PDA

View Full Version : மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4



Pages : 1 2 3 4 5 6 7 8 9 [10] 11 12 13 14 15 16

eehaiupehazij
2nd August 2015, 07:31 AM
[quote=madhu;1241365]சிவாஜிசெந்தில் சார்..

இதோ கவிதா படத்தில் ராஜசுலோசனாவுடன் எம்.என்.நம்பியாரின் இன்னொரு டூயட்...

By madhu sir


மது சார்
நல்ல கிளிப்பிங் தேடிப்பிடித்து ஞாபகப் படுத்தியமைக்கு நன்றிகள்

நிச்சய தாம்பூலம் படத்திலும் நடிகர்திலகத்தோடு ஆரம்பப் பாடலில் ஹம்மிங் வாயசைப்பார் நம்பியார் சுவாமி
வில்லத்தனம் நெளியும் ஹம்மிங்கே!!

https://www.youtube.com/watch?v=q--oOSZlz-g

vasudevan31355
2nd August 2015, 09:30 AM
//இந்த கான்செப்டுக்கு பிள்ளையார் சுழி போட்டவர் ஷம்மி கபூர் ...சைனா டவுன் மூலமாக//

செந்தில் சார்,

ஜாலியான கான்செப்ட். ரசித்தேன். 'சைனா' டவுன் பாடலை ஏற்கனவே மதுர கானத்தில் பதித்து அலசியுள்ளோம். இப்போது தலைப்புக்கு பொருத்தமாக தந்து குஜால் படுத்தியுள்ளீர்கள்.

//ஒரு காலகட்டத்தில் இந்திய கதாநாயகர்கள் பெரும்பாலும் கிளப்புகளில் ஆடிப் பாடிப் பிழைத்துக் கொண்டிருந்தனர். அப்போது வேலை வெட்டியில்லாமல் தோழிகளுடன் ஊர் சுற்றும் கதாநாயகிகள் இம்மாதிரி கிளப்புகளுக்கும் பொழுது போக்க வருவார்கள் !!//

அருமை! ரசித்துச் சிரித்தேன். உண்மையும் கூட. அதுவும் ஹிந்தித் திரைப்படங்களில் நீங்கள் மேற்கூறிய விஷயங்கள் அப்போது ஒரு திரைப்படம் விடாமல் அத்தனைப் படங்களிலும் ஆட்கொள்ளும்.

'பத்லி கமர் ஹே திரிச்சி நசர் ஹே'

என்று ராஜ்கபூரின் 'பர்ஸாத்' திரைப்படத்தில் முகேஷ் பிரேம்நாத் அவர்களுக்காகப் பாடும் பாடல் ஒன்று வரும். 1949 ல் வந்த படம். சும்மா கலக்கல் பாடல். நிம்மியின் சோகத்துக்கு லதா குரல் கொடுக்க சோகமும், சரசமும் மாறி மாறி அற்புதமான பாடலாக இது அமைந்து விட்டது. கிளப் ஆர்ப்பாட்டம் பாதியும், கலங்க வைக்கும் கண்ணீர் பாதியுமாக அற்புதக் கலவை இந்தப் பாடல். நடுவில் வரும் அந்த உற்சாக 'யேய்' குரலை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாதே. சங்கர் ஜெய்கிஷனின் அற்புதங்களில் ஒன்று, பிரேம்நாத் நெடுநெடுவென்று இளமையாக, ஜோராக இருப்பார். காட்சி ரிச். உடன் குக்கூ ஆடுவார். முகேஷின் குரல் காந்தம் போல இழுக்க லதாவின் குரல் அப்படியே உருகும். நம்மை உருக்கும்.


https://youtu.be/ApgDXzpYRKw

vasudevan31355
2nd August 2015, 09:53 AM
நம்ம நம்பியார் 'மர்மயோகி' திரைப்படத்திலேயே நல்ல கருத்துக்களை கழுதை மூலம் சொல்லி விட்டார் பாடல் வழியாக . நம்பியார் வழு வழு என்று அவ்வளவு அழகு. படத்தில் ஹீரோவுக்கு கவுண்டமணி, சந்தானம் போல பக்க பலம்.

'கழுதையிலே ரெண்டு விதம்
நல்லதுண்டு கெட்டதுண்டு
ஒன்று கத்தயிலே நல்லதென்பார்
மற்றொன்றை புத்தியிலே கெட்டதென்பார்

குட்டியாய் இருக்கையிலே
குதிரையைக் காட்டிலும்
லட்சணத்தில் எட்டு மடங்கு

கழுதை

குட்டியாய் இருக்கையிலே
குதிரையைக் காட்டிலும்
லட்சணத்தில் எட்டு மடங்கு

ஆளைப் பார்க்காதே கழுதை
அடிபட்டு செத்துப் போவே
ஒழுங்கா நடந்துக்கோ'

என்று ஜாடைமாடையா நம்பியார் கழுதையை திட்டும் சாக்கில் மனிதர்களைத் திட்டுவார். அருமை.


https://youtu.be/fJ0FupumG_w

chinnakkannan
2nd August 2015, 11:14 AM
ஹாய் குட்மார்னிங்க் ஆல்..

*

சி.செ..கோல்டன் ஐ பார்த்தது துபாயில் நள்ளிரவு 01.15 மணிக்காட்சி.. காலங்காலை 4 மணி அளவில் படம் முடித்து விட்டு சோடியம் வேப்பர் விளக்கொளியில் காரில் வந்து கொண்டிருந்தபோது போலீஸ்கார் கைகாட்டி ஓரங்கட்டச் சோல்லி - மனைவியார் தான் ஓட்டிவந்தார்- லைசென்ஸ் எடு எனக் கேட்டது மறக்க இயலாத ஒன்று.. டிக்கெட் எல்லாம் கேட்கவில்லை..! கொஞ்சம் த்ரில்லான படம் தான்..வேறென்ன செய்வது என 006 அந்த டாங்கரை ரயிலில் மோதச் சொல்லும்போது அவருக்கே சிரிப்பு வந்தது துல்லியமாகத் தெரிந்தது..வில்லங்க வில்லி, ஹீரோயின் ஸோ ஸோ.. கட்டக் கடோசியில் ஐயாம் இன்வின்சிபிள் எனும்போது லிக்விட் நைட்ரஜன் வந்து அந்தக் குண்டுப்பையனை உயிர்(இல்லாத) சிலையாக்குவது ஜோர்.. அந்த பேனா அமுக்கும் நிமிடங்களில் ஹ்ருதயத்துடிப்பு எகிறும்..

வில்லங்க வில்லன்களில் பறக்கும் பறவை நீயே பாட் போடலாம் என்றால் மதுண்னா முந்திக் கொண்டுவிட்டார்

எஸ்.வி.ராம்தாஸ் டூயட் பாடியிருக்கிறார் தெரியுமோ.. ஏதோ ஒன்று தேடுகையில் பார்த்த நினைவு..சேமிக்க மறந்து விட்டேன்..இனி மதுண்ணா வாசுண்ணா பாடு..

//ஒன்று கத்தையிலே நல்லதென்பார்
மற்றொன்றை புத்தியிலே கெட்டதென்பார்// வாஸ் பாட் இனிதான்கேக்கணும்..ம்ம் ஆனாக்க ஒங்க பேர்ல கோபமாங்காட்டியும்..ஒய்.. சொல்றேன்..

ஏ.சி.தி யின் புத்தகம் படித்துக் கொண்டிருந்தேனா நேற்று..( சுவாரஸ்யமாக அவருக்கு எழுதத் தெரியவில்லை இது என்கருத்து) அதில் ஒரு பாட் - ஆசாரியெல்லாம் பிடித்து அவர் மனதில் தோன்றிய காட்சியை- வட்ட வட்டமான தாமரை இலை செய்து அடியில் கயிறெல்லாம் கொடுத்து மரத்தில் இருத்தி, பின் நடுவில் தாமரைப்பூ என செட் போட்டு- ஏவிஎம் செய்ததை - அந்தப் பாட்டை- அது எடுபடாமல் போனதை எழுதியிருந்தாரா..அதுபற்றி எழுதலாம் என நான் நினைத்தேனா..கூகுள் செய்தேனா..

பார்த்தால் வாசு ஏற்கேனவே போட்டாச்.. விலாவாரியாக.. நற நற..

http://www.mayyam.com/talk/showthread.php?11002-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%A F%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%A E%95%E0%AE%B3%E0%AF%8D/page282

ஏ.சி.தி சொன்ன அடிஷனல் இன்ஃபோ.. இதைக் கலர் ப்ரிண்ட் போட்டு போவோர் வருவோரிடமெல்லாம் காட்டிக் கொண்டிருந்தாராம் ஏ.வி.எம்.சிலகாலம்..


ம்ம் இது மட்டுமில்லை..வேறு ஏதாவது ரேர் சாங்க் தேடினால் நமது நெய்வேலி கூகுள் அல்லது கடலூர் கூகுள் வாசு ஏற்கெனவே போட்டு வைத்திருக்கிறது.. அவர் போடாத பழைய பாட் கொடுக்காத விஷயம், விளக்கம், படங்கள் தேடுவதே சாலஞ்சிங்கான விஷயம் தான்..வாசு சார்..தாங்க்ஸ்ங்க்ணா ஃபார் யுவர் உழைப்பு.. ஸ்டில் வி வாண்ட் மோர் :)

ராகதேவனின் , ராஜ்ராஜின் பாடல்கள் இனி தான் கேட்கவேண்டும்.. முன்புகொடுத்த பா.பாடல்களுக்கு தாங்க்ஸ் ராஜ்ராஜ்சார்..:)

chinnakkannan
2nd August 2015, 11:19 AM
நம்பியார் இந்த நஙகையுடன் உள்ளத்தில் நஞ்சு உதட்டில் புன்னகையுடன் படகு விடும் தேன் நிலவை விடலாமோ சி.செந்தில்..

https://youtu.be/9g2xFmZzTv4

chinnakkannan
2nd August 2015, 03:11 PM
மீள் பதிவு

**

*****
கறுப்பு உருவம்.. திடகாத்திரமான தேகம்..கண்களில் கொஞ்சம் அனுபவ அறிவு..இருபது வயதுக்கு அதிகம் தான்.. நான் சொல்வது என் கல்லூரி சினேகிதன் ரகுராமனைப் பற்றி..செல்லமாய் ஆர்க்யூப் என்றழைப்பேன்.(ஆர்.ரகுராம்)..

அந்த ரகுராம் ஒரு நாள் கல்லூரியில் “வாடா.. அபிராமின்னு புதுசா ஒரு தியேட்டர்..அதுல ஒரு நல்ல ஹிந்திப் படம் போகலாம்” எனக் கேட்க லவ்லெட்டர் கொடுத்த இளைஞனை முறைக்கும் இளைஞியைப் போல் முறைத்தேன்..

“டேய்.. எனக்கோ ஹிந்தி சுட்டும் வராது..உனக்குத் தெரியும்.. தியேட்டர்ல நான் என்ன பண்ண” “ச்சும்மா வாடா..பிகு பண்ணாம”என மூன்றாம் பீரியட் தமிழை வெட்டி விட்டு, தரதரவென்று பஸ்ஸில் இழுத்துச் சென்று கல்லூரியிலிருந்து 45 நிமிஷப் பயணத்தில் பெரியார் பஸ்ஸ்டாண்ட் வந்து அரக்கப் பரக்க 4ம் நம்பர் பெரியார் பேருந்து நிலையம் டு தெப்பக்குளம் பஸ் ஏறி அலங்கார் தியேட்ட்ருக்கு அடுத்த ஸ்டாப்பான அபிராமி என இறங்கி இருந்தபெட்டிக்கடையில் ‘அபிராமி’ என விசாரிக்க(அப்போ குணாவெல்லாம் வரவில்லை) புது தியேட்டராப்பு என எதிர் தெரிந்த சந்தினைக் காட்டினார் பெட்டிக்க்டைக்காரர்..

வாடா என ரகு அவசரப் படுத்த வேக வேகமாக சந்துகளில் புகுந்துபுறப்பட்டு தியேட்டரில் நுழைந்து ‘என்ன படம்டா..எனக்குப் பசிக்குதே” எல்லாம் உள்ள வாங்கித் தரேன் வா – படம் பேரு கர்ஸ் எனச் சொல்ல ஏண்டா என்னை சபிக்கிறே எனச் சொன்னதும் என்னை ரகுமுறைத்தது இன்னும் நினைவிருக்கிறது..

உள் நுழைந்து சந்தோஷமாய் சூடாய்க் கிடைத்த ஏதோ வடையோ சமோசாவோ உள்ளே தள்ளி தியேட்டரில் நுழைந்தது முதல் அவனைக் கலாய்த்துக் கொண்டுதானிருந்தேன்..

மூக்கும் முழியுமாய் குட்டிப் பெண்ணாய் லட்சணமாய் அவ்வப்போது குட்டைப் பாவாடையில் டினா முனிம், செவேலென்று வார்த்த ஸ்பெஷல் ரோஸ்ட் தோசை நிற்மாய் ரிஷிகபூர் என படம் புரிவதற்கு ஒன்றும் கஷ்டமில்லை தான்..இருந்தாலும் து சோல பரஸ்கி மே சத்ர பரஸ்கா என பாட ஆரம்பிக்க என்னடா அவ சோழ தேசத்தவ இவன் பல்லவன் கறானா என அப்பாவியாய் நான் கேட்க வெகுசீரியஸாய் படத்திலிருந்துகண்ணெடுக்காமல் ரகு பதில் சொன்னான்..- அவளுக்கு பதினாறு வயசு இவனுக்குபதினேழு வயசுங்கறாண்டா.. ஓம் சாந்தி ஓம் பாடலின் போது யாருடா அந்த சாந்தி..அதுபாட்டுடா.. இப்படியே பல விஷயங்கள் வாரிக்கொண்டிருந்தேன்..

பிற்காலத்தில் ஒருவருஷமோ இருவருஷமோ கழித்து எனக்குள் ஒருவன் பார்த்தபோது கர்ஸ் பார்த்த திருப்தி ஏற்படவில்லை..

முந்தா நாள் ஸீ க்ளாஸிக் சினிமாவில் கர்ஸ் பார்த்த போது இந்த நினைவெல்லாம் வர, கண்ணில் நீர் முட்டியது..ஏனெனில் நான்கு வருடம் முன்பே ரகு சடன் ஹார்ட் அட்டாக்கில் இறந்ததாய்க் கேள்விப் பட்டேன்..அதுவும் அவனைப் பார்த்தே பல வருடங்கள் இருக்கும்..என்றாவது ஒரு நாள் பார்க்கலாம் என்றிருந்த் போது அந்த எ ஒ நா வராமலேயே போய்விடும் என நினைத்துக் கூட ப் பார்க்கவில்லை..

*

https://youtu.be/7_DT-fnCImQ

madhu
2nd August 2015, 06:24 PM
எஸ்.வி.ராம்தாஸ் டூயட் பாடியிருக்கிறார் தெரியுமோ.. ஏதோ ஒன்று தேடுகையில் பார்த்த நினைவு..சேமிக்க மறந்து விட்டேன்..இனி மதுண்ணா வாசுண்ணா பாடு..


டூயட் பாட்டுன்னா ரெண்டு பேர் பாடுறதில்லையா சிக்கா...

இந்தாங்கோ மூணு பேர் பாடும் பாட்டில் ராமதாஸும் நடிக்கிறாருங்க..

குழந்தைக்காக படத்தில் சீர்காழி, டி.எம்.எஸ்., பி.பி.எஸ் குரல்களில் மேஜர் சுந்தரராஜன், மனோகருடன் ராமதாசும்..

( சிக்கா தேடினாலும் சிக்காத வகையில் சிவாஜி ரேர் சாங்க்ஸ்னு தலைப்பு வச்சிருக்காங்க :) )

https://www.youtube.com/watch?v=pCyi8pKyCzk

vasudevan31355
2nd August 2015, 06:39 PM
சின்னா!

நன்றி. மது அண்ணா தந்தது போல் இன்னொரு பாடல். ஏற்கனவே இன்றைய ஸ்பெஷலில் போட்டிருந்தாலும் ராமதாஸ் பங்கு கொள்வதால் இந்தப் பாடல் 'விஜயபுரிவீரன்' திரைப்படத்திலிருந்து.

'உள்ளத்திலே உரம் வேணுமடா
உள்ளத்திலே உரம் வேணுமடா
உண்மையிலே திறம் காணுமடா
ஒற்றுமையால் வெற்றி ஓங்குமடா'


https://youtu.be/x6hZNQ-chcw

vasudevan31355
2nd August 2015, 06:50 PM
ராமதாஸ் பங்கு கொண்ட இன்னொரு பாடல். ஆனால் ஈஸ்வரி மட்டுமே பாடுவார்.

'வீரத் திருமகன்' படத்தில்

'கேட்டது கிடைக்கும்
நினைப்பது நடக்கும்
பதவி வேண்டுமா
என் உதவி வேண்டுமா'

அருமையான பாடல்.


https://youtu.be/lBMcYqu8ZV4

eehaiupehazij
2nd August 2015, 06:59 PM
ஊக்கம் தரும் ஆக்க பூர்வமான கருத்து எண்(ணை)ணப் பரிமாறல்கள்தான் இந்தத் திரி நன்கு தூண்டப் பட்டு சுடர் விட்டுப் பிரகாசிக்க செய்கின்றன வாசு சார்/மது சார்/ சி க சார்/ரவி சார் !
எந்த சூழலிலும் மன முதிர்வுடன் அனைவரையும் அரவணைக்கும் அருமையான பதிவத்தோழர்கள் குழாமில் இணைந்திருப்பது மன ஆறுதலைத் தருகிறது.
மனக் காயங்களுக்கு மருந்தாக இங்கு பதிவிடப் படும் தேனிசைப் பாடல்கள் பற்றிய அலசல்கள் நாளுக்கு நாள் மெருகேறிக் கொண்டே வருகின்றன.
திரியின் அபார வளர்ச்சியும் கண் பட வைத்திடும். ஊர் கூடித் தேரிழுத்திடுவோம்...இதே உற்சாகத் துள்ளல்களுடன்!

வில்லங்க கானங்களும் வெல்லங்களே!

பகுதி 4 அசோகன் / இது சத்தியம்...வல்லவனுக்கு வல்லவன்..பாத காணிக்கை....

தமிழ்த் திரை பாரம்பரியத்தில் அசோகனுக்கு ஒரு தனியிடமுண்டு அவரும் சில பல திரைப்படங்களில்...இது சத்தியம், வல்லவனுக்கு வல்லவன், மணப்பந்தல்...கதா நாயகராகவும் பாத காணிக்கை, கர்ணன், உயர்ந்த மனிதன் போன்ற படங்களில் நல்ல குணசித்தரிப்பிலும், அடிமைப்பெண், உ சு வா பிரதான வில்லனாகவும், நான், மூன்றெழுத்து..நகைச்சுவைப் பங்களிப்பிலும் மிளிர்ந்தார்! உயர்ந்த மனிதனில் நடிகர்திலகத்துடன் உன்னத இடம்!!

சத்தியம் இது சத்தியம் பாடல் காட்சியமைப்பும் அசோகனின் உடல்மொழி அசைவுகளும் பாசம் மக்கள் திலகத்தின் உலகம் பிறந்தது எனக்காக பாணியில் !

https://www.youtube.com/watch?v=17pPQil2Jc0

வல்லவனுக்கு வல்லவனிலும் எம் ஜி ஆரை நினைத்து நடன அசைவுகள் ..

https://www.youtube.com/watch?v=olTtgpu4au4

இன்னொரு உத்தம வில்லர் மனோஹருடன் ..சாவித்திரியுடன் (ஜெமினியும் இப்படத்தில் மாறுதலான வில்லன்!!)

https://www.youtube.com/watch?v=olTtgpu4au4

ஓராயிரம் பார்வையிலே ...ஒரு சில ப்ரேம்களே!! அருமையான பாடல் காட்சிப் பதிவு

https://www.youtube.com/watch?v=C9muhp0Upuc

பாதகாணிக்கையில் ஜெமினி இணைவில் ..நடிகர்திலகம் தரப் பாடல்! வீடுவரை உறவு....

https://www.youtube.com/watch?v=4cEOPNXnESw

vasudevan31355
2nd August 2015, 07:01 PM
'ஆணையிட்டேன் நெருங்காதே' (புன்னகை)

ஜெயந்தியின் கட்டளைக்கு அடிபணியாமல் மிகக் கொடூரமான காம வெறியுடன் ராமதாஸ் குடி போதையில் அவரை சீரழிக்கத் துடிப்பது படம் பார்ப்பவர் ஒவ்வொருவர் நெஞ்சத்திலும் 'திக்திக்'கை ஏற்படுத்தும். ஜானகி கத்தல், கதறல், பதப்படுத்தப்பட்ட புலி உருவம், சுழலும் காமெரா என்று திரில்லர் ரேஞ்சுக்கு பயமுறுத்தும் பாடல்.


https://youtu.be/Fvff4uFR8mo

RAGHAVENDRA
2nd August 2015, 07:03 PM
ராமதாஸ் பங்கு கொள்ளும் பாடல்களில் மேலும் ஒன்றிரண்டு என் நினைவுக்கு எட்டிய வரையில்...

கற்பழிப்பு காட்சியில் சாவகாசமாக பாட்டுப் பாடி கெஞ்சும் பெண்மணியைப் பார்த்திருக்கிறீர்களா.. இதெல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம்..

https://www.youtube.com/watch?v=uAqGxGFDv-I

வாசு சார் சொன்னதெல்லாம் வாஸ்தவம்.. அந்த உணர்வெல்லாம் நிஜமே.. ஆனால் கான்செப்ட் தான் இடிக்கிறது...

RAGHAVENDRA
2nd August 2015, 07:04 PM
https://www.youtube.com/watch?v=3kJm5268QTk

இதுவும் கிட்டத்தட்ட அந்த மாதிரி சூழல் தான்.. ஆனால் அந்த அளவிற்கு அல்ல.. அதற்கு ஒரு தயார் நிலையில் வில்லன் நெருங்க முற்படுகிறான்.. சூழ்நிலை சற்றே வித்தியாசமானது..

RAGHAVENDRA
2nd August 2015, 07:07 PM
வாசு சார்
என்ன சார் இது டெலிபதி...இரண்டு நிமிட இடைவெளியில் இருவருமே ஒரே பாடலைப் பகிர்ந்து கொண்டிருக்கிறோம்..

சரி சரி..அப்படியே இருக்கட்டும்... நம் டெலிபதிக்கு இது ஒரு உதாரணமாகட்டுமே...

vasudevan31355
2nd August 2015, 07:17 PM
சின்னா

அது போலவே 'சத்திய முத்திரை கட்டளை இட்டது நாயகன் இயேசுவின் வேதம்'.... 'கண்ணே பாப்பா' படப் பாடலில் விஜயகுமாரியுடன் இணைந்து குழந்தைகளுடன் குதூகலிக்கும் நம்பியாரையும் பார்த்து விடுவோம். பாடலின் துவக்கத்தில் நம்பியார் கைவிரல்களால் போடும் 'சொடுக்'கைக் கவனியுங்கள்.


https://youtu.be/3o_VSo6wTo8

RAGHAVENDRA
2nd August 2015, 07:17 PM
https://www.youtube.com/watch?v=s8X8RDou9-Y

மனோகரைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்ற பாடல்களில் இதற்கு தனி இடம் உண்டு. இன்னொன்று வண்ணக்கிளி. அடிக்கிற கைதான் அணைக்கும்.

vasudevan31355
2nd August 2015, 07:19 PM
வாசு சார்
என்ன சார் இது டெலிபதி...இரண்டு நிமிட இடைவெளியில் இருவருமே ஒரே பாடலைப் பகிர்ந்து கொண்டிருக்கிறோம்..

சரி சரி..அப்படியே இருக்கட்டும்... நம் டெலிபதிக்கு இது ஒரு உதாரணமாகட்டுமே...

ராகவேந்திரன் சார்,

இது நமக்குள் அடிக்கடிப் பழகிப் போன சமாச்சாரம்தானே! டெல்லி அதிபதிகளுக்குக் கூட இது போன்ற டெலிபதி வராதே.:) என்ன நாஞ் சொல்றது?

vasudevan31355
2nd August 2015, 07:26 PM
மனோகர் ஷீலாவுடன். அருமையான ஜோடிப் பொருத்தம். ஈஸ்வரியின் அலட்சியக் குரல் பாவம்.

அம்மம்மா!

கன்னத்தில் கை வைத்தால் எடுக்காமல் நம்மை மறந்து பார்க்கத் தூண்டும் பாடல். கிடாரின் இனிமை ஒன்றுக்கே காசு. சுகம் என்ன சொல்லு.:)


https://youtu.be/D6MeYM6Z7kI

RAGHAVENDRA
2nd August 2015, 07:28 PM
தம்பி .. நான் நெனச்சேன் நீ சொல்லிப்புட்டே..

அதாண்ணே நமக்குள்ள அதிசயப் பொருத்தம்...


ஹ்ம்.. தலைவர் பட வசனம் நமக்கு எப்படியெல்லாம் கை கொடுக்கிறது..

[ அங்கே யாரோ சில நண்பர்கள் நற நற... இவர்களுக்குள்ளேயே பேசிக்கிறார்கள் ... இது எந்தப் படத்து வசனம்னு தெரியலியே.. தலைவர் படம்னு வேற சொல்றாங்க...]

vasudevan31355
2nd August 2015, 07:30 PM
ஹ்ம்.. தலைவர் பட வசனம் நமக்கு எப்படியெல்லாம் கை கொடுக்கிறது..

[ அங்கே யாரோ சில நண்பர்கள் நற நற... இவர்களுக்குள்ளேயே பேசிக்கிறார்கள் ... இது எந்தப் படத்து வசனம்னு தெரியலியே.. தலைவர் படம்னு வேற சொல்றாங்க...]

ராகவேந்திரன் சார்

திரியையே ஒரு தூக்குத் தூக்கிட்டீங்க.:)

eehaiupehazij
2nd August 2015, 07:40 PM
வில்லங்க கானங்களும் வெல்லங்களே!
பகுதி 5 மனோகர் / வண்ணக் கிளி

நாடகங்களுக்கு நல்லாதரவு தந்திட்ட திரைக்கலைஞரான மனோகர் அவர்கள் ஆரம்ப காலங்களில் சில படங்களில் கதாநாயகராகவும் (தாய் உள்ளம் மனோகர் கதாநாயகராகவும் ஜெமினி வில்லராகவும்) , காலப் போக்கில் பல வருடங்கள் மாடர்ன் தியேட்டர்ஸின் (with TR Ramannaa's RR and Vinaayakaa pictures too!) முதல் போடாத பார்ட்னராகவும் பின்னாளில் முழுநேர வில்லனாகவும் மாறினார் !

ஆயிரத்தில் ஒருவன், வல்லவன் ஒருவன், தங்கசுரங்கம்,நான், மூன்றெழுத்து, மீண்டும் வாழ்வேன் சொர்க்கம், ஒளிவிளக்கு, ராஜா குறிப்பிடத் தகுந்தவை
வண்ணக்கிளியில் அடிக்கிற கைதான் அணைக்கும் ....எப்போதும் பேசப்படும் பாடல் காட்சியமைப்பு!

https://www.youtube.com/watch?v=iH5qj1ADzS8

அகத்தியரில் ராவணேஸ்வரனாக ....வென்றிடுவேன்.....

https://www.youtube.com/watch?v=z5wZVG_oJiI

eehaiupehazij
2nd August 2015, 08:11 PM
ஏனோ தமிழ்த் திரை இடிச் சிரிப்பு வில்லன் பி எஸ் வீரப்பாவுக்கு மட்டும் பாடல்கள் அமையவில்லை !
ஆனாலும் அவர் பங்கு பெறும் 'சபாஷ் சரியான போட்டி' வஞ்சிக்கோட்டை வாலிபன் இரு துருவம் பாடல் காட்சிகள் ரசிக்கத் தகுந்தவை !

https://www.youtube.com/watch?v=nksJd_aANLE

chinnakkannan
2nd August 2015, 08:46 PM
அடடடா... ஆஃபீஸ் லருந்து வீட் வர்றதுக்குள்ற இவ்ளோ பாட் கொத்துக்களா.. ஆல் நன்றிங்கோவ் :)

இனி ஒன் பை ஒன்..

( சிக்கா தேடினாலும் சிக்காத வகையில் சிவாஜி ரேர் சாங்க்ஸ்னு தலைப்பு வச்சிருக்காங்க// :) அதானே மதுண்ணா ரொம்ப மோஸ்ஸம் அவங்க..தாங்க்ஸ்..

*
வாசு

உள்ளத்திலே உரம் வேண்டுமடா ( ராமதாஸ் நன்னா கை நீட்டறார்!)

கேட்டது கிடைக்கும் (என்னா பாட்டுங்க இது- நான் மட்டும் ராம்தாஸ் போஸ்ட்ல இருந்தேன்னா பொண்ணுக்காக இல்லாட்டியும் குரலுக்காக பதவில்லாம் வேண்டாம்புள்ள..ஹெல்ப் மீ சொல்லியிருப்பேன்..:)

நாங்களும் ஆணையிட்டேன் நெருங்காதே நெனச்சோமுல்ல.. நீங்களும் ராக்வேந்திரா சாரும் சொல்லிட்டீங்க..//

ஹப்புறம் சத்திய முத்திரை கட்டளையிட்டவர் பாட் கேக்கப் பிடிக்கும்.. நிறைய தபா கேட்டு மனம் கவர்ந்த சாங்க்.. பாத்ததுங்கறது ரொம்ப ரேர்.. நம்பியார் சொடுக் பேஷ் பேஷ்..

அம்மம்மா கன்னத்தில்கன்னம் வைத்துக் கொள்ளு..ம்ம் கொ.வை. ம. தாங்க்ஸ் ஃபார் த குட் பாட் ஸ் வாசு

*

நிலவு வந்து பாடுமோ நல் பாட் தான் ராகவேந்தர் சார்..பட்ட் ஆகட்டும்…அங்கு வந்து பார்க்கட்டும்..அப்படின்னு வீச்சுன்னு ஹைபிட்ச்ல கத்துறப்ப நான் பயந்து போயிருக்கேன்.. சின்ன வயசுல..!
*
ஹை.. தோப்பில் மாடு மேஞ்சா என்ன
தோட்டம் வீணாப் போனா என்ன –
என் ஆசை மானே உதவி பெறலாம் சும்மா கிட்டே வா ( நல்லாருக்கே கதை!)

ஆசை கொண்ட மங்கையோடு ஆயுள் பூரா வாழவேண்டும்…
என் ஆசை மாமா பாடி என்னை மயக்கிடாதேடா (இலக்கணப்பிழை.. … மாமா என்றால் மரியாதைச் சொல்..ஸோ மயக்கிடாதேங்கன்னு வந்துருக்கணும்..!)

தாயுமில்லை தந்தையில்லை வேறு எனக்குத் தெரியவில்லை.
.நானும் உன்னை நாடி வந்தேனே ..
என் ஆசை மாமா நானும் உனக்கே அடிமை ஆனேனே..( அப்ப்டிச் சொல்லாதே செல்லம்!)

ஆசையாலே பாசத்தாலே அன்பினாலே சேர்ந்த நெஞ்சம்
பேசி ப் பேசி இன்பம் கண்டிடுமே (ரியலி..ஓ போரா இருக்காது :))
என் ஆசை மானே..பிறவிப்பயனை இன்று கண்டோமே (மவனே.. ஒரு அஞ்சுவருஷம் கழிச்சுச் சொல்லிப்பாரு!)

நல்ல பாட்..பட் நான் கேக்க மட்டும் செஞ்சுருக்கேன் இப்பதான் பாக்கறேன் ( மறுபடியும் செள.. நற நற) இந்தப் பாட்டா மனோகரை உச்சிக்குக் கொண்டு போனது (எம்.எஸ்.ராஜேஸ்வரியோட வாய்ஸ் ரொம்பக் க்யூட் ஸம் வாட் இட் சூட்ஸ் த டான்ஸிங் லேடி!) தாங்க்ஸ் ராகவேந்தர் சார்..

*

சி.செ.. அகெய்ன் இதுசத்தியத்தில் அசோகனுக்கு வந்த வாழ்வு எல்லாப் பாட்டும் அட்டகாசம்.. இது சத்தியம் பாட்டை விட மனம் கனிவான அந்தக் கன்னியைக் கண்டால்கல்லும் கனியாகும்.. அதை விட் புட் டீஹளே நியாயமா.. தென் வித் யுவர் பெர்மிஷன்.. நீங்கள் போடப் போகும்- வில்லன் பாட்டுக்களிலிருந்து ஒரு வில்லன் பாட்டு (பிற்காலத்துல வில்லனானவர்..அவர் பாட் போட்டுக்கட்டா..)

*

https://youtu.be/conoVD4PL5M

என்னை அழைத்தது யாரடி கண்ணே
என்னைக் கேட்டால் என்ன தெரியும்
என் மனம் என் வசமில்லையே.. mm jaishankar Lakshmi.. படம் ஒருவனுக்கு ஒருத்தியாம் ஜேசுதாஸ் ஜானகி.. படம் எப்படி இருக்கும்?

பின்ன வாரேன் :)

RAGHAVENDRA
2nd August 2015, 08:48 PM
ஏனோ தமிழ்த் திரை இடிச் சிரிப்பு வில்லன் பி எஸ் வீரப்பாவுக்கு மட்டும் பாடல்கள் அமையவில்லை !
ஆனாலும் அவர் பங்கு பெறும் 'சபாஷ் சரியான போட்டி' வஞ்சிக்கோட்டை வாலிபன் இரு துருவம் பாடல் காட்சிகள் ரசிக்கத் தகுந்தவை !

ஆஹா.. போட்டு வாங்குறீங்களே சார்..
இப்படியெல்லாம் கேட்டா நாங்க சொல்ல மாட்டோமாக்கும்..

பாடல் விவரம் வேணும்னா கேட்டுத் தான் வாங்கணும்... போட்டு வாங்கக் கூடாது..

இருந்தாலும் போனால் போகட்டும் சொல்றேன்..

ஓ...மாமா...மாமா...

வாசு சார்... வீடியோ ப்ளீஸ்....லிங்க் கிடைக்கவில்லை...

eehaiupehazij
2nd August 2015, 08:51 PM
மாற்றார் தோட்ட மெல்லிசை மதுரங்கள் !
ஹாலிவுட்டின் ஆடல் பாடல் காவியங்கள் !!
பகுதி 26 : Fred Astaire :
பிரெட் ஆஸ்டையரின் காலம் வென்ற நடனப் பாடல்கள்!!


ஹாலிவுட்டைப் பொறுத்த வரை நடனங்களும் பாடல்களும் படங்களில் இடைச் செருகலாக இல்லாமல் பெரும்பாலும் தனிப்பட்ட கதையமைப்புடன் சிறப்புப் படங்களாகவே எடுக்கப் பட்டன !
இந்த வரிசையில் பிரெட் ஆஸ்டையர், ஜீன் கெல்லி இருவருமே உலகின் நடன ஆரம்ப கட்ட ஜாம்பவான்கள். பெரும்பாலான பிரபுதேவா நடனங்களில் இவர்கள் சாயலும் ஜாக்ஸன் சாயலும் தூக்கலாக இருக்கும் ! எல்விஸ் பிரஸ்லியும் இந்த வரிசை ஆடல் பாடல் ஜாம்பவானே!!

பிரெட் ஆஸ்டயரின் நினைவு கூரல்!

சுவற்றிலும் சீலிங்கிலும் ஏறி ஆடும் அற்புதப் படப் பதிவு கிராபிக்ஸ் இல்லாத காலத்திலேயே (1951)

https://www.youtube.com/watch?v=RU_hFQg700s

உனக்காக எல்லாம் உனக்காக ..சந்திரபாபுவுக்கும் இவரே இன்ஸ்பிரேஷன்!!

https://www.youtube.com/watch?v=oglrB4w6jaY

https://www.youtube.com/watch?v=yTH9VwACh7o

https://www.youtube.com/watch?v=myBhVCik8xk

https://www.youtube.com/watch?v=MsS7B8nyw5Y

RAGHAVENDRA
2nd August 2015, 08:53 PM
நிலவு வந்து பாடுமோ நல் பாட் தான் ராகவேந்தர் சார்..பட்ட் ஆகட்டும்…அங்கு வந்து பார்க்கட்டும்..அப்படின்னு வீச்சுன்னு ஹைபிட்ச்ல கத்துறப்ப நான் பயந்து போயிருக்கேன்.. சின்ன வயசுல..!

ம்ஹ்ம்.. இந்தப் பாட்டு எப்பவுமே பயமுறுத்தற பாட்டுத்தேன்... அப்போ கேட்டு பயந்திருப்பீஹ.. இப்பா ஹீரோயினைப் பாத்து பயந்திருப்பீஹளோ..

chinnakkannan
2nd August 2015, 09:05 PM
//இப்பா ஹீரோயினைப் பாத்து பயந்திருப்பீஹளோ// ஹாங் ஜி ஹாங்க் :)

chinnakkannan
2nd August 2015, 09:14 PM
சி.செ.. உங்களுக்காகவும் ராஜ் ராஜ் சாருக்காகவும் :)

என் ஆட்டமெல்லாம்... பானுமதி பி.எஸ்.வி..

https://youtu.be/ghcaG6cgAjE

eehaiupehazij
2nd August 2015, 10:07 PM
காமெடியர்களின் ஷாம்பெயின் கலக்கல் மதுர கானங்கள்
பகுதி 5 சந்திரபாபு
காமெடி பாடல் ஆடல் முக்கோணத்தின் புவியீர்ப்பு மையப் புள்ளியாக ரசிக இரும்பு துகள்களை ஈர்த்திட்ட காந்தப் புலம்!!

கோவா மாம்பழமே மல்கோவா மாம்பழமே!! ...மீண்டும் எல்லாம் உனக்காக பிரெட் ஆஸ்டையர் பாதிப்பில்!!
https://www.youtube.com/watch?v=vNiSTIT-Uyo

ஆளை ஆளை பார்க்கிறார் ...ரத்தக் கண்ணீர் கிளப்டான்ஸ் பாடல்!

https://www.youtube.com/watch?v=67zlw6YpKtM

குங்குமபூவே ..புதையல்
https://www.youtube.com/watch?v=IA1s8rwx9R8

அவன் கனவில் அவள் வருவாள் அவனைப் பார்த்து சிரிப்பாள் ...ஜீன் கெல்லியின் பாதிப்பில் !!
https://www.youtube.com/watch?v=8ImA2bPgICM

சோகரசமும் கூட ..
https://www.youtube.com/watch?v=OslLZDX_rW0

vasudevan31355
2nd August 2015, 10:32 PM
ஆஹா.. போட்டு வாங்குறீங்களே சார்..
இப்படியெல்லாம் கேட்டா நாங்க சொல்ல மாட்டோமாக்கும்..

பாடல் விவரம் வேணும்னா கேட்டுத் தான் வாங்கணும்... போட்டு வாங்கக் கூடாது..

இருந்தாலும் போனால் போகட்டும் சொல்றேன்..

ஓ...மாமா...மாமா...

வாசு சார்... வீடியோ ப்ளீஸ்....லிங்க் கிடைக்கவில்லை...

ராகவேந்திரன் சார்,

இந்தாங்க....

ஹோ ..மா....மா ...மா
முல்லைப் பூவைப் போல என்னைக் கிள்ளு
ஹோ ..மா....மா ...வா
மோகம் கொண்டு தாகம் தீர்த்துக் கொள்ளு

வீரப்பாவின் அராஜகம். அதைவிட ஆடும் பெண்மணி (சோபனா) இன்னும் அராஜகம். ஆனால் விஜயசந்திரிகா ஜாடையில் இருப்பார். அழகுதான்.

சரியாகப் பாடல் 3.59 க்கு அதாவது 'அகரம் தமிழுக்கு சிகரம்' பாடல் முடிந்தவுடன் தொடங்கும்.


https://youtu.be/zlvYm6FQ-zA

vasudevan31355
2nd August 2015, 10:53 PM
ஏனோ தமிழ்த் திரை இடிச் சிரிப்பு வில்லன் பி எஸ் வீரப்பாவுக்கு மட்டும் பாடல்கள் அமையவில்லை !
ஆனாலும் அவர் பங்கு பெறும் 'சபாஷ் சரியான போட்டி' வஞ்சிக்கோட்டை வாலிபன் இரு துருவம் பாடல் காட்சிகள் ரசிக்கத் தகுந்தவை !



சிவாஜி செந்தில் சார்,

உங்கள் குறையை ஓரளவிற்கு தீர்க்கும் பாடல். ஆனால் அபூர்வம்தான். ஹீரோ ரேஞ்சிற்கு அட்டகாசமான தலைக் கட்டுடன், கையில் மேன்டலினுடன், நாடோடிக்காரனாய் வில்லங்க வீரப்பா நாடோடி டெண்ட்டுகளுக்கு மத்தியில் ராஜசுலோச்சனாவின் ஆடல் பாடலுக்கு இசை அமைத்து, சுலோச்சனாவைச் சுற்றி வருவது நிச்சயம் வித்தியாசமான புதுமையான ஒன்றுதான். இதுவரை பார்க்காதவர்களுக்கு இது வாய் பிளக்கச் செய்யும் பாடல்தான்.

