கிடக்கின்றன.

ஒரு சந்தேகம். தேவர் பிலிம்ஸ் படங்களில் ஆரம்ப காலத்தில் ஈஸ்வரி சில படங்களில் பாடியிருக்கிறார். ('அக்கா தங்கை' படத்தில் கூட மாறி வரும் சொசைட்டி ஈஸ்வரிக்கு உண்டு). ஒரு காலகட்டத்திற்கு பின் அவர் தேவர் பிலிம்ஸ் படங்களில் பாடவில்லையே. காபரே பாடல்கள் கூட சுசீலாவுக்குத்தான் தரப்பட்டது. இத்தனைக்கும் பெரும்பாலும் சங்கர் கணேஷ் ம்யூசிக் வேறே. ஈஸ்வரிக்கும் தேவர் பிலிம்ஸு க்கும் ஏதாவது பிரச்னையா?

vasudevan31355
11th September 2015, 08:55 AM
மதுண்ணா, ராகவேந்திரன் சார்,

உங்களுக்கு என்னுடைய பதில் ஸ்பெஷல் பாடல். நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும். அப்படியே ஒரு சந்தேகமும்.

http://shakthi.fm/album-covers/ta/d8eba9ce/cover_m.jpg

'இறைவன் இருக்கின்றான்' என்று ஒரு படம் உங்களுக்குத் தெரியும். 'இறைவன் இருக்கின்றா(னா)ன்' என்றாலே 'அவன் பித்தனா' எஸ்.எஸ்.ஆரும், விஜயகுமாரியும்தான் அனைவரின் மைண்டில் செட் ஆகியிருப்பார்கள். இப்படி ஒரு படம் இருப்பதே ரொம்பப் பேருக்குத் தெரியாது.

இந்தப் படத்தில் டி.எம்.எஸ் பாடிய மிக அருமையான பாடல் ஒன்று. தேவர் பிலிம்ஸ் 'நீலமலைத் திருடன்', அப்புறம் 'நேர்வழி' பாணியில் 'டொக் டொக்' என்று குளம்புகளின் ஒலிப் பின்னணியில் ஒலிக்க, குதிரையில் நாயகன் பாடி வரும் பாடல். வீர உணர்ச்சியை சிறுவனுக்கு ஊட்டும் பாடல்.

அட ராஜாப் பயலே தெரிஞ்சுக்கடா
நீ வளரும் பிள்ளையடா
ஒரு ரகசியம் சொல்வேன் புரிஞ்சக்கடா
உன்னை வெல்பவன் இல்லையடா
அன்பும் பண்பும் கண்டால் அங்கே பணிந்து செல்
கொடுமை புரியும் மனிதன் என்றால் துணிந்து நில்

(அட ராஜாப்)

வாழையைப் போலே தலை குனியாதே
கோழையைப் போலே பயந்து விடாதே
வஞ்சத்தை எதிர்த்து நெஞ்சத்தை நிமிர்த்து
மானத்தை மதித்து காலத்தை நடத்து
எதுவும் இறைவன் விதிதான் என்று நினைப்பதேன்
செயலும் நினைவும் தெளிவாய் இருந்தால் கலக்கமேன்

(அட ராஜாப்)

நமக்கொரு காலம் நாளை உண்டு
இருவரும் நடக்கும் பாதை ஒன்று
பரம்பரை வீரம் பாலுடன் கலந்து
தாய் கொடுத்தாலே மடியினில் சுமந்து

இப்போ சிறுவனுக்கு ஒரு பெண் பாடகியின் குரல் மிக மிக அற்புதமாக ஒலிக்கும். குரல் யாரு? வசந்தா அல்லது எல்.ஆர்.அஞ்சலி அல்லது வேறு யாராவதா? அந்தக் குரல் அவ்வளவு அற்புதம். இன்னும் கொஞ்சம் வராதா என்று ஏங்க வைக்குதே.

அன்பும் பண்பும் கண்டால் அங்கே பணிந்து செல்
கொடுமை புரியும் மனிதன் என்றால் துணிந்து நில்
அன்பும் பண்பும் கண்டால் அங்கே பணிந்து செல்
கொடுமை புரியும் மனிதன் என்றால் துணிந்து நில்

அம்சமான பாடல். பாடலர் திலகத்தின் குரலுக்குத்தான் ஈடேது?

இந்தப் பாடலைக் கேட்கும் போது,

'பட்டம் விட்டது போலே பறக்குதம்மா உன் மேலாடை
குடை ராட்டினம் போலே சுற்றுதம்மா உன் பாவாடை'

பாடல் தானாக காபகத்திற்கு வருகிறதே. ஏன்?:)

அப்புறம் இன்னொன்று. இணையத்தில் ஏகப்பட்ட தவறுகள். 'இன்பமிங்கே' வெப் சைட்டில் இந்தப் படத்தில் 'எந்தன் தேவனின் பாடல் என்ன' என்ற 'பொன் மகள் வந்தாள்' படப் பாடலைப் போய் சேர்த்து வைத்திருக்கிறார்கள். என்ன கொடுமை இது?

'அழகே உன் பெயர் தானோ' இந்தப் படமா?

இப்படத்தைப் பற்றிய இதர விவரங்களை அறிய ஆவலாய் இருக்கிறேன். ம்....வீடியோ எப்போ பார்க்குறது?:???:

http://www.inbaminge.com/t/i/Iraivan%20Irukkindraan/Azhage%20Un%20Peyarthaano.vid.html

RAGHAVENDRA
11th September 2015, 09:14 AM
இப்போ சிறுவனுக்கு ஒரு பெண் பாடகியின் குரல் மிக மிக அற்புதமாக ஒலிக்கும். குரல் யாரு? வசந்தா அல்லது எல்.ஆர்.அஞ்சலி அல்லது வேறு யாராவதா? அந்தக் குரல் அவ்வளவு அற்புதம். இன்னும் கொஞ்சம் வராதா என்று ஏங்க வைக்குதே.

வாசு சார், அது சசிரேகாவின் குரல்.

மற்ற விவரங்கள் அந்த இணைய தளத்தில் உள்ளன. பாடல்களைப் பற்றிய விவரங்கள் சரியில்லை. என்றாலும் படத்தைப் பற்றிய விவரங்கள் பெரும்பாலும் சரியாகவே உள்ளன. மேலும் இப்படத்தைப் பற்றிய விவரங்கள் பின்னர் முயற்சிக்கிறேன்.

chinnakkannan
11th September 2015, 10:14 AM
மதுண்ணா.. கரெக்டாக நூல் கொடுத்தால் புடவை நெய்து விடுகிறீர்கள்.. யெஸ்.. நிலவே நீசாட்சியான்னு டவுட்டா வேறு இருந்தது.. நீ நினைத்தால் இந்நேரத்திலே ஏதேதோ நடக்கும் பாடலுக்கு தாங்க்ஸ்..

