PDA

View Full Version : மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 [14] 15 16

chinnakkannan
4th April 2015, 09:10 AM
ஹாய் குட்மார்னிங்க் ஆல்

காலங்கார்த்தால சுறுசுறுப்பா ஒருமெலடி..

கார்காலக் குளிரும் மார்கழிப் பனியும்
கண்ணே உன் கைசேரப் பணியும் என்று

கால்கள் சேர்த்துப் பாடுவது அந்தக்கால வழக்கம் போல..:)

உன்னிடம் மயங்குகிறேன் – எனக்குப்பிடித்த பாடல்களில் ஒன்று..பட் இன்று தான் விஷூவல் பார்த்தேன் சிவகுமார்..ஜெய்சித்.. (முன்னால் போடப்பட்டிருக்கலாம் நினைவிலில்லை)

https://youtu.be/qXmQ7m0MlBA

.
**

கலை..இது என்ன எங்களுக்கெல்லாம் நன்றி சொல்லிக்கொண்டு..சரி சரி..வயது குறைந்தவர் என சொல்லியிருக்கிறீர்கள்..:)

Gopal.s
4th April 2015, 11:21 AM
என்ன கலைவேந்தன்,



சி.க, கல்நாயக் இருவருமே ஆரோக்யமான நபர்களே. தவறான இடத்தில் வந்து லேகியம் வாங்கலியோ லேகியம் என கூவி விற்க தொடங்கி விட்டீர்களே?என்ன உங்கள் இடத்தில் விலை போகவில்லையா? எங்களுக்கு நடிகர்திலகம் என்ற அருமருந்து ஒன்று போதும். வேறு எந்த லேகியமும் வேண்டாம்.



அதுவும் எல்லாரையும் புகழ்ச்சி வலையில் வீழ்த்தி ,வியாபாரம் தொடங்குவது, பிதாமகன் சூர்யா ரேஞ்சில் போக ஆரம்பித்தாயிற்றே?

chinnakkannan
4th April 2015, 12:54 PM
கல் நாயக் ஊருக்குப் போயிருப்பார் என நினைக்கிறேன்..நேற்றுக் கூட வானத்தில் வெண்ணிலா தேய்ந்தது போலத் தோற்றமளித்தது!

ம்ம் இன்னிக்கு என்ன செய்யலாம்..:

இலங்கை வானொலியில் கேட்கமட்டும் செய்த பாடல்கள்:

மாசி மாசம் முகூர்த்த நேரம் எங்கும் மங்கலம் – ரேடியோ சிலோனில் கேட்ட பாடல்…ரொம்ம்ம்ப நாள் கழிச்சு இன்று கேட்கவும் பார்க்கவும் செய்தேன்..
கோட் சூட் போட்டுக்கொண்டு டூயட் ஆடவேண்டும் என்று ரூல் யார் க்ரியேட் செய்தார்கள்..

https://youtu.be/azyQvigCjSU

ஒல்லி ஒல்லி ரத்தி கோ.சூ சுதாகர்.. ம்ம் பெண்களுக்குப் புடவை என்றும் அழகு!

*

chinnakkannan
4th April 2015, 12:55 PM
*

கண்ணெல்லாம் உன்வண்ணம் நெஞ்செல்லாம் உன் எண்ணம்..

இன்னொரு சிலோன் ரேடியோ
ஹிட் சிவகுமார் ஜெய்சித்ரா..

ஒரே பாட்டுல குழந்தை பிறந்துஸ்கூல் போகுது..ம்ம் ரியல் லைஃப்ல அப்படி நடந்தா இந்தப் பாட்டுக்கு ஹெவி டிமாண்ட் இருக்கும்.

https://youtu.be/VtzlkAvHGQs

chinnakkannan
4th April 2015, 12:58 PM
இதுவும் சிலோன் ரேடியோவில் கேட்டது தான்.. முத்துராமன் சாரதா எனப்பார்க்கையில் ஒரு இனிய ஆச்சர்யம்..

ஆகாய கங்கை இன்று மண்ணில் வந்தது
ஆஹஹா.. ஹம்மிங்க்..ஆஹா..

முத்துராமன் சாரதா..
மின்னலில் அழகிய ஊஞ்சலை அமைத்து
மேகத்தில் இரவுக்குப் பஞ்சணை விரித்து
வானத்து மீன்களில் மல்லிகை தெளித்து
மன்மத மந்திரம் மயங்கிடப் படித்து.. ம்ம்
பாடம் சொல்லக் கூடாதோ
பார்வை ஒன்று போதாதோ..

யாராக்கும் வரிகள்..

https://youtu.be/-QwHbLlzQiA

chinnakkannan
4th April 2015, 02:09 PM
**
பாடினார் கவிஞர் பாடினார் – 7

ஹாய் ஆல்.. ரொம்ப நாளாச்சா இந்த த் தொடரைக் கண்டின்யூ பண்ணி..

எனில் ஆறாம் அத்தியாயத்தின் இறுதி வரி…

//அடுத்து வரப்போகும் கவிஞர் இந்தப் பாட்டெல்லாம் இவரா எழுதினார் என ஆச்சரியப்பட வைத்தவர்..அவரும் ஒரு இசையமைப்பாளர், டைரக்டர்..

அவர்ர்ர்ர்ர்ர்……//

**

சரி அந்தக் கவிஞரைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்னால் அவரைப் பற்றிய ஒரு தகவல் தெரிவதற்கு திருமூலரை அழைப்போம். திருமூலர்? யெஸ் .
*
ஒருபாடல் திருமந்திரத்திலிருந்து…


வழுதலை வித்திடப் பாகல் முளைத்தது
புழுதியைத் தோண்டினேன் பூசணி பூத்தது
தொழுதுகொண் டோடினார் தோட்டக் குடிகள்
முழுதும் பழுத்தது வாழைக் கனியே

என்னவாக்கும் அர்த்தம்?.

இறைவா என் நெஞ்சில் உனை எண்ணிக் கசிந்துருகும் வண்ணமிருக்கும் யோகப் பயிற்சியை வித்திட்டேன்.. பாகல் எனச் சொல்லப் படும் வைராக்கியம் முளைத்தது.

.கண்ணை மறைக்கும் புழுதியைப் போல கண்களை மறைத்து உண்மையைக் கூற மறுக்கும் தத்துவங்களை ஆராய்ச்சி செய்தேன்.. பலன் பெரிய பெரிய காய்களைக் கொண்ட பூசணியைப் போல என்னுள்ளே இருந்த சிவமாகிய இறைத் தன்மை வெளிப்பட்டது..

என்னுள் இருக்கும் இந்திரிய விஷயங்களைத் தொழுது அவற்றை அடக்கி உன்னடி சேர்வதற்குப் பயிற்சியும் செய்தேன்..ஓ. காட்.. என்னாச்சு தெரியுமா.. எனக்கு வாழைப்பழத்தைப் போன்ற சுவைகொண்ட --ஆனால் அவற்றை முன்பின் அறியாமல் இருந்த எனக்கு மிகப்பெரிய ஆன்ம லாபம்..உன்னை அடைவதால் கிடைக்கும் பயன் கிடைச்சதுப்பா..தாங்க்யூ..!

(சைவப் பெரியார் துடிசைக் கிழார்ங்கறவர் எழுதின உரையைக் கொஞ்சம் எனக்குப் புரிந்த வகையில் எழுதிப் பார்த்தேன்.)

ஆனா பார்த்தீங்கன்னா…இதைத் தழுவி ரொம்ப ஸிம்ப்பிளா நாம் பார்க்கப் போகும் கவிஞர் அன்றே எழுதியிருக்கிறார் என்று சொல்வதற்கு முன் ஒரு காட்சி..

(ஆரம்பிச்சுட்டான்யா ஆரம்பிச்சுட்டான்!)

*

பாட்டுக்கு மெட்டு போட்டுட்டயா.. எங்கே…

கேட்டவர் அந்த ஓரிருபடத்திற்கு இசையமைத்திருந்த புது இசையமைப்பாளரின் நண்பர்..அந்தப் புதுப்படத்தின் புது இயக்குனர்..

போட்டுட்டேனே.. இதோ ஒரு பாடகியை வச்சு சில வார்த்தைகள் போட்டு பாடச்சொல்லியிருக்கேன்..

எங்கே சொல்லு..

தானான தான்னா ஆ ஆ
தானேனா தான்னா தனனானே தானானா..

யோவ் மெட்டு எதுக்குய்யா வார்த்தை…

சொன்னார் இசையமைப்பாளர்.. நல்லா இருக்கே.. எந்தக் கவிஞர்… நம்ம பெரியவரா..

இல்லீங்காணும்.. என்னோட அஸிஸ்டெண்ட்டா இருக்கானே…” தூரத்தில் வெடவெடவென ஒல்லியாக இருந்த ஒரு இளைஞனைக் காண்பித்தார் இசை..

“டேய்” அடா புடா நண்பர்கள் தான் இசையும் இயக்கமும்.. “அது உன் தம்பியில்லையா”

“தம்பியே தான்..அமர்..”

நல்லா இருக்கு..அவனையே முழுப்பாட்டையும் எழுதச் சொல்..

அப்படி இளையராஜா என்ற இசையமைப்பாளரின் தம்பியான அமர் என்கிற கங்கை அமரனை ப் பாடல் எழுதச் சொன்னது பாரதிராஜா என்ற புது டைரக்டர்..அந்தக்காலத்தில்..

அப்படி கங்கை அமரன் எழுதிய பாடல் செந்தூரப் பூவே…. தேசிய விருது எஸ்.ஜானகிக்கு ப் பெற்றுத் தந்த பாடல்..

தென்றலைத் தூது விட்டு மறு சேதிக்குக் காத்திருப்பேன்
கண்களை மூடவிட்டு இன்பக் கனவினில் நான் மிதப்பேன்
கன்னிப்பருவத்தில் வந்த கனவிதுவே
எண்ண இனிக்குது அந்த நினைவதுவே - ஸீ இதை நினைவிலிருந்து என்னால் டைப் செய்ய முடிகிறது என்றால் காரணம் கவித்துவமிக்க வரிகள்..

கவிஞர்கள் அனைவருக்கும் இசைஞானம் உள்ளது என்று சொல்ல முடியாது..இசைஞானம் அவ்வளவாக இல்லாத கவிஞர்கள் ,என் போன்ற கவிதை எழுத முயற்சிப்பவர்கள் நிறையவே உண்டு..

இசைஞானம் உள்ளவருக்கு , இசையமைக்கும் திறமை கொண்ட நபருக்கு , கவித்துவ உள்ளம் கண்டிப்பாக இருக்கும்.. அப்பொழுது தான் மெட்டுக்கள் பொங்கி வரும்..

அந்தமாதிரிப்பட்டவர் கங்கை அமரன்..

சிலபாடல்கள் அவர் எழுதியவை என்றால் வெகு ஆச்சர்யமாக இருக்கும்..
*

இன்னொரு சம்பவம்..

இளையராஜாவின் இன்னொரு படம்..இந்தாடா தம்பி.. இந்த மெட்டு.. நான் பாட்டுப்போட்டு இருக்கேன் பாரு..

அரண்மனைக்கிளி அழகுப் பைங்கிளி
அரங்கில் வந்ததம்மா.. நல்லா இருக்கா நீ எழுது… என கங்கை அமரனைக் கேட்க

அவர் எழுதிய பாடல்..

அரைச்ச சந்தனம் மணக்கும் குங்குமம்
அழகு நெத்தியிலே..

**

என்ன பாடல்களில் மட்டுமே கவனம் செலுத்தவில்லை ..இசை.. பின் திரைக்கதை டைரக்ஷன் என எல்லாத் துறைகளிலுமே கால் வைத்தார்.. வழுக்கவில்லை என்று தான் சொல்லவேண்டும்..

ஆனால் பாடலாசிரியராக சிலசமயங்களில் சிற்சில கமர்ஷியல் எனச்சொல்லப்படும் பாடல்களையும் எழுத வேண்டியிருந்தது.. எஸ் ஓரம்போ ஓரம்போ , அண்ணே அண்ணே சிப்பாயண்ணே.. நம்ம ஊர் நல்ல ஊர் இப்ப ரொம்ப கெட்டுப்போச்சன்னே, வாடி என் கப்பக் கிழங்கே.. என்பன சில எக்ஸாம்பிள்கள்..

கவிஞர் கங்கை அமரனின் என் மனங்கவர்ந்த சில பாடல்கள்..

சீர் கொண்டுவா வெண்மேகமே..
இது இனிய வசந்த காலம்
இலைகளில் இளமை துளிரும் கோலம்..
*
காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே

*
உன்பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே
*
சிறுபொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும்

*
தம்தன தம்தன தாளம் வரும் புது ராகம் வரும் புது தாளம்வரும்
அதில் சந்தன மல்லிகை வாசம் வரும்..
மணமாலைவரும் சுப வேளை வரும்
மண நாள் திரு நாள் சுப நாள்..

*
ஊரு சனம் தூங்கிருச்சு ஊதக் காத்தும் அடிச்சுருச்சு
பாவிமனம் தூங்கலையே அதுவும் ஏனோ தெரியலையே

**
ஆசையக் காத்துல தூதுவிட்டு
*
நீ எப்போதும் பார்த்த புள்ள உன்னை அடையாளம் தெரியவில்லை

*
மஞ்சக் குளிச்சு அள்ளி முடிச்சு
*
மண்ணிலிந்தக் காதல் அன்றியாரும் வாழ்தல் கூடுமோ
*
இந்த மான் உன் சொந்தமான்பக்கம் வந்து தான்
சிந்து பாடும்..
*
பூ மாலையே தோள் சேரவா..

*
பூங்கதவே தாழ் திறவாய், பூவாய் பெண்பாவாய்
*
புத்தம்புதுக்காலைபொன்னிற வேளை
என் வாழ்விலே தினம் தோறும் தோன்றும்
சுப ராகம் கேட்கும் என்னாளும் ஆனந்தம்
*
இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே
இன்பத்திலாடுது என் மனமே
*
அடியே.. மனம் நில்லுன்னா நிக்காதடி..
கொடியே… எனைக் கண்டு நீ சொக்காதடி
*
நான் என்பது நீயல்லவோ தேவ தேவி
*
செண்பகமே செண்பகமே தென் பொதிகைச் சந்தனமே
*
ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொண்ணும்கவலையில்லே
*
ஆனந்த ராகம் கேட்கும் காலம் கீழ்வானிலே ஒளி மின்னல் தோன்றுதே
*

இன்னும் நிறையச் சொல்லலாம்..

இங்கு ரெண்டே ரெண்டு..

தம்தனதம்தன தாளம் வரும்
சில்லென மெல்லிய தென்றலும் வந்திசை சொல்லியது
சுவை அள்ளியது
மனம் நில்லென சொல்லியும் துள்ளியது

பெண் மனம் பூவினும் மெல்லியது தவிக்கும் நினைவோ எனைக் கிள்ளியது
மல்லிகை முல்லையில் பஞ்சணையோ
மன்னவன் கொண்டது நெஞ்சணையோ
மின்னிய மின்னலும் கன்னியின் எண்ணங்களோ
இனிக் கனவுகள் தொடர்ந்திட –

தம்தன நம்தன தாளம் வரும் பல பாவம் வரும்
அதில்: சந்தன மல்லிகை வாசம் வரும்
மண மாலை வரும்.. சுப வேளை வரும்.. மண நாள்.. திருநாள்.. புது நாள்.. உனை அழைத்தது

https://youtu.be/QixSF2OUiek?list=PLn4GJpNVAHex-BOgiP11QWqCcoPrVtCoU

எப்போதுகேட்டாலும் எனக்கு மெய்மறக்கும் மேலுள்ள பாடல்.. (பிக்சரைசேஷன் எனக்குப் பிடிக்கவில்லை..ஆனால்பாடலைக் கண்மூடிக் கேட்டால் எங்கோ செல்லலாம்…)

கீழ்வரும் பாடலும் அப்படியே..

சிறு பொன்மணி அசையும்
அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன் இமைகளில் தாளலயம்

நிதமும் தொடரும் கனவும் நினைவும் இது மாறாது
ராகம் தாளம் பாவம் போல
நானும் நீயும் சேர வேண்டும்


விழியில் சுகம் பொழியும்
இதழ் மொழியில் சுவை வழியும்
எழுதும் வரை எழுதும்
இனி புலரும் பொழுதும்

தெளியாதது எண்ணம்
கலையாதது வண்ணம்
அழியாதது அடங்காதது
அணை மீறிடும் உள்ளம்

வழி தேடுது விழி வாடுது
கிளி பாடுது உன் நினைவினில்

https://youtu.be/9wCz9LBwE3I
**

இப்போதும் இன்றும்படங்களுக்குபாடல்கள் எழுதிக்கொண்டிருக்கிறார் கங்கை அமரன்.. இன்னும் கவித்துவமாக அவர் எழுதி நல்ல மெலடி கேட்கவேண்டுமென்பதே என் போன்ற சிறு ரசிகனின் ஆசை..

*
அடுத்து வரும் கவிஞரின் வாழ்வில் நடந்ததாகக்கூறப்படும் ஒரு சம்பவத்தை வைத்து இன்னொரு இந்தக்காலக் கவிஞர் அழகாகச் சிறுகதையும் எழுதியிருக்கிறார்..

அப்படி அந்தக்காலக் கவிஞர் யார் என்றால்…ஜஸ்ட் வெய்ட் ஃபார் நெக்ஸ்ட் எபிஸோட்..
*
ஏதோ மிஸ் பண்ணிட்டேனா..

ஆமா..ஆரம்பத்துல திருமூலர் பாட்டு அதுக்கும் கங்கை அமரனுக்கும் என்ன தொடர்பு..


(ரொம்ப சிம்ம்பிளா கங்கை அமரன் (?!) அன்னிக்கே சொல்லிட்டார்..அதுக்கெல்லாம் ஞானம் வேணும் ஞானம் வேணும் டோய்னு. இல்லியோ 

எஸ்ஸ்கேப்..

பின்ன வாரேன் :)

Russellzlc
5th April 2015, 01:28 PM
‘அளந்து கொட்டும் ஆண்களுக்கு வாயிலே பூட்டு.....’


சின்னக் கண்ணன்,

உங்கள் பாடல் தொகுப்புகள் பிரமாதம். நீங்கள் கூறியபடி கல்நாயக் ஊருக்கு போயிருப்பார் என்று கருதுகிறேன். நீங்கள் சொன்னது உண்மைதான். நிலா தேய்ந்தது போல நேற்று தெரிந்திருக்கும். நேற்று சந்திரகிரகணம். கல்நாயக்கும் ஊரில் இல்லை. கங்கை அமரசனுக்கும் திருமூலர் பாட்டுக்கும் நீங்கள் கொடுத்த ‘ லிங்க்’ அபாரம்.

திரு.கோபால்,

பி.யு.சின்னப்பாவைப் பற்றி தனக்கு தெரியாது என்று கல்நாயக் கூறினார். எனக்குத் தெரிந்த தகவல்களை நான் கூறினேன். மக்கள் திலகம் தனது உரையில் மேலும் என்ன கூறினார் என்று சின்னக்கண்ணன் கேட்டார். சில அம்சங்களை கூறினேன். இதைப் பார்த்து ஒரு நண்பர் தன்னிடம் ஒலிப்பதிவு உள்ளதாக தகவல் தெரிவித்தார். இதையடுத்து, அந்த ஒலிப்பதிவு (அதுவும் இங்கே அல்ல, மக்கள் திலகம் திலகம் திரியில்) தரவேற்றப்படும் என்று தெரிவித்தேன்.

சின்னக்கண்ணனும், கல்நாயக்கும் திரு.சிவாஜி கணேசன் அவர்களை மோசமாக விமர்சிக்காத ஆரோக்கியமான ரசிகர்கள் என்று எனக்குத் தெரியும். தகுதியும் திறமையும் யாரிடம் இருந்தாலும் மனமார பாராட்டுவது என் வழக்கம். உங்களைக் கூட விஷயம் தெரிந்தவர், திறமையாளர், நல்லவர் என்றெல்லாம் நான் கூறியது உண்டு. அதெல்லாம் பச்சைப் பொய், வெறும் புகழ்ச்சி வலை என்று நீங்கள் சொன்னால்......... நான் என்ன சொல்லப் போகிறேன்? உங்களைப் பற்றி என்னை விட உங்களுக்குத்தான் நன்றாகத் தெரியும்.

எம்.எஸ்.விஸ்வநாதன் வாழும் அதிசயம் கட்டுரையில் அடானாவை முதலில் பயன்படுத்தியவர் (வருகிறாள் உம்மைத் தேடி) என்று கூறியிருந்தீர்கள். அதற்கு முன்பே ரத்தக்கண்ணீரில் ‘கதவை சாத்தடி...’ மூலம் சி.எஸ்.ஜெயராமன் அவர்கள் அடானாவை பயன்படுத்தி விட்டார் என்று கூறியிருந்தேன். உங்கள் பதிவில் நீங்கள் திருத்தியதாக தெரியவில்லை. பிழையான தகவல் என்று நண்பர் ராஜேஷை வறுத்தெடுக்கும் நீங்கள் பிழையான தகவல் கொடுக்கக் கூடாது அல்லவா?

நேற்று முன்தினம் nt திரியில் உங்கள் பதிவை பார்த்து உங்கள் மீது ஆத்திரமாக வந்தது. திரு.ராகவேந்திரா சாரின் வயதுக்காவது மரியாதை கொடுக்க வேண்டாமா? உணர்ச்சி கொந்தளிப்பை ஒதுக்கிவிட்டு நிதானமாக யோசித்து பாருங்கள். நான் சொல்வதன் நியாயம் புரியும்.
--------------

சின்னக்கண்ணன், கல்நாயக்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நைஜீரியராக இருந்தால், வெள்ளையாக இல்லாமல் கறுப்பாக இருந்தால் அவரை ராஜிவ் திருமணம் செய்து கொண்டிருப்பாரா? அவரை காங்கிரஸ்காரர்கள் தலைவராக ஏற்றுக் கொண்டிருப்பார்களா? என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் கிஷோர் கூறியிருப்பதற்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன. நைஜீரியா தூதரும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் அதற்கேற்ப தங்கள் தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஆனந்தஜோதி படத்தில் வரும் அற்புதமான பாடல். கவியரசரின் சிந்தனையில் ஊற்றெடுத்த தேனாறாய் வரிகள். மெல்லிசை மன்னர்களின் மயக்கும் இசை. மக்கள் திலகத்தின் அருமையான நடிப்பு.

பல பல பல பல ரகமாய் இருக்குது பூட்டு
அது பலவிதமாய் மனிதர்களை பூட்டுது போட்டு
கலகலவென பகுத்தறிவு சாவியப் போட்டு
நான் கச்சிதமா திறந்து வைப்பேன் இதயத்தைக் காட்டு..

அடக்கமில்லாமே சபையிலே ஏறி
அளந்து கொட்டும் ஆண்களுக்கு வாயிலே பூட்டு...

என்ன ஒரு கருத்தாழம் மிக்க வரிகள். கதைப்படி, கொள்ளைக் கூட்டத்தைச் சேர்ந்த மாடக்குளம் தர்மலிங்கத்தை தேடி மக்கள் திலகம் மாறுவேடத்தில் வருவார். தர்மலிங்கத்தின் கன்னத்தில் இருக்கும் மருவையும் நெற்றியில் இருக்கும் வெட்டையும் பார்த்ததும் அந்த இரு அடையாளங்களையும் மனதில் வாங்கிக் கொண்டதை காட்டும் வகையில் அனிச்சையாக தன் முகத்தில் அந்த அடையாளங்கள் இருக்கும் இடங்களில் கை வைத்துக் கொள்வார். இசை நிகழ்ச்சிகளில் பார்த்திருக்கிறேன். உச்ச ஸ்தாயியில் பாடும்போது சிலர் காதில் கை வைத்துக் கொள்வார்கள். அதேபோல, பூட்டு, சாவி, ரிப்பேர் என்று உரத்து கூவும்போது பொத்தினாற்போல காதில் கைவைத்துக் கொள்வார். எனக்கு பிடித்த மனங்கவர்ந்த பாடல்களில் இதுவும் ஒன்று.

1962-ம் ஆண்டு தேர்தல் சமயம். காஞ்சியில் அறிஞர் அண்ணா போட்டியிட்டார். அவரை மிகக் கேவலமாக திட்டி, மரியாதைக் குறைவாக ஏசி அவரது வீட்டுக்கு எதிரிலேயே மாற்றுக் கட்சியினர் பெரிய தட்டியை வைத்திருந்தனர். ஆத்திரப்பட்ட உடன்பிறப்புகள் அதை அகற்ற முயற்சித்தனர். வன்முறை வெடித்துவிடக் கூடாதே என்று அவர்களை அமைதிப்படுத்திய அண்ணா, ‘நாளைக்கு அவர்களே அந்த தட்டியை எடுத்து விடுவார்கள். கவலைப்படாதீர்கள்’ என்று சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்.ஏதோ மாற்றுக்கட்சி மேலிடத்தில் பேசி எடுக்கச் சொல்லப் போகிறார் போலிருக்கிறது என்று அவர்களும் சென்றுவிட்டனர்.

எல்லாரும் போன பிறகு நெருக்கமான சிலரை அழைத்து ஒரு யோசனை தெரிவித்தார் அண்ணா. அவர் சொன்ன யோசனை இதுதான்.....

‘‘அந்த தட்டிக்கு அருகே இருபுறமும் பெட்ரோமாக்ஸ் விளக்குளை வைத்து விடுங்கள். அதற்குபக்கத்தில் இடம் பெற வேண்டிய வாசகம்...இரவிலும் இந்த தட்டியில் உள்ள வாசகங்கள் எல்லாருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக இந்த விளக்கு வைக்கப்படுகிறது. விளக்கு உபயம்: சி.என்.அண்ணாதுரை’’

மறுநாள் தட்டி மாயம்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

chinnakkannan
6th April 2015, 12:26 AM
கலைவேந்தன்..,

//அடக்கமில்லாமே சபையிலே ஏறி
அளந்து கொட்டும் ஆண்களுக்கு வாயிலே பூட்டு...// இந்த வரிகளுக்காகப் பாடல் போட்டிருக்கிறீர்கள் என நினைக்கிறேன். நல்ல வரிகள்..பட் பகுத்தறிவு - என்றால் அந்தப் பக்குவ நிலை எனக்கு இன்னும் வரவில்லை எனத் தான் சொல்லவேண்டும்..என் வழி கொஞ்சம் வேறு (தவறாய் எழுதியிருப்பின் மன்னிக்க)

ஏங்காணும் :) ஆனந்த ஜோதின்னா நினைவுக்கு வர்றது பொய்யிலேபிறந்துபொய்யிலே வளர்ந்தபுலவர் பெருமானே பாட்டும்... நினைக்கத் தெரிந்த மனமே பாட்டும் தான் எனக்கு..எப்பவும் அரசியலா..போரடிக்காதோ.. :)

*

தவறு செய்தவர்களை தலை குனிய வைத்த அறிஞரைப் பற்றிய தகவலுக்கு நன்றி..

*

கொஞ்சம் நகைச்சுவைக்காகத் தான் திருமூலர் பாடல் தெளிவுரை எழுதி கடைசியில் இறையருளுக்கு ஞானம் வேண்டும் எனபது போல் சொல்லப் பார்த்தேன்..வேறு எதுவும் தாழ்த்திச் சொல்ல நினைக்கவில்லை..அப்படி தொனி வந்துவிட்டதா என்ன..மன்னிக்க

*+

chinnakkannan
6th April 2015, 12:44 AM
வடக்கத்திய நண்பர்களின் வீட்டிற்குச் சென்றால் அங்கு வயது குறைந்தவர்கள் எல்லாம் டபக்கென சிரந்தாழ்த்திக் கால் தொட்டுக் கும்பிடுவார்கள்..இதை பாவ் சூ என ஹிந்தியில் சொல்வார்கள் ( நான் சொல்வது தவறாகவும் இருக்கலாம் - இந்தி)

ஷக்தி விகடனைப் புரட்டிய போது இண்ட்ரஸ்டிங்க் ஆக ஒன்று..

இப்படிக் கால் தொட்டுக் கும்பிடுவதும் காலில் விழுந்து வணங்குவதும் அவசியமா சார்..அது மரியாதை நிமித்தமா பக்தியின் அடையாளமா.. ஒரு சிங்கம் இன்னொரு சிங்கத்தின் காலில் விழுவதில்லை.. யானை இன்னொரு யானையை நமஸ்கரிக்கறதில்லை.. நமக்கு மட்டும் ஏன் சார் இந்தப் பழக்கம்” எனக் கேட்டார் நண்பர்..

மற்ற ஜீவன்களை விட மனிதனுக்குப் பாதம் என்பது முக்கியமானது.. பரதன் கூட ஸ்ரீ ராமனுடைய பாதங்களா நினைச்சுத் தான் பாதுகைகளை வாங்கிக்கிட்டுப்போறான்..தெய்வங்களுக்கும் பாருங்க முகம் வேற வேறயா இருக்கும். கணபதிக்கு யானை முகம் முருகனுக்கு ஆறுமுகம் நரசிம்மத்துக்கு சிங்க முகம்.. இப்படி ஆனா பாதங்களைப் பொறுத்தவரை எல்லாருக்கும் ஒரே மாதிரி இரண்டு பாதங்கள் தான்.. அதை திருவடிகள் என்போம்..

திருமூலர் என்ன சொல்றார் (இங்கயுமா)

திருவடி ஞானஞ் சிவமாக்குவிக்கு
திருவடி ஞானஞ் சிவலோகஞ்சேர்க்குத்
திருவடி ஞானஞ்சிறைமல மீட்கு ந்
திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே..

அதாவது இறைவனது திருவடிகளைத் தொழும் உண்மை அறிவே தொழுபவர்களை இறைவனாக்குவிக்கும். மோட்ச உலகில் கொண்டு சேர்க்கும்
வாழ்க்கை எனும் அவஸ்தைகளில் சிக்குண்டு அடைபட்டுக் கிடக்கும் கட்டினை அவிழ்த்து மீட்கும்.. வளமான எண்வகை சித்திகளையும் மோட்சத்தையும் கொடுக்கும்”

நண்பர் கையெடுத்துக் கும்பிட்டார் என்று முடித்திருப்பார்..

( நன்றி ஷக்திவிகடன் வீயெஸ்வி)

பாதம்னு பாட்டு பார்த்தா ஒன்று கிடைத்தது..கமலம் பாத கமலம் ...வெகு அழகு. (இங்கு போட்டாச் போட்டச் இல்லையே..)

https://youtu.be/Y1Ea_8j3P3M

chinnakkannan
6th April 2015, 12:47 AM
பல பல ரகமாய் பூட்டு - வீடியோ கிடைக்கலை கலைவேந்தன்..கல் நாயக்,மதுண்ணா தருவாங்க..

Richardsof
6th April 2015, 06:37 AM
பல பல ரகமாய் பூட்டு - வீடியோ கிடைக்கலை கலைவேந்தன்..கல் நாயக்,மதுண்ணா தருவாங்க..

பல பல ரகமாய் பூட்டு - வீடியோ-pl watch from 1.35.00 onwards
https://youtu.be/lSopebH1n2A

kalnayak
6th April 2015, 11:15 AM
குட் மார்னிங் டு யூ ஆல்.

சி.க.,

நான் ஊருக்கும் போகலை, ஆபிசிற்கும் வரலை. வீட்டிலே மாட்டிக்கினேன். அங்கிங்கேன்னு லோக்கல்லயே மூணு நாளா ஒரே அலைச்சல். மையத்திற்கு வரமுடியலை. நீங்கள்லாம் சொல்றமாதிரி சந்திர கிரகணம் காரணமோ என்னவோ தெரியலை!!!

'உன்னிடம் மயங்குகிறேன்', 'மாசி மாசம் முகூர்த்த நேரம்', ' ஆகாய கங்கை இன்று மண்ணில் வந்தது' பாடல்கள் நினைவூட்டலுக்கு நன்றி. நல்ல பாடல்கள்.

இப்பிடி கோட்டு, சூட்டு போட்டு நடித்து பெரிய நடிகராக தொடர முடியாமல், தெலுங்கு திரையுலகில் நகைச்சுவை நடிகராக மாறிப் போனது சுதாகரின் திரை வாழ்வு.

'கண்ணெல்லாம் உன்வண்ணம்' கேட்டது போல் என் நினைவில் இல்லை. ஆனாலும் இப்போது கேட்க நன்றாகத்தான் இருக்கிறது.

உங்கள் தொடர்களைப் பற்றிய எனது கருத்துக்களை அடுத்து வரும் பதிவுகளில் எழுதுகிறேன்.

kalnayak
6th April 2015, 11:53 AM
கல்நாயக், சின்னக்கண்ணன்,

உங்கள் இருவருக்கும்தான் நன்றி சொல்ல வேண்டும். புரட்சித் தலைவரின் உரை பற்றி நேற்று குறிப்பிட்டிருந்தேன். அந்த ஒலிப்பதிவு ஒரு நண்பரிடம் இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. விரைவில் அது மக்கள் திலகம் திரியில் தரவேற்றப்படும் என்று நம்புகிறேன். உலகெங்கும் உள்ள தமிழர்கள் அந்த உரையை கேட்க முடியும். காணாமல் போன பொக்கிஷம் மறுபடியும் கிடைத்த மகிழ்ச்சி எனக்கு. இருவருக்கும் நன்றி.

அதேநேரம், நாம் எழுதுவது எல்லாம் கவனிக்கப்படுகிறது என்பதும், சின்னக்கண்ணன் சொன்னது போல மதுரகானம் திரியை பலர் மவுனப் பார்வையாளர்களாக படிக்கிறார்கள் என்பதும் தெரிகிறது. இங்கே வருவதே ஆறேழு பேர்தான் என்று நினைத்திருந்தேன். அந்த தைரியத்தில் உங்கள் இருவருடனும் கொஞ்சம் விளையாட்டுத்தனமாக பேசுவேன்.

இனி அப்படி பேசுவதற்கு தயக்கமாக இருக்கிறது. நேற்று கூட என் வயது 28 என்று குறிப்பிட்டிருந்தேன்.பலர் பார்க்கும் திரியில் உண்மையை சொல்லிவிடத்தான் வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்? பொய் சொல்கிறான் என்று நினைக்க மாட்டார்களா? எனவே, உண்மையை சொல்லி விடுகிறேன் என் வயது 18. (அடிக்க வராதீர்கள் கல்நாயக்)

புரட்சித் தலைவர் உரையை நான் மட்டுமின்றி அனைவரும் கேட்க காரணமாக இருக்கப்போகும் உங்கள் இருவருக்கும் மீண்டும் நெஞ்சார்ந்த நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

கலை வேந்தன்,

உங்கள் வயது 18 என்று நீங்கள் அறிவித்தததை பார்த்ததும் அதிர்ந்து போனேன், எப்போதுதான் நீங்கள் உண்மையான வயதை அறிவிப்பீர்கள் என்று. இன்னும் அதிகமானவர்கள் மதுரகானம் திரியில் வந்து எழுதி போய்க் கொண்டிருந்தால் உங்களுக்கு வயது 8 என்று அறிவிப்பீர்கள். கேட்டால் 8 வயது சிறுவன் (மன்னிக்கவும்) சிறுவர் என்றால் அனுமதி மறுப்பார்கள், மற்றவர்களும் கண்டு கொள்ள மாட்டார்கள் என்பதற்காக 18 வயது என்று பொய் சொன்னேன் என்பீர்கள். இருக்கட்டும் பரவாயில்லை. உங்களைப் பற்றிய பேருண்மையை சொல்வதற்கு முன் உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும்.

உங்கள் பெரிய தாத்தா, அதாவது உங்கள் தாத்தாவின் அப்பா (அவரது பெயரைத்தான் உங்களுக்கும் வைத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.) இதே கலைவேந்தன் ஐடி-இல் அவருடன் நீங்களும் பகிர்ந்து கொண்டு எழுதுகின்றீர்கள். அவர் தன் காலத்து தியாகராஜ பாகவதர், p.u. சின்னப்பா படங்களை பார்த்ததைப் பற்றியும், அந்த அனுபவங்களையும் எழுதுவதையும், அரசியல் நிகழ்வுகளோடு பழைய திரைப் பாடல்களை சம்பந்தப் படுத்தியும் எழுதி பார்த்திருப்பீர்கள்.அத்தோடு நிறுத்திக் கொண்டிருந்தால் பரவாயில்லை. ஆனால் இந்த காலத்திலும் பாட்டிகளோடு பப்-க்கு போவதைப் பற்றி எழுதுகிறாரே. அதையெல்லாம் நீங்கள் கொஞ்சம் கேட்கக் கூடாதா?

'அவரிடம் நான் ஏன் கேட்க வேண்டும்? நான் கேட்காமலேயே வேண்டுமளவிற்கு வாங்கித் தருகிறாரே!' என்று நீங்கள் ஒரு திரைப் பட காமடி செய்ய மாட்டீர்கள், இந்த வயதிலாவது உடல் நிலையை கருத்தில் கொள்ள அவர் முயற்சிக்க வேண்டும் என்று நம்பி ஆவன செய்யுமாறு கோருகிறேன். மிக வயதானவர் பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்.

சரி உங்களைப் பற்றிய பேருண்மைக்கு வருவோம். நீங்கள் எப்போதுதான் 'நான் இன்னும் பிறக்கவே இல்லை' என்ற பேருண்மையை ஃபோரத்தில் ஒப்புக் கொள்ளப் போகிறீர்கள்? நீங்கள் பிறப்பதற்கு முன்பாகவே இதை அறிவித்து விடுங்கள். உங்களுக்கு முன்னதாக இந்த உண்மையை நான் போட்டு உடைத்ததற்கு என்னை மன்னியுங்கள். நீங்கள் உங்கள் வயதை மாற்றி மாற்றி சொல்லிக் கொண்டிருப்பதாலும், உங்கள் பெரிய தாத்தாவின் பங்களிப்பாலும் எனக்கு வேறு வழியில்லை. சொல்லிவிட்டேன். அதுதான் தொலைக் காட்சி விளம்பரங்களில் பிறந்த உடன் குழந்தைகள் இன்டெர்நெட் தேடி ஒடுகின்றனவே!!! இதில் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் அதற்குள் நீங்கள் நன்றி சொல்கிறீர்களே என்பதுதான்.

kalnayak
6th April 2015, 12:18 PM
சி.க.,
கங்கை அமரனின் எழுதிய பாடல்கள் பற்றிய பதிவு அருமை. நான் கூட இவரைப்பற்றி இவ்வாறு யோசிப்பதுண்டு - இவரும் இளையராஜைவைப் போல ஏதேனும் ஒரு துறையில் இருந்திருந்தால் 'இளையராஜாவை விட பெயர் பெற்று விளங்கி இருப்பாரோ என்னவோ என்று. ஏனென்றால் அத்தனை துறைகளிலும் கால்வைத்து சிறப்பாக செய்து இருக்கிறார். ஆனாலும் ஒரு வருத்தமும் உண்டு - அவர் பாடல்களில் சிலவற்றில் என்ன சொல்ல வருகிறார் என்பதை அவ்வளவாக புரிய முடிவதில்லை. உதாரணம் - 'சிறுபொன்மணி அசையும்'. கேட்க கேட்க இனிமை, அதைப் பிரித்து பொருள் தேடக் கூடாது என்பது போல் உள்ளது. கேட்டால் அதுக்கெல்லாம் ஞானம் வேணும் என்பார். எதற்கு இந்த வம்பு. நீங்கள் அவர் இசையமைத்த பிரபல பாடல்களையும் சொல்லுங்கள்.

திருமந்திரப் பாடல் அழகு. எனக்குப் புதுசு. அப்பப்ப இப்பிடி ஒரு பிட்ட போடுங்க. நானும் தேறிக்கிறேன். மோகமுள் தேசிய விருது பெற்ற படம் இல்லையா, அதனால் எனக்கு பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. 'கமலம் பாத கமலம்' - நல்ல அழகான பாடல்தான்.

kalnayak
6th April 2015, 12:49 PM
சந்திரன் பாடல் 59: "சந்திரனை கூப்பிடுங்க தாலாட்டுப்பாட"
----------------------------------------------------------------------------------------

படத்தின் தலைப்புப் பாடல். ஏதோ ஒரு பெரியவர் தாலாட்டி கொண்டே சந்திரனை தாலாட்டுப் பாடவும், சூரியனை சமைத்துப் போடவும் கூப்பிடச் சொல்கிறார். என்ன ஒரு கிராமத்துச் சூழ்நிழையை பாடல் முழுதும் காட்டுகிறார்கள். பிரபுவும், குஷ்புவும் நடித்த படம் என்று சொல்கிறது தலைப்புகள். தேவாவின் இசை. எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியிருக்கிறார். வாலியின் பாடல். தப்பே செய்யமுடியாது பாருங்க, தலைப்பிலே இந்த விவரம் வருவதினால்.

காணொளி:

https://www.youtube.com/watch?v=-Rtf9RPDzKw

படத்தோட பேரையும் நான் சொல்லனுமாக்கும்.

chinnakkannan
6th April 2015, 01:02 PM
கல் நாயக் வாங்க வாங்க..வந்தவுடனே குழப்பிட்டீங்களே..

சிறுபொன் மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும் தான் சொல்லுதேன்.. கிராமத்துப் பொண்ணு அவ தன் மனசுக்குப் பிடிச்ச ஆளப் பார்க்கறா அவனோ உச்சாணிக்கொம்புல இருக்குற பட்டணத்து ஆளு..அவள பாத்தவுடனே மனசுல படபடத்து மணி அடிக்குது அதுல எழும்புற இசைல தன்னையும் அறியாம அவ கண்ணு படபடக்குது தாளம் தவறாம.. அப்படின்னு வச்சுக்கலாமா..

சரீ..விலாவாரியா அப்புறம் அனலைஸ் பண்றேன் :)

சந்திரன் பாட் ஈவ்னிங் கேட் சொல்லுதேன்..

Russellzlc
6th April 2015, 02:49 PM
கலை வேந்தன்,

உங்கள் வயது 18 என்று நீங்கள் அறிவித்தததை பார்த்ததும் அதிர்ந்து போனேன், எப்போதுதான் நீங்கள் உண்மையான வயதை அறிவிப்பீர்கள் என்று. இன்னும் அதிகமானவர்கள் மதுரகானம் திரியில் வந்து எழுதி போய்க் கொண்டிருந்தால் உங்களுக்கு வயது 8 என்று அறிவிப்பீர்கள். கேட்டால் 8 வயது சிறுவன் (மன்னிக்கவும்) சிறுவர் என்றால் அனுமதி மறுப்பார்கள், மற்றவர்களும் கண்டு கொள்ள மாட்டார்கள் என்பதற்காக 18 வயது என்று பொய் சொன்னேன் என்பீர்கள். இருக்கட்டும் பரவாயில்லை. உங்களைப் பற்றிய பேருண்மையை சொல்வதற்கு முன் உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும்.

உங்கள் பெரிய தாத்தா, அதாவது உங்கள் தாத்தாவின் அப்பா (அவரது பெயரைத்தான் உங்களுக்கும் வைத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.) இதே கலைவேந்தன் ஐடி-இல் அவருடன் நீங்களும் பகிர்ந்து கொண்டு எழுதுகின்றீர்கள். அவர் தன் காலத்து தியாகராஜ பாகவதர், p.u. சின்னப்பா படங்களை பார்த்ததைப் பற்றியும், அந்த அனுபவங்களையும் எழுதுவதையும், அரசியல் நிகழ்வுகளோடு பழைய திரைப் பாடல்களை சம்பந்தப் படுத்தியும் எழுதி பார்த்திருப்பீர்கள்.அத்தோடு நிறுத்திக் கொண்டிருந்தால் பரவாயில்லை. ஆனால் இந்த காலத்திலும் பாட்டிகளோடு பப்-க்கு போவதைப் பற்றி எழுதுகிறாரே. அதையெல்லாம் நீங்கள் கொஞ்சம் கேட்கக் கூடாதா?

'அவரிடம் நான் ஏன் கேட்க வேண்டும்? நான் கேட்காமலேயே வேண்டுமளவிற்கு வாங்கித் தருகிறாரே!' என்று நீங்கள் ஒரு திரைப் பட காமடி செய்ய மாட்டீர்கள், இந்த வயதிலாவது உடல் நிலையை கருத்தில் கொள்ள அவர் முயற்சிக்க வேண்டும் என்று நம்பி ஆவன செய்யுமாறு கோருகிறேன். மிக வயதானவர் பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்.

சரி உங்களைப் பற்றிய பேருண்மைக்கு வருவோம். நீங்கள் எப்போதுதான் 'நான் இன்னும் பிறக்கவே இல்லை' என்ற பேருண்மையை ஃபோரத்தில் ஒப்புக் கொள்ளப் போகிறீர்கள்? நீங்கள் பிறப்பதற்கு முன்பாகவே இதை அறிவித்து விடுங்கள். உங்களுக்கு முன்னதாக இந்த உண்மையை நான் போட்டு உடைத்ததற்கு என்னை மன்னியுங்கள். நீங்கள் உங்கள் வயதை மாற்றி மாற்றி சொல்லிக் கொண்டிருப்பதாலும், உங்கள் பெரிய தாத்தாவின் பங்களிப்பாலும் எனக்கு வேறு வழியில்லை. சொல்லிவிட்டேன். அதுதான் தொலைக் காட்சி விளம்பரங்களில் பிறந்த உடன் குழந்தைகள் இன்டெர்நெட் தேடி ஒடுகின்றனவே!!! இதில் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் அதற்குள் நீங்கள் நன்றி சொல்கிறீர்களே என்பதுதான்.

கல்நாயக்,

ரசித்து சிரித்தேன். அதிலும் குறிப்பாக,..............

உங்கள் பெரிய தாத்தா, அதாவது உங்கள் தாத்தாவின் அப்பா (அவரது பெயரைத்தான் உங்களுக்கும் வைத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.) இதே கலைவேந்தன் ஐடி-இல் அவருடன் நீங்களும் பகிர்ந்து கொண்டு எழுதுகின்றீர்கள். அவர் தன் காலத்து தியாகராஜ பாகவதர், p.u. சின்னப்பா படங்களை பார்த்ததைப் பற்றியும், அந்த அனுபவங்களையும் எழுதுவதையும், அரசியல் நிகழ்வுகளோடு பழைய திரைப் பாடல்களை சம்பந்தப் படுத்தியும் எழுதி பார்த்திருப்பீர்கள்.அத்தோடு நிறுத்திக் கொண்டிருந்தால் பரவாயில்லை. ஆனால் இந்த காலத்திலும் பாட்டிகளோடு பப்-க்கு போவதைப் பற்றி எழுதுகிறாரே. அதையெல்லாம் நீங்கள் கொஞ்சம் கேட்கக் கூடாதா?

................. என்ற வரிகள். கண்களில் நீர் கோர்க்க சிரித்தேன். நல்ல நகைச்சுவை உணர்வு, உங்களுக்கு பாராட்டுக்கள். அன்று கூட அவசரத்தில் சொல்ல மறந்து விட்டேன். ‘சந்திரோதயம் இதிலே’... பாடல் சங்கராபரணம் ராகம் என்று கூறியிருக்கிறீர்கள். நல்ல இசைஞானம் உள்ளவர் நீங்கள் என்று நினைக்கிறேன். அதுசரி... உங்கள் உண்மையான பெயர் என்ன? என்ற பேருண்மையை எப்போது சொல்லப் போகிறீர்கள்? அதை தெரிந்து கொள்ளும் பாக்கியம் எங்களுக்கு இல்லையா?

சின்னக்கண்ணன்,
பலப் பல ரகமாய் பூட்டு பாடலை பதிவிட தேடி முயற்சி எடுத்துக் கொண்டதற்கு நன்றி.

திரு.எஸ்.வி.சார்,
தரவேற்றலுக்கு நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

kalnayak
6th April 2015, 03:40 PM
அன்று கூட அவசரத்தில் சொல்ல மறந்து விட்டேன். ‘சந்திரோதயம் இதிலே’... பாடல் சங்கராபரணம் ராகம் என்று கூறியிருக்கிறீர்கள். நல்ல இசைஞானம் உள்ளவர் நீங்கள் என்று நினைக்கிறேன். அதுசரி... உங்கள் உண்மையான பெயர் என்ன? என்ற பேருண்மையை எப்போது சொல்லப் போகிறீர்கள்? அதை தெரிந்து கொள்ளும் பாக்கியம் எங்களுக்கு இல்லையா?


ஆஹா, எப்பிடி உங்களை நம்ப வச்சேன் பார்த்தீங்களா?
இதை வெளியில யாருகிட்டயும் சொல்லிடாதீங்க. அப்புறம்......
.
.
.
.
.
.
யாரும் எனக்கு சொல்லித் தரமாட்டாங்க......
.
.
.
.
.
.
.
நான் கர்நாடக சங்கீதத்துல ஒரு பெரிய ........
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
ஞானசூனியம்-னு தெரிஞ்சுட்டா.
அப்புறம் என்ன கேட்டீங்க. என்னோட உண்மையான பேரு என்னன்னுதாதானே. அத அப்புறமா இன்னொரு நாள் வச்சிக்கலாம். உங்க பேரு என்னன்னு உண்மை முடிவாக தெரிஞ்சதுக்கு அப்புறம்!!!

Russellzlc
6th April 2015, 04:20 PM
கல்நாயக்,

இப்போதுதான் என்னை நம்ப வைக்க பார்க்கிறீர்கள். நீங்கள் மறைத்துக் கொள்ள முயற்சித்தாலும் உங்கள் திறமை உங்களை அறியாமல் வெளிப்பட்டு விடுகிறது.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

kalnayak
6th April 2015, 04:35 PM
வடிவேலு பாணியில் சொல்லிக்கொள்கிறேன் "இன்னுமா இந்த ஊரு நம்மளை நம்பிக்கிட்டு இருக்கு?"

kalnayak
6th April 2015, 05:14 PM
சந்திரன் பாடல் எங்கேயோ படிச்சது:
எங்க வீட்டுப் பிள்ளை படத்திற்காக கவிஞர் வாலி " அவன் ஒரு நிலவு" என்று நாயகனை (மக்கள் திலகம்) குறிப்பிட்டு ஒரு பாடல் எழுதி இருந்தாராம். கவியரசர் அதைக் கேள்விப்பட்டு, வாலியை ஒரு முறை சந்தித்த போது "பெண்களைத்தானே நிலவு" என்று சொல்வார்கள். நீங்கள் ஆண் மகனை நிலவு என்று சொல்லி பாடல் எழுதி இருக்கிறீர்களே என்று கேட்டாராம். அதற்கு வாலி நீங்கள் கூடத்தான் 'குலமகள் ராதை' படத்தில் நாயகனை சந்திரன் என்று விளித்து பாடல் எழுதி இருக்கிறீர்கள் என்றாராம்.கண்ணதாசன் சிரித்து அதற்கு காரணம் அந்த திரைப் படத்தில் நாயகனின் பாத்திரப் பெயர்சந்திரன். அதனால் அப்படி எழுதினேன் என்றாராம். (சந்திரன் பாடல்கள் 51 மற்றும் 56). அதற்கு வாலி "இங்கே நாயகனின் பெயரே சந்திரன்தான்" என்று சொல்லவில்லையாம். வேறு என்ன சொன்னார் என்று தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.

அப்புறம் அந்த நிலவுப் பாடல் 'எங்க வீட்டுப் பிள்ளை'யில் இடம் பெறவில்லை. அந்த பாட்டு என்ன ஆனது என்றும் தெரியவில்லை.

kalnayak
6th April 2015, 05:57 PM
நிலாப் பாடல்களைப் பற்றி படிக்கும்போது, சூரிய மண்டலத்தில் உள்ள எல்லா கோள்களின் நிலவுகளைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோமே!!!

எல்லோருக்கும் தெரியும் சூரியனை மண்டலத்தில் புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய கோள்கள் சுற்றி வருகின்றன. முதல் இரண்டு கோள்களான புதனுக்கும், வெள்ளிக்கும் நிலாக்கள் இல்லை. பூமியை சுற்றிவரும் நிலாவைத்தான் நாம் பார்க்கிறோம். பாடல்களில் எல்லா கவிஞர்களும் பாடுவது இந்த நிலாவை வைத்துத்தான்.* இந்த நிலாவின் பெயர்தான் சந்திரன்(!!!) ஆங்கிலத்தில் Luna என்பார்கள்.

செவ்வாய் கிரகத்திற்கு 2 நிலாக்கள் உள்ளன. அவைகளின் பெயர்கள்: Deimos மற்றும் Phobos. செவ்வாயில் குடியேறுபவர்கள் இந்த இரண்டு நிலாக்களையும் கண்ணால் கண்டு கழிக்கலாம். ஒரு நிலாவை ஆணாகவும், மற்றொன்றை பெண்ணாகவும் கருதி கவி பாடலாம். எந்த பிரச்சினையும் வராது. வந்தால் அடுத்த கிரகங்களில் குடியேறலாம். காரணம்? தொடர்ந்து படியுங்கள்.

வியாழன் சூரிய மண்டலத்தின் பெரிய கிரகம். அதற்கு 67 நிலாக்கள் உள்ளன. அதன் பெயர்கள் எல்லாவற்றையும் இங்கே கொடுத்தால் நீங்கள் படிக்க மாட்டீர்கள். இருந்தாலும் சிலவற்றை சொல்கிறேன். அந்த பெயர்களை உங்களில் யாராவது கேள்விப் பட்டிருக்கலாம்: Ganymede, callisto, Io, Europa, Himalia, Elara, Metis, Hegomone, Arche, Kallichore மற்றும் S2003/J16 இருந்து S2010/J2 வரை.

சனி சூரிய மண்டலத்தின் இரண்டாவது பெரிய கிரகம். அதற்கு 62 நிலாக்கள் உள்ளன. அவைகளில் குறிப்பிடத்தக்கவைகள்: Titan, Rhea, Lapetus, Dione, Tethys, Enceladus, Mimas, Hiperion, Phoebe, Janus, Pandora, Helene, Albiorix, Atlas, Pan, Telesto, Calypso, YMir.

யுரேனஸ்க்கு 27 நிலாக்கள் உள்ளன. அவைகளில் சில: Titania, Oberon, Umbriel, Ariel, Miranda, Sicorax, Puck, Portia, Juliet, Caliban, Belinda, Cressida, Rosalind

நெப்டியூன் 14 நிலாக்களை கொண்டுள்ள கிரகம். Triton, Proteus, Nereid, Larissa, Galatea, Naiad, Neso போன்றவைகள் அவைகளில் சில.

பொய் கிரகமான ப்ளூட்டோவிற்கும் Hydra, Nyx, Charon, Kerboros, Styx என்று 5 நிலாக்கள் உள்ளன.

மனிதன் இந்த கிரகங்களில் குடியேறினால் நிலவுகளுக்கு பஞ்சமே இருக்காது. அதனால் எழுதும் கவிதைகளுக்கும் வெரைட்டி கிடைக்கும். உற்சாகமாக இருக்கும்.

மற்றும் சில பொய் கிரகங்களுக்கு 4 நிலாக்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. அதையும் சேர்த்தால் 182 நிலாக்கள் உள்ளன. அறிவியல் ஆய்வாளர்கள் இன்னும் பல நிலவுகளை கண்டு பிடித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். எல்லாவற்றையும் இங்கிருந்தே பார்க்கும்படி செய்திருந்தால் கவிஞர்களுக்கு நிலாப் பஞ்சமே வந்திருக்காது. பார்க்கலாம்.

Gopal.s
6th April 2015, 07:51 PM
சரிதான் கலை. அடாணாவில் ஒன்றிரண்டு பாபநாசன் சிவன் பாட்டுக்கள் நாற்பதுகளிலும் உண்டு.
54 இல் ரத்த கண்ணீரில் விஸ்வநாதன் -ராமமூர்த்தி இசைதான்.(பேர் மட்டும் c .s .ஜெயராமன் என விஸ்வநாதன் பேட்டியொன்றில் அறிந்தது

Russellzlc
6th April 2015, 08:22 PM
அப்படியா?... படத்தின் டைட்டிலில் ‘சிதம்பரம் ஜெயராமன்’ என்று போடுவார்கள். அதனால்தான் கூறினேன்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
6th April 2015, 08:24 PM
நிலாப் பாடல்களைப் பற்றி படிக்கும்போது, சூரிய மண்டலத்தில் உள்ள எல்லா கோள்களின் நிலவுகளைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோமே!!!

எல்லோருக்கும் தெரியும் சூரியனை மண்டலத்தில் புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய கோள்கள் சுற்றி வருகின்றன. முதல் இரண்டு கோள்களான புதனுக்கும், வெள்ளிக்கும் நிலாக்கள் இல்லை. பூமியை சுற்றிவரும் நிலாவைத்தான் நாம் பார்க்கிறோம். பாடல்களில் எல்லா கவிஞர்களும் பாடுவது இந்த நிலாவை வைத்துத்தான்.* இந்த நிலாவின் பெயர்தான் சந்திரன்(!!!) ஆங்கிலத்தில் Luna என்பார்கள்.

செவ்வாய் கிரகத்திற்கு 2 நிலாக்கள் உள்ளன. அவைகளின் பெயர்கள்: Deimos மற்றும் Phobos. செவ்வாயில் குடியேறுபவர்கள் இந்த இரண்டு நிலாக்களையும் கண்ணால் கண்டு கழிக்கலாம். ஒரு நிலாவை ஆணாகவும், மற்றொன்றை பெண்ணாகவும் கருதி கவி பாடலாம். எந்த பிரச்சினையும் வராது. வந்தால் அடுத்த கிரகங்களில் குடியேறலாம். காரணம்? தொடர்ந்து படியுங்கள்.

வியாழன் சூரிய மண்டலத்தின் பெரிய கிரகம். அதற்கு 67 நிலாக்கள் உள்ளன. அதன் பெயர்கள் எல்லாவற்றையும் இங்கே கொடுத்தால் நீங்கள் படிக்க மாட்டீர்கள். இருந்தாலும் சிலவற்றை சொல்கிறேன். அந்த பெயர்களை உங்களில் யாராவது கேள்விப் பட்டிருக்கலாம்: Ganymede, callisto, Io, Europa, Himalia, Elara, Metis, Hegomone, Arche, Kallichore மற்றும் S2003/J16 இருந்து S2010/J2 வரை.

சனி சூரிய மண்டலத்தின் இரண்டாவது பெரிய கிரகம். அதற்கு 62 நிலாக்கள் உள்ளன. அவைகளில் குறிப்பிடத்தக்கவைகள்: Titan, Rhea, Lapetus, Dione, Tethys, Enceladus, Mimas, Hiperion, Phoebe, Janus, Pandora, Helene, Albiorix, Atlas, Pan, Telesto, Calypso, YMir.

யுரேனஸ்க்கு 27 நிலாக்கள் உள்ளன. அவைகளில் சில: Titania, Oberon, Umbriel, Ariel, Miranda, Sicorax, Puck, Portia, Juliet, Caliban, Belinda, Cressida, Rosalind

நெப்டியூன் 14 நிலாக்களை கொண்டுள்ள கிரகம். Triton, Proteus, Nereid, Larissa, Galatea, Naiad, Neso போன்றவைகள் அவைகளில் சில.

பொய் கிரகமான ப்ளூட்டோவிற்கும் Hydra, Nyx, Charon, Kerboros, Styx என்று 5 நிலாக்கள் உள்ளன.

மனிதன் இந்த கிரகங்களில் குடியேறினால் நிலவுகளுக்கு பஞ்சமே இருக்காது. அதனால் எழுதும் கவிதைகளுக்கும் வெரைட்டி கிடைக்கும். உற்சாகமாக இருக்கும்.

மற்றும் சில பொய் கிரகங்களுக்கு 4 நிலாக்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. அதையும் சேர்த்தால் 182 நிலாக்கள் உள்ளன. அறிவியல் ஆய்வாளர்கள் இன்னும் பல நிலவுகளை கண்டு பிடித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். எல்லாவற்றையும் இங்கிருந்தே பார்க்கும்படி செய்திருந்தால் கவிஞர்களுக்கு நிலாப் பஞ்சமே வந்திருக்காது. பார்க்கலாம்.

