PDA

View Full Version : மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம



Pages : 1 2 3 4 5 6 7 [8] 9 10 11 12 13 14 15 16 17

chinnakkannan
3rd September 2014, 12:24 PM
சுகன்யா ஸ்வர்ண முகியின் தங்கை தானே..

இ.ஸ்பெஷல் வழக்கம் போல நன்று வாசு சார்..தாங்க்ஸ்.. வீ.போ.பா..

vasudevan31355
3rd September 2014, 12:38 PM
சிறையில் பூத்த சின்ன மலர்கள்

பானுவும், அவர் தங்கை நிஷாந்தியும் நடித்தது. தயாரிப்பு எம். கோபி. இயக்கம் அமிர்தம்.

http://www.inbaminge.com/t/s/Siraiyil%20Pootha%20Chinna%20Malar/folder.jpg

gkrishna
3rd September 2014, 12:44 PM
கட்டளை படமும் தயாரிப்பு m .கோபி
லியாகத் அலி கான் இயக்கம்

gkrishna
3rd September 2014, 12:46 PM
காவிய தலைவன்
விஜயகாந்த் பானுப்ரிய
ஆபாவாணன் தயாரிப்பு

mr_karthik
3rd September 2014, 12:48 PM
பானுப்ப்ரியா தயாரித்த சொந்த ப்படம் காவியத் தலைவன்..ஆங்க்.. மென்மையாய் நடிக்க முயன்றிருந்த படம்..படம் தோல்வி என நினைக்கிறேன்..கட்டளை பற்றித் தெரியாது..

பானுப்ரியா தயாரித்த இன்னொரு படம் 'சிறையில் பூத்த சின்ன மலர்'. இப்படத்தில் பானுப்ரியாவுடன் அவரது தங்கை சாந்திப்ரியா என்கிற நிஷாந்தியும் நடித்திருந்தார். இந்தப்படமும் ஓடியதாகத் தெரியவில்லை.

தனக்குப்பொருத்தமான ஜோடியாக (படத்தில்தான்) இவரை வைத்திருந்த சத்யராஜ், பின்னர் சுகன்யா ஜோடி கிடைத்ததும் பானுவைக் கழற்றிவிட்டார்..

gkrishna
3rd September 2014, 12:50 PM
http://wordoflifeindia.org/images/c15.jpghttp://wordoflifeindia.org/images/c57.jpg

ஸ்வர்ண முஹி உஷா ராஜேந்தர் தங்கை
அவா ஆத்தில் கடைசி பெண் என்று நினைவு

gkrishna
3rd September 2014, 12:56 PM
பானுப்ரியா தயாரித்த இன்னொரு படம் 'சிறையில் பூத்த சின்ன மலர்'. இப்படத்தில் பானுப்ரியாவுடன் அவரது தங்கை சாந்திப்ரியா என்கிற நிஷாந்தியும் நடித்திருந்தார். இந்தப்படமும் ஓடியதாகத் தெரியவில்லை.

தனக்குப்பொருத்தமான ஜோடியாக (படத்தில்தான்) இவரை வைத்திருந்த சத்யராஜ், பின்னர் சுகன்யா ஜோடி கிடைத்ததும் பானுவைக் கழற்றிவிட்டார்..

உண்மை கார்த்திக் சார்
பானு பிரியா சத்யராஜ் உடன் 'தெற்கு தெரு மச்சான்,பிரம்ஹா,கட்டளை,பங்காளி,புது மனிதன் போன்ற படங்களில் நடித்தார் . பிறகு சுகன்யா உடன் ஐக்கியமாகி உடன்பிறப்பு,வால்ட்டர் வெற்றிவேல்,திருமதி பழனிசாமி,வண்டிசோலை சின்ராசு ,சேனாதிபதி போன்ற படங்களில் நடித்தார்

gkrishna
3rd September 2014, 01:01 PM
http://wordoflifeindia.org/images/c2.jpg

வாசு சார்
இந்த போட்டோவில் ச்வர்ணமுஹி உடன் இருப்பது நம்ம அரங்கேற்றம் பிரமீளா தானே ?

vasudevan31355
3rd September 2014, 01:04 PM
கிருஷ்ணா சார்,

நம்ம பிரமீளாவேதான் :)

mr_karthik
3rd September 2014, 01:07 PM
டியர் கிருஷ்ணாஜி,

காட்சிப்பிழை இதழில் திரு முரளிக்கண்ணன் அவர்களின் 'நிலைக்கமுடியாத நாயகர்கள்' என்ற கட்டுரையை மீள்பதிவு செய்திருந்தீர்கள்.

அதில் பாண்டியன், சுரேஷ் போன்ற நடிகர்கள் நிலைபெறமுடியாமல் போனதாக அவர் ஆதங்கப்பட்டிருப்பது ஆச்சரியமாக இருந்தது. என்னுடைய மிகப்பெரிய ஆச்சரியம் சுதாகர், பாண்டியன், சுரேஷ், பட்டாளத்து விஜயன் போன்ற நடிகர்கள் எல்லாம் எப்படி இத்தனை படங்களில் கதாநாயகர்களாக நடித்தார்கள் என்பதுதான். அப்போதிருந்த கதாநாயகப் பஞ்சமே அவர்களை இந்த அளவுக்காவது நிலைக்க வைத்தது. இல்லையேல் அவர்களுக்கெல்லாம் மூன்றாவது படமே வந்திருக்க வாய்ப்பில்லை. முகபாவம் என்றால் அது எந்தக்கடையில் விற்கிறது என்று கேட்கும் மரக்கட்டை முகத்தினர்.

இன்றைய ஆர்யாக்களோடும், அதர்வாக்களோடும் ஒப்பிடுகையில் மேற்சொன்னவர்களெல்லாம் ஒண்ணுமேயில்லை..

vasudevan31355
3rd September 2014, 01:08 PM
http://media.apunkachoice.com/image/Upload-Image/Image/thmbimage-6-10848.jpg

அடுத்த ரவுண்டில் பானுபிரியா சத்யராஜுடன் 'ஜோர்' படத்தில் நடித்தார் கிட்டத்தட்ட ஜோடி போலவே.

gkrishna
3rd September 2014, 01:11 PM
கார்த்திக் சார்
நீங்கள் சொல்வது போல் இந்த கட்டுரையில் அதை தான் கட்டுரை யாளரும் குறிப்பிட்டு உள்ளார்
தனி திறமை எதுவும் இல்லாதவர்கள் தமிழ் திரை உலகில் நீண்ட நாள் காலம் கழிக்க முடியாது

gkrishna
3rd September 2014, 01:57 PM
வாசு சார்
நீங்கள் பதிவு இட்ட சர்வாதிகாரி பாடல் சில நினைவு அலைகளை மீட்டி விட்டது . 1977 நெருக்கடி நிலை கால கட்டத்தில் சென்சார் என்று சொல்லப்படும் தணிக்கை துறை இந்திய அரசுக்கு எதிராக எழுந்த கிளர்ச்சிகளை பல்வேறு வித நடவடிக்கைகளின் மூலமாக ஒடுக்கி வந்தது . அதில் ஒன்று பத்திரிகை தணிக்கை .அதில் பெரிதும் பாதிக்கப்பட்டது ஆங்கிலத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாள் இதழும் தமிழ் இல் துக்ளக் வார சஞ்சிகையும் தான் . அப்போது வழக்கமாக ஒரு மாதத்திற்கு துக்ளக் இரண்டு முறை வரும் என்று நினைவு அதாவது 15 தினங்களுக்கு ஒரு முறை வெளி வரும் (fortnight). அதில் ஒரு இதழில் எல்லா பக்கங்களும் தணிக்கை செய்யப்பட்டு இரண்டு பக்கங்கள் தவிர மீதி எல்லாம் வெறும் வெள்ளை பேப்பர் ஆக வெளி வந்தது. அந்த இரண்டு பக்கங்களிலும் இந்த சர்வாதிகாரி திரை படத்தின் விமர்சனம் (அதாவது திரை படம் வெளியாகி 25 ஆண்டுகள் கழித்து) வெளியிட்டு இருந்தது. தணிக்கை துறை அதை ஒன்றும் செய்ய முடியவில்லை
சோவின் சாதுர்யத்தை எல்லோரும் வியந்து பாராட்டி இருந்தனர்

gkrishna
3rd September 2014, 02:11 PM
தமிழ்த் திரைப்பட வரலாறு - அரிய தகவல்கள்!

தமிழ்த் திரைப்பட வரலாறு குறித்து எண்ணற்றோர் நூல்களை எழுதி உள்ளனர். அவற்றுள் குறிப்பிடத்தக்கது, ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்கள் எழுதிய ‘தமிழ்த் திரைப்பட வரலாறு’ என்ற நூல்தான். தமிழ் சினிமா குறித்த ஒட்டுமொத்தத் தகவல் திரட்டாகத் திகழ்கிறது. இந்த நூலை வெளியிடுவதற்கு, தமிழக அரசு ஐந்து இலட்சம் ரூபாய் நிதி உதவி அளித்தது.

அறந்தை நாராயணன் அவர்கள் எழுதிய ‘சினிமா வரலாறு’ என்ற புத்தகத்தை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்டு உள்ளது.

ராண்டார்கை அவர்கள், இந்து ஆங்கில நாளிதழில் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். அவற்றைத் தொகுத்து பல நூல்களையும் வெளியிட்டு உள்ளார்.

பிரபல வரலாற்று ஆய்வாளர் தியோடர் பாஸ்கரன், பல நூல்களை எழுதி உள்ளார்.

தினத்தந்தி நாளிதழ் வெளியிட்ட வரலாற்றுச் சுவடுகள் தொடரில், சண்முகநாதன் அவர்கள் தமிழ்த் திரைப்பட வரலாறு குறித்து, பேசும்படம் இதழ் வந்த காலத்தில் இருந்து நிறையச் செய்திகளை எழுதினார். பேசும்படம் இதழில் பணி ஆற்றிய ஜெ.வி. என்ற புகைப்படக் கலைஞர், அந்த இதழில் வெளிவந்த படங்கள் அனைத்தையும் தொகுத்துத் தம்மிடம் வைத்து உள்ளார்.

சினிமா எக்ஸ்பிரஸ் ராமமூர்த்தி அனுபவம் வாய்ந்தவர். தமிழ் சினிமா குறித்து, பல நூல்களை எழுதி உள்ளார். தற்போது, ஜெயா தொலைக்காட்சியில், ‘தேன் கிண்ணம்’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக் கொண்டு இருக்கின்றார்.

சிவன் என்பவர், சினிமா வரலாறு என்று ஒரு நூலை எழுதினார். கற்பகம் புத்தகாலயம், கவிதா பதிப்பகம் வெளியீடுகளாக வெளியிட்டு இருக்கின்றது.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள், நான் ஏன் பிறந்தேன்? என்ற தலைப்பில் தமது வாழ்க்கை வரலாறை எழுதினார். அவரது அண்ணன் எம்.ஜி.சக்கரபாணி அவர்கள், எம்.ஜி.ஆர். முதல்வரானபோது, ராணி வார இதழில், ‘என் தம்பி எம்.ஜி.ஆர்.’ என்ற தொடரை எழுதினார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் வாழ்க்கை வரலாறை, பேராசிரியர் நாராயணசாமி எழுதி, ஒரு புத்தகமாக வெளிவந்து உள்ளது. தாய் வார இதழில், சிவாஜிகணேசனைப் பற்றி, பேராசிரியர் ராமு என்பவர் ஒரு தொடர் எழுதினார்.

சந்தமாமா பப்ளிகேசன்ஸ் சார்பில், ‘பொம்மை’ என்ற சினிமா இதழ் நீண்ட காலம் வெளிவந்தது. அதில் பணிபுரிந்த வீரபத்திரன் என்பவர் பல நூல்களை எழுதி உள்ளார். சிவாஜியின் நெருங்கிய நண்பர். அதே இதழில் பணிபுரிந்த வேம்பட்டு கிருஷ்ணன், தமிழ் சினிமா குறித்து நிறைய எழுதி உள்ளார். சினிமா எக்ஸ்பிரஸ் இதழில், தமிழகத்தில் உள்ள திரை அரங்குகள் குறித்த தகவல்களைத் தொகுத்து ஒருவர் எழுதினார்.

எம்.ஜி.ஆரும், சிவாஜியும் இரு துருவங்களாகத் தமிழ்த் திரையில் கோலோச்சிக் கொண்டு இருந்த காலத்தில், எம்.ஜி.ஆருக்காக திரை உலகம் என்ற இதழை துரைராஜ் என்பவரும், மதி ஒளி என்ற ஏட்டை சண்முகம் என்பவரும் நடத்தி வந்தனர்.

ஜூனியர் விகடன் செய்தியாளர் திருவாரூர் குணா, சிவாஜி முதல் சிவாஜி வரை என்ற தொடரை, ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படம் வெளியாகும்போது எழுதினார்.

ஏ.வி.எம். மக்கள் தொடர்பாளர், பெரு. துளசி பழனிவேல், சினிமா கதை விவாதங்களில் கலந்து கொள்பவர். தமிழ் சினிமா குறித்து, பல நூல்களை எழுதி உள்ளார்.

நடிகர் சோ அவர்கள், தமது திரைப்பட அனுபவங்களை, துக்ளக் வார இதழில் எழுதி உள்ளார்.

இயக்குநர் சித்ரா இலட்சுமணன், சினிமா வரலாறு குறித்து ஒரு நூலை எழுதி உள்ளார். தமிழ்த் திரைப்பட இசை அமைப்பாளர்களைப் பற்றிய தகவல்கள், படங்களைத் தொகுத்து, வாமனன் என்பவர் இரண்டு தொகுதிகளாக ஒரு நூலை எழுதி உள்ளார்.

மக்கள் தொடர்பாளர் சுரா என்பவர், மலையாளத்தில் இருந்து வைக்கம் பசீர் அவர்களுடைய நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்து எழுதி உள்ளார். உலகப் புகழ் பெற்ற ஓவியர் வான்கா அவர்களைப் பற்றி, தமிழில் முதலில் எழுதியவர் அவரே. தமிழ்த் திரைப்படங்கள் குறித்து நிறைய எழுதி உள்ளார்.

இயக்குநர் மகேந்திரன், ‘சினிமாவும், நானும்’ என்று புத்தகம் எழுதி உள்ளார். விடுதலைப்புலிகளின் அழைப்பின்பேரில், தமிழ் ஈழத்துக்குச் சென்று திரைப்படப் பயிற்சி அளித்தபோது, ‘நடிப்பு என்பது..., திரைக்கதை என்பது...’ என இரண்டு நூல்களை எழுதி உள்ளார். எம்.ஜி.ஆரைப் பற்றியும் ஒரு நூல் எழுதி உள்ளார்.

‘வாலி 1000’ என்ற தலைப்பில், அவரது ஆயிரம் பாடல்களைத் தொகுத்து வெளியிட்டு உள்ளனர். ஏ.வி.எம். அவர்களைப் பற்றி, இயக்குநர் எஸ்.பி. முத்துராமன், எழுத்தாளர் ராணி மைந்தன் உள்ளிட்ட பலர் எழுதி உள்ளனர். சக்திவேல் என்ற செய்தியாளர் எழுதிய பல நூல்களை, நக்கீரன் பதிப்பகம் வெளியிட்டு உள்ளது.

‘உலக சினிமா’ என்ற தலைப்பில் எழுத்தாளர் எஸ். இராமகிருஷ்ணன் ஒரு புத்தகம் எழுதி உள்ளார்.

திரைப்பட புகைப்படக் கலைஞர் ஸ்டில்ஸ் ரவி, தாம் எடுத்த படங்கள் குறித்து, ஆனந்த விகடனில், ஒரு தொடர் எழுதினார்.

குமுதம் வார இதழில் பணிபுரிந்து வந்த மேஜர் தாசன், ஒரு புத்தகம் எழுதி உள்ளார். நிறையப் படங்கள் வைத்து உள்ளார். ஜெ. பிஸ்மி என்ற எழுத்தாளர், ‘சினிமாவில் சேருவது எப்படி?’ என்று, சினிமா எக்ஸ்பிரஸ் வார இதழில் ஒரு தொடர் எழுதினார்.

குமுதம், ராணி போன்ற பல இதழ்களில் பணி ஆற்றிய சபீதா ஜோசப், ராணி வார இதழில் விஜயகாந்த், சிவகுமார் வாழ்க்கை வரலாறு தொடர்களை எழுதினார். மறைந்த எம்.பி.மணி என்பவர், தினமலர் வார இதழில் நிறைய தொடர்கள் எழுதினார்.

‘இயக்குநர்கள் கே. சங்கர் முதல் ஷங்கர் வரை’ என்ற ஒரு நூலை, தமிழ்மகன் என்பவர் ஒரு தொடராக எழுதி உள்ளார். தினமணி, குமுதம், தினமணி கதிர், வண்ணத்திரை, குங்குமம் போன்ற பல ஏடுகளில் நிறைய கட்டுரைகள் எழுதி உள்ளார்.

சிவகங்கை குமரன்தாஸ், தமிழ்த் திரையின் நிழல் அரசியலும், நிஜ அரசியலும் என்ற புத்தகத்தை எழுதி உள்ளார்.

தினமலர் வார இதழில், எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பாளர் இராமகிருஷ்ணன், இதயக்கனி விஜயன் ஆகியோர் எழுதினர். டி.எஸ்.ஆர். சுபாஷ் (மறைந்த பத்திரிகையாளர் ரவீந்திரதாஸ் மகன்) பாக்யா வார இதழில், பல ஆண்டுகளாக எழுதி வருகிறார்.

பல பதிப்பகங்கள், சினிமா குறித்த புத்தகங்களை வெளியிட்டு உள்ளனர்.

வாழ்க்கை வரலாறு நூல்கள் சில:

ராஜபாட்டை - நடிகர் சிவகுமார் (அல்லயன்ஸ்)

பால் நிலா பாதை - இளையராஜா (அரும்பு மற்றும் குமுதம் வெளியீடு)

இவன்தான் பாலா - பாலா (விகடன் பிரசுரம்)

டூரிங் டாக்கீஸ் - நடிகர் சேரன் (விகடன் பிரசுரம்)

சுட்டாச்சு சுட்டாச்சு - சுதாங்கன் (தினமணி கதிர் தொடர்)

எம். ஆர். ராதா வாழ்வியல் சிந்தனைகள் - விந்தன் (தோழமை பதிப்பகம்)

தமிழ் சினிமா வரலாறு - இராஜேந்திரன் (செம்புலம் வெளியீடு)

கலைவாணர் என்.எஸ்.கே. அவர்களைப் பற்றி, தமிழ் அறிஞர்கள் எழுதிய கருத்துகளை எல்லாம் தொகுத்து, ‘கலைவாணர்’ என்ற தலைப்பிலும், ஹாலிவுட்டின் சிறந்த படங்கள் குறித்த விமர்சனங்களைத் தொகுத்து, குருதியில் படிந்த மானுடம் என்ற புத்தகத்தையும், தோழமை வெளியிட்டு உள்ளது.

தேவிகாபுரத்தில் நண்ப்ர் மூர்த்தி என்பவர் கடந்த 40 ஆண்டுகளாக 12 மொழிகளில் திரைப்படங்கள் செய்தித்தாளில் வெளியான தேதி முதல் அப்படம் கடைசியாக ஓடிய நாள் முதல் செய்தித்தாள் துணுக்குகளை சேகரிதது வைத்துள்ளார். இதுவரை சுமார் 40000 செய்தித்தாள் துணுக்குகளை சேகரித்து வைத்துள்ளார். திரைத்துறை பற்றிய ஒருகலைக்களஞசியம ாக விளங்குகிறார். இவர் இவ்வாறு சேகரித்து வைத்து இருப்பது வெகு சிலருக்கு மட்டுமே தெரியும்.

திருநெல்வேலியைக ் களமாகக் கொண்டு/ ஒரு ரசிகனின் பார்வையில் திரைப்பட அனுபவங்களைச் சுவையாகக் கூறி உள்ளார் கவிஞர் கலாப்ரியா.
தமிழ் திரைப்பட வரலாறு குறித்து அறிய விழைவோர் தவறாமல் படிக்க வேண்டிய நூல்.

Thanks to Keetru.com

Richardsof
3rd September 2014, 02:41 PM
42 ஆண்டுகளுக்கு முன் வந்த இந்தி தழுவல் படம் . ''அவள் ''
http://i57.tinypic.com/qxrjoo.jpg
வெண்ணிற ஆடை நிர்மலா - சசிகுமார் - ஸ்ரீகாந்த் - ஏ .வி .எம் . ராஜன் ஆகியோரின் நடிப்பில் வந்த
சிறந்த படம் . நிர்மலாவின் பரிதாப முகம் - நடிப்பில் கொடி கட்டினார் . எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் .1972ல் வெளிவந்த சிறந்த படங்களில் ''அவள் '' மறக்க முடியாத படம் .
http://youtu.be/XvbnNnkjGnQ

chinnakkannan
3rd September 2014, 02:58 PM
கிருஷ்ணா சார்..புத்தகங்கள் பற்றிய தகவல்களுக்கு நன்றி..

என் நினைவுக்கு வருபவை..

எனது நாடக வாழ்க்கை - ஒளவை டி.கே ஷண்முகம் - கல்லூரிப் பருவத்தில் படித்ததாக நினைவு
சிவகுமார் டயரி - புகைப்படங்களுடன் வழவழப்பான காகிதத்தில் - கொஞ்சம் ராஜபாட்டையின் ரிபீட்டாக வரும்

நாகேஷ் கதை - நாகேஷிடம் கேட்டு சந்திர மெள்லி எழுதியது நன்றாக இருக்கும்
எனது கலைப்பயணம் - வி.கே ராமசாமி - நாடக அனுபவங்கள் மட்டும் - நன்றாக இருக்கும்
ஆனால் கல்கியில் சினிமா அனுபவங்களையும் வைத்து எழுதியிருந்தார்.. அழகான கதை திரைக்கதை எழுதுபவர் என்று அதைப் படித்தாலே விளங்கும்..
எம்.என். நம்பியாரும் சுயசரிதை எழுதியதாய் நினைவு..கல்கியில்..

சோவின் அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள் -அ வர் சந்தித்தவர்களைப் பற்றியது துக்ளக்கில் வந்ததாம்.. பட் புத்தகமாக நான் படித்திருக்கிறேன்.. ஒ.சா.மா.அசா என கு்முதத்தில் சமீபத்தில் நிறைவு பெற்ற்து..

அவன் - ரா.கி.ர தனது சினிமா அனுபவத்தையும் ஒரு அலசு அலசியிருப்பார்..

நான் பேச நினைப்பதெல்லாம் - ந.தி - இரண்டு பாகம் தான் படித்திருக்கிறேன்..மூன்றாவதுவந்ததா தெரியாது..

உலகம் சுற்றும் வாலிபன் அனுபவங்கள் - ஒருவர் எழுதியிருக்கிறார் அவர் பெயர் மறந்து விட்டது..அறந்தை நாராயணனா..

கோடம்பாக்கத்தில் அறுபது ஆண்டுகள் - ஆரூர் தாஸ்

சினிமா வாழ்க்கையோ என்னவோ தலைப்பு நினைவில்லை - நாகி ரெட்டியார்..எழுதியது..

ஜெமினியின் ஆட்டோ பயாக்ரஃபியை டிவிடியாக டாக்டர் கமலா செல்வராஜ் வெளியிட்டிருக்கிறார்.. நன்றாக இருக்கும்..அதை ப் பார்த்த பிறகு அதுவரை மனதில் சாதாரணமாக நினைத்திருந்த ஜெமினி விஸ்வரூபம் எடுத்தது நிஜம்..

chinnakkannan
3rd September 2014, 03:10 PM
//பிறகு சுகன்யா உடன் ஐக்கியமாகி உடன்பிறப்பு,// கிருஷ்ணா ஜி..சிரிக்க வைக்கிறீர்களே.. ஸ்வர்ணமுகி உஷாராஜேந்தரின் தங்கை என்ற தகவலுக்கு நன்றி..

கார்த்திக் சார்.. அந்தக் காலத்தில் சில பேருக்கெல்லாம் பயங்கர லக்.. அதில் வருபவர்கள் மைக் மோகன், ராமராஜன்,ஆனந்தராஜ்..ம்ம்..இ.கா.ப ஹீரோஸ் பத்தி நான் பேசமாட்டேன் !:) விஜயன் வயதான பிறகுகொஞ்சம் ஓ.கே படங்கள் - மீன்ஸ் குணசித்ர வேடங்களுக்கு ஓ.கே..உதா..ஆகஸ்ட் ஒன் அதில் செட்டியார் வேடம், ரன்னில் வில்லன் உதவியாள் என..

chinnakkannan
3rd September 2014, 03:15 PM
தங்கை சாந்திப்ரியா என்கிற நிஷாந்தியும் // அஞ்சலியில் இரவு நிலவில் வருபவர் தானே அவர்..

சுரேஷ்,சுதாகர் காலகட்டத்திய கதானாயகிகளில் தன்னை இம்ப்ரூவ் செய்து கொண்டு, சற்றே வயதானதும் தனக்கான களத்தைத் தேர்ந்தெடுத்து (டிவி) இன்றும் நன்கு நடித்துவரும் ராதிகா ஒரு இனிய ஆச்சர்யம்.. கிழக்கே போகும் ரயில் முகமும் நடிப்பும் பார்த்துவிட்டு இப்போதைய ஈவன் பசும்பொன்னில் அம்மாவாக ஆச்சர்யப் படுத்தினார்..

gkrishna
3rd September 2014, 03:18 PM
நன்றி வினோத் சார்

உங்கள் ஆவணங்கள் அனைத்தும் அருமை.
ராதா ,தெய்வ குழந்தைகள்,அவள்,பிள்ளையோ பிள்ளை எல்லாமே தங்க ஆவணங்கள்

gkrishna
3rd September 2014, 03:34 PM
சி கே சார்
உண்மையில் ராதிகா ஆச்சர்யம் தான். 1979-80 கால கட்டத்தில் திருநெல்வேலியில் ஒரு விழாவில் சந்தித்த நினைவு . கொஞ்சம் கருப்பாக குண்டாக shape எதுவும் இல்லாமல் ஆனால் சிரித்த முகத்துடன் அப்போதைய ஜீன்ஸ் பெல் பாட்டம் pant மற்றும் 2 அல்லது 3 இன்ச் ஹை ஹீல்ஸ் பக்கத்தில் முகத்தில் எந்த வித முக பாவமும் இல்லாமல் மொக்கை சுதாகர் (பார்த்த உடன் எரிச்சல் இன்றும் அதன் காரணம் புரியவில்லை) .

http://imedia.movies.com.pk/cb/images_celebrities/large/avatar8204.jpg

Richardsof
3rd September 2014, 03:59 PM
1972 ல் வெளி வந்த தமிழ் பட விளம்பர பதிவுகளுக்கு பாராட்டு தெரிவித்த
இனிய நண்பர்கள் திரு வாசு . திரு சின்ன கண்ணன் , திரு கார்த்திக் , திரு கிருஷ்ணா அவர்களுக்குஎன் இனிய நன்றி .

gkrishna
3rd September 2014, 04:28 PM
http://2.bp.blogspot.com/-ls2gk3JOJ0M/Up7e2CIpeEI/AAAAAAAAJ_I/Y-I-JRuNIUg/s1600/1970+Bombay+talkie+(ing)+(video)+01.jpg

பாம்பே டாக்கி என்னும் படம் 1970 ஆம் ஆண்டு வெளியானது,இதன் தயாரிப்பாளர்கள் மெர்சன்ட் ஐவரி நிறுவனத்தார். இவர்கள் தேசம், இனம், மொழி, கடந்து நல்ல சினிமா ,ஆவணப்படங்கள்செய்ய விழைபவர்கள், இது ஆங்கிலம் இந்தி பேசும் மல்டிலிங்குய்ஸ்ட் திரைப்படம், இது அமெரிக்க இயக்குனர் ஜேம்ஸ் ஐவரி இயக்கிய படம், இது இந்தி்ய சினிமாவின் பெருமைக்குரிய ஒளிப்பதிவாளர் சுப்ரதா மித்ராவின் வண்ணப்பட ஒளிப்பதிவை கொண்டிருக்கும் படம், 1970 களின் பாலிவுட் திரைப்படங்கள் கொண்டிருந்த கதை அமைப்பு,க்ளிஷே,பாடல்கள்,ரொமான்ஸ்,க்ளாமர் இத்யாதி மற்றும் ஹாலிவுட் கொண்டிருந்த உயர்ந்த ,அதி ரசனையான போஷான,லக்சுரியான தொழில்நுட்பங்களும் தன்னுள் ஒருங்கே கொண்டிருக்கும் படம். படத்தின் அற்புதமான இசை சங்கர் ஜெய்கிஷன்.

படத்தின் கதை மிகவும் எளிமையானது, பாலிவுட்டின் உச்ச மசாலா நடிகன் விக்ரம் [சஷிகபூர்], அழகிய மனைவி [அப்ர்ணா சென்] கணவனின் அன்புக்கும், கூடலுக்கு ஏங்குபவர், ஆனால் கணவனோ மாதம் 30 நாட்களுமே மசாலா திரைப்படங்களுக்கு கால்ஷீட் தந்து விட்டு,ஓய்வு ஒழிச்சலே இன்றி நடித்து வருகிறான், இது தவிர அட்வான்ஸ் வாங்கிப் போட்டுவிட்டு, கான்ட்ராக்ட் சைன் செய்து விட்டு, நிறைய கால்ஷீட் குளறுபடிகளும் செய்து வருகிறான், இதனால் விக்ரமின் மனைவியை வீட்டுக்கே வந்து மிரட்டும் ஒரு சினிமா ப்ரொட்யூசர் [உத்பல் தத்]அவளின் அழகில் மயங்கி அவளை அடையத் துடிக்கிறார், அதற்கு திட்டம் தீட்டுகிறார்.

பாலிவுட் சினிமாவைப் பற்றி உள்ளது உள்ளபடி ஆராய வரும் இங்கிலாந்து பெண் எழுத்தாளர் லூசியா [ஜெனிஃபர் கெண்டெல்] மீது சஷிகபூருக்கு, கண்டதும் காதல் வருகிறது, லூசியாவுக்கும் அவர் ஏற்கனவே திருமணமானவர் என்பதெல்லாம் மீறி காதல் வருகிறது,நேரம் ,தருணம் கிடைக்கும் போது கூடிக் குலவுகின்றனர் , சக இயக்குனர் ஹரியும் [ஸியா மொஹீதின்] லூசியா மீது ஒருதலைக்காதல் கொள்கிறார், லூசியா அவரிடம் உண்மையான நட்பை மட்டும் பேணினாலும்,ஹரி அதை காதலாக கனிய வைக்க தீவிரமாக முய்ற்சிக்கிறார் , தகுதியில்லாதவரிடம் செலுத்தும் காதல் பற்றி படம் விரிவாக பேசுகிறது, பசித்தவனுக்கு உணவு இல்லை, புசித்து வயிறு நிரம்பியவனுக்கே எல்லாம் கிடைக்கிறது, பல சமயங்களில் உணவும் காதலும் ஒன்று தான் , ஏங்குபவனுக்கு அது கிடைக்காது, இறுதியாக இவர்களின் விபரீத உறவுகள் என்னவாகிறது? என்பதை படம் மிக அழகாக விளக்குகிறது.அப்போதைய பாலிவுட் சினிமாக்கள் கொண்டிருந்த ஒட்டுமொத்த க்ளிஷேக்களின் ஆவண ஆக்கம் தான் இப்படத்தின் கதை.

படத்தில் வரும் டைப் ரைட்டர் மேலே கவர்ச்சிக் கன்னி ஹெலன் மற்றும் குழுவினர் ஆடும் பாடலுக்காக கலை இயக்குனர் பெரிய டைப் ரைட்டரையே செட்டாக போட்டிருந்தார். அப்பாடலை இங்கே பார்க்கலாம்

http://www.youtube.com/embed/s6FNC6nT584

காலம் சென்ற ஜெனிஃபர் கெண்டெல்-இவர் சஷிகபூரின் மனைவியுமாவார். அவரைவிட 6வயது மூத்தவர், இதே போலவே சத்யஜித் ரேவின் மனைவி பிஜோயா தாஸும் ரேவை விட 3 வயது மூத்தவரே, இதன் மூலம் சான்றோர்கள் வயதைப் பார்ப்பதில்லை, உண்மையான காதலை,அறிவை, புத்திசாலித்தனத்தைத் தான் மனைவியாக அமையப்போகும் பெண்ணிடம் எதிபார்க்கின்றனர் என்பது விளங்குகிறது

இதன் பெயர் போடும் காட்சியைப் பாருங்கள் மும்பையின் நிஜமான நகர்ப்புறங்களை சிறிதும் பாசாங்கே இன்றி படம் பிடித்து,அதனுள்ளே நிழல் போன்ற சினிமா படத்தின் ஆயில் பெயிண்ட் கட்டவுட்டுகளை தொழிலாளர்கள் நகரில் நிறுவுவதற்கு சுமந்து செல்வதை அப்படியே படமாக்கியுள்ளார் , இந்த தீம் சத்யஜித் ரேவின் அன்க்ரெடிட் கம்போசிஷன் ஆக்கமாகும்,இதை டார்ஜிலிங் லிமிட்டட் என்னும் படத்திலும் உபயோகித்திருப்பார்கள், அவசியம் இந்த டைட்டில் ஸ்க்ரோலை பாருங்கள். பழைய படங்களில் எத்தனையோ புதுமைகள் புகுத்தப்பட்டு அவை குடத்தினுள் வைக்கப்பட்ட விளக்கு போல இருக்கின்றன, அவற்றை ஒரு சினிமா ஆர்வலர் தேடிப் படித்து வியந்து அதை அழகாக ட்ரியூட் செய்ய வேண்டும், அதை விடுத்து மலினமாக அதை காப்பி அடிக்கக் கூடாது,
பாம்பே டாக்கி படத்தில் சத்யஜித் ரேவின் டைட்டில் தீம் கம்போசிஷன். ஓவியங்கள் திலக்.

www.youtube.com/embed/3wMuYl_-ig8

திரைப்பட மாணவர்கள் ,ஒரு ஸடைலிஷான மேக்கிங்கிற்காக பார்க்க வேண்டிய முக்கியமான படம் இது, 2013ஆம் ஆண்டு இதே பெயரில் ஒரு எஸ் மட்டும் சேர்த்து பாம்பே டாக்கீஸ் என்று நான்கு இந்திய உச்ச இயக்குனர்கள் சேர்ந்து இயக்கிய கலைப்படமும் வெளியானது. நல்ல முயற்சி தான் என்றாலும், அது 1970ஆம் ஆண்டு வெளியான பாம்பே டாக்கி என்னும் படத்தை மறக்கடிக்கும் படி, கூகுளில் தேடினால் 2013 ஆம் ஆண்டு வெளியான படத்தைப் பற்றி தான் செய்திகளை அதிகம் தருகிறது. இதனால் தான் க்ளாசிக்குகளின் பெயர்களை புதிய படங்களில் பயன்படுத்தக் கூடாது

Thanks to Geethapriyan

sss
3rd September 2014, 04:30 PM
இலங்கை இந்திய கூட்டுத் தயாரிப்பில் உருவான இன்னொரு திரைப்படம் "தீ" , எல்லோருக்கும் பிடித்த ஈஸ்வரி பாடிய இந்த பாடல் உங்களுக்கு

https://www.youtube.com/watch?v=EuVlxvd4d3c

இன்னொரு பாடல் வாணி ஜெயராம் பாடியது "இமைகள் " படத்தில் ... ஸ்ரீலங்கா சின்ன ராணி ....

http://www.inbaminge.com/t/i/Imaigal/

gkrishna
3rd September 2014, 04:37 PM
இலங்கை இந்திய கூட்டுத் தயாரிப்பில் உருவான இன்னொரு திரைப்படம் "தீ" , எல்லோருக்கும் பிடித்த ஈஸ்வரி பாடிய இந்த பாடல் உங்களுக்கு

இன்னொரு பாடல் வாணி ஜெயராம் பாடியது "இமைகள் " படத்தில் ... ஸ்ரீலங்கா சின்ன ராணி ....



வணக்கம் sss சார்

இந்தோ இலங்கை கூட்டு தயாரிப்பான தீவார் ஹிந்தி படத்தின் தழுவல் தீ படத்தை நினைவு ஊட்டியதற்கு நன்றி

இமைகள் என்றாலே 'மாட புறாவோ இல்லை manjal நிலாவோ' பாடல் மட்டுமே நினைவிற்கு வரும் . ஆனால் வாணியின் அபூர்வ பாடல் . எல்லோரும் அறியாத பாடல் ஒன்றை பகிர்ந்து உள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி

Richardsof
3rd September 2014, 04:40 PM
வாசு சார்

சர்வதிகாரி - படத்தில் இடம் பெற்ற பாடலின் முழு ஆய்வு பதிவு மிகவும் அருமை .61 ஆண்டுகள் முன்வெளியான ஒரு படத்தின் பாடலை இந்த அளவிற்கு ஆய்வு செய்து பதிவிட உங்கள் ஒருவரால்தான்முடியும் என்பது என் கருத்து . வாழ்த்துக்கள் .நீண்ட இடைவெளிக்கு பின் சர்வதிகாரி படம் பார்க்கதூண்டியுள்ளது .

gkrishna
3rd September 2014, 04:43 PM
டியர் எஸ்வி சார்

சர்வாதிகாரி பற்றிய ஆவணங்கள் இருந்தால் பதிவிடுமாறு அன்புடன் தோழமையுடன் தாழ்மையுடன் பாசத்துடன் கேட்டு கொள்கிறேன்

madhu
3rd September 2014, 05:24 PM
அந்தக் கால திரைப்பட விளம்பரங்களைக் காட்டி தலைக்கு மேல் ஜாங்கிரி சுற்ற வைத்து ஃப்ளாஷ் பேக்குக்கு கொண்டு போகும் எஸ்வீஜிக்கு நன்றி.

திரைப்படத் துறை சம்பந்தமான புத்தகங்கள் பற்றிய ஒரு சுருக்கமான விரிவான அலசலை ஆரம்பித்த கிருஷ்ணாஜிக்கும் நன்றி.

இதை அலசப் போகும் வினோத் ஜி, கார்த்திக் ஜி, வாசு ஜி, கோபால் ஜி, ராகவ் ஜி, சிக்கா ஜீ எல்லோருக்கும் நன்றி.

அதில் கன்னட, மலையாள, தெலுங்கு, ஹிந்தி வாசனை தூவப்போகும் ராஜேஷுக்கும் நன்றி

madhu
3rd September 2014, 05:37 PM
ஆனால் உற்சாக பாலாவின் அந்த தேன் மதுரக் குழைவுக் குரலுக்கு முத்து தூள் கிளப்பியிருக்க வேண்டாமோ! சரியான அசமந்தம். இப்பத்தான் 'துலாபாரம்' படத்தில் 'சிரிப்போ இல்லை நடிப்போ'வில் மனிதர் பிச்சி உதறியிருந்ததை வானாளாவ புகழ்ந்து எழுதியிருந்தேன். இங்கு மனிதர் முகத்தில் கரி பூசி விட்டாரே!


உற்சாக அருவியோ மெல்ல ஓடும் நதியோ... பாலுவின் குரல் ஜாலம் புரியத்தான் செய்யும். நம்ம நவரசத் திலகம்தான் கொஞ்சம் ஒரு மாதிரி இருக்காரு..

அதே படத்தில் இன்னொரு பாட்டு கேளுங்க..

வாழ்க்கை என்றொரு பாடல்.. அதில் ஆளுக்கு ஆள் ஒரு ராகம்

http://youtu.be/mayZ1E1nNBs

gkrishna
3rd September 2014, 05:41 PM
http://pesaamoli.com/images/cine_mag2.jpghttp://pesaamoli.com/images/cine_mag4.jpghttp://pesaamoli.com/images/cine_mag5.jpghttp://pesaamoli.com/images/cine_mag7.jpghttp://pesaamoli.com/images/cine_mag8.jpg

சில சினிமா சஞ்சிகைகள்

madhu
3rd September 2014, 05:45 PM
கங்கா யமுனா காவேரி படம் பற்றி சில காலத்துக்கு முன்னாலே ஒரு பேச்சு இங்கே அடிபட்டது இல்லையோ ?

இப்போ அந்தப் படத்தில் இருந்து எஸ்.பி.பி. வாணி பாடிய "கல்யாணத்துக்கு வாங்க.. குடும்பத்தோட வாங்க"
அப்படின்னு ஒரு பாட்டு சிக்கிச்சு. நண்பர்கள் இதையும் அலசலுக்கு எடுத்துக்குங்க...

http://youtu.be/iWLQWHmtmrk

Richardsof
3rd September 2014, 06:04 PM
Krishna sir
http://i48.tinypic.com/34zyuzn.jpg
http://i50.tinypic.com/smdel2.jpg

Richardsof
3rd September 2014, 06:09 PM
tamil advt not available

http://i57.tinypic.com/n1t94y.jpg

Richardsof
3rd September 2014, 06:11 PM
M. G. Ramachandran, M. N. Nambiar, Chittoor V. Nagaiah, Anjali Devi, V. K. Ramasami, M. Saroja, T. P. Muthulakshmi and S. R. Janaki

During the Golden Age of Hollywood, Larry Parks was a sadly underrated hero who played swashbuckling roles in many period and action-packed movies. He became a victim of the notorious Senator McCarthy’s Hollywood communist “witch hunt” and was blacklisted as a ‘Pinko’.

One of his most successful movies was Gallant Blade (1948), about a dashing, young 17th Century lieutenant of France who rescues his General from a plot to destroy him. This movie had a successful run in Madras, and T. R. Sundaram, the underrated Indian movie mogul of Modern Theatres, adapted it in Tamil as Sarvadhikari. While Sundaram produced and directed it, the screen story was written by noted writer-journalist Ko-dha-sa (Ko. Dha. Shanmugasundaram) who later became the first editor of Dhina Thanthi. The dialogue was penned by writer A. V. P. Asai Thambi, who later dabbled in politics without much success.

An ambitious minister (Nambiar) with designs to topple the puppet king (Pulimoottai Ramaswami) finds the popularity of the commander-in-chief (Nagaiah) and his favourite soldier (MGR) a stumbling block. He sends a young woman (Anjali Devi) to seduce the soldier, but she falls in love with him. After several twists and turns, the evil minister is exposed and felled in an exciting duel with the hero. The commander is chosen as the first president of the kingdom, now a republic!

That was the period when MGR was beginning to make it big in the industry, and had worked with Modern Theatres in Manthirikumari, a major hit and now a cult film.

M. N. Nambiar, who became a star thanks to Sundaram with movies such as Digambara Samiyar and Manthirikumari, played the villain’s role with panache. Anjali Devi was glamorous, and acquitted herself creditably. She had appeared in lead roles in many Modern Theatres movies during that period. Nagaiah played the role of the commander in a dignified way. Modern Theatres had a unique method of making duplicate negatives (known as ‘dupe’ in Indian movie lingo) of interesting Hollywood sequences which were kept in the studio archive for use in their production. Sundaram also had a brilliant way — not followed by anybody else in India at that time — of storing portions of readymade sets such as pillars, staircases, facades and chandeliers which could be bolted with the main sets in a matter of minutes. Thus a lot of time, energy and money could be saved. That was how Sundaram was able to make a hundred movies in languages, including English, within a short period (a little over a quarter century).

(It is a matter of deep regret that the birth centenary of this movie mogul went virtually unnoticed by both the south Indian movie world and the media. Only The Hindu carried a homage article by this writer, who made a TV film on him in 2000 for the National Film Development Corporation, Madras.)

Remembered for the excellent onscreen narration by Sundaram and the impressive performances of Nambiar, MGR, Anjali Devi and Nagaiah.

Subramaniam Ramajayam
3rd September 2014, 06:11 PM
'கலைக்கோயில்' காலத்தால் அழிக்க முடியாத பாடல்கள் இருந்தும் ஏனோ தானோ என்று எடுக்கப்பட்டு பொருத்தமற்ற நடிகர்களின் தேர்வினால் 'கொலைக் கோயில்' ஆனது.

'ஆலயம்' ஆர்ட் மூவி ரேஞ்சுக்கு ஓர் அருமையான படம். மேஜரின் பண்பட்ட நடிப்பு. பாடல்களும் ஓ.கே.

Still kalaikoil worth seeing movie for classic songs and sridher's soft touch.

mr_karthik
3rd September 2014, 06:11 PM
மேலும் சில சினிமா பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு....

ஆசையாக ஒரு அசை - ஜெமினி கணேசன்

நானும் இந்த நூற்றாண்டும் - கவிஞர் வாலி

இதுவரை நான் -கவிஞர் வைரமுத்து

வனவாசம் மற்றும் மனவாசம் -கவிஞர் கண்ணதாசன்

chinnakkannan
3rd September 2014, 06:16 PM
கார்த்திக் சார்..குமுதத்தில் கண்ணதாசன் - கடைசி பக்கம் என்ற பெயரில் சுவாரஸ்யமாக அவ்ர் எழுதியிருக்கிறார்,,

எழுத்தாளர் சாண்டில்யன் திரைப்படத்திற்குக் கதை எழுதிவிட்டுத் தான் சரித்திர நாவல் எழுத வந்தார் தெரியுமோ.. எனது போராட்டங்கள் என்ற நூலில் - என்வீடு என்ற படத்திற்குத் திரைக்கதை எழுதிவிட்டுத் தான் நாவல் பக்கம் வந்ததாக எழுதியிருக்கிறார்..

chinnakkannan
3rd September 2014, 06:18 PM
விஜயகுமாரி கூட இதயம் பேசுகிறதில் எழுதியதாக நினைவு..இப்போதைய சூழலை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது..சிவகார்த்திகேயன் தன் கதையைக் குமுதத்தில் எழுதுவதைப் பார்த்தபின்பு.

chinnakkannan
3rd September 2014, 06:20 PM
இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா - பாலகுமாரன் சிந்துபைரவி மற்றும் கமல் படம் ஒன்று இரண்டுக்கும்வேலை பார்த்தபோது எழுதியது..

சுஜாதாவின் திரைக்கதை எழுதுவது எப்படி படித்திருக்கிறீர்களா.. நல்ல புத்தகம்..அப்புறம் கனவுத்தொழிற்சாலை..சினிமாவின் அவலங்க்ளைச் சற்றே பிரதிபலித்த நாவல்..இன்றும் கூட சில விஷயங்க்ள் பொருந்துகின்றன..

chinnakkannan
3rd September 2014, 06:21 PM
கலைக்கோவில் பற்றிய தகவல்களுக்கு வாசு சாருக்கும், ராமஜெயம் சாருக்கும் நன்றி..தங்க ரதம் வந்தது வீதியிலே.. மறக்கவே முடியாத பாடல்..

Richardsof
3rd September 2014, 06:26 PM
http://i57.tinypic.com/2f07yg8.jpg

http://youtu.be/am3b--fXZUw

madhu
3rd September 2014, 06:33 PM
எஸ்வீ ஜி... அப்படிப் போட்டீங்க அருவாளை...

கலைக்கோயில் படத்தில் அத்தனை முத்தான பாடல்கள் இருந்தும் இன்று வரை காரணம் என்னவென்று அறியாமல் மனசுக்குள் சுற்றி சுற்றி மயங்க வைக்கும் பாட்டு இதுதான். இதில் ஆடியிருக்கும் சாந்தாவோ குரலிலேயே கிறங்கடிக்கும் எல்.ஆர்.ஈஸ்வரியோ .. இல்லாட்டி இது எந்த நாட்டு இசை என்று புரியாதவங்களையும் சொக்க வைக்கும் விஸ்வனாதனின் கைவண்ணமோ...அல்லது எல்லாமோ..
நானறியேன்..

