PDA

View Full Version : மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 [12] 13 14 15 16

sivajisenthil
19th August 2015, 03:05 PM
ரவி
உங்கள் தேன் கூடு வளர்ந்து தேன் மதுரம் நிறைந்து நாங்கள் பருகிட தேனீயாக என் பங்குக்கு நான் சேகரித்த தேன் மகரந்தங்கள் ....

செந்தமிழ் தேன் மொழியாள்... ..நிலாவென.....கான மதுர கந்தர்வர் டிஆர் மகாலிங்கம் அவர்களின் தேன்குழைவுக் குரலில்...
மாலையிட்ட மங்கை மைனாவதியின் நடன இழைவில் .....
https://www.youtube.com/watch?v=eO3gRFz11yY

ஜெமினியின் தேன் குழைவுக் குரலான ஏ எம் ராஜா ஸ்ரீதருக்காக தேன் உண்ணும் வண்டாக நடிகர்திலகத்தின் உதட்டசைவுக்குப் பாந்தமாக ...அமரதீபம்...

https://www.youtube.com/watch?v=AhGgNSX545E

madhu
19th August 2015, 04:02 PM
வாசு ஜி... அந்தக் காலத்தில் கோடம்பாக்கம் ராம் தியேட்டரில் இந்தப் படம் பார்க்க வெளியூரிலிருந்து வந்திருந்த உறவினர் குடும்பத்துடன் சென்றிருந்தபோது ரிசப்ஷன் ஹாலில் ஒட்டியிருந்த ஸ்டில்லைப் பார்த்து விட்டு நீச்சல் டிரஸ் எல்லாம் போட்டுக் கொண்டு டான்ஸ் ஆடும் படத்துக்கு சின்னப் பசங்கள் எல்லாம் போகக்கூடாது என்று சொல்லி எங்க குரூப்பை அப்படியே வடபழனி கோவிலுக்குத் தள்ளிக்கொண்டு போய் விட்டார்கள். மாமாஸ், மாமீஸ், அத்தைஸ், அத்திம்பேர்ஸ் எல்லாரும் படத்துக்குப் போக எங்களை அடுத்த நாள் பீச்சுக்கு போவதாக சொல்லி சினிமாவுக்கு அழைத்துச் சென்ற சின்ன மாமா வால்க.. வால்க... எல்லோர்க்கும் வேண்டும் நல்ல மனது !!


பழைய நினைவுகளை தோண்டி எடுக்க வச்சிட்டீங்க... பாலாவின் லா..லல்லல்லல்லல்லல்லா...என்று பாடியபடி ஓடுவது என் அந்தக் கால சவுண்ட்....

தேன் பாடல்களா.... ? தேன் என்றாலே மது அல்லவா ?

புதுமைப்பித்தனில் சுசீலாவின் தேன் குரலில் ... தேன் மதுவை வண்டினம் தேடி வராதா ?

https://www.youtube.com/watch?v=lqNv_XH90Ng

g94127302
19th August 2015, 05:19 PM
மது சார் , உங்களை மனதில் நினைத்துக்கொண்டுதான் எழுத ஆரம்பித்தேன் - மது என்ற வார்த்தை வேறு எங்கோ என்னை எடுத்து செல்வதைப்போல உணர்ந்தேன் , அதனால் தேன் என்ற வார்த்தை மனதில் தங்கி விட்டது - உங்கள் தேன் பாடலுக்கு என் நன்றி

g94127302
19th August 2015, 05:22 PM
செந்தில் சார் - அருமையான, தேனான பாடல்கள் - மிகவும் நன்றி - யோசியுங்கள் , இன்னும் நிறைய கிடைக்கலாம்

g94127302
19th August 2015, 05:30 PM
பாடு நிலாவே தேன் கவிதை - ஜானகியின் குரலில் ஒரு தேன் மழை

https://www.youtube.com/watch?v=nrTKUhNQaWg

========


https://www.youtube.com/watch?v=-3Z57y99u88

தேன் தேன் தேன்...
உன்னைத் தேடி அலைந்தேன்...
உயிர்த் தீயாய் அலைந்தேன்...
சிவந்தேன்...

ஆண்: தேன் தேன் தேன்...
என்னை நானும் மறந்தேன்...
உன்னைக் காண தயந்தேன்...
கரைந்தேன்...

பெண்: என்னவோ சொல்லத் துணிந்தேன்...
ஏதேதோ செய்யத் துணிந்தேன்...
உன்னோட சேரத்தானே நானும் அலைந்தேன்.... (தேன் தேன்...)

(இசை...)

பெண்: அள்ளவரும் கையை ரசித்தேன்
ஆளவரும் கண்ணை ரசித்தேன்
அடங்காமல் தாவும் உந்தன் அன்பை ரசித்தேன்

ஆண்: முட்ட வரும் பொய்யை ரசித்தேன்
மோத வரும் மெய்யை ரசித்தேன்
உறங்காமல் எங்கும் உந்தன் உள்ளம் ரசித்தேன்

பெண்: நீ சொல்லும் சொல்லை ரசித்தேன்
இதழ் துள்ளாததையும் ரசித்தேன்

ஆண்: நீ செய்யும் யாவும் ரசித்தேன்
எதும் செய்யாததையும் ரசித்தேன்

பெண்: உன்னாலே தானே நானும் என்னை ரசித்தேன்... (தேன் தேன்...)

(இசை)

ஆண்: சேலையில் நிலவை அறிந்தேன்
காலிலே சிறகை அறிந்தேன்
கனவிலே காதல் என்று நேரில் அறிந்தேன்

பெண்: திருடனே உன்னை அறிந்தேன்
திருடினாய் என்னை அறிந்தேன்
இன்னும் நீ திருடத்தானே ஆசை அறிந்தேன்

ஆண்: என் பக்கம் உன்னை அறிந்தேன்
பல சிக்கல் உன்னால் அறிந்தேன்

பெண்: ஆண் தென்றல் உன்னை அறிந்தேன்
அதில் கூசும் பெண்மை அறிந்தேன்

ஆண்: நீ நடமாடும் திராட்சைத் தோட்டம் எதிரில் அறிந்தேன்... (தேன் தேன்...)

g94127302
19th August 2015, 05:35 PM
ஆகாய கங்கை - தேன் அருவியில் நனைந்திடும் மலரோ -----


https://www.youtube.com/watch?v=lrCmn2WdRSE

g94127302
19th August 2015, 05:40 PM
தேன் சுமந்த முல்லை தானா --------

https://www.youtube.com/watch?v=P9W6bu9_omk

g94127302
19th August 2015, 05:43 PM
CK க்காக இந்த பாடல்கிண்ணத்தில் தேன் வடித்து கைகளில் ஏந்துகிறேன்
எண்ணத்தில் போதை வர எங்கெங்கோ நீந்துகிறேன்
கிண்ணத்தில் தேன் வடித்து கைகளில் ஏந்துகிறேன்

நானும் ஓர் திராட்சை ரசம் நாயகன் உந்தன் வசம்
நானும் ஓர் திராட்சை ரசம் நாயகன் உந்தன் வசம்
தென்றல் போல் மன்றம் வரும் தேவி நான் பூவின் இனம்
கொஞ்சமோ கொஞ்சும் சுகம் கொண்டு போ அந்தப்புரம்
கன்னத்தில் தேன் குடித்தால் கற்பனை கோடி வரும்
உள்ளத்தில் பூங்கவிதை வெள்ளம் போல் ஓடி வரும்
கன்னத்தில் தேன் குடித்தால் கற்பனை கோடி வரும்

ஆணிப்பொன் கட்டில் உண்டு கட்டில்மேல் மெத்தை உண்டு
ஆணிப்பொன் கட்டில் உண்டு கட்டில்மேல் மெத்தை உண்டு
மெத்தைமேல் வித்தை உண்டு வித்தைக்கோர் தத்தை உண்டு
தத்தைக்கோர் முத்தம் உண்டு முத்தங்கள் நித்தம் உண்டு
கிண்ணத்தில் தேன் வடித்து கைகளில் ஏந்துகிறேன்

யாழிசை தன்னில் வரும் ஏழிசை எந்தன் மொழி
யாழிசை தன்னில் வரும் ஏழிசை எந்தன் மொழி
விண்ணிடை வட்டமிடும் வெண்ணிலா உந்தன் விழி
பள்ளியில் காலைவரை பேசிடும் காதல் கதை

கிண்ணத்தில் தேன் வடித்து கைகளில் ஏந்துகிறேன்
கன்னத்தில் தேன் குடித்தால் கற்பனை கோடி வரும்
கிண்ணத்தில் தேன் வடித்து கைகளில் ஏந்துகிறேன்
கைகளில் ஏந்துகிறேன்...ஆஆ ஆ
கைகளில் ஏந்துகிறேன்...ஆஆ ஆ
கைகளில் ஏந்துகிறேன்.

https://www.youtube.com/watch?v=472O53yVXvw

g94127302
19th August 2015, 05:45 PM
இதுவும் CK க்காக

https://www.youtube.com/watch?v=F6UMN8dMnQA

madhu
19th August 2015, 06:27 PM
எங்க வீட்டு கம்ப்யூட்டர் பழுதாகி பல நாளாச்சு.. ஏதோ browser hijacker அப்படின்னு ஒண்ணு வந்து மொத்தத்தையும் கலக்கிப் போட்டுருச்சு. இப்போதைக்கு நண்பரின் laptop அப்பப்போ உதவுது. நண்பர்களால் ஒரு உதவி தேவைப்படுகிறது. இப்போது எதையும் பெரிய அளவில் டவுன்லோடு செய்து வைக்க முடியாததால் ஆன்லைனில் பார்க்கும் திரைக்காட்சிகளில் ஒரு பாடலை மட்டும் வெட்டி டௌன்லோடு செய்ய வசதி இருக்கிறதா ? ஏதாவது software இருக்கா ?
அல்லது முழுசா டவுன்லோடு செஞ்சு பிறகு வெட்டி எடுக்க வசதி உண்டா ? வெட்டி எடுத்துக்கிட்ட பிறகு மிச்சம் மீதியை கடாசிடலாம் இல்லையா ? ( அந்தக் காலத்தில் எங்கிட்ட ஏதோ ஒரு சாஃப்ட்வேர் இருந்துச்சு. அது பேர் கூட மறந்து போச்சு..) உதவி ப்ளீஸ்..

sivajisenthil
19th August 2015, 06:53 PM
தேன்கிண்ணம் தேன்கிண்ணம் பருவத்தில் பெண்ணொரு தேன் கிண்ணம் ...

https://www.youtube.com/watch?v=9yun_LFvuD4

g94127302
19th August 2015, 06:57 PM
மது சார் - இது ஒரு பெரிய பிரச்சனையே இல்லை . வாசு- வாசு செய்து தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமும் இல்லை . உங்களுக்கு ஏதாவது திரைப்பட பாடல் மட்டும் வேண்டுமென்றால் , youtube இல் அந்த பாடல்கள் இருக்க கண்டிப்பாக வாய்ப்பு இருக்கிறது . நீங்கள் செய்யவேண்டியது இவ்வளவுதான் .

1. Download freemake video converter ( free of cost)

2. Paste URL of the song copied from youtube

3. press the buttom Mp3 ( audio version) or MP4 ( video verson)

Work is done .

Alt 2 :

ஒரு வேளை உங்கள் பாடல்கள் youtube இல் கிடைக்க வில்லை என்றால் - அந்த படம் மட்டும் கிடைத்தால் , படத்தை download செய்து விட்டு வீடியோ கட்டர் ( free ) என்னும் சாப்ட்வேர் மூலம் எந்த பகுதி மட்டும் வேண்டுமோ அதை கட் செய்துகொள்ளலாம் - மற்றவர்களுக்கும் , உபயோகமாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் youtube இல் அந்த கட் பண்ணிய பகுதியை பதிவேற்றம் செய்து கொள்ளளலாம் .

பின் குறிப்பு : நினைத்து பாருங்கள் - இந்த யோசனைக்கு வாசு அல்லது CK அல்லது செந்தில் குறைந்தது Rs 50000/- மாவது இந்த நேரம் உங்களுக்கு பில் அனுப்பி இருப்பார்கள் . நான் முதலில் உங்கள் பதிவை படித்து விட்டதால் உங்களுக்கு இந்த Rs 50000/- மிச்சம் .:-D

sivajisenthil
19th August 2015, 07:01 PM
தேனே உன்னைத் தேடித் தேடி நான் அலைந்தேனே

https://www.youtube.com/watch?v=6ZPpeNHaFnM

sivajisenthil
19th August 2015, 10:02 PM
சூப்பர் பாட்டீஸ் டூப்பர் பாட்டூஸ்
அழகிய பாட்டிகளின் அமுதப் பாட்டுக்கள்!! / Graceful Grannies'Grand Gala Gems!
பகுதி 3 : MN ராஜம்

எம் என் ராஜம் அவர்கள் ஹாலிவுட் ஹிட்ச்காக் படங்களில் வரும் ஹீரோயின் போல வாளிப்பான உடல்கட்டும் வாகான முகவெட்டும் கொண்டவர் அவரது இளமைக் கால பட்டையைக் கிளப்பிய பாடல் காட்சிகளில் பாசமலர் திரைப்படத்தில் நடிகர்திலகம் பியானோ வாசித்திட ஜமுனாராணி குரல்குழைவில் அவர் பாடும் பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன் பாடல் காட்சியமைப்பு என் மனம் கவர்ந்த மதுர கான மெல்லிசைப் பாடலாகும் !
அதேபோல பதிபக்தியில் நடிகர்திலகத்தைக் கலாய்க்கும் கொக்கர கொக்கரக்கோ சேவலே பாடல் காட்சியமைப்பும், இரத்தக்கண்ணீரில் சந்திரபாபுவுடன் போடும் ஆளை ஆளை பார்க்கிறார் ஆட்ட பாட்டமும் !!

பாசமலரில் எழில்ராணியாக .....

https://www.youtube.com/watch?v=G2B97RTcB3E

பதிபக்தியில் ....கோழியாட்டம்!

[url]https://www.youtube.com/watch?v=E18POUkDaIE

இரத்தக்கண்ணீரில் கெட்ட ஆட்டம் ...ஆனால் கௌரவமான இழுத்துப் போர்த்திய கெட்டப்பில்!!

[url]https://www.youtube.com/watch?v=67zlw6YpKtM

வின்னர் திரைப்படத்தில் பிரசாந்தின் அழகுப் பாட்டியாக தனது பொருத்தமான திரை நாயகர் எம் என் நம்பியாருடன் !! same initials!!

https://www.youtube.com/watch?v=0h-OFA3S8ko

rajraj
20th August 2015, 02:24 AM
Another paappaa song from KaLathur kaNNammaa

ammaavum neeye appaavum neeye........

http://www.youtube.com/watch?v=Axcrmw8OD4A

From the Hindi version "main chup rahungi"

Tum hi ho maathaa pithaa tum hi ho...


http://www.youtube.com/watch?v=jUmYNTvZ0h8

I am sure you recognize the boy singing 'ammaavum neeye".


senthil: You are right. Grand daughters are a lot of fun. Unfortunately we live about 1000 miles away from her. Air travel is not fun anymore with all the security checks and lack of food in the flight ! :( We limit our visits to two a year.
My granddaughter likes two songs, one carnatic and another from a movie. I will post the movie song later. :)

madhu
20th August 2015, 05:00 AM
ரவி சார்... real video set மொத்தமும் இற்ற்ற்றக்கி வச்சிருக்கேன். video cutter வேலை செய்ய மாட்டேங்குது. மற்றபடி ஏற்கனவே youtube-ல் என் கணக்கிலேயே நிறைய பாட்டெல்லாம் பங்களிச்சு வச்சிருக்கேன்.

ஆன்லைனில் வீடியோ streamஆகி வரப்போ அதிலேயே கட் செய்ய முடியுமா என்று கேட்கிறேன். அதாவது திரி கருகி எரியும்போது விளக்கை அணைக்காமல் கத்திரிக்கோல் வைத்து அப்படியே நுனியை கட் செஞ்சு எடுப்பது போல...

என்னது ? Rs.50000/- ? ஹலோ.. ஹலோ... தலை வலிக்குதே ! ரவி சாரா ? நீங்க யாருங்க ? :rotfl:

sivajisenthil
20th August 2015, 08:06 AM
தமிழகம் தந்திட்ட தரணியின் விண்ணளாவிய பிரபஞ்சத்தின் வாழ்நாள் பெருமை நடிகர்திலகத்தின் தனி உடைமை வீர பாண்டிய கட்டபொம்மன் வந்துவிட்டார் பராக் பராக் !


வரும் வாரங்கள் பரபரப்பானவை! பலருக்கு மலரும் மனோகர நினைவுகள்!! தீப்பொறி கிளப்பும் தேசபக்தி தோய்ந்த கூர் வசனங்கள் நடிப்பின் பிரம்மனால் உயிரூட்டப்பட்டு மீண்டும் ஓர் ஆழிப் பேரலையை ஊழித்தீயை ஆர்ப்பரித்து எழ வைக்கும் தருணங்கள் !!நமது மனதையும் எண்ணங்களையும் ஒருமுகப்படுத்தி பரவச மயக்கநிலைக்கு நாம் தள்ளப்படும் அதிசயம் நிகழப் போகிறதே! இந்தத் தலைமுறை சிறார்களும் இனி கட்டபொம்மன் வேடம் தரித்து அவர் பெருமைப் படுத்திய வசனங்களை மழலையால் மிழற்றப் போகும் பொற்காலம் திரும்புகிறது!!!

என்றென்றும் நமது நினைவில் வாழும் நடிகர்திலகம் கர்ஜிக்கும் வண்ணத்திரைகள் / கண்ணுறும் விழித்திரைகள் புண்ணியம் செய்தவையே !

காலத்தால் நிலைத்திட்ட கவின்மிகு காவியம் நிகரற்ற வெற்றியை எட்டிட நடிகர்திலகம் / காதல் மன்னர் / மதுரகானங்கள் திரிகள் சார்ந்த வரவேற்பும் வாழ்த்துக்களும் !!

Generations' Celebrity Warrior General VPKB's Grand Gala Brand Power epitomized in epic proportions by the 'One and the Only One' Thesaurus of Acting Nadigar Thilagam Sivaji Ganesan!

Exploding on the screens from tomorrow!

[url]https://www.youtube.com/watch?v=fXL2WsxKvw4

g94127302
20th August 2015, 08:32 AM
மது சார் - உதவி செய்யவேண்டும் என்ற அவசரத்தில் உங்கள் பிரச்சனையை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன் . நான் ஒரு முதல் உதவி செய்யும் மருத்துவர் மட்டுமே . நீங்கள் சொல்லும் பிரச்சனைக்கு தேவை சர்ஜெரி - இதற்கு கை தேர்ந்த மருத்துவர்கள் நெய்வேலியிலும் , கோயம்பத்தூரில் , மஸ்கட் லிம் தான் இருக்கிறார்கள் . உங்களுக்கு பீஸ் Rs 50000/- மிச்சப்படுத்தல்லாம் என்று நினைத்தேன் - முடியவில்லை . இருப்பினும் ஒரு தடவைக்கு , இரண்டு தடவை யோசித்து உங்களுக்கு ஒரு நல்ல solution தருகிறேன் :-D

madhu
20th August 2015, 08:53 AM
ரவி சார்..

நீங்க கொடுக்கும் சொல்யூஷனை சொட்டு சொட்டா கண்ணில் விட்டுக் கொண்டு வேலை செய்வேன் என்று உறுதி கூறுகிறேன். எனக்கு ஊசி கூட வேண்டாம். மாத்திரை போதும்.. சர்ஜரி எல்லாம் சரிப்பட்டு வராது.. அதை விட இப்படியே விட்ருவேன்.

sivajisenthil
20th August 2015, 11:52 AM
Rajraj Sir,
For your Jugalbandhi collection : Do you already have Enga Mama Vs Brahmachari?

Enga Mama NT with children!

https://www.youtube.com/watch?v=yglkhIIxBf8

நான் தன்னந்தனிக் காட்டுராஜா ...

https://www.youtube.com/watch?v=YzqHAAsA9h0

But..derived from the original Brahmachaari starring Shammi Kapoor, the Indian Gene Kelly!

[url]https://www.youtube.com/watch?v=no6psn4h0wo


சக்கே பே சக்கே

[url]https://www.youtube.com/watch?v=1pMrwHB2kpc

vasudevan31355
20th August 2015, 12:33 PM
வார்த்தை தவறி விட்டார் செந்தில் சார்
மதுரகானம் துடிக்குதடி
பார்த்தவிடத்திலெல்லாம்
வீடியோ பார்வை தெரியுதடி

நாளைமுதல் குடிக்க மாட்டேன்
சத்தியமடி தங்கம் :)

பிரம்மச்சாரி பிரம்மச்சாரி
வழுக்கி விழலாமா :)

சொன்னது நீதானா
சொல் சொல் சொல் என் உயிரே :)

அவரா சொன்னார் இருக்காது
அப்படி எதுவும் நடக்காது
நடக்கவும் கூடாது
நம்ப முடியவில்லை :)

madhu
20th August 2015, 12:39 PM
வாசு ஜி... அவர் ஒரு ரிவர்ஸ் ரஜினி..

நாலு பாட்டு போட்டா ஒண்ணு போட்ட மாதிரி...

செந்தில்ஜி... நான் வாசுவைப் பிடிச்சுக்குறேன். இப்போதைக்கு தப்பிச்சுக்குங்க :)

sivajisenthil
20th August 2015, 12:56 PM
வார்த்தை தவறவில்லை வாசு சார்
சும்மா ஒரு ஷோ காட்டிட்டு சுட்டியாக்கி விடுவேனே !
இப்பப் பாருங்களேன் ரவி வந்து வெளுப்பதற்குள் மாற்றி விட்டேன்!!

sivajisenthil
20th August 2015, 01:11 PM
கதம்ப மதுர மாலை!!/ Old Songs remix!!

நமது திரைப் படங்களில் கற்பனைப் பஞ்சம் ஏற்படும் போது புகழ் பெற்ற பழைய / சம காலத்திய பாடல் பிட்டுக்களை சாமர்த்தியமாகக் கோர்த்துக் கதம்ப மாலையாக்கி நமது காதோடு நிற்காமல் உடல் முழுக்க சுற்றி விடுவார்கள் !

கதம்பமாலை 1 : தேன் கிண்ணம் / நாகேஷ்-விஜயலலிதா

https://www.youtube.com/watch?v=CaznqYwdGMg

ஜெர்ரி லூயியை அடியொற்றும் நாகேஷின் மானரிசம்ஸ் !

கதம்பமாலை 2 : நான் / நாகேஷ்-மனோரமா

[url]https://www.youtube.com/watch?v=MFLczvaSFoE

கதம்பமாலை 3 : நவராத்திரியில் பைத்தியக்கார் ஆஸ்பத்திரியில் மனோரமா கோஷ்டி ..

[url]https://www.youtube.com/watch?v=8HlY66SogrY

vasudevan31355
20th August 2015, 01:47 PM
ரவி சார்!

தேனின் இனிமையை உங்கள் பதிவில் மீண்டும் கண்டேன். உவகை கொண்டேன்.

தேனின் குணங்களும், அதன் மருத்துவப் பயன்களும் அனைவருக்கும் உபயோகமானவை. நல்ல உபயோகமான பதிவு. மனமுவந்த நன்றிகள். இமேஜ்களும் அட்டகாசம். தேன் கண்ணெதிரே தெறிக்கிறது.

எனக்கே முன்னால் இப்படி ஒரு யோசனை இருந்தது. ஆனால் நீங்கள் எதுவாய் இருந்தாலும் முந்தி(ரி)க் கொண்டு விடுகிறீர்கள்.:) பாருங்கள்... அருமையாக மது அண்ணாவுக்கு மென்பொருள் பற்றிய விவரங்கள் அளித்து உதவி செய்து விட்டீர்கள். அவர்தான் விட்டால் போதும் சாமி என்று உங்கள் ஆபரேஷனைக் கண்டு அலறி ஓடுகிறார்.:)

அதே போல தாங்கள் அளித்து, மற்றவர்களும் அளித்த தேன் பாடல்கள் தேனோ தேன். அருமையாக இருந்தது. பாட்டியம்மா பதிவுகளை தேனாக திசை திருப்பி விட்டு உங்கள் அருமை நண்பர் சின்னக் கண்ணனைக் காப்பாற்றி விட்டீர்கள்.:) உங்கள் குறள் பாணியில் உதாரணமிட்டால் 'உடுக்கை இழந்தவன் கை' போல.

'ராஜா', 'வெள்ளி முத்துக்கள்' பதிவுகளுக்கான பாராட்டுகளுக்கும் நன்றி!

தேன் என்றாலே என் நினைவுக்கு வரும் பிற பாடல்கள்


தேன் சொட்ட சொட்ட சிரிக்கும் ஒரு திருமண மேடை

தேன் மழையிலே தினம் நனையும் உன் நெஞ்சமே

தேனில் ஆடும் ரோஜா

தேனாற்றங்கரையினிலே

தேன் பூவே பூவே வா

தேன் மல்லிப் பூவே

தேனே தென்பாண்டி மீனே

தேனில் வடித்த சிலையே

தேன் குளத்திலே நான் குளிக்கிறேன்

சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்

செந்தமிழ் தேன் மொழியாள்

கல்யாணத் தேன் நிலா

அமுதும் தேனும் எதற்கு

என் யோக ஜாதகம் நான் உன்னைச் சேர்ந்தது
தேன் அமுதம அல்லவோ நான் அள்ளி உண்டது

தேனடி மீனடி

தேனோடும் தண்ணீரின் மீது

தேன் சிந்துதே வானம்

இன்னும் நிறைய.


ஆனால் இதையெல்லாம் தாண்டி அப்போது பட்டி தொட்டியெல்லாம் ஒலித்த திரைப்பாடல் அல்லாத கிறித்துவப் பாடல் ஒன்று ரொம்ப ரொம்பப் பிடிக்கும். சென்னை, புதுச்சேரி, திருச்சி வானொலி நிலையங்களில் காலை ஆறு மணிக்கு அப்போது போடப்படும் பக்திப் பாடல்களில் இப்பாடல் இடம் பெறாமல் போனதே இல்லை. இனிமையென்றால் அப்படி ஒரு இனிமை அப்பாடலின் முதல் வரியைப் போல. இப்பாடலைக் கேட்கும் போது உடலும், உள்ளமும் புல்லரித்துப் போவது நிஜம். இன்றும் கூட அதே போன்றே மனதை மயக்கிக் கொண்டேதான் இருக்கிறது.

அப்படியே சுசீலாம்மாவின் குரலுக்கு அடிமையாகிக் கிடக்க வேண்டியதுதான்.

தேன் இனிமையிலும்
யேசுவின் நாமம்
திவ்ய மதுரமாமே
அதைத் தேடியே நாடி
ஓடியே வருவேன் திருச்சபை
ஆனோரே

காசினிதனிலே நேசமதாக கஷ்டத்தை உத்தரித்தே
பாவக் கசடதை அறுத்துச் சாபத்தைத் தொலைத்தார்
கண்டுணர் நீ மனமே

தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்
திவ்ய மதுரமாமே

சுசீலாம்மா பாடும் அந்த கடைசி சரணம். அதைப் பூப் போல உச்சரிக்கும் பாங்கு. சரண்டர் ஆகாமல் எவரும் தப்ப முடியாது.

'பூலோகத்தாரும் மேலோகத்தாரும் புகழ்ந்து போற்று நாமம்'

அவரின் 'க' உச்சரிப்பைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம். நிஜமாகவே திவ்ய மதுரம்தான்.


https://youtu.be/x9hzx6q29to

vasudevan31355
20th August 2015, 02:41 PM
ஹய்! ரிவர்ஸ் ரஜினி! மது அண்ணா! ரொம்ப நல்லா இருக்கே!

ஆனா சிரிச்சி சிரிச்சி வயிறு புண்ணாயிடுத்து. எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிப்பீங்களோ!:)

sivajisenthil
20th August 2015, 02:42 PM
வாசு சார்
பாட்டியம்மா பாடல்கள் சி கவுக்கு அலர்ஜியா ? ஏதாவது கொசுவர்த்திச் சுருள் பிளாஷ் பேக்?
இருந்தால் எல்லோரும் தெரிந்து கொள்கிறோமே !

g94127302
20th August 2015, 06:08 PM
வாசு - மோதிர கையினால் "முந்திரி " என்று சொல்லி குட்டினதர்க்கு நன்றி - நீங்கள் குட்டினதாலோ என்னவோ வலிக்கவில்லை . தேனைப்பற்றி இவ்வளவு பாடல்களா ???? - மலைத்தேன் வாசு ! மானசிகமாக உங்களை அணைத்தேன் - பிழைத்தேன் இனி தொடராமல் ! களைத்தேன் என்று சொல்ல முடியாத பதிவுகள் உங்களுடையது

வெற்றி வேல் வீர வேல் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/hqdefault_zpslnw9o14p.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/hqdefault_zpslnw9o14p.jpg.html)

madhu
20th August 2015, 06:47 PM
விட்டுப்போன தேன் துளிகள்....

தேன் பாயும் வேளை - பௌர்ணமி அலைகள்
தேன் கூடு நல்ல தேன் கூடு - ஆட்டுக்கார அலமேலு
தென்றல் பாடவும் தேன் மலர் ஆடவும் - மனிதன் மாறவில்லை
தேன் அருவி அதில் ஒரு குருவி - கராத்தே கமலா
ஹனி ஹனி தித்திப்பது - நீச்சல் குளம்
செந்தூரப்பூவே இங்கு தேன் சிந்த வா வா - செந்தூரப்பூவே
ஆத்தாடி அம்மாடி தேன் மொட்டுதான் - இதயத்தை திருடாதே
ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே - மணிப்பூர் மாமியார்
சேலாடும் நீரோடை மீது தேன் சிந்தப் பண் பாடுவோமே - அலாவுதீனும் அற்புத விளக்கும்

தேன் கூட்டில் இன்னும் எத்தனையோ தித்திக்கும் துளிகள் இருக்கு....
மீண்டும் நினைவுக்கு கொண்டு வந்து இனிக்க வைத்த செந்தில் ஜி, வாசு ஜி... ரொம்ப நன்றி ஜி..

sivajisenthil
20th August 2015, 09:12 PM
Take it ECg! Honey filled songs are endless!
பூமாலையில் ஓர் மல்லிகை ..இங்கு நான்தான் தேன் என்றது...
இந்த வரிசையில் சேருமா !?

vasudevan31355
20th August 2015, 09:22 PM
Take it ECg! Honey filled songs are endless!
பூமாலையில் ஓர் மல்லிகை ..இங்கு நான்தான் தேன் என்றது...
இந்த வரிசையில் சேருமா !?

வெரி குட். தாராளமாக.

rajeshkrv
20th August 2015, 09:30 PM
Vanakkam Ji

after a looooooooooooooooong time

eppadi irukkeenga

chinnakkannan
20th August 2015, 09:38 PM
ஹாய் ஆல்..

வழக்கம் போல ரெண்டு நாள் கொஞ்சம் டஃப் ஆக ப் போய் விட்டபடியால் வந்து பழக இயலவில்லை.. மன்னிக்க..
எனில் ஹோம் ஒர்க்..

ராஜ்ராஜ் சார்..அம்மா பசிக்குதே தாயே பசிக்குதே- அம்மா ரொட்டி தே பாபா ரொட்டி தேக்கும் நன்றி..பாப்பாக்களின் சார்பாகவும் நன்றிகள்!
சி.செ.. சமர்த்து..சுத்திப் போட வேண்டும்.. கோழி ஒரு கூட்டிலே பாட்டுக்கு (இந்தி)க்காக ச் சொன்னேன்.. நீதுசிங்கா அது..ம்ம் எவ்ளோ வளர்ந்துட்டாங்க பிற்காலத்துல (யாரதுபக்கெட் எடுக்க போகிறது?!)

ராக தேவன்.. வாங்க வாங்க இந்த அபியும் நானும் பாட் போட்டதற்கு தாங்க்ஸ்..அந்தப் பிச்சைக்காரராய் நடித்த நடிகர் (கவில் ஆரம்,பிக்கும் பெயர் நினைவில் வர மறுக்கிறது) யெஸ் குமரவேல்.. நல்ல நடிகர்..மேஜிக் லேண்ட்டர்ன்ஸ் வழங்கிய பொன்னியின் செல்வன் நாடகத்திற்கு அவர் தான் நாடக வசனங்கள் எழுதியவர்..

வாசு.. எங்கிட்டோ போய்ட்டீங்க.. இப்படி ஒரு பாட்டை நான் நான்குவருடங்களுக்கு முன்னால் வெறும் கேட்டு மட்டும் இருந்தேன் என்றால் நம்ப வேண்டும்..மீண்டும் வாழ்வேன்பார்க்க நினைத்து இன்றுவரை பார்க்காத ஒரு படம்.. நா.வ.மு துபாய்போயிருந்த போது- அங்கிருந்து ஷார்ஜா நண்பரில்லத்தில் முரசு டிவி (மஸ்கட்டில் அப்போது எடுக்காமல் இருந்தது..இப்போது வருகிறது) சோம்பலாய்ப்பார்த்த ஒரு மாலை நேரம்.. டபக்கென இந்தப் பாட்டு வர சுறுசுறுப்பும் தானாய் வந்தது...
//பல இளைஞர்களின் தூக்கம் கலைந்திருக்கலாம் அந்த நாட்களில். இளமை பூத்துக் குலுங்குகிறது. 'ம்....கொடுத்து வைத்த விஷ்ணுவர்த்தன்' என்று மஸ்கட்டில் ஒருவர் புலம்புவதும் காதில் விழுகிறது.// அப்படில்லாம் இல்லீங்காணும் ( நெசம்மா)

பாரதி மட்டும் தான் அழகு..சூழ்ந்து ஆடிய கோடம்பாக்கங்கள் அவ்வளவாய் கவரவில்லை என ஆன்றோர்கள் சொல்வார்கள்..ம்ம் நல்ல பாட் நல்ல ரைட் அப்.. அதை மேலே வச்சுடுங்க..

*

*

சி.செ.. ரேமாமா ரேமாமா ரே, பாப்பா போலோபோலோ மம்மி போலோ போலோ ரெண்டுபாட்டுமே பிடிக்கும்.. அது என்ன சித்தி சொல்லு சொல்லு டாடி சொல்லு சொல்லு பாட் கேட்டிருக்கிறேன்படம் பார்த்ததில்லை..கனிமுத்துப் பாப்பாவா..


ரவி.. தேன் பற்றிய பதிவு நைஸ்..பதிந்த பாடல்களில்..

பார்த்தேன் ரசித்தேன் பக்கம்வரத் துடித்தேன்..அந்த மலைத்தேன் இதுவென மலைத்தேன் என ஆண்பாடுவது..ம்ஹூம் என்ன ஆணாதிக்க உலகமடா என எண்ணவைக்கும்..அழகியபாடல்..

தேன் சிந்துதே வானம் பாட்டு ஒவ்வொரு தரம் பார்க்கும் போதும் மனசுக்குள் மழையடிக்கும்..உடலுக்குள் குளிரடிக்கும் என ஆன்றோர்கள் சொல்வார்கள்..

தேன் நிலாவரும் ரொம்பப் பிடிச்ச பாட்டு..ஆடியோவில் சிலோனில் வந்த பாட்டு என நினைக்கிறேன்..

இந்த சலங்கை ஒலியில்- பூஞ்சோலைவண்ணம் கொண்டு வந்தான் கோபாலனே..பாடல் ஆரம்பிக்கும் முன் தயாரிப்பாளர் இசையமைப்பாளரிடம் சொல்வார்.. படமோ நாட்டியம் அப்படி இப்படின்னு போகுது இந்தப் பாட்டையாவது பாக்ஸ் ஆஃபீஸ்க்காக கொஞ்சம் நல்லா வைக்கலாம்னு பார்த்தா… இசையமைப்பாளர்..: நீங்க கவலைப்படாதீங்க.. நான் கொடுத்த ஸ்டெப்ஸையே மாத்திட்டான்.. இதான் நாட்டியம் தெரிஞ்சவங்களையெல்லாம் ஸ்டெப்ஸ் போடக் கூடாதுங்கறது..எனச் சொல்லி பாடல் தொடரும்..

அது போலவே.. போட்டுருக்கறது மூணு சிறந்த நடிகர்கள்..அவங்களும் சீரியஸ்.. கதையில் நகைச்சுவை வந்தாலும் அவங்களுக்கு பாட்டெல்லாம் கிடையாது..கதையில் இளமையா இருக்கற்து இந்தப் பொண்ணு தான்..இதவச்சுத்தான் பாக்ஸ் ஆஃபீஸ்க்கு ஒரு பாட் போடணும்..னு ப்ரொட்யூஸர் சொல்லியிருப்பாரோ என்னவோ சந்த்ரகலாவைக் குளிக்க விட்டிருப்பார்கள்.. (தேன் மழையிலே மாங்கனி நனையுது) சிந்தால் சோப்பாயிருக்குமோ..

*
செந்தமிழ் த் தேன் மொழியாள், தேன் உண்ணும் வண்டு.. நல்ல இனிமையான பாடல்கள் சி.செ..

/தேன் மதுவை வண்டினம் தேடி வராதா ?// தேடி வரும்னு தானே ஆ பெண்குட்டி சொல்லுது மதுண்ணாவ்..

பாடு நிலாவே, தேன் தேன் தேன் இவற்றை விட தேனருவியில் நனைந்திடும் மலரோ எனக்குப் பிடிக்கும் ரவி.. காரணம்..மு.மேத்தா..

குமுதத்தில் தொடராக வந்தபோது படித்த நாவல் கையில்லாத பொம்மை..அதையே கைராசிக்காரன் என்று எடுத்துக் கெடுத்திருந்தார்கள்.. படம் எதுவும் நினைவிலில்லை..இந்தப் பாட்டும் தான்.. நன்றாக இருக்கிறது தேன் சுமந்த முல்லை தானா..

ஹை.. எனக்காகப் பாட்டுக்களா..தாங்க்ஸ் ரவி..

. அதுவும் தேன் குடித்த நிலவு இன்னும் ஒரு ஓ. ஜீவன் ஒரு நல்ல நடிகர்..சம்விருதாவும் தான்.. கொஞ்சம் வித்தியாசமான அழகி..ஷார்ப் ஃப்யூச்சர்ஸ் என்று ஆன்றோர்கள்..சரி நானே சொல்றேன்! ஏனோதமிழில் ஒதுக்கி விட்டு விட்டார்கள்..

. கிண்ணத்தில் தேன் வடித்து பாடலுக்கும் நன்றி பிடித் பாட்டில் ஒன்று..இதுபற்றி நான் எழுதியிருக்கும் ரைட் அப் தேடி அடுத்த பதிவில் இடுகிறேன்..முடிந்தால்.. அகெய்ன் தாங்க்ஸ்

*..

தேன் பாட்டு என்றவுடன் நினைவுக்கு வந்தது தேன் கிண்ணம்.. அப்புறம் தேனாற்றங்கரையினிலே.. (வாசு போட்டுவிட்டார்) தேனே தேடி அலைந்தேன்.. மதுண்ணாவிற்கு தாங்க்ஸ்..

//தேன் இனிமையிலும்
யேசுவின் நாமம்
திவ்ய மதுரமாமே// wow வாசு ..வித்யாசமான பாட்டு.. சூப்பர்.. நான் எட்டு-10 படித்தது செய்ண்ட் மேரீஸ் எனப்படும் தூயமரியன்னைப் பள்ளி தான்.. எனில் கிறிஸ்தவப் பாடல்கள் நிறையக் கேட்டிருக்கிறேன்..இது கேட்டதாக நினைவில்லை.. நைஸ்..