கல்நாயக்,

நீங்கள் மறைக்க முயற்சித்தாலும் உங்களை அறியாமல் திறமை வெளிப்பட்டு விடுகிறது என்று கூறினேன். நான் கூறியதை நிரூபித்ததற்கு நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Gopal.s
6th April 2015, 08:36 PM
விஸ்வநாதன் தொடருக்கு ,ஒரு விஸ்வநாதன் ரசிகர் என்ற வகையில் கலை வேந்தன், கார்த்திக் இவர்களின் அபிப்ராயம் எதிர்கொண்டுள்ளேன். முரளி,வாசு ,சி.க ,கல்நாயக் ஏற்கெனெவே சொல்லியாயிற்று.

உங்கள் புரிதல், எழுத பட்ட முறை ஆகியவற்றை பற்றி சொன்னால் தொடர்வேன். எனக்கு சண்டைகளை விட,இது போல எழுத்துக்களே மனநிறைவை அளிக்கின்றன.ராகவேந்தர் சொல்ல மாட்டார்.(அவர்தான் ரவிகிரன் ரசிகராகி like போட்டு கொண்டுள்ளார். குலைப்பதைஎல்லாம் அவர் கண்டு கொள்வாரா என்ன)

Russellzlc
6th April 2015, 09:13 PM
எனக்கு சண்டைகளை விட,இது போல எழுத்துக்களே மனநிறைவை அளிக்கின்றன.

ஆஹா.... இதைத்தான் கோபால் உங்களிடம் எதிர்பார்க்கிறேன். உண்மையை சொல்கிறேன். இதை மட்டுமே நீங்கள் செய்து கொண்டிருந்தால் உங்களை அசைக்க முடியாது. கருத்துக்கள் ஒருவருக்கொருவர் வேறுபடத்தான் செய்யும். கோபம் வரும்போது உடனுக்குடன் பதில் சொல்வதை தவிர்த்து, நேரம் எடுத்துக் கொண்டு மறுநாள் சொல்லுங்கள். அப்போது, உங்கள் நகைச்சுவையே உங்களுக்கு கைகொடுக்கும். திரு.ரவி சார் கூறியபடி, ரசனை மற்றும் கருத்துக்களின் வேறுபாட்டுக்காக நாம் பிரிந்து நிற்காமல் கைகோர்த்து செயல்பட்டால் எவ்வளவோ உன்னதங்களை படைக்க முடியும். நீங்கள் கூறியிருப்பது போல, மனநிறைவை அளிக்கும் எழுத்துக்களை மட்டும் நீங்கள் எழுதினால், பாராட்டுக்கள் குவியும். உங்கள் உழைப்புக்கும் திறமைக்கும் கிடைக்கும் நியாயமான அங்கீகாரத்தை பார்த்து எல்லாரும் மகிழ்வோம்.

மெல்லிசை மன்னரின் இசையில் நான் கவனிக்காத, (கவனிக்க தெரியாத) புதிய பரிமாணங்களை கொடுத்துள்ளீர்கள். இந்த அளவு அவரது இசையை நுணுகி ஆராய்ந்து எழுத எவ்வளவு திறமை வேண்டும்? டூயட்டை முகாரி ராகத்தில் போடுவது என்பது எவ்வளவு வித்தியாசமான சிந்தனை? அதை கவனித்து சொல்ல எவ்வளவு ரசனை வேண்டும்? அற்புதம். தொடருங்கள். உங்களுக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் மன நிறைவைத் தாருங்கள்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

chinnakkannan
6th April 2015, 09:31 PM
அஹோ வாரும் கல் நாயக்
ம்ம் இவ்ளோ நிலாக்களா இருக்கு.. எனக்குத் தெரியாதே.. ஆமாம் மத்த கிரகங்கள்ள இருக்கிற நிலாக்கள் எல்லாம் ஒட்டுக்க வருமா அதாவது ராத்திரி ஒண்ணா வருமா..(அப்படி வந்தா அது ஸ்டார்ஸ் மாதிரின்னா இருக்குமில்லியா)

அப்புறம் நிலாவ நிலவுன்னு சொல்றது தப்பாக்கும் (என்னோட குருநாதர்கள் சொல்லியிருக்காங்க) புரியலை.. நிலா வை மதி, சந்திரன்னு சொல்றது தான் கரெக்ட்டாம்.. நிலவு ந்னா அந்த மதியிலிருந்து வெளிப்படுகிற கிரணங்கள்..என அர்த்தமாம்..

அப்புறமேல்ட்டு எனக்கு கல்லூரியில் அஸ்ட்ரானமி ஆன்சிலரியா இருந்தது.. ம்ம் நிலா கிரகம்னு சொல்லாம அதுல ஏதோகணக்கெல்லாம் போட்டுப் பார்த்த நினைவு..

ம்ம் தேடிவந்த திங்கள் திங்களில் செவ்வாய் செவ்வாயில் வெள்ளி சேர்த்தெடுத்தேன் அள்ளி..சேர்த்தணைத்தேன் கையில் அள்ளின்னு பாட் நினைவுக்கு வருது..

நன்றிங்க்ணா.. நல்ல இன்ஃபர்மேட்டிவ் போஸ்ட் கொடுத்ததுக்கு..ஒங்களுக்காக ஒரு நிலாப் பாடல்! :)

https://youtu.be/g4MT_1uzAy4

chinnakkannan
6th April 2015, 09:43 PM
எங்கே எங்கே சந்திரபாபு...


https://youtu.be/L0PIhl4LVrk

கண்ணிலே கண்டதும் கனவாய்த் தோணுது
காதிலே கேட்டதும் கதைபோல் ஆனது..:)


//தொடருங்கள். உங்களுக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் மன நிறைவைத் தாருங்கள்// ம்ம்ம்ம்...எல்லாம் அந்த ஈஸ்வரனின் மகிமை..:)


https://youtu.be/toatfXXJmZk

rajeshkrv
6th April 2015, 09:45 PM
கோபால்,
மேலொட்ட படித்த வரையில் உங்கள் எம்.எஸ்.வி ஆய்வு அருமை அற்புதம்.
இன்னும் அதை ஆழ்ந்து படித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறேன் விரைவில்..

கல் நாயக் நிலா பாடலக்ளின் அணிவகுப்பு அற்புதம். உங்கள் பட்டியலில் இடம்பெறாத பாடல்களை தர முயற்ச்சிக்கிறேன்

சி.க உங்கள் நகைச்சுவை கலந்த எழுத்துக்கு மன்றத்தில் எல்லோரும் அடிமை என்று சொல்வதில் எவ்வளவு பெருமை

rajeshkrv
6th April 2015, 09:53 PM
தெலுங்கு வெலுகு நீடலு தமிழில் தூய உள்ளம்

இதோ நிலவுப்பாடல் (சந்திரிகா என்றால் நிலவு என்று பொருள்)

https://www.youtube.com/watch?v=RLwMuVDcOMg

kalnayak
7th April 2015, 09:40 AM
நன்றி ராஜேஷ் தூய உள்ளம் பாடலுக்கு. இந்த பாடலை கேட்டிருக்கிறேன். படத்தின் பெயர் தெரிந்ததில்லை. தெரிந்து கொண்டேன். இது போன்ற வித்தியாசமான நிலாப் பாடல்களை தாருங்கள். சிறப்பாகவே இருக்கிறது.

kalnayak
7th April 2015, 09:49 AM
சி.க.,
நிலாவா நிலான்னு சொல்றது தப்பு (?) சரி நிப்பாட்டிக்கறேன். ஆனா நிலாப் பாட்டு வருவதை எப்படி சொல்றது? இதுக்கு மட்டும் விதிவிலக்கு கொடுக்கலாமா? வேற வழியில்லை. உதாரணத்துக்கு நீங்க அன்பே ஆருயிரே நிலாப் பாட்டு கொடுத்திருக்கீங்க. அதை மதி பாட்டு, சந்திரன் பாட்டுன்னு சொல்ல முடியாதே!!! காலங்கார்த்தாலே உங்களை குழப்பி விட்டுட்டேனா? வந்த காரியம் முடிஞ்சது.

போறதுக்கு முன்னால், சந்திரபாபு பாட்டும், கண்ணெதிரே தோன்றினால் பாட்டும் நன்று. சந்திரபாபு பாட்டில் சற்று சோகம் இழையாடுகிறதே. அவரது பாட்டு என்றாலே உற்சாகம் விளையாட வேண்டுமே. எனிவே இரண்டும் பிரபலமான பாடல்கள்தான்.*

kalnayak
7th April 2015, 02:14 PM
திங்கள் பாடல் 60: "தென்றல் தான் திங்கள் தான்"
-----------------------------------------------------------------------

வசந்த் இயக்கத்தில் வந்த படம். அஞ்சுவும், ரமேஷ் அரவிந்தும் ஆடுகிறார்கள், ராஜாவின் இசைக்கு. K.J.யேசுதாஸும், சித்ராவும் பாடுகிறார்கள் கவிஞர் வாலி/மு.மேத்தா பாடலை. (சி.க., உங்களுடைய மு.மேத்தா வரிசையில் இந்த பாடல் இல்லை. நீங்கள் அல்லது ராஜேஷ் வந்து யார் என்று உறுதி செய்ய வேண்டும்). இதில் கவிஞர் தென்றலும் திங்களும் தினமும் சிந்துது என்கிறார்கள். அதுக்கு மேல் அவைகளைப் பற்றி சொல்லவில்லை. நல்ல இனிமையான பாடல்தான்.

பாடல் வரிகள்:
-----------------------
தென்றல் தான் திங்கள் தான் நாளும் சிந்தும்
உன்னில் தான் என்னில் தான் காதல் சந்தம்
ஆடும் காற்று நெஞ்சில் தாளம் போட
ஆசை ஊற்று காதில் கானம் பாட
நெஞ்சோடு தான் வா வா வா கூட

காவேரி ஆற்றின் மீனிங்கே காதோடு மோதும் ஆனந்தம்
தீராத காதல் தேனிங்கே பாட்டோடு பாட்டாய் ஆரம்பம்
பாராமலே போராடினேன் தாளாத மோகம் ஏற
தூங்காமலே நான் வாடினேன் சேராத தோள் தான் சேர
தாவிடும் என் நெஞ்சத்தின் சந்தங்கள் பாடிடும் உன்னை
தேடிடும் உன் நெஞ்சத்தின் மஞ்சத்தில் பாய்ந்திடும் என் எண்ணங்கள்
நித்தம் நீ தித்தித்தாய் பக்கம் தான் வா வா வா கூட (தென்றல் தான் திங்கள்...)

பூ மீது மோதும் தென்றல் தான் பூமேனி சேர்ந்தால் தாங்காது
பூவாடை மூடும் ஜாலத்தால் பூபாளம் தானாய் தோன்றாது
நூலாடையின் மேலாடவும் தேகம் தான் தீயாய் மாறும்
தேனோடையில் நீராடவும் மோகந்தான் மேலும் ஏறும்
தேடிடும் என் ராஜாவின் ரோஜாப்பூ சேர்ந்திடும் உன்னை
கேளடி என் ராஜாங்கம் நீதானே சேரடி என் மன்றத்தில்
நித்தம் நீ தித்தித்தாய் பக்கம் தான் வா வா வா கூட (தென்றல் தான் திங்கள்...)

காணொளி:
-----------------
https://www.youtube.com/watch?v=02lwKN158Uo

பாட்டை கேட்டதும் கேளடி கண்மணியே என்று சொல்லத் தோன்றுமே!!!

குறிப்பு: திங்கள் பாடல் எழுதுவதால் யாரும் அஞ்சவேண்டாம். நான் மார்கழித் திங்கள், சித்திரைத் திங்கள் போன்ற திங்கள்களை எழுத மாட்டேன்.

kalnayak
7th April 2015, 03:20 PM
திங்கள் பாடல் 61: "அற்றைத் திங்கள் வானிடம்"
----------------------------------------------------------------------

விஷால், மம்தா நடிப்பில் வித்யாசாகர் இசையில், மதுபாலக்கிருஷ்ணன் மற்றும் சுஜாதா பாட (யார் எழுதிய பாடலோ தெரியவில்லை) வந்த பாடல். வானத்திலே கீதுப்பா நிலா அப்படின்னு சொல்லிகீது. சாரிங்கோ, இதுக்கெல்லாம் காணொளி மட்டும் போதுமுங்க!!!

https://www.youtube.com/watch?v=bv5nXXBFzKM

சிவப்பதிகாரம்-னு சொல்லாமலே தெரியுமே!!!

rajeshkrv
7th April 2015, 06:01 PM
thendral than thingal than - lyrics piraisoodan

chinnakkannan
7th April 2015, 06:12 PM
//நிலாவா நிலான்னு சொல்றது தப்பு (?)// நிலான்னு சொல்லலாம் நிலவு என்றால் தான் கிரணம் என்று அர்த்தமாம். பிறைசூடனும் வருவார் என் வரிசையில்..

அற்றைத் திங்கள் வானிடம் - எழுதிய கவிஞர் யுகபாரதி.. நல்ல பாட்டு.. அதே படத்தில் இன்னொரு பாடலும் வரும்..

சித்திரையில் என்ன வரும்
வெயில் சிந்துவதால்
வெக்க வரும்

நித்திரையில் என்ன வரும்
கெட்ட சொப்பனங்கள்
முட்ட வரும்

கண்ணான கண்ணுக்குள்ளே
காதல் வந்தால்
உண்மையில் என்ன வரும்

தேசங்கள் அத்தனையும்
வென்று விட்ட
தித்திப்பு நெஞ்சில் வரும்

இதுவும் வெகு அழகான பாடல்.. திடுமென சீரியஸ் படத்தில் (சிவப்பதிகாரம்) இந்த இரண்டு பாடல்களுமே அருமை..இதுவும் யுக பாரதி தான்.. அதுவும் விஷால் மம்தாமோகன் தாஸ் ( கான்ஸர் அவரைத் தாக்குவதற்கு முன் எடுத்த படம் என நினைக்கிறேன்) ஜோடி வெகு அழகு..

மா விளக்கு போல நீ
மனசயும் கொளுத்துற
நாவிடுக்கு ஓரமா
நாணத்த பதுக்குற

யாரும் இறச்சிடாத
ஒரு ஊத்து போல தேங்கி
ஆகி போச்சு வாரம்
இவ கண்ணு முழி தூங்கி // செம அழகிய வரிகள்..


https://youtu.be/UrvBQz-hPRc


தென்றல் தான் திங்கள் தானுக்கும், அற்றை த் திங்கள் வானிடமுக்கும் நன்றிங்க கல் நாயக்..

chinnakkannan
7th April 2015, 10:23 PM
பாடினார் கவிஞர் பாடினார் – 8

**

சிலோனில் ஒரு டீக்கடை..

அந்த டீக்கடையினுள்ளே ஒரு ரேடியோ.. ஆக சிலோன் ரேடியோ.. அதற்குள் ரேடியோ சிலோன்…!

ஒரு சாய் போடுங்க..

வந்த் இளைஞனுக்கு இருபத்திரண்டு வயதிருக்கலாம். கொஞ்சம் முரடான முகம் கலைந்த தலை.. கொஞ்சம் சற்றே சிவந்த கண்கள்..அழுக்கான உடை..

.மத்தியானம் நான்கு மணி ஆனதினால் இசைக்களஞ்சியம்..

துள்ளித் துள்ளி சலசலத்து ஓடும் இசை....படிக்காத மேதையில் வரும் சீவிமுடிச்சு சிங்காரிச்சு பாட்டிற்கு முன் வரும் மியூசிக்.. முடிந்து இசைக்களஞ்சியம்..

தொபக்கென வடிகட்டியில் ஊறியிருந்த தேனீருடன் தள தள தள தள என -இளம்பெண்ணைப் பார்க்கும் இளந்தாரி மனசைப் போல- கொதித்துக் கொண்டிருந்த பாலைக் கொஞ்சூண்டு நாசுக்காய் ஒருகிளாஸில் விட்டு இன்னொரு கிளாஸை எடுத்து சர் சர்ரென நுரை பொங்க ஆற்றி பெஞ்சில் உட்கார்ந்திருந்த இளைஞனிடம் கடைக்காரர் கொடுக்கவும் இசைக்களஞ்சியத்தில் முதல்பாடல் இது இன்ன படத்தில் எழுதியவர்…எனச் சொல்லி அறிவிப்பாளர் கே.எஸ்.ராஜா பாட்டை ப் போட…

சூடு சூடாய் நல்லமரக்கலரில் நுரைபொங்க இருந்த டீயை ஒரு முறை சிப்பிய இளைஞன் நிறுத்திவிட்டான்.. பின் முழுப்பாடலையும் கேட்டான்..

டீ கிளாஸ் கையிலேந்திய படியே… குடிக்காமல்.. பாடல் கேட்கக் கேட்க கண்கள் கலங்கின.. பொசுக்கெனப் பொங்கிடும் வெள்ளம் போலக் கண்களில் நீர்.. சொய்ங்க் என வழுக்கிக் கன்னத்தில் வீழ, “ஏன் கரையறீயள்” எனக் கேட்டார் திகைத்துப் போன கடைக்காரர்..

உஷ்.. என்றான் இளைஞன்..பாடலை முழுக்கக் கேட்டுவிட்டு, “இந்தப் பாட்டு எழுதினதுயாரு..”

“இவர்..ப்பா.. என்ன விஷயம்..ஏன் அழறே”

“எனக்கு என்னோட அம்மா நினைவுக்கு வந்துடுச்சு..பாவி நான்.. போகாதேன்னு சொல்லிச்சு.. இந்தவூர்லயே இருன்னு சொல்லிச்சு..எனக்கு கண்டி ஊரு.. அதவுட்டுட்டு..அவளயும் விட்டுட்டு இந்தக் குன்னாகத்துக்கு வந்துட்டேன்.. அது அப்பா இல்லாம எவ்ளோ கஷ்டப் பட்டிருக்கும் என்ன வளக்க…ஆளாக்க.... பாவி நான் பாவி..”

“இதுவே பழையபாட்டாச்சுதே..இப்பத்தான்கேக்குறியள்”

“ஓமம்..ம்ம் நான் ஒடனேபஸ்ஸ்டான் போய் ஊருக்குப் போறன்” சொன்ன இளைஞன் டீக்காசுகொடுத்துவிட்டு நடந்தான் டீயைக் குடிக்காமலேயே..

அந்தப் பாடலைப் பற்றிச் சொல்லுமுன்…

**
”அஸ்ஸலாமு அலைக்கும்..

அலைக்கும் அஸ்ஸலாம்..”

“செளக்கியமா பாய்..”

“செளக்கியம்..சொல்லுங்கள்..”

“ராமாயணக் கதையை முழுக்கப்படம் எடுக்கறோம்..உங்களுக்குத் தெரிஞ்சுருக்கும்..”

“ஆமாம்..”

“அதுல ராவணன் அரசவைல்ல பாடற மாதிரி பாட்டு வருது”

“சரி”

”அதுக்கு ஒங்க தோஸ்த் மருத காசி கிட்ட பாட்டுக் கேட்டோம்”

“சரி” மெல்லப் புருவம் உயர்ந்தது

“அவர் சொன்னார்..அவரும் எழுதுவாராம்.. நீங்களும் எழுதணுமாம்..ரெண்டு பேருக்கும் வேறவேற மெட்டு..ரெண்டுல மிகச் சிறந்ததா இருக்கறத படத்துல உபயோகப் படுத்திக்கலாம்னு சொன்னார்.. பாய்..கோச்சுக்கப் படாது.. அவருக்கு என்ன பேமண்ட் தர்றோமோ அதையே உங்களுக்கும் தந்திடறோம்..ஆனா படத்துல வரலைன்னா கோபிச்சுக்கவும் கூடாது”

“இது என்ன..பிரம்மாண்டமா படம் எடுக்கறீங்க..அதுவும் உங்க இதிகாசத்த..சிறந்ததில் சிறந்தது வரணும்னு ஆசைப்படறதுல தப்பில்லையே.. ஸ்டூடியோக்கு நான் வரணுமா.. கொஞ்சம் உடல் நிலை சரியில்லையே..எப்போ வரணும்..”

“அந்த சிரமம் உங்களுக்கு வேண்டாம்..இதோ டேப்ரெகார்டர் கொண்டு வந்துருக்கோம்.. அதுல மெட்டு பதிஞ்சுக்கிட்டு வந்துருக்கோம்.. ஐயா கேட்டு எழுதித் தந்தீங்கன்னா ஸ்டூடியோ போய் ரிகார்ட் பண்ணிடுவோம்..”

“சரி..வந்தது வந்தீங்க.. நம்ம வீட்டு வெஜிடபிள் பிரியாணியைச் சாப்பிட்டுப்பாருங்க..”

“வெஜிடபிள் பிரியாணியா” வந்திருந்தவர்கள் புருவம் உயர்த்த கவிஞர் புன்சிரித்தார்.. “ ஆமாம் நான் வெஜிடேரியன் தான்.. நான்வெஜிடேரியனில்லை..”

வந்த பிரியாணிக்கும் கவிஞரின் மனம் போலே சுவை..

பின்னர் கவிஞர் எழுதிக் கொடுத்த பாடல் என்னாயிற்று..

அதைப் பார்க்குமுன் கவிஞர் யாரெனத் தெரிந்து கொள்ளலாம்..கவி கா.மு.ஷெரிஃப்..

தன்னைப் பற்றிஅந்த மகா கவிஞர் என்ன சொல்கிறார்..

சிந்தனை என்ற கலப்பை கொண்டு
...செய்ய தமிழாம் நிலமதனை
வந்தனை செய்தே உழுதுழுது
...வார்த்தை களென்ற எருவுமிட்டு
நிந்தனை யற்ற எதுகை மோனை
...நீண்ட வரப்பும் எடுத்துக் கட்டி
அந்தம் மிகுந்த கவிதைப்பயிர்
...ஆக்கும் ஏழைப் பாட்டாளி நான்.

மிகப் பழகுதற்கு எளியவர் கவி கா.மு ஷெரிஃப். கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாளர், பதிப்பக உரிமையாளர், அரசியல்வாதி, ஆன்மிகவாதி எனப் பன்முகத் தன்மை கொண்டவர். (1914-1994) முதலில் பாட்டெழுதிய படம் பொன்முடி. பின் மந்திரி குமாரியில் வாராய் நீ வாராய் போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய்.. மேலும் பாடல்கள் பார்க்குமுன்..

*

ராமாயணப் படத்திற்காக மெட்டுக்குப் பாட்டெழுதிக் கொடுத்தார் கவி.கா.மு.ஷெரீஃப்.. ஆனால் சம்பூர்ண ராமாயணத்தில் அது இடம்பெறவில்லை.. மருதகாசி ராவணனுக்காக எழுதிய வீணைக் கொடியுடைய வேந்தனே இடம் பெற்றது..கவிஞர் கோபமெல்லாம் கொள்ளவில்லை..எனக்குக் கிடைத்தால் என்ன என் நண்பன் பெற்றாலென்ன என்ற உயர் பண்பு.

பல வருடங்கள் கழிந்தன.. ஒரு தயாரிப்பாளர் கவி.கா.மு ஷெரீஃபிடம் வந்தார்..

“சொல்லுங்க”

“சிவனோட விளையாடல்கள் பற்றிப் படமெடுக்கிறோம்”

“சரி”

“எல்லாப் பாடல்களும் கண்ணதாசன் எழுதிட்டார்.. ஒரே ஒரு பாட்டு பாக்கி..”

“ம்ம்..அதுக்கு நான் எழுதணுமா”

“இல்லை நீங்க ஏற்கெனவே எழுதிட்டீங்க”

“ நானா..” வியந்தார் கவிஞர்..
“ஆமாம்..சம்பூர்ண ராமயணத்திற்காக ராவணன்பாடற மாதிரி இருக்கற பாட்டு..இங்கே எங்க படத்துல சிவன் பாடற மாதிரி இருந்தா நல்லா இருக்கும் ”

:”சிவனடியான் பாடற பாட்ட சிவன் பாடறாரா..யா.அல்லாஹ்.. சரி”

"உங்களோட பாடலோட ஆரம்ப வரிகளை மட்டும் வச்சுக்கலாம்னு இருக்கோம்..மிச்சத்தைக் கண்ணதாசன் எழுதித் தரேன்னு சொல்லியிருக்கார்.ஆனா உங்க அனுமதி பெற்ற பிறகுதான் எழுதுவேன்னு சொல்லியிருக்கார்....”

“சரி”

வந்தவர் மகிழ்ந்தார்..”இன்னும் ஒன்று..”

“சொல்லுங்க”

“:இது சொல்லக் கஷ்டமா இருக்கு.. எல்லாப்பாட்டும் கண்ணதாசன் எழுதியிருக்கார்..இந்த ஒருபாட்டுக்கு ஒங்க பேர ப்போடறதுக்குப் பதிலா கண்ணதாசன் பேரையே போட்டுடலாம்னு எனக்கு ஒரு சின்ன எண்ணம்..”

“சின்ன எண்ணம் ம்ம்”

“நான் கண்ணதாசன் கிட்ட கேட்டுட்டேன்.. ஷெரீஃப் அண்ணனுக்குச் சரின்னா எனக்கும் சரின்னுட்டார்.. நீங்க தான் சொல்லணும்..”

“அதுக்கென்ன சரி.. என்னது இது..”

அழகாய் எவர்சில்வர் தட்டினில் பணக்கட்டுகள் கூடவே வெற்றிலை பாக்கு பழம்..

இந்தப் பாட்டுக்கான சன்மானம்..

“என்னங்க நீங்க..” கவிஞர் சிரித்தார்.. ஒரே பாட்டுக்குல்லாம் ரெண்டு தடவை சன்மானமா.. ம்ஹூம் வேண்டாம்..அதுவும் சிலவரிகளுக்கா..ம்ஹூஹூம்..”

ரெண்டு தடவையா..

ஆமா.. மொததடவையே வாங்கிட்டேனே அந்தத் தயாரிப்பாளர் கிட்ட.. ஸோ.. நீங்க பாட்டின் வரிகளை உபயோகப் படுத்திக்குங்க படத்துல..அப்புறம் கண்ணதாசன் தம்பி பேரையே போட்டுக்கிடுங்க..பணம் நீங்களே வச்சுக்குங்க..

வந்தவர்கள் அதிர்ந்து பின் ஏதும் பேசாமல் வெளியேறினர்.

அந்தப் பாடல் திருவிளையாடல் படத்தில் இடம்பெற்ற”பாட்டும் நானே பாவமும் நானே”

//எந்த அளவுக்கு இந்தச் சம்பவம் உண்மை எனத் தெரியாது.. வலையிலும், நண்பர்களிடமும் கேட்டு அவர்கள் உண்மை என்று சொன்னதினால் எழுதியிருக்கிறேன்.. முழுப் பாடலையும் அவர் தான் எழுதினார் என்று சொல்கிறார்கள்..யோசித்துப்பார்த்தால் கண்ணதாசனின் வரிகளும் கலந்திருப்பதாக எனக்குப் படுகிறது...// அப்புறம் எழுதிய சம்பவங்களின் வர்ணனை எல்லாம் என் கற்பனை//

இதே சம்பவத்தை வைத்து சமீபத்தில் குமுதம் இதழில் சிறுகதை ஒன்றைச் சிறப்பாக எழுதியிருந்தார் கவிஞர் வைரமுத்து.. மார்க்கம் என்ற தலைப்பில்.. அதில் வரும் பாடலாசிரியரின் பெயர் கவி.அப்துல்லா..

*
டீக்கடையில் டீ அருந்திய இளைஞனின் மனதைத் திருந்த வைத்த பாடல் அன்னையின் ஆணை படத்தில் வரும்

பத்துமாதம் சுமந்திருந்து பெற்றாள்
பகலிரவாய் விழித்திருந்து வளர்த்தாள்
வித்தகனாய் கல்விபெற வைத்தாள்
மேதினியில் நாம் வாழச் செய்தாள்!

அன்னையைப் போலொரு தெய்வமில்லை - அவள்
அடிதொழ மறப்பவர் மனிதரில்லை, மண்ணில் மனிதரில்லை
துன்பமும் தொல்லையும் ஏற்றுக்கொண்டே நம்மை
சுகம்பெற வைத்திடும் கருணை வெள்ளம்!

நாளெல்லாம் பட்டினியாய் இருந்திடுவாள் - ஒரு
நாழிகை நம்பசி பொறுக்கமாட்டாள்
மேலெல்லாம் இளைத்திடப் பாடுபட்டே
மேன்மையாய் நாம் வாழச் செய்திடுவாள்!

வெகு எளிய வரிகள்..பெற்றெடுத்த அன்னையைப் பற்றி வெகு சிறப்பாகப் போற்றும் வரிகள் எளிதில் மறக்கவொண்ணாத வரிகள்..எனில் முழுதாய்க் கொடுத்திருக்கிறேன்..

கவி.கா.மு.ஷெரீஃபின் மற்ற பாடல்களும் எளிமை எளிமை தான்..அவரைப் போலவே..

சில பிரபலமான பாடல்கள்...இதைப் பார்த்தாலே தெரியும்..எவ்வளவு எளிய வரிகள் கொண்டவை என்று..

சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?

, வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா,

பணம் பந்தியிலே குணம் குப்பையிலே

நான் பெற்ற செல்வம் நலமான செல்வம்

ஏரிக்கரையின் மேலே போறவளே பெண் மயிலே

ஒன்றுசேர்ந்த அன்பு மாறுமா உண்மைக் காதல் மாறிப்போகுமா?

அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை,

பொன்னான வாழ்வு மண்ணாகிப் போமா

உலவும் தென்றல் காற்றினிலே

அதுவும் வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா..

இன்றும் எவ்வளவு பொருந்துகிறது..,
*

“கவிஞன் என்பவன் ஒரு தாய் மாதிரி பத்தியம் இருக்கணும்; ரசிகனை அவன் புள்ள மாதிரி நேசிச்சு எதைக் கொடுக்கணும், எதைக் கொடுக்கக் கூடாதுங்கிற பொறுப்புணர்வோட எழுதணும்” – இது கவி. கா.மு.ஷெரீப் சொன்ன முத்து.

எந்த நிலையிலும் யாரிடமும் போய் நிற்காதவர் கவிஞர்..வாழ்க்கையின் சவால்களை அதன் வழியிலேயே ஏற்றுக் கொண்டவர்..சிறந்து வாழ்ந்து அழகிய பல நூல்கள் படைத்து குணச்செம்மலாய் இருந்து மறைந்தவர்.கவி.கா.மு.ஷெரீஃப்.

*

என்ன பாடல் போடலாம்..

பெண்ணைப் பார்ப்பது மையல் கொள்வது எக்காலத்திலும் இருப்பது தான்..அது எல்லாருக்கும் புரியும் வண்ணம்பாடலில் கொண்டு வரவேண்டும்..

இந்தப்பாடலைக் கேட்டாலே தெரியும்..

தூக்கம் கண்ணைக் சொக்கக் கண்டேன்
தூங்கும் போது கனவு கண்டேன்..
கனவிலேயும் அந்தப் பெண்ணே
கண்ணெதிரே நிற்கக் கண்டேன்

வானில் முழு மதியைக் கண்டேன்
வனத்தினிலே பெண்ணைக் கண்டேன்..

(யார் நடிகர் நடிகையர் தெரியவில்லை/ க. நா. கோச்சுக்காதீங்க..)

வானில் முழுமதியைக் கண்டேன்… வனத்திலொரு பெண்ணைக் கண்டேன்,

https://youtu.be/8SoZcfZLAhA

*
அடுத்ததாக வரப்போகும் கவிஞர் பிறைசூடனுக்கு என்னாயிற்று..

இளையராஜா பாட்டிற்குப் பாட்டெழுத வேண்டும். மெட்டெழுதுவதற்குக் காஸெட் ஒரு நாள் முன்னமே வந்தாயிற்று.. ஆனாலும் ரெகார்டிங்கிற்காக டாக்ஸியில் கிளம்பி பாதி தூரம் போகும் வரை அவருக்கும் ஒன்றும் தோன்றவில்லை..அப்புறம் என்ன செய்தார்..

அடுத்த எபிசோட்ல சொல்றேனே..

அப்புறம் வாரேன் :)

Russellisf
8th April 2015, 06:14 AM
கட்டித்தங்கம் வெட்டியெடுத்து..
ஆயிரமாயிரம் உணர்வுகளை அழுத்தம் திருத்தமாய் சொல்வது கதை!
அதனிலும் அடர்த்தியாய் ஒரு சில வரிகளில் உரைப்பது கவிதை! கதையும் கவிதையும் கைகோர்த்து நடத்திய ஊர்வலம் திரைப்படம்! இன்னிசை என்னும் பின்னணியாலே இதயத்தைத் தொடுகின்ற கலையை நம் திரைக்கலைஞர்கள் செவ்வனே செய்தளித்திருக்கிறார்கள் என்பதற்கு இன்றும் நம் இதயம் தொடுகின்ற அப்பாடல்களே சாட்சி!!
மக்கள் திலகத்தை வைத்து அதிகமான திரைப்படங்களைத் தயாரித்த மாபெரும் தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பத் தேவர் ஆவார். அத்தனைப் படங்களிலும் அற்புத இசையமைப்பு கே.வி.மகாதேவன் அவர்கள். பாடல்கள் அனைத்தும் கவியரசு கண்ணதாசன் அவர்களே!!
தேவர் படங்களென்றால் விறுவிறுப்பும், சண்டைக் காட்சிகளும் விலங்குகளைச் சாகசம் செய்ய வைத்த வித்தியாசமான படைப்பாகவும் ஒருபுறமிருக்க, தேனான இசையில் நம்மை மயக்கும் தெள்ளுத் தமிழ்ப்பாடல்களுக்கும் பஞ்சமில்லை. இவ்வரிசையில் அமைந்திருக்கும் நூற்றுக்கணக்கான பாடல்கள் - இன்றும் சாகாவரம் பெற்றவையாக மக்கள் மனதில் உலா வந்து கொண்டிருக்கின்றன. திரைக்கதையின் ஓட்டத்தில் தொய்வின்றி இருக்க தேவரின் ‘பார்முலா’ ஒவ்வொரு இருபது நிமிட இடைவெளியிலும் சண்டைக் காட்சிகளும் பாடல் காட்சிகளும் இடம் பெற வேண்டுமென்பதாகும்.
தாய்க்குப் பின் தாரம் எனத் தொடங்கி.. ‘த’ வரிசையில்.. அதுவும் மக்கள் திலகம் கதாநாயகனாக.. தர்மம் தலைகாக்கும், தாயைக் காத்த தனயன், தாய் சொல்லைத் தட்டாதே.. தனிப்பிறவி என பட்டியல் நீளும்!
இவ்வரிசையில் அமைந்த ‘தாயைக் காத்த தனயன்’ திரைப்படத்தில் விளைந்த பாடலொன்று காதல் சாம்ராஜ்ஜியத்திற்குப் பட்டாபிஷேகம் நடத்தியதுபோல விளங்குகிறது!
ஒரு பெண்ணை வர்ணித்துப் பாடல் புனைவது.. மரபாக நடந்து வருகின்ற ஒன்றுதான்.. அதிலே கண்ணதாசன் பாணி இதுவோ..
கட்டித் தங்கம் வெட்டியெடுத்து
கட்டித் தங்கம் வெட்டி எடுத்து
காதல் என்னும் சாறு பிழிந்து
தட்டிதட்டிச் சிற்பிகள் செய்த உருவமடா!-அவள்
தளதளவென்று ததும்பி நிற்கும் பருவமடா!... (கட்டி)
தொட்டுத் தொட்டு நின்றன கைகள்!
சுட்டுச் சுட்டுக் கொன்றன கண்கள் - தான்
கிட்டக் கிட்ட வந்தது கண்டு
எட்டி எட்டிச் சென்றது வண்டு!... (கட்டி)
தங்கரதம் போல வருகிறாள்! - அல்லித்
தண்டுகள் போலே வளைகிறாள்!
குங்குமப் பூப்போல் சிரிக்கிறாள்-இன்பக்
கோட்டைக்கு என்னை அழைக்கிறாள்!... (கட்டி)
காலையில் மலரும் தாமரைப் பூ! - அந்திக்
கருக்கலில் மலரும் மல்லிகைப் பூ!
இரவில் மலரும் அல்லிப்பூ! - அவள்
என்றும் மணக்கும் முல்லைப் பூ!... (கட்டி)
காதல் ரசம் பொழியும் பாடலாகவே எல்லோரும் நோக்கும் இந்த வரிக்கு (பம்மல்) கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கத் தலைவி பேராசிரியை டாக்டர் சரசுவதி ராமனாதன் அவர்கள் தந்த விளக்கமிதோ..
குங்குமப் பூ போல் சிரிக்கிறாள்..
ஒரு பெண் குங்குமப்பூ போல் சிரிக்க வேண்டும். குங்குமப்பூ எப்படியிருக்கும்? இதழ் எப்படியிருக்கும் என்பதை நோக்கும்போது .. மிகச் சிறிய கோடு விழுந்ததுபோல். தெரியுமாம்.. அதுதான் அந்தப்பூவின் இதழ் திறப்பு.. பெண்கள் அப்படித்தான் மெல்லிய புன்னகை புரிந்தால்தான் அழகு! (எனவேதான் பொம்பளை சிரிச்சா போச்சு என்கிற பழமொழி கூட வந்துள்ளது).


https://www.youtube.com/watch?v=A1OI3Ps9VwY

chinnakkannan
8th April 2015, 10:45 AM
//கட்டித்தங்கம் வெட்டியெடுத்து..
ஆயிரமாயிரம் உணர்வுகளை அழுத்தம் திருத்தமாய் சொல்வது கதை!
அதனிலும் அடர்த்தியாய் ஒரு சில வரிகளில் உரைப்பது கவிதை! கதையும் கவிதையும் கைகோர்த்து நடத்திய ஊர்வலம் திரைப்படம்! இன்னிசை என்னும் பின்னணியாலே இதயத்தைத் தொடுகின்ற கலையை நம் திரைக்கலைஞர்கள் செவ்வனே செய்தளித்திருக்கிறார்கள் என்பதற்கு இன்றும் நம் இதயம் தொடுகின்ற அப்பாடல்களே சாட்சி!!// ஹாய் யுகேஷ்.. இந்த வரிகள் நீங்கள் எழுதியவையா.. நீங்கள் எழுதியதாக இருந்தால்... வாவ்...வெரி நைஸ்ங்கோவ்.. இல்லை வலையில் இருந்து எடுத்திருந்தீர்கள் என்றால் - மிக்க நன்றி யுகேஷ் :)

கட்டித் தங்கம் எனக்கும் பிடிக்கும்.. கொஞ்சம் யோசித்தால்..

தொட்டுத் தொட்டு நின்றன கைகள்!
சுட்டுச் சுட்டுக் கொன்றன கண்கள் - தான்
கிட்டக் கிட்ட வந்தது கண்டு
எட்டி எட்டிச் சென்றது வண்டு!. இந்த வரி புரியலை.. ஒரு வேளை பாடல் காட்சியை மறுபடி பார்த்தால் புரியுமோ என்னவோ..

kalnayak
9th April 2015, 10:44 AM
குட் மார்னிங் எவ்ரிபடி,

சி.க,
இப்பிடி பண்ணிட்டீங்களே!!! வானில் முழு மதியை கண்டேன் பாடலை எழுதனும், எழுதனும்-னு இருந்தேன். திடீர்னு பார்த்தால் நீங்க எழுதிட்டீங்க.சரி. சரி. நீங்க எழுதினா என்ன. நான் எழுதினா என்ன. ச்சே. ச்சே. நீங்க எழுதினா நெறைய அந்த பாடலை பற்றி எழுதிவீங்க. இங்கேயும் கவிஞர் பத்தி நெறைய எழுதி இருக்கீங்களே. நான் ஜஸ்ட் பேரை மட்டும்தான் குறிப்பிடுவேன். நன்று

கவி கா.மு ஷெரிஃப் அவர்களின் திரைப் பாடல் வரிசை பிரமிக்க வைக்கிறது. அவ்வளவும் அற்புதமான பாடல்கள். மிக நன்றாக எழுதி இருக்கிறீர்கள். நன்றி.

அற்றைத் திங்கள் பாட்டிற்கு உங்கள் பதிலாக வந்த பாட்டு "சித்திரையில் என்ன வரும்" அருமை. "யுகபாரதி"-க்கு நன்றி.

rajeshkrv
9th April 2015, 10:47 AM
kalnayak

venmukile konja neram , aagaya veethiyil idhellam pottengala(enakku paartha gnyabakam illai)

https://www.youtube.com/watch?v=uqsCHHQxx9U

kalnayak
9th April 2015, 11:11 AM
வாங்க யுகேஷ்பாபு,
மிக அழகான பாட்டோட மதுர கானம் திரிக்கு வந்திருக்கீங்க. தமிழ் எழுத்துக்களில் வலிமையாய் சொல்லுவதகென்றே வல்லின எழுத்துக்கள் இருக்கின்றன. கவிஞர்கள் வித்தியாசமாக வலிமையுடன் ஒன்றை சொல்ல வேண்டுமென்றால் இந்த வல்லின எழுத்துக்களை பெரும்பான்மையாய் பயன்படுத்தும் பாடல்களை எழுதுவார்கள்.

தமிழ் இலக்கியத்தில் கலிங்கத்துப்பரணி-க்கு தனிப் பெரும் இடம் உண்டு. அது குலோத்துங்க சோழன் கலிங்கத்தை தன் தளபதி கருணாகரத் தொண்டைமான் பல்லவன் உதவியுடன் பெரும் போர் நடத்தி வெற்றி கொண்டதை ஜெயங்கொண்டார் பாடியுள்ளார். பரணி என்ற வகை ஆயிரம் யானைகளை கொன்று போரில் வெற்றி கொண்ட மன்னர்களை பாடும் ஒரு பாடல் வகை. இது எல்லாம் இங்கு பலருக்கு தெரிந்திருக்கும். அந்த கலிங்கத்துப் பரணியில் போரின் துவக்கத்தை இவ்வாறு வலிமையான வார்த்தைகளால் பாடுகிறார் "எடும் எடும் என எடுத்ததோர், இகலொலி கடலொலி இகக்கவே" என்று. அந்த பாடல் முழுவதும் க, ச, ட, த, ப என்று வல்லின எழுத்துக்களை அழுத்தமாக பயன்படுத்தி எழுதி இருப்பார் பாருங்கள். அவ்வளவு அழகாக இருக்கும். பின்னாளில் தமிழ் புலவர்கள் கவிஞர்கள் யாவரும் இவ்வாறே அழுத்தமாக ஒன்றை சொல்ல வேண்டுமானால் வல்லின எழுத்துக்களை பயன் படுத்தினார்கள்.

பின்னாளில் கவிஞர் வைரமுத்து ஜென்டில்மேன் படத்தில் 'ஒட்டகத்தை கட்டிக்கோ கெட்டியாக ஒட்டிக்கோ' என்று எழுதியது கூட இதைப் பார்த்துதான் என்று குறிப்பிட்டு இருக்கிறார். கவியரசர் கவியரசர் கண்ணதாசனின் வல்லின பயன்பாட்டிற்கு இது ஒரு உதாரணப் பாடல். நீங்கள் சொன்னதுபோல் கவியரசர் தனது பாணியில் கருத்துக்களை அருமையாக சொல்லி இருக்கிறார். கேட்கவும் மிக இனிமை. குங்குமப்பூ சிரிப்பு பற்றி சொன்னது நன்றாக இருக்கிறது. சி.க.வும் மகிழ்ந்து பாராட்டி விட்டார். அப்புறம் என்ன. அவர் கேட்ட சந்தேகம் யாராவது தீர்க்க வேண்டும். என்னுடைய சந்தேகங்களை அவர்தான் தீர்த்து வைத்துக் கொண்டிருக்கிறார். நான் எங்கே அவர் சந்தேகத்தை தீர்ப்பது?

chinnakkannan
9th April 2015, 11:22 AM
மிகப் பெரிய எழுத்தாளர் ஜெயகாந்தன், கணீர்க்குரலுக்குச் சொந்தக்காரர் நாகூர் ஹனீபாவின் மறைவுச் செய்தியுடன் இன்றைய பொழுது விடிந்திருக்கிறது.. மிகவும் சோகமாக இருக்கிறது..

ஜெயகாந்தன் கவிஞரும் கூட. பாதை தெரியுது பார் படத்திற்காக அவர் எழுதிய பாடல்..

தென்னங்கீற்று ஊஞ்சலிலே தென்றலில் நீந்திடும் சோலையிலே
சிட்டுக்குருவி ஆடுது தன் பெட்டைத் துணையைத் தேடுது
ம்ஹ்ம் சிட்டுக்குருவி ஆடுது தன் பெட்டைத் துணையைத் தேடுது

நீலமேகம் ஏழு வண்ண
ஆடையோடுலாவுது
வானை பூமி அழைக்குது
தொடு வானில் இரண்டும் கலக்குது

https://youtu.be/Dw77uCP_PdI

நாகூர் ஹனீபாவின் இறைவனிடம் கையேந்துங்கள் எனக்கு மிகவும் பிடித்த பாடல்..


ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்..

chinnakkannan
9th April 2015, 11:25 AM
கல் நாயக் வாங்க.. நன்றி..

ஜெயகாந்தனைப் பற்றி நிறைய எழுதவேண்டும்.. நேரம் தான் இப்போது இல்லை..

சில நேரங்களில் சில மனிதர்கள்..வேறு இடம் தேடிப்போவாளோ மறக்க முடியுமா..
வேறு இடம் தேடித் போவாளோ
இந்த வேதனையில் இருந்து மீள்வாளோ
நூறு முறை இவள் புறப்பட்டாள்
விதி நூலிழையில் இவள் அகப்பட்டாள்

பருவ மழை பொழிய பொழிய பயிர் எல்லாம் செழிக்காதோ
இவள் பருவ மழையாலே வாழ்கை பாலைவனமாகியதே

தருவதனால் பெறுவதனால் உறவு தாம்பத்யம் ஆகாதோ
இவள் தரவில்லை பெறவில்லை தனி மரமாய் ஆனாளே
சிறு வயதில் செய்த பிழை சிலுவயென சுமக்கின்றாள்
இவள் மறுபடியும் உயிர்ப்பாளோ, மலரெனவே முகிழ்ப்பாளோ

ரொம்பப் பிடித்த பாட்டு..ரொம்பப் பிடித்த நாவல் சில நேரங்களில் சில மனிதர்கள்..அதைவிட அவர் நாவலுக்கு முன்
எழுதிய அக்கினிப் பிரவேசம் சிறுகதை ரொம்ப்பப் பிடிக்கும்..(அது தான் சி நே சி ம நாவலாக எழுதினார்)

https://youtu.be/8Roo1jgPd5M

kalnayak
9th April 2015, 11:32 AM
ஹாய் ராஜேஷ்,
"வெண்முகிலே கொஞ்ச நேரம்" போடவில்லை. நீங்கள் போட்டு விட்டீர்கள். நல்ல பாடல் இசையரசியின் குரலில். நன்றி.*இதிலே நிலா வருகிறதா. மறுபடி கேட்டு உறுதி செய்து கொள்கிறேன்.

"ஆகாய வீதியில்" சீக்கிரம் போடுகிறேன்.

kalnayak
9th April 2015, 12:31 PM
நாகூர் ஹனீஃபா அவர்களின் மறைவிற்கும், தமிழ் இலக்கிய உலகின் புரட்சியாளர் ஜெயகாந்தன் அவர்களின் மறைவிற்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.

chinnakkannan
9th April 2015, 01:52 PM
ஓகே. நிலா பாட்டு கொடுங்க கல் நாயக்.. சூரியனை வேணும்னா இப்ப நான்கூப்பிடறேன் :)

கிழக்கு வெளுத்ததடி கீழ்வானம் சிவந்ததடி
கதிரவன் வரவு கண்டு கமல முகம் மலர்ந்ததடி
எங்கள் குடும்பம் இன்று ஏறெடுத்து நடந்ததடி
இன்று வந்த தென்றலுக்கு இதயமெல்லாம் சிவந்ததடி

https://youtu.be/vsd_pwkPL50

kalnayak
9th April 2015, 06:57 PM
நிலாப் பாடல் 62: "வான் நிலா நிலா அல்ல - உன் வாலிபம் நிலா"
-----------------------------------------------------------------------------------------------

மிகவும் பிரபலமான ஒரு பாடல். கவியரசர் கண்ணதாசனின் கவிதை வரிகள் எல்லா வரிகளும் லா-வில் முடிகின்றன. அற்புதமான எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரல். இசையமைத்த மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனை எப்படி பாராட்டுவது? நடிகர் சிவச்சந்திரன் பாடுவது போல பாடல் வருகிறது திரையில். நாயகியின் பெயர் தெரியவில்லை.

பாட்டு வரிகள் இதோ:
--------------------------------

வான் நிலா நிலா அல்ல - உன் வாலிபம் நிலா
தேன் நிலா எனும் நிலா - என் தேவியின் நிலா
நீயில்லாத நாளெல்லாம் - நான் தேய்ந்த வெண்ணிலா
மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா?
பூவிலாத மண்ணிலே ஜாடை பெண்ணிலா?

(வான் நிலா நிலா அல்ல)

தெய்வம் கல்லிலா? - ஒரு தோகையின் சொல்லிலா?
பொன்னிலா? பொட்டிலா? புன்னகை மொட்டிலா?
அவள் காட்டும் அன்பிலா?
இன்பம் கட்டிலா அவள் தேகக் கட்டிலா?
தீதிலா காதலா ஊடலா கூடலா?
அவள் மீட்டும் பண்ணிலா?

(வான் நிலா நிலா அல்ல)

வாழ்க்கை வழியிலா? ஒரு மங்கையின் ஒளியிலா?
ஊரிலா? நாட்டிலா? ஆனந்தம் வீட்டிலா?
அவள் நெஞ்சின் ஏட்டிலா?
சொந்தம் இருளிலா? ஒரு பூவையின் அருளிலா?
எண்ணிலா ஆசைகள் என்னிலா கொண்டது ஏன்?
அதைச் சொல்வாய் வெண்ணிலா!

காணொளி இதோ:
-----------------------------
https://www.youtube.com/watch?v=bV8V2oowwwI

பட்டினப் பிரவேசம் பண்ணியவுக எல்லாம் இப்படி பாடினால் எம்மாங்கவிதை கெடைக்கும்? இந்த படத்தை பத்தி சி.க. கொஞ்சம் சொல்லுங்களேன்.

rajeshkrv
9th April 2015, 08:51 PM
ஓகே. நிலா பாட்டு கொடுங்க கல் நாயக்.. சூரியனை வேணும்னா இப்ப நான்கூப்பிடறேன் :)

கிழக்கு வெளுத்ததடி கீழ்வானம் சிவந்ததடி
கதிரவன் வரவு கண்டு கமல முகம் மலர்ந்ததடி
எங்கள் குடும்பம் இன்று ஏறெடுத்து நடந்ததடி
இன்று வந்த தென்றலுக்கு இதயமெல்லாம் சிவந்ததடி

https://youtu.be/vsd_pwkPL50

idho original video

https://www.youtube.com/watch?v=IdJX4GdMHm0

rajeshkrv
9th April 2015, 08:52 PM
ஹாய் ராஜேஷ்,
"வெண்முகிலே கொஞ்ச நேரம்" போடவில்லை. நீங்கள் போட்டு விட்டீர்கள். நல்ல பாடல் இசையரசியின் குரலில். நன்றி.*இதிலே நிலா வருகிறதா. மறுபடி கேட்டு உறுதி செய்து கொள்கிறேன்.

"ஆகாய வீதியில்" சீக்கிரம் போடுகிறேன்.

nandri.
adhe varisiyal vennila nerathile venuganam(avasara kalyanam), velli nila vanathile vandhu pogudhada (kadhal paduthum paadu)

uhesliotusus
9th April 2015, 09:59 PM
கல்நாயக்,

நிலாப்பாடல்களின் தொகுப்பில் உங்கள் உழைப்பு தெரிகிறது. அருமை.

எனக்குத் தெரிந்த சில பாடல்கள். நீங்கள் நிறைய பாடல்கள் நிலா பற்றி போட்டு விட்டதால் நான் வழங்கும் பாடல்கள் அந்தத் தொகுப்பில் இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை. உங்கள் அனுமதியோடு சிலவற்றை பதிகிறேன். ஏற்கனவே நீங்கள் பதித்திருந்தால் பொறுத்தருள்க.

நிலவு வந்து வானத்தையே திருடிக்கொண்டது ---- திருடி (சொக்க வைக்கும் பாட்டு)


நிலவுக்குப் போவோம் இடமொன்று பார்ப்போம் ----- கண்ணன் வருவான்


நிலவோடு வான்முகில் விளையாடுதே----- ராஜராஜன்


நிலவோ அவள் இருளோ---- அருணகிரிநாதர்


நிலவு பிறந்த நேரத்திலே----அம்மா எங்கே (சுசீலாவின் அபூர்வ பாடல் வகை)


வெண்ணிலா நேரத்திலே வேணுகானம்---- அவசர கல்யாணம்


வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலாவே---- இருவர் (உலக அழகியின் நடன அசைவுகள் நளினம்)


வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்---- மன்னிப்பு


வெண்ணிலவுக்கு வானத்தை பிடிக்கலியா---- தாலாட்டு பாடவா (ரொம்ப ரொம்ப பிடித்த பாட்டு. பார்த்திபன், குஷ்பூ, ரூபினி என்று நினைக்கிறேன்)


நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு----- கண்ணுக்குள் நிலவு


நிலவும் மலரும் பாடுது--- தேன் நிலவு


வானிலவே வா நிலவே வழியில் ஒரு மேகம் இல்லை---- படம் பெயர் தெரியலையே


சர்க்கரை நிலவே சர்க்கரை நிலவே -- யூத்


தங்க நிலவே உன்னை உருக்கி தங்கச்சிக்கு---- தங்கைக்கோர் கீதம் தானே?


தங்க நிலவே நீ இல்லாமல் தனிமை காண முடியுமா----சிநேகிதி (சௌந்தரராஜனும், நடிகை பாரதியும் கலக்கி எடுத்துவிடுவார்கள்)


நிலவுக்கும் நிழலுண்டு----ஆயிரம் ரூபாய்


இந்த நிலவை நான் பார்த்தால்----- பவானி


நிலவு ஒரு பெண்ணாகி-----உலகம் சுற்றும் வாலிபன்


நிலாவே வா செல்லாதே வா-----மௌன ராகம்


வெண்ணிலா ஓடுது---- நாளை உனது நாள்


நிலவு நேரம் இரவு காயும்----அன்னை ஒரு ஆலயம்


நிலவே நீதான் தூது செல்லாயோ---ஆத்மா சாந்தி (திருச்சி லோகநாதனும் லீலாவும் இணைந்த அற்புத பாடல். எனக்கு ரொம்ப பிடித்த அபூர்வ பாடல்)


நிலா காய்கிறது---இந்திரா (ரொம்ப பாப்புலரான பவர்புல் பாட்டு)


இன்னும் இருந்தால் யோசிக்கிறேன். மேற்கண்ட பாடல்களை எனக்காக டியூபிலிருந்து போடுவீர்கள் என்று நம்புகிறேன்.


இதெல்லாம் மண்டபத்திலே யாரும் சொல்லிக் கொடுக்கலீங்க. நானே மண்டையப் பிச்சுகிட்டு போட்டது. ஆனா நிச்சயமா கல்நாயக் அளவுக்கு இல்ல.


எல்லாத்துக்கும் மேலே எக்காலமும் போற்றும் நடிகனின்

யாரந்த நிலவு பாடலை போட்டே தீரணும். இது பட்டாக்க்கத்தியின் படா வேண்டுகோள்.

இப்போ ஜூட் வுட்டுக்கிறேன்.

chinnakkannan
9th April 2015, 10:02 PM
பட்டினப் பிரவேசத்தைப் பற்றிக் கேட்டுவிட்டீர்களே கல் நாயக்..மதுரை கல்பனா தியேட்டரில் வந்தது என நினைக்கிறேன்..முதல் நேச்சுரல் கலர் படம் என நினைக்கிறேன்..

பாலச்சந்தர் என்ற எதிர்பார்ப்போடு போன படம்..படத்தின் நெகட்டிவ் தன்மையால் (பட்டணம் செல்பவர்கள் எல்லோரும் கெட்டுக் குட்டிச் சுவராகப் போய்விடுவார்கள் என்பது போல்) திரும்பும் போது சற்றே தலைவலி வந்து வீட்டுக்கு வந்தபின் கால்பால் போட்ட நினைவு..(மேட்னி ஷோ இன் மதுரை இன் சம்மர்)..அதன் பின் அந்தப் படத்தைப் பார்க்கவே இல்லை..பாடல் அவ்வப்போது கேட்டதுண்டு..

வான் நிலா நிலா அல்ல மனதில் தங்கிய பாடல் (போட்டதற்குத் தாங்க்ஸ்).. எம்.எஸ்.வி.டியூன்போடும் போது ந நன்னா ந நான நா எனப் போட கவிஞருக்கு மூடில்லையாம்..

என்னய்யா நன்ன்ன நன்னங்கற போ..

பாலச்சந்தர் எம் எஸ் வியிடம் நல்லா இருக்கு ட்யூன் எப்படியாவது வாங்கிடுங்க எனச் சொல்லிச் செல்ல எம் எஸ் வி லால லால லாலலா..எனப்பாட வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா என வார்த்தைகள் வந்து விழுந்ததாம்..

சிவரஞ்சனி இளமை.. அகலக் கண் என நன்றாக் இருந்த நினைவு..இன்னும் உங்கள் காணொளியைக் காண்கவில்லை! சிவசந்திரன் டெல்லி கணேஷ் என அறிமுகம் (அதே சிவரஞ்சனி ஊறியதயிர்வடை போல் சிந்துபைரவியில் காட்சியளித்தது சற்றே சோகம்....)

காத்தாடி ராமமூர்த்தி ரெளண்ட் அபெளட்டில் டாக்ஸியில் சுற்றிச் சுற்றி வர பின் இறங்க – சரிப்பா.. – யோவ் மீட்டரைப் பாருய்யா – பார்த்தேன் நல்லா இருக்கே…- எனச் சொல்லி த் திட்டுவாங்குவதற்கு சிரித்தது நினைவில்..

ஒரே இரவில் ஓபன் செய்யும் மளிகைக்கடை டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸாக விரிவடைந்து லஞ்சம்கேட்பதற்கு ஒரு ஆள் வர எவ்வளவு வேண்டும் என டெல்லிகணேஷ் சந்தோஷமாய்க் கேட்க கொக்கரக்கோ என சத்தம் வரும்..அவ்வளவும் டெல்லிகணேஷின் கனவு..விழித்துவிடுவார்..

சிவசந்திரனுக்கு சித்தப்பிரமை பிடிக்க டெல்லி கணேஷ் அவரது கைவிரல்களின் மீது மைதடவி எதற்கோகை நாட்டு வைப்பது மட்டும் கொஞ்சம் நினைவில்..கதை சம்பவங்கள் சுத்தமாக மற்ந்துவிட்டது..

போதுமா..

*

தாங்க்ஸ் ராஜேஷ் ஃபார் த காணொளி..


அப்புறம் என்ன செய்ய..

வந்ததுக்கு ஒரு பாட் எழுதிப்பாகக்லாமா..

வேகமாகச் சத்தமிட்டு வருவதும்
..வெட்கமிலா ஓட்டநடை கொள்வதும்
விகற்பமுடன் முத்தமிட்டுச் செல்வதும்
விரைந்தபடி அமைதியாக வருவதும்
மறுபடியும் மறுபடியும் தொடர்ந்திடும்
.மாற்றமில்லா. நாடகந்தான் ஏனடி
வரமெனவே பெற்றுவிட்டாய் நீயடி
வாழ்க்கையிலே அலைமகளே இல்லையா.

