PDA

View Full Version : மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3



Pages : 1 2 [3] 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16

vasudevan31355
17th October 2014, 09:51 AM
“காட்டு வழி பாதையில கண்டெடுத்த ஆணிமுத்து நான் புடிச்ச மாமன் மகன் தான்”

பாடல் நன்றாக இருந்தது ராஜேஷ்ஜி! காலை வணக்கங்கள்.

Russellisf
17th October 2014, 10:00 AM
இவர் கவிதைக்கு ராஜா - இன்று கவியரசு கண்ணதாசன் நினைவு நாள்

சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டியில் 1927 ஜூன் 24ல் சிறகை விரித்து, சிகாகோ மண்ணில் 1981 அக்.,17ல் வாழ்வை முடித்துக் கொண்டவர். எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தாலும், பிறருக்கு எட்டாத கருத்துக்களை கொட்டியவர்.

பத்து வயதானதொரு பாலகன்
உன் சன்னதியில் பாடியதும் நினைவில் இலையோ முத்து என இட்ட பெயர் முத்தாக
வேண்டுமென முறையீடு செய்ததிலையோ! தமிழில் ஒரு கவிமகனை
சிறுகூடல் பட்டிதனில்
தந்த மலையரசித் தாயே-


என மலையரசி கோயிலில் கவிதை வடித்தவர். அப்போது அவரது வயது பத்து. அவர் கவிஞர் கண்ணதாசன். வேலை கேட்டு ஒரு பத்திரிகை அலுவலகம் சென்றவரிடம், ஏதாவது இதழ்களில் எழுதி இருக்கிறீர்களா என கேட்க, ஆமாம் என்றார் கவிஞர். என்ன பெயரில் எழுதுகிறீர்கள் என சட்டென கேட்க, கொஞ்சமும் தயக்கமின்றி, கண்ணதாசன் என்ற பெயரில்... என்றார். இப்படித்தான் பெயரும், எழுத்தும் அவர் வசப்பட்டது.


படைப்பாற்றல் : பெண்மையை போற்றி மாங்கனி என்ற சிறு காப்பியம் படைத்தார். சங்கரர் வட மொழியில் எழுதிய கனகதாரா ஸ்தோத்திரத்தை தமிழில், பொன்மழை யாகத் தந்தார். பஜகோவிந்தத்தை எளிய நடையில் மொழி பெயர்த்தார். பகவத்கீதைக்கு உரை விளக்கம் தந்தார்.
1944 - 1981க்கு இடையே அவர் 4ஆயிரம் கவிதைகள், 5 ஆயிரத்துக்கும் மேல் சினிமா பாடல்கள் எழுதியுள்ளார். தனது அனுபவங்களை கவிதையாக்கியவர். உதாரணமாக கண்ணதாசன்,
காங்கிரசில் இருந்து விலகினார். மீண்டும் அவரை காங்கிரசில் சேர்க்க தூதுவர் ஒருவரை அனுப்பினார் காமராஜர். காமராஜரே நேரில் பேசாமல் தூது அனுப்பியது, கவிஞருக்கு வருத்தத்தை தந்தது. தனது ஆதங்கத்தை அப்போது பட்டணத்தில் பூதம் என்ற படத்தில் வரும் பாடலில் தெரிவித்தார்... இப்படி:


அந்த சிவகாமி மகனிடம்
சேதி சொல்லடி
எனை சேரும் நாள் பார்க்கச்
சொல்லடி
வேறு யாரோடும் நான்
பேச வார்த்தை ஏதடி
வேலன் இல்லாமல் தோகை ஏதடி


என எழுதினார். சிவகாமி என்பது காமராஜரின் அன்னை பெயர்.
தத்துவங்களை எளிமையாக்கி பாமரரும் புரியும் வண்ணம் பாடல்களில் புகுத்திய சாதனை கவிஞருக்கே உரியது. அவரது அர்த்தமுள்ள இந்து மதத்தை அவரது குரலிலேயே, தம்புரா இசைப் பின்னணியில் கேட்டுப்பாருங்கள். உலகமே உங்கள் வசப்பட்டதாய் உணர்வீர்கள். 270 நூல்களை எழுதியிருக்கிறார். அதில் வனவாசம் 30 பதிப்பு, மனவாசம் 20 பதிப்பையும் கண்டு சாதனை நிகழ்த்தி இருக்கிறது.


அரசவை கவிஞர் :


சாண்டோ சின்னப்பா தேவரின் தெய்வம் படத்தில் மருதமலை மாமணியே முருகையா, தேவரின் குலம் காக்கும் வேலையா


என்ற பாடலை எழுதினார். இசைக்கருவிகளும் பாடலும் போட்டிபோட்டு ஒலித்த இந்தப் பாடலுக்கு இரண்டு அர்த்தம் கொள்ளலாம். சின்னப்பா தேவருக்கு இப்பாடல் மிகவும் பிடித்துப் போயிற்று. நிரப்பாத செக்கை கொடுத்து கவிஞரை பாராட்டினார்.
ஒரு கவியரங்கில் கவிதை வாசித்த பத்து பேருக்கு கரவொலி கிடைக்கவில்லை. காரணம், கவிஞர் கவிதை வாசிக்க வேண்டும் எனக் கூட்டம் காத்திருந்ததுதான். கடைசியில் கவிஞர் கவிதை வாசித்தார். கைதட்டல் அடங்க நேரமாயிற்று.கவிஞர் சொன்னார், யார் கவிதை வாசித்தபோது நீங்கள் கூச்சலிட்டீர்களோ அவர் எழுதிய கவிதைதான் இது. புகழ்பெற்றவர் என்பதற்காக கைதட்டல் என்பது நல்ல மரபல்ல. நீங்கள் கவிதையை ரசிக்கவில்லை. வாசித்த நபரின் புகழைப் பார்க்கிறீர்கள். இது நல்ல பண்பல்ல, என்றார்.
கவிஞரின் தமிழாற்றலை உணர்ந்தவர் எம்.ஜி.ஆர்., அதனால்தான் அவர் முதல்வராக இருந்தபோது, கவிஞர் கண்ணதாசனை அரசவை கவிஞராக்கினார்.மதுவிலக்கு அமலில் இருந்தபோது மதுகுடிப்பதற்கான பெர்மிட் பெற, அமைச்சர் கக்கனை சந்தித்தார். எனது பெர்மிட் என்ன ஆனது என்ற அவரது குரலில் கோபம் கொப்பளித்தது. அமைச்சர் கக்கன், சற்று அமருங்கள். தமிழ் நீண்ட காலம் வாழ வேண்டும் என்பதற்காகவே பெர்மிட்டில் கையெழுத்திடாமல் வைத்திருக்கிறேன் எனச் சொல்ல, கவிஞரின் முகத்தில் புன்முறுவல் பூத்தது.ஏசுகாவியம் எழுதுவதற்காக குற்றாலத்தில் பாதிரியார் தம்புராஜூடன் இருந்தார். தினமும் காலையில் குளித்து, நெற்றி நிறைய விபூதி பூசிய பின்பு, பகல் முழுவதும் ஏசுகாவிய எழுத்துப்பணி.அவர் மதுஅருந்துவார் என்பதை உணர்ந்த பாதிரியார், தேவையெனில் மாலையில் மதுஅருந்தி ஓய்வெடுங்கள் என்றார்.
கவிஞரோ இப்பணி முடியும் வரை மது அருந்தமாட்டேன். இது உலக மக்களின் உயர்ந்த நூல் என்பதை என்மனம் சொல்கிறது என்றார்.


கண்ணே கலைமானே....:


கேள்விகளுக்கு மதிநுட்பத்தோடு பதில் சொல்வார்.அரசியல் மேடைக்கும், இலக்கிய மேடைக்கும் என்ன வித்தியாசம் என்றதற்கு, அரசியல் மேடை மனிதனை முட்டாளாக்குவதற்காகப் போடப்படுவது, இலக்கிய மேடை முட்டாள்தனத்தை தெளிய வைப்பதற்காக போடப்படுவது என்றார்.
உங்கள் புத்தகத்தை படிப்போருக்கு நீங்கள் சொல்லும் புத்திமதி என்ன என்றதற்கு, புத்தகத்தில் உள்ள கருத்துக்களை பின்பற்றுங்கள். அதன் ஆசிரியரை பின்பற்றாதீர்கள் என போட்டு உடைத்தார். இதற்கும் ஒருபடி மேலே சென்று, எப்படி வாழக்கூடாது என்பதற்கு எனது வாழ்க்கையின் முற்பகுதியையும், எப்படி வாழ வேண்டும் என்பதற்கு காந்தியடிகளின் சுயசரிதையும் உங்களுக்கு வழிகாட்டும் என்று வனவாசத்தில் சொன்னவர் கவியரசர்.
சினிமா உலகில் கால்பதிக்க அவர் கடந்து வந்த பாதை அவ்வளவு எளிதானதாக இல்லை. கலங்காதிரு மனமே என்ற பாடலுடன் துவங்கி, கண்ணே கலைமானே என்ற பாடலுடன் நிறைவானார். சாத்தப்பனுக்கு மகனாக பிறந்தான். ஆனால் இவன்தான் சினிமா பாடல்கள் மூலம் எல்லா வாசல்களையும் திறந்தான் என்கிறார் கவிஞரைப் பற்றி நெல்லை ஜெயந்தா.
கண்ணதாசன் முறையாக தமிழ் படித்தவரில்லை என, சில தமிழறிஞர்கள் சொன்னபோது, அதனாலென்ன, தமிழுக்கு கண்ணதாசனைத்தான் தெரிகிறது என பதிலடி கொடுத்தவர் எழுத்தாளர் ஜெயகாந்தன். காட்டுக்கு ராஜா சிங்கம். கவிதைக்கு ராஜா கண்ணதாசன் என காமராஜர் பாராட்டினார் என்றால், அர்த்தமில்லாமலா இருக்கும்?

- See more at: http://cinema.dinamalar.com/tamil-news/22995/cinema/Kollywood/special-story-about-kannadasan.htm#sthash.vbc2m5S2.dpuf

vasudevan31355
17th October 2014, 10:07 AM
ராஜேஷ்ஜி!

பி.எம்.போட்டிருக்கேன்.

vasudevan31355
17th October 2014, 10:43 AM
இன்றைய ஸ்பெஷல் (96)

இன்று ஒரு செம ஜாலியான பாட்டப் பாப்போம். 'இன்றைய ஸ்பெஷலி'ல் இன்னும் இந்த மாதிரி குத்துப் பாட்டு வரலையா? அதான் அந்தக் குறை இருக்கக் கூடாதேன்னு இந்தப் பாட்டு. இது என்ன மதுர கானமா இல்லை ........ குத்துப் பாட்டு கானமா அப்படின்னு சண்டைக்கு வந்துடாதீங்க. ஹி ஹிஹி ...ஒரு ஜாலிக்குத்தான். இந்த மாதிரிப் பாட்டுக்கு என் ராட்சஸி இல்லாமலா? அப்பிடி ஈஸ்வரி இல்லாம நான்தான் 'இன்றைய ஸ்பெஷல்' போட்டுடுவேனா?

அதுவும் பாட்டை மட்டும் நீங்க கேட்கப்படாது. ராட்சஸியைப் பார்த்துகிட்டே நீங்க ஜாலியா சந்தோஷமா இந்த மழைக்கு பட்டாணியோ ,கடலையோ கொறிச்சுகிட்டே பார்க்கணும். அதான் நம்ம நோக்கமே. அந்த மாதிரி பாருங்க. செம குஜாலா இருக்கும்.

மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிச்ச 'நான்கு கில்லாடிகள்' படம் பத்தி உங்களுக்குத் தெரியாம இருக்காது. கொஞ்சம் காமெடியாவே போகும். ஜெய்சங்கர், மனோகர், தேங்காய், சுருளி, பாரதி, புஷ்பமாலா, குமாரி பத்மினி இப்படி எல்லோரும் ஆக்ட் குடுத்துருப்பாங்க. எடிட்டிங் அப்புறம் டைரெக்ஷனை எல்.பாலு அப்படின்னு ஒருத்தர் எடுத்துக் கட்டிக்கிட்டு செஞ்சிருப்பாரு. கதை வசனம் நம்ம ஏ.எல்.நாராயணன். அப்படியே படத்துல தலையும் காட்டி இருப்பாரு. பாட்டு கூட எழுதியிருப்பாரு கண்ணதாசன் கூட சேர்ந்து.

பாட்டு ஒவ்வொன்னும் ஷோக்கா இருக்கும்.

http://i.ytimg.com/vi/gYYdI9JWLE8/0.jpghttp://i.ytimg.com/vi/jHnSQYx_B6s/0.jpghttp://i.ytimg.com/vi/DhunWkMwlXU/0.jpg

'செவ்வானத்துல ஒரு நச்சத்திரம்' அப்புறம் 'எது எதில பொருந்துமோ' அப்புறம் இன்னொன்னு 'நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சந்நிதி' அப்புறம் இப்ப போடப் போறப் பாட்டு.

வழக்கமா மாடர்ன் தியேட்டர்ஸ்க்கு மியூசிக் போடுற வேதாதான் இதுக்கும் போட்டிருப்பாரு.

இப்ப நீங்க பாக்குற பாட்டு சினிமா ஷூட்டிங் எடுக்குற பாட்டு. நாட்டுக்கட்டை கணக்கா பாரதி ஹீரோயினா நடிக்க நம்ம 'விஜயபுரி வீரன்' ஆனந்தன்தான் இந்தப் பாட்டுக்கு ஹீரோ. (படத்துக்கு இல்லீங்கோ)

ரெகார்டிங் தியேட்டர்ல இசையமைப்பாளருங்க எல்லா மியூசிக் வாத்தியத்தையும் வச்சி மியூசிக் போட, நம்ம ராட்சஸி ஜோரா பாட, (ஈஸ்வரி எவ்வளவு ஒல்லியா அழகா இருக்காங்க) படா ஷோக்கா இந்தப் பாட்ட எடுப்பாங்க. கூட பொன்னுசாமி பாடுவாரு.

'பூக்கடப் பக்கம் டீக்கடை ஓரம்

ஏக்கத்தோடு நான் காத்திருந்தேனே'

அப்படின்னுட்டு.

அப்பிடியே டைரெக்டர் ஜெயசங்கரு கோஷ்டி இந்தப் பாட்ட படமா புடிக்கும். சேலம் ஏற்காடு பக்கத்துல மலைப் பக்கம் ஷூட்டிங் எடுப்பாங்க அவுட்டோரில. எல்லா காமெடி நடிகர்களும் இருப்பாங்க. மூர்த்தி, தேங்காய் எல்லாரும்.

http://i.ytimg.com/vi/BBoY0Ka12uw/hqdefault.jpg

ஷோக்கு பாரதி பாவாட தாவணி போட்டுகிட்டு கொண்ட முடிஞ்சு பூ வச்சிக்கிட்டு அப்படியே அச்சு அசலா கிராமத்துக் கிளி மாதிரி இருப்பாங்க. லாரி டிரைவரா நம்ம ஆனந்தன் ஜோடி சேருவாரு பாரதி கூட. சும்மா இவரும் ஜோரா பேன்ட் ஷர்ட்டெல்லாம் போட்டுகிட்டு இன் பண்ணிக்கிட்டு வருவாரு. அப்புறம் சம்பந்தமே இல்லாம வெஸ்டர்ன் மியூசிக்கெல்லாம் கலக்க ரெண்டு பெரும் செம டான்ஸ். என்னவோபா நல்லாவே இருக்கும்.

புல்லா மெட்ராஸ் பாஷைலே பாட்டு நகரும். நல்லா டைம் பாஸ் ஆகும். சின்னக் கண்ணரு சிலிர்த்துகிட்டே பாப்பாரு.

ராட்சஸி ரிகார்டிங் தியேட்டர்ல இந்தப் பாட்டத்தான் பின்னுதுங்க ஹோய்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/ee.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/ee.jpg.html)

இந்தாங்க பாட்டோட மெட்ராஸ் பாஷை வரிங்க

https://i.ytimg.com/vi/asmE4Sy_K4E/mqdefault.jpg

பூக்கடப் பக்கம் டீக்கடை ஓரம்
ஏக்கத்தோடு நான் காத்திருந்தேனே
இன்னாத்தே நீயும் வரல்லே

பூக்கடப் பக்கம் டீக்கடை ஓரம்
ஏக்கத்தோடு நான் காத்திருந்தேனே
இன்னாத்தே நீயும் வரல்லே
என் அத்தான் இந்த கண்ணாத்தா
தூங்கவே இல்லே

நான் என்னாத்தச் சொல்லுவேண்டி
பொன்னாத்தா என்ன அந்த
மல்லாவரம் லாரி ஓனரு
போக்கிரிப் பையன் போகச் சொன்னான்
பெங்களூரு
லாரிய எடுத்து போகச் சொன்னான்
பெங்களூரு

எத்தினி பசங்க பொண்ணப் பாக்கவே
வந்தாங்க ஊட்டாண்ட
அட இன்னான்னு சொல்லுவேன்
நின்னாங்க கேட்டாண்ட
ஒன் மூஞ்சப் பாத்து சேஞ்சு ஆனேன்
முட்டாளு நானு
ஒன் மூஞ்சப் பாத்து சேஞ்சு ஆனேன்
முட்டாளு நானு

மூஞ்சுக்கென்ன பாரு நான்
முன்னேறிய ஸ்டாரு அஹ்ஹங்
மூஞ்சுக்கென்ன பாரு
நான் முன்னேறிய ஸ்டாரு
இன்னாடி முழிக்கிற சும்மா

யாரு?

டிரைவரு

பூக்கடப் பக்கம் டீக்கடை ஓரம்
ஏக்கத்தோடு நான் காத்திருந்தேனே
இன்னாத்தே நீயும் வரல்லே
என் அத்தான் இந்த கண்ணாத்தா
தூங்கவே இல்லே

நான் என்னாத்தச் சொல்லுவேண்டி
பொன்னாத்தா என்ன அந்த
மல்லாவரம் லாரி ஓனரு
போக்கிரிப் பையன் போகச் சொன்னான்
பெங்களூரு
லாரிய எடுத்து போகச் சொன்னான்
பெங்களூரு

ரோட்டுல போற பொம்பளயெல்லாம்
அடிச்சாங்க சைட்டு
அட இன்னாடா பேஜாருன்னு
உட்டேன் போ ரைட்டு
ஒன் மூஞ்சப் பாத்து சேஞ்சு ஆனேன்
முட்டாளு நானு
ஒன் மூஞ்சப் பாத்து சேஞ்சு ஆனேன்
முட்டாளு நானு

நானு என்ன லேசா
நான் கைபடாத ரோசா
நானு என்ன லேசா
நான் கைபடாத ரோசா
அட இன்னாய்யா முழிக்கிற சும்மா

யாரு?

நான்தான்

பூக்கடப் பக்கம் டீக்கடை ஓரம்
ஏக்கத்தோடு நான் காத்திருந்தேனே
இன்னாத்தே நீயும் வரல்லே
என் அத்தான் இந்த கண்ணாத்தா
தூங்கவே இல்லே

தா

என்னாத்தச் சொல்லுவேண்டி
பொன்னாத்தா அந்த
மல்லாவரம் லாரி ஓனரு
போக்கிரிப் பையன் போகச் சொன்னான்
பெங்களூரு
லாரிய எடுத்து போகச் சொன்னான்
பெங்களூரு


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=BBoY0Ka12uw

rajeshkrv
17th October 2014, 10:55 AM
ராஜேஷ்ஜி!

பி.எம்.போட்டிருக்கேன்.

பதில் போட்டாயிற்று.

rajeshkrv
17th October 2014, 10:56 AM
“காட்டு வழி பாதையில கண்டெடுத்த ஆணிமுத்து நான் புடிச்ச மாமன் மகன் தான்”

பாடல் நன்றாக இருந்தது ராஜேஷ்ஜி! காலை வணக்கங்கள்.

உங்களுக்கு பாடல் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி.

Gopal.s
17th October 2014, 10:57 AM
பூக்கடை பக்கம் எனது பிடித்தம். பாரதியும் ,ரவியும் ஒத்தையடி பாதையிலே கலக்கல்.அதையும் பதியுங்கள்.



நான்கு கில்லாடிகள் வந்த போது என்னை கவர்ந்த படங்களில் ஒன்று. எனக்கு மாடர்ன் தியேட்டர் தியேட்டர் படங்கள் பொதுவாக பிடிக்கும். பாபு தியேட்டர் திறந்த போது "வல்லவன் ஒருவன் "அங்குதான் பார்த்தேன்.(கடலூர்)



ஜிலுக்கடி ஜிலுக்கடியும் முடிந்தால்.

rajeshkrv
17th October 2014, 10:59 AM
நான்கு கில்லாடி பாடல் தூள். இதில் எல்லாமே சூப்பர் பாடல்கள்
ரவி- பாரதி ஒரு வித அழகு என்றால் ஜெய் - பாரதி இன்னும் அழகு...

இதில் மனோகர் சும்மா தூள் கிளப்பியிருப்பார்..

இதில் இசையரசியும் ராட்சசியும் கலக்கும் ஒரு பாடல் உண்டு
எது எதிலே பொருந்துமோ .. குமாரி பத்மினியும் பாரதியும்

http://www.youtube.com/watch?v=nnXDNUutjDw

vasudevan31355
17th October 2014, 11:09 AM
பதில் போட்டாயிற்று.

பாத்துட்டேன்ஜி! நன்றி!

vasudevan31355
17th October 2014, 11:28 AM
'பராசக்தி' இன்று இதே தேதியில் அன்று (17-10-1952) வெளியான நாள். (சிறப்புப் பதிவு)

'மதுர கானங்கள்' பராசக்தியையும், அதன் காலத்தால் அழிக்க முடியாத கலைஞனையும், பாடல்களையும் வாழ்த்துகின்றது.

http://www.thehindu.com/multimedia/dynamic/01350/TH02_PARASAKTHI_1350808g.jpg

'வெளி வந்த நாள்: 17-10-1952

மூலக்கதை: எம்.எஸ். பாலசுந்தரம்

திரைக்கதை, வசனம்: கலைஞர் மு.கருணாநிதி

இசை: ஆர். சுதர்சனம்

ஒளிப்பதிவு: எஸ்.மாருதிராவ்

தயாரிப்பு: நேஷனல் பிக்சர்ஸ் பி.ஏ.பெருமாள்

இயக்கம்: கிருஷ்ணன்-பஞ்சு

நடிக, நடிகையர்: நடிகர் திலகம், எஸ்.எஸ்.ராஜேந்திரன், எஸ்.வி.சகஸ்வரநாமம், வி.கே.ராமசாமி, பண்டரிபாய், ஸ்ரீரஞ்சனி மற்றும் பலர்.

கதை:

பாரிஸ்டர் சந்திரசேகரன் தன் தம்பிகளுடன் சிறு வயது முதல் (ஞானசேகரன், குணசேகரன்) ரங்கூனில் வாழ்ந்து வருகிறார். தமிழ்நாட்டில் மதுரையில் தந்தையுடன் இவர்களின் தங்கை கல்யாணி வசித்து வருகிறாள். அவளுக்கு திருமணத்திற்கு மாப்பிள்ளையும் பார்த்தாகி விட, உலகப் போர் காரணமாக அண்ணன்மார்கள் மூவரும் ரங்கூனிலிருந்து தங்கையின் கல்யாணத்திற்கு வர கப்பலில் இடம் கிடைக்காததால் கடைத்தம்பி குணசேகரன் மட்டும் திருமணத்திற்கு இந்தியா புறப்பட்டு வருகிறான். கப்பலும் குறிப்பிட்ட நேரத்தில் மதராஸ் வரமுடியாமல் போர்க் காரணங்களினால் தாமதப்படுகிறது. திருமணம் முடிந்து கர்ப்பமுறும் கல்யாணி குழந்தையைப் பெற்றெடுத்து கணவனை விபத்தில் பறி கொடுக்கிறாள். தந்தையையும் இழக்கிறாள். அநாதை ஆகிறாள். கப்பலில் மதராஸுக்கு தாமதமாக வந்து சேரும் குணசேகரன் தான் கொண்டுவந்த பணத்தையும், பொருளையும் வஞ்சகர்களிடம் பரிதாபமாகப் பறி கொடுக்கிறான். ஒரு சாண் வயிற்றுக்காக பைத்தியம் போல நடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறான். விதவையான கல்யாணி இட்லிக் கடை நடத்தி குழந்தையுடன் கஷ்டப்படுகிறாள். தன் தங்கையை பல சிரமங்களுக்கிடையில் மதுரை வந்து கண்டு மனம் நொந்து போகிறான் குணசேகரன். தான் அண்ணன் என்று அவளிடம் காட்டிக் கொள்ளாமலேயே.அவளுக்கு துணையாக அவளுடனே இருக்கிறான். கல்யாணிக்கு அவன் கிறுக்கண்ணா. ஆனால் அங்குள்ள காமுகன் ஒருவனின் நடத்தைக்குப் பயந்து இட்லிக்கடையை விட்டு விட்டு குழந்தையுடன் அந்த ஊரை விட்டே போய் விடுகிறாள். கல்யாணியைக் காணாமல் தேடி அலைகிறான் குணசேகரன்.

இடையில் போரின் உக்கிரம் தாளாமல் ரங்கூனிலிருந்து தமிழகம் திரும்ப பயணப்படும் ஞானசேகரனும் சந்திரசேகரனும் ஜப்பான் விமானங்களின் குண்டு வீச்சால் பிரிகிறார்கள். தம்பிகளை இழந்து தவிக்கும் சந்திரசேகரன் திருச்சி வந்து நீதிபதியாகி தன் தங்கை கல்யாணியைத் தேடுகிறார். ஞானசேகரன் குண்டு வீச்சால் கால்களை இழந்து நொண்டியாகிறான். பர்மா அகதிகளில் ஒருவனாக தமிழகம் வந்து சேர்கிறான். ஞானசேகரனும் அவனுடன் வந்த மற்ற அகதிகளும் ஆதரவின்றி பிச்சைக்காரர்களாகவே ஆகி விடுகின்றனர்.

அனாதையாகத் திரியும் குணசேகரனுக்கு அடைக்கலம் கொடுத்து அவனுக்கு நல்வாழ்வு காட்டுகிறாள் புரட்சி எண்ணம் கொண்ட விமலா என்ற ஒரு கோதை.

ஊர் விட்டு ஊர் மாறி வந்து காமுகர்களிடமும், கயவர்களிடமும் சிக்கி சொல்லொணாத் துன்பங்களுக்கு ஆளாகிறாள் கல்யாணி. பசிக் கொடுமையில் குழந்தைக்கு பால் வாங்கக் கூட இயலாத நிலையில் அனைவரிடமும் பிச்சை கூட கேட்கிறாள் கல்யாணி. ஆனால் யாரும் இரக்கம் காட்டவில்லை. மாறாக அவள் கற்பைத்தான் விலை பேசுகிறார்கள். கோவில் பூசாரி ஒருவன் கல்யாணியின் கற்பை சூறையாட முயல்கிறான். வாழவே வழியில்லாமல் போன நிலையில் பசியின் அகோரப் பிடியில் தவிக்கும் தன் மழலைச் செல்வத்தையும் கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு முயல்கிறாள் கல்யாணி. ஆனால் காவலர்களிடம் மாட்டிக் கொள்கிறாள். வழக்கை விசாரிக்கும் நீதிபதியோ அவளுடைய அண்ணன் சாட்சாத் சந்திரசேகரன்தான். கல்யாணி தன்னுடைய சோகக்கதையை கோர்ட்டில் சொல்ல அவள் தன் தங்கை என்று தெரிந்து துடித்து விழும் நீதிபதி அண்ணன் சந்திரசேகரன் மனநிலை பாதிக்கப்படுகிறார்.

கல்யாணின் வாழ்வை சூறையாட நினைத்த பகல் வேஷ காமாந்தக பூசாரி ஒருவனை வெட்டி நீதிமன்றம் புகுகிறான் குணசேகரன். அங்கு தனக்காகவும், குழந்தையைக் கொன்ற குற்றத்திற்காக கோர்ட்டில் நிற்கும் தன் தங்கைக்காகவும் புரட்சிகரமாக புதுமையாக வாதாடுகிறான். தான் பட்ட துயரங்களையும் தன் தங்கை கல்யாணி பட்ட துயரங்களையும் எடுத்துரைக்கிறான். சமூகத்தில் பெண்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும் ஏற்படும் கொடுமைகளைப் பற்றியும் சாடுகிறான். வழக்கு முடிவுக்கு வந்து குணசேகரன் நிரபராதி என்று விடுதலையாகிறான். கல்யாணியின் குழந்தையும் கருணை மனம் கொண்ட குணசேகரனுக்கு அடைக்கலம் தந்த அதே விமலாவால் காப்பாற்றப்பட்டு உயிர் பிழைப்பதால் கல்யாணியும் குற்றத்திலிருந்து விடுவிக்கப் படுகிறாள். தன் தங்கையைக் கண்ட சந்தோஷத்தில் அண்ணன் சந்திர சேகரனும் குணமடைகிறார். பிச்சைக்காரனாக அலைந்து திரிந்த ஞானசேகரனும் குடும்பத்துடன் இணைகிறான். தன் வாழ்வில் உறுதுணையாய் நின்ற விமலாவைக் கரம் பற்றுகிறான் குணசேகரன். பிரிந்த குடும்பம் ஒன்று சேர்கிறது. பிச்சைகாரர்களுக்காக ஒரு அநாதை விடுதியும் திறக்கப்படுகிறது.


https://www.youtube.com/watch?feature=player_embedded&v=SdnOlP94x2g

கதாநாயகன் குணசேகரனாக நடிகர் திலகம், அண்ணன் சந்திரசேகரனாக எஸ்.வி.சகஸ்ரநாமம், தம்பி ஞானசேகரனாக எஸ்.எஸ்.ராஜேந்திரன், தங்கை கல்யாணியாக ஸ்ரீரஞ்சனி, கதாநாயகி விமலாவாக பண்டரிபாய் திறம்பட நடித்தனர். கிருஷ்ணன் பஞ்சு இரட்டையர்கள் மிக அற்புதமாக இயக்கம் செய்தனர்.

நடிகர் திலகத்தின் முதல் படம். நாயகனாக நடிகர் திலகம் ஒப்பந்தம் செய்யப்பட்டு சிலகாட்சிகளும் எடுக்கப்பட்ட பிறகு 'தோற்றப் பொலிவு சரியில்லை... பையன் மீன் மாதிரி வாயைத் திறக்கிறான்' என்று ஏ.வி.எம்.செட்டியார்,மற்றும் சிலர் சிவாஜியை நிராகரித்து அன்றைய பிரபலம் கே.ஆர்.ராமசாமி அவர்களை நாயகனாக மாற்றிப் போடலாம் என்று சொல்ல, படத்தின் தயாரிப்பாளர் பெருமாள் நடிகர் திலகத்தின் நடிப்பின் மேல் இருந்த நம்பிக்கையால் சிவாஜியை மாற்ற இயலாது என்று கண்டிப்பாகக் கூறி விட்டார். சிவாஜி இல்லையென்றால் படத்தின் பங்குதாரர் நிலையில் இருந்து விலகுவதாகவும் அறிவித்து விட்டார்.

சிவாஜியின் அசாத்தியமான திறமையை நாடகங்கள் வாயிலாக அறிந்திருந்த, அப்போதைய அரசியல் பெருந்தலையாய் வளர்ந்து கொண்டிருந்த அறிஞர் அண்ணா சிவாஜியைத்தான் கதாநாயகனாகப் போட வேண்டும் என்று சிபாரிசு செய்ய வேறு வழியில்லாமல் மெய்யப்ப செட்டியார் ஒத்துக் கொண்டார்.

ஒல்லியான உடல்வாகுடன் வறுமையாகத் தெரிந்த சிவாஜிக்கு இரண்டு மாதங்கள் நல்ல ஆகாரங்கள் வழங்கி அவர் தோற்றப் பொலிவு மெருகூட்டப்பட்டது. மறுபடி ஷூட்டிங் தொடங்கியது. இரவுபகலாக படப்பிடிப்பு நடத்தப்பட்டு 1952-இல் பராசக்தி தீபாவளிக்கு வெளியிடப்பட்டு மாபெரும் புரட்சி வெற்றி பெற்றது. திராவிட இயக்க கொள்கைகள் பலமாக அடியெடுத்து வைத்து நுழைய பாலமாக அமைந்தது பராசக்தி.

நடிகர் திலகத்தின் முதல் படத்திலேயே அவருடைய பிரம்மிக்கத்தக்க புதுமையான நடிப்பைக் கண்டு திரையுலகமே வாய் பிளந்தது. புரட்சிக் கருத்துக்கள் கொண்ட கூர்மையான கதைக்கு மிகவும் பொருத்தமான கலைஞரின் வசனங்கள் பட்டி தொட்டியெங்கும் சிவாஜியின் குரலில் சிங்கநாதமாய் ஒலித்தன. பராசக்தியின் வசனங்கள் புதிதாக வரும் நடிகர்களுக்கு பாலபாடமாகியது. அந்த நீதிமன்றக் காட்சி ("நீதிமன்றம்... விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்திருக்கிறது") வசனத்தைப் பேசிக்காட்டினால்தான் திரையுலகிலே எவரும் அடியெடுத்து வைக்க முடியும் என்ற நிலை நீண்ட வருடங்கள் தொடர்ந்தது. கமல், சிவக்குமார் போன்ற பெரிய நடிகர்கள் எல்லாம் அந்த வசனத்தைப் பேசிக்காட்டி விட்டுத்தான் தமிழ் சினிமா உலகில் கால் பதிக்க முடிந்தது.

அதுவரை படம் நெடுக பாடல்களும், உணர்ச்சியில்லாத வசன உச்சரிப்புகளும், பொறுமையை சோதிக்கும் சவ சவ இழுவைக் காட்சிகளுமாய் இருந்த தமிழ்த்திரையுலகம் பராசக்திக்குப் பின் முற்றிலும் மாறிப் போனது. திராவிடக் கட்சிகள் தமிழ்நாட்டின் ஆட்சியைப் பிடிக்க மிகப் பெரிய தூண்டுகோலாய் அமைந்தது 'பராசக்தி'

பராசக்திக்கு முன் பராசக்திக்குப் பின் என்று தமிழ்த் திரையுலக வரலாறு மாறியது. சிவாஜிக்கு முன் சிவாஜிக்குப் பின் என்று உலக நடிப்பிலக்கணமே இரண்டாக ஆனது.

இன்றுவரை அனைவரும் அதிசயப்படுவது இது சிவாஜிக்கு முதல் படமா? என்றுதான். நாடக மேடை அனுபவம் அப்படிக் கை கொடுத்தது இந்தக் கலைஞனுக்கு. 'தென்றலைத் தீண்டியதில்லை நான்' என்னும் வசனம் மட்டுமே திரையரங்குகளில் நம் காதுக்குக் கேட்கும். மற்ற வசனங்கள் ரசிகர்கள் கைத்தட்டல்களில் காதுகளில் விழாது. குரலின் ஏற்ற இறக்கங்கள், மிக மிகத் தெள்ளத் தெளிவான உச்சரிப்பு, நொடிக்கொரு தரம் மாறும் முகபாவம், முதல் படத்திலேயே பணக்கார ரங்கூன்வாசியாக, பணமிழந்து வாடும் ஏழையாக, ராஜாவாக, மந்திரியாக, சேவகனாக தனி நடிப்பு, பைத்தியக்காரனாக பலவித உணர்ச்சிகளில் பாங்கான நடிப்பு, டூயட்டில் ஆண்மை கம்பீரம், வறுமையின் வாட்டத்தை முகத்தில் பிரதிபலிக்கும் திறமை, நீதி மன்றத்தில் சிங்கமென கர்ஜித்து முழங்கும் முழக்கம் என ஒரே படத்திலேயே அத்தனை விஷயங்களையும் வழங்கி இன்று வரை நம் நெஞ்சில் குணசேகரனாக வாழ்கிறார் நடிகர் திலகம்.

படம் காங்கிரஸ்கார ஆட்சியால் தடை செய்யப்பட்டு மீண்டு வந்து வெள்ளி விழாக் கொண்டாடியது. பல ஊர்களில் நூறு நாட்கள் கண்டது. ஈழத்தில் பிரம்மாண்ட வெற்றியினைப் பெற்றது. மறு வெளியீடுகளிலும் அமர்க்களமாக ஓடியது. அந்த வருடத்தின் மறக்க முடியாத தீபாவளி விருந்தாக அனைவருக்கும் அமைந்தது.

'புதுப் பெண்ணின் மனதை தொட்டுப் போறவரே'.... 'ஓ ரசிக்கும் சீமானே வா'... 'கா கா கா... நெஞ்சு பொறுக்குதில்லையே'... 'பூமாலை... புழுதி மண் மேலே' என்ற வெகு பிரசித்தி பெற்ற சலிக்காத பாடல்கள்.

பராசக்தி பாடல்களை இயற்றியோர்: மகாகவி பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன், கலைஞர் கருணாநிதி, உடுமலை நாராயண கவி, காமாஷிநாதன்

மாருதிராவ் அவர்களின் சிறப்பான பளிச்சென்ற ஒளிப்பதிவு

கிருஷ்ணன் பஞ்சு இரட்டையரின் அற்புதமான புதுமை இயக்கம்

என்று இந்த பராசக்தி சகலத்திலும் சக்தி பெற்று விளங்கினாள். அது மட்டுமல்ல. தமிழ்த்திரை உலகம் பெருமை கொள்ள அருமையான சிவாஜி கணேசன் என்ற ஒப்பற்ற நடிக மைந்தனை நமக்கு அருளினாள்

இந்தக் கட்டுரைத் தொடர் முழுதும் என் சொந்தப் படைப்பே.

vasudevan31355
17th October 2014, 11:32 AM
பராசக்தியைப் பற்றி சில தகவல்கள்.

1. பராசக்தி படத்தில்தான் முதன் முதலாக டைட்டிலின் போது பின்னால் பாடல் ஒலிக்கும் முறை அறிமுகப்படுத்தப் பட்டது.

2. சிவாஜி ஒல்லியாக இருந்ததினால் நேஷனல் பிக்சர்ஸ் கம்பெனி மேக்கப் மேனிடம் நிர்வாகத்தால் பணம் வழங்கப்பட்டு சிவாஜிக்கு 'தயார்த் தீனி' அளிக்கப்பட்டது. அதாவது இறைச்சி வகைகள், முட்டை, மீன் இதர மாமிச வகைகள் சிவாஜிக்கு ஒரு கிராமத்தில் இரண்டுமாத காலம் கொடுக்கப்பட்டு அவருடைய உடம்பு கதாநாயகனுக்குத் தக்கபடி ஓரளவிற்கு உருமாற்றப்பட்டது.

3. 1951-இல் 'பராசக்தி' ஷூட்டிங் ஆரம்பிப்பதற்கு முன்னால் சிவாஜியை வைத்து ஏ.வி.எம் ஸ்டுடியோவில் ஆக்டிங் டெஸ்ட் எடுக்கப்பட்டது. சிவாஜி நடித்த 'என் தங்கை' என்ற நாடகத்தில் அவர் குடிகாரனாக அதகளம் செய்வாராம். அந்த குடிகாரன் பாத்திரத்தையே சோதனை நடிப்பாக சினிமா காமெரா முன்னால் சிவாஜியை செய்ய வைத்தார்களாம். சிவாஜி பிரமாதமாக நடித்துக் காட்ட அனைவருக்கும் பரம திருப்தி ஏற்பட்டதாம்.

4. பின் பராசக்தி ஷூட்டிங்கின் முதல் நாளில் கையில் இரண்டு சிகரெட்டுகளைப் பிடித்தபடி சிவாஜி பேசி நடித்த முதல் வசனம் என்ன தெரியுமா. 'சக்சஸ்' அந்தக் காட்சியின் புகைப்படத்தைத்தான் கீழே பார்க்கிறீர்கள்.

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/5bf634e6-c91a-49c8-b610-640653ff2d90_zpseef0fbab.jpg

5. அந்தக் காலத்தில் ஒரே படத்தில் ஒரு நடிகரே வெவ்வேறு இரண்டு அல்லது மூன்று வேடங்கள் போடுவதுண்டு. 'அய்யா தெரியாதய்யா'
புகழ் ராமாராவ் பராசக்தியில் கல்யாணியின் பக்கத்து வீட்டுக் காரராகவும், கல்யாணிக்கு கடன் கொடுத்து அதை வசூல் செய்யும் சேட்டாகவும் இரண்டு வேடங்கள் செய்திருப்பார். அந்தக் காலங்களில் கம்பெனி ஒப்பந்தங்களின்படி ஒருவரே நாடகத்திலும் சரி, திரைப்படங்களிலும் சரி இரண்டு மூன்று வேடங்கள் போடுவதுண்டு. ஆனால் எளிதில் கண்டு பிடிக்க இயலாது. மேக்கப்பும், நடிப்பும் அவ்வளவு தத்ருபமாக இருக்கும்.

6. படம் இரண்டாயிரம் அடி எடுக்கப்பட்டு சிவாஜி பராசக்தியின் கதாநாயகனா இல்லையா என்ற இழுநிலை நீடித்தபோது சிவாஜி அவர்களின் மனநிலைமையை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். தான் பராசக்தியின் கதாநாயகனாக தேர்ந்தெடுக்கப்படுவோமா இல்லையா என்று அந்த மனிதர் எப்படியெல்லாம் துடித்திருப்பார். இதோ அவர் சொல்வதைக் கேளுங்கள்.

"பராசக்தியில் என்னை கதாநாயகனாக ஆக்குவார்களா இல்லையா என்று நான் துடித்துப் போனேன். அழுது அழுது என் கண்ணீர் வற்றியது. இன்று ஏவி
எம் ஸ்டுடியோவில் வானுயர வளர்ந்த வேப்ப மரங்கள் அனைத்தும் அன்று என் கண்ணீரால் வளர்ந்தவை"

அதே ஏவி எம் ஸ்டுடியோவில் தற்சமயம் உலகப்பெரு நடிகர் சிவாஜி கணேசனுக்காக வைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னம் புகைப்படத்தைத்தான் கீழே பார்க்கிறீர்கள்.('பராசக்தி' பட வடிவில்)

http://farm9.staticflickr.com/8370/8506726940_16dca13cee_z.jpg

7. முதன் முதல் ஒரு திரைப்படத்தின் வசனங்கள் இசைத்தட்டாக வெளிவந்து தமிழ்நாடு முழுதும் எதிரொலித்ததே அவ்வளவு ஏன்? இன்றளவும் கூட மார்கழி மாத அதிகாலைகளில் கோவில்களில் குணசேகரன் கல்யாணித் தங்கைக்காக நீதிமன்றத்தில் கோர்ட்டாருடன் வாதிடுவது நமது ஆழ்ந்த உறக்கத்தையும் மீறி நம் காதுகளுக்குக் கேட்டு நம்மில் உணர்ச்சிப் பிரவாகத்தை உண்டு பண்ணுகிறதே!

8. முதன்முதலில் வெளிநாட்டில் வெள்ளிவிழா கொண்டாடிய முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையும் பராசக்திக்கு உண்டு.

9. அதுவரை தமிழில் கதாநாயகர்களாகக் கோலோச்சிய நடிகர்கள் தியாகராஜா பாகவதர், பி.யூ.சின்னப்பா, டி.ஆர்.மகாலிங்கம், கே.ஆர்.ராமசாமி, எம்.கே.ராதா, ரஞ்சன், இன்னும் நிறைய பேர் பராசக்தி சுனாமியில் அடித்துச் செல்லப்பட்டனர் என்றுதான் சொல்ல வேண்டும். தெலுங்கு நடிகர்கள் நாகேஸ்வரராவ், என்.டி ஆர் கூட தமிழில் நிறைய நடித்துக் கொண்டிருந்த நேரம்.அவர்களும் நடிகர் திலகம் என்ற நடிப்புப் புயலில் தாக்குப் பிடிக்க முடியாமல் ஆந்திராவில் சென்று கரையேறினர்.

10. அதுவரை திரைப்பட விநியோகஸ்தராக இருந்த பி.ஏ.பெருமாள் முதலியார் அவர்கள் தயாரித்த முதல் படம் 'பராசக்தி'.

11. இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் அறிமுகமும் பராசக்தியில்தான் என்று நினைக்கிறேன்.

12. .கலைஞரும், சிவாஜியும் இணைந்த முதல் படம் என்பதை பட்டி தொட்டியும் அறியும்.

