PDA

View Full Version : மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3



Pages : 1 2 3 4 5 6 7 8 9 [10] 11 12 13 14 15 16

Richardsof
19th December 2014, 01:26 PM
http://youtu.be/WG0uov_eUS0

chinnakkannan
19th December 2014, 01:35 PM
வெள்ளை வெள்ளைக் கன்றுக்குட்டி.. :)

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=MULFOpS3Ufg

Gopal.s
19th December 2014, 02:03 PM
அதே அந்நிய வேந்தன்:

முரளியை வேண்டுமானால் சொல். உன்னைச் சொல்லாதே. மன்னனான நீயே முன்னால் நாடோடி மன்னனின் புகழ் பாடி அடி பணிந்து விட்டாய். சிற்றரசர்கள் எம்மாத்திரம்? என் 'அன்பே வா'.

அடடா ஆற்காடு நவாப் போல ,நான்தான் எட்டப்பர்களை உருவாக்க துணை போய் ,அந்நியர்களுக்கு உதவி விட்டேனா?பெருத்த அவமானம். கட்டபொம்மு முரளியே வாழ்க. விரைவில் உனக்காவது மண்டபம் கட்டி விடலாம்.

Russellzlc
19th December 2014, 02:10 PM
அதே அந்நிய வேந்தன்:

முரளியை வேண்டுமானால் சொல். உன்னைச் சொல்லாதே. மன்னனான நீயே முன்னால் நாடோடி மன்னனின் புகழ் பாடி அடி பணிந்து விட்டாய். சிற்றரசர்கள் எம்மாத்திரம்? என் 'அன்பே வா'.


நன்றி, திரு. வாசு சார். நேற்று இரவு லோக்கல் கேபிளில் மக்கள் திலகத்தின் படம் போட்டார்கள். பார்த்து ரசித்தேன். அப்போது, நீங்கள், திரு. ராகவேந்திரா சார், திரு.கிருஷ்ணா சார், திரு. ரவி சார், திரு. சின்னக் கண்ணன் சார், திரு.எஸ்.வி.சார் எல்லாம் நினைவுக்கு வந்தீர்கள். படம்..... நல்லவன் வாழ்வான்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Gopal.s
19th December 2014, 02:25 PM
நன்றி, திரு. வாசு சார். நேற்று இரவு லோக்கல் கேபிளில் மக்கள் திலகத்தின் படம் போட்டார்கள். பார்த்து ரசித்தேன். அப்போது, நீங்கள், திரு. ராகவேந்திரா சார், திரு.கிருஷ்ணா சார், திரு. ரவி சார், திரு. சின்னக் கண்ணன் சார், திரு.எஸ்.வி.சார் எல்லாம் நினைவுக்கு வந்தீர்கள். படம்..... நல்லவன் வாழ்வான்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

தன் நினைவு வரவில்லை போலும்? அதையெல்லாம் இன்னுமா இந்த உலகம் பாக்குது?

Russellzlc
19th December 2014, 02:36 PM
தன் நினைவு வரவில்லை போலும்? அதையெல்லாம் இன்னுமா இந்த உலகம் பாக்குது?

எனக்கு சுய விளம்பரம் பிடிக்காது வாசு சார். இன்று காலை வழியில் கேபிள் ஆபரேட்டரை பார்த்தேன். இன்றும் நல்ல படம் போடப் போகிறாராம். அது.............படித்தால் மட்டும் போதுமா?

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Gopal.s
19th December 2014, 02:57 PM
எனக்கு சுய விளம்பரம் பிடிக்காது வாசு சார். இன்று காலை வழியில் கேபிள் ஆபரேட்டரை பார்த்தேன். இன்றும் நல்ல படம் போடப் போகிறாராம். அது.............படித்தால் மட்டும் போதுமா?

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

உலகமே,படித்தால் மட்டும் போதும்னுதாம்பா நினைக்குது. ஏன் உங்க திரியிலேயே குஞ்சு குளுவான்களேல்லாம் 10 வது
படித்து பாஸ் பண்ணியதே யார் ஆசியிலோ என்று மூன்று நான்கு பக்கங்கள் ஒட்டிய ஞாபகம். போதும்பா. அதுக்குதானே காமராஜர் மதிய உணவு போட்டார்?ஹூம்....தின்னுட்டு ,படிக்கவும் படிக்காமல்........

Russellzlc
19th December 2014, 03:10 PM
உலகமே,படித்தால் மட்டும் போதும்னுதாம்பா நினைக்குது. ஏன் உங்க திரியிலேயே குஞ்சு குளுவான்களேல்லாம் 10 வது
படித்து பாஸ் பண்ணியதே யார் ஆசியிலோ என்று மூன்று நான்கு பக்கங்கள் ஒட்டிய ஞாபகம். போதும்பா. அதுக்குதானே காமராஜர் மதிய உணவு போட்டார்?ஹூம்....தின்னுட்டு ,படிக்கவும் படிக்காமல்........


நாளை ‘படிக்காத மேதை’...யாம்.


அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Richardsof
19th December 2014, 03:16 PM
HIGHLY EDUCATED MR.GOPAL

http://i59.tinypic.com/apfnde.jpg

kalnayak
19th December 2014, 05:13 PM
சி.க.,
National award winning song for you:

https://www.youtube.com/watch?v=abrf5iHlETc

chinnakkannan
19th December 2014, 05:57 PM
வாவ்..கல் நாயக் சார்..தாங்க்ஸ்.. எவ்ளோ அழகா இருக்கு கன்னுக்குட்டி ..வெகு நல்ல பாடல்.
உங்களுக்குத் தெரியுமா நான் சின்னஞ்சிறுவனாக இருந்தது முதல் இப்போதுவரை எங்கு கன்னுக்குட்டியைப் பார்த்தாலும் மெய்மறந்து அருகில் சென்றுவிடுவேன்..அதன் கண்கள் துறுதுறு துள்ளல்.. சிலவை கழுத்தைக் காட்டும்..சிலவை முட்டவரும் இருப்பினும் பிடிக்கும்..போ\னவருடம் ஓரிக்கை போன போது சில கன்றுகள் சமர்த்தாய் நான் கொஞ்சியதை உள்வாங்கின..

என் எருமைக் கன்னுக்குட்டி பாட்டு ஒண்ணு இருக்கு வாசு சார் போட்டுட்டார்..வேற கன்றுப் பாட்டு என்\ன இருக்கு

chinnakkannan
19th December 2014, 09:42 PM
கவிதையும் பாட்டும் – 2
**

நண்பர் ஒருவர் முக நூலில் அரேபியக் காதை- பொட்டி கட்டும் படலம் என ஒரு கவிதை அற்புதமாக எழுதியிருந்தார்.. நான் கொஞ்சம் யோசித்து எழுதிப் பார்த்தது இது..இப்பொழுது..சுடச் சுட உங்களுக்கு..

*

பொட்டி கட்டவிழும் படலம்

**

ஆடற் காரியாய் அசைவது இறக்கி.
அணைத்தே இழுத்துத் தரையில் வைத்து
ஊடலாய் வாகன ஊர்தியை அனுப்பி
உணர்வுடன் கூந்தலைப் பற்றியே இழுத்து
வேடமாய் நின்றால் கைப்பிடி பற்றியே
விஷயங் கனக்க வேகமாய் நடந்து
வாடா என்னும் அன்னை தந்தை
வாஞ்சையில் நோக்கும் தங்கை தனயன்
நாடிப் புன்னகை உதிர்த்தே உள்ளே
நல்ல விதமாய் வைத்தே பின்பு
தேடிய உறவுடன் சிரித்தே பேசி
தெளிவாய்க் கொஞ்சம் ஓய்\வும் எடுத்து
வாடி இங்கே என்றே தங்கை
வளைக்கரம் தன்னில் வண்ணச் சேலை
வயணமாய்ப் பார்த்த தனயன் கையில்
வாழ்க்கைக் காலம் காட்டும் கருவி
கனிவாய் ப் பார்த்த தந்தை தனக்கு
கருப்பு வெள்ளை கட்டச் சட்டை
இருப்பைக் காட்டும் வங்கிக் கணக்கு
எடுத்துக் கொடுத்தால் முகமும் மலரும்
அழகாய் மிளிரும் பட்டுச் சேலை
அன்னை சொல்வாள் ஏண்டா செலவு
உடலிளைத் திருக்கு விழிகளைத் திருக்கு
உணர்வடன் சொல்லக் கண்ணீர் பூக்கும்.!

***

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=fSe3lPOAhtY

*

rajeshkrv
19th December 2014, 09:57 PM
சி.க.,
National award winning song for you:

https://www.youtube.com/watch?v=abrf5iHlETc

national award lost it's charm ... oh my god. are people deaf

raagadevan
20th December 2014, 11:10 AM
பாடல்: "அருணகிரணம் அணியும் உதயம்..."
திரைப்படம்: கிழக்குணரும் பக்ஷி (1991)
வரிகள்: கே. ஜெயகுமார்
இசையமைப்பாளர்: ரவீந்திரன்
ராகம்: லவங்கி
பாடகர்: சித்ரா with யேசுதாஸ்

https://www.youtube.com/watch?v=Usci86wtUXs

vasudevan31355
20th December 2014, 12:11 PM
'இளையராஜா என்றும் இனிய ராஜா' (தொடர் 25) சிறப்புப் பதிவு

http://www.upperstall.com/files/imagecache/preview/profile/ilayaraja-stills-1.jpg

அடுத்து ராஜா நம் எல்லோரையும் தன் வசப்படுத்திக் கொண்ட 'முள்ளும் மலரும்'. தமிழ்த் திரையுலகிற்கு இன்னொரு அத்திப்பூ. குறிஞ்சிப்பூ.

இசைக்கு முன் முதலில்

'முள்ளும் மலரும்' ஒரு விவரமான அலசல் பார்வை (புத்தம் புது பதிவு)

http://upload.wikimedia.org/wikipedia/en/7/76/Mullum_Malarum_Poster.jpg

http://tamil.filmibeat.com/img/2014/02/27-balu-mahendra533-600.jpg

மகேந்திரன் என்ற மந்திர வித்தை அறிந்த மாயாவி 'தங்கப்பதக்க'மாய் நமக்கு அளித்த பொக்கிஷம். ரஜினியின் இன்னொரு பரிமாணத்தை வெளிக் கொணர்ந்த படம். ஆயிரம் அண்ணாமலைகளும், பாட்ஷாக்களும், முத்துக்களும், வீராக்களும், ஐ .வி.சசியின் காளிக்களும் நெருங்க முடியாத மகேந்திரனின் காளி இந்த ரஜினி. நெஞ்சில் குத்துக்கால் இட்டு இன்றுவரை நம் நெஞ்சில் உட்கார்ந்து இருக்கும் அந்த நிஜ முரட்டுக்கா(ளை)ளி முள்ளான ரஜினி.

கல்கி வெள்ளிவிழா மலரில் உமா சந்திரன் எழுதி பரிசு பெற்ற கதை. கண்ணதாசன், கங்கை அமரன், பஞ்சு பாடல்களை எழுத, பாலா, ஜேசுதாஸ், வாணி, ஜான்ஸி (ஜென்ஸி என்று போட மாட்டார்கள்) பின்னணி பாட, ஒளிப்பதிவை ஆர்வோ கலரில் தந்து ஆச்சரியப் படுத்தியவர் பாலு மகேந்திரா. வி. மோகன் தயாரிப்பில் ஆனந்தி பிலிம்ஸ் எடுத்த இக்காவியத்தை திரைக்கதை வசனம் எழுதி, இயக்கி, தனக்கென தமிழ் ரசிகர் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துக் கொண்டவர் இயக்குநர் மகேந்திரன் அவர்கள்.

பாடல்களுக்கு முன்னால் இந்த அழியாத அமரத்துவ ஓவியத்தைப் பற்றி கொஞ்சம் பார்ப்போம்.

http://www.rajinifans.com/gallery/images/Mullum%20Malarum/mullum(1).jpg

ஒரு நாலே வரிக் கதை. ஒரு நானூறு ஃபிரேம்களாய் நெஞ்சாங்கூட்டில் ஊடுருவி இன்று வரை நம்மை உலுக்கிக் கொண்டிருக்கும் காவியம்.

கதை

அனாதையான கழைக் கூத்தாடி சிறுவன் காளி தன் தங்கை வள்ளியின் மேல் உயிரையே வைத்திருக்கிறான். ஒரு அழகான கிராமத்தில் அடைக்கலம் புகுந்து தன்மான சிங்கமாக வளர்கிறான். கண் அங்கமாக தங்கையை வளர்க்கிறான். இப்போது வளர்ந்த வாலிபன் அவன். முரடன். ஊரே அவனைக் கண்டு நடுங்கும். ஆனால் ஊருக்கு உதவும் நல்லவன். மனதில் பட்டதை சொல்பவன். செய்பவன் கூட. தங்கையோ புத்தம் புது மலராக வாசம் வீசுகிறாள்.

மலைப் பகுதியில் பவர் ஹவுஸில் டிராலி ஆபரேட்டர் வேலை அவனுக்கு.

அங்கு அவனுக்கு அதிகாரியாய் வருகிறான் டிவிஷன் என்ஜினியர் ஒருவன். காளியை ஒத்த வயதுடையவன்தான். கடமையில் கண்ணானவன். சட்ட திட்ட விதிகளின்படி ஒழுங்காக வேலை நடக்க வேண்டும் என்று எண்ணுபவன்.

சும்மா இருக்கையில் கிராமத்து மக்களை டிராலியில் அடுத்த ஊருக்கு கொண்டு சென்று விடும் உதவியை செய்பவன் காளி. 'சட்டப்படி இது கூடாது' என்று தடுக்கிறான் என்ஜினியர். 'இந்த உதவியை கூடவா செய்யக் கூடாது? என்று அவனிடம் வாதிடுகிறான் காளி. ஆரம்பத்திலேயே என்ஜினியருக்கும் காளிக்கும் ஒத்துப் போகவில்ல. காளி அதிகாரியை பகையாளியாய் பார்க்கத் தொடங்குகிறான். ஆனால் அதிகாரி காளியிடம் வஞ்சம் பாராட்டவில்லை. வேலை விஷயங்களில் மட்டுமே அவனைக் கண்டிக்க்றான்.

ஒருவேளை சோற்றுக்கே வழியில்லாமல் அந்த கிராமத்துக்கு வரும் ஒரு மூதாட்டிக்கும், அவள் பெற்ற வயதுப் பெண் மங்காவிற்கும் வள்ளி அடைக்கலம் தந்து பக்கத்திலேயே வைத்துக் கொள்கிறாள். மங்கா தோற்றத்தில்தான் கன்னியே தவிர ஆண்பிள்ளைத்தனமாக ஊர் சுற்றித் திரிபவள். பயங்கர சாப்பாட்டுப் பிரியை. அவளுடைய வயதான தாயாருக்கு வேலையும் வாங்கிக் கொடுக்கிறான் காளி தன் தங்கையின் வேண்டுகோளின்படி.

மங்காவின் விளையாட்டுத்தனத்தால் காளி ஒரு நாள் வேலை பார்க்க முடியாமல் போக, அவன் மேல் ஆக்ஷன் எடுக்கிறான் அந்த என்ஜினியர். 10 நாட்கள் வேலையில் இருந்து அவனை சஸ்பெண்ட் செய்கிறான். தன் மேல் அதிகாரி வஞ்சம் தீர்த்துக் கொள்கிறான் என்று காளி கறுவுகிறான். ஊர் அவமானப்படுத்துமே என்று ஆத்திரம் மேலிட குடித்துவிட்டு ரோட்டில் மயங்கிக் கிடக்க, கை மேல் ஏறும் லாரியால் இடது கையை இழக்கிறான். என்ஜினியர் காளியின் மேல் அனுதாபப்ப்பட்டு அவனை ஹாஸ்பிட்டலில் சேர்த்து கவனித்துக் கொள்கிறான்.

அண்ணனை கவனித்துக் கொண்டதால் வள்ளிக்கு என்ஜினியர் மேல் மதிப்பும், மரியாதையும் ஏற்படுகிறது. அது காதலா இல்லையா என்று கூட அவளுக்குத் தெரியாது. அதிகாரியும் வள்ளியின் குணம் அறிந்து அவளை நேசிக்கிறான்.

ஆனால் கை போனதால் காளிக்கு வேலையும் பறி போகிறது. தான் எவ்வளவோ முயன்றும் காளிக்கு வேலையைத் தர தன்னால் முடியவில்லை என்று காளியிடம் உண்மையாகவே வருத்தப்படுகிறான் என்ஜினியர். ஆனால் காளி அதை நம்பவில்லை. தன் வேலைக்கு உலை வைத்ததும் அதிகாரிதான் என்று அவன் மீது மேலும் வெறுப்பாகிறான் காளி பழைய தன்னுடைய பகை தீக்கு மண்ணெண்ணெய் ஊற்றியபடியே.

கைகளை இழந்த அண்ணன் காளிக்கு ஊர் சுற்றி மங்காவைத் திருமணம் செய்து வைக்கிறாள் வள்ளி. முதலில் மறுத்த காளி முடிவில் மனம் ஒப்புகிறான். தனக்கு சோறு போட்டு ஆதரித்த வள்ளியின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற நன்றி உணர்வாலும், காளியை முழுதும் புரிந்தவள் ஆதலாலும் மங்காவும் அவனை மகிழ்ச்சியுடன் அவனை மணக்க சம்மதிக்கிறாள். திருமணமும் இனிதே நடந்தேறுகிறது.

http://www.thehindu.com/multimedia/dynamic/01449/06CMMULLUM_MALARUM_1449849g.jpg

திருமணத்திற்கு வரும் என்ஜினியரரை வரவேற்காமல் கண்டும் காணாமல் இருக்கிறான் காளி. தன்னுடைய இந்த நிலைமைக்கு அவன்தானே காரணம் என்று உள்ளூற பொருமிக் கொண்டிருக்கிறான் காளி. ஆனால் மங்காவும் வள்ளியும் அவனைப் புரிந்து கொண்டு வரவேற்கிறார்கள்.

வேலை இல்லாமல் கஷ்டத்தை நோக்கி குடும்பம் நகரத் தொடங்குவதால் அண்ணனுக்குத் தெரியாமல் கூலி வேலைக்குப் போகத் தொடங்குகிறாள் வள்ளி அண்ணியான மங்காவின் சொல்லையும் மீறி. இது தெரிந்த காளி மிகுந்த கோபமுற்று இருவரையும் கடிந்து கொள்கிறான். தான் இருக்கும் வரை யாரும் வேலைக்குச் செல்லக் கூடாது என்று கட்டளை இடுகிறான்.

பிழைக்க ஒரு கடை வைக்க எண்ணி பெட்டிக்கடை வைத்திருக்கும் முருகேசனிடம் பணம் கேட்கிறான் காளி. முருகேசனும் காளியின் மேல் உள்ள பிரியத்தால் பணத்தைத் தந்து உதவுகிறான். ஆனால் முருகேசன் தெரிந்தும் தெரியாமலும் ஒருத்தியை அந்த ஊரில் வைப்பாட்டியாக வைத்திருக்கிறான்.

இதற்கிடையில் அதிகாரி வள்ளியைச் சந்தித்து தான் அவளை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாகக் கூறுகிறான். காளியிடமே வந்து அவளைப் பெண் கேட்கப் போவதாகவும் கூறுகிறான். வள்ளி மிகுந்த மகிழ்ச்சியடைகிறாள். அவளுக்கும் அவனைப் பிடித்தமே.

என்ஜினியர் காளியின் வீட்டிற்கு வந்து வள்ளியைப் பெண் கேட்கிறான். இதை சற்றும் எதிர்பாராத காளி சமாளித்துக் கொண்டு முடிவை அடுத்த நாள் முருகேசன் கடை அருகே சொல்வதாகக் கூறி என்ஜினியரை அனுப்புகிறான்.

அடுத்த நாள் என்ஜினியர் ஆவலுடன் வந்து காளி என்ன சொல்லப் போகிறான் என்று அமர்ந்திருக்க, காளி மிகச் சரியான சந்தர்ப்பமாக அதிகாரியைப் பழி வாங்க அதைப் பயன்படுத்திக் கொள்கிறான். யாருமே சற்றும் எதிர்பாராவகையில் தனக்கு கடை வைக்க பணம் கொடுத்து உதவிய முருகேசனை வள்ளிக்கு மாப்பிள்ளையாக அங்கேயே அறிவித்து அதிகாரி மேல் தனக்கிருந்த ஒட்டு மொத்த பகை உணர்வையும் ஒரு வினாடியில் தீர்த்துக் கொள்கிறான். முருகேசனை பரிசம் போடவும் அழைக்கிறான்.

http://thiruttudvd.net/wp-content/uploads/2014/07/MullumMalarum00000011.jpg

ஆனால் காளியின் இந்த முடிவு அவனைச் சுற்றி சுற்றி வரும் நெருங்கிய நண்பர்களுக்குக் கூட பிடிக்கவில்லை. மங்காவுக்கு அறவே பிடிக்கவில்லை. வள்ளிக்கும் பிடிக்கவில்லை என்றாலும் அண்ணனின் அன்பு என்ற வளைக்குள் மாட்டிய முயலாய் பேச இயலாமல் துடிக்கிறாள்

பரிசம் போட வரும் முருகேசனை நிச்சயம் பண்ண விடாமால் தடுக்கிறாள் மங்கா. இதனால் பெரும் கோபமாகும் காளி மங்காவை அடித்து விடுகிறான். இதைத் தடுக்கும் வள்ளி அண்ணியை மறுத்துப் பேசி 'தன் அண்ணன் இஷ்ட்டப்படியே திருமணம் நடக்கட்டும்' என்று மனத்தைக் கல்லாக்கிக் கூறி விடுகிறாள்.

திருமணம் நடக்கத் தயாரான நிலையும் வந்து விடுகிறது. யாருமே திருமணத்தில் இஷ்டம் இல்லாமல் 'தேமே' என்று இருக்கின்றனர். காளி எதைப் பற்றியும் கவலைப்படாமல் தான் ஒற்றை ஆளாக நின்று கல்யாண வேலைகளை கவனிக்கிறான்.

இதற்கிடையில் நிலைமை விபரீதமாவதைக் கண்டு மங்கா என்ஜினியரைச் சந்திக்கிறாள். வள்ளியைக் கூட்டிக் கொண்டு போய் திருமணம் செய்து கொள்ளும்படி கெஞ்சுகிறாள். "அது படித்தவர்கள் செய்யும் வேலை அல்ல... மேலும் பரிசம் போட்டு கல்யாணத்துக்கும் நாள் குறித்த நிலையில் தான் ஒன்றும் செய்ய இயலாது" என்று என்ஜினியர் வேதனையுடன் மறுக்கிறான். வள்ளி மனதில் ஆசையைத் தூண்டிவிட்டு இப்படி பேசுவது அழகல்ல என்று மங்கா அவனைக் கடிந்து விட்டு வந்து விடுகிறாள். அத்தோடு தன்னால் முடிந்த காரியமாய் ஊர்ப் பெண்கள் சிலரைக் கூட்டிக்கொண்டு முருகேசன் கடைக்குப் போய் 'பெண் பொறுக்கியான நீ வள்ளியைத் திருமணம் செய்யக் கூடாது' என்று மிரட்டி விட்டும் வந்து விடுகிறாள்.

இதற்கிடையில் முருகேசனின் வைப்பாட்டி முருகேசன் வள்ளியைத் திருமணம் செய்து கொண்டால் பின் தன் கதி அதோ கதிதான் என்று எண்ணி ஒரு சதிவலை பின்னுகிறாள். வள்ளி அதிகாரியிடம் பழகி கர்ப்பமுற்று இருப்பதாகவும், 'அவளை உன் தலையில் கட்டப் பார்க்கிறன் காளி' என்று முருகேசனிடம் சுயநலப் பேயாக தூபம் போடுகிறாள் அவள். இதை நம்பும் முருகேசன் இந்த நிலையில் கல்யாணம் வேண்டாம் என்றால் காளி தன்னைக் கொன்று விடுவான் என்று எண்ணி அஞ்சுகிறான். வைப்பாட்டியோ அவனிடம் ஊரை விட்டு இருவரும் ஓடி விடலாம் என்று சொல்கிறாள்.

இதற்கிடையில் மங்கா திருமணம் பிடிக்காமல் அழும் வள்ளியிடம் பேசுகிறாள். 'உன் அண்ணனை விட்டு என்னை நம்பி வரமுடியுமா? என்று கேட்கிறாள். ஆனால் வள்ளி எதுவும் பேசாமல் இருக்கிறாள். மங்கா 'நான் உயிரை விட்டாவது இந்தக் கல்யாணத்தைத் தடுப்பேன்' என்று கூறுகிறாள்.

கல்யாண வேலைக்காக தனியாக அலையும் காளி முருகேசனை சந்தித்து 'உதவி செய்யக் கூடாதா? என்று கேட்கிறான். ஆனால் முருகேசன் 'என்ஜினியரிடம் கெட்டுப் போன உன் தங்கை வள்ளியை என் தலையில் கட்டப் பார்க்கிறாயே.. கல்யாணம் வேண்டாம் என்று சொல்ல எவ்வளவு நாழியாகும்? என்று கேட்டு விடுகிறான் துணிவோடு. இதைக் கேட்ட காளி கொதித்துப் போய் முருகேசனை புரட்டி எடுத்து விட்டு 'மரியாதையாக தாலி கட்ட வந்து சேர்... இல்லையென்றால் உன்னைக் கொன்று விடுவேன்' என்று மிரட்டிவிட்டுப் போய் விடுகிறான்.

அடுத்த நாள் கல்யாணம். வேலை செய்த அலுப்பில் தூங்கிவிட்ட காளி எழுந்து திகைக்கிறான். கல்யாண வீட்டில் யாருமே இல்லை. தங்கையைத் தேடி ஓடுகிறான். வழயில் முருகேசன் கடை. முருகேசன் நக்கலாக அமர்ந்திருக்கிறான். ஒன்றுமே புரியாமல் நிற்கும் காளியிடம் வள்ளிக்கு அதிகாரியுடன் திருமணம் நடக்க இருப்பதாகவும், எல்லோரும் அங்கு போய் இருப்பதாகவும் கூறுகிறான் முருகேசன் .

பதறியபடி ஓடுகிறான் காளி. அங்கே அவன் கண்ட காட்சி. அவன் கண்களை அவனால் நம்ப முடிகிறதா? மணக்கோலத்தில் அதிகாரியும், வள்ளியும் வர, உடன் மங்காவும், காளியின் உற்ற நண்பர்களும். வழயில் ஒற்றைக் கையுடன் ஒத்தையாக நிற்கும் காளியை மங்காவும், அவன் நண்பர்களும் வள்ளி நன்றக இருக்க வேண்டும் என்றுதான் இந்த முடிவெடுத்ததாகக் கூறி அவனையும் திருமணத்திற்கு அழைக்கிறார்கள். எதுவும் பேசாமல் மௌனம் காக்கிறான் காளி. எல்லாமே எல்லை மீறி விட்டது.

தன்னைக் கடந்து போக இருக்கும் தன் அன்புத் தங்கையிடம் மட்டும் நெகிழ்ச்சியுடன் பேசுகிறான் இன்னமும் தன் தன்மானத்தை விடாமல். அவள் மீது தான் கொட்டிய அன்பை அவளுக்கு ஞாபகப் படுத்துகிறான். தன்னை விட்டு அவள் மீறிப் போய் அந்தத் திருமணத்தை செய்து கொள்ளக் கூடாது என்று முடிவாகத் தடுத்து வள்ளியின் கையைப் பிடிக்கிறான். ஆனால் வள்ளி எதுவும் பேச முடியாமல் தவிக்கிறாள். அண்ணன் பாசமா அல்லது அமையவிருக்கும் நல்ல வாழ்வா...(கல்நாயக், பயப்பட வேண்டாம். தொங்கலில் விடாமல் முடித்தே விடுகிறேன்.:)). குழம்புகிறாள் வள்ளி. நம்பிக்கையோடு அவளைப் பார்க்கிறான் அண்ணன். ஆனால் வள்ளி ஒரு முடிவு எடுக்கிறாள். தன் கரத்தைப் பற்றியுள்ள தன் அண்ணனின் கரத்தை விடுவிக்கிறாள். இருந்த ஒரு நம்பிக்கையும் பறி போனது காளிக்கு. அழுதபடி அப்படியே நிலை குலைந்து சிலையாய் செய்வதறியாது நிற்கிறான் காளி. தங்கை தன்னை மீறிப் போகிறாள். அதோ போய்க் கொண்டிருக்கிறாள். அனைவரும் அவனைக் கடந்து செற்று விட்டனர். அவனுக்கும் அவர்களுக்கும் இல்லை இல்லை... அவன் தங்கைக்கும் உள்ள தூரம் அதிகரித்துக் கொண்டே போகிறது. கண்கள் கலங்க வள்ளி திரும்பித் திரும்பி அண்ணனைப் பார்த்தபடி செல்கிறாள். அண்ணன் சிலையாக அந்த சிறு நதியோடும் மலைச் சரிவில் தனி ஆளாக யார் ஆதரவும் இல்லாமல் நிற்கிறான்.

நடந்து கொண்டே சென்றவள் அண்ணனிடம் திரும்பி ஓடியே வந்துவிடுகிறாள். அவனைக் கட்டிப் பிடித்து சிறு குழந்தையாய் தேம்பித் தேம்பி அழுகிறாள். 'யார் என்ன சொன்னாலும் நீ தான் என் தெய்வம்' என்று சொல்லாமல் சொல்கிறாள். 'உன் பேச்சை மீறி எதுவும் என்னால் செய்ய முடியாது' என்றும் அந்த மென்மலர் முள்ளான அண்ணன் மேல் பாசக் கொடியாய் படர்கிறாள்.

http://i.ytimg.com/vi/jU629VRND6c/hqdefault.jpg

தன்மானத்தையும், தன்னம்பிக்கையையும் முழுவதுமாக இழந்துவிட்ட நிலையில் காளி தன் தங்கை தன்னை வந்து சேர்ந்ததுமே பழைய வீரவேசக் காளியாய் புத்துணர்வு புத்துயிர் கொண்டு சிலிர்க்கிறான். தன் தங்கையை அணைத்துக் கொண்டு கர்வத்துடன் பெருமிதப்பட்டு 'இப்ப என்னடா செய்வீங்க?' என்று எல்லோரையும் பார்த்து கொக்கரிக்கிறான். 'அவள் என் தங்கைடா... ஓடிப் போய் கல்யாணம் பண்ணிக்கிறவளாடா அவ?' என்று எகத்தாளமாய்க் எல்லோரையும் கேள்வி கேட்கிறான். தங்கையுடன் இஞ்சினீயரிடம் வருகிறான்.

'எனக்கு உங்களைப் பிடிக்கல சார்' என்று முகதிலடித்தாற் போலக் கூறியவன் அடுத்த கணம் 'என் தங்கச்சிக்கு உங்களைப் பிடிச்சிருக்கு...ஆனா உங்க எல்லாரையும் விட நான் தான் முக்கியம்னு காண்பிச்சுட்டாளே... அந்த கர்வத்துலேயும், திமிரிலேயும் இப்ப ஒன்னு செய்யப் போறேன்' என்று தங்கைக்கு தன் மேல் இருக்கும் தரம் குறையா பாசத்தை மனத்தில் நிறுத்தி, தன் அன்புத் தங்கையை தனக்குப் பிடிக்காத இஞ்சினீயருக்கு மனமுவந்து தாரை வார்த்துக் கொடுக்கிறான் அனைவரும் ஆச்சரியப்படும்படி.

அவன் என்றுமே தங்கை என்ற ரோஜா மீது முரட்டுப் பாசம் கொண்ட முள் தான்.

இசை பின்னால் தொடரும்.

vasudevan31355
20th December 2014, 12:12 PM
முள்ளும் மலரும் தொடர்ச்சி...

ரஜினி பிறந்த மாத சிறப்புப் பதிவு

அண்ணன் 'காளி'யாக ரஜினி.

http://thiruttudvd.net/wp-content/uploads/2014/07/MullumMalarum00000002.jpg

அளந்து எடுத்தாற் போன்று அண்ணன் ரோல். முரட்டுக் காளி. அனுபவித்துப் பண்ணியிருப்பார் ரஜினி. அந்தக் கால ரஜினி. வேகத்தோடு விவேகத்தையும் கொண்ட ரஜினி. காளி பாத்திரம் அவருக்காகவே பிரத்தியோகமாக வார்த்தெடுக்கப் பட்டதோ என்பது போல இருக்கும். தங்கை மேல் பாசம், கனிவு, அதே சமயம் கோபம் என்று அளந்து வைத்த நடிப்பு. "பயபுள்ள... பயபுள்ள' என்று 'துருதுரு'வென்று கிராம மக்களிடம் பரிவு காட்டுவது அவரது தனித்தன்மை. உள்ளங்கையில் அடிக்கடி புகையிலையை வைத்து நசுக்கி வாயில் போட்டு மெல்வது என்று வேறு மனிதர் கிளப்புவார்.

ஒரு முடியாத வேலைக்காரனை காருக்காக இம்சைபடுத்தும் சேஷாத்திரியின் கொடுமையைக் காண சகிக்க முடியாமல் அந்தக் கார் அருகே வந்து தனக்கே உரித்தான ஸ்டைலில் காலருகே கிடக்கும் கல்லை காலால் விருட்டென்று தூக்கிப் போட்டுப் பிடித்து யாரும் பார்க்காத சமயம் காரின் லைட்டை உடைக்கும் போது ஆரம்பிக்கும் காளியின் ராஜாங்கம் படம் வணக்கம் போடும் வரை சும்மா வரிந்து கட்டுகிறது. அந்த ஒரு காட்சியிலேயே ரஜினி கேரக்டர் என்னவென்று ஈஸியாக நமக்குப் புரிந்து விடுகிறது.

அனாதைகளாய் வந்த 'படாபட்' குடும்பத்துக்காக ஷோபா ரஜினியிடம் பரிந்து பேசும் போது ஷோபாவிடம் செல்லக் கோபமாக பேசும் ரஜினி அழகாக நம்மைக் கவர்வார். படாபட்டிற்கு தங்க 'பக்கத்தில் இருக்கும் காலி வீட்டைக் கொடுக்கலாமா?' என்று ஷோபா ரஜினியைத் தயங்கியபடி 'அண்ணே!' எனக் கேட்கத் தயாராக, ரஜினி 'என்ன?' என்று கேட்டு விட்டு, கேட்க முடியாமல் தயங்கும் ஷோபாவை 'என்னடா? என்று செல்லமாக கேட்பது அருமை. தங்கை மேல் வைத்துள்ள பாசத்தை அந்த வார்த்தையில் அழகாகப் பிரதிபலிப்பார் ரஜினி.

http://drop.ndtv.com/albums/ENTERTAINMENT/rajinikanth/17.jpg

ஓடையில் படகில் பயணம் செய்யும் போது பக்கத்தில் படகில் வரும் சாமிக்கண்ணுவின் மனைவியை (ஒரு மாதிரி மனைவி) ரஜினி கலாய்ப்பது ரசனையான காட்சி. "நீங்கள்லாம் வந்து என்கிட்டே மாட்டி இருக்கணும்டி...தொலைச்சிருப்பேன்" என்று ஆண்பிள்ளைக்கே உரிய அகம்பாவ லட்சணத்துடன் வெடிப்பது ரசமான காட்சி.ஃ

சரத்பாபுதான் தனக்கு வந்திருக்கும் உயர் அதிகாரி என்று தெரியாமல் முதலில் அலட்சியப்படுத்துவதும், பின் அதிகாரி என்று தெரிந்ததும் சற்றே பணிவும், அடக்கமும் காட்டி அதே சமயம் கொஞ்சமும் தன்மானத்தை விட்டுக் கொடுக்காமல் பேசும் கட்டங்கள் கற்கண்டு. டிராலியை ஊர் மக்களின் நலனுக்காகப் பயன்படுத்தப் போக, சரத்பாபு அதைக் கண்டித்ததும் ஊர்மக்களை டிராலியிலிருந்து கடுப்பாக இறங்கச் சொல்வதும், பின் டிராலியில் சரத்பாபுவை ஏற்றிவிட்டு, நடுவழியில் கீழே சரிவில் அதை நிற்குமாறு வேண்டுமென்றே என்ஜினை ஆஃப் செய்துவிட்டு, 'அப்படியே நடந்து போங்க' மேலே நின்றபடி கூவி பழி வாங்குவதும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு காளி ஒளிந்திருக்கிறான் என்று உணர்த்தும் அருமையான தத்ரூபக் காட்சி. காரின் லைட்டை உடைத்த ரஜினியின் அடுத்த அழகான பழிவாங்கல்.

http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2013/MullumMalarum00000006.jpg (http://s1098.photobucket.com/user/albertjraj/media/2013/MullumMalarum00000006.jpg.html)

தன்னைப்பற்றி மேலதிகாரியிடம் போட்டுக் கொடுத்த இன்னொரு தொழிலாளியை ரஜினி ஊரார் மத்தியில் புரட்டி எடுக்கும் காட்சி அட்டகாசம். ரியலிசம். 'டிஷ்யூம்' சப்தங்கள் இல்லாமல் கிராம மக்களின் களேபரக் கூக்குரல்களோடு இந்தக் காட்சி மிக இயல்பாக படமாக்கப் பட்டிருக்கும். தன்னைத் தடுக்கும் அத்தனை பேரையும் மீறி கைலியோடு ரஜனியின் ஆக்ரோஷமான உதைகள் நிஜ உதைகளாகவே நம் கண்களுக்குப் புலப்படும். அவிழ்ந்த கைலியைக் கட்டியவாறு திரும்பி திரும்பி ரஜினி முறைத்துக் கொண்டு வருவதும் வெகு இயல்பு.

அடித்துவிட்டு சக தோழர்களிடம் புலம்புவதும் டாப் ரகமே. ("இவுங்க ஆத்தாகிட்ட போய் சோறா கேட்டேன்") சர்த்பாபுவுக்கு 'லா பாய்ன்ட்' என்று பெயர் வைத்துக் கூப்பிடுவது செம கலாட்டா.

தோழர்களுடன் தண்ணி அடித்துவிட்டு, வெற்றிலை புகையிலை போட்டுக் கொண்டு, ரோட்டோர டீக்கடை பெஞ்சில் அமர்ந்து ரஜினி செய்யும் அலம்பல்கள் அமர்க்களம். காஞ்சி ரங்கமணி கோஷ்டி சரத்பாபு தலைமை ஏற்று நடத்தும் ஒரு திருமணத்திற்கு நாதஸ்வரம் மேளம் வாசிக்கச் செல்ல, போகும் வழியில் ரஜினி கண்ணில் மாட்டிவிட, ரஜினி அவர்களை அழைத்து அங்கேயே சிறிது நேரம் மேளதாளம் வாசிக்கச் சொல்லி மிரட்ட, அந்த நாதஸ்வர கோஷ்டியும் ரஜினிக்கு பயந்து வாசிக்க, ரஜினி அந்த மேளதாள சத்தத்திற்குத் தக்கபடி நக்கலாக லயித்து ஆடுவது ரொம்ப ஜோர். ரொம்ப இயற்கையான காட்சி. '16 வயதினிலே' அலம்பல் ரஜினியை மீண்டும் இந்தக் காட்சியில் காண முடியும்.

வீட்டில் ஷேவிங் செய்து கொண்டிருக்கும் ரஜினியை எஞ்சினியர் கையோடு கூப்பிட்டு வரச் சொன்னதாய் வந்த ஆள் சொல்ல, சரத்பாபுவைப் பார்க்க அப்படியே பாதி ஷேவ் செய்த முகத்துடன் கைலியோடு ரஜினி வந்து நிற்பது அந்த பாத்திரத்தின் தன்மையை மேலும் நம்முள் ஆழப்படுத்துகிறது. சரத்பாபு வார்ன் செய்ததும் தாங்க மாறாமல் டிராலியில் தனியாக ஆத்திரத்துடன் அமர்ந்து, சாப்பாடு கொண்டு வந்து சாப்பிடச் சொல்லும் தங்கை ஷோபாவையும் ஆத்திரத்தில் திட்டி, சாப்பாட்டை கோபத்தில் தட்டி விட்டு, பின் வீட்டுக்கு குடித்துவிட்டு வந்து தங்கையிடம் 'அடித்து விட்டேனே' என்று கலங்குமிடமும் அருமை. ("எந்தெந்த நாயெல்லாமோ என்னைத் திட்டுது") அருமையான நடிப்பை சிந்தும் இந்த காளி ரஜினியை திரும்ப பார்க்க மாட்டோமா என்று ஏக்கம் நெஞ்சில் நிறைகிறது.

கண்டதையும் தின்னபடி ஊர் சுற்றியபடி வரும் 'படாபட்'டை ரஜினி கடித்துக் குதறுவதும் நன்றக இருக்கும்.

http://2.bp.blogspot.com/-zTheQYYTkuk/Tt0EOwaLr8I/AAAAAAAAEHc/LB5FNnzng1A/s400/Mullum_Malarum_5.jpg

டிராலியை ஒரு சமயம் சம்பந்தமே இல்லாத சாமிக்கண்ணு ஆபரேட் செய்துவிட, அதைக் கண்டு பிடித்துவிட்ட சரத் ரஜினியைத் தேட ரஜனி 'படாபட்' செய்த கலாட்டாவில் அங்கில்லாமல் போய் பின்பு லேட்டாய் வர, சரத்பாபு ரஜினியைக் 'காய் காய்' என்று காய்ந்துவிட, ரஜினி சரத் முன்னால் இடுப்பை ஒடித்தவாறு கூனிக் குறுகி நிற்பது அருமை என்றால் வீட்டில் தங்கையுடனும், படாபட் உடனும் முதலில் கோபமாகக் கத்திவிட்டு பின் அதை சூழ்நிலைக்கேற்ப சிரிப்பாய் மாற்றி ரசித்து சிரிப்பது இன்னும் அருமை.

ரஜினி வேலையில் அலட்சியமாய் இருந்து விட்டதால் சரத் 10 நாட்கள் அவருக்கு தற்காலிக வேலை நீக்கம் செய்து கடிதம் அனுப்ப ரஜினி ஆத்திரத்துடனும், கோபத்துடனும், இயலாமையுடனும் சரத்திடம் ஓடி வந்து விளக்கம் கேட்கும் சீன் வெகு அற்புதம். "ஆரம்பத்திலிருந்தே பார்க்கிறேன். "உங்களுக்கு என்னைப் பிடிக்கல... ஏன் சார்?" என்று சரத்திடம் தைரியமாக நெஞ்சடைக்கப் பொங்கும் காட்சியில் ரஜினி நடிப்பில் அசத்துவார். ஒரு பாதிக்கப்பட்ட அவரது எண்ணப்படி வஞ்சிக்கப்பட்ட ஒரு தொழிலாளியின் குமுறல்களை வெகு அற்புதமாய் சரத்திடம் காட்டுவார் ரஜினி. ("வேண்டாத பொண்டாட்டி கை பட்டாலும் குத்தம்... கால் பட்டாலும் குத்தம். சார்! இப்ப இதுக்கு என்ன சொல்றீங்க நீங்க') லெட்டரைக் காட்டி நியாயம் கேட்டுக் குமுறுவது ஜோர். சரத் ஒத்துக் கொள்ளாத நிலையில் ஊர் தன்னை அவமானப்படுத்துமே என்று கோபமாக் கூறி விட்டு 'இதுக்கு என்ன செய்றதுன்னு எனக்குத் தெரியும் சார்' என்று கடிதத்தை சுக்கு நூறாக கிழித்துவிட்டு கிளம்பும் இடமும் சூப்பர்.

http://www.fantastikindia.fr/site/IMG/jpg/Mullum_Malarum_10_.jpg

பின் ஆத்திரத்தில் தண்ணியடித்துவிட்டு ("ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்") விறைப்பாக பாட்டுப் பாடி, (முரட்டு ஆண்மைக் கம்பீரம் 100%) ஆட்டம் ஆடி குடி போதையில் ரோட்டில் விழுநது லாரியில் ஒரு கையை கொடுத்து பரிதாபமாக இழந்து தங்கையிடம் கையில்லாமல் நிற்பதும், அண்ணனுக்கு ஒரு கை போய் விட்டது என்று தெரிந்து தங்கை உடைந்து அழும் போது 'ஒன்னுமில்லடா' என்று நெஞ்சு நிறைய சோகத்தைத் தேக்கி தேற்றுவதும் அனுதாபங்களை அள்ளும் அருமை நடிப்புதான்.

கை போனதால் வேலை போய் விட்டது என்று ரஜினியிடம் சரத் கவலையுடன் சொல்ல, அப்போதும் சரத்தை நம்பாமல் வார்த்தைகளால் ரஜினி அவரைக் குத்துவது ஷார்ப். "ரெண்டு கையும் ரெண்டு காலும் போனாக்கூட கூட காளி பொழச்சுக்குவான் சார்... கெட்ட பையன் சார் அவன்"...என்று தன்னை விட்டுக் கொடுக்காமல் பேசி 'வேலை இல்லாமல் இனி என்ன செய்யப் போகிறோம்?' என ஒரு கணம் தடுமாறி, விட்டத்தைப் பார்த்து கண்கள் கலங்கிய நிலையில் வெதும்புவதில் ரஜினி கொடி கட்டுகிறார். படத்திலேயே இந்த இடத்தில் டாப் கியரில் எகிறுவார் ரஜினி. எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த அற்புதமான நடிப்பு.

'படாபட்'டை திருமணம் செய்து முதலிரவில் அவர் பாடும் 'நித்தம் நித்தம் நெல்லுச் சோறு' பாட்டைக் கேட்டு தலையில் அடித்துக் கொண்டு இம்சை அடைவது ஜாலி. அது போல குடும்பத்தை ஓட்ட தங்கை தனக்குத் தெரியாமல் கூலி வேலைக்குப் போய்விட்டாள் என்று தெரிந்து 'படாபட்'டிடம் முதலில் குமுறுவது செம டாப். "ஏண்டி! எனக்குத் தெரியாம அவளை வேலைக்குப் போக விட்டிருக்கியே...உன்னை'' என்று நிறுத்தி 'வெட்ட வேண்டாம்?'என்று ஆத்திர சிரிப்பை உதிர்த்து 'படாபட்'டை காய்வாரே! அப்படியே நம் திலகத்தை ஞாபகப்படுத்துவார். அதே போல் தங்கையிடமும். "10 வயசு பையனா இருக்கும் போதே உங்களை கஷ்ட்டப்பட வைக்கல... நல்லா சாப்ட்டுட்டு வீட்டோட இருந்தாப் போதும்" என்று மனம் புழுங்கி வேதனைப்படுவதும் அருமை.

http://2.bp.blogspot.com/_uE1I4XUwv9s/SCXi4FKSWHI/AAAAAAAAAIo/p2FgXtzgJi4/S660/DISK1_VOL2-48+MODIFIED.BMP

சரத் பெண் கேட்டு ரஜினி வீட்டுக்கு வரும் ஒரு அருமையான காட்சி. நடிப்பை ரொம்ப என்ஜாய் செய்யலாம். வீட்டுக்கு வெளியில் தயங்கி நிற்கும் சரத்தை பழைய பகையை மனதில் வைத்து கூப்பிடாமல் நிற்பதும், பின் மனைவி வற்புறுத்தியவுடன் வேண்டாவெறுப்பாக பட்டும் படாமல் 'வாங்க' என்று எங்கேயோ பார்த்து சொல்வதும் இயல்பு. உள்ளே தரையில் பாயில் அமர்ந்து சரத்தைப் பார்க்காமல் முகத்தை படு இறுக்கமாக வைத்து "என்ன கேட்கப் போகிறானோ?' என்ற ரீதியில் ரஜினி உட்கார்ந்திருக்கும் கம்பீரம் ரகளை. சரத் பூடகமாக மேட்டரை ஆரம்பித்ததும் "என்ன சார்! என் வீட்டுக்குள்ளேயே வந்து உட்கார்ந்துகிட்டு என்கிட்டேயே லா-பாயிண்ட் பேசறீங்க!" என்று வாருவது டக்கர். சரத் ஷோபாவைப் பெண் கேட்டதும் சற்று அதிர்ந்து பின் சுதாரித்து 'இப்படி திடீர்னு வந்து பொண்ணு கேக்கறீங்களே! அது எப்படி? இந்த காதல் கீதல்ம்பாங்களே! அப்படியெல்லாம் ஏதாவது?".... என்று பல்லைக் கடித்தவாறு அதே சமயம் நிறுத்தி ஆழமாக நிதானத்துடன் கேட்பது படு தீர்க்கம்.

http://www.fantastikindia.fr/site/IMG/jpg/mullummalarum.jpg

அடுத்த நாள் யாரும் எதிர்பாராத விதமாக மூர்த்தியை மாப்பிள்ளை ஆக்கி சரத்தை வஞ்சம் தீர்ப்பதும், மூர்த்தி பின்னால் மனம் மாறி தன் தங்கையின் மானத்தைப் பற்றி தப்பாய் பேசி விட்டதைப் பொறுக்க முடியாமல் அவரைப் புரட்டி எடுப்பதும், இறுதியில் தங்கை தன்னை விட்டுக் கிளம்பிவிட்டாள் என்று பதைபதைக்க ஓடி வந்து கல்யாணம் பண்ணிக் கொள்ள அனைவருடனும் செல்லும் தங்கையை நிறுத்தி, சுற்றி நிற்கும் மனைவி, நண்பர்கள் உள்ளிட்ட எவரைப் பற்றியும் துளியும் கவலை கொள்ளாமல் தங்கையின் முடிவு ஒன்றையே பிரதானமாக எதிர்பார்த்து, அவள் மீது தனக்கிருக்கும் பாசத்தை சுட்டிக் காட்டி, அவளைப் போகக் கூடாது என்று தடுத்து, முடியாமல் கையை இழந்து உயிருக்கும் மேலான தங்கையை இழக்கப் போகிறோமோ என்ற பயத்தில் அழுதபடி ஊமையாய் நிறப்து ஏ.ஒன் . தங்கை தன் சொல்லையும் மீறி தாண்டி அடிகள் எடுத்து வைக்க ஆரம்பித்தவுடன் செய்வதறியாது ஒத்தையாக தன்னந்தனி ஆளாக வெறித்த பார்வையுடன் சிலை போல நிற்பது பரிதாபம். பின் மனம் மாறி எல்லோரையும் விட்டு தங்கை ஓடி வந்து தன்னைச் சேர்ந்தவுடன் நொடியில் மாறிக் காட்டும் பழைய காளியின் வேகம், திமிர், தெனாவட்டு, அனைவரிடமும் எகத்தாளப் பேச்சு என்று ரஜினி வெளுத்து வாங்கி விடுவார். ரோலும் அப்படிப்பட்ட ரோல்.

ரஜினி...ரஜினி... ரஜினி... படம் முழுக்க ரஜினியின் ஆதிக்கம்தான். ரஜினியின் மிகச் சிறந்த 5 படங்களை எடுத்துக் கொண்டால் என்னுடைய முதல் சாய்ஸ் 'முள்ளும் மலரு'க்கும் தான்.

இப்பேற்பட்ட நடிகர் ஆக்ஷன், காமெடி என்ற குறுகிய இமேஜ் வளையத்துக்குள் சூழ்நிலையால் தன்னைப் புகுத்திக் கொண்டு வசூல் என்ற அரக்கனின் பிடியில் மாட்டி பணத்தைக் கொட்டித் தரும் மெஷினாக மாறியது காலத்தின் கொடுமைதான். இது அவரும் உணர்ந்த்ததுதான். எவ்வளவுதான் பணம் ஈட்டினாலும் என்னதான் 'பாட்ஷா' வசூல் அள்ளினாலும், என்னதான் 'அண்ணாமலை' அமர்க்களம் பண்ணினாலும் இந்த ஒரு காளி என்ற முரட்டுப் பயலுக்கு ஈடு உண்டோ சொல்லுங்கள் சார்!

எனக்கு... எனக்கு மட்டுமல்ல...என்னைப் போன்ற நடிகர் திலகம் ரசிகர்கள் பலருக்கும் மிகப் பெரிய வருத்தம் ஒன்று உண்டு. இந்த 'முள்ளும் மலரும்' படத்தில் ரஜினி செய்த காளி ரோல் நடிகர் திலகத்திற்குக் கிடைக்கவில்லையே என்று இன்றுவரை ஆதங்கம் எங்களுக்கு உண்டு. அப்படிப்பட்ட ரோல் அது. அதை ரஜினி மிக அழகாக உள்வாங்கி, மிக அற்புதமாக அதை தன் அருமையான நடிப்பால் மெருகேற்றி காலாகாலத்துக்கும் மறக்க முடியாத 'காளி'யாக தமிழக மக்களின் உள்ளங்களில் உலா வருகிறார் இன்று வரை. நடிகர் திலகத்தின் தீவிர ரசிகரான ரஜினி இந்தப் பாத்திரத்தில் வாழ்ந்தது மிகப் பொருத்தமே.

ரஜினி பிறந்த மாதமான இந்த டிசம்பரில் அவருக்கு என்னுடைய இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களைக் கூறி நடிகர் திலகத்தின் ரசிகர்கள் சார்பாகவும், மதுரகானத் திரியின் அன்பு உள்ளங்கள் சார்பாகவும் இந்த முள்ளும் மலரும் பதிவை அவருக்கு என் அன்புப் பரிசாக அளிக்கிறேன்.

வாழ்த்துக்கள் ரஜினி!

இப்படத்தின் மற்றவர்களின் பங்கு விரைவில் தொடரும்.

Murali Srinivas
20th December 2014, 02:35 PM
அன்புள்ள வாசு,

சூப்பர்! காளி என்ற சூப்பர் கதாபாத்திரம் பற்றிய உங்கள் பதிவிற்கு இதைவிட சூப்பரான வேறு வார்த்தை தெரியவில்லை.

இந்த கதாபாத்திரத்தில் நடிகர் திலகம் என்னும் உங்கள் எண்ணம் பற்றி படித்தபோது 1978 ஆகஸ்ட் 15 அன்று மதுரை அலங்காரில் காலைக் காட்சி ஓபனிங் ஷோ பார்த்தபோது நானும் என் நண்பனும் [இருவருமே நடிகர் திலகம் ரசிகர்கள்] என்ன பேசிக் கொண்டோமோ அதை அப்படியே நினைவுப்படுத்தியது.

வாழ்த்துகள் வாசு!

அன்புடன்

chinnakkannan
20th December 2014, 03:59 PM
//என்னுடைய முதல் சாய்ஸ் 'முள்ளும் மலரு'க்கும் தான்.// எனக்கும்..

கலக்கல் கலர்ஃபுல் அலசல் வாசு சார்.. அதுவும் அந்த ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் இல் நடனம (டான்ஸ் மாஸ்டர் சுந்தரம்) ஒரு வித வெறுப்பான முகம் என கலக்கியிருப்பார் ரஜினி.. கெட்ட புள்ள சார் இந்தக் காளி... காளியா, வயசுப் பொண்ணுங்க கூட விளையாடிக்கிட்டே இருப்பான் (உடனே வயதான மூதாட்டிகளுடன் சிரித்துக் கொண்டே பேசும் காட்சி)..என் தங்கை நான் தான் முக்கியம்னு வந்துட்டா.அதனால நான் ஒண்ணு செய்ய ப் போறேன் என சஸ்பென்ஸ் பேச்சு..பின் சரத்துடன் இணைத்து விடுவது..

ஷோபா பற்றிச் சொல்லவேண்டியதில்லை..bhaaவங்கள் முகத்தில் குத்தகை எடுத்திருந்த சரஸ்வதிப் பெண் அவர்..அதனால் தான் சீக்கிரமேமேலே போய்விட்டார் போலும்.. சரத்திடம் மெல்லிய வெட்கம், அண்ணனிடம் ஃபடாபட்டைப் பற்றிச் சொல்லும் நைச்சியம் எனச் சொல்லிக் கொண்டே போகலாம்.. அடி பெண்ணே பொன்னூஞ்சலாடுது கறுப்பு இளமை பாடலும் அழகு..


ஃபடாபட்ம் சரி இணை என்றால் வெகு பொருத்தம்.. கொஞ்சம் வெளுப்பான நிறம்..வெள்ளை மனம் எல்லாம் சாப்பிடும் வயிறு என ஜொலிப்பார்.. என்னடா.. அவருக்குக் கையில்லைன்னா என்ன நானிருக்கேன் என மங்காவாய்ப் பொங்கி நீர் வாங்கிப் பானையை அடிக்கும் திறன்.. நித்தம் நித்தம் நெல்லுச்சோறு - பாடல் எழுதியது ஒரு பாடலாசிரியர்.. காட்சிப் படுத்தவேண்டுமே..அதற்கு நடிக்க வேண்டுமே.. கடைசி வரியில் சூடாக இருக்கறச்சே சாப்பிட வாங்க எனச் சொல்லும் வெட்கத்துடன் கூடிய நளினம் (காளியின் பாய்ச்சல் வேறு..)

கொஞ்சம் பொங்கலுக்கு இடையில் கல்லாய் நிரடுவது வெ.ஆ. மூர்த்தி தான்..பட் வாட் டு டூ.. ஹிஸ் கேரக்டர் இஸ் லைக் தட் இன் த மூவி..

//அளந்து எடுத்தாற் போன்று அண்ணன் ரோல். முரட்டுக் காளி. அனுபவித்துப் பண்ணியிருப்பார் ரஜினி. அந்தக் கால ரஜினி.// வெகு உண்மை..ஏனெனில்
முந்தா நாள் தான் தியேட்டர் சென்று இரவுக்காட்சி லிங்கா பார்த்தேன்.ம்ம்..(முதன் முதலில் மஸ்கட்டில் நிறைய மால்கள், மற்றும் ஹிந்தி இங்க்லீஷ் மட்டும் போட்டுவரும் பல தியேட்டர்களில் லிங்கா ரிலீஸ்.. பதினொன்றாம் தேதியே..)

அலங்கார் தியேட்ட்ரில் முதலில் பார்த்தது பின் ரீரன் தேவியிலும் பார்த்திருக்கிறேன்.பின் இடைப்பட்ட வருடங்களில் குறைந்த பட்சம் இரண்டுமுறையாவது பார்த்திருப்பேன்..என்னை மிகவும்கவர்ந்தபடம்.. மிக மிக அழகாய்ச் சொல்லியிருக்கிறீர்கள் வாசு சார்.. தாங்க்ஸ் அண்ட் வாழ்த்துக்கள்..

chinnakkannan
20th December 2014, 04:11 PM
//பாடல்: "அருணகிரணம் அணியும் உதயம்..."
திரைப்படம்: கிழக்குணரும் பக்ஷி (1991)
வரிகள்: கே. ஜெயகுமார்
இசையமைப்பாளர்: ரவீந்திரன்
ராகம்: லவங்கி //

நல்ல பாட்டு ராகதேவன்.. முழுக்கக் கேட்டேன்..லவங்கியில் தமிழ் ப்பாடல் ஏதும் உண்டா.. ந.பா.கொடுத்ததற்கு தாங்க்ஸ்..

RAGHAVENDRA
20th December 2014, 04:18 PM
வாசு சார்
வார்த்தைகளே வரவில்லை தங்களைப் பாராட்ட...
முரளி சார் சொன்னது போல் சூப்பர்... இதைத் தான் மனம் உடனே சொல்லத் துடிக்கிறது.
ரஜினியின் முள்ளும் மலரும், தங்கள் எழுத்தால் கல்லும் கனியாகும்.

RAGHAVENDRA
20th December 2014, 04:19 PM
கன்னுக்குட்டி என்றாலே ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி என்று தானே சொல்லத் தோன்றுகிறது..

இதோ..

https://www.youtube.com/watch?v=hdOBRY1Y734

கன்னட மஞ்சுளா துள்ளி விளையாடவும் கொஞ்சி விளையாடவும் துணை போகிறது ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி..

படம் புதுவெள்ளம்

RAGHAVENDRA
20th December 2014, 04:22 PM
ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக் கேட்ட தாய்..

இது மனித இனத்திற்கு மட்டுமல்ல...மற்ற உயிரினங்களுக்கும் பொருந்தும்..

இருந்தாலும் தாயாரையும் பாராட்டினால் அது நிறைவடையும் தானே..

https://www.youtube.com/watch?v=eYpNMT6EZ38

kalnayak
20th December 2014, 05:03 PM
வாசு,
அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள். படிப்பவர்களையும் அந்த அனுபவத்தை பெறவைத்தீர்கள்.

ரஜினியின் நடிப்பில் நானும் உங்களுடன் நூறு சதவீதம் ஒத்துப்போகிறேன். வெளியானபோது பாடலியில் பார்க்க முடியாமல், பின்னர் எங்கேயோ பார்த்தேன். இப்போதைய லிங்கா பார்த்து ... சரி வேண்டாம். நீங்களே எல்லாம் சொல்லியாயிற்று.

இவ்வளவு பெரிய பதிவுகளை எனக்காக தொங்கலில் விடாமல் தொடர்ந்து சொல்லியதற்கு நன்றி. அடுத்தடுத்த பதிவுகளுக்கு காத்திருக்கிறேன்.

kalnayak
20th December 2014, 05:15 PM
வாவ்..கல் நாயக் சார்..தாங்க்ஸ்.. எவ்ளோ அழகா இருக்கு கன்னுக்குட்டி ..வெகு நல்ல பாடல்.
உங்களுக்குத் தெரியுமா நான் சின்னஞ்சிறுவனாக இருந்தது முதல் இப்போதுவரை எங்கு கன்னுக்குட்டியைப் பார்த்தாலும் மெய்மறந்து அருகில் சென்றுவிடுவேன்..அதன் கண்கள் துறுதுறு துள்ளல்.. சிலவை கழுத்தைக் காட்டும்..சிலவை முட்டவரும் இருப்பினும் பிடிக்கும்..போ\னவருடம் ஓரிக்கை போன போது சில கன்றுகள் சமர்த்தாய் நான் கொஞ்சியதை உள்வாங்கின..

என் எருமைக் கன்னுக்குட்டி பாட்டு ஒண்ணு இருக்கு வாசு சார் போட்டுட்டார்..வேற கன்றுப் பாட்டு என்\ன இருக்கு

சி.க.
நீங்க அப்படி ஒரு கன்னுக்குட்டி பிரியரா? உங்களுக்காக இதோ இன்னொன்று. இளமையான சிவகுமாருடன்...

https://www.youtube.com/watch?v=eOHOQ8o0bjg

இன்னொரு பிரபல பாடல்:

https://www.youtube.com/watch?v=ufykpOeA4NA

gkrishna
20th December 2014, 06:33 PM
வாசு

சில பல காரணங்களால் பதிவிட முடியவில்லை. நண்பர் ஒருவர் மூலமாக இதை எழுதுகிறேன். முள்ளில் மலர்ந்த செந்தாழம் பூவை ரஜினியின் பிறந்த நாள் பரிசாக வழங்கி உள்ளீர்கள். முரளி சொன்னது போல் 1978 ஆகஸ்ட் 15 வெளியீடு நெல்லை சென்ட்ரலில் . இதே சமயத்தில் நெல்லை ராயலில் பாரதியின் கிழக்கெ போகும் ரயில் ஆனந்தி பிலிம்ஸ் வேணு செட்டியார் படம் எடுத்த வரைக்கும் பார்த்து விட்டு 'என் பணம் எல்லாம் போச்சு' என்று புலம்பியதாக படித்து உள்ளேன்.மேற் கொண்டு பணம் செலவிட மறுத்து கமல் உதவியுடன் படம் வெளி வந்து பெரும் வெற்றியை பெற்ற படம்.
ஆரம்ப கால இளமை ஊஞ்சல் ஆடிய நண்பர் சி கே சொன்னது போல் 'கெட்ட பையன் சார் இந்த காளி ' ரஜினியின் முழு திறமையை வெளி கொணர்ந்த படம். தமிழ் திரை உலகிற்கு பாலு மகேந்திரா என்ற பொக்கிஷ கலைஞன் கிடைத்தான். ஒரு பக்கம் நிவாஸ் ,மறு பக்கம் பாலு மகேந்திரா அதன் நீட்சியாக அசோக் குமார் . தாலாட்டும் 77-80 கால கட்டம் .

ரஜினியின் நண்பர்களாக சாமிகண்ணு(உட்கார்ந்து கொண்டே தூங்கும் பாத்திரம்)இவரது மனைவி பாத்திரத்தில் வருபவர் தான் மூர்த்தியின் kk :) ,நமது எஸ் எ கண்ணன் (படத்தில் இவரது பெயரும் கண்ணன் தான் ),
கல்கி பத்திரிகை மிகவும் ஸ்லாகித்து எழுதிய விமர்சனம் இன்னும் நினைவில் இருக்கிறது. பாடல்களுக்கு காத்து இருக்கிறேன்

என்றும் நட்புடன்

கிருஷ்ணா

gkrishna
20th December 2014, 06:36 PM
பாலுமகேந்திராவின் முள்ளும் மலரும் நினைவுகள்

இந்தப் படத்தில் எனது பங்கேற்புகள் அனைத்துமே மகேந்திரனின் விருப்பத்தின்படி நடந்தவைதான். மகேன் ஒரு நல்ல எழுத்தாளர். ஒரு நல்ல ரசிகர். அவருக்கும் எனக்குமான உறவு அமோகமாக இருந்தது. நாங்கள் இருவரும் ஒரே அலைவரிசையில் இயங்கியதை நீங்கள் முள்ளும் மலரும் படத்தில் உணர்ந்திருப்பீர்கள்.

முள்ளும் மலரும் படம் 1978- ஆகஸ்ட்15-ம் திகதி வெளியாகிறது. முதல் இரண்டு வாரங்கள் சுமார் என்ற நிலையில்தான் அதன் வசூல் இருந்தது. மூன்றாவது வாரத்தில் இருந்து வரலாறு காணாத வெற்றி. எனது முதல் தமிழ்ப் படமான அழியாத கோலங்கள் 79-ல் தான் வெளியானது. முள்ளும் மலரும் படத்தில் ஷோபாவுக்கும் சரத்பாபுவுக்குமான காதல் உண்ர்வுகளை மகேந்திரன் ஒரு பாடல் மூலம் காண்பிக்கலாம் என்று முடிவு பண்ணியிருந்தார். “செந்தாழம் பூவில்” என்ற அந்தப் பாடலை இளையராஜா அற்புதமாக அமைத்துகொடுத்திருந்தார். பாடியது யேசுதாஸ். இன்று வரை இளையராஜாவின் மிகச் சிறந்த பாடல்கள் வரிசையில் அந்தப் பாடல் இடம்பெற்று வருகிறது...

