PDA

View Full Version : கவிதை எழுதுவோம் வாருங்கள்.



kalnayak
28th January 2015, 04:50 PM
நண்பர்களே, நண்பர்களே!!!

தமிழ் இலக்கிய வரிசையில் கவிதை எழுத ஆர்வம் கொள்பவர்களுக்காக ஒரு புதிய திரி இது. இது போன்ற திரியை (அதாவது கவிதையை மட்டுமே எழுதுவதற்கான திரியை) நான் காணவில்லை இங்கே. அதணால் இந்த புதிய திரி. பல திரிகளிலும் பலரும் கவிதை எழுதுகிறார்கள். அவைகளை, அவர்களை ஒருங்கிணைப்பதற்கே*இத்திரி. உங்கள் கவிதை எழுதும் திறனை இங்கே பறை சாற்றுங்கள். என்ன வழக்கம் போல் ஒரே ஒரு வேண்டுகோள் எல்லோரும் இணக்கமாக சென்றிட மாறுபட்ட கருத்துககளை வலிந்து திணிக்காதீர்கள். நல்ல தலைப்பு உங்களால் தேர்ந்தெடுக்கப்படுவதே.

இதோ எனது முதற்கவிதை, கணித வார்த்தைகளை கொண்டு:

சதுரங்க போட்டியில் பலவிதமாய் காய்களை பெருக்கி
அவைகளை கட்டங்களில் முன்னேற்றிச்செல்லும் விதி வகுத்து
எதிரியின் காய்களை வகைவகையாய் பின்னாமாக்கும் முறைசாற்றி
நீட்டிய வேளையுடன் நிறுத்தாமல் இழுத்தடிக்கும் போதினிலே
அகல மறுக்கின்றார் அவனியுலோர் முடிவு தெரிவதற்கு
காய்களை கழித்தாயிற்று, கூட்டமாய் கட்டங்களை இழந்துமாயிற்று
திறங்களை கனமாய் பெறவேதம் சிப்பாயை முன்னேற்றுகிறார்
எக்கணமும் ஒருவர் வெல்லக்கூடுமில்லையேல் இருவரும் சமமாவர்
எவர் வெல்வர் என அறிய காத்திருப்போம், முடிவிலி எவருமிலர்.

நீங்களும் உங்கள் கற்பனை குதிரையின் சிறகை தட்டுங்களேன்.

Russellzlc
28th January 2015, 07:55 PM
வாழ்த்துக்கள் கல்நாயக், இப்போதுதான் பார்த்தேன். கவிதைக்கென்று தனியே நீங்கள் திரி ஆரம்பித்திருப்பதை. நீங்கள் நன்றாக எழுதுவீர்கள் என்று தெரியும். ஆனால், கவிஞரும் கூட என்பதை இப்போதுதான் தெரிந்து கொண்டேன். உங்கள் கவிதை நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

ஆனால், ஸாரி. என்னால் இங்கு பங்கேற்க முடியாத நிலைமை. எனக்கு கவிதை எழுத வராது. உங்கள் முயற்சி சிறப்பான வெற்றியடைய மீண்டும் வாழ்த்துக்கள். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

chinnakkannan
28th January 2015, 10:21 PM
கல் நாயக் வாழ்த்துக்கள்.. இதைப் போயம்ஸ் கவிதைகள் த்ரெட்ல போட்டிருக்கலாமே..

வர்றேங்க்ணா..மறுபடி..

chinnakkannan
28th January 2015, 10:23 PM
கயிற்றுப் போட்டி

ஒரு முனையில் அவள்
மறு முனையின் அவன்

இழுக்கையில் கோட்டைத் தாண்டி
கால்கள் சென்றுவிட

ஜெயித்தது நான்
வெற்றிப் பூரிப்பில் அவன்

தோற்றது நீ
மனதுக்குள் புன்னகையுடன் அவள்..

விட்டுக் கொடுப்பதும்
சிலசமயம்
சுவாரஸ்யம் தான்!

( ரொம்ப நாள் முன்னால எழுதினதுங்ணா)

chinnakkannan
28th January 2015, 10:26 PM
அக்கா தங்கை..
***

என் அகத்துக்காரர் ஸ்டேட் பேங்க்
என் அகத்துக்காரர் சிட்டி பேங்க்

என் அகத்துக்காரர் சீனியர் மேனேஜர்
என் அகத்துக்காரர் அஸிஸ்டெண்ட் வைஸ் ப்ரசிடெண்ட்

என் இரண்டு பெட்ரூம் ஃப்ளாட் அடையாறில்
என் ஒன்றரை க்ரவுண்ட் குடிசை வளசரவாக்கத்தில்

என் பையன் சர்ச் பார்க்
என் பெண் டான் பாஸ்கோ

என் அம்பாஸடர் தான் எனக்கு செளகர்யம்
இவருக்கு எப்போதும் புதுக்கார் தான்

அருகில் வா அருமைத் தங்காய்...
என்ன கண்ணில் கலங்கல்...

ஒண்ணுமில்லேக்கா...தூசு!

(ரொம்ப நாள் முன்னால எழுதினதுங்ணா)

kalnayak
29th January 2015, 10:15 AM
கலைவேந்தன்,
உங்கள் தூண்டுகோளுக்கு நன்றி. நான் கவிஞனுமில்லை, நல்ல ரசிகன். என் மனத்திலும் தமிழ்நாட்டின் பெரும்பாலானவர்களைப் போல அவ்வப்போது எதையாவது கவிதையாக எழுத தோன்றுகிறது. சமீபத்தில் நண்பர் சின்ன கண்ணன் வேறு என்னை கவிதை எழுத தூண்டி விட்டாரா, மனத்தில் ஒரே சிந்தனை - கவிதையாக. அதுதான் இந்த திரி. நீங்கள் கவிதையாக எழுதாவிட்டாலும் பரவாயில்லை. இங்கே எழுதப்படும் கவிதைகளை ஆதரித்து உங்கள் கருத்துக்களை எழுதுங்களேன். அதுகூட போதும். இல்லையென்றால் சற்றே முயற்சித்து கவிதையாக கூடஎழுதுங்களேன். நன்றி.

kalnayak
29th January 2015, 10:23 AM
சின்னக்கண்ணன்,
இது உங்களுக்கான திரி. உங்கள் அளவிற்கு நான் கவிதை எழுத மாட்டேன். இருந்தாலும் அவ்வப்போது முயற்சிக்கிறேன். அதற்குள் இரண்டு கவிதைகளை பதித்து விட்டீர்கள். அழகு.
உங்களிடம் இன்னொன்றை கற்றுக்கொள்ளவேண்டும்.கவிதை எழுதுவதற்க்கான டாபிக். முதல் கவிதை ஒரு சின்ன அற்புதமான காதல் கதையே!!!
இரண்டாவது அக்கா தங்கை வாழும் வளமான வாழ்க்கையை பற்றியது. நல்ல சுவாரசியம்தான். புதுக்கவிதை.
மரபுக் கவிதைகளைப் பற்றி சொன்னீர்கள். புதுக்கவிதைகளைப் பற்றியும் சொல்லுங்களேன். நானும் முயற்சிக்கிறேன்.

chinnakkannan
29th January 2015, 10:26 AM
குரு, நாளைக்கு வெள்ளிக்கிழமை..லீவ்..கொஞ்சம் விலா வாரியா புதுக்கவிதை பத்தி எனக்குத் தெரிஞ்சதைச் சொல்றேன்.. தைரியமா எழுதுங்க.. கொஞ்சம் இந்தக் கவிதைகள் த்ரெட்ல கவிதைக்குக் கவிதை பாட்டுக்குப்பாட்டு என ஒரு த்ரெட் இருக்கு..அங்கயும்வாங்க..இறுதிச் சொல் வைத்து எழுதணும்..(ம்ம் சட்டைக்கையை மடக்கி இறங்குங்க..ஒண்ணும் ப்ராப்ளமில்லை..)

chinnakkannan
29th January 2015, 10:28 AM
புதுக்கவிதைக்கு இலக்கணம்னு எதுவும் கிடையாது..ஒரு சின்ன ட்விஸ்ட்..அல்லது ஏராளமான சிந்தனைகளைப் பொதிந்து இருக்கறாமாதிரியான காட்சி. இருக்கணும்.. எனக்கு மரபுக்கவிதை கொஞ்சம் நிறையவேபிடிக்கும்..

kalnayak
30th January 2015, 10:44 AM
சி.க. நீங்கள் சொன்ன புதுக்கவிதை கருத்த்தினையே ஒரு கவிதையாக்கி மகிழ்கின்றேன்.

புதுக்கவிதை இலக்கணம் இல்லா கவிதை மற்றும் அது
மதுக்கவிதை இருப்போர் இல்லையோர் எவரும் இயற்றும் கவிதை
அது இது என எதையும் பாடவைக்கும் கவிதை. சிந்தனை
எதுவும் பொதிந்திருக்கும், படித்தவுடனே புரிந்திருக்கும்.

அசாதாரணங்களும் அநாயசமாய் சொல்லப்பட்டிருக்கும்.
இயல்பான விடயங்களும் இயல்பை மீறி எடுக்கப்பட்டிருக்கும்.
பாரதியென்ற பெரும்புலவன் காட்டிவிட்ட பாதைதனில்
பாமரரும் பயணித்திருக்கும் பாடைஏறா பாட்டுவழி.

chinnakkannan
30th January 2015, 11:10 AM
கல் நாயக் குட்.. இது பற்றி வெகுகால முன் மரபில் எழுதிப் பார்த்தது.. (ஒரிஜினலின் கடைசி நாலுலைன்ஸ் மறந்து போச்..இப்போ திருப்பி எழுதினேன்..)

புதுக்கவிதை எழுததற்கு என்ன வேண்டும்
…புவியினிலே கற்பனையின் வளந்தான் வேண்டும்
வதுவைகொளக் காத்திருக்கும் வயதுப் பெண்ணின்.
…வளமான சிந்தனைகள் பற்ற வேண்டும்
பதுமையெனத் திகைக்காமல் பாரில் எல்லா
..பல்வண்ணக் காட்சிகளை நெய்ய வேண்டும்
இதுகவிதை எளிமையெனப் போற்றும் வண்ணம்
…எழுச்சிகொள வைக்கு(ம்)புதுக் கவிதை தானே

chinnakkannan
30th January 2015, 11:38 AM
கல் நாயக்,

பலவருடங்களுக்கு முன் நான் ஆரம்பித்த ப்ளாக்கில் எழுதிப் பார்த்த கட்டுரை..(அப்புறம் ப்ளாக்கைத்தொடரவில்லை)

//எழுதுவது என்று எடுத்துக் கொண்டால் எதைப் பற்றி வேண்டுமானாலும், எந்த வடிவிலும் (தெரியாத விஷயமாய் இருந்தால் தெரிந்து கொண்டு) எழுத இயலும் என நினைக்கிறேன்..தேவை கொஞ்சூண்டு கற்பனை.


பாருங்களேன். இங்கு சுட்டெரிக்கும் வெய்யில் - ச்சும்மா 44 டிகிரி தான்..மதியம் வீட்டிற்கு உணவருந்தப் போவதற்குள் நாக்கு வெளித் தள்ளுகிறது.. ஹ்யுமிடிட்டி எனத் தமிழில் சொல்லப் படும் புழுக்கம்,அனல் காற்று பாடாய்ப் படுத்துகிறது..இரவிலும் கூட..அப்படி இருக்கையில் நேற்று வீட்டிற்குச் சென்றால் அகத்துக்காரி வடை செய்து வைத்திருந்தாள்..ஒன்றுமே தோன்றாமல் எழுத ஆரம்பித்து எழுதி விட்டேன்.
.
**

ஆடி அசைந்தே அருகில் வருமெலியால்
வாடி வதங்கும் வடை.

**

கூண்டைத் திறந்து விட்டதும்
பாய்ந்த எலியைக்
கவ்விச்சென்ற பூனையைக்
கண்டதும்
ஏனோ நினைவுக்கு வந்தது
முந்தா நாள் ருசித்த
ஆமை வடை..

****

எலி கவ்விய வடை
வடை கவ்விய பூனை
எல்லாம் மண்ணில்..

**

முந்தாநாள் பாட்டி;
நேற்று அம்மா;
இன்று மனைவி
நாளை மகள்.
வடையும் ருசியும்
மாறவில்லை தான்
மாறிப்போனதென்னவோ
தலைமுறை நாக்கு..

**

வடை வைத்து வெண்பா, புதுக்கவிதை, ஹைக்கூ, நவீன கவிதை என்றுமட்டுமல்ல.. வடையையே சரித்திரக் கதையின் ஆரம்பமாகவும் வைக்கலாம்..!

சித்திரா பெளர்ணமி முடிந்து இரு நாட்களானாலும் கூட வானில் உலா வந்து கொண்டிருந்த சந்திரன் சற்றே பிரகாசமாகத் தான் தனது நிலவினை கீழே அந்தப்புரத்திலிருந்து சற்றுத் தள்ளியிருந்த கொடி வீட்டின் விதானத்தில் பரப்பிக் கொண்டிருந்தான்.அதன் மூலம் கொடிவீட்டினுள் நுழைந்த கிரணங்களானது அங்கே ஏற்கெனவே திண்ணையில் ஒருக்களித்து அமர்ந்திருந்த செந்தமிழ்ச்செல்வியின் மீது பட்டும் படாமலும் விழுந்து அவளை ஒரு விதமான உயிர்ச்சிற்பமாக அடித்திருந்தன.

அந்த சமயத்தில் அவளது தோளை யாரோ தொட, சற்றும் திடுக்கிடாமல் திரும்பிய செல்வி, 'ஏனாம் இவ்வளவு நேரம் பாண்டியரே.. நான் ஒருத்தி இருப்பது நினைவிருக்கிறதா என்ன..வெற்றி மயக்கத்தில் மற்ற அரண்மனைக்குச் சென்று விட்டீரா.."