ஸோ.. என்னது இந்தப்பாட்டு..அலை.. கடலோட அலை தொட்டுவருவதும் தொட்டு விடுவதும் மெல்லச் சிரிப்பதும் முறைத்துச் செல்வதும் நுரைத்துவருவதும் பின்னர் கலைவதும் பார்க்கப் பார்க்க சுவாரஸ்யம், இன்பம் தான் இல்லியோ..

ஆக இப்ப என்ன பண்ணலாம்னா…(அலைபத்தி ப் போடப்போறியா போட்டுத் தொலை..மன்ச்சு..ஏன் கோபம்) :)

https://youtu.be/ejzVeq4wLH4

kalnayak
10th April 2015, 10:23 AM
கல்நாயக்,

நிலாப்பாடல்களின் தொகுப்பில் உங்கள் உழைப்பு தெரிகிறது. அருமை.

எனக்குத் தெரிந்த சில பாடல்கள். நீங்கள் நிறைய பாடல்கள் நிலா பற்றி போட்டு விட்டதால் நான் வழங்கும் பாடல்கள் அந்தத் தொகுப்பில் இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை. உங்கள் அனுமதியோடு சிலவற்றை பதிகிறேன். ஏற்கனவே நீங்கள் பதித்திருந்தால் பொறுத்தருள்க.

நிலவு வந்து வானத்தையே திருடிக்கொண்டது ---- திருடி (சொக்க வைக்கும் பாட்டு)


நிலவுக்குப் போவோம் இடமொன்று பார்ப்போம் ----- கண்ணன் வருவான்


நிலவோடு வான்முகில் விளையாடுதே----- ராஜராஜன்


நிலவோ அவள் இருளோ---- அருணகிரிநாதர்


நிலவு பிறந்த நேரத்திலே----அம்மா எங்கே (சுசீலாவின் அபூர்வ பாடல் வகை)


வெண்ணிலா நேரத்திலே வேணுகானம்---- அவசர கல்யாணம்


வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலாவே---- இருவர் (உலக அழகியின் நடன அசைவுகள் நளினம்)


வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்---- மன்னிப்பு


வெண்ணிலவுக்கு வானத்தை பிடிக்கலியா---- தாலாட்டு பாடவா (ரொம்ப ரொம்ப பிடித்த பாட்டு. பார்த்திபன், குஷ்பூ, ரூபினி என்று நினைக்கிறேன்)


நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு----- கண்ணுக்குள் நிலவு


நிலவும் மலரும் பாடுது--- தேன் நிலவு


வானிலவே வா நிலவே வழியில் ஒரு மேகம் இல்லை---- படம் பெயர் தெரியலையே


சர்க்கரை நிலவே சர்க்கரை நிலவே -- யூத்


தங்க நிலவே உன்னை உருக்கி தங்கச்சிக்கு---- தங்கைக்கோர் கீதம் தானே?


தங்க நிலவே நீ இல்லாமல் தனிமை காண முடியுமா----சிநேகிதி (சௌந்தரராஜனும், நடிகை பாரதியும் கலக்கி எடுத்துவிடுவார்கள்)


நிலவுக்கும் நிழலுண்டு----ஆயிரம் ரூபாய்


இந்த நிலவை நான் பார்த்தால்----- பவானி


நிலவு ஒரு பெண்ணாகி-----உலகம் சுற்றும் வாலிபன்


நிலாவே வா செல்லாதே வா-----மௌன ராகம்


வெண்ணிலா ஓடுது---- நாளை உனது நாள்


நிலவு நேரம் இரவு காயும்----அன்னை ஒரு ஆலயம்


நிலவே நீதான் தூது செல்லாயோ---ஆத்மா சாந்தி (திருச்சி லோகநாதனும் லீலாவும் இணைந்த அற்புத பாடல். எனக்கு ரொம்ப பிடித்த அபூர்வ பாடல்)


நிலா காய்கிறது---இந்திரா (ரொம்ப பாப்புலரான பவர்புல் பாட்டு)


இன்னும் இருந்தால் யோசிக்கிறேன். மேற்கண்ட பாடல்களை எனக்காக டியூபிலிருந்து போடுவீர்கள் என்று நம்புகிறேன்.


இதெல்லாம் மண்டபத்திலே யாரும் சொல்லிக் கொடுக்கலீங்க. நானே மண்டையப் பிச்சுகிட்டு போட்டது. ஆனா நிச்சயமா கல்நாயக் அளவுக்கு இல்ல.


எல்லாத்துக்கும் மேலே எக்காலமும் போற்றும் நடிகனின்

யாரந்த நிலவு பாடலை போட்டே தீரணும். இது பட்டாக்க்கத்தியின் படா வேண்டுகோள்.

இப்போ ஜூட் வுட்டுக்கிறேன்.

ஹலோ பட்டாக்கத்தி,

நீங்கள் கொடுத்த நிலா வரிசை ஸூபர். இதில் பல பாடல்கள் ஏற்கனவே கொடுத்தாகி விட்டது. சில பாடல்களை கொடுக்க இருக்கிறேன். முடிந்தால் நீங்கள் கொடுத்திருக்கும் எல்லா பாடல்களையும் கொடுக்க முயற்சிக்கிறேன். நன்றி.

யாரந்த நிலவு பாடல் ஸ்பெஷல் ஆச்சே. நல்ல நேரமாகப் பார்த்து கொடுத்துவிடுகிறேன். நடிகர் திலகம் திரியிலும் இந்த பாடல் முரளி அவர்களால் அலசி ஆராய்ந்து எழுதப் பட்டுவிட்டது. இருந்தாலும் என் பாணியில் நானும் சொல்கிறேன்.

kalnayak
10th April 2015, 10:31 AM
சி.க.,
பட்டினப் பிரவேசத்திற்கான உங்கள் திரை அரங்குப் பிரவேசம் உங்கள் நினைவுகளை கிளறிவிட்டது என்று நினைக்கிறேன். திரைப் படக் கதையை விட்டுத் தள்ளுங்கள். இன்னொருமுறை பார்த்தால் போச்சு. நான் இந்த படம் பார்த்ததில்லை. ஆனால் இந்தப் பாடல் பலமுறை கேட்டிருக்கிறேன். எனக்கும் மிகவே பிடித்த பாடல்.

நீங்கள் எழுதிய கவிதை அழகு. அத்துடன் நீங்கள் கொடுத்த ஜெயச்சந்திரன் பாடிய அலையே காதல் அலையே பாடலும் அழகு.

ராஜேஷ்,
நீங்கள் கொடுத்திருக்கும் நிலாப் பாடல்களையும், எனது நிலாப் பாடல் வரிசையில் சேர்த்துக் கொள்கிறேன். நன்றி.

kalnayak
10th April 2015, 11:03 AM
நிலாப் பாடல் 63: "அமுதைப் பொழியும் நிலவே. நீ அருகில் வராததேனோ"
-------------------------------------------------------------------------------------------------------------
தலைப்பைப் படித்ததும் பலரும் சொல்வார்கள் "ஆஹா அருமையான, சுகமான, மதுரமான, அற்புதமான, அட்டகாசமான, அழகான, சூப்பரான,... பாடல் ஆச்சே இது" என்று. நீண்ட நாட்களாயிற்று நடிகர் திலகத்தின் திரைப் படப் பாடலொன்றை பற்றி எழுதி. அதனால் எழுத நினைத்தேன். ஆனால் இதில் நடிகர் திலகம் தோன்றினாலும், அவர் வாயசைக்காத திரைப் பாடல். பட்டாக்கத்தியும் கேட்டுவிட்டார் நடிகர் திலகத்தின் பாடலை. அவர் கேட்டதற்காக போடலாமென்றுதான் இது. நடிகை ஜமுனா பாடுவதாக வந்திருக்கும்*பாடல்.

இந்தப் பாடல் எத்தனை மொழிகளில் பிரபலம் என்று ராஜேஷ், ராஜ்ராஜ், சி.க., போன்றவர்கள்தான் சொல்லவேண்டும். எல்லா மொழிகளிலும் இசையரசி பி.சுசீலாவின் குரலே என்று நினைக்கிறேன். 1957ல் வெளிவந்த திரைப்படம். இசை: டி.ஜி. லிங்கப்பா.

பாடலை எழுதியவர் சில நாட்களுக்கு முன் சி.க. எழுதிய கு.மா. பாலசுப்ரமணியம். அருமையாக கருப்பு வெள்ளையில் கானகத்தில் படமாக்கியிருக்கிறார்கள். மோகன ராகத்தில் அமைந்த பாடல் நம்மையெல்லாம் மயக்குகிறதே. நிலவை கேள்வி கேட்டு பார்த்திருக்கிறோம். வானத்தில் இருக்கிறாய் என்று சொல்லிப் பாடியும் பார்த்திருக்கிறோம். அருகில் வாராய் என்று அழைத்தும் பார்த்திருக்கிறோம். இது அருகில் வரமாட்டாயா, ஏன் வரமாட்டாய் என்று கேட்டுப் பாடும் பாடல். இதுவும் காதலி காதலனை நிலவோடு ஒப்பிட்டு பாடும் வித்தியாசமான பாடல்தான். பாடல் வரிகள் கீழே. காணொளி அதற்கும் கீழே. ஆனால் பாடல் வரிகளும் காணொளியும் மேலானவைகள்தான்.


அமுதைப் பொழியும் நிலவே நீ
அருகில் வராததேனோ ஓ... அருகில் வராததேனோ ஓ...
அமுதைப் பொழியும் நிலவே நீ
அருகில் வராததேனோ அருகில் வராததேனோ
அமுதைப் பொழியும் நிலவே நீ
அருகில் வராததேனோ அருகில் வராததேனோ

இதயம் மேவிய காதலினாலே
ஏங்கிடும் அல்லியைப் பாராய் ஆ...ஆ..
இதயம் மேவிய காதலினாலே
ஏங்கிடும் அல்லியைப் பாராய்
புதுமலர் வீணே வாடிவிடாமல்
புதுமலர் வீணே வாடிவிடாமல்
புன்னகை வீசி ஆறுதல் கூற
அருகில் வராததேனோ அருகில் வராததேனோ

அமுதைப் பொழியும் நிலவே நீ
அருகில் வராததேனோ அருகில் வராததேனோ

மனதில் ஆசையை மூட்டிய பின்னே
மறைந்தே ஓடிடலாமா ஆ..ஆ..ஆ..ஆ..
மனதில் ஆசையை மூட்டிய பின்னே
மறைந்தே ஓடிடலாமா
இனிமை நினைவும் இளமை வளமும்
இனிமை நினைவும் இளமை வளமும்
கனவாய் கதையாய் முடியும் முன்னே
அருகில் வராததேனோ அருகில் வராததேனோ
அமுதைப் பொழியும் நிலவே நீ
அருகில் வராததேனோ அருகில் வராததேனோ

https://www.youtube.com/watch?v=S1alh8By1Ss

தங்க மலை ரகசியம் போல இந்த பாடலைக் காக்க வேண்டியதாகப் போயிற்று எல்லோரிடமும் இருந்து. நல்லவேளை, யாரும் சொல்ல வில்லை இந்தப் பாட்டை.

Murali Srinivas
10th April 2015, 12:10 PM
கண்ணா,

பட்டணப் பிரவேசம் கல்பனாதான். ஆனால் சம்மரில் வரவில்லை. 1977 செப்டம்பர் 9 ரிலீஸ். செப் 2 அன்று புவனா ஒரு கேள்விக்குறி அலங்காரில் ரிலீஸ். அடுத்த வாரம் பட்டணப் பிரவேசம். செப் 15 அன்று 16 வயதினிலே சினிபிரியாவில் வெளியானது. செப் 30 சென்ட்ரலில் ஆடு புலி ஆட்டம். அக்டோபர் 7 அன்று மூன்று படங்கள் ரிலீஸ். சினிபிரியாவில் நாம் பிறந்த மண், தங்கத்தில் காயத்ரி, நியூசினிமாவில் ஓடி விளையாடு தாத்தா. நான் கல்லூரி முதல் வருடம். இரண்டு வருடங்கள் எமர்ஜென்சியில் அடங்கி ஒடுங்கி இருந்த கல்லூரி மாணவர்கள் தொட்டதற்க்கெல்லாம் ஸ்ட்ரைக் செய்ய ஏகப்பட்ட விடுமுறைகள். அவை அனைத்தும் படங்கள் பார்க்க உபயோகமானது.

சாரி, ஒரு சில nit pickings . பட்டணப் பிரவேசம் படத்தில் அறிமுகமானது சிவரஞ்சனி இல்லை. அது மீரா (நாக்கால் மூக்கை தொடும் மீரா). பின்னாட்களில் சிந்து பைரவியில் நீங்கள் குறிப்பிட்டது போல் Bloated figure ஆக வருவார்.நடிகர் திலகத்துடன் இமயம் படத்தில் வருவார். அது போல் வான் நிலா பாடலுக்கு சிவசந்திரனுடன் வருபவர் ஸ்வர்ணா. அவரும் அறிமுகம்தான். இதற்கு இரண்டு மாதங்கள் கழித்து வெளிவந்த நடிகர் திலகத்தின் அண்ணன் ஒரு கோவில் படத்திலும் ஒரு பாடல் காட்சிக்கு வருவார்.

டெல்லி கணேஷ் சிவசந்திரன் அறிமுகம் கரெக்ட். ஆனால் இன்னொரு முக்கியமான அறிமுக நபரை விட்டு விட்டீர்களே? அவர்தான் சரத்பாபு.

மற்றபடி தொடருங்கள். ரசித்துக் கொண்டிருக்கிறேன்.

கல்நாயக், உங்களுக்கும்தான், தொடருங்கள்.

அன்புடன் .

chinnakkannan
10th April 2015, 03:10 PM
முரளீ.. வாங்க :)

எனக்குக் கொஞ்சம் டவுட்டு தான்..ஆனால் பார்த்தது ஒரு மேட்னி..(பாவம் கண்ணா..பத்தாம் க்ளாஸ்..அதுவும் போன நேரம்..! மறந்துட்டேன் ஷமிக்கணூம்).. சைக்கிள் கைக்கு வந்த மகிழ்ச்சியில் சனி யாவது ஞாயிறாவது இற்க்கை முளைத்து சுற்றிய காலம்.. குரு.. புவனா ஒரு கேள்விக்குறி எனக்கு சாந்தி தியேட்டரில் பார்த்த நினைவு..ஒருவேளை ரீரன்னாக இருக்கும் என நினைக்கிறேன்.. ஆ.பு.ஆ சென் ட்ரல் அப்புறம் 16 வயதினிலே பாக்கெட் மணி சேர்த்து மினிப்ப்ரியாவில்(அதிலும் போட்டிருந்த நினைவு) பார்த்தேன்.. ஓ.வி.தா வும் மாட்னி தான்..எதிரிபாராமல் பார்த்த ஓ.கே படம்..

மன்னிக்க கொஞ்சம் ஆர்வக் கோளாறில் சிவரஞ்சனி என்று தவறாக எழுதிவிட்டேன்.. (சிவரஞ்சனி என்பது மீராவின் பெயர் சிந்துபைரவியில் இல்லியோ) வான் நிலா பாட்டு இனிமேல் தான் கேட்கணும்..பார்க்கணும் என்னமோ வேலை வேலை என டைம் கிடைக்கவில்லை..அகெய்ன் ஸாரி..சிவரஞ்சனி நீல கண் தேவதையோன்னோ..உண்மையா ராஜேஷ், கல் நாயக்..:) கலைஞன்ல வந்து பொசுக்குன்னு குதிச்சு செத் போவாரே..

சரத்பாபு புகையாய் நினைவில்..பட் முரளி.. அவர் நிழல் நிஜமாகிறதில் அறிமுகம் என நினைத்துக் கொண்டிருந்தேன்..

வெரி நைஸ் முரளி..கொஞ்சம் அந்தக்காலத்துக்குப் போய்ட்டு வந்துட்டேன்.. நீங்க அமெரிக்கனா.மெஜூராவா . நான் ரெண்டு வருஷத்துக்கப்புறம் தான் கல்லூரி..தாங்க்ஸ்..

chinnakkannan
10th April 2015, 03:25 PM
//எண்ணிலா ஆசைகள் பெண்ணிலா கொண்டதேன் அதைச் சொல்வாய் வெண்ணிலா// பார்த்துட்டேன் ஃப்ரெஷ்ஷா.. பாருங்க மீரா மட்டும் தான் நினைவு..ஸ்வர்ணா ப்பாப்பா நினைவிலில்லை.. அந்த மூக்கும் நாக்கும் மட்டும் தான் :) அவர் தங்கையா வருவாரோ..

கல்ஸ்...! (ஓய் ஒம்மை செல்லமாக் கூப்பிட முடியலையே) அமுதைப்பொழியும் நிலவே நல்லபாட்டு..பிடிக்கும்னு சொல்லி நிறுத்த இயலாது..ஏன்னாக்க எப்ப ந.தி பேச ஆர்மபிச்சுக் கதை மூவ் ஆகும்னு இருக்கும்..பட் நலல் படம்..(சர்ரூ வோட ஐட்டம் ஸாங்க் இருக்கும்! :) பின்ன ஒருபாட்டுக்கு வந்து ஆடுவாங்க.. அழகு, யெளவனம் என ஆரம்பிக்கும் நு நினைக்கறேன்)

அம்மா எங்கே யில் வேறொரு நிலவுப்பாட்டு இருக்கே..ஆனா சொல்ல மாட்டேனே :)

//நீங்கள் எழுதிய கவிதை அழகு. அத்துடன் நீங்கள் கொடுத்த ஜெயச்சந்திரன் பாடிய அலையே காதல் அலையே பாடலும் அழகு.// நன்றி.. காதல் பாட்டுன்னா கடல் அலை கூட காதல் அலை ஆகிடுமா என்ன....:)

kalnayak
10th April 2015, 04:52 PM
//

கல்ஸ்...! (ஓய் ஒம்மை செல்லமாக் கூப்பிட முடியலையே) அமுதைப்பொழியும் நிலவே நல்லபாட்டு..பிடிக்கும்னு சொல்லி நிறுத்த இயலாது..ஏன்னாக்க எப்ப ந.தி பேச ஆர்மபிச்சுக் கதை மூவ் ஆகும்னு இருக்கும்..பட் நலல் படம்..(சர்ரூ வோட ஐட்டம் ஸாங்க் இருக்கும்! :) பின்ன ஒருபாட்டுக்கு வந்து ஆடுவாங்க.. அழகு, யெளவனம் என ஆரம்பிக்கும் நு நினைக்கறேன்)

அம்மா எங்கே யில் வேறொரு நிலவுப்பாட்டு இருக்கே..ஆனா சொல்ல மாட்டேனே :)

//நீங்கள் எழுதிய கவிதை அழகு. அத்துடன் நீங்கள் கொடுத்த ஜெயச்சந்திரன் பாடிய அலையே காதல் அலையே பாடலும் அழகு.// நன்றி.. காதல் பாட்டுன்னா கடல் அலை கூட காதல் அலை ஆகிடுமா என்ன....:)

சி.க.,
கல்ஸ்-னே கூப்பிடுங்க. எனக்கு புது பேரு கிடைச்ச மாதிரி இருக்கு.(யாரு நானா என்னோட பெயர சொல்றது?)

கடல்-னு எழுத kadal அடிச்சேன். அது காதல்-னு வந்துடுச்சு. நானும் பாக்கலையா. நீங்க பாத்துட்டீங்க.

அம்மா எங்கே பாட்டு உங்க நெஞ்சுக்கு தெரிஞ்சா சரிதான்.

madhu
10th April 2015, 06:50 PM
அம்மா எங்கே யில் வேறொரு நிலவுப்பாட்டு இருக்கே..ஆனா சொல்ல மாட்டேனே :)

எந்தப் பாட்டு ? நெஞ்சுக்கு தெரியும் நிலவுக்கு தெரியும் பாட்டா ? அல்லது ஆகாசப் பந்தலிலே ஆயிரம் பூ பூத்திருக்கும் ஆனாலும் நிலவு வந்தால் அல்லியைத்தான் பார்த்திருக்குமா ? இதெல்லாம் பௌர்ணமி மாதிரி பல்லவியிலேயே அந்த வார்த்தையைக் கொண்ட பாடல்கள். இன்னும் "தொட்டுப்பார்..தொடும்போது.... கண்ணில் வந்து கொஞ்சும் நிலா" என்றும் "பாடி வரும் நிலவோ வெண்பளிங்கான மேனியோ" என்று பிறைச்சந்திரன் போல மறைந்து வெளிப்படும் பாடல்களும் உண்டுங்கோ..

அம்மா எங்கேனு நிலாவைக் கேட்போம்..

கல் நாயக் சாருக்கு... உடல் நிலை காரணமாக நிலவுப் பாடல்கள் முழுவதும் படிக்க முடியவில்லை. ... இருப்பினும் இந்தப் பாடல்கள் இல்லாமல் இருந்தால் லிஸ்டில் சேர்த்துக்குங்க

சந்திரப் பிறை பார்த்தேன் - கிழக்கும் மேற்கும் சந்திக்கின்றன

சந்திர குலத்தவன் சிந்தையில் கலந்திட - சிரி சிரி மாமா ( சந்திரனின் குலமும் சேர்த்திதானே ? )

வெள்ளி நிலவோ வீசும் தென்றலோ - ஹலோ பார்ட்னர்

நிலவுப் பெண் முகம் பார்க்க நீலமேகம் கண்ணாடி - பால் மனம்

ஏற்கனவே சேர்க்கப்பட்டு இருந்தால் மன்னிக்கவும்.

chinnakkannan
10th April 2015, 08:12 PM
//அம்மா எங்கே பாட்டு உங்க நெஞ்சுக்கு தெரிஞ்சா சரிதான்.// கல்ஸ் :)

//எந்தப் பாட்டு ? நெஞ்சுக்கு தெரியும் நிலவுக்கு தெரியும் பாட்டா ? அல்லது ஆகாசப் பந்தலிலே ஆயிரம் பூ பூத்திருக்கும் ஆனாலும் நிலவு வந்தால் அல்லியைத்தான் பார்த்திருக்குமா ? இதெல்லாம் பௌர்ணமி மாதிரி பல்லவியிலேயே அந்த வார்த்தையைக் கொண்ட பாடல்கள். // மதுண்ணா வாங்க வாங்க :) இன்னிசைக் களஞ்சியமே மதுண்ணா எங்களின் அதிரசமே (ஸ்வீட் பெர்ஸன்னு சொன்னேன் :) )

இந்த நெஞ்சுக்குத் தெரியும் பாட் திடீர்னு தேடற்ச்சே கிடைச்சது.. சரி இவர் போடறாரா பாக்கலாம்னு இருந்தேனா.. பட்டூ சார் வேற கேட்டாரா அதான் கல்ஸூக்குத் தெரியுமான்னு கேட்டேன்..இந்தப் பாட் சொன்னாற்போல முந்தா நாள் தான் பார்த்தேன்.. ரொம்ப நாளைக்கு முன்னால் இசைக்களஞ்சியத்தில (சிலோன்) கேட்டது இல்லை பாட்டும் பதமும்லயா

(பாட்டும்பதமும் பற்றித் தெரியாதவற்களுக்காக.. சிலோனில் ஒரு வார்த்தை எடுத்துக் கொள்வார்கள்.. கண்ணனை எண்ண நெஞ்சுக்கு எப்போதும் நல்லதே நடக்கும் அப்படின்னு வரி குன்ஸா எழுதி

கண்ணனைக்கு ஒரு பாட்டு கண்ணனைக் காண்பாயோ நிலவே

எண்ண - எண்ண எண்ண இனிக்குது ஏதேதோ இனிக்குது வண்ண வண்ணத் தோரணம் அஞ்சு ரூபா

நெஞ்சுக்கு - நெஞ்சுக்குத் தெரியும் நிலவுக்குப் புரியும் நீயார் நான் யார் என்பது

நல்லதே - நல்லதுகண்ணே கனவு கனிந்தது நன்றி உனக்கு

நடக்கும் - நடக்கும் என்பார் நடக்காது நடக்காதென்பார் நடந்து விடும்

என்று பாடல்கள் போடுவார்கள்..அல்மோஸ்ட் இந்த நிகழ்ச்சி மயில்வாகனம் தான் சொல்வார் என நினைக்கிறேன்..அதில் கேட்டிருக்கிறேனா நினைவில்லை..ஆனால் பாடல் மட்டும் கொஞ்சம் த்ரில்லிங்க்காக குரலும் உருக்கும் (நெ தெ பாட்டு))

இதே போல சிலோன் ரேடியோவில் மாலை 5டு 5.30 இசையும் கதையும் என்றுகூட வரும்..

மதுண்ணா உடல் நிலைசரியில்லாமல் வந்த போது சி.க அவரைப் பார்த்துக் கேட்டான் எனக் கதை ஆரம்பித்து “ நலந்தானா பாட்டு போடுவார்கள்.. (தி.மோ பாட்டுங்க.. சிம்பு பாட்டு இல்லை :) ) அந்தப் ப்ரோக்ராமும் நன்றாக இருக்கும்..

ஆமாம் உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள் மதுண்ணா..மை ப்ரேயர்ஸ் ஆர் வித் யூ..

ஆமாம் இந்த அம்மா எங்கே என்ன கதை.. நெஞ்சுக்குத் தெரியும் பாட்டில் வரும் பெண்மணி ஆர் பேய் யார்.. இன்னொரு பாட்டில் முத்துவும் ராஜஸ்ரீயும் பாடினார்கள்.. என்னவாக்கும் கதை.. நடுவில் ஏன் அந்தக் குழந்தை நடந்து வீட்டை விட்டு வெளியில் வருகிறது.. கன்ஃப்யூஷன் :)

chinnakkannan
10th April 2015, 10:11 PM
சரி சரி.. மதுண்ணா முரளி வந்ததனால செலிப்ரேட் பண்ணலாம்..என்ன பண்ணலாம்.. பறவைப்பாட்டா பாடலாமா..
பறவைப் பாடல்கள் 1

மொதல்ல மயில்.
.
எழிலாய் நடைகொண்டு ஏற்றமுடன் ஆடும்
மயிலிவளா மான் தானா சொல்..
*

இந்த சிவகுமார் சுமி ஜோடிப்பாட்டு சிலோன்ல போட்டு தேய்த்துஇருப்பார்கள்.. கண்ணா இப்பத் தான் பார்க்கறானாக்கும்
மயிலே மயிலே உன் தோகை எங்கே ம்ம் கொஞ்சம் சற்றே குண்டான சுமி..கடவுள் அமைத்த மேடை – படம் பார்த்ததில்லை எப்படி இருக்கும்..

https://youtu.be/-kEVLQQNffE

chinnakkannan
10th April 2015, 10:12 PM
பறவைப் பாடல்கள் 2

இன்னொரு பார்க்காதபடத்தில் வரும் நந்தவனக் கிளியும் புன்ன மரக் குயிலும்..

விழிகளோ குட்டியாய் வீர்யக் குரலில்
கிளிகொஞ்சும் கிள்ளையா நீ..
*
ஒயிலாய் நடக்காமல் ஓட்டமாய் ஓடும்
குயிலேயுன் மன்னனைக் கூறு..
*
..
ஆரம்பத்தில் ஸ்ரீதேவி ஏதோ பேசுகிறார்..ஆனால் ஆடுவது வேறு இருவர்..சிவகுமார் என நினைத்தால் சிவகுமார் இல்லை..ஆடும் நடிகை யார்..

இதுவும் ரேடியோ சிலோன் ஹிட் பாட்டுத் தான்..

தென்னமரத்துல தென்றல் அடிக்குது நந்தவனக்கிளியே
அடியே புன்னமரக் குயிலே..
//திடுதிப்பென டிரஸ் மாற்றிக் குளிப்பதென்பது சினிமாவில் தான் நடக்கும் // :)

https://youtu.be/NCL4jGJwsHc

*

chinnakkannan
10th April 2015, 10:14 PM
*
பறவைப் பாடல்கள் 3

நான்கு சுவர்கள் படம் வெகுகாலம் முன்னால் பார்த்தது.. அடுத்த பறவை பாக்கலாம்னு பார்த்தா.. ரவி..வாணு..

பையச் சிறகடித்துப் பாய்ந்தே சென்றிடும்
மைனாவிற் கென்ன மொழி..

*
ஓ மைனா ஓமைனா இது உன்கண்ணா பொன் மீனா
முன்னுரையை நான் எழுத
முடிவுரையை நீ எழுத
நல்லுறவை ஊரறிய நான் தரவா நீ தரவா

https://youtu.be/fOen-ZcPRAY

chinnakkannan
10th April 2015, 10:15 PM
பறவைப்பாடல்கள் 4

அடுத்ததா என்னதுங்கோவ்..

ஆமா

புகாத உயரத்தில் பூத்ததுபோல் செல்லும்
புறாவே அருகிலே வா..

யெஸ்.. கமல் ஓடிஓடிப் பாடும் மாடப்ராவே வா..டைப்போ இல்லீங்க்னா பாடறதே அப்படித்தான்.. நல்ல இசை..

https://youtu.be/hX4cakxbXaY

யாராக்கும் இந்தப் புறா.. ரேடியோ சிலோன்ல கேட்டது..இப்பத் தான் பார்க்கறேன்.. (ஹிஹி..மலையாள வெர்ஷனாயிட்டு) :) இதோ தமிழ் வெர்ஷன்.. மலையாளப் படத்தோட பெயர் மதனோற்சவம் தமிழ்ப்படம் பெயர் பருவமழையாமே..எப்படி இருக்கும்.. ரொம்ப நனையுமோ..

https://youtu.be/OtfOnWlKN_Y

chinnakkannan
10th April 2015, 10:17 PM
பறவைப் பாடல்கள் 5

கீச்சென்று கத்தினாலும் கிள்ளை மொழிவீச்சு
கூச்சமாய்க் கொண்ட குருவி..

யெஸ்..சிட்டுக்குருவில்லாம் பார்த்தாலேஒரு சந்தோஷம் தானே வரூ..ஸாரி வரும்.. குட்டியா அப்புறம் வெகுகுட்டிக் கண்,வெகுகுட்டிக் கால்.. கூர்மையான அலகு வெகுகுட்டித்தலையோட என் ஃப்ளாட் பால்கனில அமருமாக்கும்.. தலையைத் தலையைச் சாய்த்து கண்ணாடிச் சுவருக்குள் இருக்கும் என்னைப்பார்த்து ( நான் அறையுள் இருப்பேன்) பின் சொய்ங்க் என்று தரையிறங்கி அங்கு போட்டிருக்கும் சிறிதளவு அரிசியில் ஒரு அரிசியை எடுத்துக்கொண்டு மறுபடி பால்கனி கைப்பிடியில் உட்கார்ந்து கண்ணால் பார்த்து சட்டெனத்திரும்பி சிட்டெனப் பறந்துபோகும் சிட்டுக்குருவி..

இன் டாமில் வி ஹேவ் ஸோ மெனி சிட் குருவி ஸாங்க்ஸ்..எனில் முதல்ல ஒரு மலையாளப் பாடல்..ஓகேயா

ஓலஞ்சாலிக் குருவி இளம்காற்றிலாடி வருதி..இனிமையாய் மனதை வருடும் மலையாளப் பாடல்..குருவிகளும் வெகு இளமையாய் இருக்குங்க்ணா..

https://youtu.be/aHNdIvj63AY

சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதிதெரியுமா
எனை விட்டுப்பிரிஞ்சு போனகணவன் வீடு திரும்பல..

அந்தக்காலப் படம் எனில் வருத்தம் தான் படறாங்க இந்தம்மா.. இந்தக்காலம்னா. ஹையா வரலை ஹிந்தி சீரியல் நிம்மதியா பாக்க்லாம்னு இருப்பாங்க..யாரு..யாரோ.. :)

https://youtu.be/Vy-nGNGAnDQ

chinnakkannan
10th April 2015, 10:18 PM
பறவைப் பாடல்கள் 6

சாதல் வழியில்லை சாற்றுவேன் நானுமக்கு
காதல் பறவையே காண்..

ஆமா இந்தலவ்பேர்ட்ஸ்க்கு தமிழ்ல்ல என்னவாம்.. வெகு குட்டியா யெல்லோ அல்லது வெளிர்க்ரீன் கலர்ல க்குட்டியா இருக்கும்.. ஜோடியைப் பிரிச்சா செத்துப் போய்டுமாமே இஸிட் ட்ரூ..

என்னவோ..லவ்பேர்ட்ஸ் லவ்பேர்ட்ஸ்னு இங்க ஒருகிளி பாடுது..

https://youtu.be/okLzepu1g2Y

chinnakkannan
10th April 2015, 10:19 PM
பறவைப் பாடல்கள் 7

ஊக்கமாய்க் கூவி உறவுடன் உண்கின்ற
காக்கைபோல் எங்குண்டு சொல்..

யெஸ்.. பாரதி தான் நினைவுக்கு வருது..காக்கை ச் சிறகினிலே நந்தலாலா உன் கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா..

https://youtu.be/AVkG3N2q4ZY

ஏழாவது மனிதன் – தேவி தியேட்டர் தான் ரிலீஸ்.. ரொம்ப ஆசையாய்ப் போய்.. பாரதி பாடல்கள் மட்டும் நெஞ்சை அள்ளும் படம்.. ஸோ ஸோ தான் சிமெண்ட் ஃபாக்டரி என என்னவெல்லாமோ வரும்.. ஆமா ரகுவரன் முதல் படம்.. ஹீரோயின் யாரு தெரியலையே..:)

chinnakkannan
10th April 2015, 10:21 PM
பறவைப் பாடல்கள் – 8

ஆத்தங் கரையதனில் அழகாய்த் தவமிருக்கும்
..ஆழ மனத்திடையில் குறியாய்க் காத்திருக்கும்
பார்த்தால் தூங்குதற்போல் பொய்யாய்த் தோற்றமிடும்
..பாய்ந்து மீனைத்தான் அலகில் கவ்விவிடும்
தோற்றம் ஒல்லியென்றால் நோக்கம் வலிதன்றோ
…சோர்வும் கொள்ளாமல் கால்கள் வலித்தாலும்
வேட்டை ஆடுகின்ற கொக்கைப் போல்நெஞ்சில்
..வேகம் கொண்டாலே வெற்றி வருமன்றோ..

ஆமாங்க்ணா.. அடுத்து வருவது கொக்கு..

ஹச்சோ.. ஆதிபராசக்தியில கொக்குபறக்கும் அந்தக் குளக்கரையில் தேடினேனா அது கிடைக்கலை..அழகாக கண்ணுக்கு அழகாக இந்தப் பாட் தான் கிடைச்சது.. :)

A maiden has come beautifully from karpaka grove..ஆமா இங்க்லீஷ் ட்ரான்ஸ்லேஷனோட..

மோகக் கவிதைக்கு முன்னுரை கேட்டிடும்
நாதச் சலங்கைகள் கொண்டு
மலர்ச் செண்டு மணம் கொண்டு

முத்துப் பதித்தொரு ரத்தினப் பல்லக்கு
வந்ததுபோல் வந்து நின்று
வட்டமிடுவதைத் தட்டிப்பறித்திட
வாடுது உள்ளங்கள் ரெண்டு ம்ம் கண்ணதாசன் அண்ட் வாணிஸ்ரீ..

https://youtu.be/ykHfH9fXXak

சரி சரி திட்டாதீங்க. :).கொக்கு பாட் லேடஸ்ட் தான் இருக்கு கொக்குப் பற பற, கொக்கு சைவக் கொக்கு, கொக்கு மீனைத் திங்குமான்னு தான் இருக்கு..எனில் பழைய கொக்கு இருந்தால் நீங்கள் போடுங்கள்

chinnakkannan
10th April 2015, 10:22 PM
பறவைப் பாடல்கள் – 9

சாற்றும் உறவதனின் சிறப்பான தன்மையினை
வாத்துகள் கூட்டமும் தான்..

ஆத்தி இது வாத்துக் கூட்டம்.. நாடோடித் தென்றலில் கார்த்திக், நித்தி ஸாரி ரஞ்சி..! : :)

https://youtu.be/02merlhLX2Q

chinnakkannan
10th April 2015, 10:25 PM
பறவைப் பாடலக்ள் – 10

முன்னால் படித்து மனதை நெகிழ வைத்த கவிதை..

நேரே உடைத்து வாயில்..
இல்லையெனில் ஆம்லெட்
வளர்ந்தால்
சிக்கன் 65 எனப் பெயர்
ஆக
இயற்கை மரணம்
நிச்சயமாய் இல்லை.. (அடப்பாவிகளா என கவிதைத்தலைப்பு அண்ட் சில கோழிகள் வருத்தத்துடன் பார்ப்பது போல ஃபோட்டோ – குமுதம் என நினைக்கிறேன்)

ஊழிப் பெருவெள்ளம் ஓடியே வந்தாலும்
கோழிநீ கூவுவா யே..

சரி இதுக்கு என்ன பாட்…ஒசந்த இந்தம்மா ஏனிப்படி ஆடறாக..

https://youtu.be/-wghwODHyEo

கோழி கூவும் நேரத்தில தள்ளிப்போயிருக்கலாமில்லை…

//ஓஹ்.. ஒண்ணரை மணி நேரமாச்சுங்க்ணா குறளும் பாட்டும் எழுதி திரைப்பாட்டும் தேட..ஓகேயா//

விட்டுப்போன பறவைகளைச் சொல்ல மாட்டீங்களா என்ன.. :)

chinnakkannan
11th April 2015, 11:17 AM
ஹாய் குட்மார்னிங்க் ஆல்..

கவிதையும் கானமும்..(இது எத்தனாவது)

முத்தம் என ஆரம்பிக்கும் அழகிய நவீன கவிதை கிடைத்திருக்கும் கவிதைக்குக் கவிதை த்ரெட்டில்

தோழி பி.பிக்கா பேரனைப் பற்றி எழுதி விட்டார் நார்மல் கவிதை..எனில்.. நான் எழுதிப்பார்க்கிறேன்.. ஒரு நவீன கவிதை..

*

முத்தம் எக்காலத்திலும்
தேவையில்லாத ஒன்று என்று தான் படுகிறது..!

கன்னத்தில் சப்பக்க்
உதட்டில் ச்ச்
நெற்றியில் ஷ்ச்ச்
ம்ஹூம் முத்தம் கெட்ட ஒன்று..
எச்சல் பத்து …
அலம்பவேண்டும்..
கன்ன வேர்வை உடலுக்குக் கெடுதி..
தோல் டிஸீஸ், உப்பால் பி.பி. வரும்..!

சிறுவயதில் அம்மா அப்பா தாத்தா பாட்டி அத்தை மாமா
கொடுத்த முத்தங்கள் நினைவில் இல்லை
ஈரமும் காய்ந்து புகையாகக் கூட…..

ப்ளஸ்டூ படிக்கும் போது
பதினொண்ணாம் வகுப்பு பாக்கிய லஷ்மியை
ரகசியமாய்
மொட்டைமாடிக்கு அழைத்துச்சென்று
மூச்சு விட்டு மூச்சு விட்டு
முதல் காளை முத்தம் கொடுக்க முயல்கையில்
முகஞ்சுளித்தாள்…...
இதுக்கா இப்படி
ஸ்கூல் மொட்டை மாடிக்குக் கூப்பிட்ட
நம்ம ஃப்ளாட் மொட்டை மாடிக்கே
போயிருக்கலாமில்லை
லிஃப்ட்ம் இருக்கு..”
என்றவள்
“போய் வாய் கொப்பளி
நல்லா நாலுதடவை பல் தேய்
ஒரே கப்ப்பு..”
சென்றுவிட்டாள்..


கல்லூரியில் கிடைத்த முத்தம்
வித்தியாசமானது….
லேபராட்டரிக்கும் ரெஸ்ட் ரூமுக்கும்
இடையில் இருந்த காரிடாரில்
வேகமாய்ச் சென்ற
இருபத்தெட்டு வயது ஃப்ரொபஸர் கலாவை நிறுத்தி
விஷயம் சொன்ன போது
கையைக் கொடு மேன் சொல்லி
குலுக்காமல்
புறங்கையில்மெலிதாய்
உதட்டுச் சாயம் தீட்டி
“நல்ல ஆள்ப்பா நீ
ஃபுட்பால் டோர்ணமெண்ட்ல
வின் பண்ணினதச் சொல்ல
நல்ல இடம் பார்த்தே”
சொல்லிவிட்டு
விரைந்து போன இடத்தில்
அவரின் பாய்ஸன் பர்ஃப்யூம் வாசனை!



நேற்று
வளர்ந்த என் பேத்தியை
உச்சி முகர அழைத்த போது
வந்து
பின் முகஞ்சுளித்தாள்
தாத்தா..
மார்னிங்க் மட்டும் பண்ணாத
ஈவ்னிங்க்கும் பண்ணு ஷேவிங்க்..
குத்துது….
எனக் கன்னந்தடவிச் சென்று விட்டாள்..

ம்ம்
முத்தங்கள் எப்போதும் தேவையில்லை எனத்
தான் தோன்றுகிறது..

ஏனெனில் முத்தங்கள் மோட்ச நிலை
அடைய உதவி செய்வதில்லை
அவை இருப்பது
பல் நிலைகள் கீழே!

***
கடைசி வரி புரிந்தால் இது நவீன கவிதை இல்லை.. புரியவில்லை என்றால் ஹையா எனக்கு நவீன கவிதை எழுத வ்ருதே :)

**


சரி சரி பொருத்தமா ஒரு முத்தாப் பாட்டு போட்டுறலாமா…:)

முத்தமிடும் நேரமெப்போ முகம் தொட்டுக் கதை சொல்லும் நேரமெப்பெப்போ..

https://youtu.be/18_6LOOHC2s

chinnakkannan
12th April 2015, 03:20 PM
அதுல பாருங்கோ.. திடீர்னு பார்த்தா யாரையும் காங்கலை..

இப்படித் தான் ஒரு காலத்தில ஒரு கிராமத்தில ஒரு இளம் பெண் காத்துகினு இருந்துச்சு.
எங்கிட்டு..
*
ஊரு கோடில்ல ஒதுக்காக அரசமரம்
..ஒளிஞ்சு பேசத்தான் இடமுண்டு பின்னால
யாரும் பாக்காம நானும்மென் மச்சானும்
..ராவும் பகல்பொழுதும் பேசித்தான் இருந்தோமே
வாடி பொழுதெல்லாம் சாய்கின்ற போதினிலே
...வாரேன் பாத்திடலாம் பேசிடலாம் என்றமச்சான்
போதும் போயிடுச்சு இருட்டவும் ஆரம்பிக்க
..பொழுதாய் வருவேன்னு சொன்னவுக காங்கலையே..

*
ம் அவளுக்கு க் காதலனைக் காணோம்..இங்க நண்பர்களைக் காணவில்லையே ..என்ன செய்யலாம்..

ஹை..

காணவில்லைன்னு பாட்டுப் போட்டா வரமாட்டாஹளா என்ன

கண்ணதாசன் என்ன சொல்றார்..

பூவொன்று கண்டேன் முகம் காணவில்லை
ஏனென்று ஏனென்று நான் சொல்லலாகுமா?
ஏனென்று நான் சொல்ல வேண்டுமா?
அப்படிங்கறார் படித்தால் மட்டும் போதுமால்ல பாலாஜி மூலமா

வைரமுத்து.. சங்கீத ஜாதி முல்லை காணவில்லை ந்னு தேடறார் காதல் ஓவியத்துல

இன்னொரு காதலன் என்னைக் காணவில்லையே நேற்றோடு அதைத் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு அன்பேன்னு கதர்றான்..

பாவம் பொண்ணுங்க பாடு தான் எக்காலத்திலும்.. மனசக் கொய்றாளான்னு அந்தக் காலத்துல கேட்கப் பட்ட மனீஷா கொய்ராலா பாம்பேல என்ன சொல்றார்..
கண்ணாளனே என் நெஞ்சை நேற்றோடு காணவில்லை..
*
பணங்காசு இருந்தென்ன.. அப்படிங்கறா இந்தப் புதுமுகப் பொண்ணு மேமாசம்னு பட்த்துல..மார்கழிப்பூவை என்னா சொல்லிக் கேக்கறா

சுதந்திர வானில் பறந்ததுமில்லை
சுடச் சுட மழையில் நனைந்தும் இல்லை
சாலையில் நானாகப் போனதுமில்லை
சமயத்தில் நானாக ஆனதுமில்லை

ஏழை மனம் காணும் இன்பம்
நான் காணவில்லை

மார்கழிப் பூவே மார்கழிப் பூவே
உன் மடி மேலே ஓரிடம் வேண்டும்

மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை
உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை

*

மகாகவி பாரதியார் நிலையேதும்காணவில்லை எங்கள் முத்து மாரிங்கறார் அவரோட பாட்டில் ( திரையில் பாடலாய் வரவில்லை)

உலகத்து நாயகியே!-எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
உன் பாதம் சரண்பகுந்தோம்,-எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!

கலகத் தரக்கர்பலர்,-எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
கருத்தி னுற்றே புகுந்துவிட்டார்,-எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!

பலகற்றும் பலகேட்டும்-எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
பய னொன்று மில்லையடி-எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!

நிலையெங்கும் காணவில்லை,-எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
நின்பாதம் சரண் புகுந்தோம்,-எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!

துணிவெளுக்க மண்ணுண்டு,-எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
தோல்வெளுக்கச் சாம்பருண்டு,-எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!

மணி வெளுக்கச் சாணையுண்டு,-எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
மனம்வெளுக்க வழியில்லை,-எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!

*

என் அன்பில் கலந்தாயோன்னு ஒரு பாட் கிடைச்சது..அதுல காணவில்லை வருதான்னா எனக்குத் தெரியாது..(ஈவ்னிங்க் தான் சொல்ல முடியும்)

ஆனா கூகுளாண்டவர் என்ன சொல்றார்னா..

காணவில்லை பேதையை அவன் லட்சியமே செய்யவில்லை ராதையை ...
என்று வருதுன்னு.. நீங்க கேட்டுச் சொல்லுங்களேன்...


https://youtu.be/y0dKZiqa5_U


சரி சரி..ந.தி பாட் போட்டு ரொமப் நாளாச்சு ப்ளஸ் எனக்கு ரொம்ப்ப்ப் பிடிச்ச பாட்டு ..போட்டுக்கட்டா

பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை..


https://youtu.be/rUmL6PFD1OE


appuram vaarEn..:)..

chinnakkannan
13th April 2015, 09:06 PM
எள்ளூப் பூ வெண்மையாக இருக்குமாம்.. கொஞ்சம் கூராக ஒரு வித ரைட் ஆங்கிள்ட் ட்ரையாங்கிள் போல இருக்கும் போல..படத்தில் கொத்தாக இருப்பதால் சரிவரத் தெரியவில்லை( நான் பார்த்த வெப்சைட்ல)

எள்ளுப் பூவை முழுதாகக் காம்பைக் கிள்ளி அப்படியே வாயில் போட்டு முழுங்கினால் கண்ப்ராப்ளம்ஸ்லாம் வராதாம்.. இன்னும் பல மருத்துவ குணங்கள் கொண்டதாம் இந்த எள் ஃபேமிலி..

இருந்தாலும் இந்த எள்ளுப்பூவைத் தான் அடிக்கடி பெண்களின் நாசிக்கு உவமையாகச் சொல்வார்களாம் தமிழ் சங்கப் பாடலில்..

பிழியும் பால்நிலாவின் பேர்சொல்லும் நெற்றி
..பேசித் தீர்க்காமல் மெளனமுகக் கண்கள்
விழியும் விழியிமையும் படபடக்கும் போது
….மனதும் பரபரத்துப் பலகவிதை நெய்யும்
கயலாய் நீந்துகின்ற மைவிழியின் கீழே
..கனிவாய் வழிசொல்லும் எள்ளுப்பூ நாசி
சலிப்பாய் இல்லாத செங்கதிரின் வண்ணம்
…சாய்க்கும் செவ்விதழும் கொண்டவளும் அன்றோ

(மதுரை சின்னக் கண்ணனார்!)

ஆக இந்த எள்ளுப்பூவை எப்படிக் கையாண்டிருக்கிறார் கவியரசர். கண்ணதாசன்..

பிள்ளை அழகும் பிஞ்சு முகமும்
கிள்ளிய வெற்றிலைப் பாக்கு

சிறு எள்ளுப் பூவை அழகு பார்க்கும்
இளைய கண்ணனின் மூக்கு
(ஹி ஹி..என் மூக்குதான்..ஆமா என் மூக்கைப் பத்திக் கவிஞருக்கு எப்படித்தெரியும்!)

வெகு அழகான பாடல்….இல்லறத்தை வெகு நாசூக்காய் வெகு அழகாய்ச் சொல்லியிருக்கிறார் கவிஞர்.. எனக்கு மிகப் பிடித்த பாடல்..

மங்கல மங்கையும் மாப்பிள்ளையும் அன்று
கைகள் கலந்தாட
மஞ்சள் முகத்தினில் வெண் பிறை நெற்றியில்
வேர்வை வழிந்தோட
சங்கொலி பொங்கிட பஞ்சணையில் ஒரு
சம்பவம் உண்டாக
தாமரைக் கோவிலில் பிள்ளை வளர்ந்தான்
மல்லிகைச் செண்டாக

ஒவ்வொரு தடவையும் இந்த ‘தாமரைக் கோவில்’ பிரயோகம் கேக்கறச்சே, படிக்கறச்சே மனசுக்குள்ள ஒரு சிலிர்ப்பு ஏற்படுது..

பாடல் இடம்பெற்ற படம் நீலவானம் ந.தி.தேவிகா, குட்டி பத்மினி..அப்புறம் ராஜஸ்ரீ..

https://youtu.be/gh2NZ8T5mzc

chinnakkannan
14th April 2015, 10:23 AM
அனைத்து நண்பர்களுக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்..

அமுதே தமிழே அழகிய
மொழியே எனதுயிரே
சுகம் பல தரும் தமிழ்ப் பா

சுவையொடு கவிதைகள் தா
தமிழே நாளும் நீ பாடு

https://youtu.be/zX97xtTwtGY

chinnakkannan
14th April 2015, 03:21 PM
மக்கள்ஸ்லாம் வருவாங்கன்னு நம்பிக்கை இருக்கு..

தேடும் விழிகளுக்குத் திண்ணமாய்ச் சொல்லிடுவேன்
ஓடி வருவாரே பார்..


ம்ம் நான் உன்னைத் தேடுகிறேன் பாட் போட்டுக்கலாமா..

https://youtu.be/wG6hp7bew3w

Russellzlc
14th April 2015, 08:08 PM
சின்னக்கண்ணன், கல்நாயக் எப்படி இருக்கீங்க? கொஞ்சம் வேலை. அதான் வரமுடியல.

உங்களுக்கும்(இருவருக்கும்) திரு.வாசு சார், திரு.கிருஷ்ணா சார், ஐதராபாத் திரு.ரவி சார், திரு.ராகவேந்திரா சார், திரு.கோபால், திரு.ராஜேஷ் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

விரைவில் பாட்டோடு வரேன்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

chinnakkannan
14th April 2015, 09:07 PM
கலைவேந்தன் புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு நன்றி..உங்களுக்கும் என் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்...

sivaa
14th April 2015, 09:49 PM
மையம் உறவுகள் அனைவருக்கும், இனிய.... மன்மத புத்தாண்டு வாழ்த்துக்கள்.

https://lh3.googleusercontent.com/-7aunbm2Pexg/VMuBG5lJcHI/AAAAAAAAE1w/jFlEcxJ6Cjc/w1010-h672-no/lig.jpg

chinnakkannan
14th April 2015, 09:57 PM
நன்றி அண்ட் வாங்க சிவா :) உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்..

kalnayak
15th April 2015, 01:18 PM
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் (தாமதத்திற்கு மன்னிக்கவும்.)

சி.க. நான் சற்று பணிச்சுமையால் அதிகம் பங்கெடுத்துக்கொள்ள முடியவில்லை. விரைவில் வருகிறேன்.
உங்கள், கலைவேந்தன் மற்றும் சிவா அவர்களின் புத்தாண்டு வாழ்த்துகளுக்கு நன்றிகள்.

chinnakkannan
16th April 2015, 12:24 AM
ஹாய் கல் நாயக் வாங்க வாங்க..பரவால்லை... நோ ப்ராப்ளம் எப்ப முடியுதோ அப்ப வாங்க.. வொர்க் ஃபர்ஸ்ட் ரிலாக்சேஷன் நெக்ஸ்ட்.. இப்ப ஒருபாட்டு கேக்கலா,மா..::)

https://youtu.be/sCIz-djri84

சர்ரூவோட நெக்லஸ் நன்னாயிட்டுஇருக்கில்ல :)

கழுத்துநகை கண்கவர்ந்து காதலனைத் தூண்டி
அழுத்துமே ஆழத்திலே ஆம்..

(கண்ணா ரெண்டு நிமிஷத்திலகுறளா எங்கேயோ போய்ட்டடா நீ :) ) (அதாவது டிசைட் பண்ணி கட்பேஸ்ட் பண்ணி போஸ்ட் பண்ணறதுக்கு முன்னால் சிந்திக்காமலே வந்ததுங்க்ணா :) (போதும் எத்தனை ஸ்மைலி போடுவ.. ஸாரி மன்ச்சு)

chinnakkannan
16th April 2015, 12:31 AM
தித்திப்பது எது அதுவோன்னு திடீர்னு ஒரு க்ளிப்பிங்க் மாட்டிச்சு பாட்டும்! யார்னு உத்துப் பார்த்தா கே.ஆர்.வி கூட..ஆர்.எஸ் மனோகர்.. சப்பாத்தில மோர் ஊற்றிச் சாப்பிடறமாதிரி என்னா காம்பினேஷன் ஆமா என்ன படம்ங்க.. கொஞ்சம் இருங்க பாட் கேட் கம்றேன்..:)

https://youtu.be/QyF59bK-aAo

வாசு சார் போடலையே :)

rajeshkrv
16th April 2015, 03:13 AM
தித்திப்பது எது அதுவோன்னு திடீர்னு ஒரு க்ளிப்பிங்க் மாட்டிச்சு பாட்டும்! யார்னு உத்துப் பார்த்தா கே.ஆர்.வி கூட..ஆர்.எஸ் மனோகர்.. சப்பாத்தில மோர் ஊற்றிச் சாப்பிடறமாதிரி என்னா காம்பினேஷன் ஆமா என்ன படம்ங்க.. கொஞ்சம் இருங்க பாட் கேட் கம்றேன்..:)

https://youtu.be/QyF59bK-aAo

வாசு சார் போடலையே :)

thattungal thirakkapadum padam. chandrababu own production

rajeshkrv
16th April 2015, 03:14 AM
புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு நன்றி கலைவேந்தன், சி.க, கல்நாயக்

rajeshkrv
16th April 2015, 07:35 AM
வானொலிகளில் மட்டுமே கேட்டு மகிழ்ந்த சில பாடல்கள் உண்டு.
மதுரை வானொலியிலும் இலங்கை வானொலியிலும் அடிக்கடி ஒலிபரப்பான பாடல் இது
மதுரக்குரலோன் பி.ஜெயசந்திரன் மற்றும் சித்ரா பாடிய அருமையான பாடல்
மனோஜ் கியானின் இசையில் வைரமுத்துவின் வரிகள்
காதலெனும் நதியினிலே படப்பாடல்
ஆம் உள்ளம் உள்ளம் இன்பத்தில் துள்ளும்

https://www.youtube.com/watch?v=qnWF6EtnMxo

chinnakkannan
17th April 2015, 09:55 AM
ஹாய் ஆல் குட்மார்னிங்க்..

காலைல உற்சாகமா ப் பாட்டுப் போடலாமா

முட்டைய விட்டுப் பறவை ஒண்ணு முழிச்சு முழிச்சு ப் பார்க்குதடா ராமையா
அது குட்டைக்காலு குட்டைக்கையும் குறுகுறுன்னு விழிக்குதடா சோமையா..


எந்த நாட்டில் எந்த ஊரில் தலைவனாகுமோ
அது எதைப்படிச்சு எதை எழுதி புலவனாகுமோ

ஜெமினி ராகினி

பிறக்கும் போது பிள்ளையெல்லாம் ஒண்ணு தானப்பா
அது பிறந்தபின்னே இருக்குமந்த விஷயம் வேறப்பா

.https://youtu.be/JoVHUd-XFZU

chinnakkannan
17th April 2015, 10:06 AM
அது சரி..யாரும் வரலைன்னா என்ன சூரியன் சந்திரன் தாமரை அல்லி, சி க லாம் கடமையைச் செய்யாம இருக்காங்களா என்ன..:) அந்தமாதிரி தனியா இருக்கற்ச்சயும் கொண்டாடலாமே..

இங்க பாருங்க..எனது ராஜ சபையினிலே ஒரே சங்கீதம்
அதில் இரவு பகலும் தூக்கமில்லை ஒரே சந்தோஷம்

https://youtu.be/gUHERZnjUiY

மனதில் ஒரு களங்கமில்லைஒரே கொண்டாட்டம்
அதில் மைவிழியாள் பாடுகிறாள் காதல் வண்டாட்டம் ஓ ஹோ ஹோ..

chinnakkannan
17th April 2015, 10:13 AM
அது சரி காதலன் காதலி இருக்காங்க காதலும் இருக்கு..சரி லவ் பண்ணனும்னு முடிவும் பண்ணியாச்சுல்ல

இந்த ஜோடி என்ன பண்ணுது..

மானா மதுரையில மாந்தோப்பு மத்தியிலே அபப்டின்னு அவன் ஆரம்பிக்க
இந்தக் குட்டிப்பொண்ணு தேனே திரவியமே தேடிவந்தேன் உன்னை நானேங்கறா..

ஆனா நன்னாவே ஆட்டம் போடறாங்க..இல்லியோ..

https://youtu.be/m9Ks2V2frxw

இனிக்கும் இளமை படத்துல சுதாகர் ராதிகா

அட டி.எம்.எஸ் சுதாகருக்கும் கொடுத்திருக்காரே குரல்.. :)

chinnakkannan
17th April 2015, 10:27 AM
உற்சாகப் பாடல்கள்ல அடுத்து என்னன்னா...

ம்ம் காதல் பண்றச்சே ரெண்டு பேருக்குமே ஒரு மாதிரி மயக்கம், ப்ரக்னெண்ட் ஆன ஆட்டோட கண்ணாட்டமா மூளை மந்த நிலைய அடஞ்சுடும் ஆணுக்கும் பெண்ணுக்கும் என ஆன்றோர்கள் சொல்வார்கள் :)

பாருங்க.. அந்தக் காதல்ங்கற பருவத்துல ஆணாகட்டும் பெண்ணாகட்டும் பேசற பேச்செல்லாம் இருக்கே

உன்னை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை
என் இருவிழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை..

அப்படின்னு ஜூஜூபிக்குச் சொன்னா அந்தம்மாக்குக் கொஞ்சம் பெருமை

தமிழ் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை
நம் இதழ் பாடும் சுகராகம் முடிவதில்லை..

அப்படிங்கறா ( தமிழுக்குச் சரி..வயசானா ரெண்டு பேரும் மாறி மாறி வள்ளுனுதான் விழுந்துக்குவாங்க இல்லியோ )

https://youtu.be/TOPbh4NcO14

கலைகள் பயிலும் மாலைப் பொழுது
விடியும் வரையில் நீயும் தழுவு (தூங்க வேண்டாமோ)



அழகிய பாடல் விஜ்ஜூ மன்ச்சு.. :)

chinnakkannan
17th April 2015, 10:38 AM
ஹீம் .. இந்தக்காதலிருக்கே.. எப்பவும் ஆண்கள் பாடு கஷ்டம் தான்.. கொய்ங்க் கொய்ங்க்னு மயங்கிடுவாங்க..அப்புறம் அதப் பத்திப் பாடவும் செய்வாங்க..


ம்ம் டான்ஸ் மூவ்மெண்ட் செட் ஆகலைன்னா அந்தக்காலத்து குதிக்க வுட்டுருவாஙக் போல..

