PDA

View Full Version : மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம



Pages : 1 2 3 4 5 6 7 8 9 [10] 11 12 13 14 15 16 17

gkrishna
13th September 2014, 02:14 PM
வாணியின் நெஞ்சை பிழியும் சில பாடல்கள் பந்துவராளி ராகத்தில்

நீராட நேரம் நல்ல நேரம் –
“கிளப் டான்ஸ்” என்று சொல்லக் கூடிய தேவை அற்ற சமாச்சாரத்த்திற்க்கு போடப்பட்ட இன்மையான பாடல்.ஒரு புதிய கோணத்த்தில் பந்துவராளி ராகத்த்தில் அமைக்கப்பட்ட மெல்லீசைப்பாடல்.மெல்லிசை மன்னரின் கற்ப்பனை வியக்க வைக்கும்.எம் எஸ் வி யின் அருமையான மெட்டுக்களில் வந்து அதிகம் ஒலிக்காத பாடல்களில் ஒன்று. பின்னணி இசையும் இப்பாடலுக்கு மெருகேற்றியுள்ளது.

கவியரசரின் அர்த்தம் புதைந்த வரிகளில்... வாணி ஜெயராமின் இனிமையான குரலில்...................
பாடலுக்கேற்ப காட்சிப் பதிவும் நன்றாக உள்ளது. அதிலும் சிவாஜியின் ஸ்டைல் மற்றும் சகுந்தலாவின் சரசமாடும் மினுக்கல் நடிப்பும்.

இருந்தாலும் பாடலை தனியே கேட்கும் பொழுது , இந்த துப்பறியும் காட்சிக்கு இல்லாமல் வேறு நல்ல சந்தர்ப்பங்களுக்கு இப்பாடலை பயன்படுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் எனும் உணர்வு நிச்சயம் எழும் .

ஏழு சுரங்களுக்குள்
ராக மாலிகையில்அமைக்கப்பட்ட பாடல்.பாடல் ஆரம்பம் பந்துவராளி ராகத்தில்ஆரம்பித்த்து , பின் ரஞ்சனி ,சிந்துபைரவி , காம்போதி என மிக அழகாக நிறைவுறும் பாடல்.தமிழ் திரை தந்த சிறந்த பாடல் வரிசையில் நிச்சயமாக இந்தப் பாடலுக்கும் ஒரு இடம் உண்டு என்று துணிந்து கூறத் தக்க பாடல். படத்த்தில் கதாநாயகி ஒரு கர்நாடக இசைப்பாடாகியாக வரும் காட்சிக்கு அமைக்கப்பட்ட இந்தப் பாட்டைப் பாடி புகழின் உச்சிக்குச் சென்றவர் வாணி ஜெயராம். இசை நிகழ்ச்ச்சிகளில் அடிக்கடி ஒலிக்கின்ற பாடல்களில் ஒன்றாக் இருப்பதர்க்கு மக்கள் மத்தியில் இந்த பாடல் பெற்ற செல்வாக்கே காரணம் எனலாம்.
மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் ஒரு இசைமேதை என நிரூபிக்க இந்தப் பாடல் ஒன்றே போதும் .

gkrishna
13th September 2014, 02:17 PM
என்னதான் அகந்தை இருந்தாலும் பாண பத்திரர் திறமைக்கு உலகம் அடிமையே. அவரின் ஒரு நாள் போதுமா பாட்டை உலகம் மெச்சிய அளவு இசை தமிழையும்,பாட்டும் நானேயையும் மெச்சவில்லை.

என்ன content என்று கூட படிக்காமல் cut &paste பண்ணும் தருமியான உமக்கு,ஆயிரம் பொற்காசுகளுக்கு வழி செய்வான்.பிழைத்து கொள்ளுங்கள்.

அது பாணபத்திரர் திறமைக்கு அல்ல ஹேமநாத பாகவதர் திறமைக்கு என்று இருக்க வேண்டும்

ஒரு நாள் போதுமா பாடலை திருவிளையாடல் படத்தில் பாடுபவர்
ஹேமநாத பாகவதர்

பாட்டும் நானே பாடலை பாடுபவர் சிவ பெருமான்

இசை தமிழ் நீ செய்த பாடலை பாடுபவர் பாணபத்திரர்

Richardsof
13th September 2014, 03:32 PM
http://i59.tinypic.com/2elxs42.jpghttp://i61.tinypic.com/155rmrq.jpg

Richardsof
13th September 2014, 03:36 PM
MELODY QUEEN'S FAVORITE SONG- MANNAVAN VANTHANADI - THIRIVARUTSELVAR

http://youtu.be/5-y-J9Pabq8

gkrishna
13th September 2014, 03:45 PM
01/07/2006

coffee with suchi என்ற நிகழ்ச்சியில் இந்த வாரம் வாணி ஜெயராம். தமிழகத்தின் சிறந்த பாடகிகளில் ஒருவர். வடக்கில் இவர் புகழ் பெற்று விடுவாரோ என்று அரசியல் செய்யப்பட்டு வாய்ப்பு மறுக்கப்பட்ட தமிழ்ப் பெண். தமிழகம் அவரை அரவணைத்துக் கொண்டது. தென்னகம் நல்ல வழி தந்தது. எல்லோருக்கும் பிடித்த பாடகியும் கூட. அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் சில அருமையான துளிகள்.

கேள்வி: எம்.எஸ்.வியா? இளையராஜாவா?

வாணி: அப்படியெல்லாம் பாகுபாடு பாக்க முடியாது. ஆனா நிறையப் பாடுனது எம்.எஸ்.வி சார் கிட்டதான். என்னால என்ன முடிஞ்சதுன்னு தெரிஞ்சு அதச் சிறப்பா ஊக்குவிச்சவர் அவர். I enjoyed working with him.

கேள்வி : ஏழு சுரங்களுக்குள் எத்தனை பாடல், bole re pappihara, மேகமே மேகமே. இந்த மூனுல ஒங்களுக்குப் பிடிச்சது எது?

வாணி : மூனும் பிடிக்கும்.

கேள்வி: பி.சுசீலா பாடல்களை விரும்பிப் பாடுவீங்களாமே. எங்களுக்காக ஒரு பாடல்....

வாணி: ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன் பாடலைப் பாடுகிறார்.

கேள்வி: இப்ப இருக்குற இசையமைப்பாளர்கள் கிட்ட உள்ள குறை?

வாணி: குறையச் சொல்லக்கூடாது. நிறையத்தான் சொல்லனும். ஆனாலும் ஒரு குறையைச் சொல்லலாம். தமிழ் உச்சரிப்பு தெரியாதவங்களக் கூட்டீட்டு வந்து பாட வைக்காதீங்க. மும்பைல இருந்து கூட்டீட்டு வாங்க வெளிநாட்டுல இருந்து கூட்டீட்டு வாங்க. ஆனா தமிழ் தெரிஞ்சவங்களாக் கூட்டீட்டு வாங்க. பல பாட்டுகளைக் கேக்கவே முடியலை. தமிழ்க் கொலை பண்றாங்க. தமிழ் தெரியாதவங்கள வடக்க இருந்து ஏன் கூட்டீட்டு வாரீங்க? நம்மளக் கூப்புடுறாங்களா அவங்க?

நிகழ்ச்சியின் இடையிடையே அருமையாகப் பாடி மகிழ்ச்சியில் ஆழ்த்தினார் வாணி ஜெயராம். மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னால மலரல்லவோ........இதை தமிழகம் என்றும் மறக்காது.

புதுமை செய்ய வேண்டும் என்கிற பெயரில் பல சீரழிவுகள் தமிழ்த்திரையுலகில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. வாணி ஜெயராம் பேட்டியில் இது உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரிந்தது

வாணிஜெயராம் ஒரு கவிஞர் என்றும் பேட்டியில் கூறினார். உறக்கம் பற்றியும் ஒரு கவிதை சொன்னார். சொல் நயமும் பொருள் நயமும் மிகவும் பொருத்தம். அதை அழகாக உச்சரித்த விதமும் சிறப்பு. அவர் ஓவியம் மிகச்சிறப்பாக வரைவார் என்பது தெரிந்திருந்தது. ஆனால் கவிஞர் என்பது புதுச்செய்தி. முருகக் கடவுள் மேல் இவரே ஒரு கவிதை எழுதி அதற்கு இவரே இசையும் அமைத்திருக்கிறாராம். அதைக் கேட்கவும் ஆவல். ஆனால் தொலைக்காட்சித் தொகுப்பாளனி அவரை விஸ்வநாதனுக்கும் இளையராஜாவுக்கும் இடையே மாட்டி விடுவதிலேயே குறியாக இருந்தார்.

வாணி ஜெயராம் இந்தியில் முதலில் பாடிய பாடல் bole re pappihara என்ற பாடல். இன்றைக்கும் இது அழியாப் புகழ் பெற்ற பாடல். இந்த ஒரு பாடலே அவருக்குத் தான்சேன் விருது பெற்றுத் தந்தது.

மீரா என்ற படத்தில் முதலில் வாணியை வைத்து பண்டிட் ரவிசங்கர் ஒரு பாடலை எடுத்து விட்டார். இன்னொரு பாடலுக்கு ஒரு மிகப் பெரிய பாடகியைக் கூப்பிட்டதிற்கு அவர் வாணி பாடிய பாட்டையும் தான் பாடுவதானால் வருவதாகச் சொன்னாராம். ரவிசங்கர் என்பதால் அந்தப் பெரிய பாடகியை மறுத்து விட்டு எல்லாப் பாட்டுகளையும் வாணிக்கே கொடுத்து விட்டார்

தகவல் தந்து உதவிய நண்பர் ராகவன் அவர்களுக்கு நன்றி

gkrishna
13th September 2014, 04:30 PM
http://upload.wikimedia.org/wikipedia/ta/f/f2/Pattucottai.jpghttp://www.thehindu.com/multimedia/dynamic/01285/02cp_mahadevi_jpg_1285123f.jpg
மகாதேவி திரைப்படத்தில் மக்கள் திலகம் கதாநாயகனாக.. மாறுவேடத்தில் கண்தெரியாதவராக... நடிக்கும் காட்சியில் நாட்டில் நடக்கும் சமுதாய பிரச்சினைகளை அலசி ஆராய்ந்து அதற்குரிய தீர்வுகளையும் ஒருங்கே சொல்லும் பட்டுக்கோட்டையாரின் பாடல் கேளுங்கள்..

( சூழ்ச்சியிலே சுவரமைத்து சுயநலத்தால் கோட்டைகட்டிச்
சுடர்விட்ட நீதிதனைத் தூக்கி எறிந்துவிட்டுச்
சாட்சிகள் வேண்டாம் சகலமும் நானென்று சதிராடும் வீணர்களின் அதிகார உலகமடா
புதிரான உலகமடா _ உண்மைக்கு
எதிரான உலகமடா _ இதில்
பொறுமையைக் கிண்டிவிடும்
போக்கிரிகள் அதிகமடா ) - இந்த வரிகள் படத்தில் இடம் பெறவில்லை .

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்
குருட்டு உலகமடா _ இது
கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும்
திருட்டு உலகமடா _ தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா _ இதயம்
திருந்த மருந்து சொல்லடா

இருக்கும் அறிவை மடமை மூடிய
இருட்டு உலகமடா _ வாழ்வில்
எந்த நேரமும் சண்டை ஓயாத
முரட்டு உலகமடா _ தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா _ இதயம்
திருந்த மருந்து சொல்லடா ( குறுக்கு…

விளையும் பயிரை வளரும் கொடியை
வேருடன் அறுத்துவிளையாடும் _ மனம்
வெந்திடும் தோட்டக்காரனிடம்
மிரட்டல் வார்த்தைகளாடும் _ பல
வரட்டுக் கீதமும் பாடும் _ விதவிதமான
பொய்களை வைத்துப் புரட்டும் உலகமடா _ தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா _ இதயம்
திருந்த மருந்து சொல்லடா ( குறுக்கு…

அன்பு படர்ந்த கொம்பினிலே ஒரு
அகந்தைக் குருங்கு தாவும் _ அதன்
அழகைக் குலைக்க மேவும்
கொம்பு ஒடிந்து கொடியும் குலைந்து
குரங்கும் விழுந்து சாகும் _ சிலர்
குணமும் இதுபோல் குறுகிப்போகும்
கிறுக்கு உலகமடா _ தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா _ இதயம்
திருந்த மருந்து சொல்லடா ( குறுக்கு…

விஸ்வநாதன் ராமமூர்த்தி இருவரிசையில் டி.எம்.செளந்திரராஜன் பாடுகின்ற பாடல்! காலங்கள் பல ஆண்டுகள் முன்பே எழுதப்பட்டிருந்தாலும் இன்றைக்கும் என்றைக்கும் பொருத்தமாயிருக்கிறது என்றால் இந்தச் சமுதாயம் திருந்தவில்லை.. மாறாக.. சுயநலங்கள் பெருகி.. பொதுநலங்கள் மருகிக்கொண்டிருக்கின்றன என்று பொருள்!

உழைப்பின்பால்பட்டே உயர்வு இருக்க வேண்டும் என்கிற நியதியை மாற்றி.. ஊரை ஏமாற்றி உலையில் போடும் கூட்டம் அதிகமாகிவிட்டபடியால்.. திருட்டு உலகம் இது என்பதை மறுக்க முடியுமா? வஞ்சமும் சூதும் மக்களின் நெஞ்சில் குடிகொள்ளத் தொடங்கியதால்.. ஏழைகள் மட்டும் இன்னும் அவலத்திலே மிதக்கிறார்.. இந்தச் சமுதாயத்தை சீர்திருத்த இன்னும் எத்தனை பட்டுக்கோட்டையார் வேண்டுமோ தெரியவில்லை! மக்களின் ஏகோபித்த பிரதிநிதியாய் கவிஞர் ஏக்கப்பெருமூச்சை பாட்டுவரிகளாக்கித் தந்திருப்பது நிதர்சனம்!

1957 ஆம் ஆண்டு வெளிவந்த " மகாதேவி " என்ற திரைப்படத்தில் இந்தப்பாடல் இடம் பெற்றுள்ளது . " மணந்தால் மகாதேவி , இல்லையேல் மரணதேவி " இது வீரப்பா பேசிய புகழ் பெற்ற வசனமாகும் . இந்தப் படத்துக்காக மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் இரண்டு பாடல்கள் எழுதினார் . அதில் ஒன்று தான் இந்தப்பாடல் . இந்தப்பாடல் எழுதப்பட்டு 50 வருடங்களுக்கு மேல் ஆனாலும் , இந்தப் பாடலின் வரிகள் நமக்கு மட்டுமல்ல , உலகத்துக்கே இன்றைக்கும் என்றைக்கும் பொருந்தும்.

http://www.youtube.com/watch?v=fhmWh9xD-4w

gkrishna
13th September 2014, 04:37 PM
சுசீலா பற்றிய மிக அருமையான பத்திரிகை ஆவணம் எஸ் வீ சார்

மிக்க நன்றி

gkrishna
13th September 2014, 04:49 PM
அம்பா மனம் கனிந்துனது – படம்: சிவகவி பாடியவர்:எம்.கே.தியாகராஜா பாகவதர் – இசை:ஜி.ராமநாதன்

சுப்பர் ஹிட் பாடல் என்று சொல்லத் தக்க பாடல்.இசையமைப்பிலும் பாடப்பட்ட முறையிலும் தன்னிகற்ற எம்.கே.தியாகராஜா பாகவதர் அவர்களின் குரலினிமையில் இனிக்கின்ற பந்துவராளி அவரது ஆற்றலையும் ஞானத்தையும் என்றென்றும் பறை சாற்றும் பாடல்.நமது தாத்தாக்கள் அவருடைய குரலின் இனிமையை எவ்விதம் போற்றினார்கள் என்பதை நினைத்து பார்க்க வைக்கும். இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் அவர்களது நினைவுகள் வந்து போவது தவிர்க்க முடியாதுள்ளது .அவரின் பெருமையை ஓயாமல் பேசிக் கொண்டே இருப்பார்கள்.பாகவதரின் அழகிய குரலும் இன்பம் தரும் இனிய இசையும் பந்துவராளியை என்றென்றும் பெருமை சேர்க்கும்.இப்போது பல தலைமுறை தாண்டி கேட்கும் போதே பரவசம் அளிக்கும் இந்தப் பாடல் இசை ரசிகர்களை என்ன பாடு படுத்தியிருக்கும் என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை.ஒப்பற்ற பாடல்.பாபநாசம் சிவன், ஜி.ராமநாதன் , எம்.கே.தியாகராஜா பாகவதர் வெற்றி கூட்டணி தந்த பாடல்.

http://www.buycinemovies.com/images/detailed/0393-vcd8.jpg

http://www.youtube.com/watch?v=X3DJ9e3Vlo0

gkrishna
13th September 2014, 06:32 PM
http://lh4.ggpht.com/-obw_xthUuzw/VBKLQ6xy0VI/AAAAAAAAM9o/FxbkH8FfEUI/w1280/170000.jpghttp://lh3.ggpht.com/-vNMM4ZEj8MM/VBKLRb2bYtI/AAAAAAAAM90/Wstv_UUeUu0/w1280/170001.jpghttp://lh4.ggpht.com/-NqPYdB__Vew/VBKLSA-9D9I/AAAAAAAAM98/dYrgw1-zf-4/w1280/170002.jpg

vasudevan31355
13th September 2014, 06:36 PM
' யார் அந்த

நிலவு " ........................

https://www.filepicker.io/api/file/s0yyjioHTq2nStaLpSCc+hqdefault(4).jpg

http://www.tamilmp3songslyrics.com/lyricsimage/2008/Shanthi/YaarAndhaNilavu.GIF

" சாந்தி " " யார் இந்த நிலவு ? " பாடலின் சிறப்பம்சங்கள் என்ன ? "
என்றா கேட்கிறீர்கள் ?

அந்த சிறப்பம்சங்கள்ளை நான் பட்டியலிடும்

முன்னர் , இந்த பாடல் , ' சாந்தி ' படத்தில் இடம் பெற்ற கதையின்

சூழ்நிலையை ( sitiuation ) உங்களுக்குத் தெரியவேண்டும் !

அதற்கு.......

" சாந்தி" திரைப்படத்தின் கதையையும் ஓரளவு

தெரிந்து வைத்திருந்தால் நலம் !

" சாந்தி "

கதை சுருக்கம் :

நடிகர் திலகமும் , எஸ் . எஸ் . ஆரும் இணை பிரியாத நண்பர்கள் !

" வாழ்ந்து பார்க்கவேண்டும் , அறிவில் மனிதன்

ஆகவேண்டும் ! " என்கிற பாடலை அவர்கள் பாடி மகிழ்கிறார்கள் !

அந்த பாடலை அவர்கள் கல்லூரி நாட்களில்

பாடி மகிகிறார்கள் !

அப்போது......

ஊரில் , எஸ் எஸ் ஆருக்கு திருமண ஏற்பாடு நடக்கின்றது !

அந்த ஊரில் தோழிகள் இருவர் :

தேவிகா - விஜயகுமாரி !

இந்த இருவரில் விஜயகுமாரி இரு விழிகளை இழந்தவர்.

" தனக்கும் திருமணம் நடக்குமா ? " என்று ஏங்கும்

தன்னுடைய பார்வை இல்லாத தோழியான தேவிகா ,

விஜயகுமாரிக்கு ஆறுதல்

சொல்லி பாடுகிறார் :


" ஊரெங்கும் மாப்பிள்ளை ஊர்வலம் !

வீடெங்கும் மாவிலைத் தோரணம் ! "

தேவிகா பாடும் பாட்டு !


விஜயகுமாரியின் சித்தப்பாவாக வரும்

' சூபர்' வில்லன் ( ! ) எம் . ஆர் . ராதா, அவர் விழிகளை இழந்தவர் என்கிற

உண்மையைச் சொல்லாமல் , எஸ் . எஸ் . ஆருக்கு பெண் கொடுக்கிறார் !


சரி, அப்போ தேவிகா ' செட் அப் ' யாரூ ? "

என்றா கேட்கிறீர்கள் !

வேறு யார் , நம்ம நடிகர் திலகம்தான் !


" நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய் !

நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய் ! "

பாடலை தேவிகா பாட , அதற்கு ' விசில்' அடிக்கிறார் நடிகர் திலகம் !


தான் மணக்கப் போகும் பெண் இரு விழிகளை

இழந்தவர் என்கிற உண்மையை அறியாத எஸ் . எஸ் . ஆர், தான் பார்க்காத

எதிர்கால மனைவுக்கு.....' காதல் கோட்டை ' - அஜித் - தேவயானை

' ஸ்டைலில்' கடிதங்களில் கவிதைகளை எழுதி மகிழ்கிறார் !

" செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு

சேதியை நான் கேட்டேன் ! " பாடலை அங்கே எஸ் எஸ் ஆர் பாடுவார்,

அதற்கு 'எசப் பாட்டு' விஜயகுமாரி இங்கே பாடுவார் !


தன் மனைவிக்கு விழிகள் இரண்டும் இல்லை

என்று எஸ் எஸ் ஆர் க்கு தெரியாமல் எம் ஆர் ராதாவின் சூழ்ச்சியால்

திருமணம் நடந்து விடுகிறது.


விஷயம் பின்பு அதாவது , திருமணம் ஆனபிறகு , அறிந்து கொண்ட

எஸ் எஸ் ஆர் கோபம் கொள்கிறார், தான் ஏமாற்றப்பட்டதை

அறிந்து மனைவியை ஏறிட்டும் பார்க்காமல் அவரது ஒரே பொழுது போக்கான

காட்டில் மிருகங்களை வேட்டையாட வெளியேறுகிறார்.

" செந்தூர் முருகன் கோவிலிலே "

சோகப் பாடலை விஜயகுமாரி பாடுகிறார் !


விஷயம் அறிந்த நடிகர் திலகம் , காட்டுக்குள்

சென்று எஸ் எஸ் ஆரை சந்தித்து அவருக்கு ஆறுதல் சொல்கிறார்.

எப்படி ?


" உனக்கு திருமணம் ஆன பிறகு உன் மனைவிக்கு கண்களை

இழந்திருந்தால் உன்னால் என்ன செய்ய முடியும் ? அப்படி

நினைத்து நீ இந்த பெண்ணுக்கு வாழ்வு கொடு ! "

என்கிறார் சிவாஜி.


ஆனால் இந்த அறிவுரையை எஸ் எஸ் ஆர் கேட்கவில்லை, தொடர்ந்து

காட்டிலேயே தங்கிவிடுகிறார் !

இந்த சமயத்தில் விஜயகுமாரிக்கு கண் ஆபெரேஷன் நடக்கிறது !

ஆபெரேஷன் வெற்றி !

விஜயகுமாரிக்கு பார்வை வந்துவிட்டது !

தன் கணவனைப் பார்க்க மிகவும் விரும்புகிறார் , விஜயகுமாரி !


இந்த நேரத்தில்.......


புலி ஒன்று தாக்கி எஸ் எஸ் ஆரை இழுத்துச் சென்றுவிட்டது அந்த

களீபரத்தில் எஸ் எஸ் ஆர் இறந்து விட்டார் என்கிற சேதி ஊரில்

அடிபடுகிறது !


" எஸ் எஸ் ஆர் மரணத்திற்கு சிவாஜிதான் காரணம் ! " என்கிற

செய்தியை ஊரில் பரப்புகிறார் எம் ஆர் ராதா !


மேற்படி செய்தியை பயன்படுத்தி :

' சிவாஜியை, விஜயகுமாரியின் கணவனாக நடிக்க வேண்டும்,

இல்லையென்றால் எஸ் எஸ் ஆர் மரணத்திற்கு சிவாஜிதான் காரணம்

என்று சிவாஜியை பயமுறுத்துகிறார், ராதா !


வேறு வழி இன்றி தன் நண்பனின் மனவிக்காக , கணவன் மாதிரி

நடிக்க ஆரம்பிக்கிறார் நடிகர் திலகம் !


சிவாஜியின் மனநிலை எப்படி இருக்கும் ?

இந்த சூழலில் விஜயகுமாரியின் உண்மையான கணவன்

ஆன எஸ் எஸ் ஆர் உயிருடன் ஊருக்கு திரும்புகிறார்!

தன் மனைவிவுடன் தன் உயிர் நண்பன் " குடும்பம் " நடத்துவதை

அறிந்து மனம் வருந்துகிறார் !


இந்த சேதியை சிவாஜி அறிந்து கொண்டு மனம் வருந்துகிறார் !


சிவாஜியின் மனநிலை எப்படி இருக்கும் ?

இந்த ' கண்ணராவி' யை தேவிகாவும் காண்கிறார் !

தேவிகா அறிந்து விட்டதை சிவாஜி அறிந்து மனம்

வருந்துகிறார் !



சிவாஜியின் மன நிலை எப்படி இருக்கும் ?

" யார் அந்த நிலவு "

பாடல் இந்த சூழலில்தான் நடிகர் திலகம்

பாடுகிறார் !

http://i1.ytimg.com/vi/A3d0cMQcvUY/hqdefault.jpg

இப்போது, ' யார் இந்த நிலவு '

பாடல் படத்தில் இடம் பெற வேண்டுமான, சும்மா கானா பாலா

மாதிரி ஒருவரை அழைத்து வந்து ' கெக்கே - பிக்கே ' என்று

' துள்ளல் இசை ' என்று படு நாகரீகமாக சொல்லிக்

கொள்ளும் ' டப்பாங்குத்து ' பாடலைப் போட்டால் அது

நன்றாகவா இருக்கும் !

கதையின் இந்த சூழ்நிலைக்கு , நடிகர் திலகம் ஏற்றிருக்கும்

கதாபாத்திரத்தின் மன நிலையை அந்த பாடல்

வெளிப்படுத்தவேண்டும்......

சரி, அந்த கதாபாத்திரத்தின் மனநிலை என்ன ?


சொல்றேன்!

1. தன் நண்பனின் மனைவுக்கு கணவன் ஆக , நிர்பந்த சூநிலையில்

நடிக்க வேண்டும்....

அது :

குற்ற உணர்வு ( guilty conscious )

2. தான் ஏற்றுக்கொண்டிருக்கும் சூழ்நிலையை தான் காதலிக்கும்

பெண்ணுக்கு தெரியவந்தால் அதனால் ஏற்பட்ட :


அச்சம் - பய உணர்வு .


3. தன் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்கிற


சோகம் .

4. அதனால் ஏற்படும்


விரக்தி

5. தன் நண்பனுக்கு விஷயம் தெரிந்தால் தன்னை தவறாக

எண்ணுவானே என்கிற :


ஆதங்கம்


6. ஆக மொத்தத்தில் , ' தன் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே ,

இன்னும் இதைவிட என்ன ஆகணும் ! '

என்கிற :

அலட்சியம் !

இந்த மாதிரியான

உணர்ச்சிக் கலவை யை அந்த பாடலில்

வெளிப்படுத்த வேண்டும் !

இயக்குனர் ஏ பீம்சிங் க்கு அந்த பாடலை

தான் நினைத்தபடி வெளிக்கொண்டு வர நினைத்தார்.

அதில் வெற்றி கண்டாரா ?

வெற்றி கண்டார், பாடலும் வெற்றி !


ஆனால் , தான் நினைத்தவாறு ஒரு பாடலைத்

தர அவர் மட்டும் எண்ணிவிட்டால் அது நடக்காது.....

பாடலை உருவாக்கும் :

" தாய்மார்கள் " ( ! )

அதான்,

1. பாடலாசிரியர்

2. இசையமைப் பாளர்

3. பாடகர்

4. மற்றும்

பாடல் காட்சியில் நடிப்பவர் !

மேற்கண்டவர்கள் :

அதாவது :

1. பாடலாசிரியர் : கண்ணதாசன்,

2. இசையமைப்பாளர்கள் : மெல்லிசை மன்னர்கள்

3. பாடகர் : டி எம் எஸ்


4. நடிகர் : நடிகர் திலகம் .....

இவர்களின் ' ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காத.....

ஆனால்.....ஆரோக்கியமான பொறாமை இல்லாத

போட்டியால் பாடல் வெற்றி பெற்றது !

எப்படி ?


சொல்றேன்


" யார் அந்த நிலவு "

பாடலை எழுதிய : கவிஞர்

கண்னதாசன் :

" படகோட்டி " பாடல்களுக்குப் பிறகு எம்ஜிஆர் இன்

அனைத்துப் படங்களுக்கும் பாடல்களை எழுதியர் :கவிஞர் வாலி !

( தேவர் மற்றும் ஜி என் வேலுமணி படங்களுக்கு மட்டும் இதற்கு

விதிவிலக்கு ! கண்ணதாசன் தான் பாட்டு எழுதுவார் ! )

எனவே, கண்னதாசன் நிறைய சிவாஜி படங்களுக்கும் மற்ற

நடிகர்கள் படங்களுக்கும் பாடல்களை எழுதி குவித்தார் !

அதிலும் சிவாஜி படங்களுக்கு - அதிலும் - " ப' பட இயக்குனர்

பீம்சிங் இயக்கும் படங்களுக்கு அதிக கவனம் செலுத்தி பாடல்

களை எழுதி குவித்தார் !


" சாந்தி " படத்தில் " யார் அந்த நிலவு " பாடலுக்கான

சூழ்நிலையை இயக்குமர் பீம்சிங் இடம் இருந்து கேட்டு அறிந்து

பின்னர் அழகு தமிழில் சொற்களை அமைத்து பாடலை

எழுதினார் !

ஒண்ணும் வாணாம் ! ( சென்னை தமிழ் ! )

படத்தைப் பார்க்கவேண்டாம் !

பாடகரின் குரல் வளத்தில் கவனம் செலுத்த வேண்டாம் !

இசையமைப்பில் கவனம் செலுத்த வேண்டாம் !

வெறும் பாடல் வரிகளை மட்டும் கேட்டாலே போதும் ,

'சாந்தி ' படத்தின் கதையமைப்பை நீங்கள் புரிந்து

கொள்ளமுடியும் !


எடுத்துக்காட்டுக்கள் :

" மாலையும் மஞ்சளும் மாறியதே ஒரு சோதனை "

இந்த வரிகளைப் படித்தாலே 'சாந்தி ' படத்தின்

கதை போக்கை ஓரளவு நாம் புரிந்து கொள்ளமுடியும் !

" காலம் செய்த கோலாம் இங்கு நான் வந்த வரவு ! "

மேற்கண்ட வரிகளைப் படித்தாலே படத்தில்

நடிகர் திலகத்தின் சூழ்நிலை புரிய வரும் !

" உன் கோவிலின் தீபம் மாறியதை நீ அறிவாயோ ! "

" தீபம் மாறியது " என்பது எதனைக் குறிக்கின்றது என்பது உங்களுக்கு

புரியும் !

இப்படி வெறும் வார்த்தைகளால்நாகரீகமாக எளிதாக சொல்ல முடியாத

" கணவன் - மனைவி " சமாச்சாரத்தை பாடல் வரிகளைக்

கொண்டே மிக அழகாக விளக்கிய பெருமை கவியரசர்

கண்ணதாசனையே சாரும் !

' யார் இந்த நிலவு '

பாடலுக்கு இசை : மெல்லிசை மன்னர்கள் :


மெல்லிசை மன்னர்களின் பாடல்களுக்கும் மற்ற இசையமைப்

பாளர்களின் பாடல்களுக்கும் இருக்கும் :

ஒரே ஒரு வித்தியாசம்

என்ன தெரியுமா ?

சொல்றேன் !

" மெல்லிசை மன்னர்களின் ஒவ்வொரு பாடலும் அவர்கள் இசையமைத்த

வேறு எந்த பாடல்களுடன் ஒப்பிடாமல்

தனித்து

விளங்குவது தான் அந்த வித்தியாசம் !


( இந்த 'மேட்டரை' பின்னர் வேறு சமயத்தில் விரிவாக

சொல்கிறேன் ! )


" யார் இந்த நிலவு " பாடலும் இப்படித்தான், அவர்களின் ஏனைய

பாடல்களையும் தனித்தும் இணை இல்லாததாகவும்

சிறந்து விளங்குகிறது !


முதலில் இந்த பாடல் இடம் பெறும் ' சிடுவேஷன்' ஐ கூர்ந்து கவனித்த

இசையமைப்பாளர்கள் , இந்த பாடலுக்கு இசையமைக்க

மேலை நாட்டு இசை பாணியை பின்பற்றி இசையமைத்தால்

நல்லது என்று முடிவு எடுத்தார்கள் !


சரியாரைப் பாட வைப்பது ?


இதில் என்ன குழப்பம் , ஸ்வாமி !

அந்த கால கட்டத்தில் நடிகர் திலகத்திற்கு பின்ணனி கொடுப்பவர் :

டி எம் எஸ் தானே !

அதில்தானே குழப்பம் , ஸ்வாமி !


' என்னய்யா அந்த குழப்பம் ' ?

என்கிறீர்களா ?

" டி எம் எஸ் அவர்களுக்கு மேற்கத்திய பாணியில் பாட இயலுமா ? "

என்பதுதான் மெல்லிசை மன்னர்களுக்கு

குழப்பம் !

எனினும் வேறு பாடகரை வைத்து , தாங்கள் நினைப்பது போல்

மேற்கத்திய பாணியில் இந்த பாடலை தங்களால் பாட

வைத்து பாடலை வெற்றி பெற முடியும் !

ஆனால்.......நடிகர் திலகம் அதற்கு உடன்படாவிட்டால் ?


" விச்சு ! திரைப்படங்களில் என் பாடலுக்கு டி எம் எஸ் பாடினால்தான்

அது நான் பாடுவதாக நம் ரசிகர்கள் எண்னுவார்கள் !

அப்படி டி எம் எஸ் பாடாமல் வேறு ஒருவரை வைத்து பாடினால்,

படத்தைப் பார்க்கும் போது அந்த பாடலை நான் பாடுவதாகவே

ரசிகர்கள் நினைக்கமாட்டார்கள் , மாறாக அந்த பாடகர் பாடுவதாகவே

ரசிகர்கள் நினைப்பார்கள் ! "


சொன்னவர் நடிகர் திலகம் !

" ஒரு நாளிலே உறவானதே ! "

டி எம் எஸ் - சுசீலா பாடிய ' சிவந்த மண் ' படப் பாடலை மெல்லிசை

மன்னர் முதலில் சுசீலாவுடன் பாடவைத்த பாடகர் :

பால முரளி கிருஷ்ணா !

மேற்கண்ட பாடகர் பாடிய பாடலைக் கேட்டுத்தான் நடிகர் திலகம்

மேற்கண்ட வசனங்களை மெல்லிசை மன்னரிடம் நடிகர் திலகம்

சொன்னாராம் !

மெல்லிசை மன்னர் ரொம்ப ரொம்ப கடுப்பாகித்தான் பால முரளி

கிருஷ்ணாவை நீக்கி விட்டு டி எம் எஸ் வைத்து பாடவைத்தாராம் !

" சர்த்தான் ஸ்வாமி ! அந்த பாடல் ' சிவந்த மண் ' படம் - 1970

வெளிய்யீடு ! ' சாந்தி ' படம் - 1965 படம் தானே ! "


என்கிறீர்களா ?


சொல்றேன் !

" சபாஷ் மீனா " படம் . சந்திரபாபு அந்த படத்தில் இரட்டை வேடங்களில்

பின்னிப் ' பெடல் ' எடுத்துக்கொண்டிருந்தார்..... சிவாஜி கணேசனுக்கு

அந்த படத்தில் சொல்லிக்கொள்ளும்படி எந்த பெயரையும் கொடுக்கும்

சந்தர்ப்பம் இல்லை !

இதனை இந்த படத்தின் இசையமைப்பாளரிடம் ( டி . சலபதி ராவ் )

சொல்லிப் புலம்பினார்,

நடிகர் திலகம் !


" இந்த படத்தில் உங்களுக்கு பேர் வாங்கித் தரும் அளவுக்கு ஓர்

அழகான ' டூயட் ' பாடலைத் தரப் போகிறேன், ஆனால் பாடலைப்

பாடப் போகிறவர் டி எம் எஸ் இல்லை, வேறு பாடகரை தேர்வு செய்ய

நீங்கள் எனக்கு சுதந்திரம் தரவேண்டும், சம்மதமா ? "

சிவாஜியிடம் கேட்டவர் டி . சலபதி ராவ் !


" சரி ! "

வேண்டா வெறுப்பாக தலையை ஆட்டினார் நடிகர் திலகம் !

அந்த பாடல்தான் :


" காணா இன்பம் கனிந்தது ஏனோ ! "


சுசீலாவுடன் சிவாஜிக்கு குரல் கொடுத்த பாடகர் :


டி . ஏ. மோதி !

பாடல் சூபர் ஹிட் !


இன்னொன்று :


" குங்குமம் " படத்தில் " சின்னஞ்சிறிய வண்னப் பறவை எண்ணத்தை

சொல்லுதம்மா ! "

பாடல் ! இந்த பாடலை எஸ். ஜானகியுடன் பாடியவர் :

சீர்காழி கோவிந்தர ராஜன் !

ஆனால் நடிகர் திலகம் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை !

டி எம் எஸ் ஐ பாடச் சொல்லி இசையமைப்பாளர் கே . வி .

மகாதேவனிடம் சொல்லிவிட்டார் !

வேறு வழி !

சீர்காழி யை விலக்கி விட்டு டி எம் எஸ் ஐ பாட வைத்தார்கள் !

சீர்காழிக்கு , சிவாஜி மேல் செம கடுப்பு !

" ஐயா ! நீங்கள் எல்லோருக்கும் உணவு பறிமாருங்கள் !

ஆனால் எச்சில் உணவைப் பறிமாற வேண்டாம் ! "


நடிகர் திலகத்திடம் , சீர்காழியார் சொன்ன வார்த்தை !

நடிகர் திலகம் அவரை சமாதானப் படுத்த பெரும்

சிரமப் பட்டாராம் !

' கதை ' இப்படி இருக்க , மெல்லிசை மன்னர்கள் எப்படி

டி எம் எஸ் ஐ மாற்ற துணிவார்கள் !

அழகான, இனிய பியோனா இசையுடன் .....வேகமாகவும்

இல்லாமலும், அதே சமயத்தில் மிகவும் மந்தமான கதியில்

இல்லாமலும்......துன்பமான பாடலும் இல்லாமலும் அதே சமயத்தில்

சோகம் மற்றும் தத்துவப் பாடலும் ஆக இல்லாமலும்,

பாடகர் சிரிக்காமலும் , அழாமலும் .....அதே சமயத்தில் ரசிகர்கள்

' டம் ' அடிக்க தியேடரை விட்டு வெளியே போகாமலும்....

மிகுந்த ' மெலடி' வுடன் பாடலை மிகவும் நேர்த்திவுடன்

இசையமைத்தார்கள் !


இந்த பாடல் இன்றும் வாழ்கிறது !


சொன்னால் நம்புவீர்களோ இல்லையோ

எனக்குத் தெரியாது.....

டி எம் எஸ் முதலில் திரைப்படப் பாடல்களை பாட வரும் போது

அவர் ' காமடி ' - நகைச் சுவை பாடல்களை மட்டும் பாடுவதறு

அழைத்தார்களாம் !


பின்னர் " தூக்கு தூக்கி " படம் மூலமாக கிராமியப் பாடல்களைப்

பாடுவதில் வல்லவர் என்று அறியப்பட்டார் !


அப்புறம் ?


" அம்பிகாதி " படம் மூலம் டி எம் எஸ் மிகச் சிறந்த கர்நாடக இசைப்

பாடகர் என்கிற பெயரை தக்க வைத்துக் கொண்டார் !


இந்த நிலையில் " பாவ மன்னிப்பு " படத்தில் " வந்த நாள் முதல் "

பாடலைப் பாட யாரைப் போட்டு பாடவைக்கலாம் என்று மெல்லிசை

மன்னர்கள் மண்டையை போட்டு குடைந்து கொண்டார்கள் !

முதலில் ஜி. கே. வெங்கடேஷ் ஐ வைத்துப் பாட வைத்தார்கள் !

" சரி , இந்த ஆள் நம்ம சிஷ்யன் , படத்தில் சோகப் பாடலுக்கு

இவர் பாடியதை வைத்துக் கொள்ளலாம், ஆனால்

குழந்தையை சைக்கிளில் வைத்து சிவாஜி பாடும் பாட்டை

யாரை வைத்துப் பாட வைப்பது ? "


மீண்டும் மண்டை + குடைச்சல் + கொண்டார்கள் !


பின்னர் வந்தார் டி . ஏ . மோதி !

பாடினால்....' வந்த நாள் முதல் '....

" ச்....ச் ... செ....ச் " - அதான் " உச் " கொட்டினார்கள் அனைவரும் !



" அண்ணே ! நீங்க யார் யாரையோ வைத்து பாட வைக்கிறீர்கள் !

எனக்கு இந்த பாடலைப் பாடுவதற்கு 'சான்ஸ்' கொடுங்கள் !

ஊதித் தள்லிவிடுகிறேன் ! "


சொன்னவர் டி எம் எஸ் - மெல்லிசை மன்னரிடம் !


" ஐயா ! இந்த " வந்த நாள் முதல் " பாட்டு மேற்கத்திய பாணி !

இது உங்களுக்கு பாட வருமா என்று எங்களுக்கு தயக்கம்.....

அத்தான்.... ! "


சற்று தடுமாற்றத்துடன் டி எம் எஸ் விடம் சொன்னார் மெல்லிசை

மன்னர் !


" ' சான்ஸ்' ஐ எனக்கு கொடுத்துப் பாருங்கள் , அண்ணே ! "

---- டி எம் எஸ் !


டி எம் எஸ் பாடினார் !

" வந்த நாள் முதல் ",........... !

பாடல் சூபர் ஹிட் !


டி எம் எஸ் ஆவர்களின் புகழ் இப்படி பரவி இருக்க ...

" யார் இந்த நிலவு " பாடலை டி எம் எஸ் தவிர வேறு எவர்

நன்றாக பாடியிருக்க முடியும்...

சொல்லுங்கய்யா !

எம்கேஆர்சாந்தாராம்

gkrishna
13th September 2014, 06:50 PM
' யார் அந்த

நிலவு " ........................



வாசு சார்

உங்களின் 'யார் அந்த நிலவு' .அருமையான கட்டுரை ஒன்றை வெளியிட்டு உள்ளீர்கள். இதுவரை அறியாத அரிய தகவல்கள் தந்து திரியின் பெருமையை பறை சாற்றி விட்டீர்கள் . வாழ்க வளமுடன் .

அஞ்சாத வாசம் முடிந்ததா ?

JamesFague
13th September 2014, 06:50 PM
Deep analysis on one song. That is possible only by you Mr VasuJI. You have brought out so many information on

one song and very interesting as well as informative.

Thanks

vasudevan31355
13th September 2014, 06:57 PM
இல்லை இல்லை. அது நான் எழுதவில்லை. அது சினிமாவைப் பற்றி அதிகம் தெரிந்த சாந்தாராம் என்ற அற்புத நண்பர் எழுதியது. எல்லாப் பாராட்டுகளும் அவருக்கே சேர வேண்டும். கீழே அவர் பெயரை போட்டிருக்கிறேன்.

அப்படியே இதை மறக்காமல் பாருங்கள்.


https://www.youtube.com/watch?v=wXXPeE_YTN8&feature=player_detailpage

vasudevan31355
13th September 2014, 07:00 PM
krishna sir,

from my friend's laptop.

gkrishna
13th September 2014, 07:00 PM
உண்மை வாசு சார்
எப்போதுமே நாம் கட்டுரை எழுதியவர் பெயரை குறிப்பிட்டு விடுவோமே

5 ஸ்டார்களை கவனீதீர்களா ?

1. பாடலாசிரியர்
2. இசையமைப் பாளர்
3. பாடகர்
4. பாடல் காட்சியில் நடிப்பவர்
5 இயக்குனர்

gkrishna
13th September 2014, 07:04 PM
உங்கள் பங்களிப்பு மற்றும் கடமை உணர்ச்சி பிரமிக்க வைக்கிறது .வாசு சார்

நடிகர் திலகம் உடல் நலம் குன்றி இருந்தாலும் அல்லது தனது உறவினர்களோ நண்பர்களோ தவறி இருந்தாலும் தயாரிப்பாளர் கஷ்ட பட கூடாது என்று படபிடிப்பை ரத்து செய்யாமல் நடித்து கொடுப்பார் என்று கேள்விபட்டது உண்டு . இப்போது அதை உங்களிடம் காண்கிறேன்

Gopal.s
13th September 2014, 08:18 PM
எம்.எஸ்.விஸ்வநாதன் -ஒரு வாழும் இசை அதிசயம்-6.

இனி விஸ்வநாதன் அவர்களின் பிரத்யேக சிறப்பு ஒன்றை பார்ப்போம். அவருடைய இசையமைப்பு ஒரு மூளையின் ரகசிய விளையாட்டு. ஒரு பாட்டுக்குரிய வெவ்வேறு அம்சங்களை எப்படி திட்டமிடுகிறார்,அதிலும் காலத்துக்கு முந்திய sophistication கொண்டு என்பது புதிர்தான்.

நான் தொழில் நுட்ப முன்னேற்றத்தை குறிப்பிடவில்லை. creativity என்று சொல்ல படும் வித்தியாச படைப்பு திறனை சொல்கிறேன்.

அவர் இசை கருவிகளை உபயோக படுத்தியதில் நிஜமாகவே இசை மகாராஜாவே. யாழ்,கொட்டங்கச்சி வயலின்,உறுமி மேளம்,பறை ொட்டு,வீணை,வயலின்,மிருதங்கம்,தவில்,தபேலா,சாக்ஸ்,ஹா ர்மோனியம்,சிதார்,சாரங்கி,ட்ரம்பெட் ,புல் புல் தாரா,பியானோ,கிடார்,அக்கார்டியன்,புல்லாங்குழல் ,மௌத் ஆர்கன்,விசில்,கஞ்சிரா,பாங்கோ,ட்ரம்ஸ்,கிளாரினெட்,ஷெ னாய் ,நாதஸ்வரம்,என்று கணக்கே இல்லை. அத்துடன் ஒன்றோடு மற்றதை இணைக்கும் லாவகம், ஏதோ பெரிய சோதனை முயற்சி என்று படாமல்,உங்கள் அறிவுக்கும் ரசனைக்கும் இயல்பாக தெரியும் அழகுணர்ச்சி கொண்டிருக்கும்.

அதைத்தவிர கருவி சாரா அழகு படுத்தல்,(non -instrumental embellishmant )என்று ஒன்று உண்டு. அதுதான் infusing grandeaur mood with drafted voices என்பது. அது மனிதர்களின் வித்யாசமான ஏதோ ஒரு ஹம்மிங் அல்லது ஆலாபனை, அல்லது மழலை போன்ற gibbarish என்று ஒன்றுடன் தாளத்தை இணைத்து அழகான காற்று இசை கருவிகளையோ,அல்லது தந்தி இசை கருவிகளையோ கொண்டு பல்லவியுடனோ ,சரணத்துடனோ லீட் கொடுப்பது.

இவை சில சமயம் மனித குரல்களின் இணைந்த தாள- ஒலி கருவிகளாகவோ, வெறும் தாள-ஒலி கருவிகலாகவோ ,அல்லது திடீர் குரல் ஆரம்பமாகவோ கூட இருக்கலாம். அது பாட்டின் தன்மை மற்றும் இசையமைப்பாளரின் உள்ள போக்கில் அது மக்களை கவருமா என்று கணிப்பில் அடங்குவது.

"நெஞ்சத்தில் இருப்பது என்ன என்ன "பாட்டில் வினோத ஒலி சுசிலா குரலில் எழும்ப பாங்கோ ஒலி அதற்கு பதில் சொல்வது போல துணை நிற்கும். "ரோஜா மலரே" பாட்டிலும் ஹம்மிங் உடன் சேரும் பாங்கோ ,"பூமாலையில் ஓர் மல்லிகை" பாடலில் ஆலாபனையுடன் அழகாக சேரும் தபலா,என்பவை மனித குரலுடன் இணைந்த கருவிகளை கொண்டு ஆரம்பத்தையே களை கட்ட வைப்பார்.

கருவிகள் என்றால் ட்ரம் ,கிடார் சேரும் "யாரோ ஆட தெரிந்தவர் யாரோ ", தபலா,பாங்கோஸ் என்று சேர கூடாத கருவிகளை சேர வைத்து கொடுத்த "நாளை இந்த வேளை பார்த்து ", தவிலும்,பாங்கோவும் இணையும் "அதிசய உலகம்",ட்ரம் ,பாங்கோ இணையும் "அவளுக்கென்ன " என்று சொல்லி கொண்டே போகலாம்.

"தண்ணிலவு தேனிறைக்க ","எங்கே நீயோ நானும் அங்கே","நினைத்தால் போதும்","சின்ன சின்ன கண்ணனுக்கு ","பௌர்ணமி நிலவில்" போன்ற பாடல்கள் முகாந்திரம் இல்லாமலே திடீரென்று ஆரம்பிக்கும்.

ஆனால் எல்லா பாடல்களிலும் , ஆரம்பத்திலேயே ,இசை ரசிகர்களை கட்டி போட்டு விடுவார்.

"தூது சொல்ல ஒரு தோழி" ரெகார்டிங் முடித்து ஏதோ ஒன்று குறைவதாக தோன்ற சுசிலா பல்லவி பாட ஈஸ்வரி குரலை கொண்டு இணையாக ஆஹா சொல்ல வைத்து முடிவு கொடுத்தாராம்.

பாடல்களின் உயிர் நாடியை பிடித்தல் ஆரம்பமே. ஆனால் ஆத்மார்த்தமான இசை பங்களிப்பால் ஜீவ நாடியையே பிடித்து சிம்மாசனத்தில் அமர்த்தும் வித்தையை வரும் பதிவுகளில் பார்ப்போம்.

(தொடரும்)

Gopal.s
13th September 2014, 08:26 PM
மனதோடு பேசிய பாடகி ஸ்வர்ணலதா நினைவில்(Thanks to POEM)

பாடகி ஸ்வர்ணலதா மறைந்தோடி நான்கு வருடங்களைத் தொடுகின்றது இந்த நாள்.
சந்தோஷமோ, சோகமோ குரலின் அடி நாதத்தில் சோகம் இழையோடும் அந்தக் குரலுக்குச் சொந்தக்காரியை இழந்த நினைப்பு என்னமோ புதிதாக அவரிடமிருந்து வராதபோது தான் பிறக்கின்றது.

ஸ்வர்ணலதா போன்ற அத்திப்பூக்கள் அடிக்கடி பூப்பதில்லை. ஸ்வர்ணலதா என்ற பாட்டுக் குயிலுக்குக் கிட்டிய பாட்டுகளையும் வேறொருவருக்கும் பொருந்திப் பார்த்துத் திருப்தி காணவியலாதவை. இந்தக் குரலின் இசை நரம்பு மாற்றில்லா அபூர்வம்.

நம் பால்யகாலத்தின் ஞாபகங்களின் எச்சங்களாக, அந்தக் காலகட்டத்தை மீண்டும் எம் மனத்திரையில் ஓட்டிப்பார்க்கப் பண்ணும் சங்கதிகளில் அந்த நாட்களில் வந்த பாட்டுக்கள் பெரும் ஆக்கிரமிப்பை உண்டு பண்ணி விடும். அந்த வகையில் என் வாழ்க்கையின் பதின்ம வயதுகளின் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் தன் குரலினிமையால் வசீகரித்த ஸ்வர்ணலதா என்ற பாட்டுக் குயில் ஓய்ந்த செய்தியை அப்போது கேட்டபோது ஒரு எல்.பி ரெக்கோர்ட் ஐ பாளம் பாளமாக உடைத்து நொருக்கும் நிலையில் இருந்தது என் மனம். அந்தத் துளிர் காலத்து நினைவுகளை வேரோடு பிடுங்கிச் சாய்த்தது போல இருந்தது அப்போது.

சில வருடங்களுக்கு முன்னர் சிட்னியில், தமிழகத்துக் கலைஞர்களை வரவழைத்து இசை நிகழ்ச்சிகளை நடத்தும் நண்பர் ஒருவரிடம் பேசும் போது "யார் யாரையெல்லாம் அழைத்து வருகின்றீர்களே, பாடகி ஸ்வர்ணலதாவையும் ஒரு முறை சிட்னிக்கு அழைத்து வரலாமே" என்று கேட்டேன். "அவரை ஏற்கனவே அணுகியிருக்கின்றேன், ஆனால் அவருக்கு விமானத்தில் ஏறிப் பயணிக்க இயலாமையை ஏற்படுத்தும் ஒருவித பயவியாதி இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்" என்றார். "சரி அப்படியென்றால் ஸ்வர்ணலதாவின் தொலைபேசி எண்ணையாவது தாருங்கள், நான் ஒரு வானொலிப் பேட்டி எடுக்கின்றேன்" என்றேன். வானொலிப் பேட்டிக்கான தருணம் பார்த்திருக்கையில் அதை முற்றுப்புள்ளியாக்கியிருக்கின்றது ஸ்வர்ணலதாவின் அத்தியாயம்.

தமிழ்த்திரையிசையின் ஜாம்பவான்களான மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய மூவரின் ஆசியைப் பெற்ற விரல்விட்டு எண்ணக் கூடிய பாடகர்களில் ஸ்வர்ணலதாவும் ஒருவர். "நீதிக்குத் தண்டனை" திரைப்படத்தின் மூலம் மகாகவி பாரதியாரின் "சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா" பாடல் தான் ஸ்வர்ணலதாவின் திரையிசை வாழ்வின் முதற் பாட்டு. பாரதியாரைப் போலவே தன் வாழ்க்கைக் கணக்கை முழுமையாக முடிக்காமல் போய்ச் சேர்ந்து விட்டார்.