அவளது ஊடலை ரசித்த பாண்டிய மன்னன் சுந்தர வதன பாண்டியன்.,' செல்வி.. கோபத்திலும் நீ மிக மிக அழகாயிருக்கிறாய்...சரீ..இதைப்பார்..சமர்க்களத் தி லிருந்து நான் கொணர்ந்தது..வைர ஒட்டியாணம்- சுத்தமான அசல் வைரத்தினால் செய்யப் பட்டது..உனது இடைக்குச் சின்னதாக இருக்குமா எனத் தெரியவில்லை.." என்றான்.

அதைப் பார்த்து பிற்காலத்தில் ஒளிரப் போகும் பாரதத்தைப் போல முகமொளிர்ந்த செல்வி, 'போர்க்களத்துக்குப் போவதற்குமுன் நீங்கள் ஆசைப் பட்டு அருந்தினீர்களே..அதை உங்களுக்காக வைத்திருக்கிறேன்.' என வெள்ளித்தட்டொன்றை நீட்ட அதிலிருந்த பதார்த்தத்தை வாயிலிட்டுக்கொண்ட சு.வ பாண்டியன் முகஞ்சுளித்தான்.

'என்ன செல்வி இது..வடை மாதிரி இருக்கிறது..ஆனால் நிறைய வேறுவிதமான வாசனை வருகிறதே.."

'என்ன இப்படிச் சொல்லிவிட்டீர்கள்.. நீங்கள் ஊருக்குச் செல்வதற்கு முன் ஆசைப் பட்டு சாப்ப்ட்ட அதே வடை தான்..நெடு நாள் வைத்தாலும் கெடாமல் இருக்குமாம்..எனது பாட்டியார் சொன்னபடி செய்திருக்கிறேன்..இதைப் பற்றி நமது அவைப் புலவர் கூட ஒரு காவியம் எழுதியிருக்கிறார்.. நெடு நாள் வடை என்ற தலைப்பில்' என்றாள் செந்தமிழ்ச் செல்வி..

'அசடே..அது நெடு நாள் வடை இல்லை. நெடு நல் வாடை!" என்றான் சு.வ.பா.

**

இப்படியே கதையைக் கொண்டும் செல்லலாம்..சரி.. அப்புறம் வரட்டுமா..//

கவிதை பத்திச் சொல்லுங்கன்னா கதை வுடறேங்கறீங்களா ! :)

kalnayak
30th January 2015, 11:38 AM
ஆஹா. அருமை. அருமை.

நாம் இருவர் மட்டும் தான் இங்கே கும்மிக் கொட்டிக்கொள்ளவேண்டும் எனத் தெரிகிறது. நீங்கள் சொன்ன திரிகளுக்கும் சென்று வந்தேன். அங்கேயும் பதியலாம் என்று இருக்கிறேன். பார்க்கலாம்.

நீங்களும் என்னைப் போலவே நகைச்சுவைப் பாதையில் இறங்கி விட்டீர்கள். அட்டகாசம்தான் போங்கள்.

இப்படி வடையைப் பற்றி கவிதை எழுதியதைப் படித்தவுடன் நேற்று 'த ஹிந்து'-வில் (தமிழ்) படித்த நகைச்சுவை ஞாபகத்திற்கு வருகிறது.

ஒருவர் சொல்கிறார்: "இந்த ஏரியாவல எலித்தொல்லை இப்படி அதிகமாக இருக்கே?"

மற்றவர் பதில் இது: "இதுதான் 'வட'சென்னை ஆச்சே!!!"

Russellzlc
30th January 2015, 05:09 PM
நாம் இருவர் மட்டும் தான் இங்கே ‘‘கும்மிக் கொட்டிக்கொள்ளவேண்டும்’’ எனத் தெரிகிறது.

கல்நாயக்,

உங்கள் உவமையை ரசித்து சிரித்தேன். எனக்கும் கும்மி கொட்ட ஆசைதான். ஆனால், நான் என்ன செய்யட்டும்.கவிதை வராத கையறு நிலையில் இருக்கிறேன்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

kalnayak
2nd February 2015, 11:28 AM
கலைவேந்தன் நன்றி.
நானும், சின்ன கண்ணனும் கும்மி கொட்டிக் கொள்கிறோம். நீங்கள் பார்வையாளராகவாவது வந்து எங்களுக்கு ஆதரவு அளித்து கொண்டிருங்கள்.*

chinnakkannan
2nd February 2015, 12:59 PM
மு.எ. ஹைக்கூ..

**

கடைசி நாள் சம்பளம்
மேஸ்திரி வாங்க
கையசைத்தது வீடு

kalnayak
3rd February 2015, 05:45 PM
எழுதுவதை நிறுத்திவிட்டேன் என்று
எவருக்கும் தெரியவில்லை.
அதை தெரிவிக்க எழுதினேன்.
இப்போது எழுதுவதை நிறுத்தவில்லை என்று
எவருக்கும் தெரிவதால் இன்னும்
எழுதுவதை நிறுத்தவில்லை.

chinnakkannan
4th February 2015, 10:12 AM
கொய்யா..
***

நேரே வெட்டி
கூறுகளில் உப்பிட்டு
காய வைத்து உண்டால்
பலம் வருமென
கிழம் வாங்கிச் செல்ல
விருத்தியானது
வியாபாரம்..

(romba naalaikku munnaal ezhuthiyathu may be 15 yrs)

kalnayak
4th February 2015, 01:17 PM
புதிதாய் எழுத கருவைத் தேடினேன்
புதிராய் முளைத்த கருவை எழுதினேன்.
விதியாய் விளைந்த வாழ்வைத் காண்கிறேன்.
கதியாய் எதிரே கடவுளை தேடுகிறேன்.

சொல்வதற்கு என்ன இருக்கிறது
சொல்லாமலே எல்லாம் நிகழும்போது.
வல்லமை எதற்கு வான்மீது செல்லவா
வலியோரை வறுமையில் காத்து நிற்கவா.

எல்லோரும் போலவே நானும் ஒருவன்.
என்னை ஏமாற்றி செல்லவே எவனோ ஒருவன்
ஏங்கிச் சாவான் இவனென நினையாமல்
எள்ளி நகையாட விட்டுவிட்டான்.

chinnakkannan
4th February 2015, 01:22 PM
ரொம்ப வருத்தம் எதுக்கு கல் நாயக்.. தாராளமா எழுதுங்க.. இறைவன் எல்லா நலமும் தருவான் :)

**

புதிராய் முளைத்த கருங்கறது வாழ்வா..

**

chinnakkannan
4th February 2015, 01:28 PM
கருன்னு ஆரம்பிச்சு எழுதிப் பார்த்தேங்க.


*
கருவில் முளைத்தே காலஞ் செல்ல
...கண்கள் முளைத்து தோற்றம் மெல்ல
உருவம் சிறிதாய் சிறிதாய் வளர
...உலகந் தன்னில் வீழ்ந்தே மேலும்
பருவந்தன்னில் பலவாய்ப்பலவாய்
...பள்ளி கல்வி இளமை மேலும்
சுருங்கும் தோலில் மூப்பும் வந்தே
...சொக்கும் வேளை இறைவன் தாளில்

kalnayak
4th February 2015, 01:38 PM
சி.க.

கவலையை பதியவே கவிதையைப் பாடினேன்.
சொல்லொணா சோகம் தஞ்சம் புகுந்தது.
நிம்மதி நாடுவாய் நீயென கேட்டது.
ஆற்றினீர் நீரே நெஞ்சு நெகிழ்ந்தது.

kirukan
4th February 2015, 01:43 PM
Arumaiyana thiri ck avargale....kalakunga rendu perum....

Kirukkan.

kalnayak
4th February 2015, 01:45 PM
கிறுக்கண்ணா கிறுக்கண்ணா அப்பப்ப வாங்க.
மறக்காம மறக்காம எழுதிட்டு போங்க.
கிறுக்கிய கிறுக்கிறல் இங்கேயும் தாங்க.

kalnayak
5th February 2015, 12:32 PM
விருப்பம் தெரிவித்தவரும் நன்றி சொன்னவரும்
படித்து மந்தஹாச புன்னகை பூக்கும் யாவரும்
புதுக்கவிதை சொன்னால் பக்கம் நிறையவரும்
திரியை துவக்கிய என்னையும் மனம் கவரும்.

chinnakkannan
5th February 2015, 12:48 PM
கிறுக்கரே நன்றி.. :) நீங்களும் வாங்க..(தாமதத்திற்கு மன்னிக்க)

*

kalnayak
6th February 2015, 11:16 AM
கறிக்குழம்பு

ஆசை ஆசையாய் மேய்த்த கடாவை வெட்டும்போது
ஆசை மகன் குமுறிக் குமுறிக் கதறுகிறான்.
பாசம் பாசமாய் வளர்த்த கோழியை கொல்லும்போது
பாச மகள் அழுது அழுது பதறுகிறாள்.
சுவை சுவையாய் சமைத்ததுப் போட்டால் தடுக்கின்றார்.
சுவையில்லா முற்றிய கறி எவர் உண்பார்.

(வெள்ளிக்கிழமையன்று இதை எழுதுவதற்கு எனக்கே வருத்தமாய் இருக்கு என்ன பண்றது. கரு மனசுல உருவாயிருச்சு.)

chinnakkannan
6th February 2015, 11:39 AM
சந்தைக்குப் போனீன்னா சலிக்காம மீனுவாங்கி
…சாயங்காலம் கொழம்புவச்சு கொடுத்திடுன்னு சொன்னீங்க
மந்தைபோன ஆடுகள்ளாம் மறக்காமப் பட்டியிலே
..மாஞ்சுமாஞ்சு வந்துடுச்சே மச்சானொன்னைக் காங்கலியே
சந்தனமா மஞ்சபோட்டு பக்குவமா மசாலரைச்சு
..சட்டியிலே வச்சுபுட்டேன் கொதிக்குமணம் தெரியலையா
நொந்தகண்ணு வலிக்குதய்யா நேரத்துல தான்வாய்யா
..நெஞ்சுக்குள்ள ஒமச்சுமந்து நிக்குறது நெனைப்பிலையா

chinnakkannan
6th February 2015, 11:49 AM
வெங்காய சாம்பாரை விரல்தொட்டுப் பக்குவத்தில்
..வித்தகமாய் வைத்திடுவாள் அம்மாவும் அக்காலம்
தங்கமெனத் தகதகக்கும் சாம்பாரில் வெண்டைக்காய்
..தங்கையவள் போட்டிடுவாள் பெருஞ்சுவையாய் அக்காலம்
சங்கமிக்கும் பலகாய்கள் தாளகக் குழம்பினிலே
…சகோதரியும் தான்செய்வார் அருஞ்சுவையில் அக்காலம்
பங்கமிலை சொல்வதற்கு மனைவியவள் சாம்பாரும்
..பல்சுவையே என்றுமனம் நினைத்திடுமே இக்காலம்!..

chinnakkannan
6th February 2015, 11:50 AM
kal nayak other types of kuzhambu patthiyum rasamaai ezhuthunga

chinnakkannan
6th February 2015, 11:51 AM
இங்க புச்சு புச்சா தான் எய்தி பாக்கறேன் ஓகேயாங்க்..

kalnayak
6th February 2015, 12:06 PM
மசாலா அறைக்கிறத எழுதுறதுல இருந்து
உங்க கைப்பக்குவம் கவிதையில தெரியுது.
சமைக்கத் தெரியாத நான் சமையல பத்தி என்ன சொல்ல?

kalnayak
6th February 2015, 12:10 PM
புச்சு புச்சாய் மட்டும் நீங்க எழுதலீங்கோ.
அச்சு அசலாயும் பாங்கா எழுதறீங்கோ.

chinnakkannan
6th February 2015, 12:10 PM
ஓய்.. அதெல்லாம் எழுத எழுதத் தானா வந்துடும்.. ஒமக்காக இப்போ ரசத்தக் கொதிக்க வைக்கிறேன்..கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க..

kalnayak
6th February 2015, 12:13 PM
படிச்சு ரசிக்கத்தான் முடியுது ரசமான எழுத்த
குடிச்சு ரசிக்க முடியலயே எழுதுற ரசத்த!!!

chinnakkannan
6th February 2015, 12:28 PM
ரசம் (சுடச் சுட)

**

கண்ணை முழிச்சு நேரம் பார்த்தா
மணியோ இப்போ ஆறா அச்சோ..

அம்மா படிச்சுப் படிச்சுச் சொன்னாள்
அத்தை வீடு அண்ணா நகரில்
ஆட்டோ பிடிச்சு ப் போகப் பேசி
மறுபடி வரவும் ஒன்பது ஆகும்

அப்பா ஆறரை வாக்கில் வந்தால்
சூடாய்ச் சின்னதாய் சாம்பார் வச்சு
குக்கரில் இருக்கும் சாதம் எடுத்து
சூடு பண்ணி பின்னே ஃப்ரிட்ஜில்
வெண்டை ஃப்ரைதான் ஓவனில் வைத்து
மெல்லிய சூட்டில் தட்டில் போட்டு
கொடுடி என்றாள் ஓமறந்தேனே
ப்ளஸ்டூ படிக்கிறே சாம்பார் வைக்கத்
தெரியா தென்றால் திட்டுவாள் எனவே
சரியெனத் தலையை ஆட்டிவிட் டாச்சு
இப்போ பேந்த முழிக்கவும் ஆச்சு

ஃபேஸ்புக் ப்ரண்டிடம் கேட்டால் அவளோ
அடியே எனக்கு சாப்பிடத் தெரியும்
சாம்பார் எல்லாம் அம்மா செய்வாள்
என்றே சொல்லி சைன் ஆஃப் பண்ண
என்ன செய்யலாம் என்றே திகைத்தால்

அச்சோ வாசலில் பைக்கின் சத்தம்
அப்பா வந்தாச் என்ன செய்வேன்

உள்ளே வந்த அப்பா சோர்வாய்
என்னடி அம்மா எங்கே எங்கே

அத்தை வீடு போயிருக் காப்பா
இப்போ இதோ வந்தே விடுவாள்
ஆனால் அப்பா சாம்பார் வைக்கச்
சொன்னாள் அம்மா எனக்குத் தெரியாதே.