மின்னலதன் உற்பத்தியை அந்த வானத்துக்கே கற்றுத் தந்தவள்..( கவிஞர் டி.ராஜேந்தர்.. ஆனா ஹீரோயினைப் பார்க்காம எழுதியிருப்பாரோ...இப்பப்பார்த்தா என்னா ஆவும் :) )



https://youtu.be/pFBdGmKtUOE



இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவினில் வந்தாளோ
மோகினி போல்வந்து காளையின் உயிரினைப் பருகியும் சென்றாளோ

நளினி கங்கா.. உயிருள்ளவரை உஷ்ஷூ..

chinnakkannan
17th April 2015, 10:54 AM
//ஹீம் .. இந்தக்காதலிருக்கே.. எப்பவும் ஆண்கள் பாடு கஷ்டம் தான்.. கொய்ங்க் கொய்ங்க்னு மயங்கிடுவாங்க..அப்புறம் அதப் பத்திப் பாடவும் செய்வாங்க..// ஏதோ ஒரு ஃப்ளோல சொல்லிட்டேன் யுவர் ஹானர்.. ஸாரி.. காதல் வந்தா பொண்ணுங்களுக்கும் கஷ்டம் தான்..அந்தக் காலத்துலன்னா பொன்மணி மெகலை பூமியில் வீழும்னு பாடுவாங்க..இந்த இருவது வருஷத்துக்கு முற்பட்ட காலத்துலயும் இளமனசுல குழப்பம் தான்..அதான் விசிலடிச்சுப்பாட வைக்குது..:)

https://youtu.be/EvCBFQ6UTn0

இத்துடன் இன்றைய உற்சாகப் பாடல்கள் நிறைவுற்றது எனச் சொல்லிக்கொண்டு வடைபெறுவது (ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிடலீங்க்ணா அதான் டைப்போ :) ) விடை பெறுவது..

உங்கள் சி.க..

kalnayak
17th April 2015, 12:42 PM
சி.க.,

பறவைப் பாடல்கள், உற்சாகப் பாடல்கள்னு கலக்கறீங்க. நான் இப்போதைக்கு இவ்வளவுதான் பண்ண முடியும். தனித் தனியா பார்த்து கமன்ட் பண்ண முடியவில்லை. என்னுடைய நிலாத் தொடரை முடிந்தால் நீங்களே எழுதலாம். உடனடியா நான் வருவேன்னு தோணலை. மிஞ்சிப் போனால் தினமும் வந்து படிக்கதான் முடியும். பார்க்கிறேன், வீக்-எண்டு வந்து எதையாவது பண்ண முடியுமாவென்று.

chinnakkannan
17th April 2015, 12:52 PM
கல் நாயக் ஜி..வாங்க ..வாங்க. நோப்ராப்ளம்.. கடமை ஃபர்ஸ்ட் காதல் நெக்ஸ்ட்னு சர்ரூவோட டயலாக் ( என்ன படம் :) ) மாதிரி கடமை ஃபர்ஸ்ட்.. எப்போ முடியுமோ வாங்க..

chinnakkannan
17th April 2015, 01:50 PM
ஆதெள கீர்த்தனாரம்பத்திலே

எல்லாரும் செளக்கியமா. ம்க்கும் இதுவரைக்கும் இருந்தோம் நு நீங்க நினைக்கறது புரியறது..

இன்னிக்குப் பேசற அல்லது பாடற மேட்டர் என்னனனாக்க (எத்தனைன !)

பொடி விஷயம் தான்.

பொடி என்பது அந்தக்கால லாஹிரி வஸ்து(அப்படின்னா) என்ன விதமான விஷயங்கள் அதில் இன்க்ளூடட்னு தெரியாது.. மதுரையில் நான் இருந்த தெருவின் முக்கில் ஒருகடை உண்டு..அதில் காய்ந்த வாழைப் பட்டைகள் சில கட்டுகள், சிலபல ஜாடிகள் வைத்து ஒரு கடை இருக்கும்..

கேட்டால் ஒரு வாழைப் பட்டையை எடுத்து காசிற்கேற்ப ஒன்றிரண்டு சிட்டிகை (அந்த ஸ்பூனும் ரொம்பக்குட்டியாய் அதே சமயத்தில் காம்பு நீளமாக இருக்கும்) போட்டு மடித்துக் கொடுப்பார்கள்.

என் தந்தைக்கும் அந்த வழக்கம் உண்டு.. அந்த வாழைப்பட்டைப் பேக்கிங்கை வெகு லாகவமாகத் திறந்து கட்டை விரலையும் ஆட்காட்டி விரலையும் சேர்த்து ஒரு சிட்டிகை எடுத்து சர்ரென்று மூக்கில் ஏற்றுவார்..பார்க்கக் கொஞ்சம் தமாஷாக இருக்கும்..

மதுரை சித்திரைத் திருவிழாவில் டி.ஏ.எஸ் ரத்தினம் பட்டணம் பொடி என பெரிய பெரிய பேனர், அப்புறம் சென் ட் ரல் சினிமாவைத் தாண்டி மீனாட்சி கோவிலுக்குப் போகும் வழியில் ஒரு அட்டைச் சித்திரம்..ஒரு குண்டோதரன் டைப் படம் கண்கள் விழித்துத் தலையாட்டிய படி இருக்கும் என்.ஏ.எஸ் பொடியோ என நினைவு..

நிற்க. Gentlemen! நாம் பேசப் போவது அந்தப் பொடியில்லை.. பொடி விஷயம் என்பதற்குச் சின்ன விஷயம் என்றும் கொள்ளலாம்..

சின்ன விஷயம் என்றால் என்னைப் போன்ற இளந்தாரிகள்..சரி சரி.. பொதுவாய் இளவட்டப் பசங்கள் சில விஷயத்தைப் பார்த்தாலே உற்சாகம் கொள்வார்க்ள்..

ஒரு வயதான அம்மா – பையனைப் பெற்றவள் என்ன சொல்கிறாள்..

என்னபொடி போட்டாளோ எம்மவனத் தெரியலையே
..எப்பொழுதும் சுறுசுறுப்பாய் சுத்துகிற எளந்தாரி
கண்ணுபட்டுப் போனதுபோல் கருத்திழந்து நிக்குறதும்
…கனவுகண்ட கோழியெனக் கண்டபடி நடக்குறதும்
சொன்னசொல்லைக் கேட்டுப்புட்டு கடைகண்ணி போறவனும்
….சோம்பித்தான் நிக்குறதும் ஏங்கித்தான் தவிக்கறதும்
பெண்ணவளக் கண்டுப்பிட்டா பெத்தஎன்ன ஒதுக்கிவிட்டு
..பேதையாத்தான் இருக்கறத பெருமாளே என்னசொல்வேன்..

ஸோ இந்தம்மா பேசற பொடி சொக்குப் பொடி..ஆளை மயக்குற பொடி..

வட்ட விழிப்பார்வை வாகாக உள்ளத்தைக்
கட்டமிட்டுச் சுண்டுவதைக் காண் நு
யெஸ் .. ஆன்றோர் சொல்லியிருக்காங்க..

பாவையரோட கண், மூக்கு, வாய் மத்த பார்ட்ஸ்லாம் செய்யும் தான்.. அதையெல்லாம் விட ஆடைகளும் செய்யுமாக்கும்

சேலாடும் விழியாட செங்காந்தள் விரலாட
..செம்பவள உதட்டினிலே தித்திக்கும் தேனாட
கோலாட்டம் போட்டபடி குதித்திடுதே பின்னாலே
..கொள்ளைகொளும் கூந்தலுமே பலவிதமாய்த் தானாட
தாலாட்டும் தென்றலதைத் தக்கவைத்து நெற்றியிலே
…தகதிமிதா போட்டபடி சுருள்முடியும் தானாட
மேலாடை குறுஞ்சிரிப்புக் கொண்டபடி அங்குமிங்கும்
..மென்மையுடன் சிறிதாட மனமாடி விட்டதடி

(ஹப்பாடா..விஷயத்துக்கு வந்தாச்சு) என்ன இந்த மேலாடை இருக்கே.. ஆண்களுக்கெல்லம் அவ்வளவு சிறப்பில்லை.. பாவம் அந்தக்காலம்னா மன்னா போருக்குப் போய்ட்டு வரட்டுமான்னு சொல்ற தளபதியும் சரி மன்னரும் சரி சரிகைத்தகடி பளபளான்னு போட்டுக்கிட்டு வருவாங்க..அவ்வளவு சுகமில்லை..இந்தக்காலத்திலும் தான் அலுவல்னா பேண்ட் டிஷர்ட் டை சூட் மத்தபடி ஜீன்ஸ் டிஷர்ட் தான்.. இந்தப்
பெண்களுக்கு அந்தக்காலத்தில் புடவை இந்தக்காலத்தில் பாவாடை சட்டை தாவணி, சுரிதார் துப்பட்டா..அப்புறம் ஏகப்பட்ட வெரைட்டீஸ்..

நம்ம டை ஆடினா யாரும் பாக்க மாட்டாங்க..அதுவே அவ்விடத்துல..

ம்ம் இன்னிக்கு ப் பாக்கற பாட்டுல இந்த மேலாடையைப் பத்திக் கேள்விபதில் டைப்புல கவிஞர் சுரதா எழுதியிருக்காராக்கும்.. பட்ம் நாணல்..பாடியவர் பாடகர் திலகம் இசையரசி.. அப்புறம் ஆடியவர்கள் முத்துராமன் கே.ஆர்.விஜயா..

வெகு அழகிய பாடல்..எனக்கு மிகவும் பிடிக்குமாக்கும்

*

விண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம்
வீணைக்கு மேலாடை நரம்புகளின் கூட்டம்

https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=1lyf-YEM2_8

//முன்னால் எழுதியது.:) )

chinnakkannan
19th April 2015, 11:12 AM
அன்பின் கோபால்,

தங்களின் ஒன்று விட்ட சகோதரர், சகோதரி மற்றும் அவரது குடும்பத்தினரின் அகால இழப்பிற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்..அவர்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்..

kalnayak
20th April 2015, 03:25 PM
Dear Gopal,

My heartfelt condolences to you and your family.

rajeshkrv
20th April 2015, 08:46 PM
heartfelt condolences Gopal. May god give strength to cope up.

chinnakkannan
21st April 2015, 11:17 PM
பருவமே……..பழைய பாடல் பாடு! (திடீர்த் தொடர்)

ஒன்று

**

நண்பர் குதிரைப் பாடல்களாய் அணிவகுத்து பக்கத்து வீட்டில் பரிமாற எனக்கென்னவோ பாலகுமாரன் இரும்பு குதிரைகளில் எழுதிய கவிதை தான் நினைவுக்கு வந்தது..

சவுக்கடி பட்ட இடத்தை
நீவிடத் தெரியா குதிரை
கண்மூடி வலியை வாங்கும்
இதுவுமோர் சுகம் தானென்று
கதறிட மறுக்கும் குதிரை
ஜடமென்று நினைக்க வேண்டா
கதறிட மேலும் நகைக்கும்
உலகத்தைக் குதிரை அறியும்..

என்னா சோகம்னு கேக்கறியளா..கொஞ்ச நாளாவே வேலைப்பளு..ரெண்டு நாளா ஒரே வேலை என்றெல்லாம் இல்லாதது போல் எக்கச்சக்கமாய் ஒன்று இரண்டு மூன்று என்று ஒளவை வரிசைப் படுத்திப்பாடியதுபோல் அல்லாமல் டபக் டபக்கென வர, அதை பட்பட்டெனக் க்ளியர் பண்ணிக்கொண்டே இருக்கும்போதும் என்னவோ மூட் அவுட்..சற்றே கொஞ்சம் எரிந்து விழுந்தவாறிருந்தேன் ( நிஜமாங்க)

ஈவ்னிங்க் காரில் வரும்போது கண்மூடி (ட்ரைவர் சீட்ல இல்லிங்க்ணா) யோசித்தால் எதனால் இப்படி என மனதிற்குள் சிந்திக்கையில் வயதாகிவிட்டதா என்ன.. முதுமைப்பருவம் வந்துவிட்டதா என்ன..

உருவங் குறுகி உளத்திலே கொந்தளிக்கும்
பருவமும் வந்ததா பார்..

அருவமென அங்குதான் ஆடியே வந்த
பருவமாம் முதுமையது பாய்ந்தே – புருவத்தை
நீட்டியே மற்றவரை நிந்தனை செய்துதான்
காட்டுதா தன்னுடைய கண்..

… என யோசனை ஓடிக்கொண்டிருக்கும் போதே ஒருபெண்மகள்குளிப்பது போலவும் பின்னணியாய்…இளைய பருவம் மனதில் வந்தால் மேவும் சொர்க்க சிந்தனை எனக் குரல் ஒலிப்பது போல் வர படக்கென க் கண் திறந்து விட்டேன்..

அட.. முதியபருவம்லாம் வர்றதுக்கு இன்னும் காலமிருக்கு கண்ணா என என்னை நானே மோட்டிவேட் செய்து கொண்டு இருக்கையில் பருவம் என்ற வார்த்தை எழுந்தது..

சமர்த்தாய் வீடு வந்து பருவம் எனத் தேடிப்பார்த்தால்::

ஆங்கில அகராதியில்

1 ஒரு வார்த்தை அல்லது ஒரு வார்த்தைக்கூட்டம் – ஒரு கட்டுமானத்தின் போது அல்லது பேச்சின்போது இருப்பதைப் பருவம் எனலாம்
2. நேரத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதி
3,4 நிலவின் மாற்றங்கள்
5 ஒரு குட்டி ரிப்பன் அல்லது அதைப்போன்ற மெட்டீரியலில் கட்டப்பட்டு அல்லது மடிக்கப் பட்டு- ஒரு ஆபரணத்தைப் போல அலங்கரிப்பது (ப்ரூச் தான் தமிழில் பருவமோ)
6 ஒரு உயரமான இடம், ஒரு குன்றின் பகுதி அல்லது உயரம்
7 ஒரு சிச்சுவேஷன் அல்லது நிபந்தனை – ஒரு இலக்கை அடைய
8 மனித வாழ்க்கையின் பகுதிகள்..
(சரியாக மொழி பெயர்த்திருக்கிறேனா என சரிபார்க்க ஆங்கிலத்தில் உள்ளதை கடைசியில் தருகிறேன்)
மறுபடி வேறு ஒரு இடத்தில் டாமில் டு இங்க்லீஷ்..:

பருவம்பார்க்க - to consider or devise measures
பருவம்பிழைக்க - to fail as a season
n. பருவரு - to suffer
n. பருவரல் - being in pain
பருவல் - large or thick thing

(ஹாஆஆவ்.. யாருப்பா கொட்டாவி விடறது..)

சரி சரி ஒரு பருவப்பையனும் ஒரு பருவப் பெண்ணும் பாடற பாட்டை ப் போட்டுக்கிட்டு அடுத்த போஸ்ட்ல பருவத்தைப் பத்திப் பேசலாம் இன்னும்..
*
கண்ணருகே இமையிருந்தும் கனவு காண்பதேன்
உங்கள் கையருகே மங்கைவந்தும் கதைகள் சொல்வதேன்
இனி வழங்கும் இன்ப நினைவினிலே வாலிபத் திரு நாள்

பார்த்துப் பார்த்து நின்றதிலே பார்வை இழந்தேன்
நீ பாடும் மொழி கேட்கையிலே வார்த்தை இழந்தேன்

சர்ரு எஸ்.எஸ்.ஆர் ப்ளஸ் இளமை..
https://youtu.be/edV7bebko3g
*
சரி சரி அடுத்த பருவத்துக்குப் போகலாம்..போ’ஸ்ட்டைச் சொன்னேங்க்ணா…

*
1. any word or group of words considered as a member of a construction or utterance.
2. any specified division or portion of time
3. the phase of the moon at this time.
4. the phase of the moon at this time.
5. a piece of ribbon or similar material tied or folded upon itself and used or worn as an ornament.
6. a high place or part; a hill or elevation; height.
7. a situation or condition favorable for attainment of a goal .
8. a period of human life, measured by years from birth, usually marked by a certain stage or degree of mental or physical development and involving legal responsibility and capacity

வரட்டா :)

chinnakkannan
21st April 2015, 11:34 PM
பருவமே பழைய பாடல் பாடு – 2

பருவங்கள்னு பார்த்தீங்கன்னா மொதல்ல பொண்ணுங்களோட பருவம் தான்வரும்.. பின்ன (ஏற்கெனவே ஆளில்லா டீக்கடை..கூட்டம் வரவேணாமா..ஒரு மார்க்கெட்டிங்க் தான்..!)

ஏழு பருவம்
பேதை..
ஒன்று முதல் எட்டு வயது வரையாம்..

எல்லாவற்றையும் நம்பிவிடும், அம்மா அப்பா தான் உலகம்..அப்புறம்..ஐஸ்க்ரீம்…!

https://youtu.be/010ikQLt5wE

> பெதும்பை :

9 முதல் 10 வயது வரை...

நாலங்கிளாஸ் அஞ்சாங்க்ளாஸ் பருவமா இல்லை அஞ்சு ஆறா.. எப்படி ஆகிலும் கொஞ்சம் தெளிவு வரும் என நினைப்பதால் ரெண்டு வருஷத்துக்கு ஒருபருவமா என்ன

மஞ்சு முகட்டினில் மான்போல மேகங்கள்
கொஞ்சியே முட்டுதற்போல் கோதையிவள் – விஞ்சி
மனதாரச் சிரிக்கின்றாள் மஞ்சுளாவென் பேராம்
கனவுலகைக் கண்களிலே காண்..


https://youtu.be/TdA-ZCZ1omQ


பத்து பதினொன்னு வயசு தானே மஞ்சுளாக்கு அப்போ.. யாரங்கே..:)

மிச்ச பருவங்கள் நாளைக்கு

வரட்டா..:)

madhu
22nd April 2015, 01:06 PM
Dear Gopalj

My heartfelt condolences to you and your family. May the God be with you.

madhu
22nd April 2015, 01:14 PM
பறவைப் பாடல்கள் – 8
சரி சரி திட்டாதீங்க. :).கொக்கு பாட் லேடஸ்ட் தான் இருக்கு கொக்குப் பற பற, கொக்கு சைவக் கொக்கு, கொக்கு மீனைத் திங்குமான்னு தான் இருக்கு..எனில் பழைய கொக்கு இருந்தால் நீங்கள் போடுங்கள்

அந்தக் குறை எதற்கு சிக்கா.. இந்தாங்க நீங்க தேடிய பாட்டு.. ராதா ஜெயலக்ஷ்மி ஆதி பராசக்தியிலிருந்து...

https://youtu.be/3k8g8uF_NsE

chinnakkannan
22nd April 2015, 02:51 PM
மதுண்ணாவ்.. வாங்க :) தாங்க்ஸ் ஃபார் த பாட்..ஈவ்னிங்க் கேக்கறேன்..(குறையொன்றுமில்லை மறைமூர்த்தி மதுண்ணா:) )

kalnayak
23rd April 2015, 02:36 PM
அனைவருக்கும் வணக்கம். சற்றே நேரம் கிடைத்தது. இந்த சிறிது நேரத்தில் ஒரு நிலாப் பாடல் அடுத்த பதிவில்.

சி.க., "பருவம் உங்கள் பாடல்கள்" - நன்றாக இருந்தது.

kalnayak
23rd April 2015, 03:13 PM
நிலாப் பாடல் 64: "ஒரு தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு"
----------------------------------------------------------------------------------------

தலைப்பை பார்த்ததும் எல்லோரும் சொல்வீர்கள் "ஆஹா, என்ன அருமையான பாடல்" என்று.

சிரிது இடைவெளிக்குப் பின் வரும்போது ஒரு நல்ல பிரபலமான பாடல் வேண்டுமென விரும்பி போடுகிறேன். அனைவரும் விரும்புவீர்கள் என்று நம்புகிறேன்.

இந்த பாடல் பற்றிய விபரங்கள் நான் கொடுத்து தெரியவேண்டியதில்லை. ஆனால் சூபர் ஸ்டாரின் தங்கையாக நடித்தவர் பெயர் தெரியவில்லை. ராஜாவின் இசை. இது போதும். மலேஷியா வாசுதேவன் பாடியது. இன்னும் நம்மையெல்லாம் தாலாட்டிக் கொண்டுதான் உள்ளது.

கவியரசர் கண்ணதாசன் எழுதிய இந்த பாடலில் குறுந்தொகையில் இருந்து ஒரு கருத்தை எடுத்து கையாண்டு இருப்பதாக சொல்லப் பட்டிருக்கிறது. அந்த வரிகல் "செம்மண்ணிலே தண்ணீரை போல்" செம்மண்ணுடன் தண்ணீர் சேர்ந்தால் பிரிக்க முடியாததாக மாரும் என்பது தமிழ் இலக்கியத்தில் பல இடங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த கருத்தை கூட தமிழை சுட்டிக்காட்டி ஃப்ரன்ச் தலைநகர் பாரிசில் ஒடும் ரயிலில் போட்டிருப்பதாக ஒரு செய்தியில் நான் படித்தேன்.

தங்கையை நிலவாக பாடும் இந்த பாடல் வித்தியாசமானது தான்.

ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
என் தெய்வம் தந்த என் தெய்வம் தந்த என் தங்கை
ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு

செம்மண்ணிலே தண்ணீரை போல் உண்டான சொந்தம் இது
சிந்தாமணி ஜோதியை போல் ஒன்றான பந்தம் இது
தங்கை அல்ல தங்கை அல்ல தாயானவள்
கோடி பாடல் நான் பாட பொருள் ஆனாள்
ஒரு தங்க ரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
ஒரு தங்க ரதத்தில் பொன்மஞ்சள் நிலவு

கண்ணீரினால் நீராட்டினால் என் ஆசை தீராதம்மா
முன்னூறு நாள் தாலாட்டினால் என் பாசம் போகாதம்மா
என் ஆலயம் பொன் கோபுரம்
ஏழேழு ஜென்மங்கள் ஆனாலும் மாறாதம்மா
ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு

ராஜாவை நான் ராஜாத்திக்கு துணையாக பார்ப்பேனேம்மா
தேவர்களின் பல்லாக்கிலே ஊர்கோலம் வைப்பேனேம்மா
மணமங்கலம் திருக்குங்குமம் வாழ்க என்று பல்லாண்டு நான் பாடுவேன்
ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
என் தெய்வம் தந்த என் தெய்வம் தந்த என் தங்கை
ஒரு தங்க ரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
ஒரு தங்க ரதத்தில் பொன்மஞ்சள் நிலவு

https://www.youtube.com/watch?v=vmA41yJSkyU

தர்மயுத்தம் நடத்தி இந்த பாடலை பதிவிடுகின்றேன் என்று யாரும் நினைத்து விடாதீர்கள்.

chinnakkannan
23rd April 2015, 03:57 PM
கல் நாயக்.. வாங்க :) அழகு ப் பாடல் தந்திருக்கிறீர்கள்..

யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யாயும் நீயும் எவ்வுளதறிதும்
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தான் கலந்தனவேங்கறது சங்கப் பாடல்.. காதல்ர்களுக்காக எழுதியது..

இதையே கவிஞர் மீரா

உனக்கும் எனக்கும் ஒரே ஊர்
வாசுதேவ நல்லூர்
உன் தந்தையும் என் தந்தையும்
உறவின் முறை
திருநெல்வேலி சைவப் பிள்ளை மார்
உனக்கும் எனக்கும் உறவு
நீ எனக்கு அத்தை பெண்
எனவே
அன்புடை நெஞ்சம் தான் கலந்தனவே !

என எழுதியிருந்தார் பிற்காலத்தில்..

கவிஞர் வைரமுத்து நறுமுகையே பாட்டில்

யாயும் யாயும் யாராகியரோனென்று நேர்ந்ததென்ன
யானும் நீயும் எவ்வழியறிதும் உறவு சேர்ந்ததென்ன
ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர்க்கொடி பூத்ததென்ன
செம்புலம் சேர்ந்த நீர்த்துளி போல் அம்புடை நெஞ்சம் கலந்ததென்ன

என்று எழுதியிருப்பார்..

கவிஞர் கண்ணதாசன் அண்ணன் தங்கை உறவுக்கு எடுத்திருக்கிறார்.. அம்புட்டுதான்.. பட் இதை நான் இதுவரை நினைத்ததில்லை.. நன்றிங்க்ணா :)

chinnakkannan
23rd April 2015, 03:58 PM
சொல்ல விட்டுப் போச்..தங்கையாய் நடித்தவ்ர் பெயர் லஷ்மிஸ்ரீ என நினைவு..படம் வந்த சிலமாதங்களில் தற்கொலை செய்து கொண்டார் என நினைவு..

kalnayak
23rd April 2015, 06:16 PM
சி.க. கேட்ட நிலாப்பாடல் (நிலாப்பாடல் 65): "வெண்ணிலா வெள்ளித்தட்டு வானிலே முல்லை மொட்டு"
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சி.க. நீங்கள் எழுதியதை பார்த்து உற்சாகமாகி உங்களுக்காக இந்த பாடல் தருகிறேன்.

பிரபலமானது என அறிவேன். பலமுறை கேட்டிருக்கிறேன். இருந்தாலும் இந்த பாடலை நீங்கள்தான் நினைவு படுத்தினீர்கள்.

இந்த பாடலும் சென்ற பாடலைப் போல் கவியரசர் எழுதி மலேசியா வாசுதேவன் பாடிய பாடல்.
இசையமைத்தவர் ராஜேஷ். மேல் விவரங்கள் நமது மதுரகானத் திரி ராஜேஷ்தான் தரவேண்டும் என்பதில்லை, தெரிந்தவர்கள் யார் வேண்டுமானாலும் சொல்லலாம்.

கேட்க இனிமையாகவே இருக்கிறது. சி.க. சொன்னது போல ஹிந்தியில் இருந்து வந்துள்ள பாடல். கேட்க இனிமையாகவே இருக்கிறது. சி.க. சொன்னது போல ஹிந்தியில் இருந்து வந்துள்ள பாடல். யாரோ தமிழின் குடும்பப் பாட்டு வகையில் இந்த பாட்டை குறிப்பிட்டிருந்தார்கள்.

https://www.youtube.com/watch?v=dxX7OBMG1QQ


https://www.youtube.com/watch?v=9uIU_bA4hdQ

காளி கோயில் கபாலி இன்னா பண்ணாராம்? சிலையை கடத்தினாரா? சி.க. மேல் விவரங்கள் நீங்கள் தருகிறீர்களா?

chinnakkannan
23rd April 2015, 09:19 PM
காளிக் கோவில் கபாலி மதுரையில் ஸ்ரீதேவியில் தான் ரிலீஸ் ( சரியாங்க முரளி).. ஜெய்கணேஷ் மட்டும் நினைவு.. மாடர்ன் தியேட்டர்ஸ் படம் வழக்கமான அப்பொழுதே ரொம்ப தடவை பார்க்க கேட்கப்பட்ட பழி வாங்கும் கதை என நினைக்கிறேன்.. சரி க்யாஹீவாவையும் பார்த்துடலாமா..

https://youtu.be/xDbK1eZYVzg

போன போஸ்ட் எக்கச் சக்க வேலைக்கு நடுல்ல சந்துல சிந்து பாடினது..:) அப்புறம் இப்ப வீட்கு வந்தப்புறம் தான் பார்க்கிறேன்..தாங்க்ஸ் கல்ஸ் :)

chinnakkannan
24th April 2015, 08:55 AM
வெள்ளிக்கிழமையும் அதுவுமா காலங்காலையில என்ன பண்ணலாம்.. பக்திப் பாட்டு போட்டுடலாம்..:)


அழகான குயில்.. ரம்யா நம்பீசன்.. சாமி சரணம் :)

https://youtu.be/3BIOHVlw00k

kalnayak
24th April 2015, 10:01 AM
சுவாமியே சரணம் ஐயப்பா

அனைவருக்கும் காலை வணக்கங்கள். க்யாஹீவா பாட்டிற்கும், ரம்யா நம்பீசனின் மலையாள பாடலிற்கும் நன்றி. ஒரு சூப்பரான தமிழ் பாட்டோட வாங்க சி.க.

rajeshkrv
24th April 2015, 10:18 AM
மறந்து போன பாடல்கள் வரிசையில்

சின்ன பசங்க நாங்க திரையில் வாலி ஐயாவின் வரிகளில் அருமையான பாடல்

https://www.youtube.com/watch?v=mix5KmKQQzg

rajeshkrv
24th April 2015, 10:20 AM
சிற்பியின் இரண்டாவது அல்லது மூன்றாவது படம்

பழனிபாரதியின் வரிகளில் அழகான பாடல்
வினோதினியை கூட அழகாக காட்டினார்கள் இந்த படத்தில். சட்டையுடன் அலைய விட்டார் பாலுமகேந்திரா.. என்ன கொடுமை

https://www.youtube.com/watch?v=MRvTWY1Ld7E

kalnayak
24th April 2015, 10:41 AM
சூப்பர் ஸ்டார் பாடலை போட்டீங்க. உலக நாயகன் பாடலை போட மாட்டீங்களான்னு யாரும் கேட்காததால, சரி போட்டிடலாம்னு இந்த நிலாப் பாடல்.

நிலாப் பாடல் 66: "ஒரு நிலவும் மலரும் நடனம் புரியும் கலையரங்கம்"
-----------------------------------------------------------------------------------------------------

ஏற்கனவே 2 அல்லது 3 உலகநாயகனின் நிலவுப் பாடல்களை அம்பிகாவோடு பார்த்திருக்கிறோம். என்ன இருந்தாலும் ராஜாவோடு இசையில் எத்தனை முறை பார்த்தாலும் நம்மை சொக்க வைக்க தவறுவதில்லை. என்ன இது கவிதையாய் இயக்கும் ஸ்ரீதர் இயக்கி வந்தது. இது போன்ற படங்களையும் அவர் இயக்கத் துவங்கி ஒரு பத்தாண்டுகள் போயிருந்திருக்குமா? அப்போதைக்கு நிலை கொண்டிருந்த சூப்பர் ஸ்டாரையும், உலக நாயகனையும் இணைத்து, மற்றும் தனித் தனியாக இயக்கிக் கொண்டிருந்தார். பல்லாண்டுகள் தயாரிப்பில் இருந்த படமாம். இயக்குனர் ஸ்ரீதர் அவரது படங்களின் பாடல்கள் என்றாலே தனித்து தெரியும். இதில் இளையராஜா, கமலுடன் கூட்டணி என்றால் கேட்கவும் வேண்டுமா? இசையில், நடனத்தில் நன்றாகவே பெயர் பெற்றிருந்தது. கவிஞர் வைரமுத்து எழுதியுள்ளார். எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி இணைந்து பாடிய மற்றொரு பாடல்.

நிலவும் மலரும் நடனம் புரியும் கலையரங்கம் என்கிறார்கள். யார் நிலவு, யார் மலர் என்று சொன்னால் தேவலை. நிலவும், மலரும் பெண்களையே குறிப்பிடுகின்றன. இங்கே ஆணை குறிப்பிடும் ஒரு பொருளை குறிப்பிட்டிருக்கலாமே. இப்படியா ஆண்களை ஆண்களே நிராகரிப்பது. என்னவோ போங்க.

பாடல் வரிகள் இதோ:
-----------------------------------------------------------------------------------------------
ஆண் : ஒரு நிலவும் மலரும் நடனம் புரியும் கலை அரங்கம்
இரு விழிகள் எழுதும் கவிதை முழுதும் மந்திரம்

ஆண் : ஒரு நிலவும் மலரும் நடனம் புரியும் கலை அரங்கம்
இரு விழிகள் எழுதும் கவிதை முழுதும் மந்திரம்

பெண் : பெண் வண்ணம் பக்கம் நிற்கும் சிற்பம்
கண் வண்ணம் தென்றல் கொஞ்சும் புஷ்பம்

இருவர் : ராகங்கள் பாடுங்கள் ...புது ராகங்கள் பாடுங்கள்
தாளங்கள் போடுங்கள்..ஹே

ஆண் : ஒரு நிலவும் மலரும் நடனம் புரியும் கலை அரங்கம்
இரு விழிகள் எழுதும் கவிதை முழுதும் மந்திரம்

பெண் : ஒரு நிலவும் மலரும் நடனம் புரியும் கலை அரங்கம்
இரு விழிகள் எழுதும் கவிதை முழுதும் மந்திரம்


ஆண் : படிச்சேனே நான் கூட பாட்டு
இது பாட்டல்ல நான் போடும் வேட்டு

பெண்குழு : ஜிகு ஜிகுஜான் ஜிகு ஜிகு ஜான் ஜிகு ஜிகுஜான்
ஜிகு ஜிகுஜான் ஜிகு ஜிகு ஜான்

ஆண் : படிச்சேனே நான் கூட பாட்டு
இது பாட்டல்ல நான் போடும் வேட்டு

பெண் : மாமா...

ஆண் : கண் துடிக்கிது பெண் துடிக்கிது கையணைச்சிட வா

பெண் : புது ரோஜா....

ஆண் : பூத்திருக்குது காத்திருக்குது நான் பறிச்சிட வா

பெண் : அட நீதான்.. ஆண் : சேர்ந்திருக்கணும்

பெண் : நான்தான்.. ஆண் : தேன் கொடுக்கணும்

பெண் : நெனச்சா முடிப்பே இதில் நீ ஜெயிப்பே

ஆண் : குலுங்க குலுங்க நடக்கும் கொடியை
வளச்சு பிடிச்சு பந்தாடுவேன்..

பெண் : ஒரு நிலவும் மலரும் நடனம் புரியும் கலை அரங்கம்
இரு விழிகள் எழுதும் கவிதை முழுதும் மந்திரம்

ஆண் : ஒரு நிலவும் மலரும் நடனம் புரியும் கலை அரங்கம்
இரு விழிகள் எழுதும் கவிதை முழுதும் மந்திரம்


பெண் : நெடு நாளாய் ஏய்க்காதே ராசா
எனை நினைக்காதே நீதானே லேசா

பெண்குழு : ஜிகு ஜிகுஜான் ஜிகு ஜிகு ஜான் ஜிகு ஜிகுஜான்
ஜிகு ஜிகுஜான் ஜிகு ஜிகு ஜான்

பெண் : நெடு நாளாய் ஏய்க்காதே ராசா
எனை நினைக்காதே நீதானே லேசா

ஆண் : கண்ணே.....

பெண் : உஞ்சிரிப்பிலும் பூஞ்சிரிப்ப்பிலும் பால் மணக்குது வா

ஆண் : இளம் பெண்ணே....

பெண் : உன் வசத்திலும் என் வசத்திலும் அன்பிருக்குது வா

ஆண் : ஒரு ஏக்கம்.... பெண் : நான் கொடுத்தது

ஆண் : மோஹம்.... பெண் : நீ கொடுத்தது

ஆண் : புடிச்சா புடிப்பேன் வளச்சா வளைப்பேன்

பெண் : பகலும் இரவும் தழுவ தழுவ நெருங்கி நெருங்கி நானாடுவேன்

ஆண் : ஒரு நிலவும் மலரும் நடனம் புரியும் கலை அரங்கம்
இரு விழிகள் எழுதும் கவிதை முழுதும் மந்திரம்

பெண் : ஒரு நிலவும் மலரும் நடனம் புரியும் கலை அரங்கம்
இரு விழிகள் எழுதும் கவிதை முழுதும் மந்திரம்

ஆண் : பெண் வண்ணம் பக்கம் நிற்கும் சிற்பம்
கண் வண்ணம் தென்றல் கொஞ்சும் புஷ்பம்

இருவர் : ராகங்கள் பாடுங்கள் ...புது ராகங்கள் பாடுங்கள்
தாளங்கள் போடுங்கள்..ஹே

பெண் : ஒரு நிலவும் மலரும் நடனம் புரியும் கலை அரங்கம்

ஆண் : இரு விழிகள் எழுதும் கவிதை முழுதும் மந்திரம்

பெண் : ஒரு நிலவும் மலரும் நடனம் புரியும் கலை அரங்கம்

ஆண் : இரு விழிகள் எழுதும் கவிதை முழுதும் மந்திரம்
------------------------------------------------------------------------------------------------------
நல்ல பிரிண்ட் கிடைக்கவில்லை. மன்னிக்க.

https://www.youtube.com/watch?v=O03Aps85ZRI

இந்த பாட்டையெல்லாம் எழுதுறத பார்த்திட்டு நான் ஒரு வேலைக்கும் போகாத வெட்டி ஆளுன்னு யாரும் நெனச்சிடாதீங்க. உங்களைப் போல நானும் ஒரு தொழிலாளிதான்.

kalnayak
24th April 2015, 11:10 AM
ராஜேஷ் நீங்க கேட்ட நிலாப் பாடல் இந்தாங்க.

நிலாப் பாடல் 67: "ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா"
--------------------------------------------------------------------------
சின்ன வயதில் நமது கவனத்தை ஈர்த்ததோ என்னவோ, காதில் கேட்டிருப்போம். ஆனாலும் எல்லாருக்கும் ஏற்படுகின்ற நிலைமைதான். அப்போதைக்கு புதியதாய் எது இருக்கின்றதோ அதிலேயே நம் கவனம் இருந்திருக்கும். வயது ஆக ஆக, பழையதையும் பார்க்கவேண்டும், கேட்கவேண்டும் என்று உத்வேகம் இந்த மாதிரி பாடல்களினால்தான் ஏற்படுகின்றது. (அதுக்காக இந்த சின்னப் பையனை நம்ம கலைவேந்தன் கொள்ளுத் தாத்தாவிற்கு சமமாக நினைத்துக் கொள்ளாதீர்கள்). அழகான, அமைதியான, அற்புதமான பாடல் இது. கேட்க கேட்க இனிக்கிறது.

உடுமலை நாராயண கவியின் பாடல் (அற்புதமான வரிகள்தான்), இசையரசி பி. சுசீலாவும், கண்டசாலாவும் கேட்பவர் நெஞ்சை உருக்கியிருக்கிறார்கள். ஏ.நாகேஸ்வரராவும், நடிகையர் திலகம் சாவித்திரியும் நடிக்க, மாஸ்டர் வேணு இசையமைத்திருக்கிறார்.

அந்த அற்புதமான வரிகள் இங்கே:
-----------------------------------------------------------
ஓ...ஓ..ஓ..
ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா
அலங்காரத் தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே
ஆனந்தம் தேடுதே
ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா
அலங்காரத் தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே
ஆனந்தம் தேடுதே

இருளான மேகமென்னும் திரைக்குப் பின்னாலே
மறைந்தே இந்நாளே
உறவோடு ஓடியாடி உயர்க் காதலாலே
உவந்தே மண் மேலே
அலங்காரத் தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே
ஆனந்தம் தேடுதே

ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா
அலங்காரத் தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே
ஆனந்தம் தேடுதே

ஆஹாஹாஆ.ஆஆஆ. ஓஹோஹோஓ..ஓஓஓ

இன்னலாகத் தோன்றும் மின்னல்
இடை மறித்தாலும் இடி எதிர்த்தாலும்
கண்மணித் தாரகை தன்னைக் கைவிடேன் என்றே
களிப்பொடு சென்றே
அலங்காரத் தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே
ஆனந்தம் தேடுதே

ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா
அலங்காரத் தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே
ஆனந்தம் தேடுதே

ஆஹாஹாஆ.ஆஆஆ. ஓஹோஹோஓ..ஓஓஓ
------------------------------------------------------------------------------------

அழகான காணொளி இதோ:
----------------------------------------
https://www.youtube.com/watch?v=Em6XbRpn4r4

நம்பினால் நம்புங்கள். இந்த அழகான பாடலுக்கு காரணம் மஞ்சள் மகிமை.

chinnakkannan
24th April 2015, 12:23 PM
நம்பினால் நம்புங்கள். இந்த அழகான பாடலுக்கு காரணம் மஞ்சள் மகிமை.// :) ஒரு இரவும் நிலவும் .. பாட்டும் குட்..வர்றேன்.வர்றேன்..

//வினோதினியை கூட அழகாக காட்டினார்கள் இந்த படத்தில். சட்டையுடன் அலைய விட்டார் பாலுமகேந்திரா.. என்ன கொடுமை// ராஜேஷ் உங்களுக்கு வயசாய்டுச்சு :) மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன் பிடிக்கும் கேட்டிருக்கிறேன்.. மற்றபாட் கேக்கணும் நன்றிங்ணா

rajeshkrv
24th April 2015, 08:27 PM
சூப்பர் ஸ்டார் பாடலை போட்டீங்க. உலக நாயகன் பாடலை போட மாட்டீங்களான்னு யாரும் கேட்காததால, சரி போட்டிடலாம்னு இந்த நிலாப் பாடல்.

நிலாப் பாடல் 66: "ஒரு நிலவும் மலரும் நடனம் புரியும் கலையரங்கம்"
-----------------------------------------------------------------------------------------------------

ஏற்கனவே 2 அல்லது 3 உலகநாயகனின் நிலவுப் பாடல்களை அம்பிகாவோடு பார்த்திருக்கிறோம். என்ன இருந்தாலும் ராஜாவோடு இசையில் எத்தனை முறை பார்த்தாலும் நம்மை சொக்க வைக்க தவறுவதில்லை. என்ன இது கவிதையாய் இயக்கும் ஸ்ரீதர் இயக்கி வந்தது. இது போன்ற படங்களையும் அவர் இயக்கத் துவங்கி ஒரு பத்தாண்டுகள் போயிருந்திருக்குமா? அப்போதைக்கு நிலை கொண்டிருந்த சூப்பர் ஸ்டாரையும், உலக நாயகனையும் இணைத்து, மற்றும் தனித் தனியாக இயக்கிக் கொண்டிருந்தார். பல்லாண்டுகள் தயாரிப்பில் இருந்த படமாம். இயக்குனர் ஸ்ரீதர் அவரது படங்களின் பாடல்கள் என்றாலே தனித்து தெரியும். இதில் இளையராஜா, கமலுடன் கூட்டணி என்றால் கேட்கவும் வேண்டுமா? இசையில், நடனத்தில் நன்றாகவே பெயர் பெற்றிருந்தது. கவிஞர் வைரமுத்து எழுதியுள்ளார். எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி இணைந்து பாடிய மற்றொரு பாடல்.

நிலவும் மலரும் நடனம் புரியும் கலையரங்கம் என்கிறார்கள். யார் நிலவு, யார் மலர் என்று சொன்னால் தேவலை. நிலவும், மலரும் பெண்களையே குறிப்பிடுகின்றன. இங்கே ஆணை குறிப்பிடும் ஒரு பொருளை குறிப்பிட்டிருக்கலாமே. இப்படியா ஆண்களை ஆண்களே நிராகரிப்பது. என்னவோ போங்க.

பாடல் வரிகள் இதோ:
-----------------------------------------------------------------------------------------------
ஆண் : ஒரு நிலவும் மலரும் நடனம் புரியும் கலை அரங்கம்
இரு விழிகள் எழுதும் கவிதை முழுதும் மந்திரம்

ஆண் : ஒரு நிலவும் மலரும் நடனம் புரியும் கலை அரங்கம்
இரு விழிகள் எழுதும் கவிதை முழுதும் மந்திரம்

பெண் : பெண் வண்ணம் பக்கம் நிற்கும் சிற்பம்
கண் வண்ணம் தென்றல் கொஞ்சும் புஷ்பம்

இருவர் : ராகங்கள் பாடுங்கள் ...புது ராகங்கள் பாடுங்கள்
தாளங்கள் போடுங்கள்..ஹே

ஆண் : ஒரு நிலவும் மலரும் நடனம் புரியும் கலை அரங்கம்
இரு விழிகள் எழுதும் கவிதை முழுதும் மந்திரம்

பெண் : ஒரு நிலவும் மலரும் நடனம் புரியும் கலை அரங்கம்
இரு விழிகள் எழுதும் கவிதை முழுதும் மந்திரம்


ஆண் : படிச்சேனே நான் கூட பாட்டு
இது பாட்டல்ல நான் போடும் வேட்டு

பெண்குழு : ஜிகு ஜிகுஜான் ஜிகு ஜிகு ஜான் ஜிகு ஜிகுஜான்
ஜிகு ஜிகுஜான் ஜிகு ஜிகு ஜான்

ஆண் : படிச்சேனே நான் கூட பாட்டு
இது பாட்டல்ல நான் போடும் வேட்டு

பெண் : மாமா...

ஆண் : கண் துடிக்கிது பெண் துடிக்கிது கையணைச்சிட வா

பெண் : புது ரோஜா....

ஆண் : பூத்திருக்குது காத்திருக்குது நான் பறிச்சிட வா

பெண் : அட நீதான்.. ஆண் : சேர்ந்திருக்கணும்

பெண் : நான்தான்.. ஆண் : தேன் கொடுக்கணும்

பெண் : நெனச்சா முடிப்பே இதில் நீ ஜெயிப்பே

ஆண் : குலுங்க குலுங்க நடக்கும் கொடியை
வளச்சு பிடிச்சு பந்தாடுவேன்..

பெண் : ஒரு நிலவும் மலரும் நடனம் புரியும் கலை அரங்கம்
இரு விழிகள் எழுதும் கவிதை முழுதும் மந்திரம்

ஆண் : ஒரு நிலவும் மலரும் நடனம் புரியும் கலை அரங்கம்
இரு விழிகள் எழுதும் கவிதை முழுதும் மந்திரம்


பெண் : நெடு நாளாய் ஏய்க்காதே ராசா
எனை நினைக்காதே நீதானே லேசா

பெண்குழு : ஜிகு ஜிகுஜான் ஜிகு ஜிகு ஜான் ஜிகு ஜிகுஜான்
ஜிகு ஜிகுஜான் ஜிகு ஜிகு ஜான்

பெண் : நெடு நாளாய் ஏய்க்காதே ராசா
எனை நினைக்காதே நீதானே லேசா

ஆண் : கண்ணே.....

பெண் : உஞ்சிரிப்பிலும் பூஞ்சிரிப்ப்பிலும் பால் மணக்குது வா

ஆண் : இளம் பெண்ணே....

பெண் : உன் வசத்திலும் என் வசத்திலும் அன்பிருக்குது வா

ஆண் : ஒரு ஏக்கம்.... பெண் : நான் கொடுத்தது

ஆண் : மோஹம்.... பெண் : நீ கொடுத்தது

ஆண் : புடிச்சா புடிப்பேன் வளச்சா வளைப்பேன்

பெண் : பகலும் இரவும் தழுவ தழுவ நெருங்கி நெருங்கி நானாடுவேன்

ஆண் : ஒரு நிலவும் மலரும் நடனம் புரியும் கலை அரங்கம்
இரு விழிகள் எழுதும் கவிதை முழுதும் மந்திரம்

பெண் : ஒரு நிலவும் மலரும் நடனம் புரியும் கலை அரங்கம்
இரு விழிகள் எழுதும் கவிதை முழுதும் மந்திரம்

ஆண் : பெண் வண்ணம் பக்கம் நிற்கும் சிற்பம்
கண் வண்ணம் தென்றல் கொஞ்சும் புஷ்பம்

இருவர் : ராகங்கள் பாடுங்கள் ...புது ராகங்கள் பாடுங்கள்
தாளங்கள் போடுங்கள்..ஹே

பெண் : ஒரு நிலவும் மலரும் நடனம் புரியும் கலை அரங்கம்

ஆண் : இரு விழிகள் எழுதும் கவிதை முழுதும் மந்திரம்

பெண் : ஒரு நிலவும் மலரும் நடனம் புரியும் கலை அரங்கம்

ஆண் : இரு விழிகள் எழுதும் கவிதை முழுதும் மந்திரம்
------------------------------------------------------------------------------------------------------
நல்ல பிரிண்ட் கிடைக்கவில்லை. மன்னிக்க.

https://www.youtube.com/watch?v=O03Aps85ZRI

இந்த பாட்டையெல்லாம் எழுதுறத பார்த்திட்டு நான் ஒரு வேலைக்கும் போகாத வெட்டி ஆளுன்னு யாரும் நெனச்சிடாதீங்க. உங்களைப் போல நானும் ஒரு தொழிலாளிதான்.

NAanum oru thozhilali - ella paadalgal Vaali ayya

http://img96.imageshack.us/img96/1250/nanumoruthozhilaliback.jpg

rajeshkrv
24th April 2015, 08:29 PM
only mistake in that vinyl record is Angel aadum angel is by PS and not SJ

Russellcaj
25th April 2015, 10:31 AM
Coming after a long time.

Chinnakannan & Kalnayak

Both your posts are good and enjoyable.

Both of you pulling this thread without break.

Kalaivendhan posts are nice.

But, we all badly missing Mr. Neyvali Vasudevan

Sir, please come soon.

rajraj
26th April 2015, 08:26 AM
From 'Or Iravu' (1951)

Ayyaa saami avoji saami....

http://www.youtube.com/watch?v=DRCEp2ebzZY

From 'Samadhi' (1950)

Gore Gore ......

http://www.youtube.com/watch?v=LuCtgwQ0_Ks

From Edmundo Ros band(1945)

Chico chico from Puerto Rico...

http://www.youtube.com/watch?v=B2qDKribLIg

Enjoy ! :)

kalnayak
28th April 2015, 09:52 AM
ராஜ்ராஜ்,

ஓர் இரவு பாடல், ஹிந்தியின் சமாதி படப் பாடல் மற்றும் ஆங்கிலப் பாடல் ஜுகல்பந்தி நன்றாக இருக்கிறது. 1940-50 களிலேயே ஆங்கில பாடல்களை காப்பியடித்தார்கள் என்று சொல்ல முடியுமோ? அப்போது இப்போதைக்கு இருக்கும் வசதி கிடையாதே. இருந்தாலும் ஆங்கிலப் பாடலை கேட்டு அதை தழுவலாக மும்பையில் கொண்டு வந்து அங்கிருந்து தமிழுக்கு வர இது சாத்தியமாயிருக்கிறது. இது முடிய 6 வருடங்கள் ஆகியிருக்கிறது. இப்போதெல்லாம் அசலுக்கு முன் அதன் காப்பி நகல் வந்து விடும்.

kalnayak
28th April 2015, 10:37 AM
நிலாப் பாடல் 68: "நிலவும் மலரும் பாடுது, என் நினைவில் தென்றல் வீசுது"
--------------------------------------------------------------------------------------------------------------

ஒருத்தர் என்னை ரொம்பவே வையறாருங்க "நீயெல்லாம் என்னலே நிலாப்பட்டு எழுதறே. படத்துப் பேருலயே நிலா இருக்கு. பாட்டும் நிலாவுல ஆரம்பிக்குது. இதையெல்லாம் முதல்லையே எழுதாம என்னலே நிலாப் பாட்டு?" அருமையான இயக்குனர் ஸ்ரீதரோட படம். தென்றலோட தவழும் A.M.ராஜாவோட இசை. என்னவோ போங்க. கொஞ்சம் பொறுமை வேணும். நானும் எம்புட்டு நாளு வேலைக்கு நடுவில நிலாப் பாட்டு எழுதிட்டு இருக்கேன். நான் எழுதுறதுக்கு முன்னாலேயே சி.க வேற எழுதிடறாரு. இந்த மாதிரி பாட்டை அவரு எழுதி என்னை காப்பாத்தி இருக்கலாம். பரவாயில்லை.
A M . ராஜாவும் இசையரசி பி.சுசீலாவும் பாடியிருக்கிறார்கள். காதல் மன்னன் ஜெமினி கணேசனும், வைஜயந்தி மாலாவும் நடித்து நிலாவை கொண்டாடுகிறார்கள். மீண்டும் காதல் பாடல்தான். என்ன சுகமான பாடல் கவியரசரின் வரிகளிலே (இறைவா, இதுவாவது சரியா இருக்கணும்பா!!!)


பாடல் வரிகள்:
----------------------

நிலவும் மலரும் பாடுது
என் நினைவில் தென்றல் வீசுது
நிலை மயங்கி மயங்கி காதலினால் ஜாடை பேசுது
நிலவும் மலரும் பாடுது
என் நினைவில் தென்றல் வீசுது
நிலை மயங்கி மயங்கி காஅல் ஜாடை பேசுது
சிரித்து சிரித்து உறவு வந்தால் நிலைத்து வாழுமா
மனம் துடித்து துடித்து சேர்ந்த பின்னே தோல்வி காணுமா
சிரித்து சிரித்து உறவு வந்தால் நிலைத்து வாழுமா
தந்தை பிரித்து பிரித்து வைப்பதனால் காதல் மாறுமா
மனதினிலே பிரிவுமில்லை மாற்றுவாரில்லை
நிலை மயங்கி மயங்கி காலமெல்லாம் கானம் பாடுவோம்
முகத்தை முகத்தை மறைத்து கொண்டால் பார்க்க முடியுமா
இன்று பார்த்து பார்த்து முடித்து விட்டால் நாளை வேண்டுமே
முகத்தை முகத்தை மறைத்து கொண்டால் பார்க்க முடியுமா
கணை தொடுத்து தொடுத்து மிரட்டும் கண்ணால் பார்க்கலாகுமா
மலர் முடிப்போம் மணம் பெறுவோம்
மாலை சூடுவோம்
நிலை மயங்கி மயங்கி காலமெல்லாம் கானம் பாடுவோம்
நிலவும் மலரும் பாடுது
என் நினைவில் தென்றல் வீசுது
நிலை மயங்கி மயங்கி காதலினால் கானம் பாடுவோம்
------------------------------------------------------------------------------------
காணொளி:
-----------------

https://www.youtube.com/watch?v=6zO1C88bvzE

தேன் நிலவில் பாடவேண்டிய பாடல்தான்.

kalnayak
28th April 2015, 11:10 AM
பட்டாக்கத்தி விரும்பிக் கேட்ட பாடல்களில் இதுவும் ஒன்று. அவருக்காக உலக அழகியின் நடன அசைவுகளை கொண்ட இந்த நிலாப்பாடல்.

நிலாப் பாடல் 69: "வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலாவே"
---------------------------------------------------------------------------------

A. R. ரஹ்மான் இசையில் மணிரத்தினம் படத்திற்காக உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலின் முன்பாக உலக அழகி ஆடிய பாடல். உடன் ஆடாமல் பார்த்து நடந்து நிற்பவர் மோகன்லால். பாடியவர்: ஆஷா போஷ்லே. உறுதியாக சொல்லலாம் கவிப்பேரரசுவின் வரிகள் என்றுதான் நினைக்கிறன். பாட்டிலேயே காதல் என்று சொல்லிவிட்டார்கள். இதற்கு மேல் விவாதிக்க வேண்டுமா?

வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலாவே வந்ததே முதற்காதல்
கண்ணிலே கண்ணிலே மதுச்சாரல் கண்டதும் முதற்காதல்
தூண்டிலில் மீனா தூயவானா காரணம் நானா நீயே நீயே சொல்

(வெண்ணிலா)

என்னவா என்னவா எது கண்டு மையல் ஆனாய்
எதனால் எதனால் இமை கடந்து கண்ணாய்ப் போனாய்
நீயெங்கோ பிறந்தாய் நானெங்கோ பிறந்தேன்
ஒரே ஒரு பார்வையால் உயிரைக் குடித்தாய்

(வெண்ணிலா)

கண்களை மூடினால் கண் வந்து உள்ளம் கிள்ளும்
கட்டிலை நாடினால் இரவின்று நீளம் கொள்ளும்
வேரோடு துடிக்க யாரோடு உரைக்க
கனாக் கண்ட காட்சிகள் கையில் வருமா

(வெண்ணிலா)

https://www.youtube.com/watch?v=TAPHomV3J1M

இருவர் பாடாமல் ஒருவர் மட்டும் ஏன் பாடினார்? - உலக அழகி இருக்கறப்போ அதெல்லாம் தேவையா?

chinnakkannan
28th April 2015, 11:57 AM
//இருவர் பாடாமல் ஒருவர் மட்டும் ஏன் பாடினார்? // வாங்க கல் நாயக் .. :) அது சரி ஓய்..ஐஸ் இருக்கறச்சே ஐஸ் ஐஸைத் தானே பார்க்கும்.. இந்தமாதிரி ஏன் ஒருத்தர் பாடினார்னு கேக்கல்லாம் தோணாது..:) ( அப்பாடி வழக்கம் போல க் குழப்பியாச்சு)

//முகத்தை முகத்தை மறைத்து கொண்டால் பார்க்க முடியுமா
இன்று பார்த்து பார்த்து முடித்து விட்டால் நாளை வேண்டுமே// ஆமா.. அப்புறம் ஏதாவது மாற்றம் வராம இருக்க ஃபேஸியல்லாம் போவாங்க..ம்ம் அதெல்லாம் க.பியில் (கல்யாணத்துக்குப் பின்)

ராஜ் ராஜ் சார் ஜூகல் பந்திக்குத் தாங்க்ஸ்..எப்படி இருக்கீங்க

ஸ்டெல்லா ராக்..வாங்க.. நன்றி.. வாசு வருவார் எப்பவருவார்னு தெரியாது ஆனா வருவார்..:)

கொஞ்சம் கன்னாபின்னா என வேலை வீ வந்தும் கூட.. வர்றேன் இன்னும் சில நாள்ல வித் ரைட் அப்ஸ்.. அது இன்னிக்கா க்கூட இருக்கலாம்..

கல் நாயக்..குலோப் ஜாமூனில் செய்த சிற்பம் நித்தி படம் பார்த்தீங்களா :)

kalnayak
28th April 2015, 12:30 PM
அப்பாடி சி.க. வந்துட்டீங்களா. நீங்களும் நானும் மாத்தி மாத்தி குழப்பித்தான் பார்க்கறோம். வர்றவங்க தெளிவா இருக்கறாங்களே!!! இல்லை கண்டுக்காம போறாங்களா. அதுவுமில்லைன்னா தெளிவா இருக்கறாப்போலே நடிக்கறாலா? தெரியலை.

நீங்க குழப்பறதை நான் ரொம்ப சீரியசா எடுத்துகறதில்லை. நான் குழப்பறதையும் நீங்க சீரியசா எடுத்துக்க மாட்டீங்கன்னு தெரியும்.

"குலோப் ஜாமூனில் செய்த சிற்பம் நித்தி படம் பார்த்தீங்களா "
ஆனா அதுக்காக நீங்க இப்படி சொல்லி நான் குழம்பி போயிட்டேனே!!!

uhesliotusus
28th April 2015, 12:32 PM
நன்றி கல்நாயக். நினைவு தப்பாமல் ஞாபகம் வைத்திருந்து 'இருவர்' படத்தின் 'வெண்ணிலா' பாடலை பதிவு செய்ததற்கு நன்றி. இந்த அமிதாப்பின் அழகு மருமகளுக்கு உடம்பு வில்லாய் என்னமாய் வளைகிறது! ரஹ்மானின் பாடல்களில் என்னுடைய இரண்டாவது சிறந்த பாடல் இது.

ஆமாம்! முதல் பாடல் என்ன என்று கேட்கிறீர்களா?

சொல்லியே விடுகிறேன். 'பவித்ரா' படத்தில் மிக மிக இனிமையான பாடலான 'செவ்வானம் சின்னப் பெண் சூடும் குங்குமம் ஆகாதா' பாடல்தான் அது.

மனோவுடன் சேர்ந்து பாடும் பல்லவி மிக அற்புதமான தன் குரலில் இப்பாடலை எங்கோ கொண்டு சென்று விடுவார்.