சி.செ. மிக்க நன்றி.. போட்ட பாட்டு தான் கொஞ்சம் இடிக்கிறது..! உருகுதேக்காக ப்போட்டீர் எனத் தெரிகிறது..துன்பமா ஓய்..! :)

ராஜ் ராஜ் சார். ரொம்ப தாங்க்ஸ் :)

வாசு… மிக்க நன்றி.. நேரம்கிடைக்கும் போதுமுழுக்கப் படித்துச் சொல்லவும்..

ராகவேந்தர் சார்.. எனக்கு மிகவும் பிடித்த பாடல்.. தொடருக்கு டைட்டில் வைக்க வேண்டும் என நினைத்தால் இந்தப் பாட்டு தான் நினைவில் வந்தது..பின் போட்டுக் கேட்டால் வெகு வித்தியாசமாக இருந்தது..இதுபற்றிக் கேட்டதில் முரளி தான் ந.தியின் வெளிவராத படத்திலிருந்து எனச் சொன்னதாக நினைவு..ஒரு வெகுஅழகான பாடல்.. ஒலிப்பதிவிலேயே நின்று விட்டது கஷ்டம் தான்.. மிக்க நன்றி..

அட ராஜாப் பயலே தெரிஞ்சுக்கடா.. பாடல் முன்பு கேட்டது நினைவில்..பட் இந்த லிங்க்கில் வரவில்லை.. நன்றி வாசு..

chinnakkannan
11th September 2015, 10:17 AM
தாலாட்டு பிள்ளை எனை த் தாலாட்டு

தாலாட்டு மாறி ப் போனதே

ம்ம் யாரோ பாடின ஆரீ ரோ...ஆரா ரோ...என்ற ஐ ஓப்பனர் பாட்டும் நினைவுக்கு வருகிறது :)

rajeshkrv
11th September 2015, 10:30 AM
ஜி! வணக்கம். எங்கே காணவே காணோம்? பிஸியா? நலம்தானே! தலையை காண்பித்து வாலைக் காண்பித்து பின் காணாமல் போய் விடுகிறீர்களே! கியா சமாச்சார்?:)

அப்படியெல்லாம் இல்லை .. கொஞ்சம் பெர்ஸனல் வேலைகள் அதனால் தான் வர இயலவில்லை

வரேன் ஆனால் வரல ... ஹி ஹி

chinnakkannan
11th September 2015, 11:20 AM
தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படும் கிராமம்..இன்னும் ஒரு செயலில் கொந்தளித்து ஆளாளுக்குக் கிளம்ப
ஒரு குடிசையிலிருந்து சீறிப்பாயும் தேன்குரல்..தாலாட்டு தான்.. சொல்லும் செய்திகள் எத்தனை..
கொந்தளிக்கும் அனைவரும் அடங்கி அவரவர் வீட்டுக்குச் செல்வர்..

தண்ணீர் தண்ணீர்.. சுசீலாம்மாவின் குரல் அப்படியே உலுக்கும்.. இப்போது கேட்டாலும் குட்டியாக
ஒரு சோகம் மனதோரம் எட்டிப் பார்க்கிறது..

*


கண்ணான பூமகனே கண்ணுறங்கு சூரியனே
கண்ணான பூமகனே கண்ணுறங்கு சூரியனே
கண்ணுறங்கு சூரியனே

ஆத்தா அழுத கண்ணீர் ஆறாக பெருகி வந்து
தொட்டில் நனைக்கும்வரை உன் தூக்கம் கலையும்வரை
கண்ணான பூமகனே கண்ணுறங்கு சூரியனே
கண்ணுறங்கு சூரியனே

ஊத்துமலை தண்ணீரே என் உள்ளங்கை சக்கரையே
நீ நான் பெத்த தங்கரதம் இடுப்பிலுள்ள நந்தவனம்
காயப்பட்ட மாமனின்று கண்ணுறக்கம் கொள்ளவில்ல
சோகப்பட்ட மக்களுக்கு சோறு தண்ணி செல்லவில்ல
ஏகப்பட்ட மேகமுண்டு மழை பொழிய உள்ளமில்ல


https://youtu.be/XqLqdUMAPmA

chinnakkannan
11th September 2015, 11:28 AM
தென்பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலே
யாரடிச்சாரோ... நாயகன் இளைய ராஜா குரல்

*

பெண்ணாகப்பிற்ந்தவர்க்கு கண்ணுறக்கம் இரண்டுமுறை
பிறக்கையில் ஒரு தூக்கம்
இறக்கையில் மறு தூக்கம்
இப்போது விட்டுவிட்டால் எப்போதும் தூக்கமில்லை
என்னினிய கண் மணியே கண்ணுறங்குகண்ணுறங்கு..

சித்தி..பத்மினி..சுசீலாம்மா.

*

இன்னொரு தாலாட்டுப் பாட்டு..தன் மனதில் பதிந்த சின்னம்மாவிற்கு - எஜமானியம்மாவிற்குப் பாடுவது..

தாலாட்டுப் பாடி தாயாக வேண்டும்
தாளாத என்னாசை சின்னம்மா - வெகு
நாளாக என்னாசை சின்னம்மா..

http://yourlisten.com/kethikanth/thalattu-padi-thayaga-vendum-thalatha-ennasai-chinnamma

chinnakkannan
11th September 2015, 11:40 AM
மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா..வால்டர் வெற்றிவேல் உமா ரமணன்..

கற்பூர பொம்மை ஒன்று

அழகு நிலவே கதவு திறந்து - பவித்ரா

அழகுக் குட்டிச் செல்லம் - சத்தம் போடாதே..

இந்தப்பச்சைக் கிளீக்கொரு செவ்வந்திப் பூவில் தொட்டிலைக் கட்டிவைத்தேன்..


*

ஆலாய்ப் பறந்தே அழுதே ஆர்ப்பரித்து
...அடமாய் வாயை மூடியே திறக்காமல்
ஓல மெனவே உதட்டை குவித்துத்தான்
..ஒலித்தே கண்ணீர் கன்னத்தில் விடுமழலை
சேலாள் பதறி கொஞ்சி அமுதூட்ட
..சேயும் குடித்தே சற்றே கண்சொருக
நாலா புறமும் நடந்தே தோளிலிட்டு
..நங்கை பாட மூடி உறங்கிடுமே..

ஆரடிச்சு நீ அழறே அடிச்சாரைச் சொல்லியழு..ம்ம் இந்த வரி மட்டும் மாறாது என நினைக்கிறேன்..வேண்டுமானால் மொழி மாற்றம் கொள்ளும்..

https://youtu.be/yv0SgMnOQas

chinnakkannan
11th September 2015, 11:57 AM
ரொம்ப நாளாக இறந்து போன அண்ணனை நினைத்து இந்தப் பெண் பாடுவதாக நினைத்திருந்தேன். படம் பார்த்த போதும் அப்படியே (தெய்வத்தின் தெய்வம்) இன்று முக நூலில் ஒருவர் எழுதியிருந்ததைப் படித்த பிறகு தான் கொஞ்சம் புரிந்தது.. பாட்டைப் பார்த்த பிறகும்.. ( தாலியைத் தொட்டு பாடுகிறார் வி.கு.அதாவது எஸ் எஸ் ஆரை நினைத்தே).. அந்த வகையில் இந்தப் பாடலின் மீது ஈர்ப்பு இன்னும்கூடுகிறது..