சரிசரி கவலைப் படாதே நீயும்
வாவா நாமும் ரசமாய்ச் செய்யலாம்

சொன்ன அப்பா உள்ளே சென்று
உடையை மாற்றி பெர்முடாஸ் அ\ணிந்து
ப்ரெஷனப் ஆகி லோஷன் மணக்க
கிச்சனின் உள்ளே புகுந்தே ஃப்ரிட்ஜில்
இருந்த சிலபல தக்காளி எடுத்து
வேக வேகமாய் கட்தான் செய்து
பின்னே சின்னதாய்ப் பாத்திரம் எடுத்து
கடுகு உளூந்து எண்ணெய் விட்டு
சிம்மில் அடுப்பை ஏற்றி விட்டே
கடுகு பருப்பும் பொன்னிறமாக
கொஞ்சம் வெடிக்கும் போதில் பழத்தை
சரிவாய்ப் போட்டுப்பின்னர் ரசத்தின்
பொடியைப் போட்டு சற்றே உப்பு
பின்னர் தண்ணிர் எல்லாம் விட்டு
கொதிக்க வைக்க சற்றைப் போதில்
எங்கும் மணமாய் ஆஹா அழகு..

டைனிங்க் டேபிளில் சமர்த்தாய் நானும்
பாத்திரம் தட்டு கறியும் சாதம்
எல்லாம் வைக்க அப்பா ரசத்தின்
பாத்திரம் வைக்க இருவரும் ஒருகை
பிடித்தே சாப்பிட அடடா அமிர்தம்..

உண்டு முடித்தபின் சொன்னேன் டாடி
ஆஹா பேஷ்பேஷ் சூப்பர் டாடி
அம்மா வைவிட நீதான் பெட்டர்.
கையைப் பிடித்துக் குலுக்க உதறி
அப்பா பட்டார் அழகாய் வெட்கம்!

**

kalnayak
6th February 2015, 01:13 PM
சி.க. ரசமான ரசக்கவிதை சூப்பர்!!!


அப்பா வச்ச ரசத்தை குடித்து
மப்பா ஏறாமல் மனது வைத்து
தப்பா எதுவும் வாய் பேசாமல்
நிப்பா இந்த பிளஸ்டூ பாப்பா!!!

kalnayak
9th February 2015, 03:18 PM
அழகென்பது பார்வையிலே
அறியாமை மூளையிலே
அச்சமென்பது மனதினிலே
ஆதரவென்பது நீ மட்டுமே
அறிந்து கொண்டேன் அனுபவத்தில்.

kirukan
9th February 2015, 05:41 PM
சில்லரை மனிதர்கள் வாங்க முடியாத
மொத்த வியாபாரம் நேர்மை.
-
கிறுக்கன்
Courtesy-Warren Buffett

kalnayak
10th February 2015, 10:39 AM
கற்பனையில் வீடு கட்டி கல்லறையில் குடியிருப்போம்
பற்றற்ற வாழ்க்கைதனை பலனன்றி வாழ்ந்திருப்போம்
படைத்தவனும் நேரிலில்லை பலவுருவில் வேண்டுகிறோம்
செய்தவரை காணவில்லை செத்தபின்பா கண்டிருப்போம்.

chinnakkannan
10th February 2015, 11:57 AM
பாட்டெழுத வந்துவிட்டுப் பாதியிலே நின்றுவிட்டேன்
..பாவையவ்ள் ஈரவிழிப் பார்வையினால் வந்தவினை
கூட்டிவிடும் ஆவலினை கூர்விழியின் தன்மையது
..கூப்பிட்டுப் பேசத்தான் நினைப்பதுவும் தெரியலையே
நோட்டமிடும் உள்மனசு நோகவைத்தே சொல்வதுவோ
..நொந்தபடி ஏதேனும் சொல்வதற்கே கண்பேச்சு
வாட்டமிலை வஞ்சிமுகம் மறுபடியும் காணையிலே
..வண்ணவிதழ் புன்னகைக்க வந்ததுவே பூக்கவிதை..

kalnayak
11th February 2015, 12:45 PM
கனிந்தது காலம் கவிதை வரைய
சிந்தனையில் தேடினேன் கருவினை
எடுக்கப்போனேன் எழுதுபொருள்
துணையானவள் மறித்து நின்றாள்
கண்டுகொண்டேன் கருப்பொருள்
அனைவருக்கும் வரும் எதிர்ப்பொருள்.

kalnayak
12th February 2015, 11:06 AM
அசிங்கம் செய்ய யாருமில்லா தைரியத்தில் இயற்கை
வானம் என்னும் சுவற்றிற்கு நீல வண்ணம் பூசுகிறது
நிலைமை பார்த்து மேகப் பஞ்சுகளால் ஓவியம் வரைகிறது
மழையைப் பார்த்து மகிழ்ச்சி கொண்டு வானவில் எழுகிறது.

chinnakkannan
13th February 2015, 01:17 AM
நாளை நாளைமறு நாள் காதலர் தினம் முன்னிட்டு காதல் பாடல்கள் வடிக்கவும்..


**
பெரியமுள் சின்னமுள்ளை சுத்திசுத்தி வாரதுபோல்
..பேதையென் நெஞ்சுவொன்னை நெனச்சபடி இருக்குதய்யா
கரியநிறக் கரடியொண்ணு காட்டுவழி போகுதின்னு
..கலங்காமப் போனமக்கள் கதறித்தான் திரும்பவர
சரியாத்தான் பாத்தீரா மிருகந்தான் கண்டீரா
..சாக்கெனவே சொன்னீரா எனச்சொல்லிப் போனவரே
கரியாட்டம் ஒடம்புலதான் காத்திரமா இருப்பீரே
…கரடிவுமை அடிச்சதுவோ கன்னிமனம் துடிக்குதய்யா.

kalnayak
13th February 2015, 10:26 AM
உயிர்களை காக்கும் கதிரவன் ஆண்பால்
உயிர்களை கொண்ட பூமியோ பெண்பால்
புதன், வெள்ளி முதலான கிரகங்கள் ஆண்பால்
புவிப் பெண்ணை சுற்றும் திங்கள் அவன்
சந்திரனென்று ஆணாய் திரிகிறான்
புலவருக்கோ காதலியின் சகோதரியாய்
நிலாப் பெண் தெரிகிறாள். என்ன
திங்கள் ஒரு திருநங்கையோ இல்லையதை
சுடராய் அணிந்து கொண்ட அர்த்தநாரியோ?

chinnakkannan
13th February 2015, 03:09 PM
கண்ணுக்குள் நீரோட காமாட்சிப் பாட்டியவ
..கலங்கித்தான் பார்த்திருந்தா தொலைக்காட்சிப் பெட்டியதை
என்னாச்சோ ஏதாச்சோ சீரியலில் சோகமென்ன
…என்றபடி எச்சுமியும் எட்டித்தான் பார்க்கையிலே
வண்ணவண்ண சேலைதனை வாகாகக் கட்டிக்கிட்டு
...வக்கணையா மீன்கொழம்பு செய்முறையைச் சொல்லிநிற்க
நன்னாத்தான் இருக்குதுடி ஏதுக்குக் கலங்குறவ
. நன்றாகச் சொல்லிவிடு என்றேதான் கேட்டுவிட

மென்சிரித்தாள் காமாட்சி ஒண்ணுமிலை எச்சுமியே
…மேலாக ஒருநினைவு என்றுசொலி நிறுத்தியவள்
கண்குளமாய்ப் போனகதை நெஞ்சுக்குள் பொங்கியெழ
…காலையிலே மார்க்கெட்டு வெரசாத்தான் தாம்போயி
சின்னமீனு பெரியமீனு நல்லமீனாப் பொறக்கிவந்து
… சிட்டெனவே குழம்புவைக்க மகன்விரும்பி சாப்பிடவும்
பின்னதொரு நாளிலிந்த முதியோரின் இல்லத்தில்
…பிள்ளையவன் சேர்த்ததையும் சொல்லவில்லை அக்கிழவி..

kalnayak
14th February 2015, 02:05 PM
தோற்றவர் வெல்வதும், வென்றவர் தோற்பதும் காதலில் மட்டும்தானே
தோற்றம் பார்த்து மட்டும் வரும் காதல் தொடர்ந்து வெல்வது இல்லையே
தோகையாக வருடும் காதல் நினைவு காதலித்து தோற்றவர்க்கு சாத்தியம்
தோணும் வரியை எழுதினேன் காதலர் தினத்தில் தோற்றவர் ஆதரவிற்கு

chinnakkannan
15th February 2015, 10:24 AM
காணி நிலங்கேட்டேன் கண்டுவந்தே தந்தாய்
நாணி வணங்கி நலமாய் - வாணியுனைப்
பக்குவமாய் நான்வணங்கிப் பாதம் பணிகின்றேன்
சொக்கும் எழுத்தெனக்குச் சொல்..

chinnakkannan
15th February 2015, 10:38 AM
நாணும் பலசெயல்கள் நற்புவியில் செய்திருந்து
காணும் காட்சிகளே உண்மையெனப் - பேணித்
தானிருந்தேன் நீக்கினாய் தக்கபடி வாணிநீ,
ஆணியே ஆயிற் றது..

chinnakkannan
15th February 2015, 10:47 AM
நற்றமிழில் பாட்டெழுத நாட்டமுடன் தாளெடுத்தால்
கற்பனையோ ஓடுதே காதத்தில் - உன்பதத்தில்
வாணியே வீழ வரந்தந்தாய் இங்கெனக்கு
ஆணியே சொல்லுக் கது..

kalnayak
16th February 2015, 10:32 AM
கூற்றுவன் கொண்டுசெல்லும் வரை உயிர் காக்க
ஏற்றவன் ஏற்றவள் துணை கொண்டு வாழ்வதாய்
பெற்றவர் செய்து வைத்த பந்தம் திருமணம். அதை
விற்றவர் வாழ்வில் என்றும் இருக்கும் துன்பம்.

chinnakkannan
16th February 2015, 01:14 PM
முன்னால் எழுதிப் பார்த்த அந்தாதி..

*

எண்ணுகையில் நெஞ்சுள்ளே உற்சாகம் தான்பெருக்கும்
சின்னக் குழவியவன் சீர்மிகுந்த நோக்கினிலே
வண்ணமாய் எல்லோர்க்கும் வாழ வகைசெய்யும்
கண்ணன் கழல்களே காப்பு

காப்பதற் கென்றே குடையாகத் தான்பிடிக்க
ஆக்களுடன் சேர்ந்தங்கு மாக்களும் நின்றுவிட
பேய்மழையைப் பார்த்தே பயந்திருந்த கோகுலத்தைக்
காத்துத்தான் நின்றவன் காண்..

காண்பதோ சின்னக் குழந்தையின் தோற்றமெனில்
தீண்டிய பூதகியைத் தாக்கியே - மண்ணில்
விழச்செய்து வித்தைகள் வேடிக்கையாய்ச் செய்த
குழவிக் கிணையேது சொல்

சொல்ல நினைத்தாலே சோறதுவும் பானையிலே
துள்ளியே ஆர்ப்பரித்துத் தோயாமல் பொங்குதற்போல்
அள்ளிப் பெருகிடுதே கண்ணனவன் லீலையதும்
பள்ளிப் பருவத்தில் பார்..

பார்த்தான் பலவாறாய் பக்குவத்தைத் தானிழந்து
ஆர்ப்பரித்த காளிங்கன் தீச்செயலை – வேர்த்து
விறுவிறுத் தாடியே வெட்கிட வைத்தான்
துறுதுறு கண்ணனவன் தான்..

கண்ணனவன் தானங்கே கட்டிய கல்லிழுத்து
திண்ணமாய் நேர்நோக்கிச் செல்லுகையில் – மின்னலது
பட்டாற்போல் மரங்கள் பிரிந்தங்கே வீழவும்
தொட்டனர் சுட்டியின் தாள்

தாளால் விஷத்துடனே தீண்டிய பூதகியை
மீளா நிலைக்கணுப்பி மீண்டவன் –கேளாமல்
தாயிடம் தப்பித் தளிர்மண்ணைத் தின்னவும்
வாயில் தெரிந்த வுலகு..


உலகங்கள்: சுற்றுவதை ஒன்றாக்க் காட்டி
கலக்கத்தைத் தாயிடம் கூட்டி – படக்கென
அன்னையைக் கொஞ்சம் அணைத்தே அழுதிடுவான்
சின்னஞ் சிறுகண்ணன் தான்

சின்ன்ஞ் சிறுகண்ணன் தானென்று எண்ணாமல்
நன்றாய் இழுத்தே நாலுஅடி போடென்றே
கன்ன ஞ் சிவந்திருந்த கன்னியர்கள் சொல்கையிலே
பின்னலைப் பின்னுவான் பார்..