சும்மா 'உயிரே...உயிரே' என்று திரும்ப திரும்ப புலம்பும் 'பம்பாய்' பட பாடலைவிட நான் மேற்சொன்ன பாடல் மிக மிக அற்புதமானது. முடிந்தால் பதியுங்கள் நாயக். நீங்களும் உளம் மகிழ்வீர்கள்.

kalnayak
28th April 2015, 01:17 PM
யாரும் கேட்காத பாடல்... அப்படின்னு போடத்தான் ஒரு ஆசை. யாரும் கேட்காத ஒரு பாடல் எப்படி போட முடியும்-ன்னு சி.க. தெளிவா கேட்பார். யாரும் விரும்பி கேட்காத பாடல்-ன்னு சொன்னால் என்னை தொலைச்சிடுவாங்க. எல்லாரும் விரும்பிக் கேட்கும் பாடல்-ன்னு சொல்லவும் முடியலை. ஆஹா. இப்படி சொல்லிடலாம் - "எல்லோரும் விரும்பிப் பார்த்து கேட்க வேண்டிய பாடல்". இதுலயும் குறை கண்டுபிடிச்சா இந்த கல்நாயக் என்னதான் செய்வாங்க? பாவம். சரி அந்த பாடல் என்னன்னு பார்த்திடலாமா. பாட்டை பார்த்திட்டு எல்லோர் கிட்ட இருந்தும் லைக்ஸ் அள்ளிடலாம்னு இருக்கேன். ஏமாத்திடாதீங்க மக்களே.

நிலாப் பாடல் 70: "இரவும் நிலவும் வளரட்டுமே. நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே"
----------------------------------------------------------------------------------------------------------------------------------

இங்கே தேவிகா ஆடுகிறார், ஓடுகிறார், ... ஆனால் நடிகர் திலகம் நடக்கிறார் பாருங்கள். சிறிது நேரம் விட்டு மறுபடியும் நடை. இந்த நடையைப் பத்தி நான் என்ன சொல்றது. வேகமாய் நடக்கும் அந்த கம்பீர நடையை பற்றி விளக்கமாக நடிகர் திலகம் திரிக்கு போய் தேடிப் படியுங்கள். இந்த பாடல் ஹிந்துஸ்தானி ராகமான சாரங்க தரங்கிணி-யில் அமைந்தது என்று சொல்கிறார்கள். கோபால் போன்றவர்கள் உறுதிப் படுத்தினால் நல்லது. இந்த கோயில் கொனாரக் சூரியனார் கோயில் என்கிறார்கள். இல்லை கர்நாடகத்தின் பேலூர் மற்றும் ஹளேபீடு என்றும் சொல்கிறார்கள். பார்த்தவர்கள் சொல்லட்டும். (கல்நாயக்கிற்கு ஒன்றும் தெரியாது என்று இப்போதாவது மற்றவர்களுக்கு தெரியட்டும். ஒன்னும் தெரியாமலேயே எம்புட்டு நாளா தெரிஞ்சமாதிரி நடிக்கிறது? உண்மைய சொன்னாலும் இந்த உலகம் நம்ப மாட்டேங்குதே!!!)

பொதுவாக புராணப் படங்களுக்கு திரை இசைத் திலகம் கே.வி. மகாதேவன் இசை அமைத்துத்தான் பார்த்திருப்போம். மெல்லிசை மன்னர்கள் அரிதாக இசை அமைத்த அற்புதமான புராணப் படம். அவர்கள் இசையமைத்த மற்ற புராணப் படங்களை தெரிந்தவர்கள் சொல்வார்கள். பாடலைப் பாடியவர்கள் தமிழ்த் திரையுலகின் பெருமையான ஜோடிப் பாடகர்கள் டி.எம். சௌந்தர் ராஜன் மற்றும் இசையரசி பி. சுசீலா. பாடல் வரைந்தவர் கவியரசர் கண்ணதாசன். உருவாக்கியவர் B. R. பந்துலு.

கவியரசர் சொல்வது - இரவும் நிலவும் வளர்ந்தால் நம் இனிமை நினைவுகள் தொடரும். அடுத்த வரிதான் அவரோட தனித்தன்மை. "தரவும் பெறவும் உதவட்டுமே." இப்படியேதான் பாட்டு முழுக்க என்ன என்னமோ சொல்றாருங்க. உங்களுக்கு நல்லாவே புரியும். வேற வித்தியாசமா உங்களுக்கு புரிந்தால் இங்க சொல்லுங்க. சரி பாட்டு வரிங்களை பார்த்திடலாமோ.

இரவும் நிலவும் வளரட்டுமே நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே
இரவும் நிலவும் வளரட்டுமே நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே
இரவும் நிலவும் வளரட்டுமே
தரவும் பெறவும் உதவட்டுமே நம் தனிமை சுகங்கள் பெருகட்டுமே
இரவும் நிலவும் வளரட்டுமே நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே
இரவும் நிலவும் வளரட்டுமே

மல்லிகைப் பஞ்சணை விரிக்கட்டுமே - அங்கு
மங்கையின் தாமரை சிரிக்கட்டுமே
இல்லையென்னாமல் கொடுக்கட்டுமே - நெஞ்சில்
இருக்கின்ற வரையில் எடுக்கட்டுமே

இரவும் நிலவும் வளரட்டுமே நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே
இரவும் நிலவும் வளரட்டுமே

ஆசையில் நெஞ்சம் துடிக்கட்டுமே - அங்கு
அச்சமும் கொஞ்சம் இருக்கட்டுமே
நாடகம் முழுவதும் நடக்கட்டுமே - அதில்
நாணமும் கொஞ்சம் பிறக்கட்டுமே

இரவும் நிலவும் வளரட்டுமே நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே
இரவும் நிலவும் வளரட்டுமே
-----------------------------------------------------------------------------------------------------------

சரி நடிகர் திலகத்தின் நடை அழகைப் பார்க்கலாமா இப்போது, அந்த அழகிய பாடலைக் கேட்டுக் கொண்டே.

https://www.youtube.com/watch?v=96WAGOzyBTs

கர்ணன் என்பதற்காக நடிகர் திலகத்துடன் எல்லோருமே இனிமையை அள்ளி அள்ளிக் கொடுத்திருக்கிறார்கள்.

kalnayak
28th April 2015, 01:33 PM
ஹாய் பட்டாக்கத்தி,
வெண்ணிலா க்யுப் பாடலுக்கு நீங்கள் அளித்த வரவேற்பிற்கு நன்றி. உங்களின் முதல் விருப்பப் பாடலான "செவ்வானம் சின்னப் பெண் சூடும் குங்குமம் ஆகாதா" எனக்கும் மிகவும் பிடித்த பாடல்தான். நீங்கள் கேட்டு விட்டீர்கள். அந்த காணொளியை தரவேற்கிறேன். ஆனால் நிலாப் பாடல் அல்ல என்பதால் நான் மேற்கொண்டு இப்போதைக்கு அதைப் பற்றி ஒன்றும் சொல்ல இயலாது.

https://www.youtube.com/watch?v=7jCuuM_G1Mc

adiram
28th April 2015, 03:13 PM
//பொதுவாக புராணப் படங்களுக்கு திரை இசைத் திலகம் கே.வி. மகாதேவன் இசை அமைத்துத்தான் பார்த்திருப்போம். மெல்லிசை மன்னர்கள் அரிதாக இசை அமைத்த அற்புதமான புராணப் படம். அவர்கள் இசையமைத்த மற்ற புராணப் படங்களை தெரிந்தவர்கள் சொல்வார்கள்.//

GANGA GOWRI - MSV alone

SAKTHI LEELAI - TKR alone

Kalnayak,

Iravum Nilavum Valarattume is the topmost for all your 'Nila Songs'.

chinnakkannan
28th April 2015, 04:19 PM
//இங்கே தேவிகா ஆடுகிறார், ஓடுகிறார்// தேவிகாவுக்கும் ஆடுகிறார்க்கும் நடுவில் நளினமாக - என்று போட்டுக் கொள்ளவும் :)

//இரவும் நிலவும் வளரட்டுமே நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே// அதாவது என்னான்னாக்க ..

ஹாய்

ஹாய்..

என்னடீ இப்படி இளைச்சுட்ட..

பின்ன சும்மாவா.. ரெகுலர் ஜிம்.. அப்புறம் யோகா..ஒரு க்ரியா கூட பண்றேனாங்காட்டியும்.. நீ தான் ச்சும்மா ஓடு ஓடூன்னு ஓடிக்கிட்டிருக்க.. கொஞ்சம் சிக்னு இருக்க..டிஷர்ட் புச்சா..

அது சரி.. நீ என்னை முதல்ல பார்த்தது எங்க..

அதுவா..அந்த க்ரெளண்ட்ல ஏதோ ஓடிக்கிட்டே இருக்கறச்சே தடுக்கி விழுந்த..எக்ஸாக்ட் லொக்கேஷன்வேணும்னா வா கூட்டிப்போய்க் காட்டறேன்..

ஆமா இவளே.. நீ தான் என்னமா பதறி வந்த..அந்தப் பதற்ற்த்துல சொக்கினவன் தான் நான்..

இப்படித் தான் இரவும் நிலவும் கூடி வர்ற சமயத்தில இந்த ஸ்வீட் நத்திங்க்ஸ் சம்பாஷணைகள் பெருகுமாம்..கவிஞர் சொல்றார்..

ஸேஃபா கல் நாயக் //தரவும் பெறவும் உதவட்டுமே// சொல்லிட்டுத் தாவிட்டார்..:) அடுத்த லைன் யார் சொல்வா..//நம் தனிமை சுகங்கள் பெருகட்டுமே//

அஃதாவது:

கொஞ்சம் கிட்ட வாப்பா

என்னது ஐ 6ல என்ன காட்டப் போற..ஏய் இது ஓ.கே கண்மணி பாட்டுல்ல

ஆமாம்.. போலாமா..இந்தப் பாட்டு பறக்கவா..ரொம்ப கிறங்கடிக்குது.. ஹேய் நீ கூட நித்தி மாதிரி பட்ட்ர்ஸ்காட்ச் ஐஸ்க்ரீம்ல பண்ன சிலையாட்டம் இருக்க..

நெசம்மாவா

ஆமா அந்த சிலைக்கெல்லாம் கன்னத்துல குழிவிழாது..கிட்ட வாயேன்

ச்சீ போடா

ஹேய் மொட்ட மாடி..வாட்டர் டாங்க்..யாரும் தான் இல்லையே வா..

என்னவாம்..

இல்லை..இந்தக் கன்னக்குழில்ல இருக்கற ஐஸ்க்ரீம் டேஸ்ட் பாக்கலாமா..

போடா..

போடான்னு சொல்றது புரிது..ம்ம்

நீ ரொம்ப மோசம்டா..

அப்படின்னு ஆரம்பிச்சு..த.சு. பெருகுமாம்.. காதலர்கள்ட்ட.. கவிஞர் அந்தக்காலத்திலேயே சொல்லிட்டார்..!

இப்படி ஆரம்பிக்கற காதல் பேச்சுக்கள் எக்ஸ்ட்ரீமுக்கும் போக வாய்ப்பிருக்காம்... கடைசி ப் பாரா அப்படி ஆகிடுச்சாக்கும்..:)

ஆசையில் நெஞ்சம் துடிக்கட்டுமே - அங்கு
அச்சமும் கொஞ்சம் இருக்கட்டுமே
நாடகம் முழுவதும் நடக்கட்டுமே - அதில்
நாணமும் கொஞ்சம் பிறக்கட்டுமே


பட் என்ன சொல்லுங்க ந.தி .. தேவிகா ஜோடிபார்க்கக் கொள்ளை அழகு..தாங்க்ஸ் கல் நாயக்...

chinnakkannan
28th April 2015, 04:21 PM
(இறைவா, இதுவாவது சரியா இருக்கணும்பா!!!)// ஆடிட்டர் இன் அமெரிக்கா.. :)

chinnakkannan
28th April 2015, 05:02 PM
//செவ்வானம் சின்னப்பெண் சூடும் குங்குமம் ஆகாதோ
விண்மீன்கள் கன்னிப்பெண் சூடும் மல்லிகை ஆகாதோ

கண்ணால் உன்னை வரவேற்று பொன் கவிக்குயில் பாடாதோ
கண்ணாளன் தோளில் இடம் கேட்டு என் வண்ணக்கிளி சாயாதோ

பொன்னுடல் தன்னை என் கையில்
ஏந்த என்னடி யோசிக்கிறாய்
மொத்ததில் காதலின் எடை
என்னயாகும் இப்படி சோதிக்கிறாய்
நிலவை படைத்து முடித்த கையில்
அந்த பிரம்மன் உன்னை படைத்து விட்டான்
என்னை படைத்து முடித்த கையில்
அவன் உன்னை இங்கு அனுப்பிவைத்தான்

செண்பகப்பூவின் மடல்களை
திறந்து தென்றல் தேடுவதென்ன
தென்றல் செய்த வேலையை
சொல்லி என்னை பார்ப்பதென்ன
பார்வையின் ஜாடை புரியாமல்
நீ பாட்டு பாடி ஆவதென்ன
பல்லவி சரணம் முடிந்தவுடன்
நாம் பங்குபெறும் காட்சியென்ன//


வெகு அழகான பாடல் வைரமுத்து வ்ரி, எஸ்.பி.பி. பல்லவி, மனோ குரல்.. கேட்ட பட்டூவிற்கும் போட்ட கல்ஸிற்கும் ஒரு ஓ..

rajeshkrv
28th April 2015, 08:45 PM
யாரும் கேட்காத பாடல்... அப்படின்னு போடத்தான் ஒரு ஆசை. யாரும் கேட்காத ஒரு பாடல் எப்படி போட முடியும்-ன்னு சி.க. தெளிவா கேட்பார். யாரும் விரும்பி கேட்காத பாடல்-ன்னு சொன்னால் என்னை தொலைச்சிடுவாங்க. எல்லாரும் விரும்பிக் கேட்கும் பாடல்-ன்னு சொல்லவும் முடியலை. ஆஹா. இப்படி சொல்லிடலாம் - "எல்லோரும் விரும்பிப் பார்த்து கேட்க வேண்டிய பாடல்". இதுலயும் குறை கண்டுபிடிச்சா இந்த கல்நாயக் என்னதான் செய்வாங்க? பாவம். சரி அந்த பாடல் என்னன்னு பார்த்திடலாமா. பாட்டை பார்த்திட்டு எல்லோர் கிட்ட இருந்தும் லைக்ஸ் அள்ளிடலாம்னு இருக்கேன். ஏமாத்திடாதீங்க மக்களே.

நிலாப் பாடல் 70: "இரவும் நிலவும் வளரட்டுமே. நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே"
----------------------------------------------------------------------------------------------------------------------------------

இங்கே தேவிகா ஆடுகிறார், ஓடுகிறார், ... ஆனால் நடிகர் திலகம் நடக்கிறார் பாருங்கள். சிறிது நேரம் விட்டு மறுபடியும் நடை. இந்த நடையைப் பத்தி நான் என்ன சொல்றது. வேகமாய் நடக்கும் அந்த கம்பீர நடையை பற்றி விளக்கமாக நடிகர் திலகம் திரிக்கு போய் தேடிப் படியுங்கள். இந்த பாடல் ஹிந்துஸ்தானி ராகமான சாரங்க தரங்கிணி-யில் அமைந்தது என்று சொல்கிறார்கள். கோபால் போன்றவர்கள் உறுதிப் படுத்தினால் நல்லது. இந்த கோயில் கொனாரக் சூரியனார் கோயில் என்கிறார்கள். இல்லை கர்நாடகத்தின் பேலூர் மற்றும் ஹளேபீடு என்றும் சொல்கிறார்கள். பார்த்தவர்கள் சொல்லட்டும். (கல்நாயக்கிற்கு ஒன்றும் தெரியாது என்று இப்போதாவது மற்றவர்களுக்கு தெரியட்டும். ஒன்னும் தெரியாமலேயே எம்புட்டு நாளா தெரிஞ்சமாதிரி நடிக்கிறது? உண்மைய சொன்னாலும் இந்த உலகம் நம்ப மாட்டேங்குதே!!!)

பொதுவாக புராணப் படங்களுக்கு திரை இசைத் திலகம் கே.வி. மகாதேவன் இசை அமைத்துத்தான் பார்த்திருப்போம். மெல்லிசை மன்னர்கள் அரிதாக இசை அமைத்த அற்புதமான புராணப் படம். அவர்கள் இசையமைத்த மற்ற புராணப் படங்களை தெரிந்தவர்கள் சொல்வார்கள். பாடலைப் பாடியவர்கள் தமிழ்த் திரையுலகின் பெருமையான ஜோடிப் பாடகர்கள் டி.எம். சௌந்தர் ராஜன் மற்றும் இசையரசி பி. சுசீலா. பாடல் வரைந்தவர் கவியரசர் கண்ணதாசன். உருவாக்கியவர் B. R. பந்துலு.

கவியரசர் சொல்வது - இரவும் நிலவும் வளர்ந்தால் நம் இனிமை நினைவுகள் தொடரும். அடுத்த வரிதான் அவரோட தனித்தன்மை. "தரவும் பெறவும் உதவட்டுமே." இப்படியேதான் பாட்டு முழுக்க என்ன என்னமோ சொல்றாருங்க. உங்களுக்கு நல்லாவே புரியும். வேற வித்தியாசமா உங்களுக்கு புரிந்தால் இங்க சொல்லுங்க. சரி பாட்டு வரிங்களை பார்த்திடலாமோ.

இரவும் நிலவும் வளரட்டுமே நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே
இரவும் நிலவும் வளரட்டுமே நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே
இரவும் நிலவும் வளரட்டுமே
தரவும் பெறவும் உதவட்டுமே நம் தனிமை சுகங்கள் பெருகட்டுமே
இரவும் நிலவும் வளரட்டுமே நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே
இரவும் நிலவும் வளரட்டுமே

மல்லிகைப் பஞ்சணை விரிக்கட்டுமே - அங்கு
மங்கையின் தாமரை சிரிக்கட்டுமே
இல்லையென்னாமல் கொடுக்கட்டுமே - நெஞ்சில்
இருக்கின்ற வரையில் எடுக்கட்டுமே

இரவும் நிலவும் வளரட்டுமே நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே
இரவும் நிலவும் வளரட்டுமே

ஆசையில் நெஞ்சம் துடிக்கட்டுமே - அங்கு
அச்சமும் கொஞ்சம் இருக்கட்டுமே
நாடகம் முழுவதும் நடக்கட்டுமே - அதில்
நாணமும் கொஞ்சம் பிறக்கட்டுமே

இரவும் நிலவும் வளரட்டுமே நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே
இரவும் நிலவும் வளரட்டுமே
-----------------------------------------------------------------------------------------------------------

சரி நடிகர் திலகத்தின் நடை அழகைப் பார்க்கலாமா இப்போது, அந்த அழகிய பாடலைக் கேட்டுக் கொண்டே.

https://www.youtube.com/watch?v=96WAGOzyBTs

கர்ணன் என்பதற்காக நடிகர் திலகத்துடன் எல்லோருமே இனிமையை அள்ளி அள்ளிக் கொடுத்திருக்கிறார்கள்.

கல் நாயக் அருமை அருமை.. பாடலும் உங்கள் எழுத்தும்.
எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது.

rajeshkrv
28th April 2015, 08:46 PM
(இறைவா, இதுவாவது சரியா இருக்கணும்பா!!!)// ஆடிட்டர் இன் அமெரிக்கா.. :)

சி.க சொன்னா சரியில்லாமலா

rajeshkrv
28th April 2015, 08:48 PM
நம்பினால் நம்புங்கள். இந்த அழகான பாடலுக்கு காரணம் மஞ்சள் மகிமை.// :) ஒரு இரவும் நிலவும் .. பாட்டும் குட்..வர்றேன்.வர்றேன்..

//வினோதினியை கூட அழகாக காட்டினார்கள் இந்த படத்தில். சட்டையுடன் அலைய விட்டார் பாலுமகேந்திரா.. என்ன கொடுமை// ராஜேஷ் உங்களுக்கு வயசாய்டுச்சு :) மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன் பிடிக்கும் கேட்டிருக்கிறேன்.. மற்றபாட் கேக்கணும் நன்றிங்ணா

வயசானாலும் ............................ நீங்களே fill in the blanks pannikkonga :)

rajeshkrv
28th April 2015, 09:01 PM
கல் நாயக் நீங்கள் போடாத நிலாப்பாடல்கள் இதோ

https://www.youtube.com/watch?v=bJ7FkqfrHE8

https://www.youtube.com/watch?v=f7PyVeMELqM

https://www.youtube.com/watch?v=b0x_A5HoHjM

rajeshkrv
29th April 2015, 01:33 AM
https://www.youtube.com/watch?v=VeGdaZ-3dAE

https://www.youtube.com/watch?v=gHswF5LmNVY


https://www.youtube.com/watch?v=VSWrRERAX-w

https://www.youtube.com/watch?v=ZIUF2uvJKHY

rajeshkrv
29th April 2015, 01:39 AM
Few more nila songs

https://www.youtube.com/watch?v=Vxi2SU_KUio

https://www.youtube.com/watch?v=nhzL_tloXpA

rajraj
29th April 2015, 07:38 AM
ராஜ்ராஜ்,

ஓர் இரவு பாடல், ஹிந்தியின் சமாதி படப் பாடல் மற்றும் ஆங்கிலப் பாடல் ஜுகல்பந்தி நன்றாக இருக்கிறது. 1940-50 களிலேயே ஆங்கில பாடல்களை காபியடித்தார்கள் என்று சொல்ல முடியுமோ? அப்போது இப்போதைக்கு இருந்த வசதி கிடையாதே. இருந்தாலும் ஆங்கிலப் பாடலை கேட்டு அதை தழுவலாக மும்பையில் கொண்டு வந்து அங்கிருந்து தமிழுக்கு வர இது சாத்தியமாயிருக்கிறது. இது முடிய 6 வருடங்கள் ஆகியிருக்கிறது. இப்போதெல்லாம் அசலுக்கு முன் அதன் காபி நகல் வந்து விடும்.

kalnayak: They did borrow tunes from Hollywood movies in the 50s. I will post another song later. Hollywood movie songs were available in 78 rpm records in the 50s. It was fashionable to sing Hollywood movie songs in my college days ! :)

rajeshkrv
29th April 2015, 09:28 AM
Ankil Doris day's Que sera sera became chinna pennana pothile as well right?

rajraj
29th April 2015, 09:51 AM
Ankil Doris day's Que sera sera became chinna pennana pothile as well right?

Yes ! :)

kalnayak
29th April 2015, 10:24 AM
கர்ணன் படப் பாடலுக்கு லைக்ஸ் அள்ளி வழங்கிய ராஜேஷ், சி.க, ஆதிராம் மற்றும் ரவி அவர்களுக்கு நன்றிகள். படித்துவிட்டு லைக்ஸ் வழங்க மறந்தவர்களுக்கும், மறுத்தவர்களுக்கும், இனிமேல் படித்து விட்டு லைக்ஸ் வழங்கப் போகும் உள்ளங்களுக்கும் நன்றி.

ஆதிராம்,

இப்போதாவது என் எழுத்துக்கு பதில் எழுதியதற்கு நன்றி. இல்லாவிட்டால் நாம் இருவரும் ஒன்றே என்று நினைப்பவர்களுக்கு மேலும் மேலும் தீனி போட்டவர்களாவோம். நடிகர் திலகத்தின் படங்களில் இருந்து பல நிலாப் பாடல்களை எழுதி விட்டேன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். அவர் பங்கேற்காத சில பாடல்களை குறிப்பிட்டுருக்கிறேன். வந்தாலும் வாயசைக்காமல் இருந்த பாடல்களும் உண்டு. அவர் முழுமையாக பங்கேற்ற பாடல்களில் இது நான்காவது (புதையல், சவாலே சமாளி, பலே பாண்டியா முன்னர்). இன்னும் சில வரலாம். நீங்கள் சொல்வது போல காட்சியமைப்பில், காதல் ரசத்தில் (சி.க. அருமையான விளக்கம் கொடுத்திருக்கிறார்), இசையில், பாடியதில் மற்றும் பெரிதும் விரும்பப் பட்ட காதல் ஜோடிகளின் நடிப்பில், நடிகர் திலகத்தின் அட்டகாசமான நடை அழகில் இது சிறந்த நிலாப் பாடல்தான்.

மெல்லிசை மன்னர்கள் தனித் தனியாக இசை அமைத்த புராணப் படங்கள் விவரத்திற்கும் நன்றி.

ரவி,

உங்கள் ஆதரவிற்கு நன்றி. நடிகர் திலகம் பாடலுக்கு மட்டும்தான் மதுரகானத் திரியில் பங்கேற்பீர்களா. வாருங்கள். உங்கள் பதிவுகளை எல்லா இடங்களிலும் படித்துக்கொண்டுதான் உள்ளேன். நடிகர் திலகம் திரி போல அடிக்கடி வந்து உங்கள் பதிவுகளை பதியுங்கள்.

kalnayak
29th April 2015, 10:33 AM
சி.க.,

இரவும் நிலவும் வளரட்டுமே பாடலுக்கு நீங்கள் எழுதிய பதில் பதிவுதான் இங்கே முத்தாய்ப்பு. காதல் ரசம் சொட்டச் சொட்ட எழுதுவதில் நீங்கள் கில்லாடிதான் என்று கவியரசர் வரிகளை அலசி ஆராய்ந்து மறுபடியும் நிருபித்து விட்டீர்கள். ஒரு சின்ன ஊடலுடன் கூடிய காதல் சிறுகதை எழுதி தேவிகா - நடிகர் திலகம் ஜோடியின் காதல் வேதியியலை கொண்டாடிவிட்டீர்கள்.

"செவ்வானம் சின்னப்பெண் சூடும் குங்குமம் ஆகாதோ" பாடல் விவரம் தந்து பட்டாக்கத்திக்கு உற்சாகம் ஊட்டி விட்டீர்கள். நன்றி நன்றி. நன்றி.

kalnayak
29th April 2015, 10:41 AM
ராஜேஷ்,

'இரவும் நிலவும் வளரட்டுமே' பாடலை விரும்பிப் பாராட்டியதற்கு நன்றிகள். இதென்ன திடீரென்று இவ்வளவு நிலாப் பாடல்களை அறிவித்து விட்டீர்கள். இவைகளில் சிலவற்றை பின்னர் நான் எழுதலாம் என்று இருந்தேன். பரவாயில்லை. என் வேலை எளிதானது. இந்த பாடல் வரிசையில் நாளை உனது நாள் படப் பாடல் "வெண்ணிலா ஓடுது கண்ணிலே ஆடுது" ஒன்றை மட்டும் ஏற்கனவே நான் எழுதிவிட்டேன்.

kalnayak
29th April 2015, 11:32 AM
கலைவேந்தன் நீங்கள் கேட்ட நிலாப் பாடல் இன்று. ஏற்கனவே மது அவர்கள் இந்த பாடலை மதுர காணத் திரியில் குறிப்பிட்டு சி.க. அவர்கள் நிலாப் பாடல்களை எழுதினால் நூறு பக்கங்களுக்கு எழுதுவார் என்று சொல்லி இந்த பாடலை குறிப்பிட்டு இருக்கிறார். நான் நிலாப் பாடல்களை எழுதி அதிக பட்சமாக நூறு பாடல்களை மட்டும் எழுதலாம் என்று எழுதிக் கொண்டு இருக்கிறேன். சி.க., ராஜேஷ் போன்றவர்கள் ஏற்கனவே பல பாடல்களை குறிப்பிட்டு விட்டார்கள்.

நிலாப் பாடல் 71: "வெண்ணிலவே, வெண்ணிலவே, வெண்ணிலவே தண்மதியே"
-----------------------------------------------------------------------------------------------------------------------
காதல் மன்னன் ஜெமினி கணேசன் அவர்களின் மீண்டும் ஒரு நிலாப் பாடல். காதல் சோகப் பாடல். "நிலவே என்னிடம் நெருங்காதே ஒரு விதம்" என்றால். இது பெண்ணிடம் இருந்து வரும் சோகம். இங்கே காதலன், காதலியை நிலவென அழைக்கவில்லை. காதலன் வீழ்ந்து கிடக்க உண்மை நிலாவை துணைக்கு காதலி அழைக்கும் பாடல். எழுதியவர் பண்குகத் திறமை கொண்ட கொண்டாடப் படத்தக்க கொத்தமங்கலம் சுப்பு அவர்கள். பாடியவர் பி.லீலா. கலைவேந்தன் போன்ற பலராலும் இந்த பாடல் இன்னும் விரும்பிக் கேட்கப் படுகிறது. காரணம் படத்திற்கு இன்றும் கிடைக்கக் கூடிய வரவேற்பு என்றுதான் சொல்லவேண்டும்.

என்ன நாட்டியப் பேரொளியை சோகத்தை பிழிய வைத்துவிட்டார்கள். நன்றாகத்தான் இருக்கிறது. தமிழ்த் திரை உலகின் பிரமாண்டங்களின் ஆரம்ப கர்த்தா ஜெமினி S.S. வாசன் அவர்கள் இயக்க, C. ராமச்சந்திரா இசையமைத்திருக்கிறார். இசையமைப்பாளர் பற்றிய அதிக விவரங்களை சி.க. தனது இசையமைப்பாளர்கள் தொடரில் தருவார்.

பாடல் வரிகள் (சற்றே சுருக்கமாக):
-------------------
வெண்ணிலவே வெண்ணிலவே
வெண்ணிலவே தண்மதியே என்னுடனே வா வா...
நிலவே நிலவே வா..வா.....!
.. வேறு துணை யாருமில்லை....
விதி வழியே வந்தேன்....
நிலவே நிலவே வா..வா.....!
அஞ்சேல் அஞ்சேல் என்றே ...
அருகினிலே வந்தாரே...அபயமே தந்தாரே......
ஆதரித்தார்...அன்புரைத்தார்....
யாரிவரோ...அறியேனே...!நான் அறியேனே......!
இன்ப நிலா ஓடத்திலே...ஏற்றியே வந்தானே ....
இதயம் கோயில் கொண்டானே ....
எந்த ஊரோ என்ன பேரோ....எங்கிருந்தோ வந்தான் ..
இதயம் கோயில் கொண்டானே ....
வெண்ணிலவே தண்மதியே என்னுடனே வா வா...
நிலவே நிலவே வா..வா.....!

காணொளி:
------------------
https://www.youtube.com/watch?v=D2YsvbhzLCk

கலைவேந்தன், இங்கே பார்த்தீர்களா நாட்டியப் பேரொளி வஞ்சிக்கோட்டை வாலிபனோடு பயணம் செய்கிறார்கள் படகினிலே. சந்தோஷம்தானே?

kalnayak
29th April 2015, 11:56 AM
இங்கே சித்ரா பௌர்ணமி வருவதை முன்னிட்டு ஆளாளுக்கு நிலாப் பாடல்களை எழுதி கொண்டாடி வருகிறோம். (சொல்லவே இல்லை என்று யாரும் காலை வாரி விட்டு விடாதீர்கள். அதுதான் இப்ப சொல்லிட்டேன் இல்லையா). இங்கே ஒருத்தர் என்ன பண்ணுகிறார் பாருங்க.

நிலாப் பாடல் 72: "எங்கே அந்த வெண்ணிலா, எங்கே அந்த வெண்ணிலா"
---------------------------------------------------------------------------------------------------------------

நூற்றுக்கணக்கான பாடலில் வெண்ணிலாவை கொண்டாடிக் கொண்டிருக்க இப்படி ஒருத்தர் வெண்ணிலாவை தேடினால் எப்படி இருக்கும்? நான் அரண்டே போய்விட்டேன். ச்சே. ச்சே. அவரு தன் காதலி வெண்ணிலாவை தேடிக்கிட்டு இருக்காருன்னு பின்னாலதான் தெரிஞ்சது. மனோஜ் பாரதி மற்றும் அனிதா நடிப்பில். தேடினாலும் சற்று நேரத்தில் சோகத்தை கைவிட்டு காதலியை கண்டு சந்தோஷத்துடன் பாடுகிறார் பாருங்கள். சிற்பி இசையமைத்திருக்கிறார். கேட்கவும் சட்டென்று பிடிக்கிறது பாருங்கள். இது போதும். நன்று. உன்னி மேனன் பாடியிருக்கிறார்.

பாடல் வரிகள்:
--------------------------
எங்கே அந்த வெண்ணிலா
எங்கே அந்த வெண்ணிலா
எங்கே அந்த வெண்ணிலா
எங்கே அந்த வெண்ணிலா
கல்லை கனி ஆக்கினாள் முள்ளை மலர் ஆக்கினாள்
எங்கே அந்த வெண்ணிலா
எங்கே அந்த வெண்ணிலா
எங்கே அந்த வெண்ணிலா

தரையில் நடந்த நான் வானில் பறக்கிறேன்
உன்னால் தானம்மா உன்னால் தானம்மா
இரவாய் இருந்த நான் பகலாய் மாறினேன்
உன்னால் தானம்மா உன்னால் தானம்மா
எனக்கென இருந்தது ஒரு மனசு
அதை உனக்கென கொடுப்பது சுகம் எனக்கு
எனக்கென இருப்பது ஒரு உசுரு
அதை உனக்கென தருவது வரம் எனக்கு
நீ மறந்தால் என்ன? மறுத்தால் என்ன?
நீதான் எந்தன் ஒளி விளக்கு
என்றும் நீதான் எந்தன் ஒளி விளக்கு

எங்கே அந்த வெண்ணிலா
எங்கே அந்த வெண்ணிலா

மழையில் நனைகிறேன் குடையாய் வருகிறாய்
வெயிலில் நடக்கிறேன் நிழலாய் வருகிறாய்
தாகம் என்கிறேன் நீராய் வருகிறாய்
சோகம் என்கிறேன் தாயாய் வருகிறாய்
நதிகளில் மீன்கள் நீந்துதம்மா
அதில் நதிக்கொரு வலி ஒன்னும் இல்லையம்மா
உன் நினைவுகள் இதயத்தில் நீந்துதம்மா
அதில் எனக்கொரு வலி ஒன்னும் இல்லையம்மா
நீ இருந்தால் என்ன? பிரிந்தால் என்ன?
காதல் எனக்கு போதும் அம்மா
என் காதல் எனக்கு போதும் அம்மா

எங்கே அந்த வெண்ணிலா
எங்கே அந்த வெண்ணிலா
கல்லை கனி ஆக்கினாள் முள்ளை மலர் ஆக்கினாள்
எங்கே அந்த வெண்ணிலா

-----------------------------------------------------------------------------

காணொளி:
------------------
https://www.youtube.com/watch?v=m2DLHLv2ikY

சி.க. நிலாப் பாடல்கள் எழுதியிருந்தால் வருஷமெல்லாம் வசந்தம்தான். நான் எழுதினதால் இரண்டு மாதங்களுக்கு மட்டும்தான்.

பாடகி சுஜாதா பாடிய அதே பாடல் (பாடல் மட்டும்.)

https://www.youtube.com/watch?v=CtNluYndu-k

JamesFague
29th April 2015, 12:22 PM
Madura Ganam becomes Nila Ganam due to Mr Kalnayak and well supported by Mr CK. Great Going.

uvausan
29th April 2015, 12:32 PM
அன்புள்ள கல்நாயக் , CK , இந்த திரியினில் வருவதற்கு மிகவும் நடுக்கமாகவும் , பயமாகவும் உள்ளது - இருவரும் இவ்வளவு அறிவுபூர்வமாகவும் , அழகாகவும் பாடல்களை அலசுதுவதை பார்க்கும் பொழுது - இந்த திறமைகளில் 0.0001% கூட இல்லாமல் இங்கு வந்து பதிவுகள் போடுவதைப்போல ஒரு கொடுமை இருக்க முடியாது என்று என் உள்மனம் சொல்கின்றது - உங்கள் இருவர் பதிவுகளையும் படிக்கும் போது , சந்திர மண்டலத்திர்க்கே போய் வசிப்பதைப்போல உள்ளது - ஏதாவது ஒரு பதிவை நான் போட்டு அது "நிலாவுடன் " சம்பந்த இல்லாமல் போய் விட்டால் , உங்கள் பதிவுகளில் உள்ள தொடர்பு தடைப்பட்டு விடும் அபாயமும் உள்ளதால் , பூமியில் இருந்துகொண்டே அந்த நிலவின் அழகை உங்கள் பதிவுகள் மூலம் ரசிக்கின்றேன் . அந்த சந்திர மண்டலத்தில் வாசுவையும் , திரு கிருஷ்ணாவையும் சந்தித்தீர்கள் என்றால் என் மரியாதையை அவர்களுக்கு தெரிவிக்கவும் . சூரியமண்டலத்திக்கும் நீங்கள் இருவரும் செல்லும் வாயிப்பு உண்டா ? - நிலா பதிவுகளை நீங்கள் இருவரும் தொகுத்து ஒரு புத்தகமாக flipcart இல் பதிவிட வேண்டும் என்பது என் அவா .

அன்புடன்
ரவி

kalnayak
29th April 2015, 02:00 PM
அன்புள்ள கல்நாயக் , CK , இந்த திரியினில் வருவதற்கு மிகவும் நடுக்கமாகவும் , பயமாகவும் உள்ளது - இருவரும் இவ்வளவு அறிவுபூர்வமாகவும் , அழகாகவும் பாடல்களை அலசுதுவதை பார்க்கும் பொழுது - இந்த திறமைகளில் 0.0001% கூட இல்லாமல் இங்கு வந்து பதிவுகள் போடுவதைப்போல ஒரு கொடுமை இருக்க முடியாது என்று என் உள்மனம் சொல்கின்றது - உங்கள் இருவர் பதிவுகளையும் படிக்கும் போது , சந்திர மண்டலத்திர்க்கே போய் வசிப்பதைப்போல உள்ளது - ஏதாவது ஒரு பதிவை நான் போட்டு அது "நிலாவுடன் " சம்பந்த இல்லாமல் போய் விட்டால் , உங்கள் பதிவுகளில் உள்ள தொடர்பு தடைப்பட்டு விடும் அபாயமும் உள்ளதால் , பூமியில் இருந்துகொண்டே அந்த நிலவின் அழகை உங்கள் பதிவுகள் மூலம் ரசிக்கின்றேன் . அந்த சந்திர மண்டலத்தில் வாசுவையும் , திரு கிருஷ்ணாவையும் சந்தித்தீர்கள் என்றால் என் மரியாதையை அவர்களுக்கு தெரிவிக்கவும் . சூரியமண்டலத்திக்கும் நீங்கள் இருவரும் செல்லும் வாயிப்பு உண்டா ? - நிலா பதிவுகளை நீங்கள் இருவரும் தொகுத்து ஒரு புத்தகமாக flipcart இல் பதிவிட வேண்டும் என்பது என் அவா .

அன்புடன்
ரவி

ரவி,

உங்கள் இந்தப் பதிவில் இருக்கும் கற்பனை வளங்களை விடவா நான் என் நிலாப் பாடல் பதிவுகளில் சொல்லிவிட்டேன். நான் சந்திர மண்டலத்திற்கு பயணம் செல்லவில்லை. வாய்ப்பு கிடைத்தால் உங்களையும் அழைக்கிறேன். நான் சென்னைவாசிதான். நிலாப் பாடல்கள் எழுதியதால் சந்திரனுக்குப் போனால் சூரியனுக்கு போவதற்கு சூரியனைப் பற்றி பாடல்கள் எழுதவேண்டும். நீங்கள் என் முயற்சிக்க கூடாது?உங்கள் அனுபவங்களில் நீங்கள் பெற்ற அறிவு இந்த 0.00001% கூட எனக்கு கிடைக்காததால்தான் இங்கே நான் நிலாப் பாடல்கள் எழுதிக்கொண்டு இருக்கிறேன். நீங்கள் அப்படியே மாற்றி சொல்கிறீர்கள்.

என்னை எழுதத் தூண்டி உற்சாகப் படுத்தியவர்களில் வாசுவும் முதன்மையானவர். அவர் விரைவில் வந்து பங்கு கொள்ளவேண்டும் என்று எனக்கும் பேராவல் உள்ளது. அடுத்த நிலாப் பாடலை அவருக்கே சமர்பிக்கலாம் என்று இருக்கிறேன். கிருஷ்ணாவும் மதுரகானத் திரியில் அளப்பரிய பங்கெடுத்தவர். நீண்ட நாட்கள் வராமல் இருப்பதன் காரணம் தெரியவில்லை. எல்லோரும் வரவேண்டும். எழுத வேண்டும்.

kalnayak
29th April 2015, 02:04 PM
Madura Ganam becomes Nila Ganam due to Mr Kalnayak and well supported by Mr CK. Great Going.

நன்றி சித்தூர் வாசுதேவன், நெய்வேலி வாசுதேவன் வராத குறையை அவ்வப்போது வந்து நீங்களாவது குறையுங்கள்.

kalnayak
29th April 2015, 02:51 PM
வாசுதேவன் அவர்கள் எங்கிருந்தாலும் ஞான ஒளி என்று கேட்டால் வந்து விடுவார் என்றார்கள். எனவே இந்த நிலாப் பாடல் அவருக்கு சமர்ப்பித்து இந்த திரிக்கு அவரை வருமாறு அழைக்கிறேன்.

நிலாப் பாடல் 73: "மண மேடை மலர்களுடன் தீபம் "
-------------------------------------------------------------------------------
சற்றே அவசரப் படாமல் பொறுமையாக இந்தப் பாடலை படித்தும் கேட்டும் இது ஒரு நிலாப் பாடல்தான் என்று சம்மதித்து ஏற்றுக்கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். இத்திரைப் படத்தில் நடிகர் திலகம் நடித்த பாடல்களில் நிலா எதுவும் வரவில்லை. இந்த பாடலில் மட்டும் தான் பகலில் தெரியும் நிலவு வருகிறது. எனவே நெய்வேலி வாசுதேவன் முழு மனதுடன் இதை ஏற்றுக் கொண்டு திரிக்கு விரைவில் வரவேண்டும். சந்தோஷமான விஷயம் இது ஒரு சந்தோஷ பாட்டு. சாரதாவும் ஸ்ரீகாந்தும் நடித்த காதல் பாடல். மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதன் இசையில் இசையரசி பி. சுசீலா பாடியிருக்கிறார் கண்ணதாசன் பாடலை. நல்ல இனிமையான பாடல்தான்.

பாடல் வரிகள்:
----------------------

மண மேடை மலர்களுடன் தீபம்
மங்கையர் கூட்டம் மணக்கோலம்
மாப்பிள்ளை பெண் என்றால் இவர் என்பார்
என்றும் வாழ்க மணமங்கை என்பார்

(மண)

நான் இரவில் எரியும் விளக்கு
நீ என் காதல் மணிமாளிகை
நீ பகலில் தெரியும் நிலவு
நான் உன் கோவில் பூந்தோரணம்
மணி ஓசை ஒலிக்கும் நம் இல்லம் எங்கும்

(மண)

என் மடியில் விடியும் இரவு
நம் இடையில் வளரும் உறவு
தேகம் தழுவும் மலர் காற்று
மோகம் பரவும் பேரு மூச்சு
நான் பெறுவேன் சுகமே சுகமே

(மண)

என் தனிமை உலகம் இனிமை
என் தாய் வீடும் நினைவில் இல்லை
நான் உறவில் உனது அடிமை
உன் துணை போல சுகமும் இல்லை
அருள் புரிவான் தேவன் நம் பாதை எங்கும்

(மண)

மண மேடை மலர்களுடன் தீபம்
மங்கையர் கூட்டம் மணக்கோலம்
மாப்பிள்ளை பெண் என்றால் இவர் என்பார்
என்றும் வாழ்க மணமங்கை என்பார்

(மண)

நான் இரவில் எரியும் விளக்கு
நீ என் காதல் மணிமாளிகை
நீ பகலில் தெரியும் நிலவு
நான் உன் கோவில் பூந்தோரணம்
மணி ஓசை ஒலிக்கும் நம் இல்லம் எங்கும்

(மண)

என் மடியில் விடியும் இரவு
நம் இடையில் வளரும் உறவு
தேகம் தழுவும் மலர் காற்று
மோகம் பரவும் பேரு மூச்சு
நான் பெறுவேன் சுகமே சுகமே

(மண)

என் தனிமை உலகம் இனிமை
என் தாய் வீடும் நினைவில் இல்லை
நான் உறவில் உனது அடிமை
உன் துணை போல சுகமும் இல்லை
அருள் புரிவான் தேவன் நம் பாதை எங்கும்

(மண)

காணொளி:
------------------

https://www.youtube.com/watch?v=cfUedZ9DCjs

Russellzlc
29th April 2015, 08:30 PM
அனைவருக்கும் வணக்கம்.

கல்நாயக், சின்னக்கண்ணன் எப்படி இருக்கீங்க?

கல்நாயக், இதுதான் டெலிபதி என்பதோ? பணிகள் காரணமாக பல நாட்களாக நமது திரியை பார்க்க முடியவில்லை. (மக்கள் திலகம் திரிக்கும் அவ்வப்போது டிமிக்கி கொடுத்து விடுகிறேன்). நீண்ட நாட்கள் ஆயிற்றே பார்ப்போம் என்று இங்கே வந்து பார்த்தால், நான் கேட்ட பாடலை போட்டுள்ளீர்கள். துள்ளாத காதல் மன்னரையும், சோகமான நாட்டியப் பேரொளியையும் பார்த்தால் கஷ்டமாகத்தான் இருக்கிறது. என்றாலும் மிக இனிமையான பாடல்.

திரியை தாமதமாகப் பார்த்தாலும் என் கொள்ளுத்தாத்தா பற்றி நீங்கள் குறிப்பிட்டதை தாமதமில்லாமல் அவரிடம் கூறி உங்கள் பதிவையும் காண்பித்தேன். மகிழ்ச்சியடைந்தார். ‘உன்னைப் போலவே அவரும் (நீ்ங்கள்) சின்னப் பையன்தானா?’ என்று கேட்டார். ‘அப்படித்தான் சொல்கிறார் தாத்தா’’ என்றேன் நான். அதற்கு அவர், ‘‘பதிவுகளைப் பார்த்தால் முதிர்ச்சியும் பக்குவமும் தெரிகிறது. மஞ்சள் மகிமை பாட்டெல்லாம் வேறு போடுகிறார். நம்ப முடியவில்லையே. ஏறக்குறைய அவருக்கு என் வயது இருக்கும்போலிருக்கிறதே?’’ என்றார். உங்கள் பதிவுகளை படித்து மகிழ்ச்சியுடன் பாராட்டினார்.

இத்தனை நாள் படிக்காமல் விட்டுப் போன உங்கள் பதிவுகளை நானும் படித்து மகிழ்ந்தேன் கல்நாயக். இருவர் பட பாடலை ‘வெண்ணிலா கியூப்’ என்று நீங்கள் புதுமையாக சிந்தித்து வர்ணித்திருப்பது ரசிக்கத்தக்கது. தமிழ்த்திரையில் நிலவு பற்றி வந்த பாடல்கள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் நீங்கள் போட்ட பாடல்களை பார்த்தால் போதும். இன்னும் எவ்வளவு ஸ்டாக் வைத்துள்ளீர்கள்? ரவி சார் கூறியபடி சூரிய மண்டலத்துக்கும் செல்லும் எண்ணம் உண்டா?

நான் உங்களை ஏமாற்ற மாட்டேன். இரவும் நிலவும் பாடலுக்கு லைக் போட்டு விட்டேன். 2 லைக் போட முடியாது என்பதால் தேங்க்சும் போட்டு விட்டேன். நன்றி.


சின்னக்கண்ணன்,

வழக்கம்போல உங்கள் குறும்பு பதிவுகள் அமர்க்களம். ‘இரவும் நிலவும்..’ பாடலுக்கு உங்கள் விளக்கம் அபாரம். அந்தப் பாடலுக்கு இப்படி ஒரு விளக்கத்தை இதுவரை கேட்டதில்லை. படித்து குலுங்கி சிரித்தேன். நன்றி.


எனது பதிவுகளுக்கு பாராட்டு தெரிவித்த சகோதரி ஸ்டெல்லா ராக் அவர்களுக்கு நன்றி.


வாசு சார், கிருஷ்ணா சார் வராதது எனக்கும் வருத்தமாகத்தான் இருக்கிறது. திரியை பார்க்கிறார்களா? என்று தெரியவில்லை. இருவரும் இல்லாத திரி சூரிய, சந்திரர்கள் இல்லாத வானம்போல இருக்கிறது. அனைவரின் அன்பான அழைப்புகளை ஏற்று இருவரும் திரிக்கு வர வேண்டும் என்று வேண்டுகிறேன்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

rajeshkrv
29th April 2015, 08:49 PM
ராஜேஷ்,

'இரவும் நிலவும் வளரட்டுமே' பாடலை விரும்பிப் பாராட்டியதற்கு நன்றிகள். இதென்ன திடீரென்று இவ்வளவு நிலாப் பாடல்களை அறிவித்து விட்டீர்கள். இவைகளில் சிலவற்றை பின்னர் நான் எழுதலாம் என்று இருந்தேன். பரவாயில்லை. என் வேலை எளிதானது. இந்த பாடல் வரிசையில் நாளை உனது நாள் படப் பாடல் "வெண்ணிலா ஓடுது கண்ணிலே ஆடுது" ஒன்றை மட்டும் ஏற்கனவே நான் எழுதிவிட்டேன்.

கலை, நன்றி
ஓ அப்படியா அது மட்டும் கண்ணில் படவில்லை .. ஏதோ இன்று நிலாப்பாடல்களில் விட்டுபோனவற்றை பதியலாமே என்று நினைத்து பதிந்துவிட்டேன்.

rajeshkrv
29th April 2015, 08:53 PM
மறந்து போன பாடல்கள் வரிசையில்
இது வெளிவந்தபோது அதிகம் வானொலியில் கேட்டது

https://www.youtube.com/watch?v=oeN1fVS-Psg

chinnakkannan
29th April 2015, 09:45 PM
*
வாங்க கலை வேந்தன்.. செளக்கியமா…அண்ட் தாங்க்ஸ்..உங்கள் பாராட்டுக்களுக்கு..

வரும்போதுபாட்டுக் கொண்டுவந்திருக்கலாமில்லை.. பூகம்பம் நேப்பாளில் நடந்திருக்கிறது ..உருக்குலைந்த கட்டிடங்கள் மானுமெண்ட்ஸ் எல்லாம் பார்க்கும் போது மனது உருகி வேதனைப் படுகிறது..அதே சமயத்தில் எனக்குஒரு அரசியல் சம்பவம் நினைவுக்கு வருகிறது என்று ஆரம்பித்துசம்பவத்தை ச் சொல்லி இதையே ம.தி என்ன சொல்லியிருக்கிறாரென்றால்.. அப்படின்னு முடிச்சு ஒரு பாட் கொடுத்திருக்கலாம்..( உங்க ரூட் கரீட்டா சொல்லிட்டேனா)

*
கல்நாயக்..என்ன பண்றது..பகல்ல ஒரே வேலை.. ராத்திரிதான் வர முடியறது..( எதாவது தப்பாச் சொல்றேனா என்ன!) //வருஷமெல்லாம் வசந்தம்தான்.// இப்பவும் அப்படித் தான் ஓய் இருக்கு….ஆமா ஒரே ஒரு நிலவு அதுவும் ஒரே தடவை வர்றதவச்சுக்கிட்டு வராதவங்களை எல்லாம் வரவச்சுட்டீங்களே.. நீங்க தான்மார்க்கெட்டிங்பெர்ஸன்.. மண மேடை நல்ல பாட்டு கொ.வை.ஸ்ரீ!

பாருங்க ரவி வந்திருக்காரு.. வாங்க அண்ட் தாங்க்ஸ்ங்க
சூரிய மண்டலத்துல சுடுமேங்க.. ஹையாங்க்..! ம்ம் அழகா ஒருகட்டுரை எழுதுங்க

ஆதிராம், எஸ்.வாசு தேவன் வாங்க .. செளக்கியமா..பார்க்க சந்தோஷமாக இருக்கிறது.. ஆமா எஸ்.வாசுதேவன்..அந்த தீஸ்ரி மன் ஜில் ஆஜா ஆஜா போட்டுட்டீஙக்ளா என்ன..(ஹையா வலை விரிச்சாச்சு)

.rajesh.. எப்படி ஃபில் அப் பண்ணிக்கறது.. ம்ம் ஒங்க நிலாப் பாடல்களை இனிமேத் தான் ஒன்பை ஒன் கேக்கப்போறேன்.. தாங்க்ஸ்ங்க்ணா..

இனி அடுத்த போஸ்டில் வரப்போகிற பருவம் என்னன்னாக்கா…

chinnakkannan
29th April 2015, 09:46 PM
பருவமே…பழைய பாடல் பாடு – 3

படக் படக்கென எழுதிவிடலாம் என்று தான் தொடர் ஆரம்பித்தால், வேலை..வேலை.. ப்ளஸ்ஸ்ஸ்ஸ் மைனஸான சோம்பல்…

அது என்னவோ கொஞ்சம் மசமசன்னு சோம்பலா உள்ளுக்குள்ள குறும்பா கொஞ்சம் கண்கள்ல கனவுகட்டி ஒர்ரே இடத்துல எதாவதுபடிச்சுச் சிரிச்சுக்கிட்டு இருக்கணும்னு தோணுது…அஃதாவது பருவப்பொண்ணுங்களோட மன நிலைன்னு சொல்லலாமா (அச்சோ நான் பருவப் பையன் ஆச்சே!) :)

அங்கம் வளர்ந்துவிடும் அழகாக நடைமலரும்
..ஆடவர்கண் பார்த்தாலே அனிச்சையாகத் தலைகுனியும்
சங்குக் கழுத்தழகும் சங்கமிக்கும் இடமழகும்
...சற்றே தனிமையிலே பார்த்தங்கே களிகொள்ளும்
சொந்தம் பாராட்டி சோர்வுவரத் தான்மிரட்டும்
…சொக்கி நிற்காமல் சுறுசுறுப்பாய் இருவென்றே
விந்தைக் கருத்துக்கள் வஞ்சியரும் கேட்பதுவும்
…மிதமாய் வந்துநிற்கும் மங்கையெனும் பருவமன்றோ..

ஆக பதினொன்றிலிருந்து பதினான்கு வரை பெண்ணின் உடலில் ஏற்படும் வளர்ச்சி மாற்றங்களைப் மங்கைப் பருவம் என்பார்கள்..

அதுல பார்த்தீங்கன்னா.. பாட்டுல்லாம் இருக்கு மங்கையரில் மகராணி மாங்கனி போல் பொன்மேனின்னு.. ஆனா.. அந்தப் பாட்டுக்கு ஆடுற பெண்ணிற்குக் குறைந்த பட்சம் இருபத்திரண்டு வயதாவது இருக்கும் என நினைக்கிறேன்..

மங்கைக்கு என்ன பாட் போடலாம்..

என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட மங்கை பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி
நெஞ்சைத் தொட்டு பின்னிக் கொண்ட நங்கை ஊரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி

எனக்கு ரொம்பப்பிடித்த பாட்டு..ஏற்கெனவே போட்டிருந்தாலும்ம்ம் மீண்டும் மீண்டும்கேட்கலாம்..

https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=lL3amisRPzg

கார்த்திக் மோனிஷா..உன்னை நினச்சேன் பாட்டுப் படிச்சேன்..

இந்த மோனிஷா படம் வந்த சில மாதங்களில் இறந்துவிட்டார்கள் தெரியும் தானே..

பதினாறு வயதிருக்கும் என நினைக்கிறேன்..ஆனால் பார்வைக்கு இன்னும் சின்னப்பெண்ணாகத் தான் இருக்கிறார்..ம்ம்

*
இன்னும் ஒரு மங்கை..

மங்கை நான் கன்னித் தேன்
காதலன் தீண்டும் போது
கைகளை மன்னித்தேன் ( அதானே பார்த்தேன் என நீங்கள் சொல்வது கேட்கிறது!) :)

கொத்து மலர்க்குழல் பாதம் அளந்திடும் சித்திரமோ
முத்து நகை தரும் மெல்லிய செவ்விதழ் ரத்தினமோ
துயில் கொண்ட வேளையிலே
குளிர் கண்ட மேனியிலெ
துணை வந்து சேரும்பொது சொல்லவோ இன்பங்கள் ( ஹீம்ம்.. )

https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=ceHH1WelVBs

அடுத்த பருவத்துல வர்றேன்..

rajraj
29th April 2015, 11:23 PM
Ankil Doris day's Que sera sera became chinna pennana pothile as well right?

Thanks Rajesh for reminding me. Here are the songs:

From Aravalli (1957)

Chinna peNNaana podhile annaiyidam........

http://www.youtube.com/watch?v=kGPO7CCU8eA



From "The Man Who Knew Too Much"(1956), a Hitchcock thriller

Que Sera Sera
( When I was a little girl I asked my mother......)

http://www.youtube.com/watch?v=xZbKHDPPrrc

Que Sera Sera was a very popular song and was translated into several languages. It also won an Oscar.

You might want to watch the movie.

rajeshkrv
30th April 2015, 04:05 AM
Thanks Rajesh for reminding me. Here are the songs:

From Aravalli (1957)

Chinna peNNaana podhile annaiyidam........

http://www.youtube.com/watch?v=kGPO7CCU8eA



From "The Man Who Knew Too Much"(1956), a Hitchcock thriller

Que Sera Sera
( When I was a little girl I asked my mother......)

http://www.youtube.com/watch?v=xZbKHDPPrrc

Que Sera Sera was a very popular song and was translated into several languages. It also won an Oscar.

You might want to watch the movie.

i have seen the movie. Doris day is my fav

vasudevan31355
30th April 2015, 12:04 PM
அனைத்து நண்பர்களுக்கும் என் அன்பான வணக்கங்கள்.

பல சொந்த அலுவல்கள் காரணமாகவும், ஆபிஸ் வேலைகள் நிமித்தமாகவும் திரிக்கு வர இயலவில்லை. மன்னிக்கவும். தங்கள் எல்லோருடைய அன்பான அழைப்புக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

சின்னக் கண்ணன், கல்நாயக், ஸ்டெல்லா மேடம், கலை வேந்தன் சார், எனதருமை ராஜேஷ் அனைவர்க்கும் என் உளமார்ந்த நன்றிகள்.


கலைவேந்தன் சார்,

ஒரு எழுத்து விடாமல் திரியை தொடர்ந்து படித்து வருகிறேன். தங்கள் பங்களிப்புகளையும் படித்து மனம் மகிழ்ந்தேன். மிக்க நன்றி!


கல்நாயக், சின்னக்கண்ணன்,

அற்புதமான பங்களிப்புகளோடு திரியை கொஞ்சமும் தொய்வில்லாமல் அருமையாக நடத்தி வருகிறீர்கள். மிகவும் பெருமிதமாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. உங்கள் பதிவுகள் அனைத்தையும் படித்து விட்டேன்.
உங்கள் இருவரின் சரமாரியான உழைப்போடு, ராஜேஷ், கலை சார், ராஜ்ராஜ் சார், மது அண்ணா இன்னும் பலரின் பங்களிப்போடு, திரி அமர்க்களமாகப் பயணிப்பதைப் பார்த்து நிஜமாகவே மனம் சந்தோஷப்படுகிறது. அனைவருக்கும் என் இதயபூர்வமான வாழ்த்துக்களும் நன்றிகளும்.


கல்நாயக்,

நிலாப் பாடல்களின் தொகுப்பு நில்லாப் பாடல்களாக வில்லிலிருந்து புறப்பட்ட அம்புகள் போல் மனதிற்குள் இன்பக்கணை தொடுக்கிறது. இதற்காக தாங்கள் எவ்வளவு சிரமம் எடுத்துக் கொண்டுள்ளீர்கள் என்பதும் தெளிவாகப் புரிகிறது. நன்றி என்பது சம்பிரதாய வார்த்தை. விரைவில் நூறைத் தொட வாழ்த்துக்கள்.

தங்களின் 'ஞானஒளி' பாடல் என்னை இங்கே இழுத்து வந்து விட்டது என்றால் மிகையில்லை. சொன்னால் நம்புவீர்களோ இல்லையோ தெரியாது. நேற்றுதான்... உங்கள் பதிவு வருவதற்கு சற்று நேரத்திற்கு முன்தான் தலைவரின் இறுதிக் கட்ட உச்ச நடிப்புகளை 'ஞானஒளி' யில் பல நூறாவது தடவையாக பிரம்மித்து போய் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன். சற்று நாழிகைக்கெல்லாம் பார்த்தால் உங்கள் 'மண மேடை' பாடல் பதிவு. கடவுள் அனுகிரஹம் இல்லாமல் வேறு என்ன? ஐ மீன் நான் வணங்கும் 'ஆண்டனி' தெய்வம் ஆசி இல்லாமல் வேறு என்ன?

