PDA

View Full Version : மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3



Pages : [1] 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16

rajeshkrv
9th October 2014, 03:47 AM
http://www.4shared.com/download/8hE1c-Cuba/pizapcom14128063022241.jpg?lgfp=3000

மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3

முதலில் என்னை பாகம் 3 துவங்க அழைத்த கோபால், வாசு ஜி, கிருஷ்ணா ஜி, மதுண்ணா,
ராகவ் ஜி, எஸ்.வி ஜி மற்றும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
ஹப்பில் நீண்ட நாட்கள் உறுப்பினராக இருந்தாலும் சில திரிகளில் மட்டுமே தலைக்காட்டி கொண்டிருந்த
என்னை இரவு பகல் பாராமல் பதிவிட செய்தது மனதை கவரும் மதுர கானங்கள் திரி தான். என்றோ ஒரு நாள் திரியின் பெயரிலேயே மயங்கி உள்ளே நுழைந்து பின் இங்கு பேசப்படும் விஷயத்தாலும், நண்பர்கள்
பதிவிடும் பாடல்களும் அதைப்பற்றிய அலசலும் சற்று பிரமிக்கத்தான் வைத்தது. இன்னும் சொல்லப்போனால் நீண்ட நாட்களுக்கு பின் ஹப்பில் தொடர்ச்சியாக ஒரு திரியில் பலரும் நட்பு பாராட்டி, கேலி கிண்டல் என குடும்ப உறுப்பினர்கள் போல் உலா வந்தது இந்த திரியில் தான். நான் பாட்டுக்கு பாட்டு, நடிகர் திலகம் திரி மற்றும் சில திரிகளுக்கு மட்டுமே சென்று கொண்டிருந்த நிலை மாறி இப்பொழுது மதுர கானம் திரியை தவிற வேறு எந்த திரிக்கும் செல்வதில்லை என்றால் அது இந்த திரியின் வளர்ச்சியையும் ஆளுமையையும் ஈர்ப்பையுமே குறிக்கும். சொல்லப்போனால் மனதை கவரும் மதுர கானம் என்பது போய் மனதை மயக்கும் மதுர கானம் ஆயிற்று என்றே சொல்லலாம்.
கானம்/இசை என்பது இறை … ஆம் இறைவனை அடையும் வழி இசையே என்று பெரியவர்கள் சொல்லியிருப்பது முற்றிலும் உண்மை .. எல்லா வித சூழலுக்கும் வடிகாலாக இசை உள்ளது அதனால் தான் இன்றும் நாம் பாடல்களை கேட்டு கொண்டிருக்கிறோம்.. கர்நாடக கீர்த்தனைகள், பக்தி பாடல்கள், சினிமா பாடல்கள், நாட்டு பாடல்கள் என்று வகை படுத்தினாலும் எல்லாமே இசை தான்.
சிலர் நினைக்கலாம் என்னடா இவன் தமிழ் பாடல் சொன்னால் உடனே தெலுங்கு கன்னடம் மலையாளம் என்று பல பாட்டை பதிவிடுகிறானே , இவனுக்கு மற்ற மொழி பாடல்கள் தெரியும் என்ற மமதை என்று யாராவது நினைத்தால் இல்லவே இல்லை … இசைக்கு மொழி கிடையாது . அதுவும் நம் தென்னாட்டில் ஒரே படம்/கதை பல மொழிகளிலும் படமானது அதே சூழலில் அதே மெட்டோ இல்லை வேறு மெட்டோ அதை இங்கே பதிவிடுவதே என் நோக்கம். அதுமட்டுமல்லாது 60-70 கால கட்டங்களில் தமிழில் மட்டுமல்ல மற்ற மொழிகளிலும் மிகச்சிறந்த படங்களும் பாடல்களும் வெளி வந்தன . ஏற்கனவே அறிமுகனாவர்களுக்கு சலிப்பு தட்டலாம் ஆனால் அறிமுகம் இல்லாதவர்களுக்கு அறிமுகம் செய்யவே இந்த நோக்கம் .. நோக்கம் தவறில்லை என்று நினைக்கிறேன்..(மதுண்ணா ரொம்ப காலமாக எனக்கு ஊக்கம் கொடுத்து வருகிறார். அவருக்கு தெரியாத தமிழ் பாடல்கள் இல்லை இருந்தாலும் நான் ஏதாவது மற்ற மொழி பாடல் பதிவிட்டால் அதை கேட்டு அருமையாக பின்னூட்டம் இடுவார்.. அதையே தான் வாசு ஜி, கிருஷ்ணா ஜி, சி.க என எல்லோருமே ரசித்து எழுதுகிறார்கள்… நன்றிகள் பல)

அதே போல் இசையரசி பைத்தியம் முற்றித்தான் விட்டது (சிலர் மனதில் நினைக்க கூடும் … என்ன இவன் இசையரசி பாட்டை மட்டுமே பதிக்கிறான் என்று கொஞ்சம் கோபம் கூட வரும் …அடி வாங்கிக்க நான் ரெடி ) … என்னுடைய ரத்தம், நினைவு, சிந்தனை என எல்லாவற்றிலும் இசையரசியின் இனிய கீதமும் குரலும் கலந்துவிட்ட நிலையில் அது தவிர்க்க முடியாத ஒன்று . ஏதோ காதலி பற்றி சொல்வது போல் தோன்றலாம் ஆனால் அந்த தேன் குரலுக்கு தெய்வமே அடிமையாகும் நான் எம்மாத்திரம். இருந்தாலும் இசையரசி பாடல்கள் அல்லாது மற்ற பாடகர்களின் பாடல்களையும் பதித்திருக்கிறேன் இன்னும் பதிவிடுவேன் என்ற உறுதியும் தருகிறேன் … (கோபால் அவர்களே 70% இசையரசி பாடல்கள் 30% மற்றவர்களின் பாட்டு ஒ.கே தானே )

முன்னுரை முடிந்தது … போதும் உன் புராணம் பாடலை பதிவிடுப்பா என்று நீங்கள் எல்லோரும் சொல்வது கேட்கிறது. வருகிறேன் வருகிறேன் பாடலுக்கு வருகிறேன்.

http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/3/36/Yaar_Paiyyan.jpg/220px-Yaar_Paiyyan.jpg

”மாகனம் பொருந்திய ஸ்ரீமான் சுந்தர்ராஜன் “ என்ற வசனம் ஞாபகம் இருக்கா.. ஆம் பூரி என்ற அந்த பையன் அடிக்கடி சொல்லும் வசனம். படம் “யார் பையன்“
வங்காள மொழி கதைகள் பலவும் தமிழில் படமான காலமது. அதே போல் ஒரு வங்காள கதை
தமிழில் யார் பையன் ஆனது. (இராணி சகோதரிகளான ஹனி இராணி, டெய்ஸி இராணி குழந்தைகள் மிகவும் பிரபலம். அதிலும் டெய்ஸி இராணி தென்னிந்திய மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக கொடி கட்டி பறந்தார்).. கதையின் பிரதான பாத்திரமான பையனாக டெய்ஸி இரானி, மற்றும் ஜெமினி, சாவித்திரி,
என்.எஸ்.கே, மதுரம், டி.ஆர். ராமச்சந்திரன், சாரங்கபாணி என பலரும் நடித்திருந்தனர். அனாதையான பூரி ஒரு பார்க் பெஞ்சில் அமர்ந்திருக்கும் ஜெமினியிடம் பெயரை கேட்க அந்த பெயரையே தன் தந்தையின் பெயராக நினைத்து கொண்டு அதையே சொல்வதால் நடக்கும் நிகழ்வுகள் தான் கதை. என்.எஸ்.கே குடும்பத்தார் தயாரித்த இந்த படத்தை இயக்கியது டி.ஆர் .ரகுனாத்.
வீட்டிற்கு கூட்டி சென்றதால் ஏற்பட்ட குழப்பம் தீரும் வரை குழந்தையை தன் காதலி சாவித்திரியிடம் ஒப்படைக்கிறார் ஜெமினி.. சாவித்திரியும் அவர் அம்மாவும் அந்த குழந்தையிடம் படும் பாடு … அப்படி இப்படி அவனை சமாதானம் செய்து தூங்க வைக்க முயற்ச்சிக்கிறார் சாவித்திரி …. அப்படித்தான் ஆரம்பம் இந்த பாடல் .. டி.சலபதிராவ் அவர்களின் இசையில் அ.மருதகாசி ஐயாவின் அற்புத வரிகளில் இசையரசியின் வினோத தாலாட்டு

”தந்தை யாரோ” என்று சாவித்திரி பாடல் வரியை தொடங்கிய உடனே “மாகனம் பொருந்திய ஸ்ரீமான் சுந்தர்ராஜன்” என பையன் சொல்ல இடுப்பில் கையை வைத்துக்கொண்டு சாவித்திரி முறைக்க ஏக தமாஷ்… நடுவில் மீண்டும் தந்தை யாரோ என்று வரி வரும் போது சொல்ல வாய் திறக்கும் பிள்ளையின் வாய் பொத்தி பாடலை பாட..அதுவும் இசையரசி குறும்பாக ஜாலக்காரா தூங்குடா என்று பாடி முடித்து தூங்குடா என்று அதட்டுவது போல் பாடும் விதம் …. சத கோடி பிரணாமம்
மருதகாசி ஐயா எல்லாவித பாடல்களையும் எழுத வல்லவர். பாடலாசிரியர் என்ற அந்த சொல்லுக்கு
முதல் முதலில் முழுப்பெருமைய் சேர்த்தவர் மருதகாசி ஐயா. அவருக்கு அப்புறம் வந்தவர்கள் தான் கவியரசரும், வாலி ஐயா போன்றவர்கள் எல்லாம்.. என்ன அழகான வரிகள் .. வம்பு செய்தால் உந்தன் கன்னம் எந்தன் கையால் வீங்கும் , வாலை கொஞ்சம் சுருட்டிக்கொண்டு தூங்குடா நீ தூங்கு


தந்தை யாரோ?
குழந்தை: மஹா கனம் பொருந்திய ஸ்ரீமான் சுந்தர் ராஜன்
சுசீலா: நீயும் எந்த ஊரோ?
தந்தை யாரோ தாயும் யாரோ
நீயும் எந்த ஊரோ?
தந்தை யாரோ தாயும் யாரோ
நீயும் எந்த ஊரோ?
ஜாலக்காரா தூங்கடா
ஜாலக்காரா .....தூங்குடா
ஜாலக்காரா தூங்கடா
ஆராரோ .. நான் யாரோ .. நீ யாரோ

தந்தை யாரோ தாயும் யாரோ
நீயும் எந்த ஊரோ?

மணம் புரிந்து அரசு வேம்பும்
வலம் வராத போதிலும்
மணம் புரிந்து அரசு வேம்பும்
வலம் வராத போதிலும்
நான் வலம் வராத போதிலும்
மதலையாக வீடு தேடி வந்ததென்ன விந்தையோ

தந்தை யாரோ தாயும் யாரோ
நீயும் எந்த ஊரோ?

மாலை சூடி லாலி பாடி ஓஓஓஓஓஓஓஓஓஓ
மாலை சூடி லாலி பாடி
மனைவியாகக் கொள்ளுமுன்னே
ஏழு வயசு பிள்ளையாக எனக்குத் தந்தார் உன்னை
வாலை சும்மா சுருட்டிக் கொண்டு தூங்கடா நீ தூங்கு ...
தூங்கடா நீ தூங்கு ..
வம்பு செய்தால் உந்தன் கன்னம் எந்தன் கையால் வீங்கும்
வம்பு செய்தால் உந்தன் கன்னம் எந்தன் கையால் வீங்கும்

தந்தை யாரோ தாயும் யாரோ
நீயும் எந்த ஊரோ?

தந்தை யாரோ?

வரிகளுக்கு நன்றி: மறைந்த நம் மன்ற உறுப்பினர் ஜெயந்தி அவர்கள்
பாடல் அழகா, பாடியிருக்கும் விதம் அழகா, திரையில் சாவித்திரியின் நடிப்பு அழகா இல்லை தூங்காமல்
குறும்பு செய்யும் டெய்ஸி இராணி அழகா … யார் பையன் நம் பையன்…
இசையரசிக்கு ஒரு ஸ்பெஷல் வந்தனம் -அரச மரத்தையும் வேப்ப மரத்தையும் சுற்றாமல் அப்படியே வந்த பிள்ளை என மருதகாசி ஐயாவின் வரியை இவர் பாடும் விதம் .. மெய் சிலிர்க்கும்
மாலை சூடி லாலி பாடி என்ற வரியிலும் அதே சிலிர்ப்பு
பாகம் 3 .. தேன் இனிமையிலும் இசையரசியின் குரல் திவ்யமதுரமாமே என்பது போல் தொடங்கியாயிற்று. எல்லோரும் தங்கள் மதுர பதிவுகளை பதிந்து இந்த பாகத்தையும் மாபெரும் வெற்றி பெற செய்யவேண்டும் என்று வேண்டுகோள் வைத்து பாகம் 3 இனிதே ஆரம்பம் …

https://www.youtube.com/watch?v=s3n1Ub9Ghe4

இதே பாடலின் தெலுங்கு வடிவம் (எவரி அப்பாயி)

THANDRI EVARO THALLI EVARO NEEKU DIKKU EVARO-Evari abbayi(yaar payyan).MP3 (http://www.4shared.com/mp3/WB1wxxLPba/THANDRI_EVARO_THALLI_EVARO_NEE.html)

madhu
9th October 2014, 04:03 AM
அருமையான பாப்பா பாட்டுடன் திரியைத் துவக்கிய ராஜேஷுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்..

வருக வருக என்று சொல்லி அழைப்பார்
சிலர் வாசல் வழியில் நின்று பன்னீர் தெளிப்பார்.

நானும் அது போல சுசீலாம்மாவின் குரலில் ஒரு சின்ன சிலீர்....

படம் : பனித்திரை

http://youtu.be/TC-SNIaGhUk

madhu
9th October 2014, 04:04 AM
வாசுஜி..

இதோ.. ஆறேழு நாட்கள் போகட்டும் என்று சொல்லாமல் ஆரம்பம் இன்றே ஆகிவிட்டது

காவியத்தலைவியில் எஸ்.பி.பி., எல்.ஆர்.ஈஸ்வரியின் குரல்களில் பெல்பாட்டம் (?) போட்ட சௌகாரும், ரவிச்சந்திரனும்

http://youtu.be/XG8yZuymHXc

Russellmai
9th October 2014, 05:37 AM
மதுர கானங்கள் மூன்றாம் பகுதியைத் துவக்கி உள்ள இராஜேஷ் சார் அவர்களுக்கு அடியேனின் வாழ்த்துக்கள்.
அன்புடன் கோபு.

Richardsof
9th October 2014, 05:54 AM
மனதை கவரும் மதுர கானங்கள் - பாகம் - மூன்று

துவக்கியவர் திரு ராஜேஷ் - மூன்றெழுத்து

முந்தைய திரியை நடத்தியவர் திரு கிருஷ்ணா - மூன்றெழுத்து

இசைக்குயில் சுசீலா - மூன்றெழுத்து

பாடகர்கள் டி .எம்.எஸ் - பி.பி .எஸ் -மூன்றெழுத்து

நம்மை எல்லாம் இணைத்த தமிழ் -மூன்றெழுத்து

முக்கனிகள் தரும் சுவை - முத்தமிழ் பாடல்கள்

மறந்தே போன பல அரிய பல மொழி பாடல்கள் இங்கே சங்கமம்

மனதை மயக்கும் மதுர கானங்கள் - தினமும் பல் சுவை விருந்தாக

படைத்திடும் அன்பு உள்ளங்கள் .....தொடர்ந்து இந்த மூன்றாம் பாகத்தில்

திரு ராஜேஷின் தலைமையில் நண்பர்கள் வெற்றி கொடி நாட்டி புதிய

வரலாற்றை படைப்போம் .......சாதனைகள் புரிவோம் ...இசையால் இணைவோம்
http://youtu.be/tpvOyMEPfOw

vasudevan31355
9th October 2014, 06:35 AM
'யார் பையன்' படத்தின் சுசீலா அம்மாவின் பாடலோடு மதுர கானம் பகுதி 3 ஐ துவக்கியிருக்கும் ராஜேஷ்ஜி அவர்களுக்கு என் மனம் நிறை வாழ்த்துக்கள்.

அருமையான மிக நல்லதொரு பாடலை முதல் பதிவாக வழங்கி இசையரசிக்கு பெருமை சேர்த்துள்ளீர்கள். திரிக்கும் கௌரவமான ஒரு துவக்கத்தைத் தந்திருக்கிறீர்கள். பாடல் வரிகளுக்கும், டெய்ஸி இராணி, சாவித்திரி நடிப்பின் விளக்கங்களுக்கும் நன்றி!

பிற மொழிப் பாடல்களின் சேர்ப்பால் மதுரகானம் இன்னும் மயக்கும் கானம் ஆனது. ஏதோ ஒரு விளையாட்டாக ஆரம்பித்த இந்தத் திரி இவ்வளவு அசுர வளர்ச்சி பெரும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. அதுவும் மது அண்ணா, ராஜ்ராஜ் சார், மற்றும் நீங்கள் போன்ற விவரங்கள் அறிந்த அருமை சீனியர் ஹப்பர்கள் இங்கு கலந்து கொண்டு சிறப்ப்பித்து வருவது நாங்களெல்லாம் காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளக் கூடிய பெருமைக்குரிய விஷயம். அதே போலத்தான் இங்கு பதிவிடும் அனைத்து நல்லுள்ளங்களும்.

மதுர கானங்களில் இப்போது முழுமையாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருப்பதாக தாங்கள் குறிப்பிட்டுள்ளது இரட்டை சந்தோஷத்தை தருகிறது. தங்களின் பதிவுகள் இந்த திரிக்கு பதிக்கப்படும் இன்னொரு வைரக்கல்.

அருமையான துவக்கம். வாழ்த்துக்கள் மீண்டும்.

இதோ 1960-ல் வெளிவந்த 'புதிய பாதை' படத்தில் பாலாஜி தபேலாவிலும் காபி கப் அண்ட் சாஸரிலும் இசை தர, சாவித்திரி அருமையாக புல்லாங்குழல் ஊத, அழகு டெய்ஸி இராணி அந்த இசைக்கேற்ப அற்புத நடனமாட (பாடல் இல்லாமல்) ஒரு சில விநாடிக் காட்சிகளே என்றாலும் மனதை கொள்ளை கொள்ளும் புல்லாங்குழல் இசை, நடனம்.


https://www.youtube.com/watch?v=m0BcSTvkSY8&feature=player_detailpage

vasudevan31355
9th October 2014, 06:43 AM
வருக வருக என்று 3 ஆம் பாகத்திற்கு பொருத்தமான அதுவும் திரி தொடங்கிய ராஜேஷ்ஜியின் உள்ளம் கொள்ளை கொண்ட, எங்களது உள்ளங்களையும் கொள்ளை கொண்ட, சுசீலா அம்மவின் பனித்திரை பாடல் தந்து ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடித்த மது அண்ணாவுக்கு நன்றி!

அதே போல 'ஆரம்பம் இன்றே ஆகட்டும்' ஆனந்தப் பாடலை தந்து மகிழச் செய்ததற்கும் நன்றி!

rajeshkrv
9th October 2014, 06:50 AM
வாசு ஜி, காலை வணக்கங்கள். வாழ்த்துக்கு நன்றி
மதுண்ண, எஸ்.வி இருவருக்கும் நன்றி

RAGHAVENDRA
9th October 2014, 06:59 AM
பொங்கும் பூம்புனல்

ராஜேஷ்ஜீ,
அமர்க்களமாக இசையரசியின் இனிமையான பாடலுடன் மூன்றாம் பாகத்தைத் துவக்கியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.. எக்காலத்திலும் சூப்பர் ஹிட் பாடல் தந்தை யாரோ...
எல்லோருடைய ஆதரவுடனும் வாழ்த்துக்களுடனும் இத்திரியும் வெற்றி நடை போடும் என்பதில் ஐயமில்லை.

நேற்று கிரகணம் முடிந்து நிலா விரிவடைந்ததை யார் பார்த்தார்களோ இல்லையோ தெரியவில்லை. எனவே விரிந்து வருகின்ற வெண்ணிலாவை எல்லோரும் பார்ப்போமா..

பால நாகம்மா படத்திலிருந்து டி.வி.ராஜு இசையில் கண்டசாலா ஜிக்கி குரல்களில் சூப்பர் ஹிட் பாடல்

http://www.youtube.com/watch?v=lBIxotq5Q_k

rajeshkrv
9th October 2014, 07:02 AM
ராகவ் ஜி, நன்றி

விரிசிந்தி விந்த ஹாயி பாடல் தான் விரிகின்ற வெண்ணிலவே ஆனது

https://www.youtube.com/watch?v=_9SsBWpSjHY

vasudevan31355
9th October 2014, 07:11 AM
முதல் பக்கத்திலேயே முத்து முத்தான பதிவுகள். நன்றி ராகவேந்திரன் சார். விரிகின்ற வெண்ணிலவை காணச் செய்தமைக்கு.

rajraj
9th October 2014, 07:12 AM
Good start Rajesh ! Congratulations ! I like 'baby' songs, particularly lullabies! :)

'Yaar Paiyan' is the Tamil version of Bandish (1955) (Hindi).

My interpretaion of the instruments I mentioned:

Nadaswaram: A song like 'Nalamdhaanaa' from Thillaanaa MohanaambaaL (with Nadaswaram)
Shehnai: A song with shehnai like the song from Goonj Uthi Shehnai
Trumpet: A song like ' Baby Elephant Walk' on Trumpet by Al Hirt

Good going.
Cheers.

As you know I have limited my participation in the hub quite a bit. May be, I will change a little bit for you ! :lol:
Don't worry. I won't be hogging space here ! :lol:

rajeshkrv
9th October 2014, 07:32 AM
Good start Rajesh ! Congratulations ! I like 'baby' songs, particularly lullabies! :)

'Yaar Paiyan' is the Tamil version of Bandish (1955) (Hindi).

My interpretaion of the instruments I mentioned:

Nadaswaram: A song like 'Nalamdhaanaa' from Thillaanaa MohanaambaaL (with Nadaswaram)
Shehnai: A song with shehnai like the song from Goonj Uthi Shehnai
Trumpet: A song like ' Baby Elephant Walk' on Trumpet by Al Hirt

Good going.
Cheers.

As you know I have limited my participation in the hub quite a bit. May be, I will change a little bit for you ! :lol:
Don't worry. I won't be hogging space here ! :lol:

Ankil, thanks for the wishes.. please do visit this thread frequently and share your input and songs as well .. your knowledge on songs tamil,hindi all are great

Gopal.s
9th October 2014, 08:26 AM
ராஜேஷ்,



திரியை துவங்கியதற்கு வாழ்த்துக்கள்.



நீ போடும் நிறைய வேற்று மொழி பாடல்களை கேட்டு விட்டாவது விமர்சிப்பேன்.ஆனால் கேட்காமலேயே பலே பேஷ் போடுவோருக்கு மயங்கி ரொம்ப வேற்று மொழிக்கு போகாதே.



திரியின் துவக்கம்,தமிழர் பூமியில் ,மங்கலமான தமிழில்தான் அமைய வேண்டும்.அதுவும் எல்லோரும் ரசிக்கும் இசையரசியின் அற்புத பாடலாக அமைய வேண்டாமா?



உங்கள் பிரத்யேக ரசனையின் பாற்பட்டே எல்லாவற்றையும் அணுகாதீர்கள். உங்கள் துவக்கம் எனக்கு பெரிய ஏமாற்றமே.

rajeshkrv
9th October 2014, 08:37 AM
ராஜேஷ்,



திரியை துவங்கியதற்கு வாழ்த்துக்கள்.



நீ போடும் நிறைய வேற்று மொழி பாடல்களை கேட்டு விட்டாவது விமர்சிப்பேன்.ஆனால் கேட்காமலேயே பலே பேஷ் போடுவோருக்கு மயங்கி ரொம்ப வேற்று மொழிக்கு போகாதே.



திரியின் துவக்கம்,தமிழர் பூமியில் ,மங்கலமான தமிழில்தான் அமைய வேண்டும்.அதுவும் எல்லோரும் ரசிக்கும் இசையரசியின் அற்புத பாடலாக அமைய வேண்டாமா?



உங்கள் பிரத்யேக ரசனையின் பாற்பட்டே எல்லாவற்றையும் அணுகாதீர்கள். உங்கள் துவக்கம் எனக்கு பெரிய ஏமாற்றமே.

கோபால் ஜி, தமிழில் தானே தொடங்கியுள்ளேன் ... தந்தை யாரோ யார் பையன் திரைப்படத்திலிருந்து .. பார்க்கவில்லையா ..

Gopal.s
9th October 2014, 08:45 AM
கோபால் ஜி, தமிழில் தானே தொடங்கியுள்ளேன் ... தந்தை யாரோ யார் பையன் திரைப்படத்திலிருந்து .. பார்க்கவில்லையா ..

யார் பையன்,கைதி கண்ணாயிரம் இதெல்லாம் தமிழில் சேர்த்தியா? இந்த பாடல்கள் பின்னால் வந்தாலாவது சகித்து தொலையலாம். ஆரம்பிக்க இதுதானா கிடைத்தது?நேற்று வெண்ணிற ஆடை "ஒருவன் காதலன் "பாட்டு கேட்டேன்.சுசீலா பின்னியிருந்தார்.என்ன ஒரு pitching ,என்ன ஒரு modulation ,என்ன ஒரு control ,சிலாகிக்கும் படி அமைய வேண்டாமா?



You should have chosen the best .

rajeshkrv
9th October 2014, 08:47 AM
யார் பையன்,கைதி கண்ணாயிரம் இதெல்லாம் தமிழில் சேர்த்தியா? இந்த பாடல்கள் பின்னால் வந்தாலாவது சகித்து தொலையலாம். ஆரம்பிக்க இதுதானா கிடைத்தது?நேற்று வெண்ணிற ஆடை "ஒருவன் காதலன் "பாட்டு கேட்டேன்.சுசீலா பின்னியிருந்தார்.என்ன ஒரு pitching ,என்ன ஒரு modulation ,என்ன ஒரு control,சிலாகிக்கும் படி அமைய வேண்டாமா?



You should have chosen the best .

ஹ்ம்ம்.. நீங்கள் சொன்ன பாடல்கள் எல்லாம் வரும். எனக்கு தந்தை யாரோ பாடல் மூலம் தொடங்க பிடித்திருந்தது ..
பாட்டை கேட்டுவிட்டு சொல்லுங்கள் ..

Richardsof
9th October 2014, 08:53 AM
MELODY SONG

http://youtu.be/Nr86B4RpR7o

vasudevan31355
9th October 2014, 09:33 AM
கோபால்,

வந்த உடனேயே ஆரம்பிச்சாச்சா!:)

இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறார். பொறுங்கள். நிறைய வரும். அதற்குள் அவசரம் வேண்டாமே! நீங்களும் ஒரு குறுகிய வட்டத்துக்குக் சிக்கி கொள்ளாமல் சற்று வெளியே வாருங்கள். எனக்கும் நிறைய பிடிக்காத பாடல்கள் இருக்கின்றன. அவற்றுள் சிலவற்றை மீண்டும் நினைவுபடுத்தி திரும்பக் கேட்கும் போது அவற்றுள்ளும் சில ரசிக்கக் கூடிய இனிமையான விஷயங்கள் உள்ளன.

அவரவர்கள் கண்ணோட்டத்தில் அவரவர்களின் ரசனை வேறு. ஆளாளுக்கு ஒன்று பிடிக்கும். தனக்குப் பிடித்ததை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளத்தான் அனைவரும் விரும்புவார்கள். அதில் தவறில்லை. நீங்களும் அதில் விதிவிலக்கல்லவே.

உங்கள் ரசனையோடு ஒத்துப் போகக்கூடிய பாடல்களை இடுகை செய்யவேண்டும் என்று நினைத்தால் மதுரகானங்களின் இரண்டு பக்கங்களே போதும்.

உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன். உங்கள் ரசனை மேம்பட்டது. அது எனக்குப் புரியும். ஏனெனில் இருவர் ரசனையும் ஒன்றே.

அதனால் உங்களைப் புரிந்து கொண்டு உங்களுக்கு ஏற்றார் போல தர என்னால் முடியும். அதற்கு நமக்குள் இருக்கும் தினத் தொடர்பு (கைபேசி) முக்கியப் பங்கு வகிக்கிறது.

நீங்கள் ரசிக்கும் பாடல்களைத்தான் அனைவரும் ரசிக்க வேண்டும் என்பது சரியாகாது. அவர்கள் ரசிக்கும் பாடல்கள் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதும் சரியாகாது. ஒருவர் திரியை தன் தலை மேல் சுமக்கும் போது அவரை ஆரம்பத்திலேயே உற்சாகத்தை இழக்க வைக்க வேண்டாம். ராஜேஷ் சாரிடம் அற்புதமான விஷயங்கள் இருக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.

புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

உங்கள் ரசனைகளைப் பார்த்து வியந்து போனவன் நான். அது என்னுடன் ஒத்துப் போகிறது என்பதில் பெருமகிழ்வும் கொண்டவன் நான். ரசனை மிகுந்த ஒரு ராட்சஷ ரசிகனின்:) நட்பு கிடைத்ததற்கு பூரித்துப் போனவன் நான். அதற்காக மற்றவர்கள் ரசிப்புத்தன்மையை நாம் குறை கூற வேண்டாம். நம்மைப் போல ரசனை உள்ளவர்கள் நிறைய இருக்கிறார்கள். ஞாபகசக்தி என்பது இறைவன் தந்த வரம். அது இங்கு எல்லோரிடமும் வேண்டிய அளவைவிட அதிகமாக இருக்கிறது என்பது எவ்வளவு சந்தோஷப்பட வேண்டிய விஷயம்?

தனக்குத் தெரிந்ததை நினைவுகூர்ந்து அதைப் பதிந்து அதற்கான மற்றவர்கள் கருத்துக்களை அறியும் போது ஏற்படும் சுகம் எவராலும் தர முடியாது பெற முடியாது நடிகர் திலகம் என்ற அந்த இறைவனைத் தவிர. (உங்களுக்கும், எனக்கும்)

ஒரு மேம்பட்ட ரசிகனாக திருத்தங்களை அடுத்தவர் மனம் புண்படாமல் சொல்லுங்கள். சந்தோஷமாக ஏற்றுக் கொள்வார்கள். அதுவே திமிர்ப்பதிவுகளாக வந்தால் வெளுத்து வாங்குங்கள். நானும் உடன் வருகிறேன்.

உற்சாகப்படுத்துங்கள் கோபால். நீங்கள் உற்சாகப்படுத்தினால் ஆதாயம் உங்களுக்கே.

'ஒருவன் காதலனை' வெளுத்து வாங்கி விட்டோமே!

இன்னொன்று பாருங்கள். உங்களிடம் எவ்வளவு மரியாதை வைத்திருந்தால் பங்களிப்பு கார்டில் ராஜேஷ் உங்கள் பெயரை முதலில் குறிப்பிட்டிருப்பார்.:) அதை பயம் என்றுகூட எடுத்துக் கொள்ளலாம்.:)

எப்படி உங்களைத் தூக்கி வைத்துக் கொண்ட்டாடுகிறோம்.. கொண்டாடுகிறார்கள்.

இதையெல்லாம் நீங்கள் கவனித்து கருத்தில் கொள்ள வேண்டும் தலைவா. சரி! இட்லி ஆறுகிறது. சாப்பிட்டுவிட்டு வருகிறேன்.

அதற்குள் திட்டி எழுத ஆயத்தமாகுங்கள். :)

Gopal.s
9th October 2014, 09:47 AM
சரி,சரி, கலை வேந்தனும்,நீங்களும் மாறி மாறி அறிவுரை கூறுவதால்,இந்த நிமிடம் முதல் திருந்தி விட்டேன். இனிமேல் எல்லோரையும் பாராட்டி உற்சாக படுத்த மட்டுமே செய்வேன்.

(எஸ்வி உட்பட)

rajeshkrv
9th October 2014, 09:53 AM
வாசு ஜி,
நன்றி.

இசையரசியின் தந்தை யாரோவை ரசித்ததோடு இதோ ராட்சசியின் ஒரு மாப்ள ஸ்டைலில் ஒரு மலையாள தாலாட்டு

திரையில் அம்பிகா

https://www.youtube.com/watch?v=TLcs34B0IK0

chinnakkannan
9th October 2014, 09:54 AM
ஹாய் ராஜேஷ்.. வாழ்த்துக்கள்.. அழகான ஆரம்பம்..அழகாய் எழுதியிருக்கிறீர்கள்..அழகான பாட்டு தந்தையாரோ.. நான் முதன் முதலில் கேட்கிறேன்.. எழுதுங்கள். இன்னும்.எழுதுங்கள்.. நன்றி

மதுண்ணா.. காலங்கார்த்தால சரோஜாதேவியின் அழகுப் பாடல் அண்ட் ஆரம்பம் இன்றே ஆகட்டும் பாட்டு தாங்க்ஸ்

எஸ்.வி. சார் சங்கே முழங்கு பாடலுக்கு ஒரு ஓ..எனக்கு பிடித்த பாடல்..

தபேலா புல்லாங்குழல் ஆஹா புதியபாதை வீடியோவிற்கு வாசு ஜி நன்றி..

கண்டேனே எந்தன் ப்ரேமை என்ற ஒன்றை இன்று நான்.. அஞ்சலிதேவி என்.டி.ஆர்.. ஆஹா தாங்க்ஸ் ராகவேந்தர் சார்.. ஓ..கிரகணம் விட்டதா நேற்று.. அதான் நிலா கொஞ்சம் பளபளப்பாய் விம் போட்டுத்துலக்கினாற்போல் சிரித்திருந்தது நேற்று..

மீனே மீனே மீனம்மா வும் அழகுப் பாடல் தாங்க்ஸ் எஸ்.வி.ஜி..

ஆக இன்னிக்கு இனிய இசை திக்கெட்டும் பரவும் ஆரம்பம்..

ஆனந்தம் இன்று ஆரம்பம் மெல்லச் சிரித்தாலென்ன இதழ் விரித்தாலென்ன..

நடத்துங்கள் ராஜேஷ் நடத்துங்கள் நாளை பன்னிரண்டாம் பக்கத்தில் சந்திக்கிறேன் (இன்று வெளியூர் சென்று நாளை மதியம் தான் வருவேன்

vasudevan31355
9th October 2014, 09:55 AM
சரி,சரி, கலை வேந்தனும்,நீங்களும் மாறி மாறி அறிவுரை கூறுவதால்,இந்த நிமிடம் முதல் திருந்தி விட்டேன். இனிமேல் எல்லோரையும் பாராட்டி உற்சாக படுத்த மட்டுமே செய்வேன்.

(எஸ்வி உட்பட)

மக்கு!

நான் பிள்ளையார் பிடிக்க நினைக்கிறேன். நீ குரங்காக மாற்ற நினைக்கிறாயே! எதிரணியில் எனக்கொரு நல்ல பெயர் உண்டு என்று நானாக நினைத்துக் கொண்டிருக்கிறேன்.:) அதையும் கெடுக்கலாம்னு பாக்கிறீங்களா?:)

எத்தனை முறைதான் வழுக்கி வழுக்கி வழுக்கி விழுந்த உனக்கு வாழ்வு தருவது?:)

vasudevan31355
9th October 2014, 10:06 AM
கோ,

இந்தாருங்கள்! உங்களுக்குப் பிடித்த ரவி. அதே போல காஞ்சனா. நிச்சயமாக நீங்கள் பார்த்து நாட்களாகி இருக்கும். அபூர்வமான ஒன்றுதான். உங்களுக்காகத் தேடிக் கண்டுபிடித்தேன் லஞ்சமாக.:)

'கேட்டால் ஒன்று தர வேண்டும்' தேடி வந்த திருமகள் படத்தில். 'அதே கண்கள்' பார்த்து பார்த்து போரடித்த கண்களுக்கு மாற்றாக அதே ஜோடியின் கருப்பு வெள்ளை பாடல்.
கொஞ்சமாவது திருப்தி கிடைக்கும் என்று நினைக்கிறேன். யானைப் பசிக்கு அரிசிப் பொரி.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Isc6FZuWEvA

vasudevan31355
9th October 2014, 10:11 AM
வாசு ஜி,
நன்றி.

இசையரசியின் தந்தை யாரோவை ரசித்ததோடு இதோ ராட்சசியின் ஒரு மாப்ள ஸ்டைலில் ஒரு மலையாள தாலாட்டு

திரையில் அம்பிகா



கண்டிப்பாக பார்த்து விட்டு.... பார்த்துவிட்டுதான் எழுதுவேன் ராஜேஷ்ஜி.:) (சிலருக்கு ரொம்ப சந்தேகம். ஆனால் நானில்லைப்பா. ராஜேஷ்ஜி! சிலர் எப்படி இதையெல்லாம் கவனிக்கிறார்கள் பார்த்தீர்களா? ஹய்யா! நமக்குத்தான் வெற்றி)

gkrishna
9th October 2014, 10:11 AM
மூன்றெழுத்து வெற்றியை சுவைத்து கொண்டு இருக்கும் மூன்றெழுத்து ராஜேஷ் சார் ,

மூன்றாம் பாகம் கலை கட்டியாச்சு (களை என்றால் எதிர்மறை என்பதால் கலை என்று நேர்மறை பதத்தை உபயோகபடுத்தி உள்ளேன்)

மூன்றெழுத்து வினோத் அவர்கள் மூன்றெழுத்து நினைவு படுத்தினால் பின்னாடியே மூன்றெழுத்து கோபால் படுத்தலும் உண்டு . ஆனால் அவரே சில சமயம் இடும் பதிவுகளுக்கு ஓவும் உண்டு :)

கவலை என்ற மூன்றெழுத்து இந்த திரியில் கலந்து கொள்பவர்கள் அனைவருக்கும் நீங்கட்டும்.