இசைஞானி இளையராஜாவுக்கு எண்பதுகளின் முதல் வரிசைப்பாடகிகளான எஸ்.ஜானகி, சித்ராவுக்கு மாற்றீடாக ஒரு பாடகி தேவைப்பட்டபோது கச்சிதமாகப் பொருந்திப் போனவர் சுவர்ணலதா. "குரு சிஷ்யன்" படத்தில் வரும் "உத்தமபுத்திரி நானு" என்ற பாடல் தான் ராஜாவின் பட்டறையில் ஸ்வர்ணலதாவுக்குக் கிடைத்த முதல் வாய்ப்பு. சுனந்தா, மின்மினி ஆகியோர் அளவுக்கு ஒரு தேக்கம் இல்லாது கடகடவென்று உயரே உயரே பறந்து உச்சத்தை தொட்டார் ராஜாவின் மந்திர மெட்டுக்களோடு.
நடிகை குஷ்பு பரபரப்பான ஒரு பிரபலமாக மாறிய போது கச்சிதமாகப் பொருந்திப் போனது சுவர்ணலதாவின் குரல். குறிப்பாக சின்னத்தம்பி, இது நம்ம பூமி, பாண்டித்துரை ஆகியவை சாட்சியம் பறையும். என் ராசாவின் மனசிலே படத்தில் "குயில் பாட்டு ஹோ வந்ததென்ன இளமானே" பாட்டில் தன்னுடைய அத்தனை உணர்ச்சிகளையும் கொட்டிக் குவித்துப் படத்தின் பெருவெற்றியிலும் பங்காளி ஆனார். அந்தக் காலகட்டத்தின் நான் சென்னை வானொலியை நேசித்த போது லல்லு, சத்யா , ரேவதி என்ற முகம் தெரியாத சென்னைவாசிகள் ஞாயிற்றுக்கிழமை நேயர் விருப்பில் தொடர்ந்து கேட்ட அந்தப் பாட்டு என் விருப்பமாகவும் பெயர் சொல்லாது இடம்பிடித்தது. "மாலையில் யாரோ மனதோடு பேச" பாடலில் இவர் கொடுத்த உருக்கத்தை யாரை வைத்துப் பொருத்திப் பார்க்க முடியும்? அந்தக் காதல் அரும்பிய காலகட்டத்தில் நேசித்தவளின் குரலாகப் பிரதியெடுத்தது இந்தச் ஸ்வர்ணலதாவின் ஸ்வரம்.

"மாசிமாசம் ஆளான பொண்ணு" தர்மதுரை படப்பாட்டில் அடக்கி வாசித்த இவர் "ஆட்டமா தேரோட்டமா" என்று கேப்டன் பிரபாகரனில் ஆர்ப்பரித்த போதும் தயங்காமல் ஏற்றுக் கொண்டது மனசு. "என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி" பாட்டின் ஆரம்ப அடிகளில் இவர் செய்யும் ஆலாபனை இருதயத்தை ஊடுருவி காதல் மின்சாரம் பாய்ச்சும்.
"என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்" என்ற அந்த மந்திரப்பாட்டுக் காதுகளை ஊடுருவும் போது மயிர்க்கூச்செறியும் நிகழ்வு ஒவ்வொரு முறையும்.


1990 ஆம் ஆண்டில் இருந்து 1995 வரையான காலகட்டத்தில் இசைஞானி இளையராஜா இவரை மனதில் வைத்தோ என்னவோ அள்ளி அள்ளிக் கொடுத்த அத்தனை மெட்டுக்களும் அந்தந்தப் படங்களின் நாயகிகளுக்குப் பொருந்தியதோடு நம் மனசிலும் அழியாத கோலங்கள் ஆகி இது நாள் வரை தொடர்கின்றன.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்குப் புதுக்குரல் தேடிடும் பயணத்தில் விட்டுவிலக்காத குயில்கள் வரிசையில் ஸ்வர்ணலதாவுக்கு மிகச்சிறந்த பாடல்களைக் கொடுத்ததோடு தேசிய விரு(ந்)தாக "கருத்தம்மா" படப்பாடலான "போறாளே பொன்னுத்தாயி" பாடலைக் கொடுத்த பெருமை இவருக்குக் கிடைத்த அங்கீகாரங்களில் மகுடம். அந்தப் பாடலில் ஆர்ப்பரிப்பில்லாத மெலிதான இசையைக் கடந்து ஆக்கிரமிப்புச் செய்வது ஸ்வர்ணலதாவின் அந்த சோக நாதம். "அலைபாயுதே" படத்து "எவனோ ஒருவன் யாசிக்கிறான்" பாட்டு அதே அலைவரிசையில் பொருத்திப் பார்க்க வேண்டிய இன்னொரு வைரம். "காதல் எனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்" பாட்டில் ஸ்வர்ணலதாவுக்கு ஜோடி கட்டி அவரை இன்னொரு வடிவிலும் தன் இசையால் நிரப்பியவர் ரஹ்மான்.


ஸ்வர்ணலதாவின் முதற்பாட்டு "சின்னஞ்சிறுகிளியே கண்ணம்மா" - நீதிக்குத் தண்டனை
http://www.youtube.com/watch?v=P_uFYt_yoTo&sns=em

"மாலையில் யாரோ" - சத்ரியன்
http://www.youtube.com/watch?v=wGs9MXH42e4&sns=em


"குயில் பாட்டு ஹோ வந்ததென்ன இளமானே" - என் ராசாவின் மனசிலே
http://www.youtube.com/watch?v=XSZ1Go57_FM&sns=em


"என்னுள்ளே என்னுள்ளே பலமின்னல் எழும் நேரம்" - வள்ளி
http://www.youtube.com/watch?v=x6CvQf2xLNs&sns=em

"என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட மன்னன் பேரும் என்னடி" - உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன்"
http://www.youtube.com/watch?v=9Nm04p88DHM&sns=em

"போவோமா ஊர்கோலம்" - சின்ன தம்பி
http://www.youtube.com/watch?v=tl0cFKXoErQ&sns=em

"காதலெனும் தேர்வெழுதி" - காதலர் தினம்
http://www.youtube.com/watch?v=h0JNePYUg3k&sns=em

"எவனோ ஒருவன் வாசிக்கிறான்" - அலைபாயுதே
http://www.youtube.com/watch?v=Ol2oJlHjKsw&sns=em

"போறாளே பொன்னுத்தாயி" - கருத்தம்மா
http://www.youtube.com/watch?v=Pexy9hx4BNU&sns=em

"நன்றி சொல்லவே உனக்கு என் மனவா வார்த்தையில்லையே" பாடல். சொந்தம் கொண்டாட யாரும் இல்லாத தனியன் ஒருவன், கல்யாணச் சந்தையில் விலை போகாத, ராசியில்லாதவள் என்று ஒதுக்கப்பட்ட அந்தப் பெண்ணைக் கைப் பிடிக்கிறான். இந்த இரு உள்ளங்களும் இது நாள் வரை தம் வாழ்வின் சோகப் பக்கங்களைப் பகிர்ந்தவாறே மாறி மாறித் தமக்குள் நன்றி பகிர்கின்றார்கள் இந்த புது வசந்தத்திற்காக. பாடலின் அடி நாதத்தை எஸ்.பி.பாலசுப்ரமணியமும் , ஸ்வர்ணலதாவும் அள்ளிக் கொட்டிய அந்தப் பாடல் மீண்டும் நினைவில் எட்டிப் பார்த்துச் சோக ராகம் பிரிக்கின்து.

"திசையறியாது நானே இங்கு தினசரி வாடினேனே
இந்த பறவையின் வேடந்தாங்கல்
உந்தன் மனமென்னும் வீதி தானே"

http://www.youtube.com/watch?v=OdmOvsezxQk&sns=em

எங்களைப் போன்ற இசையெனும் வேடந்தாங்கல் நாடி வரும் பறவைகளுக்கு நீராகாரமாய் நீக்கமற என்றும் துணை நிற்கும் ஸ்வர்ணலதா கொடுத்த வற்றாத இசை வெள்ளம்.

- Kana Prabha

venkkiram
13th September 2014, 09:18 PM
எம்.எஸ்.விஸ்வநாதன் -ஒரு வாழும் இசை அதிசயம்-6.

அவர் இசை கருவிகளை உபயோக படுத்தியதில் நிஜமாகவே இசை மகாராஜாவே. யாழ்,கொட்டங்கச்சி வயலின், உறுமி மேளம்,பறை ொட்டு,வீணை,வயலின்,மிருதங்கள்,தவில்,தபேலா,சாக்ஸ்,ஹா ர்மோனியம்,பியானோ,கிடார்,அக்கார்டியன்,புல்லாங்குழல் ,மௌத் ஆர்கன்,விசில்,கஞ்சிரா,பாங்கோ,ட்ரம்ஸ்,கிளாரினெட்,ஷெ னாய் ,நாதஸ்வரம்,என்று கணக்கே இல்லை. அத்துடன் ஒன்றோடு மற்றதை இணைக்கும் லாவகம், ஏதோ பெரிய சோதனை முயற்சி என்று படாமல்,உங்கள் அறிவுக்கும் ரசனைக்கும் இயல்பாக தெரியும் அழகுணர்ச்சி கொண்டிருக்கும்.

உறுமி மேளம்,பறை,கொட்டு இசைக்கருவிகளை பயன்படுத்திய எம்.எஸ்.வியின் ஐந்துப் பாடல்களை இங்கே பதியுங்கள். மேலும் புல்லாங்குழல் இசையை சிறப்பாக பயன்படுத்திய ஐந்து பாடல்களையும் பதியவும். தெரிந்து கொள்கிறேன்.

Gopal.s
13th September 2014, 10:46 PM
உறுமி மேளம்,பறை,கொட்டு இசைக்கருவிகளை பயன்படுத்திய எம்.எஸ்.வியின் ஐந்துப் பாடல்களை இங்கே பதியுங்கள். மேலும் புல்லாங்குழல் இசையை சிறப்பாக பயன்படுத்திய ஐந்து பாடல்களையும் பதியவும். தெரிந்து கொள்கிறேன்.

http://www.youtube.com/watch?v=gkhMbyxVKKc

http://www.youtube.com/watch?v=nUqazZZR3ms

http://www.youtube.com/watch?v=UnsLQxyu-EQ

http://www.youtube.com/watch?v=eNT6UzC2ehI

Rest later. I will give all illustrations. Too many videos will cause problem for readers.

Gopal.s
13th September 2014, 11:47 PM
கிருஷ்ணாஜி ,

நீங்கள் cut paste பண்ணும் நிறைய பதிவுகள் விவகாரமானவை. படித்து விட்டு, சிலவற்றை நீக்கி பதிக்கவும்.

எனக்கு யாரையும் விரோதிகளாய் எண்ணியதில்லை. உள்ளதை சொல்வேன்,சொன்னதை செய்வேன் ,வேறொன்றும் தெரியாது, உள்ளத்தில் இருப்பதை வார்த்தையில் மறைக்கும் கபடம் தெரியாது.அடிப்பது போல கோபம் வரும்.அதில் ஆபத்து இருக்காது.

இனியாவது இந்த மறை போர் உத்திகளை மறந்து,கருத்து வேற்றுமை இருந்தால் நேரடியாக வரவும்.

நட்போடு தொடர்வதில் விருப்பமே.

venkkiram
14th September 2014, 07:22 AM
சின்னஞ்சிறு பெண்போலே சிற்றாடை இடையுடுத்தி..

- சீர்காழியார் சென்னைத் தொலைக்காட்சிக்கான நிகழ்ச்சிக்கான கச்சேரி ஒன்றில் பாடியது.

http://www.youtube.com/watch?v=eoldjJS1OWI

இதே பாடலை நாதஸ்வரத்தில் இஞ்சிக்குடி சுப்ரமணியன்(ஒரே ஊர்க்காரர்!) வாசித்திருப்பதையும் பார்த்து கேட்டு மகிழலாம்.

http://www.youtube.com/watch?v=qmoGvnVV9pY

rajeshkrv
14th September 2014, 09:00 AM
வாசு ஜி
வாங்கோ வாங்கோ எங்கே இவ்வளவு நாளாக ஆளை காணோம்.

ஸ்வரணலதாவின் கானங்கள்

https://www.youtube.com/watch?v=8LTAYZHmTbA


https://www.youtube.com/watch?v=aEJrAr1otBc

https://www.youtube.com/watch?v=mh8CEJxbcac

rajeshkrv
14th September 2014, 09:03 AM
another fav of mano & swarnalatha

https://www.youtube.com/watch?v=hzSI89T40UE

Richardsof
14th September 2014, 10:45 AM
http://i61.tinypic.com/14lo9g.jpg

TMS - S. JANAKI

ONE OF THE MOST POPULAR SONG

http://youtu.be/mS_DsFaQl28

chinnakkannan
14th September 2014, 01:18 PM
ஹாய் குட்மார்னிங்க் ஆல் :) கொஞ்சம் லேட்டு..

வாங்கோ வெங்க்கி ராம்.. எனக்குப் பிடிச்ச பாட்டு சின்னஞ்சிறு பெண் போலே..அப்புறமா மாலை கேட்கிறேன் தாங்க்ஸ்.. //வெகு சின்ன வயது..மூத்த அக்கா கல்யாணம்.. நாதஸ்வர வித்வானிடம் போய் இந்தப் பாடல் ரெக்வஸ்ட்..மாப்பிள்ளை அழைப்பு டைம்.. அவர் பாடவில்லை..ஆனால் கல்யாணம் முடிந்த இரவோ அல்லது மா.அ அன்று இரவோ நினைவில்லை அவராகவே இசைக்க வேகமாக ஓடி தாங்க்ஸ் மாமா நன்னா வாசிச்சேள் எனச் சொல்ல..கண்களில் ஆனந்தம் பொங்கியது என்ற வார்த்தையை நேரில் பார்த்தேன்..ஒரு சின்னச் சிரிப்பு.. நன்னா இரு..என்பது போல் சொன்ன நினைவு..//

ஸ்வர்ணலதா பாடல்களுக்கு நன்றி ராஜேஷ் ஜி.. சின்னஞ்சிறிய வண்ணப் பறவைக்கு நன்றி எஸ்வி சார்..

அது சரி..போன வருடம் காஷ்மீர் ப்யூட்டிஃபுல் காஷ்மீர் அப்புறம் லே லடாக் போய்க் கொண்டிருந்த போது -ஜீப் - ஒற்றைப்பாதை டூவே ட்ரை- மலைப்பகுதி - போய்க்கொண்டிருக்கையில் - டிரைவர் நிறுத்திவிட்டான்..ஏண்டாப்பா.. இல்லீங்க்னா பக்ரா.. ஆடு என்றான்.. பார்த்தால் - நாங்கள் போய்க்கொண்டிருந்த சாலை ஒருபக்கம் கிடுகிடுபள்ளம் இன்னொரு பக்கம் மலை..அந்த மலைச்ச்சரிவில்சிலபல செம்மறி ஆடுகள் எதிர்பாராமல் பாயும் மாறன் மலர்க்கணை அம்புகள் போல (சே உவமை பொருந்தலை :) ) சரிவில் இறங்கி சாலையில் டபக் படக் என ஓடிக் காணாமல் போயின..ஸம் டைம்ஸ் அவை இறங்கும் போது பாறைகள் கற்களும் சேர்ந்து உருட்டி விடுமாம்.. ஐந்து நிமிடம் கழித்து ஜீப்பைக் கிளப்பிய டிரைவர் சொன்னான்..

எதுக்காக இது..யெஸ் ஹாங்க் ஜீ.. செம்மறி ஆடு..(ஒரு ஆட்டுப் பாட்டுக்குஇவ்ளோ பில்டப்பா டூமச் கண்ணா)

செம்மறி ஆடே செம்மறி ஆடே செய்வது சரியா சொல்
செவத்த பொண்ணு இவத்த நின்னு தவிக்கலாமா சொல்ல்

தவிக்கின்ற நெஞ்சம் ஒன்று துணை இன்று பெறலாமா
துணை இங்கு நீ என்று ஊர் சொல்ல வேண்டாமா..

நல்ல பாட்டு படம் உழவன் மகன்..எஸ்பி பாலு அண்ட் வித்யாவாம்...

Gopal.s
14th September 2014, 01:29 PM
vanga si.ka. sowkiyama?paarthu romba nalachu?

chinnakkannan
14th September 2014, 02:56 PM
செளக்கியமே கோபால் சார்.. :)

இந்த ஆயலோட்டும் பெண்ணேல்ல வர்ற ஆயல் என்பது பறவைகளையாக் குறிக்குது..

chinnakkannan
14th September 2014, 03:07 PM
ஆடு பாடல்கள் என்று பார்த்தால்..

இந்த ஆட்டுக்கும் நம்ம நாட்டுக்கும் வெகு பொருத்தம் இருக்குது..

சாஞ்சா சாயற பக்கம் சாயற செம்மறி ஆடுகளா..

ஆனா மாட்டுக்கு நிறைய இருக்கறாப்பல இருக்கே

காடுமலை மேடு கண்ட மாட்டு ப் பொண்ணே - பப்ளிமாஸ் கன்ன கல்யாண் குமார் ஏறக்குறைய ஸேம் ஸேம் அன்ன தேவிகா..

மாட்டுக்கார வேலா உன் மாட்டைக் கொஞ்சம் பாத்துக்கடா

காளை இருக்கு செவலை இருக்கு கண்ணுக்குட்டி எங்கய்யா
அந்தக் கன்னுக்குட்டிய விட்டுப் பாரு கட்டிப் பிடிப்பேன் நானய்யா..

மணப்பாற மாடு கட்டி மாயவரம் ஏரு பூட்டி வயக்காட்ட உழுது போடு செல்லக் கண்ணு..

மாடாட்டம் வண்ண மயிலாட்டம்..ஓ அது மானாட்டமோ.. அதுக்கப்புறம் நெஞ்சுல மாடு முட்ட மாட்டேங்குது.

Richardsof
14th September 2014, 04:12 PM
http://i58.tinypic.com/28ich0j.gif

மனதை மயக்கும் மதுர கானங்கள் - 15.9.2014 அன்று வெற்றிகரமான 100 வது நாளை தொடுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கின்றேன் . ம .ம . ம .கா நிறுவன தலைவர் திரு வாசுதேவன் அவர்களின் தலைமையில் இந்த திரி 8.6.2014 அன்று துவங்கி மாண்பு மிகு உறுப்பினர்களால் சிறப்புடன் பல பாடல்கள் பற்றிய
பதிவுகள் - அலசல்கள் - கருத்து பதிவுகள் என்று பெருமையுடன் 15.9.2014 அன்று வெற்றிகரமான 100 வது நாளை
காண்கிறது .

இந்த இனிய நேரத்தில் மாண்பு மிகு உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துக்களும் .

மதிப்பிற்குரிய ஆய்வாளர்கள் .

நிறுவனர் - நெய்வேலி திரு வாசுதேவன்

உப தலைவர் - சென்னை திரு கிருஷ்ணா

பொங்கும் பூம்புனல் - திரு ராகவேந்திரன்

பூலோகம் - திரு சின்னகண்ணன்

திரு ராஜேஷ்

திரு மது

மாஸ்டர் ஆப் ஆல் சப்ஜெக்ட்ஸ் - திரு கோபால்

நடமாடும் பல்கலை கழகம் - திரு கார்த்திக்

திரு வெங்கி ராம்

திரு வாசுதேவன்

திரு யுகேஷ் பாபு

திரு முரளி ஸ்ரீனிவாசன்

திரு SSS

மற்றும் பல நண்பர்கள் .


அடுத்த வெளியீடு .


மனதை மயக்கும் மதுர கானங்கள் - பாகம் - 3 விரைவில் .........................

gkrishna
14th September 2014, 04:22 PM
மிக்க மகிழ்ச்சி எஸ்வி சார்
உங்களின் பண்பும் பாராட்டும் வியக்க வைக்கிறது
நீவிர் வாழ்க உங்கள் பணி சிறக்க

உங்களை போன்ற பல நல்ல இதயங்கள் வாழ்த்தும் போது நிச்சயம் நம் திரி திரு வாசு அவர்களின் தலைமயில் பல நூறு பாகங்கள் கடந்து வெற்றி நடை போடும் என்பதில் ஐயமில்லை

gkrishna
14th September 2014, 04:38 PM
மதிபிர்க்கும் மரியாதைக்கும் அன்பிற்கும் உரிய நண்பர் கோபால் அவர்களுக்கு

உங்களுக்கும் எனக்கும் என்ன விரோதம் ?
வாய்க்கால் வரப்பு தகறாரு ஏதாவது நமக்குள் இருக்கா ?
எப்போது உங்களிடம் மறை முக யுத்தம் நடத்தினேன் ?

போடும் பதிவுகளில் ஏதாவது குறையோ அல்லது விவகாரமோ அல்லது விகாரமோ அல்லது சொற்குற்றம் அல்லது பொருட்குற்றம் இருந்தால் அதை நாசூக்காக தெரியபடுத்தவும். அதை பற்றி விவாதிப்போம். அது தான் சிறந்த விமர்சர்கருக்கு அழகு.


என்னதான் அகந்தை இருந்தாலும் ஹேம நாதர் திறமைக்கு உலகம் அடிமையே. அவரின் ஒரு நாள் போதுமா பாட்டை உலகம் மெச்சிய அளவு இசை தமிழையும்,பாட்டும் நானேயையும் மெச்சவில்லை.
என்ன content என்று கூட படிக்காமல் cut &paste பண்ணும் தருமியான உமக்கு,ஆயிரம் பொற்காசுகளுக்கு வழி செய்வான்.பிழைத்து கொள்ளுங்கள்.

நான் தருமியும் அல்ல

யாரும் இங்கு செண்பக பாண்டியனும் அல்ல அவனுக்கு ஆணையிட சிவபெருமானும் அல்ல இங்கு பதிவு போடுவதால் யார் யாருக்கு ஆயிரம் பொற் காசுகள் கொடுக்க போகிறார்கள்.

காபி செய்யும் பதிவுகளாக இருந்தாலும் அதில் சில நல்ல பல அறியாத அரிய தகவல்கள் வெளி வருகின்றன. உங்களுக்கு அந்த தகவல்கள் ஏற்கனவே அறிந்த ஒன்றாக இருக்கலாம். தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளட்டும். எடுத்துகாட்டாக நேற்றைய தினம் திரு வாசு அவர்கள் சாந்தி திரை படத்தில் இடம் பெற்று இருந்த யார் அந்த நிலவு பாடலை பற்றி எழுதும் போது (அது திரு சாந்தாராம் என்ற திரைப்படங்களை பற்றி நன்கு அறிந்த ஒரு மூத்த விமர்சகர் எழுதிய பதிவு) பல தெரியாத தகவல்களை சொல்லி இருக்கிறார். அந்த பதிவு இங்கு பதிவு இட்ட பிறகு தான் பல நண்பர்கள் தெரியபடுதியமைக்கு விருப்பம் சொல்லி வாழ்த்தி உள்ளார்கள்.

ஒரு வாதத்திற்கு எடுத்து கொள்வோம்.


திருவிளையாடல் படத்தில் வரும் 'ஒரு நாள் போதுமா' பாடலிடம் 'பாட்டும் நானே பாவமும் நானே ' பாடல் தோற்று போனதாக சொல்லி இருக்கிறீர்கள். இது நடிகர் திலகத்திற்கு நீங்கள் செய்யும் பெரிய இழுக்கு அல்லவா ?நடிகர் திலகத்தின் ரசிகன்,நடிகர் திலகம் என்ற தமிழனுக்கு ஒரு அவமானம் நேர்ந்தால் பொங்கி எழ வேண்டாமா என்ற சொன்ன நீங்கள் தான் இதையும் சொல்கிறீர்கள். MSV அவர்களை PRO என்ற சொன்ன நீங்கள் தான் இன்று அவர் ஒரு சகாப்தம் என்று எழுதி கொண்டு இருக்கிறீர்கள்

திருவிளையாடல் புராண கதையையே மாற்றி விட்டீர்களே .எந்த உலகம் 'ஒரு நாள் போதுமா' பாடலை மட்டும் மெச்சியது ?எந்த உலகம் 'பாட்டும் நானே பாவமும் நானே' பாடலை மெச்சவில்லை.

முனைவர் சரஸ்வதி ராமநாதன் அவர்கள் தீபம் என்ற தமிழ் பத்திரிகையில் (கல்கி குழுமத்தில் இருந்து வரும்) திரைப்பாடலில் புராணம் என்ற தலைப்பில் ஆகஸ்ட் 20 2014 இதழில் 'இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை ' பாடலின் சிறப்பை பற்றி விளக்கி உள்ளர்கள் .
அதே போல் செப்டம்பர் 20 2014 இதழில் 'பாட்டும் நானே பாவமும் நானே ' பாடலின் சிறப்பை பற்றி விளக்கி உள்ளார்கள்.படித்து பாருங்கள் . திருமதி முனைவர் சரஸ்வதி ராமநாதன் அவர்களும் நீங்கள் சொல்லும் உலகத்தில் உள்ள ஒரு நபர். சென்னை பம்மல் கண்ணதாசன் தமிழ் சங்கத்தின் தலைவர் . கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக தமிழ் பணி செய்து வருகிறார்கள்.

விறகு விற்ற படலத்துக்கு கவியரசர் நான்கு பாடல்கள் தந்தார்
படம் திருவிளையாடல்
1.ஒரு நாள் போதுமா
2.இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை
3.பார்த்த பசுமரம்
4.பாட்டும் நானே பாவமும் நானே ' - இது கவியரசர் பாடலா அல்லது கா மு ஷெரிப் பாடலா என்று ஒரு கேள்வி எழுப்பி ஒரு பதிவு இட்டு இருந்தேன்.

'ஈசன் விறகு வெட்டியாக வந்து விட்டான். திருவிளையாடல் புராணத்தில் ஹேமநாதன் வீட்டில் வாசல் திண்ணையில் அமர்ந்து சாதாரி பண் பாடினான் என்று உள்ளது '

'உரைசால் மலரோன் அறியா விகிலிதன் கூடலில் அமர்ந்தான் என்னே '
என்று பாட உயிர் அனைத்தும் இசையில் மயங்க, ஹேம நாதனும் தன்வயமிழந்து சுவைத்து 'அப்பா யார் நீ ? என்ன உயர்வான இசை பாடினாய் ? யார் உனக்கு ஆசான் ' என கேட்க 'பண்பால் யாழ் பயில் பாணபத்திரன் சீடன் நான். எனக்கு இசை வராது என்று ஒதுக்கி விட்டார் .விறகு வெட்டி பிழைகிரென்' என பதில் வர, ஹேம நாதன் கதி கலங்கினான் ; மதி மயங்கினான் ; முனைப்பு ஒடுங்கி ஊரை விட்டே ஓடி விட்டான். 'தகுதியான சீடன் இல்லை என்று பாணர் ஒதுக்கியவனின் இசையே இவ்வளுவு தெய்வீகமாய் இருக்கிறதே ! அந்த பாணரின் இசைக்கு முன் .. என் இசை ? " என எழுந்தோடி விட்டான் .

'கிராபிக்ஸ்' காட்சிகளே அறிமுகம் இல்லாத, காமிரா தந்திரம் அதிகம் பழகாத அக்காலத்தில் ஒரே நேரத்தில் எத்தனை சிவனை (சிவாஜியை)
கண்டு மகிழ்ந்தோம். ஒருவர வாய் பாட்டு, ஒருவர் கொன்னகோல்,ஒருவர் வீணை,ஒருவர் வேய்குழல், ஒருவர் மிருதங்கம் என அசத்தலான காட்சிகள் ரசிகர்கள் நெஞ்சை விட்டு நீங்குமா ?

'கௌரி மனோஹரி' ராகத்தில் திரை இசை திலகம் அமைத்த பாடல் கம்பீரமாக பாடகர் திலகம் குரலில் ஓங்கி ஒலிக்கிறது.

(இங்கும் நான் கேள்வி எழுப்பி இருந்தேன்
இந்த பாடல் கௌரி மனோஹரி ராகமா அல்லது கானடா ராக அடிப்படையில் அமைந்த பாடலா அல்லது ஆபேரி ராக அடிப்படையில் அமைந்ததா அல்லது ஷண்முக ப்ரியா சாயலில் உள்ள பாடலா ?)

பல்லவி

'பாட்டும் நானே பாவமும் நானே
பாடும் உன்னை நான் பாட வைத்தேனே '

ஹேமனாதா! ஆணவத்தால் தலை நிமிர்ந்து என் கலைக்கு இந்த சிறு நாடு சமம் ஆகுமா என்று பாடினாயே ..

'யாமோதிய கல்வியும் எம் அறிவும் தாமே பெற' ஆண்டவன் தந்தான் என்பது அறியாதபடி ஆணவத்தால் அறிவிழந்து நிற்கிறாயா ? உன்னை பாட வைத்தவன் நானே ! உன் பாட்டும் பொருளும் நானே !

'ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே அடங்குவித்தால் ஆர் ஒருவர் அடங்காதாரே ' என்றார் அப்பர் பெருமான் .

(கண்ணதாசன் அவர்கள் இந்த வரியை கொண்டு எழுதிய பாடல் தான்
ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே கண்ணா ' அவன் தான் மனிதன் பாடல் )

அனுபல்லவி

'கூட்டும் இசையும் கூத்தின் முறையும் காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ '

இசை கூத்து இவை என்னில்ருந்தே வந்தவை. என் காதில் இருக்கும் கந்தவர்களே இசை எழுப்பி கொண்டு இருக்கின்றனர். நானே நடனத்தின் தலைவன் நடராசன் . என்னிடமே கதை அளக்க வந்தாயோ

சரணம்

'அசையும் பொருளில் இசையும் நானே
ஆடும் கலையின் நாயகன் நானே
எதிலும் இயங்கும் இயக்கம் நானே
என் இசை நின்றால் அடங்கும் இவ்வுலகே '

கடலுக்குள் அலை அசைகிறது. 'ஓம்' என்று ஒலிக்கிறது. காற்றில் மரங்களும் கொடிகளும் அசைகின்றன. வா வா தலைவா என வரவேற்கின்றன . 'கா கா' எனும் காகம் 'இறைவா காப்பாயாக' என வேண்டுகிறதோ ? 'கொக்கரக்கோ' எனும் சேவல் ('கொக்கு - மாமரம் ,அறு - வென்ற ,அறுத்த - கோ - தலைவன் ) என்று முருகனை அழைகிறதோ ?

மலர்களை தூவி மரம்,செடி,கொடிகள் வழிபாடு செய்கின்றனவோ ?

அத்தனை பொருளிலும் இசை நான் தான். ஆடலரசனும் நான்.இயக்கம்,சக்தி,ஆற்றல் எல்லாமே நான். என் இசை நின்று விட்டால் உலகு அசைவற்று போகும் ! உலக பம்பரத்தை சாட்டை இல்லாமலே சுற்ற வைப்பவன் நான் . என்னிடமே ஆணவம் காட்டி நிற்பாயோ ?

ஒரு கணம் நான் அசைவற்று இருந்தால் உலகில் எதுவும் நடக்காதே ! நீ மட்டும் பாடுவாயா ?"

சரணம் 2

நான் அசைந்தால் அசையும் அகிலம் எல்லாமே
அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா ?
ஆலவாயனோடு பாட வந்தவனின்
பாடும் வாயை இனி மூட வந்ததொரு

(பாட்டும் நானே )

என்னையே பாடுபவன் பாணன் .பண்பால் யாழ் பயில் பாணபத்திரன் என் அடியவன்.அடங்கியவன். நீ அவனை இசையில் வெல்வாயோ ?
உன் வாயை மூடி வைக்க நான் பாடி வந்தேன் பாட்டு

என கற்பனை ஸ்வரங்கள் கலந்து - விறகு வெட்டி வந்த பரமன் விஸ்தாரமாக பாட இசை கேட்டு எழுந்தோடி ஹேமநாதன் போக

'கண் மூடி கண் திறக்கும் முன் பண் நூறுக்கு பாடல் தர வல்லவனே நீ வாழ்க '

அது கவி கண்ணதாசனாக இருக்கட்டும் அல்லது கவி கா மு ஷெரிப் ஆக இருக்கட்டும்

நடந்தவை நடந்தவைகளாக இருக்கட்டும்
நடப்பவை நல்லவைகளாக இருக்கட்டும்

http://www.thehindu.com/multimedia/dynamic/01053/15cp_Mythology_9_J_1053472g.jpghttps://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcQmBcpSDuGo0p678OUNQZv7NoJ3fGAu8 0dcYYPGlySw_6tSWA_Hhttp://i1.ytimg.com/vi/Spi7AMyBAG4/0.jpghttp://2.bp.blogspot.com/-92OXmzkuhVI/Tn8wJYXfT1I/AAAAAAAAATA/w8Jc4yKOEE8/s1600/hemanathatr.JPG

Gopal.s
14th September 2014, 06:05 PM
I spoke to our common friends. Pl.Listen to them atleast. I have to tolerate you means,I will do it my way. Thanks for your clarification.Atleast ,my request to cut paste specialists is to go thru the matter before posting it.

It was a classy song oru naal podhuma. Paattum naane is powerful with power packed performance. But oru naal is the ultimate song like mannavan vanthanadi.

Gopal.s
14th September 2014, 06:07 PM
Thanks ES.Vee. Your Rare exhibits are lighting this thread. I always appreciated you without any appendages in this thread as our true friend.

Richardsof
14th September 2014, 08:15 PM
THANKS GOPAL SIR

http://i61.tinypic.com/a9oi8j.jpg

Richardsof
14th September 2014, 08:18 PM
GEMINI VASAN AND NT
http://i57.tinypic.com/142xyyf.jpg

Richardsof
14th September 2014, 08:20 PM
http://i59.tinypic.com/6nseir.jpg

Richardsof
14th September 2014, 08:23 PM
http://i62.tinypic.com/2yo4uab.jpg

chinnakkannan
14th September 2014, 09:43 PM
ஏற்கெனவே நடந்த சம்பவங்களால அந்தப் பெண்ணுக்கு ரொம்ப்ப்ப பயமாயிட்டு இருக்கு.. என்ன செய்யறதுன்னே தெரியலை..ஹஸ்பெண்ட்ட சொன்னா கேவலமா பாக்கறார்.. டாக்டர் ஃப்ரண்ட் கிட்ட சொன்னா அவரும் ஏதோ வேகமாப் பேசிட்டுப் போய்டறார்.. நான் எந்து செய்யு.. எண்ட குருவாயூரப்பா…

சோபாவில் அமர்கிறாள் பார்த்தால்…குங்குமம் பத்திரிகை.. டார்க் ப்ரவுன் ஹார்ஸ் போட்ட அட்டைப்படம் படபடக்கிறது.. அவளது மனமும் கூட.

.ஓ..கனவில் வந்தாற்போல் நடக்கிறதே கனவுலயும் இதே மாதிரிபுக் தானே பார்த்தோம்..பத்திரிகை ஆஃபீஸ்ல கேட்டா இல்லவே இல்லைன்னாங்க..ஆனா இப்போ நம்ம வீட்டு ஹால்ல..தேதி பாக்கலாமா.

.ஓ மைகாட்..கரெண்ட் டேட்.... இப்போ அந்தப் பாழடைஞ்ச சர்ச் மொட்டைத்தலை கத்தி..ஓ.ஓ.ஓஒ எல்லாம் ரியல்லா இனிமே தான் நடக்கப்போறதா..பகவானே.. காப்பாத்து எனப் பதறுகையில் அதைவிடப் பதறுகிறது ரீரிகார்டிங்க்..படத்தில்..

அட.. நூறாவது நாள் பற்றிச் சொல்லி வாழ்த்துரைத்த எஸ்வி. சாருக்கு நன்றியுடன் ஒரு ஓ போட்டுட்டுப் போலாம்னு வந்தா நூறாவது நாள் படத்தைப் பற்றி எழுதிக்கிட்டு இருக்கேன்..

எஸ்வி சார் தாங்க்ஸ்..உங்கள் பங்கும் மிக முக்கியமான ஒன்று இந்தத் திரிக்கு….எனக்கும் ஒளவையாருக்கு ரெண்டு டிக்கட்..புக் பண்ணிடுங்க அடுதத சண்டே ஈவ்னிங் ஷோ..

க்ருஷ்ணா ஜி.. அப்படியே பொங்கி எழுந்து பாட்டும் நானே பத்தி எழுதியிருக்கீங்க.. படிக்க நல்லாயிருந்தது.ஆழமாகவும் இருந்தது...நன்றி

இனி ஏற்கெனவே எழுதியிருந்ததா எனத் தெரியாது..இருந்தாலும் மறுபடி இட்டால் தப்பில்லை எனில் அந்த மோகன் நளினி பாடிய நூறாவது நாள்பாட்டு எஸ்பிபி, எஸ் ஜானகி நல்ல பாட்டு..இன்பமிங்கே.காம்ல கட் பேஸ்ட் ஒர்க் ஆகலை..எனில் பாட்டுக் கேட்டுக்கிட்டே டைப்படிச்சேனாக்கும்..

***

விழியிலே மணி விழியில் மெளன மொழி பேசும் அன்னம்
உந்தன் விரல் தொடும் இடங்களில் பொன்னும் மின்னும்

அர்த்த ஜாமங்களில் நடக்கும் இன்ப யாகங்களில்
கனி இதழ்களில் வேதங்கள் நீ ஓதலாம்

கோடி மின்னல் ஓடி வந்து பாவை ஆனது

இவள் ரதியினம் உடல் மலர்வனம்
இதழ் மரகதம் அதில் மதுரசம்

இவள் காமன் வாகனம் இசை சிந்தும் மோகனம்
அழகைப் படைத்தாய் ஓ பிரம்ம தேவனே..

காதல் தேவன் உந்தன்கைகள் தீட்டும் நகவரி
இன்ப சுகவரி அன்பின் முகவரி

கொஞ்சம் தினசரி என்னை அனுசரி..
மழலையாகும் காவிரி மடியில் தூங்கும் காதலி
விடிய விடிய என் பேரை உச்சரி

**
நூறாவது நாள்படம் பார்த்தது தேவி தியேட்டர்.. கோவை சரளா அடையாளமே தெரியாமல் ஒல்லியாய் நளினியின் சினேகிதியாக வருவார்..விஜயகாந்த்திற்கென இருட்டில் சில ஷாட்ஸ் கொடுத்திருப்பார்கள்..ஒன்றும் தெரியாது.. மோகன் வழக்கம்போல கோபம் வந்தால் கான்ஸ்டிபேஷன் வந்த குழந்தையாட்டமா முகத்தை உம்மென்று வைத்து கண்கள் முழிக்கப் பார்ப்பதே ஒரு வகை பயம்மாக இருக்கும்..இதில் க்ளோஸப்பில் வேறு காட்டுவார்கள்..

கடைசியாய் வருகிற மொட்டைத்தலை சத்ய ராஜ் ஒரு ரிலாக்சேஷன் என்றால் அவரது மனைவியாக வரும் ஒல்லி கோகிலா கோவைத்தமிழில்
நன்கு நடித்திருப்பார்.. நளினி அலறுவதற்கென்றே பிறந்தபிறவி போல..வீல் என அலறி படக்கெனப் பதறி சடக்கென ஓடி இரைக்க இரைக்க நடித்திருப்பார்..

அந்தக் காலகட்டத்தில் த்ரில்லர் என்பதால் ஆ வென்று பார்த்த படம்..:)

gkrishna
14th September 2014, 10:27 PM
எஸ்வி சார்

ஒவையார் பற்றிய விளம்பரம்,நடிகர் திலகத்துடன் ஜெமினி அதிபர் வாசன் அவர்களின் அபூர்வ புகைப்படம் இரண்டுமே அருமை .

மேலும் அன்னை 100வது நாள் புகைப்படம்,என் மகள் என்ற திரைபடத்தின் எஸ் வரலக்ஷ்மி நிழல் படம் அற்புதம் .

என் மகள் திரைபடம் பற்றி ஏதாவது தகவல்கள் இருந்தால் அறிந்து கொள்ள ஆவல்

சி கே சார்

நூறவது நாள் இது வரை விவாதிக்கப்படவில்லை என்று நினைவு
நூறாவது நாள் நெல்லை சென்ட்ரல் திரை அரங்கில் பார்த்த நினைவு
24 மணி நேரம் படமும் இதே கூட்டணி தானே .குதிரை போட்ட குங்குமம் பத்திரிகை பற்றி ஒரு காட்சி வருமே அது நூறாவது நாளா அல்லது 24 மணி நேரமா . இதே போல் யார் என்று ஒரு படம் அர்ஜுன் நளினி நடித்து கண்ணன் என்பவர் இயக்கத்தில் இதே கால கட்டத்தில் பார்த்த நினைவு . எல்லாமே கிட்டத்தட்ட த்ரில்லர் வகையறா
மோகன் தன மார்கெட் இழக்கும் நேரத்தில் இதே போல் ஒரு பேய் படம் செய்த நினைவு. மேக் up இல்லாமலேயே பேய் போல் தான் இருக்கிறார் என்று குமுதம் அல்லது தினத்தந்தி என்று படித்த நினைவு

அன்பு கோபால் சார்
ஒரு நாள் போதுமா (ராக மாலிகை) நிச்சயமாக ஒரு nice classy சாங் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது .எனக்கு தெரிந்து பாலமுரளி பாடிய 'தங்க ரதம் வந்தது வீதியிலே' (ஆபோகி தானே அது ),சின்ன கண்ணன் அழைக்கிறான் (ரீதி கௌளை), ஆயிரம் கோடி காலங்களாக(கவிக்குயில்),,கேட்க திகட்டாத கானம்(மிருதங்க சக்கரவர்த்தி) எல்லாமே கலக்கல் .நவரத்தினம் படத்திலும் குன்னக்குடி இசையில் சில பாடல்கள் பாடி இருப்பார் . உங்கள் கருத்துக்கு நன்றி

chinnakkannan
14th September 2014, 11:20 PM
//குதிரை போட்ட குங்குமம் பத்திரிகை பற்றி ஒரு காட்சி வருமே அது நூறாவது நாளா //அதேதான் :)

//மோகன் தன மார்கெட் இழக்கும் நேரத்தில் இதே போல் ஒரு பேய் படம் செய்த நினைவு. மேக் up இல்லாமலேயே பேய் போல் தான் இருக்கிறார் என்று குமுதம் அல்லது தினத்தந்தி என்று படித்த நினைவு// உருவம்

நன்றி க்ருஷ்ணாசார்..

RAGHAVENDRA
15th September 2014, 12:41 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/ck5000grtgs_zpseaa0f60d.jpg

vasudevan31355
15th September 2014, 07:58 AM
அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்.


அனைவரையும் சந்தித்து சற்று இடைவெளி ஆகிவிட்டது. ஒன்றுமில்லை. சிஸ்டம் அவுட். மதர் போர்டு காலி. எல்லாம் சரிபண்ண ஒருவாரம் ஆகிவிட்டது.


அதற்குள் பார்த்தால் அற்புதமான பதிவுகள். கிருஷ்ணா சாரின் வழக்கமான அசத்தல்கள், அழகுத் தமிழில் பீடு நடை போட்டு தன் சொந்தக் கவிதைகளோடு திரைப் பாடல்களை சாமர்த்தியமாக நுழைத்துத் தரும் சின்னக் கண்ணன் சார் பதிவுகள், எனக்கு ரொம்பப் பிடித்தமான சின்ன சின்ன மேகம் பாடல் தந்த மது அண்ணா, கன்னடப் பாடல்களை, மலையாளப் பாடல்களை, இசை இளவரசி சொர்ணலதா பாடல்கள் என்று தனக்கே உரிய பாணியில் அசத்தி வரும் ராஜேஷ் சாரின் பதிவுகள், அந்தக் கால நிகழ்வுகளை இங்கே படமாகப் போட்டு நம்மை டைம் மிஷினில் ஏற்றிவிடும் வினோத் சார் பதிவுகள், மேலதிக விவரங்களைத் தந்து ஒவ்வொருவருவர் பதிவுகளையும் சுவை கூட்ட வைக்கும் எங்கள் அருமை கார்த்திக் சார் பதிவுகள், அபூர்வ பாடல்களை தரும் எஸ்.எஸ்.எஸ்.சார் பதிவுகள், கோபாலின் மெல்லிசை மன்னர் புகழ் பாடும் தொடர், சித்தூர் வாசுதேவன், பொங்கும் பூம்புனல் தந்து நம் உள்ளங்கள பூரிக்க வைக்கும் நமது ராகவேந்திரன் சார் பதிவுகள், சந்தேகங்களை எழுப்பி விடை கண்டு திரிக்கு உற்சாகமூட்டும் வெங்கிராம் சார் பதிவுகள், ராஜ் ராஜ் சார் பதிவுகள், கோபு சரின் பதிவுகள் என்று களைகட்டி திரி உயரத்தில் பறக்கிறதே. அனைவருக்கும், விட்டுப் போன அனைத்து நண்பர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

vasudevan31355
15th September 2014, 08:03 AM
டியர் சின்னக் கண்ணன் சார்,

தங்களது பொன்னான 5000 பதிவுகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். தங்கள் அழகுத் தமிழ் பதிவுகள் இன்னும் ஆயிரம் ஆயிரமாகப் பெருகட்டும்.

vasudevan31355
15th September 2014, 08:04 AM
வினோத் சார்,

நாகிரெட்டியுடன் இளமையாக நிற்கும் என் இதய தெய்வத்தின் போட்டோவுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

vasudevan31355
15th September 2014, 08:06 AM
கோபால்,

மெல்லிசை மன்னர் பற்றிய தொடரை மிகவும் ரசித்துப் படித்து வருகிறேன். அவருடைய திறமைகளை நீங்கள் வரிசைப்படுத்தி வருவது பாராட்டுக்குரியது. நன்றி!

rajeshkrv
15th September 2014, 09:13 AM
வாசு ஜி வாங்கோ வாங்கோ

rajeshkrv
15th September 2014, 09:38 AM
வாசு ஜி

இன்று ரொம்ப நாட்கள் கழித்து தரிசனம் தந்த உங்களுக்கு இரண்டு இசையரசி பாடல்கள்

முதலில் நியாயவே தேவரு படத்தில் அற்புத பாடல் ( எப்பொழுதும் நீங்கள் சகாமயிருங்கள் என்னை மறந்து செளக்கியாமாக இருங்கள்)

https://www.youtube.com/watch?v=gS5kYEFjeRM


அடுத்து நமது ஒரே ஒரு ஊரிலே கன்னட வடிவம் .

https://www.youtube.com/watch?v=_J_pjijFY3M

Gopal.s
15th September 2014, 09:45 AM
ராஜேஷ்,



நானும் இசையரசியின் மிக பெரிய ரசிகனே. ஆனாலும்,நீங்கள் ரொம்பவே,obsession கொண்டு, அதையே பிடித்து தொங்குகிறீர்கள். இது கொஞ்சம் மற்றவர்களை உறுத்தும். எவ்வளவோ இருக்கிறதே ,இசையில்? நீங்கள் இன்னும் கொஞ்சம் மனக்கதவை விசாலமாக்கி ,இன்னும் ரசிக்க தக்க பதிவுகளை இடலாமே?

vasudevan31355
15th September 2014, 09:48 AM
கோபால்,

நமது திரியில் விவாதங்கள் வரலாம். ஆனால் சர்ச்சைகள் வேண்டாமே! கிருஷ்ணா சாரை நீங்கள் புண்படுத்தி இருக்க வேண்டாம். அவர் மிக மிக மிருதுவான ஒரு நல்ல மனிதர். அவருடைய பதிவுகளில் தங்களுக்கு ஏதேனும் ஆட்சேபணை இருந்தால் அதை அவருக்கு நீங்கள் பி.எம். மூலம் தெரியப் படுத்தலாமே!

இன்னொன்று. மற்றவருடைய சுதந்திரங்களில் நீங்கள் தலையிடுவது உங்களுக்கு இருக்கும் மிகப் பெரிய மைனஸ் பாய்ன்ட். எல்லோருக்கும் அவரவர்கள் கருத்துக்களை பதிவிட உரிமை இருக்கிறது எல்லை மீறாமல். மற்றவர்களை இப்படி செய் அப்படி செய் என்று உத்தரவு போடாமல் அடுத்தவர்களை நிம்மதியாகப் பதிவு போட விடுங்கள். மற்றவர்கள் சொன்னால் நீங்கள் கேட்பதில்லையே! அதையே மற்றவர்களிடம் நீங்கள் எப்படி எதிர்பார்க்கிறீர்கள் என்று புரியவில்லை.

இங்கு போடும் பதிவுகளை ஒன்றயணாப் பதிவுகள் என்று கேலி செய்து இருக்கிறீர்கள். அதையும் நான் அதை ஸ்போர்ட்டிவாகத்தான் எடுத்துக் கொண்டேன். சுயநலம் என்றும் சொல்லி இருக்கிறீர்கள். வார்த்தைகள் மிகத் தடிப்பாக வந்து விழுகின்றன. உங்களுக்கு உங்களைவிட பதிலை மட்டமாக எழுத பல ஆட்கள் இங்கு இருக்கிறார்கள். கவனம் தேவை.

நீங்கள் முந்தாநாள் கிருஷ்ணாவுக்கு எழுதி உடனே நீக்கிவிட்ட ஒரு மோசமான பதிவு இங்கு பல பேரிடம் பதிவாய் இருக்கிறது. அது இங்கே வரவிடாமல் நான் தடுத்துள்ளேன். அது பதிவானால் உங்கள் கதி அதோகதிதான்.

எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எழுதி விடுவது.... அதற்கு கண்டனம் வந்தால் உடனே சரணாகதி அடைவது உங்கள் தொழிலாகப் போய்விட்டது. அப்புறம் வேதாளம் கதை. முன்னுக்குப் பின் முரண். நீங்கள் கட் பேஸ்ட் போடும்போது யாராவது கேட்டார்களா?

அமைதியாகச் சென்று கொண்டிருக்கும் திரியில் இந்த மாதிரி வாக்குவாதப் பதிவுகள் வேண்டாம் என்பது எங்கள் எண்ணம். உங்கள் ஒண்ணே காலணா தெரு குழாயடி சண்டையை அங்கேயே வைத்துக் கொள்ளுங்கள். அதைவிட சீதாவும், நவக்கிரகமும் எவ்வளவோ மேல். அதை இங்கே கொண்டுவந்து அசிங்கப்படுத்த வேண்டாம். உங்கள் அற்புத அறிவாற்றலை விசுவாமித்திரன் அறிவில்லாமல் அவசரப்பட்டு பொங்கி எழுந்து தவ ஆற்றலை இழந்து விடுவது போல இப்படிப்பட்ட பதிவுகள் இட்டு இழந்து விட வேண்டாம். தங்கள் அற்புத பங்களிப்புகளை மட்டும் தொடருங்கள். அதுவே அனைவரது விருப்பமும்.

தங்கள் மேல் உள்ள நல்ல எண்ணத்தினால்தான் சொல்கிறேன்.

புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில்

உங்கள் உயிர் நண்பன்




.

vasudevan31355
15th September 2014, 09:49 AM
இப்போது கூட ராஜேஷ்ஜி பதிவுகளை தாக்கியுள்ளீர்கள். உங்களுக்குப் பிடிக்கவில்லையென்றால் ஒதுங்குங்கள். எனக்குப் பிடித்திருக்கிறது.

Gopal.s
15th September 2014, 10:02 AM
வாசு,



என் வெளியீட்டு முறைகள் வெளிப்படையானவை. உள்ளொன்று வைத்து புறமொன்று பேச தெரியாது. நான் எதிரிகளிடம் விவாதிப்பேன். ஆனால் நண்பர்களிடம் மட்டுமே உரிமையாக சண்டையிடுவேன். விஸ்வாமித்திரன் , அப்படித்தான். தவ வலிமை இழந்து இழந்து மீண்டும் பெறுவது இயல்பானால் அதை தடுக்க முடியுமா?



புரிந்து கொண்டால் சரி. யாரையும் அவமான படுத்தும் பதிவுகளை நான் இட்டதில்லை.



எல்லோரையும் சார் வேண்டாம், கோபால் என்றே அழையுங்கள் என்று சொன்ன ஒரு சாதரணனாக சொன்ன கோபாலை உங்களுக்கு தெரியாதா? கிருஷ்ணா உட்பட அனைவருக்கும் விளக்குங்கள்,என்னை விட சிறந்த நண்பன் அவர்களுக்கு அமைய போவதில்லை என்று.



இயல்பு படியே ,உயர்வு நவிற்சி அணி எனக்கு கை வராத ஒன்று. வாழ்த்தும் போதும் ,உண்மையை உரைத்தே வாழ்த்துவேன்.

gkrishna
15th September 2014, 10:08 AM
நாம் அனைவருமே மிக நல்ல ஒரு ரசிக தன்மை உடையவர்கள். அதை தேவை அற்ற விவாதங்களை செய்து சக்தியை வீணடிக்க வேண்டாமே .
வரலாறுகள் திரிக்கபடுகின்றன. நல்ல பல சம்பவங்கள் மறக்க படுகின்றன . சாதனைகள் அமுக்கபடுகின்றன . நம் திரி மூலம் அதை வெளி கொண்டு வருவோமே . தயவு செய்து எல்லோரும் ஓர் இனம் ஓர் குலம் என்ற எண்ணத்தின் அடிப்படையில் இணைந்து பணி ஆற்றுவோமே
நாம் அனைவருமே கிட்டத்தட்ட ஒரே கால கட்டத்தை சேர்ந்தவர்கள். என்ற எண்ணத்தின் அடிப்படையில் தான் இந்த பகிர்வு

நேற்று புதிய பறவை திரைப்படம் பார்த்தேன். நம் நடிகர் திலக திறனாய்வு பேரவை நிகழ்ச்சியில். மிக அருமையாக கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் முன்னால் எந்தவித டெக்னாலஜி development இல்லாத நடிகர்களின் குரல்,வசனம்,முக பாவனை, மேற்கத்திய படங்களுக்கு சவால் விடும் இசை, எல்லாம் கலந்து ஒரு இன்ப மாலை வேளை

மிக சிறந்த காட்சி அமைப்புகள் அதுவும் படத்தின் தயாரிப்பாளர் அவரே கதையின் நாயகன் ஆனால் இறுதியில் அவரே எதிர் நாயகன் . அவரை காதலிக்கும் பெண் உண்மையை கண்டு பிடிக்க வந்த ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர், அவரது தந்தை என்று வேடமிட்டு வந்த காவல் துரையின் மேல் அதிகாரி, முன்னாள் மனைவியின் சித்தப்பா என்ற வேடமிட்டு வரும் இன்னொரு அதிகாரி,நண்பனாய் இருக்கும் உள்ளூர் போலீஸ் அதிகாரி, அவரது முன்னாள் மனைவியின் அண்ணன் இப்போது எதிரியாக மாறுவது. யோசித்து பாருங்கள்
என்ன ஒரு துணிச்சல் இருந்தால் தன நடிப்பு மீது இவ்வளவு நம்பிக்கை இருந்தால் இந்த வேடத்தை ஏற்று இருக்க வேண்டும். வேறு யாரால் இப்படி பட்ட வேடங்களை ஏற்று நடிக்க முடியும் .

gkrishna
15th September 2014, 10:19 AM
வாசு சார்
6 தினங்களாக உங்கள் இன்றைய ஸ்பெஷல் பதிவிற்காக காத்து கொண்டு இருக்கிறோம்

chinnakkannan
15th September 2014, 10:29 AM
ஹாய் குட்மார்னிங்க் ஆல்

என்னது வாசு வந்துட்டாரா.. வாங்கோ வாசு சார் வாங்கோ..:)

காலைல என்ன பாட்டுப் பாடலாம்..