மதுண்ணா சி.செ வாசு.. தேன் பாடல் லிஸ்ட்க்கு ஒரு ஓ…ம்ம் யாரோ ஒரு பொண்ணு பாவாடை சட்டை தாவணி போட்டுக்கிட்டு

கருகரு விழிகள் சுழல
…காண்பவர் கருத்தும் மயங்க
துறுதுறு வெனவே நடையும்
..துடிப்புடன் ஒசியும் இடையும்
முறுவலை முகத்தில் கொண்டு
..மோகனம் பொங்கிப் பொங்கி
குறும்புடன் பாடிய பாடல்
..கூவியே அழைத்த தென்னை..
*

..யா.. மானாட்டம் தங்க மயிலாட்டம்
பூவாட்டம் வண்ணத் தேராட்டம்
தானாடும் மங்கை சதிராட்டம்
கண்டு தேனோடும் எங்கும் நதியாட்டம்..ஓஒ ஓஹோய் ஹோய்..ஹோய்..

எனப் படத்தில் தாவியாடிய சர்ரூ…:)

பின்ன வாரேன் :)

**

sivajisenthil
20th August 2015, 10:08 PM
சிறார் முதல் சூப்பர்ஸ்டார்கள் வரை மயக்கிய கதாபாத்திரம் நடிகர்திலகம் உயிரூட்டிய கட்டபொம்மனே !!

இதுவரை திரையுலகம் கண்ட கதாபாத்திரங்களில் வீரபாண்டிய கட்டபொம்மனே ரசிக நெஞ்சங்களில் ஆழமான பாதிப்புக்களை ஏற்படுத்தி ஒவ்வொருவரும் தானும் கட்டபொம்மனாக தம்மை உருவகப்படுத்திக் கொண்டு அந்தப் புகழ்பெற்ற வசனங்களை நடிகர்திலகத்தை ரோல்மாடலாக மனதில் இருத்தி பேச முயற்சி செய்ய வழி வகுத்தது !

எத்தனை சிறுவர் சிறுமியர் பேஷன் ஷோக்களில் கட்டபொம்மனாரின் கெட்டப்பில் அசத்தியிருக்கிறார்கள் என்பதற்கு கூகுள் வலைத்தளத்தில் யூ டியூபில்
உலவும் காணோளிகளே சாட்சி !

https://www.youtube.com/watch?v=Y_sNMbOklE0

இந்தக் குழந்தைகளையும் கவர்ந்திட்ட சூப்பர் ஸ்டார் ரஜினியுமே இதற்கு விதி விலக்கல்ல !

ஒரிஜினல் கட்டபொம்மன் முன்னாலேயே சோதனை மேல் சோதனை பாடும் ரஜினி கட்டபொம்மன் ..விடுதலை திரைப்படத்தில்

[url]https://www.youtube.com/watch?v=8FRCYAOcoYc

தம்பிகளே தங்கங்களே கட்டபொம்மன் சொல்லுவதை கேளுங்க! ரஜினியின் சூப்பரான கட்டபொம்மன் கெட்டப்!!

[url]https://www.youtube.com/watch?v=nOlDjoOcFLI

vasudevan31355
20th August 2015, 10:14 PM
இன்னும் சில தேன் பாடல்கள்.

முத்தம் முத்தம் செந்தேன் அல்லவோ----புத்திசாலிகள்

பூந்தேனில் கலந்து பொன் வண்டு எழுந்து

பாலாற்றில் சேலாடுது ....
தேனாற்றில் நீராடுது

ஜெர்மனியின் செந்தேன் மலரே

செந்தாமரையே செந்தேன் இதழே

தந்தேன் தந்தேன் இசை
செந்தேன் தந்தேனடி-----வில்லுப் பாட்டுக்காரன்

மலைத்தேனுங்க நான் மலைத்தேனுங்க
மச்சானைத்தான் விருந்துக்கு அழைத்தேனுங்க

vasudevan31355
20th August 2015, 10:16 PM
வணக்கம் ராஜேஷ்ஜி!

ஈவ்னிங் கூட உங்களைப் பத்தித்தான் நினைச்சுகிட்டு இருந்தேன். ஒரு பி.எம்.போடலாம்னு கூட யோசிச்சேன். அப்பாடி! வந்துட்டீங்க. எப்படி இருக்கீங்க? நலம்தானே! எவ்வளவு நாளாச்சு!

rajeshkrv
21st August 2015, 02:11 AM
வணக்கம் ராஜேஷ்ஜி!

ஈவ்னிங் கூட உங்களைப் பத்தித்தான் நினைச்சுகிட்டு இருந்தேன். ஒரு பி.எம்.போடலாம்னு கூட யோசிச்சேன். அப்பாடி! வந்துட்டீங்க. எப்படி இருக்கீங்க? நலம்தானே! எவ்வளவு நாளாச்சு!

நலமே நீங்கள் நலமா . வேலை துவங்கியாச்சா

madhu
21st August 2015, 03:43 AM
அட.. அட.. அட... அந்தத் தேன் கூட திகட்டிப் போகும். நம்ம லிஸ்ட் திகட்டவே திகட்டாதோ !

அடுத்தது பார்த்தேன்.. பார்த்தேன்.. பார்த்தேன்.. சுடச்சுட ரசித்தேன்...அட.. அதுவுந்தேன்...

சிக்கா.... அதென்ன ஆன்றோர்கள் சொன்னது ? நம்ம திரிக்குப் பெரியவர் வாத்தியாரையா ( rajraj sir )... அவர் என்ன சொல்றார்னு கேட்டு ஒரு முடிவுக்கு வாங்க..

நேத்திலிருந்து கேரளத்தில் ஓணம் கொண்டாட்டங்கள் ஆரம்பிச்சாச்சு. வெளி நாட்டு கேரளமான மத்திய கிழக்கு ஏரியாவில் அத்தப் பூக்களம் வந்தாச்சா... ? தமிழில் பிரபலமான கேரளப் பாடல்கள் என்னவாக்கும் ?

rajraj
21st August 2015, 05:11 AM
தமிழில் பிரபலமான கேரளப் பாடல்கள் என்னவாக்கும் ?

Here are two of the MalayaLam songs I like:

omana thinkal kidavo........

http://www.youtube.com/watch?v=yrYdIJj-q9I


karuna cheivan endhu thaamasam......

http://www.youtube.com/watch?v=4CqnK36B2zU

I don't know whether these became popular in Tamil ! :)

vasudevan31355
21st August 2015, 06:02 AM
//தமிழில் பிரபலமான கேரளப் பாடல்கள் என்னவாக்கும் ?//

வழக்கம் போல

பாரத விலாஸ்

மைக்கேல் மதன காமராஜன்

அப்புறம் சப்தஸ்வரதேவி உணரு---அந்த 7 நாட்கள்

தசரதனும், உஷாவும் பங்கு கொள்ளும் 'கண்ணுகள் பூட்டி ஞான் ஒரு நிமிஷம்'----திருமலை தென்குமரி

ஐ வில் சிங் பார் யூ----- எடா மிடுக்கா


https://youtu.be/1suNIBbS3M4


https://youtu.be/oZ63_o3vZUA

raagadevan
21st August 2015, 06:24 AM
vaNakkam and nanri Raj for "karuNa cheyvaan enthu thaamasam krishNaa..."; a composition by
Irayimman Thampi, sung by Chithra for a devotional album. The original was composed in Shree raagam,
but Chembai Vaidyanadha Bhagavathar later made it very popular in his several renditions in
Yadukula Kamboji raagam. I am going to make a "daring" statement here, knowing fully well that you
are going to correct me if I am wrong! :) The version that you posted (sung by Chithra) is in
Yadukula Kamboji.

If you don't mind, I would like to add two more versions of the song from Malayalam movies; both
sung in Shree raagam (again, please correct me if I'm wrong)

The first one is from the movie GAANAM...

https://www.youtube.com/watch?v=RokOv7HBzfo

...and the second one from AANANDHA BHAIRAVIi:

https://www.youtube.com/watch?v=BQWZXm7qWm4

raagadevan
21st August 2015, 06:34 AM
//தமிழில் பிரபலமான கேரளப் பாடல்கள் என்னவாக்கும் ?//

:)

https://www.youtube.com/watch?v=PnEV1CYEpy8

https://www.youtube.com/watch?v=ADUTa6TSmu4

madhu
21st August 2015, 09:02 AM
அடி பொலியாயி...

மூக்கணாங்கயிறு படம் என்று நினைக்கிறேன்.. ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம் பாடியிருப்பாங்க

மெய் சிலிர்க்குது மனம் துடிக்குது நெய் விளக்கென கண் சிவக்குது கண்மணி நீ தொடும் நேரம்
ஒரு செந்தாழம்பூவை அவன் படைத்தான் முன்னம் சொல்லாமலே இங்கு எனக்காக

என்று ஜெய் ஆரம்பித்து

பூ விரிஞ்ஞது தேன் நிறச்சது கையணைச்சது மெய் துடிச்சது
துள்ளும் எண்டே யவ்வனத்தின் மேளம்

என்று வாணி தொடருவார்...

அந்த 7 நாட்களில் கூட படத்தில் இடம் பெறாத "சுவர ராக சுத" என்று ஒரு பாட்டு உண்டு இல்லையோ ?

சிக்காவுக்காக.. ஓணம் ஸ்பெஷல் பாட்டு

ஏ.. ஜிங்கா ஜினுக்குதா இந்தா உனக்குத்தான் சிட்டுக்குருவி...
ஞான் கேரளத்து குஞ்ஞல்லோ .. நின்னே கொஞ்ச வந்த பிஞ்ஞல்லோ
இது சக்கப் பழ சாறல்லோ பொன்னம்பலத்து தேரல்லோ
திருச்சூரின் பிரேமா... ஞானே... சேட்டா...

https://www.youtube.com/watch?v=Qo9qa431ywE

chinnakkannan
21st August 2015, 09:28 AM
ஹாய் குட்மார்னிங்க் ஆல்..

தமிழில் ப்ரபலமான மலையாளம் என்றால் நினைவுக்கு வருவது - லேட்டஸ்டா (?!) உயிரே யில் நெஞ்சினிலே நெஞ்சினிலெ ஊஞ்சலே..எவ்ளோ மலையாள பில்டப் கொடுத்து யானை சேட்டன்கள் எல்லாம் உடன் ஆடினாலும்.. ஷாரூக் கான் வட இந்திய முகத்தோடு ஒல்லியாய் ஆடுவது கொஞ்சம் தமாஷ் தான்..

வறுமையின் நிறம் சிவப்பு இல் ஸ்ரீதேவி - தூமே ராஜா மேது ராணீ என இருவரி பாடுவார் (ஓ..அதுஇந்தியோ :) )

மலையாளக் கரையோரம்கவி பாடும் குருவி...

நான் கேரளத்துப் பெண்ணல்லோ..வளர தாங்க்ஸ் மதுண்ணா

சேரன் கோபிகா பாட்டு ஒண்ணு மறந்து போச்சு..

chinnakkannan
21st August 2015, 09:36 AM
மனசுல நீகோகம் மனுமள நீ கோகம்... சிந்து நதியின் மிசை..

சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் சேர்ந்திடும் நாள் திரு வோணம்..

குலுவாலிலே முத்து வந்தல்லோ..

ஓளங்கள் நு ஒரு ம்லையாளப்படம் அதுல பூர்ணி அமோல் பலேகர் நு நினைக்கேன்.. ஒரு நல்ல மலையாளப்பாட் வரும்..அது தமிழ்ல்லயும் ஃபேமஸ்..ஆனா நினைவுக்கு வரமாட்டேங்குது.. (பூர்ணி நன்னாயிட்டு ஆக்டிங்க் கொடுத்திருக்கும்)

s.vasudevan
21st August 2015, 09:40 AM
Courtesy: Tamil Hindu

தெய்வத்தின் குரல்: மனதைப் பண்படுத்தும் மகாபாரதம்காஞ்சீபுரம் ஸ்ரீகாமாட்சி அம்மன் கோயில் தரிசனம், 1957.

தற்போதுள்ள அத்தனை இந்திய மொழி லிபிகளுக்கும் ஆதாரமாக இருக்கப்பட்ட பிராம்மி என்ற லிபியில்தான், ரொம்பவும் பழைய சாசனங்கள் இருக்கின்றன. இந்த மிகப் பழமையான சாசனங்களின் எழுத்தும் அழகாக, பாஷையும் காவிய அழகோடு (flowery- ஆக) இருக்கின்றன. அப்புறம் பல்லவர் காலக் கல்வெட்டுக்களிலும் எழுத்து அச்சடித்தாற்போல் இருக்கிறது. வாசகமும் இலக்கிய நயத்தோடு இருக்கிறது.

அதன் பின் சோழர் காலத்துச் செப்பேடுகளில், எழுத்தும் வாசகமும் பெருமளவு நன்றாக இருக்கிறது. ஆனால் இரண்டுமே ஆதியில் இருந்ததைவிடக் கொஞ்சம் மட்டம்தான். ரொம்பப் பழையது. அச்சடித்த மாதிரி, கண்ணில் ஒத்திக்கொள்ளலாம்போல் இருக்கிறது. சமீபத்தில் இருநூறு முந்நூறு வருஷங்களுக்கு முந்திய செப்பேடுகளைப் பார்த்தாலோ, ஒரு சீரும் இல்லை, முறையும் இல்லை, தப்பும் அதிகமாக இருக்கிறது. மண்டை மண்டையான எழுத்து. ஏகப்பட்ட இலக்கணப் பிழை.

இப்படியே ஆதிகாலத்திலிருந்து சமீபகாலம் வரையிலான விக்கிரகங்களைப் பார்த்தேன். இவற்றிலும், காலம் சொல்லத் தெரியாதவை ரொம்ப ரொம்ப லட்சணமாயிருக்கின்றன. பல்லவ விக்கிரகங்கள் நிரம்ப நன்றாக இருக்கின்றன. சோழ விக்கிரகங்கள் ஒரு மாதிரி நியதியிலே நன்றாக இருக்கின்றன. அதன் பின் வரவர மேலும் தரக்குறைவுதான். இப்போது யாரிடமாவது புதிதாக ஒரு விக்கிரகம் அடிக்கக் கொடுத்தால் எப்படி இருக்கிறது? அழகோ, சாந்நித்தியமோ, தெய்வக் களையோ பழையவற்றில் இருப்பதுபோல் புதிதில் இருப்பதில்லை.

பழைய காலத்து ஜனங்களுடைய குணம் எப்படி? அதுவும் அதேமாதிரி உயர்ந்துதான் இருந்ததாகத் தெரிகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்நாட்டுக்கு வந்த மெகஸ்தனிஸ், 'இந்தியாவில் யாராவது, ஏதாவது கொடுத்தாலும்கூடக் கைநீட்டி வாங்கிக்கொள்பவர் இல்லை. எந்தப் பண்டம் எங்கு கிடைத்தாலும் அந்த நாட்டவருக்குத் திருடவே தெரியாது. பொய் சொல்லவே தெரியாது' என்றெல்லாம் சொல்கிறான்.

சாந்தமும், நல்ல குணமும், தப்பு வழியே இல்லாமல் சரியானபடி போகும் போக்கும் அந்தக் காலத்தில் இருந்தன. இப்போது அந்த நிலை மாறிவிட்டது. அந்தக் காலத்தில் ஜனங்கள் எப்படி இருந்தார்கள்? அவர்களுடைய மனசு எப்படி இருந்தது? அந்த மாதிரியே இப்போதும் இருக்கக் கூடாதா என்று தோன்றுகிறது.

பொதுவாக வாழ்க்கையில் ஒழுக்கம் ஏற்பட்டுவிட்டால் அப்புறம் அதன் ஒவ்வொரு துறையிலுமே ஒழுக்கத்தினால் உண்டாகிற அழகும் ஏற்பட்டு விடுகிறது. இதனால்தான் பழங்கால சிற்ப சித்திரங்கள், எழுத்து (calligraphy) உட்பட எல்லாம் ஒழுங்காக, அழகாக இருக்கின்றன.

அந்தக் காலத்தில் நல்ல நிலைமையில் இருந்து, இப்போது அதே வம்சத்தில் தோன்றிய ஜனங்களின் நிலை இப்படி எல்லாவற்றிலும் மிகவும் தாழ்வாகப் போனதற்கு ஏதாவது காரணம் இருக்க வேண்டும் என்று யோசித்தேன்.

அந்தக் காலத்தில் கோயில்களிலெல்லாம் பாரதம் வாசிக்க வேண்டுமென்று கட்டளை இருந்திருக்கிறது. பாரதம் வாசிப்பதற்கென்றே மானியம் தருகிற சாசனங்கள் இருக்கின்றன. இப்போது, பெரிய கோயில்களில் எதிலுமே பாரதம் வாசிக்கிறதைக் காணோம்.

கிராமாந்தரங்களில் கிராம தேவதைகளின் கோயில்களில் மட்டும் எங்கோ பாரதம் வாசிக்கிறதைப் பார்க்கிறோம். கிராம ரக்ஷைக்காக உள்ள, அந்த ஒரு சில கோயில்களுக்கு இன்றும் கிராம மக்கள் போகிறார்கள். சினிமா வந்து இவ்வளவு ஜனங்களை ஆகர்ஷிக்கிறபோதுகூட பாரதம் கேட்க ஜனங்கள் இருக்கிறார்கள் என்றால், பழைய காலத்தில் எப்படி இருந்திருக்கும்? அப்போது மக்களுக்கு வேறே பொழுதுபோக்கே இல்லையே.

அந்த பாரதத்தில் என்ன இருக்கிறது? பொறுமை என்பதற்கு வடிவமாக தர்மபுத்திரர் இருக்கிறார். சத்தியமான பிரதிக்ஞை என்பதற்கு பீஷ்மர் இருக்கிறார். தானத்துக்குக் கர்ணன். கண்ணியத்துக்கு அர்ஜுனன். இப்படியே ராமாயணத்தை எடுத்துக்கொண்டால், சகல தர்மங்களின் மூர்த்தியாக ஸ்ரீராமன் இருக்கிறார். பெண்களுடைய உத்தமமான தர்மத்துக்கு சீதை இருக்கிறாள். ஸ்ரீ ராமனுக்கு நேர் விரோதியாக ராவணனுக்கு மனைவியாக இருக்கும் மண்டோதரியும் சீதைக்குக் குறைவில்லாத மகாபதிவிரதையாக இருக்கிறாள்.

ராமாயண, பாரதக் கதைகளைக் கேட்கும்போது இப்படிப்பட்ட உத்தமமான ஆத்மாக்களின் ஞாபகம் வருகிறது. படித்தவர், படிக்காதவர் எல்லோருக்கும் அடிக்கடி அந்தக் கதைகள் காதில் விழுந்துகொண்டிருந்தால், நம்மால் அந்த உத்தம பாத்திரங்களைப் போலவே நடக்க முடியாமல் போனாலும், இதுதான் நாம் இருக்க வேண்டிய உண்மையான முறை என்ற நினைவு அடிக்கடி வரும். இதற்கே பலனுண்டு. இதனால்தான் இந்தக் கதைகளைக் கேட்டு வந்த அந்தக் காலங்களில், உயர்ந்த தர்மமும், நீதியும் நாட்டில் இருந்தன.

தர்மம், நீதி இரண்டும் சேர்ந்துதான் பண்பு உண்டாகிறது. அந்தப் பண்பாட்டை மாற்றுவதற்கும், குலைப்பதற்கும் இப்போது எத்தனையோ ஏற்பாடுகள் வந்திருக்கின்றன. முன்பு இருந்த பழக்கத்தை மறுபடியும் உண்டாக்குவது கஷ்டம்தான். ஆனாலும் சிறிதாவது செய்யத்தான் வேண்டும். நாம் நல்லது பண்ணிக்கொண்டு போனால் ஈசுவரன் நமக்குக் கை கொடுப்பார். அவர்தான் நமக்குக் கை கொடுத்திருக்கிறார். கால் கொடுத்திருக்கிறார். கண் கொடுத்திருக்கிறார். கொஞ்சம் ஆலோசிப்பதற்கு புத்தியும் கொடுத்திருக்கிறார். இந்தச் சக்தியும் புத்தியும் இருப்பதற்குள்ளே திருந்துவதற்கான சத்காரியம் செய்ய வேண்டும்.

இப்போது என்ன என்னவோ விதமான ஆபத்துக்கள் நமக்கு வந்துகொண்டிருக்கின்றன. ஜனங்கள் இன்ன வழியில் போவது என்று தெரியாமல் சிரமப்பட்டுக்கொண்டிருக்கும்போது, அநேக கட்சிகள் வந்து அவர்களுடைய புத்தியைப் பல விதமாகக் குழப்பி மாற்றிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் நம்முடைய சத்தியமும் நீதியும் தர்மமும் ஜனங்களுடைய மனசில் கலையாமல் நின்று காப்பாற்ற வேண்டும்.

அப்படிக் காப்பாற்றுவதற்கு மகாபாரதமே உபகாரமாக இருக்கும் என்று அன்றிலிருந்து இன்றுவரை ஜனங்களுடைய அனுபவத்தினாலே தெரிகிறது.

தெய்வத்தின் குரல் (முதல் பாகம்)

madhu
21st August 2015, 09:45 AM
அமோல் பாலேகர் பூர்ணிமாவின் ஓளங்கள் படம் இந்தியில் அவதார் என்ற பெயரில் அவதரித்து தமிழில் பூப்பூவா பூத்திருக்கு என்ற பெயரில் பிரபு, சரிதா, அமலா நடித்து வெளியானது..

தும்பி வா தும்பக்குடத்தினி பாடல் தமிழில் ஆட்டோ ராஜா படத்தில் சங்கத்தில் பாடாத கவிதையாகவும் கண்ணே கலைமானே படத்தில் நீர்வீழ்ச்சி தீ மூட்டுதே என்றும் ஹிந்தி சீனி கம் படத்தில் கும்சும் கும் என்றும் மீண்டும் மீண்டும் மீண்டும்...

வீடியோ யூ டியூபில் சுலபமாக கிடைப்பதால் இங்கே ஒட்டவில்லை.

chinnakkannan
21st August 2015, 09:54 AM
வெள்ளி முத்துக்கள் நடனமாடும்.. பாடல் கேட்டதனாலோ என்னவோ கூகுளில் நேற்று மீண்டும் வாழ்வேன் சர்ச் செய்ததில் படமே கிடைத்தது..என்னடா வாசு சார் கதையெல்லாம் போடாமல் இருக்கிறாரே எனச் சற்றே நான் யோசித்திருக்கலாம்..ம்ம் விதி வலியது

கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் இன்னும் சுவாரஸ்யமாக வந்திருக்க வேண்டிய படம்... பாரதிக்கு பொம்மை டான்ஸ் உண்டு..பார்க்கும் நமக்கு அது பொம்மையில்லை எனத் தெரிய எப்படி மனோகர் மட்டும் ஏமாறுகிறார் எனத் தெரியவில்லை..

ஸ்ட்ரெய்ட்டா மனோகர் வீட்டுக்கு வரத்தெரிந்த டாக்ஸி ட்ரைவரான ரவியால் முடிந்தது, ஆரம்பக் காட்சியில் கெடுபிடியுடன் ஒல்லியான உடற்வாகுடன் பேசும் அதிகாரி இளைஞர்... கொஞ்சம் போ.அ.வேடத்திற்குப் பொருத்தமாய் இருந்தார்... - அவருக்குத் தெரியாதது கஷ்டமே.. ரொம்ப சுலபமாய் பாரதியைக் கடத்தி தோளில் தூக்கி வில்லன்கள் டாக்ஸியில் போவதும் அது பற்றி ரவி கொஞ்சம் கூட சந்தேகப் படாததும் மறு நாள் தான் பேப்பர் பார்த்து சந்தேகப் படுவதும்..ம்ம்...

அந்த ஆறு மற்றும் நீர் வீழ்ச்சி லொகேஷன் எங்கே..திடீர் என ஒரு காட்சியில் மொட்டைத் தலை தேங்காய் சீனிவாசன் பாரதியை மானபங்கப் படுத்துவது மாதிரி வந்து நம்மைப் படுத்துகிறார்..விஜயலலிதா, ஜெய்குமாரி என்றெல்லாம் உண்டு..ஏதோ ஒரு ஹோட்டல் அங்கு எப்போதும் ஆடிக்கொண்டிருக்கும் நங்கைகள் அங்கே போய் சித்த வைத்திய சாலை போல ரவிச்சந்திரன் போர்ட் போடுவாராம்..வில்லன்கள் டுப்பாக்கியால் டுபுக் டுப்க்கென டுடுவார்களாம்.. பின் ரவிச்சந்திரன் வந்து சண்டை போட்டு அவர்களை அடிப்பாராம்..ம்ம் மழலை கூட நம்பாது... ம்ம் எனிவே.. நல்ல படத்தின் கதை கொடுக்காததற்காக வாசுவிற்கு ஒரு தாங்க்ஸ்...( நற நற) :)

அப்புறம் அவளுக்கு நிகர் அவளே, அவளும் பெண் தானே எல்லாம் யூ ட்யூபில் இருக்கிறது .. நான் பார்க்காத படங்கள்..பார்க்கலாமா...

madhu
21st August 2015, 10:05 AM
சிக்கா...

வாசு உங்களைப் படம் பார்க்கச் சொன்னாரா ? குற்றம் சுமத்தலாமா ?

பெண்களை மானத்தோடு இந்த சமுதாயம் வாழ விடுவதில்லை என்பதை உணர்த்தும் வெ.ஆ.நிர்மலாவின் அவளுக்கு நிகர் அவளே ( சேலை விற்கும் கடையைக் கண்டேன் தெருத்தெருவாக.. ஆளை விற்கும் கடையைக் கண்டேன் முதல் முதலாக ) மற்றும் பண்டரிபாய் தயாரிப்பில் சுமித்ராவின் முதல் தமிழ்ப் படமான அவளும் பெண்தானே ( உறவைத் துறந்து ஊரைப் பிரிந்து பறவை ஒன்று வந்தது.. அதன் உடலைத் தின்று பசியைத் தீர்க்க உலகம் சுற்றி நின்றது ) ஆகிய படங்களைப் பார்த்து நற நற என்று பல்லைக் கடித்து உடைந்து போனால் கம்பெனி ஜவாப்தாரி அல்ல..

chinnakkannan
21st August 2015, 10:12 AM
தாங்க்ஸ் மதுண்ணா..தட் பாட் சங்கத்தில் காணா கவிதை..மலையாளத்தில் வெகு அழகாயிட்டு இருக்கும்.. பூப்பூவா பூத்திருக்கு பார்த்ததில்லை.. எஸ் எல்லாப் பாட்டுக்களையும் நீரே தான் முன்பு கொடுத்திருக்கிறீர் நினைவுக்கு வருது..

*

கல்லூரி சமயங்களில் அவ்வப்போது சில டுபாக்கூர் படங்களுக்குச் சென்று மாட்டிக் கொண்டு முழித்ததும் உண்டு..இவ்ளோ வருடங்கள் கழித்தும் மறக்க முடியாத ஒரு நண்பன் நடராஜன் என்பவன்.. அந்தக்காலத்தில் நாங்களெல்லாம் பெரியார் பஸ்ஸ்டாண்டின் பேரலல் ரோட்டில் பஸ்ஸீக்காகக் காத்து வேகமாய் ஓடி ஏறி விமான நிலையத்துக்கு அருகில் இருக்கும் கல்லூரி ( 7 அல்லது 10 கிமி) செல்லும் போது லேம்ப்ரட்டாவில் பெட்ரோல் போட்டு (அப்போது ஏழு அறுபது என நினைவு) ட்ட்ரு ட்ட்ரு என வருபவன்.. வந்தவன்.. ஆனால் எளிமையாய்த் தான் பேசுவான்..

படிச்சு முடிச்சுட்டு வேலைல்லாம் பாக்கலாம்னு அவசியமில்லேல.. என்ன எனக்குப் படிக்க இஷ்டமில்லை (அப்பா ஒரு பிரபல மருந்துக் கம்பெனி ஹோல்சேல் கடை சாந்தி தியேட்டருக்கு பக்கத்து த் தெருவில் வைத்திருந்தார்) அப்புச்சி தான் காலேஸூ படிச்சா தொவ (தொகை- கையில் வாங்கும்வரதட்சணை) கூட வரும்னு சொன்னாக.. சரின்னு வண்ட்ட்டேன்.. முதல் செமஸ்டர் கொஞ்ச நாள் தான் வரமுடிஞ்சது..அப்புறம் இப்போ.. எனச் சொல்லி கல்லூரியின் மூன்றாவது வருடத்தில் ஒட்டுக்க பதினெட்டு அர்ரியர்ஸையும் ஒரே சிட்டிங்கில் உட்கார்ந்து க்ளியர் செய்து எக்ஸாம் எழுதி முடித்த கையோடு அப்பா மற்றும் உறவினர்கள் பார்த்து வைத்த பெண்ணை ராங்கியத்தில் கல்யாணமும் செய்து கொண்டான்..( சில வருடங்களுக்கு முன்னால் அவன் மகனுக்கும் திருமணம் முடிந்தது எனக் கேள்விப்பட்டேன்..தொவ எவ்வளவு வாங்கினான் எனத்தெரியவில்லை (யெஸ்.. செட்டி நாட்டவர் தான் அவன்)

அப்படிப்பட்ட நடராஜனுக்கு என்னை ப் பிடித்துப் போனது விதி செய்த சதி என்று தான்கூற வேண்டும்..ஆ.ஊ என்றால்சனி அல்லது ஞாயிறு ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு வந்துவிடுவான் வீட்டுக்கு..வா. போலாம் கண்ணா

யோவ் படிக்கணுமேய்யா..

ஸ்ஸூ..அத அப்புறம் பார்த்துக்கலாம் வாங்க..

மரியாதை கலந்து கலந்து பேசுவது அவ்ன வழக்கம்..

அதுவும் அவனுக்கு- அவன் அப்புச்சியின் பார்ட்னரின் பார்ட்னரோ இல்லை தெரிந்தவரோ கல்பனா தியேட்டரின் முதலாளிக்கு உற்வோ என்னவோ.. அங்கு தான் கூட்டிக் கூட்டிச் சென்று சில பல படங்கள் பார்க்க வைத்திருக்கிறான்.. உதாரணமான படங்கலின் பெயர்கள் நடமாடும் சிலைகள், வடிவங்கள் கெளதமிக்கு ஆவி பிடிக்கும் ராமராசன் படம் என..

(டுபாக்கூர் படலிஸ்ட்டில் நினைவுக்கு வருவது ஸ்ரீ தேவியில் வந்த ஆடுகள் நனைகின்றன, நீரோட்டம் ( விஜயகாந்த்தின் முதல் படம்) இன்ன பிற.. அதுவும் அவனுடன் தான் பார்த்தேன்..

ம்ம்..வடிவங்கள் என்னும் ஒரு படம்.. அதில் ஒரு பாடல் - இதயவானில் உல்வுகின்ற புதிய மேகமே - ஜெயச்சந்திரன் கொஞ்சம் பரவால்லம இருந்தது.. இன்னொரு பாட் கூட உண்டென நினைவு..தண்ணீரில் மீனழுதால் கண்ணீரை யார் அறிவார்...

https://youtu.be/GgQKKutUUFQ

சம்பந்தமில்லாமல் ஏன் இந்த ரைட்டப்பா..இல்லை..இருக்கு :) மலையாளம்னு வர்ற்ச்சே ஜெயச்சந்திரன் நினைவு..தொடர்ந்து நடராஜன் அப்புறம் இந்தப் பாட்டு.. :)

chinnakkannan
21st August 2015, 10:14 AM
ஆஹா.. இப்போதே தடுத்தாட்கொண்ட மதுண்ணா.. தாங்க்ஸ்.. :) ஆமா காதல் படுத்தும் பாடு.. கலைஞானம் தயாரித்து அவர் தான் வாணியை இண்ட்ரோ பண்ணி சக்ஸஸ் ஃபுல் என எழுதியிருந்தார்.. நன்னா இருக்குமா..

g94127302
21st August 2015, 10:46 AM
கேரளாவின் அருமையை , அதன் அழகை , அதன் தாத்பரியத்தை சிவாஜியார் பாடியிருக்கும் பாடல் - இந்த பாடலுக்கும் , நடிப்புக்கும் ஏது இணை ? என்ன பாட்டு, என்ன லோக்கேஷன், என்ன ப்ளாக்&வொய்ட் தெளிவு, என்ன ஹம்மிங், என்ன இடையூடும் தெலுங்குப் பாட்டு, என்ன அன்னியோன்னியமான ஜோடி, என்ன படகின் வேகம், என்ன வேடப் பொருத்தம், ம்ஹும், இன்னும் 100 வருசம் போனாலும் இதுபோல வருமா? உக்கார்ந்த இடத்திலேயே ஊர்ப்பட்ட எமோசன் காட்டும் கலைக்குரிசில்!

சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேரநன்னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
தோணிகளோட்டி விளையாடி வருவோம்
சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேரநன்னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
தோணிகளோட்டி விளையாடி வருவோம்

கங்கை நதி புறத்து கோதுமை பண்டம்
கங்கை நதி புறத்து கோதுமை பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்
சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு
சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்
சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு
சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்

சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேரநன்னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
தோணிகளோட்டி விளையாடி வருவோம்

சிங்களத் தீவினுக்கோர் பாலமமைப்போம்
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்
சிங்களத் தீவினுக்கோர் பாலமமைப்போம்
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்
வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்

சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேரநன்னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
தோணிகளோட்டி விளையாடி வருவோம்.

https://www.youtube.com/watch?v=AKLzxSGhVyw

chinnakkannan
21st August 2015, 11:13 AM
உடம்பில் அறிவு ஜாஸ்தியாகி விட்டதால் எக்கச்சக்கமாய் வெய்ட் போட்டு விட்டது..லீவில் சென்று வந்த அலைச்சலில் இரண்டு கிலோ குறைந்தாலும் ஷேப் என்னவோ குட்டி யானை தான்..டை கட்டிக் கொண்டால் கொஞ்சம் மினி தும்பிக்கையாய்த் தொப்பையில் புரள,கொஞ்சம் எனக்கே வெட்கமாக இருந்தது..

எக்ஸர் ஸை..ஸ்… கிலோ என்ன விலை..எனில் டயட் எனப் பார்த்தால் ஒருடயட் கிடைத்தது..இல்லை.. நான்கு மாதங்களுக்கு முன்னாலேயே எனக்கு அறிமுகமாகி கொஞ்சம் கொஞ்சம் நாள் இருந்து பின் மறுபடி நார்மல்ஃபுட் எடுத்து வெய்ட் போட்ட வண்ணம் இருந்தேன்.. இந்த ஆகஸ்ட் 1 முதல் கொஞ்சம் சீரியஸாக ஃபாலோ பண்ணிக் கொண்டு இருக்கிறேன்

டயட் ப்ரகாரம் நோ தானிய வகை உணவுகள் மீன்ஸ் ரைஸ் சப்பாத்திக்கெல்லாம் தடா.. ஓட்ஸூம் நோ.. பழங்களில் அவகாடோ மட்டுமாம்.. தேங்காய்,ச்சீஸ், வெண்ணெய் பால் மோர் - முழுக்கொழுப்புடன் எல்லாம் சாப்பிடலாம்.. பாதாம் முந்திரி பிஸ்தா எல்லாம் சேர்க்கலாம்..என்ன பாதாம் ஊறவைத்து நூறு சாப்பிட வேண்டுமாம் (சாப்பிடும் முன் பின் இரண்டு மணீ நேரம் தண்ணீர் குடிக்கக் கூடாது) வெஜிடபிள்ஸில் காலிஃப்ளவர்,முட்டைக்கோஸ் வெள்ளரி தக்காளி கணக்கில சேர்க்கலாமாம்.. நான் வெஜ்க்கு ஏகப்பட்ட ஆப்ஷன்ஸ்.. முட்டை சாப்பிடுபவர்கள் நான்கு முட்டை டெய்லி சாப்பிடலாமாம்.. (பட் நான் இரண்டு ஆம்லெட் வாரம் இருமுறை சாப்பிட்டேன் )எனில் அப்படியே ஃபாலோசெய்து கொண்டு இருக்கையில் நான்கு கிலோ குறைந்து விட்டது.. தற்போதைய எடை 105.5

மெல்லக் குறைந்தாலும் கொஞ்சம் மனசுக்கு மகிழ்ச்சியாய் உடல் கொஞ்சம் லைட்டாக உணர்கிறது.. ( கொஞ்சம் சோர்வும் இருக்கிறது..பரவாயில்லை)
என்ன ஒன்று.. நிறையத்தண்ணீர் குடிக்க வேண்டியிருக்கிறது..குறைந்தபட்சம் மூன்று லிட்டர் .
ம்ம் என்ன சொல்லிக்கொண்டிருந்தேன்..தண்ணீர்!

தண்ணீரில் வரும் பாடல்கள் என கொஞ்சம் யோசித்தால்..

தண்ணீர் சுடுவதென்ன

தண்ணி கருத்திருச்சு

தண்ணீர் கண்டபின்பு மாறும் எங்கள் கண்ணீர்

தண்ணீரிலே மீனழுதால் கண்ணீரை யாரறிவார்..

தண்ணீர் என்னும் கண்ணாடி தழுவுது முன்னாடி..

தண்ணீரைக் காதலிக்கும் மீன்களா இல்லை..

உப்பத் தின்னவன் தண்ணி குடிப்பான்

ஆத்துல தண்ணி வர அதுலொருத்தன் மீன் பிடிக்க

தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை..

தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து

வலைகளிலே மீன் சிக்கலாம் தண்ணீர் என்றும் சிக்காது

ம்ம் இன்னும் நிறைய இருக்கும் போல இருக்கே… :)


. https://youtu.be/Uhp6D2LEP38

chinnakkannan
21st August 2015, 12:05 PM
மீள் பதிவு :

***

எம்.என்.எம் – 4 !

முத்த்ம் வாங்காத, கொடுக்காத மனிதன், மனுஷி இருக்கிறார்களா என்ன.. இல்லை என்று தான் சொல்ல வேண்டும்..

அதுவும் இந்த முத்தம் இருக்கிறதே மக்களை சின்னக் குழந்தை முதல் வயது வந்து பின் வயதாகும் வரை படுத்தும் பாடு..ம்ம் சொல்லி மாளாதுங்க..

இப்பவும் மதுரையில் என் பக்கத்து வீட்டு மாமா உயிரோடிருந்து அவரைப் பார்த்தேனாகில் செளக்கியமா என்றெல்லாம் கேட்கமாட்டேன்..முதலில் ஒரு முறை.முறைப்பேன். அப்புறம் தான் இதர விசாரிப்பெல்லாம்..

பின் என்னங்க.. வெகுசின்ன வயதில் என்னைத்தூக்கி கொழுக் மொழுக் கன்னத்தைக் கிள்ளி மலையாளப் படப் போஸ்டர் சுவரில் ஒட்டியிருப்பது போல பச்சக்கென்று கன்னத்தில் அழுந்தமுத்தமிட்டு நான் பயந்தும் வாய்துர் நாற்றத்தாலும், தாடி குத்தியதாலும் இப்படி பல ரீஸன்களுக்காக அழ அப்படியே தலைக்கு மேலே தூக்கி தட்டாமாலை சுற்றி சுற்றல் வேகத்தில் அழமறந்து கொஞ்சம் கெக்கே என சிரிக்க் ஆரம்பிக்கையில்.. பார் கண்ணாக்குட்டிக்கு என்னோட முத்தம் பிடிக்குது சிரிக்கிறான் எனச் சொல்லி என்னைக் கீழிறக்கி மறுபடி பச்சக் கொடுத்து மறுபடி அழவிட்டார்.. இன்னும் அதை நினைத்தால் கன்னம் வலிக்கிறது..(இதைப் பிற்காலத்தில் என் அம்மா சொல்லியிருக்கிறார்.. ஒன்ன எப்படிக் கொஞ்சுவார் தெரியுமா அவர்….ஒங்கப்பா திட்டியே திட்டியிருக்காராக்கும்..கொழந்தைய முரட்டுத்தனமா கொஞ்சறான் பாவி.. கன்னம்லாம் கன்னியிருக்கு.. !)