வெற்றி என்ற மூன்றெழுத்து அனைவரின் வாழ்விலே கிடைக்கட்டும்

வாழ்க என்ற மூன்றெழுத்து கொண்டு அனைவரயும் வாழ்த்தி நன்றி என்ற மூன்றெழுத்து கொண்டு முடிக்கிறேன்.

பட்டின பிரவேசம் திரை படத்தில் மீரா (அறிமுகம்) தொடர்ந்து இனிக்கும் இளமை முகமாய் மாறி சிட்டுகுருவி ஆக பறந்து பின்னாளில் சிந்து பைரவி பாடிய ஜே கே பீ யுடன் தண்ணி தொட்டி ஆக மாறியவர்

https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcRY9iZPj9GGwJVWgX0UuRBR3B22SGYwr 7PGmOoWku5mUk7jLMyK7w

'வாங்கடி சிட்டுகளா வந்து வட்டமிட்டு பாட்டு படிப்போம் ' என்று ராட்சசி குரலில் மெல்லிசை மன்னரின் பாடல் ஒலிக்கும் நேரம்

ம ம ம கானத்தின் மூன்றாவது பாகத்தை கைதட்டி ஆர்பரித்து வரவேற்கும்

http://www.youtube.com/watch?v=7y2JtJuh74A

vasudevan31355
9th October 2014, 10:24 AM
சரி,சரி, கலை வேந்தனும்,நீங்களும் மாறி மாறி அறிவுரை கூறுவதால்,இந்த நிமிடம் முதல் திருந்தி விட்டேன். இனிமேல் எல்லோரையும் பாராட்டி உற்சாக படுத்த மட்டுமே செய்வேன்.

(எஸ்வி உட்பட)

செய்வீர்கள்.

கொக்கு மீனைக் கொத்தாமல் இருந்தால்:)
புலி மானை கொல்லாமல் இருந்தால்:)

அப்போதுதான் நடக்கும். ம்...(நாகையா பெருமூச்சு):)

gkrishna
9th October 2014, 10:35 AM
vasu sir

உங்களுக்கு ஒரு PM அனுப்பி உள்ளேன்

vasudevan31355
9th October 2014, 11:14 AM
ராட்சஷியை மறக்கலாகுமா?

இதோ! 'மரோசரித்ரா'வில் கருப்பு அழகு குள்ள சரிதாவுக்கு ஈஸ்வரி குரல் தர, கமல் உடன் ஆட, கலக்கலோ கலக்கலோ கலக்கல் பாடல்.

'Bhale Bhale Mogaadivoy'


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=lJXfKvFq_HE

vasudevan31355
9th October 2014, 11:24 AM
vasu sir

உங்களுக்கு ஒரு PM அனுப்பி உள்ளேன்

பார்த்துவிட்டேன் கிருஷ்ணாஜி! பதிலும் அளித்திருக்கிறேன்.

Richardsof
9th October 2014, 11:25 AM
http://i62.tinypic.com/w06jrp.jpg

SUPERB VASUDEVAN SIR

YOU ARE CREATED A NEW RECORD. ALL THE BEST

gkrishna
9th October 2014, 11:29 AM
அற்புத 6000 பதிவுகளை கடந்து வெற்றி கொடி பறக்க விட்டு கொண்டு இருக்கும் வாசு சார் அவர்களுக்கு வாழ்த்துகள்

நினைவு படித்திய எஸ்வி சார் அவர்களுக்கு நன்றி

http://cdn.innovativelanguage.com/wordlists/media/thumb/7341_fit512.jpg

vasudevan31355
9th October 2014, 11:39 AM
திரு சி.ராமச்சந்திரா அவர்களின் இசையில் பாட்டொன்று கேட்டேன்
இதில் இடம்பெற்ற குங்குமம் பிறந்தது முகத்திலா இசையரசியுடன் மதுரக்குரலோன் பாட அந்த பாடலும் மிகப்பிரபலம்...

ராஜேஷ்..

//அதை மட்டும் விட முடியுமா ? இதோ அதுவும் வந்தாச்சு ( கொஞ்சம் வீடியோ குவாலிட்டி சுமார்தான் )

கோபால் ஜி, கிருஷ்ணா ஜி, வாசு ஜி.. இந்த ஹீரோயின் யாரு ?//

மதுஜி!

'குங்குமம் பிறந்தது மரத்திலா' பாடலில் நடித்த நடிகை பெயர் இந்திராதேவி.

சுமைதாங்கி, இன்னும் சில பழைய படங்களில் நடித்திருப்பார்.

என்னுடைய 'பேசும் படம்' இதழ் பக்கங்களில் இவரது புகைப்படம் பார்த்த ஞாபகம் இருந்ததால் தேடிக் கண்டுபிடித்தேன். இதோ உங்களுக்காக இந்திராதேவியின் வண்ணப் புகைப்படம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/IMG-13.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/IMG-13.jpg.html)

vasudevan31355
9th October 2014, 11:49 AM
'சுமைதாங்கி' படத்தின் டைட்டில் கார்டில் நடிகை இந்திராதேவியின் பெயர் இருப்பதைக் காணலாம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/inthirathevi.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/inthirathevi.jpg.html)

JamesFague
9th October 2014, 11:49 AM
Madura Ganathin Mannane,

Nadigar Thilagathin Pithane

Natpin Illakkaname


Congratulations for your 6000 post and come back to our NT Thread with a bang at the earliest.


Regards

gkrishna
9th October 2014, 11:51 AM
அருமை வாசு சார்

சுமைதாங்கி படத்தில் முத்துராமன் மனைவி இவரா ?

சுமைதாங்கி
முத்துராமன் - ஜெமினி அண்ணன் - .
விஜயலட்சுமி தங்கை - அவர் காதலன் கணவர் ஹரிநாத் (எங்கிருந்தோ வந்தாள் வில்லன் )
தேவிகா ஜெமினி காதலி
சாரங்கபாணி ஜெமினி அப்பா
ராகவன் -தேவிகா அப்பா என்று நினைவு

லீலாவதி ,இந்திரா தேவி,சகுந்தலா (ஜி சகுந்தலா வா ) கொஞ்சம் விளக்குக .மண்டை காயுது .இல்லை என்றால் நைட் போய் படம் பார்க்கணும்

chinnakkannan
9th October 2014, 12:00 PM
Congrats vasu ji for 6000 posts..Innum niraiya emakkuth tharuga

Gopal.s
9th October 2014, 12:48 PM
ஏனோ தானோவென்று இல்லாமல், cut paste ஓபி அடிக்காமல், பாட்டுக்கு பாட்டு ரொம்ப போடாமல்,உழைத்து இழைத்து உண்மையாக ஆறாயிரம் கண்ட வாசுவிற்கு மனப் பூர்வமான வாழ்த்துக்கள். சிலர் ஏண்டா போடுகிறார்கள் என்று வெறுப்பாக இருக்கும்.(நம் திரியிலும் குறைந்த நாட்களில் நிறைய பதிவு ஆட்கள் உண்டே?ஒரு தன்முயற்சியோ ,சுய ஆர்வமோ இல்லாமல் மனோ வியாதி போல அதை செய்யும் நபர்கள்)



வாசு உன் சாதனை நிஜமானது. உண்மையாக தலை வணங்குகிறேன்.

gkrishna
9th October 2014, 01:42 PM
போன சண்டே(05/09/2014) ராஜா படத்தில் ஒரு அருமையான நகைச்சுவை உடன் கூடிய காட்சி அமைப்பு .

கமிஷினர் பிரசாத்(மேஜர் அய்யா) ஏர்போர்ட் இல் இருந்து வெளி வரும் போது வாசலில் இரண்டாவது சந்திரபாபு டுட்டி பார்த்து கொண்டு இருப்பார்

நம்ம மேஜர் அய்யா அவரை முதலாவது சந்திரபாபு (கான்ஸ்டபிள் பட்டாபி) என்று நினைத்து 'இங்க என்ன பண்ணிட்டு இருக்கே ' என்று கேட்பார்.

சந்திரபாபு - 'டுட்டி பார்த்து கொண்டு இருக்கேன்' .

மேஜர் அய்யா - 'உனக்கு தான் லீவ் sanction ஆகலையே '

சந்திரபாபு - 'ஆமாம் .அதுதான் இங்கே டுட்டி பார்த்து கொண்டு இருக்கிறேன்'

மேஜர் அய்யா - 'அப்பறம் கவனிசிகுறேன்'

சந்திரபாபு - ' யார் பெத்த பிள்ளையோ மறை கழண்டு அலையுது ' :)

மிகவும் ரசித்த நகைச்சுவை காட்சி

(வாசு அவர்களின் ராஜா சேவையின் தொடர்ச்சி)

gkrishna
9th October 2014, 01:47 PM
வாசு சார்

இரண்டாவது பாகத்தில் திரு மகேந்தர் ராஜ் சீனியர் ஹப்பர் சில பதிவுகள் வெளியிட்டது நினைவில் உண்டு. 'நன்றி நவிலலில்' அவர் பெயர் விட்டு விட்டது . கமல் இன் 100 வது படமான ராஜ பார்வை திரை படத்திற்கு முதலில் 'அந்தி மழை' என்று பெயர் வைத்து பின் 'ராஜ பார்வை' என்று வைத்ததாக எழுதிய நினைவு.

திரு மகேந்தர் ராஜ் அவர்களுக்கும் நன்றி .

மூன்றாவது பாகத்திலும் உங்கள் முத்தான பதிவுகள் தொடர வேண்டும் என விரும்பி கேட்டு கொள்ளும்

நட்புடன்

கிருஷ்ணா

gkrishna
9th October 2014, 02:09 PM
நன்றி மது சார்

காவிய தலைவி 'ஆரம்பம் இன்றே ஆகட்டும் ' பாடலின் காணொளி வடிவம் வழங்கியமைக்கு

பெல்பாட்டம் சௌகார் handsome ரவி

ஈஸ்வரி பாலா இணைந்து கலக்கும் 70 களில் வெளி வந்த மெல்லிசை மன்னரின் இளமை துள்ளல் பாடல் .

ஊட்டி வரை உறவு 'யாரோடும் பேச கூடாது ஆகட்டும் ' பாடலை கொஞ்சம் ஓத்து இருக்கும் .

இந்த 'யாரோடும் பேச கூடாது ஆகட்டும் ' பாடலும் ஊட்டி வரை உறவு திரை படத்தில் இடம் பெறவில்லை .இதற்கு பதிலாகத்தான் 'ராஜ ராஜ ஸ்ரீ ' பாடல் இடம் பெற்றதாக நினைவு .வேறு எந்த திரை படத்திலாவது 'யாரோடும் பேச கூடாது ஆகட்டும் ' பாடல் இடம் பெற்றதா ?

madhu
9th October 2014, 02:29 PM
Thanks Vasu ji..

மனோரமா கதா நாயகியாக நடித்த "கொஞ்சும் குமரி" படத்தில் அந்தக் கால ஜேசுதாஸ் வசந்தா டூயட்
"ஆசை வந்த பின்னே"வில் நடித்தவர் இந்திராதேவி. கண்டுகொண்டேன்...

http://youtu.be/_qLLN7Ka7MM

gkrishna
9th October 2014, 02:41 PM
மது சார்

கன்னட திரை உலகில் 70 களில் இந்திரா தேவி என்று ஒரு நடிகை உண்டு
அவரும் இவரும் ஒருவரா ?

gkrishna
9th October 2014, 02:50 PM
பாகம் இரண்டு பதிவு 3430-3433 இன் தொடர்ச்சி

http://lh4.ggpht.com/-qV4UHwRmDdI/VCsXLA1cV8I/AAAAAAAAN18/Ov1Sz2ysRZw/w1280/070000.jpg

gkrishna
9th October 2014, 02:51 PM
http://lh5.ggpht.com/-4kVj-ICcJ24/VCsXLUwEImI/AAAAAAAAN2E/EpRkZVMcNtw/w1280/070001.jpg

gkrishna
9th October 2014, 02:51 PM
http://lh5.ggpht.com/-pn7MR4R4M88/VCsXMWaUicI/AAAAAAAAN2Y/JtwHwIN1PPs/w1280/070002.jpg

madhu
9th October 2014, 02:51 PM
கிருஷ்ணா ஜி..
எனக்குத் தெரியவில்லை. மற்ற நண்பர்களுக்குத் தெரிந்திருக்கலாம். விரைவில் பதில் கிடைக்கும் :)

gkrishna
9th October 2014, 02:52 PM
http://lh3.ggpht.com/-f_iXyj-q0po/VCsXMjsVOMI/AAAAAAAAN2M/0zD1pnd7hok/w1280/070003.jpg

Russellmai
9th October 2014, 03:00 PM
டியர் வாசு சார்,
ஆறாயிரம் பதிவுகளைக் கடந்தமைக்கு என் உளமார்ந்த வாழ்த்துக்கள்..
அன்புடன் கோபு.

gkrishna
9th October 2014, 03:02 PM
கிருஷ்ணா ஜி..
எனக்குத் தெரியவில்லை. மற்ற நண்பர்களுக்குத் தெரிந்திருக்கலாம். விரைவில் பதில் கிடைக்கும் :)

நன்றி மது சார்

Russellcaj
9th October 2014, 03:05 PM
Mr. Rajesh,

Congrads for opening the new thread of Part 3, successfully.
Hope will continue journey with new dimentions of song presentation and analysis.

Mr. Vasudevan,

Thanks for remembering me at all time and mentioning my name too at the end of Part 2.

Mr. Gopal,

I fully agree and coincide with your views.
Your posts and informations are wonderful.

go ahead.

stl.

Russellcaj
9th October 2014, 03:23 PM
Mr. Vasudevan,

Just now I noticed through other hubbers post.

You have successfully crossed 6,000 posts and kindly accept my hearty congrats.

As Mr. Gopal said, each and every posts are very wonderful with your full fleged involvement.

Now I started reading all posts in Sivaji forum and surprised about your involvement for every post.

wish you to see many thousands of valuable series.

stl.

parthasarathy
9th October 2014, 04:16 PM
Dear Mr. Rajesh,

Hearty congratulations on opening the Part-3 of this thread.

I am sure, this threat will get strengthened by your contributions, other fellow hubbers and new hubbers as well. I will also try my level best to contribute.

Regards,

R. Parthasarathy

parthasarathy
9th October 2014, 04:18 PM
Dear Mr. Vasudevan,

Hearty congratulations on the new milestone of 6000 posts.

Regards,

R. Parthasarathy

madhu
9th October 2014, 05:31 PM
http://img.xcitefun.net/users/2011/09/265621,xcitefun-6000-posts.gif

வாசு ஜி... CONGRATULATIONS !!

Richardsof
9th October 2014, 06:45 PM
மனதை கவரும் மதுர கானங்கள் - 3....அமைச்சரவை பட்டியல் [ கற்பனை ]

மாண்பு மிகு முதல்வர் - திரு ராஜேஷ் - இசைத்துறை - இசை அரசி - பன்மொழி பாடல்கள்
.
மாண்பு மிகு திரு கிருஷ்ணா அவர்கள் - பத்திரிகை பதிவுகள் - வீடியோ காட்சிகள் .
மாண்பு மிகு திரு வாசுதேவன் அவர்கள் - கட்டுரைகள் - பன்மொழி படங்கள் ஆராய்ச்சியாளர் .
மாண்பு மிகு திரு ராகவேந்திரன் அவர்கள் பொங்கும் பூம்புனல் -இரவின் மடியில் காப்பாளர்
மாண்பு மிகு திரு கார்த்திக் அவர்கள் எண்ணங்களின் ஊர்வல அமைப்பாளர்
மாண்பு மிகு திரு கோபால் அவர்கள் விமர்சகர் -ஆய்வாளர் .
மாண்பு மிகு திரு வினோத் அவர்கள் ஆவணங்கள் .
மாண்பு மிகு திரு சின்னகண்ணன் கவிதை - கட்டுரை - களஞ்சியம்
மாண்பு மிகு திரு மது அவர்கள் நடமாடும் இசை களஞ்சியம்
மாண்பு மிகு திரு ராஜ ராஜ் அவர்கள் மூத்த இசை களஞ்சியம்

பிற மந்திரிகள் மற்றும் அவர்கள் துறைகள் பின்னர் அறிவிக்கப்படும் .

சபாநாயகர் - துணை சபாநாயகர் - அரசு கொறடா மற்றும் அவைத்தலைவர் பதவிகள் பற்றிய தகவல் ஓரிரு நாட்களில் முதல்வர் திரு ராஜேஷ் அறிவிப்பார் ..

gkrishna
9th October 2014, 06:57 PM
மனதை கவரும் மதுர கானங்கள் - 3....அமைச்சரவை பட்டியல் [ கற்பனை ]

மாண்பு மிகு முதல்வர் - திரு ராஜேஷ் - இசைத்துறை - இசை அரசி - பன்மொழி பாடல்கள்
.
மாண்பு மிகு திரு கிருஷ்ணா அவர்கள் - பத்திரிகை பதிவுகள் - வீடியோ காட்சிகள் .
மாண்பு மிகு திரு வாசுதேவன் அவர்கள் - கட்டுரைகள் - பன்மொழி படங்கள் ஆராய்ச்சியாளர் .
மாண்பு மிகு திரு ராகவேந்திரன் அவர்கள் பொங்கும் பூம்புனல் -இரவின் மடியில் காப்பாளர்
மாண்பு மிகு திரு கார்த்திக் அவர்கள் எண்ணங்களின் ஊர்வல அமைப்பாளர்
மாண்பு மிகு திரு கோபால் அவர்கள் விமர்சகர் -ஆய்வாளர் .
மாண்பு மிகு திரு வினோத் அவர்கள் ஆவணங்கள் .
மாண்பு மிகு திரு சின்னகண்ணன் கவிதை - கட்டுரை - களஞ்சியம்
மாண்பு மிகு திரு மது அவர்கள் நடமாடும் இசை களஞ்சியம்
மாண்பு மிகு திரு ராஜ ராஜ் அவர்கள் மூத்த இசை களஞ்சியம்

பிற மந்திரிகள் மற்றும் அவர்கள் துறைகள் பின்னர் அறிவிக்கப்படும் .

சபாநாயகர் - துணை சபாநாயகர் - அரசு கொறடா மற்றும் அவைத்தலைவர் பதவிகள் பற்றிய தகவல் ஓரிரு நாட்களில் முதல்வர் திரு ராஜேஷ் அறிவிப்பார் ..

கொடுத்து கொடுத்து சிவந்த கரமாம் பொன்மன செம்மலின் வழி வந்த எஸ்வி அவர்களே

கிள்ளி கொடுக்காமல் அள்ளி அள்ளி கொடுக்கும் உங்கள் பண்பு வியக்க
வைக்கிறது.

வாழ்க வாழ்க!

வளரட்டும் உங்கள் கற்பனை திறன் .
தொடரட்டும் உங்கள் பணி நம் திரியின் வளர்ச்சிக்கு
மலரட்டும் எங்கும் சகோதரத்துவம்
https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcQNxzI8PM_MWx90Qe6WIx8ZhNkaO7zVx t6wFpBc19zYDxPEAFQd

RAGHAVENDRA
9th October 2014, 07:25 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/Vasu6000grtgs_zpsbf4c31ed.jpg

rajeshkrv
9th October 2014, 08:05 PM
அருமை வாசு சார்

சுமைதாங்கி படத்தில் முத்துராமன் மனைவி இவரா ?

சுமைதாங்கி
முத்துராமன் - ஜெமினி அண்ணன் - .
விஜயலட்சுமி தங்கை - அவர் காதலன் கணவர் ஹரிநாத் (எங்கிருந்தோ வந்தாள் வில்லன் )
தேவிகா ஜெமினி காதலி
சாரங்கபாணி ஜெமினி அப்பா
ராகவன் -தேவிகா அப்பா என்று நினைவு

லீலாவதி ,இந்திரா தேவி,சகுந்தலா (ஜி சகுந்தலா வா ) கொஞ்சம் விளக்குக .மண்டை காயுது .இல்லை என்றால் நைட் போய் படம் பார்க்கணும்

மதுண்ணா நானும் பார்த்த உடன் இந்திரா தேவி மாதிரி தான் இருக்கு என்று நினைத்தேன் இருந்தாலும் பெரியவர்கள் கன்பர்ம் செய்யட்டுமே என்று இருந்தேன்
இந்திரா தேவியே தான்.. ஆறுமுகான பொருள் பாடலிலும் வருவார். பின்னாட்களில் பல தொலைக்காட்சி தொடர்களிலும் படங்களிலும் வயதான வேடமேற்றவர்.

ஜென்ம நட்சத்திரத்தில் குழந்தையை பாதுகாக்கும் வேலைக்காரி வேடம் இவருக்கு .... நல்ல நடிகை ..

rajeshkrv
9th October 2014, 08:06 PM
மனதை கவரும் மதுர கானங்கள் - 3....அமைச்சரவை பட்டியல் [ கற்பனை ]

மாண்பு மிகு முதல்வர் - திரு ராஜேஷ் - இசைத்துறை - இசை அரசி - பன்மொழி பாடல்கள்
.
மாண்பு மிகு திரு கிருஷ்ணா அவர்கள் - பத்திரிகை பதிவுகள் - வீடியோ காட்சிகள் .
மாண்பு மிகு திரு வாசுதேவன் அவர்கள் - கட்டுரைகள் - பன்மொழி படங்கள் ஆராய்ச்சியாளர் .
மாண்பு மிகு திரு ராகவேந்திரன் அவர்கள் பொங்கும் பூம்புனல் -இரவின் மடியில் காப்பாளர்
மாண்பு மிகு திரு கார்த்திக் அவர்கள் எண்ணங்களின் ஊர்வல அமைப்பாளர்
மாண்பு மிகு திரு கோபால் அவர்கள் விமர்சகர் -ஆய்வாளர் .
மாண்பு மிகு திரு வினோத் அவர்கள் ஆவணங்கள் .
மாண்பு மிகு திரு சின்னகண்ணன் கவிதை - கட்டுரை - களஞ்சியம்
மாண்பு மிகு திரு மது அவர்கள் நடமாடும் இசை களஞ்சியம்
மாண்பு மிகு திரு ராஜ ராஜ் அவர்கள் மூத்த இசை களஞ்சியம்

பிற மந்திரிகள் மற்றும் அவர்கள் துறைகள் பின்னர் அறிவிக்கப்படும் .

சபாநாயகர் - துணை சபாநாயகர் - அரசு கொறடா மற்றும் அவைத்தலைவர் பதவிகள் பற்றிய தகவல் ஓரிரு நாட்களில் முதல்வர் திரு ராஜேஷ் அறிவிப்பார் ..

அட ராமா டம்மி முதல்வர் இல்லையே .. .... என்ன வெச்சு காமிடி கீமிடி பன்னலையே ????:think:

rajeshkrv
9th October 2014, 08:18 PM
stella rock and parthasarathy thank you for the wishes..

ஆயிரம் பதிவுகளை கடந்தாலே பெரிய விஷயம் .. 6000 பதிவுகளை கடந்து கம்பீரமாக நடைபோடும் வாசு ஜி அவர்களுக்கு அடியேனின் மனமார்ந்த வாழ்த்துக்கள் .

gkrishna
9th October 2014, 10:50 PM
இந்திரா தேவி ஜாடை கொஞ்சம் சாரதா அவர்களை ஓத்து இருக்கும் சரியா ராஜேஷ் சார் ,மது சார்

gkrishna
9th October 2014, 10:57 PM
நாசர் நடித்து வெளிவந்த ஜென்ம நட்சத்திரம் தானே ராஜேஷ் சார்
தக்காளி ஸ்ரீனிவாசன் தயாரிப்பு ,கொஞ்சம் த்ரில்லர் டைப்

vasudevan31355
9th October 2014, 11:06 PM
அட ராமா டம்மி முதல்வர் இல்லையே .. .... என்ன வெச்சு காமிடி கீமிடி பன்னலையே ????:think:

எங்க முதல்வர் ராஜேஷ்ஜியை எங்கள் மனச்சிறையில் வைத்து அடைத்து விட்டோம். இனி ஜாமீனெல்லாம் கிடையவே கிடையாது.:) ராம்ஜெத் ஆக கோபாலே வந்தாலும் சரி:). உள்ளேயே கிடக்க வேண்டியதுதான். இல்லையா வினோத் சார்?

vasudevan31355
9th October 2014, 11:08 PM
பெரியவர்கள் கன்பர்ம் செய்யட்டுமே என்று இருந்தேன்
இந்திரா தேவியே தான்..


கண்டிப்பா நான் இல்லைப்பா. நான் இன்னும் பிறக்கவே இல்லை.:)

vasudevan31355
9th October 2014, 11:22 PM
இதோ இந்திராதேவி 'கந்தன் கருணை' படத்தில் 'ஆறுமுகமான பொருளி'ல்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/adscvb.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/adscvb.jpg.html)

rajeshkrv
9th October 2014, 11:32 PM
கிருஷ்ணா ஜி. ஆம் சாரதாவை போல் இருப்பார்.

வாசு ஜி , மனச்சிறையில் என்றுமே இருக்க நான் ரெடி

rajeshkrv
9th October 2014, 11:35 PM
ராதைக்கேற்ற கண்ணனோ சீதைக்கேற்ற ராமனோ பாடலில் தேவிகா பாடுவது இந்திராதேவிக்காகத்தான்..

ஆம் கிருஷ்ணா ஜி, ஜென்ம நட்சத்திரம் நாசர், சிந்துஜா, விவேக் நடித்த படம்

Richardsof
10th October 2014, 05:51 AM
வாசு சார்

கோபால் இந்தியாவிற்கு வாதாட நுழைந்தால் அவரை சுற்றி வளைத்து ''ஹப் -- சட்டத்தின் கீழ் கைது செய்து
ஏற்கனவே அவர் புரிந்த பல கவிதை , கிண்டல் ,,நய்யாண்டி , அசுத்தமான வார்த்தைகள் , தன்னை தானே உயர்த்தி
கொள்தல் , கால்கள் - விரல்களால் எழுதியது போன்ற குற்றங்கள் புரிந்தமைக்காக ''ஹைதராபாத் '' சிறையில்
அடைக்கப்ட்டு விசாரிக்கப்டுவார் .

அரசு தரப்பு வாதம்

தினமும் கோபால் 5 ஜானகி பாடலை முழுமையாக பாட வேண்டும்

தினமும் மெல்லிசை மன்னரின் பெருமைகளை புகழ வேண்டும்

ஜெய்சங்கரின் படங்கள் எல்லாவற்றையும் பார்த்தே தீர வேண்டும்

நீதிபதி தன்னுடைய தீர்ப்பை எம்ஜிஆர் தரப்பு வக்கீல்களுடன் கலந்து பேசி தன்னுடைய தீர்ப்பை வழங்குவார் ..:wave::wave::wave::wave::wave::exactly::exactly: :exactly:

rajraj
10th October 2014, 06:53 AM
Rajesh,
I know only a few Telugu movie songs. Here is one from Dr.Chakravarthi.

Manasuna Manasai........

http://www.youtube.com/watch?v=W34q8Qp7al4

This is in Dwijavanti, a raga I like.

I watched only one Telugu movie,Devadas, in India when I was in Bangalore(IISc student). That too because some of my close friends were from Andhra ! :) The next Telugu movie was Sankarabaranam. Most of the Telugu songs I know are classical compositions. I can post some that were used in Telugu movies, if you like. :)

Gopal.s
10th October 2014, 07:01 AM
அட ராமா டம்மி முதல்வர் இல்லையே .. .... என்ன வெச்சு காமிடி கீமிடி பன்னலையே ????:think:


அமைச்சரவை அமைத்தது யார் என்று தெரிந்துமா உங்களுக்கு இந்த சந்தேகம்? செயின்ட் ஜார்ஜ் கோட்டை ஈகா தியேட்டர் அருகே வினோத் மேற்பார்வையில் கட்ட பட்டு வருகிறது.

Gopal.s
10th October 2014, 07:06 AM
வாசு சார்

கோபால் இந்தியாவிற்கு வாதாட நுழைந்தால் அவரை சுற்றி வளைத்து ''ஹப் -- சட்டத்தின் கீழ் கைது செய்து
ஏற்கனவே அவர் புரிந்த பல கவிதை , கிண்டல் ,,நய்யாண்டி , அசுத்தமான வார்த்தைகள் , தன்னை தானே உயர்த்தி
கொள்தல் , கால்கள் - விரல்களால் எழுதியது போன்ற குற்றங்கள் புரிந்தமைக்காக ''ஹைதராபாத் '' சிறையில்
அடைக்கப்ட்டு விசாரிக்கப்டுவார் .

அரசு தரப்பு வாதம்

தினமும் கோபால் 5 ஜானகி பாடலை முழுமையாக பாட வேண்டும்

தினமும் மெல்லிசை மன்னரின் பெருமைகளை புகழ வேண்டும்

ஜெய்சங்கரின் படங்கள் எல்லாவற்றையும் பார்த்தே தீர வேண்டும்

நீதிபதி தன்னுடைய தீர்ப்பை எம்ஜிஆர் தரப்பு வக்கீல்களுடன் கலந்து பேசி தன்னுடைய தீர்ப்பை வழங்குவார் ..:wave::wave::wave::wave::wave::exactly::exactly: :exactly:

வாழ்க உங்கள் ஜனநாயக பண்பு. மாற்றாரையும் போற்றும் பெருந்தன்மை.எனக்காக வாதாட கிருஷ்ணாவை நியமிக்கிறேன். பழைய தீர்ப்புகளை cut paste பண்ணி ஜட்ஜை அசர வைத்து விடுவார்.

vasudevan31355
10th October 2014, 07:22 AM
வாழ்க உங்கள் ஜனநாயக பண்பு. மாற்றாரையும் போற்றும் பெருந்தன்மை.எனக்காக வாதாட கிருஷ்ணாவை நியமிக்கிறேன். பழைய தீர்ப்புகளை cut paste பண்ணி ஜட்ஜை அசர வைத்து விடுவார்.

நீங்க கட் பேஸ்ட் எழுதி எழுதி டூத் பேஸ்ட் மேலேயே வெறுப்பு வர ஆரம்பிச்சுடுத்து கோ. :)

vasudevan31355
10th October 2014, 07:24 AM
வினோத் சார்,

தண்டனை மிக அதிகம். என் நண்பனுக்காக கொஞ்சம் குறைத்துக் கொள்ளக் (கொல்லக்) கூடாதா? :)
ஜெய்சங்கர் படம் மட்டும் பார்க்க அனுமதி தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.:)

Gopal.s
10th October 2014, 07:31 AM
வினோத் சார்,

தண்டனை மிக அதிகம். என் நண்பனுக்காக கொஞ்சம் குறைத்துக் கொள்ளக் (கொல்லக்) கூடாதா? :)
ஜெய்சங்கர் படம் மட்டும் பார்க்க அனுமதி தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.:)

இதுவாவது பரவாயில்லேப்பா. பட்டணத்தில் பூதம்,காலம் வெல்லும்,கங்கா,எங்க பாட்டன் சொத்து,ஜம்பு ,நூற்றுக்கு நூறுன்னு சமாளிச்சிடுவேன். தேவர் படங்களை வரிசையாக பார்க்க சொன்னால்?????!!!!!!

rajeshkrv
10th October 2014, 07:32 AM
ankil .. Dr chakravarthy .. my fav movie .

PS had fantastic songs for Savitiri.. Neevu leka veena , padamani nannadaga .... Awesome songs . will share it here

Gopal.s
10th October 2014, 07:35 AM
நீங்க கட் பேஸ்ட் எழுதி எழுதி டூத் பேஸ்ட் மேலேயே வெறுப்பு வர ஆரம்பிச்சுடுத்து கோ. :)


வேப்பங்குச்சி காரா? உன்னை தெரியாதா? நீ டூத் பேஸ்ட் விளம்பரங்களில்தான் பார்த்திருப்பாய்.உனக்கென்ன போச்சு?

vasudevan31355
10th October 2014, 08:37 AM
இன்றைய ஸ்பெஷல் (89)

இந்த மாதிரி இனிமையான பாடல்கள் கிடைக்க, பாடகர் , பாடகியர் கிடைக்க தமிழன் தவம்தான் செய்திருக்க வேண்டும்.

என்ன மாதிரி ஒரு பாடல்!

ஆயுசு முழுக்க கேட்டுக் கொண்டே இருக்கலாம்.

ஆண்களை மடக்கி அவர்களை அடக்கி, வஞ்சக வலையில் சிக்க வைக்கும் பகாவலி ராணி. ஏமாந்து விட்டில் பூச்சிகளாய் விளக்கில் விழுந்து கருகும் வீரர்கள்.

'கவறாடும் புவனம். பந்தயம் 10000 பொன். வெற்றிக்கு மணமாலை. வீழ்ச்சிக்கு சிறைச்சாலை'

பகடை ஆட்டம் ஆட சதி பின்னிய வலை அழைப்பு.

ஏமாந்து வருகிறான் போரோப்பு ராஜா. பகடையில் மன்னன் பன்னிரெண்டு கேட்க ராணி பகடை உருட்டுகிறாள். உடன் உள்ள சதிகாரன் முன்னேற்பாட்டின்படி விளக்கை அணைத்து வேறொரு பகடை பன்னிரண்டை தயார் செய்து மாற்றி வைத்து விடுகிறான். விளக்கின் ஒளி மறுபடி திட்டமிட்டபடி வந்தபின் பார்த்தால் மன்னன் கேட்ட பன்னிரண்டு. அதிர்ச்சி அவனுக்கு. வெற்றி. ராணிக்கு வஞ்சகத்தின் மூலம் வெற்றி. தோல்வி. போட்டியிட வந்த மன்னனுக்கு சதி அறியாத தோல்வி. மண்ணைக் கவ்வி விட்டான். விடுவாளா ராணி? அடிமைப்படுத்துகிறாள். கேவலப்படுத்துகிறாள். ஆண் இனத்தின் நிலைமையை அவமானப்படுத்துகிறாள்.

மேற்கண்ட சூழல் முழுதும் இந்த அற்புதமான பாட்டிலே.

போரோப்பு மன்னன் ஈ.ஆர்.சகாதேவன் (என்ன ஒரு தேஜஸ் மற்றும் அழகு) டி.ஆர் ராஜகுமாரி அழகுராணியிடம், "திமிர்த்தனம் கொள்ளாதே ....ஆடவரை ஏளனமாய் எண்ணாதே" என்று சொல்லி ஆட்டத்தைத் தொடங்குவதும், 'என்ன வேண்டும் கேள்' என்று ராஜகுமாரி கேட்க, 12 போட சகாதேவன் கேட்க, சூட்சுமக்கார தங்கவேலு தந்திரமாக விளக்கை அணைத்து வேறு 12 எண்ணிக்கையுள்ள பகடையை அங்கு மாற்றி வைத்துவிட, அதிர்ச்சித் தோல்வியில் சகாதேவன் உறைய, ஆண்களின் பரிதாப நிலையை கேலி செய்து ராஜகுமாரி பாட அற்புதமாகப் படமாக்கப்பட்ட பாடல்.

ராஜகுமாரி கொள்ளை அழகு. முகம் அருகே காட்டப்படும் போது பால் நிலவு காய்கிறது முகத்தில். பல்வரிசைகளும், கண்கள் புரியும் ஜாலமும் எந்த ஆடவரையும் பைத்தியம் பிடிக்க வைக்கத்தான் செய்யும். இந்த அழகு கொண்ட நடிகை இன்னும் இங்கு பிறக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

'வீராப்பு பேசி வந்த போரோப்பு ராஜாவை வெட்டிட சொல்லு'

என்று நிறுத்தி, ஒரு போடு போட்டு, சகாதேவனுக்கு உயிர் பீதியைக் கிளப்பி, ஒரு நொடி சகா படும் வேதனையை இன்பமாக அனுபவித்து,

'மண் வெட்டிட சொல்லு'

என்று மண்ணை வெட்டச் சொல்லி ஆணை இடுவது அமர்க்களம். (பாடலாசிரியருக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்)

பாடலைப் பாடியவர் தன் குரலால் லீலா வினோதங்கள் புரிந்த பி.லீலா. (உடன் திருச்சி லோகநாதன் என்று நினைவு) சும்மா அதம் பறக்கிறது. அதுவும் பகடை ஆட்டம் பாதிப் பாடல் முடிந்தது பாட்டின் இசையே முற்றிலும் மாறி 'மதியை இழக்கிறார்' என்று இவர் பாடும்போது அப்படியே நாம் ஜென்மம் சாபல்யம் பெற்றுவிட்டது போலத் தோன்றும். 'தலைவிதியால் காலகதியால் வந்து தனியே வாடுறார்' என்று பாடும் போது உச்சங்கள் தொடுவார். நம் உடம்பெல்லாம் புல்லரிப்பது போன்ற இனம் புரியா உணர்வு ஏற்படுவதை சொல்லி முடியாது.

http://upload.wikimedia.org/wikipedia/en/d/db/Gulebagavali.jpg

http://i.ytimg.com/vi/9_XoBcW8B8g/maxresdefault.jpg

ஆர்.ஆர். பிக்சர்ஸ் தயாரித்த 'குலேபகாவலி' (1955) படத்தின் இசையமைப்பாளர் விஸ்வநாதன் ராமமூர்த்தி. இயக்கம் ராமண்ணா. எம்ஜிஆர், டி.ஆர்.ராஜகுமாரி, ஜி.வரலஷ்மி, சந்திரபாபு, ராஜசுலோச்சனா, தங்கவேலு, சாய்ராம் ஆகியோர் நடித்த படம் இது.