கோபக் கனல் கண்களில் கொதிக்க, 'ஹா..ஹா' என்று பகீர்ச் சிரிப்பு எதுவுமில்லாமல், எந்தப் பொருள் மீது கை வைக்கிறாரோ அந்தப் பொருள் கோபத்தில் இவரால் தூக்கிப் போடப்பட்டு பல படங்களில் சுக்கு நூறாகும்....நிறைய பூ ஜாடிகள், பூந்தொட்டிகள் என்று.:) அப்படியெல்லாம் இல்லாமல் வீரப்பா மென்மையாக பங்கு கொண்ட அபூர்வப் பாடல் இது.

பாடல் மிக மிக இனிமை. சுலோச்சனாவின் கண் வெட்டுகளும் அருமைதான்.

'ஆசை அன்பெல்லாம் கொள்ளை கொண்ட நேசா
பேசும் ரோஜா என்னைப் பாரு ராஜா'

இந்தப் பாடல் எனக்கு ரொம்ப பிடித்த பாடல்.

ஒரு சிறு குறை. ஆரம்பக் காட்சியைத் தவிர பெரும்பாலும் மற்ற காட்சிகளில் வீரப்பாவின் பின்புறமாகவே காமெரா மேன் அவரை கவர் செய்திருப்பார்.

படம் 1956 ல் வந்தக் 'ஆசை'தான். உங்க 'காதல் மன்னன்' நடித்ததுதான்.:)

இப்போ உங்க 'ஆசை' நிறைவேறிடுச்சா?:) நீங்கதான் சொல்லணும்.


https://youtu.be/Z5vodpSBQ6k

eehaiupehazij
2nd August 2015, 11:13 PM
கோபக் கனல் கண்களில் கொதிக்க, 'ஹா..ஹா' என்று பகீர்ச் சிரிப்பு எதுவுமில்லாமல், எந்தப் பொருள் மீது கை வைக்கிறாரோ அந்தப் பொருள் கோபத்தில் இவரால் தூக்கிப் போடப்பட்டு பல படங்களில் சுக்கு நூறாகும்....நிறைய பூ ஜாடிகள், பூந்தொட்டிகள் என்று. அப்படியெல்லாம் இல்லாமல் வீரப்பா மென்மையாக பங்கு கொண்ட அபூர்வப் பாடல் இது.
Vaasu Sir



'ஆசை'யை தரவேற்றி நிறைவேற்றியமைக்கு ஓசையான கரவொலி நன்றிகள் வாசு சார் !
உங்கள் நிறுவன பிரச்சினைகள் சுமுகமாகிட வேண்டுதல்கள் !!

https://www.youtube.com/watch?v=AX0L9J-GlHM

vasudevan31355
2nd August 2015, 11:19 PM
'ஆசை'யை தரவேற்றி நிறைவேற்றியமைக்கு ஓசையான கரவொலி நன்றிகள் வாசு சார் !
உங்கள் நிறுவன பிரச்சினைகள் சுமுகமாகிட வேண்டுதல்கள் !!

நன்றிகள் சிவாஜி செந்தில் சார்.

நாளை மீண்டும் பேச்சு வார்த்தை நடக்கவிருக்கிறது. இன்றுடன் 14 ஆவது நாளாக வேலை நிறுத்தம் வெற்றிகரமாக நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. நிர்வாகம் கொஞ்சம் தளர்ந்த மாதிரி தெரிகிறது. நாளை சுரங்கம் ஒன்றில் மறியல் போராட்டம் அறிவித்திருக்கிறது தொழிலாளர் முன்னேற்ற சங்கம் மற்று உள்ள பிற சங்கங்கள் கூட்டாகச் சேர்ந்து. இது வரை அமைதி. நாளை சற்று தீவிரம். தங்களைப் போன்ற நல்ல, அன்பு உள்ளங்களால் நல்லதே நடக்கும் என்று நம்பிக்கை வைத்துள்ளோம். நிர்வாகத்தின் அடக்குமுறைப் போக்கு ஹிட்லரை நினைவுகூர வைக்கிறது.

eehaiupehazij
2nd August 2015, 11:31 PM
Monotony breaker / Gape filler songs!!

Good Morning song from Gene Kelly's Singing in the Rain !

Just a teaser for my next series on Maatraar thoatta madhurangal : Hollywood songs and dances!
Part 27 focussing on Gene Kelly my matinee idol for songs and dances alongside Fred Astaire!!

https://www.youtube.com/watch?v=Yu6--WBPBHo

chinnakkannan
3rd August 2015, 12:01 AM
சி.செ.. ராத்திரி வேளைல்ல எம்.ஆர்.ராதாவோட டூயட் உங்களுக்காக..

*

https://youtu.be/ylBfNSMg-wc

ஆரம்பமே இனிக்கும் மனதில் அடிக்கடி துயர் கொடுக்கும் காதல்..
வளர்பிறை இனிக்கும் தேய் பிறை கசக்கும்…
காதல்…
சி.எஸ்.ஜெயராமன்…எம்.ஆர்.ராதா..- எல்லோரும் வாழ வேண்டும்..

chinnakkannan
3rd August 2015, 12:05 AM
ஒரு குறள் பார்த்தேள்ன்னாக்க….

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்

(எங்கே ரவியைக் காணோம்..)

எல்லாருக்கும் நல்ல குணமும் உண்டு, கெட்ட குணமும் உண்டு. நல்ல குணம் அதிகமாக உள்ளவனை நல்லவனாகவும் கெட்ட குணம் அதிகமாக உள்ளவனை கெட்டவனாகவும் கொள்ள வேண்டும். 'குணம்' என்பது 'நல்ல குணம்' 'குற்றம்' என்பது இங்கே 'தீய குணம்

எஸ்.பி.பியின் உரை : இதன் அர்த்தங்கள் கோபம் இருக்கிற இடத்துல குணமும் இருக்கும், சிரிக்கிற கண்கள் தான் முறைக்கவும் செய்யும், அடிக்கற கைகள் தான் அணைக்கவும் செய்யும். எந்த மனுசனக்குள்ளேயும் குணமும் உண்டு , குறையும் உண்டு. குணம் 'A' செக்ஷன் என்றால், குறை 'B' செக்ஷன். ஒருத்தரை ஒரு வேலைக்காக தேர்ந்தெடுக்கறதுக்கு முன்னாலே அவனுடைய நல்ல குணங்களை 'A' செக்ஷன்லயும் குறைகளை 'B' செக்ஷன் லயும் லிஸ்ட் அவுட் செய்து பார்க்கனும். நிறைய நல்ல குணங்கள் இருந்து கம்மியா குறைகள் இருந்தால் அவரை நாம ஒ.கே. பண்ணலாம். இந்த காலத்துக்கும் தேவையான ஒரு பெர்ஷனல் மேனேஜ்மெண்ட் உள்ளேயே வள்ளுவர் என்ன அழகாக சொல்லியிருக்கிறார்

நமக்கெல்லாம் நாடி ந்னா வேறதான் தோணும் :)

*

இங்க பாருங்கோ..ஒரு இளைஞன் இளைஞி.. ஒல்லி ஒல்லியா ஜிம்பாடி யோட இளைஞன்..அதே ஒ.ஒ.வா மூக்கும் முழியுமா கள்ளி ஸாரி கன்னி.. என்னவாச்சு பாத்தேள்னாக்க ஆடி மாசம்.. ஹஸ்பெண்ட் வைஃப் தான் கல்யாணம் ஆனவொடனே ஆடி அவசரமாப் பொறந்துடுச்சா..வூட்டுல பிரிச்சு வச்சுடறாங்க.. சரி..ன்னு எப்போதுமே அந்தக்காலத்துலருந்து பெரியவங்க வார்த்தையைமீறது தானே பசங்க வழக்கம்..

இவளுக்கோ இமெய்ல் விடறான்..ஹாய்.. நாம இந்த ..இந்தப் பார்க்குக்கு வரலாமா..

அவளுக்கும் ஆசை தான்.. அவன்பாட்டுக்கு ஏடாகூடமா எங்கிட்டாவது கூட்டுடுவானோன்னு பயந்து இருந்தாளா…பார்க்னவொடனே..ஓகே..

பார்த்தா அப்புறம் தான்..குட்டி முத்தா கொடுக்கலாம்னு கூப்பிட்டா இவ பிகு பண்ணிக்கறா.. ச்சும்மா வாடி நோ ப்ராப்ளம்னு சொன்னா அவளுக்குக் கோபம் வருது..ஆசையா வான்னுகூப்பிட்டுஇப்படி வாடி போடின்னு மரியாதை இல்லாம..இருந்தாலும் செல்லமாத்தானே சொல்றான்னு முறைக்கிறா..


வாடிபோடி என்றாலோ வண்ணவிழி காட்டியே
நாடித் துடிப்பினை நங்கையவள் – ஊடியே
ஏற்றுகிறாள் கூட எழில்காட்டி ஆசைக்கு
ஊற்றுகிறாள் எண்ணெயு மாம்..

*
இதையே அந்தக்காலத்துல வர்ற ஒருபாட்டுல
பெண் என்ன பாடறா..

நாடி துடிக்குது துடிக்குது என்னை நாடி துடிக்குது துடிக்குது (படத்துல காதலர்கள் பாடற மாதிரி வருது பாட்டு)

சீர்காழி கோவிந்த ராஜன் என்ன சொல்றார்.(படத்தில் முத்துராமன்).

கண்ணழகு நாடி கன்னியிடை நாடி
சின்ன இதழ் தன்னிருக்கும் தேனமுதம் நாடி

அந்த கே.ஆர்.விஜயாம்மா பி.சுசீலா குரல்ல என்னவாக்கும் சொல்றார்

கொஞ்சுமொழி நாடி
கோலமுகம் நாடி
பிஞ்சுமொழி வாயிருக்கும்
வஞ்சிக்கனி நாடி

நினைவு மயங்குது
எதற்கோ நெருங்குதாம்….

பட்டு மெத்தை நாடி
தொட்டு விளையாடி
பட்டத்து ராணிஎன்னும் பதவியை நாடி

பள்ளியறை நாடி துள்ளி விளையாடி
அள்ளி அள்ளி உண்ணுகின்ற அதிசயம் நாடி..

கண்ணோ துடிக்குது
கன்னம் சிவக்குது
என்னமோ புதிய அனுபவம் மெல்ல மெல்ல விளங்குது

சின்னச் சிட்டு ஜோடி
ஒன்றை ஒன்று நாடி
சிறகினை விரிக்கின்ற காலந்தனை நாடி…

தென்னை இள நீரும் செங்கரும்புச் சாறும்
கன்னங்களில் ஊறிவரும் கனி ரசம் நாடி…( நன்னா சிரிக்கறாங்க கே.ஆர்.வி!)

ஆசை பிறக்குது…
அருகில் அழைக்குது..
அம்மம்மா போதும் அனுபவம் மெல்ல மெல்ல விளங்குது..


https://youtu.be/GQOAlp3fRjI


படம் சீதா..முத்துராமன் கே.ஆர்.விஜயா..

*

chinnakkannan
3rd August 2015, 12:07 AM
நல்லதே நடக்கும் வாசு சார். Our prayers are with you.

chinnakkannan
3rd August 2015, 12:11 AM
செந்தூரப் பூவே மூன்று வெர்ஷனும் இப்போபார்த்தேன் ராகதேவன்..தாங்க்ஸ்.. தமிழில் வரிகள், தெலுகு ஹிந்தியில் விஷூவல் கொஞ்சம்மாற்றிவிட்டார்கள் இருந்தாலும் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது.. பாடலும்கூட.. நன்றி அகெய்ன்..

madhu
3rd August 2015, 06:13 AM
அசோகன் சொந்தக் குரலில் பாடி அசத்தியிருக்குற பாட்டையும் இங்கே சந்தடி சாக்கில் நுழைச்சிடறேனே !

இரவும் பகலும் படத்திலிருந்து

https://www.youtube.com/watch?v=RKjP5nuDjLg

rajeshkrv
3rd August 2015, 09:24 AM
நன்றிகள் சிவாஜி செந்தில் சார்.

நாளை மீண்டும் பேச்சு வார்த்தை நடக்கவிருக்கிறது. இன்றுடன் 14 ஆவது நாளாக வேலை நிறுத்தம் வெற்றிகரமாக நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. நிர்வாகம் கொஞ்சம் தளர்ந்த மாதிரி தெரிகிறது. நாளை சுரங்கம் ஒன்றில் மறியல் போராட்டம் அறிவித்திருக்கிறது தொழிலாளர் முன்னேற்ற சங்கம் மற்று உள்ள பிற சங்கங்கள் கூட்டாகச் சேர்ந்து. இது வரை அமைதி. நாளை சற்று தீவிரம். தங்களைப் போன்ற நல்ல, அன்பு உள்ளங்களால் நல்லதே நடக்கும் என்று நம்பிக்கை வைத்துள்ளோம். நிர்வாகத்தின் அடக்குமுறைப் போக்கு ஹிட்லரை நினைவுகூர வைக்கிறது.

நல்லதே நடக்கும் வாசு ஜி. இறைவன் என்றுமே தொழிலாளிகள் பக்கம் தான்

vasudevan31355
3rd August 2015, 11:51 AM
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்

http://2.bp.blogspot.com/-HRNJSnA1-84/TenskpB9duI/AAAAAAAAAuY/mP0R6cDrGMY/s320/spb.jpg

(நெடுந்தொடர்)

22

'கல்யாண ராமனுக்கும், கண்ணான ஜானகிக்கும்'

https://i.ytimg.com/vi/34Z2qRYT2oY/mqdefault.jpg

இன்றைய பாலா தொடரில் வந்தே விட்டது. முரளி சார் ஆசையாகக் கேட்ட 1970-ன் 'மாணவன்' வந்தே விட்டான். தேவர் தயாரித்த 'மாணவன்' இவன். ஜெய்சங்கர் மாணவனாம்.:)

http://i.ytimg.com/vi/BM8pANGK5E4/maxresdefault.jpg

முத்துராமன், லஷ்மி, சௌகார், (கொஞ்ச நாளாகவே சௌகார் மயமாகவே இருக்கிறது) சுந்தரராஜன், வி.எஸ்.ராகவன், மாஸ்டர் கமலஹாசன் வாலிப கமலஹாசனாக, நாகேஷ், அசோகன், தேங்காய், சச்சு, ஜெயகுமாரி, ராதாபாய் என்று பெருந்திரளாக நட்சத்திரங்கள். தேவர் வேறு ஒழுங்காக பணத்தை செட்டில்மெண்ட் செய்து விடுவார்.:)

கதை வசனம் பாலமுருகன். பாடல்கள் வாலி மற்றும் திருச்சி தியாகராஜன். இசை சங்கர்-கணேஷ் இரட்டையர்கள். இயக்கம் வழக்கம் போல எம்.ஏ.திருமுகம்.

மிருகங்கள் அதிகம் இல்லாத தேவர் படம். ஆனாலும் யானை உண்டு.

தேவர் பிலிம்ஸ் கதை பற்றி சொல்ல வேண்டுமா?...

ஏழை சௌகார். சூதாட்டக் கணவன் அசோகன். சூதாட்டத் தகராறில் ஒரு ஆளை தெரியாமல் குத்திக் கொன்றுவிட்டு ஜெயிலுக்குப் போகிறார். சௌகாரின் பையன் நன்றாகப் படிப்பவன். சௌகார் வேலை செய்யும் வீட்டு முதலாளி வில்லன் ஓ.ஏ.கே.தேவர் 'வேலைக்காரி மகனுக்கு படிப்பு எதுக்கு? என்று கேலி பேச, அதையே சவாலாக ஏற்று 'என் மகனைக் கலெக்டர் ஆக்குகிறேன்' என்று அவரிடம் சவால் விட்டு சென்னை சென்று ஒரு ஸ்கூலில் ஆயாவாகச் சேர்ந்து கஷ்டப்பட்டு பையனைப் படிக்க வைக்கிறார். பையன் வளர்ந்து ஜெய் ஆகிறான்.

அம்மாவுக்கு கஷ்டம் தரக் கூடாதே என்று ஜெய் படிப்பு நேரம் போக மீதி நேரங்களில் சைக்கிள் ரிக்ஷா ஓட்டுகிறார். சாரணர் இயக்க மாணவனாக நடு ரோட்டில் டிராபிக் கண்ட்ரோல் செய்கிறார். வழக்கம் போல பணக்கார லஷ்மியுடன் மோதல் செய்து பின் காதல் புரிகிறார். எம்.ஏ படித்து மாகாணத்தில் முதல் மாணவனாகிறார். அவர் படித்த கல்லூரியிலேயே லெக்சரர் வேறு ஆகிறார். வில்லன் மாணவன் ஒ.ஏ.கே தேவரின் முத்துராமனைக் கண்டிக்கிறார். சண்டை போடுகிறார். கல்லூரியை விட்டு நீக்குகிறார்.

முத்துராமன் பழி வாங்க மறைந்திருந்து ஜெய்யைக் கொலை செய்யத் துணிய, வேறு ஒரு மாணவர் ஜெய்க்குப் பதிலாக இறந்து போகிறார். அந்த கொலைப்பழி ஜெய் மேல் விழுகிறது. ஜெய் ஜெயிலுக்குப் போகிறார். பின் முத்துராமன் உண்மைக் குற்றவாளி என்று நாகேஷ் மூலம் தெரிய, ஜெய் விடுதலை ஆகிறார். முத்துராமன் ஆயுள்கைதி ஆகிறார்.

அப்புறம் ஜெயசங்கர் அம்மாவின் கலெக்டர் சபதத்தை நிறைவேற்ற ராப்பகலாகப் படிக்கிறார். கலெக்டரும் ஆகிறார். வில்லன் ஒ.ஏ.கே தேவர் தன் பையன் முத்துராமன் ஜெயிலுக்குப் போனதால் ஜெய்யை ஒழிக்க சந்தர்ப்பம் பார்த்திருக்கிறார்.

ஜெய் கலெக்டர் ஆகி ஒருமுறை ஜெயில் விசிட் போகிறார். அங்கே திருந்திய முத்துராமனைப் பார்க்கிறார். அங்கு கொலைக் குற்றத்திற்காக தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் அசோகன் முத்துராமன் மூலமாக ஜெய் தன் மகன் என்று தெரிந்து கொள்கிறார். விடுதலை ஆகி வெளியே வருகிறார்.

ஜெய் கலெக்டர் ஆனதால் ஊர் மக்கள் அவருக்கு பாராட்டு விழா நடத்துகிறார்கள். அந்த விழாவில் வில்லன் ஒ.ஏ.கே தேவர் ஜெயசங்கரை ஒழித்துக் கட்ட வேலை செய்ய, ஜெயிலில் இருந்து வந்த அசோகன் தன் பிள்ளை ஜெய் உயிரைக் காப்பாற்றி விடுகிறார். தாயின் சபதம் நிறைவேறியது. ஊரே சௌகாரை பெருமையாக நினைக்கிறது. குடும்பம் ஒன்று சேர்ந்து நமக்கு நிம்மதியை அப்போதுதான் தருகிறது.

படம் பார்த்து முடித்ததும் நீண்ட களைப்பும், ஆயாசமும் ஏற்பட்டு களைப்பு தீர நமக்கு ஒரு கப் பாயாசம் தேவை. தேவரின் கொடுமைகளில் ஒன்று.

ஜெய்சங்கரும், லஷ்மியும் பாடும் பாடலான இந்தத் தொடரின் பாடல் 'கல்யாண ராமனுக்கும் கண்ணான ஜானகிக்கும்' ஒன்று இப்படத்தின் மிகப் பெரிய ஆறுதல். பாடல் படமாக்கலில் பெரிதாக சொல்ல ஒன்றுமில்லை. அஸ் யூஷுவல்தான்.

'சின்ன சின்ன பாப்பா' (சௌகார் குழந்தைகளுக்கு புத்திமதி)

பாடலும்

குட்டி பத்மினி வாலைக் குமரியாக, கமல் பச்சிளம் பாலகனாக, கல்லூரி மாணவ, மாணவிகள் இடையே ஆடிப் பாடும்,

'விசிலடிச்சான் குஞ்சுகளா'

பாடலும் பிரசித்தம். அப்போது இருந்த நிலையில் பலர் இப்பாடலை முகம் சுளித்து நான் பார்த்திருக்கிறேன். இப்போது அது ஒன்றுமே இல்லை.

https://i.ytimg.com/vi/t9ORWBy6A-A/hqdefault.jpghttp://i.ytimg.com/vi/ydAFj02SIjs/hqdefault.jpghttp://i.ytimg.com/vi/v22ierjJakg/hqdefault.jpg

சங்கர் கணேஷ் அமர்க்களம் செய்வார்கள் இந்தப் பாடலில். உற்சாகமான ஆரம்ப மியூசிக் பாடல் நெடுகிலும் தொடரும்.

'ஆஹா ஹா ஹா ஹா' என்று பாலா பரவச ஹம்மிங் தர, பதிலுக்கு சுசீலா 'லல்லலல்லலா...லல்லலல்லலா' என்று பட்டை கிளப்ப, 'ஒ.. ஹோ ஹோ' என்று மீண்டும் பாலா ஓஹோவென்று பாட, சுசீலா மீண்டும் 'லல்லலல்லலா' முடித்துவிட்டு அப்படியே அதனுடன் 'ஆஹா ஹா ஹா' வையும் அருமையாக இணைத்துவிட, காலம் முழுதும் கேட்டுக் கொண்டிருக்க ஒரு அருமையான பாடல் இந்த 'மாணவன்' படத்தின் மூலம் நமக்குக் கிடைத்தது. பாலாவின் தொடர்ச்சியான 'லெல்லலெல்லலா'...லெல்லலெல்லலா' வெல்லத்தின் இனிப்பு. மனிதர் பின்னி விடுவார் பின்னி.

சங்கர் கணேஷ் இசையமைத்த பாடல்களில் (அதுவும் பாலா சுசீலா என்றால் இரட்டையர்கள் இணையில்லா உற்சாகம் கொள்வார்கள். எத்தனை பாட்டுக்கள் இது மாதிரி! வாவ்! கிரேட்!) மிகவும் குறிப்பிட வேண்டிய பாடல் இது. பாலா சுசீலா இருவரின் ஆரம்ப ஹம்மிங் மட்டுமே போதும். பாடலை முழுவதும் கேட்கவே வேண்டாம். ஹம்மிங் மட்டுமே அவ்வளவு அருமை.

தேவர் மனம் மகிழவே,

'மின்னுகின்ற கண்ணிரெண்டும் வேலாயுதம்
மன்னனுக்கு மங்கை மனம் மயில் வாகனம்'

வரிகள் சேர்க்கப்பட்டுள்ளது நன்றாகத் தெரியும். வேல், மயில் என்று தேவர் மனம் குளிர்ந்திருப்பார்.

நெடுந்தூரப் பயணம் பேருந்தில் மேற்கொண்டால் வழியில் பெரிய ஊர்களில் பஸ் ஸ்டாண்டுகளில் பல சிறுவர்கள் நாம் கொறிப்பதற்கு ஏதாவது ஒன்றை விற்பார்கள். அப்படி ஒரு முறை நான் வறுத்த முந்திரி என்று ஒரு பாக்கெட்டைத் தெரியாமல் வாங்கித் தொலைத்து விட்டேன். பிரித்து சாப்பிட்டால் எல்லா முந்திரியும் ஒரே சொத்தை. வாயெல்லாம் வீணாகி விட்டது. இறுதியில் ஒரே ஒரு முழு முந்திரி ஒன்ற ஜோராக செக்கச் செவேல் என்று கையில் பட்டது. அதை சாப்பிட்டால் அவ்வளவு டேஸ்ட். அந்தப் பாக்கெட்டில் அந்த ஒரு முந்திரிதான் நன்றாக அவ்வளவு அம்சமாக இருந்தது. என் வாழ்நாளில் சொத்தைகளுக்கு நடுவே தேவாமிர்தமாக வாய்த்த அந்த முந்திரியை மறக்கவே முடியாது. அது போலத்தான் இந்த சொத்தைப் படமும் அதில் முந்திரி போல் சுவை அளித்த முரளி சார் விரும்பிய பாடலும்.

https://lh5.ggpht.com/vC79z9OEjS2096x90VqPa7LxeDrKJt01w2Mw9mVFZfZgNBYMXC a11CAGqc3_ux37IURVLyZP1A

ஆஹா ஹா ஹா ஹா

லல்லலல்லலா...லல்லலல்லலா

ஒ.. ஹோ ஹோ

லல்லலல்லலா...லல்லலல்லலா ஆ ஹா ஹா ஹா ஹா

லல்லலல்லலா.. லல்லலல்லலா

ஒ...ஹோ ஹோ ஹோ

லெல்லலெல்லலா'...லெல்லலெல்லலா

ஒஒஒஒ.....ஒ

கல்யாண ராமனுக்கும் கண்ணான ஜானகிக்கும்
காதல் வந்த நேரம் என்னவோ

வைதேகி மாலையிட்டு வைபோக வாழ்வு பெற்று
தேடிக் கொண்ட இன்பம் சொல்லவோ

கல்யாண ராமனுக்கும் கண்ணான ஜானகிக்கும்
காதல் வந்த நேரம் என்னவோ

வைதேகி மாலையிட்டு வைபோக வாழ்வு பெற்று
தேடிக் கொண்ட இன்பம் சொல்லவோ

நாணலென்னும் காலெடுத்து முன்னால் வர
நூறு வகை சீதனமும் பின்னால் வர

நாணலென்னும் காலெடுத்து முன்னால் வர
நூறு வகை சீதனமும் பின்னால் வர

நாள் மணநாள் தேடினாள்
தான் சுகம்தான் நாடினாள்

கல்யாண ராமனுக்கும் கண்ணான ஜானகிக்கும்
காதல் வந்த நேரம் என்னவோ

வைதேகி மாலையிட்டு வைபோக வாழ்வு பெற்று
தேடிக் கொண்ட இன்பம் சொல்லவோ

மின்னுகின்ற கண்ணிரெண்டும் வேலாயுதம்

மன்னனுக்கு மங்கை மனம் மயில் வாகனம்

மின்னுகின்ற கண்ணிரெண்டும் வேலாயுதம்

மன்னனுக்கு மங்கை மனம் மயில் வாகனம்

வா

பக்கம் வா

நெருங்கி வா

தா

தொட்டுத் தா

தொடர்ந்து தா

கல்யாண ராமனுக்கும் கண்ணான ஜானகிக்கும்
காதல் வந்த நேரம் என்னவோ

வைதேகி மாலையிட்டு வைபோக வாழ்வு பெற்று
தேடிக் கொண்ட இன்பம் சொல்லவோ


https://youtu.be/ydAFj02SIjs

chinnakkannan
3rd August 2015, 11:58 AM
//அதில் முந்திரி போல் சுவை அளித்த முரளி சார் விரும்பிய பாடலும். // வாசு.. மாணவன் பார்த்தேனா என நினைவில்லை..ஆனால் ஸ்ரீதேவி ரிலீஸ் என ப் புகையாக நினைவில். நினைவு தெரிந்தும் பார்த்ததில்லை..பட்

நீங்கள் போட்ட இந்தப் பாட்..ஜிகு ஜிகுவென வேகமாய் ஆரம்பித்து வேகமாய்முடியும்..எனக்கும் பிடிக்கும்..

//குடும்பம் ஒன்று சேர்ந்து நமக்கு நிம்மதியை அப்போதுதான் தருகிறது. // :) ஐயோ பாவம் சார் நீங்க.. வாசகர்களுக்காக எவ்வளவு சோகமான கதையையும் விலாவாரியாக எழுதித் தர்றீங்க.. தாங்க்ஸ்..( நான் இனிமேபார்ர்க நினைப்பேன் இந்தப் படத்தை ம்ஹுஹும்.. :) )

இன்னொரு படம் பார்த்த நினைவு ஜெய் லஷ்மி தான்..லஷ்மி டபுள் ஆக்ட் அம்மா பெண்ணா வருவாங்க தாத்தா வா மேஜர்..ரொம்பப் படுத்தலான படம்..ஹையா பெயர் நினைவில்லை.. :)

vasudevan31355
3rd August 2015, 12:06 PM
//அதில் முந்திரி போல் சுவை அளித்த முரளி சார் விரும்பிய பாடலும். // வாசு.. மாணவன் பார்த்தேனா என நினைவில்லை..ஆனால் ஸ்ரீதேவி ரிலீஸ் என ப் புகையாக நினைவில். நினைவு தெரிந்தும் பார்த்ததில்லை..பட்

நீங்கள் போட்ட இந்தப் பாட்..ஜிகு ஜிகுவென வேகமாய் ஆரம்பித்து வேகமாய்முடியும்..எனக்கும் பிடிக்கும்..

//குடும்பம் ஒன்று சேர்ந்து நமக்கு நிம்மதியை அப்போதுதான் தருகிறது. // :) ஐயோ பாவம் சார் நீங்க.. வாசகர்களுக்காக எவ்வளவு சோகமான கதையையும் விலாவாரியாக எழுதித் தர்றீங்க.. தாங்க்ஸ்..( நான் இனிமேபார்ர்க நினைப்பேன் இந்தப் படத்தை ம்ஹுஹும்.. :) )

இன்னொரு படம் பார்த்த நினைவு ஜெய் லஷ்மி தான்..லஷ்மி டபுள் ஆக்ட் அம்மா பெண்ணா வருவாங்க தாத்தா வா மேஜர்..ரொம்பப் படுத்தலான படம்..ஹையா பெயர் நினைவில்லை.. :)

'விஜயா'.

நிறைய எழுதி விட்டேன் இதைப் பற்றி.

http://images.boxtv.com/clips/462/14462/player_crop_1000x563_84579_14462_q80.jpg

vasudevan31355
3rd August 2015, 12:10 PM
//ஐயோ பாவம் சார் நீங்க//

பரிதாபப்பட நீங்களாச்சும் இருக்கீங்களே:)

//( நான் இனிமேபார்ர்க நினைப்பேன் இந்தப் படத்தை ம்ஹுஹும்..:) )//

நான் இனிமே எழுத நினைப்பேன் இந்த மாதிரி.. ம்ஹுஹும் :):)

vasudevan31355
3rd August 2015, 12:59 PM
ரவி சார், கிருஷ்ணா சார், கல்நாயக், ஆதிராம் சார், வினோத் சார் அனைவரும் எங்கே போனார்கள்? யாரையும் காணலியே?

அவசியம் அனைவரையும் வருமாறு அழைக்கிறேன். மது அண்ணா கூட மீண்டு வந்து விட்டாரே. கல்ஸ், என்ன ஆயிற்று? வேலைப் பளுவா?

கிருஷ்ணா சார், அவசியம் வர வேண்டும்.

uvausan
3rd August 2015, 01:36 PM
வாசு - இரண்டு காரணங்களால் இங்கு வந்து பதிவுகள் போட மனம் வரவில்லை

1. உங்கள் கம்பெனி வேலை நிறுத்தம் சீக்கிரம் முடிவடைந்து , உங்களுக்கும் , உங்கள் நிர்வாக அனைத்து நண்பர்களுக்கும் எல்லா பிரச்சனைகளும் சீக்கிரமே முடிவடைந்து சந்தோஷம் திரும்ப வேண்டும் என்று அந்த இறைவனை ப்ராத்தனை செய்து கொண்டிருப்பதால் பதிவுகள் போட நேரம் கிடைப்பதில்லை .

2. உங்கள் பதிவுகளை நீங்கள் எழுதும் அதே ரசனையுடன் படித்து புரிந்துக்கொள்ள வேண்டுமென்றால் கண்டிப்பாக பதிவுகள் போடும் நேரத்தை மிச்சப்படுத்திக்கொள்ள வேண்டும் - குறுக்கே பதிவுகள் போட்டு அதன் அழகை கெடுத்துவிடக்கூடாது ( ck திட்டுவதும் குறையும் ----)

வேறு எந்த காரணமும் இல்லை . ஒரு அணிலின் சேவை கூட உங்கள் பார்வையில் படுவதை எண்ணி மிகவும் பெருமை படுகிறேன் .

chinnakkannan
3rd August 2015, 01:44 PM
//விஜயா'.

நிறைய எழுதி விட்டேன் இதைப் பற்றி.//

ஓய்.. நீர் எங்கே இதை ப்பற்றி எழுதியிருக்கிறீர்..எந்தபாகம்..பாகம் சொல்லி பக்கம்குறிக்கவும்! :)

எம் ஆர் ராதா டூயட் படம் பற்றி எழுதியிருக்கிறீரா..

( ck திட்டுவதும் குறையும் ----) // ரவி.. நான் இனிமே திட்டலீங்ணா.. வாங்க வாங்க ஜாலியா..வேணும்னா ஒங்களுக்கு ஒரு ஹோம் ஒர்க்..வாசு ஒன் லைனராக செந்தில்வேல் போஸ்டிற்கு பதிலாக எழுதிய சில ந.தி பாடல்களில் ஒன்றை செந்தில்வேல் போட்டுவிட்டார்..இன்னும் சில இருக்கின்றன..அதை உங்கள் பாணியில் அனலைஸ் செய்யுமேன்..(வேண்டும் வேண்டும் உங்கள் உறவு..இ.டி.சி) (பிகு செய்து கொண்டீர்களானால் ஹைதராபாத்திற்கு வந்து திட்வேன் :) )

Russellrqe
3rd August 2015, 01:54 PM
TRICHY - 1975 RARE ADVTS

http://i61.tinypic.com/6e2gis.jpg

Russellrqe
3rd August 2015, 01:55 PM
http://i58.tinypic.com/6og09y.jpg

Russellrqe
3rd August 2015, 01:57 PM
http://i58.tinypic.com/2hgdypw.jpg

Russellrqe
3rd August 2015, 01:58 PM
http://i58.tinypic.com/11aijbk.jpg

Russellrqe
3rd August 2015, 01:59 PM
http://i57.tinypic.com/ojebgj.jpg

Russellrqe
3rd August 2015, 02:00 PM
http://i60.tinypic.com/dob7ro.jpg

Russellrqe
3rd August 2015, 02:03 PM
http://i61.tinypic.com/2j6yp2.jpg

Russellrqe
3rd August 2015, 02:04 PM
http://i61.tinypic.com/537lle.jpg

chinnakkannan
3rd August 2015, 02:06 PM
வாசு சார்.. வாணிஸ்ரீ பிறந்த நாளாமே இன்னிக்கு..

*

தபால் காரன் தங்கை..படம் பார்த்ததில்லை..ஆனால் கல்லணை பார்த்திருக்கிறேன் கல்லூரிக்காலத்தில் புகையாக இருக்கிறது நினைவுகள்.. பார்த்த போது மிக மகிழ்ந்ததும் நினைவில்..

*

கரிகாலன் கட்டி வைத்தான் கல்லணை
நான் கண்களுக்குள் கட்டி வைத்தேன் கண்ணனை

காவிரி பெருக்கெடுத்தால் கொள்ளுமிடம் கொள்ளிடம்
காதல் பெருக்கெடுத்தால் ?
காதல் பெருக்கெடுத்தால் புகலிடம் பெண்ணிடம்

பன்னிரண்டு நூற்றாண்டு சென்றது
அணை பழுதில்லாமல் காலங்களை வென்றது
அந்தக்கால பெண்மை போன்ற அணையிது
குலம் அழுத்தமாக வாழ வைக்கும் துணையிது

காவிரியின் கெண்டை என்ன துள்ளுது
உன் கண்ணைப் பார்த்து சொந்தம் என்று சொல்லுது
தேக்கிய நீர் திறந்துவிட்டால் வெள்ளமே
ஆசை தேக்கியதை திறந்து விட்டால் வேகமே

https://youtu.be/9xdy8P6rFjw

vasudevan31355
3rd August 2015, 02:07 PM
//விஜயா'.

நிறைய எழுதி விட்டேன் இதைப் பற்றி.//

ஓய்.. நீர் எங்கே இதை ப்பற்றி எழுதியிருக்கிறீர்..எந்தபாகம்..பாகம் சொல்லி பக்கம்குறிக்கவும்! :)

எம் ஆர் ராதா டூயட் படம் பற்றி எழுதியிருக்கிறீரா..

( ck திட்டுவதும் குறையும் ----) // ரவி.. நான் இனிமே திட்டலீங்ணா.. வாங்க வாங்க ஜாலியா..வேணும்னா ஒங்களுக்கு ஒரு ஹோம் ஒர்க்..வாசு ஒன் லைனராக செந்தில்வேல் போஸ்டிற்கு பதிலாக எழுதிய சில ந.தி பாடல்களில் ஒன்றை செந்தில்வேல் போட்டுவிட்டார்..இன்னும் சில இருக்கின்றன..அதை உங்கள் பாணியில் அனலைஸ் செய்யுமேன்..(வேண்டும் வேண்டும் உங்கள் உறவு..இ.டி.சி) (பிகு செய்து கொண்டீர்களானால் ஹைதராபாத்திற்கு வந்து திட்வேன் :) )


படம் போட்டு பாகங்களைக் குறிக்கவா?:) சின்னா! லஷ்மி கிளப் டான்ஸ் முதற் கொண்டு, 'நேற்று வேறு இன்று வேறு நாளை வேறு' ஜெய், மேஜர் பாடல், இரு லஷ்மிக்களும் பாடும் பாடல்கள் வரைக்கும், நானும், ராகவேந்திரன் சாரும் அலசோ அலசு என்று அலசி விட்டோம். இன்னும் கேட்டால் விஜயா (vijeya) வின் ஆங்கில எழுத்துப் பிழை கூட சொல்லி விட்டோமாக்கும். தங்கை படத்தின் டைட்டிலில் விஜயா படத்தின் மியூசிக் ஓடுவதைக் கூட பிட்டு பிட்டு வைத்து விட்டோமே. ஆனால் எந்த பாகம் என்று தேட வேண்டும்.

இப்போதுதான் கல்யாண ராமனுக்கும், கண்ணான ஜானகிக்கும் காதல் நேரம் ஒதுக்கினேன். அதுக்குள்ளே என்.எல்.சி நிர்வாகம் மாதிரி பெண்டு நிமிர்த்தப் பார்க்கிறீரே!:) இது நியாயமா?

இப்படியெல்லாம் பண்ணினால் இங்கயும் ரவி சார் மாதிரி ஸ்ட்ரைக் செய்வேனாக்கும்.:) கபர்தார். :)

//எம் ஆர் ராதா டூயட் படம் பற்றி எழுதியிருக்கிறீரா..//

இல்லை தல. அமர்க்களம் தல. இப்பதான் நேரம் கிடைச்சுது. பார்த்தேன். அசத்திட்டீங்க. ஆமாம். எவ்வளவு நாழி தேடினீங்க. பாவம். இதே போல ராமதாஸ் டூயட் ஒன்னு இருக்குதாம். கொஞ்சம் தேடிக் கொடுங்களேன்.:)
இப்பல்லாம் ரொம்ப அபூர்வமா கொடுக்க முயற்சி பண்றது இங்கே தெரியுது சின்னா! வாழ்க! வளர்க!:)

vasudevan31355
3rd August 2015, 02:09 PM
//வாசு சார்.. வாணிஸ்ரீ பிறந்த நாளாமே இன்னிக்கு..//

தப்பான அட்ரெஸ். விலாசம் மாறிடுச்சி :)

vasudevan31355
3rd August 2015, 02:14 PM
செம பாட்டு சின்னா!

ரொம்பவே பிடிக்கும். நன்றி தலைவரே!

chinnakkannan
3rd August 2015, 02:15 PM
//தப்பான அட்ரெஸ். விலாசம் மாறிடுச்சி // ஓஹ்..எங்க ஊர்க் காரவுகளைச் சொல்றீகளா..வந்துடுவார்..(முரளி தானே)

RAGHAVENDRA
3rd August 2015, 02:19 PM
தப்பான அட்ரெஸ். விலாசம் மாறிடுச்சி

ஒரு பிரம்மாஸ்திரம் இருக்கு... அதைப் போட்டாப் போதும் வரவேண்டியவஹ வந்துடுவாஹ...

அது என்ன.. முரளி சாரைக் கேட்டால் தெரியும்.. அவர் சொன்னால் அடுத்த நிமிஷம் பிரயோகமாகிடும் அந்த அஸ்திரம்...

RAGHAVENDRA
3rd August 2015, 02:23 PM
வாசு சார்
மாணவன் ... தங்கள் பதிவு சூப்பர்.. அதுவும் படத்தைப் பற்றிய கருத்து சூப்பரோ சூப்பர்..
இதில் ஒரு விஷயம் .... பிளாசா வில் - நம்ம மெட்ராஸில் தான் சொல்ரேன்.. நமக்கு வேற ஊர் தெரியாதே.. நல்ல வசூல்..

