PDA

View Full Version : பண்ணைபுரமும் பக்திமார்க்கமும்



venkkiram
21st November 2014, 08:18 AM
இசைஞானியின் மந்திர இசையில் பக்தி உணர்வை வெளிப்படுத்தும் இசைப்பாடல்கள் ஏராளம். பக்திமார்க்கத்தில் ராஜாவின் இசைப்பணி 63 நாயன்மார்களின் வரிசையில் 64-ஆவது பக்தராக அவரை இணைக்கிறது என்பேன். பக்தி உணர்வுக்கு தனது மேன்மையான இசையால் அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் மனிதர். அவரது சொந்தக் குரலாக இருக்கட்டும், மற்ற பின்னணிப் பாடகர்களைக் கொண்டு பாடப்பட்ட பாடலாகட்டும், ஒவ்வொன்றுமே புறக்கணித்து செல்லமுடியாதவை. பல்வேறு மனித உணர்வுகளிலேயே பக்தி நிலை முற்றிலும் வேறுபட்டது எனலாம். தன்னை முழுவதுமாக ஒப்படைக்கும், குவியப்படுத்தும் அது ஒருவித மயக்கநிலை. ஹிப்னாடிசம் என்பார்களே! இசைஞானியின் இசையில் மயிலிறகு கொண்டு வருடும்படியான பக்திப் பாடல்களும் உண்டு, தன்னிலை இழந்து நரப்பு புடைக்க ஆட்டம்போட வைக்கும் ஒருவித பித்துப் பாடல்களும் உண்டு, தன்னிலையிலேயே இருக்கவைத்து கண்களில் நீர்வரவைக்கும் பாடல்களும் உண்டு. ரோமங்கள் சிலிர்த்து நம் சரீரமே அந்தரத்தில் பறப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் பாடல்களும் உண்டு. பொதுவாக ராஜா இசையில் பாடல் என வந்துவிட்டால் குரல் மட்டுமே பிரதானம் என்றில்லாமல் ஒவ்வொரு வாத்திய இசையுமே அதற்கான தனியுலகத்தில் இயங்கிக்கொண்டே கூட்டாக சேர்ந்து சேர்ந்து பலவண்ணப் பூக்களாக அலங்கரிக்கும் தன்மை கொண்டவை. பல ஊர்களில் அமைந்திருந்தாலும் ஒரு சில தளங்களில் அமைந்துள்ள திருக்கோயில்(கள்) நமக்கு ரொம்பவும் நெருக்கத்தை ஏற்படுத்தும் அல்லவா.. அதுபோல இத்திரியில் உங்களுக்குப் பிடித்த பக்திரசப் பாடல்களை பதியுங்கள். ஆனால் ஒரு வேண்டுகோள். பாடல் உங்களிடம் என்னென்ன வேதியியல் மாற்றங்களை ஏற்படுத்துகிறது, எவ்வளவு நெருக்கமான ஒன்று என்பதையும் அனுபவப் பூர்வமாக உணர்ந்து எழுதுங்கள். இணையத்தில் அதுபோல காணப்படும் கட்டுரைகளையும் இங்கே பகிரலாம். திரையிசைப் பாடல்கள், தனியிசைத் தொகுப்புகள் என பரவியிருக்கும் இசைச்சித்தரின் பக்திப் பாடல்களை பலதரப்பட்ட மக்களுக்கு கொண்டு சேர்க்கும் முயற்சி. இறைநம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே இங்கே பங்குபெறனும் என்ற விதிகிடையாது. இறைநம்பிக்கை இல்லாவிட்டாலும் ராஜாவின் பக்திப் பாடல்கள் உங்கள் மனதை எதோ செய்கிறது என உணர்ந்தாலோ, வேறொரு தளத்திற்கு பயணிக்கச் செய்கிறது என்பதை உணர்வுப் பூர்வமாக உணர்ந்தாலோ நீங்களும் இங்கே பங்குபெற்று உங்கள் எண்ணங்களை பதியலாம்.

இசைஜோதியில் ஒன்றாக கலப்போம்!

http://1.bp.blogspot.com/-fIrwgtJ2vOA/UUv3XOkWfGI/AAAAAAAAAB4/DZldzbMPYvw/s1600/Illayaraja.JPG

http://4.bp.blogspot.com/_nSPvsgb1MPQ/S_i0ci9HsEI/AAAAAAAAANU/XKxgOdZ1Ypw/s1600/ilaiyaraja.jpg

venkkiram
21st November 2014, 08:30 AM
http://lh5.ggpht.com/-qIzGwawPsJ8/SKlxe_4IxiI/AAAAAAAABT8/4xOsL24IQFA/ramanar11.jpg

பாவம் தீர்த்திடும் கங்கையும்
பாலின் வெண்ணிற பிறைத் திங்களும்..

https://www.youtube.com/watch?v=Xq37B_N-vUk

ஆன்மிக சாரத்தை சலைன் பாட்டிலில் நிரப்பி நரம்பு வழியே உடலுக்குள் செலுத்தினால் எப்படியிருக்கும்? அப்படியொடு உணர்வு.. இப்பாடலை ஒவ்வொரு முறையும் கேட்கும்போதெல்லாம் மனம் பாரம் குறைந்து ஒரு பறவையாய் நமது மேற்கத்திய மலைத்தொடர் முழுதும் சிறகடித்து பறப்பது போல உணர்வு. இந்த ஒரு பாடல் மட்டுமல்ல..ரமணருக்கான ராஜாவின் தொகுப்பின் உள்ள பாடல்கள் அனைத்துமே. குரலில் இவரைப் போல ஒரு பன்முகத்திறமையை வேறெங்கும் இதுவரை காணவில்லை. உணரவில்லை. சில நேரங்களில் நினைத்துப் பார்ப்பதுண்டு. இவரது இசை மீதான ஆளுமையை அப்படியே ஒரு நிமிடம் மறந்துவிட்டு நின்றாலும், பின்னணிக் குரல் என்ற ஒரு தளத்தில் கூட அப்படியொரு ஆளுமை. குன்றிலிட்ட விளக்குபோல.. திருவண்ணாமலை கார்த்திகை தீபம் போல அவரது ஜீவனுள்ள குரல் காற்றில் பலவித உணர்வுகளை பரப்பிக் கொண்டே இருக்கிறது.