இந்தப் பாடலை சரத்பாபு பாடுவதாக எடுப்பது என்றுதான் முடிவுபண்ணப் பட்டிருந்தது. இரண்டொரு வரிகளை மட்டும் சரத்பாபு பாடுவதாக வைத்துவிட்டு மிகுதிப் பாடலை நான் எனது கோகிலா படத்தில் தொடங்கியிருந்த மொண்டாஜ் உத்தியில் எடுத்தால் பொருத்தமாக இருக்கும் என்று எனக்கு பட்டது. இதை மகேந்திரனிடம் சொன்னேன் அவரும் ஒத்துக் கொண்டார். ஆனால் நடிகர் சரத்பாபுவுக்குதான் தன்னுடைய வாய் அசைவில் மொத்தப் பாடலும் இல்லையே என்பதில் வருத்தம் இருந்ததாக ஞாபகம்.

1976-ல் எனது முதல் படமான கோகிலாவில் நான் ஆரம்பித்த இந்த லவ் மொண்டாஜ் என்ற உத்தியை இன்றய இளம் இயக்குனர்கள் பலர் அழகாக உபயோகப் படுத்துகிறார்கள் என்பதில் எனக்குப் பரம சந்தோஷம்.கதையின் நகர்வு, கதாபாத்திரங்ளின் தோற்றம் அவர்களின் உரையாடல்கள் மற்றும் செயல்பாடுகள், படத்தின் ஒளிப்பதிவு, அரங்க அமைப்பு போன்ற அத்தனை விஷயங்களிலும் யதார்த்தம், இயல்புதன்மை என்று பார்த்து பார்த்துச் செய்துவிட்டு பாடல் காட்சிகளில் இந்த யதார்த்தத்தை, இந்த இயல்புதன்மையை நாம் பண்டு முதல் கோட்டை விட்டே வந்திருக்கிறோம். தாலாட்டையும், ஒப்பாரியையும், மேடைப் பாடலையும் இன்னும் இரண்டொரு பாடல் சந்தர்ப்பங்களையும் தவிர பெரும்பாலான பாடல் காட்சிகள் இயல்பு தன்மைக்கு புறம்பானவை. அபத்தமானவை என்பது நமக்குத் தெரியும்.

முள்ளும் மலரும் படம் மகேந்திரனை மிக நுட்பமான இயக்குனர் என்று அடையாளம் காட்டியது. சினிமா இயக்கம் என்ற ராஜபாட்டையில் மகேந்திரன் எடுத்துவைத்த முதல் அடியின்போது அவருடன் நான் இருந்தேன் என்பதில் எனக்கு சந்தோஷம் உண்டு. எனது ஷோபா, படாபட் ஜெயலட்சுமி, தயாரிப்பாளர் வேணு செட்டியார், ஆர்ட் டைரக்டர் ராமசாமி ..என முள்ளும் மலரும் படத்தில் பணியாற்றிய பலர் இன்று இல்லை. நாட்களை எண்ணியபடி நானும் மகேந்திரனும், இளையராஜாவும் இன்னும் சிலரும். ஆனால் ஒன்று.. எங்களுக்குப் பின்னும் தமிழ் சினிமாவில் முள்ளும் மலரும் தொடரும். உன்னதமான படைப்புகளுக்கு அந்த சக்தி உண்டு. எனது படைப்புகள் மூலம் நானும், மகேந்திரனின் படைப்புகள் மூலம் மகேந்திரனும் இளையராஜாவின் இசை மூலம் இளையராஜாவும் எஙகள் மரணத்தின் பின்பும் தொடர்ந்து வாழ்ந்து கொண்டுதான் இருப்போம். மரணிக்கப் போவது எஙகள் உடல்கள். நாங்களல்ல!

http://tamil.webdunia.com/ta/articles/1312/24/images/img1131224044_1_1.jpg

gkrishna
20th December 2014, 06:40 PM
படம் அரம்பிக்கும் போது, கவர்ந்தது அதனுடைய டைட்டில் கார்ட். டைட்டில் கார்டில் பலருடைய பேர் இருந்தது என்றால் படம் பார்ப்பவர்களுக்கு அதை முழுவதும் படிக்க அவகாசம் தருகிறார்கள்.

"“முள்ளும் மலரும்” நாவலை நான் படித்த போது கதாபுருஷன் காளி வேலை செய்யும் Winch operator உத்தியோகமும் அவனுடைய வித்தியாச சுயகெளரவமும் என்னைக் கவர்ந்தன. நாவலில் காளியை புலி ஒன்று தாக்கி அவனது ஒரு கை போய் விடும். அந்த அத்தியாயத்தோடு நாவலை மூடி வைத்து விட்டேன். பிறகு காளி அவனது தங்கை வள்ளி இருவரின் குழந்தைப் பருவம் என்று ஒவ்வொன்றாகப் புதிது புதிகாகச் சேர்த்துக் கொண்டே போய் திரைக்கதையின் கடைசிக் காட்சி வரை என் விருப்பத்திற்கு ஏற்ற மாதிரி திரைக்கதை எழுதி முடித்து விட்டேன். அப்போது நான் இயக்குனராகும் எண்ணத்திலேயே இல்லை." - என்று மகேந்திரன் சொல்லியுள்ளார்

gkrishna
20th December 2014, 06:42 PM
ரஜினி ரஜினியாக நடிக்காமல், காளி என்ற கதாபாத்திரமாக நடித்தது. தேவை இல்லாமல் சிகரெட்டை தூக்கி போட்டு பிடிப்பது, பஞ்ச் வசனம் என்று எதுவும் இல்லாமல் டைரக்டர் சொல்லுவதை செய்தது இந்த படத்துக்கு பலம்.

சரத்பாபுவை சுலபமாக வில்லனாக காட்டியிருக்கலாம் ( ரஜினியின் தங்கையை ஏமாற்றுவது மாதிரி ) ஆனால் அப்படி செய்யாமல் விட்டது தான் இந்த சினிமாவிற்கு பிளஸ்.

gkrishna
20th December 2014, 06:48 PM
பேசாமொழி இணைய மாத இதழ் (ஆறாவது இதழ்) முள்ளும் மலரும் திரைப்படத்திற்கான சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. படிக்க: http://pesaamoli.com/index_content_6.html

Gopal.s
20th December 2014, 07:27 PM
வாசு,

நான் மலரோடு மட்டுமே இனி வர வேண்டுமென்ற கலை வேந்தனின் ஆசை நிறைவேறாமல் முள்ளோடும் ஓடி வர செய்து விட்டீர்கள்.
என்னதான் முன்னறிவிப்பு செய்து விட்டு பதித்தாலும், தங்களுடைய எனது கிராமம், துளிவிஷம் முதலியவற்றை தாங்களே தாண்டி சென்று சாதித்து , என்னையும் பெரும் பதிவு போட தூண்டியுள்ளீர்கள்.

நான் பத்து வயதில் ,கல்கி சிறுகதை போட்டியில் வெற்றி பெற்ற முள்ளும் மலரும்(உமாசந்திரன்),கல்லுக்குள் ஈரம் (ர.சு.நல்லபெருமாள்) இவற்றை படித்து உத்வேகம் பெற்று ,எங்கள் வீட்டு நாக மரத்தின் உச்சி கிளையில் அமர்ந்து சிவாஜியை நாயகனாக்கி ,அந்த இரு கதைகளையும் கற்பனையில் படமாக்கி மகிழ்வேன். அந்த கதைகளின் பின்புலம்,பாத்திர வார்ப்புகள், வித்தியாச சூழல்கள் என்னை அவ்வளவு கவர்ந்தது. பின்னாட்களில் என் நண்பர் மகேந்திரன் முதலாவதை படமாக்க போவதோ, கமல் பின்னதை பெயர் போடாமல் தழுவ (ஹே ராம்) போவதோ அப்போது தெரியாது. (1969)

1976 முதல் 1981 வரை சென்னையில் பீ.டெக் படித்த நான் என்னை விட அதிர்ஷ்டசாலி இல்லையென்றே சொல்ல வேண்டும். தமிழ் பட உலகின் மறுமலர்ச்சி காலம். பாலசந்தரால் உச்சம் தொட்டு, பாரதிராஜா,மகேந்திரன்,பாலு மகேந்திரா,ருத்ரையா போன்றவர்களால் வளமாக்க பட்ட தமிழ் பட உலகம், ஸ்ரீதர்,பீம்சிங் போன்ற பழம் பெரும் ஜாம்பவான்களின் புதிப்பிக்க பட்ட பங்களிப்பையும் பெற்று செழுமை கண்டது.இந்த எழுச்சி கண்டதமிழ் பட ஆன்மாவிற்கு புதிய ரத்தங்கள் ரஜினி,கமல் இந்த மாற்றத்திற்கு தோள் கொடுக்க, இளைய ராஜா இதற்கு மெருகு சேர்த்து ,பின்னணி இசை என்ற ஆரோக்ய உடல் ஈந்தார் .

நான் மகேந்திரனின் துக்ளக் விமரிசன (போஸ்ட் மார்ட்டம் )ரசிகன். அவர் முதல் முதலில் இயக்குகிறார் ,அதுவும் நான் விரும்பிய கதையை என்பதால் 15/8/1977 முதல் நாள் முதல் ஷோ விற்கு நண்பர்களுடன் ஆஜர்.

மகேந்திரன் ,பாலச்சந்தர்,பாரதிராஜா இவர்களை தாண்டி சென்று .யதார்த்தம்,பாத்திரபடைப்பு, திரைக் கதை அமைப்பு, ஜீனனுள்ள இயக்கம்,மௌனத்திற்கு புதிய அர்த்தங்கள், ஊடு பாவான கதாபாத்திர வார்ப்புகள் ,அவர்களின் சாதக-பாதக இடையீடுகள்,தன்னையே வார்த்து செல்லும் காட்சியமைப்புகள் என்று என்னை பிரமிக்க வைத்திருந்தார். இளைய ராஜா mood music ,theme music இவற்றை கொண்டு மகேந்திர மௌனத்தை ,இசையால் இதயத்தில் ஊடுரவ செய்தார்.(பவுளி என்ற தொடாத ராகத்தில் செந்தாழம் பூவில், ராமன் ஆண்டாலும் (பத்மா அண்ணி ஷ்யாமளா உபயம்),காற்றுக்கென்ன வெளி பாணியில் அடி பெண்ணே)

பாலு மகேந்திரா என்ற கலைஞனின் வெளிப்புற படபிடிப்பையே எல்லாம் சிலாகிக்க, நான் அவருடைய கேமரா சித்து விளையாட்டில் காட்சிகள் பெரும் புது அர்த்தங்கள், காட்சிக்கேற்ற lighting ,script முழுமையாக உள்வாங்கப்பட்டு செழுமை பெரும் மந்திரம் இவற்றை பிரமித்து பார்ப்பேன்.

என்னதான் ஷோபா ,படாபட்,சரத் என்று எல்லோரும் நன்கு உணர்ந்து நடித்திருந்தாலும் ,ரஜினி தான் எத்தைகைய சாத்யகூருகள் கொண்ட அற்புத நடிகன் என்பதை உணர்த்தி ,தன்னுடைய inherent histrionic potential தன்னுடைய சமகால கலைஞர் கமலை விட emoting ,expressing ,Exhibitionist skill பல மடங்கு உயர்ந்தது என்பதை காட்டி பரிமளித்திருப்பார். (சே !!! எப்படி வீணாக்க பட்ட கலைஞர். லிங்கா பார்த்தால் வயிறு எரிகிறது)

இந்த கதையில் பாசம் என்கிற அம்சம் ஒரு incidental கோர்ப்பே. முக்கிய விஷயத்தை வழக்கம் போல விமரிசகர்கள் கோட்டை விட்டிருந்தனர். காளிக்கு ,வள்ளி மேல் உள்ளது ஒரு பாதுகாப்பு கலந்த முரட்டு பாசம். தன்னால் பாதுகாப்பானது என்ற உணர படாத எதுவும் ,தன் தங்கையையும் காக்காது என்ற உள்ளுணர்வு. அவனுக்கு தன சுயம் விஸ்வரூபம் எடுக்கும் ego .இதற்கு நெருப்பு வார்ப்பது முதலே கோணலாகும் மேலதிகாரி உறவு.பூக்களை நார் கொண்டு தொடுப்பது போல பண்ணியிருப்பார் மகேந்திரன்.இதன் பிரச்சினை ego தானே தவிர பாசமல்ல.இல்லையென்றால் பெண் கேட்டு விட்ட ஆத்திர அவசரத்தில் ,தங்கையை ஊரே இகழும் முருகேசனுக்கா அவசர சம்பந்தம் பேசுவான்?கையை இழப்பது போல ,ego விற்காக பாசத்தையுமல்லவா அடகு வைக்கிறான்? வள்ளியின் ரெண்டுங்கெட்டான் நிலை,படாபட்டின் நன்றி சார்ந்த பாத்திர இடையீடு, சரத் பாபுவின் நானென்ன செய்வது நிலை என்று இறுதி வரை அப்படி ஒரு புது மெருகுடன் பயணிக்கும் neo -classic படைப்பாக வந்த காலத்தில் திகழ்ந்தது.

வாசு,மன்னியுங்கள். சிறிதே வாட்டம் (உங்களுக்கு காரணம் புரியும்),நேரமின்மை காரணமாக எழுத நினைத்ததை ரொம்ப சுருக்கி விட்டேன். பிறகொரு நாள் ,இந்த அதிசய படத்தை எடுத்து நீண்ட ஆய்வு புரிவேன்.நன்றி.நன்றி.நன்றி.

vasudevan31355
20th December 2014, 08:55 PM
கோபால்,

நிஜமாக மனம் வருத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறது. தங்கள் அத்தையின் கணவர் மட்டுமல்ல தமிழகமே அறிந்த அறிவுச்சுடர் அணைந்து விட்டது. இதை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. தங்கள் மனம் எவ்வளவு வேதனையில் இருக்கும் என்று என்னால் பரிபூரணமாக உணர முடிகிறது.

விகடன் குழும நிறுவன தலைவர் மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய திரு. பாலசுப்ரமணியம் அவர்களின் மறைவிற்கு எனது ஆழ்ந்த அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆத்மா புனித சாந்தி அடையவும் இறைவனை வேண்டுகிறேன்.

chinnakkannan
20th December 2014, 09:03 PM
*

ராகவேந்தர் சார்.. ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி பாட்டுக்கும், நீயின்றி நானில்லை வாடா ரங்கையா பாட்டுக்கும் நன்றி.. க.மஞ்சுளா.. துளித்துளிதுளித்துளி மழைத்துளி அவர் தானே..ஒரே ஒரு படம் என நினைக்கிறேன்..இல்லை எல்லோரும் நல்லவரேயிலும் நடித்திருக்கிறாரோ.. நினைவிலில்லை..

கல் நாயக் சார்.. கன்னுக்குட்டி கன்னுக்குட்டி காளைக் கன்னுக்குட்டி பாட்+ செண்பகமே செண்பகமே பாட்டுக்கும் (எப்படி மறந்தேன்) தாங்க்ஸ்…. இளமை சிவக்குமார் ஓ.கே..கூட இருப்பது??

கிருஷ்ணா ஜி வாங்க வாங்க..செளக்கியமா… முடிந்த போது வாங்க..ஹாய்னு ஒரு அட்டெண்டன்ஸ் போட்டுட்டுப் போய்டுங்க..மு.ம பற்றிய எழுத்துக்களுக்கு தாங்க்ஸ் + சுவாரஸ்யத்துடன் கூடிய ஓ..

..// ஆரம்ப கால இளமை ஊஞ்சல் ஆடிய நண்பர் சி கே// ஹை..இப்பவும் யூத் தாங்க லொக் லொக்… உமாசந்திரன் எழுதிய நாவல் குமுதம்பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டிருகிறார்க்ள்..ஏனோ அதை வாங்குவதற்கு மனம் இல்லை.. இன்னொன்று க்ருஷ்ணாஜி.. ஜனவரி ரிலீஸ்..என் எழுத்தாள நண்பர் என்.சொக்கனின் பதிப்பகம் வெளியிடப்போகும் ஒரு மலைஇனத்தவர் + ஊடாடும் திரைப்படப் பாடல்கள் (ஆசிரியர் சிவராமன் கணேச்ன்) பின்னணியில் எழுதப்பட்டு வரும் புத்தகத்தின் பெயர் என்ன தெரியுமா.. “செந்தாழம் பூவில்…”

கோபால்..முள்ளும் மலரும் பற்றிய உங்களின் எண்ணங்கள் சுவை…

chinnakkannan
20th December 2014, 09:07 PM
வாசு சார்.. இது கொஞ்சம் அதிர்ச்சியான செய்தி தான்.. கோபால் என் மனமார்ந்த இரங்கல்கள்.

ஆ.வி.ஆசிரியர் எஸ்.பாலசுப்பிரமணியன் சேவற்கொடியோன் என்ற பெயரில் எழுதிய கதை தான் ராவ் பகதூர் சிங்காரம்..பிற்காலத்தில் விளையாட்டுப் பிள்ளையாக வந்தது.. உன் கண்ணில் நீர்வழிந்தால், என் கண்ணில் பாவை அன்றோ போன்ற மற்ற நாவல்களும் பிரபலம்..மிகச் சிறந்தமனிதர், பத்திரிகை ஆசிரியர். என்ன சொல்வதெனத் தெரியவில்லை..அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்


கோபால்,

நிஜமாக மனம் வருத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறது. தங்கள் அத்தையின் கணவர் மட்டுமல்ல தமிழகமே அறிந்த அறிவுச்சுடர் அணைந்து விட்டது. இதை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. தங்கள் மனம் எவ்வளவு வேதனையில் இருக்கும் என்று என்னால் பரிபூரணமாக உணர முடிகிறது.

விகடன் குழும நிறுவன தலைவர் மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய திரு. பாலசுப்ரமணியம் அவர்களின் மறைவிற்கு எனது ஆழ்ந்த அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆத்மா புனித சாந்தி அடையவும் இறைவனை வேண்டுகிறேன்.

vasudevan31355
20th December 2014, 09:21 PM
அன்னாருக்கு எங்களது ஆழ்ந்த அஞ்சலி

http://www.thehindu.com/multimedia/dynamic/02250/TH20_VIKATAN_BALA_2250509f.jpg

vasudevan31355
20th December 2014, 09:23 PM
கிருஷ்ணா!

வருக! அருமையான முள்ளும் மலரும் சப்போர்ட் பதிவுகளுக்கு நன்றி!

vasudevan31355
20th December 2014, 09:34 PM
சி.க சார்,

காளை, கன்னுக்குட்டி எல்லாம் முடிந்ததா? சரி நானும் ஒன்று போடுகிறேன். நீங்கள் பார்த்திராததாக.

அப்புறம் 'பொட்டி கட்டவிழும் படலம்' நீங்கள் சுடச் சுடத் தந்ததும் படித்து விட்டேன். ஆறிப் போய் பதில் அளிக்கிறேன். காரணம் காளி. நல்ல கவிதை. நன்றி! சற்று கடினமாக இருந்தது. இரண்டு மூன்று முறை படித்ததும் கொஞ்சம் புரிந்தாற் போல் இருந்தது. 'நான் பிறந்த நாட்டுக்கெந்த நாடு பெரியது' கலக்கல். கடவுளைக் கண்டேன்.

இதோ! இது கன்னுக் குட்டி இல்லே. காளை. காளையோடு மேயும் கன்னியும் புதுசுதான். 'என்னதான் முடிவு?' திரைப்படத்தில் இருந்து ஒரு காளை சம்பந்தப்பட்ட பாடல். சமீபத்தில் ராஜேஷ் சாருக்காகப் போட்டிருந்தேன். இப்போது உங்களுக்காக.


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=DOGmJERSWMQ

vasudevan31355
20th December 2014, 09:41 PM
கல்நாயக்

'மயில் போல பொண்ணு ஒன்னு' மனசுக்கு இதம். நன்றி!

அதே போல நான் எப்போதும் ரசிக்கும் பாடல் 'கன்னுக்குட்டி கன்னுக்குட்டி காளை கன்னுக்குட்டி' கண் கண்ட தெய்வம் படப் பாடல்.

ராமராஜனைப் பார்க்காமல் அந்தப் பாடலைக் கேட்டேன்.

vasudevan31355
20th December 2014, 09:50 PM
ராகவேந்திரன் சார்,

கன்னட மஞ்சுளாவின் சுட்டித்தனமான 'நான் ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி' பாடலுக்கு நன்றி! 'என்னைக் கட்டி முடிப்பதற்கே எந்தக் காளையும் இல்லையடி' என்று மஞ்சுளா திமிர்த்தனம் காட்ட அடக்கும் காளையாக சிவக்குமாரைக் காட்டுவார்கள். 'புது வெள்ளம்' நல்ல வெற்றிப் படமும் கூட.என்.வி.ஆர் பிக்சர்ஸ் தயாரிப்பு. 'இது பொங்கி வருகின்ற புது வெள்ளம்' என்ற பாடகர் திலகத்தின் கம்பீரமான பாடலைக் கூட தூக்கி சாப்பிடும் இசையரசியின் மென்மையான 'துளித் துளித் துளித் துளி மழைத் துளி'

suvai
20th December 2014, 10:00 PM
hello nga vasudevan....# 2286...nice song nga...ketathilai...loved the song/lyrics & video :-) ty nga

vasudevan31355
20th December 2014, 10:01 PM
*

ராகவேந்தர் சார்.. ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி பாட்டுக்கும், நீயின்றி நானில்லை வாடா ரங்கையா பாட்டுக்கும் நன்றி.. க.மஞ்சுளா.. துளித்துளிதுளித்துளி மழைத்துளி அவர் தானே..ஒரே ஒரு படம் என நினைக்கிறேன்..இல்லை எல்லோரும் நல்லவரேயிலும் நடித்திருக்கிறாரோ.. நினைவிலில்லை..



சி.க சார்,

'எல்லோரும் நல்லவரே' படத்தில் கன்னட மஞ்சுளா இல்லை. நம்ம மஞ்சுளாதான்.

கன்னட மஞ்சுளா 'எடுப்பார் கைப் பிள்ளை' படத்தில் ஒரு ரோலில் வருவார்.

http://kannadamoviesinfo.files.wordpress.com/2014/03/manjula.jpg?w=477&h=200

'பொன்னும் மயங்கும்... பூவும் வணங்கும்' பாடலில் முதலில் ஜெய்யுடன் ஜோடி சேர்ந்து கற்பனையில் பாடுபவர் இவர்தான். பின்னால் ஒரிஜினலாக 'வெண்ணிற ஆடை' நிர்மலா ஜெயக்கு ஜோடியாக வர, கன்னட மஞ்சுளா அதைப் பார்த்து பொறாமைப்படுவார்.


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=_Ydc5saxPUo

vasudevan31355
20th December 2014, 10:12 PM
http://beta.kannadastore.in/images/Antintha-Hennu-Naanalla-Manjula-Hits-MP3.jpg

vasudevan31355
20th December 2014, 10:14 PM
கன்னட மஞ்சுளா ஸ்டவ் விபத்தில் இறந்து போனதாக படித்திருக்கிறேன்.

vasudevan31355
20th December 2014, 10:20 PM
http://onlysuperstar.com/wp-content/uploads/2010/10/Mullum-Malarum-1978-with-Di.jpg

vasudevan31355
20th December 2014, 10:21 PM
http://onlysuperstar.com/wp-content/uploads/2009/07/mullum-malarum-shootingj.jpg

vasudevan31355
20th December 2014, 10:22 PM
http://www.rajinifans.com/gallery/images/Mullum%20Malarum/mullum(45).jpg

vasudevan31355
20th December 2014, 10:23 PM
http://www.rajinifans.com/gallery/images/Mullum%20Malarum/mullum(47).jpg

vasudevan31355
20th December 2014, 10:23 PM
http://www.rajinifans.com/gallery/images/Mullum%20Malarum/mullum(49).jpg

vasudevan31355
20th December 2014, 10:24 PM
http://www.rajinifans.com/gallery/images/Mullum%20Malarum/mullum(50).jpg

RAGHAVENDRA
20th December 2014, 10:24 PM
இதன் பிரச்சினை ego தானே தவிர பாசமல்ல

Perfect analysis Gopal...
This is where you prove you are at peak

vasudevan31355
20th December 2014, 10:24 PM
http://www.rajinifans.com/gallery/images/Mullum%20Malarum/mullum(46).jpg

vasudevan31355
20th December 2014, 10:27 PM
Perfect analysis Gopal...
This is where you prove you are at peak

ராகவேந்திரன் சார்,

இது பற்றி நான் 'நெருடல்கள்' என்ற தலைப்பில் 'முள்ளும் மலரும்' நெகடிவ் பாய்ண்ட்ஸ் பற்றி எழுதி வருகிறேன். கோபால் சொல்வது போல.

RAGHAVENDRA
20th December 2014, 10:31 PM
வாசு சார்
தாங்கள், கோபால் மற்றும் பல நண்பர்கள் உணர்ந்தது போல நானும் உணர்ந்துள்ளேன். பல கதைகளில் நாம் படிக்கும் போதே நடிகர் திலகத்தை மனதிற்குள் கற்பனை செய்து படித்து புளகாங்கிதம் அடைந்ததுண்டு.

தேவி வார இதழில் 80களில் வெளிவந்த தொடர் தூங்கும் எரிமலைகள். இது ஒவ்வொரு இதழிலும் ஏற்படுத்திய பாதிப்பு சொல்லி மாளாது. தாமரை செந்தூர் பாண்டி என்ற மிகச் சிறந்த எழுத்தாளரை எனக்கு அடையாளம் காட்டிய தொடர். கிட்டத்தட்ட நா.பா. பாணியில் இவர் எழுத்து இருக்கும். இது போன்ற பல கதைகள் தொடர்கள் நாவல்கள் நமக்குள் நடிகர் திலகத்தை ஒரு உருவகப்படுத்தி அவற்றுள் நம்மை மூழ்க வைத்தன.

இதே போல நான் விரும்பிய மற்றோர் நாவல், நாரண. துரைக்கண்ணன் எழுதிய உயிரோவியம். இது ராணி முத்து மாத இதழ் வெளிவரத்தொடங்கி இரண்டாவது புதினம். முதல் புதினம் அறிஞர் அண்ணாவின் நாவல். மூன்றாவது குரும்பூர் குப்புசாமி எழுதிய கான்ஸ்டபிள் கந்தசாமி. இதை நடிகர் திலகம் ஒரு படத்தில் படித்துக் கொண்டிருப்பதாக காட்சியும் உண்டு.

முள்ளும் மலரும் படம் மட்டுமல்ல அதைப் பற்றிய விவாதமும் பாதிப்பு ஏற்படுத்தும் என்பதற்கு தங்கள் எழுத்து ஓர் சான்று.

chinnakkannan
20th December 2014, 10:35 PM
//ராகவேந்திரன் சார்,

இது பற்றி நான் 'நெருடல்கள்' என்ற தலைப்பில் 'முள்ளும் மலரும்' நெகடிவ் பாய்ண்ட்ஸ் பற்றி எழுதி வருகிறேன். கோபால் சொல்வது போல. // படம் பார்க்கும் போதே அது ஈகோ என்று தெரியுமே... பாசத்தை மறக்கச் செய்யும் ஈகோ..

பொண்ணு பார்க்கும்மயிலைக்காளை பாட்டுக்கு நன்றி வாசு சார்.. அங்க யார் வந்திருக்கறது..சுவைங்கோ வாங்க வாங்க..வெல்கம் டு மதுர கானம்..

vasudevan31355
20th December 2014, 10:39 PM
சுவை,

நீங்கள் இங்கு வந்திருப்பது 'சுவை'யான மகிழ்ச்சி. வருக வருக!

RAGHAVENDRA
20th December 2014, 10:39 PM
Suvai
A happy welcome to you

chinnakkannan
20th December 2014, 10:44 PM
சுவை பாட்டுக்குப் பாட்டு இழைத் தோழி. முன்பு பல சமையல் கலைகளையும் இட்டிருக்கிறார்..ஆஸ்த்ரேலியாக் காரர் எனப் படித்த நினைவு.என்னngov என்பது அவரது ஸ்டாம்ப்!

மஞ்சுளா பாடலுக்கு எபாகை பி நன்றி வாசு சார்..ஆமாம் க.ம ஏதோவிபத்தில் இறந்து போனதைப் படித்ததாய் நினைவு..

vasudevan31355
20th December 2014, 10:45 PM
ராகவேந்திரன் சார்

How to steal a diamond necklace? புத்தகம் படிப்பாரே நடிகர் திலகம்! அது நன்றாக நினைவிருக்கிறது. நீங்கள் சொல்வது?!... ரொம்ப யோசிக்க வைக்கிறீர்களே! ம்...கான்ஸ்டபிள் கந்தசாமி?

suvai
20th December 2014, 11:20 PM
// thank u nga ck // :-) for me this madhura ghaanam has a soothing effect ...love listening to the old songs...despite not knowing many... thank u nga vs.. :-)

suvai
20th December 2014, 11:23 PM
vasu nga...thank you nga for the warm welcome...varuven meedum :-)

suvai
20th December 2014, 11:25 PM
vanakam nga Raghavendra...ty for your kind welcome...epo onga per paarthaalum...enoda bucket list thaan manasuku varum...to visit the Raghavendra temple :-)
sorry for writing this here nga vasu..

suvai
20th December 2014, 11:28 PM
ennaanga ck...romba balama intro ellaam thareenga neenga ennai patri...i am very insignificant nga hub la...ongala maathri neraiya nallavanga periya siriyavanga arivaalinga ellaam..nadamaadum koodam ithu...i am just a bystander...... loving many of my fav sites.. :-) ty when i get the time :-)

suvai
20th December 2014, 11:29 PM
vasu nga....loved the picture # 2297..... ty

rajraj
20th December 2014, 11:47 PM
chinnakkaNNan: Here is a kandru (kannu) song for you. No 'kutti' ! :)

From thaai uLLam

kadhaiyai keLadaa kaNNe kadhaiyai keLadaa......

http://www.youtube.com/watch?v=m_-Obun6nys

vasudevan31355
21st December 2014, 11:35 AM
''முள்ளும் மலரும்'

தொடர்கிறது....

மற்றவர் பங்களிப்பு.

காளிக்குத் தங்கை வள்ளி.

ஷோபா

http://thiruttudvd.net/wp-content/uploads/2014/07/MullumMalarum00000005.jpg

இவரைப் பற்றி என்ன சொல்ல! என்ன ஒரு குழந்தைத்தனமான, வெகுளித்தனமான முகம்! வள்ளியாக அப்பாவித் தோற்றம். எளிமையான கிராமத்துப் பின்னணி அழகு! அறிமுகக் காட்சியில் அப்படியே மீன்காரி போல உட்கார்ந்து மீன் ஆயும் நேர்த்தி, மங்கா குடும்பத்தின் மேல் கனிவு, கரிசனம், அண்ணனின் சட்டைக் காலரை நைசாக சரி செய்தபடியே லேசான குழைவில் மங்காவின் அம்மாவுக்கு வேலை வாங்கிக் கொடுக்கச் சொல்லும் சாமர்த்தியம், அண்ணனிடம் அவசியமற்ற தேவைக்குட்பட்ட அளவான அன்பு, அவன் மேல் பயம் கலந்த மரியாதை, அண்ணனின் முரட்டுக் குணங்களுக்கு உள்ளுக்குள் சில வேதனைகள், சரத்தின் ஜீப்பில் தோழிகளோடு அமர்ந்து "நான்தான் டிரைவரு... நீ டிக்கட்டு' என்று விளையாடும் சிறுபிள்ளைத்தனம், சரத் அங்கு வந்து விட்டவுடன் அப்படியே மருண்ட மானைப் போல விழிப்பது, பின் சரத் 'நீங்கதான் டிரைவரா?' என்று கேட்டவுடன் அப்படியே மிரண்டு, கொஞ்சம் கொஞ்சமாக அழுகையை ஆரம்பிப்பது, அண்ணன் கை போனதை எண்ணி உருக்கம், அண்ணன் சாப்பாட்டைத் தட்டி விட்ட லேசான வருத்தம் கலந்த கோபம், மங்காவைக் கல்யாணம் கொள்ளுமாறு அண்ணனை சாமர்த்தியமாக பொடி வைத்துக் கேட்பது, அண்ணன் கல்யாணத்துக்கு முழு சம்மதம் தரும் முன்பாகவே 'போதும்.. போதும்.. அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்' என்று ஒரே வாரத்தையில் அவனை அ(ம)டக்கி (இயல்பாக பேசிக்கொண்டே துணி தைத்துக் கொண்டிருப்பவர் மிக அழகாக பற்களால் நூலைக் கட் பண்ணுவார்) சரத்பாபுவைக் காதலிக்காமலேயே அவர் சொல்லிக் காதல் அரும்பிப் பூப்பது, பொன்னூஞ்சல் ஆடும் இளமையை குளத்தில் கவிதையாய் காண்பிப்பது, அண்ணி மங்கா தன்னிடம் ஏதோ மாற்றத்தைக் கண்டு காரணம் கேட்கிறாள் என்று தெரிந்து கொண்டு அவளிடமே வெட்கம் கொண்டு சரத்தை நினைத்து அவள் நெஞ்சில் முகம் புதைப்பது என்று கவிதையாய் நம் நெஞ்சில் நிறைவார்.

http://thiruttudvd.net/wp-content/uploads/2014/07/MullumMalarum00000007.jpg

நடிப்பில் முதிர்ந்த இந்த சின்னப் பெண் சின்ன சின்ன அழகான எக்ஸ்பிரஷன் காட்டுகையில் நிஜமாகவே அற்புதமாகவும், பிரம்மிப்பாகவும் இருக்கும். ஒரு சீன் சொல்கிறேனே!

சரத் ரஜினியும் பெண் கேட்டு வந்து பாயில் அமர்ந்து பேசும் சூப்பர் காட்சி. ரஜினியும், சரத்தும் அங்கே நடிப்பில் போட்டி போட்டுக் கொண்டிருப்பார்கள். (ரஜினியின் கண்கள் அற்புதமாக ஷார்ப்பாக நடிக்கும்.. முன்பு அதை எழுதாமல் விட்டு விட்டேன்) ரஜினி சரத்திடம் 'காதல் கீதல் ஏதாவது?'... என்று முறைப்பாகக் கேட்க 'அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல' என்று சரத் பதில் சொல்ல, "அதானே! என் தங்கச்சியை நான் அப்படி வளர்க்கல!' என்ற நம்பிக்கை கொண்ட திமிரோடு ரஜினி பேசுவார். இந்த இடத்தில் ஒரு வினாடி நேரம் ஷோபாவைக் காண்பிப்பார்கள். 'அண்ணன் தன் மேல் இவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறானே! நாம்தான் ஒரு வேலை தப்பு பண்ணி விட்டோமோ! நல்ல வேளை... அண்ணனுக்குத் தெரியவில்லை' என்ற ஒரு சிறு குற்ற உணர்ச்சியை முகத்தில் தேக்கி 'தப்பித்தோம்' என்பது போலவும் பாவம் காட்டிவிடுவார். எத்தனை பேருக்கு இது சாத்தியம்? என்னை மிகவும் கவர்ந்த இடம் இது. ஒரு வினாடி பாவம் என்பது சாதாரண விஷயமல்ல. அது இந்தப் பெண்ணிற்கு அல்வா மாதிரி வருகிறது. இப்படிப்பட்ட நல்ல நடிகைக்கா இப்படி ஒரு நிலை அந்த வயதில் வர வேண்டும்?

முருகேசன் உடனான கல்யாணத்தை நிறுத்த தனக்காகப் போராடும் அண்ணியை அண்ணன் மறுத்து அடித்துத் துவைத்ததும் அவளை விலக்கி அண்ணியிடம் "என்னைக் கொல்றதுக்குக் கூட அண்ணனுக்கு உரிமை இருக்கு... நானே சரின்னதுக்கு அப்புறம் நீ ஏன் தடுக்குற? எங்க அண்ணனுக்குத் தெரியாத நல்லது கெட்டது உனக்குத் தெரிஞ்சு போச்சா?' நீ உன் இஷ்டப்படி செய் அண்ணே!" என்று பிடிமானம் இல்லாமல் பேசி அண்ணனை மீற முடியாமல் விரக்தியாக செல்வதும் டாப் ரகம்.

அண்ணன் இறுதியில் தன்னை நிறுத்தி நெகிழ்ச்சியுடன் பேசும் போது மௌனம் சாதித்து, பின் அவன் கையை விலக்கி, மெதுவாக மற்றவர்களுடன் நடக்க ஆரம்பித்து, மனம் குழம்பிய நிலையில் தனி ஆளாக யாருமே துணை இல்லாமல் நிற்கும் அண்ணனைத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே (இளையராஜா ஷோபா ரஜினியை விட்டு விலகி நடக்க நடக்க கொஞ்சம் கொஞ்சமாக இசையின் வேகத்தைக் காட்சியமைப்பிற்குத் தோதாக கூட்டுவார். அருமையாக இருக்கும்.) அழுதபடி நடந்து பின் அண்ணன்தான் முக்கியம் என்று ஓடி வந்து அவனை அணைத்து குழந்தை போல தேம்பித் தேம்பி அழுவது நெகிழ்வான அற்புதம்.

ரஜினி ஆர்ப்பாட்டமாய்க் கவருகிறார் என்றால் ஆர்ப்பாடம் இல்லாமல் ஆர்ப்பரிக்க வைக்கிறார் ஷோபா. கோணங்கித்தனம், செயற்கைத்தனம், முகம் சுளிக்க வைக்கும் காட்சிகள் இல்லாமல் இந்த மலர் என்றும் நிரந்தர வாசம் வீசும் மலராக மணம் வீசுகிறது. முரட்டு முள்ளான அண்ணனின் மிருதுவான மலராக, நம் எல்லோர் மனதிலுமே தங்கையாகக் குடி கொள்கிறார் ஷோபா நடிகையர் திலகத்திற்குப் பிறகு.

vasudevan31355
21st December 2014, 11:39 AM
சரத்பாபு

http://thiruttudvd.net/wp-content/uploads/2014/07/MullumMalarum00000003.jpg

இஞ்சினியர் ரோல். பொருத்தம் என்றால் அப்படி ஒரு 'சிக்' பொருத்தம். ரொம்ப கேஷுவலாக. நடிப்பது போலவே தெரியாது. வந்து விட்டு போய் விடுவாரே ஒழிய நெஞ்சை விட்டுப் போக மாட்டார். நிஜமாகவே ஜென்டில்மேன் தான். காளி வீம்பு பண்ணும் போதெல்லாம் அடக்கியபடியே கண்டிப்பது அருமை. டிராலி பாதி வழியில் ரஜினியின் பழி வாங்கலில் நின்றதும் இது ரஜினி வேலைதான் என்று தெரிந்து கொண்டு லேசான புன்னகையுடன் நடக்கத் தொடங்குவது ஜோர். காளியை புரிந்து கொண்டதை ஈஸியாகக் காட்டுவார்.

ரஜினியைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லி ரஜினிக்குப் பதிலாக தன் தம்பிக்கு அந்த வின்ச் ஆபரேட்டர் வேலையைப் போட்டுத் தர வேண்டும் என்று நைசாகக் காதைக் கடிக்கும் அந்த கிளார்க் சொல்வதையெல்லாம் பொறுமையாகக் கேட்டுவிட்டு "ஆமாம்! நம்ம ஆபீஸ்ல தம்பியே இல்லாத கிளார்க் யாராச்சும் இருக்காங்களா?" என்று அலட்டிக் கொள்ளாமல் ஒரே போடு போடுவது கலக்கல்.

"இதெல்லாம் சுத்தமான ரவுடித்தனம் இல்லே" என்று ரஜினியை ஜென்டிலாக வாங்குவதும் சூப்பர். பெண் கேட்கப் போகும் போது அந்த அடக்கம், பொறுமை, நிதானம், படித்த பண்பு எல்லாமே அமர்க்களம். ரஜினி "என்ன சார், என் வீட்டுக்குள்ளேயே வந்து உட்கார்ந்துகிட்டு என்கிட்டே லா பாய்ன்ட் பேசறீங்க?' என்று படு சீரியஸாகக் கேட்டுக் கொண்டிருக்க இவர் அதைவிட படு கூலாக, வாயெல்லாம் பல்லாக "லா பாய்ன்ட்... நீ எனக்கு வச்சிருக்குற பெயர் இல்லே!" என்று ரசித்து சிரிப்பது ரகளை. அதே போல ரஜினியிடம் பெண் கேட்கும் பாங்கும் ரொம்ப நீட். காளி முருகேசனுக்கு தன் தங்கையைக் கொடுப்பதாக பேரதிர்ச்சி கொடுத்தவுடன் ரொம்ப இடிந்து போனது போல் துவளாமல் சமாளித்து செய்வதறியாது டீக் கடை பெஞ்சில் உட்கார்ந்து இருப்பதையும் சொல்லத்தான் வேண்டும்.

அதிக காட்சிகள் இல்லாவிட்டாலும் வரும் ஒவ்வொரு காட்சியிலும் அமைதியாக ஸ்கோர் பண்ணி நடிப்பில் அனைவருடனும் போட்டி போடுகிறார் இந்த இஞ்சினியர்.

vasudevan31355
21st December 2014, 11:50 AM
'படாபட்' ஜெயலஷ்மி

http://thiruttudvd.net/wp-content/uploads/2014/07/MullumMalarum00000004.jpg

மங்கா. பட்பட்தான். சாப்பாட்டுப் பிரியை. ஆம்பிள மாதிரி தைரியம். ஆரம்பத்தில். துணிமணியைக் கூட சரி செய்யாமல் 'எனக்கென்ன?' என்று இருக்கும் டைப். ரஜினி முதன் முதல் வீட்டில் தன்னை வைத்து முறைத்துப் பார்க்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக எல்லாவற்றையும் சரி செய்து விட்டு "ஏன்யா! முன்ன பின்ன பொம்பளைய பார்த்தே இல்லையா? என்று அலட்சிய நடிப்பில் அமர்க்களம் புரிவார். ஷோபா ஆயும் மீனைப் பார்த்து நாக்கு சப்புக் கொட்டுவது ஜோர்.

ரஜினியை திருமணம் செய்து கொண்டு முதல் இரவில் 'சாப்பாட்டைப் பற்றிதான் எனக்குப் பாடத் தெரியும்' என்று முழுப் பாடலையும் சாப்பாட்டைப் பற்றியே பாடி இம்சை செய்வது தனி சுகம். இந்தப் படத்தில் நடிப்பில் தானும் ஒரு தனித்த ராணி என்று காட்டி விடுவார். (முதலிரவு காட்சியை சி.க அழகாக வர்ணித்து விட்டார். அப்புறம் நான் வேறு எதற்கு? "சூடாக இருக்கறப்போ சாப்பிடவாங்க"):)

ரஜினி உறியடிக்க முடியாமல் போக, ஊரார் 'ஒத்தைக் கையா' எற்று கேலி செய்ய, 'படாபட்'வெகுண்டெழுந்து 'என்னை ஜெயிங்கடா பார்க்கலாம்' என்று சீறுவது கொஞ்சம் ஓவர் என்றாலும் பொம்பளை காளி தான்.

ரஜினி ஒற்றைக் கையில் பேண்டின் ஜிப்பைப் போட முடியாமல் திண்டாட, "உனக்கு எல்லார் தயவும் வேணும்யா இப்ப" என்று ரஜினி மறுத்து வெட்கப்பட, வெட்கப்பட இவர் ஜிப் மாட்டி விடுவது விரசமில்லாத அழகு.

தீனி மாடு போல வளர்ந்த மங்கா கொஞ்சம் கொஞ்சமாக பாந்தமான, அதே சமயம் புத்திசாலித்தனமான, விவேகமான, பொறுப்புள்ள மங்காவாக படிப்படியாக மாறுவதை நன்றாக உணர்த்தியிருப்பார் 'படாபட்'.

சரத் வீட்டுக்கு வந்து பெண் கேட்டவுடன் ரஜினிக்கு முன்பாகவே 'அதுக்கு நாங்க குடுத்து வச்சிருக்கணும்" என்று முந்திரிக் கொட்டையாய் முந்தி பதில் சொல்வது அருமை. (இதை சொன்னதும் 'படாபட்'டை ரஜினி ஒரு முறை முறைப்பார் 'என்னை மீறி பேசறியா?' என்று.. அதுவும் அமர்க்களமாக இருக்கும்.)

இறுதியில் கல்யாணத்தை தடுத்து நிறுத்த போராடுவதும், மூர்த்தியின் கடைக்கு தோழிகளுடன் சென்று மிரட்டிவிட்டு வருவதும், ரஜினியிடம் கிளைமாக்ஸில் "நான் திரும்பி வந்தா என்னை வீட்டுல சேர்க்கமாட்டே! அவ்வளவுதானே!' என்று அலட்சியம் காட்டி வேதனைப்படுவதும் இவருக்கும் இந்தப் படத்தின் வெற்றியில் பங்கு உண்டு என்று நிரூபிக்கும் காட்சிகள்.

இந்தப் பெண்ணின் உயிரும் அனாவசியமாகப் பறி போனது பெரும் துயரம்.

vasudevan31355
21st December 2014, 11:55 AM
வெண்ணிற ஆடை மூர்த்தி

http://s12.postimg.org/drmhp9ca5/vlcsnap_2013_08_28_17h53m16s212.png

பெட்டிக்கடை முருகேசன் என்ற சற்று முரணான பாத்திரம். அப்பாவியான நல்ல மனம் கொண்ட கேரக்டரே ஒரு கல்யாணமான பெண்ணையும் வைப்பாட்டியாக வைத்திருக்கும் நம்பக் கூடிய நிஜ முரண். படிய வாரிய பாகவதர் கிராப் போன்ற எண்ணெய்த் தலையுடன் மீசையற்ற வழுவழு முகம். (பாலு மகேந்திரா, மகேந்திரன் போன்ற இயக்குனர்களில் படங்களில் மூர்த்தி இப்படியேதான் வருவார்) காளியிடத்தில் நிஜ பிரியம், உதவும் மனப்பான்மை, இன்னொருத்தன் மனைவியுடன் கறாரான கொ(கெ)ஞ்சல் என்று முக்கியக் கதாபாத்திரமும் கூட. ரஜினிக்கு கடை வைக்க பணம் கொடுத்து உதவி செய்து ரஜினியிடம் பேசும் போது மூர்த்திக்கே உரித்தான ஒரு பஞ்ச் அவர் யாருக்கும் அடங்க மாட்டார் என்று காண்பிக்கும். ("போட்ற கடையை மட்டும் என் கடைக்கு எதிர்த்தா மாதிரி போட்டுறாதீங்க..என் பொழைப்பு போயிடும்":))

பணம் கொடுத்ததை கண்டிக்கும் வைப்பாட்டியிடம் கறாராக பேசுவது டாப். ('அடுப்பங்கரையில் நின்னுகிட்டு கேள்வி கேட்டா பொண்டாட்டி ஆயிடுவியா? நீ எங்க நிக்கணுமோ அங்கேயே நில்லு')

வள்ளி சரத்பாபுவுக்கா இல்லை தனக்கா என்று பரிசம் போட வந்த இடத்தில் ரஜினிக்கும், படாபட்டுக்கும் நடக்கும் தகராறுகளைப் பார்த்து பயந்தபடியே பம்மி நிற்பதும் அருமை. ரஜினியிடம் ஷோபாவைப் பற்றி தப்பாக பேசி செம்மையாக வாங்கிக் கட்டிக் கொண்டு சட்டை கிழிந்து அலங்கோல நிலையில் ரத்தம் வடிய விழுந்து கிடப்பதும் பரிதாபம்.

vasudevan31355
21st December 2014, 11:57 AM
சாமிக்கண்ணு எஸ்.ஏ.கண்ணன் மற்றும் தசரதன்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/MULLUMMALARUMfullmovieBAE0BC10BB30BCD0BB30BC10BAE0 BCD0-BAE0BB20BB00BC10BAE0BCD0-YouTubemp4_002329817.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/MULLUMMALARUMfullmovieBAE0BC10BB30BCD0BB30BC10BAE0 BCD0-BAE0BB20BB00BC10BAE0BCD0-YouTubemp4_002329817.jpg.html)

http://thiruttudvd.net/wp-content/uploads/2014/07/MullumMalarum00000006.jpg

ரஜினியின் வலது கர ஒப்புக்குச் சப்பாணி கூலிப் படைகள். 'அண்ணே!அண்ணே! என்று ரஜினியைச் சுற்றும் அவரைவிட வயசு மீறிய, பயந்த, கூழைக் கும்பிடு கோழைகள். ரசிக்கத் தகுந்த ரகங்களே! ரஜினி ஒரு ஆளைப் போட்டு புரட்டி விட்டு வருகையில் அவருக்கு இந்த கோஷ்டி ஜால்ரா போட்டபடி பேசி வருவது அப்படியே அச்சு அசலாக ஜால்ராக்கள் கோஷ்டி செய்வது. ரஜினியின் முடிவில் இஷ்டம் இல்லாமல் ஆனால் அவர் கோபத்துக்கு ஆளாக நேருமே என்று பயந்து விட்டேர்த்தியாக கல்யாண வேலைகள் செய்யவும், ரஜினி இது பற்றிக் கேட்டதும் 'ஒன்னும் இல்லேண்ணே!' என்று சுரத்தே இல்லாமல் கூறுவதும் இயல்பு.

அதுவும் சாமிக்கண்ணு தன் மனைவி (வெண்ணிற ஆடை மூர்த்தியின் ஆள் வேறு) அங்காயியிடம் அங்கலாய்ப்பது அருமை.('என்னை என்ன வயசானவன் வயசானவன்னு குத்திக் காட்ற...தலைவலிக்காக கண்ணாடி போட்டிருக்கேன்...வெயில்ல நின்னது முடி கொட்டிப் போச்சு... இதுக்குப் போயி'..) வாய் முழுக்க சிரிப்பாக அசடு வழிவதும், தூக்கம் வராமல் பினாற்றுவதும், மனைவி அதட்டிய மறுகணமே 'படுத்துட்டேன்' என்று கவிழ்ந்து கொள்வதும். மனிதர் தனியாகப் பின்னுவார்.

chinnakkannan
21st December 2014, 12:30 PM
//ஷோபா, ஃபடாபட், வெ. ஆ.மூர்த்தி, சரத்பாபு// இவர்களுடைய நடிப்பு + கேரக்டர் அலசல்கள் அருமைவாசு சார்.. அதை மேலே வைக்கவும் :)

Gopal.s
21st December 2014, 12:36 PM
Vasu, great work done on a deserving film. keep it up.

vasudevan31355
21st December 2014, 12:42 PM
http://padamhosting.me/out.php/i133509_mmalar9.png

மூர்த்தியுடன் நிற்பவர் தசரதன்

ரஜினியின் சிறு கைத்தடியாக வரும் தசரதன் அக்கால நடிகர். சிறுவயது முதற்கொண்டே நடிப்பவர். 'களத்தூர் கண்ணம்மா' படத்தில் 'அம்மாவும் நீயே...அப்பாவும் நீயே' பாடலில் சிறு வயது கமலுடனும், 'மேஜர் சந்திரகாந்த்' படத்தில் டைலர் நாகேஷ் கூட வரும் காஜா எடுக்கும் பையனாகவும் ('கல்யாண சாப்பாடு போடவா' பாட்டில் நாகேஷுடன் ஆடுவார்) 'தெய்வ மகன்' காவியத்தில் ஆசிரமத்தில் இருக்கும் பையன்களில் ஒருவராகவும், ("இன்னா வாசனைடா... அப்பளம் பொரியுதுடா... வாடா நொறுக்கலாம்") நடித்திருப்பார். பாலு மகேந்திராவின் இயக்கத்தில் வெளிவந்த 'ராமன் அப்துல்லா' படத்தில் 'உன் மதமா? என் மதமா? ஆண்டவன் எந்த மதம்?" பாடலுக்கு வயதான தோற்றத்தில் நடமாடுவார். 'சரணம் ஐயப்பா' படத்தைத் தயாரித்து இயக்கியதும் இவரே.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/MULLUMMALARUMfullmovieBAE0BC10BB30BCD0BB30BC10BAE0 BCD0-BAE0BB20BB00BC10BAE0BCD0-YouTubemp4_007508594.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/MULLUMMALARUMfullmovieBAE0BC10BB30BCD0BB30BC10BAE0 BCD0-BAE0BB20BB00BC10BAE0BCD0-YouTubemp4_007508594.jpg.html)

தசரதன் பக்கத்தில் கை கட்டி நின்று கொண்டிருப்பவர்தான் திரு எஸ்.ஏ.கண்ணன்.

ரஜினியின் இன்னொரு எடுபிடியாக வருபவர் எஸ்.ஏ.கண்ணன். இவர் சிவாஜி நாடக மன்றத்தின் பல நாடகங்களுக்கு இயக்குனர். நடிகர் திலகத்தின் நீண்ட கால நண்பர். 'பராசக்தி'யில் இறுதிக் காட்சியில் வக்கீலாக வருவார். நடிகர் திலகம் நடித்த 'சத்யம்' படத்தைத் தயாரித்து இயக்கியவர் இவர்தான். சித்தூர் பி.எம்.சண்முகம் என்பவரும் இவருடன் இணை சேர்ந்து இப்படத்தை தயாரித்தார். எஸ்.ஏ.கண்ணன் அவர்களும் காலமாகி விட்டார்.

'முள்ளும் மலரும்' படத்தில் நடித்த ஷோபா, படாபட் ஜெயலஷ்மி, எஸ்.ஏ.கண்ணன், ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திரா இவர்கள் அனைவரும் இன்று நம்மிடயே இல்லை. இத்தனைக்கும் 1978 இல் தான் படமே வந்தது. என்னே காலத்தின் விந்தை!

vasudevan31355
21st December 2014, 01:08 PM
ரிலாக்ஸ் ப்ளீஸ்.

நிரந்தர ஸ்டைல் கிங்.

எனக்கு மிக மிகப் பிடித்த நடிகர் திலகத்தின் ஸ்டைல் போஸ்கள்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/NenjirukkumVarai-YouTubemp4_005832182.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/NenjirukkumVarai-YouTubemp4_005832182.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/ThenumPaalum-YouTubemp4_006573588.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/ThenumPaalum-YouTubemp4_006573588.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/---Gauravammp4_005962472.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/---Gauravammp4_005962472.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/---Gauravammp4_002020477.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/---Gauravammp4_002020477.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/---ThangaPathakkammp4_003971651.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/---ThangaPathakkammp4_003971651.jpg.html)

RAGHAVENDRA
21st December 2014, 01:49 PM
Vasu Sir
Super.... NT Pose அமர்க்களமான ஸ்டில்கள்... கலக்குங்க...

RAGHAVENDRA
21st December 2014, 01:49 PM
வாசு சார்
முள்ளும் மலரும்..
You have done full justification for your analysis.

chinnakkannan
21st December 2014, 03:17 PM
வாசு சார் இந்தாங்க முள்ளும் மலரும் ப்ரசண்டேஷனுக்காக உங்களுக்கு ஒரு ப்ரசண்ட்..

ஒரே கான்செப்ட் ரெண்டு பாட்பா.. :) ப்ளாக் அண்ட் ஒய்ட் அம்லுவும் கலர் சர்ரூவும் :)

தென்றல் வரும் சேதி வரும்
திருமணம் பேசும் தூது வரும்
மஞ்சள் வரும் சேலை வரும்
மாலையும் மேளமும் சேர்ந்து வரும்

கண்ணழகும் பெண்ணழகும்
முன்னழகும் பின்னழகும்
காதல் வார்த்தை பழகும்

அதை கண்டிருக்கும் பெண்டிருக்கும்
வந்திருக்கும் மங்கையர்க்கும்
உள்ளம் தானே மலரும்
எண்ணம் தொடரும் இன்பம் வளரும்
அங்கு திருநாள் கோலம் திகழும்

பி.சுசீலாவின் ஹம்மிங்க் நம்மை எங்கோ கொண்டு போய்விடும்..இயற்றியது கண்ணதாசன்..பாலும் பழமும்

http://www.youtube.com/watch?v=WEESryZyIVY

**

அடுத்து வைரமுத்து தேவேந்திரன் (புதியவர்?) வேதம் புதிது

புத்தம் புது ஓலை வரும்..
இந்தப் பூவுக்கொரு மாலை வரும்

நந்தவனங்கள் பூமாலை கட்டும்
நாதஸ்வரங்கள் பொன் மேளங்கொட்டும்
நட்சத்திரம் அட்சதைகள் போடும்.. பண் பாடும்.. என் நேரம் கூடும்


http://www.youtube.com/watch?v=gz3N2MlwqTo

vasudevan31355
21st December 2014, 06:36 PM
சி.க சார்.

உங்கள் அன்புப் பரிசுக்கு மெத்த நன்றி! அழகான பரிசுகள். அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். (ஆமாம்! நடிகர் திலகத்தின் அமர்க்களமான ஸ்டைலைப் பார்க்கவில்லையா?)

நானும் இப்போது ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கப் போகிறேன். உங்களுக்கும் நீங்கள் சொன்ன கான்செப்ட்டில் ஒரு பாடல் தந்த மாதிரி ஆயிற்று. (இது கொஞ்சம் சோகம்தான்)

நம் ராஜ்ராஜ் சாருக்கு ஒரு ஜுகல் பந்தியும் வைத்த மாதிரி ஆயிற்று.:)

இந்தியிலிருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்யப்பட்ட 'அவன்' படத்திலிருந்து

'கல்யாண ஊர்வலம் வரும்... உல்லாசமே தரும்...
மகிழ்ந்து நான் ஆடிடுவேன்... ஓ...
மகிழ்ந்து நான் ஆடிடுவேன்'

ஜிக்கியின் உன்னதக் குரலில்


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=s-z6t7eehUQ

'ராஜா கி ஆயேகி பராத்'
ரங்கீலி ஹோகி ராத்
மகன் மே நாச்சூங்கி'

ஒரிஜினல் ஹிந்தி 'aah' (1953) படத்திலிருந்து.

லதாவின் லட்டுக் குரலில். (சே! என்ன மாதிரி குரல்!)

இசை: சங்கர் ஜெய்கிஷன்


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=TLFAAYUHML4

chinnakkannan
21st December 2014, 08:49 PM
(ஆமாம்! நடிகர் திலகத்தின் அமர்க்களமான ஸ்டைலைப் பார்க்கவில்லையா?)// பார்த்தேனே .. தாங்க்ஸ்..ஆனாக்க முதல் ஸ்டைல் நெஞ்சிருக்கும் வரைன்னு நினைக்கிறேன்..இரண்டாவது ஸ்டைல் பத்தி ஈவ்னிங் யோசிக்கலாம்னு விட்டுட்டேன்..இப்ப யோசிச்சா சாந்தியா? கெளரவம் என்னிக்குமே ஸ்பெஷல் தான்..அந்தத் தங்கக் காசு சிதறுமே அந்த ஸ்டைல விட்டுப்புட்டீங்களே..அதே படத்துல வக்கீலாத்து வசந்தா உன் மனதை எந்தன் வசந்தா பாட்டு..அதில் வரும் குறும்புடன் கூடிய நடை..ம்ம் மறக்கமுடியுமா..

ஜூகல் பந்தி பாட்டுக்கள் ஜோர்.. தாங்க்ஸ் வாசு சார் அகெய்ன்.. மேளம் கட்ட நேரம் வரும் பூங்கொடியேன்னு ஒரு பாட்டு மனசுல ஒலிக்குது..வேற..என்னவாக்கும் இருக்கு..

raagadevan
21st December 2014, 10:48 PM
பாடல்: "என் வாழ்விலே வரும் அன்பே வா..."
திரைப்படம்: தம்பிக்கு எந்த ஊரு (1984)
வரிகள்: பஞ்சு அருணாசலம்
இசை: இளையராஜா
பாடகர்: பாலு
நடிப்பு: ரஜினிகாந்த் & மாதவி

https://www.youtube.com/watch?v=JnGYCFlpFXk

iLaiyaraja originally composed this tune in 1983 for Balu Mahendra's Hindi movie SADMA (remake of மூன்றாம் பிறை)

Here it is; Suresh Wadkar singing Gulzar's lines, and featuring Kamal & Sridevi...

https://www.youtube.com/watch?v=0BXqAnZWqdQ

rajraj
22nd December 2014, 07:34 AM
லவங்கியில் தமிழ் ப்பாடல் ஏதும் உண்டா.. ..

Lavangi is a four note scale (raga) 'invented' by Balamuralikrishna. Four note scales were pevalent in ancient times. I think Chinese still use it. Our established scales have at least five notes (pentatonic) like Malkauns.
You won't find many songs in Lavangi.
Balamuralikrishna was challenged about his 'inventions' by Veena Balachander and the Sangeetha Academy appointed a committee to investigate.
I don't know what the committe concluded. :) I won't go beyond this ! :lol:

In case you are not aware, ancient Tamils calculated the number of possible ragas in the seven note system we use to be about 16000. So much about Carnatic music ! :)

kalnayak
22nd December 2014, 10:19 AM
வாசு,
கலக்கிட்டேள் போங்கோ!!!
பாட்டுக்கு வெயிட்டிங்...

raagadevan
22nd December 2014, 10:27 AM
CK & Raj: I cannot think of a tfm song in Lavangi raagam. Here is an attempt by music director (Bombay) Ravi in the Malayalam movie NAKHAKSHATHANGAL (1986); Jayachandran reciting a poem by O.N.V. Kurup...

https://www.youtube.com/watch?v=lGffvx1pWUo#t=57

Here is Prince Aswathi Thirunal Rama Varma (of the Travencore Royal Family) demonstrating Lavangi:

https://www.youtube.com/watch?v=F0M7gtoryGg#t=101

kalnayak
22nd December 2014, 10:32 AM
சி.க.,
உங்களுக்காக சில கடிதப் பாடல்கள்:

https://www.youtube.com/watch?v=Gr4uqoBw-Iw

https://www.youtube.com/watch?v=9hHq2lYof4U

https://www.youtube.com/watch?v=-YZhLIDapAM

https://www.youtube.com/watch?v=oyFxSHEdM98

https://www.youtube.com/watch?v=2hGON9d3_Gk

https://www.youtube.com/watch?v=lptmuEpUPTY

https://www.youtube.com/watch?v=Y0wogqlpelQ

மிகச் சமீபத்தில் தான் ராகவேந்திராவும் 'சேரன் பாண்டியனி'ன் 'காதல் கடிதம் வரைந்தேன். வந்ததா' எனக் கேட்டிருந்தார்.

gkrishna
22nd December 2014, 10:52 AM
விகடன் குழும தலைவர் திரு பாலசுப்ரமணியன் அவர்கள் மறைவு சற்று தாமதமாக தெரிய வந்தது . மேலும் திரு பாலசுப்ரமணியன் அவர்கள் நமது பதிவுலக அருமை நண்பர் திரு கோபால் அவர்களின் நெருங்கிய உறவினர் என்பதும் இன்று தான் தெரிய வந்தது. திரு கோபால் அவர்களின் துக்கத்தை பகிர்ந்து கொள்ளும் பதிவு இது

http://epaper.dinamalar.com/PUBLICATIONS/DM/MADHURAI/2014/12/22/Article//005/22_12_2014_005_017.jpg

gkrishna
22nd December 2014, 11:02 AM
வாசுவின் முள்ளும் மலரும் கதாபாத்திரங்கள் விவரிப்பு அருமை.
எஸ் ஆர் தசரதன் மிக சிறந்த நடிகர் . கமல் கால கட்டத்தவர் . A P நாகராஜன் அவர்களிடம் பல படங்களில் உதவி இயக்குனர் ஆக பணி புரிந்தவர் .
கமலஹாசனே பல பேட்டிகளில் இவரதுத் தனித்திறமைக் குறித்துத் தெரிவிக்கும் அளவிற்கு நடிப்பில் பெயர் பெற்றவர்.

https://antrukandamugam.files.wordpress.com/2014/08/thillana-moganambal-1968-zf.jpg?w=593&h=451

நீ ஒரு மகாராணி திரை படத்தில்

https://antrukandamugam.files.wordpress.com/2013/11/dhasaradhan-nee-oru-maharani-1976.jpg?w=593&h=336

Gopal.s
22nd December 2014, 11:11 AM
Thank you Vasu,c.k,Krishna.

vasudevan31355
22nd December 2014, 11:46 AM
முள்ளும் மலரும்' பங்களிப்பாளர்கள்...

தொடர்கிறது....

மகேந்திரன் என்ற மாயஜாலம். (1)

http://directormahendran.in/images/slider-image5.png

திரைக்கதை வசனம் இயக்கம் மூன்று பொறுப்புகளையும் ஏற்றவர் இயக்குநர் மகேந்திரன்.

இதுவரை வெளி வந்த தமிழ்ப்படங்களில் இருந்து இயக்கத்தில் முற்றிலும் மாறுபட்ட பாணி இது.

அதற்கு முன்னால்...