பார்க்கும் இடமெல்லாம் புன்னகைக்கு முன்வதனம்
ஈர்க்கும் பலவாறாய் என்பதனால் – சேர்த்திழுத்துக்
கண்ணிமை மூடவும் கண்ணா சிரிக்கின்றாய்
விண்ணினைக் காட்டுவா யா..

kalnayak
18th February 2015, 02:47 PM
கவிதை வரைய கருப்பொருள் வேண்டும்.
கலைவாணியே கருத்தினில் வருவாய்.
வீணை கொண்டவள் கலை விருந்து வைக்கிறாள்.
கவனம் முழுவதும் கவர்ந்து இழுத்த்தவள்
கவிதைக் கலையாய் வெளிப்பட வைக்கிறாள்.

kalnayak
19th February 2015, 02:21 PM
போராட்டம் போராட்டம் எம்மை கொன்று குவிக்கும் மனித இனத்திற்கெதிரான
போராட்டம் குவியல் குவியலாய் கூடி நின்று கூவிக்கூவி போராட்டம்
போரினிலே பாதிக்கப்பட்ட மனிதரை காக்கவென்று இருக்கிறது செஞ்சிலுவை
போதாமல் விலங்குகளை காத்திடவே இருக்கிறது நீலக்கூட்டல் சமூகம்

சுததமின்றி சூழ்நிலையை வைத்து எம்மை வளர்த்துவிட்டு கடித்து உயிர்
சுற்றுகின்ற எம்மையே சுருள் வைத்து சுருட்டினர், மேட் வைத்து மாய்த்தனர்
சுற்றுப்புறம் முழுமையும் மருந்தடித்தது மாநகராட்சி விடிய விடிய கொளுத்தினர் மருந்து
சுவர்களுக்குளே சுற்றி வலை வைத்தனர் எமைத் தடுக்க. விட்டோமா இம்மனிதரை

உயர் அழுத்த மின்சாரம் எம்மில் பாய்ச்சி இரக்கமின்றி எரித்தனர் இவர்களை எதிர்கக
உயர்வான ஒரு மஞ்சள் பெருக்கல் சமூகத்தை எவரேனும் முன்னெடுத்தனரோ
உதிரத்தை குடித்து உயிர் வாழும் எம்மை காக்காத மனிதரை நோய் பரப்பி
உலகத்தில் அவர்தம் எண்ணிக்கை குறைப்போம் இதுவே இக்கொசுக்களின் சூளுரை.

pavalamani pragasam
20th February 2015, 08:03 AM
Kalnayak, were you inspired by my story, 'War and Peace'?:-D

chinnakkannan
20th February 2015, 11:31 AM
பிபிக்கா இருக்குமா இருக்கும்


மிஞ்சினால் பறந்து மேனியில் தவழ்ந்துதான்
கொஞ்சியே பார்க்கும் கொசு!

kalnayak
20th February 2015, 11:55 AM
Kalnayak, were you inspired by my story, 'War and Peace'?:-D

மேம், உங்க 'வார் அன்ட் பீஸ்' கதை எங்க இருக்குன்னு சொல்லுங்க. படிச்சிட்டு இன்னும் அந்த கவிதைய இம்ப்ரூவ் பண்ண முடியுமான்னு பார்க்கறேன்.

kalnayak
20th February 2015, 01:36 PM
சொந்த ஊர் விட்டு எந்த ஊரிலோ பிழைத்து வருகிறேன்
எந்த ஊரும் சொந்த ஊராய் நினைக்கும் தமிழ் வழிதான்
பந்தங்கள் யாருமின்றி வந்திருந்த போதிலும் இங்கேதான்
நந்தவனமாய் கண்டிருந்து பசியாற்றிக் கொண்டிருப்பேன்

அண்டிவரும் யாவரையும் பிழைக்க வைக்கும் இவ்வூர்
உண்டிகொள்ள வைத்து உறவுகளை உருவாக்கி
பண்டிதராய் மாற்றிடவே பல்லறிவுப் புகட்டியெனை
நொண்டியிருந்த என் வாழ்வு நொடித்திடாமல் காத்திருக்கும்

pavalamani pragasam
20th February 2015, 02:43 PM
மேம், உங்க 'வார் அன்ட் பீஸ்' கதை எங்க இருக்குன்னு சொல்லுங்க. படிச்சிட்டு இன்னும் அந்த கவிதைய இம்ப்ரூவ் பண்ண முடியுமான்னு பார்க்கறேன்.
In the stories section:
http://www.mayyam.com/talk/showthread.php?10711-War-and-Peace
From old posts:
1.தொல்லை
பாசத்தோட பாக்குறா,
நேசத்தோட நெருங்குறா,
ஆசையோட அலையறா,
அருகில் வர துடிக்கிறா,
பகலில் ஓடி ஒளியறா,
பக்கம் வர வெக்கமோ?
இருட்டு வர காத்திருந்து
இஷ்டம் போல கடிக்கிறா-
எந்த எதிர்ப்பும் பலிக்கலையே,
கொசுத் தொல்லை தாங்கலையே!

2.கடிக்காமல் விடுவேனோ?

முழுதாக மூடிக் கொண்டிருக்கும் மாங்கனியே!
உனை தீண்டாதென் உயிர்தான் தரிக்குமோ?

வலைக்குள்ளே வனப்பான வண்ண மயிலே!
நானின்றி வந்ததுவோ உனக்கு பூந்துயிலே?

எட்டி நில்லென்று கட்டளையோ, தேன்மலரே!
உனைத் தொட்டாலன்றி எந்தன் பசியாறுமோ?

வாசனை பூச்செல்லாம் பூசிய பூங்காற்றே!
வரவிடாதெனை விரட்டுவது தர்மந்தானோ?

நறுமணம் வீசும் வத்தி கொழுத்திய நல்லழகே!
நச்சாலே எனை நசித்தலும் நியாயந்தானோ?

கொல்லும் படை கொண்ட என் இனிய விருந்தே!
வெல்லும் வகையில் வீரியம் வளர்க்கமாட்டேனோ?

என் உயிரின் தாரமே! அரிய காரமே! அன்னமே!
கட்டிக்காவல் தாண்டி வந்து கடிக்காமல் விடுவேனோ?

kalnayak
20th February 2015, 03:54 PM
மேம்,
உங்களோட 'வார் அன்ட் பீஸ்' ஸ்டோரி ரொம்ப நல்லாவே இருக்கு. சத்தியமா இப்பத்தான் படிச்சேன். இப்பிடி அநியாயமா நெறய விஷயங்கள் ஒத்துப் போகுதுன்னு பார்த்து அதிர்ச்சியாயிட்டேன். உங்க கதையை முன்னாடியே படிச்சிருந்தா இப்பிடி ஒரு கவிதை எழுதியிருக்க மாட்டேன். இந்த போட்டி உலகத்தில நாம யோசனை பண்ற விஷயத்தை நமக்கு முன்னாடி யாராவது யோசனை பண்ணியிருப்பாங்கன்னு சொல்றது எவ்வளவு உண்மைன்னு இப்போ தெளிவா தெரியுது. நீங்க சொல்லாத சில விஷயங்கள் நான் சொல்லியிருக்கறத்தை பாத்து இது நானா யோசனை பண்ணி எழுதுனதுன்னு ஒத்துகிடுங்க. நன்றி.

இங்க நீங்க எழுதியிருக்கிற இரண்டு கவிதைகளும் நல்லா இருக்கு. பாராட்டுக்கள். இங்கேயும் நீங்க உங்க கவிதைகளை தொடரணும்.

pavalamani pragasam
20th February 2015, 06:59 PM
ஆசைதான்!முகநூல் வருமுன் இந்த மையத்தில் பல திரிகளில் பல மணி நேரம் செலவழித்தேன். இப்பொழுது ரொம்ப சுருக்கிவிட்டேன். இரண்டாம் குழந்தை பருவத்தில் வித விதமான விளையாட்டுகளில் பொழுதை கழிக்கவே மனம் விரும்புகிறது!

chinnakkannan
23rd February 2015, 06:47 PM
முக நூலில் நண்பர் ‘மெல்லிய நல்லாள்தோள் சேர்’க்கு வெண்பா கேட்டார்..எழுதிட்டோம்ல..


வாலைப் பருவந்தான் வந்துபோச்சு என்றாகி
காளை வயததுவுங் கண்டாயே - நாளைக்கு
துள்ளும் இளமையது செல்லுமுன் சீக்கிரமாய்
மெல்லிய நல்லாள்தோள் சேர்

**

எத்தனை கிண்ணம் இருந்தால்தான் தானென்ன
அத்தனை ஒன்றே அறிவாயே - பித்தனே
எள்ளி நகையாடும் எல்லோரும் சொல்வதெது
மெல்லிய நல்லாள்தோள் சேர்

**
எங்கே நீங்கள் ட்ரை பண்ணுங்க..

kalnayak
24th February 2015, 10:32 AM
சி.க.
வெண்பான்னா என்னங்க? ஏதோ எனக்கு தெரிஞ்சத வச்சு கவிதை எழுதி ஓட்டிகிட்டு இருக்கேன். இப்பிடி பரிட்சை வைப்பீங்கன்னு தெரிஞ்சிருந்தா கவிதைன்னு எழுதி இருப்பேனா?

இருந்தாலும் உங்க வெண்பா கவிதையில அசத்திட்டேள் போங்கோ!!!

kirukan
24th February 2015, 01:31 PM
வெறும்பா

இரு காது இருக்காது இருக்கும்
இருப்பு அமைதியின் பிறப்பு.

-
கிறுக்கன்

chinnakkannan
26th February 2015, 10:13 AM
அமிழ்கின்ற எண்ணமதை ஆழ்ந்தே அணைத்து
தமிழ்ப்பாலில் தோய்த்துதான் தந்தே - நிமிடத்தில்
துல்லிய மாய்ப்பாக்கள் தூய்மையுடன் நெய்வதற்கு
மெல்லிய நல்லாள்தோள் சேர்

chinnakkannan
5th March 2015, 11:47 AM
வழுக்கை எனச்சொன்னால் வாகாய்ச் சிரித்து
நழுவாமல் வெட்டுவார் நன்றாய் - குளுமை
கலகலத்து உட்கார்ந்து கண்சிமிட்டி நிற்கும்
சலாலா செவ்விளநீர் தான்

இங்க சலாலா என்ற இடத்தில் மட்டும் தென்னை மரங்கள் முளைத்துக் குலுங்கும்.. அங்கிட்டிருந்து
தான் ஓமான் முழுக்க இள நீர் சப்ளையே..!

kalnayak
5th March 2015, 03:58 PM
நேரசை சொல்லவே தேடினேன் வார்த்தை
நேர் மற்றும் தனியெழுத்தும் நேரசை
குறிளுடன் ஒற்றும், நெடில், நெடிலுடன் ஒற்றும்
குந்தியிருந்தால் மட்டுமல்ல எவ்வொற்றையும்
முன்பிருக்கும் நேரசையுடன் சேர்ப்பின்அஃது
ஓற்றோடு ஒற்றும் சேர்ந்தும் நேரசையாகும்

chinnakkannan
5th March 2015, 05:03 PM
நாமென்றால் நானென்றாய் நங்கை உந்தன்
.. நாயகந்தான் என்றுசொல மறுத்தே நீயும்
போமென்றாய் எங்கென்றால் விழித்துப் பார்த்து
..பொழுதிலையோ உமக்கென்றாய் மேலும் நானும்
பூமென்மை புலர்காலை போல இங்கே
...புள்ளினமாய்க் கற்பனைகள் கலந்து கட்டி
பூமியிலே உன்னோடு வாழப் பாடல்
..புனைந்தாலோ சிரிக்கின்றாய் ஏனோ மானே..

kalnayak
6th March 2015, 12:28 PM
நிரையசை எனப்படுவது யாதெனின்
குறிலோடு குறில், நெடில் மற்றும்
ஓற்று சேர்ந்து உருவாவதே. இத்துடன்
ஒற்றுக்கள் எத்தனை சேர்ப்பினும்
நிரையசை மாறாதென்பதும் விதியே.

kalnayak
6th March 2015, 12:38 PM
ஓரசை சீர் நேர் நிரை எனப் பிரிந்ததால்
ஈரசை சீர் நேர்நேர், நேர்நிரை, நிரைநேர்
நிரைநிரை என நான்காய் பிரியும்.
நேர்நேர் தேமாவாக, நேர்நிரை கூவிளமாக
நிரைநேர் புளிமாவாக, நிரைநிரை கருவிளமாகும்

chinnakkannan
8th March 2015, 10:49 PM
ஓர் இள அன்னை சோஃபாவில் சாய்ந்தவண்ணம் கண்ணயர்ந்திருக்கிறாள்..;அவளை இறுக அணைத்தபடி மார்பில் தலைசாய்த்துத் தூங்குகிறது குழந்தை.. இப்படி ஒரு புகைப்படம் போனவருடமோ என்னவோ முக நூலில் நண்பர் ஒருவர் கொடுத்து அவரும் ஒரு வெண்பா இட்டிருந்தார்.. அந்த படத்திற்கு நான் எழுதிய வெண்பா ( என்னிடம் நான் பதிந்து வைத்துக் கொள்ளவில்லை) இன்று மறுபடி இன்னொரு நண்பர் லைக்கிட அது கிடைத்தது

வெல்லமென வந்தமகன் விந்தையென வஞ்சிமடிச்
செல்லமெனக் கண்ணுறங்க சிந்தைநிறை கொண்டவளும்
மெல்லமெல்ல மெய்மறந்து மேனிதனைச் சாய்த்தபடி
தள்ளுகிறாள் தூக்கத்தைத் தான்..