இனி பாடலின் வரிகள்.

http://i.ytimg.com/vi/PqBI70073nw/hqdefault.jpg

வில்லேந்தும் வீரரெல்லாம் வீழ்ச்சி பெற்றார் பகடையிலே
வில்லேந்தும் வீரரெல்லாம் வீழ்ச்சி பெற்றார் பகடையிலே
என்னை வெற்றி பெற முடியாது
நீர் கற்ற வித்தையும் செல்லாது
என்னை வெற்றி பெற முடியாது
நீர் கற்ற வித்தையும் செல்லாது

வில்லேந்தும் வீரரெல்லாம் வீழ்ச்சி பெற்றார் பகடையிலே

அகம்பாவத்தினாலே என்னை அலட்சியம் செய்யாதே
வீண் அகம்பாவத்தினாலே என்னை அலட்சியம் செய்யாதே
இந்த ஜகமே புகழ் யுவராஜனை மதியாமல் உளறாதே
இந்த ஜகமே புகழ் யுவராஜனை மதியாமல் உளறாதே
எந்நாளும் ஆடவரை ஏளனமாய் எண்ணாதே
எந்நாளும் ஆடவரை ஏளனமாய் எண்ணாதே

என்ன வேணும் துரையே
இஷ்டம் போலே கேள் இனியே
என்ன வேணும் துரையே
இஷ்டம் போலே கேள் இனியே

பன்னிரண்டு போட வேணும்
பலித்தாலே ஜெயம் காணும்
பன்னிரண்டு போட வேணும்
பலித்தாலே ஜெயம் காணும்

ஈராறு பன்னிரண்டு
ஏங்குதே உன் கண்ணிரண்டு
ஈராறு பன்னிரண்டு
ஏங்குதே உன் கண்ணிரண்டு

வீராப்பு பேசி வந்த போரோப்பு ராஜாவை
வெட்டிட சொல்லு
மண் வெட்டிட சொல்லு
சூராதி சூரன் என்று சோம்பேறியாய்த் திரிந்தார்
கட்டிடச் சொல்லு
மரத்தில் கட்டிடச் சொல்லு
வீராப்பு பேசி வந்த போரோப்பு ராஜாவை
வெட்டிட சொல்லு
மண் வெட்டிட சொல்லு

மதியை இழக்கிறார்
மனப்பால் குடிக்கிறார்
தலைவிதியால் காலகதியால்
வந்து தனியே வாடுறார்

மதியை இழக்கிறார்
மனப்பால் குடிக்கிறார்
தலைவிதியால் காலகதியால்
வந்து தனியே வாடுறார்

நிதியோடு வாழும் செல்வந்தர் யாரும்
சதியால் பாவம் ஆகிறார்
நினைவே வாழ்வில் கனவானதாலே
நிலையே மாறி ஏங்குறார்

மதியை இழக்கிறார்
மனப்பால் குடிக்கிறார்
தலைவிதியால் காலகதியால்
வந்து தனியே வாடுறார்

நிதியோடு வாழும் செல்வந்தர் யாரும்
சதியால் பாவம் ஆகிறார்
நினைவே வாழ்வில் கனவானதாலே
நிலையே மாறி ஏங்குறார்
விதியால் காலகதியால்
வந்து தனியே வாடுறார்


http://www.youtube.com/watch?v=PqBI70073nw&feature=player_detailpage

rajeshkrv
10th October 2014, 08:41 AM
குலேபகாவலி ஆஹா இன்று பார்த்தாலும் சலிக்காமல் விறுவிறுப்பாக போகும் படம்

பாடல் அற்புதம்..

Richardsof
10th October 2014, 08:50 AM
வாசு சார்

59 ஆண்டுகள் நிறைவு பெற்ற மக்கள் திலகத்தின் ''குலேபகாவலி '' படத்தில் இடம் பெற்ற பாடல்
காட்சியை விவரித்து விதம் மிகவும் அருமை .படத்தை பார்த்த உணர்வு ஏற்பட்டது .நன்றி .

rajeshkrv
10th October 2014, 08:50 AM
80’களில் கால கட்டத்தில் தமிழிலும் தெலுங்கிலும் வியாபார ரீதியை நோக்கி படங்களும் பாடல்களும் போய் கொண்டிருந்த நிலையில்
மலையாளத்தில் எப்பவுமே மெலோடிக்கு முக்கியத்துவம் கொடுத்து பாடல்கள் வந்து கொண்டிருந்தன.. ரஹ்மான் போன்ற நல்ல நடனக்கலைஞரின் படங்களில் நடன/ஆர்பாட்ட பாடல்கள் இருந்தாலும் அவற்றிலும் மொலோடி சோலோ டூயட் பாடல்கள் இல்லாமல் இருக்காது .. அப்படி 60’களில் தேவராஜன் மாஸ்டரும், பாபுக்கா, கே.ராகவன், தக்*ஷிணாமூர்த்தி ஸ்வாமிகள் போன்றோர் எப்படி மெலோடி தந்தார்களோ அவர்கள் வழியே 80’களில் ஷ்யாம்,எம்.ஜி.ராதாகிருஷ்ணன், கே.ஜே.ஜாய் மற்றும் குறிப்பாக ஜான்ஸன் மாஸ்டர். ஜான்ஸன் அவர்களில் இசையில் ஒரு தனித்துவம் மெலோடிக்கு முக்கியத்துவம் என மனுஷர் நம்மை உருக்கிவிடுவார்.. மிகச்சிறந்த திறமை சாலி

http://www.thehindu.com/multimedia/dynamic/00764/26fr_Susheela_JPG_764452g.jpg

இதோ 80’களில் வெளிவந்த புட்பால்(football) என்னும் சித்திரத்தில் ஜான்ஸன் மாஸ்டரின் சங்கீதம், இசையரசியின் குரலில் மதுர கானம்

வாசு ஜி , கேட்டு ரசியுங்கள் ... சில வருடங்களுக்கு முன் இந்த பாடலை இசையரசிக்கு நினைவூட்டியவுடன் ஜான்ஸன் மாஸ்டரை நினைவுகூர்ந்து இந்த பாடலை தினம் கேட்கும் பட்டியலில் சேர்த்து கொண்டார்.

ஜான்ஸன் மாஸ்டரின் மறைவு பேரிழப்பு ..

இதோ பாடல் மனசிண்டே மோகம் மலராய் பூத்து .... ஆஹா ஆஹா

http://www.youtube.com/watch?v=JcYy6oRjUeU

vasudevan31355
10th October 2014, 09:21 AM
6000 பதிவுகளுக்கான வாழ்த்துக்களை வழங்கிய

வினோத் சார்
கிருஷ்ணா சார்
வாசுதேவன் சார்
சின்னக் கண்ணன் சார்
கோபால் சார்
கோபு சார்
ஸ்டெல்லா மேடம்
பார்த்தசாரதி சார்,
மது அண்ணா
ராகவேந்திரன் சார்
ராஜேஷ்ஜி

அனைத்து நண்பர்களுக்கும் என் அன்பு நன்றிகள்.

6000 எல்லாம் நான் கவனிக்கவே இல்லை. வினோத் சார் செய்த வேலை. இன்னும் செய்ய வேண்டியது நிறைய உள்ளது. உங்களின் அன்பு ஆசிகளால் நிச்சயம் செய்யலாம்.

vasudevan31355
10th October 2014, 09:24 AM
ராஜேஷ்ஜி!

இசையரசியை எப்போது எனக்கு அறிமுகப்படுத்தி வைக்கப் போகிறீர்கள்?

vasudevan31355
10th October 2014, 09:27 AM
நல்ல பாடல். ஜரினாதானே?

rajeshkrv
10th October 2014, 09:28 AM
ராஜேஷ்ஜி!

இசையரசியை எப்போது எனக்கு அறிமுகப்படுத்தி வைக்கப் போகிறீர்கள்?

சீக்கிரமே ....

மதுண்ணாவும் நீங்களும் இசையரசியை சந்திக்க ஏற்பாடு செய்கிறேன்

rajeshkrv
10th October 2014, 09:34 AM
நல்ல பாடல். ஜரினாதானே?

ஜரீனா வாஹப் தான்.. நிறைய மலையாள படத்தில் நடித்தார். பாடலை கேளுங்கள் மயங்கி மயங்கி விழுவீர்கள்
எழுப்புவதற்கும் இசையரசியின் பாடல் ஒன்று தருவேன் எப்படி :)

rajraj
10th October 2014, 09:35 AM
சீக்கிரமே ....

மதுண்ணாவும் நீங்களும் இசையரசியை சந்திக்க ஏற்பாடு செய்கிறேன்

Make sure they practice at least one song to sing with her. My preference -Brindhavanamum Nandhakumaranum.... :lol:

gkrishna
10th October 2014, 09:49 AM
வாழ்க உங்கள் ஜனநாயக பண்பு. மாற்றாரையும் போற்றும் பெருந்தன்மை.எனக்காக வாதாட கிருஷ்ணாவை நியமிக்கிறேன். பழைய தீர்ப்புகளை cut paste பண்ணி ஜட்ஜை அசர வைத்து விடுவார்.

மை லார்ட்

ஜாமீன் இல்லாமல் ஜெயிலில் நிரந்தரமாக தினசரி ஒரு மாதம் முன் செய்த குலோப் ஜாமூன் (அதாவது களியும் இல்லாமல் கஞ்சியும் இல்லாமல்) சாப்பிட வைக்க வேண்டும் என்ற குறைந்த பட்ச தண்டனையை எனது கட்சிக்காரருக்கு வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்:)

gkrishna
10th October 2014, 09:51 AM
ஜரீனா வாஹப் தான்.. நிறைய மலையாள படத்தில் நடித்தார். பாடலை கேளுங்கள் மயங்கி மயங்கி விழுவீர்கள்
எழுப்புவதற்கும் இசையரசியின் பாடல் ஒன்று தருவேன் எப்படி :)

ராஜேஷ் சார்
மாட ப்ராவெ வா என்று ஜேசுதாஸ் ஒரு பாட்டு பாடுவாரே .கமல் நடித்து வந்த படம் அதில் கூட ஜரீனா உண்டு இல்லையா (பருவ மழை என்று நினைவு )

rajeshkrv
10th October 2014, 09:55 AM
ராஜேஷ் சார்
மாட ப்ராவெ வா என்று ஜேசுதாஸ் ஒரு பாட்டு பாடுவாரே .கமல் நடித்து வந்த படம் அதில் கூட ஜரீனா உண்டு இல்லையா (பருவ மழை என்று நினைவு )

ஆம் மதனோல்சவம்

vasudevan31355
10th October 2014, 09:56 AM
Make sure they practice at least one song to sing with her. My preference -Brindhavanamum Nandhakumaranum.... :lol:

ராஜ்ராஜ் சார்

ஓரளவிற்கு சமாளித்து விடுவேனாக்கும். சிக்கல் வந்தால் மது அண்ணாவை மாட்டி விட்டுவிட்டு நான் கழன்று கொள்வேன்.:) ஆமாம்! என்ன பாடல் செலெக்ட் செய்யலாம்? 'பிருந்தாவனமும்' ரொம்ப கஷ்டம் சாமி. solo pl. கொஞ்சம் ஹெல்ப் பண்ணக்கூடாதா? என்னுடைய சாய்ஸை சொல்கிறேன்.

rajraj
10th October 2014, 10:03 AM
ராஜ்ராஜ் சார்
'பிருந்தாவனமும்' ரொம்ப கஷ்டம் சாமி. solo pl. கொஞ்சம் ஹெல்ப் பண்ணக்கூடாதா? என்னுடைய சாய்ஸை சொல்கிறேன்.

Solo?

mudiyum endraal padiyaadhu padiyum endraal mudiyaadhu
vanjiyarin vaarthaiyile arthame verudhaan arthamellaam verudhaan akaraadhiyum verudhaan

This should be easy ! :)

gkrishna
10th October 2014, 10:06 AM
வினோத் சார்,

தண்டனை மிக அதிகம். என் நண்பனுக்காக கொஞ்சம் குறைத்துக் கொள்ளக் (கொல்லக்) கூடாதா? :)
ஜெய்சங்கர் படம் மட்டும் பார்க்க அனுமதி தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.:)

பார்க்கறதுன்னு முடிவாயிடுசுனா

'வீட்டுக்கு ஒரு பிள்ளை ','வைரம்','துணிவே துணை','வீட்டுக்கு வீடு'
போன்ற படங்களையும் சேர்த்து பார்க்கவும்

vasudevan31355
10th October 2014, 10:18 AM
கிருஷ்ணா!

'சுமைதாங்கி'யில் ஜெமினியின் அண்ணன் முத்துராமன். அண்ணியாக வருபவர் கன்னட லீலாவதி. தங்கை எல்.விஜயலஷ்மி. இவருக்கு ஜோடி ஹரிநாத். அப்பா சாரங்கபாணி. தேவிகாவின் அப்பா வி.எஸ்.ராகவன். தேவிகாவின் தோழியாக ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் இந்திராதேவி வருவார். படத்தில் இவர் பெயர் உஷா. திருமணம் நிச்சயப்பட்டிருக்கும் இந்திராதேவியைக் கிண்டலடித்து தேவிகா, நம்ம சி.ஐ.டி.சகுந்தலா பாடும் பாடல்

'ராதைக்கேற்ற கண்ணனோ
சீதைக்கேற்ற ராமனோ'

ஜானகி குரலில்

தேவிகாவின் காதலன் ஜெமினிதான் தனக்கு வரப்போகும் மாப்பிள்ளை என்று தெரிந்து அதிர்ச்சியில் மணப் பெண்ணாகவே உயிர் விடுவார்.

இப்போது பாடல்.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=lsY6sJPpAF0

gkrishna
10th October 2014, 10:20 AM
இதோ இந்திராதேவி 'கந்தன் கருணை' படத்தில் 'ஆறுமுகமான பொருளி'ல்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/adscvb.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/adscvb.jpg.html)

இது வரை எந்த வலை பூவிலும் பார்க்காத,படிக்காத தகவல் நடிகை இந்திரா தேவி பற்றி வெளியிட்ட வாசு சார்,மது சார்,ராஜேஷ் சார் அனைவருக்கும் நன்றி

vasudevan31355
10th October 2014, 10:22 AM
கிருஷ்ணா! (இனிமே ஜி எல்லாம் கிடையாது)

அவசியம் 'குலேபகாவலி' பாடலைப் பாருங்கள். என்னுடைய உயிர்ப்பாடல். உங்களுடையதும் ஆகட்டும். முக்கியமாக 'மதியை இழக்கிறார்' 4 வரிகள்.

gkrishna
10th October 2014, 10:29 AM
நன்றி வாசு சார்
சுமைதாங்கி படத்தின் மேல் அதிக தகவல்கள் தந்ததற்கு

http://2.bp.blogspot.com/-qjdS0bsbiV8/TpUXVTsGn2I/AAAAAAAAA94/4kRVMyWn9zo/s320/Ragging2.jpg

மேல் உள்ள படத்தின் நடிகை ராணி சந்திரா உடன் . ஒளிபதிவாளர் ராமச்சந்திர பாபு நினைவில் உண்டா ?

rajeshkrv
10th October 2014, 10:29 AM
வாசு ஜி

இதோ ராட்சசி கலக்கும் ஒரு பாடல்
http://www.youtube.com/watch?v=h2uWVQqjzMY

gkrishna
10th October 2014, 10:34 AM
கிருஷ்ணா! (இனிமே ஜி எல்லாம் கிடையாது)

அவசியம் 'குலேபகாவலி' பாடலைப் பாருங்கள். என்னுடைய உயிர்ப்பாடல். உங்களுடையதும் ஆகட்டும். முக்கியமாக 'மதியை இழக்கிறார்' 4 வரிகள்.

நண்பர் வாசுவே

உறுதியாக பார்கிறேன்
என்னை ஜீகே என்றே அழைக்கலாம் .நானும் 'உசுவா' போல் நண்பா வாசு (புத்த பிச்சு ) என்றே அழைக்கிறேன் . சிலர் பிரிய வாசு என்பார்கள்

gkrishna
10th October 2014, 10:37 AM
http://2.bp.blogspot.com/-SA-_DNEerIk/Tzr4xVBUajI/AAAAAAAABDg/R5ozDY2dBGs/s400/scan0004.tifhttp://2.bp.blogspot.com/-FvCwd-wOVVo/TzOhAfSrLSI/AAAAAAAABDU/VpzsgYKOH7k/s400/P_S_Cassette.jpg

திரு ராமச்சந்திர பாபு ஒளிபதிவில் வெளியாகத ஒரு தமிழ் படம்-1987 களில்

நடிகர் விஜயன் (பாரதி ராஜாவின் நிறம் மாறாத பூக்கள் பாம்பாட்டி ) இப்படத்தின் இயக்குனர்

vasudevan31355
10th October 2014, 10:38 AM
நண்பர் வாசுவே

உறுதியாக பார்கிறேன்
என்னை ஜீகே என்றே அழைக்கலாம் .நானும் 'உசுவா' போல் நண்பா வாசு (புத்த பிச்சு ) என்றே அழைக்கிறேன் . சிலர் பிரிய வாசு என்பார்கள்

'பிச்சுவாப் ப(போ)க்கிரி'யின் பிரிய வாசு. யாருக்கு எப்படியோ எனக்கு மிக மிகப் பிடித்த 'விஸ்வம்' அவர்.

gkrishna
10th October 2014, 10:39 AM
http://4.bp.blogspot.com/-zhfx1fx0WVs/TxujrbbpFjI/AAAAAAAABBY/3KKBJDh8QTY/s400/7th_swaram_3.jpghttp://4.bp.blogspot.com/-cOv-I7xlJQA/TxujrttkI1I/AAAAAAAABBk/J-kmDGCmJqg/s400/7th_swaram_2.jpg

அதே போல் இன்னொரு வெளியாகாத தமிழ் படம்

vasudevan31355
10th October 2014, 10:43 AM
வாசு ஜி

இதோ ராட்சசி கலக்கும் ஒரு பாடல்
http://www.youtube.com/watch?v=h2uWVQqjzMY

ராஜேஷ்ஜி!

குட்டி ராஜியுடன் குமாரி வாணிஸ்ரீ பாடும் பாடல். என் பாடகி பின்னி எடுப்பார். ஆஹா! என்ன குரலப்பா அது! அப்படியே உயிரை அலாக்காக தூக்கிக் கொண்டு போகுதே!

இந்தப் பாடலுக்கு நன்றியாக உங்களை கோபாலுக்கு நேரிடையாக அறிமுகப்படுத்தி வைக்கிறேன். :)

gkrishna
10th October 2014, 10:44 AM
http://3.bp.blogspot.com/-UWBAXiMu5R8/TxulTtdDWqI/AAAAAAAABCU/hKh2DPlTHU4/s400/KadhalViduthalai_1.jpghttp://3.bp.blogspot.com/-e9gl4BFiRww/TxulTcPEZMI/AAAAAAAABCI/pKzeoBlCgn4/s400/KadhalViduthalai_2.jpghttp://4.bp.blogspot.com/-hGT27m15xIc/TxulTOFetTI/AAAAAAAABB8/WlQXcj-EkEo/s400/KadhalViduthalai_.jpg

கேரளா திரைபடத்தின் மிக சிறந்த ஒளிபதிவாளர்களில் ஒருவர் திரு ராமச்சந்திர பாபு.திரைப்பட கல்லூரியில் படித்து பின் நிறைய மலையாள படங்களுக்கும் தமிழில் i v சசி இயக்கிய பகலில் ஒரு இரவு படத்திற்கு இவர்தான் ஒளிபதிவாளர் என்று நினைவு . யாரவது உறுதி செய்யவும் இப்படத்தின் இயக்குனர் திரு ஜெயகுமார் தான் ஆனந்த பாபு நடித்த பாடும் வானம் பாடி படத்தின் இயக்குனர் . பின்னாளில் வீடு மனை வாங்க விற்க என்கிட்டே வாங்க என்று வீட்டு தரகர் வேலைக்கு போய் விட்டார்

vasudevan31355
10th October 2014, 10:57 AM
முக்கியமாக ஒன்றை மறந்து விட்டேன். மது அண்ணா ஒரு அற்புத பாடலை அளித்திருந்தார். எனக்கு ரொம்ப விருப்பமான பாடல் கூட.

//மனோரமா கதா நாயகியாக நடித்த "கொஞ்சும் குமரி" படத்தில் அந்தக் கால ஜேசுதாஸ் வசந்தா டூயட்
"ஆசை வந்த பின்னே"வில் நடித்தவர் இந்திராதேவி. கண்டுகொண்டேன்...//

வசந்தாவின் வசீகரக் குரல். ஜேசுதாசின் ஆரம்பகால இளமை இனிமைக் குரல். சமீபத்திய திரியின் பிரபலம் இந்திராதேவி. அருமையான மயக்கும் இசை.

ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் மது அண்ணா.

vasudevan31355
10th October 2014, 11:23 AM
'ஹதிம்தாய்' ஹிந்திப் படத்தில் மனதை மயக்கும் ஒரு பாட்டு.

'Jhoomti Hai Nazar Jhoomta Hai Pyar'

http://cineplot.com/wp-content/uploads/2011/10/shakila-hatim-tai.jpghttp://cineplot.com/wp-content/uploads/2011/10/jairaj-hatim-tai.jpg

ரபி,ஆஷா பாடியது. கிழ ஜெயராஜ் தேவதையாக வரும் ஷகீலாவுடன் பாடுவது. இசை எஸ்.என்.திரிபதி. வண்ணப்படம். மாயா தந்திரக் காட்சிகளுக்கு மிகவும் புகழ் பெற்ற படம்.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=iQ4lE6Pm-ak

http://img.youtube.com/vi/uQnI8nS3lww/0.jpg

http://i683.photobucket.com/albums/vv197/nasir78621/nargis.jpg (http://s683.photobucket.com/user/nasir78621/media/nargis.jpg.html)

இதே படம் தமிழில் டப் செய்யப்பட்டு 1956 இல் 'மாய மோகினி' அல்லது 'ஹதீம்தாய்' என்ற பெயரில் வெளிவந்ததாம்.

'வான்மதி ஆகியே நாம் உலாவலாம்'

வழக்கமாக ஏ.எம்.ராஜாவும், ஜிக்கியும் குரல் தந்திருப்பார்கள்.


http://www.youtube.com/watch?v=n1Ha3X0Fukk&feature=player_detailpage

vasudevan31355
10th October 2014, 11:30 AM
http://i683.photobucket.com/albums/vv197/nasir78621/post-404-1217282554.jpg (http://s683.photobucket.com/user/nasir78621/media/post-404-1217282554.jpg.html)

vasudevan31355
10th October 2014, 11:31 AM
http://i683.photobucket.com/albums/vv197/nasir78621/shamaparwana.jpg (http://s683.photobucket.com/user/nasir78621/media/shamaparwana.jpg.html)

gkrishna
10th October 2014, 12:11 PM
இன்று அன்று | 1964 அக்டோபர் 10: அகால மரணமடைந்தார் குரு தத்

குரு தத். இந்தியத் திரையுலகில் மறக்க முடியாத பெயர். ‘ஜால்’, ‘பியாஸா’, ‘காகஸ் கி பூல்’ போன்ற படங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த கலைஞர்.

பெங்களூரில் பிறந்த குரு தத், இளம் வயதிலிருந்தே திரைப்படங்கள் மீது ஈடுபாடு காட்டினார். அவரது இயற்பெயர் வசந்தகுமார் சிவசங்கர் படுகோனே. கொல்கத்தாவில் வளர்ந்த அவர், வங்கக் கலாச்சாரத்தின் கூறுகளை உள்வாங்கிக்கொண்டார். தனது பெயரையும் குரு தத் என்று மாற்றிக்கொண்டார்.

இசைக் கலைஞர் ரவிசங்கரின் அண்ணன் உதய்சங்கர் அல்மோராவில் நடத்திவந்த இந்தியப் பண்பாட்டு மையத்தில் நிகழ்த்துக் கலை பயின்றார் குரு தத். 1944-ல் புனேயில் உள்ள பிரபாத் தயாரிப்பு நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் சேர்ந்தார். சிறிய வேடங்களில் நடித்ததுடன் உதவி இயக்குநராகவும் பணிபுரிந்தார். அந்தக் காலகட்டத்தில் தேவ் ஆனந்த், ரஹ்மான் போன்ற நடிகர்களின் நட்பு அவருக்குக் கிடைத்தது. இதற்கிடையே ஆங்கிலத்தில் சிறுகதைகள் எழுதிவந்தார். அப்போதுதான் புகழ்பெற்ற ‘பியாஸா’ திரைப்படத்தின் கதையை எழுதினார்.

1951-ல் தேவ் ஆனந்த் நடித்த ‘பாஸி’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். பல படங்களில் நடித்தும், படங்களை இயக்கியும் புகழ்பெற்றார். சொந்த வாழ்வில் பல துன்பங்களால் அவதியுற்ற அவர், 1964-ல் இதே நாளில் தற்கொலை செய்துகொண்டார். எனினும், அது தற் கொலை இல்லை என்றும் மதுபானத்துடன் அதிமான தூக்க மாத்திரைகளை விழுங்கிய தால் மரணமடைந்தார் என்றும் சொல்லப் படுகிறது.

gkrishna
10th October 2014, 12:21 PM
தொழில்நுட்பம்: மசாலா அரைத்த எலும்புக்கூடு!

http://tamil.thehindu.com/multimedia/dynamic/02147/11_2147567g.jpg

தெலுங்கில் தயாராகி, தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு 1978-ல் வெளியானது விட்டலாச்சார்யா இயக்கிய ஜெகன் மோகினி. இந்தப் படத்தின் பிரம்மாண்டமான வெற்றியில் அதன் விஷுவல் எஃபெக்ட் உத்திகளுக்கு மிகப் பெரிய பங்கிருக்கிறது. தொழில்நுட்பம் வளராத எண்பதுகளின் தொடக்கத்தில் பாலிவுட்டில்கூட யாரும் யோசித்துப் பார்க்க முடியாத பல உத்திகளைப் பயன்படுத்தினார் விட்டலாச்சார்யா.

விட்டலாச்சார்யாவின் படங்கள் தமிழ்நாட்டில் தொடர்ந்து வரவேற்பைப் பெற்றதால், என்.டி.ஆர் அளவுக்குத் தமிழ் ரசிகர்களுக்குப் பரிச்சயமானவர் ஜெகன்மோகினி படத்தின் நாயகனான நரசிம்ஹ ராஜூ.

விட்டலாச்சார்யாவின் பல படங்களில் மோகினியின் கட்டுப்பாட்டில் சிக்கித் தவிக்கும் இளவரசனாகவும், மன்னனாகவும் நடித்திருப்பார். ஜெகன் மோகினிப் பேயின் அழகில் மயங்கி, அதைத் திருமணம் செய்துகொள்வதும், அதனோடு வாழ்வதும், பிறகு மனைவி வந்து அம்மனிடம் வேண்டி, பாம்பு, குரங்கு, யானை, ஆடு உதவியுடன் மோகினியை விரட்டி கணவனை மீட்பதுமாக செம ரகளையாக இருக்கும்.

ஜெகன்மோகினி என்றில்லை, விட்டலாச்சார்யா இயக்கிய மாயா ஜாலப் படங்களில் பேய் உருவத்தில் நடிப்பவர்கள் அணியும் விதமாகத் தலைமுதல் கால்வரை ஒரே உடையாக இருக்கும்படி வெள்ளை நிறத்தில் ஒரு உடையைத் தயார் செய்தார். இந்தப் பேய் உடைக்கு மண்டையோடு போன்ற முகமுடியும், செம்பட்டை நிறத்தில் நீண்ட தலைமுடியும் என்று பேய் என்றால் இப்படித்தான் இருக்குமோ என எண்ணவைக்கும் தோற்றம் அது.

அந்தப் பேய் உருவம் திரையில் வந்தாலே ரசிகர்கள் சிரித்துக்கொண்டே பயந்து ரசித்த காலம் அது. விட்டலாச்சார்யாவின் வெள்ளைப் பேய்கள் தங்கள் கால்களை எரியும் அடுப்பில் வைத்து விறகாக்கிப் பலகாரம் சுடுவதும், பிறகு அவை ஆடாகவும், கோழியாகவும், பெண்ணாகவும் சட்டென்று மாறுவதும் ரசிகர்களால் மறக்க முடியாத விஷுவல் எஃபெக்டுகள். அழகிய பெண்ணாக இருக்கும் உருவம் அடுத்த நொடி வெள்ளைப் பேயாக மாறும் ஆச்சரியம் ரசிகர்களை வாய்பிளக்க வைத்தது.

இதைவிட அதிகம் ரசிக்கப் பட்டது எலும்புக் கூடுகளின் அட்டகாசம்! குழம்புக்கு அம்மிக்கல்லில் மசாலா அரைக்கும் எலும்புக் கூடு, திருமண மண்டபத்தில்

தவிலும் நாதஸ்வரமும் வாசிக்கும் எலும்புக்கூடுகள் என்று மிரட்டிய விட்டலாச்சார்யா, எலும்புக்கூடுகளை இயக்கத் திறமையான பொம்மலாட்டக் கலைஞர்களைக் கொண்டு, நூல் கட்டி அவற்றை அசைத்துப் படமாக்கியுள்ளார். இதற்காகப் படப்பிடிப்புத் தளத்தின் பின்னணியில் பூசப்பட்டிருக்கும் நிறம் எலும்புக்கூடுகளை இயக்கும் நூலுக்கும் பூசப்பட்டது.

பாத்திரம் வைக்கப்பட்டு எரியும் அடுப்பைத் தனியாகவும், பிறகு பேய் வேடம் போட்டவரை எரியாத அடுப்பில் கால்களை வைக்கச் சொல்லி தனியாகவும் படம்பிடித்து இரண்டையும் ஆப்டிகல் முறையில் பிலிம் லேப்பில் இணைத்துவிடுவார்கள்.

ஒரு ஷாட்டை ‘மாஸ்க்’ செய்து ஒன்றுக்கு மேற்பட்ட முறை படம்பிடிக்க கேமராவிலேயே வசதியிருக்கிறது. இரு வெவ்வேறு படச்சுருள்களை இணைத்துத் தேவையான விளைவை, ஒரு புதிய படச்சுருளில் மறு ஒளிப்பதிவு செய்வது விட்டலாச்சார்யா அதிகம் பயன்படுத்திக்கொண்ட ஆப்டிகல் எஃபெக்ட் முறை.

படத்தின் மேல் பணிபுரிந்த கலைஞர்களின் பெயர்களை டைட்டில் கார்டாகப் போடுவதிலிருந்து, காட்சி மாற்றங்களுக்குப் பயன்படுத்தப்படும், அதாவது ஒரு காட்சி மெல்ல மெல்ல மறைந்து மற்றொரு காட்சி தோன்றும் டிஸ்சால்வ் (Dissolve), ஒரு காட்சி

முடிந்து அடுத்த காட்சி தொடங்குவதை உணர்த்தும் உத்தியான (Fade Out.- Fade In ), கனவின் அரூப நிலையைப் பார்வையாளர்களுக்கு உணர்த்தவும், ஆவிகள் நடமாடுவது போலவோ, வானில் மேகத்தில் ஆவிகள் தவழ்ந்துசெல்வதுபோலவோ காட்டவும் உதவும் சூப்பர் இம்போஸ் (super impose) வரையில் ஒரு படக்காட்சியின் மேல் இன்னொன்று தெரிவதுபோலச் செய்வது எல்லாமே ஆப்டிகல் எஃபெக்ட்தான். இன்று எல்லாம் சாத்தியமாகிவிட்ட சினிமாவில் அசரவைத்த முதல் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் எதுவென்று அடுத்த வாரம் பார்க்கலாமா?

vasudevan31355
10th October 2014, 12:38 PM
குருதத் பாடல்கள் என்று எடுத்துக் கொண்டால் எனக்கு 'Aar Paar' படத்தில் வரும்

'Yeh Lo Main Haari Piya'

பாடல் மிக மிக பிடித்த பாடல். குருதத் உடன் ஷ்யாமா. பாடுவது கீதாதத். ஓ.பி.நய்யரின் அருமையான டியூன். ஷ்யாமா கொள்ளை அழகு. காரிலேயே பாடல்.

அருமையோ அருமை. இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டு மகிழ்ந்திருப்பேன் என்று எனக்கே தெரியாது. எங்கள் குடும்ப அங்கத்தினர்கள் அனைவருக்கும் இந்தப் படல் அவ்வளவு அத்துப்படி. குடும்பப் பாட்டு என்று கூட சொல்லலாம்.:)


https://www.youtube.com/watch?v=5bEEWUhEwec&feature=player_detailpage

gkrishna
10th October 2014, 01:48 PM
பாலிவுட் வாசம்: பாலிவுட்டின் வைரமுத்து!

http://tamil.thehindu.com/multimedia/dynamic/02147/4_2147471f.jpg

பாலிவுட்டில் சாதிக்கும் கனவுடன் மும்பை ரயில் நிலையத்தில் அந்த இளைஞன் வந்திறங்கி 50 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்று அவனுக்குப் பல அடையாளங்கள். திரைக்கதை ஆசிரியர், பாடலாசிரியர், கவிஞர், சமூகப் போராளி எனப் பல முகங்கள். அவர்தான் ஜாவேத் அக்தர்.

உருதுக் கவிஞரும் பிரபலப் பாடலாசிரியருமான ஜன் நிசார் அக்தர் மற்றும் எழுத்தாளர் சாஃபியா அக்தர் தம்பதியினரின் மகனாகப் பிறந்த ஜாவேத் அக்தரின் ரத்தத்தில் ஏழு தலைமுறை எழுத்தாளர்களின் மரபு கலந்துள்ளது. உருது மொழியில் மதிக்கப்படும் கவிஞரான மஜாஸ் இவரது தாய்மாமன்.

1964-ல் மும்பை வந்த ஜாவேத் அக்தருக்கு முதல் திரைக்கதை வெற்றி ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் ‘யாகீன்’ படம் வழியாகக் கிடைத்தது. அடுத்து திரைக்கதை எழுத்தாளர் சலீம் கானுடன் இணைந்து திரைக்கதை எழுதத் தொடங்கிய ஜாவேத் அக்தர் சலீம்-ஜாவேத் என்ற பெயரில் எழுதிய தீவார், ஷோலே, சீதா அவுர் கீதா, டான் ஆகிய படங்கள் பெருவெற்றி பெற்றன. ஷோலே திரைப்படத்தின் மூலம் இந்தி சினிமாவுக்குக் கோபக்கார இளைஞனான அமிதாப் பச்சன் கிடைத்தார்.

ரமேஷ் சிப்பி இயக்கிய ஷோலே திரைப்படம் இந்திப் பட ரசிகர்களை மட்டும் அல்ல, இந்திய மக்கள் அனைவரையும் பித்துப்பிடிக்க வைத்த படமாகும். அகிரா குரசோவாவின் செவன் சாமுராய் படத்தை இந்தியச் சூழலில் அருமையான கௌபாய் கதையாக மாற்றிப் பெருவெற்றி பெற்றார்கள் சலீம்-ஜாவேத் இரட்டையர்கள். ஷோலே படம் வெளிவந்து 39 ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்றும் இந்திய சினிமாவின் அரிதான காவியங்களில் ஒன்றாக ஷோலே கருதப்படுகிறது.

1981-ல் சலீம் கான் - ஜாவேத் அக்தரின் தொழிற்கூட்டணி முடிவுக்கு வந்தது. அதன் பிறகு கமல் ஹாசன் நடித்த சாகர், மிஸ்டர் இந்தியா, பேடாப் போன்ற வெற்றிப் படங்களுக்கு திரைக்கதை எழுதி சாதித்தார் ஜாவேத்.

1980-ல் இருந்து உருதுக் கவிதைகளை எழுதத் தொடங்கியிருந்த ஜாவேத், 1981-ல் சாத் சாத் திரைப்படத்தில் பாடல்களை எழுதத் தொடங்கினார். இந்தி சினிமாவின் மறக்க முடியாத பாடல்களைக் கொடுத்தவர் அக்தர். 1942 எ லவ் ஸ்டோரி படத்தில் அதன் நாயகன் அனில் கபூர் பாடி இந்தியாவே ரசித்த ‘ஏக் லட்கி கோ தேகோ தோ’ பாடல் இவர் எழுதியதே.

அனில் கபூர் நடித்து மாதுரி தீட்சித்தைப் பெரும் புகழுக்குக் கொண்டுசென்ற ‘தேசாப்’ படத்தில் வந்த ‘ஏக் தோ தீன்’ பாடல் இவருடையதே. தமிழில் வெளியான ஜீன்ஸ் படத்தில் வைரமுத்து எழுதிய பாடல்களை இந்தியில் வெளியான ஜீன்ஸுக்கு மொழிமாற்றியவர் இவரே. வைரமுத்துவைப் போலவே காலம்தோறும் தன்னை நவீனப்படுத்திக்கொள்ளும் ஜாவேத் அக்தர், ஏ.ஆர்.

ரஹ்மானின் இசையில் அமீர் கானுக்குப் பெரும்புகழைக் கொடுத்த லகான் படத்திற்கும் பாடல்களை எழுதினார். சமீபத்தில் விஸ்வரூபம் படத்தின் இந்தி வடிவமான ‘விஸ்வரூப்’ படத்திற்கும் இவர்தான் பாடலாசிரியர். திரைப்பாடலுக்குப் பலமுறை தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார்.

கவிஞர் ஜாவேத் அக்தர் முக்கியமான சமூகச் செயல்பாட்டாளரும்கூட. பாபர் மசூதி தகர்ப்பு, குஜராத்தில் நடந்த இனப் படுகொலைகளுக்கு எதிராகத் துணிச்சலாகக் குரல்கொடுத்தது மட்டுமின்றி, சட்டப் போராட்டங்களையும் தன் மனைவியும் நடிகையுமான ஷபானா ஆஸ்மியுடன் சேர்ந்து நடத்திவருகிறார்.

2010-ல் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜாவேத் அக்தர், இசையமைப்பாளர்கள் மற்றும் பாடலாசிரியர்களின் கவுரவம் மற்றும் பொருளாதாரத்தை மீட்கும் காப்பிரைட் திருத்தச் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவந்ததில் முன்னின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

gkrishna
10th October 2014, 01:53 PM
இன்று கே. பி. சுந்தராம்பாள் 106 வது பிறந்த நாள்

http://upload.wikimedia.org/wikipedia/ta/c/c2/Kbsundarambal.jpg

கே. பி. சுந்தராம்பாள் என அறியப்படும் கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள் (அக்டோபர் 10, 1908 - செப்டம்பர் 19, 1980) தமிழிசை, நாடகம், அரசியல், திரைப்படம், ஆன்மிகம் எனப் பலதுறைகளிலும் புகழ் ஈட்டியவர். இவர் கொடுமுடி கோகிலம் என்றும் அழைக்கப்பட்டார்

பக்த நந்தனார் என்னும் படத்தில் நந்தனார் வேடம் பூண்டு நடித்தார். பக்த நந்தனாரில் மொத்தம் 41 பாடல்கள். இவற்றில் கேபிஸ் பாடியவை 19 பாடல்கள். 1935இல் இப்படம் வெளிவந்தது.