மொத்தத்தில் எத்தனை யுகங்கள் போனாலும் இந்தப் பாட்டின் தாக்கம் மட்டும் குறையவே குறையாது ( of course... அதை ரசிப்போருக்கு : ) )

mr_karthik
3rd September 2014, 06:44 PM
கலைக்கோயில் படத்தில் அத்தனை முத்தான பாடல்கள் இருந்தும் இன்று வரை காரணம் என்னவென்று அறியாமல் மனசுக்குள் சுற்றி சுற்றி மயங்க வைக்கும் பாட்டு இதுதான். இதில் ஆடியிருக்கும் சாந்தாவோ குரலிலேயே கிறங்கடிக்கும் எல்.ஆர்.ஈஸ்வரியோ .. இல்லாட்டி இது எந்த நாட்டு இசை என்று புரியாதவங்களையும் சொக்க வைக்கும் விஸ்வனாதனின் கைவண்ணமோ...அல்லது எல்லாமோ..
நானறியேன்..

ஒருத்தர் அரிவாளை தூக்கிக்கொண்டு ஓடிவரப்போகிறார். சீக்கிரமே மாற்றுங்கள். அதாவது 1966-க்கு முன் வந்ததெல்லாம் ராமமூர்த்தியுடையது. விஸ்வநாதனுக்கு இதைப்பற்றியெல்லாம் எதுவும் தெரியாது.

gkrishna
3rd September 2014, 07:21 PM
அருமை எஸ்வி சார் சர்வதிகாரி மேலான தகவல்களுக்கு

கார்த்திக் சார் சி கே சார்,எஸ்வி சார்,மது சார்

கலைக்கோயில் மணி சத்தம் ஒலிச்சிக்கிட்டே இருக்கு அதாவது ஈஸ்வரியின் பாடல் மற்றும் மெல்லிசை மன்னர்களின் அபார இசை ஞானம்

gkrishna
3rd September 2014, 07:23 PM
கார்த்திக் சார்..cee kay sir

சமீபத்தில் மங்கையர் மலர் மாத இதழில் சரோஜாதேவி,கே ஆர் விஜயா,ஈஸ்வரி போன்றோரின் வாழ்கை அலைகள் தொடர் கட்டுரைகளாக வந்தன

குமுதத்தில் கண்ணதாசன் சந்தித்தேன் சிந்தித்தேன் என்று ஒரு கட்டுரை நினைவு உண்டு
மேலும் தமிழக முதல்வர் மாண்பிமிகு அம்மா அவர்கள் கூட 'மனம் திறந்து பேசுகிறேன் ' ஒரு 38 வாரம் எழுதிய நினைவு. பிறகு நின்று விட்டது

Richardsof
3rd September 2014, 07:35 PM
http://i59.tinypic.com/2d9bprk.jpg

On December 17, 1964 the country saw the birth of its first multi-screen theatre in Madras with the grand opening of Safire cineplex (Blue Diamond and Emerald) screening Cleopatra in deluxe colour. Safire screened English films exclusively, while Blue Diamond fashioned as an ‘art theatre’ presented movies of quality otherwise not shown in the city. Emerald on the other hand ran popular films in Hindi and Tamil.

A fully air-conditioned 70mm picture house, Safire boasted of Bauer U2 projectors fitted to a 62’x 29’ screen, the largest ever in the country, and a seating capacity of an impressive 909 people in cushion chairs. Continuous shows, a feature popular in the West, was a practice the cineplex brought in vogue. This allowed one to walk in and out of the theatre at any time between 1 p.m. and 1.30 a.m. and watch the same film as many times as one wanted to. A hit among young students and couples, many are known to have spent entire days within the cineplex! The canteens, Nine Gems and Navaratna famous for their North Indian snacks were an added attraction drawing in crowds. Hailed as the ‘showpiece of the motion picture exhibition world’, the cineplex changed the experience of consuming cinema in the country.

First Tamil movie-1965

http://i61.tinypic.com/2f0f4v6.jpg

gkrishna
3rd September 2014, 07:38 PM
அருமை எஸ்வி சார் safire திரை அரங்கு பற்றிய ஆரம்ப செய்தி

Richardsof
3rd September 2014, 07:41 PM
அருமை எஸ்வி சார் safire திரை அரங்கு பற்றிய ஆரம்ப செய்தி
http://i61.tinypic.com/30shpci.jpg

gkrishna
3rd September 2014, 08:20 PM
"பாற்கடல் அலை மேலே பாம்பணையின் மேலே பள்ளி கொண்டாய் ரெங்கநாதா......". ராஜாதேசிங்கு படத்தில் எம்.எல்.வி பாடியது.
நாட்டிய பேரொளி பத்மினி படத்தில் பாடி ஆடுவார்.

அதில் சில வரிகள்:
"எங்கிருக்கிறான்? ஹரி எங்கிருக்கிறான்.." என்று ஹிரண்யன் கேட்க, "எங்குமிருப்பான். தூணில் இங்குமிருப்பான் என்று மகன் பிரகலாதன் சொல்ல, நரசிம்மமாகவே தோன்றி பத்மினி ஆடுவார் பாருங்கள்.

ஆவணி ரோகிணியில் அஷ்டமியிலே அர்த்தசாம நேரத்திலே அவதரித்தோனே..ஆயர்பாடி மேவிய யசோதை நந்தபாலா..."என்று கிருஷ்ணன் அவதரிக்க, கோபியரும் சேர்ந்துகொள்ள அருமையான நடனம்.

நடன அமைப்பு யார் என்று நினைவில்லை.

பத்து அவதாரங்களையும் சொல்லும் பாடலின் சந்தங்களை பல ராகங்களில் அமைத்திருப்பார் இசைமேதை ஜி.ராமநாதன். பாட்டைக் கேட்டு என்னென்ன ராகங்கள் என்று குருஜி ராகவேந்தர் அல்லது கோபால் ஜி பிரித்து மேயுமாறு வேண்டி கேட்டு கொள்கிறேன்

http://www.youtube.com/embed/StcPEr1ZqL8

மக்கள் திலகம்,லட்சிய நடிகர்,பானுமதி,பத்மினி,oak தேவர் பெரும் கூட்டம் நடித்த படம் 1960 வெளியீடு

rajeshkrv
4th September 2014, 08:48 AM
வாசு ஜி,

நேற்றே சொல்ல மறந்து விட்டேன்

தம்பி பொண்டாட்டி மிகவும் அற்புதமான படம். ஏனோ மக்கள் அதற்கு அவ்வளவு வரவேற்பு அளிக்கவில்லை என்பது வருத்தமே..

நல்ல கதையம்சமுள்ள ஒரு படம்

நீங்கள் சொன்னது போல் மிகச்சிறந்த படம், கதை என எல்லாமும் கொண்டது. கூட்டுக்குடும்பம் அதிலும் கூட எப்படி ஒருவருக்கொருவர் அன்பாகவும் அதே சமயம் நண்பர்கள் போலவும் நடப்பதாக காட்டியது அருமை
விவேக் சமையல்காரனாக இருந்தாலும் இவர்களுடன் சேர்ந்து டி.வி பார்ப்பது கேலி செய்வது, வயதானாலும் கவிதாவை நாகேஷ் கொஞ்சுவது, தன்னுடன் வேலை செய்யும் பெண்ணையே தன் அண்ணனுக்கு பார்ப்பது, அண்ணியை கொண்டே தனக்கு பெண் பார்க்க சொல்வது என படு யதார்த்தம்.. அன்றைய சூழலில் அது கொஞ்சம் புதியதும் கூட.
இப்படி ஒரு சூழலில் கண்டிப்ப்பான அப்பா(வழக்கறிஞர் ராஜேஷ்), கணவன் பேச்சுக்கு மறு பேச்சு பேசாத அம்மா சுலக்*ஷனா இப்படி ஒரு குடும்பத்திலுருந்து வரும் சுகன்யா இந்த வீட்டில் எதிர்கொள்ளும் நிகழ்ச்சிகள் அதானல் நடக்கும் சண்டைகள் என கதை நகரும் விதம் அழகு

எப்பவுமே கணவனை மதிக்கும் சுலக்*ஷனா தன் மகள் வாழ்வு கெட்டுவிடக்கூடாது என்பதால் சொல்லும் உண்மை சுகன்யாவை குலை நடுங்கத்தான் வைக்கிறது.
குழந்தைகள் பாட்டி தாத்தாவை பார்க்க வருவதும், அவர்களுடன் சேர்ந்து ஏறுமயில் ஏறி விளையாடும் பாடலை நவீனப்படுத்தி பாடுவது என அமர்க்களம்.

மொத்தத்தில் அருமையாn் படம்

gkrishna
4th September 2014, 10:52 AM
https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcR_N7QwsASh5fDh6yzU2sFjLY0RP3D2d uKRhAddqFgt18w0qmVSKAhttp://i1.ytimg.com/vi/olTRbk-T8Ho/sddefault.jpghttp://www.tamilsong.eu/albumimages/akkarai-pachai-205-tamilsong-eu-images.jpg

அக்கரை பச்சை 1974
என் வெங்கடேஷ் இயக்கம் . இவர்தான் இளமை கோலம் பட இயக்கனர் என நினைவு (சுமன் ராதிகா நடித்து 79-80 கால கட்டத்தில் வெளிவந்த படம் )
ஜி கே தர்மராஜன் தயாரிப்பு - யோகசித்ரா (நடிகர் திலகத்தின் இளைய தலைமுறை தயாரித்தவர் )

ஜெய் ஜெயசித்ரா ரவி லக்ஷ்மி நாகேஷ் நடிப்பில் வெளிவந்த படம்
மெல்லிசை மன்னர் இசை கண்ணதாசன் பாடல்கள்

நல்ல வரவேற்பை பெற்ற படம் .

ஜெயசித்ரா,லக்ஷ்மி இருவரும் சகோதரிகள் இவர்களின் சகோதரர் நாகேஷ் .ஜெயசித்ரா ஜெய்யையும் ,லக்ஷ்மி ரவியையும் காதலிப்பார்கள்
ஜெய் மிக பெரிய பணக்காரர் .ரவி கதை எழுதும் ஏழை .
ஜெயசித்ரா ஜெய் யை திருமணம் செய்து கொண்டு கணவர் தன்னுடன் நிறைய நேரம் கழிக்காமல் எப்போதும் பிசினஸ் தொழில் என்று அலைகிறார் .அந்த வாழ்க்கை பிடிக்காமல் லக்ஷ்மி போல் ஏழை வாழ்கைக்கு ஆசைபடுவார். லக்ஷ்மியோ ஏழை ரவியை கல்யாணம் செய்து கொண்டு ஜெயசித்ரா போல் பணக்கார வாழ்கைக்கு ஆசைபடுவார் . இறுதியில் இக்கரைக்கு அக்கரை பச்சை என்ற உண்மையை உணர்ந்து இருவரும் தங்கள் சுய வாழ்கைக்கு திரும்புவார்கள் .

பாடல்கள் அனைத்தும் அருமையாக அமைந்து இருக்கும்

பாடகர் திலகம் சுசீலா குரல்களில் 'அரசனை பார்த்த கண்ணுக்கு புருஷனை பார்க்க பிடிக்காது .அரசனை பற்றி தெரிந்சுகிட்டா புருஷனை நெஞ்சு மறக்காது .அது சரி சரி அது சரி சரி புரியுது புரியுது '

பாலா ஈஸ்வரி குரல்களில் 'ஊர்கோலம் போகின்ற கிளி கூட்டம் எல்லாம் ஊரர்க்கு சொல்லுங்கள் இன்று '

மெல்லிசை மன்னரின் அசரீரி பாடல் 'இக்கரைக்கு அக்கரை பச்சை '

சுசீலா குரலில் 'பொதிகை மலை சந்தனமே பூஜை செய்யும் மந்திரமே'
மிக அருமையான பாடல்


ஆஆஆ....
பொதிகை மலை சந்தனமே
பூஜை செய்யும் மந்திரமே
பொதிகை மலை சந்தனமே
பூஜை செய்யும் மந்திரமே
மதுரை நகர் வீதியிலே
வளைய வரும் இளங்க்காற்றே
மதுரை நகர் வீதியிலே
வளைய வரும் இளங்க்காற்றே

பொதிகை மலை சந்தனேஸ்
பூஜை செய்யும் மந்திரமே

மாலையில் ஆடிடும் மலர்கள் இரண்டு
ஒரு மலர் நானாவேன்
மாலையில் ஆடிடும் மலர்கள் இரண்டு
ஒரு மலர் நானாவேன்
மங்க்கல சங்க்கொலி பொங்க்கிடும் இசையில் மணமகள் நானாவேன்
மங்க்கல சங்க்கொலி பொங்க்கிடும் இசையில் மணமகள் நானாவேன்
பஞ்ச்கணையில் உனைக் கொஞ்ச்குகையில் பசும் பாலினில் பழமாவேன்
இசை பண்ணொலி காக்க நீ மென்மொழியில் தமிழ் வீணையைப் போலாவேன்

பொதிகை மலை சந்தனமே
பூஜை செய்யும் மந்திரமே

கங்க்கையைப் போலொரு புண்ணிய நதியில் காதலில் நீ ஆட
கங்க்கையைப் போலொரு புண்ணிய நதியில் காதலில் நீ ஆட
கண்ணனின் ஆலயக் கலசமிரண்டும் காவியக் கவி பாட
கண்ணனின் ஆலயக் கலசமிரண்டும் காவியக் கவி பாட
கை வளையும் இரு மை விழியில் அந்தக் கலையினில் அரங்க்கேற
இளம் கன்னி மகள் இவள் பொன்னழகு விளையாடட்டும்
மெதுவாக

பொதிகை மலை சந்தனமே
பூஜை செய்யும் மந்திரமே
மதுரை நகர் வீதியிலே
வளைய வரும் இளங்க்காற்றே

பொதிகை மலை சந்தனமே
பூஜை செய்யும் மந்திரமே

http://www.tamilsong.eu/tamil-album/movie-albums-a,akkarai-pachai.html

chinnakkannan
4th September 2014, 10:52 AM
ஹாய் குட்மார்னிங்க் ஆல்..

//அவர்கள் கூட 'மனம் திறந்து பேசுகிறேன் ' ஒரு 38 வாரம் எழுதிய நினைவு. பிறகு நின்று விட்டது// ஆமாம் கிருஷ்ணா ஜி..

இன்னிக்கு என்னவோ கொஞ்சம் ப்ளாங்க் ஆக இருக்கிறது..வேலையும் கொஞ்சம் நிறைய..
எனில் பக்திப் பாடல் பாடலாமா..

ஞானசம்பந்தரையும் நாவுக்கரசரையும் பற்றிப் படித்திருந்தாலும் கூட அவர்களது பாடல்களில் ஆழ முயற்சித்திருந்தாலும்கூட எப்போது படிக்கும் போதும் இந்தத் திரைக் காட்சி நினைவுக்கு வருதற்குக் காரணம் ஆழ்ந்த, நடிப்பென்றே தெரியாத அர்ப்பணிப்பு.. ந.தி.. நாவுக்கரசர். ஞான சம்பந்தக்குழந்தையும் நன்கு செய்திருக்கும்..

*

சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே இறைவா – உன்னை
சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே!
அத்தனில்லாமல் ஒரு அம்மை இல்லை – அந்த
அம்மையில்லாமல் இந்தப் பிள்ளை இல்லை!…

)

பக்திப் பெருக்கில் எந்தன் ஊன் உருக – அந்த
பரவசத்தின் உள்ளே உயிர் உருக.
சக்தியெல்லாம் திரண்டு சிவம் பெருக – எந்தன்
சந்ததியே உந்தனுக்கு அடிபணிய, இறைவா!…

)

கண்ணைத் திறந்து வைத்த கருப்பொருளே – கோவில்
கதவைத் திறந்தழைத்த திருவருளே
வெண்ணைநல்லூர் உறையும் அருட்கடலே – வந்து
என்னை ஆளுகின்ற பரம்பொருளே, இறைவா!…”
*

அந்த ஆலய மணிக்கதவே தாழ் திறவாய் - உருகி உருகி அப்பர் பாட கதவு திறந்த பிறகு ஒரே பாடலில் கதவு மூட.. அப்பரின் உருக்கம்.. ம்ம் நினைத்தாலே மெய் சிலிர்க்கிறது..

gkrishna
4th September 2014, 11:09 AM
ஹாய் குட்மார்னிங்க் ஆல்..

இன்னிக்கு என்னவோ கொஞ்சம் ப்ளாங்க் ஆக இருக்கிறது..வேலையும் கொஞ்சம் நிறைய..
எனில் பக்திப் பாடல் பாடலாமா..

அந்த ஆலய மணிக்கதவே தாழ் திறவாய் - உருகி உருகி அப்பர் பாட கதவு திறந்த பிறகு ஒரே பாடலில் கதவு மூட.. அப்பரின் உருக்கம்.. ம்ம் நினைத்தாலே மெய் சிலிர்க்கிறது..

திரைப்படம் : அம்பிகாபதி
இசை. -. பாபநாசம் சிவன். பாடல். பாபநாசம் சிவன்
பாடியவர்கள். -. MK.தியாகராஜ பாகவதர்

பஜனை செய்வாய் மனமே - தினமே
நிஜ அன்புடனே நமதாண் டவனைப்
பஜனை செய்வாய் மனமே!

கானல் நீரருந்த மானலை வதுபோல்
மாநில மாயைசுகம் விரும்பாமல்
பஜனை செய்வாய் மனமே!

முடிவில் இன்பந்தரும் கடவுளை நம்பும்
அடியரை யாளுமால் விடையூ ரரனைப்
பஜனை செய்வாய் மனமே!

சற்றே சரிந்த குழலே துவளத் தரளவடம்
துற்றே யசையக் குழையூச லாடத் துவர்கொள் செவ்வாய்
நற்றே னொழுக நடன சிங்கார நடையழகின்
பொற்றே ரிருக்கத் தலையலங் காரம் புறப்பட்டதே!

https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTRRBoKMh_-KWZCxMr-AoffdnyaG8jWQ86dGu-UAbYoDxQJZN904A

http://www.youtube.com/watch?v=XjV4cNtNz3A

mr_karthik
4th September 2014, 11:34 AM
டியர் வினோத் சார்,

சென்னை மவுண்ட்ரோட்டின் அழகுக்கு மேலும் அழகு சேர்க்கும் வண்ணம் கம்பீரமாக நின்ற சபையர், எமரால்ட், புளூ டயமண்ட் திரையரங்குகளின் நிழற்படங்களையும் அது தொடர்பான செய்திகளையும் பதிவிட்டு கடந்த கால நினைவலைகளை மனதில் அலைமோத வைத்துவிட்டீர்கள்.

அந்த காம்ப்ளெக்சில்தான் எத்தனை எத்தனை படங்களைப் பார்த்து மகிழ்ந்திருக்கிறோம். எங்கள் புதுக்கல்லூரி (ராயப்பேட்டை) யைச்சுற்றித்தான் எத்தனை திரையரங்குகள். ஒருபக்கம் பைலட், மறுபக்கம் ஆனந்த் காம்ளெக்ஸ், இன்னொருபுறம் சத்யம் காம்ப்ளெக்ஸ், பின்னொரு புறம் சபையர் காம்ப்ளெக்ஸ் மற்றும் நடந்து செல்லும் தூரங்களில் அண்ணாசாலையின் மற்ற திரையரங்குகள்.

சபையர் வளாகத்தில் எத்தனை ஆங்கில மற்றும் ஹிந்திப் படங்களைக் கண்டு மகிழ்ந்திருக்கிறோம். காலத்தால் அழியாத சுவடுகள் அவையனைத்தும். எஸ்.கிருஷ்ணசாமி அசோஷியேட்ஸ் தயாரித்த 'சிந்து சமவெளி முதல் இந்திராகாந்தி வரை' என்ற வரலாற்று ஆவணப்படம் சபையரில் ஓடியபோது எத்தனை குதூகலம்.

ஆனால் காலத்தின் கோலம், இந்த அருமையான திரையரங்கம் மூடப்பட்டு, பொலிவிழந்து, பலகாலம் பாழடைந்து கிடந்து இறுதியில் மறைந்தே போனது. காரணம் யார் என்பது வரலாற்றுக்குத் தெரியும்.

ஆனால் பழைய தமிழ் திரைப்படங்கள் சிலவற்றில் இத்திரையரங்கம் காட்டப்பட்டுள்ளது. அவைதான் இதன் நினைவுச்சின்னங்கள். குறிப்பாக ரஜினி நடித்த 'ரங்கா' படத்தின் 'புருஷன்தான் இவன புருஷன்தான்' பாடல் சபையர் தியேட்டரின் லிப்டில் படமாக்கப்பட்டது. (லிப்டில் செல்லும்போதே அண்ணாசாலையின் அழகைக் காணும் வண்ணம் கண்ணாடி லிப்ட் அமைக்கப்பட்டதும் முதன்முதலில் சபையர் தியேட்டரில்தான்).

ஹும்...., திரும்பி வராத பசுமையான காலங்கள்.

Russellmai
4th September 2014, 11:48 AM
கிருஷ்ணாஜி சார்,
அம்பிகாவதி பட பாடலைப் பதிவிட்டமைக்கு நன்றி.இப்பாடலில் உள்ள
கானல்நீர் அருந்த மான் அலைவது போல்
மாநில மாயை சுகம் விரும்பாமல்
பஜனை செய்வாய் மனமே -என்ற வரிகள் அருமை
கோபு

chinnakkannan
4th September 2014, 12:38 PM
//பஜனை செய்வாய் மனமே - தினமே
நிஜ அன்புடனே நமதாண் டவனைப்
பஜனை செய்வாய் மனமே!// கிருஷ்ணா ஜி நன்றி

எஸ்வி சார், கார்த்திக் சார்.. சஃபையர் தியேட்டர் நினைவலைகளுக்கு நன்றி.. நான் படம் பார்த்ததேயில்லை..

கிருஷ்ணா சார், அக்கரைப்பச்சை நான் பார்க்க நினைத்து பார்க்காமலேயே போன் படம்..டிவிடி ஒன்று வாங்கி ஆசையாகப் போட்டால் உள்ளே நாணல் என வந்தது..கவரில் அக்கரைப் பச்சை..ம் சிலோனில் நன்கு விளம்பரப் படுத்தப் பட்ட படம் என நினைவு.. நன்றி..

chinnakkannan
4th September 2014, 12:53 PM
”எல்லாக் கடவுள்களுக்கும் நீங்கள் பாடல் எழுதுகிறீர்களே”

”ஆமாம் எழுதுவேன்.. நான் வணங்கும் கடவுள் வேறு..என் தொழில் வேறு..படத்தில் பாடல் வருகின்ற நேரம், எப்படி வரவேண்டும் என இசையமைப்பாளர் சொல்ல அந்த சமயத்திற்கேற்ப எழுதுவேன்” - ஒரு பேட்டியில் கவிஞர் வாலியின் சிலேடை..படத்தில் வருகின்ற சமயத்திற்கேற்ப எழுதியது இந்தப் பாடல்..ஏற்கெனவே இட்டிருப்பதாக நினைவு எனில் சில வரிகள் மட்டுமே..

நிலம் வெளுக்க நீர் தான் உண்டு
நீர் வெளுக்க மீன் தான் உண்டு
மனம் வெளுக்க எது தான் உண்டு?
நபியே உன் வேதம் உண்டு

உடலுக்கு ஒன்பது வாசல்
மனதுக்கு எண்பது வாசல்
உயிருக்கு உயிராய்க் காணும்
ஒரு வாசல் பள்ளிவாசல்

இருப்போர்க்கு எல்லாம் சொந்தம்
இல்லார்க்கு எது தான் சொந்தம்
நல்லார்க்கும் பொல்லார்க்கும் தான்
நாயகமே நீயே சொந்தம்

*

எம்.எஸ். விஸ்வனாதனின் கணீர்க் குரலில் முகமது பின் துக்ளக் டைட்டில் சாங்க்.. மறக்கமுடியாத ஒன்று..(வேறு ஒரு இழையில் பாடியது வீரமணி எனப் போட்டிருக்கிறார்கள்..இல்லை தானே..)

gkrishna
4th September 2014, 01:03 PM
சென்னை மவுண்ட்ரோட்டின் அழகுக்கு மேலும் அழகு சேர்க்கும் வண்ணம் கம்பீரமாக நின்ற சபையர், எமரால்ட், புளூ டயமண்ட் திரையரங்குகளின் நிழற்படங்களையும் அது தொடர்பான செய்திகளையும் பதிவிட்டு கடந்த கால நினைவலைகளை மனதில் அலைமோத வைத்துவிட்டீர்கள்.

ஹும்...., திரும்பி வராத பசுமையான காலங்கள்.


மன்மத லீலை திரை படம் என்று நினைவு .கமல் மற்றும் ஜெயப்ரதா இருவரும் டிக்கெட் எடுப்பதற்காக கீயு வரிசையில் நிற்கும் இடம் safire திரை அரங்கு என்று நினைவு . பின்னணியில் யாதோன் கீ பாராத் திரை படத்தின் பாடல் ஒலிக்கும்

அதே போல் அவள் ஒரு தொடர்கதை 23c சுஜாதா பயணிக்கும் பஸ் ஜெமினி ப்ளீஸ் safire திரை அரங்கு வாசலில் ஏறுவது போல் காட்சி அமைத்து இருப்பார் பாலச்சந்தர் என்று நினைவு

gkrishna
4th September 2014, 01:15 PM
நேற்று இரவு என் சகோதரர் ஒருவரிடம் சென்னை safire திரை அரங்கை பற்றி பேசி கொண்டு இருந்த போது அவர் தெரிவித்த தகவல்
முதல் படமான கிளீயோபாட்ரா 100 தினங்கள் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியதை நினைவு கூர்ந்தார் .அதே போல் சவுண்ட் of மியூசிக் திரை படத்திற்கு குழந்தைகள்,பள்ளிசிறுவர்கள் கூட்டமாக கூட்டமாக வருவார்கள் .மொழி தெரியாமல் புரியாமல் ஆராதனா 'ரூப் தேரா மஸ்தானா ' பாடலை பாடி கொண்டு வெளியே வரும் கூட்டம் பக்கத்தில் எம்ரால்ட் , இடைவிடாமல் ஆங்கில படம் ஓட்டும் ப்ளூ diamond திரை அரங்கம் . என்றும் நினைவு கூர்ந்தார்

gkrishna
4th September 2014, 01:20 PM
எஸ்.கிருஷ்ணசாமி அசோஷியேட்ஸ் தயாரித்த 'சிந்து சமவெளி முதல் இந்திராகாந்தி வரை' என்ற வரலாற்று ஆவணப்படம்

ஆஹா கார்த்திக் சார்
இண்டஸ் valley டு இந்திரா காந்தி மறக்க முடியாத படம்

http://static5.shop.indiatimes.com/images/products/original/B380993/movies/documentary/indus-valley-to-indira-gandhi-2-dvd-pack-.jpghttp://www.hindu.com/2005/05/20/images/2005052003912201.jpg

Among the well known documentaries of Dr. Krishnaswamy are Indus Valley to Indira Gandhi — a four-hour film on Indian history distributed by Warner Bros. in 1976-77 - The Hindu

gkrishna
4th September 2014, 01:29 PM
Thanks to Indian Express

As a film buff who has had delightful memories of many cinema theatres in Chennai, I feel a tinge of sadness whenever I pass the site that once upon a time housed the Safire theatre complex. The one time majestic building — probably the most stately cinema theatre in what was Madras — was razed to the ground more than 15 years ago and what an eyesore it presents today with its unkempt look! For many old timers it must be a melancholic trip down the memory lane every time they approach or come down the Gemini (Anna) Flyover.

Among all the movie theatres in Madras, I have the fondest memories of Safire. I saw some of the best movies at this venue, be it Safire, Blue Diamond or Emerald. Safire was the theatre where many of the most successful films shown in the city were screened, including Cleopatra (the first film shown there in 1964), The Sound of Music, Patton, It’s a Mad, Mad, Mad, Mad World, My Fair Lady, Lawrence of Arabia, Sandpebbles, Star, The Lion in Winter, Summer of 42, One Flew Over the Cuckoo’s Nest, Star Wars and many others. Blue Diamond was well known for its continuous performance showings, from nine in the morning onwards till about midnight. We loved the concept for there being no fixed show timings, we could walk in at any time and walk out at any time and see the movie more than once if we felt like it.

At Emerald I remember seeing Anand, the Rajesh Khanna-Amitabh Bachchan starrer in the early 70s, as also the runaway hit Seeta aur Geeta with Hema Malini in the title roles. Blue Diamond and Emerald were small theatres with a capacity of around 200 but Safire could seat almost a thousand patrons with its balcony and special boxes.

The dream world continued for 30 years until 1994 when the owner sold the theatre. He was from the jewelry business background and hence the names of the theatres were all named after precious stones. Besides the fresh concept of a theatre complex hosting three halls, and the idea of one of them showing continuous performances, the Safire building also attracted patronage of the gourmet kind. In the late Sixties, the management opened a restaurant in the basement — Nine Gems, which served North Indian snacks and chaats. Nine Gems folded up after a few years and was replaced a short while later by Navaratna, which served North Indian vegetarian meals. That also did not last long. There was also a small room on the ground floor that served as the booking office for Silversands, which was another of the owner’s pioneering ideas.

Silversands was the first beach resort, two kilometres from Mahabalipuram, and the concept so caught on that in the last 40 years or thereabouts, there have sprung up about a dozen more beach resorts along the route.

For three decades, Safire was the theatre to go to for entertainment; it was the in place to be seen for youngsters — in the absence of today’s bowling alleys, coffee pubs, shopping malls or video games parlours. But the ’90s were hard times for theatres as first television and then cable TV made deep inroads into their business. With varied entertainment available at home and over a 24-hour period, the attendance at cinema theatres thinned considerably. Many theatres closed down, or were converted to high-rise buildings or shopping malls and Safire too felt the pinch. But the memories still linger and even with the inevitable sad tinge, these are generally fond memories

gkrishna
4th September 2014, 01:32 PM
http://epaper.timesofindia.com/Repository/getimage.dll?path=TOICH/2011/08/20/58/Img/Pc0580200.jpg

70 களில் சென்னை தேவி திரை அரங்கு
மெக்கனாஸ் கோல்ட்

mr_karthik
4th September 2014, 01:36 PM
மன்மத லீலை திரை படம் என்று நினைவு .கமல் மற்றும் ஜெயப்ரதா இருவரும் டிக்கெட் எடுப்பதற்காக கீயு வரிசையில் நிற்கும் இடம் safire திரை அரங்கு என்று நினைவு . பின்னணியில் யாதோன் கீ பாராத் திரை படத்தின் பாடல் ஒலிக்கும்

மன்மதலீலையில் கமலும் ஜெயப்ரதாவும் கியூவில் நின்று டிக்கட் வாங்கும் இடம் மிட்லண்ட் தியேட்டர். அப்போது போர்டில் 'தயாரே மதீனா' எனற படம் திரையிடப்பட்டிருப்பதாக காட்டப்படும்.

அதே மிட்லண்ட் தியேட்டரில்தான் மன்மத லீலை ரிலீசானது.

அதே மிட்லண்ட் தியேட்டரை அதே ஜெயப்ரதா பின்னர் விலைக்கு வாங்கி, ஜெயப்ரதா தியேட்டர் என்று பெயர் மாற்றினார்.

இறுதி சோகம்... இப்போது அந்த தியேட்டரும் இல்லை...

gkrishna
4th September 2014, 01:55 PM
திருத்தத்திற்கு நன்றி kaarthik sir

மிட்லண்ட் பற்றிய நினைவு அலைகள் இனிமை

திருட்டு புருஷன் என்று ஒரு படம் ஜெயப்ரதாவின் தம்பி நடித்த நினைவு
மிட்லண்ட் ராஜ் திரை அரங்கில் ஒரு வருடம் ஓடிய நினைவு

gkrishna
4th September 2014, 02:04 PM
அலங்கார்,காசினோ,லிபர்ட்டி மற்றும் ஜெயப்ரதா - இதில் காசினோ இன்னும் இயங்கி கொண்டு இருக்கிறது என்று நினைக்கிறன்

https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcSiNkzpZLtOpwlSGl9XWl2lCNhwlL0II LwzamtSB-b1049nP1tMhttps://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcS3I2rpbhG_VAzC9gkm0sSjfJ8-U4otyF7GJqHlDmrFGTrEjOy1zghttp://yellowpages.goldenchennai.com/admin/images/small_images/gallery/7_7_small.jpghttps://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcQENFLmtiuQCzDsvyw1lVxCDvwWjYIZf I2aMYA8ukF90axt0pNCDQ

madurai thanga regal - காலையில் எட்வர்ட் மன்றம் என்ற நூலகம் - மாலையில் திரை அரங்கம்
http://www.wherewasitshot.com/wp-content/uploads/2014/08/ThangaRegalTheater_WWIS.jpg

chinnakkannan
4th September 2014, 02:21 PM
Thanks to krishna sir karthik sir for the theater ninaivalaikaL..

கிருஷ்ணா சார்..இன்னும் தங்க ரீகல் இருக்கிறதா..அந்த லாயர் லைப்ரரியும் இருக்கிறதா.. அது ரீகலாய் இருந்த போது- என் நண்பன் ஒருவனுடைய தந்தை வக்கீல் - எனில் புத்தகம் மாற்ற்ப் போவது போல் போய் தியேட்டருள் சென்று சில ஆங்கிலப் படங்கள் பார்த்திருக்கிறேன்..லைப்ரரி ஒரு ஓரம் தான்.. தங்க ரீகலாய்ப் பெயர் மாற்றம் செய்த சமயத்தில் ஒரு ரூல் ம் வந்தது என நினைக்கிறேன். அட்லீஸ்ட் 13 வாரங்கள் ஒரு தியேட்டரில் தமிழ் ப் படம் திரையிட வேண்டும் என்று..அதனால் ரீகலிலும் பரமேஸ்வரியிலும் தமிழ்ப் படங்க்ள் திரையிட ஆரம்பித்தார்கள்.. அப்படி ரீகலில் பார்த்த படம் எதிரொலி.. அப்புறம் மாப்பிள்ளை வினாயகர் ஆரம்பித்து அங்கும் ஆங்கிலப் படங்கள் வர ஆரம்பித்தன..கொஞ்சம் அதிகம் ஓடாத சில தமிழ்ப்படஙக்ள் அங்கே ரிலீஸ் ஆனதாய் நினைவு..

chinnakkannan
4th September 2014, 02:25 PM
டூரிங்க் தியேட்டர் எனத்தெரியாமலேயே போய்ப் பார்த்த தியேட்டர் பசுபதி கோவில் விஜயா.. பல வருடங்களுக்கு முன் என் சகோதரியும் சகோதரியின் கணவரும் அய்யம்பேட்டையில் இருந்தார்கள்..அங்கு சென்று தங்கியிருந்த காலத்தில் பக்கத்து வீட்டுப் பையனையும் சில நண்பர்களையும் கூட்டிக்கொண்டு நைட் ஷோ பசுபதி கோவில் சைக்கிளில் சென்று விடிகாலை இரண்டு இரண்டரை மணியளவில் (இரண்டு மூன்று இண்டர் வெல் என நினைவு) அய்யம்பேட்டை வந்து மறு நாள் அக்காவிடம் நானும்ப.வீ பையனும் திட்டு வாங்கினோம்..(இத்தனைக்கும் நான் கல்லூரி இரண்டாம் வருடம் என நினைவு) ஏண்டா ராவேளைல்ல காத்து கருப்பு அடிச்சதுன்னா எனன் பண்ணுவ..:) பார்த்த படம்.. படகோட்டி..

gkrishna
4th September 2014, 02:33 PM
கனகதுர்க்கா- பெரிய உருண்ட விழிகளும் கன்னத்தில் குழிகளுமாக 1970-களில் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்குத் திரையுலகைத் தனது திறமையால் ஆளுமைப்படுத்திக் கொண்ட ஓர் நடிகை. இவர் ஆந்திர தேசத்தைச் சேர்ந்தவர். இவரது பள்ளிப்பருவத்தில் படிப்பு ஓடாததால் குடும்பத்தில் ஒரே பெண்ணான இவர் நடிப்பைத் தேர்ந்தெடுத்தது பதினாறாவது வயதில். இவரது பெரியம்மா, பெரியப்பா போன்றோர் திரைத்துறையில் இயக்குநராகவும் நடிகராகவும் இருந்துள்ளனர். பிரேம் நகர் படத்தை இயக்கிய ரி.பிரகாஷ்ராவ் தான் இவரது பெரியப்பா. இயக்குநர் கே.விஸ்வநாத் [சங்கராபரணம்] இவரது உறவினர். இவர்தான் தெலுங்கில் ஷோபன் பாபுவின் முதல் படத்தில் கனகதுர்காவை அறிமுகம் செய்தார். இதில் 4 காட்சிகளில் மட்டுமே இவர் நடித்தார். அதன்பின் நாடகத்துறையில் இவர் கால்பதித்தார். தமிழில் பல நூற்றுக்கணக்கான நாடகங்களில் நடித்துக்கொண்டிருக்கும் போது ஒரு முறை மலையாள நடிகர் பிரேம் நசீரின் சகோதரர் பிரேம்நவாஸ் இவரது நாடகத்தைப் பார்த்துள்ளார். அச்சமயம் ‘நெல்லு’ என்ற மலையாளப் படம் எடுக்கவிருக்கும் நேரம். அவரது சிபாரிசின் பேரில் நெல்லுப் படத்தில் குறுமாட்டி என்ற கதாபாத்திரத்தில் இவர் அறிமுகம் செய்யப்பட்டார். தொடர்ந்து மது, சோமன், ஜெயன் போன்ற பிரபல நடிகர்களுடன் ஏராளமான படங்களில் கதாநாயகியாக நடித்தார். மலையாளத்தில் ரசிகர்கள் கனகதுர்க்காவைக் காணவிரும்பியது கிளாமர் வேடத்தில் அதனால் பெரும்பாலான படங்களில் இவர் கிளாமர் ரோல்களிலேயே நடித்துள்ளார்.

மலையாளத்தில் பிரபல ஒளிப்பதிவு இயக்குநராகயிருந்த ஹேமச்சந்திரன் என்பவரை இவர் 3 வருடங்கள் காதலித்து 1981-இல் மணந்தார். கனகதுர்க்காவின் கணவர் 2001-இல் காலமானார். இவரது மகள் மானசி தமிழ் நடிகர் விக்ராந்தை மணந்தார். இவர் மலையாளத்தில் 5 படங்களில் மட்டுமே நடித்துள்ளார். அத்துடன் நடிப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். கணவரது மரணத்திற்குப்பின் சில மலையாளப் படங்களில் நடித்துள்ளார். மணியம்பிள்ள ராஜுவின் ஒரு மலையாள சின்னத்திரைத் தொடரிலும் இவர் நடித்தார். மகளது படிப்புக்காக தொடர்ந்து நடிப்பதைத் தவிர்த்தார்.


http://antrukandamugam.files.wordpress.com/2014/09/kanakadurga-abhimanavanthulu-1973-1.jpg?w=593&h=450

கனகதுர்கா தற்பொழுது
http://antrukandamugam.files.wordpress.com/2014/09/kanakadurga-abhimanavanthulu-1973-3.jpg?w=593

வாசு சார்,கார்த்திக் சார்
நம்ம நடிகர் திலகத்தின் சொர்க்கம் படத்தில் இவர் தானே முத்துராமன் மனைவி - நடிகர் திலகத்தின் தங்கை

இவரது கணவர் ஹேமச்சந்திரன் - மாதவி ரவீந்தர் நடித்த கல்வி தந்தை ஜேப்பியார் தயாரிப்பில் வெளி வந்த பனி மலர் படத்தின் இயக்கனுர் என்று நினைவு

இவரது அபூர்வ ராகங்கள் - மங்களம் கதாபாத்திரம் மறக்க முடியாத ஒன்று

இந்த படத்தில் இருப்பவர் நடிகர் விக்ராந்த் - இப்போதைய பிரபல நடிகர் விஜய் இன் அம்மா ஷோபா வின் தங்கை ஷீலா வின் மகன் .கனகதுர்காவின் மாப்பிள்ளை

தகவலுக்கு நன்றி - விக்கி

http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/09/Vikranth.jpg/220px-Vikranth.jpg

gkrishna
4th September 2014, 02:37 PM
கிருஷ்ணா சார்..இன்னும் தங்க ரீகல் இருக்கிறதா..அந்த லாயர் லைப்ரரியும் இருக்கிறதா..

மூன்று மாதங்களுக்கு முன் மதுரை சென்று இருந்தேன் சி கே சார்
அப்போது தங்க ரீகல் திரை அரங்கம் இயங்கி கொண்டு இருந்தது .
நூலகம் பற்றி தெரியவில்லை .

chinnakkannan
4th September 2014, 02:39 PM
//கனகதுர்க்கா- பெரிய உருண்ட விழிகளும் கன்னத்தில் குழிகளுமாக 1970-களில் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்குத் திரையுலகைத் தனது திறமையால் ஆளுமைப்படுத்திக் கொண்ட ஓர் நடிகை// எங்கிட்டிருந்தெல்லாம்கண்டு பிடிக்கறீங்க கிருஷ்ணா சார்.. அந்த மங்களம் கேரக்டர் நல்லாவே பண்ணியிருப்பாங்க.. பெயர்லாம் தெரியாம இருந்தது..இப்போதுதகவல்கள் தந்து விட்டீர்கள்.. அதே அபூர்வ ராகங்களில் அந்த் நாகேஷ் வீட்டு ப்பெண் யார்..

அப்புறம் உன்னால் முடியும் தம்பியில் கமலுடைய அண்னன் நாதஸ்வரக் கலைஞனாக நடித்தவர் யார்..

கொஞ்சம் கலர்ப்படத்துக்குப் போனா..அகலக் கண்கள் கொண்டு கொஞ்சம் ஷார்ப் ஃபீச்சர்ஸுடன் குள்ள உருவத்தில் மோகமுள்ளில் “சொல்லாயோ வாய் திறந்து” பாடியவர் யார்.. வேறு படத்தில் நடித்திருக்கிறாரா..

சி.க.வேதாளத்தின் இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லவில்லையெனில் பெருஸ்ஸா ஒரு விருத்தம் எழுதிப் படுத்திவிடுவேன் என்பதை....:)

chinnakkannan
4th September 2014, 02:50 PM
மதுரை செய்ண்ட் மேரிஸ் தான் 8-10 நான்படித்த பள்ளி.. வளாகத்தினுள்ளேயே சர்ச்..பின் ஸ்கூல்.. பள்ளி முடிந்ததும் ஹோ வெனக் கத்தி வெளியே வந்து இடதுபக்கம் நுழைந்து மறுபடி வலதுபக்கம் சென்றால் திருமலை நாயக்கர் மஹால் தெரியும் அதனெதிரில் பஸ்ஸ்டாப்.. 8 , 12 பிடித்து பி-4 போலீஸ்ஸ்டேஷன் ஸ்டாப் சென்று வீடு செல்ல வேண்டும்..

பள்ளியில் ப்ரின்ஸிபல் ஒரு ஃபாதர்..பாடம் நடத்துபவர்களும் சில ஃபாதர்கள் வருவார்கள்.. பள்ளியின் உள்ளிருந்து வெளியில் சென்றால் போர்டிங்க் ஸ்கூல் வரும்..ஃபாதர்கள் தங்குவதற்கேற்ப ஃபாதர்ஸ் பங்களா என அழைக்கப் படும் குடியிருப்பு செழுமையாக் இருக்கும் உள்ளே செல்ல அனுமதியில்லை சிறுவர்களுக்கு..எனில் நான்சென்றதில்லை..இல்லை இல்லை ஓரிரு தடவை மேத்ஸ் நடத்தும் ஆசிரிய் ஃபாதரைப் பார்க்க ச் சென்றிருக்கிறேன்..
அந்தஃபாதர் ஸ் பங்களா சர்ச்சுக்குப் பின்னால் ..எனில் அப்படியே கூட வெளி கேட்டை அடைய முடியும்.. கிருஸ்துவ கானங்கள் நிறையக் கேட்டிருக்கிறேன்.

*
இந்த ப் பாட்டு -அவர் எனக்கே சொந்தம் படத்தில் வருகின்ற மெலடி..எனக்கு ரொம்பப் பிடிக்கும்..

*

தேவன் திருச்சபை மலர்களே...

வேதம் ஒலிக்கின்ற மணிகளே ....

போடுங்கள் ஓர்....புன்னகைக்கோலம்...
பாடுங்கள் ஓர்...இன்னிசை ராகம் ..!

விண்மீனை உன் கண்களில் பார்க்கிறேன்
பொன்மானை உன் நடையினில் காண்கிறேன்
எங்கள் அன்னை மேரியின்
பொங்கும் கருணை மழையிலே
என் செல்வமே என் தெய்வமே
பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்கவே

கண்ணே மணியே பொன்னெழில் மலர்களே
அன்பே அமுதே அருந்தவப் பயன்களே
கொஞ்சும் மழலை மொழியிலே
உள்ளம் மயங்க மயங்கவே
பொன்வண்டு போல் சில்வண்டு போல்
கவிபாடுங்கள் உலகம் மகிழவே

**

gkrishna
4th September 2014, 03:17 PM
அப்புறம் உன்னால் முடியும் தம்பியில் கமலுடைய அண்னன் நாதஸ்வரக் கலைஞனாக நடித்தவர் யார்..

சி.க.வேதாளத்தின் இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லவில்லையெனில் பெருஸ்ஸா ஒரு விருத்தம் எழுதிப் படுத்திவிடுவேன் என்பதை....:)

அந்த நடிகர் பெயர் பிரசாத் பாபு என்று நினைவு ck sir

chinnakkannan
4th September 2014, 03:25 PM
தாங்க்ஸ் கிருஷ்ணா சார்..அவர் வேறு எதுவும் படங்களில் நடிக்கவில்லை என நினைவு..அந்தப் படம் ரிலீஸாகி தேவர் மகனும் ரீலீஸான கால கட்டத்தில் எனக்கும் என் சகோதரிக்கும் ஆர்க்யூமெண்ட்..தேவர்மகன் கமல் அண்ணா தலைவாசல் விஜய்யும் இந்த உ.மு.த நாதஸ்வர வித்வானும் ஒருவரே என.. நான் இல்லை என்று ஆர்க்யூமெண்ட் செய்திருந்தேன்..

எனக்குப் பிடித்த குட்டிப் பாத்திரங்கள்

அச்சமில்லை அச்சமில்லை - சுதந்திரமாய் நடித்த நடிகர்..

நாயர் கே ராமன் (வசனப் பயிற்சி மற்றும் நடிப்பு)

ஞான ஒளி - கோகுல் நாத் ஃபாதர்..(முரட்டுப் பயலே) (அவரேவிடியும் வரை காத்திருவில் சத்யகலாவின் அப்பாவாக நடித்திருப்பார்)

நூறாவது நாள் - கோகிலா (பின்னால் விசு படங்களில் எல்லாம் நடித்தார்)

பாஸ்கர் - மற்றவை நேரில் என்ற மெளலியின் முதல் டைரக்*ஷனில் வந்த பட ஹீரோ

gkrishna
4th September 2014, 03:46 PM
தாங்க்ஸ் கிருஷ்ணா சார்..அவர் வேறு எதுவும் படங்களில் நடிக்கவில்லை என நினைவு..அந்தப் படம் ரிலீஸாகி தேவர் மகனும் ரீலீஸான கால கட்டத்தில் எனக்கும் என் சகோதரிக்கும் ஆர்க்யூமெண்ட்..தேவர்மகன் கமல் அண்ணா தலைவாசல் விஜய்யும் இந்த உ.மு.த நாதஸ்வர வித்வானும் ஒருவரே என.. நான் இல்லை என்று ஆர்க்யூமெண்ட் செய்திருந்தேன்..