நம்மளோட இன்றைய ஹீரோ இருக்கானே நல்ல ஹேண்ட்ஸம்மான புள்ளயாண்டான்.. ஹேண்ட்ஸம்மான ஹீரோயினே கிடைச்சுட்டா அவனுக்கு! சரி சரி..பியூட்டி ஃபுல்னே சொல்லிக்கலாம்.. ஹீரோயினை லவ் பண்றான்..சரி..அதுக்காக இப்படியா பண்றது..

என்னவாக்கும் செஞ்சான்..

ஹீரோயினோட பேசறான்..அதுவும் ஃபோன்ல..

பேசினா பரவால்லையே பேசறதுக்கு முன்னாடி முத்தா கொடுக்கறான் த்ரீ டைம்ஸ்..

சரி அவனோட லவ்வருக்கு கிஸ் கொடுக்கறான் ஃபோன்ல தானேன்னா..சுத்துமுத்தும் பாத்துக்க வேணாமோ.. என்ன தான் இருந்தாலும் ரகசியமா அம்மா பண்ணிவச்சுருக்கற லட்டை எடுத்துண்டு போய் மொட்டை மாடிக்குப் போய் பக்கத்து வீட்டுப் பொண்ணுக்கும் ஷேர்பண்ணி சாப்பிடறது தானே சுகம்.. ச்ச்..என்னது வேற கத வருதே இதுல! சுத்து முத்தும் பார்க்காம அவன் பேசறதே ஆபீஸ்லயே கேட்டுண்டுருக்கா ஒரு இளம் பெண்.. வேற யார்..ஹீரோவோட செக்ரட்டரி..இதுல என்னன்னா ஹீரோயினோட ஃப்ரண்டும் கூட அவ..

ஹீரோ என்னதான்பாஸா இருந்தாலும் அவர் குடுமி நம்ம கைலங்கற நினைப்புல ப்ச்ச் ப்ச்ச் ப்ச்ச் நு அவன் ஃபோன்ல பண்ற மாதிரியே பண்ணிக்காமிக்க அவனுக்கு வெக்கம் கோபம்லாம் வருது..

இவளே செகரட்டரி.. பேரு சுமான்னு வெச்சுக்குவோம்..சுமா. இப்படி சும்மாச் சும்மா நான் உமமா கொடுத்ததை ச்சுக்காட்டி சாரி குத்திக் காட்டிச் செய்யாதே..ஏதோ தெரியாத்தனமா செஞ்சுட்டேன்..ஸாரிங்கறான்..

அதுக்கு சுமா இட்ஸால் ரைட் நு சொன்னாலும் வீட்டுக்குப் போய் ஹீரோயினை (சூர்யான்னு வெச்சுக்கலாமா) சூர்யாவை கலாட்டா பண்றாள்..ஏன்னா அவ ஹீரோயின் வீட்ல தான் குடியிருக்கா..

இப்படி கலகலன்னு இருந்தாலும் கூட சுமா மனசுக்குள்ற ஒரு சோகம் 99 இயர்ஸ் லீஸ் போட்ட மாதிரி நன்னா சம்மணம் போட்டுண்டு ஒக்காந்திண்டுருக்கு.. என்னவாம்..

சுமாக்கு சில பலகதைகள்ள, சினிமாக்கள்ள மட்டும் தென்படற கதை மாதிரியான சோகம்..காலைல கல்யாணம் நைட் ஹஸ்பண்ட் போயாச்சு..இதான் அந்தக்காலத்திலேயே திருவிளையாடற் புராணத்துல இருக்கே.. ஒட்டிய பல் கிளை துவங்கி ஒல்லொலி மங்கலம் முழங்க கட்டிய கொம்பறதுப் பாய்ந்தகாளை மணமகனை முட்டி கொத்துப்ப்ரோட்டா வாக்க மணமகன் டபக்குனு போய்டறான்னு வருமே.. அதே தான் சுமா விஷயத்திலயும்..

அவள் ஒரு யங்க் விடோ..ஹூம் தள்ளாத வயசில்லை தான்..ஆனா ஆசைகளைப் புறந்தள்ளியும் விட முடியாத வயசு.. ம்ம் எல்லாம் விதிவசம்னு தான் இருக்கா சுமா.. ஹீரோ மேல கொஞ்சம் அபிலாஷை உண்டு.. ஹீரோவை சுரேஷ்னு வெச்சுக்குவோமா சுரேஷ்..ம்ம் இருந்தாலும் ஸ்னேகிதியின் ப்ரஸண்ட் காதலன் ப்யூச்சர் கணவன்.. கொஞ்சம் அவங்களை வாரி மட்டும் விடுவோம்னு இருக்கா..

ஆனாக்க இந்த விதி இருக்கே அது ஒரு பொல்லாத விஷயம்....இல்லையில்ல விஷமக் கார விஷயம்… யாராவது கிச்சுக் கிச்சு மூட்டினாக் கூட சிரிக்காது..ஆனா திடீர்னு எதையோ நினைச்சுக்கிட்டுச் சிரிக்கிற யங்க் காலேஜ் க்ர்ளாட்ட்மா கெக்கபிக்கேன்னு சிரிக்க ஆரம்பிச்சுடுத்துன்னு வச்சுக்கங்க வாழ்க்கை பாட்டுக்கு ரூட் மாதிரிப் போய்டும்..

சுமாக்கும் அப்படித்தான் நடக்குது.. ஊருக்குப் போய் இருக்கலாம்னு போறா..கூடவே சூர்யாவும் வரா.. அங்க சுமாவோட தகப்பனார் பக்க்த்தூர் திருவிழாப்பாக்க சூர்யாவக் கூட்டிண்டு போய்டறார்..

இங்க ஏதோ ஆஃபீஸ் வேலயா எங்கேயோ மும்பையோ என்னவோ போய்ட்டு வந்த சுரேஷுக்கு சூர்யாவைப் பாக்காம மனசுக்குள்ள நம நமங்குது..

காதலிக்கும் பெண்ணின்
கண்ணை விட
காதலிக்கும் ஆணின்
நெஞ்சம் அதிகம் துடிக்கும் நு ஆன்றோர் சொன்னாற்போல அவனுக்கு ஹ்ருதயம் அடிச்சுக்குது.. சுமா எங்க போறதா சொன்னா..அந்த ஊர் தானே..அந்த ஊர் தானே சூர்யாவும் போய்ருக்கான்னு அதே ஊருக்குக் கிளம்பி காலைல போய் இறங்கினா..

வாசல்ல கோலம் போட்டுக்கிட்டிருக்கா சுமா..இவனப் பாத்துடறா..இவன்கண்ணையும் பாத்துடறா..

பாதகத்தி சொல்லாம போனதினால் அங்கே
..படபடன்னு செவந்திருக்கும் கண்களையும் பார்த்தாள்
வேதனையைச் சொல்லாம சிரிக்கின்ற அவனின்
…வெளிறித்தான் போனமுகம் சொன்னதுவே கதையை

ஹலோ சுரேஷ் சார்..எப்படிங்க இங்கிட்டுங்கறா.. இல்ல..இங்க தானே சூர்யா வந்தா..ங்கறான் சுரேஷ்..
ஓ அவ கிராமத்துக்குன்னா போயிருக்கா.. நாளைக்குக் காலைல வந்துடுவா..

ஓ அப்படியா சுமா நான் கிளம்பறேன்..

சுரேஷ் சார்.. இருந்துட்டு சுமாவப் பார்த்துட்டே போய்டுங்களேன்.. அப்படிங்கறா சுமா..இல்லை இல்லை சொல்ல வச்சுடுத்து விதி..

கொஞ்சம் யோசிச்சு சரின்னு தங்கிடறான்..

அப்புறம் என்ன ஆச்சு.. இரவும் பகலும் டச்சிங் டச்சிங்க்ல இருக்கற அந்திப் பொழுது வந்து இரவும் வந்துடுது..

இவனுக்கோ லவ்வர் இல்லை.. அவளை நினைச்சுக்கறான்..சுமாவும் அந்தப் பக்கம் அறையில இருக்கா..அவளுக்கும் எதையெல்லாமோ எண்ண எண்ண எண்ணப் போராட்டம்..இரவு இளமை தனிமை … என்னாகும்..பட்டாசுத் திரிமேலே எரியற ஊதுபத்தி போட்டா மாதிரி பட்டுன்னு உணர்வெல்லாம் வெடிச்சுடுது… ரெண்டு பேரும் தாச்சித் தூங்கிடறாங்க!

அப்புறம் தாங்க அவங்களோட வாழ்க்கைப் பாதை திசை மாறிப் போய்டுது..

இதுல சுமாக்கு சுரேஷ் மேல அபிலாஷை அதாவது ஒரு ஈர்ப்பு இருந்ததுன்னு சொன்னேன்ல அந்த ஈர்ப்புல முன்னாலேயே ஒரு கனவு காணறாங்க.. அஃப்கோர்ஸ் சுரேஷை உமர் கயாமாகவும் தன்னை காதலியாகவும் நினச்சுக்கிட்டு..

அந்தப் பாட்டோட வரிகள்..
**
கிண்ணத்தில் தேன் குடித்து கைகளில் ஏந்துகிறேன்
எண்ணத்தில் போதை வர எங்கெங்கோ நீந்துகிறேன்..

*
படம் தெரிஞ்சுருக்குமே..இளமை ஊஞ்சலாடுகிறது கமல்ஹாசன் ஜெய்சித்ரா.. ( சுரேஷ் சுமா) சூர்யாவா ஸ்ரீப்ரியா, அப்புறம் ரஜினி உண்டு.. வெகு அழகான பாடல்களும் வெகு சுவாரஸ்யமாகவும் போகும் படம்..

அது சரி ஆணிப் பொன் நா என்னவாக்கும்.. ஆணிப் பொன் என்றால் சுத்தமான பொன் சுத்தத் தங்கம் 24 காரட் .999 கோல்ட்..ஆணிப்பொன் தேர்கொண்டுன்னு ஒரு பாட்டு கூட உண்டே..அச்சோ அத இன்னொரு எம் என் எம்க்கு யூஸ் பண்ணிக்கலாமே..!@ :)

Varadakumar Sundaraman
21st August 2015, 12:27 PM
RARE ADVTS
http://i62.tinypic.com/s419bd.jpg

Varadakumar Sundaraman
21st August 2015, 12:28 PM
http://i61.tinypic.com/15n17wx.jpg

Varadakumar Sundaraman
21st August 2015, 12:31 PM
http://i58.tinypic.com/34zivr5.jpg

Varadakumar Sundaraman
21st August 2015, 12:32 PM
http://i59.tinypic.com/2zjar0k.jpg

Varadakumar Sundaraman
21st August 2015, 12:33 PM
http://i62.tinypic.com/zyddw8.jpg

Varadakumar Sundaraman
21st August 2015, 12:34 PM
http://i58.tinypic.com/2q9l3q0.jpg

Varadakumar Sundaraman
21st August 2015, 12:36 PM
http://i59.tinypic.com/4t0x3k.jpg

Varadakumar Sundaraman
21st August 2015, 12:38 PM
http://i58.tinypic.com/qs8v9d.jpg

vasudevan31355
21st August 2015, 01:28 PM
அமோல் பாலேகர் பூர்ணிமாவின் ஓளங்கள் படம் இந்தியில் அவதார் என்ற பெயரில் அவதரித்து தமிழில் பூப்பூவா பூத்திருக்கு என்ற பெயரில் பிரபு, சரிதா, அமலா நடித்து வெளியானது..மது அண்ணா!

1983-ல் ராஜேஷ்கண்ணா, ஷபனா ஆஸ்மி நடித்து வெளிவந்து சக்கை போடு போட்ட 'அவ்தார்' இந்திப் படம் தமிழில் நடிகர் திலகம், அம்பிகா நடித்து 'வாழ்க்கை' (1984 ) யாக வெளிவந்து தூள் கிளப்பியது. 'வாழ்க்கை'யும் மலையாளத்தில் 'ஜீவிதம்' ஆனது. மது, கே.ஆர்.விஜயா நடிக்க பாலாஜி தயாரித்த படம் இது.

இப்போது ஒரு சிறு சந்தேகம். தாங்கள் குறிப்பிட்டுள்ள 'பூப் பூவா பூத்திருக்கு' படத்தின் இந்தி அவதாரம் வேறு 'அவதாரா'?

தமிழில் 'காலம் மாறலாம்...நம் காதல் மாறுமா' டூயட் மலையாளத்தில் எங்கன இருக்கும்?

உங்க பேர் கொண்டவரும்,:) 'புன்னகை அரசி'யும் பாடுகிறார்கள். இசை ராஜாவின் தம்பியாமே!

'என் மானசும் என்னும் நிண்டே ஆலயம்'


https://youtu.be/dJIvpJvn96g

s.vasudevan
21st August 2015, 03:30 PM
Courtesy: Tamil Hindu

காற்றில் கலந்த இசை 18: வன தேவதைகளின் விருப்பப் பாடல்
மாலைக்கும் இரவுக்கும் இடைப்பட்ட நேரம். குளிர்காற்று வருடும் வனப் பாதை ஒன்றில் ஊர்ந்து செல்கிறது வாகனம். அதன் விளக்கொளியில் கரும்பச்சைக் குவியல்களாகத் தெரிகின்றன புதர்க் காடுகள். வனத்தின் மவுனத்தைக் கலைத்தபடி குளிர்க்காற்றுடன் கலந்து பரவத் தொடங்குகிறது வாகனத்தின் மியூசிக் சிஸ்டத்திலிருந்து ஒலிக்கும் அந்தப் பாடல்.

‘ராசாவே ஒன்ன நான் எண்ணித்தான்’. அருகில் எங்கோ ஒரு மலைக் கிராமத்துப் பெண் தனது காதலனை நினைத்துப் பாடிக்கொண்டிருக்கிறாள் என்று நினைக்க வைக்கும் உயிர்ப்பான பாடல் இது. வி.சி. குகநாதன் இயக்கத்தில் ரஜினி, தேவி, ப்ரியா நடித்த ‘தனிக்காட்டு ராஜா’ (1982) படத்தில் இடம்பெற்றது. ஜெய்சங்கர், ஆர்.எஸ். மனோகர், செந்தாமரை, சங்கிலி முருகன், விஜயகுமார் என்று ஏகப்பட்ட வில்லன்களை எதிர்த்து நிற்கும் கோபக்கார இளைஞன் பாத்திரத்தில் நடித்திருப்பார் ரஜினி. இப்படம் பெரிய வெற்றி பெறவில்லை. ரஜினியின் காதலியாக வரும் தேவி, அவரைக் காப்பாற்ற வில்லன் ஜெய்சங்கரை மணந்துகொள்வார். வெற்றி பெறாததற்கு இதுவும் ஒரு காரணம் என்று சொல்பவர்கள் உண்டு.

குளிர்க் காற்றை ஊடுருவிச் செல்லும் கூர்மையான குரலில் எஸ்.பி. ஷைலஜா பாடிய பாடல்களில் ‘ராசாவே உன்ன நான் எண்ணித்தான்’ பாடலும் ஒன்று. பாடலின் தொடக்கத் தில் ஜலதரங்கமும் புல்லாங்குழலும் இணைந்த இசைக் கலவையைக் கரும் பாறையில் பட்டுத் தெறிக்கும் சாரலாக ஒலிக்க விட்டிருப்பார் இளையராஜா. மழை ஈரம் படிந்த குன்றின் மீது வரிசையாக வைக்கப்பட்ட விளக்குகளின் காட்சியை மனதுக்குள் எழுப்பும் இசை இப்பாடல் முழுவதும் ஒளிர்ந்துகொண்டே இருக்கும்.

காதலனின் நினைவில் நாயகி பாடும் இப்பாடல் முழுவதும் அவளது தோழிகளின் ஆறுதல் மொழியாகப் பெண் குரல்களின் ஹம்மிங் பயன்படுத்தப்பட்டிருக்கும். ‘ராசாவே’ எனும் பல்லவியின் முடிவில் நாயகியின் காதல் மனதுக்கு வாழ்த்துச் சொல்லும் தோழிகளின் ஹம்மிங் ஒலிக்கத் தொடங்கும். ‘தனதம் தம்தம் தம்தம் தம்தம்’ எனும் அந்த ஹம்மிங் செறிவான மரங்கள் அடர்ந்த வனப் பாதையில் ஒரு கற்பனை உலகுக்கு நம்மை அழைத்துச் செல்லும். துல்லியமான ஒலியமைப்பில் மெலிதான தாளக்கட்டும் கிட்டார் இசையும் துணைக்கு வரும். குளிர்ந்த ஓடையின் நீர்ப்பரப்பில் மிதக்கும் கிட்டாரை மீட்டி ஒலிப்பதிவு செய்திருப்பார்களோ என்று தோன்றும் அளவுக்கு கிட்டார் கம்பிகளின் வழியே ஈரத்தைக் கசிய விட்டிருப்பார் இளையராஜா.

‘மாக்கோலம் போட்டு மாவிளக்கேத்தி நீ கிடைக்க நேந்துக்கிட்டேன்’ எனும் வரியில் பெண் மனதின் காதல் பிரார்த்தனையை எளிய மொழியில் சொல்லியிருப்பார் வாலி. வன தேவதைகள் எனும் விஷயம் உண்மையாக இருக்கும்பட்சத்தில் உங்கள் வாகனத்தில் ஒலிக்கும் இப்பாடலை அடர்ந்த மரங்களுக்குப் பின்னே வலம் வரும் அந்தத் தேவதைகள் ரசித்துக்கொண்டிருக்க வாய்ப்புண்டு. இப்பாடல் உருவாக்கும் கற்பனை வனத்துக்கும் பாடல் படமாக்கப்பட்ட விதத்துக்கும் அத்தனை பொருத்தம் இருக்காது என்பதையும் குறிப்பிட வேண்டும்.

ஒலிப்பதிவின் புதுமைக்கு உதாரணம் என்று சொல்லத்தக்க மற்றொரு பாடல் ‘சந்தனக் காற்றே’. எஸ்.பி.பி. – ஜானகி ஜோடியின் மாஸ்டர் பீஸ் பாடல்களில் ஒன்று இது. மேற்கத்திய இசைக் கருவிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்பாடலும் அடர்ந்த வனத்தின் சித்திரத்தைக் கண் முன் நிறுத்தும். நெடிய மரங்களுக்கு நடுவே, முகத்தில் அறையும் சிலீர் காற்றைக் கிழித்துக்கொண்டு பைக்கை ஓட்டிச் செல்லும் உற்சாகத்தைப் பிரதிபலிக்கும் முகப்பு இசையுடன் பாடல் தொடங்கும். வனப் பகுதியில் உலவச் செல்லும் நகரவாசியின் கண்களுக்குப் படும் காட்சிகளின் இசை வடிவம் என்று இப்பாடலைச் சொல்லலாம். வனப் பாதைகளில் பகல் நேரத்தில் ஒலிக்கும் சில்வண்டுகளின் ரீங்காரத்தின் சாயலை இப்பாடலில் உணர முடியும். பல்லவி மற்றும் சரணங்களின் முடிவில் எஸ்.பி.பி.-ஜானகி குரல்கள் சங்கமித்துக் கரைவதைப் போல் ஒலிப்பதிவை வடிவமைத்திருப்பார் இளையராஜா. ‘நீர் வேண்டும் பூமியில் பாயும் நதியே’ எனும் வரி வாலியின் அற்புதக் கற்பனை.

உள்ளூர்ப் பண்ணையாரான ஜெய் சங்கரின் அடக்குமுறைக்கு எதிராக விவசாயிகளை ஒன்றுதிரட்டி ரஜினி பாடும் ‘கூவுங்கள் சேவல்களே’ எழுச்சியூட்டும் இசையும் புரட்சிகரமான பாடல் வரிகளும் கொண்ட பாடல். வயலின்கள், ட்ரம்பெட் இசையுடன் அதிரும் தாளக்கட்டுடன் தொடங்கும் பாடல் இது. ஆவேசத் துடிப்புடன் எஸ்.பி.பி. பாடியிருப்பார். ‘திண்ணைக்கும் பண்ணைக்கும் அலைந்து தலை எண்ணெய்க்கும் வக்கு இல்லை’ என்ற வரிகளில் ஏழை மக்கள் மீது நாயகன் காட்டும் கரிசனத்தைப் பதிவுசெய்திருப்பார் வாலி. இப்பாடலின் தொடக்க இசை, வானொலி நிகழ்ச்சியொன்றின் முகப்பு இசையாகப் பயன்படுத்தப்பட்டது.

இப்படத்தில் ‘நான்தான் டாப்பு’, ‘நான்தாண்டா இப்போ தேவதாஸ்’ ஆகிய இரண்டு பாடல்களும் உண்டு.

chinnakkannan
21st August 2015, 03:34 PM
எண்ணத்தில் தேனூறி ஏற்றபல கொண்டுவரும்
கண்ணில் வழிந்தோடிக் கற்பனைக்கு வித்தாகும்
திண்மைச் சிரிப்பில் திசையெங்கும் பொங்கிவிழும்
மென்மை மழையதுவா மே…
*
மழையது வென்றிங்கே மாந்தரவர் போற்றிக்
குழைந்து வணங்கிகை கூப்பி – கலையாமல்
இன்னும் பொழிகவென ஏதோ சொலிவணங்க
மின்னலிடி தந்திடுவாள் தான்
*

தானாய்க் கருமேகம் தக்கபடி உண்டாக
மானாய்ப் புவியின் மடியினிலே – மீனாய்
விழுந்தே பலவாறாய் வித்தைகள் செய்யும்
குழுவாய் மழைத்துளிகள் ஆம்..
*

ஆமென்றால் இல்லையென ஆர்ப்பாட்டம் பலகொண்டு
போமென்றால் போய்யாபோ போட்டியுடன் – தாமென்ற
எண்ணமெதும் கொள்ளாமல் எத்தனையோ நாட்டியம்தான்
வண்ணமழை ஆடிடுமே வா..
*
வாவென்றே வஞ்சிவிழி வாகாகப் பார்ப்பதுபோல்
தாவென்றே நெஞ்சைத் தயக்கமின்றி கேட்டுவிடும்
வேழமது கர்ஜனையாய் விண்ணில் இடிமுழக்கி
ஆழமாய்ப் பெய்யும் மழை..
*
மழையென எண்ணியிங்கு மாண்பாய்க் கவியைக்
கலையுடன் கற்பனையைச் சேர்த்தே – வலையிலே
இட்டேன் அடியேன் எழிற்குறைவு என்றாலோ
சுட்டித்தான் இங்குசொல்வீ ரே..

*

காலையில்கேட்ட அழகிய மழைப்பாடல்.. இத்துடன் திடீரென்று பாட்டுக்கள் எழுதிப்பார்க்கலாம் என இப்போது நினைத்து எழுதியது….. ( மேற்கண்ட பாக்கள் வடிக்க நான் எடுத்துக்கொண்ட நிமிடங்கள் பத்து..ஓ.கேயாங்க..?)

குடும்பத்தலைவன் சரோஜா தேவி.. வெகு அழகான பாடல்..வரிகளும் தான்..

*

https://youtu.be/tdxrpD7QQpM

மழை பொழிந்து கொண்டே இருக்கும்
உடல் நனைந்து கொண்டே இருக்கும்
மனம் நிறைந்து நிறைந்து
எண்ணம் வழிந்து வழிந்து
உயிர் மிதந்து கொண்டே இருக்கும்


உள்ளம் துடித்துக் கொண்டே இருக்கும்
கண்கள் விழித்துக் கொண்டே இருக்கும்
தென்றல் தழுவிக் கொண்டே வரும்
இரவைக் கண்டே பெண்மைதவித்துக் கொண்டே இருக்கும்


ஆயிரம் யானை பலமிருக்கும்
அல்லிக்கொடி போல் மனமிருக்கும்
தாயின் பாசம் நிறைந்திருக்கும்
தாவியணைத்தால் மெய் சிலிர்க்கும்


இன்று கூட்டுக்குள்ளே இருக்கும்
நாளை வீட்டுக்குள்ளே இருக்கும்
எங்கள் கூட்டுக்குரல் இன்பக்கோட்டைக்குள்ளே
என்றும்கேட்டுக்கொண்டே இருக்கும்

பின்ன வாரேன் :)

madhu
21st August 2015, 05:23 PM
மது அண்ணா!
இப்போது ஒரு சிறு சந்தேகம். தாங்கள் குறிப்பிட்டுள்ள 'பூப் பூவா பூத்திருக்கு' படத்தின் இந்தி அவதாரம் வேறு 'அவதாரா'?


ஹி..ஹி..ஹி..ஹிந்திப் படத்தின் பேரெல்லாம் கொஞ்சம் குழப்பிக் கொள்வேன்.. வாசுஜி.. நீங்க சொன்னது மாதிரி அவதார் வாழ்க்கையேதான்.. ஓளங்கள்..ஹிந்தியில் மாசூம் என்ற பெயரில் வெளிவந்தது. இரண்டிலும் ஷபனா அஸ்மி என்பதால் ஹி ஹி...

madhu
21st August 2015, 05:41 PM
சிக்கா...

பல்லவியில் தண்ணீர் வரும் பாடல்களில் சில..

தூரச் சிகரங்களில் தண்ணீர் துவைக்கும் அருவிகளே

தண்ணிக்குடம் எடுத்து தனிவழியே போற குட்டீ

போறாளே பொன்னுத்தாயி பொலபொலவென்று கண்ணீர் விட்டு
தண்ணீரும் சோறும் தந்த மண்ணை விட்டு

தரை மேல் பிறக்க வைத்தான் எங்களை
தண்ணீரில் பிழைக்க வைத்தான்

குத்தாலத்தில் தண்ணி இல்லேன்னா வெறும்
பாறை மட்டும்தான் பாட்டு படிக்கும்

இந்த அல்லித்தண்டு என்னைக் கண்டு
தண்ணிக்குள்ளே விக்கி நிக்குது

மரத்தை வச்சவன் தண்ணியை ஊத்துவான் தெரிஞ்சுக்க மாமா

இன்னும் சரணங்களில் இருக்கும் பாடல்கள்
தேவை என்றால் அது உங்களுக்கே தண்ணி பட்ட பாடு இல்லையோ ?

s.vasudevan
21st August 2015, 05:42 PM
Courtesy: Tamil Hindu

திரை விலகிய சென்னையின் முகம்!


தமிழ்த் திரைப்படங்களைப் பொறுத்தவரை, கதை நடப்பது நகரத்தில் என்று வைத்துக்கொண்டால் அந்த நகரம் பெரும்பாலும் சென்னையாகவே இருக்கும். “என் மகன் வேலை தேடிப் பட்டணத்துக்குச் சென்றிருக்கிறான்” என்று ஒரு ஏழைத் தாய் விட்டத்தைப் பார்த்துக் கவலைப்படும் காட்சிக்குப் பின்னர், சென்ட்ரல் ரயில் நிலையத்தை கேமரா கீழிருந்து பிரம்மாண்டமாகக் காட்டும் காட்சி கண்டிப்பாக வரும்.

அறுபதுகள், எழுபதுகளில் வெளியான திரைப்படங்கள் என்றால் வாகன நெரிசலற்ற அகலமான மவுண்ட் ரோடு இடம்பெறும். எண்பதுகளில் வெளியான பெரும்பாலான படங்களில் பி.ஏ., படித்த நாயகன் எந்த வேலையும் கிடைக்காமல் மெரினா கடற்கரையின் காந்தி சிலைக்குக் கீழ் நின்று நியாயம் கேட்டுப் பாட்டுப் பாடுவான்.

இப்படியாகச் சில டெம்ப்ளேட் ‘லொக்கேஷன்’கள் தமிழ்த் திரைப்படங்களில் காட்டப்படும். விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால், சென்னையில் நடக்கும் கதை என்று ஓரளவு நம்பகத்தன்மையுடன் எடுக்கப்பட்ட படங்கள் எண்ணிக்கையில் குறைவுதான். பொதுவாகவே தமிழ்த் திரைப்படங்களில் கதை நடக்கும் நகரிலேயே பீச் இருக்கும், மலைவாசஸ்தலம் இருக்கும். ரசிகர்கள் அதைப் பெரிதுபடுத்தாமல் பெருந்தன்மையாக ஏற்றுக்கொள்வார்கள்.

எண்பதுகளின் இறுதியில் இதில் குறிப்பிடத்தக்க மாற்றம் வந்தது. குறிப்பாக கமல் ஹாஸனின் ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘மைக்கேல் மதன காமராஜன்’, ‘சத்யா’, மணிரத்னம் இயக்கிய ‘மவுன ராகம்’, ‘அக்னி நட்சத்திரம்’, ‘அஞ்சலி’, வஸந்தின் ‘கேளடி கண்மணி’, கதிர் இயக்கிய ‘இதயம்’, விக்ரமனின் ‘புதுவசந்தம்’ போன்ற திரைப்படங்களில் மாநகர சென்னையின் அடையாளம் வெளிப்பட்டிருந்தது. சென்னைச் சாலைகளின் வாகனப் பரபரப்பு, அலுவலகக் கட்டிடங்கள், வணிக வளாகங்கள், கல்லூரிகள் போன்றவற்றை அவற்றின் இயல்புடன் இப்படங்கள் சித்தரித்தன.

நகர வாழ்வைச் சித்தரிப்பதில் ஓரளவு தேர்ந்தவர் என்று சொல்லத்தக்க இயக்குநரான மணிரத்னம், ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராமுடன் இணைந்து, மர நிழல்கள் அடர்ந்த நகரப் பகுதிகளின் அழகைக் காட்சிப்படுத்தினார். குறிப்பாக, ‘மிஸ்டர் சந்திரமவுலி’யை ஒரு கப் காபி சாப்பிட கார்த்திக் அழைக்கும் காட்சியைச் சொல்லலாம் (அநேகமாக வுட்லண்ட்ஸ் டிரைவ் இன் ஓட்டலில் இக்காட்சி எடுக்கப்பட்டிருக்கலாம்.)

‘அஞ்சலி’ படத்தில் வரும் அபார்ட்மெண்ட் குடியிருப்பும், உயர் நடுத்தர மக்களின் வாழ்க்கையும் தமிழ்த் திரைப்படங்களில் அதுவரை காட்டப்படாத ஒன்று. அபார்ட்மெண்ட் காட்சிகள் ‘செட்’களில் எடுக்கப்பட்டவை என்றாலும் மது அம்பட்டின் ஒளிப்பதிவு அதை உயிர்ப்புடன் காட்டியது. ‘அக்னி நட்சத்திரம்’ படத்தில் மின்சார ரயில் காட்சிகளை அதன் அசல் ஒளியில் படமாக்கியிருப்பார் மணிரத்னம். ‘சத்யா’ படம் சென்னை தெருக்களில் உலா வரும் இளைஞர்களின் உலகைப் புதிய கோணத்தில் சித்தரித்தது.

90-களின் பிற்பாதியில் வஸந்த் இயக்கிய ‘ஆசை’, ‘நேருக்கு நேர்’, அகத்தியனின் ‘காதல் கோட்டை’ போன்ற திரைப்படங்கள் சென்னையின் அசல் நகரத் தன்மையை ஓரளவுக்கு வெளிப்படுத்தின. ’காதல் கோட்டை’ படத்தில் மழைக் காலத்துச் சென்னையை அசலாகக் காட்டியிருப்பார் அகத்தியன். இக்காலகட்டத்தில் தமிழ்த் திரையிசையில் கானா பாடல்களைப் பிரபலப்படுத்தியிருந்தார் தேவா. சென்னையின் பிரத்யேக இசை வடிவமாகக் கருதப்படும் கானா பாடல்களின் வரவு, சென்னைகுறித்த சித்திரத்தைத் திரைப்படங்கள் ஓரளவு அசலாக வெளிப்படுத்த உதவியது. ‘உதயம் தியேட்டரிலே என் இதயத்த தொலைச்சேன்’, ‘விதவிதமா சோப்பு சீப்புக் கண்ணாடி’, ‘குன்றத்துல கோயில கட்டி’ போன்ற பாடல்கள் வட சென்னையின் வாழ்க்கையைப் பிரதிபலித்தன.

வெவ்வேறு காலகட்டங்களில் வெளியான ஜெயகாந்தனின் ‘யாருக்காக அழுதான்’, பாரதிராஜாவின் ‘என் உயிர்த் தோழன்’ போன்ற படங்கள் சென்னை குடிசைப் பகுதிகளின் வாழ்வைச் சித்தரித்தன. என்றாலும், படமாக்கப்பட்ட விதம், சூழல் ஆகியவற்றில் நம்பகத்தன்மை சற்று குறைவாகவே இருந்தது. அதேபோல், சென்னைத் தமிழ் பேசப்பட்ட படங்கள் பல வெளியாகியிருந்தாலும் அவற்றில் பெரும்பாலானவை ‘செட்’ களில் எடுக்கப்பட்டவை அல்லது பொருத்தமற்ற கதைச் சூழல்களை அடிப்படையாகக் கொண்டவை என்பதால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. கதை நடக்கும் இடம் இதுதான் என்ற தெளிவுடன் படமெடுக்கத் தொடங்கிய இளைஞர் பட்டாளம்தான் சென்னையின் அசல் முகத்தைச் சித்தரிப்பதில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியது.

‘புதுப்பேட்டை’யில் சென்னை ரவுடி களின் நிழல் உலகத்தை செல்வராகவன் காட்டிய விதம் அசலுக்கு மிகவும் நெருக்கமாக அமைந்தது. குடிசைப் பகுதிகளின் இருள் வாழ்க்கை, ’ஏரியா’ பிரித்துக்கொள்வதில் ரவுடிகளுக்கு இடையிலான ‘புரிந்துணர்வு’, பாலியல் தொழிலாளர்களின் வாழ்க்கை என்று பல்வேறு விஷயங்களை இப்படம் துல்லியமாக முன்வைத்தது. வெற்றி மாறன், ‘பொல்லாதவன்’ திரைப்படத்தின் மூலம் இவ்விஷயத்தை மேலும் முன்னெடுத்துச் சென்றார். அப்படத்தில் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் கிஷோருக்கும் டேனியல் பாலாஜிக்கும் இடையே வாக்குவாதம் நடக்கும் காட்சியில் வெளிப்பட்டிருக்கும் அசல் தன்மை, தமிழ்த் திரைமொழிக்கு மிகவும் புதியது. இந்தப் படத்தில் வெளிப்பட்ட சென்னை மொழியின் தன்மை பிரமிப்பூட்டக்கூடியது.

இதே காலகட்டத்தில் வெளியான, வெங்கட் பிரபுவின் ‘சென்னை 28’, சென்னை இளைஞர்களின் கிரிக்கெட் காதலை அற்புதமாகச் சித்தரித்தது. நண்பர்களுக்குள் நடக்கும் சிறு உரசல்கள், நண்பனின் தங்கையுடனான காதல், பிரிவு என்று பல்வேறு விஷயங்களை நம்பகத்தன்மையுடன் வெளிப்படுத்திய படம் இது. மிஷ்கின் இயக்கிய ‘அஞ்சாதே’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ போன்ற திரைப்படங்கள் இரவு நேரச் சென்னையின் மர்மங்களை, அழகியலுடன் வெளிப்படுத்தின. சுதந்திரத்துக்கு முந்தைய சென்னையை விஜய் இயக்கிய ‘மதராசப்பட்டினம்’ கற்பனை வளத்துடன் சித்தரித்தது.

சென்னையின் புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களின் வாழ்க்கையை ரசனையுடன் சித்தரித்த ‘அட்டகத்தி’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ரஞ்சித், ‘மெட்ராஸ்’ படத்தில் வட சென்னைப் பகுதி மக்கள் வாழ்வில் அரசியல் குழுக்கள் ஏற்படுத்தும் பாதிப்பைச் சிறப்பாகச் சித்தரித்தார். சந்தோஷ் நாராயணன் - கானா பாலாவின் பாடல்கள் சென்னையின் அசல் குரலாகவே ஒலித்தன.

இன்றைய தேதிக்குத் தமிழில் வெளியாகும் பல படங்கள் சென்னையின் நடுத்தரக் குடும்பங்கள், குடிசைப் பகுதி மக்கள், தாதாக்கள், காவல்துறையினரின் பணி வாழ்க்கை என்று பல்வேறு விஷயங்களை முடிந்தவரை நம்பகத்தன்மையுடன் சித்தரிக்கின்றன. சுசீந்திரன் இயக்கத்தில் வந்த ‘நான் மகான் அல்ல’ படத்தில் சென்னையில் உள்ள சில அபாயகரமான போக்குகளும், திட்டமிட்டு ஆளைக் கொலை செய்வதில் உள்ள கச்சிதத்தன்மையும் பதைக்கவைக்கும் விதத்தில் பதிவாகியிருந்தன.

பல்வேறு வண்ணங்களாலான சென்னையின் அசல் உருவத்தை இளம் கரங்கள் சிரத்தையுடன் திரை ஓவியமாக வரைந்துகொண்டிருக்கின்றன.

vasudevan31355
21st August 2015, 05:47 PM
ஆமாம் மது அண்ணா! எனக்கும் மாசூம் இப்போதுதான் நினைவுக்கு வருகிறது. பிரபு ரோலுக்கு ஷா, சரிதாவுக்கு ஷபனா, அமலாவிற்கு சுப்ரியா பதக். பூ.பூ.பூ சக்கை போடு போட்டது. தமிழிற்கு இசை டி.ஆர்.

'வாசம் சிந்தும் வண்ணச் சோலை'

நல்லாவே இருக்கும்.

இன்னொரு அம்புலிமாமா பாடல் உண்டுதானே!

'உங்கப்பா வாங்கி வந்த குதிர'


https://youtu.be/ew53HCZbSMI

vasudevan31355
21st August 2015, 05:53 PM
இந்தாங்கோ!

சிவக்குமார் நொந்து போய் 'சொர்க்கம் நரகம்' படத்தில் பாடுறார்.

'தண்ணீரை நெருப்பு என்று சந்தேகம் கொண்டவர்கள்
கண்ணீரைக் காணாமல் ஓய்ந்ததுமில்லை
அவர்கள் கண்மூடித் தலையணையில் சாய்ந்ததுமில்லை'


https://youtu.be/svfDtOlnFbk

vasudevan31355
21st August 2015, 05:56 PM
அதே சிவக்குமார்

'தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான்'

அப்படின்னு இன்னும் நொந்து பாடுவாரே!

vasudevan31355
21st August 2015, 06:04 PM
சரத்பாபுவும், ஸ்ரீப்ரியாவும் 'நினைவுகளி'ல் மூழ்கி

'ஓடைத் தண்ணீரில் மீனாட
ஊதாப் பூவோடு தேனாட
கண்ணில் கஸ்தூரி மானாட
வந்தேன் உன்னோடு நான் ஆட'

பாட, சின்னாவால் ஓர் ரேர் பாடல் கிடச்சுது. தேங்க்ஸ் சின்னா!