13. கவிஞர் கண்ணதாசன் நீதிபதியாக பராசக்தியில் சில காட்சிகள் விருப்பத்துடன் ஏற்று நடித்தாராம். இறுதிவரை நடிகர் திலகத்துக்கு உறுதுணையாய் இருந்த சிவாஜி நாடக மன்ற இயக்குனர் எஸ். ஏ. கண்ணன் இறுதி நீதிமன்றக் காட்சிகளில் வக்கீலாக நடித்திருப்பார்.

14. 'பராசக்தி'யில் சிவாஜி நடிப்பதைப் பார்க்க அப்போதே பெரிய நடிக நடிகைகள் மற்றும் இதர கலைத்துறையினர் ஏ.வி.எம்.ஸ்டுடியோ வளாகத்திற்கு வந்து விடுவார்களாம். 'யார் இந்தப் புதுப் பையன்? போடு போடு என்று போடுகிறானே!' என்று சத்தமில்லாமல் தங்களுக்குள் பேசிக் கொள்வார்களாம்.

15. தனக்கு வாழ்வளித்த பெருமாள் முதலியார் அவர்களை தன் வாழ்நாள் முழுதும் நன்றி மறக்காமல் ஒவ்வொரு பொங்கலன்றும் முதலியாரின் சொந்த ஊரான வேலூருக்கு குடும்பத்துடன் சென்று, அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி, அவருக்கு மரியாதைகள் செய்து விட்டு வருவது நடிகர் திலகத்தின் வாழ்நாள் இறுதி வரை தொடர்ந்தது. இப்போதும் அவர் பிள்ளைகள் மூலம் தொடர்கிறது.

'பேசும்படம்' சினிமா இதழ் 'இம்மாத நட்சத்திரம்' என்ற தலைப்பில் 1952 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சிவாஜி அவர்களைப் பற்றி வெளியிட்ட பெருமைமிகு கட்டுரை. இக்கட்டுரை ஆவணத்தை நமக்குத் தந்த திரு.பம்மல் சுவாமிநாதன் அவர்களுக்கு நன்றி!

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/01_zps79b71244.jpg

vasudevan31355
17th October 2014, 11:45 AM
தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசையெல்லாம்


https://www.youtube.com/watch?v=eCVQAzG8_14&feature=player_detailpage

ஓ ரசிக்கும் சீமானே வா


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=3w4MAmf7Pog

புதுப் பெண்ணின் மனதைத் தொட்டுப் போறவரே


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=RsUzS5EM1EU

chinnakkannan
17th October 2014, 11:48 AM
ஹாய் வாசு சார்.. பூக்கடைபக்கம் படத்தில் பார்த்ததோடு சரி..படக்கதை கூட நினைவிலில்லை..

பாரதியின் இடையில் வரும் சின்ன ட்விஸ்ட் அழகாய் இருக்கிறது..ஸாரி டைப்போ பாட்டின் இடையில் வரும் சின்ன ட்விஸ்ட் நன்றாக இருக்கிறது.. தாங்க்ஸ்..ஐ திங்க் பாவாடை சட்டை தாவணி போட்டு ட்விஸ்ட் ஆடுவது இந்த ஒரு பாட்டு தான் என நினைக்கிறேன் (ஹையா வெடி போட்டாச்சு)

//எது எதிலே பொருந்துமோ
உருவம் பார்த்துப் பருவம் பார்த்துப் பழகும் காதல் ஒன்று

தொட்டுத் தொட்டுப் பார்த்தபின்பு ஆசைகொள்ளும் மனது
தொட்டபின்பு ஆசை விட்டு விட்டு விடும் சிறகு…// குமாரி பத்மினிக்கு பளபள ட்ரஸ் அவ்வளவாய்ப் பொருந்தவில்லை..கொஞ்சம் டைட்!

ஆனாக்க எனக்கு செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம் ரொம்ப்பப் பிடிக்குமே.. :)

vasudevan31355
17th October 2014, 01:01 PM
1988 ல் வெளியான 'அதுக்காகப் பிறந்தவள்' என்ற அபூர்வ படத்தின் அபூர்வ பாடல்.

'எந்த நேரம் தூக்கம் வராது'

வாணி ஜெயராம் பாடும் பாடல்.இப்படத்தைப் பற்றி நண்பர்களுக்கு ஏதாவது தெரிந்தால் பகிரவும். சின்னக் கண்ணனார் ஆதரவு இருக்கும் வரை நமக்கென்ன கவலை?:)


https://www.youtube.com/watch?v=v-tHnI-s0bI&feature=player_detailpage

madhu
17th October 2014, 01:15 PM
காலை வணக்கம் நண்பர்களே

மதுண்ணா என்ன தேனிசை தென்றலின் முத்துக்கள் பற்றி மூச்சு விடவில்லையே .. பாடல்கள் கேட்டீர்களா ??

ரெண்டு தடவை எழுதி போஸ்ட் செய்யும் முன்னாலே சர்ர்ரியா கரண்ட் கட். ரெண்டு வாட்டியும் காப்பாற்றி வைக்கவில்லை. மீண்டும் எழுதுகிறேன்.

Richardsof
17th October 2014, 02:37 PM
சொல்லடி அபிராமி .... ஆதிபராசக்தி
நான் போட்ட புள்ளி ..ஒரு மாற்றம் ... வீட்டுக்கு ஒரு பிள்ளை

இதோ எந்தன் தெய்வம் ..... பாபு

கடவுள் வாழ்த்து பாடும் .... நீரும் நெருப்பும் .

இந்த 4 பாடல்கள் 18.10.1971 தீபாவளி அன்று வெளிவந்த படங்களில் இடம் பெற்ற பிரபலமான பாடல்கள் . பாடகர் திலகத்தின் மாறுபட்ட குரலில் ஒலித்த இனிமையான பாடல்கள்
http://youtu.be/Edf2ESf603A

madhu
17th October 2014, 06:28 PM
அன்பளிப்பு படத்தில் எல்.ஆர்.ஈஸ்வரியின் பாட்டு..

வாசு ஜி... இந்தப் பாட்டைப் போன்ற டியூனில் வேறொரு பாட்டு இருக்குதா ?

http://youtu.be/t8dhgkAuFw0

chinnakkannan
17th October 2014, 11:23 PM
மிட் நைட் மசாலா

பகுதி மூன்று..

கண்களிலே கொஞ்சம் கவலை,பயம் எதிர்பார்ப்ப்பு... மேலே வானத்தில் மதி.. இரண்டாம் பிறையோ என்னவோ கொஞ்சம் வட்டம் கம்மியாய்ப் போனாலும் கீழே நிற்கும் அவளைப் பார்த்து ஹலோ சொல்லிவிட்டு பின் திருத்தி ஏய் புள்ள செளக்கியமா எனக் கேட்பது போல் பளீரெனச் சிரித்துக் கொண்டிருந்தது..
அவள்..ஸ்ரீ திவ்யா ..சினிமா ஷ்டார் கணக்காய்த் தான் அழகு.. கிராமத்து நங்கை.. வந்துவிட்டாள் அந்த ஊரின் கோடியில் இருக்கும் மாந்தோப்பில்.. மாமர நிழலில்..

காரணம் திவா.. அவளது முறைப்பையன்..முறைமாமன்.. அவளை சின்னவயதிலிருந்தே முறையாக முறை கொண்டாடிப் பாசம் வைத்திருப்பவன்..பக்கத்து டவுனில் தான்கல்லூரிப் படிப்புப் படித்தவன்.. இவளும் சும்மா இல்லை..ப்ளஸ்டூ முடித்தவள் தான்.. கர்ரெஸ் (கரெஸ்பாண்டன்ஸில்) இல் மதுரை காமராசர் யுனிவர்சிட்டியில் பிகாம் இரண்டாம் வருடம்..

சென்னையில் வேலை கிடைத்துப் போய்விட்டு எட்டுமாதம் கழித்து நேற்றுத்தான் ஊருக்குவந்தான்..

ஊருக்கு வந்தவன் திவ்யாவின் அம்மா அப்பாவிடம் ஆசி வாங்கவும் வந்தான்..”மாப்ள தீர்க்காயுசா இருங்க” எனச் சொல்லி திவ்வு மாடில்ல இருக்கு என அனுப்பியும் வைக்க மாடிக்கு வந்தவன் திவ்யமான அழகில் சொக்கியதென்னவோ நிஜம்..

ஸ்ரீக்குட்டி (அவன் அவளை அப்படித்தான் அழைப்பான்) இந்த இடைவெளியில் எப்படி ஆகிவிட்டாள்.. எட்டுமாதம் தான் இருக்கும்..உயர்ம் கூடினாற்போல இருக்கிறது..இளைத்திருமிருக்கிறாள்..போட்டுக்கொண்டிர ுந்த பாவாடை சட்டையில் அழகாய்த் தான் இருக்கிறாள்..இல்லை இல்லை இன்னும் அவள் முகம் பார்க்கவில்லையே..

காரணம் மொட்டை மாடியில் அந்த மாலைவேளையில் கொடியில் இருந்த துணிகளை எடுத்துக் கொண்டிருந்த ஸ்ரீ யின் கூந்தல் மற்றும் பின்னழகுதான் அவன் கண்ணில் பட்டது.. மெல்ல “ஸ்ரீ”

துணியெடுத்த அவள் காதிலும் அந்த்க் குரல்.. ம்க்கும்..மாமன் இங்க எங்க வரப்போகுது..எஸ்ஸெம்மெஸ் அனுப்பிச்சுருக்குமே.. வாஸ்ஸப்புலயும் வரலை..பிஸியோ என்னவோ.. ஆனாலும் ஸ்ரீ ஒனக்கு ரொம்பவும் தான் பிரமை..

மறுபடி “ஸ்ரீ” எனக் குரல் கொஞ்சம் சத்தமாக.. திரும்பினால்..அட மச்சான்…மாமா..

“என்னங்க” என்றாள் நாக்குழற.. அவளுக்கு உடல் உயிரெல்லாம் பதறியது..”இப்படியா ஷாக் குடுப்பாவ”

“ச்.. ஒரு சர்ப்ரைஸ் தான் ஸ்ரீ” எனக் கரம் பற்றினான் திவா.. என்ன நீ நாளுக்கு நாள் அழகாய்கிட்டு தான் இருக்க.. ஒரு நிமிஷம் இரு.. என முகம் நிமிர்த்தி,” தலை முடிக்கு ஷாம்ப்பூ போட்டிருக்க.. கொஞ்சம் பஃப்னு இருக்கு..கொஞ்சம் சுருளா நெத்தில விழறது ரொம்ப அழகா இருக்கு.. நெத்தில இருக்கற நெளிப்பொட்டு ஜோர்.. கண்ணில என்ன கருவளையம்.. உதடு ஏன் இப்படி ட்ரையா இருக்கு லிப் க்ளாஸ் போடறதில்லையா…” கொஞ்சம் தள்ளி நின்று “ஒடம்பும் இளச்சுப் போன மாதிரி இருக்கு புள்ள…சில ப்ளேஸஸ் தவிர!”

“மாம்மா” கையை உதறினாள்.. ” நீங்களும் தான் இளச்சுட்டீங்க..எத்தனை நாள் லீவு..ஒருவாரமா”

ஒரு வாரமா.. கெட்டது போ.. நான் இன்னும் ரெண்டு நாள்ல கெளம்பணுமாக்கும்..ஹேய் ஒண்ணு செய்யலாமா..இன்னிக்குப் பெளர்ணமி.. நாளைக்கும் நிலா இருக்கும்.. நம்ம மாந்தோப்புக்கு வர்றியா..சும்மா வீட்டுல சொல்லிட்டே கூட வா..

நா வரமாட்டேம்ப்பா.. அதுவும் சொல்லிக்கிட்டா.. அம்மா வையும்..

முறை மாமன் தானே புள்ள.. அங்கிட்டு வா.. நிறையப் பேசலாம் நிறைய விஷயமும் ஒனக்குக் கத்துத் தாரேன்..

“சரி” என அரை மனதாய்த் தான் வந்தாள் அவள்.. ஆனால் அடிவயிற்றில் கொஞ்சம் பயம்..

முறைமாமன் தான்..படிச்சவன் தான்..வான்னுகூப்பிட்டான்னு வந்தாச்சு.. ஆசையாத்தான் இருக்கு..இது வரைக்கும் எதுவும்கேட்டதில்லை..அப்பப்ப லைட்டா டச்சிங் டச்சிங்க்..கைமட்டும் பிடிச்சிருக்கான்.. ஒரே ஒரு தடவை எதையோ காட்டறதுக்காக தோளைத் தொட்டிருக்கான்.. சிலிர்ப்பாத் தான் இருந்துச்சு.. அதுக்கும் அப்படித்தான் இருந்திருக்கும்.. ஆனா ஒண்ணும் எக்ஸ்ட்ராவாக் கேட்டதிலலை. இப்ப என்னடான்னா இங்க வரச் சொல்லியிருக்கானே..செல்வி வீட்டுக்கு போய்ட்டு வரேன்னு சொல்லிட்டு ஸ்கூட்டிய எடுத்துட்டு அவவீட்டுல விட்டுட்டு ரகசியமா சொல்லிட்டு இங்க வந்தாச்சு. ஏதோ சொல்லித் தாரேன்னு சொன்னானே.. ஏடாகூடமா ஏதாச்சும் பண்ணிடுமோ..இங்கிட்டும் ஆள் நடமாட்டம் எதும் இல்லை.. காத்து வேற ஜில்லுனு வீசுது...ஆளை வேற காணும்..செல்ல போன் பண்ணிப் பார்க்கலாமா..

கைப்பையிலிருந்து செல்ஃபோன் எடுக்கையிலேயே தொலைவில் அவ்ளைப் பார்த்ததும் இன்னும்பதற்றம் கூடுகிறது அவளுக்கு..

அவன் வந்து இழுத்தணைத்து இடைதொட்டிழுத்து ஏதாவதுகேட்டால் என்ன செய்வேன் நான்.. ஸ்ரீயின் மனதில் எப்போதோ கேட்ட நாட்டுப் பாடல் ஒலித்தது..

கள்ளத்தை கண்களிலே காட்டி மச்சான்
..காணாத இடத்திற்கே கூப்பி டாதே
உள்ளதெலாம் உனக்கெனவே தானே மச்சான்
…உள்ளத்தை வாட்டாதே போப்போ நீயும்
வள்ளலெனத் தருவேனே ஆசை மச்சான்
…வாகாக வேளைவந்தால் உனக்குத் தானே
எள்ளிடுவார் யாரேனும் பார்த்தால் மச்சான்
..இன்னுமெனைத் தூண்டாதே சொல்வேன் கேட்பாய்..

ஸ்ரீயின் அருகில் திவா நெருங்கி விட்டிருந்தான்..

**
இதே மாதிரி சிச்சுவேஷன் தாங்க இந்தப் பாட்டிலும்.. ஹீரோ ஹீரோயினைத் தனியாக் கூப்பிட்டுட்டார் போல.. ஹீரோயினும் வந்துடறா.. பயம் மனசுல.. பாட்டும் பாடிடறாளாக்கும்
மெல்ல..மெல்ல மெல்ல எந்தன் மேனி நடுங்குது மெல்ல.. சொல்ல.. சொல்ல சொல்ல நெஞ்சம் துள்ளுது துள்ளுது சொல்ல...

மெல்ல.. மெல்ல மெல்ல எந்தன் மேனி நடுங்குது மெல்ல..
சொல்ல.. சொல்ல சொல்ல நெஞ்சம் துள்ளுது துள்ளுது சொல்ல...

உச்சி முதற்கொண்டு பாதம் வரை இன்று ஓடிடும் மின்னலை என்ன சொல்ல...
மிச்சம் இருப்பதை நாளை என்று...
மிச்சம் இருப்பதை நாளை என்று நெஞ்சில் மின்னிடும் ஆசையை என்ன சொல்ல..


அத்திப் பழத்துக்கு மேலழகு உந்தன் ஆசை பழத்துக்கு உள்ளழகு...

தத்தித் தவிக்கின்ற பொன்னழகு...
உன்னைத் தழுவ துடிக்கின்ற பெண்ணழகு..


தாமரை பூவினில் வண்டு வந்து தேனருந்த மலர் மூடிக்கொள்ள...
உள்ளிருந்தே வண்டு ஆடுதல் போல்...
உள்ளத்தில் நீ இன்று ஆடுகின்றாய்... ஆடுகின்றாய்... ஆடுகின்றாய்..


மேலை திசையினில் போயுறங்கும் கதிர் மீண்டும் வரும் வரை நம் உலகம்...
காலை பொழுதினில் சிந்தனைகள்.....
மறு மாலை வரும் வரை கற்பனைகள்..


ஒன்றிலிருந்தே ஒன்று வரும் அந்த ஒன்றுக்குள் ஒன்று உறங்கிவிடும்....
ஒன்றிலிருந்தே ஒன்று வரும் அந்த ஒன்றுக்குள் ஒன்று உறங்கிவிடும்....
ஒன்று பிரிந்தபின் ஒன்றுமில்லை...
நாம் ஒன்று இரண்டென்பதென்றுமில்லை...

மெல்ல.. மெல்ல மெல்ல எந்தன் மேனி நடுங்குது மெல்ல..
சொல்ல.. சொல்ல சொல்ல நெஞ்சம் துள்ளுது துள்ளுது சொல்ல...

**

படம் தான் தெரியுமே பணமா பாசமா..பாடியவர்கள் திரையில் ஜெமினி சர்ரோஜாதேவி.. பின்னால்.. டி.எம்.எஸ்.. பி.சுசீலா..

இதோ வீடியோ..

http://www.youtube.com/watch?v=uDk-a_Wfo98
**
அது சரி என்ன ஆச்சு திவாவுக்கும் ஸ்ரீக்கும்.

திவா நெருங்கி வர.. ஸ்ரீ “எவ்ளவு நேரமா காத்திருக்கேன் தெரியுமா”

திவா சிரித்து..வா..அப்படி உக்காந்துக்கலாம்..

“மாமா.. நீ வரச் சொன்னயேன்னு வந்தேன்..வீட்லயே பேசியிருக்கலாம்ல.. “

“ச் சும்மா பந்தா பண்ணாத புள்ள ஒக்காருங்கறேன்ல” அதே மாமரத்தின் கீழே அவன் உட்கார அவளும் உட்கார..

“சொல்லு மாமா..”

“ஏய் எப்படி இருக்க நீ..என்னை நினைக்கறியா..”

“யோவ் அதான் நிதைக்கும் குட்மார்னிக்க் மாமோய் வாஸ்ஸப்ல அனுப்பறேன்ல”

“ச் நானும் நினைக்கேன் தெரியுமா எப்போதும் உன்னை ஸ்ரீ.. கொஞ்சம் கிட்ட வாயேன்..”

“வேணாம்யா. ஏதோ ஜனவரில்ல நாள் குறிக்கலாம்னு அப்பா பேசிக்கிட்டிருந்தார்.. உங்கப்பா சொன்னாரா.” பக்கத்தில் நகர்ந்துகொண்டே கேட்டாள்..

“சொன்னாரு.. நான் சரின்னுட்டேன்… இந்தா உனக்காக புதுசு வாங்கிட்டு வந்தேன்..சார்ஜ் ஆகும்னு பார்த்தேன் ஆகலை..வீட்டுக்குப் போய் போட்டுரு…சார்ஜ் ஆகியிருந்தா இங்கயே சொல்லிக் கொடுத்திருப்பேன்..”

“என்னாது இது..”

“ஸாம்ஸங்க் நோட் 4 புள்ள..செல்ஃபோன்..இனிமே எனக்கு மெஸேஜோட ஒன்னோடா செல்ஃபியும் அனுப்பிச்சுடு..சரியா..”

“ஹையோ மாமா ஒன்னைத் தப்பா நினைச்சுட்டேனே” என மனதுள் நினைத்தவள் துள்ளி அவனுக்குகுட்டி முத்தா தர திவா முழித்தான்.. பின் அவர்கள் பேச்சும் தொடர்ந்தது.. லெட் தெம் டாக் த ஸ்வீட் நதிங்க்ஸ்.. நாம அவங்கள விட்டுறலாம்..என்னாங்கறீங்க..
*
பிடிச்சுருக்கா ராகவேந்தர் சார்..
அடுத்த பாட்டு டெடிகேடட் டூ மதுண்ணா.. நோ க்ளூஸ்..க்ளூ கொடுத்தா கண்டு பிடிச்சுருவார்….இருந்தாலும் ஒரு இல்லவே இல்லாத க்ளூகொடுக்கலாமா..(?!) her eyes wont tell any lies.!

( நா போய்ட்டு அப்புறம் வாரேன்)

rajraj
17th October 2014, 11:55 PM
ரெண்டு தடவை எழுதி போஸ்ட் செய்யும் முன்னாலே சர்ர்ரியா கரண்ட் கட். ரெண்டு வாட்டியும் காப்பாற்றி வைக்கவில்லை. மீண்டும் எழுதுகிறேன்.

Time to get an iPad and keep it fully charged? Or a battery backup? :)

madhu
18th October 2014, 04:23 AM
இதோ இன்னும் கொஞ்சம் பாட்டொன்று கேட்டேன் பாடல்கள்

நிலவே நீ வா - சுசீலா

http://youtu.be/1A-OiW_eb7A

நினைப்பது நடப்பதில்லை - சீர்காழி கோவிந்தராஜன், சுசீலா

http://youtu.be/Iw7Sh5Y5b-E

vasudevan31355
18th October 2014, 07:52 AM
மதுஜி!

'பாட்டொன்று கேட்டேன்' படமெல்லாம் ரொம்ப அபூர்வம். இதையெலாம் பார்க்கமுடியுமா என்று நினைத்திருந்தேன். படம் ரிலீஸான சமயம் இருந்த 'பொம்மை' இதழில் ராஜன் ஸ்டில் பார்த்திருக்கிறேன். பரவாயில்லை. நினைத்தது நடக்கிறது... கேட்டது கிடைக்கிறது இப்போது இணையத்தின் புண்ணியத்தால். அப்லோடருக்கும், தேடித் பிடித்த உங்களுக்கும் மிக்க நன்றி!

அதுமாதிரி 'கற்பூரம்' படத்தின் பாடல்கள். கிடைக்குமா? ரொம்ப நாளாக 'அழகு ரதம் பொறக்கும்' அது அசைஞ்சி அசைஞ்சி நடப்பதைப் பார்க்க ஆசை.

RAGHAVENDRA
18th October 2014, 08:35 AM
http://2.bp.blogspot.com/_z4f5Utuf6qM/TSP9pGNM_NI/AAAAAAAAAP8/1myHGpVPbXc/s320/SM%2BSubbaiah%2Bnaidu.jpg

தமிழகத்து ஒ.பி.நய்யார் என அன்புடன் நினைவு கூறப்படும் இசை மேதை எஸ்.எம்சுப்பய்யா நாயுடு அவர்களின் நூற்றாண்டைக் கொண்டாடும் விதமாக, சென்னை வின்டேஜ் ஹெரிடேஜ் அமைப்பு வரும் 26.10.2014 ஞாயிறு மாலை நடைபெறும் மாதாந்திர நிகழ்ச்சியில் அவருடைய பாடல்கள் இடம் பெறுகின்றன. இதில் இன்னொரு சிறப்பம்சமாக சினிமா கம்ப்யூட்டர் என்று நண்பர்களால் அழைக்கப்படும் திரு விஜயகுமார் அவர்கள் கௌரவிக்கப் படுகிறார். இரவு நடுநிசியில் எழுப்பிக் கேட்டாலும் எந்தப் பாடல் எந்தப் படம் எழுதியது யார் இசையமைத்தது யார் பாடியது யார் நடித்தவர் யார் என அனைத்து விவரங்களையும் விரல் நுனியில் வைத்து உடனே சொல்லக் கூடியவர் திரு விஜயகுமார்.

இந்நிகழ்ச்சியினைப் பற்றிய ஆங்கில விவரம் கீழே தரப்படுகிறது.

Vintage Heritage
(An association for the promotion of vintage film music/classics)
2/12, Dhanakoti Ammal Street, Kodambakkam, Chennai – 24.
Phone: 24728396/9444411091/ 9444047714

Celebrates veteran music composer “O.P. Nayyar of the South”
S M Subbaiah Naidu’s birth centenary
with video clips of the composer’s select melodies.
Also honours the composer’s most ardent fan and a connoisseur of vintage film music
‘Mini Computer’ B. Vijayakumar
on Sunday the 26th October 2014
- at 6.15 p.m. Vivekananda Hall, P S High School,
- No.215, R K Mutt Road, Mylapore, Chennai -600004.
- All are welcome! Spread word and attend in large numbers !

rajeshkrv
18th October 2014, 08:37 AM
காலை வணக்கங்கள் வாசு ஜி, மதுண்ணா மற்றும் அனைத்து நண்பர்களுக்கும்

தேனிசை தென்றலின் முத்துக்கள் -5

கவியரசரின் நினைவு நாள் இன்று(இங்கு இன்னும் தேதி 17 தான்) , ஆக அவரே பாடல் வரியின் பல்லவயில் வருகிறார்.
ஆம் 1991’ல் வெளியான் மரிக்கொழுந்து திரைப்படத்திற்கு தேவா இசையமைத்து வைரமுத்துவின் வரிகள்
பாலுவும் சித்ராவும் குரல் கொடுக்க திரையில் ரமேஷ் அர்விந்த் மற்றும் ஐஸ்வர்யா

அடிக்கடி வானொலியில் ஒலிபரப்பபட்ட பாடல் ...

இதோ கேட்டு கண்டு மகிழுங்கள்

http://www.youtube.com/watch?v=W-aMkTlWGKM

RAGHAVENDRA
18th October 2014, 08:38 AM
வாசு சார் நேற்றைய தினம் பராசக்தி தினமாக அனுசரித்து விட்டீர்கள். பாராட்டுக்கள். 62 ஆண்டுகள் கடந்த பின்னும் பசுமையான நினைவுகளோடு நெஞ்சில் நிழலாடுகிறது.

Richardsof
18th October 2014, 08:51 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/1cde39b4-e3cb-40d0-8f64-d06e259b8fdb_zps34dfa13c.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/1cde39b4-e3cb-40d0-8f64-d06e259b8fdb_zps34dfa13c.jpg.html)

chinnakkannan
18th October 2014, 09:09 AM
ஹாய் குட்மார்னிங் ஆல்..

6000 போஸ்ட்ஸ் கடந்த ராகவேந்தர் சாருக்கு வாழ்த்துக்கள்..

ராஜேஷ்..கண்ணதாசனே கண்ணதாசனே வந்து விடு நல்ல பாடல்.. யூ நோ..ஐஸ்வர்யா முதல் படத்திலோ இரண்டாவது படத்திலோ பார்க்க கொஞ்சம் மிக அழகாக இருப்பார்..அப்புறம் திசை மாறி காதல்கல்யாணம் டைவர்ஸ் என.. சமீபத்தில் ஒய்.ஜி.மகேந்திராவின் ஒரு ரயில்வே ஓய்வறையில் நடக்கின்ற நாடகத்தில் நன்றாக நடித்திருந்தார் என எழுதியிருந்தார்கள்.. நன்றி..

பராசக்தி தகவல்களுக்கு நன்றி வாசு சார்..

அந்த அதுக்காகப் பிறந்தவள் பாட்டுப் போட்டால் வீட்டில் “என்ன காலங்கார்த்தாலே இப்படி பாட்டு எனத் திட்டு வர நிறுத்திவிட்டேன்! இதுவரை கேட்டதில்லை!

rajraj
18th October 2014, 09:15 AM
அந்த அதுக்காகப் பிறந்தவள் பாட்டுப் போட்டால் வீட்டில் “என்ன காலங்கார்த்தாலே இப்படி பாட்டு எனத் திட்டு வர நிறுத்திவிட்டேன்! இதுவரை கேட்டதில்லை!

adhaane ! kaalaiyil 'achutham keshavam' podaNum ! :)

I will post it in Sanskrit compositions thread later ! :lol:

chinnakkannan
18th October 2014, 09:40 AM
கொஞ்சம் எனக்குப் பிடித்த பாடல்..வீடியோ தேடினேன்.. கிடைக்கவில்லை.. ஏற்கெனவே போட்டாகி விட்டதா எனத் தெரியவில்லை.

படம் அவள் தந்த உறவு.. எம்.எஸ்.வி எஸ்.பி.பி..

*
நினைத்துப் பார்க்கிறேன் என் நெஞ்சம் இனிக்கின்றது
சிரித்துப் பார்க்கிறேன் என் ஜீவன் துடிக்கின்றது

Remember my sweetheart!
Oh oh remember! Oh my darling! Remember!

நடன சாலைகளில் மலையின் சோலைகளில்
நதியின் ஓரங்களில் இடங்கள் இருக்கின்றன

கடந்த காலங்களில் நடந்த உள்ளங்களில்
விழுந்த எண்ணங்களின் தடங்கள் இருக்கின்றன (ஹெளட்ரூ)

Oh oh remember! Oh my darling! Remember!

இரவு மேடைகளில் மழையின் சாரல்களில்
உறவு கோலம் இடு உலகம் அழைக்கின்றது

வசந்த புஷ்பங்களில் அசைந்த சந்தங்களில்
பிறந்த சொந்தங்கள்தான் கனவை வளர்க்கின்றது

Oh oh remember! Oh my darling! Remember!

நினைத்துப் பார்க்கிறேன் என் நெஞ்சம் இனிக்கின்றது
சிரித்துப் பார்க்கிறேன் என் ஜீவன் துடிக்கின்றது

Oh oh remember! Oh my darling! Remember!

rajeshkrv
18th October 2014, 09:52 AM
வாசு ஜி
நெடு நாட்கள் ஆயிற்று உங்களுக்கு வேறு மொழிப்பாடல்களை கொடுத்து

இதோ இன்று தந்து விடுகிறேன்


முதலில் வழக்கம் போல கன்னட பாடல்
கன்னட அண்ணன் ஒரு கோவில் . ஆம் அதே படம் அதே சூழல் அதே குரல். இசை எம்.ரங்காராவ்

இசையரசி கலக்கும் பாடல்

https://www.youtube.com/watch?v=1LXichRJweE


மலையாளம்: அதே வயலார்- தேவராஜன் - இசையரசி கூட்டணி
நம்ம ஷீலா சேச்சிக்கு .. மிகவும் அற்புத பாடல்
பல இசை போட்டி நிகழ்ச்சிகளில் பெண்கள் பாடும் பாடல்

ஷ்ராவன சந்திரிக பூ சூடிச்சு

https://www.youtube.com/watch?v=avMD1E-L3vw

ஷீலாவே நம் இசையரசி பற்றி சொல்லியது இதோ

https://www.youtube.com/watch?v=S7c6aAsiPkQ

மலையாள நடிகர் சித்திக் இந்த பாடல் பற்றியும் இசையரசி பற்றியும் கூறியது இதோ

http://dc406.4shared.com/img/ozjg-3B6ce/144d75ab938/siddique.wmv (http://www.4shared.com/video/ozjg-3B6ce/siddique.html)

vasudevan31355
18th October 2014, 09:52 AM
ராகவேந்திரன் சார்.

http://thumbnails105.imagebam.com/26605/5ee64b266040797.jpg

முத்தான உங்கள் 6000 பதிவுகளுக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

http://www.bitrixsoft.com/upload/iblock/d06/6000cup_300x316.jpg

மேலும் மேலும் இது....


http://www.youtube.com/watch?v=du5ouJwX2Y0&feature=player_detailpage

vasudevan31355
18th October 2014, 10:00 AM
'நினைத்துப் பார்க்கிறேன்'

ஏற்கனவே போட்டுட்டாலும் பாடல் வரிகள் தந்ததற்கு நன்றி சின்னக் கண்ணன் சார். அது என்ன கொஞ்சம் பிடித்த பாடல் என்று சுளுவாகச் சொல்லி விட்டீர்கள். பாலா உயிரைக் கொடுத்துப் பாடிய பாடல் அது. சும்மா கலக்கி விடுவார் கலக்கி. நிறையவே பிடிக்கும். வீடியோ இல்லைதான்.


http://www.youtube.com/watch?v=9ZEYMVX0BTQ&feature=player_detailpage

vasudevan31355
18th October 2014, 10:05 AM
அருமையான பாடல் ராஜேஷ் சார். அம்பரீஷ் மோகன்பாபு ரோலா? நடிகை யார்? ஷீலா, சித்திக் பேட்டியும் தூள். (இசையரசி மேல் உள்ள பற்றில் பாடலை இரண்டு தடவை பதித்து விட்டீர்களே!)

rajeshkrv
18th October 2014, 10:08 AM
அருமையான பாடல் ராஜேஷ் சார். அம்பரீஷ் மோகன்பாபு ரோலா? நடிகை யார்? ஷீலா, சித்திக் பேட்டியும் தூள். (இசையரசி மேல் உள்ள பற்றில் பாடலை இரண்டு தடவை பதித்து விட்டீர்களே!)

வாசு ஜி காப்பி பேஸ்ட் மிஸ்டேக் அப்பொழுதே சரி செய்து மலையாள பாடலை பதித்து விட்டேன் ..

rajeshkrv
18th October 2014, 10:12 AM
ஆம் அம்பரீஷ் மோகன் பாபு ரோல், அந்த நாயகி பெயர் ஜெயலெக்*ஷ்மி . நிறைய நடிக்க வில்லை என நினைக்கிறேன்

vasudevan31355
18th October 2014, 10:17 AM
இன்றைய ஸ்பெஷல் (97)

http://www.inbaminge.com/t/s/Sangamam%20OLD/folder.jpg

சித்ரா பிலிம்ஸ் பிலிம்லேண்ட்ஸ் அளிக்கும் 'சியாரா பிலிம்ஸ்' (அடேங்கப்பா!) 'சங்கமம்' திரைப்படத்திலிருந்து ஒரு வித்தியாசமான பாடல். ஜெமினி, விஜயா, 'வெண்ணிற ஆடை' நிர்மலா, கீதாஞ்சலி, வீரப்பா, நாகேஷ், கே.டி.சந்தானம் முதலியோர் நடித்த வண்ணப் படம் இது. ரவீந்தர் வசனம் எழுத, கண்ணதாசன் பாடல்கள் எழுத, மெல்லிசை மன்னர்களின் ஒரு மன்னர் டி.கே.ராமமூர்த்தி இசையில், பாடல்களில் பின்னி எடுத்த படம் இது. இயக்கம் தாதாமிராசி. இந்தப் படத்தின் இன்னொரு அம்சம் ஒளிப்பதிவு. கே.எஸ்.பிரசாத் காமரா 'பளிச்'. அருமையான வண்ணம். எல்லாம் இருந்தும் சொதப்பல் கதையால் படம் தோல்வியுற்றது. ஜெமினிக்கு இரட்டை வேடம் வேறு. ஆள் 'சிக்' கென்று இருப்பார்.

http://i.ytimg.com/vi/CTN2EMvZE60/maxresdefault.jpg

பாடல்கள் காலாகாலத்துக்கும் அழியாப் புகழ் பெற்றவை.

'ஒரு பாட்டுக்குப் பல ராகம்'

'கண்ணனிடம் கேட்டிருந்தேன்'

'வண்ண பூப்போட்ட சேலை கட்டி'

'தன்னந்தனியாக நீ வந்த போது'

ஜல்சா...பார்த்தால் பார்க்கலாம்'

என்று மனம் மயக்கும் பாடல்கள்.

இன்று பார்க்கப் போகும் பாடல் ஒரு tribal டைப் பாடல். மிக வித்தியாசமாக, மிக அழகாக எடுக்கப்பட்ட பாடல். மலைஜாதிப் பெண் போல 'வெண்ணிற ஆடை' நிரமலா ஓடி வர, அவர் பின்னால் மலை ஜாதிப் பெண்களின் கோஷ்டி ஓடிவர, இயற்கை அழகு கொஞ்சும் மலைகளிலும், அருவிகளிலும் படமாக்கப்பட்ட எழில் பாடல். நிர்மலா இயற்கையாகவே அழகு. வண்ணத்தில் மின்னுகிறார். நிர்மலா அணிந்திருக்கும் சேலை பெரிய பூக்களுடன் அழகோ அழகு!

ஜெமினி யூத் போல் ரெட் கோட், எம்.ஜி.ஆர் குல்லா, கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டு கலக்குகிறார். உடன் ஆடும் துணை நடன நடிகைகளில் ஆலம், ராஜேஸ்வரி தென் படுகின்றனர்.

இந்தப் பாடலில் வரும் குறும்பு ஒன்று என்னை மிக ரசிக்க வைத்தது. பாடலின் இறுதி சரணத்தில் அருவியில் நின்று கொண்டு ஜெமனி, நிர்மலா, துணை நடிகைகள் பாடிக் கொண்டிருப்பார்கள். அப்போது நிர்மலா

'கையிரண்டில் பாலெடுத்து
கட்டிலறை செல்லுமுன்னே
காதலர்கள் பேசிக்கொள்ள
என்ன வேணும்?'

என்று கேள்விக்கணை போட, அதற்கு ஜெமினி கூலாக, ஸ்டைலாக அருகில் உள்ள துணை நடன நடிகைகளைப் பார்த்தபடி,

'இவர்கள் செல்ல வேணும்'

என்று பதில் தந்து அடிப்பாரே ஒரு நக்கல். செம கிண்டல். (அவர்கள் அருகிலேயே இருந்து தொல்லை கொடுக்கிறார்களாம்... அதனால் அவர்கள் போக வேண்டுமாம்... அப்போதே இப்படி ஒரு கிண்டலான நகைச்சுவை) இயக்குனரின் நகைச்சுவை உணர்வு மெச்சத் தகுந்தது.

'வெண்ணிற ஆடை' நிர்மலாவுக்கு சரளா பின்னணி கொடுத்திருப்பார். அம்சமான அள்ளிக் கொண்டு போகும் குரல். குரலில் செம கிக். தெளிவான மயக்கும் குரல். ஜெமினிக்கு குரல் கொடுத்திருப்பது திருவையாறு ரமணியா? நண்பர்கள் விளக்கவும். அப்படியே ஏ.எல்.ராகவன் குரல் போல் உள்ளது. மதுஜி! ப்ளீஸ்!

மிக இனிமையான, அழகான மலைஜாதி நடனப் பாடல். பாடலின் இடையில் விதவிதமாக ஒலிக்கும் கோரஸ் மறக்க முடியாதது. அதே போல புல்லாங்குழல் இசையும். நடனமும் நிரம்ப அழகு.

இனி பாடலின் வரிகள்

(கோரஸ்)

தந்தன தய்யன தந்தன தய்யன தந்தன தய்யானா
தய்யன தந்தன தய்யன தந்தன தய்யன தந்தானா
தந்தன தய்யன தந்தன தய்யன தந்தன தய்யானா
தய்யன தந்தன தய்யன தந்தன தய்யன தந்தானா

வண்ண பூப்போட்ட சேலை கட்டி
புதுப்பொண்ணு பக்கம் வந்தா
மாப்பிள்ளை கண்ணுக்குள்ளே என்ன வரும்

அம்மா மயக்கம் வரும்

வண்ண பூப்போட்ட சேலை கட்டி
புதுப்பொண்ணு பக்கம் வந்தா
மாப்பிள்ளை கண்ணுக்குள்ளே என்ன வரும்

அம்மா மயக்கம் வரும்

(கோரஸ்)

தள்ளாடும் கால்கள் ரெண்டில்
தண்டைகள் ஜல் ஜல் என்றே
தள்ளாடும் கால்கள் ரெண்டில்
தண்டைகள் ஜல் ஜல் என்றே
சங்கீதம் பாடும் போது என்ன வரும்

அன்பே சரசம் வரும்

வண்ண பூப்போட்ட சேலை கட்டி
புதுப்பொண்ணு பக்கம் வந்தா
மாப்பிள்ளை கண்ணுக்குள்ளே என்ன வரும்

அம்மா மயக்கம் வரும்

ஓ......ஹோய்.

முத்துக்களைக் கட்டினால் மாலை வரும்
கட்டும் வேளை வரும்
கோவிலைக் கட்டினால் ஓசை வரும்
கட்டும் நேரம் வரும்

(கோரஸ்)

முன்வட்டத் தங்கச் சங்கு
கண் பட்டு மின்னும் போது
முன்வட்டத் தங்கச் சங்கு
கண் பட்டு மின்னும் போது
மூடிக் கொண்டோடச் சொல்லும்
நாணம் வரும்

குணம் நாலும் வரும்

வண்ண பூப்போட்ட சேலை கட்டி
புதுப்பொண்ணு பக்கம் வந்தா
மாப்பிள்ளை கண்ணுக்குள்ளே என்ன வரும்

அம்மா மயக்கம் வரும்

ஓ......ஹோய்.

சந்திக்கும் கண்களில் என்ன வேணும்
ஒரு சொந்தம் வேணும்

ஓஹோ

சாமத்தில் பெண்ணுக்கு என்ன வேணும்
ஒரு மன்னன் வேணும்

ம்ஹூம்

கையிரண்டில் பாலெடுத்து
கட்டிலறை செல்லுமுன்னே
கையிரண்டில் பாலெடுத்து
கட்டிலறை செல்லுமுன்னே
காதலர்கள் பேசிக்கொள்ள
என்ன வேணும்

இவர்கள் செல்ல வேணும்.

தன்ன தானானா தானனன்னா.......


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=o9FwMEsXwjM

rajeshkrv
18th October 2014, 10:27 AM
சங்கமம் ராமமூர்த்தி கலக்கிய படம்
எல்லா பாட்டும் சூப்பார் , தன்னந்தனியாக, ஒரு பாட்டுக்கு பல ராகம் ஆஹா
அருமை வாசு ஜி.. அடி தூள்

vasudevan31355
18th October 2014, 10:45 AM
சங்கமம் ராமமூர்த்தி கலக்கிய படம்
எல்லா பாட்டும் சூப்பார் , தன்னந்தனியாக, ஒரு பாட்டுக்கு பல ராகம் ஆஹா
அருமை வாசு ஜி.. அடி தூள்

நன்றி ராஜேஷ்ஜி.

// ஒரு பாட்டுக்கு பல ராகம் ஆஹா//

அடடா! ராட்சஸியின் அந்த அஅ..... ஆஆ.... ஹம்மிங். சான்ஸே இல்லைஜி. டி.எம்.எஸ்ஸும் எடுப்பார் பாருங்கள் ஒரு ஹைபிச். 'லல்லல்லா லலலலா' முடித்து விட்டு 'ஆஹாஹா ஹாஹாஹா ஹாஹாஹா' கொடுப்பார் பாருங்கள். ஜென்மம் சாபல்யமடையலாம் ஜி.

சுசீலா அம்மாவின் 'கண்ணனிடம் கேட்டிருந்தேன்' மட்டும் என்னவாம்? சூப்பர். (இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் 'பிராயச் சித்தம்' படத்தில் சுசீலாம்மா பாடும் 'சாமி செஞ்ச பொம்மைகள் போலே'.... 'மயங்குகிறாள் இந்த மதுரை மீனாட்சி' பாடல்களும் எனக்கு உடனே ஞாபகம் வரும் ராஜேஷ்ஜி. அது ஏன்னு தெரியல.:)

vasudevan31355
18th October 2014, 10:49 AM
தன்னந்தனியாகவே 'தன்னந்தனியாக' வை கலக்கியிருப்பார் ராமமூர்த்தி.


http://www.youtube.com/watch?v=8Ltkq5_iCMI&feature=player_detailpage

rajeshkrv
18th October 2014, 10:53 AM
வாசி ஜி
ஒரு அறிய புகைப்படம்

https://scontent-b-lga.xx.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/10433691_919669391396174_2448052636986719904_n.jpg ?oh=9313de9de7905737a7163785b83a7d00&oe=54F36B55

vasudevan31355
18th October 2014, 10:58 AM
ராஜேஷ்ஜி!

'கண்ணதாசனே கண்ணதாசனே' பாடல் தேவாவின் சூப்பர் ஹிட் பாடல். எல்லோருக்கும் பிடித்தமான படலை அளித்ததற்கு நன்றி!

http://website.jeevan4u.com/uploaded_images/PrakashRaj-Trisha-Aishwarya-Photos-742459.jpg

இந்தப் படத்தில் ஐஸ்வர்யா கருப்பு நிறம் கொண்ட பெண்ணாக நடித்திருப்பார்தானே!