எனக்குப் பிடித்த குட்டிப் பாத்திரங்கள்

அச்சமில்லை அச்சமில்லை - சுதந்திரமாய் நடித்த நடிகர்..

நாயர் கே ராமன் (வசனப் பயிற்சி மற்றும் நடிப்பு)

ஞான ஒளி - கோகுல் நாத் ஃபாதர்..(முரட்டுப் பயலே) (அவரேவிடியும் வரை காத்திருவில் சத்யகலாவின் அப்பாவாக நடித்திருப்பார்)

நூறாவது நாள் - கோகிலா (பின்னால் விசு படங்களில் எல்லாம் நடித்தார்)

பாஸ்கர் - மற்றவை நேரில் என்ற மெளலியின் முதல் டைரக்*ஷனில் வந்த பட ஹீரோ

மோகமுள் கதாநாயகி - அர்ச்சனா என்று நினைவு - மராத்தி ஹிந்தி கதக் டான்சர்

அச்சமில்லை அச்சமில்லை - சுதந்திரம் - இவரது பேட்டி குமுதம் அல்லது விகடன் நினைவில் உண்டு - நிறைய தெலுங்கு படங்களில் குள்ள பேய் வேஷம் போட்டு இருப்பார்

நாயர் ராமன் - வாத்தியார் ராமன் - ரஜினியின் சிவா படத்தில் நினைவு உண்டு

கோகிலா - வைதேகி காத்து இருந்தாள்,திருமதி ஒரு வெகுமதி

கோகுல்நாத் - nootrukku நூறு , இரு கோடுகள் எல்லா பழைய பாலச்சந்தர் படங்கள்

பாஸ்கர் - குடும்பம் ஒரு கதம்பம் - சுஹாசினி தம்பி - நித்யாவின் காதலர் என்று நினைவு மற்றும் எல்லா மௌலி படங்கள் - ரஜினியின் நான் சிகப்பு மனிதன் என்று நினைவு

chinnakkannan
4th September 2014, 03:49 PM
//மோகமுள் கதாநாயகி - அர்ச்சனா என்று நினைவு - மராத்தி ஹிந்தி கதக் டான்சர் // நன்றி கிருஷ்ணா சார் தகவல்களுக்கு.. நான் கேட்டது மோகமுள் கதானாயகியை அல்ல. .தங்கம் என்ற கேரக்டரில் வயதானவருக்கு வாழ்க்கை ப்பட்ட பேதைப் பெண்ணாக வருபவர்.. வந்தவர்..

chinnakkannan
4th September 2014, 04:01 PM
கிருஷ்ணா ஜி..கண்ணான்னு கூப்பிடறத விட கிருஷ்ணான்னு கூப்பிடறது இன்னும் நெருக்கமாத் தோணுமோ..அதுவும் பெண்களுக்கு..இந்த ப் பெண் நிர்மலா என்னவாக்கும் சொல்றா..லஷ்மி கல்யாணத்தில..

எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று..அதுவும் சுசீலாம்மாவின் உருக்கும்குரல்..

பிருந்தாவனத்துக்கு வருகின்றேன்! - என்
பெருமான் உன்னிடம் கேட்கின்றேன்!
கிருஷ்ணா நான் ஒரு பாவியோ? - என்
கேள்விக்கு பதில் என்ன கேலியோ?

//ஹாய் கிருஷ்ணா..என் மீது உன் கடைக்கண்பார்வை பட்டது தெரியும் .. ஆனாக்க அதுக்கப்புறம் ஃபர்தர் ஸ்டெப்ஸ் நீ எடுக்கவே இல்லையே.. ஏன் நான் பாவம் செய்தவளா..சொல்லு கிருஷ்ணா சொல்லு.. அது சரீ ஈ..இது ப்ருந்தாவனம் ..ஒன்னோட இடம்..உன்னோட சைட்ல எல்லாம் கோபிகைகள் .. நார்த் இண்டிய இளம் பெண்கள்..நன்னாவே இருக்கா.. நான் தமிழ்ப்பெண் தானே..கொஞ்சம் நிறம் மட்டு...அதனால என்னைக் கேலிப் பார்வை பார்க்கறியா//


கீதையில் உன் குரல் கேட்டேனே! - என்
கிருஷ்ணனின் திருமுகம் பார்த்தேனே!
பாதையில் உன் துணை வரவில்லையே!
பகவான் திருவருள் தரவில்லையே!

// குரு..கிருஷ்ணா..என்னவனே.. இவ்ளோ தூரம் பஸ் சார்ஜ் கொடுத்து லொங்கு லொங்குன்னு உன்னைத் தேடி வந்திருக்கேன்..வர்றச்சே படிச்ச புக் கீதை..அதுல வரிகள்ளாம் தெரில க்ருஷ்ணா ..உன்னோட லவிங்க் ஃபேஸ் தான் தெரிஞ்சது..அதுக்கப்புறம் கொஞ்சம் இறங்கி உன்னைத் தேடி வர்றச்சயாவது என்னை வந்து பார்த்திருக்கலாம்.. நீயோ வல்லை..ஏன் கண்ணா.ஏன் எனக்கு அருள் செய்ய மாட்டேங்கற//

குங்குமம் அணிந்தால் உன் தேவி! - தன்
கூந்தலை முடித்தாள் பாஞ்சாலி!
சங்கமம் என்பது எனக்கில்லையோ? - அந்த
மங்கல மரபுகள் உனக்கில்லையோ?

// என் செல்லக் கிருஷ்ணா.. உன்னை த் தேடி உருகற பக்தை .. வந்திருக்கேன்.. நீ மத்தவாளுக்கே அருள் செஞ்சுக்கிட்டு இருக்கியே நியாயமா..எனனை ஆட்கொண்டால் என்னப்பா குறைஞ்சிடும் உனக்கு..இல்லை அது பத்தித்தான் உனக்குத் தெரியாதா//

கங்கையின் வெள்ளம் தண்ணீரோ? - இல்லை
கன்னியர்கள் விடும் கண்ணீரோ?
கண்ணனின் மனமும் கல் மனமோ? - எங்கள்
மன்னனுக்கு இது தான் சம்மதமோ?

//இப்போ புரிஞ்சுப் போச்சு கிருஷ்ணா.. நீ என்னைப் போல நெறயப் பேருக்கு டபாய்ச்சுக்கிட்டே இருந்திருக்க..அதான் உன்னை நினைச்சே உருகற என்னை ப்போன்ற கன்னிப் பெண்கள் விடற கண்ணீர் தான் கங்கையாய்டுச்சுன்னு நினைக்கறேன்..உனக்கென்ன கல்மனசாப்பா..இது உனக்கே சம்மதமா..ஏதோ செய்//

கிருஷ்ணா கிருஷ்ணா

//கண்ணா..கண்ணா :)//

**

vasudevan31355
4th September 2014, 04:13 PM
அடேயப்பா!

தியேட்டர் பதிவுகள், கனகதுர்கா, குட்டி கதாபாத்திர நடிகர்கள் என்று திரி அதம் பறக்கிறதே. ம்..நாம சிட்டியிலே இருந்ததில்லே. கடலூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள டூரிங்குகள் தான்.

சி.க.சார்,

தேவன் திருச்சபை மலர்களே பாடல் வரிகளுக்கு நன்றி.

//சி.க.வேதாளத்தின் இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லவில்லையெனில் பெருஸ்ஸா ஒரு விருத்தம் எழுதிப் படுத்திவிடுவேன் என்பதை//....

அது எப்படிங்க? என்ன மிரட்டலா!?:) இப்படியெல்லாம் பயமுறித்தினா நாங்க பயந்திடுவோமா?:)

பெருஸ்ஸா ஒரு விருத்தம் எழுதுங்க. படிச்சிட்டு அதைவிட பெரிசா பதிவு போடறேன். ஓஹோன்னானாம் வெள்ளைக்காரன்.:)

chinnakkannan
4th September 2014, 04:15 PM
காலமகள் தந்த கவிதைக் கோமகன் கவியரசு கண்ணதாசன் திருவுருவச்சிலை திறந்துவைத்த பெருமகிழ்வில் .. கலைவாணர் அரங்கில் முழுநாள் வைபவங்கள்! கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம், இசைவிருந்து நடைபெற்ற நாள் 11.12.1994.

திரைவரலாறுகளைத் தன் விரல்நுனியில் வைத்திருக்கும் திரை அகராதி அருமைக்குரிய பிலிம்நியூஸ் ஆனந்தன் அவர்களின் ஆலோசனையேற்று திராவிடக் கவிஞர்கள் மூவரைத் தேர்ந்தெடுத்து ‘கண்ணதாசன் விருதுகள்’ வழங்கிப் பெருமையுற்ற கவியரங்கில்.. திருமிகு ஆருத்ரா.. தெலுங்குக் கவிஞர் - பின்வருமாறு கூறினார். தமிழ் கலந்த தெலுங்கில் அந்த இனியமகன் செப்பியதாவது..

நானும் கவிஞர் கண்ணதாசனும் நல்ல நண்பர்கள்.. அடிக்கடி நேரிலும்..அவ்வப்போது தொலைபேசியிலும் அளவளாவாவதுண்டு! இன்றைக்கு என்ன பாடல் எழுதினீர்கள் என்று கேட்பார்.. நான் சொல்லுவேன்.. அதே போல்.. நீங்கள் என்ன பாடல் எழுதினீர்கள் என்று கேட்க அதையும் அறிந்துகொள்வேன்.

அப்படி ஒரு சமயம்.. நான் கேட்டபோது.. அவர் ஒரு பாடல் சொன்னார். அசந்து போனேன். இன்னொரு முறை சொல்லுங்கள் எனச் சொல்லிக் கேட்டேன். அந்தப் பாடல் அந்த அளவுக்கு என்னை மிகவும் ஈர்த்தது.

என்ன பாடல் தெரியுமா? லட்சுமி கல்யாணம் என்கிற திரைப்படத்திற்காக கண்ணதாசன் இயற்றிய ‘ராமன் எத்தனை ராமனடி’ என்கிற பாடல்தான் அது. கவிஞரிடம் எப்படி இத்தனை ராமனை வரிசைப்படுத்தினீர்கள் என்று கேட்டேன்.

எந்தப் பாடலுக்கும் ஒரு கரு உண்டல்லவா? இந்தப் பாடலுக்கு என்ன கரு என்று கேட்டேன். கண்ணதாசன் சொன்னார்.. இராமயணத்தில் பட்டாபிஷேகப் படலத்திற்குப்பிறகுவரும் இரண்டாம் காதையில் சலவைத் தொழிலாளி ஒருவர் சொன்னார் என்பதற்காக.. ராமன் சீதையைக் கொண்டு சென்று காட்டில் விட்டுவிட்டு வரும்படி தம்பி லக்குவனனிடம் ஆணையிடுவான். அவ்வாய்ச் சொல் ஏற்று லக்குவனன் சீதையைக் காட்டில் விட்டு வீடு திரும்பியபோது ராமன் நிலைப்படியில் தலையை வைத்து அழுது கொண்டிருப்பான்.. அப்போது லக்குவனன் அண்ணன் ராமனைப் பார்த்து.. ஏனன்னா.. இது என்ன ? நீங்கள் தான் ஆணையிட்டீர்கள்.. இப்போது அழுதுகொண்டிருப்பதென்ன? என்று கேட்க..

‘ஆணையிட்டது கோசலராமன்..
அழுதுகொண்டிருப்பது சீதாராமன்’ என்று
இப்பொறிதான் .. இப்பாடல் உருவானதற்கான கருவானது என்றார்.

வம்சத்திற்கொருவன் - ரகுராமன்
மதங்களை இணைப்பவன் - சிவராமன்
மூர்த்திக்கு ஒருவன் - ஸ்ரீராமன்
முடிவில்லாதவன் - அனந்தராமன்

என 18 ராமன்களின் பவனியல்லவா இந்தப் பாட்டு!

(காவிரிமைந்தன் என்பவர் எழுதியிருந்ததில் இருந்து )

இனி பாட்டு..

**

ராமன் எத்தனை ராமனடி
ராமன் எத்தனை ராமனடி - அவன்
நல்லவர் வணங்கும் தேவனடி - தேவன்

கல்யாண கோலம் கொண்ட - கல்யாணராமன்
காதலிக்கு தெய்வம் அந்த - சீதாராமன்
அரசாள வந்த மன்னன் - ராஜாராமன்
அலங்கார ரூபம் அந்த - சுந்தரராமன்

தாயே என் தெய்வம் என்ற - கோசலராமன்
தந்தை மீது பாசம் கொண்ட - தசரதராமன்
வீரம் என்னும் வில்லை ஏந்தும் - கோதண்டராமன்
வெற்றி என்று போர் முடிக்கும் - ஸ்ரீஜெயராமன்


வம்சத்திற்கொருவன் - ரகுராமன்
மதங்களை இணைப்பவன் - சிவராமன்
மூர்த்திக்கு ஒருவன் - ஸ்ரீராமன்
முடிவில்லாதவன் - அனந்தராமன்

ராமஜெயம் ஸ்ரீராமஜெயம்
நம்பிய பேருக்கு ஏது பயம்
ராமஜெயம் ஸ்ரீராமஜெயம்
ராமனின் கைகளில் நான் அபயம்!!!

*

மறுபடியும் சுசீலாம்மாவின் அழகிய பாடல்.. லஷ்மி கல்யாணம் திருப்பிப் பார்க்கணும் போல இருக்கே..

gkrishna
4th September 2014, 05:14 PM
//மோகமுள் கதாநாயகி - அர்ச்சனா என்று நினைவு - மராத்தி ஹிந்தி கதக் டான்சர் // நன்றி கிருஷ்ணா சார் தகவல்களுக்கு.. நான் கேட்டது மோகமுள் கதானாயகியை அல்ல. .தங்கம் என்ற கேரக்டரில் வயதானவருக்கு வாழ்க்கை ப்பட்ட பேதைப் பெண்ணாக வருபவர்.. வந்தவர்..

சி கே சார்
அது வாணி என்ற நடிகை .அவர் வேறு எந்த படதிலாவது நடித்தாரா என்று வாசு சார் சொல்ல வேண்டும்

vasudevan31355
4th September 2014, 05:26 PM
இன்றைய ஸ்பெஷல் (69)

'இன்றைய ஸ்பெஷலி'ல் நெஞ்சைப் பிழியும் ஒரு பாடல்.

http://www.inbaminge.com/t/i/Itho%20Enthan%20Theivam/folder.jpg

படம்: இதோ எந்தன் தெய்வம்

வெளி வந்த வருடம்: 1972

நடிகர்கள்: முத்துராமன், மேஜர், கே.ஆர்.விஜயா, பேபி இந்திரா

ஒரு வீட்டுக்குள் திருடனாக நுழையும் முரடன் ஒருவன் அந்த வீட்டின் சிறுமியின் அன்புக்கு பாத்திரமாகி திருந்துவதுதான் கதை.

திருடனான மேஜர் கே.ஆர்.விஜயா, முத்துராமன் தம்பதிகளின் மகளான பேபி இந்திராவிடம் நெகிழ்ச்சியாக பாடும் பாடல். திருடனான தான் தொட்டிலில் தவழாமல் குப்பைத் தொட்டியில் புரண்ட கதையைச் சொல்லிப் பாடும் பாடல்.

'தனி ஆளாகவே வாழ்ந்த, வளர்ந்த என்னை இப்படி பாசத்துக்கு அடிமையாக்கி விட்டாயே' என்று அந்த குழந்தையிடம் நெக்குருகிப் பாடுகிறான் அவன்.

பாறாங்கல் போன்ற தன் மனதிலும் ஈரம் வரவழைத்து கண்களில் கண்ணீரைப் பெருகச் செய்த அந்த தெய்வக் குழந்தையை மானசீகமாகப் போற்றுகிறான்.

விவரம் புரியாமல் அப்பா என்று தன்னை அழைக்கும் அந்தக் குழந்தையின் அன்பில் சிக்குண்டு அந்த சிங்கம் முயலாகிறது.

அருமையான பாடல். பாடகர் திலகம் வழக்கம் போல உணர்ச்சிப் பிரவாகம் பெருக்கெடுக்க சோகத்தையும், பாசத்தையும் ஒரு சேர பிழிந்து எடுத்துத் தருகிறார்.

மேஜருக்கு இந்தப் பாடல் நடிகர் திலகத்தின் பாடல் காட்சி போல அமைந்துவிட்டது. அவரும் குறைவில்லாமல் செய்திருப்பார். 'மெல்லிசை மன்னர்' கடன் வாங்காமல் இப்பாடலின் டியூனைப் போட்டிருப்பார் என்று நம்புவோமாக.

பெரிய வித்தியாசம் எல்லாம் எதுவுமில்லை. ஆனால் மேஜருக்கு அமைந்து விட்டது விஷேசம். நடிகர் திலகத்திற்கு அமைந்திருந்தால் கதையே வேற.

http://i.ytimg.com/vi/ZUdm2n-fBLU/maxresdefault.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/mejar.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/mejar.jpg.html)

இனி பாடலின் முழு வரிகள்

தானே முளைத்த மரம்
தனியாக வளர்ந்த மரம்
ஏன் முளைத்ததென்றாயோ
என் செல்வமே
எனக்கே தெரியாதம்மா

தானே முளைத்த மரம்
தனியாக வளர்ந்த மரம்
ஏன் முளைத்ததென்றாயோ
என் செல்வமே
எனக்கே தெரியாதம்மா

ஆசை என்னும் காட்டுக்குள்ளே
பாதிவழி போனவர்கள்
ஆசை என்னும் காட்டுக்குள்ளே
பாதிவழி போனவர்கள்
தான் செய்த பாவம் அம்மா
என் செல்வமே
நான் செய்த பாவம் இல்லை

பால் குடித்த பாசம் இல்லை
பள்ளி சென்ற பாடம் இல்லை
பால் குடித்த பாசம் இல்லை
பள்ளி சென்ற பாடம் இல்லை
ஊருக்கு நான் யாரம்மா
என் செல்வமே உறவுக்கு நீ யாரம்மா

தானே முளைத்த மரம்
தனியாக வளர்ந்த மரம்
ஏன் முளைத்ததென்றாயோ
என் செல்வமே
எனக்கே தெரியாதம்மா

கல்லுக்கும் நெஞ்சம் உண்டு
கண் உண்டு கண்ணீர் உண்டு
கல்லுக்கும் நெஞ்சம் உண்டு
கண் உண்டு கண்ணீர் உண்டு
சொன்னவள் நீதானம்மா
என் தெய்வத்தை உன்னிடம்
கண்டேனம்மா

தொட்டியில் வாழ்ந்த பிள்ளை
தொட்டிலில் வாழ்ந்ததில்லை
தொட்டியில் வாழ்ந்த பிள்ளை
தொட்டிலில் வாழ்ந்ததில்லை
அப்பனென்று அழைத்தாயம்மா
அதில் என் கற்பனை வளர்த்தாயம்மா

அன்பென்றும் ஆசையென்றும்
பண்பென்றும் பாசமென்றும்
சொன்னதைக் கேட்டேனம்மா
அதை நான் சொர்க்கத்தில் காண்பேனம்மா
சொர்க்கத்தில் காண்பேனம்மா

தானே முளைத்த மரம்
தனியாக வளர்ந்த மரம்
ஏன் முளைத்ததென்றாயோ
என் செல்வமே
எனக்கே தெரியாதம்மா

ஆரிராரிரோ ஆரிராரிரோ
ஆரிராரிரோ ஆரிராரிரோ


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=ZUdm2n-fBLU

chinnakkannan
4th September 2014, 05:34 PM
வாசு சார்.. நான் உங்களைக் கேட்க நினைத்த படத்திலிருந்து டபக்கென்று பாடல் கொடுத்திருக்கிறீர்கள்..ஓஹோன்னானான் வெ.கா :) இந்தப் படம் பற்றி எழுதியிருக்கிறீர்களா..அதுவும் இந்தப் பாட்டு என்று இன்னொரு பாட்டு செலக்ட் செய்துவிட்டு சிகப்புவண்ண புகைப்படத்தில் சிகரெட் குடித்துக் கொண்டிருக்கும் ந.தி அவதார் வைத்திருப்பவர் கோபித்துக் கொள்வார் என்று நிறுத்தி விட்டேன்.. என்ன பாட்டு..

அம்பிகை நேரில் வந்தாள்
அன்பினை அள்ளித் தந்தாள்
கோபுரம் கண்ணில் கண்டேன்
கொஞ்சிடும் கலசம் கண்டேன்
தேவி.., என் தேவி...

ஆலயம் திறந்து வைத்தேன்
ஆலாத்தித் தட்டும் வைத்தேன்
சன்னிதானம் வரையில்
தேவியைக் காண வைத்தேன்
தேவா.. என் தேவா

பூவிலே பூஜை செய்வேன்
காதிலே வேதம் சொல்வேன்
ஆயிரம் குடங்கள் கொண்டு
அபிஷேகம் நடத்தி வைப்பேன்

சாத்துப்படி போட்டு வைப்பேன்
சந்தனத்தில் ஊற வைப்பேன்
அர்த்த ஜாமம் வரையில்
அம்மனைக் காண வைப்பேன்
தேவா,.. என் தேவா....

பல்லக்கில் ஏற்றி வைப்பேன்
பாமாலை சூட்டி வைப்பேன்
உல்லாச ஊர்வலத்தில்
உள்ளத்தை மயங்க வைப்பேன்

கோயிலில் குடியிருப்பேன்
குத்துவிளக்கேற்றி வைப்பேன்
தேவனின் நிலையில் நின்று
தேவியைத் தழுவிக் கொள்வேன்

**

நீங்கள் எழுதிய பாடல் கேட்டதில்லை.. கேட்டுப் பார்க்கிறேன்.. நன்றி

*

கிருஷ்ணா ஜி வாணி பற்றித் தேடித்தான் பார்க்க வேண்டும்..ம்ம் நன்றி

gkrishna
4th September 2014, 05:37 PM
"ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்" இலங்கை வானொலியில் கலக்கிய பாடல், உறவாடும் நெஞ்சம் படத்திற்காக எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பாடியது. இளையராஜா தன் ஆரம்பகாலத்தில் அவசரமாக படங்களை ஒப்புக்கொண்டு சூடு போட்டுக் கொண்ட அனுபவம் இந்தப் படத்தையும் சேர்த்து ஒரு பட்டியல் இருக்கு. ராஜாவின் அழகான மெட்டும், இசையும் இப்பாடலை இன்னொரு தனித்துவமான கீதமாகக் காட்டினாலும் படம் பிரபலமில்லாத வகையில் பாடலின் உழைப்பும் வீணாகி விட்டது. ஆனால் வருஷங்கள் பல கடந்தும் இன்றும் கேட்க இதமான ராகம் இது

இதே படத்தில் இன்னும் ஓர் ஜாலியான பழைய பாடல். நம் மனதை குஜாலாக குதுகலப்படுத்தும் இதுபோல அழகான வரிகள் //பொல்லாத பருவம் துடிக்கின்ற வயசு, கொல்லாமல் என்னை அணைக்கின்ற புதுசு, எல்லாமே புதுசு இனிக்கின்ற மனசு, வாய்யா..அய்யோஓஓ.. பக்கத்துல வாய்யா..ம்ஹாஆஆ// மறுபடியும் இந்த மாதிரி பாடல்கள் எப்போது கேட்க போகிறோம் என்ற ஆவல் அதிகரிக்கிறது. எல்லோரும் பாடலை கேட்டு ஜாலியாக, சந்தோசமா இருங்க.

பாலாவின் துள்ளல் குரலும் அதிலும் அந்த வாம்மா பக்கத்திலே வாம்மா என்று சொல்லும் போது ஒரு குழைவு வோவ் மார்வலஸ்

படம்: உறவாடும் நெஞ்சம்
இயக்குனர் தேவராஜ் மோகன்
தயாரிப்பாளர் வி. கந்தசாமி
ஸ்ரீ விஷ்ணுபிரியா கிரியேஷன்ஸ்
நடிப்பு சிவகுமார், சந்திரகலா
இசையமைப்பு இளையராஜா
வெளியீடு நவம்பர் 27, 1976

நெனச்செதெல்லாம் நடக்க போற நேரத்திலே வாடி
என் காதல் ராணி நான் தானே தேடி
நெனச்செதெல்லாம் நடக்க போற நேரத்திலே வாடி
என் காதல் ராணி நான் தானே தேடி

இது தானா மோகம் இது ஒரு நாளில் தீரும்
என் காதல் ராஜா நான் தானே ரோஜா

நெனச்செதெல்லாம் நடக்க போற நேரத்திலே வாய்யா
என் காதல் ராஜா நான் தானே ரோஜா

செந்தாழம் பூக்கள் சிரிக்கின்ற நேரம்
செவ்வாயில் மீன்கள் வருகின்ற நேரம்
தனியாக வந்தால் கதை நூறு சொல்வேன்
வாம்மா
ம்
பக்கத்துல வாம்மா
ம்ஹும்

என் காதல் ராணி நான் தானே தேடி
நெனச்செதெல்லாம் நடக்க போற நேரத்திலே வாடி
என் காதல் ராணி நான் தானே தேடி

இரவோடு நிலவு கதை பேசும் போது
உறவாடும் நெஞ்சம் விளையாட வேண்டும்
பொன்மேனி என்றும் பூவாட வேண்டும்

வாய்யா
ம்ஹாஆ
பக்கத்துல வாய்யா
ம்ஹஹஹஹா

என் காதல் ராஜா நான் தானே ரோஜா
நெனச்செதெல்லாம் நடக்க போற நேரத்திலே வாயா
என் காதல் ராஜா நான் தானே ரோஜா

பொல்லாத பருவம் துடிக்கின்ற வயசு

சொல்லாமல் என்னை அணைக்கின்ற புதுசு

எல்லாமே புதுசு இனிக்கின்ற மனசு

வாய்யா

அய்யோஓஓ

பக்கத்துல வாய்யா

ம்ஹாஆஆ

என் காதல் ராஜா நான் தானே ரோஜா

என் காதல் ராணி நான் தானே தேடி

http://www.inbaminge.com/t/u/Uravadum%20Nenjam/

இந்த பாடலுக்கு ஒளி காட்சி கிடைக்குமா ?

http://i33.servimg.com/u/f33/18/11/56/22/uravaa10.jpg

vasudevan31355
4th September 2014, 05:56 PM
மோகமுள் படத்தின் நாயகி அர்ச்சனா ஜோக்லேக்கர்.

http://video.tamilsway.com/wp-content/uploads/sites/5/2013/10/archana-founds-abhisekh-mogha-mull-tamil-film.jpg

vasudevan31355
4th September 2014, 05:56 PM
http://i.ytimg.com/vi/Fx-XxUla8cw/maxresdefault.jpg

vasudevan31355
4th September 2014, 05:57 PM
கிருஷ்ணா சார்

நீங்கள் குறிப்பிட வாணி என்ற நடிகை. இவர் ஷபானா என்ற பெயரில் பாலச்சந்தரின் 'ஒரு வீடு இரு வாசல்' படத்தில் நடித்திருந்தார் என்று நினைவு. பாலச்சந்தரின் 'ரயில் சிநேகிதம்' தொலைகாட்சி சீரியல்களிலும் பார்த்த நினைவு இருக்கிறது.

http://i.ytimg.com/vi/l46UYIz7Qu8/maxresdefault.jpg

vasudevan31355
4th September 2014, 05:59 PM
http://3.bp.blogspot.com/-6LJ0ENi6__4/ULxhQX_nbCI/AAAAAAAAK7U/E_z-3PJXN-E/s1600/scan0009.jpg

http://1.bp.blogspot.com/-PE0GPyRgxCM/ULxhRwYwOtI/AAAAAAAAK7c/o37fod00ITI/s1600/scan0010.jpg

vasudevan31355
4th September 2014, 06:04 PM
அர்ச்சனா ஜோக்லேக்கர்.

http://www.joinfilms.com/sites/default/files/archana_joglekar3.jpg

http://www.cinema.marathifanbook.com/wp-content/uploads/2013/11/Archana-Joglekar-22.jpg

http://archanaarts.us/Images/shakuntal2.gif

http://archanaarts.us/Images/shakuntal3.gif

http://img.india-forums.com/wallpapers/1024x768/308425-archana-joglekar-performs-at-the-50th-year-of-celebrations-of-a.jpg

vasudevan31355
4th September 2014, 06:07 PM
சி.க. ஸ்பெஷல் :tongueout:

http://img.india-forums.com/wallpapers/1280x800/308426-archana-joglekar-with-her-mother-at-the-50th-year-of-celebratio.jpg

mr_karthik
4th September 2014, 06:20 PM
என் விருப்பம் (7)

இந்தப்பாடல் படத்தில் இரண்டுமுறை இடம்பெறும். முதல்முறை படம் பார்க்கும் நம்மை ஏமாற்றுவதற்காக. இரண்டாம் முறை நம்மை மகிழ்விப்பதற்காக (இயக்குனர் சி.வி.ஆர். குரல்: 'ஏமாற்றுவதற்காக என்று ஏன் எடுத்துக்கொள்கிறீர்கள்?. கதாநாயகி ஒரு திரைப்பட நடிகை என்று அறிமுகப்படுத்துவதற்காக என்று எடுத்துக்கொள்ளுங்களேன்') . இருந்தாலும் இப்படியா?. எடுத்த எடுப்பிலேயே கதாநாயகியை திருமணம் ஆனவளாக, அதுவும் ஹீரோ அல்லாத வேறு ஒருவருடன் காட்டி கலங்கடிப்பது?. பாடிக்கொண்டே வருபவர் கால் சற்று இடறியதும் ஸாரி சொல்லும்போதே நாம் விழித்துக்கொள்கிறோம். பாடல் முடியும்போது காமிராவையும் பட யூனிட்டையும் காண்பித்து, டைரக்டர் 'கட்' சொன்னதும், நமக்கு புரிந்துவிடுகிறது ஓ. இவங்க சினிமா நடிகையா? இவ்வளவு நேரம் ஷூட்டிங்தான் நடந்ததா?. என்று நிம்மதி அடைகிறோம்.

மீண்டும் அதே போன்றதொரு சிச்சுவேஷன். இப்போது கதாநாயகனுடன். ஆனால் போலியான நடிப்புக்காக அல்ல. நிஜமான காதலுடன் மனம் ஒன்றிப்போக மனம் பாடவேண்டும் என்று நாடுகிறது. நடிப்புக்காக தான் ஏற்கெனவே பாடிய அந்தப்பாடல் நினைவுக்கு வர மனம் நிறைந்த பூரிப்புடன் பாடுகிறாள்.

அதே முன்னிசையுடன் பாடல் துவங்குகிறது. முதலில் சிதாரின் வருடல், அடுத்து வயலினைத்தொடர்ந்து புல்லாங்குழலின் சிறிய இடையீடு, மீண்டும் சிதாருடன் தொடர்ந்து வயலினில் உச்சத்தில் தூக்கி நிறுத்த, இசையரசியின் தேன்குரலில் பல்லவி ஆரம்பம்...

ஆலயமாகும் மங்கை மனது - அதை
அன்றாடம் கொண்டாடும்
காலைப்பொழுதூ ஊ ஊ ஊ காலைப்பொழுது
ஒரு ஆலயமாகும் மங்கை மனது

காதலனுக்கு சமைத்துப்போட்டு அலுவலகம் செல்பவனை முகமலர்ச்சியோடு அனுப்பி வைக்கும்போது கிட்டத்தட்ட ஒரு மனைவி போலவே உரிமையெடுத்துச்செய்யும் அவள் உற்சாகம் என்ன அருமையாக நம்மையும் தொற்றிக்கொள்கிறது. வாழ்ந்தால் இப்படி ஒரு கணவனோடு வாழ வேண்டுமென்ற ஆசை அவளுக்கு. வாந்தால் இப்படியொரு மனைவியோடு வாழ வேண்டுமென்ற ஆவல் நமக்கு.

சரணத்திலும் என்ன ஒரு நளினம்...

மன்னன் இட்ட தாலி பொன்வேலி
மானம் என்னும் வேலி தன் வேலி
குலமகள் அவள் தோற்றம் குங்குமச்சிலையாக
குலமகள் அவள் தோற்றம் குங்குமச்சிலையாக
நாயகன் கைகளில் நாயகி ஆடிடும்

ஒரு ஆலயமாகும் மங்கை மனது - அதை
அன்றாடம் கொண்டாடும்
காலைப்பொழுதூ ஊ ஊ ஊ காலைப்பொழுது
நல் காலைப்பொழுது

‘காலைப்பொழுது’ என்ற வரியை மூன்று முறை பாடும்போதும் மூன்று விதமான மாடுலேஷன்களுடன் பாடி அசத்தும் இசையரசி, அவரை அப்படி பாடவைத்த மெல்லிசை மன்னர்...

வேலைமுடிந்து வீடு திரும்பிய காதலன், தன் ஜெர்க்கின்ஸ் உள்ளேயிருந்து எடுத்துக்கொடுக்கும் மல்லிகைப்பூவை வாங்கிக்கொண்டு போகும்போது நாயகியின் அந்த துள்ளல் நடையில்தான் என்னவொரு உற்சாகம். அதை ரசித்துக்கொண்டே சோபாவில் அமரும் காதலனிடம், தானே தயாரித்த வடைகளை தட்டில் வைத்து நீட்ட, தட்டை வாங்கிக்கொள்ளும் நாயகன் முதலில் ஒரு வடையை எடுத்து அவளுக்குக் கொடுக்க, தானேசெய்த வடையாயிருந்த போதிலும் அதை காதலன் கையிலிருந்து பெறும்போது பலமடங்கு உற்சாகமும் மலர்ச்சியுமாக வாங்கி சாப்பிடும்போது அவள் முகத்தில்தான் என்னவொரு காதல் ('பஞ்சு மிட்டாய் அஞ்சு ரூபாய், நீ பாதி தின்று தந்ததால் லட்ச ரூபாய்') . அதுதானய்யா காதலின் சக்தி.

கட்டில் தந்த பாட்டு பாராட்டு
தொட்டில் தந்த பாட்டு தாலாட்டு

என்ற வரிகளில்தான் அவள் முகத்தில் என்னவொரு வெட்கம்...

தேவனின் சந்நிதி தேவியின் நிம்மதி

ஒரு ஆலயமாகும் மங்கை மனது - அதை
அன்றாடம் கொண்டாடும்
காலைப்பொழுதூ ஊ ஊ ஊ காலைப்பொழுது
நல் காலைப்பொழுது

என்று முடிக்கும்போது, அதுவரை இருந்த உற்சாகமெல்லாம் இருவருக்கும் ஏக்கமாய் மாற, இன்னும் தங்களுக்கு திருமணம் ஆகவில்லை என்ற உண்மை உணர்த்த, தடுப்பின் அந்தப்பக்கம் படுக்கபோகும் அவளுக்கு நாயகன் போர்வையை எடுத்துத்தர, மேற்கொண்டு பல்லவியைப்பாடமுடியாமல் அவள் ஏக்கத்துடன் பார்க்க தன் இனிய இசையாலே பாடலை முடிக்கும் மெல்லிசை மன்னர்.

சுமதி என் சுந்தரி திரைக்காவியத்தைப் பிடிக்காதவர்களே இருக்க முடியாது என்று சொல்லுமளவுக்கு எல்லா வயதினரையும் வசப்படுத்தும் இப்படத்தில், இந்தப்பாடல் காட்சியில்தான் நடிகர்திலகமும், இன்றைய 'மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா' வாக ஆகிப்போன அன்றைய எங்கள் கலைச்செல்வியும்தான் எவ்வளவு ஒன்றிப்போய் நடித்திருப்பார்கள்.

மெல்லிசை மன்னரின் தனித்த இசையில் 1971-ம் ஆண்டு வந்த இந்தப்பாடல், 60-களின் எந்தவொரு பாடலுக்கும் குறைந்ததல்ல என்பதை முத்தாய்ப்பாக சொல்லி முடிக்கிறேன்.

vasudevan31355
4th September 2014, 06:26 PM
நெனச்செதெல்லாம் நடக்க போற நேரத்திலே வாடி
என் காதல் ராணி நான் தானே தேனி

இவளவுதான் கெடச்சுது


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=KLM5XthTkQQ

vasudevan31355
4th September 2014, 06:33 PM
டியர் கார்த்திக் சார்,

ஆலயமாகும் மங்கை மனது - அதை
அன்றாடம் கொண்டாடும்
காலைப்பொழுது காலைப்பொழுது
ஒரு ஆலயமாகும் மங்கை மனது

அருமை.

ஒவ்வொரு வரிக்கும் ரசமான விளக்கம். நீங்கள் ஏன் இந்தப் பாடலை எடுத்துள்ளீர்கள் என்பது சூசகமாகப் புரிகிறது.

நீங்கள் என்னதான் பிரயத்தனம் எடுத்தாலும் நடப்பது நடந்து கொண்டுதான் இருக்கும்.

முதல்முறை சுதர்சன் சினிமா நாயகனுடன் நாயகி சுமதி


https://www.youtube.com/watch?v=oO4MSWUO9oM&feature=player_detailpage

இரண்டாம் முறை நம் நாயகருடன் நாயகி சுந்தரி


https://www.youtube.com/watch?v=UZtITycERbo&feature=player_detailpage

gkrishna
4th September 2014, 07:08 PM
என் விருப்பம் (7)

தமிழ்த்திரையிசையின் இருண்ட காலத்தில் (1971) வந்த ஒரு பாடல்..

சுமதி என் சுந்தரி திரைக்காவியத்தைப் பிடிக்காதவர்களே இருக்க முடியாது என்று சொல்லுமளவுக்கு எல்லா வயதினரையும் வசப்படுத்தும் இப்படத்தில், இந்தப்பாடல் காட்சியில்தான் நடிகர்திலகமும், இன்றைய 'மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா' வாக ஆகிப்போன அன்றைய எங்கள் கலைச்செல்வியும்தான் எவ்வளவு ஒன்றிப்போய் நடித்திருப்பார்கள்.

மெல்லிசை மன்னரின் தனித்த இசையில் 1971-ம் ஆண்டு வந்த இந்தப்பாடல், 60-களின் எந்தவொரு பாடலுக்கும் குறைந்ததல்ல என்பதை முத்தாய்ப்பாக சொல்லி முடிக்கிறேன்.

தமிழ்த்திரையிசையின் இருண்ட காலத்தில் 1971

வாசு சார்
மனசாட்சியை துறக்காமல் எழுதி உள்ளார் கார்த்திக் சார்

கலைச்செல்வி தோசை கல்லை பேப்பர் கொண்டு தேய்த்து பின் தோசை சுடுவது (முறுகல் வடபழனி நெல்லை சைவ பிள்ளை முத்து லக்ஷ்மி பவன் ) அப்படி சுட்ட முறுகல் தோசையை நம்மவர் ஒரு விள்ளல் விள்ளி தேங்காய் சட்னி முக்கி வாயில் போடும் அழகு . பின் வேலைக்கு கிளம்புவது . உடன் கலைச்செல்வி வீடு பெருக்கி சுத்தம் செய்வது . அப்போது ஒரு வேஸ்ட் பேப்பர் மட்டும் மாட்டாமல் பெருக்குவது . பின் காய் நறுக்குவது (முருங்கை சாம்பார் ) . நம்மவர் மாலையில் வீடு திரும்பிய உடன் இரண்டு வடை கொடுப்பது கொடுத்த இரண்டு வடையில் ஒன்றை நம்மவர் கலைச்செல்விக்கு கொடுப்பது .அதை வெட்கத்துடன் வாங்கி கொண்டு கலைச்செல்வி கடிப்பது

இருண்ட காலமாகவே இருந்து இருக்கலாம்

https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcRxUj7NV12p35X8FQs2HpUpQCKZ6tYUS-2OpFvvXKnUSvVFmL3NdQhttp://s2.dmcdn.net/ChzAq/x240-B4n.jpg

vasudevan31355
4th September 2014, 07:10 PM
சிகப்பும், வெள்ளையும் சேர்ந்து கட்டம் போட்ட கைலி அணிந்து மெல்லிய வெள்ளை கலர் ஷர்ட்டில் தலைவர் ரங்கநாதர் போல் பள்ளி கொண்டு உறங்கிக் கொண்டிருக்க நாயகி ஜெயா மேடம் ஸ்டவ்வில் (பித்தளை மண்ணெண்ணெய் பம்ப் ஸ்டவ்) காப்பி போட்டு கலந்து கொண்டுவந்து தலைவரைத் தட்டி எழுப்ப, தலைவர் எழுந்து உட்கார்ந்து, கண்களைக் கசக்கிக் கொண்டு காப்பியை கொஞ்சம் கூச்சத்துடன் வாங்கிக் கொள்வார். காபி அருந்தியபடி ஜெயாவை ஓரக்கண்ணால் பார்வை வேறு.

குளித்துவிட்டு வேறு கைலியில், அப்போது விற்பனையில் அதம் பறந்த புகழ் பெற்ற 'சுமதி என் சுந்தரி' (எல்லாத் துணிக்கடை வாசல் முன்னாலும் 'சுமதி என் சுந்தரி சட்டை கிடைக்கும்' என்ற போர்ட் வைத்திருப்பார்கள்) கட்டம் போட்ட ஷர்ட்டில் தோளில் துண்டுடன் வருவார். தோசை வார்க்கும் நாயகியை பார்த்தவாறு கடிகாரம் கையில் கட்டுவார் சிரித்தபடி. பின் வெளிர் சந்தனக் கலர் பேன்ட் ஷர்ட். சட்டையில் (மேல் பட்டனுக்கு பக்கத்தில் சைடில் இன்னொரு பட்டன் ஸ்டைலாக இருக்கும்) ஜெயா தரும் ஓவர் கோட்டை வாங்கிக் கொள்வார்.

http://i.ytimg.com/vi/UZtITycERbo/0.jpg

ஜெயா சாதம் வடித்து காய்கறியெல்லாம் நறுக்கி சமையலை முடித்தவுடன் வீட்டில் உள்ள பொருட்களையெல்லாம் துணியால் துடைத்து வைத்து வீட்டைப் பெருக்குவார். நடிகர் திலகம் வேலை முடித்து வந்து படு ஸ்டைலாக நடந்து வந்து கோட்டினுள் இருக்கும் மல்லிகைப் பூவை மேடத்திடம் தருவார்.

பின் கோட்டை கழற்றி வைக்கும் போது tuck in செய்திருப்பார். (ரொம்ப அழகாக இருக்கும்) ஜெயா வடை தந்தவுடன் அதை இதழ்களை விரிக்காமல் அழகாக ருசி பார்த்துவிட்டு (என்ன அழகாகச் சாப்பிடுவார்!) கண்களாலேயே அருமை என்பது போல பாவம் காட்டுவார். பின் இரவு வேளை. வேட்டி சட்டையில் இப்போது அமர்க்களம். அப்புறம்... அப்புறம்... அப்புறம்தான்.

gkrishna
4th September 2014, 07:15 PM
வாசு சார்

என்ன ஒற்றுமை நமக்குள் . இப்போது தான் கார்த்திக் சார் பதிவை பார்த்து விட்டு சு எ சு பற்றி எழுதி submit போட்டால் உங்கள் வரிகளில் காட்சி விரிகிறது . எண்ண பறவை சிறகடித்து சென்னையில் இருந்து நெய்வேலலிக்கு விண்ணில் பறக்குதுஅம்ம

vasudevan31355
4th September 2014, 07:16 PM
http://thumbnails107.imagebam.com/26605/4346fa266040791.jpg


http://thumbnails104.imagebam.com/26605/4ba340266040796.jpghttp://thumbnails105.imagebam.com/26605/5ee64b266040797.jpg
http://thumbnails104.imagebam.com/26605/a95dbe266040804.jpghttp://thumbnails107.imagebam.com/26605/b52f9a266040805.jpg
http://thumbnails102.imagebam.com/26605/933ac6266040801.jpghttp://thumbnails108.imagebam.com/26605/fff95d266040803.jpg

vasudevan31355
4th September 2014, 07:18 PM
கிருஷ்ணா சார்,

உண்மை! நீங்கள் 7.08 நான் 7.10 அவ்வளவுதான் வித்தியாசம். அருமையான 'தானே முளைத்த மரம்' பாடல் பார்த்தீர்களா?

gkrishna
4th September 2014, 07:29 PM
உண்மை! நீங்கள் 7.08 நான் 7.10 அவ்வளவுதான் வித்தியாசம். அருமையான 'தானே முளைத்த மரம்' பாடல் பார்த்தீர்களா?

அதை எழுத வந்தவன் கார்த்திக் சார் இன் நம்மவர் பதிவு படித்து விட்டு திசை மாறிய பறவை ஆகி விட்டேன் .

இதோ எந்தன் தெய்வம் நான் 1973 கால கட்டத்தில் சேலம் சங்ககிரி சிமெண்ட் தொழிற்சாலை மனமகிழ் மன்றம் சிறப்பு நிகழிச்சியில் பார்த்த படம் .அமுதம் pitcures சொந்தம் திரை படம் எடுத்த R வெங்கட்ராமன் தயாரிப்பு . எல்லோரும் அந்த படத்தில் அம்பிகை நேரில் வந்தாள் பாடலை சொல்லுவார்கள் . நம்ம சி கே கூட குறிப்பிட்டு இருந்தார் .
நீங்கள் குறிப்பிட்ட பாடல் வித்யாசமான பாடல் .
மேஜர்க்கு யோகம்

https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcTqyL3n1tAPKLbel_1iC0jLDIAm0c1DH GWz2nSS1bGDVrbgNwl_

உறவாடும் நெஞ்சத்தில் ஜெய் சங்கர் நினைவு இல்லையே

mr_karthik
4th September 2014, 07:31 PM
டியர் வாசு சார்,

'இதோ எந்தன் தெய்வம்' படத்தில் இடம்பெற்ற பாடலை இன்றைய ஸ்பெஷலாக தேர்ந்தெடுத்து அருமையாக விளக்கி விட்டீர்கள். பாடல் ரிலிசானபோதே பார்த்த படம். மேஜர் தாடியுடன் கையில் குழந்தையுடன் வித்தியாசமான கெட்டப்பில் இருந்த போஸ்டர்தான் படம் பார்க்கத் தூண்டியது. கூடவே நம் தலைவரின் பாடல்தான் டைட்டில்.

இப்படம் புன்னகையை அடுத்து அமுதம் பிக்சர்ஸார் தயாரிப்பு. இதனையடுத்து முத்துராமன், விஜயா, பிரமீளா நடித்த சொந்தம் படத்தை தயாரித்தனர். முதல் படம் கே.பி.இயக்கத்தில் வர, மற்ற இரண்டும் ஏ.சி.டி. இயக்கத்தில். இவற்றையடுத்து நமது 'அன்பே ஆருயிரே' தயாரித்தனர்.