Irene Hastings
22nd November 2014, 10:04 AM
அய்யா

இசை ஞாநியின் பக்தி கலந்த இசை அமைப்பு சிறப்பபானது என்பது அனைவரும் அறிந்ததே

ஆனால் அவர் 64 நாயன்மார் அளவிற்கு உயர்த்துவது சற்று மிகை பட்டது

ஒன்றினை ஒப்புக் கொள்கிரேன் . நீங்கள் அவரின் பக்தர் எனவே உயர்த்தி எழுதவேண்டும்

இவருக்கு முன் திரு டி.r .பாப்பா , குன்னக்குடி , g .ராமநாதன் போன்றவர்களை எந்த வரிசயில் சேர்பீரோ ?

திரு டி.எம்.எஸ். மற்றும் சீர்காழி பாடிய பாடல்கள் அவ்வளவு பக்தி கொள்ளவில்லையோ ? அல்லது நீங்கள் கேட்டதே இல்லையோ ?

venkkiram
22nd November 2014, 10:15 AM
Irene
இத்திரியில் போகவேண்டிய தூரம் நிறைய இருக்கு. அதனால உங்களது பதிவிற்கு பதில் எழுத பல நாட்கள் ஆகும். பொறுத்திருக்கவும்.

SVN
26th November 2014, 06:56 PM
ராஜாவின் இசையில் எனக்கு மிகவும் பிடித்த 'பக்தி' பாடல்கள் பல உண்டு. அதில், இரண்டை மட்டும் குறிப்பிடுகிறேன்! இதில் சிறப்பு என்னவென்றால், பாடல் வரிகளும் காவியத்தன்மை வாய்ந்தவை. No pedestrian lyrics here.. இசையும் நம்மை வேறு ஒரு தளத்துக்கு அழைத்துச்செல்லும்.

1. பார்த்த விழி பார்த்தபடி... படம்: குணா
2. எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ படம்: பாரதி

1. முதல் பாடல். இதில் கோரஸ் பெண்கள் பாடுகிறார்கள்...
.
இடங்கொண்டு விம்மி .. இணை கொண்டு இறுகி
இளகி முத்து வடங்கொண்ட கொங்கை மலை கொண்ட
இறைவர் வலிய நெஞ்சை நடங்கொண்ட
கொள்கை நலம் கொண்ட நாயகி
நல்லரவின் படம் கொண்ட அன்புப்பணிமொழி
வேதப் பரிபுரையே...

பார்த்த விழி பார்த்த படி பூத்து இருக்க
காத்திருந்த காட்சி இங்குக்காணக்கிடைக்க ...

பாடலாசிரியர் வாலியா, புலமைப்பித்தனா சரியாகத் தெரியவில்லை.. அற்புதம்! பாடியவரோ யேசுதாஸ்.. பாடலின் பாதிப்பைச் சொல்ல வேண்டுமா?

2. இரண்டாவது பாடல், பாரதி படத்தில், பாரதியார் எழுதாத ஒரு பாடல். புலமைப்பித்தன் எழுதி, மது பால கிருஷ்ணன் பாடிய பாடல். உதாரணத்துக்கு சில வரிகள் இதோ:

வரிப்புலி அதழ் தரித்தவன் எழில் கண்டேன்
பிறப்பெனும் பிணி அறுப்பவன் துணை கொண்டேன்
தமிழ்க்கவி தரும் எனக்கொரு வரம் தரத்திரு உளம் வேண்டும்
சக திருக்கெனை தரத்தகும் நெறி வகுத்திடத் துணை வேண்டும்
ஆலம் கரு நீலம் எனத்தெரியும் ஒரு கண்டன் .
அண்டும் திருத் தொண்டன் எனும், அடியார்க்கொரு தொண்டன் ..
பற்றுத் தலைக்கு நெருப்பவன்;
ஒற்றைக்கணத்தில் அழிப்பவன்;
நெற்றிப் பிறைக்குள் நெருப்பை வளர்த்து ... (எதிலும் இங்கு இருப்பான்)

தெளிய நீரோடை போன்று பிரவாகமாய் வரும் இசை... Very meditative.

Russellhaj
26th November 2014, 09:26 PM
// இடங்கொண்டு விம்மி .. இணை கொண்டு இறுகி
இளகி முத்து வடங்கொண்ட கொங்கை மலை கொண்ட
இறைவர் வலிய நெஞ்சை நடங்கொண்ட
கொள்கை நலம் கொண்ட நாயகி
நல்லரவின் படம் கொண்ட அன்புப்பணிமொழி
வேதப் பரிபுரையே...//


இது "அபிராமி அந்தாதி" . அபிராமி பட்டரால் பாடப்பட்டது

SVN
27th November 2014, 02:57 PM
நன்றி poem. I stand corrected.