சொர்க்கத்தின் திறப்பு விழா
இங்கு சொர்க்கத்தின் திறப்பு விழா
புது சோலைக்கு வசந்த விழா
பக்கத்தில் பருவ நிலா
இளமை தரும் இனிய பலா
பார்க்கட்டும் இன்ப உலா

ஓ.. ஸாரி.. வழக்கம்போல வேற பாட்ட கட் பேஸ்ட் பண்ணிட்டேன்..பாட நினச்சது..

ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தேவனென்று போற்றுவோம்
அன்னை இதயமாக அன்பு வடிவமாக வந்து வழிகாட்ட வேண்டும் என்று வணங்குவோம்


கடவுளிலே கருணை தனை காணலாம்
அந்த கருணையிலே கடவுளையும் காணலாம்
நல்ல மனசாட்சியே தேவன் அரசாட்சியாம்
அங்கு ஒருபோதும் மறையாது அவன் சாட்சியாம்

**

சரியா அப்புறம் வரட்டா.. இப்ப என்ன இன்னொரு பாட்டா.. சரி பாடிட்டுப் போறேன் :)

போய் வா .......நதியலையே ......
இவள் பூச்சூடும் நாள் பார்த்து வா
வா வா நதியலையே ..
ஏழை பூமிக்கு நீர் கொண்டு வா

*
கண்டிப்பா அப்புறம் வருவேன் உஷார் :)

Gopal.s
15th September 2014, 10:33 AM
அதே,அதே வாசு. உன்னுடைய காலை பதிவுகள் இல்லாமல் எங்களுக்கு போர் அடித்தது. (தினமும் இருந்தாலும் அதேதான். வாசுவினால் போர் தான்).உன்னால் அதிர்ச்சி அடைய காத்திருக்கிறோம். இன்ப அதிர்ச்சி நிறைய, துன்ப அதிர்ச்சி அவ்வப்போது, அதுசரி,என்ன செய்து கார்த்திக்கை மிரட்டினாய்?வரவே காணோம்?



போடு .உன்னுடைய sincere presentation ,யாராலும் நெருங்க முடியாத ஒன்று.உன்னுடைய ரசிக நண்பன் நான்.



நன்றி கிருஷ்ணா, நடந்ததை மறப்போம். நான் எதற்காக கோப பட்டேன் என்று நண்பர்கள் விளக்கியிருப்பார்களே?

gkrishna
15th September 2014, 10:39 AM
2009 ஆம் ஆண்டு ஒரு நண்பர் புதிய பறவை திரைபடத்தை முதன்முறையாக பார்கிறார் .அவரது பார்வையில்

ஒரே வரிதான் கதை,அதனை கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்கு முன் எப்படி எடுத்திருக்கிறார்கள் என்பதுதான் வியப்பு. சிவாஜி மலேசியாவில் தன்னுடைய இதயம் பலஹீனமான குடிகார மனைவியை (சவுகார் ஜானகி) அறைந்ததில் இறந்து விடுகிறார். அதனை மறந்து இந்தியாவில் வேறோரு பெண்ணை திருமணம் செய்ய நினைக்கையில் மீண்டும் சவுகார் ஜானகி அத்தான் என்றபடி வீட்டுக்குள் நுழைகிறார்.இந்த தருணத்தில் சிவாஜி தான் செய்த கொலையை மறைத்து, வந்திருப்பவர் தன் மனைவி சவுகார் ஜானகி அல்ல என்பதை நிரூபிக்கவேண்டும்.இதனை அவரின் முகத்தில் கொண்டு வருவதுதான் இந்தபடம்.படத்தின் இறுதியில்தான் தான் மனைவியை கொலை செய்ததை சொல்வார். அதுவரை நடப்பதுதான் கதை.

பல இடங்களில் சிவாஜி தன்னுடைய முத்திரையை பதித்து இருப்பார். பார்த்த ஞாபகம் இல்லையோ பாடலின் போது சிகரெட் புகையுடன் சௌகார் ஜானகியை சேர்த்து ரசிக்கும்போது அவரின் நடிப்பு.கப்பலில் சந்தித்த வி.கே.ராமசாமி அவரது மகள் சரோஜாதேவிக்கும் ஊட்டியில் தன் இல்லத்தில் இடம் கொடுத்திருப்பார்.அப்போது மிரட்டல் தொணியில் வரும் எம்.ஆர்.ராதாவின் போனை கேட்டு முடித்தவுடன் முகத்தில் குழப்பமும்/கோபத்தையும் ஒருங்கே கொண்டு வந்த அந்த நடிப்பு இந்த மனிதருக்கு மட்டுமே வரும் போல.

சரோஜாதேவியுடன் காதல் வயப்பட்டு நிச்சயம் செய்யும் ஒரு நன்னாளில், மனைவி என்று சொல்லிக்கொண்டு சௌகார் ஜானகி வருகிறார்,அவருடைய சித்தப்பாவாக எம்.ஆர்.ராதாவும் நுழைகிறார்.நிச்சயம் தடைபடுகிறது.இந்த சௌகார் ஜானகி தன் மனைவி அல்ல என்று நிரூபிக்கிறேன் அதுவரை வீட்டில் இருக்கசொல்கிறார்.அவர்களும் இருக்கிறார்கள்.

மனைவி என்று சொல்லிக்கொண்டு சௌகார் ஜானகி வீட்டுக்கு வந்தவுடன். அவர் தன் மனைவி இல்லை என்று நிரூபிக்க அவர் படும் சிரமங்களை சில இடங்களில் ஆணவத்தோடும், பல இடங்களில் எப்படி எதிர்கொள்வது என்ற குழப்பத்துடனும் தந்திருப்பார். சில இடங்களில் ஒரு சிலரால் சொல்லப்படும் மிகைப்படுத்தப்பட்ட நடிப்பும் உண்டு. அது அந்த படம் எடுக்கப்பட்ட கால கட்டத்தை யோசித்தீர்கள் ஆனால் நிச்சயம் அது மிகை நடிப்பு என்று கொள்ள முடியாது .சரோஜாதேவியும் அருமையாக நடித்திருப்பார்.நாகேஷ்,வி.கே.ராமசாமியின் பங்கு அவ்வளவு சுகம் என்று சொல்லமுடியாது ஒருவேளை 2009 ல் ரசிக்கமுடியவில்லையாகவும் இருக்கலாம்.எங்கே நிம்மதி பாட்டையும் நன்றாகவே படமாக்கியிருப்பார்கள்.உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்லவேண்டும் என்னை பாடச்சொன்னால் என்ன பாடத்தோன்றும் பாடலும் அருமை.

வந்திருப்பவர் தன் மனைவி அல்ல என்பதை நிரூபிக்க தன் போலிஸ் நண்பன், சிங்கப்பூர் நணபரை தொடர்பு கொள்ள முயற்சி,மனைவியின் அண்ணன் மூலம் இறுதி முயற்சி செய்கிறார்.கடைசியில் மனைவியின் அண்ணனும் தங்கச்சி,சித்தப்பா என்று சொன்னவுடன். எல்லா முயற்சியும் தோல்வியுற்ற நிலையில்,சிவாஜி தான் தான் அந்தக்கொலையை செய்தது என்பதை ஒரு நீண்ட விளக்கம் /பிளாஷ்பேக் மூலம் தருவார்.தந்து முடித்தவுடன் இப்போது தெரிந்ததா இவள் என் மனைவி அல்ல என்று கூறி சரோஜாதேவியை இப்போ என்னை நம்புகிறாயா எனக்கேட்கும் போது, சரோஜாதேவி இன்ஸ்பெக்டர் இவரை கைது செய்யுங்கள் என்று கூறூவார்.

எம்.ஆர்.ராதா, சரோஜாதேவி ஆகியோர் உண்மையைக்கண்டுபிடித்து சிவாஜியை கைது செய்ய வந்தவர் என்ற உண்மையை சொல்வார்.இதனைப்போல சில விஜயசாந்தி நடித்த டப்பிங் படம் மூலம் பார்த்துவிட்டதால் ஓரளவு யூகிக்கமுடிந்தது.ஆனாலும் அந்தக்காலத்தில் எடுத்த ஒரு திரில்லரை இப்போதும் ரசிக்கமுடிகிறது.

thanks to KJMK

rajraj
15th September 2014, 10:42 AM
கண்டிப்பா அப்புறம் வருவேன் உஷார் :)

chinnakkaNNan: If you return in the evening here are a few veNNila songs for you:

-veNNilaavum vaanum pole
-veNNilaa jothiyai veesudhe
-oho veNNilaave
-vaaraayo veNNilaave
-vandhu vandhu konjuvadhen veNNilaave
-vaana meedhil neendi Odum veNNilaave
-veNNilavin oLithanil veesum thendral
-aagaaya veedhiyil azhagaana veNNilaa

Now, you can write about veNNilaa songs! :) This is an assignment from the professor! :lol: Don't worry about grades..
I don't have teaching assistants any more tto grade assignments! I am retired ! :lol:

gkrishna
15th September 2014, 10:59 AM
ஜனவரி 29 2014 அன்று தினமலர் பத்திரிகையில் வந்த செய்தியும் அதற்கு வந்த பின்னூட்டமும்

1964ம் ஆண்டு வெளிவந்த படங்கள் இந்த ஆண்டு பொன்விழாவை கொண்டாடுகின்றன. அவற்றில் பல காவியங்கள் அடங்கும். யாரும் விழா எடுத்து பொன் விழாவைக் கொண்டாடப்போவதில்லை. நாம் கொஞ்சம் நினைத்துப் பார்த்துக் கொள்வோம்.

எம்.ஜி.ஆர்

1964ம் ஆண்டு எம்.ஜி.ஆர், சிவாஜி என்ற இரண்டு சூப்பர் ஸ்டார்களின் ஆண்டாகவே இருந்தது. இந்த ஆண்டு எம்.ஜி.ஆர் நடித்த 7 படங்கள் வெளிவந்தது. தெய்வத்தாய், என்கடமை, படகோட்டி, பணக்கார குடும்பம், தாயின் மடியில், தொழிலாளி, வேட்டைக்காரன். இதில் 5 படங்களில் சரோஜாதேவி எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்திருந்தார். எம்.ஜி.ஆர்-சரோஜாதேவி மேட் பார் ஈச் அதர் ஜோடியாக வலம் வந்த ஆண்டாக அமைந்தது. ஒரு படத்தில் சாவித்திரியும் ஒரு படத்தில் கே.ஆர்.விஜயாவும் ஜோடியாக நடித்திருந்தனர். இதில் தாயின் மடியில் தவிர மற்ற படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தவை.

சிவாஜி

சிவாஜி, கை கொடுத்த தெய்வம், நவராத்திரி, பச்சை விளக்கு, புதிய பறவை, ஆண்டவன் கட்டளை ஆகிய 5 படங்களில் நடித்திருந்தார். சாவித்ரி 3 படங்களிலும், எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்துவந்த சரோஜாதேவி புதிய பறவையிலும், தேவிகா ஒரு படத்திலும் ஜோடியாக நடித்தனர். புதிய பறவை சஸ்பென்ஸ் த்ரில்லர் வரிசையிலும், நவராத்திரி 9 வேடங்களில் நடித்த முதல் படம் என்ற வகையிலும் காலத்தால் அழிக்க முடியாத காவியங்களாகின.

கட்டுரையாளர் முரடன் முத்து மற்றும் கர்ணன் இரண்டையும் மறந்து விட்டார்

ஜெமினி-எஸ்.எஸ்.ஆர்

இவர்கள் இருவரையும் தவிர ஜெமினி கணேசன் வீரக்கனல், வாழ்க்கை வாழ்வதற்கே, பாசமும் நேசமும், ஆயிரம் ரூபாய் என 4 படங்களிலும், எஸ்.எஸ்.ராஜேந்திரன் அல்லி, பூம்புகார், உல்லாச பயணம், வழி பிறந்தது என 4 படங்களில் நடித்தார். பூம்புகர் காலத்தை வென்ற காவியமாக இப்போதும் திகழ்ந்து கொண்டிருக்கிறது.

இதுதவிர டி.எம்.சவுந்தர்ராஜன் நடித்த அருணகிரி நாதர், வீணை எஸ்.பாலச்சந்தர் இயக்கிய திகில் படமான பொம்மை, ஸ்ரீதரின் காதல் காவியமான காதலிக்க நேரமில்லை, நாகேஷ் நடித்த வெள்ளிவிழா படமான சர்வர் சுந்தரம், ஆகிய முக்கியமான படங்களும் இந்த ஆண்டு பொன்விழா கொண்டாடுகிறது.

விஸ்வநாதன்-ராமமூர்த்தி

1964ம் ஆண்டும் எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி ஆகியோரின் இசை ராஜாங்கம்தான் இருந்தது. வீரக்கனல், வாழ்க்கை வாழ்வதற்கே, சர்வர் சுந்தரம், புதிய பறவை, பணக்கார குடும்பம், பாசமும் நேசமும், ஆண்டவன் கட்டளை, தெய்வத்தாய், கை கொடுத்த தெய்வம், காதலிக்க நேரமில்லை, கருப்பு பணம், கலைகோவில், பச்சை விளக்கு, படகோட்டி, படங்களுக்கு இசை அமைத்திருந்தனர். கே.வி.மகாதேவன் 9 படங்களுக்கு இசை அமைத்திருந்தார்.

பொன்விழாவை கொண்டாடும் அனைத்து படங்களுக்கும் நமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம். - See more at:

http://cinema.dinamalar.com/cinema-news/16865/special-report/Golden-Jubliee-films-of-Tamil-Cinema---Special-Story.htm#sthash.sDgIID8m.dpuf

வாசகர் கருத்து (8)
jacob Martin - chennai,இந்தியா 21 பிப்,2014 - 21:46 Report Abuse
jacob Martin MGR இன் இரண்டு படங்கள் மட்டுமே வெற்றிப்படங்கள். மீதி 5 தோல்வி தழுவிய படங்கள். சிவாஜி அவர்களின் 7 படங்களில் முரடன் முத்து தவிர அனைத்துமே மிக பெரிய வெற்றி படங்கள். சிவாஜி பற்றிய செய்திகளை இருட்டடிப்பு செய்யாதீர்கள்
Rate this:
2 members
0 members
2 members
Share this comment
Reply
V.MURUGAN - PAPPANAPPATTU,இந்தியா 05 பிப்,2014 - 09:30 Report Abuse
V.MURUGAN மலரும் நினைவுகள்...மறக்கமுடியா நினைவுகள்...அசைபோட உதவிய தினமலருக்கு நன்றி..
Rate this:
1 members
1 members
78 members
Share this comment
Reply
Nagaraj - Doha,கத்தார் 30 ஜன,2014 - 14:10 Report Abuse
Nagaraj நெஞ்சை விட்டு என்றும் நீங்காதவை
Rate this:
0 members
0 members
7 members
Share this comment
Reply
K Chandrasekar - Chenai,இந்தியா 30 ஜன,2014 - 10:43 Report Abuse
K Chandrasekar நினைத்து பார்க்கவே பெருமையாக உள்ளது.
Rate this:
0 members
0 members
5 members
Share this comment
Reply
Swaminathan - atlanta,யூ.எஸ்.ஏ 30 ஜன,2014 - 09:48 Report Abuse
Swaminathan அந்தநாள் மீண்டும் வருமோ.
Rate this:
0 members
0 members
6 members
Share this comment
Reply
Sundar - Bangalore,இந்தியா 30 ஜன,2014 - 08:36 Report Abuse
Sundar காதலிக்க நேரமில்லை படத்திற்கு இணையான படம் இதுவரைக்கும் இல்லை.
Rate this:
0 members
0 members
15 members
Share this comment
Reply
அறிவாலயம் c / o போயஸ் - Chennai,இந்தியா 30 ஜன,2014 - 07:02 Report Abuse
அறிவாலயம் c / o போயஸ் காதலிக்க நேரமில்லை, சர்வர் சுந்தரம் இரண்டைத் தவிர எல்லாம் குப்பை ஒரே ஓவர் ஆக்டிங் செயற்கையான வசனங்கள் எப்படித்தான் ரசித்தனரோ?
Rate this:
13 members
1 members
7 members
Share this comment
Reply
naresh - Chennai ( Posted via: Dinamalar Android App ) 29 ஜன,2014 - 22:02 Report Abuse
naresh உள்ளம் கணிந்த வாழ்த்துக்கள்
Rate this:
0 members
0 members
8
- See more at: http://cinema.dinamalar.com/cinema-news/16865/special-report/Golden-Jubliee-films-of-Tamil-Cinema---Special-Story.htm#sthash.sDgIID8m.dpuf

gkrishna
15th September 2014, 11:07 AM
புதிய பறவை விகடன் பொக்கிஷம்
புதிய பறவை சேகர்-சந்தர்
சேகர்: மலேயாவிலிருந்து புறப் பட்டு, கப்பல் வழியாக இந்தியாவுக்கு வந்து, ஊட்டிக்குச் சென்று உல்லாசமாகப் பறக்கிறதல்லவா பறவை!
சந்தர்: ஆமாம்! கதைகூட ஆங்கிலத்திலிருந்து புறப்பட்டு, வங்காளத்துக்கு வந்து, அங்கிருந்து தமிழுக்கு வந்திருக்கிறது.
சேகர்: சஸ்பென்ஸை கடைசி வரை நன்றாகக் காப்பாற்றி இருக்கிறார்கள். தாதா மிராசி திறமையாக டைரக்ட் செய்திருக்கிறார்.
சந்தர்: யு ஆர் ரைட்! நடிப்பு, டைரக்ஷன், போட்டோகிராபி, கலர் எல்லாமே பிரமாதம்தான்.
சேகர்: சிவாஜியின் முத்திரை பல இடங்களில் சிறப்பாக விழுந் திருக்கிறது. சௌகார்ஜானகி இயற்கையாக நடித்திருக்கிறார். சரோஜாதேவி அழகாக வந்து போகிறார்.
சந்தர்: நாகேஷ் காமெடி?
சேகர்: கொஞ்சம் மிகையாகஇருந்தாலும், நகைச்சுவை குறையவில்லை.
சந்தர்: இரவுக் காட்சிகளெல்லாம் ரொம்பப் பிரமாதமா எடுத்திருக்காங்க, இல்லையா சேகர்?
சேகர்: ஆமாம்! வெறும் நிழலைக் காட்டி இரவு என்று சொல்லாமல், இங்கிலீஷ் படம் மாதிரி எடுத்திருக்காங்க. 'செட்' கண்ணைக் கவர்கிறது.. . .

gkrishna
15th September 2014, 12:03 PM
தமிழ் சினிமாவில், நட்சத்திர நடிகர்களின் இமேஜ் எனும் ஒளி வீசுவதற்கு உயிரைக் கொடுத்து நடிக்கும் சண்டை நடிகர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது? நடிகர் – நடிகைகளை அட்டைப்படங்களிலும், அனைத்து வகை செய்திகளிலும் திணித்து எழுதும் ஊடகங்கள் எவையும் இத்தகைய கலைஞர்களை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. மாறி வரும் தமிழ் சினிமாவில் சண்டை நடிகர்களின் உலகம் எப்படி இருக்கும்? மாஸ்டர் என்று அழைக்கப்படும் சண்டை இயக்குநர்களில் ஒருவரான மாஸ்டர் நித்தியானந்தனை, சென்னை-வடபழனியில் இருக்கும் தென்னிந்திய திரைப்பட சண்டைக் கலைஞர்கள் சங்க கட்டிடத்தில் சந்தித்து பேசினோம். சினிமா ஓடுவதற்கு மட்டுமல்ல சினிமா உலகைப் புரிந்து கொள்ளவும் சண்டை நடிகர்களின் வாழ்க்கை உதவும். படியுங்கள்

http://www.vinavu.com/wp-content/uploads/2014/07/nithyanandam-1.jpg

வினவு: ஒரு திரைப்படத்தில் சண்டை நடிகர்கள் அவசியமா?

நித்தியானந்தன்: சார்லி சாப்ளின் போன்ற ஒரு சிலரைத் தவிர வேறு யாரை எடுத்தாலும் ஆக்சன் கதாநாயகர்கள் தான் பிரபலம். புரூஸ் லீ, ஜெட்லீ, ஜாக்கி ஜான், சில்வர்ஸ்டன் ஸ்டோன், ஆர்னால்டு என எல்லோருமே இதற்காகத் தான் மதிக்கப்படுகிறார்கள்.

வினவு: ஆனால் மக்களைப் பொறுத்தவரை நீங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு நடிக்கிறீர்கள், உங்களது வாழ்க்கை நிலைமை என்ன? பலருக்கும் தெரியாதே?

நித்தியானந்தன்: மற்றவர்களைப் போலத்தான் நாங்களும். என்ன கூடுதலாக கொஞ்சம் சண்டையெல்லாம் கற்றுக்கொண்டு, கண்ணாடியை உடைக்க தைரியமா முன்னால் வந்து நிற்போம். வறுமை காரணமாக ஐந்தாயிரம், பத்தாயிரம் கிடைக்கும் என்பதற்காகத்தான் இந்த தொழிலுக்கு வருகிறோம். எங்களுக்கும் கொஞ்சம் பயம் இருக்கும். ஆனால் இப்போதைய சண்டைக் காட்சிகளில் உயிரெல்லாம் போயிடாது. முன்னாடி போயிருக்கிறது. அப்போது உண்மையான கண்ணாடியை உடைக்க வேண்டியிருக்கும். இப்போது காயம் மட்டும் படும். எனக்கு கூட கை கால் எல்லாம் காயம் பட்டு இருக்கிறது. (கைகளில் காயம்பட்ட தழும்புகளைக் காண்பிக்கிறார்.)

வினவு: எத்தனை வயதில் இந்த தொழிலுக்கு வந்தீர்கள்? உங்களை எப்படி தெரிவு செய்தார்கள்? அப்போது இந்தத் துறை எப்படி இருந்தது?

நித்தியானந்தன்: நான் 23 வயதில் வந்தேன். இப்போது 54 வயதாகிறது. எங்க அப்பா சண்டை நடிகரா இருந்தார். வணங்காமுடி, தங்கமலை ரகசியம், புதிய பறவை போன்ற படங்களில் சிவாஜிக்கு டூப் போட்டிருக்கிறார். ராயபுரத்தில் தான் வசித்து வந்தார். நானும் அங்குதான் பிறந்து வளர்ந்தேன். எஸ்.எஸ்.எல்.சி படித்தும் வேலை கிடைக்கவில்லை. அதான் இங்கு வந்து விட்டேன். அப்பா வேலை பார்த்த மாஸ்டரிடமே என்னை சேர்த்து விட்டார்.

வினவு: உங்களை ஏன் அதற்கு மேல் படிக்க வைக்க முடியவில்லை?

நித்தியானந்தன்: வருமானம் பத்தல சார். இந்திரா காந்தி ஆட்சியில சண்டைக் காட்சிகளில் ரத்தம் வருவது போல காட்சிகள் அமைக்க கூடாது என்று சட்டம் போட்டார்கள். அதை எதிர்த்து கடுமையான போராட்டம் எல்லாம் நடைபெற்றது. எம்.ஜி.ஆர் வந்து தான் ரத்தம் இல்லாமல் சண்டை எல்லாம் வைத்து படம் எடுத்து, எங்களை வாழ வைத்தார்.

car-3வினவு: உங்களது அப்பா காலத்தில் எவ்வளவு வருமானம் கிடைக்கும்?

நித்தியானந்தன்: ஒரு சண்டைக் காட்சிக்கு ரூ.200 முதல் 300 வரை கிடைக்கும். முதலில் மாஸ்டராக தொழிலை ஆரம்பித்த அவர் பிறகு சண்டை போடுபவராக மாறி விட்டார்.

வினவு: வேறு வேலைக்கு போக முடியாத காரணத்தால் தான் இதற்கு வந்து விட்டீர்களா?

நித்தியானந்தன்: வேலை வாய்ப்பு இல்லை. அடுத்து நான் பார்க்க கொஞ்சம் கலராக (மாநிறம்) கொஞ்சம் உயரமா இருந்ததால கதாநாயகர்களுக்கு டூப் போட முடியும்னு சொன்னாங்க. அதுனால எங்கப்பா என்னய சூப்பர் சுப்பயராயன் மாஸ்டர்ட்ட எடுத்துண்டு போயி விட்டாரு. பீச்ல தினமும் காலைல ஜிம்னாஸ்டிக் பயிற்சி எடுப்போம். அப்புறம் வாரிசு சண்டை நடிகர்களுக்கெல்லாம் யூனியன்ல ஒரு செலக்சன் வைப்பாங்க. அதுல நான் செலக்ட் ஆகிட்டேன்.

வினவு: அந்த செலக்சன்ல என்னென்ன தேர்வுகள் இருக்கும்?

நித்தியானந்தன்: ஜிம்னாஸ்டிக்ல சிங்கிள், டபுள், தொடர்ச்சியா விதவிதமா பல்டி அடித்து காட்டணும். இதுபோக உங்களுக்கு வேறு என்னென்ன தெரியுமோ அதை எல்லாம் செய்து காண்பிக்கணும். கத்தி, வாள், ஸ்கிப்பிங், அப்புறம் கராத்தே இந்த நான்கிலும் தேர்வுகள் நடைபெறும். ரொம்ப இல்லேன்னாலும் ஓரளவு திறமை காட்டினால் தேர்வு செய்து விடுவார்கள். இல்லையின்னா ‘இன்னும் கொஞ்சம் பிராக்டிஸ் பண்ணிட்டு வாப்பா’ எனச் சொல்லி கொஞ்சம் டைம் கொடுப்பாங்க. பிறகு தேர்வு வைத்து அவனையும் உள்ளே எடுத்துக் கொள்வார்கள். ஏனென்றால் வாரிசுக்கு கட்டாயம் ஒரு வாய்ப்பு தர வேண்டும் என்பது யூனியன் விதி. இங்கிருக்கும் பலருமே வாரிசுகள் தான்.

வெளியே இருந்து எடுக்க வேண்டுமானால் குறிப்பிட்ட கால அவகாசத்திற்கு பிறகுதான் எடுப்பார்கள். உடற்தகுதியுடன், அருகில் உள்ள காவல் நிலையத்தில் இருந்து வழக்கு இல்லேன்னு சான்றிதழ் தரணும். கிரிமினல் பின்னணி இருந்தால் சேர்க்க மாட்டாங்க. முன்னாடி சிவக்குமார் சார் மாதிரி உயரம் குறைவான கதாநாயகர்களும் இருந்த காரணத்தால் உயரம் குறைவாக இருந்தாலும் எடுத்தாங்க. இப்போது அது சாத்தியமில்லை.

வினவு: அப்போது யூனியனில் சேர்வதற்கு எவ்வளவு கட்டணம்?

fire-2நித்தியானந்தன்: நான் அப்போது வாரிசாக சேர்ந்ததால் கட்டணம் ரூ.500. மற்றவர்களுக்கு ரூ.5000. இது நடந்தது 1982-ல்.

வினவு: நீங்கள் சேர்ந்த பிறகு நடித்த முதல் படம் எது?

நித்தியானந்தன்: தமிழ், தெலுங்கு, இந்தியில் தயாரான ராம் லஷ்மண்தான் முதல் படம். தமிழில் கமல், தெலுங்கில் கிருஷ்ணமராஜ், இந்தியில் மிதுன் சக்ரவர்த்தி ஆகியோர் கதாநாயகர்கள். நான் கிருஷ்ணமராஜுக்கு டூப் போட்டேன். இரண்டு காட்சிகளில் வந்தேன். தாவிக் குதிப்பது, டைவ் அடிப்பது போன்றவற்றை செய்தேன்.

வினவு: அதற்கு உங்களுக்கு என்ன சம்பளம் தரப்பட்டது?

நித்தியானந்தன்: மூன்று நாளைக்கு ஆயிரம் ரூபாய் தந்தார்கள். தாஸ் சார் தான் எனக்கு மாஸ்டர். அப்புறம் நிறைய மொழிகளில் நிறைய பேருக்கு டூப் போட்டிருக்கிறேன். என்.டி.ஆர், கிருஷ்ணா, பிரேம் நசீர், ஷோபன் பாபு, ராஜ்குமாருன்னு பலருக்கு டூப் போட்டுள்ளேன். இந்தியில் தர்மேந்திரா, மிதுன் சக்ரவர்த்திக்கும் டூப்பா நடிச்சேன்.

ரஜினிக்கு தங்க மகன், நான் மகான் அல்ல, பிலாப்டா படங்களிலும், கமலஹாசனுக்கு கைதியின் டைரி, சட்டம் படங்களிலும் டூப் போட்டேன். அப்போது நான் உயரமாகவும், ஒல்லியாகவும் இருந்தேன்.

வினவு: நீங்கள் இதுவரை எத்தனை படம் நடித்திருப்பீர்கள்?

நித்தியானந்தன்: சரியாத் தெரியலை.

வினவு: ஒரு ஆயிரம் இருக்குமா?

நித்தியானந்தன்: அதுக்கும் கூட இருக்கும் சார். ஏன்னா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தின்னு எல்லா மொழியிலயும் பண்ணியிருக்கிறேன். கன்னடத்தில் அம்ரீஷ், பிரபாகரன், விஷ்ணுவர்தன், டாக்டர் ராஜ்குமார் என எல்லோருக்கும் டூப் போட்டிருக்கிறேன்.

வினவு: நீங்கள் எந்த சண்டையில் சிறப்பான முறையில் பெயர் பெற்றவர்?

நித்தியானந்தன்: ஜிம்னாஸ்டிக். அப்புறம் ஆபத்தான காட்சிகளில் ரிஸ்க் எடுத்து நடிப்பது. உதாரணமாக உயரமான இடத்தில் இருந்து குதிப்பது போன்றவற்றில்.

வினவு: அதிகபட்சம் எவ்வளவு உயரத்தில் இருந்து குதிப்பீர்கள்?

நித்தியானந்தன்: சீக்ஸ் பீட்சுன்னு ஒரு திரைப்படம் அதில் தண்ணீருக்கு மேலே இருந்து 80, 100 அடி உயரத்தில் இருந்து குதித்திருக்கிறேன். அது துறைமுகத்தில கப்பலுக்கும் மேலே இருக்குற டவர்ல இருந்து குதிச்ச சீன்.

http://www.vinavu.com/wp-content/uploads/2014/07/jump-4.jpg

வினவு: இதெற்கெல்லாம் பயிற்சி, ஒத்திகை எடுப்பீர்களா?

நித்தியானந்தன்: அதெல்லாம் கிடையாது சார். ஏற்கெனவே குதித்திருக்கிறோம் என்ற தைரியம்தான். தொழில்னு வந்த பிறகு அதெல்லாம் பார்க்க கூடாது. நானே இன்னொரு மாஸ்டருக்கு (ஆம்பூர் பாபு) பதிலாகத்தான் அப்படி குதிச்சேன்.

வினவு: தண்ணீர் ஆழம் குறைவான இடங்களில் குதிப்பதுண்டா? ஒகேனக்கால் போன்ற அருவிகளின் மேலே இருந்து குதித்திருக்கிறீர்களா?

நித்தியானந்தன்: அப்படியெல்லாம் குதிக்கவில்லை. எல்லாவற்றையும் ஒரு கணக்கில் கொண்டுதான் செய்வோம். அருவிக்கு மேலே குதித்ததில்லை. ஆனா ஒகேனக்கலில் மோகன்லாலுக்கு பதிலாக வெள்ளத்தில் அடித்துச் செல்வது போல டூப்பா நடித்திருக்கிறேன்.

வினவு: ஜிம்னாஸ்டிக், ஆபத்தான சண்டை காட்சியில் பெயர்பெற்றுள்ள நீங்கள் இதில் எத்தனை முறை காயமடைந்துள்ளீர்கள். அதில் குறிப்பிடும்படியான சம்பவம் எதாவது இருக்கிறதா?

நித்தியானந்தன்: நிறைய வாட்டி அடிபட்டிருக்கிறேன். சில முறை உயிர் போகும் நிலைக்கு சென்று திரும்பியிருக்கிறேன். ஒரு மலையாள படத்துக்கு டூப் போட்டிருந்தேன். இப்போ சீப்ராஸ் பில்டிங்னு இருக்கே அது ஒரு காலத்துல சாரதா ஸ்டுடியோஸ்னு இருந்தது. அங்க இரண்டு மாடி உயரத்தில் இருந்து எதிரே இன்னொரு கட்டிடத்திற்கு செல்ல சாரத்தை போல ஒரு கயிறைப் பிடித்துக் கொண்டு வழுக்கிக் கொண்டு கீழிறங்க வேண்டும். வேற பாதுகாப்பு வசதியெல்லாம் இல்லை. பாதி வழியில் கயிறு அறுந்து, தரையில் விழுந்து விட்டேன். நினைவு தப்பி வாயில் ரத்தம் வர ஆரம்பித்து விட்டது. விஜயா மருத்துவமனையில் சேர்த்து இப்போது மியாட் மருத்துவமனையில் இருக்கும் மோகன்தாஸ் டாக்டர்தான் எனக்கு ஆபரேஷன் செய்து காப்பாற்றினார்.

http://www.vinavu.com/wp-content/uploads/2014/07/niagara-falls-walk.jpg
நயகரா
நயகரா அருவிக்கு குறுக்கே நடக்கும் சாகச வீரர்

வினவு: இதெற்கெல்லாம் முன்னரே பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து விட்டு படப்பிடிப்பு நடத்த மாட்டார்களா?

நித்தியானந்தன்: அதெல்லாம் செஞ்சாலும் அதையும் மீறி நமக்கு அடிபட்டு விட்டது. கீழே பெட் எல்லாம் போட்டிருந்தார்கள் (ஒரு அடி உயரத்தில் கோணிப்பையில் வைக்கோல் உள்ளே வைத்து சுற்றப்பட்டிருப்பதைத்தான் அவர் பெட் என்கிறார்).

வினவு: எவ்வளவு காலம் அதன்பிறகு ஓய்வெடுத்தீர்கள்? அந்தக் காலங்களில் சம்பந்தப்பட்ட படத் தயாரிப்பாளர் எதாவது உதவி செய்தாரா?

நித்தியானந்தன்: அதெல்லாம் பண்ண மாட்டார்கள். மருத்துவ முதல் உதவி செய்வார்கள். மருத்துவ செலவை கொஞ்சம் ஏற்றுக் கொள்வார்கள். அதன் பிறகெல்லாம் ஒன்றும் கிடைக்காது.

வினவு: சண்டை நடிகர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டமெல்லாம் கிடையாதா?

நித்தியானந்தன்: முன்னாடி இருந்தது. இப்ப கிடையாது. சொந்த பொறுப்பில் தான் அவங்கவங்கதான் பார்த்துக்கொள்ள வேண்டும்.

வினவு: கோடிக்கணக்கில் செலவழித்து சினிமா எடுக்கும் தயாரிப்பாளருக்கு உங்களது ரிஸ்க் சண்டை மட்டும் தேவைப்படுகிறது. ஆனால் உதவாமல் போகிறார்கள், ஏன்?

நித்தியானந்தன்: இந்த தொழில் ரிஸ்க்குனு தெரிந்துதானே வருகிறோம். அதனால் உதவிய எதிர்பார்க்க முடியாது. கண்ணாடியை உடைப்பது போன்ற ஆபத்துகளுக்கு தக்க ஊதியத்தை தந்து விடுகிறார்கள். வாழ்நாள் முழுதும் உதவி பண்ண முடியாது இல்லையா. ஒரு விபத்து நடக்கிறது, அதில் சில சமயம் உயிர் பிழைத்திருப்போம், சில சமயம் ரொம்ப பிரச்சனையாகும். அது போலத்தான் இதுவும்.

வினவு: ஆனால் உங்களது ரிஸ்க்குகளுக்குத்தானே மக்கள் கைதட்டுகிறார்கள், விசிலடிக்கிறார்கள். அதை வைத்து சம்பாதிக்கும் தயாரிப்பாளர் உங்களுக்கு உதவக் கூடாதா?

நித்தியானந்தன்: சினிமாவில் விபத்து பல இடங்களிலும் நடக்கலாம். நடனமாடும் போது கூட நடக்கலாம். ஆனா சண்டைக் காட்சியில் வாய்ப்பு அதிகம். அதுதானே சண்டைக்காட்சி?

http://www.vinavu.com/wp-content/uploads/2014/07/motor-bike-jump.jpg

வினவு: ஜிம்னாஸ்டிக் பண்ணும்போது என்ன விதமான விபத்துக்கள் நடக்கும்?

நித்தியானந்தன்: ஜிம்னாஸ்டிக்கில் சம்மர் ஷாட் பண்ணும்போது நம்மோட ஆள் ஒருத்தர் இறந்தே விட்டார். “நாளை உனது நாள்” (விஜயகாந்த், நளினி நடித்த படம், இயக்கம் ஏ.ஜெகநாதன், தயாரிப்பு வாசன் பிரதர்ஸ், ஆண்டு 1984.) படத்தில் பெட் போட்டுதான் ஸ்பிரிங் போர்டில் சம்மர் ஷாட் அடித்தார். முதல் சம்மர் அடித்து இரண்டாவது அடிக்கையில் பாதியில் தலை தரையில் மோதி விட்டது. தண்டுவடத்தில் முறிவு. மறுநாள் இறந்துவிட்டார். அவர் பெயர் ரவி, வயது 28, தண்டையார் பேட்டையை சேர்ந்தவர். சமீபத்தில் ஷாகுல் என்பவர் தெலுங்கு படத்துல நடிக்கும் போது இதே போல் விபத்து நடந்து இறந்து விட்டார். சிட்டிசன் படத்தில் அஜீத்துக்கெல்லாம் அவர்தான் டூப் போட்டுள்ளார்.

வினவு: இப்படி அடிபடுபவர்களுக்கு நிவாரணத் தொகை எதாவது கிடைக்குமா?

நித்தியானந்தன்: யூனியனில் எல்லோரும் ஆளாளுக்கு கொஞ்சம் பணம் போட்டு குடும்பத்தினருக்கு கொடுப்போம். படத்தில் நடித்த கதாநாயகர்களும், தயாரிப்பாளர்களும் மனது வைத்தால் கொஞ்சம் பணம் கிடைக்கும். லோகு என்பவர் வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் டூப் போட்டு நடிக்கையில் அடிபட்டு விட்டது. கமல் சார் ஒரு லட்சம் ரூபாய் அவருக்கு கொடுத்தார். அதுபோல அவர்களாக விரும்பினால் எதாவது நடக்கும்.

வினவு: ஜிம்னாஸ்டிக்கிலேயே இவ்வளவு ஆபத்துக்கள் இருக்கிறதா?

நித்தியானந்தன்: ஜிம்னாஸ்டிக்கிலேயே ஒரு ஸ்டூல் தற்செயலாக நழுவி விட்டால் தலைகீழாக விழ வேண்டியதுதான். பயிற்சி எடுத்திருந்தாலும் இப்படி நடக்கும். விபத்துக்களை ஒன்றும் பண்ண முடியாது. எல்லாம் கடவுள் விட்ட வழிதான்.

http://www.vinavu.com/wp-content/uploads/2014/07/nithyanandam-2.jpg

வினவு: சண்டை காட்சிகளுக்கு முன் எதாவது பிரத்யேகமான உணவு கட்டுப்பாடு, வேறு தயாரிப்புகள் உண்டா?

நித்தியானந்தன்: அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது. மத்தவங்களுக்கு கம்பெனி கொடுக்கும் அதே உணவைத்தான் சாப்பிடுவோம். ஆபத்து நிறைந்த காட்சிகளை சாப்பிடப் போவதற்கு முன்னரே எடுத்து விடும்படி நாங்கள் இயக்குநரை கேட்டுக் கொள்வோம். அவர்களும் பெரும்பாலும் ஒத்துக்கொள்வார்கள். சாப்பிட்டு விட்டு உடனே செய்தால் ஒரு மாதிரியாக இருக்கும். இல்லாவிடில் மாலை நேரத்தில், சாப்பிட்டு சில மணி நேரம் கழிந்த பிறகு காட்சிகளை எடுக்குமாறு கேட்டுக் கொள்வோம். மற்றபடி அங்கு தரும் இட்லி, பொங்கல், கறிக்குழம்பு எல்லாவற்றையும் சாப்பிடுவோம்.

வினவு: அப்படியானால் உடலை சக்தியுடன் பராமரிப்பதற்கான சிறப்பு உணவுக்கு என்ன செய்வீர்கள்?

நித்தியானந்தன்: அதை வீட்டில் சாப்பிட்டுக் கொள்வோம். பழங்கள், முட்டை போன்றவற்றை எடுத்துக் கொள்வோம். ஆளாளுக்கு இது வேறுபடும். சிலர் ஒன்றுமே எடுத்துக் கொள்ள மாட்டார்கள். சிலர் பழங்களுடன் பயிறு வகைகள், சத்தான கீரைகள், சூப் போன்றவற்றை எடுத்துக் கொள்வார்கள். எல்லோருக்கும் பொதுவான டயட் என்றெல்லாம் கிடையாது.

வினவு: – ஜிம்னாஸ்டிக், ஆபத்து நிறைந்த ஷாட் போக என்னென்ன சண்டை வகைகள் உள்ளன?

நித்தியானந்தன்: வாள், கத்தி சண்டை, கொம்பு சண்டை, களறி சண்டை, குங்பூ, கராத்தே, குத்துச் சண்டைன்னு நிறைய இருக்கிறது.

வினவு: இப்போதைய மார்க்கெட்டில் சண்டை ட்ரெண்ட் என்ன?

நித்தியானந்தன்: இப்போது எதார்த்தமான சண்டைகளை விரும்புகிறார்கள். அதாவது இரண்டு பேர் சண்டை போட்டால் ஒருத்தரை ஒருத்தர் பிடித்து தள்ளுவது, அடிப்பது போன்றவை. எதார்த்தமான இத்தகைய சண்டைதான் இப்போது ட்ரெண்ட்.

வினவு: பழைய கத்திச் சண்டை, சிலம்பமெல்லாம் இப்போது கிடையாதா?

நித்தியானந்தன்: அதெல்லாம் கிராம சினிமா சப்ஜெக்ட் என்றால் கட்டாயம் கம்பு சண்டை இருக்கும். இதற்கெல்லாம் தனித்தனி ஸ்பெஷலிஸ்டுகள் இருக்காங்க. கம்புச் சண்டை, கத்திச் சண்டை போன்றவற்றுக்கு எங்களுக்குள்ளேயே தனித்தனி சங்கங்கள் உள்ளன.

வினவு: கண்ணாடியை உடைப்பதில் இப்போது ஆபத்தில்லை, முன்னர் இருந்ததாக சொல்லியிருக்கிறீர்கள். அதை விளக்குங்களேன்.

நித்தியானந்தன்: முன்னாடி ஒரிஜினல் கண்ணாடியை உடைப்பார்கள். அதில் ஸ்பெஷலிஸ்டு நமச்சி வாத்தியார். அப்புறம் டி.எஸ். மணி, கண்ணாடி வரதன்னு பல கில்லாடிங்க இருந்தனர். அப்போ உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் அளவுக்கு காயம் ஏற்படும். இப்போது வரும் சில்வர் கிளாஸ் சுக்குநூறாக உடைந்து விடும் என்பதால் ரத்த காயம் இருக்கலாமே தவிர உயிருக்கெல்லாம் ஆபத்து இல்லை. இது கடந்த 15 ஆண்டுகளாக அறிமுகமாகியிருக்கும் புதிய டெக்னாலஜி. அதாவது கார், பஸ் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் கண்ணாடி இது.

http://www.vinavu.com/wp-content/uploads/2014/07/glass-1.jpg

வினவு: கண்ணாடி, மேசைகளை உடைப்பது எல்லாம் எப்படி எடுக்கிறீர்கள்?

நித்தியானந்தன்: கண்ணாடியில் சில புள்ளிகளில் மறைவாக பட்டாசு மருந்துகளை வைத்திருப்பார்கள். கண்ணாடியின் எதாவது ஒரு புள்ளியில் அடித்தால் அனைத்து பட்டாசுகளும் வெடிக்கும் வகையில் செட்டப் செய்யப்பட்டிருக்கும். சில சமயங்களில் சுத்தியலை வைத்தும் உடைப்போம். கேமராவில் அதை மறைத்து விடுவார்கள். பட்டாசுகள் வெடிப்பதும், நாங்கள் உடைக்க கண்ணாடியில் கை வைக்கும் நேரமும் கரெக்டா இருந்தால் சரியா உடையும். நீங்கள் கவனித்து பார்த்தால் அப்படி உடையும் போது புகை வருவது தெரியும். அது பட்டாசுகள் வெடிப்பதால் ஏற்படுவது. சுவர்களை மோதி உடைக்கும் இடத்தில் உண்மையான செங்கற்களுடன் நாங்கள் மோதி உடைக்கும் இடங்களில் மாத்திரம் தெர்மோகோல் வைத்து டம்மியான செங்கற்களை வைத்திருப்பார்கள்.

http://www.vinavu.com/wp-content/uploads/2014/07/car-4.jpg

வினவு: கார், பைக்குளில் பறந்து எகிறிக் குதிப்பது பற்றி கூறுங்களேன்.

நித்தியானந்தன்: அதற்கென ஜம்பர்கள் தனியாக இருக்கிறார்கள். இவர்களுக்கு தனியாக பயிற்சியெல்லாம் கிடையாது. வண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். வேகத்தடைகளில் வீலிங் பண்ணி ஜம்ப் பண்ண பயிற்சி எடுப்பாங்க. மற்றபடி தைரியம்தான் வேணும். முன்னாடி அட்டைப் பெட்டிகளை வைத்து மோடி எடுக்கும் பயிற்சி கிடையாது. இப்போது எடுக்கிறார்கள். இதுபோக தண்ணீரில் குதிக்கும் கார், பைக் காட்சிகளை பயிற்சி செய்து பார்ப்பார்கள்.

கார் ஜம்பிங்கைப் பொறுத்தவரை, முதலில் காரை பக்காவாக வெல்டிங் எல்லாம் செய்து விட்டு, அதற்குள்ளே ஒரு கூண்டு போல செய்து டிரைவர் பாதுகாப்பாக இருக்குமாறு பார்த்துக் கொள்வோம். டமால், டுமால் என தலைகீழாக பல்டி அடித்த பிறகு பார்த்தால் கார் வெளியே அப்பளமாக நொறுங்கியிருக்கும். ஆனால் உள்ளே இருந்த ஆளுக்கு ஒரு சிறு பிசிறு கூட காயமோ பாதிப்போ இருக்காது. ஏனெனில் அவர்தான் கூண்டுக்குள் இருக்கிறாரே.

வினவு: விபத்துக்கள் ஏதும் நடந்து விட்டால் பாதுகாக்க, மருத்துவர், ஆம்புலன்சு போன்ற வசதிகள் படப்பிடிப்பு தளத்தில் இருக்குமா?

நித்தியானந்தன்: வைத்திருக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான இடங்களில் அதெல்லாம் கடைபிடிக்க மாட்டாங்க. ஆனால் விபத்தெல்லாம் நடக்காது. கூண்டு நல்ல பலமாக இருக்கும். அப்புறம் வண்டியில் தேவையான அளவுக்கு மட்டும் தான் பெட்ரோல் வைத்திருப்போம். இல்லாவிடில் தீ விபத்து ஏற்பட்டு விடும் இல்லையா. அதனால் பயப்பட தேவையில்லை. முதலுதவியும் பெரிதாக தேவைப்படுவதில்லை.

வினவு: இங்கே சென்னையில் ஜம்பர்கள் எத்தனை பேர் இருப்பார்கள்?

நித்தியானந்தன்: ஒரு இருபது பேர் வரை இருப்பார்கள். வேறு மாநிலங்களில் ஒரு சிலர் மட்டும் தான் இருக்கிறார்கள். மும்பையில ரேசர் பைக் போன்ற ஆபத்தில்லாத உயர் ரக பைக்கில் மட்டும்தான் ஜம்ப் செய்வார்கள். நம்மவர்கள் மட்டும்தான் ரிஸ்க்கெடுத்து எல்லா வகை பைக்குகளிலும் ஜம்ப் பண்ணக் கூடியவர்கள்.

வினவு: – நீங்களும் அந்த ரேசர் பைக்கை வாங்க வேண்டியதுதானே?

நித்தியானந்தன்: – இல்ல. அது விலை அதிகம். நம்ம ஆளுங்க சாதா பைக்குலயே அதையெல்லாம் பண்றாங்க. நம்மளயும் சாதா பைக்ல ஜம்ப பண்ண இப்பவும் இந்தி படங்களுக்கு கூப்பிடத்தான் செய்றாங்க. மலையாளம், இந்தி, கன்னடம், தெலுங்கு என நாம்தான் முன்னர் இங்கிருந்து சென்று வந்தோம். இப்போது அவர்களும் (கேரளா தவிர) கற்றுக் கொண்டு விட்டார்கள். இப்போ நம்ம மாஸ்டர்கள் அங்க போனால் சில ஸ்பெஷலான ஆட்கள் வேண்டும் என்பதற்காக இங்கிருந்து ஆட்களை அழைத்துக் கொண்டு போவார்கள்.

வினவு: ஜம்பர்களை எப்படி சேர்க்கின்றீர்கள்? அவர்கள் எந்த சமூகப் பின்னணியில் இருந்து வருகிறார்கள்?

http://www.vinavu.com/wp-content/uploads/2014/07/Tony-Jaa.jpg
Tony Jaa டோனி ஜா

நித்தியானந்தன்: ஜம்ப் அடிக்கத் தெரிகிறதா என்று ஓரளவு பார்த்து விட்டு சேர்த்துக் கொள்வோம். அவர்களுக்கென தனியாக இங்கு சங்கம் உண்டு. வெளியில் இருந்து வருபவர்கள், ஒர்க் ஷாப்பில் மெக்கானிக்காக இருப்பவர்களையும் வண்டி ஓட்டுவதைப் பார்த்து சேர்த்துக் கொள்ளலாமே என்று காலப் போக்கில் சேர்த்துக் கொள்கிறோம். முதலில் சினிமாவில் இவர்களுக்கு காட்சிகள் குறைவு. இப்போது தேவை அதிகரித்து விட்டதால் தனியாக சங்கம் அமைக்கப்பட்டு விட்டது.

வினவு: வயது இதற்கு ஒரு தடையா?

நித்தியானந்தன்: அப்படி சொல்ல முடியாது. நாற்பது வயதிலேயே ஓய்வு பெற்று விடுபவர்களும் உண்டு. ஐம்பத்தைந்து வயதில் ஜம்ப் அடிப்பவர்களும் இருக்கிறார்கள். இப்போது இருப்பவர்களில் சீனியர் கேப்டன் குமார், 59 வயசிலும் ஜம்ப் அடிக்கிறார். அவருக்கு இதுதான் தொழில் என்றாலும் இப்போது பகுதி நேரமாக கப்பல்களில் ஒட்டியிருக்கும் கிளிஞ்சல்கள், பாசிகளை அகற்றுவது, மூழ்கிய படகுகளை மீட்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். மீனவ சமூகத்தை சேர்ந்தவர்.

வினவு: சண்டை நடிகர்கள், ஜம்பர்களுக்கு சம்பளம் எவ்வளவு?

நித்தியானந்தன்: – படத்துக்கு படம், மாஸ்டருக்கு மாஸ்டர் அது வேறுபடும். ஆட்டோவில் மீட்டர் போட்டு ஓட்டச் சொன்னாலும் மேலே போட்டுக் கேட்கலையா அது மாதிரிதான் இங்கும். குறைந்தபட்சம் என ஒரு தொகையை யூனியன் முடிவு செய்திருந்தாலும் அதனை விட அதிகமாக பேசி முடிவு செய்வதும் உண்டு. லோ பட்ஜெட்டுன்னா அது கிடைக்காது.

மாஸ்டர்களுக்கு இருபதாயிரம் ரூபாயிலிருந்து ஒரு லட்சம் வரை சம்பளம் கிடைக்கும். காட்சி ஒன்றுக்கு பத்தாயிரம் குறைந்தபட்சம் என்று ஊதியம் யூனியனால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு குறையக் கூடாது. அதிகமாக எவ்வளவு வேண்டுமானாலும் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். எந்திரன் படத்திற்கெல்லாம் ஒன்றரை கோடி வரை ஒப்பந்தமாச்சுன்னு நினைக்கிறேன்.

சண்டை போடுபவர்களுக்கு காட்சி ஒன்றுக்கு 4 ஆயிரம் ரூபாய் சம்பளம். இந்தியில் ஆறாயிரம் ரூபாய். ஜம்பருக்கு மூவாயிரம் ரூபாய். இது மூன்று நாட்களுக்கானது. அதற்கு மேல் காட்சியை எடுக்க ஆகும் நாட்களுக்கு பாதி சம்பளம் தரப்படும்.

வினவு: ஒருவருக்கு மாதமொன்றுக்கு எத்தனை நாட்கள் வேலை கிடைக்கும்?

நித்தியானந்தன்: யூனியனில் இருக்கும் 600 உறுப்பினர்களுக்கு இருநூறு பேருக்கு தினசரி வேலை கட்டாயம் இருக்கிறது. மற்றவர்களுக்கு சொல்ல முடியாதுதான். உயரம், எடை, கட்டுமஸ்தான தோற்றம், திறமைகள் இருந்தால் நிறைய வேலை கிடைக்கும்.

வினவு: சராசரியாக ஒருவருக்கு மாதம் எவ்வளவு கிடைக்கும்?

நித்தியானந்தன்: – அதை துல்லியமாக சொல்ல முடியாது. சில சமயம் சூட்டிங் இருக்கும், சில சமயம் இருக்காது. சில நேரம் சூட்டிங் இருந்தாலும் சண்டை போடுபவருக்கு ஓய்வு தேவைப்படும். ஆனாலும் ஓரளவு நன்றாக வேலை கிடைப்பவர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் முதல் பதினைந்தாயிரம் வரை கிடைக்கும். எப்போதும் பிசியாக இருப்பவர்களுக்கு இருபதாயிரம் வரை கூட கிடைக்கும்.

வினவு: வெளியே மற்ற துறைகளில் உள்ள சம்பளத்தை ஒப்பிடும் போது இது குறைவாக இல்லையா?

நித்தியானந்தன்: அதெல்லாம் ஒப்பிடவே கூடாது. இரண்டாவது வேலை குறைந்து விட்டது. சூட்டிங்கும் பெரிதாக நடக்கவில்லை.

வினவு: நீங்கள் அப்படியொன்றும் ஆகா ஓகோவென சம்பாதித்து விட்டது போல தெரியவில்லையே?