அப்பாடி! எத்தனை நாள் ஆச்சு இந்தப் பாடலைக் கேட்டு! ஸ்ரீபிரியா செம குளுகுளு. வாணி ரகளை.


https://youtu.be/wE1lMvMGkGk

vasudevan31355
21st August 2015, 06:13 PM
'ஓடத்துல தண்ணீரு
பெண்ணொருத்தி கண்ணீரு
ஓடம் போய் ஊரு சேருமா?
என் ராசாத்தி ராசா
உன் நெனப்பு என்னைக்கும் மாறுமா?

கரை கடந்த குறத்தியின் இல்லை இல்லை ஒருத்தியின் தண்ணீரு... கண்ணீரு... பாவமான பாவம். ஜானகி அடி தூள்.

vasudevan31355
21st August 2015, 06:41 PM
தண்ணிப் பாட்டு

தண்ணீரில் தள்ளாடும் மண் வீடு போலாச்சு......வரவு நல்ல உறவு

கண்ணாடி மேனியடி... தண்ணீரில்ஆடுதடி ..... சின்னாவுக்குப் பிடித்த பாட்டு

தண்ணீரிலே மீன் அழுதால் கண்ணீரைத்தான் யாரறிவார்?

தாகத்துக்குத் தண்ணி குடிச்சேன்

தண்ணி இல்லேன்னா தாங்காது மீனு .....பக்கத்து வீட்டு ரோஜா

தண்ணீர் வீட்டோ வளர்த்தோம்

தண்ணிக் குடம் எடுத்து தங்கம் நீ நடந்து வந்தா...

தண்ணிக் கொடம் எடுத்து தனி வழியே போற குட்டி...

என்னடிப் பாப்பா சௌக்கியமா? தண்ணியிலே உள்ள சுகம்...

தண்ணீரில் ஏதடி நெருப்பு....உயிர்

தண்ணிக்குள் நிக்குது தாவணி....

ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த

தண்ணியிலே நனைஞ்சா இது தங்கமின்னு ஜொலிக்கும்

எந்நாளும் தண்ணியிலே எங்க பொழப்பு

தரை மேல் பிறக்க வைத்தான் - எங்களைத்
தண்ணீரில் பிழைக்க வைத்தான்

sivajisenthil
21st August 2015, 06:58 PM
NTR's admiration for NT!!


நடிகர் திலகத்தின் உற்ற நண்பரும் தீவிர ரசிகருமான
என் டி ராமாராவ் அவர்கள் தெலுங்கில் நிகரற்ற சூப்பர்ஸ்டாராக வலம் வந்த போதும் நடிகர்திலகத்தின் விருப்பத்திற்கிணங்க கர்ணன் திரைப்படத்தில் விசுவரூப கிருஷ்ண பரமாத்மாவாக சிறப்புத் தோற்றமளித்து பெருமைப்படுத்தினார்.

அவ்வண்ணமே நடிகர்திலகமும் நட்பின் புரிதலாக
என் டி ஆரின் சாணக்கிய சந்திரகுப்தா திரைப்படத்தில் மாவீரர் அலெக்சாண்டராக சிறப்புத் தோற்றம் ஏற்று கௌரவப்படுத்தினார் !!

நடிகர்திலகத்தின் பிரிக்க முடியாத பாத்திரப் படைப்பின் திரைத் தோற்றங்களான வீரசிவாஜி மற்றும் கட்டபொம்மன் கெட்டப்புகளில் அப்படியே பொருந்தி நடிகர் திலகத்துக்கு பெருமை சேர்த்தார் என் டி ஆர் தனது மேஜர் சந்திரகாந்த் படம் வாயிலாக ..

நடிகர்திலகத்தின் வீர பாண்டிய கட்டபொம்மன் அதிரடிக் கலக்கலாக டிஜிடலில் மறு வெளியீடு கண்டுள்ள இவ்வேளையில் NTR அவர்களின் அசத்தலான இப்பாடல் காட்சியும் நடிகர் திலகத்துக்கான சிறந்த நினைவஞ்சலியே !!


https://www.youtube.com/watch?v=rC0g0719uBM

vasudevan31355
21st August 2015, 07:33 PM
செந்தில் சார்,

திருப்தியா பார்த்துக்கோங்க.
http://2.bp.blogspot.com/-PfZ1AwAxrjc/UXan1KkYDxI/AAAAAAAAAuc/1xG_8bem--A/s1600/Major+Chandrakanth+Movie+Rare+Shooting+Pics+(3).jp g

http://3.bp.blogspot.com/-PO0DsF7JLD8/UXan20X43AI/AAAAAAAAAuo/7t-vpbXdYas/s1600/Major+Chandrakanth+Movie+Rare+Shooting+Pics+(4).jp g

http://1.bp.blogspot.com/-G44J6Tk321c/UXan5e9d9bI/AAAAAAAAAvA/NeCJcCO4j4M/s1600/Major+Chandrakanth+Movie+Rare+Shooting+Pics+(5).jp g

http://2.bp.blogspot.com/-5b0V_g2hpYE/UXan45RSDGI/AAAAAAAAAu8/oXgLXsP4a5k/s1600/Major+Chandrakanth+Movie+Rare+Shooting+Pics+(6).jp g

http://3.bp.blogspot.com/-4osPfISafDo/UXan3eu4OvI/AAAAAAAAAuw/8TureHwfb4s/s1600/Major+Chandrakanth+Movie+Rare+Shooting+Pics+(2).jp g

http://1.bp.blogspot.com/-h1NNuoKnnPw/UXan2s3MGTI/AAAAAAAAAuk/99i7bozFwK8/s1600/Major+Chandrakanth+Movie+Rare+Shooting+Pics+(1).jp g

chinnakkannan
21st August 2015, 07:40 PM
ஆஹா..மதுண்ணா, வாசு சார் மிக்க நன்றி தண்ணீர் பாடல்கள் லிஸ்டிற்கு..ம்ம் ஒடைத்தண்ணீரில் நீராட இப்போ தான் பார்க்கிறேன் வெகு அழகானபாடல்..சொன்னாற்போல ஸ்ரீப்ரியாவும் அழகு (கன்னக்குழி விழும் நடிகை வேறு யார் இருக்கிறார்கள்..?!) (என்.டி.ஆர்க்கெல்லாம் பக்கெட் எடுக்கணுமா நற நற)

chinnakkannan
21st August 2015, 07:55 PM
தண்ணிக்குள் நிக்குது தாவணி ஆடியோ மட்டும் தான் கிடைக்குது..

தண்ணியிலே நனைஞ்சா இது தங்கமின்னு ஜொலிக்கும் - இதுவும் கேட்டதில்லை..கிடைக்கவுமில்லை..

என்னடி பாப்பா செளக்கியமா தண்ணியிலே - உங்க புண்ணியத்துல நான் பார்த்தேனாக்கும்..ரொம்ப நாளாச்சு தாங்க்ஸ்..

தண்ணிக் கொடம் எடுத்து தங்கம் நீ நடந்து வந்தா தவிக்குது மனசு தவிக்குது - ஒல்லி ப்ரஷாந்த்(முதல் படமா என்ன)
அட சந்தனக் கொடத்துத் தேனே நான் சந்திச்ச இளமானே (ஹை..இதிலயும் தேன் வருதே) இப்ப தான்பாக்கேன்..

தண்ணிக் கொடமெடுத்து த் தனிவழியே போற குட்டி - ம்ஹூம் தேடினதுல கிடைக்கலை..

ஆமா எங்கிட்டிருந்துங்கோ இப்படிப் பாட்டெல்லாம் கண்டு பிடிக்கறீங்க..க்ரேட் அண்ட் தாங்க்ஸ்..

sivajisenthil
21st August 2015, 08:01 PM
தமிழில் வெகுஜனரஞ்சக இலக்கிய மதுர கீதங்களில் இலந்தைப் பழம் மாம்பழம் இளநி வரிசையில் ஊத்திக் கொடுத்தாண்டி ஒரு ரவுண்டு பாடலுக்கும் தண்ணியிலே மிதப்பதில் தனிப் பங்குண்டு!

ஆனால் இது எந்தப் படத்திலென்று வாசு வாசு பண்ணிப் பார்த்தேன்...கிடைக்கவில்லையே சிக!

தண்ணியிலே மீனுண்டு தரையிலே மானுண்டு மாத்தி வெச்சா தீர்ந்துவிடும் கணக்கு ..ஜிஞ்சினுககாம் சின்னக்கிளி பாடலும் சேருமா?

chinnakkannan
21st August 2015, 08:16 PM
தமிழில் வெகுஜனரஞ்சக இலக்கிய மதுர கீதங்களில் இலந்தைப் பழம் மாம்பழம் இளநி வரிசையில் ஊத்திக் கொடுத்தாண்டி ஒரு ரவுண்டு பாடலுக்கும் தண்ணியிலே மிதப்பதில் தனிப் பங்குண்டு!

ஆனால் இது எந்தப் படத்திலென்று வாசு வாசு பண்ணிப் பார்த்தேன்...கிடைக்கவில்லையே சிக!

தண்ணியிலே மீனுண்டு தரையிலே மானுண்டு மாத்தி வெச்சா தீர்ந்துவிடும் கணக்கு ..ஜிஞ்சினுககாம் சின்னக்கிளி பாடலும் சேருமா?


சி.செ :) :)

நானும் வாசு வாசு பண்ணிப்பார்க்கறேன்.. சிக்குதான்னு..

தண்ணியிலே மீனுண்டு தரையிலே மானுண்டு மாத்திவச்சா தீர்ந்து விடும் கணக்கு..அந்த வரிகள் அந்தப் பாடல் ஆக்டிங்க் ரேஞ்சே வேற .. அதுவும் சேரும்..(ம்ஹூஹூம் நான் சோக மோட்க்குப் போக மாட்டேன் இப்போ)

சரி சரி தண்ணீர் பற்றி ப் பாடல்கள் வழங்கிய மதுண்ணா வாசு சி.செ விற்காக ஒரு மலை ரோஜா ஆடப் போகிறது..(இப்பத் தான் பாட் கேட்டேன் அண்ட் பார்த்தேன்..ஸ்ரீப்ரியா டயட்டில் இருந்தாரோ என்னவோ பயங்கர ஒல்லி.. (சங்கிலி படம் பார்த்ததில்லை..)

https://youtu.be/1XaRtNyqcCk

மலை ரோஜாப் பூவு ஒண்ணு மடியில் விழுந்து
மகராஜா கொண்டாரய்யா காதல் விருந்து..

இதழெங்கும் பனி ஊஞ்சல் இடையோடு கருங்கூந்தல் சொல்லட்டும் என்னவாம் அர்த்தம்..ச்சும்மா மெட்டுக்கு வார்த்தையைப் போட்டு ஃபில் அப்பப் பண்ணியிருக்காங்க போல..

vasudevan31355
21st August 2015, 08:17 PM
//தமிழில் வெகுஜனரஞ்சக இலக்கிய மதுர கீதங்களில் இலந்தைப் பழம் மாம்பழம் இளநி வரிசையில் ஊத்திக் கொடுத்தாண்டி ஒரு ரவுண்டு பாடலுக்கும் தண்ணியிலே மிதப்பதில் தனிப் பங்குண்டு!

ஆனால் இது எந்தப் படத்திலென்று வாசு வாசு பண்ணிப் பார்த்தேன்...கிடைக்கவில்லையே சிக!//

செந்தில் சார்,

நீங்க கேட்டு இல்லாமலா? திருப்தியா பார்த்துக்கோங்க.

கேட்டு ரவுண்டு அடிங்க. உலகம் இவ்வளவுதான். அப்படி ஜகா வாங்குங்க.

ஜின் குடிச்சேன் ஜின் குடிச்சேன்
ஜிங்காலக்கடி ஜின்னு

ஆஹா! ரம் குடிச்சேன் குடிச்சேன்
ரம்மாலக்கடி ரம்மு


https://youtu.be/5-ESQnjpMX8

vasudevan31355
21st August 2015, 08:38 PM
சின்னா!

'தண்ணியிலே நனைஞ்சா இது தங்கமின்னு ஜொலிக்கும்'

பாடல் கேளடி கண்மணி படமாம். ஆனால் படத்தில் இப்பாடல் இடம் பெறவில்லை. பாடியது யார் தெரியுமா? என் பேவரைட் உமா ரமணன். செம பாட்டு சின்னா! இளையராஜா இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் இனிமை...ரகளை.

கேட்டுட்டு சொல்லுங்க.

http://www.starmusiq.com/tamil_movie_songs_free_download.asp?movieid=576

chinnakkannan
21st August 2015, 09:00 PM
சின்னா!

//'தண்ணியிலே நனைஞ்சா இது தங்கமின்னு ஜொலிக்கும்'

பாடல் கேளடி கண்மணி படமாம். ஆனால் படத்தில் இப்பாடல் இடம் பெறவில்லை. பாடியது யார் தெரியுமா? என் பேவரைட் உமா ரமணன். செம பாட்டு சின்னா! இளையராஜா இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் இனிமை...ரகளை.// வாசு சூப்பர்.. இந்தப் பாட்டு கேட்டதேயில்லை.. நைஸ்..படத்துல எப்படிப் பொருந்தும் என்று தெரியவில்லை..


உமாரமணனின் பூங்கதவே தாழ் திறவாய் மறக்க முடியுமா...பொன் மானே கோபம் ஏனோ மறக்க முடியுமா.

மஞ்சள் வெய்யில் மாலையிட்ட பூவே..உங்களுக்காக.. ச்சும்மா கண்மூடியே கேக்கலாம்.. நல்ல பாட்டு..

https://youtu.be/25p9EQA4Hsc

rajraj
21st August 2015, 09:02 PM
They are talking about prohibition in Tamilnadu. People are talking about 'thaNNi' here ! :lol: Must be generation gap ! :)

chinnakkannan
21st August 2015, 09:11 PM
ராஜ் ராஜ் சார் அது வேற இது வேற :)

*

வாஸ்ஸு... உமா ரமணன்னு கிளப்பி விட்டுட்டீங்க அவங்கன்னு தெரியாமலேயே எத்தனப் பாட்டு கேக்க மட்டும் செஞ்சுருக்கேன் (வாணின்னு நெனச்சுருந்தேனாக்கும்)

*

காதல் வயப்பட்ட கள்ளமனக் கண்ணுக்குள்
மோதலாய்ச் சீண்டியே மோகத்தை - ஊதியே
தூக்கி நிறுத்தியே துன்பத்தை மேல்நிறுத்தும்
பூக்களும் வண்ணமாய்ப் போ..!

*

பூத்துப் பூத்துக் குலுங்குதய்யா பூவு
அதப் பார்த்து பார்த்து மனசுக்குள்ளே நோவு..

https://youtu.be/DbvU49SfgYY

chinnakkannan
21st August 2015, 09:30 PM
மீண்டும் உமா ரமணன் இன் தண்ணீர்..

*
குயிற்பாட்டை இங்குதான் கூட்டிவந்த நண்பா
மயிலாக மாறினேன் பார்..

*தண்ணீரிலே முகம் பார்க்கும் ஆகாயமே
நல்ல பன்னீரிலே நீராடும் பூந்தோட்டமே
இன்னார்க்கு இன்னார் தான் சாமி சொன்னதம்மா.. முரளி சாரதாப்ரீதா (கிட்டத்தட்ட கனகா இல்லியோ)..

https://youtu.be/2iVSZYjlZbU

chinnakkannan
21st August 2015, 09:42 PM
உமா ரமணனின் பாடல்கள் நானிப்போது கேட்கப் போவது...

நில் நில் நில் பதில் சொல் சொல் சொல் எனை வாட்டாதே
மேகம் கருக்கையிலே புள்ள தேகம் குளிருதடி..
கஸ்தூரி மானே கல்யாணத் தேனே
ஆனந்த ராகம் கேட்கும் காலம்...
வெள்ளி நிலவே வெள்ளி நிலவே வீண் சோகம் ஏனடி மானே..

தாங்க்ஸ் வாசு..

sivajisenthil
21st August 2015, 11:01 PM
மாற்றார் தோட்ட மதுர கீதங்கள் ! பகுதி 35 : the sound of music (1965)

Dedicated to our daughters / grandchildren if applies!!


பொம்மலாட்ட / பொம்மையாட்டப் பாடல்கள் ! puppet show melodies!!

மனிதராகிய நாமெல்லோருமே இறைவன் கைப் பொம்மைகளே ! ஆட்டுவிக்கிறார்....ஆடுகிறோம்!! வாழ்க்கையே பொம்மலாட்டமே!!!
பொம்மலாட்டப் பாடல்களில் சிகரம் சவுண்டு ஆப் மியூசிக் படத்தில் சாந்தி நிலையக் குழந்தைகள் நடத்தும் மேடைப் பொம்மலாட்டமே !!

https://www.youtube.com/watch?v=gtZyAf8JqDI

தமிழில் காத்தவராயனில் சந்திரபாபு போடும் பொம்மையாட்டம் !
https://www.youtube.com/watch?v=6Q_d-KM9Lek


மீண்டும் வாழ்வேன் பாரதி பொம்மையாட்டமும் ரசனையே !


ஜெய் லட்சுமி பெண்ணல்ல நீ ஒரு பொம்மை ...ஓகே!

rajraj
22nd August 2015, 12:32 AM
ராஜ் ராஜ் சார் அது வேற இது வேற :)

appadiya? sari! :) Here is a 'thaNNi' song for you ! :)

kodaiyile ilaippaatrikkoLLum vaga kidaitha kuLir tharuve tharu nizhale
..................
odaiyile oorugindraa theenchuvai thaNNeere.........

http://www.youtube.com/watch?v=KkdY71gPNFE

T.R.Mahalingam in Naam Iruvar !

raagadevan
22nd August 2015, 12:54 AM
Here's my contribution to the list of தண்ணி/தண்ணீர் பாடல்கள்! :)

படம்: மைதிலி என்னை காதலி:

தண்ணீரிலே மீன் அழுதால்
கண்ணீரைத் தான் யார் அறிவார்
தனிமையிலே நீ அழுதால்
உன் மனதை யார் அறிவார்...

படம்: மைதிலி என்னை காதலி:

தண்ணீரில் மீன் ஆழுதால்
கண்ணீரை கண்டது யார்
தனியாக நான் அழுதால்
என்னோடு வருவது யார் யார் யார்...

படம்: முப்பெரும் தேவியார்:

தண்ணீரில் ஒரு பௌர்ணமித் திங்கள்
குளிக்க வந்ததோ
பாராட்டும் இரு காவியக் கண்கள்
ரசிக்க வந்ததோ...

படம்: நாடோடிக் காதல்:

தண்ணியிலே மானம்மா தரையிலே மீனம்மா
என்ன சொல்ல எங்கள் வாழ்க்கை கானல் நீரம்மா...

படம்: புது மனிதன்:

வலைக்கு தப்பிய மீனு மாமு
ஓலைக்கு வந்தது பாரு
பொறந்தது தண்ணீரிலே
மீனு அழிவது வெண்ணீரிலே...

(Most of the videos are available on youtube)

sivajisenthil
22nd August 2015, 01:22 AM
வாசு சிக ராஜ் சார்ஸ் ராகதேவ் ரவி சார்ஸ்... ..வேண்டுமளவு தண்ணிய(பி)டிச்சுட்டோமா?!
தண்ணி நமக்கு மழையிலிருந்தும் அப்புறமா ஏரி குளம் கிணற்றிலிருந்தும் கிடைக்கிறது ..இவற்றுக்கும் பாட்டைப் போடுவோமா?
TRM பாடும் மழை சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே....
தேன் மழையிலே மாங்கனி நனைந்தது இங்கே ...
ஏரிக்கரையின் மேலே போறவளே பொன்மயிலே ..
குளத்திலே தண்ணியில்லே கொக்குமில்லே மீனுமில்லே ...

குலுக்கல் முறையில் ...TRM wins...
ஆட வந்த தெய்வம் ..
https://www.youtube.com/watch?v=7unLk8rkpuk

rajraj
22nd August 2015, 01:29 AM
..வேண்டுமளவு தண்ணியடிச்சுட்டோமா?

naan 'thaNNi' adikkiradhillai! :) I am a teetotaler ! :lol:

sivajisenthil
22nd August 2015, 01:36 AM
naanum thanni kudikkira teetotalerthaan jee !

vasudevan31355
22nd August 2015, 06:22 AM
செந்தில் சார்,

ஜெய்யுடன் ஆடும் அந்த பொம்மை லஷ்மி அல்ல. ஸ்ரீபிரியா. 'சொந்தமடி நீ எனக்கு' படத்தில். ஜெயச்சந்திரனும், சுசீலாவும் பாடிய அப்போதய சூப்பர் ஹிட் இது. ஆனால் சந்திரபாபு பொம்மைக்கு முன்னால் இவையெல்லாம் பிசுபிசுத்துப் போன பொம்மைகள்.


https://youtu.be/wMt9mGhy_Zg

vasudevan31355
22nd August 2015, 06:24 AM
செந்தில் சார்

கட்டபொம்மன் வெற்றி மகிழ்ச்சியில் இரவெல்லாம் தூங்காமல் இருந்தீர்களா? நடுநிசி தாண்டி பதிவிட்டு உள்ளீர்கள். நான் நாளை சென்னை பயணம். சாந்தியில் ஈவ்னிங் ஷோ பார்க்க உத்தேசம். தூக்கம் வருவேனா என்கிறது.

RAGHAVENDRA
22nd August 2015, 06:48 AM
வாசு சார்
ஆஹா.. தங்கள் வருகையை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.
தங்களுடன் சேர்ந்து தலைவரின் திருமுகத்தை தரிசிக்க

RAGHAVENDRA
22nd August 2015, 06:50 AM
கௌரவம் படத்தில் தலைவரின் வசனம் வரும் இவன் எப்படா விழுவான்னு தானே எல்லோரும் எதிர்பார்க்கிறா..

அது போலத் தான் அங்கும் நடக்கிறது...

இந்த நேரத்தில் இந்த பொம்மையைப் பற்றிய அலசல் மிகவும் பொருத்தமே...

https://www.youtube.com/watch?v=Y381IdU6Sjc

சொல்வதற்கெல்லாம் தலையாட்டும் இந்த பொம்மையைப் போல் இருந்தால் நல்ல பெயர் வாங்கலாம்...

RAGHAVENDRA
22nd August 2015, 06:54 AM
https://www.youtube.com/watch?v=E1dlc5O2qU8

பொம்மைப் பாடல்களுக்கெல்லாம் சிகரம். நடன அமைப்பின் உச்சம்.

மெல்லிசை மன்னரின் புகழ்க்கிரீ்டத்தில் வைரக்கல்.

ஈஸ்வரியின் குரல்... நெருங்க முடியுமா யாராவது..

rajraj
22nd August 2015, 07:21 AM
Here is a bommai song from Bommai a VeeNaa Balachander movie.

neeyum bommai naanum bommai........

http://www.youtube.com/watch?v=buQ6KQ0LASw

vasudevan31355
22nd August 2015, 07:30 AM
//தண்ணிக் கொடமெடுத்து த் தனிவழியே போற குட்டி - ம்ஹூம் தேடினதுல கிடைக்கலை..//

சின்னா!

அந்தப் பாடல் 'வந்தாளே மகராசி' படத்தின் 'கண்களில் ஆயிரம் ஸ்வீட் ட்ரீம்....கன்னமிரண்டும் ஐஸ்க்ரீம்' பாடலாகும்.

இந்தப் பாடலை மேடமே பாடகர் திலகத்துடன் இணைந்து சொந்தக் குரலில் பாடியிருப்பார்கள். பல பேருக்கு இந்தப் பாடலே தெரியாது. சங்கர் கணேஷ் மியூசிக்.

இப்பாடலில் மூன்று வெவ்வேறு சரணங்கள் வெவ்வேறு டியூன்களோடு. முதல் சரணம் ஆங்கிலம் கலந்து, ('டீன் ஏஜ்... காதல் ஒருவித மயக்கம்') இரண்டாவது சரணம் 'ரூப் கி ராணி புல்புல்' ன்று இந்தியிலும், (சுக்ரியா) மூன்றாவது சரணம்

'தண்ணிக் குடம் எடுத்து தனி வழியே போற குட்டி'

('மாம்பூ பூத்திருக்கு... மாதுளம்தான் பிடிச்சிருக்கு...அப்பு...எப்பு' என்று மேடம் கலக்கி விடுவார் கலக்கி)

என்று பக்கா கிராமக் குத்து வரிகளாயும் வரும். பாருங்கள். மூன்று வேறுவிதமான காஸ்ட்யூம்களில் மேடம் ஜொலி ஜொலிப்பார். கவலை மறந்து ரசிக்கலாம். ஆனால் சில இடங்களில் மேடம் டியூனோடு ஒத்துழைப்பு தர முடியாமல் சிறிது சுதி பிசகுவார். ('தேகோஜி தேகோ தமாஷா'):) ஜெய்யும் மேடத்தின் திறமைக்கு முன்னால் தடுமாறுவார். பரவால்ல்ல்ல....மன்னிச்சிடுவோம்.


https://youtu.be/J7k-198SDzQ

vasudevan31355
22nd August 2015, 07:36 AM
ராகவேந்திரன் சார்!

வருக!

வருத்தம் வேண்டாம். தங்கள் மனப்புண்ணிற்கு மருந்தாக மதுரகானங்கள் அமையட்டும். இனி நடப்பவை எல்லாம் நலமாக நடக்க இறைவனை வேண்டுவோம். கட்டபொம்மனின் வெற்றிக் களிப்பே மனக் காயங்களுக்கு களிம்பு. நாளை சாந்தியில் சந்திப்போம். நன்றி!

vasudevan31355
22nd August 2015, 07:42 AM
ஒரு பொம்மை பொம்மை விக்குது பாருங்க


https://youtu.be/s6uGEMnvFOM

sivajisenthil
22nd August 2015, 08:40 AM
Vasu Sir
I really feel atop cloud 9 after witnessing the stupendous crowd pulling capacity of VPKB even after 56 years with the same standing ovation and reception for NT's meticulous dialogue delivery and electrifying performance sustained throughout this unique stand alone movie of all times!! Immortal NT in his evergreen saga!!
The picture quality in its digital cinemascope format is amazing even as some patches are irrecoverable from the original film negative.
However, the movie requires some more trimming that you can understand when you see!

senthil

vasudevan31355
22nd August 2015, 08:43 AM
நண்பர்களே!

ஸ்ட்ரைக் தொடர்கிறது. நிர்வாகம் நசுக்குகிறது. மிரட்டுகிறது. இன்று ரயில் மறியல் போராட்டம். 32 நாட்கள் முடிந்து விட்டன. இத்தனை நாட்களுக்கும் ஊதியம் இல்லை. இன்னும் தொழிலார்கள் அமைதிதான் காத்து வருகின்றனர். நேற்று டெல்லியில் அதிமுக எம்பிக்கள், யூனியன் லீடர்ஸ் பிரதமரை சந்தித்து மனு கொடுத்துள்ளனர். பிரச்னை முடிந்த பாடில்லை. லாக்-அவுட் செய்துவிடுவோம் என்று திமிர்த்தனத்துடன் நிர்வாகம் மிரட்டுகிறது. இன்னும் பொறுமை காக்கிறோம்.

எளியோரைத் தாழ்த்தி வலியோரை வாழ்த்தும் உலகே உன் செயல்தான் மாறாதா?
எளியோரைத் தாழ்த்தி வலியோரை வாழ்த்தும் உலகே உன் செயல்தான் மாறாதா?
பரிதாபம் நெஞ்சில் சிறிதேனும் இல்லாப் படுபாவியால் வாழ்வு பறி போவதோ?
பரிதாபம் நெஞ்சில் சிறிதேனும் இல்லாப் படுபாவியால் வாழ்வு பறி போவதோ?

நிர்வாகத்தையும், அதிபரையும் நினைத்தால்


https://youtu.be/95qkgTiiYX4

sivajisenthil
22nd August 2015, 08:49 AM
Vasu Sir
We all feel for this quandary at your premises and pray continuously for the smooth recovery to normality and happiness to prevail
senthil

vasudevan31355
22nd August 2015, 08:57 AM
மது அண்ணா! ஜி!

உங்களுக்காக ஒரு அரிய பாடல்.

'பால்மனம்' கொண்டு உங்களுக்கு அளிக்கிறேன். ஜெய், மணிமாலா பாடும் அருமையான, இனிமையான தாலாட்டுப் பாடல்.

ஆரிரோ ஆரிரோ..... ஆரி ராரிரோ

தாயறிந்த ஒரு பாட்டு தாலாட்டு
திருமகனே கண் வளராய் நீ கேட்டு
தாயறிந்த ஒரு பாட்டு தாலாட்டு
திருமகனே கண் வளராய் நீ கேட்டு
பிள்ளை சொன்ன மழலை மொழி நான் கேட்டு
பிள்ளை சொன்ன மழலை மொழி நான் கேட்டு
பாட்டாக பாடுகிறேன் தாலேலோ

(தாயறிந்த)

மடியில் விதையாகி
கொடியில் அரும்பாகி
புன்னகையில் பூப்போலே
மலர்ந்தவன் நீயே

மடியில் விதையாகி
கொடியில் அரும்பாகி
புன்னகையில் பூப்போலே
மலர்ந்தவன் நீயே

காயென்றும் கனியென்றும்
காலத்தில் மரமாகி
காயென்றும் கனியென்றும்
காலத்தில் மரமாகி
நிழல்தரும் நம்பிக்கையில்
இருப்பவள் தாயே

(தாயறிந்த)

அன்புக்கு அன்னை என்பார்
அறிவுக்கு தந்தை என்பார்
அன்னை உள்ள இடத்தில் இன்று
தந்தை இல்லை கண்ணே

அன்புக்கு அன்னை என்பார்
அறிவுக்கு தந்தை என்பார்
அன்னை உள்ள இடத்தில் இன்று
தந்தை இல்லை கண்ணே

உதட்டில் உறவு வைத்து
உள்ளத்தில் மறதி வைத்த
உதட்டில் உறவு வைத்து
உள்ளத்தில் மறதி வைத்த
உலகத்தில் நடப்பதெல்லாம்
விந்தை இல்லை கண்ணே

(தாயறிந்த)

ஆஹா! அருமையிலும் அருமை. சுசீலா, சௌந்தரராஜன் அமைதியாக அமர்க்களம்.

மது அண்ணா!

கதை ப்ளீஸ். மணிமாலா ஜெய்க்குத் தங்கையா? அப்போ மணிமாலாவின் ஏமாற்றுக் கணவர் யாரோ?:) நான் படம் பார்த்ததில்லை.


https://youtu.be/iFsBggVHIzU

vasudevan31355
22nd August 2015, 08:59 AM
Vasu Sir
We all feel for this quandary at your premises and pray continuously for the smooth recovery to normality and happiness to prevail
senthil

நன்றி செந்தில் சார். வேண்டுதல்கள் என்றுமே வீணாவதில்லை. தங்களைப் போல் நல்லுள்ளம் கொண்ட நண்பர்களின் பிராத்தனையால் நிச்சயம் வெற்றி பெறுவோம். இது உறுதி.

madhu
22nd August 2015, 09:09 AM
வாசு ஜி...

வந்தாளே மகராசி பாடலை பதியலாம் என்று வந்தபோதே உங்க பதிவைக் கண்டேன்..நன்றி நன்றி....

சீக்கிரமே கரி மனம் வைரம் ஆகட்டும்.. நிர்வாகம் நல்ல முடிவைத் தரட்டும்.. ஆண்டவன் அருள் சேரும்.

தாயறிந்த ஒரு பாட்டு எனக்கு மிகவும் பிடித்த பாடல். இதன் ஆடியோ கூட கிடைக்காமல் தேடி அப்புறம் ராஜேஷ் ஒரு முறை கொடுத்தார். வீடியோ போன வருடம் யூடியூபுக்கு வந்தது.

பால் மனம் படம் பற்றி ஒன்றுமே தெரியாது. பார்த்தசாரதி இசையில் இந்தப் பாடல், "நிலவுப் பெண் முகம் பார்க்க" மற்றும் "கன்னி ஒருத்தியிடம்" ஆகிய பாடல்கள் மட்டுமே நினைவில் உள்ளன. கே.ஆர்.விஜயா ஜோடி என்பதால் இப்பாடலைப் பாடும் மணிமாலா தங்கையாக இருக்கலாம். ( ஒரு சமயம் ராஜமன்னார்குடி ஸ்ரீராம் தியேட்டரில் இந்தப் படம் ஓடுவதாக மாட்டு வண்டியில் நோட்டீஸ் கொடுத்து விட்டுப் போனாங்க.. அடுத்த நாள் போனால் தியேட்டர் கோடவுன் ஆகிவிட்டது. அறுவடை சமயத்தில் தியேட்டரை மூடி நெல் மூட்டை அடுக்கிடுவாங்களாம் )

ராகவேந்திரா சார் உதவி செய்வார் என்று நினைக்கிறேன்.

vasudevan31355
22nd August 2015, 09:23 AM
மது அண்ணா!

அருமை! அருமை!

செம பாட்டை ஞாபகப்படுத்திட்டீங்க

கன்னி ஒருத்தியிடம் எத்தனை கனி! (என்னா குறும்பு!)
கனிகளின் சுவையே தனித்தனி
கண்ணைக் கவரும் அந்த அருங்கனி
தின்ன முடியாத சித்திரக்கனி (அநியாயம்! அநியாயம்!):)

அடடா! எத்தனை நாளாயிற்று கேட்டு?! இப்போ கேட்டுக் கொண்டே டைப் அடிக்கிறேன். இந்த மாதிரி பாடல்களில் இருக்கும் சுவையே தனி. அதுவும் மக்கள் கலைஞர், ரவி படங்களில்தான் இந்த மாதிரி வைரங்கள் கிடைக்கும். இதற்கு பாடும் பாடகர் திலகத்தின் பாணியும் தனிதான். இன்று முழுக்க இந்தப் பாடல்தான். நன்றி அண்ணா! ஜெய், விஜயா டூயட்டை அப்படியே மனக் கண்ணால் உணர முடிகிறது. ஆமாம்! இந்தப் பாடலின் வீடியோ இருக்கா?

vasudevan31355
22nd August 2015, 09:25 AM
//அறுவடை சமயத்தில் தியேட்டரை மூடி நெல் மூட்டை அடுக்கிடுவாங்களாம்//

அறுவடை முடிந்ததும் மீண்டும் தியேட்டர் ஆகி விடுமா?

vasudevan31355
22nd August 2015, 09:25 AM
//சீக்கிரமே கரி மனம் வைரம் ஆகட்டும்.. நிர்வாகம் நல்ல முடிவைத் தரட்டும்.. ஆண்டவன் அருள் சேரும்.//

நன்றி மது அண்ணா!

vasudevan31355
22nd August 2015, 09:58 AM
சின்னா!

என்னை சொல்லிட்டு நீங்க எனக்கு தூக்கம் இல்லாம பண்ணிட்டீக உமா ரமணன் பாடலகளைப் போட்டு. எதைக் கேட்பது எதைத் தவிர்ப்பது என்று குழப்பமாகிப் போய் விட்டது. அந்தக் குரலில் ஏதோ ஒரு தனி சுகம் காணலாம். என்ன சொல்லுங்க...'ஆனந்த ராகம் கேட்கும் காலம்' பாட்டுக்குப் பின்தான் அவருடைய எல்லா பாட்டும். 'நில் நில் நில் பதில் சொல் சொல் சொல்' வித்தியாசம். சில பாடல்களில் ஜானகிக்கு பதிலா ராஜா இவரை யூஸ் பண்ணியிருந்தா ரொம்ப நல்லாயிருந்திருக்கும். சொற்பமான பாடல்களே பாடி விட்டார்.

ஆனால் 'வெள்ளி நிலவே எனக்குப் பிடிக்காது. பாடலின் சிச்சுவேஷனும் பிடிக்காது. கார்த்திகையும் அந்தப் பாடலில் பிடிக்காது. ஹீரோயினை சுத்தமாகப் பிடிக்காது. பாலா வேறு 'முல்லை மலரே'வை 'முல்லை மலழ்ழே' என்று ஓவரகாப் பண்ணுவார். அவரையும் இந்தப் பாடலில் பிடிக்காது. டோட்டலாவே எந்த அம்சமும் இப்பாடலில் பிடிக்காது. பிடித்தவர்கள் என்னை மன்னித்துக் கொ(ல்)ள்க.:)

நன்றியோ நன்றி சின்னா! அருமையான உமா பாடல்களின் தொகுப்புக்கு.

g94127302
22nd August 2015, 10:00 AM
வாசு , இந்த போராட்டம் உங்களுக்கு வந்த சோதனை அல்ல - எங்கள் எல்லோருக்கும் வந்த சோதனை - நீங்கள் முன் வரிசையில் இருக்கிண்டீர்கள் - அவ்வளவு தான் வித்தியாசம் . எங்கள் பிராத்தனைகளுக்கு வந்த சோதனையாகத்தான் நான் கருதுகிறேன் . இன்னும் எங்கள் வேண்டுதல்களை வலுவாக்கிக் கொள்ள வேண்டும் - இறைவனின் செவிகளில் எட்டும் வரை எங்கள் பிராத்தனைகள் தொடரும் - அதற்கு பின்பும் தொடரும் - ஏனென்றால் அவனுக்கு மனமார நன்றியும் சொல்ல வேண்டும் அல்லவா - நம்பிக்கையை கை விடாதீர்கள் - உங்கள் சுக துக்கங்களில் நாங்கள் என்றுமே பங்கு கொள்வோம் ...

chinnakkannan
22nd August 2015, 10:27 AM
வாசு.. உங்களுக்கு வந்த சோதனை விரைவில் தீர்வதற்கு நான் தினமும் ப்ரார்த்தனை செய்து கொண்டு வருகிறேன்.. விரைவில்.. விரைவில் சரியாகி விடும்..

எனக்கும் வெள்ளி நிலவே பிடிக்கவில்லை.. செவ்வரளித்தோட்டத்திலே பார்த்தேன்..அதுவும்கண்மூடிக் கேட்கலாம் தான்..

g94127302
22nd August 2015, 11:58 AM
ஒன்றில் இரண்டு - புதிய பதிவு , புதிய எண்ணங்களில் , பழைய பாட்டுக்களுடன் :பகுதி 1

ஒன்றில் இரண்டு ( two in one ) : ஆங்கிலத்தில் " count your blessings " என்று சொல்வார்கள் - உனக்கு கிடைத்துள்ள வரங்களை நீ எண்ண ஆரம்பித்தால் உன் ஆயுசு முடிந்து விடும் " என்பார்கள் . இறைவன் நமக்கு போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு வரங்களைத்தந்திருக்கிறார் - நாம் தான் அவைகளை எண்ணிபார்ப்பதில்லை - மற்றவர்களுடன் நம்மை ஒப்பிட்டே இறைவன் நமக்கு கொடுத்த வரங்களை அலட்ச்சியம் செய்து கொண்டிருக்கிறோம் . How much enough is enough ?? என்ற கேள்விக்கு இன்னும் பதில் யாரிடம் இருந்தும் கிடைக்கவில்லை . இறைவன் நமக்கு அள்ளித்தந்த பரிசுகளில் விலை மதிக்க முடியாதது " நட்பு " - நண்பர்கள் - அந்த நட்பை பற்றிய உயரிய பதிவு தான் இது ...