இந்தப் பாடலை இனிய நண்பர் பாவலர் நாவலர் நெய்வேலி வைரம- யார் எந்தப் பாட் கேட்டாலும் வாரி தகவல்கள் பக்கெட்கள் வழங்கும் வள்ளல்,இதுவரை விஜயகுமாரி பாடல் கொடுக்கிறேன் கொடுக்கிறேன் என்று ஏமாற்றிய காளை - அண்ணன் வாசு தேவனுக்கு வழங்குகிறேன்.. (பாட் ஸ்பான்ஸர் ட் பை சி.செ,மது, ராகவேந்த்ரா, ராஜ்ராஜ் (பின்ன எனக்கு சப்போர்ட் வேணாமா :) )

https://youtu.be/FMwt_ANhryY

JamesFague
11th September 2015, 11:58 AM
From Facebook

இசைஞானி புதுமைகள் 28 !
1. ஒரு பாடலை உருவாக்க வெளிநாட்டு பயணமோ, அழகான லொகேஷன்களோ, வார அல்லது மாதக்கணக்கில் நேரமோ இளையராஜாவுக்குத்
தேவைப்பட்டதில்லை. தென்றல் வந்து தீண்டும்போது... என்ற பாடலை உருவாக்க இசைஞானி எடுத்துக் கொண்டது வெறும் அரை மணி நேரம்தான்.
2. இளையராஜா வெறும் அரைநாளில் மொத்த ரீரிகார்டிங்கையும் செய்துமுடித்த படம் ''நூறுவாது நாள்"
3. சிகப்பு ரோஜாக்கள் படத்திற்கான ரீரிகார்டிங்கிற்கு ஆன மொத்த செலவு வெறும் பத்தாயிரம்.. மூன்றே நாளில் வெறும் ஐந்தே ஐந்து இசைக்கலைஞர்களை கொண்டு அந்த படத்திற்கு இசை சேர்க்கப்பட்டது
4. எல்லோரும் இசையை வாசித்துதான் காட்டுவார்கள். ஆனால் ராஜா மட்டும்தான் இசையை 'பக்கா' நோட்ஸாக இசைக் கலைஞர்களுக்கு எழுதியே கொடுப்பவர். அவர் நோட்ஸ் எழுதும் வேகம் பார்த்து சர்வதேச இசை விற்பன்னர்களே மிரண்டு போனது வரலாறு.
5. அமிர்தவர்ஷினி என்ற மழையை வரவழைப்பதற்கான தனித்துவமுடைய ராகத்தை ஒரு கோடைப்பொழுதின் பிற்பகலில் "தூங்காத விழிகள்
ரெண்டு" பாடலை அமைத்து மழையையும் வரவழைத்தவர் இசைஞானி
6. பாடலின் மெட்டும் அதற்கான 100% orchestration ஐயும் ஒருவரே செய்யும்போது கிடைக்கும் அத்தனை முழுமை! அத்தோடு ஒவ்வொரு வாத்தியத்தையும் வித்தியாசமாய் கையாளும் ஆளுமை மற்றும் பாங்கு, அதுவும் மற்றவர்களிடமிருந்து இவரை வேறுபடுத்திக்
காட்டுகிறது
7. இசைஞானி தான் முதல்மிறையாக ரீதிகௌளை என்ற ராகத்தை சினிமாவில் பயன்படுத்தினார் ."கவிக்குயில்" என்னும் படத்தில் "சின்ன
கண்ணன் அழைக்கிறான்" என்ற பாடல்தான் அது.
8. Counterpoint என்ற யுக்தியை சர்வதேச இசையின் நுட்பங்களை இசைஞானி சிட்டுக்குருவி படத்தில் இடம்பெற்ற "என் கண்மணி" என்ற பாடலில் பயன்படுத்தி வெற்றி கண்டவர்.
9. இந்தியத் திரை இசையில் காயத்ரி என்ற படத்தில்தான் முதன் முதலாக இசைஞானி "எலெக்ட்ரிக் பியானோ" உபயோகபடுத்தினார்.
10. இசைஞானி செஞ்சுருட்டி ராகத்தில் இசையமைத்த ஒரே பாடல் ஆட்டுக்குட்டி முட்டையிட்டு.
11. உலகில் வேறு எந்த இசையமைப்பாளரும் முயற்சி செய்திருக்கவே முடியாத விஷயம்., ஓர் இசையமைப்பாளர் ஏற்கனவே இசையமைத்து,
பாடல் வரிகள் எழுதப்பட்டு, படமாக்கப்பட்டு, அந்த சவுண்ட் ட்ராக்கை அப்படியே நீக்கிவிட்டு, அந்தக் காட்சியை மட்டும் அப்படியே வைத்துக்கொண்டு, உதட்டசைவு, உடலசைவு, காட்சித்தேவை அனைத்துக்கும் பொருத்தமாக புதிய இசையை எழுதி வியப்பின் உச்சிக்கு நம்மை அழைத்து சென்றவர் இசைஞானி ( ஹேராம் )
12. முன்பெல்லாம் பின்னணி இசைச்சேர்ப்பில் ஒரு ரீல் திரையிட்டு காண்பித்ததும் இயக்குனரோ மற்றவர்களோ இசையமைப்பாளரிடம் வந்து அமர்ந்து அந்த படத்தில் வந்ததுபோல போடுங்கள், இந்த படத்தில் வந்தது போல போடுங்கள் என்றெல்லாம் சொல்லிப் பின் இசைச்சேர்ப்பு முடிந்து, அது சரியில்லாமல் மறுபடி இசையமைப்பாளரே வேறு மாதிரி இசை சேர்ப்பார். ஆனால் இளையராஜாவிடம் அப்படி இல்லை. ஒரு ரீல்
திரையில் பார்த்தால் போதும் உடனே இசைக்குறிப்புகளை எழுத ஆரம்பித்து விடுவார். அதை வாசித்தாலே போதும். இப்படி வேண்டாம்,
வேறுமாதிரி போடுங்கள் என்று சொல்வதற்கான வாய்ப்பே இருக்காது.
13. இந்தியாவில் அல்ல ஆசியாவிலே முதன் முறையாக சிம்பொனி இசை அமைத்தவர் இசைஞானி, சிம்போனி கம்போஸ் பண்ண குறைஞ்சது
ஆறு மாசமாவது ஆகும். வெறும் 13 நாளில் மற்ற கம்போஸர்களை மிரள செய்தவர் இசைஞானி.
14. விசிலில் டியூன் அமைத்து அதை ஒலினாடாவில் பதிவு செய்து பின்பு பாடகரை வைத்து பாடிய பாடல் "காதலின் தீபம் ஒன்று".
15. படத்தின் கதையை கேட்காமல் பாடலுக்கான சூழ்நிலைகளை மட்டும் கேட்டு இசையமைத்த ஒரே படம், "கரகாட்டக்காரன்".
16. வசனமே இல்லாத காட்சியில் கூட, அந்த காட்சியை இசையால், மௌனத்தால் செழுமைபடுத்தி பார்வையாளர்களுக்கு கொண்டு போய்
சேர்க்க முடியும் என்பது ராஜாவிற்கு நன்றாக தெரியும். அதில் ராஜா கிரேட். இரண்டு பேர் மௌனமாக இருக்கும் காட்சியாக இருந்தால் கூட, அவர்களின் மன உணர்வுகளை கூட புரியாதவர்களுக்கும் புரிய வைத்துவிடுவார் ராஜா. அந்த அற்புதமான ஆற்றல் இளையராஜாவிற்கு உண்டு. இந்திய சினிமாவில் பின்னணி இசையில் நம்பர் ஒன் ஜீனியஸ் இளையராஜா.
17. ராஜா சார் ரீ-ரெக்கார்டிங் பண்றதுக்கு முன்னாடி ஒரு முறைக்கு இரண்டு முறை படத்தை பார்ப்பார், மூன்றாவது முறை படம் திரையில் ஆரம்பிக்கும்போது நோட்ஸ் எழுத ஆரம்பிச்சிடுவார், அவர் ஆரம்பிச்சு முடிக்கும்போது படம் கரெக்டா முடியும். அந்த அளவுக்கு எந்த இசையமைபாளராலும் நோட்ஸ் எழுத முடியாது.
18. இந்தியாவிலேயே பின்னணி இசை கேசட்டாக வந்து ஹிட்டான ஒரே படம் ‘பிள்ளை நிலா’
19. பருவமே புதிய பாடல் பாடு என்ற பாடலுக்கு தொடையில் தட்டி தாளத்திற்கு புதிய பரிமாணத்தை கொடுத்தவர் இசைஞானி
20. இந்தியாவில் முதல் முறையாக சிறந்த பிண்ணனி இசைக்கான விருதை வாங்கியவர் இசைஞானி ( பழசிராஜா )
21. இசைஞானி முதன் முதலாக 'ஸ்டீரியோ'' முறையில் பாடல்களை பதிவு செய்த படம் பிரியா.
22. 137 வாத்தியங்கள் பயன்படுத்தப்பட்ட பாடல் "சுந்தரி கண்ணால் ஒரு சேதி"
23. இசைஞானியின் பாடலுக்காக கதை எழுதிய வெற்றிக்கண்ட படங்கள் "வைதேகி காத்திருந்தால்", "அரண்மனைக்கிளி".
24. இந்தியாவுக்கு கம்ப்யூட்டர் இசையை அறிமுகப்படுத்தியவர் இசைஞானி ( புன்னகை மன்னன் )
25. “பஞ்சமுகி” என்றொரு ராகம் நமது ராகதேவனால் இயற்றப்பட்டுள்ளது.. ஆனால் இதுவரை அவர் இந்த ராகத்தினை எந்த பாடலிலும் பயன்படுத்தாமல் ரகசியமாக வைத்துள்ளார்..
26. பொதுவாக 2 அல்லது 3 நாட்களிகல் படத்திற்கான இசையமைப்பை முடித்துவிடுவார் ராஜா, ஆனால் அதிகபட்சமாக, அதாவது 24 நாள் பின்னணி இசைகோர்ப்புக்காக எடுத்துக்கொண்ட படம் ( காலாபாணி ) தமிழில் ( சிறைச்சாலை )
27. முன்பெல்லாம் கிட்டார், தபேலாக் கலைஞர்கள் உதவியுடன் ஆர்மோனியத்தை இசைத்து டியூன் உருவாக்குவார். அதற்கு பிறகு ஆர்மோனியத்தில் வாசித்துப் பார்ப்பதில்லை, கண்களை மூடிச் சிந்திப்பார், இசை வடிவங்கள் அவர் மூளையில் இருந்து புறப்படும். அவற்றை அப்படியே இசைக் குறிப்புகளாக எழுதிவிடுவார். ஆர்மோனியம் இல்லாமல் இசை அமைக்கும் இந்த ஆற்றல், இந்திய சினிமா இசை
அமைப்பாளர்களில் இவரிடத்தில் மட்டுமே இருக்கிறது என்பது பிரமிப்பான உண்மை.
28. ராஜா இசை வித்தகர் மட்டுமல்ல... அற்புதமான கவிஞர். காவியக் கவிஞர் வாலிக்கே வெண்பா கற்றுக் கொடுத்தவர். அதனால் ராஜாவை தனது 'குரு' என்றும் கூறி மகிழ்ந்தவர் வாலி.