இதோ எந்தன் தெய்வம் அப்போதைக்கு வந்த படங்களின் சாயல் இருந்தது. மேஜருக்கு நல்ல பெயர் வாங்கித்தந்தது...

vasudevan31355
4th September 2014, 07:31 PM
உறவாடும் நெஞ்சத்தில் ஜெய் சங்கர் நினைவு இல்லையே

அது ச்சும்மா விவரம் தெரியாத புள்ளைவ

vasudevan31355
4th September 2014, 07:35 PM
பென்சில் ஆர்ட்டில் சுந்தரனும், சுந்தரியும். இது எப்படி இருக்கு?

http://2.bp.blogspot.com/_78rwGPFYej0/SjO5YK3AdmI/AAAAAAAAARg/pK9c7KyKV_Y/s1600/2.jpg

vasudevan31355
4th September 2014, 07:37 PM
கிருஷ்ணா சார்,

முழுக்க முழுக்க உங்களுக்காக

http://4.bp.blogspot.com/_BbJAArGDIEA/R8T3hv3HRYI/AAAAAAAAC9E/L1JudDl2Rpo/s320/y+vijaya+12.jpg

mr_karthik
4th September 2014, 07:39 PM
டியர் கிருஷ்ணா சார்,

லக்ஷ்மி கல்யாணம் படத்தில் இடம்பெற்ற அருமையான 'ராமன் எத்தனை ராமனடி' பாடல் உருவான விளக்கம் அருமை. ராமாயணம், மகாபாரதக் காவியங்களின் சொல்லாடல்களை வைத்து கவிதை புனைவதில் வல்லவர் கண்ணதாசன் என்பதை முந்திய பக்கமொன்றின் பதிவில் தந்தீர்கள். அதை மெய்ப்பிக்கும் இன்னொரு பாடல் இது. தேர்ந்தெடுத்தமைக்கு பாராட்டுக்கள்...

vasudevan31355
4th September 2014, 07:40 PM
கிருஷ்ணா சார்,

நடன மாஸ்டரைத் தெரிகிறதா?

http://www.narthaki.com/ss/images/ul6.jpg

gkrishna
4th September 2014, 07:40 PM
வாசு சார்
ரயில் ச்நேஹம் தொலை காட்சி சீரியல் அறிமுக பாடல் நினைவிற்கு வந்து விட்டது


ரயில் ச்நேஹம் ... ரயில் ச்நேஹம் ..
முதலும் இல்லாதது ,முடிவும் இல்லாதது ,
முகமே இல்லாதது ,அறிமுகமே இல்லாதது ...
விதையும் இல்லாமல் நிலமும் இல்லாமல்
மரமாய் உண்டாவது ....ரயில் ச்நேஹம் (2)

வாழ்கை இங்கு கொஞ்ச நேரம் வந்த தூரம் கொஞ்ச தூரம்
சொந்தமில்லை எந்த ஊரும் தேவை இல்லை ஆரவாரம் ...
தோளில் உள்ள பாரம் போதும் ..... நெஞ்சில் எனன வேறு பாரம் ...
நேற்று மீண்டும் வருவதில்லை ..நாளை எங்கே தெரியவில்லை ...
இன்று ஒன்று மட்டுமே உங்கள் கையில் உள்ளது ...
வாழ்க்கை வந்து உங்களை வாழ்ந்து பர்ர்கசொன்னது ...

முதலும் இல்லாதது ....

https://cascade.madmimi.com/promotion_images/0056/3397/original/tamil_plays_copy.jpg?1310163212

vasudevan31355
4th September 2014, 07:44 PM
http://www.narthaki.com/ss/images/ul2.jpg

http://www.narthaki.com/ss/images/ul4.jpg

http://www.narthaki.com/ss/images/ul3.jpg

http://www.narthaki.com/ss/images/ul5.jpg

http://www.narthaki.com/ss/images/ul9.jpg

http://www.narthaki.com/ss/images/ul10.jpg

http://www.narthaki.com/ss/images/ul11.jpg

vasudevan31355
4th September 2014, 07:47 PM
கிருஷ்ணா சார்,

இந்தாங்கோ.

இந்த வீணைக்குத் தெரியாது
இதைச் செய்தவன் யாரென்று


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=4EU9RgQFBE8

mr_karthik
4th September 2014, 07:48 PM
டியர் வாசு சார் & கிருஷ்ணாஜி,

ஆலயமாகும் மங்கை மனது பாடலைப் பதித்ததும் அதற்கு சிறப்பு சேர்க்கும் வண்ணம் காட்சி விரிவாக்கம் என்ன, ஸ்டில்கள் என்ன, வீடியோ என்ன, விளக்கங்கள் என்ன அசத்தி விட்டீர்கள்.

இருவரும் அந்தக்காட்சியை அணு அணுவாக விவரித்திருக்கும் விதம் சூப்பர் சார். சும்மாவா?. கோடு போட்டால் ரோடு போடுபவர்கள் ஆயிற்றே...

vasudevan31355
4th September 2014, 07:49 PM
http://i.ytimg.com/vi/ChpJrtFRzSM/maxresdefault.jpg

gkrishna
4th September 2014, 07:50 PM
கிருஷ்ணா சார்,

நடன மாஸ்டரைத் தெரிகிறதா?


இவர் தானே அவர்

http://www.narthaki.com/ss/images/ul10s.jpg

udupi lakshmi narayan
இவரின் சீடர் தானே பிரபு தேவா வாசு சார்

http://www.narthaki.com/ss/images/ul13.jpg

gkrishna
4th September 2014, 07:59 PM
From Lakshminarayan chroeographer

Reminiscing about his younger days, Guru Udupi Laxminarayan holds one episode very dear to his heart. “I have come across many unforgettable incidents through which I have learnt the practicality of life and which have also added pride to my life's achievements. One of it involves eminent actor Sivaji Ganesan. I was once offered a program in Mangalore, Karnataka, for which I planned to perform a dance drama called Dharmamoorthi (depiction of Jesus Christ). Sivaji Ganesan was to preside over the function. Unfortunately due to very bad climatic conditions, all the flights were cancelled. Despite the difficult and risky journey by road, Sivaji Ganesan opted to drive all the way from Chennai to Mangalore because of the respect and love he had for me since I had worked with him in many films as a choreographer.

http://www.natyamanjari.com/images/gallery/4.jpg

vasudevan31355
4th September 2014, 08:10 PM
அவரே கிருஷ்ணாஜி.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/efg.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/efg.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/wqewfgh.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/wqewfgh.jpg.html)


கொஞ்ச நாளைக்கு முன்னாடி 'ஜஸ்ட் ரிலாக்ஸ்' பகுதியில் 'சுமதி என் சுந்தரி படத்தில் வரும் எல்லோருக்கும் காலம் வரும் பாடலைப் பற்றி எழுதி இருந்தேன். அப்பாடலில் நட்டுவனார் போல ஒருவர் ஆடுவாரே. அவர் இவரேதான். அருமையான நடன இயக்குனர். காமெடியும் பிரமாதம்.

இன்று கார்த்திக் சார் 'சுமதி என் சுந்தரி' எடுக்கவும், இவரை நாம் நினைவு கூரவும் சரியாக அமைந்துவிட்டது.

vasudevan31355
4th September 2014, 08:12 PM
http://www.narthaki.com/info/profiles/images/prof159a.jpg

Guru Udupi Laxminarayan
Compiled by: Lalitha Venkat

March 18, 2014

Guru Udupi Laxminarayan was born on September 17, 1926 into a family of orthodox Sanskrit scholars. As per the family tradition, Laxminarayan leant the Vedas and Sanskrit and after six years of school, joined the local Sanskrit college known as Sriman Madhwa Siddhanta Samskrita Mahapatasala. He enrolled himself in Bharatiya Nritya Kala Kendra at Dharwar to learn Carnatic music, but ended up learning dance from Srinivas Kulkarni, the principal of Bharatiya Nritya Kala Kendra.

He moved to Chennai when he felt he wanted to further his training in classical dance. He learnt Bharatanatyam from Kanchipuram Ellappa Mudaliar through Gurukulavasam. Ellappa was a perfectionist who would spend even two months teaching a single adavu, if that was necessary. This approach also helped him to check if Laxminarayan was serious about learning Bharatanatyam. It was almost a year before the natyacharya began to teach Laxminarayan seriously but to compensate for this, he got him ready for the stage in another year. Curiously, he had not been told that the young man from Udupi had already received some training in dance.

Apprenticeship under Ellappa was a marvelous learning experience for Laxminarayan. In the 7 years of Gurukulavasam, he had to observe everything that his guru taught his students. His guru took him to watch programs of luminaries like Balasaraswati. All this was his training and inspiration. Apart from dance, his guru taught him Tamil; the importance of enunciating and understanding the lyrics of a song properly; the need to apply his mind to the meaning of the songs; and the art of nattuvangam and the skills needed for it, especially how to utter the jatis with the proper intonation and the appropriate stress on 'vallinam' and 'mellinam.' Even during his learning period, Laxminarayan had opportunities to practice what he had learned, for Ellappa would send him as a substitute to conduct the recital of one or the other disciples whenever he himself could not do so.

http://www.narthaki.com/ss/images/ul12.jpg

In 1963, he passed the Government Higher Grade examination in dance with a first class. Knowledge of theory is essential for this course and Laxminarayan studied all the relevant texts on dance in the original Sanskrit language. Laxminarayan's first major appearance on stage was as a member of the dance group of Bhaskar Roy Chowdhury, who was also a disciple of Ellappa.

With his guru's permission, in 1962 he started a dance company Natya Manjari in Chennai. There were not many male dancers those days. Ladies have natural body glamour but surviving as a male dancer was rather difficult. When he started his dance troupe, he had no help coming in despite his asking, so he had to do something to sustain his 25 member troupe. In those days, classical dance was the base for film song and dance choreography. Thus, Laxminarayan entered the world of cinema as a dancer and later directed dance in innumerable films.

He has danced in movies such as 'Raji My Darling,' 'Valliyin Selvan' and 'Paattum Bharatamum.' A versatile performer, he danced as Manmadha in a Rati-Manmadha sequence with senior Varalakshmi in 'Harischandra,' a Kathakali dance in 'Thirumalai Thenkumari,' and folk dances too to name a few. He has choreographed for a number of Kannada films including 'Purandaradasar,' 'Lakshmi Kalyanam,' the Shiva dance in 'Pon Oonjal,' Ramayanam song in 'Grahapravesham,' song with the baby in 'Galatta Kalyanam,' the train song in 'Sumathi en Sundari' in which he also dances. Among new age films, he has choreographed for 'Kaadhalan' and 'Jeans.' Laxminarayan has also acted in a Hindi film 'Kitna Badal Gaya Insaan' in a character role.

When he was invited by Sivaji Ganesan to compose dance for his film, the words of appreciation he received from the great actor was something that he would always cherish. There is no video proof of his dancing, just a few b & w photos and the one witness who has actually seen him perform in Sivaji's plays is Sivaji's son Ram Kumar!

Udupi Laxminarayan produced many innovative dance dramas like Dharmamoorthi, Shilpiyin Kanavu, Mayura Vijayam, Talatarangam, Chandragrahanam etc. He has trained number of students including Sujatha Srinivasan, Anandavalli, Jayanthi Ramanujam, Emi Mayuri, Divya Kasturi, Swathi Kamakshi, the incredibly flexible bodied film personality Prabhu Deva and his two brothers. He has given many lec-dems on different topics taking reference from Kalidasa's slokas. He has published a book Natanattil Pudiya Paathaigal which gives valuable information about dance. He has composed many items like Ganapathy stuthi, varnams, padams and tillanas in Sanskrit which his daughter Madhumathy Prakash has published as a book titled Udupi Spoorthi Ranjana. Daughter Madhumathy Prakash and granddaughter Mamtha Rao continue to propagate his teachings and dance style.

http://www.narthaki.com/ss/images/ul15.jpg

Once a year, Udupi Laxminarayan organizes a program titled 'Guru Charana Smaranam' to pay tribute to the memory of his guru Ellappa Mudaliar. A DVD on 'Kanchipuram Style of Dance' was released in August 2012 during the celebration of 50 years of Natya Manjari which may well be the only school which follows the Kanchipuram style of Bharatanatyam today. Guruji is a staunch supporter of the male dancer. “Unless you have the support of someone or family members, it is difficult for a male dancer to come up, as he must also earn and support his family. It's a rarity to see male dancers perform. Instead of going for glamour, one must also see what male dancers can present, encourage them and help them come up in life.”

Reminiscing about his younger days, Guru Udupi Laxminarayan holds one episode very dear to his heart. “I have come across many unforgettable incidents through which I have learnt the practicality of life and which have also added pride to my life's achievements. One of it involves eminent actor Sivaji Ganesan. I was once offered a program in Mangalore, Karnataka, for which I planned to perform a dance drama called Dharmamoorthi (depiction of Jesus Christ). Sivaji Ganesan was to preside over the function. Unfortunately due to very bad climatic conditions, all the flights were cancelled. Despite the difficult and risky journey by road, Sivaji Ganesan opted to drive all the way from Chennai to Mangalore because of the respect and love he had for me since I had worked with him in many films as a choreographer. During the presentation, there was pin drop silence in the auditorium and at the time of crucifixion of Christ, one could hear the whispers and see the tears. The Bishop, who was also the chief guest, appreciated my performance as he felt it was realistic and natural, be it the crucifixion of the Lord or the depiction when he woke up on the 3rd day. This is just one of the many memorable incidents that I have experienced in my lifetime.”

Some of his honors and awards include: Bharatanatya Chakravarthy - 1985 (Gnanananda Seva Samajam and Bhagavata Sammelana Samajam, Chennai), Karnataka Kalashree by the Karnataka state government - 2002, Acharya Choodamani by Sri Krishna Gana Sabha, Chennai - 2002, Kalaimamani by the Tamilnadu state government – 2003, Natya Kalanidhi by Association of Bharatanatyam Artistes of India (ABHAI), Nartaka Award - 2010.

madhu
5th September 2014, 05:43 AM
நதியின் வேகத்தோடு அடித்துச் செல்லப்படும் துரும்பின் மீது பயணிக்கும் எறும்பின் நிலை.. எத்தனை பதிவுகள் ? எத்தனை விவரங்கள் ?
சேமித்து வைக்க பெட்டகம் போதாதே !

அக்கரைப் பச்சை முதல் உடுப்பி லக்ஷ்மி நாராயண் வரை மீண்டும் பத்து ப்தினொரு பக்கங்களில் லட்சக் கணக்கான ஐட்டம்ஸ் பரிமாறி விருந்து..

எமரால்டு தியேட்டரில்தானே "மரோ சரித்ரா" வருடக் கணக்கில் ஓடியது ? ராஜராஜ சோழன் வெளியான போது ஆனந்த் தியேட்டர் வாசலில் மவுண்ட் ரோடு ஜன நெரிசலில் சிக்கிக் கொண்ட காலம்... !!
ஜி.என்.செட்டி ரோடுக்குள் வந்து விட்டால் சன் தியேட்டர்.

நாங்க எல்லாம் ரங்கநாதன் தெருவில் கிரிக்கெட் ஆடியவங்க.. அதனால் ராஜகுமாரி, கிருஷ்ணவேணி, நூர்ஜஹான், ஜெயராஜ், ஸ்ரீனிவாசா, நேஷனல், சன் இப்படியே காலம் தள்ளிடுவோம்.
( அதிலேயும் கிருஷ்ணன்னு என் ஃப்ரெண்ட் ஒருத்தன் அப்பவே வித விதமாக ஆராய்ச்சி செய்வான். அதாவது ஒன்பது எழுத்து படம் கிருஷ்ணவேணியில் ரிலீஸ் ஆனா அங்கே நூறு நாள் ஓடுமாம்.. அன்று கண்ட முகம், திருமலை தென்குமரி etc.. அஞ்சு எழுத்து என்றால் மற்ற தியேட்டர்களில் ஓடினாலும் இங்கே ஐம்பது நாளில் தூக்கிடுவாங்களாம்.. மன்னிப்பு, பாதுகாப்பு.. இதெல்லாம் எந்த அளவுக்கு சரின்னு இப்போ கேள்வி வருது. ... )

சரி.. முக்கியமான விஷயத்துக்கு வர்ரேன்..
படத்தில் இடம் பெறாமல் போன வைரங்களில் ஒன்று மனக்கண்ணில் மின்னுது..

சுசீலாம்மாவின் குரலின் ஆழம் இந்தப் பாடலில் அங்கங்கே சில வார்த்தைகளில்
தனியாக ஜொலிக்கும். (உ-ம்) "போனாலும்"... ம்ம்.. இதை விவரிக்க எனக்குத் தெரியவில்லை. சிக்கா.. விருத்தம் பாடாமல் உரை நடையில் விளக்குக.

இது விஜயகுமாரிக்காக உருவான பாடல் என்பதால் அந்த துடிக்கும் மேல் உதடு ( not Male ), சுழிக்கும் கீழ் உதடு, நடுங்கும் கன்னப்பகுதி, படபடக்கும் கண்ணீர் வழியும் கண்கள் என்றெல்லாம் படமாக்கப் பட்டு இருக்கலாம்.

அதிர்ஷ்டமோ துரதிருஷ்டமோ... இது படத்தில் இடம் பெறவில்லை. நானும் ஒரு பெண் மறைத்து வைத்திருக்கும் அரிய பாடல் இதோ..

கண்ணழகின் சன்னதியில் காத்திருந்தேன்
உன் கனி முகத்தின் தரிசனத்தைப் பார்த்திருந்தேன்
இன்னமுதப் பேச்சினிலே மயங்க வைத்தாய்
உன் இதயத்திலே எனக்கு ஒரு இடம் கொடுத்தாய்

( கண்ணழகின் )

வண்ண மலர்ச் சிரிப்பை எல்லாம் வழங்க வந்தாயே
எண்ணமதில் ஊர்வலமாய் எழுந்து வந்தாயே
வாழ்க்கை எனும் போர்க்களத்தில் எனைப் பிடித்தாயே
இன்ப வரம் கொடுத்து அன்பினிலே மகிழ்ந்திருந்தாயே

( கண்ணழகின் )

மணமேடை வாசலிலே வந்து நின்றேனே
மலை போன்ற துயரம் அங்கே கண்டு நின்றேனே
மயங்காதே என்று சொல்லி தேற்ற வந்தாயே
மனைவி என்ற பெருமை தந்து காக்க வந்தாயே

( கண்ணழகின் )

உன்னைக் கண்ட கண் ஒரு நாள் ஓய்ந்து விடும்
உனக்கு உணவளித்த கை ஒரு நாள் சாய்ந்து விடும்
என் உயிர் பறந்து போனாலும் உறவிருக்கும்
என் உள்ளம் என்றும் உன் மடியில் தவமிருக்கும்

( கண்ணழகின் )

மேலதிக விவரங்களை நண்பர்களிடம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

rajeshkrv
5th September 2014, 05:58 AM
மதுண்ணா அருமை அருமை

Richardsof
5th September 2014, 06:19 AM
RADHA SALUJA- 1970

http://i58.tinypic.com/8wxjly.jpg

Richardsof
5th September 2014, 06:23 AM
http://i57.tinypic.com/2zxytyb.jpg

Richardsof
5th September 2014, 06:24 AM
http://i60.tinypic.com/2vrzp7s.jpg

Richardsof
5th September 2014, 06:27 AM
http://i58.tinypic.com/316nrc3.jpg

Richardsof
5th September 2014, 06:30 AM
http://youtu.be/PfZLx0Ed-4E

rajeshkrv
5th September 2014, 06:55 AM
எஸ்.வி ஜி
அருமை
ஹிந்தி எதிர் நீச்சலில் ஜெயந்தி வேடமேற்றவர் ராதா சலூஜா. நல்ல அழகு அந்தோ பரிதாபம் தமிழில் அழகுபதுமையாக வலம் வந்தவர்

rajeshkrv
5th September 2014, 08:25 AM
வாசு ஜி

நீங்கள் அளித்த தம்பி பொண்டாட்டி பாடல் அருமை.. ஆம் அந்த படத்தில் அனைத்து பாடல்களும் வித்தியாசமாகவும் அருமையாகவும் இருக்கும்.

பாடலை அளித்ததற்கு நன்றி.

இதோ உங்களுக்காக இன்றைய கன்னட கஸ்தூரி

இசையரசியின் குரலில் அற்புதமான பாடல்

பந்தே பருத்தாவா காலா

http://www.youtube.com/watch?v=7Nn9yVNpFvk

Richardsof
5th September 2014, 09:55 AM
http://i60.tinypic.com/b3vd35.jpg

http://youtu.be/bfYrYPTGkkg

gkrishna
5th September 2014, 09:56 AM
மது சார்

அருமையான மலரும் நினைவுகள் சென்னை பிற பகுதி முக்கியமாக மாம்பலம் சைதாபேட்டை தொகுதி திரை அரங்குகளை நினைவு கூர்ந்து உள்ளீர்கள் . இன்னும் நினைவில் வருவது ராம் திரை அரங்கு இன்று கல்யாண மஹால் . வடபழனி டு விருகம்பாக்கம் அன்னை கருமாரி,தேவி கருமாரி, சக்தி கருமாரி,(இந்த மூன்றும் பஸ் மாதிரி இருக்கும்) மற்றும் வேம்புலி அம்மன் எதிரில் நேஷனல் திரை அரங்கு என்று பல திரை அரங்குகள் . இந்த பக்கம் வந்தால் பரங்கிமலை ஜோதி ,பல்லாவரம் தேவி

நானும் ஒரு பெண் வெளிவராத பாடல் உங்களின் பன்முக திறமைக்கு சான்று .

எஸ்வி சார் அவர்களின் ராதா சலூஜா படங்கள் இதயக்கனி ,இன்று போல் என்றும் வாழ்க நினைவை ஏற்படுத்தியது . வாழ்க எஸ்வி சார்
வளர்க அவர்கள் பணி . ராதா சலுஜா பற்றி குமுதம் ஒரு வரி பஞ்ச் நினைவில் உண்டு - ராதா சலுஜா - பலூடா

வாசு சார் லக்ஷ்மி நாராயன் பதிவை சுமதி என் சுந்தரி 'எல்லோருக்கும் காலம் வரும் ' பாடலுடன் இணைத்து வெளியிட்ட படங்கள் அருமை

இன்று தமிழ் ஹிந்துவில் பழைய நடிகை டி வீ குமுதினி பற்றி எழுதி உள்ளார்கள் . இறுதியில் பெரிய ஓட்டை - டி வீ குமுதினி வியட்நாம் வீடு படத்தில் நடிகர் திலகத்தின் அம்மா என்று எழுதி உள்ளார்கள் . அந்த படத்தில் அவர் நடிகை பத்மினியின் அம்மா என்று நினைவு - நடிகர் திலகத்திற்கு அத்தை . படத்தின் இறுதியில் 'அத்தை நான் முந்திண்டா நேக்கு நீ முந்திண்டா நோக்கு ' வசனமே பெரிய கை தட்டலை பெற்ற நினைவு .

அசோக் குமார் படத்தில் தியாகராஜ பாகவதர் அவர்களுடன் கதாநாயகி குமுதினி

http://antrukandamugam.files.wordpress.com/2014/07/tv-kumudhini-mkt-ashok-kumar-19411.jpg?w=593&h=336

rajeshkrv
5th September 2014, 10:13 AM
கிருஷ்ணா ஜி எங்கே என் வணக்கம். உங்க பேச்சு கா :)

gkrishna
5th September 2014, 10:26 AM
எஸ்வி சார் அவர்களின் ராதா சலுஜா படங்கள் சில நினைவை எழுப்பி விட்டன . radha saluja 'அதான் அதான் அத்தே அத்தே வந்துடுவாங்கோ என்று கொஞ்சும் அழகு.

என் நண்பன் செல்லயா (MGR ரசிகன்) சொல்லும் சினிமாக்கதைகள் மிகப்பிரபலம்! வாத்தியார் வராத பீரியட்டில் சப்தம் போடாமல் ஏதாவது செய்யச்சொல்லி உத்தரவு வரும். அன்று அவன் காட்டில் மழை. மொத்த கிளாசுக்கும் தான் பார்த்த புதுப் படத்தை காட்சி வாரியாக சொல்லுவான். ஒரு முறை ‘இதயக்கனி’ கதை சொல்கையில் பக்கத்து வகுப்பு ஆசிரியரிடம் பிடிபட்டான்.

பெரிதாக சத்தம் போட்ட பின், “சரி, கதையை முடிச்சுக்கோ. ஆனால் ராதா சலுஜா வர்ற சீன் எல்லாம் கொஞ்சம் சென்சார் பண்ணிச் சொல்லு” என்று அவர் சொன்ன போது மொத்த கிளாசும் ஆரவாரமாய் கை தட்டியது!

http://i58.tinypic.com/67l7rs.jpg

gkrishna
5th September 2014, 10:27 AM
கிருஷ்ணா ஜி எங்கே என் வணக்கம். உங்க பேச்சு கா :)

அண்ணா னு சொல்லவா தம்பி னு சொல்லவா

மன்னிக்கணும் அவசரத்தில் உங்களை கவனிக்காமல் விட்டு விட்டேன்
ராதா சலுஜா படுத்திட்டா

gkrishna
5th September 2014, 10:29 AM
இதயக்கனி இசையரசி,சாய்பாபா ,பாடகர் திலகம் பாடல்

ஒரு பக்கம் கண்ணாடி வெண்ணிற ஆடை நிர்மலா (அப்படியே தலை வாரலாம்) மறுபக்கம் ராதா சலுஜா இது போதாது ட்விஸ்ட் ஆடும் மனோகர் கனகதுர்கா 555 ஓர் வில்ஸ் பில்ட்டர் சிகரட் உடன் ராஜா சுலோச்சனா (கொள்ளை கூட்ட பாஸ் )

கொடுத்து வைத்த ரசிகர்கள்

அழகை வளர்ப்போம் நிலவில் மயங்கி
இரவை ரசிப்போம் கனவில் உலவி

தொட்ட இடம் எல்லாம் தித்திப்புடன் இருக்கும்
முத்து தமிழ் மாது
தத்தை மொழி சொன்னால்
தொட்ட இடம் எல்லாம் தித்திப்புடன் இருக்கும்
முத்து தமிழ் மாது
தத்தை மொழி சொன்னால்
பட்டு முகம் கொஞ்சம் வெட்கத்துடன் சிவக்க
முத்தம் அவள் தந்தாள்
மெத்தையிடும் முன்னால் என் மேலாடை தாலாட்ட
தேனோடு தேன் சேர
இன்பம் எங்கும் பொங்கும் பொங்கும்

தொட்ட இடம் எல்லாம் தித்திப்புடன் இருக்கும்
முத்து தமிழ் மாது
தத்தை மொழி சொன்னால்

Heyy wots ur name baby
Mala
OHH how sweet name...
really ya lovely name
come lets dance baby....

எங்கேயோ பார்த்த ஞாபகம்
ஞாபகம் ஞாபகம் ஞாபகம்
என் மேலே சாய்ந்த ஓவியம்
எங்கேயோ பார்த்த ஞாபகம்
பொன் வண்ணம் தேன் சிந்தும்
மலர்காவியம் மலர் காவியம்
எழில் ராணியின் இதழ் நாடகம் இதழ் நாடகம்
தமிழ் காதலின் புகழ் கோபுரம் புகழ் கோபுரம்
அகப் பாடலின் சுமை தாங்குமே
சுமை தாங்கியும் இமை மூடியும் சுகம் காணலாம்
அசல் இவ்விடம் நகல் அவ்விடம்
அழகென்பதே விஷமாகுமோ
எங்கேயோ பார்த்த ஞாபகம்
என் மேலே சாய்ந்த ஓவியம்
பொன் வண்ணம் தேன் சிந்தும்
மலர்காவியம் ஆடை கட்டி
வந்து நிற்கும் மேடு
பள்ளமானதொரு பாவை விழி
ஜாடை முத்தம் போடுகின்ற ஆலவட்டம்
மீறுகின்ற போதை
வீணை மட்டும் பேசுகின்ற வாணி
பெற்ற பேரை வெல்க
வார்த்தை இவள் ஆணை
வென்று வீழ்த்துகின்ற சேனை கொண்ட
காதல் தேவன் கோட்டை காதல் தேவன் கோட்டை

தொட்ட இடம் எல்லாம் தித்திப்புடன் இருக்கும்
முத்து தமிழ் மாது
தத்தை மொழி சொன்னால்

தளிர் மேனியில் விரல் பட்டதும் குளிர் போனதே
குளிர் போனதும் மழை கூந்தலின் புகழ் பாடினேன்
புகழ் பாடியே தினந்தோறுமே
முகம் தேடினேன் முகம் கண்டதும்
புது காதலில் நடமாடினேன்
சுகம் எவ்விடம் துயர் அவ்விடம்
சுடர் என்பதே வெறுப்பாகுமோ
எங்கேயோ பார்த்த ஞாபகம்
என் மேலே செய்த ஓவியம்
பொன் வண்ணம் தேன் சிந்தும் மலர்காவியம்

பாடல் முடிவில் மெல்லிசை மன்னரின் saxophone ,triumpht ,பங்கோ எல்லாம் கலந்து பாடலை அப்படியே வாத்ய இசை ஆக தருவார்கள் அமர்களமான இருண்ட காலம் 1975

gkrishna
5th September 2014, 10:31 AM
புலமை பித்தன் மெல்லிசை மன்னர் பாடகர் திலகம் இசைஅரசி
பொங்கி வரும் காவேரி என்ன ஒரு கூட்டணி
கூடவே மக்கள் திலகம் பலூடா ராதா சலுஜா

இன்பமே.. உந்தன் பேர் பெண்மையோ
என் இதயக் கனி நீ சொல்லும் சொல்லில் மழலைக்கிளி
என் நெஞ்சில் ஆடும்பருவக்கொடி..
இன்பமே உந்தன் பேர் வள்ளலோ..
உன் இதயக் கனி நான் சொல்லும் சொல்லில்மழலைக்கிளி
உன் நெஞ்சில் ஆடும்பருவக்கொடி..
(இன்பமே)

சர்க்கரைப் பந்தல் நான் தேன்மழை சிந்த வா
சந்தன மேடையும் இங்கே சாகச நாடகம் எங்கே
தேனொடு பால் தரும் செவ்விளனீர்களை
ஓரிரு வாழைகள் தாங்கும்
தேவதை போல் எழில் மேவிட நீ வர
நாளும் என் மனம் ஏங்கும்
(இன்பமே)

பஞ்சணை வேண்டுமோ நெஞ்சணை போதுமே
கைவிரல் ஓவியம் காண
காலையில் பூமுகம் நாண
பொன்னொளி சிந்திடும் மெல்லிய தீபத்தில்
போரிடும் மேனிகள் துள்ள
புன்னகையோடொரு கண்தரும் ஜாடையில்
பேசும் மந்திரம் என்ன
(இன்பமே)

மல்லிகைத் தோட்டமோ வெண்பனிக் கூட்டமோ
மாமலை மேல் விளையாடும்
மார்பினில் பூந்துகிலாடும்
மங்கள வாத்தியம் பொங்கிடும் ஓசையில்
மேகமும் வாழ்த்திசை பாடும்
மாளிகை வாசலில் ஆடிய தோரணம்
வான வீதியில் ஆடும்
(இன்பமே)

gkrishna
5th September 2014, 10:35 AM
thanks to Maalaimalar

1975-ல் நினைத்ததை முடிப்பவன், நாளை நமதே, இதயக்கனி, பல்லாண்டு வாழ்க ஆகிய படங்கள் வெளிவந்தன.

இதில் "இதயக்கனி" மெகா ஹிட் படம். இது சத்யா மூவிஸ் தயாரிப்பு. எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்தவர் இந்தி நடிகை ராதா சலுஜா. மற்றும் மனோகர், கோபாலகிருஷ்ணன், கே.கண்ணன், ராஜசுலோசனா, பண்டரிபாய், நிர்மலா ஆகியோரும் நடித்தனர்.

பத்திரிகையாளராக இருந்து சினிமா டைரக்டரான ஏ.ஜெகந்நாதன் இப்படத்தை இயக்கினார். ஜெகதீசன் வசனம் எழுதினார்.

புலமைப்பித்தன் எழுதிய "இதயக்கனி", "நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற", "இன்பமே உந்தன் பேர் பெண்மையோ" ஆகிய பாடல்களும், வாலி எழுதிய "இதழே இதழே தேன் வேண்டும்", "புன்னகையில் கோடி" ஆகிய பாடல்கள் `ஹிட்' ஆயின.

"ராண்டார் கை" எழுதிய ஆங்கிலப்பாடல் ஒன்றும் இப்படத்தில் இடம் பெற்றது. உஷா உதூப் பாடிய அப்பாடல் ரசிகர்களிடம் பெரும் கைதட்டலைப் பெற்றது.

gkrishna
5th September 2014, 10:40 AM
http://www.aptalkies.com/modules/gallery/galleries/Movies/Tiger%20(1979)/covers/thumbs/Tiger%20(1979)%20Audio%20EPLP%20Gramphone%20Record %20Covers_aptalkies81EE43-597125.jpghttp://www.aptalkies.com/modules/gallery/galleries/Movies/Tiger%20(1979)/covers/thumbs/Tiger%20(1979)%20Audio%20EPLP%20Gramphone%20Record %20Covers_aptalkiesF61CB0-BC00B8.jpg

தெலுகு tiger படத்தில் ராதா சலுஜா NTR ஜோடி
ரஜினி சுபாஷினி இன்னொரு ஜோடி

madhu
5th September 2014, 11:02 AM
இதில் "இதயக்கனி" மெகா ஹிட் படம். இ
"ராண்டார் கை" எழுதிய ஆங்கிலப்பாடல் ஒன்றும் இப்படத்தில் இடம் பெற்றது. உஷா உதூப் பாடிய அப்பாடல் ரசிகர்களிடம் பெரும் கைதட்டலைப் பெற்றது.

இண்டர் நெட்டில் சுட்ட பாடல் வரிகள்

hello lover mister right
you're looking not so bright
come, come, hold me tight
ooh, that sets me alight

hello lover mister right
you're looking not so bright
come, come, hold me tight
ooh, that sets me alight

sha ba da ba di ba ba
sha ba da ba di ba ba

oh that cool moonlit night
twinkling stars and clouds in flight
oh that cool moonlit night
twinkling stars and clouds in flight
you and me
me and you
oh, sure delight
ooh, that sets me alight
boy oh boy

hello lover mister right
you're looking not so bright
come, come, hold me tight
ooh, that sets me alight

di bap bap pa
shi bap pap pa
di bap bap pa

don't leave me in plight
I'll never let you out of sight
hello lover mister right
come, come, hold me tight
ooh, that sets me alight
oh boy

hello lover mister right
you're looking not so bright
come, come, hold me tight
ooh, that sets me alight

hey folks
I'm gonna tell you something really funny now
Once upon a time
there was a man, a woman and a lamp
now they say, three is a crowd
and so the lamp went out : )

come on now
let's really swing it
okay?
one two three four
yesterday has gone away
tomorrow is another day
yesterday has gone away
tomorrow is another day
sing
swing
sing swing and sway the glory
tut tut tu ru tu
tut tut tu ru tu
tut tut tu ru tu
tut tut tu ru tu
shi ba du pap pa
shi ba du pap pa
shi ba du pap pap pa
tut tut tu ru tu

http://youtu.be/uUiHEuSaJVM

gkrishna
5th September 2014, 11:10 AM
நெஞ்சில் ஆடும் பூ ஒன்று என்ற திரைப்படம் 1978-79 கால கட்டத்தில் சிலோன் வானொலி நிலையத்தில் கேட்ட பாடல்
இந்த படம் விஜயகுமார் ராதா சலுஜா என்று நெட் இல் போட்டு உள்ளது இது சரியா தவறா என்று தெரியவில்லை
மேலும் இந்த படம் வெளியானதா என்று தெரியவில்லை இளைய ராஜா இசை

கர்நாடக சங்கீத ராகங்களில் அமைக்கப்பட்ட ராஜாவின் பாடல்அமிர்தவர்ஷிணி ராகத்தில் அமைக்கப்பட்டு, ஜானகி - ஜெயச்சந்திரன் பாடிய பாடல்.

மீண்டும் மீண்டும் கேட்க, அப்படி என்ன விசேஷம்?

சில பாடல்களில் மட்டுமே மிக மென்மையான நிதானம் கூடும். 'வானம் எங்கே மேகம் எங்கே' அப்படியொரு பாடல்.

பல்லவி, இரு சரணங்கள் மற்றும் இரு இடையீடு இசைக்கோர்வைகள் அனைத்தும் மிக மென்மையாக, மிக நளினமாக மிதக்கின்றன. ஆரம்பம் பேஸ் கிடாரோடு ஆரம்பித்து ஒவ்வொரு இசைக்கருவியாக சேர்ந்து வேறொரு தளத்திற்கு போக ஆரம்பிக்கும் போது, குழுவின் கோரஸ் சேர்க்கிறது.

கவுன்ட்டர் பாயிண்ட் உத்தியில் இசைக்கப்பட்டது என்று தோன்றும் வண்ணம் அந்த கோரசுடன் ஜானகி லீடில் சேர்ந்து பாட, பாடல் மெதுவே எடை குறைந்து லேசாகிறது. நம் மனமும்.

பல்லவி முடிந்து முதல் இடையீடு இசையில் ஆரம்பிக்கும் ஒரு பிரமாத வயலின் பிட் முடிந்ததும் மீண்டும் கோரஸ். இந்தப் பாடலின் அற்புதத் தன்மைக்கு முக்கிய காரணிகளில் ஒன்று கோரஸ். ராஜா கோரசை வயலின் ஆர்கெஸ்ட்ரா போன்றே உபயோகித்திருக்கிறார்.

அவரது பாடல்களில் வரும் விரிவான வயலின் ஆர்கெஸ்ட்ரா இசையை ஏறக்குறைய கோரசுக்கும் ஜானகிக்கும் பிரித்து பின்னணி-லீட் என்று அமைத்திருக்கிறார்.

முதல் இடையீடு இசை முடிந்து ஜெயச்சந்திரன் 'விண்மீன்கள் தாலாட்ட' என்று ஆரம்பிக்கும்முன்னால் வரும் குழல் இசை வழக்கம் போல் ஒரு பாரில் முடியாமல் இரண்டு பார் வரை நீள்கிறது.

இரண்டாம் இடையீடு இசையில் காம்போ ஆர்கனை அடுத்து வரும் ஓர் வயலின் ஆர்கெஸ்ட்ரா மனதை தடவ, கோரஸ், அடுத்து ஜானகியின் ஹம்மிங் உருக்குகிறது. மிக மிக எளிமையான ரிதம்.

ஆளரவமற்ற இரவின் தனிமையில் கேட்டுப் பாருங்கள் - விழிகளின் அடைப்பில் மனம் திறப்பதை உணர்வீர்கள்.

http://Vaanam Enge Megam Enge – TamilWire.com.mp3

இந்த படத்தில் மேலும் நல்ல பல பாடல்கள் உள்ளன

மலேசிய வாசுதேவன் குரலில் 'ஒரு மூடன் கதை சொன்னான் '

http://www.youtube.com/watch?v=thyAJ6Gx5Uo

மேலும் ஜானகி பாலா குரல்களில்

லா ஆ லலலல் லா ஆ லலல்ல லலலாலல்லலலலலல
கோடி இன்பம் மேனி எங்கும் பாய்ந்ததம்மம்மா
கோடி இன்பம் மேனி எங்கும் பாய்ந்ததம்மம்மா
ப்ரீத்தி என்று பேரைச் சொன்னால்
ஊஞ்சல் ஆடும் உள்ளம் உன்னால்
ஏதேதோ எண்ணம் வந்ததோ
கோடி இன்பம் மேனி எங்கும் பாய்ந்ததம்மம்மா

இந்த சுகம் சொல்ல மொழி ஏது
இன்ப ரசம் பொங்கி வரும்போது
உந்தன் வசம்தானே இளமாது

தேனில் ஊரும் பூச்செண்டு
தென்றல் கொஞ்சும் நாள் கண்டு
ஆனந்தம் தானாக என்னை தேடி வந்ததோ
கோடி இன்பம் மேனி எங்கும் பாய்ந்ததம்மம்மா
ப்ரீத்தி என்று பேரை சொன்னால்
ஊஞ்சல் ஆடும் உள்ளம் உன்னால்
ஏதேதோ எண்ணம் வந்ததோ
கோடி இன்பம் மேனி எங்கும் பாய்ந்ததம்மம்மா

கன்னம் என்னும் கிண்ணம் அழகாக
கொண்டு வரும் வண்ணம் எதற்காக
ஓவியங்கள் தீட்டும் எனக்காக

கண்ணில் ரெண்டு மீன் ஆட
காதல் ஓடை நீர் ஆட
தூங்காமல் போராட
உந்தன் ஆசை வந்ததோ
லாலாலலல் லா லலல லாஆ

கங்கை நதி வந்து கடல் சேரும்
மங்கை நதி மன்னன் மடி சேரும்
மஞ்சள் நதி எங்கும் வழிந்தோடும்

நெஞ்சில் ஆடும் பூ ஒன்று
நானும் சூடும் நாள் இன்று
பாசத்தில் நேசத்தில் இந்த உள்ளம் துள்ளுதோ
கோடி இன்பம் மேனி எங்கும் பாய்ந்ததம்மம்மா

ப்ரீத்தி என்று பேரைச் சொன்னால்
ஊஞ்சல் ஆடும் உள்ளம் உன்னால்
ஏதேதோ எண்ணம் வந்ததோ
கோடி இன்பம் மேனி எங்கும் பாய்ந்ததம்மம்மா
லா ஆ லலலல் லாஆ லலல்ல ல்ல்லாலல்லலல்லலல
ம் ம் ம் ம் ம் ம் ம் ம்

http://www.divshare.com/download/15865598-804

madhu
5th September 2014, 11:14 AM
கிருஷ்ணாஜி

எனக்கு இன்னும் தென் சென்னை மட்டும்தான் ஓரளவு பழக்கம். ஆதம்பாக்கம் ஜெயலக்ஷ்மி தியேட்டர் அறுபதுகளில் லலிதா டாக்கீஸ் என்ற பெயரில் டெண்ட் கொட்டகையாக இருந்து (கல்யாணியின் கணவன், அல்லி படங்கள் ரிலீஸ் ஆச்சு) பின் கட்டிடமாக எழுந்தது. இன்னமும் இருக்கு...( சவாலே சமாளி இரண்டாவது வாரம் இங்கே வந்தது. இதய வீணை வெள்ளியன்று ரிலீஸ் ஆகி ஞாயிறு முதல் இங்கேயும் ஓட ஆரம்பித்தது), பரங்கிம்லை ஸ்டேஷன் பக்கத்தில் பல நாள் கட்டடமாக எழுந்த மதி தியேட்டர், ஆலந்தூர் விக்டோரியா ( மத்தியான ஷோ மலையாளப் பட ஸ்பெஷல் ),நங்க நல்லூர் ரங்கா, மூவரசம்பட்டு காமாட்சி, வேளச்சேரி ராஜலட்சுமி முதல்... பல்லாவரம் ஜனதா ( அப்புறமா தேவி) , லக்ஷ்மி ( உலகம் சுற்றும் வாலிபன் முதல் மலையாள தச்சோளி அம்பு வரை எந்தப் படம் ஓடுது என்பதை எல்லா புற நகர் ரயில் நிலையத்து கேண்டீன் பக்கத்து தூணில் இருக்கும் போஸ்டரைப் பார்த்தாலும் தெரிந்து கொள்ளலாம் ), குரோம்பேட்டை வெற்றி, தாம்பரம் எம்.ஆர்., வித்யா, நேஷனல் ( திருவிளையாடல், எங்க வீட்டுப் பிள்ளை ரெண்டுமே பிச்சுகிட்டு ஓடியதாக நினைவு )...

அப்போதெல்லாம் இரும்புலியூர் லெவல் கிராசிங் பக்கத்தில் ஒரு தியேட்டர் உண்டு. ( இப்போது தாம்பரம் தாண்டி பைபாஸ் ரோடு மேம்பாலம் இருக்கும் இடம் ). அதில் புதுப் படங்கள் ரிலீசாகி ரெண்டு மூணு வாரத்தில் வந்து விடும். டிக்கெட் சுலபமாக கிடைக்கும். சோஃபா Rs.1.25-தான். நோ மூட்டைப் பூச்சி. மீனம்பாக்கம் ஜெயின், தாம்ப்ரம் கிறிஸ்துவக் கல்லூரி மாணவர்கள் கூடும் இடம்...

அது ஒரு கனாக்காலம்..

gkrishna
5th September 2014, 11:23 AM
அருமை மது ஜி
இரும்புலியூர் திரை அரங்கு அனு என்று நினைவு

gkrishna
5th September 2014, 11:28 AM
http://rymimg.com/lk/f/l/ea36598c07984aa8ad326ade6b676e55/3877615.jpghttp://4.bp.blogspot.com/-XJQOjvQDK2M/UR2-MoXCn6I/AAAAAAAAGYA/NDBnHWpcyU0/s400/indru+pol.JPGhttp://i42.tinypic.com/501rae.jpg

http://www.youtube.com/watch?v=CNeWIBCkv7E

பாலா வாணி குரல்களில் இடையில் மெஹ்பூப இசை எல்லாம் வரும் .மெல்லிசை மன்னர் இசை கோர்வை பல ட்யுன்கள் உள்ளடக்கிய பாடல்

என் யோக ஜாதகம் நான் உன்னை சேர்ந்தது
இன்ப லோக நாடகம் உன் உறவில் காண்பது
உன் அழகு அல்லவோ என்னை அடிமை கொண்டது
தேன் அமுதம் அல்லவோ நான் அள்ளி உண்டது

பொன் வண்ண புஷ்பங்கள் உன் ஆடை ஆக
அதில் தென்றல் நீந்தட்டும் குளிர் ஓடையாக !
மை சிந்தும் கண்ணுக்குள் உந்தன் மேனி ஆட
இந்த சொர்க்க தீவுக்குள் சுகம் கொடி தேட !


கடல் நீலம் கொண்டு ஜாலம் காட்டும் கருவிழிகள்
எந்த காலம்தோறும் பாலம் போடும் உன் விழிகள்


என் பத்து விரல் தழுவ தழுவ
உன் முத்து உடல் துவழ துவழ இதமோ
என் கட்டழகன் குலவ குலவ
கை தொட்ட இடம் குளிர குளிர
சுகமோ சுகமோ சுகமோ


தத்தைக்கொரு மெத்தை என்று தோளிரண்டும் ஆட
வித்தைகளின் அர்த்தங்களை நீ எடுத்து கூற
இரவோ பகலோ மடி மேலே
வருவேன் விழுவேன் கொடி போலே
இதழோ இடையோ பரிமாறு
இதுவோ அதுவோ விளையாடு


இரவெல்லாம் இன்பம் என்னும்
பொய்கை இங்கே பொங்கும்
நம் அங்கம் நீராட்ட
எண்ணம் எல்லாம் உன் வண்ணம் பாராட்ட
தங்கத்தை வைரம் சந்திக்கும் நேரம் ஆசைகள் ஆயிரம்

உலகெல்லாம் உன்னை சுற்றி கண்டேன்
கண்ணா மன்னா என் உள்ளம் தள்ளாட
மங்கை என் கை உன் மாலை என்றாட

gkrishna
5th September 2014, 12:19 PM
கண்ணே பாப்பா எஸ்வி சார் அவர்களின் விளம்பரம் சில நினைவலைகள் - http://sivamgss.blogspot.in/


தற்செயலாக இந்தப் படம் வசந்த் தொலைக்காட்சியில் மத்தியானமாப் போட்டாங்க. கறுப்பு வெள்ளைப்படம் தான். ஆரம்பம் கொஞ்சம் சொதப்பல் தான். கே.ஆர். விஜயா குற்றாலத்தில் ஊர் சுற்றி (?) பார்க்க வரும் முத்துராமனின் பின்னணியே தெரியாமல் அவரிடம் தன்னை இழந்ததாகக் காட்டி இருப்பது அபத்தத்தின் உச்சகட்டம். என்ன இருந்தாலும் இளம் வயதுப் பெண் இப்படியா ஏமாறுவாங்க? ஆனால் இம்மாதிரிப் பெண்களை அந்தக் காலங்களில் (படம் அறுபதுகளில் வந்திருக்கணும்) "அபலை" என்ற பட்டம் சூட்டி இரக்கம் காட்டி மகிழ்வார்கள். அப்படியே இதிலும் நடக்கிறது. பகவதிபுரம் தான் தன்னோட ஊர்னு கே.ஆர். விஜயாவை ஏமாத்திப் பாதியிலேயே விட்டுட்டுப் போறார். அந்த ஊரிலேயே ஸ்டேஷன் மாஸ்டர் வி.எஸ்.ராகவன் உதவியுடன் தங்கி இருந்த விஜயா வர ஒவ்வொரு ரயிலிலும் முத்துராமனைத் தேடிக் கடைசியில் தனக்குக் குழந்தை பிறந்து ஐந்து வருடங்களுக்குப் பின்னர் தற்செயலாக ஒரு ரயிலில் காண்கிறார். ஆனால் முத்துராமன் அவரைத் தெரியாது எனச் சொல்லி விடுகிறார்.