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/VTS_02_2.VOB_20150430_115752.571.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/VTS_02_2.VOB_20150430_115752.571.jpg.html)

அதுவும் அவர் மாதா சிலையின் முன் நின்று,

"மாதாவே! என் மகளை தெருவில நிக்க வச்சுட்டியே! எனக்கேன் இந்த வாழ்வு மாதாவே!"

என்று புலம்பி 'டக்'கென்று திரும்பி, இரு கைகளையும் வயிற்றின் குறுக்கே கிராஸ் போல வைத்து, பின் உடனே படுகம்பீரத்துடன் கைகளை பின்கட்டி நடந்தபடி ,

"லாரன்ஸ்! Is a combination of cobra and the wounded tiger?"

என்று கர்ஜிப்பாரே!

(இந்த 'tiger' என்ற வார்த்தையை உச்சரித்து முடித்தவுடன் அந்த தெய்வத்தின் வாயை கவனியுங்கள். வலதுபுற உதடுகள் சற்றே மேலேறி, அதே சமயம் இடதுபுற உதடுகள் கீழறங்கி, இரு உதடுகளும் ஒட்டிய நிலையில், மேஜர் தனக்கு விடுத்திருக்கும் சவாலை அந்த முகம் எப்படி வெறித்தனமாக, ஆங்காரமாக, அதே சமயம் முரட்டுத்தனமாக எதிர்கொள்கிறது. (அந்த மீசையின் ஏறி இறங்கிய அம்சத்தை என்னவென்று எழுத!?) சற்றே மேல்நோக்கி பார்க்கும் அந்த முகத்தில்தான் எத்துணை வேதனை கலந்த வெறி? ("உன்னலதாண்டா நான் பெத்த மகளை அணுகக்கூட முடியவில்லை... இருடா! உன்னை வச்சுக்கிறேன்...) அதே சமயம் தன் இயலாமையையும் வெளிபடுத்தத் தயங்காது. அந்தக் கண்களில்தான் என்ன ஒரு ஆங்கார வெறி! கண்களை மூடிக் கொண்டு அந்த குரலைக் கேட்டால் மிரண்டு போவீர்கள். அந்த மீசைக்கும், பார்வைக்கும் ஒரு சிங்கமாகவே காட்சியளிப்பார். கோப சிங்கம், பாச சிங்கம் என்று இரண்டு குணங்களையும் மாற்றி மாற்றி காட்டுவார். எப்படியானாலும் சிங்கம் சிங்கம்தானே!

வேண்டாம் கல்நாயக். என் கண்களிலிருந்து கண்ணீர் பெருக ஆரம்பிக்கிறது. இதற்கு மேல் சத்தியமாக முடியாது.

தலைவரின் இன்னொரு அருமையான ஸ்டைல் பாடலோடு விரைவில் மீண்டும் வருகிறேன்.

அதுவரை உங்கள் அனைவரது அன்பையும் எண்ணியபடி,

உங்கள் அனைவரின் பதிவுகளை ரசித்தபடி

உங்கள் அனைவரின்

வாசுதேவன்.

(சி.க,

அடுத்த பாகத்தைத் தொடங்க இப்போதே ரெடியாகுங்கள்)

chinnakkannan
30th April 2015, 12:41 PM
வாசு சாஆஆர்......:) :boo: வாஆஆஆங்க.....!

நலமா .. செளக்கியமா...ஆஹா.. இப்படிக் கலர்ஃபுல் எழுத்தைப் பார்த்து எவ்வ்வ்வளோ காலம் ஆஆஆச்சு.... வாங்க வாங்க..சிக்கா ஹாப்பி அண்ணாச்சி :)

வந்தவுடனே எனக்கொரு குண்டா..:)

பூசு மஞ்சளெனப் பொன்வானம் சிவந்ததுபோல்
...பொலிந்தே தெம்மாங்கு பாடிடுதே எம்முள்ளம்
வாச மலர்களையே வாகாகத் தான் தொடுத்து
...வாழ்த்தி வரவேற்கக் காத்திருந்தோம் பலநாளாய்
நேசங் கொண்டவுளம் நித்தநித்தம் பேசியதை
..நேரி லார்சொன்னாரோ நிச்சயமாய் ஈசன் தான்
ஆசை நிறைசெய்த அவன் தாளை வணங்கித்தான்
..பாசம் பலகொண்டு வாசுவுமை வரவேற்போம்..!


மன்னவன் வந்தானடி..தோழின்னு பப்பி குதிச்சுக் குதிச்சு ஆடற பாட்டு உமக்காக..!

https://youtu.be/5-y-J9Pabq8

adiram
30th April 2015, 12:52 PM
What a surprise Neyveli Vasudevan sir,

Gnana Oli patri pesumbothellaam neengal unarchi vasappaduvadhil irundhe, andha padam...che..che.. andha kaaviyam endha alavu ungal manadhudan ondri vittadhu endru therigiradhu. (already known, but once again).

Ungalai varavazhaikkum 'maaya valai' Gnana Oli patri padhivu iduvadhuthaan.

kalnayak
30th April 2015, 03:02 PM
வாங்க வாசு வாங்க.

மதுர கானத் திரியே திருவிழாக்கோலம் பூண்டு விட்டது. உங்களுக்காக நாங்கள் எல்லோரும் எவ்வளவு காத்திருந்தோம் என்பது இப்போது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். . நீங்கள் எழுதும் ஒவ்வொரு நாளும் இங்கு வருகை தரும் அனைவருக்கும் உற்சாகத் திருவிழாதான். என்னையெல்லாம் இவ்வளவு எழுத வைத்து நீங்கள் எழுதாமல் இருந்தது கடினமாக இருந்தது. நீங்களும் எழுதி, கிருஷ்ணாவும் கலந்து கொண்டால் திரியில் பட்டாசு கொளுத்தி கொண்டாடும் வழி வகைகளைத் தேட வேண்டும். எனது ஞான ஒளி பாடலின் வேண்டுகோளை ஏற்று வருகை தந்ததற்கு நன்றி. நன்றி. நன்றி. உங்கள் வீக்னஸ் எங்களுக்கு எல்லாம் பலம். இருந்தாலும் உங்களை கண் கலங்க வைத்ததற்கு எனக்கும் கஷ்டமாக இருக்கிறது. நீங்கள் நேரம் கிடைக்கும் போது ஒன்றிரண்டு பதிவுகள் இட்டிருந்தால் உங்கள் பலவீனத்தை இப்படி பயன் படுத்தி இருக்கமாட்டோம்.

நீங்கள் வராமல் இருந்த போது உங்கள் வரவை எதிர்பார்த்த சிலர் இப்படி சொன்னார்கள்: "நீ வருவாய் என நான் இருந்தேன். ஏன் மறந்தாய் என நான் அறியேன்."
சிலர் இப்படி இருந்தோம்: "நீ வரவேண்டும் என எதிர் பார்த்தேன்"
நீங்கள் வந்த பின்னே சி.க சொன்னார்: "மன்னவன் வந்தானடி"
நான் சொல்கிறேன்: "வந்தாலும் வந்தான்டி ராஜா"

சித்ரா பௌர்ணமி வருகிறதே!!! நீங்களும் பௌர்ணமியாய் வந்துட்டீங்க. கலக்குங்க. வாழ்த்துகள்.

https://www.youtube.com/watch?v=LWblg-F5Xnw

https://www.youtube.com/watch?v=UWv56Q0854Y

https://www.youtube.com/watch?v=sHWZbgTR1n8

https://www.youtube.com/watch?v=uckFlXsmneU

adiram
30th April 2015, 03:35 PM
CK & Kalnayak,

To welcome Vasu sir, these five songs are not enough. Some more are...

'Varugave varugave... thalaivaa' (Aadhi paraskathi)

'Thalaivaa Dhavapputhalvaa varugave' (Agathiyar)

'Varavendum Maharaja' (Varaverpu)

chinnakkannan
30th April 2015, 03:53 PM
இன்னிக்கு மீனாட்சி திருக்கல்யாணம்..மதுரையில் ஒரே கோலாகலமாக இருக்கும்..ம்ம் எவ்ளோ நாளாச்சு பார்த்து..சரி அதைக் கொண்டாடறதுக்கு பாட் போட்டுடலாம்..

https://youtu.be/9hHq2lYof4U


யாரங்கே முழிக்கறது..அதான் பாட்டு நடுல்ல அபிராமியேன்னு வருதுங்களே :)

kalnayak
30th April 2015, 05:35 PM
கலைவேந்தன்,

உங்களுடைய லைக்சுக்கும், தான்க்சிற்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள். உங்கள் கொள்ளுப் பேரரை நான் நலம் விசாரித்ததாக சொல்லுங்கள். மஞ்சள் மகிமை படத்திலிருந்து பாடல் போட்டதும் நானும் உங்கள் வயதுதான், உங்கள் காலத்திய நண்பன் கிடைத்துவிட்டேன் என்று குஷியாகி விட்டீர்கள் போலிருக்கிறது. மன்னிக்கவும். நான் அவ்வளவு பெரியவன் இல்லை. வயது வித்தியாசம் பாராமல் நட்பு கொள்ளலாம். யூட்யூபில் தேடினால் மஞ்சள் மகிமை (ராஜேஷ் சொன்னார்), ஆத்மா சாந்தி (நீங்கள் சொன்னீர்கள்) கிடைக்கிறது. உங்களைப் போன்று சிவகவி, சந்திரலேகா, அவ்வையார், வஞ்சிக் கோட்டை வாலிபன் போன்ற படங்களை வெளியான அன்றே காணும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை, மிகவும் பின்பே பிறந்ததினால். அதனால் என்ன. நீங்கள்தான் இருக்கிறீர்களே இந்த திரியில், அந்த அனுபவங்களை எங்களோடு பகிர்ந்து கொள்ள.


மற்றபடி நான் மேற்கொண்டு சூரியனுக்கு செல்வதாயில்லை. சந்திர மண்டலத்திலிருந்து விரைவில் திரும்பி வந்துவிடுவேன். வேறு வேலைகள் உள்ளன. அறிவிக்கிறேன்.

எல்லோருடைய வேண்டுகோளுடன் உங்களுடையதையும் ஏற்று வாசுதேவன் திரிக்கு வந்துவிட்டார். வேண்டுகோளை வைத்ததற்கு உங்களுக்கும் நன்றி.

அதானே சி.க. சொல்வது போல் நீங்கள் ஏன் நேபாள் பூகம்ப நிகழ்ச்சியோடு ஒப்பிட்டு ஒரு அசாதாரண பாட்டை அறிவிக்கக் கூடாது.

Russellzlc
30th April 2015, 05:45 PM
வாசு சார்,

வாங்க... வாங்க.. வாங்க... உங்கள் அற்புதமான எழுத்துக்களை படித்து எவ்வளவு நாட்கள் ஆயிற்று. சார், நாம் ஒவ்வொருவருமே அலுவல் மற்றும் குடும்ப பொறுப்புகளுக்கிடையே ரிலாக்சுக்காகவும் மனத்திருப்திக்காகவும் திரையில் நாம் ரசித்ததை பகிர்ந்து கொள்கிறோம். நாம் பார்க்காத கோணங்களை மற்றவர்கள் கூறும்போது ‘அட... ஆமாம்..’ என்று ரசித்து மகிழ்கிறோம்.

உங்களைப் போன்று நுணுக்கமாக எடுத்துச் சொல்பவர்கள், ரவி சார் போன்று நல்ல கருத்துக்களை கூறுபவர்கள், கிருஷ்ணா சார், சின்னக்கண்ணன், கல்நாயக் போன்று நகைச்சுவையாக எழுதுபவர்கள் திரிக்கு வராமல் இருந்தால் உங்களுக்கெல்லாம் நஷ்டம் இல்லாமல் இருக்கலாம். எங்களைப் போன்றவர்களுக்கு பெரிய நஷ்டம்.

பல்வேறு அலுவல்கள் இருந்தாலும் நேரம் கிடைக்கும்போது திரிக்கு வந்து பங்களியுங்கள். ரசிக்க காத்திருக்கிறோம். திரியை வரி விடாமல் படித்து வருகிறேன் என்று கூறியது மகிழ்ச்சி. எனது பங்களிப்பை பாராட்டியதற்கு நன்றி.

அன்பான வேண்டுகோளை ஏற்று திரிக்கு வந்ததற்கு மிகவும் நன்றி.

குறிப்பாக, ஞானஒளி பாடலை போட்டு நீங்கள் வரக் காரணமாக இருந்த கல்நாயக் நன்றிக்குரியவர்.

எனக்கு பாடலை தரவேற்றத் தெரியாது. என் சார்பாக உங்களை,

வாங்கய்யா வாத்தியாரய்யா
வரவேற்க வந்தோமய்யா,
ஏழைகள் உங்களை நம்பி
எதிர்பார்த்து நின்றோமய்யா...

என்று வரவேற்கிறேன்.

கல்நாயக்,... கிருஷ்ணா சாருக்கு ஒரு பாட்டு ரெடி பண்ணுங்க.

சின்னக்கண்ணன், ...என் ரூட்ட கரெக்டா தெரிஞ்சு வச்சுருக்கீங்க. எப்பப் பார்த்தாலும், ஏழைகள், கஷ்டம், பசி, தொழிலாளர்கள், சாதாரண மக்களின் துயரம் என்றுதான் சிந்தனை ஓடுகிறது. நான் அடித்தளத்தில் இருந்து வந்ததும் அதற்கு ஒரு உளவியல் காரணமாக இருக்கலாம். விரைவில் பாட்டோடு வரேன். (பயப்படாதீங்க, நேபாள பூகம்பம் இல்லை)

அனைவருக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்.

அன்புடன்: கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

kalnayak
30th April 2015, 05:56 PM
சி.க. மார்கடிங்-னாலே பிடிக்காத என்னை பெரிய ஆளாக்கிட்டீங்களே. இதுக்கு காரணமான குரு யாரு நீங்கதானே. வாரவுக எல்லாரும் எழுதணும் வோய். என்ன பண்ணப் போறீக? வாசு சீக்கிரம் வந்து எழுதறேன்-னுட்டாரு. எப்பிடியாவது நீங்கதான் கிருஷ்ணாவை பிடிக்கணும். சின்னக்கண்ணன் பிடிக்கமுடியாத கிருஷ்ணாவா? மதுவையும் அழைங்க. எஸ். வாசுதேவனுக்கான வலை விரிப்பு சூப்பர். இந்த ஆதிராமையும் எப்பிடியாவது வளைச்சு பிடிக்கணும். பயங்கர திறமை கொண்ட ஆளு. கவிதையெல்லாம் பிரமாதமா எழுதுவாரு.

உங்க மங்கைப் பருவப் பாடல் தொடர் அருமை. "என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட மங்கை பேரும் என்னடி" எனக்கு மிகவும் பிடித்த பாடல். இந்த மோனிஷா திமிழில் அறிமுகமான படத்திற்கு டி. ராஜேந்தர் இசையமைத்திருந்தார். படத்தின் பெயர் நினைவில் வரமாட்டேன் என்கிறது. பாடல்கள் அப்போதைக்கு கவர்ந்திருந்தது.
எதிர் நீச்சல் பாட்டும் மிக பிரபலமானது. எல்லோரும் விரும்பி கேட்பது. நாகேஷிற்கு ப.ப. ஸ்ரீநிவாஸ் குரல் வித்தியாசமாக இருக்கிறது.

அடுத்த பருவத்திற்கு காத்திருக்கிறேன்.

chinnakkannan
30th April 2015, 05:59 PM
test message

kalnayak
30th April 2015, 06:05 PM
test message

சி.க. உங்கள் டெஸ்ட் மெசேஜ் சூப்பர். அடிக்காதீங்க. அடிக்காதீங்க. நான் ஓடிடறேன். 3 நாள் கழிச்சு வர்றேன்.

எல்லோருக்கும் சித்திரை பௌர்ணமி திருநாள் வாழ்த்துகள்.

chinnakkannan
30th April 2015, 06:35 PM
ஹச்சோ.. நான் அங்கிட்டு உள் நுழைய முடியலைன்னு ஹெல்ப்கேட்டு நுழைஞ்சு டெஸ்ட் மெஸேஜ் அடிச்சனா..அதான் :)

அல்லாருக்கும் சி.பெள நல்வாழ்த்துக்கள்..

chinnakkannan
30th April 2015, 06:36 PM
என்ன பண்ணப் போறீக? // முடிஞ்சா வீக் எண்ட்ல நெம்ப எழுதலாம்னு இருக்கேன்.. எதுவும் வேலை வராம இருக்கணும்..

vasudevan31355
30th April 2015, 07:07 PM
இந்த மோனிஷா திமிழில் அறிமுகமான படத்திற்கு டி. ராஜேந்தர் இசையமைத்திருந்தார். படத்தின் பெயர் நினைவில் வரமாட்டேன் என்கிறது. பாடல்கள் அப்போதைக்கு கவர்ந்திருந்தது.

தங்கள் அன்பான வரவேற்பிற்கு என் இதயம் மகிழ்ந்த நன்றி கல்நாயக்.

http://www.inbaminge.com/t/p/Pookal%20Vidum%20Thoothu/folder.jpg

நீங்கள் குறிப்பிடும் படம் 'பூக்கள் விடும் தூது'. மோனிஷாதான் நாயகி. ஹரீஷ் நாயகன். இதே ஹரிஷ் பின்னால் 'ஞானப்பறவை' படத்தில் நடிகர் திலகத்துடன் இணைந்து நடித்திருந்தார்.

படத்தின் பாடல்கள் இனிமை.

குறிப்பாக,

'கதிரவனைப் பார்த்து காலை விடும் தூது
வண்டுகளைப் பார்த்து பூக்கள் விடும் தூது'

'மூங்கில் காட்டோரம்....குழலின் நாதம் நான் கேட்கிறேன்'. (பாடல் ஆரம்பிக்கும் போதே ராஜேந்தரின் இசையை பரிபூரணமாக உணர ஆரம்பிக்கலாம்.பாலா மிக அருமையாகப் பாடிய பாடல் இது.)

பாடல்கள்.

கதை,வசனம், பாடல்கள், இசை ராஜேந்தர். இயக்கம் ஸ்ரீதர் ராஜன்.


https://youtu.be/y4kTkpKjrxg

RAGHAVENDRA
30th April 2015, 07:49 PM
வாசு சார்
மதுர கானம் மனதை மயக்க மட்டுமல்ல, இணைக்கவும் உதவும் இனிய பாலம் என்பதை தங்களுடைய இந்தத் திரியின் வெற்றி மிகவும் ஆழமாய் ருசுப்படுச்சியுள்ளது. தங்களுடைய எழுத்துக்கள் இல்லாமல் ஒரு vaccum இருந்தது அது இப்போது நிறைந்து விட்டது.
தொடர்ந்து தங்கள் பங்களிப்பைத் தாருங்கள்..

rajeshkrv
30th April 2015, 08:28 PM
அனைத்து நண்பர்களுக்கும் என் அன்பான வணக்கங்கள்.

பல சொந்த அலுவல்கள் காரணமாகவும், ஆபிஸ் வேலைகள் நிமித்தமாகவும் திரிக்கு வர இயலவில்லை. மன்னிக்கவும். தங்கள் எல்லோருடைய அன்பான அழைப்புக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

சின்னக் கண்ணன், கல்நாயக், ஸ்டெல்லா மேடம், கலை வேந்தன் சார், எனதருமை ராஜேஷ் அனைவர்க்கும் என் உளமார்ந்த நன்றிகள்.


கலைவேந்தன் சார்,

ஒரு எழுத்து விடாமல் திரியை தொடர்ந்து படித்து வருகிறேன். தங்கள் பங்களிப்புகளையும் படித்து மனம் மகிழ்ந்தேன். மிக்க நன்றி!


கல்நாயக், சின்னக்கண்ணன்,

அற்புதமான பங்களிப்புகளோடு திரியை கொஞ்சமும் தொய்வில்லாமல் அருமையாக நடத்தி வருகிறீர்கள். மிகவும் பெருமிதமாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. உங்கள் பதிவுகள் அனைத்தையும் படித்து விட்டேன்.
உங்கள் இருவரின் சரமாரியான உழைப்போடு, ராஜேஷ், கலை சார், ராஜ்ராஜ் சார், மது அண்ணா இன்னும் பலரின் பங்களிப்போடு, திரி அமர்க்களமாகப் பயணிப்பதைப் பார்த்து நிஜமாகவே மனம் சந்தோஷப்படுகிறது. அனைவருக்கும் என் இதயபூர்வமான வாழ்த்துக்களும் நன்றிகளும்.


கல்நாயக்,

நிலாப் பாடல்களின் தொகுப்பு நில்லாப் பாடல்களாக வில்லிலிருந்து புறப்பட்ட அம்புகள் போல் மனதிற்குள் இன்பக்கணை தொடுக்கிறது. இதற்காக தாங்கள் எவ்வளவு சிரமம் எடுத்துக் கொண்டுள்ளீர்கள் என்பதும் தெளிவாகப் புரிகிறது. நன்றி என்பது சம்பிரதாய வார்த்தை. விரைவில் நூறைத் தொட வாழ்த்துக்கள்.

தங்களின் 'ஞானஒளி' பாடல் என்னை இங்கே இழுத்து வந்து விட்டது என்றால் மிகையில்லை. சொன்னால் நம்புவீர்களோ இல்லையோ தெரியாது. நேற்றுதான்... உங்கள் பதிவு வருவதற்கு சற்று நேரத்திற்கு முன்தான் தலைவரின் இறுதிக் கட்ட உச்ச நடிப்புகளை 'ஞானஒளி' யில் பல நூறாவது தடவையாக பிரம்மித்து போய் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன். சற்று நாழிகைக்கெல்லாம் பார்த்தால் உங்கள் 'மண மேடை' பாடல் பதிவு. கடவுள் அனுகிரஹம் இல்லாமல் வேறு என்ன? ஐ மீன் நான் வணங்கும் 'ஆண்டனி' தெய்வம் ஆசி இல்லாமல் வேறு என்ன?

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/VTS_02_2.VOB_20150430_115752.571.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/VTS_02_2.VOB_20150430_115752.571.jpg.html)

அதுவும் அவர் மாதா சிலையின் முன் நின்று,

"மாதாவே! என் மகளை தெருவில நிக்க வச்சுட்டியே! எனக்கேன் இந்த வாழ்வு மாதாவே!"

என்று புலம்பி 'டக்'கென்று திரும்பி, இரு கைகளையும் வயிற்றின் குறுக்கே கிராஸ் போல வைத்து, பின் உடனே படுகம்பீரத்துடன் கைகளை பின்கட்டி நடந்தபடி ,

"லாரன்ஸ்! Is a combination of cobra and the wounded tiger?"

என்று கர்ஜிப்பாரே!

(இந்த 'tiger' என்ற வார்த்தையை உச்சரித்து முடித்தவுடன் அந்த தெய்வத்தின் வாயை கவனியுங்கள். வலதுபுற உதடுகள் சற்றே மேலேறி, அதே சமயம் இடதுபுற உதடுகள் கீழறங்கி, இரு உதடுகளும் ஒட்டிய நிலையில், மேஜர் தனக்கு விடுத்திருக்கும் சவாலை அந்த முகம் எப்படி வெறித்தனமாக, ஆங்காரமாக, அதே சமயம் முரட்டுத்தனமாக எதிர்கொள்கிறது. (அந்த மீசையின் ஏறி இறங்கிய அம்சத்தை என்னவென்று எழுத!?) சற்றே மேல்நோக்கி பார்க்கும் அந்த முகத்தில்தான் எத்துணை வேதனை கலந்த வெறி? ("உன்னலதாண்டா நான் பெத்த மகளை அணுகக்கூட முடியவில்லை... இருடா! உன்னை வச்சுக்கிறேன்...) அதே சமயம் தன் இயலாமையையும் வெளிபடுத்தத் தயங்காது. அந்தக் கண்களில்தான் என்ன ஒரு ஆங்கார வெறி! கண்களை மூடிக் கொண்டு அந்த குரலைக் கேட்டால் மிரண்டு போவீர்கள். அந்த மீசைக்கும், பார்வைக்கும் ஒரு சிங்கமாகவே காட்சியளிப்பார். கோப சிங்கம், பாச சிங்கம் என்று இரண்டு குணங்களையும் மாற்றி மாற்றி காட்டுவார். எப்படியானாலும் சிங்கம் சிங்கம்தானே!

வேண்டாம் கல்நாயக். என் கண்களிலிருந்து கண்ணீர் பெருக ஆரம்பிக்கிறது. இதற்கு மேல் சத்தியமாக முடியாது.

தலைவரின் இன்னொரு அருமையான ஸ்டைல் பாடலோடு விரைவில் மீண்டும் வருகிறேன்.

அதுவரை உங்கள் அனைவரது அன்பையும் எண்ணியபடி,

உங்கள் அனைவரின் பதிவுகளை ரசித்தபடி

உங்கள் அனைவரின்

வாசுதேவன்.

(சி.க,

அடுத்த பாகத்தைத் தொடங்க இப்போதே ரெடியாகுங்கள்)

ஆஹா ... வந்தாரய்யா வந்தாரய்யா எங்கள் வாசுதேவர் ஐயா வந்தாரய்யா
தந்தாரய்யா அள்ளித்தந்தாரய்யா தமிழை அள்ளி அள்ளி தந்தாரய்யா

வாங்க ஜி, அப்பாட நடிகர் திலகம் பற்றிய ஒரு பாடல் தான் உம்மை இங்கே இழுத்து வந்துள்ளது. ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் எவ்வளவு அழைத்தும் வாராதிருப்பாரோ வண்ண மலர் வாசு அவர் என்ற எண்ணம் நிறைவேறியது..

வாழ்த்துக்கள் கல்நாயக்

rajeshkrv
30th April 2015, 08:39 PM
ragahav ji, vanakkam
neenga kooda Vasu ji vandhathan vaareenga .... hmmmmmmm enna seyya ellathukkum oru kaLai venum :)

chinnakkannan
30th April 2015, 09:21 PM
//கதை,வசனம், பாடல்கள், இசை ராஜேந்தர். இயக்கம் ஸ்ரீதர் ராஜன். // இந்த ஸ்ரீதர் ராஜன் தானே டாக்டர் ஜிஜியைக்கல்யாணம் கட்டிக்கினார்..பாருங்க வாசு..இப்படி வம்பெல்லாம் பேசி நாளாச்சு :)

ராகவேந்தர் வாங்க வாங்க..:) ந.திடாட்காம் எப்படி இருக்கு..//தங்களுடைய எழுத்துக்கள் இல்லாமல் ஒரு vaccum இருந்தது அது இப்போது நிறைந்து விட்டது.// வாசுவைப் பாராட்டியது ஓ.கே..அதுக்காக இந்த 102 கிலோவை (ஹி ஹி நான் தான்) வேக்கம் சொல்லி நோகடிச்சுட்டீங்களே..!

//oru kaLai venum // ஆங்கிலத்துல கலைன்னு டைப் பண்ணனும்னா kalai ந்னு பண்ணனும்..kaLai அப்படின்னா களைஆகிடும்..:)

rajeshkrv
30th April 2015, 09:25 PM
//கதை,வசனம், பாடல்கள், இசை ராஜேந்தர். இயக்கம் ஸ்ரீதர் ராஜன். // இந்த ஸ்ரீதர் ராஜன் தானே டாக்டர் ஜிஜியைக்கல்யாணம் கட்டிக்கினார்..பாருங்க வாசு..இப்படி வம்பெல்லாம் பேசி நாளாச்சு :)

ராகவேந்தர் வாங்க வாங்க..:) ந.திடாட்காம் எப்படி இருக்கு..//தங்களுடைய எழுத்துக்கள் இல்லாமல் ஒரு vaccum இருந்தது அது இப்போது நிறைந்து விட்டது.// வாசுவைப் பாராட்டியது ஓ.கே..அதுக்காக இந்த 102 கிலோவை (ஹி ஹி நான் தான்) வேக்கம் சொல்லி நோகடிச்சுட்டீங்களே..!

//oru kaLai venum // ஆங்கிலத்துல கலைன்னு டைப் பண்ணனும்னா kalai ந்னு பண்ணனும்..kaLai அப்படின்னா களைஆகிடும்..:)
yes KaLai thaan naan sonnadhu .. அந்த முகக்களை அதைத்தான் நான் சொன்னேன் சி.க

chinnakkannan
30th April 2015, 09:45 PM
//முகக்களை// ஆகா எங்கிட்டோ போய்ட்டீங்க ராஜேஷ்..ஆனா நம்மூர் வழக்கம் முகராசின்னு சொல்வாங்க....:)

RAGHAVENDRA
30th April 2015, 10:09 PM
டியர் சி.கே., ராஜேஷ்,
அதெல்லாம் ஒண்ணுமில்லே... ந.தி.யைப் பற்றியே முழுக்க முழுக்க மைண்ட்லே ஓடிட்டிருக்கு... வேறெ ஏதாவது பக்கம் போனால் கூட சுத்தி சுத்தி அங்கே தான் செக்கு மாடாய் வந்து நிக்குது.. என்ன செய்ய... ந.தி.டாட் காம்... பேஷா போய்க்கொண்டிருக்கு...
ஒரு பார்ட்டி நடக்குது... சுமார் 20 அல்லது 25 பேர் காபி சாப்பிடணும்....இருக்கிறது 4 அல்லது 5 ஃப்ளாஸ்க் தான்.. அதில் ஒரு சிலர் ஓவல் அல்லது போர்ன்வீடா கேட்பார்கள் என எதிர்பார்த்து அதற்காக ஒரு ஃப்ளாஸ்கை ஒதுக்கி வைத்து மத்த ஃப்ளாஸ்கில் காபி ஊற்றி வைக்கிறார்கள். ஆனால் யாருமே வேறு பானம் கேட்கவில்லை.. எல்லோருமே காபியைத்தான் லைக் பண்ணுகிறார்கள்... காபி ... போதவில்லை... ஆனால் ஃப்ளாஸ்க் காலியாக உள்ளது... அந்த நேரத்தில் காபியைக் கொண்டு வர எல்லோரும் பறக்கும் போது ஆபத்பாந்தவனாய் அந்த ஃப்ளாஸ்க் பயன்படுகிறது... இதனால் அந்த vaccum நிரப்பப் படுகிறது.

ஆனால்... உண்மையில் அந்த முக்கியமான ஃப்ளாஸ்க் நிரம்பிய பிறகு தான் எல்லோரும் காபி குடித்த பிறகுதான் அந்த பார்ட்டி முழுமையடைகிறது.

ஸ்....ஹப்பாடா... ஒரு VACCUM சொல்லி விட்டு எவ்வளோ பெரிய சமாதானம் சொல்ல வேண்டியிருக்கு...

சி.க. சார்... உங்க கூட சேர்ந்து நானும் எழுத்தாளனாயிட்டேனாக்கும்...

chinnakkannan
30th April 2015, 10:57 PM
//ஆனால்... உண்மையில் அந்த முக்கியமான ஃப்ளாஸ்க் நிரம்பிய பிறகு தான் எல்லோரும் காபி குடித்த பிறகுதான் அந்த பார்ட்டி முழுமையடைகிறது.

ஸ்....ஹப்பாடா... ஒரு vaccum சொல்லி விட்டு எவ்வளோ பெரிய சமாதானம் சொல்ல வேண்டியிருக்கு...

சி.க. சார்... உங்க கூட சேர்ந்து நானும் எழுத்தாளனாயிட்டேனாக்கும்... // ராகவேந்தர் சார் :) :) :) இதானே வேண்டாங்கறது.. மெய்யாலுமே பார்ட்டியைப் பத்திச் சொல்றீங்கன்னு அளவுக்கு என்னை நினைக்க வச்சது உங்களோட எழுத்து வன்மை..

இன்ஃபேக்ட் ஒங்களுக்காகவே - ஒருவேளை நாம எழுதறது வியாழக்கிழமையும் அதுவுமா ராகவேந்திரருக்குப் பிடிக்கலையோன்னு (கண்ணா நீ எங்கேயோ போயிண்டிருக்கடா சிலேடைல) மாஞ்சு மாஞ்சு ஒண்ணு எழுதியிருக்கேன்..:) அது அடுத்த போஸ்ட்ல:) நன்றிங்கோ..(இருந்தாலும் புரிஞ்சா மாதிரியும் இருக்கு..ஆனா புரியலை)

chinnakkannan
30th April 2015, 10:58 PM
பருவமே.. பழைய பாடல் பாடு – 4

கண்ணை மூடினால் உறக்கம் வரமாட்டேன் என்கிறது. மூடினால் அவள் முகம்..திறந்தாலும் தான்..

ஆஹா..எவ்வளவு இனிய முகம்..எவ்வளவு அழகிய குரல் அவளும் நளினம்..அவளது உடலும் நளினம்..

போகத் தான் வேண்டும்.. இப்போது போகக் கூடாதாம்..தாயாரின் சிரார்த்தமா.. என்னடா இது மங்கள் தாஸ்.. நீ இந்த ஊரின் பெரிய வணிகர் ரகுநாதரின் ஒரே மகன்..பார்க்குமிடமெல்லாம் இந்த ஊரில் உன் அப்பாவின் வீடுகள், நிலங்கள், கடைகள்.. ஏன் நான் செலவு செய்தாலென்ன..

செய்வது யாருக்கு..என் சிந்த்த்தூவிற்குத் தானே..சுருக்கமாகச் சொன்னால் அவள் முகம் சுருங்கத் தான் செய்யும்..சிந்தாமணி என்றால் முகமலரும்..அப்படியே உன் பாட்டியைப் போல நீட்டி முழக்கிக் கூப்பிடுகிறேனா என்றால்வெட்கச் சிரிப்புசிரிப்பாள்..

அதுவும் அடடா அவள் செய்யும் வெல்லப் பணியாரம்..அவள் கைப்பக்குவத்திலோ என்னவோ உடலெங்கிலும் தித்திப்புப் பரவும் பின் ஆவலாய் பச்சை வெற்றிலையை க் காம்பைக் கிள்ளும்போது அவள் புறங்கையில் தெரியும் பச்சை நரம்புகள் அதுவும் அவளது அழகிய பால்வண்ணமா..கொஞ்சம் மஞ்சள் பொடி சிறிதளவே தூவிய பால்வண்ணமா ஆம் அது தான் சரி.. அந்தக் கையில் எவ்வளவு அழகாய் இருந்து உளத்துக்குள்ளே உலையைப் பற்றவைத்தது..

ஆஹா இந்தச் சிந்தாமணியின் பெயரைச் சொர்க்கமென்று வைத்திருக்கலாம்..பிரம்மன் ஏகப்பட்ட அலுவல்கள் இருக்கிறதென்று விஷ்ணுவிடம் ஒப்புதல் வாங்கி விடுமுறையில் ஏகாந்தத்தில் இருக்கும்போது இவளை வடித்திருப்பான் போல..
கண்ணிமையும் அழகு; கண்களும் அழகு
புருவமும் அழகு; பருவமும் அழகு
முறுவலும் அழகு முறுவும் இதழும் அழகு
நாசியென்றால் எள்ளுப் பூவாமாமே.. ம்ம்ஹூம் இல்லவே இல்லை இவளுடையது தான்..அதில் செல்லமாய்க் குத்தப்பட்டு சிரிக்கும் வைரமூக்குத்தி
கன்னமும் அழகு..காதுமடல் அழகு..
ம்ம்கொஞ்சம் கீழிறங்கி யோசித்தால்..வேண்டாம் மனதுக்குள்ளேயே நினைத்துக் கொள்வோம்!

மொட்டை மாடி அழகிய நிலா சிரித்தபடி மேகங்களுடன் நடை பழகிக் கொண்டிருக்கிறது..இப்படி நடக்கின்ற நடையில் படக்கென இளைத்து இளைத்து தேய்ந்து விடும்.. பின் மறையும் பின் எழும்.. ஆனால் எனது அக்னி..சிந்தாமணியின் சிந்தனையில் ஏற்படும் உடலக்னி என்னசெய்வது..
முடியவில்லையே..மங்கள் தாஸா சீக்கிரம் ஒரு முடிவெடு..

மங்கள் தாஸ் ஒரு முடிவெடுத்தான்..
உடன் கீழிறங்கி பின்பக்கம் கொல்லைப்புறச்சுவரைத் தாண்டிய போது தான் அதை உணர்ந்தான்..எங்கிருந்தோ மேகங்கள் சூழ்ந்து கொண்டதை..காற்றில் குளிரும் ஈரப்பதமும் கலந்திருப்பதை..என்ன இது என் சிந்த்தூவைப் பார்க்கப் போகவேண்டுமே..மழை வரும்போலிருக்கிறதே..

வருமென்ன..வந்தேவிட்டது

சுற்றிச் சுழன்றடிக்கும் காற்று..காற்றில் படபடக்கும் மரங்களின் இலைகள் இவையெல்லாவற்றுக்கும் கவலைப் படாமல். இப்படி எங்கேடா போகிறாய் மங்களா எனத் தடுப்பது போலவே உரக்க இடிக்குரலில் மின்னல்விளக்கில் மழை ஹோ ஹோ ஹோ வெனப் பெய்ய ஆரம்பித்தது.

ம்ஹூம் .. உள்ளக்கனல் தகிக்க சிந்தாமணியை அவள் நினைவே ஒன்றாகி சடக் சடக்கென வேகவேகமாக ஆற்றங்கரைப் பக்கம் சென்றால்.. இது என்ன ஆற்றில் வெள்ளம்..ஆற்றின் அக்கரையில் அவள் வீடு.. எப்படிச் செல்வேன்..அடடா அடடா அடடா அவள் ஏதோ செய்கிறாள் எனை..அட இது என்ன..

ஆஹா இருட்டிலும் இறைவன் நமக்குக் கருணைவைத்திருக்கிறான்..இந்த வான நிலா மேகத்தில் புகுந்துகொண்டால் என்ன.. என் இதய நிலா தான் இந்தக் கட்டையை எனக்குக் கொடுத்திருக்கிறாள் இறைவனிடம் சொல்லி..

நினைத்துத் தாவி அங்கே ஆற்றின் போக்கோடு எதிர்க்கரைப்பக்கம் சென்றுகொண்டிருந்த கட்டை மேல் மங்கள் தாஸ் ஏற அதுவும் அந்தப்புறம் அடித்துக் சென்றது அவனை..ஆனால் அவனறியாதது அவன் ஏறிய கட்டை நிஜமான கட்டையில்லை..பொய்யுடம்பு.. உயிரில்லாதது..ம்ஹூம் அதன் நாற்றத்தையும அவன் உணரவில்லை.. இருளில் ஆற்றின் கரை அருகில்வரக்கட்டையை விட்டுமறுபடி நீந்தி ஏறி வேகவேகமாய் (ஏன் இந்த மழை நிற்க மாட்டேன் என்கிறது) வேக வேகமாய் அவளுடைய வீடு இருக்கும் தெருவிற்குச் செல்ல விளக்குகள் எல்லாம் இல்லை..தெருவும் இருளோ என இருந்தது அவன் மனத்தைப் போல.

வீடும் இருளில்.. இருந்தாலென்ன.. அதோ முதல் மாடியில் அந்த நிலவு எனக்காக நின்றிருக்கும்..

மங்கள் தாஸின்கைகள் மாடியில் ஏறுவதற்காக அந்தப்பக்கமிருந்த மரத்தின் கிளையைப் பிடிக்கலாமெனத் தேட அகப்பட்டது ஒரு கயிறு அதைத் தொற்றி அங்கிட்டிருந்து சொய்ங்க்க் என மாடிக் கைப்பிடிச் சுவரைப் பற்றி – அவ்வாறு பற்றுகையில் கைகளில் கால்களில் சிராய்ப்பு ஏற்பட்டு வழுக்க்கினாலும் மறுபடி தொற்றி உள்ளே குதிக்க சத்தம் கேட்டு சிந்தாமணி மாடியறையை விட்டு வெளியே வர…ப்பளீர்….

வானத்தில் ஒரு மின்வெட்டு..மின்னற்குழந்தை கடகடவெனச் சிரிக்க..அந்தவெளிச்சத்தில் அந்த்ப் பதினைந்திலிருந்து பதினெட்டு வயதிற்குள் இருந்த மடந்தை (ஹப்பாடி விஷய்த்துக்கு வந்தாச்சு) சிந்தாமணி அவளும் பளீரென ஒரு மின்னல் போலத் தான் தோன்றினாள் மங்கள் தாஸிற்கு..

ஹச்சோ.. நீங்கள் நீங்கள் எப்படி இங்கே..உங்கள் தாயாரின் சிரார்த்தமென்று சொன்னார்களே உள்ளே வாருங்கள்..

குரலில் பதற்றம் உடலில் பதற்றம் கண்களில் பதற்றம் மட்டுமின்றி நாசியிலும் பதற்றம்..ஏதோ தேவையில்லாத நாற்றம்..

காட்டிக்கொள்ளாமல் உள் சென்று எரிந்துகொண்டிருந்த எண்ணெய் விளக்கில் மங்கள் தாஸைப் பார்த்தவள் அதிர்ந்தாள்..

கண்களில் காமத்தீ…உடலிலோ ரத்தம் வரும் சிராய்ப்புக்கள்..அதோ ஓரம் கயிறாய் ஊர்வது என்ன. ஓ...ஹ்.. பாம்பா..இதைப்பற்றியா ஏறி வந்தான்.. ஆற்றை எப்படிக் கடந்திருப்பான்

சிந்த்த்ட்தூஊஉ..

நாக்குழற அருகில் வர மங்கள் முயற்சிக்க எப்படி ஆற்றைக்கடந்தீர்கள்..

ஒரு கட்டை கிடந்தது அதைப்பற்றி வந்தேன் – எனக் கைபற்ற முற்பட அவன்கைகளில் சில அழுக்குக்கள்..அந்தக் கட்டையுடையவை..

பார்த்தாள் சிந்தாமணி.. நள்ளிரவு..மழை..வெள்ளம் எல்லாம் கடந்து என்னை என்னிருப்பிடத்தை என்னுள்ளத்தை..இல்லை இல்லை என்னுடலைத் தேடி இவன் வந்திருக்கிறான்..இது சரியா சரியில்லையே.. என்ன செய்யலாம்..

மங்கள்..அங்கு குளியலறையில் மாலையில் போட்டுவைத்திருந்த வென்னீர் இருக்கிறது போய்க் குளித்து விட்டு வாருங்கள்..

சிந்த்தூ.. ஒரே ஒரு சின்ன அணைப்புக் கொடேன்.. ஓ உன்னுடையும் நனைந்து அழுக்காகுமோ எனப் பயப்படுகிறாயா..

இல்லைபடவா..உன் உள்ள அழுக்கை எடுக்கப் பார்க்கிறேன்.. முகம் கல்லாகி.. மங்கள் போய்க் குளித்துவாருங்கள்..

அந்த எண்ணெய் தீபத்தைப் போல அவள் குரலும் படபடக்க அவன்போய்க் குளித்து உடைமாற்றி வரும்போது அவள் கட்டிலில் திரும்பி அமர்ந்திருந்தாள்..

சிந்தூ..

திரும்பினாள்..
என் சிந்துவா இவள்.. சீற்றமிக்க கடலலைகள் இவள் கண்களுள் ஏன் பொங்கு கின்றன.. கண்களும் சிவந்திருக்கின்றன..முத்தாட அழைக்கும் உதடுகள் ஏன் இயல்பு மாறித் துடிக்கின்றன..

என்னாயிற்று..

நீங்கள் எப்படி வந்தீர்கள் தெரியுமா

தெரியும் மழை, கட்டை, கயிறு நீ.. இதற்காகவா கோபம்..

இல்லை மங்கள்.. நீங்கள் கட்டையாய்ப் பிடித்தது பிணம்.. கயிறாய்ப்பிடித்ததுபாம்பு.. இங்கு வந்திருப்பது என்றாவது ஒரு நாள் அழகெலாம் இழந்து ரத்தம் சுண்டி கட்டையாக ஜீவன் விடப்போகிற இந்த அற்ப மடந்தைக்காக (ஹை..ரெண்டாவது தடவையும் சொல்லியாச்சு)

சிந்தூ என்ன சொல்கிறாய் நீ..

தலையூசி ஒன்றை எடுத்தாள் நறுக்கென தனது சுண்டுவிரலில் குத்தினாள்.. ரத்தம் அவள் இதழ் நிறத்தைப் போலத் துளிர்க்க “பாருங்கள் மங்கள்.. ரத்தமும் சதையும் கொண்ட சாதாரணப் பெண் நான்..எனக்காகவா இவ்வளவு பாடு உங்களுக்கு..இதில் கொஞ்சமே கொஞ்சம்பிற்காலத்தில் வரப்போகும் கணக்கான ஒரே ஒருசதவிகிதம் இறைவன் பால்காட்டினீர்கள் என்றால்.. அந்தக் கிருஷ்ணன் மீது ப்ரேமித்திருந்தீர்களென்றால் எங்கேயோ சென்றிருப்பீர்கள்..

என்ன சொல்கிறாய் நீ

என் மீதுள்ள ப்ரேமையை விடுங்கள் என்கிறேன்.. கொஞ்சம் ஆண்டவனை நினையுங்கள் என்கிறேன்..

நீ சொல்வதானால் எதையும் செய்வேன் சிந்தூ இதையும் செய்கிறேன்” என்ற மங்கள் அன்றிலிருந்து பகவான் கிருஷ்ணனின்பக்தனானான்.. பிற்காலத்தில் லீலா சுகர் என்று அறியப்பட்டார்..க்ருஷ்ணாம்ருதமென்ற காவியத்தை சமஸ்கிருதத்தில் எழுதினார்..

*
மடந்தைப் பருவம் 15 இலிருந்து 18 வயதிற்குள்ளாமாம் பெண்களுக்கு..
அதைத் தேடப்போய் பில்வ மங்கள் பற்றிய குறிப்புக் கிடைக்க அதற்குக் கொஞ்சம் ஜிகினா வேலை செய்து எழுதிப்பார்த்தேன்.. (கவிதையைத்தவிர்த்ததற்குக் காரணம் – கலை இது தான் என் ரூட் என்றுவிடுவார் என்ற பயம்)

இந்தப் பில்வ மங்களின் கதை ஒரு படமாகவும் வந்ததாக்கும்..எப்போது 1937 இல் ..எம்.கே.தியாகராஜ பாகவதரின் இரண்டாவது படம்.. சிந்தாமணி என்ற பெயர்.. எடுத்தது மதுரை ராயல் டாக்க்கீஸ் என்ற கம்பெனி.. ஒருவருடத்திற்கும் மேலாக எல்லாஇடங்களிலும் ஓடி – மதுரை நியூ சினிமாவிலுமாம்- அதில் வசூலித்த பணத்தை வைத்து அந்த தயாரிப்பாளர்கள் மதுரையில் ஒரு தியேட்டர் வாங்கினார்களாம்..அதற்கும். சிந்தாமணி என்றே பெயர் வைத்தார்களாம்….சிந்தாமணி தியேட்டரில் பல படங்கள் பார்த்திருக்கிறேன்(இப்போதும் இருக்கா என்ன) இந்த விஷயம் எனக்குத் தெரியாத ஒன்று (உண்மையா முரளி)

மறுபடியும் மடந்தைக்கு வந்தால்:

பெரிய திருமொழியில்:

திருமடந்தை மண் மடந்தை இரு பாலும் திகழ
தீ வினைகள் போயகல அடியவர்கட்கு என்றும்
அருள் நடந்து இவ் ஏழ் உலகத்தவர் பணிய வானோர்
அமர்ந்து ஏத்த இருந்த இடம்” என்று திருமங்கையாழ்வார் ஸ்ரீதேவி பூதேவிப்பிராட்டிகளை இளைய பருவம்கொண்ட நங்கையர்கள் எனச் சொல்கிறார்.

கோவலனும்பாருங்க.. விஷமக்காரன் மட்டுமல்ல விஷயக்காரன் தான்..
“மாந்தளிர் மேனி மாதவி மடந்தை
பால்வாய்க் குழவி பயந்தனள் “ என சிலப்பதிகாரத்தில் வருகிறது.. கண்ணகிக்கு என்னவாக்கும் வயசு..பாவம் அவள் இன்னும் சின்னப் பொண்ணாம்..பன்னிரண்டு வயது மங்கைப்பருவம் என்கிறது சிலப்பதிகாரம்..
*
எனில் மடந்தைக்கு என்னப் பாட் போடலாம்..என யோசித்தால் முதலில் சிந்தாமணியில் வரும் ராதே எனக்குக் கோபம் ஆகாதடி..

https://youtu.be/7Gv2JlXTJng

பதினாறுக்கு நிறைய பாட்டுக்கள் இருக்கு..வாசு வந்ததுனால போட்டாச் சொல்ல வைக்கலாம்..

என்றும்பதினாறு .. வயது பதினாறு
மனதும் பதினாறு..அருகில் வா வா விளையாடு..

**

எண்ணிரண்டு பதினாறு வயது
அவள் கண்ணிரண்டில் காணுதம்மா காதல் கொண்ட மனது

*

அவள் பதினாறும் நிறையாத பருவமங்கை…தப்புங்க்ணா.. பருவ மடந்தைன்னு வந்துருக்கணும்..

ம்ம் திடீர்னு யூட்யூப் லிங்க் கனெக்ட் பண்ண டயமாகுதா.. சரி..ஒருபாட்டோட நிறுத்திக்கலாம்..லாமா..

அடுத்த பருவத்தில் சந்திக்கலாம்..

வாரேன்..:)

RAGHAVENDRA
1st May 2015, 06:45 AM
பில்வ மங்களா..
போனான் பங்களா...
அவள் கேட்டாள் நீங்களா...

[யாரோ ஓடி வரும் சத்தம் கேட்குதே.. வுடு ஜூட்....]

RAGHAVENDRA
1st May 2015, 06:46 AM
பதினாறு வயதினிலே... 17 பிள்ளையம்மா..

[ஏதோ ஒரு டெலிவரியில் ட்வின்ஸாக இருந்திருக்கும்....]

chinnakkannan
1st May 2015, 06:50 PM
[ஏதோ ஒரு டெலிவரியில் ட்வின்ஸாக இருந்திருக்கும்....] ராகவேந்திரர் :)

சரி இந்த அத்தியாயம் ஷார்ட்டா போட்டுக்கலாம்

**


பருவமே பழைய பாடல் பாடு – 5

அடுத்து வரும் பெண்களின் பருவங்கள்..
அரிவை – 19 முதல் 24 வயது வரை..
தெரிவை 25 முதல் 29 வயது வரை..
பேரிளம் பெண் 30 வயது முதல்..

இது தான் பருவங்கள் என எழுதியிருந்தாலும் அதற்கான விளக்கங்கள் கிடைக்கவில்லை..ம்ம் கல்யாண வயது என்பது 21 லிருந்து 24 வயது வரை இருக்கலாம் என ஆன்றோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.. அது தான் குடும்ப வாழ்க்கையைப் பற்றி அறியும் பருவம் என்பதால் அரிவை என்றிருக்கலாமோ..
பாவம் இந்தப் பெண்.. தன்மனதுக்குகந்த காதலனிடம் ஒரு வார்த்தை பேச ஒருவருடம் காத்திருந்திருக்கிறாள்..ம்ம்

https://youtu.be/7K2oU6PDIk4

தெரிவை – கல்யாணமாகி குழந்தைகள் பிறந்து கஷ்ட நஷ்டம் தெரிகின்ற பருவம் என்பதால் இருக்கலாமோ..இந்தப் பாட்டில் வரும் சுஹாசினி தெரிவை வயதிருக்கும் என நினைக்கிறேன்

https://youtu.be/se0n59viLT4

பேரிளம்பெண்.. என்றால் முப்பது வயதிற்கு மேல்..- தெரிவையில் பத்து வருடங்க்ள் சேர்த்து நாற்பது வயதில் இப்படிச் சொல்லியிருக்கலாம்…ம்ம்
இருந்தாலும் இவர் வயதானாலும் அழகு தான்.. பாட்டி பப்பிம்மா.. பூவே பூச்சூட வா..

https://youtu.be/wDOUp9H_mTA

ஆக பெண்களின் பருவம் முடிந்து விட..அடுத்த போஸ்டில் ஆண்களின் பருவங்கள்..

வரட்டா..

vasudevan31355
1st May 2015, 08:25 PM
ஆதிராம் சார்,

தங்கள் அன்பான வரவேற்புக்கு நன்றி! தங்களுடன் உரையாடி எவ்வளவு நாட்களாகி விட்டது! நீங்கள் இல்லாமல் சரியான புள்ளி விவரங்கள் இல்லை. மதுரகானத்தில் தங்களைக் காண மிக்க மகிழ்ச்சியாய் உள்ளது. தங்களின் அருமையான சுவையான சுருக்கமான நச்சென்ற பதிவுகளுக்கு முதல் ரசிகன் நான்தான். தங்களின் பதிவுகளுக்காக காத்திருக்கிறேன்.

vasudevan31355
1st May 2015, 08:28 PM
ராகவேந்திரன் சார்!

மிக்க நன்றி! தங்களின் அபூர்வமான பாடல்களின் தொகுப்புக்காக காத்திருக்கிறேன். நடிகர் திலகம் திரியில் தங்களின் 'திலக சங்கமம்' கலக்கல். ஒரு சிறு வேண்டுகோள். அதை மதுர கானங்கள் திரியில் பதிந்தால் மிக பொருத்தமாய் இருக்குமே. இசை சம்பந்தப்பட்ட பதிவு அல்லவா?

RAGHAVENDRA
1st May 2015, 10:42 PM
ஆகட்டும் வாசு சார்
அடுத்த திலக சங்கமம் பதிவு தொடங்கி இரண்டிலுமே இடம் பெறும்...

chinnakkannan
2nd May 2015, 12:21 PM
ஹாய் ஆல் குட்மார்ங்க்..

மொதல்ல பார்த்தீங்கன்னா,

மரம் அது மரத்தில் ஏறி, மரம் அதைத் தோளில் வைத்து,
மரம் அது மரத்தைக் கண்டு, மரத்தினால் மரத்தைக் குத்தி
மரம் அது வழியே சென்று, வளமனைக்கு ஏகும்போது
மரம் அது கண்ட மாதர் மரமுடன் மரம் எடுத்தார்

ஹலோஓஒவ்..சிக… மஸ்கட்ல வெயில் ஜாஸ்தியாஆ என அலறும் குரல் கேட்கிறது.. ஆண்பருவங்கள் பற்றி எழுதலாம் என்றால் அவ்வளவாக கொஞ்சம் மனம் செல்லவில்லை.. இப்படி பருவம் முடிந்தபையன் பருவம் பருவம் என்று சொல்கிறானே எனமற்றவர்கள் சொல்லிவிடும் அபாயம் இருப்பதால் என்ன எழுதலாம் என்று மோ.வ. பார்க்காமல் யோசித்ததில் பல நாட்கள்முன்பு தேர்ந்தெடுத்த பாடல் எனது சிந்தைக்கு எட்டி இங்கே இட்டுவிட்டேனா..(ஹப்பா மூச்சு விட்டுக்கறேன்)

அதாவது மேற்கண்ட மரப் பாடலை எழுதியவர் ஒரு புலவர் (ஹை என்ன கண்டுபிடுப்பு) ஷங்க காலம் தான்
..
மரமாகப் போச்சுதய்யா மூளை
உரமாகத் தமிழினிலே வேலை
சரம்சரமாய் மரங்கள்வர
சங்கதமிழ் பாபடித்தால்
சிரமெங்கும் சுற்றிநிற்கும் வேளை

என இந்தப் பாட்டைப் படித்த போது எனக்கு ஏற்பட்டதென்னவோ வாஸ்தவம்..

ஆனாக்க இதை எழுதின புலவர் இருக்காரே..ஒவ்வொரு மரம் என்கிற வார்த்தைக்கும் ஒவ்வொரு மரம் என இருக்க வேண்டுமாம் இல்லை வேறு பொருள் இருக்க எழுதியிருக்கிறார் (கன்ஃபீஷன்?!)
பாட்டின் பொருள்.. ஒரு கிங்க் காட்டிற்குள் போய் வேங்கைப் புலியைக் கொன்று தன் அரண்மனைக்குத் திரும்புகையில் அங்கு சில பெண்கள் அவனை வரவேற்கிறார்கள்.. அம்புட்டு தேன் சிம்ம்பிள்..பின் எப்படிய்யா இப்படி வரும் என்று கேட்டால் வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம்..

மரம் அது மரத்தில் ஏறி = அரசன் ஒருவன் மாவில் (குதிரையின்மீது) ஏறுகிறான்

மரம் அதைத் தோளில் வைத்து = வேலைத் தோளில் வைக்கிறான்

மரம் அது மரத்தைக் கண்டு = அரசன் ஒரு வேங்கைப் புலியைப் பார்க்கிறான்

மரத்தினால் மரத்தைக் குத்தி = வேலினால் வேங்கையைக் குத்துகிறான்

மரம் அது வழியே சென்று = அரசன் வந்த வழியிலேயே திரும்புகிறான்

வளமனைக்கு ஏகும்போது = வளங்கள் நிறைந்த தன்னுடைய மாளிகைக்குச் செல்கிறான்

மரம் அது கண்ட மாதர் = அரசனைச் சில பெண்கள் காண்கிறார்கள்

மரமுடன் மரம் எடுத்தார் = ஆலத்தி (ஆல் + அத்தி) எடுத்து வரவேற்றார்கள்

ஆக, ராஜா ஒருவன் வேட்டைக்குப் போய் வேங்கையைக் கொன்று திரும்புகிறான், பெண்கள் அவனை வரவேற்கிறார்கள், அவ்வளவுதான் விஷயம், இதைச் சொல்வதற்கு அரச மரம், மா மரம், வேல மரம், வேங்கை மரம், ஆல மரம், அத்தி மரம் என்று ஒரு காட்டையே பாட்டுக்குள் நுழைத்துவிட்டார் புலவர்!
(நன்றி பாட்டும் பாட்டின் விளக்க வுரையும்என். சொக்கனின் தினம் ஒரு பாவிலிருந்து)

ஸோ…வாசு முறைப்பது தெரிகிறது..மரப்பாட்டுத் தானே போடுங்களேன் என..

https://youtu.be/BzqNmhXhqCE

பனை மரம் தென்னை மரம் வாழை மரம் பாட்டுத் தான்போடலாம்னு தேடினேன்..தேடினேனா.. கிடைக்கலையா..அதான் ஆடிவெள்ளி..அண்ட் ஸ்ரீதேவி..ஓ..பேக் க்ரெளண்டல் ஆல மரம் இருக்கே. ஹி ஹி..::)

chinnakkannan
2nd May 2015, 12:24 PM
ஹச்சோ..வாசு வந்திருக்காஹ.. அவருக்கு எதுவும் கிஃப்ட் கொடுக்கலையே..

இந்தப் படமும் மதுரை ஸ்ரீதேவி தான்..டபிள் ஆக்ட் ந.தி என்பது மட்டும் நினைவில்.கடவுளை பூஜை செய்யும் ஒரு ந.தி, இன்னொரு ந.தி நம்பிக்கை இல்லாதவர் ( வி.கே.ஆரோ எம்.ஆர்.ஆர். வாசுவிடமோ. பரங்கிக்காய் என ப்ளாக்மெய்ல் மட்டும்செய்வார்..அதுமட்டும் நினைவில்)

கடைசியில் என்னையும் மீறிய சக்தி தான் அந்தக் கோவில் கலசத்தைச் சுற்றவைத்தது என்பது போல் க்ளைமாக்ஸில் சொல்வார்.. சின்ன ந.தி இளமையாய் இருப்பார்..

இடைப்பட்ட கதை நடிகையரெல்லாம்மறந்து போச்சு..இப்பத் தானிந்தப் பாட்டைப் பார்த்து கொஞ்சூண்டு நினைவு வந்தது..
பால் பொங்கும் பருவம் அதில் நான் தங்கும் இதயம்
கனவும் நினைவும் மனதில் மலரும்..