eehaiupehazij
11th September 2015, 11:58 AM
நான் பெற்ற செல்வம் நலமான நலமான செல்வம் .....பிஞ்சும் தூங்கிட வாஞ்சை மிஞ்சும் கண்களுடன் நடிகர்திலகத்தின் தொட்டிலாட்டம்!

https://www.youtube.com/watch?v=jcfAofXtCVM

Enjoy the animated lullaby song....not to miss category!

மூன்றாம் பிறையில் தொட்டில் கட்டி ...வாவ்!

https://www.youtube.com/watch?v=ors5PkvHGwk

chinnakkannan
11th September 2015, 12:11 PM
பதின் மூன்றோ பதினான்கோ வருடம் தவம் கிடந்து பெற்ற மகள் ஆறாவதோ ஐந்தாவதோ வயதில் மரித்த ஒரு மிகப்பெரிய சோகம் சித்ராவிற்கு.. மறக்கவும் இயலாது..தாலாட்டைத் தேடியதில் கிடைத்தது அவரின் இந்த மனமுருக்கும் சோகத் தாலாட்டு..

https://youtu.be/tCXi4tPumjI

chinnakkannan
11th September 2015, 12:13 PM
கோபு 1954 - தங்களது பார்வையிடல் விருப்பங்கள் சரி தமிழிலேயே சொல்கிறேன் லைக்ஸ் எங்களுக்கு மிகப் பெரிய சப்போர்ட்...கொஞ்சம் வந்து நீங்களும் எழுத வேண்டும் என்பது எங்களது எல்லோரின் ஆசையும்

eehaiupehazij
11th September 2015, 12:18 PM
கட்டிலின் மேலேயே தொட்டிலும் !
அத்தை மடியே மெத்தையாக ......குழந்தையின் பிஞ்சுப் பாதங்களில் பாச முத்திரை பதித்து நெஞ்சையள்ளும் காதல்மன்னர்!