பொதுவாகவே தமிழ்ப்படங்கள் இன்றுவரை மசாலா மாயைகளே. பாடல்களின் ஆக்கிரமிப்பிலிருந்து விலகி, பின் வசன நடையில் மயங்கி, பிறகு உச்ச நட்சத்திரங்கள் என்ற ஆதிக்க முதலைகளின் வாயில் சிக்குண்டு வெளியே வர இயலாமல் இன்று வரை நிலை தடுமாறுகின்றன. மிகப் பெரிய நிறுவனகளின் அடிமை இயக்குனர்களே அப்போதெல்லாம் சிறந்த இயக்குனர்களாக மதிக்கப்பட்டார்கள். பிரம்மாண்டத்திற்கும், பட வெற்றிகளுக்கும் மட்டுமே உத்திரவாத இயக்குனர்கள் அவர்கள். இவர்களே பெரிய இயக்குனர்களும் கூட. சுந்தர்ராவ் நட்கர்னி, எல்லீஸ் ஆர் டங்கன், எஸ்.எஸ்.வாசன், பீம்சிங், ஏ.சி.டி , நீலகண்டன், ஸ்ரீதர், கே.சங்கர், ராமண்ணா, ராஜசேகர், எஸ்.பி.முத்துராமன், சுரேஷ் கிருஷ்ணா, சங்கர், இப்போதைய லிங்கா ஃபேம்(?!) ரவிக்குமார் வரை பணம் கட்டினால் ஜெயிக்க வைக்கும் உத்திரவாதக் குதிரைகள். நல்ல படம் பண்ணுவதைக் காட்டிலும் 'நல்லா' பணம் பண்ணி தயாரிப்பாளர்களின் கல்லா நிரப்பும் சாமர்த்தியம் இவர்களுக்கு உண்டு. அதனால் இவர்கள் நல்ல படங்களே அளிக்கவில்லை என்றும் கூறி விட இயலாது. நம் தமிழ் மண்ணின் ரசனைக்கேற்ப சில சமயம் கொஞ்சம் அதையும் மீறி இவர்கள் சில முயற்சிகள் எடுத்து வெற்றி கண்டதுண்டு. உதாரணம் ஸ்ரீதரின் 'நெஞ்சில் ஓர் ஆலயம்', சங்கரின்' ஆலயமணி' என்று கொள்ளலாம். சிவாஜியா? பீம்சிங், ஏ.சி.டி... எம்.ஜி.ஆரா? நீலகண்டன், திருமுகம்... ரஜினியா? எஸ்.பி.எம், ராஜசேகர், சுரேஷ் கிருஷ்ணா.... கமலா? சிங்கீதம் சீனிவாசராவ், கே.விஸ்வநாத், கமல் என்று பாமரனும் சொல்லும் அளவிற்கு உச்ச நடிகர்களை இயக்கி இன்றுவரை கூட ரசிகர்களிடையே கலவரங்களை கருத்து வேறுபாடுகளை ஸ்ட்ராங்காக விதைத்துவிட்ட புண்ணியம் இவர்களுக்கு உண்டு. (இதில் விஸ்வநாத் தனிரகம். இசைநாத ரசிகர்களுக்கு மட்டும் விஸ்வநாத் பரப்பிரம்மம்.):)

மகேந்திரன் மாதிரி முயற்சிகள் எடுக்காமலில்லை. சிலர் எடுத்தது உண்டுதான். உதாரணமாக நிமாய்கோஷ் இயக்கிய 'பாதை தெரியுது பார்', எஸ்.பாலச்சந்தரின் 'அந்த நாள்' பீம்சிங்கின் 'யாருக்காக அழுதான்?' போன்ற படங்களைச் சொல்லலாம். இயக்குனர்கள் காலம் இல்லாமல் நடிகர்கள் காலமாக இருந்ததால் (இப்போது கூட அப்படித்தான் இருக்கிறது) இயக்குனர்கள் என்று தனியாக சிரத்தையாகப் பேசப்பட வைக்க இயலவில்லை. தோல்வியில் துவண்டு வேண்டாம் விஷப் பரிட்சை என்று ஓடத்தான் இவர்களால் முடிந்தது. இதற்கே பீம்சிங் மிகப் பெரிய வெற்றிப்படங்களின் இயக்குனர். எஸ்.பாலச்சந்தர் ஆங்கிலப் படங்களின் திரைக்கதை பாணியைக் கொண்டு வந்து முக்கியமாக (பிளாஷ் பேக் யுத்திகள்) புது முயற்சிகளுக்கு அடிக் கோலிட்டார். அப்போது புதுமை வேண்டும் என்று படிப்பறிவோடு கலைத்தாகம் கொண்டு அலைந்த அறிவார்ந்த ரசிகர்கள் என்று எடுத்துக் கொண்டால் ஒரு சதம் கூட தேறாது. இந்த நிலையில் புது முயற்சிகளுக்கு ஆதரவும் மிகக் குறைவு. முயற்சி எடுத்தவர்கள் இன்னும் குறைவு.

இப்படிப்பட்ட நிலையில் நகத்தைக் கடித்தபடி ஒரு இயக்குனர் வந்து தமிழ்ப் பட உலகின் தலை விதியை 'கல்யாணப் பரிசு', 'நெஞ்சில் ஓர் ஆலயம்' என்ற அற்புத படங்களை சோகம் பிழியக் கொடுத்து இயல்பு கெடாத அளவான வசனங்களுடன், இயக்குனர்களின் பங்கை, அவர்களுக்கிருக்கும் மரியாதையை தமிழ்ப்பட உலகிற்கு எடுத்துக் காட்டத் தொடங்கினார். 'புதுமை இயக்குனர்' என்று பெயர் பெற்று இயக்குனர் ஒருவருக்கு ரசிகர்கள் மன்றம் தொடங்கும் அளவிற்கு இவரது ஆதிக்கம் வளரத் தொடங்கியது. இது தமிழ் சினிமா ஆரோக்கியத்தை நோக்கி எடுத்து வைத்த அடுத்த அடி என்றும் சொல்லலாம்.

இந்த நிலையில் 'ராகினி கிரியேஷன்ஸ்' பாலச்சந்தர் என்ற அற்புதமான மனிதர் 1965 களில் அதுவரை இருந்த சினிமா சரித்திரத்தை மாற்றி எழுத நாடக மேடையிலிருந்து சினிமா மேடையில் கால்தடம் பதித்து கொஞ்சம் கொஞ்சமாக வெற்றி கொள்ள ஆரம்பித்து இயக்குனர் என்பவர் யார் என்று எல்லோருக்கும் புரிய வைக்கத் தொடங்கினார். (இந்தக் கால கட்டத்திற்கு முன்னால் ஸ்ரீதரும் சில சோதனை முயற்சிகள் எடுத்து தோல்வியுற்று துவண்டு போய் இருந்தார். தவிரவும் அவராலும் ஒரு ஆரம்பகால முழுமையான இயக்குனராக பின்னாட்களில் பரிமளிக்க முடியாமல் பல சறுக்கல்களைச் சந்திக்க நேர்ந்தது. அவரிடம் இருந்த சரக்கும் தீர்ந்து விட்டதோ என்ற சந்தேகமும் வந்துவிட்டது. ஸ்ரீதர் என்ற தனித்தன்மை அவரிடம் தொடராதது பெரும் குறை}

உச்ச நட்சத்திரங்கள் இல்லாமல், காட்சி பிரம்மாண்டங்கள் இல்லாமல், வண்ணங்கள் தெளிக்காமல், சண்டைக் காட்சிகள் வைக்காமல் இயல்பான வசனங்களோடு நம்மிடையே உலா வரும் மனிதர்களை ஓரளவிற்கு திரையில் உலா வர வைத்தார் பாலு. ஆனால் இவரது படங்களின் கதா பாத்திரங்கள் அதிபுத்திசாலித்தனமான கட்டமைப்பைக் கொண்டதாய் இருந்தது ஒரு வீக்னெஸ். ஒரு சாதா கேரக்டர் கூட சோதா போல் இல்லாமல் மேதை அளவிற்கு பேசும் வசனங்கள் முன்னிலை வகித்ததால் கேரக்டர்களின் இயல்புத் தன்மை குறைந்து பாலச்சந்தர் என்ற தனி மனித இயக்க முத்திரை அதிகமாகி 'இது பாலச்சந்தர் படம்' என்று பாமர ரசிகன் சொல்லுமவிற்குக் கூட வளர்ந்து இருந்தாலும், கலை ஆர்வலர்களை சிலாகித்துப் பேச வைத்தாலும், தனிமனித மேதாவித்தனம் அங்கு வெற்றி பெற்று இயல்புநிலை பின்னுக்குத் தள்ளப்பட்டது என்பது என் தாழ்மையான கருத்து.

ஆனால் எது எப்படி இருந்தாலும் 'இயக்கம் என்றால் அது பாலச்சந்தர் தான்' என்று ஒட்டு மொத்தத் தென்னகத்தையும் தன்னகத்தே தக்க வைத்துக் கொண்ட முதல் பெருமை 'இயக்குனர் சிகரம்' பாலச்சந்தர் அவர்களையே சாரும்.

ஜெயகாந்தன், பீம்சிங் கூட்டணி யதார்த்த படங்களில் (ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், சில நேரங்களில் சில மனிதர்கள்) தனியாக கொடி கட்டி பரிமளிக்கத் தொடங்கி மசாலா மாயையில் மயங்கிக் கிடந்த ரசிகர்களை ஓரளவிற்கு தன் பக்கம் வரவழைத்தது. இந்தப் படங்கள் மிக நல்ல முயற்சி என்றாலும் பாராட்டுதல்களை, அவார்டுகளைக் குவித்தாலும், 'டப்பு' குவிப்பதில் மண்ணைக் கவ்வின. சாதாரண பாத்திரங்கள் திரையில் உலாவுவதும், இயற்கையான சம்பவங்கள் என்ற போர்வையில் சதா சாப்பிட்டுக் கொண்டே, நடந்து கொண்டே சுரத்தே இல்லாமல் பேசுவதும் படம் பார்ப்பவர்களின் பொறுமையை நிரம்ப சோதனை செய்தன. நான் முன்பு சொன்னது போல உச்ச நட்சத்திரங்கள் தங்களுக்குப் பிடித்தமான இயக்குனர்களை வைத்துக் கொண்டு அனைவரும் ரசிக்கும்படியான பொத்தம் பொதுவான ரசிக்கத் தகுந்த படங்களை கமர்ஷியலாகக் கொடுத்து தங்களுடைய 'இமேஜு'ம் போகாமல் பார்த்துக் கொண்டு வெற்றி கண்டு வந்தனர்.

ஆக ஒன்று மகா மேதாவித்தனம்... இன்னொன்று அறுவை என்ற நல்ல ரசமான ரகம்... இன்னொன்று என்றுமே அழியாத மசாலா மாயை.... மூன்று பிரிவுகள். ஒன்று ஏறினால் ரயில் ரகம். ஒன்று இறங்கினால் ஜெயில் ரகம். இன்னொன்று பாதுகாப்பான பொதுவான பஸ் பயணம்.

இப்போது மகேந்திரனுக்கு வந்து விடுவோம்.

இந்த சூழ்நிலையில்தான் வறண்ட பாலைவனத்தின் (வறண்ட பாலைவனம் இல்லை... அற்புதமான பாலைவனம்தான். வேண்டுமானால் சினிமாவைக் கலையாக, உயிராகப் பாவிக்கும் புதுமை விரும்பிகளின் புலம்பல்கள் என்று பொருள் கொள்ளலாம்... நமது கோபால் சார் போல.) பால் வெள்ளமாக பொங்கி வந்தார் இயக்குனர் மகேந்திரன் பாலு மகேந்திரா என்ற தேனையும் சேர்த்து அள்ளி எடுத்துக் கொண்டு எந்த பந்தாவும் இல்லாமல் எந்த ஆடம்பரமும் இல்லாமல் கமர்ஷியல் பிளஸ் ஆர்ட் என்ற சக்சஸ்ஃபுல் பார்முலாவைக் கையில் எடுத்துக் கொண்டு.

மகேந்திரன் கற்று நமக்களித்த மாய வித்தைதான் என்ன?

ரொம்ப சுலபான வித்தை

ஒரு அடிமட்ட பாமர ரசிகனைக் கூட ஒரு கலா மேதையான ரசிகனுடன் ஒன்றாக அமரவைத்து, இருவரையுமே ஒரு சேர படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் ஒன்ற வைத்து, அணு அணுவாக ரசிக்க வைப்பது.

இந்த பார்முலாவைத்தான் மகேந்திரன் இலகுவாகப் புரிந்து கொண்டு, அதை அற்புதமாக எடுத்துக் கொண்டு வந்து 'முள்ளும் மலரும்' என்று அனாயாசமாகச் சாதித்தார். முள், மலர் என்ற இருதரப்பு குணங்கள் கொண்ட ரசிகர்களையும் ஒன்றாக இன்புற வைத்தார் படத்தின் தரமோ இயல்பு நிலையோ சிறிதும் கெடாமல், பாதிக்காமல்.

ஒரு படம் ஆர்ட் பிலிம் என்ற முத்திரை குத்தப்பட்டு பாமரர்களால் ஒதுக்கி தள்ளி விட்டுவிடப் படக் கூடாது. கமர்ஷியல் அயிட்டங்கள் பிடிக்காது என்ற கலா ரசிகனை இழந்து விடவும் கூடாது. (இந்த இடத்தில் கமர்ஷியல் அயிட்டங்கள் என்று நான் குறிப்பது அவிழ்த்துப் போட்டு ஆடும் காபரேவையோ, கண்றாவி சண்டைக் காட்சிகளையோ, குத்துப் பாட்டுக்களையோ அல்ல. காட்சியோடு ஒன்றி, கதாபாத்திரங்களோடு ஒன்றி அதாவது வலுவில் ஒன்றாமல் தானே தன்னையுமறியாமல் இடைவேளையில் கேண்டீன் கூடச் செல்ல மனமில்லாமல் ரசித்து ரசித்து சுகமாக படத்துடன் ஐக்கியமாகிவிடுவது. படம் முடிந்து வீட்டுக்கு வந்ததும் அந்த காட்சிகளின் பிடிகளிலேயே உழன்று கொண்டிருப்பது). இப்படி இருவரையும் சமநிலைப்படுத்த வேண்டும்.

என் நண்பர் ஒருவர் என்னிடம் இது பற்றிக் கூறும் போது கேட்டார்.

'ஏன்? ஸ்ரீதர் இல்லையா? 'காதலிக்க நேரமில்லை' இரு தரப்பு ரசிகர்களும் ரசித்த படமாயிற்றே' என்று.

நான் சொன்னேன்....

'நான் சொல்ல வந்து அதுவல்ல... நீங்கள் கேட்கும் கேள்வியும் தவறல்ல. 'காதலிக்க நேரமில்லை' கவிதையல்ல... காவியமல்ல.... கலாட்டா... கலாட்டா எல்லோருக்கும் பிடிக்கும். இதில் ரசிகன் என்பவன் அந்த நேரத்திற்கு இருநிலைப் பட மாட்டான். சோப்புக் குமிழ் காற்றில் வானவில் வண்ணங்களுடன் பறக்கும் போது எந்த மனிதனும் விரலால் அதை தொட்டு ரசிப்பான். ஆனால் 'முள்ளும் மலரும்' அப்படியா?'

என்றேன்.

அவர் உங்களைப் போலவே புரிந்து கொண்டார்.

பிறகு தொடரட்டுமா?

gkrishna
22nd December 2014, 12:08 PM
மகேந்திரன் என்ற மாயஜாலம். (1)

[B][SIZE=2]திரைக்கதை வசனம் இயக்கம் மூன்று பொறுப்புகளையும் ஏற்றவர் இயக்குநர் மகேந்திரன்.

[color=blue]வாசு

இயக்குனர் மகேந்திரன் பற்றி நீங்கள் எழுதி உள்ள கருத்தை ஓட்டியே திரு மகேந்திரன் அவர்கள் தன்னை பற்றி கொடுத்த வாக்கு மூலம்


‘சினிமாவை வெறுத்து ஓடிய எனக்கு, என்றுமே அது காதல் திருமணமாக இருந்ததில்லை. சினிமா எனக்கு கட்டாயத் திருமணம்தான். அந்த உன்னதமான ஊடகத்தில் நான் நுனிப்புல் மேய்ந்தவன்’ என இயக்குநர் மகேந்திரன் தெரிவித்தார்.

கோவை, குஜராத்தி சமாஜத்தில் சனிக்கிழமை, இயக்குநர் மகேந் திரனின் ‘சினிமாவும் நானும்’ நூல் அறிமுக விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், இயக்குநர் மகேந்திரன், பின்னணிப் பாடகி ஜென்ஸி, கவிஞரும் பாடலாசிரியருமான அறிவுமதி, எழுத்தாளர் பாமரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மௌனமே சிறந்த மொழி

நிகழ்ச்சியில் இயக்குநர் மகேந்திரன் பேசியதாவது: “மெளனத்தை விட சிறந்த மொழி இருப்பதாகத் தெரியவில்லை. அர்த்தங்களுக்கு ஏற்ப வார்த்தைகள் கிடைப்பதில்லை. அந்தசமயம் எண்ணங்களை, மெளனங்கள் மட்டுமே வெளிப்படுத்தும். ’உதிரிப்பூக்கள்’ போன்ற எனது படங்களில் மெளனம் அதிகமாக இருப்பதாகச் சொல்வார்கள். உண்மைதான், எனது படத்துக்குப் பெரும்பாலும் வசனம் எழுதியது இளையராஜாதான். மெளனங்களை நான் வசனங்களாக வடித்தபோது, இசையால் ஒவ்வொரு இடத்தையும் நிரப்பியவர் இளையராஜா.

100 ஆண்டுகள் கடந்தும் டூயட் பாடல்கள் இருப்பது தமிழ் சினிமாவின் சுமையாக இருக்கிறது. சினிமாவின் இயல்புத் தன்மையை பாடல்கள் கெடுத்து விடும். அதே சமயம், நான் இளையராஜாவின் பாடல்களுக்கு அடிமை. பல நேரங்களில் மன இறுக்கத்துக்கு மருந்தாக இருந்தவை ராஜாவின் பாடல்களே. திரைக்கதை எழுதும் போதும், மனஉளைச்சலை உணரும்போது அவரது இசையும் பாடல்களுமே மனத்தை அமைதிப்படுத்தும். நீங்கள் கேட்க நினைக்கும், அனைத்து கேள்விகளுக்கும் ‘சினிமாவும் நானும்’ புத்தகத்தில் பதில்கள் கூறியுள்ளேன்.

தமிழ் சினிமா மீது வெறுப்பு!

ஏன் குறைவான படங்களை கொடுத்தீர்கள்? 12 படங்களைக் கொடுக்க இவ்வளவு காலம் ஏன்? என்பதற்கெல்லாம் எனது பதில் இதுதான்: தமிழ் சினிமாவைத் தவிர வேறு எதையுமே பார்க்காமல் இருந்தவன், யதேச்சையாக இரண்டு ஹாலிவுட் படங்களைப் பார்த்தேன். அதன்பின் தமிழ் சினிமாக்கள் மீது வெறுப்பு வந்துவிட்டது.

இங்கு பல உன்னத கலைஞர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்களால் உருவாக்கப்படுவது சினிமாவாக இல்லை. காலத்தின் கட்டாயத்தால் வெறுப்புடன் இதனை ஏற்றுக்கொண்டேன்.

இந்தப் பிழைப்பு வேண்டாமென, பலமுறை சினிமாவை விட்டு ஓடியிருக்கிறேன். நான் செய்த தவறுகளுக்குத்தான் நான் பொறுப்பே தவிர; நான் செய்த நன்மைகளுக்கும், சாதனைகளுக்கும் நான் பொறுப்பல்ல. இது தன்னடக்கமில்லை, எனது வாக்கு மூலம்.

காதல் திருமணம்

சினிமாவில் சாதிக்கத் துடிக்கும் அனைவருமே ஆசை, விருப்பம், லட்சியம், போராட்டம் ஆகியவற்றைக் கடந்து, வெற்றி பெறுவார்கள். அது அவர்களுக்குக் காதல் திருமணம் போன்றது. ஆனால், நான் சினிமாவை வெறுத்தவன். என்றுமே சினிமா எனக்குக் காதல் திருமணமாக இருக்கவில்லை. கட்டாயத் திருமணமாகத்தான் இருந்துள்ளது.

ஓடிச் சென்றவனை விடாமல் பிடித்துக் கொண்டதற்காக, சினிமாவுக்கு மரியாதை கொடுக்கிறேன். ஆனால், அந்த சினிமாவை இதுவரை அன்போடு நெருங்கவில்லை” என்றார்.

gkrishna
22nd December 2014, 12:25 PM
வாசு

மகேந்திரனின் முள்ளும் மலரும்,உதிரி பூக்கள் பற்றி எல்லோரும் சொல்வார்கள். அவருடைய 'பூட்டாத பூட்டுகள் ' .அதிலும் அந்த கதாநாயகி சாருலதா .

தோற்றே போய் இருக்கக் கூடாத கலைஞன், தோற்று போயிட்டார். அதற்கு அவர் தான் காரணம். ஆனால் நஷ்டம் தமிழ் ரசிகர்களுக்கு.

http://4.bp.blogspot.com/-GfWWNBoMP0E/T1Mri8QSfzI/AAAAAAAAB9Y/z2Xyx8axerw/s1600/mahendran5.jpg

மகேந்திரனின் இயக்கத்தில் சில படங்கள் பூஜை மற்றும் விளம்பரத்துடன் நின்ற நினைவு

'1 2 3 4'
'புன்னகை என்ன விலை'
'உதிராத பூக்கள் '

நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த சாசனம் நிறைய ஊர்களில் வெளியாகவே இல்லை

vasudevan31355
22nd December 2014, 12:34 PM
வணக்கம் கிருஷ்ணா! நன்றிகளும் கூட. இயல்பு நிலைக்கு வந்தாகி விட்டதா?:)

gkrishna
22nd December 2014, 12:36 PM
வணக்கம் கிருஷ்ணா! நன்றிகளும் கூட. இயல்பு நிலைக்கு வந்தாகி விட்ட்டதா?:)

கொஞ்சம் கொஞ்சம் ஆக வந்து கொண்டு இருக்கிறது .. இருக்கிறேன் :)

vasudevan31355
22nd December 2014, 12:37 PM
'உதிரிப் பூக்கள்' படத்துக்காக அஸ்வினியை இயக்கும் மகேந்திரன் கிருஷ்ணா.

http://www.frontline.in/multimedia/dynamic/01603/fl18_tam_udhiri_po_1603413g.jpg

vasudevan31355
22nd December 2014, 12:39 PM
'ஜானி'யில் ரஜினியை இயக்குகிறார் மகேந்திரன்.

http://3.bp.blogspot.com/-TEbsQL2JM8A/UL-4PveRD6I/AAAAAAAAHvs/6_bOeoni51w/s1600/11rajinikanth+rare+photos.jpg

gkrishna
22nd December 2014, 12:41 PM
ஒரு வேலையைத் தேடிக் கொள்ளுங்கள். பசியில்லாமல் சென்று வாய்ப்புக் கேளுங்கள். அது ஆரோக்கியமாக இருக்கும். தயக்கமோ, கூச்சமோ இருக்காது. வாய்ப்புக் கிடைக்காவிட்டாலும் சோர்ந்து போகமாட்டீர்கள் இன்னொருவரைத் தேடி கம்பீரமாகச் செல்வீர்கள்

மகேந்திரன் உதவி இயக்குனருக்கு சொன்ன அறிவுரை

வாசு

மகேந்திரன் பற்றி படிக்கும் போது நிறைய கேள்விகள் எழுகின்றன

ஒரு திரைக்கலைஞனின் வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் சகஜம். நுட்பமான படைப்புகளைத் தந்து தமிழ் சினிமாவிற்கு மாற்று அடையாளத்தை உருவாக்கிய அவரால் இடையில் ஏற்பட்ட சரிவிலிருந்து ஏன் கடைசிவரை மீள முடியவில்லை ?

ஊர் பஞ்சாயத்து என்ற படம் ஏன் எடுத்தார் (அல்லது கெடுத்தார் ) :)

vasudevan31355
22nd December 2014, 12:42 PM
மகேந்திரன் எழுதிய 'சினிமாவும், நானும்' புத்தகம்

http://www.thehindu.com/multimedia/dynamic/01686/12cbjesmahendra_CM_1686593e.jpg

gkrishna
22nd December 2014, 12:43 PM
நம்ம நிறை குடம் கங்கா :) விற்கு கதை மகேந்திரன் :):)

vasudevan31355
22nd December 2014, 12:43 PM
ஒரு வேலையைத் தேடிக் கொள்ளுங்கள். பசியில்லாமல் சென்று வாய்ப்புக் கேளுங்கள். அது ஆரோக்கியமாக இருக்கும். தயக்கமோ, கூச்சமோ இருக்காது. வாய்ப்புக் கிடைக்காவிட்டாலும் சோர்ந்து போகமாட்டீர்கள் இன்னொருவரைத் தேடி கம்பீரமாகச் செல்வீர்கள்

மகேந்திரன் உதவி இயக்குனருக்கு சொன்ன அறிவுரை

வாசு

மகேந்திரன் பற்றி படிக்கும் போது நிறைய கேள்விகள் எழுகின்றன

ஒரு திரைக்கலைஞனின் வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் சகஜம். நுட்பமான படைப்புகளைத் தந்து தமிழ் சினிமாவிற்கு மாற்று அடையாளத்தை உருவாக்கிய அவரால் இடையில் ஏற்பட்ட சரிவிலிருந்து ஏன் கடைசிவரை மீள முடியவில்லை ?

ஊர் பஞ்சாயத்து என்ற படம் ஏன் எடுத்தார் (அல்லது கெடுத்தார் ) :)

மகேந்திரனும் மனிதன் தானே!:)

gkrishna
22nd December 2014, 12:47 PM
அதே தான் வாசு

1976 இல் அன்னகிளி ஆரம்பித்த தமிழ் சினிமா மாற்றம் (அதற்கு பிறகு தேவராஜ் மோகன் படம் ஒன்று கூட சொல்லி கொள்ளும் படி இல்லை .அன்னக்கிளியும் இளைய ராஜா இல்லைனா படம் சோ சோ தான் ),1977 பாரதிராஜா ,1978 மகேந்திரன்,ருத்ரையா இப்படி போனது மீண்டும் வணிகதிற்காக சமரசம் செய்து கொண்டு விட்டது

gkrishna
22nd December 2014, 12:50 PM
http://directormahendran.in/images/pootatha.png

பூட்டாத பூட்டுகள்

vasudevan31355
22nd December 2014, 12:51 PM
நம்ம நிறை குடம் கங்கா :) விற்கு கதை மகேந்திரன் :):)

எடோ! சேதி கேட்டோ? கமல் கூட முதலில் பிளே-பாய் தானே! அதுவும் பெரிய்ய்.... ய ஷீலா கூட.:) 'ஈட்டா'வில். மகா மட்டும் விதிவிலக்கா? அதான் கங்கா பிளஸ் ராஜ் கோகிலா. ராஜ் கோகி என்றவுடன் இந்த மூன்று நாட்களாக 'முள்ளும் மலரும்' பட பதிவுக்காக பட்ட கஷ்டங்கள் நொடியில் ஓடி விட்டது.:) கை தேர்ந்த வைத்தியக்கார கில்லாடி கிருஷ்ணா நீங்கள்:)

gkrishna
22nd December 2014, 12:54 PM
ஒரு டசன் படம் கொடுத்து இருக்கிறார்

முள்ளும் மலரும் (1978)
உதிரிபூக்கள் (1979)
பூட்டாத பூட்டுகள்(1980)
ஜானி (1980)
நெஞ்சத்தை கிள்ளாதே(1980)
நண்டு (1981)
மெட்டி(1982)
அழகிய கண்ணே (1982)
கை கொடுக்கும் கை(1984)
கண்ணுக்கு மை எழுது(1986)
ஊர் பஞ்சாயத்து (1992)
சாசனம்(2006)

சனி கிழமை திரு முரளி,சாரதி அவர்களுடன் சென்னை சங்கரா ஹாலில் cd சிறப்பு விற்பனையில் அழகிய கண்ணே பார்த்தேன். நேற்று வாங்கினேன் . இனிமேல் தான் பார்க்க வேண்டும் . சரத்பாபு,சுஹாசினி நடித்து

gkrishna
22nd December 2014, 12:56 PM
வாசு

நாம் மூவர்,ஆடு புலி ஆட்டம்,மோஹம் 30 வருஷம் படத்தில் கூட இவர் பங்கு உண்டு

vasudevan31355
22nd December 2014, 12:59 PM
இதுக்கே சொல்கிறீர்களே!

'இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்' என்ற காலணா படத்திற்கு நம்ம மகேந்திரன் ஒரு செர்டிபிகேட் கொடுத்ததைப் பார்த்தா என்ன சொல்லுவீங்க? என்னை அடிக்க வருவீங்க.:)

இதைப் பார்த்தா நம்ம கோபால் கூட அடுத்த முறை இங்கு வரும் போது மகேந்திரனை சந்திக்காமல் போனாலும் போய் விடுவார்.:)

காலம் மனுஷனை எப்படியெல்லாம் மாத்துது? மாத்தாடு கிருஷ்ணா மாத்தாடு.:)

Director Mahendran, who is well known for his classic films including Uthiripookal and Mullum Malarum, appreciates the efforts of fellow director Chimbu devan and making of his Tamil cowboy film “Irumbu Kottai Murattu Singam”. In his letter to Chimbudevan after watching the film, Mahendran wrote that the film gave him a complete different experience and has brought him to the childhood stage.

Though IKMS is an average success in terms of collections, Chimbudevan and his team has received wide appreciation from different quarters for their effort. Veteran director Mahendran’s letter is the latest but not the least.

http://600024.com/files/2010/06/Mahendra_IKMS_1-660x1024.jpg

http://600024.com/files/2010/06/Mahendra_IKMS_2-697x1024.jpg

vasudevan31355
22nd December 2014, 01:01 PM
சனி கிழமை திரு முரளி,சாரதி அவர்களுடன் சென்னை சங்கரா ஹாலில் cd சிறப்பு விற்பனையில் அழகிய கண்ணே பார்த்தேன். நேற்று வாங்கினேன் . இனிமேல் தான் பார்க்க வேண்டும் . சரத்பாபு,சுஹாசினி நடித்து

அடப் பாவி! சொல்லவே இல்ல.:)

vasudevan31355
22nd December 2014, 01:02 PM
நீ எங்கே.. இனி நான் அங்கே:)

vasudevan31355
22nd December 2014, 01:03 PM
யப்பா! அரட்டை அடிச்சி நாளாச்சு! ராஜேஷ்ஜி காணல்ல.

vasudevan31355
22nd December 2014, 01:04 PM
ஆனா ஒன்னு கிருஷ்ணா! என்னதான் சறுக்கினாலும் அந்த மனிதருக்கு 'முள்ளும் மலரும்' என்ற ரிஷிமூலம் ஒன்று போதும் கிருஷ்ணா. வேற எதுவுமே வேண்டாம். முள்ளாக கோபாலும், மலராக நானும் பார்த்துக் கொள்வோம்.:cry2:

chinnakkannan
22nd December 2014, 02:03 PM
//அதான் கங்கா பிளஸ் ராஜ் கோகிலா. ராஜ் கோகி என்றவுடன் இந்த // ச்சின்னப் பசங்களும் இந்த த்ரெட்டப் படிக்கறாங்கன்னு ஞாபகம் வச்சுக்கணும்.. :) நான் கங்கா பார்த்ததில்லை..ரா கோ வோட முகமும் நினைவுக்கு வர்றமாட்டேங்குதுங்க்ணா..:)

gkrishna
22nd December 2014, 02:19 PM
//அதான் கங்கா பிளஸ் ராஜ் கோகிலா. ராஜ் கோகி என்றவுடன் இந்த // ச்சின்னப் பசங்களும் இந்த த்ரெட்டப் படிக்கறாங்கன்னு ஞாபகம் வச்சுக்கணும்.. :) நான் கங்கா பார்த்ததில்லை..ரா கோ வோட முகமும் நினைவுக்கு வர்றமாட்டேங்குதுங்க்ணா..:)
சி கே

http://desmond.imageshack.us/Himg708/scaled.php?server=708&filename=gangar.jpg&res=landing

மீனா உடைய அம்ம்ம ராஜ் மீனா அவங்க அக்கா ராஜ் கோகிலா என்ன வாசு நான் சொல்றது 'சரிதா'னே ? :)

http://4.bp.blogspot.com/-nd7V6yNy578/U8QXEq4NVwI/AAAAAAAAAoU/zahP570NR0o/s1600/11-1399790971-telugu-star-24-meena-mother-raj-mallika.jpg

chinnakkannan
22nd December 2014, 02:57 PM
Aha. krishna ji.. தகவல் களஞ்சியம்னா அது நீங்க தான்..கொஞ்ச்சம் பிஸி.. நா அப்புறமேல்ட்டு ஈவ்னிங்க் வாரேன்..

vasudevan31355
22nd December 2014, 03:14 PM
சி கே

http://desmond.imageshack.us/Himg708/scaled.php?server=708&filename=gangar.jpg&res=landing

மீனா உடைய அம்ம்ம ராஜ் மீனா அவங்க அக்கா ராஜ் கோகிலா என்ன வாசு நான் சொல்றது 'சரிதா'னே ? :)


http://4.bp.blogspot.com/-nd7V6yNy578/U8QXEq4NVwI/AAAAAAAAAoU/zahP570NR0o/s1600/11-1399790971-telugu-star-24-meena-mother-raj-mallika.jpg


சிறு திருத்தம் கிருஷ்ணா!

மீனாவின் அம்மா பெயர் ராஜ்மல்லிகா. ராஜ்மல்லிகாவின் தங்கைதான் ராஜ் கோகிலா. அதனால் மீனாவுக்கு சித்தி முறையாக வேண்டும் ராஜ் கோகிலா. 'சரிதா'ன் போங்க!:)

vasudevan31355
22nd December 2014, 03:17 PM
//அதான் கங்கா பிளஸ் ராஜ் கோகிலா. ராஜ் கோகி என்றவுடன் இந்த // ச்சின்னப் பசங்களும் இந்த த்ரெட்டப் படிக்கறாங்கன்னு ஞாபகம் வச்சுக்கணும்.. :) நான் கங்கா பார்த்ததில்லை..ரா கோ வோட முகமும் நினைவுக்கு வர்றமாட்டேங்குதுங்க்ணா..:)

படம் கேக்கிறதுக்கு இவ்வளவு பில்ட் அப்பா?:) சின்னப் புள்ளைங்கல்லாம் பார்க்கக் கூடாது.:) கேக்கவும் கூடாது. ம்ஹூம். நிறய இருக்கு. ஆனாக்கா போட மாட்டேன்.

Russellzlc
22nd December 2014, 03:28 PM
ஜெமினி அதிபராக இருந்த மறைந்த மேதை திரு.எஸ்.எஸ்.வாசன் அவர்களின் புதல்வரும், விகடன் குழுமங்களின் தலைவரும், புரட்சித் தலைவர் நடித்த சிரித்து வாழ வேண்டும் படத்தின் பங்குதாரர்களில் ஒருவராக இருந்து தயாரித்ததோடு அப்படத்தை இயக்கியவரும், பன்முக ஆற்றலாளருமான மரியாதைக்குரிய திரு.பாலசுப்ரமணியன் அவர்களின் மறைவுக்கு எனது இரங்கலையும், அவரது மறைவால் வாடும் அவரது நெருங்கிய உறவினரான நண்பர் திரு.கோபாலுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
22nd December 2014, 03:30 PM
உலகம் சமநிலை பெற வேண்டும்


நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

திரு.கிருஷ்ணா சார், எங்கே ரொம்ப நாளா பார்க்க முடியல?

திரு.வாசு சார்,

உங்களது முள்ளும் மலரும் ஆய்வு அற்புதம். நான் இந்தப் படத்தை ரிலீஸ் ஆனபோது ஒருமுறை பார்த்தேன். நீங்கள் குறிப்பிட்டதைப் போல,....

"ரெண்டு கையும் ரெண்டு காலும் போனாக்கூட கூட காளி பொழச்சுக்குவான் சார்... கெட்ட பையன் சார் அவன்"...என்று தன்னை விட்டுக் கொடுக்காமல் பேசி 'வேலை இல்லாமல் இனி என்ன செய்யப் போகிறோம்?' என ஒரு கணம் தடுமாறி, விட்டத்தைப் பார்த்து கண்கள் கலங்கிய நிலையில் வெதும்புவதில் ரஜினி கொடி கட்டுகிறார்.’’

........ உழைப்பை மட்டுமே நம்பியிருக்கும் தன்மானமுள்ள தொழிலாளி உள்ளுக்குள்ளே கலங்கினாலும் வெளியே அப்படித்தான் சார் விட்டுக் கொடுக்காமல் பேசுவான். அப்படிப்பட்ட தொழிலாளியின் எண்ண ஓட்டத்தை பிரமாதமாக விளக்கியுள்ளீர்கள். உங்களுக்கு கிடைத்த மிகப் பெரிய வரப்பிரசாதம் நினைவாற்றல். பாராட்டுக்கள். நீங்கள் குறிப்பிட்டுள்ள காட்சி, நாளிதழில் நான் படித்த செய்தியையும் அதையொட்டிய, அகத்தியர் திரைப்படத்தில் வெளியான பாடலையும் நினைவுபடுத்தியது.

இசைப் பேரறிஞர் சீர்காழி திரு.கோவிந்தராஜன் அவர்கள் பாடிய ‘உலகம் சமநிலை பெற வேண்டும்...’ பாடல்தான் அது. அந்தப் பாடலைப் பற்றிய கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். திரு.கோவிந்தராஜன் அவர்களின் வித்தியாசமான கணீர் குரலும் எனக்குப் பிடிக்கும். அகத்தியர் வேடம் அவருக்கு பொருந்திய மாதிரி யாருக்கும் பொருந்தாது. வேடத்துக்கேற்ற அவரது உடல் வாகு கன கச்சிதம். நாளிதழில் நான் படித்த செய்தி என்றேனே, முதலில் அதைச் சொல்கிறேன்.

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் பாக்ஸ்கான் (foxconn) தொழிற்சாலை இன்று முதல் தனது உற்பத்தியை நிறுத்தப் போவதாக அறிவித்திருக்கிறது. அதாவது அதன் ஒரு பிரிவு மூடப்படுகிறது. 1,700 தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். நோக்கியா நிறுவனம் சில மாதங்களுக்கு முன் மூடப்பட்டபோது 8,000 தொழிலாளர்கள் வேலை இழந்தனர். (இங்கே ஒரு விஷயம். காஞ்சிபுரம் அருகே செயல்பட்டு வந்த நோக்கியா ஆலையில் 2 ஆண்டுக்கு முன் பெண் தொழிலாளி ஒருவர் இயந்திரத்தில் சிக்கினார். இயந்திரத்தை உடைத்தால்தான் அவரை மீட்க முடியும். ஆனால், பல லட்சம் மதிப்புள்ள இயந்திரத்தை மேலிடத்தின் அனுமதி இல்லாமல் உடைக்க முடியாது என்று அதிகாரிகள் கூறிவிட்டதால் பலர் முன்னிலையில் அந்த பெண் துடிதுடித்து இறந்தார். இயந்திரத்துக்கு உள்ள மதிப்பு மனித உயிருக்கு இல்லை.)

நோக்கியா நிறுவனம் மூடப்பட்டதால் ஆர்டர்கள் வரவில்லை என்று கூறி தொழிற்சாலையை மூடுவதாக பாக்ஸ்கான் கூறுகிறது. ஆனாலும், தொடர்ந்து சீமென்ஸ், சோனி நிறுவனங்களுக்கு உதிரிபாகங்களை உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது பாக்ஸ்கான். 500 முன்னணி பன்னாட்டு நிறுவனங்கள் பட்டியலில் 30வது இடத்தில் இருக்கிறது பாக்ஸ்கான். 1,700 தொழிலாளர்களை வேறு பணிக்கு பயன்படுத்திக் கொள்வது அந்நிறுவனத்துக்கு ஒன்றும் பெரிதல்ல. இத்தனைக்கும், சிறப்பு பொருளாதார மண்டலத்தில் (special economic zone) அமைக்கப்பெற்ற பாக்ஸ்கான், அரசின் வரிச்சலுகை, மலிவு விலையில் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் ஆகியவற்றை அரசிடம் இருந்து பெற்று கோடிக்கணக்கில் லாபம் சம்பாதிக்கிறது.

தொழிற்சாலை அமைப்பதற்காக, சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படும்போது விவசாயிகளிடம் இருந்து அடிமாட்டு விலையில் நிலமும் அரசால் கையகப்படுத்தப்பட்டு பகாசுர நிறுவனங்களிடம் வழங்கப்படுகிறது.(அம்பானிகளும், அதானிகளும், டாடாக்களும், பன்னாட்டு நிறுவனங்களும் என்ன செய்வார்கள்? பாவம், அவர்கள் ஏழைகள்) நிலத்தை கொடுக்கும் விவசாயிகளுக்கு தொழிற்சாலையில் வேலை வழங்கப்படும் என்று உத்தரவாதமும் வழங்கப்படுகிறது. பாக்ஸ்கான் போன்ற நிறுவனங்களின் மூடலால் இவை எல்லாமே அர்த்தமற்று போகிறதே? இந்நிறுவனங்களுக்கு வழங்கப்படும் சலுகைகளால் அரசுக்கும் கோடிக்கணக்கில் நஷ்டம்.

முள்ளும் மலரும் காளியாவது கை போனதால் வேலை இழந்தான். ஆனால், கையிருக்கும்போதே வேலை இழந்த தொழிலாளர்கள் செய்வதறியாது கண் கலங்கி நிற்கின்றனர். என்றாலும் தன்மானத்தோடு போராடி வருகின்றனர். இந்த செய்தியையும் போராடும் தொழிலாளர்களின் நிலையையும் நினைத்தபோது எனக்கு அகத்தியர் படத்தில் வரும் இந்தப் பாடல்தான் தோன்றியது.

கதைப்படி, சிவபெருமான் கல்யாணக் காட்சியைக் காண ஒரு பகுதியில் முப்பத்து முக்கோடி தேவர்கள், கின்னரர், கிம்புருடர் திரண்டதால் அந்தப் பகுதி சரிந்து விடுகிறது. பூமியை சமப்படுத்த குறுமுனி அகத்தியரை சிவபெருமான் அனுப்பி வைக்கிறார். அப்போது, அகத்தியர் பாடுவதுதான் இப்பாடல்.

எனக்கென்னவோ, இந்தப் பாடலை எழுதிய திரு. உளுந்தூர்பேட்டை சண்முகம் அவர்கள் உலகில் மக்களிடம் நிலவும் ஏற்றத் தாழ்வுகள், இமயம் குமரிக்கிடையே நிலவும் வேறுபாடுகள், சமயச் சண்டைகள், மனிதனின் திருப்தியில்லா பேராசை, நேர்மையின்மை போன்றவற்றை மனதில் கொண்டு எழுதியது போல இருக்கிறது. இதோ அந்தப் பாடல்.

உலகம் சமநிலை பெற வேண்டும்
உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்
நிறைவே காணும் மனம் வேண்டும்
இறைவா அதை நீ தர வேண்டும்
(உலகம் சமநிலை)
இமயமும் குமரியும் இணைந்திடவே
எங்கும் இன்பம் விளைந்திடவே
சமயம் யாவும் தழைத்திடவே
சத்தியம் என்றும் நிலைத்திடவே
(உலகம் சமநிலை)
அறிவும் அன்பும் கலந்திடவே
அழகில் வையம் மலர்ந்திடவே
நெறியில் மனிதன் வளர்ந்திடவே
நேர்மை நெஞ்சில் நிறைந்திடவே
(உலகம் சமநிலை)
.............
என்ன அருமையான பாடல். சீர்காழி திரு.கோவிந்தராஜன் அவர்களின் வெண்கலக் குரல் பாடல் வரிகளுக்கு மேலும் உயிரூட்டுகிறது.


உலகில் ஆண்டான்-அடிமை, இருப்பவன் -இல்லாதவன், உயர்ந்தவன் -தாழ்ந்தவன் என்ற நிலை மாறிட...

ஏழைகளின் குமுறலைப் பார்த்து எக்காளமிடும் ஏகாதிபத்யம் ஒழிந்திட.....

தனியுடமைக் கொடுமை நீங்கி பொதுவுடமை சமுதாயம் மலர்ந்திட...

அந்த சமதர்ம பூமியிலே எல்லாரும் மன நிறைவுடன் வாழ்ந்திட....

‘உலகம் சமநிலை பெற வேண்டும்
உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்’

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

gkrishna
22nd December 2014, 04:51 PM
திருத்தற்கு நன்றி வாசு

நன்றி கலை சார் .சில பல அலுவல்களால் திரியில் கலந்து கொள்ள முடியாமல் போய் விட்டது . வெண்கல குரலோன் சீர்காழி அவர்களின் 'உலகம் சம நிலை பெற வேண்டும் ' பாடலை மிக சரியான தருணத்தில் நினைவு படுத்தியதற்கு வாழ்த்துகள் பாராட்டுகள்

vasudevan31355
22nd December 2014, 06:34 PM
கலைவேந்தன் சார்!

தங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி!

மிக அழகாக foxconn தொழிலாளிகளின் நிலைமையைப் பிட்டு பிட்டு வைத்து விட்டீர்கள். படிக்கும் போது மனம் பதறுகிறது. எங்கள் நெய்வேலியில் கூட இது போன்ற நிகழ்வுகள் மறைமுகமாக வெளியே தெரியா வண்ணம் நிகழ்ந்து வருகின்றது. நிலம் கொடுத்தவர்களின் வாரிசுகளுக்கு இதுவரை வேலைகள் முறையாக வழங்கப் படவில்லை. அதனால் அடுத்த ப்ராஜெக்ட்டுக்குத் தேவையான நிலத்தைத் தர நிலத்தின் சொந்தக்காரர்கள் தயங்குகிறார்கள். பென்ஷன் என்ற ஒன்றே இங்கு கிடையாது. இது அதைவிட கொடுமை. விலை போகும் யூனியன்கள் இன்னும் அக்கிரமம்.

இந்த அக்கிரமங்கள் அழிந்து சமதர்மம் நிலைக்க வேண்டும் என்று நீங்கள் அளித்துள்ள பாடல் மிகப் பொருத்தமானது.

எனக்கும் மிக மிகப் பிடித்த பாடல் இது. காட்சிக்கான விளக்கத்தையும் நறுக்கென்று பதிந்து விட்டீர்கள். நன்றி!

இதோ! நாம் எல்லோருமே இப்பாடலைக் கேட்டு ரசிக்கலாம்.


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=HYVmsb7q7zc

rajraj
23rd December 2014, 02:43 AM
From Adhisaya PeN(1959)

eenaa meenaa deekkaa.......... (Hindi video)

http://www.youtube.com/watch?v=7TMgOamXFpA

Original tune from Aasha(1957)

eenaa meenaa deekkaa........... (Female version)

http://www..youtube.com/watch?v=tTAsZdC48Vw

eenaa meenaa deekkaa..............(Male version)

http://www.youtube.com/watch?v=sddv3_csYCo


HAPPY HOLIDAYS :)

gkrishna
23rd December 2014, 10:52 AM
வானொலி அண்ணா என்று அன்புடன் அழைக்கபடும் திரு கூத்த பிரான் அவர்கள் நேற்று மாலை காலமானதாக எனது அலுவலக நண்பர் ஒருவர் கூறினார் எனது அலுவலக நண்பருக்கு திரு கூத்த பிரான் அவர்கள் தூரத்து சொந்தம் என்றும் கூறினார். ஆனால் எந்த வலைபூவிலும் இந்த செய்தி வெளியடபடவில்லை. நமது திரி நண்பர்கள் யாரவது உறுதி செய்தால் நன்று. சென்ற வாரம் இது போல் பெருமைக்குரிய இயக்குனர்சிகரம் திரு பாலச்சந்தர் அவர்கள் காலமாகி விட்டார் என்று தகவல் பரவி நானும் சில நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டேன். ஆனால் பின்னர் அது வதந்தி என்று தெரிய வந்ததும் மிகவும் வருத்தம் அடைந்தேன் .திருமதி குஷ்பூ சுந்தர் கூட அவர்கள் இது போன்ற வதந்திகள் பற்றி வருத்தம் தெரிவித்து ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

http://i61.tinypic.com/5pj33a.jpghttp://3.bp.blogspot.com/--rHd5YCHW0I/TZCOZpKttJI/AAAAAAAAA9c/mtO7fO8pc4w/s1600/koo.jpeg

gkrishna
23rd December 2014, 12:20 PM
பழம்பெரும் நாடக நடிகர் கூத்தபிரான் காலமானார். தனது வாழ்க்கையை, ஆல் இந்தியா ரேடியோவில், அறிவிப்பாளராக துவக்கிய கூத்தபிரான், குழந்தைகளுக்காக அவர், நாடகங்களை எழுதி இயக்கி நடிக்கச் செய்தார். 1970ம் ஆண்டுவாக்கில், இளைய தலைமுறையினரிடையே, 'வானொலி அண்ணா' என்று அன்போடு அழைக்கப்பட்டார். கூத்தபிரான், குழந்தைகளுக்கு நல்ல போதனைகளை கற்பிக்கும் பொருட்டு, 800க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதி இயக்கியுள்ளார். சினிமா மற்றும் டிவிக்களின் வருகையால், ஒருபோதும் நாடகக்கலை பாதிக்கப்படாது என்றும், மற்ற ஊடகங்களை விட, நாடகங்களில் தான், பார்வையாளர்களின் பங்கு பெருமளவு இருப்பதாக அவர் கூறியிருந்தார். ஐந்து தலைமுறை மக்களை மகிழ்வித்த கூத்தபிரான், பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். 2003ம் ஆண்டில், மாநில அரசு இவருக்கு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்தது. மியூசிக் அகாடமி, நாடக கலா சிரோன்மணி விருது வழங்கி கவுரவித்தது.

JamesFague
23rd December 2014, 12:24 PM
a beautiful melody from Moondru Mudhichu. Adi Velli Thedum Inbam


http://youtu.be/BCE9JC_gil8

Russellzlc
23rd December 2014, 02:48 PM
நன்றி திரு.வாசு சார், திரு. கிருஷ்ணா சார். ‘உலகம் சமநிலை பெற வேண்டும்’ பாடலை எல்லாரும் ரசிக்கும் வகையில் தரவேற்றி உதவியதற்கும் நன்றி வாசு சார். பேசாமல் எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு லேப் டாப்பும் கையுமாக பழைய பாடல்கள், படங்களைப் பற்றி உங்களோடெல்லாம் பேசிக்கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது. என்றாலும் சில கடமைகளும் பொறுப்புகளும் நினைவுக்கு வருகின்றன. நன்றி சார்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

gkrishna
23rd December 2014, 04:58 PM
http://4.bp.blogspot.com/-RInaC1ICkGw/TqW_6YuvDcI/AAAAAAAABDU/ZVKD7ZeUsFc/s640/___20111013_1901636825.jpg

இயக்குனர் மகேந்திரன் இயக்கத்தில் வடிவுக்கரசி/ராதிகா/விஜயகுமாரி -மெட்டி

JamesFague
23rd December 2014, 05:05 PM
Superb Song from Adu Puli Attam - Vanukku thanthai evano



http://youtu.be/DsdH9WR0Ub0

gkrishna
23rd December 2014, 08:42 PM
very unfortunate news

director kb (k.balachandar) passed away

sun news

with deep sorrow

gkrishna

gkrishna
23rd December 2014, 08:46 PM
https://www.youtube.com/watch?v=aWRND9ELTmQ

Gopal.s
23rd December 2014, 08:55 PM
பாலசந்தர் மறைவுக்கு இந்த ஏகலைவன் அஞ்சலி.

chinnakkannan
23rd December 2014, 09:03 PM
இயக்குனர் சிகரம்கே.பாலச்சந்தரின் மறைவை அறிய மிக வருத்தமாக உள்ளது..அவரதுஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்..

gkrishna
23rd December 2014, 09:16 PM
இயக்குனர் சிகரம்கே.பாலச்சந்தரின் மறைவை அறிய மிக வருத்தமாக உள்ளது..அவரதுஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்..

thanks - dinamalar

1930 ஜூலை 9ம் தேதி திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள நல்லமாங்குடி என்ற கிராமத்தில், சினிமாவுக்கு தொடர்பில்லாத குடும்பத்தில் பிறந்தார். தந்தை கைலாசம், தாயார் காமாட்சியம்மாள். நன்னிலத்தில் பள்ளியில் படிக்கும் போதே நாடகம் மற்றும் சினிமா மீது விருப்பம் கொண்டார். நண்பர்களை வைத்து திண்ணை நாடகங்களை நடத்தினார்.
அப்போதைய தமிழ் சினிமாவின் "சூப்பர் ஸ்டாராக' விளங்கிய தியாகராஜ பாகவதரின் படங்களால் ஈர்க்கப்பட்டார். 12 வயதிலேயே சினிமா மற்றும் நாடகங்களுக்கு அடிக்கடி சென்றார். இதன் மூலம் அவர் மனதில் சினிமா ஆசை வளரத் தொடங்கியது. பின் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி., (விலங்கியல்) படிப்பில் சேர்ந்தார். கல்லூரியில் படிக்கும் போதும் கதை எழுதுவது, நாடகங்களில் நடிப்பது போன்ற திறமைகளை வளர்த்துக் கொண்டார். கல்லூரிகளில் விழா என்றால் அதில் பாலசந்தரின் நாடகம் கண்டிப்பாக இடம்பெறும். 1949ல் பட்டப்படிப்பை முடித்ததும், முத்துப்பேட்டையில் உள்ள பள்ளியில் ஓராண்டு ஆசிரியராக பணியாற்றினார். அங்கும் மாணவர்களை வைத்து நாடகம் நடத்துவார். 1950ல் சென்னை வந்தார். அங்கு மத்திய அரசின் அக்கவுண்டண்ட் ஜென்ரல் அலுவலகத்தில் கிளார்க் பணியில் சேர்ந்தார். அங்கு இருக்கும்போதே கிடைக்கும் நேரத்தில் நாடக கம்பெனியில் சேர்ந்து நாடகம் இயக்கும் திறமையை வளர்த்துக்கொண்டார். ஆங்கிலத்தில் வெளியான "மேஜர் சந்திரகாந்த்' என்ற நாடகத்தை தமிழில் மொழி பெயர்த்து இயக்கினார். இந்நாடகம் பெரும் வரவேற்பை பெற்றது. இதன் பின் நீர்க்குமிழி, சர்வர் சுந்தரம், மெழுகுவர்த்தி, நாணல், நவக்கிரகம் உள்ளிட்ட நாடகங்களையும் இயக்கினார்.

சினிமாவில் தடம்: வேலை பார்த்துக் கொண்டிருந்த போது, 1965ல் எம்.ஜி.ஆர்., நடிக்கும் தெய்வத்தாய் என்ற படத்துக்கு வசனம் எழுத வாய்ப்பு வந்தது. முதலில் தயங்கிய இவர், பின் சம்மதித்தார். இதன்பின் சர்வர் சுந்தரம் படத்துக்கு வசனம் எழுதினார். அதே ஆண்டு 1965ல் நீர்க்குமிழி என்ற திரைப்படத்தில் முதன்முதலாக இயக்குநராக அறிமுகமானார். நடிகர் நாகேஷ் கதாநாயகனாக நடித்தார். இவருடைய பெரும்பாலான படங்களில், குடும்பு உறவுகளுக்கு இடையேயான பிரச்னை, சமூகப் பிரச்சினைகள் ஆகியவை மையக்கருத்தாக அமைந்தன. இதன் பின் பல படங்களை இயக்கினார். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்களில் நீர்க்குமிழி, மேஜர் சந்திரகாந்த், இரு கோடுகள், பூவா தலையா, பாமா விஜயம், தாமரை நெஞ்சம், நான் அவனில்லை, புன்னகை, எதிர் நீச்சல், சிந்து பைரவி, அபூர்வ ராகங்கள், தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை, அக்னிசாட்சி, வறுமையின் நிறம் சிகப்பு, புதுப்புது அர்த்தங்கள், வானமே எல்லை, ஜாதிமல்லி, நூற்றுக்கு நூறு, கல்கி, பார்த்தாலே பரவசம் உள்ளிட்ட படங்கள் சிறந்த படங்களாக அமைந்தன.

தயாரிப்பு நிறுவனம்:1981ல் "கவிதாலயா" என்னும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கினார். இதன் மூலமாக பிற இயக்குனர்களின் கைவண்ணத்தில் பல திரைப்படங்களை அளித்தார். வெற்றிப்படங்களான அச்சமில்லை அச்சமில்லை, சிந்து பைரவி உள்ளிட்ட 56 திரைப்படங்களை தயாரித்துள்ளார்.

இவரால் உருவான நடிகர்கள்:தமிழ்த் திரையுலகில் இன்று முன்னணி நடிகராக விளங்கும் ரஜினியை 1975ல் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியவர் பாலச்சந்தர். அதே போல நடிகர் கமலஹாசன் ஏற்கனவே அறிமுகமாகியிருந்தாலும், பாலசந்தரின் அதிக படங்களில் நடித்துள்ளார். சிரஞ்சீவி, ராதாரவி, நாசர், பிரகாஷ்ராஜ், பூர்ணம் விஸ்வநாதன், சரத்பாபு, சார்லி, விவேக், எஸ்.பி.பி. என இவர் அறிமுகப்படுத்திய நடிகர்கள் ஏராளம். இன்னமும் இவரைக் கண்டாலே எழுந்து நின்றுவிடுவார் ரஜினி.

இவரால் வந்த நடிகைகள்: ஸ்ரீதேவி, ஜெயப்பிரதா, சரிதா, சுஜாதா, ஸ்ரீப்ரியா, ஜெயசுதா, ஜெயசித்ரா, கீதா, ஸ்ரீவித்யா, சுமித்ரா, ஜெயந்தி, மதுபாலா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பல நடிகைகளை அறிமுகப்படுத்தினார்.

புதுமுக நடிகர்கள் படம்:அவள் ஒரு தொடர்கதை போன்ற சில திரைப்படங்களை முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்தே இயக்கியிருந்தார். ஜெயலட்சுமி, ஸ்ரீபிரியா, விஜயகுமார், ஜெய்கணேஷ் ஆகியோர் அறிமுகமான இப்படம் ஒரு வெற்றிப்படமாகவும் அமைந்தது. பட்டினப்பிரவேசம் திரைப்படத்திலும், டெல்லி கணேஷ், சிவச்சந்திரன் போன்றோரை அறிமுகம் செய்தார். இதுவும் வெற்றிப்படமே.

பிறமொழி நடிகர்கள்:பிற மொழியிலிருந்தும் சிலரை தமிழில் அறிமுகப்படுத்திய பெருமையும் இவருக்கு உண்டு. அவர்களுள் சுஜாதா (அவள் ஒரு தொடர்கதை), ஷோபா (நிழல் நிஜமாகிறது), சரத்பாபு (நிழல் நிஜமாகிறது), சரிதா (தப்புத்தாளங்கள்), பிரகாஷ்ராஜ் (கல்கி) ஆகியோர் அடங்குவர்.

செஞ்சுரி:இதுவரை 101 படங்கள் இயக்கியுள்ளார். முதல்படம்: நீர்க்குமிழி; நூறாவது படம்: பார்த்தாலே பரவசம்; கடைசிப் படம்: பொய்.

நாடகத்திலிருந்து சினிமாவுக்கு...:எஸ். வி.சேகர் (வறுமையின் நிறம் சிகப்பு), மவுலி (நிழல் நிஜமாகிறது) ஒய். ஜி.மகேந்திரன் (நவக்கிரகம்) மற்றும் காத்தாடி ராமமூர்த்தி (பட்டினப்பிரவேசம்) என, முன்னரே நாடக மேடையில் புகழ் பெற்றிருந்த சிலரை சினிமாவுக்கு அழைத்து வந்தார்.

நடிகராக அவதாரம்:கல்கி, பொய், ரெட்டைச்சுழி, நினைத்தது யாரோ, உத்தம வில்லன் போன்ற படங்களில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார்.

ரஜினிக்கு பிடித்த படம்:பாலச்சந்தர் இயக்கிய படங்களில் அவள் ஒரு தொடர்கதை, அரங்கேற்றம் ஆகிய 2 படங்களும் ரஜினிக்கு பிடித்த படங்கள்.

நிறைவேறாத கனவு:தமிழ் சினிமாவின் இரு பெரும் நடிகர்களாக திகழும் ரஜினி - கமல் இருவரும் இணைந்து கடைசியாக நடித்த படம், 1979ல் பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான "நினைத்தாலே இனிக்கும்' திரைப்படம். 35 ஆண்டுகளுக்குப் பின் இருவரையும் வைத்து ஒரு திரைப்படம் இயக்குவதற்கு பாலச்சந்தர் திட்டமிட்டிருந்தார். அது நடக்கவில்லை என்பது தமிழ் ரசிகர்களுக்கு ஏமாற்றமே. பாலச்சந்தர், வெளிநாட்டில் படப்பிடிப்பை நடத்திய முதல் படமும் இதுவே.

யாருக்கு அதிக வாய்ப்பு:* தனது இயக்கத்தில் பாலச்சந்தர் அதிகமாகப் பயன்படுத்திய நடிகர்கள் ஜெமினி கணேசன், நாகேஷ், மேஜர் சுந்தரராஜன், கமலஹாசன், முத்துராமன் ஆகியோர். நாகேஷ் இவருக்கு விருப்பமான நடிகர்களில் ஒருவராக இருந்தவர். நடிகைகளில் சவுகார் ஜானகி, ஜெயந்தி, சுஜாதா, சரிதா ஆகியோரைக் குறிப்பிடலாம்.
* சக இயக்குநர்கள் மற்றும் தனக்கு பின் வந்த இயக்குநர்கள் யாராக இருந்தாலும், சிறந்த படம் கொடுப்பவர்களை தயங்காமல் பாராட்டி விடுவார்.
* சிவாஜியை வைத்து பாலச்சந்தர் இயக்கிய ஒரே படம் எதிரொலி. 1971ல் இப்படம் வெளியானது.
* பாலச்சந்தர் இயக்கிய முதல் வண்ண திரைப்படம் நான்கு சுவர்கள். ரவிச்சந்திரன் மற்றும் ஜெய்சங்கர் நடித்து 1971ல் வெளியானது. இவர் இயக்கிய கடைசி கருப்பு வெள்ளை திரைப்படம் நிழல் நிஜமாகிறது.
* துவக்க காலத்தில் நாடக பாணியிலான திரைப்படங்களை (மேஜர் சந்திரகாந்த், நீர்க்குமிழி, தாமரை நெஞ்சம்) இயக்கிய பாலச்சந்தர், நகைச்சுவையில் தனது முத்திரையைப் பதித்த படங்கள், அனுபவி ராஜா அனுபவி, பூவா தலையா, பாமா விஜயம் போன்றவை. இதன் பின் இவர் இயக்கிய நகைச்சுவைப் படங்களான தில்லு முல்லு, பொய்க்கால் குதிரை சிறந்த வெற்றியை பெற்றன.
* நூறு படங்களுக்கும் மேலாக இயக்குனராகப் பணியாற்றி இருந்தாலும், எம்.ஜி.ஆரை பாலச்சந்தர் இயக்கியதே இல்லை. அவரது ஒரே ஒரு படத்துக்கு (தெய்வத்தாய்) வசனம் மட்டும் எழுதினார்.
* பாலச்சந்தரின் இயக்கத்தில் சிந்து பைரவி படத்தில் தனது பாத்திரத்திற்காக, சுஹாசினி இந்திய அளவில் சிறந்த நடிகை விருது பெற்றார். இளையராஜாவிற்கும் சிறந்த இசையமைப்பாளர் விருதை ஈட்டித் தந்த படம் இது.
* பாலச்சந்தரின் இயக்கத்தில் ஜெயலலிதா நடித்த ஒரே படம் மேஜர் சந்திரகாந்த்.
* ஒருமுறை "பெப்சி' தலைவராக இருந்திருக்கிறார்.

இந்தி படங்கள்:ஏக் துஜே கேலியே, ஜரா சி ஜிந்தகி, ஏக் நயீ பஹேலி போன்ற படங்களை இந்தியில் இயக்கியுள்ளார்.

நான்கு மொழி:தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளில் திரைப்படங்களை இயக்கியவர்.

டிவி தொடர்கள்:தூர்தர்ஷனில் 1990ல் வெளிவந்த இவரது "ரயில் சிநேகம்' இன்றளவும் பேசப்படும் தொடர். கையளவு மனசு, காசளவு நேசம், காமடி காலனி, ரகுவம்சம், அண்ணி போன்ற15க்கும் மேற்பட்ட "டிவி' சீரியல்களை இயக்கினார். பின்னாளில் வெளிவந்த மெகா சீரியல்களுக்கு இவர்தான் வழிகாட்டி.

8 தேசிய விருது:இவர் இயக்கிய மற்றும் தயாரித்த இரு கோடுகள், அபூர்வ ராகங்கள், தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை, ருத்ரவீணா, ஒரு வீடு ஒரு வாசல், ரோஜா ஆகிய படங்களுக்கு மொத்தம் 8 தேசிய விருதுகள் கிடைத்தன.