அடுத்ததாக மணிமேகலையில் நடித்தார். 1938−ல் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு 1940−ல் படம் வெளிவந்தது. இப்படத்தில் 11 பாடல்களை இவர் பாடியிருந்தார்.

தமிழிசை முதல் மாநாட்டு இசையரங்கில் (ஜனவரி 4, 1944) கலந்து கொண்டார்.

தொடர்ந்து கேபிஎஸ் ஔவையார் என்ற படத்தில் ஔவையார் வேடமேற்று நடித்தார். இப்படம் 1953−ல் வெளிவந்தது. 'பொறுமை யென்னும் நகையணிந்து' , 'கன்னித் தமிழ்நாட்டிலே - வெண்ணிலவே' போன்ற பாடல்கள் பிரசித்தமானவை. ஒளவையார் படத்தில் 48 பாடல்கள். இவற்றில் கேபிஎஸ் பாடியவை 30.

1964 பூம்புகார் படம் வெளிவந்தது. இப்படத்தில் கவுந்தி அடிகள் பாத்திரத்தை கேபிஎஸ் ஏற்று நடித்திருந்தார்.

மகாகவி காளிதாஸ் (1966), திருவிளையாடல் (1965), கந்தன் கருணை (1967), உயிர் மேல் ஆசை (1967), துணைவன் (1969), சக்தி லீலை (1972), காரைக்கால் அம்மையார் (1973), திருமலை தெய்வம் (1973), மணிமேகலை (பாலசன்யாசி) உள்ளிட்ட 12 படங்களில் கேபிஎஸ் பாடி நடித்தார்.

gkrishna
10th October 2014, 02:13 PM
http://tamil.thehindu.com/multimedia/dynamic/02147/x_2147787g.jpg

போற்றுதற்குரிய ஆற்றல் மிக்க பலரது வாழ்வில் திடீரென ஏற்படும் மாற்றங்கள் அவர்களைத் திகைக்கவைப்பது கண்கூடு. மற்றவர்களின் வேதனையைப் போக்கும் சாதனை புரியும் அவர்கள், தங்களுக்கு நேரிடும் சில சோதனைகளை உடனே தீர்க்க முடியாமல் மனம் வருந்தும் உணர்வு திரையில் நன்றாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆற்றாமை உணர்வை அழகாக வெளிப்படுத்தும் மிகப் பிரபலமான இந்திப் பாடலையும் அதற்கு இணையான தமிழ்ப் பாடலையும் பார்ப்போம்.

ராஜேஷ் கன்னா, ஷர்மிளா தாகூர் நடித்து 1972 -ம் ஆண்டு வெளிவந்த அமர் பிரேம் (அழியாத காதல்) படத்தின் அனைத்துப் பாடல்களும் புகழ்பெற்றவை. எனினும் ஆர்.டி. பர்மன் இசையில் ஹஸ்ரத் ஜெய்பூரியின் வரிகளில், கிஷோர் குமார் பாடிய, இந்துஸ்தானி பைரவி ராகத்தில் அமைந்த, சாகா வரம்பெற்ற பாடல் இது. எளிய வரிகள், ஆழமான கருத்து, மனதைத் தொடும் இசை, இதமான குரல் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய அந்தப் பாடல்:

(ச்)சிங்காரி கோயி தட்கே,

தோ சாவன் உஸ்ஸே புஜாயே

சாவன் ஜோ அகன் லகாயே,

உஸ்ஸே கோன் புஜாயே

ஓ... கோன் புஜாயே

பத்ஜட் ஜோ பாக் உஜாடே

ஓ பாக் பஹார் கிலாயே

ஜோ பாக் பஹார் மே உஜ்டே

உஸ்ஸே கோன் கிலாயே

ஓ கோன் கிலாயே...

பாடலின் பொருள்:

(திடீரென எழுகின்ற) தீச்சுவாலையை

(அப்போது பெய்யும்) மழை அனைத்துவிடும்.

மழையே தீயை உருவாக்கினால்

அதை யார் அணைப்பது? யார் அணைப்பது

இலையுதிர் காலம் உதிர்க்கும் தோட்டத்து இலைகளை

வசந்த காலம் புதுப்பிக்கும்

வசந்த காலத்திலேயே

உதிர்ந்து நிற்கும் தோட்டத்தை

எவரால் மலரச் செய்ய முடியும்.

என்னிடம் கேட்காதே

எப்படி (நம்) கனவு இல்லம் இடிந்தது என்று

அது உலகம் செய்த செயல் அல்ல

நாம் எழுதிய கதை

எதிரி (உள்ளத்தில்) கோடரியை

பாய்ச்சினால், ஆறுதல் அளிக்க

நம் நண்பர்கள் இருப்பார்கள்

நெருங்கிய நண்பர்களே (நம் மனதை) காயப்படுத்தினால் யார் சரி செய்வார்கள்

என்ன நடந்திருக்குமோ தெரியாது

என்ன செய்திருப்பேனோ தெரியாது

சூறாவளிக்கு முன் எந்தச் சக்தியும் நிற்க முடியாது

(என்பதை) ஏற்கவே வேண்டும்

இயற்கையின் குற்றம் அல்ல அது

(எனில்) வேறு எதோ சக்தியுடைய குற்றம்.

கடலில் செல்லும் படகு தடுமாறினால்

படகோட்டி (எப்படியாவது) கரை சேர்த்திடுவான்

படகோட்டியே படகைக் கவிழ்த்துவிட்டால்

(படகில்செல்பவரை) யார் காப்பாற்றுவார்

ஓ…யார் காப்பாற்றுவார்.

கதையின் அடிப்படையிலும் பாத்திரங்களின் இயல்பிலும் வேறுபட்டிருந்தாலும் இதற்கு

இணையாக விளங்கும் தமிழ்ப் பாடல் வெளிப்படுத்தும் ஆற்றாமை உணர்வு இப்பாடலுடன் நெருங்கி இருப்பதைப்

பார்க்கலாம். கடமை தவறாத காவல் அதிகாரியாக இருந்தும் தறுதலைப் பிள்ளையைத் திருத்த முடியாமல் அவன் செய்கையால் கலங்கும் கழிவிரக்க உணர்வைக் கன கச்சிதமான நடிப்பால் வெளிப்படுத்தும் சிவாஜி கணேசன், கே.ஆர். விஜயா நடித்த தங்கப் பதக்கம் என்ற வெற்றிப் படத்தின் பாடல்.

http://tamil.thehindu.com/multimedia/dynamic/02147/z_2147786g.jpg

இசை விஸ்வநாதன். பாடல் கவிஞர் கண்ணதாசன்.

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி

வேதனைதான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி

சொந்தம் ஒரு கை விலங்கு நீ போட்டது

அதில் பந்தம் ஒரு கால் விலங்கு நான் போட்டது

ஆதாரம் இல்லையம்மா ஆறுதல் சொல்ல

நான் அவதாரம் இல்லையம்மா தத்துவம் சொல்ல

பரிகாரம் தேடி இனி எவ்விடம் செல்ல

எனக்கு அதிகாரம் இல்லையம்மா வானகம் செல்ல

ஒரு நாளும் நான் இது போல் அழுதவனல்ல

அந்தத் திருநாளை மகன் கொடுத்தான் யாரிடம் சொல்ல

(சோதனை மேல் சோதனை)

வசனம்: மாமா… காஞ்சிபோன பூமி எல்லாம் வத்தாத நதியைப் பாத்து ஆறுதல் அடையும்.

அந்த நதியே காஞ்சி போய்ட்டா?

துன்பப்படுறவங்க எல்லாம் அந்தக் கவலையைத் தெய்வத்துகிட்ட முறையிடுவாங்க.

ஆனா தெய்வமே கலங்கி நின்னா?

அந்தத் தெய்வத்துக்கு யாரால ஆறுதல் சொல்ல முடியும்???

பாடல்: நானாட வில்லையம்மா சதையாடுது

அது தந்தை என்றும் பிள்ளை என்றும் விளையாடுது

பூவாக வைத்திருந்தேன் மனமென்பது

அதில் பூநாகம் புகுந்துகொண்டு உறவென்றது

அடி தாங்கும் உள்ளம் இது இடி தாங்குமா

இடி போல பிள்ளை வந்தால் மடி தாங்குமா

(சோதனை மேல் சோதனை)

“துன்பப் படுறவங்க எல்லாம் அந்தக் கவலையைத் தெய்வத்துகிட்ட முறையிடுவாங்க.

ஆனா தெய்வமே கலங்கி நின்னா??

அந்தத் தெய்வத்துக்கு யாரால ஆறுதல் சொல்ல முடியும்?”

பாட்டின் இடையே வரும் இந்த வசனம் பல தருணங்களிலும் தளங்களிலும் மேற்கோளாகக் காட்டப்படுவது இங்கு குறிப்பிடத்தகுந்தது.

gkrishna
10th October 2014, 03:44 PM
தமிழ்நாட்டில் பிறந்து ஹிந்தியில் கொடிகட்டி பறந்த பறக்கின்ற நடிகை ரேகாவுக்கு இன்று வயது 60-அடிவயற்றை என்னமோ செய்கிறது

ரேகா (Rekha) என்ற திரைப் பெயரால் அனைவராலும் அழைக்கப்படும் பானுரேகா கணேசன் (பிறப்பு: 10 அக்டோபர் 1954) இந்தியாவில் தமிழ்நாட்டில் பிறந்து பாலிவுட் திரைப்படங்களில் நடித்து பிரபலமான ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார்

வயசானாலும் அழகும் ஸ்டைலும் மாறவே இல்லை... இந்த வசனம் யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ நடிகை ரேகாவிற்கு பொருந்தும். இன்றைக்கு 60 வது பிறந்தநாளைக் கொண்டாடும் நடிகை ரேகா, இன்னமும் இளமை மாறாமல் இருக்கிறார். இதை அவருடைய சமீபத்திய திரைப்படமான சூப்பர் நானி பார்த்தவர்களுக்குத் தெரியும். சினிமாவிற்கு சிலகாலம் இடைவெளி விட்டிருந்த ரேகா கிரிஷ் 2 படத்தில் நடித்த போதே ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். இப்போது மீண்டும் ஒரு சிறிய இடைவெளிக்குப்பின்னர் சூப்பர் நானி படத்தில் நடித்துள்ளார். 1970 களில் பாலிவுட் உலகின் கவர்ச்சி ப்ளஸ் கனவுக்கன்னியாகத் திகழ்ந்த ரேகா 15 ஆண்டுகளுக்கும் மேலாக அசைக்க முடியாத நடிகையாகத் திகழ்ந்தார்.

குழந்தை நட்சத்திரம் காதல் மன்னன் நடிகர் ஜெமினி கணேசன்- தெலுங்கு நடிகை புஷ்பவள்ளி தம்பதியின் மகளான ரேகா 1966ம் ஆண்டு தெலுங்கில் ரங்குலா ரத்னா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் ரேகா.

1969ம் ஆண்டு கன்னடத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். 1970 களில் பாலிவுட்டில் அடியெடுத்து வைத்த ரேகா, அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார். பின்னர், 1980களில் காமெடி மற்றும் குணசித்திர வேடங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார்.

1990களில் ஸ்ரீதேவி, மாதுரி தீட்சித் உள்ளிட்ட ஹீரோயின்களுக்கு அம்மாவாகவும் நடித்தார். பல தேசிய விருதுகளை பெற்றுள்ளார் நடிகை ரேகா

அமிதாப்பச்சன் நடிக்கும் ஷமிதாப் படத்திலும் நடிக்கிறார் ரேகா. 1981ம் ஆண்டு யாஷ் சோப்ரா இயக்கிய சில்சில்லா படத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கவில்லை. ஆர்.பால்கி இயக்கத்தில் அமிதாப் பச்சன் மற்றும் தனுஷ் நடிக்கும் ஷமிதாப் படத்தில் தான் அமிதாப் பச்சனுக்கு ஜோடியாக ரேகா நடிக்க உள்ளார். இதை தனுஷ் உறுதிபடுத்தியுள்ளார்.

இன்று 60 வது பிறந்தநாளைக் கொண்டாடும் ரேகாவை நாமும் வாழ்த்துவோமே

http://tamil.filmibeat.com/img/2014/10/10-1412933742-rekha3-600.jpghttp://tamil.filmibeat.com/img/2014/10/03-rekha5-600.jpghttp://4.bp.blogspot.com/-llY1t4_ZkXk/TyQP2mw5mHI/AAAAAAAACTE/5upOwTrBfyA/s640/39a2f87df83e.jpg

Scottkaz
10th October 2014, 06:33 PM
உண்மையில் அருமையான இன்றைய ஸ்பெஷல் (89)
நன்றி வாசுதேவன் சார்
உங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் தங்களின் profile picture முடியுமானால் மாற்றிவிடவும் கட்டாயம் ஒன்றும் இல்லை மாற்றினால் நன்றாக இருக்கும்

இன்றைய ஸ்பெஷல் (89)

இந்த மாதிரி இனிமையான பாடல்கள் கிடைக்க, பாடகர் , பாடகியர் கிடைக்க தமிழன் தவம்தான் செய்திருக்க வேண்டும்.

என்ன மாதிரி ஒரு பாடல்!

ஆயுசு முழுக்க கேட்டுக் கொண்டே இருக்கலாம்.

ஆண்களை மடக்கி அவர்களை அடக்கி, வஞ்சக வலையில் சிக்க வைக்கும் பகாவலி ராணி. ஏமாந்து விட்டில் பூச்சிகளாய் விளக்கில் விழுந்து கருகும் வீரர்கள்.

'கவறாடும் புவனம். பந்தயம் 10000 பொன். வெற்றிக்கு மணமாலை. வீழ்ச்சிக்கு சிறைச்சாலை'

பகடை ஆட்டம் ஆட சதி பின்னிய வலை அழைப்பு.

ஏமாந்து வருகிறான் போரோப்பு ராஜா. பகடையில் மன்னன் பன்னிரெண்டு கேட்க ராணி பகடை உருட்டுகிறாள். உடன் உள்ள சதிகாரன் முன்னேற்பாட்டின்படி விளக்கை அணைத்து வேறொரு பகடை பன்னிரண்டை தயார் செய்து மாற்றி வைத்து விடுகிறான். விளக்கின் ஒளி மறுபடி திட்டமிட்டபடி வந்தபின் பார்த்தால் மன்னன் கேட்ட பன்னிரண்டு. அதிர்ச்சி அவனுக்கு. வெற்றி. ராணிக்கு வஞ்சகத்தின் மூலம் வெற்றி. தோல்வி. போட்டியிட வந்த மன்னனுக்கு சதி அறியாத தோல்வி. மண்ணைக் கவ்வி விட்டான். விடுவாளா ராணி? அடிமைப்படுத்துகிறாள். கேவலப்படுத்துகிறாள். ஆண் இனத்தின் நிலைமையை அவமானப்படுத்துகிறாள்.

மேற்கண்ட சூழல் முழுதும் இந்த அற்புதமான பாட்டிலே.

போரோப்பு மன்னன் ஈ.ஆர்.சகாதேவன் (என்ன ஒரு தேஜஸ் மற்றும் அழகு) டி.ஆர் ராஜகுமாரி அழகுராணியிடம், "திமிர்த்தனம் கொல்லாதே....ஆடவரை ஏளனமாய் எண்ணாதே" என்று சொல்லி ஆட்டத்தைத் தொடங்குவதும், 'என்ன வேண்டும் கேள்' என்று ராஜகுமாரி கேட்க, 12 போட சகாதேவன் கேட்க, சூட்சுமக்கார தங்கவேலு தந்திரமாக விளக்கை அணைத்து வேறு 12 எண்ணிக்கையுள்ள பகடையை அங்கு மாற்றி வைத்துவிட, அதிர்ச்சித் தோல்வியில் சகாதேவன் உறைய, ஆண்களின் பரிதாப நிலையை கேலி செய்து ராஜகுமாரி பாட அற்புதமாகப் படமாக்கப்பட்ட பாடல்.

ராஜகுமாரி கொள்ளை அழகு. முகம் அருகே காட்டப்பட்டு போது பால் நிலவு காய்கிறது முகத்தில். பல்வரிசைகளும், கண்கள் புரியும் ஜாலமும் எந்த ஆடவரையும் பைத்தியம் பிடிக்க வைக்கத்தான் செய்யும். இந்த அழகு கொண்ட நடிகை இன்னும் இங்கு பிறக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

'வீராப்பு பேசி வந்த போரோப்பு ராஜாவை வெட்டிட சொல்லு'

என்று நிறுத்தி, ஒரு போடு போட்டு, சகாதேவனுக்கு உயிர் பீதியைக் கிளப்பி, ஒரு நொடி சகா படும் வேதனையை இன்பமாக அனுபவித்து,

'மண் வெட்டிட சொல்லு'

என்று மண்ணை வெட்டச் சொல்லி ஆணை இடுவது அமர்க்களம். (பாடலாசிரியருக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்)

பாடலைப் பாடியவர் தன் குரலால் லீலா வினோதங்கள் புரிந்த பி.லீலா. (உடன் திருச்சி லோகநாதன் என்று நினைவு) சும்மா அதம் பறக்கிறது. அதுவும் பகடை ஆட்டம் பாதிப் பாடல் முடிந்தது பாட்டின் இசையே முற்றிலும் மாறி 'மதியை இழக்கிறார்' என்று இவர் பாடும்போது அப்படியே நாம் ஜென்மம் சாபல்யம் பெற்றுவிட்டது போலத் தோன்றும். 'தலைவிதியால் காலகதியால் வந்து தனியே வாடுறார்' என்று பாடும் போது உச்சங்கள் தொடுவார். நம் உடம்பெல்லாம் புல்லரிப்பது போன்ற இனம் புரியா உணர்வு ஏற்படுவதை சொல்லி முடியாது.

http://upload.wikimedia.org/wikipedia/en/d/db/Gulebagavali.jpg

http://i.ytimg.com/vi/9_XoBcW8B8g/maxresdefault.jpg

ஆர்.ஆர். பிக்சர்ஸ் தயாரித்த 'குலேபகாவலி' (1955) படத்தின் இசையமைப்பாளர் விஸ்வநாதன் ராமமூர்த்தி. இயக்கம் ராமண்ணா. எம்ஜிஆர் ,டி.ஆர்.ராஜகுமாரி, ஜி.வரலஷ்மி, சந்திரபாபு, ராஜசுலோச்சனா, தங்கவேலு, சாய்ராம் ஆகியோர் நடித்த படம் இது.

இனி பாடலின் வரிகள்.

http://i.ytimg.com/vi/PqBI70073nw/hqdefault.jpg

வில்லேந்தும் வீரரெல்லாம் வீழ்ச்சி பெற்றார் பகடையிலே
வில்லேந்தும் வீரரெல்லாம் வீழ்ச்சி பெற்றார் பகடையிலே
என்னை வெற்றி பெற முடியாது
நீர் கற்ற வித்தையும் செல்லாது
என்னை வெற்றி பெற முடியாது
நீர் கற்ற வித்தையும் செல்லாது

வில்லேந்தும் வீரரெல்லாம் வீழ்ச்சி பெற்றார் பகடையிலே

அகம்பாவத்தினாலே என்னை அலட்சியம் செய்யாதே
வீண் அகம்பாவத்தினாலே என்னை அலட்சியம் செய்யாதே
இந்த ஜகமே புகழ் யுவராஜனை மதியாமல் உளறாதே
இந்த ஜகமே புகழ் யுவராஜனை மதியாமல் உளறாதே
எந்நாளும் ஆடவரை ஏளனமாய் எண்ணாதே
எந்நாளும் ஆடவரை ஏளனமாய் எண்ணாதே

என்ன வேணும் துரையே
இஷ்டம் போலே கேள் இனியே
என்ன வேணும் துரையே
இஷ்டம் போலே கேள் இனியே

பன்னிரண்டு போட வேணும்
பலித்தாலே ஜெயம் காணும்
பன்னிரண்டு போட வேணும்
பலித்தாலே ஜெயம் காணும்

ஈராறு பன்னிரண்டு
ஏங்குதே உன் கண்ணிரண்டு
ஈராறு பன்னிரண்டு
ஏங்குதே உன் கண்ணிரண்டு

வீராப்பு பேசி வந்த போரோப்பு ராஜாவை
வெட்டிட சொல்லு
மண் வெட்டிட சொல்லு
சூராதி சூரன் என்று சோம்பேறியாய்த் திரிந்தார்
கட்டிடச் சொல்லு
மரத்தில் கட்டிடச் சொல்லு
வீராப்பு பேசி வந்த போரோப்பு ராஜாவை
வெட்டிட சொல்லு
மண் வெட்டிட சொல்லு

மதியை இழக்கிறார்
மனப்பால் குடிக்கிறார்
தலைவிதியால் காலகதியால்
வந்து தனியே வாடுறார்

மதியை இழக்கிறார்
மனப்பால் குடிக்கிறார்
தலைவிதியால் காலகதியால்
வந்து தனியே வாடுறார்

நிதியோடு வாழும் செல்வந்தர் யாரும்
சதியால் பாவம் ஆகிறார்
நினைவே வாழ்வில் கனவானதாலே
நிலையே மாறி ஏங்குறார்

மதியை இழக்கிறார்
மனப்பால் குடிக்கிறார்
தலைவிதியால் காலகதியால்
வந்து தனியே வாடுறார்

நிதியோடு வாழும் செல்வந்தர் யாரும்
சதியால் பாவம் ஆகிறார்
நினைவே வாழ்வில் கனவானதாலே
நிலையே மாறி ஏங்குறார்
விதியால் காலகதியால்
வந்து தனியே வாடுறார்


http://www.youtube.com/watch?v=PqBI70073nw&feature=player_detailpage
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

vasudevan31355
10th October 2014, 07:07 PM
நன்றி ராமமூர்த்தி சார்.

எனக்கு நிரம்ப பிடித்த பாடல் அது.

நீங்கள் என்னுடைய அவ்தார் பிக்சரை மாற்றும்படி கேட்டிருந்தீர்கள். ஆனால் காரணம் கூறவில்லை. புகை பிடிப்பது உடல் நலத்திற்குத் தீங்கானது என்ற ரீதியில்தான் அதை மாற்றச் சொல்லியிருப்பீர்கள் என்று யூகிக்கிறேன். அப்படியே இருந்தால் நிச்சயம் உடன் பரிசீலனை செய்கிறேன். மாற்றவும் செய்கிறேன்.

'மதுர கானங்கள்' திரியை கண்டு வாசித்து வருவதற்கு என் உளமார்ந்த நன்றி. தங்களின் மேலான பங்களிப்பையும் இங்கு அளிக்குமாறு விருப்பத்துடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி!

vasudevan31355
10th October 2014, 07:13 PM
மை லார்ட்

ஜாமீன் இல்லாமல் ஜெயிலில் நிரந்தரமாக தினசரி ஒரு மாதம் முன் செய்த குலோப் ஜாமூன் (அதாவது களியும் இல்லாமல் கஞ்சியும் இல்லாமல்) சாப்பிட வைக்க வேண்டும் என்ற குறைந்த பட்ச தண்டனையை எனது கட்சிக்காரருக்கு வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்:)

எனது கட்சிக்காரர் பதிலுக்கு பழைய நீராகார சாதத்தில் 40 நாட்கள் நெய் ஊற்றி சாப்பிடும்படி பதில் தந்திருக்கிறார் கிருஷ்ணா சார். என்ன சொல்ல.:)

vasudevan31355
10th October 2014, 07:28 PM
மாலை மதுரம்.

http://www.thehindu.com/multimedia/dynamic/01390/10cp_manithan1953__1390186f.jpg

என்ன அழகான பாடல்!

'மனதை மயக்கும் அற்புதக் குரலில் ஒலிக்கும் அழியாத கானம். எஸ்.வி.வெங்கட்ராமன் இசையில் எம்.எல்வசந்தகுமாரியின் தேனினும் இனிய குரலில்.

1953 ல் வெளிவந்த 'மனிதன்' படத்தில்

குயிலே குயிலே
குயிலே குயிலே
உனக்கனந்த கோடி நமஸ்காரம்
குமரன் வரக் கூவுவாய்
நீ குமரன் வரக் கூவுவாய்

மலை மாங்கனி சோலையிலே
மருவி எனையே பிரிந்த
குமரன் வரக் கூவுவாய்
நீ குமரன் வரக் கூவுவாய்

வருவார் வருவார் என்றே எதிர்பார்த்தேன்
விழி சோர்ந்தே'

டி .கே. பகவதி, டி .கே.சண்முகம், கிருஷ்ணகுமாரி ஆகியோர் நடித்த புதுமைப் படைப்பு.


https://www.youtube.com/watch?v=Z_wpUQlf4JY&feature=player_detailpage

Scottkaz
10th October 2014, 07:36 PM
நிச்சயம் அதுதான் சார் வேறு எந்த காரணமும் இல்லை

நன்றி ராமமூர்த்தி சார்.

எனக்கு நிரம்ப பிடித்த பாடல் அது.

நீங்கள் என்னுடைய அவ்தார் பிக்சரை மாற்றும்படி கேட்டிருந்தீர்கள். ஆனால் காரணம் கூறவில்லை. புகை பிடிப்பது உடல் நலத்திற்குத் தீங்கானது என்ற ரீதியில்தான் அதை மாற்றச் சொல்லியிருப்பீர்கள் என்று யூகிக்கிறேன். அப்படியே இருந்தால் நிச்சயம் உடன் பரிசீலனை செய்கிறேன். மாற்றவும் செய்கிறேன்.
மதுர கானங்கள்' திரியை கண்டு வாசித்து வருவதற்கு என் உளமார்ந்த நன்றி. தங்களின் மேலான பங்களிப்பையும் இங்கு அளிக்குமாறு விருப்பத்துடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி!

உண்மையில் மதுர கானங்கள் அற்புதமான வகையில் அன்பான கீதங்களின் மூலம் பயணம் செய்கிறது தினமும் கண்டு களிக்கிறேன்
நன்றி திரு வாசுதேவன் சார்
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Murali Srinivas
10th October 2014, 07:39 PM
அன்பு ராஜேஷ்,

மதுர கானங்கள் திரியின் மூன்றாம் பாகம் துவக்கிய உங்களுக்கு என் இதயப்பூர்வமான வாழ்த்துகள். தாமதத்திற்கு மன்னிக்க! என்றென்றும் நமது இசையரசியின் புகழ் பாட வாழ்த்துகள்!

இரண்டாம் பாகத்தை துவக்கி குறுகிய காலத்தில் அதை சிறப்புற செய்த அருமை நண்பர் கிருஷ்ணாஜி அவர்களுக்கு பாராட்டுக்கள்!.

ஒரு பணியை ஏற்றுக் கொண்டால் அதற்காக உழைப்பதில் உடல் பொருள் ஆவி அனைத்தையும் தரும் அருமை நண்பர் வாசுவிற்கும் பாராட்டுக்கள்.

பொங்கும் பூம்புனல் ராகவேந்தர் சார், நடமாடும் பாடல் களஞ்சியம் மதுஜி [சென்னையில் இருக்கிறீர்களா மதுஜி? அதே அலைபேசி எண்தானா? சில வருடங்களாக ஏப்ரல் 6 அன்று அந்த எண்னை விளித்து விளித்து லைன் கிடைக்கவில்லை. மாதத்தில் ஒரு முறை நடைபெறும் நமது NT FAnS screening-ற்கு வரலாமே!), பழைய விளம்பரங்கள், புகைப்படங்கள் மற்றும் சில பத்திரிக்கை செய்திகள் போன்றவற்றை பதிவிடும் வினோத் சார், அருமை நண்பர் சுந்தரபாண்டியன் (sss), மூத்த சகோதரர் ராஜ்ராஜ் அவர்கள் ஆகிய அனைவருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துகளும்!

எத்தனை பேர் இருந்தாலும் அங்கே தனியாக தன் எழுத்துக்களால் நிற்கும் கார்த்திக் அவர்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துகளும்!

Last but not the least - இந்த ஹப்பிலேயே ஒரு தனித்துவ (unique) எழுத்து நடை கொண்ட பல்வேறு வித இசை வடிவங்களை எல்லாம் கரைத்துக் குடித்த அருமை நண்பர் old turk கோபாலுக்கும் வாழ்த்துகள்!

பெயர் விடுப்பட்டுப் போன பங்களிப்பாளர்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துகளும்!


அன்புடன்

vasudevan31355
10th October 2014, 07:45 PM
மாலை மதுரம்.

'அமரகவி'.

இதுவும் 1953-ல் வெளிவந்த பாகவதரின் படம். ஆனால் எதிர்பாரா வகையில் தோல்வி அடைந்தது பல்வேறு காரணங்களினால். பாகவதருக்கு 'வண்ணக்கிளி' பி.எஸ்.சரோஜா இணை இப்பாடலில்.

செடி மறைவிலே ஒரு பூங்கொடி
மறைந்தே மாயம் செய்வதேன்
செடி மறைவிலே ஒரு பூங்கொடி
மறைந்தே மாயம் செய்வதேன்

பிடிக்க வந்தாலே ஓடிடுவேனே
நிஜமே இது எனையே தொட முடியாதும்மாலே

அபூர்வமான இனிமை கொஞ்சும் பாடல். பாடலைத் தரவேற்றிய அன்பருக்கு நன்றி!


https://www.youtube.com/watch?v=APkSGY9jwf8&feature=player_detailpage

vasudevan31355
10th October 2014, 07:48 PM
மிக்க நன்றி முரளி சார். எவ்வளவு நாட்களாயிற்று? நலம்தானே! தங்கள் பங்களிப்புகள் அவசியம் இப்பாகத்திலாவது அதிகம் இடம் பெற வேண்டும் என்பதே என் ஆசை. எங்கள் அனைவரின் ஆசை கூட.

madhu
10th October 2014, 08:01 PM
வாசு ஜி..
குலேபகாவலி பாட்டு பிரமாதம். ரொம்ப நாளாச்சு. இந்தப் பாட்டிலேயே ஹிந்தி, மலையாளம், தெலுங்கு எல்லாம் வருமே..

இதைக் கேளுங்க..

http://youtu.be/S-eOSgnZdjU

Richardsof
10th October 2014, 08:06 PM
என்னுடைய சிறு பங்களிப்பை பாராட்டிய இனிய நண்பர் திரு முரளி ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு நன்றி ..

madhu
10th October 2014, 08:11 PM
எல்.ஆர்.ஈஸ்வரி பெயரைப் படித்ததும் இந்தப் பாட்டு நினைவுக்கு வந்தது. ரொம்ப நாளாச்சு பார்த்து கேட்டு..

துடித்ததென்னவோ...வ்வ்வ்வ்...கவனிங்க..

படம் :ஒளிவிளக்கு

http://youtu.be/wTGoS8drHbI

vasudevan31355
10th October 2014, 08:37 PM
நன்றி! ஆமாம் மதுஜி. அருமை. பாடலின் நீளம் அதிகமாய் இருப்பதால் 'நாகலிங்க நாகப்பாம்பு' போர்ஷனை மட்டும் எடுத்துக் கொண்டேன். :)

'என்ன வேணும் துரையே
இஷ்டம் போலே கேள் இனியே'

வித விதமாக மாற்றி மாற்றிப் பாடுகிறார்!

'பியாரி ஆவோ ஹமாரா லட்டு'

'பந்தமுள்ள சுந்தராங்கி பகட களிக்கான் வந்நு'
'நாடு விட்டு நாடு வந்நு நசிச்சிப் போகாதே ராஜா'

வார்ர்ரே வா!

vasudevan31355
10th October 2014, 08:56 PM
மதுஜி!

இன்னொன்று தெரியுமா? நீங்கள் பதித்துள்ள 'யய்யய்ய... நான் கண்ட கனவினில் நீ இருந்தாய்' பாடலைப் பற்றி என் நண்பருடன் நேற்று மாலை பேசி மகிழ்ந்திருந்தேன். கூடவே 'ருக்குமணியே'வும். இன்று நீங்கள் சொல்லி வைத்தாற் போல் பதிந்து விட்டீர்கள்.

அதுவும் 'லுலுலுலுலுலு' அட்ட்டகாசம். 'ஜின்ஜன ஜன ஜின்ஜன ஜின்ஜன' ஆரம்பம் கேட்கவே வேண்டாம்.

'பந்து போல எனை எடுத்து தன் பக்கம் வைத்தா னோ' ('னோ' தனியாக கேட்குமே! அதுதான் ராட்சஸி)

இசை சாம்ராஜ்யம் கொடி நாட்டுகிறது.

RAGHAVENDRA
10th October 2014, 09:14 PM
பொங்கும் பூம்புனல்

இது ஒரு அபூர்வ பாடல். இனிமை சற்று மிஸ்ஸிங் தான். நாடோடிகளைப் பற்றிய பாடல் என்றாலும் இசைக்கருவிகள் பாடலின் கருத்தோடு ஒன்றவில்லை. ஒரு வேளை படத்தில் காட்சியமைப்பு எப்படியோ..

எஸ்.டி.சேகர் இசையில் ஊருக்கு ஒரு ராஜா படத்திற்காக வாணி ஜெயராம் பாடிய பாடல்.

http://play.raaga.com/tamil/browse/movies/year-1970-1978/popular/Oorukku-Oru-Raja-T0002266

RAGHAVENDRA
10th October 2014, 09:18 PM
பொங்கும் பூம்புனல்

சுராங்கனி பாட்டு தமிழ் சினிமாவை அந்நாட்களில் ஒரு வழி படுத்தி விட்டுத் தான் போனது. விஜய பாஸ்கர் மட்டும் விதி விலக்கா..

இதோ பல்லவியை மட்டும் அந்த மெட்டில் போட்டு அவருக்கே உரிய மெட்டில் ஒரு குத்துப் பாட்டு...

ராஜாவுக்கேத்த ராணி படத்திற்காக எஸ்.பி.பாலா மற்றும் எஸ்.ஜானகி குரல்களில்...

ராஜா வந்தார் ராணி வந்தார்

http://play.raaga.com/tamil/browse/movies/year-1970-1978/popular/Rajavuketha-Rani-T0002334

RAGHAVENDRA
10th October 2014, 09:21 PM
பொங்கும் பூம்புனல்

நீண்ட நாட்களுக்குப் பின் மீண்டும் ஒரு நினைவூட்டலாக...

நெஞ்சிலாடும் பூ ஒன்று படத்திலிருந்து இசைஞானி இளையராஜா இசையில் வானம் எங்கே. மேகம் எங்கே..

ஜெயச்சந்திரன், எஸ்.ஜானகி கோரஸ் குரல்களில்..

http://play.raaga.com/tamil/browse/movies/year-1970-1978/popular/Nenjil-Aadum-Poo-Ondru-T0000991

Murali Srinivas
11th October 2014, 12:21 AM
அருமை நண்பர் எங்கள் ஊர்காரர் சுவையான செய்திகளை சில்மிஷத்துடன் கலந்து தரும் சின்னக் கண்ணா, உங்கள் பெயரை சொல்லாமல் விட்டு விட்டேன். மன்னிக்கவும். இந்த மதுர கானங்கள் திரியில் உங்கள் பங்களிப்பு மிக அதிகம் [அதனாலேயே நீங்கள் இப்போது நடிகர் திலகம் திரிக்கு வருவதில்லை என நினைக்கிறேன்]. உங்களுக்கும் என் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

வாசு, நன்றி. நிச்சயமாக பங்களிப்பு செய்ய முயற்சிக்கிறேன்.

அன்புடன்

rajraj
11th October 2014, 05:57 AM
From Salangai Oli

Bala Kanakamaya Chela.......

http://www.youtube.com/watch?v=RRCUUWzkdPg


Bala Kanakamaya is a composition by Thyagaraja set to Atana (also known as YEla nee dhaya raadhu) .

raagadevan
11th October 2014, 06:23 AM
வணக்கம் ராஜ்! :)

The song is from சலங்கை ஒலி (சாகர சங்கமம் in Telugu).

rajraj
11th October 2014, 06:44 AM
Thanks RD ! :) VaNakkam ! Good to see you here ! :)

vasudevan31355
11th October 2014, 07:34 AM
அன்பு ராகதேவன் சார்!

http://www.hipishcomments.net/graphics/flower_scraps/flower_bouquet/flower-bouquet_018.jpg

வருக! வருக! 'மதுரகானங்கள்' திரி மகிழ்ச்சியுடன் தங்களை வரவேற்கிறது. திரியின் மகுடத்தில் இன்னொரு கோஹினூர் வைரம். ரொம்ப மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது சார். தங்கள் அனுபவம் தோய்ந்த அருமையான பங்களிப்புகளை கண்டு களிக்க காத்திருக்கிறோம். நன்றி!

Richardsof
11th October 2014, 08:50 AM
TAMIL FILM PERSONALITIES

http://i58.tinypic.com/2yubyif.jpg

Richardsof
11th October 2014, 08:51 AM
http://i60.tinypic.com/2rhbsdi.jpg

raagadevan
11th October 2014, 09:53 AM
அன்பு ராகதேவன் சார்!

வருக! வருக! 'மதுரகானங்கள்' திரி மகிழ்ச்சியுடன் தங்களை வரவேற்கிறது. திரியின் மகுடத்தில் இன்னொரு கோஹினூர் வைரம். ரொம்ப மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது சார். தங்கள் அனுபவம் தோய்ந்த அருமையான பங்களிப்புகளை கண்டு களிக்க காத்திருக்கிறோம். நன்றி!

மனம் நிறைந்த நன்றி திரு வாசுதேவன் சார் :) My knowledge of Tamil music is very limited, especially when in the midst of yourself and all the other eminent persons participating on these pages. I will try to contribute, at least once in a while. Thank you, once again!

rajeshkrv
11th October 2014, 09:57 AM
காலை வணக்கம் நண்பர்களே .....