பஞ்சவர்ணகிளியிலும் கண்ணன் வருவான் கதை சொல்லுவான் தாலாட்டுப் பாடலில் விஜயா !!

https://www.youtube.com/watch?v=T6XAdv2DIEo

vasudevan31355
11th September 2015, 12:24 PM
இந்தப் பாடலை இனிய நண்பர் பாவலர் நாவலர் நெய்வேலி வைரம- யார் எந்தப் பாட் கேட்டாலும் வாரி தகவல்கள் பக்கெட்கள் வழங்கும் வள்ளல்,இதுவரை விஜயகுமாரி பாடல் கொடுக்கிறேன் கொடுக்கிறேன் என்று ஏமாற்றிய காளை - அண்ணன் வாசு தேவனுக்கு வழங்குகிறேன்.. (பாட் ஸ்பான்ஸர் ட் பை சி.செ,மது, ராகவேந்த்ரா, ராஜ்ராஜ் (பின்ன எனக்கு சப்போர்ட் வேணாமா :) )


அடாடாடா! புல்லரிச்சி போச்சுங்காணும். இன்னும் ஏதாவது பாக்கி இருக்கா? விஜயகுமாரி பாட்டு போடலியேன்னு வருத்தப்பட்டு சாபமிட்டவரு நீர் மட்டும்தான் ஓய்.:) ஏதோ ஒரு நல்ல பாட்டை கொடுத்ததானால் தப்பிச்சீர். அதைக் கூட கண்ணை மூடிக் கொண்டுதான் கேட்டேன். 'உங்க விஜயகுமாரி'ன்னு சொல்லவும் பயமா இருக்கு. அப்புறம் நானும் பார்த்துகிட்டே இருக்கேன் அப்படின்னு சண்டைக்கு வருவீர்.:) எது எதுக்குதான் பயப்படற துன்னு தெரியல என் ராசா.:)

eehaiupehazij
11th September 2015, 12:30 PM
கோபு 1954 - தங்களது பார்வையிடல் விருப்பங்கள் சரி தமிழிலேயே சொல்கிறேன் லைக்ஸ் எங்களுக்கு மிகப் பெரிய சப்போர்ட்...கொஞ்சம் வந்து நீங்களும் எழுத வேண்டும் என்பது எங்களது எல்லோரின் ஆசையும்

I second it Gopu Sir!

eehaiupehazij
11th September 2015, 12:31 PM
Welcome Gopu Sir!
senthil

madhu
11th September 2015, 12:37 PM
கோபு 1954 - தங்களது பார்வையிடல் விருப்பங்கள் சரி தமிழிலேயே சொல்கிறேன் லைக்ஸ் எங்களுக்கு மிகப் பெரிய சப்போர்ட்...கொஞ்சம் வந்து நீங்களும் எழுத வேண்டும் என்பது எங்களது எல்லோரின் ஆசையும்

I second it Gopu Sir!

I Third it Gopu Sir !

madhu
11th September 2015, 12:47 PM
இதோ குழந்தை உள்ளம் படத்தில் சுசீலா ஜானகி பாடும் தாலாட்டிலும் தூளியும் தொட்டிலும் ஆடுது

https://www.youtube.com/watch?v=dM1YcW_JDmQ

சொர்க்கத்தில் கட்டப்பட்ட தொட்டில் என்றும் மாமர ஊஞ்சல் என்றும் சொன்னாலும்... புடவைத் துணியில் கட்டிய தூளிதானே அது..

மன்னவன் வந்தானடியில் ந.தியும், ஜெயசுதாவும்

https://www.youtube.com/watch?v=bewdYe9TwEY

madhu
11th September 2015, 12:48 PM
வாசு ஜி...

இறைவன் இருக்கின்றான் படத்தின் பெயரே இப்போதான் மறுபடி நினைவுக்கு வருது...அட ராஜப்பயலே பாட்டும் மட்டும் நினைவில் இருக்கிறது.. அழகே உன் பெயர்தானோ அமுதே உன் மொழிதானோ கூட அந்தப் படம் என்றுதான் நினைவு... யோசிக்கிறேன்.

eehaiupehazij
11th September 2015, 01:09 PM
திரை வாழ்வின் மாதா பிதா குரு தெய்வமாக கமலஹாசனை தாலாட்டி சீராட்டிய நடிகர்திலகமும் காதல் மன்னரும் !


கமலஹாசக் குழந்தை கொஞ்சம் வளர்ந்து விட்ட கனமான குழந்தையாதலால் வலிமையான தனது கரங்களையே தொட்டிலாக்கி தாலாட்டி மகிழும் நடிகர்திலகம் !

திரை ஞானத் தந்தையான காதல் மன்னரோ தனது மடியையே தலையணையாய் கமலுக்கு தாரை வார்க்கிறார் !!


நடிப்பிலக்கணத் தந்தையிடம் ஒரு பாடலுக்கு மிகப் பொருத்தமாக எப்படி வாயசைக்க வேண்டும் முக பாவங்களை எப்படியெல்லாம் பாடல் வரிகளுக்கும் அர்த்தங்களுக்கும் ஏற்றபடி மாற்றி மாயாஜாலம் செய்ய வேண்டும் போன்ற அரிச்சுவடிப் பாடங்களை வைத்த கண் வாங்காமல் பிரமித்து வாயடைத்துப் போய் ஊன்றிக் கவனித்துக் கற்றுக் கொள்கிறார் கமலஹாசன் !!

https://www.youtube.com/watch?v=ayXXXujt3Fo

vasudevan31355
11th September 2015, 01:35 PM
உங்களுக்கெல்லாம் எப்படி எப்படியெல்லாம் தாலாட்டு இருந்தாலும் எனக்கு இதுதான் டாப். சொர்க்கம். எம் மன்னவன் நடித்த 'மன்னனவன் வந்தானடி' படத்தில் அருமையான தாலாட்டுப் பாடல். டி.எம்.எஸ். வாய்ஸ் அப்படியே நெய் மைசூர் பாகாய் உருகும். உருக்கும்.

http://ecx.images-amazon.com/images/I/81JtThIPgOL._SY606_.jpg

https://i.ytimg.com/vi/B_2AO-e4gtY/hqdefault.jpg

'சொர்க்கத்தில் கட்டப்பட்ட தொட்டில்
ஏழ்மைத் துன்பத்தில் ஆடுதடா இங்கே'

'கன்னத்தில் காலமிட்ட கண்ணீரின் கோடு
பிள்ளைக்குத் தெய்வம் தந்த வைரத்துத் தோடு
அன்னைக்கு வீடு இந்த சின்னஞ்சிறு கூடு
மாமன் அரண்மனை கட்டி வைப்பான் நாளை அன்போடு'

குரலில் சோகம் இழையும்.

நடிகர் திலகத்தின் அமைதியான ஆக்டிங். கண்களாலேயே நடித்து விடுவார்.