கமல் நூறு படம் பட்டியல் வந்த போது அதில் மாணவன் மற்றும் அன்புத்தங்கை இடம் பெறவில்லை. அப்புறம் சேர்த்தார்களா தெரியவில்லை.. ராஜபார்வை 100வது படமாக அறிவிக்கப்பட்டபோது எனக்கு தெரிந்து அந்த நூறில் மாணவன், அன்புத்தங்கை ...ம்ஹூம்..

vasudevan31355
3rd August 2015, 02:50 PM
//தப்பான அட்ரெஸ். விலாசம் மாறிடுச்சி // ஓஹ்..எங்க ஊர்க் காரவுகளைச் சொல்றீகளா..வந்துடுவார்..(முரளி தானே)

மக்கு கண்ணா! மக்கு கண்ணா!,

தெரியலயா? கோவிந்தா! கோபாலா! கிருஷ்ணா! பாண்டுரங்கா!

vasudevan31355
3rd August 2015, 03:02 PM
சின்னா!

நீங்கள் 'தபால்காரன் தங்கை' பாடல் பதித்ததும் எனக்கு ஒன்று நினைவு வந்து விட்டது. அப்போது கடலூர் தங்கராஜ் மைதானத்தில் பெரிய பொருட்காட்சி ஒன்று நடைபெற்றது. நானும் அம்மாவும் இரவு பொருட்காட்சி சென்று பார்த்து விட்டு அன்று அங்கு நடை பெற்ற 'சோ' வின் 'முகமது பின் துக்ளக்' நாடகம் பார்த்தோம். 1970 என்று நினைக்கிறேன். ஏகத்துக்கும் கூட்டம். அப்போதெல்லாம் அது படமாக வரவில்லை. பின் கடலூர் துறைமுகம் கமர் திரையரங்கில் 'தபால்காரன் தங்கை' படம் ஓடிக் கொண்டிருந்தது. பின் அம்மவை அரி அரி என்று அரித்து செகண்ட் ஷோ அந்தப் படத்தைப் பார்த்து விட்டு வீடு போய் சேர்ந்தோம். அப்போதைய சிறு வயது ரசனைக்கு ஏற்றவாறு படம் இல்லை அதனால் தியேட்டரில் தூங்கி விட்டேன்.

பின்னால் இந்தப் படம் ரீ-ரிலீஸில் வரவே இல்லை. பின் டிவிடி தான். அப்புறம் பார்த்தால் படத்தில் எனக்குப் பிடித்த சைலஸ்ரீ.:) அட்டகாசமான ஒரு டான்ஸ். விடுவோமா?

எங்கே தேடிக் கண்டு பிடித்து அண்ணனுக்குப் போடும் பார்ப்போம். அண்ணன் தூங்கி எழுந்து ரிலாக்ஸாகப் பார்ப்பேனாக்கும்.:) பாட்டு வரியெல்லாம் கேட்கப்படாது.

Russellrqe
3rd August 2015, 03:03 PM
HAPPY BIRTHDAY TO VANISREE
http://i60.tinypic.com/15p517t.jpg
C.K NOW O.K
https://youtu.be/cGsLuQPy3y8

vasudevan31355
3rd August 2015, 03:06 PM
ரவி சார்!

இந்தக் காரணமெல்லாம் ஏற்றுக் கொள்ளப் படாது.:) நீங்கள் வந்து பதிவுகள் இட்டே தீர வேண்டும். உங்கள் பதிவுகளுக்கென்று நிச்சயம் ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது. மறந்து விடாதீர்கள். சி.க கிளியரென்ஸ் கொடுத்து விட்டாரே! அவரை மஸ்கட்டிலிருந்து ஹைதராபாத் வரவழைக்கணுமா?:) வாங்க சார். உங்களுக்காக எல்லோரும் இங்கு வெயிட்டிங்.

chinnakkannan
3rd August 2015, 03:10 PM
குமார் சார்.. ஆவணங்க்ள் பதிவுகள் வழக்கம்போல ஆஹா..

ஆனாக்க்க..என்னன்னாக்க....


வாணிஸ்ரீ பர்த்டே விஷ் பண்ணினது ஓ.கே..அதுக்காக அவஸ்யம் இந்தக் காலப் படம் போடணுமா என்ன ?! :)

chinnakkannan
3rd August 2015, 03:14 PM
//எங்கே தேடிக் கண்டு பிடித்து அண்ணனுக்குப் போடும் பார்ப்போம். அண்ணன் தூங்கி எழுந்து ரிலாக்ஸாகப் பார்ப்பேனாக்கும். பாட்டு வரியெல்லாம் கேட்கப்படாது.// தேடிக் கண்டுபிடிச்சுட்டேனே..ஆனா நீங்க கேளுன்னு சொன்னாலும் என்னால் இப்பக் கேக்க முடியாத் :sad: :) என்னமோ மைனா மாட்டிக்கிட்டான்னு ஆரம்பிக்குதாமா..

https://youtu.be/oyJPcmnFmjg

eehaiupehazij
3rd August 2015, 05:35 PM
மாற்றார் தோட்ட மதுர கானங்கள்

பகுதி 27 : ஜீன் கெல்லி / GENE KELLY சிங்கிங் இன் தி ரெயின் புகழ் ஹாலிவுட் நடன/பாடல்/ஆடல் கலைஞர்!

விக்கிபீடியாவிலிருந்து .....


Eugene Curran "Gene" Kelly (August 23, 1912 – February 2, 1996) was an American dancer, actor, singer, film director, producer and choreographer. He was known for his energetic and athletic dancing style, his good looks, and the likable characters that he played on screen.

Best known today for his performances in films such as An American in Paris (1951), Anchors Aweigh (1945), and Singin' in the Rain(1952), he was a dominant force in musical films until they fell out of fashion in the late 1950s. His many innovations transformed the Hollywood musical and he is credited with almost single-handedly making the ballet form commercially acceptable to film audiences. Kelly received an Academy Honorary Award in 1952 for his career achievements. He later received lifetime achievement awards in the Kennedy Center Honors (1982), and from the Screen Actors Guild and American Film Institute. In 1999, the American Film Institute also numbered him 15th in their Greatest Male Stars of All Time list.

முதல் தர நடனக் கலைஞர்!
சந்திரபாபு.... ஷம்மிகபூர் முதல் பிரபுதேவா வரை இவரது நிழல் படியாத நடன ஸ்டெப்ஸ் இல்லை !!

அன்கர்ஸ் அவே Anchors Aweigh திரைப்படத்தில் புகழ் பெற்ற கார்டூன் ஜெர்ரியுடன் அசத்தலான நடனப் பாடல்!

https://www.youtube.com/watch?v=ZUIhu7_Hryg

unimaginable, inimitable and amazing steps!!

https://www.youtube.com/watch?v=RfhRzpyOb7c


அமெரிக்கன் இன் பாரிஸ் படத்தில் ...

https://www.youtube.com/watch?v=HjhU-1menXQ

https://www.youtube.com/watch?v=IhChMAzFP9c

எக்காலத்திலும் நம்பர் ஒன் இசை நடனப் படமான சிங்கிங் இன் தி ரெயின்...அமர்க்களமான நடனங்கள்!!

https://www.youtube.com/watch?v=w40ushYAaYA

https://www.youtube.com/watch?v=7YWBOfsXsDA

https://www.youtube.com/watch?v=tciT9bmCMq8

https://www.youtube.com/watch?v=_fzPf8GL0mw

madhu
3rd August 2015, 06:27 PM
சிக்கா...

கரிகாலன் கட்டி வைத்த கல்லணையையும் மாட்டிக்கிட்ட மைனாவையும் கண்டு பிடிச்சு போட்ட உங்க துப்பறியும் இலாகாவை விட்டு அதே படத்திலிருந்து எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய "பொறுத்துக்கோ ஐயா பொறுத்துக்கோ" பாட்டையும் கண்டு பிடிச்சு போடச்சொல்லுங்க.. இல்லாட்டி அடுத்த சென்னை டிரிப்பில் ஜிகிர்தண்டா வாங்கித் தர மாட்டேனுங்கோ..

chinnakkannan
3rd August 2015, 06:40 PM
மதுண்ணா பொறுத்துக்காதீங்க..இந்தோ.. பட் இது ஆடியோவாம்..கேக்குமான்னும் எனக்குத் தெரியாது :)


http://www.inbaminge.com/t/t/Thabalkaran%20Thangai/


குமார் சார் தாங்க்ஸ் :) அந்த க் குட்டி ப்ளாக் அண்ட் ஒய்ட் படம் நல்லா இருந்துச்சே! :)

RAGHAVENDRA
3rd August 2015, 07:06 PM
சிக்கா...

கரிகாலன் கட்டி வைத்த கல்லணையையும் மாட்டிக்கிட்ட மைனாவையும் கண்டு பிடிச்சு போட்ட உங்க துப்பறியும் இலாகாவை விட்டு அதே படத்திலிருந்து எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய "பொறுத்துக்கோ ஐயா பொறுத்துக்கோ" பாட்டையும் கண்டு பிடிச்சு போடச்சொல்லுங்க.. இல்லாட்டி அடுத்த சென்னை டிரிப்பில் ஜிகிர்தண்டா வாங்கித் தர மாட்டேனுங்கோ..

அப்படிப் போடுங்க... தூள் மது... பாப்போம் சி.கா. வீடியோவுக்கு என்ன செய்றாருன்னு..

Richardsof
3rd August 2015, 07:32 PM
இனிய நண்பர் குமார் சார்

திருச்சி நகரத்தில் வெளிவந்த சிவாஜி இதழில் இடம் பெற்ற படங்களின் விளம்பர பதிவுகள் அனைத்தும் அருமை ..

இனிய நண்பர் வாசு சார்
நேரமின்மையால் திரியில் பதிவுகள் வழங்க இயலவில்லை . ஆனாலும் இத்திரியில் இடம் பெற்ற அத்தனை பதிவுகளையும் ரசித்து படித்து கொண்டு வருகிறேன் . நீங்கள் கூறியது போல் திரியின் ஜாம்பவானாகிய திரு கார்த்திக் அவர்களின் பதிவு இடம் பெற்று நீண்ட நாட்களாகி விட்டது .தேவிகா அண்ணியாரின் படமோ பாடலோ இடம் பெற்றால் ஒரு வேளை வருவார் என எண்ணுகிறேன் . மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் அவர் பதிவிட்ட பொன்னந்தி மாலை பொழுது பாடல் பதிவை தினமும் படித்து ரசித்து வருகிறேன் .

madhu
3rd August 2015, 07:54 PM
சிக்கா... ஆடியோ கேட்டிருக்கேன். இருந்தாலும் தாங்க்ஸ்.... வீடியோவைக் கண்டு புடிச்சாத்தான் ஜிகிர்தண்டா..

( அது சரி.. நீங்க லிங்க் கொடுத்த பக்கத்தில் இந்தப் படத்தில் மாணிக்க மகுடம் சூட்டிக் கொண்டாள் பாட்டையும் சேர்த்துட்டாங்க கவனிச்சீங்களா ? )

Murali Srinivas
3rd August 2015, 08:16 PM
வாசு,

மிக்க நன்றி. இந்த பாடல் நீங்கள் சொன்னது போல் சுசீலா எஸ்பிபி குரல்களில் தேவாமிர்தமாய் ஒலிக்கும். அந்த ஹம்மிங்கும். நான் முன்பே சொன்னது போல் சரணத்தின் இறுதியில் வரும் அந்த வார்த்தைகளை நீட்டியபடி பாடும் (மணநாள் தேடினாள்) அந்த பாவமும் பிடிக்கும். என்ன ஒன்று இந்த சரணத்தின் இதே ட்யுனை புகுந்த வீடு படத்தில் செந்தாமரையே பாடலுக்கும் சரணத்தில் பயன்படுத்தியிருப்பார்கள் சங்கர் கணேஷ்.
நீங்கள் குறிப்பிட்ட சின்ன சின்ன பாப்பா பாடலை ஒரு இங்கிலீஷ் படத்திலிருந்து சுட்டிருப்பார்கள் சங்கர் கணேஷ். City City Bang Bang என்ற படம். மதுரை பரமேஸ்வரியில் வந்தது. அதிசயமாக அந்த படத்தில் பாடல் வரும். City City Bang Bang Bang Bang என்று வரும் அந்த பாடலின் ட்யுனை அப்படியே பயன்படுத்தியிருப்பார்கள். விசிலடிச்சான் குஞ்சுகளா பாடலில் கமலைப் பார்த்தால் வேடிக்கையாக இருக்கும்.

இந்த மாணவன் படம் ஒருவகையில் நம்மை பாதித்த படம். பாதித்த என்றால் நமது பிரிஸ்டிஜ் பத்மநாபனை பாதித்த படம் எங்கள் மதுரையில். இதை பற்றி முன்பே குறிப்பிட்டிருக்கிறேன். வியட்நாம் வீடு மதுரை ஸ்ரீதேவியில் பிரமாதமாக ஓடிக் கொண்டிருந்த நேரம்.

வியட்நாம் வீடு படத்தை ஒரு சாதாரண லெவல் விநியோகஸ்தர் என்று சொல்லக்கூடியவர்.வெளியிட்டிருக்க மாணவன் படத்தை வெளியிட்டது கிழக்கரை யாசின் குழுமத்தை சேர்ந்த சேது பிலிம்ஸ். மாணவன் வெளியான நாள் 1970 ஜூலை 10. ஸ்ரீதேவி அரங்க உரிமையாளரிடம் மாணவன் படத்தை அங்கேதான் வெளியிட வேண்டும் என்று சேது பிலிம்ஸ் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தனர்

வியட்நாம் வீடு holdover விடாமல் ஓடிக் கொண்டிருந்தது. அந்த 13வது வாரம் ஞாயிற்றுக்கிழமை (86-வது நாள்) மாலைக்காட்சி கூட ஹவுஸ்ஃபுல். சிந்தாமணியில் கூட ரிலீஸ் செய்திருக்கலாம். அங்கே ஓடிக் கொண்டிருந்த படமும் அதே நாள்தான் (ஜூலை 9 )கடைசி நாள். ஆனாலும் ஸ்ரீதேவியில்தான் வெளியிட வேண்டும் என்று சேது பிலிம்ஸ் நிர்பந்தம் செய்து மாணவன் படத்தை ரிலீஸ் செய்தனர். அதனால் 90 நாட்களில் வியட்நாம் வீடு எடுக்கப்பட்டு விட்டது. 100 நாள் லிஸ்டில் சென்னை கோவை, திருச்சி சேலம் ஆகிய நகரங்களோடு சேர்த்து இடம் பெற்றிருக்க வேண்டிய மதுரை இந்த சதியினால் அந்த வாய்ப்பை இழந்தது. அந்த காரணத்தினாலும் மாணவன் எப்போதும் என் நினைவில் நிற்கும்.

முந்தைய எஸ்பிபி பாடல்களில் பௌர்ணமி நிலவில் அருமையான பாடல். கொஞ்சம் மூக்கால் பாடியிருந்தாலும் கூட (கம்பன் தமிழோ பாட்டினிலே) நல்ல இனிமை. அதுவும் படத்தின் திருப்புமுனை காட்சி வேறு. 2010 நவம்பரில் வாலியின் 80 வது பிறந்தநாள் விழாவும் அவர் பாடல்களின் தொகுப்பான வாலி 1000 புத்தக வெளியீட்டு விழாவின்போது பின்னணி இசை இல்லாமல் எஸ்பிபி மேடையில் இந்த பாடலை பாடியபோது அதுவரை அசிரத்தையாக அலைபேசியில் விளையாடிக் கொண்டிருந்த கமல் முகம் நிமிர்ந்து ரசித்த காட்சி இப்போதும் மனதில் நிற்கிறது. .

காவியத் தலைவி பற்றி அது நடிகர் திலகத்திற்கு கிடைத்திருக்கக் கூடாதா என்றும் சொல்லியிருந்தீர்கள். எனக்கு தெரிந்து சௌகார் முதலில் நடிகர் திலகத்தைத்தான் அணுகினார். ஆனால் கால்ஷீட் இடித்தது ஒரு காரணம் என்றால் அப்போது கேபி இயக்கத்தில் எதிரொலி படத்தில் நடிகர் திலகம் நடித்துக் கொண்டிருந்த காரணத்தினால் repetion வேண்டாம் என்று நடிகர் திலகம் (அல்லது விசிஷண்முகம்?) நினைத்தார் என்றும் சொல்வார்கள்.

தொடருங்கள்!

அன்புடன்

chinnakkannan
3rd August 2015, 08:22 PM
இந்தப் பூஞ்சிட்டு மான்குட்டி போகின்ற போகிலே போகட்டும்

பொறுத்துக்கோ ஐயா பொறுத்துக்கோ... ம்ம் இப்பத் தான் கேக்கறேன்..


இப்படியா சிக்காவை டீல்ல வுடறது.. மதுண்ணா ராகவேந்தர்..மோசம்..:) ம்ம் தேடறேன்

இந்த மாட்டிக்கிச்சு மைனாவையும் தான்.. .ஜாக்பாட் ம்ம்..

அஞ்சுகுதிரை ஒண்ணா வந்தா ரூபா பதினஞ்சு லட்சம்
அதுல ஒண்ணு வரலேன்னா அவமானம் தான் மிச்சம்..யாராக்கும் லிரிக்ஸ் :)

vasudevan31355
3rd August 2015, 08:36 PM
சின்னா!

காலையிலே என்னைப் பாவம்னீங்க.:) இப்போ நீங்களே பாவமாயிட்டீங்க.:) போட்டு வாட்றாங்க சின்னப் புள்ளையை.:)

ஜெயலிதா ஜாக்பாட்
ஜெயசங்கர் ஜாக்பாட்.

vasudevan31355
3rd August 2015, 08:40 PM
சிக்கா... ஆடியோ கேட்டிருக்கேன். இருந்தாலும் தாங்க்ஸ்.... வீடியோவைக் கண்டு புடிச்சாத்தான் ஜிகிர்தண்டா..

( அது சரி.. நீங்க லிங்க் கொடுத்த பக்கத்தில் இந்தப் படத்தில் மாணிக்க மகுடம் சூட்டிக் கொண்டாள் பாட்டையும் சேர்த்துட்டாங்க கவனிச்சீங்களா ? )

நீங்க வேற. ஏ.வி.எம் வெப்சைட்டில ஹோம் பேஜில அவுங்க இதுவரைக்கும் தயாரிச்ச படத்தோட லிஸ்ட்ட போட்டிருக்காங்க. உதாரணத்துக்கு ஒன்னே ஒன்னு சொன்னேன். நிறைய தப்பு. பாலாஜி தயாரிச்ச பாபு படத்தை அந்த லிஸ்ட்ல சேர்த்திருக்காங்க. இன்னும் நிறைய தவறு. என்ன காரணமோ?

RAGHAVENDRA
3rd August 2015, 08:44 PM
அபூர்வ கானங்கள்

காலம் என்னோடு வரும் போது கடவுள் வருகின்றார்..
காதல் என் நெஞ்சைத் தொடும் போது என் தலைவன் வருகின்றார்..

திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன் இசையில் எஸ்.ஜானகி குரலில் நீண்ட நாட்களுக்குப் பின்

புதிய வாழ்க்கை திரைப்படப் பாடல்..

நன்றி வடவை பாஸ்கி

https://www.youtube.com/watch?v=zi8bAUy3v4w

RAGHAVENDRA
3rd August 2015, 08:46 PM
வாசு சார்
கோவிச்சுக்காதீீங்க.. இது அபூர்வ கானங்கள் என்பதால் இங்கு அறிமுகம் மட்டும் செய்கிறேன்.
உங்களுடைய வரிசையில் வரும் போது நீங்கள் எங்களுக்கு இதைப் பற்றிய விரிவான பதிவினைத் தரவேண்டுகிறேன்.

நீண்ட நாட்களுக்குப் பின்
புதிய வாழ்க்கையிலிருந்து பேசு மனமே பேசு.. காணொளி...

https://www.youtube.com/watch?v=omfaWZjatBk

ஒரு வேளை புதிய வாழ்க்கைப் பாடல்களைப் பகிர்ந்து கொண்டு விட்டோமோ...

மதுர கானம் திரிகளின் வேகத்தில் இதெல்லாம் மறந்து விடுகிறது..

RAGHAVENDRA
3rd August 2015, 08:50 PM
அபூர்வ கானங்கள்

அல்லி திரைப்படத்திலிருந்து

இசையரசியின் குரலில் இனிமைக்கோர் உதாரணமான பாடல்..
திரை இசைத் திலகத்தின் கைவண்ணத்தில் மலர்ந்த மதுர கானம்..

உன்னையன்றி யாரிடம் என் நிலையைச் சொல்வேன்

https://www.youtube.com/watch?v=5dECa9jgb7A

RAGHAVENDRA
3rd August 2015, 08:55 PM
அபூர்வ கானங்கள்

இரண்டு மனம் .. தலைவரின் வசந்த மாளிகை பாடலின் தாக்கத்தில் படத்தின் பெயரே இரண்டு மனம்.. சுரேஷ் சுலக்ஷணா நடித்த திரைப்படத்தில் இடம் பெற்ற இப்பாடல் ஜெயச்சந்திரனுக்கு புகழ் வாங்கித் தந்த பல பாடல்களில் ஒன்று..

கார்கால மேகம் உன் கண்கள் மீது ஊர்கோலம் போவதென்ன..

அந்தப் பெண் கண்ணீர் சிந்துவதை எவ்வளவு அழகாக வர்ணித்திருக்கிறார் கவிஞர்..

பாடல் முழுதுமே இலக்கிய மயம்...

https://www.youtube.com/watch?v=4Iw2iReB5ys

RAGHAVENDRA
3rd August 2015, 09:00 PM
அபூர்வ கானங்கள்

இன்னுமோர் அபூர்வ கானம்.. இதுவும் ஆரம்ப கால எஸ்.பி.பாலா... வாசு சார் கோவிக்கக் கூடாது.. இந்தப் பாடல் பட்டியலில் வருமா தெரியாது..
இருந்தாலும் ஓர் அறிமுகமாக அமையட்டுமே..

இந்தப் பாடல் பலர் கேட்டிருக்க வாய்ப்பில்லை.. இசைத்தட்டும் மிகக் குறைவாகத் தான் வெளியிடப்பட்டது. ராணி யார் குழந்தை படத்தில் டி.வி.ராஜு இசையில் இடம் பெற்ற பாடல்...

டிங்கிரி டிங்கிரி டால்...

https://www.youtube.com/watch?v=0xOUKtBZiO8

மேற்கண்ட அபூர்வ கானங்களுக்கு நன்றி திரு வடவை பாஸ்கி

RAGHAVENDRA
3rd August 2015, 09:07 PM
அபூர்வ கானங்கள்...

அபூர்வமானது மட்டுமல்ல.. நெஞ்சில் பசுமரத்தாணி போல் ஆழ ஊறிவிட்ட பாடல்..

மெல்லிசை மன்னரின் வெறியனாக என்னை மாற்றிய பாடல்.. கோடிக்கணக்கான முறை கேட்டாலும் நெஞ்சைத் தொடும் பாடல்..
என்ன எழுதுவது எப்படி எழுதுவது...

அவரைத் தவிர வேறு யாராலும் கற்பனை செய்ய முடியாத அற்புத கானம்..

ஒரு வாரிசு உருவாகிறது படத்தில் எந்தன் பூவனத்தில் இன்று வசந்தம்..

மலரே மலரே தூங்காதே..

இந்த மலரே மலரே இரண்டு வார்த்தைகளிலேயே பாலா நம்மைக் கட்டிப் போட்டு விடுவார்..

இதற்கு மேலும் நான் சொல்ல வேண்டாம்.. நீங்களே அனுபவியுங்கள்..உணருங்கள்..

https://www.youtube.com/watch?v=IYz4bAT3RYs

chinnakkannan
3rd August 2015, 09:16 PM
நிஜம்மாவே குழந்தைய ரொம்ப வாட்டிட்டாங்க..:) தேடினா கிடைக்கலை..பொறுத்துக்கோஐயாவையும் அபூர்வ கானஙக்ள்ல சேர்த்து ராகவேந்திரர் தான் போடணும்..அல்லது மது..

பர்த்தியா நான் ஒரு பாட் போடறேன்.. இந்தப் பாட்ட சர்ச் பண்ணா ஒரே ஷாக்.. மனதைக்கவரும் மதுர கானங்கள் பாகம் 2 ந்னு வந்துச்சு..வந்துச்சா ஃபுல்லா ஸ்க்ரோல் பண்ணியும் சிக்கலை.. அப்புறம் பொறுமையா மறுபடி படிக்க.. கார்த்திக் தான் ஒரே ஒரு வரி எழுதியிருந்தார் இந்தப் பாட்டில் முத்து ராமனுக்கு சீர்காழி குரல் பொருத்தமாக இருக்கும் என..ஹப்பாடி தப்பிச்சேன்..அது என்ன பாட்டுன்னா...

வெண்பளிங்கு மேடை கட்டி..

தங்கரதம் ஏறி வந்து மங்கை முகம் பார்த்தவரே
பொங்கிவரும் ஆசையிலே பங்குபெறக் கூடாதோ..(ம்ம் மணிமாலாவிடம் என்ன நாசூக்கு..!)

https://youtu.be/4z_dvy2x-XE

போட்டாச் என்றால் பா.சொ.ப.சொ ( பாகம் சொல்லி பக்கம் சொல்க :) )

rajraj
3rd August 2015, 09:20 PM
http://www.youtube.com/watch?v=ZTTzcXSLjhI

eehaiupehazij
3rd August 2015, 09:29 PM
Dear Rajraj sir

Thanks for uploading the enchanting theme song from Chitti Chitti Bang Bang produced by the James Bond company by Broccoli for a change from the Bond genre of movies. A drastic contradiction towards capturing the hearts of children!
senthil

rajeshkrv
3rd August 2015, 09:36 PM
chitti chitti bang bang .. awesome movie..

vasudevan31355
3rd August 2015, 09:42 PM
ராகவேந்திரன் சார்,

அருமை. மீண்டும் 'அபூர்வ கானங்கள்' தொடரை திரியில் பார்க்க சந்தோஷமாய் இருக்கிறது. ஒவ்வொன்றாகப் பார்க்க வேண்டும். மிக்க நன்றி.

இன்று தாங்கள், சின்னா, மது அண்ணா, குமார் சார் என்று பதிவுகள் அட்டகாசம். வேலை நிமித்தம் வராத நண்பர்கள் திரும்ப வந்தால் திரி இன்னும் களை கட்டும். அனைவரும் நாளை வருவார்கள் என்று நம்புவோம். குறிப்பாக ரவி சார், கல்ஸ், ஆதிராம் சார்.

நானும் இன்று ஒரு அபூர்வ பாடலை வாணிஸ்ரீ பிறந்த நாளுக்காக தேர்ந்தெடுத்து வைத்தேன். அவருக்கு நமது மதுர கானங்கள் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

பாடகர் திலகமும், இசையரசியும் பாடும் அட்டகாசமான பாடல்.

எல்லாப் பாடல்களுமே அருமையாய் அமைந்த 'எதிர்காலம்' படப் பாடல். இசை 'மெல்லிசை மன்னர்'.

ராகவேந்திரன் சார், மது அண்ணா!

இந்தப் பாடலில் ஒரு சிறு சந்தேகம். பாடலின் துவக்கத்தில் வரும் அந்த ஆண்குரல் ஹம்மிங் யாருடையது? (ம்ஹூஹூம் ம்ஹூஹூம்) உன்னிப்பாகக் கேட்டால் பாலா குரல் போல இருக்கிறது. அல்லது பொன்னுசாமியா? அல்லது வேறு யாராவதா? கண்டிப்பாக சௌந்தரராஜன் இல்லை.

பாட்டுப் புத்தகம் இருந்தால் தகவல்கள் தெரியும் என நினைக்கிறேன்.

பாட்டின் நடுவில் வரும் ஷெனாய் ஓசை பித்துப் பிடிக்க வைக்கிறது.

பொண்ணு ஏன் தானே சிரிக்குது
கண்ணு ஏன் நீரில் குளிக்குது
பூவைக் கிள்ளும் நினைப்போ
தன் பேரைச் சொல்லும் சிரிப்போ

பிள்ளை ஏன் தானே சிரிக்குது
கண்ணு ஏன் நீரில் குளிக்குது
பூவைக் கிள்ளும் நினைப்போ
தன் தேவை சொல்லும் சிரிப்போ

பட்டும் படாமல் கட்டிப் பிடித்தேன்
தொட்டும் தொடாமல் முத்து கொடுத்தேன்
முத்து கொடுத்தேன்

கட்டுப் படாமல் கையைத் தடுத்தேன்
வெட்கம் கெடாமல் கொட்டிக் கொடுத்தேன்
கொட்டிக் கொடுத்தேன்

மூங்கில் பந்தல் வெற்றிலைக் கொடி போல்
மார்பில் சாய்ந்தேன் ஆயிரம் தடவை

முன்னும் பின்னும் ஆசை இருந்தும்
முகத்தை ஏனோ மூடுவது புடவை

(சுசீலாவும், சௌந்தரராஜனும் இந்த இடத்தில் 'யய்யாயயயாயா' போடுவார்கள் பாருங்கள். அம்சமோ அம்சம்).

'யய்யாயயயாயா' 'யய்யாயயயாயா'
'யய்யாயயயாயா' 'யய்யாயயயாயா'

(பிள்ளை ஏன்)

ஆப்பிள் பழங்கள் தோப்பில் பறித்தேன் ('ஆப்பிள் பழங்கள்'வார்த்தையை அழகாய் உச்சரிப்பார் சௌந்தரராஜன்)
பார்த்துச் சுவைத்தேன் சேர்த்துக் குடித்தேன்
சேர்த்துக் குடித்தேன்

கண்ணை மறைத்தேன் மண்ணில் கிடந்தேன்
என்ன நினைத்தோ என்னைக் கொடுத்தேன்
என்னைக் கொடுத்தேன்

ஆஹா மஞ்சள் கன்னம் செந்நிறமாக
கொஞ்சம் தந்தேன் கொடுத்தது போக

மழையோ நதியோ வந்தது போலே
மயங்கி இருந்தே மணமகளாக

'யய்யாயயயாயா' 'யய்யாயயயாயா'
'யய்யாயயயாயா' 'யய்யாயயயாயா'

(பொண்ணு ஏன்)


https://youtu.be/8V8WXLQmukY

eehaiupehazij
3rd August 2015, 09:52 PM
காமெடியன்களின் ஷாம்பெயின் கலக்கல் மதுர கானங்கள்
பகுதி 6 : சாரங்கபாணி

கலைவாணர் காலத்திலும் அதற்குப் பின்னரும் கொடிகட்டிப் பறந்த நகைச்சுவை வித்தகர் திரு சாரங்கபாணி அவர்கள் !
மிஸ்ஸியம்மா அலிபாபாவும் நாற்பது திருடர்களும் குறிப்பிடத்தகுந்த படங்கள் !! தில்லானா மோகனாம்பாளில் எடுத்தவுடன் தவில் வசிக்கும் காட்சி இவருக்குப் பெருமை சேர்த்தது !!
அந்த வயதிலும் பாலையாவுடன் என்னவொரு போட்டி அடி!

https://www.youtube.com/watch?v=cPfu1r_NUjw

காதல் மன்னருடன் மிஸ்ஸியம்மா திரைப்படத்தில் அசத்தலான பாடல் இசை பங்களிப்பு !!
வஞ்சியரின் வார்த்தையிலே அர்த்தமே வேறுதான் ...அகராதியும் வேறுதான்!!

https://www.youtube.com/watch?v=daJdkHGeZ00

https://www.youtube.com/watch?v=T0MO7pNHXiY

அலிபாபாவில் இரண்டு பாடல் காட்சிகள் !!

பானுமதியின் முத்திரைப் பாடல் காட்சியில் சாரங்கபாணியாரின் இசை அசைவுகள்!
https://www.youtube.com/watch?v=nrdxKy2J0Zw

ஏக்கு பரதேசி மேரா தில் லேகயா என்று மகுடி இசை மேலோங்கி நிற்கும் பாஹன் என்னும் ஹிந்தி படத்தின் சாயலில்...மதுபாலாவின் மறக்கமுடியாத நடனப் பாடல்!!

https://www.youtube.com/watch?v=x0nwDVgmI50

சின்னஞ்சிறு சிட்டே எந்தன் சீனா கற்கண்டே ...ராஜம் இணைவில்!

https://www.youtube.com/watch?v=88qY0TghS5I

rajeshkrv
3rd August 2015, 09:59 PM
sivajisenthil sir. super
sarangapani my fav.. enna body language ... adeyappa... sabapathy, my wife and many more ..ellame super

vasudevan31355
3rd August 2015, 10:01 PM
//இந்தப் பாடல் பட்டியலில் வருமா தெரியாது//

நிச்சயமாக ராகவேந்திரன் சார். பட்டியலில் எப்போதோ உட்கார்ந்து விட்டது.:) விரைவில் விவரங்களுடன் வரும். உங்கள் அபூர்வ தேடல்கள் ஆச்சர்யப்பட வைக்கின்றன.

vasudevan31355
3rd August 2015, 10:03 PM
ஜி!

வணக்கம். நலமா? தங்கள் நல்ல உள்ளத்திற்கு நன்றி. விரைவில் நிலைமை சுமுகமாகும் என்று நம்புகிறேன். நீங்கள் மீண்டும் வந்து கலக்க ஆரம்பித்திருப்பது பெரு மகிழ்ச்சி.

vasudevan31355
3rd August 2015, 10:08 PM
செந்தில் சார்,

'ஏக்கு பரதேசி மேரா தில் லேகயா' தினம் தினம் நான் கேட்டு ரசிக்கும் பாடல். பதித்தமைக்கு நன்றி. நய்யரின் மகுடிக்கு எப்போதோ நான் அடிமை. மதுபாலா என்ன ஒரு அழகு! பரத் பூஷன் குழந்தை முகமும் ரொம்பப் பிடிக்கும். என்ன மாதிரி ஒரு இனிமையான பாடல்! நாள் முச்சூட கேட்டுக் கொண்டே இருக்கலாம். ஆமாம். வில்லன்களின் வில்லங்கப் பாடல்கள் அதுக்குள்ளே முடிஞ்சுடுச்சா?

RAGHAVENDRA
3rd August 2015, 10:08 PM
வாசு சார்
கையைக் கொடுங்கள்.. சூப்பரோ சூப்பர்.. வாணிஸ்ரீயின் பிறந்த நாளைக்கு...அருமையான பாடலைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள்..நெஞ்சைத் தொடும் இனிய பாடல்..
மெல்லிசை மன்னரின் பின்னணி இசையைப் பற்றிப் பக்கம் பக்கமாக எழுதலாம்.

தாங்கள் குறிப்பிட்ட அந்த ஹம்மிங்... எம்.எல்.ஸ்ரீகாந்தின் குரலாகத் தெரிகிறது. ஏனென்றால் அந்த 70களின் கால கட்டத்தில் இது போன்ற ஹம்மிங்கிற்கு அவரைத் தான் மெல்லிசை மன்னர் அழைப்பார். மற்றபடி குரலில் பல்வேறு எஃபெக்டுகளைக் கொண்டு வரவேண்டுமென்றால் சதன் அவர்களும், மேண்டலின் ராஜு அவர்களும் தருவார்கள்.

அதுமட்டுமின்றி எதிர்காலம், உத்தரவின்றி உள்ளே வா படங்கள் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் பாடல் பதிவுகள் செய்யப்பட்டவை என கேள்விப்பட்டிருக்கிறேன்.

பின்னணி இசையில் டி.எம்.எஸ் பல்லவியைப் பாடி முடித்தவுடன் சுசீலா பாடத் துவங்குதற்கு முன் வாணிஸ்ரீயின் நடனத்திற்குப் பின்னணியில் ஒரு அக்கார்டின் ஒலிக்கும். அட்டகாசம். கூடவே புல்லாங்குழல்...

அதுவும் நீங்கள் குறிப்பிட்ட அந்த ஹம்மிங்கின் போது தான் அந்த பாடலின் தாளமே துவங்கும். இவையெல்லாம் மெல்லிசை மன்னரின் மாபெரும் இசை மேதமைக்கு சான்று. வித்தியாசமாக சிந்திப்பார். எப்போது தாளம் துவங்குமென்று தெரியாது. ஆனால் எந்த தாளமென்றாலும் அதற்குள் பாடலின் சந்தங்கள் வந்து அமர்ந்து விடும்.
வாணிஸ்ரீ ஓடி வரும் போது வயலின்கள், பின் அதைத் தொடர்ந்து ட்ரம்பெட், அதைத் தொடர்வது புல்லாங்குழல், வைப்ரஃபோன் என அமர்க்களமாக இருக்கும். ஆனால் எதுவுமே பாடலைக் கெடுக்காமல் தனித்தனியே ஒலித்து இனிமையைக் கூட்டும். ஜெய்யின் வாயிலிருந்து சிகரெட்டை வாணி எடுக்கும் நேரத்தில் ஒரு ட்ரம்பெட் ஆரம்பிக்கும். ஆஹா..

அதற்குப் பிறகு தாளக்கட்டு மாறி, பாடல் வேகமெடுத்து பிறகு மீண்டும் தாளக்கட்டு மாறி தொடக்க நிலைக்கே வரும் லாவகம்...

திரை இசைச் சக்கரவர்த்தி யாயிற்றே...

அருமையான தேர்வு வாசு சார். பாராட்டுக்கள்.

RAGHAVENDRA
3rd August 2015, 10:12 PM
https://www.youtube.com/watch?v=RYTcHTbWl3s

வாணியின் பிறந்த நாளில் அவருடைய முதல் படப்பாடல் நினைவிற்கு வருகிறது.

பாடகர் திலகம் இசையரசியின் குரலில் இப்படி ஓர் இனிமையான பாடலை தொலைக்காட்சிகள் ஏனோ கண்டு கொள்வதில்லை.

கார்த்திக் சொல்வது போல பெரும்பாலான சேனல்கள் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கின்றன.

rajeshkrv
3rd August 2015, 10:15 PM
ஜி!

வணக்கம். நலமா? தங்கள் நல்ல உள்ளத்திற்கு நன்றி. விரைவில் நிலைமை சுமுகமாகும் என்று நம்புகிறேன். நீங்கள் மீண்டும் வந்து கலக்க ஆரம்பித்திருப்பது பெரு மகிழ்ச்சி.

நலமே .. நீங்கள் நலமா.
வர முடிந்தவரை வருகிறேன் ஜி.

eehaiupehazij
3rd August 2015, 10:25 PM
காமெடியன்களின் ஷாம்பெயின் கலக்கல் மதுர கானங்கள்
பகுதி 7 : 'சோ'

பிரசித்தி பெற்ற பத்திரிகையாளரான சோ ராமசாமி அவர்களின் தமிழ்த்திரை நகைச்சுவைப் பங்களிப்பும் மறக்க முடியாததே ! நடிகர்திலகத்தின் பார் மகளே பார் அறிமுகம்....நாகேஷுக்கு அடுத்த இடம் ..பொம்மலாட்டம் ஜாம்பஜார் ஜக்கு மனோரமா பாடல் காட்சியில் சோவின் முட்டைக் கண் கொனஷ்டைகள் நினைவில் நிற்கும்......
அவரது அரசியல் சட்டையர் முகமது பின் துக்ளக்,
நீலகிரி எக்ஸ்ப்ரெஸ்,தேன்மழை, அடிமைப் பெண், எங்கமாமா...குறிப்பிடத் தகுந்தவை !

https://www.youtube.com/watch?v=oiqJrRG1b7s

https://www.youtube.com/watch?v=vZ8zu_IPGjE

vasudevan31355
3rd August 2015, 10:26 PM
ராகவேந்திரன் சார்

கலக்கி விட்டீர்கள். பாடலில் ஒலிக்கும் அத்தனை வாத்தியக் கருவிகளின் பங்களிப்புகளை மிக அழகாக தொகுத்து வழங்கியதற்கு நன்றிகள்.

நீங்கள் சொன்னது போல இசைக் கருவிகளின் ஒலிகள் பாடலைக் கெடுக்காமல் அருமையாக காதில் வந்து விழுகின்றன. நான் ஒரு ஷெனாய் ரசிகன். எனவே இது போன்ற பாடல்கள் மிக மிகப் பிடிக்கும்.

இது போன்ற ஏனோதானோப் படங்களிலெல்லாம் 'மெல்லிசை மன்னர்' கொஞ்சமும் வித்தியாசம் பாராது உழைத்திருப்பார். அவருடைய பாடல்களால் மட்டுமே இந்த மாதிரிப் படங்களை நாம் இன்னும் நினைவில் கொண்டுள்ளோம். இது மறுக்க முடியாத உண்மை. அது போலத்தான் சங்கர் கணேஷ், குமார் இவர்களும்.