நித்தியானந்தன்: அப்படி சொல்ல முடியாது சார். நானெல்லாம் சம்பாதித்ததை மிச்சம் பண்ணியிருந்தால் வசதியாக மாறியிருக்கலாம். தினமும் இரண்டு படம் சூட்டிங் போவேன். ஆனால் அன்றன்று சம்பாதித்த பணத்தை ஆடம்பரமாகவும், ஜாலியாகவும் செலவழித்தே தீர்த்து விட்டோம். அதனால் தான் முன்னேற முடியாமல் போய் விட்டது. அப்போதும் கூட எல்லோருக்குமே தண்ணி பழக்கம் இருந்தது என்று சொல்ல மாட்டேன். ஆனால் இப்போது வரும் பசங்க மிகவும் உசாராக இருக்கிறார்கள். மாறி விட்டார்கள்.

வினவு: மாஸ்டர்கள் படத்துல வேலை செய்யும் நிலைமை பற்றி சொல்லுங்களேன்.

நித்தியானந்தன்: குறைந்தபட்சம் சண்டை ஒன்றுக்கு ரூபாய் இருபதாயிரம் வரை வாங்க வேண்டும் என்பது விதி. சண்டை ஐந்து நாட்கள் வரை கூட எடுக்கப்படும். படம் ஒன்றுக்கு முழுக்கவும் ஒரே மாஸ்டர்தான் இருப்பார். படத்தின் பிரமாண்டம், சந்தையின் வீச்சைப் பொறுத்து இந்தத் தொகை மாறுபடக் கூடும். மாஸ்டருக்கு சண்டை காட்சியுடன் கூடவே படத்தில் லொகேஷன் பார்ப்பது, நிர்வாகம் போன்ற சில வேலைகளும் உண்டு. நமது சென்னையில் 60 மாஸ்டர்கள் வரை இருக்கின்றனர்.

வினவு: நீங்கள் எப்போதிருந்து மாஸ்டர் ஆனீர்கள்?

நித்தியானந்தன்: 2008ல் இருந்து மாஸ்டர் ஆனேன். இதுவரை 30 படங்கள் பண்ணியிருக்கிறேன்.

வினவு: பிற மாஸ்டர்கள் பிசியாக இருக்கையில் வேலையை எடுத்து உங்களிடம் தரும் க்ளாஸ் ஒர்க் (சப் காண்ட்ராக்ட் அல்லது உள் ஒப்பந்தம்) முறை உண்டா? நீங்கள் அப்படி பண்ணியிருக்கிறீர்களா?

நித்தியானந்தன்: தருவார்கள். பண்ணியிருக்கிறேன். அப்படி தருகையில் அவர்களது பெயருக்கு இணையாக டைட்டில் கார்டில் கீழே எனது பெயரும் இருக்கும்.

வினவு: தமிழகம் போலவே பிற மாநிலங்களிலும் மாஸ்டர்கள் இருக்கிறார்களா?

நித்தியானந்தன்: ஆந்திராவில் 20 பேர், கர்நாடகாவில் பதினைந்து பேர், ஒரிசாவில், பாம்பேயில் சிலர் என இருக்கின்றனர்.

வினவு: கேரளாவில் இல்லையா?

நித்தியானந்தன்: கேரளாவுக்கு இங்கிருந்துதான் சண்டை நடிகர்கள் போகிறார்கள். காரணம் அங்கு மிகவும் ஈகோ பார்ப்பார்கள். கதாநாயகனிடம் செருப்பால் அடி வாங்க வேண்டுமென்றால் ‘ஐயோ, அதை ஏன் நான் வாங்க வேண்டும்’ என்று பதிலுக்கு எகிறுவார்கள். எனவே அதற்கெல்லாம் ஆட்கள் இங்கிருந்துதான் செல்கிறார்கள்.

வினவு: – சண்டைக் காட்சிகளுக்கு எந்தெந்த மாவட்டங்களில் இருந்து அதிகம் வருகிறார்கள். சென்னை மீனவர்கள் அதிகமாக இத்துறைக்கு வரக் காரணம் என்ன?

நித்தியானந்தன்: தூத்துக்குடி, திருநெல்வேலி, ஆந்திரா, கேரளாவில் இருந்தும் வருகிறார்கள். எனினும் மொத்தமுள்ளவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் சென்னையை சேர்ந்தவர்கள்தான். அதிலும் பெரும்பான்மை மீனவர்கள்தான். காரணம் அவர்கள் தைரியமானவர்கள் என்பதோடு, கடற்கரையில் நிறைய நாட்கள் தொடர்ச்சியாக பயிற்சி எடுக்க முடிவது தான்.

வினவு: – மீனவர் தவிர வேறு என்ன சாதியினர் வருகிறார்கள்? பெண் சண்டை நடிகர்கள் உண்டா?

நித்தியானந்தன்: அப்படி குறிப்பிட்டு சொல்ல முடியாது. எல்லா சாதியில் இருந்தும் இத்தொழிலுக்கு வருகிறார்கள். சௌராஷ்டிரா சாதியினரும் உண்டு. முன்னாடிதான் பிராமின்ஸ் அரசு வேலை, ஐ.ஏ.எஸ்ன்னு போனார்கள். ஜிம்னாஸ்டிக், சண்டை திறமைகளை வளர்த்துக் கொண்டால் யார் வேண்டுமானாலும் வரலாம். பிராமின்சில் இருந்து கண்ணன் என்று ஒரு பையன் இருக்கிறான். எனினும் சிறுபான்மையாகத்தான் இவர்கள் இருக்கின்றனர். முஸ்லீம்கள் சிலரும் உண்டு. பெண்கள் கிடையாது.

வினவு: பெண்கள் சண்டை நடிகர்களாக முன் வருவதில்லையா?

நித்தியானந்தன்: அப்படியெல்லாம் இல்லை. பெண்களுக்கு அதிகம் வாய்ப்பில்லை. தேவைப்பட்டா ஆண்களே அந்த வேடத்தை டூப் போட்டு நடித்து விடுவோம். அந்தக் காலத்தில் வந்த லேடி ஜேம்ஸ்பாண்ட் படங்களில் எல்லாம் அப்படித்தான். மார்பகங்களை மாத்திரம் வைத்து, ஸ்டிரெச் போட்டு பேண்டுடன் நடித்தால் வித்தியாசமாக தெரியாது. ஆங்கில படத்தில் கூட இதுதான் நிலைமை. அவர்களை விட ஆண்களுக்கு தான் தைரியம் ஜாஸ்தி.

வினவு: நீங்கள் சண்டைக் காட்சிகளில் நடிப்பதை உங்களது வீடுகளில் இருக்கும் பெண்கள் எப்படிப் பார்க்கிறார்கள்?

நித்தியானந்தன்: எப்போதும் ஆபத்தில் இருப்பதால் பயத்துடன் தான் இருப்பார்கள். ஆனால் போக கூடாது என்றெல்லாம் தடுக்க மாட்டார்கள். இத்தனை நாள் இதை வைத்து தானே குடும்பம் நடத்தி இருக்கிறார்கள்.

வினவு: உங்கள் அப்பாவைப் பார்த்து நீங்கள் சண்டை போடுபவராக வந்தது போல உங்கள் மகனையும் இந்த துறைக்கு கொண்டு வருவீர்களா?

நித்தியானந்தன்: என் மகனும் சண்டைக்காரனாகத்தான் இருக்கிறான். ஐந்து வருடம் படம் பண்ணினான். இப்போது பி.எஸ்.சி விசுவல் கம்யூனிகேசன் படிக்க அனுப்பியிருக்கிறேன். அதில் கொஞ்சம் வாய்ப்பிருப்பதால் பார்க்கலாம் என்று. இல்லேன்னா சண்டைதான் வேலை.

வினவு: சண்டை நடிகர்கள் எல்லோரும் தங்களது பிள்ளைகளைப் படிக்க வைக்கிறார்களா?

நித்தியானந்தன்: எல்லோரும் டிகிரி படிக்க வைக்கிறார்கள். தினேஷ் மாஸ்டர் பசங்களையெல்லாம் இஞ்சினியரிங் படிக்க வைத்தார். அவரு பையன் தான் வேலையில்லா பட்டதாரி படத்தில் மாஸ்டர். அவன் படித்து முடித்து விட்டு, எளிதாக இருக்கும், ஜாலியாக இருக்கும், வெளிநாடு எல்லாம் போகலாம் என்பதால் சினிமா சண்டை வேலைக்கே வந்து விட்டான்.

வினவு: உங்க வருமானத்த பாத்தா ஜாலி மாதிரி தெரியலையே?

நித்தியானந்தன்: அப்படியில்லை. சில பேருக்குதான் வாய்ப்பு கிடைக்கும். சினிமாவையே எடுத்துக் கொண்டால் எல்லா நடிகர்களும் வெற்றி பெறுவதில்லையே? சிலருக்கு குடும்ப பொறுப்புகள் ஜாஸ்தியா இருக்கும். என்னையே எடுத்துக் கொண்டால் தங்கைக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டியிருந்தது, அம்மாவை காப்பாற்ற வேண்டியதாயிற்று. சில பேருக்கு அந்த கமிட்மெண்ட்ஸ் எல்லாம் இருக்காது.

வினவு: சில காட்சிகளில் தவறுதலாக நீங்கள் கதாநாயகர்களை அடித்து விட்டால் அதை அவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள்?

நித்தியானந்தன்: மன்னிப்பு கேட்போம். நம்ம மேல தப்பு இருந்தால் மாஸ்டர் திட்டுவார். அவங்க மேல தப்புண்ணா சமரசம் பண்ணி வைப்பார். இதுபோல நிறைய முறை நடந்துள்ளது.

வினவு: உங்களது அனுபவத்தில் காட்சிக்கு உகந்த முறையில் நன்றாக சண்டை போடும் கதாநாயகன் யார்?

நித்தியானந்தன்: – பிரபு சார், சரத் சார், அர்ஜூன் சார் எல்லோரும் நல்லா பண்ணுவாங்க. இருந்தாலும் ஒரு ஆக்சன், கிக் போன்றவற்றில் ஒரு லைவ்வான அனுபவம் பிரபு சாரிடம் தான் இருக்கும். காரணம் அவர் முறைப்படி குத்துச்சண்டை எல்லாம் கற்றுக்கொண்டு அதன் பிறகு தான் சினிமாவுக்கு வந்தார். அதனால் அவரது சண்டைக்காட்சிகள் பார்க்க அழகாக இருக்கும். முன்னாடியெல்லாம் இப்படி கற்றுக்கொண்டு வருவது பெரும்பாலும் கிடையாது. இப்போது வரும் நடிகர்கள் ஒரு வருடம் குத்துச்சண்டை, ஒரு வருடம் நடனம் என கற்றுக் கொண்டுதான் பிறகு நடிக்க வருகிறார்கள்.
http://www.vinavu.com/wp-content/uploads/2014/07/jackie-chan-injuries.jpg
ஜாக்கி சான் காயங்கள்
ஜாக்கி சான் முகத்தில் கண், காது , மூக்கு, உதடு, தாடை அனைத்தும் எத்தனை தடவை உடைந்தன என்பதை சீன மொழியில் விளக்கும் வரைபடம்.

வினவு: ஒன்றுமே தெரியாமல் வரும் நடிகர்களை சண்டை காட்சியில் இயக்க நிறைய சிரமப்படுவீர்களே?

நித்தியானந்தன்: அவருக்கு ஏற்றது போல சின்னச் சின்ன காட்சிகளாக வைத்து எடுப்போம். நேரம் அதிகரிக்கும். வேறு வழி இல்லை. அவரால் ஒரு சின்ன குத்து விட முடியாதா. அதை வைத்து வைத்து கடைசியில் திறமையாக சண்டை போடுபவராக திரையில் பார்க்கையில் கொண்டு வந்து விடுவோம்.

வினவு: இரண்டு அடி, நான்கு அடி உயரத்திலிருந்து கூட கதாநாயகர்கள் குதிக்க மறுத்து அடம்பிடித்தால் என்ன செய்வீர்கள்?

நித்தியானந்தன்: முதலில் ஆபத்து இல்லை என மாஸ்டர் கதாநாயகர்களிடம் சொல்லுவார். அப்புறம் பெட் எல்லாம் போட்டு எடுக்க முயற்சி செய்வார். அதிலும் காலில் பிரச்சினை என்று எதாவது கதாநாயகன் சொல்லி மறுத்து விட்டால் வேறு வழியே இல்லை. டூப் போட்டு எடுத்து விட வேண்டியதுதான்.

வினவு: இப்படி உண்மையில் பயந்தாங்கொள்ளிகளாகவும், திரையில் வீரன் போலவும் கதாநாயகர்கள் தோன்றுவதற்கு யார் மூல காரணம்?

நித்தியானந்தன்: சண்டை போடுபவர்கள் மற்றும் மாஸ்டர்கள் தான் காரணம். ஒரு பயந்தாங்கொள்ளியை பெரிய மாஸ் ஹீரோவாக காட்டுவது அவர்கள்தான். ஒரு படத்தில் கூட இதைப் பற்றி ஒரு காட்சி வந்தது. உண்மையில் பயந்தாங்கொள்ளியாக இருப்பவர் படத்தில் மட்டும் மாட்டை அடக்குவார், தலையால் முட்டுவார், தீக்குள்ளே குதிப்பார்.

வினவு: சினிமாவின் பிற துறைகளில் தொழிலாளர்களுக்கு சம்பளம் சரியாக தருவதில்லை என்ற பிரச்சினை இருக்கிறது. உங்களுக்கு எப்படி?

நித்தியானந்தன்: அதெல்லாம் சரியாக கொடுத்து விடுவார்கள். அடுத்த படப்பிடிப்பு துவங்குவதற்கு முன் பணம் கொடுக்கப்பட்டாக வேண்டும் என்று விதி இருக்கிறது. வரவில்லை எனில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் யூனியனிலிருந்து புகார் கொடுப்போம். பெப்ஸியில் புகார் கொடுப்போம். பிறகு இரு தரப்பையும் கூப்பிட்டு பேசுவார்கள். முடியவில்லை என ஒரு மாத காலம் வரை அவகாசம் கேட்டார்கள் எனில் அட்ஜஸ்ட் பண்ணிப் போய்க் கொள்வோம். எப்படியானாலும் படத்தை வெளியிடுவதற்கு முன் பணத்தை வாங்கி விடுவோம்.

வினவு: சண்டை காட்சிகளில் எம்ஜிஆர் காலத்து கதாநாயகர்களுக்கும் இப்போதுள்ள கதாநாயகர்களுக்கும் என்ன வித்தியாசம்?

நித்தியானந்தன்: அப்போது சிலம்பம், ஜூடோ போன்ற சண்டைகள் இருந்தால் முறைப்படி கற்றிருக்க வேண்டும். தெரியாம பில்டப் கொடுக்க முடியாது. இப்போது சண்டையே தெரியவில்லை என்றாலும் சண்டை தெரிவது போல காட்ட முடியும். அந்தக் காலத்துல மெனக்கெட்டு அந்தக் கலைகளை கற்றுக்கொள்ள தேவை இருந்தது. இப்போது தொழில்நுட்பம் வளர்ந்து விட்டதால் கதாநாயகன் கொஞ்சமா காலை தூக்கினால் கூட உயரத்தை உயர்த்தி காட்ட முடியும். துறைமுகங்களில் எப்படி வேலைகள் எல்லாம் தொழில்நுட்பத்தால் இப்போது எளிதாகியிருக்கிறதோ அது போலத்தான். முன்னர் தீயில் குதிப்பதென்றால் உண்மையிலேயே குதிப்பார்கள். அதையெல்லாம் இப்போது தொழில்நுட்பம் வந்து எளிதாக்கியிருக்கிறது.

வினவு: தீ சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுப்பது பற்றி சொல்லுங்களேன்.

நித்தியானந்தன்: உடம்பெல்லாம் துணியை சுற்றிக்கொண்டு, தீயணைப்பு வீரர்கள் பயன்படுத்தும் உடைகளை அதற்கு மேல் அணிந்து கொள்வோம். தலைக்கு, கண்களுக்கு என பாதுகாப்பு கருவிகள் இருக்கும். உடம்பு முழுக்க தீப்பிடிக்காமல் இருப்பதற்கான சொல்யூஷனை தடவிக் கொள்வோம். படம் எடுக்கையில் தீ மட்டும் தான் தெரியும், போட்டிருக்கும் உடைகளெல்லாம் தெரியாது. வெளியே வந்த உடன் கோணிப்பை, சீஸ் பயர் கொண்டு தீயை அணைத்து விடுவோம். முகங்களில் ஆங்காங்கு காயம், கொப்புளங்கள் ஏற்படலாம். தீயணைப்பு உடைகள் அளவில் சிறியனவாக இருப்பதால் ஒல்லியாக இருப்பவர்கள்தான் இதற்கு போக முடியும். இதில் நம்மிடம் நான்கைந்து பேர் வரை உள்ளனர். ஆபத்து என்பதால் எல்லோரும் இதற்கு முன்வர மாட்டார்கள். ஒரு தீக்காட்சி பண்ணினால் ஐந்தாயிரம் ரூபாய் வரை சம்பளம் இருக்கும்.

வினவு: எம்ஜிஆர் காலங்களில் சண்டை போடுபவர்கள் பக்கவாட்டில் கைகளை வீசி சண்டை போடுவதால் டைமிங் அதிகமாக இருக்கும். இப்போது ஜாக்கி ஷான் போன்றவர்களது சண்டை காட்சிகளில் நேரடியாக குத்து விடுவது போலவும், ஆக்ஷன் நேரம் குறைந்திருப்பதாக தெரிவது உண்மையா?

நித்தியானந்தன்: எல்லாமே சினிமா லென்சோட ஒளி சிதறடிப்புதான். மற்றபடி அனைவரது சண்டையும் ஒன்றுதான். இப்போது இது ட்ரெண்ட். அப்போது நடிகர்கள் கொஞ்சம் சத்தமாக பேசி நடிப்பார்கள். ஏன்னா அவங்க நாடகத்தில் இருந்து வந்தவர்கள். கடைசியில் உட்கார்ந்து கேட்பவனுக்கும் கேட்க வேண்டும் என்பதற்காக அப்படி பயிற்சி பெற்றவர்கள். தொழில்நுட்பம் வளர்ந்தப்புறம் அது தேவைப்படவில்லை இல்லையா. அது போல்தான் இதுவும்.

வினவு: சண்டை நடிகர்களிடம் நட்சத்திர நடிகர்கள் எப்படி நடந்து கொள்வார்கள்?

நித்தியானந்தன்: – எல்லோருமே அன்பாகவும், மதிப்பாகவும் தான் நடத்துவார்கள். ரஜினி சார், பிரபு சார், அர்ஜூன் சார், விஜயகாந்த் சார் என எல்லோருமே ஒவ்வொரு விதமாக நன்றாக நடத்துவார்கள். எல்லோருக்குமே சண்டை நடிகர்கள் என்றால் ஒரு மதிப்பு மரியாதை இருக்கும், நன்றாக பேசுவார்கள், ஒரு அடி பட்டால் வந்து என்ன ஏது என்று பார்ப்பார்கள். மலையாளத்தில் மோகன்லால், கன்னடத்தில் அம்ரீஷ், ராஜ்குமார் சார் என எல்லோருமே நன்றாகத்தான் நடத்துவார்கள்.

வினவு: இவர்கள் தனியாக உங்களுக்கு ஏதாவது பணம், பரிசு எனத் தருவார்களா?

நித்தியானந்தன்: சிலர் விருப்பப்பட்டு ஒரு சண்டைக் காட்சி முடிந்தால் நடிகர்கள் இளைப்பாற கொஞ்சம் பணம் கொடுப்பார்கள். பாக்யராஜ், சத்யராஜ் போன்றவர்கள் கட்டாயம் ஒரு சண்டைக் காட்சி முடிந்தவுடன் ரூ.200 தருவார்கள். பத்தாண்டுகளுக்கு முன்னர் ரஜினி சாரும் தருவார்.

வினவு: – மலையாளத்தில் இப்போது நடிகர்கள் சண்டையெல்லாம் கற்றுக்கொண்டு விட்டார்களா? யார் நன்றாக சண்டை போடுவார்கள்?

நித்தியானந்தன்: மோகன்லால் நன்றாக பண்ணுவார். இப்போது நிறைய இளைஞர்கள் வந்துள்ளார்கள். அவர்களில் பிரிதிவிராஜ் சார் நன்றாக பண்ணுவார்.

வினவு: சண்டைக் காட்சிகளில் புதிய ட்ரெண்டுகள், தொழில்நுட்பம் போன்றவற்றை ஹாலிவுட் திரைப்படங்களை பார்த்து தெரிந்து கொள்வீர்களா?

car-2நித்தியானந்தன்: ஆமாம். என்ன மாதிரியான காட்சிகள், எவ்வளவு தூரத்தை, காலத்தை வைத்து எடுத்துள்ளார்கள் என்பதை கவனித்துக் கொள்வோம். குண்டு வெடிக்க என்ன தொழில்நுட்பம் புதிதாக வந்துள்ளது என்பதெல்லாம் அவற்றைப் பார்த்துதான் தெரிந்து கொள்வோம். மற்றபடி நேரடியாக அவர்களுடன் எல்லாம் எனக்கு தொடர்பில்லை. சிலருக்கு இருக்க கூடும்

வினவு: நீங்கள் பார்த்த சண்டை நடிகர்களில் உலகிலேயே மிகச் சிறந்தவர் யார்?

நித்தியானந்தன்: ஒவ்வொருவரும் ஒவ்வொன்றில் பெஸ்ட். புரூஸ் லி ஒரு பவர். ஜாக்கி ஷான் அதை கிமிக்சோடு சேர்த்து செய்தார். இப்போது டோனி ஜா வந்திருக்கிறார். ஒவ்வொருத்தரும் முன்னர் இருந்தவர்களைத் தாண்டி இன்னொருபடி மேலே போய்தான் பண்ணியிருக்கிறார்கள்.

வினவு: சண்டைக் காட்சிகளில் மிகவும் ரிஸ்க் எடுத்து நடிப்பவர்கள் ஹாங்காங், சீனர்கள் என்று சொல்லலாமா?

நித்தியானந்தன்: அப்படி சொல்ல முடியாது. ஹாலிவுட்டில்தான் நிறைய ரிஸ்க் எடுக்கிறார்கள். சீனர்கள் செய்வது எல்லாம் கிம்மிக்ஸ்தான். பாலத்தில் இருந்து குதிப்பது, விமானத்தில் இருந்து குதிப்பது, அருவியில் மேலிருந்து குதிப்பது போன்றவற்றையெல்லாம் அங்கு உண்மையிலேயே செய்கிறார்கள். கிராபிக்சில் எல்லாவற்றையும் கொண்டு வர மாட்டார்கள். இப்போது கூட ஒரு ஜேம்ஸ்பாண்ட் படத்தில் ஒருவன் அருவியில் இருந்து குதித்திருக்கிறான். ஏனெனில் அவன் ஏற்கெனவே அதற்கு பயிற்சி பெற்றவன். அதனால் எளிதில் பண்ணி விட்டான். என்றாலும் அதில் ரிஸ்க் அதிகம் இல்லையா?

வினவு: அதெல்லாம் இங்கு பண்ணுவதற்கு என்ன தடையாக இருக்கிறது?

நித்தியானந்தன்: பாதுகாப்பு ஏற்பாடுகள் கிடையாது. அவ்வளவு சம்பளமும் இங்கு தர முடியாது. ஹாலிவுட் வேறு, இது வேறு.

வினவு: தமிழில் சண்டை நடிகர்களைப் பற்றி இதுவரை படம் ஏதும் வந்துள்ளதா?

நித்தியானந்தன்: சசிக்குமார் எடுத்த டிஷ்யூம் திரைப்படம். இதில் எங்களது பிரச்சினைகள், கஷ்டங்கள், ஆபத்துக்களைப் பற்றிப் பேசியிருந்தார். அதுபோக பம்மல் கே. சம்மந்தம் ஒரு காமெடி படமென்றாலும் ஒரு சண்டை மாஸ்டரைப் பற்றி எதார்த்தமாக எடுத்திருந்தார்கள்.

வினவு: சண்டை மாஸ்டர்கள் குணச்சித்திர நடிகராக மாறிப் போவது இப்போது அதிகரித்துள்ளதா?

நித்தியானந்தன்: குறைவுதான். தினேஷ், பொன்னம்பலம், மணவை சங்கர், நந்தா சரவணன், முத்துக்காளை, ராஜேந்திரன் என சிலர்தான் போயுள்ளனர். சிலர் டிவி சீரியல்களுக்கும் நடிக்கப் போயுள்ளனர். இப்போது யூனியனுக்கு பெரும்பாலும் யாரும் வருவதில்லை. செல்பேசி வந்து விட்டதால் அடுத்து என்ன வேலை, சம்பளம் எல்லாவற்றையும் அதிலேயே பேசி முடிவு செய்து விடுகின்றனர்.

வினவு: சண்டை நடிகர்களை ரவுடிகளும், சில அரசியல் கட்சிகளும் தங்களது நலனுக்காக பயன்படுத்திக் கொள்வதாக சொல்கிறார்களே. உதாரணம் அயோத்தி குப்பம் வீரமணி, கபிலன் போன்றவர்கள். அதுபற்றி உங்கள் கருத்தென்ன?

நித்தியானந்தன்: அதெல்லாம் உண்மை கிடையாது. உறுப்பினர்கள் யாராவது இப்படியான செயல்களில் ஈடுபடுவது தெரிய வந்தால் உடனடியாக உறுப்பினர் அட்டையை ரத்து செய்து விடுவார்கள். வழக்கு ஏதாவது வந்தால் உடனடியாக நீக்க மாட்டார்கள். ஆனால் சம்பந்தப்பட்டவர் தான் குற்றமற்றவர் என்பதை நிரூபித்தாக வேண்டும்.

பத்திரிகைக்காரர்கள் இதில் குழப்புகிறார்கள். சினிமாவில் வரும் துணை நடிகர்கள் வேறு, சண்டை போடுபவர்கள் வேறு, ரவுடியாக வருபவர்கள் வேறு. சண்டை போடுபவர்கள் எல்லோருமே உண்மையில் எந்த குற்ற வழக்கிலும் சம்பந்தப்பட்டிருக்க முடியாது. அப்படி சம்பந்தப்படும் பட்சத்தில் உறுப்பினர் அட்டை பறிமுதலாகும் என்பதால் பயந்து போய்தான் இருப்பார்கள். ரவுடிகளாக நடிப்பவர்கள் தனியாக இருக்கிறார்கள். அதில் இருப்பவர்கள் முடியெல்லாம் வளர்த்துக் கொண்டு தனியாக ஒரு ரவுடி போன்ற தோற்றத்தில் கம்பீரமாக இருப்பார்கள். அவர்கள் செய்யும் தவறுக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது. அவர்கள் தனி குரூப்.

வினவு: துணை நடிகர்கள் சங்கம் தங்களது சங்கத்தில் இல்லாதவர்களை நடிக்க வைத்தால் அதை எதிர்த்து போராடுகிறார்களே. அது போல நீங்கள் ஏன் எதிர்த்து போராடவில்லை?

நித்தியானந்தன்: அது படத்தின் இயக்குநரோட விருப்பம். அதில் எப்படி தலையிட முடியும்? அப்படி வந்தவர்களில் சிலருக்கு முன்னரோ, அதன் பின்னரோ ஒருவித குற்றப்பின்னணி இருக்கும். அப்படி இருப்பவர்கள் எங்களது சங்கத்தில் உறுப்பினராக முடியாது.

வினவு: சண்டை போடுபவர்களது சங்கத்திற்கு இது ஒரு கட்டிடம் தானா? எப்போது இதை கட்டினார்கள்?

நித்தியானந்தன்: இது ஒன்றுதான். முதலில் இது ஒரு குடிசையாக இருந்தது. 1968-ல் இக்கட்டிடம் அடிக்கல் நாட்டப்பட்டு எண்பதுகளில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

வினவு: இப்போது வேலைகள் பிரிந்து மலையாளம், தெலுங்கு ஆகியவற்றுக்கு போய் விட்டதால் இங்கு வேலை குறைந்து விட்டது. அஜீத்தின் வீரம் படத்தில் கூட இங்கிருந்து போனவர்கள் திரும்ப வேண்டியதாகி பிரச்சினை ஆனது. இதனை எப்படி தீர்த்துக் கொள்கிறீர்கள்?

நித்தியானந்தன்: மேல ஐகர்ப் இருக்கு. அதுக்கு கீழே பெப்ஸி இருக்கிறது. அதற்கு கீழே சங்கங்கள் இருக்கின்றன. பிரச்சினை வந்தால் முதலில் ஐகர்ப்பில் புகார் செய்வோம். அது பெப்சிக்கு வரும். சம்பந்தப்பட்ட மாநில சங்கங்களை கூட்டிப் பேசி சமரசம் செய்து வைப்பார்கள்.

வினவு: ஆனால் பிற இடங்களில் வைத்திருப்பது போல தமிழ்நாட்டுக்கு தனியாக தமிழ் பெயரில் சங்கம் அமைக்க வேண்டும் என சிலர் சொல்கிறார்களே?

நித்தியானந்தன்: – அப்படி இயக்குநர்கள் சொல்கிறார்கள். அவர்கள் ஒரு மொழியில்தான் படம் பண்ணுகிறார்கள். நாங்கள் அப்படி கேட்கவில்லையே. நாங்கள் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, போஜ்புரி, பெங்காலி எல்லாம் பண்றோம். இந்திய அளவில் சண்டைக்காட்சிகள் பண்ணுகிறோம். நமக்கு எதுக்கு மொழி? சண்டையில் திறமை இருந்தால் எந்த மொழியில் வேண்டுமானாலும் படம் பண்ண முடியும்.

வினவு: கர்நாடாகா போன்ற மாநிலங்களில் இங்கிருப்பதைப் போல மாஸ்டர்கள் இப்போது வந்து விட்டார்களா?

நித்தியானந்தன்: இப்போது கொஞ்சம் வந்து விட்டார்கள். பெங்காலிலும், இந்தியிலும் கூட வந்து விட்டார்கள். முன்னாடி படம் எடுக்க வேண்டுமானால் ஒரு இயக்குநரிடம் குறைந்தபட்சம் பத்து வருசமாவது குப்பை கொட்ட வேண்டும். இப்போது டிஜிட்டல் கேமரா வந்து விட்டதால் பத்து பேரு பத்து இடத்தில் அவனவன் படம் எடுக்க ஆரம்பித்து விட்டான். முன்னாடி படத் தொகுப்பாளராகணும்னா பிலிம் ரோலை அடுக்கி ரோலை சுற்றி வைக்க வேண்டும். இப்போது செல்பேசியிலும், கணிணியிலும் படத்தொகுப்பை எளிதாக செய்ய கற்றுக்கொண்டு விடுகிறார்கள். அதே போல்தான் சண்டைப் பயிற்சியிலும். முன்னாடி ஒரு மாஸ்டரிடம் சில ஆண்டுகளாவது இருந்துதான் ஆளாக முடியும். இப்போது சில ஹாலிவுட் படங்களைப் பார்த்தே ஆளாகி விடுகிறார்கள். இது ஒரு புதுமையான அறிவு வளர்ச்சிதான். விசயம், தொழில்நுட்பம் இருப்பதால் எளிதாக எல்லோரும் கற்றுக்கொள்ள முடிகிறது.


http://www.vinavu.com/wp-content/uploads/2014/07/nithyanandam-3.jpg
திருத்தணி திரைப்பட விழாவில் மாஸ்டர் நித்தியானந்தன்

வினவு: நீங்கள் எடுத்த 30 படங்களில் நன்றாக ஓடியது எந்தப் படம்?
நித்தியானந்தன்: நன்றாக ஓடியது என்று சொல்ல மாட்டேன். ஆனால் சண்டைக் காட்சிகள் பலரும் பாராட்டும்படி பேரரசு இயக்கத்தில் பரத் நடித்த திருத்தணி படம் பேசப்பட்டது. நான் அவன் இல்லை பார்ட் 2, மலையாளத்தில் லக்கிஜா போன்ற படங்களெல்லாம் பண்ணியிருந்தாலும் பெரிதாக இவையெல்லாம் ஓடவில்லை. ஆனால் என்னோட வேலை அதில் சுத்தமாக இருந்தது.

வினவு: மாஸ்டர், உங்களது பெயர் திரைப்படங்களில் எப்படி வரும்?

நித்தியானந்தன்: நித்தியானந்தன்தான் பேரு. டைட்டிலில் தீப்பொறி நித்யா என்றிருக்கும்.

வினவு: நீங்கள் எப்போது ஆரம்பித்து எப்போது ஜிம்னாஸ்டிக் பயிற்சியை விட்டீர்கள்? ஏன் ஒரு காலகட்டத்துக்கு பிறகு சண்டைப் பயிற்சியாளர்களுக்கும், மாஸ்டர்களுக்கும் தொப்பையுடன் உடம்பு போட்டு விடுகிறது?

நித்தியானந்தன்: நான் 1978-ல் பள்ளிப்படிப்பு முடித்த பிறகு ஆரம்பித்து பத்து பதினைந்து ஆண்டுகள் வரை பயிற்சி செய்தேன். பெரியளவில் இல்லாவிடிலும் சம்மர் ஷாட், சில தாவிக்குதித்தல்கள் மட்டும் பண்ணினேன். முதலில் ஒல்லியாக இருந்தாலும் வயது ஆக ஆக உடம்பு போட்டு விடுகிறது. திருமணம், சாப்பாடு போன்றவையும் காரணங்கள்தான் சார்.

வினவு: சினிமா துறையிலேயே மற்றவர்கள் உங்களது சங்கத்தில் இருக்கும் ஒற்றுமையை ஒரு பொறாமையோடு பார்க்கிறார்கள்? இந்த ஒற்றுமைக்கு காரணம் என்ன?

நித்தியானந்தன்: இது மற்ற வெளியாள் யாரும் நினைத்தாலும் பண்ண முடியாத கலை. மற்றவற்றையெல்லாம் அப்படி சொல்ல முடியாது. ஏனெனில் இது உயிரை பணயம் வைப்பதாக இருப்பதால் அதைப் பார்த்து மிரளும் தயாரிப்பாளர் ‘ஏய் முதல்ல அவனுக்கு காசக் கொடுய்யா’ என்று சொல்வான். ஏனெனில் எந்த தயாரிப்பாளரும் சண்டை பயிற்சியாளரின் வயிற்றில் அடிக்க மாட்டான். தாமதமாக வேண்டுமானால் பணம் கிடைக்கலாமே தவிர அப்படியெல்லாம் தராமல் ஒரேயடியாக போய்விட மாட்டார்கள்.

வினவு: தமிழ் சினிமா சண்டைப்பயிற்சி வரலாற்றில் மிகவும் பிரபலமான, முக்கியமான, மிகவும் ரிஸ்க் எடுத்து சண்டை போடுபவர் மற்றும் மாஸ்டர் யார்?

நித்தியானந்தன்: மாஸ்டர் ராஜசேகர், (பிட்சா, இவன் வேற மாதிரி என்ற படங்களெல்லாம் பண்ணியவர்) சமீபத்தில் ஜெயலலிதா முதல்வராக பதவியேற்கும் நிகழ்ச்சியில் மிகவும் ரிஸ்க் எடுத்து மூன்று கண்ணாடிகளை உடைத்தார். அடுத்து மாஸ்டர் குமார். இவர் எகிறி குதிப்பது, தீயில் குதிப்பது எல்லாம் பயப்படாமல் செய்யக் கூடியவர். அந்தக் காலத்தில் சாம்பு என்று ஒரு மாஸ்டர் இருந்தார். முஸ்தபா என்று ஒருவர். நிறைய பேர் இறந்து விட்டார்கள். சிலர் இருக்கிறார்கள். சூப்பர் சுப்பராயன் மாஸ்டர் இப்போதும் இருக்கிறார். அவர் நிறைய ஆபத்தான காட்சிகளெல்லாம் பண்ணியிருக்கிறார். படம் எடுக்கையில் பாதி உடம்பு தீயில் பற்றிக்கொள்ளும் விதமாக எல்லாம் பண்ணியிருக்கிறார்.

வினவு: இப்படி ஆபத்தான காட்சிகளில் பயம் தெரியாமல் இருப்பதற்காக பான்பராக் போடுவது, மது சிறிது அருந்திக்கொள்வது, வேறு போதை எல்லாம் செய்வீர்களா?

நித்தியானந்தன்: கிடையாது. பயமெல்லாம் ‘ஸ்டார்ட் கேமரா’ சொன்ன பிறகு சுத்தமாக இருக்காது. கயிற்றின் மேல் நடப்பவனைப் பார்த்தால் நாம்தான் பயப்படுவோம். அவன் அநாயசமாக நடப்பான். எல்லாமுமே பயிற்சிதான். கீழே இருந்து பார்ப்பவனுக்கு இருக்கும் பயம் அதை செய்பவனுக்கு இருக்காது. நமக்கே திரும்ப வந்து திரையில் அல்லது வீட்டில் உட்கார்ந்து பார்க்கையில் இதை நாமா பண்ணினோம் என்று ஆச்சரியமாக இருக்கும்.

வினவு: உங்கள் சங்க கட்டிடத்திற்கு ஏன் விட்டலாச்சார்யா பெயர் வைத்துள்ளீர்கள்? அதிகமான இடங்களில் எம்ஜிஆர் படம் வைத்துள்ளீர்கள்?

நித்தியானந்தன்: சங்கம் வைப்பதற்கு விட்டலாச்சார்யா தான் மூல காரணம். அவர்தான் சங்கம் வைக்க தூண்டுதலாக இருந்தார். அதை வைத்து தான் சம்பளத்தை பேசி முடிவு பண்ண முடியும் என்று எங்களுக்கு வழிகாட்டினார். எம்.ஜி.ஆர் படங்களில் 85% சண்டைக்காட்சிகள் இருக்கும் என்பதால் அதிகமாக எங்களுக்கு வேலை கொடுத்திருக்கிறார். அதனால் தான் வைத்திருக்கிறோம்.

வினவு: தற்போது சண்டை யூனியனில் சேருவதற்கு எவ்வளவு கட்டணம்?

நித்தியானந்தன்: இப்போது மூணேகால் லட்சம் கட்டினால்தான் சேர முடியும். அதுவும் நிறைய சோதனை, பயிற்சிகள்ள செலக்ட் ஆனாத்தான் கொடுப்பாங்க. ஏதாவது மாஸ்டர் அல்லது உறுப்பினரோட சிபாரிசும் வேண்டும். இருக்கிறவங்களுக்கே வேல அதிகம் இல்லேங்கிறதால இந்த கட்டணத்த அதிகரிச்சிருக்கிறோம். மத்தவங்களும் விரும்பி வருவதில்லை.

வினவு: வெளிநாடு படப்பிடிப்புக்கு உங்களை கூட்டிக்கொண்டு போனால் அந்த நாட்டு சம்பளம், இன்சூரன்சு எல்லாம் செய்து தருவார்களா?

நித்தியானந்தன்: இங்கேயே பேசி முடிவு செய்து கொள்வோம். சம்பளம் பெரும்பாலும் இங்கு 3 நாட்களுக்கு என்று இருப்பதை அங்கு போனால் ஒரு நாளைக்கு என்று பேசி முடிவு செய்து கொண்டுதான் கிளம்புவோம். முறையாக அங்கிருக்கும் கம்பெனிகளுக்கு சொல்லி அனுமதி பெற்று விட்டுதான் படப்பிடிப்பு துவங்கும்.

வினவு: நமது மாஸ்டர்கள் அங்குள்ள சண்டை நடிகர்களை பயன்படுத்துவது உண்டா?

நித்தியானந்தன்: அதுவும் நடக்கத்தான் செய்கிறது. உதாரணமாக பார்கோ, சுவரில் எகிறி எகிறி குதித்து அடிப்பது போன்றவற்றில் அவர்கள் நம்மை விட நன்கு பயிற்சி பெற்றவர்களாக இருக்கிறார்கள். அதுபோன்ற காட்சிகளுக்கு அந்த துறையில் சிறப்பாக பயிற்சி பெற்ற வெளிநாட்டவர்களைப் பயன்படுத்தி நம்மவர்கள் இயக்குகிறார்கள்.

வினவு: – உங்களுக்கு கதாநாயகன் ஆக வேண்டும் என்ற ஆசை எல்லாம் வரவில்லையா? ஏன்?

நித்தியானந்தன்: எனக்கு விருப்பம் எல்லாம் இல்லை. அதுல டயலாக் பேசணும், பாடி லேங்குவேஜ் வேணும். அதுக்கெல்லாம் ஒரு இது வேணும். கஷ்டம்கிறதுக்காக எல்லாம் முயற்சி பண்ணாம இருக்கவில்லை. இதுவே போதும்ணு இருந்துட்டேன்.

வினவு: அப்படி ஒருவேளை இதெல்லாம் கற்றுக்கொண்டு போயிருந்தால் வாய்ப்பு கிடைத்திருக்குமா?

நித்தியானந்தன்: கிடைத்திருக்கும். பத்தில் ஒன்றாவது வெற்றி பெறத்தானே செய்யும். ஆனால் நான் முயற்சியே செய்யவில்லை. அப்படியே சின்ன சின்ன வேடமாக கிடைத்ததால் பெரிதாக எதையும் நினைக்கவில்லை.



Thanks to vinavu

gkrishna
15th September 2014, 12:45 PM
கர்நாடக இசைக் கச்சேரிகளில் இன்றைக்கும் பாடப்பட்டு வரும் சுப்பிரமணிய பாரதியாரின் ‘சின்னஞ்சிறு கிளியே’ பாடல் ஒரு திரைப்படத்துக்காக மெட்டமைக்கப்பட்டது என்பதை ஒரு நண்பரிடம் பேச்சுவாக்கில் நான் சொன்னபோது நம்ப மறுத்தார். அதுவும் இப்போது இல்லை. சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே மெட்டமைக்கப்பட்டு மேடையேறிய பாடல் அது என்ற செய்தியும் அவருக்கு வியப்பை அளித்தது. மிகச் சிறுவயதிலேயே காலமாகிவிட்ட மாமேதை சி.ஆர்.சுப்பராமன் அவர்களால் காபி, மாண்ட், வசந்தா, திலங், நீலமணி என்று ராகமாலிகையில் மெட்டமைக்கப்பட்ட அந்தப் பாடல், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் தயாரித்த ‘மணமகள்’ திரைப்படத்தில் இடம்பெற்றது. எம்.எல்.வசந்தகுமாரியும், வி.என்.சுந்தரமும் பாடிய அந்தப் பாடல் கர்நாடக சங்கீதக் கச்சேரிகளில் வாய்ப்பாட்டு பாடுபவர்களால் மட்டுமல்லாது வாத்தியக்காரர்களாலுமே வெகுவாக வாசித்துக் கொண்டாடப்பட்ட ஒன்று.

‘மணமகள்’படம் வெளிவந்து கிட்டத்தட்ட முப்பதாண்டுகளுக்குப் பிறகு ‘நீதிக்கு தண்டனை’ என்ற படத்துக்காக எம்.எஸ்.விஸ்வனாதன் ‘சின்னஞ்சிறு கிளியே’ பாடலுக்கு புதிதாக மெட்டமைத்தார். ஏற்கனவே இத்தனை பிரபலமாகக் கொண்டாடப்படும் பாடலை புதிய மெட்டில் அமைப்பதற்கு அசாத்திய மேதைமையோடு, பாடகர்களின் குரல் தேர்விலும் மிகுந்த கவனம் தேவை. எம்.எஸ்.விஸ்வநாதன் சரியான குரல் தேர்விலும், பாடகர்கள் சரியாகப் பாடுவதிலும் மிக மிக கண்டிப்பானவர் என்பது நன்கறியப்பட்டதொரு விஷயம். அவரிடம் பாடிய பல பாடகர்களும் தங்கள் பேட்டியில் நிறைய பெருமிதத்தோடும், கொஞ்சம் பயத்தோடும் அதைக் குறித்துச் சொல்லியிருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட எம்.எஸ்.விஸ்வநாதன் அப்பாடலின் ஆண் குரலுக்கு, செம்பை வைத்தியநாத பாகவதரின் சிஷ்யரும், கர்நாடக சங்கீதத்தில் தேர்ச்சி பெற்றவருமான கே.ஜே.யேசுதாசைத் தெரிவு செய்கிறார். அதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஆனால் அப்பாடல் தொடங்குவதே பெண் குரல்தான். அந்தப் பெண்குரல் பகுதிக்கு பதினான்கு வயதே நிரம்பிய ஒரு புதிய பெண் பாடகியைப் பாடவைக்கிறார். அப்படியென்றால் அவருக்கு அந்தப் பெண் குரல் மீது எத்தனை நம்பிக்கையும், அங்கீகரிப்பும் இருந்திருக்க வேண்டும்! ‘சின்னஞ்சிறு கிளியே’ என்று பல்லவியை அனுபவித்துப் பாடித் துவக்கிய அந்த இளம்பாடகியின் பெயர் ஸ்வர்ணலதா.

இசையமைப்பாளர்களின் மனதில் உள்ள மெட்டை அப்படியே திருப்பிப் பாடவே சிரமப்படும் பாடகர், பாடகிகளுக்கு மத்தியில், கேட்ட மாத்திரத்தில் தன்னிடமுள்ள தனித்துவக் குரலால் அனைவரையும் கவர்ந்த ஒரு பாடகியாகவே ஸ்வர்ணலதா அறியப்பட்டார். போதையில் பாடிடும் ஓர் இளம்பெண்ணின் குரலுக்கு முதன்முதலாக இவரை குருசிஷ்யன் என்னும் திரைப்படத்தில் ‘உத்தமபுத்திரி நானு’ என்னும் பாடலில் பயன்படுத்திய இளையராஜா, பிற்பாடு ஸ்வர்ணலதாவைப் பல்வேறு பாடல்கள் பாடவைத்தார். அவையெல்லாமே ஸ்வர்ணலதாவைத் தவிர வேறு எந்த பாடகியையும் கொண்டு கற்பனை பண்ணிப் பார்க்க முடியாதவை.

http://kirukkals.com/wp-content/uploads/2010/10/swarnalatha.jpg

கருப்புவெள்ளைத் திரைப்படங்களின் காலத்தில் எல்.ஆர்.ஈஸ்வரி பாடியது போன்ற கிளப்வகைப் பாடல்கள், 90களில் ஸ்வர்ணலதாவின் தனித்துவக் குரலால் மேலும் புகழ் பெற்றன. ‘தளபதி’ திரைப்படத்தின் ‘ராக்கம்மா கையத் தட்டு’ பாடலில் துவங்கி, பின்னர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் ‘ஜெண்டில்மேன்’ திரைப்படத்தின் ‘உசிலம்பட்டி பெண்குட்டி’, ‘காதலன்’ திரைப்படத்தின் ‘முக்காலா முக்காபுலா’, ‘இந்தியன்’ திரைப்படத்தின் ‘அக்கடான்னு நாங்க’ போன்ற பல பாடல்களுக்கு மத்தியில் இன்றைக்கும் மெல்லிசைக் கச்சேரிகளில் தவறாது இடம்பெறும் ஒரு முக்கியமான பாடலாக ‘கேப்டன் பிரபாகரன்’ படப்பாடலான ‘ஆட்டமா தேரோட்டமா’ பாடல் உள்ளது. பாடுபவரையும், இசைப்பவர்களையும், கேட்பவர்களையும் துள்ளாட்டம் போடவைக்கும் உற்சாகப் பாடலது. இப்பாடலைக் கவனித்துக் கேட்டால் தெரியும் ‘ஆட்டமா’, ‘தேரோட்டமா’ என்ற வார்த்தைகளில் ‘மா’வில் ஒரு தனித்த நெளிவு இருக்கும். அந்த நெளிவு செயற்கையாக வலிந்து செய்ததைப் போல இல்லாமல் வெகு இயல்பாக இருக்கும். இந்த நெளிவுதான் ஸ்வர்ணலதாவைப் பிற குரல்களிலிருந்து தெளிவாக வேறுபடுத்திக் காட்டும் தனிச்சிறப்பு. மேடைக்கச்சேரிகளில் இப்பாடலை நன்கு கவனித்துக் கேட்டால் தெரியும், இதைப் பாட முயற்சிப்பவர்கள் ஒன்று அந்த நெளிவை ஃப்ளாட்டாகப் பாடி கடந்து சென்று விடுவார்கள். இல்லை செயற்கையாகத் தெரியும் ஒரு கமகத்தைத் தருவார்கள். எளிதில் நகலெடுத்துவிட முடியாத குரலும், பாடுமுறையும் ஸ்வர்ணலதாவுடையது!

நான் இங்கே சொல்லியிருக்கும் இந்தப்பாடல்கள் படுபிரபலமானவை. ஆனால் அதிகம் வெளியே தெரியாத க்ளப் பாடல் ஒன்று இருக்கிறது. ‘எத்தனை ராத்திரி’ என்ற அந்தப்பாடலை நான் வெகு முக்கியமான ஒன்றாகக் கருதுகிறேன். மலேஷியா வாசுதேவனுடன், ஸ்வர்ணலதா இணைந்து பாடிய அப்பாடலில் சரணத்தில் ‘இடத்தைப் பிடிச்சுக்கோ… நீ… குடியும் இருந்துக்கோ’ என்ற இடத்தில் ஸ்வர்ணலதா ஒரு பிருகா தருகிறார் பாருங்கள், எந்த ஒரு செவ்வியல் பாடலுக்கும் இணையான ஒன்றாக இப்பாடலை உயர்த்துகிறது அந்த பிருகா.

ஒருபுறம் க்ளப் வகைப்பாடல்களைப் பாடினாலும், இன்னொரு பக்கம் உணர்ச்சிகரமான முக்கியமான பாடல்களும் ஸ்வர்ணலதாவைத் தேடி வந்தன. பெரும்புகழ் பெற்ற ‘போவோமா ஊர்கோலம்’ என்னும் ‘சின்னத்தம்பி படப்பாடலில் இளையராஜாவின் ஆஸ்தான புல்லாங்குழல் கலைஞரும், பின்னணிப் பாடகருமான நெப்போலியன் என்ற அருண்மொழி வாசித்த புல்லாங்குழல் பகுதிகளின் நுணுக்கங்களை, போட்டி போட்டு கொண்டு தன்குரலில் கொண்டு வந்திருக்கிறார் ஸ்வர்ணலதா. உடன் பாடியவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். அப்பாடலின் ஆண் கதாபாத்திரம் செய்யும் சேட்டைகள் வெகு எளிதாக மொத்த கவனத்தையும் ஆண்குரல் பக்கம் திருப்பிவிடும் சாத்தியம் கொண்டவை. எஸ்.பி.பாலசுப்ரமணியமும் அப்பகுதிகளைப் பிரமாதமாகப் பாடியிருப்பார். இதையெல்லாம் மீறி, நம்மை வந்தடைந்தது ஸ்வர்ணலதாவின் குரல். குறிப்பாக அந்தப் பாடலின் இன்னொரு வடிவமான ‘நீ எங்கே’ என்று துவங்கும் தனிக்குரல் சோகப்பாடலை உணர்ச்சிகரமாக ஸ்வர்ணலதா பாடியிருக்கும் விதம் அபாரமானது. அப்பாடலின் நாடகத்தன்மை காரணமாகப் பலரும் அப்பாடலை கவனிக்காமல் கடந்து சென்றிருப்பார்கள். ஆனால் அப்பாடலின் இரண்டாம் இண்டர்லூடில் ஸ்வர்ணலதா தந்திருக்கும் கீரவாணி ராக அடிப்படையில் அமைந்த ஆலாபனை அசாத்தியமானது. ‘காற்றில் எந்தன் கீதம்’ பாடலின் ப்ரிலூடில் எஸ்.ஜானகி தந்த கீரவாணி ஆலாபனைக்கு இணையானது. அதைப்போலவே பாடல் முடியும் இடத்தில் ‘நீ எங்கே’யின் இறுதியில் கேட்கும் நெளிவும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. ‘ஆட்டமா, தேரோட்டமா’வில் துள்ளலைத் தந்த நெளிவு, இங்கே சோகத்தை அற்புதமாக வெளிப்படுத்துகிறது.

ஸ்வர்ணலதா ஏ.ஆர்.ரஹ்மான் மூலமாக தேசியவிருது வென்ற ‘கருத்தம்மா’ படத்தின் ‘போறாளே பொன்னுத்தாயி’யும் நம் நெஞ்சத்தை உருக்கும் சோகப்பாடல்தான். ‘போறாளே பொன்னுத்தாயி’ பாடலை தேர்வுக்குழுவினர் முழுமையாகக் கேட்டிருக்க வேண்டிய தேவையே இருந்திருக்காது என்றே தோன்றுகிறது. ‘ஓ’வென்று தன் சோகக்குரலால் ஸ்வர்ணலதா அந்தப் பாடலைத் துவக்கும்போதே தேர்வுக்குழுவினர் விருதை எடுத்து மேஜைமேல் வைத்திருந்திருக்க வேண்டும்.

‘அலைபாயுதே’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘எவனோ ஒருவன்’ என்னும் அருமையான பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்வர்ணலதாவுக்குத் தேர்ந்தெடுத்துக் கொடுத்திருந்தார். அதன் நியாயமான காரணத்தை பாடலின் துவக்கம் முதல் இறுதி வரை உணர்ச்சி ததும்பப் பாடி நமக்கு உணர்த்தியிருப்பார் ஸ்வர்ணலதா. ‘முதல்வன்’ திரைப்படத்தின் ஜோடிப்பாடலான ‘குறுக்கு சிறுத்தவளே’ பாடலை, படத்தில் இன்னொரு முறை பயன்படுத்தும் போது ஸ்வர்ணலதாவைக் கொண்டே பாடவைத்திருக்கிறார் ரஹ்மான். ‘உளுந்து வெதைக்கையிலே’ என்ற அந்தப் பாடல் துவங்கும் முன்பே ஸ்வர்ணலதா ‘எ எ . . ஏலே . .ஏலே’ என்று பாடலைத் துவக்கி விடும் விதம் அலாதியானது. ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பாலிவுட் இசையுலகில் ஒரு வலுவான ஸ்தானத்தை ஏற்படுத்திக் கொடுத்த ராம்கோபால்வர்மாவின் ‘ரங்கீலா’ திரைப்படத்தில் ஸ்வர்ணலதா அற்புதமாகப் பாடியது ‘ஹாய் ராமா’ என்னும் பந்துவராளி ராகப்பாடல். அதன் மூலம் பாலிவுட்டிலும் பலரையும் திரும்பிப்பார்க்க வைத்தார் ஸ்வர்ணலதா. இந்தியத் திரையிசையுலகின் மரியாதைக்குரிய இசைமேதையான நௌஷாத் அலியின் இசையமைப்பில் ‘முகல் ஏ ஆஸம்’ திரைப்படப்பாடல்கள் தமிழில் டப்செய்யப்பட்டபோது அதிலிருந்த முக்கியமான பாடல்களைப் பாடியவர் ஸ்வர்ணலதா.