**

கொள்ளையிட வந்தமகன் கெஞ்சிநெஞ்சில் கண்ணயர
தொல்லைகளும் துன்பமதும் தள்ளிசெல மெய்மறந்து
அல்லியிதழ்க் கண்ணிமைகள் அஞ்சுகத்தின் கண்தழுவி
அள்ளுமனச் சித்திரம்தான் ஆம்

**

முற்றிலும் குறில்களால் ஆன கூவிளங்காய்ச் சீர்களில் நண்பர் எழுதியிருந்தார் (இறுதிச் சொல் மட்டும்காசு என்ற வாய்ப்பாட்டில் முடியும் வண்ணம்) எனக்கு அது வரலை..

kalnayak
9th March 2015, 02:01 PM
நேர்நேர்நேர் தேமாங்காய் நேர்நேர்நிரை தேமாங்கனி
நேர்நிரைநேர் கூவிளங்காய் நேர்நிரைநிரை கூவிளங்கனி
நிரைநேர்நேர் புளிமாங்காய் நிரைநேர்நிரை புளிமாங்கனி
நிரைநிரைநேர் கருவிளங்காய் நிரைநிரைநிரை கருவிளங்கனி
என மூச்சீர் வகைகள் அசையால் எண்ணாக பிரியும்.

kalnayak
9th March 2015, 02:12 PM
தளை எனப்படுவது யாதெனின் முதல் சீரின் கடை அசையும்
அடுத்த சீரின் முதல் அசையும் இணைவதாகும்
நேர்ஒன்றிய ஆசிரியத் தளையில் முதல் சீர் கடை மாவுடன்
அடுத்த சீர் முதல் அசை நேர் என நேருக்கு நேர் அமைவது
அவ்வாறே நிறையொன்றிய ஆசிரியத் தளையில்
விளமுடன் நிரையும் வளமாய் அமைவதே.

kalnayak
11th March 2015, 12:33 PM
எதுகை மோனை இயைபு முரண்
மற்றும் அளபெடையென தொடை ஐந்தாம்.
இரண்டாம் எழுத்து ஒத்து வந்தால் எதுகை
முதலிலேயே ஒத்துவந்தால் மோனை
முதல், மூன்றாம் ஐந்தாம் சீர்கள் மோனை கொள்ளும்
அடிகளின் முதல் சீர் எதுகை கொள்ளும்

chinnakkannan
14th March 2015, 02:24 AM
கல் நாயக் சார்.. நலமா

மதுர கானங்கள் திரியில் எனை - நீங்க்ளெல்லாம் ஜல்லி அடிக்கிறீர்கள் என்றால் உங்களை என்னவென்று கூற என எழுதியிருந்தீர்கள்..அதற்கு நான் தன்னடக்கத்திற்காக எழுதியிருந்தேன் எனச் சொல்லியிருந்தேன் உங்களிடம்..ஆனால் அது..


பொய்...

எனது குரு நாதர்களில் ஒருவரான ஹரிகிருஷ்ணன் என் தமிழைச் செதுக்கியவர்களில் ஒருவர் (என்ன செய்ய..சின்னக்கண்ணன் அவ்வளவு மக்கு..ஒரு வாத்தியார்களில்லை..பலர் இருந்தார்கள் எனைச் செதுக்குவத்ற்கு..) (திருந்தவில்லை என்ப்துவேறு விஷயம்..

எனது குரு நாத்ர் ஹரிகிருஷ்ணன் எழுதிய கவிதை - என் நெஞ்சத்தில்..என் நினைவோட்டத்தில் என்றும் பதிந்து இருக்கும் கவிதை ( வகை சிந்துப்பா- படித்தவுடன் உமக்கும் தோன்றும் அந்த வகையில் எழுத) இங்கு தருகின்றேன்

**

முகப்பு » கவிதை
ஒரு சொல் தொலைவு

- ஹரி கிருஷ்ணன்

ஒரு இருபதாண்டுகளுக்கு முன்னர் சென்னை பெசன்ட்நகர் ரத்தினகிரீஸ்வரர் ஆலயத்தில் ஆதிசங்கரரின் அன்னையைப் பற்றிப் பாட அழைத்திருந்தார்கள். மகாபெரியவரின் ஆசியுடன் நடந்த கவியரங்கம் அது. துறவி என்பவன் அன்னையின் சம்மதத்தோடுதான் துறவேற்க முடியும் என்பது நமக்குத் தெரிந்த ஒன்று. ஒரு பக்கம் பந்தங்களை இறுத்துக் கொணடு விடுபட்டுப் போகும் உறுதியான நிலையில் ஒரு
சிறுவன்; மறுபக்கம், வாழ்க்கையில் இழக்க இனி ஏதும் இல்லை என்று நினைத்திருந்தவளுக்கு, ‘தன் வாழ்க்கைக்கு ஒரேஒரு பிடிப்பாக மிகுந்திருக்கும் இந்தப் பிள்ளையையும் இழந்தே ஆகவேண்டும்’ என்ற கட்டாயச் சூழல். அந்த அன்னையின் மனநிலையைப் படம் பிடித்திருக்கிறேன்.

ஒரு சொல் தொலைவு


அம்மா எனக்குப் பொழுதில்லை – காலை
அழுந்தப் பிடித்த தொருமுதலை
இம்மா நிலத்தில் நிலைப்பதற்கும் – கண்
இமைப்பொ ழுதிலுயிர் துறப்பதற்கும்

உன்வா யுதிர்க்கும் ஒற்றைச்சொல் – ஆம்
ஒருசொல் தொலைவே மிகுந்துளது – சொல்
உன்மக னுலகைத் துறப்பதுவா – அன்றி
உலகினி லுயிரைத் துறப்பதுவா?

ஒருகணப் போதே அவகாசம் – உன்
உதடுகள் தருமொலி கதைபேசும் – இனி
மறுமுறை நினைக்கப் பொழுதில்லை – உன்
மகனுயிர் தனக்குன் சொல்எல்லை.

சின்னச் சங்கரன் நதியினிலே – காலைத்
திருகிப் பிடித்த பிடியினிலே – ஒரு
கன்னங் கறுத்த பெருமுதலை – அது
கவ்விட நடுங்கிச் சிதறுதலை.

அன்னை யொருத்தி நதிக்கரையில் – பதறி
அகலப் பிரிந்த கைகளுடன் – அவள்
தன்னிலை பார்ப்ப தொருநொடியே – இளந்
தனயனைப் பார்ப்ப தொருநொடியே.

மரணம் ஜனனம் எனச்சுழலும் – புலை
வாழ்க்கைச் சகடம் எற்றிவிட – இது
தருணம் என்று சிரித்தபடி – அவன்
சாற்றுதல் கேட்ப தொருநொடியே.

எப்படிச் சொல்வாள் துறவேற்க – இலை
எப்படிப் பொறுப்பாள் உயிர்துறக்க?
எப்படிச் சொல்லினும் இலையெனினும் – இந்த
ஈட்டி முனையவள் நெஞ்சுக்கே.

நான்கு வயதுப் பிள்ளையினை – தந்தை
நலிவுற விட்டுவான் ஏகியதும்
ஏங்கித் துயர்கொண் டுழலாது – கல்வி
ஏற்கத் தான்வழி புரிந்ததுவும்

வேத வித்தாய் மகன்வளர – மனம்
விம்மிப் பெருமித முற்றதுவும் – அலை
மோதும் திரளாய் மனக்குகையில் – பிள்ளை
முதலையின் வாய்ப்பிடி படும்வரையில்.

ஒற்றைச் சொல்லா அவகாசம் – சொல்
உதிர்த்த வுடனே இறும்பாசம் – உளம்
முற்றிலும் ஓலம் மோதிவர – உயிர்
மூச்சே பாரம் ஆகிவிட

அன்னை சொன்னாள் அந்தச்சொல் – உயிர்
அறுந்து வேரறச் சாய்க்கும்சொல் – வரும்
பின்னைப் பிறப்பினை மாற்றும்சொல் – ஒளிப்
பிள்ளையை ஞானியாய் நிறுத்தும்சொல்.

ஷண்மத ஸ்தாபனம் அந்தச்சொல் – உயர்
சதுர்மறைக் காப்பே அந்தச்சொல் – சுடர்
உண்மையின் ஒளியினைத் துலக்கும்சொல் – பரம்
ஒன்றே ‘நீ’யென விளக்கும்சொல்.

துறவறம் கொள்ளென வாய்திறந்து – மனத்
துயரம் மீதுறத் தெறித்திடும்சொல்.
ஒருதளிர் சுமந்த பட்டமரம் – மதம்
உயிர்தழைத் திடவெனத் தந்தவரம்.

அன்பினால் துறந்தேன் சங்கரனே – உற
வனைத்தையும் துறப்பாய் என்மகனே – இனி
உன்கைப் பிடிநெருப் பொன்றைத்தான் – தாய்
உடலுனை வரமாய்க் கேட்டிருக்கும்.

சின்னச் சங்கரன் நடக்கின்றான் – மனம்
தின்னத் தவிக்கச் செல்கின்றான்.
அன்னை இன்னும் நதிக்கரையில் – அவள்
ஆவி பிரிந்திடும் நாள்வரையில்

**

எப்படி இந்தப் பாட்டின் அனுபவம்..

முரளிதரன்..சுலபம்தான் நீங்களும் எழுத முயற்சி பண்ணுங்கள்..

kalnayak
19th March 2015, 04:46 PM
சி.க.,

இந்த கவிதையை படித்த பின்பு எனக்கு ஒன்று தான் தோன்றியது. நானும் கவிதை எழுதுகிறேன் என்று உளறிக் கொட்டத்த்தான் வேண்டுமா என்று. உங்கள் நெஞ்சத்தில், நினைவோட்டத்தில் என்றும் பதிந்து இருக்கும் கவிதை என்றும் சொல்லியிருக்கிறீர்கள். அதற்கான முழு தகுதியும் இந்த கவிதைக்கு இருக்கிறது. சொல்லவந்த பொருள் நெஞ்சை தொடுகிறது என்றால் சொல்ல பயன்படுத்திய வார்த்தைகள், என்னவென்று சொல்ல. இன்னும் நான் நிறைய தமிழ் படிக்க வேண்டும் - இந்த கவிதையை இன்னும் பலமுறை படித்தால் தான் எனக்கு முழுவதுமாக புரியும். சிந்துப்பா வகை *என்றும் சொல்லிவிட்டீர்கள். நான் இலக்கணம் கற்கும் ஆமை வேகத்தில், எப்போதுதான் இந்த சிந்துப்பாவை கற்பேனோ? நானும் முரளிதரன் உடன் சேர்ந்து சித்தப்பா என்று சொல்லும்படி ஆகிடுமோ என்று அஞ்சுகிறேன். அவராவது ஒன்றும் தெரியவில்லை என்று பிரமாதமாக கவிதை எழுதுகிறார். நான்?

நெஞ்சைத் தொடும் கவிதை தந்தீர். நன்றி.

kalnayak
24th March 2015, 12:14 PM
சி.க.,

ஓற்றெழுத்துக்கள் இல்லாமல் ஒரு கவிதை தருவீரா?

chinnakkannan
24th March 2015, 12:41 PM
புரியலை கல் நாயக்.. ஒற்றெழுத்து..?

kalnayak
24th March 2015, 01:04 PM
மன்னிக்கவும். அது ஒற்றெழுத்துத்தான் - ஒரு எழுத்து அல்ல. க், ங், ச், ஞ், ... போன்றவை இல்லாமல். அப்படி ஒரு குறள் இருக்கிறதா என்ன?*

chinnakkannan
24th March 2015, 01:13 PM
இல்லை கல் நாயக்..

ஆனால் தேடிய போது கிடைத்தது.. முதலெழுத்துக்கள் எல்லாம் சேர்த்து கவிதையின் அடக்கப்பொருள் வரவேண்டும்.(தலைப்பில்)

தலைப்பு நமசிவாய

நன்னெறிக் காட்டி நலம்பெற அருளி
மனத்துளே மன்றத்தில் மணியொளிக் கூட்டி
சித்தத்தில் சித்தாந்தச் சிவநாத மெழுப்பி
வாயறியா பேரின்ப வாரியிலே ஆழ்த்தி
யமபுரத்திற் கேகாமல் இக்கணந்தான் காத்திடுமே!

kalnayak
28th March 2015, 09:35 AM
முயற்சித்தேன் ஒற்றில்லா கவிதை வரைய. கிடைத்தது இதுவே.
------------------------------------------------------------------------------------------

பகலிலே ஓயாது உழை
இரவிலே விடாத மழை
கனவிலே வருவாளே தேவதை
மனதிலே தேடிவை கவிதை
நினைவிலே எழுமா நாளை
விடாதே உனது கதை
மீறாதே ஒருவரை முறை
வதையாதே இதுமேலே எனை
ஓடவே நானே விடு ஆளை.

kalnayak
28th March 2015, 09:56 AM
திருமாலனே, ஏழுமலையனே
நமோ நாராயண நாமமததை
கூறவே சீனிவாசனே பெருமாளே
எழுவாயே எனதகமே அருளிடவே

chinnakkannan
29th March 2015, 06:30 PM
நல்ல முயற்சி கல் நாயக்.. குட்..


ஒற்றுவிட்டார் கல்நாயக் ஓரிடத்தில் நின்றிங்கு
பற்றினார் விஷ்ணுவைப் பார்..

kalnayak
30th March 2015, 12:39 PM
நல்ல முயற்சி கல் நாயக்.. குட்..


ஒற்றுவிட்டார் கல்நாயக் ஓரிடத்தில் நின்றிங்கு
பற்றினார் விஷ்ணுவைப் பார்..

திருத்தினேன் நாராயணக் கவிதையை, ஒற்றில்லாமல்.

chinnakkannan
30th March 2015, 01:23 PM
ஓ.. குற்றமாச் சொல்லலை க் கல் நாயக்.. ஜஸ்ட் ஒரு குறள் போட்டேன் அம்புட்டு தான்.. :)

kalnayak
30th March 2015, 01:37 PM
குற்றமாய் நானும் எடுக்கலை சி.க. திருத்தமாய் எடுத்துக் கொண்டேன். மறந்துபோய் அங்கே பரந்தாமனாய் அழைத்தேன். பின்பே பெருமாளை கொண்டுவந்தேன்.