வாசு ஜி, மதுண்ணா, ராகவ் ஜி இதோ ஒரு அற்புத பாடல்

கிருஷ்ணா ஃப்ரேமா திரையில் பி.பி.ஸ்ரீனிவாஸ் அவர்களும் இசையரசியும் கலக்கோ கலக்கும் பாடல்

பெண்டியாலாவின் இசையில் நம்மை மயக்கும் பாடல் .. எல்லோரும் கட்டாயம் கேட்டு மகிழ வேண்டிய பாடல்

http://www.youtube.com/watch?v=i5EY-l-ncBk

rajeshkrv
11th October 2014, 09:58 AM
மனம் நிறைந்த நன்றி திரு வாசுதேவன் சார் :) My knowledge of Tamil music is very limited, especially when in the midst of yourself and all the other eminent persons participating on these pages. I will try to contribute, at least once in a while. Thank you, once again!

ராகதேவனே வருக வருக உமது கானமழையை பொழிக பொழிக

chinnakkannan
11th October 2014, 10:09 AM
//அருமை நண்பர் எங்கள் ஊர்காரர் சுவையான செய்திகளை சில்மிஷத்துடன் கலந்து தரும் சின்னக் கண்ணா//ஹையாங்க்.. மு்ரளி சார்.. என்ன இது.. தனியாகவெல்லாம் சொல்லிக் கொண்டு.. உருப்படியாக எதுவுமே நான் எழுதவில்லையே..:) நன்றி..

ஹாய் ராகதேவரே.. வாங்க வாங்க..

gkrishna
11th October 2014, 10:18 AM
//அருமை நண்பர் எங்கள் ஊர்காரர் சுவையான செய்திகளை சில்மிஷத்துடன் கலந்து தரும் சின்னக் கண்ணா//ஹையாங்க்.. மு்ரளி சார்.. என்ன இது.. தனியாகவெல்லாம் சொல்லிக் கொண்டு.. உருப்படியாக எதுவுமே நான் எழுதவில்லையே..:) நன்றி..

ஹாய் ராகதேவரே.. வாங்க வாங்க..

காலை (கலை) வணக்கம் அனைத்து நண்பர்களுக்கும்

சின்ன கண்ணன் சார் நீங்கள் ஊரில் இருந்து வரும் போது 12 வது பக்கத்தில் பதிவு செய்வேன் என்று சொன்னீர்கள் பக்கம் 12 இல் இருந்து காத்து கொண்டு இருந்தேன் :)

'காத்திருந்து காத்திருந்து ' வைதேகி காத்து இருந்தாள் நினைவு வந்து விட்டது தலை

ராஜேஷ் சார் காலை வணக்கம்

gkrishna
11th October 2014, 10:19 AM
மதிப்பிற்கும் மாரியாதைக்குரிய மூத்த பதிவாளர் ராகதேவன் நம்ம திரியில் . மிகவும் மகிழ்ச்சி. அவரது வேறு பல திரிகளில் பல பதிவுகள் கண்டு வியப்புற்றேன் .உண்மையில் அவர் ஒரு ராகதேவன் .நமது திரியின் பல்வேறு பரிமாணங்களுக்கு விரிவடைய போகிறது என்பதை அவரது வருகை கட்டியம் கூறி விட்டது.

அவரை மீண்டும் ஒரு முறை வருக வருக என்று வரவேற்கிறேன்

gkrishna
11th October 2014, 10:20 AM
dear ராஜேஷ் சார்

தெலுகு இசை அமைப்பாளர் விஜயா கிருஷ்ணமுர்த்தி உடன் ஜோசப் என்று ஒரு இசை அமைப்பாளர் இணைந்து இசை அமைத்த விஷயம் கேள்வி பட்டு இங்கு ஒரு பதிவு இட்டு இருந்தேன். அவரை பற்றி மேல் தகவல்கள் கிட்டுமா

chinnakkannan
11th October 2014, 10:26 AM
ஹாய் குட்மார்னிங்க் ஆல்..

குட்மார்னிங்க் ராஜேஷ்.. ம்ம் நேத்து ராத்திரி யம்மா.. ஓ. . நோ நேற்றிரவு தான் மஸ்கட் மறுபடி திரும்பி வந்தோம் (போய் இருந்தது ஜெபல் ஷாம்ஸ் என்ற மலைப் பகுதிக்கு..நாலரை மணி நேர டிரைவ்..) இனி மேல் தான் ஹோம் வொர்க் பண்ணணும்..

திரும்பறச்சே பிபிஎஸ் பாட்டாக் கேட்டேன்..

காதல் கொண்டாலே ஆடவர்கள் பாவம்..என்று இசையரசியும்..அதைச்சொன்னாலே என் ஆரம்பிக்கும் எல் ஆர் ஈஸ்வரியும் காதல் என்பது எதுவரை எனக் கேள்வி எழுப்பும் பிபிஎஸ் கல்யாணக் காலம் வரும்வரை எனச் சொல்லும் சந்திரபாபு என கலக்கலாய் ஒரு பாட்டில் ஆரம்பித்தது..
ஏதோ மனிதன் பிறந்து விட்டான்
பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை
நல்லவன் எனக்கு நானே நல்லவன்
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்..
பருவத்துப் பெண்கள் தனித்திருந்தால் பார்ப்பவர் மனதில் என்ன வரும்
இளையவரென்றால் ஆசை வரும் முதியவரென்றால் பாசம் வரும்.. என நிறைய பாடல்கள்..

முந்தா நாளிரவு ஜெபல் ஷாம்ஸ் மலையில் மெல்லிய குளிரில் கொஞ்சம் வழக்கம் போலான என் கரகரத்த இனிமைக் குரலில் நான் எடுத்துக் கொடுக்க மற்றவர்கள் பாடி ஆடினார்கள்..பழைய பாடல்கள் கம்மி தான்..(

ம்ம் அப்புறம் வீட்டிற்கு வந்தால் களைப்பு தான்.. இன்றுடன் லீவ் முடிய நாளையிலிருந்து ரொட்டீன் லைஃப்..


ஹோம் வொர்க் பண்ணிட்டு மறுபடி வர்றேன்..:)

rajeshkrv
11th October 2014, 10:27 AM
dear ராஜேஷ் சார்

தெலுகு இசை அமைப்பாளர் விஜயா கிருஷ்ணமுர்த்தி உடன் ஜோசப் என்று ஒரு இசை அமைப்பாளர் இணைந்து இசை அமைத்த விஷயம் கேள்வி பட்டு இங்கு ஒரு பதிவு இட்டு இருந்தேன். அவரை பற்றி மேல் தகவல்கள் கிட்டுமா

கிருஷ்ணமூர்த்தி விஜயா படங்களில் இசை உதவியாளராகவும் இசையமைப்பாளராகவும் இருந்தார். அதனால் அவர் பெயர் விஜயாகிருஷ்ணமூர்த்தி என்று டைட்டிலில் போடுவதுண்டு.

ஜோஸப் - பாப் இசையில் வல்லுனராக இருந்தார். குலேபகாவலி கதா படத்தொடக்கத்தின் போது ஜோஸப்பின் இசையை பயன்படுத்த நினைத்த என்.டி.ஆர்
அவரை அந்த படத்துக்கு இசையமைப்பாளராக்கி கிருஷ்ணமூர்த்தியை அவருக்கு உதவியாளராக்கினார். அப்படித்தான் அந்த படத்துக்கு இருவரும் இசையமைத்தனர்.

இது முன்பு சிமாட்ட மியுசிக் வலைதளத்தில் படித்ததாக நினைவு..

gkrishna
11th October 2014, 10:36 AM
அருமையான தகவல் ராஜேஷ் சார்

விஜயா கிருஷ்ணமுர்த்தி சிம்ம நாதம் (என்டிஆர்,வாணிஸ்ரீ) தெலுங்கில் சிம்ஹ பெல்லடு டைட்டில் கார்ட் நினைவில் உண்டு . இசை எம் எஸ் விஸ்வநாதன் உதவி விஜயா கிருஷ்ணமுர்த்தி

ஜகன்மோகினி இசை விஜயா கிருஷ்ணமுர்த்தி

இசை அரசி செம பாட்டு ஒன்று உண்டே 'காதல் அலைகள் மேலே ஊஞ்சல் ஆடும் பெண்மை அழகு நதிகளே ஓட நீரோடைக்கு என்ன பிரேமை " சூப்பர் பாலா இசை அரசி ஹம்மிங் 'தன்னானே தன்னானே தன்னானே '

பொங்கி பிரவாகமெடுக்கும் ஹொகெனகல் அருவி உடன் இசை அரசியின் இசை அருவி

gkrishna
11th October 2014, 10:40 AM
இதே போல் ஜகன் மோகினி படத்தில் முதல் பாடல் ஒன்று நினைவில்
உண்டு ' ராஜா ராஜா ராஜா ராஜா செந்தூரம் என் பூக்கள் '. இதுவும் இசை அரசி தானா ?

rajeshkrv
11th October 2014, 10:41 AM
கிருஷ்ணா ஜி,
இதோ காதல் அலைகள் மேலே
https://www.youtube.com/watch?v=VP8Oa_D2mSw

raagadevan
11th October 2014, 10:42 AM
ரொம்ப நன்றி சின்னக்கண்ணன், ராஜேஷ் & கிருஷ்ணா சார்! :)

gkrishna
11th October 2014, 10:47 AM
நன்றி ராஜேஷ் சார்
காதல் அலைகள் மேலே பாடலுக்கு . அருமையான மெலடி.

இன்னொரு பாடலும் ஜகன் மோகினியில் இசை அரசி என்று நினைவு 'என் பெயரோ நவ மோகினி என் உடல் எங்கும் சுவை மாங்கனி' என்று வரும் .

இதே போல் இன்னொரு பாடல் 'அழகே வா அருகே வா ஆட பொழுதுக்கு பொழுதுண்டு பாட ' இது பாலா ஈஸ்வரி என்று நினைவு

rajeshkrv
11th October 2014, 10:53 AM
en peyaro isayarasi thaan

idho ratchasiyum vanijayaramum paadiya padal telugu'vil

https://www.youtube.com/watch?v=SCpNttw5_FY

gkrishna
11th October 2014, 11:02 AM
நன்றி ராஜேஷ் சார்

gkrishna
11th October 2014, 11:10 AM
dear raajesh sir

1973 களில் நடிகர் திலகம் கலை செல்வி நடித்து யோகானந்த் இயக்கத்தில் தாய் என்று ஒரு கருப்பு வெள்ளை படம் வெளி வந்தது
உங்களுக்கும் நினைவு இருக்கும் . சூப்பர் இசை அரசி பாடல்
'எங்க மாமனுக்கும் மாமிக்கும் கல்யாணம்
இரண்டு யானை கட்டி போகுதம்மா ஊர்கோலம் '

மாமரத் தோப்புக்குள்ளே பந்த இட்டு
மான்களும் கொண்டு வந்த மஞ்சள் தட்டு
மாமரத் தோப்புக்குள்ளே பந்த இட்டு
மான்களும் கொண்டு வந்த மஞ்சள் தட்டு
சந்தனம் பூசிக் கொள்ள வந்தது ரெண்டு சிட்டு
தந்தது வானம்பாடி சாந்துப் பொட்டு
ஆலமரம் மேல ரெண்டு அணில் வந்து துள்ளுதடி
ராமருக்கு பாலம் கட்ட போன கதை சொல்லுதடி
ஆலமரம் மேல ரெண்டு அணில் வந்து துள்ளுதடி
ராமருக்கு பாலம் கட்ட போன கதை சொல்லுதடி
எங்க மாமனுக்கும் மாமிக்கும் கல்யாணம்
ரெண்டு யானை கட்டிப் போகுதம்மா ஊர்கோலம்


முதல் சரணத்தில்

ஆலமரம் மேல ரெண்டு அணில் வந்து துள்ளுதடி
ராமருக்கு பாலம் கட்ட போன கதை சொல்லுதடி
ஆலமரம் மேல ரெண்டு அணில் வந்து துள்ளுதடி
ராமருக்கு பாலம் கட்ட போன கதை சொல்லுதடி

இதை பாடும் போது சுசீலாவின் வாய்ஸ் உடன் மெல்லிசை மன்னரின் புல்லாங்குழல் இசை என்று நினைவு இரண்டும் சேர்ந்து கலைகட்டும்

அந்த 'போன கதை சொல்லுதடி' வரியில் இருந்தே நீங்கள் இன்னொரு பாடலுக்கு பயணம் செல்லலாம்

வாயாடி படத்தில் பாடகர் திலகத்தின் குரலில் 'அடி வாயாடி பொன்னா இல்லை பூவா கண்ணா இல்லை மீனா '

chinnakkannan
11th October 2014, 11:23 AM
//சின்ன கண்ணன் சார் நீங்கள் ஊரில் இருந்து வரும் போது 12 வது பக்கத்தில் பதிவு செய்வேன் என்று சொன்னீர்கள் பக்கம் 12 இல் இருந்து காத்து கொண்டு இருந்தேன்

// வந்து விட்டேன் கிருஷ்ணா ஜி..:)

. இப்போது ஒரு ஃபோன்கால் சற்று க் கீழே போய்விட்டு வந்தேன்..வந்தால் ஜெ.மோ வின் ஜெ.மா பாட்டு..
படம் பார்த்த போது ஓட்டிப் பார்த்த பாடல் என நினைக்கிறேன்..எனில் நினைவிலில்லை..ஜெகன் மோகினி அதிர்ஷ்டவசமாய் ஓடிய படம்.. மதுரை மீனாட்சி தியேட்டர் என நினைவு..ஆனால் நான் பார்த்தது என்னவோ பல வருடங்கள் சென்று

காதல் அலைகள் மேலே ஊஞ்சல் ஆடும் பெண்மை..படகு நதி வழி ஓட நீரோடைக்கு என்ன ப்ரேமை.(.பட்டப்ப் பகலில்) அடடா கடுங்குளிரோ அதைத் தந்தது வெண்ணிலவோ

படர்ந்திடும் உணர்ச்சிகளோ ஓர் உவகையைச் சொல்லிடுதோ// நல்ல மெலடியஸ் பாடல்.. கேட்ட க்ருஷ்ணா ஜிக்கும் போட்ட ராஜேஷீக்கும் ஒரு ஓ..+ தாங்க்ஸ்..

எல் ஆர் ஈஸ்வரி வாணி ஜெயராம் பாட்டும் பார்த்தேன் ராஜேஷ்..தாங்க்ஸ்..அது ஏன் அந்த க் கால தெலுங்குஇளவரசர்கள் எல்லாம் ஸ்போர்ட்ஸ் பேண்ட் டே அணிகிறார்கள்..( நரசிம்ம ராஜூவையோ அல்லது வேறு யாராவது ஹீரோவையோ வைத்துப் படம் எடுக்கும் போதே ஒரு கிளி, ஒரு குரங்கு, ஒரு நாய், ஒரு புலி என ஒரு தனியாக ஷாட் எடுத்து வைத்துவிடுவாராம் விட்டலாச்சார்யா.. (எங்கோ படித்தது) ஹீரோ ஏதாவது கால்ஷீட் தகராறு செய்தால் உடன் குரங்காகப் போகக் க்டவது தான்!)

தாய் படம் வெகு புகையாக இருக்கிறது நினைவில்க்ருஷ்ணாசார்.. ஆமாம் விட்டலாச்சார்யா பற்றி இங்கு பேசினோமா?

madhu
11th October 2014, 11:33 AM
இதே போல் ஜகன் மோகினி படத்தில் முதல் பாடல் ஒன்று நினைவில்
உண்டு ' ராஜா ராஜா ராஜா ராஜா செந்தூரம் என் பூக்கள் '. இதுவும் இசை அரசி தானா ?

அது வாணி ஜெயராம் இல்லையோ..

செந்தூரம் என் ரூபம் சிறு நகை சிந்துது ரோஜா.. நான் தான்.. ராஜா
மறந்தாயா.. நெடு நாளாய்... தேன் பூவை ... என் மன்னா

madhu
11th October 2014, 11:35 AM
dear raajesh sir

1973 களில் நடிகர் திலகம் கலை செல்வி நடித்து யோகானந்த் இயக்கத்தில் தாய் என்று ஒரு கருப்பு வெள்ளை படம் வெளி வந்தது
உங்களுக்கும் நினைவு இருக்கும் . சூப்பர் இசை அரசி பாடல்
'எங்க மாமனுக்கும் மாமிக்கும் கல்யாணம்
இரண்டு யானை கட்டி போகுதம்மா ஊர்கோலம் '


வீடியோ இருந்திச்சு.. இப்போ காணவில்லை. இப்போதைக்கு ஆடியோவைக் கேட்டு ரசியுங்க..

http://youtu.be/JnN3dlbKhrU

அப்படியே அங்கே இருந்து..

பொன்னா இல்லை பூவா

http://youtu.be/G16Ui_af7GI

gkrishna
11th October 2014, 11:35 AM
விட்டால் விடிய விடிய பேசலாம் விட்டல் ஆச்சார்யா பற்றி
ஆரம்பிங்க உங்க கச்சேரியை நண்பர் வாசு இருக்கும் போது :)
அப்பத்தான் கலை கட்டும் கச்சேரி
பாகம் ஒன்றில் கொஞ்சம் பேசிய நினைவு விஜயலலிதா பதிவோடு சேர்ந்து

gkrishna
11th October 2014, 11:37 AM
மது கண்ணா மன்னிக்கவும் அண்ணா :)
புறநானூறு அக நானூறு நினைவு இருக்கோ இல்லையோ
ஜகன் மோகினி பாடல்கள் அதனையும் தேன் சொட்டு
ஈஸ்வரி ஒரு பாடல் உண்டே
'பதினாறே ஏன் வயசையா ஆ
பள பள வென்ற சொகுசையா ஆ
புடிசிகோ கை புடிசிகோ என்னை கொஞ்சம் அணைசுகோ'

gkrishna
11th October 2014, 11:41 AM
வீடியோ இருந்திச்சு.. இப்போ காணவில்லை. இப்போதைக்கு ஆடியோவைக் கேட்டு ரசியுங்க..

அப்படியே அங்கே இருந்து..

பொன்னா இல்லை பூவா



dear madhu sir

இதே மாதிரி அன்பை தேடி படத்தில் ஒரு பாட்டு வரும் டி எம் எஸ் சுசீலா சேர்ந்து 'புத்தி கெட்ட பொண்ணு ஒண்ணு சுற்றுதடி'
சுசீலா முதலில் கீழ் ஸ்தாயியில் எடுத்து 'கண்களே நீங்கள் பாருங்கள் காதல் பேசுங்கள்' என்று பாடி விட்டு பின்னல் அதையே மேல் ஸ்தாயியில் பாடுவார் . நடிகர் திலகம் மல் ஜிப்ப கீழே கைலி ஒரு பெல்ட் costume பஞ்சம்

chinnakkannan
11th October 2014, 11:57 AM
சில சமயங்களில் பாடல்கள் முதலில் கேட்டிருப்போம்.. படத்தில் வேறு விதமாக இருக்கும்..

அது போன்ற பாடல் இது,.. எனக்கு மிக மிகப் பிடிக்கும்.. ஆனால் படம் வெளியான போது வரவில்லை.. சரி என சமீபத்தில் வந்த புதுப்படத்தில் அதே பாடலை உபயோகப்படுத்துகிறார்கள் எனத் தெரிந்த போது மகிழ்ச்சியாய் இருந்தது.. பாடல் பார்த்தால் கொஞ்சம் ஏமாற்றம் தான்..கல்யாண ஃபங்க்ஷனில் அந்தப் பாட்டைப் பாடுவது போன்று காட்சியமைப்பு..கொஞ்சம் வருத்தம் தான்..

இன்று எதையோ தேடிப் பார்க்கப் போக அந்தப் பழைய படத்தில் வராத பாட்டின் வீடியோ கிடைக்க ஆவலுடன் பார்த்தால் அதுவும் ஏமாற்றமே..

( இன்னும் என்னடா சஸ்பென்ஸ்… பாட்டச் சொல்லு..
ஷ்ஷ் மனசாட்சி)

பாடல் புத்தம் புதுக் காலை படங்கள் அலைகள் ஓய்வதில்லை அண்ட் மேகா

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=Ytzlszu2MaQ

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=mRWj5knSvC0

gkrishna
11th October 2014, 12:00 PM
டியர் சி கே சார்

நமக்கோ ஏமாற்றம் . சிலர் அதை தான் மாற்றம் என்கின்றனர் .

madhu
11th October 2014, 12:03 PM
dear madhu sir

இதே மாதிரி அன்பை தேடி படத்தில் ஒரு பாட்டு வரும் டி எம் எஸ் சுசீலா சேர்ந்து 'புத்தி கெட்ட பொண்ணு ஒண்ணு சுற்றுதடி'
சுசீலா முதலில் கீழ் ஸ்தாயியில் எடுத்து 'கண்களே நீங்கள் பாருங்கள் காதல் பேசுங்கள்' என்று பாடி விட்டு பின்னல் அதையே மேல் ஸ்தாயியில் பாடுவார் . நடிகர் திலகம் மல் ஜிப்ப கீழே கைலி ஒரு பெல்ட் costume பஞ்சம்

http://youtu.be/qsmT8a4oqoU

gkrishna
11th October 2014, 12:06 PM
நன்றி மது சார்

இந்த மூன்று பாடல்களுமே கிட்டத்தட்ட ஒரே இசை கோர்வையில் அமைக்கப்பட்ட பாடல்கள் போல் இருக்கும் .

madhu
11th October 2014, 12:09 PM
நண்பரிடம் தாய் படப்பாடல் வீடியோ கீதுங்கோ... அவர் அனுமதிக்காக வெயிட்டிங்

இந்தாங்கோ

http://youtu.be/HsYlilibfMA

chinnakkannan
11th October 2014, 12:51 PM
அவள் ஒரு விலைமகள்.. சூழ்நிலையில் அப்படி ஒரு வாழ்க்கைக்குத் தள்ளப்பட்டவள்..உடல், உணர்வுகள், மனம் எல்லாம் மரத்து இருப்பவள்..

அவளிடம் ஒரு நாள் எதிர்பாராத விதமாக ஒருவன் வருகிறான்.. அழகாய்ச் சீவிச் சிங்காரித்து படுக்கையறையில் அமர்ந்திருப்பவளின் மீது அவனது கண்கள் ஆவலாய்த் தீண்டுகின்றன.. கண்கள் மட்டும்..

அவளுக்கோ புரியவில்லை.. அவன் அவளைப் பார்க்கிறான் ஆவல் மிகக் கொண்டு. பின் அந்த அறையில் உயிர்ப்பூவாய்ச் சிரிக்கும் அவளது கறுப்பு வெள்ளைப் புகைப்படத்தைப் பார்க்கிறான்.. மறுபடியும் அவளை..

என்ன சொல்வது, என்ன செய்வது எனத் தெரியாமல் (அவளுக்கே இது புது அனுபவம்) அந்தப் புகைப்படத்தை எடுத்து அவனிடம் கொடுக்கிறாள்.. எடுத்துக்கொண்டு போ எனவும் சொல்கிறாள்..

அவன் எடுத்துக் கொண்டு செல்கிறான்..மறு நாள் அந்தப் புகைப்படத்தை வைத்துக் கல்லில் வெகு அழகாகச் சின்ன சிற்பமொன்றை வடிக்கிறான்.. ஆம் அவன் ஒரு சிற்பி..

வடித்த அந்தக் கற்சிற்பத்தை இந்த உயிர்ச்சிற்பத்திடம் கொடுக்கிறான்..அந்த ஊமை.. அவன் வடித்த பெண் சிலை உயிரோடு அவளிடம் பேசுகிறது..அவளுக்கோ மடை திறந்து பொங்கும் நீரலையென மனம் பொங்குகிறது..கண்களில் நீரோடை கட்டுகிறது..மைவிழி கரையக் கரைய அவளது மனதிற்குள் இருக்கும் உணர்வுகள் பொங்கி எழுகின்றன..

இவன் என்னை ஏற்றுக் கொள்வானா.. ஒரு பாலைவனமாய் இருந்த வாழ்வில் பசுங்காற்று வீசும் சோலையென வந்துவிட்டானா.. இவன் என்னை ஏற்றுக் கொண்டால் நான் என்ன ஆவேன் என நினைக்கிறாள்.. அதே சமயம் தாலி கட்டவா..என்னை மணக்க சம்மதமா என்பது போல் அவன் கேட்கிறான் அவளுடைய சந்தோஷத்தில் பாட்டும் வருகிறது..
*
இனிமேல் நாளும் இளங்காலை தான்
எனையே சூடும் மணமாலை தான்..
என்றும் வசந்தம் என் காதல் சொந்தம் கை கூடும் ம்ம்

பெண்ணென்று வாழாமல் பிழையாய் வாழ்ந்தேன்
கண் காண முடியாத் பிறையாய்த் தேய்ந்தேன்
நீ வந்த நேரம் நீங்காத பாரம்
சருகாய்க் காய்ந்து மெருகாய்த் தேய்ந்து போகும் என் பாவம் இந் நேரம்.ம்ம்

என் பாட்டின் ஆதாரம் உந்தன் ராகம்
என் ராக அலங்காரம் உந்தன் தாளம்
இசையாக நாளும் இணைகின்ற கோலம்
வளர்பிறையாக வளரும் காலம்..
கீதம் சங்கீதம் சந்தோஷம் ம்ம்ம்
*
மேற்கண்ட பாடல் இரவுப் பூக்கள் படத்தில் சித்ரா பாடியது.. படம் நான் பார்த்ததில்லை.. இந்தப் பாடல் மட்டும் இப்போது கேட்டேன். கொள்ளை கொள்கிறது மனத்தை..

படத்தில் நடித்திருப்பது ஜீவிதா ரவீந்தர். ஜீவிதா கொஞ்சம் கொஞ்சம் பூர்ணிமா ஜெயராம் சாயல். நல்ல நடிகை.. மொச்சைக் கொட்டை மொச்சைக் கொட்டையாய்க் கண்கள்..சிறு கொடையாரஞ்சுப்பழத்தை எப்போதும் புதைத்திருப்பதுபோலப் பொசு பொசு கன்னம்..கொஞ்சம் வித்யாச அழகு (பிற்காலத்தில் தெலுங்கு டாக்டர் ராஜசேகருக்கு மனைவியாக ஆனவர்)

எஸ்பெஷ்லி இந்தப்பாட்டில் அந்த ப் பெண்ணின் ஏக்கம், தாகம், வேண்டும் தன்மை, இறைஞ்சும் தன்மை எனக் கண்களில் வெகு இயல்பாய்க் கொண்டு வந்திருக்கிறார்..

பாடல் வீடியோ..
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=Kzd31yE2KPM

படத்தில் என்ன ஆகும்..அவர்களதுகல்யாண வாழ்க்கை?

(பாடலைக் கேட்டுக் கேட்டு வரிகளை டைப்படித்தேன்!)

chinnakkannan
11th October 2014, 01:34 PM
அவள் ஒரு இள நங்கை..படித்தவள். அழகி.. எப்படிப் பட்ட அழகு?

முகமதி நெற்றியில் மூண்ட பயமும்
அகத்தினில் தேக்கும் அழகே - தகதகக்கும்
பார்வையிலே பேசுகின்ற பாவைநீ என்னுடைய
ஆர்வத்தைத் தூண்டுகிறாய் ஆம்

என்றெல்லாம் இளைஞர்கள் பேசும் வண்ணம் கொண்ட தெறிக்கும் அழகு..

அதுமட்டுமில்லை..அவள் ஒரு ரிப்போர்ட்டர்..பத்திரிகையில் செய்திகள் எழுதுபவள்..

மெய்யிலே பொய்கூட்டா மேனிகொண்ட பாவையவள்
செய்தி வரைபவள்தான் ஆம்..

அவள் ஒரு தொடர் எழுதுகிறாள் பத்திரிகையில்..யாரைப் பற்றி. ஒரு தூக்குத் தண்டனைக் கைதியைப் பற்றி.. எழுதுகையிலேயே அவளுக்குக் கண்கள் கலங்குகின்றன.. நெஞ்சம் விம்முகிறது..காரணம் அந்தக் கைதி அவளின் அக்காவின் கணவர்..அக்காவைத் துன்புறுத்தி துன்புறுத்தி மரணமடைய வைத்த ஒரு சேடிஸ்ட் துன்பியலாளன்..

அன்று இரவு தொடர் எழுதி முடிக்கையில் வாசலில் தட் தட்.. பார்த்தால் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் ஒருஆண்மகன்.. அவளும் அவளுடன் வீட்டில் தங்கும் டாக்டர் தோழியும் அந்த் ஆண்மகனைத் தாங்கி படுக்கையறைக்குக் கூட்டிச் செல்கிறார்கள். முகம்பார்த்தால் அந்த நங்கைக்கு அதிர்ச்சி..

ஆம்..அந்த மனிதன் அவளது அக்காவின் கணவன்.. எவனை மிக ஆழமாக வெறுத்தாளோ அவனே அவள் வீட்டில்..கைதி உடையில்

போலீசுக்குப் போகலாம் என நினைக்கையில் டாக்டர் தோழி தடுக்கிறாள்..முதலில் மருத்துவம் அப்புறம் போலீஸ்..

ம்ஹூம் என இவள் மறுக்க மறுக்க டாக்டர் அந்தக் கைதிக்கு மருத்துவம் செய்ய, கண் விழிக்கும் அவன் தனது மைத்துனியை அடையாளம் கண்டு கொள்கிறான்..

அவளிடம் சொல்கிறான்.. “ மைத்துனியே.. நீ உன் அக்காவைக் கொடுமைப் படுத்தினேன் நான் என்று பத்திரிகையில் எழுதியிருந்தாய்.. அது எல்லாம் பொய்.. உண்மை என்னவெனில்..” எனத் தன் கதையைச் சொல்கிறான்..

சிவகுமார், ராதா, ஜெயஸ்ரீ நடித்த மனிதனின் மறுபக்கம் படத்தின் சுருக்க்கக் கதை.. சிவகுமார் - தனது மைத்துனி ஜெயஸ்ரீ கதை எழுதும்போது கெட்டவராகவும், அதே சமயத்தில் தன் கதை சொல்லும்போது நல்லவராக நடித்திருப்பார் நன்றாக.. ராதா தான் ஜோடி..மாடலிங் கின் போது மாடர்ன் டிரஸ்ஸாகட்டும் வித வித வண்ண மயமான சேலைகளிலாகட்டும் சற்றே நிறம் குறைந்த புஷ்பமாக ஒளிர்ந்திருப்பார் (வாசு சார் இந்தக்கால ஃபோட்டோ வே வேண்டாம்..!)

இந்தப் படத்தில் அனேகமாக எல்லாப்பாடல்களும் நன்றாக இருக்கும்

இருந்தாலும் இந்தப் பாட்டு எஸ்.பி.பி ஜானகி பாடுவது எனக்குப் பிடிக்கும்.. பாடல் வரி வைரமுத்து..

*

கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன
நெஞ்சுக்குள்ளே அன்பின் பாரம் என்ன

நீ என்ன மாயம் செய்தாய்
நீருக்குள் தீயை வைத்தாய்

நீதந்த காதல் சொந்தம்
வாழட்டும் கண்ணா என்றென்றும்


வானத்தில் ஊஞ்சல் கட்டி ஆடும் அந்த மேகம்
பூமிக்கு நீரை சிந்தும் சொந்தம் என்னம்மா

நீ அந்த வானம் இந்த பூமி இங்கு நானே
நெஞ்சத்தில் தாகம் என்று நீயும் சொல்லம்மா

காலங்கள் செல்லச்செல்ல ஆயுள் இன்று கூடும்
ஆனாலும் காதல் என்னும் சொந்தம் என்றும் வாடும்
நீலம் பூத்த கண்கள் ரெண்டும் உன்னை வைத்துக்கொள்ளட்டும்
நீயும் நானும் மாலை சூடும் காலம் என்ற காலம் இந்தக்

கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன
நெஞ்சுக்குள்ளே அன்பின் பாரம் என்ன



பூவுக்கு தாலி கட்ட போகும் தென்றல் காற்று
போகட்டும் நீயே இன்று வாழ்த்துச்சொல்லி போ
காதுக்குள் நாளை அந்த மேளச்சத்தம் கேட்கும்
கையோடு நீயும் கொஞ்சம் மாலை கட்டித்தா

தாளத்தை தள்ளிவைத்து ராகம் எங்கு போகும்
பாசத்தை தள்ளிவைத்து ஜீவன் எங்கு வாழும்
பொன்னில் பாதி பூவில் பாதி
பெண்ணின் வண்ணம் நான் கண்டேன்
காதல் வேதம் கண்ணில் ஓடும் கண்ணே கட்டி பெண்ணே இந்த

கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன
நெஞ்சுக்குள்ளே அன்பின் பாரம் என்ன


பாடல் வீடியோ..


http://www.youtube.com/watch?feature=player_embedded&v=yEayiPak0-I

vasudevan31355
11th October 2014, 01:40 PM
இன்றைய ஸ்பெஷல் (90)

'சபதம்' (1971) (Full meals)

http://i.ytimg.com/vi/NdqjFjFGso4/hqdefault.jpg

தேவநாயகி பிலிம்ஸ் 'சபதம்' (1971) என்ற அருமையான ஒரு படம். ரவிச்சந்திரன், கே.ஆர்.விஜயா, நாகேஷ், டி கே.பகவதி, வி.கே.ராமசாமி, சஹஸ்ரநாமம், அஞ்சலிதேவி, பண்டரிபாய் நடித்த இத்திரைப்படம் கதாநாயகிக்கு மிகவும் முக்கியத்துவம் அளித்த ஒரு படம். (கிருஷ்ணா! இதிலும் இந்திராதேவி உண்டு) நடனத்தை சலீம் அமைத்திருப்பார். நமது பி.என்.சுந்தரம் ஒளிப்பதிவு இயக்குனராக பணியாற்றி இருப்பார். இயக்கம் நமது பிரிய பி.மாதவன்.

கதை

மிக நல்லவரான பெரிய மனிதர் செல்வநாயகத்திற்கு (டி கே.பகவதி) அவரைப் போலவே உருவ ஒற்றுமையும், குரல் ஒற்றுமையும் கொண்ட துரைசிங்கம் (டி கே.பகவதி) என்ற தறுதலை தம்பி. அண்ணனிடமிருந்து சொத்தை பாகம் பிரித்துக் கொண்டு குடி, காமம் என்று சொத்தை அழிக்கிறான் அவன். தம்பியின் போக்கு கண்டு, மனம் நொந்து, மறுபடியும் அவனைத் தன்னுடன் சேர்த்துக் கொள்கிறார் செல்வநாயகம். தன் மனைவி கண் தெரியாத ராஜேஸ்வரி (அஞ்சலிதேவி), மகன் முத்து மேல் அதிக பாசம் அவருக்கு. தம்பி துரைசிங்கத்திற்கு லஷ்மி (பண்டரிபாய்) என்ற பண்பான மனைவி.


வியாபார விஷயமாக அண்ணனும் தம்பியும் வெளியூர் புறப்பட, அந்த சந்தர்ப்பத்தைத் தனக்கு சாதமாக்கிக் கொள்கிறான் தம்பி. உருவ ஒற்றுமையைப் பயன்படுத்தி, அண்ணனைக் கொன்றுவிட்டு, அண்ணன் வேடத்தில் வந்து நல்லவன் போல ஊரில் கபடமாடுகிறான் துரைசிங்கம். ஊரும் அவனை செல்வநாயகம் என்று பரிபூரணமாக நம்பி ஏமாறுகிறது. குழந்தையுடன் இருக்கும் தன் அண்ணியை பைத்தியம் என்று பட்டம் கட்டி அவள் வீட்டை விட்டு ஓடும்படி செய்கிறான் செல்வநாயகம்.


தன் கணக்கப்பிள்ளை வள்ளிமுத்துவின் (சஹஸ்ரநாமம்) மகள் சிவகாமி (கே.ஆர்.விஜயா) என்ற பெண்ணின் மீது காமப் பித்து பிடித்து அலைந்து, அவளை ஆசைநாயகியாய் வைத்துக் கொள்ள வள்ளிமுத்துவிடமே அனுமதி கேட்கிறான். இல்லையென்றால் கொன்று விடுவதாக பயமுறுத்துகிறான். அவன் சுயரூபம் தெரிந்து கொண்ட வள்ளிமுத்து செய்வதறியாமல் திகைத்து தூக்கில் தொங்குகிறான். (உண்மையில் துரைசிங்கத்தால் தூக்கில் தொங்கவிடப் படுகிறான்) வெளியூரில் படிக்கும் சிவகாமி தன் தந்தை இறந்த சேதி கேட்டு துடிதுடித்துப் போகிறாள். தன் தந்தையின் கடிதம் மூலம் செல்வநாயகம் ஒரு காமுகன் என்று புரிந்து கொள்கிறாள். தந்தை சாவுக்குக் காரணமானவனை பழி வாங்கத் துடிக்கிறாள். ஆனால் செல்வநாயகம் போர்வையில் இருக்கும் துரைசிங்கம் ஊர்மக்களை அப்படியே தன்னை நல்லவன் என்று நம்பும்படி செய்திருக்கிறான். இதனால் சிவகாமி துரைசிங்கம் கெட்டவன் என்று ஆதாரத்துடன் ஊர் மக்களிடம் நிரூபித்தாலும் தன் சாமர்த்தியப் பேச்சாலும், பசுத்தோல் போர்த்திய புலி நடிப்பாலும் சிவகாமியின் ஆதாரங்கள் ஒவ்வொன்றையும் உடைத்தெறிகிறான் துரைசிங்கம். அவனை அயோக்கியன் என்று ஊர் மக்கள் முன்னிலையில் விரைவில் நிரூபிப்பதாக துரைசிங்கத்திடம் 'சபதம்' போடுகிறாள் சிவகாமி.

http://i.ytimg.com/vi/yPRAkU6T8zk/0.jpg

வீட்டை விட்டு ஓடிப்போன ஓடிப்போன ராஜேஸ்வரியின் மகன் முத்து (ரவிச்சந்திரன்) வளர்ந்து பெரியவனாகி எல்லா உண்மையையும் தன் தாயின் மூலம் அறிகிறான். முத்து சிவகாமியைக் காதலித்து துரைசிங்கம் மூலம் சிவகாமி பட்ட துயரங்களை அறிந்து கொள்கிறான். பாதிக்கப்பட்ட சிவகாமி, முத்து இருவரும் கூட்டணி அமைத்து, திட்டம் போட்டு துரைசிங்கம் வீட்டில் தம்பதிகளாக நுழைகிறார்கள். இவர்களுடன் துரைசிங்கத்தின் மகன் நாகேஷும் தன் தந்தையின் கபட நாடகத்தைத் தெரிந்து கொள்ள, மூவரும் துரைசிங்கத்துடன் ஆடு புலி ஆட்டம் விளையாட ஆரம்பிக்கிறார்கள். அவனுக்கெதிரான ஆதாரங்களைத் திரட்டி அவனை நிலைகுனிய வைத்து ஊருக்கு 'அவன் துரைசிங்கம்தான்...செல்வநாயகம் இல்லை' என்று புரிய வைக்கிறார்கள். இறுதியில் இறந்து போன செல்வநாயகமே உயிருடன் திரும்ப நேரில் வர, அதிர்ச்சியடைந்து தான் வாயாலேயே தன் அண்ணன் செல்வநாயகத்தைக் கொன்றதாக தன்னையுமறியாமல் ஊர் மக்கள் முன்னிலையில் கூறி காவலர் வசம் மாட்டிக் கொள்கிறான் துரை சிங்கம். ('புதிய பறவை' கோபால் போல) ஆனால் வந்தது உண்மையான அண்ணனா?..