//ஜெய்யின் வாயிலிருந்து சிகரெட்டை வாணி எடுக்கும் நேரத்தில் ஒரு ட்ரம்பெட் ஆரம்பிக்கும்//

அருமையான கவனிப்பு ராகவேந்திரன் சார். நானும் ரொம்ப ரசித்தேன். எங்கள் ரசிக வேந்தரா கொக்கான்னானாம்.

அது போல சுசீலா 'தடுத்தேன்' எனும் போது 'தடுத்தே...(ஏ ஏ ஏ.ஏ).....ன்' என்று ஒரு வைப்ரேட் பண்ணுவார் பாருங்கள். அடி தூள்.

vasudevan31355
3rd August 2015, 10:30 PM
வாணியின் பிறந்த நாளில் அவருடைய முதல் படப்பாடல் நினைவிற்கு வருகிறது.

பாடகர் திலகம் இசையரசியின் குரலில் இப்படி ஓர் இனிமையான பாடலை தொலைக்காட்சிகள் ஏனோ கண்டு கொள்வதில்லை.

கார்த்திக் சொல்வது போல பெரும்பாலான சேனல்கள் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கின்றன.

2 x 9= 18 :)
3 x 8= 24 :)

eehaiupehazij
3rd August 2015, 10:47 PM
செந்தில் சார்,

'ஏக்கு பரதேசி மேரா தில் லேகயா' தினம் தினம் நான் கேட்டு ரசிக்கும் பாடல். பதித்தமைக்கு நன்றி. நய்யரின் மகுடிக்கு எப்போதோ நான் அடிமை. மதுபாலா என்ன ஒரு அழகு! பரத் பூஷன் குழந்தை முகமும் ரொம்பப் பிடிக்கும். என்ன மாதிரி ஒரு இனிமையான பாடல்! நாள் முச்சூட கேட்டுக் கொண்டே இருக்கலாம். ஆமாம். வில்லன்களின் வில்லங்கப் பாடல்கள் அதுக்குள்ளே முடிஞ்சுடுச்சா?

நன்றி வாசு சார்
மதுபாலாதான் இந்திய நடிகைகளில் வீனஸ் தேவதை ....நர்கிஸ் சம போட்டியாளராயினும்!
அவரது அபாரமான நடனத் திறமை அற்புதமான காட்சி நகர்வில் வெளிப்பட்ட படம் முகல் ஏ ஆஜம..திலீப் குமாருடன்...நடிகர்திலகம் மிகவும் மதித்த பிருதிவி ராஜ்கபூரின் ஆளுமை நிறைந்த பங்கேற்பில்....

https://www.youtube.com/watch?v=TdOS-0sIW-Y

https://www.youtube.com/watch?v=Kj6nveaC4uY

வில்லங்க கானங்கள் அவ்வளவுதான் வாசு சார் அவர்களுக்கப்புறம் வில்லன்கள் எல்லோரும் முன்னாள் கதாநாயகர்களே ..ஜெய் ரவி விஜயகுமார்....

rajeshkrv
3rd August 2015, 10:50 PM
நன்றி வாசு சார்
மதுபாலாதான் இந்திய நடிகைகளில் வீனஸ் தேவதை ....நர்கிஸ் சம போட்டியாளராயினும்!
அவரது அபாரமான நடனத் திறமை அற்புதமான காட்சி நகர்வில் வெளிப்பட்ட படம் முகல் ஏ ஆஜம் ..திலீப் குமாருடன்...பிருதிவிராஜ்கபூரின் ஆளுமை நிறைந்த பங்கேற்பில்....

https://www.youtube.com/watch?v=tdos-0siw-y

https://www.youtube.com/watch?v=kj6nveac4uy

வில்லங்க கானங்கள் அவ்வளவுதான் வாசு சார் அவர்களுக்கப்புறம் வில்லன்கள் எல்லோரும் முன்னாள் கதாநாயகர்களே ..ஜெய் ரவி விஜயகுமார்....

nargis arai ambalai..

eehaiupehazij
3rd August 2015, 11:03 PM
Mmmm...rajesh sir...!!

பாரதிராஜாவின் ஹீரோயின்களின் தலை சாய்த்த சிரிப்பின் மாடல் நர்கிஸ்தான் !!!

https://www.youtube.com/watch?v=AvXH3IOQFiQ

எந்தக் காலத்திலும் மனதை மயக்கும் தேன் மதுர கானம் !!

https://www.youtube.com/watch?v=y01uvU0UAoU

rajeshkrv
3rd August 2015, 11:04 PM
Madhubala and nargis poles apart..

chinnakkannan
3rd August 2015, 11:15 PM
//பொண்ணு ஏன் தானே சிரிக்குது
கண்ணு ஏன் நீரில் குளிக்குது//2 x 9= 18
3 x 8= 24// ஆஹா ரெண்டு வாணிஸ்ரீ பாடலுக்கும் அலசலுக்கும் வாசு, ராகவேந்திரருக்கு மிக்க நன்றி..

ம்ம் காதல் படுத்தும் பாடு தான் ஃபர்ஸ்ட் படமா.. நான் இந்தப் பாட் போடணும்னு எடுத்துவச்சுருக்கேனே.. சரி பரவாயில்லை..

*

சி.செ. உங்கள் ஆங்கிலப்பட பாடல்களுக்கு வியாழன் அல்லதுவெள்ளி என ப் பார்க்கப் போகிறேன்..ராகவேந்திரரின் அபூர்வ கானங்களும் தான்


சி.செ. இந்த சாரங்கபாணி தூள்.. நல்ல நடிகர்..சின்னஞ்சிறு சிட்டே எந்தன் சீனாக்கற்கண்டே நல்ல பாட்டு.. எனக்குப் பிடிக்கும்..

ஆனால் நடுவில் கொடுத்தீங்க பாருங்க ஒரு பாட்டு வாவ்.. எவ்ளோ நாளாச்சு மும்தாஜ் ஜெஹான் டெஹ்லவி.. பார்த்து.. (என் தாத்தாவின் க.க)

அந்தக் காலத்தில் அழகு, நடிப்பு என்பதற்கு அர்த்தமாக விளங்கியவர்..சொந்த வாழ்க்கை மிகச் சோகம்..

தேவதை பிறந்தது காதலர் தினத்தில்(14.2.33) இன் பாகிஸ்தான்..ஐந்தாவது மகளாகப் பிறந்து பின் டெல்லி பம்பாய் எனப் புலம்பெயர்ந்து குடும்பத்தைக் கவனிக்க ஸ்டூடியோக்களில் பயணித்து பின் ஹிந்திப்படவுலகில் மெல்ல நுழைந்து முன்னேறி பாடுபட்டு பின் திலீப் குமாரிடம் காதல் வயப்பட்டு அப்பா ஏற்காமல் போக –கிஷோர் குமாரைக் கைப்பிடித்து குடும்ப வாழ்க்கை வாழலாம் என்றால் அங்கும் விதியின் சிரிப்பு..

அழகாய் நடிப்புடன் அழகிய தேவதையாக மும்தாஜைப் படைத்த இறைவன் வேறொன்றும் தந்து விட்டான்..அவர் இருபத்தோராவது வயதில் ஹ்ருதயத்தில் ஓட்டை.. பின் நடிப்புத் தொழில் காதல் இன்ன பல ப்ரஷர் என உடல் நிலை சீர்குலையத்தான் செய்தது.
.
கடைசியில் தேவதையின் முப்பத்தாறாவது வயதில் வா என்று அழைத்துக் கொண்டுவிட்டான்.. மும்தாஜ் என ஆரம்பப் பெயருடன் பின் மதுபாலா என (Mughal-e-Azam மேலும் புகழ் சேர்த்தது) மின்னியவர் மறைந்தும் விட்டார் நோயினால்..

எப்போது மதுபாலா பார்த்தாலும் கொஞ்சம் மனம் வலிக்கும்..பலவிதமான காண்ட்ரவர்ஸிக் கதைகள் படித்திருந்தாலும்.. நல்ல அழகி. நல்ல நடிப்பு..ம்ம்


https://youtu.be/tssqks17h5w

rajraj
3rd August 2015, 11:15 PM
https://www.youtube.com/watch?v=AvXH3IOQFiQ


There is a Tamil song in the same tune by M.S.Rajeswari --madhi kulavum yaazhisaiye kaNNan kuzhal isai aavaayo.....
I coould not locate it in youtube. If any of you find it please post. Thanks! :)

chinnakkannan
3rd August 2015, 11:16 PM
நான் ராஜேஷை வழி மொழிகிறேன் சி.செ :)

eehaiupehazij
3rd August 2015, 11:28 PM
சி க /ராஜேஷ் சார்களே!
நான் மதுபாலாவின் இணையற்ற அழகுக்கும் நடனத்துக்கும் அடிமை ....
நர்கிசின் பாந்தமான வதனம் மற்றும் நளினமான நடிப்பின் பக்தன்

chinnakkannan
3rd August 2015, 11:30 PM
சி க /ராஜேஷ் சார்களே!
நான் மதுபாலாவின் இணையற்ற அழகுக்கும் நடனத்துக்கும் அடிமை ....
நர்கிசின் பாந்தமான வதனம் மற்றும் நளினமான நடிப்பின் பக்தன்

ச்சே புஸ்ஸூன்னு போய்டுச்சே..ம்ம் நாளைக்கு வாசு ராகவேந்தர் மது என்ன சொல்றாங்கன்னு பாக்லாம் (ஹையா நாளைக்குப் பாடு ஓவர்..கண்ணா நல்லா ப்ளான் பண்றடா நி) ஆனா இன்னிக்கு இருக்கே..ஏன் ராஜ் ராஜ் சார் சொல்ல மாட்டாஹளா என்ன..:)

RAGHAVENDRA
3rd August 2015, 11:41 PM
சி.க சார்.. நாளைக்கு பாடு நாளைக்குப் பாத்துக்கலாம்.

தூங்கப் போறதுக்கு முன்னாடி ஒரு சந்தேகம்...

நர்கீஸ் அந்தக் காலத்துப் பொண்ணு கேள்விப்பட்டிருக்கேன்...

மதுபாலா யாரு, அர்ஜூன் கூட ஜென்டில்மேன், அரவிந்த சாமி கூட ரோஜாவிலே எல்லாம் வருவாங்களே அவங்களா..

தூங்கறதுக்கு முன்னாடி கேள்வி கேட்டுறது பெட்டர்..

பதில் சொல்றவங்க மண்டை காஞ்சிடும் இல்லே..

chinnakkannan
3rd August 2015, 11:53 PM
//மதுபாலா யாரு, அர்ஜூன் கூட ஜென்டில்மேன், அரவிந்த சாமி கூட ரோஜாவிலே எல்லாம் வருவாங்களே அவங்களா// ராகவேந்தர் சார் :) அவங்க வேற மது பாலா..இவங்க வேற மது பாலா..

rajeshkrv
4th August 2015, 12:03 AM
//மதுபாலா யாரு, அர்ஜூன் கூட ஜென்டில்மேன், அரவிந்த சாமி கூட ரோஜாவிலே எல்லாம் வருவாங்களே அவங்களா// ராகவேந்தர் சார் :) அவங்க வேற மது பாலா..இவங்க வேற மது பாலா..

sika raghav ji ungalathaan kalaikraar.. paavam ungalukku puriyave illa :)

rajraj
4th August 2015, 04:40 AM
.ஏன் ராஜ் ராஜ் சார் சொல்ல மாட்டாஹளா என்ன..:)

vambu? :lol:

Nargis was in the lead in my most favorite movie Aah (1953), dubbed in Tamil as Avan. I liked the movie for the songs. I posted some in jugalbandi. I liked Madhubala in Mughal E Azam. I posted a couple of songs from that movie also.

vasudevan31355
4th August 2015, 07:26 AM
நான் ராஜேஷை வழி மொழிகிறேன் சி.செ :)

நான் ஜியையும், சின்னாவையும் வழிமொழிகிறேன்.:)

vasudevan31355
4th August 2015, 07:29 AM
முரளி சார்,

மாணவன் பாடலுக்கான அழகான பின்னூட்ட விளக்கங்களுக்கு நன்றி! மாணவன் மதுரையில் வீட்டுக்கு வில்லனாக வந்ததைப் படித்ததும் அவன் மேல் இன்னும் ஆத்திரம் அதிகமானது. இந்தக் குப்பை படத்துக்கா அவ்வளவு அலம்பல்? அதுவும் எந்தப் படத்துடன் மோதுவது? கலிகாலம் ஆயிற்றே.

தாங்கள் பாலா தொடரைத் தொடர்ந்து படித்து கருத்துக்கள் தெரிவிப்பதற்கு நன்றி முரளி சார்.

eehaiupehazij
4th August 2015, 07:33 AM
ஒரு கதம்பமான முறையில் இந்தியத் திரையுலகின் முடிசூடா ராணிகளுக்கு மலரஞ்சலி செலுத்திய அனைத்து சக பதிவ ஜாம்பவான்களுக்கும் இதயபூர்வ நன்றிகள்
செந்தில்

https://www.youtube.com/watch?v=f1DZxkiMjRo

https://www.youtube.com/watch?v=jfYiBwz7mRU

vasudevan31355
4th August 2015, 07:34 AM
வில்லங்க கானங்கள் அவ்வளவுதான் வாசு சார் அவர்களுக்கப்புறம் வில்லன்கள் எல்லோரும் முன்னாள் கதாநாயகர்களே ..ஜெய் ரவி விஜயகுமார்....

செந்தில் சார்,

வில்லங்க கானம்.

இதோ ராதாரவி வில்லனாகவே பாடும் ஒரு முழுப் பாடல்.

'சூரக்கோட்டை சிங்கக் குட்டி' படத்திலிருந்து.

அப்பன் பேச்சைக் கேட்டவன் யாரு
இப்போ இங்கே இருக்கிறேன் பாரு
முன்னால யாருமில்ல
பின்னால யாருமில்ல
தப்பாம பொறந்தவன் நான்தான்'

ரவி அமர்க்களமாக பிகர்களுடன் ஜலக்கிரீடை செய்வார். குரல் யாரென்று தெரிகிறதா சொல்லுங்கள்.


https://youtu.be/vvzv51m011g

vasudevan31355
4th August 2015, 07:44 AM
செந்தில் சார்,

மதுபாலா காமெடி ரோல்களில் கூட கலக்குவார் அல்லவா? 'சல் தி க நாம் காடி' (1958) படத்தில் மூன்று குமார் பிரதர்ஸ் பண்ணும் அமர்க்களம். அவர்களுடன் மயங்க வைக்கும் மதுபாலா மகிழ்ச்சியூட்டும் நடிப்பைத் தந்திருப்பார். கிஷோர் விழுந்து விழுந்து கோழி பிடிப்பதும், மது அதைப் பார்த்து விழுந்து விழுந்து சிரிப்பதும் அப்படியே

'ஹாலு கைஸா ஹே ஜனாப் கா'

பாடலை எடுப்பதும் என்றும் மறக்க முடியாதே. அதுவும் அந்த பிஞ்சு ஆஷாவின் குரல் இதயத்தில் இனிமையாய்ப் பதியும்.


https://youtu.be/z73Oox76Qpw

eehaiupehazij
4th August 2015, 08:00 AM
செந்தில் சார்,

வில்லங்க கானம்.

இதோ ராதாரவி வில்லனாகவே பாடும் ஒரு முழுப் பாடல்.


வாசு சார்
ராதாரவி ஒரு கார்த்திக் நடித்த படத்தில் நான் பேசிடும் புல்லாங்குழல் என்னும் பாடலை மைக் மோகன் ரேஞ்சுக்குப் பாடி நகர்ந்து அசத்தியிருப்பார் படம்
பேர் டக்குனு ஞாபகம் வரலே

https://www.youtube.com/watch?v=GmY1x-QkJSs

காவிய தலைவி வில்லன் MRR வாசுவும் பாடல் காட்சியில் ...
https://www.youtube.com/watch?v=dE2ED9yYiV4

Russellrqe
4th August 2015, 08:19 AM
RARE ADVT -TRICHY AREA
http://i59.tinypic.com/33bltw6.jpg

Russellrqe
4th August 2015, 08:20 AM
http://i61.tinypic.com/ip63nm.jpg

vasudevan31355
4th August 2015, 08:21 AM
செந்தில் சார்,

இதோ உங்கள் கான்செப்ட்டில் இன்னொரு பாடல்.

வில்லங்க வில்லன் பாடல்களில் சேர்த்துக் கொண்டாலும் சரி!

காமெடி ஷாம்பெயின் வரிசையில் வைத்துக் கொண்டாலும் சரி!

'கவிதா' படத்தில் பாலையா இளசு போல கோவா ஸ்டைல் உடை, தொப்பி அணிந்து வித்யாவதியுடன் ஆடிப் பாடும் பாடல். சாணம் மிதிக்கத் தெரிந்தால் அது ஆங்கில நடனமாம்.:) ஏ.எல்.ராகவன் பாலையாவுக்கு குரல் தந்திருப்பார். ஆனால் பொருந்தாது.ஆமாம்! ஆங்கிலோ இந்தியப் பெண்ணாக வரும் இந்த காமெடி நடிகை யார் தெரிகிறதா? இவர் பெயர் வித்யாவதி. நடிகை ஜெயலிதாவின் அம்மா சந்தியா இருக்கிறாரே அவருடைய தங்கை இவர். அதாவது ஜெயாவுக்கு சித்தி முறை. இவருக்கு ஜமுனாராணி 'ஜம்'மென்று குரல் தந்திருப்பார்.

'மணக்கும் ரோஜா மை லேடி
எனக்கு நீதான் சரி ஜோடி'

பாலையாவின் கூத்துக்களை ஆனந்தமாக ரசிக்கலாம்.


https://youtu.be/6iN3eTeKHXM

Russellrqe
4th August 2015, 08:22 AM
http://i58.tinypic.com/2wr3no3.jpg

vasudevan31355
4th August 2015, 08:22 AM
வாசு சார்
ராதாரவி ஒரு கார்த்திக் நடித்த படத்தில் நான் பேசிடும் புல்லாங்குழல் என்னும் பாடலை மைக் மோகன் ரேஞ்சுக்குப் பாடி நகர்ந்து அசத்தியிருப்பார் படம்
பேர் டக்குனு ஞாபகம் வரலே




http://static.paadalvarigal.com/pvt100/2718.jpg

Russellrqe
4th August 2015, 08:23 AM
http://i58.tinypic.com/x4kv80.jpg

Russellrqe
4th August 2015, 08:24 AM
http://i60.tinypic.com/15f5c9t.jpg

vasudevan31355
4th August 2015, 08:25 AM
குமார் சார்,

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அற்புத ஆவணங்களைத் தேடித் தேடி வழங்கி வருகிறீர்கள். எப்படிப் பாராட்டுவதென்றே தெரியவில்லை. ஒவ்வொன்றும் அற்புதம். நன்றிகள்.

Russellrqe
4th August 2015, 08:25 AM
http://i57.tinypic.com/o71xsx.jpg

Russellrqe
4th August 2015, 08:27 AM
குமார் சார்,

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அற்புத ஆவணங்களைத் தேடித் தேடி வழங்கி வருகிறீர்கள். எப்படிப் பாராட்டுவதென்றே தெரியவில்லை. ஒவ்வொன்றும் அற்புதம். நன்றிகள்.

THANKS VASU SIR
NEENGAL ELLORUM
http://i57.tinypic.com/10rqzgk.jpg

Russellrqe
4th August 2015, 08:31 AM
http://i62.tinypic.com/1621nic.jpg

Russellrqe
4th August 2015, 08:35 AM
http://i57.tinypic.com/ay93ba.jpg

vasudevan31355
4th August 2015, 08:37 AM
செந்தில் சார்,

இதோ சாரங்கபாணியின் சர்க்கரைப் பாடல். 'வேதாள உலகம்' படத்தில் மேற்கத்திய இசை பாணியில் பாடி அசத்துவாரே. எம கிங்கிரர்கள் போல நிற்கும் வேதாளங்களை கிண்டல் செய்து பாடும் பாடல்.

அய்யய்ய பார்க்க கண்ணு கூசுதே
அவலட்சணமாய் தோணுதே
பைய பைய கோபம் வந்து போகுதே
பார்க்க பார்க்க வெறுப்பாவுதே


https://youtu.be/LJMXb1HgGKA

eehaiupehazij
4th August 2015, 08:51 AM
Thanks a lot Vaasu Sir for having triggered the voluntary participation of our friends by way of prompting them to come with valuable contributions for this thread even for a small naglected piece of song or sequence from any film
senthil with regards

madhu
4th August 2015, 09:05 AM
ச்சே புஸ்ஸூன்னு போய்டுச்சே..ம்ம் நாளைக்கு வாசு ராகவேந்தர் மது என்ன சொல்றாங்கன்னு பாக்லாம் (ஹையா நாளைக்குப் பாடு ஓவர்..கண்ணா நல்லா ப்ளான் பண்றடா நி) ஆனா இன்னிக்கு இருக்கே..ஏன் ராஜ் ராஜ் சார் சொல்ல மாட்டாஹளா என்ன..:)

எனக்குப் பிடித்த நர்கீஸ் பாட்டு இது..

படம் : அதாலத்.... கொஞ்சம் கண்ணில் ஈரம் வரவழைக்கும் கதைக்கு லதாவின் இந்தப் பாட்டு வெங்காய உரிப்பு
https://www.youtube.com/watch?v=vY_S_Br6MAs

எனக்குப் பிடித்த மதுபாலா பாட்டு இது

படம் : பர்சாத் கி ராத்

அழும்போது கூட அழகா இருப்பார்

https://www.youtube.com/watch?v=s6hnfdvqAg8

eehaiupehazij
4th August 2015, 11:25 AM
இணையதளத்தில் இணையற்ற தேடுதல் நாயகராக விளங்கும் வாசு சாருக்கு ...
கூகுள் கூகுள் பண்ணிப் பார்த்தோம் ....கிடைக்கவில்லை
யாகூ யாகூ பண்ணிப் பார்த்தோம் ....கிடைக்கவில்லை
வாசு வாசு பண்ணிப் பார்த்தோம் ....கிடைச்சிருச்சே!!
நன்றிகள் வாசுதேவன் சார்

eehaiupehazij
4th August 2015, 11:40 AM
காதலியின் காதொலி காணொளி Whisphers கான மதுரங்கள் !: புதிய குறுந்தொடர் ஆரம்பம்!


காதலிக்கும் போது காதலியின் கிசுகிசுப்பான பேச்சுடன் அருகாமை நமது செவிகளுக்கு மனங்கவர் மதுரகானமே !!

அதுவே தலையணை மந்திரமாக மாறும் போது மாமியார்களுக்கு நாராசமே !

காதலி மண்டைக்குள் மாவாட்டும் மனைவியான பிறகு கிசுகிசுப்புக்கு வேலையில்லாமல் அவர் போடும் எரிச்சல் கத்தல்கள் கணவனின் செவிக்குள் தண்டர்பாலே !!

அதன்பிறகு கிடைத்தற்கரிய காதோர கிசுகிசுப்பு நமக்கெல்லாம் வெறும் கனவே !! கானல் நீரே !

ம்ம்ம்...... (ஆனந்த) கண்ணீரை சுண்டி விட்டுக் கொள்வோம் !!


பகுதி 1 : காதொலி சித்தர்கள் காதோடு காதாக!!

கிசுகிசுப்பான காதொலி பாடல்களில் என்றும் முதலிடம் ஜெயந்தி ஈஸ்வரியின் குரல் குழைவில் காதல் மன்னரைக் கட்டிப் போட்ட காணொளிக் காட்சி / வெள்ளிவிழா

https://www.youtube.com/watch?v=s4TdHTtuVQ8

மெல்லப் பேசுங்கள் ..பிறர் கேட்கக்கூடாது...சொல்லித் தாருங்கள்...யாரும் பார்க்கக் கூடாது..../ காசேதான் கடவுளடா!

https://www.youtube.com/watch?v=DvxHybjxzRc

மெல்லப் பேசு மெல்லப் பேசு கண்ணாடிப் பாத்திரத்தை கல்மீது வைப்பது போல் மெல்லப் பேசு / TR PAAPPA!மனிதரில் மாணிக்கம் ?

https://www.youtube.com/watch?v=hL2yL63Aytw


இந்த ரிலே ரேசில் குச்சியை கொடியோடு இப்போது வாசு சாரிடம் ஒப்படைக்கிறேன்!
அவரும் கொஞ்சதூரம் ஓடி சி க விடம் கொடுப்பாராம் !!
சி க ஓ(ட்)டோ ஓ(ட்)டுன்னு ஓட்டிட்டு ராகவேந்தர் சாரிடம் ஹேண்டோவர் செய்வாராம்...அப்புறம்....

eehaiupehazij
4th August 2015, 12:16 PM
காதலியின் காதொலி காணொளி Whisphers கான மதுரங்கள் !:

பகுதி 2 : டெலிபோன் மூலம் காதோடு காதாக.....நமக்கும் காற்றோடு காற்றாக!! மதுர விருந்தே!!


டெலிபோன் என்று ஒன்று ஒருகாலத்தில் காதலர்களை காதோடு காதாக ஒட்டிக் கட்டிப் போட்டது !!Now cellphones.....Whats App....
இதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் மக்கள் திலகமே !
ஹலோ ஹலோ சுகமா ......ஆமா நீங்க நலமா?

https://www.youtube.com/watch?v=qqEFpc7V4kY

செல்போன் இல்லாததால் டெலிபோனை மையமாக வைத்து கதை பின்னப் பட்ட படங்களில் புதிய பறவையும் திரிசூலமும் நடிகர்திலகத்தின் பங்கு !!

https://www.youtube.com/watch?v=HdnpiKZBpAs


காதல் மன்னர் எப்போதும் நேருக்கு நேர்தான் .....ஸ்ட்ரேயிட்டா பங்காளி டு பங்காளிதான்

இந்த ரிலே ரேசில் குச்சியை கொடியோடு இப்போது வாசு சாரிடம் ஒப்படைக்கிறேன்!

Russellxor
4th August 2015, 12:52 PM
கதைசுருக்கம்:
part1

நடிகர்திலகத்தின் மகன் சரத்பாபு.
ஜெய்சங்கரின்
தங்கையைகாதலிப்பது போல் நடித்துஅந்த பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டுஏமாற்றிவிட்டு ஊருக்கு வந்து விடுகிறார்.அந்தப்பெண் மானம் கருதி தற்கொலை செய்து விடுகிறார்.அந்தப் பெண்ணின் தற்கொலைக்குப்பின்ஒரு கடிதம் மூலமாகதற்கொலைக்கு காரணம் ஜெய்சங்கரால் தெரிந்து கொள்ளப்படுகிறது.கடிதத்துடன் சரத்பாபுவின் போட்டோவும்ஜெய்யின் கைக்கு கிடைக்கிறதுதன் தங்கையின் மரணதுக்கு காரணமானவனை பழி தீர்க்க வேண்டி,அந்த போட்டோவையும் அரிவாளையும் எடுத்துக்கொண்டு கண் மருத்துவர் நடிகர்திலகத்தை பார்க்க வருகிறார்.பையில் இருக்கும் பணத்தை எடுத்துக்கொண்டு தனக்கு கண்பார்வை அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறார்.நடிகர்திலகமும் சமாதானப்படுத்தும் வகையில் கண்பார்வை தர ஒப்புக்கொள்கிறார்.

part2
நடிகர்திலத்தின் மருமகளாக சரிதா.மாமனாரின் அன்புடனும் கணவரின் பாசத்துடனும் சந்தோசமாக வாழ்க்கை சென்று கொண்டிருக்கும் சமயத்தில்
சரிதாவுக்கு ஏற்படும் ஒரு நோய் அவரது உயிருக்கே பாதுகாப்பில்லை,6மாதத்திற்குள்எந்த நேரமும் இறக்க நேரிடலாம்என்கிற நிலை.சின்ன அதிர்ச்சி ஏற்பட்டாலும் உயிர் இழக்க நேரிடலாம் என்ற காரணத்தால் அந்த விஷயத்தை யாரிடமும் சொல்லாமல் மறைத்து விடுகிறார் நடிகர்திலகம்.

part1 Part2 ஆகிய இரண்டின் முடிவுகளும் ஒன்றாக கலந்த நிலையில் இப்பொழுது,.,

ஜெய் க்கு நடிகர்திலகத்தின் மேல் நம்பிக்கை பிறக்கிறது.கண் ஆபரேசனுக்கு பிறகு போட்டோவை வாங்கிகொள்வதாகவும் அதுவரை பத்திரமாக வைத்திருக்குமாறும் கேட்டுக்கொள்கிறார.ஆபரேசனுக்கு பின் போட்டோவில் உள்ள நபரை தானே கொண்டு வந்துகண் முன் நிறுத்துவதாகவும் வாக்கு கொடுக்கிறார்.அதன் பின்னர் நடிகர்திலகம் போட்டோவை பார்க்கும்படி நேரிடுகிறது.
அதிர்ச்சி
அதிர்ச்சி
அதிர்ச்சி
போட்டோவில் மகன் சரத்பாபு.
யாருக்கும் தெரியாத வண்ணம் போட்டோவைகிழித்து குப்பைக்கூடையில் எறிந்து விடுறார்.
இதை சரிதா பார்த்துவிடுகிறார்.இதற்கு பின்னர் நடக்கும் சம்பவங்கள்சரிதாவுக்கு நடிகர்திலத்தின் மேல் சந்தேகம் கொள்ள வைக்கிறது.ஜெய் கொடுத்த போட்டோவைஅவர் ஏன் கிழித்து எறிய வேண்டும்?மேலும் அவருடைய நடவடிக்கைகள் ஜெய்க்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவது போல் தெரியவில்லையே?என்றுசரிதாவின் மனம் குழப்பமும்,சந்தேகமும் கொண்ட நிலையில் தவிக்கிறது.சின்ன அதிர்ச்சி கூட தன் மருமகளுக்கு தெரியக்கூடாது என்னும் நிலையில்நடிகர்திலகம் அந்த விஷயத்தை மறைக்க எடுத்துக் கொளளும் முயற்சிகளே சரிதாவுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.இந்த சூழ்நிலையில் தான் தன் எண்ணக் குமுறல்களைசரிதா கேட்பதாகவும் நடிகர்திலகம்மறைமுகமாகவும்
சொல்வதாகவும் இந்தப்பாடல் படத்தில் வருகிறது.


சுசீலா:கண் கண்ட தெய்வமே, கை வந்த செல்வமே, முருகா முருகா முருகா! என்னென்ன சொல்கின்றார், என்னென்ன செய்கின்றார்? சில உள்ளதுக்குள் கள்ளம் வைத்தது - உன் வேலையா? வேலய்யா இது உன் வேலையா?

tms:கண் கண்ட தெய்வமே, கை வந்த செல்வமே முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

சுசீலா:சுந்தர வேல்முருகா, துண்டுகள் இரண்டாக சூரனைக் கிழித்தாய் அன்றோ! - ஒரு தோகையைக் காலடியில், சேவலை கை அணைவில் காவலில் வைத்தாய் அன்றோ!

Tms: மந்திரத் தெய்வங்களின் மாயக் கதைகளுக்கு வரைமுறை கிடையாது அன்றோ! அவை தந்திரம் செய்வதுண்டு, சாகசம் கொள்வதுண்டு சகலமும் நன்றே அன்றோ! என்னென்ன சொல்கின்றார், என்னென்ன செய்கின்றார்? சில உள்ளதுக்குள் உள்ளம் வைத்தது - உன் வேலையா? வேலய்யா இது உன் வேலையா? (கண் கண்ட தெய்வமே)

பாடலில் சற்று கடினமான வார்த்தைகள் கையாளப்பட்டிருக்கும்.தமிழும் அதன் அர்த்தம் விளங்கும்படியான உச்சரிப்பும் கொண்ட பாடகர்களால் மட்டுமே இந்தப்பாடலை பாட முடியும்.சுசீலாவேதுண்டுகள் இரண்டாக சூரனை என்பதில் உச்சரிப்பில் பலம் குறைந்திருப்பது தெரிகிறது.(10பேரை வைத்து சோதனை செய்ததில் அறிந்த முடிவுஇது) TMS இந்த விசயங்களில் சூறாவளி.


சுசீலா: காட்சியைக் கொன்றவர் முன், சாட்சியைக் கொன்றுவிட்டு ஆட்சியும் செய்தாய் ஐயா - உன்தன் மாட்சிமை என்னவென்று காட்சிக்கும் தோன்றவில்லை சூழ்ச்சியைச் சொல்வாய் ஐயா!

tmsபிள்ளையைக் கொன்றுவிட்டு, பெரிய) விருந்து வைத்தான் கள்ளமில் பரஞ் சோதியே - விருந்து எல்லாம் முடிந்த பின்னே, பிள்ளையினை அழைத்தான் இறைவன் அருள்ஜோதியே!

சுசீலா: காரிருள் சூழ்ந்ததும் கதிரும் மறைந்தது - நீதி எல்லாம் துடிக்கும்!

tmsமேற்கினில் சூரியன் மறைந்தாலும் - கீழ் வானம் சிவக்கும்!




சுசீலா: கந்தன் இருப்பது உண்மை என்றால் இது உண்மைகள் வெளியாகும்!

tms:காலம் வரும் வரை காத்திருந்தால் அது நல்லவர் வழியாகும்!!

இருவரும்:கண் கண்ட தெய்வமே! கை வந்தகள் செல்வமே! முருகா முருகா முருகா! முருகா முருகா முருகா!

பிரமாண்ட காட்சிகள் அரங்கங்கள் வண்ண வண்ண ஆடைகள்வெளிநாட்டு படப்பிடிப்பு இல்லாமலேயே ஒரு பாடலை அதற்கு மேலாக ரசிக்க வைக்க முடியும் என்பதற்கு இந்தப் பாடலும் ஒரு உதாரணம்

கதையின் முடிவைTV OR DVD யில் காண்க

chinnakkannan
4th August 2015, 12:56 PM
hi good morning all..

si.se niraiyakk kaathOdu irukkaraapala irke..

கல்யாண வளையோசை கொண்டு
காற்றே நீ முன்னாடிச் செல்லு
பின்னாடி நான் வாரேன் என்று
கண்ணாளன் காதோடு சொல்லு

*
ஆண் : உன் புடவை முந்தானை சாய்ந்ததில்
இந்த பூமி பூப்பூத்தது...
பெண் : இது கம்பன் பாடாத சிந்தனை
உந்தன் காதோடு யார் சொன்னது

*
பூங்காற்று வீசும்
பொன் மாலை நெரம்
காதோடு ஏதோ
கூறாமல் கூறும்
உச்சி வானம் இங்கும்
ஒடுகின்ற மேகம்
கிட்ட வந்து என்னை
தொட்டு விட்டு போகும்

*

will come later :)

madhu
4th August 2015, 01:45 PM
காது பற்றி ஏதோ காதில் விழுந்தது...

இதோ ஒரு காது பாட்டு.. என்ன சேதின்னு கேக்கறீங்களா ? உங்க காதைக் கொடுங்க

https://www.youtube.com/watch?v=Nof1SLPfCsM

vasudevan31355
4th August 2015, 02:42 PM
செந்தில் சார்,

இந்தாங்க. 'பதங்கா' படத்தின் பட்டை கிளப்பும் பாடல். என் அருமை பேகம் பாடியது.

http://www.lyricsmasti.com/mimg/2070.jpg

'மேரே பியா கயே ரங்கூன்'

[Singers:- Shamshad Begum & Chitalkar]

Chitalkar:

hello, hindustan ka dehradun
hello, main rangoon se bol raha hoon
main apni biwi renukadevi se baat karna
chahata hun
haan haan

Shamshad:

mere piya, ho mere piya gaye rangoon
kiya hai wahaan se teliphoon
tumhari yaad sataati hai,
tumhari yaad sataati hai,
jiya men aag lagaati hai


https://youtu.be/HRhc_rBp4rk

uvausan
4th August 2015, 04:28 PM
வாசு - ஒரு திருப்பமான பதிவு . இப்படிப்பட்ட ரசனை வர , பல நாட்கள் ஆகும் -- இல்லை பல ஜென்மங்கள் ஆகும் என்று எழுதுவதெல்லாம் கற்பனை கலந்த பொய் . உண்மையைச் சொன்னால் வரவே வராது என்றுதான் எழுத வேண்டும் . நீங்கள் பாலா , சரளா , குசல குமாரி இவர்களுடன் தலைவர் நடித்த 200 படங்களுக்கு மேலே வந்த படங்களையும் கொஞ்சம் ஆராய்ச்சி செய்தால் , பல ஆச்சரியங்களை உங்களால் அழகாக வெளிக்கொண்டு வரமுடியும் . கேலி செய்யும் பலருடைய வாய்களையும் மூட முடியும் . . செய்வீர்கள் என் நம்புகிறேன்

vasudevan31355
4th August 2015, 06:22 PM
ரவி சார்!

அதெல்லாம் ஒரு புறம் கிடக்கட்டும். எங்கே உங்கள் பதிவுகள்? நாளை காலை குறள் பதிவுகளுக்காக வெயிட் செய்து கொண்டிருப்பேன் நம்பிக்கையோடு.

Russellxor
4th August 2015, 06:29 PM
வாசு சார்
உங்கள் உழைப்பு மலைக்க வைக்கிறது.பெருமை கொள்ள வைக்கிறது.
உங்களுக்காக...
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/20150804171935_zpstukulvsd.gif (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/20150804171935_zpstukulvsd.gif.html)

vasudevan31355
4th August 2015, 06:36 PM
செந்தில் சார்,

'ஓசை வராமல் உறவு கொள்வோமே' என்று சப்தமே வேண்டாம் என்று முடிவெடுக்கும் இந்த 'அன்பே ஆருயிரே' தம்பதிகள் பாடுவதைக் கேளுங்கள். இவர்களுக்கு ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும்......


https://youtu.be/0_rmgSEPilM

madhu
4th August 2015, 06:56 PM
அன்பு நட்பு வட்டத்துக்கு ஒரு வேண்டுகோள்..

ஒரு பழைய எல்.ஆர்.ஈஸ்வரி பாடல்.. படம் மற்றும் எந்த விவரமுமே நினைவுக்கு வரவில்லை...

ஒரு சரணம் இப்படி வரும் ...

"ஆதி மனிதர்கள் இருவர்களாலே ஆசை உண்டானது....
( ஆடை இல்லை.. திரையும் இல்லை.. காதல் மட்டும் அவரறிந்தார் )
ஆதி மனிதர்கள் இருவர்களாலே காதல் உண்டானது....
ஆசை உண்டான காலத்திலிருந்தே போதை உண்டானது.. ஹா..
போதை.. உண்டானது..

இதைப் பாடிப் பார்த்தபோது "மாலை மயக்கத்தில் மந்திரமொன்று வேண்டும்" என்று ஒரு பல்லவி வாய்க்கு வந்து சேர்ந்தது. அது சரியா தவறா என்று தெரியவில்லை.

யாருக்காவது ஏதாவது விவரம் தெரிந்தால் சொல்லுங்க ப்ளீஸ்..

( வாசு ஜி... ராகவ் ஜி.. any idea ? )

eehaiupehazij
4th August 2015, 06:57 PM
Vasu Sir
Your relay start is amazing!
SiKa waiting....to get the baton from you!
This is the solid proof of your inherent character of exploring and imploring!
thank you sir

senthil

madhu
4th August 2015, 07:02 PM
உன் காதோடு காதொரு சேதி சொன்னால் என்ன கண்மணியே என்று எஸ்.பி ( பி அண்ட் எஸ் ) சொல்வது நிஜம்... ஐ மீன் நிஜங்கள்

https://youtu.be/VUdku9fNLzE

eehaiupehazij
4th August 2015, 07:05 PM
மாற்றார் தோட்ட மதுரங்கள் !
பகுதி 28 : குரு தத் ஸ்பெஷல்!!


உடலமைப்பிலும் முகபாவங்களிலும் சற்றே ஜெமினியை நினைவு படுத்தினாலும் அசாத்திய திறமைசாலி !
இளம் வயதிலேயே அமரத்துவம் அடைந்து விட்டாலும் அவரது காலம் ஹிந்தி திரைப்படங்களின் கதையோட்டம் இசை மற்றும் பாடல் காட்சியமைபபுக்களில் ஒரு பொற்காலமே!! அவரது நினைவுகளை திரி நண்பர்களுடன் என்னால் இயன்ற கருத்து வெளியீட்டில் பகிர்ந்து கொள்வதில் பெருமையே!!

Vasanth Kumar Shivashankar Padukone (9 July 1925 – 10 October 1964), better known as Guru Dutt, was an Indian filmdirector, producer and actor. He made 1950s and 1960s classics such as Pyaasa, Kaagaz Ke Phool , Sahib Bibi Aur Ghulam andChaudhvin Ka Chand. In particular, Pyaasa and Kaagaz Ke Phool are now included among the greatest films of all time, both byTime magazine's "All-TIME" 100 best movies and by the Sight & Sound critics' and directors' poll, where Dutt himself is included among the greatest film directors of all time. He is sometimes referred to as "India's Orson Welles". In 2010, he was included among CNN's "top 25 Asian actors of all time".