எனக்குப் பிடித்த காமரா கூச்சம் இல்லாத நடிகை. அருமையாக நடிக்கக் கூடியவர் அவர் அம்மா மாதிரியே. ஏனோ சோபிக்காமல் போனார். ஆனால் பிரகாஷ்ராஜ் படமான 'அபியும் நானும்' படத்தில் த்ரிஷா அம்மாவாக இவர் நடிப்பு கொடி கட்டிப் பறந்தது. ஆனால் யாரும் கண்டு கொள்ளவில்லை. பிரகாஷ்ராஜ் திரிஷாவுக்கு செல்லம் கொடுத்து ஏதாவது பெண்ணுக்கு ஆகிவிடுமோ என்று பயந்தபடியே இருக்க, அதற்கு ஐஸ்வர்யா கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் அவரை சமாளித்து கலாய்க்கும் அழகு ஏ.ஒன். நீங்க பார்த்தீர்களா ஜி?

vasudevan31355
18th October 2014, 10:59 AM
வாசி ஜி
ஒரு அரிய புகைப்படம்

https://scontent-b-lga.xx.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/10433691_919669391396174_2448052636986719904_n.jpg ?oh=9313de9de7905737a7163785b83a7d00&oe=54F36B55

super

vasudevan31355
18th October 2014, 11:10 AM
ராஜேஷ்ஜி!

பதிலுக்கு நான் ஒரு புகைப்படம் அளிக்கிறேன். என்னிடம் இருந்த இந்த அரிய புகைப்படத்தை உங்களுக்காகவே இப்போது ஸ்கேன் செய்தேன். இதில் நமக்குப் பிடித்தமான நடிகர் திலகமும், இசையரசியும் இருப்பதைக் கவனியுங்கள். ஓ.கே.வா?

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/4edf2e8b-6eb4-4d52-a251-c446838e7a36.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/4edf2e8b-6eb4-4d52-a251-c446838e7a36.jpg.html)

chinnakkannan
18th October 2014, 11:18 AM
மேலும் மேலும் இது வளரட்டும் வேண்டும் வேண்டும் எனத் தொடரட்டும்..முத்து ராமன் பாரதி.. நான்பார்க்காத கேட்டிராத ஒன்று.. பாட்டுக்கு முன்னால் வரும் ஜொள்ளும் பிடித்திருக்கிறது..தாங்க்ஸ் வாசுசார்..மேலும் மேலும் என முத்துராமன் இழுக்கும் போது பாரதி ஏன் எக்ஸர்ஸைஸ் பண்ணுகிறார்? ம்ஹூம் எல்லாம் தெய்வச் செயல் (ஆமா படம் எப்படி இருக்கும்) (அப்புறம் எங்கிட்டிருந்து இப்படி ப் பாட்டெல்லாம் பிடிக்கிறீர்கள்?!)

நினைத்துப் பார்க்கிறேன் பாட்டுக்கு நன்றி..எனக்கு கொஞ்சம் ரொம்ப ப் பிடிக்கும் என எழுத நினைத்து ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிடாத பசியினால் ரொம்பவை விழுங்கிவிட்டேன்..!

ஷ்ராவண சந்திரிக பூசூடிச்சுன்னா காலையில் அல்லி பூ முடித்ததா ராஜேஷ்.. மலை, கன் பாடல்க்ளுக்கு அப்ப்டியே ஒங்க்ளுக்குத்தெரிந்த ஒன்லைன் மீனிங்க் கொடுங்களேன். முடிந்தால்,, ஹிந்திப் பாட்டுக்கு வேண்டுமானல் நான்கொடுக்கிறேன் (சரியாக இருக்குமா இருக்காதா என்பது வேறுவிஷயம்!)..பூனம்கி ராத்.. ராத்திரிப் பூனை போல..!

ம்ம் ஒரு நண்பருக்கு பி.எம். போட்டால் மெய்ல் பாக்ஸ் எல்லாம் ரொம்பி வழிகிறதுஎனத்தகவல் வருகிறது..ஆமாம் மெய்ல் பாக்ஸ் கெபாசிட்டி எவ்வளவு.. அடிக்கடி டெலீட் செய்து வைத்துக் கொண்டால் தொடரிபு கொள்ள வசதியாக இருக்குமே..

vasudevan31355
18th October 2014, 11:24 AM
எம்.ஜி.ஆர். அவர்கள் நடித்த 'நம்நாடு' தெலுங்கில் 'கதாநாயகுடு' ஆனது. என்.டி ஆர் ஹீரோ. ஜெயலலிதா நாயகி.
'தமிழில் ஆடை முழுதும் நனைய நனைய மழை அடிக்குதடி' என்ற அருமையான சுசீலாம்மாவின் பாடல் இப்போது தெலுங்கில்.

'முத்யால ஜல்லு குரிசே'


http://www.youtube.com/watch?v=eii6I4KXMzs&feature=player_detailpage

vasudevan31355
18th October 2014, 11:28 AM
(ஆமா படம் எப்படி இருக்கும்)

வண்டலூர் மிருகக் காட்சி சாலைக்குப் போனா மாதிரி இருக்கும் சி.க.சார். :)

gkrishna
18th October 2014, 12:41 PM
சூப்பர் வாசு /சி கே / ராஜேஷ் /குருஜி ராகவேந்தர் /மது அண்ணா

சென்னையில் ஒரு மழை நாள் நேற்று இன்றும் தொடர்கிறது.
இங்கு பதிவுகள் மழையாக பொழிகிறது . சில சொந்த அலுவல்களினால் வெளியே .இன்று உள்ளே இன்றைய ஸ்பெஷல் 3 பாடல்கள் மிஸ் பண்ணி இருக்கிறேன். அதே போல் ராஜேஷ் ஜி யின் பிற மொழி பாடல்கள் ,சி கே எழுத்து நடை இதை எல்லாம் கொஞ்சம் மெதுவாக படிக்க வேண்டும். சங்கமம் 1969-70 களில் கலக்கிய ஈஸ்ட்மேன் கலர் .பயங்கர குளிர்ச்சியாக இருக்கும் . கே ஆர் விஜயா வைட் கலர் நைலக்ஸ் சேலை நடுவில் பூ போட்டு இருக்கும் . தாதா மிராசி இதற்கு பிறகு மூன்று தெய்வங்கள் தானா வாசு சார் ?
வேறு எதுவும் எடுத்தாரா ?

gkrishna
18th October 2014, 12:43 PM
தெய்வ செயல் தானே ஹிந்தி ஹாத்தி மேரே சாத்தி பின் நல்லநேரம்
வாசு ?

vasudevan31355
18th October 2014, 12:51 PM
வணக்கம் கிருஷ்ணா சார். இந்த மழை போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?

எல்லாம் 'தேவர் செயல்'. முருகா ! முருகா!

gkrishna
18th October 2014, 12:52 PM
6000 பதிவுகள் கடந்த குருஜி ராகவேந்தர் அவர்களுக்கு,

வாழ்த்த வயது இல்லை. வணங்குகிறேன்

vasudevan31355
18th October 2014, 12:52 PM
[QUOTE=gkrishna;1173196 கே ஆர் விஜயா வைட் கலர் நைலக்ஸ் சேலை நடுவில் பூ போட்டு இருக்கும் .[/QUOTE]

தீபாவளி நேரம் இந்த வம்புதானே வேணாம்கிறது கிருஷ்ணா. பர்ஸ் வேற காலி.:)

vasudevan31355
18th October 2014, 12:56 PM
குருஜி ராகவேந்தர் அவர்களுக்கு வாழ்த்த வயது இல்லை

கிருஷ்ணா! ராகவேந்திரன் சார் நம்மை விட வயதில் மூத்தவராயிற்றே. அவருக்கு நம்மை வாழ்த்தும் வயது உண்டே! :)

(பிரித்துப் போட்டு தாக்கு. மழை ஆச்சா! கிருஷ்ணாவிடம் வம்பு வளர்க்கணும் போல தோணுச்சு)

gkrishna
18th October 2014, 12:56 PM
இப்ப செம மழை இங்கே வாசு சார் .

'பூ போட்ட தாவணி ' வாங்கிட வேண்டியது தானே வாசு சார்

http://www.youtube.com/watch?v=jY8sMkNIIOs

மாதவி கமல் கலக்கல்

gkrishna
18th October 2014, 12:58 PM
கிருஷ்ணா! ராகவேந்திரன் சார் நம்மை விட வயதில் மூத்தவராயிற்றே. அவருக்கு நம்மை வாழ்த்தும் வயது உண்டே! :)

(பிரித்துப் போட்டு தாக்கு. மழை ஆச்சா! கிருஷ்ணாவிடம் வம்பு வளர்க்கணும் போல தோணுச்சு)

தமிழ் பெருமை பார்த்தீர்களா வாசு

ஒரு கமா விட்டேன் அவ்வளுவ்தான் அர்த்தமே மாறுது

'தமிழுக்கும் அமுதென்று பேர் '

gkrishna
18th October 2014, 01:00 PM
போன வாரம் நீங்கள் 6000 எல்லாம் ஒரிஜினல் பதிவு , இந்த வாரம் ராகவேந்தர் 6000 எல்லாம் ஒரிஜினல் பதிவு :)

vasudevan31355
18th October 2014, 01:24 PM
போன வாரம் நீங்கள் 6000 எல்லாம் ஒரிஜினல் பதிவு , இந்த வாரம் ராகவேந்தர் 6000 எல்லாம் ஒரிஜினல் பதிவு :)

இந்த போக்ரானுக்கு என்ன அர்த்தம்?:)

gkrishna
18th October 2014, 01:38 PM
மன்னிக்கணும் வாசு ஒரு சின்ன வேலையாக வெளியே . இப்ப உள்ளே

Gopal.s
18th October 2014, 02:43 PM
இந்த போக்ரானுக்கு என்ன அர்த்தம்?:)

தேக்கு மர தேகமோன்னோ?எவ்வளோ அடிச்சாலும் தாங்கறது.

gkrishna
18th October 2014, 03:31 PM
'அம்மா' அவர்கள் நடித்த ஒரு நேரடி ஹிந்தி திரை படம் இயக்கம் T பிரகாஷ் ராவ்

IZZAT


http://4.bp.blogspot.com/-gpKY2vcnFIw/Ts2y-XDRDVI/AAAAAAAABzM/qe5LLR9B8kY/s1600/jayalalitha-1st-hindi-movie-izzat-photo-still-unseen-3.jpghttps://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcSUqyF2ftAjPeuSA59FV69DQBj1QpLMf mcOYU5Y9e_Ed4TLx10Ohttp://memsaabstory.files.wordpress.com/2008/12/izzat_rukjaa.jpg?w=446&h=340

http://www.youtube.com/watch?v=grF7nFvTicM

gkrishna
18th October 2014, 03:31 PM
திரி ரொம்ப படுத்துகிறது

gkrishna
18th October 2014, 03:51 PM
வேட்டைக்காரன் 1964 மக்கள் திலகம் நடித்த மாபெரும் வெற்றி சித்ரம் .
அருமையான பாடல்கள் திரை இசை திலகம் கே வி மகாதேவன் இசை அமைத்து வெளி வந்த தேவர் பில்ம்ஸ் .கண்ணதாசன் எழுதிய மிக சிறந்த பாடல் .மக்கள் திலகத்தின் சுறுசுறுப்பு சும்மா ரப்பர் பந்து மாதிரி துள்ளுவார்.

உன்னை அறிந்தால்...
நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்
(உன்னை)

மானம் பெரியது என்று வாழும் மனிதர்களை
மான் என்று சொல்வதில்லையா
தன்னை தானும் அறிந்து கொண்டு
ஊருக்கும் சொல்பவர்கள் தலைவர்கள் ஆவதில்லையா
(உன்னை)

பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும்
சாமிக்கு நிகர் இல்லையா
பிறர் தேவை அறிந்து கொண்டுவாரிக்கொடுப்பவர்கள்
தெய்வத்தின் பிள்ளை இல்லையா(உன்னை)

மாபெரும் சபையினில் நீ நடந்தால் -
உனக்கு மாலைகள் விழவேண்டும் -
ஒரு மாசு குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழ வேண்டும்


உன்னை அறிந்தால்...

இதே போன்று சமீபத்தில் வேட்டைக்காரன் (அதே பெயர்) அப்படின்னு ஒரு படம்
நம்ம விஜய் நடித்து வெளி வந்த படம். ஷங்கர் மகாதேவன் பாடி விஜய் அந்தோனி இசை அமைத்த படம் .பாடல் எழுதியது கபிலன் என்று நினைக்கிறேன் .
பாடல் வரிகள் ஒவ்வொன்றும் நச்சு நச்சு என்று இருக்கும் .நச்சு என்றால் தமிழில் விஷம்

நான் அடிச்சா தாங்க மாட்ட
நாலு மாசம் தூங்க மாட்ட
மோதி பாரு வீடு போய் சேர மாட்ட

நான் அடிச்சா தாங்க மாட்ட
நாலு மாசம் தூங்க மாட்ட
மோதி பாரு வீடு போய் சேர மாட்ட

நான் புடிச்சா உடும்பு புடி
நான் சிரிச்சா வாய்ல வெடி
நான் பாடும் பாட்டுக்கு தோள்பறை நீ எடு

நான் அடிச்சா தாங்க மாட்ட
நாலு மாசம் தூங்க மாட்ட
மோதி பாரு வீடு போய் சேர மாட்ட

ஏ வாழு வாழு வாழ விடு
வாழும் போது வானை எடு
வம்பு பண்ணா வாலை எடு
வணங்கி நின்னா தோள தொடு

ஏ வாழு வாழு வாழ விடு
வாழும் போது வானை எடு
வம்பு பண்ணா வாலை எடு
வணங்கி நின்னா தோள தொடு

நான் அடிச்சா தாங்க மாட்ட
நாலு மாசம் தூங்க மாட்ட
மோதி பாரு வீடு போய் சேர மாட்ட

ஏ மை ராசா
வா நீ க்லோஸா
ஆடு என் கூட வில்லேஜ் சல்ஸா
சல்ஸா சல்ஸா ச ச ச ச
ஜல்ஸா ஜல்ஸா ஜ ஜ ஜ ஜ ஜ

உணவு உடை இருப்பிடம் உழவனுக்குல் கிடைக்கணும்
அவன் அனுபவிச்ச மிச்சம்தான் ஆண்டவனுக்கு படைக்கணும்
ஆலமர பள்ளிக்கூடம் ஆக்ஸ்வர்ட்டா மாறணும்
நீ தாய் மொழியில் கல்வி கற்று தமிழ்நாட்டை உயர்த்தணும்

வாய் மூடி வாழாதே வீண் பேச்சு பேசாதே
காலம் கடந்து போச்சுன்னு கவலை பட்டு ஏங்காதே
கனவு ஜெயிக்க வெணும்ன்னா கண்ணை மூடி தூங்காதே
குத்துங்கடா குத்து என் கூட சேர்ந்து குத்து

நான் அடிச்சா தாங்க மாட்ட
நாலு மாசம் தூங்க மாட்ட
மோதி பாரு வீடு போய் சேர மாட்ட

வரட்டி தட்டும் செவுத்துல வேட்பாளர் முகமடா
காத்திருந்து ஓட்டு போட்டு கருத்து போச்சு நகமடா
புள்ள தூங்குது இடுப்புல பூனை தூங்குது அடுப்புல
நம்ம நாட்டு நடப்புல யாரும் இத தடுக்கல

தாய் பேச்சௌ மீராதே தீயோர் சொல் கேட்காதே
ஏதோ நானும் சொல்லிப்புட்டேன் ஏத்துக்கிட்டா ஏத்துக்கோ
சொன்னதெல்லாம் உண்மையின்னா உன்னை நீயே மாத்திக்கோ
குத்துங்கடா குத்து ஏழூரு கேட்க குத்து

நான் அடிச்சா தாங்க மாட்ட
நாலு மாசம் தூங்க மாட்ட
மோதி பாரு வீடு போய் சேர மாட்ட

http://www.youtube.com/watch?v=2EjbMt3gpxo

parthasarathy
18th October 2014, 05:35 PM
எம்.ஜி.ஆர். அவர்கள் நடித்த 'நம்நாடு' தெலுங்கில் 'கதாநாயகுடு' ஆனது. என்.டி ஆர் ஹீரோ. ஜெயலலிதா நாயகி.
'தமிழில் ஆடை முழுதும் நனைய நனைய மழை அடிக்குதடி' என்ற அருமையான சுசீலாம்மாவின் பாடல் இப்போது தெலுங்கில்.

'முத்யால ஜல்லு குரிசே'



Vasu Sir,

Telugu is the original from which, Nam Naadu was born later in Tamil and then was remade in Hindi as Apna Desh, like "Ramudu Bheemudu", original Telugu, then Tamil "Enga Veettu Pillai" and then

Regards,

R. Parthasarathy

madhu
18th October 2014, 06:04 PM
காலை வணக்கங்கள் வாசு ஜி, மதுண்ணா மற்றும் அனைத்து நண்பர்களுக்கும்

தேனிசை தென்றலின் முத்துக்கள் -5

கவியரசரின் நினைவு நாள் இன்று(இங்கு இன்னும் தேதி 17 தான்) , ஆக அவரே பாடல் வரியின் பல்லவயில் வருகிறார்.
ஆம் 1991’ல் வெளியான் மரிக்கொழுந்து திரைப்படத்திற்கு தேவா இசையமைத்து வைரமுத்துவின் வரிகள்
பாலுவும் சித்ராவும் குரல் கொடுக்க திரையில் ரமேஷ் அர்விந்த் மற்றும் ஐஸ்வர்யா

அடிக்கடி வானொலியில் ஒலிபரப்பபட்ட பாடல் ...

இதோ கேட்டு கண்டு மகிழுங்கள்


திருச்சியில் என் நண்பர்களுடன் மன்னார்புரம் வெங்கடேஸ்வரா என்று ஒரு தியேட்டரில் ஒரு நண்பனின் பிறந்த நாளுக்காக எல்லோராலும் இழுத்துச் செல்லப்பட்டு பார்த்த படம். அந்த நண்பன் இன்று இல்லை என்றாலும் என்றும் அவ்னை நினைவுபடுத்தும் இந்தப் பாடல்..

படம் முழுக்க கறுப்பு பட்டிக்காட்டுப் பெண்ணாக வரும் ஐஸ்வர்யா இந்தப் பாட்டில் மட்டும் க்லராக வருவார். கண்ணதாசன் காதல் பாட்டு வரிகளை திருத்திக் கொடுப்பாரா என்ன ? ம்ம்..

தேவா இசை பல பேருடைய கலவை போலத் தெரிந்தாலும் அனேகமாக மனதில் நிற்கும் இசையாகவே இருக்கும். இந்தப் பாடலும் விதிவிலக்கல்ல.

madhu
18th October 2014, 06:13 PM
வாசு ஜி..

கற்பூரம், அவள் தந்த உறவு பாடல் வீடியோக்கள் சிக்கவில்லை. கண்டிப்பாக விரைவில் வலையில் சிக்கும் என சென்னை வானிலை இயக்குனர் ரமணன் போல ஹேஷ்யம் சொல்கிறேன்.

சங்கமம் நல்ல பாடல்கள் கொண்ட படம். ஆனால் கண்டிப்பாக முடிவு வரை படத்தைப் பார்ப்பது தலைவலிக்க வைக்கும்.

RAGHAVENDRA
18th October 2014, 08:38 PM
வாழ்த்துக்களை உரைத்த

நான்கு திரிகளிலும் அன்புடன் வாழ்த்துக் கூறிய அன்பு நண்பர் வினோத்,
அன்பு நண்பர் நெய்வேலி வாசுதேவன்,
அன்பு நண்பர் சின்னக்கண்ணன்
அன்பு நண்பர் கிருஷ்ணா
மற்றும் பெயர் விட்டுப் போன நண்பர்கள் இருந்தால் அவர்களும் சேர்த்து அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

RAGHAVENDRA
18th October 2014, 08:39 PM
வாசு சார்
மேலும் மேலும் இது வளரட்டும்..
ஆம் தங்களுடைய சிறந்த பங்களிப்பால் மய்யத்தின் மய்யமாக இத்திரி மேலும் மேலும் வளரட்டும் என வாழ்த்துகிறேன்.

vasudevan31355
18th October 2014, 09:06 PM
வாசு ஜி..



சங்கமம் நல்ல பாடல்கள் கொண்ட படம். ஆனால் கண்டிப்பாக முடிவு வரை படத்தைப் பார்ப்பது தலைவலிக்க வைக்கும்.

ஆயாசக் களைப்பு.

madhu
19th October 2014, 04:48 AM
ராக்வ் ஜி..

6000 பதிவுகள் கண்டு ஆனந்தக் களைப்பில் வீழ்ந்த உங்களை குளிர்விக்க தேன் நிலா வந்து விட்டது

கங்கிராஜுலேஷன்ஸ்

http://youtu.be/Y5m0m5zSbEo

Gopal.s
19th October 2014, 07:05 AM
சங்கமம் நல்ல முயற்சி. ஆனால் பிரசவ காலம் மிக மிக நீண்டு, டினோசர் குழந்தை போல டெலிவரி ஆன படம்.

டி.கே.ஆர் பளிச்சிடுவார். முக்கியமாக வண்ண பூ போல சேலை கட்டி.

வாசு கண்ணில் படாமலா போகும்?கழுகு கண் ஆயிற்றே?

vasudevan31355
19th October 2014, 09:45 AM
இன்றைய ஸ்பெஷல் (98)

கமால் பிரதர்ஸ் தயாரித்த 'கண் கண்ட தெய்வம்' படத்தில் ஒரு கலக்கல் சாங். நம்ம சூர்யாவோட அப்பா சிவக்குமார் தென்னை மரத்துல உட்கார்ந்துகிட்டு அரை நிஜார் போட்டுகிட்டு என்ன ரகளையா சைட் அடிச்சுகிட்டு கலாட்டா பண்ணி இந்த பொண்ணுகிட்டே பாடுறார் பாருங்க. பாட்டு முழுக்க மனுஷர் தென்னை மரத்திலேயே பாடி முடிச்சுடுவாரு. நம்ம பாடகர் திலகம் சௌந்தரராஜன் செமத்தியா பாடியிருப்பாரு. சிவக்குமார் பாக்குறதுக்கு அப்படியே சூர்யா மாதிரியே இருப்பாரு.

பாடல் வரிகள் செம ஜனரஞ்சகம். அப்பா! இந்தப் பாட்டுல மொத்தம் எத்தன 'பாப்பா' வருதுன்னு ஒரு போட்டியே வைக்கலாம்.

இசை கே.வி. மகாதேவன். இயக்கம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். அண்ணன், தம்பி ஒற்றுமையை அப்பட்டமாகப் பிரதிபலித்த படம் இது. உணர்ச்சிக் குவியல்கள் நிறைந்தது. ரங்காராவ், சுப்பையா, பத்மினி, சிவக்குமார், நாகேஷ் என்று பலர் நடித்த வெற்றிப் படம் இது. ரங்காராவ் மிகச் சிறப்பான நடிப்புக்காக இப்படத்தின் மூலம் மிகவும் புகழ் பெற்றார். இப்படத்தையே கே.எஸ்.ஜி. பின்னாளில் நடிகர் திலகத்தை வைத்து 'படிக்காத பண்ணையார்' என்று எடுத்தார். தேங்காய், கே.ஆர்.விஜயா, ஒய்.ஜி.எம் உடன் நடித்தனர்.

இந்தப் பாடல் ஒரு உற்சாகமான பாடல். நல்லா என்ஜாய் செய்யலாம்.

இனி பாடலின் வரிகள்

தென்ன மரத்துல குடி இருப்பத சின்ன பாப்பா
எங்க சின்ன பாப்பா
அவ தெரிஞ்சுகிட்டா சிரிச்சுகிட்டே என்ன பாப்பா
எதுத்த வூட்டுப் பாப்பா

நான் தென்ன மரத்துல குடி இருப்பத சின்ன பாப்பா
எங்க சின்ன பாப்பா
அவ தெரிஞ்சுகிட்டா சிரிச்சுகிட்டே என்ன பாப்பா
எதுத்த வூட்டுப் பாப்பா

என் பாட்டு சத்தம் கேட்டுதுன்னா சின்ன பாப்பா
எங்க சின்ன பாப்பா
அவ ஆட்டத்தோடு அபிநயத்த புடிச்சி பாப்பா

என் பாட்டு சத்தம் கேட்டுதுன்னா சின்ன பாப்பா
எங்க சின்ன பாப்பா
அவ ஆட்டத்தோடு அபிநயத்த புடிச்சி பாப்பா

கொடுங்கோடையில குளுகுளுங்குற குமரிப் பாப்பா
எங்க குமரிப் பாப்பா
பனி வாடையிலே வெதுவெதுங்குற வயசுப் பாப்பா
நல்ல வயசுப் பாப்பா

கொடுங்கோடையில குளுகுளுங்குற குமரிப் பாப்பா
எங்க குமரிப் பாப்பா
பனி வாடையிலே வெதுவெதுங்குற வயசுப் பாப்பா
நல்ல வயசுப் பாப்பா

என் ஆசையெல்லாம் நீதான்னா சின்னப் பாப்பா
எங்க சின்னப் பாப்பா
அய்யோ எனக்கு அப்படி இருக்குதும்பா அறிவுப் பாப்பா
நல்ல அழகுப் பாப்பா

என் ஆசையெல்லாம் நீதான்னா சின்ன பாப்பா
எங்க சின்னப் பாப்பா
அய்யோ எனக்கு அப்படி இருக்குதும்பா அறிவுப் பாப்பா
நல்ல அழகுப் பாப்பா

நான் எறங்கி வந்து எதுக்க நின்னா சின்ன பாப்பா
எங்க சின்னப் பாப்பா
நீங்க இங்கே எப்படி வந்தீங்கேன்னு என்ன கேப்பா

நான் எறங்கி வந்து எதுக்க நின்னா சின்ன பாப்பா
எங்க சின்னப் பாப்பா
நீங்க இங்கே எப்படி வந்தீங்கேன்னு என்ன கேப்பா

நான் அக்கம் பக்கம் பாக்கையிலே சின்ன பாப்பா
எங்க சின்ன பாப்பா
இங்கே யாருமில்ல சொல்லுங்கன்னு வாயப் பாப்பா
என் வாயப் பாப்பா

நான் அக்கம் பக்கம் பாக்கையிலே சின்ன பாப்பா
எங்க சின்ன பாப்பா
இங்கே யாருமில்ல சொல்லுங்கன்னு வாயப் பாப்பா
என் வாயப் பாப்பா

நான் போட்டுக்கவா அத போட்டுக்கவா
நான் போட்டுக்கவா தாலியின்னா சின்ன பாப்பா
எங்க சின்ன பாப்பா
சர்தான் போட்டுக்கோன்னு கழுத்த மெல்ல நீட்டிப் பாப்பா
கழுத்த நீட்டிப் பாப்பா

நான் போட்டுக்கவா தாலியின்னா சின்ன பாப்பா
எங்க சின்ன பாப்பா
சர்தான் போட்டுக்கோன்னு கழுத்த மெல்ல நீட்டிப் பாப்பா
கழுத்த நீட்டிப் பாப்பா

பாப்பா பாப்பா யப்பா தப்பா யப்பபபப்பப பப்பா

நான் தென்ன மரத்துல குடி இருப்பத சின்ன பாப்பா
எங்க சின்ன பாப்பா
அவ தெரிஞ்சுகிட்டா சிரிச்சுகிட்டே என்ன பாப்பா
எதுத்த வூட்டுப் பாப்பா


http://www.youtube.com/watch?v=w-zzWBSUZe4&feature=player_detailpage

rajeshkrv
19th October 2014, 10:38 AM
காலை வணக்கங்கள்

வாசு ஜி, ஐஸ்வர்யா பற்றிய கருத்தில் எனக்கு உடன் பாடிருந்தாலும் அந்த குரல் .. அதுவும் அது மாறி இன்று இருக்கும் குரல் அய்யயோ முடியாது ...

==============================================

தேனிசை தென்றலின் முத்துக்கள் - 7

ஆரம்ப காலத்தில் அன்பாலயா பிரபாகரன், மணிவாசகம் போன்றோர் தேவாவிற்கு வாய்ப்பு வழங்கினர்
அப்படி மணிவாசகம் இயக்கி முரளி, கெளதமி நடித்த “ நம்ம ஊரு பூவாத்தா” திரைப்படத்தில் ஒலித்த இந்த பாடல்
குறைந்த அளவு ஒலிபரப்பட்டது . கொஞம் பிரபலமும் கூட
கானகந்தர்வன் திரு யேசுதாஸ் மற்றும் சித்ராவின் குரல் “ஆவாரம்பூவு ஒன்னு நாரோடு வாடுதுன்னு காதோரம் வந்ததா சேதி “

பழைய மெட்டை நினைவூட்டினாலும் நல்ல பாடல்

http://www.youtube.com/watch?v=cYVCd7w2kbU

RAGHAVENDRA
19th October 2014, 10:44 AM
தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி மது.

பாக்கு வெத்திலை அருமையான படம். மலையாளத்திலிருந்து தமிழுக்கு இறக்குமதியானது. பாலன் கே.நாயரின் நல்ல நடிப்பில் வெளிவந்தது. சென்னை தேவி திரையரங்கில் பகல் காட்சியில் திரையிடப்பட்ட போது பார்த்தது. இதற்குப் பிறகு மறு வெளியீடு காணவேயில்லை.

தற்போது (தங்கள் நண்பர் என எண்ணுகிறேன்) வடவை பாஸ்கி அவர்களின் புண்ணியத்தால் பல அருமையான பாடல்கள் காணக் கிடைக்கின்றன. அவருக்கு நம் உளமார்ந்த நன்றி.

chinnakkannan
19th October 2014, 12:23 PM
ஹாய் ஆல் குட்மார்னிங்க்..

இன்றைய ஸ்பெஷல் நான் ஏற்கெனவே கேட்ட பாட்டு தான்வாசு சார்.. வீ.போ.எ தாங்க்ஸ்..

இப்போ ஒரு குட்ட்டிப் பாட்டு.. படம் ஆரமப்ம் தான் வரும்.. யார் என்ன ஏது என்றே தெரியாது.. ஹீரோயின் கொய்ங்க் கொய்ங்க் என்று ஆட டைரக்டரே ஒளிப்பதிவும் எனில் விஷீவலில் மோர் கான்செண்ட்ரேட் பண்ணியிருப்பார்.. இன்னும் கொஞ்ச நேரம் இன்னும் கொஞ்ச நேரம் வரப்படாதோ என இருக்கும் இந்தப் பாட்டு முடிந்த பிறகு... ஒரு நல்ல பாட்டு...


வானெங்கும் தங்க விண்மீன்கள் விழி இமை மூட
சூரியன் வந்து கடல் குளித்தேறும் நேரம்....

நேரம்

வானில் ஒரு தீபாவளி
நாம் பாடலாம்கீதாஞ்சலி

கீழை வானமெங்கும் தீயின் ஓவியம்
கண்கள் போதை கொள்ளும் காலை காவியம்

கரையின் மீது அலைக்கென்ன மோகம்
நுரைகள் வந்து கோலம் போடுதே

ரோஜா ஒன்று இன்று அலையில் ஆடலாம்
அவள் பாதம் பட்ட மண்ணை ஏலம் போடலாம்

பெண்ணை பார்த்தால் கரையேறும் மீன்கள்
உள்ளங்கைகள் ரோஜா தீவுகள்

வீடியோ...

http://www.youtube.com/watch?v=bqtA8myPSto

Gopal.s
19th October 2014, 01:24 PM
வாசு,

கண் கண்ட தெய்வம் என்னுடைய ஆதர்ஷ படம். தென்ன மரத்திலே,கன்னு குட்டி கன்னு குட்டி இரண்டும்,பாடல் ,படமாக்கம் இரண்டுமே,அமர்க்களம்.

vasudevan31355
19th October 2014, 02:13 PM
நன்றி கோ!

நான் ஸ்பெஷலில் போடும் பாடல்கள் தங்களின் பிடித்தமாய் இருப்பது மகிழ்ச்சி. கன்னுக்குட்டியும் அமர்க்களம். பாடலுக்கு நடிக்கும் நடிகை கொள்ளை அழகு கன்னுக்குட்டி போலவே. பார்த்தே விடுவோம்.

கன்னுக்குட்டி கன்னுக்குட்டி
காளை கன்னுக்குட்டி
கல்யாண வயசு வந்த சின்னக் குட்டியேங்க்
நான் சொல்லாம சொன்னதயெல்லாம் சொல்லு குட்டி

அமர்க்களம் கோ.


http://www.youtube.com/watch?v=eOHOQ8o0bjg&feature=player_detailpage

vasudevan31355
19th October 2014, 02:22 PM
வானெங்கும் தங்க விண்மீன்கள் விழி இமை மூட
சூரியன் வந்து கடல் குளித்தேறும் நேரம்....

நேரம்



அருமையான பாடல் சின்னக் கண்ணன் சார்.

எந்த நேரத்திலும் இனிக்கும் பாடல். உங்கள் முன்னுரை செம ஜாலி. ஏன் ஸ்ரீதேவியை பத்தி ஒண்ணுமே சொல்லல? கிழவியாயிட்டாங்கன்னா?:) இப்போ அப்டேட்ல யாரு? அப்புறம் எப்படி வீடியோ போட கத்துகிட்டீங்க?

vasudevan31355
19th October 2014, 02:23 PM
காலை வணக்கங்கள்

வாசு ஜி, ஐஸ்வர்யா பற்றிய கருத்தில் எனக்கு உடன் பாடிருந்தாலும் அந்த குரல் .. அதுவும் அது மாறி இன்று இருக்கும் குரல் அய்யயோ முடியாது ...



:):):):)

vasudevan31355
19th October 2014, 02:50 PM
அன்பளிப்பு படத்தில் எல்.ஆர்.ஈஸ்வரியின் பாட்டு..

வாசு ஜி... இந்தப் பாட்டைப் போன்ற டியூனில் வேறொரு பாட்டு இருக்குதா ?



நன்றி மதுஜி! ரொம்ப அபூர்வமான பாடல். கீதாஞ்சலி இந்தப் பாடலில் விஜயலலிதா மாதிரியே குதிப்பார். நம்பியாரின் அந்த 'ஆஹஅஹஹஹஹா' ஓஹோ!

chinnakkannan
19th October 2014, 02:58 PM
//அப்புறம் எப்படி வீடியோ போட கத்துகிட்டீங்க?// தாங்க்ஸ் வாசு சார்.. எல்லாம் துரோண வாசுவாச்சாரியார் மூலமாத் தான் :) ஸ்ரீ தேவில்லாம் ஒருலைன் ரெண்டுலைன் போட முடியாதே..

பழகிய கண்களோ பார்த்ததும் ஏங்கும்
அழகுக்கோர் ஏற்றம் அவள் (ர்)

//வாசு ஜி, ஐஸ்வர்யா பற்றிய கருத்தில்// ஐஸ்வர்யா பற்றி என்ன க் கருத்துச் சொன்னீங்க.. ஐஸ்வர்யா குரல் ராஜேஷ் சொன்னாற்போல கஷ்டம் தான்.. கன்னுக்குட்டியா (நீங்க போட்ட பாட்டைச் சொல்லலை!) இருக்கறச்சே நல்ல கல்ரா இருப்பாங்க.. ஏதோ முதலோ இரண்டாவதோ படத்துல காலில் ஒரு தங்கக் கொலுசு போட்டிருப்பாங்க.. நிறத்துக்கும் கொலுசுவிற்கும் மேட்சாக இருக்கும்!

இப்போ அப்டேட்ல ஸ்ரீ திவ்யா (ஜீவா படம்!) :) கேதரினா தெரிஸான்னு யாரோ வந்துருக்காங்களாம்..பாக்கணும்

vasudevan31355
19th October 2014, 03:10 PM
சின்னக் கண்ணன் சார்,

உங்களின் மி.நை.ம பகுதி மூன்று இப்போதுதான் படித்தேன். ம்.. என்ன சொல்வது? 'மெல்ல மெல்ல' பாடலுக்கு முன்னால் ஒரு கதை. சுவாரஸ்யமாகவே இருந்தது சாண்டில்யனின் வர்ணிப்புகள் போல. கடைக்கோடியில் சிறு பயம் தெரிகிறது. ஆனால் காதலர்களின் உரையாடல்களில் இயல்பான நடையே தென்படுகிறது. மச்சானை எண்ணி மருண்டு மான் போல ஒதுங்கும் அந்தப் பெண்ணின் மனநிலை ஜோர்தான். இருந்தாலும் படிக்கும் போது மனசு கொஞ்சம் பக் பக்தான். ஆனா சாமர்த்தியமா நீர் தப்பிக்க 'சாம்சங் நோட்' புடிச்சீர் பாரு.:) அங்கனதான்யா நீர் நிக்கிறீர். நாங்க ஏமாளியாயிட்டோமில்ல வழக்கம் போல.:)

ஆனால் நீர் இந்த விஷயத்தில் கண்ணதாசனை நெருங்க முடியாது.:) நீர் பயந்து பயந்து தருவதை மனுஷன் படா தில்லா இந்த 'மெல்ல மெல்ல' பாட்டில் அநியாயத்துக்கு விளையாடி இருப்பருங்கானும். முழுசா அர்த்தம் புரிந்தா அதோகதிதான்.

எனிவே ரொம்ப ரசிச்சேன் சி.க.

vasudevan31355
19th October 2014, 03:14 PM
நம் நாடு கதாநாயகுடு விளக்கத்திற்கு நன்றி பாரத்தசாரதி சார். ஆனா ஒரு குறை. ஆடிக்கு ஒரு முறை அமாவாசைக்கு ஒரு முறை வந்தா எப்படி? உங்களை வரவழைக்க இனிமே நிறைய தப்பு தப்பா தகவல்கள் தரப் போறேன். ஹய்யா! இப்ப என்ன பண்ணுவீங்க? இப்ப என்ன பண்ணுவீங்க?

vasudevan31355
19th October 2014, 03:19 PM
மதுஜி!

நீங்கள் அளித்த 'அன்பளிப்பு' ராட்சஸி பாடல் போலவே இன்னொன்று.

'அருணோதயம்' படத்தில்

ஜெய்குமாரி

'எதற்கும் தயார்' (நடிகர் திலகம் செம ஸ்மார்ட்)

நீங்க தயாரா?


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=ausQEx-mv8c

vasudevan31355
19th October 2014, 03:27 PM
கோ,

நமக்குப் பிடித்த ரவியின் இன்னொரு அபூர்வ பாடல்.

'இலைகளில் விளையாடும் கனித் தோட்டமே'

ஒரு கண்டிஷன். பாடலைப் பார்க்கும் போது ரவியை மட்டுமே பார்க்க வேண்டும். கூட ஒரு இம்சை பாடாய்ப் படுத்தும். பொறுத்துக் கொள்ளவும்.:)


http://www.youtube.com/watch?v=OqQ7szspUJg&feature=player_detailpage

vasudevan31355
19th October 2014, 03:36 PM
மதுஜி!

உங்களுக்கு இன்னொரு பாடல்.

'குலவிளக்கு' தருகிறது.

அருமை டியூன் மதுஜி! இந்த பாட்டைக் கேட்டு எனக்கு ரொம்ப நாளாச்சு மதுஜி! உங்களுக்கு?

'கொண்டு வந்தால் அதைக் கொண்டு வா வா
பால் குடிக்கின்ற நேரம் அல்லவா

உண்டு மகிழ்ந்திட ஓடி வா ஓடி வா
பழம் உண்ணுகின்ற நேரம் அல்லவா'


http://www.youtube.com/watch?v=Sf5_YbR6V6o&feature=player_detailpage

chinnakkannan
19th October 2014, 03:38 PM
வாசு சார்.. நன்றி நன்னு..தாங்க்ஸ்லு. ஷீக்ரியா.தன்யவாத்.. :) ஃபுல் மீனிங்க்லாம் சொல்ல முடியுமா என்ன..சில இலை மறை காயா இருந்தாத் தான் அழகு இல்லியோ..

இந்தாங்க ஒங்களுக்கு ஒரு குட்ட்டிப் பாட்டு..:)

**

படம் நடிப்பு என்றெல்லாம் பல பேர் எழுதி ஃப்ரேம் பை ஃப்ரேமாக ரசித்த படந்தேன்..:) மேல் என்ன நாஞ் சொல்லிட முடியுங்கறேன்.. ந.தி யோட நடிப்புன்னே சொல்ல முடியாத மாதிரி ரொம்ப இயல்பா ஒரு கிராமத்துப் பெரியவரோட வாழ்க்கை தாங்கறேன்....

வானம் தொட்டுவிடும் தூரம் தான் நு குமுதத்தில எழுதறதுக்கு முந்தியே ஒரு மாத நாவல் ஒண்ணு வைரமுத்து எழுதினாக.. அதுல இந்த நாட்டுப் புறப் பாட்டு வருமாக்கும்..

நைஸாங்காட்டியும் அத இழுத்து இந்தப் படத்துக்குள்ளாற தள்ளியிருப்பாருல்லா.. ரொம்ப அழ்ழகாவும் இருக்குமில்லா அது..

என்னாங்கறீயளா.. இதோ

ஏறாத மலை மேலே

ஏறாத மலை மேலே ஏ ஏஎலந்த பழுத்திருக்கு எலந்தபழுத்திருக்கு


ஏறி உலுப்பட்டுமா இன்னும் கொஞ்சம் நாளிருக்கு இன்னும்கொஞ்சம் நாளிருக்கு

அடி மாந்தோப்புக் கரை மேலே மயிருணத்தும் சின்னவளே
மயிருணத்தும் சின்னவளே...

ஆசையிலே நானும் வந்து பாடும் குரல் கேக்கலையா
பாடும் குரல் கேக்கலையா

பாட்டுச்சத்தம் கேக்கலையா பாட்டுச் சத்தம் கேக்கலையா

பாட்டுச்சத்தம் கேட்டதய்யா உன் பாட்டுச் சத்தம் கேட்டதய்யா
கூப்புடற சத்தமில்லாம்குயிலு ச் சத்தமின்னிருந்தேன் குயிலுச் சத்தமின்னிருந்தேன்

அடி என் சத்தமின்னிருந்தா என்னடி நீ செஞ்சுருப்ப என்னடி நீ செஞ்சிருப்ப

ஒங்க சத்தமின்னிருந்தா ஓடோடி நான் வந்திருப்பேன் ஓடோடி நான் வந்திருப்பேன்

ஓடோடி வந்திருந்தா ஓடைப் பக்கம் அடி ஓடைப்பக்கம்..(பாடிய ந.தி வடிவைப் பார்த்து ப் பம்மும்போது பார்த்துக்கொண்டிருக்கும் தியேட்டர் சனமும் பம்முவர்)..

இன்னும் கொஞ்ச நேரம் போயிருக்கக் கூடாதா எனத் தோன்றவைக்கும் பாட்டுக்களில் ஒன்று இது..

*
பாடல் வீடியோ!

https://www.youtube.com/watch?v=4TpWrJhwO4E&list=PL0F3F5B577844E9E3




ஆனால் நீர் இந்த விஷயத்தில் கண்ணதாசனை நெருங்க முடியாது.:) நீர் பயந்து பயந்து தருவதை மனுஷன் படா தில்லா இந்த 'மெல்ல மெல்ல' பாட்டில் அநியாயத்துக்கு விளையாடி இருப்பருங்கானும். முழுசா அர்த்தம் புரிந்தா அதோகதிதான்.

எனிவே ரொம்ப ரசிச்சேன் சி.க.

RAGHAVENDRA
19th October 2014, 03:39 PM
வாசு சார்
எதற்கும் தயார் என்பதற்கு பதில் எதற்கும் உஷார் என்று ஒரு பாட்டிருந்தால் அதைப் போட்டிருக்கலாம்...

இதைப் பார்க்கும் போது என் நினைவுக்கு வந்தது..

http://www.youtube.com/watch?v=eoldjJS1OWI

இப்பாடலில் வரும் அந்த ஸ்ரீதுர்கையை நினைத்து மனசாந்தி அடைவோம்...

RAGHAVENDRA
19th October 2014, 03:44 PM
எதற்கும் தயாரா வாசு சார் மற்றும் நண்பர்களே..

இதற்கு தயாராகுங்கள்..

கண்கள் குளமாகும், நெஞ்சு ஈரமாகும்...

சீர்காழியின் குரலில் எங்கிருந்தோ வந்தான் படப்பாடலைக் கேட்கும் போது மட்டுமல்ல..