மார்கழி மாதத்துப் பனியும் இந்த மங்கையைக் கண்டதும் பணியும் (உஷா நந்தினிக்குக் கொஞ்சம் ஓவர் தான்..வாணிஸ்ரீயோட கால்ஷீட் வாங்கியிருக்கலாம்ம்ம்)

அலை தனில் வரும் அழகுப்படகு
இவள் உடல் என அணைத்துப் பழகு..ம்ம்

கொஞ்சம் ஃபாஸ்ட் அண்ட் மெலோடியஸ் சாங்க்காக்கும்..

https://youtu.be/4gtli5IYvps

வாசு சார் ஹாப்பி?
(படம் மனிதனும் தெய்வமாகலாம்)

chinnakkannan
2nd May 2015, 12:26 PM
இன்னொரு ஸ்பெஷல் சாங்க்… ( வாசு போட்டாச் இல்லீங்களே)

கண்ணாடி மேனியடி
தண்ணீரில் ஆடுதடி
கல்யாணம் ஆகும் முன்னே
கற்பனையில் நீந்துதடி..

கொடிமலர்..காஞ்ச் அண்ட் கோ… குளிக்கறதுக்குப்புடவையைக் கட்டிக்கொண்டு எக்ஸர்ஸைஸ் பண்ணறாங்க.. கொஞ்சம் பயம்மா இருக்கு..ஏதாவது நடந்துடுமோன்னு..

https://youtu.be/-SeCEd47iuY

chinnakkannan
2nd May 2015, 12:29 PM
அதே கொடிமலரில் இன்னொருதுள்ளல் பாட்டு.. ஓஓஒ..

காஞ்ச்..ஏவி.எம். ராஜன் ( நற நற..)

https://youtu.be/MXK4DdGsMW0

chinnakkannan
2nd May 2015, 12:43 PM
வாழ்க்கையில எப்போதுமே சுய நலம் முக்கியம்..அதான் ஃபர்ஸ்ட்.. அப்புறம் தான் மத்தவங்களுக்கு என்று ஏதோ ஒரு ஆன்றோர் சொல்லியிருக்கிறார்..

எனில்…எனக்காக இந்தப் பாட்டு..

தேவனைப் பற்றிப் பாடும் தேவதை.. தேவிகை..
பாவிகளே பாவிகளே உங்கள் பாதையைப் பாரு்ங்கள்.. (என்னையா..ம்ஹூம் இருக்காது!) :)

https://youtu.be/u0v9Ux2Lup8

JamesFague
2nd May 2015, 02:06 PM
Yesterday watched Savale Samali and when the famous scene which took place near the well my thought went to the

descritpion/analysis made by our Neyveliar about the NT's performance in that scene and today when casually viewing this

thread got a pleasant surprise of our beloved hubber Mr Neyveliar presence. Welcome back and do contribute here and our

god's thread as usual.


Regards

JamesFague
2nd May 2015, 02:30 PM
Courtesy: Tamil Hindu

தமிழ், இந்தி என்னும் மாறுபட்ட மொழிகள் வெளிப்படுத்திய ஒன்றுபட்ட உணர்வை இதுவரை இப்பகுதியில் கண்டோம். ஒரு சூழலை அல்லது தருணத்தை அணுகும் விதத்தில் இரு மொழிப் படைப்பாளிகளுக்கும் கணிசமான வேற்றுமைகளும் இருக்கின்றன.

அந்த வேற்றுமைகளின் அழகை இனிக் காண்போம். மேலெழுந்தவாறு பார்க்கும்போது எதிரெதிர் துருவ நிலைகளாகத் தோன்றினாலும் அடிநாதம் ஒன்றாக இருப்பதையும் உணர முடியும். அத்தகைய பாடல்களை இந்தப் பகுதியில் காண்போம்.

உலகத்தில் மாற்றம் ஒன்றுதான் மாறாத அம்சம் என்று சொல்லப்படுவதுண்டு. இந்த மாற்றத்தின் இயல்பை ஒவ்வொரு படைப்பாளியும் தனக்கே உரிய விதத்தில் அணுகுகிறார். “இயற்கை சக்திகளான, மலை, கடல் வானம் ஆகியவை எல்லாம் அப்படியே இருக்கும்போது மனிதனின் குணங்கள் மட்டும் வெகுவாக மாறிவிட்டதைப் பார்” என்று கூறுகிறது ஒரு தமிழ்ப் பாடல்.

“உலகத்தில் மனிதன் மட்டும் அல்ல, பகல்-இரவு, சூழ்நிலை, பருவம் ஆகிய இயற்கை எல்லாம் மாற்றத்துக்கு உட்பட்டவை. எனவே வீணாகக் கவலை கொள்ளாதே” என்று சொல்கிறது ஒரு இந்திப் பாடல். இந்த இரண்டு பாடல்களையும் பார்ப்போம்.

இந்திப் பாடல்:

திரைப்படம்: நயாசன்சார் (புதிய குடும்பம்) 1959-ல் வெளியான படம். பாடலாசிரியர்: ராஜேந்திரகிஷன்

பாடியவர்: ஹேமந்த்குமார். இசை: சித்ரகுப்த்.

பாடல்:

தின் ராத் பதல்த்தேஹைன்

ஹாலாத் பதல்த்தேஹைன்சாத்சாத்மௌசம் கீ

ஃபூல்அவுர் பாத் பதல்த்தேஹைன்

பொருள்:

பகல்-இரவு மாறுகிறது.

பக்கச் சூழல்கள் மாறுகின்றன.

பருவமும் அதன் பாதையும்

மலரும் மொட்டும் மாறுகின்றன.

எப்போதும் இருக்காது வெயில்

இருப்பதில்லை இருட்டும் எப்போதும்.

ஓர் இடத்தில் நிற்காது ஒருபோதும்

ஓடுகின்ற காலத்தின் கால்கள்.

எழுந்ததும் அழிந்ததுமாக எத்தனை ஊர்கள்

விழிகளில் விழுந்து இங்கே மாறின.

கடந்து போகும் இலையுதிர் காலம்

அடைவோம் உடனே வசந்த காலம்

இன்று தோன்றும் காய்ந்த கொடியே

எழிலுடன் நிற்கும் பூக்களுடன் நாளை

எவர்தான் கேட்பார் இயற்கையை நோக்கி

இரவுகள் இருக்கட்டும் இருள் இன்றி என

இந்த வாழ்க்கை ஒரு பாயும் நதி

இன்பம் துன்பம் இதில் ஓடும் புனல்

மலரைக் கொய்யும் மனதுடையோரே

குத்தும் முள்ளை முதலில் கொள்வீர்

எப்படி அறிவார் இன்பத்தின் மகிமை

தப்படி வைத்துத் துன்பத்தைத் தாண்டார்

பகல்-இரவு மாறுகின்றன.

பக்கச் சூழல்கள் மாறுகின்றன.

இதே கருத்தை மிக இனிமையான மெட்டில் கூறும் தமிழ்ப் பாடல் மிகவும் பிரபலம்.

திரைப்படம்: பாவ மன்னிப்பு (1961). பாடலாசிரியர்: கண்ணதாசன்.

பாடியவர்: டி.எம். சௌந்திரராஜன். இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி.

பாடல்:

வந்த நாள் முதள் இந்த நாள் வரை

வானம் மாறவில்லை

வான் மதியும் நீரும் கடல் காற்றும்

மலரும் மண்ணும் கொடியும்

சோலையும் நதியும் மாறவில்லை

மனிதன் மாறிவிட்டான்

நிலை மாறினால் குணம் மாறுவார்-பொய்

நீதியும் நேர்மையும் பேசுவார் தினம்

ஜாதியும் பேதமும் கூறுவார்-அது

வேதம் விதியென்றோதுவார்

மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்

பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்

பாயும் மீன்களில் படகினைக் கண்டான்

எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்

எதனைக் கண்டான் பணம்தனைப் படைத்தான்

இன்பமும் காதலும் இயற்கையின் நீதி

ஏற்றத் தாழ்வுகள் மனிதனின் ஜாதி

பாரில் இயற்கை படைத்ததை எல்லாம்

பாவி மனிதன் பிரித்து விட்டானே

மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்.

chinnakkannan
2nd May 2015, 03:09 PM
எஸ்.வாசுதேவன் வாங்க :) அழகான பாடல் ஹிந்தி.. ட்ரான்ஸ்லேஷனும் அழகு.. ஆடியோ தான் கிடைச்சது யூட்யூப்ல

https://youtu.be/ncFAsqaa0Eg

வந்த நாள் முதல் - மறக்க முடியுமா ரஹீம் ந.தி. அண்ட் குழந்தை.. அது இப்போது என்னவாக இருக்கிறது..

https://youtu.be/Yhrp0_XgjdQ


*

கொஞ்சம் நான் எழுதிப்பார்க்கட்டா..


கருவறை தொடங்கிக் கல்லறை வரையில்
....காண்பது எல்லாம் சுழலாய்ச் சுழல்கள்
வருவது தெரியும் வாழ்வினில் என்றோ
...வகையுடன் முடிவோம் எனத்தெரி யாதே
பரிவுகள் பாசம் இளமையின் வேகம்
..பலதினம் கழிய முதுமையின் சோகம்
விரிவெனப் பார்க்கச் சுழற்சியாய் மாறும்
..வெளிறியே சிரிக்கும் வாழ்வதன் வேஷம்..

மாற்றங்கள் தான்கண்டான் மனிதன் அன்று
…மாறிவரும் வேகத்தின் தன்மை கண்டே
ஆற்றல்கள் அறிவினொளி என்றே எங்கும்
..அகத்தினிலே கொண்டுபல செயல்கள் செய்தான்
போற்றுதலாய்ப் பலவிஷயம் செய்யுங் காலம்
…போதாமல் கூடஒரு செயலும் செய்தான்
மாற்றமென மனத்துக்கண் மனிதப் பண்பை
…மாற்றிவிட்டே நடக்கின்றான் நடக்கின் றானே…

கொஞ்சம் ஒழுங்கா வந்திருக்கா :)

chinnakkannan
2nd May 2015, 03:12 PM
//கருவறை தொடங்கிக் கல்லறைவரையில்// இது கண்ணதாசன் எழுதிய கடைசிப் பாடலின் முதல் வரி..அதைக் கொஞ்சம் அவரிடமிருந்து வாங்கிவிட்டேன்..

uvausan
2nd May 2015, 06:45 PM
நாளும் ஒரு அழகின் அலை


ஈகரையில் போட்ட பதில் பதிவை இங்கு இடுவதில் பெருமை அடைகிறேன் - உங்கள் திறமை எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே - இருப்பினும் இந்த பதிவை இங்கு படிப்பவர்கள் கண்டிப்பாக ஈகரை சென்று அங்கும் மயங்க ஒரு வாய்ப்பு கிடைக்குமே என்ற ஒரே எண்ணத்தில் மீள் பதிவிடுகிறேன் .

அன்புள்ள ck

அருமை , அற்புதம் , ஆனந்தம் - இவைகளுக்கும் மேலே ஏதாவது வார்த்தை இருந்தால் , சாதாரண
நடையில் , இந்த பாமரனுக்கும் புரிகின்ற வகையில் சொல்ல முடியுமா ?

ஒன்று மட்டும் எனக்கு புரிகின்றது - உங்கள் முன்னோர்கள் கம்பனின் வழி வந்தவர்களாக இருக்க வேண்டும் - அதனால் வர்னைனைகளும் , கவிகளும் குற்றால அருவி போல உங்களுக்கு வருகின்றது - இல்லை என்றால் சின்ன வயதில் காளி உங்கள் நாவில் "ஓம் " என்று எழுதி இருக்க வேண்டும் ; அப்படியும் இல்லை என்றால் அந்த ஆதி சங்கரரே உங்கள் ஆத்மாவுடன் கலந்திருக்க வேண்டும் .

மிகவும் ரசிக்கின்றேன் - நிலா பதிவுகள் போடுவது மட்டும் அன்றி , அந்த நிலவையே , அம்மாவாசையில் வரவழைத்தவளை உங்களால் மட்டுமே இப்படி ரசித்து , அழகாக எழுத முடியும் -

அன்புடன்
ரவி

chinnakkannan
2nd May 2015, 09:02 PM
//மிகவும் ரசிக்கின்றேன் - நிலா பதிவுகள் போடுவது மட்டும் அன்றி , அந்த நிலவையே , அம்மாவாசையில் வரவழைத்தவளை உங்களால் மட்டுமே இப்படி ரசித்து , அழகாக எழுத முடியும் - // ரவி.. என்னங்க இது திடீர்னு.. ரொம்ப நன்றி :) கொஞ்சம் கூச்சமாக இருக்கிறதுங்க.. இன்னும் வெகு தூரம் போக வேண்டும்..உஙக்ளைப் போல ரசனை மிக்க நண்பர்களின் வாழ்த்துக்களும் பாரட்டும் இறையருளும் எனக்கு என்றும் துணை நிற்கும் என நம்புகிறேன்.. மிக்க நன்றி அகெய்ன்..

rajeshkrv
2nd May 2015, 09:30 PM
சி.க ரவியின் வாழ்த்தை நான் வழிமொழிகிறேன் ..

RAGHAVENDRA
2nd May 2015, 10:45 PM
திலக சங்கமம் - வளர்பிறை

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/valarpiraiPP01_zpsde54486a.jpg
'
என்ன சொல்வது.. எப்படி துவங்குவது ... தெரியவில்லை..

டைட்டில் கார்டு தொடங்கி வணக்கம் வரை நடிகர் திலகம் சரோஜாதேவி இணையின் ஆளுமை...மறக்க முடியாத காவியம்... இதுவரை பார்க்காத ரசிகர்கள் நிச்சயம் இப்படத்தை மிஸ்பண்ணுகிறார்கள் என்று அடித்துச் சொல்வேன்... சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் பார்த்தாலும் இப்போது மீண்டும் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்காதா என தவிக்கிறது மனசு..

நடிகர் திலகம் திரை இசைத் திலகம் இணை பல மறக்க வொண்ணா காவியங்களைத் தந்திருந்தாலும்,, வளர்பிறை தனியிடம் பெறுகிறது. கவியரசரின் பாடல் வரிகள் நம்மை மெய்சிலிர்க்க வைக்கும் டி.எம்.எஸ்.சின் குரலில்.

அத்தனை பாடல்களையும் இங்கே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றாலும் பூஜ்ஜியத்துக்குள்ளோ ஒரு பாடல் தமிழ்த்திரையுலக வரலாற்றில் கவியரசருக்கெனத் தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிய பாடல்.

http://music.raag.fm/Tamil/songs-11420-Valarpirai-Various

முற்றும் கசந்தததென்று பற்றறுத்து வந்தவர்க்கு சுற்றமென நின்றிருப்பான் ஒருவன் -
அவனைப் புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்..

இறைவன் இருக்கின்றானா இல்லையா என்ற வாதத்தை அர்த்தமற்றதாக்கி விட்டு, அவனைப் புரிந்து கொள்ளும் வழிமுறையை சொல்லித்தரும் பாடல். ஏங்கும் மனதிற்கு, வாடும் நெஞ்சிற்கு, துன்பத்தில் அல்லலுறும் மனதிற்கு ஆறுதலாய் இறைவன் இருக்குமிடத்தைப் புரிந்து கொள்ளும் வழியை அருமையாக சொல்லித் தரும் வரிகள்... இறைவனை எங்கும் தேடாதீர்கள்,, உங்களைச் சுற்றி இருக்கும் ஏதாவது ஒன்றில் அவனைக் காணலாம் என்ற பொருளில் பாடல் வரிகள் அமைந்து, டி.எம்.எஸ்.சின் குரலில் ஆறுதலின் உணர்வை அப்படியே கொண்டு வரும் விந்தை..

திரை இசைத்திலகம் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு தமிழ்த்திரையுலகை ஆண்டு கொண்டிருப்பார் தன் படைப்புகளின் மூலம்.

இவையனைத்தையும் தூக்கி சாப்பிடும் வண்ணம் தன் நடிப்பால் நம்மைக் கட்டிப்போட்டு விடுவார் நடிகர் திலகம்..

rajeshkrv
2nd May 2015, 11:07 PM
ராகவ் ஜி,

ஆம் சிவாஜி சரோஜாதேவியின் அருமையான நடிப்பு இந்த படத்தில் உண்டு என்று. பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை இன்னும்

chinnakkannan
3rd May 2015, 12:05 AM
ராஜேஷ்.. நீங்களுமா.. மிக்க நன்றி.. பயம் இன்னும் கூடுகிறது.. இன்னும் நன்றாக எழுதவேண்டுமென..

ராகவேந்திரர்.. வளர்பிறை..பூஜ்யத்துக்குள்ளே ஒரு அழகுப்பாடல்.. வளர்பிறை நான் பார்த்ததில்லை..ஊருக்குச் சென்றால் வாங்கவேண்டும்..

எனது அடுத்த போஸ்ட் என்னவாக்கும்..எதிர்பாராமல் பார்த்த நல்லபடம் ஒன்று அதிலும் திலக சங்கமமா இல்லையா எனத் தெரியவில்லை..பட் பாடல்கள் அழகு..

chinnakkannan
3rd May 2015, 12:41 AM
பட்டினத்தார் என்னவாக்கும் சொல்றார் (ஹாஆஆவ்.. யாருங்க அங்க கொட்டாவி விடறது..)

உண்டதே உண்டு உடுத்ததே உடுத்தும்
அடுத்தடுத்து உரைத்ததே உரைத்தும்
கண்டதே கண்டும் கேட்டதே கேட்டும்
கழிந்தன கடவுள் நாள் எல்லாம்

வாழ்க்கை என்பது இறைவன் கொடுத்த வரம்..அப்படிப்பட்ட வாழ்க்கையில் காலத்தை எப்படியெல்லாம் வீணாக்குகிறோம்..
மீண்டும் மீண்டும் அதே ஓமான் எக்ஸ்ப்ரஸ் பொங்கல் வடை, அல்லது சாதம் ரசம் குழம்பு காய்கறி.. வெய்ட் ஏறிவிட்டால் டயட்டுக்காண உணவு..

சின்னவயசில் ட்ராயர் கல்லூரியிலிருந்து கல்யாணம் வரை கல்யாணத்திலிருந்து வயதாவது வரை பேண்ட் ஷர்ட் டை.. வீட்டில் வயதை மறைக்க பெர்முடாஸ்.. வெளியில் ஊருக்குப் போய்க் கோவில் சென்றால் வேட்டி..இப்படித் திரும்பத் திரும்ப காரியங்கள்.. அழகான காட்சிகள் சோகமான காட்சிகள் என திரும்பத் திரும்ப வருகின்றன..அதே அழகு சோகம் அதுவும் கேட்கவும் செய்கிறோம்…

இப்படி வரப்ரசாதமாக நமக்குக் கடவுள் கொடுத்த நாட்களை எல்லாம் வீணாகக் கழித்துக் கொண்டிருக்கிறோமே என வருத்தப் படுகிறார் பட்டினத்தார்..
ம்ம் என்ன செய்ய..எப்படியாகிலும் உருப்படியாக எழுதிவிடுவோம் என்ற நம்பிக்கையில் தான் வாழ்க்கைச் சக்கரம் சுழன்று கொண்ட்ட்டிருக்க்கிறது… நீளமாக.

*
அவன் ஒரு பட்டாளத்தான்..யெஸ் மிலிட்டரி மேன்.. அவனுக்கும் பத்து தினங்கள் கிடைக்கின்றன விடுமுறை.. அவனது தாயாரைப் பார்த்து (ஆறு தினங்கள் ட்ராவல் ப்ளஸ் ஊருக்குப் போய்வர இரண்டு நாள் தாயாருடன் இரண்டு நாள் எனப் ப்ளான்) வரப் புறப்படுகிறான்..

புறப்படும் போது தன் சக ஜவான்களைப் பார்க்கிறான்.. ஒருவன் தன் காதலியைப் பார்த்து எனது பரிசைக் கொடு எனக் கொடுக்கிறான்..இன்னொருவன் என் மகனைப் பார்த்து நான் விரைவில் வருவேன் எனச் சொல் எனச் சொல்கிறான்..அவனது மேலதிகாரியோ ஆஸ்பத்திரியில்.. போய்ப் பார்த்தால் – தலைக்கட்டுடன் அந்த தலைக்கட்டு சொல்கிறார்..”எனது கல்லூரிக்காதலியாயிருந்து மனைவியான தேவியைப் பார்த்து அவளிடம் சொல்.. என் வாழ்க்கை காவியமாகவும் ஆகலாம் அல்லது சிறுகதையாகவும் முடியலாம் எனச் சொல்” “ நான் மறுபடி வருகிறேன் ஐயா” “ நான் இருந்தால் பார்க்கலாம்” என விரக்தியாய்ச் சிரிக்கிறார் மேலதிகாரி..

ரயிலில் ஏறும் போது அவனுக்கு இன்னொரு நண்பனின் நினைவு..போர்க்களத்தில் இந்த வீரனின் கைகளில் உயிர்விட்டவன் அவன்.. ஊருக்குப் போய் என் தங்கை ராதாவை கவனித்துக் கொள் – என்பது அவனுடைய கடைசி வார்த்தைகள்..

ஆச்சர்யமாக அவன் சென்று கொண்டிருந்த பாஸஞ்சர் ரயிலிலேயே (அந்தக்காலம்) ஒரு இளம் பெண் ஏறுகிறாள்..யாரோ ஒரு கயவனால் துரத்தைப்பட்டு.. அவளை ஆசுவாசப் படுத்திப் பேச்சுக் கொடுத்தால் அவளே தான் ராதா..அவனுடைய நண்பனின் தங்கை..

பின் என்ன.. அந்த ராணுவ இளைஞன் ராதாவை அவள் வீட்டில் விட்டுவிட்டு பின் மற்ற நண்பர்களைப் பார்த்து விட்டு பின் கடைசியில் தனது தாயிடம் போகும் போது கொஞ்சம் கஷ்டம் தான்..ஏனெனில் இரண்டு நாட்கள் எக்ஸ்ட்ராவாக வேறு இடங்களில் கழிந்துவிட தன் தாயிடம் இருக்கப்போவது அரை மணி நேரம் மட்டுமே – என உணர்ந்து அதையே அம்மாவிடம் சொல்கிறான்..

அம்மாவோ பரவாயில்லைடா அரைமணியாவது வந்தாயே.. சரி போய் வா ..அடுத்த முறை நெடு நாள் தங்கும் வண்ணம் வா.. எனச் சொல்லி வழியனுப்புகிறாள்..

இது தாயே உனக்காக படத்தின் கதை.. A ballad of a soldier என்ற ரஷ்யச் சிறுகதையைத் தழுவி எடுக்கப் பட்ட படமாம்..

இதைப் பற்றி நான் கேள்விப்பட்டதில்லை.. ஏசு நாதர் பேசினார் என்ற பாட்டு மட்டும் கேட்டிருக்கிறேன்.. காலையில் பாடல் போடுவதற்குப் பார்த்த போதுதான் தேவிகா என்று சர்ப்ரைஸ்.. சரி படம் பார்க்கலாம் என யூட்யூபில் தேடினால் இன்னொரு சப்ரைஸ் சிவாஜிகணேசன்.சிவகுமார் படம் எனப் போட்டிருந்தது ...

படம் பார்க்க ஆரம்பித்தால் தான் தெரிந்தது ந.தி, பத்மினி, ஜெயலலிதா தேவிகா என எல்லாரும் கெளரவத் தோற்றம் சிவகுமார் புஷ்பலதா..வசந்தமாளிகையில் ந.தியின் அன்னையாக வருபவர் தான் இதில் சிவகுமாரின் அம்மா..(என நினைக்கிறேன்..)

நீட்டாக எடுக்கப் பட்ட படம்..எனக்கு மிகப் பிடித்திருந்தது..பாடல்கள்…ச்சோஸ்வீட்.. அதில் ந.தி பத்மினி பாட் நான் கேட்டிராத பார்த்திராத ஒன்று..இந்தியன் கப்பலேறிப் போயாச்சு ப் பாட்டின் முன்னோடி

மேலதிகாரியாக ஆஸ்பத்திரியில் ந.தி..உணர்ச்சிபொங்க சிவகுமாரிடம் தன் கதை சொல்வது அழகு..அந்த ஃப்ளாஷ்பேக்கில் ந.தி. பத்மினியின் இளமை ப்ளஸ் அசத்தல் நடிப்பு.. வெகு அழகு..
.
பழகு செந்தமிழ் அழகு மங்கை உன்
பருவம் காட்ட வேண்டும்..
https://youtu.be/SR3JqKEVnbk


ஏசு நாதர் பேசினால் அவர் என்ன பேசுவார்..
அமைதிப்புறாவே அமைதிப்புறாவே அழைக்கின்றேன் உன்னை..

ஜெயலலிதா நடனத்தில்..
காவேரியில் தேம்ஸி நதி கலந்துவிட்டது
கண்டாங்கி கவுனுக்குள்ளே மறைந்துவிட்டது..
கோவைப்பழம் செர்ரியோடு கனிந்துவிட்டது
குவளைமலர் லில்லியோடு குவிந்துவிட்டது …வாவ்…
( நாகரீகம் மாறியதை எளிய வரிகளில் பாடல்..அழகுதான்)
வீடியோ கிடைக்கவில்லை.. அமைதிப்புறா கிடைத்தது..அது விஜயகுமாரி என விட்டுவிட்டேன்..!

பார்க்கவில்லை எனில் கண்டிப்பாக லெஷரில் பார்க்கவேண்டிய படம்..
வலையில் தேடியதில் ஏற்கெனவே இந்தப் படத்தைப்பற்றி வாசு சார் எழுதியிருக்கிறார் வெகு அழகாக.. ராகவேந்திரரும்தான்..

http://www.mayyam.com/talk/showthrea...l=1#post730220

ம்ம் அப்புறம் வாரேன்..:)

uvausan
3rd May 2015, 10:56 AM
கல்நாயக் /ck - நான் (கல்நாயக்) தமாஷா சொன்னதை ஏன் இவ்வளவு சீரியஸ் ஆக எடுத்துக்கொண்டீர்கள் என்று நீங்கள் கேட்கலாம் - ஒரு விஷ பரீட்சை யை தெரிந்தும் எடுத்துக்கொள்ளலாமா என்று நீங்கள் கேட்பதும் புரிகின்றது . ஒரு சின்ன முயற்சி - 1000 கரங்கள் நீட்டி நம்மை தினமும் அரவணைக்கும் அந்த கதிரவனுக்கு இந்த ரவியின் ஒரு மிகச்சிறிய காணிக்கை . உங்கள் இருவருக்கும் ஒரு சின்ன வேண்டுகோள் -

1. உங்கள் திறமையை வைத்து என் பதிவுகளை எடை போடாதீர்கள் - உங்கள் கற்பனைக்கும் , திறமைக்கும் முன் என் பதிவுகள் எறும்பை விட சிறியவை .

2. என்னிடம் ரொம்பவும் எதிர்பார்க்காமல் ( சிங்கங்கள் நடமாடும் இடம் இது என்று எனக்குத்தெரியும் ) சாதரணமாக பதிவுகளை படிக்கவும் .

3. போடும் போதே , நீங்கள் ஏற்படுத்தும் நேப்பாள் நில நடுக்கத்திலும் , நெய்வேலி யிலிருந்து வரப்போகும் சுறாவளியிலும் , திலகத்தின் சங்கமத்திலும் என் பதிவுகள் காணாமலும் போகலாம் - மீண்டும் கதிரவனின் ஒளி எழும்பும் .

4. பாடல்களில் கதிரவனை பற்றி ஏதாவது ஒரு குறிப்பு இருக்கும் - பாடல்கள் நிலாவைப்போல ஆரம்பத்திலேயே ஆதவனை பற்றித்தான் ஆரம்பிக்கும் என்று அவசியம் இல்லை .

5. கதிரவனை பற்றி உங்களுக்கு உதிக்கின்ற நல்ல பாடல்களையும் கண்டிப்பாக பதிவிடவும் .

6. மறை முகமாக , என் பதிவுகள் உங்கள் பதிவுகளையும் இன்னும் அதிகமாக உயர்த்தும் - எப்படி என்று கேட்கிண்டீர்களா ? - தரத்தில் சுமாராக இருப்பதால் - நிலாவே தேவலை என்று பலர் நினைக்கத்தோன்றும் - இதற்காக உங்களிடம் இருந்து எந்த கமிஷன் யையும் நான் எதிர்பார்க்க மாட்டேன் .

7. ஒரே நாளில் ஒரு பதிவுக்கும் மேலே போட வாய்ப்பு உள்ளது - எல்லோரையும் அலெர்ட் பண்ணுவதும் உங்கள் கடமை .

8. எழுத்து பிழை இருந்தால் மன்னிக்கவும் - உங்களைப்போல பிறவி கவிஞர் அல்ல தமிழில் ...

இனி என் பதிவுகள் உதயமாகும்

அன்புடன்

ரவி

uvausan
3rd May 2015, 11:35 AM
Om ~ Japa kusuma-sankarsham kashyapeyam maha-dyutim
tamo-rim sarva-papa-ghnam pranato ' smi divakaram


I pray to the Sun, the day-maker, destroyer of
all sins, the enemy of darkness, of great
brilliance, the descendent of Kaashyapa, the
one who shines like the japaa flower.

Om Crimson red like a hybiscus flower, the Great Light shines onto the earth, removing all the darkness and eradicating sin. We bow down with devotion to that Shining Light. Om we bow down to the Sun, Light of Wisdom, Dispeller of Ignorance.

In Vedic astrology, the Sun is the principal of light, life and love, or true-will and perception. It is the most important factor for determining the spiritual life and potential of an individual. In represents the soul---the causal body or reincarnating entity---whose will is behind our fate. It is also the mind or the mental principal on a lower level as reason, discernment, clarity and illumination.

Surya is an important god in all religions especially in Hinduism. He is the chief graha or celestial body around which revolve all the astrological grahas. He is the supreme father whose chariot is made up of 12 wheels , each wheel corresponding to the seasons and which is pulled by 7 horses. They say that while six horses are seen , the seventh horse is unseen. it is the mysterious horse of intuitive wisdom whose presence is felt but which remains invisible. Let the sun god shower all His blessing to every one in this mayyam thread and brighten our lives better than BEST.

uvausan
3rd May 2015, 11:57 AM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 1.

சிங்கங்கள் நடமாடும் இந்த மதுர காண வனத்தில் , இந்த சுண்டலியின் முதல் பதிவு ( திருமணம் செய்துக்கொள்ளும் முன்பு நானும் ஒரு சிங்கமாகத்தான் இருந்தேன் என்பது வேறு விஷயம் ).

கதிரவனை வணங்கி , ஆரம்பிக்க இந்த பாடலைத்தவிர வேறு சிறப்பான பாடல் வேறு எந்த உலகத்திலும் கிடைக்குமா ? அகர முதல எழுத்தெல்லாம் என்று ஆரம்பித்து வைத்த அந்த கணேசனை வணங்கி விட்டு இந்த பாடலை பதிவிடுகிறேன் .

ஆயிரம் கரங்கள் நீட்டி - அணைக்கின்ற தாயே போற்றி !!
அருள் பொங்கும் முகத்தை காட்டி - இருள் நீக்கம்
தந்தாய் போற்றி !
தாயினும் பரிந்து சால சகலரை அணைப்பாய் போற்றி !!
தழைக்கும் ஓர் உயிர்களக்கெல்லாம் துணைக்கரம் கொடுப்பாய்
போற்றி !!
தூரத்தே நெருப்பை வைத்து சாரத்தை தருவாய் போற்றி !!
ஞாயிறே நலமே வாழ்க நாயகன் வடிவே போற்றி !!
நானிலும் உள நாள் மட்டும் போற்றுவோம் போற்றி போற்றி !!


"Aayiram Karangal Neeti
Anaikkindra Thaye Potri
Arul Pongum Mugathai Kaati
Irul Neekam Thanthai Potri
Thayinum parinthu Sala Sagalarai Anaippai Potri
Thazhaikkum Or Uyirkatkellam Thunakkaram Koduppai Potri
Thoorathey Neruppai Vaithu Saarathai Tharuvai Potri
Gnayire Nalamey Vazhga Nayagan Vadivey Potri
Naanilam Ulla Naal Mattum Potruvom Potri Potri"

https://youtu.be/xsCtzX-9TiU

uvausan
3rd May 2015, 12:06 PM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 2.

ஆயிரம் கரங்கள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை -

ஆடி வா ஆடி வா ஆடி வா - அட பிறந்தவளே ஆடி வா - புகழ் தேட பிறந்தவளே பாடி வா --

அருமையான சூழ்நிலை - அழகான காதலர்கள் - அற்புதமான பாடல் - இளமை , இனிமை ததும்பும் பாடல் இதோ

https://youtu.be/P8d1U0w9J-4

vasudevan31355
3rd May 2015, 05:35 PM
ராகவேந்திரன் சார்,

என் வேண்டுகோளை ஏற்று திலக சங்கமத்தை மதுரகானங்கள் திரியிலும் சங்கமம் ஆக்கியதற்கு என் நன்றிகள் ஆயிரம்.

பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்யத்தை ஆண்டு கொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன். அவன் இறைவன்.

பூஜ்யம் தாண்டி தன் நடிப்பு ராஜ்யத்தால் நடிப்பை இன்னதென்று இகமதில் புரிய வைத்துக் கொண்டிருப்பான் ஒருவன். அவன் நாம் வணங்கும் இறைவன்.

உண்மைதானே!

vasudevan31355
3rd May 2015, 05:49 PM
சி.க,

http://www.thehindu.com/multimedia/dynamic/01908/23fr-nadigar-FI_23_1908920e.jpg

அருமை. 'தாயே உனக்காக' கதை கலக்கல். நிஜமாகவே அருமையான மூவி. பச்சிளம் பாலகன் போன்று பால் வடியும் முகம் சூர்யா அப்பாவிற்கு.

http://s2.dmcdn.net/CyFV6/1280x720-TH3.jpg

//வசந்தமாளிகையில் ந.தியின் அன்னையாக வருபவர் தான் இதில் சிவகுமாரின் அம்மா..(என நினைக்கிறேன்..)//

கரெக்ட். சாந்தகுமாரி. 'சிவந்த மண்'ணிலும் அன்னை இவரே. அதை விட்டு விட்டு விட்டீர்களே!

http://s2.dmcdn.net/CyFTO/1280x720-1NC.jpg

''காவேரியில் தேம்ஸி நதி கலந்துவிட்டது//

மிக அபூர்வமான பாடலை நினைவு கூர்ந்து நெஞ்சாங்கூட்டில் குந்தி விட்டீர்கள்.

சீர்காழியின் தழுதழுத்த குரலில் 'கருநீல மலை மேலே தாய் இருந்தாள்' ஒரு உணர்ச்சிப் பிரவாகம். மெய் சிலிர்த்துவிடும்.

http://s2.dmcdn.net/CyFQU/1280x720-rmq.jpg

அதே போல பி.வசந்தாவின் 'ஏசுநாதர் பேசினால்' கற்கண்டு. அந்தக் குரலில் இருக்கும் வசியத்தை, வசீகரத்தை கவனித்தீர்களா?

சி.க,

http://i.ytimg.com/vi/uLAUC4nff6c/hqdefault.jpg

நிஜமாகவே அற்புத படத்தை நினைவூட்டி அடுத்த பாகத்தை தொடக்க ஸ்ட்ராங் பவுண்டேஷன் போட்டு விட்டீர்கள். என் மனமார்ந்த நன்றி. ரசித்து சுவைத்'தேன்'. இது போன்ற அபூர்வ பதிவுகளுக்கு என் நெஞ்சில் எப்போதும் தனி இடம் உண்டு.

'Ballad of a soldier' படத்திலிருந்து ஒரு காட்சி.

http://www.mattfind.com/12345673215-3-2-3_img/movie/r/q/j/ballad_of_a_soldier_1959_580x458_942382.jpg

http://wfiles.brothersoft.com/b/ballad_of_a_soldier_59143-1600x1200.jpg

vasudevan31355
3rd May 2015, 06:01 PM
சி.க,

எஸ்.எஸ்.ஆரின் அருமையான குத்துப்பாட்டு ஒன்று 'தாயே உனக்காக' படத்தில் உண்டு. சோல்ஜர்ஸ் கேம்ப்பில் சச்சு உல்லாச நடனம் ஆட, எஸ்.எஸ்.ஆர் ராணுவ உடையில் போடும் செம் ஆட்டம். பார்த்திருக்கீரா? இல்லையென்றால் கண்டு பிடியுங்கள்.

நிறைய வேலை வாங்கி விட்டீரே ஐயா!

vasudevan31355
3rd May 2015, 06:06 PM
பிடிக்காத நடிகை நடித்த பிடித்த பாடல்.

அமைதிப்புறாவே அமைதிப்புறாவே அழைக்கின்றேன் உன்னை.. (சுசீலா அம்மாவின் அழகான குரலில்)


https://youtu.be/0X-ykDR3uvU

vasudevan31355
3rd May 2015, 06:17 PM
ரவி சார்,

'திறமை உள்ளவன் எங்கிருந்தாலும் தேசம் அவனிடம் ஓடும்'. இது தலைவர் வாக்கு. உங்களுக்கு சாலப் பொருந்தும். உங்கள் திறமையை எந்த வகையிலும் குறைத்து எடை போட முடியாது. 'சூரியன் போகும் திசையினிலெல்லாம் வளையும் சூர்யகாந்தி' போல் உங்கள் பதிவுகள் எங்கிருந்தாலும் படித்து மகிழ்கிறோம்.

தங்கள் கதிரவ கானங்கள் கலக்கல். ந.தியும், ம.தியும் என்று அமர்க்களமான துவக்கம். 'ஆயிரம் கரங்கள் நீட்டி' உங்களை வரவேற்கிறோம்.

'குறவஞ்சி' படத்தில் நடிகர் திலகத்தின் பெயர் கதிரவன்தானே!

vasudevan31355
3rd May 2015, 06:19 PM
வாசுதேவன் சார்,

தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி! தங்களின் 'Tamil Hindu' பதிவிற்கும் நன்றி!

vasudevan31355
3rd May 2015, 06:21 PM
ஹை! ராஜேஷ்ஜி ஆன்லைனில்.

rajeshkrv
3rd May 2015, 06:21 PM
கண்ணா கண்ணா காவியக்கண்ணா .. சின்ன கண்ணா . வர வர உமது எழுத்து தேர்ந்த எழுத்தாளர் போல் சும்மா அதிருதுல.....
கலக்கல் தூள் .. வாழ்த்துக்கள்

வாசு ஜி,
அமைதிப்புறாவே பாடல் அருமை அருமை.
எனக்கும் பிடிக்காத நடிகை இதோ பிடித்த பாடல்
மிகவும் அரிய பாடல்

https://www.youtube.com/watch?v=eGemQwQtPis

chinnakkannan
3rd May 2015, 06:38 PM
இந்த சுண்டலியின் முதல் பதிவு ( திருமணம் செய்துக்கொள்ளும் முன்பு நானும் ஒரு சிங்கமாகத்தான் இருந்தேன் என்பது வேறு விஷயம் ). // ரவி வாங்க வாங்க..:) ச்சும்மா இந்த பந்தாக்கெல்லாம் குறைச்சல்லை..இதுல குறும்புல்லாம் இருக்கு... நாங்களும் தான் சி ஆ இருந்து பூ ஆ மாறிட்டோம் .. அப்புறம் முதலில் படிச்ச போது சுண்டலின் முதல் பதிவுன்னு படிச்சுக் குழம்பிட்டேன் :) நடத்துங்க அண்ட் கலக்குங்க.. ரெண்டு பாட்டும் குட்..இங்க எக்கச்சக்க வெயிலா..ஒரே எரியறது பாடி முழுக்க..காலங்காத்தால அஞ்சரைக்கு ச் சூரியன் இஸ் ஸுட்டு ஃபையிங்க்..ம்ம்பெள்ர்ணமி அன்னிக்குக் கூட சந்திரனைப் பார்த்தா சூரியனாத் தெரிகிறதுன்னு தான் பாடத் தோணுது..(ஹச்சோ ஒங்களுக்கு பாட் க்ளூ கொடுத்துட்டேனோ..) ஸ்லோகம் அண்ட் ஸாங்க்ஸ்க்கு ஒரு ஓ அண்ட் டாங்க்ஸ்..:)

chinnakkannan
3rd May 2015, 06:45 PM
//நிறைய வேலை வாங்கி விட்டீரே ஐயா!//

வாசு..அது எஸ் எஸ் ஆரோட குத்து ப் பாட் டில்லை..சச்சுவோடது..! நல்லா இருக்கும்
..ஒருஃப்ளோல குறிப்புல்லாம் எடுத்துக்காம மனசுல ரசிச்சுப் பதிஞ்சதை எழுதினேனா... அதுவிட்டுப் போச்சு..
படம் முழுக்க ப் பார்த்தீங்கன்னா ஸர்ப்ரைஸ் எலிமெண்ட்ஸ் எக்கச் சக்கம்.. விகேஆர் நாகேஷ் சுந்தர்ராஜன் முத்துராமன்
குலதெய்வம் ராஜகோபால் என.. அதுல குலதெய்வம் ராஜகோபால் கழைக்கூத்தாடி ப்ளஸ் சித்து வேலை மாதிரி..
விஜயகுமாரியப் பார்த்து சோர்வடைந்த நேரத்துல அவர் சீன்.. ஒரு குப்பலா இருக்கற சுத்திச் சுத்தி இருக்கற கயிறு..அவர் சொல்ல அது
ஸ்ட்ரெய்ட்டா மேலெழும்ப அதப் பிடிச்சுக்கிட்டு அவரோடமனைவி யோ அஸிஸ்டண்டோ மேல ஏறி மறைஞ்சவுடனே நிமிர்ந்து உட்கார்ந்துவிட்டேன்..!

ஆஹா..எல்லா ஸ்டில்களுக்கும் மிக்க நன்றி..இது தான் வாசுசார்..அண்ட் கமெண்ட்ஸூக்கும்

ஆனா மெய்னா எழுத நினைச்ச விஷயம் விட் போச்..

அது அடுத்த போஸ்டில்

rajeshkrv
3rd May 2015, 06:47 PM
ஹை! ராஜேஷ்ஜி ஆன்லைனில்.

ungalai paarthathal naanum online'l

chinnakkannan
3rd May 2015, 06:49 PM
மூணுவருஷத்துக்கு முன்னால் கார்கில் போயிருந்தேன்/தோம் நானும் என் மனைவியும்..

அங்கு கார்கில் போரில் மரணமடைந்த வீரர்களின் புகைப்படங்கள் அஸ்தி எல்லாம் ஒரு மியூசியமாட்டம் வைத்திருக்க உள்ளே
புகைப்படங்களுடன் அவர்கள் பட்ட க்*ஷ்ட நஷ்டங்கள் எல்லாம் எழுதிவைத்திருக்க- பார்த்து நெஞ்சுக்குள்ளிருந்து ஒரு பந்து மேலெழும்பி
தொண்டையில் அடைத்துக் கொள்ள கண்கள் தானாகக் கலங்கி கண்ணீர் பெருக மனசு கனத்துப் போய் வெளியே வந்தோம்..

வழிந்த கண்ணீரைக் கூட த் துடைக்காமல் மெல்ல நாங்களிருவரும் நடக்க எங்கள் நிலையைப் பார்த்தாரோ என்னவோ எங்கிருந்தோ
வந்த ஒரு ஜவான்.. சாப்.. அந்த நினைவுச் சின்னத்தைப் பார்க்காமல் போகிறீர்களே என ஆப்போஸிட் ஸைடில் இருந்த
மரணித்த ஒரு மேஜரின் நினைவுச்சின்னத்தைக் காட்டினார்.. மெல்ல அங்கும் போய் தரை தொட்டு வணங்கி விட்டுத் தான் வந்தோம்..

மறுபடியும் ஜீப்பில் ஏறிச் செல்கையில்.. தன்னிலை வருவதற்கு எங்களுக்கு ஒரு அரைமணி நேரம் தேவைப் பட்டது..ம்ம்
நமக்காக எவ்வளவு பாடுபட்டு சுற்றம் துறந்து இருக்கிறார்கள் இந்தப் போர்வீரர்கள்..

vasudevan31355
3rd May 2015, 06:53 PM
//நிறைய வேலை வாங்கி விட்டீரே ஐயா!//

வாசு..அது எஸ் எஸ் ஆரோட குத்து ப் பாட் டில்லை..சச்சுவோடது..! நல்லா இருக்கும்
.

அண்ணா! இல்ல இல்ல கண்ணா! நல்லா பாருங்க மறுபடி. எஸ்.எஸ்.ஆர்தான் மஸ்த் கலந்தர் குத்துப்பாட்டு பாடி குத்துவார். சச்சு சாதரணமாகத்தான் ஆடுவார். ம்...எங்ககிட்டேயேவா?:)

chinnakkannan
3rd May 2015, 09:57 PM
பார்க்கறேன் வாசு சார்..

**

சித்ரா பெளர்ணமியும் அதுவுமா திருடன் வந்தான்னு ஒரு பொண்ணுபாடறதா மதுண்ணா ஃபேஸ்புக்ல சொன்னாரா... நிமிண்டிட்டேன் (சுட்டுட்டேன்..)

நான் எழுதிப்பார்க்கும் பாட்டு அப்புறம் வீடியோ பாட் ஓகேயா..


நகைக்கின்ற கண்களின் ஓரம்
..நங்கையின் உள்மனம் தேறும
பகைவனாய் இருப்பவன் மீது
…பாவையவள் பார்வையும் தோது
மிகையிலை தங்கமாய் மின்னும்
…மேனியுடன் கூந்தலும் தானே
திகைத்திட்ட நெஞ்சமும் பின்பு
…சேயிழையின் பின்செலும் நன்றாய்..


https://youtu.be/IKuNMJq8DEo

chinnakkannan
3rd May 2015, 10:41 PM
பெளர்ணமியும் அதுவுமா பெளர்ணமிப் பாட் போடலைன்னா எப்படி...

ஒருவர் வாழும் ஆலயம்.. ரகுமான் ராது (இந்த ஒருபடம் தான் அவர்) நீபெளர்ணமி.. என் நெஞ்சிலே.. (பாடறது சிவகுமார்)

https://youtu.be/X82IFcTvOIc


இப்படி நடந்து நடந்து பாடி ஒரு இடத்துல ஒக்காந்துண்டு தன்னோட ப்ளாக் அண்ட் ஒய்ட் லைஃப் நினைக்கறாரா..

பெளர்ணமி ... பனிவிழும்.. ஓ இது கல் நாயக் பாட் நான்போட மாட்டேனே :)

கூ கூ கூ... ந்னு குரல் கேக்குது..

சித்திரை மாதம் பெளர்ணமி நேரம் முத்து ரதங்கள் ஊர்வலம் போகும்..

https://youtu.be/y0khGzjDhNQ

vasudevan31355
4th May 2015, 07:24 AM
கோபால்,

நிரம்ப சந்தோஷமாய் இருக்கிறது. தங்கள் மகனோடு பழகியவன் என்ற முறையில் அந்த செல்வத்தைப் பற்றி பரிபூரணமாக என்னால் உணரமுடிகிறது. சாலையில் இரு சக்கர வாகனத்தில் தவறி விழுந்த ஒருவரைப் பார்த்ததும் காரை நிறுத்தி ஓடோடிப் போய் அவரகளை கவனித்துக் கொண்டதை நேரில் கண்டு பூரித்துப் போனவன் நான். இது உங்களுக்கு மட்டுமல்ல. எனக்கும் எல்லையில்லாப் பெருமையே. அவருக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்களும், ஆசிகளும். புலிக்குப் பிறந்தது பூனையல்லவே. நன்றி!

vasudevan31355
4th May 2015, 07:37 AM
சி.க,

பௌர்ணமி பாடல்களை ரசித்தேன்.

'ஒருநாள் இரவு தனிமையில் இருந்தேன்' பாடல் போலவே நடிகர் திலகத்தின் 'தங்கைக்காக' படத்திலும் ஒரு பாடல் உண்டு. கிட்டத்தட்ட இந்தப் பாடல் போலவே இருக்கும். அதுசுசீலா அம்மா. இது ராட்சஸி.

'வெள்ளிக்கிழமை ராத்திரி நேரம்
கல்கத்தாவில் நடந்தது ஒன்று
ஊரெங்கும் பேர் பெற்ற திருடன் பிடிபட்டான்
திருடன் பிடிபட்டான்'

அருமையான பாடல். ஹிட்டடிக்காமல் போனதில் வருத்தமே. சீனப் பின்னணி இசையில் 'தமிழக மும்தாஜ்' (பேர் நல்லா இருக்கா?) 'வெண்ணிற ஆடை' ஆட, 'திலகம்' பர்மா பின்னணியில் லுங்கி, தலையில் பர்மா தலைப்பாகைக் கட்டு என்று அசத்துவார் 'ச்சிங் ச்சிங் ச்சிங் ச்சூச்சூ' என்றே பாடியபடி. நாகேஷ் சாப்ளின் வேடத்தில் இருப்பார்.

அனேகமாக நீங்கள் பார்த்து நாட்கள் ஆகியிருக்கலாம். பார்த்துட்டு சொல்லுங்கோ. 'வெண்ணிற ஆடை' நிர்மலா அழகாக பாடலுக்கு வாய் அசைப்பதையும் கவனித்துக் கொள்ளுங்கள். 'காத்திருந்த ஒருத்தி கண்ணடித்ததாலே' என்ற வரிகளில் அந்த 'லே' வை ராட்சஸி எப்படி உச்சரித்து அசத்துகிறார் என்பதையும் கேட்டு ரசியுங்கள்.


https://youtu.be/QgulwUF15w0

vasudevan31355
4th May 2015, 08:11 AM
'என் தம்பி'

'தட்டட்டும்....கை தழுவட்டும்' பாடல் சிறப்புப் பதிவு.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20new/---Enthamby%20%20Sarojadevi%20Sivaji.mp4_20150504_074 811.052.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20new/---Enthamby%20%20Sarojadevi%20Sivaji.mp4_20150504_074 811.052.jpg.html)

(நடிகர் திலகத்தின் நளின நடிப்பில் மனம் சொக்கியபடி)

தோட்டத்தில் கண்ணனும், ராதாவும். அந்த இனிய மாலைப் பொழுதில் காதலர்கள் களிப்போடு பேசிக்கொண்டிருக்க, சட்டென்று கண்ணனின் மீது ஒரு சாட்டை வீச்சு. சற்றே நிலை குலைந்து போன கண்ணன் நிமிர்ந்து பார்க்கிறான். அங்கே சாட்டையும் கையுமாக அவனுடைய திருந்தாத தம்பி விஸ்வம்.

தன் சொத்துக்காகவும், சுயநலத்திற்காகவும் தன் அன்பான சொந்த அண்ணனையே சாகடிக்க முயற்சித்தவன் தம்பி. ஆனால் விதியின் விளையாட்டு வேறு. சில நாட்களுக்குள் அண்ணன் கண்ணன் திரும்ப உயிருடன் அவன் குடும்பத்துடன் இணைகிறான். தம்பி நம்பினானில்லை. ஆனால் சூழல் நம்பித்தான் ஆக வேண்டும்.

படகில் செல்லும்போது ஆற்றில் கண்ணெதிரே அண்ணனை திட்டமிட்டு தண்ணீரில் கவிழ்த்தவன் தம்பி. கண்டிப்பாக அண்ணன் உயிரோடு இருக்கவே முடியாது. அவனுக்கு நீச்சல் தெரியாது. ஆனால் கண்ணன் அண்ணனாக மறுபடி உயிர் பிழைத்து வந்திருக்கிறான். எப்படி சாத்தியம்? நிச்சயமாக இவன் அண்ணன் கண்ணன் இல்லை. கண்ணன் மாதிரி உருவம் கொண்ட வேறு ஒருவன் தன் அண்ணனாக இங்கே நடிக்க வந்து தனக்கு சேர வேண்டிய சொத்தை அபகரிக்க பிரமாதமாக நடிக்கிறான். ம்ஹூம்...இவனை விடக் கூடாது. இவன் வேஷத்தைக் கலைத்து இவன் டூப்ளிகேட் என்று அனைவரிடமும் நிரூபித்து அவனை வீட்டை விட்டு துரத்தி மீண்டும் சொத்து முழுவதையும் தானே அனுபவிக்க வேண்டும். இது தம்பியின் தீர்மானமான முடிவு.

இறந்த தன் அண்ணனுக்கு தன்னைப் போலவே பல வீர வித்தைகள் தெரியும். வாள் வீச்சு, குதிரை ஏற்றம் இப்படி பல. சரி! போலியாய் வந்திருக்கும் கண்ணனுக்கு இவையெல்லாம் நிச்சயம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதை வைத்து அவனை மடக்க வேண்டும். இப்போது காதலி ராதாவுடன் காதல் புரிகிறான். இதுதான் சரியான சந்தர்ப்பம் வந்திருப்பவன் போலி என்று நிரூபிக்க.

இறந்ததாக கருதப்படும் ஒரிஜினல் கண்ணனுக்கு ராதா சுழன்று ஆடும் போது அவள் கூந்தலில் கொலு இருக்கும் மலர்களை தன் கையில் உள்ள சாட்டையால் அசால்ட்டாக மலர்கள் கசங்காமல் பறிப்பது கைவந்த கலை.

இப்போது மகன் மாட்டினான்.

தம்பிக்குக் கொண்டாட்டம். நிச்சயம் கண்ணன் போல் இவனுக்கு சாட்டையால் மலர்களை பறிக்க தெரியாது. இப்போது ஒரு டெஸ்ட் செய்து பார்த்து விடுவோமே! அப்படியே ராதாவும் வந்திருப்பவன் போலி என்று உண்மையை தெரிந்து கொள்வாள் அல்லவா!

போலி என்று நினைக்கும் கண்ணனிடம் தம்பி 'ராதா ஆட, அவள் தலையில் இருக்கும் மலர்களை சாட்டையால் அவளை காயப்படுத்தாமல் கொய்ய வேண்டும்' என்று ஆணை பிறப்பிக்கிறான். அவன் நினைத்தது போலவே கண்ணனாக வந்திருப்பவன் தம்பியின் சவாலை எதிர் கொள்ளத் தயங்குகிறான். ஆனால் தம்பி விடவில்லை. காதலியும் கண்ணனிடத்தில் பெரும் நம்பிக்கை வைத்து தம்பியின் சவாலை எதிர் கொண்டு வெற்றி காணச் சொல்கிறாள். மலர்களை சாட்டையால் கொய்து தம்பியின் மூக்கை உடைக்க சொல்கிறாள். அந்த அப்பாவி அவன் போலியோ அல்லது அசலோ செய்வதறியாது மறுக்கப் பார்க்கிறான். தம்பி இதை சாக்காக வைத்து வந்திருப்பவன் போலி என்று எள்ளி நகைக்கிறான். ஆனால் காதலியின் பிடிவாதத்தால் சவாலை அரைமனதுடன் எதிர் கொள்ளத் தயாராகிறான் அண்ணன்.

ராதா ஆட ஆரம்பிக்க, தான் 1..2...3 என்று சொன்னதும் ராதாவின் தலையில் உள்ள மலர்களை கண்ணன் சாட்டை கொண்டு கொய்ய வேண்டும் என்று தம்பி விஸ்வம் கட்டளை பிறப்பிக்க, ஒன்றுமே செய்யத் தோன்றாமல் சாட்டையை வாங்குகிறான் கண்ணன். ராதா பாடியபடியே ஆட, தம்பி பாடலின் நடுவில் ஒன்...டூ...திரீ சொல்ல,

தம்பியின் சவாலை ஏற்று கண்ணன் காதலியின் கூந்தலில் உள்ள மலர்களைப் பறித்தானா? இல்லையா? பரிட்சையில் வெற்றி வாகை சூடினானா இல்லையா? தம்பியின் மூக்கு அறுபட்டதா இல்லையா?

அட்டகாசமான இந்த சிச்சுவேஷன் பாடலைப் பாருங்கள்.

இருங்க... இருங்க.. பார்ப்பதற்கு முன்னாடி மூலவரைப் பற்றி சொல்லாமல் எப்படி?! அவரின்றி ஓர் அணுவும் அசையாதே!

கண்ணனாக யாரென்று நினைக்கிறீர்கள்? கண்ணான நடிகர் திலகம்தான். நடிப்பின் மன்னனான மாயக் கள்வன்தான்.

தம்பியாக பாலாஜி. காதலியாக எனதருமை ராஜேஷ்ஜிக்கு மிகவும் பிடித்த சரோஜாதேவி. மூவர் கூட்டணி. முடிவு முத்தான பாடல். அம்சமான ஆடல். இருக்கை நுனிக்கு அனைவரையும் வரவழைக்கும் சஸ்பென்ஸ் பாடல்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/R.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/R.jpg.html)

பாடல் ஒருபுறம், சிச்சுவேஷன் ஒருபுறம் இருக்கட்டும். அதைத் தாண்டிய நம் அண்ணனின், ஸாரி... கட்டழகு கண்ணனின் ஸ்டைல் இருக்கிறதே! அதைப் பற்றி சொல்லாமல் பாடல் எப்படி எடுபடும்? இல்லை தெரியாமல்தான் கேட்கிறேன்.

செதுக்கி வைத்த அஜந்தா ஓவிய சிற்பங்கள் பிச்சை வாங்க வேண்டும் இந்த ஆண்மை நிறைந்த அழகனிடம். வீரம் நிறைந்த விவேகனிடம். கோட்டுக்காகவே பிறந்த கோமகனிடம். படிய வாரிய அழகான ஒரிஜினல் சுருள்முடி. அளவெடுத்தாற் போன்ற தேகக் கட்டு. அப்போதுதான் கல்லூரியில் சேர்ந்தாற் போன்ற மாணவனின் தோற்றம். கொஞ்சும் இளமை. அப்பழுக்கில்லாத அழகு முகம். சுழலும் விழிகள். அதே போன்று கைகளில் சுழலும் சாட்டை. சாட்டையோடு கூடிய சாதிப்பு நடை. எள்ளல். முடிவில் துள்ளல். இவ்வளவும் மூன்றே நிமிடங்களில் நமக்களிப்பது நடிப்பின் வள்ளல்.

எப்போது தம்பி 'ஒன்...டூ...திரீ' சொல்வானோ என்று லேசான பயம் கலந்த நடுக்கம். சாட்டை கொண்டு மலர்களைப் பறிக்க முடியுமா என்ற சந்தேகம். பந்தயத்தில் தோற்று விடுவோமோ என்ற பயம். தன் நிலை கண்டு பரிதாபப்பட்டு காதலி ஆட, அவளின் மேல் செலுத்தும் வாஞ்சையான பார்வை. கொஞ்சம் கொஞ்சமாக தான் யார் என்று நிரூபணம் செய்யும் சாமர்த்தியம். முதலில் தோற்பது போலக் காட்டி, பின் வெற்றி வாகை சூடி, பின் தம்பியை வாட்டி எடுக்கும் வஞ்சம். மலர்களைப் பறித்து மட்டும் வெற்றி வாகை அல்ல. என்றும் போல நடிப்பிலும், ஸ்டைலிலும் பார்ப்பவர் மனதைப் பறித்து நிரந்தர வெற்றி வாகைதான்.

பாடல் ஆரம்பிப்பதற்கு முன் பாலாஜி சாட்டையை தன் மார்பின் மேல் வீசியவுடன் திடுமென அதிர்வுற்று, பின் சுதாரித்து,

'எதையும் தட்டிப் பறிக்கற்தில தம்பிக்கு ரொம்ப ஆசை'

என்று நடிகர் திலகம் பாலாஜியை நக்கல் விடும் இடம் நயமான அற்புத ஆரம்பம். ஒவ்வொரு முறையும் அவர் பாலாஜியை தன் ஓர விழிகளால் பார்க்கும் கட்டங்கள் வெகு சுவை. எப்போது பாலாஜியின் வாயிலிருந்து 'ஒன்...டூ...திரீ' வந்து விழுமோ என்று அச்சத்துடன் அவர் ஓரக் கண்களால் பாலாஜியை கவனித்துக் கொண்டிருக்கும் வித்தைப் பார்வைகள் அமர்க்களம். சாட்டையை வளைத்து சுற்றிப் பிடித்தபடி அவர் நிற்கும் அந்த கம்பீர ஸ்டைல் காந்தம். பாலாஜி ஜாடையால் அவரை சைகை செய்து அழைத்தவுடன் சாட்டையை இரண்டுமுறை மிக அழகாக வலது கையால் தூக்கிக் காண்பிப்பார். (இதே போல 'சிவந்த மண்'ணிலும் 'பட்டத்து ராணி'யில் செய்து காட்டுவார்.)