Baazi was an immediate success. Guru Dutt followed it with Jaal and Baaz. Neither film did well at the box office, but they bring together the Guru Dutt team that performed so brilliantly in subsequent films. Fortune smiled on Dutt's next film, the 1954 Aar Paar. This was followed by the 1955 hit, Mr. and Mrs.55, then C.I.D., Sailaab, and in 1957, Pyaasa - the story of a poet, rejected by an uncaring world, who achieves success only after his apparent death. Guru Dutt played the lead role in three of these five films.

Sahib Bibi Aur Ghulam, a critically and commercially successful film, was directed by his protégé, writer Abrar Alvi, which won him the Filmfare Best Director's award. The film's star Waheeda Rehman denied rumors that the film was ghost-directed by Guru Dutt himself. Guru Dutt also has his influence on his last box office smash hit Chaudhvin Ka Chand.

Movies like C.I.D., Baazi, Pyaasa, Kaagaz Ke Phool, Chaudhvin Ka Chand and Sahib Bibi Aur Ghulam were rightfully the first of their kind in Hindi cinema. The only movie produced by Guru Dutt and termed a box-office disaster was Kaagaz Ke Phool, now a cult classic. He lost over 1.7 million producing that film, a large amount by the standards of the time, which was more than recovered by his next project, Chaudhvin Ka Chand. Pyaasa was rated as one of the best 100 films of all time by Time Magazine.[1] In the 2002 Sight & Sound critics' and directors' poll, two of his films, Pyaasa and Kaagaz Ke Phool, were among the top 160 greatest films of all time. The same 2002 Sight & Sound poll ranked Dutt at #73 in its list of all-time greatest directors, thus making him the eighth highest-ranking Asian filmmaker in the poll.

Famous song in Aar Paar! Enjoy the music by Nayyar!

https://www.youtube.com/watch?v=DJFwNErOujc

கொஞ்சம் தெய்வப்பிறவியின் கட்டடம் கட்ட இடப்பொருத்தம் அவசியம் வருகிறதா ...ஞாபகம்!

https://www.youtube.com/watch?v=wxt4iEdakxA

https://www.youtube.com/watch?v=Ws4_dxK3Q3A

https://www.youtube.com/watch?v=rIX_UGulNK8

Mr and Mrs 55 with the Venus of Indian screen MADHUBAALA!
https://www.youtube.com/watch?v=Ik5EzMk_V2Q

vasudevan31355
4th August 2015, 08:16 PM
அன்பு நட்பு வட்டத்துக்கு ஒரு வேண்டுகோள்..

ஒரு பழைய எல்.ஆர்.ஈஸ்வரி பாடல்.. படம் மற்றும் எந்த விவரமுமே நினைவுக்கு வரவில்லை...

ஒரு சரணம் இப்படி வரும் ...

"ஆதி மனிதர்கள் இருவர்களாலே ஆசை உண்டானது....
( ஆடை இல்லை.. திரையும் இல்லை.. காதல் மட்டும் அவரறிந்தார் )
ஆதி மனிதர்கள் இருவர்களாலே காதல் உண்டானது....
ஆசை உண்டான காலத்திலிருந்தே போதை உண்டானது.. ஹா..
போதை.. உண்டானது..

இதைப் பாடிப் பார்த்தபோது "மாலை மயக்கத்தில் மந்திரமொன்று வேண்டும்" என்று ஒரு பல்லவி வாய்க்கு வந்து சேர்ந்தது. அது சரியா தவறா என்று தெரியவில்லை.

யாருக்காவது ஏதாவது விவரம் தெரிந்தால் சொல்லுங்க ப்ளீஸ்..

( வாசு ஜி... ராகவ் ஜி.. any idea ? )

மதுண்ணா!

நானும் கேட்டிருக்கிறேன். உங்கள் பல்லவி சரியேதான். நன்றாக நினைவிருக்கிறது. ஆனால் படம் தெரியவில்லை. கண்டு பிடிப்போம். வச்சீங்களே அருமையான வேலை.:) யப்பா! செம ஞாபகசக்தி. ராயல் சல்யூட் உங்களுக்கு.

RAGHAVENDRA
4th August 2015, 08:48 PM
மது,
அந்தப் பாடல் வாசு சொன்னது போல் மாலை மயக்கத்தில் என்பது போலத் தான் பல்லவி வரும். பாட்டின் மெட்டும் தாளக் கட்டும் மிகவும் அருமையாக இருக்கும். ஆனால் படம் பெயர் தான் சட்டென்று ஞாபகம் வரவில்லை. பார்ப்போம் நினைவிற்கு வந்தவுடன் இங்கு பகிர்ந்து கொண்டு விடுவோம்.

இந்தப் பாடலின் மெட்டும் கூட கிட்டத்தட்ட மூன்று தெய்வங்கள் படத்தில் வரும் நீ ஒரு செல்லப் பிள்ளை மெட்டினை ஒத்திருக்கும் என நினைவு.

chinnakkannan
4th August 2015, 08:53 PM
**
சிவாஜி.செந்தில்ல்ல்ல்ல்ல்…

மனோஹர் பாட் ஒண்ணு யுரேகா யுரேகா..போட்டாச் நு நெய்வேலிக் குரல் கேட்காத் கேட்காத்..(ஆண்டவா காப்பாத்)

மனோஹர் கே.ஆர்.விஜயா இசை எம்.எஸ்.வி.படம் தட்டுங்கள் திறக்கப்படும்..வெகு ஜோராகப் பாடியிருப்பது பி.சுசீலாம்மா…

அதுல பாருங்க கே.ஆர்.விஜயா வெகு இளமை + எட்டு ஒன்பது காஸ்ட்யூம் மாத்தறாங்க..மாத்திக்கிட்டே பாடறாங்களா..மனோகர் ரசிச்சுக்கிட்டே கேக்கறாரா.. நன்னாவே இருக்கு..அதனால நானும் ரசிச்சுக்கிட்டே டைப் அடிச்சனா..

*


வெகு ச்சின்ன கே.ஆர்.விஜயா என்ன சொல்றாஹ..
*
தித்திப்பது தித்திப்பது எது அதுவோ..
தீராதது எது அதுவோ
கண்களில் மட்டும் உண்டாவது எது அதுவோ
உண்டானபின் ஒன்றாவது எது அதுவோ..

(எது தாங்க)
அட ஆன்ஸர் சொல்லிட்டஹளே

ஆடை மூடிய பாவையின் மேனி பாடும் பாடலது
ஆடிப் பாடி ஏங்கியதாலே மோதும் ஓடையது
கண்கள் காணுவது தனியே பெண்கள் பேசுவது
கன்னம் தேடுவது இனி நான் என்ன கூறுவது…

இன்னும் சொல்றாஹ..

மேகம் மூடிய மலைகளின் நடுவே பாடும் பாடலது
பாடும் பாடலைப் போடப் போட ஊறும் போதையது ( நன்னா உதட்டை மடிக்கிறாஹ)
நதியில் ஓடுவது ஒரு நாள் கடலில் சேருவது..
பழகித் தேறுவது ..இதில்யார் பாடம் கூறுவது (அப்படிப் போடுங்க அரிவாளை!)
*
அவுட்டோர் , துள்ளும் பாடலில் துள்ளும் இளமை, அடக்க ஒடுக்க மனோஹர் (படத்துல நல்லனா கெட்டனா தெரியாது (ஓ..வ மிஸ் ஆகிடுச்சு போட்டுக்குங்க!))

https://youtu.be/O9cdbIyQJ4U

வர்றேன் மறுபடி வர்றேன் :)

vasudevan31355
4th August 2015, 09:08 PM
மது அண்ணா!

நம் சந்தேகம் தீர்வு ஆகும் வரை ராட்சஸியின் இன்னொரு அருமையான பாடலைக் கேட்போம்.

'பெண்ணை வாழ விடுங்கள்' என்று கர்ணன் சொல்லுகிறார்.:) பின்னாலய கர்ணன் படங்களுக்கு பல விதங்களில் இந்தப் படம் முன்னோடி. காமெராக் கோணங்கள், வழக்கமான கர்ணனின் ஜெய், அப்போதைய எம்.ஆர்.ஆர்.வாசு என்று.

'சிவந்த மண்' 'பட்டத்து ராணி' போல எகிப்தின் பிரமிடுகள் செட். காஞ்சனா போல ஷீலாவுக்கு மேக்-அப். அதே ஈஸ்வரி. பாடல் அருமையோ அருமை. என்ன சாட்டை ஓசை இல்லை. வண்ணம் இல்லை.

'அழகிலே கனிரசம்
இதழிலே மதுரசம்
ஆட்டம் என்னென்ன
வரும் கூட்டம் என்னென்ன
அதில் நோட்டம் என்..னெ...ன்..ன'

ஈஸ்வரி

'அத்தை மகள்... வந்ததைப் போல்
அன்னத்தின் மேனி கண்டு
ஜாடை செய்கிறார்'

என்று அசத்தி விடுவார்.

ஷீலா ஆடும் நடன மாதர்களின் பின் பக்கம் நின்று அவர்களைக் காலால் உதைத்துத் தள்ளுவார். இதெல்லாம் கர்ணன் கைங்கர்யம்.:) நல்ல வேளை. ஷீலா கால்களைச் சுழற்றி படம் பார்க்கும் நம்மை உதைப்பது போல் வரவில்லையோ தப்பித்தோம்.:) இசை எஸ்.எம்.எஸ். இவர் ஈஸ்வரியைக் கையாளும் விதமே அலாதி.

ஒளிப்பதிவு, தயாரிப்பு கர்ணன். பெயருக்கு ஆர்.தேவராஜன் இயக்குனர்.:)


https://youtu.be/j_OLdvar-do

vasudevan31355
4th August 2015, 09:19 PM
சின்னா!

//மனோஹர் பாட் ஒண்ணு யுரேகா யுரேகா..போட்டாச் நு நெய்வேலிக் குரல் கேட்காத் கேட்காத்..(ஆண்டவா காப்பாத்)//

போட்டாச்சான்னு ஞாபகம் இல்லை. ஆனால் ரொம்ப ரேர் சாங்தான். தேடி தேடிக் கண்டு பிடிக்கிறீங்க. சபாஷ். அப்படித்தான் இருக்கணும்.:) அதான் இன்னைக்கு முச்சூட ஆளைக் காணோமா?:) எனிவே அருமையான அரிதான பாடலைக் கொடுத்ததற்கு நன்றியோ நன்றி. எதுக்குதான் ஆண்டவனைக் கூப்பிடறதுன்னு இல்லையா? ஆண்டவா!:)

chinnakkannan
4th August 2015, 09:21 PM
காதில் தொலைபேசி கன்னியின் சொல்லாட
தோதினில் நெஞ்சம் தோய்ந்தங்கே – மோதியே
கண்திறந்தும் காட்சி கனவினில் தான்விரிய
விண்ணுளே சென்ற விழி..

அதானே பாருங்க இங்கே.. ரெண்டு லவ்வர்ஸ்..

ஆரம்பத்துல காதோடு ஃபோன்ல பேசிக்கிட்டே பாடறதுக்கு பார்க் பீச் பின் மலை..ன்னு போய்டறாங்க..அவன் அவன் கனவைச் சொல்ல ஜொள் விட்டு ப்ளாக் அண்ட் ஒய்ட் தக்காளிக் கன்னம் மினுமினுக்க போதும்னு ஃபோன்லயே சொல்லிட்டு கேளுங்கள் என் கனவைங்கறா காதலி..அதுல ஆறு வருது..ஆறுதலும் தருது....

நேரம் மாலை நேரம்
நெஞ்சம் நெருங்கும் நெஞ்சம்.
அத்தான் என்றேன் முத்து முத்தாக ( மாப்ள.. பாத்தா புதுசாட்டமா இருக்கு..இப்படித்தான் ஆரம்பிப்பாங்க ..பர்ஸ்ல க்ரடிட் கார்ட் டெபிட் கார்ட்லாம் இருக்கா)

அள்ளிக் கொண்டாய் கட்டுக் கட்டாக..(ஹெள இஸ் தட்)

ஆண்மானும் பெண்மானும் ஒன்றோடு ஒன்றானோம் ( நல்லவேளை தப்பிச்சாங்க…சல்மான்கான் அப்போ சின்னப் புள்ளையா இருந்திருப்பார்… )

ஏ.எல் ஆர். சுசீலாம்மா ,அழகாப்பாடியிருக்காங்க.. ராஜ ஸ்ரீ..அண்ட் ஹீரோ..ஏல்.எல் ராகவனே தானாம்..ம்ம்
ராஜ ஸ்ரீயீன் கனவு..

நீராடும் துறையில் என் அருகே வந்தாய்
எனைக்காணும் பொழுதல்ல மறைவாய் என்றேன்
தேரோடும் ராஜாங்கம் இதுவோ என்றாய்
திரு நாளில் முதல் நாளில் அறிவாய் என்றேன்..

ம்ம் கல்லும் கனியாகுமாம்.. படம்.. எப்படி இருக்கும்..

*

https://youtu.be/rLZu_lR6kfc

chinnakkannan
4th August 2015, 09:29 PM
//'அத்தை மகள்... வந்ததைப் போல்
அன்னத்தின் மேனி கண்டு
ஜாடை செய்கிறார்'// நைஸ் பாட் வாசு .. ஆளை ஆளைப் பார்க்கிறாய் ஆளை ஆளைப் பார்க்கிறாய் ஆட்டத்தைப்பார்த்திடாமல் ஆளை ஆளை ப் பார்க்கிறாய் பாட்டும்
ஆட்டத்தை ரசிக்கவில்லை ஆளைத்தான் ரசிக்குது பாட்டும் நினைவுக்கு வருது..ஷீல் ஷீல் தான்..தாங்க்ஸ் :)

ஹப்பாடா மனோகர் போடலையா பாராட்டுக்குத்தாங்க்ஸ்..இன்னிக்கும் இன்னுமிரு நாளும் கொஞ்சம் வேலை ஜாஸ்தி.. ஈவினிங்க்தான் வரமுடியும்னு நினைக்கறேன் ( யாருங்க அது ஹப்பாடி சொல்றது..!)

chinnakkannan
4th August 2015, 10:23 PM
கொஞ்சுமெழில் விஞ்சிவர குழவியினை நன்றாக
..மிஞ்சிவிரும் ஆசையினால் மங்கையவள் அணைத்துவிட
பஞ்சுமனம் கொண்டவனாம் பால்முகத்து வாலிபனும்
…பற்றிவிட்ட தீயினிலே படபடத்துத் தானெரிய
அஞ்சுகத்தைத் தான் நினைத்து அவன்கனவு காணுகிறான்
..அழகுரதம் எனவிருக்கும் ஆரணங்கின் கைபற்றி
நெஞ்சுகொளும் ஆசையிலே சிறுமுத்தம் தான்கேட்க
.. நேரிழையாள் விழியசைவில் பாடலது பிறந்ததையா..

***
டி.எம்.எஸ். பி.எஸ்.. அழகுப்பாடல்.. நல்ல ஹம்மிங்க்.. லிரிக்ஸ் வாலி?

*
செக்கச் சிவந்த இதழிருந்தால் முத்தம் வேண்டுமே
சீவி முடித்தகுழலிருந்தால் கோத வேண்டுமே
தக்கவரைத் தேர்ந்தெடுத்து தழுவ வேண்டுமே
தாமரைப்பூ முகத்தில்முகம் பதிக்க வேண்டுமே..

நெற்றியிலுள்ளகுங்குமப் பொட்டு சட்டையில் ஒட்டாதோ
நெளியும்கைகள் வளைய வந்து கட்டியணைக்காதோ
கட்டில் போட்டு மெத்தை விரித்து க வி தை சொல்லாதோ
கண்ணா அம்ம்மா ம்ம்ம் என்று கதை படிக்காதோ..

காதல் பேச்சு ப் பேச ஒரு காலம் இல்லையா
கல்யாணத்தின் முன்னே இது பாவம் இல்லையா
ஆதி மனிதருக்கும் நமக்கும் பேதம் இல்லையா
அன்னை தந்தை காத்து வந்த நியாயம் இல்லையா

வாழப் போகும் ஜோடி இங்கு நானும் நீயுமா
இல்லை வாழ்ந்து பார்த்து முடிந்து விட்ட தந்தை தாயுமா
காலம் பார்த்து நேரம் பார்த்து மாலை சூடுவோம்
கை கலந்து மெய் கலந்து கானம் பாடுவோம்..ம்ம்
*
உயிர் மேல் ஆசை ஜெய். எல்.விஜயலஷ்மி டி.எம்.எஸ் பி.எஸ்.

https://youtu.be/Bk_Kta_9YnM

chinnakkannan
4th August 2015, 10:35 PM
கொஞ்சுமெழில் கொண்டபெண்ணே கொடுத்துவிடு என்னிதயம்
..கோதையுனைக் கெஞ்சித்தான் கேட்கின்றேன் தந்துவிடு
பிஞ்சுமனம் கொண்டவளைப் பேதையெனைப் பித்தாக்கி
…விஞ்சிவிடும் வார்த்தையினை விதைக்கலாமோ வித்தகரே
நெஞ்சினிடம் கேட்டுவிட்டேன் நேரிடையாய் மொழிந்துவிட்டேன்
.. நின்றதையா நாடியதும் சொன்னதையா சேதியினை
தஞ்சமென என்னிதயம் உன்னிடமே இருக்கையிலே
..தாவிவந்த உன்னிதயம் கேட்பதுவோ நியாயமிலை..!
*

ஹை..இன்னொரு அழகிய டூயட் நான் கேட்காதது..ரவிச்சந்திரன்..பாரதி தானா..வாலிப விருந்து…

எங்கே எங்கே என்மனது அது அங்கே இருந்தால் தந்துவிடு..

தொட்டால் உடம்பு தாங்காது
கை பட்டால் இதயம் தூங்காது (எல் ஆர். ஈ அண்ட் வாலி)
வெட்கம் என்னைத் தடுக்குது
உன் பக்கம் பார்த்தால் துடிக்குது

கன்னியின் உடலே கற்கண்டா
கைபட்டால் அதுவே கரைவதுண்டா

கரும்பும் இனிப்பும் பிரிந்திடுமா
காத்திருந்தாலே கசந்திடுமா ( வாலி அகெய்ன்.. நைஸ்)

*


https://youtu.be/nSuP1spVkD0

chinnakkannan
4th August 2015, 10:44 PM
கொஞ்சுமெழில் நங்கையர்கள் இருவர் அங்கே
….கொட்டுகின்ற இமைகளுடன் கண்க ளுள்ளே
விஞ்சிவரும் காதலினை ஆசை கூட்டி
..வேட்கையுடன் பாடுகிற பாடல் கேட்டே
மிஞ்சுகிறான் வாலிபனும் பண்பை அங்கே
…மேலதிகம் பெண்களவர் கானம் கேட்க
வஞ்சியரோ வாலிபத்தின் மயக்கம் கொண்டே
….வாகாகப் பாடினரே காலம் காலம்..!

*

ஹை.. கொஞ்சுமெழில் வச்சு மூணு பாட் எழுதிட்டேன்.. !
*
https://youtu.be/U2XV6qAXn8g

அமைதி கொள்ளாமல் ஆவலைச் சொல்லாமல்
எரிமலை புகைபோலே மணிகடல் அலைபோலே – எவண்டி எவண்டி
எனைக்கவர்ந்த கள்வனடி..

கற்பனை செய்துசெய்து ஏங்குவதோ
சிற்பத்தைப் பார்த்து பார்த்து தூங்குவதோ
இனிக்கும் காதல் இளமைக்காதல்
இரவில் நிலவில் இன்பம் கண்டேன்

கனிந்து வந்தபோது பூப்போலே
காவேரி வளைந்து நின்றாள் வேர்போலே
ஏனோ ஏனோ தாவிச் சென்றேன்
ஏதோ ஏதோ வாழ்வைக் கண்டேன்

சந்தனக் காட்டிலுள்ள தேனோடை
கன்னியர் நீராடும் நீரோடை
கள்வனைக் கண்டோம் கருத்தினில்கொண்டோம்
பருவம் தந்த பார்வையைக் கொண்டோம்

எவண்டி எவண்டி
நம் மனம்கவர்ந்த கள்வனடி..

எல் ஆர் ஈஸ்வரி ஜானகி விஜயபுரி வீரன் என்.டி.ஆர் ராஜஸ்ரீ அப்புறம் வாசு சொல்வார்!

**

rajeshkrv
4th August 2015, 10:52 PM
ஜி
உமக்காக ஒரு சூப்பர் பாடல்
மனசு பரிமளின்ச்சனே . ஸ்ரீ கிருஷ்ணார்ஜுன யுத்தம் திரையிலிருந்து
தமிழில் இது மனசு பரிமளித்ததே


https://www.youtube.com/watch?v=jdqCYzjD2Ko

eehaiupehazij
5th August 2015, 03:08 AM
Gap filler / Monotony breaker

Swings and Dongles!

நடிகர்திலகம் ஆடிய ஊஞ்சல்களும் தொங்கல்களும்

ஊஞ்சலாட்டம் ஒரு மன மகிழ்வான பொழுதுபோக்கே! கவலைகள் மறந்து மனம் தெளிந்து உடலும் உள்ளமும் புத்துணர்ச்சி பொங்க வைக்கும் விளையாட்டே !
திருமண நிகழ்விலும் அறுபதாம் ஆண்டு நிறைவு போன்ற வைபவங்களிலும் ஊஞ்சலாட்டம் சிம்பாலிக்காக வைக்கப் படுகிறது!சிறுவர் பெரியோர் பேதமின்றி ஆடி மகிழும் ஊஞ்சல்கள் நடிகர் திலகத்தையும் சுமந்தாடிய பெருமை பெற்றன..
அதே போலத்தான் அலங்கார சர விளக்குத் தொங்கல்களும் டார்ஜான் பாணி மரக்கிளை கொடித் தொங்கலும் கயிற்றுத் தொங்கலும்!!


https://www.youtube.com/watch?v=tkiAfQcDXoA

உத்தமபுத்திரனில் அந்தப்புரத்தில் ஆடல் பாடல் மது மங்கை மயக்கத்தில் திளைத்திருக்கும் மோசமான தருணத்தில் அன்னையின் திடீர் வரவு விக்கிரமனை நிலைகுலைய வைக்கிறது அன்னையின் மீது மட்டற்ற பாசமும் மரியாதையும் இருப்பினும் சிவபூஜை கரடியாக தாயின் பிரவேசத்தை விரும்பாத மன நிலையை அலட்சியமாக ஊஞ்சலில் அமர்ந்து கால்களை எத்தி எத்தி ஆடும் அபாரமான உளவியல் வெறுப்பு கலந்த கோபத்தை அவர் வெளிப்படுத்தியிருக்கும் பாங்கு உலக நடிகர்கள் எவரையும் தாள் பணிய வைக்கும் உன்னதமே!!

https://www.youtube.com/watch?v=G5237Cr-2AI


வியட்நாம் வீடு காவியத்திலும் தம்பதியர் முதுமைத் தள்ளாட்டத்திலும் நாணிக் கோணி ஊஞ்சலாட்டம் பின்னுகிறார்கள்!!(No link available!)

https://www.youtube.com/watch?v=HVly9jHBF0o

சொர்க்கம் திரைப்படத்திலும் திருமணக் கனவாக வண்ணமயமான ஊஞ்சலாட்டம் இடம் பெறுகிறது !

https://www.youtube.com/watch?v=ElJK1zLMjTo

உத்தம புத்திரன் கயிற்றுத் தொங்கலும் சாண்டலியர் சரவிளக்குத் தொங்கலாட்டமும்

https://www.youtube.com/watch?v=hjpR-KiOnX4



https://www.youtube.com/watch?v=W37hLhSP9NU

In Deiva Magan too..!!

https://www.youtube.com/watch?v=kzqpT0JK6-g


தங்கசுரங்கம் கயிற்றுத் தொங்கல் ..கிணற்றுக்குள் ரொமான்ஸ்!!

https://www.youtube.com/watch?v=lnObODMJnHY


தங்கமலை ரகசியம் மரக் கொடி டார்ஜான் தொங்கலாட்டம்!

Russellrqe
5th August 2015, 08:09 AM
1952 - rare documents from trichy publications

sivaji magazine ''parasakthi'' review

http://i60.tinypic.com/33uzmo5.jpg

Russellrqe
5th August 2015, 08:11 AM
http://i57.tinypic.com/2mqub2s.jpg

Russellrqe
5th August 2015, 08:13 AM
http://i59.tinypic.com/e6ve4p.jpg

Russellrqe
5th August 2015, 08:14 AM
http://i59.tinypic.com/2inbwp.jpg

Russellrqe
5th August 2015, 08:15 AM
http://i57.tinypic.com/34fjofr.jpg

Russellrqe
5th August 2015, 08:17 AM
http://i59.tinypic.com/2cz59wz.jpg

rajraj
5th August 2015, 08:29 AM
From avan(1953), Tamil dubbed version of Aah(1953)

kalyaaNa oorvalam varum........

http://www.youtube.com/watch?v=s-z6t7eehUQ

From the Hindi original Aah(1953)

raja ki ayegi baraat........

http://www.youtube.com/watch?v=TLFAAYUHML4

From Prema Lekhalu(1953), Telugu dubbed version

panditlo pellavuthunnadi..

http://www.youtube.com/watch?v=3hLisnLvpT4


I don't think I posted this jugalbandi earlier. I thought I should post some songs from Aah because I said that was my most favorite movie ! :)
I sing this in jugalbandi in our annual music party. I sing the Tamil version and my friend from the north sings the Hindi version! Just for fun ! :)

vasudevan31355
5th August 2015, 10:05 AM
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்

http://2.bp.blogspot.com/-HRNJSnA1-84/TenskpB9duI/AAAAAAAAAuY/mP0R6cDrGMY/s320/spb.jpg

(நெடுந்தொடர்)

23

'அன்பைக் குறிப்பது 'அ'னா'

'என்ன முதலாளி சௌக்கியமா?'

http://i.ytimg.com/vi/39ADVkaK98Y/hqdefault.jpg

இன்றைய தொடரில் அண்ணா புரொடக்ஷன்ஸ் அளிக்கும் டி.கே.சங்கரின் 'என்ன முதலாளி சௌக்கியமா?'

கம்யூனிசக் கொள்கைகளை முழங்கும் படம்.

மேஜர் மெயின் ரோல். அப்புறம் கே.ஆர்.விஜயா. ஜெமினி, நாகேஷ், ஜெயபாரதி. எம்.ஆர்.ஆர். வாசு, வி.எஸ்.ராகவன் என்று நட்சத்திரங்கள். கவர்ச்சிக்கு ஹலம், விஜயலலிதா கூட உண்டு.

முதலாளித்துவ வெறி பிடித்த மேஜரை விஜயா ஏமாற்றி திருமணம் கொண்டு நாகேஷ் துணையோடு அவரை அடக்குவதே கதை.

இந்தப் படத்தின் மூலக்கதை கண்ணதாசன். 'திரையுலகத் தாரகை' என்று விஜயாவின் பெயருக்கு டைட்டில் கொடுத்திருப்பார்கள். ஒளிப்பதிவு இயக்குனர் நிமாய் கோஷ். இசை 'மெல்லிசை மன்னர்'. அசோசியட் டைரெக்டர் K.விஜயன். திரைக்கதை, வசனம், இயக்கம் 'மல்லியம்' ராஜகோபால்.

ஈஸ்வரி பாடும்,

'என்ன முதலாளி சௌக்கியமா?' (மேஜரிடம் விஜயா கிண்டல்)

'எகிப்து நாட்டின் இளவரசி' (ஹலம் டான்ஸ்).

'நல்ல காரியம் நடக்கட்டும்...நமக்குள்ளாகவே இருக்கட்டும்' (விஜயலலிதா டான்ஸ்)

அப்புறம் 'பாடகர் திலகம்' நாகேஷுக்கு (மலையாளக் கரை ஜெயபாரதியைக் கிண்டல் செய்து) பாடும்

'வாடி வாடி என் மாளிகை மான்குட்டி'

என்று தெரிந்தும் தெரியாத பாடல்கள்.

பிறகு தொடரில் இடம் பெறப் போகும் பாலாவின் 'அன்பைக் குறிப்பது 'அ'னா பாடல்.

மீண்டும் ஜெமினிக்கு பாலா. ஜெமினி பள்ளிக் குழந்தைகள் மூலமே சிலேட்டில் 'அ'னா, 'ஆ'வன்னா எழுதி கே.ஆர்.விஜயாவை அவருக்கே உரித்தான பாணியில் கணக்குப் பண்ணப் பார்ப்பது அருமைதான். ஆனால் மனிதருக்கு வயது ஏறி முகம் பலாப்பழம் போல் முற்றிப் போய் எங்காவது வெடித்து விடப் போகிறது என்று நாம் அஞ்சும் அளவிற்கு இருப்பார். அவரைக் குறை கூறி என்ன பயன்? இயற்கைக்கு எல்லோரும் அடி பணிதுதானே ஆக வேண்டும்?

பாலா பாடல் முழுதும் கொஞ்சி விளையாடுவார். குழைவும் அருமை. அப்படியே பாடலில் சொக்க வைப்பார். அனுபவம் மெருகேறி பாலகக் குரல் கொஞ்சம் மறைந்து பாலாவின் குரலாகவே கேட்க ஆரம்பிக்கும்.

http://i.ytimg.com/vi/_oLLrY7brRM/maxresdefault.jpg

வெளிப்புறப் படப்பிடிப்பும், வண்ணக் குழைவும், பூங்காவும், குழந்தைகளும் நேர்த்தி. Tata Ace ன் உருவம் அகோரமாக இருந்தாலும் முகம் களையாகவே இருக்கும்.:razz: புன்னகைக்கு அரசிதான்.

முதலில் உயிரெழுத்துக்களை வைத்தே கவிஞர் சிம்பிளாகவும், அழகாகவும் பாடலை முடித்து குழந்தைகள் வாயிலாக ஜெமினி மூலம் விஜயாவிற்கு காதல் தூது விட்டு விட்டார்.

அன்பைக் குறிப்பது 'அ' னா
ஆசையின் விளக்கம் 'ஆ' வன்னா
இளமையில் இன்பம் 'இ' னா
ஈடில்லா சுகம் 'ஈ' யன்னா

(அன்பை)

உயிர்க்குயிர் என்பது 'உ' னா
ஊடலில் கூடல் 'ஊ' வன்னா
என்னையே தருவது 'எ' னா
ஏக்கமோ ஏக்கம் 'ஏ' யன்னா

லாலாலலலலலாலா
லாலலலாலாலாலா

(பாலா புகுந்து விளையாடி விடுவார் இந்த 'லாலா'வில். என்ன இனிமை! என்ன இனிமை!)

ஐக்கியப்படுவது 'ஐ'யன்னா
ஒழுக்கத்தை உணர்த்தும் 'ஒ' னா
ஓர் முடிவெடுப்பது 'ஓ' வன்னா
ஒளடதம் நோய்க்கென்ன 'ஒள' வன்னா
ஃ தே காதலாம் 'ஃ' ன்னா

லாலாலலலலலாலா
லாலலலாலாலாலா

'அ' னா 'ஆ' வன்னா 'இ' னா
'அ' னா 'ஆ' வன்னா 'இ' னா

லாலாலலலலலாலா
லாலலலாலாலாலா

http://s2.dmcdn.net/uTrr/x240-2sZ.jpg

இப்போது கணக்குக் குறியீடுகளை வைத்து கண்ணதாசன் விளையாடுவார். காதல், இல்லற வாழ்வின் தத்துவங்களை கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் இவற்றை வைத்தே முடித்துவிடும் சாமர்த்தியம் சாகாவரம் பெற்ற, எந்த நிலையிலும் தனக்கு மரணமில்லாத, கண்ணதாசனை அன்றி வேறு யாருக்கு உண்டு?

உள்ளத்தில் ஆர்வத்தைக் கூட்டி விடில்
உண்மைக் காதல் கையில் கூடி விடும்
உள்ளத்தில் ஆர்வத்தைக் கூட்டி விடில்
உண்மைக் காதல் கையில் கூடி விடும்

கள்ளத்தை எண்ணத்தில் கழித்து விடில்
கற்பு நெறி ஒன்றே மிச்சப்படும்

இல்லற வாழ்க்கையை வகுத்து விடில்
இருவரின் பங்கென்ன புரிந்து விடும்
இல்லற வாழ்க்கையை வகுத்து விடில்
இருவரின் பங்கென்ன புரிந்து விடும்

வெள்ளம் போல் ஆசையைப் பெருக்கி விடில்
வேலியிட்டு (சிகப்பு) முக்கோணம் தடுத்து விடும்

(அனைத்தும் ஜெமினி மூலம் சிலேட்டில் எழுதிக் காட்டப் படும். பாடல் முழுக்க ஜெமினி உற்சாக துள்ளாட்டம் போட்டபடி இருப்பது ரசிக்க வைக்கும்)

அன்பைக் குறிப்பது 'அ' னா
ஆசையின் விளக்கம் 'ஆ' வன்னா

அன்பைக் குறிப்பது 'அ' னா

ம்?!...

ஆசையின் விளக்கம் 'ஆ' வன்னா


https://youtu.be/Q8B4mhk_nAk

vasudevan31355
5th August 2015, 10:44 AM
சின்னா!

கொஞ்சுமெழில் வச்சு மூணு பாட் எழுதினீரே. நன்னாயிட்டு. ஆமாம்! அமைதி கொள்ளாமல் குளிக்கும் அந்த நடிகைகள் யாரென்று சொல்லவே இல்லையே?

http://i.ytimg.com/vi/JKwEscLdJ8s/hqdefault.jpg

சரி! அது 'அக்கி பிடுகு' என்ற தெலுங்குப் படத்தின் மொழிமாற்றுத் தமிழ்ப் படம். 'வீராதி வீரன்' என்று தமிழில் 1964-ல் வந்தது. என்.டி. ராமாராவ் ஹீரோ. கிருஷ்ணகுமாரி, ராஜஸ்ரீ நாயகிகள். ராஜன் நாகேந்திரா இசையமைத்திருந்தார். ('இரு நிலவுகள்' என்ற கமல் நடித்த தெலுகு தமிழ் டப்பிங் படத்துக்கும் இவரே இசை. 'ஆனந்தம் அது என்னடா?' )

'எவரனுக்குன்னாவே' என்று தெலுங்கில் இந்தப் பாடல் தொடங்கும். புரட்சிதாசன் அதை 'அமைதி கொள்ளாமல்' என்று மாற்றி தமிழுக்கு எழுதி இருப்பார். 'எவரே...எவரே'... என்பதை 'எவன்டி?... எவன்டி?' என்று சாமர்த்தியமாக தமிழுக்குத் தக்கபடி வார்த்தைகளைப் போட்டிருப்பார்.:)

இரண்டிலுமே பாடல் கேட்க செம ஜோர். நான் சில மாதங்களுக்கு முன் கேட்டேன். இப்போது உங்கள் புண்ணியத்தால் இரண்டு மொழிகளிலும் மீண்டும் கேட்டு ரசித்தேன். தேங்க்ஸ் சின்னா

போனஸ் கொசுறு செய்தி.

'அக்கி பிடுகு' படம் எம்.கே ராதா, ரஞ்சன் நடித்து வந்து தமிழில் சக்கை போடு போட்ட ஜெமனி தயாரித்த 'அபூர்வ சகோதர்கள்', இந்தியில் ராஜேந்திர குமார் நடித்த 'கோரா அவுர் காலா', அப்புறம் ஒரிஜினல் தமிழில் மீண்டும் எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்த 'நீரும் நெருப்பும்' படத்தின் கார்பன் காப்பி உல்டா. தமிழில் மீண்டும் டப்பிங்கில் 'வீராதி வீரன்'

இதோ தெலுங்கு வடிவம். Enjoy. ஆமாம்! தமிழுக்கு மாஞ்சி மாஞ்சி லிரிக்ஸ் எழுதுனீரே! அப்படியே தெலுங்குக்கும் கொஞ்சம் எழுதுமே ஓய்..:)


https://youtu.be/MVs2RMq3UKY

madhu
5th August 2015, 10:44 AM
"வாசு ஜி..

சூப்பர் சூப்பர் சூப்பரே !

ஆனால் ஒரு சந்தேகம். அன்பைக் குறிப்பது ஆனா இடம் பெற்றது "என்ன முதலாளி சௌக்கியமா? படம் என்று நினைக்கிறேன்.
( ஏனென்றால் நான் சங்கமம் படம் பார்த்ததில்லை. ஆனால் என்ன முதலாளி சௌக்கியமா பார்த்திருக்கிறேன். இது நான் பார்த்த பாடல் காட்சி என்பதால் இந்த சந்தேகம் )

எதற்கும் இன்னொரு தடவை சந்தேகத்துக்கு சங்கமமத்தையும் செக் பண்ணிடுவோம்.

rajeshkrv
5th August 2015, 11:31 AM
வாசு ஜி பாலா தொடர் அருமை அருமை. :thumbsup:

rajeshkrv
5th August 2015, 11:35 AM
ஜி
இதோ ஒரு கன்னட பாடல்

ஏக் துஜே கேலியேவில் படங்களின் பெயரில் வ்ந்த பாடல் போல்
கன்னடத்தில் ஹம்சலேகாவின் இசையில் (ஹிந்தி ஹீரோவின் டியூனை அப்படியே சுட்டுவிட்டார்)
இசையரசியுடன் ரமேஷ் பாடிய பாடல்

ரவிச்சந்திரன் குஷ்பு

https://www.youtube.com/watch?v=XzodLN4eiIk

vasudevan31355
5th August 2015, 11:43 AM
மதுண்ணா!

நன்றி! நான்தான் (ஸ்ட்ரைக்) குழப்பத்தில் மாற்றி எழுதி விட்டேன். கண்டிப்பாக என்ன முதலாளி சௌக்கியமா தான் சந்தேகமே இல்லை. எனக்கே நன்றாகத் தெரியும். இரண்டுமே ஜெமினி. இரண்டுமே விஜயா. இரண்டுமே கலர். யோசிக்கவே இல்லை. தெளிவு படுத்தியதற்கு நன்றி. மாற்றி விட்டேன். மீண்டும் நன்றி தங்களுக்கு.

sss
5th August 2015, 11:52 AM
மதுண்ணா!

நானும் கேட்டிருக்கிறேன். உங்கள் பல்லவி சரியேதான். நன்றாக நினைவிருக்கிறது. ஆனால் படம் தெரியவில்லை. கண்டு பிடிப்போம். வச்சீங்களே அருமையான வேலை.:) யப்பா! செம ஞாபகசக்தி. ராயல் சல்யூட் உங்களுக்கு.

வாசு சார்.. நீங்கள் எப்படி மறந்தீர்கள்..

அமுதா திரைப் படம் தான் அது...



சுந்தரபாண்டியன்

chinnakkannan
5th August 2015, 12:10 PM
ஹாய் குட்மார்னிங்க் ஆல்..

வாசு.. தாங்க்ஸ் ஃபார் வீராதி வீரன்..ஹப்பா இவ்ளோ டீடெய்ல்ஸா.. கிருஷ்ணகுமாரிங்கற பெயர் நெஞ்சுக்குழில்ல நின்னுக்கிட்டு இருந்துச்சு இருந்துச்சா..சரி நீங்க சொல்வீங்கன்னு விட்டுட்டேன்..அதே மாதிரி சொல்லிட்டேள்.. ஹப்புறம் எ.மு.செள பார்த்ததில்லை..ஆனா அனா பாட் சங்கமம் இல்லைஎன்பது தெரியும்..கொஞ்சூண்டு ம.காய வைச்சுட்டேள்..தெலுகு பாட்டுக்குஎப்படி லிரிக்ஸ் எழுதறது.. எனகுகு தெரியாதே..


சி.செ ஊஞ்சல் எக்கச்சக்கமா இருக்குதுங்க்னா வார்த்தைல

மழைக்கால மேகம் ஒன்று மடி ஊஞ்சல் ஆடியது
ஊஞ்சலுக்குப் பூச்சூட்டி ஊர்வலத்தில் விட்டாரோ
தில் தில் தில் மனதில் ஒரு ஜல் ஜல் ஜல் ஊஞ்சல்
உலாவும் உன் இளமை தான் ஊஞ்சலாடுது
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே..
உன்னாலே என்தன் உள்ளம் ஊஞ்சல் போல ஆடுதே பின்னாலே குத்திக் குத்தித் தாளமெல்லாம் போடுதே

சரி கடைசிப் பாட் ஃபாஸ்ட் சாங்க் கறதால போட்டுக்கலாம்.. (பாகம் மூணுல அறுபத்திரெண்டாம் பக்கம் போட்டதும் நான் என்பதால் ப்
நானே போட்டாச் சொல்லிக்கலாம்!)

https://youtu.be/a7iXs4NT47U

பின்ன வாரேன்

vasudevan31355
5th August 2015, 12:59 PM
வாசு சார்.. நீங்கள் எப்படி மறந்தீர்கள்..

அமுதா திரைப் படம் தான் அது...