அவரே அதை பாடுவதைக் காணும் போதும் கூட..

லண்டனில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இசைமணி சீர்காழி அவர்கள் புதல்வர் சிவ சிதம்பரத்துடன் இணைந்து பாடும் நெஞ்சைத் தொடும் பாடல்..

http://www.youtube.com/watch?v=AKAgDfUuzYg

RAGHAVENDRA
19th October 2014, 03:52 PM
காணக் கிடைக்காத தங்கம்... என்று கூவலாம்..

அபூர்வமான காணொளி..

இசைமணி சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் இசை நிகழ்ச்சி.. எம்.எஸ்.அனந்தராமன் வயலின், ஸ்ரீமுஷ்ணம் ராஜா ராவ் மிருதங்கம், விக்கு விநாயகராம் கடம்...

ரசிப்பது நாவலரும் குன்னக்குடியும் மட்டுமல்ல.. நாமும் தான்..

http://www.youtube.com/watch?v=7twnTx0xcis

chinnakkannan
19th October 2014, 03:53 PM
குட்ட்டிப் பாட்டு -3

இந்தக் காலத்துலல்லாம் காதல் காதல் எல்லாம் டபக்குன்னுல்லாம் வருதா என்ன..பொண்ணுங்கள்ளாம் தெளிவு தான் அண்ணாச்சி..

அந்தக் காலத்துல பாத்தோமுன்னா அங்கிட்டு அவளப்பார்ப்பான் அவன் அவளும் பார்ப்பா காதல் வந்துடும்..கூடவே போராட்டமுந்தேன்..

அவளப் பாக்கறது கூட கஷ்டமாச்சுன்னா உசுரே போய்டும் இந்தக் காதலப் படவாவுக்கு..

பாருங்க..மொதல்ல அந்தப் பொண்ணு பாடிச்சு..அதப் பாட வுடாம க் கிண்டல் பண்ணிக் கெடுத்தவன் தானே இவன்..

அது என்ன பாடிச்சு

*
தரிசனம் கிடைக்காதா? என் மேல் கரிசனம் கிடையாதா?
கண்ணா
உன் தரிசனம் கிடைக்காதா? என் மேல் கரிசனம் கிடையாதா?

**

அதக் கிண்டல் பண்ணி பின் வருந்தி தானும் அதக் கத்துக்கிட்டு அவளுக்கு முன்னாடிபாடறான்..ஏன்..எல்லாம் வயசு..கெமிஸ்ட்ரி பண்ற வேலைங்காணும்!

**

தரிசனம் கிடைக்காதா? என் மேல் கரிசனம் கிடையாதா?
தேவி
உன் தரிசனம் கிடைக்காதா? என் மேல் கரிசனம் கிடையாதா?
தேவி உன் தரிசனம் கிடைக்காதா?

பொய்யில்லை கண்ணுக்குள் தீ வளர்த்தேன்
உன் பூஜைக்கு நெஞ்சுக்குள் பூ வளர்த்தேன்
விழிகளில் வழிகிற துளிகளில்
இவள் மனம் தினம் தினம் கரைகிற வரையிலும்
தேவி உன் தரிசனம் கிடைக்காதா?
என் மேல் கரிசனம் கிடையாதா?


*

சாலமன் பாப்பையா ஸ்டைலில்.. நல்லாத் தான்யா இருக்கும் பாட்டு.. அப்புறம் தரிசனஞ்செஞ்சானான்னு கேக்காதீங்க.. நாம்பாக்கலை..:)

வீடியோ கீழே..

http://www.youtube.com/watch?v=A7o_tmDEw68

vasudevan31355
19th October 2014, 03:58 PM
இந்த அற்புதமான பாடலின் வீடியோவைக் கண்டு களியுங்கள்.

கண்ணா கண்ணா வாராய்
ராதை என்னைப் பாராய்
ஜாலம் பண்ணாதே
நீ இப்போ எங்கே போறாய்
கண்ணா கண்ணா வாராய்

ஸ்ரீராம் சந்திரகாந்தா இணைந்த இப்பாடல் தேனினும் இனிமை. இப்பாடலில் சந்திரகாந்தா அடையாளம் தெரியாத அளவிற்கு மிக இளமையாய் இருப்பதைப் பார்க்கலாம். 'மாய மனிதன்' படத்தில்தான் இந்த மதுர கானம். ஜிக்கி அவர்களின் குரல் ஜாலம் புரிகின்றது. ஸ்ரீராம் என்ன ஒரு தேஜஸ்! மனிதர் மழ மழவென செம அழகு. ஆஜானுபாகுவான உயர்ந்த உருவம்.


http://www.youtube.com/watch?v=L7-IZ3iSGGA&feature=player_detailpage

chinnakkannan
19th October 2014, 04:28 PM
இன்னிக்கு நெற்றய ஹோம் வொர்க் இருக்கும் போல இருக்கே..மழை அங்கே எப்படி வாசு சார்..?

vasudevan31355
19th October 2014, 06:52 PM
சி.க.சார்,

நீங்கள் அளித்திருந்த 'வானில் ஒரு தீபாவளி பாட்டில்' மேலே வெற்றுடம்புடன் கிடார் வாசிக்கும் நடிகரின் பெயர் அஷோக். இவர் ஒரு நடன நடிகர் மற்றும் உதவி நடன இயக்குனரும் கூட. நிறையப் படங்களில் பாடல்களுக்கு மட்டும் நடனமாடுவார். மிக அழகானவரும் கூட.

http://cdn4.static.ovimg.com/m/0zb0w0v/?width=150

'மானாமதுரை மல்லி' என்று ஒரு படம் நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். அந்தப் படத்தின் ஹீரோ இவர்தான்.

vasudevan31355
19th October 2014, 07:00 PM
இன்னிக்கு நெற்றய ஹோம் வொர்க் இருக்கும் போல இருக்கே..மழை அங்கே எப்படி வாசு சார்..?

மழை விடாது தூறிக் கொண்டே இருக்கிறது சி.க.சார் அதிக வலுவில்லாமல்.

RAGHAVENDRA
19th October 2014, 09:28 PM
பொங்கும் பூம்புனல்

நீண்ட நாட்களுக்குப் பின் அபூர்வமான பாடல். மெல்லிசை மன்னரின் இசையில் கோவை சௌந்தர்ராஜன், ஈஸ்வரி பாடிய அருமையான பாடல், ஆசீர்வாதம் படத்திலிருந்து.

http://www.youtube.com/watch?v=axRT12XHR5A

RAGHAVENDRA
19th October 2014, 09:39 PM
பொங்கும் பூம்புனல்

எப்படிப் பாராட்டினாலும் வார்த்தைகள் போதாது இப்பாடலுக்கு..

எனக்கு நினைவிருந்து சிணுங்கலும் சிரிப்புமாக எஸ்.பி.பாலா எஸ்.ஜானகி பாடிய முதல் பாடல் இதுவாகத்தானிருக்கும்..

சித்திரச் செவ்வானம் படத்தில் எங்கே உன்னைக் கண்டால் கூட நெஞ்சில் கொண்டாட்டம்...

எங்கே இப்பாடலைக் கேட்டால் கூட நம் நெஞ்சில் கொண்டாட்டம்..

http://www.youtube.com/watch?v=lQVsaj-6gcc

chinnakkannan
19th October 2014, 09:50 PM
ஆவாரம் பூவொண்ணு நாரோடு வாடுதுன்னு காதோடு வந்ததா சேதி.. நம்பியிருக்குது இள மனசு… நான்படமும் பார்த்த்தில்லை..பாட் இப்பத் தான் கேக்கறேன்.. மூச்சுக்குள்ள நான் தெனமும் கட்டிவச்ச நல்ல முத்தே..ம்ம் யாராக்கும் லிரிக்ஸ்.. ஓகே சாங்க் தான்.. தவிர அழுகைப்பா..ஹையாங்க்..அடுத்து சிரிப்புபாட் போடுங்க.. 

வாசு சார்..ரெண்டு பாட்டும் ஓஹோன்னு சொல்ல முடியாது..கன்னுகுட்டியும் பாப்பா பாட்டும் தான்..இருந்தாலும்காணொளிக்கு தாங்க்ஸ்.அண்ட் ரைட் அப்புக்கும். மூணாவதா என்னவாக்கும்.. ரவி பாட்டு ஆரம்பத்திலேயே விஜயகுமாரி முகம் பார்த்ததும் நிறுத்திட்டேன்..!

ராகவேந்திரா சார் இரண்டு பாடல்கள் சீர்காழி கேட்டேன்..மூன்றாவது கேட்கவில்லை..சரி என்றுஎழுதிய ஹோமொர்க்கை இட வந்தால் எங்கே உன்னைக் கண்டால் கூட நெஞ்சில் கொண்டாட்டம் பாட்டு..தாங்க்ஸ் எனக்குப் பிடிக்குமே..ஜெய்சங்கர் லஷ்மி இதுவரை கேட்டதிலலை இந்தப் பாட்டு..மறுபடிகேட்டுப் பார்க்கிறேன்..

RAGHAVENDRA
19th October 2014, 09:54 PM
பொங்கும் பூம்புனல்

நம்மில் பெரும்பாலோர் இசைத்தட்டில் மட்டுமே கேட்டிருப்போம். படத்தைப் பார்த்திருக்க மாட்டோம்.. அப்படிப்பட்ட அபூர்வமான ஒரு படம் திரிபுரசுந்தரி. இதில் ஓடம் ஒன்று எனத்துவங்கும் இளையராஜா பாடிய பாடல் பலருக்கும் நினைவிருக்கும். ஆனால் இந்தப் பாடல் ......

ஜென்சியும் எஸ்.ஜானகியும் இணைந்து பாடிய இனிமையான பாடல்..

http://www.youtube.com/watch?v=Cpj70ied0lY

rajraj
19th October 2014, 10:08 PM
இந்த அற்புதமான பாடலின் வீடியோவைக் கண்டு களியுங்கள்.

கண்ணா கண்ணா வாராய்
ராதை என்னைப் பாராய்


Tune from 'Thandi thandi Hawaa....' from Johnny Walker (1957)

http://www.youtube.com/watch?v=nlw5w1TZMGg

Was a popular song! :)

vasudevan31355
19th October 2014, 10:21 PM
Tune from 'Thandi thandi Hawaa....' from Johnny Walker (1957)



yes sir. know b4.:) thank u.

chinnakkannan
19th October 2014, 11:51 PM
எம்.என்.எம் – 4 !

முத்த்ம் வாங்காத, கொடுக்காத மனிதன், மனுஷி இருக்கிறார்களா என்ன.. இல்லை என்று தான் சொல்ல வேண்டும்..

அதுவும் இந்த முத்தம் இருக்கிறதே மக்களை சின்னக் குழந்தை முதல் வயது வந்து பின் வயதாகும் வரை படுத்தும் பாடு..ம்ம் சொல்லி மாளாதுங்க..

இப்பவும் மதுரையில் என் பக்கத்து வீட்டு மாமா உயிரோடிருந்து அவரைப் பார்த்தேனாகில் செளக்கியமா என்றெல்லாம் கேட்கமாட்டேன்..முதலில் ஒரு முறை.முறைப்பேன். அப்புறம் தான் இதர விசாரிப்பெல்லாம்..

பின் என்னங்க.. வெகுசின்ன வயதில் என்னைத்தூக்கி கொழுக் மொழுக் கன்னத்தைக் கிள்ளி மலையாளப் படப் போஸ்டர் சுவரில் ஒட்டியிருப்பது போல பச்சக்கென்று கன்னத்தில் அழுந்தமுத்தமிட்டு நான் பயந்தும் வாய்துர் நாற்றத்தாலும், தாடி குத்தியதாலும் இப்படி பல ரீஸன்களுக்காக அழ அப்படியே தலைக்கு மேலே தூக்கி தட்டாமாலை சுற்றி சுற்றல் வேகத்தில் அழமறந்து கொஞ்சம் கெக்கே என சிரிக்க் ஆரம்பிக்கையில்.. பார் கண்ணாக்குட்டிக்கு என்னோட முத்தம் பிடிக்குது சிரிக்கிறான் எனச் சொல்லி என்னைக் கீழிறக்கி மறுபடி பச்சக் கொடுத்து மறுபடி அழவிட்டார்.. இன்னும் அதை நினைத்தால் கன்னம் வலிக்கிறது..(இதைப் பிற்காலத்தில் என் அம்மா சொல்லியிருக்கிறார்.. ஒன்ன எப்படிக் கொஞ்சுவார் தெரியுமா அவர்….ஒங்கப்பா திட்டியே திட்டியிருக்காராக்கும்..கொழந்தைய முரட்டுத்தனமா கொஞ்சறான் பாவி.. கன்னம்லாம் கன்னியிருக்கு.. !)

நம்மளோட இன்றைய ஹீரோ இருக்கானே நல்ல ஹேண்ட்ஸம்மான புள்ளயாண்டான்.. ஹேண்ட்ஸம்மான ஹீரோயினே கிடைச்சுட்டா அவனுக்கு! சரி சரி..பியூட்டி ஃபுல்னே சொல்லிக்கலாம்.. ஹீரோயினை லவ் பண்றான்..சரி..அதுக்காக இப்படியா பண்றது..

என்னவாக்கும் செஞ்சான்..

ஹீரோயினோட பேசறான்..அதுவும் ஃபோன்ல..

பேசினா பரவால்லையே பேசறதுக்கு முன்னாடி முத்தா கொடுக்கறான் த்ரீ டைம்ஸ்..

சரி அவனோட லவ்வருக்கு கிஸ் கொடுக்கறான் ஃபோன்ல தானேன்னா..சுத்துமுத்தும் பாத்துக்க வேணாமோ.. என்ன தான் இருந்தாலும் ரகசியமா அம்மா பண்ணிவச்சுருக்கற லட்டை எடுத்துண்டு போய் மொட்டை மாடிக்குப் போய் பக்கத்து வீட்டுப் பொண்ணுக்கும் ஷேர்பண்ணி சாப்பிடறது தானே சுகம்.. ச்ச்..என்னது வேற கத வருதே இதுல! சுத்து முத்தும் பார்க்காம அவன் பேசறதே ஆபீஸ்லயே கேட்டுண்டுருக்கா ஒரு இளம் பெண்.. வேற யார்..ஹீரோவோட செக்ரட்டரி..இதுல என்னன்னா ஹீரோயினோட ஃப்ரண்டும் கூட அவ..

ஹீரோ என்னதான்பாஸா இருந்தாலும் அவர் குடுமி நம்ம கைலங்கற நினைப்புல ப்ச்ச் ப்ச்ச் ப்ச்ச் நு அவன் ஃபோன்ல பண்ற மாதிரியே பண்ணிக்காமிக்க அவனுக்கு வெக்கம் கோபம்லாம் வருது..

இவளே செகரட்டரி.. பேரு சுமான்னு வெச்சுக்குவோம்..சுமா. இப்படி சும்மாச் சும்மா நான் உமமா கொடுத்ததை ச்சுக்காட்டி சாரி குத்திக் காட்டிச் செய்யாதே..ஏதோ தெரியாத்தனமா செஞ்சுட்டேன்..ஸாரிங்கறான்..

அதுக்கு சுமா இட்ஸால் ரைட் நு சொன்னாலும் வீட்டுக்குப் போய் ஹீரோயினை (சூர்யான்னு வெச்சுக்கலாமா) சூர்யாவை கலாட்டா பண்றாள்..ஏன்னா அவ ஹீரோயின் வீட்ல தான் குடியிருக்கா..

இப்படி கலகலன்னு இருந்தாலும் கூட சுமா மனசுக்குள்ற ஒரு சோகம் 99 இயர்ஸ் லீஸ் போட்ட மாதிரி நன்னா சம்மணம் போட்டுண்டு ஒக்காந்திண்டுருக்கு.. என்னவாம்..

சுமாக்கு சில பலகதைகள்ள, சினிமாக்கள்ள மட்டும் தென்படற கதை மாதிரியான சோகம்..காலைல கல்யாணம் நைட் ஹஸ்பண்ட் போயாச்சு..இதான் அந்தக்காலத்திலேயே திருவிளையாடற் புராணத்துல இருக்கே.. ஒட்டிய பல் கிளை துவங்கி ஒல்லொலி மங்கலம் முழங்க கட்டிய கொம்பறதுப் பாய்ந்தகாளை மணமகனை முட்டி கொத்துப்ப்ரோட்டா வாக்க மணமகன் டபக்குனு போய்டறான்னு வருமே.. அதே தான் சுமா விஷயத்திலயும்..

அவள் ஒரு யங்க் விடோ..ஹூம் தள்ளாத வயசில்லை தான்..ஆனா ஆசைகளைப் புறந்தள்ளியும் விட முடியாத வயசு.. ம்ம் எல்லாம் விதிவசம்னு தான் இருக்கா சுமா.. ஹீரோ மேல கொஞ்சம் அபிலாஷை உண்டு.. ஹீரோவை சுரேஷ்னு வெச்சுக்குவோமா சுரேஷ்..ம்ம் இருந்தாலும் ஸ்னேகிதியின் ப்ரஸண்ட் காதலன் ப்யூச்சர் கணவன்.. கொஞ்சம் அவங்களை வாரி மட்டும் விடுவோம்னு இருக்கா..

ஆனாக்க இந்த விதி இருக்கே அது ஒரு பொல்லாத விஷயம்....இல்லையில்ல விஷமக் கார விஷயம்… யாராவது கிச்சுக் கிச்சு மூட்டினாக் கூட சிரிக்காது..ஆனா திடீர்னு எதையோ நினைச்சுக்கிட்டுச் சிரிக்கிற யங்க் காலேஜ் க்ர்ளாட்ட்மா கெக்கபிக்கேன்னு சிரிக்க ஆரம்பிச்சுடுத்துன்னு வச்சுக்கங்க வாழ்க்கை பாட்டுக்கு ரூட் மாறிப் போய்டும்..

சுமாக்கும் அப்படித்தான் நடக்குது.. ஊருக்குப் போய் இருக்கலாம்னு போறா..கூடவே சூர்யாவும் வரா.. அங்க சுமாவோட தகப்பனார் பக்க்த்தூர் திருவிழாப்பாக்க சூர்யாவக் கூட்டிண்டு போய்டறார்..

இங்க ஏதோ ஆஃபீஸ் வேலயா எங்கேயோ மும்பையோ என்னவோ போய்ட்டு வந்த சுரேஷுக்கு சூர்யாவைப் பாக்காம மனசுக்குள்ள நம நமங்குது..

காதலிக்கும் பெண்ணின்
கண்ணை விட
காதலிக்கும் ஆணின்
நெஞ்சம் அதிகம் துடிக்கும் நு ஆன்றோர் சொன்னாற்போல அவனுக்கு ஹ்ருதயம் அடிச்சுக்குது.. சுமா எங்க போறதா சொன்னா..அந்த ஊர் தானே..அந்த ஊர் தானே சூர்யாவும் போய்ருக்கான்னு அதே ஊருக்குக் கிளம்பி காலைல போய் இறங்கினா..

வாசல்ல கோலம் போட்டுக்கிட்டிருக்கா சுமா..இவனப் பாத்துடறா..இவன்கண்ணையும் பாத்துடறா..

பாதகத்தி சொல்லாம போனதினால் அங்கே
..படபடன்னு செவந்திருக்கும் கண்களையும் பார்த்தாள்
வேதனையைச் சொல்லாம சிரிக்கின்ற அவனின்
…வெளிறித்தான் போனமுகம் சொன்னதுவே கதையை

ஹலோ சுரேஷ் சார்..எப்படிங்க இங்கிட்டுங்கறா.. இல்ல..இங்க தானே சூர்யா வந்தா..ங்கறான் சுரேஷ்..
ஓ அவ கிராமத்துக்குன்னா போயிருக்கா.. நாளைக்குக் காலைல வந்துடுவா..

ஓ அப்படியா சுமா நான் கிளம்பறேன்..

சுரேஷ் சார்.. இருந்துட்டு சுமாவப் பார்த்துட்டே போய்டுங்களேன்.. அப்படிங்கறா சுமா..இல்லை இல்லை சொல்ல வச்சுடுத்து விதி..

கொஞ்சம் யோசிச்சு சரின்னு தங்கிடறான்..

அப்புறம் என்ன ஆச்சு.. இரவும் பகலும் டச்சிங் டச்சிங்க்ல இருக்கற அந்திப் பொழுது வந்து இரவும் வந்துடுது..

இவனுக்கோ லவ்வர் இல்லை.. அவளை நினைச்சுக்கறான்..சுமாவும் அந்தப் பக்கம் அறையில இருக்கா..அவளுக்கும் எதையெல்லாமோ எண்ண எண்ண எண்ணப் போராட்டம்..இரவு இளமை தனிமை … என்னாகும்..பட்டாசுத் திரிமேலே எரியற ஊதுபத்தி போட்டா மாதிரி பட்டுன்னு உணர்வெல்லாம் வெடிச்சுடுது… ரெண்டு பேரும் தாச்சித் தூங்கிடறாங்க!

அப்புறம் தாங்க அவங்களோட வாழ்க்கைப் பாதை திசை மாறிப் போய்டுது..

இதுல சுமாக்கு சுரேஷ் மேல அபிலாஷை அதாவது ஒரு ஈர்ப்பு இருந்ததுன்னு சொன்னேன்ல அந்த ஈர்ப்புல முன்னாலேயே ஒரு கனவு காணறாங்க.. அஃப்கோர்ஸ் சுரேஷை உமர் கயாமாகவும் தன்னை காதலியாகவும் நினச்சுக்கிட்டு..

அந்தப் பாட்டோட வரிகள்..
**
கிண்ணத்தில் தேன் குடித்து கைகளில் ஏந்துகிறேன்
எண்ணத்தில் போதை வர எங்கெங்கோ நீந்துகிறேன்..

நானுமோர் திராட்சை ரசம் நாயகன் உந்தன் வசம்
தென்றல் போல் மஞ்சம் வரும்தேனிலா ப்பூவின் இனம்
அஞ்சவோ கொஞ்சும் சுகம் கொண்டுபோ அந்தப் புரம்
கன்னத்தில் தேன் குடித்தால் கற்பனை கோடிவரும்
உள்ளத்தில் பூங்கவிதை வெள்ளம்போல் ஓடி வரும்

ஆணிப்பொன் கட்டில் உண்டு, கட்டில்மேல் மெத்தை உண்டு,
மெத்தைமேல் வித்தை உண்டு, வித்தைக்கோர் தத்தை உண்டு,
தத்தைக்கோர் முத்தம் உண்டு, முத்தங்கள் நித்தம் உண்டு!

யாழிசை தன்னில் வரும் ஏழிசை எந்தன் மொழி
விண்ணிலே வட்டமிடும்வெண்ணிலா உந்தன் விழி
பள்ளியில் காலை வரை பேசிடும் காதல் கதை (தூங்காதோ)

**
வரிகள் வாலி ஐயாதான்.. ஜேசுதாஸ் வாணிஜெயராம்..

படம் தெரிஞ்சுருக்குமே..இளமை ஊஞ்சலாடுகிறது கமல்ஹாசன் ஜெய்சித்ரா.. ( சுரேஷ் சுமா) சூர்யாவா ஸ்ரீப்ரியா, அப்புறம் ரஜினி உண்டு.. வெகு அழகான பாடல்களும் வெகு சுவாரஸ்யமாகவும் போகும் படம்..

அது சரி ஆணிப் பொன் நா என்னவாக்கும்.. ஆணிப் பொன் என்றால் சுத்தமான பொன் சுத்தத் தங்கம் 24 காரட் .999 கோல்ட்..ஆணிப்பொன் தேர்கொண்டுன்னு ஒரு பாட்டு கூட உண்டே..அச்சோ அத இன்னொரு எம் என் எம்க்கு யூஸ் பண்ணிக்கலாமே..!@

பாடல் வீடியோ கீழே..

http://www.youtube.com/watch?v=472O53yVXvw

**
அடுத்த பாட்டு அப்புறம்..முடிந்தால்..

( நா போய்ட்டு அப்புறம் வாரேன்)

Gopal.s
20th October 2014, 05:24 AM
திரை இசைத் திலகம்” கே.வி. மகாதேவன் -26 பிஜிஎஸ் மணியன் எழுதும் தொடர்


"இசை மனிதகுலத்தை ஒன்று சேர்க்கிறது. எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த நிறத்தவராக இருந்தாலும் அனைவரும் ஒன்றுதான் என்று நிரூபிப்பது இசை." ஜான் டென்வர்.



தமிழ்த் திரை உலகின் சாதனைப் படங்களின் வரிசையில் "இதயக் கமலம்" படத்திற்கும் கண்டிப்பாக ஒரு இடம் கொடுக்கலாம்.



சிவாஜி-m.g.r போன்ற உச்ச நட்சத்திரங்கள் கிடையாது.



அப்போதுதான் திரை உலகில் அறிமுகமாகி இருந்த ரவிச்சந்திரன் - கே.ஆர். விஜயா ஆகிய இருவரின் திறமை மீது நம்பிக்கை வைத்து - அதிவும் வண்ணத்திரைப்படமாக தயாரித்து ஒரு வெள்ளி விழப்படமாக கொடுக்க முடிந்தது என்றால் அது மகத்தான சாதனை தானே.



ரவிச்சந்திரன் - கே.ஆர். விஜயா ஆகிய இருவரையும் தவிர ரசிகர்களுக்கு தெரிந்த முகங்கள் என்றால் அது ஷீலா, ருக்மணி (நடிகை லக்ஷ்மியின் தாயார்) ஆகிய இருவர்தான் என்னும்போது அந்த வியப்பு அதிகமாகத்தான் செய்கிறது.



அந்த வெற்றிச் சாதனைக்கு சரியான பக்கபலமாக கே.வி. மகாதேவனின் பாடல்கள் அமைந்தன.



கவியரசு கண்ணதாசன் பாடல்கள் அனைத்தையும் காட்சிக்குப் பொருத்தமாக எழுதிக்கொடுக்க-அந்த வரிகளைப் பார்த்தவுடன் தானாகவே கே.வி. மகாதேவனிடமிருந்து மெட்டுக்கள் துள்ளி வந்து விழுந்தன.



பாடல்கள் அத்தனையுமே சூப்பர் ஹிட் பாடல்கள்தான்.



கதாநாயகன் ரவிச்சந்திரனுக்கு பி.பி. ஸ்ரீநிவாஸையும், இரட்டை வேடமேற்ற கே.ஆர். விஜயாவுக்கு பி.சுசீலா, எஸ். ஜானகி ஆகிய இருவரையும் பாடவைத்தார் கே.வி. மகாதேவன்.



இரண்டாவது கதாநாயகியான ஷீலாவிற்கும் பி. சுசீலாவின் குரலில் ஒரு பாடல்.பாடல்



"நீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன் போ போ போ" - பி.பி. ஸ்ரீனிவாஸ் - பி. சுசீலாவின் இணைவில் ஒரு அருமையான டூயட். விறுவிறுப்பான இணைப்பிசையும் பாடலுக்கான மெட்டும் மனதை கவருகின்றன.



"தோள் கண்டேன் தோளே கண்டேன்" - பி.பி. ஸ்ரீநிவாஸின் கந்தர்வக் குரலில் பாடல் ஒலிக்க ஹம்மிங்கிலேயே அவரைத் தொடர்வார் பி.சுசீலா. கேட்பவரை மயங்கவைக்கும் பாடலில் சரணத்துக்குச் சரணம் மாறும் இணைப்பிசையில் தான் எத்தனை பரிமாணங்கள்!



இப்போதெல்லாம் வெரைட்டி வெரைட்டி என்று பெரிதாகத் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடுகிறோமே அந்தச் சாதனைகளைச் சத்தமே இல்லாமல் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் கே.வி. மகாதேவன்.



இந்த ஒரு பாடலில் மட்டும் என்று இல்லை. கே.வி. மகாதேவனின் இசையில் வெளிவந்த பாடல்களில் ஒன்றுக்கொன்று அவர் கொடுத்திருக்கும் வித்தியாசமான நுணுக்கங்களும் அசைவுகளும் "அட" என்று புருவங்களை உயர்த்தவைக்கும்.



"மேளத்தை மெல்லத்தட்டு மாமா - உன் தாளம் இப்போ சரிதானா" - எஸ். ஜானகி பாடியிருக்கும் இந்தப் பாடலில் சரணங்கள் விருத்தமாகவும் பாடலாகவும் விரியும் அழகே தனி.



"மலர்கள் நனைந்தன பனியாலே" - மோகன ராகத்தில் மகாதேவன் அமைத்திருக்கும் இந்தப் பாடலின் அழகும் இனிமையும் வார்த்தைகளுக்கு அவர் கொடுத்திருக்கும் அழுத்தமும் .. வருணிக்க வார்த்தைகளே இல்லை.



மோகன ராகத்தில் எத்தனையோ திரைப்படப் பாடல்கள் அமைந்திருந்தாலும் இந்தப் பாடல் முதலிடம் பெறும் முத்தான ஒரு பாடல்.



கதைப்படி மனைவி இறந்துவிட்டதால் அவள் நினைவாகவே வாழும் கதாநாயகனின் மனதுக்கு உற்சாகம் கொடுக்க அவனது முறைப்பெண்ணாக வரும் இரண்டாவது கதாநாயகி நடனமாடிப் பாடுவதாக ஒரு காட்சி.



அவள் ஆடிப்பாடும்போது அவளுடைய இடத்தில் கதாநாயகனின் மனக்கண் முன்னால் அவன் மனைவி தோன்றுவதாக காட்சி விரியும்.



இப்படிப்பட்ட சூழலில் அமைந்த பாடலை மகாதேவன் அமைத்திருக்கும் விதமே தனி.



முறைப்பெண் பாடும்போது ஒரு ராகத்திலும், அவனது கற்பனை நாயகி பாடுவதாக அமையும்போது வேறு ஒரு ராகத்திலும் அமைத்து ஒரே பாடலில் இரு வேறு சூழ்நிலைகளையும் வேறுபடுத்திக் காட்டி இருக்கிறார் கே.வி. மகாதேவன்.



ராகம் மட்டும் என்று அல்ல. தாளக் கட்டும், இணைப்பிசையுமே மாறுபடும்.



"என்னதான் ரகசியமோ இதயத்திலே.." என்று துவங்கும் இந்தப் பாடல் காட்சியில் ஷீலா, கே.ஆர். விஜயா ஆகிய இருவருமே நடித்திருப்பார்கள். பி.சுசீலாதான் இருவருக்குமே பாடி இருப்பார்.



ஷீலா பாடுவதாக அமைந்த பல்லவியும், சரணங்களும் "காபி" ராகத்திலும், கே.ஆர். விஜயா பாடும் சரணங்கள் "திலங்" ராகத்திலும் முற்றிலும் மாறுபட்ட நடையில் அமைந்த பாடல் இது.



இப்படி எல்லாம் பாடல்கள் இருந்தாலும் படத்தின் பெயர் சொன்னாலே பளிச்சென்று செவிகளில் வந்து அலைமோதும் பாடல் "உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல" பாடல் தான்.



"பாட்டைப் பார்த்ததுமே தானாகவே மெட்டு வந்து விழுந்த பாட்டு" என்று கே.வி. மகாதேவன் சிலாகித்துக் கூறிய பாடல் இது.



சுசீலாவின் தேன்குரலில் இனிமையாக ஒலிக்கும் இந்தப் பாடலின் இணைப்பிசையில் தான் சிதாரும், குழலும், வயலினும் தான் எவ்வளவு ரம்மியமாக தபேலாவுடன் இணைந்து மனத்தைக் கவர்கின்றன.!



படத்தில் பலமுறை இடம்பெறும் பாடல் இது. தீம் சாங் என்பார்களே அது இந்தப் பாடல்தான். படம் முடிவதும் இந்தப் பாடலுடன் தான்.



ஆகமொத்தம் "இதயக் கமலத்தில்" இடம் பெற்ற பாடல்கள் அனைத்துமே இன்றளவும் வாடாமல் திரை இசை ரசிகர்களின் மனங்களை நிறைத்துக் கொண்டு மணம் வீசிக்கொண்டே இருப்பது மறுக்க முடியாத உண்மை.

RAGHAVENDRA
20th October 2014, 06:49 AM
பொங்கும் பூம்புனல்

http://www.tamilstar.com/profile/uploads/artist/profile/ar5105Sridhar.jpg

தமிழ்த்திரையுலகின் முதல் டிரெண்ட் செட்டர். நான்கு சுவர்களைத் தாண்டியும் சினிமாவை கொண்டு செல்லலாம் என்பதற்கு அஸ்திவாரம் போட்டவர். நான்கு சுவர்களுக்குள்ளும் சினிமாவை சொல்லலாம் என்பதற்கும் அவர் தான் அஸ்திவாரம் போட்டார். புதிய முகங்கள், புதிய கோணங்கள், புதிய இசை, புதிய உத்தி முறைகள் என அவருடைய அனைத்து முயற்சிகளுமே அது வரை இருந்த நடைமுறைகளை மாற்றியவை. வெறும் நான்கு சுவர்களுக்குள் நெஞ்சில் ஓர் ஆலயம், நாடு தாண்டி சிவந்த மண் என இரு துருவங்களையும் இணைத்த புதுமை இயக்குநர்..

அவருக்கு இந்த உலகமே ஒரு கவிதை... அதை கதையில் கண்டார்...ஒளிப்பதிவில் கண்டார்... இசையில் கண்டார்...நடிப்பில் கண்டார்...படத்தொகுப்பில் கண்டார்... சினிமாவின் ஒவ்வொரு துறையிலும் கண்டார்..

அக்டோபார் 20 -- இன்று அவருடைய நினைவு நாள்...

இதோ அவர் நினைவாக ஓ மஞ்சு திரைப்படத்திலிருந்து உலகம் ஒரு கவிதை...

http://www.youtube.com/watch?v=3smCzx5XOFI

RAGHAVENDRA
20th October 2014, 06:50 AM
கோபால் சார்
இதய கமலம் திறனாய்வு அருமை..
என்றாலும் உங்கள் எழுத்தில் இதைப் படிக்க வேண்டும்...

RAGHAVENDRA
20th October 2014, 06:52 AM
இயக்குநர் ஸ்ரீதருக்கு அஞ்சலியாக ...

http://www.youtube.com/watch?v=4p30PGZ4UC0

RAGHAVENDRA
20th October 2014, 06:59 AM
Another tribute to Director Sridhar

http://www.youtube.com/watch?v=FHLLQnauoSw

RAGHAVENDRA
20th October 2014, 07:01 AM
SPB pays tribute

http://www.youtube.com/watch?v=4jC8dsYZ62M

RAGHAVENDRA
20th October 2014, 07:04 AM
Pattathu Raani .. tribute by Kalpana

http://www.youtube.com/watch?v=PWCU-t0eyVU

RAGHAVENDRA
20th October 2014, 07:09 AM
பொங்கும் பூம்புனல்

ஏ.எம்.ராஜாவுக்கும் ஏராளமான ரசிகர்களை உருவாக்கிய பாடல்...

மீண்ட சொர்க்கம் திரைப்படத்திலிருந்து..

http://www.youtube.com/watch?v=k-os3ksSZVY

RAGHAVENDRA
20th October 2014, 07:11 AM
பொங்கும் பூம்புனல்

காலத்தால் அழியாத கண்களைக்குளமாக்கும் உன்னத கானம்...

http://www.youtube.com/watch?v=CuGcevyIkxY

rajeshkrv
20th October 2014, 07:53 AM
சிக , கிண்ணத்தில் தேன் வடித்தேன் சூப்பர் பாட்டு. வாலி ஐயாவின் வரிகள் தூள். நானுமோர் திராட்சை ரசம்.... சின்ன திருத்தம் பெண் குரல் ஜானகி . வாணி இல்லை.

rajeshkrv
20th October 2014, 08:12 AM
தேனிசை தென்றலின் முத்துக்கள் - 8

1992'ல் முரளி நடித்து வெளிவந்த தங்கராசு திரையில் இடம்த்பெற்ற இனிமையான பாடல்

http://upload.wikimedia.org/wikipedia/en/7/76/Thangarasu.jpg

பூங்காற்றே தினமும் தேடுறேன்...
மிகவும் இனிமையான பாடல் .. பாலாவின் குரலில் அழகு பாடல்
வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பபட்ட பாடல்

http://www.youtube.com/watch?v=piJ7ApDmI3o

இதே பாடல் சோகமாக ஸ்வர்ணலதாவின் குரலில் .. இதோ

http://www.youtube.com/watch?v=DLH-X9g5XIY

rajeshkrv
20th October 2014, 10:11 AM
ஆதி நாராயண ராவ் .. அருமையான இசைக்கலைஞர். மராட்டி இசையை தெலுங்கு இசையுலகுக்கு அறிமுகம் செய்தவரும் இவரே

அப்படிப்பட்ட 2 பாடல்கள் இதோ

மங்கையர் உள்ளம் மங்காத செல்வம்(தெலுங்கில் ஸ்வர்ண மஞ்சரி)

பழம்பெரும் நடிகர் நாகய்யாவும் இசையரசியும் பாடும் மதுரமைனா குரு தீவெனா

http://www.youtube.com/watch?v=9gFWLC8BgiE


http://www.youtube.com/watch?v=PNdkINYMADw


அடுத்து பக்த துகாரம் திரையில் எல்லாமே அருமையான பாடல்கள்

அப்படி ஒரு பாடல் இதோ. பொடி சங்கதிகள் , மராட்டிய இசை என தூள் கிளப்பும் பாடல் . இசையரசி பின்னுகிறார்

http://www.youtube.com/watch?v=BT_RdiRpIJQ

chinnakkannan
20th October 2014, 10:17 AM
ஹாய் குட்மார்னிங்க் ஆல்..


கோபால் சார்..இதயக்கமலம் இந்த ஒரு வருடத்திற்குள் தான் பார்த்தேனா என நினைவில்லை.. கலைஞர் டிவி என நினைவு.. பாடல் மட்டும் நினைவிருக்க படம் சுத்தமாய் மறந்து விட்டிருக்க பார்க்க த்ரிலலக இருந்தது (வெள்ளிக்கிழமை மதிய த் தூக்கத்தை விட்டுப் பார்த்த ப்டம்)

//"என்னதான் ரகசியமோ இதயத்திலே.." என்று துவங்கும் இந்தப் பாடல் காட்சியில் ஷீலா, கே.ஆர். விஜயா ஆகிய இருவருமே நடித்திருப்பார்கள். பி.சுசீலாதான் இருவருக்குமே பாடி இருப்பார்.

ஷீலா பாடுவதாக அமைந்த பல்லவியும், சரணங்களும் "காபி" ராகத்திலும், கே.ஆர். விஜயா பாடும் சரணங்கள் "திலங்" ராகத்திலும் முற்றிலும் மாறுபட்ட நடையில் அமைந்த பாடல் இது.// இந்தப் பாட்டு ரொம்ப அழகாய்ப் படமாக்க ப் பட்டிருக்கும்..சுசீலாம்மாவும் வெகு அழகாகப் பாடியிருப்பார்..

ஒரு ஒரியப் படத்தை எல்.வி ப்ரசாத் எடுத்து ஆருர் தாஸிடம் கொடுத்துப் பார்க்கச் சொல்லி பின் அதற்கு கைகால் கண் மூக்கெல்லாம் போட்டு ஆரூர் தாஸ் கதை வசனம் எழுதியதாக அவருடைய ஒரு புத்தகத்தில் எழுதியிருந்தார்.. கே.ஆர்.வி யின் இரண்டாவது படம்..இம்மெச்யூரிட்டி படக்கென நடிப்பில் தெரியும்.. (ஆரூர் தாஸா சித்ராலயா கோபுவா நினைவில்லை)

ஸ்ரீதர் படப் பாடல்களுக்கு நன்றி ராக வேந்தர் சார்.. நானே நானா, துயிலாத பெண்ணொன்று கண்டேன் எல்லாம் என் உயிர்ப்பாடல்கள்... பிற்காலப் படங்களில் ஸ்ரீ தர் பாடல்களில் எனக்கு மிகுந்த இஷ்டம் எது தெரியுமோ.. மலய மாருதத்தில் (கோபால் சார் சரிதானே) வரும் கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்

http://www.youtube.com/watch?v=w8MZUOS55fo

ராஜேஷ்.. யா..ஜானகியாக்த் தான் இருக்கும் என நினைத்தேன்..வாணி என இட்டு விட்டேன்.. அந்த ஆணிப் பொன் வாலி ஐயா விட்டதே இல்லை..

ஆணிப்பொன்னு ஐயராத்துப் பொண்ணுன்னு இன்னொரு பாட்டில் வேறு எழுதியிருப்பார்..

ஒரிஜினல் பார்த்தால் பாசுரமாக்கும்..

மாணிக்கங்க் கட்டி வைர மணிக்கட்டி
ஆணிப்பொன்னால் செய்த வண்ணச் சிறு தொட்டில்

அப்புறம்...ஸ்ரீதரோட பாட்டுன்னா இதைச் சொல்லாம விட முடியுமோ..

கொடுத்துப் பார் பார் பார் உண்மை அன்பை

http://www.youtube.com/watch?v=a7iXs4NT47U

அப்புறம் வாரேன்..

rajraj
20th October 2014, 10:37 AM
chinnakkaNNan: I posted 'achutham keshavam' in Sanskrit classical compositions in movies' thread as I said. Play it in the morning and avaoid being chastised ! :lol:

vasudevan31355
20th October 2014, 11:38 AM
இன்றைய ஸ்பெஷல் (99)

'இன்றைய ஸ்பெஷலி'ல் பத்மினி பிக்சர்ஸ் அளிக்கும் 'தேடி வந்த மாப்பிள்ளை' படத்திலிருந்து மனத்தைக் கொள்ளை கொள்ளும் ஒரு பாடல். 'மக்கள் திலகம்' எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, அசோகன், சோ, ஜோதிலஷ்மி, எம்.வி.ராஜம்மா, மேஜர் சுந்தர்ராஜன், விஜயஸ்ரீ, காந்திமதி முதலானோர் நடித்திருந்தனர். பி.ஆர்.பந்துலு தயாரித்து இயக்கிய இப்படத்திற்கு இசை 'மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள். வசனம் 'எம்.ஜி.ஆரி'ன் ஆர்.கே சண்முகம். (உதவி டைரக்ஷன் பொறுப்பும் இவர் ஏற்றிருப்பார்). பாடல்கள் கண்ணதாசன் மற்றும் வாலி. நடனம் பி.எஸ்.கோபாலகிருஷ்ணன், சோப்ரா. ஒப்பனை பீதாம்பரம்.

http://i.ytimg.com/vi/ww0efd9tOPc/hqdefault.jpg

பணக்கார குடும்பப் பெண் ஜெயலலிதாவிற்கு மேல்நாட்டு சங்கீதம் கற்றுத்தர அவரின் அப்பா 'மேஜர்' சுந்தர்ராஜன் ஒரு வேதாந்தி மாஸ்டரை பேப்பர் விளம்பரம் தந்து ஏற்பாடு செய்ய, அங்கு தன் தந்தையைக் கொன்றவர்களை கண்டுபிடிக்கும் நோக்கத்தோடு எம்.ஜி.ஆர் வயதான மாஸ்டராக மாறு வேடம் பூண்டு வருகிறார். ஜெயலலிதாவுக்கு பியானோ வாசித்தபடி சங்கீதம் கற்றுக் கொடுக்கிறார்.

இந்த சிச்சுவேஷனில் வரும் பாடல்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355017/dfghjk.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355017/dfghjk.jpg.html)

எம்.ஜி.ஆர் வயதான கெட் -அப்பில். நரைத்த பிரவுன் கலர் முடி, வழுக்கைத் தலை,தொங்கு மீசை, தாடி, கருப்பு கோட் சூட், கூலிங் கிளாஸ், கையில் குடை ஸ்டிக் என்று சார்லி சாப்ளின் தோற்றத்தில் கனகச்சிதம். (பீதாம்பரம் ஒப்பனையில் கலக்கியிருப்பார். எம்.ஜி.ஆரை மிக வித்தியாசமான மாறு வேஷத்தில் ஒப்பனை செய்து காட்டி சபாஷ் வாங்குவார்). எம்.ஜி.ஆர் இந்த ரோலில் அட்டகாசமாய் மின்னுவார். மிக அழகாக காமெடி இழையோட இந்த ரோல் படைக்கப்பட்டிருக்கும். எம்.ஜி.ஆர் அவர்களும் இந்த வயதான மாஸ்டர் பாத்திரத்தை உணர்ந்து பண்ணியிருப்பார். (அது என்னவோ தெரியவில்லை... சாப்ளின் ரோல் பண்ணினாலே நம்ம நடிகர்களுக்கு மிகவும் உற்சாகம் தொற்றிக் கொள்ளும். கமல் கூட 'புன்னகை மன்னன்' படத்தில் 'சாப்ளின்' செல்லப்பாவாக பிளந்து கட்டியிருப்பார்)

பந்துலு தன் படங்களில் எம்.ஜி.ஆர் அவர்களின் வழக்கமான பாணியோடு சேர்த்து சற்றே வித்தியாசமாக காமெடி கலந்து உலாவ விடுவர். 'ரகசிய போலீஸ் 115' லும் சரி, 'தேடி வந்த மாப்பிள்ளை' படத்திலும் சரி... காமெடி படத்தோடும், கதையோடும் மெலிதாகச் சேர்ந்தே பயணிக்கும். ரசிக்கும்படியும் இருக்கும்.