தனிப்பாடல்களில் ஸ்வர்ணலதாவுக்குப் பேர் சொல்லும்படியாக பல பாடல்கள் அமைந்தது அவரது அதிர்ஷ்டம் என்று சொல்ல முடியாது. அவரது குரலில் உள்ள தனித்துவமே அவரை அப்பாடல்கள் தேடி வர காரணமாக அமைந்தது. பண்பலை வானொலிகளில் நிச்சயமாக ஒரு நாளைக்கு ஒருமுறையாவது இடம்பெறும் பாடலாக ‘சத்ரியன்’ படத்தின் ‘மாலையில் யாரோ’ பாடல் இன்றுவரை இருக்கிறது. ‘வள்ளி’ திரைப்படப்பாடலான ‘என்னுள்ளே என்னுள்ளே’ பாடல்தான் ஸ்வர்ணலதா பாடிய பாடல்களிலேயே சிறந்த பாடல் என்று அடித்துச் சொல்பவர்கள் இருக்கிறார்கள்.

‘உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன்’ படத்தில் ஆபேரி ராகத்தின் அடிப்படையில் இளையராஜா மெட்டமைத்திருந்த ‘என்னைத் தொட்டு’ என்ற பாடல் கேட்பவரின் மனதைக் கொள்ளை கொள்ளும் மற்றுமொரு நல்ல ஸ்வர்ணலதா பாடல். இப்பாடலின் ஆரம்பத்தில் வரும் ஆலாபனையில் எடுத்த எடுப்பிலேயே மேல்ஸ்தாயிக்குச் சென்று பாடலின் மொத்த ரசத்தையும் தந்து விடுகிறார் ஸ்வர்ணலதா. இந்த உணர்வைத்தான் பாடலில் மீண்டும் மீண்டும் வரும் ‘அன்பே ஓடிவா’ என்ற வரிகளில் நாம் பெற்றுக்கொள்கிறோம். இப்பாடலின் பிற்பகுதியை எஸ்பிபி பாடியிருந்தாலும் மைய உணர்வைத்தரும் அந்த முக்கியமான ஆலாபனையைப் பாட ஸ்வர்ணலதாவைத்தான் பயன்படுத்தியிருந்தார் இளையராஜா.

கவிஞர் மு.மேத்தா தயாரித்த ‘தென்றல் வரும் தெரு’ திரைப்படத்தின் ‘புதிய பறவை’ என்னும் சுத்த தன்யாசி ராக அடிப்படையில் அமைந்த பாடலும் அவரது முக்கியமான பாடல்களின் வரிசையில் உள்ள ஒன்று. இதே பாடலின் நாதஸ்வர வடிவம் ஒன்றும் இத்திரைப்படப் பாடல் கேஸட்டில் இருக்கிறது. அதைக் கேட்டுவிட்டு ஸ்வர்ணலதா பாடிய வடிவத்தைக் கேட்டால்தான், ஸ்வர்ணலதாவின் தனித்துவமும், அது ஏன் முக்கியமான பாடல் என்பதும் புரியும். இப்பாடலின் ட்யூனே உள்ளத்தை உருக்கும் தன்மையையுடையது என்பதை அந்த நாதஸ்வரத்தைக் கேட்டால் வரிகளில்லாமல் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். பல்லவியின் முதல் இரண்டு வரிகளும் கீழிருந்து மேலேறி, மேலிருந்து கீழிறங்கும் வகையில் ஒன்றுக்கொன்று எதிரிடையான தன்மை கொண்டவை. அதில் ‘புதிய பறவை பறந்ததே’ என்ற மூன்றே வார்த்தைகளில் முழு ஆக்டேவும் மேலேற வேண்டும். நாதஸ்வரத்தில் அதை இயல்பாகவே காட்டிவிடலாம். ஆனால் குரலில் வார்த்தைகள் வழியாகச் சொல்வது கத்தி மேல் நடப்பது போன்றது. கொஞ்சம் பிசகினாலும் இழுவையாகத் தெரிந்துவிடும். பிறகெப்படி பாடவேண்டும்? ஸ்வர்ணலதா பாடியிருப்பதை வைத்து அதை எப்படிப்பாட வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம்.

http://solvanam.com/wp-content/uploads/2010/09/pudhiya-paravai-nadhaswaram.mp3

http://solvanam.com/wp-content/uploads/2010/09/pudhiya-paravai-voice.mp3

’நாங்கள்’ என்று ஒரு படம். இப்படி ஒரு படம் வந்த செய்தியை பெரியவர் ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்கள் சொன்னால்தான் யாரும் நம்புவார்கள். இத்தனைக்கும் அதில் சிவாஜி கணேசன் நடித்திருந்தார். இந்தப் படத்தில் ‘பாரடி குயிலே’ என்றொரு பாடலை ஸ்வர்ணலதாவைப் பாட வைத்திருக்கிறார் இளையராஜா. இந்தப் பாடலின் சரணத்தில் ‘நான் விரும்பிய திருநாள் பிறந்தது’ என்ற வரியை ஸ்வர்ணலதாவின் குரலில் கேட்கும் போது உருகாத மனிதர்கள் யாராவது இருந்தார்களென்றால், அவர்களுக்குச் செவிக்கோளாறு என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும். இப்பாடலின் சரணம் பிரபலமான அபூர்வ சகோதரர்கள் தீம் இசையின் இன்னொரு வடிவம். ஆனால் அதையும் நேரடியாக உபயோகிக்காமல் அபூர்வ சகோதரர்கள் தீம் இசையின் தைவதத்தை மாற்றிப்போட்டு நடபைரவி ஸ்கேலிலிருந்து கரஹரப்ரியா ஸ்கேலுக்கு மாற்றியிருப்பார் இளையராஜா. ஸ்வர்ணலதா சரணத்தில் அந்த தைவதத்துக்குத் தரும் அழகே தனிதான்.

நண்பர் சீமான் நெருக்கமான நண்பர்களுடன் இருக்கும் போதெல்லாம் ‘ஆத்தோரம் தோப்புக்குள்ளே’ என்னும் நாட்டுப்புறப் பாடலை அருமையாக அனுபவித்துப் பாடுவார். முதன் முதலில் அவர் இயக்கிய ‘பாஞ்சாலங்குறிச்சி’ என்னும் திரைப்படத்தில் தன் மனதுக்கு நெருக்கமான அந்தப் பாடலை அவர் பயன்படுத்தியிருந்தார். தேவாவின் இசைச்சேர்க்கையில் உருவான அந்தப் பாடலில் ‘அத்தனையும் பொய்யாச்சே ராசா, ஒத்தையில நிக்குதிந்த ரோசா’ என்ற வரியை ஸ்வர்ணலதா பாடியிருக்கும் விதத்தை என்னவென்று சொல்வது? கேட்டுக் கேட்டு உருகத்தான் முடியும்.

ஜோடிப்பாடல்களில் ஸ்வர்ணலதா பாடிய பல புகழ்பெற்ற பாடல்களுக்கு மத்தியில் அதிகம் பேசப்படாத ஒரு பாடல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. சமுத்ரப்ரியா ராகத்தில் அமைந்த அந்தப் பாடலை பி.ஜெயச்சந்திரனுடன் இணைந்து பாடியிருப்பார் ஸ்வர்ணலதா. ‘ஜல் ஜல் சலங்கை குலுங்க’ என்று துவங்கும் அந்தப் பாடல் இளையராஜாவின் இசையில் ‘பொண்ணுக்கேத்த புருஷன்’ என்ற படத்தில் இடம்பெற்றிருந்தது. மாயாமாளவகௌளையில் அமைந்த ‘ஆறடிச்சுவருதான்’ என்ற ‘இது நம்ம பூமி’ படப்பாடலை, யேசுதாசுக்கு இணையாக சிறப்பாகப் பாடியிருந்தார் ஸ்வர்ணலதா. இத்தனைக்கும் பல்லவி முடிந்து, முதலாம் சரணமும் முடியும் இடத்தில்தான் யேசுதாசுடன் வந்து இணைவார். ‘ராத்திரி வலம்வரும் பால்நிலா எனை வாட்டுதே’ என்று அவர் பாட ஆரம்பிக்கும் போதே, அத்தனை நேரம் பாடியிருந்த யேசுதாசின் குரலுக்கு மிக அருகில் எளிதாக வந்து சேர்ந்து விடும் ஸ்வர்ணலதாவின் அற்புதக்குரல். இதே ராகத்தில் அமைந்த ‘உடன்பிறப்பு’ திரைப்படத்தில் ‘நன்றி சொல்லவே உனக்கு’என்ற பாடலும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒன்று. மூத்த பாடகியான உமாரமணனுடன் இணைந்து பாடிய இரு பெண்குரல் பாடலான ‘புதுப்பட்டி பொன்னுத்தாயி திரைப்படத்தின் ‘ஊரடங்கும் சாமத்துல’ பாடலும் மிக முக்கியமான ‘ஸ்வர்ணலதா’ பாடல்.

எஸ்.பி.பாலசுப்ரமணியத்தோடு இணைந்து பாடிய சண்முகப்ரியா ராகத்தில் அமைந்த ‘ராஜாதி ராஜா உன் மந்திரங்கள்’ பாடலும் ஸ்வர்ணலதா பாடிய மிக மிக முக்கியமான பாடல்களில் ஒன்று. ஒரு சரணம் மேற்கத்திய ஸ்டைலிலும், இன்னொரு சரணம் முழுக்க நாட்டுப்புற ஸ்டைலிலும் இருக்கும். இதில் நாட்டுப்புற ஸ்டைலில் வரும் சரணம் உச்சஸ்தாயியில் தொடர்ந்து நான்கு ஆவர்த்தங்கள் பாடப்படவேண்டிய ஒன்று. கொஞ்சம் பிசகினாலும் பெருங்குரலெடுத்து கத்துவதைப் போலாகிவிடும். அதை ஸ்வர்ணலதா பாடிய விதத்தைக் கேட்கையில் நமக்கு அது ஒரு வெகு வெகு எளிமையான ஒரு பாடலைப் போல் தோன்றும்.

தனது முப்பத்தியேழாம் வயதில் அகால மரணமடைந்த ஸ்வர்ணலதாவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பண்பலை வானொலி, மற்றும் தனியார் தொலைக்காட்சி நிலையங்கள் அவர் பாடிய எண்ணற்ற பாடல்களை ஒலிபரப்பிக் கொண்டேயிருந்தன. பீம்பிளாஸ் ராக ஆலாபனையுடன் அட்டகாசமாக ஸ்வர்ணலதா பாடியிருக்கும் ‘ஊரெல்லாம் உன் பாட்டுத்தான் உள்ளத்தை மீட்டுது’ என்ற பாடல் மட்டும் அவருக்காகவே அவர் பாடிய பாடலாக எனக்குத் தோன்றியது.

திருமணம் ஆன நாளிலிருந்து தான் வெறுத்து ஒதுக்கிய தன் கணவனை மனம் மாறி ஏற்றுக் கொள்ளும் கர்ப்பிணிப் பெண் ஒருத்தி மகிழ்ச்சியுடன் பாடும் விதமாக அமைந்த அந்த‘குயில் பாட்டு’ என்னுடைய தனிப்பட்ட ரசனையின்படி விசேஷமானப் பாடல். கதைப்படி அந்தப் பாடலை பாடி முடிக்கும்போது அந்தப் பெண் கால்தவறி விழுந்து மரணமடைவாள். அப்பாடலின் முடிவில் நடக்கவிருக்கும் அவளது துர்மரணத்தை முன்கூட்டியே உணர்த்தும் விதமாக இளையராஜா சிவரஞ்சனி ராகத்தில் ஒற்றை வயலினைக் கொண்டு அற்புதமாக அந்தப் பாடலைத் துவக்கியிருப்பார். இனி அந்த வயலினைக் கேட்கும்போதெல்லாம் ஸ்வர்ணலதாவின் அகால மரணத்தைக் குறித்தும் நினைக்காமல் இருக்க முடியாது.

சிறந்த மேடை பேச்சாளர் நெல்லை கண்ணன் அவர்களின் மைந்தர், பாலு மகேந்திரா அவர்களின் உதவி இயக்கனுர், நடிகர் ஆர்யாவின் சொந்த தயாரிப்பான படித்துறை திரைபடத்தின் இயக்கனுர் நண்பர் சுகா அவர்கள் பாடகி சொர்ணலதா அவர்களை பற்றி எழுதிய கட்டுரை ஒன்று

vasudevan31355
15th September 2014, 12:49 PM
இன்றைய ஸ்பெஷல் (72)

சிறிது இடைவெளி விட்டு வந்ததால் இன்றைக்கு மிக அரியதொரு ஆவண ஸ்பெஷல்

இன்றைய 72 ஆவது சிறப்பு ஸ்பெஷல் இதுவரை நீங்கள் காணாதது.

நடிகர் திலகம் நடித்து வெளிவராமல் பாதியின் நின்று போன 'ஞாயிறும் திங்களும்' படத்திலிருந்து ஒரு பாடல்.

http://i169.photobucket.com/albums/u204/ram_msvtimes/MSV%20Photos/admmsvcomposing1A.jpg

அது ஒரு சிறப்பு. அதுமட்டுமல்ல.

வெளியவே வராத அந்தப் படத்தின் 'இன்றைய சிறப்பு ஸ்பெஷல்' பாடலை பற்றிய ' பேசும்பட' ஆவணப் பதிவை இப்போது இணையத்தில் முதன்முதலாகக் காணப் போகிறீர்கள்.

இப்படத்தைப் பற்றி தெரியாத சில தகவல்கள் இதில் உள்ளன. நடிகர் திலகம் நடித்து வெளிவராமல் போனதால் இப் 'பேசும் படம்' இப்படம் பற்றிய இதழில் சில விவரங்களை ஆதாரத்துடன் அறிந்து கொள்ள முடிகிறது.

நடிகர் திலகம் ரசிகர்களுக்கு இந்த ஆவணம் கிடைக்காததொரு பொக்கிஷம். கண்டிப்பாக சேமித்து வைத்துக் கொள்ளவும்.

இப்பாடல் படமான விதத்தைப் பற்றியும், இப்பாடலில் நடித்த கலைஞர்கள் பற்றியும் இந்த ஆவணம் கூறுகிறது.

படம்! ஞாயிறும் திங்களும்

இசை: மெல்லிசை மன்னர்

பாடலுக்கு நடித்தவர்கள்: முத்துராமன், சசிரேகா.

பாடியவர்கள்: எஸ்.வி.பொன்னுசாமி, எல்.ஆர்.ஈஸ்வரி

பாடல் இயற்றியவர்: கண்ணதாசன்.

கதை வசனம்: வலம்புரி சோமநாதன்

இயக்கம்: ஆர்.சடகோபன்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/IMG_0001-8.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/IMG_0001-8.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/IMG_0002-7.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/IMG_0002-7.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/IMG_0003-4.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/IMG_0003-4.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/IMG_0004-3.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/IMG_0004-3.jpg.html)

பாடல் கேட்க அவ்வளவு இனிமை. எஸ்.வி.பொன்னுசாமியும், ராட்சஸியும் சேர்ந்த அபூர்வ கலக்கல்.

இனி பாடலின் முழு வரிகள்

பன்னீர்ப் பூவே
பாதி நிலாவே
பச்சைக் கல்லில் கட்டிய தேரே
பாராயோ என்னை பாதிக் கண்ணாலே

பட்டுப் பட்டுத் தேறிய நெஞ்சை
தொட்டது போதாதோ
பாதிக் கண்ணால் பேதைப்
பெண்ணை சுட்டது போதாதோ
சுட்டது போதாதோ
முள் பூவைத் தொட்டாலும்
பூ முள்ளைத் தொட்டாலும்
நீ பெண்ணைத் தொட்டாலும்
துன்பம் பெண்ணுக்கல்லவோ
நீ பெண்ணைத் தொட்டாலும்
துன்பம் பெண்ணுக்கல்லவோ

பன்னீர்ப் பூவை
பாதி நிலாவை
பச்சைக் கல்லில் கட்டிய தேரை
பாராதே நீ என்னை பாதிக் கண்ணாலே

தத்தி தத்தித் தாவும் பெண்ணைத்
தொட்டது போதாது
தத்தி தத்தித் தாவும் பெண்ணைத்
தொட்டது போதாது
தங்கம் பொங்கும் அங்கம்
எங்கும் சுட்டது போதாது
சுட்டது போதாது
தேன் பாலில் பட்டாலும்
பால் தேனில் பட்டாலும்
யார் யாரைத் தொட்டாலும்
துன்பம் இன்பம் அல்லவோ

பன்னீர்ப் பூவே
பாதி நிலாவே
பச்சைக் கல்லில் கட்டிய தேரே
பாராயோ என்னை பாதிக் கண்ணாலே

கொட்டும் மழையில் சிட்டுப் போலே
கொஞ்சிட வந்தாயோ
கட்டுக் கூந்தல் மெத்தை விரித்து
கைகள் தாராயோ
கைகள் தாராயோ

ஓர் நாளும் வந்தாலும்
அதை நாமும் கண்டாலும்
யார் கூடாதென்றாலும்
நெஞ்சம் கூடும் அல்லவோ

பன்னீர்ப் பூவே
பாதி நிலாவே
பச்சைக் கல்லில் கட்டிய தேரே
பாராயோ என்னை பாதிக் கண்ணாலே


http://www.youtube.com/watch?v=j0zamOEkFFE&feature=player_detailpage

gkrishna
15th September 2014, 01:09 PM
வாசு சார்
இரண்டு மூன்று முறை உங்கள் செல் போன் முயற்ச்சி செய்தேன் . சுவிட்ச் ஆப் செய்து இருந்தது. உண்மை இப்போது தான் தெரிகிறது . என்ன ஒரு இனிமையான பாடல் .வெளி வராத ஒரு படத்தின் பாடலை சிறப்பித்து வெளியிட நமது வாசு அவர்களால் தான் முடியும். நடிகை சசிரேகா பற்றி மேல் தகவல்கள் ஏதும் உண்டா ?

Gopal.s
15th September 2014, 01:15 PM
vasu, What a song!!! One of my favourites. What surprise? Double cheers to you.:-D

gkrishna
15th September 2014, 02:35 PM
இன்றைய ஸ்பெஷல் (72)

நடிகர் திலகம் நடித்து வெளிவராமல் பாதியின் நின்று போன 'ஞாயிறும் திங்களும்' படத்திலிருந்து ஒரு பாடல்.

பாடியவர்கள்: எஸ்.வி.பொன்னுசாமி, எல்.ஆர்.ஈஸ்வரி

பாடல் இயற்றியவர்: கண்ணதாசன்.

கதை வசனம்: வலம்புரி சோமநாதன்

இயக்கம்: ஆர்.சடகோபன்.




Gopal Krishnan RadioMarconi-facebook

நீங்கள் இந்தப் பாடல்களைக் கேட்டதுண்டா? உங்களுக்குத் தெரியுமா, நடிகர் திலகம்+தேவிகா இணையில் உருவான படம் "ஞாயிறும் திங்களும்". பாதியில் நின்று போய்விட்டது. அதற்காக மெல்லிசை மன்னர்கள் இசையில் இரண்டு பாடல்கள் பதிவு செய்யப்பட்டு மிகப் பிரபலமாக, இலங்கை வானொலியில் ஒலிபரப்பப்பட்டு வந்தன. இப்போது ஒலிபரப்பப் படுவதில்லை. எனக்காக அந்த பாடலை ஒலிபரப்பா முடியுமா?
1) "பட்டிலும் மெல்லிய பெண்ணிது" - டி.எம்.எஸ்.சார்+சுசீலா அம்மா
2) "பன்னீர்ப் பூவே பாதி நிலாவே" டி.ஏ.மோதி+எல்.ஆர்.ஈஸ்வரி அம்மா

டியர் வாசு சார்

இப்படி ஒரு விண்ணப்பம் face புக் இல் உள்ளது .இதில் மோதி என்று குறிப்பிட்டு உள்ளார்கள் . நான் பின்னோட்டம் செய்து விட்டேன் அது பொன்னுசாமி என்று உங்களின் சார்பாக

gkrishna
15th September 2014, 02:55 PM
நடிகர் திலகத்தின் செந்தாமரை,,பதிபக்தி திரைப்படங்கள்
உதவி டைரக்ஷன் – ஜி.எஸ்.மகாலிங்கம், ஆர்.சடகோபன்

வாசு சார் /ragavender sir
நடிகர் திலகத்தின் செந்தாமரை திரைபடத்தின் உதவி இயக்கனுர் R.சடகோபன் அவர்கள்தான் ஞாயிறும் திங்களும் திரைப்பட இயக்குனர் R .சடகோபன் அவர்களா ?

Richardsof
15th September 2014, 02:57 PM
அன்பு வணக்கம் நண்பர்களே

சின்ன கண்ணன் சார்
சென்னை - வெலிங்டன் -21.9. 1953 மாலை காட்சி ஒளவையார் படத்திற்கு ரூ.1.25 மூன்று டிக்கெட் a 5.a 6, a 7 அனுப்பி உள்ளேன் .கண்டிப்பாக சென்று பார்த்து வரவும் . அநேகமாக கே. பி. சுந்தராம்பாள் அவர்கள் உங்களை வரவேற்பார்கள் .

கிருஷ்ணா சார்
அருமையான கட்டுரைகள் . பாராட்டுகளுக்கு நன்றி .

வாசு சார்
மறந்தே போய் விட்ட ஒரு பாடலை தக்க ஆவணங்களுடன் , பாடலை பதிவிட்ட உங்களுக்கு நன்றி .

கோபால் சார்
என்ன கொடுமை .இந்த வயதுக்கு மேல் படித்து , உழைத்தது ,முன்னேறி ... எதற்காக ...
அந்த நாட்கள் ... சினிமா சினிமா என்று மோகமாக தினமும் பயணித்து எனக்கு பிடித்தமான வாத்தியார் புகழ் பாடுவதில் ..கிடைக்கும் இன்பம் பேரின்பம் எத்தனை கோடிகள் கிடைத்தாலும்
அதற்கு ஈடாகுமா ? நீங்களும் நம்ம கேஸ் தானே ....ஒ .கு .ஊ . ம .

Richardsof
15th September 2014, 03:00 PM
http://i57.tinypic.com/bexy4z.jpg

Richardsof
15th September 2014, 03:03 PM
1968- CHENNAI - ANNA SALAI - IRANDAVATHU ULAGA TAMIL MAANAADU .

http://i58.tinypic.com/r1lw0l.jpg

Richardsof
15th September 2014, 03:16 PM
THANKS TFM LOVER SIR

http://i871.photobucket.com/albums/ab272/1tfml/1965/IdhayakKamalam.gif

Gopal.s
15th September 2014, 03:19 PM
கோபால் சார்
என்ன கொடுமை .இந்த வயதுக்கு மேல் படித்து , உழைத்தது ,முன்னேறி ... எதற்காக ...
அந்த நாட்கள் ... சினிமா சினிமா என்று மோகமாக தினமும் பயணித்து எனக்கு பிடித்தமான வாத்தியார் புகழ் பாடுவதில் ..கிடைக்கும் இன்பம் பேரின்பம் எத்தனை கோடிகள் கிடைத்தாலும்
அதற்கு ஈடாகுமா ? நீங்களும் நம்ம கேஸ் தானே ....ஒ .கு .ஊ . ம .
அச்சச்சோ,



தலைவா ,உங்களோடு கூட சேர்ந்து ஊறுவதால் தப்பு கணக்கு போட்டுட்டீங்க. நான் பயங்கர படிப்பாளி புள்ளே, workaholic ஆக்கும்.(ஆனால் எதையும் விட மாட்டேன்)

madhu
15th September 2014, 03:19 PM
வெகு நாட்கள் கழித்து இந்தப் பாட்டின் வீடியோ பார்த்தேன். இது அந்தந்த ராகத்தில் பாடப்படவில்லை என்று தோன்றினாலும் பாட்டு என்னவோ அருமை

முத்துராமன் பிரமீளா நடிப்பில் "பெண் ஒன்று கண்டேன்" படத்துக்காக எஸ்.பி.பி. குரலில்...

நீ ஒரு ராகமாலிகை.. உன் நெஞ்சம் என் காதல் மாளிகை.

http://youtu.be/FPcypPogwCA

Richardsof
15th September 2014, 03:25 PM
GOPAL SIR

http://i62.tinypic.com/2ajyjw7.jpg


YOU ARE A GREAT .

madhu
15th September 2014, 03:30 PM
ஏகப்பட்ட பக்கங்கள் ஓடி விட்டன. நாலு நாட்கள் ஒரு பெரிய யுகம் போல ஆயிடிச்சே ! மெதுவாகத்தான் படிச்சு முடிகக்ணும். ( அம்மாடியோ ஒவ்வொரு பதிவும் பெர்ர்ருசா வேற இருக்கு .. )
பரவாலேது.. பெரிய வெல்லக்கட்டியை சுற்றும் சிற்றெறும்பு போலானேன். ( இதை வச்சி நம்ம சிக்கா ஒரு கவிதை எழுதி போடப்போறாராம் .. உஷார் )

gkrishna
15th September 2014, 03:51 PM
அற்புதம் எஸ்வி சார்
இதயகமலம் விளம்பரம்
பார்த்து கொண்டே தூங்கி விட்டேன்
முழித்து பார்த்தால் 'படித்தால் மட்டும் போதுமா '

கேட்டானே ஒரு கேள்வி (நான்) வார்த்தையில் பதில் சொல்ல முடியாமல்
இளைய தலைமுறை படத்தில் இடம் பெறாத ஒரு சூப்பர் பாடல்
வாசு அவர்களிடம் சொல்லி ஒரு பதிவு போட வேண்டும்

gkrishna
15th September 2014, 04:08 PM
மது அண்ணா

மன்னிக்கவும் சொர்ணலதா கட்டுரை மற்றும் சண்டை பயிற்சி நித்தியாநந்தன் கட்டுரை இரண்டும் கொஞ்சம் பெரிய பதிவு. ஆனால் சுருக்க மனம் வரவில்லை. சொர்ணலதா கட்டுரையில் திரு சுகா அவர்கள் சொர்ணலதாவின் அபூர்வ பாடல்களை தெரியபடுத்தி உள்ளார்கள். ராக குறிப்புகளுடன் .

Gopal.s
15th September 2014, 04:20 PM
GOPAL SIR

padithal mattum podhuma


YOU ARE A GREAT .
போதும்பா. படிக்காத பசங்களெல்லாம் ,இந்த காலத்திலேயே புள்ளை குட்டிங்களெல்லாம் படிக்கத்தானேப்பா வெக்கறீங்க?(இதிலே வேறு so and so ஆசியாலே பள்ளியில் முதல் என்ற பீத்தல் வேறு )படிக்காத மேதையாவே வளக்க வேண்டியதுதானே,வெண்ணைகளா?

gkrishna
15th September 2014, 04:28 PM
போதும்பா. படிக்காத பசங்களெல்லாம் ,இந்த காலத்திலேயே புள்ளை குட்டிங்களெல்லாம் படிக்கத்தானேப்பா வெக்கறீங்க?(இதிலே வேறு so and so ஆசியாலே பள்ளியில் முதல் என்ற பீத்தல் வேறு )படிக்காத மேதையாவே வளக்க வேண்டியதுதானே,வெண்ணைகளா?

இப்ப உள்ள பிள்ளைகள் எல்லாம் படித்த போதையாக அல்லவா இருக்கு
ஆனாலும் உங்கள் கமெண்ட் ரசிக்க வைக்கிறது

Gopal.s
15th September 2014, 04:44 PM
இப்ப உள்ள பிள்ளைகள் எல்லாம் படித்த போதையாக அல்லவா இருக்கு
ஆனாலும் உங்கள் கமெண்ட் ரசிக்க வைக்கிறது
நானும் அந்த கால படித்த போதைதான் தலைவா. என்னோட சேர்ந்து சில படிக்காத போதைகளும் லேபல் அடித்ததுண்டு .கூட்டாளியை காட்டி கொடுக்கும் பழக்கம் எப்போதுமே எனக்கு இல்லை.(கூட்டாளியே காட்டி கொண்டால் நான் பொறுப்பில்லை)

gkrishna
15th September 2014, 04:47 PM
http://antrukandamugam.files.wordpress.com/2013/08/rathna-sabash-thambi-1967.jpg?w=249

இவர் தானே mgr நடித்த இதயக்கனி படத்தில் 'நீங்க நல்லா இருக்கணும் ' பாடலில் ஆடி பாடுவார்

gkrishna
15th September 2014, 05:36 PM
தேவ் ஆனந்துக்காக ஏராளமான பாடல்களை முகமது ரஃபி பாடியிருக்கிறார். தேவ் ஆனந்தின் ஹிட் படங்களான ஜுவல் தீஃப், மன் பசந்த், கைடு ஆகிய படங்களில் பல ஹிட் பாடல்களை ரஃபி பாடியிருக்கிறார் ஆனால் பின்னணிப் பாடகரான ரஃபிக்கு தேவ் ஆனந்த், குரல் கொடுத்திருக்கிறார் என்பது மிகச் சிலருக்கு மட்டுமே தெரிந்த செய்தி.

1966-ம் ஆண்டில் வெளிவந்த பியார்மொஹப்பத் படத்தில் முகமது ரஃபி பாடியிருந்தார். அந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த ரஃபிக்காக ஒரு பாடலை தேவ் ஆனந்த் பாடியுள்ளார். இந்தத் தகவலை ரஃபியின் 31-வது ஆண்டு நினைவு நாளில் தேவ் ஆனந்தே தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக டுவிட்டர் பக்கத்திலும் அவர் தகவலை வெளியிட்டுள்ளார். அவர் கூறியுள்ளதாவது: முகமது ரஃபி போன்ற சிறந்த நண்பரை இனி நான் பார்க்க முடியாது. அவர்தான் நம்மை விட்டு மறைந்துவிட்டார். ஆனால் அவரது பாடல்கள் காலத்தால் அழிக்க முடியாதவை. அவரது நினைவு அழிக்க முடியாதவே. அவர் இன்னும் நம்மைச் சுற்றித்தான் இருக்கிறார். அவரது குரலால் இன்னமும் உலகை வளைய வருகிறார்.

ரஃபி மிகச் சிறந்த மனிதர் மட்டுமல்லாமல் அமைதியே உருவானவர்.

பியார்மொஹப்பத் படத்தில் இடம்பெற்ற பாடலை நான் முகமது ரஃபிக்காக பாடினேன். நான் அதுவரை பின்னணிப் பாடல்களைப் பாடியதேயில்லை. இந்தப் படத்தில் வரும் ஒரு பாடலை ரஃபி பாடினார். பாடலுக்கு இடையே வரும் வரிகளை, ரஃபிக்காக நான் பாடினேன் என்று அவர் அந்த டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார்.

இதுமட்டுமல்லாமல் 1960-ல் வெளியான காலா பஜார் படத்துக்காகவும், தேவ் ஆனந்த் பாடியுள்ளார் என்று பாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்தன. தேவ் ஆனந்த் நடித்த ஹரே ராமா ஹரே கிருஷ்ணா படத்தில் இடம்பெற்றிருந்த "தம் மாரோ தம்' பாடல் இன்றளவும் சூப்பர் ஹிட் பாடலாகத் திகழ்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

Thanks to dinamani

http://www.webmallindia.com/img/film/hindi/pyar_mohabbat_1331378676.jpg

Gopal.s
15th September 2014, 05:55 PM
I SONGS REVIEW

Review by : Behindwoods Review Board
Album Release Date : Sep 15,2014
CAST AND CREW
1 of 2
Production: Venu Ravichandran
Cast: Amy Jackson, Vikram
Direction: Shankar
Screenplay: Shankar
Story: Shankar
Music: A. R. Rahman
Background score: A. R. Rahman
Cinematography: P. C. Sreeram
Dialogues: Shankar, Subha
Editing: Anthony
Stunt choreography: Anal Arasu
Dance choreography: Shobi
PRO: Nikhil Murugan
Distribution: Aascar Films

I alias Ai is one of the most expected movies of the year directed by Shankar, starring Vikram and Amy Jackson in the lead roles. The music for the film is by our 'Mozart of Madras' A.R.Rahman
Mersalaayitten
Singers: Anirudh Ravichander, Neeti Mohan
Lyrics: Kabilan

Anirudh’s voice adds color to this thumping song, that'll make your senses go up and down. Its mastering will make you feel the rhythms and the bass strokes, all the way to your lungs. Folk beats with all the possible effects position the song completely international. Violin is A.R’s vintage touch ! Fun filled, innovative, generation X lyrics by Kabilan.
Ennodu Nee Irundhaal
Singers: Sid Sriram, Sunitha Sarathy
Lyrics: Kabilan

‘Adiyey’ fame Sid Sriram pulls of another thriller here with his jazzy voice. Starting of the song is a killer! Piano, flute and the symbols establish the type of song you're going to listen. The sudden break down is then set into a pace by the bass drum. A top class rock song, backed by chorus, sensational rendition and raising octaves. The timpani, electric guitars and sudden change in texture of singing are all sheer genius.
Ladio
Singers: Nikita Gandhi
Lyrics: Madhan Karky

Rahman is one composer who can still sound original, even if going completely western. R n B amalgamated with electronic sounds provide a song that could be boasted off in foreign sea-shore parties. The rapid changes in the tune make it a little abstract. Might require some effort from casual listeners to follow the song.
Pookkalae Sattru Oyivedungal
Singers: Haricharan, Shreya Ghoshal
Lyrics: Madhan Karky
Haricharan's crystal clear voice, Shriya's Hindustani driven singing lead to a chart-buster, here. A song purposefully made to match the locales Shankar might shoot the love song. Harp, Haiku, programmed beats and blues type guitar riff delivers a self-justifying sonata.
Aila Aila
Singers: Aditya Rao, Natalie Di Luccio
Lyrics: Madhan Karky

A strong experimental song with the grand piano, opera singing, carnatic traces, bhangra beats and subtle techno treats. Will definitely need the visuals to experience it better.
Ennodu Nee Irundhaal (Reprise)
Singers: Chinmayee, Sid Sriram
Lyrics: Kabilan

Keeping ‘Ennodu nee irundhal’ harmony, Chinmayee's husky voice and the soul stirring chord progressions from the acoustic guitar combine to give a very soothing composition. The simple first BGM and the basic rhythms make it an easily understandable melody, unlike other Rahman songs that has to grow into you after multiple listens. Late incoming of the male voice creates further impact!
Mersalaayitten (Remix)
Singers: Anirudh Ravichander, Neeti Mohan
Lyrics: Kabilan

Rahman makes this different from the original by making it shorter, adding little more reverb on the voice and overlapping the beats.
Verdict: Rahman & Shankar are back to doing what they do best, churn out chartbusters !
3.5
( 3.5 / 5.0 )

gkrishna
15th September 2014, 05:57 PM
"கான காந்தர்வன்' கே.ஜே.யேசுதாஸின் கலைப்பயணத்துக்கு இது 50-வது ஆண்டு. 1964-ஆம் ஆண்டில் எடுத்து வைத்த அடி, நீலவானம் போல் இன்றும் தொடர்ந்து செல்கிறது. 50 ஆண்டுகள் கடந்த இந்த இசைப் பயணத்தில் ரசிகர்களின் ஆதரவிலும், வணிக வெற்றியிலும் இப்போதும் அவருக்கு முதல் இடம். ஆயிரக்கணக்கான பாடல்கள் ஒவ்வொன்றிலும் எந்த விதமான பாதிப்பும் இல்லாமல் முற்றிலுமாக தன்னாலேயே உருவாக்கப்பட்ட அவரது பாணிக்கு ஒவ்வொரு தமிழ் ரசிகனும் அடிமை. நான்கு சகோதரர்கள், ஒரு சகோதரி இருந்தும் யேசுதாஸþக்கு மட்டுமே சங்கீதம் பயிலும் அனுமதியை தந்திருக்கிறார் அவரது தந்தை ஜோசப். தன் தந்தையின் ""இந்த சுதந்திரம்தான் என் இசைப் பயணத்தின் முதல் உத்வேகம்'' என்பது யேசுதாஸ் பெருமையாக சொல்லும் வார்த்தைகள். ""எதிலும் செயற்கைத்தனங்கள் இருந்தால் ரசிக்க முடியாது. இசையில் அப்படி இருக்கவே கூடாது. ஒரு பூ தானாக மலருவது போல் மலர வேண்டியது பாடல். அது இப்படித்தான் வேண்டும் என்று கட்டளை பிறப்பிக்காதீர்கள்'' என்பது இளம் தலைமுறையினருக்கு யேசுதாஸின் அறிவுரை. உங்களுக்கு பிடித்த பாடகர் யார்? என்ற சமீபத்தில் கேள்வி ஒன்றுக்கு.... யேசுதாஸின் பதில்: ""நடிகர் சந்திரபாபு.''

நன்றி தினமணி கதிர் 14/09/14

Russellmai
15th September 2014, 05:58 PM
கிருஷ்ணா சார்,
எங்க வீட்டுப் பிள்ளை மற்றும் தொழிலாளி படங்களில் நடித்த
அதே ரத்னா தான் இவர்.
கோபு

gkrishna
15th September 2014, 06:01 PM
திருமண விசேஷங்களில் நாதஸ்வரம் வாசிப்பதைப் பார்த்திருக்கிறோம். ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் வாசிக்கப்படும் ராகங்கள் பற்றி பலருக்குத் தெரியாது. அது
குறித்த விவரம்:
மாப்பிள்ளை அழைப்பிற்கு: கல்யாணி, சங்கராபரணம்.
ஜானவாச ஊர்வலத்தில்: தோடி, காம்போதி, கரகரப்பிரியா
திருமண மண்டபத்தில் ( நிச்சயதார்த்தம் நடக்கும் போது): கானடா, அடாணா, பியாகடை.
திருமண நாளன்று காலையில்: பூபாளம்,கேதாரம்
முகூர்த்தத்திற்கு முன்பு: தன்யாசி, காபி நாராயணி
முகூர்த்தம் நடக்கும் போது: நாட்டைக் குறிஞ்சி
தாலிகட்டும் சமயத்தில்: ஆனந்தபைரவி
ஊஞ்சல் நிகழ்ச்சியின் போது: நீலாம்பரி, ஆனந்த பைரவி, குறிஞ்சி.

http://media.dinamani.com/2014/09/14/15.jpg/article2430787.ece/alternates/w460/15.jpg

gkrishna
15th September 2014, 06:02 PM
கிருஷ்ணா சார்,
எங்க வீட்டுப் பிள்ளை மற்றும் தொழிலாளி படங்களில் நடித்த
அதே ரத்னா தான் இவர்.
கோபு

நன்றி கோபு சார்
திடீர் என்று ஏற்பட்ட சந்தேகம்

Russellisf
15th September 2014, 06:14 PM
அன்று வந்ததும் அதே நிலா: தேவிகா - நடிப்புச் சுமைதாங்கி

தமிழ் சினிமாவின் கதைப்போக்கைத் தடம் மாற்றியவர்களில் முக்கியமானவர் ஸ்ரீதர். உணர்ச்சிபூர்வமான கதைகளைப் படமாக்கியது மட்டுமல்ல, நேர்த்தியான திரைக்கதைகளில் தமது கதாபாத்திரங்களைப் பொருத்தியவர் அவர். கதாபாத்திரங்களின் மீது நம்பகத்தன்மையை உருவாக்க மிகப் பொருத்தமான நட்சத்திரங்களை அவற்றுக்குத் தேர்வு செய்தார்.

ஸ்ரீதரின் நம்பிக்கையைப் பெற்ற நட்சத்திரங்களில் ஒருவர் தேவிகா. ஸ்ரீதர் இயக்கிய ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் சோகச் சுமையை ஏற்றி வைத்தது கல்யாண்குமார் – தேவிகா ஜோடி. அந்த இணைக்கு ரசிகர்கள் கொடுத்த இடத்தைப் பார்த்த இயக்குநர் ஸ்ரீதர், அவர்களை அடுத்த ஆண்டே ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் மீண்டும் இணைத்தார். அந்தப் படமும் மாபெரும் வெற்றிபெற்றது. ஸ்ரீதர் இயக்கத்தில் அடுத்து தேவிகா நடித்த ‘சுமைதாங்கி’ படமும் மறக்க முடியாத படமானது.

பாடியது சுசீலாவா? தேவிகாவா?

விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையில் உருவான பல பாடல்கள் காலத்தால் அழிக்க முடியாத அமரத்துவம் பெற்றவை. தேவிகா நடித்த பெரும்பான்மையான படங்களில் இந்த மெல்லிசை மன்னர்களின் பாடல்கள் அமைந்துபோயின. “ நான் பாட வைத்தது சுசீலாவையா இல்லை தேவிகாவையா?” என்று எம்.எஸ்.வி.யே வியந்து கேட்கும் அளவுக்குப் பாடல்களுக்குத் தேவிகா வாயசைக்கிறாரா அல்லது நேரடியாகப் பாடுகிறாரா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு வந்தது. அந்த அளவுக்குச் சிறப்பானதொரு நடிப்பைப் படத்திற்குப் படம் வெளிப்படுத்தினார் தேவிகா.

நாட்டியப் பேரொளி பத்மினியும், நடிகையர் திலகம் சாவித்திரியும் நீயா, நானாப் போட்டியிட்டு வந்த 60களில் தனக்கு யாரும் போட்டியில்லை என்று தனித்து வெற்றிக்கொடி நாட்டியவர் தேவிகா. தெலுங்கு தேசத்திலிருந்து தமிழுக்கு வந்த அவர், இரு மொழிகளிலும் சுமார் 150 படங்களில் நடித்தார். ஒவ்வொரு படத்திலும் தேவிகா என்ற நட்சத்திரத்தின் ஒளிவட்டம் இல்லாமல் கதாபாத்திரமாகக் கூடு பாய்ந்துவிடும் மாயத்தைச் செய்து காட்டினார்.

பானுமதியின் தேர்வு

முதலாளி படத்தில் எளிய குடும்பத்தின் வள்ளி என்ற பெண்ணாகத் தோன்றிய தேவிகாவின் அழகில் சொக்கிப்போனார்கள் அன்றைய ரசிகர்கள். ‘ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே’ என்று டி.எம்.எஸ் கம்பீரமாகப் பாடிய பாடலுக்கு எஸ்.எஸ். ராஜேந்திரன் ரொமாண்டிக் நடிப்பில் பின்ன, அந்தப் பாடலில் தேவிகா காட்டும் வெட்க அழகுக்குக் கொட்டிக் கொடுக்கலாம். அதே படத்தில் வரும் ‘குங்குமப் போட்டுக்காரா..’ பாடலில் காதலனைப் பகடிசெய்யும் சுட்டித்தனம் எந்தப் பெண் நட்சத்திரத்தையும் நினைவூட்டாத தனி வண்ணம் கொண்டது.

“சொன்னது நீதானா” “கங்கை கரைத் தோட்டம்”, “நெஞ்சம் மறப்பதில்லை”, “அமைதியான நதியினிலே”, “அலையே வா... அருகே வா”, “பாலிருக்கும் பழமிருக்கும்”, “கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே”, “இரவும் நிலவும் வளரட்டுமே”, “நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு”, “ சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?” போன்ற பாடல்களுக்கு அவர் காட்டும் முக நடிப்பில் சொக்கிப்போகாத ரசிகர்களே இருக்க முடியாது.

15 வயதில் அறிமுகம்

பிரமீளா தேவி என்ற இயற்பெயருடன் ‘நாட்டிய தாரா’ என்ற தெலுங்குப் படத்தில் 1956-ல் 15 வயதில் அறிமுகமாகியிருந்தார் தேவிகா. அதே ஆண்டு பானுமதியின் கணவர் ராமகிருஷ்ணா தயாரித்து இயக்கிய ‘மணமகன் தேவை’ படத்துக்கு இரண்டாவது கதாநாயகி தேவைப்பட்டார். படத்தின் நாயகன் சிவாஜி. நாயகி பானுமதி. இரண்டாவது கதாநாயகியைத் தேர்வு செய்யும் பொறுப்பை மனைவி பானுமதியிடம் ஒப்படைத்தார் இயக்குநர். அன்று பானுமதியின் சாய்ஸாக இருந்தவர் பிரமீளா தேவிதான். அந்தப் படத்தில் நடித்தபோது பானுமதி தந்த அறிவுரையை ஏற்று நடிகர்

எஸ்.வி. சகஸ்ரநாமம் நடத்தி வந்த ‘சேவா ஸ்டேஜ்’ நாடகக் குழுவில் சேர்ந்தார். சினிமாவில் நடித்துவிட்டு மேடை நாடகத்துக்குச் செல்வதாவது என்று நினைக்காமல் முத்துராமனுடன் இணைந்து நாடகத்தில் நடித்தார். நாடகத்தில் பிரமிளா தேவியைப் பார்த்த பட அதிபர் எம்.ஏ. வேணு முதல் முழுநீளக் கதாநாயகி வாய்ப்பைக் கொடுத்தார்.

முக்தா வி. சினிவாசன் இயக்குநராக அறிமுகமான அந்தப் படத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரன் நாயகனாக நடித்தார். 1957-ம் வருடம் தீபாவளிக்கு வெளிவந்த இப்படம், ஜெமினி - சாவித்ரி நடிப்பில் வெளியான சௌபாக்கியவதி படத்தை வசூலில் தோற்கடித்தது. சிறந்த படத்துக்கான தேசிய விருதும் கிடைத்தது. பிரமிளா தேவி என்ற பெயரையும் தேவிகா என்று மாற்றிக்கொண்டார். அந்தப் படம்தான் ‘முதலாளி’. அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு முன்னணிக் கதாநாயகியாக உயர்ந்த தேவிகா, சிவாஜி கணேசன் ஜோடியாகப் பல படங்களில் இணைந்து நடித்தார். ‘பாவமன்னிப்பு’, ‘பந்தபாசம்’, ‘அன்னை இல்லம்’, ‘குலமகள் ராதை’, ‘ஆண்டவன் கட்டளை’, ‘சாந்தி’, ‘நீலவானம்’, ‘கர்ணன்’ ஆகிய படங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். நீலவானம் படத்தில் அன்று தேவிகாவின் நடிப்பைப் புகழாத பத்திரிகைகளே இல்லை.

குடும்பப்பாங்கு நட்சத்திரம்

கர்ணன் படத்தில் கர்ணம் குருசேஷத்திரப் போர்க் களத்துக்குப் புறப்படும் காட்சியில் மஞ்சள் நிறப் பட்டாடையில் நீராடிய கூந்தலைத் தளையவிட்டபடி தேவிகா வரும் அழகே தனி. ஆனால் அந்தக் காட்சியில் தேவிகா காட்டும் தவிப்பு இன்று பார்த்தாலும் பதறவைக்கும். நடிகர் திலகத்தோடு மட்டுமல்ல ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ஆர். உள்ளிட்ட அன்றைய முன்னணிக் கதாநாயகர்கள் பலருடனும் இணைந்து நடித்த தேவிகா, எம்.ஜி. ஆருடன் ‘ஆனந்த ஜோதி’ என்ற ஒரே ஒரு படத்தில் நடித்திருந்தார். அதில் சிறுவன் கமலஹாஸன் நடித்திருந்தார்.

இயக்குநர் பீம்சிங்கிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய தேவதாஸுக்கும் தேவிகாவுக்கும் காதல் பிறந்தது. 1972-ம் ஆண்டு வாழ்விலும் இணைந்தது இந்த ஜோடி. தேவதாஸ் - தேவிகா தம்பதியின் ஒரே மகள் நடிகை கனகா.

தனது கணவரை இயக்குநர் ஆவதற்காக ‘வெகுளிப்பெண்’ என்ற படத்தைச் சொந்தமாகத் தயாரித்தார் தேவிகா. அம்மா கதாபாத்திரங்களில் நடிக்க தேவிகாவுக்கு வாய்ப்புகள் வந்துகொண்டே இருந்தன. ஆனால் கடைசிவரை கதாநாயகியாகவே வாழ்ந்து கடந்த 2002-ல் மறைந்த தேவிகா, குடும்பப் பாங்கான நாடகத் தன்மை மிகுந்த கதைகளில் நடிப்புச்சுமை மிகுந்த கதாபாத்திரங்களைத் தன் தோள்களில் தாங்கிய சுமைதாங்கியாக வலம் வந்தார்.

Courtesy the hindu tamil

gkrishna
15th September 2014, 06:19 PM
நடிகையர் திலகத்தின் அந்த நாள் ஞாபகம்! 09.11.1975

நடிகையர் திலகம் சாவித்திரி நடிக்க வந்து 25 வருடங்களாகிவிட்டன. இந்த 1975... அவருக்கு வெள்ளி விழா ஆண்டு. அவரைப் பாராட்டி விரைவில் ஒரு விழா நடத்த இருக்கிறார்கள். அந்தக் காலம் எப்படி, இந்தக் காலம் எப்படி? சாவித்திரி சொல்கிறார்.

நான் நடிக்க வந்தபோது...
''நான் 1950-ல நடிக்க ஆரம்பிச்சேன். நான் நடிக்க வந்தபோது, இத்தனை 'புரொடக்ஷன்’கள் இல்லை. வந்த புதுசுலயே நான் எட்டுப் படங்கள்ல நடிச்சேன். சேர்ந்தாற் போல எட்டுப் படங்களில் ஒரு ஆர்ட்டிஸ்ட் நடிக்கிறது அப்போது எல்லாம் பெரிய காரியம். அதோட அப்போ வந்த எட்டுப் படங்களும் இப்போ வர்ற 40 படங்களுக்குச் சமம்... எல்லாவிதத்திலும்தான்!''

மூணு மாதம் ரிகர்சல்!
''நான் நடிச்ச படங்களில் எல்லாம் கதைதான் பிரதானம். முழுக்கக் கதை வசனம் எழுதிடுவாங்க. பிறகு, எல்லா ஆர்ட்டிஸ்ட்டுகளையும் ஆபீஸுக்கு வரச் சொல்லி இரண்டு, மூணு மாசம் ரிகர்சலில் இருப்போம்.

http://www.vikatan.com/av/2012/04/mzuwmd/images/p67.jpg

இப்போ உள்ள நிலைமை? திடீர் புதுமுகங்கள் நாற்காலியைக் கையோடு கொண்டுவந்து மூலையில் போட்டு உட்கார்ந்துகொள்ள வேண்டியது. இன்னும் சில பேர் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்பதுபோலக் கையில் ஒரு ஆங்கிலப் புத்தகத்தை வைத்துக்கொண்டு 'படிப்பது’. யாராவது, எதாவது கேட்டால், 'எங்களுக்கு எந்தவித வம்பும் தேவையில்லை’ என்று 'ஸ்டாக் பதில்’ ஒன்றைச் சொல்லிவிடுவது!''
எங்களுக்குக் கற்றுத்தருகிறார்கள்!
''அப்போதெல்லாம் ரிகர்சல் பண்ணிட்டுத்தான் செட்டுக்குள் நுழைவாங்க. இதனால், எல்லோருடைய போர்ஷனும் எல்லோருக்கும் மனப்பாடமாக இருக்கும்.

இப்போ?
எல்லாமே 'ஆர்ட்டிஃபிஷியல்’. நடிப்பு முக்கியமாப் படலை. ஒவ்வொரு சீனுக்கும் என்ன ஹேர் ஸ்டைல், என்ன டிரெஸ் சேஞ்ச் பண்றதுங்கிறதுதான் முக்கியமான விஷயமாப்போயிடுச்சு.
முன்பெல்லாம் புதுமுகம்னு வந்தா, முதல்ல ஸ்க்ரிப்ட்டைக் கொடுத்துடுவாங்க. ரிகர்சல் பண்ணிக்கிட்டு ரெடியா இருக்கணும்.
இப்போ வந்திருக்கிற 'திடீர்’ ஆர்ட்டிஸ்ட்டுகள் மேக்கப் போட்டுக்கிட்டு நேரே செட்டுக்கு வந்துடுறாங்க. உள்ளே நுழையும்போதே 'ஷாட் ரெடியா?’னு கேட்டுட்டே நுழையறாங்க. எங்களைப் போன்ற அனுபவம் உள்ள பெரிய நட்சத்திரங்கள் அமர்ந்திருந்தால், ஒரு மரியாதை கூடக் கிடையாது. சிலர் எங்களுக்கே 'இப்படி டயலாக் சொல்லுங்க... அப்படி டயலாக் சொல்லுங்க’னு கத்துத்தர்றாங்க!''

http://www.vikatan.com/av/2012/04/mzuwmd/images/p67a.jpg

'நான் சிவாஜி அண்ணனோடு நடிக்கும்போது 'யார் ஸ்டுடியோவில் முதலில் இருப்பது’ என்று எங்களுக்குள் போட்டி இருக்கும். அப்படித் தொழில்ல அக்கறைகொண்ட நட்சத்திரங்களை இப்ப படவுலகில் விரல்விட்டுத்தான் எண்ண வேண்டி இருக்கு.
அந்தக் காலத்துல தயாரிப்பாளர், டைரக் டர்னா எவ்வளவு நடுக்கம் தெரியுமா? கேமரா மேன் நிக்கச் சொன்னார்னா, அவர் 'உட்காரு’னு சொல்ற வரைக்கும் நாங்க உட்கார மாட்டோம். ஆனா, இப்போ இருக்கிற புதுமுகங்கள், 'கேமரா லைட் நம் மீது விழும்போது எழுந்து நின்றுகொள்ளலாம்’ என்று உட்கார்ந்துவிடுகிறார்கள்.

ஐஸ் பாக்ஸ் முன்னே, நடிகை பின்னே!

இப்போ புதுமுகங்கள் கார்ல வந்தா, உடனே கார்லருந்து இறங்கி வர மாட்டாங்க. முதல்ல ஐஸ் பாக்ஸ் வரும். அடுத்தது மேக்கப் பாக்ஸ் வரும். அதுக்கு அடுத்தது நாற்காலி வரும். இதெல்லாம் வந்த பிறகுதான், ஆர்ட்டிஸ்ட் மெதுவாக இறங்கிவருவார்.
எங்களுக்கென்று தனியாக நாற்காலி கொண்டுவரும் பழக்கத்தை முதன்முதலில் ஆரம்பித்தவர்களே நானும் நாகேஸ்வரராவும்தான். தயாரிப்பாளர்களுக்குத் தொந்தரவு கொடுக்கக் கூடாது என்றுதான் இதை ஆரம் பித்தோம். இப்படித் தனியாக நாற்காலி கொண்டுவருவதற்கு நாங்கள் முதலில் எப்படிப் பயந்திருக்கிறோம் தெரியுமா? இப்போதோ எல்லாமே சர்வ அலட்சியமாக இருக்கிறது!''