தன் தந்தையிடம் குழந்தையைச் சேர்ப்பிக்கச் சொல்லி விஜயா கடிதம் எழுதி வைத்துவிட்டுச் செத்து விடுகிறார். உறவினர் அனைவரும் குழந்தையை ஏற்க மறுக்க அது எப்படியோ ரயிலில் ஏறிச் சென்னை வருகிறது பெற்றோரைத் தேடி. வந்த குழந்தை எப்படியோ பிச்சை எடுத்துப் பிழைக்கும் கும்பலிடம் சேர்ந்து கொள்கிறது. குழந்தையை ஆதரிக்கும் சந்திரபாபு அதன் பெயரில் வாங்கிய லாட்டரிச் சீட்டிற்கு லக்ஷ ரூபாய்ப் பரிசு விழ ஆரம்பம் ஆகிறது விறுவிறுப்பு.

குழந்தையாக நடித்திருப்பது பேபி ராணியாம். நல்லா இயல்பா நடிக்கிறது. அதை விட நல்லா "ஓ" னு அழுகிறது. அழுகை வெகு இயல்பு. அதிலும் லாட்டரிச் சீட்டைக் களவாட வருபவர்களைச் சரியாகக் கணித்து அவர்களிடமிருந்து தப்பிப்பது; வழியில் சந்திக்கும் நடிகை மனோரமா, உபந்நியாசகர் வேடத்தில் இருப்பவர் வி.கே.ராமசாமி, ரிக்க்ஷாக்காரர், குப்பத்துக்காரர்கள் இத்தனை பேரையும் சமாளிக்கும் விதம் நன்றாகவே படமாக்கப்பட்டுள்ளது. நம்பியாரை முதலில் நம்பி அவருடன் செல்ல நினைக்கும் குழந்தை பின்னர் தப்பி விடுகிறது. கடைசியில் ஒரு வழியாக போலீஸ் கமிஷனர் சுந்தரராஜனிடம் வந்து சேர்ந்து உண்மையைச் சொல்கிறது.

குழந்தையை நம்பியாரிடம் போய் இருக்கச் சொல்லும் சுந்தரராஜனிடம் மாட்டேன்னு சொல்லுகிறது. பின்னர் நம்பியார் நல்லவர் தான் எனத் தெரிந்து கொண்டு அவரிடம் போகிறது. அவர் மனைவியாக வரும் விஜயகுமாரிக்குக் குழந்தை இல்லாததால் இந்தக் குழந்தையிடம் பாசமழை பொழிகிறார். முத்துராமன் பெண்களை ஏமாற்றிப் பிழைக்கும் கும்பலில் வேலை செய்கிறார். (அந்தக் காலத்திலேயே ஆன்டி ஹீரோவாக நடிச்சிருக்கார் முத்துராமன். )மனோகர் தான் தலைவர். குழந்தைக்குப் பரிசு கிடைத்திருப்பதும், அதன் பெற்றோர் படமும் தினசரிகளில் வரக் குழந்தையிடமிருந்து பணத்தைப் பிடுங்கத் தயாராகின்றனர் வில்லன் மனோகர் குழுவினர். அதற்காக டி.கே.பகவதியின் மகளான கல்பனா (இதுவும் கே.ஆர்.விஜயா)வை குழந்தைக்குத் தாயாக நடிக்கச் சொல்ல பின்னர் நடப்பது தான் க்ளைமாக்ஸ். பி.மாதவன் இயக்கம். கதை கோர்வையாகச் சொல்லப்பட்டிருப்பதோடு சம்பவங்களும் முன்னுக்குப் பின் முரண் இல்லாமல் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

நம்ம வாசு சார் பாகம் ஒன்றில் சுசீலாவின் அருமையான பாடல் 'தென்றலில் ஆடை பின்ன ' இன்றைய ஸ்பெஷல் பதிவில் இட்டு இருந்தார் .தொடர்ந்து கார்த்திக் சார் சில மலரும் நினைவுகள் இட்டு இருந்தார் .

சுசீலாவின் ' சத்திய முத்திரை கட்டளை இட்டவன் நாயகன் ஏசுவின் வேதம்' , 'கண்ணே பாப்பா கனி முத்து பாப்பா ' பாடல்கள் மிகவும் பிரபலம் . விஜயகுமாரி யின் ஒப்பனை யார் என்று தெரியவில்லை சின்ன பொண்ணா காண்பிக கோண வகிடு எடுத்தா போதும் னு இயக்கனுர் மாதவன் கட்டளை போல இருக்கு

சூப்பர் ஊ ஊ ஊ :)

http://i1.ytimg.com/vi/INW3jMa24cY/sddefault.jpg

இந்த குழந்தை பேபி ராணி பேசும் தெய்வம்,திருடன் போன்ற படங்களில் கொள்ளை அழக்காக இருக்கும் . ஆனால் ஒன்று அழுதால் ஒ ஒ வென்றே அழும்

ராஜநாயகம் அவர்கள் தன்னுடைய கட்டுரையில் கண்ணே பாப்பா சந்திர பாபு பற்றி இவ்வாறு சொல்லுகிறார்

'கண்ணே பாப்பா ' சந்திர பாபு நடிக்கும் போது கேசுவலா ஒரு சின்ன ஹம்மிங் செய்கிறார் .
ஹிந்துஸ்தானி ! ஹிந்துஸ்தானி க்ளாசிகல் !
பண்டிட் ஜஸ்ராஜ் ஜோக் ராக ஆலாபனை ஆரம்பிப்பது போலிருந்தது .

மெஹ்தி ஹசன் கஜல் பாடல் “ZINDAGI MERE SAFI PYAARU KIYAA KARUTHEGU..

”என்ன ஒரு சௌஜென்யம் . என்ன ஒரு அற்புத குரல் .

மெஹ்தி ஹசனின் இந்த பாடலை கேட்கும்போது ஏனோ எப்போதும் சந்திரபாபு ஞாபகம் வரும் .
சரியான சூழல் மட்டும் இருந்திருந்தால் பாபு பெரிய கஜல் பாடகர் ஆகி இருப்பார் .

அசோகமித்திரன் என்னிடம் ஒரு முறை சொன்னார் . "சந்திர பாபுவுக்கு ஆன்மீக தேடல் இருந்தது . அதற்கான வழி காட்ட, அவரை நெறிப்படுத்த சரியான குருநாதர் கிடைக்கவில்லை "

gkrishna
5th September 2014, 01:53 PM
http://photos1.blogger.com/blogger/7261/2274/320/ksrajah.2.jpghttp://photos1.blogger.com/blogger/7261/2274/320/mg2.jpg

அமரர் கே.எஸ்.ராஜா பற்றிய ஒரு ரசிகனின் நினைவலைகள்.- யாழ் சுதாகர்

'தூங்க வைப்பதல்ல வானொலி அறிவிப்பு
உற்சாகம் பொங்க வைப்பது தான்
உயிர்த்துடிப்பான அறிவிப்பு' என்று...

எழுபதுகளில் எழுந்து வந்த
மின்சாரத் தமிழே... வணக்கம் ! ...

வீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டிக்கு அருகில்
ஆவலுடன் கூடியிருக்கும் எங்கள்
வானுயர்ந்த ரசனைகள் வற்றாத வரை...

உங்களை
மறக்க முடியுமா அய்யா ?

சென்னைக்குச் சுற்றுலா சென்று திரும்பிய
எங்கள் ஊர் ரசிக முகங்களிடம்...
எம்.ஜி.ஆர்., சிவாஜியைப் பார்த்தீர்களா ? என்று
என் விசில் வயதுகளில் நான் விசாரித்ததுண்டு.

பத்து வருடங்கள் கழித்து நான் இந்தியாவுக்கு வந்திருந்தபோது...
இந்திய நண்பர்கள் என்னிடம் கேட்ட கேள்விகளில்
எனக்கு இமய வியப்பைக் கொடுத்தது எது தெரியுமா ?

நீங்கள் கே.எஸ். ராஜாவைப் பார்த்திருக்கிறீர்களா ?
அவர் எப்படி இருப்பார் ?

------------------

மின்னல் வேகம்...

ஆனாலும் வார்த்தைக்கு வார்த்தை விளங்கிக் கொள்ளும்படியான
தெளிவான உச்சரிப்பு...

இந்த இரண்டும் இணைந்து ஜொலித்த ஒரு பிறவி அறிவிப்பாளர்
உங்களைப்போல்... இனி பிறக்க முடியுமா?...

உங்கள் அருமையை சுருங்கச் சொல்லி...
விரிய விளங்க வைக்க இப்படியும் சொல்லலாம்.

ஒரு எம்.ஜி.ஆர்....
ஒரு கண்ணதாசன்...
ஒரு சிவாஜி...
ஒரு டி.எம். சௌந்தரராஜன்...
ஒரு கே.எஸ்.ராஜா...

தனித்துவமாக நடிக்கும் திறமை இருந்தாலும் புது முகங்கள்
சில காட்சிகளிலாவது...சிவாஜியின் பாதிப்பில் சிக்கிக் கொள்வதைப் போல
முதன் முதலாக ஒலிவாங்கிக்கு முன்னே நிற்கும் அறிவிப்பாளர் பலரை...
தொப்பி அணிந்து வரும் உங்கள் தோழமைக்குரல்
அப்பிப் பிடித்து ஆட்சி செய்வதை அவதானித்திருக்கிறன்.

பேசாதவர்களைப் பேச வைத்த..
பார்க்காதவர்களைப் பார்க்க வைத்த...
நடக்காதவர்களை நடக்க வைத்த...
சித்தர்களைப் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

ஆனால்... ஓடாததை எல்லாம் ஓடவைத்த சித்தரை
நேரில் பார்த்தேன்.

உங்களைத் தான் சொல்கிறேன் !

இந்தியாவில் ஓடாத படங்கள் இலங்கையில்
உங்கள் மந்திர உச்சாடனம் கேட்டதால்
100 நாள்.. வெள்ளி விழா... என வெற்றி நடை போட்டனவே...
அதைத் தான் சொல்கிறேன்...

இந்தியாவிலும் கூட பின்னணியில் இருந்த பல படங்கள்...
திரை விருந்து நிகழ்ச்சிகளில்
உங்கள் 'தங்கக் குரல் 'கட்டி விட்ட 'தாயத்து' மகிமையால்
சிங்க நடை போட்டு
விநியோகஸ்தர்களை வசூல் மழையில் நனைத்ததைப் பற்றிய
வியப்புச் செய்திகளையும்
பத்திரிகைச் செய்திகளில் படித்திருக்கிறேன்.

உங்கள் உற்சாக குரலுக்காக மட்டுமன்றி அந்த வார நிகழ்ச்சியில்
புதிதாக நீங்கள் செய்யப்போகும் ஒட்டு வேலைகளையும்,
விளம்பர சாதுர்யங்களையும் தவறாது ரசிப்பதற்காக
சலிக்காத ரசிக வேட்கையுடன்
வானொலிப் பெட்டிக்கு அருகில் காத்துக் கிடந்தேன் என்பதை
அறிவீர்களா ராஜா ?

நடிகர் திலகத்தின் 'எங்கள தங்க ராஜா' படத்துக்கு
நீங்கள் விளம்பரம் வாசித்தபோது

எங்கள் என்று குதூகலமாக ஆரம்பித்து...

தங்க என்ற இடத்துக்கு வரும்போது
குரலில் குழைவு கூட்டி அவசரமாக நெகிழ்ந்து..

ராஜா என்று கம்பீரமாக முடிப்பீர்களே...

அன்று கேட்ட அந்த 'தங்க'
இன்றும் என் செவியோரங்களில் மங்காமல் தங்கி விட்டது.

'நான் ஏன் பிறந்தேன்' படத்தில்
கே.ஆர்.விஜயாவிடம் எம்.ஜி.ஆர் பேசுவதாக வரும்

'அழறவங்களை சிரிக்க வைக்கிறதும், சிரிக்கிறவங்களை சிந்திக்க
வைக்கறதும் தான் என்னோட லட்சியம்...'
என்ற வசனத்தை மட்டும் தனியே பிரித்தெடுத்து...

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களே உங்கள் இலட்சியம் என்ன ?
என்று நீங்கள் பேசிவிட்டு
அந்த இடத்தில் கொண்டு வந்து
லிங்க் கொடுப்பீர்களே... அடடா !

நீயா, குரு, நிறம் மாறாத பூக்கள். பட்டாக்கத்தி பைரவன், மீனவநண்பன், என்று பல படங்களுக்கு... நீங்கள் செய்து காட்டிய
இது போன்ற ரேடியோ கிராபிக்ஸை எல்லாம்
இன்றும் கூட என் செவிகள் அசை மீட்டு ரசிப்பதுண்டு.

ஈர்ப்புத் தமிழே... எனக்கு மட்டும்
இந்த ரகசியம் சொல்வீர்களா ?

'சந்திர வதனன் 'எம்.ஜி.ஆரின்
காந்தச் சிரிப்பைக் கண்டதும் வந்திடும் உற்சாகம்...
உங்கள் சுந்தரக் குரலால்
எம்.ஜி.ஆர் என்று சொன்னதைக் கேட்டதும் வந்ததே எப்படி ?

ஈர்ப்புத் தமிழே எனக்கு மட்டும்..
இந்த ரகசியம் சொல்வீர்களா ?

கவியரசர் கண்ணதாசன் காலமானார் என்ற சேதி அறிந்தவுடன்
மூச்சிரைக்க ஓடி வந்து...
இலங்கை வானொலி இசைத்தட்டுக் களஞ்சியத்துக்குள் பார்வை பதித்து...

உங்களுக்கே இயல்பான தேர்ந்த அவசரத்துடன்
கண்ணதாசன் எழுதிய முதல் இசைத் தட்டைத் தேடிப்பிடித்து...

இன்னும்... இன்னும்... அவர் கவிப்புலமைக்கு
மகுடம் சூட்டிய இசைத் தட்டுக்களை எல்லாம் அள்ளிக்கொண்டு

அவசர அவசரமாக அன்றைய திரை விருந்து நிகழ்ச்சியை
அரசவைக் கவிஞருக்கு கண்ணீர் அஞ்சலியாக்கி...

அயல்நாட்டு வானொலிகளையும் முந்தி நின்றீர்களே...!

அறிவிப்பு பாணியில் மட்டுமன்றி
உழைப்பிலும்...
கடமையிலும்...
தமிழன் என்ற துடிப்பிலும்...
உங்களுக்கு இருந்த வேகத்தை
அன்றைய நிகழ்ச்சியில் உணர்ந்து நெகிழ்ந்தேன்.

யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில்
யாழ்தேவிக்காக காத்திருந்த பயணிகள் மத்தியில்
எதிர்பாராதவிதமாக உங்களை இனங்கண்டு...

இன்ப அதிர்ச்சிக்குத் திரைபோடத் தெரியாத பாமரன் போல்
உங்கள் பக்கம் பாய்ந்து வந்து...
ரசிகன் என்ற அடைமொழியுடன் அறிமுகம் செய்து கொள்கிறேன்.

புன்னகையுடன் அங்கீகாரம் தருகிறீர்கள்.

அந்த அங்கீகாரமும், உங்கள் எளிமையும் தந்த தைரியத்தில்
அதிக உரிமை எடுத்துக் கொண்டு அளவளாவுகிறேன்.

தகரம் வேய்ந்த திரைஅரங்குகளின் பெயர்களையும்
ஸ்டைலோடு சொல்லி அவற்றிற்கு
சிகரகம்பீரம் கொடுக்கும் உங்கள் சிறப்புக் குரல் பற்றி -
(இதை விட்டால் வேறு சந்தர்ப்பம் கிடைக்குமோ என்ற அங்கலாய்ப்புடன்) பட்டியல் போட்டுப் பாராட்டுகிறேன்.

நீங்கள்... நெகிழ்வது தெரிகிறது...

அதற்குப் பிறகு நிறையவே பேசினீர்கள்.
எண் ஜோதிடம் பற்றியும் பேசினோம்.
உங்கள் பிறந்த தேதி கேட்டேன்
சொன்னீர்கள்.

(அடடா நீங்களும் எட்டா? இந்த விஷயத்தில் உங்களை ஒத்திருப்பதை உள்ளுக்குள் உரத்து மகிழ்கிறேன்.)

புகையிரத நிலைய பூபால சிங்கம் புத்தகக் கடை...

சிவராசா எழுதிய எண் ஜோதிட நூலை
என்னிடம் வாங்கிய நீங்கள்...
முகவரி தந்து கடிதம் போடச் சொல்கிறீர்கள்..

யாழ்தேவி புறப்படுகிறது...

அன்றைக்கு மட்டும் யாழ்தேவியின் கம்பீரம்
சற்று கூடியிருப்பதாகவே எனக்குத் தெரிகிறது.

உள்ளே... நீங்கள் அல்லவா ?

அதற்குப் பிறகு... ஓரிரு வருடங்கள் கழித்து...
ஈச்சமோட்டை சனசமூக நிலையம் நடத்தப்போகும்
பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியை நீங்கள்
தொகுத்து வழங்க இருப்பதாகக் கேள்விப்பட்டேன்.

இதற்கு முன்பு ஒரு முறை வீர சிங்கம் மண்டபத்தில்
உங்கள் போட்டி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொள்ள முயன்று
முடியாமல் போனது நினைவுக்கு வந்தது.

இருந்தாலும் நம்பிக்கையுடன்
நடுவர்களிடம் பெயர் கொடுத்தேன்.

போட்டியில் பங்கேற்கும் நூற்றுக்கணக்கான
நேயர்களில் என்னையும் ஒருவனாக தேர்ந்தெடுத்தார்கள்.

மேடையில் எனது முறை வருகிறது...

போட்டியின் ஆரம்பத்தில் என்னைப் பற்றிய மேடை அறிமுகத்துக்காக
என்னிடம் சில கேள்விகள் கேட்கிறீர்கள்.

ராஜாவுடன் ஒலிவாங்கி பிடித்துப் பேசுகிறோம் என்ற
உயர மிதப்பில் உற்சாகமாக பதில்களை சொல்லுகிறேன்...

சுதாகர்... உங்கள் பொழுது போக்கு என்ன ? என்று கேட்கிறீர்கள்.

எம்.ஜி.ஆர் படங்களைப் பார்த்து ரசிப்பது என்கிறேன்.

கரகோஷத்தில் ஈச்சமோட்டை அதிர்கிறது.

கரகோஷத்திற்காகத் தானே எம்.ஜி.ஆர் பெயரைச் சொன்னீர்கள் சுதாகர் ?
மறுபடியும் என்னைப் பேச வைக்க விரும்புகிறீர்கள்.

கரகோஷத்திற்காக நான் அவர் பெயரைச் சொல்லவில்லை. வானொலி உலகில் எப்படி ஒரே ஒரு கே.எஸ்.ராஜா இருக்க முடியுமோ அது போல மக்கள் திலகமாக திரை உலகில் ஒரே ஒரு எம்.ஜி.ஆர் தான் இருக்க முடியும்... என்று துவங்கிய என் எம்.ஜி.ஆர் புராணத்தில் சாமர்த்தியமாக உங்கள் பெயரையும் நுழைத்த பெருமிதத்துடன் பேச்சை முடிக்கிறேன்.

இரண்டு மடங்கானது கரகோஷம்!.

நெல்லியடி மகாத்மா திரையரங்கில்...
'உலகம் சுற்றும் வாலிபன்' வெளிவருவதற்கு சில தினங்கள் முன்பு...
அப்படம் நகரங்களில் ஓடும்போது நீங்கள் வழங்கிய வானொலி விளம்பரத்தை ஒலிநாடாவில் பிடித்து வைத்திருந்து,
வேறொரு படத்தின் இடைவேளை சமயத்தில் அதை ஒலிக்கச் செய்ததை எதிர்பாராதவிதமாக கேட்டபோது உங்கள் ரசிகனாக துள்ளி குதித்ததையும்,

சுமார் 15 ஆண்டுகள் கழித்து சென்னை கமலா திரையரங்கில் ஏதோ ஒரு படத்தின் இடைவேளையில்... ஆடியோ விளம்பரங்களின் நடுவில் எதிர்பாராதவிதமாக உங்கள் மின்னல் தமிழைக் கேட்டு அந்த 20 நொடிகளும் எங்கள் கந்தர் மடம் வீட்டுக்குள் நான் கால் பதித்ததையும் -

சீனி மாமாவிடம் வாங்கிய அவர் உயரத்தில் பாதி நீளம் கொண்ட பழங்காலத்து ரேடியோ பெட்டியின் பேசும் முகத்தை முத்தமிட்டதையும் -

உங்கள் குரல் நின்றுபோனதும் மீண்டும் வெறுமைக்குள் வந்து விழுந்ததையும் இங்கு சொல்லாவிட்டால்....

வேறு எங்கு சொல்வது ஐயா ?

அதற்குப் பிறகு....
1986 என்று நினைக் கிறேன்.

நீங்கள் சென்னை விவித்பாரதியில் இசை மலர் நிகழ்ச்சியை வழங்கிக் கொண்டு இருக்கிறீர்கள்.

சென்னையில் திரைப்படப் பத்திரிகையாளனாக நான் பணியாற்றி கொண்டிருக்கின்றேன்.

டி.எம். சௌந்தரராஜன், சிவகுமார், கமல்ஹாசன் என்று கலையுலக சாதனையாளர்களை செவ்வி கண்டு எழுதிய நான்...

அந்த வரிசையில் எங்கள் மண்ணைச் சேர்ந்த உங்களைப் பற்றியும் எழுதிக் குளிர ஆசைப்பட்டு -

எங்கெல்லாமோ தேடி அலைந்து...

கடைசியில் தங்கக் குரலின் தங்குமிடம் திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ளமாடி வீடு என்கின்ற தகவல் அறிந்து உங்களை நாடி வந்து செவ்வி கண்டேன்.

இசை மலர் நிகழ்ச்சியில்
உங்கள் ஊஞ்சல் தமிழை ரசித்தவர்கள் இதயம் கனிந்து அனுப்பிய ஆயிரக்கணக்கான பாராட்டு மடல்களையெல்லாம் உங்கள் இல்லத்தில் ஆசையோடு அடுக்கி வைத்திருந்தீர்கள்.

எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை வானொலியில் ஒலித்த உங்கள் வர்த்தக விளம்பரங்களையெல்லாம் ஒலிநாடாவில் பதிவு செய்த வைத்திருந்து...

நீங்கள் இந்தியாவில் இருப்பதை அறிந்ததும் அந்த ஒலிநாடாவை உங்களுக்கு அனுப்பி வைத்த தமிழ்நாட்டு ரசிகர் ஒருவரைப் பற்றி என்னிடம் பெருமிதத்தோடு சொல்லி நெகிழ்ந்தீர்கள்.

ஒரு குழந்தையின் குதூகலத்துடன் அந்த ஒலிநாடாவை எனக்காக ஒலிக்கச் செய்து என்னையும் பத்து வருடங்கள் பின்னோக்கி அழைத்து சென்று பரவசப்படுத்தினீர்கள்.

1987, ஜூலை 27ம் தேதி, மாலை 6.30 மணி.

சென்னை மியூசிக் அகாடமியில் என் இசைத் தோழன் உதயா வழங்கும் இன்னிசை மழை நிகழ்ச்சி.

அரங்கு வழிந்த கூட்டம்.

வணக்கம் என்று சொல்லி உங்கள் பாணியில் கரங்களை உயர அசைத்தவாறே மேடையில் தோன்றுகின்றீர்கள்.

நீங்கள் மேடைக்கு வந்ததும் சொல்லி வைத்தது போல அத்தனை ரசிகர்களும் எழுந்து நின்று கரகோஷம் செய்து உங்களுக்கு மரியாதை செய்கிறார்கள்.

நீங்கள் உணர்ச்சிப் பெருக்குடன் உங்கள் கழுத்தில் இருந்த மாலையைக் கழற்றி... 'எனக்கு போடப்பட்ட மாலை.... உங்களுக்கு போடப்படவேண்டிய மாலை'... என்று சொல்லி ஆடியன்ஸ் மத்தியில் தூக்கிப் போடுகிறீர்கள்...

அந்த நிகழ்ச்சியின் இடைவேளையில் - மேடையின் பின்புற வாயிலில் நின்று கொண்டிருந்த உதயாவை ஒரு ரசிகர் நெருங்குகிறார்.

நீங்கள் தானே இந்த இசை நிகழ்ச்சியின் பொறுப்பாளர் ?

ஆமாம்.... உங்களுக்கு என்ன வேண்டும்? என்று கேட்கிறார் உதயா.

கலைந்து போய் வாரப்படாத தலையுடனும், கசங்கிப் போன ஆடையுடனும், கலையாத ஆர்வத்துடனும் காணப்பட்ட அந்த ரசிகர் உடனே உதயாவின் கரங்களைப் பற்றுகிறார்.

'கே.எஸ் . ராஜாவை நேரில் பார்க்கணும்னு திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு வந்திருக்கிறேன். அவரோட சில நிமிஷங்களாவது பேச ஆசைப்படும்றேன். தயவு செய்து ராஜாகிட்டே என்னை கூட்டிட்டுப் போய் அறிமுகப்படுத்திவைங்க...' என்று கக்கத்தில் இருக்கும் மஞ்சள் பை நழுவுவது தெரியாமல் உதயாவை கெஞ்சுகிறார் அந்த ரசிகர்.

உடனே அந்த ரசிகரை கே.எஸ். ராஜா இருக்குமிடத்திற்கு அழைத்துச் செல்கிறார் உதயா.

திரை நட்சத்திரங்களின் நடுவில் நின்று கொண்டிருந்த ராஜாவை நெருங்கி அந்த ரசிகரைப் பற்றி சொல்லி அறிமுகப்படுத்துகிறார் உதயா.

உடனே... ராஜா அந்த ரசிகரை சேர்த்து அணைத்துக் கொள்கிறார்.

' நம் இருவரையும் ஒரு போட்டோ எடுங்கள்' என்று அருகில் நின்ற புகைப்படக் கலைஞரிடம் கட்டளையிடுகிறார்.

தோழமையுடன் அந்த ரசிகருடன் அளவளாவுகிறார்.

அறிவிப்பு தீபத்தை தரிசித்த திருப்தியுடன் திருவண்ணாமலை திரும்புகிறது.

இந்த செய்திகளையெல்லாம் பின்பு உதயா என்னிடம் சொன்ன போது இலங்கைத் தமிழனாக என்னுள் பெருமிதம் பெருக்கெடுத்தது.

வீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டிக்கு அருகில்
ஆவலுடன் கூடியிருக்கும் எங்கள்
வானுயர்ந்த ரசனைகள் வற்றாத வரை...

உங்களை
மறக்க முடியுமா அய்யா ?

-யாழ் சுதாகர்

gkrishna
5th September 2014, 02:28 PM
படித்த தகவல்

நடிகர் திலகம் பாடுவதாக வரும் அந்தப் பாடலை வழக்கம் போல டி.எம் எஸ்ஸைப் பாட வைக்காமல் வேறொரு பாடகரைப் பாட வைத்தார்
மெல்லிசை மன்னர் எம். எஸ்.வி.

மிகவும் உணர்வு பூர்வமான ஒரு சோகப்பாடல் அது. ஆனாலும் அந்தப் பாடகர் மிகவும் சிறப்பாகப் பாடியதால் மெல்லிசைமன்னருக்கு திருப்தி.
சிவாஜியும் அந்த குரலை ஏற்றுக் கொன்டார்.சிவாஜி வாயசைத்து நடிக்க அந்தப் பாடல் காட்சி படமானது.
ஆனால் அந்தப்பாடல் காட்சியை திரையில் போட்டுப் பார்த்த போது பாடகரின்குரல்,சிவாஜியின் நடிப்பு எல்லாமே நன்றாக இருந்தும் ,
ஏதோஒன்று குறைவது போலத் தோன்றியது.மெல்லிசைமன்னருக்கும் அந்தக் காட்சி போட்டுக் காட்டப்பட்டது.

ஆமாம் சிவாஜியின் செழுமையான நடிப்போடு அந்தக்குரல் ஒட்டவில்லை என்றார்எம்.எஸ்.வி.
பாடல் காட்சியை படமாக்கி முடித்து விட்டோமே இனி என்ன செய்வது ?என்று எல்லோருக்குமே குழப்பம்.

அந்தக் காலத்தில் இன்றைக்கு இருப்பதைப் போன்ற அதி நவீனதொழில் நுட்பவசதிகள் இல்லை.
எனினும்,எம்.எஸ்.வி. யோசித்துப் பார்த்தார்.திடீரென ஒரு எண்ணம் அவர் மூளையில் மின்னலிட்டது.
உடனே டி.எம்.எஸ் அவர்களை ஸ்டூடியோவுக்கு அழைத்து வந்தார்.அந்தப்பாடலுக்கு சிவாஜி நடித்த காட்சியை திரையில் ஓட விடும்படி சொன்னார்.

அதில் சிவாஜியின் வாய் அசைவைப் பார்த்து...அதற்கு ஏற்ற படி அந்தப்பாடலைப் பாடும்படி டி.எம்.எஸ்ஸிடம் வேண்டுகோள் விடுத்தார்.
மிகவும் சவாலான ஒரு வேலை தான்.
ஆனால் டி.எம்.எஸ், சிவாஜியின் வாய் அசைவையும் முக பாவங்களையும் நன்கு கவனித்துக் கொண்டே அந்தப்பாடலைப் பாடிமுடித்தார்.
மெல்லிசைமன்னர் ஓடி வந்து டி.எம்.எஸ்ஸை கை கொடுத்துப் பாராட்டினார்.

இந்தப்பாடல் எம்.எஸ்.வி, டி.எம்.எஸ் இருவருக்கும் ஒருசவாலான அனுபவம் மட்டுமல்ல.... வித்தியாசமான அனுபவமும்கூட.

வழக்கமாக டி.எம்.எஸ் பாடிய பாடலைக் கேட்டு அந்தப் பாடலுக்கு ஏற்ப சிவாஜி வாய் அசைப்பார்.

ஆனால் இந்தப் பாடலைப்பொறுத்தவரை சிவாஜியின் வாய் அசைவைப் பார்த்து அதற்கு ஏற்ப டி.எம்.எஸ் பாடினார்.

டிஜிட்டல்,ஸ்டீரியோ, நவீன டிராக் சிஸ்டம் போன்ற அதி நவீனவசதிகள் இல்லாத எழுபதுகளில்
கருவிகளை நம்பாமல் திறமையையும் தன்னம்பிக்கையையும் மட்டும் நம்பி

இந்த சாதனையைப் படைத்த இருவரும் தமிழ்த் திரை இசையின் அதிசயங்கள்!

இந்த இசை அதிசயங்களின் கூட்டணியில் பதிவான அந்தய பாடல் எது?என்று கேட்கின்றீர்களா?

'கௌரவம்' படத்தில் இடம் பெற்ற 'பாலூட்டி வளர்த்த கிளி'என்ற பாடல் தான் அது.


ஆனால் இதே செய்தியை ஜெயா டிவி தேன் கிண்ணம் நிகழ்ச்சியில்
நிகழ்ச்சியை வழங்கிய ஜாக்கி 'முதலில் இந்த பாடலை முதலில் திரு டி எம் எஸ் அவர்கள் சிங்கப்பூர் பயணம் சென்றதால் மெல்லிசை மன்னரே பாடினார் என்றும் சிவாஜி அவர்களுக்கு இந்த பாடலுக்கு மெல்லிசை மன்னரின் குரல் அவ்வளவாக எடுபடவில்லை என்றும் எனவே மீண்டும் திரு டி எம் எஸ் அவர்களே பாடி ரெகார்ட் செய்தார்கள் என்றும் கூறினார்



http://www.youtube.com/watch?v=54HL4BSefHA

டீ.எம்.எஸ் பற்றி மெல்லிசை மன்னர் இப்படிச் சொன்னார் "கோடி ரூபா குடுத்தாலும் அபசுரமாப் பாடத் தெரியாது அவருக்கு"

பாலூட்டி வளர்த்த கிளி பழம் கொடுத்து பார்த்த கிளி
பாலூட்டி வளர்த்த கிளி பழம் கொடுத்து பார்த்த கிளி
நான் வளர்த்த பச்சைக் கிளி நாளை வரும் கச்சேரிக்கு
நான் வளர்த்த பச்சைக் கிளி நாளை வரும் கச்சேரிக்கு
செல்லம்மா எந்தன் செல்லம்மா செல்லம்மா எந்தன் செல்லம்மா

சட்டமும் நானுறைத்தேன் தைரியமும் நான் கொடுத்தேன்
சட்டமும் நானுறைத்தேன் தைரியமும் நான் கொடுத்தேன்
பட்டம் மட்டும் வாங்கி வந்து பாய்ந்து செல்ல பாக்குதடி
பட்டம் மட்டும் வாங்கி வந்து பாய்ந்து செல்ல பாக்குதடி
செல்லம்மா எந்தன் செல்லம்மா
பாலூட்டி வளர்த்த கிளி பழம் கொடுத்து பார்த்த கிளி
நான் வளர்த்த பச்சைக் கிளி நாளை வரும் கச்சேரிக்கு
செல்லம்மா எந்தன் செல்லம்மா

நீதிக்கே துணிந்து நின்றேன் நினைத்ததெல்லாம் ஜெயித்து வந்தேன்
நீதிக்கே துணிந்து நின்றேன் நினைத்ததெல்லாம் ஜெயித்து வந்தேன்
வேதனைக்கு ஒரு மகனை வீட்டினிலே வளர்த்து வந்தேன்
வேதனைக்கு ஒரு மகனை வீட்டினிலே வளர்த்து வந்தேன்
செல்லம்மா என்தன் செல்லம்மா செல்லம்மா எந்தன் செல்லம்மா
பாலூட்டி வளர்த்த கிளி பழம் கொடுத்து பார்த்த கிளி
நான் வளர்த்த பச்சைக் கிளி நாளை வரும் கச்சேரிக்கு
செல்லம்மா எந்தன் செல்லம்மா

ஆண்டவன் சோதனையோ யார் கொடுத்த போதனையோ
ஆண்டவன் சோதனையோ யார் கொடுத்த போதனையோ
தீயினிலே இறங்கி விட்டான் திரும்ப வந்து தாழ்பணிவான்
தீயினிலே இறங்கி விட்டான் திரும்ப வந்து தாழ்பணிவான்
சத்தியம் இது சத்தியம் செல்லம்மா எந்தன் செல்லம்மா
பாலூட்டி வளர்த்த கிளி பழம் கொடுத்து பார்த்த கிளி
நான் வளர்த்த பச்சைக் கிளி நாளை வரும் கச்சேரிக்கு
செல்லம்மா எந்தன் செல்லம்மா செல்லம்மா எந்தன் செல்லம்மா

gkrishna
5th September 2014, 02:41 PM
https://awardakodukkaranga.files.wordpress.com/2010/03/gayathiri-1.jpg?w=600

காயத்ரி திரை படத்தில் இடம் பெற்ற காட்சி
ரஜினி ,ராஜசுலோச்சனா,அசோகன் இவர்களுடன் இருக்கும் இன்னொரு நடிகை ராஜி அவர்கள் . இவர்கள் பற்றி மேலான தகவல்கள் இருந்தால் பதிவிடுமாறு வேண்டி கேட்டு கொள்கிறேன்

chinnakkannan
5th September 2014, 03:45 PM
ஹாய் ஆல் குட் ஆஃப்டர் நூன்.. கொஞ்சம்பிஸி எனில் வரவில்லை..வ்ரவில்லை எனில் “ஒன்றும் தெரியாத” பையனாக இருப்பேன் என நினைக்கவேண்டாம் :) ராதாசலூஜா கொஞ்சம் வித்யாச அழகு.. நடிப்பு என்று பார்த்தால் கொஞ்சம் கஷ்டம் தான்..கிருஷ்ணா ஜி..உங்க்ள் பதிவுகள், அனைவரின் பதிவுகளையும் ஒவ்வொன்றாக படித்துக்கொண்டிருக்கிறேன்.ஈவ்னிங்க் வர்றேன்.. அந்த ராஜி தெரியலை..

chinnakkannan
5th September 2014, 03:46 PM
ந.தியின் பாலூட்டி வளர்த்த கிளி பாட்டுக்கு தாங்க்ஸ்..க்ருஷ்ணா ஜி.. நான் அறியாத தகவல் அந்தப்பாடகர் யார்..

நான் இல்லாத போது சு.எ.சு டிஸ்கஸ் செய்ததை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்பதை... :)

Richardsof
5th September 2014, 03:54 PM
http://i60.tinypic.com/2vvtg1z.jpg

http://youtu.be/Npi3gVwyCRU

Richardsof
5th September 2014, 04:05 PM
http://i61.tinypic.com/20zusr9.jpg

http://youtu.be/johU1E9zocw

gkrishna
5th September 2014, 04:11 PM
அந்த ராஜி தெரியலை..

நடிகர் திலகத்தின் நான் வாழ வைப்பேன் படத்தில் கால் ஊனமான தங்கை ஆக வருவார் 'எந்தன் பொன் வண்ணமே அன்பு பூ வண்ணமே ' பாடலில் வருவார்

gkrishna
5th September 2014, 04:28 PM
http://tamil.thehindu.com/multimedia/dynamic/02093/12_2093882g.jpg

தமிழ்த் திரையில் சாதனை படைத்த பல நட்சத்திரங்களின் முதல்படம் பாதியில் கைவிடப்பட்டிருக்கிறது. எம்.ஜி.ஆரும் இதற்கு விதிவிலக்கல்ல.எம்.ஜி.ஆர். நடிப்பில் முதலாவதாக வந்திருக்க வேண்டிய படம் ‘சாயாதேவி’.

40களில் புகழ்பெற்றிருந்த நாராயணி கம்பெனி என்ற பட நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஹஸ்வந் நந்தலால் இயக்கிய படம். எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக அந்தப் படத்தில் நடித்தார் குமுதினி. படம் ஓரளவு வளர்ந்த நிலையில், எம்.ஜி.ஆர். மீது தயாரிப்பாளர்களுக்குத் திருப்தியில்லை.

அவரை மாற்ற வேண்டும் என்று இயக்குநரை வற்புறுத்த ஆரம்பித்தார்கள். ஆனால் எம்.ஜி.ஆர் பாடி நடிப்பதில்லை என்பதுதான் தயாரிப்பாளர்களுக்குக் குறையாகப்பட்டது. ஆனால் இயக்குநர் ஒப்புக்கொள்ளவில்லை. “ராமச்சந்திரனை மாற்ற முடியாது. வேண்டுமென்றால் குமுதினியை மாற்றுங்கள்” என்று உறுதியாகக் கூறி விட்டார்.

ஆனால் தயாரிப்பாளர்கள் குமுதினியை மாற்ற விரும்பவில்லை. நன்றாகப் பாடி, அற்புதமாக நடிக்கும் குமுதினி அன்று இரண்டு மெகா வெற்றிப் படங்களில் நடித்துவிட்ட முன்னணிக் கதாநாயகி.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை ஒட்டிய ‘அத்திகல்’தான் குமுதினியின் சொந்த ஊர். ஐந்து வயதிலேயே கர்நாடக சங்கீதத்தில் தேர்ச்சிபெற்ற குமுதினியின் இயற்பெயர் கல்யாணி காந்திமதி.

திருவிதாங்கூர் மன்னர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள, திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் நடந்தது கல்யாணியின் இசை அரங்கேற்றம். பத்துவயதில் இத்தனை பாட்டுத்திறனா என்று வியந்த மன்னர். அரங்கேற்ற மேடையிலேயே சிறுமி கல்யாணிக்குத் தங்கப் பதக்கம் அணிவித்துப் பாராட்ட நெகிழ்ந்துபோயினர் பெற்றோர்.

மகளின் இசைத் திறமையை மேலும் வளர்க்க எண்ணி, மதுரைக்குக் குடிபெயர்ந்தது கல்யாணியின் குடும்பம். மதுரையில் பல இசை விற்பன்னர்களிடம் பாரம்பரிய இசை பயின்ற அவர் 12 வயதுமுதல் கச்சேரிகளில் பாட ஆரம்பித்தார்.

டி.ஆர்.மகாலிங்கம் பரிந்துரைத்த திறமையாளர்பின்னாளில் மிகப்பெரிய நடிகராக மிளிர்ந்த டி.ஆர். மகாலிங்கம் உச்சஸ்தாயில் பாடக்கூடியவர். மதுரை பாய்ஸ் நாடக கம்பனியில் எஸ்.ஜி.கிட்டப்பாவின் வாரிசு என்று 15 வயதில் புகழடைந்திருந்த அவர், ஒருமுறை கல்யாணியின் கச்சேரியைக் கேட்டார்.

மைக் செட் வந்திருந்த தொடக்க காலம் அது. கல்யாணி உச்சஸ்தாயில் பாடியதும், குரலின் கம்பீர பாவமும், பாடும்போது இயல்பாகத் தோன்றிய முகபாவனைகளும் அவரைக் கவர்ந்துவிட்டன. கல்யாணியின் கச்சேரியில் கூட்டம் அலைமோதியதையும் கண்டார்.

அந்தக் காலகட்டத்தில் எடுக்கப்பட்ட படங்களுக்கு, நாடகங்களில் பாடி, நடிக்கும் நடிகர்களையே தேர்வு செய்தார்கள். ஆனால் குமுதினி கச்சேரியோடு நிறுத்திக்கொண்டார். நாடகங்களில் நடிக்கவில்லை. திருமணமும் ஆகிவிட்டது. இருப்பினும் அவரது பாடும் திறமைக்காக சினிமா வாய்ப்பு தேடி வந்தது.

கே.சுப்ரமணியம் இயக்கத்தில் 1939-ம் ஆண்டு வெளியான ‘ தியாக பூமி’ திரைப்படம், சுந்தந்திரப் போராட்ட உணர்வுகளைக் கிளறியதால், பிரிட்டீஷ் அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்டது. என்றாலும் தடையை மீறி மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது அந்தப் படம்.

அதற்குக் கிடைத்த வெற்றியை மனதில் வைத்து, இந்தியில் வெற்றிபெற்ற ஒரு சரித்திரப் படம் ‘தியாகபூமி’யின் தலைப்புச் சாயலுடன் ‘மாத்ருபூமி’ என்ற படமாகத் தமிழில் மறு ஆக்கம் செய்யப்பட்டது. இந்தப் படத்துக்கு வாள் வீச்சு, குதிரையேற்றம் இவற்றோடு பாடவும் தெரிந்த திறமையான கதாநாயகியைத் தேடிக்கொண்டிருந்தார் படத்தின் இயக்குநர் ஹெச்.எம்.ரெட்டி. இதைக் கேள்விப்பட்ட டி.ஆர்.மகாலிங்கம், கல்யாணி காந்திமதியைப் பற்றி எடுத்துக் கூற, உடன் மதுரை சென்று அவரைப் பார்த்தனர். நாடகங்களில் கூட நடித்திராத நிலையில் சினிமாவில் நடிக்க மறுத்துவிட்டார்.

ஆனால் கல்யாணியின் கணவர் “ எல்லோருக்கும் சினிமா வாய்ப்பு தேடி வராது” என்று உற்சாகம் தரவே, களறியும் வாள் வீச்சும் கற்றுக்கொள்ள கேரளம் சென்றார். நாராயணன் நாயர் என்பவரிடம் ஒரே மாதத்தில் கற்றுக்கொண்டார். பிறகு கிண்டி குதிரைப் பந்தய மைதானத்தில் குதிரையேற்றம் பயிற்றுவிக்கப்பட்டது.

குமுதினி ஆனார் கல்யாணி‘மாத்ருபூமி’யில் டி.எஸ். சந்தானம், பி.யு.சின்னப்பா ஏ.கே.ராஜலெட்சுமி ஆகியோருடன் படத்தின் கதாநாயகியாக நடித்தார் கல்யாணி காந்திமதி.

இந்தப் படத்தில் கதாநாயகியின் கதாபாத்திரப் பெயர்தான் ‘குமுதினி ’. அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு கல்யாணி காந்திமதி, குமுதினி ஆனார். அறிமுகப் படத்திலேயே எடுத்த ஆக்*ஷன் அவதாருக்கு நாலாபக்கமிருந்தும் பாராட்டுகள் மலையாகக் கொட்டின.

குமுதினியின் இரண்டாம் படம் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரான எம்.கே.டி நடித்து 1941-ம் ஆண்டு வெளியான ‘அசோக்குமார்’.

ஆனால் அதில் கண்ணாம்பா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தாலும் அரசகுமாரனாக நடித்த எம்.கே.டியின் காதலி ‘காஞ்சனமாலை’யாக அபலைப் பெண் கதாபாத்திரத்தில் எம்.கே.டிக்கு இணையாகப் பாடி நடித்தார். மூன்றாவதாக அவர் நடித்து கைவிடப்பட்டதுதான் ‘சாயாதேவி’ திரைப்படம்.

சாயாதேவியில் எம்.ஜி.ஆருடன் நடிக்க முடியாமல்போனாலும் ‘ஸ்ரீமுருகன்’ படத்தில் சிவபெருமானாக நடித்த எம்.ஜி.ஆருடன் பார்வதியாகத் தோன்றி நடித்து எம்.ஜி.ஆர் மதித்த முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக ஆனார்.

நூற்றுக்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கும் குமுதினி நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்தவர். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் அம்மாவாக ‘வியட்நாம் வீடு’, ‘சிவந்தமண்’ ஆகிய இரண்டு படங்களில் நடித்தவர்.

தமிழ்சினிமாவில் தனித்தடம் பதித்த ‘ஒளவையார், ‘மணிமேகலை, ‘பூம்பூகார், ‘பத்ரகாளி, ‘வியட்நாம் வீடு, ‘சிவந்தமண், ‘சொல்லத்தான் நினைக்கிறேன், ‘ஒரு வீடு ஒரு உலகம்’ உள்ளிட்ட பல படங்களில் ‘கலைமாமணி’ டி.வி. குமுதினியின் முத்திரை நடிப்பைக் காண முடியும்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் அம்மாவாக ‘வியட்நாம் வீடு’ - பத்மினியின் அம்மாவாக என்று நினைவு

மேலே படத்தில் இருப்பவர் நடிகை சாந்த குமரி .வசந்த மாளிகை திரை படத்திலும் அம்மாவாக வருவார் . கட்டுரையாள(ஆ)ர்(வல) கோளறு
தவறை திருத்திய வாசு சார் அவர்களுக்கு நன்றி

gkrishna
5th September 2014, 05:21 PM
http://www.thinakaran.lk/vaaramanjari/2009/12/13/f09121333-1.jpg
முப்பத்திரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு- நடிப்புலக மாமேதையைச் சந்தித்த முதல் இரு தினங்களிலேயே அவர் தன்நெஞ்சார நேசிக்கும் ஒரு நண்பனாகும் பாக்கியம் பெற்றேன். அவர் என்னை எனது ரசிகர் என்று பகிரங்கமாய் வானொலியில் சொன்னதால், தொழில் ரீதியாக பலரது எரிச்சல் பொறாமைகளுக்கு நான் பலியானாலும், மறுபுறம் ‘பைலட் பிரேம்நாத்’ படப்பிடிப்புக் குழுவினர் மத்தியில், எனக்குப் பெரும் மதிப்பும் சர்வசுதந்திரமும் கிடைத்தது. ஒருநாள், நடிகர் திலகம் தன் அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்க ரண்முத்து ஹோட்டலின் 3ம் மாடியில் கடற்கரைப் பக்கமாக அமைந்துள்ள ‘டெரஸ்’ எனப்படும் திறந்த வெளித்தளத்தில் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது.