அது 'தேடி வந்த மாப்பிளை'யில் இன்னும் ரசிக்கக் கூடிய அளவிலே இருக்கும். அதுவும் வயதான மியூசிக் டியூஷன் மாஸ்டர் ரோலில் இன்னும் அது அதிகமாக வெளிப்படும். இந்த ரோலும் மிக வித்தியாசமான எம்.ஜி.ஆர்.அவர்களை நாம் கண்டு ரசிக்க முடியும். (வழக்கமான மாறு வேஷத்தில் வந்து அறிவுத்தல் பாடல்கள் போல் இல்லாமல் இது செம வித்தியாச ஜாலி)

ஜெயலலிதா மேஜரின் மகளாக வந்து எம்.ஜி.ஆருடன் ஆடிப் பாடுவது அமர்க்களம். அம்மணிக்கு சொல்லியா கொடுக்கணும் நடனம் ஆட? அதுவும் வெஸ்டர்ன். ஜமாய்ப்பார்.

பி.எஸ்.கோபாலகிருஷ்ணன் சாப்ளின் ஸ்டைலில் எம்.ஜி..ஆர் அவர்களை அற்புதமாய் ஆட வைத்து நம்மை ரசிக்க வைத்திருப்பார். பாடலின் துவக்கத்தில் அந்த பியானோ ஒலியின் ஆர்ப்பாட்டம் தொடங்கும் போது எம்.ஜி.ஆர் பியானோ வாசித்தபடி தலையாட்டுவது அருமையாக இருக்கும். பியானோ இசைக்குத் தக்கவாறு மேடம் கைகளில் சிட்டிகை சொடுக்கியபடியே கால்களை மாற்றி மாற்றி வைத்து ஓடிச் செல்லும் அழகே அழகு.

இரண்டு கால்கையும் அகல விரித்து, முழங்கால்களை மடக்கி, இரு பாதங்களையும் எதிரெதிர் திசையில் ஷூவோடு வைத்தவாறு கையில் ஸ்டிக் வைத்துக் கொண்டு நடந்து வரும் சாப்ளினின் ஸ்டைல் சிறு குழந்தைகளுக்கும் தெரியும். அதை எம்.ஜி.ஆரும் நன்றாக வெளிப்படுத்தியிருப்பார். அதனுடன் வயதான தள்ளாட்டத்தையும் சேர்த்துக் காண்பித்திருப்பார். 'பப்பரப்பா' எனும் போது தொப்பியைத் தூக்கி வழுக்கையைக் காட்டுவது ஜாலியான காமெடி.

அதே போல பாடலின் இடையிசையில் வரும் அந்த டேப் மியூசிக் ஒலிக்கு எம்.ஜி.ஆர் பொருத்தமாகவே ஸ்டெப்ஸ் வைப்பார். எம்.ஜி.ஆரா இது என்ற ஆச்சர்யம் மேலிடும். ஒரு இடத்தில் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இணையாக ஆடும் போது புரிந்து கொண்டு மிக அழகான ஸ்டெப்ஸ்களை டைமிங்காக வைப்பது ஜோர்.

இப்பாடலில் கொடி கட்டும் இன்னொரு மாஸ்டர் 'மெல்லிசை மன்னர்' மாஸ்டர்தான். யப்பா! என்ன ஒரு உறசாகம்! என்ன ஒரு வேகம் கலந்த விவேகம்! சும்மா பியானோ புகுந்து புறப்பட்டு துவம்சம் செய்துவிடும். இப்பாடலின் ஒவ்வொரு வினாடியும் இசைக்கருவிகள் புரியும் விந்தைகள் சொல்லி முடியாது. (இதே போல 'கண்ணன் என் காதலன்' படத்தில் 'பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்" பாடலில் பியானோவில் விளையாடி இருப்பார்) பாடலின் முடிவில் சௌந்தரராஜன் 'லலலல்லலா' என்று முடித்தவுடன் அதே 'லலலல்லலா' வை டிரம்பெட்டில் கொண்டு வருவது ஏக ரகளை.

பாடல்கள் வரிகள் செம ரகளை.

சங்கீத ஞானம், சரசம், சுகம் தானே வரும்.... அதுவாய் கனியும் கனி உண்டு, அடித்துக் கனியும் கனியும் உண்டு... இசை ஞானம் தானே வர வேண்டும், யாரும் சொல்லி வரக் கூடாது என்ற பொருள் பதிந்த வரிகள்.

'இசையை ரசிப்பது உண்டு
இடையை ரசிப்பது உண்டு'

வரிகளில் கவிஞரின் குறும்பு கொப்பளிப்பதைப் பாருங்கள்.

'எதிலே விழுந்தால் சுகமோ
அதிலே இதயம் பதிவதும் உண்டு'

http://archives.deccanchronicle.com/sites/default/files/styles/sliderimage_crop/public/mediaimages/gallery/2013/Feb/scan0027_0.jpg

அற்புதமான வைர வரிகள். எதில் சுகம் இருக்கிறதோ அந்த விஷயத்தில் நம் மனது ஆழமாகப் பதிந்து விடுவது இயற்கை. (இப்போது என்னையே எடுத்துக் கொள்ளுங்களேன்... நடிகர் திலகத்தின் ஒப்பற்ற நடிப்பில் ஈடு இணையில்லா சுகம் நான் கண்டதனால்தான் என் இதயம் அவர் வசமாகி விட்டது)

அதை இரண்டே வரிகளில் உணர்த்திய கவிஞரின் திறமையை எப்படிப் புகழ!

'தள்ளாடும் இடையுடன் நடமிடும் பெண்ணின்
கண்ணே காதலின் வாசல்'

மேற்கண்ட வரிகளுக்கு விளக்கம் வேறு தேவையா? அட்டகாசம் போங்கள். பாடகர் திலகம் பட்டை கிளப்பியிருப்பார்.

இசையமைப்பாளர், நடன இயக்குனர், ஒளிப்பதிவாளர், மேக்-அப் மேன், பாடலாசிரியர், பாடகர், நடிக நடிகையர் அனைத்தும் ஒன்று சேர்ந்து இப்பாடலை அற்புதமாக பரிமளிக்கச் செய்திருப்பார்கள்.

மொத்தத்தில் அதியற்புத இசைப் பின்னணி கொண்ட இன்பத்தை அள்ளித் தரும் பாடல்.

இனி பாடலின் வரிகள்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355017/fbhnjm.png (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355017/fbhnjm.png.html)

தொட்டுக் காட்டவா
மேலை நாட்டு சங்கீதத்தைத் தொட்டுக் காட்டவா
வட்டம் போடவா
வாலிபத்தின் வேகத்தோடு வட்டம் போடவா

ஹூ..ஹூ ஹூ ஹூ ஹூ ஹூ
லலலல்லலா பப்பரப்பா

தொட்டுக் காட்டவா
மேலை நாட்டு சங்கீதத்தைத் தொட்டுக் காட்டவா
வட்டம் போடவா
வாலிபத்தின் வேகத்தோடு வட்டம் போடவா

அதுவாய்க் கனிவது உண்டு
அடித்தால் கனிவது உண்டு
சங்கீத ஞானமும், சரசமும் சுகமும்
தானே வருவது உண்டு
இசையை ரசிப்பது உண்டு
இடையை ரசிப்பது உண்டு
எதிலே விழுந்தால் சுகமோ
அதிலே இதயம் பதிவதும் உண்டு

தொட்டுக் காட்டவா
மேலை நாட்டு சங்கீதத்தைத் தொட்டுக் காட்டவா
வட்டம் போடவா
வாலிபத்தின் வேகத்தோடு வட்டம் போடவா

தாளத்தில் விழுவது பாடல்
தாகத்தில் எழுவது காதல்
தள்ளாடும் இடையுடன் நடமிடும் பெண்ணின்
கண்ணே காதலின் வாசல்
ஆசையைத் தருவது மேனி
ஆசையைத் துறந்தவன் ஞானி
அஞ்சாமல் நடப்பதும் வேரியைப் பார்ப்பதும்
நவீன உலகத்தின் பாணி

தொட்டுக் காட்டவா
மேலை நாட்டு சங்கீதத்தைத் தொட்டுக் காட்டவா
வட்டம் போடவா
வாலிபத்தின் வேகத்தோடு வட்டம் போடவா

ஹூ..ஹூ ஹூ ஹூ ஹூ ஹூ
லலலல்லலா பப்பரப்பா


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Va12xpbjMrw

Gopal.s
20th October 2014, 12:00 PM
இந்த பாடல் எனது பிடித்தம் கூட. தேடி வந்த மாப்பிள்ளை நிஜமான ஜாலி படம். தொட்டு காட்டவா,சொர்கத்தை தேடுவோம்,இடமோ சுகமானது,வெற்றி மீது எல்லாமே நல்ல படமாக்கம்.இந்த பாடல் வேடம்,அமர்க்களம்.



இதே போல என்னை கவர்ந்த போயும்,போயும் மனிதனுக்கிந்த,எத்தனை பெரிய மனிதருக்கு,நானொரு குழந்தை,எங்கள் தங்கம் காலட்சேபம் இவற்றையும் பதிக்கலாம்.

chinnakkannan
20th October 2014, 12:01 PM
தொட்டுக் காட்டவா நல்ல பாட்டு வாசுசார்..ம்ம் தேடிவந்த மாப்பிள்ளை.. அதுல தானே நாலுபக்கம் சுவரு.. நடுவுல பார் இவரு.. பாட்டு. சிவாஜி ஸ்டில் நல்ல இடம் நீ வந்த இடம் தானே..எதற்கு இங்கு போட்டீர்கள்..கொஞ்சம் புரியலை.இந்தப் பாட்டு வாலி தானே..வழக்கம் போல நன்றி.. ஆமா நூறாவத் போஸ்ட்டுக்கு எனது அட்வான்ஸ் வாழ்த்துக்கள் :) கொஞ்சம் தெரிந்த பாட்டாப் போடுங்க..

chinnakkannan
20th October 2014, 12:04 PM
//chinnakkaNNan: I posted 'achutham keshavam' in Sanskrit classical compositions in movies' thread as I said. Play it in the morning and avaoid being chastised ! // கண்டிப்பா.. I will do that.. இப்போக் கூட மறுபடியும் பாசுரங்களுக்குப் போகலாம்னு இருக்கேன்! அந்தத் தொடர் வேறு அப்படியே நிக்குது :)

vasudevan31355
20th October 2014, 12:17 PM
.எதற்கு இங்கு போட்டீர்கள்..கொஞ்சம் புரியலை.ஆமா நூறாவத் போஸ்ட்டுக்கு எனது அட்வான்ஸ் வாழ்த்துக்கள் :)

நன்றி சின்னக் கண்ணா சார். பதிவை முழுசாப் படிங்க.. அப்ப எதுக்குப் போட்டேன்னு புரியும். விவரமா எழுதி இருக்கேனே. கவனிக்கலையா?

Richardsof
20th October 2014, 01:03 PM
வாசு சார்

தேடி வந்த மாப்பிள்ளை - படத்தில் இடம் பெற்ற ''தொட்டு காட்ட வா '' பாடலை மிக அற்புதமாக
ஆய்வு செய்து பதிவிட்ட உங்களுக்கு ஒரு சபாஷ் . பாராட்ட வார்த்தைகள் இல்லை .
http://i284.photobucket.com/albums/ll22/picz17/Valentine20day2035.jpg (http://s284.photobucket.com/user/picz17/media/Valentine20day2035.jpg.html)
ஒரு நாள் கூத்துக்கு மீசையை '' பாடல் - விரைவில் உங்களின் ஸ்பெஷல் பதிவை ஆவலுடன்
எதிர்பார்க்கிறேன் .

chinnakkannan
20th October 2014, 01:14 PM
//எதிலே விழுந்தால் சுகமோ
அதிலே இதயம் பதிவது உண்டு' //இந்த வரிக்குத் தானா..ஸ்டில் கூட கலரா மாற்றிவிட்டீர்களே..:)

vasudevan31355
20th October 2014, 01:20 PM
//எதிலே விழுந்தால் சுகமோ
அதிலே இதயம் பதிவது உண்டு' //இந்த வரிக்குத் தானா..ஸ்டில் கூட கலரா மாற்றிவிட்டீர்களே..:)

இப்போது புரிந்ததா? அதே! அதே! போட்டது பொருத்தம்தானே! (cycle gap):) கருப்பு வெள்ளை தனியா தெரிஞ்சுது. அதான் கலர்ல...ஹி ..ஹி ..ஹி

vasudevan31355
20th October 2014, 01:21 PM
நன்றி வினோத் சார்.

உங்கள் ஆசை நிச்சயம் நிறைவேறும்.

chinnakkannan
20th October 2014, 03:21 PM
மழைன்னாலே எப்போதும் குஷி தான்..அதுவும் ஒரு வாலிபன் கூட கன்னி இருந்தா அவ்வளவு தான்..பின் என்ன குஷியா மழையில நன்ஞ்சு ஆடிப் பாட்த்தான் செய்வான்..

ஆர் சுந்தர்ராஜனின் கவித்துவமான டைட்டில் கொண்ட படம் இது..படம் அந்தக்கால வழக்கம்போல வேலையில்லா வாலிபன் காதல் கடைசியில் சோகம் எனத் தான் முடிந்தாலும் பாடல்கள் கே.வி.மகாதேவன் இசையில் வெகு அழகு.. அதுவும் குறிப்பாய் இந்தப் பாட்டு.. கே.ஜே.ஜேசுதாஸ்.. எஸ்.ஜானகி கோரஸ்...

மழை விழும் கொடியென நதிவிழும் கடலென
மரகத மணி உடல் சிலிர்க்குது

கருவிழி அழைக்குது கரங்களும் துடிக்குது
இளமனம் சிறகினை விரிக்குது
வசந்தமும் இங்கு வந்த்து இங்கு
மங்கல வாழ்க்கை மலரட்டும் என்று

தகதக தகதக தக தகதக்ஜம்

மங்கையின் குங்கும்ம் மன்னவன் உன்னுடன்
சங்கம்ம் ஆவது எப்பொழுது
உன் சந்தன இதழால் கவியெழுது
செங்கயல் விழிகளில் அஞ்சனம் கரைந்திட
தினம் தினம் மன்மதக் கதை படிப்போம்..
செவ்விதழ் ஓரத்தில் தேனெடுப்போம்..

ராகமும் தாளமும் சேர்ந்த்து போல் இரு
மேகமும் மேகமும் சேர்ந்த்தம்மா
தேகமும் தேகமும் மயங்குதம்மா..
பொன்னிற மின்னலின் புது ஒளி கண்ட்தும்
பூமியில் மலர்ந்த்து தாழை மடல்
பொங்குது பொங்குது காதல் கடல்..
வசந்தமும் இன்று வந்த்து இங்கு...

**
பட்த்தோட டைட்டில் விட்டுட்டேனே..தூங்காத கண்ணின்று ஒன்று

http://www.youtube.com/watch?v=oXlAlSyJuk4


பாடல் வரிகளை மறுபடி டைப்படித்தேன்..

மோகன் அம்பிகா பொருத்தம் தான் என்றாலும் அனியாயத்திற்கு அம்பிகா மானபங்கப் பட்டு இறப்பது போல தேவையில்லாத சோகம் ஆக்கியிருப்பார்கள் இறுதியில்..

ஒரு மேட்னி ஷோ பார்த்து விட்டு மாலை முழுதும் தலை வலித்து இரவு அமிர்ந்தாஞ்சன் தடவிக்கொண்டு மெட்டாசினோ கால்பாலோ உண்டது நினைவில் இருக்கிறது..

யார் பாடல் வரிகள் தெரியவில்லை..ஆனால் நல்ல பாட்டு..

parthasarathy
20th October 2014, 03:45 PM
இங்குள்ள பெரும்பாலோர் போல் எனக்கும் இசையரசி பி.சுசீலா தான் மிகவும் பிடித்த பாடகி.

இவர் ஒருவர்தான், இது வரையிலும், எந்த ஸ்தாயியிலும் பிசிறடிக்காமல் பாடியவர். பொய் குரலிலும் பாடாதவர்.

எவ்வளவு சிரமமான பாடலையும், முகத்தை அஷ்ட கோணலாக்காமல் பாடியவர்.

இந்தத் திரியின் மூன்றாவது பாகத்தில், அடியேனின் இந்தப் பாடல் பதிவோடு எனது பங்கைத் தருகிறேன்.

பாடல்: மாலை சூடும் மண நாள்; படம்: நிச்சய தாம்பூலம்; வருடம்: 1962; பாடியவர்: இசையரசி பி. சுசீலா; இயற்றியவர்: கவியரசு (ஒருவன் தான்!); நடிப்பு: நடிகர் திலகம் மற்றும் ஜமுனா.

பணக்கார வீட்டுப் பிள்ளை நடிகர் திலகம் ஏழை வீட்டுப் பெண் ஜமுனாவைக் காதலித்து அவருடைய தகப்பனாரின் (எஸ். வி. ரங்கா ராவ்) எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டு, வீட்டை விட்டு வெளியேறுகிறார்.

வீம்புடன் வெளியேறினாலும், வாழ்க்கையை நடத்துவது சிரமமாகிறது வேலை கிடைக்காததனால்.

விடிந்தால் தீபாவளி. அதுவும் தலை தீபாவளி. வீதியில், எல்லோரும் குடும்பத்தோடு தீபாவளியை புதுத் துணி உடுத்தி, பட்டாசு வெடித்துக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தான்? ஒரு கைக்குட்டையைக் கூடத் தன்னை நம்பி வந்தவளுக்கு வாங்கிக் கொடுக்க முடியாத நிலை. அப்படியே, இறுகி, கூனிக் குறுகி, சப்த நாடியும் ஒடுங்கி, வீட்டினுள் நுழைகிறான் நாயகன். உடன், நாயகி நாயகனிடம், என்ன ஆயிற்று, ஏன் இப்படி இருக்கிறீர்கள் என கவலையோடு வினவ, நாயகனும் நிலையைத் தெரிவிக்க, உடனே, நாயகனின் கவலையையும் விசனத்தையும் போக்கும் வண்ணம், அவனை உற்சாகப் படுத்த பாடத் துவங்குகிறாள்.

இந்தப் பாடலில் இரண்டு கருப்பொருள்கள் உள்ளன. ஒன்று, நாளின் முக்கியத்துவம் மற்றொன்று ஒரு பொருளின் முக்கியத்துவம். எத்தனையோ தீபாவளி வரும் தலை தீபாவளி? ஒரு முறை தானே வரும். அந்த முக்கியமான நாளில், ஒரு பொருளையும் மனைவிக்கு வாங்கித் தர முடியவில்லையே என்ற நாயகனின் கவலையைப் போக்க, இந்த இரண்டு கருப் பொருள்களை வைத்து, கவி புனைகிறார் கவியரசு.

மாலை சூடும் மண நாள்
இள மங்கையின் வாழ்வில் திருநாள்
சுகம் மேவிடும் காதலின் எல்லை
வேறொரு திருநாள் இனி இல்லை

நாள் என்னைய்யா நாள்? நானும் நீயும் மனம் ஒற்று சந்தோஷமாக இருக்கும் ஒவ்வொரு நாளுமே திருநாள் தானே?

பல்லவியிலேயே, நாயகனுக்கு கொஞ்சம் உற்சாகம் வரணுமே!

இப்போது, சரணம். இதில் முதல் முக்கியக் கருப்பொருள் அதாவது நாள்.

காதல் கார்த்திகை திருநாள் (இருவரின் அன்பு ஒன்றே போதும், கார்த்திகை தீபத்தைக் கொண்டாட என்கிறாரா?)
மனம் கலந்தால் மார்கழித் திருநாள் (உங்கள் ஊகத்துக்கே விட்டு விடுகிறேன்!)
சேர்வது பங்குனித் திருநாள் (பங்குனியில் தானே முக்கிய விசேஷங்களுக்கு அச்சாரம் போடுவார்கள்)
நாம் சிரிக்கும் நாளே திருநாள் (விளக்கமே தேவையில்லை!!)

இரண்டாவது சரணம். இதன் கருப்பொருள் "ஒரு பொருள்". அதாவது புதுத் துணி வாங்கித் தர முடியவில்லையே என்ற ஏக்கம்.

மங்கலக் குங்குமம் போதும் (வீட்டிலேயே உள்ளது)
சிறு மலரும் மணமும் போதும் (அந்த காலத்தில் ஒரு எட்டணாவில் வாங்கி விடலாம்!)
பொங்கிடும் புன்னகை போதும் (விலையே இல்லை!!)
மனம் புது மணத் திருநாள் காணும் (இந்த வரியில், பொருளையும் நாளையும் சேர்த்து விடுகிறார் பாருங்கள் - அதாவது, பூ வாங்கி, என் நெற்றியில் திலகமிட்டு நீங்கள் புன்னகைக்கும் தருணம் ஒவ்வொன்றும் ஒரு திருநாள் என்று, இந்தப் பாடலின் முக்கியக் கருப்பொருள்கள் நாள் மற்றும் பொருளின் முக்கியத்துவத்தை அந்தக் கடைசி வரியில் சொல்லி, முத்தாய்ப்பாக பாடலின் நோக்கத்தையும் கடைசியில் மறக்காமல் இணைக்கும் விந்தை!

எப்பேர்பட்ட தத்துவ ஜாலத்தை, எளிய வார்த்தைகளால் புரிய வைத்த அந்த ஜீவக் கவிஞனை என்னவென்று போற்றுவது?

இந்தப் பாடலின் எளிமையை (மெல்லிசை மன்னர்கள்) பேசுவதா?
தேனினும் இனிய குரலில் பாடிய இசையரசியைப் புகழ்வதா? (பிரம்மன் இவரைப் படைக்கும் போது, கூடவே தேனையும் அவர் தொண்டையில் கொட்டி விட்டானோ?!)
அற்புதமாக, ஜீவனுடன் நடித்துக் காட்டிய நடிகர் திலகத்தையும், ஜமுனாவையும் சிலாகிப்பதா?

அது சரி. நடிகர் திலகம் இடம் பெற்ற பாடலை சொல்லி விட்டு, அவரைப் பற்றி சொல்லாமல் விடுவதா? பாடல் துவங்கியதும் அந்தப் படியோரம் இலேசாக காலை விரித்துக் கொண்டு மய்யமாக அதே நேரம் சோகமாக நிற்பதைச் சொல்வதா; மேலே இரண்டு பேரும் சென்று அங்கே படியோரம் நிற்கும் போது, மெல்ல மெல்ல அவர் முகம் இயல்பு நிலைக்கு மாறி, அந்த முழங்கையை அவரது பிரத்யேக ஸ்டைலில் கைப் பிடி மேல் ஊன்றிக்கொண்டு ஜமுனாவைப் பார்ப்பதை சொல்வதா? பாடலின் முடிவில் இருவரும் சேர்ந்து பாடலை முடிக்கும் போது காட்டும் தன்னை மறந்த நிலையை சொல்வதா! (சும்மா சொல்லக் கூடாது, ஜமுனாவும் அற்புதமாக செய்திருப்பார். அவருடைய காதோர முடிக்கற்றை காற்றில் இலேசாகக் கலைந்து கன்னத்தின் மேலே இருக்கும் அழகே அழகு, அந்தக் கடைசி போஸில்! இந்தப் போஸே தானே பட விளம்பரங்களிலும் இருந்தது.)

மனத்தைக் கவரும் மதுர கானங்களில் எனது முதல் பெரிய பதிவு. என் மனத்தைக் கொள்ளை கொண்ட இருவரின் (நடிகர் திலகம் மற்றும் கவியரசு) பாடலுடன் துவங்குவது தற்செயலாக இருந்தாலும், மனதுக்கு மகிழ்ச்சியே.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

chinnakkannan
20th October 2014, 04:51 PM
பார்த்த சாரதி சார்..வாங்கோ வாங்கோ.. அழகுப்பாட்டுக்கு அழகான விளக்கங்கள்.. நன்றி..இன்னும் இன்னும் எழுதுங்கோ..

ஆப் கேலியே வீடியோ நீச்சே ஹை..! :)

http://www.youtube.com/watch?v=7zRfhAMqOKA

Gopal.s
20th October 2014, 06:57 PM
பெயர்தானா பார்த்தசாரதி. பார்க்காத சாரதி ஆகவே மாறி விட்டார்.
வந்தாலும் மாலை சூடி வந்தீர்கள். எங்களுக்கெல்லாம் திருநாள்.

rajeshkrv
20th October 2014, 08:23 PM
பார்த்த சாரதி ஜி, பார்த்த மாத்திரத்திலேயே உங்கள் பதிவுகளின் தாசனாக்கிவிட்டீர்.. இசையரசியின் புகழ் பாடிய உமது நாவிற்கும் கைகளுக்கும் தேனாபிஷேகம் செய்கிறேன்.
வருக வருக ... பங்களிப்பு பெருக பெருக ... அதை நாம் அனைவரும் ஆசை தீர பருக பருக .... அள்ளி தருக தருக

rajeshkrv
20th October 2014, 08:52 PM
வாசு ஜி, இரண்டு நாட்களாக உங்கள் இன்றைய ஸ்பெஷல் தூள். அதுவும் தேடி வந்த மாப்பிள்ளை பாடல் டாப் கிளாஸ்....

vasudevan31355
20th October 2014, 09:02 PM
வணக்கம் ராஜேஷ்ஜி! நன்றி!

rajeshkrv
20th October 2014, 09:18 PM
வணக்கம் வாசு ஜி,

நலம் தானே .... மழை ஓய்ந்ததா?

vasudevan31355
20th October 2014, 09:25 PM
ராஜேஷ்ஜி!

மழை விட்டு விட்டு பெய்கிறது. ஆனால் நிரம்ப வலு இல்லை. ஆனால் நம் இசை மழை மட்டும் ஓயாது.:)

'ஸ்வர்ண மஞ்சரி' பாடல் இனிமை.

'பக்த துக்காராம்' நடிகர் திலகம் வீர சத்ரபதி சிவாஜியாக நடித்ததால் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். சிறிது நேரமே வந்தாலும் அதம் பறக்கும்.

நாகேஸ்வரராவின் அமைதியான நடிப்பு எவரையும் அடிமையாக்கும் இந்தப் படத்தில். காஞ்சனா நாட்டியப் பாடலும் நன்று. இதே போல வில்லன் நாகபூஷணம் சதியால் நாகேஸ்வரராவை மயக்க காஞ்சனா ஆடும் நடனப் பாடல் (பூஜைக்கு வேளாயரா) ஒன்று உண்டு. ஆனால் நாகு மயங்காமல் 'உன் அழகும், இளமையும் சிறிது நாளைக்கே...நாளையே உன் அழகு குலைந்து உன் நாடி தளர்ந்து முதுமை எய்து விடுவாய் ...என்று அறிவுரை சொல்லி பாடி திருத்துவார். அந்தப் பாடலும் அற்புதமாய் இருக்கும். பாடகர் திலகம் தமிழில் இப்பாடலைப் பாடியிருப்பார். இப்படத்தில் மொத்தம் 17 பாடல்கள். ஒவ்வொன்றும் மணிமணியாக இருக்கும்.

'மங்கையர் உள்ளம் மங்காத செல்வம்' மயில் டான்ஸ் பாடல் 'வருமோ இது போல் ஒருநாள்' ரொம்ப ரசித்தேன்.

rajraj
20th October 2014, 09:27 PM
... மழை ஓய்ந்ததா?

gaana mazhai eppadi Oyum? :)

vasudevan31355
20th October 2014, 09:29 PM
சி.க.சார்,

தூ.க.ஒன் மழைப் பாடல் தூள். ரொம்பப் பிடித்த பாட். இப்பத்தான் சின்னக் கண்ணன்.:ty:

vasudevan31355
20th October 2014, 09:32 PM
gaana mazhai eppadi Oyum? :)

100% correct

vasudevan31355
20th October 2014, 09:36 PM
'பக்த துக்காராம்' படத்தின் மிகவும் புகழ் பெற்ற பாடலான 'கருணாமையா தேவா... பாண்டுரங்க விட்டலா' இதோ.

நடிகர் திலகத்தின் கம்பீரமும், நாகுவின் பக்திப் பிரவாகமும் நம் மனதை மயக்கும்.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=KihtQrNHuOw

vasudevan31355
20th October 2014, 09:40 PM
மாலை மதுரம்

'நல்ல பிள்ளை' படத்தில் ஒரு பாடல்.

'ஏகாந்த ராஜா நீ' பி.லீலாவின் குரலில் அமைதி குடி கொண்ட அற்புதமான பாடல்.

ராஜ்ராஜ் சாருக்கு வேலை வைத்துவிட்டேன்.:) இந்தி ஒரிஜினல் பின்னாலேயே வரும் என்று நம்புகிறேன். :)


http://www.youtube.com/watch?v=_8QjiW6HLGo&feature=player_detailpage

vasudevan31355
20th October 2014, 09:44 PM
மாலை மதுரம்

'நல்ல தீர்ப்பு' படத்திலிருந்து ஒரு கேட்கக் கிடைக்காத அரிய கானம்.

'நித்திரையில் சித்திரக் கனவு ஒத்திகை பாக்குது'


http://www.youtube.com/watch?v=U8vgCcJtSrc&feature=player_detailpage

vasudevan31355
20th October 2014, 09:49 PM
மாலை மதுரம்

'விளையாடு ராஜா விளையாடு'

டாக்டர் சந்திரபாபுவின் வேடிக்கை விளையாட்டுப் பாட்டு. (குரங்கு சேட்டைக்கும், இவருக்கும் அப்படி ஒரு தொடர்பு) உடன் நர்ஸ் ஜி.சகுந்தலா.

'நான் சொல்லும் ரகசியம்' படத்தின் கலகலப்பான பாடல்.


http://www.youtube.com/watch?v=g-MyxLv24XI&feature=player_detailpage

vasudevan31355
20th October 2014, 09:55 PM
மாலை மதுரம்

'கடவுளின் குழந்தை' திரைப்படத்திலிருந்து மதுரக் குரலோன் பி.பி.ஸ்ரீனிவாஸின் குரலோடு இசையரசியும் சேர்ந்தால்.

'சின்ன சின்னப் பூவே'

கல்யாண் குமார், (இது கல்யாண் குமாரின் முதல் தமிழ்ப் படமா?) ஜமுனா இணைவில்.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=T8g1g8Mzkgo

rajraj
20th October 2014, 09:57 PM
ராஜ்ராஜ் சாருக்கு வேலை வைத்துவிட்டேன்.:) இந்தி ஒரிஜினல் பின்னாலேயே வரும் என்று நம்புகிறேன். :)


From Albela(1952):

Dheerese Aajaari Ankhiyan Mein.....

http://www.youtube.com/watch?v=8h94Qg1g-JI


vaathiyaarukke assignment? rojulu maaraayi ! :lol:

vasudevan31355
20th October 2014, 10:05 PM
ராஜேஷ்ஜி

p m.:)

rajeshkrv
21st October 2014, 06:38 AM
From Albela(1952):

Dheerese Aajaari Ankhiyan Mein.....

http://www.youtube.com/watch?v=8h94Qg1g-JI


vaathiyaarukke assignment? rojulu maaraayi ! :lol:

இதோ இதன் தெலுங்கு வடிவம் - இசையரசியின் குரலில்

http://www.youtube.com/watch?v=UPzz4_7Z6q8

RAGHAVENDRA
21st October 2014, 07:07 AM
சாரதி சார்
வருக வருக..
அட்டகாசமான பாடலுடன் தங்களுடைய பங்களிப்பை இத்திரியில் துவங்கியுள்ளீர்கள்..
தொடர்ந்து தங்களுடைய பங்களிப்பை அனைவரையும் போல நானும் விரும்புகிறேன்.
அன்புடன்

rajeshkrv
21st October 2014, 09:47 AM
தேனிசை தென்றலின் முத்துக்கள் - 9

80'களின் இறுதிகளில் பல புதிய குரல்கள் அறிமுகாயின . அதில் எனக்கு மிகவும் பிடித்த பெண் குரல் (சுஜாதவிற்கு அப்புறம் சுனந்தா).
ஆம் இளையராஜாவின் பெருமைக்குரிய அறிமுகமானார் . ஆம் எனக்கு மிகவும் பிடித்த “காதல் மயக்கம் அழகிய கண்கள் துடிக்கும்” பாடலின் மூலம் அறிமுகமான சுனந்தா நல்ல குரல்வளம், அழகாக பாடக்கூடியவர்.. அதன் பிறகு ஒரு 5 ஆண்டுகள் நிறைய பாடினார். அப்படி அவர் பாடிய ஒரு பாடல் அதுவும் தேனிசைத்தென்றல் தேவாவின் இசையில் இடம்பெற்ற பாடலே இன்றைய முத்து .

http://3.bp.blogspot.com/_7sFnp21KUjE/TJJuuxlTM_I/AAAAAAAAAEg/QiT6HBxpe9I/s400/sunanda.jpg

ஹிந்துவில் சுனந்தா பற்றிய கட்டுரை.
http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/article3203817.ece

சரி பாடலுக்கு வருகிறேன்.
அப்பொழுது அறிமுகமாகியிருந்த பிரஷாந்த் மற்றும் கண்ணழகி மோகினி இருவரும் சேர்ந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்திருப்பார் அந்த தயாரிப்பாளர்
இருவரையும் ஜோடி சேர்த்தார் “உனக்காக பிறந்தேன் “ என்ற படத்திற்கு.

http://i1135.photobucket.com/albums/m629/arsaraogi/lists711/ResizeofIMG_9812.jpg

இது கிட்டத்தட்ட புன்னகை மன்னன் சாயல் .ஆம் இந்திய இலங்கை காதல்.. இதில் இலங்கையிலிருந்து ஓடி வரும் பெண்ணாக மோகினி அவரைக்காப்பாற்றுபவராக பிரஷாந்த்..

இதற்கு தேவா அருமையான பாடலகளை தந்திருந்தார்.

மூன்று பாடல்கள் மிகவும் அருமையான பாடல்கள்

அதிலும் இந்த பாடல் அபாரம்... பிரஷாந்திடம் மோகினி அவருக்கு எப்படிப்பட்ட பெண் வேண்டும் , காதலி இருக்கிறாரா என்று கேட்க
அதற்கு பிரஷாந்த் பதில் சொல்வதாக பாடல்

வாலி ஐயாவின் அருமையான வரிகள், பாலாவும் சுனந்தாவும் அழகாக பாடும் பாடல்
எல்லோரும் கேட்டு மகிழ வேண்டிய பாடல்

இதோ
பெண் வேணும் ஒரு பெண் வேணும் பசும் பொன்னு நிறத்துல பெண் வேணும்

திரை: உனக்காக பிறந்தேன்
இசை: தேவா
வரிகள் வாலி
குரல்: எஸ்.பி.பாலா, சுனந்தா

பெண் வேணும் ஒரு பெண் வேணும்
பசும் பொன்னு நெறத்துல ஒரு பெண் வேணும்
சொல்லவா சொல்லவா சுகம் அல்லவா
சொல்லவா சொல்லவா சுகம் அல்லவா
அந்த மானும் கிடைத்தொரு மாலை தொடுத்திட*

பெண் வேணும் ஒரு பெண் வேணும்
பசும் பொன்னு நெறத்துல ஒரு பெண் வேணும்
பெண் வேணும் ஒரு பெண் வேணும்
பசும் பொன்னு நெறத்துல ஒரு பெண் வேணும் பெண் வேணும்...

அழகிய கண்ணா உன்னிடத்தில் பழகிய பெண்ணா
இதுவரை இல்லை கற்பனையில் எழுந்தது முல்லை
அந்த வாசமலர் அவள் எப்படியோ
உன்னை வாரியணைத்திடும் பூங்கொடியோ
புது வண்ணப்புதையலில் பூத்திருக்கும்
விழி வெச்ச இடமெங்கும் பொன்னிருக்கும்
யாரது அந்த தேவதை ஊரெது நீயும் சொல்லிடு
அந்த சாமிதான் சொல்லனும் தேவியை காட்டனும்

பெண் வேணும் ஒரு பெண் வேணும்
பசும் பொன்னு நெறத்துல ஒரு பெண் வேணும்
பெண் வேணும் ஒரு பெண் வேணும்

அபிநய கண்கள் அவள் ஒரு அதிசய திங்கள்
மதுரகப்பூவில் அவளது நவரச கோவில்
உன் கற்பனை அற்புதம் இன்னும் சொல்லு
ஒரு காதல் கவிதையை பாடித் தள்ளு
புது சொர்க்கத்தை இன்பத்தை நீ ரசிக்க
உன் பக்கத்தில் வெக்கத்தில் பூவிருக்கு
யாரது அந்த தேவதை ஊரெது நீயும் சொல்லிடு
அந்த நேரம் பிறந்திடும் ஆவல் தெரிந்திடும்

பெண் வேணும் ஒரு பெண் வேணும்
பசும் பொன்னு நெறத்துல ஒரு பெண் வேணும்
பெண் வேணும் ஒரு பெண் வேணும்
சொல்லவா சொல்லவா சுகம் அல்லவா
சொல்லவா சொல்லவா சுகம் அல்லவா
அந்த மானும் கிடைத்தொரு மாலை தொடுத்திட*

இலங்கை வானொலி அடிக்கடி ஒலிபரப்பிய பாடல் இது.
எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

http://www.4shared.com/mp3/OnIZqhJNce/Pen_Venum_Oru_Pen_-_Unakkaga_p.html

chinnakkannan
21st October 2014, 10:17 AM
ஹாய் குட்மார்னிங்க் ஆல்..

ராஜேஷ் ஜி..வாவ் என்னா பாட்டுங்க அது.. எனக்கு ரொம்ப ப் பிடித்த பாட்டு பெண்வேண்டும் ஒரு பெண்வேண்டும்.. எப்படி மறந்தேன்.. மிக்க நன்றி நினைவூட்டலுக்கும் பாடலுக்கும்..

மனசுக்குள்ற ஒரு சின்ன விரதம் எடுத்திருந்தேன்.. அதை உங்கள் போஸ்ட்டிங்க் உடைத்து விட்டது :) (வேறென்ன வேறு இழையில் ஆரம்பித்த தொடர்களை எழுதிவிட்டுத் தான் இங்கு வரவேண்டுமென)

rajeshkrv
21st October 2014, 10:36 AM
வாசு ஜி
இதோ ஒரு கன்னட பாடல்

நவஜீவனா திரையில் ராஜன் நாகேந்திராவின் இசையில் இசையரசி கலக்கும் பாடல்

https://www.youtube.com/watch?v=Wf4iRtxo4hE

rajeshkrv
21st October 2014, 10:36 AM
ஹாய் குட்மார்னிங்க் ஆல்..

ராஜேஷ் ஜி..வாவ் என்னா பாட்டுங்க அது.. எனக்கு ரொம்ப ப் பிடித்த பாட்டு பெண்வேண்டும் ஒரு பெண்வேண்டும்.. எப்படி மறந்தேன்.. மிக்க நன்றி நினைவூட்டலுக்கும் பாடலுக்கும்..

மனசுக்குள்ற ஒரு சின்ன விரதம் எடுத்திருந்தேன்.. அதை உங்கள் போஸ்ட்டிங்க் உடைத்து விட்டது :) (வேறென்ன வேறு இழையில் ஆரம்பித்த தொடர்களை எழுதிவிட்டுத் தான் இங்கு வரவேண்டுமென)

சிக நன்றி. ஆம் அருமையான பாட்டு

chinnakkannan
21st October 2014, 10:49 AM
தமிழில் ஆட்டம் என்றால் என்னவாம்.. டான்ஸ்.. ஆடுதல்.. நடனம் எனச் சொல்லலாம்..ஆட்டமா தேரோட்டமா பாட்டும் கூடவே ரம்யா க்ருஷ்ணனும் நினைவுக்கு வந்தாலும் வருவார்கள்!

அதுவே சுசீலாம்மவின் ஒரு பாடல் மானாட்டம் வண்ண மயிலாட்டம் பூவாட்டம் வண்டு தேனாட்டம் தானாடும் மங்கை சதிராட்டம்கண்டு தேனோடும் எங்கும் நதியாட்டம்.. என்ற பாட்டில் வருகிற ஆட்டம்- மான் மயில் பூ தேன் நதி எல்லாவற்றிலும் போல என்பது போலப் பொருள் (ஹையா என்னா ஒரு இன்வென்ஷன்!) இதுவும் கண்ணதாசன்..இன்னொரு பாட்டும் நினைவுக்கு வந்த்து..அதுவும் கண்ண தாசன்

கொஞ்சம் வில்லங்கமான கதைகளைக் கொண்டபடங்கள் அப்போது மலையாளத்தில் வந்துகொண்டிருந்த காலகட்டம்..சில ஏ சென் ட்டரில் ப்ரமாதமாக ஓடின..ஆவ நாழியோ ஆ நிமிஷமோ இந்தப் பட்த்தின் பெயர் என நினைக்கிறேன்..பூர்ணிமா ஜெயராமும் உண்டு என்பது போல் நினைவு..ஆனால் இதன் மலையாள வெர்ஷன்பார்க்கவில்லை..தமிழில் கே.பாலச்சந்தர் எடுத்தார்..
எஸ்.பி பாலசுப்ரமணியம் பாடிய பாட்டு இது சரத் சுஜாதா சரிதா.. நடித்த படம்..எம்.எஸ்.விஸ்வனாதன் இசை..
நண்பனுடன்லொங்கிடி லொங்கிடி என சைக்கிளில் சுற்றி எந்தப் படமும்கிடைக்காமல் ஒரு தீபாவளி நாளில் மார்னிங் ஷோ மினிப்ரியாவில் பத்து மணிக்காட்சிக்கு பத்தரைக்குப் போய் பாதியில் இருந்து பார்த்த படம்.. உடன் இந்தப் பாடல் வந்த்து என நினைக்கிறேன்..

**

தேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம்
காவிரி பொங்கிடும் நீரோட்டம்,
கண்டதும் நெஞ்சினில் போராட்டம் போராட்டம்

பொன்னாட்டம் அங்கு பெண்ணாட்டம்
என் கண்ணோட்டம் ஒரு வெள்ளோட்டம்
சின்ன சின்ன நடை திண்டாட்டம்
அதை கண்டதும் நெஞ்சினில் கொண்டாட்டம்

பூந்தோட்டம் பூந்தோட்டம் கண்ட மானாட்டம்
பொன் வண்டாட்டம் இடும் தேனாட்டம்
வண்ண வண்ண முகம் பாலாட்டம்
அந்த வஞ்சியின் மெல்லிடை நூலாட்டம்

சேலாட்டம் விழி சீராட்டும்
இளம் தண்டாட்டம் உடல் பாராட்டும்
எண்ண எண்ண சுகம் உள்ளோட்டம்
எனை இந்திர லோகத்தில் தாலாட்டும்

தேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம்
காவிரி பொங்கிடும் நீரோட்டம்
கண்டதும் நெஞ்சினில் போராட்டம் போராட்டம்

**

படத்தோட கதை..ம்ஹூம் சொல்ல மாட்டேன்.. பாலச்சந்தர் டச் கொஞ்சம் நன்றாக இருக்கும் என நினைவு..

இன்னொரு பாட்டு.. நானா பாடுவது நானா – வாணி ஜெயராம் மும் நன்றாக இருக்கும்..