நல்ல விஷயங்களே இல்லையா?

முன்பெல்லாம் நாங்கள் நடிக்கும்போது, செட்டுக்கு வெளியே எல்லோருமாகச் சேர்ந்து சிரித்துப் பேசிக்கொண்டு இருப்போம். ஆனால், 'ஷாட் ரெடி’ என்றதும் அந்த மூடுக்கு வந்து விடுவோம். இவர்களுக்கு ஷாட்டுக்கு முன்பே அந்த 'மூடு’க்கு வரத் தெரியாது. அழுகிற சீன்கள் வந்தால்கூடப் பெரிய கொண்டை போட்டுக்கிட்டு, அமர்க்களமா டிரெஸ்பண்ணிக் கிட்டு வந்து நிக்கறது... டைரக்டர் 'ரிகர்சல் பாருங்கம்மா’னு சொன்னா, 'அதெல்லாம் டேக்கிலே பார்த்துக்கறேன் சார்’னு சொல்றது... டேக் எடுக்கும்போது டயலாக் சொல்லத் தெரியாம முழிக்கிறது... டைரக்டரைப் பார்த்து, 'அடுத்த தடவை கரெக்டா சொல்றேன் சார்’னு அசடு வழியறது... இதைத்தான் இப்போ வர்ற புதுமுகங்கள் செஞ்சுட்டு இருக்காங்க. இந்த லட்சணத்துல இவங்க எங்களுக்கு டயலாக் சொல்லித் தர்றாங்களாம்!''

தியேட்டரில் படம் பார்ப்பேன்!
''சாதாரணமாக நான் தியேட்டர்களில் படம் பார்ப்பதைத்தான் விரும்புவேன். ஏனென்றால், அப்போதுதான் ரசிகர்களுடைய உண்மையான கருத்துக்களை அறிந்துகொள்ள முடியும். யாராவது தனியாகப் படம் போட்டுக்காட்டினால், நான் போவது ரொம்பவும் அரிது. அப்படிப் பார்க்கப் போனால், ஒரு சீன் நல்லாயில்லேன்னா 'என்னங்க இது... இந்த சீனை இப்படி எடுத்திருக்கீங்களே’னு வெளிப்படையாகக் கேட்டுவிடுவேன். சில பேர் இதை விரும்ப மாட்டாங்க. இதனாலேயே நான் போறதில்லை. நான் நடிச்ச படங்களைப் பார்க்கிறபோது, எந்தெந்த இடத்தில் என்னென்ன தப்புப் பண்ணியிருக்கேன்னும் பார்ப்பேன்.
இப்போ இருக்கிற சில ஆர்ட்டிஸ்ட்டுகள் 'ஆஹா, என்னமா நாம நடிச்சிருக்கோம்’னு தங்களைத் தாங்களே பாராட்டிக்கிறாங்க!''

வதந்திகள் கிளம்பும் இடம்!
''ஒரு காலத்துல நான் குண்டா இருந்தேன். அது என்னுடைய ரசிகர்களுக்குப் பிடிக்கல. வாஸ்தவம்தான். அதை நானும் ஒப்புக்கிறேன். பிறகு, நடுவுல ஜான்டிஸ்ல படுத்து இளைச்சுப் போயிட்டேன். இப்போ 'ஃப்ளூ’ வந்து ரொம்ப இளைச்சுப் போயிருக்கேன். இளைச்சுப்போனா லும், 'சாவித்திரிக்கு என்னமோ வியாதி’னு ஒரு வதந்தி.
இந்த மாதிரி வதந்திகள் கிளம்பற இடம் எது தெரியுமா? பாண்டி பஜார். ரொம்ப மோசமான இடம். சினிமாவில் சான்ஸ் கிடைக்காத சில பேர்வழிகள் இங்கே அரட்டை அடித்துக்கொண்டு கிளப்பிவிடுகிற சங்கதிகள்தான் வதந்திகளாக உருவாகின்றன!''
உத்தரவுகள் போட்டதில்லை.
''நான் ஒரு படத்தில் நடிச்சிட்டு இருந்தபோது, ஒரு புதுமுகத்தை என்னோடு நடிக்கிறதுக்கு அழைச்சிட்டு வந்தாங்க. இதைக் கேள்விப்பட்ட என் பெரியப்பா, 'புதுமுகமா, வேண்டாம். நிறைய டேக் எடுக்க வேண்டி இருக்கும். இதை நீ ஏத்துக்காதே’ என்று என்னிடம் சொன்னார். 'பெரியப்பா! நானும் ஒரு காலத்தில் புதுமுகமா இருந்தவதான்... ஞாபகம் வெச்சுக் குங்க’னு பெரியப்பாகிட்ட சொல்லி, பிறகு அந்தப் புதுமுகத்துக்கும் தைரியம் கொடுத்தேன். யாருக்கும் கெடுதல் செய்யணும்கிற எண்ணம் எனக்குக் கிடையாது.
எங்க காலத்துல 'இந்த ஆர்ட்டிஸ்ட்டைப் போடு, அந்த ஆர்ட்டிஸ்ட் வேண்டாம்’ என்ற உத்தரவுகள் எல்லாம் இருந்தது இல்லை. இப்போ சொல்லவே வேண்டாம்.

என்ன தைரியம்?
இப்போ வர்ற படங்களுக்கு கதாநாயகிகள் 'கிளாமரா’ இருந்தாப் போதும். ஜீன்ஸ், பெல்பாட்டம், மினி ஸ்கர்ட் எல்லாம் போட்டாப் போதும். நான் நடிச்ச வரை பாவாடை, தாவணி, புடவை இவ்வளவு தான் எங்களுக்குத் தெரியும். அதான் எங்க லிமிட்!
ஒருநாள் திடீர்னு தயாரிப்பாளர் ஒருத்தர், 'ஸ்டன்ட் படம் ஒண்ணு எடுக்கப்போறேன். நடிக்கிறீங்களா?’னு கேட்டார். நானே முன் கோபக்காரி... எனக்குக் கோபம் வரக் கேட்கவா வேண்டும்? என்னைப் பார்த்து இந்தக் கேள்வியைக் கேக்கிறதுக்கு உங்களுக்கு என்ன தைரியம்? இந்த மாதிரி ரோலுக்கு விஜயலலிதா, ஜோதிலட்சுமி இருக்காங்க... போட்டுக்கங்க’னு சொல்லி, ஒரு கப் காபி கொடுத்து அனுப்பிவைத்தேன்!''

Thanks to Vikatan 09/11/1975

gkrishna
15th September 2014, 06:19 PM
Thanks yukesh sir

venkkiram
15th September 2014, 08:26 PM
I SONGS REVIEW

Review by : Behindwoods Review Board
( 3.5 / 5.0 )

நேற்றுதான் ஒரு அன்பருக்கு இங்கே கட் அண்ட் காப்பி செய்யவேண்டாம் என அறிவுரை சொன்னதாக நினைவு. அது ஆறி அடங்குவதற்குள் தானாகவே அந்த வேலையை செய்துவிட்டீர்கள். இந்த முரண்தான் உங்களிடத்தில் காணப்படும் காமெடிகளில் முக்கியமான ஒன்று. இங்குள்ள பெரும்பாலோனோர்கள் இங்கே உரையாடும் பாடல்களின் காலம் மற்றும் ரசனை வேறு. ஆனால் தானும் ஒரு மெர்சலான இளைஞன் என வலிந்து நிர்ணயிப்பதாக தற்போது வந்த 'ஐ' படத்தின் பாடல் விமர்சனத்தை அதுவும் தான் கேட்காமல் மிகவும் மலிவான இசைவிமர்சனத்திற்கு பெயர்போன Behindwoods இடத்திலிருந்து அப்படியே காப்பி செய்வதன் நோக்கம்தான் என்ன? அப்படத்தை பற்றி உரையாட அதற்கென பல திரிகள் உள்ளது. அங்கே சென்று பேசலாமே? இங்கே வருகைதரும் எத்தனை நபர்கள் நீங்கள் கொடுத்த அப்பதிவினை வாசித்து உங்களுடன் உரையாடப் போகிறார்கள் என நினைக்கிறீர்கள்? ? சரி..கட் & காப்பிதான் செய்கிறீர்கள்.. முடிவாக நீங்களும் அந்தப் பாடல்களை கேட்ட பட்சத்தில் அதைப்பற்றிய உங்களின் அபிப்ராயம் என்னவென்றாவது சொல்லலாம். அதுவும் கிடையாது. நான் முன்னரே சொன்னதுபோல உங்களின் ஒவ்வொரு பதிவிலும் ஒருவித மறைபொருள் இருக்கிறது.

chinnakkannan
15th September 2014, 08:43 PM
///If you return in the evening here are a few veNNila songs for you:// கண்டிப்பாக முயற்சிக்கிறேன் ராஜ்ராஜ் சார்..:)

கிருஷ்ணா ஜி.. ஸ்டண்ட் மாஸ்டர் நித்யானந்தம் பதிவு நன்று.. எனக்கு டிஷ்யூமில் வரும் – பேர் பாடியுடன் ஜீவாவின் உடலை வரைய ஓவிய மாணவிகள் தயாராக நின்றிருக்க- அவர் சட்டையைக் கழட்டியதும் எல்லா மாணவ மாணவிகள் அழுவதைப்பார்த்து ஹீரோயின் சந்தியா திகைத்துத் திரும்பப்பார்த்தால் ஹீரோ ஜீவாவின் உடம்பு ரணகளமாய் – வெட்டுக்காயத் தழும்புகள் நிறைய தையல்களுடன் கொஞ்சம் ரத்தமும் வந்து இருக்கும்.. ஹீரோயின் திகைத்து என்னப்பா ஆச்சு..;ஜீவா..அய..இதுக்குப் போய் அழுவாங்களா.. இதான் என் தொழிலு..இது பாருங்க இது ரஜினியோட ஒரு ஃபைட்ல நடிச்சப்ப போட்ட தையலு – எனச் சொல்லும் காட்சி தான் நினைவுக்கு வந்தது..

ஸ்வர்ணலதா – சுகாவின் பதிவும் ஓகே.. சுகாவின் தாயார் சன்னிதி படித்திருக்கிறீர்களா.. விகடனில் ஒரு தொடர் எழுதினார் அது என்னவோ மனதில் ஒட்டவில்லை..பட் படித்துறை படம் வரவே இயலாமல் போனது ஒரு சோகம் தான்..

வாசு ஜி..72வது இடுகை ஞாயிறும் திங்களும் படமும்படம்பற்றிய தகவலும் பாடலும் எனக்குப் புதிது.. முதல் தடவையாகக் கேட்கிறேன் பன்னீர்ப்பூவே பாதி நிலாவே.. அவ்ளோ ஓஹோ என்று சொல்ல முடியாது..ஓ.கே தான்..ஒருவேளை நிறைய தடவை கேட்டால் பிடிக்கலாம்.. மிக்க நன்றி..இந்தப்பாடலுக்கும்.. அப்புறம் இன்னொரு நன்றி..காலையில் சொல்ல மறந்துவிட்டேன்..

எஸ்.வி. சார் டிக்கெட்களுக்கு ஒரு தாங்க்ஸ்.. அது என்ன 3 டிக்கட்..(மதுண்ணாவும் ராஜேஷூம் சொல்லிட்டாங்களா!) அகெய்ன் உங்கள் பதிவுகளுக்கும் ஒரு ஓ..

ஹப்பாடி.. ஒருவழியா ஹோம் ஒர்க் முடிச்சாச்சு..அடடா இல்லியே..சரி ஆரம்பிக்கிறேன்..:)

chinnakkannan
15th September 2014, 08:50 PM
கிருஷ்ணா ஜி ரொம்ப நாள் ஆச்சா….. மறந்து போச்சு… மறுபடியும் கேட்க வழியிருக்கான்னு பார்க்கணும் (அட உறவுகாரங்க கல்யாணத்தைச் சொன்னேங்காணும்..!)


திருமண விசேஷங்களில் நாதஸ்வரம் வாசிப்பதைப் பார்த்திருக்கிறோம். ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் வாசிக்கப்படும் ராகங்கள் பற்றி பலருக்குத் தெரியாது. அது
குறித்த விவரம்:
மாப்பிள்ளை அழைப்பிற்கு: கல்யாணி, சங்கராபரணம்.
ஜானவாச ஊர்வலத்தில்: தோடி, காம்போதி, கரகரப்பிரியா
திருமண மண்டபத்தில் ( நிச்சயதார்த்தம் நடக்கும் போது): கானடா, அடாணா, பியாகடை.
திருமண நாளன்று காலையில்: பூபாளம்,கேதாரம்
முகூர்த்தத்திற்கு முன்பு: தன்யாசி, காபி நாராயணி
முகூர்த்தம் நடக்கும் போது: நாட்டைக் குறிஞ்சி
தாலிகட்டும் சமயத்தில்: ஆனந்தபைரவி
ஊஞ்சல் நிகழ்ச்சியின் போது: நீலாம்பரி, ஆனந்த பைரவி, குறிஞ்சி.

http://media.dinamani.com/2014/09/14/15.jpg/article2430787.ece/alternates/w460/15.jpg

rajeshkrv
15th September 2014, 09:03 PM
Gopal sir, i've posted some LRE songs and other songs as well. my obsession with isaiyarasi is obvious and i will continue to post only her songs .. then and there i will post other songs which impressed me .

madhu
16th September 2014, 04:44 AM
வெகு நாட்களுக்குப் பிறகு இந்தப் பாடலில் காணொளியை யூடியூபில் கண்டேன்.
அதைப் பகிர்ந்து கொள்ள வந்தேன்.

சகோதர-சகோதரி பாடிய டூயட் பாடல்களில் இதற்கும் ஒரு தனி இடம் உண்டு. அந்தக் கால
வெற்றி ஜோடி மோகன் பூர்ணிமா ஜெயராம் நடித்தும் பெரிய வெற்றி பெறாத படவரிசைகளில்
தீராத விளையாட்டுப் பிள்ளையும் ஒன்று ( லேடஸ்டாக அதே பெயரில் விஷால் நடித்து
வெளிவந்த படமும் பெரிசா போகவில்லையாமே )

ஆனால் இந்தப் பாட்டும் அதன் இரண்டு வெர்ஷன்களுமே ஒரு மென்மையான சாரலாக
எப்போதும் நனைத்துக் கொண்டே இருக்கும்

மலர்களே இதோ இதோ வருகிறாள் தலைவி

http://youtu.be/skUdSnkEihk


http://youtu.be/ahgvYlHw7I8

Gopal.s
16th September 2014, 07:27 AM
Gopal sir, i've posted some LRE songs and other songs as well. my obsession with isaiyarasi is obvious and i will continue to post only her songs .. then and there i will post other songs which impressed me .

Fair Enough. But talented youngsters like you should ponder into many versatile subjects. That's why I requested.Pl.Continue as you like.I am also a devotee of Suseela.

vasudevan31355
16th September 2014, 07:44 AM
மதுஜி!

நல்ல அரிய பாடல்களுக்கு நன்றி!

'மலர்களே! இதோ... இதோ வருகிறாள் தலைவி' அப்படியே தாலாட்டும் சுகம்.

அதே போலத்தான் 'நீ ஒரு ராக மாளிகை' பாடலும். ஆனால் முத்துராமனை நினைத்தால்தான் பயம்.

இதே டைப்பில் 'எதிர்பார்த்தேன்....இளங் கிளியைக் காணலியே' என்ற பாலாவின் பாடல் ஒன்று உண்டு. 'அந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை' என்ற படத்தில் வரும் இந்தப் பாடலில் பாலாவின் பல்வேறு மாயா ஜாலங்கள் நிகழ்த்தும் அந்த குரல்வளம் நம்மை சொர்க்கத்தின் விளிம்புகளுக்கு அழைத்துச் செல்கிறது. (தொடத் தொட தள்ளித் தள்ளிப் போனா அமர்க்களம் பாலா)

வரிகளும் தேன் மதுரம். ('ஊருக்குள்ளே தீப்பிடிச்சா ஓடையும் உண்டு தீ அணைக்க... உள்ளத்திலே நெருப்பெரிஞ்சா உடனே வரணும் நீ அணைக்க')

இது போன்ற நல்ல பாடல்கள் கபில்தேவ் போன்ற மண்களுக்கு அமைந்ததுதான் மிகப் பெரிய வருத்தம். பாலாவின் உழைப்பு அனைத்தும் வீணடிக்கப் பட்டிருக்கிறது இப்பாடல். சுலக்ஷணா படுத்திருப்பார். கபில்தேவ் ஒரு எங்கோ ஒரு இடத்தில் உணர்வுபூர்வமே இல்லாமல் பாடிக் கொண்டிருப்பார். அய்யகோ! கொடுமைடா சாமி. எவ்வளவு உணர்ச்சிபூர்வமான பாடல் அது!

காதுகளுக்கு மட்டும் ஏற்படும் இனிமை காட்சிகளில் ஏற்படாதது சோகமே!


http://www.youtube.com/watch?v=_XqP2KxUpe0&feature=player_detailpage

Gopal.s
16th September 2014, 07:45 AM
நேற்றுதான் ஒரு அன்பருக்கு இங்கே கட் அண்ட் காப்பி செய்யவேண்டாம் என அறிவுரை சொன்னதாக நினைவு. அது ஆறி அடங்குவதற்குள் தானாகவே அந்த வேலையை செய்துவிட்டீர்கள். இந்த முரண்தான் உங்களிடத்தில் காணப்படும் காமெடிகளில் முக்கியமான ஒன்று. இங்குள்ள பெரும்பாலோனோர்கள் இங்கே உரையாடும் பாடல்களின் காலம் மற்றும் ரசனை வேறு. ஆனால் தானும் ஒரு மெர்சலான இளைஞன் என வலிந்து நிர்ணயிப்பதாக தற்போது வந்த 'ஐ' படத்தின் பாடல் விமர்சனத்தை அதுவும் தான் கேட்காமல் மிகவும் மலிவான இசைவிமர்சனத்திற்கு பெயர்போன Behindwoods இடத்திலிருந்து அப்படியே காப்பி செய்வதன் நோக்கம்தான் என்ன? அப்படத்தை பற்றி உரையாட அதற்கென பல திரிகள் உள்ளது. அங்கே சென்று பேசலாமே? இங்கே வருகைதரும் எத்தனை நபர்கள் நீங்கள் கொடுத்த அப்பதிவினை வாசித்து உங்களுடன் உரையாடப் போகிறார்கள் என நினைக்கிறீர்கள்? ? சரி..கட் & காப்பிதான் செய்கிறீர்கள்.. முடிவாக நீங்களும் அந்தப் பாடல்களை கேட்ட பட்சத்தில் அதைப்பற்றிய உங்களின் அபிப்ராயம் என்னவென்றாவது சொல்லலாம். அதுவும் கிடையாது. நான் முன்னரே சொன்னதுபோல உங்களின் ஒவ்வொரு பதிவிலும் ஒருவித மறைபொருள் இருக்கிறது.

வெங்கி,



நான் மெர்சலான இளைஞன்தான். என் முக நூலில் வா புரியும்.ஐ பற்றி இன்னும் எனக்கு அபிப்ராயம் இல்லை. பிறகு எழுதுவேன். நோக்கமோ ,புண்ணாக்கோ திட்டமிடுதலோ,இல்லைப்பா. நேற்று மேயும் போது கண்ணில் பட்டது,சும்மா மியூசிக் திரிதானே என்று போட்டேன் .



இங்கு எல்லோருமே ,பழமை வாதிகள் ,இசை அறியாதவர்கள் என்று முடிவு கட்டி விடாதே. வாசுவும் ,ராகவேந்தரும் நம்மையெல்லாம் தூக்கி சாப்பிடும் ரசனை கொண்டவர்கள்.



வாசு ,இத்திரியை தொடங்கிய நோக்கம் வேறு. நான் அளிக்க நினைத்த பங்களிப்பு வேறு. (நாங்கள் பேசியுள்ளோம்)கடைசியில் வாசு playing to the gallery(எல்லோரையும் அணைத்து செல்வது.) .70 இன் இசை மட்டும் கேட்டு வளர்ந்த ,அதற்கு மேல் வளராத சிலரால், விஜய பாஸ்கர்,சங்கர்-கணேஷ் தாண்டி செல்லாமல் தவிக்கிறது.சில சமயம் ஒரு படத்தில் 1 வினாடி தலை காட்டிய எக்ஸ்ட்ரா நடிகைகளுக்கு 8 பக்கம்,ராகத்தை ,சங்க நாட்களில் இருந்து அலசினால், பெப்பே, கொஞ்சம் உள்நுழைந்தால் ஊஹும் என்று ஆகி விட்டது. சொன்னாலும் வெட்கமடா ,சொல்லா விட்டால் துக்கமடா என்ற நிலையே.



இதையும் மீறி என்னை இங்கு செலுத்துபவர்களில் தலையாய பங்கு வாசு,ராகவேந்தர்,கார்த்திக்,முரளி,வெங்கிராம்,P oem போன்ற சிலரே.இதையும் மீறி இசையின் பரிமாணங்கள் அலச படும். அதற்கு, நிச்சயம் தகுதியுள்ள நபர்கள் இங்கு உண்டு.

அந்த கால மைதானங்கள் ஞாபகம் வருகிறது. ஒரு பக்கம் கிரிக்கெட் விளையாடி கொண்டிருப்போம்.சிறுவர்கள் கல்பாரி விளையாடுவார்கள். சிலர் கோலி .அங்கு கில்லிதாண்டாவும் இருக்கும். கால்பந்து வேறு ஒரு குழு. அத்தனையும் அந்த குட்டி திடலில் ஒரே சமயம். கிரிக்கெட் விளையாடும் போது ,அவ்வப்பொழுது கில்லி வந்து தாக்கும்.கால் பந்து நெற்றியை பதம் பார்க்கும். திட்டுவதை தவிர வேறு வழி?



அப்படித்தான் திரிகளும். வசீகரமும் அதுதான். வேதனையும் அதுதான்.

vasudevan31355
16th September 2014, 07:54 AM
கோ,

எனக்கு வேறு வழி ஏதும் தெரியல. இப்போதைக்கு இதுதான். முதல் வரியை மட்டும் புடிச்சுக்கோ. மத்த வரிகளெல்லாம் வெங்கிராம் சார் சொன்ன மாதிரி இளைஞர்களுக்கு மட்டுமே.:)


http://www.youtube.com/watch?v=0MCuKxZKYSE&feature=player_detailpage

vasudevan31355
16th September 2014, 07:59 AM
beshaq mandir masjid tode, bullesha ye kahta
beshaq mandir masjid tode, bullesha ye kahta
par pyar bhara dil kabhi na todo is dil me dilbar rahta
jis palde me tule mohabbat
jis palde me tule mohabbat usme chaandi nahi taulna
tauba meri na dholna mai ni bolna
o nahi bolna jaa, mai nahi bolna jaa
o mai nahi bolna jaa, dholna mai ni bolna
tauba meri na dholna mai ni bolna

தேவாவின் ஒரிஜினாலிட்டி டியூனுக்கு ஒரு 'ஓ':)

vasudevan31355
16th September 2014, 08:05 AM
வண்டிப் பாடல்கள்.

நண்பர்கள் சில தினங்களுக்கு முன்னால் வண்டிப் பாடல்கள் வழங்கி கலக்கியிருந்தார்கள்.

இதோ இன்னும் சில.

'சம்சாரம்' படத்தில் 'கட கட கட லொட லொட வண்டி' ஸ்ரீராம் மாட்டு வண்டியிலும், ஹீரோயின் (தெரியல) மற்றும் கோஷ்டியினர் காரிலும். துணை நடிகைகள் முகபாவங்கள் அடி தூள்.

மாடு ரெண்டும் சண்டி... ஓ........வண்டிக்காரன் நொண்டி. மகா ரம்யம்.


http://www.youtube.com/watch?v=yHG_cHfDlIg&feature=player_detailpage

vasudevan31355
16th September 2014, 08:21 AM
வண்டிப் பாடல்கள்

உலகம் பெரிது
சாலைகள் சிறிது
ஒலி கொடுத்தால்
வழி கிடைக்கும்

காக்கி உடுப்புடன், கழுத்தில் மப்ளருடன், அழகான நடிகர் திலக ஓட்டுனர் லாரி ஓட்டிக் கொண்டே பாடும் அற்புத கருத்துள்ள அழகுப் பாடல். நம் பம்மலார் அவர்களுக்கு மிகவும் பிடித்த பாடல்.

'வழிகள் தோறும் தலைகளைப் பார்த்தால் பொதுக் கூட்டம் போல் தெரியுதடா

படைக்கும் தொழிலை கொஞ்சம் நிறுத்திக் கொண்டால் என்ன பரந்தாமா'

படைப்பை கொஞ்ச நாள் நிறுத்தக் கோரும் நடிகர் திலகம்.

அவசியம் பார்த்து மகிழவும்.


http://www.youtube.com/watch?v=lMew-0KiKeY&feature=player_detailpage

RAGHAVENDRA
16th September 2014, 08:40 AM
வாசு சார்
தாங்கள் பங்கு கொள்ளாமல் குறையாக இருந்தது. இப்போது தங்கள் வருகையினால் அது சரியாகி விட்டது.

வண்டி பாடலைத் தலைவர் பாடல் மூலம் கலக்கி விட்டீர்கள்.

இன்னொரு வண்டிப் பாடல்

இல்லறமே நல்லறம் படத்திலிருந்து


http://www.dailymotion.com/video/xf5yjk_ninaikkum-podhe-aha-illarame-nallar_fun

vasudevan31355
16th September 2014, 08:43 AM
வண்டிப் பாடல்கள்

'நானும் கூட ராஜாதானே நாட்டு மக்களிலே
அட நாணம் என்ன வெட்கம் என்ன காசு கேட்பதிலே'

ரயிலில் பாடியபடி பிச்சை எடுக்கும் நாகேஷ். 'புன்னகை' வரவழைக்கும் பொருள் பொதிந்த பாட்டு. ('ஓட்டுப் பிச்சை வாங்க என்கிட்டதானே வரணும்' என்ற ரீதியில் வம்பளந்து பிச்சை எடுப்பார் நாகேஷ்)


http://www.youtube.com/watch?v=HuAQhCtbRpI&feature=player_detailpage

vasudevan31355
16th September 2014, 09:08 AM
வாருங்கள் ராகவேந்திரன் சார். வெற்றிகரமாக 'புதிய பறவை' யை பறக்க விட்டதற்கு தங்களுக்கு வாழ்த்துக்கள். முரளி சாருக்கும் சேர்த்து. கூட்டம் நிரம்பி வழிந்ததைக் கேட்டவுடன் மிக்க சந்தோஷமாய் இருந்தது. வாசு சாரும், கிருஷ்ணா சாரும் விவரித்தார்கள்.

rajeshkrv
16th September 2014, 09:22 AM
கோபால் சார். நான் ஸ்வர்ணலதா, ஈஸ்வரியம்மா மற்றும் ஜிக்கி, லீலா, சுஜாதா பாடல்களை தந்துள்ளேன்
இசையரசி பாடல்கள் நிறைய வரத்தான் செய்யும்..


வாசு ஜி வாங்கோ வாங்கோ


உன்னிமேனன் எனக்கு மிகவும் பிடித்த குரல். இன்னும் நிறைய பாடியிருக்க வேண்டியவர்..

இதோ தேவா அவரை வித்தியாசமாக பயன்படுத்தினார்

சுஜாதாவும் சரி உன்னிமேனனும் சரி அருமையாக பாடியிருப்பார்கள்
அதுவும் வரிகளும் ரொம்ப அழகாக இருக்கும்

http://www.youtube.com/watch?v=SXiNUpuz50Y

gkrishna
16th September 2014, 09:31 AM
வாசு சார்

காலையில் கலை கட்டியாச்சு .
சில தலைகளும் தளைகளும் களைகளும் தொந்தரவு தான்.
நடிகர் திலகத்தின் 'உலகம் பெரிது ' பாடல் வரிகளை போல் தான்
பரந்தாமனும் படைப்பை நிப்பாட்ட போறது இல்லை
இங்கும் பதிவு எழுதாமல் யாரும் இருக்க போறது இல்லை
தோட்டம் அனைத்தும் எனக்கே சொந்தம் என்பது சுயநல கூட்டம்
இதுவும் கவிஞர் வரிகள் தான்

வண்டினு சொல்றதுக்கு பதிலாக வாகன பாடல்கள் என்று சொல்வோம்
ms பிள்ளை படத்தில் ஒரு பாடல் நினைவு
நாகேஷ் பாடுவார் - 'குபு குபு நான் எஞ்சின் டக டக நான் வண்டி '
இங்கேயும் வண்டினு தான் வருது .

காலையில் நல்ல பாசுரம் சொல்ல முடியலே . எங்கே பாசுரம் பாடும் தென்றல் சி கே சார்

gkrishna
16th September 2014, 09:39 AM
வாசு சார்
அந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை இயக்கம் r சுந்தர்ராஜன் என்று நினைவு
கபில்தேவ் சுலக்ஷனா நடித்து வந்த படம்
இந்த கபில்தேவ் என்ன ஆனார் என்று தெரியவில்லை
இவர் 1 நிமிஷம் வர நடிகர் இல்லை. இந்த படத்தின் ஹீரோ
பின்னாளில் ஒரு பேய் படத்தில் வந்த நினைவு .(அதிசய மனிதன் )
செந்தில் காமெடி கொஞ்சம் பேசப்பட்ட படம்
ஒரு பெரிய கல்லை தூக்கி கொண்டு எலி செய்ய புறபடுவார்
பிறகு நிலவை காட்டி 'இதே நிலவை நேற்று எங்க ஊரில் பார்த்தேன் '
அப்படின்னு வரும் . மாமா இசை
இளையராஜா கூட முறைத்து கொண்டு இயக்கனுர் சுந்தர்ராஜன்
மாமா, மெல்லிசை மன்னர்,தேவேந்திரன் என்று ரவுண்டு அடித்து விட்டு பின்னர் மீண்டும் ராஜாவிடம் அடைக்கலம்.
இன்னொரு பாட்டு நினைவு உண்டு 'சுமை தாங்கி' என்று ஆரம்பிக்கும்

gkrishna
16th September 2014, 09:47 AM
மணியோசையும்
கை வளையோசையும்
ஆனந்த ராகம் சொல்ல
நான் கேட்கிறேன்
உன்னை ஆகாயம் பூமி எங்கும்
நான் பார்க்கிறேன்

இதுவும் அந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை பாலாவின் நல்ல பாடல்

gkrishna
16th September 2014, 10:01 AM
இயக்கனுர் ர.சுந்தர்ராஜன் 80 களில் அந்த வேளையில் தமிழ் சினிமாவில் புதுமையையும் தரத்தையும் புகுத்திய மகேந்திரன், பாலுமகேந்திரா,ஆபாவாணனின் (உடனே ஒரு கூட்டம் ஆபாவாணனை எப்படி மகேந்திரன்,பாலு மகேந்திரா கூட சேர்கலாம் அப்படின்னு கிளம்பும் ) அறிவு ஜீவித்தனம் இல்லாத ஆனால் எப்படியான படம், எவருடன் சேர்ந்தெடுத்தால் ஓடும் என்ற பட்டுணர்வைக் கொண்டு ஜெயித்தவர். . இவரின் வெற்றிக்கு இசைஞானி எவ்வளவு உறுதுணையாக இருந்தாரோ அவ்வளவுக்கு கவுண்டமணியும் இருந்துள்ளார் என்பதை மறுக்க முடியாது.

ஆனால் ஆர்.சுந்தரராஜனின் பலம், இளையராஜா மட்டுமன்றி மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் (சரணாலயம் உள்ளிட்ட பல படங்கள்), கே.வி.மகாதேவன் (அந்த ராத்திரிக்கு சாட்சியில்லை, தூங்காத கண்ணின்று ஒன்று), தேவேந்திரன் (காலையும் நீயே மாலையும் நீயே), தேவா (என் ஆசை மச்சான் உள்ளிட்ட பல படங்கள்) என்று இவர் சேர்ந்து பணியாற்றிய ஒவ்வொரு படங்களிலும் அட்டகாசமான பாடல்களைத் தருவித்திருப்பார். எண்பதுகளிலே இளையராஜா கோலோச்சிக்கொண்டிருந்த வேளை, "எதிர்பார்த்தேன் இளங்கிளியை காணலையே", "சுமைதாங்கி ஏன் இன்று",'மணி ஓசையும் '(அந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை), "எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை" (சரணாலயம்) , "ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்"(காலையும் நீயே மாலையும் நீயே) போன்ற பாடல்களை அன்றைய இலங்கை வானொலி ரசிகர்கள் மறக்கமாட்டார்கள். கூடவே தேவாவுடன் இவர் இணைந்து பணியாற்றிய என் ஆசை மச்சான் திரைப்படத்தில் வந்த பாடல்களையும் கூட.

இணையத்தில் திரட்டிய தகவல்கள்

gkrishna
16th September 2014, 10:03 AM
ராஜேஷ் சார்

வாங்க ரொம்ப நாளாக ஆச்சு உங்க கூட பேசி
நேற்று உங்க face புக் படித்த நினைவு .
தமிழ் திரை இசையில் ஆண் குரல்கள் னு ஒரு பதிவு படித்தேன்
மிக அருமை.

vasudevan31355
16th September 2014, 10:03 AM
கிருஷ்ணா சார்,

சண்டைப் பயிற்சியாளர் மாஸ்டர் நித்தியானந்தன் அவர்களின் விரிவான பேட்டி அருமை. இவ்வளவு விவரமான விவகாரமான விஷயங்கள், சண்டைப் பயிற்சியாளர்களின் போராட்ட வாழ்க்கை தளம் வேறு எந்த கட்டுரையிலும் வந்ததாக நினைவில்லை.

இளைய திலகம் பிரபு சண்டைக் காட்சிகளில் அற்புதமாகப் பங்களிப்பதில் முதன்மையானவர் என்று மாஸ்டர் கூறியிருப்பது நமக்கெல்லாம் பெருமை.

தாங்கள் பதிவிட்ட கட்டுரையைப் படித்தவுடன் எனக்கு ஒரு விஷயம் ஞாபகத்திற்கு வந்து விட்டது.

ஒருமுறை பிரபு என்னை நீதியின் நிழல் ஷூட்டிங்கிற்கு வரச் சொல்லி இருந்தார். வாகினி ஸ்டுடியோவில். அப்போது அப்படத்திற்காக ஒரு சண்டைக் காட்சி எடுத்தார்கள். அப்போது இளைய திலகத்தின் பங்களிப்பு என்னை பிரமிக்க வைத்தது. மாடி போல ஒரு செட் போட்டு அங்கு பிரபு சண்டை காட்சியில் நடித்துக் கொண்டிருந்தார். துணை ஸ்டன்ட் நடிகர்கள் ஒவ்வொருவரும் பிரபு அடிக்கையில் குட்டிக் கரணம் அடித்து மேலிருந்தவாறு கீழே அடுக்கப்பட்டிருந்த பஞ்சு மூட்டைகளில் விழுந்து எழுந்தது பரிதாபமாக இருந்தது. ஒவ்வொருவரியும் பிரபு தனியே அழைத்து 'அடிபட்டு விட்டதா' என்று அக்கறையுடன் விசாரித்துக்கொண்டே இருந்தார். (நடுவில் மறக்காமல் அவருடைய உதவியாளர் பாபு மூலம் எனக்கு கூல் ட்ரிங்க்ஸ், காபி என்று அனுப்பிக் கொண்டே இருந்தார்) அந்த ஒரு சண்டைக் காட்சியை 3 மணி நேரத்துக்கும் மேலாக எடுத்தார்கள். எனக்கே போரடித்துவிட்டது. ஆனால் அதுதானே பயிற்சியாளர்களுக்கும், ஸ்டன்ட் நடிகர்களுக்கும் பிழைப்பு.

அது போல ஒருமுறை ஏ.வி.எம் ஸ்டுடியோவில் 'ஜூடோ' ரத்னம் மாஸ்டரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது நான் அவரிடம் 'ஜூடோ சார்! தற்சமயம் யார் சிறப்பாக சண்டைக் காட்சியில் நடிக்கும் ஹீரோ? என்று கேட்டேன். அதற்கு அவர் கொஞ்சமும் யோசியாமல் 'பிரபுதான் தம்பி. அது சிங்கக் குட்டியாச்சே' என்றார். எனக்கு பெருமை பிடிபடவில்லை.

இப்படி பல மாஸ்டர்கள் பிரபு சண்டைக் காட்சிகளில் அற்புதமாகப் பரமளிக்கக் கூடியவர் என்று பேட்டிகளிலும் படித்திருக்கிறேன்.


'சிம்ம சொப்பனம்' என்ற அருமையான நடிகர் திலகத்தின் படம். அதில் அப்பா நடிகர் திலகத்தின் ஆணை கேட்டு எதிரிகளுடன் சண்டையிடப் புறப்படுவார் பிரபு. நடிகர் திலகத்தின் மனைவி கே.ஆர். விஜயா "ஒரு அப்பாவே பிள்ளையை இப்படி தூண்டி சண்டைக்கு அனுப்பலாமா.. அவனுக்கு ஏதாவது அடிபட்டால் என்னாவது? நீங்களும் துணைக்குப் போகக் கூடாதா?" என்று கோபிப்பார்.

அதற்கு நடிகர் திலகம் கொஞ்சம் கூட ஈகோ இல்லாமல் "என்னைவிட சண்டையில் அவன் பெட்டர்" என்பாரே பார்க்கலாம்!

எத்தனை பேர் இதுமாதிரி ஒத்துக் கொள்வார்கள் அது உண்மையாய் இல்லாவிட்டாலும் கூட.

உத்தமபுத்திரன், வணங்காமுடி, தங்கை, ராஜா, நீதி, தங்கைக்காக, தர்மம் எங்கே, எங்க ஊர் ராஜா, திருடன், என் தம்பி, நேர்மை, இருதுருவம், தங்கச் சுரங்கம், நீதிபதி, தீர்ப்பு, சங்கிலி, புதையல் என்று பல படங்களில் சண்டைக் காட்சிகளில் பின்னியெடுத்த நடிகர் திலகம் அகந்தை இல்லாமல் இப்படி ஒரு வசனம் தந்திருப்பார்.

வழக்கம் போல எல்லாப் பதிவுகளையும் போல சண்டைக்காட்சி பதிவும் நடிகர் திலகத்திடமே முடிவடைகிறது பார்த்தீர்களா?

நல்ல பதிவுக்கு நன்றி கிருஷ்ணா சார்.


http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/1a46fda5-edab-428c-81ad-4c8bb4cde521.jpg


'தர்மம் எங்கே' படத்தில் நடிகர் திலகம் பங்கு பெற்ற அபாரமான சண்டைக் காட்சி இதோ.

கொடுங்கோலாட்சி புரியும் கொடியவனின் கொட்டத்தை அடக்க எரிமலையென எழுகிறான் சேகர். ஊருக்காகப் போராடும் அவன் வழக்கம் போல ஊர்மக்கள் ஆதரவின்றி வில்லனின் ஆட்களால் கைது செய்யப்பட்டு சிறைக்குக் கொண்டுவரப் படுகிறான். சிறைக்காவலரும், யானை பலம் கொண்ட பயில்வான் ஒருவனும் சேகரைப் புரட்டி எடுக்கின்றனர். எரியும் தீயில் அவன் முகத்தைப் பொசுக்குகின்றனர் எதிரிகள். அனல் தாங்க மாட்டாமல் அலறுகிறான் அவன். பொறுமைக்கும் எல்லை உண்டல்லவா! எரிமலையாகி வெடிக்கிறான். எதிரிகளைத் தூக்கிப் போட்டுப் பந்தாடுகிறான். துவம்சம் செய்கிறான். சிறையிலிருந்து தப்பித்து சென்று ஆற்றில் குதித்தவன் ஒரு நாடோடிக் கும்பலால் காப்பாற்றப்பட்டு, கொடியவனுக்கெதிராக கொடி பிடித்து, புரட்சிப்படை அமைத்து, வில்லனை தவிடு பொடியாக்கி, தானே ஆட்சியையும் பிடிக்கிறான்.

புரட்சி வீரனாக நம் சிங்கம். சிறையில் வீரர்கள் அடைக்க வருகையில் ஆரம்பிக்கும் அனல் கக்கும் சண்டைக்காட்சி. சங்கிலியால் பிணைக்கப்பட்டு சிறைக்குக் கைதியாய் கொண்டு வரப்படும் போதே அந்த நடையிலேயே உக்கிரம் தெரிய ஆரம்பித்து விடும். மூன்று காவலர்களும், ஒரு பயில்வானுமாய் சுற்றி நின்று மாறி மாறித் தாக்க, ஒவ்வொரு அடிக்கும் நம்மவர் அலறித் துடிப்பது பார்ப்பவர் அடிவயிற்றைக் கலங்க வைக்கும். வாயில் ரத்தம் ஒழுக, கழுத்தில் சங்கிலியுடன் அவர் போராடும் போது மெய் சிலிர்க்கும். அடிகளைப் பொறுத்துக் கொண்டு ஒரு கட்டத்தில் தாங்க மாட்டாமல் ஒரு காவலனை கழுத்தை விடாப்பிடியாய் இறுக்கி (அவன் இறக்கும் வரை) மற்ற காவலர்கள் கண்மண் தெரியாமல் அடிக்கும் அவ்வளவு அடிகளையும் தாங்கிக் கொண்டு, தன் காரியத்தை வெற்றி வெறியுடன் செய்து முடிப்பது அமர்க்களம். பின் சங்கிலியை ஆயுதமாக்கி சண்டமாருதமாய் சண்டையிடும் போது இன்னும் அமர்க்களம். பயில்வானும், ஒரு காவலனும் தன்னை அப்படியே குண்டுக்கட்டாகத் தூக்கி எரிந்து கொண்டிருக்கும் நெருப்பில் முகத்தையையும், முடியையும் பொசுக்குகையில் அனல் பட்ட புழு போல அவர் அலறும் அலறு பாறை நெஞ்சையையும் பதைபதைக்க வைத்து விடும். முடியெல்லாம் கருகி, முகமெல்லாம் பொசுங்கி முகத்தில் அவர் காட்டும் வலிகளின் பிரதிபலிப்பு பிரமாதப் படுத்திவிடும். அந்த அவலட்சண ஒப்பனை ரத்தக் கண்ணீர் ராதாவை ஒத்திருக்கும். பின் பழி உணர்ச்சி மேலிட அதே சங்கிலியால் ஆசாத் பயிவானை மலையைக் கட்டி இழுப்பது போல பிணைத்து அதே நெருப்பில் தன்னை பொசுக்கியது போலவே பொசுக்கிப் பழி தீர்ப்பது கைத்தட்டல்களை அள்ளும். பின் தப்பித்து செல்கையில் அங்கு சங்கிலியால் தூணில் கட்டப்பட்டு நிற்கும் ஒரு அப்பாவிக் கைதியை அவ்வளவு வலி வேதனைகளிலும் விடுவித்து விட்டுச் செல்வது அவரது மனிதாபிமானத்தைக் காட்டும். அவருக்குள்ளிருக்கும் மானுடத்தை வெளிப்படுத்தும்.

மிக மிக அற்புதமான சண்டைக்காட்சி. வாயடைத்துப் போகச் செய்யும், மூக்கின் மேல் விரல் வைக்க செய்யும் கலக்கல் பைட். இந்த சண்டைக்காட்சியில் பெரும்பாலும் டூப்பே போடாமல் அவ்வளவு பிரமாதப்படுத்தியிருப்பார். (ஒரு சில லாங் ஷாட்களில் மட்டும் டூப்)

மற்ற ஸ்டன்ட் கலைஞர்கள் அவரை அலாக்காகத் தூக்கும் போதும், மற்றும் நெருப்பின் அருகில் அவர் முகத்தைக் காட்டும் போதும் எப்படி இவரால் இவ்வளவு துணிச்சலாக நடிக்க முடிகிறது என்ற கேள்விக்கணை நம் மனதில் எழாமல் இருக்காது. முகமும், உடலும் வேறு நெருப்பில் சிதைந்தது போல ஒப்பனை வேறு. அதையும் maintain செய்ய வேண்டும். மேலும் இந்த சண்டைக்காட்சியின் பிரதான அம்சம் சுறுசுறுப்பு... விறுவிறுப்பு... எதிர்பாராத பல நிகழ்வுகள் திடுமென திருப்பங்களை ஏற்படுத்தி நம்மை இருக்கையின் நுனிகளில் இருக்க வைத்துவிடும். A.D வெங்கடேசன், M.K சாமிநாதன், திருவாரூர் தாஸ் என்ற மூன்று ஜாம்பவான்களின் சண்டைப்பயிற்சி, நடிகர் திலகத்தின் ராட்சஷ ஒத்துழைப்பு, ஒளிப்பதிவாளரின் ஒப்பில்லா ஒளிப்பதிவு இந்த மூன்றும் இந்த சண்டைக்காட்சியை எங்கோ தூக்கிக் கொண்டு போய் நிறுத்தி விடடது

இந்த அமர்க்களமான சண்டைக் காட்சியை நம்மில் பலர் மறந்திருக்கக் கூடும். சிலர் காணாமலும் இருந்திருக்கலாம். இப்படம் சற்று சரியாகப் போகாததினால் எடுபடாமலும் போய் இருக்கலாம். இப்போது பாருங்கள் எப்பேர்பட்ட சண்டைக் காட்சிகளில் நம் இதயதெய்வம் புகுந்து விளையாடி இருக்கிறார் என்று!


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=9-HE9HfJ1Eo



அதே போல திரு.எம்.ஜி.ஆர் அவர்கள் 'அன்னமிட்டகை' படத்தில் பங்கு கொண்ட இந்த சண்டைக் காட்சி என்னை மிகவும் கவர்ந்த ஒன்றாகும். மிக அருமையான சிலம்பாட்டம். சுறுசுறுப்பு, விறுவிறுப்பு நிறைந்த அற்புதமான சண்டைக்காட்சி. சுற்றிலும் எதிரிகள் சூழ்ந்திருக்க நடுவில் எம்.ஜி.ஆர் அவர்கள் புயலென சிலம்பம் சுழற்றி புகுந்து விளையாடுவது ரொம்பவே நம்மை ரசிக்க வைக்கிறது.


http://www.youtube.com/watch?v=0Daa00DQxHs&feature=player_detailpage

gkrishna
16th September 2014, 10:09 AM
வாசு சார்

பார்த்தீங்களா ரசனை எப்படி ஓத்து போகிறது . இளைய திலகம் ,நடிகர் திலகம்,மக்கள் திலகம் சண்டை காட்சிகள் தொகுப்பு அருமை
எத்தனை stunt மாஸ்டர்கள் 'ஜூடோ ரத்னம்,ஆம்பூர் பாபு,மாடக்குளம் தர்மலிங்கம்,அழகிரிசாமி ,ஷ்யாம் சுந்தரம்,வெங்கடேசன்,திருவாரூர் தாஸ் ,சூப்பர் சுப்பராயன்,'

madhu
16th September 2014, 10:14 AM
கபில்தேவ் சுலக்ஷனா நடித்து வந்த படம்
இந்த கபில்தேவ் என்ன ஆனார் என்று தெரியவில்லை
இவர் 1 நிமிஷம் வர நடிகர் இல்லை. இந்த படத்தின் ஹீரோ
பின்னாளில் ஒரு பேய் படத்தில் வந்த நினைவு .(அதிசய மனிதன் )


இதயக் கோவிலில் வந்த "கபில்தேவ்" இவர்தான் என்று நினைக்கிறேன்

http://youtu.be/5RounWCOTPg

madhu
16th September 2014, 10:17 AM
நானும் புது பாட்டு பதியப் போகிறேன்.

ஜீப் வண்டி பாட்டு ஒண்ணு

உண்ணி மேனன் குரலில் ஜெய் ஆகாஷ் நடித்த கிச்சா வயது 16 பாட்டு

சில நேரம் சில பொழுது சோதனை வரும்பொழுது
நம்பிக்கையால் மனம் உழுது வானில் உன் பெயரெழுது

http://youtu.be/zapHOoT8Wzw

இன்னொண்ணு சத்யராஜ், ஸ்ரீவித்யா நடித்து டி.எம்.எஸ்., சுசீலா குரல்களில் தாய் நாடு படப்பாடல் ( இது சாரட்டு வண்டிதானே )

ஒரு முல்லைப் பூவிடம் கொஞ்சும் பூமணம் தஞ்சம் ஆனது கண்ணா

http://youtu.be/LdECHPLLqqE

gkrishna
16th September 2014, 10:25 AM
தேங்க்ஸ் மது சார்

என் ஜீவன் பாடுது னு ஒரு படம் சுந்தர்ராஜன் இயக்கம்
இதிலும் கபில்தேவ் வருவார் என்று நினைவு

பல நல்ல பாடல்கள் நிறைந்த ராஜாவின் இசை
70 களில் வந்த படம் அல்ல
86-87 காலகட்டத்தில் வந்த படம் என்று நினைவு

vasudevan31355
16th September 2014, 10:29 AM
ராஜேஷ் சார்/ கிருஷ்ணா சார்,

ஒரு நெகிழ்ச்சியான நினைவு. மறைந்த நம் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட பாடகி சொர்ணலதா அவர்களின் ஒவ்வொரு நினைவு தினத்தையும் எங்கள் நெய்வேலியில் உள்ள இன்னிசைக் கச்சேரி இசைக் கலைஞர்கள் மறக்காமல் நினைவு அஞ்சலி போஸ்டர் அடித்து நகரம் முழுது ஒட்டி அந்த இசைக் குயிலுக்கு பெருமை சேர்ப்பார்கள். இந்த 4 ஆவது ஆண்டு நினைவு தினத்திற்கு அவர்கள் அடித்துள்ள போஸ்டர். நிஜமாகவே பாராட்டப்பட வேண்டிய விஷயம்தானே!

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/IMG_20140914_132004.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/IMG_20140914_132004.jpg.html)

gkrishna
16th September 2014, 10:30 AM
வாசு சார்
தர்மம் எங்கே நிழல்படம் அந்த கோரமான நடிகர் திலக ஒப்பனை கொஞ்சம் பயமாய் இருந்தது
இப்போது தான் லோட் ஆயிற்று . எப்பேர்பட்ட நடிகன் .
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் வஞ்சனை செய்யோம்
என்ற தமிழ் பழமொழி படி வாங்கின காசுக்கு வஞ்சனை செய்யாமல் செய்யும் தொழிலே தெய்வம் னு வாழ்ந்த நடிகன்

gkrishna
16th September 2014, 10:36 AM
வாசு சார்

பாடகி சொர்ணலதா நினைவு சுவரொட்டி .

இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்.இது போல் யார் என்று ஊர் சொல்லவேண்டும்

திரை உலகில் இருந்த காலமோ ஏறத்தாழ 20-25 ஆண்டுகள் .மறைந்து 4 ஆண்டுகள் ஆகி விட்டன. ஆனாலும் நினைவு கூர்ந்து வெளியிட்ட நெய்வேலி ரசிகர்களும் அதை எங்களுக்கு எல்லாம் தெரியவேண்டும் என்ற எண்ணம் கொண்டு வழங்கும் நல்ல உள்ளத்திற்கு சொந்தகாரர் வாசு தவிர வேறு யார் இருக்க முடியும் . நன்றி நன்றி

தமிழ் ரசிகர்களின் ரசனை கொண்டாடப்பட வேண்டிய ஒன்று

gkrishna
16th September 2014, 10:49 AM
வாசு சார்

சண்டை காட்சி பற்றிய உங்கள் பதிவு நிறைய நினைவுகளை கிளறி விட்டது .

ரந்தாவா நடிகர் திலகம் ஸ்டைல் fight ,கவர்ச்சி வில்லன் கே கண்ணன் உடன் இடும் சங்கிலி சண்டை (வெரி ஸ்மார்ட் னு கண்ணன் கத்தியை எடுத்த உடன் NT ஒரு பார்வை பார்த்து கொண்டு கண்ணன் மேல் பாயும் காட்சி ). சற்று நேரம் கழித்து சண்டையில் கத்தி வாசலில் வந்து விழுவது அதை பாலாஜி காலால் அமுக்குவது . பின்னாடியே வந்து கலைச்செல்வி 'சும்மா பார்த்துட்டு நிக்கறீங்களே போய் காப்பாத்த கூடாதா ?' சொல்லும் போது உடன் பாலாஜி 'இன்னைக்கு காப்பதிடலாம் ஆனால் வேறு ஒரு சந்தர்ப்பம் யாரும் இல்லாத நேரத்தில் ராஜா என்ன செய்வான் ' அவனே தனி ஆளாய் சமாளிக்கட்டும் .
(வசனம் AL நாராயணன் )

அதே போல் மக்கள் திலகத்தின் உசுவா ஜஸ்டின் உடன் fight ,குருசாமி நம்பியார் உடன் புத்த விகார சண்டை ,மனோகர் உடன் இடைவேளைக்கு முன் வரும் சண்டை 'நாயோடு திறமையை அவங்க பார்க்கட்டும் என்னோட திறமையை நீங்க பாருங்க ' உடனே இடைவேளை கார்ட் , 'இந்த படத்தின் பாடல்களை கொலம்பியா இசை தட்டுகளில் கேட்டு மகிழுங்கள்' என்ற வாசகத்துடன் . அவளுவுதான்

திரை அரங்க கழிவறைகளிலும்,டீ ஸ்டால்களிலும் அந்த சண்டை பற்றிய பேச்சு தான்

vasudevan31355
16th September 2014, 11:05 AM
http://a1.mzstatic.com/us/r30/Music/v4/34/ce/f1/34cef19a-6468-0cdc-3212-c598dfc3baa9/cover326x326.jpeg

கிருஷ்ணா சார்,

'நித்திரையில் ஒரு ராத்திரி' என்ற மலையாளப் படத்தில் கபில் தேவ். கிறித்துவப் பாதிரியாராக வந்து இளம் பெண்களைக் கெடுத்து கொலை செய்வார்.