விருதுகள்:1968 - 1993 - தமிழக அரசு விருது
1973ல் - கலைமாமணி விருது
1974 - 1994 - 12 முறை பிலிம்பேர் விருது (சவுத்)
1976 - 1982 - நந்தி விருது
1981ல் - பிலிம்பேர் விருது
1987ல் - மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது
1992ல் - அறிஞர் அண்ணா விருது
2008 - 39வது சர்வதேச திரைப்படவிழாவில் "வாழ்நாள் சாதனையாளர் விருது'
2011ல் - தாதா சாகிப் பால்கே விருது.
கவுரவ டாக்டர் பட்டங்கள் - 3 பல்கலை

பாலச்சந்தர் இயக்கிய திரைப்படங்கள்:
01.நீர்க்குமிளி
02.நாணல்
03.மேஜர் சந்திரகாந்த்
04.பாமா விஜயம்
05.அனுபவி ராஜா அனுபவி
06.எதிர் நீச்சல்
07. தாமரை நெஞ்சம்
08.பலே கொடலு
09. பூவா தலையா
10.சட்டெகலப்பு சடேயா
11.இரு கோடுகள்
12. பத்தாம்பசலி
13.எதிரொலி
14.நவகிரகம்
15.காவிய தலைவி
16. நான்கு சுவர்கள்
17.நூற்றுக்கு நூறு
18.பொம்மா பொருசு
19.புன்னகை
20.கண்ணா நலமா
21. டெள்ளக டகழா
22.அரங்கேற்றம்
23.சொல்லத்தான் நினைக்கிறேன்
24. அவள் ஒரு தொடர்கதை
25. நான் அவனில்லை
26. அபூர்வ ராகங்கள்
27.மன்மதநீலை
28.அந்துலாணி கதா
29. மூன்று முடிச்சு
30.அவர்கள்
31. பட்டின பரவசம்
32. அயினா
33. நிழல்நிஜமாகிறது
34.மாரோ சரிதரா
35. தப்பு தாளங்கள்
36. தப்பிடா தலா
37. நினைத்தாலே இனிக்கும்
38.அந்தமானிய அனுபவம்
39. நூல் வெலி
40. குப்பெடு மனசு
41.இடி கதா காடு
42.கழகன்
43.வறுமையின் நிறம் சிவப்பு
44. அகாலி ராஜ்யம்
45. அடவாலு மீகு ஜோகர்லு
46.எங்க ஊர் கண்ணகி
47. தொலிகோடி கூடிண்டி
48. தில்லு முல்லு
49. தண்ணீர் தண்ணீர்
50. எத் துஜே கே லியே
51.47 நாட்கள்
52. 47 ரோஜூலு
53.அக்னி சாட்சி
54. பெங்கியாழி அரலிடா ஹூவு
55. பொய்காலி குதிரி
56.ஜாரா சி ஜிங்காடி
57. கோகிலம்மா
58. எக் நாய் பகலி
59.அச்சமில்லை அச்சமில்லை
60. ஈரஐ ரேகேகலு
61. கல்யாண அகதிகள்
62.சிந்து பைரவி
63. முகிலே மலிகே
64. சுந்தர ஸ்வாப்நகலு
65. புன்னகை மன்னன்
66. மனதில் உறுதி வேண்டும்
67. ருத்ரவேணா
68. உன்னால் முடியும் தம்பி
69.புது புது அர்த்தங்கள்
70.ஒரு வீடு இரு வாசல்
71.அழகன்
72. அழகன்
73. வானமே இல்லை
74. திலோன் கா ரிஷ்தா
75. ஜாதி மல்லி
76. டூயட்
77.கல்கி
78. பார்த்தாலே பரவசம்
79. பொய்

gkrishna
23rd December 2014, 09:45 PM
பாலசந்தர் 101 படங்கள் இயக்கி உள்ளார் . அவரது 100வது படம் பார்த்தாலே பிரவேசம் ஆனால் தினமலர் 79 படங்களின் பட்டியல் தான் வெளியிட்டு உள்ளனர்

vasudevan31355
24th December 2014, 07:12 AM
http://andhrabuzz.com/upload/news/17024/kb_1.jpg

இயக்குனர்களின் தலைவன் திரு.கே பாலச்சந்தரின் மறைவு தாங்க முடியாத பேரிழப்பை தென்னக திரையுலகத்திற்கு ஏற்டுத்தியுள்ளது. சிகர சாதனைகளை புரிந்த அந்த சினிமா சிற்பியின் மறைவுக்கு என் கண்ணீரோடு கூடிய அஞ்சலியைக் காணிக்கையாக்குகிறேன்.

gkrishna
24th December 2014, 10:04 AM
தமிழ் சினிமாவின் பீஷ்மர். உறவுகளுக்கு, உணர்வுகளுக்குப் புது வண்ணம் பூசிய பிதாமகன். செஞ்சுரி போட்ட சிகரம்

http://www.vikatan.com/news/images/k_Balachandar2(1).jpg

gkrishna
24th December 2014, 10:05 AM
http://www.vikatan.com/news/images/k_Balachandar5.jpg

gkrishna
24th December 2014, 10:25 AM
நகைச்சுவை நடிகராக வலம் வந்த நாகேஷை, ஹீரோவாகப் போட்டு பல்வேறு நாடகங்களையும் படங்களையும் இயக்கியவர் இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர். நாகேஷின் குருநாதராகவும் நல்ல நண்பராகவும் திகழ்ந்த பாலசந்தர், நாகேஷ் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டது

இறந்தவர்களுக்கு, இருப்பவர்கள் செய்யும் சடங்குகளுள் ஒன்று வாய்க்கரிசி போடுவது. அதைச் செய்து அவரை மயானத்தில் தனியே விட்டுவிட்டு வந்து அசை போட்டுப் பார்க்கிறேன்.

ஆரம்ப காலம் தொடங்கி, அண்மையில் பதினைந்து நாட்களுக்கு முன்பு போய் பார்த்துப் பேசிவிட்டு வந்த சம்பவம் வரை ஒவ்வொரு விஷயமும் நினைவுக்கு வந்து நெஞ்சை அடைக்கிறது. ஆத்மார்த்தமாகப் பழகும் அந்த நண்பரை இழந்து மனமொடிந்து போயிருக்கிறேன்.


நான் பத்திரிகைப் பேட்டிக்காகவோ அல்லது ஒப்புக்காகவோ சொல்லவில்லை. நடிப்பில் சிவாஜிக்குப் பிறகு பேர் சொல்லும் பிள்ளையாக இருந்தவர் நாகேஷ். அதிலும் குணச்சித்திரமாகவும் காமெடியாகவும் இணைந்து நடிக்கும் நடிகர், இனிமேல் பிறந்தால் கூட அதிசயம் என்றுதான் சொல்ல வேண்டும். காமெடி டிராக்கில் மட்டும் ஓடிக் கொண்டிருந்த அவரை குணச்சித்திர நடிகனாக்கியது பற்றி நினைத்தால் பல சம்பவங்களைக் கூறத் தோன்றுகிறது.

சின்னச் சின்ன கம்பெனிகள் நடத்தி வந்த சில நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த நாகேஷ் பற்றி நண்பர்கள் சிலர் என்னிடம் சிலாக்கியமாகச் சொன்னார்கள். நானும் அரசுப் பணியில் இருந்தபடியே நாடகங்கள் எழுதி இயக்கிக் கொண்டிருந்தபடியால், இயல்பாக ஏற்பட்ட ஆர்வத்தில் நண்பர்கள் கூறிய நாடகத்தையும் நாகேஷையும் பார்க்கப் போனேன்.

அப்படிப் போன ஒரு நாடகத்தில் நாகேஷின் ஆரம்பக் காட்சியே எனக்கு பிரமிப்பு ஏற்படுத்திவிட்டது. அதாவது யாரோ விரட்டி வருவதுபோல பாவனை செய்தபடி, நீளமான சோபா ஒன்றை அனாயாசமாக தாண்டிக் குதித்தபடி வசனம் பேசுவார். அப்போது அவருடைய அங்கஅசைவுகளும் வசன உச்சரிப்புகளும் என்னைப் பெரிதும் கவர்ந்துவிட்டது. நாடகம் முடிந்ததும் தனியே பார்த்துப் பாராட்டிவிட்டு, `இப்படி நடிப்பது ரிஸ்க் இல்லையா? அடிபட்டால் என்னாகும்?' என்று அக்கறையுடன் கேட்டேன். அதற்கு நாகேஷ், `அடிபடலாம். அதற்கு பயந்து மெனக்கெடாமல் இருக்கக் கூடாது. ஆல் இன் கேம். அதிலும் நாடகத்திற்கு மற்ற தொழிலில் காட்டும் திறமை மற்றும் அக்கறையைவிட நூறு சதவிகிதம் அதிகம் காட்டினால்தான் ஜெயிக்க முடியும்!' என்று விளக்கம் சொன்னார்.

அவருடைய நாடகத்தைப் பார்க்கப் போன காலகட்டத்தில் நான் `மேஜர் சந்திரகாந்த்' நாடகம் நடத்திக் கொண்டிருந்தேன். அதைப் பார்க்க வந்த நாகேஷ், என் நாடகத்தை வெகுவாகப் பாராட்டிவிட்டு, மெதுவாக தனக்கும் என் குழுவில் இடம் வேண்டும் என்று கேட்டார். சின்னச் சின்ன கம்பெனிகளில் நடிக்கும் தனக்கு என் அங்கீகாரமும் ஆதரவும் வேண்டும் என்று வெளிப்படையாகப் பேசினார். குறைந்தபட்சம் `மேஜர் சந்திரகாந்த்' நாடகத்தில் ஒரு கேரக்டர் கொடுக்க வேண்டும் எனவும் கேட்டார்.


நான் அவரிடம் `உங்களுக்கான ஒரு ஸ்கிரிப்ட்டைத் தயார் செய்து, அதன் மூலம் உங்களை எங்கள் குழுவில் சேர்க்கிறேன்' என்றதும், சரி என்று போனவர், மறுநாளே என் அலுவலகம் வந்து தனக்கான ஸ்கிரிப்ட் தயாரா எனக் கேட்டார். இவ்வளவிற்கும் சினிமாவில் தலைகாட்டி பிரபல-மாகிவிட்ட அவர், நிஜமாகவே நாடகங்களில் நடிக்க அதுவும் என் நாடகங்களில் நடிக்கக் காட்டிய ஆர்வம் என்னைப் பெரிதும் ஈர்த்தது.

அதன் விளைவாக தீவிரமாக யோசித்தபோது, நாகேஷின் முகத்தில் இருந்த அம்மைத் தழும்புகளையும் அதனால் நாயகன் படும் மன உளைச்சல்களையும் வைத்து ஒரு கதை பண்ணலாமா என்று நாகேஷிடமே கேட்டேன். இந்த கதைக்களம் அவருக்குப் பிடித்துப் போய்விட்டது. உடனே என்னை அடுத்தடுத்து சந்தித்து ஒரு வகையில் நெருக்கடி கொடுத்து தனக்கான அந்த முழுக் கதையையும் உருவாக்க வைத்துவிட்டார். அதுதான் `சர்வர் சுந்தரம்.'
அந்தக் கதை தயாரானதும் தினமும் ரிகர்சல் பார்க்க சின்சியராக ஸ்பாட்டுக்கு வந்துவிடுவார். நான் ஏற்கெனவே சொன்ன மாதிரி சினிமாவில் பிஸியான நிலையிலும் அவருடைய நாடக ஆர்வம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. குறுகிய காலத்தில் மெனக்கெட்டுத் தயாரித்த `சர்வர் சுந்தரம்' நாடகத்தை அரங்கேற்றும் நாளன்று என்னை விட டென்ஷனாக இருந்த நாகேஷ் மெதுவாக, `பாலு, இந்த நாடகத்தோட முதல் டயலாக் தவிர மற்றதெல்லாம் மறந்துடுத்தே' என்றார். ஆனால் நாடகம் தொடங்கியதும் மடமடவென்று டயலாக்குகளை வீசி அசத்திவிட்டார். குறிப்பாக நாயகிக்கு பொக்கே கொடுத்துவிட்டு, பதிலுக்கு குப்பைக் கூடையை எடுத்துப் போகிறேன் என்று கூறியபோது, ஆடியன்ஸ் தட்டிய கைதட்டல்கள் இன்னமும் காதுகளில் ஒலிக்கிறது.


அந்த நாடகத்தின் காட்சி அமைப்புகள் சிறப்பாக இருந்தாலும் நாகேஷின் நடிப்பும் மெருகேற்றியதால் கிடைத்த பாராட்டு ஒவ்வொரு காட்சியிலும் பிரதிபலித்தது. இந்த நாடகம் நடக்கவிருந்த ஓரிரு நாளில் எம்.ஜி.ஆர். படங்களில் நடிக்க கால்ஷீட் கொடுத்திருந்தார். அவரிடம் நாடகம் பற்றிக்கூறி அனுமதி வாங்கி வந்து நடித்துவிடும் போக்கும் என்னைக் கவர்ந்தது.
`சர்வர் சுந்தரம்' நன்றாக போய்க்கொண்டிருந்தாலும் `மேஜர் சந்திரகாந்த்' நாடகத்திலும் தான் பங்குபெற வேண்டும் என்று தொடர்ந்து அடம் பிடித்து வந்தார். அதனால் ஒரு காட்சியில் பேப்பர் போடும் பையன் கேரக்டர் கொடுத்தேன். அதில் வந்தவரை ஆடியன்ஸ் பார்த்து `ஹே, நாகேஷ்' என்று கத்தினார்கள்.

இதெல்லாம் நடப்பதற்கு முன்பு நானும், நாகேஷும் இணைந்து ஒரு நாடகத்தில் நடித்தோம். முதலாளியாக நானும் வேலைக்காரராக அவரும் நடிக்கும்போது, திடீரென்று இஷ்டத்துக்கு வசனம் பேசி என்னைத் திகைக்க வைத்துவிட்டார். அதிலிருந்து என் நாடகங்களில் இப்படி அதிரடியாக புதிய வசனம் எதுவும் பேசக்கூடாது என்று வாய்ப்பூட்டு போட்டுவிட்டேன்.
பிறகு, நான் எழுதிய `நீர்க்குமிழி' நாடகத்தில் நாகேஷ் புகுந்து கலக்கினார். காமெடியனாக வந்த நாகேஷ், இந்நாடகத்தின் மூலம் பார்வையாளர்களை அழ வைத்துவிட்டார். பலமுறை நானே அவரது நடிப்பைப் பார்த்துக் கண்கலங்கியுள்ளேன்.

அந்த நாடகத்தில் பல பரிமாணங்களைக் காட்டி அசத்திய நாகேஷை மனதில் வைத்து `எதிர்நீச்சல்' நாடகம் எழுதினேன். அதுபற்றி எதுவும் நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இப்படிப் போன காலகட்டத்தில் `நீர்க்குமிழி' நாடகத்தைப் படமாக்கினோம். நாடகத்தில் நடித்தவர்களையே பெரும்பாலும் போட்டு குறைந்த பட்ஜெட்டில் தயாரான அப்படம் நிறைவான வருவாயும், பேரும் கொடுத்தது. குறிப்பாக இப்படம் பற்றி ஏவி.எம். செட்டியாரும், பாரதிராஜாவும் பிரமிப்புடன் பேசினார்கள்.

அதேசமயம் புதிய நாடகமாக `நவக்கிரகம்' எழுதினேன். அதுதான் என் கடைசி நாடகமாகிவிட்டது. காரணம், நான் உள்பட நாடகத்தில் பங்கேற்ற அனைவரும் சினிமாவில் பிஸியாகிவிட்டதால் நாடகத்திற்குத் தேவையான நேரத்தை எங்களால் ஒதுக்க முடியாமல் போனதுதான்.

ஆனால், சினிமாவில் தனிக் கொடி நாட்டி வெற்றிப் பாதையில் போய்க் கொண்டிருந்த எங்கள் நட்புக்கு யாரோ திருஷ்டி போட்டுவிட்டார்கள். பல ரூபங்களில் வந்த பிரச்னைகளால் பிரிந்துவிட்டோம்.

நாகேஷ் வீட்டில் நடந்த ஒரு துயரச் சம்பவத்தால் தனிமையில் வாழ ஆரம்பித்த நாகேஷை வைத்து `வெள்ளிவிழா' என்ற படத்திற்கு கால்ஷீட் வாங்கினேன். எனக்குக் கொடுத்த கால்ஷீட் தினத்தன்று எனக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு எம்.ஜி.ஆர். படமொன்றில் நடிக்கப் போயிருந்தார். அந்த விஷயம் தெரிந்து விசாரித்தபோது, அவர் என்னைப் பற்றிக் கூறிய வார்த்தைகள் காயத்தையும், ஆறாத வடுவையும் எனக்குள் ஏற்படுத்திவிட்டது. அதில் கோபமடைந்த நான், நாகேஷின் தொடர்பை அறவே துண்டித்துவிட்டு அவருக்காக உருவாக்கிய கேரக்டரில் புதுமுகம் ஒருவரை அறிமுகப்படுத்தினேன். அவர்தான் தேங்காய் சீனிவாசன்.

இந்த `வெள்ளிவிழா' பட ஷூட்டிங்கின் போது எனக்கு ஹார்ட்-அட்டாக் வந்து நினைவைத் துறந்து பல நாட்கள் ஆஸ்பத்திரியில் இருந்தேன். அப்போது தினமும் நாகேஷ் வந்து என்னைப் பார்த்துவிட்டுப் போவாராம். பின்னாளில் என் மனைவி சொல்லித் தெரிந்துகொண்ட விஷயமிது.

ஆனாலும் வருத்தம் குறையாத நிலையில், நாகேஷ் உறவே இல்லாமல் ஏழெட்டுப் படங்கள் எடுத்து அதில் பல ஹிட் ஆகின. பட வெற்றிவிழா சிலவற்றில் நாகேஷைப் பார்த்துப் பேச ஆரம்பித்த பிறகு சமரசம் ஆகிவிட்டோம்.


அடுத்து `அபூர்வ ராகங்கள்' படம் எடுக்கும்போது அதில் கண்டிப்பாக தனக்கு ஒரு ரோல் வேண்டும் என்று உரிமையுடன் கேட்டார் நாகேஷ். அவருக்காகவே டாக்டர் ரோலை உருவாக்கினேன். பிறகு அடுத்தடுத்து எங்கள் நெருக்கம் பலப்பட்டு விட்டது. அதே சமயம் நாகேஷ் பற்றி இன்னொரு விஷயத்தையும் கூற விரும்புகிறேன். என் நாடகங்கள் தொடங்கி கேள்விப்பட்ட அனைத்து நாடகங்களையும், சினிமாக்களையும் பற்றி விலாவாரியாக மணிக்கணக்கில் பேசும் நாகேஷ், தன் குடும்ப விஷயங்களைப் பற்றி ஒருபோதும் பேசியதில்லை. அந்த வகையில் நாகேஷ் இரும்பு மனசுக்காரர் என்றுதான் சொல்வேன். மொத்தத்தில் நாகேஷ் மறைவு நடிப்பிற்கு இழப்பு!

நாகேஷ் இன் மறைவு நடிப்பிற்கு இழப்பு என்று சொன்ன பாலச்சந்தர் இன் மறைவு இயக்கத்திற்கு பேரிழப்பு

https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcRoC8R1BmIeFyovN2IobCETmSItRkvyN tH65LRN8c6yY13OLQm7Ow

kalnayak
24th December 2014, 10:28 AM
பத்திரிக்கையுலகின் ஜாம்பவான் திரு. பாலசுப்பிரமணியம் அவர்கள் மறைந்து ஒரு வாரத்திற்குள் இயக்குனர் சிகரம் திரு. பாலச்சந்தர் மறைவு. இருவருக்கும் கண்ணீர் அஞ்சலிகள்.

gkrishna
24th December 2014, 10:31 AM
திரைப்படங்களைப் பொழுதுபோக்கு ஊடகமாக மட்டுமே எண்ணாமல், அதன் மூலம் சமுதாய மாற்றங்களைக் கொண்டுவர முடியும் என்று தன் படங்களின் மூலம் உணர்த்தியவர். பாலசந்தரின் பல படங்கள் சமுதாய மாற்றங்களைக் குறி வைத்து எடுக்கப்பட்டு அவை வெற்றி கண்டவை.
நேர்மையின் அவசியத்தை உணர்த்திய புன்னகை (1971),
குடும்பக் கட்டுப்பாட்டின் அவசியத்தைப் புரிய வைத்த அரங்கேற்றம் (1973),
பெண் சுதந்திரத்தை வலியுறுத்திய அவள் ஒரு தொடர்கதை (1974) மற்றும் அவர்கள் (1977),
சமுதாயத்தின் கீழ்த் தட்டு மக்களின் பிரச்சினைகளை முன் வைத்த தப்புத்தாளங்கள் (1978),
வேலை இல்லாத படித்தவர்களுக்கு ஒரு பாடமாக வறுமையின் நிறம் சிவப்பு (1980),
மக்களின் தண்ணீர் பிரச்சினையை முன்வைத்த தண்ணீர் தண்ணீர் (1981),
சமகால அரசியலில் உள்ள ஊழல் மற்றும் கட்சி மாற்றங்களின் பிரச்சினைகளைச் சாடிய அச்சமில்லை அச்சமில்லை (1984),
விவசாயத்தின் அவசியத்தையும், படித்தவர்கள் தன் கிராமங்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் முன் வைத்த உன்னால் முடியும் தம்பி (1988), பிரச்சினைகளுக்குத் தற்கொலை ஒரு முடிவு அல்ல என்பதை உணர்த்திய வானமே எல்லை (1993),
ஜாதி மத துவேஷங்களுக்கு எதிரான ஜாதி மல்லி (1993)

gkrishna
24th December 2014, 10:35 AM
கே.பாலசந்தர் பற்றி இயக்குனர் வசந்த பாலன் அவருடைய முகநூல் பக்கத்தில் வெளியிட்ட சில பதிவுகள்….

“இயக்குநர் கே பாலசந்தர் அவர்களின் மரணம் எனக்கு பாடம் கற்றுத்தந்த ஆசிரியனை இழந்தது போல் மனம் தவிக்கிறது. மாற்று சினிமாவின் பிதாமகன்.

கே பாலசந்தர் உலக சினிமாவரிசை இயக்குநர்களில் ஒருவராக வைத்து போற்றப்பட வேண்டியவர்.

கே பாலசந்தர் அவர்களுடைய திரைப்படங்கள் உலக திரைப்படவிழாக்களில் கலந்து கொள்ள தகுதியான திரைப்படங்கள்.கேன்ஸ் திரைப்படவிழாவில் முதல்பரிசை வெல்ல கூடிய திரைப்படங்கள்.

சாதிக்கு எதிராகவும் மதங்களுக்கு எதிராகவும் போலியான அரசியலுக்கு எதிராகவும் தன் சாட்டையை பலமாக சுழட்டியவர் கே பாலசந்தர் அவர்கள்.
தண்ணீர் தண்ணீர் படத்தை போன்ற அரசியல் படத்தை எடுத்து வெற்றி கண்டவர் கே பாலசந்தர் அவர்கள்..அந்த தைரியம் தான் பாலசந்தர்.
விபசாரிகளின் வாழ்வில் உள்ள அழகியலை நம் முன் துணிச்சலாக வைத்தவர் கே பாலசந்தர்……தப்பு தாளங்கள்..
இன்றைக்கு கூட எடுக்க துணியமுடியாத கதையை அன்றைக்கே அழகுணர்ச்சியுடன் இசையாக பதிவு செய்தவர் கே பாலசந்தர் அவர்கள் – அபூர்வ ராகங்கள்..
விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கையை 1970களிலே நம் முன் கருப்பு வெள்ளையில் ஓடவிட்ட துணிச்சல் தான் கே பி…
கதாபாத்திரத்தின் தன்மை ஒரு திரைக்கதை எழுத மிக முக்கியம் கதாநாயகனின் கேரக்டர்சேஷன் என்ன என்று அனைவரும் கேள்வி கேட்பார்கள்…இன்று அனைவரும பேசுகிற கேரக்டர்சேஷனை படத்தில் உள்ள அனைத்து கதாபாத்திரங்களுக்கும் உருவாக்கிய மேதை கே பி …….இருமல் தாத்தாவில் தொடங்கி ஆயிரம் உதாரணம் சொல்லலாம்.

நூற்றுக்கு நூ று திரைப்படத்தை ஒரு திரில்லராக எடுத்து வெற்றி கண்டவர் கேபி..

இன்று அனைவரும பேசுகிறார்கள்.பாடலுக்குள் ஒரு கான்செப்ட் வைக்கவேண்டும் என்று அதை அன்றே செய்து காட்டியவர் கேபி..
1.சிப்பி இருக்குது முத்து இருக்குது…
2.சங்கீத ஸ்வரங்கள்…
3.ஹலோ மைடியர் ராங்நம்பர்…
4.கடவுள் அமைத்துவைத்த மேடை…

கதாநாயகிகளுக்கு இன்று சினிமாவில் காட்சிகளை இல்லை…கதாபாத்திரத்திற்கு வலிமை இல்லை கேபியின் கதாநாயகிக்ள் மிக வலிமையான பெண்கள்…வல்லமை பொருந்தியவர்கள் கதாநாயகர்களை விட கதாநாயக பிம்பத்திற்குள் ஒளிந்து கொண்டவர் அல்ல கேபி, ஆண்மை பொருந்திய இயக்குனர் கேபி, என்றும் அழிக்க முடியாத பலம் கேபி.

கதாநாயக பிம்பத்திற்குள் வழிபாட்டின் தளமாக இருந்த சினிமா இண்டஸ்ரிக்குள், ஸ்டுடியோவில் வேலை செய்பவர் உண்டு, கொத்தடிமைகளாய் கதை இலாகா உண்டு, இயக்குநர்கள் அடிமையாக ஸ்டுடியோவில் இருந்த காலம் அது ….கதாநாயகர்களுக்கு மரியாதை உண்டு..தயாரிப்பு நிறுவனங்கள் கோலோச்சிய காலம் அது…அன்று இயக்குநர்கள் என்றொரு ஜாதி உண்டு, அதற்கென்று தனியொரு முகம் உண்டு, குணம் உண்டு என்று உருவாக்கிக் காட்டியவர் இயக்குநர் சிகரம் கேபி…

சினிமாவில் பல செண்டிமெண்டுகள் உண்டு,, முதல் காட்சியில் வெற்றி வெற்றியென கதாநாயகன் கத்தி கொண்டே வரவேண்டும் அல்லது கதாநாயகி ஆத்தா நான் பாஸாயிட்டேன் என்று சொல்லவேண்டும்…

டைட்டில் நம்பிக்கை கொண்டதாக இருக்கவேண்டும். அறச் சொல் இடம் பெறாத பாடல்வரிகள் வேண்டும் என்று இருந்த சினிமாவிற்குள் தன் முதல் பட டைட்டிலை ‘நீர்க் குமிழி’ என்று வைத்து வெற்றி கண்டவர் கேபி.

ஒரு திரைப்படத்தில் முதல் பாதி ஒரு கதை இரண்டாம் பாதி ஒரு கதை என்ற புதுமையை புகுத்தியவர் கேபி…ஒரு வீடு இரு வாசல்..

கேபி அவர்களுடை படத்தலைப்பு ஒரு கவிதை அதற்குள் கதை ஒளிந்திருக்கும்….
இருகோடுகள்
பாமாவிஜயம்
சிந்து பைரவி
அவள் ஒரு தொடர்கதை
ஜாதிமல்லி
நிழல் நிஜமாகிறது
கையளவுமனசு.

gkrishna
24th December 2014, 10:37 AM
இயக்குனர் கே.பாலசந்தர் பற்றி வைரமுத்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது,

“இதயத்தை உலுக்கிவிட்டது இயக்குநர் சிகரத்தின் இறப்பு. பாலசந்தர் என்பது ஒருவரின் பெயரன்று, தமிழ் சினிமாவின் துண்டுச் சரித்திரம். இந்தியாவின் தெற்கிலும் ஒரு சிகரம் இருக்கிறது என்று வடக்கை அண்ணாந்து பார்க்க வைத்தவர் பாலசந்தர்.

நடுத்தர வர்க்கத்தின் உறவுச் சிக்கல்களையும், மேட்டுக்குடி வர்க்கத்தின் உளவியல் சிக்கல்களையும் கலைவடிவமாக்கிய கலைமேதை. சலித்துப் போன பாணியில் புளித்துப் போன கதைகளால் அலுத்துப் போன தமிழ் சினிமாவை புதிய பாதைக்கு அழைத்து வந்தவர்களில் பாலசந்தரும் தலையாயவர்.
நாடகக் கலை அவரை வளர்த்தது, திரைக்கலையை அவர் வளர்த்தார். கறுப்பு – வெள்ளைப் படங்களுக்கு கிரீடம் சூட்டியவர் பாலசந்தர். தன் முதல் படத்திற்கே ‘நீர்க்குமிழி’ என்று பெயரிட்டு மூட நம்பிக்கையை முறியடித்தவர். கமல் – ரஜினி என்ற சரித்திரக் கலைஞர்களை வழங்கியது மட்டுமல்ல, நூற்றுக்கணக்கான சராசரிக் கலைஞர்களுக்கும் முகமும், முகவரியும் தந்தவர் அவர். பாடல்களுக்கும், வசனங்களுக்கும் அவர் கொடுத்த முன்னுரிமையால் தமிழ் தன்னைப் புதுப்பித்துக்கொண்டது.

அபூர்வ ராகங்கள் – அவள் ஒரு தொடர்கதை – அரங்கேற்றம் – தண்ணீர் தண்ணீர் – சிந்துபைரவி போன்ற கலைக் கருவூலங்களை உருவாக்கி தமிழ் சினிமாவுக்குப் பொற்காலப் பெருமையைக் கூட்டியவர் பாலசந்தர். நான் பழகிய வரையில் அவர் ஒரு குழந்தை. கள்ளம் கபடமற்ற கலைஞர். ஒரு தென்னங்கீற்றில் துள்ளித் திரியும் அணிலைப்போல சுதந்திரமான சுறுசுறுப்பு உள்ளவர்.

திரையுலகம் தாதாசாகிப் பால்கே விருதுபெற்ற உன்னத இயக்குநரை இழந்து நிற்கிறது. குடும்பம் தங்கள் தலைவனை இழந்து நிற்கிறது. பல இயக்குநர்கள் தங்கள் பிதாமகனை இழந்திருக்கிறார்கள். நான் கவிதை எழுதும் என் கட்டை விரலை இழந்து நிற்கிறேன்.
போய் வாருங்கள் இயக்குநர் சிகரமே உங்கள் புகழைக் காத்துக்கிடக்கும் பெருங்கடமையில் எங்கள் காலம் கழியும். நினைவுச் சின்னம் எழுப்ப வேண்டும் என்ற சராசரிக் கோரிக்கையெல்லாம் இந்தச் சமூகத்தில் எடுபடாது. நீங்கள் இயக்கிய கலைச் சித்திரங்களே உங்கள் நினைவுச் சின்னங்களாகும்.
உங்கள் புகழ் வாழ்க,”

http://www.screen4screen.com/wp-content/uploads/2014/12/vairamuthu-and-k-balachander-300x261.jpg

gkrishna
24th December 2014, 10:44 AM
அழகான பாத்திரப் படைப்பு, அழுத்தமான காட்சிகள், நச்சென்ற வசனங்கள், கதையோடு இழைந்த இசை, புதுமையான காட்சியமைப்பு

கலெக்டர் ஜானகி,
லலிதா,
m.r.பைரவி,
கவிதா,
அனு,
கண்ணம்மா,
சிந்து,
நந்தினி,
ஸ்ரீரஞ்சனி,
ப்ரியா ரஞ்சன்,
சஹானா.

இவை பெயர்கள் மட்டும் அல்ல. நம்மோடு வாழும் கதாபாத்திரங்கள்.

gkrishna
24th December 2014, 11:01 AM
தங்கு தடங்கல் இல்லாத மென்மையான இசையுடன் இனிமையான குரல்களால் முழுமை பெற்ற பாடல் .

விண்ணுக்கு மேலாடை ஆக சென்று விட்ட அந்த முழு மதியின் நினைவாக

http://www.youtube.com/watch?v=1lyf-YEM2_8

JamesFague
24th December 2014, 11:09 AM
In memory of KB Sir




http://youtu.be/WVZOHNxwTKk










http://youtu.be/Df_6sr1hXt0

gkrishna
24th December 2014, 11:16 AM
தெருவில் நடந்தபோது... கமல்


என் குரு கே.பாலசந்தர், 'அவள் ஒரு தொடர்கதை' படத்தை எடுத்துக் கொண்டிருந்த நேரம். அந்த படத்தில் நடிப்பதற்கு ஸ்ரீகாந்தை அழைத்தார்கள். அவரிடம் கால்ஷீட் இல்லை. அந்த வேடத்தில் தெருவில் போகிறவரை அழைத்து நடிக்க வைக்க முடியுமா? என்று பாலசந்தரும், தயாரிப்பாளர் ராம அரங்கண்ணலும் காரில் பேசிக்கொண்டு வந்தபோது, அந்த வழியாக நான் தெருவில் நடந்து போய்க்கொண்டிருந்தேன்.


இரண்டு பேரும் என்னைப் பார்த்து சிரித்தார்கள். தெருவில் போனவனை அழைத்து வந்து நடிக்க வைத்தார்கள். பிறகுதான் சிரித்த காரணத்தை சொன்னார்கள். அன்று நான் தெருவில் நடந்து போகாவிட்டால், எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்காது. எந்த சீட்டு குலுக்கிப்போட்டு நான் வந்தேன் என்று தெரியவில்லை.

என் குரு கே.பாலசந்தர இன்றும் இளைஞர்தான். வாலிபராஜாதான். என்னுடன், 'உத்தம வில்லன்' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

http://www.youtube.com/watch?v=gJQ-grJjRgU

gkrishna
24th December 2014, 12:22 PM
தன் கதாநாயகிகளை பற்றி கே பி

இனி, இந்த உடல் எனக்குத் தேவையில்லை என்பவள், ஒரு கட்டத்தில் விலை மாது என்று மாறி நிற்பாள். முன்பு தான் காதலித்த தங்கவேலு (சிவகுமார்) எதிர்பாராதவிதமாக, இவள் இருக்கும் இடத்துக்கு வந்து அதிர்ச்சியில் உறைந்து நிற்பான். ''இது தப்புனு தெரியும். ஆனா, நீயும் என்னைத்தானே விலை பேச வந்திருக்கே?'' என்று லலிதா கேட்க, கூனிப்போவான் தங்கவேலு

இடையில் தங்கையின் திருமணத்துக்காக வீட்டுக்கு வரும் லலிதா, அவள் அம்மா நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியாவாள். கோபம் வந்தவளாய் சுவரில் வரைந்த முக்கோண சின்னத்தை காட்டும் இடத்தில், சமூகத்துக்குப் பாடம் சொல்லும் லலிதா, அந்த விழிப்பு உணர்வு இல்லாததால்தான் தனக்கு இந்நிலை என்பதை பரிதாபமாக உணர்த்துவாள். தன் மாராப்பு விலகியதைக்கூட கவனிக்காமல் இருப்பவளிடம், தங்கை அதை சுட்டிக்காட்ட, 'ஆம்பளை என்பதே மரத்துப் போச்சு!' என்பாள். உண்மை எல்லோருக்கும் தெரிய வரும்போது வாய்க்கு வந்தபடி பேசி விரட்டி அடிப்பார்கள். தங்கவேலு அவளைத் திருமணம் செய்துகொள்ள, அவளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக மனநிலை பாதிக்கப்பட்டு, கடைசியாக கடலை நோக்கி ஓடுவாள். சூழ்நிலையாலும் சமூகத்தாலும் அணைந்துபோன மெழுகுவத்தியாக இருந்தாலும், நாம் வாழும் சமூகம் குறித்து நம்மை யோசிக்க வைத்தவள் லலிதா. எந்நாளும் பெண்மையின் அறிவையும், துணிவையுமே பேசுபவர்கள்தான் என் கதைநாயகிகள்

http://i1.ytimg.com/vi/C3vUZsnnn5c/mqdefault.jpghttp://4.bp.blogspot.com/-_6ec2YxMZrY/UNyYHI3aSII/AAAAAAAAEC0/YMapT3_yV64/s1600/Arangetram.jpg

RAGHAVENDRA
24th December 2014, 06:59 PM
http://www.thehindu.com/multimedia/dynamic/01731/25MP_BALACHANDER_1731046g.jpg

தமிழ் சினிமாவில் ஸ்ரீதருக்குப் பிறகு புதிய டிரெண்டை உருவாக்கியவர் கே.பி. நடிகர் திலகத்துடனான முதல் படத்திலேயே முத்திரை பதித்தவர். எதிரொலியோடு நடிகர் திலகம் கேபி கூட்டணி நின்று போனது தமிழ் சினிமாவிற்கு துரதிருஷ்டம். எதிரொலி மட்டும் வெற்றி பெற்றிருந்தால் அது எந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்திருக்கும் என்பது கணித்திருக்க முடியாததாகும். பல படங்களில் அவருடைய கதாபாத்திரங்கள் அவருக்குள் நடிகர் திலகத்தை உருவகப் படுத்தி அதனை வெளிக்கொண்டு வந்துள்ளதாக நான் பலமுறை உணர்ந்திருக்கிறேன். அதற்கு மிகச் சிறந்த உதாரணம் நான் அவனில்லை. ஜெமினி கணேசன் நடித்திருந்தாலும் கூட கேபியை பொறுத்தவரை அவர் அந்தப்பாத்திரத்திற்குள் நடிகர் திலகத்தை உருவகப்படுத்தியே வடிவமைத்திருந்தார் என நான் பலமுறை நினைத்திருக்கிறேன், இன்றும் நம்புகிறேன். அந்த உருவகத்தை ஜெமினி கணேசன் மூலமாக அவர் வெற்றிகரமாக வெளிக்கொண்டு வந்தார் என்றும் நான் எண்ணியதுண்டு. அவருக்குள் நடிகர் திலகத்தை வைத்து இன்னும் படங்களை இயக்கியிருக்கலாமே என்கின்ற ஏக்கம் நிச்சயம் இருந்ததுண்டு என்றும் அதை சில கதாபாத்திரங்களின் வடிவமைப்பின் மூலம் அவர் தீர்த்திருக்க வாய்ப்புண்டு என்றும் நான் நம்பி வருகிறேன். இதற்கொரு இன்னொரு உதாரணம், நூற்றுக்கு நூறு. இதில் வரும் பேராசிரியர் கதாபாத்திரத்தைப் பொறுத்த மட்டில் TO SIR WITH LOVE மற்றும் ஆண்டவன் கட்டளை இந்த இரண்டு நாயகர்களின் கலவையாக வடித்திருந்தார் என்பதே என் அபிப்ராயம்.

இன்னும் நூறாண்டுகளுக்கு கேபியின் சகாப்தம் நிலைத்திருக்கும். ஸ்ரீதரும் கேபியும், பீம்சிங்கிற்குப் பிறகு தமிழ்த்திரையுலகை வலுவாக தாங்கி நின்ற தூண்கள்.

ஆனால் இந்தத் தூண்கள் சாயவில்லை, சொல்லப்போனால் அந்தத் தூண்களின் வண்ணமாக இவர்கள் கலைந்திருக்கலாம். இவர்கள் வடித்த தூண்களாக மகேந்திரன், பாரதிராஜா, போன்றவர்கள் தாங்கி நிற்பார்கள். அவர்களுக்குப் பின்னும் அவர்களுக்கு அடுத்தடுத்த தலைமுறையினர் அந்தப் பொறுப்பை நிச்சயம் ஏற்பார்கள்.

வருங்காலத்தில் தமிழ் சினிமாவின் பாதை உலக உச்சியை நோக்கிச் செல்லும். அப்போது அவர்களை அங்கே வரவேற்க கே.பி., ஸ்ரீதர், பீம்சிங், போன்றோர் காத்திருப்பர்.

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/KBRECEIVINGSIVAJIGANESANAWARD_zps4f3372b6.jpg

sss
24th December 2014, 09:40 PM
கைலாசம் பாலசந்தர். இதுதான் இவரது முழுப்பெயர். கடந்த 1930ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் பிறந்த இந்த இயக்குனர் சிகரம், சிகரத்தையும் தாண்டி சொர்க்கத்தை அடைந்த நாள் இன்று. ஆம் இந்த சிகரம் இன்று நம்மை விட்டு பிரிந்துவிட்டது.

http://img.indiaglitz.com/tamil/news/mgr_kb_2412_m1.jpg


சிறுவயதிலேயே மேஜர் சந்திரகாந்த், நீர்க்குமிழி, மெழுகுவர்த்தி, சர்வர் சுந்தரம், நவக்கிரகம் போன்ற நாடகங்களை இயக்கி அவற்றை சென்னையில் நடத்தி வந்தார். பின்னர் முதன்முதலாக எம்.ஜி.ஆர் நடித்த தெய்வத்தாய் என்ற படத்திற்காக பாலசந்தர் வசனம் எழுதினார். இவருடைய திறமையை பார்த்த ஏ.வி.மெய்யப்ப செட்டியார் இவருடைய நாடகங்களுள் ஒன்றான சர்வர் சுந்தரம்' நாடகத்தின் கதை உரிமையை பெற்று திரைப்படமாக்கினார். இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் கிருஷ்ணன் பஞ்சு இயக்கினார்.

http://img.indiaglitz.com/tamil/news/balachandar_sl33m.jpg

தமிழ்த் திரையுலகிற்கு வசனகர்த்தாவாகவும், திரைக்கதை ஆசிரியராகவும் இருந்த பாலசந்தர் முதன்முதலில் இயக்குனர் ஆனது நீர்க்குமிழி என்ற படத்தின் மூலம்தான். அந்த படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து தனது நாடகங்களான மேஜர் சந்திரகாந்த், எதிர்நீச்சல், பாமா விஜயம், இரு கோடுகள் போன்ற படங்களை இயக்கினார்.

http://img.indiaglitz.com/tamil/news/kb_rajini_introm3.jpg

பாலசந்தரின் பெண்ணிய புரட்சி கருத்துக்கள் வெளிவர காரணமாக இருந்த படம் அரங்கேற்றம். பிராமின் குடும்பத்தில் ஆச்சாரமாக சூழ்நிலையில் பிறந்த ஒரு பெண், குடும்பத்தினர்களின் நலனுக்காக விபச்சாரத்திற்கு தள்ளப்படும் புரட்சி திரைக்கதை கொண்ட படமாக இது அமைந்தது. அதன் பின்னர் பாலசந்தர் இயக்கிய சொல்லத்தான் நினைக்கின்றேன், அவள் ஒரு தொடர்கதை, அபூர்வ ராகங்கள் ஆகியவை முக்கிய படங்களாகும். இதில் இன்று சூப்பர் ஸ்டார் என்று போற்றப்படுகின்ற ரஜினிகாந்த் அறிமுகமான படம் அபூர்வ ராகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அரங்கேற்றம் படத்திற்கு பின்னர் பெண்மைப்புரட்சி மற்றொரு செய்த படம் என்று அவள் ஒரு தொடர்கதை படத்தை கூறலாம். இந்த படத்தில் அறிமுகமான சுஜாதா பின்னாளில் பெரிய நடிகையானார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சுஜாதா வேடத்தில் ஜெயப்ரதா அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது

பின்னர் விதவைபெண்ணின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் "அவர்கள்", வேலையில்லா பட்டதாரிகளின் உணர்வுகளை வெளிப்படுத்திய 'வறுமையின் நிறம் சிகப்பு, ஆகியவை 1980களில் வந்த குறிப்பிடத்தக்க படங்களாகும்

http://img.indiaglitz.com/tamil/news/balachandar_sivajim1.jpg

எம்.ஜி.ஆரின் தெய்வத்தாய் படத்தில் தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கிய பாலசந்தர், சிவாஜி கணேசனை வைத்து இயக்கிய ஒரே திரைப்படம் எதிரொலி. சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக ஒரு நல்லவன் எப்படி படிப்படியாக கெட்டவனாக மாறி கொலை செய்ய துணியும் அளவுக்கு போகிறான் என்பதே இந்த படத்தின் கதை.

அதன்பின்னர் பாலசந்தர் இயக்கிய தண்ணீர் தண்ணீர், அக்னி சாட்சி, அச்சமில்லை அச்சமில்லை, சிந்து பைரவி, புதுப்புது அர்த்தங்கள், புன்னகை மன்னன், உன்னால் முடியும் தம்பி, போன்ற பல படங்களில் ஒவ்வொரு படத்திலும் ஒரு புரட்சி கருத்து இருக்க தவறுவதில்லை.

பெரிய திரையை போலவே சின்னத்திரையிலும் தனது தனி முத்திரையை பதித்தவர் பாலசந்தர். முதன்முதலாக சின்னத்திரையில் கையளவு மனசு என்ற தொடரை இயக்கினார். அதன் பின்னர் ரயில் சினேகம், ரமணி vs ரமணி, காதல் பகடை, ஒரு கூடை பாசம், பிரேமி, ஜனனி, அண்ணி போன்ற தொலைக்காட்சி தொடர்களை இயக்கினார்.

பாலசந்தர் இயக்கிய 100வது படம் பார்த்தாலே பரவசம் மற்றும் அவர் இயக்கிய கடைசி படம் பொய். இது அவரது 101வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒருசில படங்களில் அவர் நடிகராகவும் ஜொலித்துள்ளார். பாரதிராஜாவுடன் இவர் நடித்த ஒரே படம் ரெட்டைச்சுழி. இந்த படத்தை பிரபல இயக்குனர் ஷங்கர் தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விரைவில் வெளிவரவுள்ள கமல்ஹாசனின் உத்தம வில்லன் படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் பாலசந்தர். அதுவே அவர் நடித்த கடைசி படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://img.indiaglitz.com/tamil/news/rettasuli_24m.jpg

அவள் ஒரு தொடர்கதை, வறுமையின் நிறம் சிகப்பு, தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை,புதுப்புது அர்த்தங்கள் போன்ற படங்களுக்கு சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது பெற்ற பாலசந்தர், 1994ஆம் ஆண்டு வாழ்நாள் சாதனையாளர் என்ற விருதையும் பெற்றுள்ளார். மேலும் அண்ணமலை, அழகப்பா, மற்றும் சென்னை பல்கலைக்கழகங்கள் இவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்து கெளரவித்துள்ளன.

உலக சினிமா வரலாறு என்ற புத்தகம் எழுதப்பட்டால் அதில் பாலசந்தரின் பெயர் ஒரு பக்கம் அளவுக்காவது இருக்கும். அந்த அளவிற்கு உலகத்தரம் வாய்ந்த படங்களை இயக்கிய பாலசந்தரை பற்றி சொல்ல இந்த ஒரு பக்கம் போதாது. எனினும் அவரை பற்றி அவர் மறைந்த இந்நாளில் ஒருசில துளிகளை எடுத்து கூறியதில் பெருமைப்படுகிறோம். பாலசந்தரின் பூத உடல் வேண்டுமானால் மறையலாம். ஆனால் அவர் தமிழ் சினிமாவில் செய்த சாதனைகள் என்றுமே அழியாது. அழியாப்புகழ் பெற்ற பாலசந்தரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.

Thanks:http://www.indiaglitz.com

Gopal.s
25th December 2014, 05:38 AM
எனக்கு சினிமாவை நேசிக்க, சினிமா என்ற 20 ஆம் நூற்றாண்டின் வசீகர பேயை கனவாக,நனவாக ,லட்சியமாக,பொழுது போக்காக,இனிய சுவாசமாக்க ஆரம்பகர்த்தாக்கள் சிவாஜி,பாலசந்தர் என்ற இரு தமிழ் பால்கேக்கள்.பிறகு 6 வயது முதல் ,15 வயது வரை தமிழ்நாட்டில் வசதிகள் நிரம்பிய நகர கிராமமான தொழில் இரண்டுங்கெட்டான் நெய்வேலியில் வளர்ந்த, பொது நூலகத்தை,ஒரே ஒரு சினிமா கொட்டகையை மட்டும் நம்பி வாழ்ந்த ,சிறுவன்,தகப்பன் என்று ஒரு படி தாண்டி குதித்து ,விடலை என்ற அற்ப ,அற்புத சுகம் காணா இந்த தமிழ் மட்டுமே அறிந்த அப்பாவி சிறுவனுக்கு, பேசும் ஊமை படங்களை, அறிந்த மொழி எழுத்துக்களுடன் பார்த்து பெல்லினி,கோடர்ட்,பெர்க்மென் என்ற பெயர்களா தெரிந்திருக்க போகிறது? ஆனால் உண்மை என்னவென்றால் ,இவ்வளவும் தெரிந்த பிறகும், மனதில் இந்த மேதைகள் இன்னும் விஸ்வரூபம் எடுத்து நிற்பதை நன்கு உணர முடிகிறது. அதனால்தான் உலக மேதைகளை பற்றி எழுத லட்சம் மேதைகள், போலி தமிழ் பேதைகள் என போலி அறிவுஜீவி கும்பல்கள் மற்றோர் கருத்தை பிரதியெடுத்து ,பேதி போல எழுத்துக்களை கிருமிகளுடன் கழிந்து தள்ள, நானோ தமிழும் அறிந்து,சினிமாவையையும் அறிந்து,எழுத்துக்களையும் அறிந்து,எண்ணங்களையும் அறிந்து சுத்தமாக வாழ்வதால், இந்த சுற்றி வாழ்ந்த நாம் மட்டுமே நன்கு அறிய வாய்ப்பிருந்த ,அங்கீகாரம் பெறாத உலக மேதைகளை, மற்றவர் பார்க்க தவறிய கோணத்தை காட்டி வெளிச்சம் பரப்புவதை, நன்றி கடனாக, தமிழர்களை தமிழர்க்கு உணர்த்தும் பணியாக செய்தேன்? இதை என்னை தவிர எவனும் செய்திருக்க முடியாது என்ற அகந்தையும் எனக்குண்டு.

பாலசந்தர் என்ன செய்தார்?

தூய கலைக்கும் ,பாமர மனதுக்கும் கலப்பு மணம் புரிந்து இடைநிலை படங்கள் தந்தார்.

அறிவுக்கும், மனதுக்கும் இடைநிலையில் சமத்துவம் கண்டார்.

ஜன்னலை திறந்து உலக வெளிக்காற்றை மட்டுமே அனுபவிக்க செய்து காட்சியை மட்டும் தனதாக்கி போலி செய்தார்.

தொடர்ந்த ஒரு நிலைப்பட்ட கற்பனைகளை மட்டும் வைத்து கதைக்காமல் தன்னை புதிப்பித்து கொண்டே சோதனைக்கு ஆட்படுத்தி,நமக்கு கண்டுபிடிப்பின் பலனை மட்டும் ,அறிவு சார் நிதி கேட்காமல்,இலவசமாக மற்ற சராசரிகளுக்கு கொடுக்கும் விலையிலே தந்தார்.

மந்திர கடவுளாய் மாறி நரிகளை பரியாக்கினார்.புதுமை தந்தார்.மாற்றம் தந்தார். நனவான கனவுகளை,கனவான நனவுகளை
புத்திணைப்பில் தந்தார்.

சினிமா அறியாகுழந்தைகளாய் தா தா தா என்று தேவர் படங்களுடன் தத்தகாரம் பயின்ற அறிவு நோயாளி தமிழ் குழந்தைகளுக்கு தேனை ஊட்டினார்.மருந்தை ஊட்டினார்.தேனுடன் மருந்தும் ஊட்டினார்.முதல் ஊரறிந்த நல்ல சினிமா மருத்துவர் அவரே.

அவர் படங்களில் ஆச்சர்யங்கள் உண்டு.புது உலகங்கள் உண்டு. சுவைகள் உண்டு. களிப்பும் உண்டு. நவரசங்களும் உண்டு. ஆனால் பழக்கமான பதார்த்தங்களோ ,சமையலோ இல்லை.மாற்றம் விரும்பிய நாவுகளுக்கு அரு சுவை விருந்து.

உலகத்தோடு ஓட்ட விரும்பி குதித்து முன்னேற துடித்த உள்ளங்களுக்கு ,பழங்குடிகளின் ,மூட பழக்க வழக்கங்கள்,சடங்குகள் கொண்ட தமிழ் படங்கள் என்ற அறியாமை தீவை தாண்ட, இடை பாலமாகி ,இன்னொரு உலக சினிமா புது உலகுக்கு வேகமாக ஓட வைத்தார்.

புதிர் மனதை ,மேலும் புதிராக்கும் ,கனவு பட்டறையின் மனோதத்துவ மருத்துவராய்,நோய் முதல் நாடி குறை தீர்த்து, ஆரோக்கியம் கண்டார்.

யாரும் போகாத பாதைகளை முதலில் சென்று வென்று, மற்றவர்களும் தெளிவும் திடமும் கண்டு தன்னை தொடர்ந்து வர செய்த முதல் பயணி. தூரத்தில் தெரிந்த நல்ல சினிமா என்ற நிலவில் தமிழ் நாட்டில் இருந்து சென்று கால் வைத்த முதல் ஆம்ஸ்ட்ராங் .

இத்தனையும் மீறி கற்றாரை கற்றார் காமுற வேண்டும் என்ற மன பயிற்சியை கற்றாருக்கு கற்று கொடுத்து,பாரதி ராஜாவை,மகேந்திரனை,பாலு மகேந்திராவை திறந்த மனதுடன் கடிதம் கொடுத்து வரவேற்ற பக்குவ மனிதர்.

தமிழ் சினிமாவுக்கு திருவள்ளுவரை கொடுத்த அகர முதல் எழத்து ஆதி பகவன்.

எங்கெங்கோ சேகரித்து ,முறை படுத்தி சுமந்து,எனக்கு சுவாரஸ்ய புதிர்கனவுகளை விற்ற சுவாரஸ்ய ,நெறி -நிறை வியாபாரி.

சிவாஜி- பாலசந்தர் சொர்க்கத்திலாவது இணைந்து உங்கள் ஒரே படத்தை எதிரொலிக்காமல் ,இணைந்து ஒரு அதிசயத்தை வானுலக அமரர்களுக்கு தாருங்கள். அதை காண நானும் ஒரு நாள் அங்கு வருவேன்.

vasudevan31355
25th December 2014, 02:43 PM
http://merrychristmaswishesmessagess.com/wp-content/uploads/2014/12/happy-christmas-images.gif

chinnakkannan
25th December 2014, 02:47 PM
அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின நல் வாழ்த்துக்கள்..

எவ்வளவோ பாடல்கள் இருக்கலாம் கிருஸ்துமஸ் நன்னாளுக்கு. எனக்கு எப்போதும் மனதில் வருவது கிண்கிணிக் கிண்கிணி கிணி என வரும் மாதா கோவில் மணியோசை.. தவப்புதல்வன் பற்றி நிறையப் பேசியிருப்பார்கள்.. இந்தப் பாடலில் மாலைக் கண் நோயுடன் (அம்மாவிற்குத் தெரியக் கூடாது என்பதும் ஒன்று) ந.தி ஆடும் காட்சி மனதில் பதிந்திருக்கும் ஒன்று..

ஆடை அழகி மேரி உனக்கு முத்து மாலைப் பரிசு
மேடைப்பேச்சு மோகன் உனக்கு தங்கப் பேனா பரிசு
பாட்டுப் பாடும் பாபு உனக்கு பட்டுச் சொக்காய்ப் பரிசு
ஆட்டமாடும் ராணி உனக்கு தங்கப் பேனா பரிசு
சீருடை தாங்கிய ஷீலாப் பொண்ணுக்கு சிக்லட் பாக்கெட் பரிசு
நூற்றுக்கு நூறு மார்க்கு வாங்கிய நூர்ஜஹானுக்குவாட்ச்சு..( நினைவிலிருந்து எழுதுகிறேன்)

http://www.youtube.com/watch?v=tIu-muoZNls

uvausan
25th December 2014, 09:55 PM
இறப்பவர்களில் இரண்டு வகை :

1. வாழும்போதே இறப்பவர்கள் - இவர்களால் யாருக்கும் எந்த உபயோகமும் இல்லை - பூமிக்கு பாரமாக இருப்பவர்கள் - கடைசி வரை மற்றவர்களை வார்த்தைகளாலும் , செய்கையினாலும் துன்புறுத்தியே இன்பம் காணுபவர்கள் - இவர்கள் வாழும்போது - வாழ்க்கையின் அர்த்தத்தை உணராதவர்கள் - தனக்குத்தான் எல்லாம் வரும் , தெரியும் என்று நினைத்து ஒரு மாயையில் நாட்களை கடத்துபவர்கள் . இவர்கள் வாழும்போதே இறந்து விடுகின்றவர்கள் !!

2. இறந்தும் வாழ்பவர்கள் - இவர்களை உலகம் மறப்பதில்லை - பலயுகங்கள் கடந்தாலும் இவர்கள் வாழ்வார்கள் - மற்றவர்களின் வாழ்க்கையில் ஒளி தந்தவர்கள் - முன்னோடியாக இருப்பவர்கள் - இந்த வரிசையில் இரு திலகங்களுக்கு பிறகு KB இடம் பெறுகின்றார் - இவரை மறப்பது அவ்வளவு சுலபம் இல்லை ----

ஒவ்வொரு வருடமும் சில நல்ல உள்ளங்களை நம்மிடம் இருந்து பிரித்து கொண்டு சென்று விடுகின்றது - இந்த வருடம் நன்றாக வாழ்க்கையை அனுபவித்தவர்களை மட்டும் அல்ல , அரும்ப துடிக்கும் மொட்டுக்களையும் , தீவிரவாதம் என்ற போர்வையில் இரக்கமே இல்லாமல் சுட்டு தள்ளி விட்டது . அதன் கோர பசிக்கு பச்சிளம் குழந்தைகள் தானா கிடைத்தார்கள் ? வரும் வருடம் பசி இல்லாமல் வர வேண்டும் என்று ப்ராத்தனை செய்து கொள்வதை தவிர வேறு என்ன செய்ய முடியும் ??

Beautiful narration about LIFE - Still trying to understand !!

The Egg
By: Andy Weir

You were on your way home when you died.

It was a car accident. Nothing particularly remarkable, but fatal nonetheless. You left behind a wife and two children. It was a painless death. The EMTs tried their best to save you, but to no avail. Your body was so utterly shattered you were better off, trust me.

And that’s when you met me.

“What… what happened?” You asked. “Where am I?”

“You died,” I said, matter-of-factly. No point in mincing words.

“There was a… a truck and it was skidding…”

“Yup,” I said.

“I… I died?”

“Yup. But don’t feel bad about it. Everyone dies,” I said.

You looked around. There was nothingness. Just you and me. “What is this place?” You asked. “Is this the afterlife?”

“More or less,” I said.

“Are you god?” You asked.

“Yup,” I replied. “I’m God.”

“My kids… my wife,” you said.

“What about them?”

“Will they be all right?”

“That’s what I like to see,” I said. “You just died and your main concern is for your family. That’s good stuff right there.”

You looked at me with fascination. To you, I didn't look like God. I just looked like some man. Or possibly a woman. Some vague authority figure, maybe. More of a grammar school teacher than the almighty.

“Don’t worry,” I said. “They’ll be fine. Your kids will remember you as perfect in every way. They didn't have time to grow contempt for you. Your wife will cry on the outside, but will be secretly relieved. To be fair, your marriage was falling apart. If it’s any consolation, she’ll feel very guilty for feeling relieved.”

“Oh,” you said. “So what happens now? Do I go to heaven or hell or something?”

“Neither,” I said. “You’ll be reincarnated.”

“Ah,” you said. “So the Hindus were right,”

“All religions are right in their own way,” I said. “Walk with me.”

You followed along as we strode through the void. “Where are we going?”

“Nowhere in particular,” I said. “It’s just nice to walk while we talk.”

“So what’s the point, then?” You asked. “When I get reborn, I’ll just be a blank slate, right? A baby. So all my experiences and everything I did in this life won’t matter.”

“Not so!” I said. “You have within you all the knowledge and experiences of all your past lives. You just don’t remember them right now.”

I stopped walking and took you by the shoulders. “Your soul is more magnificent, beautiful, and gigantic than you can possibly imagine. A human mind can only contain a tiny fraction of what you are. It’s like sticking your finger in a glass of water to see if it’s hot or cold. You put a tiny part of yourself into the vessel, and when you bring it back out, you've gained all the experiences it had.

“You've been in a human for the last 48 years, so you haven’t stretched out yet and felt the rest of your immense consciousness. If we hung out here for long enough, you’d start remembering everything. But there’s no point to doing that between each life.”

“How many times have I been reincarnated, then?”

“Oh lots. Lots and lots. An in to lots of different lives.” I said. “This time around, you’ll be a Chinese peasant girl in 540 AD.”

“Wait, what?” You stammered. “You’re sending me back in time?”

“Well, I guess technically. Time, as you know it, only exists in your universe.
Things are different where I come from.”

“Where you come from?” You said.

“Oh sure,” I explained “I come from somewhere. Somewhere else. And there are others like me. I know you’ll want to know what it’s like there, but honestly you wouldn't understand.”

“Oh,” you said, a little let down. “But wait. If I get reincarnated to other places in time, I could have interacted with myself at some point.”

“Sure. Happens all the time. And with both lives only aware of their own lifespan you don’t even know it’s happening.”

“So what’s the point of it all?”

“Seriously?” I asked. “Seriously? You’re asking me for the meaning of life? Isn’t that a little stereotypical?”

“Well it’s a reasonable question,” you persisted.

I looked you in the eye. “The meaning of life, the reason I made this whole universe, is for you to mature.”

“You mean mankind? You want us to mature?”

“No, just you. I made this whole universe for you. With each new life you grow and mature and become a larger and greater intellect.”

“Just me? What about everyone else?”

“There is no one else,” I said. “In this universe, there’s just you and me.”
You stared blankly at me. “But all the people on earth…”

“All you. Different incarnations of you.”

“Wait. I’m everyone!?”

“Now you’re getting it,” I said, with a congratulatory slap on the back.

“I’m every human being who ever lived?”

“Or who will ever live, yes.”

“I’m Abraham Lincoln?”

“And you’re John Wilkes Booth, too,” I added.

“I’m Hitler?” You said, appalled.

“And you’re the millions he killed.”

“I’m Jesus?”

“And you’re everyone who followed him.”

You fell silent.

“Every time you victimized someone,” I said, “you were victimizing yourself. Every act of kindness you've done, you've done to yourself. Every happy and sad moment ever experienced by any human was, or will be, experienced by you.”

You thought for a long time.

“Why?” You asked me. “Why do all this?”

“Because someday, you will become like me. Because that’s what you are. You’re one of my kind. You’re my child.”

“Whoa,” you said, incredulous. “You mean I’m a god?”

“No. Not yet. You’re a fetus. You’re still growing. Once you've lived every human life throughout all time, you will have grown enough to be born.”

“So the whole universe,” you said, “it’s just…”

“An egg.” I answered. “Now it’s time for you to move on to your next life.”

And I sent you on your way.

The End.


இனிய கிறிஸ்துமஸ் திரு நாளில் வாழும் போதே இறக்காமல் , எல்லோரும் வாழும் வகையில் உதவியாக இருப்போம் !

இந்த பாடல்கள் உங்களுக்கு

http://youtu.be/Y-CHrEpLJsk

http://youtu.be/E9vrdsAPnvU

raagadevan
25th December 2014, 10:57 PM
Beautiful narration about LIFE - Still trying to understand !!


It is beautifully narrated, and it sure would a take several rounds of reading to understand it fully (if at all!)! :)

Thank you!

JamesFague
26th December 2014, 11:08 AM
Superb melody from Panner Pushpangal

http://youtu.be/ypcPeZMlVn4

gkrishna
26th December 2014, 12:22 PM
நேற்று ஜாலியாக ஜல்லி அடித்த ஒரு விவாதம் எங்கள் நண்பர்களிடத்தில்

பாலு வாலி குமார் , (1965 முதல் 1970 வரை )
பாலு கண்ணதாசன் விஸ்வநாதன் (1971 முதல் 1981 வரை)
பாலு வைரமுத்து இளையராஜா (1984 முதல் 1990 வரை)
பாலு வைரமுத்து ரஹ்மான் (டூயட் மற்றும் பார்த்தாலே பரவசம் )
பாலு புலமைபித்தன் மரகதமணி (அழகன் )

மிக நீண்ட நேரம் நடந்தது . எல்லோரும் அவரவர் கருத்தை அகந்தை இன்றி தெரிவித்தார்கள். விவாதத்திற்கு முடிவு ஏது ? .ஆனால் நல்ல பல பாடல்கள் அவரவர் பாணியில் சிலாகிகபட்டன

gkrishna
26th December 2014, 12:28 PM
இரண்டு தினங்களாக நிறைய தொலைகாட்சிகளில் பாலச்சந்தர்க்கு இரங்கல் தெரிவித்து பாடல்கள் மற்றும் திரைப்படங்களை ஒளிபரப்பினார்கள். ஆனால் ஒருவராவது கலாகேந்திரா கோவிந்தராஜன்,துரையையும், அருள் பிலிம்ஸ் ராம அரங்கன்னெல் பற்றியும் ,பிரேமாலயா வெங்கட்ராமனை பற்றியும் ஏதாவது தகவல் சொன்னார்களா ? என்று பார்த்தால்

https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcTSWbaQtmVy8q4fF9FpX_bsB_-4XWb-f4iyTjaPrB2LQ887LCmewQ

:)

Murali Srinivas
26th December 2014, 02:19 PM
கிருஷ்ணாஜி,

கேபி- வைரமுத்து- இளையராஜா கூட்டணியில் வெளிவந்த படங்களே மொத்தம் இரண்டுதான். அவை சிந்து பைரவி மற்றும் புன்னகை மன்னன். அவை முறையே 1985 தீபாவளி மற்றும் 1986 தீபாவளிக்கு வெளிவந்தன. அதற்கு முன்பு உள்ள காலகட்டத்தில் வைரமுத்து பாலசந்தர் படத்தில் முதன் முதலாக எழுதிய பாடல் தண்ணீர் தண்ணீர் படத்தில் இடம் பெற்ற எம்எஸ்வி இசையில் இசையரசியின் கண்ணான பூமகனே1 கண்ணுறங்கு சூரியனே! பாடல்தான். அதில் சரணத்தில் வரும் ஒரு வரியை ( என் இடுப்பில் வந்த நந்தவனமே) கேபி வெகு நேரம் சிலாகித்து பாராட்டியதாக வைரமுத்து எழுதியிருந்தார்.

நிழல்கள் மற்றும் வறுமையின் நிறம் சிவப்பு ஒரே நாளில் [1980 தீபாவளி] ரிலீஸ். அதன் பிறகு 1981-ல் எங்க ஊர் கண்ணகி, 47 நாட்கள் மற்றும் தண்ணீர் தண்ணீர் ஆகிய படங்களை கேபி இயக்கினார். இதில் தண்ணீர் தண்ணீர் படத்தில் வைரமுத்து இடம் பெற்றார். 1982-ல் அக்னி சாட்சி. 1983-ல் பொய்க்கால் குதிரை -இவை இரண்டும் வாலி. 1984-ல் அச்சமில்லை அச்சமில்லை வந்தது. அதில் விஎஸ்.நரசிம்மன்- வைரமுத்து கூட்டணி. அது 1985 ஏப்ரலில் வெளிவந்த கல்யாண அகதிகள் படத்திலும் தொடர்ந்தது. பிறகுதான் நான் முதலில் குறிப்பிட்ட சிந்து பைரவி மற்றும் புன்னகை மன்னன்.

1987 ஜனவரியில் வெளியான காதல் பரிசுதான் இளையராஜா இசையில் வைரமுத்து எழுதிய பாடல் இடம் பெற்ற கடைசி படம். 1987 தீபாவளிக்கு கேபியின் மனதில் உறுதி வேண்டும் வெளியானது. 1988 ஆகஸ்ட் உன்னால் முடியும் தம்பி ரிலீஸ் பிறகு 1989 தீபாவளிக்கு புது புதுப் அர்த்தங்கள் வெளியானது. இவை அனைத்தும் இளையராஜா வாலி.

1990-ல் ஒரு வீடு இரு வாசல் படத்தி கேபி இயக்கினார். அதற்கு இளையராஜா இல்லை. ஆனால் வைரமுத்துவும் இல்லை என்றுதான் நினைவு. பின் கேபி வைரமுத்து இணைந்தது டூயட் படத்தில்.

அன்புடன்

vasudevan31355
26th December 2014, 02:52 PM
1990-ல் ஒரு வீடு இரு வாசல் படத்தி கேபி இயக்கினார். அதற்கு இளையராஜா இல்லை. ஆனால் வைரமுத்துவும் இல்லை என்றுதான் நினைவு. பின் கேபி வைரமுத்து இணைந்தது டூயட் படத்தில்.



முரளி சார்,

நல்ல புள்ளி விவரங்கள். நன்றி!