அனைத்து நண்பர்களுக்கும் மன்ங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்..


http://www.youtube.com/watch?v=XA0_hc5GxPc

Gopal.s
21st October 2014, 11:09 AM
karthik,

Pl.Come . I want to finish the serial on M.S.V and be away from Dec.

vasudevan31355
21st October 2014, 11:16 AM
இன்றைய ஸ்பெஷல் (100)

http://4.bp.blogspot.com/-yKjEItOYO-M/U-5p1vxB5hI/AAAAAAAAH24/OuPZbSziKx0/s1600/100.gif

http://photos1.blogger.com/blogger2/8071/1647/1600/tamil_diwali_484X133_ba_051.gif

இன்றோடு 'இன்றைய ஸ்பெஷல்' தனது 100 ஆவது பாடலைத் தொடுகிறது. 100 ஆவது பாடல் என்பதால் மிக ஸ்பெஷலாகவும் ஆகிறது.

எனவே தான் ஒரு அமர்க்களமான டீஸிங் பாடலை எடுத்தேன். அதுவும் நடிகர் திலகத்தின் பாடல். 'ராஜா ராணி' என்ற அற்புதமான படத்தின் பாடல்.

http://blog-assets.spuul.com/wp-content/uploads/2013/11/Raja-Rani.jpg

படம்: ராஜா ராணி

நடிகர்கள்: நடிகர் திலகம், பத்மினி, எஸ்.எஸ்.ஆர், என்.எஸ்.கிருஷ்ணன், டி. ஏ.மதுரம்

கதை, வசனம்: மு.கருணாநிதி

ஒளிப்பதிவு: ஜி.விட்டல் ராவ்.

இசை: 'எனதருமை' டி.ஆர்.பாப்பா

இயக்கம்: ஏ.பீம்சிங்.

http://i1.ytimg.com/vi/vAE6xvRMn34/mqdefault.jpg

இளமை கொப்பளித்து துள்ளும் ஒரு படம். ஜாலி... ஜாலி... ம்... படம் முழுக்க அப்படி ஒரு ஜாலி. அழகு சுந்தரனாய் நடிகர் திலகம். அதே போல அழகுப் பதுமையாய் பத்மினி. இந்தப் படத்தில் இந்த ஜோடியின் இணைவுக்கு ஈடு இணையே இல்லை எனலாம். என்.எஸ்.கிருஷ்ணன், டி. ஏ.மதுரம் காமெடி அருமை. நடிகர் திலகத்தின் இரு ஓரங்க நாடகங்கள். சேரன் செங்குட்டுவன், சாக்ரடீஸ். இரண்டைப் பற்றியும் சொல்ல திரி போதாது. ஒளிப்பதிவு கண்ணைப் பறிக்கும். உடையலங்காரங்கள் பிரமிப்பூட்டும். இன்றைய புது படங்களுக்கு சவால் விடும் இளமைப் படம். எப்போதுமே எவர்க்ரீன் படம்.

பாடல் சிச்சுவேஷன்.

தன்னை மறைமுகமாகக் காதலிக்கும் பத்மினியை செம நையாண்டி, நக்கல் செய்து நடிகர் திலகம் பாடிய பாடல். தனது தந்தையின் ஆணைக்கேற்ப ஏழையான பத்மினி ஆடவரை ஏறெடுத்தும் பாராமல் இருப்பார் நடிகர் திலகமான ராஜாவைக் காணும் வரை. நடிகர் திலகத்திடம் காதல் வலையில் மாட்டிக் கொண்டு பல பொய்கள் சொல்லி தான் பணக்காரப் பெண் என்று சொல்லி அவரிடமிருந்து தப்பிப்பார்.

ஒரு கட்டத்தில் உண்மை தெரிந்தவுடன் நடிகர் திலகம் பத்மினியைக் கேலி செய்து பாடும் பாடல் இது.

என்ன ஒரு கேலி, நையாண்டி, நக்கல்! அதுவும் நடிகர் திலகத்திற்கு இதற்கெல்லாம் சொல்லியா தரணும்? கிளப்பி விடுவார் கிளப்பி. கொள்ளை அழகு. ஸ்லிம்மான உடல். ஒயிட் அண்ட் ஒயிட் பேன்ட் கோட் சூட். அப்படியே அள்ளிக் கொண்டு போவார் அழகில். ஒல்லியாக இருப்பதால் உயரமாக வேறு தெரிவார். ஒவ்வொரு வரிக்கும் அவர் முகம் காட்டும் கேலி, குறும்பு இருக்கிறதே... அப்பா! பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

இந்தப் பாடல் காமெடிப் பாடல் என்பதால் நடிகர் திலகத்திற்கு பின்னணி பாடும் அதிர்ஷ்டம் எஸ்.சி.கிருஷ்ணன் அவர்களுக்குக் கிடைத்தது. குரல் நடிகர் திலகத்திற்கு அவ்வளவாகப் பொருந்தாவிட்டாலும் நடிகர் திலகம் தன் நடிப்பால் அதை சரிகட்டி விடுவார் வழக்கம் போல்.

http://i.ytimg.com/vi/7TKkjd2wElI/maxresdefault.jpg

'எண்ணற்ற பொய் சொல்லி
என்னையே மாற்றிய என் தங்கமே'

என்னை ஏமாற்றிய தங்கமே
என்னையே மாற்றிய என் தங்கமே

என்று இரு பொருள்பட பிய்த்து உதறுவது பலே!

'அரிச்சந்திரன் வீட்டுக்கு அடுத்த வீட்டுப் பெண்ணே
அநியாயமாய் உண்மை சொல்வதிலே
உனக்கு அவனியிலே நிகர் யாரு கண்ணே'

வரிகளில் முக பாவங்களில் கலக்கி விடுவார். அந்த முகம், உடல் நொடித்துக் காட்டும் நொடிப்பு இருக்கிறதே! பொம்பளை கெட்டாள் போங்கள். 'யம்மாடி! உன்னைப் போல உண்மை சொல்ல ஆளே இல்லை' என்பது போல அப்படி ஒரு குசும்பு. நாடக மேடை அனுபவம் அப்படி கைக்கொடுக்கும்.

அது போல பாடலுக்கு நையாண்டி செய்துகொண்டே ஆடும் ஸ்டெப்ஸ் இருக்கிறதே! சும்மா தூள். கோட்டின் இரு பாக்கெட்டுகளிலும் கைகளை நுழைத்துக் கொண்டு இடுப்பை நொடித்தபடி பத்மினியிடம் வருவதும், அப்படியே ஆடியபடி பின்புறம் செல்வதும் கலக்கல். ஓரக்கண்களால் பத்மினியைப் பார்த்துக் கொண்டே ஆடுவது இன்னும் அழகு. கண்களில் கேலி, குறும்பு கொப்பளிக்கும். அதே போல 'ஆ' என்னும் போது கைகளை ஒரு சுழற்று சுழற்றுவார் சர்வ அலட்சியமாக.

'அட இஸ்பேட் ராணி'

என்று சொல்லிவிட்டு ஒரு ஸ்டெப் போடுவார் பாருங்கள். அது அவரால் மட்டுமே முடிந்த ஒன்று. கால்கள் பின்னியெடுக்கும்.

இனி பாடலின் வரிகள்

http://i.ytimg.com/vi/dQD3Uef3EiE/0.jpg

கண்ணற்ற தகப்பனுக்கு
பெண்ணாகப் பிறந்தவளே
எண்ணற்ற பொய் சொல்லி
என்னை ஏமாற்றிய என் தங்கமே

ஹஹஹஹ

எண்ணற்ற பொய் சொல்லி
என்னையே மாற்றிய என் தங்கமே

பூனை கண்ணை மூடிக் கொண்டால்
பூலோகம் இருண்டு போகுமோ
மியாவ் மியாவ்
வானை நோக்கித் திரையைப் போட்டால்
வட்டநிலாவும் மறைந்து போகுமோ
மியாவ் மியாவ்
வானை நோக்கித் திரையைப் போட்டால்
வட்ட நிலாவும் மறைந்து போகுமோ
பூனை கண்ணை மூடிக் கொண்டால்
பூலோகம் இருண்டு போகுமோ
மியாவ் மியாவ்

கெட்டிக்காரன் பொய்யும் புரட்டும் எட்டு நாளைக்கு
கெட்டிக்காரன் பொய்யும் புரட்டும் எட்டு நாளைக்கு
இந்தக் கட்டிக்கரும்பின் பொய்யும் புரட்டும்
எத்தனை நாளைக்கு
இந்தக் கட்டிக்கரும்பின் பொய்யும் புரட்டும்
எத்தனை நாளைக்கு
ஆ...
பூனை கண்ணை மூடிக் கொண்டால்
பூலோகம் இருண்டு போகுமோ
மியாவ் மியாவ்

(பத்மினி

'நான் ஒன்னும் பொய் சொல்லல...
எல்லாம் உண்மைதான்'

நடிகர் திலகம்

'ஓ அப்படியா! நீ சொன்னதெல்லாம் உண்மைதானா'?!

பத்மினி

'ஆமாம்'

நடிகர் திலகம்

'யம்மா!')

அரிச்சந்திரன் வீட்டுக்கு அடுத்த வீட்டுப் பெண்ணே
அரிச்சந்திரன் வீட்டுக்கு அடுத்த வீட்டுப் பெண்ணே
அநியாயமாய் உண்மை சொல்வதிலே
உனக்கு அவனியிலே நிகர் யாரு கண்ணே
நிகர் யாரு கண்ணே

ராஜா

ராணி

சீட்டுக்கட்டு ராணி போலே சிக்கி விட்டாய் பெண் மயிலே
சீட்டுக்கட்டு ராணி போலே சிக்கி விட்டாய் பெண் மயிலே
வாட்டமே இல்லாமலே வாழலாம் பூங்குயிலே
வாட்டமே இல்லாமலே வாழலாம் பூங்குயிலே

கிளாவர் ராணி உனக்கு என்ன வேணுமின்னு கேளு
கிளாவர் ராணி உனக்கு என்ன வேணுமின்னு கேளு
ஆர்டின் ராணி போல பாடு டைமண்ட் ராணி போல பாடு
ஆர்டின் ராணி போல பாடு டைமண்ட் ராணி போல பாடு

அட இஸ்பேட் ராணி

ஏனிந்த சோகமோ என் மேல் என்ன கோபமோ
ஏனிந்த சோகமோ என் மேல் என்ன கோபமோ

உண்மை சொன்ன பாவமோ
உன் மனதில் என்ன தாபமோ
உண்மை சொன்ன பாவமோ
உன் மனதில் என்ன தாபமோ
ஹய்

பூனை கண்ணை மூடிக் கொண்டால்
பூலோகம் இருண்டு போகுமோ
மியாவ் மியாவ்
வானை நோக்கித் திரையைப் போட்டால்
வட்ட நிலாவும் மறைந்து போகுமோ
பூனை கண்ணை மூடிக் கொண்டால்
பூலோகம் இருண்டு போகுமோ
மியாவ் மியாவ்


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=dQD3Uef3EiE

vasudevan31355
21st October 2014, 11:25 AM
'இன்றைய ஸ்பெஷல்' தொடர் இத்துடன் முடிவுறுகிறது.

'இன்றைய ஸ்பெஷலி'ல் இதுவரை 100 பாட்டுக்கள் அலசியுள்ளேன். பெரும்பாலும் கொஞ்சம் அபூர்வமான பாடல்கள்தாம். பாடலின் முழு வரிகள் மட்டுமல்லாது முடிந்தவரை படத்தின் கதைச்சுருக்கம், பட டெக்னீஷியன்கள் விவரம், பாடல் படமாக்கப்பட்ட விதம், காட்சிகளின் சிச்சுவேஷன், படத்தின் ஸ்டில்கள், பாடலின் வீடியோக்கள் என்று விவரித்து அளித்துள்ளேன்.

ஒவ்வொரு படத்தையும் பார்த்து, முக்கியமாக தவறு நேர்ந்து விடக் கூடாது என்பதில் மிக கவனம் கொண்டு படத்தின் டைட்டில் பார்த்து, விவரங்களை அளித்துள்ளேன். பாடல் வரிகளின் விவரங்களை இணையத்தில் எங்கும் தேடாமல், பாடலை பல தடவை போட்டுக் கேட்டுத்தான் வரிகளை டைப் செய்துள்ளேன்.

http://www.jayarammatrimony.com/jupiterwebsoft_images/nandri.jpg

வரிகளில் பிழைகள் இருந்தால் அதை பெருந்தன்மையுடன் சுட்டிக்காட்டி, அதே சமயம் பதிவுகளை மனதாரப் பாராட்டிய அன்பு சகோதரர் மதுண்ணா அவர்களுக்கு என் ஆழ்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சலிக்காமல் பாடல் பதிவுகளைப் பார்த்து பாராட்டிய அன்பு நண்பர் கோபு மற்றும் ஸ்டெல்லா மேடத்திற்கும் என் நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன்.

அதே போல புதிய முயற்சிகளை ஊக்குவித்த என் கோபாலுக்கு என் மனமார்ந்த நன்றி!

மற்றும் ராஜேஷ் சார், போனில் பாராட்டும் கிருஷ்ணா சார், ஒவ்வொரு பாடலையும் பார்த்து feedback தந்த சின்னக் கண்ணன் சார், எப்போதும் உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கும் ராகவேந்திரன் சார், இப்போது வரவில்லையென்றாலும் எப்போதும் 'இன்றைய ஸ்பெஷலை'ப் படித்துப் பாராட்டிய கார்த்திக் சார், நமது முரளி சார், திரிக்கு வர இயலாவிட்டாலும் பாடல் பதிவைப் பார்த்துவிடும் பம்மலார் சார், மற்றும் அனைத்து திரி நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

ஆதரவு தந்த வெளிப் பார்வையாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி!

அனைவருக்கும் என் இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

JamesFague
21st October 2014, 11:58 AM
Mr Neyveliar,


Regarding your Indraya Special, you have not analysed our NT's Song much than others inspite of being a hardcore PIHTAN. It shows your magnanimity but it is not the

case of few who post unrelevent things which are not required for in ths thread.


Congratulation.


Regards

chinnakkannan
21st October 2014, 12:09 PM
//பூனை கண்ணை மூடிக் கொண்டால்
பூலோகம் இருண்டு போகுமோ
மியாவ் மியாவ் // முன்பு கேட்டிருந்த பாடல் தான் வாசு சார்.. வழக்கம் போல மாலை கேட்கிறேன். அஸ் யூஸ்வல் குட்..

ஆனால் டபக்கென்று இங்கிருந்து இ.ஸ்பெ விட்டுப் போகலாம்னு பார்க்கிறீர்களே..முடியாது முடியாது நோ.. நோ நோ

அட்லீஸ்ட் வேறு ஒரு தொடர்..இன்றைய நொறுக்ஸ் வைஃபி வித் வாசு, எண்ணத்தில் தோய்ந்தும் வண்ணத்தில் தோயாத பாடல்கள், இன்றைய டிஃபன் என்பது போன்ற டைட்டிலில் ஆரம்பியுங்களேன்..:)

Gopal.s
21st October 2014, 12:19 PM
ராஜாராணி-



எனது பிடித்தம். என் மனது புரிந்துதானே உங்கள் தேர்ந்தெடுப்பும் இருக்கும்.இந்த பாடலும்,கடைசி டூயட் பாடலும் ,அப்பப்பா.... இந்த made for eachother pair இல் ஜொலிக்கும்.இந்த காட்சிகள்.படம் முடியும் தருவாயில் வரும் டூயட் நம்மை கட்டி விடும்.



நன்றி வாசுதேவன். நான் இங்கு இரண்டு வருடம் தாக்கு பிடித்ததே உங்களை ஒன்ற சிலரால்.

Richardsof
21st October 2014, 12:38 PM
வாசு சார்

100 ஸ்பெஷல் - பாடல்கள் - ஒரு அருமையான வீடியோ டைரி .தனி மனிதராக சிறந்த பாடல்களை தேர்ந்தெடுத்து நீண்ட உரையுடன் பதிவிட்ட உங்களுக்கு வாழ்த்துக்கள் .உங்களின் உழைப்பு வியக்க
வைக்கிறது .சற்று ஓய்வெடுங்கள் . உங்களுக்காக என்னுடை ஸ்பெஷல் .

http://youtu.be/IfSxRUwl1MA

gkrishna
21st October 2014, 05:12 PM
dear vaasu sir

பாகம் 1,2 மற்றும் பாகம் 3 இரண்டிலும் நீங்கள் எழுதிய இன்றைய ஸ்பெஷல் தொடர் பாடல்களின் அயராத உழைப்பிற்கு வாழ்த்துகள்

பாகம் 2 மற்றும் 3 இரண்டையும் தொகுத்து உள்ளேன் . சில பதிவுகள் எண் மீண்டும் வந்து உள்ளன.நீங்கள் 103 கிட்ட எழுதி இருக்க வேண்டும் என்று நினைக்கிறன் பாகம் ஒன்றை சிறிது நாட்களுக்குள் தொகுத்து தர முயற்ச்சிக்கிறேன். மீண்டும் எண் (என்) வாழ்த்துகள்
.

இன்றைய ஸ்பெஷல் (54) சுதந்திர தின ஸ்பெஷல். 'நாம் இருவர் ' பாகம் 2 பதிவு எண் 96 பக்கம் 10
இன்றைய ஸ்பெஷல் (54) கங்கா பாகம் 2 பதிவு எண் 218 பக்கம் 22 *
இன்றைய ஸ்பெஷல் (55) மகேஸ்வரி பாகம் 2 பதிவு எண் 455 பக்கம் 46
இன்றைய ஸ்பெஷல் (56) கெட்டிகாரன் பாகம் 2 பதிவு எண் 511 பக்கம் 52
இன்றைய ஸ்பெஷல் (57) 'அடுத்த வீட்டு பெண் ' பாகம் 2 பதிவு எண் 629 பக்கம் 63
இன்றைய ஸ்பெஷல் (58) 'சில நேரங்களில் சில மனிதர்கள்' பாகம் 2 பதிவு எண் 665 பக்கம் 67
இன்றைய ஸ்பெஷல் (59) 'ராஜா வீட்டு பிள்ளை ' பாகம் 2 பதிவு எண் 851 பக்கம் 86
இன்றைய ஸ்பெஷல் (60) 'மாதவி' பாகம் 2 பதிவு எண் 912 பக்கம் 92
இன்றைய ஸ்பெஷல் (61) 'துலாபாரம்' பாகம் 2 பதிவு எண் 1003 பக்கம் 101
இன்றைய ஸ்பெஷல் (62) 'சித்ராங்கி ' பாகம் 2 பதிவு எண் 1213 பக்கம் 122
இன்றைய ஸ்பெஷல் (63) 'மஞ்சள் குங்குமம்' பதிவு எண் 1328 பக்கம் 133
இன்றைய ஸ்பெஷல் (64) 'ருத்ர தாண்டவம் ' பதிவு எண் 1477 பக்கம் 148 பாகம் 2
இன்றைய ஸ்பெஷல் (65) 'பொன் வண்டு ' பதிவு எண் 1549 பக்கம் 155 பாகம் 2
இன்றைய ஸ்பெஷல் (66) '47 நாட்கள்' பதிவு எண் 1630 பக்கம் 163 பாகம் 2
இன்றைய ஸ்பெஷல் (67) 'வாடை காற்று ' பதிவு எண் 1673 பக்கம் 168 பாகம் 2
இன்றைய ஸ்பெஷல் (68) 'சர்வாதிகாரி' பதிவு எண் 1747 பக்கம் 175 பாகம் 2
இன்றைய ஸ்பெஷல் (69) 'இதோ எந்தன் தெய்வம்' பதிவு எண் 1829 பக்கம் 183 பாகம் 2
இன்றைய ஸ்பெஷல் (70) 'வாழையடி வாழை' பதிவு எண் 1923 பக்கம் 193 பாகம் 2
இன்றைய ஸ்பெஷல் (71) 'எங்க வீட்டு பெண் ' பதிவு எண் 2028 பாகம் 2 பக்கம் 203
இன்றைய ஸ்பெஷல் (72) ''ஞாயிறும் திங்களும்'' பதிவு எண் 2313 பாகம் 2 பக்கம் 232
இன்றைய ஸ்பெஷல் (73) லாரி டிரைவர் ராஜாக்கண்ணு பதிவு எண் 2388 பாகம் 2 பக்கம் 239
இன்றைய ஸ்பெஷல் (73) கங்கா கௌரி பாகம் 2 பதிவு எண் 2479 பக்கம் 248 *
இன்றைய ஸ்பெஷல் (74) 'கௌரி கல்யாணம்' பாகம் 2 பதிவு எண் 2710 பக்கம் 271
இன்றைய ஸ்பெஷல் (75) 'செல்லப்பிள்ளை' பாகம் 2 பதிவு எண் 2786 பக்கம் 279
இன்றைய ஸ்பெஷல் (76) 'முகத்தில் முகம் பார்க்கலாம்' பாகம் 2 பதிவு எண் 2818 பக்கம் 282
இன்றைய ஸ்பெஷல் (76) 'மலர்களே மலருங்கள்' பாகம் 2 பதிவு எண் 2858 பக்கம் 286 *
இன்றைய ஸ்பெஷல் (77)'பெண்ணே நீ வாழ்க' பாகம் 2 பதிவு எண் 2894 பக்கம் 290
இன்றைய ஸ்பெஷல் (78) 'சித்ரா பௌர்ணமி' பாகம் 2 பதிவு எண் 2955
இன்றைய ஸ்பெஷல் (78) 'இப்படியும் ஒரு பெண் ' பாகம் 2 பதிவு எண் 3086
இன்றைய ஸ்பெஷல் (79) 'ஏழைப் பங்காளன்' பாகம் 2 பதிவு எண் 3183.
இன்றைய ஸ்பெஷல் (80) வசந்த ராகம் (1986) பாகம் 2 பதிவு எண் 3255
இன்றைய ஸ்பெஷல் (81) 'சொல்லத்தான் நினைக்கிறன்' பாகம் 2 பதிவு எண் 3351
இன்றைய ஸ்பெஷல் (82) 'காதல் படுத்தும் பாடு' பாகம் 2 பதிவு எண் 3564
இன்றைய ஸ்பெஷல் (83) 'பாதுகாப்பு' பாகம் 2 பதிவு எண் 3610
இன்றைய ஸ்பெஷல் (84) 'நாளை உனது நாள்' பாகம் 2 பதிவு எண் 3645
இன்றைய ஸ்பெஷல் (85) 'நன்றி மீன்றும் வருக' பாகம் 2 பதிவு எண் 3666
இன்றைய ஸ்பெஷல் (86) 'பந்தயம்' பாகம் 2 பதிவு எண் 3741
இன்றைய ஸ்பெஷல் (87) 'ஓர் இரவு ' பாகம் 2 பதிவு எண் 3821
இன்றைய ஸ்பெஷல் (88) 'அபூர்வ சகோதரர்கள்' பாகம் 2 பதிவு எண் 3943
இன்றைய ஸ்பெஷல் (89) 'குலேபகவாலி' பாகம் 3 பதிவு எண் 78
இன்றைய ஸ்பெஷல் (90) 'சபதம்' (1971) பாகம் 3 பதிவு எண் 169
இன்றைய ஸ்பெஷல் (91) 'தாய்க்கு ஒரு பிள்ளை பாகம் 3 பதிவு எண் 264
இன்றைய ஸ்பெஷல் (92) 'மகனே நீ வாழ்க ' பாகம் 3 பதிவு எண் 307
இன்றைய ஸ்பெஷல் (93) 'வரப்ரசாதம்' பாகம் 3 பதிவு எண் 340
இன்றைய ஸ்பெஷல் (94) 'ஓடும் நதி' பாகம் 3 பதிவு எண் 416
இன்றைய ஸ்பெஷல் (95) முதலாளி பாகம் 3 பதிவு எண் 465
இன்றைய ஸ்பெஷல் (96) நான்கு கில்லாடிகள் பாகம் 3 பதிவு எண் 504
இன்றைய ஸ்பெஷல் (97) 'சங்கமம்' பாகம் 3 பதிவு எண் 535
இன்றைய ஸ்பெஷல் (98) 'கண் கண்ட தெய்வம்' பாகம் 3 பதிவு எண் 569
இன்றைய ஸ்பெஷல் (99) 'தேடி வந்த மாப்பிள்ளை' பாகம் 3 பதிவு எண் 614
இன்றைய ஸ்பெஷல் (100) 'ராஜா ராணி ' பாகம் 3 பதிவு எண் 650

chinnakkannan
21st October 2014, 06:28 PM
கிருஷ்ணா ஜி.. நல்ல காரியம் செய்தீர்கள்..நைஸ்..அண்ட் தாங்க்ஸ்.. எப்படி தீபாவளி ஊரில் போய்க்கிட்டிருக்கு மெட் ராஸா நெல்லையா.. மழை இன்னும் இருக்கா..


ராஜேஷ் ஜி..மதுரகானங்கள் 3 இன் முதல் பக்கத்தில் இதை ப் போட்டு விட முடியுமா முடிந்தால்..இதை கட் பேஸ்ட் செய்து எம் எஸ் வர்டில் வைத்துக் கொண்டு விட்டுப்போனதைப் படிக்கணும் வீக் எண்ட் ஹோம் வொர்க் :)

rajeshkrv
21st October 2014, 09:21 PM
வாசு ஜி,

ஏன் ஏன்... எதற்கு இந்த முடிவு..... இன்றைய ஸ்பெஷல் தொடர வேண்டும் ....

RAGHAVENDRA
21st October 2014, 09:59 PM
வாசு சார்
இன்றைய ஸ்பெஷல் என்றைக்குமே ஸ்பெஷல் தான். தொடருங்கள்..

RAGHAVENDRA
21st October 2014, 10:00 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/diwaligrtgs2014_zps4a973bcb.jpg

gkrishna
21st October 2014, 10:11 PM
அனைவருக்கும் இதயம் கனிந்த தீப ஒளி திரு நாள் வாழ்த்துகள்

chinnakkannan
22nd October 2014, 12:25 AM
ஹாய் ஆல் விஷ் யூ அன் ட் யுவர் ஃபேமிலி எ வெரி ஹாப்பி நியூ இயர்..ஸாரி பழக்க தோஷம்..எ வெரி ஹாப்பி தீபாவளி.

ரெண்டு பாட்டு ஒரே டைப்புன்னு தெரியுமோ..

கவிஞர் என்ன சொல்றார்… “ டியூன் போட்டார் இசையமைப்பாளர்.. எழுதிட்டேன்.பட் சரியில்லைங்க்ணா அது மாத்துங்க என்றார்..மாற்றிவிட்டேன்..அந்தப் பாட்டு..இது…” படம் சிவப்பு மல்லி

ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்
தொட்டுக்கொள்ள ஆசைகள் துள்ளும்
பூவைகையில் பூவை அள்ளிக் கொடுத்த பின்னும்

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=HJQQZDjknbI

”ஆனால் என் இதயக் கருவறைக்குள் உதித்த சிசு என்னுள்ளே உறங்கிக் கொண்டிருந்தது.. பின் இசையமைப்பாளர் வேறு ஒரு மொட்டு வழங்க அந்த சிசுவின் உயிர் அதில் போய் ஒட்டிக் கொண்டது” இப்படிச் சொல்வதாக சி.க எழுதிப்பார்க்கும் கவிஞர் யார் என்று தெரிந்திருக்குமே.. வைர முத்து படம்கருடா செளக்கியமா..

மொட்டு விட்ட வாசனை மல்லி வாங்கி வந்தேன் ஆசையில் அள்ளி
கையில் பட்டால் நோகும் என்று காம்பினைக்கிள்ளி
உள்ளங்கையில் தந்தானடி உன் பெயர் சொல்லி

(கவிஞர் வைரமுத்துவே ஒருபேட்டியில் சொன்ன விஷயம் இது.. நான் எப்போதோ படித்தது)


அனைத்து நண்பர்களுக்கும் குடும்பத்தாருக்கும் ஹேப்பி டிவாலி..ஹேப்பினஸ் ஆல்வேஸ்..அகெய்ன்..

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=0kk_L0-4b_c

Richardsof
22nd October 2014, 05:15 AM
அனைத்து நண்பர்களுக்கும் , திரியின் பார்வையாளர்களுக்கும் இதயங்கனிந்த நல் தீபாவளி வாழ்த்துக்கள் .

rajraj
22nd October 2014, 05:40 AM
Wish you all a Happy and fun filled DeepaavaLi ! :)

In case, there is a ban on fireworks where you live celebrate with this song:

oosi pattaase vedikkaiyaa thee vachchaale vedi dabaar dabaar..........

http://www.youtube.com/watch?v=6rE3chAx5C0


:)

raagadevan
22nd October 2014, 10:03 AM
Rajesh... Hope you wouldn't mind me posting a தேனிசைத் தென்றல் song to express my Deepavali wish and dream (கனவு) for my beloved India and the whole world...

கனவு காண்கிறேன் கனவு காண்கிறேன்
கண்ணில்லாதவள்(ன்) கனவு காண்கிறேன்
துப்பாக்கி எல்லாம் தூக்கிப்போடுவதாய்
ராணுவம் எல்லாம் நதிகள் இணைப்பதாய்
எல்லா நாடும் ஒரு நிலம் ஆவதாய்
எல்லா கடவுளும் ஒரு மதம் ஆவதாய்
கனவு காண்கிறேன் [நான்] கனவு காண்கிறேன்
..................................................

அகிலத்தை அன்பொன்றே ஆள வேண்டும்
ஆயுதங்கள் கண்காட்சி ஆக வேண்டும்
25-ஓடு வயது நின்று
200 ஆண்டு வரை வாழ வேண்டும்
கனவு காண்கிறேன் நான் கனவு காண்கிறேன்...

http://www.youtube.com/watch?v=UnLhKSf5So0

Here is "கவிப்பேரரசு வைரமுத்து" with my favourite lines...

கனவு காண்கிறேன் கனவு காண்கிறேன்
கண்ணில்லாதவள் கனவு காண்கிறேன்
துப்பாக்கி எல்லாம் பூக்கள் பொழிவதாய்
ராணுவம் எல்லாம் நதிகள் இணைப்பதாய்
எல்லா நாடும் ஒரு நிலமாவதாய்
எல்லா கடவுளும் ஒரு மதமாவதாய்...

கனவு காண்கிறேன் கனவு காண்கிறேன்
இரு கண்ணில்லாதவள் கனவு காண்கிறேன்
கனவு காண்கிறேன் நான் கனவு காண்கிறேன்

குண்டுகளின் சத்தங்கள் ஓய வேண்டும்
குயில் பாடும் சங்கீதம் ஒலிக்க வேண்டும்
பீரங்கிகள் சத்தங்கள் தீர்ந்து போக
பியானோவின் நாதங்கள் கேட்க வேண்டும்
குண்டுகளின் சத்தங்கள் ஓய வேண்டும்
குயில் பாடும் சங்கீதம் ஒலிக்க வேண்டும்
பீரங்கிகள் சத்தங்கள் தீர்ந்து போக
பியானோவின் நாதங்கள் கேட்க வேண்டும்

அகிலத்தை அன்பொன்று ஆள வேண்டும்
ஆயுதங்கள் கண்காட்சி ஆக வேண்டும்
இருபத்தி ஐந்தோடு வயது நின்று
இருநூறு ஆண்டு வரை வாழ வேண்டும்

கனவு காண்கிறேன் நான் கனவு காண்கிறேன்

இசை கொண்டு உலகத்தை இசைய வைப்பேன்
இயங்காத இதயத்தை இயங்க வைப்பேன்
உயிரெல்லாம் நாதத்தால் உருக வைப்பேன்
உறங்காத விண்மீனும் உறங்க வைப்பேன்

இசை கொண்டு உலகத்தை இசைய வைப்பேன்
இயங்காத இதயத்தை இயங்க வைப்பேன்
உயிரெல்லாம் நாதத்தால் உருக வைப்பேன்
உறங்காத விண்மீனும் உறங்க வைப்பேன்

மூளைக்குள் மிருகத்தோல் உரித்து வைப்பேன்
முற்றிலுமாய் உலகப் போர் நிறுத்தி வைப்பேன்
வன்முறை இல்லாத உலகம் தன்னில்
மானாட புலியாட ஆட வைப்பேன்

கனவு காண்கிறேன் கனவு காண்கிறேன்
கண்ணில்லாதவள் கனவு காண்கிறேன்
துப்பாக்கி எல்லாம் பூக்கள் பொழிவதாய்
ராணுவம் எல்லாம் நதிகள் இணைப்பதாய்
எல்லா நாடும் ஒரு நிலமாவதாய்
எல்லா கடவுளும் ஒரு மதமாவதாய்…

கனவு காண்கிறேன் கனவு காண்கிறேன்
இரு கண்ணில்லாதவள் கனவு காண்கிறேன்...

rajeshkrv
22nd October 2014, 10:41 AM
தேனிசை தென்றலின் முத்துக்கள் -10


அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்

இதே போல் ஒரு தீபாவளி அன்று வெளியான சூரியன் திரைப்படம் சக்கை போடு போட்டது.
சரத்குமார் ஒரு அந்தஸ்தான ஹீரோவாக உயர்ந்தது இந்த படத்திற்கு பிறகு தான்
பவித்ரனின் இயக்கத்தில் தேவாவின் பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட்

பிரபுதேவா விஜி ஆடும் லாலாக்கு டோல் டப்பிமா பாடல்
கந்த ஷஷ்டி கவசத்தை உல்டா செய்து அளித்த பதினெட்டு வயது
என பாடல்கள் இருந்தாலும்
இந்த பாடல் எனக்கு பிடிக்கும்.. நல்ல கும்மி பாடல் இசை, வாலி ஐயாவின் வரிகள்

பெண் குரல் தான் கொஞ்சம்.... இருந்தாலும் பாடல் ஹிட்.. பாலாவும் ஜானகியும் பாடும் கொட்டுங்கடி கும்மி கொல்லி மலை கும்மி..

இதோ

http://www.youtube.com/watch?v=YhP42NLAtRk

rajeshkrv
22nd October 2014, 10:43 AM
Rajesh... Hope you wouldn't mind me posting a தேனிசைத் தென்றல் song to express my Deepavali wish and dream (கனவு) for my beloved India and the whole world...

கனவு காண்கிறேன் கனவு காண்கிறேன்
கண்ணில்லாதவள்(ன்) கனவு காண்கிறேன்
துப்பாக்கி எல்லாம் தூக்கிப்போடுவதாய்
ராணுவம் எல்லாம் நதிகள் இணைப்பதாய்
எல்லா நாடும் ஒரு நிலம் ஆவதாய்
எல்லா கடவுளும் ஒரு மதம் ஆவதாய்
கனவு காண்கிறேன் [நான்] கனவு காண்கிறேன்
..................................................

அகிலத்தை அன்பொன்றே ஆள வேண்டும்
ஆயுதங்கள் கண்காட்சி ஆக வேண்டும்
25-ஓடு வயது நின்று
200 ஆண்டு வரை வாழ வேண்டும்
கனவு காண்கிறேன் நான் கனவு காண்கிறேன்...

http://www.youtube.com/watch?v=UnLhKSf5So0

Here is "கவிப்பேரரசு வைரமுத்து" with my favourite lines...

கனவு காண்கிறேன் கனவு காண்கிறேன்
கண்ணில்லாதவள் கனவு காண்கிறேன்
துப்பாக்கி எல்லாம் பூக்கள் பொழிவதாய்
ராணுவம் எல்லாம் நதிகள் இணைப்பதாய்
எல்லா நாடும் ஒரு நிலமாவதாய்
எல்லா கடவுளும் ஒரு மதமாவதாய்...

கனவு காண்கிறேன் கனவு காண்கிறேன்
இரு கண்ணில்லாதவள் கனவு காண்கிறேன்
கனவு காண்கிறேன் நான் கனவு காண்கிறேன்

குண்டுகளின் சத்தங்கள் ஓய வேண்டும்
குயில் பாடும் சங்கீதம் ஒலிக்க வேண்டும்
பீரங்கிகள் சத்தங்கள் தீர்ந்து போக
பியானோவின் நாதங்கள் கேட்க வேண்டும்
குண்டுகளின் சத்தங்கள் ஓய வேண்டும்
குயில் பாடும் சங்கீதம் ஒலிக்க வேண்டும்
பீரங்கிகள் சத்தங்கள் தீர்ந்து போக
பியானோவின் நாதங்கள் கேட்க வேண்டும்

அகிலத்தை அன்பொன்று ஆள வேண்டும்
ஆயுதங்கள் கண்காட்சி ஆக வேண்டும்
இருபத்தி ஐந்தோடு வயது நின்று
இருநூறு ஆண்டு வரை வாழ வேண்டும்

கனவு காண்கிறேன் நான் கனவு காண்கிறேன்

இசை கொண்டு உலகத்தை இசைய வைப்பேன்
இயங்காத இதயத்தை இயங்க வைப்பேன்
உயிரெல்லாம் நாதத்தால் உருக வைப்பேன்
உறங்காத விண்மீனும் உறங்க வைப்பேன்

இசை கொண்டு உலகத்தை இசைய வைப்பேன்
இயங்காத இதயத்தை இயங்க வைப்பேன்
உயிரெல்லாம் நாதத்தால் உருக வைப்பேன்
உறங்காத விண்மீனும் உறங்க வைப்பேன்

மூளைக்குள் மிருகத்தோல் உரித்து வைப்பேன்
முற்றிலுமாய் உலகப் போர் நிறுத்தி வைப்பேன்
வன்முறை இல்லாத உலகம் தன்னில்
மானாட புலியாட ஆட வைப்பேன்

கனவு காண்கிறேன் கனவு காண்கிறேன்
கண்ணில்லாதவள் கனவு காண்கிறேன்
துப்பாக்கி எல்லாம் பூக்கள் பொழிவதாய்
ராணுவம் எல்லாம் நதிகள் இணைப்பதாய்
எல்லா நாடும் ஒரு நிலமாவதாய்
எல்லா கடவுளும் ஒரு மதமாவதாய்…

கனவு காண்கிறேன் கனவு காண்கிறேன்
இரு கண்ணில்லாதவள் கனவு காண்கிறேன்...

super

parthasarathy
22nd October 2014, 12:26 PM
Dear friends,

Wish you and your family a very happy and safe Deepavali.

Regards,

R. Parthasarathy

sss
22nd October 2014, 12:38 PM
அனைவருக்கும் உளம்கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்...

ஜெயச்சந்திரன் மற்றும் வாணி ஜெயராம் குரலில் "ஆகாசம் நிறையே தீபாவளி" என்கிற பாடல் இதிகாசம் மலையாள படத்தில்

http://www.mediafire.com/listen/8cqbp4loj44e7i0/Aakasham_Niraye_Deepavali_PJC_VJ_Ithihasam.mp3

சுந்தர பாண்டியன்

vasudevan31355
22nd October 2014, 02:51 PM
அனைத்து நண்பர்களுக்கும் என் மனம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

http://cdn.shopify.com/s/files/1/0149/0217/products/player-2_2048x2048.jpg?v=1331551390

chinnakkannan
22nd October 2014, 03:21 PM
விஜயகாந்த்திற்கு சில பல நல்ல பாடல்களும் அமைந்திருக்கின்றன..குறிப்பாக அவரது இளவயதில்..

எல்லாரும் தீபாவளியில் பிஸியாக இருப்பதால் நான் தனியாக இருக்கிறேனே..ஸோ தனிமையிலே.. என்ன ஆகும்..வி.கா பாட்டு நினைவுக்கு வந்தது..

சட்டம் ஒரு இருட்டறை.. சங்கர் கணேஷ் என நினைக்கிறேன்..ஹீரோயின் தெரியவில்லை.. ஆனால் பாடல் மென்மையான ஒன்று. எஸ்.என் சுரேந்தர் (மோகனின் வாய்ஸ்) எஸ்.ஜானகி..

நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு..இதுவும் சிலோன் ரேடியோ உபயத்தில் மனதில் பதிந்த பாட்டு..வி.கா தான்..ஆனால் பாடல் படமாக்கிய விதம் சொதப்பியிருப்பார்கள்..

*

தனிமையிலே ஒரு ராகம் ஒரு தாளம் உருவாகும்
இனிமையின் கவிதைகள் பிறந்தது
இளைமையின் நினைவுகள் பறந்தது

ஹோ நெஞ்சமே உன்னிடம் இன்று தான் மாற்றமே
கல்லான நெஞ்சங்கள் கூட இளம் பெண்ணாளே பூவாக மாறும்
இனி நான் காணும் இன்பங்கள் ஆறு போல ஓடவேண்டும்


என் தேவனே என் மனம் உன்னிடம் தஞ்சமே
என் உள்ள பொன்வாசல் தேடி
இசை காற்றாக என்னோடு கூடி
புது ஊற்றாக இன்பங்கள் ஊர வேண்டும் சேரவேண்டும்


ஹே தென்றலே என் மனம் வானிலே போகுதே
எண்ணாத இன்பங்கள் யாவும் இனி என்னாலும் உன்னோடு வாழும்
பனி நீராட்டும் இந்நேரம் பாடவேண்டும் கூட வேண்டும்

**

//வாசு சார் கங்கா ஸ்நானம் ஆச்சா..எவ்ளோசரவெடி விட்டீங்க.. இங்கே வெடி பார்த்தே நாளாச்சு..//

http://www.youtube.com/watch?v=qa4Pqfqq2cw

vasudevan31355
22nd October 2014, 05:45 PM
சின்னக் கண்ணன் சார்,

அதிகாலையிலேயே ஆச்சு சார். 5 மணிக்கு ஆயில் பாத் எடுத்து 6 மணிக்கெல்லாம் வேலைக்குப் போயாச்சு. ஆபிசில் பெண்டு கழட்டிட்டாங்க. தீபாவளி மே தினம் மாதிரி மாறிப் போச்சு. தலைவர் படங்களோட தீபாவளி மகிழ்ச்சியெல்லாம் போச்சு. அவர் இல்லாத தீபாவளி இனிப்பு இல்லாத அதிரசம் போல. வெடியெல்லாம் கிடையாது சார். பசங்க ரொம்ப ஸ்டிரக்ட். சுற்றுப்புறசூழல் பாதிக்கக் கூடாது என்று. ஆசையாய் மத்தாப்பு கொளுத்தும் என்னையும் கொளுத்த விடுவதில்லை.

'தனிமையிலே' ரொம்ப இனிமையான பாடல். ஞாபகப் படுத்தியதற்கு நன்றி. இன்று ஞான ஒளி 'அம்மாக்கண்ணுவை' பார்த்துவிட்டு அடுத்து நீங்கள் பதித்த பாடலைத்தான் பார்த்து ரசித்தேன்.

உங்களுக்கு என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

vasudevan31355
22nd October 2014, 06:23 PM
இந்த தீபாவளி நாளில் இருந்து இவர் அவர் என்ற வித்தியாசம் இல்லாது தனது ஒப்பற்ற திறமையினால் அனைவர் நெஞ்சங்களிலும் ஆழமாகப் பதிந்த நம் 'மேஸ்ட்ரோ' இளையராஜா இசை அமைத்த பாடல்களை தினம் ஒன்றிரண்டு தரலாம் என்று ஆசை. ரொம்ப டீப்பாக எல்லாம் கிடையாது. சிம்பிளாகத்தான். இதுவரை அதிகமாக நான் ராஜா சார் பாடல்கள் எடுத்ததில்லை. இதில் வெளியே தெரியாத பல ராஜாவுடைய பாடல்களும் தரப் படவிருக்கின்றன. நம் ராஜேஷ்ஜி தொடங்கிய இந்த மூன்றாவது பாகத்தில் தரலாம் என்று எண்ணியிருந்தேன். இன்று தீபாவளி நல்ல நாள் ஆதலால் இன்று தொடங்குகிறேன். வழக்கம் போல் தங்கள் ஆதரவைத் தந்து இந்தத் தொடர் சிறப்பிக்க வேண்டுகிறேன்.