அதைத்தான் நீங்கள் அதிசய மனிதன் என்று குறிப்பிட்டிருக்க வேண்டும்.

chinnakkannan
16th September 2014, 11:10 AM
ஹாய் குட்மார்னிங்க் ஆல்..:)

தீராத விளையாட்டுப் பிள்ளை முன்னால் பார்த்திருக்கிறேன் மதுண்ணா.. ஃபார் ஒன்லி பூர்ணிமா ஜெயராம்..அந்தப் பாடல் நினைவில்லை..
இன்னொரு படம் கூட உண்டு..மோகன் “நடித்த” படம் அந்த சில நாட்கள்..அதிலும் பூர்ணிக்க்யூட்டி தான்..

வந்துட்டேன் க்ருஷ்ணா ஜி.. வென்ணிலா பத்தி எழுதலாம்னு நினச்சு பாசுரம் எழுதிட்டேன்..ம்ம் கொஞ்சம் கொஞ்சம் கோபால் சார் போஸ்டிங்க்ஸ்
படிச்சதுனால் வந்த விளைவாக் கூட இருக்கலாம் அதுபத்தி அப்புறம்..

வாசு சார் எதிர்பார்தேன் இளங்கிளியக் காணலியே நல்ல பாட்டு..எனக்கு ப்பிடிக்கும்.. அப்புறம் ஸ்டண்ட் மேன் அண்ட்ஸ்டண்ட் காட்சிகள்
கொஞ்சம் வேகமாப் படிச்சேன்..வெரி நைஸ் நன்றி.. அப்புறம் நிதானமா படிக்கறேன் (கொஞ்சம் வேலை ஜாஸ்தி உள்ற வரமுடியலை)

மதுண்ணா நேத்திக்கு இந்த கிச்சா வயுசு 16 பாட்டு நினைவுக்கு வந்தது..சேனல் மாத்தறப்ப சிக்கிய ஒரே ஒரு தரம் கேட்டு மனதில் நின்ற பாட்டு..
மறுபடி கேட்க வைத்தமைக்கு நன்றி..(ஜெய் ஆகாஷ்னு தெரியுது படம் தான் தெரியலை..ஈவன் சிம்ரனும் நினைவுக்குவரலை..)

ஆர் சுந்தர்ராஜன் - தூங்காத கண்ணின்று ஒன்று - கொஞ்சம் நல்ல பாடல்கள் கொண்ட படம்.. நீ அழைத்தது போல் ஒரு ஞாபகம் என ரயிலில்
ஹீரோ பாட வேஸ்டாக அம்பிகாவின் மானபங்கக் காட்சி இன்னொரு பக்கம் ஓடும்.. மழையெனும் ..ஸ்வரங்களை நினைத்தே ஜொலிக்குது
என்பது போல் வரும் ஒரு வேகப் பாடல் நன்றாக இருக்கும்.. நான்பாடும் பாடலில் பாடும் வானம்பாடி அப்புறம் பாடவா உன் பாடலை,
பாட்டுக்கள்..அந்தப் படம் இண்டர் வெல் வரைக்கும் ரொம்ப நேச்சுரலாக அவரால் எடுக்கப் பட்டு இருக்கும்..அந்தக்காலத்திலேயே
சிலாகித்ததாக நினைவு.. நன்றி கிருஷ்ணா ஜி



//வாசு ,இத்திரியை தொடங்கிய நோக்கம் வேறு. நான் அளிக்க நினைத்த பங்களிப்பு வேறு.
(நாங்கள் பேசியுள்ளோம்)கடைசியில் வாசு playing to the gallery(எல்லோரையும் அணைத்து செல்வது.) .
70 இன் இசை மட்டும் கேட்டு வளர்ந்த ,அதற்கு மேல் வளராத சிலரால்,
விஜய பாஸ்கர்,சங்கர்-கணேஷ் தாண்டி செல்லாமல் தவிக்கிறது.
சில சமயம் ஒரு படத்தில் 1 வினாடி தலை காட்டிய எக்ஸ்ட்ரா நடிகைகளுக்கு 8 பக்கம்,
ராகத்தை ,சங்க நாட்களில் இருந்து அலசினால், பெப்பே, கொஞ்சம் உள்நுழைந்தால் ஊஹும்
என்று ஆகி விட்டது. சொன்னாலும் வெட்கமடா ,சொல்லா விட்டால் துக்கமடா என்ற நிலையே. // நன்றி கோபால் சார்


//இதையும் மீறி என்னை இங்கு செலுத்துபவர்களில் தலையாய பங்கு வாசு,ராகவேந்தர்,கார்த்திக்,முரளி,
வெங்கிராம்,P oem போன்ற சிலரே.இதையும் மீறி இசையின் பரிமாணங்கள் அலச படும்.
அதற்கு, நிச்சயம் தகுதியுள்ள நபர்கள் இங்கு உண்டு.// மிக்க நன்றி கோபால் சார்..

மீண்டும் வருவேன் உஷார்..

vasudevan31355
16th September 2014, 11:20 AM
கிருஷ்ணா சார்,

நீங்கள் கேட்டிருந்த நடிகை ரத்னா (தொழிலாளி, இதயக்கனி) படம் தேடினேன். என்னிடம் இருந்த 'பேசும் படம்' ஒன்றில் இருந்தது. இது பிரத்யோகமாக உங்களுக்காகவே ஸ்கேன் செய்தேன். என்ஜாய்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/IMG-11.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/IMG-11.jpg.html)

vasudevan31355
16th September 2014, 11:21 AM
இது ஞான ஒளி 'அலேக்' விஜயநிர்மலா ரசிகர்களுக்காக.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/IMG_0001-9.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/IMG_0001-9.jpg.html)

vasudevan31355
16th September 2014, 11:51 AM
கிருஷ்ணா சார்

ரொம்ப எளிதாக 'ராஜா' படத்தில் ராஜாவுடனான கண்ணன் சண்டைக்காட்சியை அருமையாக விளக்கி விட்டீர்கள்.

vasudevan31355
16th September 2014, 11:54 AM
'நெஞ்சமெல்லாம் நீயே' திரைப்படத்தில் நம் எல்லோர் நெஞ்சிலும் நிறைந்த பாடல். வாணியின் மயக்கும் குரலில். ராதா நடிப்பில்.

சங்கர் கணேஷ் இரட்டையரின் அற்புதமான இசையமைப்பில்

'யாரது.... சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது'...


http://www.youtube.com/watch?v=DuNdEXqbBok&feature=player_detailpage

gkrishna
16th September 2014, 12:00 PM
எதிர்பாராத அதிர்ச்சி (இன்ப) :) வாசு சார்

gkrishna
16th September 2014, 12:09 PM
http://vanijairam.lakshmansruthi.com/images/vani_jairam-01.jpg

வாசு சார்

வாணியின் நாத ஒலியை எழுப்பி விட்டீர்கள் .70 களுக்கு பிறகு சங்கர் கணேஷ் இல்லை. அருமையான பாடல் படம் வெளிவந்த ஆண்டு 1983

இந்த நேரத்தில் வைரமுத்து வாணி உரையாடல்

குயிலின் கூட்டில் கொஞ்சநேரம்
- கவிஞர் வைரமுத்து

வெயிலின் நிறம் மஞ்சளுக்கு மாறிக்கொண்டிருந்த ஒரு மாலை நேரம்.

திருமதி வாணி ஜெயராம் அவர்களின் வீட்டு வெளிச்சுவர் தனது நெந்றியில் ''மயூரப்பிரியா'' என்று எழுதி வைத்திருக்கிறது.

மயூரம் என்றால் மயில் என்று பொருள்.

தன் வீட்டுக்கு மயில் என்று பெயர் வைத்திருக்கிறதே ஒரு குயில் என்று மனதுக்குள் ரசித்துக் கொள்கிறேன்.

திரு. ஜெயராம் அவர்களும், திருமதி வாணி ஜெயராம் அவர்களும் புன்னகை ராகம் பாடி வரவேற்கிறார்கள்.

அந்த வரவேற்பறையின் அமைதி சுமந்த அழகு, வெயிலோடு அழைத்து வந்த வெப்பத்தையெல்லாம் வெளியே அனுப்பிவிடுகிறது.

விருதுகளை எல்லாம் கண்ணாடிச் சுவர்களுக்குள் அடுக்கி வைத்திருக்கும் அழகு..

தனது கலையுலக வாழ்க்கையைத் தொடங்கி வைத்த அமரர் வசந்த்தேசாயின் படத்திற்கு மாலையிட்டு வைத்திருக்கும் மாண்பு...



சுவரில் வழியில் வர்ணக் கலவைகளால் நதியின் திருப்பத்தில் நகரும் ஒரு படகு...

அந்த அறையெங்கும் தூய்மைக்கு அங்குலம் அங்குலமாக அலங்காரம் செய்து வைத்திருக்கும் அந்தப் பாங்கு...

இவையெல்லாம் அந்தக் கோடை வேளையில் மனசுக்குள் மெல்லிய மல்லிகைக் காற்றாய் வீசின.

''உங்களுடைய மூலப்பெயருக்கு ஏற்றவாறே வீட்டை வைத்திருக்கிறீர்கள்?'' என்று வியந்து போகிறேன். (அவருடைய மூலப்பெயர் கலைவாணி)

எனது பொய்யில்லாத புகழ்ச்சியை அவர் தனது புன்னகையால் அங்கீகரித்துக் கொள்கிறார்.

வீட்டைச் சுற்றிக் காட்டுகிறார்.

ஒவ்வோர் அறையிலும் தூய்மையும் அழகும் அரசோச்சுகின்றன.

அங்கே ஆடம்பரத்தின் விசுவருபமில்லை.

அழகு அடக்கமாக இருக்கிறது.

வீட்டை கட்டியதிலும் அதைக் கட்டிக் காப்பதிலும் உள்ள பெருமை தன் கணவரையே சாரும் என்று பெருமை நுரைக்கப் பேசுகிறார்.

திரு. ஜெயராம் அவர்களின் கலை உள்ளத்தை வணங்கி வாழ்த்துகிறேன்.

அவர்கள் வீட்டுச் சமையலறைகூட அப்போதுதான் துடைத்து வைத்த ஆப்பிள் போலப் பளபளப்பாய் இருக்கிறது.

''உங்கள் வீட்டு ஸ்டவைக்கூட யாரோ கொடுத்த அவார்டைப் போலல்லவா அழுக்குப் படாமல் வைத்திருக்கிறீர்கள்! சமைக்கிறீர்களா இல்லையா?'' என்று சந்தேகத்தோடு கேட்டேன்.

சிரிப்பை அடக்க முடியாமல், அன்று சமையல் நடந்தற்கான சாட்சிகளைக் காட்டினார்.

மாடி அறையில் ஒரு பெரிய சுவரோவியம் ஒட்டப்பட்டிருந்தது.

அது, ஒரு பெரிய வனாந்தரத்தை வரைந்து காட்டியிருந்தது.

அதைப் பார்த்த உடனே மனசு அதற்குள் ஓடி விழுந்து உட்கார்ந்து கொண்டது.

தாகூர் சொன்னதைச் சொன்னேன்.

''எந்த ஒரு ஓவியத்தைப் பார்த்தவுடன் நமக்கு அந்த இடத்திற்குப் போய் உட்கார வேண்டும் என்று தோன்றுகிறதோ அதுதான் சிறந்த ஓவியம்.

எனக்கு இப்போது இந்த ஓவியத்தில் இருக்கிற இந்த மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு எழுத வேண்டும் போலிருக்கிறது'' என்றேன். ஜெயராம் சிரித்தார்.

மீண்டும் வரவேற்பறைக்கு வந்து அமர்ந்தோம்.

வாணி ஜெயராம் : நேற்று சிலோன் ரேடியோவில் 'ஒரு இந்தியக் கனவு' படத்தில் நீங்கள் எழுதிய 'என் பெயரே எனக்கு மறந்து போன' பாடலைக் கேட்டேன்.

சமீபகாலத்துல ரசிக்கற மாதிரி வந்திருக்கும் பாடல்கள்ல இதுவும் ஒன்று.''

நான் : எனக்கும் ரொம்பப் பிடித்த பாட்டு அது. முதன் முதலில் புத்தகத்துக்குள்ளிலிருந்து எடுத்து இசையமைக்கப்பட்ட முதல் புதுக்கவிதைங்கற அந்தஸ்து அந்தப் பாட்டுக்கு உண்டு. எம்.எஸ்.வி. ரொம்ப நல்லா இசையமைச்சிருக்கார். நீங்களும், எஸ்.பி.பியும் ரொம்ப அழகாப் பாடியிருக்கீங்க.''

வாணி ஜெயராம் : ''உங்களுடைய முதல் பாடலே 'இது ஒரு பொன்மாலைப் பொழுது''தானா?

நான் : ''ஆமாம். நான் எழுதி நீங்கள் பாடின முதல் பாட்டு எது தெரியுமா?''

கொஞ்சநேரம் யோசித்துவிட்டு கணவர் ஜெயராமைப் பார்க்கிறார். அவர் என்னைப் பார்க்கிறார்.

நான் : ''மேகமே மேகமே'' தான்.''

ஆச்சரியத்தால் இருவரின் விழிகளும் குரல்களும் உயர்கின்றன.

வாணி ஜெயராம் : ''அப்படியா! அதற்கு முன்பு உங்கள் பாடலை நான் பாடியதேயில்லையா?''

நான் : ''இல்லை. அப்போதுதான் நான் திரையுலகத்திற்கு வந்து கொண்டிருக்கிறேன். அந்தப் பாடல், எண்ணிக்கையில் எனது எட்டாவது பாடலாகவோ அல்லது ஒன்பதாவது பாடலாகவோ இருக்கக்கூடும். உங்களுக்கு 'கஜல்' தெரியும் என்பதால் அந்தப் பாடலைச் சிங்காரித்துவிட்டீர்கள் என்று இசையமைப்பாளர் திரு. சங்கர் (கணேஷ்) என்னிடத்தில் பாராட்டியிருக்கிறார்.''

வாணி ஜெயராம் : ''நம்மைவிட நமது இசைக்கு ஆயுள் அதிகம். இந்த மாதிரி ஜீவனுள்ள பாடல்கள்தான் காலத்தைக் கடந்து நிற்கும்.

நான் : ''மல்லிகை என் மன்னன் மயங்கும்', 'ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை ராகம்', 'மேகமே.. மேகமே' போன்ற பாடல்களைப் பாடிவிட்டு எப்போதாவது நீங்க கிளப் டான்ஸ் பாட்டுப் பாடுவது மனசுக்கு ரொம்பக் கஷ்டமாயிருக்கு மேடம். குத்துவிளக்குல சிகரெட் பற்ற வைக்கற மாதிரி இருக்கு.''

தான் அமர்ந்திருந்த சோஃபா அதிரச் சிரிக்கிறார்.

இன்றைய இசையுலகத்தைப் பற்றிய சின்னச் சின்னச் சர்ச்சைகள், அங்கங்கே சில ஆதங்கங்கள், மற்றவர்களைப் பற்றிய உயர்ந்த அபிப்பிராயங்கள், 'நெஞ்சமெல்லாம் நீயே' படத்தில் வரும் 'யாரது' என்ற பாடலைப் பற்றிய சிலாகிப்புகள், இவற்றோடு அந்தத் தாயுள்ளத்தின் அன்பையும், உபசரிப்பையும் ஏற்றுக் கொண்டு விடைபெற்றேன்.

திரும்பி வரும்போது அநத்ச் சகோதரியின் குரல் என்கூடவே வந்து கொண்டிருக்கிறது.

- கவிஞர் வைரமுத்து (உடனிருந்து கேட்டு உரையாடலை எழுதியவர் : சுதா முருகேசன்)

madhu
16th September 2014, 12:25 PM
தேங்க்ஸ் மது சார்

என் ஜீவன் பாடுது னு ஒரு படம் சுந்தர்ராஜன் இயக்கம்
இதிலும் கபில்தேவ் வருவார் என்று நினைவு

பல நல்ல பாடல்கள் நிறைந்த ராஜாவின் இசை
70 களில் வந்த படம் அல்ல
86-87 காலகட்டத்தில் வந்த படம் என்று நினைவு

இதோ மனோவின் குரலில் மௌனம் ஏன் மௌனமே... என் ஜீவன் பாடுது படத்தில்

கபில்தேவ், கார்த்திக், சரண்யா நடித்த பாடல் காட்சி

http://youtu.be/JIaxLRfpXBw

gkrishna
16th September 2014, 12:53 PM
யு ட்டுயுப் வலையை கலைத்து தேடி களைத்து ஓய்ந்து இருந்த நேரத்தில் உங்கள் கண்ணில் மாட்டும் பாடல்கள்

m for magic madhu

thanks with wishes

gk

gkrishna
16th September 2014, 01:00 PM
dear ck sir /vasu sir

'சித்திரை'யில் நிலா சோறு ' சமீபத்தில் வெளி வந்த படம் . வெளி வந்த சுவடு தெரியாமல் காணமல் போன படம் .R சுந்தர்ராஜன் இயக்கம்
ராஜாவின் இனிய பாடல்கள் இருந்தும்

chinnakkannan
16th September 2014, 01:09 PM
தொடர்கதையில் வெகு சுவாரஸ்யமாக ப்படித்த நாவல்..கண்ண தாசனின் அதைவிட ரகசியம்.. சந்தர்ப்ப சூழ்நிலையில் கதையின் நாயகி ஒரு டிரெஸ்லெஸ் ஓவியத்திற்குச் சம்மதித்துவிட..வெகு நாட்களுக்குப் பிறகு அதே ஓவியம் அவளது மணப்பரிசாக வருவது போல் இருக்கும் கதை கதா நாயகன் பெயர் ரகு நந்தன்..ஒரு தோழி உண்டு..ஜமீந்தார் உண்டு..கதை தான் நினைவுக்கு வர மறுக்கிறது..க்ளைமாக்ஸில் அந்த ஓவியத்திற்கு ஆடை வரைந்திருப்பார் கதா நாயகன்.. என நினைக்கிறேன்

படம் பார்க்கவில்லை..ஃபடாபட் ஜெயலட்சுமி இன்னொரு நாயகி யார் எனத் தெரியவில்லை..

செங்கரும்பு தங்கக் கட்டி ஃபேமஸ்பாட்டு..ஆனால் வாணி ஜெயராம் பிசுசீலா பாட்டு -முதலில் வந்தவள் தெய்வானை தொடர்ந்து வந்தவள் வள்ளியம்மை நன்றாக இருக்கும்..

கிருஷ்ணா ஜி.. வாணி ஜெயராம் போஸ்ட்க்கு நன்றி.. கேள்வியின் நாயகனே பாட்டுக்கு கவிஞரிடம் சிச்சுவேஷன் சொன்ன போது கவிஞர் எழுதிக் கொடுத்தது ப்தினைந்துக்கும் மேற்பட்ட சரணங்களாம்..பாலச்சந்தரும் எம்.எஸ்வியும் திணறிப் போய் பின்னர் அவற்றிலிருந்து செலக்ட் செய்தார்களாம்..

ஒருகண்ணும் மறுகண்ணும் பார்த்துக் கொண்டால்
அவை ஒன்றோடு ஒன்று சொல்லும் சேதி என்ன
இருகண்ணும் ஒன்றாகச் சேர்ந்துவிட்டால்
அவை இரண்டுக்கும் காட்சியிலே பேதம் என்ன

பேதம் மறைந்ததென்று கூறு பெண்ணே நமது
பேதம் தனை மறந்து நடக்கும் முன்னே

கண்ணே உன் காலம் சென்ற கதை என்ன
உன்னைக் காணப் பிழைத்திருந்தேன் வேறு என்ன
உடல் எப்படி (அம்மாவின் ஆதங்கம்)
முன்பு இருந்தாற்படி ( பெண்ணின் சமயோசித பதில்)
மனம் எப்படி (இப்ப என்னடீ பண்ணப் போற)
நீ விரும்பும் படி...

இந்தப் பாடலை எத்தனை முறை ரசித்திருப்பேன் கேட்டிருப்பேன் பார்த்திருப்பேன்..அதுவும் கொட்டைப்பாக்கு கொட்டைப்பாக்காய் நான்கு கண்கள்+ இரண்டு கொழுக் மொழுக் கன்னம் அருகருகில் உணர்ச்சிகள் பொங்க (ஸ்ரீவித்யா+ஜெயசுதா)

இரண்டு பேருக்கும் வாணி மட்டும் பாடியது என்பது இன்னொரு ஆச்சர்யம்..

chinnakkannan
16th September 2014, 01:15 PM
//'சித்திரை'யில் நிலா சோறு ' சமீபத்தில் வெளி வந்த படம் . வெளி வந்த சுவடு தெரியாமல் காணமல் போன படம் .r சுந்தர்ராஜன் இயக்கம்
ராஜாவின் இனிய பாடல்கள் இருந்தும்// ஆமாம் குரு.. அந்தப் பாடல்கள் கூட நன்றாக இருக்கும் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன்..கேட்டதில்லை..

ஆர் சுந்தர்ராஜன் என்றால் பயணங்கள் முடிவதில்லை முண்டியடித்து முன்னால் வரும்..அதில் எனக்கு மிகப் பிடித்த பாடல்
சாலையோரம் சோலை ஒன்று வாடும் சங்கீதம் பாடும்
கண்ணாளனைப்பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து..

கடற்கரை ஈரத்திலே காலடிகள் நீ பதிக்க
அலை வந்து அடித்ததனால் கன்னி மனம் தான் தவிக்க
கடலுக்குக் கூட ஈரமில்லையோ...

பூர்ணிமா ஜெயராம் அழகு.. அப்படியே ஸ்ரீ தேவியின் நடன அடிகளை இமிடேட் செய்திருப்பார்..

gkrishna
16th September 2014, 02:00 PM
படம் பார்க்கவில்லை..ஃபடாபட் ஜெயலட்சுமி இன்னொரு நாயகி யார் எனத் தெரியவில்லை..

செங்கரும்பு தங்கக் கட்டி ஃபேமஸ்பாட்டு..ஆனால் வாணி ஜெயராம் பிசுசீலா பாட்டு -முதலில் வந்தவள் தெய்வானை தொடர்ந்து வந்தவள் வள்ளியம்மை நன்றாக இருக்கும்..



அது சுமா என்ற ஒரு நடிகை ceekay sir



கொடுத்தது ப்தினைந்துக்கும் மேற்பட்ட சரணங்களாம்..பாலச்சந்தரும் எம்.எஸ்வியும் திணறிப் போய் பின்னர் அவற்றிலிருந்து செலக்ட் செய்தார்களாம்..
இந்தப் பாடலை எத்தனை முறை ரசித்திருப்பேன் கேட்டிருப்பேன் பார்த்திருப்பேன்..அதுவும் கொட்டைப்பாக்கு கொட்டைப்பாக்காய் நான்கு கண்கள்+ இரண்டு கொழுக் மொழுக் கன்னம் அருகருகில் உணர்ச்சிகள் பொங்க (ஸ்ரீவித்யா+ஜெயசுதா)

இரண்டு பேருக்கும் வாணி மட்டும் பாடியது என்பது இன்னொரு ஆச்சர்யம்..

https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcTU_AxsEnbEyMWgWJpYaRiJ6Ak7aJGQK nBzZzg9sqCWghtLZ3KQ

கொட்டை பாக்கு கிடைத்து விட்டது வெற்றிலை எங்கே சி கே சார்

இன்னொருவர் சசிரேகா என்று நினைவு சி கே சார்
ஆனால் நீங்கள் சொன்ன கொட்டை பாக்கு நல்ல உவமான உவமேயம்

அந்த பாடலின் ரசித்த சில வரிகள்

பசுவிடம் கன்று வந்து பால் அருந்தும்
அந்த பால் அருந்தும் போதா காளை வரும்

பழனி மலையில் உள்ள வேல் முருக
சிவன் பல்லாண்டு ஏங்கி விட்டான் வா முருகா

gkrishna
16th September 2014, 02:25 PM
வாணியின் பதிவிற்கு விருப்பமும் ஆதரவும் தெரிவித்ததற்கு நன்றி sss சார்

gopu sir

உங்களுக்கு எப்பவும் உண்டு

chinnakkannan
16th September 2014, 02:27 PM
//கொட்டை பாக்கு கிடைத்து விட்டது வெற்றிலை எங்கே சி கே சார்// :) நன்றி க்ருஷ்ணா சார்.. நானும் இரண்டு குரல்கள் என்று தான் நினைத்தேன் கூகுளில் தேடினால் மோஸ்ட் இடங்களில் வாணிஜெயராம் என்று மட்டும் போட்டிருக்கிறார்கள் இந்தப் பாடலுக்கு..

தலைவன் திருச்சானூர் வந்துவிட்டான் மங்கை
தரும தரிசனத்தைத் தேடுகின்றாள்.. தேடுகின்றாள்

அலர்மேலு அவனிடத்தைக் காண்பாளோ... உருக்க்கமான குரல்.. அண்ட் டயர்டான அலட்சிய ரஜினி..

gkrishna
16th September 2014, 02:41 PM
பூர்ணிமா ஜெயராம் அழகு.. அப்படியே ஸ்ரீ தேவியின் நடன அடிகளை இமிடேட் செய்திருப்பார்..

https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcR0C79PtR2sB-bbPhsaUb3nQ3ml42TSpT3LRHD87QQ1veAq__x5
சித்திரையில் நிலாச்சோறு படத்தின் பாடல்களை நிச்சயம் கேட்டு பாருங்கள் சி கே சார்
பிடிக்கும் உங்களுக்கு

ஹம்சத்வனி ராகத்தில் அமைந்த 'நன்றி சொல்ல வேணும்' -
ஆபேரி ராகத்தில் அமைந்த 'காலையிலே மாலை வந்தது'
சிந்து பைரவி ராகத்தில் அமைந்த 'கல்லாலே செய்து வைச்ச '

மூன்று பாடல்கள் இனிமை. சமீப காலங்களில் அதாவது 2010 க்கு பிறகு வந்த ராஜாவின் இசையில் நல்லதொரு பாடல்கள். என்ன படம் சிறு முதலீட்டு படம் என்பதால் வெளியில் தெரியாமல் போயிற்று

பூர்ணிமா ஜெயராம் அழகை குறிப்பிட்டு இருந்தீர்கள் .

இந்த விடியோவில் உள்ள பாடலை கேட்டு பாருங்கள்
இளமையான சிரஞ்சீவி மற்றும் அழகான பூர்ணிமா

http://www.youtube.com/watch?v=LQZWsLy-DRs

vasudevan31355
16th September 2014, 02:44 PM
இன்றைய ஸ்பெஷல் (73)

'இன்றைய ஸ்பெஷலி'ல் ஓர் அற்புதமான நடிகர் திலகத்தின் டூயட் பாடல்

http://i.ytimg.com/vi/_meD8n91Ikk/0.jpg

படம்: லாரி டிரைவர் ராஜாக்கண்ணு

கதை: (டிரைவர் ராமுடு) தாரதாமா பிலிம் யூனிட்

வசனம்: ஏ.எல்.நாராயணன்

பாடல்கள்: கண்ணதாசன், வாலி

ஒளிப்பதிவு டைரெக்டர்: டி.எஸ்.விநாயகம்

இசை: மெல்லிசை மன்னர்

தயாரிப்பு: 'ராஜா மகாலட்சுமி ஆர்ட்ஸ்' புஷ்பா ராஜன்.

இயக்கம்: ஏ.சி.திருலோகசந்தர்.

இதுவும் ஒரு வாகனப் பாடலே. ஆனால் லொக்கேஷன்கள் பிரமாதம்

கூட்ஸ் வண்டி ஒன்று இயற்கை எழில் சூழ்ந்த மலைப் பகுதியினூடே பயணிக்க, மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்ட சரக்குப் பெட்டி ஒன்றில் நடிகர் திலகமும், ஸ்ரீபிரியாவும் பங்கு கொள்ளும் ரசமான காதல் காட்சி. மலைப் பகுதி வளைவுகளிலும், பாலங்களிலும், குகை வழியேயும் மரங்கள் பச்சைப் பசேலென்று சூழ்ந்திருக்க, கூட்ஸ் ரயில் வண்டி வேகமாக விரைந்து செல்ல, அழகான பிளாக் ஸ்ட்ரைப்டு கோடுகள் உள்ள ஒயிட் கோட், கூலிங் கிளாஸ் அணிந்து படு ஸ்டைலாக நடிகர் திலகம்.... அவருக்கு தோதாக வெரி சிம்பிளான புடவை அணிந்து, அதிக ஆடம்பர அலங்காரங்கள் இல்லாமல் ஸ்ரீப்ரியா. இடுப்பில் மடித்து
கட்டப்பட்டு செருக்கப்பட்ட சேலை பிளஸ் மல்லிகைப்பூ. அவ்வளவே.

http://i.ytimg.com/vi/2YBIwC5HvV0/hqdefault.jpg

நடிகர் திலகம் கூட்ஸ் வண்டியில் நிற்கும் அழகே தனி. நின்ற வாக்கில் அவர் ஸ்ரீபிரியாவின் கைகளைப் பிடித்தவாறு முகபாவங்களில் பாலாவுக்கு ஏற்ப அசத்தியபடி அனாயாசமான ஸ்டைல்களில் கலக்குவார். (இதற்கே உடல் பெருத்திருந்த நேரம். ஆனால் மனிதர் என்ன ஒரு ஸ்டைல்! முகமோ கொள்ளை அழகு!) பல்வேறு இடங்களில் கூட்ஸ் வண்டி நுழைந்து வரும்போது கம்பிகளை பிடித்தும், பிடிக்காமலும் நடிகர் திலகம் நடித்திருப்பதைக் காணலாம். ஒரு இடத்தில் இரு கால்களையும் மடக்கி உட்கார்ந்தவாறு பிரியாவை லவ்ஸ் விடுவது தனி அழகு.

பாடல் முழுவதும் கூட்ஸ் வண்டியிலேயே படமாக்கப் பட்டிருக்கும். பேக் புரஜக்ஷன் காட்சிகளே இருக்காது. லாங் ஷாட்டில் பாலத்தில் வளைந்து திரும்பும் கூட்ஸ் வண்டியை காண ரம்மியமாக இருக்கும்.
காமெராக் கோணங்கள் பின்னியெடுக்கும். டி.எஸ்.விநாயகம் விஸ்வரூபம் எடுத்திருப்பார் இப்பாடல் காட்சியில். காட்சியமைப்பும், பின்னணிகளும் பிரம்மாண்டத்தைக் கொடுப்பது நிஜம். பாடலை இளமை பொங்க நடிகர் திலகம் ரசிகர்களை மனதில் எண்ணி ஜோராக இயக்கியிருப்பார் ஏ.சி. திருலோக்சந்தர்.

பின்னாளில் நடிகர் திலகத்திற்கு கிடைத்த மிகச் சிறந்த சில டூயட் பாடல்களில் இந்தப் பாடல் மிக முக்கியமானது.

http://i.ytimg.com/vi/UYX0EE_Gt9g/hqdefault.jpg

'லாரி டிரைவர் ராஜாக்கண்ணு' பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளான படம். இது ஒரு லோ கிளாஸ் படம்தான். ஆனால் வசூலில் ஒரு போடு போட்ட படம். பலர் இந்தப் பாடலை மறந்திருக்கக் கூடும். இப்போது நினைவு படுத்திக் கொள்ளலாம். படம் லோ கிளாஸ் என்றாலும் இப்பாடல் ஒரு ஹை -கிளாஸ்.

பாடல் இனிமையோ இனிமை. ஆர்ப்பாட்டமாக பாலா நடிகர் திலகத்திற்கு ஏற்றவாறு பாட, ஜானகி அமைதியாக ஈடு செய்வார்.

'மெல்லிசை மன்னரி'ன் அற்புதமான பின்னாளைய டூயட் இது. கூட்ஸ் வண்டியின் சப்தங்கள், வண்டியின் விசில் சப்தம், ஹாரன் சவுண்ட் என்று ஜிகு ஜிகு உற்சாக இசை. மனிதர் பின்னுவார்.

அனுபவித்துப் பாருங்கள். நடிகர் திலகம், ஸ்ரீபிரியா இருவருடனும் நாம் கூட்ஸ் வண்டியில் ஊட்டி, கொடைக்கானல் போய்விட்டு வந்தது போல ஒரு சுகமான அனுபவம் கிடைக்கும் நிச்சயமாக.

இனி பாடலின் முழு வரிகள்

ஆ ஹா ஹாஹா ஹா
ஆ ஹா ஹாஹா ஹா
ஆ ஹா ஹாஹா ஹா

வெட்கப் படவோ
செல்லக் கிளியென வட்டமிடவோ
மெல்லத் தொடுகையில் பூவாகி பிஞ்சாகிக்
காயாகிக் கனியாகி வண்ணம் பெறவோ

ஹா ஹாஹா ஹா
ஹே ஹே ஹே ஹே

பக்கம் வரவோ
பத்து விரல்களில் பந்தலிடவோ
வஞ்சிக் கொடி இது மேலாட மேலாட
நூலாடை போலாட எண்ணமில்லையோ

ஆ ஹா ஹாஹா ஹா
ஹே லா லா ல லா

(கூட்ஸ் குகைக்குள் நுழையும் போது 'திடுதிடுதிடுமென' ஒரு கலக்கல் ம்யூசிக்)

நான் புஷ்பாஞ்சலி ஒன்று செய்ய
நீ பொன்னோவியம் என்று மாற
நா....ன் புஷ்பாஞ்சலி ஒன்று செய்ய
நீ பொன்னோவியம் என்று மாற

அந்த ரசனைகளை இந்த ரசிகையொரு
தேர் தேர் தேர் என்று ஆட

இன்பக் கவிதைகளின் சந்தம் முழுவதையும்
பார் பார் பார் என்று பாட

வெட்கப் படவோ...ஹோ ஹோ (பாலா பின்னல்)
செல்லக் கிளியென வட்டமிடவோ (ஹா ஹா)
மெல்லத் தொடுகையில் பூவாகி பிஞ்சாகிக்
காயாகிக் கனியாகி வண்ணம் பெறவோ

(என்ன உற்சாகமான இடையிசை!)

நான் புல்லாங்குழல் என்று ஆக
நீ கண்ணன் விரல் என்று சேர
நான் புல்லாங்குழல் என்று ஆக
நீ கண்ணன் விரல் என்று சேர

மின்னல் கொடி மலர்கள்
கன்னங் கருவிழிகள்
மான் மான் மான் என்று துள்ள

(நடிகர் திலக மான் அபிநயக் கலக்கல்)

தன்னந்தனிமை இது தந்த இனிமை இது
யார் யார் யார் தடை சொல்ல

பக்கம் வரவோ
பத்து விரல்களில் பந்தலிடவோ
வஞ்சிக் கொடி இது மேலாட மேலாட
நூலாடை போலாட எண்ணமில்லையோ

ஆ ஹா ஹா ஹா ஹா
லா........
ஹே ஹே ஹே ஹே


http://www.youtube.com/watch?v=Y-78SiZynzw&feature=player_detailpage

gkrishna
16th September 2014, 02:47 PM
நானும் இரண்டு குரல்கள் என்று தான் நினைத்தேன் கூகுளில் தேடினால் மோஸ்ட் இடங்களில் வாணிஜெயராம் என்று மட்டும் போட்டிருக்கிறார்கள் இந்தப் பாடலுக்கு..

தலைவன் திருச்சானூர் வந்துவிட்டான் மங்கை
தரும தரிசனத்தைத் தேடுகின்றாள்.. தேடுகின்றாள்

அலர்மேலு அவனிடத்தைக் காண்பாளோ... உருக்க்கமான குரல்.. அண்ட் டயர்டான அலட்சிய ரஜினி..

பல தகவல்கள் வலையில் தவறாக தான் உள்ளன
புராண நடப்பு சம்பவங்களை பாடலாக புனைவதில் கவியரசருக்கு நிகர் அவரே . இன்றும் திருச்சானூர் திருப்பதி பிரமோற்சவ நிகழ்ச்சியில் இதுவும் ஒன்று

gkrishna
16th September 2014, 03:03 PM
தக்காளி MSV 81 களில் போட்ட மிக சிறந்த டூயட் பாடல் .
சாந்தி திரை அரங்கு கட் அவுட் இன்னும் எனக்கு நினைவில் உண்டு வாசு சார் .அதே சமயத்தில் இங்கே தேவி கலாவில் 'நெஞ்சத்தை கிள்ளாதே',தேவியில் 'ராஜ பார்வை' என்று நினைவு.
நெல்லையில் இருந்து சென்னைக்கு வேலை தேடி வந்த சமயம் .
இரண்டு தினங்களில் 3 படங்களை பார்த்த நினைவு .interview அட்டெண்ட் பண்ணினேனா என்று நினைவு இல்லை ஆனால் நிறைய படம் பார்த்தேன் .

gkrishna
16th September 2014, 03:08 PM
நான் புஷ்பாஞ்சலி ஒன்று செய்ய
நீ பொன்னோவியம் என்று மாற
நா....ன் புஷ்பாஞ்சலி ஒன்று செய்ய
நீ பொன்னோவியம் என்று மாற

அதிலும் அந்த புஷபாஞ்சலி என்ற வார்த்தை பாலா வாயில் படும் பாடு
அதனால் வரும் பாட்டு சூப்பர் பங்காளி

train சத்தத்திற்கு இணையான பாலா ஜானகி ஹம்மிங் குரல்கள்

Richardsof
16th September 2014, 03:17 PM
http://i60.tinypic.com/22b3u8.jpg

Richardsof
16th September 2014, 03:22 PM
http://i61.tinypic.com/dxn0pl.jpg

Richardsof
16th September 2014, 03:23 PM
http://i57.tinypic.com/308fy3p.jpg

Richardsof
16th September 2014, 03:38 PM
KRISHNA SIR

http://i57.tinypic.com/2mcwobk.jpg

Richardsof
16th September 2014, 03:44 PM
http://youtu.be/lXHee4fDiv8 (http://youtu.be/lXHee4fDiv8)

chinnakkannan
16th September 2014, 03:52 PM
பூர்ணிமா பாடலுக்கு நன்றி க்ருஷ்ணா ஜி..

வாசு சார்.லாரிடிரைவர் ராஜாக்கண்ணு பார்த்ததில்லை. இந்தப் பாடலையும் கேட்டதில்லை..அல்லது கேட்ட ஞாபகம் இல்லை..பார்க்கிறேன்.. ஆனால் இதே படத்தில் வேறு ஒரு ஃபேமஸ் பாட்டு உண்டில்லையோ..தாங்க்ஸ்..(எப்போ தான் எனக்குத்தெரிந்த பாட்டுப் போடப்போகிறீர்களோ..

பூர்ணிமாஜெயராம்பொறுத்த வரை ஓளங்கள் பாலுமகேந்திரா - அமோல்பலேகர் பூர்ணிமா அம்பிகா என நினைவு. நினைவுக்கு வருகிறது.. நல்ல படம்.. ஒரு நல்ல பாட்டு தும்பீ வா தும்பக் குளத்தில் பின்னர் தமிழ் கன்னடம் என வந்த நினைவு..

சங்கத்தில் காணாத கவிதை அங்கத்தில் யார் தந்தது ராரா ரரர..

சிந்தி தேன் பாய்கின்ற இதழைச் சிந்தித்தேன் பூவானதோ - தமிழ் வெர்ஷன் ஆட்டோ ராஜா என நினைவு விஜயகாந்த் + ஒரு டுபாக்கூர் ஹீரோயின் (நடிக்க வராமல் பார்த்தாலே எரிச்சல் வரத்தூண்டும் முகம்) பாட்டு வெரி நைஸ்..லிரிக்ஸ் புலமைப் பித்தன் என நினைக்கிறேன்..

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=eEQa7c4UAx4

gkrishna
16th September 2014, 04:02 PM
http://3.bp.blogspot.com/-6fqJ9mk6nKQ/UYYrMt10InI/AAAAAAAAAxI/OKAR5GUqJnA/s640/NP_SN_enlarge.jpg

எஸ்வி சார்

ஜெமினி நினைவுகள்-திருநெல்வேலி

அந்நாள்களில் ஏ.வி.எம் படங்கள் பாப்புலர் டாக்கீஸிலும். மாடர்ன் தியேட்டர்ஸ் , விஜயா-வாஹினி படங்கள் ராயல் டாக்கீஸிலும் ஓடும். 1962ல் பாப்புலர் திரை அரங்கு உரிமையாளர்கள் கட்டிய சென்ட்ரல் தியேட்டரை திரு. ஏ.வி.மெய்யப்ப செட்டியார் அவர்கள் நெல்லைக்கு நேரில் வந்து திறந்துவைத்தார்.இந்நாட்களில் இருப்பது போல் விடியோ conferencing முறை அந்நாளில் கிடையாது.

ஜெமினி நிறுவனம் தங்கள் படங்களை ஜெமினி பிக்சர் சக்யூட் என்ற பெயரில் தாங்களே எல்லா ஊர்களிலும்,தியேட்டர்காரர்களுடன் ஒப்பந்த அடிப்படையில் திரையிட்டார்கள். அப்படி தொடங்கியதுதான் ஜெமினி- பாலஸ்-டி-வேல்ஸ் திரை அரங்கு உறவு.

ஜெமினி படம ரிலீஸ் தேதியில் வேறு எந்த படம் ஓடிக்கொண்டிருந்தாலும் எடுத்துவிட்டு ஜெமினி படம் தான் திரையிட வேண்டும். இது ஒப்பந்த விதி. 1943ல் ஜெமினியின் மங்கம்மா சபதம் ரிலீஸ் ஆனபோது நன்றாக ஓடிக்கொண்டிருந்த தியாகராஜ பாகவதரின் 'சிவகவி', தொடர் ஓட்டமாக ராயல் டாக்கீஸுக்கு மாற்றப்பட்டது

ஜெமினியின் பிரமாண்டமான தயாரிப்பான 'சந்திரலேகா', 1948ல் வரும் வரை இந்த தியேட்டரில் சிங்கிள் ப்ரொஜெக்டர்தான். தயாரிப்பாளர்-டைரக்டர் திரு S.S.வாசன் அவர்கள் திரை அரங்கு முதலாளியிடம் , "படம் மூன்றரை மணி நேரம் ஓடும். அதனால் டபுள் ப்ரொஜெக்டராக மாற்றி விடுங்கள்" என்று சொன்னதால் புதிய RCA Simplex ப்ரொஜெக்டர்களும் RCA சவுண்ட் சிஸ்டத்துடன் வந்தது. ஜெமினி இரட்டையர்களின் குழலோசை ரொம்ப தூரம் கேட்குமாம்.

திரைக்கு வந்து பல மாதங்கள் ஓடிய ஜெமினி படங்கள் பற்றி சொல்ல நினைத்தால் முதலில் சந்திரலேகாதான். 31 வாரங்கள் ஓடியது.

ரஞ்சன் (இயற்பெயர் வெங்கடரமண சர்மா) முறைப்படி FENCING ஃப்ரான்ஸில் கற்றவர. எம்.கே.ராதாவுடன் அவர் போடும் வாள் சண்டை மிகவும் பிரபலம் . FENCING - ஸ்டன்ட் சோமு என்று படத்தின் டைட்டிலில் பார்க்கலாம்

இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ், ,கல்யாணமானதும் பால்கனியிலிருந்து நாட்டு மக்களுக்கு கை அசைப்பதை போல் படத்தின் கடைசிக் காட்சியில் எம்.கே.ராதாவும் டி.ஆர்.ராஜகுமாரியும் உப்பரிகையில் இருந்து மக்களைப் பார்ப்பது ராஜ குடும்ப கல்யாணம் எப்படி நடக்கும் என்று டைரக்டர் வாசனின் அருமையான காட்சியமைப்பு.

http://2.bp.blogspot.com/-l6oviG8z_9A/UmyiAma0VBI/AAAAAAAAAzk/oaetVxSFKIQ/s1600/avvaiyaar.jpg

சக்ரதாரி, அபூர்வ சகோதரர்கள், சம்சாரம், மூன்று பிள்ளைகள், ..எல்லாமே ஜெமினியின் மிக பெரிய வெற்றி பெற்ற படங்கள்

ஜெமினியின் ஹிந்தி படம் 'இன்ஸானியத்,' தேவ் ஆனந்தும் திலீப் குமாரும் இணைந்து நடித்த ஒரே படம், பாலஸில் ரொம்ப நாள் ஓடியது. சிரிப்பு நடிகர் ஆகாவுடன் ஜிப்பி (சிம்பன்ஸி) செய்யும் சேட்டைகள் எல்லோரும் ரசித்த காட்சிகள்.

தியேட்டர் அமைப்பு காரணமாக மேட்னி ஷோ தடை ஆனதால், ஜெமினியின் வஞ்சிக்கோட்டை வாலிபன் பார்வதி டாக்கீஸ் ரிலீஸ் .பிறகு பழைய படங்களாக ஓடும் திரை அரங்கு போல் தினம் இரண்டு காட்சிகள் மட்டும் நடத்தும் போது மேலும் ஈரடுக்கு மேம்பாலம் அமைந்ததால் ரசிகர் கூட்டம் குறைந்தது, குத்தகை காலம் முடிந்ததும் நில உரிமையாளர்களான கோவில் நிர்வாகக்குழு வாடகையை பல மடங்கு உயர்த்தியது போன்ற பல காரணங்களால் தியேட்டரை மூட வேண்டியதாயிற்று.

ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி என்பார்கள். இன்று ஆலும் வேலும்தான் பாலஸுக்கு நிழல். கோவில் நிர்வாகம் அந்த இடத்தில் கல்யாண மண்டபம் கட்ட திட்டமிடுகிறார்களாம்.

ஒவையார் படத்தை எக்ஸ்க்ளூஸிவிலி லேடிஸுக்காகவும் அதாவது பெண்களுக்கு மட்டுமாக ஒரு ஷோ நடத்தினார்கள். படம் முடிந்து போகும் போது பெண்கள் எல்லோருக்கும் ரிப்பன், சீப்பு, கண்மை, சாந்துபொட்டு எல்லாம் நவராத்திரிக்குக் கொடுப்பது போல் காம்பிளிமெண்ட் கொடுத்து சந்தோஷப் படுத்தியதும் பின்னர் இக்னேஷியஸ் கான்வெண்ட்மாணவ மாணவிகள், மதர்ஸ் சிஸ்டர்ஸ் எல்லோருக்குமாகவும் ஒரு ஷோ காண்பித்ததும் வாடாத நினைவுகள்.

நெல்லை நண்பர் பகிர்ந்து கொண்ட மலரும் நினைவுகள்

gkrishna
16th September 2014, 04:20 PM
விளையாட்டு பிள்ளை நெல்லை லக்ஷ்மி
ஒளி விளக்கு நெல்லை சென்ட்ரல்
எல்லோரும் நல்லவரே நெல்லை பார்வதி

gkrishna
16th September 2014, 04:45 PM
இப்ப பாலஸ் டி வேல்ஸ் தியேட்டர் பண்டாரவிளை நாடார் மாவுகட்டு போடும் இடமாகி விட்டது.காலை ஆறு மணிக்கு கீழே விழுந்த,சுளுக்கிய வலியோடு மனிதர்கள் கூடுகிறார்கள்

https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcS_99VhM0rwkWgM3qjZqc42Cg_MoU1cr CEnKXlMWlHA7cZO8BfX

gkrishna
16th September 2014, 04:49 PM
சி கே சார்

ஆட்டோ ராஜா - சங்கர் கணேஷ் இசை அமைத்து வெளிவந்த படம்
சந்ததத்தில் பாடாத கவிதை இந்த ஒரு பாட்டு மட்டும் இளையராஜா உடையது .
இது எப்படி சாத்தியம் ஆயிற்று என்று ஏதாவது தகவல்கள் இருந்தால் தெரிவிக்கலாம்

heroine பேரு காயத்திரி என்று நினைவு
பாலச்சந்தர் படத்தில் வரும் வெறும் பொம்மை போன்ற முகம்
எப்படி செலக்ட் செய்தார்கள் என்று தெரியவில்லை
இந்த பாட்டு பார்தீங்கன்னா கட் சாட் ஆகவே வரும்

chinnakkannan
16th September 2014, 05:21 PM
கிருஷ்ணா ஜி..அந்த தும்பி நா தும்பக் குடத்தின் கேட்டுப் பாருங்க வெகு ஜோராக இருக்கும.. இந்தப் பாட்டுக்கு லிங்க் கொடுத்ததோட சரி..பார்க்கலை..
அப்புறம்.. நீங்க திருநெல்வேலிக்காரவுகளா..

rajeshkrv
16th September 2014, 05:30 PM
ராஜேஷ் சார்

வாங்க ரொம்ப நாளாக ஆச்சு உங்க கூட பேசி
நேற்று உங்க face புக் படித்த நினைவு .
தமிழ் திரை இசையில் ஆண் குரல்கள் னு ஒரு பதிவு படித்தேன்
மிக அருமை.

நன்றி கிருஷ்ணா ஜி. அதே போல் பெண் குர்லகள் கட்டுரையும் படிங்கோ

chinnakkannan
16th September 2014, 05:32 PM
வானம்பாடில்ல இந்தப் பாட்டு எழுதினது யார்னு போட்டிருக்கு தெரியுமா.. சஸ்பென்ஸ்..கீழே பார்க்கவும் :)
ரொம்ப எஞ்சாய் பண்றா மாதிரியான லிரிக்ஸ்..


இந்தப் பாட்டைப் பத்தி என்னைவிட ஆதித்ய இளம்பிறையன் என்பவர் உணர்ச்சிவசப்பட்டு என்னவாக்கும் எழுதியிருக்கார்..

///அனிச்சத்தின் மென்மை இவள்
அன்னத்தின் தன்மை இவள்
செங்காந்தளை மேவிய சிவப்பு இவள்
மரபுகளை மீறிய வார்ப்பு இவள்
வம்புக்குள் அடங்கா வனப்பு இவள்
வளிமண்டலத்தை மீறிய ஈர்ப்பு இவள்

தேர்ந்தெடுத்த வார்த்தைகளை கோர்த்து ஆகா! அற்புதம்!! என்று உற்சாகம் கொள்ளும் வேளையில், தழைகளை தழுவிய தென்றலொன்று முன்னிரவுப் பொழுதில் என் காதோரமாய் தந்த இந்தப் பாடல் என் கர்வம் கொன்று நித்திரை தின்று ஆசை எனும் ஆண்ட வெளியில் ஆர்ப்பரித்து அடங்கச் செய்கிறது.

இசையா! இன்பத் தமிழா!

தெரியவில்லை. கேட்டவுடன் கிறங்கடிக்கும் இதன் இனிமையை என்னவென்று சொல்வது !! ஆசைகளிலும் நிராசைகளிலும் தொலைந்துவிட்ட வாழ்க்கையின் கணங்களை இந்தச் சின்னஞ் சிறிய பாடல் மீட்டு பூமிப்பந்தை என் கண்ணின் கருவிழிக்குள் சுழலச் செய்கிறது. கற்பனையெனும் எல்லைகளற்ற கானக வீதிகளில் நான் காணமல் போகிறேன்....

பெண்களின் அழகை கம்பன் பாடியிருக்கான், இளங்கோ வர்ணித்திருக்கிறான்... முச்சங்கங்களில் அமர்ந்த எத்தனையோ புலவர்கள் பெண்களின் அங்கங்களை கவிதையாய் புனைந்திருக்கிறார்கள் பாடியிருக்கிறார்கள் போற்றியிருக்கிறார்கள். அழகிகளையும் பேரழகிகளையும் கண்டிருப்பார்கள் களித்திருப்பார்கள் கண்களால் பருகியதை கவிதையாய் வடித்திருப்பார்கள். ஆனால்

எச்சொல்லுக்குள்ளும் அடக்க முடியாத அத்துமீறல் இவள் அங்க அழகு !!
ஒரே வரி.... ஓராயிரம் சிந்தனைச் சிற்றலைகளை ஓயாது உள்ளத்தில் உரசச் செய்கிறது...// நன்றி ஆதித்ய இளம்பிறையன்..


*

சங்கத்தில் பாடாத கவிதை உன்
அங்கத்தில் யார் தந்தது
சந்தத்தில் மாறாத நடையோடு என்
முன்னே யார் வந்தது
தமிழ்ச் சங்கத்தில் பாடாத கவிதை உன்
அங்கத்தில் யார் தந்தது

கையின்றே செங்காந்தள் மலரே
நீ சொன்னால் நான் நம்பவோ
கால் என்றே செவ்வாழை இலைகளை
நீ சொன்னால் நான் நம்பி விடவோ
மை கொஞ்சம்.......
பொய் கொஞ்சம்........
கண்ணுக்குள் நீ கொண்டு வருவாய்
காலத்தால் மூவாத உயர் தமிழ்
சங்கத்திலே....

அந்திப்போர் காணாத இளமை
ஆடட்டும் என் கைகளில்
சிந்தித்தேன் செந்தூர இதழ்களில்
சிந்தித் தேன் பாய்கின்ற உறவை
கொஞ்சம் தா..அ...
கொஞ்சம் தா..ஆ..
கண்ணுக்குள் என்னென்ன நளினம்
காலத்தால் மூவாத உயர் தமிழ்
சங்கத்திலே

ஆடை ஏன் உன் மேனி அழகை
ஆதிக்கம் செய்கின்றது
நாளைக்கே அனந்த விடுதலை
காணட்டும் காணாத உறவில்
கை தொட்டு...ஆ
மெய் தொட்டு..ஆ
சாமத்திலே தூங்காத விழிகளில்
சந்தித்தேன் என்னென்ன மயக்கம்
தமிழ் சங்கத்திலே பாடாத கவிதை உன்
அங்கத்தில் யார் தந்தது

படம்: ஆட்டோ ராஜா
இசை: இளையராஜா
பாடல்: வாலி
பாடியவர்கள்: இளையராஜா, ஜானகி

*

இந்த ரெண்டு பேரும் அப்படியே மயங்கி மயங்கி ப் பாடின மாதிரி இருக்கும் ம்ம்ம்ம் ஆஆ ஆ.. எல்லாம் அப்படியே அழகா இருக்கும்..இதையே இளையராஜாவோட ஒரு ஷோவில் கேட்டிருக்கிறேன்..கனடான்னு நினைவு..வீடியோவில் தான்..அதுவும் அழகு..

rajeshkrv
16th September 2014, 05:34 PM
ஆட்டோ ராஜா சங்கத்தில் பாடாத கவிதை எழுதியது வாலி ஐயா .. கங்கை அமரன் அல்ல

chinnakkannan
16th September 2014, 05:36 PM
ஓ..அப்படியா..தாங்க்ஸ் ராஜேஷ்.. இது வான்ம்பாடியில் போட்டிருந்தார்கள்..

rajeshkrv
16th September 2014, 05:36 PM
pulamai pithan confirms that sangathil is by vaali..

chinnakkannan
16th September 2014, 05:42 PM
//ஆட்டோ ராஜா என்ற கேப்டனின் படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலின் பின்னால் ஏகப்பட்ட குழப்பங்கள் உண்டு. இந்தப் பாட்டு முதலில் மலையாளத்தில் வந்தது என்றும், இந்த மெட்டுக்கு சொந்தக்காரர் சங்கர்- கணேஷ் என்றும் பல கட்டுக்கதைகள் இணையத்தில் உலவுகிறது.