இறுதியில் தன் 'சபத'த்தில் மாபெரும் வெற்றி காணுகிறாள் சிவகாமி.


இந்தப் படத்தின் மிகப் பெரிய பலமான தூண் இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ். என்ன ஒரு திறமை! இவர் நம் திரையுலகிற்குக் கிடைத்த ஒரு குறிஞ்சி மலர். இசையமைப்பதோடு மட்டுமல்லாமல் வித்தியாசமான குரல் வளம் கொண்ட பாடகரும் கூட.

http://i.ytimg.com/vi/BAlryz7Jl2Q/hqdefault.jpg

இப்படத்தில் இடம் பெற்ற எஸ்.பி.பாலா தங்கக் குரலில் பாடிய சூப்பர் டூப்பர் ஹிட் பாடலான

'தொடுவதென்ன தென்றலோ மலர்களோ'

பாடல் ஒன்று போதும் ஜி.கே.வெங்கடேஷ் அவரின் திறமையை காலம் முழுதும் பறைசாற்ற. நமக்கு இறப்பு என்று ஒன்று வரும்போது இந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டே கண் மூடினால் கண்டிப்பாக சொர்க்கம் கிடைக்கும்.


இந்தப் படத்தில் அதே போல அருமையான ஒரு பாடல். 'இன்றைய ஸ்பெஷலா'க வரும் பாடல். ஆனால் அதிகம் பேசப்படாத அதிசயப் பாடல். அப்போது ஓரளவிற்குப் பிரபலம். பாடலென்றால் அப்படி ஒரு பாடல்.

'ஆட்டத்தை ஆடு
புலியுடன் ஆடு
போட்டிக்கு வருகின்ற ஆட்டம் ஆடு'

இந்தப் பாட்டின் இடையிடையே வரும் இசை சித்து வேலைகள் நிஜமாகவே பிரமிக்கக் கூடிய வகையைச் சேர்ந்தவை. புத்திசாலித்தனமான வரிகளுக்கு கமர்ஷியல் இசை கிளாஸிக்காக. நிறைய வித்தியாசங்களை இப்பாடலில் உணர முடியும். ஒரு குத்துப் பாட்டு ரேஞ்சுக்கு இருந்தாலும் கதையோடு ஒட்டிய பாடல் வரிகளாலும், பங்கு கொண்ட நடிகர்களின் உற்சாகமான நடிப்பாலும், துள்ளல் போட வைக்கும் இசையாலும் இப்பாடல் ஜோராக மிளிர்கிறது.


பாடலின் வரிகள் அற்புதம்.

'உயர்ந்து நின்றால் தேவாரம்
உருண்டு வந்தால் அடிவாரம்'

மகோன்னதமான வரிகள்.

"பொய் வேஷம் போடும் துரைசிங்கமே! இப்போது உயரத்தில் நிற்கலாம். என்னால் அடிவாரத்திற்கு உருண்டு வரப்போகிறாய்"

என்ற அர்த்தம் தொனிக்கும் அழகான வரிகள். கண்ணதாசன் ரகளை வரிகளை தந்திருப்பார்.

பாடலின் நடுவில் வரும் குத்திசைக்கு நாகேஷும், ரவியும் ஆடுகளின் முகமூடி அணிந்து கொண்டு குத்தாட்டம் போடுவது அமர்க்களம். நாகேஷுக்கு அவருக்காகவே பாடுவதற்கென்றே பிறந்த ஏ.எல்.ராகவனும், கே.ஆர்.விஜயாவிற்கு ராட்சஷியும், ரவிச்சந்திரனுக்கு ஜி.கே.வெங்கடேஷ் அவர்களும் குரல் தந்து பின்னியிருப்பார்கள். (ஜி.கே.வெங்கடேஷின் குரல் அம்சமான ஒரு குதூகலம். சாய்பாபா குரல் போல) ஈஸ்வரின் அபரிமிதமான தெள்ளத் தெளிவான உச்சரிப்பு இப்பாடலுக்கு கூடுதல் பலம். 'பொல்லாத சபதம்' என்று அவர் 'ல்' லிற்கு படு அழுத்தம் கொடுத்து உச்சரிப்பது அவரால் மட்டுமே முடிந்த ஒன்று.


'புன்னகை அரசி'க்கு இந்த மாதிரி ரோல் அல்வா சாப்பிடவது போல. கலக்கிவிடுவார். டி .கே.பகவதி நல்ல அண்ணனாகவும், கெட்ட தம்பியாகவும் அருமையான நடிப்பைத் தந்திருப்பார். படம் நெடுக கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் அமைதியாகச் சிரித்தபடியே வில்லத்தனம் புரிவது ஏ.ஒன். இந்தப் படம் சென்னையில் பாரகன், கிரௌன், புவனேஸ்வரி ஆகிய தியேட்டர்களில் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது.

http://content.hungama.com/movie/display%20image/180x255%20jpeg/83168554.jpg

இனி பாடலின் வரிகள்.

தொகையறா

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
உறவு கலவாமை வேண்டும்

தத்தளாங்கு தகஜும்... தத்தளாங்கு தகஜும்... தத்தளாங்கு தகஜும்

கே.ஆர்.விஜயா

ஆட்டத்தை ஆடு
புலியுடன் ஆடு
போட்டிக்கு வருகின்ற ஆட்டம் ஆடு
இன்று ஆடுகள் மோதட்டும் புலியோடு
வெள்ளாட்டின் சபதம்
அது பொல்லாத சபதம்

ஆட்டத்தை ஆடு
புலியுடன் ஆடு
போட்டிக்கு வருகின்ற ஆட்டம் ஆடு
இன்று ஆடுகள் மோதட்டும் புலியோடு
வெள்ளாட்டின் சபதம்
அது பொல்லாத சபதம்

ரவிச்சந்திரன்

கட்டு கட்டா திருநீறு
கழுத்தில் ஆடும் மணிமாலை
கட்டு கட்டா திருநீறு
கழுத்தில் ஆடும் மணிமாலை
பக்தி பொங்கும் புலியைப் பார்த்து
பயப்படாதே வெள்ளாடு
பயமில்லாமல் நீ ஆடு
அடுத்த ஆட்டம் நீ ஆடு

வெள்ளாட்டின் சபதம்
அது பொல்லாத சபதம்
வெள்ளாட்டின் சபதம்
அது பொல்லாத சபதம்

ஆட்டத்தை ஆடு
புலியுடன் ஆடு
போட்டிக்கு வருகின்ற ஆட்டம் ஆடு
இன்று ஆடுகள் மோதட்டும் புலியோடு

நாகேஷ்

தகப்பன் புலியோ தள்ளாடுது
அந்த புலிக்குப் பிறந்த வெள்ளாடிது
தகப்பன் புலியோ தள்ளாடுது
அந்த புலிக்குப் பிறந்த வெள்ளாடிது
அப்பாவி அப்பாவும்
இப்பாவி பப்பாவும்
தப்பான சொந்தங்கள் கொண்டாடுது
மொகத்தப் பார்த்து நீ ஆடு
களத்தைப் பாத்து காய் போடு

வெள்ளாட்டின் சபதம்
அது பொல்லாத சபதம்
வெள்ளாட்டின் சபதம்
அது பொல்லாத சபதம்

ஆட்டத்தை ஆடு
புலியுடன் ஆடு
போட்டிக்கு வருகின்ற ஆட்டம் ஆடு
இன்று ஆடுகள் மோதட்டும் புலியோடு

கே.ஆர்.விஜயா

உயர்ந்து நின்றால் தேவாரம்
உருண்டு வந்தால் அடிவாரம்
உயர்ந்து நின்றால் தேவாரம்
உருண்டு வந்தால் அடிவாரம்
கள்ளனாகி தோல்வி கண்டால்
கையில் உண்டு தேவாரம்
அதிகம் உண்டு ஆதாரம்
தவணை தந்தோம் ஒரு வாரம்.

பகவதி சரணாகதி அடைய ஒரு வாரம் தவணை தருகிறார்களாம். வாவ்!

வெள்ளாட்டின் சபதம்
அது பொல்லாத சபதம்
வெள்ளாட்டின் சபதம்
அது பொல்லாத சபதம்

ஆட்டத்தை ஆடு

மூவரும்

புலியுடன் ஆடு
போட்டிக்கு வருகின்ற ஆட்டம் ஆடு
இன்று ஆடுகள் மோதட்டும் புலியோடு

வெள்ளாட்டின் சபதம்
அது பொல்லாத சபதம்
வெள்ளாட்டின் சபதம்
அது பொல்லாத சபதம்

இப்பாடல் இணையத்தில் தனியே தேடிப்பார்த்ததில் கிடைக்கவில்லை. அதனால் 'சபதம்' முழுப் படத்தையும் இங்கு பதித்திருக்கிறேன். அதில்

1:42:56 நேரம் தொடங்கி 1:47:35 நேரம் வரை இப்பாடலைக் கண்டு இன்புறுங்கள். அவசியம் கேட்டுப் பாருங்கள்.

'சபதம்' உண்மையிலேயே எனக்கு கொஞ்சம் சவால் விட்டுதான் விட்டது.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=NdqjFjFGso4

gkrishna
11th October 2014, 01:46 PM
மனிதனின் மறுபக்கம் ரங்கராஜ் படம் இல்லையோ சி கே சார்

இந்த ஜேசுதாஸ் பாடல் ஒண்ணு நினைவில் உண்டு
இந்த படம் வரும்போது எல்லாம் திலிப் அதுதாங்க நம்ம ரஹ்மான் சார் தான் கிபோர்ட் பிளேயர் என்று கேள்வி

'ஊமை நெஞ்சின் சொந்தம்
இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்
ஊமை நெஞ்சின் சொந்தம்
இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்

வார்த்தைகள் தேவையா மௌனமே கேள்வியா '

gkrishna
11th October 2014, 01:55 PM
https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcQqGVWI0Mh-7XITknOluLURcVTiDHk8-mpEP2FpCvTJ4zky14pBXg

சபதம் படத்தில் டி கே பகவதி ருத்ராட்ச பூனை ஆச்சே நண்பா வாசு
எத்தனையோ படங்களில் நடித்து இருந்தாலும் இந்த படத்தில் வரும் பகவதி வில்லன் ரோல் மறக்க முடியாத ஒன்று. நெத்தியில் பட்டை நெஞ்சில் கொட்டை (ருத்ராட்சமப்பா ), செய்வது எல்லாம் சேட்டை

இந்த படம் வரும் போது ராசையா அதான் நம்ம மொட்டை இசை ஞானி ஜி கே வெங்கடேஷ் க்கு உதவியாளர் ஆக பணி புரிந்தார் என்று நினைவு

gkrishna
11th October 2014, 02:00 PM
'தொடுவதென்ன தென்றலோ மலர்களோ' பாட்டின் நடுவே ரவி விசில் அடித்து கொண்டு தலையை துவட்டி கொண்டு லேசாக கண் சிமிட்டி விஜயாவை லுக் விடும் காட்சி ஒன்று போதுமே நண்பா

Murali Srinivas
11th October 2014, 02:06 PM
கண்ணா/கிருஷ்ணாஜி,

மம்மூட்டி நடித்த நிறக்கூட்டு என்ற மலையாளப் படம்தான் தமிழில் மனிதனின் மறுபக்கம் ஆக வெளிவந்தது. பாலு மகேந்திராவின் யாத்ரா படத்திற்காக மம்மூட்டி தலையை கிட்டத்தட்ட மொட்டையடிக்க அதே கெட்டப்பை இயக்குனர் ஜோஷி தன நிறக்கூட்டு படத்திலும் சாமர்த்தியமாக பயன்படுத்திக் கொண்டார். 1985 செப்டம்பரில் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவந்த யாத்ராவும் சரி நிறக்கூட்டும் சரி மிகப் பெரிய வெற்றி பெற்றன.

அந்த வெற்றியைப் பார்த்துத்தான் சத்யஜோதி பிலிம்ஸ் தமிழில் சிவகுமாரை வைத்து தயாரித்தார்கள். மனிதனின் மறுபக்கம் சிவகுமாரின் 150-வது படமாக 1986-ல் [ஜூலை என்று நினைவு] வெளிவந்தது. மம்மூட்டியின் performance -ஐ வைத்துப் பார்க்கும்போது சிவகுமார் ரொம்பவே சுமார்தான். இது போன்றே மம்மூட்டி நடித்த மற்றொரு சூப்பர் ஹிட் படமான ஷ்யாமா தமிழில் சிவகுமார் நதியா நடித்து உனக்காகவே வாழ்கிறேன் என்ற பெயரில் வெளியானது. அதுவும் சொதப்பல் கேஸ்தான்.

அன்புடன்

gkrishna
11th October 2014, 02:43 PM
அருமையான தகவல்களை தந்து சிறப்பு செய்து விட்டீர்கள் முரளி சார்

krishnaa

gkrishna
11th October 2014, 02:44 PM
dear vaasu

இளையராஜா ஜி கே வெங்கடேஷ் பற்றி சொன்ன சில தகவல்கள்(நன்றி மாலைமலர்)

ஜி.கே.வெங்கடேஷ் மி யூசிக் கம்போஸ் செய்யும்போது ஓய்வு கிடைத்தால், பழைய பாடல்களின் உயர்தரமான அமைப்புகளை விளக்குவார்.

அவர் எஸ்.வி. வெங்கட்ராமனுக்கு வீணை வாசித்தவர். எம்.எஸ்.சுப்புலட்சுமி நடித்த "மீரா'' உள்பட பல படங்களுக்கு இசை அமைத்தவர், எஸ்.வி.வெங்கட்ராமன். மீரா படத்தில் ஒரு காட்சி. ஒட்டகத்தின் மீது போய்க்கொண்டே எம்.எஸ். ஒரு பாட்டு பாடுவார்.

இதற்கு இசை அமைக்கும் முன், உயிரியல் பூங்காவுக்கு ("ஜு'') வெங்கட்ராமன் சென்றார். அங்கு காசு கொடுத்து ஒரு ஒட்டகத்தின் மீது சவாரி செய்தார். ஒட்டகம் நடந்த நடையை தாள கதியாக வைத்து, மி யூசிக் கம்போஸ் செய்தார் என்று சொல்வார், ஜி.கே.வி.

"சிலையே நீ என்னுடன் பேசவில்லையோ?'' என்ற பாடலை ஜீ.கே.வி. பாடினால் மிக அழகாக இருக்கும்.

chinnakkannan
11th October 2014, 02:49 PM
”இந்தக் கண்ணாப் பய இருக்கானே..ஒரு மோஸ்ஸமான பேர்வழி..அவன் கிட்ட என் மனசக் கொடுத்துட்டேன் அவன் கிட்ட என்னையே கொடுக்கலாம்னு இருக்கேன்.. அவன் என்னடான்னா ஒரு பேச்சு சொல்றானா எனக்கு” தலைவி உருகுகிறாள்.. கண்ணா..என்னடாப்பா எனக்கு இப்படித் துன்பம் மிகச் செய்யறே….

காண்கின்ற வழியெல்லாம் கண்ணாவுன் தோற்றமென
பூண்கின்ற நாணம் பொலிவிழக்க - நோன்பெனவே
வண்ண விழிகளால் வாடியே நிற்குமெனை
திண்ணமாய் தீண்டுதற்கு வா

தலைவின்னா தோழின்னு இருக்கணுமே.. இருக்கா..சொல்றா..

“இந்தப்பாரு.. நாம இருக்கறது வாஸ்ஸப் ஃபேஸ்புக் ட்விட்டர் யுகம்..இப்படி எக்ஸர்ஸைஸ்லாம் பண்ணாம சாப்பிடாம இளைச்சா ஒடம்பு என்னாறது..இப்படி வெறிச்சு வெறிச்சுப் பாக்கறதும் கண்ணா ந்னு மூச்சிழுத்து கண்ணான்னு மூச்சு விடறதும் பக்கத்துல இருக்கற எனக்குக் கேட்டா பரவாயில்லை.. தூரத்துல இருக்கற ஒங்க அம்மாக்கும் கேட்டுறப் போறது..ஸோ ஒன்னப் பத்தி வேணும்னா நான்
கண்ணாக் கிட்ட சொல்லிடட்டுமா”

பார்வை பொருளென்ன பக்குவமாய்ச் சொல்தோழி
ஆர்ப்பரிக்கும் நெஞ்சின் அலையோசை - கோர்வையாய்
காதுகளில் மோதியே கேட்கிறதே கண்ணனிடம்
தோதுபடச் சொல்லட்டு மா

“ஆமா.. நீ எல்லாம் இப்படித் தான்.. சமய சந்தர்ப்பம் பார்த்து நீ எங்கிட்டுப் போய் சொல்வே கண்ணா கிட்ட..அந்த மாயக்காரன் எங்க இருக்கானோ..எப்படி ஒளிஞ்சுக்கிட்டு இருக்கானோ.. சரி போடி..இதோ பாரு..வானில இருக்கே..என்னோட சோக நிலையைப் பார்த்தும் புரிஞ்சுக்காம சிரிச்சுண்டு இருக்குதே இந்த நிலா.. இதுக்கிட்ட சொல்றேன்.. அவனைப் பார்த்தா என்னோட ஸிச்சுவேஷன், தோற்றம் எல்லாம் சொல்லுன்னு” எனச் சொல்லிச் சொல்கிறாள்..
*
கண்ணனைக் காண்பாயா நிலவே என் மனம் சொல்வாயா
கண்ணிலே தலைவன் முகம் வந்து
நெஞ்சில் புகுந்து கலந்து குலாவுது

தூக்கம் பறக்கின்றதே தொடர்ந்து விரகம் நடக்கின்றதே
பெண்மை ஏக்கம் அறிவாயே நேற்றுச் சொன்ன
இன்பக் கதைகளில் துன்பம் பிறந்தது..

நீரும் எனைச் சுடுதே விழியில்
கண்ணீர் மழை விழுதே
உன் கைதொட்டுப் பீரிந்ததனால் காணும் இந்த
மங்கை மலர்வனம் என்று மலர்வது…

கண்ணனைக் காண்பாயா நிலவே என் மனம் சொல்வாயா

**
பாடல் இடம்பெற்ற படம் மனிதனின் மறுபக்கம்..(ம்ம் அதே படம் தான்) பாடியவர் சித்ரா..

ஆடியோ லிங்க்..

http://www.inbaminge.com/t/m/Manithanin%20Marupakkam/Kannanai%20Kanpaaya.eng.html

Russellisf
11th October 2014, 02:49 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/c_zps3e6e0a83.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/c_zps3e6e0a83.jpg.html)


பல ஆண்டுகளுக்கு முன் நடந்தது இது....

இசையில் ஆர்வம் கொண்ட ஒரு இளம் பெண்...தன் சகோதரியோடு இணைந்து ஒரு பாடலை பாடி வெளியிட நினைத்து ..பல கிராமபோன் ரிகார்டு [ இசைத்தட்டு ] கம்பெனிகளை கேட்டுப் பார்த்தாராம்...ஆனால் இசைத்தட்டு கம்பெனிகள் இதற்கு மறுத்து விட்டார்களாம்....அவர்கள் சொன்ன ஒரே காரணம்...
‘‘ஓதுவார்கள் பலர் பாடியும் அது மக்களைச் சரியாக சென்றடையவில்லை...வேண்டாம் இந்த வீண்வேலை....விட்டு விடுங்கள்..’’

விடவில்லை அந்த சகோதரிகள் ...இசைத்தட்டு சுழல்வது போல் ..இசைத்தட்டு கம்பெனிகளை சுற்றி சுழன்று வந்து முயற்சித்தும் ..கீறல் விழுந்த இசைத்தட்டாக “முடியாது “ என்ற பதிலே திரும்ப திரும்ப வந்ததாம்...

ஆனாலும் மனம் தளராத அந்த சகோதரிகள் அந்தப் பாடலை பல ராகங்களில் டியூன் போட்டுப் பாடிப் பார்த்தார்களாம்...
முதலில் ‘ஆபேரி’ அடுத்து ‘சுப பந்துவராளி’. அதனைத் தொடர்ந்து ‘கல்யாணி’. இறுதியாக ‘தோடி’.. இப்படி நான்கு ராகத்தில் பாடினார்கள் இந்தப் பாடலை...!!!
ஒருவழியாக 1970 - ல் வெறும் 500 ரிகார்டுகள் மட்டுமே வெளியிட்டார்களாம்..

ஆனால்....
அந்த ரிக்கார்ட் பல ரிக்கார்டுகளை முறியடித்து வரலாற்று சாதனை படைத்தது ...
இப்படி அந்தக் காலத்தில் படாத பாடுபட்டு பாடி இந்த இசைத்தட்டை வெளியிட்ட சகோதரிகள் ...

சூலமங்கலம் சகோதரிகள் !!
அந்தப் பாடல்...
கந்த சஷ்டி கவசம்...

சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்..

கந்தசஷ்டி கவசத்தை வேறு சிலரும் பாடியிருந்தாலும், சூலமங்கலம் சகோதரிகள் அளவுக்கு வேறு எதுவும் நம்மைக் கவரவில்லை...!


courtesy net

Russellisf
11th October 2014, 02:50 PM
முள்ளும் மலரும் ...
இந்தப் படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒரு பாடலை கொடுத்திருக்கிறார் இயக்குனர் மகேந்திரன்...
இது தற்செயலாக நடந்ததா..அல்லது திட்டமிட்டு செய்யப்பட்டதா எனத் தெரியவில்லை...!!!

படா பட் ஜெயலட்சுமிக்கு ” நித்தம் நித்தம் நெல்லுச்சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா…”
ஷோபாவுக்கு “அடி பெண்ணே…. பொன்னூஞ்சல் ஆடும் இளமை….”
சரத்பாபுவுக்கு “செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா…”.
ரஜினிக்கு “ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லே”

வேறு ஏதாவது படங்களில் இந்த மாதிரி முயற்சி எதுவும் நடந்ததா எனத் தெரியவில்லை...

முள்ளும் மலரும் படத்தில் இளையராஜா இசையில் தனி ராஜாங்கமே நடத்தி இருப்பார்..அது பற்றி சுருக்கமாக மகேந்திரன் சொன்னது ரசிக்கும்படி இருந்தது ...

“காட்சிக்கும், அதை உயிரூட்டிய இசைக்கும் ஒரு தொடர்பு தமிழ் சினிமாவில் ஏற்பட ஆரம்பித்தது இளையராஜாவால் என்றால் அது மிகையாகாது... திரையில் ஒளியும்-ஒலியும் சிவ – சக்தி ஆயின...”

# ஆம்..சக்தி இல்லையேல் சிவம் இல்லை..
சிவம் இல்லையேல் சக்தி இல்லை...
ஏடாகூடமான பேச்சுக்கள் இல்லாமல் இளையராஜா இப்போது இருப்பதில்லை....!
.இளையராஜாவின் சமீபத்திய பேச்சு இது...

“ இந்த நாற்பது வருஷ இசை வந்து... நான் இல்லேன்னு வச்சுக்கங்க... எம்ப்டியா, ஒரு சூனியமா இருந்திருக்காது..? "

#இளையராஜா....
அவர் ஒரு முள்ளும் மலரும் ....!!!

courtesy net

Russellisf
11th October 2014, 02:51 PM
சீர்காழி கோவிந்தராஜன் , சக பாடகர்களோடு இணைந்து பாடும்போது...இந்த மல்யுத்தம் ஏனோ நினைவுக்கு வருகிறது...
உடன் பாடும் பாடகர் எவராக இருந்தாலும் தன் வெண்கலக் குரலால் மூச்சுத் திணற அமுக்கி மூழ்கடித்து விடுகிறார் சீர்காழி..!

“ திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம் ' பாட்டில் சீர்காழி குரல் , டிஎம் எஸ். குரலை கழுத்தில் அழுத்தி கடலுக்குள் தள்ளி விடுகிறது...!!

கர்ணன் படத்தில் “மழை கொடுக்கும் கொடையுமொரு இரண்டு மாதம்.” .பாடலில் டி.எம்.எஸ். தனியாகப் பாடும்போது தெளிவாகத் தெரிகிறார்...பி.பி.ஸ்ரீநிவாஸ் சும் அப்படியே...
ஆனால் மூவரும் சேர்ந்து “ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி!” என்று கோரஸ் பாடும்போது ,சீர்காழி குரல் முன் டி.எம்.எஸ்.சும் பி.பி.எஸ்.சும் எங்கோ காணாமல் போய் விடுகிறார்கள்...

சினிமாக்களில் இப்படி இருந்தாலும்...ஒவ்வொரு நாளிலும் ..ஒவ்வொரு ஊரிலும்... டி.எம்.எஸ்சும் , சீர்காழியும் பக்திப் பாடல்களால் ...இன்றும் ஒவ்வொருவர் நெஞ்சிலும் நிரந்தரமாக வாழ்ந்து வருகிறார்கள்...

ஒரு விசித்திர ஒற்றுமை...
மார்ச் 24 ....
இது டி.எம்.செளந்தரராஜன் பிறந்த தினம்
சீர்காழி கோவிந்தராஜன் நினைவு தினம்...

“உள்ளம் உருகுதய்யா....”

chinnakkannan
11th October 2014, 02:53 PM
முரளி சார் மனிதனின் மறுபக்கம் கொஞ்சம் சிவகுமார் முயற்சித்திருப்பார் என்று தான் சொல்லவேண்டும்..அவருக்கு முரட்டு ரோல் வருவதுகொஞ்சம் கஷ்டம் தான்.. மம்முட்டி படம் நிறக்கூட்டு பார்க்கவில்லை. யாத்ரா பார்த்திருக்கிறேன்.. (மதுரை சக்தி).. ஜோஷி நியூடெல்லி டைரக்டர் தானே.. உனக்காகவே வாழ்கிறேன் சமீபத்தில் தான் பார்த்தேன்.. தகவலுக்கு நன்றி..

க்ருஷ்ணாஜி..ஊமை பாட்டை விட்ட சந்தோஷம் சந்தோஷம் என்னும் இன்னொரு பாட்டும் நன்றாக இருக்கும்..

Russellisf
11th October 2014, 02:54 PM
சொல்லடி அபிராமி - வானில்
சுடர் வருமோ எனக்கு இடர் வருமோ...”

ஆதிபராசக்தி படத்தில் வரும் இந்தப் பாடலை
அபிராமி அந்தாதியை அடிப்படையாகக் கொண்டு எழுதியிருப்பார் கண்ணதாசன்...
ஆனால் இந்தப் பாடலின் இடையில் திரிகூடராசப்பக் கவிராயர் எழுதிய குற்றாலக் குறவஞ்சி யில் இருந்தும் சில வரிகளை அழகாக எடுத்துக் மிக்ஸ் செய்திருக்கிறார் கண்ணதாசன்...

இதோ...இதில் முதல் ஆறு வரிகள் குற்றாலக் குறவஞ்சி ..
கடைசி நான்கு வரிகள் கண்ணதாசன்..

செங்கையில் வண்டு கலிம் கலிம் என்று
ஜெயம் ஜெயம் என்றாட - இடை
சங்கதமென்று சிலம்பு புலம்பொடு
தண்டை கலந்தாட - இரு
கொங்கை கொடும்பகை வென்றனமென்று
குழைந்து குழைந்தாட – மலர்ப்...//

பங்கயமே உனைப் பாடிய பிள்ளை முன்
நிலவு எழுந்தாட
விரைந்து வாராயோ எழுந்து வாராயோ
கனிந்து வாராயோ..

# அழகாக கலந்திருக்கிறார் கண்ணதாசன்...
எதை எங்கே எப்படி மிக்ஸ் செய்ய வேண்டும் என்பதை அழகாக ...அளவாக செய்வதில் வல்லவர் கண்ணதாசன் ....


courtesy net

Russellisf
11th October 2014, 02:59 PM
மதுவின் தீமைகளை விளக்கி ஒரு பாடல் எம்.ஜி.ஆருக்கு தேவைப்பட்டது....பாடல் எழுத அவர் அழைத்தது
...........கண்ணதாசனை..!!!
கண்ணதாசன் எழுதினார் இப்படி..

மதுவுக்கு ஏது ரகசியம் ?
அந்த மயக்கத்தில் எல்லாம் அவசரம்
மதுவில் விழுந்தவன் வார்த்தையை
மறுநாள் கேட்பது அவசியம் !
அவர் இவர் எனும் மொழி
அவன் இவன் என வருமே
நாணமில்லை வெட்கமில்லை
போதை ஏறும் போது ந*ல்ல*வ*னும் தீய*வ*னே
கோப்பை ஏந்தும் போது..

எம்.ஜி.ஆருக்காக மதுவை குறை கூறி அப்படி எழுதிய
அதே கண்ணதாசன்தான்
இப்படியும் ஒரு காலத்தில் எழுதி இருந்தார்..

ஒரு கையில் மதுவும் ஒரு கையில் மாதுவும்
சேர்ந்திருக்கின்ற வேளையிலே என்
ஜீவன் பிரிய வேண்டும் - இல்லையென்றால்
என்ன வாழ்க்கை நீ வாழ்ந்தாயென்றே
எனை படைத்த இறைவன் கேட்பான் ...

கண்ணதாசனுக்கு எப்படி வந்தது இந்த தமிழ் ஆளுமை..?
இந்த செட்டி மகனுக்கு இப்படி ஒரு சீர் கொடுத்த சீமாட்டி யார்..?
இதோ ..கண்ணதாசனின் காவிய வரிகள்...

வட்டிக் கணக்கே
வாழ்வென் றமைந்திருந்த
செட்டி மகனுக்கும்
சீர்கொடுத்த சீமாட்டி!
தோண்டுகின்ற போதெல்லாம்
சுரக்கின்ற செந்தமிழே
வேண்டுகின்ற போதெல்லாம்
விளைகின்ற நித்திலமே
உன்னைத் தவிர
உலகில்எனைக் காக்க
பொன்னோ பொருளோ
போற்றிவைக்க வில்லையம்மா!
என்னைக் கரையேற்று
ஏழை வணங்குகின்றேன்!


courtesy net

gkrishna
11th October 2014, 03:16 PM
சகோதரர் யுகேஷ் பாபு சார்
நன்றி நன்றி
மேலே சொல்ல வார்த்தைகளே இல்லை
நல்ல பல தகவல்களை சொல்லி திரியை சிறப்பு செய்து விட்டீர்கள்
மீண்டும் மீண்டும் நன்றி

gkrishna
11th October 2014, 03:30 PM
https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcRRvPg9e7BqISM8Q7aXRQPTdDZUwKeEU-cw3jxRZigvmAZW43NFhttp://static.indianexpress.com/m-images/Sun%20May%2012%202013,%2008:18%20hrs/M_Id_384743_Amitabh_Bachchan_Zanjeer.jpg

இந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன் இன்று தனது 72-வது பிறந்த நாளை கொண்டாடுவதையொட்டி பாலிவுட்டை சேர்ந்த பல்துறை பிரபலங்கள் நேரிலும், தொலைபேசி, கைபேசி, இ-மெயில், டுவிட்டர் மற்றும் ஃபேஸ்புக் வாயிலாகவும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

3 முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருதும், மத்திய அரசின் உயரிய விருதகளான பத்மஸ்ரீ, பத்மபூஷன் ஆகிய விருதுகளையும் பெற்றுள்ள அமிதாப் பச்சன், 1969-ம் ஆண்டில் இந்தி திரைப்பட உலகில் காலடி பதித்தார்.

அந்நாளின் இந்தி சூப்பர் ஸ்டார் ராஜேஷ் கண்ணாவுடன் இணைந்து 1971-ம் ஆண்டு இவர் நடித்த ‘ஆனந்த்’ திரைப்படத்தில் சிறப்பான கதாபாத்திரம் அமைந்ததையடுத்து, 1973-ல் வெளியான ‘ஜஞ்சிர்’ படத்தில் அதிரடி கதாநாயகனாக அமிதாப் பச்சன் அறிமுகமானார்.

அதே ஆண்டில் நடிகை ஜெயாவை திருமணம் செய்த இவர், பாலிவுட் கதாநாயகர்களில் மிகவும் பிரபலமானவராக உலகளாவிய அளவில் அறியப்பட்டார். குடும்ப நண்பரான முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியுடன் நெருக்கமாக நட்பு பாராட்டிய இவர், காங்கிரஸ் கட்சிக்காக பல தேர்தல்களின்போது தீவிர பிரசாரமும் செய்துள்ளார்.

190-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அமித்தாப் பச்சன் தற்போது, ஒரு தனியார் தொலைக்காட்சியில் ‘கோன் பனேகா க்ரோர்பதி’ என்ற கேள்வி பதில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இன்று தனது 72-வது பிறந்த நாளை கொண்டாடும் அவருக்கு நம் வாழ்த்துகள்

http://www.youtube.com/watch?v=4CSYwTE1kr0

gkrishna
11th October 2014, 03:31 PM
https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcRRvPg9e7BqISM8Q7aXRQPTdDZUwKeEU-cw3jxRZigvmAZW43NFhttp://static.indianexpress.com/m-images/Sun%20May%2012%202013,%2008:18%20hrs/M_Id_384743_Amitabh_Bachchan_Zanjeer.jpg

இந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன் இன்று தனது 72-வது பிறந்த நாளை கொண்டாடுவதையொட்டி பாலிவுட்டை சேர்ந்த பல்துறை பிரபலங்கள் நேரிலும், தொலைபேசி, கைபேசி, இ-மெயில், டுவிட்டர் மற்றும் ஃபேஸ்புக் வாயிலாகவும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

3 முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருதும், மத்திய அரசின் உயரிய விருதகளான பத்மஸ்ரீ, பத்மபூஷன் ஆகிய விருதுகளையும் பெற்றுள்ள அமிதாப் பச்சன், 1969-ம் ஆண்டில் இந்தி திரைப்பட உலகில் காலடி பதித்தார்.

அந்நாளின் இந்தி சூப்பர் ஸ்டார் ராஜேஷ் கண்ணாவுடன் இணைந்து 1971-ம் ஆண்டு இவர் நடித்த ‘ஆனந்த்’ திரைப்படத்தில் சிறப்பான கதாபாத்திரம் அமைந்ததையடுத்து, 1973-ல் வெளியான ‘ஜஞ்சிர்’ படத்தில் அதிரடி கதாநாயகனாக அமிதாப் பச்சன் அறிமுகமானார்.

அதே ஆண்டில் நடிகை ஜெயாவை திருமணம் செய்த இவர், பாலிவுட் கதாநாயகர்களில் மிகவும் பிரபலமானவராக உலகளாவிய அளவில் அறியப்பட்டார். குடும்ப நண்பரான முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியுடன் நெருக்கமாக நட்பு பாராட்டிய இவர், காங்கிரஸ் கட்சிக்காக பல தேர்தல்களின்போது தீவிர பிரசாரமும் செய்துள்ளார்.