குழந்தையை ஜெயசுதாவிடமிருந்து வாங்கிக் கொண்டு அடுத்த செகண்ட் இந்தப் பாட்டை எடுப்பார் பாருங்கள். இந்த ஒரு செகண்ட் போதும். வேறு எதுவுமே வேண்டாம். அதுவரை படு கேஷுவலாக தங்கை ஜெயசுதாவிடம் உரையாடிக் கொண்டிருந்தவர் குழந்தையை கையில் வாங்கியவுடன் 'சொர்க்கத்தில்' என்று ஆரம்பிப்பதற்கு முன்னால் ஒரு செகண்ட் சாப்பாடு ரெடி செய்யப் போகும் ஜெயசுதாவை ஒரு பார்வை பார்த்து பின் குழந்தையைப் பார்ப்பார். நன்றாக கவனியுங்கள் அந்தப் பார்வையை. ரிவர்ஸ் வராமல் இருக்க மாட்டீர்கள். நிச்சயமாகச் சொல்கிறேன்.

'மாளிகை மன்றம் கண்ட மன்னன்' என்று இரண்டாம் தரம் பாடும் போது அந்தக் குழந்தையை நடிகர் திலகம் அணைத்திருக்கும் விதம் பாருங்கள். இடது பக்க தோள்பட்டையைச் சற்றே உயர்த்தி, குழந்தையை சுமப்பதற்கு ஏற்றார்போல் உடலை கொஞ்சம் குறுக்கி, வலதும் இடதுமாய் அசைந்து.... அதே போல 'மன்னன்' எனும்போது வாய் அசைப்பதை கவனிக்காமல் இருந்து விடாதீர்கள். ரிவர்ஸ் வராமல் இருக்க மாட்டீர்கள்.

எத்தனை முறை எத்தனைப் படங்களில் அவர் பண்ணியிருந்தாலும் அவரையறியாமல் அவர் கண்கள் இரண்டும் மேல் நோக்கி அடிக்கடி உத்திரத்தை பார்க்கும் அழகை காணுங்கள். ரிவர்ஸ் வராமல் இருக்க மாட்டீர்கள்.

உடல் அசைவு எதுவுமின்றி,

'கன்னத்தில் காலமிட்ட கண்ணீரின் கோடு
பிள்ளைக்குத் தெய்வம் தந்த வைரத்துத் தோடு'

என்று முகம் மட்டுமே சிரித்தபடி, ஆனால் அதில் சோகத்தைத் தேக்கி, சைடில் தனை மறந்து நகரும் கேமேராவின் பார்வையை சற்றும் நோக்காமல் 'தோடு' எனும் போது அப்படி இருந்தபடியே ஒரு கண் சிமிட்டல் செய்வார். பாருங்கள். ரிவர்ஸ் வராமல் இருக்க மாட்டீர்கள்.

பாடல் முடியும் போது 'ஏழ்மைத் துன்பத்தில் ஆடுதடா இங்கே' எனும்போது அந்த முகத்தில் தெரியும் ஏழ்மை உணர்வை எண்ணித் தவிக்கும் பரிதாபத்தைக் கவனியுங்கள். ரிவர்ஸ் வராமல் இருக்க மாட்டீர்கள்.

'பாடகர் திலகம்' பாடினாரா அல்லது 'நடிகர் திலகம்' பாடிவிட்டு பாடகர் திலகத்தின் பெயரை போட்டுக் கொள்ளச் சொன்னாரா என்ற அளவிற்கு குழப்பம் நம்ம குழப்பும். அவ்வளவு துல்லிய குரல் ஒற்றுமை. ஒவ்வொரு வார்த்தையும் இந்த உன்னத இரு கலைஞர்களாலும் உயிர் பெறும். பாவம் பெறும். உன்னதம் பெறும்.

அந்த கோமாளி ராஜா வேஷத்தில் கூட கோமான் போல அவ்வளவு அழகாக இருப்பார் நடிகர் திலகம். குறிப்பாக அழகு பொங்க சிரிக்கும் காட்சிகள். (இப்போதைய பேஷன் french beard லாம் அவர் அப்போதே வைத்துக் காட்டி விட்டுப் போய் விட்டார்.) எதற்குத்தான் முன் உதாரணமாய் திகழவில்லை அவர்!?


https://youtu.be/k-WAz4j6IEk

vasudevan31355
11th September 2015, 01:40 PM
ஆஹா!

மதுண்ணா! ஒன்றாகவே யோசித்து விட்டோம் வழக்கம் போல. நீங்கள் சுருக். நான் விவர்.:) பாதகமில்லை. 'இமை தொட்ட மணி விழி'

chinnakkannan
11th September 2015, 01:48 PM
ஆஹா!

மதுண்ணா! ஒன்றாகவே யோசித்து விட்டோம் வழக்கம் போல. நீங்கள் சுருக். நான் விவர்.:) பாதகமில்லை. 'இமை தொட்ட மணி விழி'

அப்ப நானு.. கிளாஸஸ் ஆ..:)

அப்ஜெக்*ஷன் யுவர் ஹானர்..இந்த சுருக், விவர் எல்லாம் என்னுடைய வர்ணனை என்று சொல்லிக்.....:)

chinnakkannan
11th September 2015, 01:52 PM
அடாடாடா! புல்லரிச்சி போச்சுங்காணும். இன்னும் ஏதாவது பாக்கி இருக்கா? விஜயகுமாரி பாட்டு போடலியேன்னு வருத்தப்பட்டு சாபமிட்டவரு நீர் மட்டும்தான் ஓய்.:) ஏதோ ஒரு நல்ல பாட்டை கொடுத்ததானால் தப்பிச்சீர். அதைக் கூட கண்ணை மூடிக் கொண்டுதான் கேட்டேன். 'உங்க விஜயகுமாரி'ன்னு சொல்லவும் பயமா இருக்கு. அப்புறம் நானும் பார்த்துகிட்டே இருக்கேன் அப்படின்னு சண்டைக்கு வருவீர்.:) எது எதுக்குதான் பயப்படற துன்னு தெரியல என் ராசா.:)

பயம்லாம் படவேண்டாம்.. நான் சண்டையெல்லாம் போட மாட்டேன் :) ஏற்கெனவே ஒரு ஆச்ரமத்திலருந்து அழைப்பு வந்திருக்கு.. :) இனி ஃபுல்லா ஆன்மீகம் தான்.. (யாரு அது..எந்த ஃபுல்னு கேக்கற்து) :)

அப்படிக் கண்முடிக் கேட்டதுனால தான் ஓய் அந்தம்மா இத்தனை நாளும் அண்ணனை நினைச்சுப் பாடறாங்கன்னு நினைச்சுட்டேன்..எஸ் எஸ்.ஆர். கோபம் நல்லா இருக்கும்.. :)

ஆமா செளகார் நீரோடும் வைகையிலே தவிர்த்து வேற தாலாட்டுப் பாடலியா ? :)

chinnakkannan
11th September 2015, 01:54 PM
மன்னவன் வந்தானடியும் சித்ரா பெளர்ணமியும் நான் அடிக்கடி கன்ஃப்யூஸ் பண்ணிக்கறேன்..நல்ல தாலாட்டு இருக்கேன்னு சித் பெள ல தேடிப்பார்த்தேனாக்கும்.. ஆமாம் சித்.பெள ல தானே காதல் ராஜ்ஜியம் எனது..பாட்டு..:)

சொர்க்கத்தில் கட்டப் பட்ட தொட்டில் நல்ல பாட் நிறைய தடவை கேட்டிருக்கிறேன்.. தாங்க்ஸ்ங்க்ணா..

madhu
11th September 2015, 01:56 PM
ஜீஸ்....