சுந்தரபாண்டியன்


நன்றி சுந்தரபாண்டியன் சார். ஏனோ டக்கென்று நினைவுக்கு வரவில்லை.

madhu
5th August 2015, 01:15 PM
நன்றி சுந்தர பாண்டியன் சார்... யெஸ்... எஸ்.பி. இசைத்தட்டின் ஒரு பக்கம் "அன்பே அமுதா" . இன்னொரு பக்கம் இந்தப் பாட்டு...

யூடியூபில் செக் செஞ்சால் அமுதா முழு திரைப்படத்தின்( part 3) மூன்றாம் பகுதியில் முதலிலேயே இந்தப் பாட்டு வருது. ஆனால் என்ன காரணத்தாலோ ஒலியே இல்லை. வாயசைப்பை வைத்து உறுதி செய்து கொண்டேன்.

மீண்டும் நன்றி.
வாசு ஜி... விரைவில் உங்கள் பணியில் உண்டாகியிருக்கும் குழப்பங்கள் எல்லாம் தீர்ந்து மகிழ்ச்சி நிலவ வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுகிறேன்.

sss
5th August 2015, 01:18 PM
வாசு சார் ... போராட்டம் தீவிரமாகிறது போலிருக்கிறது ... சீக்கிரம் நல்ல முடிவு வர வேண்டுகிறேன்.
இந்த பாட்டு உங்களுக்கு " அங்கே " காத்திருக்கிறது...பெற்றுக்கொள்ளவும் ...

அமுதா படத்தின் டைட்டில் காட்சியில் வாணி ஜெயராம் பெயர் வரும்.. ஆனால் படத்திலோ பாடல் எதுவும் இல்லை...காரணம் தெரியவில்லை...

vasudevan31355
5th August 2015, 02:05 PM
வாசு சார் ... போராட்டம் தீவிரமாகிறது போலிருக்கிறது ... சீக்கிரம் நல்ல முடிவு வர வேண்டுகிறேன்.




சுந்தரபாண்டியன் சார்,

நேற்று இப்பாடல் பற்றி சுக்ராவில் கேட்டிருந்தேன். பிறகு பார்க்கவில்லை. நன்றி! பெற்றுக் கொள்கிறேன்.

இன்று 17ஆவது நாளாக ஸ்ட்ரைக் தொடர்கிறது.

நேற்றும் இன்றும் மறியல் போராட்டம் நடத்தி தொழிலாளர்கள் ஆயிரம் பேர்களுக்கு மேல் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். போராட்டம் தீவிரமடைந்து வரும் வேளையில் நிர்வாகத்துடன் இன்று உச்சக்கட்ட பேச்சு வார்த்தை நடைபெறுகிறது. நிர்வாகம் கொஞ்சமும் வளையாமல் முரண்டு பிடிக்கிறது. எல்லோர் முகங்களிலும் கவலை ரேகை. பத்து சதவீத ஊதிய உயர்விலேயே பிடிவாதமாக நிற்கிறது நிர்வாகம். ஆனால் சென்றமுறை முப்பது சதம் முடிந்தது. அடுத்த ஐந்தாண்டுகள் முடிவடையும் நிலையில் நிர்வாகம் இப்படி வெறுமனே 10 சதவீதம்தான் என்று முரண்டு பிடிப்பது அனைவரையும் எரிச்சல் அடையச் செய்துள்ளது. காவல்துறை குவிக்கப்பட்டுள்ளது. அரெஸ்ட் ஆன தொழிலாளர்களுக்கு காவல்துறையால் மூன்று வேளை உணவு கூட வழங்க முடியவில்லை. நேற்று பசி மயக்கத்தில் சிலர் மயக்கமடைந்து விட்டனர். கைது செய்யப்பட்ட தொழிலாளர்கள் கல்யாண மண்டபங்களிலும், சமுதாயக் கூடங்களிலும் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இன்று பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தால் நாளை கார்பரேட் ஆபீஸ் முன்பு தொழிலார்கள் திரளாகச் சென்று மறியல் நடத்த இருப்பதாக தெரிகிறது. நெய்வேலி நகரமே பதட்டமாக உள்ளது. ஆனால் அமைதியாக உள்ளது. தொழிலாளிகள் கட்டுக்கடங்கியே இருக்கிறார்கள். ஆனால் நிர்வாகம் அதைப் புரிந்து கொள்வதாகவே இல்லை.

இத்தனை நாள் தாக்குப் பிடித்த நிலையில் இப்போது மின்சார உற்பத்தி சிறிது சிறிதாக பாதிக்கப்பட ஆரம்பித்துள்ளது. ஆனால் எந்தப் பாதிப்பும் எங்களுக்கு இல்லை என்று நிர்வாகம் அறிக்கை விடுக்கிறது. நிலக்கரி வெட்டி எடுப்பதும் குறைந்துள்ளது. அதிகாரிகளும், ஒப்பந்தத் தொழிலாளிகளும் வேலைக்குச் செல்வதால் நிர்வாகம் நிரந்தரத் தொழிலார்கள் மேல் வஞ்சம் தீர்க்க நினைக்கிறது.

இந்த 17 நாட்களும் அனைவருக்கும் சம்பளம் கட். இது போனஸ், இன்சென்டிவ் என்று எல்லாவற்றிலும் பாதிப்பைத் தரும்.

பொறுத்திருந்து பார்ப்போம். இது பற்றி அக்கறையுடன் விசாரிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. தங்கள் அனைவரின் வேண்டுதல்களால் நிச்சயம் விரைவில் விடிவு ஏற்படும்.

chinnakkannan
5th August 2015, 02:43 PM
//இந்த 17 நாட்களும் அனைவருக்கும் சம்பளம் கட். இது போனஸ், இன்சென்டிவ் என்று எல்லாவற்றிலும் பாதிப்பைத் தரும்.

பொறுத்திருந்து பார்ப்போம். இது பற்றி அக்கறையுடன் விசாரிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. தங்கள் அனைவரின் வேண்டுதல்களால் நிச்சயம் விரைவில் விடிவு ஏற்படும்.// கொஞ்சம் சோகமாகத் தான இருக்கிறது வாசு..ம்ம் கூடிய விரைவில் சரியாக ப்ரே மட்டும் இங்கிருந்து பண்ணிக் கொண்டிருக்கிறேன்/ எல்லோரும்..

vasudevan31355
5th August 2015, 03:01 PM
நன்றி சுந்தர பாண்டியன் சார்... யெஸ்... எஸ்.பி. இசைத்தட்டின் ஒரு பக்கம் "அன்பே அமுதா" . இன்னொரு பக்கம் இந்தப் பாட்டு...

யூடியூபில் செக் செஞ்சால் அமுதா முழு திரைப்படத்தின்( part 3) மூன்றாம் பகுதியில் முதலிலேயே இந்தப் பாட்டு வருது. ஆனால் என்ன காரணத்தாலோ ஒலியே இல்லை. வாயசைப்பை வைத்து உறுதி செய்து கொண்டேன்.

மீண்டும் நன்றி.
வாசு ஜி... விரைவில் உங்கள் பணியில் உண்டாகியிருக்கும் குழப்பங்கள் எல்லாம் தீர்ந்து மகிழ்ச்சி நிலவ வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுகிறேன்.

நன்றி மது அண்ணா!

நானும் பார்த்தேன். படத்தின் அரை மணிக்குள்ளாகவே இந்தப் பாடல் வந்து விடும். ரவி அமர்ந்திருக்க ஹோட்டலில் எல்.காஞ்சனா காபரே ஆடுவார். வழக்கத்தைவிட இந்தப் பாடலில் கூடுதல் அழகாகத் தெரிவார்.
வாயசைப்பை நானும் செக் செய்தேன். என்ன ஒரு ஒற்றுமை! நான் முன்னம் இந்தப் படத்தை டவுன்லோட் செய்து வைத்திருந்தேன். அதைத் தேடி எடுத்துப் பார்த்தேன். ராஜ் வீடியோ விஷன் 'யூ டியூபில்' அப்லோட் செய்தும் புண்ணியமில்லை. ராஜஸ்ரீ அழும் காட்சியில் கட் ஆகும் ஆடியோ அடுத்து வரும் இந்தப் பாடல் முழுதும் முடிந்ததும்தான் திரும்பக் கேட்க ஆரம்பிக்கிறது. அதுவும் ராட்சஸி பாடல். கைக்கு எட்டியும் வாய்க்கு......எப்படியாவது பிடிக்க வேண்டும்.

vasudevan31355
5th August 2015, 03:35 PM
மது அண்ணா!

'சுக்ரா' வில் நான் கேட்டுக் கொண்டதற்கிணங்க நண்பர் அசோக், நமது அருமை நண்பர் சுந்தரபாண்டியன் சார் இருவரும் 'மாலை மயக்கத்தில் மந்திரமொன்று வேண்டும்' பாடலை அளித்திருந்தார்கள். அவர்களுக்கு என் சார்பிலும், மதுர கானங்கள் சார்பிலும் மனமார்ந்த நன்றி!

ஆனால் பாடலை டவுன்லோட் செய்ய முடிந்ததே தவிர லிங்க் கிடைக்கவில்லை. அதனால் நான் டவுன்லோட் செய்த பாடலை Media Fire ல் உங்களுக்காகவே அப்லோட் செய்து லிங்கை இங்கே கொடுத்துள்ளேன். பெற்றுக் கொள்ளவும்.

http://www.mediafire.com/download/wwbhgd638uhivhp/Maalai_Mayakkathil.mp3

JamesFague
5th August 2015, 05:14 PM
கடைசியாக வந்த தகவல் படி பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்து விட்டதாக தெரிகிறது.

sss
5th August 2015, 08:16 PM
அன்புள்ள வாசு அண்ணா & மது சார்... நன்றி..

வாசு அண்ணா சம்பளம் , போனஸ், இன்சென்டிவ் என்று எல்லா பாதிப்பையும் இது தரும் என்பது மனதுக்கு கஷ்டமாக உள்ளது ... ம்
உழக்கும் வர்க்கம் பாவம்... வீட்டிலும் வெளியிலும் நிம்மதி கிடைக்க வேண்டுகிறேன்...

Russellrqe
6th August 2015, 08:22 AM
RARE ADVTS & TRICHY ADVTS.
http://i59.tinypic.com/op0ioh.jpg

Russellrqe
6th August 2015, 08:24 AM
http://i62.tinypic.com/2cmusyw.jpg

Russellrqe
6th August 2015, 08:25 AM
http://i62.tinypic.com/kuji9.jpg

Russellrqe
6th August 2015, 08:26 AM
http://i57.tinypic.com/adhz0y.jpg

Russellrqe
6th August 2015, 08:27 AM
http://i57.tinypic.com/29ntd1t.jpg

Russellrqe
6th August 2015, 08:28 AM
http://i62.tinypic.com/dlt5d1.jpg

Russellrqe
6th August 2015, 08:29 AM
http://i62.tinypic.com/16ld3kp.jpg

vasudevan31355
6th August 2015, 08:48 AM
நண்பர்களே!

இன்று உச்சகட்டமாய் தொழிலார்கள் ஒன்று திரண்டு நெய்வேலி தலைமை அலுவலகத்தை காலை 9 மணிக்கு மேல் முற்றுகை இட இருக்கிறோம். நேற்று மாலை ஒவ்வொரு தொழிலாளி வீட்டிற்கும் சென்று பேரணியில் கலந்து கொள்ள வேண்டுமாய் வேண்டுகோள் விடுத்தோம்.

நேற்று நடந்த பேச்சு வார்த்தையிலும் நிர்வாகம் கொஞ்சமும் மசிந்து கொடுக்காததால் அனைத்து தொழிலாளர்களும் கொதிப்படைந்து இருக்கின்றனர். நெய்வேலியில் கலவர ரேகை படிய ஆரம்பித்திருக்கிறது. இன்றைய காலை போராட்டம் வலுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. அனேகமாக பேரணி தடுத்து நிறுத்தப்பட்டு அனைவரும் கைதாகலாம். கிட்டத்தட்ட 12000 தொழிலார்கள். இதில் குறைந்தது 6000 பேராவது பேரணியில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2990 மெகாவாட் உற்பத்தி மின்சாரம் தற்சமயம் 1000 மெகாவாட் குறைந்து விட்டது. ஆனால் நிர்வாகம் பராமரிப்புப் பணியால்தான் உறபத்தி குறைந்துள்ளது என்று சப்பை கட்டு கட்டுகிறது. அதிகாரிகளின் கோழைத்தனமும், பயந்த போக்கும், நிர்வாகத்தின் அதீதமான அச்சுறத்தல்களும் அவர்கள் தொழிளார்களுக்கு சப்போர்ட் பண்ண முடியாத சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறது. தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்று நினைக்கும் அதிகார வர்க்கத்துக்கு இன்று சாவு மணி அடிக்கப்படவேண்டும் என்பதே தொழிலார்களின் நிலைப்பாடு.

மிகப் பெரிய கலவர சூழ்நிலையை உருவாவதற்கு நிர்வாகமே முழுப் பொறுப்பு. இதற்கு அதிகாரிகள் என்ற அடிமாடுகள் உடந்தை.

எந்தக் கட்சிகளும் கண்டுகொள்ளாத நிலையில், கட்சித் தலைவர்களும் கண்டுகொள்ளாத நிலையில் தென்னகத்திற்கே மின்சாரம் வழங்கும் ஆசியாவின் மிகப் பெரிய நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் தன்னுடைய தொழிலார்களுடன் அனாதையாய் நிற்கிறது. மின்சாரம் மட்டும் சொகுசாக வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருந்தால் போதுமா? அதை உழைத்து உருக்குலைந்து தரும் தொழிலாளிகளின் நிலைமையை எந்தக் கட்சியாவது நினைத்துப் பார்க்கிறதா?

எங்களுக்காக இனி நாங்களே போராடிக் கொள்வது என்று தீர்மானம் எடுக்கும் நிலை வந்துவிட்டது. அதில் நிச்சயம் வெற்றி பெறுவோம். சுயநலம் பிடித்து அலையும் கட்சிகளையும், அதன் தலைவர்களையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

தொலைக்காட்சிகளில் கூட எங்கள் நிலைமை வெளியே தெரியாமல் மறைக்கப்படுகிறது. சன் டிவி, ஜெயா டிவியில் எல்லாம் இதெல்லாம் ஒரு செய்தியே அல்ல என்பது போல நடக்கிறார்கள். மின்சாரம் முழுதும் நின்றுவிட்டால் என்ன செய்வார்கள்? அவரவர்களுக்கும் அவரவர் தலைவர்களின் ஒப்பாரிதான் முக்கியம்.

இந்த நிலையில் இந்தப் பாடலைத்தான் நினைக்க வேண்டியுள்ளது.

எரிமலை எப்படிப் பொறுக்கும்
நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்
ரத்தச் சாட்டை எடுத்தால் கையை நெறிக்கும்
விலங்கு தெறிக்கும்
நாம் கண்ணீர் விற்கும் ஜாதி
இனி அழுதால் வராது நீதி


https://youtu.be/_ZgDcgGpzjk

Russellrqe
6th August 2015, 08:51 AM
http://i61.tinypic.com/15qfas4.jpg

Russellrqe
6th August 2015, 09:02 AM
திரு வாசுதேவன் சார்
நெய்வேலி நிலக்கரி சுரங்க நிர்வாகத்தின் நேர்மையற்ற போக்கும் அதற்கு துணை போகும் அதிகாரிகள் மற்றும் சில சுயநல யூனியன் தலைவர்களும் , பாராமுகமாக இருக்கும் அரசியல்
கட்சிகள் - இவர்களை நினைத்தால் ...............
உங்கள் போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது . எல்லாம் நல்லபடி நடந்திட வேண்டுகிறேன் .

rajraj
6th August 2015, 09:26 AM
I read somewhere today (5th August) is Chandrababu's birthday. In his memory here is a song he sang for VeeNa Balachander in Penn (1953)

kalyaaNam ha ha ha kalyaanam.......

http://www.youtube.com/watch?v=JgtZk34-5WM

From the Hindi remake Ladki

shaadi shaadi.....

http://www.youtube.com/watch?v=tya2ViAqh64

From the Telugu remake Sangham

pelli pelli...

http://www.youtube.com/watch?v=J1DzcwW7xo8

RAGHAVENDRA
6th August 2015, 09:39 AM
வாசு சார்
இந்தப் பதிவினை நான் எழுதும் போது தங்கள் போராட்டம் துவங்கியிருக்கலாம்.
அதிகாரி வர்க்கம் நிர்வாகத்தின் பக்கமே நின்று தங்களுடைய சுயநலத்தை மட்டுமே குறியாய்க் கொண்டு செயல்படுவது இந்த நூற்றாண்டிலும் தொடர்வது உள்ளபடியே வேதனையாய்த் தான் இருக்கிறது
என்றாலும் வியர்வையின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.
தங்கள் போராட்டம் வென்றே தீரும். இதில் எனக்கு நம்பிக்கை உள்ளது.
என் மனமார்ந்த பிரார்த்தனைகள் தங்கள் எல்லோருக்காகவும்.

madhu
6th August 2015, 11:08 AM
Vasu ji..

My prayers for you and NLC employees. Ellam nallathagave nadakkum.

eehaiupehazij
6th August 2015, 07:01 PM
தேன் சொட்டும் வானமும் தேள் கொட்டும் வனமும்


கற்பனை வளம் மிகுந்த பாடல் வரிகள் பொருத்தமான இசைகோர்ப்பில் வளமான குரல் குழைவில் வண்ண மயமான நடனம் கலந்த காட்சியமைப்பில் திறமையான நடிகர்களின் மெருகேற்றலில் வரும்போது அது தேன் சொட்டும் வானமே!!
ஏனோதானோ என்று நாராசமான கற்பனை வறட்சி நிறைந்த சொதப்பலான காட்சியமைப்பில் அதுவே தேள் கொட்டும் வனமாகிவிடும் வாய்ப்பும் உண்டே !!

பகுதி 1 : நடிகர்திலகத்தின் வீரபாண்டிய கட்டபொம்மன்

இன்பம் பொங்கும் வெண்ணிலா Vs ஆத்துக்குள்ளே ஊத்தை வெட்டி...

தேன் சிந்தும் வானமான இனிமை பொங்கி வழியும் காட்சியமைப்பு !
https://www.youtube.com/watch?v=DjbFwPJgDTE

விழிபிதுங்கி வெளியே ஓட வைக்கும் வனத் தேள்கடி !!
https://www.youtube.com/watch?v=e6Wjfzdm2Hg

eehaiupehazij
6th August 2015, 07:43 PM
மாற்றார் தோட்ட மதுரங்கள்

பகுதி 29 : டீன் மார்டின் - ஜெர்ரிலூயி ஆடல் பாடல் கலக்கல் !!


சைலன்ஸ்ர்ஸ் படப் புகழ் டீன் மார்டின் மிகச் சிறந்த பாடகரும் கூட ! ஜெர்ரிலூயி நாகேஷின் மானசீக நகைச்சுவை குருநாதர்...அங்கசேஷ்டைகள் கொனஷ்டைகள் நிறைந்த ஆடல் பாடல்களிலும் தூள் பரத்தியவர்!!
இரு ஜாம்பவான்களும் இணைந்து ஏராளமான திரைவிருந்து பங்களிப்பினை நல்கியுள்ளனர் ..கறுப்பு வெள்ளை டு கலர் காலம் வரை!

https://www.youtube.com/watch?v=BLQybyaWt6s

https://www.youtube.com/watch?v=cJ3RecyeJ_U

https://www.youtube.com/watch?v=v-JUON0gmv8

https://www.youtube.com/watch?v=0mPaC0chAVM

https://www.youtube.com/watch?v=ypSJO8SSgw4

eehaiupehazij
7th August 2015, 07:11 AM
மாற்றார் தோட்ட மனங்கவர் மதுரங்கள் !
ஜேம்ஸ் பாண்ட் படங்களின் இசை மற்றும் டைட்டில் பாடல்கள் தொகுப்பு
பகுதி 30 : டுமாரோ நெவர் டைஸ் / TOMORROW NEVER DIES(1997) / PIERCE BROSNAN as James Bond OO7!


கோல்டன் ஐ வசூல் மழை கொடுத்த புத்துணர்ச்சியில் அடுத்த படமான டுமாரோ நெவர் டைஸ் படத்திலும் பியர்ஸ் பிராஸ்னன் தனது உளவுப் பணியைத் தொடர்ந்தார். வழக்கமான ஜேம்ஸ் பாண்ட் அம்சங்கள் தூக்கலாக இருந்தாலும் சற்றே ஸ்கூல் பையன் மாதிரி கெச்சலான தோற்றம் ஷான் கானரியின் முரட்டுத் தனத்தை இமிடேட் செய்யும்போது கொஞ்சம் சிரிப்பை வரவழைத்தது. சற்று ஓவரான முகச் சுழிப்புக்களும் ரோஜர் மூரை இமிடட் செய்கிறார் என்பதை உணர்த்தியது. வரவர கிராபிக்ஸ் ஆதிக்கமும் அதிகரிக்க பாண்ட் படங்கள் கொஞ்சம் ரசிகர்களின் ஈடுபாட்டை குறைய வைக்க துவங்கியது. படமும் பெரிய வெற்றியை அடையவில்லை இசையும் பாடலும் பெரிதாக ரசிகர்களை சென்றடையவில்லை ஆனாலும் ரசிக்கத் தகுந்ததே !

https://www.youtube.com/watch?v=0IKVYHgghiE

https://www.youtube.com/watch?v=n8FLB4LuFCE

https://www.youtube.com/watch?v=IcRbEPRt1_Y

https://www.youtube.com/watch?v=JQSSvDQyUNA

Russellrqe
7th August 2015, 08:30 AM
RARE ADVT- TRICHY
http://i61.tinypic.com/nmkzrn.jpg

Russellrqe
7th August 2015, 08:32 AM
http://i59.tinypic.com/9858pv.jpg

Russellrqe
7th August 2015, 08:33 AM
http://i60.tinypic.com/24xgmyp.jpg

Russellrqe
7th August 2015, 08:35 AM
http://i60.tinypic.com/v42y40.jpg

Russellrqe
7th August 2015, 08:37 AM
http://i59.tinypic.com/2uhbzfr.jpg

Russellrqe
7th August 2015, 08:40 AM
http://i62.tinypic.com/muuykj.jpg

JamesFague
7th August 2015, 01:19 PM
Courtesy: Tamil Hindu

சூழல் ஒன்று: பார்வை இரண்டு- சென்று வா நிலவே



காதலனைப் பிரிந்து வாடும் நாயகி சந்திரனைப் பார்த்துத் தன் பிரிவாற்றாமையைப் பாடுவது இந்தியத் திரை மரபு. இந்தச் சூழலில் அமைந்த இந்தி - தமிழ் கதாநாயகிகளின் பார்வைகளைக் காண்போம்.

‘நாம் மகிழ்வோடு இருந்தபோது உதித்த சந்திரன் வானில் எழும்பிவிட்டதே, நீ இன்னும் வரவில்லையே’ என்ற இந்திப் பாடலையும் ‘எங்களுடன் இணைந்திருந்த நிலாவே இப்பொழுது என் தலைவன் இங்கு இல்லை, எனவே நீ இன்று போய்விடு; நாளை இதே நேரம் அவன் இருக்கும்பொழுது வா’என்று கோரும் தமிழ்ப் பாடலையும் பார்ப்போம்.

இந்திப் பாடல்

படம்: பேயிங் கெஸ்ட். பாடியவர்: லதா மங்கேஷ்கர்.

பாடலாசிரியர்: மஜ்ரூர் சுல்தான் பூரி. இசை: எஸ்.டிபர்மன்.

பாடல்

சாந்த் ஃபிர் நிக்லா மகர் தும் ந ஆயே ஜலாஃபிர் மேரி தில், கரூங்கி யா மே ஹாய்யே ராத் கஹத்திஹை வோ தின் க யே தேரே யே ஜாண்த்தா ஹை தில் கே தும் நஹீன் மேரே

பொருள்

நிலா மீண்டும் வந்ததே வானில் – ஆனால்

நீ இன்னும் வரவில்லை

எரிகிறது மீண்டும் என் இதயம்

என்ன செய்வேன் அய்யோ நான்

இந்த இரவு சொல்கிறது உனது அந்த

இன்பமான நாள் எங்கோ சென்றுவிட்டது

இதயம் எனது அறிந்து கொண்டுவிட்டது

இனி நீ என்னுடையவனில்லை என

இருந்தும் நிற்கிறேன் என் இமை விரித்து

என்ன செய்வேன் ஐயோ நான்

எழுகிறதே உன் நினைவு

இந்த இரவு சொல்கிறது உன் அருமை

அந்த நாட்கள் அகன்றுவிட்டன

அறிந்துகொண்டது (என்) உள்ளம் அல்ல

நீ எனது என நிற்கிறேன் கண் இமை விரித்து

என் செய்வேன் நான் எழுகிறதே உன் நினைவு

தகிக்கும் நெஞ்சின் கரும் புகை சூழும்

சகிக்க நான் இயலேன் சடுதியில் கிளம்பி வா

எரித்துவிட்டது எனை இந்த வசந்தத்தின் நிழல்

இருந்தும் நிற்கிறேன் என் இமை விரித்து

என்ன செய்வேன் ஐயோ நான்

நிலா மீண்டும் வந்ததே வானில் – ஆனால்

நீ இன்னும் வரவில்லை.

தமிழ்ப் பாடல்

படம்: உயர்ந்த மனிதன். பாடலாசிரியர்: வாலி.

பாடியவர்: பி.சுசிலா. இசை: எம்.எஸ். விஸ்வநாதன்

பால் போலவே வான் மீதிலே

யார் காணவே நீ காய்கிறாய் ?

நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா

இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா

தென்றலே என் தனிமை கண்டு நின்று போய்விடு

வண்ண விழியின் வாசலில் என் தேவன் தோன்றினான்

எண்ணம் என்னும் மேடையில் பொன் மாலை சூடினான்

கன்னியழகைப் பாடவோ அவன் கவிஞன் ஆகினான்

பெண்மையே உன் மென்மை கண்டு கலைஞன் ஆகினான்... ( நாளை )

சொல்ல நினைத்த ஆசைகள் சொல்லாமல் போவதேன்?

சொல்ல வந்த நேரத்தில் பொல்லாத நாணம் ஏன்?

மன்னன் நடந்த பாதையில் என் கால்கள் செல்வதேன்?

மங்கையே உன் கண்கள் இன்று மயக்கம் கொண்டதேன்? ( நாளை )

சிறந்த பாடலுக்கான தேசிய விருது பெற்ற பாடல் இது.

JamesFague
7th August 2015, 01:22 PM
Courtesy: Tamil Hindu


காற்றில் கலந்த இசை 16: காலைப்பனி, காதல் மற்றும் கானம்

ர்மறையான கதாபாத்திரங்களைப் பிரதானப் பாத்திரங்களாக வைத்து திரைப்படம் எடுப்பதற்கு அசாத்தியமான துணிச்சல் வேண்டும். இயக்குநர் மகேந்திரனிடம் அந்தத் துணிச்சல் உண்டு. அவர் இயக்கிய ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ திரைப்படம் ஒரு உதாரணம்.

படத்தில் மோகன், பிரதாப் போத்தன், சுஹாசினி ஆகியோரின் பாத்திரங்கள் மனத் தெளிவு கொண்டவை அல்ல. ஆனால், சூழல் கைமீறிச் செல்லும்போது தவறுகளைத் திருத்திக்கொள்ள அத்தனைப் பிரயத்தனப்படும் பாத்திரங்கள் அவை. நகரப் பின்னணியில் எடுக்கப்பட்ட இப்படத்துக்கு மேற்கத்திய இசைப் பாணியில் அற்புதமான இசையைத் தந்திருந்தார் இளையராஜா.

பருவத்தின் முதல் பாடல்

நகரத்தின் சாலையில் அதிகாலையில் ஜாகிங் செல்லும் நாயகிக்கு வழித்துணையாகச் சேர்ந்துகொள்கிறான் நாயகன். இருவரும் ஜாகிங் செல்லும் காட்சியின் பின்னணியில் ஒலிக்கும் பாடல் ‘பருவமே… புதிய பாடல் பாடு’. காலடிச் சத்தங்களைத் தாளமாக வைத்து இளையராஜா இசையமைத்த பாடல் இது. இப்பாடல் பதிவுசெய்யப்பட்ட விதம் பற்றி இசை நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்துகொண்டார் இளையராஜா. ஜாகிங் செல்லும் ஜோடியின் காலடிச் சத்தங்களை உருவாக்கப் பல்வேறு முயற்சிகளைச் செய்தும் திருப்தியடையாததால், கடைசியில் இசைக் கலைஞர்கள் இருவர் தங்கள் தொடைகளில் கைகளால் தட்டி எழுப்பிய ஒலியே பொருத்தமானதாக இருக்கும் என்று முடிவுசெய்தாராம்.

கிராமம் அல்லது வனப் பிரதேசம் பின்னணியிலான நிலப்பரப்புகளின் சித்திரத்தை உருவாக்குவதற்கும், நகரத்தின் பூங்காக்கள், நெடுஞ்சாலைகளின் இருபுறமும் விரியும் நிலப்பரப்புகள் போன்றவற்றைச் சித்தரிப்பதற்கும் இடையிலான நுட்பமான வேறுபாட்டை இளையராஜாவின் இசையில் உணர முடியும். அந்த வகையில் நகரம் சார்ந்த இயற்கை நிலப்பரப்பின் காட்சிகளைச் சித்தரிக்கும் இசையைக் கொண்ட பாடல் இது. ஓடிச் செல்லும்போது மாறிக்கொண்டே வரும் காட்சிகளுக்கு ஏற்ப, இசைக் குறிப்புகளை எழுதியிருப்பார் இளையராஜா.

காலடிச் சத்தத்தின் அதிர்வுகளால் பூச்செடிகளில் அமர்ந்திருக்கும் பட்டாம்பூச்சிகள் மேலெழுந்து பறப்பதைப் போல் முதல் நிரவல் இசையின் கிட்டார் இசை ஒலிக்கும். தொடர்ந்து ஒலிக்கும் வயலின் இசைக் கோவைக்கும் சரணத்துக்கும் இடையில் சில நொடிகளுக்கு ஹார்மோனியத்தின் இசையைக் கரைய விட்டிருப்பார் இளையராஜா.

அக்காட்சியில் சுள்ளிப் பொறுக்கிக் கொண்டு செல்லும் ஏழைச் சிறுமியைக் காட்டுவார் மகேந்திரன். மேன்மையான ரசனை கொண்ட இரு கலைஞர்களின் கூட்டுப் பங்களிப்புக்கு உதாரணம் அக்காட்சியும் இசையும். இரண்டாவது நிரவல் இசையில், அதிகாலைப் பனியில் உடலை வருடும் குளிர் காற்றைப்போல் தழுவிச் செல்லும் வயலின் இசைக் கோவையைத் தந்திருப்பார் இளையராஜா. மென்மையான இப்பாடலின் சுவை எஸ்.பி.பி. – எஸ். ஜானகி குரல்களில் மேலும் கூடியிருக்கும்.

காதலின் மர்மம்

விவரிக்க இயலாத உணர்ச்சிகளை எழுப்பும் மர்மமான உறவு காதல். குறிப்பாக, நட்பு காதலாக மலர்வதற்கு முன்னதான இடைவெளியில் ஏற்படும் உணர்ச்சிகள் விவரணைகளுக்கு அப்பாற்பட்டவை. கலைப்படைப்புகளில் அவற்றைப் பதிவுசெய்ய நுட்பமான பார்வை தேவை. மர்மங்கள் நிறைந்த அந்தப் பக்கங்களை அற்புதமாகப் பதிவுசெய்த படைப்புகளில் ஒன்று ‘உறவெனும் புதிய வானில்’ பாடல்.

புதிரான விஷயத்தை அணுகும் மனது, மர்மமான உலகில் சஞ்சரிப்பது போன்ற உணர்வைத் தரும் பாடல் இது. எதிர்பாராத திகைப்பில் உறைந்திருக்கும் மனதைப் பிரதிபலிக்கும் முகப்பு இசையுடன் பாடல் தொடங்கும். சஞ்சலமான மனதின் படபடப்பும், பரவசம் ததும்பும் காதல் உணர்வும் கலந்த குரலில் ‘பா..பபப்பா…’ எனும் ஹம்மிங்குடன் பாடத் தொடங்குவார் ஜானகி. ‘கனவிலும்… நினைவிலும் புது சுகம்’ என்று அவர் பாடும்போது, அதே உணர்வு கொண்ட காதலனின் குரலாக எஸ்.பி.பி.யின் ஹம்மிங் இணைந்துகொள்ளும்.

கிட்டார், எலெக்ட்ரிக் கிட்டார், வயலின், பியானோ என்று மேற்கத்திய இசைக்கருவிகளைப் பயன்படுத்தி, வெவ்வேறு அடுக்குகளில் விரிந்துசெல்லும் இசைக் கோவையை உருவாக்கியிருப்பார் இளையராஜா. பனி படர்ந்த நிலப்பகுதி, நகருக்கு வெளியே புதர்களில் புதைந்திருக்கும் பழைய கட்டிடங்கள், அறையின் இருளை ஊடுருவிச் செல்லும் ஒளிக்கீற்று என்று வெவ்வேறு கற்பனை அடுக்குகளின் மேல் பாடல் மிதந்துகொண்டே செல்லும். ‘பார்வை ஒவ்வொன்றும் கூறும் பொன் காவியம்’ எனும் வரிகளைப் பாடும்போது எஸ்.பி.பி.யின் குரலில் இருக்கும் காதல் கலந்த கம்பீரம் தனி அழகு.

திருமண உறவின் சிக்கலில் தவிக்கும் நாயகியின் மனப்பதிவாக ஒலிக்கும் ‘ஏ.. தென்றலே’ எனும் பாடலை பி. சுசீலா பாடியிருப்பார். ஜானகியை ஒப்பிட சுசீலாவுக்குக் குறைவான பாடல்களையே வழங்கியிருந்தாலும், அவருக்கென தனிச் சிறப்பான பாடல்களை வழங்கத் தவறவில்லை இளையராஜா.

இப்பாடல் அவற்றுள் ஒன்று. பாடலின் தொடக்கத்திலும், இடையிலும் வரும் சோக தேவதைகளின் கோரஸ் இப்பாடலின் உணர்வைக் கூட்டிவிடும். ’மம்மி பேரு மாரி’ என்று ஒரு பாடலும் படத்தில் உண்டு. ‘கீச்சு’ எனும் செல்லப் பெயரில் அழைக்கப்படும் பதின்பருவ இளைஞன் பாடுவதாக அமைக்கப் பட்ட அப்பாடலைப் பாடியவர் எஸ். ஜானகி!

JamesFague
7th August 2015, 01:25 PM
Courtesy: Tamil Hindu

எம்.ஜி.ஆருக்கே சவாலாக அமைந்தவர்!





அந்த நாள் ஞாபகம்: ரஞ்சன்

புகழின் உச்சாணிக் கொம்பில் சூப்பர் ஸ்டாராக இருந்தார் எம்.ஜி.ஆர். தனது சொந்தத் தயாரிப்பான ‘நாடோடி மன்னன்’ படத்தில் அவர் நடித்துக் கொண்டிருந்தபோது பத்துக்கும் அதிகமான படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார். இந்த நேரத்தில் எம்.ஜி.ஆரை மட்டுமே வைத்துப் படங்களைத் தயாரித்துவந்த சாண்டோ சின்னப்பா தேவர், அவருக்கென்றே உருவாக்கிய ‘ராபின் ஹுட்’ டைப் கதைதான் ‘நீலமலைத் திருடன்’.

எம்.ஜி.ஆரின் நட்சத்திர அந்தஸ்துக்கு ஏற்ப திரைக்கதை, சென்டிமென்ட் காட்சிகள், பாடல் காட்சிகள், ஆக்*ஷன் காட்சிகள் ஆகியவற்றை அமைத்து சூப்பர் ஹிட் மசாலா படம் எடுப்பதில் தேவர் கெட்டிக்காரர். அவ்வண்ணம் எம்.ஜி.ஆருக்காகப் பார்த்துப் பார்த்து உருவாக்கிய நீலமலைத் திருடன் (1957) படத்தின் கதையை, தனது சகோதரரும் இயக்குநருமான எம்.ஏ. திருமுகத்தை அழைத்துச்சென்று எம்.ஜி.ஆரிடம் சொல்ல வைத்தார்.

கதையைக் கேட்டு ‘சபாஷ்’ என்று பாராட்டினாரே தவிர கால்ஷீட் தராமல் இழுத்தடித்துவந்தார். தேவர் அதற்கு முன் எம்.ஜி.ஆரை வைத்துத் தயாரித்த ‘தாய்க்குப் பின் தாரம்’ படத்தில் ஏற்பட்ட மனஸ்தாபத்தை எம்.ஜி.ஆர். மறக்கவில்லை. தேவரோ தெய்வ பக்தியும் பொறுமையும் கொண்டவர். அப்படிப்பட்டவர் இனி எம்.ஜி.ஆருக்காகக் காத்திருப்பதில் அர்த்தமில்லை என்ற முடிவுக்கு வந்தார். இந்தக் கதைக்கு எம்.ஜி.ஆரை விட்டால் வேறு யார் சரியாகப் பொருந்துவார் என்று யோசிக்க ஆரம்பித்தார். அப்போது தேவரின் எண்ணத்தில் சட்டென்று வந்து அமர்ந்துகொண்டார் நடிகர் ரஞ்சன்.

எஸ். எஸ். வாசன் இயக்கிய ‘சந்திரலேகா’, ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தின் இந்தி மறுஆக்கம் ஆகிய படங்களின் மூலம் இந்திப் படவுலகில் பிஸியான சாகஸ நடிகராகப் புகழ்பெற்றிருந்தார் ரஞ்சன். சில ஆண்டுகள் மதராஸ் பக்கமே தலைவைத்துப் படுக்காமல் பம்பாயில் தங்கிவிட்டார். அவரை மீண்டும் இங்கே அழைத்து வந்தார் தேவர். தேவருக்கு எம்.ஜி.ஆரைப் போலவே ரஞ்சனும் ஆரம்ப கால நண்பர்.

‘சாலிவாகனன்’(1944) படப்பிடிப்பில் எம்.ஜி.ஆரும் ரஞ்சனும் மோதிய வாள் சண்டைக் காட்சியின் படப்பிடிப்பு பல நாட்கள் நடந்தது. படப்பிடிப்பு என்ற போர்வையில் எம்.ஜி.ஆர் தன்னைத் தாக்குவதாக ரஞ்சனும், ரஞ்சன் தன்னைத் தாக்குவதாக எம்.ஜி.ஆரும் மாறி மாறி இயக்குநரிடம் புகார் செய்தனர். படப்பிடிப்பில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட இந்த உரசலை நன்கு அறிந்தவர் தேவர். இருவரையும் மத்தியஸ்தம் செய்து சமாதானப்படுத்தியவர்களில் தேவரும் ஒருவர். சாலிவாகனன் படத்தில் எம்.ஜி.ஆருக்குச் சவாலாக அமைந்த ரஞ்சன்தான் இந்தக் கதையில் நடிக்க முடியும் என்று தேவர் நம்பினார்.

கவலையடைந்த எம்.ஜி.ஆர். ரசிகர்கள்

1957-ல் வெளியான ‘நீலமலைத் திருடன்’ படத்தில் வில்லன் பி.எஸ். வீரப்பாவை ஒழித்துக்கட்ட நீலமலைத் திருடனாகத் தேர்ந்தெடுக்கப்படும் இளைஞன் வேடத்தில் நடித்தார் ரஞ்சன். மருதகாசி எழுதி கே.வி. மகாதேவன் இசையமைத்து டி.எம்.சௌந்தர்ராஜன் உச்சஸ்தாயில் கம்பீரமாகப் பாடிய ‘சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா! தலை நிமிர்ந்து உன்னை உணர்ந்து செல்லடா!’ என்ற பாடல் காட்சியில் வெள்ளைக் குதிரையில் ஏறி ரஞ்சன் திரையில் வந்தபோது எம்.ஜி.ஆர். ரசிகர்கள் திடுக்கிட்டுப் போனார்கள். “நம்ம வாத்தியார் நடிச்சுருக்க வேண்டிய பாட்டு நைனா” என்று கவலைப்பட்டுப் புலம்பித் தள்ளினார்கள். படம் 100 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது. படத்தை எம்.ஜி.ஆர். பார்த்துவிட்டு “தேவருக்கு கால்ஷீட் கொடுக்க முடியாமல் போய்விட்டதே!” என தன் அண்ணன் சக்கரபாணியிடம் வருந்தினார். இந்தச் செய்தி தேவர் காதுக்கும் வந்துசேர்ந்தது.