"வெற்றிக்கே விரைந்து செல்லட்டும்".... என்று தேவி பாடும் போது சைட் போஸில் மிக அழகாக புருவத்தைத் தூக்குவார் உடலை சற்றே திருப்பியபடி. உடன் 'தட்டட்டும்' என்று பாடல் மறுபடி பல்லவிக்கு வரும் போது ரொம்ப அழகாக கவனத்துடன் கண்களை ஒரு வினாடி இமைத்துக் காட்டுவார். இந்த நூற்றில் ஒரு விநாடிக் காட்சியை pause செய்து திரும்பப் பாருங்கள். பாடலுக்கே போக மாட்டீர்கள். அந்தக் காட்சியிலேயே ஒன்றிப் போவீர்கள்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20new/---Enthamby%20%20Sarojadevi%20Sivaji.mp4_20150504_074 837.113.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20new/---Enthamby%20%20Sarojadevi%20Sivaji.mp4_20150504_074 837.113.jpg.html)

"நெஞ்சத்தில் நடுக்கம் ஏனோ ஏனோ ஏனோ" என்ற வரிகளின் போது அதே போல ஒரு செகண்ட்... ஒரே ஒரு செகண்ட் சிறு நடுக்கத்துடன் தொண்டையில் விழுங்கிக் காண்பிப்பார்.

அடடா! என்னய்யா நடிகன் இவன்! ஒரு வினாடியில் கூட இவரின் முகம் எத்துணை உணர்ச்சிகளை வெளிப்படுத்தி பார்வையாளனை உறைய வைக்கிறது! அவனுக்கு அந்த கேரக்டரின் நிலைமையைப் புரிய வைக்கிறது! ஈரேழு லோகங்களில் அலசி எடுத்தாலும் இப்பேற்பட்ட நடிகன் கிடைப்பானா?!!!

என்ன தவம் செய்தோம் உம்மை நாங்கள் இங்கு பெற.

இப்போது பாருங்கள். நடிப்பின் சாம்ராஜ்யம் விரிவடையும். பாலாஜி முதன் முதல் 'ஒன்...டூ...திரீ' சொன்னவுடன் இந்த மனிதர் செய்து காட்டும் சர்க்கஸ் வித்தை ஒன்று இருக்கிறதே. முதல் முயற்சி தோல்வியடைவது போல காட்சி. சாட்டையால் பூவை எடுப்பாரோ இல்லையோ என்று ஒவ்வொருவரும் நகம் கடிக்கும் நேரம். ஆனால் தோற்பது போல காட்டி பாலாஜியை அந்த சொற்ப நேரம் மட்டும் தற்காலிக சந்தோஷப்பட வைக்க வேண்டும். இவன் ஒரிஜினல் கண்ணன் இல்லையோ என்று பார்வையாளனும், ஏன் தேவியும் கூட சந்தேகப்பட வேண்டும்.

அதற்கு இந்த சாம்ராஜ்ய சக்கரவர்த்தி நடிப்பில் சாமர்த்தியம் காட்டுவதைக் காணுங்கள். முதலில் பாடலின் ஆரம்பத்தில் சாட்டையை விடத் தெரியாதவர் போல சாட்டையை ஓங்காமல் கைகளால் கீழிருந்தபடி அதாவது மார்புக்கு நேராக விட்டு பூவை இழுக்க முயற்சிப்பார். என்ன ஒரு புரிந்து புரிய வைக்கும் தன்மை. சாட்டை கையாளத் தெரியாதவர் போன்று இவர் செய்யும் நடிப்புச் சேட்டை நமக்கு நல்ல வேட்டைதானே!

முதல் முறை பூ கொய்ய முடியாமல் இவர் தோல்வியுறும்போது பார்வையாளர்கள் 'உச்' கொட்டி பரிதாபப் படாமல் இருக்க முடியாது.

பாலாஜியின் பின்னாலேயே வெகு ஸ்டைலாக நடந்து வந்து அடுத்த 'ஒன்...டூ...திரீ' க்குத் தயாராகும் போது ஒரிஜினல் கண்ணனின் குணாதிசயத்தை நமக்கு உணர்த்த ஆரம்பிப்பார். ஆரம்பத்தில் நிற்கும் ஸ்டைலுக்கும், இப்போது கம்பீரத்துக்கு வரும் போது நிற்கும் ஸ்டைலுக்கும் வித்தியாசம் இருக்கும். (கால்களை சற்றே அகற்றி வைத்து லேசாக தலையை சாய்த்தபடி அலட்சிய தோரணை காட்டுவார்.)

அடுத்த 'ஒன்...டூ...திரீ' க்கு வெற்றிகரமாக சரோஜாதேவியின் தலையில் இருந்து பூவைப் பறித்து ஸ்டைலாகப் பிடித்தவுடன் அவர் முகத்தில் தெரியும் அந்த வெற்றிப் பெருமிதம்...அந்த நிம்மதிப் பெருமூச்சு. பூவை ஒருவழியாக எடுத்து விட்டோம் என்று சற்றே வளைந்த முதுகுடன் அவர் நிற்கும் அந்தக் கண்கொள்ளாக் காட்சி. பார்த்துக் கொண்டே உயிரை விடுபவன் புண்ணியவான். உயிர் போனால் அப்படித்தான் போக வேண்டும். என் தலைவனின் முகத்தை பார்த்து ரசித்தபடியே உயிர் பிரிய வேண்டும். பின் அவனடி சேர வேண்டும்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20new/---Enthamby%20%20Sarojadevi%20Sivaji.mp4_20150504_074 906.833.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20new/---Enthamby%20%20Sarojadevi%20Sivaji.mp4_20150504_074 906.833.jpg.html)

'பதமாக கால் பின்னி நடிக்கின்றதே... பரிதாப உணர்வோடு நடக்கின்றதே' என்று தேவி பாடும் போது இடது கையால் மிக அழகாக மலரை தேவியின் பக்கம் நீட்டுவார் பின் பக்க போஸில். அள்ளிக் கொண்டு போகுமய்யா. கரையாத மனமும் கரையும் இந்தக் காட்சியில்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20new/---Enthamby%20%20Sarojadevi%20Sivaji.mp4_20150504_074 929.232.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20new/---Enthamby%20%20Sarojadevi%20Sivaji.mp4_20150504_074 929.232.jpg.html)

அடுத்து வரும்,

'வெற்றிக்கே விரைந்து செல்லட்டும்'

வரிகளின் போது மலரைக் கையால் பிடித்தபடி (காமெரா மெதுவாக அவரிடம் குளோஸ்-அப்புக்கு நகரும்) அதை ஆமோதிப்பது போல் சிறு தலையசைவில் கண்களை இமைத்துக் காட்டுவார்.

கொன்று விடுவார் கொன்று. அங்கிட்டு இங்கிட்டு திரும்பினீர்களோ போச்சு...போச்சு. மிகப் பெரிய இழப்பை சந்தித்தவர் ஆவீர்கள். அமர்க்களமான சீன். அவர் கண் இமைக்கும் போது நீங்கள் கண் இமைக்கவே கூடாது.
அப்போதுதான் சொர்க்கம் என்றால் என்னவென்று உணர்வீர்கள்.

இப்போது வரும் 'நெஞ்சத்தில் நடுக்கம் ஏனோ ஏனோ ஏனோ' வரிகளில் படு அலட்சியம் காட்டுவார். முன்பிருந்த நடுக்கம் இருக்கவே இருக்காது. மாறாக எகத்தாளம் பண்ண ஆரம்பிப்பார். சிகரெட்டை ஒரு 'பப்' இழுத்துவிட்டு பின்னால் நிற்கும் பாலாஜியைப் பார்க்காமலேயே சிகரெட்டை நக்கலாக அவரிடம் நீட்டுவார்.

பாடலின் முடிவில் வரும் 'ஒன்...டூ...திரீ' யின் போது மூன்று முறை மிக அழகாக, அம்சமாக தேவியின் கூந்தலில் இருந்து மலர்களை சாட்டையால் தொடர்ந்து கொய்வார். நான்காவது முறை யாரும் எதிர்பாராத வகையில் சட்டென்று பாலாஜியின் பக்கம் திரும்பி பாலாஜியின் கையில் உள்ள சிகரெட் கேஸை பதம் பார்ப்பார். அதுவரை கொடி கட்டிப் பறக்கும் 'மெல்லிசை மன்னரி'ன் இசை அப்படியே நின்று நிசப்தமாகி விடும். சாட்டை சப்தம் மட்டுமே ஒலிக்கும். அடுத்து பாலாஜி வாயருகே சிகரெட்டைக் கொண்டு போகும் போது சிகரெட்டை சாட்டையால் ஒரு விளாசு விளாசி தட்டி விடுவார். பின் சரோஜாதேவி ஓடி வந்து அணைத்துக் கொண்டவுடன் (தேவியை ஒரு அன்பான பார்வை ஒன்று பார்ப்பார்) ஒரு அம்சமான ஸ்டெப்பை வீரமாக வைத்தபடி பாலாஜியின் கோட்டில் ஒரு அடி விடுவார். பின் காலை சற்றே தாங்கியபடி மீண்டும் ஏக ஸ்டைலாக நடந்து வந்து பாலாஜியை சாட்டையால் வளைத்து அங்குள்ள கம்பத்தில் கட்டுவார். நடிப்பால் நம்மைக் கட்டுவார். பின் கூத்தாடியின் நக்கல் தலையாட்டல்.

வார்ரே வா! நடிகர் திலகமே! உங்கள் நடிப்பையெல்லாம் ரசிக்க இந்த ஜென்மம் என்ன நூறு ஜென்மம் பத்தாது.

இப்போது பாடலுக்கு வருவோம். கண்ணதாசனின் கவின்மிகு வார்த்தைகள் வரிகளில் ஜொலிக்க, சுசீலா அம்மா வெகு கம்பீரமாகப் பாட, (அதுவும் 'பரிதாப உணர்வோடு நடக்கின்றதே' எனும் போது பரிதாப உணர்வு பாந்தமாய் நம்மை பணிய வைக்கும். உச்சரிப்பின் உமையாள் அல்லவா இந்த தெய்வப் பாடகி! ) அபிநய சரஸ்வதி அழகான இளமையுடன் அழகான அசைவுகள் கொடுக்க, பாலாஜி வில்லத்தனத்தை நேர்த்தியாகக் காட்ட, (பாலாஜியின் பெயர் விஸ்வம். 'ராஜா' வில் நாடகக் காவலர் மனோகர் 'விஸ்வம்'. பாலாஜி படங்களில் ராசியான வில்லன் பெயர். 'விஸ்வம்' என்றாலே வில்லத்தனமான வெற்றிதானோ) மறக்கவே முடியாத சிச்சுவேஷனுக்குத் தகுந்த பாடல் வரிகள்.

குறிப்பாக,

'மலர் கூட உனைக் காக்க நினைக்கின்றதே'

வரிகள். மிக அழகாக காட்சியின் நேர்த்தியை உணர்த்தும் வரிகள். பரிதாப உணர்வு கசிவதை இந்த வரிகளிலேயே உணரலாம்.

மொத்தத்தில் எம் நடிக சாம்ராஜ்ய ஒரே ஒரு நிரந்தர சக்கரவர்த்தியின் நடிப்புக்காக அல்ல... அசைவுகளுக்காகவே ஆயிரம் முறை பார்த்து ரசிக்க வேண்டிய பாடல்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் திலகம் படப் பாடலை மனமகிழ்ச்சியோடு மதுர கானத்தில் பதிகிறேன். அனைவருக்கும் என் நன்றி.


https://youtu.be/BTNvznQYGIA

அன்புடன்
நெய்வேலி வாசுதேவன்

chinnakkannan
4th May 2015, 10:20 AM
///என் இளைய மகன், வாழ்வில் எதையுமே, சக மனிதர்களுக்கும்,பூமிக்குமான நன்மை பயக்கும் காரியத்தையே தொழிலாக கொள்வேன் என்று கொள்கை ரீதியான வாழ்வை தேர்ந்தெடுத்தவன்.



ஓஹயோ மாநிலத்தில் நேற்று அவனுக்கு மேற்படிப்பு பட்டமளிப்பு விழா.(மரபு சாரா பசுமை எரிபொருள் மற்றும் சக்தி சேமிப்பு ,சேதாரம் தவிர்த்தல் துறைகளில் ).அவனுக்கு அமெரிக்க அரசால் ஏற்கெனெவே Excellence அவார்ட் வழங்க பட்டாலும், அவனது பல்கலை கழகம்(165 Years Old ) அவனது துறையில் அவனை சிறந்தவனாக கௌரவித்து பட்டயம் வழங்கியது. இதற்கு சிறப்பு அழைப்பாளர்களாக நானும் என் மனைவியும். இதை பெரும் ஒரே இந்திய மாணவனாக எங்கள் செல்வம்.//

அன்பின் கோபால்..

உங்கள் இளைய ம்கனுக்கு எங்களின் வாழ்த்துக்களும் ஆசிகளும்.. உங்களுக்கும் உங்கள் துணைவியாருக்கும் எங்களின் வாழ்த்துக்கள்..உங்கள் இளைய மகன் இன்னும் நிறைய உயரஙக்ள் செல்வார் என எனக்குத் தோன்றுகிறது..

அன்புடன்

சி.க

uvausan
4th May 2015, 10:22 AM
வாசு - உங்கள் வரவேற்ப்புக்கு மிகவும் நன்றி - கருமேகங்களை கலைத்து , கதிரவனாக மீண்டும் ஒளி தர இங்கு வந்தது மிகவும் மனதிற்கு சாந்தியை தருகிறது .

uvausan
4th May 2015, 10:26 AM
Ck - இது மார்கழி மாதம் கூட இல்லை - எப்படி உங்களுக்கு சுண்டல் நினைவு வந்தது என்று புரியவில்லை - ஒரு வேலை ஒரு சுண்டலியின் பதிவு என்று சொல்லியிருப்பதால் எழுத்துக்களும் உங்களுக்கு மிகவும் சின்னதாகவே தெரிந்திருக்கும் - கரெக்ட் ஆ ??

chinnakkannan
4th May 2015, 10:28 AM
வாசு...

அந்தக் காலத்தில் மதுரை சாந்தி தியேட்டரில் பார்த்தபோது ஏற்பட்ட பரபரப்பு ஆர்வம் - தட்டட்டும் கை தழுவட்டும் பாடல் காட்சி- அதை அப்படியே வரிகளில் கொண்டுவந்திருக்கிறீர்கள் பாராட்டுக்கள்..மனப்பூர்வமாக..

சரோஜா தேவி மட்டும் இந்தப் படத்தில் சற்றே செழுமையாக (ஹி ஹி குண்டு என்றால் கோபிப்பீர்கள் தானே) இருப்பார்..ஆனால் இந்தப் பாட்டில் ஏனோ சற்றே ஒல்லியாகத் தென்படுவார்.. ந.தியின் ஸ்டைல் ப்ள்ஸ் பாடல் சிச்சுவேஷன்.. சுசீலாம்மாவின் குரல் ப்ள்ஸ் இசை.. பாட்டை எங்கோ கொண்டு போய்விடும்..

கன்னத்தில் விழுந்த முத்தங்கள்
எண்ணத்தில் நிறைந்து நிற்கட்டும்
வீரத்தை அணைத்துக் கொள்ளட்டும்
வெற்றிக்கே விரைந்து செல்லட்டும்


நூலாடும் மேலாடை சிரிக்கின்றதே
மேலாடும் பொன்னாடை அழைக்கின்றதே
சேலாடும் கண் இன்று துடிக்கின்றதே
போராடும் உனைக் கண்டு தவிக்கின்றதே

கவிஞரின் வரிகளுக்கு வாயசைப்பு சுசீலாம்மாவின் இனிமைக் குரல்..ப்ளஸ் ந.தி.. மறக்க இயலுமா..

ம்ம் காலங்கார்த்தாலே படுத்திவிட்டீர்கள் ஸ்வாமி.. தாங்க்ஸ்ங்க்ணா..:)

chinnakkannan
4th May 2015, 10:30 AM
//எழுத்துக்களும் உங்களுக்கு மிகவும் சின்னதாகவே தெரிந்திருக்கும் - கரெக்ட் ஆ ??// எனக்குக் கண்ணாடியின் பவர் மாறியது உங்களுக்கு எப்படித் தெரியும் ரவி :) மார்கழி மாசம் சுண்டலா..யாருங்க தருவாங்க..ம்ம்சரி சரி இன்னொரு சூரியன்பாட் போட்டு எங்களைப் பனியாய்ச் சுடுங்க..!:)

chinnakkannan
4th May 2015, 10:35 AM
//சீனப் பின்னணி இசையில் 'தமிழக மும்தாஜ்' (பேர் நல்லா இருக்கா?) 'வெண்ணிற ஆடை' ஆட, 'திலகம்' பர்மா பின்னணியில் லுங்கி, தலையில் பர்மா தலைப்பாகைக் கட்டு என்று அசத்துவார் 'ச்சிங் ச்சிங் ச்சிங் ச்சூச்சூ' என்றே பாடியபடி. நாகேஷ் சாப்ளின் வேடத்தில் இருப்பார்.// பட்டம் நன்னாயிட்டு இருக்கு..:) சொன்னாற்போல பார்த்து நாளாயிடுச்சு.. பார்த்துவிட்டுச் சொல்கிறேன்..வெ. ஆ. நிர்மலா கடற்கரைப்பாட் தான் நினைவுக்கு வருது..காட்சியாய்..பாட்டுக்குக் கொஞ்சம் ரோசிக்கணும் :) பின்னவாரேன்..

uvausan
4th May 2015, 10:51 AM
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 3.

ஞாயிறு என்பது கண்ணாக

இது போன்ற அமைதியான ஆர்ப்பாட்டம் இல்லாத பாடல்கள் இக்காலத்தில் வரும் படங்களில் அபூர்வம். காதலர்களின் மனம் எப்படி ஒற்று போகவேண்டும் என்பதை அழகாக எடுத்துச்சொல்லும் பாடல் - SSR பாடல்களில் மிகவும் பிடித்த பாடல் இது

ஞாயிறு என்பது கண்ணாக
திங்கள் என்பது பெண்ணாக
செவ்வாய் கோவை பழமாக
சேர்ந்தே நடந்தது அழகாக (ஞாயிறு என்பது கண்ணாக)


நேற்றைய பொழுது கண்ணோடு
இன்றைய பொழுது கையோடு
நாளைய பொழுதும் உன்னோடு
நிழலாய் நடப்பேன் பின்னோடு (நேற்றைய பொழுது)


ஊருக்கு துணையாய் நான் இருக்க
எனக்கொரு துணையை எதிர்பார்த்தேன்

ஊருக்கு துணையாய் நான் இருக்க
எனக்கொரு துணையை எதிர்பார்த்தேன்

உள்ளத்தின் கோவிலில் விளக்கேற்ற
மைவிழி கிண்ணத்தில் நெய் வார்த்தேன்
உள்ளத்தின் கோவிலில் விளக்கேற்ற
மைவிழி கிண்ணத்தில் நெய் வார்த்தேன்

ஞாயிறு என்பது கண்ணாக
திங்கள் என்பது பெண்ணாக
நாளைய பொழுதும் உன்னோடு
நிழலாய் நடப்பேன் பின்னோடு

முன்னொரு பிறவி எடுத்திருந்தேன்
உன்னிடம் மனதை கொடுத்திருந்தேன்

முன்னொரு பிறவி எடுத்திருந்தேன்
உன்னிடம் மனதை கொடுத்திருந்தேன்

பின்னொரு பிறவி எடுத்து வந்தேன்
பேசிய படியே கொடுக்க வந்தேன்

பின்னொரு பிறவி எடுத்து வந்தேன்
பேசிய படியே கொடுக்க வந்தேன்

ஞாயிறு என்பது கண்ணாக
திங்கள் என்பது பெண்ணாக
நாளைய பொழுதும் உன்னோடு
நிழலாய் நடப்பேன் பின்னோடு

https://youtu.be/aStD-0XODZE

rajeshkrv
4th May 2015, 03:15 PM
வாசு...

அந்தக் காலத்தில் மதுரை சாந்தி தியேட்டரில் பார்த்தபோது ஏற்பட்ட பரபரப்பு ஆர்வம் - தட்டட்டும் கை தழுவட்டும் பாடல் காட்சி- அதை அப்படியே வரிகளில் கொண்டுவந்திருக்கிறீர்கள் பாராட்டுக்கள்..மனப்பூர்வமாக..

சரோஜா தேவி மட்டும் இந்தப் படத்தில் சற்றே செழுமையாக (ஹி ஹி குண்டு என்றால் கோபிப்பீர்கள் தானே) இருப்பார்..ஆனால் இந்தப் பாட்டில் ஏனோ சற்றே ஒல்லியாகத் தென்படுவார்.. ந.தியின் ஸ்டைல் ப்ள்ஸ் பாடல் சிச்சுவேஷன்.. சுசீலாம்மாவின் குரல் ப்ள்ஸ் இசை.. பாட்டை எங்கோ கொண்டு போய்விடும்..

கன்னத்தில் விழுந்த முத்தங்கள்
எண்ணத்தில் நிறைந்து நிற்கட்டும்
வீரத்தை அணைத்துக் கொள்ளட்டும்
வெற்றிக்கே விரைந்து செல்லட்டும்


நூலாடும் மேலாடை சிரிக்கின்றதே
மேலாடும் பொன்னாடை அழைக்கின்றதே
சேலாடும் கண் இன்று துடிக்கின்றதே
போராடும் உனைக் கண்டு தவிக்கின்றதே

கவிஞரின் வரிகளுக்கு வாயசைப்பு சுசீலாம்மாவின் இனிமைக் குரல்..ப்ளஸ் ந.தி.. மறக்க இயலுமா..

ம்ம் காலங்கார்த்தாலே படுத்திவிட்டீர்கள் ஸ்வாமி.. தாங்க்ஸ்ங்க்ணா..:)

hmmmmmmm

Russellzlc
4th May 2015, 04:03 PM
அன்பின் வடிவமே, ஆற்றலின் உருவமே, நட்பின் இலக்கணமே, நல்லிணக்க நாயகரே, எங்கள் வாசுதேவரே, தங்களை நடிகர் திலகம் திரியில் பார்த்ததும் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.

தங்களது வரவு நமது இரு திரிகளிடையே நட்புறவை மேலும் பலப்படுத்த உதவும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு உண்டு. வாழ்த்துக்கள். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

chinnakkannan
4th May 2015, 05:31 PM
வாங்க கலை .. நலமா :)

*

ஞாயிறு என்பது கண்ணாக
திங்கள் என்பது பெண்ணாக
செவ்வாய் கோவை பழமாக
சேர்ந்தே நடந்தது அழகாக// பாட்டு மெலடி நல்லா இருக்கு..எனக்கும் பிடிச்ச பாட்டு தான் ரவி..

ஆனா ஒக்காந்து ரூம் போடாமலே யே யோசிச்சா..

ஞாயிறு - கதிரவனைக் கண்களில் கொண்டு ..அதாவது கதிரவனின் ஒளியைக் கண்களில் கொண்டு நிலவுபோல் தோற்றமளிக்கும் பெண்ணானவள் தன் கோவைப் பழம் போன்ற செவ்வாயுடன் அழகாக நடந்து வந்தாள்.. பட் வந்தது என்பது உயர்திணை மறைத்த அஃறிணை சரியாங்கண்ணா..:)

ரவிச்சந்திரன் நினைவு வருது..

தேடிவந்த திங்கள்
திங்களில் செவ்வாய்
செவ்வாயில் வெள்ளி
சேர்த்தணைத்தேன் கையில் அள்ளி..

(தோள் கண்டேன் தோளே கண்டேன் பாட்ல வரும் ( வாலி? ராஜேஷ்))

அடுத்து இன்னொரு சண்டே எக்ஸர்ஸைஸ் பாட்டு போடுவீங்களா :) (க்ளூ கமல் இன் தட்)

Russellzlc
4th May 2015, 05:59 PM
ரவி சார், உங்களது ஆயிரம் கரங்கள் நீட்டி பதிவுகளும் தேர்ந்தெடுக்கும் பாடல்களும் அற்புதம். நன்றி.

சின்னக்கண்ணன், ரூம் போடாமலேயே இப்படி யோசிக்கிறீர்களே? ரூம் போட்டால் இன்னும் என்னவெல்லாம் தோன்றுமோ? வித்தியாசமாக சிந்தித்திருக்கிறீர்கள். உங்களுக்கு நகைச்சுவையாக எழுத வரும் என்று எல்லாருக்கும் தெரியும். ஆனால், கார்கில் அனுபவ பதிவு மூலம் உருக்கமாகவும் எழுத வரும் என்று நிரூபித்து விட்டீர்கள். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

chinnakkannan
4th May 2015, 09:42 PM
பருவமே பழைய பாடல் பாடு – 6

யார் கவிஞர் என நினைவில்லை.. நெடுங்காலம் முன்பு படித்த கவிதை..

பிள்ளைப் பேறு வேண்டுமென்று
மாந்தர்
அரசைச் சுற்றியது அந்தக்காலம்
வேண்டாமென்று
அரசு
அவர்களைச் சுற்றுவது இந்தக்காலம்..

ஏன் பெண்பேறு வேண்டுமென்று யாரும் வேண்டுவதில்லை..ஒவ்வொருவருக்கும் சாண்பிள்ளையானாலும் ஆண்பிள்ளை பிறந்தால் நல்லது என்ற மெண்ட்டாலிட்டி.. (இப்போது இன்றையகாலகட்டத்தில் வெகுவாக மாறிவிட்டது என்பது வேறு விஷயம்..)

So.. ஆண்களின் பருவங்கள் என்று பார்த்தால் ஒட்டுக்கவே பார்த்துவிடலாம்..

* 1 வயது முதல் 7 வயது வரையிலான பருவம் - பாலன்
* 8 வயது முதல் முதல் 10 வயது வரையிலான பருவம் – மீளி
* 11 வயது முதல் 14 வயது வரையிலான பருவம் – மறவோன்
*15 வயதிற்குண்டான பருவம் – திறவோன்
*16 வயதிற்குண்டான பருவம் – விடலை
*17 வயது முதல் 30 வரையிலான பருவம் - காளை
* 30 வயதுக்கு மேலான பருவம் - முதுமகன்.

17-30 ந்னு இங்க ஸ்ட்ரெய்ட்டா காளைங்கறாங்க..ஆனா பெண்களுக்கு மட்டும் அதையே இன்னும் மூன்று பருவமா பிரிச்சுருக்காங்க..ம்ம் அண்ட் 30 வயதுக்கு மேலான பருவம் முதுமகன் என்பதெல்லாம் ஓவர்..

பாலனுக்கு அம்மாவும் நீயே அப்பாவும் நீயே நினைவுக்கு வருகிறது..
மீளிக்கு அஞ்சலியில் முதல்பாட்டு நினைவுக்குவருகிற்து..
மறவோன் அழியாத கோலங்கள் பாட்ட
திறவோன் விடலை எல்லாம் வந்திருக்கலாம் விட்டுவிடலாம்..

சுவாரஸ்யமான பருவம் என்ன..இளமை பொங்கும் பருவம்.. காளை தான்.. கல்லூரியிலிருந்த் வேலை பார்க்கும் வரை என்பதாலேயே காளை என வைத்திருக்கிறார்களா..

அந்தக்காலப் பாடல் என்ன சொல்கிறது காளை வயதுகட்டான சைஸூ களங்கமில்லா மனசு

காளைவயதில் தான் கேள்விகள் எழும்பும்.. காதல் என்பது எதுவரை கல்யாணக் காலம் வரும்வரை.. என..

காளை காளை முரட்டுக்காளை நீதானே..
காளையிருக்கு செவலை இருக்கு கன்னுக்குட்டி எங்கய்யா (இதில் வருவது நிஜக் காளையோ)

கனிவாக பேசும் பெண்கள் கையிலே
கத்தியும் ஈட்டியும் இருக்குது
கணவனை கண்டால் மனைவியர் எல்லாம்
காளை போலவே முறைக்குது// அநியாயம் இந்த ஆட்சியியிலே அநியாயம்.. பாட்டில் வருகிறது இந்த வரி..

கேட்டுப்பாரு கேள்விகள் நூறு
பாட்டுப் பாடுகாளை என்னோடு என்கிறார் ரவிச்சந்திரன் மாடிவீட்டு மாப்பிள்ளையில்..
நானும் பாதை தேடி ஓடி வந்த காளை அல்லவா என்கிறார் ஏ.எம் ராஜா பாட்டுப்பாடவாவில்..

காளைக்கு நிறைய பாடல்கள் இருக்கின்றன..ஆனால் காளைப் பருவத்தில் முறைப்பெண்களுடன் பாட எத்தனை பேருக்குக் கொடுத்துவைத்திருக்கும்..

அழகிய பாடல் அழகிய வரிகள் (ஒரு வரி மட்டும் கவிஞரிடம் தவறு என்று ஒருவர் சொல்ல அதைப் பெருந்தன்மையாக ஆமாம் எனச் சொல்லிவிட்டாராம் கண்ணதாசன் அது என்னவரி அதுபற்றி அப்புறம்..

ஆஹா என்ன இனிமையான பாடல்..
ரொம்ப்ப்பப்பிடிச்ச வரிகள்..
முதிராத நெல்லாட ஆட-ஆட
முளைக்காத சொல்லாட ஆட-ஆட
உதிராத மலராட ஆட-ஆட
சதிராடு தமிழே நீ ஆடு!

இளமை ம.தி, ஜோதிலட்சுமி , மணிமாலா.. பெரிய இடத்துப் பெண்..

https://youtu.be/Jsdac29vXj0

//சோ எழுதிய ஒரு நூலில் படித்தது.. பச்சரிசிப் பல்லாட என எழுதியிருக்கிறீரே கவிஞரே பாடுவதோ இளமைப் பூ.. எப்படி அதனுடையபச்சரிசிப்பற்கள் ஆடும் எனக் கேட்க..ஆமாம் அது தவறு என்றாராம் கண்ணதாசன்//

சரி தப்பெல்லாம் இல்லாமல் எப்போதுமே மயக்கும் பாடல் இது..எனக்கு காளைப்பருவத்திலும் சரி இப்போ தர்ட்டி ப்ளஸ் முதுமகன் பருவத்திலும் சரி..

முதுமகன் + காளை இரண்டும்சேர்ந்த ஒருபாட் இருக்கே..

https://youtu.be/rYXr0rvZ2Vk

பருவம் முடிஞ்சு போச்சான்னு பார்த்தா அதான் இல்லை.. மறுபடியும் பார்க்கலாம்..

வரட்டா..:)

chinnakkannan
4th May 2015, 09:55 PM
ஹை ரொம்ப நாளாச்சு கேட்டு வாங்கி.. வாசுங்ணா..
திடீர்னு தேடினா இந்தப் பாட்டு கிடைச்சதாக்கும்..

முத்துராமனுடன் ஆடுபவர் முன்னாலாடிய மணிமாலா தானே படம்..நல்லாருக்குமா..
வெண்பளிங்கு மேடை கட்டி..- சீர்காழி..எல்.ஆர்.ஈ.?

https://youtu.be/4z_dvy2x-XE

chinnakkannan
4th May 2015, 10:28 PM
தேவி ஸ்ரீதேவி கலெக்ஷன்!
தேவி ஸ்ரீ தேவி தேடி அலைகின்றேன்.. ப்ரேம் நசீர் ஷீலா..பாட் கேட்டிருக்கேன்..அது என்ன காணொளி தமிழ்ல்ல வீடியோ இப்பத்தான் பாக்கறேன்.. பிபி.எஸ். நல்ல பாட்டு...

https://youtu.be/A1Ya9Vjw4nU?list=PLavWHS_Nw0fNDu47A6nyKuR5URmKUbYS x

ஹச்சோ இன்னொரு பாட்டு கிடைக்குதே அதே தேவிஸ்ரீதேவி தான் ஆரம்பம் இங்க சாவித்ரி – சந்தானம்ங்கற படமாம்..

https://youtu.be/qNIlZn_Y5o4?list=PLavWHS_Nw0fNDu47A6nyKuR5URmKUbYS x

பாடுபவர் கண்டசாலா எனப் போட்டிருக்கிறது..குரல் வித்தியாசமாக இருக்கிறது..

**
சரி சரி.. இந்த ஸ்ரீதேவியையும் பார்த்துடலாம்.. பாக்கலாமா..

இடத்தக் கொடுத்தா மடத்தப்பிடிப்ப எனக்கா தெரியாது..என்னங்க்ணா.. ஓ பாட்டு வரியா..சரி..:)

https://youtu.be/z0pENX4JXNM

chinnakkannan
4th May 2015, 10:32 PM
கலைவேந்தன்.. நன்றிங்க.. பட் பாட்டு ஞாயிறு என்பது கண்ணாக – அப்படித் தானே அர்த்தம் வரும்?

**
படக்குன்னு சோகம் வருது.. ஏன் ஏன் ஏன்..
நண்பர் கல் நாயக்கைக் காணோம்..ம்ம்.. தேடிடுதே வானமிங்கே தேனிலவே நீர் போனதெங்கே.. பாடுது பார் ஒரு வானம்பாடி..

https://youtu.be/GjK8twYITOQ?list=PLavWHS_Nw0fNDu47A6nyKuR5URmKUbYS x

ஒரு வேளை தேனிலவுக்கே போயிருப்பாரோ..ம்ம் இருக்காது.. நல்லவர்..சொல்லாமப் போக மாட்டார்....!

raagadevan
5th May 2015, 12:54 AM
தேவி ஸ்ரீ தேவி தேடி அலைகின்றேன்.. ப்ரேம் நசீர் ஷீலா..பாட் கேட்டிருக்கேன்..அது என்ன காணொளி தமிழ்ல்ல வீடியோ இப்பத்தான் பாக்கறேன்.. பிபி.எஸ். நல்ல பாட்டு...

https://youtu.be/A1Ya9Vjw4nU?list=PLavWHS_Nw0fNDu47A6nyKuR5URmKUbYS x

CK: Here are the original versions of this song, the first one by K.J. Yesudas and the other one by P.Leela;
from the 1965 movie KAAVYAMELA - Music by V. Dakshinamoothy.

https://www.youtube.com/watch?v=esP-BWF8odA

https://www.youtube.com/watch?v=LIXpKWrilvw

raagadevan
5th May 2015, 01:12 AM
KAAVYMELA also had this one-of-a-kind song; featuring live performances by P. Leela,
P.B. Sreenivas, K.J. Yesudas, M.B. Sreenivasan and V. Dakshinamoorthy…

https://www.youtube.com/watch?v=xCaLvV7oSGU

chinnakkannan
5th May 2015, 11:14 AM
//CK: Here are the original versions of this song, the first one by K.J. Yesudas and the other one by P.Leela;
from the 1965 movie KAAVYAMELA - Music by V. Dakshinamoothy.//ராக தேவன் வாங்க..:) தாங்க்ஸ் ஃபர் தெ ஸாங்க்ஸ்..வீட் போய் கேட் சொல்றேன்..

கோபு, ஆதிராம்.. தாங்க்ஸ் ஃபார் தெ லைக்ஸ்

kalnayak
5th May 2015, 12:23 PM
அனைவருக்கும் வணக்கம்.

இப்படியா பண்ணுவது. ஒரு மூணு அல்லது நாலு நாளு திரிக்கு வரலை. அதுக்காக இப்படியா பண்ணுவது?

கிட்டத்தட்ட பத்து பக்கத்துக்கு மேலே அருமையான பதிவுகளா இருக்கே. எனக்கு இதையெல்லாம் படிக்கிறதுக்கு ரெண்டு நாளு வேணுமே. இதை முடிச்சு நான் பதில் கொடுத்து என்னோட பதிவை ஆரம்பிக்கறதுக்கு ஒரு ரெண்டு அல்லது மூணு நாளு ஆகும்.

chinnakkannan
5th May 2015, 01:08 PM
அன்பின் ராஜேஷ்.. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..ஹேப்பினஸ் ஆல்வேஸ்..

ராஜேஷோட பர்த்டேக்கு என்ன பாட் போடறது..ராஜேஷ் கன்னா ஸாங்க் போட்டுடலாம்..

https://youtu.be/ql1-jjEPErw

அப்புறம்.. ஜூகல் பந்தி ராஜ் ராஜ் சார் நினைவு வந்துடுச்சே :)

https://youtu.be/ha4Rpp1hXKc

kalnayak
5th May 2015, 01:09 PM
வாசு சார்
மதுர கானம் மனதை மயக்க மட்டுமல்ல, இணைக்கவும் உதவும் இனிய பாலம் என்பதை தங்களுடைய இந்தத் திரியின் வெற்றி மிகவும் ஆழமாய் ருசுப்படுச்சியுள்ளது. தங்களுடைய எழுத்துக்கள் இல்லாமல் ஒரு vaccum இருந்தது அது இப்போது நிறைந்து விட்டது.
தொடர்ந்து தங்கள் பங்களிப்பைத் தாருங்கள்..

ராகவேந்திரா அவர்களே,

வாருங்கள். வாருங்கள். நீங்கள் என்ன வாசு வந்தால்தான் திரும்ப மதுர கானம் திரிக்கு வருவேன் என்று சபதம் எடுத்திருந்தீர்களா? எப்படியோ. பரவாயில்லை. அடிக்கடி வாருங்கள். உங்கள் தேர்வு பாடல்களையும் தாருங்கள். அப்போதுதான் மணக்கும் மதுர கானமாய் இருக்கும்.

kalnayak
5th May 2015, 01:16 PM
தங்கள் அன்பான வரவேற்பிற்கு என் இதயம் மகிழ்ந்த நன்றி கல்நாயக்.

http://www.inbaminge.com/t/p/Pookal%20Vidum%20Thoothu/folder.jpg

நீங்கள் குறிப்பிடும் படம் 'பூக்கள் விடும் தூது'. மோனிஷாதான் நாயகி. ஹரீஷ் நாயகன். இதே ஹரிஷ் பின்னால் 'ஞானப்பறவை' படத்தில் நடிகர் திலகத்துடன் இணைந்து நடித்திருந்தார்.

படத்தின் பாடல்கள் இனிமை.

குறிப்பாக,

'கதிரவனைப் பார்த்து காலை விடும் தூது
வண்டுகளைப் பார்த்து பூக்கள் விடும் தூது'

'மூங்கில் காட்டோரம்....குழலின் நாதம் நான் கேட்கிறேன்'. (பாடல் ஆரம்பிக்கும் போதே ராஜேந்தரின் இசையை பரிபூரணமாக உணர ஆரம்பிக்கலாம்.பாலா மிக அருமையாகப் பாடிய பாடல் இது.)

பாடல்கள்.

கதை,வசனம், பாடல்கள், இசை ராஜேந்தர். இயக்கம் ஸ்ரீதர் ராஜன்.


https://youtu.be/y4kTkpKjrxg

நன்றி வாசுதேவன்,

பூக்கள் விடும் தூது பாடல்களை நினைவு படுத்தியதற்கு. கடலூர் கிருஷ்ணாலயாவில் பட வெளியீட்டின் போது பார்த்திருக்கிறேன் ( பக்கத்தில் கலைவேந்தன் இல்லையே!!!) அடிக்கடி வெளியில் கேட்டு நீண்ட நாட்கள் நினைவில் இருந்தது - மறந்து போயிருந்தது தற்போது.

kalnayak
5th May 2015, 01:21 PM
டியர் சி.கே., ராஜேஷ்,
அதெல்லாம் ஒண்ணுமில்லே... ந.தி.யைப் பற்றியே முழுக்க முழுக்க மைண்ட்லே ஓடிட்டிருக்கு... வேறெ ஏதாவது பக்கம் போனால் கூட சுத்தி சுத்தி அங்கே தான் செக்கு மாடாய் வந்து நிக்குது.. என்ன செய்ய... ந.தி.டாட் காம்... பேஷா போய்க்கொண்டிருக்கு...
ஒரு பார்ட்டி நடக்குது... சுமார் 20 அல்லது 25 பேர் காபி சாப்பிடணும்....இருக்கிறது 4 அல்லது 5 ஃப்ளாஸ்க் தான்.. அதில் ஒரு சிலர் ஓவல் அல்லது போர்ன்வீடா கேட்பார்கள் என எதிர்பார்த்து அதற்காக ஒரு ஃப்ளாஸ்கை ஒதுக்கி வைத்து மத்த ஃப்ளாஸ்கில் காபி ஊற்றி வைக்கிறார்கள். ஆனால் யாருமே வேறு பானம் கேட்கவில்லை.. எல்லோருமே காபியைத்தான் லைக் பண்ணுகிறார்கள்... காபி ... போதவில்லை... ஆனால் ஃப்ளாஸ்க் காலியாக உள்ளது... அந்த நேரத்தில் காபியைக் கொண்டு வர எல்லோரும் பறக்கும் போது ஆபத்பாந்தவனாய் அந்த ஃப்ளாஸ்க் பயன்படுகிறது... இதனால் அந்த vaccum நிரப்பப் படுகிறது.

ஆனால்... உண்மையில் அந்த முக்கியமான ஃப்ளாஸ்க் நிரம்பிய பிறகு தான் எல்லோரும் காபி குடித்த பிறகுதான் அந்த பார்ட்டி முழுமையடைகிறது.

ஸ்....ஹப்பாடா... ஒரு VACCUM சொல்லி விட்டு எவ்வளோ பெரிய சமாதானம் சொல்ல வேண்டியிருக்கு...

சி.க. சார்... உங்க கூட சேர்ந்து நானும் எழுத்தாளனாயிட்டேனாக்கும்...

சி.க. இந்த பெருமையும் உங்களுக்குதான்னு ராகவேந்திரா சொல்றாரு. எத்தனை பேரத்தான் புதுப் புது திறமையோடு தயார் பண்ணி இருக்கீங்க இப்படி?

kalnayak
5th May 2015, 01:33 PM
பருவமே.. பழைய பாடல் பாடு – 4

கண்ணை மூடினால் உறக்கம் வரமாட்டேன் என்கிறது. மூடினால் அவள் முகம்..திறந்தாலும் தான்..

ஆஹா..எவ்வளவு இனிய முகம்..எவ்வளவு அழகிய குரல் அவளும் நளினம்..அவளது உடலும் நளினம்..

போகத் தான் வேண்டும்.. இப்போது போகக் கூடாதாம்..தாயாரின் சிரார்த்தமா.. என்னடா இது மங்கள் தாஸ்.. நீ இந்த ஊரின் பெரிய வணிகர் ரகுநாதரின் ஒரே மகன்..பார்க்குமிடமெல்லாம் இந்த ஊரில் உன் அப்பாவின் வீடுகள், நிலங்கள், கடைகள்.. ஏன் நான் செலவு செய்தாலென்ன..

செய்வது யாருக்கு..என் சிந்த்த்தூவிற்குத் தானே..சுருக்கமாகச் சொன்னால் அவள் முகம் சுருங்கத் தான் செய்யும்..சிந்தாமணி என்றால் முகமலரும்..அப்படியே உன் பாட்டியைப் போல நீட்டி முழக்கிக் கூப்பிடுகிறேனா என்றால்வெட்கச் சிரிப்புசிரிப்பாள்..

அதுவும் அடடா அவள் செய்யும் வெல்லப் பணியாரம்..அவள் கைப்பக்குவத்திலோ என்னவோ உடலெங்கிலும் தித்திப்புப் பரவும் பின் ஆவலாய் பச்சை வெற்றிலையை க் காம்பைக் கிள்ளும்போது அவள் புறங்கையில் தெரியும் பச்சை நரம்புகள் அதுவும் அவளது அழகிய பால்வண்ணமா..கொஞ்சம் மஞ்சள் பொடி சிறிதளவே தூவிய பால்வண்ணமா ஆம் அது தான் சரி.. அந்தக் கையில் எவ்வளவு அழகாய் இருந்து உளத்துக்குள்ளே உலையைப் பற்றவைத்தது..

ஆஹா இந்தச் சிந்தாமணியின் பெயரைச் சொர்க்கமென்று வைத்திருக்கலாம்..பிரம்மன் ஏகப்பட்ட அலுவல்கள் இருக்கிறதென்று விஷ்ணுவிடம் ஒப்புதல் வாங்கி விடுமுறையில் ஏகாந்தத்தில் இருக்கும்போது இவளை வடித்திருப்பான் போல..
கண்ணிமையும் அழகு; கண்களும் அழகு
புருவமும் அழகு; பருவமும் அழகு
முறுவலும் அழகு முறுவும் இதழும் அழகு
நாசியென்றால் எள்ளுப் பூவாமாமே.. ம்ம்ஹூம் இல்லவே இல்லை இவளுடையது தான்..அதில் செல்லமாய்க் குத்தப்பட்டு சிரிக்கும் வைரமூக்குத்தி
கன்னமும் அழகு..காதுமடல் அழகு..
ம்ம்கொஞ்சம் கீழிறங்கி யோசித்தால்..வேண்டாம் மனதுக்குள்ளேயே நினைத்துக் கொள்வோம்!

மொட்டை மாடி அழகிய நிலா சிரித்தபடி மேகங்களுடன் நடை பழகிக் கொண்டிருக்கிறது..இப்படி நடக்கின்ற நடையில் படக்கென இளைத்து இளைத்து தேய்ந்து விடும்.. பின் மறையும் பின் எழும்.. ஆனால் எனது அக்னி..சிந்தாமணியின் சிந்தனையில் ஏற்படும் உடலக்னி என்னசெய்வது..
முடியவில்லையே..மங்கள் தாஸா சீக்கிரம் ஒரு முடிவெடு..

மங்கள் தாஸ் ஒரு முடிவெடுத்தான்..
உடன் கீழிறங்கி பின்பக்கம் கொல்லைப்புறச்சுவரைத் தாண்டிய போது தான் அதை உணர்ந்தான்..எங்கிருந்தோ மேகங்கள் சூழ்ந்து கொண்டதை..காற்றில் குளிரும் ஈரப்பதமும் கலந்திருப்பதை..என்ன இது என் சிந்த்தூவைப் பார்க்கப் போகவேண்டுமே..மழை வரும்போலிருக்கிறதே..

வருமென்ன..வந்தேவிட்டது

சுற்றிச் சுழன்றடிக்கும் காற்று..காற்றில் படபடக்கும் மரங்களின் இலைகள் இவையெல்லாவற்றுக்கும் கவலைப் படாமல். இப்படி எங்கேடா போகிறாய் மங்களா எனத் தடுப்பது போலவே உரக்க இடிக்குரலில் மின்னல்விளக்கில் மழை ஹோ ஹோ ஹோ வெனப் பெய்ய ஆரம்பித்தது.

ம்ஹூம் .. உள்ளக்கனல் தகிக்க சிந்தாமணியை அவள் நினைவே ஒன்றாகி சடக் சடக்கென வேகவேகமாக ஆற்றங்கரைப் பக்கம் சென்றால்.. இது என்ன ஆற்றில் வெள்ளம்..ஆற்றின் அக்கரையில் அவள் வீடு.. எப்படிச் செல்வேன்..அடடா அடடா அடடா அவள் ஏதோ செய்கிறாள் எனை..அட இது என்ன..

ஆஹா இருட்டிலும் இறைவன் நமக்குக் கருணைவைத்திருக்கிறான்..இந்த வான நிலா மேகத்தில் புகுந்துகொண்டால் என்ன.. என் இதய நிலா தான் இந்தக் கட்டையை எனக்குக் கொடுத்திருக்கிறாள் இறைவனிடம் சொல்லி..

நினைத்துத் தாவி அங்கே ஆற்றின் போக்கோடு எதிர்க்கரைப்பக்கம் சென்றுகொண்டிருந்த கட்டை மேல் மங்கள் தாஸ் ஏற அதுவும் அந்தப்புறம் அடித்துக் சென்றது அவனை..ஆனால் அவனறியாதது அவன் ஏறிய கட்டை நிஜமான கட்டையில்லை..பொய்யுடம்பு.. உயிரில்லாதது..ம்ஹூம் அதன் நாற்றத்தையும அவன் உணரவில்லை.. இருளில் ஆற்றின் கரை அருகில்வரக்கட்டையை விட்டுமறுபடி நீந்தி ஏறி வேகவேகமாய் (ஏன் இந்த மழை நிற்க மாட்டேன் என்கிறது) வேக வேகமாய் அவளுடைய வீடு இருக்கும் தெருவிற்குச் செல்ல விளக்குகள் எல்லாம் இல்லை..தெருவும் இருளோ என இருந்தது அவன் மனத்தைப் போல.

வீடும் இருளில்.. இருந்தாலென்ன.. அதோ முதல் மாடியில் அந்த நிலவு எனக்காக நின்றிருக்கும்..

மங்கள் தாஸின்கைகள் மாடியில் ஏறுவதற்காக அந்தப்பக்கமிருந்த மரத்தின் கிளையைப் பிடிக்கலாமெனத் தேட அகப்பட்டது ஒரு கயிறு அதைத் தொற்றி அங்கிட்டிருந்து சொய்ங்க்க் என மாடிக் கைப்பிடிச் சுவரைப் பற்றி – அவ்வாறு பற்றுகையில் கைகளில் கால்களில் சிராய்ப்பு ஏற்பட்டு வழுக்க்கினாலும் மறுபடி தொற்றி உள்ளே குதிக்க சத்தம் கேட்டு சிந்தாமணி மாடியறையை விட்டு வெளியே வர…ப்பளீர்….

வானத்தில் ஒரு மின்வெட்டு..மின்னற்குழந்தை கடகடவெனச் சிரிக்க..அந்தவெளிச்சத்தில் அந்த்ப் பதினைந்திலிருந்து பதினெட்டு வயதிற்குள் இருந்த மடந்தை (ஹப்பாடி விஷய்த்துக்கு வந்தாச்சு) சிந்தாமணி அவளும் பளீரென ஒரு மின்னல் போலத் தான் தோன்றினாள் மங்கள் தாஸிற்கு..

ஹச்சோ.. நீங்கள் நீங்கள் எப்படி இங்கே..உங்கள் தாயாரின் சிரார்த்தமென்று சொன்னார்களே உள்ளே வாருங்கள்..

குரலில் பதற்றம் உடலில் பதற்றம் கண்களில் பதற்றம் மட்டுமின்றி நாசியிலும் பதற்றம்..ஏதோ தேவையில்லாத நாற்றம்..

காட்டிக்கொள்ளாமல் உள் சென்று எரிந்துகொண்டிருந்த எண்ணெய் விளக்கில் மங்கள் தாஸைப் பார்த்தவள் அதிர்ந்தாள்..

கண்களில் காமத்தீ…உடலிலோ ரத்தம் வரும் சிராய்ப்புக்கள்..அதோ ஓரம் கயிறாய் ஊர்வது என்ன. ஓ...ஹ்.. பாம்பா..இதைப்பற்றியா ஏறி வந்தான்.. ஆற்றை எப்படிக் கடந்திருப்பான்

சிந்த்த்ட்தூஊஉ..

நாக்குழற அருகில் வர மங்கள் முயற்சிக்க எப்படி ஆற்றைக்கடந்தீர்கள்..

ஒரு கட்டை கிடந்தது அதைப்பற்றி வந்தேன் – எனக் கைபற்ற முற்பட அவன்கைகளில் சில அழுக்குக்கள்..அந்தக் கட்டையுடையவை..

பார்த்தாள் சிந்தாமணி.. நள்ளிரவு..மழை..வெள்ளம் எல்லாம் கடந்து என்னை என்னிருப்பிடத்தை என்னுள்ளத்தை..இல்லை இல்லை என்னுடலைத் தேடி இவன் வந்திருக்கிறான்..இது சரியா சரியில்லையே.. என்ன செய்யலாம்..

மங்கள்..அங்கு குளியலறையில் மாலையில் போட்டுவைத்திருந்த வென்னீர் இருக்கிறது போய்க் குளித்து விட்டு வாருங்கள்..

சிந்த்தூ.. ஒரே ஒரு சின்ன அணைப்புக் கொடேன்.. ஓ உன்னுடையும் நனைந்து அழுக்காகுமோ எனப் பயப்படுகிறாயா..

இல்லைபடவா..உன் உள்ள அழுக்கை எடுக்கப் பார்க்கிறேன்.. முகம் கல்லாகி.. மங்கள் போய்க் குளித்துவாருங்கள்..

அந்த எண்ணெய் தீபத்தைப் போல அவள் குரலும் படபடக்க அவன்போய்க் குளித்து உடைமாற்றி வரும்போது அவள் கட்டிலில் திரும்பி அமர்ந்திருந்தாள்..

சிந்தூ..

திரும்பினாள்..
என் சிந்துவா இவள்.. சீற்றமிக்க கடலலைகள் இவள் கண்களுள் ஏன் பொங்கு கின்றன.. கண்களும் சிவந்திருக்கின்றன..முத்தாட அழைக்கும் உதடுகள் ஏன் இயல்பு மாறித் துடிக்கின்றன..

என்னாயிற்று..

நீங்கள் எப்படி வந்தீர்கள் தெரியுமா

தெரியும் மழை, கட்டை, கயிறு நீ.. இதற்காகவா கோபம்..

இல்லை மங்கள்.. நீங்கள் கட்டையாய்ப் பிடித்தது பிணம்.. கயிறாய்ப்பிடித்ததுபாம்பு.. இங்கு வந்திருப்பது என்றாவது ஒரு நாள் அழகெலாம் இழந்து ரத்தம் சுண்டி கட்டையாக ஜீவன் விடப்போகிற இந்த அற்ப மடந்தைக்காக (ஹை..ரெண்டாவது தடவையும் சொல்லியாச்சு)

சிந்தூ என்ன சொல்கிறாய் நீ..

தலையூசி ஒன்றை எடுத்தாள் நறுக்கென தனது சுண்டுவிரலில் குத்தினாள்.. ரத்தம் அவள் இதழ் நிறத்தைப் போலத் துளிர்க்க “பாருங்கள் மங்கள்.. ரத்தமும் சதையும் கொண்ட சாதாரணப் பெண் நான்..எனக்காகவா இவ்வளவு பாடு உங்களுக்கு..இதில் கொஞ்சமே கொஞ்சம்பிற்காலத்தில் வரப்போகும் கணக்கான ஒரே ஒருசதவிகிதம் இறைவன் பால்காட்டினீர்கள் என்றால்.. அந்தக் கிருஷ்ணன் மீது ப்ரேமித்திருந்தீர்களென்றால் எங்கேயோ சென்றிருப்பீர்கள்..

என்ன சொல்கிறாய் நீ

என் மீதுள்ள ப்ரேமையை விடுங்கள் என்கிறேன்.. கொஞ்சம் ஆண்டவனை நினையுங்கள் என்கிறேன்..

நீ சொல்வதானால் எதையும் செய்வேன் சிந்தூ இதையும் செய்கிறேன்” என்ற மங்கள் அன்றிலிருந்து பகவான் கிருஷ்ணனின்பக்தனானான்.. பிற்காலத்தில் லீலா சுகர் என்று அறியப்பட்டார்..க்ருஷ்ணாம்ருதமென்ற காவியத்தை சமஸ்கிருதத்தில் எழுதினார்..

*
மடந்தைப் பருவம் 15 இலிருந்து 18 வயதிற்குள்ளாமாம் பெண்களுக்கு..
அதைத் தேடப்போய் பில்வ மங்கள் பற்றிய குறிப்புக் கிடைக்க அதற்குக் கொஞ்சம் ஜிகினா வேலை செய்து எழுதிப்பார்த்தேன்.. (கவிதையைத்தவிர்த்ததற்குக் காரணம் – கலை இது தான் என் ரூட் என்றுவிடுவார் என்ற பயம்)

இந்தப் பில்வ மங்களின் கதை ஒரு படமாகவும் வந்ததாக்கும்..எப்போது 1937 இல் ..எம்.கே.தியாகராஜ பாகவதரின் இரண்டாவது படம்.. சிந்தாமணி என்ற பெயர்.. எடுத்தது மதுரை ராயல் டாக்க்கீஸ் என்ற கம்பெனி.. ஒருவருடத்திற்கும் மேலாக எல்லாஇடங்களிலும் ஓடி – மதுரை நியூ சினிமாவிலுமாம்- அதில் வசூலித்த பணத்தை வைத்து அந்த தயாரிப்பாளர்கள் மதுரையில் ஒரு தியேட்டர் வாங்கினார்களாம்..அதற்கும். சிந்தாமணி என்றே பெயர் வைத்தார்களாம்….சிந்தாமணி தியேட்டரில் பல படங்கள் பார்த்திருக்கிறேன்(இப்போதும் இருக்கா என்ன) இந்த விஷயம் எனக்குத் தெரியாத ஒன்று (உண்மையா முரளி)

மறுபடியும் மடந்தைக்கு வந்தால்:

பெரிய திருமொழியில்:

திருமடந்தை மண் மடந்தை இரு பாலும் திகழ
தீ வினைகள் போயகல அடியவர்கட்கு என்றும்
அருள் நடந்து இவ் ஏழ் உலகத்தவர் பணிய வானோர்
அமர்ந்து ஏத்த இருந்த இடம்” என்று திருமங்கையாழ்வார் ஸ்ரீதேவி பூதேவிப்பிராட்டிகளை இளைய பருவம்கொண்ட நங்கையர்கள் எனச் சொல்கிறார்.

கோவலனும்பாருங்க.. விஷமக்காரன் மட்டுமல்ல விஷயக்காரன் தான்..
“மாந்தளிர் மேனி மாதவி மடந்தை
பால்வாய்க் குழவி பயந்தனள் “ என சிலப்பதிகாரத்தில் வருகிறது.. கண்ணகிக்கு என்னவாக்கும் வயசு..பாவம் அவள் இன்னும் சின்னப் பொண்ணாம்..பன்னிரண்டு வயது மங்கைப்பருவம் என்கிறது சிலப்பதிகாரம்..
*
எனில் மடந்தைக்கு என்னப் பாட் போடலாம்..என யோசித்தால் முதலில் சிந்தாமணியில் வரும் ராதே எனக்குக் கோபம் ஆகாதடி..

https://youtu.be/7Gv2JlXTJng

பதினாறுக்கு நிறைய பாட்டுக்கள் இருக்கு..வாசு வந்ததுனால போட்டாச் சொல்ல வைக்கலாம்..

என்றும்பதினாறு .. வயது பதினாறு
மனதும் பதினாறு..அருகில் வா வா விளையாடு..

**

எண்ணிரண்டு பதினாறு வயது
அவள் கண்ணிரண்டில் காணுதம்மா காதல் கொண்ட மனது

*

அவள் பதினாறும் நிறையாத பருவமங்கை…தப்புங்க்ணா.. பருவ மடந்தைன்னு வந்துருக்கணும்..

ம்ம் திடீர்னு யூட்யூப் லிங்க் கனெக்ட் பண்ண டயமாகுதா.. சரி..ஒருபாட்டோட நிறுத்திக்கலாம்..லாமா..

அடுத்த பருவத்தில் சந்திக்கலாம்..

வாரேன்..:)

எப்பிடீங்க்னா இப்பிடியெல்லாம் எழுதறீங்க. இப்பிடியெல்லாம் எழுதி எல்லாரையும் எழுத்தாளர்களா, கவிஞர்களா மாத்திகிட்டே இருங்க. வாழ்த்துகள்.

நெறைய எழுதி இருக்கீங்க. இன்னும் ரெண்டு வாட்டி படிச்சுட்டு டாபிக்ல என்னோட கமெண்ட் சொல்றேன்.