'ஒரு வீடு இரு வாசல்' படத்திற்கும் வி.எஸ்.நரசிம்மன்தான் இசை. ஆனால் பாடல் ஆசிரியர் பெயர் போட மாட்டார்கள் என்று நினைவு. டைட்டில் மிகச் சுருக்காக முடிந்து விடும்.

gkrishna
26th December 2014, 02:56 PM
நல்லதொரு நீண்ட விளக்கத்திற்கு நன்றி முரளி சார், நீங்கள் சொல்வது அனைத்தும் சரியான தகவல். நேற்று நடந்த நண்பர்கள் ஜாலியான விவாதத்தின் முழு விவரங்களையும் நான் பதிவு இடவில்லை. பாலு வைரமுத்து இளையராஜா (1984-1990) என்று பதிவிட்டதால் வந்த வருட பிழை. புது புது அர்த்தங்கள்(1989),உன்னை சொல்லி குற்றமில்லை (1990) படங்களுடன் பாலு இளையராஜா கூட்டணி முடிவிற்கு வந்ததை குறிப்பிடுவதற்காக எழுதியது. மேலும் நீங்கள் கூறியது போல் பாலு வாலி இளையராஜா , பாலு வைரமுத்து நரசிம்ஹன் விவாதத்தில் இடம் பெற்றன. வானமே எல்லை 1992 பாலு வைரமுத்து,மரகதமணி பாடல் என்று நினைவு .ஒரு வீடு இரு வாசல் நரசிம்ஹன் இசை . பாடல்கள் எதுவும் இல்லை என்று நினைவு . அந்த படத்தில் உள்ள சார்லி பேசும் வசனம் ஒன்றை என் நண்பர் நினைவு கூர்ந்தார் . 'துணை நடிகை நடிகர்களை எக்ஸ்ட்ராஸ் என்று சொல்லாதே .கோ ஆர்டிஸ்ட் என்று சொல்லு '

ஸ்பெஷல் தேங்க்ஸ் முரளி சார் நிறைய விஷயங்களை அசை போட வைத்ததற்கு
பாலச்சந்தரின் படங்கள் பற்றி பாமரன் எழுதிய கடிதம் ஒன்று 90 களில் குமுதம் இதழில் பிரபலம் . பாலச்சந்தர் பற்றி நிறைய விவாதிக்கணும் முரளி சார்

gkrishna
26th December 2014, 03:00 PM
முரளி சார்,

நல்ல புள்ளி விவரங்கள். நன்றி!

'ஒரு வீடு இரு வாசல்' படத்திற்கும் வி.எஸ்.நரசிம்மன்தான் இசை. ஆனால் பாடல் ஆசிரியர் பெயர் போட மாட்டார்கள் என்று நினைவு. டைட்டில் மிகச் சுருக்காக முடிந்து விடும்.

ஒரு வீடு இரு வாசல் மொத்தமே 4 அல்லது 5 டைட்டில் கார்ட் தான் வாசு சார்

vasudevan31355
26th December 2014, 03:08 PM
முரளி சார்,

அதே 1984 ல் வெளியான பாலச்சந்தர் தயாரித்த, ஆனால் அவர் இயக்காமல் அமீர்ஜான் இயக்கிய, முரளி, அனிதா நடித்த கலாகேந்திராவின் 'புதியவன்' படத்தில் வி.எஸ்.நரசிம்மன், வைரமுத்து கூட்டணியே தொடர்ந்து இடம் பெற்றது.

Murali Srinivas
26th December 2014, 04:31 PM
நன்றி கிருஷ்ணாஜி & வாசு.

வாசு, கவிதாலயா பானரில் அமீர்ஜான் இயக்கத்தில் 1984 மார்ச்சில் வெளியான பூவிலங்கு [முரளியின் அறிமுக படம்] படத்திலும் இளையராஜா வைரமுத்து கூட்டணிதான்.

கிருஷ்ணாஜி,

வானமே எல்லை வைரமுத்துதான். யோசித்தபோது மற்றொர்ன்று நினைவிற்கு வந்தது அழகன் மட்டுமல்ல உன்னால் முடியும் தம்பியும் புலமைபித்தன்தான்.

அன்புடன்

gkrishna
26th December 2014, 05:35 PM
கவிதாலயா பானரில் அமீர்ஜான் இயக்கத்தில் 1984 மார்ச்சில் வெளியான பூவிலங்கு [முரளியின் அறிமுக படம்] படத்திலும் இளையராஜா வைரமுத்து கூட்டணிதான்.

வானமே எல்லை வைரமுத்துதான். யோசித்தபோது மற்றொர்ன்று நினைவிற்கு வந்தது அழகன் மட்டுமல்ல உன்னால் முடியும் தம்பியும் புலமைபித்தன்தான்.

அன்புடன்

அருமை முரளி சார்

சூப்பர் தகவல்

1993 ஜாதிமல்லி பாலு வைரமுத்து மரகதமணி

1996 தீபாவளி ரிலீஸ் கல்கி
பாலு தேவா இளந்தேவன் (இவர் பின்னாளில் அம்மாவுக்கு ஆஸ்தான அறிக்கை தயாரிப்பாளர் இப்போது வாசனின் த மா க ) கூட்டணியில் வந்தது .

1996 தேவாவிற்கு மறக்க முடியாத தீபாவளி
கோகுலத்தில் சீதை,பாஞ்சலகுரிச்சி,கல்கி,அவ்வை ஷண்முகி ,சேனாதிபதி

thanks murali

suvai
26th December 2014, 08:17 PM
Vanakam to all
Thank you for such details, it sure is amazing how you can transport one to the time period. Deepest sympathies to families who have lost their loved ones.

chinnakkannan
27th December 2014, 10:47 AM
நிறைய எழுத வேண்டியிருக்கிறது..பட் கொஞ்சம் கொஞ்சம் நிறைய வேலை.. ம்ம்

நேற்று எதேச்சையாக கிடைத்த கேப்பில் பார்த்த பாடல் இது..கேட்கமட்டும் செய்திருக்கிறேன் முதல் முறை பார்த்தேன்.. கேட்கும் போது கல்லூரி ராணிகாள் உல்லாசத் தேனிகாள் என்றுஆரம்பிக்கும்..வீடியோவில் சிங்காரச் சோலையே உல்லாச வேளையே என இருக்கிறது..துள்ளல் பாட்டு..அந்தக்காலத்திலும் கொஞ்சம் குத்துப்பாட்டு ஸ்டெப்ஸ் இருந்திருக்கிறது :) அப்புறம் வர்றேன்..

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=JAb6EUr1zYs

JamesFague
27th December 2014, 12:39 PM
IR at his best - superb song from Nenjathai Kiladhe



http://youtu.be/I0UFU8LzcTk

JamesFague
27th December 2014, 12:44 PM
Nice Melody from Padu Nilave - Malaiyoram Vesum Katru


http://youtu.be/D-9xg5Lx7V4

JamesFague
27th December 2014, 12:47 PM
One of the best movie of Prabhu Manasukkul Mathappu - Fine Melody song


http://youtu.be/iFAQS5YasYI

JamesFague
27th December 2014, 12:49 PM
Super Hit song of Ponthotta Kavalkaran



http://youtu.be/sxItiuEa9MQ

vasudevan31355
27th December 2014, 02:11 PM
'இளையராஜா என்றும் இனிய ராஜா' (தொடர் 26)

http://www.upperstall.com/files/imagecache/preview/profile/ilayaraja-stills-1.jpg

முள்ளும் மலரும் பாடல்கள்...

http://3.bp.blogspot.com/-yZGwL1by-9o/UaY81Kb89aI/AAAAAAAAJWw/Mpndy68bWmA/s640/music-composer-ilaiyaraaja-rare-photos+(1).jpg

http://thiruttudvd.net/wp-content/uploads/2014/07/MullumMalarum00000010.jpg

'முள்ளும் மலரும்' படத்தின் பாடல்கள் அனைவரும் அறிந்ததுதான். ஆனால் டைட்டில் பாடலான இந்தப் பாடலை பெரும்பாலானோர் மறந்திருக்கக் கூடும். காளி தன் சிறுவயது தங்கையுடன் ஏக்கம் காட்டும் காட்சிகள், கழைக் கூத்தாடி ஒருவன் தன் தங்கையின் உயிருடன் விளையாடும் போது தன் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அதைப் பார்த்து பதறியபடி இருக்கும் காளி சிறுவன், பணக்காரக் குழந்தைகள் குடும்பத்துடன் காரில் பயணித்து காளியின் தங்கைக்கு பிஸ்கட்டைக் காட்டியும் காட்டாமலும் கொடுக்காமல் விளையாட்டுத்தனம் செய்ய, அதைப் பார்த்து கொதிப்படையும் காளி. அவர்கள் நகர்ந்தவுடன் கல்லெடுத்து காரின் விளக்குகளை உடைக்கும் கோபம் என்று பின்னணியில் காட்சிகள் ஒவ்வொன்றாக நகர இளையராஜாவின் குரலில் ஒலிக்கும் பாடல். அப்படியே டைட்டிலும் ஆர்ப்பாட்டமில்லாமல் 'ஹேய் ஹேய் ஹேய்' என்று இரைச்சல் இல்லாமல், கிராபிக்ஸ் வித்தைகள் காட்டாமல், சூப்பர் ஸ்டார் என்று மின்னி மின்னி மறையாமல் ரஜினிகாந்த் என்று வெறுமனே அமைதியாக ஆரம்பமாகும். எது சூப்பர் என்று நீங்களே முடிவுக்கு வாருங்கள்.

நல்ல அழகான பாடல்தான். இன்னும் ஆழப்படுத்தி இருந்திருந்தால் ஹிட் அடித்திருக்கும். இளையராஜா குரல் பெரிய மைனஸ் பாய்ன்ட். சில இடங்களில் என்ன உச்சரிக்கிறார் என்றே புரியவில்லை. பூ, வாசம், வேலி, காவல் என்ற வழக்கமான பாசப் புலம்பல்களிலிருந்து விடுபட்டு வேறு ஏதாவது பாடலாசிரியர் (கங்கை அமரனோ) யோசித்து இருந்திருக்கலாம் இந்த வித்தியாச படத்திற்கு. வரிகள் நச்சென்று மனதில் பதியவில்லை. ஆனால் படமாக்கிய முறை கொஞ்சம் திருப்தி தருகிறது.

இருந்தாலும் தப்பில்லை. உணர்வே இல்லாத, ஏற்ற இறக்கங்களே இல்லாத, கட்டையான ராஜா குரல் அல்லாமல் ஜேசுதாஸ் அல்லது பாலாவிற்கு தந்திருக்கலாம். ஜெயச்சந்திரன் கூட ஓகே.

மானினமே முல்லப் பூ வண்ணமே
மானினமே முல்லப் பூ வண்ணமே
மயிலே குயிலினமே
மயங்குது என் மனமே
ஏ அன்னமே
வண்ணப் பூ வனமே
வழித்துணை கொடுக்கணுமே

(மானினமே)


ஆச விதை போட்டு வச்சே
நீரும் இறைச்சேன்
அல்லும் பகல் ஆசப்பட்டு
காத்துக் கிடந்தேன்
பூப்பதங்கு ஒண்ணே ஒண்ணு
புத்தம் புது ரோசாப் பூவு
ஏ சொர்ணமே
இது என் வர்ணமே

(மானினமே)


பாசத்தில காவலிட்ட வேலி இருக்கு
பாத்தியிலே பன்னீர ஊத்தி வளர்த்தேன்
மொட்டு விட்டதம்மா அங்க
முல்லை மனம்தானே இங்க
என் உறவு இது என் கனவு

(மானினமே)


வாசமுள்ள பூ இருக்கு ஏழை கையில
ஆசைப்பட்டு பூசிக்குது மஞ்ச வெயிலே
பந்தத்துக்கு வேலி இல்ல
பாசத்துக்கு நாளும் இல்ல
பூ முல்லைப் பூ
மனசோ வெள்ளைப் பூ

(மானினமே)


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=n1tp7U4fHm0


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=EcDnOP3_uVI

uvausan
27th December 2014, 08:11 PM
இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் ------


இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்ப்பேன் - தர்மம் செய்ய ஒன்று - செய்த தருமத்தை மறக்க ஒன்று ------


ஒரு பட்டி மன்றத்தில் கேட்டது :

கார்மேகமும் , மேலே போகின்ற ஒரு தொழிற்சாலையின் கருப்பு புகையும் ஒரே நிறத்தில் தான் இருக்கும் - மேலே போவதில் அர்த்தம் இல்லை - கீழே வேருக்கு வரணும் - மழையினால் மட்டுமே கீழே வர முடியும் நல்லவன் திரும்பி வருவான் ..கெட்ட பழக்கங்கள் உள்ளவர்கள் எல்லோரும் கெட்டவர்களா , எனக்கு தெரியாது .; நல்ல பழக்கங்கள் உள்ளவர்கள் எல்லோரும் நல்லவர்களா , எனக்கு தெரியாது ஆனால் சிந்தனைகள் செயலாக மாறும் , செயல்கள் பழக்கங்களாக மாறும் ; பழக்கங்களே ஒரு கலாச்சாரமாக மாறும் ; ஒரு கலாசாரம் தான் ஒரு அடுத்த தலைமுறையை காப்பாத்தும் என்பது மட்டும் தெரியும் -------

ஒரு மாணவன் என்னிடம் கேட்டான் - " ஏன் மேடம் எழுந்திருச்சு நின்றால் தான் மரியாதையா ? - நான் சொன்னேன் " எழுந்திருச்சு நின்றால் தான் மரியாதையா என்று எனக்கு தெரியாது -- ஆனால் மரியாதை நிற்கும் என்று மட்டும் தெரியும் !" நல்லவனாக ஒருவன் இருக்க வேண்டும் என்பதற்கு யாருக்கும் ஒரு probation period என்பதெல்லாம் கிடையாது --

ஒரு மனிதனை இன்னொரு மனிதன் பார்க்கும் போது அவன் உள்ளத்தில் நம்பிக்கை பிறக்க வேண்டும் - Action Start - replay என்று நல்லது செய்வதற்கு சொல்ல முடியாது --- " நாம் fair weather good people ஆக இருப்பதில் அர்த்தம் இல்லை -தட்ப வெப்ப சூழ்நிலை நன்றாக இருக்கும் போது , கண்ணுக்கு முன்னால் அபாயம் இல்லாமல் இருக்கும் போது எல்லாராலும் நல்லவனாக இருக்க முடியும் - நல்லவனை தூக்கி கடுமையான சூழ்நிலையில் போடுங்கள் - வெளியில் நல்லவனாகவே வருகிறானா ? - அப்படி வந்தால் அவன் தான் மனிதன் ---------

கீழ் வரும் ஒரு சம்பவம் நல்லவர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்பதை உறுதி படுத்தும் படியாக இருக்கின்றது - இப்படி முகம் தெரியாத எவ்வளவோ மனிதர்கள் , அவர்களை சந்திக்கும் வாய்ப்பு நமக்கு கிட்டாமலேயே போகலாம் - அவர்கள் எங்கோ இருப்பதினால் தான் இன்னும் பலர் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிண்டார்கள் , மழை இன்னும் பெய்து கொண்டிருக்கின்றது !!


காணிக்கை

தொழிலதிபர் சங்கரகிருஷ்ணன் என்றால் விருதுநகர் வட்டாரத்தில் மிகவும் பிரசித்தம். விருதுநகர் என்ன, தமிழ்நாடு முழுவதுமே சமீபகாலமாக அவர் பிரபலமடைந்து வருகிறாரே! வாரப் பத்திரிகைகளில் கவர் ஸ்டோரி, தொலைக்காட்சிகளில் நேரடிப் பேட்டி என, பொதுஜனங்களுக்கு அவரை அறிமுகம் செய்துவைப்பதில் போட்டாபோட்டிதான். சமையல் எண்ணெய், பருப்புவகைகள், உயர் ரக மளிகைச் சாமான்கள் என அவரது நிறுவனத் தயாரிப்புகள் பலரது சமையலறைகளுக்குள் நுழைந்து, அவரது புகழையும் மணம் கமழச் செய்கின்றன.

சங்கரகிருஷ்ணன் பரம்பரைப் பணக்காரர் அல்ல. அதற்காக தடாலடியாகப் பணம் சேர்த்த, தாதாத்தனங்கள் கொண்ட திடீர் பணக்காரரும் அல்ல. செங்கற்களை அடுக்கி, கட்டடம் எழுப்புவதுபோல் படிப்படியாக உழைப்பினாலும், திறமையினாலும் முன்னுக்கு வந்தவர். அவருக்குத் தனது உழைப்பு, திறமை இவற்றைவிட வேறு ஒரு விஷயத்தில் மிகுந்த நம்பிக்கை உண்டு. அது, திருப்பதி பாலாஜி.

திருப்பதி சென்று திரும்பி வந்தால் திருப்பம் நேரும் என்று பெருமாள் பக்தர்கள் கூறுவது, சங்கரகிருஷ்ணன் வாழ்க்கையில் நூற்றுக்குநூறு நிஜம். அவரது மறைந்த நண்பன் கோவிந்தசாமிதான் 15 வருடங்களுக்கு முன்பு முதன்முறையாக அவரைத் திருப்பதிக்கு அழைத்துச் சென்றவன். கூட்டிச் சென்ற கோவிந்தசாமிக்கு கோவிந்தா சாமி கொட்டிக் கொடுத்தாரோ இல்லையோ, கூடச் சென்ற சங்கரகிருஷ்ணனுக்கு திருப்திகரமான திருப்பங்களைக் கொடுத்தார். அதற்குப் பிரதி நடவடிக்கையாக, அவர் ஆண்டுதோறும் ஒரு கணிசமான தொகையை திருப்பதி உண்டியலில் சேர்ப்பது வழக்கம்.

இப்போதும் தனக்கு ஏற்றம் தரும் ஏழுமலையானைத் தரிசித்து அவருக்கு காணிக்கையைச் செலுத்துவதற்காக காரில் பயணமானார் சங்கரகிருஷ்ணன். டிரைவர் பல முறை சாரி கேட்டு, அவசர வேலையாக ஊருக்குச் சென்றுவிட்டதால், காரை அவரது நண்பனும் கம்பெனி ஆடிட்டருமான ராமபத்ரன் ஓட்டிவந்தார். ராமபத்ரன் கிண்டல் பேர்வழி. ஆரம்பகாலத்தில் திருப்பதிக்குக் கூட வரும்போது, “ஏம்பா உன் ஸ்லீப்பிங் பார்ட்னருக்கு டிவிடெண்ட் கொடுக்கவா?” என சங்கரகிருஷ்ணனிடம் கேலி செய்வார். இல்லையேல், “என்னப்பா, ‘உயர்’ அதிகாரிக்கு கமிஷன் கொடுக்கப் போலாமா?” எனச் சீண்டுவார். இதற்கெல்லாம் சங்கரகிருஷ்ணன் அசைந்துகொடுப்பதில்லை. “எனது வளமான வாழ்க்கைக்கு வெங்கடேசப் பெருமாள்தான் காரணம். யார் கேலி பேசினாலும் நான் ஏற்கெனவே அவர்கிட்ட பிரார்த்தனை செய்த மாதிரி வருஷாவருஷம் எனது காணிக்கையைக் கொடுத்துட்டேதான் இருப்பேன்” என்று கூலாக பதிலளிப்பார்.

சென்னை மாநகரைத் தாண்டி ஆந்திர எல்லையைத் தொட இருந்தபோது, கார் திடீரென மக்கர் செய்தது. புஸ் புஸ் என்று சப்தத்துடன் ஏதோ ஒரு கிராமப்பகுதியில் நின்றுவிட்டது. சங்கரகிருஷ்ணனின் டிரைவர், தான் இந்த முறை திருப்பதி வரவில்லை என்பதால், வழக்கத்தைவிட கூடுதல் கவனத்துடன் காரை சர்வீஸுக்கு விட்டு, பெட்ரோலை நிரப்பி, எல்லாவற்றையும் சரிபார்த்துதான் ஒப்படைத்தான். பிறகு எப்படி?

பேச்சு சுவாரஸ்யத்தில் திருப்பதிக்குச் செல்லும் சரியான பாதையை விட்டு, வேறு எங்கோ கார் வந்திருப்பது அப்போதுதான் தெரிந்தது. பக்கத்தில் மெக்கானிக் ஷாப் ஏதும் இருக்குமா? சரியான நெடுஞ்சாலைக்கு எப்படிப் போவது? சங்கரகிருஷ்ணனுக்கு சென்டிமென்டாக, தான் முதன்முதலாக திருப்பதிக்குப்போன ஜூலை மாதம் 2-ம் தேதி பாலாஜியை தரிசித்தாக வேண்டும். இதுவரை வழியில் எந்த இடைஞ்சலும் வந்ததில்லை. சொகுசாகத்தான் வருவார். தரிசனத்துக்குப் பின் ஒவ்வோர் ஆண்டும் வளர்ச்சியும் பிரமாதமாக இருக்கும்.

சே! இந்தமுறை இப்படி நடுவழியில் மாட்டிக் கொண்டோமே என சங்கரகிருஷ்ணனுக்கு அவரது இயல்பை மீறி ஆத்திரமும் ஏமாற்றமும் பொங்கி வந்தது. “அந்த முட்டா டிரைவருக்கு லீவு கொடுக்காம, வாடான்னு சொல்லியிருக்கணும். அவன் கூட வந்திருந்தா வழியும் தப்பியிருக்காது. ஏதாவது சரிபண்ணி கூட்டிப்போயிருப்பான். இப்போ ஒரு மணி நேரமா சும்மா நிக்கறோமே” என்று புலம்பினார்.

“கோபப்படாதே சங்கரகிருஷ்ணா, எல்லாம் உன் பெருமாள் விளையாட்டுதான்” என்று அப்போதும் கிண்டலடித்தார் ராமபத்ரன். “சரி, சரி, பக்கத்துல எங்காவது விசாரிப்போம்” என்று கூறி சங்கரகிருஷ்ணனை அழைத்துக்கொண்டு அவர் சற்று நடந்துவந்தபோது பக்கவாட்டில் பழமையான, சற்று சிதிலமடைந்த கோவில் ஒன்று தென்பட்டது. “வாப்பா, இந்த சாமிட்ட பிரார்த்தனை செஞ்சுட்டு, அந்த சாமியைப் பாக்கறதுக்கு உபாயம் தேடுவோம்” என்றார் ராமபத்ரன். சங்கரகிருஷ்ணனால் தட்ட முடியவில்லை. ஏதாவது வழி கிடைக்குமே என்ற எண்ணத்தோடு, ஏதோ ஒன்று அந்தக் கோவில்பால் அவரை ஈர்த்தது.

அருகே சென்றபோது சிதிலமடையத் தொடங்கியுள்ள அந்தக் கோவில் சிவன் கோவில் எனத் தெரிந்தது. வாசலிலேயே பட்டர், இவர்களுக்காகக் காத்திருந்தவர்போல் நின்றிருந்தார். “வாங்கோ, வாங்கோ” என வாய் நிறைய சிரிப்போடு வரவேற்றார். “என்னமோ தெரியலை, வழக்கமா பத்து மணிக்கு நடை சாத்திருவேன். ஏன்னா பெரிசா ஒண்ணும் ஆள் வரமாட்டா. உங்களைப்போல பெரிய மனுசா இங்க வர்ரதே அபூர்வம். இன்னைக்கு எம்பையனோட காலேஜ் அட்மிஷன் விஷயமா பெரிய மனுஷா ஒருத்தரைப் பார்க்கணும். என் பையன் வர்ரதுக்காக காத்துண்டுருக்கும்போதுதான் உங்களைப் பார்க்க முடிஞ்சது. எல்லாம் ஈஸ்வர சங்கல்பம். வாங்கோ, உள்ளபோய் சுவாமியை தரிசிக்கலாம்” என்றார் பட்டர்.

நல்ல அருமையான கோவில்தான். ஆனால் அங்கங்கே புதர் மண்டிக் கிடந்தது. ஏதாவது சோழனோ, பல்லவனோ கட்டியிருக்கணும். அது சரிதான் என்பதைப்போல, “சார்! இது ஆந்திராவை ஒட்டி தொண்டை மண்டலமா இருந்தாலும், இதைக் கட்டினவன் சோழ மன்னன். குலோத்துங்கச் சோழன்னு சொல்றா. ஆனா, கல்வெட்டு எதுவும் அகப்படலை” என்றார் பட்டர்.

“புராணப்படி பார்த்தா, இது விஷ்ணு கூர்ம அவதாரம் எடுத்தபோது இங்க லிங்கப் பிரதிஷ்டை செஞ்சு, ஈஸ்வரனை வழிபட்டதா சொல்றா. சுவாமி பேரு கூட கூர்மேஸ்வரர்தான். இதைப்போல சென்னைல கச்சாலீஸ்வரர் கோவிலும், சிங்கப் பெருமாள் கோவில் பக்கத்துல திருக்கச்சூர்ல கச்சபேஸ்வரர் கோவிலும் இருக்கு. கூர்மம், கச்சாலம், கச்சபம் எல்லாமே ஆமையோட சம்ஸ்கிருதப் பேரு. விஷ்ணு கூர்ம அவதாரத்துல சிவபெருமானை வழிபட்ட ஸ்தலம்கறதுனால இந்த இடத்துக்கு கூர்மேஸ்வரம்னு ஒரு பேரு இருக்கு” என்று மேலும் தொடர்ந்தார் பட்டர்.

அப்போது, சங்கரகிருஷ்ணனைப் பார்த்துச் சிரித்தார் ராமபத்ரன். பார்த்தியா நீ கும்படற பெருமாளே, சிவலிங்கத்தைக் கும்பிட்டாராம்னு கேலி செய்வதுபோல் இருந்தது அவரது சிரிப்பு. இதற்கும் பட்டரின் வார்த்தைகள் மூலமே பதில் வந்தது. “எல்லா பகவானும் சமம்னு சொல்றதே தப்பு. ஏன்னா, பகவான் ஒருத்தர்தான். அவர்தான் நமக்காக பல ரூபங்கள்ல காட்சி தரார். அவா அவா கும்படற சாமி மேல நல்ல பக்தியும் நம்பிக்கையும் வேணும்கிறதுக்காக பெருமாள் சிவனைக் கும்பிட்டார்னும், சிவன் சில இடங்கள்ல பெருமாளைக் கும்பிட்டார்னும் புராணங்கள் சொல்றது. பேதங்களெல்லாம் மனுஷா மனசுலதான். பகவான் ஒருத்தரேதான். அதோட நாம செய்யற நல்ல செயல்களுக்கும், நம்பிக்கைக்கும் ஏத்தாப்பலதான், நம்ம உழைப்புக்கும் தகுந்தபடி பகவான் அருளறார்” என்றார் பட்டர். சங்கரகிருஷ்ணனனுக்கு மட்டுமின்றி ராமபத்ரன் மனதிலும் பட்டரைப் பற்றி உயர்ந்த எண்ணம் எழுந்தது.

தரிசனம் முடிந்ததும் ஆரத்தித் தட்டில் 1000 ரூபாய் போட்டார் சங்கரகிருஷ்ணன். ஆரத்தி ஜோதியை விட அதிகமாக, பட்டரின் கண்கள் ஜொலித்தன. கோவில் பிரகாரத்தைச் சுற்றிவிட்டு மீண்டும் ஈஸ்வரன் சன்னதி நோக்கி சங்கரகிருஷ்ணனும், ராமபத்ரனும் வந்தனர். அப்போது, பட்டருடன் யாரோ பேசும் சப்தம் கேட்டது.

“அப்பா, இந்த முறையாவது நாம பார்க்கப்போற மாமா, கடன் கொடுத்துடுவாரா? இதுவரை நாலு முறை போயாச்சு!” என்று பட்டரிடம், அருகில் நின்றுகொண்டிருந்த பையன் கேட்டதன் மூலம் அவன், பட்டரின் பையன் என்பது புரிந்தது. “நம்பிக்கையை விடாதப்பா. எப்படியும் ஈஸ்வரன் கைகொடுப்பான். நமக்குக் கொடுப்பினை இருந்தா எப்படியும் 5 லட்சம் கிடைச்சுரும். நீ ஆசைப்பட்டபடி என்ஜினீயரிங் காலேஜ் சேர்ந்திரலாம்” என்றார் பட்டர். “எனக்காக வேணாம்பா, நியாயம், நேர்மை, பக்தி, பகவான் கைங்கர்யம்னு இருக்கற உங்களுக்காகவாவது நமக்குத் தேவைப்படறபோது பகவான் பணம் கொடுத்து உதவ வேண்டாமா? நான் கட்ஆஃப் மார்க் 190 எடுத்திருந்தாலும் டொனேஷன் கொடுத்தாதான் காலேஜ்ல சேரமுடியும்கற நிலைமை எதுக்கு?” என்றான் படபடப்புடன் பையன். “அப்படிப் பேசாதப்பா, பகவான் எல்லாத்துக்கும் கணக்கு வெச்சுருப்பான். அவனண்ட நம்ம பாரத்தை போட்டுட்டு அவனே கதின்னு இருப்போம். நல்லது நடக்கும்” என்றார் பட்டர்.

இருவரின் உரையாடலையும் கேட்டபடியே சங்கரகிருஷ்ணனும் ராமபத்ரனும் அங்கு வந்து சேர்ந்தார்கள். “இங்க பக்கத்துல ஏதாவது மெக்கானிக் ஷாப் இருக்குமா?” என்று கேட்டார் சங்கரகிருஷ்ணன். “சார் அப்போ அங்க நிக்கறது உங்க காரா கவலைப்படாதீங்க சார். பக்கத்துலதான் மெக்கானிக் ஒருத்தர் இருக்கார். நான் சைக்கிள்ல போய் கூட்டிண்டு வரேன்” என்று கூறி பதிலுக்குக்கூட காத்திராமல் சிட்டாய் பறந்தான் பையன்.

சற்று நேரம் நிலவிய அமைதியைக் கலைத்தபடி, ஒரு விண்ணப்பம் என்று இழுத்தார் பட்டர். “அடடா, ஆயிரம் ரூபாயை தட்டுல போட்டதும் பட்டருக்கு பணத்தாசை வந்துவிட்டதா, அவர் பையனுக்குக்கூட காலேஜ் அட்மிஷன் அது இது என்றாரே!” என்ற எண்ணம் சற்று அசூயையுடன் சங்கரகிருஷ்ணன் மனத்தில் எழுந்தது. ஆனால், பட்டர் கேட்ட உதவி, சங்கரகிருஷ்ணனை அசரவைத்தது.

“நீங்களே பார்த்திருப்பேள். இந்தப் புராதனக் கோவில் கம்பீரமா இருந்தாலும், ரொம்ப சிதிலமாயி்ட்டது. நல்ல வருமானமுள்ள கோவில்னா கவர்ன்மென்ட் எடுத்துப்பா, கல்வெட்டு, புதைபொருள்னு ஏதாவது கிடைச்சதுன்னா ஆர்க்கியாலஜியாவது எடுத்துப்பா. ஆனா இது ரெண்டுக்கும் வழியில்லாத கோவில். நீங்க பெரிய மனசோட ஆயிரம் ரூபாய் கொடுத்திருக்கேள்..” என்று சொல்லி தொண்டையைச் செருமிக்கொண்டார் பட்டர்.

“உங்களப் பார்த்தா பெரிய கம்பெனி ஓனர் மாதிரி இருக்கு. நீங்க சொந்தமாவோ இல்ல உங்க கம்பெனி மூலமாவோ இந்தக் கோவிலுக்கு மராமத்து செய்து திருப்பணி செய்யலாம். முடியுமா?” என்று கேட்டார் பட்டர்.

பட்டரின் பண்பான வார்த்தைகள், அவரது சுயநலமில்லாத பொதுநலம் எல்லாம் சங்கரகிருஷ்ணனைக் கவர்ந்தன. “செய்துடலாம் சாமி, கோவில் சுவரைப் புதுப்பிச்சு பெயின்ட் எல்லாம் அடிக்க ஒரு லட்சம் ஆகும்ணு நெனக்கறேன். என் கம்பெனி நன்கொடையா அதைப் பண்ணிடறேன். கோவில் திருப்பணி உபயம் – பெருமாள் பிரசாதம் அன் கோ-ன்னு ஒரு போர்டு மட்டும் வெச்சுக்க அனுமதி கொடுங்க” என்றார் சங்கரகிருஷ்ணன், சற்று விளம்பர உத்தியையும் மனத்தில் வைத்தபடி.

“ஆகா, பேஷ் பேஷ்! சிவன் கோவிலுக்கு உபயம் பெருமாள் பிரசாதம். ரொம்ப அருமை. அண்ணா பேரு என்ன?” என்று கேட்டார் பட்டர். ‘சங்கரகிருஷ்ணன்’ என்று பதில் வந்ததும் “பார்த்தேளா? உங்க பெயரே, அரியும் சிவனும் ஒண்ணுங்கற பெரியவா வாக்குக்கு ஏத்த மாதிரி இருக்கு” என்று மகிழ்ந்தார்.

இந்த மனிதரிடம்தான் எத்தனை ஞானம், பண்பு என்று வியந்தபடி, “சாமீ, திரும்ப ஒரு தர ஆரத்தி காட்ட முடியுமா?” என்று கேட்டார் சங்கரகிருஷ்ணன். ‘ஓ காட்டிடலாமே’ என்று அவர், சுவாமிக்கு ஆரத்தி காட்டிவிட்டு, இருவர் பக்கமும் தட்டை நீட்ட, அதில் கட்டுக் கட்டாய் திருப்பதி கோவிலுக்கு காணிக்கை செலுத்துவதற்காக வைத்திருந்த 5 லட்சம் ரூபாயைப் போட்டார் சங்கரகிருஷ்ணன். “அடடா நீங்கதான் கம்பெனி செலவுல திருப்பணி செய்யறேன்னு சொன்னேளே? இப்போ இந்தப் பணத்தை தட்டுல போட்டிருக்கேளே? இதை எப்படி நான் காபந்து பண்ணுவேன்? நீங்களே வெச்சிருந்து திருப்பணி செய்யுங்கோ!” என்று பதறினார் பட்டர்.

“இருக்கட்டும். இருக்கட்டும். திருப்பணியை என் கம்பெனி செலவுல செஞ்சுடறேன். இது உங்க பையன் என்ஜினீயரிங் காலேஜ்ல சேர நான் உங்களுக்குக் கொடுக்கற காணிக்கை” என்றார் சங்கரகிருஷ்ணன். கண்ணில் நீர்க்கோர்க்க நன்றிகூட சொல்ல முடியாமல் பரிதவித்துக் கொண்டிருந்த பட்டரிடம், “சாமி உங்க பையன் பேரு என்ன?” என்று கேட்டார் சங்கரகிருஷ்ணன். “பாலாஜி” என்று பதில் கூறினார் அந்தக் கோவிலின் பட்டர் பரமேஸ்வர குருக்கள்.

அப்படிபட்ட நல்ல உள்ளங்களை வாழ்த்தும் ஒரு இனிய பாடல் -உங்களுக்காக



http://youtu.be/PzJYMGZ1pfU

RAGHAVENDRA
27th December 2014, 08:17 PM
முரளி கிருஷ்ணா வாசுதேவா ... பெயர் மூன்று அவதாரம் ஒன்று..

ஆம் தகவல் ஞான அவதாரங்கள் இந்த மூவரும் அள்ளித் தெளிக்கும் தகவல்கள் மதுர கானத்தின் மணி முத்துக்கள்..

மூவருக்கும் என் உளமார்ந்த பாராட்டுக்கள்..

ஓ... இன்னொன்று விட்டு விட்டதே..

கோபாலா... அதுவும் இதே அவதாரம் தானே...

இந்தத் தகவல் களஞ்சியங்களால் நிரம்பி வழிகிறது மதுர கானம் ... அதன் மூலமாக மய்யம் இணைய தளம்...

இவற்றைப் பற்றிய விரிவான வர்ணனைக்கோ.. சின்னக் கண்ணன்...

என்னா விநோதம் பாருங்க....

எல்லாமே கண்ணனின் அவதாரம் தானுங்க...

vasudevan31355
27th December 2014, 09:06 PM
ரவி சார்,

கிரேட். அருமையான சம்பவம். தெய்வ நம்பிக்கை எந்த அளவிற்கு கை கொடுக்கும் என்பதற்கு இதை விட உதாரணம் கூறி விட முடியாது. திருப்பதிக்கான பணம் கூர்மேஸ்வரருக்கு போகவும், அது திரும்ப பாலாஜிக்கே போவதும் இறைவன் விளையாட்டல்லாமல் வேறென்ன?

படிக்கையில் சிலிர்க்கிறது. நல்ல பதிவு. நன்றிகள் ஆயிரம்.

vasudevan31355
27th December 2014, 09:57 PM
பாடல் இரண்டு
பாணி ஒன்று


தொடர் 9

அன்பு ராகவேந்திரன் சாருக்கு அன்பளிப்பு.

தாரகைகளின் தற்புகழ்ச்சிப் பாடல்கள்.

இளம் பெண்கள் வீட்டில் தனியே இருந்தால் அவர்கள் மனதில்தான் எத்தனை எத்தனை என்ன ஓட்டம்!

அதுவும் பெரிய நிலைக் கண்ணாடி முன்பு நின்று தன் அழகை பெருமிதத்துடன் பார்த்து பூரித்துக் கொள்வது, தன் பேரழகில் கர்வம் கொள்வது என்று இவர்கள் தன்னை மறந்து செய்யும் செயல்களைப் பாருங்கள்.

முதலில் இந்த 'பியூட்டி'யைப் பாருங்கள்.

தன் அறையில் ஒரு ஆடவன் இருப்பது தெரியாமல் இந்த மங்கை தன் அழகை தானே ரசித்து ஆட்டம் போடுகிறாள். பாட்டும் பாடுகிறாள். அவள் முகத்தில்தான் எத்தனை உற்சாகப் பிரகாசம்!

'சோப்பு சீப்பு கண்ணாடி' படத்தில் 'அலேக்' விஜயநிர்மலா பங்கு கொள்ளும் ரகளை பாடல். சுசீலாம்மா கலக்கியிருபார்கள். நிறைய பேர் கண்டிப்பாக பார்த்திருக்க மாட்டீர்கள். நல்லா என்ஜாய் செய்யலாம் மறைந்திருந்து பார்க்கும் நாகேஷ் போலவே.

'நிச்சயம் நானே நேச்சுரல் பியூட்டி
நினைத்ததைச் செய்வேன்
தட்ஸ் மை ட்யூட்டி

கண்ணாடி போலே மேலே
தன்னாலே மின்னும் நைலக்ஸ்
கண்ணாலே பேசும் போது
முன்னாலே தோன்றும் ஐடெக்ஸ்
பொன்னான கைகள் மீது
எந்நாளும் காணும் கியூடெக்ஸ்
தேனாகக் கொஞ்சும் நேரம்
பூவாக மாறும் லிப்ஸ்டிக்

கேன் ஐ கிஸ்'?

'பொம்சிக்கு பொம்சிக்கு பொம்சிக்கு பொம்சிக்கு'

நைலக்ஸ், ஐடெக்ஸ், கியூடெக்ஸ் என்று அப்போதைய டாப் ரேஞ்ச் அழகு சாதனப் பொருள்கள் அதே ஆங்கில வார்த்தைகளில் பாடலில் வருவதை கவனியுங்கள்.

நிஜமாகவே கலக்கல் சாங்க்தான்.


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=LCc8sCWSKCY

அதே போலத்தான் இந்தப் பெண்ணும்.

இவளுக்கு நடிகையாக வேண்டும் என்ற ஆசை. தன் அழகு மேல் மகா கர்வம் அவளுக்கு. அவள் ரூம் முழுக்க புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகைகளின் படங்கள்தான். குளித்துக் கொண்டே இந்த அழகுப்பதுமை இன்னொரு உருவம் எடுத்து பாடுவதை கேளுங்கள். மகிழுங்கள்.

'மை ஃபிரண்ட் நெஞ்சத்தில் என்ன
ஐ நோ அஞ்சாதே கண்ணு
ஒருநாள் மலரும்
உலகம் புகழும் உண்மையில் சந்தேகம் என்ன?

கேரி ஆன்

மேனி என்ற மலர் மூடுகின்ற உடை
ராணி உன் அழகை மூடுமோ
தேனை அள்ளி வரும் பாவை உந்தன் இதழ்
தேவை வந்தவுடன் பேசுமோ'

அற்புதமான பாடல். 'மெட்ராஸ் டு பாண்டிச்சேரி' படத்தில் கல்பனாவின் அலம்பல்.

இரண்டு பாடல்களுக்குமே இசை கோபாலின் டி .கே ராமமூர்த்திதான். இரண்டுமே சுசீலா பாடியதுதான். இரண்டு படங்களுக்குமே இயக்கம் திருமலை மகாலிங்கம்தான். பாடல்கள் ஒன்று போல் இருப்பதில் ஆச்சர்யம் என்ன?

இதிலும் லவ்லி லைஃப், ஜாலி லைஃப், கேரி ஆன், ஐ நோ என்று ஆங்கில வார்த்தைகள் உண்டு


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=pKVLKDmrAZg

RAGHAVENDRA
27th December 2014, 11:43 PM
வாசு சார்,
தங்களின் கற்பனையே தனி. ரூம் போட்டு யோசிப்பீங்களோ என்று கேட்கத் தேவையேயில்லை. நம் நண்பர்களுக்கு மதுர கானம் திரியில் எப்படியெல்லாம் இசை விருந்து படைக்கலாம் என்பதைப் பற்றிய சிந்தனைக்கு நேரம் போக மீதியைத் தங்களுக்கு என்று தாங்கள் ஒதுக்கிக் கொள்கிறீர்கள் என்றே நான் சொல்வேன். அந்த அளவிற்கு தங்கள் கற்பனை நேரம் உழைப்பு திறமை யாவையுமே இங்கு பிரதிபலிக்கின்றன.

அதன் மற்றொரு பரிமாணமே பாடல் இரண்டு பாணி ஒன்று .. என்ன வித்தியாசமான சிந்தனை... அருமை அருமை.

அதுவும் சரியான தலைப்பில் தொடரில் அடுத்து இடம் பெற்றுள்ள பாடல்கள் நிச்சயம் அனைவரின் கற்பனையூற்றும் பெருக்கெடுத்து ஓடச் செய்யும்.

இதோ இத்தொடரில் மேலும் இரு பாடல்கள்..

இப்பாடல்களின் வரிகளில் அந்நிய மொழியில்லை. ஆனால் பாருங்கள் கவிஞர்களின் கற்பனையை, தங்களைத் தாங்களே இத்தாரகைகள் புகழ்ந்து கொள்வதை மறைமுகமாக எடுத்துரைக்கின்றனர்.

1. சரஸ்வதி சபதம் - திரை இசைத்திலகம் இசையில் கண்ணதாசன் வரிகள்

உருவத்தைக் காட்டிடும் கண்ணாடி..

இப்பாடலில் வரும் வரிகளில் சில..

நாடும் நகரமும் நால்வகைப் படையும் நவரத்ன மாளிகையும் என் வசமே...
ஆஹா.. எக்காலத்திலும் பொருந்தும்.

https://www.youtube.com/watch?v=KpvQs1OJVj4

2. அடுத்து மெல்லிசை மாமணி குமார் அவர்களின் இசையில் நெஞ்சையெல்லாம் கிறங்கச் செய்யும் மதுர கானம்...

பல்லவியிலேயே தன் புகழ்ச்சியை அழுத்தமாக சித்தரிக்கிறாள் இத்தாரகை..

காணக் கண்கோடி வேண்டும் கன்னிக் கனியல்லவோ

https://www.youtube.com/watch?v=jIHt5NO8duQ

இரண்டுமே இசையரசியின் குரலில் என்னமாய் நம் நெஞ்சை வருடுகின்றன..

அது சரி...தற்புகழ்ச்சிப்பாடல் எனக்கு அன்பளிப்பா...

இதில் ஏதும் உள்குத்து... ஏதாவது...

எனிவே தங்களுக்கு என் உளமார்ந்த நன்றி...

vasudevan31355
28th December 2014, 06:58 AM
ராகவேந்திரன் சார்,

தற்புகழ்ச்சிக்கும் தங்களுக்கும் துளியூண்டும் சம்பந்தம் உண்டா? இது ஆசைக் குத்து.:) உள்குத்து அல்ல.:) உள்குத்துபவர்களுக்கு வஞ்சகமில்லாமல் உள் குத்து குத்த வேண்டியதுதான்.:) அதே போல வெளிக்குத்துக்கும் வெளியே நின்று எட்டிப் பார்த்தபடி வெளிக்குத்துதான்.:) நம்மைப் பொறுத்த வரையில் பொறுமை அதிகம். அதையே அட்வான்டேஜ் எடுத்துக் கொண்டு சீண்டினால் அப்புறம் ஒரிஜினல் மங்கி குணம்தான்.:)

அந்தப் பாடல்களை நான் தங்களுக்கு அன்பளிப்பாக அளித்ததற்குக் காரணமே தங்கள் ரசனை தான். (அதற்காக மற்றவர்கள் எவரேனும் எங்களுக்கு ரசனை இல்லையா என்று உள்குத்து பதிவுகள் ஏதேனும் போட்டு விடப் போகிறார்கள்?:)

வித்தியாசமான பாடல்களை மிகவும் ரசிப்பவர் நீங்கள். கொஞ்சம் அதே ரகம் நானும். எங்கள் பிதாமகர் நீங்கள். அதனால்தான் 'மை ஃபிரண்டா'ன உங்களுக்கு நிச்சயம் நான் தந்த 'நேச்சுரல் பியூட்டி'.

அதே பாணியில் பதிலுக்கு இரு பாடல்கள் தந்து அசத்தி விட்டீர்கள் என்றால் அந்த 'காணக் கண் கோடி வேண்டும்' பாடலுக்கு ஈடு இணையே இல்லை சார். கேட்கக் காது கோடி வேண்டும். நான் தினம் தினம் கேட்டு மகிழும் பாடல் சார் அது. 'இன்றைய ஸ்பெஷல்' தொடரில் கூட அது பற்றி எழுதி இருக்கிறேன். மெல்லிசை மன்னரின் பிரம்மாண்ட இசைக்கு இந்தப் பாடலும் ஒரு உதாரணம். அதுவும் இடையிசையில் அவர் பயன்படுத்தாத இசை வாத்தியங்களே இல்லை எனலாம். பாடலின் நடுவில் 'குட்டி ரொம்ப ஷோக்கா இருக்கா இல்லே? யாரது என்று?' ஒருவர் நாகேஷிடம் சொல்லுவார். கண்களை மூடிக் கொண்டு கேட்டால் அந்தக் குரல் எனக்கென்னமோ ஸ்ரீகாந்தின் குரல் போலவே தெரியும்.

நன்றி ராகவேந்திரன் சார்.

vasudevan31355
28th December 2014, 11:34 AM
'இளையராஜா என்றும் இனிய ராஜா' (தொடர் 27) Sunday Special

http://www.upperstall.com/files/imagecache/preview/profile/ilayaraja-stills-1.jpg

முள்ளும் மலரும் பாடல்கள்...

http://i.ytimg.com/vi/vbwJ2LRnyLY/hqdefault.jpg

அடடா! என்ன ஒரு பாடல். சாகா வரம் பெற்றது. அழிவென்பதையே அறியாத ஒரு பாடல். எல்லாமே சேர்ந்து அமையக் கூடிய பாடல்கள் ரொம்பக் கம்மி. ஒளிப்பதிவு, பாடல் வரிகள், இசை, நடிக நடிகர்கள், பாடகர், சிச்சுவேஷன் என்று அத்தனை அம்சங்களும் ஒருங்கே அமையப் பெற்று என்றுமே நம் நெஞ்சில் இன்பக் குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கும் பாடல்.

http://i.imgur.com/bTNkLvX.jpg

கண்ணதாசனின் விரசமில்லாத இரு பொருள் தரும் அழகான வரிகளுக்கு தன் மதுரக் குரலால் உயிர் கொடுக்கிறார் ஜேசுதாஸ் என்றால் இருவரையும் மிஞ்சி இளையராஜா தரும் அந்த நெளிவு சுளிவு இசைப் பிரவாகம் எனக்கு இன்று வரை ஒரு ஆச்சர்ய அதிசயமாகவே படுகிறது.

'நீங்கள் உங்கள் வேலையைப் பாருங்கள்... நான் என் வேலையை செவ்வனே செய்து முடிப்பேன்' என்று போட்டி போடாமல் போட்டி போட்டு, ஜீப்போடு மலைப் பாதைகளையும், மேடு பள்ளங்களையும் இயற்கை வண்ணங்களையும் தன் காமிரா மூலம் பாடல் வரிகளுக்கு ஏற்ப பொருத்த அழகுடன் கூட்டிக் காட்டி, நம்மையும் அந்த ஜீப்புடனேயே பயணிக்க வைத்து, கொஞ்சமும் செயற்கைத்தனமில்லாமல் மகேந்திரனுக்கு ஏற்ற மகேந்திராவாய் ஒளிப்பதிவு ஜாலம் செய்யும் பாலு மகேந்திரா.

மிக அழகாக ஜீப்பின் ஸ்டியரிங்கைப் பிடித்து, சற்றே தலையை மேலே தூக்கியவாறு, இயற்கை அழகில் லயித்து, பெண்களுக்காக ஃபிலிம் காட்டாமல், அலட்டாத முகபாவங்களை இயற்கை அன்னையின் அழகில் தன் அகலமான முகத்தால் அளந்து காட்டி, ஜீப்பில் அமர்ந்திருக்கும் ராஜகுமாரியை மேகத்துக்கு ஒப்பிட்டு மகிழ்ந்து நம்மையும் மகிழ வைக்கும் நம் சரத் எஞ்சினீர் ஜென்டில்.

http://i.ytimg.com/vi/8e17naoTrmE/hqdefault.jpg

சின்னதான முகச் சுழிப்புகளுடன் பாடலை ரசிக்கும் ஷோக்கான ஷோபா, அவரின் அழகுத் தோழிகள் என்று முழுவதுமாகவே நம்மை ஆட்கொண்டு நம்மை சீக்கிரம் வெளியே விடாத பாடல்.

கவிஞன் இயற்கை அழகை பெண்ணுக்கு ஒப்பிட்டு பெருமிதம் கொள்கிறான்.

தாழம்பூவின் வாசம் அவனிடம் ஆனந்தமாக மேடை போடுகிறதாம். சாலைகளின் வளைவு நெளிவுகளை மங்கையின் கூந்தலின் வளைவு நெளிவுகளோடு ஒப்பிடுவது அழகல்லவா! மெதுவாக ஊர்ந்து செல்லும் ஆற்று வெள்ளம் பருவ மங்கையின் ஊடலோடு கூடிய வெட்கமாமே!

பாஷை இல்லாமல் இன்னிசை ராகம் இசைக்கும் குயில்களையும், ஆலமரத்தில் ஆலம் பழங்களைத் தேடும் கிளிகளையும் கண்டு இச்சை கொள்கிறானே இந்த நாயகன். அவன் தேடும் கிளி அவன் அருகிலேயேதானே! தன் சூசகமான எண்ண வெளிப்பாட்டை அந்தக் கிளி புரிந்து கொள்ளுமா?

இப்படி கவிஞரின் கற்பனை கரை புரண்டு ஓடுகிறது பாடல் முழுதும்.

https://lh6.googleusercontent.com/-MeOcnyDykTY/VFfD5yZzU5I/AAAAAAABBl4/DNEfmIvKPJI/s288/13988_602702396504933_8607164573310028501_n.jpg

பாடலின் ஆரம்பமே அப்படியே நம்மை 'ஜிவ்'வென்று 'வாராய்... நீ வாராய்' என இன்ப மலை உச்சிகளில் தூக்கிக் கிடாசும். ஜேசுதாசின் அந்த 'ம்ம்ம்... ம்ம்ம்...ஹம்மிங் துவக்கம் நாடி நரம்புகளுக்கும் புகுந்து நாட்டியமாட ஆரம்பித்து விடும். அந்தக் குரலுடனேயே ராஜா ஆரம்பித்து தொடரும் அந்த மாயமந்திர இசை பிட் ஈடு இணை இல்லாதது. ஹம்மிங் முடிந்ததும் அந்த புல்லாங்குழலின் ஆதிக்கம்... பின் அதைத் தொடர்ந்து வரும் இடையிசை என்று இடைவிடாத இன்பம். இடை இசையிநூடே வரும் கிளிகளின் சப்தம் கிளுகிளுக்க வைக்கும். மலைப்பாதை வளைந்து செல்லும் போது அதற்கேற்ப ஜீப் வளைந்து கொடுக்க, வளைந்து நெளிந்து போகும் பாதை என்று ஜேசுதாஸ் குரலெடுக்க, இசையும் வளைந்து நெளிந்து உடல் முழுவதும் இன்பச் சூட்டைத் தெளிக்க, இனம் புரியாத சுகம் ஏகத்துக்கும் பரவுவதை உணர்வுபூர்வமாக உணரமுடியும். 'ஆலங்கொடி மேலே கிளி' எனும் போது எழும் அந்தக் கிளியின் குரல் சத்தம் படு தெளிவு. அடடா! காட்சிக்குத் தக்கவாறு என்ன அழகான சப்தங்கள்! இத்தனைக்கும் கிளிகளைக் காட்டாமலேயே!

வழியில் ஆட்டுக் கூட்டம் வந்து மறிக்க, ஆடுகளை மேய்ப்பவன் ஆடுகளை ஓரம் ஒதுங்கச் செய்ய, ராஜா தரும் அந்த கொட்டாங்கச்சி வயலின் போன்ற இசையும், தொடரும் புல்லாங்குழல் இசையும் அமர்க்களமான அமர்க்களம். ரிக்கார்டிங் அவ்வளவு அற்புதமாக இருக்கும். ஒரு நாலாந்தர டேப் ரெகார்டர் ஒன்றை (பெட் செட் என்று சொல்வார்கள்) விலை ரொம்பக் கம்மி... அப்போது இந்தப் பாடல் கேட்பதற்கென்றே பாண்டியில் வாங்கினேன். அந்த செட்டில் கூட அவ்வளவு துல்லியமாக உணர முடியும் ராஜாவின் ரகளையான நகாசு வேலைகளை.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/MULLUMMALARUMfullmovieBAE0BC10BB30BCD0BB30BC10BAE0 BCD0-BAE0BB20BB00BC10BAE0BCD0-YouTubemp4_001463788.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/MULLUMMALARUMfullmovieBAE0BC10BB30BCD0BB30BC10BAE0 BCD0-BAE0BB20BB00BC10BAE0BCD0-YouTubemp4_001463788.jpg.html)

'இளைய பருவம் மலையில் வந்தால்' மூன்றாவது சரணத்தில் ஜீப் ஓட்டம் நிறுத்தப்பட்டு ஷோபாவைக் காண்பிப்பார்கள். பாலு மகேந்திராவுக்காகவே இந்த சரணம்.:) ஷோபா பூந்தோட்டத்துக்குள் வருவது, தண்ணீர் குடம் சுமந்தபடி பாடலையும், பாடியவரையும் மனதில் அசை போட்டுக் கொண்டே வருவது, பூவைக் கையில் வைத்துக் கொண்டு தலைமுடி காற்றில் பறக்க ஷோபாவை ஒரு சைட் போஸ் தர வைத்திருப்பார் பாலு. ஒரே வார்த்தை. கவிதை. பாடல் முடியும் போது மரங்களினூடே சூரியன் மறைந்து இருள் சூழ ஆரம்பிப்பதையும், அந்த சிகப்புப் புள்ளியான சூரியனுடனே ஷோபா உடன் நடந்து செல்வதையும் பாலு இழைத்திருப்பார்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/MULLUMMALARUMfullmovieBAE0BC10BB30BCD0BB30BC10BAE0 BCD0-BAE0BB20BB00BC10BAE0BCD0-YouTubemp4_001492305.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/MULLUMMALARUMfullmovieBAE0BC10BB30BCD0BB30BC10BAE0 BCD0-BAE0BB20BB00BC10BAE0BCD0-YouTubemp4_001492305.jpg.html)

இந்தப் படம் வெளிவந்த போது இந்தப் பாடலில் மிகவும் மனம் லயித்து வெறி பிடித்து திரிந்தேன் என்றும் சொல்லலாம். கடைக்கு சென்றால், கல்லூரி சென்றால், சைக்கிளில் ஊர்களுக்கு சென்றால், பஸ் பிரயாணம் மேற்கொண்டால் இந்தப் பாடல் ஒன்றையேதான் வாய் முணுமுணுத்தபடி இருக்கும். இந்தப் பாட்டின் ஆளுமையிலிருந்து, தாக்கத்திலிருந்து நான் விடுபட்டு வர சில மாதங்கள் பிடித்தது.

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
பூவாசம் மேடை போடுதம்மா
பெண் போல ஜாடை பேசுதம்மா
அம்மம்மா ஆனந்தம்
அம்மம்மா ஆனந்தம்

வளைந்து நெளிந்து போகும் பாதை
மங்கை மோக கூந்தலோ
மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம்
பருவ நாண ஊடலோ
ஆலங்கொடி மேலே கிளி
தேன் கனிகளைத் தேடுது
ஆசைக் குயில் பாஷை இன்றி
ராகம் என்ன பாடுது
காடுகள் மலைகள் தேவன் கலைகள்

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா

அழகு மிகுந்த ராஜ குமாரி
மேகமாக போகிறாள்
ஜரிகை நெளியும் சேலை கொண்டு
மலையை மூடப் பார்க்கிறாள்
பள்ளம் சிலர் உள்ளம் என
ஏன் படைத்தான் ஆண்டவன்
பட்டம் தர தேடுகின்றேன்
எங்கே அந்த நாயகன்
மலையின் காட்சி
இறைவன் ஆட்சி

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா


இளைய பருவம் மலையில் வந்தால்
ஏகம் சொர்க்க சிந்தனை
இதழை வருடும் பனியின் காற்று
கம்பன் செய்த வர்ணனை
ஓடை தரும் வாடை காற்று
வான் உலகை காட்டுது
உள்ளே வரும் வெள்ளம் ஒன்று
எங்கோ என்னைக் கூட்டுது
மறவேன் மறவேன் அற்புத காட்சி


செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
பூவாசம் மேடை போடுதம்மா
பெண் போல ஜாடை பேசுதம்மா
அம்மம்மா ஆனந்தம்
அம்மம்மா ஆனந்தம்


https://www.youtube.com/watch?feature=player_embedded&v=8e17naoTrmE

chinnakkannan
28th December 2014, 11:49 AM
ஹாய் குட்மார்னிங்க்..

ஹச்சோவ்.. நிறைய இருக்கே.. பாலச்சந்தர் பதிவுகள் கிருஷ்ணாஜி வாசுதேவர் ராகவேந்தர் கோபாலர் மிக்க நன்றி
கல் நாயக் கடிதப் பாடல்களுக்கு நன்றி

வாசுசார் முள்ளும் மலரும் பாடல்களுக்கும் விவரணைகளுக்கும் ஒரு ஓ அண்ட் தாங்க்ஸ்..

த.புபாடல்கள் வாசுசார் ராகவேந்தர் மிக்க்க நன்றி..

ராகவேந்தர் சார்..இந்தக் கண்ணன்களை வளர்த்து வரும் யசோதை போன்றவர் நீங்கள்..உங்களுக்கு என் நமஸ்காரங்கள்..

ஆமா த. பு பாடல்கள்ல யாரோ நீச்சலடிச்சுக்கிட்டே பாடறாங்களாமே..யார்ப்பா பார் அதிரூப சுந்தரி.. பாரதி ரூப சுந்தரின்னும் சொல்லலாமா..(கண்ணாவ் எங்கேயோ போய்க்கிட்டிருக்கடா நீ! :) )

http://www.youtube.com/watch?v=-r_C8nuj1dw

மலர் எது என் கண்கள் தான் என்று சொல்வேனடி
கனி எது என் கன்னம் தான் என்று சொல்வேனடி
காலத்தில் வசந்தமடி நான் கோலத்தில் குமரியடி..


நாயகியரின் போதைப் பாடல்களில் மிஸ்ட்டர் கார்த்திக் சொன்னதாக நினைவு..

வர்றேங்ன்க மறுபடி மேபி டுடே ஈவ்னிங்க்.. (ரொம்ப சாஸ்திங்க்ணா வொர்க்..ஸாரி)

chinnakkannan
28th December 2014, 11:55 AM
//ஆலங்கொடி மேலே கிளி எனும் போது எழும் அந்தக் கிளியின் குரல் சத்தம் படு தெளிவு. அடடா! காட்சிக்குத் தக்கவாறு என்ன அழகான சப்தங்கள்! இத்தனைக்கும் கிளிகளைக் காட்டாமலேயே!//

'//இளைய பருவம் மலையில் வந்தால்' மூன்றாவது சரணத்தில் ஜீப் ஓட்டம் நிறுத்தப்பட்டு ஷோபாவைக் காண்பிப்பார்கள். பாலு மகேந்திராவுக்காகவே இந்த சரணம். ஷோபா பூந்தோட்டத்துக்குள் வருவது, தண்ணீர் கடம் சுமந்தபடி பாடலையும், பாடியவரையும் மனதில் அசை போட்டுக் கொண்டே வருவது, பூவைக் கையில் வைத்துக் கொண்டு தலைமுடி காற்றில் பறக்க ஷோபாவை ஒரு சைட் போஸ் தர வைத்திருப்பார் பாலு. ஒரே வார்த்தை. கவிதை. பாடல் முடியும் போது மரங்களினூடே சூரியன் மறைந்து இருள் சூழ ஆரம்பிப்பதையும், அந்த சிகப்புப் புள்ளியான சூரியனுடனே ஷோபா உடன் நடந்து செல்வதையும் பாலு இழைத்திருப்பார். // கலக்கல் காட்சி சுவையான வர்ணிப்பு வெர்ரிகுட் அண்ட் தாங்க்ஸ் வாசு சார்.. எனிவே.. எனக்கு இன்னா தோணிச்சுன்னா..கொஞ்சம் சரததையும் பாடறா மாதிரிகாட்டி மிக்ஸ் பண்ணியிருக்க்லாம்னு.. கண்ணதாசன் பத்தி வெகு நாட்கள் முன்னால எழுத ஆரம்பிச்ச தொடர்ல இந்தப் பாட்டு தான் ஃபர்ஸ்ட்.கிட்டத் தட்ட என்னோட சிந்தனா (?!) அலைகளுக்கு ஒத்தே உங்களுடையதும் இருக்கிறது..

ம்ம் தொழில் பாட்டு பாதி எழுதியிருக்கேன்..இன்னிக்கு முடிக்க முடியுமா.. பார்க்கலாம்..அதோட வர்றேன்..

uvausan
28th December 2014, 12:29 PM
பாடல் 5 ,
பாணி ஒன்று

தாய் ( வாசு ) எட்டடி பாய்ந்தால் , குட்டி ( நாங்கள் ) பதினாறு ஆடி பாய வேண்டாமா ? - ஒன்று , இரண்டு அல்ல , 5 பாடல்கள் , ஒரே பாணி , ஒரே நோக்கம் , ஒரே கருத்து - உறவின் அருமையை அழகாக சொல்லும் பாடல்கள் - கணவன் - மனைவி உறவு மட்டும் அருமையாக அமைந்து விட்டால் , வேறு எந்த தோல்வியும் நம்மை ஒன்றும் செய்யாது -- திருமணங்கள் இன்று ஒரு கோர்ட்டில் ஆரம்பித்து , மறு கோர்ட்டில் முடிவடைந்து விடுகின்றன - உறவு என்பது இரு உடல்கள் சம்பந்த பட்டது மட்டும் அல்ல - இரு வேறு வேறு மனங்கள் ஒன்றாக இணைந்து வாழ்வது தான் உறவு . உறவு எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று சொல்லவில்லை - இப்படி வாழ்ந்தால் நன்றாகவே இருக்கும் என்று மட்டுமே சொல்கின்றது . அப்படி வாழாமல் எவ்வளவு உறவுகள் பிறக்காமலேயே இறந்து விடுகின்றன , மலராமலேயே வாடி விடுகின்றன , பூக்காமலேயே கருகி விடுகின்றன ---- இந்த பாடல்களை கேளுங்கள் - உறவின் உண்மையான அர்த்தத்தை புரிந்து கொள்ளலாம்

வேண்டும் வேண்டும் உங்கள் உறவு வெண் பனி தென்றல் உள்ளவரையில்


http://youtu.be/ORM86VivNUM


தந்தை வாழ்வு முடிந்து போனால் , தாயின் மஞ்சள் நிலைப்பதில்லை - தாயின் வாழ்வு முடிந்து போனால் , தந்தைக்கு என்று யாரும் இல்லை - ஒருவராக வாழ்கிறோம் , பிரிவதர்க்கோ இதயம் இல்லை -

பிரிந்த மகளை நினைத்து ஒரு தந்தை பாடும் பாடல் - உறவின் அருமையை இதைவிட அருமையாக சொல்ல முடியாது .

http://youtu.be/GAQFU7dU8LM


இங்கு நானொரு பாதி , நீயொரு பாதி - இதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி ---- உன்னை காணாத கண்ணும் கண் அல்ல -


வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத உணர்ச்சிகள்

http://youtu.be/6ZByhP1ebCQ

நான் பாதி - நீ பாதி கண்ணே -

வேறு விதமாக , ஆனால் அதே உணர்சிகளுடன் ------

http://youtu.be/DxgdPJ8rUSI

ஒரு நாளும் உன்னை மறவாத இனிதான மனம் வேண்டும் - உடலாலும் , உயிர் உறவாலும் பிரியாத மனம் வேண்டும்

http://youtu.be/fn9NxPDy8Ok


இந்த ப்ராத்தனை மட்டும் ஒவ்வருவருக்கும் நிறைவேறி விட்டால் , மகிழ்ச்சிக்கும் , நிம்மதிக்கும் அளவேது ??

:):smile2:

uvausan
28th December 2014, 08:15 PM
விநாயக பெருமானே , பிரணவத்தின் பீடமே, !

ஞானத்தின் பரம்பொருளே ! வேண்டும் வரத்தை கொடுக்கும் வேலவனின் தமையனே ! வேத நாயகனின் தலை மகனே !

என் அன்னை கொடுத்த கன்னி தமிழால் உன்னை இன்னும் சில நாட்களில் பிறக்க போகும் இந்த இனிய புத்தாண்டில் வருக வருக என்று வரவேற்கிறேன் !! வணக்கம் !!!