வேடிக்கை பார்க்கச் சென்றிருந்த என்னுடன் அன்றைய இளம் நடிகை ஸ்ரீதேவி பேசிக் கொண்டிருந்தார். மொட்டை மாடியிலிருந்து இயக்குநர் திருலோகச்சந்தர் கேமரா கோணத்தைச் சரி பார்த்துக் கொண்டிருக்க நேரமும் ஓடிக்கொண்டிருந்தது.

நானும் ஸ்ரீதேவியும் கடற்கரைப்பக்கமாக அமைந்த கட்டைச்சுவரில் சாய்ந்து கடலலைகளைப் பார்த்தபடி பேசிக் கொண்டிருந்தோம். சிறிது நேரத்தில் ஏதோ சந்தடி கேட்டுத் திரும்பிப்பார்த்தால் புகைப்படக் கலை நிபுணர் ஸ்டில்ஸ் சாரதி ஒரு ‘ட்ரைபொட்டில்’ தன் கமராவைப் பொருத்தி எங்கள் இருவரையும் படமெடுக்க ஆயத்தமாகவும் அருகில் நடிகர் திலகம் கமரா கோணத்தைச் சரிபார்த்துக் கொண்டும் இருப்பதையும் கண்டு திகைத்துவிட்டோம்.

கோமாளிகளில்

http://www.thinakaran.lk/vaaramanjari/2009/12/13/f09121333-5.jpg

நாம் திரும்பியதும், நடிகர் திலகம் “ஐயய்யோ திரும்பிட்டாங்களே... திரும்பிட்டாங்களே... அருமையான இந்தக் காதல் காட்சியைப் படம்பிடித்து ஹமீத்தோட பொண்டாட்டிக்கு காட்டி ஒரு கலாட்டா பண்ணலாம்னு இருந்தேனே...” என்று ஒரு குழந்தையைப் போல் குதிக்க ஆரம்பித்தார். எத்தனை பெரிய கலைமேதை. அவருக்குள்ளும் ஒரு குறும்புக்காரக் குழந்தை மனம் இருப்பதைக் கண்டு வியந்தேன்.

அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு “அப்படியொரு படத்தை விட உங்களோடு சேர்ந்து ஒரு படம் எடுத்துக்கொள்ள ஆசைப்படுகிறேன் என்று கூறியதும் அன்போடு என் தோளில் கைபோட்டு அரவணைத்தபடி போஸ் கொடுத்தார். அப்படத்தை என் மனைவிக்கும் காட்டி நடந்ததைச் சொல்லி சிரித்து மகிழ்ந்தோம்”

என்று தமது ஃப்ளாஷ்பேக் அனுபவங்களை ஹமீத் சொல்லத் தொடங்கினார்.

http://www.thinakaran.lk/vaaramanjari/2009/12/13/f09121333-6.jpghttp://www.thinakaran.lk/vaaramanjari/2009/12/13/f09121333-7.jpg

“இசைஞானி இளையராஜாவின் ஆரம்பக்காலம். 1977ல் இலங்கைக்கு அவரை முதன் முதலாக அழைத்து வந்தவர் நடிகர் பிரசாந்தின் அப்பா. தியாகராஜன். வானொலி நிலையத்தில் நானும் சில அறிவிப்பாளர்களும் சேர்ந்து அவரைப் பேட்டி கண்டோம். பேட்டி முடிந்தபின், இலங்கை ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முன்னால் நின்று ஒரு படம் எடுக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.

நானும் ராஜகுருசேனாதிபதி, கனகரத்தினமும் சேர்ந்து நிற்க அப்படத்தை எடுத்தவர் பிரசாந்தின் அப்பா தியாகராஜன். அதன்பின், ‘பேசிக்கொண்டிருங்கள் வந்து விடுகிறேன்’ என்று சொல்லிப்போன தியாகராஜனும் அவர் சென்ற வாகனமும் திரும்பிவரத் தாமதமாகவே பேச்சின் சுவாரசியத்தில் எங்களையும் மறந்து போன நானும் இளையராஜாவும், கால்நடையாகவே வானொலி நிலையம் அமைந்திருந்த டொரிங்டன் சதுக்கத்திலிருந்து புல்லர்ஸ் ரோட் வழியாக பம்பலப்பிட்டியையும் கடந்து அவர் தங்கியிருந்த வெள்ளவத்தைக்கு நடந்தே சென்றோம். ம்... அது ஒரு காலம்...?

தான் கடந்து வந்த வாழ்க்கை பாதையைப் பற்றி ஹமீத் என்ன நினைக்கிறார்?

“எத்தனையோ முகங்களை பார்த்திருக்கிறேன். நான் வாழ்ந்த காலத்தில் நான் கற்ற அனுபவபாடங்கள் ஏராளம்.

வாழும் காலத்தில் நாம் எதையாவது சாதித்தால்தான் பின்னால் பேசப்படுவோம். அதை நான் முடிந்தளவு செய்து வருகிறேன். இந்த வாழ்க்கை இனிமையானது. நல்லதை மட்டும் தேர்ந்தெடுத்து வாழ்ந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்” என்று கூறி முடித்துக் கொண்டார்.

madhu
5th September 2014, 05:54 PM
ராதாசலூஜா கொஞ்சம் வித்யாச அழகு.. நடிப்பு என்று பார்த்தால் கொஞ்சம் கஷ்டம் தான்..
குமுதத்தில் வெளிவந்த "தோ ரஹா" விமரிசனத்தில் "அனில் தாவன் அழகன்.. ராதா சலூஜா நடிகை" என்று சொல்லியிருப்பாங்க.. :)

பாலூட்டி வளர்த்த கிளி பாடலை எம்.எஸ்.வி.யே முதலில் பாடியதாகத்தான் கேள்விப் பட்டிருக்கிறேன். இப்படியும் நடந்திருச்சா ? கிளிக்கு ரெக்க மொளச்சா இப்படித்தான் !!

இலங்கை வானொலி அறிவிப்பாளர் குரல்கள் எல்லாமே மனதில் பதிந்தவைதான். ஒவ்வொருவரைப் பற்றியும் தெரிந்து கொள்ள ஆசைதான். காத்திருக்கிறேன்.

JamesFague
5th September 2014, 10:35 PM
Enjoy the fantastic song from HERO. Starrig Jackie & Meenakshi Seshadri. One of the best composition from LP and the movie becomes instant Siliver Jubilee hit for

the beauty of Meenakshi.


http://youtu.be/lfHt4ryo1RY

rajeshkrv
6th September 2014, 05:19 AM
திரையரங்க தகவல்கள் அற்புதம்.
எனக்கு சென்னை திரையரங்குகள் தெரியாது , எனக்கு மதுரை திரையரங்குகள் மட்டுமே தெரியும்

செண்ட்ரல், சிந்தாமணி,ஜெயராஜ், சரஸ்வதி,, மதி, அலங்கார், விஜயலெட்சுமி , தங்கம் என எல்லா திரையரங்கிலும் படங்கள் பார்த்த ஞாபகம்.

நினைவூட்டலுக்கு நன்றி

Richardsof
6th September 2014, 05:50 AM
Rajesh Sir

Madurai old theatres ....just recall old memories...


chinthamani

http://i60.tinypic.com/ven8ys.jpg

central
http://i59.tinypic.com/2vi130o.jpg

Richardsof
6th September 2014, 05:52 AM
NEW CINEMA

http://i59.tinypic.com/2zhecfa.jpg

Richardsof
6th September 2014, 05:57 AM
MEENAKSHI
http://i57.tinypic.com/4tkihh.jpg

Richardsof
6th September 2014, 05:57 AM
http://i57.tinypic.com/2h6x3c3.jpg

rajeshkrv
6th September 2014, 06:18 AM
எஸ்.வி ஜி அருமை

Richardsof
6th September 2014, 06:30 AM
TAMIL MOVIES BANNERS ON LEFT SIDE . DIFFICULT TO FIND OUT THE NAME OF THE MOVIES.

CHENNAI - BROADWAY JUNCTION -1970

http://i58.tinypic.com/21kasxu.jpg

Richardsof
6th September 2014, 06:34 AM
http://i57.tinypic.com/15n98u8.jpg

http://youtu.be/bqxcWw3sU1w

vasudevan31355
6th September 2014, 06:59 AM
வணக்கம் ராஜேஷ்ஜி

'தம்பி பொண்டாட்டி' பற்றி அற்புதமான ஆய்வு அளித்து அசத்தி விட்டீர்கள். அந்தப் படத்தைப் பற்றி நான் என்னென்னவெல்லாம் நினைத்திருந்தேனோ அப்படியே அதை நீங்கள் தங்கள் பதிவில் அளித்து விட்டீர்கள். பிரமாதமாக எழுதுகிறீர்களே!

உன் எண்ணம் எங்கே பாடல் ஆய்வும் சுவை கூட்டியது.

அருமைஜி. வாழ்த்துக்களும், நன்றிகளும் .

vasudevan31355
6th September 2014, 07:04 AM
வினோத் சார்,
ஆவணப் பொக்கிஷங்கள் அமர்க்களம். தங்கள் சிரத்தையான உழைப்புக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

கண்ணே பாப்பா, கடவுளைக் கண்டேன், அவள் அனைத்து விளம்பரங்களும் கொள்ளை கொள்கின்றன.

நன்றி!

vasudevan31355
6th September 2014, 07:06 AM
கிருஷ்ணா சார்,

மின்னல் வேகப் பதிவுகள். குமுதினி, ராஜி, அப்துல் ஹமீத், கே.எஸ்.ராஜா,என்று உபயோகமான பதிவுகள். படித்து மாளவில்லை. தேனி போன்ற சுறுசுறுப்பை தங்களிடம் காண்கிறோம்.

நன்றி!

vasudevan31355
6th September 2014, 07:12 AM
கிருஷ்ணா சார்,

தாங்கள் அளித்துள்ள 'ஹிந்து' நாளிதழின் நடிகை குமுதினி பற்றிய பதிவை ரசித்து படித்தேன்.

அதில் ஒரு சிறு திருத்தம். 'சிவந்த மண்' திரைப்படத்தில் நடிகர் திலகத்தின் அம்மாவாக வருபவர் நடிகை சாந்த குமாரி. முத்துராமன் அம்மாவாக வருபவரே குமுதினி.

Richardsof
6th September 2014, 08:43 AM
1969- KUMUDHAM - TIT BITS

http://i58.tinypic.com/s1u8mr.jpg

Richardsof
6th September 2014, 08:45 AM
KUMUDHAM - 1969 - TITBITS

http://i59.tinypic.com/3166jxw.jpg

Richardsof
6th September 2014, 08:45 AM
1969- KUMUDHAM
http://i57.tinypic.com/smunmw.jpg

Richardsof
6th September 2014, 08:46 AM
http://i60.tinypic.com/2en5js8.jpg

Richardsof
6th September 2014, 08:49 AM
http://i57.tinypic.com/s67tjp.jpg

Richardsof
6th September 2014, 08:49 AM
http://i57.tinypic.com/2ziakht.jpg

Richardsof
6th September 2014, 08:53 AM
http://i58.tinypic.com/znm2ci.jpg

Richardsof
6th September 2014, 08:54 AM
http://i58.tinypic.com/aws000.jpg

vasudevan31355
6th September 2014, 09:38 AM
வினோத் சார்,

சுனாமி. சினிமா சம்பந்தப்பட்ட பழைய ஆவணங்கள் அல்லோலகல்லோலம். கலக்குங்கள்.

vasudevan31355
6th September 2014, 09:50 AM
//கிருஷ்ணா சார்,

தாங்கள் அளித்துள்ள 'ஹிந்து' நாளிதழின் நடிகை குமுதினி பற்றிய பதிவை ரசித்து படித்தேன்.

அதில் ஒரு சிறு திருத்தம். 'சிவந்த மண்' திரைப்படத்தில் நடிகர் திலகத்தின் அம்மாவாக வருபவர் நடிகை சாந்த குமாரி. முத்துராமன் அம்மாவாக வருபவரே குமுதினி.//

'சிவந்த மண்' படத்தில் டி .வி.குமுதினி முத்துராமனின் தாயாக.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355012/kumu.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355012/kumu.jpg.html)

rajeshkrv
6th September 2014, 10:21 AM
கே எஸ் ராஜாவின் பதிவை கண்டவுடன்
நான் சமீபத்தில் முகனூலில் எழுதிய குரலால் தமிழ் வளர்த்தவர்கள் என்ற பதிவை இங்கே மீள் பதிவாக இடுகிறேன்.

https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-9/1970414_443579005772323_72409203_n.jpg?oh=f072736a 5e9c535fb5471eddfdfeb6f7&oe=549470CE&__gda__=1419872546_9a5c87dfbbde66e15674d1fd905a744 b

குரலால் தமிழ் வளர்த்தவர்கள்
எனது சிறு வயதில் 2 இன் 1 வானொலியில் அதிகம் கேட்டது இலங்கை
ஒலிபரப்பு கூட்டுத்தாபனம். ஆம பழைய பாடல்களை பல அபூர்வ பாடல்களையும் அதைப்பற்றிய விபரங்களையும் கூறுவதில் இந்த வானொலிக்கு நிகரேதுமில்லை.
முக்கிய காரணம் அதன் அறிவிப்பாளர்கள். இலங்கை ஒலிபரப்பு
கூட்டுத்தாபனத்தின் முதல் தமிழ் அறிவிப்பாளர் மரியாதைக்குறிய திரு எஸ்.பி.மயில்வாகனம் ஐயா அவர்கள். குரலாலேயே மக்களை கட்டிப்போட்டவர் இவர். பாடல் ஒலிபரப்பு, பேட்டி என எதுவாக இருந்தாலும் அழகான தமிழில் அதுவும் இலங்கை தமிழில் பேசிய அழகு அடேயப்பா.
இந்த குரலுக்கு சொந்தக்காரரை நேரில் ஒரு முறையாவது பார்த்துவிடமாட்டோமா என ஏங்கிய ரசிகர்கள் உண்டு.
இவரத்தொடர்ந்து பாடல்கள் ஒலிபரப்புவதில் மிகவும் புகழ்பெற்றவர்
திருமதி ராஜேஸ்வரி சண்முகம்.. இனிய குரலில் இவர் பாடல்களைப்பற்றி
சொல்லும் விதமே அலாதி.. அதே போல் திரு கே.எஸ்.ராஜா .. இந்த மூன்று
பெயரும் அறிவிப்பாளர்களில் ஜாம்பவான்கள் எனலாம். இவரைத்தொடர்ந்து இன்றும் நம்மிடையே தன் கம்பீர குரலால் தமிழை வளர்த்து கொண்டிருப்பவர் திரு.பி.எச்.அப்துல் ஹமீது அவர்கள். இவர் வானொலி,தொலைக்காட்சி,மேடை நிகழ்ச்சிகள் என பலவற்றிலும் தன் தமிழால் அழகுக்கு அழகு சேர்ப்பவர். இவர் இருக்கிறார் என்று தெரிந்தே சில மேடை நிகழ்ச்சிகளை மக்கள் பார்ப்பதுண்டு. அவ்வளவு புகழுண்டு காரணம் இவரது குரலும் தமிழும்.
இலங்கை வானொலியைப்போலவே அகில பாரத வானொலியிலும் சில குரல்கள் நம்மை ஈர்த்ததுண்டு. குறிப்பாக “செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண்ஸ்வாமி” .. இந்த குரலில் செய்திகளை கேட்கவே அதிக ரசிகர்கள் உண்டு அந்த காலத்தில். இவரைப்போலவே செய்திகள் வாசிப்பது ராமனாதன்(சரத்குமாரின் தந்தை). இந்த இருவரும் நேர்த்தியாக வானொலிப்
பெட்டியின் வழியாக மக்களின் மனதில் புகுந்தவர்கள். பல வருடங்களுக்கு பின்னே அந்த குரலுக்கான முகம் எது என்பதை விகடன் வாயிலாக தெரிந்துகொண்டேன்.. இப்படி குரலாலேயே தமிழை வளர்த்து நம்மையும் கவர்ந்தவர்கள் இவர்கள்
தமிழ் நாட்டிற்கு தொலைக்காட்சி வந்தபோது தூர்தர்ஷனில் செய்திகளை வித்தியாசமாக வாசித்தவர்கள் ஷோபனா ரவி,சந்தியா ராஜகோபால் மற்றும் பாத்திமா பாபு. இவர்களும் அழகாகவும் அன்றை சூழலுக்கு ஏற்றவாறு செய்திகளை நேர்த்தியாக வாசித்தனர்.
இவர்கள் எல்லோரும் அவர்களை அறியாமலே தமிழுக்கு ஆற்றியிருக்கும் தொண்டு அளப்பறியது..
குறிப்பாக இலங்கை வானொலி அறிவிப்பாளர்கள்.
இன்றைய அறிவிப்பாளார்கள் எல்லாம் நுனி நாக்கு ஆங்கிலமும் அலங்கார உடையுமன்றி நல்ல தமிழோ செய்திகளை நேர்த்தியாகவோ வாசிப்பதில் ஆர்வம் துளி கூட இல்லை. அன்றைய அறிவிப்பாளார்களை இன்றும் நினைவு கூர்கிறோம் என்றால் அவர்களின் தமிழாற்றல் அதன் கூட சேர்ந்த அவர்களது உழைப்பு என்று எல்லாமும் சேர்ந்தே.
இது போன்ற அறிவிப்பாளர்கள் இனி கிடைப்பார்களா.. ஹுஹூம் சந்தேகமே..
- ராஜேஷ்(@Rajesh venkatasubramanian)

vasudevan31355
6th September 2014, 10:35 AM
இலங்கை வானொலி அறிவிப்பாளர்கள் பற்றிய தங்களுடைய முகநூல் பதிவு அட்டகாசம் ராஜேஷ்ஜி.

mr_karthik
6th September 2014, 10:38 AM
டியர் கிருஷ்ணாஜி,

இலங்கை வானிலையில் தனது தேன் மதுரக்குரலால் அனைவரையும் கவர்ந்த அறிவிப்பாளர் கே.எஸ்.ராஜா அவர்களைப்பற்றி யாழ்சுதாகரின் பதிவு மிக மிக அருமை. அதனை இங்கே பதித்ததற்கு மிக்க நன்றி.சுதாகர் சொல்லியிருப்பது கொஞ்சமும் மிகையல்ல. மிகச்சாதாரண படத்துக்குக்கூட மிகச்சிறப்பாக விளம்பரம் தந்து, அந்தப் படத்தைப் பார்த்தேயாக வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்துவதில் வல்லவர். படத்தில் வரும் வசனங்களை தனியே பதிவு செய்து, அதனுடன் தன் குரலையும் பொருத்தமாக இணைத்து சுவைபடத் தருவதில் அசகாய சூரர் கே.எஸ். ராஜா.

அவரைப்பற்றிய பதிவைப்படித்து விட்டு, 'இப்போது கூடவே இன்னொரு தேன்குரல் அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீது பற்றிய பதிவையும் தந்தால் நன்றாக இருக்குமே' என்று நினைத்துக்கொண்டே தங்களின் அடுத்த பதிவைப் பார்த்தால் என்னவொரு ஆச்சரியம். அப்துல் ஹமீது பற்றிய பதிவு. அதுவும் நம்மவரை உள்ளடக்கி. கூடவே மயில்வாகனன் அவர்களின் புகைப்படமும்.

அட்டகாசம் சார். பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் கிருஷ்ணாஜி...

vasudevan31355
6th September 2014, 10:42 AM
இன்றைய ஸ்பெஷல் (70)

'இன்றைய ஸ்பெஷலி'ல் 'வாழையடி வாழை' திரைப்படப் பாடல்.

http://i.ytimg.com/vi/FR8_BwDRJm8/0.jpg

படம்: வாழையடி வாழை (1972)

நடிகர்கள்: முத்துராமன், பிரமீளா, எஸ்.வி.ரங்காராவ், ஜி.வரலஷ்மி, ஷண்முக சுந்தரம், பி.ஆர்.வரலஷ்மி

பாடல்கள்: உடுமலை நாராயண கவி, மருதகாசி

இசை: குன்னக்குடி வைத்தியநாதன்

தயாரிப்பு: சித்ரா புரொடக்ஷன்ஸ்

கதை, வசனம், இயக்கம்: 'இயக்குனர் திலகம்' கே.எஸ்.கோபால கிருஷ்ணன்

http://i.ytimg.com/vi/nVSfKVlCa64/0.jpg

'இயக்குனர் திலகம்' பெருமையுடன் அறிமுகப்படுத்தும் டி.ஏ. பிரமிளா, ஆர்.வரலஷ்மி என்று டைட்டில் போடுவார்கள். இந்தப் பிரமீளா பின்னாட்களில் மிரள வைக்கும் படங்களில் நடித்து கதி கலக்குவார் என்று அப்போது யாருக்கும் தெரியுமா?

http://4.bp.blogspot.com/_jkW-9IuPFu4/SoQvKT9YsBI/AAAAAAAAAZ0/OIdyE_Iixgs/s400/P.R.Varalakshmi.JPG

அதே ரகம்தான் ஆர்.வரலஷ்மியும். பி.ஆர். வரலஷ்மி என்று இனிஷியலை மாற்றிக் கொண்டு 'வியாபாரம்' நடத்தினார்.

தன் அழகின் மேல் அபார நம்பிக்கை வைத்திருக்கும் நாயகி திருமணம் செய்து கொண்டாலும் தன் அழகு கெட்டுவிடும் என்று கணவனை தன்னிடம் நெருங்க விடாமல் செய்கிறாள். பிள்ளை பெற்றால் அழகு குலைந்துவிடும் என்று நினைக்கிறாள். தன்னைவிட அந்தஸ்து குறைந்தவர்களை துச்சமாகத் தூக்கி எறிகிறாள். பிறந்த வீட்டாரையும், புகுந்த வீட்டாரையும் மதிக்காமல் மிதிக்கிறாள். இவ்வளவுக்கும் காரணம் அவள் அழகு. தன் சொந்த அக்காள் ஒரு சமையல்காரன் நொண்டியைக் கல்யாணம் பண்ணியதால் அவளைக்கூட உதாசீனப்படுத்துகிறாள். எல்லாரையும் அருவருப்போடு பார்க்கிறாள்.

இறுதியில் அவளுக்கு அம்மை போட்டு அவள் அழகு பறி போகிறது. அழகு மட்டுமல்ல. வாழ்வும் பறி போகிறது. அவள் தங்கையே அவள் வாழ்வைப் பறிக்கிறாள். (அவளைத் திருத்தத்தான்)

http://img.youtube.com/vi/g1bCqQrkc7Q/hqdefault.jpg

இறுதியில் புத்தி வருகிறது. எல்லோரும் சேர்ந்து அவளுக்குப் புத்தி புகட்டுகிறார்கள். முடிவு சுபம்.

வழக்கமான இயக்குனர் திலகத்தின் படம். வளவள வசனங்கள், தலைக்கு மேல் கையெடுத்துக் கும்பிடும், அளவுக்கு மீறி உணர்ச்சிவசப்படும் பாத்திரங்கள், அதிகப்படியான காட்சியமைப்புகள், திருந்தாத கேரக்டர்கள், அதைத் திருத்தப் பாடுபடும் நல்ல கேரக்டர்கள், திருந்தாத ஜென்மங்களுக்கு தண்டனை, நாடகமாடித் திருத்துவது, என்று அலுப்புத் தட்டுகிறது.

வழக்கமான மாமனார் ரங்காராவ், வழக்கமான முத்துராமன், வழக்கமான சண்முகசுந்தரம், வழக்கமான ராகவன். வழக்கமான துடுக்கு ஜெயசித்ரா, வழக்கமான கே.எஸ்.கோபால கிருஷ்ணன்.

அடங்காத குட்டிக் குதிரையாக பிரமிளா, கணவனாக முத்துராமன். இருவருக்கும் முதல் இரவு டூயட். சீர்காழி கோவிந்தராஜன் குரலில். நல்ல தமிழில். குன்னக்குடியின் டிரேட் மார்க் இசைப் பின்னணியில்
காமத்துடன் நெருங்கும் நாயகன். அழகைக் காப்பாற்றிக் கொள்ளத் துடிக்கும் நாயகி.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/s1-1.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/s1-1.jpg.html)

நடிகர் திலகத்தின் 'செல்வம்' படப்பாடலான 'எனக்காகவா நான் உனக்காகவா' இப்படத்தில் முழுதும் இடம் பெறுவது தனிச் சிறப்பு. முத்துராமனும், பிரமீளாவும் 16 mm ஸ்க்ரீனில் புரஜெக்டர் மூலம் இப்பாடலைப் பார்த்து உணர்ச்சிவசப்படுவது போல காட்சிக்குப் பொருத்தமாக ஒரு காட்சி வரும். நம் உள்ளமெல்லாம் ஆனந்தக் கூத்தாடும்.

அழகான தூய தமிழ் வரிகள். சீர்காழி அனுபவித்துப் பாடியிருப்பார். வார்த்தைகள் தெள்ளத் தெளிவாக வந்து கொட்டும் அருவியைப் போல. ஆனால் முத்துராமனுக்கு பொருந்தாது.

'வாடாத பூமேடை நீயல்லவோ
ஆடாத பொன்வண்டு நானல்லவோ'

எனும் போது அலட்சியம் கொடிகட்டும். இந்தப் பாடல் பலர் விரும்பி நான் கேட்டிருக்கிறேன். சில பெரிசுகள் இந்தப் பாடலைக் கேட்டு சொக்கிப் போவார்கள். இப்போது அதிகம் வெளியே தெரியாத பாடல் என்றாலும் அப்போது ஹிட்தான்.

http://img.youtube.com/vi/zAttOcRxeOo/hqdefault.jpg

இனி பாடலின் முழு வரிகள்

ஆஹா! ஆஹா கற்பகத்தின் பூங்கொம்போ
காமனது பெரு வாழ்வோ
பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ
புயல் சுமந்த விற்குவளை
பவளமலர் நிறை பூத்த விற்கொடியோ
பொற்பதமோ இது என்ன அற்புதமோ

அங்கமெல்லாம் தங்கமோ
மன்மதனாடும் சதுரங்கமோ
அங்கமெல்லாம் தங்கமோ
மன்மதனாடும் சதுரங்கமோ
அங்கமெல்லாம் தங்கமோ

செங்கனி இதழ் கோவையோ
இல்லை.... இல்லை
ஆ............................................ .ஆ
செங்கனி இதழ் கோவையோ
இல்லை தேன் சிந்தும் மலர் பாவையோ
செங்கனி இதழ் கோவையோ
இல்லை தேன் சிந்தும் மலர் பாவையோ

அங்கமெல்லாம் தங்கமோ
மன்மதனாடும் சதுரங்கமோ
அங்கமெல்லாம் தங்கமோ

வாடாத பூமேடை நீயல்லவோ
ஆடாத பொன்வண்டு நானல்லவோ
வாடாத பூமேடை நீயல்லவோ
ஆடாத பொன்வண்டு நானல்லவோ
ஆடவா பாடவா தேடவா
நீ வா வா வா

ஆடவா புதிய இசை பாடவா
மடியில் இடம் தேடவா
என்னருகில் நீ வா வா வா

அங்கமெல்லாம் தங்கமோ
மன்மதனாடும் சதுரங்கமோ
அங்கமெல்லாம் தங்கமோ

ஜாதி மல்லிப் பூவைக் கிள்ள
சம்மதம் தாராயோ
பாதியோடு பாதியாகி என்னைச் சேராயோ
ஜாதி மல்லிப் பூவைக் கிள்ள
சம்மதம் தாராயோ
பாதியோடு பாதியாகி என்னைச் சேராயோ
இடை மின்னவா நடை பின்னவா
விடை சொல்லவா
இருகரம் தழுவிட வா

அங்கமெல்லாம் தங்கமோ
மன்மதனாடும் சதுரங்கமோ
அங்கமெல்லாம் தங்கமோ


http://www.youtube.com/watch?v=zAttOcRxeOo&feature=player_detailpage

rajeshkrv
6th September 2014, 10:43 AM
நன்றி வாசு ஜி.
தங்களின் பாராட்டுக்கு நன்றி. அதே போல் தம்பி பொண்டாட்டி பற்றிய பதிவிற்கான பாராட்டிற்குன் நன்றி.

rajeshkrv
6th September 2014, 10:46 AM
வாழையடி வாழை பற்றிய உங்கள் இன்றைய ஸ்பெஷல் அருமை .. எனக்கு பிடித்த படம். ஜெய்சித்ராவின் வேடம் நன்றாக இருக்கும்
இசை இன்னும் கொஞ்சம் பிரமாதமாக இருந்திருக்கலாம். வ்ழக்கமான கே.எஸ்.ஜி படங்கள் போல் இல்லாமல் பாடல்கள் சுமார் ரகம் என என் அபிப்ராயம்

rajeshkrv
6th September 2014, 10:50 AM
http://www.youtube.com/watch?v=0pyo15LBcPQ

chinnakkannan
6th September 2014, 10:52 AM
குட்மார்னிங் ஆல்..

முதன்முதலில் கண்ணில் பட்டது வாழைய்டி வாழை பாடல்..வாசு சார்..தாங்க்ஸ்..ராஜேஷ் ஜி சொல்லியிருப்பது போல் படம் சுமார் ரகம் பாடலிட்டதற்கு நன்றி..சீர்காழி கோவிந்தராஜன் குரல் தான் முத்துராமனுக்குப் பொருந்தவில்லை..பொருந்திய படம் அனுபவி ராஜா அனுபவி..

மறுபடியும் பின்னோக்கிப் போய் வருகிறேன் :)

gkrishna
6th September 2014, 11:10 AM
கிருஷ்ணா சார்,

தாங்கள் அளித்துள்ள 'ஹிந்து' நாளிதழின் நடிகை குமுதினி பற்றிய பதிவை ரசித்து படித்தேன்.

அதில் ஒரு சிறு திருத்தம். 'சிவந்த மண்' திரைப்படத்தில் நடிகர் திலகத்தின் அம்மாவாக வருபவர் நடிகை சாந்த குமாரி. முத்துராமன் அம்மாவாக வருபவரே குமுதினி.

நன்றி வாசு சார்
இனிய காலை வணக்கம்
நினைவு படுத்தியமைக்கு நன்றி
ஹிந்து வலைப்பூவில் சு எ சு திரை படத்தில் நாகேஷ் வீ கோபாலகிருஷ்ணன் அவர்களிடம் சொல்வது போல் சொடேர் என்று பதில் போட்டு விட்டேன்

ராஜேஷ் சார் உங்கள் முக நூல் தமிழ் அறிவிப்பாளர்கள் பற்றிய பதிவு
மிக மிக அவதானித்து எழுதப்பட்ட பதிவு .ரசித்து படித்த பதிவு

எஸ்வி சார்
அருமையான வடகறி (உங்கள் பழைய ஆவணங்களை சொன்னேன் :))
அதில் உள்ள சமாச்சாரங்கள் எல்லாமே புதிய செய்திகள்

கார்த்திக் சார்

நன்றிகள் பல. நீங்களும் நமது மற்ற வாடிக்கையாளர்களும் :) இருக்கும் போது தைரியமாக கருத்துகளை பதிவிட முடிகிறது . தகவல்களில் தவறு இருந்தாலும் திருத்தி விடுகிறீர்கள் . மன்மத லீலை safire மிட்லண்ட் திரை அரங்கு பற்றிய உங்கள் திருத்தம் உங்கள் பண்பிற்கு ஒரு சிறந்த எடுத்துகாட்டு . அதே போல் பாராட்டும் போதும் வஞ்சனை இல்லாமல் பாராட்டுகிறீர்கள். வாசு சார் அவர்களின் குமுதினி சாந்த குமரி திருத்தமும் இந்த வகை தான். திரு மது அவர்களும்,ராஜேஷ் மற்றும் எல்லோருமே இப்படி பண்பில் சிறந்து விளங்குவதை பார்க்கும் போது 'என்ன தவம் செய்தோம் இப்படி ஒரு நட்பு கிடைக்க '

gkrishna
6th September 2014, 11:13 AM
அடங்காத குட்டி குதிரை பின்னாட்களில் மட்ட குதிரை

இந்த படம் என் உடைய 12வது வயதில் நெல்லை பார்வதி திரை அரங்கில் கண்டு களித்த (கழிக்க முடியாத:)) நினைவு .50 நாட்கள் மேல் ஓடிய வெற்றி சித்ரம் ஜெயசித்ராவின் பூபைதிய பாடல் 'ரோஜா மொட்டும் மலர்ந்ததாம் மலர்ந்த பூவும் சிவந்ததாம் '
அந்நாட்களில் நெல்லை சீமையில் எல்லா வீடுகளில் பூ புனித நன்னீராட்டு விழா பாடல் இது . .இன்னும் ஒரு பாடல் நினைவில் உண்டு
'hallo ஸ்வீட்டி hallo அன்பும் நீ அமுதும் நீ ஸ்வீட்டி' என்று வரும் .பாடலை பாடியவர் தாராபுரம் சுந்தர்ராஜன் என்று நினைவு

gkrishna
6th September 2014, 11:15 AM
ஈரோடு: நல்ல படங்களை ஆதரிக்குமாறும், ஆபாசப் படங்களைப் புறக்கணிக்குமாறும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் பழம்பெரும் நடிகரான வி.எஸ்.ராகவன்.(30/09/2013)

நேற்று, ஈரோட்டில் கொங்கு கலையரங்கில், கவிதாலயம் இசைப்பள்ளி மற்றும் ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலையம் சார்பில் பழம்பெரும் நடிகர் வி.எஸ்.ராகவனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
அப்போது, வி.எஸ். ராகவன் தெரிவித்ததாவது...
அறிமுகம்....
1954-ஆம் ஆண்டு வெளிவந்த "வைரமாலை' என்ற தமிழ்ப்படத்தில் முதன்முறையாக நான் அறிமுகம் ஆனேன்.

அப்பா கேரக்டர்....
முதலில் நாடகத்திலும் பிறகு சினிமாவிலும் தொடர்ந்து பல ஆண்டுகளாக நடித்து வருகிறேன். பெரும்பாலும் தந்தை கதாபாத்திரத்தில் தான் நடித்து வருகிறேன்.

ஆரோக்கிய சினிமா....
என்னைப் பொருத்த வரை சினிமா என்பது ஆரோக்கியமானதாக இருக்க வேண்டுமே தவிர, ஆபாசமாக இருக்கக் கூடாது.

ஆதரவும் புறக்கணிப்பும்....
நல்ல படங்களை மக்கள் ஆதரிக்க வேண்டும். ஆபாசப் படங்களை மக்கள் புறக்கணித்தால் மீண்டும் ஆபாசப் படங்களை தயாரிக்க அஞ்சுவார்கள்.

திருப்தியான படங்கள்...
நான் நடித்ததிலேயே, சவாலே சமாளி, வாழையடி வாழை ஆகிய படங்கள் எனக்கு திருப்தி தந்த படங்களாக அமைந்தன.

நாகேஷால் வந்த நகைச்சுவை...
திரையுலகில் நாகேஷுடன் பழகிய பிறகுதான் நகைச்சுவையாகப் பேசுவதைக் கற்று கொண்டேன்.

சாகும் வரை நடிக்க ஆசை...
எனக்கு இப்போது 89 வயதாகி விட்டது. சாகும் வரையிலும் நடித்து கொண்டே இருக்க வேண்டும் என்பதே என் ஆசை எனத் தெரிவித்தார்.

http://tamil.filmibeat.com/img/2013/09/30-vs-rahagavan-600-jpg.jpg

mr_karthik
6th September 2014, 11:15 AM
டியர் ராஜேஷ் சார்,

வானொலி அறிவிப்பாளர்கள் பற்றிய தொகுப்பு அருமை. ஆள் இந்தியா ரேடியோவில் (முந்தைய பெயர் ஆகாசவாணி) சரோஜ் நாராயணசாமி போலவே குரலாலேயே பிரபலமான இன்னும் சிலர்.. விஜயம், சாம்பசிவன், சுப்ரமணியம், பத்மநாபன் மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களில் ஜெயம்கொண்டான், கூத்தபிரான் போன்றவர்கள். இவர்களில் ஜெயம்கொண்டான் சில திரைப்படங்களிலும் நடித்ததால் அவர் முகம் பரிச்சயம். கூத்தபிரானை ஒரேயொருமுறை கருப்பு வெள்ளை கால தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன். மற்றவர்கள் குரலால் மட்டுமே அறிமுகம்.

நல்ல தொகுப்புக்கு நன்றி...

gkrishna
6th September 2014, 11:22 AM
PR வரலக்ஷ்மி அந்நாட்களில் அபிமான நடிகை .சினிமா பைத்தியம் திரை படத்தில் கான்வென்ட் ஸ்டுடென்ட் ஆக வந்து ஜெயசித்ரா உடன் சாக்லேட் சண்டை போடுவார் . மலை நாட்டு மங்கை (நீளமான.....) கடல் அலையே
சசி குமார் ஜோடி
http://www.thehindu.com/multimedia/dynamic/00286/14cp_varalakshmi_jp_286665e.jpg

புது வசந்தம் படத்திலும் நன்றாக நடித்து இருப்பார் . ஆனால் உடும்பு கொஞ்சம் பூசின உடம்பு

ஹிந்து நாள் இதழில் அவர் கொடுத்த 2013 பேட்டி ஒன்று

Can you name five of your films you would like your grandchildren to watch?

Vazhaiyadi Vazhai, Ore Sakshi, Deivamsham, Shankarlal and Kaadu (Malayalam).

chinnakkannan
6th September 2014, 11:23 AM
கே.எஸ்.ராஜா, அப்துல் ஹமீத் கண்ணே பாப்பா பதிவுகளுக்கு நன்றி கிருஷ்ணா சார்.. மீண்டும் சந்திக்கும் வரை வணக்கம் கூறிவிடைபெறுவது கே.எஸ். ராஜா.. மயில்வாகனம் மோஸ்ட்லி பாட்டும்பதமும், இசையும் கதையும் சொல்பவர் என நினைக்கிறேன்.. வாழ்க்கையில் நல்லவை செய்தால் எல்லாம் நல்லபடி நடக்கும் என ஒரு வாக்கியம் எடுத்து அதில் உள்ள ஒவ்வொரு வார்த்தையிலும் ஆரம்பிக்குமொரு பாடல் போடுவார்கள் மாலை 5 டு 5.30 என நினைவு..இசையும் கதையும் மோஸ்ட்லி 5.30 ட்டு 6.00 அவன் மனதில் துயரம் அடிக்கிறது காதலில் தோல்வி அடைந்துவிட்டான்..அவன் மனம் பாடுகிறது என்று சொல்லி உன்னைச் சொல்லிக் குற்றமில்லை பாட்டுப் போடுவார்கள்..

இசைக்களஞ்சியம் பள்ளி கல்லூரி விடுமுறை நாட்களில் வீட்டில் இருந்தால் 4 டு 4.30 கண்டிப்பாகக் கேட்டுவிடுவேன்..அது பி.ஹெச்.அப்துல் ஹமீதாய் இருக்கும்..ம்ம்
ராஜேஷ் முக நூலில் இட்ட கட்டுரை அருமை..தொடருங்கள்.. நன்றி

கண்ணே பாப்பாவில் சத்திய முத்திரை கட்டளை இட்டது பாட்டு எதற்காகவோ எடுத்து வைத்திருந்தேன்.. பார்த்தால் படப்பாடல் எஸ்வி சார் படம் பற்றி கிருஷ்ணா ஜி நன்றி

எஸ்.வி.சார் குமுதம் பக்கங்கள், மதுரை தியேட்டர்கள் என தூள் பரத்துகிறீர்கள்..மிக்க நன்றி..
வாசு சார் வழக்கம் போல கலக்குகிறார்..உடுப்பி லஷ்மி நாராயணன் பற்றிய தகவல்களுக்கு மிக்க நன்றி

சுமதி என் சுந்தரி நான் மிகவும் ரசித்த ஒரு படம்..(ஆனால் சினிமாவே தெரியாத ஒரு ஆள் என்பதை ஏனோ என் மனம் ஏற்கவில்லை..அதுவும் கதைகள் நாவல்கள் ரசித்துப் படிக்கும் கதா நாயகன்)..பாடல்கள் ந.தி, லொகேஷன் மிக அழகு.. ஜெயலலிதா சற்றே பூசினாற் போல இருப்பார்.. இருந்தாலும் சில இடங்களில் தவிப்பதும் சில ரொமான்ஸ் பார்வைகளும் நன்றாக இருக்கும்..

பொட்டு வைத்த முகமோ.. கட்டி வைத்த குழலோ
ஒரு தரம் ஒரே தரம்
ஓராயிரம் நாடகம் ஆடினாள்.. ரொம்பப் பிடிக்கும்
ஆலயமாகும் மங்கை மனது பாட்டு மற்றவைகளைக் கம்பேர் செய்கையில் கொஞ்சம் ஸ்லோதான்..அதுவும் பட ஆரம்பத்தில் வேறு யாருடனோ ஜெயலலிதா பாடுவது போல வந்த போது இண்ட்ரஸ்ட் இல்லை.. அதைப்பற்றிய கார்த்திக் சாரின் பதிவுக்கு நன்றி + ஒரு ஓ.. சு.எ.சு பிற்காலத்தில் பார்த்த போது என் சகோதரிசொன்னஒரு தகவல்.. ந.தியின் ஷர்ட் போல கட்டம்போட்ட சட்டை அந்தக் காலகட்டத்தில் ஃபேஷனாக இருந்ததாம்..

அப்புறம். மதுரை தியேட்டர்கள்..எழுதணும்.. அப்புறம்வரேனே..

mr_karthik
6th September 2014, 11:25 AM
டியர் வினோத் சார், அசத்தல் ஆவணப்பதிவுகளுக்கு மிக்க நன்றி. கண்ணே பாப்பா, துணைவன் மற்றும் குமுதம் ஆவணங்கள் மிக அருமை. இதன் மூலம் வினோத் ஸ்டைல் என்ற புதிய முறையைத் துவங்கியுள்ளீர்கள்.

பாடலைப்பற்றிய விளக்கங்கள் எழுதி வீடியோவைப் பதிவிடுவது ஒரு வகை.

பாடலின் ஸ்டில்களை போட்டு வீடியோவைப் பதிவிடுவது ஒரு வகை.

எதுவுமே எழுதாமல் வெறும் வீடியோவை மட்டும் இணைப்பது இன்னொருவகை.

இவற்றிலிருந்து வேறுபட்டு, படத்தின் விளம்பர ஆவணத்தைத் தந்து கூடவே வீடியோவைப் பதிவிடுவது புதியவகை. இதுதான் வினோத் ஸ்டைல்.

அருமை... அற்புதம்... அட்டகாசம்... அசத்துங்கள்.

chinnakkannan
6th September 2014, 11:35 AM
வி.எஸ். ராகவன்.. கண்பார்த்த ஜாடையிலே காவியம் கண்டேன் என்று செளகார் ஜானகி உருக்கமாகப் பாடிக் கொண்டிருக்க கோடுபோட்ட சட்டையுடன் கத்தியைக் கைகளில் வைத்த படி அந்த உருவம் நெருங்க, செளகார் திரும்பிப் பார்க்காமலேயே – ஹேய் டாக்டர் நீங்கள் தான் எனக்குத் தெரியும் ..என் உயிரையும் வாங்கிவிடுங்கள் என்று சொல்ல – என்ன என்னைப் பற்றிப் பேசுகிறாய் என்ற படி டாக்டரான வீணை எஸ்.பாலச்சந்தர் மாடியிலிருந்துகுரல் கொடுக்க.. கத்தியுடன் வந்தது யார் என அதிர்ச்சியுடன் செளகார் பார்த்தால்… வி.எஸ். ராகவன்.. வித்தியாசமான வில்லனாக நடு இரவில் (அச்சோ சஸ்பென்ஸ் சொல்லிட்டேனே)
அதே போல் பட்டணத்தில் பூதத்திலும் வில்லன்.. எதிர் நீச்சலில் பேப்பர் மாமா..இருகோடுகளில்..அவ அம்மா போட்டா ஒரு கோடு அதுக்குப் பக்கத்துல உன்னைப் பெரிய கோடாக்கிக் காட்டறேம்மா எனச் சொல்லும் வெறி.. அது போல க்ளைமாக்ஸில் ஜெமினியின் குழந்தை தானே என நீச்சல் குளத்தில் உதவி செய்யாமல் திரும்பும் அலட்சியம்..விஎஸ் ஆர் முத்திரை..

இம்சை அரசனில் – இரட்டைக் குழந்தை என்றால் கதை இப்படித் தான் இருக்கவேண்டும் என்ற சிரிப்பு.. இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பால குமாராவில் ஹீரோ “தண்ணி’ தாகம் எடுத்துத் தவிக்க – பார்த்தால் எல்லாவற்றையும் இவர் குடித்திருப்பார்..

சோடை போன படங்கள் என்றுஎதுவுமே இல்லை..பாரேன் என் காரை விக்கச் சொல்லியிருந்தேன் நல்ல லாபத்துலயே வித்துட்டான் என பாலையாவிடம் சொல்வது (காதலிக்க நேரமில்லை) ம்ம் வாழையடி வாழை நினைவிலில்லை.. ஒரு நல்ல நடிகர்.. நீடூழி வாழட்டும்.. தாங்க்ஸ் கிருஷ்ணா சார்..

abkhlabhi
6th September 2014, 11:40 AM
Ref gkkrishna பதிவு எண் 1881.


கன்னட "Nanna Nee Gelalare" படத்தில் dubbing தான் "நெஞ்சில் ஆடும் பூ ஒன்று". கன்னட படம் வெளியானதே 1980-81இல். கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாருடன் இசைஞானியின் முதல் படம். இந்த படம் ஓடியதே இளயராஜாவின் இசைகாக தான்.

இதே படத்தில் கர்நாடக - மேற்கத்தி இசையில் ஒரு பாடல்.

https://www.youtube.com/watch?v=L4yUnySv7O0


மேலும் "I love U" என்ற பாடல். இசையை மட்டும் கேளுங்கள். இசைஞானியின் இசையில் மயங்காதவர் இருக்கிறார்களா ?

https://www.youtube.com/watch?v=nWjDPUZZ1qo


இசைஞானியின் இசையில் மற்றும் ஒரு கன்னட பாடல் SPB - SJ பாடிய பாடல் -
படம் ஜென்ம ஜென்ம தா அனுபந்தா .

https://www.youtube.com/watch?v=kO1d2RpS8SU

gkrishna
6th September 2014, 11:44 AM
many thanks bala sir for your reference of nenjil aadum poo ondru

chinnakkannan
6th September 2014, 12:00 PM
நெஞ்சிலாடும் பூ ஒன்று கன்னடப் பாடல்களுக்கு தாங்க்ஸ் பாலா சார்.. நெஞ்சில் ஒரு முள்னு ஒரு படம்..அதுவும் ஹிந்திப் படத் தழுவலா வேறு மொழியா தெரியவில்லை பூர்ணிமா ஜெயராம் விதவை வேஷம் என நினைவு..

gkrishna
6th September 2014, 12:01 PM
http://2.bp.blogspot.com/-Y_JwCFhh_g8/UeihK_HF1wI/AAAAAAAACvs/Mp6aGbkguV8/s1600/Manjubhashini+song+lyrics+kodungallur+amma+movie.j pg

எஸ்வி சார் அவர்கள் கண்ணகி படும் பாடு என்று பழைய ஆவணம் பதிபிட்டு இருந்தார் . அதில் கொடுங்கல்லுரம்மா என்ற படத்தில் ஜோதி லக்ஷ்மி கே ஆர் விஜயா நடித்து உள்ளதாக தகவல் உண்டு

அந்த படத்தில் நடிகை கே ஆர் விஜயாவின் நிழல்படம்

மஞ்சுபாஷினி ...........
மஞ்சுபாஷினி மணியர வீணையில்
மயங்கி உணருன்னதேதொரு ராகம் ..
ஏதொரு கீதம் ...ஊஒ ஒஹ் ...