அப்போது, ‘ரஞ்சனுக்கும் எம்.ஜி.ஆருக்கும் கத்தி சண்டை வைத்தால் இருவரில் யார் வெல்வார்கள்?' என்று டீக்கடையில் வாய்ச் சண்டை நடக்கும். “ எம்.ஜி.ஆர்தான் ஜெயிப்பார்” என எம்.ஜி.ஆர் ரசிகர்களும், “ரஞ்சனை ஜெயிக்க முடியாது” என்று ரஞ்சன் ரசிகர்களும் வாக்குவாதம் செய்துகொள்வார்கள். இதற்குக் காரணமாக அமைந்தது ரஞ்சனின் வாள் வீசும் வேகம்.

காவிரி மைந்தர்

திருச்சிராப்பள்ளி மாவட்டம், அரியலூர் வட்டத்தைச் சேர்ந்த ஊர் லால்குடி. ரஞ்சனின் அப்பா வி. ராமநாராயண சர்மா லால்குடிக்காரர். ரஞ்சனின் தாயார் அலமேலு அம்மாள் திருச்சி  ரங்கத்தைச் சேர்ந்தவர். பாரம்பரிய இசை, நடனம், பக்தி மூன்றுக்கும் பெயர்பெற்ற இந்த ஊர்களைச் சேர்ந்த பெற்றோருக்கு 10 பிள்ளைகள். அவர்களில் 4-வது பிள்ளையாகப் பிறந்தார் ரஞ்சன். அவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் வேங்கட ரமணன். வீட்டில் செல்லமாக ரமணி. சென்னை மயிலாப்பூருக்கு ரஞ்சனின் குடும்பம் குடிபெயர்ந்தது. சென்னையில் படித்து வளர்ந்த ரஞ்சன் நாமக்கல் சேஷையங்காரிடம் கர்நாடக சங்கீதம் பயின்றார்.

‘பரதம்’ நாராயணஸ்வாமி ஐயரிடம் நாட்டியம் கற்றார். படிப்பிலும் ’பலே’ என்று சொல்ல வைத்தார். பாட்டில் சுட்டி, பரதத்தில் படு கெட்டி என்று பள்ளிப் பருவத்தில் பெயரெடுத்தார். கல்லூரியில் படித்துக்கொண்டே நாட்டிய நாடகமொன்றில் நடிக்க ஆரம்பித்தார் ரஞ்சன். ஜெமினி ஸ்டூடியோவின் ஊழியர் வேப்பத்தூர் கிட்டு, ரஞ்சனின் துருதுரு நடனத்தையும் நடிப்பையும் கண்டார். அவர் படபடவென்று திக்காமல் திணறாமல் வசனம் பேசிய அழகைக் கண்டார்.

எம்.கே. தியாகராஜ பாகவதர் நாயகனாக நடித்துவந்த ‘அசோக்குமார்’(1941) படத்தில் இளம் புத்தராக நடிக்க ஒருவரைத் தேடிக்கொண்டிருந்தார் அந்தப் படத்தின் இயக்குநர் பி. ஜி. ராகவாச்சாரி. அவரிடம் ரஞ்சனை அழைத்து அறிமுகப்படுத்தினார் கிட்டு. வாய்கிழிய வசனம் பேசலாம் என்று வந்த ரஞ்சனுக்கு ஒரு வார்த்தைகூட வசனம் பேசாமல் ஒரே ஒரு காட்சியில் அமைதியாக அமர்ந்திருக்கும் புத்தர் வேடம் கிடைத்தது. இதே படத்தில் எம்.ஜி.ராமச்சந்தர் என்று பெயர் போடப்பட்ட எம்.ஜி.ஆருக்குத் துணை வேடம்.

சகலகலா வல்லர்

ஆனால், அதே ஆண்டில் ரஞ்சனுக்கு ஏற்றம் ஏற்பட்டது. ஜெமினி ஸ்டூடியோவில் சுற்றிவந்த ரஞ்சனைக் கண்டார், அன்று புகழ்பெற்ற ஒளிப்பதிவாளராகவும் இயக்குநராகவும் விளங்கிய நியூடோன் ஸ்டூடியோ ஜிடன் பேனர்ஜி. ரஞ்சனின் தோற்றத்தைப் பார்த்து அவரும் தன்னைப் போல் ஒரு வங்காளி என்று நினைத்த ஜிடன், ஆர். ரமணி என்ற பெயரை ரஞ்சன் என்று மாற்றினார். அவரை நாயகனாக்கவும் உறுதியளித்தார்.

இதற்கிடையில் ஜெமினியின் நந்தனார் (1941) படத்தில் சிவபெருமானாக ரஞ்சன் ஆடிய சிவதாண்டவ நடனம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. அதையடுத்து எஸ். சௌந்தர்ராஜன் இயக்கிய ‘ரிஷ்யசிருங்கர்’(1941) படத்தில் நாயகனாக நடித்தார். அதற்கு முன் ரஞ்சன் நாரதராக நடித்திருந்த பக்தநாரதர் (1942) என்ற படமும் வெளியாகிக் கவனம் பெற்றது. ஆனால், ரஞ்சனுக்கு முதல் பெரிய வெற்றியாக அமைந்த படம் மங்கம்மா சபதம் (1943). இதில் ரஞ்சன் அப்பா, மகன் என இரு வேடங்களில் நடித்திருந்தார்.

அதன் பிறகு பிஸி நாயகனாக மாறிய ரஞ்சனின் திரைப் பயணத்தில் திருப்புமுனையாக அமைந்தது 1948-ல் வெளிவந்த எஸ். எஸ். வாசனின் பிரம்மாண்டமான படமாகிய ‘சந்திரலேகா’. இதில் கதாநாயகனாக நடித்த எம்.கே. ராதாவுக்கும் கதாநாயகியாக நடித்த டி.ஆர். ராஜகுமாரிக்கும் இணையாக வில்லன் சஷாங்கனாக நடித்திருந்த ரஞ்சன் ரசிகர்களை மிகவும் கவர்ந்தார். ரஞ்சனின் துடுக்குத்தனம் நிரம்பிய வில்லன் நடிப்புக்குக் கிடைத்த வரவேற்பைக் கண்ட வாசன், அவரை இந்தியில் நடிக்க வைத்துப் பல படங்களை இயக்கினார். நிஷான், மங்களா, சிந்துபாத் தி செய்லர் படங்களில் தொடங்கி இந்திப் படவுலகில் பத்துக்கும் அதிகமான படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றார் ரஞ்சன்.

விமானம் ஓட்டுதல், குதிரை ஏற்றம், வாள் வீச்சு, ஓவியம் வரைதல், பரத நாட்டியம், பக்கவாத்தியம் இசைத்தல் போன்ற பல கலைகளிலும் சிறந்தவராக விளங்கிய சகலகாலா வல்லவர் இவர். ‘நடனம்' என்ற பெயரில் பத்திரிகையொன்றைச் சில காலம் நடத்தி எழுத்தாளராகவும் விளங்கினார். ரஞ்சன் அந்தக் காலத்து பி.ஏ., எம்.லிட்., பட்டதாரி.

1959-ல் ரஞ்சன் நடித்த படம், ராஜா மலையசிம்ஹன். கடைசியாக அவர் நடித்த படம்1969-ல் வெளியான ‘கேப்டன் ரஞ்சன்’. இதன் பிறகு தனது மனைவி டாக்டர் கமலாவுடன் அமெரிக்காவில் வசித்துவந்தவர் தனது 65-வது வயதில் மறைந்தார். தமிழ் சினிமாவில் ரஞ்சன் போல் ‘சகலகலாவல்லவர்’களாக இருந்த நடிகர்கள் மிகவும் குறைவே.

chinnakkannan
7th August 2015, 02:21 PM
எஸ்.வாசுதேவன்..வெண்ணிலாப் பாடல் தேர்ந்தெடுத்துப் போட்டதற்கு நன்றி..

*

எரிகின்ற என்னிதயம் குளிர நீயும்
…ஏறித்தான் வந்துவிட்டாய் நிலவுப் பெண்ணே
விரிகின்ற புன்முறவல் தோற்றம் மேலும்
…விகசித்தே விரிகின்ற ஒளியைக் கூட்டி
சிரித்தபடி என்மனதில் சிரிப்பூ பூக்க
…சீக்கிரமாய் வந்துவிட்டாய் பரவா யில்லை
நெறிக்கின்ற புருவங்கள் கொண்டு நானும்
…நீங்காத வேதனையில் இருக்கின் றேனே


நேற்றுத்தான் சென்றநீயும் திரும்பி விட்டாய்..
…. நெஞ்சகத்தில் புகுந்துவிட்ட அவனோ கொஞ்சம்
மாற்றங்கள் கொண்டானோ அறியேன் நானே
..மறுநாளில் வருவேனே என்றே சொல்லி
ஆற்றல்கள் அன்புதனைக் கலந்து என்னை
..அணைத்தேதான் இதழ்பதித்துச் சென்ற பின்பே
தூற்றலென நாட்களுந்தான் ஓடி மாதம்
…சீக்கிரமாய் கடந்ததுவே அவனைக் காணோம்..

இந் நிலையில் ஒன்றுசெய்வாய் நிலவே நீயும்
…இன்றுசென்று நாளைவாடி பரவாயில்லை
வெண்ணிலவே உனைப்போலே நிறத்தில் உள்ளம்
…வெட்கிவிடும் கன்னத்தின் சிவப்பு கண்ணில்
மென்னிதயம் கொண்டவளாய் இங்கு நானும்
…மேவிநொந்து நிற்பதையே தானு ணர்ந்தே
வெண்புரவி மீதினிலே வருவான் என்றே
…வேட்கையுடன் காத்திருப்பேன் நாளை வாடி..
*

https://youtu.be/ii8D7gNn318

chand phir nikla

Russellxor
7th August 2015, 05:44 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1438949503100_zpsul975ut1.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1438949503100_zpsul975ut1.jpg.html)

madhu
7th August 2015, 07:09 PM
1968 வருடத்துக்கான சிறந்த பாடகிக்கான விருதை இந்த நிலாப் பாடலுக்காக சுசீலாம்மா பெற்றார். தேசிய ஒருமைப்பாட்டு விருதுக்கான பாடலாக குழந்தைக்காக படத்தில் இடம் பெற்ற தேவன் வந்தான் தெரிவு செய்யப் பட்டது.

சிறந்த பாடலுக்கு என்று தேசிய விருது வழங்கப் படுகிறதா ? குழப்பத்தைத் தீர்த்து வையுங்க நண்பர்களே !

RAGHAVENDRA
7th August 2015, 08:22 PM
1968 வருடத்துக்கான சிறந்த பாடகிக்கான விருதை இந்த நிலாப் பாடலுக்காக சுசீலாம்மா பெற்றார். தேசிய ஒருமைப்பாட்டு விருதுக்கான பாடலாக குழந்தைக்காக படத்தில் இடம் பெற்ற தேவன் வந்தான் தெரிவு செய்யப் பட்டது.

சிறந்த பாடலுக்கு என்று தேசிய விருது வழங்கப் படுகிறதா ? குழப்பத்தைத் தீர்த்து வையுங்க நண்பர்களே !

ஆம். மதுஜி. ஆனால் ஒரு சிறிய திருத்தம். பாடலுக்கு அல்ல, பாடலாசிரியருக்கு.
கவியரசர் கண்ணதாசனுக்கு ஒரு PLAQUEம் Lyric Writer of the Best Film Song on National Integration விருதும் வழங்கப்பட்டது.

http://iffi.nic.in/Dff2011/16th_nff/16th_nff_1970_img_49.jpg

eehaiupehazij
7th August 2015, 08:28 PM
'கலர்' காஞ்சனாவின் கான மதுரங்கள் : வானவில் பார்வை VIBGYOR view!

வானத்தில் விமான நங்கையாக பறந்து கொண்டிருந்த காஞ்சனாவை கனவுத் தொழிற்சாலை அதிபர் ஸ்ரீதர் பூமியில் இறங்கிவந்து கால் பதித்த நட்சத்திரமாக்கினார்!
சிவந்த மெலிந்த அழகிய உடலமைப்புடன் வசீகரமான முகத் தோற்றத்துடன் காதலிக்க நேரமில்லைக்குப் பிறகு அதிக அளவு வண்ணப் படங்கள் அமைந்து கலர் கதாநாயகி பட்டம் வென்று அனைத்து கதாநாயகர்களாலும் விரும்பப்பட்ட கனவுக் கன்னியாக ரசிக நெஞ்சங்களில் கொடிகட்டிப் பறந்தார்!

KANCHANA VIBGYOR VIEW 1

சாந்தி நிலையம்(1969)

வானவில்லின் முதல் வண்ண அடுக்கின் உச்சியில் சிவப்பு (RED)!

எந்த வண்ணத்தையும் விட பளீரிடுவது சிவப்பு வண்ணமே !

அவ்வண்ணமே கலர் காஞ்சனாவின் எழில் தோற்றம் 'பச்'சென்று மனதில் இறங்கியது காதல் மன்னரின் இணைவில் சாந்தி நிலையம் (a neat adoption of the Hollywood's legendary musical extravaganza THE SOUND OF MUSIC starring Julie Andrews and Christopher Plummer 1965) திரைக் காவியத்திலேயே !

மார்கஸ் பர்ட்லெ என்னும் ஒளி ஓவிய சக்கரவர்த்தியின் பசுமைக் குளுமையான படப் பதிவில் ஜெமினி கணேசன் மிக இயற்கையான ஆண்மையழகில் ஏ எம் ராஜா பி பி ஸ்ரீனிவாசுக்கு எவ்வகையிலும் குறைந்திடாத பாடும் நிலா பாலுவின் பொருத்தமான குரல் குழைவில் மின்னினார் காதலின் மன்னராக !!
அவருக்கு மிகவும் பொருந்திய ஜோடியாக காஞ்சனா அழகின் அஜந்தா எல்லோரா சிற்பமாக இனிமை சேர்த்து இயற்கையின் இளைய கன்னியாக உருவகப் படுத்தப் பட்ட இப்பாடலே வானவில்லின் உச்ச அடுக்கு சிவப்பு எக்காலத்திலும் !!

https://www.youtube.com/watch?v=LC5-vQtAQx4

சாந்தி நிலையம் காஞ்சனா புயல் மையம் கொண்ட வண்ணத் திரை மதுர கான மழைப் பொழிவே! இப்புயல் கடந்த கரைகள்!!

https://www.youtube.com/watch?v=uVH9o1_kyXE

https://www.youtube.com/watch?v=hp5b-ZmgQJ8

https://www.youtube.com/watch?v=WbitNDIYlXk

https://www.youtube.com/watch?v=XChwaujC198

eehaiupehazij
7th August 2015, 11:09 PM
மாற்றார் தோட்ட தேன் மதுரங்கள் / PART 31
REX HARRISON with AUDREY HEPBURN in My Fair Lady1964

மிகச்சிறந்த இசையும் பாடலும் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட ஹாலிவுட் காவியம் !
ரோமன் ஹாலிடே நாயகி ஆத்ரே ஹெப்புர்ன் உயரிய நடிகர் ரெக்ஸ் ஹாரிசனுடன் நம்மை மகிழ்வித்த மதுர கானப் பதிவு !!


My Fair Lady is a 1964 American musical film adaptation of the Lerner and Loewe eponymous stage musical based on the 1938 film adaptation of the original 1913 stage play Pygmalion by George Bernard Shaw. With a screenplay by Alan Jay Lerner and directed by George Cukor, the film depicts a poor Cockney flower seller Eliza Doolittle who overhears an arrogant phonetics professor, Henry Higgins, as he casually wagers that he could teach her to speak "proper" English, thereby making her presentable in the high society of Edwardian London.

The film won eight Academy Awards, including Best Picture, Best Actor, and Best Director.

இப்படத்தின் வசன நடை பாடல் ஸ்டைலை அடிப்படையாகக் கொண்டே உயர்ந்த மனிதனில் நடிகர்திலகம் அசத்திய அந்தநாள் ஞாபகம் பாடல் அமைக்கப் பட்டது என்று கேள்விப் பட்டிருக்கிறேன்


https://www.youtube.com/watch?v=HroAq_E075Y

https://www.youtube.com/watch?v=QLue_qt8etk

https://www.youtube.com/watch?v=Doz5w2W-jAY

https://www.youtube.com/watch?v=RZmazN1bPgQ

https://www.youtube.com/watch?v=wefP_aEl6_I

https://www.youtube.com/watch?v=MnOI7G0rJ18

Russellrqe
8th August 2015, 09:05 AM
1956- SUDHESA MITHRAN
http://i61.tinypic.com/e1bxg7.jpg

Russellrqe
8th August 2015, 09:07 AM
TRICHY- ADVTS

http://i61.tinypic.com/12540md.jpg

Russellrqe
8th August 2015, 09:09 AM
http://i60.tinypic.com/2u4ilc7.jpg

Russellrqe
8th August 2015, 09:10 AM
http://i61.tinypic.com/svq739.jpg

Russellrqe
8th August 2015, 09:13 AM
http://i58.tinypic.com/2mosb5v.jpg

eehaiupehazij
8th August 2015, 12:04 PM
மாற்றார் தோட்ட மதுரங்கள்
பகுதி 32 : rock and roll ராக் அண்டு ரோல் இசை நடனப் பாடல்களின் தாக்கம்!


ராக் அண்டு ரோல் உலக திரை நடன வரலாற்றில் மைல்கல்லான நிகழ்வே!
மிக வேகமான நடன ஸ்டெப்புகளுடன் உடலை வளைத்து நெளித்து கைகளையும் தட்டிக்கொண்டு ஆடுவது த்ரில்லிங்கான அனுபவமே !

https://www.youtube.com/watch?v=_u0OmHXWEvw


ஈடு இணையற்ற நடன மேதைகள் பிரெட் ஆஸ்டையர் மற்றும் ஜீன் கெல்லியின் ஒப்புயர்வற்ற நடனத்தை கண்ணுற்ற கண்கள் புண்ணியம் செய்தவையே !

https://www.youtube.com/watch?v=lMKbGRCbsaw


https://www.youtube.com/watch?v=mOLOeaYjRME

https://www.youtube.com/watch?v=Cm-BXU4w5rA

தமிழ்த் திரையுலகின் முதல் ராக் ன் ரோல் அதிரடி ஆட்டம் நடிகர்திலகத்தின் விக்கிரமன் வாயிலாகவே !

https://www.youtube.com/watch?v=a63IlNFGip8


ராக் ர்ராக் ராக் ராக் ன் ரோல் நடிகர்திலகத்தின் பதிபக்தியில் சந்திரபாபுவின் ஜீன் கெல்லி பாணி நடனத்தில் !!
டி எஸ் பாலையாவின் சாஸ்திரீய பாட்டும் பரத ராக்கின் முயற்சியும் ரசனையே !!

Enjoy with head phones in tact! feel the happiness!!

https://www.youtube.com/watch?v=MU-vw_bBO28

Russellxor
8th August 2015, 01:21 PM
கண்ணதாசனின் வைர வரிகள்
தொடர்1


ஏழ்மையை படைத்தது அவனென்றால்
இறைவன் என்பவன்
எதற்காக?

(இறைவன் உலகத்தை படைத்தானாம்.)

Russellxor
8th August 2015, 01:25 PM
கண்ணதாசனின் வைர வரிகள்
தொடர்2

இரவும் பகலும் இரண்டானால்
இன்பம் துன்பம் இரண்டானால்
உறவும் பிரிவும் இரண்டானால்
உள்ளம் ஒன்று போதாதே

eehaiupehazij
8th August 2015, 01:29 PM
Gap filler / Monotony breaker

High Decibels of Kollywood Vs Hollywood !

கணீர் குரலாளுமை இசை ராணிகள்
கே பி சுந்தராம்பாள் Vs ஹாலிவுட்டின் சுந்தராம்பாள் ஷர்லி பாஸி

திருவிளையாடலில் சுந்தராம்பாளின் வெண்கலக் குரல் கலக்கல்!!

https://www.youtube.com/watch?v=KDNSM0RyUa8

கோல்டுபிங்கரில் ஷர்லி பாசியின் நரம்பூசிக் குரல் பாய்ச்சல்!!

https://www.youtube.com/watch?v=CS8SPiBI-8c

https://www.youtube.com/watch?v=Ixny_7WUFCw

From Diamonds are Forever!

https://www.youtube.com/watch?v=qPeSPB68i2c

eehaiupehazij
8th August 2015, 04:31 PM
Dear Neyveli Vasu Sir
We pray His Almighty to put an end to the unwanted stalemate situations and shower His blessings towards resuming your duties soon with an amicable solution and settlement,
senthil

eehaiupehazij
8th August 2015, 05:58 PM
இந்த அடக்க ஒடுக்கம் ரொம்பப் பிடிச்சிருக்கு

BLOW HOT BLOW COLD DANCING DAMSELS OF KOLLYWOOD!

இனக்கவர்ச்சி மயக்க கானங்கள் Vs மனக்கவர்ச்சி மதுர கீதங்கள்!


வியாபார ரீதியாக வலியப் புகுத்தப் படும் குத்தாட்டங்களும் பன்முக அனர்த்தப் பாடல்களும் மலிந்து பழகிப் போய் விட்ட திரையுலகில் அத்தி பூத்தாற்போல 'இந்த அடக்க ஒடுக்கம் ரொம்பப் பிடிச்சிருக்கு' என்று சொல்லுமளவில் நமது கவர்ச்சித் தாரகைகளும் எல்லை மீறாத கவர்ச்சியுடன் கௌரவமான பாடல் நடனக் காட்சிகளிலும் நடித்திருக்கிறார்கள் என்பது வியப்பின் சரித்திரக் குறியீடே !

கவர்ச்சித் தாரகை 1 : விஜயலலிதா

விஜய லலிதா காந்தக் கண்ணழகுடன் மிகக் கவர்ச்சிகரமான செழுமையான உடலமைப்புக் கொண்டவர். ஓரளவு நடிப்புத் திறமையும் வாய்ந்தவர்.
ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைகள் பெரும்பாலும் அவரை கச்சை கட்டி கவர்ச்சியாட்டமே ஆட வைத்தன. பின்னாளில் இந்த கவர்ச்சி எல்லைகளையும் மீறி ஸ்டண்ட் கதாநாயகியாக ரிவால்வர் ரீட்டா போன்ற படங்களிலும் அசத்தினார்,விஜய சாந்தியின் சித்தி.

வல்லவன் ஒருவன், நூற்றுக்கு நூறு, சொர்க்கம், சாந்தி நிலையம், எதிரொலி திரைப்படங்களில் அவரது நடனங்கள் மனதைக் கவர்ந்தன .

பளிங்கினால் ஒரு மாளிகை பருவத்தால் மணி மண்டபம் உயரத்தில் ஒரு கோபுரம் காட்டும் ஜேம்ஸ் பாண்ட் வில்லி ...

https://www.youtube.com/watch?v=5MDOr0gq0-8

நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் நீ வர வேண்டும் ....மக்கள் கலைஞருக்கு நூற்றுக்கு நூறு வாழ்நாள் நடிப்பு மகுடம்!

https://www.youtube.com/watch?v=IEK6uVBuhB8

பொன்மகள் வந்தாள் பொருள் கோடி தந்தாள் பூமேடை வாசல் பொங்கும் சொர்க்கத் தேனாக...நடிகர்திலகத்தின் காலங்கடந்து நிலைத்து நிற்கும் கனவுக் காட்சி!

https://www.youtube.com/watch?v=3xzlyze2Fuo

பெண்ணைப்; பார்த்தும் பேச்சு வராத காதல் மன்னரைக் கவிழ்க்க முடியுமா ?

https://www.youtube.com/watch?v=Ypri1gs9U_k

நடிகர்திலகத்தின் நல்ல மனசுக்கொரு குறையுமில்லையே !!எதிரொலிக்கிறார் எட்டுத்திக்கும் !

https://www.youtube.com/watch?v=IG-TGZyPBEM

eehaiupehazij
8th August 2015, 07:41 PM
இந்த அடக்க ஒடுக்கம் ரொம்பப் பிடிச்சிருக்கு

BLOW HOT BLOW COLD DANCING DAMSELS OF KOLLYWOOD!

இனக்கவர்ச்சி மயக்க கானங்கள் Vs மனக்கவர்ச்சி மதுர கீதங்கள்!


வியாபார ரீதியாக வலியப் புகுத்தப் படும் குத்தாட்டங்களும் பன்முக அனர்த்தப் பாடல்களும் மலிந்து பழகிப் போய் விட்ட திரையுலகில் அத்தி பூத்தாற்போல 'இந்த அடக்க ஒடுக்கம் ரொம்பப் பிடிச்சிருக்கு' என்று சொல்லுமளவில் நமது கவர்ச்சித் தாரகைகளும் எல்லை மீறாத கவர்ச்சியுடன் கௌரவமான பாடல் நடனக் காட்சிகளிலும் நடித்திருக்கிறார்கள் என்பது வியப்பின் சரித்திரக் குறியீடே !

கவர்ச்சித் தாரகை 2 : ஜோதிலட்சுமி



சிறந்த நடனத் தாரகையான ஜோதிலட்சுமி அருமையான உடம்பின் வளைவுகளால் ரசிக நெஞ்சங்களைக் கிறங்கடித்து அக்காலத்தில் திரையரங்குகளுக்கு கூட்டத்தை ஈர்த்து Crowd Puller ஆக புகழ் பெற்றவர். அக்கட தேசத்தின் கவர்ச்சி வெடிகுண்டாக டான்சுலு ஆடியவர் !
எண்ணம்போல கண்ணன் வந்தான் அம்மம்மா என்னும் இந்தப் புகழ் பெற்ற பாடல் காட்சியமைப்பில் முத்துராமனுடன் இணைந்து கண்ணியமான நடன
அசைவுகளால் உள்ளம் கவர்ந்தார்! அதுவரை போட்ட கெட்ட ஆட்டமெல்லாம் மறந்தே போச்!!
இவரும் ராக்கட் ராணி என்ற மொழிமாற்றப் படத்தில் கதாநாயகியாக சாகசங்கள் செய்தார்! இப்படத்தின் கவர்ச்சி நடன டிபார்ட்மெண்டை விஜயலலிதா பெருந்தன்மையுடன் கவனித்துக் கொண்டார்!!


பூவும் போட்டும் திரைப்படம் ஜோதிலக்ஷ்மியிடம் பொதிந்திருந்த நடிப்பம்சங்களையும் வெளிக் கொணர்ந்தது !

https://www.youtube.com/watch?v=LKJ2BTbrIS4

மக்கள்திலகத்துடன் அடிமைப் பெண்ணில் காலத்தை வென்றவன் நீ ஆடல் பாடல் பங்களிப்பு !!

https://www.youtube.com/watch?v=NAkxBhg8b3s

இதழை விரித்த ரோஜா பட்டணத்தில் பூதம் துணையுடன்
https://www.youtube.com/watch?v=uSlqdZjEK_g

Not losing her dance touch even with younger generations!!

https://www.youtube.com/watch?v=SqJjygA8Jpk

eehaiupehazij
8th August 2015, 09:51 PM
காமெடியர்களின் ஷாம்பெயின் கலக்கல் மதுரங்கள்
பகுதி 6 வெண்ணிற ஆடை மூர்த்தி

சற்று வரம்பு மீறிய இரட்டை அர்த்த வசனங்களால் கொஞ்சம் சங்கடப் படுத்தினாலும் மூர்த்தி அவர்களும் ஒரு தவிர்க்க இயலாத நகைச்சுவையாளரே!
அறிமுகப் படமான ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை, உத்தரவின்றி உள்ளே வா, சிவந்த மண் மற்றும் மூன்று தெய்வங்கள் படத்திலும் பாடல் காட்சிகளில் நகைச்சுவை பங்களிப்பு செய்திருக்கிறார் !


காதலிக்க நேரமில்லை நாகேஷ் பாணியில் ....

https://www.youtube.com/watch?v=PoTPg0wL51g

உத்தரவின்றி உள்ளே வா ..

https://www.youtube.com/watch?v=kdu45A-2a1w

மூன்று தெய்வங்கள் ...நானொரு சின்னப் பிள்ளை

https://www.youtube.com/watch?v=7hXbJGf8mEw

சிவந்தமண்

https://www.youtube.com/watch?v=3bIXJ3oW1YI

eehaiupehazij
8th August 2015, 10:12 PM
Gap filler / Monotony breaker

To and Fro / அங்கும் இங்கும் / இங்கும் அங்கும் / Here and There

அங்கும் இங்கும் 1

ஹிந்தி பிரம்மச்சாரியில் ஷம்மிகபூர் மும்தாஜ்

https://www.youtube.com/watch?v=y1JYQ4P24s8

எங்கமாமா நடிகர்திலகத்துடன் நிர்மலா

https://www.youtube.com/watch?v=7KqCOT4Qito

இங்கும் அங்கும்

சபாஷ் மீனாவில் நடிகர்திலகம் மாலினியுடன்

https://www.youtube.com/watch?v=MewOsMqwg3Y

தில் தேரா தீவானா ஷம்மிகபூர் மாலா சின்ஹாவுடன்

https://www.youtube.com/watch?v=JwnXbIDm_EE

eehaiupehazij
9th August 2015, 06:48 PM
Gap filler / Monotony breaker

To and Fro / அங்கும் இங்கும் / இங்கும் அங்கும் / Here and There

இங்கும் அங்கும் 2
நடிகர்திலகம் / தேவ் ஆனந்த் மதுர கீத பரிமாற்றங்கள்

அமரதீபம் / அமர்தீப்

நடிகர்திலகத்தின் இணைவில் ஸ்ரீதரின் அமரதீபம் மாபெரும் வெற்றியைப் பெற்றது அது ஹிந்தியில் தேவ் ஆனந்த் அவர்களை வைத்து எடுக்கப் பட்டு பிரம்மாண்டமான வெற்றி பெற்றது இரண்டு படங்களிலும் இசையும் பாடலும் நடனங்களும் அசத்தல் ரகளையாக இருக்கும்

ஜனரஞ்சகமான நாடோடிக் கூட்டம் பாடல்

https://www.youtube.com/watch?v=kaOHOqK2E3g

https://www.youtube.com/watch?v=BjYnZCTgfr8

இங்கும் அங்கும் 2 ராஜா (1972) / ஜானி மேரா நாம் (1970)

பின்னாளில் நடிகர்திலகம் தேவ் ஆனந்தின் ஜானி மேரா நாம் படம் ராஜாவாக பாலாஜி அவர்களின் தயாரிப்பில் உருவாக்கப்பட்டு தனது நடிப்பால் இன்னும் மெருகேற்றி
மகத்தான வசூல் சாதனைப் படமாக்கினார் 1972ல்! Hero 72!!
மிகக் கச்சிதமான உடல்வாகில் பின்னிஎடுத்தார் நடிக மன்னர் !!

தேவ் ஆனந்த் ஹேமமாலினி இணைவில்

https://www.youtube.com/watch?v=6n5I_mVf-Yk

நடிகர்திலகம் ஜெயலலிதா இணைவில்

https://www.youtube.com/watch?v=_5yRH4RxlBE

eehaiupehazij
9th August 2015, 09:18 PM
'கலர்' காஞ்சனாவின் கான மதுரங்கள் : வானவில் பார்வை VIBGYOR view!

வானத்தில் விமான நங்கையாக பறந்து கொண்டிருந்த காஞ்சனாவை கனவுத் தொழிற்சாலை அதிபர் ஸ்ரீதர் பூமியில் இறங்கிவந்து கால் பதித்த நட்சத்திரமாக்கினார்!
சிவந்த மெலிந்த அழகிய உடலமைப்புடன் வசீகரமான முகத் தோற்றத்துடன் காதலிக்க நேரமில்லைக்குப் பிறகு அதிக அளவு வண்ணப் படங்கள் அமைந்து கலர் கதாநாயகி பட்டம் வென்று அனைத்து கதாநாயகர்களாலும் விரும்பப்பட்ட கனவுக் கன்னியாக ரசிக நெஞ்சங்களில் கொடிகட்டிப் பறந்தார்!

KANCHANA VIBGYOR VIEW 2

சிவந்த மண்(1969)

வானவில்லின் இரண்டாவது வண்ண அடுக்கின் உச்சியில் ஆரஞ்சே! சிவந்த செம்மண்ணில்தான் ஆரஞ்சு விளைச்சல் அதிகமாக இருக்கும் !!(ORANGE)!
[COLOR="#FF0000"][QUOTE]எந்த வண்ணத்தையும் விட மின்னுவது ஆரஞ்சு வண்ணமே !

நடிகர்திலகம் சவுக்கை சொடுக்கி அரேபிய நடையில் கலக்கும் பட்டத்து ராணி பாடலில் காஞ்சனாவின் நடனம் பிரம்மிப்பானதே!
அந்தக் காலகட்டத்தில் இந்தக் காட்சியமைப்பின் பிரம்மாண்டம் கூட்டத்தை ஈர்த்ததில் வியப்பில்லை !

https://www.youtube.com/watch?v=4B3mg5GbaRY

அதே காஞ்சனா இதே படத்தில் சச்சுவுடன் சேர்ந்து ஆடும் கிளப் டான்ஸ் கொஞ்சம் முரணானதே எனினும் அரங்க அமைப்பும் பாடலின் வேகமும் காஞ்சனாவின் சிம்ரன் ஸ்டைல் இடுப்பசைவுகளும் இசையும் ரசனைக்குரியதே !!
https://www.youtube.com/watch?v=bvmxghzvaoE

பாடல்களைப் பொறுத்தவரை சிவந்தமண்ணில் தேன் சிந்திய வானமே!! காஞ்சனாவின் வாழ்நாள் பங்களிப்பு!!

பார்வை யுவராணி கண்ணோவியம் .....

https://www.youtube.com/watch?v=e1uFShGfygE

ஒரு ராஜா ராணியிடம் வெகுநாளாக ஆசை கொண்டார் ...

https://www.youtube.com/watch?v=dGhkH958nHo

ஒரு நாளிலே உறவானதே ......

https://www.youtube.com/watch?v=ZNQSCPPTFzc

chinnakkannan
9th August 2015, 09:33 PM
ஹாய் குட் ஈவ்னிங்க் ஆல்..

சிவாஜி செந்தில்.. ஜி.. இந்த அடக்க ஒடுக்கம் எனக்கு ரொம்ப ப் பிடிச்சுருக்கு :) காமடியர்கள் மாற்றான் தோட்ட மதுர கானங்கள், கலர் காஞ்சனாவின் கான மதுரங்கள் என வெரைட்டியாக க் கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்.. மிக்க நன்றி..

கொஞ்சம் வேலை பபளு..லீவு நாளில் கொஞ்சம் வீட்டு வேலைப் பளு! வெளியில் போய் வந்து பின் இன்னொரு வீ.வேலை..அது என்னவெனில்...

ஊருக்குப் போயிருந்தேனா..அங்கிட்டிருந்துவாங்கிய புத்தகங்கள் கண்ணா வருவாயா எனக் கேட்டன..எனில் அதில் கொஞ்சம் மூழ்கிவிட்டேன்..சார்ட் போட்டுப் படித்துக்கொண்டிருக்கிறேன்.. அதனாலும் இங்கே உட்காரவில்லை..

இன்னொன்றும் கூட இன்று ஆசையாய்ப்பாடல்கள் சி.செ நீங்கள் போட்டிருந்த காட்சிகள்(ஆங்கிலப் படங்களின்) பார்க்கலாம் என உட்கார்ந்தால் ஆடியோ கனெக்*ஷன் என்னவெனத் தெரியவில்லை ஒர்க் ஆகவில்லை..செக் செய்ய வேண்டும்..ம்ம்

ஜோ.ல வின் உன்னழகைக் கண்டுகொண்டால் பாடல் - பாடல் நன்னாயிட்டு இருக்கும்..பாட்டுக்குப் பொருத்தமா என ஆன்றோர்கள் தான் சொல்லவேண்டும் :)

ம்ம் மறுபடி வர்றேன் :)

eehaiupehazij
9th August 2015, 09:58 PM
//ஜோ.ல வின் உன்னழகைக் கண்டுகொண்டால் பாடல் - பாடல் நன்னாயிட்டு இருக்கும்..பாட்டுக்குப் பொருத்தமா என ஆன்றோர்கள் தான் சொல்லவேண்டும்

ம்ம் மறுபடி வர்றேன் //


சி க !

எண்ணம் போல கண்ணன் பாடலை ஒப்பிடும்போது ஜோதி இப்பாடலில் சரியாக ஐக்கியமாகவில்லையோ !?
கொஞ்சம் (s)exposure தான் !! அக்கட பூமியாட்டம் என்று குழப்பமாயிருக்குமோ?

https://www.youtube.com/watch?v=o2Iu8lXOlcs

chinnakkannan
9th August 2015, 10:10 PM
அக்கட பூமியாட்டம் என்று குழப்பமாயிருக்குமோ?// :) இருக்குமாயிருக்கும்..சி.செ :)

**

தீதிலை கண்ணில் திகட்டாமல் மின்னிடும்
ஜோதி யழகுதான் ஜோர் (ஓய்.. நான் இ.கா ஜோ(திகா) சொன்னேன்!)

eehaiupehazij
10th August 2015, 07:10 AM
'கலர்' காஞ்சனாவின் கான மதுரங்கள் : வானவில் பார்வை VIBGYOR view!

KANCHANA VIBGYOR VIEW 3 மஞ்சள் !


அதே கண்கள் (1968)

வானவில்லின் மூன்றாவது வண்ணத் திண்டு ! The Third band of Rainbow!!


கலர் கதாநாயகன் வெள்ளிவிழா நாயகன் கலைநிலவு சின்ன வாத்தியார் என்றெல்லாம் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ரவிச்சந்திரனுடன் கலர் கதாநாயகி அசத்திய
அற்புதமான whodunit ஹிட்ச்காக் பாணி மர்ம முடிச்சுக்கள் அவிழ்க்கப்படும் விறுவிறுப்பான பொழுது போக்குத் திரைப்படம் !
இப்படத்திலும் காஞ்சனாவின் எழில் தோற்றம் ரசிகர்களை சொக்க வைத்தது! ரவியின் சூப்பர் நடன நளினங்களும் வேதாவின் அதிரடி இசையும் பிரமாதமான ஸ்டன்ட்களும், சஸ்பென்சும்....மாபெரும் வெற்றிப் படம்!!

பூம் பூம் பூம் மாட்டுக்காரன் ...

https://www.youtube.com/watch?v=YEHvmgoYrOo


கண்ணுக்கு தெரியாதா காஞ்சின் கலர் !!

https://www.youtube.com/watch?v=DOTiyjWxuYk

எத்தனை அழகு காஞ்ச் இருபது வயதினிலே

https://www.youtube.com/watch?v=NQv_NSIkGiU

பூதத்தைக் கண்டு பயந்த பெண்ணே !

https://www.youtube.com/watch?v=brDthfw0S4s

In the Hollywood tradition by our Vedha's enchanting musical adoption!

https://www.youtube.com/watch?v=5awRkln87S0

Engrossing titiles and music! Maruthirao's cinematography!

https://www.youtube.com/watch?v=Au2IJ6_hKu8&index=1&list=PLE58ECB59AFD1672C

madhu
10th August 2015, 07:20 AM
'கலர்' காஞ்சனாவின் கான மதுரங்கள் : வானவில் பார்வை VIBGYOR view!KANCHANA VIBGYOR VIEW 3

(1969)

வானவில்லின் வது வண்ண அடுக்கின் உச்சியில் !

மஞ்சள் நிறத்தைக் காணவில்லையே ! சிவாஜிசெந்தில் ஜி... முழுவதும் எழுதும் முன் தவறாக பதியப்பட்டு விட்டதோ ?

eehaiupehazij
10th August 2015, 07:23 AM
Madhu Sir
It is in the reverse order Red, Orange, Yellow....as per the color layers of Rainbow
senthil

rajraj
10th August 2015, 08:01 AM
madhu: You should visit us to see rainbows ! :)

raagadevan
10th August 2015, 08:30 AM
Now that we are talkin' about வானவில், also known as rainbow (with ஏழு நிறங்கள்), I want to post
a song starting with ஏழு நிறங்களில்... :)

https://www.youtube.com/watch?v=Sm70VRUZsvI

vasudevan31355
10th August 2015, 09:19 AM
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்

http://2.bp.blogspot.com/-HRNJSnA1-84/TenskpB9duI/AAAAAAAAAuY/mP0R6cDrGMY/s320/spb.jpg

(நெடுந்தொடர்)

24

''திருமகள் தேடி வந்தாள்''

''இருளும் ஒளியும்''

http://cdn1.biscoot.com/Thumbnail/Song/IrulumOliyum_x301113195205467_190x190.jpg

அடுத்து பாலாவின் இன்னொரு அட்டகாசம்.

'திருமகள் தேடி வந்தாள்'

புரடியூசர்ஸ் கம்பைன் 'இருளும் ஒளியும்' (1971) திரைப்படத்தில் மெகா ஹிட்டான பாடல்.

ஏ.வி.எம்.ராஜன், முத்துராமன், நாகேஷ், வாணிஸ்ரீ (இரு வேடங்களில்), ரமாபிரபா, சுந்தரிபாய், ருக்மணி, ரங்காராவ், சுப்பையா, நாகேஷ் என்று நிறைய நட்சத்திரங்கள்.