'இளையராஜா என்றும் இனிய ராஜா' என்பது டைட்டில். நண்பர்கள் தங்கள் கருத்துக்களைப் பகிரலாம்.

vasudevan31355
22nd October 2014, 06:29 PM
'இளையராஜா என்றும் இனிய ராஜா' (தொடர் 1)

அன்னக்கிளி'யில் இருந்தே ஆரம்பிப்போம். முதல் படத்திலேயே இசையின் உச்சம். அதுவும் இந்தப் பாட்டில் இசைக்கருவிகளின் ஆக்கிரமிப்பு புருவம் உயர வைக்கும். தன்னுடைய பிரத்யோக ஸ்டைலை இந்தப் பாடலின் ஆரம்ப இசையில் தந்து ஆரம்பித்திருப்பார். பச்சரிசி குத்தும் உலக்கைகளின் சப்தம், கல் இயந்தரம் சுழலும் சப்தம், பணியாரம் பிழியும் சப்தம், இடியாப்பம் நூல் போல உருவாகும் சப்தம், அரிசியை முறத்தில் புடைக்கையில் எழுந்து விழும் அரிசியின் சப்தம், மாப்பிள்ளை பெண்ணாக தோழியர் நடித்துக்காட்டும் போது எழுப்பும் மங்கள ஓசை ஒலி, கூடவே இழைந்தோடும் 'லாலி லல்லி லாலி லல்லி' வாழ்த்தொலி கோரஸ், 'நம்ம வீட்டுக் கல்யாணம்' வரிகளுக்குப் பின் ஒலிக்கும் அந்த இனிமையான விதவிதமான சின்ன நோட்ஸ், பாடல் முழுக்க அங்கிட்டும், இங்கிட்டும் உற்சாகமாய் ஓடி, பாடி, ஆடி கல்யாண சமையல் வேலைகள் செய்திடும் கிராமத்து பெண்மணிகள், சிவக்குமாரை காதலில் 'அம்போ' என்று பறி கொடுத்துவிட்டு வெளியில் மகிழ்ச்சியையும், உள்ளே வேதனையின் துடிப்பையும் காட்டி தனி மரமாய் உலக்கை மரத்தை அணைத்து சோகம் காட்டி, நம்மை அழவைத்த நடிப்பின் அற்புத அன்னக்கிளி சுஜாதா, போதிய வாய்ப்பில்லாமல் இருந்து சந்தர்ப்பத்தை சரியாய் பயன்படுத்திக் கொண்ட ஜாலக்காரி ஜானகி என்று இப்பாடலில் நம் நெஞ்சைக் கவர்ந்த அம்சங்கள் ஏராளம் ஏராளம்.

இசைக் கிராதகனின் இசைச் சாம்ராஜ்யம். முதல் படத்திலேயே முத்தான இசை தந்து ஒட்டு மொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்தவன். பின்னால் உலகே தன்னைத் திரும்பிப் பார்க்க இப்பாடலின் மூலம் விதை விதைத்தவன்.

நீங்களே பாருங்கள். 'அன்னக்கிளி'யில் என் உள்ளம் கவர்ந்த முதல் பாடல்.


http://www.youtube.com/watch?v=K_ftUBqeZR0&feature=player_detailpage

rajeshkrv
22nd October 2014, 08:02 PM
Vasu ji arumai.
naanum 90'kaLin sila IR songs sollalam enna irundhen . ungal thodarukku vaazhthukkal

RAGHAVENDRA
22nd October 2014, 08:14 PM
வாசு சார்...

இளையராஜாவின் பாடல்களைப் பற்றிய தங்கள் புதிய தொடருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அவர் இசையமைத்த பாடல்களில் எல்லோரும் அறிந்தவற்றை விடுத்து, அபூர்வமானவற்றைத் தேர்ந்தெடுத்துத் தரவேண்டும் என வேண்டுகிறேன்.

vasudevan31355
22nd October 2014, 09:10 PM
ராஜேஷ்ஜி

தீபாவளி வாழ்த்துக்கள். எப்படிக் கொண்டாடினீர்கள்? இசையரசிக்கு தீபாவளி வாழ்த்துக்கள் சொன்னீர்களா? தங்கள் இளையராஜா தொடர் வாழ்த்துக்கு நன்றி!

chinnakkannan
22nd October 2014, 09:11 PM
வாசு சார், எனக்கும் கொஞ்சம் பிழியப் பிழிய வேலை+ மீட்டிங்க்ஸ்.. இப்போ தான் வந்தேன்..(காலையில் அஞ்ச்சு மணிக்கே எழுந்தாச்சு.. நேத்து தூங்க பதினொன்றரைக்கு மேல் ஆகிவிட்டது கீழ் ஃப்ளாட்டிலிருந்து ஒரு பெண் வந்துஎன் வீ.காவிற்கு கைக்கோலம் போட்டுக்கொண்டிருந்தாள்) காலையில் செவேலெனச் சித்திரம் வரைந்த கையால் அடியேனுக்கு லேகியம், இரண்டு இட்லிகள் +இரண்டு பஜ்ஜிகள் தரப்பட லபக்கென விழுங்கி ஓடி விட்டேன்..இப்பத் தான் கண்ணு அசத்தறது ( இங்கே அஞ்சு என்றால் சென்னை ஆறரை)

இளையராஜா வின் அன்னக் கிளியா..ஹை..ஸ்ரீதேவி தியேட்டர் ல ரிலீஸ்.. படம் ஒரே ஒருமுறை ரிலீஸின் போது பார்த்தது.. அதன் பிறகு பாடல்கள் மட்டும் தான் கேட்டிருக்கிறேன்..முத்து முத்தா பச்சரிசி குத்தத்தான் வேணும்.. நல்ல கோரஸ் பாட்டு.. ம்ம் குட் வாசு சார்.. நடத்துங்க நடத்துங்க

vasudevan31355
22nd October 2014, 09:12 PM
வாசு சார்...

இளையராஜாவின் பாடல்களைப் பற்றிய தங்கள் புதிய தொடருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அவர் இசையமைத்த பாடல்களில் எல்லோரும் அறிந்தவற்றை விடுத்து, அபூர்வமானவற்றைத் தேர்ந்தெடுத்துத் தரவேண்டும் என வேண்டுகிறேன்.

நன்றி ராகவேந்திரன் சார். நிச்சயமாக. தங்கள் கூறியபடியே செய்ய வெண்டும் என்றுதான் நானும் நினைத்துக் கொண்டிருந்தேன். கண்டிப்பாக ராஜாவின் அரிய பாடல்களைத் தர முயற்சிக்கிறேன்.

vasudevan31355
22nd October 2014, 09:16 PM
சி.க சார்,

முதலில் போய் ரெஸ்ட் எடுங்க. எதுவாயிருந்தாலும் நாளை பேசிக்கலாம். உடல்நலம் முக்கியம். போய்த் தூங்குங்க.

rajeshkrv
22nd October 2014, 09:43 PM
ராஜேஷ்ஜி

தீபாவளி வாழ்த்துக்கள். எப்படிக் கொண்டாடினீர்கள்? இசையரசிக்கு தீபாவளி வாழ்த்துக்கள் சொன்னீர்களா? தங்கள் இளையராஜா தொடர் வாழ்த்துக்கு நன்றி!

தீபாவளி சாயங்காலம் தான் கொண்டாட வேண்டும்.
ஆம் இசையரசிக்கு வாழ்த்து சொல்லியாச்சு ... ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.

rajeshkrv
22nd October 2014, 09:43 PM
நன்றி ராகவேந்திரன் சார். நிச்சயமாக. தங்கள் கூறியபடியே செய்ய வெண்டும் என்றுதான் நானும் நினைத்துக் கொண்டிருந்தேன். கண்டிப்பாக ராஜாவின் அரிய பாடல்களைத் தர முயற்சிக்கிறேன்.

அதுவே அதுவே. நானும் முடிந்தவரை உதவுகிறேன்...

vasudevan31355
22nd October 2014, 09:46 PM
மாலை மதுரம்

'பாட்டாளியின் சபதம்' படத்திலிருந்து அதிகம் பார்த்திராத ஒரு பாடல் ராஜேஸ்வரராவ் அவர்களின் இசையமைப்பில். ஒரு நாடகக் காட்சியில் வரும் பாடல்.

பெண்டாட்டி புருஷனுக்கு பலமான சொந்தமே
பிள்ள குட்டி ஆன பின்னே பிரியாத பந்தமே

பாம்பு நிலாவை விழுங்குவது போன்ற காட்சியமைப்பு புதுமைதான். இந்தப் பாடலில் நாயகனை பாம்பு கொத்திவிடுகிறது. பேதை அவனுக்காக அழுகிறாள் நாயகி. பிழைக்க மாட்டான் என்கிறாள் நாகக்கன்னி.
அவன் பிழைக்க வேண்டுமென 'உனக்கு என்னென்ன வேண்டுமோ நான் தருகிறேன்' என்கிறாள் நாயகி ஆனால் நாகக் கன்னி மசியவில்லை. அவன் விதி அவ்வளவுதான் என்று கடுப்பேற்றுகிறாள். இறுதியில் பத்தினியான நாயகி தன் கற்பு நெறியால் அக்கினித் தேவதையாய் மாறி நாகக் கன்னிகையைச் சுட்டெரிக்க வெப்பம் தாளாது நாகக் கன்னி தான் தீண்டிய நாயகனின் உடம்பிலிருந்து விஷத்தை உறிஞ்சி அவனை உயிர் பிழைக்க வைக்கிறாள்.

தன் பதிவிரதத் தன்மையால் தன் பதியை மீட்கிறாள் நாயகி

இறுதியில் பாம்பு சரோஜாவுக்கு பொட்டு வைப்பது ஜோராக இருக்கிறது.

ஈ.வி.சரோஜாதான் நாயகி. நாட்டியம் அருமை. நாக நாட்டியமும் நன்றாக இருக்கிறது.

இசையரசி, டி.வி.ரத்தினம், சொர்ணலதா (அப்போதே ஒரு சொர்ணலதா) மூவர் இணைந்து பாடியது இப்பாடல். இயற்றியவர் உடுமலை நாராயண கவி.

இந்தப் பாடலில் நாகக் கன்னிகையாக வரும் நடிகை யார் என்று கண்டுபிடிக்க முடிகிறதா? ராஜேஷ் சார் கூற வேண்டாம்.


http://www.youtube.com/watch?v=gytKrQCOt24&feature=player_detailpage

chinnakkannan
22nd October 2014, 10:01 PM
முன்பு எழுதிப்பார்த்த நாட்டுப்பாடல் ஒன்று..
**
பாட்டெழுத வேணு மின்னு
…பலவாறா நெனச்சு புட்டு
நோட்டெடுத்து தெறந்து வச்சா
..நோகாம ஒங்க படம்
கோட்டுசூட்டு போட்டு கிட்டு
..கொடையைத்தான் வச்சுக் கிட்டு
நோட்டவிட்டு என்னப் பாக்க
.. நொடியிலெல்லாம் மறந்து போச்சு..

ராப்பொழுது போன மச்சான்
… ரயிலேறிப் போன மச்சான்
மேப்பார்வை பாப்ப தற்கு
…மதராஸூ போன மச்சான்
சாப்பாடு செஞ்சு புட்டேன்
..சாமியின்னும் காண லையே
கூப்பாடு போடும் நெஞ்ச
..\..குறைக்கயெப்போ வருவாக..
**

கஷ்டம் தானில்லை.காத்திருத்தல் என்பது..இந்தம்மாவிற்காவது படம் இருக்கிறது..வீட்டுக்காரரின் படம்..ம்ம்

மனதுக்குள் இருந்து துளிர்த்துப்பொங்கி வெகு அழகான மகாகவி பாரதியாரின் பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது..
எப்பொழுது நினைத்தாலும் கேட்டாலும் இனிக்கும்பாடல்..
(இந்தப்பாடலுக்கு விளக்கமெல்லாம் கொடுக்கமாட்டேன்..அப்படியே அனுபவிக்கணும்..

*

ஆசை முகம் மறந்து போச்சே -இதை
யாரிடம் சொல்வேனடி தோழி
நேசம் மறக்கவில்லை நெஞ்சம் – எனில்
நினைவு முகம் மறக்கலாமோ?

கண்ணில் தெரியுதொரு தோற்றம் – அதில்
கண்ணனழகு முழுதில்லை
நண்ணு முகவடிவு காணில் – அந்த
நல்ல மலர்ச் சிரிப்பைக் காணோம்
தேனை மறந்திருக்கும் வண்டும் – ஒளிச்
சிறப்பை மறந்துவிட்ட பூவும்
வானை மறந்திருக்கும் பயிரும் – இந்த
வையம் முழுதுமில்லை தோழி

கண்ணன் முகம் மறந்துபோனால் – இந்த
கண்களிருந்து பயனுண்டோ
வண்ணப் படமுமில்லை கண்டாய் – இனி
வாழும் வழியென்னடி தோழி

வீடியோ தேடினால் – சர்ப்ரைஸ்.. கார்த்திக் பாடியிருக்கிறார்.. நல்ல உருக்கம்.. நல்ல புல்லாங்குழல் இசை.. மயக்கமா இருக்குங்க.. உங்களுக்கும் வரும்..!

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=oSnGtyaLh0E

rajeshkrv
22nd October 2014, 10:10 PM
வாசு சார். அந்த நாக் கன்னியை தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். பார்ப்போம்..

chinnakkannan
22nd October 2014, 10:15 PM
நாட்டியம் தெரிந்த சின்னப் பெண் அந்த நடிகை பெயர் வித்யா என நினைவு..இந்தப் படத்தின் அறிமுகத்திற்குப் பிறகு கோடை மழை வித்யா என்றாகி விட்டது..ஆனாலும் நிறையத் தமிழில் நடிக்கவில்லை.. பின் சில மலையாளப்படங்களில் நடித்திருப்பார்..( ராஜேஷ்..கஜ கேசரியோகத்தில் வருவார்.. பார்த்திருக்கீங்களா)

படம் சித்திக் கொடுமை பற்றி என நினைக்கிறேன்.. இங்கு யாரும் இதைப்பற்றிப் பேசவில்லை என நினைக்கிறேன்.. பேசியிருந்தால் மறுபடி ஒரு முறை பார்க்கலாம்.

.பாடியவர் சித்ரா..இசை இளையராஜா படம் கோடை மழை…

காற்றோடு குழலின் நாதமே
கண்ணன் வரும் நேரம் யமுனையின் கரை ஓரம்
அவன் வரும் வழி பார்த்து வழி பார்த்து
தவிக்கும் மனத்தை இளக்க வருவது

வண்டாடும் அரவிந்த மலருந்தன் கண்கள்
கண்டாடும் எனதுள்ளம் பிருந்தாவனம்

அழகிய வரிகள் பட் கொஞ்சம் படக் படக்கென ஓடுவதால் இப்போ டைப்படிக்க முடியலை..பாட்டுப் பார்க்கலாமே..

http://www.youtube.com/watch?v=B1cRM9nnNU0&feature=player_detailpage

chinnakkannan
22nd October 2014, 10:22 PM
இது ஒரு புதிராக்கும்.. ம்க்கும்..:) துக்ளக் என்ன குலமோ என்ன கோத்திரமோ..ம்ம் அவன் வந்தான்னா அவனுக்கு என்ன சமைக்கணும் சிக்கன் மட்டன்மீனு எறா சுறா (பேஷ் பேஷ் கடவுளுக்கு நல்ல அர்ச்சனை) – என முகமது பின் துக்ளக்கில் இருந்து யாரடி நீ மோகினியில் பாட்டி வரை பல்வேறு பாத்திரங்களில் ஜொலித்த சுகுமாரி தானே..(வாராயோ தோழா வாராயோ :)

rajraj
23rd October 2014, 05:54 AM
பிழியப் பிழிய


Orange, Mango or Lemon? :lol:

This is known as taking things out of context! :) Just for fun! :)

rajraj
23rd October 2014, 07:16 AM
FRom Vaazhkkai (1950)

eNNi eNNi paarkka manam inbam koNdaadudhe.....

http://www.youtube.com/watch?v=VfUNJKD1lf0


Tune from Badi Bahen (1949)

Chup Chup Khade Ho Jaroor Koi Bath Hai......

http://www.youtube.com/watch?v=-btaTuMDqbE


These were popular songs in the 50s! :)

Have fun and enjoy whatever is left of DeepavaLi sweets ! :)

Richardsof
23rd October 2014, 08:22 AM
http://i58.tinypic.com/1zokaw2.jpg


http://i57.tinypic.com/33wr2ms.jpg

http://youtu.be/2UhLj7ezWkM

chinnakkannan
23rd October 2014, 10:39 AM
hi good morning all

ஹையாங்க் எஸ்வி சார்.. கோடிக்கனவுகள் ஆடி வருகுது கோவில் சிலை ஒன்று ஓடி வருகுது.. வாவ் என்னா பாட்டுங்க அது..எனக்கு ரொம்பப் பிடிச்சதாக்கும்..தாங்க்ஸ்ங்கோவ்..

எண்ணி எண்ணிப் பார்க்க மனம் இன்பம் கொண்டாடுதே ஹிந்திவெர்ஷனும் கேட்டதாய் நினைவு..கேட்டுப் பார்க்கிறேன்..தாங்க்ஸ் ராஜ்ராஜ் சார்..

RAGHAVENDRA
23rd October 2014, 11:15 AM
வாசு சார்
இளையராஜாவின் அந்நாளைய பாடல்களில் எனக்கு மிக மிக பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று.
காலத்தைக் கடந்து நிற்கும் பாடல்.

நிஜ வாழ்க்கையில் இது போன்ற சூழ்நிலையில் சிக்கித் தவிக்கும் மனிதர்களுக்கு இப்பாடல் பெரிய ஆறுதல்.

எஸ்.பி.முத்துராமனின் மிகச் சிறந்த படங்களில் ஒன்று. ரஜினிகாந்த் அவர்களுக்குள் இருக்கும் நடிப்புத் திறமையை வெளிக்காட்டிய படம்.

புவனா ஒரு கேள்விக்குறி

https://www.youtube.com/watch?v=LGQLzNR7yoo

chinnakkannan
23rd October 2014, 11:54 AM
கொஞ்சம் வித்தியாசமான எழுத்து மகரிஷியுடையது.. மென்மையாக ஆனால் கொஞ்சம் பொட்டில் அடித்தாற்போன்ற வசனஙகள்..சீரியஸ் தன்மையுடைக கதை, களங்கள் என.. மாலை மதியில் வெளியான இரண்டாவதோ மூன்றாவதோ நாவல் இது..படிக்கும் போதே படமாக எடுத்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் தோன்றவைத்தது..அதே போல வில்லத் தனமான ஹீரோ காரெக்டர் சிவகுமார் சம்பத் குமாருக்கு ரஜினி எனப் படித்த போது ஆஹா பொருத்தம் தான் எனப் பட்டது..

படமும் ஏமாற்றவில்லை (சிவகுமார் கொஞ்சம் முயற்சி எடுத்திருப்பார் வித்தியாசமாக நடிப்பதற்கு..சம்பத்திற்கு அப்படியே ரஜினி பொருந்தியிருப்பார்..) கடைசியில் பொசுக்கென்று கேள்விக்குறி மட்டும் போட்டு படத்தை முடித்திருப்பார்கள்..கொஞ்சம்வித்தியாசமான நல்ல படம்..

chinnakkannan
23rd October 2014, 02:50 PM
அவர் ஒரு பெரியவர்..கிருஷ்ண பக்தர்.. கிருஷ்ணரைப் பற்றியே அழகாகப் பாடி – கிருஷ்ணா முகுந்தா முராரே – எனச் சொல்லியவண்ணம் மரத்தினாலான கிருஷ்ண பொம்மைகள் செய்பவர்..அவர் வேலைபார்க்கும் இட்த்தின் முதலாளியோ நல்லவர்.. அந்த பொம்மைகளும் விற்கும்..எப்போதும் அதற்கான டிமாண்ட் இருந்தவண்ணம் இருக்கும்..

காலப் போக்கில் முதலாளி மரணமடைய அவர் மகன் பொறுப்பேற்கிறான்..

“ஐயா”

“சொல்லுங்க சின்ன முதலாளி”

‘ உங்க பொம்மை எல்லாம் தரமாத்தான் இருக்கு அது மட்டும் பத்தாது.. விலைவாசி ஏறிக்கிட்டே இருக்கு.. ஐ நீட் மோர் ஸேல்ஸ் அண்ட் மோர் ப்ராஃபிட்.. அதனால”

“அதனால”

“ஒரு மெஷின் இம்போர்ட் பண்ணலாம்னு இருக்கேன்.. ஆமா நீங்க எவ்வளவு பொம்மை பண்ணுவீங்க ஒரு மாத்த்திற்கு”

“சின்ன முதலாளி.. நான் பக்தியில தோஞ்சவன்.. அந்தக் க்ருஷ்ணனை நினைச்சு பக்தியோட பண்றது தான்.அதனாலேயே அந்தக் க்ருஷ்ணன் அழகாய் என் கைவிரல்ல பிறக்கறான்னு நினைக்கறேன்..பொம்மைன்னு கூட சொல்ல என் நா ஒப்பலை..எனில் வேகப் படுத்தினா பத்து செய்யற இட்த்துல பதின்ஞ்சு செய்வேன்..:

” நான் இம்போர்ட் பண்ற மெஷின் குறைந்த பட்சம் 150 செய்யுமேய்யா..”

“எனக்கு மெஷின் ஆப்பரேட் பண்ணத்தெரியாதுங்களே”

“இந்த பாருங்க நீங்க எங்க அப்பாக்கிட்ட ரொம்ப காலம் வேலை பார்த்தவங்க..ஸோ உங்களை வேலையை விட்டு தூக்க மாட்டேன்.. மிஷின் வரவழைக்கிறேன்..கையால செய்யறத மெஷினால் செய்யுங்கோ.. “

“ஓ.. நோ அதுல பக்தி பாசம்லாம் இருக்காதேங்க.. நான் பண்ணமாட்டேன்”

“பெரியவரே..பக்திபாசம்லாம் எனக்கும் இருக்கு.. ஆனா நான் இங்க அதைப் பார்க்க முடியாது..இது நான் பிஸினஸ் செய்ற இடம்..எனக்கு நெறய கனவுகள் இருக்கு.. நான் அடுத்த லெவலுக்குப் போக ஆசைப்படறேன்..உங்களோட ஸேம் ஸாலரி அண்ட் ஹாஃப் ஒர்க் – மெஷின் ஆப்பரேட் பண்றது இது என்னோட ஆஃபர் வேண்டுமானால் எடுத்துக் கொள்ளுங்கள்”

முடியாது சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்தால் கல்லூரி செல்ல ஆசைப்படும் மகன்,கல்யாண வயதில் மகள் இன்ன பிறபிரச்னைகள்.. மறுபடியும் வேலைக்கு வருகிறார் பெரியவர்..

“சின்ன முதலாளி.. நான் யோசிச்சேன் மறுபடி..வேலைக்கு வர்றேன்”

“ஓ.கே குட்”

நிதானமாக க்ருஷ்ண பொம்மை – கி..ரு..ஷ்..ணா.. மு..கு..ந்தா...மு...ரா...ரே எனப் பாடியபடி செய்வதை..கிருஷ்ணா முகுந்த முராரே ரே ரே ரே என வேகமாகப் பாடி செய்ய ஆரம்பிக்கிறார் பெரியவர்..!

இது சுஜாதாவின் மாறுதல் வரும் என்ற நாடகத்தின் சுருக்கம்..பார்த்திருக்கிறேன்..
சொல்ல வந்த்தென்ன..மாற்றம்..உலகத்தில் மாறாத்து ஒன்றே ஒன்று தான்..அது தான் மாற்றம்..
அந்தக் கால்த்தில்..
சிலோன் ரேடியோ..
டிவியே இல்லாமல் ஓரிரு டிவிக்கள் அங்கொன்றும் இங்கொன்றும்..வந்த்து ரூபவாஹினி மட்டுமே

பின் ப்ளாக் அண்ட் ஒய்ட் ஸாலிடேர்; கலரில் பிபிஎல் கெல்ட்ரான் – ஒரே ஒரு சானல் தூர்தர்ஷன்..

படம்பார்க்க தியேட்டர் என்பது மாறி வீடியோ.. விசிஆர் காஸ்ட்லி என்பதால் விசிஆர் டிவி வாடகைக்கு விட்டு சம்பாதித்தவர்களும் உண்டு மதுரையில்..

வீடியோவின் ஆக்கிரமிப்பு பலவருடங்கள்..வாடகைக்கு – பத்து ரூபாய் கொடுத்து ஒரு நாளில் பார்த்துத் தரவேண்டும் என்பதுகண்டிஷன்.. பார்த்திருக்கிறேன்.
துபாயில் ஐந்து திர்ஹாம்..
.பின் ஸாட்டிலைட் சானல்கள் வந்தும் புதுப்பட வீடியோவிற்குமவுசு குறையவில்லை சிலகாலம்..
பின் சிடி ப்ளேயர்.. வீடியோவை விட செளகர்யம் மூணு சிடிக்களில் படம் வாடகை மஸ்கட் 500 பைஸா (baize) பின் அதுவே சொந்தமாக அதே விலை..

பின் இப்போது ஒரே டிவிடி மூன்று படம் என..

டெக்னாலஜியின் மாற்றம் அனுபவித்துக் கொண்டுதானிருக்கிறோம்.. நாமும் மாறிக் கொண்டுதான் இருக்கிறோம்..
ஆனாலும் பழைய நினைவுகள்.. தளபதி வந்துடுச்சா தாங்களேன்.. இருபது காப்பி போட்டேன் தம்பி எல்லாரும் வாங்கிட்டுப் போய்ட்டாங்க..அப்புறம் நாப்பது பேர் புக் பண்ணியிருக்காங்க.. நீங்க நாளைக் கழிச்சு வாங்க பார்க்கலாம்

வெய்ட் பண்ணி ஆஃபீஸ் முடித்து இரவு எட்டுமணிக்குக் கடைக்குப் போய்வாங்கி அக்கா வீட்டிற்கு வந்து பத்துமணிக்குமேல் பார்த்து ஒருமணி தூங்கி பின் காலை எட்டுமணி ஆஃபீஸ்.. நினைத்தால்..சிரிப்பு..வரும்..
ம்ம்
இங்கே வாசு சார் இ.ரா விற்குப் போக நான் கொஞ்சம் பழைய படங்களுக்கும் போவேனாக்கும்..அப்ப்ப்ப..
//அடப்பாவி ஒரு எம்.கே.டி பாட்டுப் போட இந்த பில்டப்பா //
**
கிருஷ்ணா முகுந்தா முராரே - ஜெய
கிருஷ்ணா முகுந்தா முராரே

கருணா சாகர கமலா நாயக
கனகாம்பர தாரீ கோபாலா
கிருஷ்ணா முகுந்தா முராரே

காளிய மர்த்தன கம்சனி தூஷன
கமலாயத நயனா கோபாலா
கிருஷ்ணா முகுந்தா முராரே

குடில குண்டலம் குவலய தளநீலம்
மதுரமுரளீ ரவலோலம்
கோடி மதன லாவண்யம்
கோபி புண்யம் பஜா கோபாலம்

கோபி ஜன மன மோகன வியாபக
குவலய தள நீலா கோபாலா

**

ஹரிதாஸ்..அகெய்ன் மதுரை ஸ்ரீதேவி ச்சின்ன வயதில் ஃபுல் படம்பார்த்த்து 22 ரீல்கள் அதுவே சிலவருடங்கள் கழித்து நான் கல்லூரியில் படிக்கும் போது ஜெகதாவில் ரீலீஸ் ஆக- இந்தமுறை எடிட்ட்ட் வெர்ஷன் – 13 ரீல்கள்.. என் நண்பன் பார்த்து வந்து நன்றாக இருக்கிறது எனச் சொன்னான்! ஒரு வாரம் ஹவுஸ்ஃபுல் என நினைவு..

*
http://www.youtube.com/watch?v=1LZGwwdGvAA

vasudevan31355
23rd October 2014, 03:20 PM
கிருஷ்ணா....முகுந்தா...சின்னக்கண்ணா!

சூப்பரப்பு. அந்த முதலாளி, தொழிலாளி கான்வர்சேஷன் அமர்க்களம் கண்ணா.

கொஞ்சம் பழைய படமா? ஒ...ரிலீஸ் ஆகி ஒரு 5 வருஷம்தான் ஆகுதா?

ஆனா அந்தப் பாட்டுல என்னவோ ஈர்க்குது சாமி. எத்தனை தபா கேட்டாலும் அலுக்காது.

chinnakkannan
23rd October 2014, 04:07 PM
தாங்க்ஸ் வாசு சார்.. ஒரிஜினல் சுஜாதா ட்ராமா ரொம்ப நல்லா இருக்கும்..பார்த்துமிருக்கிறேன் (பூர்ணம் விஸ்வ நாதன்) அதுவும் அந்த க்ருஷ்ணா முகுந்தா முராரேயே கொஞ்சம் வெஸ்டர்ன்ல வேகமாப் பாடியிருப்பாங்க / /கொஞ்சம் பழைய படமா? ஒ...ரிலீஸ் ஆகி ஒரு 5 வருஷம்தான் ஆகுதா?// இ. ரா பாட்டை விடப் பழைய படம் நு அர்த்தம்.. :)

vasudevan31355
23rd October 2014, 05:56 PM
'இளையராஜா என்றும் இனிய ராஜா' (தொடர் 2)

இளையராஜா என்ற அதிசயம் 'கிளி'யாக கொஞ்ச ஆரம்பித்து நம் நெஞ்சில் நுழையத் தொடங்கி பின் 'காளி' யாகி விஸ்வரூபம் எடுத்தது. ஆம் இளையராஜாவின் வாழ்க்கையில் ஏன் நம் வாழ்க்கையிலும் மறக்க முடியாத 'பத்ரகாளி' படப் பாடல்கள். தூளியைக் கண்டாலே 'கண்ணன் ஒரு கைக்குழந்தை' என்ற மயக்கும் மந்திர சக்தியைத் தன்னகத்தே கொண்ட கணவனைத் தாலாட்டும் கந்தர்வ கானம்தானே இப்போது கூட நமக்கு ஞாபகம் வரும்? பூ ஒன்று புயலானது போல அமைதியான அந்த அக்ரஹாரத்துப் பைங்கிளி கணவன் விரும்புகிறானே என்று 'கேட்டேளே அங்கே... அதப் பார்த்தேளா இங்கே' என்று திரையரங்குகள் அதிர ரெகார்ட் டான்ஸ் ரேஞ்சுக்கு ஆட்டம் போட்டாளே அமைதியான இசையரசியின் ஆர்ப்பாட்டக் குரலில். எவரால் மறந்துவிட முடியும் அதை?

ஒன்றிரண்டு படங்களிலே மட்டும் தலை காட்டி இருந்தாலும் ராணி சந்திரா என்ற அந்த கேரளத்துக் கிளி நம் மனக்கூண்டுக்குள் இன்னும் சிறகடிக்கின்றதே.... ஆகாய விபத்து அல்ப ஆயுசில் அள்ளிக் கொண்டு போனாலும் ஆலமரம் போல் நம் நெஞ்சில் நிறைந்துவிட்ட ப(வி)த்திரமான 'காளி' அல்லவா?

ஒரு கருப்பு வெள்ளைப் படம் பட்டி தொட்டியெல்லாம் பணத்தைக் கூடை கூடையாய் அள்ளியதே இந்த ராஜாவின் ராஜ உழைப்பினால். கல்யாண வீடுகளின் இசைத்தட்டுக்களில் கண்ணன் 'ஒரு கைக்குழந்தை'யாய்
சுனாமியாய் சுழன்றானே....'வாங்கோண்ணா... அட வாங்கோண்ணா' என்று இந்த பத்ரகாளி அனைத்துத் தரப்பினரையும் வரவேற்று வாரி அணைத்துக் கொண்டாளே. பாடல்களுக்காகவே படம் பட்டை கிளைப்பிக் கொண்டு ஓடியதே.

அந்த 'பத்ரகாளி'யிலிருந்து ஒரு குத்துப்பாடல். ஹிட்டடித்த பாடல்தான். இப்போது கொஞ்சம் நாம் மறந்திருக்க வாய்ப்புண்டு. அதனால் என்ன? தொடர் நினைவு படுத்திவிடப் போகிறது.

ஒத்த ரூபா ஒனக்குத் தாரேன்
பத்தாட்டியும் எடுத்துத் தாரேன்
முத்தாரம் நீ ஒன்னு தந்தாக்கா
என் முன்னாடி நீ கொஞ்சம் வந்தாக்கா

ஒத்த ரூபா எனக்கு வேணாம்
உன் உறவும் எனக்கு வேணாம்
அம்மாடி எனக்கது கட்டாது
அட என் மேனி மணக்குற சவ்வாது

மலேஷியா வாசுதேவன், ஜானகி குரலில் ஒலிக்கும் வெகு ஜனரஞ்சக குதூகலப் பாடல். நெடுந்தூரப் பயணத்தில் தொண்டை வறண்டு போகும் போது கிராமத்துப் பெட்டிக்கடையில் சிகப்புக் கலர் கிரஷ் குடிக்கும் போது கிடைக்கும் சொல்லொணா சுகம் இப்பாடலில் கிடைப்பது நிஜம்.

திரையுலக மார்கண்டேயனும், ஒல்லி அழகுக் கொடி தளிர் இடை பவானியும் (சி.க மன்னிக்க:)) ராஜசேகரின் அரிவாள் நடைக்கு மத்தியில் வாழைத் தோப்பிலும், கம்மாக்கரையிலும் போடும் குத்துப் பாடல். பாடலின் இடையே புல்லாங்குழல் அழகாகக் கையாளப்பட்டிருக்கும். பின்னால் வந்த ஒத்த ரூபா பாடல்களுக்கு முன்னோடி.


https://www.youtube.com/watch?v=AdUL_0yl5Ps&feature=player_detailpage

chinnakkannan
23rd October 2014, 09:19 PM
//திரையுலக மார்கண்டேயனும், ஒல்லி அழகுக் கொடி தளிர் இடை பவானியும்// அப்ஜெக்ஷன் யுவர் ஆனர் போடலாம் எனச் சொல்லும் எண்ணத்தில் பாடல் முழுக்கப் பார்த்தேன்..பரவாயில்லை..கரெக்ட் தான் வாசு சார்..கீப் இட் அப்..! இந்தப் பாடல் சுத்தமாய் மறந்து போன ஒன்று தான்.. பவானி யார்.. ஒருவேளை ராணிசந்திராவைத் தான் பவானி என்கிறீர்களா..

**

இந்த ராணி சந்திரா தொடர்பான ஒரு சோக நினைவலை..

அவர் பெயர் சுந்தரம்..அரசு அதிகாரி தான்..திடுமெனப் பதவி உயர்வு – மதுரையில் பாண்டியன் கோஆப்பரேட்டிவ் ஸ்டோர்ஸ் செய்ன்ஸ் எல்லாவற்றிற்குமான மேலாளர் டைப் – என்ன விதமான போஸ்ட் என்பது நினைவிலில்லை..

பம்பாய்க்கு ஏதோ அலுவல் விஷயமாக ரயிலில் போய்விட்டு திரும்பும் போது மெட் ராஸ் ஃப்ளைட்டில் ஏறினார்..முதல் ஃப்ளைட் பயணம்..( விமானம் கிளம்பி இயந்திரக் கோளாறால் பம்பாய் ஏர்போர்ட்டிலேயே இறங்க முயற்சிக்க க்ராஷ் ஆகி விட..அதில் மரணம் அவரைத் தழுவி விட்டது.. இதே அக்டோபர் மாதம் தான்..வருடம் 1976.. ராணி சந்திரா வந்த அதே ஃப்ளைட்..இந்தியன் ஏர்லைன்ஸ்..

அவர் எனது தந்தையின் சகோதரர்.. என் சித்தப்பா.. உன்னை விட வயசானவங்க நானெல்லாம் இருக்கேன்..ஒன்னைக் கொண்டு போய்ட்டானே என என் அப்பா விம்மி அழுதது,(அப்பா 83ல் மறைந்தார்) டிவிஎஸ் நகருக்கு ஆறு நாட்களுக்கு அப்புறம் வந்த உயரம் குறைந்த பெட்டி… அதன் அருகில் போய்பார்ப்பதற்கு விடாத அண்ணன் (வேண்டாம்டா..ஸ்மெல் நல்லதில்லை).. என்னைச் சிறுவன் என்பதால் இறுதிக்காரியத்திற்குக் கூட்டிச் செல்லவில்லை..- ம்ம் மறக்காது..இல்லை..கொஞ்சம் மறந்து தான் இருந்தது..உங்கள் இந்த்ப்போஸ்ட் கிளறிவிட்டது..

பத்ர காளி- மதுரை கல்பனாவில் பார்த்த நினைவு.. ஐ திங்க் செத்துப் போனதினாலேயே அவர் நன்றாக நடித்தார் எனச் சொல்கிறார்கள் என அந்தக் காலத்திலேயே நினைத்தேன் நான்.. (அவரது வேறு படங்கள் பார்க்கவில்லை) அப்புறம் விவரமறிந்த பருவத்திலும் அந்தப்படம் பார்த்ததில்லை..
..
**

rajeshkrv
23rd October 2014, 10:04 PM
வாசு ஜி,

இளையராஜா தொடர் அருமை
ஒத்த ரூபா பாடல் ஆம் பிற்கால ஒத்த ரூபா பாடலுக்கு முன்னோடி.. இருந்தாலும் கண்ணன் ஒரு கை குழந்தை, கேட்டேளே அங்கே பாடல்களுக்கு முன்னால் இது கொஞ்சம் அமுங்கி போனது.

இருந்தாலும் ரசிக்கும்படியான பாடல்.

தொடருங்கள் வாழ்த்துக்கள்

vasudevan31355
23rd October 2014, 10:15 PM
நன்றி ராஜேஷ்ஜி! நீங்கள் சொல்வது உண்மைதான். இரு சூப்பர் ஹிட் பாடல்களால் ஒத்த ரூபா கொஞ்சம் அமுங்கியது உண்மை. ஆமாம் பி.எம்.பார்த்தீங்களோ? நாகக் கன்னி பி.எம் :)

vasudevan31355
23rd October 2014, 10:19 PM
சின்னக் கண்ணன் சார்,

கண்களில் கண்ணீர் வரவழைத்து விட்டீர்கள். எதுவும் சொல்லத் தோன்றவில்லை. தெரிந்தோ தெரியாமலோ ஸாரி. உங்கள் சோகத்தில் நானும் பங்கு கொள்கிறேன். என்னை பாதித்த பதிவு.

vasudevan31355
23rd October 2014, 10:26 PM
//பவானி யார்.. ஒருவேளை ராணிசந்திராவைத் தான் பவானி என்கிறீர்களா..//

பவானியைத்தான் பவானி என்கிறேன்.:) நம்ம 'கந்தனுக்கு மாலையிட்டாள்' பவானிதான். தெரியலையா? 'புண்ணிய பூமி'யில் நடிகர் திலகத்துடன் நடித்த பவானி. 'அல்லி தர்பார்' பவானி. 'உழைக்கும் கரங்கள்' படத்தில் எம்.ஜி.ஆர் அவர்களைக் காதலித்து தோற்கும் ரோல். (கொஞ்ச நாளைக்கு முன் கூட இவரைப் பற்றி அலசு அலசு என்று அலசினோமே)

'ஆடிய பாதங்கள்
அம்பலத்தில்'

பரதம் ஆடுவரே அதே பவானிதான். ம்க்கும்... இது கூடத் தெரியாதாக்கும். நாகக்கன்னி சுகுமாரியைக் கண்டுபிடிக்கத் தெரிகிறது:)......


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Y6uIcNXmb-0

Murali Srinivas
24th October 2014, 12:30 AM
வாசு,

இந்தப் புகைப்படத்தில் நடிகர் திலகத்தோடு இருப்பவரை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். இவர் கடலூர் வாழ் பல் மருத்துவர் Dr. முத்துகுமரன் என்பவர். [Dentist] நடிகர் திலகத்தின் மிகப் பெரிய ரசிகர் என்று சொன்னார்கள். படத்தில் அன்று சிறுவனாக காட்சியளிப்பவர் Dr-ன் மகன். அவரும் இன்று டாக்டர் என்று சொன்னார்கள். அது மட்டுமல்ல அவரும் நடிகர் திலகத்தின் மிகப் பெரிய ரசிகர் என்பது உபரி தகவல். எனக்கு மின்னஞ்சலில் இந்தப் புகைப்படத்தை நண்பர் கவிஞர் தென்காசி கணேசன் அனுப்பி வைத்திருந்தார். இதோ அது உங்களுக்காக

https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=ddb7951de6&view=fimg&th=1493cd90914dca65&attid=0.1&disp=inline&realattid=1482747088953409536-1&safe=1&attbid=ANGjdJ97Dct25YTlCyJXg5hLOEMk5RjHz2lPbzOLwSG CmrR5RXKDYPp8-fByL1o1I4vlMryxzNAKrd7eo1X4N8sao3Di9YVhyoiE_jDCDv6 OgtXGiGlRmSIeJkh03XM&ats=1414089831977&rm=1493cd90914dca65&zw&sz=w996-h544

அன்புடன்

மற்ற நண்பர்கள் இடையூறுக்கு மன்னிக்கவும்

sivaa
24th October 2014, 04:26 AM
முரளி சார் புகைபடத்ததை பார்க்கமுடியவில்லை

sivaa
24th October 2014, 04:36 AM
ரஜனிகாந்தின் வாழ்வில் நடந்தவை?
ரஜனி ஒரு முன்நாள் பைத்தியக்காரன்.எம் ஜீஆரிடம் சவுக்கடிபட்டதில் இருந்து பைத்தியமானவர்.ஒரு பார்ட்டி ஒன்றில் குடிபோதையிநடிகை லதாவின் கையைப்பிடித்து இழுத்தார் தடுக்கப்போன கமலகாசனை கன்னத்தில் அறைந்தார்.எம் ஜியாரின் ஒப்பந்தத்தில் இருந்தவர் லதா பாதுகாவலருடன் விழாவுக்குச்சென்ற லதாவின் பாதுகாவர் செய்தி சொன்னார் தலைவர் கொண்டுவாடா அவனை என்றார்.காரின் டிக்குக்குள் குண்டுக்கட்டாகத்தூக்கி செல்லப்பட்டார்.தோட்டத்தில் கட்டிவைத்து சவுக்கால் அடிபட்டார்.அன்றே செத்...திருப்பார் நடிகர் சங்க தலைவர் சிவாஜிக்கு செய்தி போனது.அவர் தலைப்போட்டு ரஜனியைக் காப்பாத்தினாரரிந்தச்செய்தியைப்பிரசுரித்த ஜேபியாரை கத்தியால் குத்த்ப்போனார்..போதையில் இரவு நேரத்தில் அண்ணாசாலையில் முன்னுக்கு ஓடும் அதேவேகத்தில் றிவேர்சிலும் ஒடுவார் காரணம்கேட்கப்போன பொலீசாரை தாக்கினார் இப்படிப்பல குற்றசாட்டுகழுடன் பாரிசுகோணர் சென்னை நீதிமன்றில் நிறுத்தப்பட்டார் தண்டிக்கப்பட்டார்.இவருக்கு இரண்டு மகள்கள் ஒன்றுக்கு மண்டோதரி என்றும் மற்றதற்கு குண்டோதரி என்றும் பெயரிட்டார்.மனைவியை மொட்டையடித்து அவமானப்படுத்தினார்.இல்லையென்று சொல்லச்சொல்லுங்க?ராகவேந்திரா படம் வெளியானபோது தமிழ்நாடு புராகவும் நூறு கல்யாண மண்டபங்கள் கட்டுவேன் அத்தனையிலும் ஏழைமக்களின் திருமணத்துக்கு இலவசமாக வழங்குவேன் என்று படவெற்றிவிழாவில் கூறி வந்தார் ஆனால் கட்டியது ஒன்றுதான் அதிலும் இன்றுவரை எந்த ஏழைக்கும் இலவசமாக மண்டபம் வழங்கப்படவில்லை.விசர் கொண்டு திரிந்தபொழுது திருச்சி விமான நிலயமுன்பாக இருந்த பெட்டிக்கடையை உடைத்து நொருக்கினார்.விமானத்தில் சென்றபொழுது செய்த கலாட்டாவில் விமானியே கலங்கிப்போனார்.இதுவெல்லாம் நடைபெறவில்லையென்று சொல்லச்சொல்லுங்க?1978 முதல்1979வரை உள்ள பத்திரிகைச்செய்திகள் இவை இவர் மறுத்தால் அத்தனையையும் வெளியிடுவோம்.லதாவுடன் திருமணம் நடந்தது எப்படியென்று சொல்லச்சொல்லுங்க.இவரைமாதிரி விசர்க்குற்றவாளிகளா? தமிழகமுதல்வர்கள்????இன்னும் இருக்கு பிரியா சூட்டிங்க் சிங்கப்பூரில் நடந்தபொழுது செய்த றவுடித்தனங்கள்.தொடரும்


இது முகநூல் ஒன்றிலிருந்து
இதன் உண்மை விபரம் யாராவது தெரிவிக்கமுடியுமா?

rajeshkrv
24th October 2014, 08:53 AM
சிவா சார்
இது மாதிரி நிறைய நடத்திருக்கிறது.. பலரும் பலவிதமாக கூறுவர்.. ...