190-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அமித்தாப் பச்சன் தற்போது, ஒரு தனியார் தொலைக்காட்சியில் ‘கோன் பனேகா க்ரோர்பதி’ என்ற கேள்வி பதில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இன்று தனது 72-வது பிறந்த நாளை கொண்டாடும் அவருக்கு நம் வாழ்த்துகள்

http://www.youtube.com/watch?v=4CSYwTE1kr0

Russellisf
11th October 2014, 04:24 PM
வாலி ஒரு நிகழ்ச்சியில் சொல்லி இருந்தார் ...
"தரை மேல் பிறக்க வைத்தான் "[படகோட்டி] பாடலின் சரணத்தை ,
முதலில் எழுதும்போது
"ஒருநாள் போவார்..ஒருநாள் வருவார்..ஒவ்வொரு நாளும் மரணம்..."என்று எழுதி இருந்தாராம்..
எம்.எஸ்.வி.கொஞ்சம் யோசித்து விட்டு "கவிஞரே...ஒரு வார்த்தை வெல்லும்..ஒரு வார்த்தை கொல்லும்..இந்த மரணம் என்ற வார்த்தையை கொஞ்சம் மாற்றிக் கொள்ளலாமா.?"எனக் கேட்டாராம்...வாலியும்.." ஒவ்வொரு நாளும் மரணம்.."என்பதை "ஒவ்வொரு நாளும் துயரம்.."என்று மாற்றிக் கொடுத்தாராம்..
ஆம்..மரணம் என்பதை வார்த்தைகளில் கூட , நாம் எல்லோரும் தவிர்க்கவே நினைக்கிறோம்...
ஆனால் வாழ்க்கையில்...?

courtesy net

Russellisf
11th October 2014, 04:27 PM
மஞ்சுளாவை ஒவ்வொரு நடிகரும் ஒவ்வொரு விதமாக வர்ணித்து பாடியிருக்கிறார்கள் ..
"உனை ரவிவர்மன் காணாமல் போனானடி
அந்த ரதிமாறன் கண்டாலும் தொலந்தானடி.."என்று முத்துராமன் பாடினார்...
[படைத்தானே பிரம்ம தேவன்/எல்லோரும் நல்லவரே]
"இலக்கிய ரசத்தோடு இலை மறை கனியோடு
ஒதுங்கிய உடையோடு குலுங்கிய வளையோடு
ஓவிய சீமாட்டி உரு வந்ததோ..."இது சிவாஜி ..[ஊஞ்சலுக்கு பூச்சூட்டி ..அவன்தான் மனிதன் ]
எல்லோரிலும் உச்சம் தொட்டவர் எம்ஜியார்தான்...
"மடல்வாழை தொடை இருக்க
மச்சம் ஒன்று அதில் இருக்க
படைத்தவனின் திறமை எல்லாம்
முழுமை பெற்ற அழகி என்பேன்..."
//சில நடிகைகளின் கல்யாணம் கேலிக்குரியதாகவும்...கேள்விக்குறியாகவும் ஆகும் நிலையில் , முழுமையாக விஜயகுமாரோடு வாழ்ந்து முடித்த மஞ்சுளாவை பாராட்டியே ஆக வேண்டும்


courtesy facebook

Russellisf
11th October 2014, 04:31 PM
தி.நகரில் ஒரு ரெஸ்டாரண்டில் மாலை நேர அரையிருளில் அமர்ந்து நண்பன் ரவியோடு உணவு அருந்திக் கொண்டிருந்தேன்..எதிர்மேஜையில் ... அட..கவிஞர் முத்துலிங்கம்...நண்பன் ரவி ஆர்வமானான்...
" ஜான்....பிளீஸ்..அவர்கிட்ட கொஞ்சம் பேசுவோமே..."
கவிஞர் முத்துலிங்கம் அருகில் நாங்கள் அமர இடம் இல்லை...எங்கள் அருகே நிறைய இடம் இருந்தது...நான் கவிஞர் அருகே சென்று ,சற்று தயக்கத்துடன் கேட்க அவர் தயக்கமின்றி உடனே எங்களுடன் வந்து அமர்ந்தார்...நான் உண்மையை ஒத்துக் கொண்டேன்.."ஐயா ..உங்களை எங்களுக்குத் தெரியும்..ஆனா ..உங்க பாட்டெல்லாம் அவ்வளவா தெரியாது.."
"பரவாயில்லை "என்ற முத்துலிங்கம் அவர்கள் ,தாம் எழுதிய சில பாடல்களை நினைவுபடுத்தி சொன்னார்...
"மணி ஓசை கேட்டு எழுந்து(பயணங்கள் முடிவதில்லை)..ராகதீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ(பயணங்கள் முடிவதில்லை)..சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம் (உதய கீதம்).."
அவர் பாடல்களை சொல்ல சொல்ல நண்பன் ரவி உற்சாகமானான்...ஒரு புதிய நூறு ரூபாய் நோட்டை எடுத்து .."சார்...இதில உங்க கையெழுத்து வேணும்.."என்று கவிஞரிடம் நீட்ட ,அவர் தடுத்து..இன்னும் சில தன் பாடல்களை சொன்னார்..
"சின்னஞ்சிறு கிளியே சித்திரப் பூவிழியே (முந்தானை முடிச்சு)
ஆறும் அது ஆழமில்லை (முதல் வசந்தம்) .. செந்தூரப்பூவே இங்கு தேன் சிந்த வா (செந்தூரப்பூவே).."
நண்பன் ரவி உணர்ச்சிவசப்பட்டு மேலும் உற்சாகமாகி ,இப்போது ஐநூறு ரூபாய் நோட்டை எடுத்து,மறுபடியும் கையெழுத்து கேட்க ,முத்துலிங்கம் இப்போதும் மறுத்து இன்னும் தன் பாடல்களை தொடர்ந்தார்....
"இதயம் போகுதே எனையே பிரிந்தே (புதிய வார்ப்புகள்).. டாடி டாடி ஓ மை டாடி (மவுன கீதங்கள்)... .தேவன் கோயில் தீபம் ஒன்று (நான் பாடும் பாடல்)...பிள்ளைத் தமிழ் பாடுகிறேன் (ஊருக்கு உழைப்பவன்)...மாஞ்சோலை கிளிதானோ (கிழக்கே போகும் ரயில் ).."..இப்போது நண்பன் ரவி எல்லை கடந்த உற்சாகத்தில் ஆயிரம் ரூபாய் நோட்டை எடுத்து அதில் கையெழுத்து இடச் சொன்னான்..கவிஞர் முத்துலிங்கம் அமைதியாக சொன்னார்..."நண்பரே..எம்ஜியார் எனக்கு அன்பை கொடுத்ததோடு ... சில பதவிகளும் கொடுத்து அழகு பார்த்தவர்..நான் முன்னாள் அரசவைக் கவிஞர்; முன்னாள் மேலவை உறுப்பினர்.அதனால் சொல்கிறேன்..சட்டப்படி ரூபாய் நோட்டில் கையெழுத்து போடக் கூடாது ...ஒரு துண்டுக் காகிதம் கொடுங்கள்.."....கொடுத்தோம்...அவர் எழுதிய பாடலையே எழுதி கையெழுத்து இட்டுக் கொடுத்தார்..."அன்புக்கு நான் அடிமை ..தமிழ் பண்புக்கு நான் அடிமை.."
ரூபாய் நோட்டின் மதிப்பு மட்டும் அல்ல...கவிஞர் முத்துலிங்கத்தின் மதிப்பும் எங்களுக்கு முழுமையாக தெரிந்தது....
அன்புக்கு நாங்களும் அடிமை...!


courtesy net

Russellisf
11th October 2014, 04:36 PM
“அப்பன் தவறு பிள்ளைக்கு தெரிந்தால் அவனுக்கு வெட்கமில்லை
அத்தனை பேரையும் படைத்தானே அந்த சிவனுக்கும் வெட்கமில்லை….”
யாருக்கும் வெட்கமில்லை படத்திற்காக கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகள் இவை...
நாத்திகத்தின் எல்லையைத் தொட்டு விட்டு வந்த ஒருவன் மீண்டும் ஆத்திகனாக மாறும்போது
ஆண்டவனிடம் அதிகமாய் உரிமை எடுத்துக் கொள்வான்....
நம் கண்ணதாசனைப் போல...
“க*ட*வுள் என் வாழ்வில் க*ட*ன்கார*ன்
க*வ*லைக*ள் தீர்ந்தால் க*ட*ன் தீரும்
ஏழைக*ள் வாழ்வில் விளையாடும்
இறைவா நீ கூட* குடிகார*ன்..”
தான் நாத்திகனாதைப் பற்றி கண்ணதாசன் வெளிப்படையாகவே இப்படிக் கூறினார்...
“மேடைகளில் நடைபெறும் வார்த்தை விளையாட்டுகளில் மயங்கி நாத்திகர்களானவர்கள் பலர். அவர்களில் நானும் ஒருவன்... `கருப்புச் சட்டைக்காரன்’ என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்பட்டவன்..”
கண்ணதாசன் ..தி. கிரேட்...!!!
:” தெய்வம் என்றால் அது தெய்வம் ..
அது சிலை என்றால் வெறும் சிலைதான்
உண்டென்றால் அது உண்டு
இல்லை என்றால் அது இல்லை...”

courtesy net

chinnakkannan
11th October 2014, 04:37 PM
வாசு சார்.. சபதம் கதை, பற்றிய விவரிப்பு ஜோர். அதுவும் பாடல் கிடைக்காமல் கஷ்டப்பட்டு முழுப்படத்தையும் இட்டதற்கு தாங்க்ஸ்.. நான் நீங்கள் இட்ட பாட்டிலிருந்து முழுப் படத்தையும் பார்த்தேன்.. நன்றி..( இது வரை பார்த்தேனா என்றும் நினைவிலில்லை..இருந்தாலும் என் ஜாய்ட் த மூவி..:)

Russellcaj
11th October 2014, 06:19 PM
சகோதரர் யுகேஷ் பாபு சார்
நன்றி நன்றி
மேலே சொல்ல வார்த்தைகளே இல்லை
நல்ல பல தகவல்களை சொல்லி திரியை சிறப்பு செய்து விட்டீர்கள்
மீண்டும் மீண்டும் நன்றி

Sailing in the same boat,

that is 'courtesy : net'

Russellisf
11th October 2014, 06:40 PM
சின்ன சின்ன இழை பின்னிப் பின்னி வரும்
சித்திரக் கைத்தறிச் சேலையடி நம்ம
தென்னாட்டில் என்னாளும் கொண்டாடும் வேலையடி
சின்ன சின்ன இழை பின்னிப் பின்னி வரும்
சித்திரக் கைத்தறிச் சேலையடி நம்ம
தென்னாட்டில் என்னாளும் கொண்டாடும் வேலையடி
தையாதைய தந்தத் தானா தையாதையா தந்தத் தானா
தையாதைய தந்தத் தானா தையாதையா தந்தத் தானா
அன்னையர் தந்தையர் வண்ணக் குழந்தைகள்
புன்னகை மங்கையர் போற்றிப் புகழ்ந்திடும்
ஆடையடி செய்துமடி போடுங்கடி .........
சிந்தை சிர்ற்பிகள் தேசத்தறிஞர்கள்
செந்தமிழ் சோலையில் பூத்த கலைஞர்கள்
ஒஓ.... ஓ....
மங்கல மாநிலம் எங்கள் மங்கல மாநிலம்
காக்கும் மறவர் யாவரும் - புவி
வாழ்வை உயர்த்தும் மக்கள் எல்லோரும்
வாங்கி மகிழும் பொன்னாடையடி
வாங்கி மகிழும் பொன்னாடையடி
ஓ.......... தான தையாதைய தந்தத் தன்ன தானா தையாதையா
தந்தத் தானா ............................................
சின்ன சின்ன இழை பின்னிப் பின்னி வரும்
சித்திரக் கைத்தறிச் சேலையடி நம்ம
தென்னாட்டில் என்னாளும் கொண்டாடும் வேலையடி

raagadevan
11th October 2014, 07:07 PM
For a change of pace, here is a Tamil/Malayalam song from 1991...

"ஊட்டிப் பட்டணம் பூட்டிக் கட்டணும் சொன்னா வாடா..."

திரைப்படம்: கிலுக்கம்
இயக்குனர்: ப்ரியன் (ப்ரியதர்சன் )
வரிகள்: பிச்சு திருமல
இசை: எஸ். பி. வெங்கடேஷ்
பாடகர்கள்: எஸ்.பி. பாலசுப்ரமணியம், கெ.எஸ். சித்ரா & எம்.ஜி. ஸ்ரீகுமார்

http://www.youtube.com/watch?v=_6CauUi8v28

Russellisf
11th October 2014, 07:15 PM
இணையத்தில் படித்ததை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டேன் அவ்வளவு தான்





Sailing in the same boat,

that is 'courtesy : net'

vasudevan31355
11th October 2014, 07:21 PM
சின்னக் கண்ணன் சார்,

இரவுப் பூக்கள் படத்தில் வரும் இனிமேல் நாளும் இளங்காலை தான்எனையே சூடும் மணமாலை தான்..பாடலைப் பற்றி தங்களுக்கே உரித்தான பாணியில் அழகாக அலசியுள்ளீர்கள். நான் இன்னும் அந்தப் படம் பார்க்கவில்லை. பாடலையும் இப்போதுதான் கேட்டேன். நன்றாக இருந்தது. எனக்கும் ஜீவிதாவை பிடிக்கும்.

ஜீவிதா நல்ல காமெடி செய்வார் தெரியுமா? நடிகர் திலகத்தின் ராஜ மரியாதை படத்தில் நல்ல காமெடி பண்ணியிருப்பார். இவரைப் பார்த்தால் நடிகை போலவே தெரியாது. ஏதோ பக்கத்து பால் கடையில் பால் பாக்கெட் வாங்க வந்த பெண் போலத் தோன்றும்..

சபதம் படத்தின் பாடலை ரசித்து எழுதியதற்கு நன்றி!

அதே போல எனக்கு மிகவும் பிடித்த 'கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன' பாடலும் அருமை. என்ன பாடல்!

நல்ல பாடல்களை நினைவு கூர்ந்தாதற்கு நன்றி சின்னக் கண்ணன் சார்.

vasudevan31355
11th October 2014, 07:25 PM
மதுஜி!

'அன்பைத் தேடி' படத்தின் 'புத்தி கெட்ட பொண்ணு ஒன்னு'

'தாய்' படத்தின் அருமைப் பாடல் 'எங்க மாமனுக்கும்'

வீ டியோக்களுக்கும் நன்றி!

மறுபடியும் நன்றி. இரண்டு படங்களுமே என் இதய தெய்வத்தின் படங்கள்.

vasudevan31355
11th October 2014, 07:33 PM
ராகதேவன் சார்,

வித்தியாசமான 'கிலுக்கம்' பாடல் பலே ஜோர். அப்போது ரொம்ப ரசித்துப் பார்த்த படம். நல்ல முயற்சி. பாட்டை இட்டதோடு அழகாக படம், பாடலை இயற்றியவர், இசையமைப்பாளர் என்று நீங்கள் தந்திருப்பது மிக்க உபயோகமாய் இருக்கிறது.

உங்கள் பதிவைப் பார்த்தவுடன் ஜெயராம் நடித்த பழனியில் அதிகம் படமாக்கப்பட்ட 'மழவில் காவடி' படம் நினைவுக்கு வந்து விட்டது. செம காமெடி. படம் முழுதும் தமிழ் வசனங்கள் அதிகம் என்று நினைவு.

gkrishna
11th October 2014, 07:34 PM
Sailing in the same boat,

that is 'courtesy : net'

ஸ்டெல்லா_ராக் அவர்களுக்கு

படித்ததை பகிர்ந்து கொள்ளுதல் என்பது மிக சிறந்த கலை . அந்த பகிர்வை தந்தவரை பாராட்டுவது என்பது அதை விட சிறந்த கலை.

ஒரு சிறந்த கலைஞர் என்று நினைத்தேன். ஆனால் இப்போது தான் தெரிகிறது இரண்டு நட்பாளர்களை பிரித்து விடும் ஒரு சிறந்த கொலைஞர் என்று .

Russellisf
11th October 2014, 07:37 PM
கிருஷ்ணா சார் தங்களுடனான நட்பு எப்பொழுதும் தொடரும் . நான் உள்ளே வருவது அவருக்கு பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன்



ஸ்டெல்லா_ராக் அவர்களுக்கு

படித்ததை பகிர்ந்து கொள்ளுதல் என்பது மிக சிறந்த கலை . அந்த பகிர்வை தந்தவரை பாராட்டுவது என்பது அதை விட சிறந்த கலை.

ஒரு சிறந்த கலைஞர் என்று நினைத்தேன். ஆனால் இப்போது தான் தெரிகிறது இரண்டு நட்பாளர்களை பிரித்து விடும் ஒரு சிறந்த கொலைஞர் என்று .

vasudevan31355
11th October 2014, 07:42 PM
ராஜேஷ்ஜி

ஜெயமாலினி, மாயா இதர நடன நடிகைகள் ஆடும் ஜிகினா கலர் பாடலான அந்த தெலுங்குப் பாடல் ஒரு உற்சாகம். நன்றி! இதே டியூனில் தமிழில் ஒரு பாடல் இருப்பதாக ஞாபகம். நினைவுக்கு வரவில்லை.

vasudevan31355
11th October 2014, 07:44 PM
சின்னக் கண்ணன் சார்,

ஜீவிதா என்றாலே 'தர்மபத்தினி' படம் நினைவுக்கு வரும். வெரி ஸ்மார்ட்.

vasudevan31355
11th October 2014, 07:48 PM
கிருஷ்ணா சார்,

நடிகர் திலகத்தின் 'தாய்' வெளியான தேதி, வருடம். 7.03.1974

vasudevan31355
11th October 2014, 07:55 PM
சி.க.சார்,

'இரவுப் பூக்கள்' படத்தில் இன்னொரு பாடல் ஒன்று அப்போது பிரபலம்.

'மல்லி மல்லி செண்டு மல்லி
ஆளை அசத்துதடி'

சத்யராஜ், நளினி நடித்தது.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=8PU4hIkiRZk

vasudevan31355
11th October 2014, 07:59 PM
மதுஜி!

'வாயாடி' படத்தில் மனோகரைக் கிண்டல் செய்து 'புன்னகை அரசி' கோஷ்டி ஒரு கேலிப் பாட்டுப் பாடிக் கூத்தடிக்கும். ரொம்ப நாளாச்சு.

'வாடை புடிக்கிற வாத்தியாரே
பாவாட புடிக்கிற வாத்தியாரே'

ஈஸ்வரி வழக்கம் போல கதி கலக்குவார். கோரஸ் கோஷ்டியும் நன்றாக இருக்கும்.

RAGHAVENDRA
11th October 2014, 08:26 PM
http://www.youtube.com/watch?v=yLbUhJB4rxM

ராக்ஷஸன் என்கிற பெயரில் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட ராக்ஷஸடு தெலுங்குப் படத்தில் பாடல்கள் நெஞ்சை அள்ளிக்கொண்டு போகும். குறிப்பாக மல்லி மல்லி என்கிற இப்பாடல் கேட்கும் போதெல்லாம் பரவசமூட்டும் பாடல்.

Russellisf
11th October 2014, 08:40 PM
ராஜபார்ட் ரங்கதுரை என்று ஒரு படம்...அதில் ஒரு டூயட் பாடலுக்கு பத்துக்கும் மேல் டியூன் போட்டிருந்தாராம் எம்.எஸ்.விஸ்வநாதன் ...எதை தேர்வு செய்வது என எல்லோரும் மணிக் கணக்கில் உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருந்தார்களாம் ..அப்போது அந்த அறைக்குள் இருந்த எல்லோருக்கும் டீ கொண்டு வந்த ஒருவர் இவர்களின் குழப்பத்தை கவனித்து விட்டு , "அட..அந்த ஒண்ணாவது டியூனையும் , ஏழாவது டியூனையும் சேர்த்து போட்டுப் பாருங்களேன் .."என்று சொல்லி விட்டு காலி கிளாஸ்களை வாங்கிக் கொண்டு போய்விட்டாராம்...அப்படி டியூன் போட்ட அந்த பாடல் சூப்பர் ஹிட் ஆனது.. அதுதான் "மதன மாளிகையில் மந்திர மாலைகளாம் "என்ற பாடல்...டீ கொடுப்பவர் பேச்சை நாம் கேட்பதா என யாருக்கும் ஈகோ வரவில்லை ...-இதை எம்.எஸ்.விஸ்வநாதன் தனது பேட்டியில் பல முறை சொல்லி இருக்கிறார்..
நம்முடைய பிரச்னைகளுக்கு தீர்வு யார் மூலமாக வேண்டுமானாலும் கிடைக்கலாம்..ஈகோவை விட்டு விட்டால் எந்த பிரச்னையும் இல்லை...

courtesy facebook

rajraj
11th October 2014, 08:58 PM
http://www.youtube.com/watch?v=tyeT_p_0gWg

I used to sing this song.


சின்ன சின்ன இழை பின்னிப் பின்னி வரும்
சித்திரக் கைத்தறிச் சேலையடி நம்ம
தென்னாட்டில் என்னாளும் கொண்டாடும் வேலையடி
சின்ன சின்ன இழை பின்னிப் பின்னி வரும்
சித்திரக் கைத்தறிச் சேலையடி நம்ம
தென்னாட்டில் என்னாளும் கொண்டாடும் வேலையடி
தையாதைய தந்தத் தானா தையாதையா தந்தத் தானா
தையாதைய தந்தத் தானா தையாதையா தந்தத் தானா
அன்னையர் தந்தையர் வண்ணக் குழந்தைகள்
புன்னகை மங்கையர் போற்றிப் புகழ்ந்திடும்
ஆடையடி செய்துமடி போடுங்கடி .........
சிந்தை சிர்ற்பிகள் தேசத்தறிஞர்கள்
செந்தமிழ் சோலையில் பூத்த கலைஞர்கள்
ஒஓ.... ஓ....
மங்கல மாநிலம் எங்கள் மங்கல மாநிலம்
காக்கும் மறவர் யாவரும் - புவி
வாழ்வை உயர்த்தும் மக்கள் எல்லோரும்
வாங்கி மகிழும் பொன்னாடையடி
வாங்கி மகிழும் பொன்னாடையடி
ஓ.......... தான தையாதைய தந்தத் தன்ன தானா தையாதையா
தந்தத் தானா ............................................
சின்ன சின்ன இழை பின்னிப் பின்னி வரும்
சித்திரக் கைத்தறிச் சேலையடி நம்ம
தென்னாட்டில் என்னாளும் கொண்டாடும் வேலையடி

Gopal.s
11th October 2014, 09:08 PM
கிருஷ்ணா,

நல்ல மாட்டுக்கு ,ஒரு சூடு,நல்ல மனிதருக்கு ஒரு சொல்.வேலை மென கேட்டு வாசு சபதம் பதிவை போட்டால், அதை பார்த்து ஏதாவது சம்மந்தமுள்ள பதிவாகவாவது போட கூடாதா? அப்படியென்ன உழைப்பை மதிக்காமல், சொந்த புத்தியும் இல்லாத அவசர பதிவுகள்? நான் சொல்வதை ,என் தனிப்பட்ட கருத்து மட்டுமே என்று நீங்கள் கருதினால் ,உங்களை விட அசமஞ்சத்தை பார்க்கவே முடியாது. நான் தயங்காமல் ,நேரடியாக சொல்வதை கேட்டு, சொந்தமாக பதிவு போடுங்கள். அல்லது மற்றவர் உழைப்பை மதியுங்கள்.நீங்களும்,சித்தூர் வாசுவும் அடிக்கும் கூத்து சகிக்கவில்லை.

gkrishna
11th October 2014, 09:11 PM
நம்முடைய பிரச்னைகளுக்கு தீர்வு யார் மூலமாக வேண்டுமானாலும் கிடைக்கலாம்..ஈகோவை விட்டு விட்டால் எந்த பிரச்னையும் இல்லை...

courtesy facebook

dear babu sir

இந்த ஈகோ தானே மனுஷனையும் மனுஷிகளையும் பாடாய் படுத்துகிறது
அருமையாக சொன்னீர்கள் ஈகோவை விட்டு விட்டால் எந்த பிரச்னையும் இல்லை...

gkrishna
11th October 2014, 09:11 PM
நன்றி நண்பா வாசு

தாய் 74 ரிலீஸ் என்று நினைவு ஊட்டியதற்கு

Gopal.s
11th October 2014, 09:15 PM
dear babu sir

இந்த ஈகோ தானே மனுஷனையும் மனுஷிகளையும் பாடாய் படுத்துகிறது
அருமையாக சொன்னீர்கள் ஈகோவை விட்டு விட்டால் எந்த பிரச்னையும் இல்லை...

சொந்த புத்தியற்ற சராசரிகளுக்கு வேண்டுமானால் ஈகோ இல்லாமல் இருக்கலாம். வெற்றி பெற்ற , சமூகத்திற்கு கூடுதல் உழைப்பு தரும் சுய புத்தி கொண்டவர்களுக்கு constructive ego இருக்கவே இருக்கும். parasite என்ற ஒட்டுண்ணிகளுக்கு ஈகோ எப்படி இருக்கும்?

gkrishna
11th October 2014, 09:16 PM
கிருஷ்ணா,

நல்ல மாட்டுக்கு ,ஒரு சூடு,நல்ல மனிதருக்கு ஒரு சொல்.வேலை மென கேட்டு வாசு சபதம் பதிவை போட்டால், அதை பார்த்து ஏதாவது சம்மந்தமுள்ள பதிவாகவாவது போட கூடாதா? அப்படியென்ன உழைப்பை மதிக்காமல், சொந்த புத்தியும் இல்லாத அவசர பதிவுகள்? நான் சொல்வதை ,என் தனிப்பட்ட கருத்து மட்டுமே என்று நீங்கள் கருதினால் ,உங்களை விட அசமஞ்சத்தை பார்க்கவே முடியாது. நான் தயங்காமல் ,நேரடியாக சொல்வதை கேட்டு, சொந்தமாக பதிவு போடுங்கள். அல்லது மற்றவர் உழைப்பை மதியுங்கள்.நீங்களும்,சித்தூர் வாசுவும் அடிக்கும் கூத்து சகிக்கவில்லை.

தேவை இல்லாமல் சபதம் பிரச்சனையில் மூக்கை நுழைக்க வேண்டாம்
சபதம் சம்பந்தமாக இரண்டு பதிவுகள் பதிவிட்டு உள்ளேன்
முழுவதும் படிக்கவும்
படித்து விட்டு கருத்து சொல்லவும்
நாங்கள் அடிப்பது கூத்து என்றால் நீங்கள் அடிப்பது என்ன
ஒரே வசவு பதிவு வேற என்ன தெரியும் உங்களுக்கு
பேசாமல் மண்டூகம் போல் மஞ்சத்தில் தூங்கும் வேலையை பாரும்

gkrishna
11th October 2014, 09:19 PM
நண்பர் வாசு போட்ட சபதம் பதிவு எண் 169
சபதம் பற்றி நான் போட்ட பதிவு எண் 171,172
நீர் என்ன கிழிசீர்

RAGHAVENDRA
11th October 2014, 09:25 PM
இணைய இணைப்பு சீராக இல்லாததால் பதிவுகளை தொடர்ச்சியாக பகிர்ந்து கொள்ள இயலவில்லை.

வாசு சார்
சபதம் படம் என்றாலே எல்லோரும் பாலாவின் பாட்டை மட்டும் தான் கூறுவார்கள். ஆனால் ரேடியோவில் ஹிட்டான பாட்டு தாங்கள் குறிப்பிட்ட ஆட்டத்தை ஆடு பாட்டுத் தான். பட்டி தொட்டி எங்கும் பிரபலமான பாட்டு. அர்த்தமுள்ள வரிகள். டி.கே. பகவதியின் வாழ்க்கையில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய படம். சென்னை பாரகன் தியேட்டரில் நன்றாக வெற்றி நடை போட்டது. சபதம் படத்திற்கு மக்களை திரையரங்கிற்கு வரவைத்தது தாங்கள் இன்றைய ஸ்பெஷலில் குறிப்பிட்டுள்ள பாட்டுத் தான். உள்ளே சென்ற பிறகு தான் தொடுவதென்ன பாட்டின் சிறப்பை மக்கள் அறிந்து பின்னாளில் அப்பாடல் ஹிட்டானது.
ஒவ்வொரு நாளும் தாங்கள் அடுத்து என்ன ஸ்பெஷல் தரப்போகிறீர்கள் என எதிர்பார்ப்பை ஏகத்துக்கும் எகிற வைக்கிறீர்கள்..
Well Done, Keep it up.

RAGHAVENDRA
11th October 2014, 09:26 PM
ராக தேவன் சார்
தங்களுடைய வருகை இத்திரியின் இன்னொரு பரிமாணத்தை உணர்வதற்கான ஒரு வாய்ப்பு. தங்களுடைய பாணியிலும் கோணத்திலும் பாடல்களைப் பகிர்ந்து கொண்டு அலச வேண்டுகிறேன்.

gkrishna
11th October 2014, 09:26 PM
வாசு சபதம் பதிவு போட்டது மதியம் 2 மணி அளவில் நான் சபதம் பற்றி இரண்டு பதிவுகள் இட்டது அதில் இருந்து 10 நிமடங்கள் இடைவெளியில்
நீங்கள் 6 மணி நேரம் என்ன செய்தீர்கள். அடுத்தவர் உழைப்பை எப்படி மதிக்க வேண்டும் என்று எங்களுக்கு தெரியும். நீர் என்ன சட்டாம்பிள்ளையா ?
இங்கே யாரும் யாருக்கும் பாடம் எடுக்க வேண்டாம்

gkrishna
11th October 2014, 09:29 PM
சொந்த புத்தியற்ற சராசரிகளுக்கு வேண்டுமானால் ஈகோ இல்லாமல் இருக்கலாம். வெற்றி பெற்ற , சமூகத்திற்கு கூடுதல் உழைப்பு தரும் சுய புத்தி கொண்டவர்களுக்கு constructive ego இருக்கவே இருக்கும். parasite என்ற ஒட்டுண்ணிகளுக்கு ஈகோ எப்படி இருக்கும்?

உமக்கு என்ன சொந்த புத்தி உள்ளது
காவிய தலைவன் பாடல் பற்றி behindwoods வலையில் இருந்து கட் அண்ட் பேஸ்ட் செய்து போட்டது யாரு அதற்கு நண்பர் வெங்கிராம் இடமிருந்து வாங்கி கட்டி கொண்டது யார்

chinnakkannan
11th October 2014, 09:29 PM
மதுண்ணா..பொன்னா இல்லை பூவா..வாயாடி பாட்டு கேட்க நன்றாக இருக்கும்..அ.காலத்தில் பார்த்தது…கே.ஆர்.விஜயா கொஞ்சம் அகலமாய் ஆன பிறகு நடித்த படங்களில் ஒன்று ( திருடி, கியாஸ் லைட் மங்கம்மா, நத்தையில் முத்து என சீரீஸ் போலப் படங்கள் வந்த காலகட்டம் இல்லியோ).. சபதத்திலும் கொஞ்சம் தாட்டியாகத் தான் இருப்பார்..

வாசு சார்.. நன்றி.. இரவுப் பூக்கள் மல்லி மல்லிப் பாட்டிற்கும் இந்தப் பாட்டு முன்பு கேட்டிருக்கிறேன்..

சபதம் டி.கே பகவதி பார்த்ததும் எனக்கு நினைவுக்கு வந்தது அவர் ராவணனாய் நடித்த ரேடியோ டிராமா சம்பூர்ண ராமாயணம்.. வெகு ஜோராக இருக்கும்..ஒருமணி நேரம் தினம் என ஒரு மூன்றுதினங்கள் கேட்ட நினைவு..குமுறிக் குமுறி லஷ்மணன் ராமனிடம் பரதன் படையெடுத்து வருகிறான் என்று சொல்லும் போது ராமன் “ நம்ப மாட்டேன் உன் சொல் அடா தம்பி “ எனப் பாடும் பாட்டும், “அடேய் குரங்கே யார் நீ” என ராவண பகவதி கேட்க அனுமன் வெகுண்டு “ ராமசாமி தூதன் நானடா அடே ராவணா நானடா என்பேர் அனுமானடா அடடா அடடடா” எனப் பாடும் பாட்டும் நினைவுக்கு வருகின்றன. ஒளவை டி.கே சண்முகம் (டி.கே.பகவதியின் அண்ணன்) எழுதிய “எனது நாடக வாழ்க்கை” படித்திருக்கிறீர்களா.. நான் படித்திருக்கிறேன் பல வருடங்களுக்கு முன்பு.. வெகு நன்றாக இருக்கும்..ஐ. திங்க் பணமா பாசமாவிலும் டி.கே . பகவதி சர்ரோவின் அப்பா தானே..

ஜீவிதாவின் தர்மபத்தினி நினைவில் இருக்கிறது வாசு சார்.. கார்த்திக் ஜோடி என நினைக்கிறேன்..அதேபோல் சிவகுமாருடன் கண்ணத் தொறக்கணும் சாமி என்று ஒருபடம்.. சோவின் காமெடி.. அதிலும் ஒரு நல்ல பாட்டு உண்டு..

ஊட்டிப்ப்பட்டணம் – கிலுக்கம் பாட்டிற்கு தாங்க்ஸ் ஆர்டி. கிலுக்கம் தமிழில் வந்த நினைவு..என்ன பெயர் நினைவுக்கு வரவில்லை..

ராகவேந்திரா சார்.. மல்லி மல்லி தெலுங்குப் பாட்டு நைஸ்.. சிரஞ்சீவி சுஹாசினி.. நன்றி.. அதைப்பார்த்த போது முன்பு பார்த்த ஆக்ரோஷம் என்ற தெலுகு டப் படம் தான் நினைவுக்கு வருகிறது..அதிலும் சிரஞ்சீவி சுஹாசினி தான்..சிரஞ்சீவி ரொம்ப கஷ்டப் பட்டு காடு, மலை, கடல் எல்லாம் தாண்டி வில்லன் இருக்குமிடத்திற்கு க்ளைமாக்ஸ் வருவதற்கு சற்று முன் தான் போய்ச் சேருவார்..அவர் போய்ச் சேர்ந்ததும் அவரைத் தேடி வரும் சுஹாசினி அவர் எங்கே என சிரஞ்சீவியின் நண்பரான டாக்ஸி ட்ரைவரைக் கேட்க அவர், “வாத்யாரையா கேக்கறீங்க.. குந்தும்மா நான் கூட்டிப் போறேன் “ என்று அடுத்த காட்சியிலேயே டாக்ஸியிலேயே அவரை வில்லன் இடத்திற்குக் கூட்டிச் சென்று விடுவார்!

அந்த கால கட்டத்தில் தமிழில் ஏகப்பட்ட கண்டிஷன்ஸ் உடன் நடிப்பவர்க்ள் தொடக்கூடாது, தள்ளித் தான் நடிப்பேன் என போட்டிருந்த சுஹாசினியை ஆக்ரோஷத்தில்பார்த்தால்- கொஞ்சம் ஆச்சர்யமாக இருக்கும்..சர்வ சாதாரணமான நெருக்கம்..ம்ம் அதுவும் “என் பொம்முக் குட்டி அம்மாவுக்கு” படத்தில் சத்யராஜூக்கு அக்கா போல விலகி விலகி நடித்திருந்தது கொஞ்சம் கஷ்டமாய்த் தான் இருந்தது..படத்தில் சத்யராஜ், ரகுவரன், ரேகா என எல்லாரும் நன்றாக நடித்திருப்பார்கள்..இவருக்கும் சத்யராஜூக்கும் தம்பதி என்பதற்கான இயல்புத் தன்மை தொலைந்திருக்கும்..அதனாலேயே படம் சுமாராகத் தான் போனது என நினைக்கிறேன்..

ராஜ் ராஜ் சார்.. சின்னச் சின்ன இழை பின்னிப் பின்னி வரும் சித்திரக் கைத்தறிச் சேலையடி பாடல் வெகு அழகான ஒன்று. பாடுவீங்களா..வாவ்... தாங்க்ஸ்..

Gopal.s
11th October 2014, 09:37 PM
வாசு சபதம் பதிவு போட்டது மதியம் 2 மணி அளவில் நான் சபதம் பற்றி இரண்டு பதிவுகள் இட்டது அதில் இருந்து 10 நிமடங்கள் இடைவெளியில்
நீங்கள் 6 மணி நேரம் என்ன செய்தீர்கள். அடுத்தவர் உழைப்பை எப்படி மதிக்க வேண்டும் என்று எங்களுக்கு தெரியும். நீர் என்ன சட்டாம்பிள்ளையா ?
இங்கே யாரும் யாருக்கும் பாடம் எடுக்க வேண்டாம்

நான் வாசுவின் பதிவுக்கு சம்மந்தமில்லாமல் பதிவுகளோ,cut paste அபத்தங்களோ பண்ண மாட்டேன். உங்களுடன் சமமாக பேசுவதே எனக்கு இழிவு. சொன்னதை கேட்டால் மரியாதை பிழைக்கும்.அவர் பதிவை படிக்க இடைவெளி இல்லாமல் ,டி.கே.பகவதி பற்றி ஒரு காபி பதிவு ,ஜி.கே.வெங்கடேஷ் பற்றி ஒரு காப்பி பதிவு என்று தொந்தரவு.பலர் சொன்னது.(8 பேர் திரி சம்மந்த பட்டவர்கள்) கிருஷ்ணாவும்,எஸ்.வாசுவும் திரியில் நல்ல எழுத்துக்களை பார்க்கவே அனுமதிப்பதில்லை.

என்னுடைய பதிவுகள் வெளியாகா விட்டால் எனக்கு ஒன்றும் நஷ்டமில்லை. நான் ஈசி சேரில் சாய உங்களை மாதிரி மூன்றாந்தர குமாஸ்தா அல்ல. அசடுகளுக்கு அகங்காரம் வேறு.

Gopal.s
11th October 2014, 09:41 PM
உமக்கு என்ன சொந்த புத்தி உள்ளது
காவிய தலைவன் பாடல் பற்றி behindwoods வலையில் இருந்து கட் அண்ட் பேஸ்ட் செய்து போட்டது யாரு அதற்கு நண்பர் வெங்கிராம் இடமிருந்து வாங்கி கட்டி கொண்டது யார்

அறிவற்ற .........,

வெளியாக இருக்கும் படத்தை பற்றி ஒரு முன்னோட்டம் போடுவதும் , ஹைதர் காலத்து தெரிந்த விஷயங்களை cut paste பண்ணி கழுத்தறுப்பதும் ஒன்றா? இங்கிருப்பவர்களுக்கு தெரியும் ,யார் எவ்வளவு ,பங்களித்தார்கள் என்பது?உங்களை கொஞ்சம் மரியாதை கொடுத்ததால் எங்களுக்கு சமம் என்று நினைக்க வைத்து விட்டது.

JamesFague
11th October 2014, 09:43 PM
Enjoy the super song from the movie Shakti. Music by the one & only the Great RD sung by Kishoreji & Lataji


http://youtu.be/AVQ-QyQsMPs

gkrishna
11th October 2014, 09:43 PM
welcome chitoor vasu sir

Gopal.s
11th October 2014, 09:47 PM
இங்கிருக்கும் பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.

என்னால் முடிந்த அளவு, இசையை,இசையமைப்பாளர்களை ,இசை பற்றிய பங்களிப்பை வழங்கியுள்ள எனக்கு கிருஷ்ணா போன்றவர்களின் வேலையற்ற காப்பி பதிவுகள் தடையாகவே உள்ளது. உழைத்து பதிவுகள் போட்டால் 20 பக்க கழிவுகளை கொட்டுகிறார். சம்மந்தா சம்மந்தமில்லாமல். ஏனைய பதிவாளர்கள் தீர்ப்பு சொல்லட்டும். நான் பங்களிப்பதா அல்லது குப்பைகள் சேரட்டுமா என்று.