மஞ்சுபாஷினி மணியர வீணையில்
மயங்கி உணருன்னதேதொரு ராகம் ..
ஏதொரு கீதம் ...ஊஒ ஒஹ்

மஞ்சுபாஷினி ...

http://www.youtube.com/watch?v=n4ehNQSOBNw

Pictorial Review of the film
Kodungallooramma ( 1968 )
Director : Kunchacko
Producer : Geetha Salam, Excel
Songs : K J Yesudas, S Janaki, P Leela, Balamuraleekrishna
( Vayalar Ramavarma, Raghavan K )
Cast : Prem Nazir and K R Vijaya (as Kovalan and Kannagi)
Thikkurissi(rich merchant, Kovalan"s father)
Jyothilakshmi ( as Madhavi )
S P Pillai and Adoor Pankajam (Madhavi"s parents)
Adoor Bhasi (Chinese trader)
Script : Jagathy N K Achari

The hit songs are
"Manju bhashini .." (K. J. Yesudas)
the soulful solo "Bhadradeepam ..." (S. Janaki)
the group song led by M. Balamuralikrishna "Kodungallooramme ..."
"Rithukanyakayude..." (P. Susheela)
"Kaveri poompattanathil..." (Balamuralikrishna-Susheela )
"Udayasthamanangale..." (Yesudas)
"Narthaki nisha narthaki..." (Yesudas-P. Leela)

The story of the film is based on legend of Kannagi, the central character of the epic Silapathikaram. Kannagi is eulogized as the epitome of chastity and is worshiped as goddess Pattini in Sri Lanka by the Sinhalese Buddhists and as Kodungallur Bhagavathy and Attukal Devi in Kerala. kovalan, the son of a wealthy merchant in Kaveripattinam, married Kannagi, a young woman of legendary beauty.

The events related to Kannaki have high influence in the traditions and culture of Tamil Nadu and Kerala. After setting fire to Madurai City, Kannagi finally reached Kodungalloor and settled at Kodungallur Bhagavathy Temple south of Guruvayoor.

http://malayalamcinemahistory.com/pr/kglr/b4.JPGhttp://malayalamcinemahistory.com/pr/kglr/b7.JPGhttp://malayalamcinemahistory.com/pr/kglr/e2.JPGhttp://malayalamcinemahistory.com/pr/kglr/g9.JPGhttp://www.malayalamcinemahistory.com/sf/Kodungallooramma.jpg

mr_karthik
6th September 2014, 12:08 PM
டியர் வாசு சார்,

வாழையடி வாழை படத்தில் இடம்பெற்ற சீர்காழியின் பாடல் பற்றிய பதிவு நல்ல அலசல். இன்றைய ஸ்பெஷலுக்காக எடுத்துக்கொண்டோமே என்பதால் நிறைகளை மட்டும் அலசாமல், குறைகளை அதிகமாக விவரித்துள்ளீர்கள். நடுநிலையான நல்ல பதிவு.

ஏனோ இப்படத்தில் சீர்காழியின் குரல் முத்துராமனுக்கு பொருந்தவில்லை என்பது உண்மை. 'அழகிருக்குது உடம்பிலே ஆசையிருக்குது மனசிலே' மற்றும் 'வெண்பளிங்கு மேடை கட்டி' பாடல்கள் நன்கு பொருந்தின. இவற்றைவிட அட்டகாசமாகப் பொருந்தியது 'காதலிக்க நேரமில்லை காதலிப்பார் யாருமில்லை' பாடல்தான்.

முதல் படமானாலும் மிகவும் அழகாக செய்திருந்தார் நம்ம பிரமீளா. இரண்டாவது படமான அரங்கேற்றத்தில்தான் அதிரடி பெர்பாமன்ஸ் கொடுத்து திணறடித்தார் (கே.பி.யின் தயவால்)

இந்தப்பாடல் சுமார் ரகம்தான். குன்னக்குடியிடமிருந்து சமூகப் படங்களில் இவ்வளவுதான் எதிர்பார்க்க முடியும். கதையும் அரதப்பழசு. இருந்தாலும் படம் நன்றாக ஓடி கே.எஸ்.ஜி.க்கு கல்லா நிரம்பியது.

டியர் கிருஷ்ணாஜி,

வாசு சாரின் இன்றைய ஸ்பெஷலுக்கு சிறப்பு சேர்க்கும் வண்ணம் பி.ஆர்.வரலட்சுமி மற்றும் வி.எஸ்.ராகவன் ஆகியோரின் பதிவுகளுக்கு நன்றி. (வி.எஸ்.ஆர். எந்த பேட்டியிலும் நமது சவாலே சமாளி படம் பற்றி சொல்லத்தவற மாட்டார்.).

gkrishna
6th September 2014, 12:24 PM
நாளை திருவோணம் (ஓணம் பண்டிகை கேரளா மாநிலத்தில் தமிழ்நாடு தீபாவளி பண்டிகை போல் கொண்டாடப்படும் ) . இந்த மாநிலத்தையே god 's own country என்று சொல்வார்கள் . மகாபலி சக்கரவர்த்தி எல்லா வீடுகளுக்கும் வருவதாக ஐதீகம் .

Onam Special Show | Mahabali [1983]

பிரேம் நசிர், ஜெயபாரதி ,சோமன் ,தேசிய நடிகை உன்னிமேரி (தீபா),ராஜ்குமார் (ஸ்ரீப்ரியா ஆத்துகாரர் மற்றும் நடிகை லதாவின் அன்பு தம்பி ) போன்ற பெருங்கூட்டம் கொட்டம் அடித்த படம்


https://oldmalayalamcinema.files.wordpress.com/2011/09/mahabali1983-malayalam-film.jpg?w=665

this was one of the rare movies where you saw Actor MG Soman in a mythological role. Sree Murugalaya Films banner, the movie had its Screenplay written by Palani Swami and Dialogues by the one and only N Govindankutty. The best part of the movie? MG Soman as Narada ! :) .



https://oldmalayalamcinema.files.wordpress.com/2011/09/mahabali1983-nandini-gets-a-new-home.png?w=300&h=226https://oldmalayalamcinema.files.wordpress.com/2011/09/mahabali1983-the-prince-is-imprisoned.png?w=665https://oldmalayalamcinema.files.wordpress.com/2011/09/mahabali1983-mahabali-revists-his-kingdom.jpg?w=665https://oldmalayalamcinema.files.wordpress.com/2011/09/mahabali1983-the-headless-statue.jpg?w=665

மாதுரி குரலில் ச்வர்ணங்கள் பாடல்

http://www.youtube.com/watch?v=1PTMtyT7s3Q

வாணி ஜெயராம் கிருஷ்ணசந்தர் குரல்களில்
http://www.youtube.com/watch?v=AmWpUJ63vZ0

gkrishna
6th September 2014, 12:35 PM
எழுபதுகளின் இறுதிக்காற்பகுதியில் இருந்து எண்பதுகளின் முற்பகுதிவரை தமிழ் சினிமாவில் தமக்கென ஒரு இடத்தைத் தக்க வைத்தவர்களில் நடிகை சுஜாதாவும் பாடகி ஜென்ஸியும் குறிப்பிடத்தக்கவர்கள். இந்த இருவருமே மலையாளத்திரையுலகில் அறிமுகமாகியிருந்தாலும் இருவரையும் சுவீகரித்துத் தக்க அங்கீகாரத்தைத் கொடுத்ததென்னவோ தமிழ்த்திரையுலகம் தான். அவள் ஒரு தொடர்கதை மூலம் சுஜாதாவும் திரிபுர சுந்தரி மூலம் ஜென்ஸியுமாக தமிழ்த்திரையுலகில் காலடியெடுத்து வைத்தார்கள். இருவரையும் இணைத்த புள்ளியாக "பூந்தளிர்" என்ற படத்தில் வரும் "ஞான் ஞான் பாடணும்" பாடலைச் சொல்லலாம். இதற்கு முன்போ பின்போ சுஜாதாவுக்காக ஜென்ஸி பாடியதாக நினைவிலில்லை. இந்த விசேஷம் மட்டுமல்ல பாடல் முழுதுமே மலையாள வரிகளைத் தாங்கி வந்த சிறப்பையும் கொண்டிருக்கிறது இந்தப் பாட்டு.

ஜெமினி தயாரித்து நடித்த கே.பாலசந்தர் இயக்கிய நான் அவனில்லை படத்தில் வரும் "மந்தார மலரே " தவிர மைக்கேல் மதன காமராஜன் படத்தில் வரும் "சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்" பாடல்களைத் தவிர " நெஞ்சினிலே நெஞ்சினிலே" (உயிரே) , "லாலா நந்தலாலா" ( நரசிம்மா), திருவோணம் திரு நாளும் (கும்பகோணம் கோபாலு) பாடல்களிலும் ஒரு சில மலையாள வரிகளை உள்ளடக்கி வந்திருக்கின்றன.

இசைஞானி இளையராஜாவின் இசையில் "பூந்தளிர்" படத்தில் வரும் ஒவ்வொரு பாடல்களையும் தனித்தனியே சிலாகிக்கும் அளவுக்குச் சிறப்பு வாய்ந்தவை. "ஞான் ஞான் பாடணும்" பாடலை எம்.ஜி.வல்லபன் எழுதியிருக்கிறார்.

இளையராஜாவின் ஆரம்பகாலப்படங்களில் கணிசமான பங்களிப்பை எம்.ஜி.வல்லபன் வழங்கியிருக்கிறார். எம்.ஜி.வல்லபனே இயக்கிய தைப்பொங்கல் போன்ற படங்களில் பாடலாசிரியராகவும் இவர் கொடுத்த பாடல்கள் கவிச்சிறப்பு மிக்கவை. ராஜா நினைத்தால் ஒரு மலையாளக் கவிஞரை எழுத வைத்திருக்கலாம். எம்.ஜி.வல்லபனுக்கான விசேட அழைப்புக்குக் கண்டிப்பாகக் காரணமிருக்கும். அந்த வாய்ப்பையும் நிறைவாகவே வழங்கியிருக்கிறார் இவர்.

"மரத்தைச் சுற்றிப் பாடும்" மரபோடு சரி சமமாகப் பயணப்பட்டது காதலியோடு "ஒளித்துப் பிடித்து தேடி விளையாடும்" பாடல்கள். குறிப்பாக இந்தப் பாடலை ஒத்த பாடல்களாக சம காலத்தில் வந்த "கண்டேன் எங்கும்" (காற்றினிலே வரும் கீதம்), மற்றும் "தெய்வீக ராகம் திகட்டாத பாடல்" (உல்லாசப் பறவைகள்) வகையறாவில் அடக்கக்கூடியது இந்தப் பாட்டு.

ஜென்ஸிக்குக் கிடைத்த இந்த இரண்டு பாடல்களில் "தெய்வீக ராகம் திகட்டாத பாடல்" இன்னொரு திசையில் உச்ச ஸ்தாயியில் பயணப்படும் போது இந்தப் பாடல் அடக்கமாக வந்து மனதைக் கவர்கின்றது. இந்த இரண்டு பாடல்களையும் இன்னொருவருக்குப் பொருத்திப் பார்க்க முடியுமென்றால் அவர் ஸ்வர்ணலதா ஒருவர் தான். ஓணம் பண்டிகை நாளில் இதம் தரும் இந்தப் பாடலைக் கேட்பதே சுகம் தரும் அனுபவம்.

http://www.youtube.com/watch?v=0PXGyomZF9M

vasudevan31355
6th September 2014, 12:38 PM
சிங்களப் படவுலகின் புகழ் பெற்ற நடிகை கீதா குமாரசிங்கே படங்கள். (ஸ்ரீலங்கா பத்திரிக்கைகளிலிருந்து)

இவர் 'மோகனப் புன்னகை' படத்தில் நடிகர் திலகத்தின் ஜோடியாக கவர்ச்சியாக வருவார்.

'தென் இலங்கை மங்கை' என்ற அருமையான பாடல் இவருக்கு உண்டு. நல்ல அழகான நடிகை. இவரது பெண் நதி குமாரசிங்கே இப்போது நடிகையாகவும் மாடலாகவும் கலக்குகிறார்.

http://1.bp.blogspot.com/_Kqm3dfxyOiI/SX3FHdZAVlI/AAAAAAAAN-c/CASqoC8pkVk/s1600/z1.jpg

http://3.bp.blogspot.com/_Kqm3dfxyOiI/ShFQuQ-CLJI/AAAAAAAARR8/_mcuyMduy18/s1600/geetha%2B(10).jpg

http://3.bp.blogspot.com/_Kqm3dfxyOiI/ShFQYVJKU_I/AAAAAAAARRs/3C10KIvr9D0/s1600/geetha%2B(7).jpg

http://1.bp.blogspot.com/_zvjc7jPvmtw/SfPZ3thFMDI/AAAAAAAAGpQ/Yrtj1dPeLwI/s1600/geetha%2Bkumarasinghe%2B-%2B1.jpg

http://www.geethakumarasinghe.com/site/covers/l.jpg

vasudevan31355
6th September 2014, 12:43 PM
கீதா குமாரசிங்கே மகள் நதி குமாரசிங்கே

http://3.bp.blogspot.com/-mZEKx8t6IRg/UMnjGjxr5GI/AAAAAAAANJQ/On-FfvThupE/s640/geetha-kumarasinghe-daughters-photo-11.jpg

http://1.bp.blogspot.com/-ZAimfCAgE3A/UMnjMWlZkxI/AAAAAAAANJ4/WqJvzt8bpfY/s1600/geetha-kumarasinghe-daughters-photo-16.jpg

vasudevan31355
6th September 2014, 12:45 PM
நடிகர் திலகத்துடன் கீதா 'மோகனப் புன்னகை' படத்தில்.

http://i.ytimg.com/vi/GQJw_CQm8WY/maxresdefault.jpg

'தென் இலங்கை மங்கை
வெண்ணிலவின் தங்கை
தேனருவி நீராடினாள்'


https://www.youtube.com/watch?v=f6efkuqrka4&feature=player_detailpage

gkrishna
6th September 2014, 12:53 PM
பாடல்: தென் இலங்கை மங்கை
திரைப்படம்: மோஹனப் புன்னகை
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்: janaki

தென் இலங்கை மங்கை வெண்ணிலவின் தங்கை
தேனருவி நீராடினாள் தாமரையைப் போலே
பூ மகளும் நின்றாடினாள்

தென் இலங்கை மங்கை வெண்ணிலவின் தங்கை
தேனருவி நீராடினாள் தாமரையைப் போலே
பூ மகளும் நின்றாடினாள்

தென் இலங்கை மங்கை வெண்ணிலவின் தங்கை
தேனருவி நீராடினாள் தாமரையைப் போலே
பூ மகளும் நின்றாடினாள்

வான் பார்க்கும் தென்னை நீராடும் என்னை
ஏன் பார்த்து சாய்கின்றதோ
வான் பார்க்கும் தென்னை நீராடும் என்னை
ஏன் பார்த்து சாய்கின்றதோ
பூந்தேரில் ஏறி போகின்ற தென்றல்
என் மீது பாய்கின்றதோ
ஆகாய மேகம் நான் கொண்ட கூந்தல்
தானென்று எண்ணி தரை வந்து சேரும்

தென் இலங்கை மங்கை வெண்ணிலவின் தங்கை
தேனருவி நீராடினாள் தாமரையைப் போலே
பூ மகளும் நின்றாடினாள்

பொன் மீன்கள் என்று என் கண்கள் கண்டு
செம்மீன்கள் பாராட்டுதோ
பொன் மீன்கள் என்று என் கண்கள் கண்டு
செம்மீன்கள் பாராட்டுதோ
சேய் போல என்னை தண்ணீரின் வெள்ளம்
தாய் போல தாலாட்டுதோ
ஏகாந்த நேரம் ஏதேதோ எண்ணம்
பூம்பாவை நெஞ்சில் புதுக்கோலம் போடும்

தென் இலங்கை மங்கை வெண்ணிலவின் தங்கை
தேனருவி நீராடினாள் தாமரையைப் போலே
பூ மகளும் நின்றாடினாள்

vasudevan31355
6th September 2014, 12:55 PM
V.S.Ragavan with R.S.Manohar. Film: Vairamalai

http://www.thehindu.com/multimedia/dynamic/00304/08MPRAGHAVAN1_304042g.jpg

gkrishna
6th September 2014, 01:00 PM
திரு கார்த்திக் சார் அவர்கள் நடிகர் திலகம் திரியில் பதிவு இட்ட மோகனபுன்னகை - மீள் பதிவு

நடிகர்திலகம் - ஸ்ரீதர் இணைந்து படைத்த கடைசிக் காவியம்...
'மோகனப்புன்னகை' நினைவலைகள்
32-வது உதய தினம் (14.01.1981 - 14.01.2012)

இயக்குனர் ஸ்ரீதருடன் நீண்டகாலமாக ஸ்டில் போட்டோகிராபராகப் பணியாற்றிய 'ஸ்டில் சாரதி' தனது ‘சாரதி மோஷன் பிக்சர்ஸ்’ சார்பில் தயாரித்த படம் 'மோகனப்புன்னகை'. அவருக்கு ஆசை நடிகர்திலகத்தை வைத்து படம்பண்ண வேண்டுமென்று. அதே சமயம் தனக்கு நெடுங்காலமாக வாழ்வளித்த ஸ்ரீதர் கையால் இயக்கப்பட வேண்டும் என்பதும் அவரது எண்ணம். ஆகவே வைரநெஞ்சத்துக்குப்பிறகு நடிகர்திலகத்தை விட்டு திசைமாறிப்போயிருந்த ஸ்ரீதரையும் நடிகர்திலகத்தையும் இப்படத்தில் மீண்டும் ஒன்று சேர்த்தார். இடைப்பட்ட காலத்தில் ஸ்ரீதர் மாற்றுமுகாமில் இரண்டு படங்களையும், அதன்பின் கமல் ரஜினியை வைத்து இளமை ஊஞ்சலாடுகிறது படத்தையும், பின்னர் அழகே உன்னை ஆராதிக்கிறேன் போன்ற படங்களையும் இயக்கியிருந்தார். பெருந்தன்மையோடு எதையும் எடுத்துக்கொள்ளும் நடிகர்திலகமும் மீண்டும் ஸ்ரீதருடன் இணைந்து பணியாற்ற சம்மதித்தார். மோகனப்புன்னகை உருவானது.

நடிகர்திலகத்தின் படங்களிலேயே முதன்முறையாக நான்கு கதாநாயகிகள் (பாவை விளக்கில் எத்தனை?). அந்த நால்வர், வைரநெஞ்சத்தில் ஏற்கெனவே நடிகர்திலகத்துடன் இணைந்திருந்த பத்மப்ரியா, பிற்காலத்தில் கவர்ச்சி ஆட்டத்தில் கலக்கிய அனுராதா, மலையாளப்படங்களில் கொடிகட்டிப்பறந்த ஜெயபாரதி, மற்றும் இலங்கை நடிகை கீதா ஆகியோர். நெடுநாட்களுக்குப்பின் ஸ்ரீதரின் இயக்கம், மெல்லிசை மன்னரின் இசை, பி.என்.சுந்தரத்தின் ஒளிப்பதிவு எல்லாம் சேர்ந்து ரசிகர்களை அதிகம் எதிர்பார்க்க வைத்து விட்டது. மெல்லிசை மன்னரும், சுந்தரமும் ஏமாற்றவில்லை. கதைதான் சற்று பலவீனமாக அமைந்துவிட்டது.

சாந்தியில் விஸ்வரூபம் ஓடிக்கொண்டிருந்தபோது இப்படம் ‘சித்ரா’வில் வெளியானது. ஆகவே சாந்தியில் தினமும் மாலை நாங்கள் கூடிப்பேசிக் கொண்டிருந்தபோது, ஏற்கெனவே அப்படத்தின் சில காட்சிகளைப் பார்த்திருந்த நண்பர் சிவா படத்தை ஏகமாக புகழ்ந்து தள்ளினார். சித்ராவில் முதல்காட்சி பார்த்து விடலாம் என்று எண்ணியிருந்தபோது, ‘Oasis Entertainers’ என்ற அமைப்பினர் படம் ரிலீஸ் அன்று காலை மோகனப்புன்னகை சிறப்புக்காட்சியாக, பைலட் தியேட்டரில் ஒருகாட்சி மட்டும் திரையிட இருக்கிறார்கள் என்ற செய்தி வர, 'அட சித்ராவில் பார்ப்பதைவிட பைலட்டில் பார்க்கலாமே' என்ற ஆர்வம் எல்லோருக்கும் உண்டானது. அதற்கேற்றாற்போல மறுநாள் அந்த Oasis Entertainers அமைப்பினரே நேரடியாக வந்து சாந்தி வளாகத்தில் நின்ற ரசிகர்களிடம் டிக்கட் விற்கத்தொடங்கினர் (ஸ்பெஷல் காட்சியாதலால் கூடுதல் விலை). எல்லோருக்கும் முதல்நாள் பைல்ட்டில் பார்க்க இருக்கிறோம் என்ற சந்தோஷம். (ஏனோ சிவாஜி மன்றத்தில் இப்படத்தின் ஸ்பெஷல் காட்சி போடவில்லை).

ரிலீஸுக்கு முதல்நாள் இரவு 12 மணிவரை சித்ராவில் அலங்காரம் நடந்துகொண்டிருப்பதைப் பார்வையிட்டுக்கொண்டிருந்தோம். சேப்பாக்கம் மன்றத்தினர் பந்தல் அமைத்திருந்தனர். எங்கள் மன்றத்தின் சார்பில் நடிகர்திலகத்தின் கட்-அவுட்டுக்கு ராட்சத மாலை போட்டிருந்தோம். மற்ற மன்றத்தினர் தங்கள் மன்றங்களின் பேனர்கள் மற்றும் கொடிகளால் அலங்கரித்திருந்தனர். ‘சைதை சிவந்த மண் சிவாஜி’ மன்றத்தினர் வழக்கம்போல ராட்சத பேனர் அமைத்திருந்தனர். சித்ரா தியேட்டரின் கண்ணடிப்பெட்டியினுள் நமது ராகவேந்தர் சார் அழகுற அமைத்திருந்த வண்ண மயமான பதாகை அலங்கரித்திருந்தது.(அதைப்பார்வையிட்டுக் கொண்டிருந்தபோதுதான் 'அமரகாவியம்' படத்துக்கு தாஜ்மகால் வடிவில் ஒரு சிறப்பு பதாகை உருவாக்க இருப்பதாகச்சொன்னார்).

ரிலீஸன்று காலை 8 மணிக்கெல்லாம் பைலட் தியேட்டர் முன் கூடி விட்டோம். அப்போது அங்கே திரையிடப்பட்டிருந்த வேறு படத்தின் பானர்கள் கட்டப்பட்டிருந்தன. படம் ரிலீஸாகும் தியேட்டர் ஒன்று, நாங்கள் பார்க்க வந்திருக்கும் தியேட்டர் ஒன்று. அந்த வழியே பஸ்ஸில் போனவர்களெல்லாம், அங்கே திரையிடப்பட்டிருந்த படத்துக்குத்தான் இவ்வளவு கூட்டமும் என்று எட்டிப்பார்த்துக்கொண்டு போயினர். 8.40 அளவில் எல்லோரையும் உள்ளே அனுமதித்து, சரியாக 9 மணிக்கு படத்தைத் துவக்கினார்கள். படம் துவக்கத்திலிருந்தே நன்றாகவே இருந்தது.

நடிகர்திலகத்துக்கு நான்கு ஜோடிகள் இருந்தபோதிலும் அதில் மூன்று ஜோடி ஒருதலைக்காதல். இலங்கை நடிகை கீதாவுக்கும் அவருக்கும் மட்டும்தான் ஒரிஜினல் காதல். ஏற்கெனவே பத்மப்ரியாவுக்கு அவர் மேல் ஒருதலைக்காதல். அது நிறைவேறாமல் நடிகர்திலகம் - கீதா காதல் மணமேடை வரை வந்ததில் அவருக்கு வருத்தம். ஆனால் மணமேடையில் கீதா கொல்லப்பட, அந்த ஒரிஜினல் காதல் முறிந்து போகிறது. நாளடைவில் தன் அலுவலகத்திலேயே பணிபுரியும் ஜெயபாரதியுடன் நடிகர்திலகத்துக்கு காதல் ஏற்பட, அதையறியாத ஜெயபாரதி, நடிகர்திலகம் தன் காதலைச்சொல்ல வரும் நேரம் பார்த்து, தான் மணமுடிக்கப்போகும் நபரை அவருக்கே அறிமுகப்படுத்த அந்தக்காதலும் அவுட். இதனிடையே தான் வளர்த்து வந்த அனுராதாவும் தன்மீது காதல் கொள்வது கண்டு, அதிர்ச்சியடையும் நடிகர்திலகம், அதை முறிக்க அவரே அனுவுக்கு முன்னின்று வேறு ஒருவருடன் மணமுடிக்க, புதிய கணவனுடன் கப்பலில் பயணிக்கும் அனுராதா நடிகர்திலகத்தை மறக்க முடியாமல் கப்பலில் இருந்து குதித்து உயிரை விட, கடற்கரையில் சோகமே உருவாக அமர்ந்திருக்கும் நடிகதிலகத்தின் காலடியிலேயே அனுராதாவின் பிணம் ஒதுங்க, அதைத்தூக்கியவாறு அவர் கடலுக்குள் செல்வதோடு படம் முடிகிறது.

கொஞ்சம் சிக்கல் நிறைந்த கதைதான். இடையில் கொஞ்சம் சொதப்பியும் இருந்தார்கள். காதலி கீதா இறந்த சோகத்தில் முதலில் மதுப்பித்தராகவும், பின்னர் பெண்பித்தராகவும் மாறுவதாகக் காட்டியிருந்தது ரசிகர்களுக்கும், தாய்மார்களுக்கும் அவ்வளவாகப் பிடிக்கவில்லை. கீதா இறந்த பின் ஜெயபாரதியுடனான அவரது காதல் நிறைவேறுவதாக முடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று ரசிகர்கள் அப்போதே பேசிக்கொண்டார்கள். ஆனால் ஒட்டுமொத்தமாக படம் ரசிகர்களுக்குப் பிடித்திருந்தது. படம் நெடுகிலும் ரசிகர்கள் ஆரவாரமாக கைதட்டி ரசித்தார்கள். நாகேஷின் காமெடியும் நன்றாகவே அமைந்து ரசிகர்களால் ரசிக்கப்பட்டது. வம்பு பேச ஆளில்லாமல் கண்ணாடியில் தன்னைத்தானே பார்த்துப்பேசிக்கொள்ளும் இடம் வெகு ஜோர்.

குறிப்பாக பாடல் காட்சிகள் ரசிகர்களுக்குப் பிடித்திருந்தது. படத்தின் முதல் பாடலாக, கீதா அருவியில் குளிக்கும் காட்சியுடன் படமாக்கப்பட்ட 'தென்னிலங்கை மங்கை' பாடலும், கீதாவும் நடிகர்திலகமும் இணைந்து பாடும் டூயட் 'தலைவி.. தலைவி... என்னை நீராட்டும் ஆனந்த அருவி' பாடலும் கொண்டாட்டமாக ரசிக்கப்பட்டது என்றால், ஜெயபாரதி தன் வருங்காலக்கணவனை அறிமுகப்படுத்தியதும், அவரை வாழ்த்தி நடிகர்திலகம் பாடும் 'கல்யாணமாம் கச்சேரியாம்' பாடல் ரசிகர்களை உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது. கண்களில் சோகத்தைத்தேக்கி வைத்துக்கொண்டே சிரித்துக்கொண்டு பாடும் காடசிகளில் ரசிகர்களின் கைதட்டல் அரங்கத்தை அள்ளியது. அனுராதாவிடம் பாடும் பாடல் 'குடிக்க விடு... என்னைத் துடிக்க விடு' என்ற பாடலும் ரசிகர்களால் ஆரவாரத்துடன் ரசிக்கப்பட்டது. வெளிச்சத்துக்கு வராமல் போன நடிகர்திலகத்தின் பல தத்துவப்ப்பாடல்களில் இதுவும் ஒன்று.

பைலட் தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது, படம் நன்றாக இருக்கிறது நிச்சயம் வெற்றிபெறும் என்று எல்லோரும் பேசிக்கொண்டு சென்றனர். அன்று மாலைக்காட்சியின்போது ரெஸ்பான்ஸ் தெரிந்துகொள்வதற்காக சித்ராவுக்குப்போனோம். உள்ளே போய் படம் பார்க்கவில்லை. முதல்நாளாகையால் கடும் கூட்டம். மேட்னி பார்த்துவிட்டு வெளியே வந்த பொதுமக்கள், படம் நன்றாயிருப்பதாகச்சொல்லவே படம் வெற்றியென்று அப்போதே முடிவு செய்தோம். ஐந்தாம் நாள் இரண்டாம் முறையாக, 'சித்ரா'வில் மாலைக்காட்சி பார்த்தோம். அப்போதும் எல்லோரும் நன்றாகவே ரசித்தனர், கைதட்டினர், பாராட்டினர். குறிப்பாக 'கல்யாணமாம்' பாடலுக்கும், 'குடிக்க விடு' பாடலுக்கும் நல்ல வரவேற்பு.

இவ்வளவு ஆரவாரமாக வரவேற்கப்பட்ட 'மோகனப்புன்னகை' ஏன் பெரியதொரு வெற்றியைப் பெறவில்லையென்பது இன்றுவரை புரியாத காரணமாகவே இருக்கிறது.

vasudevan31355
6th September 2014, 01:06 PM
https://dozeu380nojz8.cloudfront.net/uploads/video/horizontal_cover/3207/large_d6e31aca15_Mohana-Punnagai.jpg

vasudevan31355
6th September 2014, 01:06 PM
http://i1.ytimg.com/vi/v5MyR7lX30E/0.jpg


http://images.mavshack.com/PicturePublishing/IND-DVD-06-454--MOHANA_PUNNAGAI--S_e4b38cc3-1593-4ec6-aa04-27fb70bbe882.jpg

http://i.ytimg.com/vi/4cZmx_Ae4nM/hqdefault.jpg

vasudevan31355
6th September 2014, 01:08 PM
http://i1.ytimg.com/vi/geh0sF1ttS4/maxresdefault.jpg

http://i1.ytimg.com/vi/QT7hKDKjv8Y/maxresdefault.jpg

http://i.ytimg.com/vi/wp3XNScG--M/maxresdefault.jpg

http://i1.ytimg.com/vi/3w1S8gypmQ8/maxresdefault.jpg

http://i.ytimg.com/vi/Yp6VbsMJwLc/maxresdefault.jpg

sss
6th September 2014, 01:10 PM
வாழையடி வாழை - சீர்காழி பாடலைப் பற்றி திரு ராஜநாயஹம் தனது வலை யில் கூறியுள்ளது...

சீர்காழியின் நளினமற்ற அபத்த கூப்பாடு க்கு ஒரு உதாரணம்.

'வாழையடி வாழை' படத்தில் டூயட் பாட்டு " ஹல்லோ ! ஸ்வீட்டி அல்லோ !"

மதுரை தியேட்டரில் படம் பார்ப்பவர்கள் சிரித்து விடுவார்கள்.
"டே ..என்னடா பாடுறே " என்று கத்துவார்கள்.
-----------------

gkrishna
6th September 2014, 01:12 PM
அருமையான நிழற்படங்கள் வாசு சார்
ஜெயபாரதியுடன் இருக்கும் நடிகர் கை கொடுக்கும் கை ரங்கநாதன் அவர்கள் தானே

எனகென்னவோ ஜெயபாரதி pant ஷர்ட் விட புடைவையில் தான் பாந்தமாய் இருக்கிறார் வாசு சார்

gkrishna
6th September 2014, 01:19 PM
வாழையடி வாழை - சீர்காழி பாடலைப் பற்றி திரு ராஜநாயஹம் தனது வலை யில் கூறியுள்ளது...



ஹலோ ஸ்வீட்டி ஹலோ பாடலுக்கான நிழல் படங்கள்

http://i1.ytimg.com/vi/DzaEo0aRCFw/hqdefault.jpghttps://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcQUSPZV4dvJyCkuwiiHL1tk3hm52w8RK EJFKa7TPbJJYcsz4nPmhttps://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcRkziDqNSzl1oqYBhP5y0g_BVxm73E9I aWVncVuXum45hpOh61X

http://www.onlinenewsvideo.net/hello-sweety-hello-vazhaiyadi-vazhai-tamil-song_73b744138.html

இந்த பாடலை பாடுபவர் சீர்காழியா. கொஞ்சம் கேட்டு சொல்லுங்கள் sss சார் வாசு சார்

படத்தின் டைட்டில் கார்டு இல்

சீர்காழி கோவிந்தராஜன்
s .v கிருஷ்ணமுர்த்தி
L .R .ஈஸ்வரி குழுவினர்
M R விஜயா

என்று உள்ளது

sss
6th September 2014, 02:22 PM
கிருஷ்ணா சார்,

உங்கள் சந்தேகம் சரியே...இந்த பாடல் கிருஷ்ணா மூர்த்தி பாடியது தான்..
ராஜா நாயகம் சார் "அங்கமெல்லாம் தங்கமோ" என்கிற பாடலுக்குப் பதில் இதை சொல்லிவிட்டார் என நினைக்கிறேன்.
அந்த பாடலுக்கு முன்னர் சீர்காழி "ஆஅ... ( சிலுக்கு மாதிரி ஒரு முனங்கல்..) ஆஹா ...கற்பகத்துக்கு பூங்கொம்போ ..." என ஆரம்பம் செய்வதை ஒரு வேளை ரசிகர்கள் கேலி செய்தார்களோ என்னவோ ?
இதோ இந்த பாடலைக் பாருங்கள்..கேளுங்கள்...
https://www.youtube.com/watch?v=zAttOcRxeOo

gkrishna
6th September 2014, 02:51 PM
உங்கள் சந்தேகம் சரியே...இந்த பாடல் கிருஷ்ணா மூர்த்தி பாடியது தான்..
ராஜா நாயகம் சார் "அங்கமெல்லாம் தங்கமோ" என்கிற பாடலுக்குப் பதில் இதை சொல்லிவிட்டார் என நினைக்கிறேன்.
அந்த பாடலுக்கு முன்னர் சீர்காழி "ஆஅ... ( சிலுக்கு மாதிரி ஒரு முனங்கல்..) ஆஹா ...கற்பகத்துக்கு பூங்கொம்போ ..." என ஆரம்பம் செய்வதை ஒரு வேளை ரசிகர்கள் கேலி செய்தார்களோ என்னவோ ?
இதோ இந்த பாடலைக் பாருங்கள்..கேளுங்கள்...


நன்றி sss சார்
செண்பக பாண்டியனின் சந்தேகத்தை தீர்த்து வைத்த சுந்தர பாண்டியனே நீவிர் வாழ்க . என்னால் 1000 பொற்காசுகள் கொடுக்க முடியவில்லை .அதற்கும் மேலாக என் அன்பு கலந்த நன்றியை மீண்டும் தெரிவித்து கொள்கிறேன்

Richardsof
6th September 2014, 02:54 PM
http://i60.tinypic.com/307qf51.jpg

http://youtu.be/AVkG3N2q4ZY

JamesFague
6th September 2014, 02:59 PM
Majestic Photos of NT from Mohana Punnagai. Thanks to Neyveliar JI.



Regards

JamesFague
6th September 2014, 03:02 PM
Mr NeyveliarJI,

If possible can you post the other side of the photo of NT which is with Jayabaduri as the
same required for one drawing purpose.

Regards

mr_karthik
6th September 2014, 03:17 PM
டியர் வாசு சார்,

கிடைத்தற்கரிய இலங்கை நடிகை கீதாவின் நிழற்படங்கள் நன்றாக உள்ளன. அதுவும் சிங்களப் பத்திரிகைளில் இருந்து...........!!!!!!!!!!!!!!!!.

எங்கிருந்து பிடிக்கிறீர்கள் இவற்றையெல்லாம்?.
அசத்தல் மன்னர்களப்பா...

Richardsof
6th September 2014, 03:24 PM
என்னுடைய ஆவண பதிவுகளுக்கு பாராட்டுக்கள் தெரிவித்த இனிய நண்பர்கள் திரு ராஜேஷ் , திரு வாசு , திரு சின்ன கண்ணன் , திரு கார்த்திக் ,திரு கிருஷ்ணா மற்ற நண்பர்களுக்கும் அன்பு நன்றியினை தெரிவித்து கொள்கின்றேன் .

இனிய நண்பர் திரு கார்த்திக் அவர்களின் மோகன புன்னகை - மீள் பதிவு அருமை . நன்றி கிருஷ்ணா சார் .

Richardsof
6th September 2014, 04:05 PM
இவர் யார் என்று தெரிகிறதா ?

http://i62.tinypic.com/2zxmg75.jpg

Russellmai
6th September 2014, 06:36 PM
கிருஷ்ணாஜி சார்,
நெல்லை பார்வதி திரையரங்கில் நூறு நாட்களைக் கடந்தும் வசூல் குறையாமல் ஓடிக் கொண்டிருந்த பட்டிக்காடா பட்டணமா திரைப்படத்தின் ஓட்டத்தை
தடுத்த படம் வாழையடி வாழை.இரு படங்களுக்கும் ஒரே விநியோகஸ்தர் அமைந்ததால்
வந்த கொடுமை.
கோபு

Murali Srinivas
6th September 2014, 08:07 PM
To My Dear Gopal and all Vani Fans

https://scontent-b-mad.xx.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/10678666_945804508779847_1174038460031564948_n.jpg ?oh=efa92faa087bb93aad11b0a19cc07566&oe=54974B2F

Regards

chinnakkannan
6th September 2014, 09:19 PM
மதுரைக்கென்று சில பிரத்யேகத் தமிழ் உண்டு..அதில் ஒன்று பந்தா..

யாராவது அலட்டுகிறார்க்ள் என்றால் ரொம்ப பந்தா பண்றான் பாரேன் என்பார்கள்..(இப்பவும் உண்டா தெரியவில்லை)

அதுல பாருங்க பாஸ்..இந்தப் பெண்கள் இருக்காங்களே..ம்க்கும் இந்த லவ்வர்க்கு முன்னால் பந்தா பண்ணுவாங்க பாருங்க..

அதுவும் வாலியே என்ன சொல்லியிருக்கார்.. கண்கள் தொடாமல் கைகள் படாமல் காதல் வருவதில்லை..கொஞ்சம் ஓரளவுக்கு உண்மை தான்!

இருந்தாலும் உஷார் ப் பார்ட்டிங்க தான்.. பிடிக்கும் கொஞ்சம் காதலோட காதலன் தன்பக்கம் இழுத்தணைக்கறது..ஆனா பிடிக்காத மாதிரிக் காட்டுவாங்க..என்று ஆன்றோர் சொல்லியிருக்கிறார்கள்..!

வேறுவேண்டும் எனக்கேட்டால் பதிலெதுவும் சொல்லாய்
...விஷமக்கண் பார்வையினால் மெளனத்தால் கொல்வாய்
மேருபோல நிமிர்ந்திருந்த முகத்தினையே சற்றே
..மேவித்தான் இதழமுதம் பருகிடவே அழைத்தால்
சேறுபட்ட சீலையினைப் பார்த்தாற்போல் பதறி
..செவ்விதழைத் தான்மடித்துத் தள்ளலாமோ பெண்ணே
தேருநிலை மாறியதே தங்கநிறப் பெண்ணே
..தெனாவட்டாய் நிலைகொள்ளச் செய்திடுவாய் கண்ணே..

பின்ன என்னங்க..டார்க் ப்ளூலெக்கின்ஸ்ல டிசைன் வேற..மேல ஒரு பிங்க் கலர் ஸ்பாகெட்டி டாப்ஸ்.. தலைமுடியோ பஃப்னு விரிச்சிருக்கா.. எல்லாம் அனுப்பிச்ச செல்ஃபி போட்டோ தான் .போட்டோல்ல பார்க்கறச்சயே கிறங்குதே.. கூப்புடலாமா..சட்டுன்னு காதலியக் கூப்பிட பழைய பாட்டத்தவிர வேற என்ன இருக்கு

விழியே விழியே உனக்கென்ன வேலை
விருந்துக்குவரவா நாளைக்கு மாலை
தூது சொல்லடி மெதுவாக – நீ
தூது சொல்லடி மெதுவாக
இளம் தோள்களிலே அசைந்தாடட்டுமா நெஞ்சைக்
கேட்டுச் சொல்லடி சுவையாக..

//அவளுக்கும் அந்தப் பாட்டுத் தெரியும் போல..வாஸ்ஸப்ல அவளே பாடறா.. அட குரலும் நல்லா இருக்கே//

விருந்து என்றாலும் வரலாம் வரலாம்
மருந்து தந்தாலும்தரலாம்
இதில் நாளை என்ன நல்ல வேளை என்ன
இங்கு நான்கு கண்களும் உறவாட..

//கூடவே வாய்ஸ் வேற வருது..டேய் பாட்டுத்தான் பாடினேன் நீ பாட்டுக்கு பைக் எடுத்துக்கிட்டு வீட்டுப் பக்கம் வந்துடாதே..டாட் இஸ் தேர்….ஓகே.. பாடறதுன்னா பாடு..வேறவழி சந்திரபோஸ் பாடறதா நினச்சுக்கறேன்!//

கன்னம் என்னும் ஒரு கிண்ணத்திலே
கறந்த பாலிருக்கும் வண்ணத்திலே
கரும்புச் சாறு கொண்டு வருவாயோ
கிளியே கொஞ்சம் தருவாயோ..

//லூஸீ… நீ தான்மொட்டை மாடிலல் நான் இருந்தாலும் யாரும் இல்லாம இருக்கறச்சயும் கூட அந்த எதிர் ஃப்ளாட் மாமா ஜன்னல்லருந்து பார்க்கறார்னு பயந்த..இப்ப என்னடான்னா பாட்டு மூலமா கிஸ்கேக்கற – இப்படில்லாம் நெனச்சுக்கிட்டா..ஆனா சொல்லலை..கண்டின்யூ பண்றா/

கேட்டுத் தருவது சரிதானா
கிளியின் சொந்தம் என்ன அது தானா
பாலும் பழமும் தேனும் தினையும்
நாலும் தருவேன் மேலும் தருவேன்
என்னவேண்டும் இன்னும் சொல்லலாமா

/இவனுக்கோ பக்னு ஆய்டுச்சு..அடாடா.. இட்லி மொளகாப்பொடில்லாம் தரமாட்டாளாம்மா..ஓ பாட்டு தானே..இருந்தாலும் நாளைக்கு நேர்ல பார்க்கறச்சே கேட்டுக்கணும்!//

காவேரிக் கரையின் ஓரத்திலே
தாலாட்டும் தென்றல் நேரத்திலே
கலந்து பேசிக்கொள்ள வருவாயோ
கனியே கொஞ்சம் தருவாயோ..

// ம்ம்..மஹாபலிபுரம் கூடப் போலாம்னு கேட்ட ஆள் தானே இவன்..நோ சான்ஸ்னு அப்போதே சொல்லிட்டேனே..இவனோட திருச்சி வரைக்குமா..என் ஆஃபீஸ்லயும் லீவ் கிடைக்காது..அவனுக்கும் தான்..என்ன தான்பாட்டுப் பாடினாலும்லாஜிக்கா கொஞ்சம் மாத்திப் பாடலாமில்லை..லூஸீ..அதுக்கு எப்படி பாட்டுல்லாம் எழுத வரும்..இருந்தாலும் நான் ரொம்ப அழகா இருக்கேன்னு சொல்லிடுத்து ஃபோட்டோல்ல..அதுவும் இன்னிக்கு க் காலைல தான் ஃபேஸியல் பண்ணிக்கிட்டேன்னு அதுக்குத்தெரியாது..சரிசரி.மிச்சப் பாட்டையும் முடிச்சுடலாம்.. //

ஆற்றங்கரை என்ன அவசியமா
அதிலும் சொந்தம் என்ன ரகசியமா
தேதி குறித்து ஊரை அழைத்து
காலம் அறிந்து மாலை அணிந்து
தரவேண்டும் தந்து பெறவேண்டும்..

/ம்க்கும்.. பார்க்கலாம்..அப்பா கூட யு.எஸ்லருந்து ஒரு ஜாதகம் பொருந்தியிருக்குன்னு சொன்னாரே..சரி சரி இப்போ இதுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் கொடுத்துடலாம்.. ஐ லவ்யூடா.. வெய்ட் பண்ணிக்கிட்டிருக்கான் பாரேன்.. ஒடனே மீ டூ.. இன்ஃபினிட் டைம்ஸ்னு வந்துடுச்சு..//

**
.படம் புதிய பூமி பாடகர் திலகமும் இசையரசியும் பாடும் இந்தப் பாடல் எனக்கு ரொம்பப் பிடிக்குமாக்கும்..அதுவும் இசையரசி..விருந்துஎன்றாலும் வரலாம் வரலாம் என இழுக்கும் ராகம்… நைஸ்…

*

chinnakkannan
6th September 2014, 09:29 PM
எஸ்.வி.சார்.. யார்னு தெரியலையே

வெண்ணிலவின் ஒன்றுவிட்ட சகோதரியின் மகளோ
..வீசுகின்ற தென்றலதின் வேட்டகத்து உறவோ
எண்ணத்தில் பார்த்திருக்கும் இளவரசி தானோ
..எழுத்தினிலே சரித்திரத்தில் வருகின்ற தேனோ
கன்னந்தான் சிவந்ததுவோ கலர்ப்படத்தின் பிரமையோ
…கண்களிலே சிரித்திருக்கும் கவிதையதும் எதுவோ
வண்ணமகள் படந்தந்தீர் வாகாக இங்கே..
..வஞ்சியவள் பெயரென்ன பட்டெனவே சொல்வீர்..

//கண்ணா வரவர உன்னோட ஜொள் தாங்க முடியலை..

ச்சும்மா ஃபன் தானே மனசாட்சி :)//

vasudevan31355
6th September 2014, 10:48 PM
ஒரு கலர்ப் படத்துக்கு இவ்வளவு ஜொள்ளா?:)

வெடி போட்றவருக்கே எஸ்வி மருந்து கிடிச்சுட்டாரே! என்ன கொடுமை சரவணன் சார் இது.

JamesFague
6th September 2014, 11:07 PM
Fantastic melody from Ashiqui 1990 movie. Enjoy the song.


http://youtu.be/2MIr6GuycTI

JamesFague
6th September 2014, 11:10 PM
Superb melody and if you listen the song in night it will be a memorable experience. What a melody.



http://youtu.be/Pu3c5WntSgo

Gopal.s
7th September 2014, 05:29 AM
நண்பர்களே,

வேலை நிமித்தம் மற்ற நாடுகளுக்கு சென்று வர வேண்டியுள்ளதாலும்,மாலை வேலைகளை வியாபார விருந்தாளிகளுக்கு பங்கு வைத்து விடுவதாலும்,சில நாட்கள் அடிக்கடி எழுத்தில் உங்களுடன் பங்கு பெற இயலாது.

ஆனாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் படிப்பதும் ,மானசீக பங்களிப்பும் உண்டு. மன்னிக்கவும்.

வாழ்த்துக்களுடன்,

Richardsof
7th September 2014, 06:14 AM
[QUOTE=chinnakkannan;1162369]எஸ்.வி.சார்.. யார்னு தெரியலையே

வெண்ணிலவின் ஒன்றுவிட்ட சகோதரியின் மகளோ
..வீசுகின்ற தென்றலதின் வேட்டகத்து உறவோ
எண்ணத்தில் பார்த்திருக்கும் இளவரசி தானோ
..எழுத்தினிலே சரித்திரத்தில் வருகின்ற தேனோ
கன்னந்தான் சிவந்ததுவோ கலர்ப்படத்தின் பிரமையோ
…கண்களிலே சிரித்திருக்கும் கவிதையதும் எதுவோ
வண்ணமகள் படந்தந்தீர் வாகாக இங்கே..
..வஞ்சியவள் பெயரென்ன பட்டெனவே சொல்வீர்..

ulagam sutrum valiban - pachaikili song fame metta - thailand actress

http://i62.tinypic.com/35btwle.jpg

Richardsof
7th September 2014, 06:16 AM
http://youtu.be/Tk9JS0zTZ5A

Richardsof
7th September 2014, 06:20 AM
மதுரைக்கென்று சில பிரத்யேகத் தமிழ் உண்டு..அதில் ஒன்று பந்தா..