இந்த திரியில் இது போன்ற விஷயங்கள் வேண்டாமே.. இதற்கென்றே திரிகள் உள்ளன(ஆம் கிசு கிசு திரி)

rajeshkrv
24th October 2014, 09:03 AM
என்ன சிக?? வாசு ஜி சொன்னது போல் பவானியை அலசோ அலசோ என்று பாகம் 2’ல் அலசினோமே மறந்து போச்சா?

vasudevan31355
24th October 2014, 09:08 AM
காலை வணக்கம் ராஜேஷ்ஜி!

உங்களுக்கெல்லாம் தராமல் நான் இங்கு தீபாவளி பலகாரங்களை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறேன் ஜி. அதுவும் அந்த அதிரசம் சூப்பர் ஜி. அவ்விடம் எப்படி? (அப்படியே கொஞ்சம் தனி மடலையும் பார்த்துடுங்க)

vasudevan31355
24th October 2014, 09:10 AM
ராஜேஷ்ஜி!

அங்கு ஞாபக சக்திக்கு ஏதாவது நல்ல மருந்து கிடைக்குமா? கொஞ்சம் எனக்கு அனுப்பி வையுங்களேன். நான் ஒருத்தருக்கு அனுப்பணும்.:)

rajeshkrv
24th October 2014, 09:18 AM
தேனிசை தென்றலின் முத்துக்கள்-11

1992 தேவா தன்னை நன்றாக நிலை நிறுத்திக்கொண்டிருந்த காலம்..
அதே போல் இணைந்த கைகள், ஊமை விழிகள் மூலம் பிரபலமாயிருந்த அருண் பாண்டியனை முழு நாயகனாக போட்டு ”கோட்டை வாசல் “ என்ற படமெடுத்தார் இயக்குனர் செல்வ விநாயகம்

அருண் பாண்டியனுக்கு இரண்டு வேடம், ஒருவருக்கு ஜோடி சரண்யா, மற்றொருவருக்கு சுகன்யா .
சரண்யா அன்று ஒரு வாயில்லா பூச்சி .. இன்று அம்மா வேடங்களில் ஜொலிக்கும் அளவிற்கு அன்று ஜொலிக்கவில்லை

சுகன்யா . நல்ல கதாப்பாத்திரங்ள் உள்ள படங்களே நடித்திருந்த சுகன்யா இதில் எப்படி நடிக்க ஒத்துக்கொண்டார் என்பது தெரியவில்லை.
படம் சுமார் ரகம் .. இசை தேவா . இரண்டு பாடல்கள் நல்ல இனிமை
அதிலும் நான் இன்று பதியவிருக்கும் பாடல் மிகவும் பிரபலமான ஒன்று.. பாவம் தேவா .. இந்த பாடல் அவ்வளவு பிரபலமாகாததால் அதை அப்படியே கொஞ்சம் மாற்றி சூப்பர் ஸ்டாரின் அண்ணாமலையின் அண்ணாமலை அண்ணாமலை பாடல் அமைத்து வெற்றியும் கண்டார்.

சரி சரி இதோ பாடல்
மன்னவனே மன்னவனே மாலையிட்ட சின்னவனே ... பாலு சித்ராவின் குரலில் நல்ல அழகு பாடல்
http://www.youtube.com/watch?v=H4V6LLNw2TE

தொடரும்

rajeshkrv
24th October 2014, 09:41 AM
காலை வணக்கம் ராஜேஷ்ஜி!

உங்களுக்கெல்லாம் தராமல் நான் இங்கு தீபாவளி பலகாரங்களை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறேன் ஜி. அதுவும் அந்த அதிரசம் சூப்பர் ஜி. அவ்விடம் எப்படி? (அப்படியே கொஞ்சம் தனி மடலையும் பார்த்துடுங்க)

எங்க வீட்டு தீபாவளி ...

https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-9/10403512_937168932979553_8552550728886096916_n.jpg ?oh=d3ca059103482f067f8ec0bc584cea8e&oe=54EC2402&__gda__=1421270458_3e7ba81799c5c6563e0ccb48d5469be e

chinnakkannan
24th October 2014, 09:48 AM
ஹாய் குட்மார்னிங்க் ராஜேஷ் வாசு சார்..
//அங்கு ஞாபக சக்திக்கு ஏதாவது நல்ல மருந்து கிடைக்குமா? கொஞ்சம் எனக்கு அனுப்பி வையுங்களேன். நான் ஒருத்தருக்கு அனுப்பணும்//
//பவானியை அலசோ அலசோ என்று//

ஹையாங்க்.. நிஜம்மாவே மறந்து போச்சு..இன்னும் லீவில் போய் வந்த நாட்களின் பக்கங்கள் படிக்கவில்லையாக்கும்..மேபி அதில் பவானி பற்றி இருக்குமாயிருக்கும் ..ஞாபக் சக்தி மருந்து அனுப்பறது இருக்கட்டும் அதிரசம் அங்கே இங்கே அல்வா அண்ட் பாதாம் கேக்காக்கும்.. ராஜேஷ் மத்தாப்புல்லாம் விட்டார் நான் பார்த்தேனாக்கும்.. (இப்ப வாசு சார் சொன்னதும் பவானி நினைவுக்கு வந்துவிட்டது…)

சுகுமாரி மறக்க முடியுமா என்ன..சிறந்த குணச்சித்திர நடிகை.. நூற்றுக்கு நூறில்மனோகரின் மனைவி, மோகம் முப்பதுவருஷம் சுந்தர்ராஜனின் ஜோடி பம்மல் கே சம்பந்தம் அனாதை ஆசிரமத் தலைவி என டிஃபரண்ட் கேரக்டர்ஸ்..

chinnakkannan
24th October 2014, 09:52 AM
மன்னவனே மன்னவனே பாட்டுக் கேட்டதில்லை..இப்ப தான் கேக்கறேன்..தாங்க்ஸ்..ஆமா ராஜேஷ் ஒண்ணு கவனிச்சீங்களா..அந்தக் காலத்திலேயே அம்மா மாதிரி ஒரு வயசான தோற்றத்துல தான் சரண்யா இருந்திருக்காங்க..

rajeshkrv
24th October 2014, 09:53 AM
மன்னவனே மன்னவனே பாட்டுக் கேட்டதில்லை..இப்ப தான் கேக்கறேன்..தாங்க்ஸ்..ஆமா ராஜேஷ் ஒண்ணு கவனிச்சீங்களா..அந்தக் காலத்திலேயே அம்மா மாதிரி ஒரு வயசான தோற்றத்துல தான் சரண்யா இருந்திருக்காங்க..

அதனால தான் சோபிக்க முடியல , அவங்களும் பேட்டியில் சொன்னாங்களே சீரியசா எடுத்தக்கலைன்னு .. அதான்..

rajraj
24th October 2014, 09:55 AM
இங்கே அல்வா .

Tinnevelly style or Tanjore style? :) Last time I tasted Thirunelveli halwaa was when my friend,PaNrutti Ramachandran, visited the US about 30 years back. He gave me some ! :) There is a place near Tanjore known for halwa. :)

rajeshkrv
24th October 2014, 10:01 AM
Tinnevelly style or Tanjore style? :) Last time I tasted Thirunelveli halwaa was when my friend,PaNrutti Ramachandran, visited the US about 30 years back. He gave me some ! :) There is a place near Tanjore known for halwa. :)

பன்ருட்டி ராமச்சந்திரன்.. முன்னாள் அமைச்சரா? அங்கிள் நீங்க பெரிய ஆளு தான் (வயசுல பெரியவர் என்று தெரியும். இது வேற :) )

chinnakkannan
24th October 2014, 10:02 AM
எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணன் வீட்டிற்கு ஒரு எழுத்தாள நண்பருடன் பல வருடங்களுக்குமுன் சென்றிருக்கிறேன்.. அவர் கேட்டார்..ஈஸியா அட்ரஸ் கண்டு பிடிச்சீங்களா.. அவ்வளவு கஷ்டமெல்லாம் இல்லீங்க வந்துட்டோம்..”இல்லை.. கொஞ்சம் சரண்யா வீட்டுக்குப் பக்கத்து வீடுன்னா இன்னும் சுலபமா அடையாளம்காட்டியிருப்பாங்க “ என்றார்..! (திரும்பும் போது அந்த வீட்டைப் பார்த்ததுபுகையாக நினைவில்)

இளமைக் காலத்தில் குறிப்பிடத் தக்க படம் அவர் நடித்தது கிடையாது எக்ஸெப்ட் பசும்பொன்..(அப்போது தான் சொந்தக் குரலில் பேச ஆரம்பித்தார் என நினைக்கிறேன் படங்களில்)

இவரைப் போலவே கிளாமர் லுக்கே இல்லாத நடிப்பு மட்டுமே (யாருக்கு வேண்டும் ?!) அந்தக்காலத்திலும் இந்தக்காலத்திலும் கொண்ட இன்னொருவர்…. நதியா (எப்போப்பார்த்தாலும் உறைபோட்ட தலைகாணி மாதிரி டிரஸ்!!)

rajeshkrv
24th October 2014, 10:04 AM
எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணன் வீட்டிற்கு ஒரு எழுத்தாள நண்பருடன் பல வருடங்களுக்குமுன் சென்றிருக்கிறேன்.. அவர் கேட்டார்..ஈஸியா அட்ரஸ் கண்டு பிடிச்சீங்களா.. அவ்வளவு கஷ்டமெல்லாம் இல்லீங்க வந்துட்டோம்..”இல்லை.. கொஞ்சம் சரண்யா வீட்டுக்குப் பக்கத்து வீடுன்னா இன்னும் சுலபமா அடையாளம்காட்டியிருப்பாங்க “ என்றார்..! (திரும்பும் போது அந்த வீட்டைப் பார்த்ததுபுகையாக நினைவில்)

இளமைக் காலத்தில் குறிப்பிடத் தக்க படம் அவர் நடித்தது கிடையாது எக்ஸெப்ட் பசும்பொன்..(அப்போது தான் சொந்தக் குரலில் பேச ஆரம்பித்தார் என நினைக்கிறேன் படங்களில்)

இவரைப் போலவே கிளாமர் லுக்கே இல்லாத நடிப்பு மட்டுமே (யாருக்கு வேண்டும் ?!) அந்தக்காலத்திலும் இந்தக்காலத்திலும் கொண்ட இன்னொருவர்…. நதியா (எப்போப்பார்த்தாலும் உறைபோட்ட தலைகாணி மாதிரி டிரஸ்!!)

பசும்பொன்னில் அவருக்கு குரல் ரேவதி .

rajraj
24th October 2014, 10:04 AM
பன்ருட்டி ராமச்சந்திரன்.. முன்னாள் அமைச்சரா? அங்கிள் நீங்க பெரிய ஆளு தான் (வயசுல பெரியவர் என்று தெரியும். இது வேற :) )

Yes! :) My engineering college friend, one year senior to me. When I came to the US for higher education I asked him to come with me . He declined ! Very bright man. Never scored less than 100/100 in Math.

chinnakkannan
24th October 2014, 10:06 AM
ராஜ் ராஜ் சார்..இதுமஸ்கட் ஹல்வா.. கோதுமையைப் பாவம் தண்ணீரில் போட்டு ஊஊஊற வைத்து சமர்த்தாய்ப் பாலெடுத்து பின் கிளறிக் கிளறி செய்ததாக்கும் (எல்லாம் வீ.கா) டேஸ்ட் பார்க்க மட்டும் அடியேன்!

இருட்டுக் கடை அல்வா ஒரு தடவை சாப்பிட்டிருக்கிறேன்.. மதுரையில் ஃபேமஸ் தெற்குச் சித்திரை வீதி நாகப் பட்டண்ம் நெய் மிட்டாய்க் கடை அல்வா ( நல்ல ப்ரெளன் நிறத்துல (தபு கலர்னு கூடச் சொல்லலாம்!) சூப்பரா இருக்கும்..

rajraj
24th October 2014, 10:10 AM
ராஜ் ராஜ் சார்..இதுமஸ்கட் ஹல்வா.. கோதுமையைப் பாவம் தண்ணீரில் போட்டு ஊஊஊற வைத்து சமர்த்தாய்ப் பாலெடுத்து பின் கிளறிக் கிளறி செய்ததாக்கும் (எல்லாம் வீ.கா) டேஸ்ட் பார்க்க மட்டும் அடியேன்!
..

Save some for me. Next time I will take transAtlantic flight stopping by your place ! :lol:

chinnakkannan
24th October 2014, 10:10 AM
ஓ.. தாங்க்ஸ் ராஜேஷ்..

//எதை கேட்பதோ எதை சொல்வதோ
நான் அறியாத பெண்ணல்லவோ
நீ கேட்கலாம் நானும் சொல்லலாம்
அது புரியாத ஒன்றல்லவோ// இந்தப் பாட்டு தேடிக்கிட்டே இருக்கேன் சிக்க மாட்டேங்குது..!
(மதுரகானத்துக்காக ஒரு பாட்டும் போட்டாச்சு!)

அது என்ன அழகாகச் சிரித்தது அந்த நிலவுன்னு ஒரு பாட்டு மனசுக்குள்ற ரீங்காரம் பாடுது..!

chinnakkannan
24th October 2014, 10:13 AM
ஆஹா வாங்கோ வாங்கோ.. ஃப்ரஷ்ஷா பண்ணியே தருவோமே..

இப்போதைக்கு ஒரு பாட்டு

வரச் சொல்லடி அவரை வரச்சொல்லடி
அந்தி மாலை நேரந்தனில் நானாகத் தரவேண்டும்
வரச்சொல்லடி..
:)

rajeshkrv
24th October 2014, 10:18 AM
வாசு, சி க, அங்கிள், ராகவ் ஜி, மதுண்ணா

இதோ மனதை மயக்கும் ஒரு கன்னட பாடல்
குல கவுரவா (தமிழில் பின்னாளில் இதே படம் குல கெளரவம் என்று முத்துராமன் ஜெயந்தி நடித்து வெளிவந்தது)

டி.ஜி.லிங்கப்பாவின் இசை அப்படியே அந்த வயலின் ஆஹா நம்மை அசையவிடாது

இசையரசி பற்றி சொல்லவும் வேண்டுமா...

ராகா நின்னது பாவா நன்னது

https://www.youtube.com/watch?v=a4DS4fNta04

சிக உமக்காக விளக்கம்
ராகம் உன்னுடையது பாவம் என்னுடையது
தாளம் உனது நாட்டியம் எனது

மனமே யமுனா
மனையே(வீடு) கோகுலம்
நான் புல்லாங்குழல்(முரளி)
நீ கோபாலா
நாம் இணைவது ஒரு புதிய சங்கமம்
வா என் இதய வீணையை மீட்டு. இருவரும் சேர்ந்து பாடுவோம் அமர கானம்

என் வாழ்க்கை கோவிலுக்கு ஒளி தந்தாய்
என் வாழ்க்கைபடகை ஓட்டுபவன் நீ
உன் புன்னகை மல்லிகை போன்றது
இந்த அன்பு இந்த கனிவு இந்த காதல் என்றுமே இருக்க வேண்டும்.

chinnakkannan
24th October 2014, 11:41 AM
ஆஹா.. தாங்ஸ் ஃபார்த பாட் அண்ட் விளக்கம் ராஜேஷ்.. கேட்டேன் கோகுலா சங்கமா (ம் விட்டுட்டு கால் போட்டால் கன்னடா ஆகிடும் போல.. கன்னடம் ஆகிடும் போல)
இந்தாங்கோ இதுக்கு வீடியோ அகப்படலை உங்க சுசீலாம்மா பாட்டு.. ( சாதகப் பறவைகள்க்காக இன்னிக்கு ப் ப்ரோக்ராம் இருக்கு..ஆனா ஸ்பான்ஸர் ப்ரோக்ராம்.டிக்கட் ரேட்லாம்போடலை..ம்ம் கேட்டுப்பார்க்கணும்)

வெண்ணிலா நேரத்திலே வேணு கானம்
மேல்மாடி முற்றத்திலே நீயும் நானும்
கண்ணா ஆஆ கண்ணா ஆஆஆ
பொன்னி சிரிக்கும் தஞ்சை நாட்டில் காணப்
போக வேண்டும் சூரக்கோட்டை - அந்த
சூரக் கோட்டை சின்ன ராஜா - உங்க
தோள்களிலே இந்த வண்ண ராணி கண்ணா
கட்டிலில் பாடலாம் கைகளில் ஆடலாம்
தொட்டு விளையாடினால் தொட்டில் வரை போகலாம்
தொடங்கட்டும் கோகுல லீலைகளெல்லாம் - பின்பு
தொடரட்டும் கண்ணனின் சேவைகளெல்லாம்

*
போனஸாக..
உங்களுக்காக சப்தபதி பாட்டு..ஹே ஜாதவே.. (ஆடுபவர் சபிதா பொம்மிடிப்பட்டி)

http://www.youtube.com/watch?v=pHh8wv7A8XA&feature=player_detailpage

RAGHAVENDRA
24th October 2014, 01:03 PM
http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/75/Rajendran.S.S.jpg/220px-Rajendran.S.S.jpg

இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் மறைவு தமிழ்த் திரையுலகிற்கு ஈடு செய்யவொணா இழப்பாகும். தமிழ் மொழியின் மீது அவரது பற்று மிகவும் ஆழமானது. அவர் நடித்த படங்களில் இடம் பெற்ற பல பாடல்கள் மக்களால் பெரிதும் வரவேற்புப் பெற்றுள்ளன.

அவர் நினைவாகவும் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் ...

அவரே பாடிய பாடல்...

http://www.youtube.com/watch?v=PxB877Szahk

vasudevan31355
24th October 2014, 01:09 PM
'இளையராஜா என்றும் இனிய ராஜா' (தொடர் 3)

தேவராஜ் மோகன், இளையராஜா கூட்டணியில் இன்னொரு கருப்பு வெள்ளைப் படம். வஞ்சனை இல்லாமல் பாடல்கள் போட்டுக் கொடுத்த இசைஞானி. இளையராஜாவை நம்பினார் கெடுவதில்லை. நீ பெரிய தயாரிப்பாளர், நீ பெரிய நடிகன், நீ சின்ன பட்ஜெட் புரடியூசர், நீ சின்ன நடிகன் என்ற பாகுபாடெல்லாம் ஞானியிடம் கிடையவே கிடையாது. தராசு போல நடுநிலை ராஜா.

சின்ன நடிகர்கள், சின்ன பட்ஜெட் படம். மாதவன் தயாரித்து தேவராஜ் மோகன் இயக்கிய படம். புகழ் பெற்ற 'கௌரவம்' படத்தில் நடிகர் திலகம் பாடும் 'பாலூட்டி வளர்த்த கிளி' பாடல் வரியே டைட்டிலாக.

ஆம். 'பாலூட்டி வளர்த்த கிளி' படத்தின் பாடல்கள் இன்று மட்டுமல்ல அன்று மட்டுமல்ல என்றுமே சுகம்.

விஜயகுமார், ஸ்ரீப்ரியா இருவரின் மௌனக் காதலை மிக அழகாக நம்முள் புதைக்கும்,

'நான் பேச வந்தேன் சொல்லத்தான் ஓர் வார்த்தையில்லை'

அமிர்தத்துக்கு இணையான பாடல்.

'வாடியம்மா பொன் மகளே வந்த இடம் நல்ல இடம்' இனிமையோ இனிமை. சாமிக்கண்ணு பொடி உறிஞ்சும்போது அதுக்கும் கூட கலக்கல் மியூசிக். சுசீலாம்மா, பாலா ரகளை.

இப்போது நாம் பார்க்கப் போவது நாம் அனைவரும் சிறுவயதில் விளையாடி மகிழ்ந்த

'கொல கொலையா முந்திரிக்கா
நரிய நரிய சுத்தி வா'

விளையாட்டுப் பாடல்தான்.

விளையாட்டுப் பாடலைக் கூட மிக இனிமையாகத் தந்திருப்பார் ராஜா. ஜானகியும் 'ஜம்'மென்று பாடியிருப்பார். இசை உற்சாக அருவியாய் நம்மை மகிழ வைக்கும். அப்போதுதான் பறித்துப் போட்ட செவ்விளநீர் போல இளமை கொழிக்க, செழிப்பான புள்ளிமான் போல், பிள்ளைகளுடன் துள்ளி துள்ளி ஓடி விளையாடுவார் அழகு கன்னக்குழி ஸ்ரீபிரியா.

ஏனோ நம்மையறியாமலேயே உற்சாகம் பீறிட்டு வந்து நம்மைத் தொற்றிகொள்ளும் இந்தப் பாட்டிலே.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=ylfCsR4GMx4

rajeshkrv
24th October 2014, 08:10 PM
வாசு ஜி,

ஆம் பாலூட்டி வளர்த்த கிளி பாடல்கள் எல்லாமே அருமை .. இனிமை ..

chinnakkannan
24th October 2014, 08:45 PM
//செழிப்பான புள்ளிமான் போல், பிள்ளைகளுடன் துள்ளி துள்ளி ஓடி விளையாடுவார் அழகு கன்னக்குழி ஸ்ரீபிரியா.// புள்ளி மான்லாம் ஒல்லியான்னா இருக்கும்..! :)ம்ம் பாலூட்டி வளர்த்த கிளி படம் பார்த்ததில்லை..கொலைகொலையாம் முந்திரிக்கா எனக்குப் பிடிக்கும்.. தாங்க்ஸ் வாசுசார்..நான்…பேச வந்தேன் சொல்லத் தான் வார்த்தை இல்லையும் நல்ல பாட்

chinnakkannan
24th October 2014, 08:51 PM
:என்னை துரோகி என்று சொல்லாதே தியாகு.. நான்காதலித்த வானம்பாடி தான் உன் மீனா” ஆலயமணி

“என்னமோ தாது தூதுன்னு பேசறாங்க..அர்த்தமும் அவங்களே சொல்லட்டும்..” வானம்பாடி

“வாராதிருப்பாளோ வண்ண மலர்க் கன்னி அவள்” – பச்சை விளக்கு

“என்னை விட்டு ஓடிப் போக முடியுமா “

ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே

ம்ம் இன்னும் பல இனிய பாடல்கள் காட்சிகள்..செய்தவர் மறைந்து விட்டார். எஸ்.எஸ்.ஆர்.. அவர் ஆன்மா சாந்தியடைவதாக..

RAGHAVENDRA
24th October 2014, 09:15 PM
எஸ்.எஸ்.ராஜேந்திரன் நினைவாக சில பாடல்கள்..

மறக்க முடியுமா திரைப்படத்திலிருந்து இனிமையான பாடல்...

ஒண்ணு கொடுத்தா...

http://www.youtube.com/watch?v=OZ3iOYKjDro

RAGHAVENDRA
24th October 2014, 09:17 PM
எஸ்.எஸ்.ஆருக்கு மிகப் பெரும் புகழைத் தேடித் தந்த பாட்டு..

அக்காலத்தில் இப்பாடல் நடிகர் திலகம் படத்தில் இடம் பெற்றிருக்கக் கூடாதா என பல ரசிகர்கள் ஏங்கியதுண்டு..

திரை இசைத்திலகம் இசையில் வானம்பாடி படத்தில் பாடகர் திலகம் குரலில் கவியரசர் வரிகள்...

கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்...

http://www.youtube.com/watch?v=HGu2z9X8JXI

RAGHAVENDRA
24th October 2014, 09:20 PM
ஈஸ்வரியின் ஹம்மிங் அரவணைத்துச் செல்ல பாடகர் திலகம் பாடும் அற்புதமான பாடல். எஸ்.எஸ்.ஆருக்கு வாய்த்த மிகச்சிறந்த பாடல்களில் ஒன்று.

வானம்பாடி ... திரை இசைத்திலகம் கே.வி.எம். அவர்களின் இணையற்ற படைப்புக்களில் ஒன்று..

ஏட்டில் எழுதி வைத்தேன்.. எழுதியதைச் சொல்லி வைத்தேன்..

இதுவும் கவியரசரின் வரிகள் தான்..

http://www.youtube.com/watch?v=arPkgsUyjR0

ஜி.ஆர். நாதனின் ஒளிப்பதிவு குறிப்பிடத்தக்கது.

RAGHAVENDRA
24th October 2014, 09:22 PM
வேளாண்மையின் சிறப்பை எடுத்துரைக்கும் கருத்தாழமிக்க பாடல்...

பிள்ளைக்கனியமுது படத்திலிருந்து.. பாடகர் திலகத்தின் குரல்.. திரை இசைத் திலகம் இசை...

ஏர்முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லே...

http://www.youtube.com/watch?v=2QnnDK2E3gQ

RAGHAVENDRA
24th October 2014, 09:25 PM
மெல்லிசை மன்னர்கள்..ஏ.எம்.ராஜா...பி.சுசீலா...மருதகாசி...கூட ்டணியில் மாபெரும் புகழ்பெற்ற பாடல்... பெற்ற மகனை விற்ற அன்னை திரைப்படத்திலிருந்து...

தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும் கண்கள் உறங்கிடுமா...

http://www.youtube.com/watch?v=tQ55acTpSWs

RAGHAVENDRA
24th October 2014, 09:27 PM
நடிகர் திலகத்தின் உன்னதத் திரைக்காவியங்களில் ஒன்றான பழநி திரைப்படத்தில் இடம் பெற்ற இனிமையான டூயட் பாடல்...

வட்ட வட்டப் பாறையிலே வந்து நிற்கும் வேளையிலே..

http://www.youtube.com/watch?v=Gxl2MG5EhaA

RAGHAVENDRA
24th October 2014, 09:29 PM
எஸ்.எஸ்.ஆர். அவர்களுக்கென்று பல ரசிகர்களை உருவாக்கிய பாடல்களில் ஒன்று ஆனந்தி திரைப்படத்தில் இடம் பெற்ற கண்ணிலே அன்பிருந்தால்....

பாடகர் திலகத்தின் குரலைக் கேட்கும் போதே கற்பனையில் எஸ்.எஸ்.ஆரின் உருவம் நிழலாடும்..

http://www.youtube.com/watch?v=yfCzXD8mz-I

RAGHAVENDRA
24th October 2014, 09:40 PM
இனி சில மற்ற அபூர்வமான பாடல்கள்..

இசையரசியின் ஈடு இணையற்ற குரலில் என்.எஸ்.தியாகராஜனின் இசையில் வள்ளி தெய்வானை படத்திலிருந்து...

பூத்திருந்தோம் காத்திருந்தோம் ... இப்பாடலைக் கேட்க... பார்க்கவும் தான்...

http://www.youtube.com/watch?v=RS4tP7h91DM

RAGHAVENDRA
24th October 2014, 09:41 PM
அபூர்வ ராகங்கள்... கானங்கள்...

அந்தியில் சந்திரன் வருவதேன்...

மெல்லிசை மன்னரின் இசையைக் கேட்டு மெய்மறக்க..

http://www.youtube.com/watch?v=mGihFumUJW8

RAGHAVENDRA
24th October 2014, 09:50 PM
மல்லிகை மோகினி....

பாடல் மிகவும் பிரபலம்...

ஒரு பாடலை பல ராகத்தில் உனைப் பார்த்துப் பாடினேன்...

இலங்கை நடிகர் காமினி ஃபொன்சேகா லதா மற்றும் பலர் நடித்த படம்..

http://www.youtube.com/watch?v=6oSvnYBIexo

மேற்கண்ட அபூர்வமான பாடல்களைத் தரவேற்றிக் காணும் வாய்ப்பளித்த ஃப்ரெஞ்சு நண்பருக்கு உளமார்ந்த நன்றி

RAGHAVENDRA
24th October 2014, 09:54 PM
மதுர கீதம் படத்திலிருந்து

கண்ணன் எங்கே.. சோக வடிவம்...

http://www.youtube.com/watch?v=UnAHakrZsKw

ஹிந்திப் பாடலின் மெட்டு ...

இதனுடைய ஒரிஜினல் ஹிந்தி பாடல்

கேல் கேல் மெய்ன் படத்திலிருந்து...

http://www.youtube.com/watch?v=KEv0m2r-uus

sivaa
25th October 2014, 09:29 AM
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/10613071_667115953395344_5598346959903583594_n_zps 2806c279.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/10613071_667115953395344_5598346959903583594_n_zps 2806c279.jpg.html)

vasudevan31355
25th October 2014, 09:55 AM
'இளையராஜா என்றும் இனிய ராஜா' (தொடர் 4)

இளையராஜாவின் ஆச்சர்யப்படுத்தும் முன்னேற்றமான வேகம் சற்றும் தரம் குறையாமல் மெருகேறியபடியே. முக்கியமாக நடுத்தர பட்ஜெட் படங்கள்.... அதுவும் கருப்பு வெள்ளை படங்களில் இளையராஜாவின் ஆதிக்கம் கொடி கட்ட ஆரம்பித்தது. கிராமப்புற மெட்டுக்களை பல இசையமைப்பாளர்கள் பிரமதமாக நமக்கு அளித்திருந்தாலும் இளையராஜா அந்த விஷயத்தில் தனியாகத் தெரிய ஆரம்பித்தார் என்றுதான் சொல்ல வேண்டும். கிராமப்புற இசை மட்டுமல்லாது கிளாஸிக்களிலும் அவர் முத்திரை பதிக்க ஆரம்பித்தார்.

ராஜா இசையமைத்த அப்படிப்பட்ட படங்களில் ஒன்று அவரது இசைக்காகவே இன்றுவரை பேசப்படும் 'உறவாடும் நெஞ்சம்' என்ற ஒரு படம். சிவக்குமார், சந்திரகலா போன்ற நன்கு பரிச்சயமான நடிகர்கள் நடித்திருந்தாலும் படம் பற்றியோ, நடிப்பு பற்றியோ,கதை பற்றியோ பல பேருக்குத் தெரியாது. ஆனால் பாடல்கள் ஒவ்வொன்றும் அனைவர் மனதிலும் நீங்கா இடம் பிடித்தன.

1976-இல் வெளிவந்த 'உறவாடும் நெஞ்சம்' படத்தில் பாடல் என்ன என்று கேட்டால் பலருக்குத் தெரியாது. ஆனால் 'ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்' பாடலைப் பற்றிக் கேளுங்கள். 'ஓ... அருமையான பாடல் ஆயிற்றே... இந்தப் பாடல் 'உறவாடும் நெஞ்சம்' படத்திலா? என்று ஆச்சர்யமாகக் கேட்பார்கள். ஆக படத்தை விட பாடல்களே சூப்பர் டூப்பர் ஹிட் ஆயின. இதுவும் தேவராஜ் மோகன் இயக்கம்தான்.

இந்தப் படத்தில் இருந்து ராஜாவின் அபூர்வப் பாடல் ஒன்று. 'அரரரே' என்று ஜானகி ஆரம்பிக்க 'டிக் டிக் டிக்' என்ற ஓசையுடன் அமர்க்களமாக ஆரம்பிக்கும் பாடல்.

நெனச்சதெல்லாம் நடக்கப் போற நேரத்துல வாடி
என் காதல் ராணி... நான்தானே தேனீ
என் காதல் ராணி... நான்தானே தேனீ

இதுதானோ மோகம்
இது ஒரு நாளில் தீரும்
என் காதல் ராஜா... நான்தானே ரோஜா
நெனச்சதெல்லாம் நடக்கப் போற நேரத்துல வாய்யா
என் காதல் ராஜா... நான்தானே ரோஜா

பாலாவும், ஜானகியும் பின்னி எடுத்த பாடல். பஞ்சு அருணாச்சலத்தின் வரிகள். ஜானகி 'வாய்யா... பக்கத்துல வாய்யா' என்னும் போது பின்னுவார். பாலா கேட்கவே வேண்டாம்... உற்சாகத் துள்ளல் துள்ளுவார். அதுவும் ஜானகி 'வாய்யா' என்றவுடன் ஒரு 'ஹய்யோ' போடுவாரே.... அமர்க்களம்.

பாடலைக் கேட்டாலே எழுந்து ஆடத் தோன்றும்.


http://www.youtube.com/watch?v=KLM5XthTkQQ&feature=player_detailpage

rajeshkrv
25th October 2014, 11:03 AM
தேனிசைத்தென்றலின் முத்துக்கள் -11

சரத்குமார் சூரியனுக்கு பின் பல படங்களில் தலையை காட்டினார். இருந்தாலும் பேர் சொல்லும் படி ஒன்றும் அமையவில்லை
அப்படி இருந்த சூழலில் சாமுண்டி வந்தது . 11’ம் வகுப்பு படிக்கும் போது இந்த படத்தை நண்பர்களுடன் பார்த்தேன். இதில் என் கூட கனகா ரசிகர்கள் வேறு .. கஷ்டம்ம்..

தேவாவின் இசையில் பாடல்கள் நன்றாகவே பிரபலமடைந்தது
முத்து நகையே முழு நிலவே
கண்ணுல பால ஊத்த வந்த கண்ணம்மா
இரண்டும் நல்ல பிரபலமாயின

அதே போல் பாலாவின் குரலில் இந்த பாடலும் அருமையான ஒன்று
மண்ணத்தொட்டு கும்பிட்டுட்டு பொட்டொன்னு வெச்சுக்கம்மா (திரையில் தங்கையாக நடிகை மீரா)

https://www.youtube.com/watch?v=tCiE0_5ixb8

vasudevan31355
25th October 2014, 11:28 AM
இலட்சிய நடிகரின் மறைவுக்கு என் அஞ்சலி

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/VTS_01_3VOB_001571256.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/VTS_01_3VOB_001571256.jpg.html)

இலட்சிய நடிகர் மறைந்துவிட்டார். ஒரு பெரிய சோகம் என்னைக் கவ்விக் கொண்டது நிஜம். நடிகர் திலகத்துடன் பல்வேறு கருத்து வேறுபாடுகள் கொண்டவராய் இருந்தாலும் நடிப்பு என்று வரும்போது திலகத்துடன் இணைந்து பல காவியங்கள் தந்து, தனித்தன்மையான சிறந்த நடிப்பு என்ற ஒத்துழைப்பை நல்கியவர்.

புராண வேடங்களை நான் ஏற்க மாட்டேன் என்ற உண்மையான இலட்சியத்தைக் கடைப்பிடித்து நிஜமான லட்சிய நடிகராகத் திகழ்ந்தவர். நடிகர் திலகத்திற்குப் பிறகு தமிழை அருமையாக உச்சரித்தவர். நடிப்பில் பல சாதனைகளை நிகழ்த்தியவரும்கூட.

என்னைக் கேட்டால் அவருடைய உச்சம் 'கை கொடுத்த தெய்வ'த்தில் தான் என்பேன். அண்ணன் தங்கையாய் பழகும் நடிகர் திலகத்தையும், எஸ்.எஸ்.ஆரின் மனைவி கே.ஆர்.விஜயாவையும் இணைத்து ஊர் கேவலமாக முடிச்சுப் போட்டுப் பேசி கதை கட்டும். கயிறு திரிக்கும். ஒரு கட்டத்தில் அது அதிகமாகிவிட, நடிகர் திலகம் மனம் நொந்து, 'இனி அங்கிருந்தால் நண்பனுக்கு மிகுந்த அவமானம் ஏற்படும்' என்று கையில் பையுடன் வீட்டை விட்டு கிளம்புவார். எஸ்.எஸ்.ஆர் தடுத்து காரணம் கேட்பார். அதற்கு நடிகர் திலகம் ஊராரின் கேலிப் பேச்சுக்களையும், விஜயாவைத் தன்னுடன் மற்றவர்கள் சம்பந்தப்படுத்திப் பேசுவதையும் சொல்லி தாங்கமாட்டாமல் குமுறுவார். எஸ்.எஸ்.ஆர் எவ்வளவோ சமாதானம் சொல்லிப் பார்ப்பார். நடிகர் திலகம் கேட்க மாட்டார். 'வீட்டை விட்டுக் கிளம்புகிறேன்' என்று பிடிவாதமாகவே இருப்பார். இறுதியில் எஸ்.எஸ்.ஆர் 'ஆல்ரைட்...போடா' என்று கடுப்பாகச் சொல்லி விடுவார். கே.ஆர்.விஜயாவும் நடிகர் திலகத்தை போக வேண்டாம் என்று தடுப்பார்.

"அவனைத் தடுக்காதே போகட்டும் விடு" என்று விஜயாவிடம் எஸ்.எஸ்.ஆர். கூறுவார்.

"இந்த உலகத்தைக் கண்டு பயப்படறேன்னு சொல்றாரு... அந்த உலகத்துக்குள்ளேயா அவரைத் தனியா அனுப்புறீங்க?"

அப்படின்னு விஜயா எஸ்.எஸ்.ஆரிடம் கதறுவார்.

அதற்கு எஸ்.எஸ்.ஆர்,

"அவன் பொய் சொல்றான் ராதா பொய் சொல்றான்...(குரல் மாடுலேஷன் அற்புதமாக இருக்கும்) நான் பயந்த நேரத்துலலாம் எனக்கு தைரியம் சொன்னவன் அவன். இந்த உலகத்தைக் கண்டு அவன் பயப்படல...தனக்குத் தானே அவன் பயப்பட ஆரம்பிச்சுட்டான்... (நடிகர் திலகம் அதிர்ச்சியில் உறைந்து தன்னையறியாமல் 'ஆங்' என்பாரே பார்க்கலாம்) இந்த வீட்ல இருந்தா ஊரார் சொன்னா மாதிரி எங்க உண்மையிலேயே தப்பு பண்ணிடுவோம்கிற பயம் அவன் மனசுக்குள்ள வந்துடிச்சி...அதனால்தான் போறேன்னு சொல்றான்" என்று வேண்டுமென்றே நடிகர் திலகத்தைத் தடுத்து நிறுத்த ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பார்.

இதைக் கேட்டதும் நடிகர் திலகம் படுகோபமுற்று, எஸ்.எஸ்.ஆரின் மேல் பாய்ந்து, அவர் கன்னத்தில் 'அறை அறை' என்று அறைந்து விடுவார். நடிகர் திலகத்தில் கைவிரல்கள் எஸ்.எஸ்.ஆரின் கன்னத்தில் பதிந்திருக்கும்.

"என்னடா சொன்னே?!

யாரடா சொன்னே?!

யாரப் பக்கத்துல வச்சுக்கிட்டுடா சொன்னே?!"

என்று எஸ்.எஸ்.ஆரின் சட்டையைக் கொத்தாகப் பிடித்துக் கொண்டு ஆங்காரமாக நிற்பார் நடிகர் திலகம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/VTS_01_3VOB_001557221.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/VTS_01_3VOB_001557221.jpg.html)

அதற்கு எஸ்.எஸ்.ஆர் கொஞ்சமும் பதறாமல் நிதானமாக, ஆணித்தரமாக

"யேய் ...நீ போறேன்னு சொன்னா அதைத்தாண்டா சொல்லுவேன்" என்று தீர்க்கமாக நடிகர் திலகத்தைப் பார்த்து சொல்லுவார்.

"மறுபடியும் சொல்றா பார்க்கலாம்" வேகத்துடன் நடிகர் திலகம்.

"உண்மையிலேயே தப்பு பண்ணிடுவோமோன்னு பயந்துதான்டா நீ போற" மீண்டும் எஸ்.எஸ்.ஆர் அதே ஸ்டேன்டர்டான நிலையில்.

மறுபடி புயல் மாதிரி வேகம் கொண்டு ,எஸ்.எஸ்.ஆரைப் பிடித்துக் கீழே தள்ளிவிட்டு, நடிகர்திலகம் அவர் கழுத்தை நெருக்கிப் பிடித்து,

"சொல்லலேன்னு சொல்றா"..

எஸ்.எஸ்.ஆர் பதறவே பதறாமல்,

"போகலைன்னு சொல்றா"

நடிகர் திலகம் சிம்மமாக எஸ்.எஸ்.ஆரின் கழுத்தைக் கடிக்கப் போவார்.

"குரல்வளையைக் கடிச்சு ரத்தத்த உறிஞ்சுபுடுவேன்...சொல்லலேன்னு சொல்றா"

எஸ்.எஸ்.ஆர்,

"யேய்... நீ போனா அப்படித்தாண்டா சொல்லுவேன்... போகலைன்னு சொல்றா"

என்ன ஒரு காட்சி! என்ன ஒரு நடிப்பு! இந்தக் காட்சியில் நடிகர் திலகத்தின் முன் நிற்க இந்த இலட்சிய நடிகரை விட்டால் வேறு யார்?

நடிகர் திலகத்தை அறவே மறந்து விடுவோம். இலட்சிய நடிகரின் திறமையை இந்தக் காட்சியில் என்னவென்று சொல்வது? நண்பனின் மேல் கொண்ட நம்பிக்கையை அவனையே உணரச் செய்யும் சாமர்த்தியம், அசையாத சங்கர் சிமெண்ட் உறுதி, கொஞ்சமும் தளராத மனம், எங்கு அடித்தால் நண்பன் வீழ்வான் என்று அந்த இடம் பார்த்து அடிக்கும் சமயோசிதபுத்தி, உணர்ச்சிகளுக்கு ஆளாகாமல் அமைதிவழிப் போராட்டம் நடத்தி நண்பனை நிறுத்தும் பாங்கு, நண்பனின் முரட்டு அடிகளையும் தாங்கிக் கொண்டு "போகலைன்னு சொல்றா"என்று இறுதிவரை உறுதியாக நின்று காரியத்தை சாதிப்பது என்று நடிப்பில் சாதித்துக் காட்டுவாரே! நடிகர் திலகம் பொங்கி கோபப்பட்டு குமுறும் போதெல்லாம் அவரைத் தன் சிறு கண்களால் தீர்க்கமாகப் பார்த்துப் பேசும் தோரணை, 'நண்பன் கிளம்பத் தயாராகி விட்டான்... இனி அவனைத் தடுக்க பிரம்மாஸ்திரத்தை எடுக்க வேண்டியதுதான்' என்று முடிவு செய்து, அப்படியே எடுத்து, ஒரே அஸ்திரத்திலேயே அவனை வீழ்த்தி இலட்சியத்தை நிறைவேற்றிய லட்சிய நடிகன் இன்று நம்மிடத்தில் இல்லையே!

அவருடைய மறைவுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் மறைந்திருக்கலாம். அவரின் எண்ணற்ற படங்கள் குறிப்பாக நடிகர் திலகத்துடன் அவர் நடித்த, அவருடன் பாத்திரமாக வாழ்ந்த கதாபாத்திரங்களை நாம் மறக்க முடியுமா?

vasudevan31355
25th October 2014, 11:44 AM
காலை வணக்கம் ராஜேஷ்ஜி!

vasudevan31355
25th October 2014, 11:44 AM
ராஜேஷ்ஜி!

அருமையான வயலின் இசையுடன் தொடங்கும்

'ராகா நின்னது பாவா நன்னது
தாளா நின்னது நாட்யா நன்னது

மனவே யமுனா
மணியே கோகுலா
நானே முரளி
நீனே கோபாலா'

அம்ர்க்களமோ அமர்க்களம். பத்து முறைகளுக்கு மேல் கேட்டுவிட்டேன். நிஜமாகவே இசையரசி கொன்னுட்டாங்க ஜி. அதுவும் அந்த 'து' உச்சரிப்பு ரகளையான ரகளை. தேங்க்ஸ் ஜி.

vasudevan31355
25th October 2014, 11:46 AM
'மண்ணத்தொட்டு கும்பிட்டுட்டு பொட்டொன்னு வெச்சுக்கம்மா'

ரொம்பப் பிடித்தம் எனக்கு.

vasudevan31355
25th October 2014, 11:55 AM
சின்னக் கண்ணன் சார்,

'வெண்ணிலா நேரத்திலே வேணுகானம்' அச்சா பாடல். ரொம்பப் பிடிக்கும். பதித்ததற்கு நன்றி. வரிகளுக்கும் சேர்த்துத்தான். வீடியோ நாங்களே தேடிக்கவா?:) எந்த ஊர் நியாயம் இது?:)

சரி போனா போகுது. இந்தாங்க.:)


https://www.youtube.com/watch?v=yJ8rGdEUeOo&feature=player_detailpage

vasudevan31355
25th October 2014, 11:59 AM
ராஜேஷ்ஜி!

எங்க வீட்டு தீபாவளி ...பலகாரங்கள். நாக்கு ஊறுது ஜி. பார்சல் ப்ளீஸ்.