வசனம் 'வியட்நாம் வீடு' சுந்தரம். பாடல்கள் கண்ணதாசன். இசை 'திரை இசைத் திலகம்'. திரைக்கதை, இயக்கம் எஸ்.ஆர். புட்டண்ணா.

சந்திரா என்ற அடக்க ஒடுக்கமான பெண்ணாகவும், பானு என்ற ஆர்ப்பாட்ட அலட்டல் நங்கையாகவும் வாணிஸ்ரீ ரெட்டை வேடம் கட்டுவார். முதாலவது பரவாயில்லை. பானு வேடத்தின் அலட்டல் சகிக்காது. வாயில் பபிள்கம் மென்று 'யூ நோ... யூ நோ' என்று போட்டுத் தாக்கி விடுவார். நமக்கு எரிச்சலும், கோபமுமாகவே வரும். பின்னாடி வந்த 'வாணி ராணி'க்கு ஒத்திகை.

பணக்காரத் திமிர் பிடித்த வாணிஸ்ரீ பானு பிரம்மச்சாரியான கல்லூரித் தோழன் முத்துராமனை விளையாட்டாகக் காதலித்து ஏமாற்றிவிடுகிறார். முத்துராமன் இதைத் தாங்கமாட்டாமல் தற்கொலை செய்து கொள்கிறார். அதைக் கேள்விப்பட்டும் கூட வாணிஸ்ரீ திருந்தவில்லை.

ஏழை வாணிஸ்ரீ (சந்திரா) சித்தியால் கொடுமைப்படுத்தப் படுகிறார். பானுவின் அப்பா ரங்காராவ் இரு வாணிஸ்ரீகளுக்கும் திருமணம் செய்ய முடிவெடுக்கிறார். நண்பனின் மகன் ஏ.வி.எம்.ராஜனை பானுவுக்கு பிக்ஸ் செய்கிறார். ராஜன் கிராமத்தில் இருப்பதால் அவரைப் பற்றித் தெரியாமல் வாணிஸ்ரீ மறுக்க, தந்தை ரங்காராவ் கண்டிப்புடன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறி விடுகிறார். எனவே பானு தன் இடத்தில் சந்திராவை நடிக்க வைத்து பல நாடகமாடுகிறாள். சந்திராவை பானு என்று எண்ணி ராஜன் காதலித்து பின் அவள் நடவடிக்கைகள் மேல் சந்தேகப்பட்டு அது பானு இல்லை சந்திரா என்று கண்டுபிடிக்கிறார். இறுதியில் பானுவின் அத்தனை அம்பலங்களும் வெளிச்சத்திற்கு வருகின்றன. முடிவில் மனம் திருந்தி பானு முத்துராமனின் தற்கொலைக்கு தானே காரணம் என்று சொல்லி தானும் தற்கொலை செய்து கொண்டு நம்மையும் கொலை செய்கிறாள்.

ராஜனும், சந்திராவும் இணைகிறார்கள்.

அருமையான சில பாடல்கள் படத்தைக் காப்பாற்றுகின்றன.

'வானிலே... மண்ணிலே' என்று இயற்கை பிரதேசங்களில் குதூகலித்து கனவு கண்டு ஆடும் சந்திரா வாணிஸ்ரீ. (சுசீலாவின் அருமையான குரலில்)

முத்துராமனை கிண்டல் அடித்து சுசீலா குரலில் வாணிஸ்ரீ பாடும் 'ஹோ... ஹோ... மிஸ்டர் பிரம்மச்சாரி' (பேஸ் கிடார் அமர்க்களம்)

சுசீலாவின் குரலில் 'திருமகள் தேடி வந்தாள்'

அதே பாடல் திரும்ப பாலா குரலில்.

'மேஜிக்' ராதிகாவின் கவர்ச்சி நடனம் ஒன்றும் உண்டு.

http://i.ytimg.com/vi/QYTTA-XwDKk/maxresdefault.jpg

இந்தப் படத்தில் இன்னொரு முக்கியமான விஷயம் 'படாபட்' ஜெயலஷ்மி தாவணி போட்ட குட்டிப் பெண்ணாக அப்போதே ராஜனுக்குத் தங்கையாக நடித்திருப்பார்.

படத்தை வண்ணமும் காப்பாற்றுகிறது. அருமையான வண்ண ஒளிப்பதிவு.

'நாகரஹாவு' போன்ற (தமிழில் 'ராஜநாகம்') கன்னடத்தில் பெயர் சொல்லும்படி எடுத்த புட்டண்ணா இந்த மாதிரி படங்களை இயக்கியிருக்க வேண்டாம். 'நாகரஹாவு' கன்னடத்தின் மிகச் சிறந்த பத்து படங்களில் ஒன்றாக இன்றும் போற்றப்படுகிறது. இவர் தமிழில் இயக்கிய 'சுடரும் சூறாவளியும்' கூட அவுட். 'டீச்சரம்மா' கொஞ்சம் பிழைத்தது பாடல்களால். புட்டண்ணாவின் தோற்றம் நம்ம ஊர் மணிவண்ணன் போல இருக்கும்.

இந்தப் பாடல் பாலாவை எங்கோ கொண்டு போய்த் தூக்கி நிறுத்தியது என்றால் அது மிகையில்லை. இன்று வரை இந்தப் பாடலுக்கு கொஞ்சமும் மவுசு குறையவில்லை.

https://i.ytimg.com/vi/ygdzg2EJIEw/hqdefault.jpg

இந்தப் பாடலில் பாலாவின் அழுத்தம் திருத்தமான தமிழ் உச்சரிப்பு அவர் எந்த அளவிற்கு தமிழில் ஈடுபாடுடன் பாடுகிறார் என்பதை உணர்த்திற்று. அவ்வளவு அற்புதமாக ஒவ்வொரு எழுத்தையும் அவர் உச்சரித்து அசத்தியிருப்பார். வல்லினம், மெல்லினம் உச்சரிப்புகள் மிகச் சரியாகவே இருக்கும்.

பாடலிலே,

'திருமலை திருப்பதிப் பால் பழங்கள் - உயர்
தென் திருப்பழனியின் தேன் குடங்கள்'

என்று தென்னகத்தின் புனிதத் தலங்களை உதாரணம் காட்டி காதலியின் மகத்துவத்தை காதலன் புகழ்வது என்பது அபாரம். காதல் பாடலில் கூட பக்தி மணம் கமழும் அருமை அந்தக் காலத்தில் நிகழ்த்தப்பட்டது.

ஆனால் மேற்சொன்ன வரிகள் இப்படத்தின் நாயகிக்குப் பொருந்துமோ என்னமோ தெரியாது... ஆனால் பாலாவுக்கு நிச்சயம் பொருந்தும். தேன் குடங்களிலிருந்து தேனையும், பால் குடங்களிலிருந்து பாலையும் ஒரு சேர நம் மீது பொழிந்தாற்போல அத்தனை இன்பங்களையும் பாலா இப்பாடல் மூலம் நமக்கு விருந்தாக அளித்து விட்டார்.

'கனிவாய் மொழிதரும் வாசகங்கள்' எனும்போது 'கனிவாய்' என்று சொல்லி, சிறிது கேப் விட்டு பிறகு 'மொழிதரும் வாசகங்கள்' என்று பாடும் போது நெஞ்சில் வஜ்ரமாய் ஓட்டிவிடுவார்.

எள் உருண்டையோடு சேர்ந்த வெல்லமாக பாலாவுடன் மிகப் பொருத்தமாக ஹம்மிங் செய்து பாடலை மேலும் பளபளப்பாக்கி அமர்க்களப்படுத்தி விடுவார் 'ஹம்மிங்' பி.வசந்தா. என்ன மாதிரி பாடகி! இவருக்கெல்லாம் ஏன் நிறைய வாய்ப்புகள் கிட்டவில்லை? ('இரு வீடுகள்' படத்தில் இவர் பாடிய 'பொன்னான உள்ளம் உன்னோடு இருக்க... கண்ணான கண்ணே பயம் வேண்டாம்'... பாடலைக் கேட்கும் போதெல்லாம் நெஞ்சாங்குழிக்குள் ஏதோ வந்து அடைப்பது போன்ற உணர்வு எப்போதுமே என்னுள் எழும். கண்களில் ஓரமும் நீர்த்துளிக்கத் தவறாது.)

http://i.ytimg.com/vi/dPW9BhoEqrE/hqdefault.jpg

திருமகள் தேடி வந்தாள்
எந்தன் இதயத்தில் குடி புகுந்தாள்
குலமகள் கோலத்திலே
தேவி மருமகளாக வந்தாள்

ஆஆஆஆ ஹா ஹா ஹா

திருமகள் தேடி வந்தாள்

திருமகள் தேடி வந்தாள்

ஆஆ..... ஆஆஆ

மஞ்சள் தந்தவள் விசாலாட்சி
நல்ல மலர்களைத் தந்தவள் மீனாட்சி
மஞ்சள் தந்தவள் விசாலாட்சி
நல்ல மலர்களைத் தந்தவள் மீனாட்சி
குங்குமம் தந்தவள் காமாட்சி
குங்குமம் தந்தவள் காமாட்சி
எங்கள் குடும்பத்தில் தேவி உன் அரசாட்சி

திருமகள் தேடி வந்தாள்
எந்தன் இதயத்தில் குடி புகுந்தாள்
குலமகள் கோலத்திலே
தேவி மருமகளாக வந்தாள்

ஆஆஆஆ ஹா ஹா ஹா

திருமகள் தேடி வந்தாள்

ஆஹாஹா அ ஆஹாஹா ஆஹஹஹா ஹ ஹாஆஆஆ

திருமலை திருப்பதிப் பால் பழங்கள் - உயர்
தென்திருப் பழனியின் தேன் குடங்கள்
திருமலை திருப்பதிப் பால் பழங்கள் - உயர்
தென்திருப் பழனியின் தேன் குடங்கள்
கனிவாய் மொழிதரும் வாசகங்கள் - என்
கனிவாய் மொழிதரும் வாசகங்கள்
காதல் தெய்வத்தின் உயர் குணங்கள்
காதல் தெய்வத்தின் உயர் குணங்கள்

திருமகள் தேடி வந்தாள்
எந்தன் இதயத்தில் குடி புகுந்தாள்
குலமகள் கோலத்திலே
தேவி மருமகளாக வந்தாள்

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

திருமகள் தேடி வந்தாள்

ராகவேந்திரன் சார், மது அண்ணா!

இந்தப் பாடலில் மூன்றாவது சரணம் ஒன்று உண்டு என்று நினைவு. 'மங்கல மங்கை' என்று சரணம் தொடங்கும் என்று நினைக்கிறேன். அந்த சரணத்தின் வரிகள் கிடைக்குமா? ப்ளீஸ்!


https://youtu.be/n-fj_GDQnO0

RAGHAVENDRA
10th August 2015, 09:49 AM
வாசு சார்
நலமா. தங்கள் போராட்டங்கள் நிறைவுற்று நல்லபடியாக தீர்வாகி தாங்களெல்லாரும் மகிழும் வண்ணம் பலன் பெற வேண்டுமென்று இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.
தங்கள் வாழ்வில் தற்காலிகமாக ஏற்பட்ட இருளகன்று ஒளி வீசும் நாள் தொலைவில் இல்லை.

பாலாவின் மிக மிக அருமையான பாடல். சூப்பர் ஹிட் பாடல். இன்னும் பல ஆண்டுகளுக்கு அவர் புகழ் பாடும் பாடல், திருமகள் தேடி வந்தாள்.

1971ம் ஆண்டின் சிறந்த பாடல்களைக் கொண்ட தொகுப்பு வரிசையில் கிராமஃபோன் ரிக்கார்டு நிறுவனம் எல்.பி.இசைத்தட்டினை வெளியிட்டது. அதில் இப்பாடல் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

வானிலே மண்ணிலே பாடல் காட்சியின் படமாக்கத்தில் பெரும்பங்கு நமது இயக்குநர் பாரதிராஜா அவர்களுக்கு உண்டு. இப்படத்திலும் அவர் புட்டண்ணா அவர்களின் உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/irulumoliyumbharathiraja_zpsh0slgnjy.jpg

முதன் முதலில் வெளியிடப்பட்ட இசைத்தட்டில் தாங்கள் குறிப்பிட்ட மூன்றாம் சரணம் இடம் பெற்றது. அதன் வரிகளுக்கு முயற்சி செய்கிறேன்.

JamesFague
10th August 2015, 10:55 AM
Courtesy: Tamil Hindu

இக்கட்டான தருணத்தில் திருச்சி மாணவிக்கு கிடைத்த அரிய உதவி: வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்




ஏழை மாணவிக்கு மனிதநேய அடிப்படையில் கலந்தாய்வின் போது உதவி வழங்கி, கல்வி என்பது கற்போருக்கு வழங்கும் மிகப் பெரிய சேவை என்பதை நிரூபித்துள்ளது தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்.

திருச்சி மாவட்டம், முசிறியைச் சேர்ந்த ராஜேந்திரன் - தங்கப்பொண்ணு தம்பதியினரின் மகள் ஆர்.சுவாதி. அரசுப் பள்ளியில் பயின்று பிளஸ் 2 தேர்வில் 1,017 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். பி.எஸ்சி. வேளாண் படிப்பு படிக்க வேண்டும் என்ற விருப்பத்தில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகக் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்திருந்தார்.

ஏனைய போட்டி மாணவர் களைக் காட்டிலும் கட்-ஆப் மதிப் பெண் குறைவாக இருந்ததால், உடனடியாக அவருக்கு இடம் கிடைக்கவில்லை. காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். கலந்தாய்வின்போது இடம் கிடைத்து வேளாண் படிப்பைத் தேர்வு செய்த மாணவர்கள் சிலர், வேறு படிப்புக்குச் சென்றுவிட் டதைத் தொடர்ந்து, காத்திருப்போர் பட்டியலில் இருந்த சுவாதிக்கு இறுதிக்கட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு பல்கலைக் கழகம் சார்பில் அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டது.

தவறுதலாக சென்னைக்கு..

அழைப்புக் கடிதத்தில், கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக அண்ணா அரங் கில் 8-ம் தேதி காலை 8.30 மணிக்கு நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட் டிருந்தது. ஆனால், கோவை யில் உள்ள வேளாண் பல்கலைக் கழகத்துக்கு வருவதற்கு பதிலாக, மாணவியும், அவரது தாயாரும் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்துக்கு 8-ம் தேதி காலை 6.30 மணி அளவில் சென்றபோதுதான் தவறுதலாக மாறி வந்தது, அவர்களுக்கு தெரிய வந்துள்ளது.

கலக்கத்துடன் அங்கு நின்ற அவர்களை சந்தித்த மனிதநேய மிக்க ஒரு நபர், விவரங்களைக் கேட்டறிந்தார். வேளாண் பல்கலைக் கழகத்தின் மக்கள் தொடர்பு அலுவலகத்துக்கு அழைத்து பதிவாளர் சி.ஆர்.அனந்தகுமார் தொலைபேசி எண்ணைப் பெற்று விவரத்தைக் கூறியுள்ளார். அந்த மாணவியை விமானத்தில் அனுப்பி வைப்பதாகவும், ஒரு மணிக்கு பல்கலைக்கழகம் வந்துவிடுவார்கள் என்பதால் கலந்தாய்வுக்கு அனுமதிக்கு மாறும் கோரியுள்ளார்.

விமான டிக்கெட்

இதனை ஏற்றுக்கொண்ட பதிவாளர், மாணவியின் விவரங்களைப் பெற்று கல்லூரி முதல்வருக்கு தகவல் தெரிவித் துள்ளார். இதையடுத்து, சென்னை யில் இருந்து விமானம் மூலமாக கோவைக்கு நேற்று முன்தினம் பகல் 11.30 மணிக்கு வந்தடைந்த மாணவியையும், அவரது தாயா ரையும் பல்கலைக்கழகத்தின் காரை அனுப்பிவைத்து அழைத்துவரச் செய்துள்ளார் துணைவேந்தர். பின்னர், பிற்பகலில் நடைபெற்ற கலந்தாய் வுக்கு நேரம் ஒதுக்கித் தரப் பட்டது.

மாணவி ஆசைப்பட்ட பி.எஸ்சி. வேளாண் படிப்புக்கு இடம் கிடைக்கவில்லை. இருப்பினும், வேளாண் பல்கலைக்கழகத்தில் பி.டெக். உணவுத் தொழில்நுட் பவியல் படிப்பில் இடம் கிடைத்துள்ளது. மனிதாபிமானம் உள்ள ஒரு நபர், தனது சொந்த செலவில் விமான டிக்கெட் எடுத்துக் கொடுத்து அனுப்பி வைத்ததன் மூலமாகவும், பல்கலைக்கழகம் தகுந்த நேரத்தில் வழங்கிய உதவி காரணமாகவும் மாணவியின் வேளாண் படிப்பு ஆசை நிறைவேறியுள்ளது.

இதுகுறித்து வேளாண் பல்கலைக்கழக பதிவாளர் சி.ஆர்.அனந்தகுமார் கூறும்போது, "அன்றைய தினம் காலையில் ஓர் அழைப்பு வந்தது. அந்த மாணவியின் நிலை குறித்து கூறினர். அந்த மாணவிக்கான கலந்தாய்வு பதிவு எண், விவரங்களை குறுந்தகவலாக பெற்று, கல்லூரி முதல்வருக்கு அனுப்பி வைத்தேன்.

அவர்கள் கூறியபடி உரிய நேரத்தில் வந்து கலந்தாய்வில் கலந்து கொண்டு படிப்பைத் தேர்வு செய்தனர். நான், எனது பணியைத்தான் செய்தேன். எனக்கு அழைத்த அந்த நபரின் எண்ணை பதிவு செய்யாமல் விட்டுவிட்டேன்" என்றார்.

முகம் தெரியாத நபரின் மனிதாபிமானம்

பல்கலைக்கழக துணைவேந்தர் கே.ராமசாமி கூறும்போது, "மனிதநேயம் இல்லாத வாழ்க்கை நல்ல வாழ்க்கை கிடையாது. மாணவியின் நிலையை அறிந்து சமயோசிதமாக செயல்பட்டு அனுப்பி வைத்த முகம் தெரியாத அந்த நபருக்குத்தான் எல்லா பெருமையும் சேரும். இருப்பினும், பிளஸ் 2 படித்த மாணவி, தனக்கு வந்த கடிதத்தை சரியாகப் படிக்காமல் இருந்ததை நினைத்து வருத்தம் கொள்கிறேன். அந்த மாணவிக்கு உரிய நேரத்தில் அந்த நபருடைய உதவி கிடைத்ததால் தான் வர முடிந்தது. இல்லையென்றால் நாங்கள் நினைத்தாலும் இடம் வழங்க முடியாது. சமூகத்தில் வாய்ப்புகள் நிறைய உள்ளன. அதை நாம்தான் சரியாக பயன்படுத்த வேண்டும். அனுமானத்தில் ஒருபோதும் செயல்படக்கூடாது" என்றார்.

vasudevan31355
10th August 2015, 03:15 PM
ராகவேந்திரன் சார், மது அண்ணா!

'திருமகள் தேடி வந்தாள்' சுசீலாம்மா பாடலில் மூன்றாவது சரணமாக,

'மங்கள மங்கையின் குங்குமமும்
அவர் மஞ்சளும் தாலியும் மனையறமும்
பொங்கி நலம் பெற அருள் புரிவாள்
எங்கள் புதுமனை வாழ்வில் வளம் தருவாள்'

என்று வரும். பாலா மட்டும் பாடும் பாடலில் இந்த சரணம் வருமா இல்லையா என்று தெரியவில்லை அல்லது வேறு சரணமா? டிவிடியிலும் பாலா பாடலில் இரு சரணங்களே வருகின்றன. படத்திலும் அப்படியே. எல்லா ஆடியோவிலும் இரு சரணங்களே உள்ளன. ஒருவேளை மூன்றாவது சரணம் பாலாவின் பாடலில் இல்லையா? சுசீலா பாடலில் மட்டும்தானா? ஒரே குழப்பமாக இருக்கிறது. தெளிவுபடுத்தவும்.

RAGHAVENDRA
10th August 2015, 03:58 PM
ராகவேந்திரன் சார், மது அண்ணா!

'திருமகள் தேடி வந்தாள்' சுசீலாம்மா பாடலில் மூன்றாவது சரணமாக,

'மங்கள மங்கையின் குங்குமமும்
அவர் மஞ்சளும் தாலியும் மனையறமும்
பொங்கி நலம் பெற அருள் புரிவாள்
எங்கள் புதுமனை வாழ்வில் வளம் தருவாள்'

என்று வரும். பாலா மட்டும் பாடும் பாடலில் இந்த சரணம் வருமா இல்லையா என்று தெரியவில்லை அல்லது வேறு சரணமா? டிவிடியிலும் பாலா பாடலில் இரு சரணங்களே வருகின்றன. படத்திலும் அப்படியே. எல்லா ஆடியோவிலும் இரு சரணங்களே உள்ளன. ஒருவேளை மூன்றாவது சரணம் பாலாவின் பாடலில் இல்லையா? சுசீலா பாடலில் மட்டும்தானா? ஒரே குழப்பமாக இருக்கிறது. தெளிவுபடுத்தவும்.

ஆமாம். சுசீலா பாடும் பாடலில் மட்டும் தான் மூன்று சரணங்கள். பாலா பாடியுள்ள பாடலில் இரண்டு மட்டுமே. இசைத் தட்டிலும் அப்படித்தான்.

madhu
10th August 2015, 04:49 PM
Madhu Sir
It is in the reverse order Red, Orange, Yellow....as per the color layers of Rainbow
senthil

நான் அதைச் சொல்லவில்லை சிவாஜிசெந்தில் சார்..

நான் பார்த்தபோது என் பதிவில் இருந்த சில வரிகள் மட்டுமே உங்கள் பதிவில் ஏறி இருந்தது. சில நிமிடங்கள் கழித்து மீண்டும் பார்த்தபோதும் அப்படியே இருந்ததால் ஏதேனும் சர்வர் ( சுந்தரம் இல்லை ) பிராப்ளமா என்று கேட்டேன். இப்போ உங்க பதிவு சரியாயிடுச்சு.. நல்ல ஜாண்டிஸ் வந்த மாதிரி மஞ்சள் மின்னுது. :)

madhu
10th August 2015, 04:58 PM
வாசு ஜி..

திருமகள் தேடி வந்தாள் பாடலில் சுசீலா பாட்டில் மட்டும்தான் மங்கல மங்கையர் சரணம் உண்டு. பாலுவின் பாட்டுக்கு ரெண்டுதான். நான் படம் ரிலீசானபோதே பார்த்திருக்கிறேன். படத்தில் நிச்சயம் இடம் பெறவில்லை. அந்தக் கால இசைத்தட்டிலும் கிடையாது. ( என் கிட்டே இருந்தது ) ... ஒரு வேளை முதலில் சேர்த்திருந்து அப்புறம் படம் ரிலீசாகும் முன்பே வெட்டி விட்டிருந்தால் தெரியவில்லை.

ராகவ் ஜி... பொன்னூஞ்சலின் வருவான் மோகன ரூபன் பாட்டின் வீடியோ எங்கேயாவது கிடைக்க வாய்ப்பு உண்டா ? ( உஷா நந்தினி வெள்ளைப் புடவை காற்றில் பறக்க நடிகர் திலகத்தை மயக்க சிரித்துக் கொண்டே வருவார் )

sivaa
10th August 2015, 05:09 PM
Courtesy: Tamil Hindu

இக்கட்டான தருணத்தில் திருச்சி மாணவிக்கு கிடைத்த அரிய உதவி: வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்




ஏழை மாணவிக்கு மனிதநேய அடிப்படையில் கலந்தாய்வின் போது உதவி வழங்கி, கல்வி என்பது கற்போருக்கு வழங்கும் மிகப் பெரிய சேவை என்பதை நிரூபித்துள்ளது தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்.

திருச்சி மாவட்டம், முசிறியைச் சேர்ந்த ராஜேந்திரன் - தங்கப்பொண்ணு தம்பதியினரின் மகள் ஆர்.சுவாதி. அரசுப் பள்ளியில் பயின்று பிளஸ் 2 தேர்வில் 1,017 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். பி.எஸ்சி. வேளாண் படிப்பு படிக்க வேண்டும் என்ற விருப்பத்தில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகக் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்திருந்தார்.

ஏனைய போட்டி மாணவர் களைக் காட்டிலும் கட்-ஆப் மதிப் பெண் குறைவாக இருந்ததால், உடனடியாக அவருக்கு இடம் கிடைக்கவில்லை. காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். கலந்தாய்வின்போது இடம் கிடைத்து வேளாண் படிப்பைத் தேர்வு செய்த மாணவர்கள் சிலர், வேறு படிப்புக்குச் சென்றுவிட் டதைத் தொடர்ந்து, காத்திருப்போர் பட்டியலில் இருந்த சுவாதிக்கு இறுதிக்கட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு பல்கலைக் கழகம் சார்பில் அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டது.

தவறுதலாக சென்னைக்கு..

அழைப்புக் கடிதத்தில், கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக அண்ணா அரங் கில் 8-ம் தேதி காலை 8.30 மணிக்கு நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட் டிருந்தது. ஆனால், கோவை யில் உள்ள வேளாண் பல்கலைக் கழகத்துக்கு வருவதற்கு பதிலாக, மாணவியும், அவரது தாயாரும் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்துக்கு 8-ம் தேதி காலை 6.30 மணி அளவில் சென்றபோதுதான் தவறுதலாக மாறி வந்தது, அவர்களுக்கு தெரிய வந்துள்ளது.

கலக்கத்துடன் அங்கு நின்ற அவர்களை சந்தித்த மனிதநேய மிக்க ஒரு நபர், விவரங்களைக் கேட்டறிந்தார். வேளாண் பல்கலைக் கழகத்தின் மக்கள் தொடர்பு அலுவலகத்துக்கு அழைத்து பதிவாளர் சி.ஆர்.அனந்தகுமார் தொலைபேசி எண்ணைப் பெற்று விவரத்தைக் கூறியுள்ளார். அந்த மாணவியை விமானத்தில் அனுப்பி வைப்பதாகவும், ஒரு மணிக்கு பல்கலைக்கழகம் வந்துவிடுவார்கள் என்பதால் கலந்தாய்வுக்கு அனுமதிக்கு மாறும் கோரியுள்ளார்.

விமான டிக்கெட்

இதனை ஏற்றுக்கொண்ட பதிவாளர், மாணவியின் விவரங்களைப் பெற்று கல்லூரி முதல்வருக்கு தகவல் தெரிவித் துள்ளார். இதையடுத்து, சென்னை யில் இருந்து விமானம் மூலமாக கோவைக்கு நேற்று முன்தினம் பகல் 11.30 மணிக்கு வந்தடைந்த மாணவியையும், அவரது தாயா ரையும் பல்கலைக்கழகத்தின் காரை அனுப்பிவைத்து அழைத்துவரச் செய்துள்ளார் துணைவேந்தர். பின்னர், பிற்பகலில் நடைபெற்ற கலந்தாய் வுக்கு நேரம் ஒதுக்கித் தரப் பட்டது.

மாணவி ஆசைப்பட்ட பி.எஸ்சி. வேளாண் படிப்புக்கு இடம் கிடைக்கவில்லை. இருப்பினும், வேளாண் பல்கலைக்கழகத்தில் பி.டெக். உணவுத் தொழில்நுட் பவியல் படிப்பில் இடம் கிடைத்துள்ளது. மனிதாபிமானம் உள்ள ஒரு நபர், தனது சொந்த செலவில் விமான டிக்கெட் எடுத்துக் கொடுத்து அனுப்பி வைத்ததன் மூலமாகவும், பல்கலைக்கழகம் தகுந்த நேரத்தில் வழங்கிய உதவி காரணமாகவும் மாணவியின் வேளாண் படிப்பு ஆசை நிறைவேறியுள்ளது.

இதுகுறித்து வேளாண் பல்கலைக்கழக பதிவாளர் சி.ஆர்.அனந்தகுமார் கூறும்போது, "அன்றைய தினம் காலையில் ஓர் அழைப்பு வந்தது. அந்த மாணவியின் நிலை குறித்து கூறினர். அந்த மாணவிக்கான கலந்தாய்வு பதிவு எண், விவரங்களை குறுந்தகவலாக பெற்று, கல்லூரி முதல்வருக்கு அனுப்பி வைத்தேன்.

அவர்கள் கூறியபடி உரிய நேரத்தில் வந்து கலந்தாய்வில் கலந்து கொண்டு படிப்பைத் தேர்வு செய்தனர். நான், எனது பணியைத்தான் செய்தேன். எனக்கு அழைத்த அந்த நபரின் எண்ணை பதிவு செய்யாமல் விட்டுவிட்டேன்" என்றார்.

முகம் தெரியாத நபரின் மனிதாபிமானம்

பல்கலைக்கழக துணைவேந்தர் கே.ராமசாமி கூறும்போது, "மனிதநேயம் இல்லாத வாழ்க்கை நல்ல வாழ்க்கை கிடையாது. மாணவியின் நிலையை அறிந்து சமயோசிதமாக செயல்பட்டு அனுப்பி வைத்த முகம் தெரியாத அந்த நபருக்குத்தான் எல்லா பெருமையும் சேரும். இருப்பினும், பிளஸ் 2 படித்த மாணவி, தனக்கு வந்த கடிதத்தை சரியாகப் படிக்காமல் இருந்ததை நினைத்து வருத்தம் கொள்கிறேன். அந்த மாணவிக்கு உரிய நேரத்தில் அந்த நபருடைய உதவி கிடைத்ததால் தான் வர முடிந்தது. இல்லையென்றால் நாங்கள் நினைத்தாலும் இடம் வழங்க முடியாது. சமூகத்தில் வாய்ப்புகள் நிறைய உள்ளன. அதை நாம்தான் சரியாக பயன்படுத்த வேண்டும். அனுமானத்தில் ஒருபோதும் செயல்படக்கூடாது" என்றார்.

திக்குத் தெரியாமல் தவித்த ஸ்வாதி...திடீரென்று கிடைத்த உதவி... நடைபயிற்சி நண்பர்களுக்கு நன்றி!
ஞாயிற்றுக்கிழமை (9/8/15) காலையிலிருந்து ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப், இணையதள பக்கங்கள் என்று பரபரக்க ஆரம்பித்த அந்த செய்தி, இன்று நாளிதழ்களிலும் படபடத்துக் கொண்டிருக்கிறது!

'கோயம்புத்தூர் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் படிப்பில் சேர வேண்டிய ஏழைக் குடும்பத்து பெண் ஸ்வாதி, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு திசைமாறி வந்துவிட்டார். சில மணி நேரங்களே இருக்கும் நிலையில், கோவைக்கு விமானம் மூலம் சில நல்ல உள்ளங்களால் அனுப்பி வைக்கப்பட்டு, ஒரு வழியாக வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சேர்க்கப்பட்டார்' என்பதுதான் அந்தச் செய்தி.

http://img.vikatan.com/news/2015/08/10/images/helpsoingso_1.jpgஇதைப் படித்த எல்லோருமே... அந்த நல்ல உள்ளங்களைப் பாராட்டித் தள்ளிக் கொண்டே இருக்கிறார்கள்... அவர்கள் யாராக இருக்கும் என்கிற கேள்வியை எழுப்பியபடியே! நாமும் மனதில் பாராட்டிக் கொண்டே தேடுதலில் இறங்கினோம்... கிடைத்தார் அந்த நல்ல உள்ளங்களில் ஒருவரான சரவணன்!

திருச்சி மாவட்டம், முசிறி பகுதியை சேர்ந்த விவசாயி ராஜேந்திரனின் ஒரே மகள் சுவாதி. படித்து வேளாண் விஞ்ஞானி ஆகவேண்டும் என்பது எதிர்கால ஆசை. கணவன் இல்லாத நிலையிலும் கஷ்டப்பட்டு மகளைப் படிக்க வைத்தார் தங்கப்பொண்ணு. ப்ளஸ்-டூவில் 1,076 மதிப்பெண்கள் எடுத்திருந்த இவரின் விண்ணப்பம் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டது. ஏற்கெனவே தேர்வுபெற்ற மாணவர்கள் சிலர், வேளாண்மைக் கல்வியை விட்டு வேறு படிப்புகளுக்குச் சென்று விட்டதால், ஸ்வாதிக்கு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சேரும் வாய்ப்பு கிடைத்தது.

ஆகஸ்ட் 8-ம் தேதி காலை 8.30 மணிக்கு கோயம்புத்தூர் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள அண்ணா கலையரங்கில் நடக்கும் இறுதிகட்ட கலந்தாய்வில் கலந்துகொள்ள வருமாறு மின்னஞ்சல் (இமெயில்) அழைப்புக் கடிதம் ஒன்றை ஸ்வாதிக்கு அனுப்பியது வேளாண்மை பல்கலைக்கழகம். அண்ணா கலையரங்கம் என்று இடம் பெற்றிருந்த வாசகத்தை அண்ணா பல்கலைக்கழகம் என்று தவறாக புரிந்துகொண்ட மாணவி ஸ்வாதி, அம்மாவுடன் சென்னை, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அதேநேரம் வந்தடைந்தார். ஆனால் அவர் செல்லவேண்டியது கோவை அண்ணா கலையரங்கிற்கு; சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அல்ல என தெரியவந்தபோது அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றது மாணவியின் குடும்பம்.

அப்போதுதான் அவர்களுக்கு கைகொடுத்து பேருதவி செய்திருக்கிறார் எம்.சரவணன். டெக் மஹேந்திரா தகவல்தொழில்நுட்ப நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணிபுரியும் அவரை பாராட்டிவிட்டு, பேசினோம்.

"என்னோட சொந்த ஊரு சேலம் மாவட்டம், சங்ககிரி பக்கத்தில் உள்ள வைகுந்தம். பரம்பரை விவசாய குடும்பம். இதே அண்ணா பல்கலைக்கழகத்தில் படிச்சு முடிச்சு, சென்னையில பல வருஷமா வேலை பார்க்கிறேன். ஒவ்வொரு நாளும் அதிகாலை 6 மணிக்கே எழுந்து நடைபயிற்சி போகும் வழக்கம் உண்டு. நான் படிச்ச அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில்தான் நடைபயிற்சி. அங்கு நடைபயிற்சி போறவங்க எல்லாம் சேர்ந்து குழு அமைச்சிருக்கோம். அதன் மூலமா ஹெல்த் உள்ளிட்ட பல விஷயங்களை பரிமாறிக்குவோம்.

http://img.vikatan.com/news/2015/08/10/images/kovai%20swathy%20550%201.jpg
ஆகஸ்ட் 8-ம் தேதி நடைபயிற்சி செல்லும் வழியில் சூட்கேஸ் வெச்சிட்டு ஒரு பொண்ணும், கூடவே ஒரு அம்மாவும் குழப்பத்துடனும் தவிப்புமாக நின்னிட்டிருந்ததை பார்த்தோம். மூணாவது சுற்று நடைபயிற்சி வரும்வரை வெள்ளந்தியா அவங்க ரெண்டு பேரும் நின்னுட்டிருந்ததைப் பார்த்தேன். கிராமத்து ஆளுங்க மாதிரி தெரியவே... என்ன ஏதோனு கிட்டபோய் விசாரிச்சோம்.

வேளாண்மை கல்லூரி கலந்தாய்வுக்கு வந்ததாக சொன்னாங்க. அது கோயம்புத்தூர்லதானே நடக்கும். ஒருவேளை சென்னையில் ஏதாவது உறுப்புக் கல்லூரி இருக்கோனு சந்தேகத்தில் வேளாண்மைப் பல்கலைகழக முன்னாள் துணைவேந்தரும் எங்க குடும்ப நண்பருமான முருகேசபூபதியை தொடர்பு கொண்டு கேட்டேன்.

‘கோவையில்தான் நடக்கிறது' னு சந்தேகத்தை நிவர்த்தி செய்தார். பிறகு, அந்தப் பெண்ணுக்கு வந்த மின்னஞ்சல் அழைப்புக் கடிதத்தை திறந்து பார்த்தப்பதான்... விஷயம் புரிஞ்சுது.

http://img.vikatan.com/news/2015/08/10/images/kovai%20swathy%20right(1).jpg‘தவறா புரிஞ்சுகிட்டு, பெரிய தப்பை பண்ணீட்டீங்களேம்மா... ஒரு வருஷ படிப்பே போயிடுமே. இன்னும் கொஞ்ச நேரத்துல கோயம்புத்தூர்ல கலந்தாய்வு நடக்கப்போகுது... நீங்க இங்க நின்னுட்டிருக்கீங்களே' னு கண்டிச்சாலும், அந்த விஷயத்தை அப்படியே விட எங்களுக்கு மனசு வரலை. எப்படியாவது அவங்க ரெண்டு பேரையும் கோவைக்கு அனுப்பனும்னு நண்பர்கள் கலந்து பேசினோம்.

பல்கலைக்கழக தொலைபேசிக்கு போன் போட்டப்ப, யாரும் எடுக்கல. அது அலுவலக நேரத்தில் மட்டுமே செயல்படும் தொலைபேசி. அடுத்த முயற்சியாக முன்னாள் துணைவேந்தர்கிட்ட பேசி, அந்தப் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவரோட எண்ணை வாங்கி பேசினோம். அவர், சம்பந்தப்பட்ட துறை நிர்வாகத்துகிட்ட நிலைமையை சொல்லிப் பேசியதில் நாள் தள்ளிவைக்க முடியாது என்றும், நேரத்தை வேண்டுமானால் 8.30 என்று இருந்த கலந்தாய்வை இந்த மாணவிக்கு மட்டும் இரண்டு மணி நேரம் நீட்டிக்கலாம்னு பதில் கிடைச்சுது.

உடனே நடைபயிற்சி நண்பர்கள் நாங்கள்லாம் கலந்துபேசி கார் மூலம் விமான நிலையம் அனுப்பி, விமான டிக்கெட்டை எடுத்துக் கொடுத்து, முதல் தடவையா விமானம் ஏறுறதால அதுக்கான ஆலோசனைகளையும் கூறி அனுப்பினோம். சரியாக 11.30 மணிக்கு கோவை விமான நிலையத்தில், எங்க ஏற்பாட்டின்படி தயாரா இருந்த பல்கலைக்கழக வாகனத்தில் ஏறிப்போய், பி.டெக் உணவு தொழில்நுட்பவியல் படிப்பில் இடம் வாங்கிடுச்சு அந்தப் பொண்ணு ஸ்வாதி" என்று நடந்ததை தனக்கே அப்படி ஒரு உதவி கிடைத்த மகிழ்வோடு பேசினார் சரவணன்.

உதவி கேட்கக்கூட தயங்கி நின்ற சூழலில் வலியச்சென்று அவர்களுக்கு பேருதவி செய்த சரவணன் மற்றும் அவருடைய நடைபயிற்சி நண்பர்கள் குழுவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து கொண்டே இருக்கிறது இப்போது.

http://img.vikatan.com/news/2015/08/10/images/kovai%20swathy%20550%202.jpg
இதுகுறித்து வேளாண்மை பட்டதாரிகள் சங்கத்தின் அமைப்பாளர் வேலாயுதம், "பல்கலைக்கழகம் அனுப்பிய மின்னஞ்சலைக்கூட முழுமையாக படிக்க முடியாததால் ஒரு வருட படிப்போ பறிபோக இருந்த நிலையில், அதைக் கைவசப்படுத்திக் கொடுத்த... சரவணன் உள்ளிட்டோருக்கு மக்கள் அனைவருமே நன்றி சொல்லலாம். கிராமத்து மாணவி ஒருவரின் அறியாமையை புரிந்து, கலந்தாய்வை காலநீட்டிப்பு செய்த பல்கலைக்கழக நிர்வாகத்துக்கும் நன்றிகள்.

அதேசமயம், பல்கலைக்கழகம் இதுபோன்ற அழைப்புக் கடிதங்களை ஆங்கிலத்தில் மட்டுமல்லாது, தமிழிலும் சேர்த்தே அனுப்பினால், இதுபோன்ற குழப்பங்களைத் தவிர்க்கலாம்" என்று வேண்டுகோளும் வைத்தார்.

அதுவும் சரிதானே!

-ஜி.பழனிச்சாமி
Vikatan EMagazine (https://www.facebook.com/vikatanweb)

madhu
10th August 2015, 05:10 PM
வாசுஜி...

ஆனால் தெலுங்கில் எஸ்.பி.பி. பாட்டிலும் 3 சரணம் இருக்கு.

https://www.youtube.com/watch?v=M6FIlSw-I78

சுசீலா பாட்டிலும் 3 சரணம் இருக்கு

https://www.youtube.com/watch?v=4YTNsLZzfNQ

madhu
10th August 2015, 06:03 PM
madhu: You should visit us to see rainbows ! :)

அது ஏன் வாத்தியாரையா ? இங்கே கூட வானவில் தெரியுமே ? ;)