யாராவது அலட்டுகிறார்க்ள் என்றால் ரொம்ப பந்தா பண்றான் பாரேன் என்பார்கள்..(இப்பவும் உண்டா தெரியவில்லை)

அதுல பாருங்க பாஸ்..இந்தப் பெண்கள் இருக்காங்களே..ம்க்கும் இந்த லவ்வர்க்கு முன்னால் பந்தா பண்ணுவாங்க பாருங்க..

அதுவும் வாலியே என்ன சொல்லியிருக்கார்.. கண்கள் தொடாமல் கைகள் படாமல் காதல் வருவதில்லை..கொஞ்சம் ஓரளவுக்கு உண்மை தான்!

இருந்தாலும் உஷார் ப் பார்ட்டிங்க தான்.. பிடிக்கும் கொஞ்சம் காதலோட காதலன் தன்பக்கம் இழுத்தணைக்கறது..ஆனா பிடிக்காத மாதிரிக் காட்டுவாங்க..என்று ஆன்றோர் சொல்லியிருக்கிறார்கள்..!

வேறுவேண்டும் எனக்கேட்டால் பதிலெதுவும் சொல்லாய்
...விஷமக்கண் பார்வையினால் மெளனத்தால் கொல்வாய்
மேருபோல நிமிர்ந்திருந்த முகத்தினையே சற்றே
..மேவித்தான் இதழமுதம் பருகிடவே அழைத்தால்
சேறுபட்ட சீலையினைப் பார்த்தாற்போல் பதறி
..செவ்விதழைத் தான்மடித்துத் தள்ளலாமோ பெண்ணே
தேருநிலை மாறியதே தங்கநிறப் பெண்ணே
..தெனாவட்டாய் நிலைகொள்ளச் செய்திடுவாய் கண்ணே..

பின்ன என்னங்க..டார்க் ப்ளூலெக்கின்ஸ்ல டிசைன் வேற..மேல ஒரு பிங்க் கலர் ஸ்பாகெட்டி டாப்ஸ்.. தலைமுடியோ பஃப்னு விரிச்சிருக்கா.. எல்லாம் அனுப்பிச்ச செல்ஃபி போட்டோ தான் .போட்டோல்ல பார்க்கறச்சயே கிறங்குதே.. கூப்புடலாமா..சட்டுன்னு காதலியக் கூப்பிட பழைய பாட்டத்தவிர வேற என்ன இருக்கு

விழியே விழியே உனக்கென்ன வேலை
விருந்துக்குவரவா நாளைக்கு மாலை
தூது சொல்லடி மெதுவாக – நீ
தூது சொல்லடி மெதுவாக
இளம் தோள்களிலே அசைந்தாடட்டுமா நெஞ்சைக்
கேட்டுச் சொல்லடி சுவையாக..

//அவளுக்கும் அந்தப் பாட்டுத் தெரியும் போல..வாஸ்ஸப்ல அவளே பாடறா.. அட குரலும் நல்லா இருக்கே//

விருந்து என்றாலும் வரலாம் வரலாம்
மருந்து தந்தாலும்தரலாம்
இதில் நாளை என்ன நல்ல வேளை என்ன
இங்கு நான்கு கண்களும் உறவாட..

//கூடவே வாய்ஸ் வேற வருது..டேய் பாட்டுத்தான் பாடினேன் நீ பாட்டுக்கு பைக் எடுத்துக்கிட்டு வீட்டுப் பக்கம் வந்துடாதே..டாட் இஸ் தேர்….ஓகே.. பாடறதுன்னா பாடு..வேறவழி சந்திரபோஸ் பாடறதா நினச்சுக்கறேன்!//

கன்னம் என்னும் ஒரு கிண்ணத்திலே
கறந்த பாலிருக்கும் வண்ணத்திலே
கரும்புச் சாறு கொண்டு வருவாயோ
கிளியே கொஞ்சம் தருவாயோ..

//லூஸீ… நீ தான்மொட்டை மாடிலல் நான் இருந்தாலும் யாரும் இல்லாம இருக்கறச்சயும் கூட அந்த எதிர் ஃப்ளாட் மாமா ஜன்னல்லருந்து பார்க்கறார்னு பயந்த..இப்ப என்னடான்னா பாட்டு மூலமா கிஸ்கேக்கற – இப்படில்லாம் நெனச்சுக்கிட்டா..ஆனா சொல்லலை..கண்டின்யூ பண்றா/

கேட்டுத் தருவது சரிதானா
கிளியின் சொந்தம் என்ன அது தானா
பாலும் பழமும் தேனும் தினையும்
நாலும் தருவேன் மேலும் தருவேன்
என்னவேண்டும் இன்னும் சொல்லலாமா

/இவனுக்கோ பக்னு ஆய்டுச்சு..அடாடா.. இட்லி மொளகாப்பொடில்லாம் தரமாட்டாளாம்மா..ஓ பாட்டு தானே..இருந்தாலும் நாளைக்கு நேர்ல பார்க்கறச்சே கேட்டுக்கணும்!//

காவேரிக் கரையின் ஓரத்திலே
தாலாட்டும் தென்றல் நேரத்திலே
கலந்து பேசிக்கொள்ள வருவாயோ
கனியே கொஞ்சம் தருவாயோ..

// ம்ம்..மஹாபலிபுரம் கூடப் போலாம்னு கேட்ட ஆள் தானே இவன்..நோ சான்ஸ்னு அப்போதே சொல்லிட்டேனே..இவனோட திருச்சி வரைக்குமா..என் ஆஃபீஸ்லயும் லீவ் கிடைக்காது..அவனுக்கும் தான்..என்ன தான்பாட்டுப் பாடினாலும்லாஜிக்கா கொஞ்சம் மாத்திப் பாடலாமில்லை..லூஸீ..அதுக்கு எப்படி பாட்டுல்லாம் எழுத வரும்..இருந்தாலும் நான் ரொம்ப அழகா இருக்கேன்னு சொல்லிடுத்து ஃபோட்டோல்ல..அதுவும் இன்னிக்கு க் காலைல தான் ஃபேஸியல் பண்ணிக்கிட்டேன்னு அதுக்குத்தெரியாது..சரிசரி.மிச்சப் பாட்டையும் முடிச்சுடலாம்.. //

ஆற்றங்கரை என்ன அவசியமா
அதிலும் சொந்தம் என்ன ரகசியமா
தேதி குறித்து ஊரை அழைத்து
காலம் அறிந்து மாலை அணிந்து
தரவேண்டும் தந்து பெறவேண்டும்..

/ம்க்கும்.. பார்க்கலாம்..அப்பா கூட யு.எஸ்லருந்து ஒரு ஜாதகம் பொருந்தியிருக்குன்னு சொன்னாரே..சரி சரி இப்போ இதுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் கொடுத்துடலாம்.. ஐ லவ்யூடா.. வெய்ட் பண்ணிக்கிட்டிருக்கான் பாரேன்.. ஒடனே மீ டூ.. இன்ஃபினிட் டைம்ஸ்னு வந்துடுச்சு..//

**
.படம் புதிய பூமி பாடகர் திலகமும் இசையரசியும் பாடும் இந்தப் பாடல் எனக்கு ரொம்பப் பிடிக்குமாக்கும்..அதுவும் இசையரசி..விருந்துஎன்றாலும் வரலாம் வரலாம் என இழுக்கும் ராகம்… நைஸ்…

*


EXCELLENT WRITE UP . THANKS CHINNA KANNAN SIR

http://youtu.be/b8GfsvQPXgs

RAGHAVENDRA
7th September 2014, 08:09 AM
பல்வேறு அலுவல்களின் நிமித்தம் தொடர்ந்து இத்திரியில் பங்கேற்க முடியவில்லை. விரைவில் தொடர்வேன் என நம்புகிறேன்.

இந்த இடைநாட்களில் எவ்வளவு பதிவுகள். பக்கங்கள் பறக்கின்றன. பதிவுகள் பல்வேறு வகையில் விரிகின்றன. ஒவ்வொன்றும் பாராட்டுக்குரியவை.

வாசு சார் மோகனப் புன்னகை சூப்பர்... இந்த கீதா குமாரசிங்கே, இலங்கை இந்திய கூட்டுத்தயாரிப்பான ரத்தத்தின் ரத்தமே திரைப்படத்தில் ஒரு காட்சி முழுவதும் மிகவும் ஆபாசமாக தணிக்கையின் கெடுபிடியை மீறியும் வெளிப்பட்ட காட்சிகளில் காட்சியளித்தார். ஆனால் நல்ல திறமைசாலியான நடிகை. முகத்தில் உணர்வுகளை வெளிப்படுத்துவதில் வல்லவர்.

இதே போல வாழையடி வாழை பாடல்...

தாங்கள் குறிப்பிட்ட பாடல் ஹிட்டாகாததற்கு ஒரு காரணம் பாடலின் தாள அமைப்பே. ஒரு அறிமுக இசையமைப்பாளர் கூட முதலிரவுக் காட்சியில் இவ்வளவு வேகமான தாளக்கட்டில் பாடலை அமைக்க மாட்டார். படத்தைப் பார்க்காமல் இந்தப் பாட்டைக் கேட்பவர்கள், அடித்துச் சொன்னால் கூட இது முதலிரவுப் பாடல் என நம்ப மாட்டார்கள்.

இந்தத் தாளக்கட்டின் காரணமாகத்தான் முத்துராமனுக்கு இப்பாடலில் சீர்காழியின் குரல் பொருந்தாமல் போய் விட்டது.

RAGHAVENDRA
7th September 2014, 08:10 AM
கார்த்திக் சார்
தங்களுடைய அபூர்வமான தகவல்களும் நினைவுப் பரிமாற்றங்களும் நம் நடிகர் திலகம் திரியில் இடம் பெறாதது ஒரு குறையே. காலம் இந்தக் குறையைப் போக்கும் என எதிர்பார்ப்போம்.

RAGHAVENDRA
7th September 2014, 08:12 AM
முரளி சார்
வாணியின் படத்தைப் போட்டு ஒருவரை இங்கே இழுக்க ஐடியா போட்டது சூப்பர்..
அந்தக் காலத்து பனாமா சிகரெட் விளம்பரம் போல இழுக்க இழுக்க இறுதி வரை அவர் வருவார்...
(என்னைப் போல் ஒருவன் படத்தில் இந்த வாசகத்தை வைத்து ஒரு பாடலையே மெல்லிசை மன்னர் உருவாக்கி விட்டார்.)

RAGHAVENDRA
7th September 2014, 08:14 AM
இழுக்க இழுக்க இறுதி வரை இன்பம்... பாடகர் திலகம் ராட்சசி குரலில் சூப்பர் பாடல்...

இதோ கேளுங்கள்...

ட்ரம்பெட் கோரஸ் ஒன்றாய் ஒலிக்கும் போது அட்டகாசமாய் இருக்கும்.

சிலருக்கு வாழ்க்கை சரணம் துவங்குவதற்கு முன் வரும் அக்கார்டியன் அமர்க்களம்..

கேளுங்கள்

http://www.youtube.com/watch?v=AZCA0ZWwBZQ

RAGHAVENDRA
7th September 2014, 08:15 AM
வினோத் சார்
அட்டகாசமாக அந்தக் காலத்து விளம்பரங்கள் திரையரங்குகள் என நிழற்பட அணிவகுப்பில் அசத்துகிறீர்கள்.. மேலும் தொடருங்கள்..

RAGHAVENDRA
7th September 2014, 08:17 AM
கிருஷ்ணா ஜீ, ராஜேஷ், சி.க., வாசு, பெங்களூர் பாலா மற்றும் பெயர் விட்டுப்போன ஒவ்வொரு பங்கேற்பாளருக்கும் பாராட்டுக்கள்.

Gopal.s
7th September 2014, 08:33 AM
Tamil Music directors and SJ ! - Random thoughts

by Subramaniamviswanathan @ SJ yahoo grp

Viswanathan- Ramamurthy(V-R) were somewhat as brilliant and as prolific in TFM in the 60s as were S-J in HFM. But quantity-wise V-R bagged and scored for a huge no. of films, I would say bulk of the Tamil films in the 60s, their only able competitor being K.V. Mahadevan of ‘Shankarabharanam’ fame who was an accomplished genius of his own class. So you can imagine the equivalent combined work of S-J, SDB, MM, OPN, Naushad and half a dozen more top-grade MDs, V-R and KVM were handling themselves on the Tamil front. I believe there would have been as many Tamil films churned out in the 60s as Hindi films, give and take some. So it is a huge quantum of output we are talking about and the beautiful thing is that it hardly showed on the quality! KVM experimented in Hindustani classical as well, which he used in one mythological film ‘Karnan’ with outstanding effects. V-R combined successfully popular music with aesthetic appeal for more than a decade, until they decided to part ways in the early 70s. Ramamurthy went into oblivion, whereas M.S.Viswanathan or MSV, as popular known is still active and to date the most senior and well-known MD in Tamil cinema. So they were definitely not chhoti-moti cheez!

There were umpteen Tamil films, mostly family melodramas that were re-made in Hindi in the 60s, and most often than not, I dare to say, that the music in Hindi versions fell short of the quality that the Tamil originals had. Somehow, barring S-J, other stalwart MDs could not really re-create the magic of V-R and KVM’s original scores. Some glaring examples are Nazrana, Raakhi, Gauri, Khandaan, Mehrbaan ( all Ravi), Aadmi, Ram aur Shyam, Saathi ( all Naushad) and Pyar kiye Jaa (L-P) – I think in the last mentioned, Director Sridhar & L-P totally missed the bus even with Kishore Kumar in the lead, whereas the original hit ‘Kadhalikka Neramillai’ had an array of delightful songs by V-R that are still as fresh and popular as ever. There were more re-makes that followed which were damp squibs; ‘Lakhonme ek’ (RDB), ‘Teen Bahuraniyan’ (K-A) etc. RDB did not take a chance in another re-make, ‘Do Phool’. He straightaway lifted ‘Muthu kulikka vaarigala’ as it was in the original V-R version!

So was there a silver lining in the Hindi re-makes?
Yes, it was S-J’s music As Mr. Natarajan had noted in an earlier mail, it is difficult to judge whether ‘Dil Ek Mandir’’s music was better or the original ‘Nenjil Or aalayam’ by V-R was better. Both were classy and carried the respective composers’ individual styles. ‘Zindagi’ was as good as the original as well. If KVM’s ‘Iruvar ullam’ was a musical delight, then so was S-J’s ‘Hamrahi’, the Hindi version. I guess one of the most successful Tamil film-maker Sridhar banked on S-J for his Hindi re-makes like ‘Dil ek mandir’, ‘Dharti’ and ‘Duniya kya jane’ after occasional straying in ‘Nazrana’ and ‘Pyar kiye jaa’. S-J also did not disappoint in ‘Main Sundar Hoon’ which was a re-make of the Tamil hit ‘Server Sundaram’. (You can see the respective MDs composing music in a song sequence of these films!) . I must also mention that when Hindi films with S-J’s music were re-made in Tamil, the Tamil music lagged behind in quality! A classic example is ‘Brahmachari’. Its remake ‘Enga Mama’ which had MSV’s music, was a pale comparison to Brahmachari’s songs! During that period, Viswanathan and Ramamurthy had split ways, and Tamil music went on a descent, only to be resurrected by another up-coming genius in the mid- 70s by the name ‘Ilayaraja’! ( He has composed for few Hindi films like ‘Sadma’ and the recent ‘Chini kum’).

Regards,
S.V.Nathan.

L

Gopal.s
7th September 2014, 09:01 AM
RK Sekhar----a small flashback...)
(Dileep (a) A.R.Rahman's Dad)

It was 1964.....

One old man's photo was hanging on the wall of the house,with the mild letters reading 'Keelanoor rajagopal baghavadhar'.Below that,RK sekhar was composing and playing a tune in his harmonium.RK Sekhar abbreviates to Rajagopala KulaSekhar..The man on the photo was his father.That's rahman's grandfather.During the yesteryears,his grandfather was was telling 'Harikadhai bagavadham' in mylapore temples.(May be this could be the reason for naming a track as 'Mylapore Blues' in his 'Connections' Album? )

Sekhar was playing 'Sotta mudhal sudala varai..' from his hit film 'Palasi Raja' in his harmonium.In the next few years,the woman who's going to give birth to rahman,kasthuri(now kareema) was hearing that tune happily.She started crying.On seing that sekhar stopped playing and kasthuri why she was crying.

Wiping the tears from her eyes,kasthuri replies that for this only we struggled so much.Now all we hear is your's song all over kerala.


Sekhar stops her n tells kasthuri, " Don't get too excited.All songs are hit but there's no offer for the next project"..At that very moment,ramanathan entered the house and congratulates sekhar and says ,""Palasi raja's" songs are super kit..So you're doing our next project "Aisha" ..I came here to give you the advance and sees all those dismantled musical instruments spreaded all over the house"

"All seems to be imported musical instruments..None does experiments as you sir..Everyone beats around the same old tune..Not only your music in "Palasi raja" but your re-recording was so minute and perfect.None can near you sir" says ramanathan.With a low pitch voice ramanathan asks sekhar, " Sekhar sir,don't mistake me that i am talking politics,with the aim of doing something new in music yu've come from tamil nadu to here..But people here are jealous of you sir,so you should be a little careful:"

Level headed sekhar replies" People who grow will grow ramanathan sir..None could stop that..Their ashes will have their names scribbled on it" and bids adieu to ramanathan


R.K.Sekhar,a tamilian entered malayalam music industry without any fuzz.But there's none to appreciate or welcome him whole-heartedly..Because,They were jealous that he does something new rather than doing the same old stuff.People weren't interested in hearing something new.


Very few music directors like salil Choudary did some new things with their music.Doing something new in music was sekhar's ambition..People don't accept new things that easily,Opportunities are not an issue for sekhar.But immersing himself in music was his sole aim.He was more of a 'workaholic',having improper food and sleep.


From 1902,Indian film industry's first re-recording 'Gowhar john' to the latest 'delhi 6' ,he has almost all records in his kitty and he's the famous music critic and writer,shajji..


He recorded most of RK Sekhar's compositions in CD's and gave it to rahman.Even rahman doesn't have those songs.Only shajji had it..One can understand how a son feels when hearing a song composed by his father


In all the stage shows from then to now,RK Sekhar's 'palasi raja' film hit number sung by yesudas 'Sotta mudhal sudala varai' will be sung without fail.For over 40 years,it remains as an evergreen number.One of yesudas' beginning numbers..

During that song:

http://i39.tinypic.com/oqlkx1.jpg

Rk sekhar has composed music for 22 malayalam films.From that more than 100 songs are still evergreen numbers :-)

Not only composing but also re-recording,sound arranging,sound mixing required few eminent people,sekhar was a mix of all says shajji.

In that season ,illayaraja worked under RK Sekhar as keyboard player and arranged notes.It reminds us of a proverb in english "History repeats itself"


Sekhar started his life journey as a worker in Electric Board of tamil nadu..At one stage he shifted to music.He was naturally talented in harmonium,he learned carantic music from dakshinamurthy master.Slowly understanding the nuances of music,he became arranger and conductor of music.Many were not able to write musical notes,but sekhar was flamboyant in all departments of music.He was a gift to malayalam music industry.

He captured the music industry with his 'palasi raja',but after that he did his next album only after 8 years.. He was working as a music arranger due to economic problems in between those years..


Without taking enough rest,sekhar's musical journey continued for days and nights.His family doesn't know when he returns home.This restlessness led to the improper health condition of sekhar..It made him bed-ridden..


At a time when A.R.Rahman’s father R.K Shekar what working round-the-clock, he never cared about food or sleep. He used to spend all his time at the recording studio, having just tea and biscuits. Sometimes, he used to suffer from severe stomach ache, late in the nights. Unable to bear the pain, he would just lie down with a pillow pressed tight on his stomach. He would relax and sleep after the killing pain subsided. Barely an hour after he slept it would have already dawned. With the thought that, musicians would be waiting at the studio from 7 am itself, he would wake up and rush for the recording. He didn't have time to even consult a doctor regarding his stomach ache. He would neither tell anyone about this!



The other sad story is that, though an amazing composer, Shekar had very few opportunities to compose alone for films, and he just worked for other composers. He gave 10 beautiful songs for the film Pazhasirajaâ. The song Siragatru veeNoru kochhu thumbiâ sung by AM Raja and S.Janaki, and the lullaby Muththey va va vaâ sung by P.Susheela are a pleasure to listen to, even now! The song Sahibe sahibe a-salam aleikumâ became a trendsetter. After a long break, came the movie Aayeshaâ. The song yathrakaara povuga povugaâ sung by P. B. Sreenivas for that film is one of PBS™s best songs. But, how long can someone financially sustain without getting proper composing opportunities?



Days passed, and the cruel hands of the disease clutched RK Shekar tightly. He became bedridden. The images of the young kid, Dileep, visiting his dad every day at the hospital became permanently etched in Dileep's memory.


Dad is lying on the hospital bed, surrounded by his assistants. They note down on the music notes dictated by Shekar. A few directors come in and tell him We feel bad to tell this now¦ But, our film scores will get completed only if you come. Not worrying about the agony caused by the disease, he listens to the tunes and writes notes for music arrangements. Popular lyricist, Sri Kumaran comes and holds Shekars hands in gratitude, and says “Get well soon, and come back. Lets make music together! Theirs was a successful combo, and had given some superb songs. Shekhar returns a dry smile in return, for he was well aware of the seriousness of his disease. The kid, Dileep, watches all this with a mix of amazement and confusion.



Dileep couldnt understand what happened to his dad all of a sudden, for he would always be busy like a bee. All he knew was that his dad was a good musician. The collection of musical instruments and music-records formed Dileeps world. Dileep believed that his dad would get well soon, and would be back to his music work very soon. But, that was not to be. Shekars health condition kept deteriorating each day.


Shekar got married only when he was 31, at Thiruppathi. He got married to Kanchana, and had 4 kids, back-to-back Kanchana, Dileep, Bala and Rekha. Shekar had been making so many innovations in Malayalam film music industry. It was he, who introduced SP Balasubramanyam and Bala Murali Krishna to that industry. No one could even imagine penetrating into Malayalm music industry dominated by legendary singer KJ Jesudas. The song “neeyendre velicham composed by Shekar and sung by P Susheela for the 1972 movie Miss Mary is still one of the most famous devotional songs in Kerala among all the devotees of Mother Mary.



The curiosity and eagerness of Rahman towards new technology, was evident in Shekar in those days. He often went to Singapore and hunted for new musical instruments and latest innovations in recording techniques. When we were all bored listening to the same voices, it was Rahman who broke the trend and introduced many new voices, and took the listening experience to a new level. RK Shekar was a forerunner for Rahman in that front too.



In those days, singing for movies was no ordinary feat. Recording studios were like iron-fortresses. It was not possible for anyone to get in so easily. Shekar opened the doors of the fortress for new singers. He introduced many new singers like Bramhanandan, Sadhanandan, Sudha Varma, Gopalakrishnan, Soman, Ponguntham Ravi, Jayalakshmi, Kasthoori Shankar, Manoharan, Ambly, Jayashreee. That legacy of encouraging new talent continues through A.R.Rahman.

RK Shekar composed 110 songs in Malayalam. Singers like Jesudas, Jayachandran, P Susheela, Vani Jaaram have sung several wonderful songs in his music. Even today, Shekars songs are mesmerizing the people of Kerala.

Is it not interesting to note history repeats that M.S.V-T.K.R assisted C.R.Subbaraman and C.R.S brother C.R .Shankar Raman (sankar-ganesh)assisted M.S.V-T.K.R. Ilayaraja assisted RK.Sekar and RK.Sekar's son A.R.Rahman assisted Ilayaraja(punnagai mannan)!!!!

chinnakkannan
7th September 2014, 10:35 AM
ஹாய் குட்மார்னிங்க் ஆல்

அந்த நடிகை மேத்தா ரெங்க்ரூட்டா வா.. எஸ்வி சார்.. தாங்க்ஸ்.. அகெய்ன் மீண்டும் தாங்க்ஸ் விழியே விழியே வீடியோவிற்கும் பாராட்டிற்கும்

கோபால்.. வேலைக்கு இடையிலுமிங்கு வருகை தந்து பதிவுகள் இடுவதற்கு நன்றி.. ஆர்.கே சேகர் பற்றிய பதிவிற்கு நன்றி.. நான் அறியாத விஷய்ஙக்ள்..

வாசு சார் நன்றி :) இன்னிக்கு இனிய ஞாயிற்றுக் கிழமையோன்னோ.. வாணிஸ்ரீயின் கலர்ப் படம் இருக்கறதால அவஙக்ளை பத்தி ஒரு பாட்டு போடுங்க பார்க்கலாம்.. :)

Richardsof
7th September 2014, 10:55 AM
இன்னிக்கு இனிய ஞாயிற்றுக் கிழமையோன்னோ.. வாணிஸ்ரீயின் கலர்ப் படம் இருக்கறதால அவஙக்ளை ப [க்]த்தி ஒரு பாட்டு போடுங்க பார்க்கலாம்.. :)[/QUOTE]

http://youtu.be/ykHfH9fXXak

chinnakkannan
7th September 2014, 11:40 AM
எஸ்.வி.சார்.. :) நன்றி..

//வாணிஸ்ரீ

60'களின் முடிவில் 70'ன் ஆரம்பத்தின் மின்னிய நட்சத்திரம் வாணிஸ்ரீ..
எல்லா முன்னணி நட்சத்திரங்களுடனும் நடித்தவர்.
ஒரு பாடலில் தோன்றி, காமெடி வேடம் செய்து கதாநாயகி அந்தஸ்திற்கு உயர்ந்தவர்
கருப்பு நிறமாக இருந்தாலும் நடிப்பு, வசனம் மற்றும் தோரணை மூலம் எல்லோரையும் கவர்ந்தவர்

வசந்த மாளிகை, வாணி ராணி, இருளும் ஒளியும், தாமரை நெஞ்சம், வெள்ளி விழா என இவரது நடிப்பில் மின்னிய படங்கள் எத்தனையோ..

இவரது நடிப்பில் வந்த படங்கள் சில

அவசர கல்யாணம்
காதல் படுத்தும் பாடு
கண்ணன் என் காதலன்
வசந்த மாளிகை
வாணி ராணி
தாமரை நெஞ்சம்
இருளும் ஒளியும்
டீச்சரம்மா
நிறைகுடம்
நான்கு சுவர்கள்
வெள்ளி விழா
சிவகாமியின் செல்வன்

சிவாஜி, என்.டி.ஆர், நாகேஸ்வரராவ், ஜெமினி, ஜெய்சங்கர் என எல்லா நடிகர்களுடனும் நடித்தவர்.
குறிப்பாக சிவாஜியுடன் நடித்த படங்கள் மிகவும் அருமை.


கலைமகள் கைப்பொருளே
திருமகள் தேடி வந்தாள்
நாளை இந்த வேளை பார்த்து
புலவர் சொன்னதும் பொய்யே பொய்யே
வெள்ளிக்கிண்ணம் தான்
மயக்கம் என்ன இந்த மெளனம் என்ன
என்ற பாடல்களில் இவரது நடிப்பு துடிப்பு மிகுந்தது
// வலையில் கிடைத்தது..

mr_karthik
7th September 2014, 11:51 AM
எஸ்.வி.சார்.. யார்னு தெரியலையே

வெண்ணிலவின் ஒன்றுவிட்ட சகோதரியின் மகளோ
..வீசுகின்ற தென்றலதின் வேட்டகத்து உறவோ
எண்ணத்தில் பார்த்திருக்கும் இளவரசி தானோ
..எழுத்தினிலே சரித்திரத்தில் வருகின்ற தேனோ
கன்னந்தான் சிவந்ததுவோ கலர்ப்படத்தின் பிரமையோ
…கண்களிலே சிரித்திருக்கும் கவிதையதும் எதுவோ
வண்ணமகள் படந்தந்தீர் வாகாக இங்கே..
..வஞ்சியவள் பெயரென்ன பட்டெனவே சொல்வீர்..

//கண்ணா வரவர உன்னோட ஜொள் தாங்க முடியலை..

ச்சும்மா ஃபன் தானே மனசாட்சி :)//

அது தாய்லாந்து நடிகை மேத்தா ரூங்கிரட்டா என்பதைக் கண்டுபிடித்து நேற்றே பதிவிட்டேன். திடீரென்று ஒரு சந்தேகம், அது ஏதாவது ஒரு இந்தி நடிகையின் பழங்கால போட்டோவாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் உடனே பதிவை நீக்கிவிட்டேன். அந்த சில நிமிடங்களுக்குள் இங்கு வந்தவர்கள் என் பதிவை பார்த்திருக்கலாம்.

இனி உங்கள் ஜொள்ளை நிறுத்த....

உ.சு.வாலிபன் 73-ல் வெளியானபோதும் மேத்தா நடித்த ஷூட்டிங்க் நடந்தது 1970-ல். அதாவது இன்றிலிருந்து 44 ஆண்டுகளுக்கு முன்பு. அப்போதே அவர் தாய்லாந்தில் பிரபல நடிகை என்றபோதிலும் உங்கள் வசதிக்காக, அந்தப்படத்தில் நடிக்கும்போது அவர் வயது சுமார் 17 என்று வைத்தாலும் இப்போது மேத்தாவின் வயது 61.

chinnakkannan
7th September 2014, 11:56 AM
//அந்தப்படத்தில் நடிக்கும்போது அவர் வயது சுமார் 17 என்று வைத்தாலும் இப்போது மேத்தாவின் வயது 61.// கார்த்திக் சார் தகவல்களுக்கு நன்றி.. தெரியும்..அவருக்கே இப்போது ஜொள் விடும் வயது வந்து விட்டதென்று(வயதாகிவிட்டது என்று) முன்பே எழுதியிருந்தேனே.. அவர் பாங்க்காக் டி.வி.சீரியல்களில் நடித்து வருவதாக..எழுத்தாளர் இரா.முருகன் சிலவருடங்களுக்கு முன் எழுதியிருந்தார் என்று..கண்டிப்பாய் 17 இருக்காது மேபி 23 இருக்கலாம்..!

chinnakkannan
7th September 2014, 12:55 PM
இந்தப் பாட்டு இங்கு வரலைன்னு நினைக்கறேன்.. கொஞ்சம் டபக்கென காதுகளில் ரீங்கரிக்கும் பாடல் எஸ்பிபி..வாணி ஜெயராம்..பேரும் புகழும்..

**

அவளே என் காதலி
அவளே என் காதலி

கொடி நீருக்குள்ளே மலர் மேலே
பெண் குளிப்பது தாமரை போலே
நான் நீராய் பிறந்திருந்தாலும்
இந்நேரம் என்னென்னவோ

அவனே என் காதலன்
அவனே என் காதலன்

நடை மேடையிலே விழி இங்கே
அவன் நாடகம் பார்ப்பது எங்கே
அவன் நீராய் பிறந்திருந்தாலும்
இந்நேரம் என்னென்னவோ


பாராட்டும் பிள்ளை ஒன்று
தாலாடும் பெண்ணைக்கண்டு
போராட்டம் செய்வதென்ன
இலையோ மலரோ கனியோ

பால் வாசம் சிந்தும் சின்ன
பாப்பாவின் உள்ளம் இன்று
பூவாசம் கொண்டதென்ன
அதுவோ இதுவோ எதுவோ

அவளே என் காதலி


தொட்டாலும் ஒட்டிக் கொள்ளும்
பட்டான வெள்ளி க்கன்னம்
எட்டாமல் செய்வதென்ன
இனமோ குலமோ பயமோ

பேராசை வெள்ளம் வந்து
போராடும் போதும் பெண்கள்
தாய்வீடு தந்த செல்வம்
அச்சம் நாணம் வெட்கம்

அவனே என் காதலன்

**

chinnakkannan
7th September 2014, 01:20 PM
மஞ்சள் குங்குமம் என்று படம்..பாடல் மட்டும் நினைவில்.. மற்ற டீடெய்ல்கள்..இருக்கவே இருக்காங்க மக்கள்ஸ்..

*

என் காதல் கண்மணி
ஏதேதோ நினத்தாளோ
சொல்ல ஞானம் வந்ததோ
சொல்லாமல் மறைத்தாளோ
ராதா.. ராதா... ராதா..

என் விட்டு தோட்டத்தின் புது மல்லிகை
எந்நாளும் சிந்தட்டும் இளம் புன்னகை
வாடாத மலரே தேயாத நிலவே
நாள் தோறும் என்னோடு உறவாட வா
ராதா

கண்ணுக்குள் விளையாடும் கலை அன்னமே
தாளத்தில் அழியாத எழில் வண்ணமே
கடல் வாணம் யாவும்.. தடம் மாறினாலும்
மாறாத நிலைகொண்டு மனமுண்டு வா..
ராதா

உன் நெஞ்சின் பொன்னென்று அறியாததோ
உறவெல்லாம் உனதென்று தெரியாதததோ
பனி தூங்க்கும் கிளியே.. பால் போன்ற மனமே..
வாங்காலம் நமதென்று முடிவோடு வா..
ராதாஆஆ..

**

இதெல்லாம் ரேடியோல்ல கேட்ட பாடல்கள்.. அப்புறம் சமீபத்தில் கேட்டதில்லை..கடந்த சிலவருஷங்களாகவும் கேட்டதில்லை..கண்ணுல தட்டுப்பட்டவொடனே மனசு பாட ஆரம்பிச்சுடுது..!

chinnakkannan
7th September 2014, 01:31 PM
வேகவேகமாக காதுகளில் ரீங்கரிக்கும் பாடல்.. அதுவும் ரேடியோவில் கேட்டது தான்..படம் மன்னவன் என்று இப்போ பார்த்த பிறகுதான் தெரிகிறது..இசை சங்கர் கணேஷ்.. எஸ்பிபி அண்ட் பி.சுசீலாம்மா..வா..பக்கம் வா.. நெருங்கிவா..தா.. தொட்டுத் தா தொடர்ந்து தா...ராக ஆலாபனை இருவரும் இழுத்துப் பாடுவது..கேட்க மிக நன்றாக இருக்கும்..

கொஞ்சம் சுறுசுறுப்பு கொள்ள வைக்கும் பாடலும் கூட..

*
கல்யாண ராமனுக்கும் கண்ணான ஜானகிகும்
காதல் வந்த நேரம் என்னவோ


வைதேகி மாலையிட்டு வைபோக வாழ்வு பெற்று
தேடிக்கொண்ட இன்பம் சொல்லவோ

நாணம் என்ற காலிரண்டும் முன்னால் வர
நூறு வகை சீதனமும் பின்னால் வர
நாள்.. மணநாள்.. தேடினாள்
தா.. சுகம்.. தா நாடி வா

மின்னுகின்ற கண்ணிரண்டும் வேலாயுதம்
மன்னனுக்கு மங்கை மனம் மயில் வாகனம்

வா....
பக்கம் வா...
நெருங்கி வா...

தா...
தொட்டுத்தா...
தொடர்ந்து தா...

கல்யாண ராமனுக்கும் கண்ணான ஜானகிகும்
காதல் வந்த நேரம் என்னவோ
**

பாடலை எழுதியவர் வாலியாகத் தான் இருக்கவேண்டும் என நினைக்கிறேன்..

mr_karthik
7th September 2014, 01:46 PM
மஞ்சள் குங்குமம் என்று படம்..பாடல் மட்டும் நினைவில்.. மற்ற டீடெய்ல்கள்..இருக்கவே இருக்காங்க மக்கள்ஸ்..

*

என் காதல் கண்மணி
ஏதேதோ நினத்தாளோ
சொல்ல ஞானம் வந்ததோ
சொல்லாமல் மறைத்தாளோ
ராதா.. ராதா... ராதா..

டியர் சி.க.

இந்தப்பாடலை ஏற்கெனவே நமது வாசுதேவன் அவர்கள் இன்றைய ஸ்பெஷல் பகுதியில் (இதே இரண்டாம் பாகத்தில்தான்) அட்டகாசமாக முழு விவரங்களுடன், முழுப்பாடல் வரிகளுடன், ஸ்டில்களுடன், வீடியோவுடன் அலசித்துவைத்து காயப்போட்டுவிட்டார். நிறைய பின்னூட்டங்களும் வந்தன.

chinnakkannan
7th September 2014, 01:48 PM
கார்த்திக் சார்.. நன்றி.. எப்படி விட்டேன் தெரியவில்லை..தேடி ப் பார்க்கிறேன்..

chinnakkannan
7th September 2014, 02:07 PM
கார்த்திக் சார்.. 134ம் பக்கத்தில் வந்திருக்கிறது.. நானும் பாராட்டியிருந்தேன்..ஆனால் மறந்து போய்விட்டேன்..மன்னிக்க :) வயசாறதோல்லியோ..பங்குனி வந்தா இருபத்து நாலாய்டுச்சு. :)

இருநூறாவது பக்கத்தை எட்டிவிட்டதற்காக அனைவருக்கும் ஒரு ஓ :)

mr_karthik
7th September 2014, 02:52 PM
என் விருப்பம் (9)

'நட்சத்திரம்' என்று ஒரு படம். நீயா பட வெற்றிக்குப்பின் ஸ்ரீபிரியா தயாரித்தார். தெலுங்கில் ஜெயசுதா நடித்து வெளிவந்த 'சிவரஞ்சனி' படத்தின் தமிழ் ரீமேக். துரை இயக்கத்தில் சங்கர் கணேஷ் இசையில் வந்தது.

படத்தின் இன்னொரு சிறப்பம்சம் இதில் நடிகர்திலகம், ரஜினி, கமல், சாவித்திரி, மஞ்சுளா, இயக்குனர் ஸ்ரீதர் ஆகியோர் கௌரவ தோற்றத்தில் நடித்திருப்பார்கள்.

கிராமத்தில் கொட்டாங்கச்சி பிடில் செய்து விற்கும் ஸ்ரீபிரியா எப்படி நகரத்துக்கு சென்று பெரிய சினிமா நடிகையாகி ஒரு அயோக்கியனின் வலையில் சிக்கி, மனமுடைந்து இறந்துபோகிறாள் என்பது கதை. கதாநாயகனாக அந்த நடிகையின்மேல் உயிரையே வைத்திருக்கும் அவளது ரசிகன் (ஹரி பிரசாத்). கொஞ்சம் வித்தியாசமான கதைதான். இதில் 'அவளொரு மேனகை என் அபிமான தாரகை' என்ற அருமையான பாடல் ஏற்கெனவே இங்கு ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

இன்னொரு மனதை மயக்கும் பாடல். கதாநாயகி ஸ்ரீபிரியா கிராமத்தில் கொட்டாங்கச்சி பிடில் விற்பவளாக வரும்போது பாடும் பாடல்..

"வைகை கரையினில் ஒரு பறவை - அது
வானத்தில் தேடுது தன் உறவை"

தெருத்தெருவாக நடந்து பிடில் விற்கும்போது பாடிக்கொண்டே சென்று, ஒரு வீட்டுத்திண்ணையில் அமர்ந்து விற்பனை செய்துகொண்டே, பாடலில் தன் கதையையும் சொல்லியவாறு தொடர்ந்து பாடும்போது இனம் புரியாத சோகம் நம் மனதில் படரும். எந்தவித பந்தாவான கைகால் அசைவுகள் இல்லாமல் முகத்தில் ஒரு மாதிரியான சோகம் இழையோடும் முகபாவத்துடன் ஸ்ரீபிரியா பாடும்போது பாடலுடன் நாம் ஒன்றிப்போவோம். கடைசியில் ஓடிவந்து காசை நீட்டும் சிறுவனிடம் 'எல்லாம் விற்றுவிட்டது' என்று சொல்வதுபோல கூடையைக் கவிழ்த்துக் காட்டியபடி பாடலை பாடி முடிக்கும்வரை நம் மனதை என்னவோ செய்யும்.

ஸ்ரீபிரியா நடித்து எனக்குப்பிடித்த சில பாடல்களில் இதற்கு முக்கியத்துவம் உண்டு. (இன்னொன்று, வசந்தத்தில் ஓர் நாள் படத்தில் இடம்பெற்ற 'வேண்டும் வேண்டும் உந்தன் மனது' என்ற மனத்தைக் கலங்கடிக்கும் பாடல்).

மற்றவர்களுக்கு எப்படியோ, என்னைப்போன்ற எமோஷனல் பேர்வழிகளுக்கு மனத்தைக் கரைய வைக்கும் பாடல் 'வைகை கரையினில் ஒரு பறவை'. சங்கர் கணேஷ் இசையில் வந்த அழகிய மேலோடி (மெட்டும் வேறெங்கும் தழுவப்பட்டதா என்பது தெரியாது)...

chinnakkannan
7th September 2014, 03:58 PM
இந்தப் பாடல் கேட்டதாக நினைவில்லை கார்த்திக் சார்.. நான் நட்சத்திரம் படமும் பார்த்ததில்லை..ம் தேடிப்பார்க்க வேண்டும் .. நன்றி..

Richardsof
7th September 2014, 04:16 PM
சின்ன கண்ணன் சார்

வாணிஸ்ரீ எம்ஜிஆருடன் கண்ணன் என் காதலன் - தலைவன் - ஊருக்கு உழைப்பவன் மூன்று படங்களில் நடித்துள்ளார் கண்ணன் என் காதலன் படத்தில் இடம் பெற்ற '' கண்களிரண்டும் விடி விளக்காக ''பாடல் காட்சியில் வாணிஸ்ரீயின்
இளமையும் காதல் நடிப்பும் அபாரம் .வாணியின் காதல் நடிப்பை கண்டு மகிழுங்கள் .

http://youtu.be/COchFKFl4vU

chinnakkannan
7th September 2014, 04:32 PM
//வாணிஸ்ரீ எம்ஜிஆருடன் கண்ணன் என் காதலன் - தலைவன் - ஊருக்கு உழைப்பவன் மூன்று படங்களில் நடித்துள்ளார் கண்ணன் என் காதலன் படத்தில் இடம் பெற்ற '' கண்களிரண்டும் விடி விளக்காக ''பாடல் காட்சியில் வாணிஸ்ரீயின்
இளமையும் காதல் நடிப்பும் அபாரம் .வாணியின் காதல் நடிப்பை கண்டு மகிழுங்கள் .// எஸ்.வி.சார்.. பாடலிட்டமைக்கு நன்றி..கண்களிரண்டும் விடி விளக்காக பாடல் கேட்டிருக்கிறேன்..பார்த்ததில்லை..எம்.ஜி.ஆர்.- வாணிஸ்ரீ - ஜோடி முதல்முதல் கேள்விப் படுகிறேன்..ஏனெனில் மூன்று படங்களையும் பார்த்த்தில்லை..பாடல் மட்டும் கேட்டிருக்கிறேன்..ஊ.உவில் லதா இல்லியோ.. (வீடியோ பார்த்துச் சொல்கிறேன்)

madhu
7th September 2014, 04:55 PM
//எஸ்.வி.சார்.. பாடலிட்டமைக்கு நன்றி..கண்களிரண்டும் விடி விளக்காக பாடல் கேட்டிருக்கிறேன்..பார்த்ததில்லை..எம்.ஜி.ஆர்.- வாணிஸ்ரீ - ஜோடி முதல்முதல் கேள்விப் படுகிறேன்..ஏனெனில் மூன்று படங்களையும் பார்த்த்தில்லை..பாடல் மட்டும் கேட்டிருக்கிறேன்..ஊ.உவில் லதா இல்லியோ.. (வீடியோ பார்த்துச் சொல்கிறேன்)

தலைவன் - நீராழி மண்டபத்தில்

http://youtu.be/Ej07LWFhQp0

madhu
7th September 2014, 05:00 PM
என் விருப்பம் (9)
மற்றவர்களுக்கு எப்படியோ, என்னைப்போன்ற எமோஷனல் பேர்வழிகளுக்கு மனத்தைக் கரைய வைக்கும் பாடல் 'வைகை கரையினில் ஒரு பறவை'. சங்கர் கணேஷ் இசையில் வந்த அழகிய மேலோடி (மெட்டும் வேறெங்கும் தழுவப்பட்டதா என்பது தெரியாது)...

நானும் எமோஷனல் பேர்வழி என்பதால் என்னையும் கரைத்த பாடல் இது....

http://youtu.be/z1dlaf5docU

madhu
7th September 2014, 05:04 PM
இந்தப் பாட்டு இங்கு வரலைன்னு நினைக்கறேன்.. கொஞ்சம் டபக்கென காதுகளில் ரீங்கரிக்கும் பாடல் எஸ்பிபி..வாணி ஜெயராம்..பேரும் புகழும்..

அவளே என் காதலி


http://youtu.be/-_BsBGsQchk

vasudevan31355
7th September 2014, 05:24 PM
டியர் கார்த்திக் சார்,

'உங்கள் ஜொள்ளை நிறுத்த' ரொம்ப ரசித்தேன்.

அப்புறம் 'வைகைக் கரையினில் ஒரு பறவை' கொட்டாங்கச்சி வயலின் பாடல் இதுவரை யாரும் தொடாதது. கலக்கி விட்டீர்கள். உங்களுக்கு ஸ்ரீபிரியாவைப் பிடிக்காது. இருந்தாலும் நல்ல பாடலை ரசித்து சுவைத்து எங்களுக்கு ஞாபகப்படுத்தியதற்கு நன்றி. எனக்கு கிளாமரில் பிரியாவை ரொம்பப் பிடிக்கும். கிருஷ்ணா சார் என் கட்சி. சி.க சொல்லவே தேவையில்லை.

எனக்கு நட்சத்திரத்தில் 'பொன்னாங்கன்னி பூத்து வந்ததோ' பாடல் ரொம்ப இஷ்டம். அதே போல் ஜெயச்சந்திரன், ஜானகி பாடும் 'வானம் இங்கே மண்ணில் வந்தது' பாடலும் மிகவும் பிடிக்கும்.

ராஜ் பிளஸ் சேனல் கிடப்பவர்கள் தொடர்ந்து கவனித்தால் மாதம் ஒருமுறை 'நட்சத்திரம்' படம் போடுவார்கள்.

நடிகர் திலகம் கௌரவ நடிகராக ஸ்ரீபிரியாவுடன் ஷூட்டிங்கில் கலந்து கொள்வது போல சில காட்சிகள் வரும். கமல், ரஜினி எல்லோரையும் காட்டிவிட்டு இறுதியாக ஷூட்டிங்கில் ஸ்ரீபிரியா திமிராகப் பேசும்போது 'ஹஹஹஹ்ஹஹா' என்று சிரித்தபடியே திரும்புவது போல நடிகர் திலகம் அறிமுகக்காட்சி. இடைவேளைக்குப் பிறகு என்று நினைவு. கடலூர் பாடலி தியேட்டரில் முதல் காட்சியில் அந்த சீனுக்கு பூகம்பம் ஏற்பட்டது என்றுதான் கூற வேண்டும். தியேட்டர் கூரை இரண்டாகப் பிளந்தது போல் அப்படி ஒரு கைதட்டல் நடிகர் திலகத்தைப் பார்த்து. கமல் ரஜினி ரசிகர்கள் முகத்தில் ஈயாடவில்லை. அதுதான் என் தலைவன்.

அருமையான நினைவுகளை கிளர்ந்து எழச் செய்தமைக்கும் நன்றி கார்த்திக் சார்.

'வானம் இங்கே மண்ணில் வந்தது'


http://www.youtube.com/watch?v=KGtKYzI5tc8&feature=player_detailpage