இந்த திரியையே எடுத்துக்கொள்வோம் - வெறும் பதிவுகளை மட்டுமே படித்து நட்பை வளர்த்துக்கொண்டுள்ள திரி இது - இங்கு இருப்பவர்கள் கருப்பா , வெளுப்பா , என்ன சாதி ? என்ன மதம் ? எந்த தெய்வத்தை வணங்குகிறார்கள் ? பாங்கில் எவ்வளவு பணம் உள்ளது ? எந்த பதவியில் இருக்கிறார்கள்? , society யில் என்ன மதிப்பு ? - எவ்வளவு தூரம் படித்திருக்கிறார்கள் ? இந்தியாவில் இருக்கிறார்களா இல்லை NRIs யா ?? - இப்படி எந்த கேள்விகளும் நம்முள் இன்று வரை எழுந்ததே கிடையாது -- நல்ல பதிவுகளை மட்டுமே போட வேண்டும் - தெரிந்த விஷயங்களாக இருந்தாலும் , தெரியாத கண்ணோட்டத்தில் அலச வேண்டும் , பிறரை காயப்படுத்தும் வகையில் பதிவுகள் இருக்ககூடாது - உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி கொண்டு வரும் பதிவுகளாக இருக்க வேண்டும் - நகைச்சுவைகள் இருக்க வேண்டும் - ஆனால் அவைகள் திரியில் இருப்பவர்களை கலாய்க்கும் வகையில் இருக்க கூடாது - இப்படி பல எழுத படாத சட்டங்கள் , கொள்கைகள் , யாருமே தெரிவிக்காமலே நம்முள் ஊறி விட்டன / ஒன்றி விட்டன . ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்ததில்லை ( சிலர் இதில் விதி விலக்காக இருக்கலாம் ) ஆனாலும் ஒருவருக்கு ஏதாவது பிரச்சனைகள் என்றால் நம்முள் இருக்கும் நிம்மதி நம்மிடம் சொல்லிக்கொள்ளாமலே விடை பெறுகிறது - கைகள் உயர எழுந்து இறைவனை நோக்கி வணங்குகின்றன - சமீபத்தில் மணிவிழா கொண்டாடிய திரு ராகவேந்திரா அவர்களுக்கு எல்லா திரிகளும் ஒன்று சேர்ந்து , தங்கள் கருத்து வேறுபாடுகளை மூட்டைக்கட்டி வைத்துவிட்டு உடனே விரைந்து வணங்கி வாழ்த்தியது இன்னும் நம் மனங்களில் பசுமையாக இருக்கின்றன .

மது சார் நல்ல உடல் ஆரோக்கியம் பெற வேண்டும் - திரும்பவும் திரியில் வந்து , திரியை அலங்கரிக்க வேண்டும் என்று எல்லோரும் ஒரு மனதாக ப்ராத்தனை செய்துகொண்டது நினைவில் பசுமையாக இருக்கின்றன - வாசுவின் பிரச்சனைகள் நம் சிரிப்பை என்றோ நம்மிடம் இருந்து பிடுங்கி கொண்டு விட்டது . CK வின் இந்திய பயணம் வெற்றி அடைய ஒருமனதாக எல்லோரும் வாழ்த்தினோம் -- இப்படி பல உதாரணங்கள் -- சொல்லிக்கொண்டே போகலாம் .

இப்படிப்பட்ட நண்பர்கள் ஆண்டவன் நமக்கு கொடுத்த இனிமையான வரம் அல்லவா ? இந்த வரத்தை நாம் போற்றி புகழ வேண்டாமா ? இந்த எண்ணம் என் மனதில் பல நாட்களாக ஓடிக்கொண்டிருக்கிறது - இன்று அந்த எண்ணங்களுக்கு சிறிய வடிவம் கொடுக்கலாம் என்ற ஆசை - அதன் விடைதான் இந்த நன்றி சொல்லும் பதிவு . மாதா , பிதா , குரு , தெய்வம் என்று சொல்வார்கள் - இதை சற்றே மாற்றி சொல்ல வேண்டும் - மாதா , பிதா , மனைவி , நண்பன் , குரு என்று.

மாதா , பிதா , மனைவி இவர்களை "கருக்குள் கருவில்" சந்தித்து நன்றி சொன்னோம் - பலர் மறந்திருக்கலாம் . இந்த பதிவு நண்பர்களின் முக்கியத்துவத்தை சொல்லும் பதிவு . சிலருக்கு சிலவற்றை கண்டிப்பாக சொன்னால்தான் படிக்கவே நாட்டம் வரும் - அவர்களுக்காக சொல்கிறேன் இதை - சிறிய பதிவுதான் - மெகா தொடர் இல்லை .

ஆமாம் - தலைப்புக்கும் பதிவுக்கும் என்ன சம்பந்தம் -?? CK வின் குரல் காதுகளில் விழுகிறது - சொல்கிறேன் ... இந்த பதிவுகளில் துணைக்கு திருவள்ளுவரும் என்னுடன் பயணிக்கிறார் - அதானால் தான் ஒன்றில் இரண்டு என்ற தலைப்பு .

பகுதி 2

குறள்கள் - நட்பு

நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு.

அறிவுள்ளவர்களுடன் கொள்ளும் நட்பு பிறைநிலவாகத் தொடங்கி முழுநிலவாக வளரும், அறிவில்லாதவர்களுடன் கொள்ளும் நட்போ முழுமதிபோல் முளைத்துப் பின்னர் தேய்பிறையாகக் குறைந்து மறைந்து போகும்.

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.

படிக்கப் படிக்க இன்பம் தரும் நூலின் சிறப்பைப் போல் பழகப் பழக இன்பம் தரக்கூடியது பண்புடையாளர்களின் நட்பு.


புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்.


இருவருக்கிடையே நட்புரிமை முகிழ்ப்பதற்கு ஏற்கனவே தொடர்பும் பழக்கமும் வேண்டுமென்பதில்லை. இருவரின் ஒத்த மன உணர்வே போதுமானது.

( நட்பு தொடரும் )

g94127302
22nd August 2015, 12:00 PM
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.

இன்முகம் காட்டுவது மட்டும் நட்புக்கு அடையாளமல்ல; இதயமார நேசிப்பதே உண்மையான நட்பாகும்.

பகுதி 3

இனி திரை பாடல்கள் , நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்த பாடல்களை இரசிக்கலாமா ?

முதலில் ஒரு வீர சிங்கத்தின் கர்ஜனையை மீண்டும் கேட்டுக்கொண்டிருக்கும் இந்த நல்ல நாளில் , அந்த சிங்கத்திற்கு , தேச பக்தி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வாழ்ந்துக்காட்டிய மகானுக்கு , தமிழ் என்னும் மொழி உயர்ந்த ரக தேனில் தோய்க்கப்பட்ட ஒன்று - அதை சொல்பவர்கள் சொன்னால் மட்டுமே அந்த தேனின் இனிமையை அனுபவிக்க முடியும் என்று கர்ஜித்த அந்த கேசரிக்கு இந்த பாடல்களை சமர்ப்பிகின்றேன் . இன்றும் என்றும் தன்னை தமிழன் என்று சொல்லிக்கொள்ளும் ஒவ்வொருவனும் , தனக்கு தேச பக்தி இருக்கிறது என்று மார் தட்டிக்கொள்ளும் எவனும் , நான் இந்த தாயகத்தில் பிறந்தேன் , இந்த நாட்டின் "அசல் வித்து " என்று சொல்லிக்கொள்ளும் அனைவரும் தலை நிமிர்ந்து நடக்கவைத்தவனுக்கு நாம் எல்லோரும் தலை குனிந்து நன்றி சொல்லுவோம் .......

பகுதி 4 - பாடல்கள்

பள்ளிக்கூட காலத்து இரு நண்பர்கள் உலக நடைமுறைகளினால் நீண்ட காலம் பிரிந்திருந்து வயதான காலத்தில் மீண்டும் தற்செயலாக சந்திக்க நேர்ந்தால் அவர்கள் உணர்வுகள் எப்படி இருக்கும்?

இந்த பாடல் அவர்களது உணர்வுகளை பிரதிபலிக்கின்றன. பாருங்கள்! கேளுங்கள் !!

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே
நண்பனே நண்பனே
இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே
அது ஏன் ஏன் நண்பனே நண்பனே

https://www.youtube.com/watch?v=VtrnHY21zZw

ராமு ஐ லவ் யூ
ராஜா ஐ லவ் யூ
.
இமை தொட்ட மணி விழி
இரண்டுக்கும் நடுவினில் தூரம் அதிகமில்லை
இருவரும் ஒரு குணம் இருவரும் நண்பர்கள்
அதுதான் அன்பின் எல்லை
.
( ராமு )
.
கண்ணினிடம் குசேலன் கண்ட சுகம்,
இல்லை இல்லை..
கம்பனிடம் சோழன் கண்ட சுகம்,
இது காரிய காலத்து அன்பு மனம்
பசும் பாலையும் நீரையும் சேர்த்த விதம்
.
( ராமு )
.
பன்னீர் என்றாலும் கண்ணீர் என்றாலும்
உன்னை நானாக நினைப்பேன்
பள்ளம் என்றாலும் மலைக்கே சென்றாலும்
உன்னை என்னோடு அணைப்பேன்

மாலை கொண்டாலும் மணநாள் வந்தாலும்
நாளை உன்னோடு கழிப்பேன்
பாதை ஒன்றாக பார்வை ஒன்றாக
வாழ்வை உன்னோடு இணைப்பேன்
.
( இமை )
.
கந்தன் செந்தூரில் உந்தன் பேர் சொல்லி
நான் ஓர் கற்பூரம் எரிப்பேன்
சிந்தும் கற்பூர வாசம் நீ என்று
சொந்தம் கொண்டாடி இருப்பேன்

அந்தம் இல்லாமல் ஆதி இல்லாமல்
அவன் போல் நான் எங்கு கலப்பேன்
எண்ணம் வாழ்வாக எல்லாம் நன்றாக
இறைவா நான் உன்னை அழைப்பேன் ..

https://www.youtube.com/watch?v=CFj4Tb9KEYw

தெய்வம் என்றால் அது தெய்வம்
அது சிலை என்றால் வெறும் சிலைதான்


https://www.youtube.com/watch?v=1WCxSHN4aUE

( நட்பு தொடரும் )

sivajisenthil
22nd August 2015, 01:20 PM
pillow talks 1 / கண்ணற்ற காதலில் எண்ணற்ற தலையணை மதுர கீதங்கள் : பகுதி 1


பொதுவாக காதலனோ காதலியோ அருகில் இல்லாத பொழுது அதிர்ஷ்டமடிப்பது தலையணைகளுக்கே !
காதலிகள் காதலனாக எண்ணி இறுக்கக் கட்டி உம்மாவெல்லாம் தருவார்கள் ! லிப்ஸ்டிக் படிந்த இலவம் பஞ்சுத் தலையணை விலைமதிப்பற்றதே!!
அதையே காதலன் கையாளும் விதம்..கட்டி அணைத்திடுவர் காதல் மகளிர்! கசக்கிப் பிழிந்திடுவர் காதல் நாயகர்!..அப்ஜக்ஷன் யுவர் ஆனர்தான்!!
தலையணையும் நடிக்கும் மதுர கானங்களில் முதலிடம் காதலிக்க நேரமில்லைக்கே !


ஒரு இளம் பிஞ்சு நெஞ்சத் தலையணையே இன்னொரு இலவம் பஞ்சு மஞ்சத் தலையணையில் ஒரு இ(ச்)ஞ்சுக்கு இதழ் பதிக்கும் அனுபவம் கொஞ்(சு)சம் புதுமை பஞ்சம் தீர்த்ததே!!

https://www.youtube.com/watch?v=GRMs-mIsrGQ

vasudevan31355
22nd August 2015, 01:24 PM
//பொதுவாக காதலனோ காதலியோ அருகில் இல்லாத பொழுது அதிர்ஷ்டமடிப்பது தலையணைகளுக்கே !//

:):):):)

vasudevan31355
22nd August 2015, 01:36 PM
செந்தில் சார்!

ஏன்... உங்கள் காதல் மன்னனை நினைத்து மெத்தையில் படுத்து, தலையணைகளுக்கு மத்தியில் உருண்டு புரளும் புன்னகை அரசியின் பு(அ)லம்பலை எப்படி மறக்க முடியும்?

'நித்திரையில் வந்து நெஞ்சில் இடம் கொண்ட
உத்தமன் யாரோடி தோழி'

அதுவும் ஒன்றுக்கு இரண்டு தலையணை. இன்னும் தங்களிடமிருந்து என்னென்ன தலைப்புக்கள் வந்து எங்கள் தூக்கத்தைக் கெடுக்கப் போகிறதோ!:) விடுங்க ஆளை. ஜூட். கட்டபொம்மன் அழைக்கிறார். கைதான் டைப் அடிக்கிறதே ஒழிய எண்ணமெல்லாம் என் தெய்வத்தைப் பற்றியே.


https://youtu.be/F0xW0-EfOrQ

vasudevan31355
22nd August 2015, 02:41 PM
ரவி சார்

அமர்க்களம். நட்புக்கு திரியை உதாரணம் காட்டி விளக்கியிருப்பது அருமை! நட்புக்கு உதாரணம் காட்டி பதிந்திருக்கும் மூன்று பாடல்களுமே நடிகர் திலகத்தின் பாடல்கள் என்பது இன்னொரு சிறப்பு. 'இமை தொட்ட மணிவிழி' பாடலின் முழு வரிகளுக்கும் நன்றி! நடிகர் திலகத்திற்கு நன்றி சொல்லும் தங்கள் பாங்கு மெய் சிலிர்க்க வைக்கிறது. தொடருங்கள் தங்கள் நட்பை எல்லோரிடமும்.

vasudevan31355
22nd August 2015, 02:55 PM
சின்னா!


என்ன கொடுமை! தண்ணீர் பாடல்கள் வரிசையில் இப்பாடலை எப்படி எல்லோரும் மறந்து போனோம்? நமக்கே தண்ணி காட்டிடுச்சே இந்தப் பாடல்.:confused2:

அதுவும் நடிகர் திலகத்தின் 'தங்கை' படப் பாடல்.

'தண்ணீரிலே தாமரைப்பூ
தள்ளாடுதே அலைகளிலே'


https://youtu.be/7wwZV_6sqOA

sivajisenthil
22nd August 2015, 05:51 PM
PILLOW WARS / தலையணை யுத்தங்கள்!


தலையணை குழந்தைகளின் சண்டையில் பஞ்சாய்ப் பறக்கும் அஹிம்சை ஆயுதமே!!
தலையணைகளை எடுத்து அடித்துக் கொள்ளும் சுகமே அலாதிதான்! சிலசமயம் இந்தத் தலையணை ஆயுதப் போரில் பெரியவர்களும் சிறார்களாக மாறி மகிழ்வதும் உண்டு !!

https://www.youtube.com/watch?v=WbitNDIYlXk

மைக் மோஹனும் ராதிகாவும் ஒரு படத்தில் (ரெட்டை வால் குருவி) தலையணை யுத்தத்தில் மட்டையாகி மயங்குவர்!

[url]https://www.youtube.com/watch?v=_AEbyE1pCTM

kalnayak
22nd August 2015, 06:31 PM
அனைவருக்கும் வணக்கம்.

மன்னிக்கவும். நல்ல பல கானங்கள் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. வழக்கம் போல வாசுவும், சி.கவும் கலக்கிகொண்டிருக்க, சிவாஜி செந்திலும் தனது பாங்கில் பட்டைய கிளப்ப, ரவியும் புதிதான தலைப்பில் வழக்க, மது அய்யாவும், ராஜ்ராஜ் அய்யாவும் முன்பை விட அதிகமாக பங்கெடுக்க, ராகவேந்திர அவர்களும் வீரபாண்டிய கட்டபொம்மன் மகிழ்ச்சியில் இருக்க (வேறு யாரையாவது விட்டிருந்தால் சேர்த்துக் கொள்ளுங்கள்) எல்லோரும் மது உண்ட வண்டுகளாய் மதுர கானங்கள் கண்டு மகிழ என்னுடைய வாழ்த்துகள்.

வாசுவிற்கு என்.எல்.சி. போராட்டம் எல்லாத் தொழிலாளர்களுக்கும் வெற்றி தரும் போராட்டமாய் விரைவில் முடிவடைய என்னுடைய வாழ்த்துகள்.

madhu
22nd August 2015, 07:08 PM
ரவி சார்... உங்கள் ஒவ்வொரு சொல்லும் உண்மை. உண்மையைத் தவிர வேறில்லை.... நன்றி சொல்ல வேண்டும் இறைவனுக்கு...

வாசு ஜி...

வீடியோ தரம் சுமார்... போதாக்குறைக்கு கிராஃபிக்ஸ் வேற..... கஷ்டப்பட்டு பாருங்க

கன்னி ஒருத்தியிடம் எத்தனை கனி

https://www.youtube.com/watch?v=X-DmutNZq7s

நிலவுப் பெண் முகம் பார்க்க நீலமேகம் கண்ணாடி

https://www.youtube.com/watch?v=7EO_17Y3Dpc

sivajisenthil
22nd August 2015, 07:08 PM
PILLOW SLEEPS / சிலநேரங்களில் சில தலையணைகள் உறங்குவதற்கு மட்டுமே!

குடும்பத்தின் / நாட்டின் சுமைதாங்கியாக உழைக்கும் கதாநாயகர் இளைப்பாறி உறங்கிட சுமைதாங்கியாக மாறுகிறது தலையணை !

https://www.youtube.com/watch?v=2MVzY-elSjI

குடும்பத்தினர் சுகமாக தலையணையில் முகம் பதித்து உறங்கவேண்டும் என்று நினைப்பவரே உண்மையான குடும்ப தலைவர் !
இங்கோ ஒரு குழந்தை பெற்றோர் தலையணையில் முகம் பதித்து உறங்கிட தாலாட்டு பாடும் விந்தை !!


https://www.youtube.com/watch?v=8mrS-ySbwTc

g94127302
22nd August 2015, 09:03 PM
கல்நாயக் சார் - வருக வருக ! 59 வருடங்களுக்கு பிறகு புது பொலிவுடன் ( நடுவில் பல தடவைகள் வந்தாலும் ) தமிழகத்தையே தன் சிம்ம கர்ஜனையால் உலுக்கிகோண்டிருக்கும் அந்த நாயகனின் வரவு போல உள்ளது நீங்கள் வருவது -- கல் நெஞ்சக்காரர் என்று ck உரிமையுடன் நீங்கள் இங்கு வராததை நினைத்து புலம்பியுள்ளார் சமீபத்தில் - அப்படிப்பட்டவர் அல்ல என்று நிரூபித்து விட்டீர்கள் - மேகங்களில் மறைந்துள்ள நிலவு வெளிவரட்டும் - வாடிக்கொண்டிருக்கும் பூக்கள் புத்துணர்ச்சி பெறட்டும் . உங்கள் வரவு இங்கு ஒரு கும்ப மேளமாக இல்லாமல் , கும்பிடும் பதிவுகளாக தினமும் வரட்டும் .....

chinnakkannan
22nd August 2015, 09:10 PM
//நகைச்சுவைகள் இருக்க வேண்டும் - ஆனால் அவைகள் திரியில் இருப்பவர்களை கலாய்க்கும் வகையில் இருக்க கூடாது - இப்படி பல எழுத படாத சட்டங்கள் , கொள்கைகள் , யாருமே தெரிவிக்காமலே நம்முள் ஊறி விட்டன / ஒன்றி விட்டன .//ஆமாம் - தலைப்புக்கும் பதிவுக்கும் என்ன சம்பந்தம் -?? Ck வின் குரல் காதுகளில் விழுகிறது// ரவி :) :) இது கலாய்த்தல் இல்லியா :)

வள்ளூஸ் இன்னும் ஒண்ணு சொல்லியிருக்காருங்காணும்..

நகுநற் பொருட்டன்று நட்டல் மிகுதிற்கண்
மேற்சென்றிடித்தற் பொருட்டு..

உமக்குத் தெரியாதா என்ன..

நட்பா காதலான்னு பாண்டவர் பூமில ஒரு பாட் நினைவுக்குவருது..திடீர்னு.. இப்படி ஆண் பெண் நட்பு பாட் வேற ஏதாவது இருக்கா.. போடுமேன்/போடுங்களேன்..

ராகதேவன் ராஜ் ராஜ் வாசு, சி.செ. தண்ணீர் பாடல்களுக்கு நன்றி.. வாசு..எப்படி இந்த தண்ணீரிலே தாமரைப் பூ விட்டீர்/டோம்.. நல்ல பாட்..வயசாய்டுத்துங்காணும்..( நான் நம்மைச் சொன்னேன்!)

chinnakkannan
22nd August 2015, 09:23 PM
மதுண்ணா.. கன்னி ஒருத்தியிடம் எத்தனை கனி...விழி நாவல் கனி.. கன்னம் மாங்கனி..கோவை கனி இதழ் சரி..காதல் கனியா.. எந்த மார்க்கெட்ல கிடைக்கும்..நீயும் நானும் முகம்பார்க்க நெஞ்சம் தான் கண்ணாடி..ம்ம் ரெண்டு பாட்டும் ஜோர்.. நான் பார்த்ததில்ல..ஒரே பூவா விழுது.. கல் நாயக் வந்துட்டார்னா..

கல் நாயக் வாரும் வாரும்..உமக்காகக் காத்திருந்து காத்திருந்து விழிகள் பூத்து விட்டன..ம்ம் ஒரு ஹிந்தி நடிகரிடம் ஒரு மலையாள - தமிழ் நடிகை சிக்கியிருப்பதாக ஒருகிசு கிசு சமீபத்தில் படித்தேன்..அது போல் உம்மையும் யாராவது வரவிடாமல் தடுத்து விட்டாரா..

chinnakkannan
22nd August 2015, 09:28 PM
///பொதுவாக காதலனோ காதலியோ அருகில் இல்லாத பொழுது அதிர்ஷ்டமடிப்பது தலையணைகளுக்கே !
காதலிகள் காதலனாக எண்ணி இறுக்கக் கட்டி உம்மாவெல்லாம் தருவார்கள் ! லிப்ஸ்டிக் படிந்த இலவம் பஞ்சுத் தலையணை விலைமதிப்பற்றதே!!
அதையே காதலன் கையாளும் விதம்..கட்டி அணைத்திடுவர் காதல் மகளிர்! கசக்கிப் பிழிந்திடுவர் காதல் நாயகர்!..அப்ஜக்ஷன் யுவர் ஆனர்தான்!!
தலையணையும் நடிக்கும் மதுர கானங்களில் முதலிடம் காதலிக்க நேரமில்லைக்கே !/// சி.செ.. :) :) :)

சி.செந்தில்.. வரவர ரொம்பத் தேறிவிட்டீர்..சுவையா எழுதிறீர்ங்காணும்.. ம்ம் .. இந்தப் படஙகாட்டறத விட்டுட்டு ஃபுல் ஃப்ளெட்ஜ்டா பெரிய கட்டுரையா எழுதுமேன்.. (இது சி.க வினால் சி.செக்கு விடப்படும் சி.ரெக்வஸ்ட் (முதலும் கடைசியுமான சி க்கான விரிவு சின்ன, நடு சி..சிவாஜி) :)

chinnakkannan
22nd August 2015, 09:31 PM
//இந்தப் படஙகாட்டறத விட்டுட்டு// மீன்ஸ் வீடியோல்லாம் ஓ.கே.. பட்ட் ரொம்ப க் குட்டியா எழுதறீர்னு சொல்ல வந்தேன்.. நீரும் என்னைத் திட்டாதீர்..

ஹப்புறம்..

அனுபவம் புதுமை நல்ல பாட் தான் ஆனா ரொம்ப்ப்ப நீஈளம்... இன்னிக்குப் போட்டா நாளைக்குத் தான் முடியும்..(இதற்கு உதாரணம் சொல்லணும்னா ஒரு திரைப்படத்தைத் தான் சொல்லணும்.. ரிதம் நு பேரு அதுக்கு..அதுவும் போட்டா முடிய ரெண்டு நாளாகும்..!)

rajraj
22nd August 2015, 09:54 PM
சி.செந்தில்.. இந்தப் படஙகாட்டறத விட்டுட்டு ஃபுல் ஃப்ளெட்ஜ்டா பெரிய கட்டுரையா எழுதுமேன்.. (இது சி.க வினால் சி.செக்கு விடப்படும் சி.ரெக்வஸ்ட் (முதலும் கடைசியுமான சி க்கான விரிவு சின்ன, நடு சி..சிவாஜி) :)

Request or challenge? :lol:

chinnakkannan
22nd August 2015, 10:02 PM
நாரதர் சீஸன்லாம் முடிஞ்சுடுத்தே.. அமெரிக்கால்லருந்து நாராயணான்னு கொரல்கேக்கறதே :)

rajraj
22nd August 2015, 10:06 PM
ராகவேந்திர அவர்களும் வீரபாண்டிய கட்டபொம்மன் மகிழ்ச்சியில் இருக்க

To make Raghavendra happier here is a song from Veera Pandiya Kattabomman

anjaadha singam en kaaLai.....

http://www.youtube.com/watch?v=fXL2WsxKvw4

From the Hindi dubbed version Amar Shaheed

alhad mera jawan jaage

http://www.youtube.com/watch?v=meZJllsX0WU

sivajisenthil
22nd August 2015, 10:38 PM
பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெற்றுவிடும் சி க !
வாசு சிக ராகவேந்தர் முரளி கோபால் ரவிகிரண் ரவி மது கல்நாயக் ராஜ்ராஜ் .. ராகதேவன்.....இத்தனை .சிற்பிகளும் சேர்ந்து என்னை செதுக்கியிருக்கிறீர்கள்!!
படங்காட்டுவதை நிறுத்திவிட்டு இனி உங்களோடுதான் ரேஸ் ! சரியான ட்ராக்கில் உங்களோடு என்னையும் சேர்த்துக் கொண்டமைக்கு நன்றி!!
சிரிக்கும் கண்ணனை சீரியஸ் கண்ணனாக்கி விடமாட்டேன்!! என்ன...ஒரு 3000 தாண்டினபின்னால் ஆரம்பிக்கலாம் என்றிருந்தேன்....

sivajisenthil
22nd August 2015, 11:18 PM
Quote Originally Posted by chinnakkannan View Post
சி.செந்தில்.. இந்தப் படஙகாட்டறத விட்டுட்டு ஃபுல் ஃப்ளெட்ஜ்டா பெரிய கட்டுரையா எழுதுமேன்.. (இது சி.க வினால் சி.செக்கு விடப்படும் சி.ரெக்வஸ்ட் (முதலும் கடைசியுமான சி க்கான விரிவு சின்ன, நடு சி..சிவாஜி)
Request or challenge?கூடலில் முடியும் ஊடல் / Building Strong Basement Weak!!

பகுதி1
குளிர் நிலவு நெருப்பாகி மலரே முள்ளாகும் காதல் களம்!

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் / போலீஸ்காரன் மகள் (1962)


காதல் களம் வீரபாண்டிய கட்டபொம்மனின் போர்க்களத்தை விட சவால்கள் நிறைந்ததே ! போர்க்களத்தில் எல்லாமே வெட்டு ஒன்று துண்டு இரண்டுதான்!!போர்க்கள எதிரிகள் நிஜ உலகில் கண்ணுக்குத் தெரிந்தவரே! காதல்களமோ கண்ணுக்குத் தெரியாத எதிர்மறை காரணிகள் மலிந்த மாயா லோகம்!

நெஞ்சிலே பாயும் வேலுக்குக் கூட அஞ்சாத வீரனும் வேல்விழியாளின் ஊடலம்புக்கு நெஞ்சம் நடுங்கி விடுவானே !!பெண்ணின் மேல் ஆணாதிக்கம் மற்றவர் கண்கட்டும் தந்திர வித்தையே ! தனிமையிலோ பெண்ணாதிக்கத்தின் முன்னே (Body) Building strong ஆன ஆணின் Basement Weak தான் ! அவ்வாறே கடலை விட ஆழமான புதிரான பெண்ணின் ஊடல் வெளிப்பாடும் ஆணின் கூடல் வேண்டியே!!

போர்க்களத்தில் ஒருவர் ஜெயிக்க ஒருவர் தோற்றே ஆகவேண்டும் ..ஆனால் காதல் களத்தில் போட்டியிடும் இருவருமே வெல்வதுதான் உளவியல்ரீதியாக நமக்கு உறைக்கும் உண்மை நிலைப்பாடு !

போலீஸ்காரன் மகள் திரைப்படத்தில் புதுமை இயக்குனர் ஸ்ரீதர் இந்தக் கோட்பாட்டை மிக அழகாக பாலாஜி புஷ்பலதா பங்கு பெரும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் பாடல் வாயிலாக பி பி ஸ்ரீனிவாசின் ஜெமினிக் குழைவில் மெல்லிசை மன்னர்களின் இசைத் தென்றலில் உயிர்ப்பான காட்சியாக நமது விழிகளுக்கு வெண்திரை வாயிலாக விரியச் செய்திருப்பார் !

காதலிக்கும் தெரியும் காதலனுக்கும் புரியும் மங்கையின் ஊடல் மன்னனின் காதல் ஆழத்தை சோதித்திடவே என்பது! காதல் வயப்படும்போது கனவுலகில் சஞ்சரிக்கும் போது காதலன் காதலியின் ஊடலால் மெர்சலாகி அவள் குளிர் நிலவாக இருந்தாலும் ஊடலின் வெப்பம் உணர்கிறான் அவள் மிருதுவான சுகந்த மலராக இருப்பினும் கூரான முள் குத்துவதாக கசந்த உணர்வை அடைகிறான்

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ..நெருப்பாய் எரிகிறது
இந்த மலருக்கு என்மேல் என்னடி கோபம் ..முள்ளாய் மாறியது...
கனிமொழிக்கென்மேல் என்னடி கோபம்.....கனலாய் காய்கிறது
உந்தன் கண்களுக்கென்மேல் என்னடி கோபம்.. கணையாய்ப் பாய்கிறது!

காதல் களம் போர்க்கோலம் பூணுவது போன்ற பிரமையை கவியரசர் உருவாக்குகிறார் ....Follows :
பகுதி 2 : காதல் கள பனிப்போரில் காதலியைக் கவிழ்த்திட காதலனின் சாம பேத தான தண்ட அணுகுமுறைகள்

இந்த ஊடல் பனிப்போர் எப்படி கூடல் வெற்றியாக இருபக்கமும் முடிகிறது என்பதைத் தொடர்வோம் ...சிக வாசு ராகவேந்தர் கல்நாயக் ரவி ராஜ்ராஜ் மது ராகதேவன் உள்ளிட்ட இத்திரியின் பதிவு வேந்தர்கள் எனது இந்த கன்னி முயற்சியான விரிவுப்பதிவை படங்காட்டாமலே என்னாலும் போட முடியும் என்பதை ஏற்றுக் கொண்டு ஆசீர்வதித்தால்.....

அன்புடன் செந்தில்

chinnakkannan
23rd August 2015, 01:39 AM
ஆசிகள் சொல்வதற்கு ஞான் மிகச் சின்னவன் சி.செ. வாழ்த்துகள்.. எழுதுங்கள்.. ( நாளை ஒர்க்கிங் டேயின் முதல் நாள் எனில் என்னால் வர இயலாது எனில் தூக்க நாயகி கண்ணா வா வா என ஆவலாக இருகரம் நீட்டிச் சிரிமுகம் காட்டி தவழ்ந்து வந்தாலும் ஒதுக்கி உங்களை வாழ்த்துகிறேன்..)

உந்துதலும் வெறிசேர்ந்தால் என்ன ஆகும்
...உணர்வுடனே துரிகையில் கற்ப னைகள்
விந்தையெனக் கரங்களிலே வண்ண மெல்லாம்
...வித்தையுடன் சரம்சரமாய் தீற்றி விட்டே
சிந்தையினைக் கொள்ளைகொளும் ஒவி யம்போல்
..சிற்பங்கள் போலிங்கே எழுதும் நீவீர்
கொந்தளிக்கும் அலைகடலாய்ப் பெருகி இங்கே
...கோட்டைபல பிடிக்கட்டும் செய்யும் நீரே..

..

முந்தானை பிடித்தங்கே மோகத்தில் காதலியை
சொந்தங் கொளநினைத்தே சோர்விலாமல் - சிந்தையில்
காலாடி எண்ணங் கனலோடிப் பாடியவர்
பாலாஜி என்றே பகர்...

குலுங்கும்முந்தானை சிரிக்கும் அத்தானை
மிரட்டுவதேனடியோ

ம்ம் புஷ்பலதாவின் மயக்கும் விழிகளுடன் மல்லாடும் பாலாஜி.. நைஸ் தான் இல்லியா செந்தில்

பூடகமாய்க் கோபமும் புன்சிரிக்கும் உள்ளமென
ஊடலிலே காட்டும் உணர்வு

என்று புஷ்பலதாவும் கொஞ்சம் ஓ.கே தான் இல்லியோ..

என்ன பாலாஜியின் அத்தைமகள் புஷ்பலதா.. பாலாஜி கள்ளப் பையர்.. படத்தில்.. விஜயகுமாரியை லவ்ஸ் விட்டு புஷ் ஷைசைடில் சைட் அடித்து நைச்சியம் பண்ணுபவர்.. தெரியாதா என்ன உமக்கு..

இருப்பினும் பாடல் சிச்சுவேஷன் சொல்லி மெட்டும் பாடலும் செய்வித்ததில் எதுவும் முடிவதில்லையே

அழகாய்ப் படம்பிடித்த டைரக்டரும் நடித்த பாலாஜி புஷ் தானே பெசப்படுகிறார்கள்..இவ்வளவு ஆண்டு காலமாகியும்..

ஆமாம்..ஊடல் சிறு மின்னல்னு ஒருபாட்டும் இருக்கு ஓய்..அதைப்பற்றியும் எழுதும்..

தொடர்போட தானே எழுதறேன்..கண்ணுக்குள்ள நித்ரா வந்துட்டாங்காணும்.. தொடருங்கள்.அசத்துங்கள்..மீட் யூ டுமாரோ நைட் இன் த மூன் லைட்.. நாளைக்கு ஈவ்னிங் வர்றேன்னு சொன்னேன்...:)

sivajisenthil
23rd August 2015, 02:38 AM
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் .......தொடர்கிறது....பகுதி 2


இப்படத்தில் ஜெமினிதான் ஸ்ரீதரின் முதல் சாய்ஸ் !
ஆனால் நடிப்புக்கு நல்ல ஸ்கோப் இருந்தும் எதிர்மறை விளைவுகள் கருதி காதல் மன்னர் வளர்ந்து வந்த பாலாஜிக்கு பொருந்தி வரும் என்பதாக ஸ்ரீதரிடம் கூறி பாலாஜிக்கு உதவினார் என்று கேள்வி. இதேபோல எதிர்மறை குணாதிசயம் படிந்த படித்தால் மட்டும் போதுமா, பலே பாண்டியா திரைப் படங்களிலும் ஜெமினி பாடல்களைப் பாடி நடிக்கும் அதிர்ஷ்டம் பாலாஜிக்கு அடித்தது. ஸ்ரீனிவாசின் குரல் ஜெமினிக்கு அப்புறம் பாலாஜிக்கும் முத்துராமனுக்கும் ரவிக்கும் நன்றாகவே பொருந்தியது !! பாலாஜியும் தனது நன்றியறிதலை அண்ணாவின் ஆசை திரைப்படத்தில் ஜெமினியை நாயகனாக்கி வெளிப்படுத்தினார். பின்னாளில் பாலாஜி நடிகர்திலகத்தின் ஆஸ்தான தயரிப்பாளரானது தனிக் கதை. உனக்காக நான் படத்திலும் பாலாஜி நடிகர் திலகத்திற்கு இணையான பாத்திரப் படைப்பில் ஜெமினியைப் பொருத்தினார்


போலீஸ்காரன் மகள் திரைப்படத்தில் விஜயகுமாரியை ஏமாற்றிவிட்டு புஷ்பலதாவை அடைய முயலும் கேரக்டரில் நன்கு பொருந்தினார் பாலாஜி!
விஷயம் தெரியாது அவரை விரும்புவார் புஷ்பலதா இப்பக்கக் காதலில் ஒரு ஊடல் சூழலில் பாலாஜி புஷ்பலதாவின் மனம் கவர போடும் சாம பேத தான தண்ட பிட்டுக்களை அருமையான பாடல் வரிகளாக்கியிருப்பார் கவியரசர் பாலாஜியின் மலரும் நினைவுகளில் புகழ் பெற்ற பாடலாயினும் இன்றும் கண்ணை மூடிக் கேட்கையில் ஜெமினி பாடலாகவே உணரப்படுகிறது !


இந்த சூரிதார் துப்பட்டா கால மாற்றத்தில் குலுங்கும் முந்தானை அத்தான் பொத்தான் எல்லாம் மறக்கப் பட்டுவிட்டதே !

குலுங்கும் முந்தானை சிரிக்கும் அத்தானை மிரட்டுவதேனடியோ
உந்தன் கொடியிடை இன்று படை கொண்டு வந்து கொல்வதும் ஏனடியோ
இப்படி ஸ்டெப் பை ஸ்டெப்பாக பாடல் வரிகள் முன்னேறி ...
சித்திரை நிலவே அத்தையின் மகளே சென்றதை மறந்து விடு ...உந்தன் பக்தியில் திளைக்கும் அத்தான் எனக்கு பார்வையை திறந்து விடு... என்று பெரிய ஐஸ் கட்டியை புஷ்பலதா என்னும் டைடானிக் கப்பலின் வேகப் பாதையில் தடைப் பாறையாகப் போடுகிறார் பாலாஜி !

திருமண நாளில் மணவறை மீது இருப்பவன் நான்தானே என்ற உத்தரவாத முத்தாய்ப்பில் கவிழுகிறார் புஷ்பலதா !!

ஸ்ரீதரின் எந்தப் படத்திலும் பாடல்கள் சோடை போனதில்லை போலீஸ்காரன் மகளும் மிக இனிமையான இசைக்கோர்வையில் காலத்தை வென்று இன்றும்
தேனிசை மதுரங்களாய் உலவிக்கொண்டிருக்கும் பாடல்களை உள்ளடக்கியதே! ராண்டார் கை Blast from the Past பாணியில் சொல்வதென்றால் the film did not fare well at the box office !

ஏன் இந்தப் பாடல் காட்சியமைப்பை நான் சிலாகிக்கிறேன் என்றால் .....
எனது கல்லூரிப் பருவத்தில் எங்கள் ஆர்கெஸ்ட்ராவில் ஜெமினியின் ராஜா / ஸ்ரீநிவாஸ் குரல்களுக்கு நான் மைக் முன்னணிப் பாடகனாக இருந்தேன்!!!
பாட்டுப் பாட வா, நிலவே என்னிடம், மயக்கமா கலக்கமா......நான் விரும்பிப் பாடியவை...வெறும் பாத்ரூம் சிங்கிங் பிராக்டிஸ்தான்!!
அவ்வப்போது கொஞ்சம் காற்று வாங்கப் போனேன், உலகம் பிறந்தது எனக்காக, யார் அந்த நிலவு போன்ற TMS பாடல்களையும் தொட்டுக் கொள்வேன் !
இந்தப் பாடல்களையெல்லாம் மதுரகான திரி ஜாம்பவான்கள் விலாவரியாக அலசியிருப்பீர்கள்!

இருந்தாலும் சி க உங்கள் ஆதங்கமும் சரியே ! உங்கள் யானை பலத்தின் முன் நானெல்லாம் மியாவ் மியாவ் பூனைக்குட்டியே! இத்திரியில் எனது எழுத்துத் திரியை சரியாகத் தூண்டிவிட்டு எண்ணெய் ஊற்றி பிரகாசிக்க வைக்க நினைக்கும் உங்கள் முயற்சிக்கு நன்றிகள் !

senthil

பிரிக்க முடியாதது எதுவோ ? செந்திலும் கான்செப்ட் காணோளியுமே!! அப்பத்தானே இது புல் பிளட்ஜ்டு ரைட் அப்!!!

https://www.youtube.com/watch?v=PUxLkYndr-g

madhu
23rd August 2015, 04:47 AM
வள்ளூஸ் இன்னும் ஒண்ணு சொல்லியிருக்காருங்காணும்..