ஆனால் குறளை கவனியாமல் இருந்தது தவறுதான். குறள் நன்றாகவே இருந்தது.

kalnayak
31st March 2015, 12:39 PM
இரு வரிக் கவிதை

தள்ளாத வயதில் தள்ளாடாத வாழ்க்கைக்கு
தள்ளிக்கொண்டு போகிறான் வண்டியை கிழவன்!!!

chinnakkannan
1st April 2015, 10:29 AM
தள்ளாடி அவள் நடக்க
வயிற்றுச் சுமையிலோ
துள்ளாட்டம்!

chinnakkannan
1st April 2015, 10:30 AM
குறிஞ்சி, பட்ட்டூ, செல்லம் என
என் செல்லப் பெயர்கள்
அவர் பழைய டைரியில்..!

chinnakkannan
1st April 2015, 11:04 AM
அம்மாவின் பழைய கடிதத்தில்
வேப்பம் பூ பச்சடி ரெஸிப்பி
இனித்தது..

chinnakkannan
1st April 2015, 11:05 AM
பச்சைப் பசேல் வயல்வெளிகளினிடை
சிக்னல் கிடைக்கலையாம்
வாடியது அவள்முகம்..

chinnakkannan
1st April 2015, 11:05 AM
அவளது அழகு மிக எளிமை
கழுத்தில் ஒரே ஒரு
எட்டு காரட் வைர ஆரம்..

chinnakkannan
1st April 2015, 11:06 AM
எதிர்பாராத மின்வெட்டு
எதிர்பாராத உன் விரல்களின் சீண்டல்
மனதுள் உணர்வுகளின் வெளிச்சம்..

chinnakkannan
1st April 2015, 11:07 AM
புதுக்குடித்தனம் வந்த
பழைய சி.டி ப்ளேயரை
இன்முகத்துடன் வரவேற்றது வி.ஸி.ஆர்

kalnayak
1st April 2015, 02:18 PM
புது செல்பேசியை வாங்கிய என்னைவிட
என் மகனுக்கே மகிழ்ச்சி அதிகம்
வீடீயோ விளையாட்டு நிறையவாம்.

chinnakkannan
4th April 2015, 10:04 AM
ஆய்வோம் வாங்கடா

துவாதசிபாராயணத்திற்காக
ஞாயிற்றுக் கிழமை சந்தையில்
பேரம் பேசி
வாங்கிய அகத்திக் கீரைக் கட்டுக்களைப்
பிரித்த வண்ணம்
கூப்பிடுவாள் அம்மா

நான் அண்ணா தங்கை
சுற்றி அமர்ந்து
அண்ணா அவன் விளையாட்டுபர்றி
தங்கை அவள் வகுப்பில் நடந்ததுபற்றி
நான் படித்த அணிலில் வந்த கதை பற்றிப்
பேசப் பேச
வெற்று இலைகள்
விரித்திருக்கும் பேப்பரில் மலரும்..

பின்
வெற்றுக்காம்புகளை வாசலில் போடலாம்
எனச் செல்லும் போது
அம்மா நிறுத்துவாள்
இந்தா மாட்டுக்குத் தானே கொடுக்கப்போற
என
உள்ளிருந்து இன்னுமிரண்டு கட்டு
எடுத்துக் கொடுப்பாள்..
இதையும் கொடு..

எடுத்து தெருமுனையில்
இருக்கும் மாடடிடம் நான் கொடுக்க
கன்றிடம் தங்கை கொடுப்பாள்
மாடு என்றால் பயம்
கன்று முட்டாது..
அழகாய் மாடும்கன்றும்
அசைபோடுவதைப் பார்ப்பதும் ஒரு அழகு..

இப்போதும்
துவாதசி க்கள் வந்து போகின்றன
அதைப்பர்றிக் கவலையும் பட்டதில்லை..
நான் வேலைசெய்யுமிடத்தில்
என்றும் அகத்திக்கீரை கிடைத்ததில்லை..
மாடுகளும்..

முடிந்ததெல்லாம் நினைவை
அசைபோடுவது தான்

chinnakkannan
6th April 2015, 02:14 PM
அமைரா என்ற புது ஹீரோயினுக்கு முக நூலில் நண்பர் ஒருவர் எழுதியிருந்தார்..அதைத் தொடர்ந்து நான் எழுதிப்பார்த்த வெண்பாக்கள்!

தூண்டும் சிரிப்பழகில் துல்லியமாய் வேடங்கள்
மூன்றாய் இருந்தும் முயன்றிருந்தார் – மீண்டும்
திரும்பியே பார்க்கவைக்கும் சீரான தோற்றம்
கரும்பாய் இனித்திடும் கண்..!

அழகாய் அமைராக்கு ஆனந்தப் பண்ணாய்
நயமாகப் பாடல் நவின்றீர் – நிலவுபோல்
தேயாமல் நன்றாய் திரையிலே மின்னுதற்கு
மேவியே வாழ்த்துவோ மே..

chinnakkannan
8th April 2015, 03:46 PM
திட்டமும் இலக்கும் கொண்டே
..தீர்க்கமாய்த் தேடி னேன்நான்
இட்டமாய்க் கொண்ட ஆசை
..எழுச்சிகொள் பயணம் என்றே
சட்டமாய் நெஞ்சில் வைத்தே
...தக்கன செய்யச் செய்ய
வித்தைகள் வெற்றி எல்லாம்
..விரும்பியே தொடர்ந்த தங்கே..

chinnakkannan
13th April 2015, 02:56 PM
ஃபேஸ் புக்ல லிமரிக் பற்றிப் பேச்சு வந்தது..கிட்டத்தட்ட மரபுக் கவிதை தான்

வாய்ப்பாடு

காய் காய் மா
காய் காய் மா
காய் காய்
காய் காய்
காய் காய் மா

ஸிம்ப்பிள் தான் 1,2,5 அடிகள்ல மட்டும் இயைபு வரணும்..இயைபுன்னா பாட்டி ஏட்டி போட்டி; வந்தேன் தந்தேன் நொந்தேன் இந்தமாதிரி..

மதியுங்கள் நு பாட்டுக்குப் பாட்டு த்ரெட்ல எழுதியிருந்தேன்..இன்றைய முக நூல் முயற்சி..

*

மதியென்றால் மலையாளப் போதும்
மதியென்றால் தமிழ்நிலவாய் மாறும்
பாடுபவன் கறபனையில்
பாய்ந்துவரும் சொல்லசைவில்
விதிவைத்த செயலாக ஆகும்..

*

மதியென்றாய் மகிழ்ந்ததுவும் நானா
மதியென்றேன் கேட்கலையே வீணா
மலையாளச் சொல்லசைவில்
மனதுள்ளே நாணமிட
சதிபோலே முத்தமிடல் வேணா(ம்)

*

இதுல முக்கியமான விதி என்னன்னாகொஞ்சம் ஹ்யூமர் இருந்தால் இன்னும் நன்னா இருக்கும்

எங்கே கல் நாயக் முரளீ ட்ரை பண்ணுங்க..

chinnakkannan
14th April 2015, 02:26 PM
Face bookla kidaitha ponmozhi:

Open your "Eye" and close your "I"

இதற்கு வெண்பா எழுதிப் பார்த்தேன்..

நானை மறைத்தங்கு நல்லவிழி தான் திறந்தால்
வீணையொலி மீட்டும் உளம்

நானொத்த எண்ணங்கள் நன்றாகத் தான்மறந்தே
மீனொத்த கண்கள் திறந்துவிடு - தேனொத்தே
வாழ்விலே உந்தன் வளம்பெருகி தோற்றமதும்
ஆழ்ந்தே அழகாகும் ஆம்

kalnayak
24th April 2015, 01:43 PM
காதலோடு கண்ணை நோக்கி கவர்ந்தனள் காரிகை
தூய நெஞ்சிவன் கவிதை வரைய தூக்கினான் தூரிகை
வெற்றி கிட்டி அவளை சேரின் முழக்குவான் பேரிகை

kirukan
26th April 2015, 02:12 PM
ச், ப், த் வர வேண்டிய இடத்தில் அதை உபயோகித்து எழுதினால் இன்னும் நன்றாக இருக்கும்.எங்கு எப்படி உபயோக படுத்த வேண்டும் என்பது எனக்கும் சரியாக தெரியாது.சி.க மற்றும் பிபி அவர்கள் உதவ முடியும் என நம்புகிறேன்.



Note: ithu kurai kooral alla meruketral
-
கிறுக்கன்

kirukan
26th April 2015, 02:19 PM
Face bookla kidaitha ponmozhi:

Open your "Eye" and close your "I"

இதற்கு வெண்பா எழுதிப் பார்த்தேன்..

நானை மறைத்தங்கு நல்லவிழி தான் திறந்தால்
வீணையொலி மீட்டும் உளம்

நானொத்த எண்ணங்கள் நன்றாகத் தான்மறந்தே
மீனொத்த கண்கள் திறந்துவிடு - தேனொத்தே
வாழ்விலே உந்தன் வளம்பெருகி தோற்றமதும்
ஆழ்ந்தே அழகாகும் ஆம்

கிறுக்கனின் மொழியில்

உன்னை துறந்து உள்ளம் திறந்தால்
உலகம் உன் வசம்.
-
கிறுக்கன்

chinnakkannan
26th April 2015, 02:21 PM
உன்னைத் துறந்து.. என்று வரும் கி.. அவர்களே :)

kirukan
26th April 2015, 02:30 PM
உன்னைத் துறந்து.. என்று வரும் கி.. அவர்களே :)

athil santhegam vanthu than googlai nadinen varthaiyai parthen porulai parkka villai.Nandri si.ka avargale... matri vitten

yosithal athuvum sariyagathan irukirathu...unnai kinaru pol thondi ullam thiranthaal....
-
கிறுக்கன்

-

pavalamani pragasam
27th April 2015, 08:52 AM
நான் இதில் ரொம்ப வீக்!!!

kalnayak
9th May 2015, 06:57 PM
மறந்தே போகினேன் கவிதை எழுத
திறந்தே கிடக்கிற திரியாய் இதுவும்
இறந்தே போகும் இப்படியே விட்டால்
பிறந்தே வந்ததே கவிதையும் இதுகண்டு

எதையே எழுதுவேன் கவிதையாய் இங்கு
இதையே எழுதலாம் பார்த்து விட்டு
கதையை அள்ளினால் கலாய்ப்பார் இங்கே
வதைக்காதே எமையெவென்று வைவார் உளர்

kalnayak
5th June 2015, 02:36 PM
கவிதையொன்றை எடுத்து விடு
கருவேயில்லைஎன்ற கவலை எடு
அவியலாயும் இருக்கலாம் நினைத்து இடு
உருவேயில்லாமல் கிடைக்கவே இரவு படு
தவிப்பேயில்லாமல் வார்த்தை குடு
குருடனும் கேட்டால் இடுவான் மடு
குவித்ததைஎல்லாம் மறக்காமல் சுடு
அருமையாய் இல்லை என்போரை தடு.

chinnakkannan
5th June 2015, 03:20 PM
சரி சரி அழாதீங்க..


கல்லென்றேன் இல்லை கலையென்றாய் காலத்தில்
...நில்லாது நிற்கும் எனச்சொல்லி என்னையே
செல்லென்றாய் சீரைச் தெரியாத செல்வனென்றாய்
..சேல்விழிகள் சிவக்க ஏதேதோ பேசிநின்றாய்
மெல்லநானும் மேவி அணைக்கவும் மிரள்விழிகள்
..மேன்மேலும் அனலைக் கக்கிவிடப் பார்க்கின்றாய்
கல்லென்றேன் உண்மை கற்றுவிடு சிற்பத்தை
..கண்களிலே வடிக்கும் கலையாலே எனச்சொன்னேன்..

*

ஒங்களை மாதிரி நானும் எழுதிட்டேன் :)


*

chinnakkannan
5th June 2015, 11:38 PM
ஓமானில் ஒரு கற்பனை ஓட்டல் கட்டிப் பார்த்தேன்!
*
ஓமானில் உள்ளவொரு ஓட்டல் – அங்கே
…ஓயாமல் கிடைத்திடுமே நல்லமிள கூட்டல்!
ராமா வெனச்சொல்லி பாட்டி – அதை
…டக்கெனவே செய்திடுவாள் பல்சுவைகள் கூட்டி

உளுந்திலே செய்திட்ட வடையாம் – அதில்
..உழுதபடி நின்றிருக்கும் சாம்பாரும் மடையாம்
கிளுகிளுப் பாககுலோப் ஜாமூன் – கண்கள்
சிமிட்டவே ஆசைகள் பொங்கிடும் ஆமென்!.

மல்லிகைப் பூச்சாயல் இட்லி – உடன்
..மங்கையின் இதழ்வண்ணக் காரத்தில் சட்னி
விள்ளவே கண்டிருப்பார் எல்லாம் – பின்னர்
…வேகமாய் உள்செல்ல போய்விடும் பட்(டி)னி..!

ஆசையாய் இளநங்கை போலே – நன்கு
..ஆர்ப்பாட்ட மில்லாத முறுவலில் தோசை
ஓசைகள் கேட்டிடும் பாரு – எண்ணெய்
..விட்டிட நாவிலே ஊறிடும் ஜோரு..

பாஷைகள் வேண்டாமே இதற்கு – அந்த
..பாதுஷா இனிப்பினில் சொர்க்கமே எதற்கு
காசுபணம் பார்த்திடவும் கண்டோம் – நல்ல
…கானத்தின் இனிமைபோல் சுவைகள்பல தின்றோம்.!