ஒரு சின்ன உதவி... பணம் பெண் பாசம் படத்தில் வரும் லக்ஷ்மி வந்தாள் மஹராணி போல் பாடலில் எஸ்.பி.பி.யுடன் ஹம்மிங் கொடுத்திருக்கும் பாடகி யாரு ?

madhu
11th September 2015, 02:01 PM
ஆமா செளகார் நீரோடும் வைகையிலே தவிர்த்து வேற தாலாட்டுப் பாடலியா ? :)

நான் போட்டிருக்கும் குழந்தை உள்ளத்தில் வாணிஸ்ரீயுடன் பாடியிருப்பது யாருங்கோ ?

இதைத் தாலாட்டு என்று எடுத்துக் கொள்ளலாம் என்றால் இதோ.... பர்மா பாப்... சாரி அம்மா பாடும் பேசும் தெய்வம் பாட்டு

https://www.youtube.com/watch?v=r39vy5NI0k4

chinnakkannan
11th September 2015, 02:07 PM
ஜீஸ்....

ஒரு சின்ன உதவி... பணம் பெண் பாசம் படத்தில் வரும் லக்ஷ்மி வந்தாள் மஹராணி போல் பாடலில் எஸ்.பி.பி.யுடன் ஹம்மிங் கொடுத்திருக்கும் பாடகி யாரு ?

கேட்டால் பெண் குரல் போல் இருக்கிறது மதுண்ணா :) நானும் தேடிப் பார்த்தேன் யார் என்று தெரியவில்லை..டெஃபண்ட்டா ஜானகி கிடையாது..


ஹப்புறம்..சி.செ..திடீர்னு தோணினது..வெண்பனித் துகளில் வண்ணமய நடிக நடிகையர் வெள்ளித்திரையினில் பொன்னாய் மின்னிய பாடல்கள் நு போட் பார்க்கலாமா..

எனக்குத் தெரிந்து ரெண்டு மூணு தான் இருக்கு..

vasudevan31355
11th September 2015, 02:10 PM
தமிழ் திரைத் தாலாட்டுப் பாடல்களில் மணிமகுடமான இரு பாடல்கள்.

அன்பில் மலர்ந்த நல் ரோஜா
கண் வளராய் என் ராஜா

கூனனை மணந்த இளவரசியின் மகிழ்வான குழந்தைத் தாலாட்டு. ஒரு தேவதை விண்ணிலிருந்து இறங்கி வந்து இந்தப் பாடலை பாடி விட்டுச் சென்றதோ


https://youtu.be/3qC3ytEfBXQ

இதுவும் தாலாட்டு. ஆனால் சோகம்.

சின்னஞ்சிறு கண் மலர்
செம்பவழ வாய் மலர்

இந்தப் பாடலையும் அதே தேவதைதான் பூமிக்கு வந்து மீண்டும் பாடி விட்டு பறந்து விட்டது.

அங்கு அஞ்சலி என்றால் இது சாவித்திரி. அது 'கணவனே கண் கண்ட தெய்வம்' என்றால் இது 'பதிபக்தி'. இரண்டுமே கருப்பு வெள்ளைப் படங்களின் தாலாட்டு. ஆனால் நீங்கள் பார்க்கப் போவது வண்ணப் படுத்தப்பட்டது. முன்னது சுமார். பின்னது டாப். சாவித்திரி ஜாக்கெட்டுக்கு பச்சை நிறம்.

இரண்டு படங்களிலும் குழந்தைகளுக்கு காரணகர்த்தா குறும்பு காதல் மன்னர். மீதியை செந்தில் சார் சொல்வார்.


https://youtu.be/FsRfUMhZPOI

chinnakkannan
11th September 2015, 02:12 PM
நான் போட்டிருக்கும் குழந்தை உள்ளத்தில் வாணிஸ்ரீயுடன் பாடியிருப்பது யாருங்கோ ?

இதைத் தாலாட்டு என்று எடுத்துக் கொள்ளலாம் என்றால் இதோ.... பர்மா பாப்... சாரி அம்மா பாடும் பேசும் தெய்வம் பாட்டு

]

சாரிங்க..இப்ப தான் பாட் கேட்டேன் கு.உ. நல்லா இருக்கு.. நான் சும்மா செள கேட்டா சீரியஸா கொடுத்துடறதா.. :)

chinnakkannan
11th September 2015, 02:14 PM
சின்னஞ்சிறு கண்மலர் வெகு அழகான பாடல்..அஞ்சலியின் பாட்டும் கேட்டிருக்கிறேன்..

இன்னொன்னு நினைவு..
சந்தா ஹைதூ மேரா சூரஜ் ஹைதூ..அது தாலாட்டில வராதுல்ல

தமிழ்ல்ல

என்ன்ன்ன் ராஜாவின் ரோஜா முகம் திங்கள் போல் சிரிக்கும் செவ்வாயில் பால் மணக்கும்..(புதன்ல ?)

vasudevan31355
11th September 2015, 02:16 PM
அப்ப நானு.. கிளாஸஸ் ஆ..:)



நானும் ரவுடிதான்.... நானும் ரவுடிதான்:) ச்சும்மா சின்னா! இதுக்கும் கோவிச்சுக்காதேயும்.:) ஜாலி:)

vasudevan31355
11th September 2015, 02:17 PM
தமிழ்ல்ல

என்ன்ன்ன் ராஜாவின் ரோஜா முகம் திங்கள் போல் சிரிக்கும் செவ்வாயில் பால் மணக்கும்..(புதன்ல ?)

மோராகி புளிக்கும். அய்ய! இது கூட தெர்லியே!

vasudevan31355
11th September 2015, 02:21 PM
//ஆமாம் சித்.பெள ல தானே காதல் ராஜ்ஜியம் எனது..பாட்டு//

இல்லை.

chinnakkannan
11th September 2015, 02:21 PM
நானும் ரவுடிதான்.... நானும் ரவுடிதான்:) ச்சும்மா சின்னா! இதுக்கும் கோவிச்சுக்காதேயும்.:) ஜாலி:)

நற நற.. கோச்சுண்டுட்டேன்.. :) பின்ன புஸ்தி மீசை, கட்டம் போட்ட கைலி கன்னத்துல மருல்லாம் கொடுக்காம எப்படி ரெள்டி வேஷம் பொட முடியும் என்னால..:)


நானும் Glasse aa ன்னு கேட்டேன்..

chinnakkannan
11th September 2015, 02:23 PM
//ஆமாம் சித்.பெள ல தானே காதல் ராஜ்ஜியம் எனது..பாட்டு//

இல்லை. // தாங்க்ஸ்.. பாட்டு வரும்னு நினைச்சேன்.. பட் அழகான பாடல்..