மகாபாரதத்திற்கு நீர் பிரதி எடுத்தது உண்மையானால் ,
அந்த மாபெரும் காவியம் அழிந்துவிடகூடாது என்பதற்காக ,
புலமைக்கு முதலிடம் கொடுத்து , நீரே சுவடி எடுத்து
எழுத்தாணியாக உமது கொம்பை உடைத்து பாரத்தை
ஏட்டிலே பதித்தது உண்மையானால்;

ஆற்று நீரை கமண்டலத்திர்க்குள் அடக்கி அகஸ்த்திய முனிவன் எடுத்து செல்கிறான் என்பதை அறிந்து , காக்கை வடிவெடுத்து ,
கமண்டலத்தின் நீரை கவிழ்த்து , அதன் காரணமாக காவேரி ஆறு
பரந்து ஓடுவது உண்மையானால் ;

அன்னை தந்தையே உலகம் என்பதை மற்றவர்களுக்கு எடுத்து காட்ட அவர்களையே வலம் வந்து நீரே ஞான பழம் பெற்றது உறுதியானால்;
கல்வி கற்ற சாண்டோர்கள் , முதலில் உம்மை நினைத்து , உமக்கு ஒரு காப்பு செய்யுள் இயற்றிய பின்பே மற்றவைகளை எழுதுவது
உறுதியானால் ;

தமிழ் மகளாம் வள்ளியை தம்பி முருகனுக்கு மணம் முடிக்க இதே யானை வடிவில் வந்து நீரே திருமணத்தை நடத்தி வைத்தது நிச்சயமானால் ;

ஞானத்தின் பீடத்திலே அமர்ந்து ஓம் என்ற பிரணவத்தின் வடிவமே நீர் என்பது திண்ணமானால் ,

பாலும் , , தேனும் , பாகும் பருப்பும் - இவை நாலையும் தந்த தமிழ் மூதாட்டி ஔவைக்கு , நீரே சங்க தமிழ் மூன்றையும் கொடுத்தது சத்தியமானால் ---- என் கல்வி மீது ஆணையிட்டு கேட்கிறேன் . இதை கேள் !!!!

புதிய வருடம் "மையம் " திரியில் இருக்கும் எல்லோருக்கும் , திரிகளை படிக்கும் பல கோடி வாசகர்களுக்கும் , அவர்கள் குடும்பங்களுக்கும் இந்த புத்தாண்டில் நல்லதே நடக்கும்! சந்தோஷமாக இருப்பார்கள் என்று ஆசீர்வதி !!!


நன்றி கணேசா ! மிக்க நன்றி !!!

http://youtu.be/1WdZqJxmuco

(இசை : இளைய (வாசு ) ராஜா
ராகம் : நாட்டை ( இந்த விபரம் கிருஷ்னாஜிக்காக -----)

Richardsof
29th December 2014, 09:21 AM
COLLECTION FROM OLD CINEMA MAGAZINE ''FILIMALAYA''

http://i58.tinypic.com/23tqtuf.jpg

Richardsof
29th December 2014, 09:23 AM
http://i62.tinypic.com/346q5vc.jpg

Richardsof
29th December 2014, 09:25 AM
http://i62.tinypic.com/34xhv6g.jpg

Richardsof
29th December 2014, 09:27 AM
http://i62.tinypic.com/2whl2l3.jpg

Richardsof
29th December 2014, 09:28 AM
http://i62.tinypic.com/2rdyogn.jpg

Richardsof
29th December 2014, 09:29 AM
http://i59.tinypic.com/8zifc2.jpg

vasudevan31355
29th December 2014, 10:28 AM
உடற்பயிற்சி பாடல்கள்

பாடல் இரண்டு
பாணி ஒன்று


தொடர் 10

இன்றைய தொடரில் கட்டழகான ஸ்லிம்மான இரு நடிகைகள் தத்தம் தோழியருடன் காலையில் உடற்பயிற்சி செய்யும் அழகை கவனியுங்கள். ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்லர். ஆட்டத்திலும் சரி, ஆடிக் கொண்டே உடம்பை வளைப்பதிலும் சரி... யார் டாப்? சொல்லவே முடியாது.

முதலில் இந்த அழகுப் பெண்ணைப் பாருங்கள்.

சிக்கென்று ஆடை
சிக்கென்ற உடல்
சில்லென்ற கடற்கரை

சுள்ளென்ற சூரியன்

வருமுன் இவள் தன் தோழியருடன் உடற்பயிற்சி செய்யத் தொடக்கி விட்டாள்.

http://i.ytimg.com/vi/ivp0fObBi3I/hqdefault.jpg

இளையராஜாவின் அமர்க்களமான இசையில் இந்த சிட்டுக்கள் ஆடும் அழகே அழகு. ஜானகியின் வளமான குரலில் நாயகி நதியா படு ஸ்லிம்மான மேனியுடன் ஆடியபடி உடற்பயிற்சி செய்யும் அழகு. பாடலின் பின்னால் கம்பீரமான ஆண்தன்மையுள்ள, பெண்குரலில் உடற்பயிற்சி உத்தரவு ஒலிக்க, அதற்கேற்றவாறு ஆடும் அழகு தேவதைகள். ஸ்ரீதர் என்றாலே இளமைதான் என்று மறுபடி நிரூபணம். 'இனிய உறவு பூத்தது' படத்தில் இளையவரின் பிரம்மாண்ட இசையில்.

'சிக்கென்ற ஆடையில்
சிட்டுக்கள் ஆடட்டும்
சில்லென்ற வாடையில்
உல்லாசம் தேடட்டும்
பூப் போன்ற வாலிபம்
வாடாமல் வாழட்டும்'


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=5aHJFJ4KJwY

http://i.ytimg.com/vi/QAQYYptFJ2A/hqdefault.jpg

இதே போல இன்னொரு ஸ்லிம் அழகி. அமலா. அமலா நாகார்ஜுனா. அதே இளையராஜாவின் இசையில் அதே போல தோழியருடன் சித்ராவின் அழகுக் குரலில் 'மௌனம் சம்மதம்' படத்தில் உடம்பை வில்லாக வளைத்து செய்யும் வித்தைகள். கொஞ்சமும் குறையாத ராஜாவின் பிரம்மாண்ட பின்னணி. அமலாவுக்கு 'அக்ரோபேட்டிக்' அமலா என்றே பெயர் சூட்டலாம். அவ்வளவு அழகாக உடம்பை வளைத்து உடற்பயிற்சி செய்து ஆடுவார். உடன் ஆடும் துணை நடிகையரின் ஆட்டங்களும் படு ஜோர். பாடல் அவ்வளவு இனிமை.

'சிக் சிக்கா சிட்டு சிட்டுக்கு
சிக் சிக்கா கட்டும் மெட்டுக்கு
மேலும் மேலும் இன்பம் வரும் நாளைக்கு
தாளம் ராகம் தேடி வரும் வேளைக்கு

சிக்கென்ற ஆடையில்
சிட்டுக்கள் ஆடட்டும்
சில்லென்ற வாடையில்
உல்லாசம் தேடட்டும்
பூப் போன்ற வாலிபம்
வாடாமல் வாழட்டும்

வாலைப் பருவமடி
வளைந்தபடி வாடும் உருவமடி
நாளைக் கனவுகளில்
தினம் தினமும் நீந்தும் இதயமடி
எத்திக்கும் சுற்றும் எண்ணங்கள்
தித்திக்கும் கோடி வண்ணங்கள்
பட்டுப் பூ போலக் கன்னங்கள்
பார்க்கட்டும் காதல் சின்னங்கள்

பாடிப் பாடி இறைவனடி தேடி தேடி
ஆடிப்பாடி அழகனுடன் (மம்முட்டியா?):) கூடிக் கூடி

அருமையான வரிகள். எனக்கு மிக மிக பிடித்த பாடல். வீட்டில் ஹோம் தியேட்டர் இருந்தால் இந்த இரண்டு பாடல்களையும் ஒருதரம் கேட்டுப் பாருங்கள். ராஜாவின் அட்டகாசங்கள் தனித்தனியாகத் தெரியும். ஸ்டீரியோ பிரிந்து பிளந்து கட்டுவதை அணுஅணுவாக ரசிக்கலாம். இப்போதெல்லாம் இது போன்ற ஒரு பாடல்.... ஒரே ஒரு பாடல், இது போன்ற தரமான இசை எவரேனும் தரத்தான் முடியுமா? பெருமூச்சு விட்டுக் கொள்வதைத் தவிர வேறு வழியே இல்லை.


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=sTooIjqtLMs

gkrishna
29th December 2014, 11:48 AM
http://2.bp.blogspot.com/-5QWLRDOsyE4/VJm2acrmWAI/AAAAAAAAgQc/oc2J7IhSo8o/s1600/kb_1.jpg

இந்த முக்கியமான பேட்டிக்காக சினிமா எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையை எத்தனை பாராட்டினாலும் தகும், பெரிய பேட்டி பொறுமை உடன் படியுங்கள்.
இயக்குனர் சிகரம் பற்றிய அருமை பெருமைகள் பிடிபடும்.

தமிழ் சினிமாவின் வரலாற்றை ஆயிரம் பக்கங்களுக்கு விலாவாரியாக எழுதலாம். அதை ஒரே பாராவில் எழுத வேண்டிய சூழல் வந்தாலும் அதில் தவிர்க்க முடியாத ஒருவரின் பெயர் உண்டென்றால் அது கே.பி. சினிமா அடைமொழியோடு சொல்வதென்றால் இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர். நூறு அசாதாரணமான திரைப் படைப்புகளுக்குச் சொந்தக்காரர். நையாண்டி, நகைச்சுவை, சமூக சித்திரம், அரசியல், பெண்ணியம் என எல்லா கதைகளையும் தொட்டு எல்லாவற்றிலும் நூற்றுக்கு நூறு மார்க் வாங்கியவர். அவருக்குப் பால்கே விருது வழங்கி கௌரவித்திருப்பதன் மூலம் தமிழையும் தமிழர்களையும் இந்திய அரசு பெருமைப்படுத்தி இருக்கிறது. தமிழகத் திரையுலகின் தரத்தை முன்னகர்த்திக் காட்டியிருக்கும் அவரைச் சந்திப்பது என்பது அரை நூற்றாண்டு சினிமா சரித்திரத்தைச் சந்திப்பதற்குச் சமம்.

உங்கள் திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் "அரங்கேற்றம்'. திடீரென்று அப்படியொரு புரட்சிகரமான படத்தை எடுக்க வேண்டும் என்று உங்களைச் சிந்திக்க வைத்தது எது?

அந்தக் கதையை என் திரைவாழ்வில் ஆறு மாத ஓய்வுக்குப் பின்னால் எடுத்தேன். அதனாலும்கூட அதில் சற்று சத்தியாவேசம் அதிகமாகவே இருந்தது. அந்தப் படம் 72-ல் வந்தது. அதற்கு முன்னாடி வரை ரொம்ப வேகமாக தினம் மூன்று ஷூட்டிங், நான்கு ஷூட்டிங் என்று ஓடிக் கொண்டிருந்தேன். விளைவு ஹார்ட் அட்டாக். ஆறு மாதம் ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டார்கள்.அந்த ஓய்வில் யோசனை பண்ணியதில் இதுவரைக்கும் என்ன பண்ணியிருக்கோம்.. இனி என்ன பண்ணப் போகிறோம் என்ற மனத்தின் அலசலில் விளைந்ததுதான் "அரங்கேற்றம்'. கிருஸ்துவுக்கு முன்.. கிருஸ்துவுக்குப் பின் என்பதுபோல ஹார்ட் அட்டாக்குக்கு முன் ஹார்ட் அட்டாக்குக்குப் பின் என என் படங்களைப் பிரித்துவிடலாம். அதற்கு முன்னாடி 15, 20 படங்கள் எடுத்திருந்தேன். ஹார்ட் அட்டாக் என்னை முற்றிலுமாக புரட்டிப் போட்டுவிட்டது. என்ன மாதிரியான படங்களை எடுக்கப் போகிறோம் என்பதற்கும் கூட "அரங்கேற்றம்' முன் மாதிரியாக அமைந்துவிட்டது.

இப்போது அரங்கேற்றம் திரைப்படம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

"அரங்கேற்றம்' உங்களுக்குத் தெரியும். அது பூகம்பத்தையே ஏற்படுத்தியது. அப்போது எனக்கு சின்ன வயது. இப்போது கேட்டால் அப்படியொரு படத்தை எடுப்பேனா என்பது சந்தேகம்தான். பிராமண சமுகத்தில் நிறைய குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு சிரமப்படுவதுதான் கதையின் மையம். ஒரு ஏழ்மையான குடும்பத்தில் நிறைய பெண் குழந்தைகளைப் பெற்று அவர்களை கரையேற்ற முடியாமல் அவதிப்படுவதைச் சொல்ல வேண்டும் என்பதுதான் என் நோக்கம். என் மகள் புஷ்பா ஒரு பேட்டியில் சொல்லும்போது அந்தக் கதை அவருடைய வாழ்க்கையில் எதிர்கொண்ட ஓர் உண்மைச் சம்பவமாக இருந்திருக்கலாம் என்று சொல்லியிருந்தார்கள்.... இருந்திருக்கலாம் என்றுதான் சொன்னார்கள். உண்மைச் சம்பவம் என்று சொல்லவில்லை. இப்போதும் அது உண்மையில் நடந்த சம்பவமா? என்பதைச் சொல்ல நான் விரும்பவில்லை.

"அரங்கேற்றம்' திரைப்படத்தை நீங்கள் ஏன் பிராமண சமூகத்தின் பின்புலத்தில் அமைத்திருந்தீர்கள். அதற்கு ஏதாவது காரணம் உண்டா?

அதைச் சொல்வதற்கு எனக்கு மிகவும் தெரிந்த பழக்கமான சமூகத்தைக் கையில் எடுத்துக் கொள்வதுதானே சரியாக இருக்கும்?அந்தச் சமூகத்தைப் பற்றித்தான் எனக்கு நன்றாகத் தெரியும். அவர்களின் வாழ்க்கை, பேச்சு வழக்கு, நடை, உடை, பாவனை எனக்கு அத்துப்படியாக இருந்தது. 15 -20 ஆண்டுகள் அதிலேயே ஊறி வளர்ந்தவன். என்னுடைய கதையைச் சொல்லுவதற்கு அந்த சமூகத்தின் பழக்க வழக்கங்கள் எளிமையாக இருந்தன. அதுவுமில்லாமல் எனக்குத் தெரியாத இன்னொரு சமூகத்தைக் கையில் எடுத்து விமர்சிப்பதும் சரியாக இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை.அந்தக் கதையில் நான் என்ன சொல்ல விரும்பினேனோ அதை ஆணித்தரமாகச் சொன்னேன் என்பது எனக்குப் புரிந்தது. எனக்கு மட்டுமல்ல, அது யாருக்குப் புரிய வேண்டுமோ? அவர்களுக்கும் புரிந்தது. தமிழக அரசும் கூட குடும்பக் கட்டுப்பாட்டை இதைவிட அழுத்தமாக யாரும் சொல்லிவிடமுடியாது என்று பாராட்டி, கெüரவித்தது.

உங்கள் திரைப்படங்கள் அனைத்துமே பிராமணர்களையும் அவர்களின் வாழ்க்கை நெறியையும் அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டதாகக் கூறப்படுகிறதே, அது உண்மைதானா?"

அரங்கேற்றம்' படத்துக்குப் பிறகு "அவள் ஒரு தொடர்கதை', "அபூர்வ ராகங்கள்', "அவர்கள்' என என் படங்கள் அணிவகுத்தன. ஆனால் என்ன சொல்கிறார்கள் என்றால் நீங்கள் ஏன் பிராமண சமுதாயத்தை மட்டுமே வைத்துப் படம் எடுக்கிறீர்கள் என்றார்கள். நான் பிராமண சமுதாயத்தை வைத்து "அரங்கேற்றம்' என்கிற ஒரே ஒரு படம்தான் எடுத்தேன். நான் எடுத்தவை எல்லாமே நடுத்தர வர்க்கத்தை மையப்படுத்திய படங்கள்தான். ஆனால் பிராமண சமூகத்தை நடுத்தர வர்க்கத்துடனேயே அடையாளப்படுத்திப் பார்க்கிறார்கள். அதில் நியாயமே இல்லை. "அரங்கேற்றம்' தவிர வேறு எந்தப் படத்திலுமே ஜாதியைப் பற்றிச் சொன்னதே இல்லை."அச்சமில்லை அச்சமில்லை' படத்தில் ஒரு ஜாதிக் கலவரம் நடப்பதாகச் சொல்ல நேர்ந்தபோதுகூட அவர்கள் என்ன ஜாதி என்பதைச் சொல்லவே இல்லை. "எதிர் நீச்சல்' என்றால் உடனே அது பிராமணக் கதை என்று நினைக்கிறார்கள். அதில் ஒரு குடும்பம்தான் பிராமணக் குடும்பம். ஒரு நாயர் குடும்பம், ஒரு முஸ்லிம் குடும்பம் என்று எட்டுக் குடும்பங்களை அதில் காட்டினேன். பட்டுமாமி கேரக்டர் பேசப்பட்டதால் உடனே அது பிராமணக் கதை என்று நினைத்துவிடுகிறார்கள். அப்படியில்லை.

எம்.ஜி.ஆர்., சிவாஜி என்ற தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர்கள் கோலோச்சிக் கொண்டிருந்த காலகட்டத்தில் நாகேஷ், முத்துராமன், ஜெமினி, மேஜர் சுந்தர்ராஜன் போன்ற அடுத்தகட்ட நடிகர்களை வைத்தே படங்களை இயக்கினீர்கள். கதையின் பலத்தில் மட்டுமே மக்களைக் கவர வேண்டிய நெருக்கடி இருந்ததே?

நெருக்கடி என்று சொல்ல முடியாது. அதை என் குறிக்கோளாக வைத்திருந்தேன். நாகேஷ் என் நண்பன். நானும் அவனும் ஒன்றாக வந்தோம். அவனைக் கதாநாயகனாக வைத்து சக்ஸஸ் செய்தவன் நான். ஒரு காமெடியனைக் கதாநாயகனாக வைத்து எந்தப் படமும் வெற்றி பெற்றதில்லை. என்.எஸ்.கே.வை கதாநாயகனாக வைத்து அண்ணா ஒரு படத்துக்கு கதை எழுதியிருக்கிறார். அந்தப் படம் பெரிய வெற்றி பெறவில்லை. அதன் பிறகு யாரும் அப்படி முயற்சி பண்ணதாகத் தெரியவில்லை. அப்படியிருந்தும் நாகேஷைக் கதாநாயகனாக்கினேன்.

நாகேஷைக் கதாநாயகனாக்க வேண்டும் என்பதற்காகவே "சர்வர் சுந்தரம்' கதை எடுக்கப்பட்டதா, இல்லை அது இயல்பாக அமைந்ததா?

இயல்பாக வந்தது என்று சொல்ல முடியாது. நாகேஷை மனதில் வைத்துத்தான் "சர்வர் சுந்தரம்' நாடகம் எடுக்கப்பட்டது. அவருடைய உடல் அமைப்புக்கு... அவருடைய உடல் மொழிக்கு ஏற்ப சர்வர் பாத்திரத்தில் ஒரு கதையை உருவாக்கினேன். அதே போல ஜெமினி என்னை வைத்து படம் எடுக்க ஆசைப்பட்டார். அவரை வைத்து படங்கள் எடுத்தேன்.

பெரிய நடிகர்களை வைத்துப் படங்கள் எடுப்பதில்லை என்று நீங்கள் தீர்மானித்திருந்தீர்களா?

அப்படியெல்லாம் இல்லை. தேதி பிரச்னைகள் தராத நடிகர்களை வைத்துப் படம் எடுப்பதில் கவனமாக இருந்தேன். இந்தக் காட்சிக்குப் பத்து பேர் தேவை என்றால் நான் செட்டுக்குள் போகும்போது அந்தப் பத்துபேரும் இருக்க வேண்டும். இருக்கிற நடிகர்களை வைத்து காட்சிகளை எடுத்துக் கொள்ள எனக்கு முடியாது. இந்த நடிகரை இந்தப் பக்கம் நிற்க வைத்து படம் எடுத்துக் கொண்டு இன்னொரு நாள் இன்னொரு நடிகரை அந்தப் பக்கம் நிற்க வைத்து படம் எடுக்கிற சிந்தனைக்கெல்லாம் நான் போகவே இல்லை. இதற்கு சின்ன ஆர்ட்டிஸ்டுகளோ, புது முகங்களோதான் எனக்குச் சரியாக இருந்தார்கள்.

"புன்னகை' படம் தோல்வி அடைந்தது என்பதும், தாங்கள் ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு சிகிச்சை எடுத்தீர்கள் என்பதும் தங்களைத் தளர வைத்திருக்க வேண்டும் அல்லவா? ஆனால் நேர் மாறாக அதற்குப் பிறகுதான் நீங்கள் பல புதுமுகங்களை அறிமுகப்படுத்தி "ரிஸ்க்' எடுத்தீர்கள். அதற்கு ஏதாவது காரணம் உண்டா?

ஹார்ட் அட்டாக்குக்குப் பிறகு நான் எடுத்த முடிவுகளில் ஒன்று புதுமுகங்களை அறிமுகப்படுத்துவது... "அவள் ஒரு தொடர்கதை' படத்துக்கு நடிகர்களை தேர்வு செய்த போது ஒரு படத்தில் தலை காட்டியிருந்தாலும் அவர்களைத் தவிர்த்துவிட வேண்டும் என்பதில் குறியாக இருந்தேன். அந்தப் படத்தில் ஒரே ஒரு விதிவிலக்கு கமல்ஹாசன். அந்த விகடகவி வேடத்துக்கு எனக்குச் சரியான ஆள் கிடைக்கவில்லை. அந்த வேடத்தை கமலைத் தவிர வேறு யார் செய்திருந்தாலும் சரியாக இருக்காது என்றும் தோன்றியது. யாரை நம்பி அந்த வேடத்தை நான் ஒப்படைக்க முடியும்? அதனால் அவரை மட்டும் வைத்துக் கொண்டு மற்ற எல்லாரையும் புதுமுகங்களாக தேர்வு செய்தேன்.அந்தப் படத்தில் நடித்த சுஜாதா, ஜெய்கணேஷ், ஸ்ரீப்ரியா எல்லாருமே பின்னாளில் பிரபலமானார்கள்.நான் தியேட்டரில் இருந்து வந்தவன். தியேட்டரில் ஒழுக்கம் முக்கியம். அதில் ரொம்ப கண்டிப்பாக இருப்பேன். அதனால் ஆரம்பித்திலிருந்தே எனக்கு செகர்யமான நடிகர்களை வைத்து படம் எடுப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தேன்.

போகப் போக அதைத் தளர்த்திக் கொள்ள வேண்டியிருந்தது வேறு விஷயம்.சொல்லப் போனால் புதுமுகங்களை அறிமுகப்படுத்துவது ஸ்ரீதர் பாணி. அவர் நிறைய புதுமுகங்களை அறிமுகப்படுத்திக் கொண்டே இருப்பார். அதைத் தொடர்ந்து நானும் புதுமுகங்களைத் தேட ஆரம்பித்து, பாலசந்தர் படம் என்றால் புதுமுகங்கள் இருப்பார்கள் என்று பேசும் அளவுக்குப் போனது. பாலசந்தர் படம் என்று மக்கள் மனதில் ஒரு எதிர்பார்ப்புக்கும் அதுவே காரணமானது. இல்லையென்றால் சிவாஜி படம், எம்.ஜி.ஆர். படமாகத்தான் பேசியிருப்பார்கள்.புது முகங்கள் என்ற போது அவர்களுக்குச் சொல்லித் தர மிகவும் அவகாசம் இருந்தது. முழுமையாகத் தயார் செய்ய முடிந்தது. நூறு சதவீதம் அவர்களைத் தயார் செய்தேன். வெற்றியும் நூற்றுக்கு நூறாக அமைந்தது. அதனால்தான் "அவர்கள்' படத்தில் சுஜாதாவை அனுவாகவும் ரஜினியை ராமநாதனாகவும் மக்கள் இன்னமும் ஞாபகம் வைத்திருக்கிறார்கள்.

சிவாஜியை வைத்து "எதிரொலி' படத்தை இயக்கினீர்கள். உங்களைத் திரையுலகில் அறிமுகப்படுத்திய எம்.ஜி.ஆரை வைத்து ஒரு படம்கூட இயக்கவில்லையே ஏன்?

எம்.ஜி.ஆர். ஒரு இமயம். என்னோடு தோழமையோடு இருக்கிற கமல்ஹாசன், ரஜினிகாந்தை வைத்துக்கூட ஒரு கட்டத்துக்கு மேல் நான் படம் இயக்கவில்லை. ரஜினியைக்கூட எஸ்.பி.முத்துராமனையும் கே.எஸ். ரவிகுமாரையும் வைத்துத்தான் இயக்க வைத்தேன்.ரஜினியிடம் என்ன எதிர்பார்ப்பார்கள் என்று எனக்குத் தெரியும். அதை முத்துராமன் செய்வதுதான் சரியாக இருக்கும். என்னிடம் மக்கள் எதிர்பார்ப்பது வேறு. நானும் ரஜினியும் சேர்ந்தால் அந்த எதிர்பார்ப்பு வேறு மாதிரி ஆகிவிடும். அது படத்தைப் பாதிக்கும் என்பதை உணர்ந்து கொண்டேன்."எதிரொலி'யைப் பொறுத்த வரை அந்தக் கதை சிவாஜிக்கு ரொம்ப பிடித்திருந்தது.

திரைக்கதையை ரொம்ப ரசித்தார்.கதையில் சிவாஜிகணேசன் ஒரு தவறு செய்துவிடுகிறார். அதற்காக குற்ற உணர்வில் படம் முழுக்க தவிக்கிறார். மனசாட்சியால் கடைசி வரை தொல்லை பட்டுக் கொண்டே இருப்பார். அப்ப சிவாஜி பெரிய இமேஜ் உள்ள ஹீரோ. அவர் போய் தவறு பண்ணிட்டதாக காட்டினால் ஒத்துக் கொள்வார்களா? அவரைப் போய் தப்பு பண்ணிட்டதா காட்டிட்டாரேன்னு என்னைக் குற்றம்சாட்டினார்கள். படம் சரியா போகவில்லை. ஆனால் மிகவும் ரசித்து எடுத்த படம் அது. இப்போது பார்த்தாலும் ஆச்சர்யமாக இருக்கும். அதை ஒரு புதுமுகத்தை வைத்து எடுத்திருந்தால் வெற்றி பெற்றிருக்கும் என்பது என் கணிப்பு. அப்படி எடுத்திருந்தால் அது பாலசந்தர் படமாகியிருக்கும். அது சிவாஜி படமாகிவிட்டது. அதிலிருந்து இமேஜ் ஒரு தடையாக அமைந்துவிட்டது. இமேஜ் இருக்கும் நடிகர்களை வைத்துப் படம் எடுக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்துவிட்டேன்.

அதனால்தான் எம்.ஜி.ஆரை வைத்துப் படமே இயக்கவில்லையா?

எம்.ஜி.ஆர். என்னுடைய இயக்கத்தில் ஒரு படம் எடுக்க விரும்பினார். ஆர்.எம். வீரப்பன் அது பற்றி பேசினார். அவர் கொடுத்த தேதியை நாம் மீறவே முடியாது. அவருக்கான பாடல்கள், காட்சிகள் எல்லாம் வேறு மாதிரி இருக்க வேண்டும். என் பாணி வேறாக இருந்தது. அதுவுமில்லாமல் நான் அப்போதுதான் நாடகத்தில் இருந்து வந்து படங்கள் இயக்கிக் கொண்டிருந்தேன். இரண்டு, மூன்று படங்கள் கையில் இருந்தன. அவர் கொடுத்த தேதி எனக்குச் சரியாக வரவில்லை. நான் எம்.ஜி.ஆரை நேரில் சந்தித்து கையெடுத்துக் கும்பிட்டு அதைத் தவிர்த்துவிட்டேன். (சிரிக்கிறார்)

அவர் உங்களை வசனகர்த்தாவாக அறிமுகம் செய்தார். அவர் உங்களுக்கு அறிமுகம் ஆனது எப்படி?

என் நாடகத்தைப் பார்த்துத்தான். என்னுடைய "சர்வர் சுந்தரம்', "நாணல்', "மெழுகுவர்த்தி' என என் எல்லா நாடகத்துக்கும் அவர் வந்திருக்கிறார். "மெழுகுவர்த்தி'யைப் படமாக்க வேண்டும் என்று உரிமை வாங்கினார். என்ன காரணத்தினாலோ அது நடக்காமல் போய்விட்டது. இந்தியில் ப்ரான் நடித்த ஒரு படத்தின் உரிமையை வாங்கி அதைத்தான் "தெய்வத்தாய்' என்று படமாக்கினார்கள். அதற்கு என்னைத் திரைக்கதை வசனம் எழுதுவதற்கு எம்.ஜி.ஆர். கேட்டுக் கொண்டார். அது குறித்து ஆர்.எம்.வீரப்பன்தான் என்னிடம் பேசினார்.

நட்சத்திர அந்தஸ்துள்ள நடிகர்களுக்கு நீங்கள் கதை தயாரிக்கவில்லை. ஆனால் நீங்கள் இயக்கிய படங்களின் மூலமாகவே நட்சத்திர அந்துஸ்துள்ள நடிகர்கள் உருவானார்கள். கமல், ரஜினி இருவரும் உங்கள் தயாரிப்புகள். அவர்களின் நட்சத்திர பலத்துக்கு ஏற்ப கதையை உருவாக்கும் சூழ்நிலை உங்களுக்கு ஏற்பட்டதா?

ஒரு கட்டத்துக்கு மேல அவர்களுக்குப் பண்ணமுடியலைதான். அப்கோர்ஸ்.. கமல் எனக்கு பிரச்னை இல்லை. "தப்புத்தாளங்கள்' படத்தில் பார்த்தீர்கள் என்றால் ஒரே ஒரு காட்சியில் அவர் தாசி வீட்டுக்கு வந்துவிட்டுப் போவதுபோல ஒரு காட்சி. கமல் அதை மகிழ்ச்சியாக நடித்துக் கொடுத்தார். அந்த மாதிரி ஒரு காட்சியை ரஜினியை வைத்துப் பண்ண முடியாது. மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

ஆக்க்ஷன் ஹீரோவாகவே நடித்துக் கொண்டிருந்த ரஜினியை வைத்து "தில்லு முல்லு' என்ற காமெடி படத்தை எடுக்க முடிந்ததே?

ஆமாம். ரஜினிக்கும்கூட அதில் நடிப்பதற்கு யோசனை இருந்தது. ""தைரியமா பண்ணுப்பா. நான் பாத்துக்கிறேன்'' என்று சொல்லித்தான் நடிக்க வைத்தேன். ரசித்து ரசித்துப் பண்ணிய படம். சந்தோஷமாக நடித்தார். அதற்கப்புறம்தான் அவர் படங்களில் முன்பகுதியில் காமெடியாகவும் பின் பாதியில் சீரியஸாகவும் இருப்பது மாதிரி ஒரு ட்ரெண்ட் உருவானது. அண்ணாமலை, முத்து எல்லாம் அந்த டைப் படங்கள்தான். காமெடியில் அவரை ரசிக்கிறார்கள் என்பது தெரிந்ததும் அது ஒரு பார்முலாவாகவே மாறிவிட்டது.

வித்தியாசமான முயற்சியாக நீங்கள் எடுத்த புன்னகை, நான் அவனில்லை ஆகியவை பெரிய வரவேற்பைப் பெற முடியாமல் போனதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?

நான் மிகவும் முன்னாடி செய்துவிட்ட படங்கள் அவை. மக்கள் தயாராவதற்கு முன்னால் வந்துவிட்டதுதான் அவை வரவேற்பைப் பெறமுடியாமல் போனதற்குக் காரணம். "நான் அவனில்லை' இப்போது ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றுவிட்டது. இருந்தாலும் நான் அப்போது செய்த ஸ்கிரீன் ப்ளே இல்லை இது. அது வேறு. வெற்றி பெற்றுவிட்டது என்பது வரை சந்தோஷம்தான்.கல்கி எடுத்தேன். அதில் கணவனால் புறக்கணிக்கப் பட்ட பெண்ணுக்கு ஒரு புதுமைப் பெண் ஒருத்தி ஒரு முடிவெடுக்கிறாள். பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் அன்புக்காக அவள் தன்னைத் தியாகம் செய்கிறாள். அந்தக் கணவனிடமிருந்து ஒரு குழந்தையைப் பெற்று புறக்கணிக்கப்பட்ட பரிதாபத்துக்குரிய அந்தப் பெண்ணுக்கு அந்தக் குழந்தையைத் தருகிறாள். இப்போது எடுத்தால் அந்தப் படம் பிரமாதமாகப் போகும் என்பது என் நம்பிக்கை. அது ஒரு பதினைந்து வருஷத்துக்கு முன்னால் எடுத்துவிட்ட படம். ஒரு பெண் அப்படி செய்வாளா என்ற பதறினார்கள். சிலர் ஆவேசப்பட்டார்கள். இப்போது காலம் மாறியிருக்கிறது. பலருடைய சிந்தனைகளை மாற்றியிருக்கிறது. வாடகைத் தாய் என்றெல்லாம் இப்போது பேசுகிறார்கள்.

ஸ்ரீதர், மகேந்திரன், பாரதிராஜா, பாலுமகேந்திரா, மணிரத்னம்.. என உங்களுக்கு முன்னும் உங்கள் சமகாலத்திலும் பணியாற்றிய பல முக்கியமான இயக்குநர்கள் இருக்கிறார்கள். இதில் தமிழ் சினிமாவின் தரத்தை முன்னெடுத்துச் சென்ற படங்களாக நீங்கள் கருதுவது எவற்றை?

ஒவ்வொருத்தருக்கும் ஒரு சிறப்பு இருக்கிறது. பாரதிராஜாவின் முதல் படமே பிரமிக்க வைத்த படம்தான். கிழக்குச் சீமையிலே எனக்கு மிகவும் பிடித்தபடம். மகேந்திரனின் உதிரிப்பூக்கள், மணிரத்னத்தின் இதயக்கோயில் சங்கரின் எந்திரன் என நிறைய சொல்லலாம்.

கறுப்பு வெள்ளைப் படங்களில் இருந்து வண்ணப்படங்களுக்கு மாறிய முக்கியமான காலகட்டத்தைக் கடந்து வந்திருக்கிறீர்கள். உங்களுக்கு அந்த மாற்றம் ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்தியதா?

கறுப்பு வெள்ளையில் எடுத்ததுமாதிரி எமோஷனல் காட்சிகள் கலரில் வராது. வண்ணப் படங்களின் காலம் வந்த பின்பும் நான் கறுப்பு வெள்ளையில்தான் பிடிவாதமாக படங்கள் எடுத்துக் கொண்டிருந்தேன். ஒரு கட்டத்துக்கு மேல் அது பிளாக் அண்டு ஒயிட் காலம் என்று பேச ஆரம்பித்த பின்பு வேறு வழியில்லாமல் நானும் கலரில் எடுக்க ஆரம்பித்தேன். நான் முதலில் எடுத்த படம் நான்கு சுவர்கள். அது சரியாகப் போகவில்லை. நல்ல படம் அது. முதல் கலர் படம் என்பதால் கலர்படம்.. கலர் படம் என்று அதிலேயே நிறைய யோசனை செலவானது.

சொல்லப் போனால் வண்ணத்துக்குக் கொடுத்த முக்கியத்துவத்தினால் என்னையே நான் இழக்க வேண்டியதாக இருந்தது. இப்பவும் மறுபடி எடுக்கலாம். அப்படிப்பட்ட கதை அது. என்னால் என் சிந்தனையை அதில் முழுமையாக வெளிப்படுத்த முடியாமல் போனது. வண்ணம் வந்த போது ஏற்பட்ட பாதிப்பு என்றால் இதுதான்.ஆனால் இப்போது மக்கள் கலரில் எடுக்கும் படங்களை விரும்பத் தொடங்கி நிறைய மாற்றங்கள் வந்தாகிவிட்டது. இனிமேல் மறுபடி கறுப்பு வெள்ளைக்குத் திரும்ப முடியாது. நூற்றுக்கு நூறு எடுத்துக் கொண்டால் அதில் கறுப்பு வெள்ளையிலேயே அத்தனை எமோஷனையும் காட்ட முடிந்தது. கலரில் எடுத்திருந்தால் என்ன செய்திருப்பேன்? அதில் இடம் பெறும் ஐந்து பெண்களுக்கும் ஐந்து பாடல் வைத்திருப்பேன். சிந்தனை அப்படித்தான் போயிருக்கும்.

மேடை நாடகம், சினிமா, தொலைக்காட்சித் தொடர்... மூன்றிலும் சாதனை படைத்திருந்தாலும் உங்கள் படைப்புத் திறனை முழுமையாக வெளிப்படுத்தும் களமாக இதில் எதைக் கருதுகிறீர்கள்?

நாடகம், சினிமா, தொலைக்காட்சித் தொடர் மூன்றுமே மூன்று தனித்தனி கம்பார்ட்மெண்டுகள். நாடக பயிற்சி சினிமாவுக்கு பயன்படும். ஆனால் சினிமாவுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கும். எனக்கே அப்படி வேறு மீடியத்துக்கு மாறும்போது அவகாசம் தேவைப்பட்டது. நாடகத்தின் தாக்கம் என்னிடம் அதிகம் இருந்தது. நாடகம் என்றால் உயிரை விடுவேன். பத்து ஆண்டுகள் நாடகமே உலகம் என்று இருந்தேன்.

அதனால் அதிலிருந்து சினிமாவுக்கு என்னைத் தயார்படுத்திக் கொள்வதற்குள் ஐந்தாறு சினிமாக்களைக் கடந்துவிட்டேன். ஆரம்பத்தில் என்னுடைய நாடககங்களையேதான் நான் சினிமாவாக எடுத்தேன். அதனால் எந்த இடத்தில் கைதட்டல் விழும் எந்த இடத்தில் மக்கள் கண்கலங்குவார் என்பது தெரியும். அந்தந்த காட்சிகளை அப்படி அப்படியே வைத்தேன். சினிமாவை ஒத்திகைப் பார்த்துவிட்டு படம் எடுப்பதுமாதிரியான அனுபவம் அது. சினிமாவுக்காக சிந்திக்கும்போது அதை எதிர்பார்க்க முடியாது. அதுதான் வித்தியாசம்.

ஏ.ஜி.எஸ்.ஸில் பணியாற்றிய காலங்களிலேயே நாடகம் போட ஆரம்பித்தீர்கள் அல்லவா?

1950-ல் ஏ.ஜி.எஸ்.ஸில் சேர்ந்தேன். 59-லிருந்து நாடகம் போட ஆரம்பித்தேன். 63, 64-ல் சினிமாவுக்கு வந்துவிட்டேன். ஏ.ஜி.எஸ்.ஸில் என்னுடன் பணியாற்றிக் கொண்டிருந்த அனந்து என் நாடகங்களைப் பார்த்துவிட்டு என்னுடன் பழக ஆரம்பித்தார். சினிமாவிலும் அந்த நட்பும் பங்களிப்பும் தொடர ஆரம்பித்தது.

வி.குமார், எம்.எஸ். விஸ்வநாதன்... பிறகு இளையராஜா... ஏ.ஆர்.ரஹ்மான் என உங்கள் படங்களில் இசையமைப்பாளர்கள் பணியாற்றியிருக்கிறார்கள். அவர்களின் தனித்துவமான அடையாளம் என்று நீங்கள் உணர்ந்தது எதை?

ஒவ்வொருத்தருமே இசை மேதைகள். அவர்களுக்குத் தீனிபோடுவது சாதாரண விஷயமில்லை. என்னுடைய படங்களில் மொத்த டூயட் என்று பார்த்தால் நான்கைந்து பாடல்கள்தான் இருக்கும். மற்றதெல்லாம் சிச்சுவேஷன் பாடல்கள்தான். எல்.ஆர். ஈஸ்வரி ஹைபிட்சில் பாடக்கூடியவர். அவரை காதோடுதான் நான் பாடுவேன் என்று பாட வைத்தது வி.குமார் இசையில்தான். அதே படத்தில் மென்மையான குரலில் பாடக்கூடிய பி.சுசிலாவை நான் சத்தம்போட்டுத்தான் பாடுவேன் என்று ஹை பிட்சில் பாடவைத்தோம். இசையில் அற்புதமான பல முயற்சிகளை நாங்கள் செய்தோம்.எம்.எஸ்.விஸ்வநாதனும் நானும் பணியாற்றிய படங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். அத்தனைப் பாடல்களும் காலம்கடந்து நிற்பவை. எம்.எஸ்.வியும் கண்ணதாசனும் எனக்குக் கொடுத்த விதவிமான மெட்டுக்களுக்கும் பாடல்களுக்கும் கணக்கே இல்லை. அத்தனை அற்புதமான பாடல்கள். தெய்வம்தந்த வீடு வீதியிருக்கு..., காற்றுக்கென்ன வேலி.. கடலுக்கென்ன மூடி.. என்ன அற்புதமான பாடல்கள்..?

அதுவரை எம்.எஸ். விஸ்வநாதனின் இசையமைப்பில் படங்களை இயக்கிய நீங்கள் பிறகு ஏன் திடீரென்று இளையராஜாவை இசையமைக்க ஒப்பந்தம் செய்தீர்கள்?"

சிந்து பைரவி' படம் வொர்க் பண்ணும்போது இந்தப் படத்தை இளையராஜாவை வைத்து பண்ணப் போகிறேன் என்று எம்.எஸ்.வி.யிடம் சொன்னேன். படத்தில் கர்னாடிக்கோடு ஃபோக் சாங்கும் இருப்பதால் அதற்கு இளையராஜா பொருத்தமாக இருப்பார் என்று சொன்னேன். அவருடைய சம்மதத்தோடுதான் இளையராஜாவிடம் சென்றேன். ராஜாவுக்கு ரொம்ப சந்தோஷம். வைரமுத்துவின் வரிகளில் பாடறியேன் படிப்பறியேன் கிடைத்தது. எல்லாமே சிட்சுவேஷன்தான். குமாரிடம் பணியாற்றியபோதே எம்.எஸ்.வியிடம் போனேன். எம்.எஸ்.வியிடம் இருக்கும்போதே ராஜாவிடம் போனேன். அப்படித்தான் ரஹ்மானிடம் வந்தேன். அதற்கு எந்த விருப்பு வெறுப்பும் காரணமில்லை. கதையைச் செழுமைபடுத்த என்ன தேவையோ அதை நாடிப் போனேன். கதைதான் அதற்கு யார் தேவை என்பதைத் தீர்மானிக்கிறது.

தெலுங்கில் மரோசரித்ரா, இந்தியில் ஏக் துஜே கேலியே போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்திருந்தும் அந்த மொழிப் படங்களில் நீங்கள் தொடர்ந்து படங்கள் இயக்கவில்லேயே?

ஒரு மனுஷன்தானே? எவ்வளவு பண்ண முடியும்? இத்தனைக்கும் தெலுங்கில் என்னை இயக்கும் கே.விஸ்வநாத்துக்கு நிகராகக் கொண்டாடினார்கள். இருந்தும் தமிழோடு நிறுத்திக் கொண்டேன். அதுவுமில்லாமல் பணம் சேர்க்கிற ஆசை என்னிடம் எப்போதும் இருந்ததில்லை. தமிழ் எனக்கு வசதியாக இருந்தது அதிலேயே கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டேன்.

உங்கள் படங்களில் பல மொழியினரை நடிகர்களாக அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள். ஆனால் அவர்கள் நடிக்கும் திரைப்படங்களில் அவர்கள் எல்லோரும் சொந்தக் குரலில்தான் படத்தில் பேச வேண்டும் என்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருந்தீர்கள். ரஜினி, சரிதா, பிரகாஷ்ராஜ் போன்றவர்கள் அவர்களின் உச்சரிப்புக்காகவே சிலாகிக்கப்பட்டார்கள். இப்போது நடிக்கும் நடிகைகள் பலருக்கும் டப்பிங் கலைஞர்களே குரல் கொடுக்கிறார்கள். இது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

பெரும்பாலும் என் படத்தில் அதைப் பிடிவாதமாகக் கடைபிடித்தேன். ஒன்றும் செய்வதற்கில்லை என்று நினைத்தவர்களுக்கு மட்டும் டப்பிங் வைத்துக் கொண்டேன்.

ரஜினி, கமலிடம் கண்டு வியந்த பல விஷயங்கள் இருக்கும். அவர்களின் குருவாக அவர்களிடம் பிடிக்காத விஷயம் என்ன?

""நூற்றுக்கு நூறு'' படம் பார்த்திருப்பீர்கள். அதில் எல்லோருமே ஜெய்சங்கரை பெண் சபலம் உள்ளவராக பழி சொல்லுவார்கள். அவரைக் காதலிக்கும் லட்சுமியும் அதை நம்ப ஆரம்பித்துவிடுவார். ஒரு காட்சியில் நாகேஷ் வெள்ளைத்தாளில் பேனாவால் ஒரு புள்ளி வைத்துவிட்டு இது என்ன என்று கேட்பார். லட்சுமி கறுப்புப் புள்ளி என்பார். நாகேஷ், ஏன் இவ்வளவு வெள்ளை இருக்கிறதே இது கண்ணுக்குத் தெரியவில்லையா என்பார். எங்கேயோ படித்திருந்தேன். அதை அந்தப் படத்தில் பயன்படுத்தியிருந்தேன். அப்படித்தான். மனிதன் என்றால் ஏதோ ஒரு குறை இருக்கத்தான் செய்யும். அதை நாம் பெரிதுபடுத்தக்கூடாது. ரஜினி, கமலிடம் எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன. அதைத்தான் நான் பார்க்கிறேன்.

தமிழ் சினிமா தொழில்நுட்ப ரீதியாக பல முன்னேற்றங்களைக் கண்டிருக்கிறது. அந்த வளர்ச்சியை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

ஆகாயத்தில் மூன்று குட்டிக்கர்ணம் அடிப்பதற்கும் திரையில் நூறு ரஜினியைக் காட்டுவதற்கும்தான் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறார்கள். அப்போதே யதார்த்தம் போய்விடுகிறது. கிராபிக்ஸைப் பயன்படுத்தி வியக்க வைப்பதற்கான கதைகள் வேறு. அவதார் மாதிரியான விஞ்ஞான புனைகதைகளுக்கும் மாயாஜால படங்களுக்கும் குழந்தைகளுக்கான அனிமேஷன்களுக்கும் அத்தகைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும். யதார்த்த படங்களுக்குத் தேவையில்லை. யதார்த்த கதைகள் என்பவை கேமிரா சொல்லும் கதையாக இருக்க வேண்டுமே தவிர, கம்ப்யூட்டர் சொல்லும் கதையாக இருக்கக் கூடாது. நான் சொல்வதை இன்றைக்கு நிறைய பேர் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

அப்படியானால் நல்ல திரைப்படம் உருவாவதற்கு இந்தத் தொழில்நுட்பம் எல்லாம் தேவையில்லை என்கிறீர்களா?

எடிட்டிங், கேமரா தொழில்நுட்பம் போன்ற வளர்ச்சிகள் காலத்தின் கட்டாயம். அவை நிச்சயம் தேவை.

உலகத் தரமான சினிமா என்பது பற்றி பலரும் பேசுகிறார்கள். உங்கள் பார்வையில் உலக சினிமா என்றால் என்ன?

உலக சினிமா எல்லாமே நல்ல சினிமா இல்லை. நல்ல சினிமாதான் உலக சினிமாவாக இருக்க முடியும். நுணுக்கமாகச் சொல்ல வேண்டியதை நுணுக்கமாகவும் விரிவாகச் சொல்ல வேண்டியதை விரிவாகவும் சொல்வதே நல்ல சினிமாவாக இருக்கமுடியும். ரேவும் அடூர் கோபாலகிருஷ்ணனும் எடுத்தவை உலகத்தரமானவை. ஆனால் அது எல்லோருக்கும் புரிந்து கொள்ள முடிகிற படமாக இருக்க வாய்ப்பில்லை.உலகத்தரம் வாய்ந்த ஜனரஞ்சக சினிமா என்று ஒன்று இருக்கத்தான் செய்கிறது. எல்லாவற்றையும் குழப்பிக் கொள்ளக்கூடாது. உலக சினிமா வேறு, சினிமா உலகம் வேறு என்பார் எழுத்தாளர் ஜெயகாந்தன்.. அதுதான் என் கருத்தும்.

உங்கள் யூனிட் என்று சொல்லும் அளவுக்கு உங்களுக்கென கேமிராமேன், கதைவிவாதக் குழுவினர் செயல்பட்டனர். குறிப்பாக அனந்து உள்ளிட்டவர்களைப் பற்றி?

வெவ்வேறு காலகட்டங்களில் பலர் பணியாற்றியிருக்கிறார்கள். முன்னரே சொன்னது மாதிரி இசையமைப்பாளர்கள், கவிஞர்கள்...ஒளிப்பதிவாளர்களில் லோகநாத் 55 படங்களுக்கு மேல் பணியாற்றினார். அதன் பிறகு அவருடைய அஸிஸ்டெண்ட் ரகுநாதரெட்டி 25 படங்களுக்குப் பணியாற்றினார். சீரியலுக்கும்கூட அவர்தான் செய்கிறார். எடிட்டிங்கில் பார்த்தால் ஆரம்பகாலத்தில் நடராஜ முதலியார் செய்தார். அதற்கப்புறம் என்.ஆர். கிட்டு... அவரால் முடிகிற வரை எனக்கு எடிட்டிங் செய்தார். அவர் என்னைத் தவிர வேறு யாருக்கும் பணியாற்றியதில்லை. அனந்து நாடக உலகத்திலிருந்தே உடன் இருந்தவர். ஆரம்பத்தில் 10-15 படம் தவிர என் எல்லா படத்திலும் இருந்தவர். வசந்த் எடுத்துக் கொண்டால் பதிமூன்று வருஷம் வொர்க் பண்ணியிருக்கிறார். சுரேஷ்கிருஷ்ணா ஒன்பது வருஷம்.. சரண் ஏழெட்டு வருஷம்.. இடையில் வந்துவிட்டுப் போனவர்கள் மிகவும் குறைவு.

கடந்த 50 ஆண்டுகளாக திரைத்துறையில் செயல்பட்டு வருகிறீர்கள். இந்திய அரசின் மிக உயர்ந்த திரைத்துறை சாதனையாளர் விருதான பால்கே விருது பெற்றிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் திரைத்துறையினருக்கு உங்கள் அறிவுரை?

அறிவுரை எல்லாம் பெரிய வார்த்தை... ஒரே ஒரு விஷயம்தான்.. அர்ப்பணிப்புதான் முக்கியம். செட்டுக்கு வந்துவிட்டால் சினிமாவைத் தவிர எந்த சிந்தனையும் இருக்காது. அர்ப்பணிப்புதான் அடிப்படை.. அப்புறம் உழைப்பு.. அப்புறம் திறமை... திறமையில்லாம அர்ப்பணிப்பு மட்டும் இருந்து பிரயோஜனமில்லையே..

இயக்குனர் கே.பாலச்சந்தர் பிறந்தது தஞ்சாவூர் தாலுக்காவில் உள்ள நன்னிலம். இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், நடிகர், மேடை நாடக இயக்குநர், தொலைக்காட்சி நாடகத் தயாரிப்பாளர் என கலை உலகின் பலத்துறைகளிலும் வெற்றிக் கொடி நாட்டியவர். வாழ்க்கைத் துணை ராஜம். மகன், கைலாசம். மகள் புஷ்பா கந்தசாமி.கே.பாலசந்தர் என்று அறியப்பட்ட கைலாசம் பாலசந்தர் பிறந்தது ஜூலை 9, 1930-ல். வீட்டுத் திண்ணையில் பள்ளிப்பருவத்திலேயே நாடகம் போட்டவர்.

மேடை நாடகத் துறையில் இருந்து திரைத்துறைக்கு வந்தவர். எம்.ஜி.ஆர். நடித்த "தெய்வத்தாய்' படத்துக்கு வசனம் எழுதினார். திரைத்துறையில் 1965-ம் ஆண்டு வெளியான "நீர்க்குமிழி' இவரது இயக்கத்தில் வெளிவந்த முதல் திரைப்படம். நாகேஷ் இதில் கதாநாயகனகாக நடித்தார். இவருடைய பெரும்பாலான படங்களில், மனித உறவு முறைகளுக்கு இடையிலான சிக்கல்கள், சமூகப் பிரச்னைகள் ஆகியவையே கருப்பொருளாய் விளங்கின. "புன்னகை', "அவள் ஒரு தொடர்கதை', "அபூர்வ ராகங்கள்', "அவர்கள்', "புன்னகை மன்னன்', "எதிர் நீச்சல்', "வறுமையின் நிறம் சிகப்பு', "உன்னால் முடியும் தம்பி' முதலியன இவர் இயக்கிய சிறந்த படங்களில் சில.

90- களுக்குப் பிறகு "கையளவு மனசு' போன்ற பெரும் வரவேற்பைப் பெற்ற தொலைக்காட்சித் தொடர்களையும் இயக்கினார்.கவிதாலயா என்னும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நிறுவினார். இதன் மூலமாக பிற இயக்குநர்களின் கைவண்ணத்தில் பல திரைப்படங்களை அளித்துள்ளார். அவற்றில் "நெற்றிக்கண்', "ராகவேந்தரா', "சிவா', "ரோஜா', "முத்து' ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

இவருக்கு 1987ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது கொடுக்கப்பட்டது. 2010-ஆம் ஆண்டுக்கான தாதாசாகெப் பால்கே விருதுக்கு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.இயக்குநர் ஸ்ரீதரைப் போலப் பல புதுமுகங்களை ஆர்வத்துடன் அறிமுகம் செய்தவர் பாலசந்தர். அவர்களுள் உலக அளவில் புகழ் அடைந்தவர் ரஜினிகாந்த். கமலஹாசனை கதாநாயகனாக்கியது பாலசந்தர் அல்ல எனினும், வரிசையாக அவருக்கு வாய்ப்புக்களை ஏணிப்படிகளாக அமைத்துக் கொடுத்தவர் பாலசந்தர்தான். ""அவள் ஒரு தொடர்கதை'' போன்ற சில திரைப்படங்களை முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்தே இயக்கியிருந்தார்.

படாபட் ஜெயலட்சுமி, ஸ்ரீபிரியா, விஜயகுமார், ஜெய்கணேஷ் ஆகியோர் அறிமுகமான இது ஒரு வெற்றிப்படமாகவும் அமைந்தது. "பட்டினப்பிரவேசம்' திரைப்படத்திலும், டெல்லி கணேஷ், சிவச்சந்திரன் போன்றோரை அறிமுகம் செய்தார். இதுவும் ஒரு வெற்றிப்படமே.மேலும், பிற மொழியிலிருந்தும் சிலரை தமிழில் அறிமுகப்படுத்திய பெருமையும் இவருக்கு உண்டு. அவர்களுள் சுஜாதா (அவள் ஒரு தொடர்கதை) "ஷோபா (நிழல் நிஜமாகிறது)' சரத்பாபு (நிழல் நிஜமாகிறது), சரிதா (தப்புத்தாளங்கள்), பிரகாஷ்ராஜ் (டூயட்) ஆகியோரைக் குறிப்பிடலாம்."வறுமையின் நிறம் சிகப்பு' திலீப், "நிழல் நிஜமாகிறது' அனுமந்து ஆகியோர் இவருடைய அறிமுகங்களே.

மேஜர் சுந்தரராஜன் (மேஜர் சந்திரகாந்த்), எஸ். வி. சேகர் (வறுமையின் நிறம் சிகப்பு), மற்றும் மௌலி (நிழல் நிஜமாகிறது), ஒய். ஜி. மகேந்திரன் (நவக்கிரகம்), காத்தாடி இராமமூர்த்தி (பட்டினப்பிரவேசம்) ஆகியோர் நாடக மேடையில் இருந்து இவரால் திரைக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர்கள். தமது இயக்கத்தில் பாலசந்தர் அதிகமாகப் பயன்படுத்திய நடிகர்கள் ஜெமினி கணேசன், நாகேஷ், மேஜர் சுந்தரராஜன், கமலஹாசன், முத்துராமன் ஆகியோர். நடிகையரில் செüகார் ஜானகி, ஜெயந்தி, சுஜாதா, சரிதா ஆகியோரைக் குறிப்பிடலாம்.

வெற்றி, தோல்வி ஆகிய இரு துருவங்களையும் ஒரே நேரத்தில் தமது திரையுலக வாழ்வில் பாலசந்தர் அனுபவித்தது உண்டு. இவர் முதன் முதலில் இயக்கிய வண்ணப்படமான "நான்கு சுவர்கள்' தோல்வி அடைந்தது. அதே கால கட்டத்தில் அவரது "நூற்றுக்கு நூறு' வெளியாகி பெரும் பாராட்டையும் வெற்றியையும் ஈட்டியது.அரசியல் களத்தைத் தொட்டுப் பார்த்த பாலசந்தரின் படங்கள் "தண்ணீர் தண்ணீர்', "அச்சமில்லை அச்சமில்லை'. "தண்ணீர் தண்ணீர்' கோமல் சுவாமிநாதனின் நாடகத்திலிருந்து உருவானது. கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் இணைந்து நடித்த கடைசிப் படம் பாலசந்தரின் "நினைத்தாலே இனிக்கும்'. பாலசந்தர் வெளிநாடுகளில் படப்பிடிப்பை நிகழ்த்திய முதல் படமும் இதுவே.பாலசந்தரின் கைவண்ணத்தில் ஜெயலலிதா நடித்த ஒரே படம் "மேஜர் சந்திரகாந்த்'. இவர் கறுப்பு வெள்ளையில் எடுத்த கடைசி படம் "நிழல் நிஜமாகிறது,

1969 முதல் பால்கே விருது மத்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்டு வருகிறது. இந்தியச் சினிமாவின் தந்தை என்று போற்றப்படும் பால்கே மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்தவர். 1913-ல் "ராஜா ஹரிசந்திரா' என்ற படத்தை முதன் முதலாக தயாரித்தார். 19 ஆண்டுகளில் 95 திரைப்படங்களைத் தயாரித்தவர். மெüனயுகம் முடியும்போதே இவருடைய சினிமா வாழ்வும் முடிவுக்கு வந்துவிட்டது. "சேது பந்தனம்' என்ற இவருடைய கடைசி மெüனப்படம் 1932-ல் வெளியானது.தமிழ் சினிமா பங்களிப்புக்காக இதுவரை நான்கு பேர் தாதா சாகேப் பால்கே விருது பெற்றிருக்கிறார்கள். எல்.வி. பிரசாத் (1982), நாகிரெட்டி (1986), சிவாஜிகணேசன் (1996), கே.பாலசந்தர் (2011).

kalnayak
29th December 2014, 11:54 AM
முரளி கிருஷ்ணா வாசுதேவா ... பெயர் மூன்று அவதாரம் ஒன்று..

ஆம் தகவல் ஞான அவதாரங்கள் இந்த மூவரும் அள்ளித் தெளிக்கும் தகவல்கள் மதுர கானத்தின் மணி முத்துக்கள்..

மூவருக்கும் என் உளமார்ந்த பாராட்டுக்கள்..

ஓ... இன்னொன்று விட்டு விட்டதே..

கோபாலா... அதுவும் இதே அவதாரம் தானே...

இந்தத் தகவல் களஞ்சியங்களால் நிரம்பி வழிகிறது மதுர கானம் ... அதன் மூலமாக மய்யம் இணைய தளம்...

இவற்றைப் பற்றிய விரிவான வர்ணனைக்கோ.. சின்னக் கண்ணன்...

என்னா விநோதம் பாருங்க....

எல்லாமே கண்ணனின் அவதாரம் தானுங்க...

இப்பவாவது ஒருத்தர்தான் பல பெயர்களில் வந்து திரியில் (குறிப்பாக நடிகர்திலகம் திரிகளில்) எழுதுகிறார் என்று குற்றம் சாட்டுபவர்களின் குற்றத்தை ஒப்புக் கொள்ளுகின்றீர்களா?

chinnakkannan
29th December 2014, 12:21 PM
ஆண்களும் எக்ஸர் ஸைஸ் லாம் செய்வாங்கன்னு நெய்வேலி வாசுதேவனார்க்கு யாரும் சொல்ல வில்லை போல..:)

ஆனா அஸ் யூஸ்வல் பெண்களும் உடற்பயிற்சி செஞ்சுக்கிட்டு பாடுவாங்களாக்கும்..( ரெண்டு உ.ப பாட்டுக்கும் தாங்க்ஸ்..) இந்தப் பாட்டுல நீங்க எழுதியிருக்கற சொர்ண புஷ்பம் ( நதியா பாட்டு பார்த்ததில்லை பார்த்துட்டு சொல்றேன்) ஆடறது தான் ஃபேமஸ் இல்லையோ.. (மெள ச வை விட)..:)


http://www.youtube.com/watch?v=o_AnPm0noXQ

அக்னி நட்சத்திரம்.. பிரபு அம்லு மற்றும் இதர உ.ப அழகிகள்..ப்ளஸ் இளைய ராஜா..

//அமலாவுக்கு 'அக்ரோபேட்டிக்' அமலா என்றே பெயர் சூட்டலாம்... // நல்ல பட்டம் :)
அப்புறம் வர்றேங்க்ணா...

gkrishna
29th December 2014, 02:05 PM
அடையாறு கலை இலக்கியச் சங்கம்

பாலச்சந்தர் – ஒரு சகாப்தம்:


நினைவேந்தல்

தமிழ்மணம் இலக்கிய மனை,

கோட்டூர் தோட்டம் (துரைமுருகன் இல்லம் அருகில்),

சென்னை

மார்கழி 23, 2045 / சனவரி 7. 2015 மாலை 4.30


அன்புடையீர்,
தாதாசாகேப் விருதாளர் இயக்குநர் பாலச்சந்தர் நினைவேந்தல் மேற்குறிப்பிட்டவாறு நடைபெற உள்ளது.

நடிகர் சாருகாசன்,
இயக்குநர் இலெனின்,
இயக்குநர் தமிரா (பாலச்சந்தர் நடித்த இரட்டைச்சுழி படத்தை இயக்கியவர்),
(அப்படத்தின் உரையாடலாசிரியர்) தமிழ்,
எழுத்தாளர் முனைவர் பாரதிபாலன்,
கல்விக்கடல் முனைவர் ஆனந்த மூர்த்தி (15 முதுகலைப் பட்டங்களும் முனைவர் பட்டங்களும் பெற்ற கல்வியாளர்),
நண்பர் வட்டத்தினர் பங்கேற்க உள்ளனர்.
தங்களின் நினைவுரைகளையும் தெரிவிக்க நினைவேந்தலில் பங்கேற்க அன்புடன் அழைக்கிறோம்.

மரு.அகிலா சிவசங்கர், தலைவர்.
வையவன், செயலர்
அடையாறு கலை இலக்கியச் சங்கம், சென்னை

https://ci6.googleusercontent.com/proxy/QBzwJIjunp3SXyN0y-vJO9GA0cYkz155USktGacP_0-2eXNufo4ontUjvx2GiBl4T94m-YhCK0ljRegB6-HO1ljrodsnKe3bZHjOgEFd304MWwnnNu8G8TkXXmYSwwg=s0-d-e1-ft#http://www.akaramuthala.in/wp-content/uploads/2014/12/k.balachandar01.jpg

gkrishna
29th December 2014, 04:51 PM
இந்தி நடிகர் ராஜேஷ் கண்ணா பிறந்த தினம்: 29-12-1942


http://www.youtube.com/watch?v=vo1MykK4u8U

vasudevan31355
29th December 2014, 05:11 PM
ஆண்களும் எக்ஸர் ஸைஸ் லாம் செய்வாங்கன்னு நெய்வேலி வாசுதேவனார்க்கு யாரும் சொல்ல வில்லை போல..:)



சி.க

ஆண்கள் எக்ஸர்ஸைஸ் பண்ணி நீங்களும், நானும் பார்த்தா நல்லாவா இருக்கும்?:)

vasudevan31355
29th December 2014, 05:21 PM
ஆனா அஸ் யூஸ்வல் பெண்களும் உடற்பயிற்சி செஞ்சுக்கிட்டு பாடுவாங்களாக்கும்..( ரெண்டு உ.ப பாட்டுக்கும் தாங்க்ஸ்..) இந்தப் பாட்டுல நீங்க எழுதியிருக்கற சொர்ண புஷ்பம் ( நதியா பாட்டு பார்த்ததில்லை பார்த்துட்டு சொல்றேன்) ஆடறது தான் ஃபேமஸ் இல்லையோ.. (மெள ச வை விட)..:)




நதியா நடனத்தைவிட ஸ்டைல் ஜாஸ்தி. ஆனால் அம்மு அப்படி இல்லை. ப்ரொபெஷ்னல் பெர்பெக்ஷன். உடம்பு வில்லாகும். அதனால் என் ஓட்டு அமலாவுக்கே. (ஆனா உடம்பு இளைச்சி ஒல்லிக்குச்சான்)

ஆனால் நீங்க போட்ட பாட்டு சான்ஸே இல்ல. பிரபு, அமலா ஒரு ஆண் , ஒரு பெண் அமர்க்களம். எல்லாத்தையும் விட இது இன்னும் டாப். இந்தப் பாட்டைப் போட்ட உங்களுக்கு ரோஜாப்பூவாலேயே அபிஷேகம் செய்யலாம். தேங்க்ஸ் கண்ணா!

Russellzlc
29th December 2014, 06:07 PM
‘கவிகளும் கண்பாடுதே...’

திரு.வாசு சார், திரு.கிருஷ்ணா சார், திரு.ராகவேந்திரா சார், திரு. ரவி சார், திரு.சின்னக்கண்ணன் சார் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். பணி காரணமாக அடிக்கடி வரமுடியவில்லை என்றாலும் எல்லா பதிவுகளையும் படிக்கிறேன். 3,4 நாட்கள் பார்க்க முடியாவிட்டாலும் பின்னர், மொத்தமாக படித்து விடுகிறேன்.

திரு.வாசு சார், முள்ளும் மலரும் படத்தை அலசி முடித்து விட்டீர்கள் என்று பார்த்தால் பாடல்களையும் விடமாட்டேன் என்கிறீர்களே. இனி அந்தப் படத்தை வேறுயாரும் திறனாய்வு செய்ய எதையும் விட்டு வைக்கவில்லை நீங்கள். இந்தப் படத்தின் ஆய்வு மற்றும் தரவேற்றலுக்கு மட்டும் உங்கள் உழைப்பை நினைத்தால் பிரமிப்பு ஏற்படுகிறது. நான் இன்னும் உழைக்க கற்க வேண்டும்.