நகுநற் பொருட்டன்று நட்டல் மிகுதிற்கண்
மேற்சென்றிடித்தற் பொருட்டு..

உமக்குத் தெரியாதா என்ன..

ஆண் பெண் நட்பு பாட் வேற ஏதாவது இருக்கா.. போடுமேன்/போடுங்களேன்..சிக்கா... நான் தமிள்ல வீக்கு.. வள்ளூஸ் சொன்னதுக்கு அர்த்தம் சொல்லுங்க..

நட்புன்னா அவங்க மேலே போய் இடிக்கணுமா ? அப்புறம் மிக்ஸ்ட் நட்பு பத்தி வேற சொல்றீங்க.. அடி விழப்போகுது.

ஆளை அறியாமல் மேலே போய் இடித்தால்
காலை கழட்டிடு வார்

( ஹி ஹி.. குரல்.. குரள்.. ம்ம்ம் குறள்தானே... எப்படி இருக்கு ? )

rajraj
23rd August 2015, 06:17 AM
வாசு சிக ராகவேந்தர் முரளி கோபால் ரவிகிரண் ரவி மது கல்நாயக் ராஜ்ராஜ் .. ராகதேவன்.....இத்தனை .சிற்பிகளும் சேர்ந்து என்னை செதுக்கியிருக்கிறீர்கள்!!.

senthil: My sculpting/chiselling days are over! :lol: I did it for more than 25 years teaching my engineers how to write a report and how to make a presentation! :) I am sure some of them asked who is this Indian to tell us how to write? :lol:
I am sure they knew I was trying to help them. I understood that because I was given the nicknames 'walking dictionary' and 'professor'. Those were the days ! :) If you picked up something from me it is purely accidental ! :lol:

vasudevan31355
23rd August 2015, 07:27 AM
எல்லோருக்கும் வணக்கம். அத்தனை பேரும் கலக்குறீங்க. கல்ஸ் நண்பா! வாங்க. தோ சென்னை கிளம்பிட்டேன். கட்டபொம்மனை தரிசித்துவிட்டு வந்துடறேன். அதுவரை என் தொல்லை இல்லாம தூள் கிளப்புங்க.:)

sivajisenthil
23rd August 2015, 07:55 AM
senthil: My sculpting/chiselling days are over! I did it for more than 25 years teaching my engineers how to write a report and how to make a presentation! I am sure some of them asked who is this Indian to tell us how to write?
I am sure they knew I was trying to help them. I understood that because I was given the nicknames 'walking dictionary' and 'professor'. Those were the days ! If you picked up something from me it is purely accidental ! rajraj sir

:pink:It reflects rajraj sir by the way you interact. It is incidental and not a serendipity that I am picking up many a good guidance from esteemed persons like you in my thread life. A silver jubilee achievement :yes: to get conferred as a walking dictionary and professor would mean that you are a 'living thesaurus' too! I feel your those days are resuming virtually! Keep up your humble service sir.

senthil

rajraj
23rd August 2015, 07:57 AM
rajraj sir

It reflects rajraj sir by the way you interact. It is incidental and not a serendipity that I am picking up many a good guidance from esteemed persons like you in my thread life. A silver jubilee achievement to get conferred as a walking dictionary and professor would mean that you are a 'living thesaurus' too! I feel your those days are resuming virtually! Keep up your humble service sir.

senthil

Thanks senthil ! :)

madhu
23rd August 2015, 08:54 AM
வாத்தியாரையா... Dictionary-ல் புதிதாக வார்த்தைகள் கூடுமே தவிர குறைவதில்லை... நீங்களும் அப்படித்தான்..

மத்தவங்க எப்படி அழைத்தாலும் எனக்கு அன்று முதல் என்றும் நீங்க வாத்தியாரையாவேதான் !!!!

rajraj
23rd August 2015, 09:02 AM
வாத்தியாரையா... Dictionary-ல் புதிதாக வார்த்தைகள் கூடுமே தவிர குறைவதில்லை... நீங்களும் அப்படித்தான்..

மத்தவங்க எப்படி அழைத்தாலும் எனக்கு அன்று முதல் என்றும் நீங்க வாத்தியாரையாவேதான் !!!!

Thanks madhu ! :) I hope you are right. I am still learning. Some say that the best way to learn is to teach ! :)

g94127302
23rd August 2015, 09:23 AM
பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெற்றுவிடும் சி க !
வாசு சிக ராகவேந்தர் முரளி கோபால் ரவிகிரண் ரவி மது கல்நாயக் ராஜ்ராஜ் .. ராகதேவன்.....இத்தனை .சிற்பிகளும் சேர்ந்து என்னை செதுக்கியிருக்கிறீர்கள்!!
படங்காட்டுவதை நிறுத்திவிட்டு இனி உங்களோடுதான் ரேஸ் ! சரியான ட்ராக்கில் உங்களோடு என்னையும் சேர்த்துக் கொண்டமைக்கு நன்றி!!
சிரிக்கும் கண்ணனை சீரியஸ் கண்ணனாக்கி விடமாட்டேன்!! என்ன...ஒரு 3000 தாண்டினபின்னால் ஆரம்பிக்கலாம் என்றிருந்தேன்....

செந்தில் சார் , நீங்கள் சிற்பி செதுக்காத சிலை என்றல்லவா நினைத்திருந்தோம் - எப்படி இவ்வளவு பேர்கள் உங்களை செதுக்கிருக்க முடியும் ?? தன்னடக்கம் வேண்டும் சார் - ஆனால் நீங்கள் காட்டுவது யாராலும் emulate பண்ண முடியாத ஒன்றாக இருக்கிறது .

raagadevan
23rd August 2015, 10:57 AM
This one does not (probably) fit into any of the categories or titles on these pages...
but WOW what a song! Thanks to பாரதிராஜா, வைரமுத்து, இளையராஜா,
கே. ஜே. யேசுதாஸ், ஜென்சி, கமல் & மாதவி...

https://www.youtube.com/watch?v=ovr-8b8uIXI

g94127302
23rd August 2015, 11:13 AM
நட்பு தொடர்கிறது :

நட்பின் அருமை என்பதற்கு உதாரணம் சொல்லவேண்டுமென்றால் கண்ணன் - குசேலன் இவர்கள் நட்பு தான் நினைவிற்கு உடனே வருகிறது - அவலை வாங்கித்தின்ற கண்ணன் குசேலனை குபேரனாக்கினான் என்பது எல்லோருக்கும் தெரிந்த கதை - தெரியாத ஒன்று - கண்ணன் -ருக்மனிக்குள் நடந்த ஒரு சம்பாஷனை

ருக்மணி கண்ணனிடம் : கண்ணா - குசேலன் உன்னை மலை மாதிரி நம்பி வந்தான் - நீயும் அவனை ஏமாற்றவில்லை - ஒரு வேளை நீ அவனை ஏமாற்றி இருந்தால் -------

கண்ணன் : ஒரு கணவன் , மனைவியை ஏமாற்றலாம் , மனைவியும் கணவனை ஏமாற்றக்கூடும் இனி வரும் நாட்களில் --- ஆனால் உறவுகளை கடந்து சிறந்து விளங்குவது நட்பு - அந்த நட்பு தான் நானும் குசேலனும் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் நம்பிக்கை
என்னை அவன் நம்புவது அவன் எடுத்துக்கொண்ட முடிவு - அவன் எடுத்துக்கொண்ட அப்படிப்பட்ட முடிவு சரிதான் என்று நிரூபிப்பது என் முடிவு .

அடிக்கடி சந்தேகப்படுவது நட்பு அல்ல - சந்தேகத்தை விரட்டி அடிப்பதுதான் சிறந்த நட்பு .

சிங்கத்தின் கர்ஜனை தொடருகிறது நம் நட்ப்பைபோல

. நண்பரிடம் தோற்று விட்டேன் பாசத்தாலே

https://www.youtube.com/watch?v=H7xlhIaJFSQ&list=PLZd0oC9ZKBzEVmwmWUCRTduJxMfWbW3at


அன்புள்ள நண்பரே !


https://www.youtube.com/watch?v=LJtmL7XusaA

முழுகாத ship - friendship தான்

https://www.youtube.com/watch?v=b4xWUU6g8UA

(நட்பு இன்னும் வளரும் )

sivajisenthil
23rd August 2015, 06:59 PM
Shower Stars / Swimming Beauties/ Water Masters!

நட்சத்திரக் கு(வி)ளியல் பாடல்களும் 'பாத்ரூம் சிங்கர்'களுக்கான மதுர கானங்களே!


வேலை முடிந்து அலுப்புத் தீர வீட்டுக்கு வந்ததும் நமக்குத் தோன்றுவது ஒரு குளியல் போட்டால் புத்துணர்ச்சி மீளுமே என்பதுதான் !
என்ன.......குளியல் அ(மு)றைதான் நமது வசதி வாய்ப்புக்களுக்குத் தகுந்த மாதிரி மாறிக் கொண்டே இருக்கும்!!

கிணற்றடியில் தண்ணீர் சேந்தி ஆனந்தக் குளியல் போடலாம் ....வீட்டுக்குப் பக்கத்தில் பின்புறத்தில் ஆறோடினால் நீராடலாம்......நீச்சல் குளமிருந்தால் உலக நீச்சல் நடன தாரகை எஸ்தர் வில்லியம்ஸ் போல ஒரு டைவ் அடித்து மீனாய் நெளிந்து நீந்தலாம்......

பட்ஜெட்டில் பாத்டப் இருந்தால் முங்கலாம் ....எல்லாவற்றையும் விட சிறந்தது ஷவரை திறந்து விட்டு பாடிக்கொண்டே மேனி நனைப்பதே!!

ஷவர் குளியல் நமது சிந்தனைகளை ஒருமுகப் படுத்தும் அற்புதமான உடற்பயிற்சியும் கூட!! வேண்டுமென்றால் கீசரை போட்டுக்கொண்டு இதமான வெப்ப நீர்த் திவலைகளிலும் கவலைகளை வடித்துத் துரத்தலாம் !


அந்தக்காலப் படங்களில் எப்படியெல்லாம் குளியல் போட்டார்கள் என்பதை நாமும் 'மஞ்சக் குளித்து'ப் பார்ப்போமா !

ஷவர் ஸ்டார்/ஸ்விம்மர் 1 : Water Master ஜெமினி கணேசன் (தனிக்குளியல் எங்கே போட விட்டார்கள்!)
வஞ்சிக்கோட்டை வாலிபனில் அடிமைப் பையன் ஜெமினியை ராஜா மகள் ரோஜா மலர் அல்லிராணி வைஜயந்தி மாலா ஒரு ஊடலுக்குப் பின் கூடலில் டூயட் பாடவேண்டி பொற்றாமரைக் குளத்தில் பத்துக்கும் மேற்பட்ட பதுமையரை விட்டு அழுக்குத் தேய்த்துக் குளிப்பாட்டுவார் ...அப்புறம்..வெள்ளித்திரையில்....

Watch from 1 :06 : 00.....quite interesting segment!

https://www.youtube.com/watch?v=4Hf0zQDtAGg

சிலீரென்று குளித்துவிட்டுப் பளீரென்று நகைநட்டுடன் புன்னகை பூக்கும் காதல் மன்னருக்கான வைஜயந்தியின் அதிரடி ஆட்ட பாட்டம்!

[url]https://www.youtube.com/watch?v=zkHlWFI8sac

இளமை கொலுவிருக்கும் இனிமை குவிந்திருக்கும் குமரிகளுடன் குளித்துக் கும்மாளமிடும் மிஸ்டர் ஜமீன்தார் ஜெமினி !!

[url]https://www.youtube.com/watch?v=IbS6KHTlhsM

நீச்சல் குளமென்ன ....ஆற்றோட்டத்திலும் பத்மினி குளிப்பதால் சுடும் தண்ணீரும் ஜெமினிக்குப் பன்னீரே! தண்ணீர் சுடுவதென்ன?

[url]https://www.youtube.com/watch?v=EPWTU1WuC10

கொடுத்து வைத்த காதல் மன்னர் ரோஜர் மூரின் James Bond பனிச்சறுக்கு ரேஞ்சுக்கு வைஜயந்தியுடன் தேன் நிலவு காஷ்மீர் ஏரியில் நீர்ச் சறுக்கு விளையாட்டில் Water Master நிபுணராக சாகசம் செய்கிறாரே!

https://www.youtube.com/watch?v=WekowqRIO1E

காதல் மன்னருக்கு பாத்ரூம் ஷவரை விட திறந்த வெளி மழைத்தூறல் ஷவர்தான் பிடிக்கும் !!
இப்படிக் குளித்தால் ஜலதோஷமும் பிடிக்கும் !!

https://www.youtube.com/watch?v=_ukBdTZTQgM

Never Before Never Again feat by Esther (the one and the only) Williams!

போனஸ்: Must see! Don't Miss!!
மாற்றார் தோட்ட நீச்சல் நடன மதுர கீதம்
எஸ்தர் வில்லியம்ஸ் ....இப்பூவுலகின் ஈடுஇணையற்ற நீச்சல் சாதனை நாயகி.....

https://www.youtube.com/watch?v=rd1-dysPP9g

sivajisenthil
23rd August 2015, 08:43 PM
மாற்றார் தோட்ட மதுர கீதங்கள்

Esther Williams / The Million Dollar Mermaid!
பகுதி 36 : எஸ்தர் வில்லியம்ஸின் இணையற்ற நீச்சல் நடன கானப் பொக்கிஷங்கள்!உலகில் இதுவரை தோன்றிய ஜீவராசிகளிலேயே இந்த அளவு நீருக்கடியில் எந்த மீனும் திமிங்கிலமும் சுறாவும் டால்பினும் ஆக்டோபசும் ஆமையும் நடன நாட்டிய சாகசங்கள் நிகழ்த்தியதில்லை! இனியும் நிகழ்த்துவாரில்லை! கண்களும் சிந்தையும் குளிர்ந்திட.....

https://www.youtube.com/watch?v=rd1-dysPP9g

If you are impressed by this performance you will be prompted to go to the You Tube site for many more such feats of the one and the only one of human kind ESTHER WILLIAMS, the million dollar mermaid!

rajraj
24th August 2015, 01:56 AM
From Veera PaNdiya Kattabomman(1959)

pogaathe pogaathe en kaNavaa.....

http://www.youtube.com/watch?v=a861UAQfX0w

From the Hindi dubbed version Amar Shaheed

matt jaa re matt jaa re saajanwa......

http://www.youtube.com/watch?v=oDRSZmOllNg

RAGHAVENDRA
24th August 2015, 06:12 AM
Many many happy returns of the day NOV Sir.

https://www.youtube.com/watch?v=Gu4t6mhZDK4

g94127302
24th August 2015, 08:33 AM
Many many happy returns NOV sir . இங்கே பதிவிடும் பாடல்கள் உங்களுக்காகவும் தான் !!

ஒன்றில் இரண்டு ( நட்பு தொடர்கிறது ).


பகுதி 1

நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு

ஆராய்ந்து பாராமல் கொண்டிடும் தீய நட்பு, அந்த நட்பிலிருந்து விடுபட முடியாத அளவுக்குக் கேடுகளை உண்டாக்கும்.


ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்.

திரும்பத் திரும்ப ஆராய்ந்து பார்க்காமல் ஏற்படுத்திக் கொள்கிற நட்பு, கடைசியாக ஒருவர் சாவுக்குக் காரணமாகிற அளவுக்குத் துயரத்தை உண்டாக்கி விடும்.

கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்.

தீமை வந்தால் அதிலும் ஒரு நன்மை உண்டு. அந்தத் தீமைதான் நண்பர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று அளந்து காட்டும் கருவியாகிறது.

உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு.

ஊக்கத்தைச் சிதைக்கக்கூடிய செயல்களையும், துன்பம் வரும்போது விலகிவிடக்கூடிய நண்பர்களையும் நினைத்துப் பார்ககாமலே இருந்து விட வேண்டும்.

g94127302
24th August 2015, 08:36 AM
பகுதி 2

எத்தனை புலிகள் வந்தாலும் ஒரு சிங்கத்தின் முன் என்ன செய்ய முடியும் ?? கர்ஜனை தொடர்கிறது .

நல்ல நண்பர்கள் சேர்ந்தால் அங்கே கவலைகளுக்கு பிரியா விடை கொடுத்துதானே ஆகவேண்டும் - இந்த இன்பம் , தன்னை மறக்கும் சுகம் , செலவுகளைப்பற்றிய சிந்தனையே இல்லாமல் - இதுதான் வாழ்க்கையோ - ஏன் இந்த இன்பம் பல சமயங்களில் நமக்கு தொடர்ந்து கிடைப்பதில்லை ???

https://www.youtube.com/watch?v=q--oOSZlz-g


கல்லூரிப்படிப்பு முடிந்து வெளியேறும் இளைஞர்களின்
உல்லாச கனவுகள்.

நல்ல நண்பர்கள் இருவரை ஒருவராக்கும் சக்தி பெற்றவர்கள் .

https://www.youtube.com/watch?v=YU-b1hNh0g0

நல்ல நண்பர்கள் , நல்ல குடும்பம் - இது தெய்வீகம் - இதற்க்கு ஈடு இணையே இல்லை

நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்ற
நாளிருக்கு வாழ்ந்தே தீருவோம்
எங்கே கால் போகும் போக விடு
முடிவை பார்த்து விடு
எங்கே கால் போகும் போக விடு
முடிவை பார்த்து விடு
காலம் ஒரு நாள் கைகொடுக்கும்
அதுவரை பொறுத்துவிடு
காலம் ஒரு நாள் கைகொடுக்கும்
அதுவரை பொறுத்துவிடு
யா யா யாயா யா யா யாயா .. லா..லா…லா..
நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்ற
நாளிருக்கு வாழ்ந்தே தீருவோம்
லா..லா…லா….லா….லா….
.
இருந்தால் தானே .. செலவு செய்ய
எடுத்தால் தானே … மறைத்து வைக்க
கொடுத்தால் தானே வாங்கி செல்ல
படுத்தால் தானே விழித்து கொள்ள
கொடுத்தால் தானே வாங்கி செல்ல
படுத்தால் தானே விழித்து கொள்ள
எங்கே கால் போகும் போக விடு
முடிவை பார்த்து விடு
காலம் ஒரு நாள் கைகொடுக்கும்
அதுவரை பொறுத்துவிடு
யா…யா…யா… லா…லா…
நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்ற
நாளிருக்கு வாழ்ந்தே தீருவோம்
நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்ற
நாளிருக்கு வாழ்ந்தே தீருவோம்
.
துணிந்தால் தானே … எதுவும் முடிய
தொறந்தால் தானே…. பாதை? தெரிய
சிரித்தால் தானே கவலை மறைய
சில நாள் தானே சுமைகள் குறைய
சிரித்தால் தானே கவலை மறைய
சில நாள் தானே சுமைகள் குறைய
எங்கே கால் போகும் போக விடு
முடிவை பார்த்து விடு
காலம் ஒரு நாள் கைகொடுக்கும்
அதுவரை பொறுத்துவிடு
யா…யா…யா… லா…லா…
நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்ற
நாளிருக்கு வாழ்ந்தே தீருவோம்
நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்ற
நாளிருக்கு வாழ்ந்தே தீருவோம்.

https://www.youtube.com/watch?v=NaItT2DZVXU


இந்த பாடலை பாடாத நண்பர்களே இருக்க முடியாது - இன்றும் கண்களில் நீரை வர வழிக்கும் ஆற்றல் பெற்ற பாடல்

https://www.youtube.com/watch?v=Y4WGotsRPSs

A good song about true friendship !!!

https://www.youtube.com/watch?v=6MIHGllM8zI

(நட்பு தொடரும் )

chinnakkannan
24th August 2015, 03:02 PM
குளீயல் பாட்டெல்லாம் நிறைய உண்டே..

நீராடும் அழகெல்லாம் நீ மட்டும் பார்க்கலாம்..

ரெண்டுபேர் குற்றாலத்தில் குளிப்பது..

பாலாடை மேனி பனிவாடைக்காற்று நீராட வந்தோமடி

மஞ்சக் குளிச்சு அள்ளி முடிச்சு மெட்டி ஒலிக்க மெல்லசிரிச்சு

ஞாயிறு ஒளி மழையில் திங்கள் குளிக்க வந்தாள்..

முத்துக்குளிக்க வாரீகளா..

உன் குளியலறையில் நான் மஞ்சளா ஷாம்ப்பூவா..

குளிக்கும் ஓர் கிளி..கொதிக்கும் நீர்த்துளி

இன்னும் நிறைய இருக்கும் போல் இருக்கே..

kalnayak
24th August 2015, 03:19 PM
நன்றி ரவி, சி.க., சிவாஜி செந்தில், ராஜ்ராஜ், மது, வாசு மற்றும் ஏனைய நண்பர்கள் அனைவருக்கும்.

சி.க.விற்கு இல்லாத உரிமையா? அவர் எனது குரு. மாணவர்களை ஆசிரியர்கள் தாரளமாக வையலாம். அந்த உரிமையில் சொல்லுகிறார் என்றே எடுத்துக் கொள்கிறேன். மற்றபடி நான் இங்கு வரக் கூடாது என்றெல்லாம் வராமல் இருந்ததில்லை. முன்பு அலுவல் நேரத்தின் இடைவெளிகளில் பதிவுகளிட்டேன். தற்போது அதிகமான வேலைப் பளுவுடன். என் கணினியில் நான் என்ன செய்கிறேன் என்று மற்றொருவர் பார்க்கின்ற வாய்ப்பு மிக அதிகமான பட்சத்தில், மதுரகானத் திரியிலும் நுழைய முடிவதில்லை. அதிகமாக வேலையைப் பார்க்கிறேன். மதுரகானத் திரியில் எல்லோருடைய பதிவுகளைப் படிக்கவும் முடிவதில்லை. நானும் எழுத முடிவதில்லை. நேற்றும், இன்றும் சற்று கிடைத்த இடைவெளிகளில் வந்து விட்டேன். போன பதிவிலிருந்து இந்த பதிவிற்கு முந்தைய பதிவு வரை படித்து விட்டேன். இன்னும் இடைவெளிகள் சற்று அதிகம் கிடைத்தால் நிச்சயம் என்னுடைய பதிவுகள், பாடல்கள் வரும்.

மீண்டும் நன்றி.

chinnakkannan
24th August 2015, 04:16 PM
கல் நாயக்.. நோ ப்ராப்ளம்..எப்போ முடியுமோ அப்போ வாங்க.. :) ப்ரமோஷன் க்கு நா வேணா ரெக்கமண்ட் பண்ணட்டா..(வீட்டிலயும் ஆஃபீஸ் வேலையை எடுத்துக்காதீங்க)

sivajisenthil
24th August 2015, 05:26 PM
Shower Stars / Swimming Beauties/ Water Masters!

நட்சத்திரக் கு(வி)ளியல் பாடல்களும் 'பாத்ரூம் சிங்கர்'களுக்கான மதுர கானங்களே!


வேலை முடிந்து அலுப்புத் தீர வீட்டுக்கு வந்ததும் நமக்குத் தோன்றுவது ஒரு குளியல் போட்டால் புத்துணர்ச்சி மீளுமே என்பதுதான் !
என்ன.......குளியல் அ(மு)றைதான் நமது வசதி வாய்ப்புக்களுக்குத் தகுந்த மாதிரி மாறிக் கொண்டே இருக்கும்!!

கிணற்றடியில் தண்ணீர் சேந்தி ஆனந்தக் குளியல் போடலாம் ....வீட்டுக்குப் பக்கத்தில் பின்புறத்தில் ஆறோடினால் நீராடலாம்......

பட்ஜெட்டில் பாத்டப் இருந்தால் முங்கலாம் ....எல்லாவற்றையும் விட சிறந்தது ஷவரை திறந்து விட்டு பாடிக்கொண்டே மேனி நனைப்பதே!!

ஷவர் குளியல் நமது சிந்தனைகளை ஒருமுகப் படுத்தும் அற்புதமான உடற்பயிற்சியும் கூட!! வேண்டுமென்றால் கீசரை போட்டுக்கொண்டு இதமான வெப்ப நீர்த் திவலைகளிலும் கவலைகளை வடித்துத் துரத்தலாம் !


அந்தக்காலப் படங்களில் எப்படியெல்லாம் குளியல் போட்டார்கள் என்பதை நாமும் 'மஞ்சக் குளித்து'ப் பார்ப்போமா !

ஷவர் ஸ்டார்/ 2 : மக்கள்திலகம் MGR

மக்கள் திலகமும் நிறைய படங்களில் புத்துணர்ச்சிக் குளியல் போட்டிருக்கிறார்!
மக்கள்திலகத்தின் கிணற்றடிக் குளியல் குற்றால அருவியிலே குளித்தது போல இருந்ததாம் ...இருக்காதா பின்னே....தலையில் தண்ணீர் ஊற்றுபவர் ராஜ சுலோச்சனாவாக இருக்கும்போது ....!!அதுவும் லுங்கி சட்டை கெட்டப்பில் ..!!

https://www.youtube.com/watch?v=mIQUFOFl340

உன்விழியும் என் வாளும் சந்தித்தால்....எங்கே..பாத்ட்ப்பிலா!? கொடுத்து வைத்த ராஜஸ்ரீ!....வாத்தியாரே ஷவர் அடிக்கும்போது....!!

https://www.youtube.com/watch?v=6FlCmlYEvM0

பறக்கும் பாவையுடன் பக்கத்து பக்கத்து பாத்ரூமில் ஷவர் குஷிதான் ! புத்துணர்ச்சி பொங்கிவரும் ஷவர் சிங்கிங்!!

[url]https://www.youtube.com/watch?v=2L43xqROx1k&index=1&list=PLA1A7994C02D6A137

கட்டோடு குழலாட ஆட ...கண்ணென்ற மீனாட ஆட...ஆற்றுக்குளியல் ஊற்றெடுக்கும் உற்சாகமே! ஒன்றுக்கு இரண்டாகப் பாவையர் உடனிருந்தால்...!!

https://www.youtube.com/watch?v=xK8NF1XaWBA

chinnakkannan
24th August 2015, 05:48 PM
ஷவர் ஸ்டார்/ :) உன் விழிய விட உன்னைத் தானே ஏய் எனக்குப் பிடிக்கும்..சி.செ.. இந்த விளையாட்டுப்பிள்ளையிலும் காஞ்ச் குளிக்கற பாத்டப் நல்லாயிருக்கும் :)

sivajisenthil
24th August 2015, 05:52 PM
//பாத்டப் நல்லாயிருக்கும் // அப்ப குளிக்கிற காஞ்ச் நல்லாயில்லையா சிக?
:-d
சாந்திநிலையம் அருவிக்குளியல் குழந்தைகள் கூட்டத்துடன் காஞ்சனாவின் பங்களிப்பில் ரம்மியமே!

https://www.youtube.com/watch?v=uVH9o1_kyXE

chinnakkannan
24th August 2015, 06:44 PM
//அப்ப குளிக்கிற காஞ்ச் நல்லாயில்லையா // அவங்களுக்குத் தான் பாட் கிடையாதே..

மழைல குளிக்கற பாட்டும் உண்டா என்ன? :)

madhu
24th August 2015, 07:09 PM
Hi aaaalllll...

அடுத்த சந்தேகம் வந்தாச்சு... இதுக்கு விடை சொல்லுங்க..

ஒரு பாடல்... அது டூயட்டா சோலோவா என்று நினைவில்லை.. ஆனால் பின்பகுதியில் டி.எம்.எஸ் பாடுவார்..
இப்படி சில வரிகள்... "மச்சி மச்சி என் மச்சிகளா இந்த மாமன் மேல் ஆசை வச்சிகளா" என்று ஆரம்பித்து "கொருக்குப்பேட்டை, ராயப்பேட்டை, சைதாப்பேட்டை" என்று பேட்டையை ராப் செய்வார்.
கடேசில " நான் எடுத்த சாட்டை அது நடத்தட்டுமே வேட்டை.. ஓட்டேரின்னா மாட்டே.. அது போகும் கிருஷ்ணாம்பேட்டை" என்று முடிப்பார்.

நண்பர்களே... இந்தப் பாடல் பற்றிய விவரங்களை தாருங்கள் என கேட்டுக் கொள்கிறேன்

sivajisenthil
24th August 2015, 09:56 PM
Shower Stars / Swimming Beauties/ Water Masters!

நட்சத்திரக் கு(வி)ளியல் பாடல்களும் 'பாத்ரூம் சிங்கர்'களுக்கான மதுர கானங்களே!

ஷவர் ஸ்டார் 3 நடிகர்திலகத்தின் குளியல் நவரசக் குவியல்!


சறுக்கி விழுந்துதான் சைக்கிள் கற்றுக்கொள்ள முடியும். ஜான் ஏறி முழம் சறுக்கினால்தான் வழுக்கு மரமேறி புதையல் எடுக்க முடியும்! அப்படியே தண்ணீரில் முங்கிமுங்கி மூச்சடக்கி கைகால்களை உதறினால்தான் நீச்சல் கற்றுக்கொள்ள முடியும் ....

எதிர்நீச்சல் போட்டால்தான் வாழ்க்கையின் வெற்றிக்கனிகளை பலே பாண்டியனாகி ருசிக்க முடியும் என்பதை தேவிகா சொல்லித்தான் நடிகர்திலகம் புரிந்து கொண்டாரோ ?!
https://www.youtube.com/watch?v=s0brrvQD8OU

வீரபாண்டிய கட்டபொம்மனாக இன்றும் கர்ஜித்துக் கொண்டிருப்பவரா இந்த சேற்றில் மலர்ந்த செந்தாமரையைப் பார்த்து இப்படி ஒரு இடிச்சிரிப்பு சிரிக்கிறார் ?!அதோடு எவ்வளவு லாவகமாக சேற்றில் புதைந்த பாரதியின் ராசி தங்கசுரங்கமாம் மச்சம் கண்டிட ஷவரடிக்கிறார் ?! புதுமையான சேற்று முங்கல் ஷவர் குளியல்!!பாரதியோடு கிணற்றுக்குள் இறங்குவதும் குளிக்கத்தான் என்று நம்பி ஏமாந்து விட்டோம் !


https://www.youtube.com/watch?v=TojrKH2x7lo

நீச்சல் குளம்தான் காதலியரின் நினைவுப் பகிர்தலில் புத்துணர்ச்சி தூண்டும் கிரியா ஊக்கி தத்தம் மனங்கவர் மங்கையரை தண்ணீரில் முங்கி நீந்திக்கொண்டே சிலாகித்து நினைவசைகளை சுண்டுவது வித்தியாசமே

[url]https://www.youtube.com/watch?v=rUmL6PFD1OE

இன்னும் தங்க பதுமை வசந்த மாளிகை தீபம் படங்களிலும் இத்தகைய காட்சிகளைக் கண்ணுற்று மகிழலாம் !

rajeshkrv
24th August 2015, 10:43 PM
திரையில் பக்தி தொடர்ச்சி:

இந்த பாடலுக்கு இணையான பாடல் இதுவரை வரவில்லை

ஆம் லவ குசா திரையில் இசையரசி மற்றும் பி.லீலாவின் குரலில் ஒலித்த ஜகம் புகழும் புண்ணிய கதை

தெலுங்கில் கண்டசாலா இசை, தமிழில் மகாதேவனின் இசை. வரிகள் மருதகாசி ஐயா

https://www.youtube.com/watch?v=RA5ecj775MU

என்ன அருமையான பாடல். பேபி உமா மற்றும் இன்னொரு சிறுவனின் நடிப்பு பாடல் வரிகள், பாடியவர்களின் குரல் வளம் என எல்லாமே பக்தி ரசம் சொட்டும்

chinnakkannan
24th August 2015, 10:46 PM
வாங்க ராஜேஷ்.. நலமா.. என்னாச்சு.. ராமாயணம் லாம்கேக்க பாக்க ஆரம்பிச்சுட்டீங்க..:)

madhu
25th August 2015, 04:41 AM
ராஜேஷ்.... ஜகம் புகழும் புண்ய கதை என்னைக்குமே ராமன் கதைதான்..

உங்க பதிவு அயோத்தியா காண்டத்தில் இருந்துதான் ஆரம்பிக்குது.. பால காண்டம் மிஸ்ஸிங்.

இந்தாங்க பாலகாண்டம்.. ( எங்களுக்கெல்லாம் கடவுளரைக் குழந்தைகளாக மாற்றி ரசிக்கவே இஷ்டம். சிக்கா பேரிலேயே சின்னக் கண்ணனாக இருக்கிறார். நான் அவதாரில்)

https://www.youtube.com/watch?v=GblL675ZE8w

எனக்கு ஒரு சந்தேகம்.. லவகுசா படத்தில் வால்மீகி முனிவர் இந்த ராமாயணத்தைச் சொல்லிக் கொடுக்க லவனும் குசனும் பாடுறாங்க. ஆனால் அதிலே பரதன் தேடி வருவதோ.. பாதுகை வாங்கிச் செல்லும் காட்சியோ காணவே காணோமே !
முக்கியமான கட்டத்தை ஒரு வரியிலாவது சேர்த்திருக்கலாமே !

கங்கைக் கரை அதிபன் பண்பில் உயர்ந்த குகன் அன்பால் ராமபிரான் நண்பனாகினான்
பஞ்சவடி செல்லும் பாதையைக் காட்டினான்

என்று வருகிறது. ராமாயணக் கதையின் படி குகன் சித்திரகூட மலைக்குத்தான் வழி காட்டுகிறான். பிறகு பரதன் வந்து பாதுகை பெற்று சென்றபின் ராமர் குடும்ப சகிதம் விராதனைக் வதம் செய்தபடி தண்டகாரண்யம் செல்வதாகப் படித்திருக்கிறேன்.

எதனால் இந்த மாற்றம் ? யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்களேன் !!

vasudevan31355
25th August 2015, 08:59 AM
'நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்' தெலுங்கில் பார்த்து ரசிக்க. 'நேருக்கு நேர் நின்று பாருங்கள் போதும்' பாடல் இப்படத்தில் கைவிடப்பட்டு அதற்கு பதிலாக இரு வல்லவர்கள்' பாடல் டியூன் எடுத்துக் கொள்ளப்பட்டு விட்டது.

'மனசாரகா நீவு'

'எதிரிகள் ஜாக்கிரதை' படம்தாங்க அது.

ராஜஸ்ரீயும், ராம் மோகனும் நடித்திருப்பார்கள்.

சுசீலாவும், பி.பி ஸ்ரீனிவாசும் பாடுவார்கள். மாடர்ன் தியேட்டர்ஸ் 'எவரு மொனகாடு' படத்தில்.


https://youtu.be/yrqWryoU9dQ

vasudevan31355
25th August 2015, 09:16 AM
மனோகரும், மணிமாலாவும், மாஸ்டர் பிரபாகரும் நடித்த 'அப்பா பக்கம் வந்தா' பாடலை தெலுங்கில் காந்தாராவ், மாஸ்டர் ராஜு சௌகார் நடிக்க பாருங்கள்.


https://youtu.be/quCk-KAZfRY

vasudevan31355
25th August 2015, 09:23 AM
'எனக்கொரு ஆசை இப்போது' (தெலுங்கில்)


https://youtu.be/l4ugTc2rUAw

vasudevan31355
25th August 2015, 09:28 AM
'நீயாக எனைத் தேடி வருகின்ற நேரம்' (தெலுங்கில்)


https://youtu.be/GRW-mJeQldc

vasudevan31355
25th August 2015, 09:31 AM
'அனுபவி ஜோரா அனுபவி' (தெலுங்கில்) இதுவும் 'இரு வல்லவர்கள்' பாடல். தமிழில் ஜெய், விஜயலஷ்மி பாடுவார்கள். ஆனால் தெலுங்கில் ஹீரோ பாட மாட்டார். படம் மாறுது அல்லவா? ஒன்லி லேடீஸ்.


https://youtu.be/eR2iiqyqYL4

rajeshkrv
25th August 2015, 09:31 AM
evaru monagadu is vallavan oruvan remake only (or could be simulataneous production)

raagadevan
25th August 2015, 09:35 AM
Thank you வாசு சார் for the Telugu version of my favourite song 'நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்'.
Here is the original Hindi song from which the tune was adapted by Vedha for IRU VALLAVARGAL:

https://www.youtube.com/watch?v=vAD33F3s1VM

Mohamad Rafi and Suman Kalyanpur singing the composition of Shankar/Jaikishan for Biswajeet and
Saira Banu in the movie APRIL FOOL (1964)

vasudevan31355
25th August 2015, 09:41 AM
நன்றி ராகதேவன் சார். பிஸ்வஜித் நம்ம ஊரின் அந்தக் கால நம்பியார் போல மொழு மொழு என்றிருப்பார். சுமன் கல்யாண்பூர் எனக்கு மிகவும் பிடித்தமான பாடகி.

vasudevan31355
25th August 2015, 09:43 AM
ஜி!

நலமா? தாங்கள் மீண்டும் களம் கண்டிருப்பது களிப்பைத் தருகிறது. இப்பதான் எங்கள் பழைய ஜி.

'எவரு மொனகாடு' 'எதிரிகள் ஜாக்கிரதை' படத்தின் ரீமேக் அல்லவா?

vasudevan31355
25th August 2015, 09:57 AM
சுமன் கல்யாண்பூர் பாடல்களில் மிகவும் பிடித்த பாடல். 'BAAT EK RAAT KI' படப் பாடல். ஹேமந்த் குமார் உடன் பாடுவார். தேவ், வஹீதா நடிப்பில். வாவ்! என்ன ஒரு பாடல்!

Na Tum Hame.N Jaano,
Na Ham Tumhen Jaanen
Magar Lagataa Hai Kuchh Aisaa,
Meraa Hamadam Mil Gayaa


https://youtu.be/hGOkuBTtBu0

rajeshkrv
25th August 2015, 10:00 AM
https://www.youtube.com/watch?v=Tf8QbJfTdko

rajeshkrv
25th August 2015, 10:00 AM
https://www.youtube.com/watch?v=_ddBySWHz_Q

rajeshkrv
25th August 2015, 10:01 AM
நன்றி ராகதேவன் சார். பிஸ்வஜித் நம்ம ஊரின் அந்தக் கால நம்பியார் போல மொழு மொழு என்றிருப்பார். சுமன் கல்யாண்பூர் எனக்கு மிகவும் பிடித்தமான பாடகி.

nambiyara ???? namma gemini matrum innum sila heroes pol azhagagave iruppar

rajeshkrv
25th August 2015, 10:03 AM
ஜி!

நலமா? தாங்கள் மீண்டும் களம் கண்டிருப்பது களிப்பைத் தருகிறது. இப்பதான் எங்கள் பழைய ஜி.

'எவரு மொனகாடு' 'எதிரிகள் ஜாக்கிரதை' படத்தின் ரீமேக் அல்லவா?

ஆனால் கதை என்னவோ வல்லவன் ஒருவன் போல் இருந்ததாக நினைவு.
மீண்டும் பார்க்கிறேன்

நலமே ஜி. உங்கள் நிற்வாகம் சீக்கிரமே நல்ல முடிவு எடுக்கும். மனம் தளராமல் இருங்கள். இறைவன் இருக்கிறான்

rajeshkrv
25th August 2015, 10:08 AM
https://www.youtube.com/watch?v=S9L-odI-OFs

madhu
25th August 2015, 10:18 AM
நன்றி ராகதேவன் சார். பிஸ்வஜித் நம்ம ஊரின் அந்தக் கால நம்பியார் போல மொழு மொழு என்றிருப்பார்.