ஓமானில் நல்லவொரு ஓட்டல் – அதில்
..உண்டவர்கள் மனதிலே நல்லசீ ராட்டல்..
ஏமாற்றம் எக்காலம் வாரா- அதன்
..ஆறாத சுவைபோல எவ்விடமும் வாரா

**

chinnakkannan
5th June 2015, 11:42 PM
**
சிந்து வருவதற்கு – ஷண்முகா
..சிந்தை வரவில்லையே
விந்தைக் கற்பனைகள் – மனதில்
..வித்தை கூட்டுதய்யா

சொந்தக் காரியவள் – அழகை
…சொக்கி வார்ப்பதற்கு
பந்தக் காலிட்டுக் – கற்பனை
வாயிலில் தேக்கிவைத்தேன்

என்ன எழுதுவது – ஷண்முகா
…எனக்கே சொல்லிவிடு
வண்ண மயிலழகை – நானும்
வார்த்தையில் மெல்லுதற்கு

கன்னக் குழியிங்கே – கண்கள்
சிமிட்டிக் காட்டுதய்யா
எண்ணக் குரலினையே – ஓசை
இயல்பாய்க் கூட்டுதய்யா..

பண்ணாய் இசைத்திடவே – பல
பாடல் வகையுண்டே
வண்ணக் கவியழகாய் – சிந்து
திண்ணமாய் நிற்குதய்யா

கண்கள் திறந்துவிடில் – கற்பனை
கொட்டும் அருவியென
உண்மை சொல்லிவிடு – ஷண்முகா
உணர்ந்தே பாடல்நெய்வேன்..

chinnakkannan
5th June 2015, 11:43 PM
ஏழு மலைதனிலே – அவன்
நின்றிருப் பானருள் தந்துநிற்பான்
மேலும் வேண்டிநின்றால் – நம்
மேன்மைகள் துலங்கிட வழியும் செய்வான்

சூழும் துன்பங்களை – தூளாய்
தூற்றியே மாற்றியே காட்டிடுவான்
வீழும் வேதனைகள் – மாறி
விந்தையாய் இன்பமும் தந்திடுவான்

chinnakkannan
5th June 2015, 11:43 PM
போதுமா கல் நாயக் புதுசான கவிதைகள் :) சிந்துப் பாவியலில் ட்ரைப் பண்ணிப்பார்த்தேன் :)

chinnakkannan
6th June 2015, 02:38 PM
பதறிடப் பதறிட நிற்கும் – மனம்
பணிவினைக் கூட்டியே சொக்கும் –இது
அடியேன் அறியாத சந்தம்- இதில்
ஆழ்ந்தே – நெஞ்சும்
சூழ்ந்தே – கொஞ்சி
படித்தபின் மேலெழுதிப் பார்க்கும்

chinnakkannan
6th June 2015, 02:39 PM
மோகமாய் வந்தனள் ராதை – கண்ணன்
வேகமாய்ப் போகின்ற பாதை – பார்த்து
தேகத்தில் கொண்டாளே கோதை – கொஞ்சம்
வாதை பின்னர்
சூதை மேலும்
வெட்கியே அவன்பின்னே ஓடியது காதை

kirukan
8th June 2015, 11:22 AM
பெண்ணை பூவை என
புனைந்தது ஏனோ
புரிந்திட விழைந்ததில்
அறிந்திட்டேன் இவ்வொற்றுமை

சொந்தகாரன் மண்ணோடு
எடுத்து கொடுப்பது
நிச்சயித்த திருமணம்
புது மண்ணில் நட்டாலும்
பழய மண்ணின் வாசம்
சில/பல காலம் வீசும்
(வேரோடு வந்த மண்ணின் அளவை பொருத்து)

வேரோடு பிடுங்கி
செல்வது காதல் திருமணம்
வேரோடு மண் ஒட்டுவதும் உண்டு
மண் வேரை வெட்டுவதும் உண்டு
ஒட்டிய மண் மனப்பதும் இல்லை
வெட்டிய வேர் உயிர்ப்பதும் இல்லை

(இருதரப்புக்கும் பொது)

(தரம்)
தோட்டத்தில் செழித்த செடி
வீட்டினில் வாடியது ஏனோ
மண்ணின் மகத்துவம்
புரியாது மகசூல் செய்யலாமோ

(ஆதரவு/அரவணைப்பு)
தண்ணீரை ஊற்றுகிறேன் என்று
வெந்நீரை ஊற்றினால்
வாடித்தான் போகும்
தண்ணீரை தாராளமாய்
ஏராளமாய் ஊற்றினால்
அழுகிதான் போகும்

(கண்டிப்பு)
பூச்சியை கொல்லும்
பூச்சி கொல்லியின்
தெளிச்சல் தரம் தாண்டினால்
செடி மரமாகும் ஆனால்
மரம் விஷமாகும்

சத்தில்லா மண்ணால்
மரம் மலடகும்
மண் பற்றா வேரால்
மண் கரைந்து மறைந்திடும்

செழித்த மண்ணும்
அதில் திளைத்த வேரும்
அளவாய் தெளித்த நீரும்
என்றும் இன்பமாய் சுகித்திடும்.

(வெகு நாளாய் எழுத நினைத்தது ...சிறு கவிதையாய் எழுத காத்திருந்தேன் ஆனால் முடியவில்லை கட்டுரையாகி போனது...மன்னிக்கவும்)

-
கிறுக்கன்

kalnayak
8th June 2015, 11:51 AM
கிறுக்கண்ணா,

அருமை. அருமை. இப்படித்தான் எழுதணும் பெருசு பெருசா, அழகு அழகா. நல்ல விஷயத்தை தெளிவா சொல்லனும்னா எப்படி வேணுமென்றாலும் சொல்லலாம்.

kalnayak
8th June 2015, 11:54 AM
சி.க.,

நிறைய, நிறைய கவிதைகள் எழுதியதற்கு நன்றிகள். ஆனால் போதும் என்றுமட்டும் சொல்லிவிடுவேன் என்று எதிர்பார்க்காதீர்கள். ஷண்முகனையும், எழுமலையானையும் சிந்துப்பாவில் அழைத்தது அருமை. அருமை.

chinnakkannan
15th February 2016, 11:08 AM
வினோதினி..

**********************
(முன்பு மரத்தடி.காமில் எழுதியது..2004 இன்று அகப்பட்டது)
********

*********************
கமலா ராமச்சந்திரன்:
*********************

பிறந்த போது கண்கள் மட்டும்
உருட்டி உருட்டி விழித்துப் பார்க்க
உடலோ பூஞ்சை ஒருகை அகலம்
எடுத்துக் காட்டிய நர்ஸோ சொன்னாள்
கவலைப் படாதே கூடிய சீக்கிரம்
நல்ல உணவில் உடம்பு தேறும்

***

பார்த்துக் கொள்ள ஊரில் இருந்து
வந்த அம்மா அவளைப் பார்த்து
என்னடீ இப்படி தவளைக் குட்டியை
பெத்துப் போட்டு இருக்கே' சொல்லி
எடுத்துக் கொண்டே கொஞ்சினாள் நன்றாய்

***

வேலை பாதி நிறுத்தியே வந்த
ராமுவின் முகத்தில் திமிறும் சிரிப்பு
என்னோட ஏஞ்சல் எவ்ளோ அழகு
தாங்க்ஸ்டீ கமலா' கன்னந் தட்ட
வெளிறிய முகத்தில் வெளிறிச் சிரித்து
'என்ன கொஞ்சம் கருப்புதான் இல்ல'
'வாயை மூடு நீமட்டும் அழகோ..
குழந்தை எப்படி முழிக்குது பாரு'
சீறிய வாறே அடக்கினர் என்னை..
என்ன நினைத்ததோ ஏது நினைத்ததோ
கண்கள் மூடி சிரித்தது அதுவும்

***

திருமண மாகிப் பத்து வருடம்
தவமாய்க் கிடந்து கோவில் டாக்டர்
சாமியார் ஜோஸ்யம் விரதம் எதையும்
விட்டு வைக்காமல் இருந்ததில் வந்த
அத்திப் பூவிற்கு அழகுக் குட்டிக்கு
என்ன பேரை வைக்கலாம் என்று
பலப்பல யோசனை செய்த பின்னால்
அவரும் சொன்னார் வினோதினி என்று
எனக்கும் பெயரது பிடித்து விட்டது..

***

குட்டி ராட்சசி அப்பா செல்லம்
கொஞ்சம் கூட மதிக்கலை என்னை
வளர வளர பிடிவாதம் கோபம்
மிஞ்சினால் அழுகை கண்மட்டும் சிரிக்கும்
வாயும் நீளம் நாக்கும் நீளம்
காரம் வேண்டும் உப்பும் வேண்டும்
இனிப்பா வேண்டாம் என்ன அம்மாநீ
எனக்குப் பிடிச்சதைப் பண்ணித் தாயேன்..

***

இன்றும் கூட எங்களுக் குள்ளே
குடுமிப் பிடியாய் அடிதடி சண்டை
அழகாய்ப் பாலை ஊற்றிப் பிசைந்து
ஒருதுளி மோரை விட்டுப் பின்னர்
நல்ல மாவடு இரண்டை வைத்தால்
சாதமா வேண்டாம் போர்ம்மா நீதான்

***

இருப்பது என்னவோ கால்ஜாண் வயிறு
இதிலே பாதியும் வைத்து விடுவாய்
சும்மா சும்மா தோசை வருமா
இன்னிக்கு மட்டும் சாப்பிடு கண்ணே
கொஞ்சி குழைந்து பாக்ஸில் வைத்து
புத்தகம் எல்லாம் பையில் வைத்து
டாட்டா பைபை செல்லக் குட்டி
என்றே சொல்ல குட்டியும் திரும்பி
அதிசய மாக கன்னத்தில் ஒன்று
கொடுத்து விட்டு ஓடி விட்டாள்..
மிச்சம் மட்டும் கொண்டு வந்தால்
மாலை அவளுக்கு அடிதான் தருவேன்..

***************
ராமச் சந்திரன்
***************

பக்கத்தில் உள்ள மில்லில் எனக்கு
இயந்திரம் இயக்கும் அறுவை வேலை
ஏதோ வாழ்க்கை ஓடுது தன்னால்
என்று இருந்த வாழ்வில் அழகாய்
வசந்தம் போலே வானவில் போலே
பளிச்சென மின்னும் நட்சத் திரமாய்
வினோதினி பிறந்தாள் வண்ணக் கலவையாய்

***

சின்னக் குட்டி செல்லக் குட்டி
என்னை மாற்றிய வெல்லக் கட்டி
ஒருகணம் கன்னத்தில் அழுத்தமாய் முத்தம்
கொடுத்துக் கொஞ்சுவாள் பின்னர் நன்றாய்க்
கிள்ளியும் விட்டு சாரிப்பா என்பாள்..
போடி போடி கறுப்பி என்று
சமயத்தில் இவளும் சீண்டி விட்டால்
நீதான் கறுப்பு பாட்டி கறுப்பு
அப்பா நானா அட்டைக் கறுப்பு
என்றே கேட்டால் இல்லை கண்ணே
நீகொஞ்சம் சிவப்பில் சற்றே கம்மி
போப்பா என்றே கோபம் கொண்டு
பெரிய மனுஷியாய் முகத்தைத் தூக்கிப்
பேச மாட்டாள் பின்னர் அவளைத்
தூக்கிக் கொஞ்சி பலப்பல விதமாய்
சமாதான வார்த்தை சொல்ல வேண்டும்..

***

அன்றொரு நாளில் எனக்கோ தலைவலி
வேலை சீக்கிரம் முடித்து வந்தால்
இவளைக் காணோம் வினுமட்டும் வீட்டில்
அப்பா அப்பா என்னப்பா ஆச்சு
முகமே னப்பா வாடி இருக்கு
அம்மா எங்கே செல்லக் குட்டி
பக்கத்து வீட்டு மாமி கூட
எங்கோ போனாள் அப்பா உனக்கு
தலைவலி யாப்பா இந்தா தைலம்
தலையைக் கொஞ்சம் பிடிச்சு விடட்டுமா
படபட வார்த்தைகள் துள்ளி வந்திட
முகமோ உம்மென மாறி நின்றிட
எனது தலைவலி போயே போச்சு..

***

நேற்றுக் கூட ஆசைப் பட்டு
பென்சில் பாக்ஸ்தான் வேண்டும் என்றாள்
அழகாய் யானை வரைந்த பெட்டி
வாங்கிக் கொடுத்து அவளிடம் மெல்ல
பத்திர மாக வச்சிரு செல்லம்
எப்படி யும்இதை தொலைக்கக் கூடாது
என்றே சும்மா சொல்லி வைத்தேன்
குட்டியும் தீவிர முகத்துடன் என்னிடம்
சரியெனச் சொல்லி முத்தமும் கொடுத்தாள்..


(..தொடரும்..)

chinnakkannan
15th February 2016, 11:10 AM
வினோதினி...தொடர்ச்சி..

**

************
வினோதினி..
************
இந்த அம்மா எப்பவும் மோசம்
அடிக்கடி சாதம் வைக்கிறாள் லஞ்ச்க்கு
பக்கத்து வீட்டு ராகுல் எல்லாம்
எப்பவும் புதுசாய் கொண்டுதான் வர்றான்
நேத்த்க்கு கூட கொஞ்சம் போண்டா
கொடுத்தான் நானும் தோசை தந்தேன்.
அப்பா கொடுத்த பென்சில் பெட்டி
அடடா அழகு.. அந்த யானை
ஹிஹி சொல்லிச் சிரிப்பதாய் இருக்கு
இன்னும் ஏதோ வாங்கணும்னு நினச்சேன்
மறந்து போச்சு அச்சோ முதல்கிளாஸ்
மீசை வச்ச மல்லிகா டீச்சர்
அம்மா கேட்டால் அடிப்பாள் அடியே
அப்படி எல்லாம் சொல்லப் படாது
ஏன்மா லேசா இருக்கே அவர்க்கு
சிரித்துத் தலையில் குட்டியும் விடுவாள்..