JamesFague
11th October 2014, 09:47 PM
Enjoy the super song from the movie Doosra Aadmi. Starring Rishi & Rakhee


http://youtu.be/ZxYwSxhco9Y

JamesFague
11th October 2014, 09:50 PM
Enjoy the melody from the movie Khatta Meetha. This film has been remade in Tamil as Mazhalai Pattalam.


http://youtu.be/blr41OQknOM

Gopal.s
11th October 2014, 09:54 PM
சித்தூர் வாசு,

உங்களுக்கு பெயர் நன்றாக இருப்பதால் திட்டு வாங்காமல் தப்பிக்கிறீர்கள். வெறுமனே வீடியோ பார்க்க நாங்களெல்லாம் மடையர்களா? வெறும் பார்வையாளராகவே இருந்து தொலையலாமே?வெட்டி வேலை. வெறும் பாடலை குறிப்பிட்டால் நாங்களே கிளிக் பண்ணி பார்த்து கொள்வோம்.

கருமம். கேட்பார் இல்லாமல், நமக்கென்ன என்று என்னிடம் தனியாக புலம்பும் ஏனைய பதிவர்களும் இருப்பதனால் ,உம்மை மாதிரி ஆட்கள் கூத்தடிக்கிறீர்கள்.

JamesFague
11th October 2014, 10:06 PM
Thanks for your kind words. Pls continue your good work.

RAGHAVENDRA
11th October 2014, 10:28 PM
கோபால் சார்
ஒவ்வொரு பதிவரும் ஒவ்வொரு வகையில் தங்களுடைய பங்களிப்பினைத் தந்து கொண்டுள்ளார்கள். சில சமயம் நம்முடைய எதிர்பார்ப்பிற்கேற்ற வேகம் இல்லாமல் போகலாம், சில சமயம் அதுவே அதிகமாகலாம். ஒவ்வொரு பதிவும் ஒவ்வொரு பங்கேற்பாளரால் கவனிக்கப் பட்டுக்கொண்டு தானுள்ளது. சித்தூர் வாசு அவர்களாகட்டும் மற்ற நண்பர்களாகட்டும் தங்கள் சொந்த வாழ்க்கையில் சந்திக்கக் கூடிய பிரச்சினைகளிலிருந்து தற்காலிகமேனும் விடுபட்டு ஆறுதலடைய இது போன்ற வடிகால்கள் பெரிதும் பயன்படுகின்றன. இவற்றின் மூலம் அவர்கள் அடையும் ஆறுதல்கள் அனைத்திற்குமான பெருமை ந்ம்முடைய மய்யம் இணைய தளத்திற்குச் சேரும். இதனை தயவு செய்து அந்த அடிப்படையில் பாருங்கள். இன்னும் சொல்லப் போனால் தாங்களும் தான் எத்தனையோ தொழில் பிரச்சினைகளிலிருந்து விடுபட இங்கே பங்கேற்கிறீர்கள். மற்றவர்களை விட தங்களுக்கு இன்னும் அதிகம் கூட இருக்கலாம்.

சித்தூர் வாசுவைப் பொறுத்த வரையில் அவரும் பல பாடல்களை ரசித்து அந்த இன்பத்தை இங்கே பகிர்ந்து கொள்கிறார். அதன் மூலம் அவர் அடையும் மன ஆறுதல் அவருடைய கஷ்டங்களை மறக்கச் செய்கிறது.

இது போன்று தான் ஒவ்வொரு பங்கேற்பாளரும்..

இந்த அடிப்படையில் ஒவ்வொரு பங்கேற்பாளரின் பதிவினையும் தாங்கள் அணுக வேண்டும் என வேண்டுகிறேன்.

நாம் ஒவ்வொருவரும் இங்கு சகோதர சகோதரியரே.. தாங்கள் உட்பட...

யார் மனதையும் புண்படுத்தும் வகையில் தங்கள் பதிவுகளிலிருந்து வார்த்தைகள் வரவேண்டாம் என்பதே என் விருப்பம்.

RAGHAVENDRA
11th October 2014, 10:56 PM
இரவின் மடியில்

ஈரவிழிக் காவியங்கள்... இளையராஜாவின் புகழ் மகுடத்தில் மற்றோர் வைரக்கல்...

இப்பாடல் அதற்கொரு சான்று...

கனவில் மிதக்கும் இதயம் முழுதும் .... அருமையான பாடல்...

கனவில் ஆரம்பிக்கும் ராகத்தை அடிப்படையாக வைத்து மிதக்கும் என்ற வார்த்தை முடியும் என எதிர்பார்ப்போம். ஆனால் சற்றே வித்தியாசமாக எடுத்துச் செல்லும் பாணி ரசிக்க வைக்கும் உத்தி...

நடுவில் வரும் விசில் ஓசை.. ஆஹா... ரம்மியமான சூழலில் இரவின் மடியில் விண்ணை அண்ணாந்து பார்த்து ரசிக்க வேண்டிய பாடல்...

http://play.raaga.com/tamil/browse/movies/year-1980-1982/popular/Eara-Vizhi-Kaaviyangal-T0002676

RAGHAVENDRA
11th October 2014, 11:02 PM
இரவின் மடியில்

காலமும் நேரமும் கனிந்து வரும் போது காதல் தேனாகும்... இது இந்தக் காதலர்களின் நம்பிக்கை...

மலேசியா வாசுதேவனின் குரலில் இந்த அளவிற்கு இனிமை உள்ளதா என்று வியக்க வைக்கும் அபூர்வமான பாடல்...எஸ்.ஜானகியின் குரலோ கேட்கவே வேண்டாம்...

இளைய ராஜா வின் இசையில் இன்னுமோர் இனிய பாடல், என் செல்வமே என்ற திரைப்படத்திலிருந்து..

நடித்தவர்கள் சுமன், அம்பிகா. இயக்கம் எஸ்.பி.முத்துராமன்.

http://play.raaga.com/tamil/browse/movies/year-1980-1982/popular/En-Selvame-T0002684

RAGHAVENDRA
11th October 2014, 11:08 PM
இரவின் மடியில்

எத்தனை கோணம் எத்தனை பார்வை... இளையராஜா இசை... உடனே டக்கென்று நினைவுக்கு வருவது அலைபாயுதே பாடல் தான்...

ஆனால் தீபன் சக்கரவர்த்தி சசிரேகா குரல்களில் இந்த இனிமையான பாடல் பலர் அறிந்திருக்க மாட்டார்கள்..

விதைத்த விதை தளிராய் எழுந்து அரும்பாய் வரும் பொழுது... அருமையான பாடல்..

நடுவே வீணை இசை .... அருமையாக இருக்கிறது... ரம்மியமாக இருக்கிறது..

அருமையான ராகமாலிகை...

கேளுங்கள்...

http://play.raaga.com/tamil/browse/movies/year-1980-1982/popular/Ethanai-Konam-Enthanai-Paarvai-T0002696

RAGHAVENDRA
11th October 2014, 11:14 PM
இரவின் மடியில்

ராமாயணத்தில் சீதையைப் பார்த்து விட்டு வந்த அனுமனிடம் ராமர் கேட்பதற்கு முன்பாகவே அனுமர் உரக்கக் குரல் கொடுத்தாராம்... கண்டேன் சீதையை...

அதைப் போல் கண்டேன் இப்பாடலை... உரக்கக் கூவ வேண்டும் போலுள்ளது இணையத்தில் இப்பாடலைக் கண்டபொழுது...

இனம் தெரியாத அல்லது அதிகம் அறிந்திராத கவிதை மலர் திரைப்படத்தில் இடம் பெற்ற அலைகளே வா... பாடலைக் கேட்கும் போதே மெய் சிலிர்க்கும் அற்புதமான படைப்பு...

எஸ்.பி.பாலாவின் உச்சஸ்தாயி குரலில் கூட இனிமை நம்மை மயக்க வைக்கிறது..

மழையே மழையே என அவர் கூவும் போது நாமும் கூட குரல் கொடுக்கலாம் போல உணர்வோம்...

இளையராஜா என்னும் சிறந்த இசை மேதையின் சிறந்த படைப்புகளில் குறிப்பாக டாப் 10ல் வரவேண்டிய பாடல்..

என்ன ஒரு சிம்ஃபோனி... என்ன ஒரு காம்போஸிஷன்...

முதல் முறையாக இப்பாடலைக் கேட்பவர்கள்... குறைந்தது 15 நாட்களாவது இப்பாடலின் Hangoverல் இருப்பார்கள்..


http://play.raaga.com/tamil/browse/movies/year-1980-1982/popular/Kavithai-Malar-T0002765

RAGHAVENDRA
11th October 2014, 11:19 PM
இரவின் மடியில்

பார்த்துப் பார்த்து செதுக்கிய சிற்பம் சிதிலமானால் மனம் என்ன பாடுபடும்... பார்த்துப் பார்த்துக் கட்டிய வீடு விற்க வேண்டி வந்தால் மனம் என்ன பாடுபடும்...

நினைத்து நினைத்து வரைந்த ஓவியம்...???

இந்த உணர்வை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா...

இசையரசியின் குரல் விடையளிக்கிறது...

இளையராஜாவின் இசையில் கேள்வியும் நானே பதிலும் நானே படத்திலிருந்து...

http://play.raaga.com/tamil/browse/movies/year-1980-1982/popular/Kelviyum-Naane-Pathilum-Naane-T0002767

RAGHAVENDRA
11th October 2014, 11:27 PM
இரவின் மடியில்

இளையராஜா இசையில் மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி குரல்களில் மகனே மகனே படத்திலிருந்து மனதை மயக்கும் ஒரு மதுர கானம்...

மது மலர்களே தினம் மலர்ந்தது..

http://play.raaga.com/tamil/browse/movies/year-1980-1982/popular/Magane-Magane-T0002785

RAGHAVENDRA
11th October 2014, 11:32 PM
இரவின் மடியில்

ஜேசுதாஸ் வாணி ஜெயராம் சங்கர் கணேஷ் கூட்டணி என்றால் இனிமைய உத்தரவாதமல்லவா...

படம் ராஜ்ஜியம் இல்லாத ராஜாக்கள்..

சுகம் தரும் பொன்மாலைக் காற்று வராமலா போய் விடும் இந்த இனிமையான பாடலைக் கேட்டால்...

http://play.raaga.com/tamil/browse/movies/year-1980-1982/popular/Rajyam-Illatha-Rajakkal-T0002336

RAGHAVENDRA
11th October 2014, 11:37 PM
இரவின் மடியில்

அழகே.. அழகே.. நெஞ்சம் முழுதும் நீ....

கவிஞர் புலமைப்பித்தனின் வரிகளில் இப்பாடலின் இலக்கியத் தரம் போற்ற வேண்டிய ஒன்று..

இசையரசி மற்றும் மலேசியா வாசுதேவன் குரல்களில் ....சொக்க வைக்கும் பாடல்..

இடம் பெற்ற திரைப்படம் வாலிபமே வா வா...

இப்பாடலில் இசையரசியின் குரல்களில் வா வா என்ற வார்த்தைகளின் உச்சரிப்பு முற்றிலும் வித்தியாசமாக இருக்கும்.

http://play.raaga.com/tamil/browse/movies/year-1980-1982/popular/Valibame-Vava-T0002432

Murali Srinivas
12th October 2014, 12:58 AM
வாசு சார்,

நீங்கள் இன்று தரவேற்றிய சபதம் படம், அந்த பாடல் ஆகியவை என்னை எங்கேயோ இட்டு சென்று விட்டது. 1971 ஏப்ரல் மாதம் வெளியான் படம். மதுரையில் தங்கத்தில் வெளியானது. அங்கே பார்த்தேன். இந்தப் பாடல் பல நாட்கள் நான் முணுமுணுத்த பாடல். படம் சுவாரஸ்யமாகவே போகும். ஆனால் அதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு வந்த அக்கா தங்கை படத்தின் கதைக்கும் இதற்கும் நிறைய similarities இருக்கும்.

1971 ஏப்ரல் இறுதியில் ஸ்கூல் கோடை விடுமுறை காலத்தில் சென்னைக்கு குடும்பத்துடன் சென்றோம். அதற்கு சில காலங்களுக்கு முன்தான் மதுரையிலிருந்து சென்னைக்கு பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் ஓட ஆரம்பித்திருந்தது. எனக்கு தெரிந்தவரை அதற்கு முன்பு ஜனதா எக்ஸ்பிரஸ் ரயில்தான் சென்னைக்கு ஓடிக் கொண்டிருந்தது. அதுவும் தஞ்சாவூர் கும்பகோணம், மாயவரம் வழியாக ஓடிக் கொண்டிருந்தது. திண்டுக்கல் திருச்சி வழியாக பாண்டியன் அதுவும் இரவில் ஏறினால் காலையில் சென்னை சென்று விடலாம் என்ற சௌகரியம். அந்தக் காலத்தில் அனைத்து ரயில்களும் செங்கல் சிவப்பு அல்லது மரூன் கலரில் இருக்க பாண்டியன் எக்ஸ்பிரஸ் கோச்கள் மட்டும் பச்சை கலரில் [olive green] அமைந்திருக்கும். அந்த ரயிலே ஒரு prestigious train-ஆக பேசப்பட்டுக் கொண்டிருந்த காலம். அந்த லீவில் சென்னை செல்லும்போது பாண்டியனில்தான் சென்றோம் அதுவே ஒரு சாதனையாக தோன்றியது. ரயில்வேயில் வேலை பார்த்த என் தாய் மாமன் எங்களை வழியனுப்ப வந்ததும் அவர் அடித்த கமன்ட்டும் நினைவில் இருக்கிறது.

எங்கள் மதுரை மாநகரம் அப்போது நகராட்சியாக இருந்தது. அது நிலை உயர்த்தப்பட்டு மாநகராட்சியாக 1971 மே 1 முதல் மாற்றம் பெறுவதாக இருந்தது. சென்னைக்கு பிறகு தமிழகத்தில் இரண்டாவது மாநகராட்சியாக உயர்வு பெற்றது எங்கள் மதுரை. நகராட்சி சேர்மன் ஆக இருந்த மதுரை முத்து மதுரையின் முதல் மேயர் ஆக பதவி ஏற்க இருந்தார். அந்த சுட்டிக்காட்டித்தான் என் மாமன் என்ன சொன்னார் என்றால் அன்று [அதாவது 1971 மே 1 அன்று மதுரை மக்கள் அனைவருக்கும் சிறப்பு பரிசு கொடுக்கிறார்கள் என்றும் அதை வாங்காமல் நீங்கள் சென்னை போகிறீர்களே என்று கிண்டல் அடித்தார்.

சென்னை வந்து நான்கு நாட்கள் ஒரு உறவினர் வீட்டில் தங்கினோம். அங்கே என் வயதையொத்த இரு பையன்கள் இருந்தார்கள். ஆகவே சினிமா பீச் என்று பல இடங்களுக்கு சென்றோம். முதல் நாள் ஸ்டார் திரையரங்கில் மனோஜ் குமார் நடித்த பூரப் அவுர் பச்சிம் [கிழக்கும் மேற்கும்] படம் பார்த்தோம். உங்களுக்கு தெரிந்திருக்கும் உப்கார் படத்திற்கு பின் மனோஜ் குமார் படத்தில் தன் கேரக்டர் பெயர் பாரத் என்றுதான் வைத்துக் கொள்வார். ஆனால் நமக்கு என்றும் ஒரே "பாரத்"தானே.

அதற்கு ஒரு வருடம் முன்னர்தான் தேவி மற்றும் தேவி பாரடைஸ் திரையரங்குகள் திறக்கப்பட்டன. அந்த வளாகத்தைப் பற்றியும் அந்த இரு தியேட்டர்களைப் பற்றியும் பல்வேறு விஷயங்கள் சொல்வார்கள். குறிப்பாக தேவி திரையரங்கில் திரையிடப்பட்ட The Airport என்ற திரைப்படத்திற்கு டிக்கெட்டுகள் flight ticket போலவே அடித்துக் கொடுக்கப்பட்ட விஷயம் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. ஆகவே அந்த திரையரங்கத்தையும் காண வேண்டும் என்ற ஆவல். போதாதற்கு நமது சொர்க்கம் வேறு அங்கு வெளியாகி சாதனை புரிந்திருந்ததனால் ஆவல் அதிகமானது. தேவியில் ஓடிய ஆங்கிலப் படத்திற்கு டிக்கெட் கிடைக்காமல் தேவி பாரடைஸில் அப்போது ஓடிக் கொண்டிருந்த பர்தே கே பீச்சே [திரைக்கு பின்னால்?] என்ற வினோத் மெஹ்ரா நடித்த படத்திற்கு சென்றோம். பாரடைஸ் அரங்கிற்கு செல்ல வளைந்து வளைந்து செல்லும் அந்த சரிவான ramp-ல் ஏறி சென்றது இன்னும் நினைவில் இருக்கிறது.

இவ்வளவும் பார்த்த பின் நமது மெக்காவிற்கு போகாமல் இருக்க மனம் இடம் கொடுக்குமா? சென்னைக்கு வரும்போதே நமது திரையரங்கில் படம் பார்க்க வேண்டும் என்ற ஆவல் பேராவலாக மாறியது. 1971 பிப்ரவரி 6 அன்று வெளியான தங்கைக்காக சாந்தியில் ஓடிக் கொண்டிருந்த விவரம் தெரியும். ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டையும் தாண்டி படம் 75 நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது என்கின்ற போது அதையும் பார்த்துவிட துடித்துக் கொண்டிருந்தேன். ஆனால் என் துரதிர்ஷ்டம் நாங்கள் சென்னை வந்து இறங்கவும் தங்கைக்காக 83 நாட்களை நிறைவு செய்து சாந்தியிலிருந்து மாற்றப்படுவதும் ஒரே நேரத்தில் நடைபெற்றது. நம்மை குறை சொல்ல வேண்டுமென்று நினைப்பவர்கள் சாந்தியில்தானே ஓடியது என்பார்கள். ஆனால் உண்மை நிலவரம் என்னவென்றால் சாந்தி நமது பல படங்களுக்கு பாதகமாகவேதான் செயல்பட்டிருக்கிறது.

சரி நமது படம் பார்க்க முடியவில்லை. அரங்கையாவது பார்ப்போம் என்று அப்போது ஓடிக் கொண்டிருந்த ஒரு இந்திப் படத்திற்கு சென்றோம். பால்கனியில் இருந்து படம் பார்த்தோம். படம் பெயர் இப்போது சட்டென்று நினைவிற்கு வரவில்லை. மசாலா படம். படத்தில் பெண்கள் கூட சண்டை போடுவார்கள். ஒரு வேளை ராகவேந்தர் சாருக்கு நினைவிருக்கலாம். நமது சாந்தி திரையரங்கில் படம் பார்த்ததும் ஒரு சாதனையாக தோன்றியது.

திரும்ப ஊருக்கு கிளம்பும் நாள். அன்றுதான் பாரகன் திரையரங்கம் சென்றோம். சபதம் படத்தை நான் ஏற்கனவே பார்த்து விட்டேன் என்று சொல்லியும் என்னை கூட்டிக் கொண்டு போனார்கள். ஓரளவிற்கு விவரம் தெரிந்து சினிமா பார்க்க தொடங்கியவுடன் என்னை நடிகர் திலகம் முழுமையாக ஆட்கொண்டார். அதற்கு பிறகு அடுத்த தலைமுறையை சேர்ந்த ஜெய், ரவி ஆகிய இருவரில் ரவி மீது ஈர்ப்பு வராதது மட்டுமல்ல பிடிக்காமலும் போனது. அதற்கு முக்கிய காரணம் தனக்கு என்று ஒரு சொந்த பாணியை கடைபிடிக்காமல் நடிகர் திலகத்தை ஜெராக்ஸ் எடுப்பார்.

நடக்கும் நடையில் கூட ஏன் வலது கையில் வாட்ச் கட்டும் ஸ்டைலில் கூட அப்படியே சிவாஜி. அதனாலேயே பெரிதாக ஒன்றுமில்லாவிட்டாலும் யாரையும் காப்பியடிக்காமல் சுறுசுறுப்பாக திரையில் தோன்றிய தென்னகத்து ஜேம்ஸ்பாண்டை பிடித்துப் போனது. 1971 பொது தேர்தல் நேரத்தில் ரவி திமுகவிலும் சேர்ந்த தகவல் வரவும், தேர்தல் கூட்டங்களில் நடிகர் திலகத்தை தாக்கிப் பேசிய தகவல்களும் வரவே சுத்தமாக மனசிலிருந்து விலகிப் போனார். நாங்கள் போனபோது பாரகன் திரையரங்கில் ரவியின் கட் அவுட்டிற்கு கருப்பு சிவப்பு காகிதப்பூ மாலை வேறு போட்டிருந்தைப் பார்த்ததும் மனதில் செம வெறுப்பு.

அன்று மாலை லஸ் கார்னரில் போய் ஒரு கடையில் கிரிக்கெட் பேட் மற்றும் ball அடங்கிய செட் வாங்கிக் கொண்டு மதுரை திரும்பி சென்றேன். நான் வாங்கியது கிரிக்கெட் ball என்று நினைத்திருக்க மதுரை சென்று விளையாட ஆரம்பித்தவுடன்தான் தெரிந்தது அது cork ball என்று. தேவி பாரடைஸ் தியேட்டர் டிக்கெட்டை பத்திரமாக வைத்திருந்தேன். மதுரையில் நண்பர்களுக்கு காட்டுவதற்காக. ஆனால் கோடை விடுமுறை அதுவும் மே முதல் வாரம் போனதால் ஒரு மாத காலத்திற்கு டிக்கெட்டை பத்திரப்படுத்தி வைத்திருந்து ஜூன் முதல் வாரம் ஸ்கூல் திறந்தவுடன் அதை காட்டி மகிழ்ந்தது இப்போதும் பசுமையாக நெஞ்சில் நிற்கிறது.

ஒரு பாடல் நீங்கள் பதியப் போக எனக்குள் இத்துணை நினைவலைகளை அது கிளறி விட்டு விட்டது. பாடல் பற்றிய என் கருத்து சிறியதாகவும் அதோடு இணைந்திட்ட பல்வேறு நிகழ்வுகள் கூடுதலாகவும் அமைந்து விட்டன. மிக்க நன்றி வாசு சார். நிஜமாகவே நினைத்தாலே இனிக்கிறது!

அன்புடன்

RAGHAVENDRA
12th October 2014, 07:51 AM
முரளி சார்
சாந்தி வாசலிலேயே நின்று கொண்டிருந்தாலும் உள்ளே சென்று ஹிந்திப் படம் பார்த்ததில்லை அதிகம். தியேட்டருக்கு சென்று மற்ற மொழிப்படங்களை அதிகம் பார்த்ததில்லை. சில குறிப்பிட்ட மிக பிரபலமான படங்கள் விதிவிலக்கு, ஆராதனா, யாதோன் கி பாரத், ஹம் கிஸி ஸே கம் நஹின், பாபி, மேரா நாம் ஜோக்கர், போன்றவை. எனவே தாங்கள் குறிப்பிட்ட படம் எனக்கும் நினைவில் இல்லை.

RAGHAVENDRA
12th October 2014, 07:52 AM
மதுர கானம் திரிக்கு நட்சத்திர அந்தஸ்து..

இவ்வளவு விரைவில் அதுவும் தொடங்கிய சில நாட்களிலேயே நட்சத்திர அந்தஸ்து பெற்று விட்ட மனதைக் கவரும் மதுர கானம் திரிக்கும் பங்கேற்பாளர் ஒவ்வொருவருக்கும் உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

vasudevan31355
12th October 2014, 08:00 AM
இன்றைய 'தி இந்து' தமிழ் நாளிதழில் வந்துள்ள அருமையான மானா பாஸ்கரன் அவர்கள் எழுதியுள்ள நடிகர் திலகத்தின் புகழ்பாடும் கட்டுரை.

'நான் சிவாஜி கட்சி'

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/e820c23d-42c3-42b3-b15f-ec513565ba77.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/e820c23d-42c3-42b3-b15f-ec513565ba77.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/IMG_0001-10.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/IMG_0001-10.jpg.html)

vasudevan31355
12th October 2014, 08:02 AM
இன்றைய 'தி இந்து' தமிழ் நாளிதழில் வந்துள்ள மானா பாஸ்கரன் அவர்கள் எழுதியுள்ள நடிகர் திலகத்தின் புகழ்பாடும் அருமையான கட்டுரை.

'நான் சிவாஜி கட்சி'

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/e820c23d-42c3-42b3-b15f-ec513565ba77.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/e820c23d-42c3-42b3-b15f-ec513565ba77.jpg.html)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/IMG_0001-10.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/IMG_0001-10.jpg.html)

Gopal.s
12th October 2014, 08:36 AM
நான் சொல்வதை தயவு செய்து புரிந்து கொள்ளவும். நான் பிற விஷயங்களை,மனம் கவர்ந்த விஷயங்களை
பகிர்வதை தடை படுத்தவில்லை.பிறர் சுதந்திரங்களை தடை படுத்தவில்லை. உன் கையை நீட்டி நீ ரிலாக்ஸ் பண்ணும் போது ,அங்கே கடினமான உழைப்பை நல்கும் ஒருவரின் கண்ணை,மூக்கை குத்தி விட்டால் ,அதை அவர் எடுத்தும் சொன்னால் கேட்டு திருந்த வேண்டுமல்லவா?

1)படித்ததில் பிடித்த மற்ற பதிவுகளை ,relevant ஆக இருந்தால் ,ஜோ மாதிரி link கொடுத்தால் போதும் .cut paste பண்ணும் அவசியம் சில சமயம் நேரும். பதிவுகளில் மற்றவர் மனம் கோணும் படி ஏதேனும் இருப்பின் ,edit செய்வதற்கே cut paste உதவும். அல்லது நம் பதிவுக்கு support ஆனா சில விஷயங்களை ,உதவிக்கு அழைக்க cut paste பயன் படுத்தலாம். நமக்கே தெரியாமல்,நாமே படிக்காமல்,சம்மந்தா சம்மந்தமில்லாமல் ,40 cut paste ஒரே நாளில் போடுவது ,அல்லது ஒன்றுமே எழுதாமல் வீடியோ மட்டும் போட்டு ஜல்லியடிப்பது, சம்மந்த பட்ட நபருக்கு relaxation .ஆனால் என் போன்ற,வாசு போன்ற,முரளி போன்ற,கார்த்திக் போன்ற,ராகவேந்தர் போன்ற, sincere பதிவாளர்களுக்கு எரிச்சல் தரும்.

2)அதே மாதிரி முழு பக்க படத்தை ,முழுவதும் quote செய்து, அருமை சார் என்ற ஒற்றை வரி பதிவு,சில திரிகளில் பக்கம் நகர்த்தி ,பாகம் தேடும் உத்தியாக மேற்கொள்ள படுகிறது. moderator என்பவர்,சும்மா
வெட்டிதான் அத்திரிகளில். அப்படியாவது சாதனை செய்கிறார்களாம்!!!!

என்னைத்தை சொல்ல?எனக்குத்தான் அகந்தை,கோபக்காரன்,பிறர் மனதை புண் படுத்தி இன்பம் அடைபவன் என்ற நற்சான்றிதழ்.

ஏனைய்யா, விமர்சனங்கள்,ஆய்வுகள்,கவிதைகள்,அங்கதம்,அறிமுகங்கள் ,நுண்கலைகள்,மனோதத்துவ உளவியல்,சிறந்த தேர்வுகள் என்று எத்தனை விதம் அனைத்தும் கூர்மையான தெளிவுடன்,coordinated ஆக என்னால் போட பட்டன.அத்தனையும் விழலுக்கிறைத்த நீரோ என்ற .விரக்தியே மிகுகிறது. ஒவ்வொரு பதிவுக்கும் பின்னால் 50 ஆண்டு படிப்பனுபவம்,அழகியல்,ஈடுபாடு என்று எவ்வளவு உள்ளன?

rajeshkrv
12th October 2014, 09:40 AM
வாசு ஜி,
சபதம் படப்பாடலும் விளக்கமும் தூள்

டி.கே.பகவதி சூப்பர் நடிப்பு எத்தனையோ படங்களில் வில்லனாக, குண்ச்சித்திர பாத்திரங்களில் நடித்திருந்தாலும் இதில் அபாரமான வில்லன் வேடம்

அதுவும் ராஜேஸ்வரி(அஞ்சலியின் ) கணவனாக திரும்பி வர, அந்த நடக்கும் விதம் தொடும் விதத்திலேயே அது தன் கணவன் இல்லை என்பதை புரிந்து கொள்ளும் அஞ்சலி ... என இவரது நடிப்பு அபாரம் .. என்னை கேட்டால் இந்த படத்தின் நாயகன் டி.கே.பகவதி தான்

rajeshkrv
12th October 2014, 09:44 AM
இரவின் மடியில்

அழகே.. அழகே.. நெஞ்சம் முழுதும் நீ....

கவிஞர் புலமைப்பித்தனின் வரிகளில் இப்பாடலின் இலக்கியத் தரம் போற்ற வேண்டிய ஒன்று..

இசையரசி மற்றும் மலேசியா வாசுதேவன் குரல்களில் ....சொக்க வைக்கும் பாடல்..

இடம் பெற்ற திரைப்படம் வாலிபமே வா வா...

இப்பாடலில் இசையரசியின் குரல்களில் வா வா என்ற வார்த்தைகளின் உச்சரிப்பு முற்றிலும் வித்தியாசமாக இருக்கும்.

http://play.raaga.com/tamil/browse/movies/year-1980-1982/popular/Valibame-Vava-T0002432

வாலிபமே வா படத்தின் பாடல்கள் கங்கை அமரனும் வாலியும் இல்லையோ??

vasudevan31355
12th October 2014, 09:46 AM
டியர் ராகவேந்திரன் சார்,

நன்றி! எனக்குத் தெரிந்து 'சபதம்' படத்தின் 'தொடுவதென்ன தென்றலோ' பாடலை என் நண்பர்கள் கேட்டுவிட்டு 'எம்.எஸ்.விஸ்வநாதன் என்னமாய் ட்யூன் போட்டிருக்கார்' என்பார்கள். எனக்கு பகீரென்று இருக்கும். 'அடப்பாவிகளா!அது எம்.எஸ்.போட்ட பாடல் இல்லை... ஜி.கே.வெங்கடேஷ் போட்ட பாடல்' என்பேன். அவர்கள் நம்பவே மாட்டர்கள். 'அது யாருப்பா ஜி.கே.வெங்கடேஷ்?' என்று எதிர் கேள்வி போடுவார்கள்.

இந்த மாதிரி வெளியில் தெரியாத அசாத்திய ஞானமுள்ள இசையமைப்பாளர்களைப் பற்றி வெளியே நம் பங்குக்கு ஓரளவிற்காவது ஏதாவது செய்ய வேண்டும் என்பதனால்தான் 'சபதம்' போன்ற பதிவுகள்.

'சபதம்' டைட்டிலில் பின்னணி பாடுபவர்கள் பட்டியலில் ஜி.கே.வெங்கடேஷ் பெயர் இருக்காது. ஆனால் 'ஆட்டத்தை ஆடு' பாடலில் ரவிச்சந்திரனுக்கு ஜி.கே.வெங்கடேஷ் குரல் கொடுத்திருப்பார். அது வேறு ஒரு குழப்பம். அதற்காக என்னிடம் இருந்த புத்தகங்களைப் புரட்டிப் பார்த்து அது ஜி.கே.வெங்கடேஷ் என்று கன்பார்ம் செய்து கொண்டேன் முன்னமே தெரிந்திருந்தாலும் கூட. சிலர் சாய்பாபா என்று நினைக்கக் கூடும். குரல் ஒற்றுமை கொஞ்சம் அப்படியே இருக்கும்.

தங்களுடைய இரவின் மடியில், பொங்கும் பூம்புனல் பாடல்களை ஆனந்தமாக ரசிக்கிறேன். அதுவும் இளையராஜாவின் அபூர்வ வரிசைகள் அமிர்தம். தங்கள் ரசனை வியப்புக்குரியது. பின்பற்றி வழி நடக்கச் செய்வது. நன்றி.

vasudevan31355
12th October 2014, 10:04 AM
வாசு ஜி,
சபதம் படப்பாடலும் விளக்கமும் தூள்

டி.கே.பகவதி சூப்பர் நடிப்பு எத்தனையோ படங்களில் வில்லனாக, குண்ச்சித்திர பாத்திரங்களில் நடித்திருந்தாலும் இதில் அபாரமான வில்லன் வேடம்

அதுவும் ராஜேஸ்வரி(அஞ்சலியின் ) கணவனாக திரும்பி வர, அந்த நடக்கும் விதம் தொடும் விதத்திலேயே அது தன் கணவன் இல்லை என்பதை புரிந்து கொள்ளும் அஞ்சலி ... என இவரது நடிப்பு அபாரம் .. என்னை கேட்டால் இந்த படத்தின் நாயகன் டி.கே.பகவதி தான்

நன்றி ராஜேஷ்ஜி!

முற்றிலும் உண்மை!

பகவதி பட்டை கிளப்பிய படம் இது. அதுவும் பண்டரிபாய்க்கு கட்டிய கணவன் தான் உயிருடன் இருக்கும் போதே விதவைக் கோலம் தந்து அண்ணன் செல்வநாயகம் வேடம் பூண்டு இருட்டில் திருட்டுத்தனமாக பண்டரிபாயை காமத்துடன் நெருங்குவது பகவதிக்கு ரொம்பப் புதுசு. நாமே கொஞ்சம் கண்ணைக் கசக்கித்தான் பார்க்க வேண்டும்.

பகவதி நடித்ததில் எனக்கு பிடித்தவை. சம்பூர்ண ராமாயணத்தை விட்டுத்தள்ளுங்கள். ராவணனாகவே வாழ்ந்தார் அதில். அதுவல்லாமல்

'அவன் ஒரு சரித்திரம்' படத்தில் நடிகர் திலகத்தின் தந்தையாக, கிராமத்து பெரிய மனிதராக அருமையாக நடித்திருப்பார். அதில் தன்னுடைய வயலில் மேயும் ஒரு காளை மாட்டிடம் சண்டையிட்டு காயங்களோடு வீட்டிற்கு வருவார். நடிகர் திலகம் பதறி என்னவென்று வினவ காளை மாட்டிடம் சண்டையிட்ட கதையை உணர்ச்சியுடன் விவரிப்பார். எனக்கு மிக மிக பிடித்த நடிப்பு இது.

அடுத்து 'ராஜபார்ட் ரங்கதுரை'. ரங்கதுரையை 'அம்மம்மா!' பாட விட்டு அப்பாட்டை ரசிக்கும் போது பகவதியின் அனுபவம் பளிச்சிடும். மாப்பிள்ளை ஸ்ரீகாந்துக்கு தரும் அறிவுரைகளும் மனதை அள்ளும்.

அடுத்து 'நம் நாடு' படத்தில் எம்.ஜி.ஆர் அவர்களின் அண்ணனாக. அழகாகப் பண்ணியிருப்பார். ரங்காராவுக்கு எதிராக எம்.ஜி.ஆர் அவர்கள் போர்க்கொடி தூக்கும் போதெல்லாம் எஜமான விஸ்வாசம் கொண்டு எம்.ஜி.ஆர் அவர்களை கடிந்து கொள்வது, பிறகு ரங்காராவ் ஒரு மிருகம் என்று கொதிப்பது, தன் தம்பி தேர்தலில் நின்று வெற்றி பெற்ற பூரிப்பைக் காட்டுவது என்று நன்றாக நடித்திருப்பார்.

இன்னும் நிறைய உள்ளது. பழுத்த நாடக அனுபம் மிக்க நல்ல கலைஞரை மறக்க இயலுமா?

rajeshkrv
12th October 2014, 10:06 AM
ஜி.கே.வெங்கடேஷ் பற்றிய பேச்சு வந்ததால் சில தினங்களுக்கு முன் ஒரு கன்னட பாடல் பதிவு செய்திருந்தேன்
ராஜ்குமார் மற்றும் பாரதி .. அந்த பாடலுக்கு அருமையான இசை கொடுத்தவர் ஜி.கே.வெங்கடேஷ்

ஜி.கே.வி பல கன்னட படங்களுக்கு அருமையான இசையமைத்துள்ளார். அருமையான பாடல்கள் கொடுத்துள்ளார்.


தெலுங்கிலும் பல நல்ல பாடல்கள் தந்துள்ளார்.
குறிப்பாக நம்மூரின் மேல் நாட்டு மரும்கள் தெலுங்கில் அமெரிக்கா அம்மாயி
முத்தமிழில் பாட வந்தேனின் தெலுங்கு வடிவம் “பாடனா தெனுகு பாட்டா” இசையரசியின் குரலில் ஜொலிக்கும் பாடல்

அதே போல் தேன் சிந்துதே வானம் தெலுங்கில் சோலோவாக மாறியது, ஆண் குரல் பாலா, பெண் குரல் இசையரசி
படம் ஜமீண்தார்காரு அம்மாயி

https://www.youtube.com/watch?v=HsbrBHDXZ0E

https://www.youtube.com/watch?v=nKZy0iRJaFs

rajeshkrv
12th October 2014, 10:07 AM
அதே போல் சவாலே சமாளி, பணமா பாசமா இரண்டிலும் அருமையான வேடம்

vasudevan31355
12th October 2014, 10:08 AM
ராஜேஷ்ஜி!

பி.எம்.அனுப்ச்சி இருக்கேன் பாருங்க.

vasudevan31355
12th October 2014, 10:12 AM
அதே போல் சவாலே சமாளி, பணமா பாசமா இரண்டிலும் அருமையான வேடம்

ஆமாஜி! 'சவாலே சமாளி' படத்தில் பஞ்சாயத்து காட்சி ஒன்னு போதுமே! நடிகர் திலகம், பகவதி, நாகேஷ் கொடி நாட்டுவார்கள்.