அட... எனக்கும் பிஸ்வஜித்தைப் பார்த்தால் கொழுகொழு நம்பியார் போலத்தான் தோன்றும்

vasudevan31355
25th August 2015, 10:19 AM
nambiyara ???? namma gemini matrum innum sila heroes pol azhagagave iruppar

:):):)

http://sim05.in.com/2/8cd12bc09d98df5ad49ce31ae089c2bc_ls_t.jpg

vasudevan31355
25th August 2015, 10:25 AM
மது அண்ணா!

பிழைத்தேன்.:) எனக்கு எப்போ விஸ்வாவைப் பார்த்தாலும் அந்தக்கால மீசை இல்லாத 'வழுவழு நம்பியார்தான் ஞாபகத்துக்கே வரும். மக்களைப் பெற்ற மகராசி, நான் பெற்ற செல்வம், பாகப்பிரிவினை படங்களில் அப்படியே பிஸ்வஜித் போலவே இருப்பார்.

https://i.ytimg.com/vi/HRyKGoZ_gvY/hqdefault.jpghttp://padamhosting.me/out.php/i132689_vlcsnap-2011-12-21-09h09m37s33.pnghttp://bharatdiscovery.org/w/images/7/73/Biswajit-Chatterjee.jpg

rajeshkrv
25th August 2015, 10:26 AM
nambiyarai vida innum azhaguppa .. biswajit

vasudevan31355
25th August 2015, 10:31 AM
http://s2.dmcdn.net/Pmpb/1280x720-tTY.jpg

vasudevan31355
25th August 2015, 10:32 AM
nambiyarai vida innum azhaguppa .. biswajit

முகச் சாயல் கொஞ்சம் ஒன்றாகவே இருக்கும்ஜி.

madhu
25th August 2015, 10:38 AM
ராஜேஷ்...

பத்மப்ரியா கூட ஹேமமாலினி போல ஜாடையில் இருப்பார்.. இதில் அழகு பத்தியெல்லாம் ஒண்ணும் கிடையாது.. Just இவரைப் பார்க்கிறபோது அவர் நினைவு வரும். அம்புட்டுதேன்.

madhu
25th August 2015, 10:38 AM
வாசு ஜி... ஒரு பாட்டு டவுட் கேட்டிருந்தேன்..ஹி ஹி.. நானே கண்டுபிடிச்சுட்டேன். சிரித்த முகம் படம்.. ஈஸ்வரியும் டி.எம்.எஸ்ஸும் கலக்கும் பாட்டு..

மச்சி வந்து மச்சானுக்கு வச்சா பாரு விருந்து...

vasudevan31355
25th August 2015, 11:03 AM
நல்லாவே கண்டுக்கினேன் மதுண்ணா! எனக்கும் நல்லாத் தெரியும். உங்க மிடில் வரியைப் படிச்சதுமே தானாகவே பாட ஆரம்பிச்சுட்டேன். பல்லவி வரும் போது மக்கர் பண்ணுச்சு. ஏன்னா பல்லவி டியூன் வேற. நிறைய தடவை கேட்டிருக்கேன். செம குத்து அந்த வரிகளில்.! ஆனா இப்போ உங்க பதிவைப் பார்த்ததும் கிளியர் ஆயிடுத்து

மச்சி மச்சி என் மச்சிகளா
இந்த மாமன் மேல் ஆச வச்சீகளா

இந்தாங்க. இப்போ பாட்டையும் கேட்டுடலாம்.

http://www.inbaminge.com/t/s/Siritha%20Mugam/

vasudevan31355
25th August 2015, 11:47 AM
மது அண்ணா!

'சிரித்த முகம்' என்றாலே 'சடார்'னு

'வா காதல் செய்து பார்ப்போம்' ஏ.எல்.ராகவன், ராட்சஸி பாட்டுதான் நினைவுக்கு வந்தது.

'ராஜாத்தி கூந்தலுக்கு ரோஜாப்பூ வங்கி வந்து' பாடல் நினைவில் இருந்தாலும் பாலையா 20 வயது இளைஞன் மாதிரி 'வா காதல் செய்து பார்ப்போம்' என்று பாடி ஜோடியுடன் ட்விஸ்ட் ஆடுவது மட்டும் நினைவில் இருக்கிறது. பாண்டி அஜந்தா தியேட்டரில் ஓடிச் சென்று படம் பார்த்தது நன்றாக நினைவில் இருக்கிறது.

ஈஸ்வரி 'அஹ்ஹோ' என்று நடுவில் அமர்க்களம் பண்ணி 'பாலையா' என்று கொஞ்சுவதும் காட்சியாக ஞாபகம் இருக்கிறது. ஆனால் பாடல் வரிகள் மனப்பாடம்.

சூப்பர் பாட்டு மதுஜி! மியூஸிக் அமர்க்களம்.

வா காதல் செய்து பார்ப்போம்
நம் கன்னம் ரெண்டும் சேர்ப்போம்
நாம் ஓடியாடும் அழகை
இந்த உலகம் பார்க்க வைப்போம்

வா காதல் செய்து பார்ப்போம்
நம் கன்னம் ரெண்டும் சேர்ப்போம்
நாம் ஓடியாடும் அழகை
இந்த உலகம் பார்க்க வைப்போம்

அய்யய்யே அம்மம்மா
அறுபதான வயசு

ஹா..ஆனாலும் என்னம்மா
ஆசைதானே பெரிசு

அய்யய்யே அம்மம்மா
அறுபதான வயசு

ஆனாலும் என்னம்மா
ஆசைதானே பெரிசு

(வா காதல்)

தா! தா! ஜோராகத் தா! நீ தருகின்ற சுகமென்ன!

வா! வா நேராக வா! என் வயசுக்கு இது என்ன!

தா! தா! ஜோராகத் தா! நீ தருகின்ற சுகமென்ன!

வா வா நேராக வா! என் வயசுக்கு இது என்ன!

சேரன் சோழன் என்று மன்னர் யாவும் நீரய்யா!

('ஹ... யாரங்கே? என்று பாலையா மன்னர் தோரணை காட்டுவார்)

சேரும் ஆசை கொண்டேன்
நானும் உந்தன் பால் அய்யா:)(பாலையா)

மனதில் வந்தது ஷோக்கு
நாம் ஆடிடுவோம் இனி ஷேக்கு

(வா காதல்)

தேன் தேன் நானே வந்தேன் உன் 'திருவிளையாடலு'க்கு
(ஒரு நாள் போதுமா' வுக்கு பொருத்தமாக வரி)

நீதான் தோதானவள் இந்த 'திருவருட்செல்வ'னுக்கு... ஹோ

தேன் தேன் நானே வந்தேன் உன் 'திருவிளையாடலு'க்கு

நீதான் தோதானவள் இந்த திருவருட்செல்வனுக்கு

ஆயர் பெண்கள் கொஞ்சும் காதல் கண்ணன் நீரய்யா!
ஆசை வள்ளி நெஞ்சில் ஆடும் கந்தன் பாலையா (சூப்பரு)

ஆஹா இனி என்ன நெக்ஸ்ட்டு?
நாம் ஆடிடிவோம் இனி ட்விஸ்ட்டு!

வா காதல் செய்து பார்ப்போம்

அஹ்ஹோ!

நம் கன்னம் ரெண்டும் சேர்ப்போம்

அஹ்ஹோ!

நாம் ஓடியாடும் அழகை
இந்த உலகம் பார்க்க வைப்போம்

'ஐயோ' என்று ஆட முடியாமல் பாலையா இறுதியில் அலறுவார்.

எனக்கு ராகவன், ஈஸ்வரி கலாய்ப்ப்புகளில் இதுவும் ரொம்பப் பிடிச்ச பாட்டு மதுண்ணா!

sivajisenthil
25th August 2015, 01:24 PM
Shower Stars / Swimming Beauties/ Water Masters!

நட்சத்திரக் கு(வி)ளியல் பாடல்களும் 'பாத்ரூம் சிங்கர்'களுக்கான மதுர கானங்களே!

ஷவர் ஸ்டார் 4 ரவிச்சந்திரனின் குளியல் நெளியல் நடன கீத நளினங்கள்

வெள்ளிவிழா நாயகன் கலர் கதாநாயகன் கலை நிலவு என்றெல்லாம் மிகுந்த எதிர்பார்ப்புக்களுடன் வரவேற்ப்பு பெற்ற ரவிச்சந்திரன் ராமண்ணாவின் இணைவில் பொழுதுபோக்கு மன்னனாகவும் மாறினார்! வித்தியாசமான நளினமான நடன அசைவுகள் அவரது தனி அடையாளமாக இன்றளவும் கலர்புல் பாடல் காட்சிகளில் ரசிக்கப் படுகின்றன நான் மூன்றெழுத்து அதே கண்கள் மீண்டும் வாழ்வேன் அவரது அந்தக்கால கலர் நாயகன் அந்தஸ்தை உயர்த்திய மிக சிறந்த பொழுது போக்குப் படங்கள் ! அவர் பங்களிப்பும் நீச்சல் குளியல் காட்சிகளில்..மதுர கான இசை நடனக் கோர்வையில்.....

அதே முகம் அதே குணம் கண்டேன் ...பாடலில்

https://www.youtube.com/watch?v=XyjQACjiJoQ

vasudevan31355
25th August 2015, 02:03 PM
உருப்படாத சில படங்களில் பாட்டுக்கள் அமைந்துவிடும் பாருங்கள். அந்த மாதிரி அருமையான பாடல்களினாலேயே பத்து பைசாவுக்குத் தேறாத படங்கள் கூட நம் நினைவுகளில் தங்கிப் போகின்றன.

http://i.ytimg.com/vi/vf5wo_0cPkE/hqdefault.jpg

அந்த மாதிரி ஒரு பாடல்தான் இது. இந்தப் பாடலைக் கேட்டாலே ஏதோ ஒரு இனம் புரியாத கலவரம் நெஞ்சில் ஓடுவது தவிர்க்க முடியாததாகிறது. இத்தனைக்கும் நெஞ்சை உருக்கக்கூடிய சோகப் பாடலும் இல்லை. ஆனால் நெஞ்சாங்கூட்டை அடைக்கிறது. ஏதோ சொல்ல முடியாத உணர்வுகள் ரத்த நாளங்களில் பாய்கின்றன. இதற்கு சுசீலா அம்மாவின் குரலும் பெரும் காரணம். சரோஜாதேவி, ஜெமினி நடிப்பெல்லாம் இதற்கு காரணமாகாது. பாடலின் டியூன் குறிப்பாக பல்லவியின் 4 வரிகள் கேட்க கேட்க கண்களில் என்னையுமறியாமல் நீர்த் துளிக்கிறது காரண காரியமே இல்லாமல். என்னவென்றும் புரியாமல்.

'சோகம் பாடும் வீணை தன்னை
பால் போல சேலையிட்டு
பார்த்தாய் என் தெய்வமே'

என்று நாயகி நாயகனுக்கு புகழ்மாலை சூடும்போது நெஞ்சு நெகிழ்கிறது. ஒரு காலத்தில் 'தேடித் தேடிக் காத்திருந்து' அலைந்து திரிந்து கேட்ட பாடல்.

பாடல் துவங்குமுன் சரோஜாதேவி ஜெமினியிடம்,

'ஒரு பெண்ணை அடிமையாக்கக் கூடிய இவ்வளவு பலம் ஒரு ஆணுக்கு எங்கிருந்து வந்தது?'

என்று அணைத்து அழுதபடி வினவ,

பதிலுக்கு ஜெமினி,

'ஒரு ஆணைக் கோழையாக்கக் கூடிய இவ்வளவு சக்தி ஒரு பெண்ணுக்கு எப்படி வந்தது?'

என்று வெதும்ப,

அந்த ஆரம்பக் காட்சி பாடலுக்கு நல்ல பலம் சேர்க்கிறது. (ஆரூரான் இதையாவது ஒழுங்காகச் செய்தாரே!) நல்லவேளை. பாடல் விஜயகுமாரிக்கு போகவில்லை. சரோஜாதேவியிடம் போனதோ தப்பித்தோம். பிழைத்தோம். நன்றி ஆண்டவனே!:)

கேட்டுவிட்டு எழுதுங்கள். இவள் 'பெண் என்றால் பெண்'. பாடல் என்றால் இது பாடல்.

மனமுவந்த பாராட்டுக்கள் சுசீலா அம்மா!

http://1.bp.blogspot.com/-AyBv6n4pDTs/UvYo2fnWR6I/AAAAAAAAAtg/tTFrHgT7cI4/s1600/206200_240952256024075_928782098_n.jpg

தேடித் தேடிக் காத்திருந்தேன்
தெய்வம் என்னைப் பார்க்கவில்லை
ஆதாரம் வேண்டி அடைந்தேன்
அய்யா உன் காலடியில்

(தேடித் தேடிக்)

மலருக்கெல்லாம் வாய் இருந்தால்
என் மன்னவன் புகழ் பாடும்
மலருக்கெல்லாம் வாய் இருந்தால்
என் மன்னவன் புகழ் பாடும்
மஞ்சளுடன் குங்குமமும்
உன் மடியில் விளையாடும்
ஆடும்

மேகம் போல ஆடையிட்டு
சோகம் பாடும் வீணை தன்னை
மேகம் போல ஆடையிட்டு
சோகம் பாடும் வீணை தன்னை
பால் போல சேலையிட்டு
பார்த்தாய் என் தெய்வமே

(தேடித் தேடிக்)

ஊஞ்சலிலே நாயகனின் உருவம் விளையாட
ஊஞ்சலிலே நாயகனின் உருவம் விளையாட
ஓர் விழியால் முகம் பார்த்து நாயகி இசை பாட
பாட

வானமீன்கள் பூச்சொரிய
வந்த தென்றல் தாலாட்ட
வானமீன்கள் பூச்சொரிய
வந்த தென்றல் தாலாட்ட
ஆனந்தம் கோடி கண்டேன்
அய்யா உன் மடியினிலே

(தேடித் தேடிக்)https://youtu.be/svXrrwwFwho

Varadakumar Sundaraman
25th August 2015, 02:20 PM
1959- TAMIL CINEMA ADVTS
http://i60.tinypic.com/izb05g.jpg

Varadakumar Sundaraman
25th August 2015, 02:21 PM
http://i61.tinypic.com/2ngwqd5.jpg

Varadakumar Sundaraman
25th August 2015, 02:22 PM
http://i61.tinypic.com/34ovcer.jpg

Varadakumar Sundaraman
25th August 2015, 02:23 PM
http://i62.tinypic.com/bhyct0.jpg

Varadakumar Sundaraman
25th August 2015, 02:25 PM
http://i62.tinypic.com/2ztfuyw.jpg

Varadakumar Sundaraman
25th August 2015, 02:26 PM
http://i60.tinypic.com/xqaxhj.jpg

Varadakumar Sundaraman
25th August 2015, 02:27 PM
http://i61.tinypic.com/aajiw4.jpg

Varadakumar Sundaraman
25th August 2015, 02:28 PM
http://i61.tinypic.com/2mmbvdi.jpg

Varadakumar Sundaraman
25th August 2015, 02:29 PM
http://i59.tinypic.com/23t16ih.jpg

kalnayak
25th August 2015, 02:40 PM
ராஜேஷ் ஜி,

பக்திப் பாடல்கள் வரிசையில் 'ஜகம் புகழும் புண்ணிய கதை' ஒலி-ஒளி காட்சிக்கு நன்றி. இந்த பாடலை நான் பலமுறை கேட்டிருக்கிறேன். ஆனால் திரைப் படப் பாடல் என்று நினைத்ததில்லை. அருமை. முடிந்தால் லவ-குசா திரைப் படம் பார்க்க வேண்டும். முயற்சிக்கிறேன். மற்றபடி நீங்கள் சொல்லுவது - 'இந்த பாடலுக்கு இணையான பாடல் இதுவரை வரவில்லை' - என்பது உண்மைதான். நன்றி. நன்றி. நன்றி.

madhu
25th August 2015, 03:41 PM
வாசு ஜி...

காரியம் முழுவதும் வெற்றி .. ஆஹா காதல் கொண்டாள் குட்டி என்ற டி.எம்.எஸ் பாட்டும் சிரித்த முகம்தானே ?

வா காதல் செய்து பார்ப்போம் பாட்டைப் பாடிக்கொண்டேதான் மச்சி பாட்டைக் கண்டுபிடித்தேன்.. ஆஹா... இன்னைக்கு என்ன ஆச்சுன்னு தெரியல.. என் மனசுல தோன்றுவதை எல்லாம் நீங்க சொல்லிடுறீங்க...

அடுத்ததாக.. தேடித் தேடிக் காத்திருந்தேன் பல்லவியை எப்போது கேட்டாலும் அல்லது நினைத்தாலும் கூட ஏதோ ஒரு சோகம் கலந்த சுகம் தொண்டைக்குள் வந்து நிற்கும். நீங்களும் அதையே எழுதி இருப்பதைப் பார்த்ததும் என்ன சொல்வதென்றே தெரியவில்லை..

ம்ம்ம்... இப்போ அடுத்த டவுட்டையும் வச்சிடறேன்.

நம்ம ராட்சசி பாடிய மரத்தை வச்சவன் தண்ணியை ஊத்துவான் தெரிஞ்சுக்க மாமா.. இதில் மறைஞ்சிருக்குற ரகசியத்தை நீ புரிஞ்சுக்க மாமா என்ற பாடல் பற்றிய விவரங்கள் ப்ளீஸ்..

sivajisenthil
25th August 2015, 05:53 PM
சிறைச்சாலை என்ன செய்யும் ? ஜெயிலில் மலர்ந்த குயிலிசை கான மலர்ச்சரம்!

வீரபாண்டிய கட்டபொம்மன் சூப்பராகக் கலக்கி பட்டையைக் கிளப்பிக் கல்லாக் கட்டிக் கொண்டிருக்கும் கொண்டாட்ட வேளையில் !

குயில் 1 :
நடிகர்திலகம் ஜெயில் பறவையாக.....கூண்டுக்கிளியாக!!


சிறைச்சாலை என்பது தோற்றுவிக்கப் பட்டதே குற்றவாளிகள் மனம் திருந்தி குற்றங்கள் குறைய வேண்டும் என்பதற்கே !
சட்டம் ஒரு இருட்டறையாகவும் வழக்குரைஞரின் வாதம் ஒரு சுடர் விளக்காகவும் இருக்கும் வரை நீதிதேவனின் மயக்கம் சந்தர்ப்ப சூழல்களால் குற்றமற்ற அப்பாவிகளையும் சிறைக்கு அனுப்பி விடுகிறதே !
பெரும்பாலான நமது கதாநாயகர்கள் இந்த கோட்டாவில்தான் ஜெயிலுக்குப் போய்ப் பாட்டெல்லாம் பாடி ஜாலியாக இருப்பார்கள் !!
அதிக அளவில் சிறை வாழ்க்கையை திரையில் அனுபவித்ததிலும் நடிகர்த்திலகத்திற்கே முதலிடம் !!
புதிய பறவை தவிர ஏகப்பட்ட படங்களில் நடிகர்திலகம் செய்யாத குற்றத்திற்குத்தான் ஜெயிலுக்குப் போயிருக்கிறார் !!
ஜெயில் வாழ்க்கையில் குயிலாக மாறி அவர் இசைத்த கானங்களின் வரிசை......

ஆரம்பம் கொஞ்சம் ஜாலியாக இருக்கட்டுமே ...

ஜெயில் 1 / குயில்1 பலே பாண்டியா!

ஆள் மாறாட்டத்தில் யாரை எங்கே வைப்பது என்பதில் சட்டத்தின் ஓட்டையால் நீதிதேவன் கோட்டை விட்டதால் நடிகர் திலகமும் கொஞ்ச காலம் சிறையில் குறட்டை விட நேரிடுகிறது !!
விரக்தியில் சக சிறைத்தோழர்களும் கைகோர்த்துக் கலக்கும் கருத்தாழமிக்க ஜெயில் குயிலிசை!!

https://www.youtube.com/watch?v=Gy3DN7wDX14

ஜெயில் 2 / குயில் 1 சரசுவதி சபதம்
ஈகோ தலையெடுத்ததால் அல்லிராணி தன்னைப் புகழ்ந்து பாட மறுத்த புலவர் பெருமகனை ஜெயிலில் தள்ள இதற்க்கெல்லாம் அலட்டிக் கொள்ளாத நடிகர்திலகம் காவலர் தலைவர் நாகேஷும் கால் தடுமாறி ஆடும் வண்ணம் ஒரு குயிலிசைப் பாடலை புயலிசையாக வீசுகிறார் !

https://www.youtube.com/watch?v=j5Hf_toX9tg


ஆனாலும் கதாநாயகர்களாயிற்றே தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும் ஆனாலும் தர்மமே இறுதியில் வெல்லும் என்று உணர்த்தி விடுதலை ஆகி விடுவார்கள்

vasudevan31355
25th August 2015, 06:16 PM
வாசு ஜி...

காரியம் முழுவதும் வெற்றி .. ஆஹா காதல் கொண்டாள் குட்டி என்ற டி.எம்.எஸ் பாட்டும் சிரித்த முகம்தானே ?மதுண்ணா!

தன்யனானேன். மகிழ்ச்சி.

அதேதான். நீங்கள் எடுத்த 'காரியம் முழுதும் வெற்றி'தான். உங்களோடு எனக்கும் சேர்த்து.

காரியம் முழுவதும் வெற்றி
ஆஹா... காதல் கொண்டாள் குட்டி
கல்யாணம் ஆகட்டும்
கையில் அணைப்பேன் கட்டி

(இப்ப வரும் பாருங்க ஜாலி வரிங்க)

அட ஜில்ஜில் மேனி ஜிகினாராணி
சிரித்த முகம் படு சுட்டி

ஜில்ஜில் மேனி ஜிகினாராணி
சிரித்த முகம் படு சுட்டி

(அப்போ இந்த ரெண்டு வரிகளும் ரொம்ப பாப்புலர் மதுண்ணா! இதையேத்தான் பாடிக் கொண்டிருப்பேன்.)

தாடி தடுத்தாலென்ன
மீசை மறைத்தாலென்ன
என்னை சங்கர சம்போ சாமி
இவன் என நினைத்தாலென்ன

பட்டுப் பாவாடையும்
கட்டும் மேலாடையும்
தொட்டுத் தாலாட்டினால்
சிட்டு தானாடுமே

(அட ஜில்ஜில்)

கட்டி இழுக்காவிட்டால்
பட்டம் பறக்காதம்மா
ஒரு கட்டிலும் மெத்தையும்
இல்லாவிட்டால் சுவைக்காதம்மா
மஞ்சள் நூல் வாங்குவேன்
கொஞ்சம் பொன் வாங்குவேன்
மஞ்சம் நான் வாங்குவேன்
நெஞ்சில் அவள் தூங்குவாள்:) (இன்னா ஒரு ஆசை!... கனவு!)

(ஜில்ஜில்)

பாடல் பாதிதான் ஞாபகத்தில் இருந்தது. எடு சி.டி பக்கெட்டை. தேடு. எப்படியோ ஒருவழியா சேமிப்புக் கிடங்கிலிருந்து தூசி தட்டி எடுத்துட்டேன். பாடல் வரிகளை விட மனசு வரல. அதான் பாட்டைக் கேட்டுகிட்டே டைப் அடிச்சுட்டேன்.:) ரேர் சாங் வேற. உபயோகப் படட்டுமே! உங்க பாணியிலயே ஒரு ஹி ஹி யும் போட்டுடறேன்.:)

'பாடகர் திலகம்' இதையெல்லாம் ஊதித் தள்ளி விடுவாரே.


அப்புறம் மதுண்ணா!

ராட்சஸி கோஷ்டியுடன் 'அத்தைக்கு மீசை வச்சி' ஸ்டைலில் ஒரு பாடல் பாடுவாரே!

இந்தப் பக்கம் கட்டி வச்ச மாப்பிள்ளை வீடு
நொண்டி நொண்டி ஓடிவரும் மக்குப் பொண்ணப் பாரு
ஏண்டியம்மா ராஜாத்தி காலுக்கென்ன கூறு
ஹோ ஹோ ஹோ டட்டட்டா

நாத்தனாரைப் பாரடி
காலைக் கொஞ்சம் வாரடி
நாலு பக்கம் கூடடியோ

(இப்போ இங்கே ஒரு அமர்க்களம் நடக்குமே!.... ஈஸ்வரி இடைவிடாமல் முழங்குமே!)

அடி வாடி...பூக்காரி....ராஜாத்தி....என் கண்ணு....என் முத்து...ஒரு காலு.... நீ வாங்க வந்தியா?

இந்தப் பாட்டும் 'சிரித்த முகம்'தானே மது அண்ணா?


அடுத்தது

டி.எம்.எஸ். பாடும் இன்னொரு பாடல்

இதுவும் 'சிரித்த முகம்' படப் பாடல்தானே? இதுவும் கேட்க சூப்பராவே இருக்கும்.

எந்தன் பேரு கோமாளி
நான் எல்லோருக்கும் ஏமாளி
ஏனோ வந்தேன் பூமியில் நானும்
இறைவனிடத்தில் வாதாடி

நல்லது நடக்குது தள்ளாடி
கெட்டது போகுது முன்னாடி
நல்லது கெட்டது தெரியா உலகில்
நானும் வந்தேன் ஆத்தாடி
நானும் வந்தேன் ஆத்தாடி

(எந்தன் பேரு)

அவன் புத்தியில் படைத்தது மண்ணு
போதையில் படைத்தது பொண்ணு:)
பொண்ணு... பொண்ணு... பொண்ணு
மத்தியில் கிடந்து மயங்கட்டும் என்று
மனிதர்க்கு வைத்தது கண்ணு:)
மனிதர்க்கு வைத்தது கண்ணு
ஆத்தாடி

(எந்தன் பேரு)

ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா

அறிவிருக்குது எனக்கு
அழகிருக்குது ஒனக்கு
இரண்டும் உள்ள பிள்ளை பிறக்கும்
திருமணமானால் நமக்கு
திருமணமானால் நமக்கு

(எந்தன் பேரு)

சிங்கப்பூர் சீமானின் 'எம் பேரு ஜோக்கர்' பாட்டு உடனே நினைவுக்கு வருது.

இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குது மது அண்ணா! நிறைய பேருக்குத் தெரியாத அற்புதமான பாடல்களையெல்லாம் எடுக்க வச்சுட்டீங்க. தேங்க்ஸோ தேங்க்ஸ் உங்களுக்கு. அப்புறம் இன்னொரு வேலை கொடுத்து இருக்கீங்க. அதை வேற பார்க்கணும். அதை நெனச்சாலே 'டக்'குன்னு 'தாய்' படத்தின் 'சின்னக் குட்டி அழகைப் பார்த்து சிரிச்சுக்க மாமா...கொஞ்சம் சிங்காரமா உன் மனச விரிச்சுக்க மாமா' உள்ளே ஓடுது. மரத்தை வச்சவன் தண்ணி ஊத்தாமயா போயிடுவான்?:)

madhu
25th August 2015, 06:34 PM
வாசு ஜி...

எந்தன் பேரு கோமாளி நினைவிருக்கு.. அதே படம்.. ஆனா அந்த ராட்சசி பாட்டு நினைவுக்கு வரலியே !...
வயசாயிடுச்சு... முதலில் என் மூளையைக் கொஞ்சம் தூசி தட்டணும்.. யோசிப்போம்...

vasudevan31355
25th August 2015, 06:41 PM
மதுண்ணா!

இப்போ கேட்டுட்டு அப்புறம் நினைவுக்கு வருதான்னு சொல்லுங்க.

http://www.mediafire.com/download/qtqdikkb3cl3j5v/Siritha+Mugam+-+Intha+Pakkam+Katti+Vacha.mp3

vasudevan31355
25th August 2015, 06:45 PM
வாசு ஜி...

எந்தன் பேரு கோமாளி நினைவிருக்கு.. அதே படம்.. ஆனா அந்த ராட்சசி பாட்டு நினைவுக்கு வரலியே !...
வயசாயிடுச்சு... முதலில் என் மூளையைக் கொஞ்சம் தூசி தட்டணும்.. யோசிப்போம்...

கற்பூரமே இப்படி சொன்னா வாழை மட்டை நான் என்ன சொல்றதாம்?

madhu
25th August 2015, 06:48 PM
நீங்க காய்ஞ்ச கட்டை நான் ஈரமான கற்பூரம்னு வச்சுப்போம் வாசுஜி.. ( கவனிக்க.. நான் வாழைன்னு சொல்லலைந்.. சந்தனக் கட்டைனு சொல்றே )

ஜில் ஜில் மேனி பாட்டை முழுசா பாடிப் பார்த்து சந்தோஷப்பட்டுக் கொண்டு இருக்கிறேன். அதே ஸ்டைலில் வீட்டுக்கு ஒரு பிள்ளை படத்திலிருந்து

நான் போட்ட புள்ளி ஒரு மாற்றமில்லை..
கல்யாணமான கன்னிப் பெண்ணே பொன்னம்மா
நீ காட்டுக் குட்டி நான் ஒரு காடு வெட்டி
நீ பாட்டி வேஷம் போட்ட போதும் காதல் உண்டம்மா

அப்படின்னு டி.எம்.எஸ் பாடும் பாட்டு நினைவுக்கு வந்தது.

அதையும் ரசிப்போமே

https://www.youtube.com/watch?v=xh2a6RF1AyU

vasudevan31355
25th August 2015, 07:02 PM
நிச்சயமாக. அதை மறக்க முடியுமா? போட்ட புள்ளியை நெஞ்சிலிருந்து அகற்ற முடியாதே. ஆனந்தமாக ரசித்துவிட்டு இதையும் ரசிப்போம். அதே போல இன்னொரு பாட்டு. அதே ஜெய். உஷாவுக்கு பதிலாக உப்பிய விஜயா.:) ஆனால் பிளாக் அண்ட் ஒயிட்.

பொன்னா? இல்லை பூவா?
கண்ணா? இல்லை மீனா?
பொட்டு வச்சக் கட்டழகு
கட்டி வச்ச மொட்டழகு
ரெண்டு கண்ணு போதாது அம்மா
முத்து முத்துப் பல்லழகு
மூடி வச்ச முன்னழகு
தந்த பசி தீராது சும்மா


https://youtu.be/da6eOvL9VwQ

madhu
25th August 2015, 07:14 PM
வாசுஜி.....

யெஸ்.....அதே. அதே... நான் படம் பார்த்ததில்லை. ஆனால் வானொலியில் கேட்டிருக்கிறேன்.. முதல் வரி டியூன் கேட்டதும் நினைவுக்கு வந்தாச்சு...
வாவ்... எத்தனை நாளாச்சு இந்தப் பாட்டெல்லாம் கேட்டு...
புடவைக்கும் வேட்டிக்கும் முடிச்சொண்ணு போடடி. .. ஹா..ஹா..ஹா..

ஜில் ஜில் மேனி பாட்டையும் கொஞ்சம் பகிருங்களேன் ப்ளீஸ்...

vasudevan31355
25th August 2015, 08:18 PM
மதுண்ணா!

யூனியனில் மீட்டிங். போய் விட்டு வந்தேன். அதான் லேட். உங்களுக்கில்லாததா? இந்தாங்க 'ஜில் ஜில் மேனி'

http://www.mediafire.com/download/51piafcf9fnjsfc/Siritha+Mugam+-+Kariyam+Muzhuvathum+Vetri.mp3

vasudevan31355
25th August 2015, 08:27 PM
மதுண்ணா !

இந்தப் பாடல்களையெல்லாம் போன வருடம் எனக்களித்து உதவி புரிந்த சுந்தரபாண்டியன் சாருக்கு நமது மதுர கானங்கள் சார்பாக மீண்டும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி சுந்தரபாண்டியன் சார். மிக்க நன்றி!

rajeshkrv
25th August 2015, 08:56 PM
Vanakkam madhunna & Vasuji (vaji vaji ...)

vasudevan31355
25th August 2015, 09:01 PM
Vanakkam madhunna & Vasuji (vaji vaji ...)

Vanakkamji!

en jeevan

https://latchuart.files.wordpress.com/2014/07/shivajiganesan2.jpg?w=700

rajeshkrv
25th August 2015, 09:04 PM
ஜி

இதோ உங்களுக்காக ஒரு இனிய கன்னட பாடல்

https://www.youtube.com/watch?v=BZ0MZ7O-mLc

sivajisenthil
25th August 2015, 09:29 PM
சிறைச்சாலை என்ன செய்யும் ? ஜெயிலில் மலர்ந்த குயிலிசை கான மலர்ச்சரம்!

குயில் 2 : மக்கள் திலகம் கூண்டுக்கிளியாக.....


சிறைச்சாலை என்பது தோற்றுவிக்கப் பட்டதே குற்றவாளிகள் மனம் திருந்தி குற்றங்கள் குறைய வேண்டும் என்பதற்கே !
சட்டம் ஒரு இருட்டறையாகவும் வழக்குரைஞரின் வாதம் ஒரு சுடர் விளக்காகவும் இருக்கும் வரை நீதிதேவனின் மயக்கம் சந்தர்ப்ப சூழல்களால் குற்றமற்ற அப்பாவிகளையும் சிறைக்கு அனுப்பி விடுகிறதே !
பெரும்பாலான நமது கதாநாயகர்கள் இந்த கோட்டாவில்தான் செய்யாத குற்றத்திற்கு ஜெயிலுக்குப் போய்ப் பாட்டெல்லாம் பாடி ஜாலியாக இருப்பார்கள் !!
மக்கள் திலகமும் புரட்சிக்காரராகவும் அப்பாவியாகவும் நிறைய படங்களில் ஜெயிலுக்குப் போயிருக்கிறார் !! ஆனால் காவலர்கள் இவர் வருகையால் திருந்தி நல்லவர்களாகி விடுவார்கள் !
ஜெயில் வாழ்க்கையில் குயிலாக மாறி அவர் இசைத்த கானங்களின் வரிசை......

குடியிருந்த கோயிலில் மட்டும் பிடிகிட்டாப் புள்ளியாக தப்பித்து ஓடுபவர் ஒரு விபத்தால் சிறைப்படுத்தப் பட்டு சுயநினைவின்றி சிறைப்படுத்தப் படுவார் ! தான் யாரென்று தெரிந்து கொள்வதற்காக டாக்டர் நர்ஸ் இன்ஸ்பெக்டர் இன்னொரு எம்ஜியார் எல்லோரையும் நிற்க வைத்து பாட்டலடிப்பார்!!


https://www.youtube.com/watch?v=ciE9Lrnd-X8

தூங்கிப் பொழுதைக் கழித்துக் கொண்டு சோம்பேறிகளாக இருக்கும் காவலர்களுக்கு உறைக்கும் வண்ணம் வாழ்க்கையின் வெற்றி இலக்குத் தத்துவங்களை
புரட்சிப் பாடகராக வெளிப்படுத்தும்போது கூண்டுக்கிளியாய் பக்கத்து செல்லில் 'சுவற்றுக்கும் கேட்கின்ற காதிருக்கும்' என்னும் கோட்பாட்டை நிரூபிக்கும் வண்ணம் ஒட்டுக் கேட்டுக் கொண்டிருக்கும் ஜெயில் பறவையாக இருக்கும் நாயகிக்கும் ஒரு பிராக்கெட் போடப்படும் !!

[url]https://www.youtube.com/watch?v=rfT6xXit7Sk

செய்யாத தவறுக்காக கதாநாயகன் சிறுவயதாக இருக்கும்போதே தந்தை ஜெயிலுக்குப் போய்விடுவார் !
அதே வழியில் விதி கதாநாயகரையும் கரெக்டாக அதே ஜெயிலுக்குக் கொண்டு போய் கைதியாகக் கோர்த்து விடும் !!
மனம் கல்லாகிப் போன மனிதர்களே கடவுளும் கல்லாக சமைந்து நிற்கக் காரணம் என்று ஜெயில் வளாகத்தில் பாடும்போதுதான் தந்தை கண்டுபிடித்து பிளாஷ் பேக்கடித்து ....நாயகர் வெளியே வந்து பழிதீர்த்திட வழி கிடைக்கும்!! நமக்கும் தியேட்டரை விட்டு வெளிய வருபோது ஒரு வாழ்க்கைத் தத்துவப் பாடல் மனதில் ஆணியடிக்கும் புண்ணியம் மக்கள்திலகத்தாலேயே !

[url]https://www.youtube.com/watch?v=DrtNhx9XcKM

vasudevan31355
25th August 2015, 10:23 PM
ஜி!

ரெண்டு கல்ஸும்:) பாடும் கன்னடல் பாடல் கேட்டேன். நன்றாக இருந்தது.

chinnakkannan
25th August 2015, 10:36 PM
ஹாய் ஆல்.. செளக்கியமா இருக்கேளோன்னோ..

என்ன ஆச்சுன்னே தெரியலை..வந்து பாத்தா புச்சு புச்சா வாசுண்ணாவும் மதுண்ணாவும் பழைய பாட்ஸ் போட்டுக்கிட்டே போய்க்கினு இருக்காங்க..ஒண்ணொன்னா கேக்கணும்..

இன்னொரு கோயமுத்தூர்க் காரவுக ஷவர்ல குளிச்சுக்கிட்டே இருந்தாரா என்ன நெனச்சாரோ ஜெயிலுக்குக் களத்தை மாத்திட்டார்என்ன சொல்ல..

நடுல கொஞ்சம் நாளாக் காணோம்னு நினச்சுருந்த வரத குமார சுந்தர ராம அண்ணா கற்புக்கரசி, அல்லி பெற்ற பிள்ளை மணிமேகலை,ராஜசேவை(மோர்க்குழம்பு சைட்டிஷ்ஷா தருவாங்களா), காவேரியின் கணவன் என தெரியாத படங்களோட விளம்பரமாக் கொடுத்து அசத்துறாரா..

..

//அந்த மாதிரி ஒரு பாடல்தான் இது. இந்தப் பாடலைக் கேட்டாலே ஏதோ ஒரு இனம் புரியாத கலவரம் நெஞ்சில் ஓடுவது தவிர்க்க முடியாததாகிறது. இத்தனைக்கும் நெஞ்சை உருக்கக்கூடிய சோகப் பாடலும் இல்லை. ஆனால் நெஞ்சாங்கூட்டை அடைக்கிறது. ஏதோ சொல்ல முடியாத உணர்வுகள் ரத்த நாளங்களில் பாய்கின்றன. இதற்கு சுசீலா அம்மாவின் குரலும் பெரும் காரணம்.// ஆஹா எவ்ளோ உருக்கம்.. எனக்கும் தேடித்தேடிப் பார்த்திருந்தேன் பாட் பிடிக்கும்.. இனிதான் கேக்கணும்..
//பத்மப்ரியா கூட ஹேமமாலினி போல ஜாடையில் இருப்பார்.. இதில் அழகு பத்தியெல்லாம் ஒண்ணும் கிடையாது.. Just இவரைப் பார்க்கிறபோது அவர் நினைவு வரும். அம்புட்டுதேன்.// நம்பறோம் மதுண்ணா..

ராஜேஷ் ஜி.. ராமாயணப் பாட் போட்டாருன்னா மதுஜி பால காண்டத்துலருந்து ஆரம்பிச்சு அதே பாட் போடறார்..

எனக்கும் அது தொடர்பா லட்சுமணன் நினைவு வந்து முன்பு எழுதிய (சுமார் பதினைந்து வருடம் முன்) கவிதை நினைவுக்கு வந்து தேடிப் பார்த்து த் டைப்புகிறேன்..

*
லட்சுமணக் கோடு..
**
சுழலில் சுற்றும் வட்டம் போலே
சுற்றிச் செல்லுது நினைவும் பின்னால்..