***

ஹோம்வொர்க் எல்லாம் பண்ணி விட்டேன்
டீச்சர் வேற என்னவோ சொன்னாள்
ஏண்டா கோபு அதுதான் என்ன..
இந்தக் கணக்கும் தலையைக் குழப்புது

***

அதுசரி அங்கே மேலே என்ன
ஹையா நெருப்பு என்னது இப்படி
சடசட வென்றே கூரையில் போகுது..
பயந்த நாங்கள் எழுந்து ஓடி
வாசல் பக்கம் முட்டி மோத
என்னது இந்தக் கதவு திறக்கலை
பதறி அழுதே பலப்பல குரல்கள்
உதவி உதவி என்றே கத்த
உள்ளே சூடு அய்யோ எரியுதே..
கோபு சொல்றான் கத்தா தேன்னு
நீட்டி அவனது கையைப் பிடித்தேன்
மோதிய மோதலா யாரோ திறந்தாரா..
ஏதும் தெரியலை தெரிந்து தான்என்ன
நாங்கள் எல்லாம் ஒண்ணாய் வெளியில்
போவதற் காக கத்தியே முந்த
வெளியில் மாடிப் படியில் இன்னும்
மத்த கிளாஸின் பசங்களின் கூட்டம்
அப்பா ஒருவழி நானும் வெளியில்
வந்தாச்சு என்றே நினைத்தால் அய்யோ
என்னோட ஆனை பென்சில் பாக்ஸ்தான்
அப்பா கேட்டா திட்டு வாளே
போகா தேடீ கோபி சொன்னான்
ம்ம் மாட்டேன்..அப்பா சொன்னா
என்றே சொல்லி கையை உதறி
மறுபடி மோதி கிளாஸிக்குள் போனால்
ஒரேயடி யாகப் புகையும் நெருப்பும்
புக்ஸீம் பாக்ஸீம் சிதறி இருக்க
ஹையா அங்கென் பென்சில் பாக்ஸே
வேகமாய் ஓடி எடுக்க அச்சச்சோ
என்னது இப்படிக் கூரை விழுதே..
அம்மா..அப்பா...அய்யோ..ஆஆ..

*********************
ஜெயஸ்ரீ சேஷாசலம்..
*********************
இறைவன் ஒருவன் இருக்கின் றானா..
எதற்காக இப்படி இவ்வளவு உயிரை
ஒரேயடி யாக எடுத்து இருக்கணும்
எண்பதுக்கும் மேலே சின்னப் பிஞ்சுகள்
பொசுங்கி நொறுங்கிய அவலம் என்னே..
பேசி முடித்து விழியைத் துடைக்க
காமெரா மேனோ கட்பணணி விட்டான்..

***

எனக்கு வேலை டிவியில் செய்திகள்
சுடச்சுட நடக்கும் இடத்தில் எடுக்கணும்
பலப்பல விபத்துகள் பலப்பல தேர்தல்கள்
பலப்பல ஊழல்கள் பலப்பல நிகழ்வுகள்
எல்லா வற்றையும் கண்டே மனமும்
மரத்துப் போய்த்தான் ஓடுது பொழுது

***

திரும்பிப் பார்த்தால் அமுதம் அஜயன்
ஹல்லோ அஜயா என்ன இங்கே..
சரிசரி எல்லாம் ரிப்போர்ட் எடுத்தாயா
எனிதிங்க் ஸ்பெஷலா சொல்லுப்பா எனக்கும்
கையில் என்ன ஹைக்கூவா கொண்டா
வெள்ளை மனங்கள்.. கறுப்பு உடல்களாய்..
வண்ணப் படங்களில்... அபாரம் அஜயா..
அங்கே பாரேன் அழுதே வறண்டு
அந்த மூலையில் அமரும் தம்பதி..
ஆஸ்பிட்டல் வாசம் குடலைப் புரட்டுது
வாவா போய்த்தான் விஷயம் கேட்போம்..

***

மேடம் நான் தான் இந்த டீவி..
உங்கள் துயரைச் சொல்ல முடியுமா..
கணவன் சொன்னான்: எங்கள் பொக்கிஷம்
கறுப்புத் தங்கம்; வீட்டின் ராணி..
காற்றில் கருகிக் கரைந்தே விட்டாள்
பெயரும் வினோதம் செய்யும் லீலைகள்
எல்லாம் வினோதம் இப்போ பார்த்தால்
கறுப்பாய்க் கருகிக் கரைந்ததும் வினோதம்..

***

விம்மல் அடுக்கிப் பேசிச் செல்ல
'உங்கள் நஷ்டம் பெரிதெனத் தெரியும்
சிலபல லட்சம் ஈடாம் சொன்னார்..'
'பணத்தை நானே உங்களுக்குத் தருவேன்
எங்கள் சின்னக் குட்டியைத் தாங்கள்.."
வெடித்தாள் மனைவி; கணவனோ சொன்னான்
அந்தப் பணந்தான் எங்களுக்கு வேண்டும்..

***

அடடே இதுவோர் ஸ்கூப்நியூஸ் ஆச்சே..
சொல்லுங்கள் ராமு உங்கள் எண்ணம்..
இந்தப் பணத்தை இந்தப் பள்ளிக்கு
கொடுப்பேன் நன்றாய் மறுபடி கட்ட..
இன்னும் பலவாய் பள்ளிகள் உண்டு
'நோநோ ராமு மேலிடம் இப்போ
எல்லாப் பள்ளிக்கும் கடுமை விதிகள்
போட்டு இருக்கு கவலை வேண்டா.."

***

'இனிமேல் என்ன கவலை வாழ்வில்
இருக்கும் பிடிப்போ கருகிப் போச்சு
உங்களுக் கென்ன இதுவோர் செய்தி
அடுத்த விபத்தில் இதுவொரு கோப்பு
எத்தனை விதிகள் போட்டால் என்ன
மறுபடி இதுபோல் பள்ளிகள் முளைக்கும்
விதியை மீறி விதியை அழைக்கும்..
இந்தக் காயம் எங்கள் வாழ்வில்
முழுதும் முழுதும் வலித்தே இருக்கும்..
இன்னும் ராமு ஏதெதோ சொல்ல..

***

மெல்லத் திரும்பி காமிரா மேனிடம்
'நிறுத்துப்பா அப்புறம் வம்பாப் போயிடும்
எதுக்கும் ஒண்ணுசெய் இந்தாள் பேச்சை
வெட்டி விட்டுடு' என்றே சொல்லி
திரும்பி ராமு கமலா விடமே
நன்றி நவின்று இடம்விட் டகன்றேன்..


(முற்றும்)

chinnakkannan
15th February 2016, 11:19 AM
ஒரு முதியவளின் படுக்கையறை..

** (2005 இல் எழுதியது)

மூத்த பேரன் மடியில் தலையும்
இடதுகை விரல்கள் ரவிக்கையில் நுழைத்தும்
கண்கள் கொஞ்சம் இறுக்கவே மூடி
நன்றாய்த் தூக்கம் போட்டு விட்டாச்சு..
இரண்டாம் பேரனோ அவளது மடியில்
டிவி சீரியல் வெறித்துப் பார்த்தே
கொஞ்சம் கொஞ்சமாய் இமைகள் மூட..


பத்தரை வாக்கில் முழுவதும் முடிய
அவளும் டிவியை படக்கென அணைக்க
மெஞ்ஞ மெஞ்ஞேஎன இருந்த அவனும்
எதுவும் சொல்லத் தோன்றாமல் சற்றே
வாரப் புத்தகம் எடுத்துப் புரட்ட..
அவளும் எழுந்து சின்னதை உள்ளே
விட்டுவிட்டு வந்து பெரியதை வாங்கி
உள்ளே நுழைகையில் ஒருவிழிப் பார்வை
அவனிடம் வீச படக்கென புத்தகம்
ஹாலில் இருந்த மேஜையில் வீசி
சட்டென அவளுடன் அறையுள் நுழைய..
கதவு கொஞ்சம் கொஞ்சம் மெல்லமாய்
பின்னர் சற்றே வேகமாய் மூட..


ஆச்சு இனிமேல் உறங்கி எழுந்து
காலை வேலை பார்த்திட வேண்டும்
இருப்பது ஒருஹால் ஸிங்கிள் பெட்ரூம்..
ஹால்தான் எனது இருப்பிடம் இரவில்..
மெல்லப் படுக்கையை உதறி விரித்து
தலையணை கொஞ்சம் சரியாய் வைத்து
மெல்ல எழுந்து விளக்கை அணைத்து
மெல்ல நடந்து படுக்கையில் தலையை
வைத்தால் உள்ளே மெல்லமாய்க் குரல்கள்..
என்னைப் பற்றி ஏதும் பேச்சா..
இல்லை சின்னவன் முழித்தழ றானா....


என்ன வாழ்க்கை என்றே தெரியலை
அவரும் போய்த்தான் வருடங்க ளாச்சு..
பேரன் பேத்திகள் பார்த்து விட்டாச்சு..
இப்போது இருப்பவன் என்னுடைய சின்னவன்
கடைசியாப் பிறந்த நல்லவன் என்னை
நன்றாய் வைத்துப் பார்த்துக் கொள்கிறான்..
மற்றவை எல்லாம் அவரவர் மனைவிகள்
முந்தானை பிடித்தே சென்றுதான் விட்டார்..
என்ன கொஞ்சம் பேசவே மாட்டான்
காலையில் ஆபீஸ் கிளம்பினான் என்றால்
இரவில்தான் வேலை முடித்து வர்றான்..
இந்தப் பெண்ணும் என்னுடைய உறவுதான்..
ஆரம் பத்தில் சரியாய் இருந்தாள்..
மூத்ததைப் பெத்த ஒருவரு டத்தில்
சின்னது வந்ததும் நிறையவே மாற்றம்..
ம் யாரைச் சொல்ல யாரை நோக..
சத்தம் கேக்குதே குழந்தை அழறதோ..


மேலே ·பேனும் மெல்லமாய்ச்சுற்றுது..
இந்த மாம்பலக் கொசுக்கள் மோசம்..
ஸ்ஸ் அப்பா.. என்னகடி கடிக்குது..
ஓடோ மோஸ்தான் தடவிக்க வேணும்..
சீரியல் பெண்ணின் கணவன் நாளை
சம்சாரத் துடன் சேர்ந்திடு வானா..


ஓஓ அடடா.. மாத்திரை மறந்தேன்..
எங்கே தண்ணீர்.. குடித்தே முழுங்கலாம்..
கொஞ்சம் கைகால் படபடன்னு வருது..
தெரியலை டாக்டரிடம் பிபி சொல்லணும்..
இந்த பாழாப் போன மனுஷன்
என்னை விட்டு சீக்கிரம் போகுமா..
மூணு பிள்ளை ரெண்டு பொண்ணு..
வயணமாப் பெத்து வளத்துவிட் டாச்சு..
வளத்த கடாக்களும் மாரில்பாஞ் சாச்சு..
எப்போ காலம் வருமென நானும்..
இருந்துதான் பாக்கேன்.. ஒண்ணும் காணோம்..


ம்ம்நாளைக்கு என்ன என்ன செய்யணும்..
மூத்தவள் பெண்ணுக்கு பளஸ்டூ எக்ஸாம்
போனில் பேசி விஷ்ஷ¤ம் பண்ணனும்..
பண்ணலை என்றால் மறுநாள் திட்டுவாள்
பெரியவன் பையனுக்கு பர்த்டேன்னு நினைக்கேன்..
காலண்டரைக் கொஞ்சம் புரட்டிப் பாக்கணும்
ரெண்டாம் காஸ்க்கு இவளை விட்டு
போன்பண்ணச் சொல்லணும் இவளது அம்மா
உடம்பு தேவலை ஆச்சா என்றே
அவளுக்கும் போன்பண்ணிக் கேக்கணும் அப்புறம்..
துபாயில் இருக்கும் சின்னப் பெண்ணிடம்
கொஞ்சம் பேசணும் நாளும் ஆச்சு..
இவனுக்குக் காலையில் தக்காளிக் கொத்சு..
வெண்டைக் காயில் வதக்கல், சீரா
மிளகு ரசமும் தேங்காய்த் துகையலும்
செய்யணும் ஏனோ தூக்கமும் வரலை..


கண்கள் இறுக்க மூடிக் கொஞ்சம்
ராமா ராமா சொல்ல லாமா..
ராமா ராமா ராமா ராமா..
சுற்றிச் சுற்றி நினைவுகள் மயங்க..


மெல்லத் தூக்கம் வந்துவிட் டாச்சு..!

( நன்றி மரத்தடி.காம்)

kalnayak
15th November 2016, 09:47 PM
வந்துவிட்டேன் கல்நாயக், அப்படியே வந்துட்டேன்னு சொல்ல மாட்டேன். எல்லோருக்கும் வணக்கம் சொல்ல மட்டுமே வந்துவிட்டேன் நான். விரைவில் முன்போல் எழுத வரக்கூடும். பார்க்கலாம்.

chinnakkannan
4th December 2016, 10:35 PM
vaanga kal nayak. sowkiyamaa.. aarambikklaamaa kacheriyai

kalnayak
29th August 2018, 01:06 PM
Hi Everybody,

This is Kalnayak. Hope everybody is doing great.

Chinnakkannan, Eppidi irukkeenga. Innum inge ezhuthareengalaa?

kalnayak
2nd January 2019, 11:56 PM
Hi everybody,

Sorry I am not able to access all these pages smoothly. There is always problem in accessing some of these pages. Hope everybody is doing fine.

kalnayak
16th June 2019, 09:30 PM
Hi Everybody,

Please let me know, how to access other pages without any issues. I am not able to access any other thread. How do you access?