திரு.ரவிசார், உங்கள் காணிக்கை கட்டுரை அற்புதம். தனது திருப்பணியையும் நிறைவேற்றிக் கொண்டு, அர்ச்சகரின் மகனின் கல்விச் செலவையும் கொடுக்க வைத்த, பெருமாளின் பெருமையை நீங்கள் விவரித்த விதம் சிறப்பு.

திரு.கிருஷ்ணா சார், கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம் என்பது போல தேடித்தேடி அரிய பதிவுகளை இடுகிறீர்கள். நிறைய தகவல்கள் தெரிந்து கொள்ள முடிகிறது. பாராட்டுக்கள், நன்றிகள். அமரர் பாலச்சந்தர் அவர்களின் இந்தியன் எக்ஸ்பிரஸ் பேட்டிக்கு பின் வெளியாகியிருக்கும் தகவல்களில் எனக்கு இரண்டு சந்தேகங்கள்.
1. அவள் ஒரு தொடர்கதைக்கு முன்பே, பொண்ணுக்கு தங்க மனசு படத்தில் விஜயகுமார் நடித்ததாக ஞாபகம்.
2. பட்டினப் பிரவேசத்தில் திரு.காத்தாடி ராமமூர்த்தியை பாலச்சந்தர் அறிமுகப்படுத்தியதாக இருக்கிறது. பட்டிக்காடா பட்டணமா படத்திலேயே, ரிக்க்ஷாக்காரராக வந்து மனோரமாவிடம் அடிவாங்குவாரே?
எனது சந்தேகங்கள் சரிதானா?

-------------
இனி, பாடலுக்கு வருகிறேன்.
அடுத்த வீட்டுப் பெண் படத்தில் திரு.சீர்காழி கோவிந்தராஜன் அவர்களும் திரு.திருச்சி லோகநாதன் அவர்களும் இணைந்து பாடிய அற்புதமான பாடல். ‘கண்களும் கவிபாடுதே...’ பாடகர்கள் பாடுவதற்கு மிகவும் கடினமான பாடல். இருவருமே இசையில் மேதைகள்.

இந்தப் பாடலை பார்ப்பவர்கள் நிச்சயம் சிரிக்காமல் இருக்க முடியாது. திரு.டி.ஆர்.ராமச்சந்திரன், திரு.தங்கவேலு, திரு.பக்கிரிசாமி, திரு.ஏ.கருணாநிதி, திரு.சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன், திரு.பிரண்ட் ராமசாமி, திருமதி. அஞ்சலி தேவி அனைவரும் சேர்ந்து கலக்கியிருக்கும் பாடல். ‘விண்மணி போலே மண்மேலே...’ என்று சீர்காழி குரலில் தங்கவேலு பாடியதும், அடுத்து லோகநாதன் குரலில் பாட்டு வாத்தியாராக வரும் பக்கிரிசாமி, பதற்றத்தில் பாடலை மாற்றி ‘கவிகளும் கண்பாடுதே..’ என்று மாற்றிப் பாடுவது வேடிக்கை. அவர் சுரம் பாடி முடித்ததும் இதற்கு என்ன பதில் என்று கேட்பது போல, பெருமிதம் கலந்த முகத்தை நிமிர்த்தி சவால் விடுவது போல அஞ்சலி தேவி அவர்களின் நடிப்பு ரசிக்கத்தக்கது.

இந்தப் பாடல் காட்சியில் முக்கியமாக கவனிக்க வேண்டிய அம்சம், தமிழ் திரையுலகின் முதல் காமெடி கதாநாயகன் என்ற பெருமையை பெற்றவரான திரு.டி.ஆர்.ராமச்சந்திரன் அவர்களின் நடிப்பு. காட்சிப்படி திரு.தங்கவேலுதான் உண்மையில் பாடுவார். அஞ்சலியை மயக்க டி.ஆர்.ராமச்சந்திரன் தனக்கு பாடத் தெரியும் என்று காட்டுவதற்காக வாயசைப்பார். ஆனால், உள்ளூர பயம், பதற்றம், வெற்றி பெற வேண்டும் என்ற வேகம் எல்லாவற்றையும் திரு.ராமச்சந்திரன் காட்டியிருப்பார்.

திரு.தங்கவேலு எப்போது பாடலை ஆரம்பிப்பாரோ என்று எச்சரிக்கையுடன் ஓரக்கண்ணால் அவரை பார்த்தபடி, அவர் ஆரம்பித்ததும் ஒரு விநாடி கழித்து உதறிக் கொண்டே பாட ஆரம்பிப்பார். அவரை குளோசப்பில் காண்பித்து முகத்தில் முத்தாக வியர்வையை காண்பித்தால் காமெடிக்கு பதிலாக திகிலாகி விடும். அப்படியல்லாமல், பயம், பதற்றத்தால் முகத்தில் வழியும் வியர்வையை கையால் துடைத்தபடி பாடி தனது உணர்வுகளை உடல் மொழியால் காட்டியிருப்பார். வெற்றி பெறும் வேகத்தில் எழுந்து அஞ்சலி தேவியை நோக்கி ஓடுவார். அப்போது, அவர் இடுப்பில் கட்டப்பட்டிருக்கும் கயிறை தங்கவேலு இழுத்து, பின்னால் கொண்டு வருவது நிச்சயம் வயிற்றை பதம் பார்க்கும். எல்லாவற்றுக்கும் உச்சமாக, தங்கவேலு உச்ச ஸ்தாயியில் பாடும்போது சத்தம் தாங்க முடியாமல் இருகாதுகளையும் கைவிரல்களால் அடைத்துக் கொள்ளும் காட்சி நகைச்சுவையின் உச்சம்.

பாடி வாயசைக்க வேண்டும். ஆனால், பாடத் தெரியாதது போல, பாடல் ஆரம்பித்ததும் சற்றுத் தள்ளி பாடலைத் தொடங்கி பின்னர், சரியாகப் பாடுவது போல நடிப்பதற்கு என்ன டைமிங் சென்ஸ் வேண்டும்? அதை திரு.டி.ஆர்.ராமச்சந்திரன் அருமையாக செய்திருப்பார்.

30 ஆண்டுகளுக்கு முன் திரு.சிவாஜிகணேசன் அவர்கள் நடித்த கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி படத்தை திரையரங்கில் மறுவெளியீட்டில் பார்த்தேன். பின்னர், பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதிலும் இதேபோல, திரு.சிவாஜி கணேசன் அவர்கள் பாட திரு. டி.ஆர்.ராமச்சந்திரன் வாயசைப்பது போல காட்சி வரும். அந்த பாடலை வானொலியில் பலமுறை கேட்டு ரசித்திருக்கிறேன். ஆனால், சட்டென்று நினைவுக்கு வரவில்லை.

இந்த இரண்டு பாடல்களையும் பாடல் இரண்டு, பாணி ஒன்றுக்கு கூட பயன்படுத்திக் கொள்ளலாம் திரு.வாசு சார். நடிகரும் ஒன்று என்பது இன்னும் சிறப்பு.

நண்பர்கள் அனைவருக்கும் மீண்டும் எனது ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

RAGHAVENDRA
29th December 2014, 06:34 PM
உள்குத்துபவர்களுக்கு வஞ்சகமில்லாமல் உள் குத்து குத்த வேண்டியதுதான்.:) அதே போல வெளிக்குத்துக்கும் வெளியே நின்று எட்டிப் பார்த்தபடி வெளிக்குத்துதான்.:) நம்மைப் பொறுத்த வரையில் பொறுமை அதிகம். அதையே அட்வான்டேஜ் எடுத்துக் கொண்டு சீண்டினால் அப்புறம் ஒரிஜினல் மங்கி குணம்தான்.:)

அந்தப் பாடல்களை நான் தங்களுக்கு அன்பளிப்பாக அளித்ததற்குக் காரணமே தங்கள் ரசனை தான். (அதற்காக மற்றவர்கள் எவரேனும் எங்களுக்கு ரசனை இல்லையா என்று உள்குத்து பதிவுகள் ஏதேனும் போட்டு விடப் போகிறார்கள்?:)



வாசு சார்
தங்களுடைய நடையே தனி... என்ன அருமையாக விளக்கியிருக்கிறீர்கள்.. அட்டகாசம்..

குத்து என்றவுடன் எனக்கு அந்நாளைய குத்து தான் ஞாபகத்திற்கு வருகிறது...

ஆஹா... கள்ளபார்ட் நடராஜன் தூள் கிளப்பும் குத்துப் பாட்டு...

https://www.youtube.com/watch?v=zAZfkh7H6PI

ஒரு யோசனை தோன்றுகிறது..
[யாராவது குத்து விடப்போகிறார்கள். ]

அந்நாளைய திரைப்படக் குத்துப்பாடல்களைப் பற்றிய தொடர் ஒன்று நீங்கள் எழுதினால் என்ன...

வருங்காலத்தில் மெல்லிசை மேடை நிகழ்ச்சிகளுக்கு சரியான தீனி கிடைக்குமே...

RAGHAVENDRA
29th December 2014, 06:41 PM
கலைவேந்தன் சார்
காத்தாடி ராமமூர்த்தி அதற்கும் இன்னும் சில வருடங்கள் முன்பாகவே வந்து விட்டார்..
பெண்ணே நீ வாழ்க படத்தில் பிரம்மச்சாரியாக ஜெய் நடிக்கும் படத்தில் நண்பர்கள் கிண்டல் செய்யும் பாட்டில் வருவார் என்பது என் நினைவு.
ராமன் எத்தனை ராமனடி படத்தில் இந்த நாட்டில் ஏழைகளுக்கு வாழ வழியே இல்லையா என்ற வசனத்தைச் சொல்லிக் கொடுப்பார்.

RAGHAVENDRA
29th December 2014, 06:46 PM
வாசு சார்
முள்ளும் மலரும்...
தங்களுடைய அட்டகாசமான பதிவைப் பாராட்டும் பதிவும் பல பக்கங்களுக்கு வரவேண்டும்.
ஆனால்... வார்த்தைகள்... [புதிய பறவை படத்தில் தலைவர் ரேகை ரேகை எனக் கேட்பாரே, அது போல கேட்கவேண்டும் ]
வர மாட்டுங்குதே..

சூப்பர்.. ரொம்ப கஞ்சமாக நாலே எழுத்துக்களில் முடித்து விட்டேன்.

rajraj
29th December 2014, 10:20 PM
ஆண்களும் எக்ஸர் ஸைஸ் லாம் செய்வாங்கன்னு நெய்வேலி வாசுதேவனார்க்கு யாரும் சொல்ல வில்லை போல..:)


vasu is very young. He walks to work from home. That is enough exercise! :lol:

chinnakkannan
29th December 2014, 10:48 PM
வாசுசார் உங்கள் பெருந்தன்மைக்கு மிக்க நன்றி.. அது ரொம்ப நல்ல பாட்டாக்கும் ரோஜாப்பூ ஆடிவந்தது.. பிரபுவும் நல்ல உடற்கட்டுடன் இருப்பார்.. பிற்காலத்தில் அவர் செய்த உ.ப வை நானும் ஜிம்மில் செய்து பார்த்திருக்கேன் ( நெஜம்மாங்க..சொன்னா நம்பணும்!)


கலை வேந்தன் சார்..வாங்க வாங்க.. அ.வீ பெ பாட்டு கண்களும் கவி பாடுதே நினைவைத் தூண்டி விட்டு விட்டீர்கள்..அப்போது நான்மதுரையில் இருந்தேனா பக்கத்துத் தெருவான ரெட்டைத் தெருவில் இருந்த நங்கை யாருன்னாக்க..ஸாரி..பெர்ஸனல்லாம்அவையில் சொல்ல மாட்டேனே.:). அ.வீ.பெ பார்த்தது பரமேஸ்வரி தியேட்டரில்.. கடைசியில் க்ளைமாக்ஸில் டி.ஆர்.ராமச் சந்திரனும் பிணமாய் நடிப்பதை மறந்து எழுந்து அழ..பார்த்துச் சிரித்த சிரிப்பில் ஒர்ரே வயிற்று வலி..

எனில் உங்கள் கண்களும் கவி பாடுதே உடன் ஜூகல் பந்தியாய் இந்திப் படோசானும்..

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=s0GEAUaj8mg

http://www.youtube.com/watch?v=9HwrMGpFaik&feature=player_detailpage

ராஜ் ராஜ் சார்..உம்மை நினச்சேன் ஜூகல் பந்தின்னவுடனே.. வந்துட்டீங்க..என்னால வாக்லாம் போக முடியாது.. 35 கிலோமீட்டர்..அப்புறம் கண்ணா இளைச்சுத் துரும்பாய்ப் போய்டுவேன்..

ராகவேந்தர் சார் குத்து ஸாங்க்கிற்கு நன்றி.. நானும் தேடறேன்..!

rajraj
30th December 2014, 06:34 AM
From Malliga(1957)

Neela vaNNa kaNNane unadhu......

http://www.youtube.com/watch?v=oT8qRSJVXqU

Hindi song in the same tune from Payal (1957)the dubbed version of Malliga

Ja re Saanwale salone........

http://www.youtube.com/watch?v=OvdAEagrMw0


Not sure I posted this already. I remember posting songs from Malliga/Payal! :)

Gopal.s
30th December 2014, 08:25 AM
நண்பர்களே,



நான் கூறிய படியே மையம் திரிகளில் இருந்து புத்தாண்டு முதல் விடை பெறுகிறேன்.உங்கள் அனைவருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்களையும்,தமிழர் புத்தாண்டு வாழ்த்துக்களையும் முன் கூட்டியே மனப்பூர்வமாக சமர்ப்பிக்கிறேன்.



நான் 2012 மத்தியில் இங்கு வந்து சுமார் 2 1/2 வருடங்களாக உங்களுடன் ,அறிவு-உணர்வு பூர்வமாக இயங்கியுள்ளேன். நான் சொல்ல வந்த பல விஷயங்களுக்கு உங்களின் ஊக்குவிப்பு ,உத்வேகம் தந்து என் எண்ணங்களுடன்,என் தமிழ் எழுத்தையும் முப்பதாண்டுகள் கழித்து மீட்டெடுக்க உதவியது. நன்றிகள் நண்பர்களுக்கும்,மையத்துக்கும்.



என் எண்ணங்களையும் ,எழுத்துக்களையும் சுதந்திரமாக ,பொய் கலப்பின்றி ,புகழுக்கு போதையாகாமல் ,எண்ணங்களுக்கு மட்டுமே ,எழுக்களுக்கு மட்டுமே போதை வய பட்டு கட்டுண்டிருந்தேன்.சரி என்பதில் வழுவாமல்,தவறு என்பதில் தவறாமல் ,என் தராசு துல்லியம் கண்டதான திருப்தி உள்ளது. பல வகைப்பட்ட புதுமை எண்ணங்களை விதைத்துள்ளேன்.



வாசு போன்ற நண்பர்களுடன் இணங்கியும் ,பிணங்கியும் தொடர்ந்துள்ளேன். ஆனால் மகா திருப்தி சமீப வாசுவின் முள்ளும் மலரும். என்ன ரசனையுடன் கூடிய உழைப்பு.

வாசுவிடம் எனக்குள்ள முரண் ,மாற்றோருக்கு நாம் கொடுக்கும் மதிப்பு அவர்களால் உரிய முறையில் திரும்ப வேண்டும். உதட்டளவு பாராட்டுக்களால் மட்டும் அல்ல. நீங்கள் உன்னதம் என்று மதிப்பவற்றுக்கு அவர்களிடமிருந்தும் பதிவுகள் வர வேண்டும். அவைதான் உண்மையான மதிப்பை வழங்கும் விதம் என்றே நான் கருதுவேன். வாழ்க்கை ,தொடர்ந்த ஒரு வழி பாதையாக மட்டும் இருக்க முடியாது.



என்னை மகிழ்வித்த,விமர்சித்த,முரண் பட்ட,உடன் பட்ட,பாராட்டிய அனைத்து உன்னங்களுக்கும் நன்றி. புத்தாண்டு எனக்கு மாற்றத்தை தந்து உள்ளது. என் உழைப்பு இன்னும் அதிகம் கூட போகிறது.கடமையை செய்,பலனை கடவுளுக்கு விடு,நேரம் தவறாதே,தொழிலில் உன்னதம் காண் ,உதட்டை உள்ளத்தின் உண்மை வாசலாக்கு என்ற என் நடிப்பு தெய்வத்தின் தமிழ் வழியில் தொடர்வேன். நானும் உன்னதம் தொடுவேன் என்ற உறுதியோடு விடை வேண்டுகிறேன்.



மீண்டும் நன்றி.

gkrishna
30th December 2014, 10:49 AM
அன்பு கலை சார்

ராகவேந்திரா சார் சொன்னது போல் காத்தாடி ராமமுர்த்தி பழைய படங்கள் நிறையவற்றில் காண கிடைப்பார். திரைப்படம் மாணவன் அல்லது நூற்றுக்கு நூறு என்று நினைக்கிறன் .கல்லூரி மாணவராக சைடு கிருதா வைத்து கொண்டு டைட் போட்டு கொண்டு கிடார் எல்லாம் வைத்து கொண்டு ஆடிய காட்சி நினைவில் இருக்கிறது. வாசு அவர்களிடம் கேட்டால் ஸ்டில் கிடைக்கும் :).

நடிகர் விஜயகுமார் முதல் படம் பொண்ணுக்கு தங்க மனசு தான் .அதற்கு முன்னரே ஸ்ரீ வள்ளி திரைபடத்தில் குட்டி முருகன் ஆக தோன்றி இருப்பார். கந்தன் கருணையில் முருகர் வேடத்திற்கு சிவகுமார் உடன் மோதி பின்னர் அது கிடைக்காமல் பொண்ணுக்கு தங்க மனசு படத்தில் அதே சிவகுமார் உடன் இன்னொரு கதாநாயகன் ஆக அறிமுகம்.

அதே போன்று ஸ்ரீப்ரியா பாலச்சந்தரின் அறிமுகம் என்று ஒரு கட்டுரை படித்திருக்கிறேன். ஆனால் ஸ்ரீப்ரியா பி மாதவன் இயக்கிய முருகன் காட்டிய வழி திரை படத்தில் அறிமுகம். நிறைய நடிகர், நடிகைகளுக்கு இந்த முதல் படம் குழப்பம் உண்டு

நன்றி கலை வேந்தர் சார்

gkrishna
30th December 2014, 11:41 AM
நேற்று ராஜேஷ் கண்ணா பிறந்த நாள் .நேற்று எழுத நினைத்து மறந்து இன்று பதிவிடுகிறேன்.

தமிழ்நாட்டில் 55 வயதை நெருங்கியவர்கள் அல்லது கடந்தவர்கள் அனைவரும் 1965ல் தீவிரமான ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நிகழ்வில் கலந்து கொண்டவர்களாக இருப்பார்கள் அல்லது அதை பற்றிய தகவல்களை தங்கள் மாணவ பருவத்தில் படித்து இருப்ப்பார்கள்.அந்த அளவுக்கு தமிழ்நாட்டில் 1965ல் மாணவர்களால் நடத்த பெற்ற தீவிரமான போராட்டம் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம். ஏறக்குறைய ஒரு தலைமுறை ஹிந்தியை எதிர்த்து இன்றுவரை ஹிந்தி தெரியாமலே இருக்கிறது என்னை போலே :). ஞாயிறு தினமலர் நாள் இதழில் கூட இப்போதைய நடுவண் அரசின் அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களின் இது சம்பந்தமான பேட்டி ஒன்று வெளியாகி உள்ளது .நண்பர்கள் படித்து இருக்கலாம்.

1965ல் தீவிரமான ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கு கொண்ட மாணவர்கள் எல்லாம் 1970-71 கால கட்டத்தில் கல்லூரி கால கட்டத்திலோ, அல்லது வேலை தேடி கொண்டு இருப்பவர்களாகவோ அல்லது வேலையில் சேர்ந்து அடுத்த நிலைக்கு செல்பவர்களாகவோ இருந்து இருப்பார்கள். அனைவரும் தங்கள் மிக முக்கியமான வாழ்நாளில் 20-22 வயதை நெருங்கியவர்களாக இருப்பார்கள் இதில் ஒரு ஆச்சரியமான முரண் என்னவென்றால் 70களில் வெளியான ராஜேஷ் கண்ணாவின் ஹிந்தி திரைபடங்கள் தமிழகத்தில் அன்றைய இளைஞர்கள் இடையே மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்றால் அது மிகை ஆகாது . ஆராதனா,ஆனந்த்,அந்தாஸ் போன்ற படங்கள் தமிழகத்தை ஹிந்தி பக்கம் திருப்பியது..அவரின் படத்தை பார்க்காதவர்கள் நண்பர்கள் வட்டத்தில் கேவலமாக பார்க்கப்பட்டனர் .இரண்டு வரிகளாவது அவர் படத்தின் பாடல்களை பாடவில்லை என்றால் நட்பு வட்டம் மட்டும் அல்ல கன்னியரின் கூட்டம் ஒரு பொருட்டாகவே நம்மை மதிக்காது. எனது சகோதரரின் நண்பன் ஒருவன் ஜிந்தகி ஏக சப்பார் என்று தப்பு தப்பாக பாடி தன் சக கல்லூரி தோழியை இழந்தான் என்பது ஒரு கொசுறு செவி வழி செய்தி. பாடல்களுக்க்கவே ஹிந்தி கற்றுக்கொண்ட நண்பர்களும் உண்டு.

ஒரு அரசாங்கத்தையே மாற்றக்கூடிய பலம் பொருந்திய ஹிந்தி எதிர்ப்பு என்னும் ஆயுதம் ராஜேஷ் கண்ணா வரவிற்கு பின் தமிழகத்தில் கூர் மழுங்கியது.அதன் தொடர்ச்சியாக பாபி,யாதோன் கி பாரத்,ஹரே ராம ஹரே கிருஷ்ணா,சீதா ஔர் கீதா,கீதா மேரா நாம்,கட்டி பதங்,ஷர்மிலி,பாரூத்,ஜவானி திவானி,சத்யம் சிவம் சுந்தரம்,முக்கந்தர் கா சிக்கந்தர்,கோஷிஷ்,பேனாம்,காளிசரண்,ஹம் கிச்சிசே கம் நஹி என்று 78-79 வரை தொடர்ந்த ஹிந்தி படங்களின் தாக்கத்தில் இருந்த , ஹிந்தி திரைப்பட மோகத்தில் இருந்த தமிழனை மீட்டு வந்தது பாரதி ராஜா,இளையராஜா,மகேந்திரன் என்பது வேறு கதை .

ரூப் தேரா மஸ்தானா என்ற பாடல் ஒலிக்கும் போதெல்லாம் எங்காவது ஒரு யுவனும் எங்காவது ஒரு யுவதியும்
ராஜேஷ்கன்னா என்னும் ஒரு புள்ளியில் மையப்ப்பட்டிருப்பார்கள் என்றே இன்றும் நம்புகிறேன்.

நன்றி


http://i.ndtvimg.com/mt/movies/2012-07/rajesh-khanna-prayer.jpghttp://media2.intoday.in/indiatoday/images/Photo_gallery/rajesh-1_071812051222.jpg

gkrishna
30th December 2014, 01:09 PM
விநாயக பெருமானே , பிரணவத்தின் பீடமே, !

புதிய வருடம் "மையம் " திரியில் இருக்கும் எல்லோருக்கும் , திரிகளை படிக்கும் பல கோடி வாசகர்களுக்கும் , அவர்கள் குடும்பங்களுக்கும் இந்த புத்தாண்டில் நல்லதே நடக்கும்! சந்தோஷமாக இருப்பார்கள் என்று ஆசீர்வதி !!!


நன்றி கணேசா ! மிக்க நன்றி !!!

(இசை : இளைய (வாசு ) ராஜா
ராகம் : நாட்டை

தமிழ் ' நாட்டை' ஆண்ட அந்த 'கணேச பெம்மான் வித்யாபதி' பற்றிய குறிப்புகளும் உங்கள் புதிய வருட வாழ்த்துகளும் அருமை ரவி சார்

'நாட்டை' பெரும்பாலும் கச்சேரிகளின் ஆரம்பத்தில் பாடப்படும் ஒரு மங்கள ராகம்...விநாயகரோ ஆரம்பத்தில் வணங்கப்படும் கடவுள்..எனவே விநாயகர் மீதான பெரும்பாலான பாடல்கள் நாட்டையில் தான் இருக்கும் சில 'ஹம்சத்வநியிலும்' உண்டு

சல நாட்டையின் குழந்தை ராகம்

பாட்ஷா படத்தில் தேவா கொஞ்சம் இதை தொட்டு இருப்பார் 'தங்க மகன் இங்கு சிங்க நடை போட்டு '

ஹாரிஸ் ஜெயராஜ் அந்நியன் படத்தில் திருவையாறு தியாகராஜா உற்சவ பஞ்ச ரத்ன கீர்த்தனை சதா பாடுவது போல் 'ஜகதானந்த காரக' அதன் நீட்சி 'அய்யங்கார் வீட்டு அழகே' பாடலில் கையாண்ட ராகம்

ஸ்ரீகாந்த தேவா குமரன் சன் ஆப் மகாலட்சுமியில் 'சென்னை செந்தமிழ் ' பாடலில் கையாண்ட ராகம்

ரஹ்மான் இருவர் படத்தில் 'நறுமுகையே நறுமுகையே 'பாடலில் கையாண்டு இருப்பார்

வித்யாசாகர் அள்ளி தந்த வானம் படத்தில் 'தோம் தோம் ' ஹரிஹரன் சித்ரா குரலில் தெளித்து இருப்பார்

எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தார் போல் நினைவெல்லாம் ரவி மன்னிக்கவும் நித்யா 'பனி விழும் மலர் வனம் ' ராஜாவின் கை வண்ணத்தில்,வைரமுத்துவின் வைர வரிகளில் பூத்த குறிஞ்சி பூ பாடல்

http://www.youtube.com/watch?v=0Rm_XUzqjPI

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்

https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcQUUKycX1dDGOz09SbOp8mHHNJwrHod7 QezC-SAVIwoQ-1CXQoSQw

JamesFague
30th December 2014, 01:14 PM
Wish you all a Happy & Prosperous New Year 2015



http://youtu.be/VvffL2njuCc

gkrishna
30th December 2014, 03:21 PM
அன்பு ரவி சார்

பனி விழும் மலர் வனம் பாடல் அதே நினைவெல்லாம் நித்யா படத்தில் இன்னொரு நல்ல பாட்டை நினைவு படுத்தியது

'கன்னி பொண்ணு கை மேலே
கட்டி வைச்ச பூ மாலை '
-ஹமசாநாதம் பீஸ் - ரவி சார்.

ராஜா உருவாக்கிய அல்லது கட்டமைத்த களங்களில் எல்லோருக்கும் நெருக்கமான ஒன்று - வித்தக கலைஞர் மலேசியாவின் கிராமப்புற குரலில் உடன் சுசீலா .ஓரளவு மெத்தனமான அல்லது அதிகபட்ச வேகமில்லாத மெட்டு, அதைச் சுற்றி வெள்ளப்பெருக்கெடுத்து ஓடும்படியோ அல்லது மெட்டை இருமடங்கு உயர்த்திப் பிடித்தோ செல்லும் தாளக்கட்டு. தறிகெட்ட வெள்ளத்தில் துடுப்புகளின்றித் தன்னியல்பான வேகத்தில் நகரும் ஓடமொன்றில் அமர்ந்து இருகரைகளையும் வேடிக்கை பார்ப்பதைப் போன்றதுதான் இந்த பாடலை கேட்கும் போது உள்ள உணர்வு .

பாடல் முழுவதுமே நமக்கு லட்டுதான் என்றாலும் அதில் திராட்சை நிரம்பிய பகுதிகளாக சரணங்களை எடுத்துக்கொள்ளுங்கள். காட்சி அமைப்பு இப்படிதான் இருக்கும் என்று எளிதாக அறிந்து கொள்ளலாம். முதல் சரணத்தில் ஆண் பெண்ணுக்கு மாலையணிவிப்பதாகவும் இரண்டாவதில் பெண் அணிவிப்பதாகவும் நினைப்பதுதான் அது. குறிப்பிட்ட நபர் ஒரு வரியை முன்னெடுத்துச் சென்று சிறிது தயக்கம் கலந்த வெட்கத்துடன் அடுத்தவரிடம் ஒப்படைப்பதும் அவர் அதைத் தாங்கி ஏற்பதுமாகச் சரணங்களைத் தொடுத்திருக்கிறார் ராஜா.

இவையனைத்தும் நடக்கும் அட்டகாசமான நாடகத்தை நிகழ்த்திக் காட்ட நமக்குக் கிடைத்திருப்போர் மலேசியாவும் சுசீலாவும். திரைநடிப்பென்பதைப் பின்னணியில் மட்டுமின்றி திரையிலும் முயற்சிசெய்தவர் மலேசியா. பாடல் முழுவதும் தன் நடிப்பாற்றலைக் குரலில் அனாயசமாகக் கடத்திவிடுகிறார். ’.. அச்சம் கொண்டது..’, ’..நெஞ்சு துடிக்கிது..’ ஆகிய இடங்களில் சுசீலாவுக்கு மட்டுமே இது கைகூடும் அனாயசமான நடிப்பாற்றல். இருவரது வயதையும் மேற்சொன்ன வகைமைகளையும் நாம் நினைத்துக்கொள்ள வேண்டுமோ என்று நினைக்க தூண்டுகிறது.


கண்ணுக்குள்ள வெட்கப்படும்
கிளி அச்சச்சோவென அச்சம் கொண்டது
தூரம் கண்டு தத்திச்செல்லும்
அடி திக் திக் திக்கென்ன நெஞ்சு துடிக்கிது

கண்ணுக்குள்ள வெட்கப்படும்
கிளி அச்சச்சோவென அச்சம் கொண்டது
தூரம் கண்டு தத்திச்செல்லும்
அடி திக் திக் திக்கென்ன நெஞ்சு துடிக்கிது

மச்சானின் கண் பேசும் மெளனத்தில் பெண் பேசும்
மச்சானின் கண் பேசும் மெளனத்தில் பெண் பேசும்

பூமாலை வாடும் முன்னே வாடி முன்னே
பிறைகண்ணே ஏங்காதே

கன்னி பொண்ணு கைமேல கட்டி வெச்ச பூமாலை

(அருமையான கோரஸ் )

பொத்தி வச்ச முத்துச்சரம்
அது பத்திரம் பத்திரம் மேடையில் வந்தது
பட்டுத்திரை முத்தம் தரும்
முத்தம் தர தம்தர யாரது கண்டது

பொத்தி வச்ச முத்துச்சரம்
அது பத்திரம் பத்திரம் மேடையில் வந்தது
பட்டுத்திரை முத்தம் தரும்
முத்தம் தர தம்தர யாரது கண்டது

கிட்டப்போ மைனாவே தொட்டுப்பார் மைனாவே
கிட்டப்போ மைனாவே தொட்டுப்பார் மைனாவே

இன்னைக்கு தோப்புக்குள்ள காவல் இல்லா பாடிக்கொண்டே வா புள்ள

கன்னி பொண்ணு கைமேல கட்டி வெச்ச பூமாலை

பண்ணைபுரத்து சித்தனும் ,வடுகபட்டி முத்துவும் இணைந்து தொடுத்து ரசிகர்களுக்கு வழங்கிய பூமாலை .

நிழல்கள் ரவி ,லாவண்யா ஜோடி என்று நினைக்கிறேன். கல்யாண பெண் முகத்தை பார்த்தால் சபீதா ஆனந்த் சாயல் இருக்கிறது .மண பெண்ணின் தோழி முகம் நடன நடிகை லலிதா மணியை நினைவு படுத்துகிறது

https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcQ7U58aDYrIzIiGlBQrMuRa-EopdoDDAs2EO0_uelwOF9zkMHR-

http://m.youtube.com/watch?v=Ef91P$13SOY

gkrishna
30th December 2014, 04:11 PM
2014 உதிர்ந்த நட்சத்திரங்கள்
ஜனவரி
6 "ரத்தக் கண்ணீர்' படத்தின் வசனகர்த்தா திருவாரூர் தங்கராசு காலமானார்.
13 பழம்பெரும் நடிகை அஞ்சலிதேவி உடல்நலக் குறைவால் காலமானார்.
22 தமிழ், தெலுங்கு உள்பட பல மொழிப் படங்களில் நடித்துப் புகழ் பெற்ற நடிகர் நாகேஸ்வரராவ் காலமானார்.
பிப்ரவரி
13 இயக்குநர் பாலுமகேந்திரா மறைவு.
அக்டோபர்
22 ஒளிப்பதிவாளர் அசோக்குமார் மறைவு.
24 நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் மறைவு.
நவம்பர்
8 நடிகர் மீசை முருகேசன் காலமானார்.
18 இயக்குநர் ருத்ரைய்யா காலமானார்.
டிசம்பர்
23 உடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட இயக்குநர் கே.பாலசந்தர் காலமானார்.

Russellzlc
30th December 2014, 08:11 PM
நண்பர்களுக்கு வணக்கம்

திரு. காத்தாடி ராமமூர்த்தி பற்றிய தகவலுக்கு நன்றி திரு. ராகவேந்திரா சார். தங்களின் நினைவாற்றலுக்கு பாராட்டுக்கள்.

திரு. விஜயகுமார் பற்றிய தகவலுக்கு நன்றி திரு.கிருஷ்ணா சார். ஸ்ரீ வள்ளி படத்தில் குட்டி முருகனாக தோன்றி இருப்பார் என்ற கூடுதல் தகவலுக்கும் நன்றி.

திரு.சின்னக் கண்ணன் சார், உங்கள் நடையில் எனக்குப் பிடித்த அம்சமே எதிர்பாராமல் நீங்கள் வைக்கும் ‘பஞ்ச்’தான். ‘மதுரை ரெட்டைத் தெருவில் இருந்த நங்கை யாருன்னாக்க...’ என்று கூறி ஆவலைத் தூண்டி,... ‘ஸாரி, பெர்சனல்லாம் அவையில் சொல்ல மாட்டேனே’ என்று அதிர்வேட்டு போடுகிறீர்களே...... அதான், நீங்கள்.

திரு.வாசு சாரை பார்க்க முடியவில்லையே, பிஸி என்று நினைக்கிறேன்.

மீண்டும் ஒருமுறை நண்பர்கள் அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

இன்று நம்மிடமிருந்து விடை பெற்றிருக்கும் நண்பர் திரு. கோபாலுக்கும் வாழ்த்துக்கள். கோபால், எனக்கு உங்களிடம் பிடித்தது, கொண்ட கொள்கையில் நீங்கள் உறுதியாக இருப்பது. வாழ்த்துக்கள்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

vasudevan31355
31st December 2014, 11:28 AM
பிரபலமாகும் முன் அறிமுகமான நடிகர்கள்.

நன்றி கலை சார்.

கொஞ்சம் பிஸி தான். வருட முடிவு வேலைகள். டூ வீலர் எஃப்.சி, வீடு பெயிண்டிங், ஆபிஸ் வொர்க் என்று கொஞ்சம் வேலைகள் தாம்.

தங்களுக்கும், ஏனைய நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.

நீங்கள் மிக அழகாக பாடல்களை தெரிவு செய்கிறீர்கள். இப்போது நீங்கள் பதித்துள்ள 'கண்களும் கவி பாடுதே' பாடலும் அதே ரகமே. அருமை சார். அருமையான நகைச்சுவை ததும்பும் பாடல். மிக அழகான விளக்கங்கள் அளித்து பாடலை இன்னும் ஒருமுறை பார்க்கச் செய்து விட்டீர்கள். டி.ஆர். ராமச்சந்திரன், மற்றும் பக்கிரிசாமி ஆகியோரின் சேட்டைகளை ரசித்து எழுதி பதிவை சுவாரஸ்யப்படுத்தி இருக்கிறீர்கள். யார்தான் இந்தப் பாடலை விரும்ப மாட்டார்கள்? 'முட்டைக்கண்ணன்' ராமச்சந்திரன் என்று பொத்தம் பொதுவாக மக்கள் அவரை அழைப்பது எவ்வளவு பொருத்தம்? பக்கிரிசாமி என்ற உன்னத நகைச்சுவை நடிகரின் திறமையை உணர்த்திய படம். ஆனால் எத்தனை பேருக்குத் தெரியும்? நான் இவரைப் பற்றிக் கூட முன்பு ஒருமுறை எழுதி இருக்கிறேன்.

'நீதி' படத்தில் நடிகர் திலகத்துடன் பக்கிரிசாமி

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/needhivob_004138710.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/needhivob_004138710.jpg.html)

நடிகர் திலகம் இவரை பல படங்களில் பயன்படுத்திக் கொண்டார். குறிப்பாக 'நீதி' படத்தில் ஷேவ் செய்பவராக வந்து, நடிகர் திலகம் கொலைகாரர் என்று நினைத்து பயத்தில் கை நடுங்கி, நடிகர் திலகத்தின் ஒரு பக்க மீசையை தவறி மழித்து விடுவார். முகத்தில் காமெடிக் கலை முகத்தில் தாண்டவமாடும் நல்ல நடிகர்.

மாடர்ன் தியேட்டர்ஸ் இவரை நிறையப் படங்களில் பயன்படுத்திக் கொண்டது. ஆனால் வில்லன் குரூப் ஆளாகத்தான் சிறுசிறு வேடங்கள் கொடுத்தார்கள்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/muthu.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/muthu.jpg.html)

'அரசிளங்குமரி' படத்தில் இளம் முத்துராமன்.

அதே போல நடிகர்கள் பிரபலமாவதற்கு முன்பு சில படங்களில் தலை காட்டி இருப்பார்கள். கே. பாலாஜி அவர்களும் முருகனாக 'ஒளவையார்' படத்தில் வருவார் என்று நினைவு. உங்களுக்குத் தெரிந்திருக்கும். முத்துராமன் நிறையப் படங்களில் நடித்திருந்தாலும் எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்த 'அரசிளங்குமரி' படத்தில் ஒரு சிறு வேடத்தில் திரு.எம்.ஜி.ஆர் அவர்களுடன் ஏற்றம் இறைப்பவராக வருவார். 'தந்தனத்தானே ஏலேலோ' ஒரு என்று எம்ஜி.ஆர் அவர்களுடன் பாடல் கூட ஒன்று உண்டு.

இதோ விஜயகுமாரை கந்தன் கருணையில் பாருங்கள். பால் வடியும் முகம். விஜயகுமார் அருண் பிரசாத் மூவீஸ் 'பொண்ணுக்குத் தங்க மனசு'படத்தில் பிரபலமானார். இந்தப் படத்தில் அவருக்கு சொந்தக் குரல் கிடையாது. பி.டி ரட்சகன் என்பவர்தான் விஜிக்குக் குரல் கொடுத்திருப்பார்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/KandhanKarunaiavi_004160921.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/KandhanKarunaiavi_004160921.jpg.html)

கவுண்டமணி படங்களில் பிரபலமாவதற்கு முன்பு சிறு சிறு வேடங்களில் தலை காட்டுவார். 'ராமன் எத்தனை ராமனடி' படத்தில் நடிகர் திலகம் விஜயகுமார் ஆன பிறகு அவரின் வளர்ப்பு மகளான பேபி ராணியை ஸ்கூலுக்கு கொண்டுவிடும் டிரைவராக வருவார்.

மிக அபூர்வமாய் நடிகர் திலகத்துடன் கவுண்டமணி ராமன் எத்தனை ராமனடி படத்தில் தோன்றும் காட்சி

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355019/VTS_02_3VOB_001964519.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355019/VTS_02_3VOB_001964519.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/VTS_02_3VOB_001969092.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/VTS_02_3VOB_001969092.jpg.html)

அதே போல் காத்தாடி ராமமூர்த்தியும் நிறையப் படங்களில் வருவார். ராகவேந்திரன் சார் அதைக் குறிப்பிட்டு விட்டார். என்னுடைய உயிரான 'ஞான ஒளி' படத்தில் ஒரே ஒரு காட்சியில் தலை காட்டுவார் காத்தாடி. ஸ்ரீகாந்தும், சாரதாவும் ரயிலில் ஊருக்குத் திரும்பும் போது டிரெயினில் அப்பர் பெர்த்தில் கண்ணாடி போட்டு படுத்துக் கொண்டு புத்தகம் படித்துக் கொண்டிருப்பார் காத்தாடி.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/GnanaOli-Uyirvanicomavi_001174337.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/GnanaOli-Uyirvanicomavi_001174337.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/GnanaOli-Uyirvanicomavi_001161753.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/GnanaOli-Uyirvanicomavi_001161753.jpg.html)

பின்னாளில் முக்தாவின் சில படங்களில் தலை காட்டினார். குமுதம் இதழில் அப்போது பாக்கியம் ராமசாமி அமர்க்களப்படுத்திய அப்புசாமியும் சீதாப்பாட்டியும் (அப்புசாமி படம் எடுக்கிறார், அப்புசாமியும், ஆப்ரிக்க அழகியும், சுண்டக்காய் சித்தர் அப்புசாமி) தொலைகாட்சி சீரியலாக எடுக்கப்பட்ட போது நமது காத்தாடிதான் அப்புசாமித் தாத்தா என்று நினைக்கிறேன். இப்போதும் சீரியலில் நடிக்கிறார்.

gkrishna
31st December 2014, 11:40 AM
https://antrukandamugam.files.wordpress.com/2013/08/r-packirisami-karunthel-kannayiram-1972.jpg?w=593

நடிகர் பக்கிரிசாமி -

சுமதி என் சுந்தரி திரைபடத்தில் 'டிர் டிர்' பால்காரர் - மதுவின் மனைவி வந்து விட்டதை மாமா தங்கவேலுவிடம் சொல்வது இவர் தானே வாசு ஜி.
பாபு படத்தில் வரதப்பா கஞ்சி வரதப்பா பாடலில் உடன் நடனம் ஆடுவார்

gkrishna
31st December 2014, 11:55 AM
http://s1.dmcdn.net/BjeUG/x240-jGR.jpg

இப்போதைய நடிகர் திரு ஜெய் (இசை அமைப்பாளர் தேவாவின் மருமகன் ) 2002 கால கட்டத்தில் நடிகர் விஜய் நடித்த பகவதி திரைபடத்தில் அவரது தம்பியாக வருவார் .பிறகு 5 ஆண்டுகள் கழித்து 2007இல் சென்னை 28 மற்றும் சுப்ரமணியபுரம் படத்தில் கதாநாயகனாக அறிமுகம்

gkrishna
31st December 2014, 12:20 PM
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcRzmqRyar2LRflgQRV6QfE0vISq9rKLV 6eVLmgUxDVG08n6xY2uyg

இன்றைய பிரபல கதாநாயகி த்ரிஷா கிருஷ்ணன் ஜோடி திரைபடத்தில் சிம்ரனின் நண்பியாக

http://www.youtube.com/watch?v=8PthDDvuJFw

gkrishna
31st December 2014, 12:37 PM
https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcR9imdTN9wgeQIu7i7Ae0iEtARjIPgD6 kaRi4PlM0yamjcApbn6

நடிகர் ஷாம் குஷி திரைபடத்தில் பிரபலம் ஆவதற்கு முன் நடிகர் விஜயின் நண்பனாக.உடன் இருப்பவர் இன்றைய பிரபல நடிகர் சித்தார்த் என்று நினைக்கிறன்


http://www.youtube.com/watch?v=juXnMgn0xLk

uvausan
31st December 2014, 01:11 PM
படித்தவைகளில் பிடித்தது

இரண்டு வகையான மனிதர்களை நாம் நம் வாழ்க்கையில் தினமும் சந்திக்கறோம் - சிலர் இப்படிப்பட்டவர்கள்

"Wherever they go they bring happiness"


இவர்களால் எல்லோருக்கும் மகிழ்ச்சி உண்டாகின்றது , இவர்களை சந்திப்பதினால் நமக்கு அமைதி கிடைக்கின்றது , வாழ்க்கையின் உண்மையான அர்த்தம் புரிகின்றது - கர்வம் , ஆணவம் நம்மைவிட்டு அகல்கின்றது - படித்தவன் , படிக்காதவன் என்ற வேறுபாடு நம்மிடையே ஏற்படுவதில்லை - நம்மை ஆட்டி வைக்கும் மிருகம் இவர்களை சந்திப்பதனால் அடங்கிவிடுகின்றது - அமைதி தெய்வம் நம் முழு மனதில் கோவில் கொள்கின்றது ; மனம் சாந்தி சாந்தி சாந்தி என்று ஓய்வு கொள்ளும் ; பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்து விடும்

அடுத்த வகையான மனிதர்கள்

"Whenever they go, they bring happiness"

இவர்கள் இடத்தை காலி பண்ணியவுடன் , அந்த இடத்தில் சந்தோஷமும் , மகிழ்ச்சியும் தானாகவே தேடி ஓடி வந்து விடும் - வாழும் போதே இறந்து விடும் வகையை சேர்ந்தவர்கள் - இவர்கள் தனக்கே பாரமாக உள்ளவர்கள் - மற்றவர்களுக்கு எந்த நல்லதும் செய்யாதவர்கள் , செய்ய தெரியாதவர்கள் ....

ஆண்டு முடிவடையும் இந்த நாளில் நாம் போடும் பதிவுகளால் எல்லோருக்கும் மகிழ்ச்சியை உண்டாக்குவோம் - நாம் முதல் பிரிவை சார்ந்த மனிதர்களாக இருப்போம் !எல்லோரும் எல்லா வளமும் பெற நம் பதிவுகள் ஒரு உறுதுணையாக இருக்கட்டும் .

சமீபத்தில் நான் படித்த ஒரு புத்தகத்தில் இருந்து இந்த பதிவை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்

LUNCH WITH GOD

A little boy wanted to meet God! He packed his suitcase with two sets of his dress and some packets of cakes! He started his journey, he walked a long distance and found a park! He was feeling tired, so, he decided to sit in the park and take some refreshment! He opened a packet of cake to eat!

He noticed an old woman sitting nearby, sad with hunger, so he offered her a piece of cake!

She gratefully accepted it with a wide look and smiled at him! Her smile was so pretty that the boy longed to see it again! After sometime he offered her another piece of cake! Again, she accepted it and smiled at him! The boy was delighted!

They sat there all afternoon eating and smiling, but never said a word! While it grew dark, the boy was frightened and he got up to leave but before he had gone more than a few steps, he ran back and gave the woman a hug and she kissed him with her prettiest smile!

Back home, when the boy knocked the door, his mother was surprised by the look of joy on his face!

She asked him, "What did you do today that makes you look so happy?" He replied, "I had lunch with God!" Before his mother could respond, he added, "You know what? She's got the most beautiful smile I've ever seen in my life!"

Meanwhile, the old woman, also radiant with joy, returned to her home! Her son was stunned by the look of peace on her face and asked, "Mom, what did you do today that made you so happy?" She replied, "I ate cakes in the park with God!"

Before her son responded, she added, "You know, he's much younger than I expected!"

Too often we underestimate the power of a touch, a smile, a kind word, a listening ear, an honest compliment, or the smallest act of caring, all of which have the potential to turn a life around! Remember, nobody knows how God will look like! People come into our lives for a reason, for a season or for a lifetime! Accept all of them equally.

LET THEM SEE GOD IN YOU..!!

Itni Shakti Hamein Dena Data

A heart touching sweet & inspiring ever green song .

http://youtu.be/xNBKq8GAffw



Ae maalik tere bande hum

The transportation of both the lyrics and music composition to a different level is very evident with the soul rendition of Lathaji.


http://youtu.be/m2CJZiP4_Sc


O Palan Haare -


http://youtu.be/qHQ1FPheB8w



ஹாப்பி இன்றுமுதல் ஹாப்பி யாக இருக்கட்டும் நம் வாழ்க்கை !

http://youtu.be/iEzkwgYXYY0



ஆடாத மனமும் உண்டோ ???

http://youtu.be/ogtom7PGgoI?list=PL9CE7DB4208E84AD7

gkrishna
31st December 2014, 02:11 PM
அன்பு ரவி சார்

நன்னா சொன்னேள் போங்கோ :clap:

பாலச்சந்தர் இன் மன்மத லீலை (1976) யில் இதை ஒட்டியே வசனமும் வரும். ஈஸ்வர ஐயர் (சுப்ரமணியம்) தனது கம்பெனி எஜமான் மதுவிடம் மாட்டி கொண்டு முழிக்கும் போது அவர் சொல்லும் வசனமே இது தான் .

'சில பேர் எங்கே எல்லாம் போறாளோ அங்கே எல்லாம் சந்தோசம் கொடுப்பா ..சில பேர் எப்ப போறாளோ அப்ப தான் சந்தோசம் '

http://i1.ytimg.com/vi/XHpxGjKgqPc/sddefault.jpg

எல்லோரும் இன்புற்று இருக்க நினைபதுவே அல்லாமல் யாமொன்று அறியோம் பராபரமே

chinnakkannan
31st December 2014, 03:59 PM
விஜயகுமார் அருண் பிரசாத் மூவீஸ் 'பொண்ணுக்குத் தங்க மனசு'படத்தில் பிரபலமானார். இந்தப் படத்தில் அவருக்கு சொந்தக் குரல் கிடையாது. பி.டி ரட்சகன் என்பவர்தான் விஜிக்குக் குரல் கொடுத்திருப்பார். // ஆமாம் வாசு சார்..அந்தக் குரல் இருக்கே ஹாரிபிள்..ம்ம் விதுபாலாவை நினச்சு அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு பார்த்தேன்:) தேன் சிந்துதே வானம் மறக்க முடியுமா..

எழுத முடியுமா இன்னிக்குன்னு தெரியலை.. எழுதப்பார்க்கிறேன்..


நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..


புதுக்கனவு லாகிரியில் பூப்போட்ட தாவணியில்
..பொங்கிவரும் இளநெஞ்சம் போட்டுவரும் துள்ளலென
பதுமையென இருந்துவிட்ட பழங்காலம் போய்விடவே
..பக்குவமும் புதுமைகளும் பலப்பலவாய்த் தருவதற்கு
குதித்தோடி வருகிறதே குதூகலமாய்ப் புதுவருடம்
..குளுமைகளும் ரசனைகளும் இன்பங்களும் பலவிதமாய்
மதுரமென உம்வாழ்வில் மகிழ்ச்சியுடன் பிரவகிக்க
..மனமார வாழ்த்துவெனே மகாஷக்தி அருளிடுவாள்..!


முதல் வரி மட்டும் வெகுகாலம் முன்னால் குமுதம் அட்டைப் படத்தில் ஒரு புலி படம் போட்டு சில வார்த்தைகள் கொடுத்து கவிதை எழுதச் சொல்லியிருந்தார்கள்- அதில் வந்த ஒரு கவிதையின் முதல் வரி புதுக்கனவு லாகிரியில்.. அதை மட்டும் எடுத்தாண்டேன்..:)

Russellzlc
31st December 2014, 06:07 PM
எல்லாரும் கொண்டாடுவோம்

திரு.வாசு சார், தங்களின் விரிவான பதிலுக்கு நன்றி. ஒரு தகவல் கேட்டால் அதற்காக நீங்கள் மெனக்கெடுவதும் அது தொடர்பான விவரங்களை ஆதாரங்களோடு பதிவிடும் உங்கள் ஆர்வமும், உழைப்பும்.......... தகவல் சுரங்கம் நீங்கள். நன்றி சார்.

திரு.ரவி சார், தங்களின் படித்தவைகளில் பிடித்தது கட்டுரையும் பாடல்களும் அருமை.



நாளை ஆங்கிலப் புத்தாண்டு. வைகுண்ட ஏகாதசி வேறு (இன்று அதிகாலை சொர்க்க வாசல் திறப்பு) பெருமாளின் அருளை வேண்டி, புத்தாண்டை எல்லாரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்.

அதைக் கொண்டாடும் வகையில் ராமாயணம், தமிழிசை கலந்து நெட்டில் நான் படித்து ரசித்த ஒரு பதிவு. அனைவருக்காகவும் இங்கே.

----------------------------------------


ராமாயணத்தில் ஒரு உணர்ச்சிகரமான தருணம்.

சீதையிடம் ராமன் விடைபெற்றுச் சொல்ல வருகிறான். “நான் கானகம் போகிறேன்; பதினான்கு வருடத்தில் திரும்பி வந்து விடுவேன், நீ வருத்தப் படாமல் இரு” என்கிறான். அப்போது சீதை கேட்கிறாள்:

எப்படி மனம் துணிந்ததோ சாமி வனம்போய் வருகிறேன்
என்றால் இதை ஏற்குமோ பூமி (எப்படி)
கரும்பு முறித்தாப் போலே சொல்லல் ஆச்சுதோ – ஒரு
காலும் பிரியேன் என்று சொன்ன சொல்லும் போச்சுதோ
வருந்தி வருந்தி தேவரீர் வெல்ல
வார்த்தையால் கொல்லாமல் கொல்ல
இரும்பு மனதுண்டாச்சு தல்லோ
என்னை விட்டுப் போகிறேன் என்று சொல்ல (எப்படி)


அருணாசலக் கவிராயரின் இராம நாடகத்தில் உள்ள ஒரு கீர்த்தனை இது. சஞ்சய் சுப்ரமணியம் பாடும் போது “வருந்தி வருந்தி”யில் வரும் குழைவும், “கொல்லாமல் கொல்ல”வில் வரும் அழுத்தமும் இந்தப் பாட்டின் *பா*வத்தை வெளிப்படுத்தும் விதமே அலாதியாக இருக்கும். நல்ல கற்பனையும் மனோதர்மமும் கொண்ட பாடகர்கள் சஞ்சரிக்க உகந்த இது போன்ற இடங்கள் இராம நாடகத்தின் பல கீர்த்தனைகளில் உண்டு.
பண்டிதர்கள் மட்டுமே பயின்று வந்த கம்பரின் ராமாயணத்தை, பாமரர்களும் புரிந்து கொண்டு ரசித்து அனுபவிக்கும் வண்ணம் கீர்த்தனைகளாகப் புனைய வேண்டும் என்பது தான் 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணாசக் கவிராயர் (1711-1778) கொண்ட முக்கிய நோக்கமாக இருந்திருக்கிறது. வணிகர் குலத்துதித்த அருணாசலம் சிறுவயதிலேயே பல நூல்களைக் கற்றுப் புலமை பெற்றிருந்தார். தமது ஊரான தில்லையாடியில் காசுக்கடை நடத்தி வந்தார். வியாபார நிமித்தம் பயணம் செய்யும்போது எதேச்சையாக சீர்காழியில் உள்ள தருமபுரம் மடத்தில் தங்க நேர்ந்தபோது, அவரது தமிழ்ப் புலமையால் கவரப்பட்ட மடத்தின் அதிபர் அவரை சீர்காழிக்கே வரவழைத்து, தமிழ்த் தொண்டும் ஆசிரியப் பணியும் செய்யுமாறு பணித்தார். மடத்தில் பாடம் சொல்லியதுடன், அக்காலத்திய தமிழ்ப் புலவர்களது பாணியில் தலபுராணம், பிள்ளைத்தமிழ், அந்தாதி, கோவை, கலம்பகம், வண்ணம் என்று பல சிற்றிலக்கிய நூல்களையும் கவிராயர் எழுதியிருக்கிறார். அவரிடம் பாடம் கேட்ட வெங்கட்ராமய்யர், கோதண்ட ராமய்யர் என்ற இரு சங்கீத வித்வான்களின் வேண்டுகோளுக்கு இணங்கி இராமநாடகக் கீர்த்தனைகளைப் புனைந்தார். இரண்டு வித்வான்களும் பல ஊர்களிலும் சென்று அந்தக் கீர்த்தனைகளைப் பாடிப் பிரபலப் படுத்தினர். அந்தத் தனித்துவமிக்க இசைத்தமிழ் நூல் தான் இன்றளவும் அருணாசலக் கவிராயர் பெயரை அழியாமல் நிலைநிறுத்தியிருக்கிறது.

சைவ சமயத்தவராக இருந்தாலும், அருணாசலக் கவிராயரின் கீர்த்தனைகள் அனைத்திலும் ராமபக்தி ததும்புவதைக் காணலாம்.
“ராமனைக் கண்ணாரக் கண்டானே – விபீஷணன் கை
மாமுடி மேல் வைத்துக் கொண்டானே”
என்ற கீர்த்தனையில் ஸ்ரீராமனின் திருமேனியழகை வர்ணிக்கிறார்.
அறிவார் யார் உன்னை அறிவார் யார்..
அறியார் யார் மானிடம் போலே குறியா வேஷம் கொண்டதாலே
சிறியேன் செய்த பிழை தன்னைக் குறியாதே ராகவா, உன்னை (அறிவார்)
என்று விராதன் துதியாக வரும் கீர்த்தனையில் ஸ்ரீராமனைப் பரம்பொருளாகவே எண்ணித் துதிக்கிறார்.
இராம நாடகமும் கம்ப ராமாயணத்தைப் போலவே ஆறு காண்டங்களைக் கொண்டது. பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற வடிவ இலக்கணம் கொண்ட கீர்த்தனங்கள் (தருக்கள்), கண்ணிகள் (திபதைகள்) ஆகியவை இதில் காணும் மையமான இசைப் பாடல் வகைகள். இவற்றோடு கூட, விருத்தம், கலித்துறை, கொச்சகம் போன்ற செய்யுள்களும் இசைப்பாடல்களுக்கு முன்பின்னாக அமைந்துள்ளன. என்னிடம் உள்ள பதிப்பில், 450 பக்கங்களில் விரியும் நூல். கீர்த்தனங்கள் மட்டும் 250க்கு மேல் இருக்கும்.

இராம நாடகத்தில் சில கீர்த்தனைகள் மற்றவற்றை விடப் பரவலாக உள்ளதற்குக் காரணம் இருக்கிறது.

“ராமசாமி தூதன் நானடா – அடடா ராவணா
நானடா என் பேர் அனுமானடா… “
“அடித்தானே அசோகவனம் தன்னை முடித்தானே அனுமன்..”
இவை போல ஜனரஞ்சக மெட்டுகளில் அமைந்த பாட்டுக்கள் அக்காலத்தில் நாடக மேடைகளில் பாடி ரசிக்கப் பட்டிருக்கக் கூடும். இசை நாடகங்கள் வழக்கொழிந்த பின், அந்தப் பாடல்களைப் பாடுவார் யாரும் இல்லை. ஆனால் செவ்வியல் தன்மை கொண்ட கணிசமான கீர்த்தனைகள் இன்னமும் பிரபலமாக நீடித்து வருவதன் காரணம் அவற்றின் இசை ஒழுங்கும், உணர்ச்சி பூர்வமான தருணங்களும், அர்த்த கம்பீரமும், ஆரம்ப கால வித்வான்கள் அவற்றைத் தொடர்ந்து தங்கள் கச்சேரிகளில் பாடி வந்ததும் என்று சொல்லலாம்.
யாரோ இவர் யாரோ – என்ன பேரோ அறியேனே (யாரோ)
கார் உலாவும் சீர் உலாவும் மிதிலையில்
கன்னி மாடந்தனில் முன்னே நின்றவர் (யாரோ)
சந்த்ரபிம்ப முக மலராலே என்னைத்
தானே பார்க்கிறார் ஒருக்காலே
அந்த நாளில் தொந்தம் போலே உருகிறார்
இந்த நாளில் வந்து சேவை தருகிறார் (யாரோ)


இந்த அழகிய பைரவி ராகக் கீர்த்தனையைக் கேட்டிருக்காத சங்கீத ரசிகரைக் காண்பது அபூர்வம். “இவர் யாரோ” என்று வருவதால், ராமனைக் கண்ட சீதை பாடும் பாட்டு இது என்று பலர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மையில் சீதையை கன்னிமாடத்தில் கண்டு, வீதியில் நடந்து வரும் ராமன் பாடுவது இது. இளம்பெண்ணைக் கூட “இவர்” என்று மரியாதையுடன் அழைக்கும் வழக்கு இரு நூற்றாண்டு முன்பு வரை கூட தமிழ் நாட்டில் இருந்திருக்கிறது என்று தெரிகிறது.
ஸ்ரீரங்கத்தில் கம்பர் அரங்கேற்றிய அதே மண்டபத்தில் தனது இராம நாடகத்தையும் அரங்கேற்ற வேண்டும் என்று விரும்பி, அவ்வாறே நிகழ்த்தியும் காட்டினார் அருணாசலக் கவிராயர்.

“ஏன் பள்ளி கொண்டீரையா – ஸ்ரீரங்கநாதரே நீர்
ஏன் பள்ளி கொண்டீரைய
என்ற கீர்த்தனை இந்தத் தருணத்தில் அவர் பாடியதாக சொல்லப் படுகிறது.
மாசிலாத மிதிலேசன் பெண்ணுடன் வழிநடந்த இளைப்போ
தூசிலாத குகன் ஓடத்திலே கங்கைத் துறைகடந்த இளைப்போ
மீசுரமாம் சித்ரகூடச் சிகரக் கல்மிசை கிடந்த இளைப்போ
காசினிமேல் மாரீசனோடிய கதி தொடர்ந்த இளைப்ப
என்று இந்தப் பாடலின் சரணங்களில் வரும் துரித கதியிலான சொற்கட்டுக்கள் அற்புதமானவை.

கவிராயர் கம்பராமாயணத்தை மிகவும் ஆழ்ந்து கற்று அதில் தோய்ந்தவர் என்பது அவர் கம்பனின் சொல்லாட்சிகளை அப்படியே பயன்படுத்துவதில் இருந்து தெரிகிறது. ஆனால், நாடகம் என்பது முற்றிலும் வேறு வடிவம் என்ற பிரக்ஞையுடன், பல இடங்களில் உரையாடல் தன்மை கொண்ட பாட்டுக்களையும், மக்களின் அன்றாட சொல்வழக்குகளையும் மிகவும் சுவாரஸ்யமான வகையில் சேர்த்திருக்கிறார்.
ராமன் அணைகட்ட வழிவேண்டும் போது, சமுத்திர ராஜன் வந்து அடிபணியும் பாடல்.

சரணம் சரணம் ரகு ராமா – நீ என்னைத்
தற்காத்தருள் பரந்தாமா… (சரணம்)
மட்டி மீன் ஒன்றோடொன்று மல்லாடி, அவர்பூணும்
வழக்குத் தீர்க்கப் போனேன்; இதுக்கோ உன் மனம் கோணும்
எட்டும் ரெண்டும் தெரியா எனக்கித்தனையோ காணும்
என்ன பிழை செய்தாலும் நீயே பொறுக்க வேணும்…. (சரணம்)



தியாகராஜரின் கீர்த்தனங்களைப் போல, இராம நாடகக் கீர்த்தனைகளின் ராகங்கள் வாக்கேயக் காரரால் தெளிவாக வரையறை செய்யப் படவில்லை என்றே கருத வேண்டியுள்ளது. ஒரு சிலவற்றைத் தவிர பெரும்பாலான கீர்த்தனைகளை புத்தகத்தில் கொடுத்திருக்கும் ராகத்தில் யாருமே பாடிக் கேட்டதில்லை. “யாரோ இவர் யாரோ” – சாவேரி என்கிறது புத்தகம், பைரவி தவிர வேறு ஒரு ராகத்தில் அந்தப் பாடலைக் கற்பனை செய்யவே முடியவில்லை. “சரணம் சரணம் ரகுராமா” – எல்லாருமே புத்தகம் கூறும் அசாவேரி ராகத்தில் தான் பாடுகிறார்கள். அது நன்றாகப் பொருந்தவும் செய்கிறது.

கண்டேன் கண்டேன் கண்டேன் சீதையைக்
கண்டேன் ராகவா…
பனிக்கால வாரிஜம் போல நிறம் கூசி
பகல் ஒரு யுகம் ஆகக் கழித்தாளே பிரயாசி
நினைத்தங்கே ராவணன் அந்நாள் வர, சீசீ
நில்லடா என்றேசி
தனித்துத் தன் உயிர்தன்னைத் தான்விட மகராசி
சாரும்பொழுது காணும் சமயமிதுவே வாசி
இனித்தாமதம் செய்யல் ஆகாதென்றிடர் வீசி
ராம ராம ராம என்றெதிர்ப் பேசி (கண்டேன்)
கண்களில் கண்ணீர் வராமல், தழுதழுக்காமல் நெஞ்சு விம்மாமல், உள்ளமுருக்கும் இந்தக் கீர்த்தனையைக் கேட்க முடியாது.
ஒரே கீர்த்தனை தான். ஆனால் அதில் பல வண்ணங்களைக் காட்டி விட முடியும். நெய்வேலி சந்தான கோபாலனின் வசந்தாவில், ஓடோடி வந்து படபடவென்று துடிப்பாக “கண்டேன் கண்டேன்” என்று ராமனுக்கு செய்தி சொல்கிறான் அனுமன். பாம்பே ஜெயஸ்ரீயின் பாகேஸ்ரீயில், இலங்கையில் தான் கண்ட தெய்வத்தை எண்ணி உருகி நெகிழ்ந்து தழுதழுத்துப் போகிறான்.இரண்டு விதமான *பா*வங்களுக்குமான சாத்தியங்கள் இந்தக் கீர்த்தனையில் அழகாகப் பொருந்தி வருகின்றன.

ராக பாவத்தில் லயிப்பது, திளைப்பது என்று வந்து விட்டால், ரசனையுள்ள இசைக்கலைஞனுக்கு தோதான “வெளி” இராமநாடகக் கீர்த்தனையில் நிரம்பவே உண்டு.
சஞ்சய் சுப்ரமணியத்தின் இசைப் பயணம் குறித்த “ஆரார் ஆசைப்படார்” என்ற ஆவணப் படத்தில், அவர் முதிய நாதஸ்வர வித்வான் எஸ் ஆர் டி வைத்யநாதனை சந்தித்து உரையாடும் காட்சி மிகவும் ரசிக்கும் படியாக இருக்கும்.

நவரத்னத் தங்கத் தோடு நடையிலே அன்னப் பேடு
அவனிமேல் இல்லை ஈடு அவளுக்கவளே சோடு….
என்று சரணத்தை ஆற அமரப் பாடி,

காணவேணும் லட்சம் கண்கள் சீதாதேவி தன்
காலுக்கு நிகரோ பெண்கள்…

என்று பல்லவியில் வந்து முடிக்கும் போது, அந்தச் சுருட்டி அப்படியே நம்மை வாரிச் சுருட்டிக் கொள்கிறது. சீதையின் அழகை இராவணனுக்கு எடுத்துச் சொல்லி சூர்ப்பணகை பாடுவதாக வரும் பாட்டு இது.

அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் ஆரம்ப காலத்திலிருந்தே தமிழ்க் கீர்த்தனங்களை நிரம்ப தனது கச்சேரிகளில் பாடி வந்தவர். ஒருமுறை ஒரு கச்சேரியில் அவர் தன்னை மறந்து லயித்துப் பாடிக்கொண்டிருக்க, கூட்டத்தில் ஒரு ஆள் தமிழ்ப் பாட்டு தமிழ்ப் பாட்டு என்று நச்சரித்துக் கொண்டே இருந்தாராம். சிங்கத்தை சீண்டினால் அது சும்மா இருக்குமா? அரியக்குடி அடுத்ததாக ஒரு பாட்டை கம்பீரமாக ஆரம்பித்தாராம் -

ஆரடா குரங்கே – இங்கே வந்த நீ
ஆரடா குரங்கே!

இராம நாடகக் கீர்த்தனைகள் நவரசமும் பொருந்திய இசைப் படைப்புக்கள் என்பதற்கு வேறென்ன சான்று வேண்டும் !

courtesy - net

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

RAGHAVENDRA
31st December 2014, 07:30 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/NEWYEARGRTG2015MADURAGANAMFW_zps8c2759aa.jpg

sss
31st December 2014, 10:00 PM
இசையால் வசமான எல்லா நல்ல இதயங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகள்..

http://holidayswishes.net/wp-content/uploads/2014/07/Music-and-love-background-for-new-year-2015.jpg

chinnakkannan
31st December 2014, 10:01 PM
//ராமசாமி தூதன் நானடா – அடடா ராவணா
நானடா என் பேர் அனுமானடா… “// சிலோன் வானொலியில் சம்பூர்ண ராமாயணம் – டி.கே.பகவதி ட்ரூப்பின் வானொலி வடிவத்தில் இந்தப் பாடல் கேட்டிருக்கிறேன்.. அடடா.. அடடா..என அனுமான் இழுக்கும் அழகே அழகு..

//யாரோ இவர் யாரோ – என்ன பேரோ அறியேனே (யாரோ)
கார் உலாவும் சீர் உலாவும் மிதிலையில்// ரொம்பப் பிடிச்ச பாட்டுங்க கலைவேந்தன்..

முன்னாலே முன்னாளில் (ஹை!) எழுதிப்பார்த்த க் குட்டிப் பாட்டு..

ஆண்மக னென்று உன்னை
..அணங்குநான் எங்கு சொல்வேன்
ஊண்தனை மட்டு மல்ல
…உணர்வுகள் கொண்ட என்னை
தீண்டினாய் ராவ ணாவுன்
..திமிரினை என்ன சொல்வேன்
வீண்மக னென்று நீயும்
…விந்தையாய் ஆன தென்ன

கால்களை இறுக்க வைத்துக்
..கவலையில் உடலும் வாட
நீள்விழி உயர்த்தி சீதை
..நின்றவந் தரக்கன் மீது
வேல்களாய்க் கூர்மை யான
..வென்றிடும் சொற்கள் எய்ய
ஊழ்வினை பற்ற பின்னாள்
…உயிரினை விட்டா னன்றோ..

(ஏதோ எனக்குத் தெரிந்த சுருக்க்கமான ராமாயணம்!)

ராம நாடகக் கீர்த்தனைகளைப் பற்றி வெகு அழகாக எழுதியிருக்கிறீர்கள் கலைவேந்தன்…ம்ம் புதுவருடம் பிறக்க சிலமணித் துளிகள் தான் உள்ளன ..அண்ட் அண்டை நாட்டிலிருந்து உற்வுகள் வந்து கொண்டும் இருக்கிறார்கள்..வீரிவாக எழுத இயலவில்லை.. இன்னும் இன்னும் எழுதுங்கள் கலைவேந்தன் சார்..உங்கள் எழுத்துக்கலை மேல்மேலும் வரும் ஆண்டிலும், வரும் ஆண்டுகளிலும் ப்ரகாஸிக்கட்டும்!

உங்களுக்காக..ராமன் கதை கேளுங்கள் பாடல்

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=ra6qETtPYz0

Gopal.s
1st January 2015, 07:35 AM
படித்தவைகளில் பிடித்தது

இரண்டு வகையான மனிதர்களை நாம் நம் வாழ்க்கையில் தினமும் சந்திக்கறோம் - சிலர் இப்படிப்பட்டவர்கள்

"Wherever they go they bring happiness"


இவர்களால் எல்லோருக்கும் மகிழ்ச்சி உண்டாகின்றது , இவர்களை சந்திப்பதினால் நமக்கு அமைதி கிடைக்கின்றது , வாழ்க்கையின் உண்மையான அர்த்தம் புரிகின்றது - கர்வம் , ஆணவம் நம்மைவிட்டு அகல்கின்றது - படித்தவன் , படிக்காதவன் என்ற வேறுபாடு நம்மிடையே ஏற்படுவதில்லை - நம்மை ஆட்டி வைக்கும் மிருகம் இவர்களை சந்திப்பதனால் அடங்கிவிடுகின்றது - அமைதி தெய்வம் நம் முழு மனதில் கோவில் கொள்கின்றது ; மனம் சாந்தி சாந்தி சாந்தி என்று ஓய்வு கொள்ளும் ; பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்து விடும்

அடுத்த வகையான மனிதர்கள்

"Whenever they go, they bring happiness"

இவர்கள் இடத்தை காலி பண்ணியவுடன் , அந்த இடத்தில் சந்தோஷமும் , மகிழ்ச்சியும் தானாகவே தேடி ஓடி வந்து விடும் - வாழும் போதே இறந்து விடும் வகையை சேர்ந்தவர்கள் - இவர்கள் தனக்கே பாரமாக உள்ளவர்கள் - மற்றவர்களுக்கு எந்த நல்லதும் செய்யாதவர்கள் , செய்ய தெரியாதவர்கள் ....

ஆண்டு முடிவடையும் இந்த நாளில் நாம் போடும் பதிவுகளால் எல்லோருக்கும் மகிழ்ச்சியை உண்டாக்குவோம் - நாம் முதல் பிரிவை சார்ந்த மனிதர்களாக இருப்போம் !எல்லோரும் எல்லா வளமும் பெற நம் பதிவுகள் ஒரு உறுதுணையாக இருக்கட்டும் .

சமீபத்தில் நான் படித்த ஒரு புத்தகத்தில் இருந்து இந்த பதிவை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்



ரவி,



விடை பெற்று விட்ட பிறகு கோழை போல பதிவுகள் போட்டு தாக்குவதை நிறுத்து. உன்னுடைய பதிவுகள் படிக்க பட வேண்டும் என்பதற்காக எத்தனை பேரை காக்காய் பிடித்தாய் ,எவ்வளவு முறை நீயே வந்து வந்து போனாய் என்பதை ஊரே பார்த்து சிரித்தது. நீ எந்த வகை மனிதன் என்று ஊருக்கே தெரியும்.



உன் பெண்மை ததும்பும் குரலில் நீ சொன்னது. நாமெல்லாம் படிச்சவா........நான் சொன்னது ,'நாமெல்லாம் படிச்சதை யார் வேணுமானாலும் படிக்கலாம்".



பிறகும் உன் திரிசம வேலை தொடர்கிறது.நீ அகந்தை குறைந்த எல்லோரையும் சரி சமமாக எண்னும் உண்மை மனிதனா?



ரவி ஒன்று புரிந்து கொள். என்னால் வாழ்ந்தவர்கள் மட்டுமே உண்டு. நாக்கில் தேனை சுமந்து ,நரி வேலை பார்க்கும் உன்னால் என்னை உணர முடியாது. இனியாவது குரலை போல ,மனதிலும் பெண்மை சுமக்காமல் ,நேரடியாக வா. நான் அதனால் மகிழ்ச்சியே அடைவேன். எனக்கு கோழைகள்,துதி பாடிகள்,சந்தர்ப்பவாதிகள்,சமய அடிப்படைவாதிகள் ,திறமை அற்றவர்கள் இவர்களை அறவே பிடிக்காது.



தைரியமாக என்னை தாக்கிய வாசு,ராகவேந்தர், ரவிகிரன் சூர்யா,கலை இவர்களை நான் மதித்தே வந்துள்ளேன்.நான் போய் விட்டேன் என்றதும் தைரியம் பெறாதே. உன்னை மாதிரி பயந்து ஓடி ,புற கடை வழியாக வந்து ஹிட்டுக்கு அலைய மாட்டேன்.



எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து நைச்சியமாக போகலாம் என்று பார்த்தால் விட மாட்டாய் போலுள்ளது.

நன்கு சுவையாக புன்முறுவலுடன் தாக்க ,உன்னை கொம்பு சீவி கொண்டிருக்கும் கலையிடம் கலை பயிலு.உன் எழுத்துக்கள் வள வள வென்று nuance அற்று தட்டையாக உள்ளது. கொஞ்சம் படித்தவன் என்ற அகந்தையை எழுத்தில் மறைமுகமாக காட்டு.



நான் வாசு,முரளி,கார்த்திக் ,சின்ன கண்ணன்,சாரதி,ராகவேந்தர்,கலை வேந்தன் போன்றவர்களையே கற்றவர் வரிசையில் வைப்பேன்.இவர்கள் அகந்தை கொண்டாலும் மகிழ்ச்சியே.

vasudevan31355
1st January 2015, 09:12 AM
http://wallfoy.com/wp-content/uploads/2014/01/Colorful-Music-Wallpapers-19.jpg

http://www.freetix.nl/uploads/news/5444e7890414e.jpeg

vasudevan31355
1st January 2015, 09:19 AM
அனைவருக்கும் என் இதய தெய்வத்தின் சார்பில் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

http://d2yhexj5rb8c94.cloudfront.net/sites/default/files/styles/article_node_view/public/flsh%20back.JPG

raagadevan
1st January 2015, 10:50 AM
Wish everyone a safe, healthy & happy 2015! :)

vasudevan31355
1st January 2015, 11:00 AM
கோபால்,

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

நீங்கள் திரியில் தொடர்வது சந்தோஷமே!

ஆனால் புத்தாண்டும் அதுவுமாக தனிப்பட்ட நபர் தாக்குதல்கள் தேவைதானா?... தொடர்வு இப்படியா ஆரம்பித்து தொடர வேண்டும்? கடவுளே! இது அழகல்லவே! இதை சங்கடத்துடன் தெரிவிக்கிறேன்.

Gopal.s
1st January 2015, 11:20 AM
கோபால்,

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

நீங்கள் திரியில் தொடர்வது சந்தோஷமே!

ஆனால் புத்தாண்டும் அதுவுமாக தனிப்பட்ட நபர் தாக்குதல்கள் தேவைதானா?... தொடர்வு இப்படியா ஆரம்பித்து தொடர வேண்டும்? கடவுளே! இது அழகல்லவே! இதை சங்கடத்துடன் தெரிவிக்கிறேன்.

வாசு,



திரியில் நானாக தொடரவில்லை. கொண்டாட நினைத்த சிலரின் தயவு.



அடடா ,புத்தாண்டும் அதுவுமாக தனிப்பட்ட நபரையா தாக்கி விட்டேன் ?புத்தாண்டும் அதுவுமாக சிலர் போனாத்தான் நிம்மதி என்று வாழ்த்தியவரை ,வழிமொழிந்த அல்லக்கை ஈஸ்வரையரை சேர்த்திருந்தால்,தனி பட்ட நபர்கள் என்றாகியிருக்கும்.தாங்கள் குறையும் நீங்கியிருக்கும்.



கிருஷ்ணா ,ராமா என்று போகாமல், இதிலும் சொந்தமாக தாக்காமல்,வெட்டி ஓட்டும் பாணியில் ஆமாம் சாமி போட்ட அந்த பிறவியையும் சேர்த்திருக்கலாம். ஆனால் ரவி புகழுக்காக எச்சில் விட்டு (அவ்வப்போது மற்றவர் எச்சில் தானம் செய்து, எச்சில் ஏற்ற வேண்டிய அளவு இழப்பார்)அலைவாரே தவிர சிறிது ரோஷம்,சொரணை கொண்டவர். இவையெல்லாம் இல்லை என்று போஸ்டர் அடித்து விட்டவரை ரவியுடன் சேர்க்க தயங்கி "நபர் "ஆக முடிந்தது.மன்னியுங்கள் வாசுதேவன்.

vasudevan31355
1st January 2015, 11:48 AM
புத்தாண்டு சிறப்புப் பாடல்.

http://i922.photobucket.com/albums/ad67/pulavar/thiyagam-1.jpg (http://s922.photobucket.com/user/pulavar/media/thiyagam-1.jpg.html)

'உலகம் வெறும் இருட்டு
நீ உருப்படியா ஏத்திக்கடா விளக்கு'

நடிகர் திலகத்தின் இந்த ஜாலியான தத்துவப் பாடலோடு இந்த கானத்தை நான் தொடங்குகிறேன்.

'தியாகம்' வெள்ளி விழாப் படத்தின் வீழாத பாடல்.

எல்லோரும் போற வழி
நான் போகும் முன்னே
இரண்டில் ஒன்று பார்ப்பேனடா
அட இரண்டில் ஒன்று பார்ப்பேனடா
எந்த எமனையும் கேள்வி கேட்பனடா

கேள்... கேள்வி கேள். தயங்காதே. பயப்படாதே. இரண்டில் ஒன்று பார். உன் நெஞ்சில் கள்ளமில்லை என்றால் உன்னில் பயம் எதற்கு? எவனாய் இருந்தால் என்ன?... எமனாய் இருந்தால் என்ன?

சொத்தை வஞ்சகம் செய்து பிடுங்கி தன்னை சதி செய்து சிறைக்கு அனுப்பிய கூட்டத்தை வெளியே வந்து கூலாய் பாட்டுப் பாடி கலாய்க்கும் நடிகர் திலகம். உடன் அவரின் சிறுத் தொண்டர்கள்.

தேடும் காசு பண வெட்டு
நீ ஊரடிச்ச மூட்டு
ஒரு காலம் வந்தா தாளம்
தந்தினதன்னா

திருடிச் சேர்த்த பணம் நிக்காதுடா
உன்ன வைக்காதடா
அது போற வழிக்காகதடா

நிதர்சனம். நேர்மையான மனிதரின் உண்மையான கருத்து.

நல்லது கெட்டது எத்தனை வந்தது
எத்தனை நின்னுது எத்தனை போச்சுது
சுத்தன காசுக்கு பத்திரம் பண்ணுற டேய்

சுத்துன காசுக்கு பத்திரம் பண்ணுறவன் இன்னைக்கு அனுபவிக்கிறதை நேரிடையாகப் பார்க்கிறோம். ஆனா அப்படி இருந்தும் இன்னும் பேயாதான் பணத்துக்கு 'அலை'யிறாங்க. தலைவர் அறிவுறுத்திச் சொல்லியும் திருந்தாத இவர்களை என்னவென்று சொல்வது?

ஜாதி ரெண்டுன்னு
சொன்னது அவ்வை சொன்னது
அங்கேயே நின்னுது
தர்மம் என்ன பண்ணுது?

எவ்வளவு உண்மை! ஜாதி அவ்வையோடு ஆயிடுச்சே!

தத்துவத்தை படிக்காதே தேங்காய் சாமி
ஜாதி பேதம் பார்ப்பதில்லை நம்ம சாமி
அட அம்மன் சாமி!
அம்மன் சாமி வேலை பாரு
ஆமாம் சாமி வேலை எதுக்கு?

'ஆமாம் சாமி' போட்டு கவிழ்த்தவர்களை தலைவருக்குத் தெரியாதா? அம்மன் முன்னால் நடந்த அக்கிரமத்திற்கு, அட்டூழியத்திற்கு அங்கேயே கொடுவாளால் பழி தீர்த்த 'பராசக்தி' மைந்தனுக்குத் தெரியாதா'? எந்த கவிழ்ப்புக்கும் மயங்காத, கண்ணியத்துக்கு பெயர் போன 'கலைச் சக்கரவர்த்தி'க்குத் தெரியாததா? அதனால்தான் புத்தி பிசகியவர்களுக்கு இந்த புத்திமதி.

பூஜை நாலு தரம் பண்ணு
நீ ஏழு தரம் தின்னு
நீ ஊர்ப்பணத்தை தின்னா வாயில மண்ணு

உடம்பு ரப்பரைப் போல் வீங்குதடா
பூமி தாங்குதடா
சாமி எப்போதும் தாங்காதடா

கட்டி முடிச்சவன் வீட்டில இல்லடா
வீட்டுல உள்ளவன் கட்டியதல்லடா
எத்தனை சொல்லியும் புத்தி பொறக்கல டேய்... யா

http://shakthi.fm/album-covers/ta/6f6e54eb/cover_m.jpg

4-3-1978 இல் வந்த 'தியாகம்'. 50 வயசு நடிகர் திலகத்திற்கு. தண்ணியடிப்பது போல பாவனை செய்து ஆடும் ஆனந்த ஆட்டம். அன்று காலை முதல் காட்சியில் 'தியாகம்' வெளியான தமிழக தியேட்டர்கள் இப்பாட்டில் இரண்டு பட்டது. இந்த வயதில் இப்படி ஒரு ஆட்டமா என்று வாய் பிளந்தது ஜனம். இது நிஜம். இத்தனைக்கும் காலில் அடிபட்ட வலியுடன் ஆடுவார். ('ஜாதி ரெண்டுன்னு சொன்னது' வரிகளில் நடந்து வரும் போது காணலாம். வேதனையை வெளிக்காட்டாமல், ஆட்டத்திலும் சோடை போகாமல் வலியுள்ள காலை மேலே உயர்த்தி பேலன்ஸ் செய்வார் அழகாக) விக்கும், மீசையும் வியக்க வைக்கும். சாதரணமான ஒரு ஷர்ட் இவருக்குள் பொருந்தி அசாதரணமான ஸ்டைலில் மிளிரும். கையில் உள்ள பாட்டிலில் தாளம் போட்டு, நெற்றியில் முடிக்கற்றைகள் விழுந்து மறைக்க, அதைக் கையால் ஒரு பக்கம் ஸ்டைலாக ஒதுக்கிவிடும் நேர்த்தி நெத்தியடி. 50 வயதில் இருபது வயது இளைஞன் போல இளக்கார ஆட்டம். படு கேஷுவல்.

உடன் கிருஷ்ணமூர்த்தியும், ஜூனியர் பாலையாவும். வி.கே.ஆரும், வாசுவும் வில்லன் கோஷ்டி. பாலாஜி இன்ஸ்பெக்டர்.

ஜாலியான பாடல். ராஜாவின் ரசிக்க வைக்கும் இசை. பாடகர் திலகத்தின் ஈடு செய்ய முடியாத நடிப்புச் சிங்கத்துகான 100% குரல். ஜாலியான நடனம், கேரளக் கரை தென்னந்தோப்புக்குள் மீண்டும் 'ராஜா'. அதே பிரம்மாண்ட வெற்றி

பாட்டு முடிந்ததும் சொந்தக்குரலில் பாலாஜியிடம் இதே பாடலை இரண்டு வரிகள் ஜோராகப் பாடிக் காட்டி வி.கே.ஆரை விரட்டுவார்.

ஜனரஞ்சகப் பாடலில் சுயவஞ்சகப் புலிகளின் முகத் திரையைக் கிழிக்கும் கருத்துக்கள்.

தலைவர் சொன்னது போல் இந்தப் புத்தாண்டில் ஜாதி பேதம் இல்லாமல் இருண்ட உலகத்தில் அறிவு விளக்கேற்றி, பணத்தாசை பித்து இல்லாமல் வாழ முயற்சி செய்து, சகோதரத்துவம் உணர்வு கொண்டு வம்பு எதுவும் இல்லாமல் அன்போடு வாழ உறுதி கொள்வோம்.

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

1.40 இலிருந்து 1.45 வரை பாடலை ரசிக்கலாம்.


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=bPrQVL8kico

gkrishna
1st January 2015, 03:44 PM
நண்பர் வாசு அவர்களுக்கு

புது வருடம் அன்று போடப்படும் முதல் பதிவு தனி நபர் தாக்குதலுடன் ஆரம்பிக்க வேண்டுமா ? என்று கேட்டு உள்ளீர்கள். மறக்க முடியாத 2015 ம் ஆண்டின் முதல் பதிவு கீழ் வரும் பதிவு

திரு கோபால் அவர்களுக்கு

தேவை இல்லாமல் என் பெயரை இழுக்க வேண்டாம்.அனாவசியமாக கீழோரின் வார்த்தைகள் உபயோகிக்க வேண்டாம் .நீங்கள் திரியில் தொடர்வதால் எனக்கு துக்கமோ அல்லது திரியில் இருந்து விடை பெற்று கொள்வதால் சந்தோஷமோ கிடையாது . உங்களை திரியை விட்டு நான் போக சொல்லவில்லை. இங்கு எல்லோரும் சக பதிவர்கள் . யாரும் கருத்து எழுதலாம். ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கும். அந்தந்த கருத்தை அவரவர்கள் அவரவர்கள் பாணியிலே வெளிபடுதுவார்கள். அது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் கருத்து பிடிக்கவில்லை,கருத்தில் பிழை இருக்கிறது என்று சொல்லத்தான் உங்களுக்கு உரிமை உண்டே தவிர தனி நபர் தாக்குதல் என்பது 'நான் நிரம்ப படித்தவன்' என்று சொல்லி கொள்ளும் ஒருவருக்கு அழகல்லவே. இதை விட கேவலமாக எழுத எல்லோராலும் எழுத முடியும் ஆனால் படித்தவர்கள் யாரும் அப்படி எழுத மாட்டார்கள்.

நண்பர் ரவியின் பதிவு நான் ரசித்த பதிவு .அதற்கு என் பாராட்டை என் பாணியில் தெரிவித்தேன். எனக்கு தெரிந்து அந்த பதிவில் அவர் எங்கும் உங்கள் பெயரை உபயோகித்ததாக தெரியவில்லை. இதுவும் அவருக்கு வக்காலத்து வாங்கி கொண்டு எழுதவில்லை. என்னை பொறுத்த வரையில் அந்த பதிவு உங்களை தனிப்பட்ட முறையில் தாக்கி போடப்பட்ட பதிவாகவே நான் கருதவில்லை. மேலும் நண்பர் ரவியின் தொடர்பான என் எதிர் பதிவு உங்களை எந்த விதத்தில் காயபடுதுகிறது என்பதும் புரியவில்லை. 'மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம் இருக்கும் ' என்று சொல்வார்கள். நீங்களாக அந்த பதிவு உங்களை தாக்கி போட்ட பதிவு என்று நினைத்து கொண்டால் அதற்கு நான் எந்த விதத்திலும் பொறுப்பாளி ஆக மாட்டேன்.

இறுதியாக ஆனால் உறுதியாக சொல்கிறேன் 'நீங்கள் என்னை புத்திசாலி என்று அழைக்க வேண்டும்' என்று நானும் என்றும் கருதியதும் இல்லை . ஆனால் என்னை 'அல்லக்கை,சூடு சொரணை அற்றவன்' என்று சொல்வதற்கு உங்களுக்கு எந்தவிதத்திலும் உரிமையும் கிடையாது.உங்களுக்கு அந்த தகுதியும் கிடையாது.

ஏற்கனவே நடிகர் திலகம் திரியில் நண்பர் ஒருவர் 'உங்களுக்கு இந்த திரி சரி வராது. நீங்கள் ப்ளாக் ஆரம்பிக்க போவதாக சொன்னீர்களே எப்போது ஆரம்பிக்க போகிறீர்கள் ' என்று ஒரு பதிவு போட்டு அதை படித்தவன் என்ற முறையில் கவிஞர் கண்ணதாசன் அவர்களின் மணி வாசகமான திருவாசகத்துடன் முடிக்கிறேன் .

'மதியாதார் தலை வாசல் மிதியாதே என்று மானமுள்ள தமிழனுக்கு அவ்வை சொன்னது
அவ்வை சொன்னது அதில் அர்த்தம் உள்ளது '

Gopal.s
1st January 2015, 05:02 PM
கிருஷ்ணா,



உங்களை விட்டது தவறு என்று எல்லோரும் சொல்லும் அளவு அறுத்து தள்ளி விட்டீர்கள்.இந்த அழகில் கர்வம் வேறு. உங்கள் நிறுவனத்தில் உங்கள் இணைப்பையே துண்டித்து விடுவதால்,சற்றே எல்லோரும் அயர்ந்து நிம்மதியாக இருந்தார்கள்.என்னவோ சம்மந்தா சம்மந்தமில்லாத பதிவுகளால் ,கார்த்திக்,என்னை வெறுப்பேற்றி ,நாங்களாக வெளியேறுகிறோம்.



ஆனால் நான் போட்ட பதிவுகள் என் சொந்த கருத்தென்று நீங்கள் எண்ணியிருந்தால் நீங்கள் முழு முட்டாள்.அது குறைந்தது அறுவரின் கருத்து.(இந்த அறுப்பவரை அறுத்து விடுங்கள் என்ற அறுவர் விண்ணப்பம் வைத்ததால் ,நான் பணம் வாங்காமல் செய்த பொதுசேவை)இதை முதலில் நாசூக்காக சொன்னவரே கார்த்திக்.(நாசூக்கு,உங்களிடம்)



ஆனால் என் பணியில் தோற்று விட காரணம், கரப்பான் பூச்சிகளை அழிப்பது கடினம்.உண்ணிகளை அழிப்பது அதை விட கடினம்.



உங்களை வீட்டில் நுழைய விட்டதற்கு வீட்டின் பெயரையே மாற்றி உங்கள் போர்டு போட்டு விட்டாயிற்றே." மயக்கும்"என்ற வார்த்தை எப்போது கவரும் ஆனது?

Russellzlc
1st January 2015, 05:33 PM
‘ஆங்கார உள்ளமே, அமைதியும் பெறுமே....’


திரு. சின்னக் கண்ணன் சார் அவர்களுக்கு,

என் எழுத்துக் கலை வரும் ஆண்டுகளில் மேல் மேலும் பிரகாசிக்கட்டும் என்று வாழ்த்தியதற்கு நன்றி. புத்தாண்டும் வைகுண்ட ஏகாதசியும் கொண்ட நாளில், தமிழ் கற்றறிந்த உங்களிடம் இருந்து கிடைக்கும் வாழ்த்து அந்த ‘சின்னக் கண்ணனே’ வாழ்த்தியது போலிருந்தது. நன்றி.

என்றாலும், ‘ராம நாடக கீர்த்தனைகள் பற்றி வெகு அழகாக எழுதியிருக்கிறீர்கள்’ என்ற உங்கள் பாராட்டுக்கு நான் தகுதி உடையவனல்ல. அந்த கட்டுரை நான் நெட்டில் படித்து ரசித்தது. அதை நான் குறிப்பிட்டும் இருக்கிறேன். இவற்றையெல்லாம் ஆழ்ந்து படித்து வருகிறேன். உங்களின் வாழ்த்துக்களோடு விரைவில் அது குறித்து எழுதுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. நன்றி.

திரு.கோபால்,

நீங்கள் திரும்பி வந்தது மகிழ்ச்சி. திரு.ரவி சாருக்கு நான் கொம்பு சீவி விடுவதாக கூறியிருக்கிறீர்கள். அவருடைய பதிவு நன்றாக இருந்ததால் பாராட்டினேன். மற்றபடி, கொம்பு சீவி விடவில்லை. பதிவுகளை வைத்துப் பார்க்கையில் அவர் ஐதராபாத்தில் இருக்கிறார் என்று தெரிந்து கொண்டேனே தவிர, அவர் எப்படி இருப்பார், என்று கூட எனக்கு தெரியாது. பேசியதும் இல்லை. அவர் மட்டுமல்ல, திரு.வாசு சார், திரு.ராகவேந்தர் சார், திரு. கிருஷ்ணா சார், திரு. சின்னக் கண்ணன் சார் யாரையுமே எனக்கு தெரியாது. அவர்களை விடுங்கள். உங்கள் பதிவுகளில் இருந்து வியட்நாமில் இருக்கிறீர்கள் என்று தெரிந்து கொண்டேனே தவிர, உங்களையும் எனக்கு தெரியாது. கருத்து மாறுபாடு காரணமாக உங்களை கருத்து ரீதியாக தாக்க வேண்டுமென்றால், நீங்களே கூறியபடி நானே தாக்குவேன். யாரையும் கொம்பு சீவி விட மாட்டேன்.

நான் ஒருவருடன் விவாதிக்கிறேன் என்றால் அவர் எனக்கு சமமாகவோ, என்னை விட உயர்ந்தவராகவோ இருக்க வேண்டும் என்று நினைப்பேன். என்னிடம் இல்லாத சில திறமைகள் உங்களிடம் இருப்பதை பார்க்கிறேன். உங்களிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறேன்.... ஆக்கபூர்வமாக. நன்றி.

திரு. ரவிக்குமார் சார், திரு.கிருஷ்ணா சார்.

நீங்கள் இருவரும் திரு.கோபாலை குறிப்பிடவில்லை என்றாலும் கூட, அவரை மீண்டும் திரிக்கு கொண்டு வரும் சக்தி உங்கள் எழுத்துக்களுக்கு இருக்கிறது. பாராட்டுக்கள்.

திரு. வாசு சார்,

திரு. சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த வணங்காமுடி படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்
‘ஓங்காரமாய் விளங்கும் நாதம்..’. அருமையான பாடல். சிற்பம் செதுக்கும் இடத்துக்கு திரு.சாவித்திரி செல்லும்போது திரு.சிவாஜி கணேசனுடன் இருக்கும் திரு.தங்கவேலுதான் பாடியதாக அவரை நம்ப வைப்பார்கள். இருவரையும் அரசவைக்கு கொண்டு வந்து பாடச் சொல்லும்போது, தங்கவேலு விழித்தபடி சமாளிப்பார். பாடு என்று சொல்லி சேனாதிபதியாக இருக்கும் திரு.நம்பியார், தங்கவேலுவின் கன்னத்தில் அறைவார்.
அதுவரை சாவித்திரியை அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கும் திரு.சிவாஜி கணேசன் நண்பனுக்கு அடி விழுந்தவுடன் அவரை அணைத்தபடி, பாடுவார். அதுவும் அடிதாங்காமல், ‘ஆ.... ’ என்று உச்ச ஸ்தாயியில் தொடங்கி ‘பாட்டும் பரதமும் பண்பட்ட கலைகளும்... ’ என்று தொடங்கும் கருத்து மிக்க பாடல்.

ஓங்கார நாதத்தின் சிறப்பை குறிக்கும் வகையில்,

‘ஆங்கார உள்ளமே
அமைதியும் பெறுமே
நீங்காத துயர் மாறி
நிம்மதி பெறுமே....
நிகரேது.... புவி மீது..’

என்ற வரிகளும், டி.எம்.எஸ்.சின் கம்பீர குரலும் திரு.சிவாஜி கணேசன் அவர்களின் சிறந்த நடிப்பும், எப்பேர்பட்ட ஆங்கார உள்ளத்தையும் அமைதிப்படுத்தும்.
இந்தப் பாடலை நீங்கள் தரவேற்றினால், மகிழ்ச்சி. எனக்கு தரவேற்றத் தெரியாது. உங்களுக்கு சிரமம் கொடுக்கிறேன். மன்னிக்க வேண்டும்.

புத்தாண்டில், ஆங்காரமும், துயரமும் நீங்கி உள்ளங்கள் அமைதியும், நிம்மதியும் பெறட்டும். ஓங்காரம் ஒலிக்கட்டும்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

RAGHAVENDRA
1st January 2015, 09:19 PM
பொங்கும் பூம்புனல்

மதுரகான நாயகரே வாசுதேவரே..
இதோ தங்களுக்கு என் புத்தாண்டுப் பரிசு..

இசை தெய்வம் மெல்லிசை மன்னரின் பெயரை ஆண்டாண்டு காலத்திற்குச் சொல்லும் பாடல்..

என் உயிரே இப்பாடலில்...

வெண்ணிலவில் கண்கவரும் ஷாஜஹானின் தாஜ்மஹல்..

https://www.youtube.com/watch?v=LHf2fkHD_TI

RAGHAVENDRA
1st January 2015, 09:22 PM
பொங்கும் பூம்புனல்

விரல் மீட்டாமல் இருக்கின்ற வீணை என்னாகும்..

பாடல் விளக்குகிறது..

பெண்ணைச் சொல்லிக் குற்றமில்லை.. ஆஹா.. இசைக்கென்றே ஒரு படம்...
அண்ணன் ஒரு கோயில் ஆட்டுக்கார அலமேலு வின் ஓசையில் சுத்தமாக அடங்கி விட்டது.

இசையரசியின் குரல்...
ஆஹா... என்னென்பது..
வார்த்தைகளே வரவில்லை...பாராட்ட...


https://www.youtube.com/watch?v=BLXPGwHiUAY

RAGHAVENDRA
1st January 2015, 09:30 PM
பொங்கும் பூம்புனல்

வாசு சார்
இதோ இன்னோர் புத்தாண்டு பரிசு

ஈஸ்வரியின் சூப்பர் டூப்பர் பாட்டு

யாரடி வந்தார் என் எண்ணத்தைக் கொள்ள.. நீயும் நானும் படத்திலிருந்து..

https://www.youtube.com/watch?v=N6A2e2oYqvg

RAGHAVENDRA
1st January 2015, 09:37 PM
பொங்கும் பூம்புனல்

வாசு சார்.. இதோ இன்னோர் புத்தாண்டுப் பரிசு

தங்க வளையல் படத்திலிருந்து .. பாடகர் திலகம் ராட்சசி கலக்கும் தாழை மடல் சிரிப்பு..

https://www.youtube.com/watch?v=p8su1CTXRTQ

இந்த அபூர்வப் பாடல்களுக்கு நன்றி ஈஸ்வர் கோபால் சார்

vasudevan31355
1st January 2015, 09:39 PM
புத்தாண்டு பரிசுகளை அளித்து பெரு மகிழ்ச்சியில் மூழ்கச் செய்து விட்டீர்கள் ராகவேந்திரன் சார். ஒவ்வொன்றும் அற்புத குணங்கள் கொண்ட சுவை மிகுந்த பாடல்கள். மிக அரிதானவையும் கூட. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் என் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

vasudevan31355
1st January 2015, 09:49 PM
ராகவேந்திரன் சார்,

இதோ தங்களுக்கு என் அன்புப் புத்தாண்டு பரிசுகள் சில.

நீண்ட நாட்களாக நாம் எதிர்பார்த்துக் காத்துக் கிடந்த 'புதிய சங்கமம்' படப் பாடல். இளையதிலகமும், சுஹாசினியும் பங்கு கொள்ளும் பாடல். அற்புதம்.

'பஞ்ச சுரங்களே இந்தூளம்'. சுசீலா அம்மாவின் அற்புதமான குரலில். பாண்டிச்சேரியில் படமாக்கப்பட்ட பாடல் (சில ஷாட்கள்) என்று நினைவு. சரணத்தின் நடுவில் வரும் குழலின் இசை சற்று 'மணாளனே மங்கியின் பாக்கியம்' படத்தின் 'அழைக்காதே' பாடலை ஞாபகப்படுத்தும்.


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=L3M7wnE2PZw

vasudevan31355
1st January 2015, 09:54 PM
இதோ இன்னொரு அற்புதமான பாடல். ஸ்ரீதரின் 'சௌந்தர்யமே வருக வருக' படத்தில் ஒலிக்கும்

'ஆகாயம்தானே அழகான கூரை
காணுமிடம் யாவும் காதலர்கள் வீடு
கண்ணான கண்ணே விளையாடு
கல்யாண மந்திரம் பாடு'

பாலா, வாணி ஜெயராம் பின்னி எடுக்கும் பாடல். ஸ்ரீப்ரியா, சிவச்சந்திரன் இணை. பிரியாவுக்கு வாணியின் குரல் எப்போதுமே பொருத்தம். வெளிநாடுகளில் பாடலின் படக் காட்சிகள். இதுவும் நாம் காத்துக் கிடந்த பாடலே.


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=LSECG9TXDpc

vasudevan31355
1st January 2015, 10:01 PM
ராகவேந்திரன் சார்,

இன்னுமொரு ரேர் சாங். 'பஞ்சபூதம்' படத்திலிருந்து. இந்தப் பாடலுக்கும் ரொம்ப நாளாக வெயிட்டிங்.

என் ராஜாத்தி புது ரோஜாப்பூ
என் சந்தோஷம் கண்ணே
உன் சகவாசமே

ஸ்ரீகாந்தின் அபூர்வ டூயட் சங்கீதாவுடன். (சங்கீதாவிடம் எப்போதுமே ஏதோ ஒரு குறை தென்பட்டுக் கொண்டேதான் இருக்கும். இவரும் சில காலங்கள் எப்படியோ ஓட்டி விட்டார். )

ஜெயச்சந்திரன், ஜானகி இணைவில்.

ஆனால் பாடல் சுகம்... இதம். ஜானகி சில இடங்களில் டாப். அதுவும் பல்லவி வரிகளின் உச்சரிப்பில்.


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=7qeet9vIGms

rajraj
1st January 2015, 10:26 PM
Wishing you all a happy and prosperous New Year ! :)


From Akbar, Tamil dubbed version of Mughal E Azam

kaadhal koNdaale bayam enna.......

http://www.youtube.com/watch?v=fTJCr1nzTDY

From Mughal E Azam

Pyar Kiya To Darna Kiya.........

http://www.youtube.com/watch?v=b5oaUXgXQtE

Another Tamil version

kaadhalithaale achcham enna.....

http://www.youtube.com/watch?v=8QHUNzYq4CM


vasu: Azhaikkadhe ninaikkadhe, the Tamil version of 'mujhe na bhula' is also in HindhoLam( known as Malkauns in Hindustani Classical. :)

vasudevan31355
2nd January 2015, 05:36 AM
Wishing you all a happy and prosperous New Year ! :)




vasu: Azhaikkadhe ninaikkadhe, the Tamil version of 'mujhe na bhula' is also in HindhoLam( known as Malkauns in Hindustani Classical. :)

wow! great sir. Thank u.

rajeshkrv
2nd January 2015, 07:48 AM
நேற்று ஜாலியாக ஜல்லி அடித்த ஒரு விவாதம் எங்கள் நண்பர்களிடத்தில்

பாலு வாலி குமார் , (1965 முதல் 1970 வரை )
பாலு கண்ணதாசன் விஸ்வநாதன் (1971 முதல் 1981 வரை)
பாலு வைரமுத்து இளையராஜா (1984 முதல் 1990 வரை)
பாலு வைரமுத்து ரஹ்மான் (டூயட் மற்றும் பார்த்தாலே பரவசம் )
பாலு புலமைபித்தன் மரகதமணி (அழகன் )

மிக நீண்ட நேரம் நடந்தது . எல்லோரும் அவரவர் கருத்தை அகந்தை இன்றி தெரிவித்தார்கள். விவாதத்திற்கு முடிவு ஏது ? .ஆனால் நல்ல பல பாடல்கள் அவரவர் பாணியில் சிலாகிகபட்டன


1990's KB-vaali-Illayaraja (MAnadhil urudhi vendum, Pudhu pudhu arthangal

Sollathan ninaikkiren - Vaali, poikkal kudhirai- vaali, agni saatchi- vaali

ipdi niraya irukku. you cant generalize an ERA

gkrishna
2nd January 2015, 09:35 AM
நண்பர் ராஜேஷ் அவர்களுக்கு

புத்தாண்டு நல் வாழ்த்துகள் . நீங்கள் சொன்னது போல் அதன் தொடர்ச்சியான பதிவுகளில் இது போன்று முரளி ,வாசு அவர்களும் குறிப்பிட்டு எழுதி இருந்தார்கள். 65,66 களில் வீ குமார் உடன் பணி ஆற்றி விட்டு ,67 களில் மெல்லிசை மன்னர,கண்ணதாசன் கூட்டணியில் (பாமா விஜயம்,அனுபவி ராஜ அனுபவி) பாலச்சந்தர் இணைந்தார். பின் 68,69 களில் மீண்டும் வீ குமார்,வாலி உடன் இணைந்து பணி ஆற்றினார் . ஆகையால் வருஷம் குறிப்பிட முடியாது தான் .குறிப்பிடவும் கூடாது தான் .

நன்றி

parthasarathy
2nd January 2015, 11:21 AM
Dear all,

Wish you and your families a very happy New Year.

I was expecting any one to say about 'Kathadi' Ramamoorthy's earlier movie but; no one indicated. He acted in "Edhir Neechal" as one of the college mates of Nagesh, along with ISR. In fact, I had a great opportunity to work in the same office (in a temporary leave vacancy for a month) where he worked and got retired - M/s. Jenson & Nicholson, adjacent to Ananda Vikatan on the Mount Road in April 1985.

Regards,

R. Parthasarathy

kalnayak
2nd January 2015, 02:41 PM
அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு 2015 வாழ்த்துகள்!!!

vasudevan31355
2nd January 2015, 03:49 PM
கலை சார்,

இதோ உங்களுக்குப் பிடித்த நடிகர் திலகத்தின் சீறும் நடிப்பில் நம் நாடி நரம்பையெல்லாம் சிலிர்க்க வைக்கும் 'வணங்காமுடி' படப் பாடல் அர்த்தம் பொதிந்த வரிகளோடு.

'ஓங்காரமாய் விளங்கும் நாதம்
அந்த ரீங்காரமே இன்ப கீதம்'

'பாட்டும் பரதமும் பண்புள்ள நாடகமும்
நாட்டுக்கு நல்ல பயன் தருமா
எண்ணிப் பாராமல் போராடும் மாந்தரால்
பலனற்று மாறி விடுமா'

என்று தொகையறாவுடன் ஆரம்பிக்கும் இப்பாடலில் நடிகர் திலகத்தின் உச்ச கட்ட கோபம் அனலாய்த் தகிக்கிறது. நடிப்பு நெருப்பைக் கக்குகிறது. எனக்கு மிக மிகப் பிடித்த பாடல்.

இப்பாடலில் வரும்,

'இயலும், இசையும், 'கலை':)யும்
இகமதில் மகிழ்வுற சுகம் தரும்'

என்ற வரிகள் அப்பட்டமான உண்மையை உரைக்கின்றதே! எப்பேற்பட்ட கோபமும், ஆத்திரமும், மன உளைச்சலும் நல்ல இசை கேட்டால் நகர்ந்து ஓடி விடுமல்லவா!

'நாதம்' எனும் போது நடிகர் திலகம் உதடுகளைக் குவித்து, ஆனால் முழுமையாக ஒன்று சேர்க்காமல் இதழ்களுக்குள் சற்று இடைவெளி விடுவது (அதாவது பாடகர் திலகத்தின் குரலுக்கேற்றவாறு) அவர் ஒரு தெய்வக் கலைஞர் என்று உணர்த்தி விடும்.

அணு அணுவாக நம்மை ரசிக்க வைத்து அணுக்களில் அமைதி ஏற்படுத்தும் அமரகானம்.

நன்றி கலை சார்.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=j7eCsFO-Wkg

Russellzlc
2nd January 2015, 04:40 PM
திரு. வாசு சார்,

பாடலை தரவேற்றியதற்கு மிகவும் நன்றி. அதில், ‘கலை’ என்ற வார்த்தை வரும்போது உங்களுக்கே உரிய கைவண்ணம். நன்றி.

வணங்காமுடி படத்தை மறுவெளியீட்டில் நான் பார்த்து 30 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும். இருந்தாலும் என் நினைவில் தங்கிவிட்ட ஒரு காட்சி. கிளைமாக்சில் வாள் சண்டையின்போது, திரு.நம்பியாரின் வாள், அங்குள்ள ஒரு சோபாவில் சொருகிக் கொண்டு விடும். நிராயுதபாணியான திரு.நம்பியார் பயத்துடன் திரு.சிவாஜி கணேசனை பார்ப்பார். அப்போதே அவரை கொன்றிருக்க முடியும். இருந்தாலும், ஒரு வாய்ப்பு கொடுப்பதற்காக, சோபாவில் சொருகிக் கொண்டிருக்கும் வாளை தன் கையில் உள்ள வாளால் திரு.சிவாஜி கணேசன் தட்டி, அதை எடுத்துக் கொள்ளச் சொல்லி ஜாடை காட்டுவார். ‘அட! வாத்யார் பாணியில் இருக்கிறதே’ என்று நான் ரசித்த சண்டைக் காட்சி அது.

(எங்கள்) வள்ளலின் கையில் பல லட்சம் இருந்தால்
வறியவர்க்கெல்லாம் சுபதினம்...

என்பதைப் போல,

உங்களின் கையில் கம்ப்யூட்டர் இருந்தால்
எங்களுக்கெல்லாம் சுபதினம்.

நன்றி சார்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

vasudevan31355
2nd January 2015, 10:24 PM
ராஜ் ராஜ் சார்,

'பூங்கோதை' என்ற படம் 1953 ஆம் ஆண்டு வெளிவந்தது. (தெலுங்கில் 'பரதேசி' 1953) நடிகர் திலகம், ANR, அஞ்சலிதேவி நடித்த இப்படத்தில் 'நான் ஏன் வர வேண்டும்... ஏதுக்காகவோ... யாரைக் காண்பதற்கோ' என்ற ஜிக்கியின் பாடல் உண்டு. இந்தப் பாடல் 1951-ல் வெளிவந்த 'jadoo' இந்தித் திரைப்படப் பாடலின் தழுவல் ஆகும். இந்த வீடியோவை அப்லோட் செய்த வேம்பார் மணிவண்ணன் 'பூங்கோதை' திரைப்பட தமிழ்ப் பாடலை ஒரிஜினல் ஹிந்தியிலேயே இணைத்து ரீமிக்ஸ் செய்துள்ளார். ஏன் இப்படி இவர்கள் இஷ்டத்திற்கு குழப்புகிறார்கள் என்று புரியவில்லை. மணிவண்ணன் பல அரிய அற்புத பாடல்களை 'யூ ட்யூப்' இணைய தளத்தில் தரவேற்றி அரும் பெரும் சாதனை புரிந்து வருகிறார். அவருக்கு நம் நன்றிகள். ஆனால் ஒரிஜினலாக தமிழ்ப் படத்தில் வர வேண்டிய பாடலில் இந்தி மூலத்திலேயே இணைத்து ரீமிக்ஸ் செய்வது வருந்தத்தக்கது. இது கண்டிப்பாக நிறுத்தப்பப்ட வேண்டும். இதனால் ஒரிஜினல் படத்தின் பாடல்கள் எந்தப் படம் என்று குழம்பக் கூடிய வாய்ப்புகள் அதிகம். நீங்களே பாருங்கள்.

'Lo pyar ki ho gai jeet'

'Jadoo' இந்திப் படப் பாடல் லதாஜியின் குரலில்.


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=vRTYEcnEY0w

'பூங்கோதை'யில் இடம் பெற்ற 'நான் ஏன் வர வேண்டும்... ஏதுக்காகவோ... யாரைக் காண்பதற்கோ' தமிழ்ப் பாடல் வேம்பார் மணிவண்ணன் புண்ணியத்தால் மீண்டும் இந்தி 'jaadu' படத்தில் இந்திப் பாடலுக்கு பதிலாக அழகாக குந்திக் :)கொண்டது.


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=5neBmH_yzeU

'பூங்கோதை' தமிழ்ப் படத்தின் தெலுங்கு மூலமான 'பரதேசி' யில் இதே பாடல் தெலுங்கில் அதே ஜிக்கி பாடியது. வீடியோ கிடைக்கவில்லை. ஆடியோ மட்டுமே.

'நேனெந்துக்கு ராவாலி
எவரிக்கோசமோ'

http://www.cineradham.com/newsongs/player/player.php?song[]=845

rajraj
2nd January 2015, 11:12 PM
vasu: When Manivannan has trouble getting the Tamil version he posts the Hindi version for video with Tamil audio.

I don't think it is a big issue. Just enjoy the song ! :) If you find the Tamil video you can help him with the link. Unfortunately Tamil movie world has not preserved all Tamil movies. Or, it may be a copyright issue as one producer did for some 1940s movies.

vasudevan31355
3rd January 2015, 02:27 PM
If you find the Tamil video you can help him with the link.

chance nahee.:)

vasudevan31355
3rd January 2015, 03:58 PM
'இளையராஜா என்றும் இனிய ராஜா' (தொடர் 19)

http://www.upperstall.com/files/imagecache/preview/profile/ilayaraja-stills-1.jpg

'முள்ளும் மலரும்' பாடல்கள்... தொடர்கிறது...

http://i.ytimg.com/vi/k4Szjiw9Ih0/hqdefault.jpg

'ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லே ஹோய்'

http://i.ytimg.com/vi/GCGbU1H27Lk/maxresdefault.jpg

சுயமரியாதையோடு கூடிய என்ன ஒரு அகம்பாவ அலட்சிய தொனி! கதையின் நாயகனுக்கு கனப் பொருத்தமான காட்சிக்கேற்ற பாடல். 'வேலை போனாதான் என்ன? வாழ்வே அத்தோடு முடிந்து விடுமா?' என்று தனக்குத் தானே தைரிய சமாதானம் சொல்லி, அடுத்தவனுக்கும் அதைரியத்தைப் போக்கி, அமர்க்கள அறிவுரை கூறும் பாடல்.

http://i.ytimg.com/vi/BHgUwlvTFa8/mqdefault.jpg

கரடுமுரடான மலைப்பாதையில் பல்லக்கில் சாமி ஊர்கோலம் வர, படுகர் இனப் பெண்கள் போல மலை ஜாதிப் பெண்கள் பின்னால் பறவை போல் நாட்டியமாடி வர, விறைப்பான முறைப்பான ரஜினி பாலாவின் குரலில் வெளுத்து வாங்கும்

'நான்தாண்டா என் மனசுக்கு ராஜா'

பின்னே! எனக்கு நானே ராஜா... நீ என்னடா என்னைய வேலைய விட்டுத் தூக்கறது?

அப்படியே எதுக்கைகேற்ற மோனை.

'வாங்குங்கடா வெள்ளியில் கூஜா'

'நீ கேட்டா கேட்டதை கொடுப்பேன்
கேக்குற வரத்தை கேட்டுக்கடா'

'என்ன வேண்டுமோ வரத்தைக் கேட்டுப் பெற்றுக் கொள். எனக்கு கொடுக்கும் சக்தி இருக்கிறது. எனக்கு எவனும் வரம் கொடுக்கத் தேவை இல்லை'

என்ற மமதை கலந்த செருக்கு இயலாமையிலும் ஆற்றாமையிலும், அறியாமையிலும் காளியுடன் பொங்கிப் பிரவாகம் எடுப்பதைக் காணலாம். உள் நிறைய வேதனை வைத்து வெளி தைரியம் காட்டும் காளியின் காங்கேயன் காளை வேக கோபம்.

'யானையைக் கொண்டாங்க
குதுரையைக் கொண்டாங்க
நானும் ஊர்கோலம் போக
வாழை தென்னை மாவிலை எல்லாம்
தொங்கணும் தோரணமாக

ஏண்டா டேய்! ராணியைக் கூப்பிடு (ரஜினியின் கட்டுக்கடங்காத காட்டாற்று வெள்ளப் பாய்ச்சலை முகத்தில் கண்டு மிரளலாம். கண்கள் கோர தாண்டவம் ஆடும்)
அவளோட சேடியைக் கூப்பிடு
ஏ மதுரா ராஜ்ஜியம் என்னது
உனக்கொரு பாதியைக் கொடுக்குறண்டா'

'எனக்கு ஒருத்தன் என்ன வேலை தருவது? மதுரா ராஜ்யத்துக்கே நான் சொந்தக்காரன். அதில் உனக்கு ஒரு பாதியைக் கொடுக்கிறேன்'.

கர்ணனாக காளி இதை கொடையாகத் தரவில்லை. யாரும் கேட்காமலேயே அவன் ராஜ்யத்தை பங்கு போட்டுத் தர அவன் தயார். இது அவன் அசராத அயர்ந்த மனநிலை. ஜனரஞ்சக வாழ்வின் பிரதிநிதிகளின் சாதராண குணத்தைத்தான் காளி இப்பாடலில் பிரதிபலிக்கிறான் சற்று உயர்நிலை கோபத்தோடு. எல்லோருக்கும் இருக்கும் அந்த எதிர் வேகம் இவனிடம் கொஞ்சம் ஜாஸ்தி.

பொன்னா பூப்பூத்து வைரம் காயாக
காய்க்கும் என்னோட தோட்டம்
மாசம் மூணு போகம் விளையும்
லாபம் மேலும் கூடும்
கையிருக்கு உழைச்சிக் காட்டுறன் (கை போகப் போவது தெரியாமல் நம்பிக்'கை' யோடு)
மனசிருக்கு பொழச்சிப் பாக்குறேன்
ஏ போனா போகுது வேலை
உனக்கொரு வேலையக் கொடுக்குறண்டா

அத்தனை வரிகளும் உடன் ஆடுபவர்களுக்கோ, ஏனையோர்களுக்கோ காளி சொல்வதல்ல. அத்தனையையும் அவன் தன் உயர் அதிகாரி எஞ்சினியரை மனதில் வைத்தே வஞ்சம் தீர்க்கப் பாடும் பாடல் புலம்பல். 'நீ என்னை என்ன செய்தாலும் அது துரும்பளவு கூட என்னை பாதிக்காது' என்ற ரீதியிலேயே பாடல் முழுதும் அர்த்தம். அவன் ஆத்திரம் முழுதும் அதிகாரி மீதே. அவன் தன்னை வேலை நீக்கம் செய்தானே என்ற வெறி குடியில் இன்னும் குதி போட்டு கும்மாளமிடுகிறது.

மென்மையான பாடல்களுக்கும், குழைவான பாடல்களுக்கு மட்டுமே பாலா என்றிருந்த நிலைமையை மாற்றி ஆண்மையின் ஆவேச ஆணிவேர் பாலாவின் குரலில் ஊடுருவி கம்பீரத்தை கர்வமாய் அந்தக் குரலில் நமக்களித்த அதிகப்பட்ச ஃபாரன்ஹீட் பாடல். 'வீரப் பாடல்களுக்கு விவரம் பத்தாது' என்போரின் வாயை இந்த ஒரே பாடலில் அடைத்து ஆச்சரியப்பட வைத்தார் பாலா.

ராஜா! சொல்லவும் வேண்டுமோ!

மலை ஜாதிப் பெண்களின் அந்த கோரஸை இன்றுவரை யாராலும் மறக்க முடியுமா? அல்லது ரஜினி ஆடும் கோர தாண்டவத்தைத்தான் மறக்க முடியுமா? ஜெயக்குமாரியும், மற்ற நடன மாதர்களும் ஒருவருக்கொருவர் வரிசையாக கைகளால் மற்றவர் இடுப்பைக் கோர்த்துக் கொண்டு முன்னாலும் பின்னாலும் ஊஞ்சல் போல அசைந்தாடுவது அழகு. அந்த இனம் புரியாத வார்த்தைகள் நிறைந்த கோரஸ் 'லேலேலே' வா அல்லது 'ரெரெரெ' வா என்று பட்டிமன்றமே நடந்து நான் கேட்டதுண்டு. அழகான காட்டுவாசிகள் தரப்பு தாளங்கள். கீழே கோல் போட்டு தாண்டித் தாண்டி ஆடும்போது கொடுக்கும் இசை இங்கே அது இல்லாமலேயே ஒலிக்கும். இடையிசை முடிந்ததும் மறுபடி அந்த மலைஜாதி கோரஸ் தேனாய் காதில் நுழையும். நாட்டுப்புறப் பாடல் மெட்டையும், மலைஜாதிப் பாடல் மெட்டையும் இணைத்து தாரை, தப்பட்டை, முரசுகளின் இணைந்த கலவை ஒலியால் ஒய்யார இசை தந்த தொடரின் நாயகரை பாராட்ட வார்த்தைகளைத்தான் தேட வேண்டியுள்ளது. நாயகனின் ஆங்காரத்தில் இசையும், குரலும், வரிகளும், நடிப்பும் சம அளவில் பங்கு போட்டுக் கொள்கின்றன.

சிச்சுவேஷனுக்குத் தகுந்த பாடல். தன் மனதில் உள்ளதையெல்லாம் கொட்டிவிடும் தன்மை. எவருக்கும் அடங்கா கொதி நிலை. எவரையும் மதியா மதி இழந்த நிலை.

சில இடங்களில் ரஜினி அக்கம் பக்கதிலுள்ள எவரையும் பார்க்காமல், கவனிக்காமல் மேளம் கொட்டி, தன்னையே முன்னிலைப்படுத்தி, தலையைச் சாய்த்து, வெறியுடன் குனிந்தபடி ஆடுவது இந்தப் பாடலில் அவர் பங்கை எங்கோ தூக்கிக் கொண்டு சென்று விடுகிறது என்பது என் கருத்து.

ரஜினியின் ஆங்காரப் பாடல்களில் ஆகாயம் தொடுவது.

அடுத்து 'அடேய் நண்பா! உண்மை சொல்வேன்'. இது என் வரிசை. உங்களுடையதும் அதுதானே!


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=BHgUwlvTFa8

rajeshkrv
5th January 2015, 09:24 AM
Vasu ji

mullum malarum writeup is amazing.. more than what mahendran showed us in screen, you shown more depth in writing
keep it up. kudos

vasudevan31355
5th January 2015, 10:26 AM
'இளையராஜா என்றும் இனிய ராஜா' (தொடர் 20)

'முள்ளும் மலரும்' பாடல்கள்... தொடர்கிறது...

'நித்தம் நித்தம் நெல்லுச் சோறு'

http://i.ytimg.com/vi/9JQgkQIeUzM/hqdefault.jpg

எல்லோரையும் இம்சைப்படுத்தும் காளியையே இம்சிக்கும் மங்கா. முதலிரவில். கை இழந்த காளிக்கு இழந்த கையே மீண்டது போல துணைவியாகும் மங்கா ஒரு சாப்பாட்டுப் பிரியை என்பது அனைவரும் அறிந்த விஷயம்.

அன்றைய ஆனந்தமான இரவில் காளி ஒரு பேச்சுக்கு மங்காவைப் பாட்டுப் பாட கோரிக்கை வைக்க, மங்கா விடுவாளா? தமிழகத்து சமையல் அனைத்தையும் தன் குரலில் பாடலாக்கி அத்துணை பேரையும் சப்புக் கொட்ட வைத்து விட்டாளே! வேறு வழியில்லாமல் அவள் பாடலைக் கேட்டு அழாத குறையாக காளி தலையில் அடித்துக் கொள்ள, அதைப் பற்றியெல்லாம் கொஞ்சம்கூட கவலை கொள்ளாமல் அவள் சகட்டு மேனிக்கு மூன்று நிமிடப் பாடலில் சப்புக் கொட்டியவாறே சமையல் கலையையே நமக்கு கற்றுத் தந்து விடுகிறாளே!

நித்தம் நித்தம் நெல்லுச் சோறு

https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcSevF2xGfgsEdBtFqrN0W0LLy2F_WpB8 9wUG8gKhTEKnhuLz7St

நெய் மணக்கும் கத்தரிக்கா

http://3.bp.blogspot.com/_ABIR8T9swTc/R9x9JnHOH3I/AAAAAAAAAbU/bdHb9h6ODvo/s400/DSC06039.JPG

நேத்து வச்ச மீன் கொழம்பு

http://www.spiceindiaonline.com/files/images/IMG_1028.preview.jpg

என்ன இழுக்குதைய்யா
நெஞ்சுக்குள்ளே அந்த நெனப்பு
வந்து மயக்குதய்யா

பச்சரிசி சோறு உப்புக் கருவாடு

http://1.bp.blogspot.com/-0skoOqbCyw8/UDEPNppd6ZI/AAAAAAAAFas/FUz2MqlY0QY/s1600/karuvadu+kuzhambu11.JPG

சின்னமனூரு வாய்க்கா சேலு கெண்ட மீனு

குருத்தான மொளக்கீர

http://farm3.static.flickr.com/2782/4325641824_4d3a51f514_m.jpg

வாடாத சிறுகீர
நெனக்கையிலே எனக்கு இப்போ எச்சி ஊறுது
ஸ்....
அள்ளித் தின்ன ஆச வந்து என்ன மீறுது

நித்தம் நித்தம் நெல்லுச் சோறு
நெய் மணக்கும் கத்தரிக்கா
நேத்து வச்ச மீன் கொழம்பு
என்ன இழுக்குதைய்யா
நெஞ்சுக்குள்ளே அந்த நெனப்பு
வந்து மயக்குதய்யா

பாவக்கா கூட்டு பருப்போட சேத்து

http://www.microwaverecipescookbook.com/wp-content/uploads/2012/07/IMG_1373.jpg

பக்குவத்த பாத்து ஆக்கி முடிச்சாச்சு
சிறுகாளான் வறுத்தாச்சு... பதம் பாத்து எடுத்தாச்சு
கேழ்வரகு கூழுக்கது ரொம்பப் பொருத்தமய்யா

http://2.bp.blogspot.com/-vETvfHuKI3c/TdyoDmhqOoI/AAAAAAAABLw/HFMg9ZdhECw/s640/DSC_0059.JPG

தினம் குடிச்சா ஒடம்பு அது ரொம்பப் பெருக்குமய்யா

நித்தம் நித்தம் நெல்லுச் சோறு
நெய் மணக்கும் கத்தரிக்கா
நேத்து வச்ச மீன் கொழம்பு
என்ன இழுக்குதைய்யா
நெஞ்சுக்குள்ளே அந்த நெனப்பு
வந்து மயக்குதய்யா

பழயதுக்கு தோதா புளிச்சிருக்கும் மோரு
https://farm8.staticflickr.com/7345/13617117013_447bc5e029_z_d.jpg

பொட்டுக்கட்ல தேங்கா போட்டரச்ச தொவையலு
http://www.cookatease.com/uploads/PottuKadalaiRoastedBengalGramThuvayal_BBD7/Pottu_Kadalai_Roasted_Bengal_Gram_Thuvayal_3.jpg

சாம்பாரு வெங்காயம் சலிக்காது தின்னாலும்
அதுக்கு எண உலகத்துல இல்லவே இல்ல
அள்ளித் தின்ன எனக்கு அது அலுக்கவே இல்ல

இவ்வளவு நேரம் தனக்குப் பிடித்த சாப்பாட்டு அயிட்டங்களைக் கூறி காளியைப் பதம் பார்த்த மங்கா இறுதியில் தான் காளிக்கு எல்லாவற்றையும் விட வெகு சுவையான 'மேனி மெனு'வை அறுசுவை விருந்தாக படைக்கப் போவதை எவ்வளவு சூசகமாகத் தெரிவிக்கிறாள் பாருங்கள் அவளது பாணியிலேயே.

இத்தனைக்கும் மேலிருக்கு நெஞ்சுக்குள்ள ஆச ஒன்னு
சூசகமாக சொல்லப் போறேன் பொம்பளதாங்க
சூடாக இருக்கறப்போ சாப்பிட வாங்க

அடடா!அருமை! கோவில் மாடு மாதிரி தீனி தின்று ஊரை ஆம்பிளை போல் சுற்றி வந்த மங்காவுக்குள் இருக்கும் நளினமான பெண்மை இப்போது நயமாக வெளிப்படுகிறது காளியே வியந்து போகும் அளவிற்கு. அதுவும் சாப்பாடு சூடாக இருக்கும்போது சுவையாக இருப்பது போல் தான் சூடாக இருப்பதாய் நாசூக்காய் உணர்த்தி தன்னையே சாப்பிட வருமாறு அவள் கோரிக்கை வைத்து அவளுக்குள் ஒளிந்திருக்கும் அந்தரங்கப் பெண்மையை அழகாக, அருவருப்பின்றி, ஆபாசமில்லாமல் வெளிப்படுத்துகிறாள்.

பட்டி தொட்டியெல்லாம் ஹிட்டான அருமையான ஜனரஞ்சகப் பாடல். வெள்ளிக்கிழமைகள் விநாயகர் கோவிலில் வழங்கும் சுண்டலை அனைத்துத் தரப்பினரும் வாங்கி சுவைத்து இன்புறுவதைப் போல லோ கிளாஸ் ஹைகிளாஸ் என்று அனைத்து கிளாஸ்களையும் ரசிக்க வைத்த ராஜாவின் 'ஏ' கிளாஸ் பாடல். பாடல் நெடுக வரும் அந்த 'டிய்யூங்... டிய்யூங்.. டிய்யூ டிய்யூ டிய்யூங்' இசையை லேசில் மறந்து விட முடியாது. பாடலின் முடிவில் ரஜினி 'படாஃபட்'டை இறுகக் கட்டித் தழுவ, ராஜா தரும் சிறுக சிறுக பெருகும் அந்த ascending தாள இசை ரகளை.

இந்த மாதிரிப் பாடலை ராட்சஸியை விட்டால் பாட யாரும் கிடையாது. ஆனால் ராஜாவுக்கும், ஈஸ்வரிக்கும் ஆரம்பத்திலிருந்தே டெர்ம் சரியில்லாததால் மிகப் பொருத்தமாக ராஜா வாணி வசம் இந்தப் பாடலை ஒப்படைத்து விட்டார். இன்னொன்று. இந்தப் பாடலை அவரது ஆஸ்தானப் பாடகி ஜானகிக்கும் அவர் அளிக்கவில்லை. ஜானகிக்கு அளித்திருந்தால் நன்றாக இருந்தாலும் விரகதாபம் தூக்கி மேலோங்கியிருக்க வாய்ப்புக்கள் அதிகம். வாணியிடம் வந்ததால் பண்பாட்டு வாசனை மாறாமல், எல்லை மீறாமல் பாடல் மிக அருமையாகப் பரிமளித்தது. இந்த சாப்பாட்டு சமாச்சாரமெல்லாம் ராஜா 'அன்னக்கிகிளி'யிலேயே புகுந்து மேயந்து விட்டார். இசை அதைவிட இதில் கம்மிதான். ஆனால் மண்வாசனை மாறாமல் அமர்க்களப் படுத்தியிருபார்.

'படாஃபட்' மிகப் பொருத்தம். கிராமத்துக்கே உரித்தான அந்த பட்டுப் புடவை செல்க்ஷனும் ஏ.ஒன். சாப்பாட்டு வகைகளை ரசித்து பாடுவது நாமே ருசிக்கக் கூடிய அளவிற்க்கு டாப். ரஜினி அனுபவிக்கும் சித்ரவதைகளும் ரசம்.

kalnayak
5th January 2015, 10:54 AM
வாசு,
ஒரு வாரத்திற்கும் மேலாக முள்ளும் மலரும் படத்திற்காக தூள் கிளப்பிக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் கடைசிப்பதிவு...?

பாவி (செல்லமாகத்தான்) . இப்படி நாக்கில் எச்சில் ஊறும் படங்களைப் போட்டு எல்லோரையும் படுத்த வேண்டுமா? வேண்டும். வேண்டும்!!!