*
மேகத்தில் மறையா மின்னலைப் போல
மேகக் கூந்தலில் மல்லிகை இருக்க
என்றே எழுதிப்பார்த்தபோதில்
அம்மா சொன்னாள் வாசலில் யார்பார்..

கூடம் ரேழியைத் தாண்டிச் சென்றால்
வட்டத் திங்கள் சின்னச் செவ்வாய்

மேலே பார்க்குமுன் அம்மா வந்து
வாவா இவளே வழிதெரிஞ் சுதாடி..
இவனே இவள்தான் அவரின் பெண்” என
இந்த ஊரில் கொஞ்சம் ஆஃபீஸ்‘
வேலை இருந்தது மாமி வந்தேன்
நாளை தான்பஸ் எங்கே மாமா?”

எப்பவும் போல இப்பவும் டூர்தான்
எனக்கும் நாளை உறவின் திருமணம்
இன்று மாலை துவரிமான் போகணும்
காலை வருவேன் கவலைப் படாதே..
இவன்பார்த் துப்பான் என்ற அம்மா
நேரம் ஆகவும் கிளம்பிச் செல்ல..

மாலை சென்றதும் நானும் அவளும்
டிவி ரேடியோ டேடிகூல் பாட்டு
எல்லாம் பேசி அலுத்த பின்னர்
இரவும் வந்தது நிலவும் வந்தது
அவளும் என்னைப் புதிராய்ப் பார்த்து
மெல்ல நகர்ந்து அறையினுள் செல்ல
படுக்கை இரண்டு தலையணை எல்லாம்
எடுத்து விரித்து ஹாலில் படுத்தேன்..

*

என்னைப் பற்றிக் கொஞ்சம் சொல்லணும்
தேடலைத் துவக்கும் கல்லூரிப் பருவம்
அறிவதில் தெரிவதை அறியும் பருவம்
உள்ளே இருப்பவள் உன்வயது தானே
ஒருவகை உனக்கு முறைப்பெண் தானே
உள்ளே போயேன்” மற்றும் பலவாய்ப்
புலம்பிய சாத்தானைத் தட்டி அடக்கிக்
கண்ணை மூடிக் கடவுளை அழைத்தால்
கடவுள் வரலை ஸ்ரீதேவி வந்தாள்…..
கனவினில் தூங்கி எழுந்தால் மறுநாள்…

*
சிற்சில மாதங்கள் சென்றபின் ஒரு நாள்
அவளின் திருமணம் அழைப்பிதழ் வந்தது;
சென்றால் சுற்றம் இல்லாப் போதில்
சுற்றும் பார்த்து “நன்றி” என்றாள்
அதன்பிறகு நானும் இதுவரை அவளைப்
பார்க்கவே இல்லை…வேண்டுமா என்ன..
***

ம்ம் இதுக்குப் பொருத்தமா.. பாட் வேணும்னா தேடிப் போடுங்களேன்..

**

நானும் கொஞ்சம் தேடிப்பார்த்து ஒரு ரேர் சாங்க் போடட்டா..(ஹச்சோ போட்டாச் குரல் வராம இருக்கணுமே

*
மானாப் பொறந்தா காட்டுக்கு ராணி
மலராப் பொறந்தா தோட்டத்து ராணி..
ஆணா பொண்ணா பூமியில் பிறந்தா
அல்லும் பகலும் சோதனை தானே..

ம.தி, ஜெயலலிதா.. டான்ஸ் நல்லா இருக்கே..


https://youtu.be/koBxXqnuOgQ


பின்ன வாரேன் :)

rajraj
26th August 2015, 12:59 AM
From Santhana Thevan (1939)

aadhi param poruLe........

http://www.youtube.com/watch?v=e6IPdJnr-cs

The singer is U.R.Jeevarathnam.

rajesh: This song is to nudge into posting more ! :)

vasudevan31355
26th August 2015, 10:36 AM
செந்தில் சார்!

நடிகர் திலகம் குளியல் சீன்கள் சில இருக்கின்றனவே!

ராஜஸ்ரீயுடன் நடிகர் திலகம் நீச்சல் குளத்தில் 'ஓ...லக்ஷ்மி...ஓ ஷீலா... ஓ மாலா...உதவிக்கு வாருங்கள்' என்று குட்டிக் கரணமெல்லாம் போட்டு இளமைத் துள்ளாட்டம் போடுவாரே!


https://youtu.be/AOeUkd4aM_A

vasudevan31355
26th August 2015, 11:16 AM
http://www.thehindu.com/multimedia/dynamic/01828/06cp_Nil_Kaavani_K_1828603e.jpg

இதோ இன்னொரு வித்தியாசமான பாடல்.

'மை நேம் ஈஸ் ரோஸி'

ராட்சஸி பாடியது. ராட்சஸியின் வித்தியாசங்களில் ஒன்று. (குரல் நடுக்கங்கள் அபாரம்) ஆனால் பிரபலமாகாதது. அது பற்றிக் கவலை இல்லை. இப்படி ஒரு மியூஸிக் ஒரு பாடலுக்கு அமைந்து கேட்டிருப்போமா என்பது சந்தேகமே. இப்போது கேட்டாலும் வியப்பு தீர வில்லை. இசைக்கருவிகள் ஒன்றுக்கொன்று சளைக்காமல் போட்டி போடுகின்றன ஈஸ்வரியின் குரலோடு சேர்ந்து.

தலையில் ஒற்றை ரோஜாவுடன் கண்களை அப்படியே சொக்க வைத்து, செருக வைத்து, விஜயலலிதா 'வல்லவன் ஒருவன்' படத்தில் 'பளிங்கினால் ஒரு மாளிகை' போலவே எலக்ட்ரிக் நாற்காலியில் அமர்ந்திருக்கும் ரகசிய உளவுத்துறை அதிகாரியை போட்டுத் தள்ளப் பார்க்க (விஜி அழகாக இருக்கிறார் சேலையில்) இந்தப் பாடல் அந்தக் கால டேப் ரெகார்டரில் ஒலிக்கும். டிரம்ஸ், பாங்கோஸ் எல்லாம் வெளுத்து வாங்குகின்றன. புல்லாங்குழல் திகிலூட்டுகிறது. பியானோ பிய்ந்து போகிறது. ஆர்கனும், வயலினும் பின்னிப் பிணைகின்றன.

மை நேம் ஈஸ் ரோஸி
என்னை நீ நேசி
கண்களால் பேசி
கொஞ்சலாம் ஈஸி

வந்ததோ மாலை
தந்ததோ போதை
என்னமோ தேவை
சொல்லுவாள் பாவை

நல்லதோர் நேரம்
உள்ளதோ கொஞ்சம்
இன்று நீ இங்கே
நாளை நீ எங்கே

அவ்வளவுதான். எலக்ட்ரிக் சேரில் அமர்ந்திருந்த துப்பறியும் அதிகாரி அப்படியே பொசுங்கி புகைந்து விடுவார்.

அடுத்த குறி ஜெய் மீது. இப்போது விஜி மாடர்ன் டிரஸ்ஸில் கண்களை மேலும் சொக்க வைத்து, முறைத்து, அதே டிரம்ஸ் ஒலி பின்னி பயமுறுத்த, ஜெய் கூட ஆடியபடி அதே வரிகளில் பாடல் டேப்பில் ஒலிக்க,

மை நேம் ஈஸ் ரோஸி
என்னை நீ நேசி
கண்களால் பேசி
கொஞ்சலாம் ஈஸி

ஜெய் விடுவாரா? நைசாக அதே சேரில் விஜியை உட்கார வைத்து விடுவாரே! நம்ம தமிழ் பிஸ்வஜித்:) முகத்தை அஷ்டகோணலாக சுருக்கிக் கொண்டு வேறு காத்திருப்பார்.

இன்று நீ இங்கே
நாளை நீ எங்கே

எனும்போது நாற்காலி புகையும் என்று ஜெய்க்குத் தெரியாதா?:) தானும் தப்பித்து உட்கார்ந்திருக்கும் விஜியையும் இழுத்துக் காப்பாற்றி விடுவார்.

உடனே டிரம்ஸும், கிடாரும் இணைய, டிரம்பெட் அதம் பண்ண, பேஸ் கிடார் பேஜார் கிளப்ப, விஜியின் காபரே ஆரம்பமாகும். இடைவிடாத இசையின் ஆதிக்கம். வயலின், சாக்ஸ் என்று இன்னும் கூடும்.

நான் ரொம்ப ரொம்ப என்ஜாய் பண்ணி கேட்கும், பார்க்கும் பாடல் இது.

கிட்டத்தட்ட ஆறு நிமிஷங்கள். நான்ஸ்டாப் மியூஸிக். அதுவும் வித்தியாசமாக. இனிமையாக. பிரம்மாண்டமாக. அதிசயப்படத்தக்க வகையில். ஆச்சர்யப்படத்தக்க வகையில்.

இசை 'வல்லிசை மன்னர்' எம்.எஸ்.விஸ்வநாதன். உதவி கோவர்த்தன்

அனுபவிக்கத் தயாராகுங்கள்.


https://youtu.be/yy2AkmOmJ3E

vasudevan31355
26th August 2015, 11:50 AM
நடிகர்திலகம் சிவாஜி அவர்களின் மணிமண்டபத்தை தமிழக அரசே கட்டும் என்று தமிழக சட்டசபையில் முதல்வர் செல்வி.ஜெயலலிதா அவர்கள் அறிவித்துள்ளார். முதல்வருக்கு எங்கள் மனமார்ந்த நன்றி!

chinnakkannan
26th August 2015, 12:20 PM
நி.க.கா பாடல்கள் பற்றி ஒரு வியாசமே எழுதலாம் வாசு.. ஜில்லென்று காற்று வந்ததோ.. எங்கேயோ பார்த்த முகம்.. ம்ம் இரண்டுக்கும் எனது ஊரின் வடகிழக்கில் இருக்கும் வாழைத்தோப்பை எழுதி வைப்பேன்! :)

விபிகேபி.. யில் இருந்து மீண்டாச்சா. உங்கள் ஐந்து வயது மகன் ரசித்ததைப் பற்றி மகிழ்ச்சி!.ஏன் நெய்வேலியில் எல்லாம் போட மாட்டார்களா..? ம்ம் எனக்கு இங்கெல்லாம் வராது..

vasudevan31355
26th August 2015, 01:14 PM
நி.க.கா பாடல்கள் பற்றி ஒரு வியாசமே எழுதலாம் வாசு.. ஜில்லென்று காற்று வந்ததோ.. எங்கேயோ பார்த்த முகம்.. ம்ம் இரண்டுக்கும் எனது ஊரின் வடகிழக்கில் இருக்கும் வாழைத்தோப்பை எழுதி வைப்பேன்! :)

விபிகேபி.. யில் இருந்து மீண்டாச்சா. உங்கள் ஐந்து வயது மகன் ரசித்ததைப் பற்றி மகிழ்ச்சி!.ஏன் நெய்வேலியில் எல்லாம் போட மாட்டார்களா..? ம்ம் எனக்கு இங்கெல்லாம் வராது..

மீள்வதா? அப்படினா என்ன?

ஐந்து வயது இல்லை சின்னா பதினெட்டு வயது.

படம் ரொம்ப காஸ்ட்லி சின்னா! தென் ஆற்காட், பாண்டி இங்கு திரையிடப் படவில்லை.

ஆமாம். பாட்டைப் பற்றி ஒன்றும் சொல்லாமல் எங்கேயோ பார்த்த முகத்துக்கு போய் விட்டீர். பாடல் எப்படியிருந்தது? கேட்டிருக்கிறீரா? அதைச் சொல்லும் சாரே! அதை விட்டுபுட்டு.:)

vasudevan31355
26th August 2015, 01:42 PM
நேற்று 'சிரித்த முகம்' பாடல்கள் அலசலின் போது அதே 'சிரித்த முகம்' என்று ஆரம்பிக்கும் வேறு படப் பாடல்களும் நினைவில் ரீங்காரமிடுகின்றன.

ஒன்று

'பொண்ணு மாப்பிள்ளே' படத்தில் காஞ்சனாவும், ஜெய்யும் பாடும் 'சிரித்த முகம்... உன் சிரித்த முகம் சிவந்ததென்ன கண்ணா கண்ணா'

பாடல்.


https://youtu.be/D2KgO1ZnI00

அடுத்தது.

http://www.thehindu.com/multimedia/dynamic/01950/15cp_kannadi_Malig_1950045e.jpg

T.R.ராதாராணி என்ற அபூர்வ நடிகை (கொஞ்சம் பானுமதி ஜாடை. சட்டி முகம்) சொந்தமாகத் தயாரித்து நடித்த 'கண்ணாடி மாளிகை' என்ற படத்தில் சுசீலாம்மா பாடிய அருமையான பாடல். குரலினிமைக்கு ஈடு இணையே இல்லை. படத்தில் நடிகவேள் ராதாவும் உண்டு

'சிரித்த முகம் வேணுமடி பெண்ணே!
அதுதான் சேவை செய்யும் பெண்களுக்கு
அழகு தரும் கண்ணே!

மலைவாழ் ஜாதியினரின் பாடல் போல தேயிலை பறித்துக் கொண்டு ராதாராணி கோஷ்டியினருடன் பாடும் பாடல்.


https://youtu.be/m6p5r-_Te64

chinnakkannan
26th August 2015, 01:44 PM
இன்னும் முழுக்க நி.க கா படம் பார்க்கவில்லை என்றால் நம்ப வேண்டும்.. இந்த மை நேம் இஸ் லூசி.. நன்னாத் தான் இருந்தது.. ஒரே புகை புகையா முதல் ஆள் மரணிக்க ஜெய் எஸ்ஸ்கேப் ஆவது..ம்ம்

சிரித்தமுகமும் கண்டு..என அ.ஓ பாட்டும் நினைவுக்கு வருது..

chinnakkannan
26th August 2015, 01:45 PM
சிரித்தாய் அந்த சிரிப்பில் ஒரு மோகம்....
அழைத்தாய் அந்த அழைப்பில் ஒரு ராகம்...
கேட்டாய் அந்த கேள்வியில் ஒரு நாணம்...
கொடுத்தாய் அதை மறவேன் ஒரு நாளும்..

இதுவும் நினைவுக்கு வருதுங்க்ணா..எழுதும் :)

vasudevan31355
26th August 2015, 01:52 PM
சிரித்தாய் அந்த சிரிப்பில் ஒரு மோகம்....
அழைத்தாய் அந்த அழைப்பில் ஒரு ராகம்...
கேட்டாய் அந்த கேள்வியில் ஒரு நாணம்...
கொடுத்தாய் அதை மறவேன் ஒரு நாளும்..

இதுவும் நினைவுக்கு வருதுங்க்ணா..எழுதும் :)

ம்..ஏமாற மாட்டேனே! அது தொடரில்.:)

vasudevan31355
26th August 2015, 01:55 PM
ஆமாம்! ரேர் சாங் ஒன்று போட்டீர்களே! போ..ச்:)

'மானாப் பொறந்தா காட்டுக்கு ராணி'

'கன்னித்தாய்' இன்னைக்கு கண் திறந்துட்டாங்களே!:)

chinnakkannan
26th August 2015, 01:57 PM
//படம் ரொம்ப காஸ்ட்லி சின்னா! தென் ஆற்காட், பாண்டி இங்கு திரையிடப் படவில்லை.// மெல்ல வருமாயிருக்கும்.. ஆமா ஏன் ஓவர்ஸீஸ்ல ரிலீஸ் பண்ணலை..பார்க்கறதுக்கு ஆர்வமுள்ள மக்கள் இருக்காங்களே..(அல்லது பண்ணியாச்சா).. அஞ்சு வயசில்லைன்னு எனக்குத் தெரியாதா எனன்..ச்சும்மா.. :)

chinnakkannan
26th August 2015, 01:58 PM
ஆமாம்! ரேர் சாங் ஒன்று போட்டீர்களே! போ..ச்// அ பா மனுஷா.. ரொம்ப மோஷ்ஷம்.. பாகம் சொல்லி பக்கம் சொல்க..:)

இன்ஃபேக்ட் என்னென்ன இன்பங்கள் நு இன்னொரு பாட் இருக்கு ..போ.ட்..ச் ஆன்னு தெரியலை..

chinnakkannan
26th August 2015, 01:59 PM
இந்தக் கண்ணாடி மாளிகை படம்லாம் பத்தி எழுதினா என்னவாம்..

vasudevan31355
26th August 2015, 02:12 PM
ஆமாம்! ரேர் சாங் ஒன்று போட்டீர்களே! போ..ச்// அ பா மனுஷா.. ரொம்ப மோஷ்ஷம்.. பாகம் சொல்லி பக்கம் சொல்க..:)பாகம் அவில் பாகம்:)
பக்கம் அக்கம் பக்கம்:)

vasudevan31355
26th August 2015, 02:13 PM
இந்தக் கண்ணாடி மாளிகை படம்லாம் பத்தி எழுதினா என்னவாம்..

நானேதான் எழுதணுமா? நீர் ஒன்னு விளாசுமே:)

vasudevan31355
26th August 2015, 02:14 PM
இந்தாரும். 'இந்து' சொல்லுது

T.R. Radharani was a tall, attractive and graceful dancer who appeared in the song and dance sequences of well-known movies such as Aduthaveettu Penn and Aadavantha Deivam. A resourceful woman, she established Rani Productions under which she produced Kannadi Maligai.

She played the lead in the movie in which she cast top stars of the day such as M.R. Radha, Asokan, Chittoor V. Nagaiah, S.D. Subbulakshmi, Sukumari and Sadan. The movie was made by newcomers about whom not much is known today.

Kannadi Maaligai tells the story of Karunakaran (Nagaiah), a rich zamindar with his wife (Subbulakshmi) who leads an unhappy life thinking of their lost kid. His manager Ratnam (Asokan) saves a young female worker, Rani (Radharani), who works in the rich man’s tea estate, from the clutches of a mysterious hooded man who is believed to have magical powers! Ratnam gives her protection, the two fall in love, and she gives birth to a daughter who is taken away from her soon…. Ratnam has a friend Dr. Manohar (Radha) and they both indulge in many villainous deeds. Ratnam abandons Rani…

A livid Rani spends her time dressed as a man, wearing an eye-mask, looking for villains like Ratnam, who tries to marry another rich woman. Rani is befriended by a group of kind-hearted tribal people who give her protection. After several murders and robberies, Ratnam and Manohar blame the masked leader of the gang (Rani) for the crimes. Rani takes it upon herself to expose the villains and finally finds that Manohar is the hooded man who attacked her in the estate! She also finds the other member of the robber gang is none other than her lover, Ratnam!

She also discovers that she is the lost daughter of the rich man owning properties, including the Kannadi Maligai (mansion of mirrors). She is also able to trace her missing daughter. The villains are exposed and as they say, all is well that ends well….

M.R. Radha as the villainous doctor, with his characteristic style of dialogue delivery and punch lines, is brilliant. During the 1960s and even afterwards, Radha appeared in every other Tamil film for which he received a fixed salary of Rs. 60, 000.

Asokan as Ratnam is his usual self and the climactic fight between him and the eye-patch wearing leader (Rani in disguise) is excellently photographed. The film has many picturesque outdoor locations (cinematographer Chitty Babu) with many of the sequences shot in and around the Hoganekal area. The film is in black and white, and yet the landscape sequences are brilliant.

T.R. Saroja, Radharani’s sister, also dons a major role and so does Sukumari, the popular multilingual star-actress. A.K. Mohan as the police officer looks handsome but somehow did not make much progress in his career.

Radharani, mostly seen with an eye-patch and in men's clothes, looks attractive and her performance is quite impressive.

The film was written by Sami and directed by Sami-Mahesh about whom nothing much is known today.

This film was dubbed into Telugu as Addala Meda, but did not make much of an impact.

madhu
26th August 2015, 04:56 PM
சிரித்த முகம் முடிந்த காலம்... சிரிக்கின்ற முகம் நிகழ்காலம்

அதை அப்படியே சிலை செய்து வைத்தால் எப்போதும் ரசிக்கலாமே...
அந்தக் காலத்தில் ஹீரோயினுக்கு சுசீலாம்மாதான் பாடுவாங்க.. ( ஒரு சில விதிவிலக்குகள் உண்டு.. சுமைதாங்கி போல ).. கிளப் டான்ஸ், தோழி என்றால் ஈஸ்வரி, சில சமயம் நாலஞ்சு பாட்டில் ஒண்ணோ அல்லது செகண்ட் ஹீரோயினுக்கோ பாட ஜானகிக்கு சான்ஸ் கிடைக்கும். அது போலத்தான் இது.
ஆனாலும் ஏனோ மனசுக்குள் கொஞ்சம் இனிமை சாரலைத் தூவும் பாடல்... அந்த பின்னணி இசை... அபாரம்.

முரடன் முத்து படத்தில் சந்திரகாந்தாவுக்காக ஜானகி சிரிக்கின்ற முகத்தை சிலை செய்கிறார்

https://www.youtube.com/watch?v=QMAVAyMltqU

RAGHAVENDRA
26th August 2015, 05:57 PM
ஒரு பக்கம் ஒருத்தர் குளியல் ஆராய்ச்சி பண்ணி அதற்குத் தண்டனையாக ஜெயிலில் அடைந்து விட்டார்..
இன்னொரு பக்கம் ஜெகம் புகழும் புண்ணிய கதையைச் சொல்லி குளியல் ஆராய்ச்சிக்காக திரிக்கு பிராயச்சித்தம் தேடுகிறார் போல..
வேறோர் பக்கம் கொழு கொழு முகத்தைப் பற்றி ஆராய்ந்து முடிந்து விட்டு சிரித்த முகத்திற்கு வந்தாகி விட்டது.

என்னமோ போங்க...

RAGHAVENDRA
26th August 2015, 06:00 PM
வாசு சார்
தேடித் தேடிக் காத்திருந்தேன்.,
என்ன சொல்ல.. மெல்லிசை மன்னரின் டாப் டென்னிலும் முதல் இடத்தில் அமரும் பாடல், என்னைப் பொறுத்த வரை.
இதைப் போல இன்னோர் பாடல் இந்த ஏழேழு லோகத்திலும் இன்னும் ஏழேழு ஜென்மத்திலும் யாராலும் போட முடியாது.
ஒரு இடத்தில் ஷெனாய் ஒலிக்க அதை அப்படியே தன் குரலில் பின் தொடரும் இசையரசியின் குரல் .... ஆஹா...
நெஞ்சை நசுக்கிப் பிழிந்து ஜூஸாக்கி நம்மிடமே கொடுத்துப் பருகச் சொல்லி விடுவார்...

படம் எப்படியோ ஆனால் இந்தக் காட்சி மட்டும் படத்தில் மிகச்சிறப்பாக அமைந்திருக்கும். சரோவின் நடிப்பிற்கென உள்ள சில படங்களில் இதுவும் ஒன்று.
அதுவும் பாடலுக்கு முன் வரும் வசனமும் பின்னணி இசையும் நம்மை நெக்குருகச் செய்து விடும்.

இந்தப் பாட்டிற்கு நான் வெறும் பைத்தியமல்ல.. வெறி பிடித்த பைத்தியம்.. ஒரு லட்சம் தடவை தொடர்ந்து கேட்கச் சொன்னாலும் கேட்டுக்கொண்டே இருப்பேன்.
நினைவூட்டியதற்கு மிக்க நன்றி.

RAGHAVENDRA
26th August 2015, 06:02 PM
வாசு, மது
மரத்தை வெச்சவன் தண்ணியே ஊத்துவான் பாடல் எதிரொலி படத்தினுடையது. விஜயலலிதாவுக்கு இரண்டு பாடல்கள். திரையரங்கு அல்லது விநியோகஸ்தர்களின் புண்ணியத்தில் பல ஊர்களில் நீக்கப்பட்டு விட்டது என நினைக்கிறேன். ஒரு வேளை ஏதாவது பிரதியில் இருந்தாலும் இருக்கலாம்.

vasudevan31355
26th August 2015, 06:37 PM
வாசு, மது
மரத்தை வெச்சவன் தண்ணியே ஊத்துவான் பாடல் எதிரொலி படத்தினுடையது. விஜயலலிதாவுக்கு இரண்டு பாடல்கள். திரையரங்கு அல்லது விநியோகஸ்தர்களின் புண்ணியத்தில் பல ஊர்களில் நீக்கப்பட்டு விட்டது என நினைக்கிறேன். ஒரு வேளை ஏதாவது பிரதியில் இருந்தாலும் இருக்கலாம்.

நன்றி ராகவேந்திரன் சார் மரத்தை வச்சவன் பாடல் விளக்கத்துக்கு.

sivajisenthil
26th August 2015, 06:42 PM
வாசு சார்
நீலவானம் / நில்கவனி காதலி ..நீச்சல் குள நீராடல்கள் போட்டிருக்கலாம்தான்.... விடியோ கட்டுப்பாட்டுக்காக விட்டுவிட்டேன்!! மூன்றெழுத்து ஷவர் விடியோவும் கிடைக்கவில்லை! பட்டணத்தில் பூதம் ரொம்பக் கவர்ச்சியாக
இருந்ததால் கூச்சப் பட்டு கண்ணை மூடிக் கொண்டேன் !
எல்லோரும் சேர்ந்து என்னை பெஞ்ச் மேல் ஏற்றுவதற்குள் குளியல் விடியோஸ் குளோஸ்டு!
அடுத்த கான்செப்ட் நம்பர் பாட்டுக்கள் !! ஏற்கனவே பதிவுகள் இருந்தால் விட்டுவிடுகிறேன்!!

Teaser for Number 1

ஒண்ணா இருக்கக் கத்துக்கணும் ....பாடுகிறார் உலகின் நம்பர் 1 நடிப்புச் சக்கரவர்த்தி!

https://www.youtube.com/watch?v=smlQQAZHKpk

vasudevan31355
26th August 2015, 06:51 PM
ராகவேந்திரன் சார், மதுண்ணா!

http://i.ytimg.com/vi/4q8kKwKuMdc/hqdefault.jpg

'மரத்தை வச்சவன்' பாடல் மேஜர் சுந்தர்ராஜனிடம் விஜயலலிதா பாடுவதாக வருவது போல.

'காரோட்டும் மாமா
காக்கிச் சட்டை மாட்டிகிட்டு சைடு காட்டிகிட்டு
காரோட்டும் மாமா'

என்று கேட்பது டாக்சி டிரைவரான மேஜரிடம்தான் கேட்கப்பட வேண்டும். எனக்கு ரொம்ப ரொம்ப லேசாகத்தான் நினைவில் இருந்தது. பாடலைக் கேட்டவுடன் 'டக்' என்று ஞாபகம் வந்து விட்டது.

இந்தப் பாடலை வழங்கிய பேராசிரியர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

இதோ முழுப் பாடல் வரிகளும் அனைவருக்காக. முக்கியமாக மது அண்ணாவுக்காக.

மரத்த வச்சவன் தண்ணிய ஊத்துவான் தெரிஞ்சுக்க மாமா
மரத்த வச்சவன் தண்ணிய ஊத்துவான் தெரிஞ்சுக்க மாமா
இதில் மறைஞ்சிருக்கிற ரகசியத்த நீ புரிஞ்சுக்க மாமா
தெரிஞ்சுக்க மாமா... புரிஞ்சுக்க மாமா

(மரத்த வச்சவன்)

வயசுக் கோளாறு
நான் தனியாப் படுத்தா தூக்கம் வரலே
வயசுக் கோளாறு
இது சரியாப் போக மருந்தா இல்லே மாமா நீ கூறு
நீ துணையா வரணும் தருவதைத் தரணும் சொர்க்கம் அது பாரு
திண்ணை இருக்குது திரையும் இருக்குது தனிச்சிப் பேசலாமா?
தனிச்சிப் பேசலாமா?

(மரத்த வச்சவன்)

காரோட்டும் மாமா
காக்கிச் சட்டை மாட்டிகிட்டு சைடு காட்டிகிட்டு
காரோட்டும் மாமா
நீ சட்டை பண்ணாம சந்தியில் நிற்கிற தேரோட்டலாமா?:)
இந்தத் தேரை ஓட்டலாமா
நான் சொன்னதைக் கேட்டும் நின்னுகிட்டிருக்கே
அவசரக் கேஸ் மாமா
மோட்டார் ஓடுது மீட்டர் ஏறுது லேட்டு பண்ணலாமா?
லேட்டு பண்ணலாமா?

(மரத்த வச்சவன்)

sivajisenthil
26th August 2015, 07:36 PM
எண்கள் நமது கண்கள் /
எண்ணங்களின் வண்ணங்கள் திரை மதுர கீதங்களாக!

எண் ஒன்று


உலகில் பிறந்த எல்லோருமே எல்லா வாழ்வியல் முயற்ச்சிகளிலும் முதல் இடம் அடைவதில்லை ! முயற்சியுடையோரே இகழ்ச்சியடையாது முதலிடம் நோக்கி நகர்ந்தாலும் அந்த இடத்தை அடைந்து நிலையாகத் தக்க வைத்துக் கொள்வதும் ஒரு சிலருக்கு மட்டுமே சாத்தியம்!!

முதல் படத்திலேயே உச்சப் புகழடைந்து இறுதிவரை உலக நடிப்பு சாம்ராஜ்ஜியத்தில் அந்த இடத்தைத் தக்கவைத்து இன்றும் ரசிக நெஞ்சங்களில் முதல் தர நடிப்பிலக்கணமாகக் கொடி நாட்டிக் கொண்டிருக்கும் நடிகர்திலகம் உருவகப் படுத்திய வீரபாண்டிய கட்டபொம்மனின் சிரஞ்சீவித்துவம் வாய்ந்த வெற்றியே சாட்சி !!

நம்பர் ஒன் என்னும் மந்திர எண் மதுர கானங்களில் நடத்தும் இந்திரஜாலம் !!
ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா நடிகர்திலகமே!! எல்லோரும் ஒன்றாயிருக்கக் கற்றுக்கணும் என்ற தாரக மந்திரமுரைத்தவரும் அவரே!

One and the only One NT!

https://www.youtube.com/watch?v=Uh3980VY49Y
வாழ்வில் வெற்றிக்கனி பறித்திட நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் சீரிய புரிதலுடன் கூடிய திட்டமிடுதலாக இருத்தல் வேண்டும் என்ற கோட்பாட்டை மிகச் சரியாக நடைமுறைப் படுத்திக் காட்டியவர் மக்கள் திலகம் !

மக்களைக் கவர பொழுது போக்கு அம்சங்கள் மேலோங்கிய படங்களையே ஜனரஞ்சகமாகத் தந்த போதிலும் தேன் தடவிய மருந்தாக நல்ல கருத்து
விருந்தையும் புத்திசாலித்தனமாக எதிர்கால தீர்க்கதரிசனத்துடன் நிதானமாகப் படிப்படியாகப் புகுத்தி 'நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்' என்னும் ஒற்றை மந்திரப் பாடல் காட்சியமைப்பை மூலதனமாக்கி மக்களை ஈர்த்து திரைப்பட நடிகரும் நாடாளலாம் என்பதை உலகுக்கே வழிகாட்டிய ஜாம்பவான்!
மனிதநேயமிக்க மக்களின் நம்பர் ஒன் அரசியல் சாம்ராஜ்ய மன்னராக இன்றளவும் சிரஞ்சீவித்தனம் குறையாத ஓட்டு வங்கியைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் மாமனிதர் MGR கண்ணோட்டத்தில் எண் ஒன்றுக்கான முக்கியத்துவம் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்'

https://www.youtube.com/watch?v=iPMrQXfSJF0

vasudevan31355
26th August 2015, 07:47 PM
https://ulife.vpul.upenn.edu/careerservices/blog/wp-content/uploads/2011/04/300.jpg

'மனதை மயக்கும் மதுர கானங்கள்' பாகம் 4-ன் வெற்றிகரமான 300-ஆவது பக்கம். எவ்வளவு பாடல்கள்! எத்தனை தலைப்புக்கள்! அனைவரின் பங்களிப்பும் அபாரம். வெற்றிக்கு பாடுபட்டுக் கொண்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் என் மனார்ந்த நன்றி.

madhu
26th August 2015, 07:51 PM
வாசு ஜீஈஈஈஈஈஈஈ....

மரத்தை வச்சிட்டு தண்ணியை ஊத்தாம போயிட்டீங்களே ! பாட்டு லிரிக்ஸ் மட்டும்தானே இருக்கு.. வீடியோ அல்லது ஆடியோ...காணலியே ?
( மறுபடி என் கண்ணுல கோளாறா ? பேராசியர் ? முத்து நகரத்தவரா ?

rajeshkrv
26th August 2015, 08:33 PM
வாசு சார்
தேடித் தேடிக் காத்திருந்தேன்.,
என்ன சொல்ல.. மெல்லிசை மன்னரின் டாப் டென்னிலும் முதல் இடத்தில் அமரும் பாடல், என்னைப் பொறுத்த வரை.
இதைப் போல இன்னோர் பாடல் இந்த ஏழேழு லோகத்திலும் இன்னும் ஏழேழு ஜென்மத்திலும் யாராலும் போட முடியாது.
ஒரு இடத்தில் ஷெனாய் ஒலிக்க அதை அப்படியே தன் குரலில் பின் தொடரும் இசையரசியின் குரல் .... ஆஹா...
நெஞ்சை நசுக்கிப் பிழிந்து ஜூஸாக்கி நம்மிடமே கொடுத்துப் பருகச் சொல்லி விடுவார்...

படம் எப்படியோ ஆனால் இந்தக் காட்சி மட்டும் படத்தில் மிகச்சிறப்பாக அமைந்திருக்கும். சரோவின் நடிப்பிற்கென உள்ள சில படங்களில் இதுவும் ஒன்று.
அதுவும் பாடலுக்கு முன் வரும் வசனமும் பின்னணி இசையும் நம்மை நெக்குருகச் செய்து விடும்.

இந்தப் பாட்டிற்கு நான் வெறும் பைத்தியமல்ல.. வெறி பிடித்த பைத்தியம்.. ஒரு லட்சம் தடவை தொடர்ந்து கேட்கச் சொன்னாலும் கேட்டுக்கொண்டே இருப்பேன்.
நினைவூட்டியதற்கு மிக்க நன்றி.

thedi thedi kathirundhen paadalukku thaan mudhal mudhalil KJJoy accordion vasithaar

vasudevan31355
26th August 2015, 08:49 PM
மதுண்ணா!

பேராசிரியர் கந்தசாமி கொடுத்த பாடலை சேமிக்க முடிந்ததே தவிர லிங்க் இல்லை. எனவே நான் Media Fire-ல் இப்போ பாடலை அப்லோட் செஞ்சேன். அதான் வெயிட்டிங். முடிச்சாச்சு. இப்போ கேட்டு ரசிங்க.

அதற்கு முன் ஒரு டவுட்டு. இதே டியூனில் நான் இன்னொரு பாடலை கேட்ட மாதிரி நினைவிருக்கு. தொண்டையில் நிக்குது. வருவேனா என்கிறது. இல்லை பிரமையா என்றும் அறியேன்.

'தெரிஞ்சுக்க மாமா... புரிஞ்சுக்க மாமா'

ரெண்டாம் தடவை வரும்போது அந்த இடத்தில் ஈஸ்வரி குரலில் 'கணக்குப் பண்ணுற?....எதுக்கு நிக்குற?' அப்படின்னு வர்ற மாதிரி ஒரு நெனப்பு. ஆனா நிச்சயமாத் தெரியல. உங்களுக்கு எதாச்சும் ஐடியா இருக்கா?:)

அதுக்கு முன்னால பாடலை கேட்டு ரசிங்க.

http://www.mediafire.com/download/u5p1ga4jienchqk/LRE+-+Marathai+Vachavan+Thanniyai.mp3

vasudevan31355
26th August 2015, 08:55 PM
ராஜ்ராஜ் சார்,

1952-ல் வெளிவந்த 'Daag' (1952) படத்தில் நாயகன் திலீப் குமாருக்கு Talat Mehmood பாடிய அற்புத பாடல் ஒன்று. "Ae Mere Dil Kahin Aur Chal" என்ற அந்தப் பாடல் மிக மிக இனிமையானது.

http://www.thehindu.com/multimedia/dynamic/01584/HYCP15BLAST_1584436f.jpg

இந்தப் பாடலின் டியூனை அப்படியே அடுத்த வருடம் 1953-ல் வெளிவந்த 'பிரதிக்ஞா' என்ற தெலுங்குப் படத்தில் பயன்படுத்திக் கொண்டார்கள். இப்படத்தின் நாயகன் காந்தாராவ். அவர் அப்போதுதான் அறிமுகமாகி இருந்த நேரம். இப்படத்தில் ராஜநாளா, சாவித்திரி, கிரிஜா என்று நட்சத்திரங்கள். காந்தாராவ் குதிரையில் ஏ.எம்.ராஜா குரலில் பாடிக் கொண்டே வருவார். ('சாகினி ஜீவிதம் ஜோருகா'). குதிரைக் குளம்பொலியுடன் 'டடடடா... டடடடா... டடடடா' என்று ராஜா பாடுவது அம்சமாக இருக்கும். அப்போ ரொம்ப பாப்புலர். 'மிஸ்டர் மைசூர்' பட்டம் பெற்ற சுதர்சன் என்ற நபர் இப்படத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

இதில் இன்னொரு விசேஷமும் உண்டு. இதே படம் தமிழிலும் 'வஞ்சம்' என்று பெயரிடப்பட்டு அதே நடிகர்களைக் கொண்டு தமிழிலும் வெளிவந்தது. தமிழிலும் அதே டியூனில்தான் பாடல்.

"Ae Mere Dil Kahin Aur Chal" ('Daag')


https://youtu.be/91BZGtyNABo

'சாகினி ஜீவிதம் ஜோருகா' ('பிரதிக்ஞா')


https://youtu.be/NbQWjIm98lU

'துள்ளியே ஓடுமே வாழ்வுமே' ('வஞ்சம்')


https://youtu.be/wPa6ptUNWEM

g94127302
26th August 2015, 08:58 PM
எல்லோருக்கும் வணக்கம் - நான் எடுத்துக்கொண்ட ஒரு சிறு முயற்சியில் இது கடைசி மையில் கல் . பலர் இந்த திரியில் முன்னம் பதிவிட்டதை மறந்திருக்கலாம் - பல குளியல் காட்ச்சிகள் , தலையணிகள் இவைகளின் நடுவே இன்னும் ஞாபகம் வைத்திருப்பார்கள் என்று நான் நம்புவதும் தவறாக இருக்கலாம் . ஆயிரம் கரங்கள் நீட்டி என்று ஆதவனை வரவேற்றோம் , பிறகு கருக்குள் கருவாக நம் பெற்றோர்களை பூஜித்தோம் - மனைவியின் பெருமைகளை வாழ்த்த்தினோம் , பிறகு நட்பு எவ்வளவு முக்கியம் , எல்லோருக்கும் நன்றி சொல்வது எவ்வளவு அவசியம் என்பதையும் ஒரு சிறு தொடர் மூலமாகப்பார்த்தோம் . மாதா , பிதா , மனைவி , நண்பன் ---- இந்த வரிசையில் அடுத்து ( கடைசி ) நாம் வணங்கப்போவது குரு , டீச்சர் , ஆசான் - எப்படி வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளலாம் . இந்த பிரத்யேக பதிவுகளை திரு ராஜ் ராஜ் , திரு கோவை சிவாஜி செந்தில் , திரு செல்வகுமார் , மற்றும் teaching இல் நாட்டம் உள்ள அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் சமர்ப்பிக்கிறேன் . திரு ராஜ் - "திரையில் பக்தி " என்ற பதிவைத் தொடர்வதால் நான் வரிசையில் கடைசியாக வரும் " தெய்வத்தை " பற்றி பதிவுகள் போடப்போவதில்லை .