காதல் ராஜ்ஜியம்
காதலின் தீபம்
காதலின் பொன் மேடையில்
காதல் கண்மணி

இன்னும் என்னென்ன இருக்கு..

vasudevan31355
11th September 2015, 02:58 PM
ஜீஸ்....

ஒரு சின்ன உதவி... பணம் பெண் பாசம் படத்தில் வரும் லக்ஷ்மி வந்தாள் மஹராணி போல் பாடலில் எஸ்.பி.பி.யுடன் ஹம்மிங் கொடுத்திருக்கும் பாடகி யாரு ?

மதுண்ணா!

அது எஸ்.பி.ஷைலஜான்னு நினைக்கிறேன்.

vasudevan31355
11th September 2015, 03:07 PM
தாங்க்ஸ்.. பாட்டு வரும்னு நினைச்சேன்.. பட் அழகான பாடல்..



'காதல் ராஜ்ஜியம்' 'மன்னவன் வந்தானடி' படத்தோட பாட்டு. எனக்கு பிடித்த கொடியிடை மஞ்சுளா என் உயிர் நடிகர் திலகத்துடன் இணை சேர்ந்து நடித்தது. திருமலை நாயக்க மன்னனாக நடிக மன்னனவன் புரவியில் அமர்ந்து அமர்க்களம். இருந்தாலும் எதிர்பார்த்த அளவிற்கு இப்பாடல் காட்சியாய் அமையாதது இன்று வரை வருத்தமே. நீர் முன்பு கேட்டிருந்தீரே...பாடல் நால்லாயிருக்கும்...காட்சி இளிக்கும் என்று. அந்த வகையைச் சேர்ந்தது. அமர்க்களமான ஜோடி இருந்தும் ஊட்டி கொடைக்கானலில் குதிரைக்காரன் வாடகைக்கு நம்மை குதிரையில் அமர்த்தி நம் கூடவே குதிரையுடன் ஓடி வந்து ஒரு ரவுண்டு வந்து 10 ரூபாய் வாங்குவானே... அது போல மஞ்சுளா குதிரையைப் பிடித்து நடிகர் திலகம் குதிரையில் அமர்ந்திருக்க அவரைக் கூட்டி வருவார். இப்படியா பாடல் காட்சி எடுப்பது? சொதப்பல். ஆனால் நடிகர் திலகத்தின் நாயக்கர் மேக்-அப் எல்லாவற்றையும் மறக்கடிக்கச் செய்து விடும். அது போல எங்கள் மஞ்சுளா அழகும். ஹி... ஹி... ஹி.


https://youtu.be/J0ZL6cROU0w

chinnakkannan
11th September 2015, 03:11 PM
எஸ்.பி.ஷைலஜாவில் எனக்குப் பிடித்த பாட்டு..

ஆசையைக் காத்துல தூதுவிட்டு..


https://youtu.be/BsGf4HmbxLc

ஆமாம் இந்த சுபாஷிணி என்ன ஆனார்..பேசியாச்சா?

chinnakkannan
11th September 2015, 03:14 PM
'காதல் ராஜ்ஜியம்' 'மன்னவன் வந்தானடி' படத்தோட பாட்டு. எனக்கு பிடித்த கொடியிடை மஞ்சுளா என் உயிர் நடிகர் திலகத்துடன் இணை சேர்ந்து நடித்தது. திருமலை நாயக்க மன்னனாக நடிக மன்னனவன் புரவியில் அமர்ந்து அமர்க்களம். இருந்தாலும் எதிர்பார்த்த அளவிற்கு இப்பாடல் காட்சியாய் அமையாதது இன்று வரை வருத்தமே. நீர் முன்பு கேட்டிருந்தீரே...பாடல் நால்லாயிருக்கும்...காட்சி இளிக்கும் என்று. அந்த வகையைச் சேர்ந்தது. அமர்க்களமான ஜோடி இருந்தும் ஊட்டி கொடைக்கானலில் குதிரைக்காரன் வாடகைக்கு நம்மை குதிரையில் அமர்த்தி நம் கூடவே குதிரையுடன் ஓடி வந்து ஒரு ரவுண்டு வந்து 10 ரூபாய் வாங்குவானே... அது போல மஞ்சுளா குதிரையைப் பிடித்து நடிகர் திலகம் குதிரையில் அமர்ந்திருக்க அவரைக் கூட்டி வருவார். இப்படியா பாடல் காட்சி எடுப்பது? சொதப்பல். ஆனால் நடிகர் திலகத்தின் நாயக்கர் மேக்-அப் எல்லாவற்றையும் மறக்கடிக்கச் செய்து விடும். அது போல எங்கள் மஞ்சுளா அழகும். ஹி... ஹி... ஹி.

[ ரசிக்கறதுங்கறதை உஙகளிடம் இருந்து தான் கத்துக்கணும் ஓய்..அது என்ன ஹிஹி.. :) நல்ல ரைட் அப்..குட்டியா இருந்தாலும் கூட... கீப் இட் அப்..ஓ என் பாணியில்.. அதை மேலே வைங்க..:) அப்புறம் முக்கியமான ஒண்ணு..

பாட் போட்டதுக்கு தாங்க்ஸ்.. :)

இந்த வேண்டும் வேண்டும் ஏன் நீர் அனலைஸ் பண்ணலை இன்னும்..நீர் செந்தில்வேலைக் கேட்ட நினைவு.. சரியா..அதுவும் அழகான பாடல்.. ந.தி..ஸ்ரீப்ரியா..

vasudevan31355
11th September 2015, 03:15 PM
மதுண்ணா!

இன்னொரு அருமையான பாடல் 'பணம் பெண் பாசம்' படத்திலிருந்து.

எனக்கு மிக மிக பிடித்த பாடல் இது.

'அன்போடும் பண்போடும் உறவாடும் பாசம் அழியாத வரலாறம்மா'

சுசீலாவின் அற்புதமான பாடல்களில் ஒன்று. இதிலும் குழந்தைத் தாலாட்டு வரும். இரண்டாவது சரணத்தில் சரிதா தூளி ஆட்டிப் பாடுவார்.

'உயிர் தந்து உயிர் காக்க வேண்டும்' என்ற நல்ல வரிகள் உண்டு.


https://youtu.be/vhxhwXtx9rE

chinnakkannan
11th September 2015, 03:17 PM
சில பாடல்களுக்கெல்லாம் ரிச்னெஸ் தேவைப்படும்..அது போன்ற பாடல் காதல் ராஜ்ஜியம் எனது..எவ்வளவு தடவை ஆடியோகேட்டிருப்பேன் தெரியுமா..