இந்த மெட்டு முதலில் மூன்றாம் பிறை பிண்ணனி இசையில் ராஜா உபயோகித்தது. இதை மிகவும் ரசித்த பாலு மகேந்திரா ஓளங்கள் என்ற மலையாள படத்தில் ராஜாவை பாடலாக்க சொன்னார். தும்பி வா என எஸ்.ஜானகி தனியாக பாடிய பாடலது. அதேப் பாடலை பின் தமிழில் டூயட்டாக மாற்றினார் ராஜா. தும்பி வா பாடலின் ஸ்ருதியும் இதுவும் வேறு வேறு. இதை ராஜா தொடங்கும் போதே ஒரு காதல் ஏக்கத்தை காண்பித்திருப்பார். ஆனால் மலையாளத்தில் அப்படி இருக்காது.

அதேப் போல இந்தப் பாடலை எழுதியது புலமைப்பித்தன் என்றும், கங்கை அமரன் என்றும் சொல்கிறார்கள். எனக்கும் சரியான தகவல் கிடைக்கவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்களேன். பாடலின் வரிகளை கவனித்தால் இதன் முக்கியத்துவம் விளங்கும். எனக்கு மிகவும் பிடித்த வரி. // நன்றி..பாரதி கண்ணம்மா.ப்ளாக்ஸ்பாட்.காம்..

இன்னும் சில இடங்களில் புலமைப் பித்தன் என்றும் போட்டிருக்கிறார்கள்ராஜேஷ்..வாலி என்று உறுதியாய்த் தெரியுமா..

chinnakkannan
16th September 2014, 05:44 PM
ஓ.. அகெய்ன் தாங்க்ஸ்.. ராஜேஷ்..(தீராத செண்பக்ப் பாண்டிய சி.க வின் சந்தேகத்தைத் தீர்த்த ராஜேஷீக்கு அவர் ஆஃபீஸிலே ஒரு காப்பசீனோ பார்சல் :)//

gkrishna
16th September 2014, 05:44 PM
கிருஷ்ணா ஜி..அந்த தும்பி நா தும்பக் குடத்தின் கேட்டுப் பாருங்க வெகு ஜோராக இருக்கும.. இந்தப் பாட்டுக்கு லிங்க் கொடுத்ததோட சரி..பார்க்கலை..
அப்புறம்.. நீங்க திருநெல்வேலிக்காரவுகளா..

அப்பு
பொறவு திருநெல்வேலியிலே பொறந்தா திருநெல்வேலினுதானெ சொல்லுவாக வேற என்ன சொல்லுவாக அப்பு
அப்பு மதுரை தானே

அந்த மலையாள பாடல் கேட்டு இருக்கிறேன் சி கே சார்
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்

தகவலுக்கு நன்றி ராஜேஷ் சார்
நிச்சயம் படித்து விடுகிறேன்

chinnakkannan
16th September 2014, 05:59 PM
ஆண்குரல் பெண்குரல் இரண்டும் காணோமே..ரெண்டும் இங்கே இடுங்களேன்..

நன்றி கிருஷ்ணா ஜி. அதே போல் பெண் குர்லகள் கட்டுரையும் படிங்கோ

madhu
16th September 2014, 06:04 PM
சிக்கா...
இதோ ஓளங்கள் பாட்டு

தும்பீ வா தும்பக் குடத்தினி துஞ்சத்தாயூஞ்ஞாலிடாம்

http://youtu.be/t1D0AmO8pA4

ஆட்டோ ராஜாவின் "சங்கத்தில் பாடாத கவிதை"

http://youtu.be/Iz2nQd-UGPA

சிக்காவை குழப்ப இதோ கண்ணே கலைமானே படத்தில் ஜானகி பாடிய பாடல்

நீர்வீழ்ச்சி தீ மூட்டுதே தீக்கூட குளிர்காயுதே

http://youtu.be/1hJ_NP9YW7g

கடேசியாக ஹிந்தி "பா" படத்தின் பாடல்

Gumm summ gumm

http://youtu.be/ESQJh7dFmc8

gkrishna
16th September 2014, 06:07 PM
மது ஜி

தாங்காது தளிர் மேனி நம்ம திரி :)
இம்புட்டு பாட்டா
ஒரே தாள கட்டில்
கட்டில் தாங்காது போலஇருக்கே

madhu
16th September 2014, 06:10 PM
Aries வாசுஜி..

லாரி டிரைவர் ராஜாக்கண்ணு என்றாலே "என்னென்பதோ" பாட்டுதான் நினைவுக்கு வரும். மீண்டும் வெட்கப் பட வைத்ததற்கு நன்றி

gkrishna
16th September 2014, 06:13 PM
சும்மா பொந்து பொந்து னு சத்யகலா உடன் பாடும் பாட்டு தானே
அது மது ஜி
https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcQCJzHNMyFXqzZT-4fCq2PX9Uaz3jMFohuM9Jha2DJfmXVHkEVo

இந்த சீன் நினைவு உண்டா மது அண்ணா

madhu
16th September 2014, 06:14 PM
சும்மா பொந்து பொந்து னு சத்யகலா உடன் பாடும் பாட்டு தானே
அது மது ஜி
https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcQCJzHNMyFXqzZT-4fCq2PX9Uaz3jMFohuM9Jha2DJfmXVHkEVo

இந்த சீன் நினைவு உண்டா மது அண்ணா

யூ மீன் ரெண்டு இட்லி ஒரு வடை ?

gkrishna
16th September 2014, 06:16 PM
தலைவா நமஸ்கரிக்கிறேன்
என்னை மன்னிசேன் அப்படி னு ஒரு வார்த்தை சொல்லுங்கோ ப்ளீஸ்

chinnakkannan
16th September 2014, 06:17 PM
வாவ் மதுண்ணா.. தாங்க்ஸ்..இன்ஃபேக்ட் கண்ணே கலைமானே கேக்கணும்னு இருந்தேன்..போய்க் கேக்கறேன்..

chinnakkannan
16th September 2014, 06:19 PM
என்னை மன்னிச்சேன் நு ஒரு வார்த்தை மதுண்ணா சொல்ல மாட்டார்..ஏன்னாக்க அது ரெண்டு வார்த்தை ஆச்சே :) ஆமா இந்த மாதிரி ஏதாவது கடிப் பாட்டு..ஆப்பிள் கடி கொய்யாக் கடி ஏதாவது இருக்கா (ஹப்பா ரொம்ப லேட்டா வெடி போடற கண்ணா நீ)

madhu
16th September 2014, 06:23 PM
என்னை மன்னிச்சேன் நு ஒரு வார்த்தை மதுண்ணா சொல்ல மாட்டார்..ஏன்னாக்க அது ரெண்டு வார்த்தை ஆச்சே :) ஆமா இந்த மாதிரி ஏதாவது கடிப் பாட்டு..ஆப்பிள் கடி கொய்யாக் கடி ஏதாவது இருக்கா (ஹப்பா ரொம்ப லேட்டா வெடி போடற கண்ணா நீ)

கைராசிக்காரன் அப்படின்னு ஒரு படம் வந்திச்சு. அதிலே பிரபுவும், சில்க்கும் ஒரு ரூமுல இருக்கும்போது ஆப்பிளை எடுத்து பிரபு கடிக்க சில்க் கடிக்க வேண்டாம்னு சொல்ல வெளியே இருப்பவர்களின் கற்பனையில் "ஏ.. ராஜா கடிக்காதீங்க" அப்படின்னு ஒரு பாட்டு வரும்.. படம் பார்க்கிறப்போ பார்த்ததுதான். அப்புறம் கேட்டதும் இல்லை. எங்கேயும் கேள்விப்படவும் இல்லை.

gkrishna
16th September 2014, 06:25 PM
தலைவா கடி தாங்கலை :)
வேணா குடி சாத்துக்குடி

டி டி டி டி டி டி டி.டி சாத்துக்குடி
அஹா குடி குடி குடி குடி
குடி குடி குடி குடி சாத்துக்குடி
பனியில் ஊறி வௌஞ்சது இந்த சாத்துக்குடி
பருவம் பார்த்து கனிஞ்சது இந்த சாத்துக்குடி
மஞ்சள் பூசி குளிச்சது

gkrishna
16th September 2014, 06:29 PM
மது ஜி

இந்த கைராசிக்காரன் தானே ரா கி ரங்கராஜனின் கையில்லாத பொம்மை

madhu
16th September 2014, 06:31 PM
தலைவா நமஸ்கரிக்கிறேன்
என்னை மன்னிசேன் அப்படி னு ஒரு வார்த்தை சொல்லுங்கோ ப்ளீஸ்

ஒய்.. ஒய்... ? நான் என்ன தப்பு செஞ்சேன் ?

madhu
16th September 2014, 06:32 PM
மது ஜி

இந்த கைராசிக்காரன் தானே ரா கி ரங்கராஜனின் கையில்லாத பொம்மை

அப்படித்தான் சொன்னாங்க.. ஆனால் ரொம்ப வித்தியாசமான கதை.

vasudevan31355
16th September 2014, 06:35 PM
கைராசிக்காரன் அப்படின்னு ஒரு படம் வந்திச்சு. அதிலே பிரபுவும், சில்க்கும் ஒரு ரூமுல இருக்கும்போது ஆப்பிளை எடுத்து பிரபு கடிக்க சில்க் கடிக்க வேண்டாம்னு சொல்ல வெளியே இருப்பவர்களின் கற்பனையில் "ஏ.. ராஜா கடிக்காதீங்க" அப்படின்னு ஒரு பாட்டு வரும்.. படம் பார்க்கிறப்போ பார்த்ததுதான். அப்புறம் கேட்டதும் இல்லை. எங்கேயும் கேள்விப்படவும் இல்லை.

நன்றி மதுஜி.

அடுத்த வரி

பூமேனி பொறுக்காதுங்க.

அதானே மதுஜி.

gkrishna
16th September 2014, 06:36 PM
ஒய் நீர் தப்பு பண்ணலே
நான் தான் ஒய் தப்பு பண்ணிட்டேன்
மது அண்ணா எவ்வளுவு பெரிய ஆழமான கடல் அப்படின்னு தெரியாம
காலை விட்டுட்டேன் .

rajraj
16th September 2014, 06:37 PM
என்னை மன்னிச்சேன் நு ஒரு வார்த்தை மதுண்ணா சொல்ல மாட்டார்..ஏன்னாக்க அது ரெண்டு வார்த்தை ஆச்சே :) ஆமா இந்த மாதிரி ஏதாவது கடிப் பாட்டு..ஆப்பிள் கடி கொய்யாக் கடி ஏதாவது இருக்கா (ஹப்பா ரொம்ப லேட்டா வெடி போடற கண்ணா நீ)

kaakkaa kadi kadichu kudutha kamarukattu mittaayi......:lol:

gkrishna
16th September 2014, 06:37 PM
அண்ணா வாசு அண்ணா

வந்துதட்டு ளே
ராஜா கடிச்சா பூமேனி எப்படி தாங்கும்

vasudevan31355
16th September 2014, 06:39 PM
படம் சரியாப் போகல. ஆனா பாட்டுக்கள் ஒன்னு ஒன்னும் அருமை.

இதே சில்க்கிற்கும், பிரபுவிற்கும் ஒரு அருமையான பாட்டு.

'தேன் சுமந்த முல்லைதானா

வானவில்லின் பிள்ளைதானா'


அப்புறம்

நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்

பிரபு ராதா மென்மை டூயட்.



http://www.youtube.com/watch?v=AXo8i3tVPWI&feature=player_detailpage

gkrishna
16th September 2014, 06:40 PM
இங்கே ராஜ்ராஜ் veteren hubber வெட்றாரே
சான்ஸ்ஏய் இல்லை

madhu
16th September 2014, 06:41 PM
நன்றி மதுஜி.

அடுத்த வரி

பூமேனி பொறுக்காதுங்க.

அதானே மதுஜி.

அதே அதே !!

gkrishna
16th September 2014, 06:41 PM
கை வீசும் தாமரை

இதில் தானே வாசு அண்ணா

madhu
16th September 2014, 06:41 PM
ஒய் நீர் தப்பு பண்ணலே
நான் தான் ஒய் தப்பு பண்ணிட்டேன்
மது அண்ணா எவ்வளுவு பெரிய ஆழமான கடல் அப்படின்னு தெரியாம
காலை விட்டுட்டேன் .

ஹி ஹி.. நான் கடல் எல்லாம் இல்லை.. குட்டைதான் :)

rajraj
16th September 2014, 06:42 PM
இங்கே ராஜ்ராஜ் veteren hubber வெட்றாரே
சான்ஸ்ஏய் இல்லை
My post was an aberration ! :)

gkrishna
16th September 2014, 06:43 PM
ஹி ஹி.. நான் கடல் எல்லாம் இல்லை.. குட்டைதான் :)

ஆனால் குழம்பாத குட்டை எங்களை எல்லாம் குழப்பாத குட்டை

madhu
16th September 2014, 06:44 PM
கைராசிக்காரன்

நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்

http://youtu.be/AXo8i3tVPWI

கை வீசும் தாம்ரை

http://youtu.be/27QW9wC-An0

தேன் சுமந்த முல்லைதானா ( ஆடியோ ஒன்லி )

http://youtu.be/O18TLhw9Sfc

gkrishna
16th September 2014, 06:44 PM
My post was an aberration ! :)

ராஜ்ராஜ் அண்ணா

aberration மீனிங் அண்ணா தமிழ் இல் மட்டும்
நான் ஆங்கிலத்தில் கொஞ்சம் இல்ல ரொம்பவே ஸ்ட்ரோங்

madhu
16th September 2014, 06:46 PM
ராஜ்ராஜ் அண்ணா

aberration மீனிங் அண்ணா தமிழ் இல் மட்டும்
நான் ஆங்கிலத்தில் கொஞ்சம் இல்ல ரொம்பவே ஸ்ட்ரோங்

ரூட் மாறுறதுன்னு சொல்லுவாங்கோ.

தூய தமிழில் "பிறழ்ச்சி"

gkrishna
16th September 2014, 06:46 PM
பிறழ்ச்சி-aberration

ஆனால் நீங்கள் பிறழாதவர் சரிதானே rajraj anna

gkrishna
16th September 2014, 06:48 PM
மது அண்ணா

மீண்டும் நமஸ்காரம் நான் ரூட் மாத்தலே
சி கே மாதிரி இங்கிலீஷ் கவிதை எழுதி பார்த்தேன்

rajraj
16th September 2014, 06:49 PM
ஆனால் நீங்கள் பிறழாதவர் சரிதானே rajraj anna

Yes! :)

gkrishna
16th September 2014, 06:52 PM
Yes! :)

sorry next post please

gkrishna
16th September 2014, 06:53 PM
Yes! :)

அப்பா தப்பிச்சேன் உங்க சிரிப்பு நல்ல சிரிப்பு கள்ள சிரிப்பு இல்ல
'அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் ஆணவ சிரிப்பு
இங்கே நீ சிரிக்கும் பொன் (அல்லது) புன் சிரிப்போ ஆனந்த சிரிப்பு

gkrishna
16th September 2014, 06:58 PM
வென்கிராம் சார் அவர்கள் உறுமி,பம்பை பற்றி சில பாடல்கள் கேட்டு இருந்தார் என்று நினைவு

'பம்பை உடுக்கை கட்டி பரிவட்டம் மேலே கட்டி ' - ரிக்க்ஷாகாரன்
'கேட்டுகோடி உறுமி மேளம் '
'அம்பிகையே ஈஸ்வரியே '

இந்த பாட்டு எல்லாம் நீங்கள் கேட்டவர் கொடுத்துட்டாரா என்று தெரியவில்லை .இருந்தாலும் இப்போது என் நினைவில் வந்தவை

rajraj
16th September 2014, 07:05 PM
அப்பா தப்பிச்சேன் உங்க சிரிப்பு நல்ல சிரிப்பு கள்ள சிரிப்பு இல்ல


Thank you! It reminds me of what some of my students used to tell me -" You are the only professor who smiles at students". Teaching can be fun for both the teacher and the students! One student labelled me 'funny professor' :lol:

gkrishna
16th September 2014, 07:10 PM
உங்கள் நட்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி ராஜ்ராஜ் sir
எப்பவுமே நீங்க funny professor தான்.எங்களை எல்லாம் சிரிக்க வைக்கிற professor
சுந்தர காண்டம் திரை படத்தில் பாக்யராஜ் கூட professor ரோல் தானே
முந்தானை முடிச்சு படத்தில் ஹை ஸ்கூல் டீச்சர் or முதியோர் கல்வி
புதிய வார்ப்புகள் ஆரம்ப பள்ளி கூட டீச்சர்

கேட்கலாமா இந்த கேள்வி
இந்த மாதிரி roles நடிச்ச தமிழ் actors வேறு யாராவது சார்

rajraj
16th September 2014, 07:20 PM
உங்கள் நட்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி ராஜ்ராஜ் sir
எப்பவுமே நீங்க funny professor தான்.எங்களை எல்லாம் சிரிக்க வைக்கிற professor
கேட்கலாமா இந்த கேள்வி
இந்த மாதிரி roles நடிச்ச தமிழ் actors வேறு யாராவது சார்

Thank you again. Unfortunately I don't know much about Tamil movies after 1965, the year I left for the US. In fact, I am learning about those movies here ! :lol: Learning never ends! :) If I recall any I will post.

( Another aberration. I revealed some personal information! :) )

madhu
16th September 2014, 07:22 PM
Thank you again. Unfortunately I don't know much about Tamil movies after 1965, the year I left for the US. In fact, I am learning about those movies here ! :lol: Learning never ends! :) If I recall any I will post.

( Another aberration. I revealed some personal information! :) )

படிக்க வேண்டும் புதிய பாடம் வாத்தியாரையா
பழைய பாடம் தேவையில்லை வாத்தியாரையா

http://youtu.be/3IDTDy7pYE0

rajraj
16th September 2014, 07:28 PM
படிக்க வேண்டும் புதிய பாடம் வாத்தியாரையா
பழைய பாடம் தேவையில்லை வாத்தியாரையா


Yes! I am learning -History of music,mathematics and languages ! :)

madhu
16th September 2014, 07:36 PM
சிக்கா... உங்களுக்காக ஒரு ஸ்பெஷல் பாட்டு..

சாருகேசி ராகம் கேட்டதுண்டோ ? "வசந்த முல்லை போலே வந்து" , "வரச்சொல்லடி அவனை வரச்சொல்லடி" மற்றும் " தூது செல்வதாரடி" என்று விதவிதமா கேட்டிருப்பீங்க..

டி.எம்.எஸ்ஸின் ஜாலி பாடலைக் கேளுங்கள்.. "நான் இசைக்கும் ராகமெல்லாம் அவன் தந்த யோகம்"

படம் "சிரி சிரி மாமா".... பாட்டைக் கேட்கும்போது பாகவதர் பாடிக் கொண்டிருக்கும் மேடைக்கு பாம்பு வந்திருக்குமோ என்று தோன்றுகிறது

http://youtu.be/D5nlBtiYK2E

chinnakkannan
16th September 2014, 09:58 PM
ஆஹா.. லா.டி.ரா பாட்டு, தும்பி வா தும்பக் குடத்தில் ஆரம்பிச்சு நாலு பாட்டு…நான் இசைக்கும் ராகமெல்லாம் அவன் தந்த யோகம்.. கேட்டு முடிச்சேன்.. ஆனா அதுக்கு ம் முன்னாலே கேட்டது – மாம்பழத்தோட்டம் மல்லிகைக் கூட்டம் மணக்க வரும் மாலைப் பொழுதோடு மருவி அணைக்கும் மயக்கம் கொடுக்கும் மன்மதன் வந்தான் தேரோடு.. அங்கே காதலர் உள்ளம் ரெண்டும் படக் படக் பட்பட்.. கேட்டேன்.. ரொம்ப நாளாச்சு கேட்டு..
தாங்க்ஸ் டு மதுண்ணா தும்பியில் ஆரம்பித்து நா.இ.ராகமெல்லாம் பாட்டு வரைக்கும்..கைராசிக்காரன் பாட்டு கேட்கலை..படம் பார்த்திருக்கேன்..கதை மிக அழகான நல்ல கதை.. கதை..ரா.கி ரங்கராஜன் எனப் போட மட்டும் அவரிடமிருந்து வாங்கி உல்டா பண்ணி ஒருவழியேத்தி இருப்பார்கள்.. சிரிசிரி மாமா பார்த்ததில்லை..வெ.ஆ.மூர்த்தியா.. பாட்டுக்கு தாங்க்ஸ்..
தாங்க்ஸ் எஸ்விசார்..மாம்பழத் தோட்டத்திற்கு.. நோ தாங்க்ஸ் ஃபார் செளகார் ஜானகி ஃபோட்டோ..
தாங்க்ஸ் வாசு சார் ஃபார் இ.ஸ்பெஷல் பாட்டுக்கு.. நான் இப்போ தான் கேட்கறேன்..
வாங்க ராஜ் ராஜ் சார்..கரெக்டா காக்காக் கடி பிடிச்சுட்டீங்களே.. தாங்க்ஸ்..

கிருஷ்ணாஜி எனக்குத் தெரிஞ்ச ஒரு கடிப் பாட்டு..வேண்டும் வேண்டும் வா
மீண்டும் மீண்டும் வா.. பால் நிலா ராத்திரி பாவையோர் மாதிரி அழகு ஏராளம் அதிலும் தாராளம் என்று டிம்பிள் தாராளமாய் ஆடும் பாடலில்..
தேக்கு மரத்தில் வார்த்து வைத்த தேஹம் இது தானா…என்ற வரிகள் வரும்போது வாளால் ஆப்பிள் கடிப்பார் கமல்ஹாசன் (கத்தி டைரக்டர் தரலையாம்) என்று நினைவு.. அப்புறம் ஒரு விளம்பரப் படம் பளிச்சிடும் ஈறுகள் மற்றும் பற்களுக்கு கர்ரக் என ஒருஆப்பிள் கடிபட்டு ஒருகரும்பு கடிக்கப் பட்டு வஜ்ரதந்தி வஜ்ர தந்தி வீக்கோ வஜ்ர தந்தி டூத் பவுடர் டூத்பேஸ்ட்… என்ற விளம்பரப் பாடல்… அடிக்க வருமுன் எஸ்கேப்ப் ஆகலாம்னா..இதென்ன

கண்ணே கலைமானே பாட்டை டைப்படிக்கலாம் என்று வேகமாக அடித்ததில் இவ்வளவு தான் மிச்சம்..டைப்படிப்பதை நிறுத்திப் பாட்டைக்கேட்டு விட்டேன்..ஏன் வீடியோ கிடைக்கலையா..

நீர்வீழ்ச்சி தீமூட்டுதே தீக்கூட குளிர் காயுதே
ஆண்பார்வை மின்சாரம் தந்திட பெண் தேகம் சிலிர்க்கின்றதே

செம்மாந்து மழைவந்து பெய்யுது தேன் சிட்டு நனைகின்றது
கண்மீன்கள் தரை வந்து கொஞ்சுது தேன் சொட்டித் திரள்கின்றது
தண்ணீரில் அப்புறம் வேகமாயிடுத்து…:)

rajeshkrv
17th September 2014, 08:10 AM
கிருஷ்ணா ஜி , வாசு ஜி பதிவுகள் அருமை அற்புதம்

Richardsof
17th September 2014, 08:35 AM
MUSIC DIRECTOR VEDHA .

http://i57.tinypic.com/2wn0ow6.jpg

http://i57.tinypic.com/552j6d.jpghttp://i57.tinypic.com/2sb78cp.jpg

Richardsof
17th September 2014, 08:36 AM
http://i61.tinypic.com/15gs9c3.jpg

Richardsof
17th September 2014, 08:37 AM
http://i59.tinypic.com/2utgp6o.jpg

Richardsof
17th September 2014, 08:38 AM
http://i59.tinypic.com/2a0mfk6.jpg

Gopal.s
17th September 2014, 08:38 AM
வென்கிராம் சார் அவர்கள் உறுமி,பம்பை பற்றி சில பாடல்கள் கேட்டு இருந்தார் என்று நினைவு

'பம்பை உடுக்கை கட்டி பரிவட்டம் மேலே கட்டி ' - ரிக்க்ஷாகாரன்
'கேட்டுகோடி உறுமி மேளம் '
'அம்பிகையே ஈஸ்வரியே '

இந்த பாட்டு எல்லாம் நீங்கள் கேட்டவர் கொடுத்துட்டாரா என்று தெரியவில்லை .இருந்தாலும் இப்போது என் நினைவில் வந்தவை

ஏன் காதுதான் சங்கர்-கணேஷ்,விஜய பாஸ்கர் இசை கேட்டு ஒரு மாதிரி ஆகி விட்டதென்றால் ,கண்ணுமா கெட்டு தொலைத்தது? கேள்வியை படித்தவர்,அதன் பதிலை பார்த்து விட்டு தொடரவும்.அல்லது ஒதுங்கி நில்லுங்கள். என் எழுத்துக்கு வந்த பிரதி வாதத்திற்கு நான் பதில் சொல்லி கொள்வேன். எந்தெந்த படங்களில் அவர் என்ன கருவிகள் உபயோக படித்தினார் என்பதை நாங்கள் பார்த்து கொள்கிறோம்.

Richardsof
17th September 2014, 08:46 AM
http://youtu.be/D6MeYM6Z7kI

Gopal.s
17th September 2014, 08:58 AM
Madhu- Seriously ,I have a question for you. Do you have the system with special provision to search for a non-existent songs? I am surprised the way you brought those ones!!!

RajRaj- Welcome to professor Double Raj. My Teaching was limited to my lectures to B.Tech students during my M.tech Days (thanks to my insincere lazy lecturers who volunteered to trust their work as I showed my inclination),My SITRA(Research Institute)Days with South India Mill owners Techno-commercial classes,Costing Institute ,management development classes and Seminars. Trust me,this is the profession closest to my heart next only to Film-making. I envy you. I was rated as the friendliest ,effective lecturer and awarded by SIMA best lecture Award.(I became a Chief Executive in a Multi-national with a flourishing career but my heart is still in teaching).
I envy you Professor. Welcome here.

Chinna Kanna- Enjoying your style thoroughly.

Krishna- Enjoying your spontaneous kuthals and your enthusiasm.

Rajesh- Expected a song today. Just stopped with a remark?

Vasu- what is surprise shock or shocking surprise today?

Karthik- If I don't get your response today,I am halting my serial on M.S.V. Much more to write.

venkkiram
17th September 2014, 08:58 AM
அமைதி அமைதி திரு கோபால்.. கடைசில கலகமே என்னாலதான் வந்தது என யாராவது ஒருத்தர் இடையில புகுந்து தீர்ப்பு சொல்லிவிடப் போகிறார்! ஆயிரம் வவ்வால்கள் ஒன்றோடொன்று இடைவெளியில்லாமல் ஒட்டிக்கொண்டு அடைந்து கிடந்தாலும் ஒரு தாய் வவ்வால் தனது சேயை சரியாக கண்டுபிடித்துவிடுமாம். அதுபோல ஒரே கேள்விக்கு பலதரப்பட்ட பதில்கள் துணுக்குக் களஞ்சியமான இத்திரியில் பலரிடமிருந்தும் வந்தாலும், உங்களின் பதில்/பதிவு சிறப்புதான். அதுபோல ஒவ்வொருவரின் பதில்/பதிவும் ஒவ்வொருவிதத்தில் முக்கியமானதுதான். (அவையெல்லாம் எனக்கு ஒத்துப்போகிறதா/இல்லையா என்பது வேறுவிஷயம்) அதனால் கோபத்தை தணியுங்களேன்.

Gopal.s
17th September 2014, 09:01 AM
Special Thanks ESVEE for visual treat with avanangal .Only Baddie to be accepted in our Camp!!!!????

Gopal.s
17th September 2014, 09:09 AM
அமைதி அமைதி திரு கோபால்.. கடைசில கலகமே என்னாலதான் வந்தது என யாராவது ஒருத்தர் இடையில புகுந்து தீர்ப்பு சொல்லிவிடப் போகிறார்! ஆயிரம் வவ்வால்கள் ஒன்றோடொன்று இடைவெளியில்லாமல் ஒட்டிக்கொண்டு அடைந்து கிடந்தாலும் ஒரு தாய் வவ்வால் தனது சேயை சரியாக கண்டுபிடித்துவிடுமாம். அதுபோல ஒரே கேள்விக்கு பலதரப்பட்ட பதில்கள் துணுக்குக் களஞ்சியமான இத்திரியில் பலரிடமிருந்தும் வந்தாலும், உங்களின் பதில்/பதிவு சிறப்புதான். அதுபோல ஒவ்வொருவரின் பதில்/பதிவும் ஒவ்வொருவிதத்தில் முக்கியமானதுதான். (அவையெல்லாம் எனக்கு ஒத்துப்போகிறதா/இல்லையா என்பது வேறுவிஷயம்) அதனால் கோபத்தை தணியுங்களேன்.

Venki,

I value your response as a discerning reader. I want to segregate casual conversation/Comical interractions with serious interaction on the subject deserve special attention. I don't have anger or enmity but sometime people don't have synch or Goal Congruence with the subjects under discussion and purpose.Thats it. Even in my work ,I show two distinct faces.Serious matters ,only the deserving people can enter and contribute. Having fun with team,other normal operations ,all are welcome. It has become my success formula. Provocation is the best Tonic for Indians.

gkrishna
17th September 2014, 09:43 AM
நன்றி திரு வென்கிராம் உங்கள் பதிவுக்கு

vasudevan31355
17th September 2014, 10:10 AM
வண்டிப் பாடல்.

இந்தப் பாடலைப் பாருங்கள். வித்தியாசமான முயற்சி. காதலி இங்கே காதலனுக்கு கார் ஓட்ட கற்றுக் கொடுக்கிறாள். அதுவும் பாடல் மூலமாகவே.

"இது கிளட்ச்....இது கியர்... இது பிரேக்.... கிளட்சை மிதித்து கியரை மாத்தி ஆக்சிலேட்டரை கொடுக்கணும்... ஸ்டீரிங்கைப் பிடித்து ஹாரனை அமுக்கி பாதையைப் பார்த்து போகணும்... சமயத்தில் பிரேக்கையும் போடணும்"

என்று அழகாகச் சொல்லித் தருகிறாள்.

'புதுசு இது புதுசு
இளசு இது இளசு'

என்று ஆனந்தக் கும்மாளமிட்டே சாலைகளில் காரோட்டிச் செல்லும் இந்த காதலர்களின் ஆனந்தம் நம்மையும் தொற்றிக் கொள்ளுமே.

சுசீலா அவர்களின் இளசுக் குரல் இனிமையான இதம்.

'சபாஷ் தம்பி' படப்பாடல்.


http://www.youtube.com/watch?v=ZQmggOCBvHc&feature=player_detailpage

chinnakkannan
17th September 2014, 10:13 AM
குட்மார்னிங்க் ஆல்..

ஹாய் வாசு சார்.. கார் பாட்டில் அழகிய மிதிலை நகரினிலே சச்சு தான் நினைவுக்கு வருகிறார்..இளையவரென்றால் ஆசை வரும் முதியவரென்றால் பாசம் வரும்.. ம்ம் தாங்க்ஸ் ஃபார் த கார் பாட்..

vasudevan31355
17th September 2014, 10:19 AM
கிருஷ்ணாஜி,

வணக்கம்.

எப்படியோ எதிர்பாராமல் கலகங்கள் நன்மையிலேயே முடிந்தது. இல்லையென்றால் இவ்வளவு பெரிய ஆசுவாச விடுதலை கிடைத்திருக்காது. இதற்காக கலகம் நினைக்காத (!) கலகக்கார்களுக்கு :) கலக்கல் கலக நன்றிகள் கூறியே தீர வேண்டும். கிருஷ்ணாஜி! நாட்டாமை தீர்ப்பு நல்ல தீர்ப்பா? ஆனால் நான்... நான் நாட்டாமை இல்லை சாமி.

vasudevan31355
17th September 2014, 10:23 AM
வணக்கம் சின்னக் கண்ணன் சார்,

//ஃபார் த கார் பாட்..// எப்படி ராஜா இப்படியெல்லாம் முடிகிறது.? ஷுபா. தாங்கல சாமி :)

JamesFague
17th September 2014, 10:28 AM
Thanks Vasuji for LDR song. Fantastic song with NT as usual very smart and handsome.

gkrishna
17th September 2014, 10:28 AM
வாகன பாடல் வாசு சார்
நம்ம ஜெமினி அண்ணாவும் சரோஜா அக்காவும்
'ஜிகு ஜிகு எங்கும் போவோம் ' பாலா சுசீலா குரல்களில்
ஸ்கூட்டர் வாகனம் தானே
படம் மாலதி தானே
ஏற்கனவே இந்த பாடல் போடப்படவில்லை தானே

vasudevan31355
17th September 2014, 10:36 AM
வாகன பாடல் வாசு சார்
நம்ம ஜெமினி அண்ணாவும் சரோஜா அக்காவும்
'ஜிகு ஜிகு எங்கும் போவோம் ' பாலா சுசீலா குரல்களில்
ஸ்கூட்டர் வாகனம் தானே
படம் மாலதி தானே
ஏற்கனவே இந்த பாடல் போடப்படவில்லை தானே


கிருஷ்ணா சார்,

போட்டாச்சு போட்டாச்சு (வடிவேலு)

சிட் சிட் சிட் சிட் சிட் சிட் சிட் எங்கே போவோம்.
சிட் சிட் சிட் சிட் சிட் சிட் சிட் எங்கும் போவோம்.

vasudevan31355
17th September 2014, 10:37 AM
கிருஷ்ணா சார்,

'பேசும் படம்' இதழில் வெளிவந்த 'மதுரை மன்னன்' (நம் காந்தாராவ் நடித்தது) நியூஸ் பாருங்கள்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355014/IMG.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355014/IMG.jpg.html)

vasudevan31355
17th September 2014, 10:40 AM
எதிரிகள் ஜாக்கிரதை, மணமாலை, வேதா என்று கலக்கும் எஸ்வி சார்,

அரிய ஆவணங்களுக்கு நன்றிகள்.

gkrishna
17th September 2014, 10:47 AM
சூப்பர் வாசு சார்

வந்து விட்டான் விட்டல் ப்ரோடக்ஷன் மதுரை மன்னன்
வடநாட்டு mgr காந்தா ராவ் ஜோடி யாரு வாசு சார்
வசனம் பாடல்கள் புரட்சிதாசன்
இயக்கம் பி v ஆச்சார்யா

மீசை பென்சில் மீசை
இன்று ஒரு கேள்வி
தமிழ் படத்தில் முதன் முதலில் ஒரிஜினல் மீசைவைத்து நடித்த நடிகர் யாரு வாசு சார்

venkkiram
17th September 2014, 10:48 AM
இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே இங்கே பறந்தன

எழுபதுகளின் இறுதி.. சினிமாவை ஒரு விஷுவல் ஊடகமாக பெரிதும் பயன்படுத்தத் துவங்கிய காலக் கட்டம் என்பேன். கவியரசரும் அதற்கு அச்சாணியாக இப்படி பாடலை ஆரம்பிக்கிறார்.. கவிதையின் கட்டமைப்பே ஒரு புதிய உடை உடுத்திவந்து நிற்கிறது. இந்த ஒரே அடியில் கேட்போரின் மனதில் அழகான ஒரு காட்சியினை உருவகப்படுத்தி விடுகிறார். கற்பனை வானத்தில் வர்ணம் தீட்டும் கவித்துவமான தூரிகை வரிகள. படத்தில் நாயகி நாயகனைப் பார்த்து பாடுவதாக இவ்வரிகள் இருந்தாலும், நாம் தனியாக இதைக் கேட்டுரசிக்கும்போது, ஒரு பறவையாக மாறி மலையின் எழிலை ரசிக்க ஆரம்பித்துவிடுவோம். ஒரே கல்லில் இரு மாங்காய் போல இசைக் கண்ணாடியில் நிறப்பிரிகை நடத்திய ராஜா-கவியரசர்-ஜென்சி.

https://www.youtube.com/watch?v=rNge1N2Imsk

gkrishna
17th September 2014, 11:06 AM
வரவேண்டும் வெங்கிராம் சார் உங்களை வெங்கி என்று அழைக்கலாமா?
நிறம் மாறாத பூக்கள் பாடலை வழங்கி உள்ளீர்கள் .அருமையான பாடல் .ஜென்சி மலையாளமும் தமிழும் கலந்த ஸ்லாங் .
78-79 களில் இப்படி ஒரு கலவை தமிழுக்கு புதிது.
மாதுரி கூட மலையாள பாடல்கள் நிறைய பாடி இருக்கிறார் . ஆனால் தமிழுக்கு பாடும் போது தமிழ் ஸ்லாங் தான் வரும். உதாரணம் 'வெள்ளி ரதங்கள் அழகு மேனி ','தேடி வந்த கண்களுக்கு ஓடி வரும் சாமி'

பாடலின் சில வரிகள் கண்ணதாசனின் கவித்துவத்தை பறைசாற்றும்

இலை மறைவினில் இரு கனிகளும்
அங்கே அங்கே கனிந்தன
இது கண்கள் சொல்லும் ரகசியம்
நீ தெய்வம் தந்த அதிசயம்

madhu
17th September 2014, 11:09 AM
கிருஷ்ணா ஜி

தேடுகின்ற கண்களுக்குள் பாட்டை பாடியது அம்பிலி என்று நினைக்கிறேன்.

http://youtu.be/gqgC1bGWr1I

rajraj
17th September 2014, 11:15 AM
madhu: Here is a song for you and others:

aasai koLLum meesai uLLa aambaLaiya paathiyaa ....... from vazhkkai(1949)

http://www.youtube.com/watch?v=ZelSkcKSXec

It was popular in the early 50s.

vasudevan31355
17th September 2014, 11:15 AM
//ஜோடி யாரு வாசு சார்//

வேற யாரு கிருஷ்ணா சார்?

சௌகாரின் தங்கச்சிதான்.

vasudevan31355
17th September 2014, 11:19 AM
இன்றைய ஸ்பெஷல் (73)

http://archives.deccanchronicle.com/sites/default/files/mediaimages/gallery/2013/Feb/jaya22_0.jpg

'இன்றைய ஸ்பெஷலி'ல் ஒரு மாற்றத்திற்காக 'கங்கா கௌரி' (1973) திரைப்படப் பாடல்.

கதை உரையாடல்: ஏ.எஸ்.நாகராஜன்

பாடல்கள்: கண்ணதாசன்

இசை: 'மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.விஸ்வநாதன்.

தயாரிப்பு: பத்மினி பிக்சர்ஸ்

இயக்கம்: பி ஆர்.பந்துலு

http://img.youtube.com/vi/VMM40Uy7hwY/0.jpg

http://i.ytimg.com/vi/iPddY8zI7Xo/0.jpg

சிவன், 'பர்வத ராஜகுமாரி' பார்வதி திருமணத்திற்கு சனீஸ்வரனை அழைக்கவில்லை என்று சனி பகவானிடம் தூபம் போடுகிறான் நாரதன். ஏற்கனவே சிவன் மீது கடுப்பு கொண்டிருக்கும் சனி பகவான் கல்யாணத்தை தடுத்து நிறுத்துகிறேன் என்று கிளம்புகிறான். ஆனால் அதற்குள் சிவன் பார்வதி திருமணம் நடந்து முடிந்து விடுகிறது. திருமணத்தை பிரம்மா முன்னின்று புரோகிதராக நடத்தி வைக்கிறார்.

சனியும், நாரதனும் தங்கள் திருவிளையாட்டைத் தொடங்குகிறார்கள். தட்சப் பிரம்மன் மூலம் சிவனுக்கு இடர் வர திட்டம் தட்டுகிறார்கள். புரோகிதம் செய்து வைத்த பிரம்மாவின் தலைகள் ஒவ்வொன்றிக்கும் ஒவ்வொரு திசையில் இருந்தும் சிவன் தட்சணை அளிக்க வேண்டும் என்று நாரதன் யோசனை கூறுகிறான். சிவனும் அப்படியே சம்மதித்து பிரம்மனின் ஒவ்வொரு தலைக்கும் ஒவ்வொரு திசையிலிருந்தும் புரோகித தட்சணை அளிக்கிறான்.

சனி இப்போது விதி வடிவில் விளையாடுகிறான். பிரம்மன் நான்கு தலைகளுக்கும் தட்சணை பெற்றுக் கொண்டு தனது ஐந்தாவது தலைக்கும் தட்சணை கேட்கிறான் அதுவும் இதுவரை கொடுக்காத திசையிலிருந்து. விவரமறியாத சிவன் "அதற்கென்ன கொடுத்தால் போகிறது" என்று அப்பாவியாய் கூறுகிறான்.

தனது ஈசான திக்கிலிருந்து தட்சணை தருவதாக சிவன் கூற, அதற்கு பிரம்மன் "கிழக்கும், வடக்கும் சேர்ந்தது ஈசான திசை... அதனால் அது புது திசை ஆகாது" என்று மறுக்கிறான் சனியின் சதியால். "அப்படியானால் அக்கினி திசையிலிருந்து தருகிறேன்" என்கிறான் சிவன். அதற்கு திருமாலோ "அக்கினி திசை கிழக்கும் தெற்கும் சேர்ந்தது. வாயு திக்கு மேற்கும் வடக்கும் சேர்ந்தது. பிரம்மா சொல்வது போல இதுவெல்லாம் புது திசை ஆகாது" என்று எடுத்துரைக்கிறார்.

"என்ன செய்வது?" என்று சிவன் விழிக்க, பிரம்மா "திருமால் அடிகாணாமல் அழிந்தான் என்றும், நான் முடி காணாமல் மயங்கினேன் என்றும் கேலி செய்தார்களே.... அந்த சிவன் இப்போது திசை காணாமல் திக்கற்று திகைக்கிறாரே.... திருமணம் செய்து வைத்த புரோகிதருக்கு தட்சணை கொடுக்க வழியில்லாமல் திக்கற்று நிற்கும் இவர் புவனங்கள் அனைத்தையும் படைத்த என்னை விட எவ்விதத்தில் உயர்ந்தவர்? இவரைப் போய் பரம்பொருள் என்கிறார்களே" என்று சிவனை அவமானப்படுத்தி கேலி பேசுகிறான் பிரம்மன்.

இதைக் கேட்டு பெரும் கோபம் கொள்கிறான் சிவன். ஐந்தாவது தலைக்கு புது திக்கிலிருந்து தட்சணை கேட்டதால் பிரச்சனைக்குரிய அந்த பிரம்மனின் ஐந்தாவது தலையை சிவன் கிள்ளி எடுத்துவிடுகிறான் அதுமட்டுமல்ல. "ஐமுகன் நீ இனி நான்முகன் என்றே அழைக்கப் படுவாய்... இதுவே உன் கடைசி புரோகிதமாய்ப் போகட்டும்... உலகில் உனக்கு கோவில்களே இனி இல்லாமல் போகட்டும்" என்றும் சாபமிட்டு விடுகிறான்.

இதனால் ஆத்திரமுற்ற பிரம்மன் பதில் சாபமிடுகிறான். "நீ கிள்ளி எடுத்த எனது ஐந்தாவது தலை பிச்சை ஓடாக மாறி உன் கையிலேயே ஒட்டிக் கொள்ளட்டும். அதற்கு பிச்சை எடுத்து ஜீவிப்பதே உன் தொழிலாகும் அந்த ஓடு அதில் இடப்பட்ட பொருள்களை பாதி தின்றுவிட்டு நிரம்பாமலே போகும். அது எப்போது நிரம்புகிறதோ அப்போதுதான் உனக்கு சாப விமோசனம்" என்று சிவனுக்கு கடுமையாக சாபம் இட்டு விடுகிறான்.

கையில் பிச்சை கபால ஓடுடன் பரிதாபமாக நிற்கிறான் சிவன். அதைக் கண்டு சனி மௌனமாகக் கொக்கரிக்கிறான்.

பிச்சை ஓடுடன் எல்லோரிடமும் பிச்சை எடுக்கிறான் சிவன். ஆனால் பிச்சைப் பாத்திரம் நிரம்பியபாடில்லை.

இந்த சூழ்நிலையில் ஒலிக்கும் அற்புத பாடல். சிவன் மேல் பரிதாபம் கொள்ள வைக்கும் கவிஞரின் பாடல்.

http://i.ytimg.com/vi/W901TPriAUc/hqdefault.jpg

சிவனாக காதல் மன்னன் ஜெமினி கணேசன். பிரம்மாவாக ஜெமினி மகாலிங்கம். திருமாலாக சிவக்குமார். சனி பகவானாக ஓ..ஏ.கே தேவர் நாரதராக 'துகளக்' ஆசிரியர். பார்வதியாக ஜெயந்தி.

பாடகர் திலகத்தின் அற்புதமான குரல் பாவங்களில் ஒலிக்கும் பாடல். இந்தப் பாடலை இவரைத் தவிர வேறு யாரும் இவ்வளவு சிறப்பாகப் பாடிவிட முடியுமோ!

பிச்சை ஓடு நிரம்புவது எப்போது? சிவன் சாபம் தீருவது எப்போது? எல்லாம் அந்த 'கோபாலனு'க்குதான் வெளிச்சம்.

'இச்சமயம் என்னிடத்தில் அன்பு வையுங்கள்' என்று சிவன் கதறும் ஒரு வரியிலேயே அவனின் துன்ப நிலையை நம் மனதில் அப்படியே பதிய வைக்கும் கவிஞரின் வரிகள். அதற்கேற்றவாறு அருமையான இசை அமைத்த 'மெல்லிசை மன்னர்' அவர்கள்.

இனி பாடலின் முழு வரிகள்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/fgj.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/fgj.jpg.html)

பிச்சாண்டி தன்னைக் கண்டு பிச்சை இடுங்கள்
உங்கள் பெரிய கரங்களினால் அள்ளி இடுங்கள்
பிச்சாண்டி தன்னைக் கண்டு பிச்சை இடுங்கள்
உங்கள் பெரிய கரங்களினால் அள்ளி இடுங்கள்
இச்சமயம் என்னிடத்தில் அன்பு வையுங்கள்
இச்சமயம் என்னிடத்தில் அன்பு வையுங்கள்
இந்த ஈசனுக்கும் சாபம் உண்டு கண்டு கொள்ளுங்கள்
இந்த ஈசனுக்கும் சாபம் உண்டு கண்டு கொள்ளுங்கள்

பிச்சாண்டி தன்னைக் கண்டு பிச்சை இடுங்கள்
உங்கள் பெரிய கரங்களினால் அள்ளி இடுங்கள்

எத்தனை அடியாரை வாழ்த்திய கைகள்
இப்போது திருவோடு ஏந்திய கைகள்
எத்தனை அடியாரை வாழ்த்திய கைகள்
இப்போது திருவோடு ஏந்திய கைகள்
கட்டி வைத்த பொன்னரிசி கொட்டி விடுங்கள்
கையில் ஒட்டி உள்ள ஓடு தன்னை தட்டி விடுங்கள்
கையில் ஒட்டி உள்ள ஓடு தன்னை தட்டி விடுங்கள்

பிச்சாண்டி தன்னைக் கண்டு பிச்சை இடுங்கள்
உங்கள் பெரிய கரங்களினால் அள்ளி இடுங்கள்

ஆண்டவன் என்று சிலர் என்னை அழைத்தார்
ஆண்டி இவன் என்றே பிரம்மன் அழைத்தான்
சாத்திரத்தில் வந்ததில்லை இந்த பாவம்
என் ஆத்திரத்தில் வந்ததுதான் இந்த சாபம்
என் ஆத்திரத்தில் வந்ததுதான் இந்த சாபம்

பிச்சாண்டி தன்னைக் கண்டு பிச்சை இடுங்கள்
உங்கள் பெரிய கரங்களினால் அள்ளி இடுங்கள்


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=O41LtUgHRt4

gkrishna
17th September 2014, 11:39 AM
இன்றைய ஸ்பெஷல்
ஒரு அபூர்வமான பாடல் வாசு சார்
கங்கா கௌரி படத்தின் கதை முழுவதையும் விளக்கி விட்டீர்கள்
விஜய் டிவி காலை பக்தி ஸ்பெஷல் பார்த்த நிறைவு

gkrishna
17th September 2014, 11:46 AM
மது ஜி

தகவலுக்கு நன்றி .

பாடகி அம்புலி பாடிய வேறு சில பாடல்கள் ஏதாவது நினைவு படுத்த முடியுமா

gkrishna
17th September 2014, 11:47 AM
//ஜோடி யாரு வாசு சார்//

வேற யாரு கிருஷ்ணா சார்?

சௌகாரின் தங்கச்சிதான்.

ஓ அது கிருஷ்ணா குமரியா

gkrishna
17th September 2014, 12:01 PM
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcSxDSQYdLJlYpOgkAtudqno13xTouapi QZAVmM4uZdaE8J7_ehrVg

ஆகாயம் காணாத சூர்யோதயம் (ஆலய தீபம்): இந்த அற்புதமான பாடலைப் பற்றித் தனியே ஒரு கட்டுரையே எழுதலாம். ஸ்ரீதருடன் இணைந்து எம் எஸ் வி செயல் பட்ட கடைசிப் படம் இது என்று நினைவு.படம் 1984 கால கட்டத்தில் வெளி வந்தது

இதில் முதல் சரணத்தில்,

'தாலாட்டு உனக்காக நான் பாடினேன்
தாயன்பில் எனக்காக நீ பாடம்மா'

என்ற வரிகளைத்தொடர்ந்து ஒரு சிறிய ஹம்மிங்கில் ஒரு தாலாட்டை அமைத்திருப்பார் அது ஒரு அற்புதம்.

இரண்டாவது சரணத்தில்,

'இளங்கோவும் காணாத என் கண்ணகி
எழில் கொஞ்சும் ஆட்டத்தில் பொன் மாதவி'

என்று வரும்.

இந்த வரிகளைத்தொடர்ந்து வெறும் சலங்கை ஓசையையும் தாளக் கருவிகளையும் வைத்து, சில வினாடிகளில் ஒரு மினி நாட்டியக் கச்சேரியையே நிகழ்த்தியிருக்கிறார் நம்மவர். மாதவி நடனத்துக்குப் பேர் போனவள். கவிஞர் வேறு 'எழில் பொங்கும் ஆட்டம்' என்று எழுதி விட்டார். இந்த சந்தர்ப்பத்தை விட்டு விடுவாரா எம் எஸ் வி? அற்புதம்.

http://www.youtube.com/embed/Vyn1gTkei2k

பாடலை கேட்டால் விளக்க முடியாத நுணுக்கங்களையும் நன்றாக புரிந்து கொள்ளலாம்

thanks to Mr.Parthasarathy - MSV

vasudevan31355
17th September 2014, 12:23 PM
ஓ அது கிருஷ்ணா குமரியா

ஆமாம். ஆமாம். அது கிருஷ்ணாவின் குமாரிதான் :)

vasudevan31355
17th September 2014, 12:29 PM
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcSxDSQYdLJlYpOgkAtudqno13xTouapi QZAVmM4uZdaE8J7_ehrVg

ஆகாயம் காணாத சூர்யோதயம் (ஆலய தீபம்): இந்த அற்புதமான பாடலைப் பற்றித் தனியே ஒரு கட்டுரையே எழுதலாம். ஸ்ரீதருடன் இணைந்து எம் எஸ் வி செயல் பட்ட கடைசிப் படம் இது என்று நினைவு.படம் 1984 கால கட்டத்தில் வெளி வந்தது

இதில் முதல் சரணத்தில்,

'தாலாட்டு உனக்காக நான் பாடினேன்
தாயன்பில் எனக்காக நீ பாடம்மா'

என்ற வரிகளைத்தொடர்ந்து ஒரு சிறிய ஹம்மிங்கில் ஒரு தாலாட்டை அமைத்திருப்பார் அது ஒரு அற்புதம்.

இரண்டாவது சரணத்தில்,

'இளங்கோவும் காணாத என் கண்ணகி
எழில் கொஞ்சும் ஆட்டத்தில் பொன் மாதவி'

என்று வரும்.

இந்த வரிகளைத்தொடர்ந்து வெறும் சலங்கை ஓசையையும் தாளக் கருவிகளையும் வைத்து, சில வினாடிகளில் ஒரு மினி நாட்டியக் கச்சேரியையே நிகழ்த்தியிருக்கிறார் நம்மவர். மாதவி நடனத்துக்குப் பேர் போனவள். கவிஞர் வேறு 'எழில் பொங்கும் ஆட்டம்' என்று எழுதி விட்டார். இந்த சந்தர்ப்பத்தை விட்டு விடுவாரா எம் எஸ் வி? அற்புதம்.

http://www.youtube.com/embed/Vyn1gTkei2k

பாடலை கேட்டால் விளக்க முடியாத நுணுக்கங்களையும் நன்றாக புரிந்து கொள்ளலாம்

thanks to Mr.Parthasarathy - MSV


http://www.youtube.com/watch?v=Vyn1gTkei2k&feature=player_detailpage

gkrishna
17th September 2014, 12:32 PM
பாடலின் லிங்க் கொடுத்ததற்கு நன்றி வாசு சார்

இன்று காலையில் இந்த பாட்டை கேட்டேன். மெல்லிசை மன்னரின்
இசை கோர்வை கொள்ளை கொள்ள வைத்தது

vasudevan31355
17th September 2014, 12:34 PM
அனுராகசீமா' படத்தில் காந்தாராவும், கிருஷ்ண குமாரியும்.

http://s1.dmcdn.net/CEdXI/1280x720-8J_.jpg

http://i.ytimg.com/vi/IHMXXgEP77s/maxresdefault.jpg

chinnakkannan
17th September 2014, 12:34 PM
வாசு சார் //எப்படி ராஜா உனக்குத் தோணுது// :) தாங்க்ஸ்..

கங்கா கெளரி ஸ்பெஷல்வெரி நைஸ் வாசு சார்.. வெகு சின்ன வயதில் மதுரை சென் ட்ரலில் பார்த்த நினைவு.. அதன் பிறகு முழுக்கப்பார்க்க சந்தர்ப்பம் வரவில்லை..ஆரம்பத்தில் ஒவ்வொரு கிரகங்களையும் சோ தனக்கே யுரிய நகைச்சுவைத் தனமையில் சிரித்தபடி பாடிவரும் பாட்டு ஒன்று மட்டும் நினைவில் + இரண்டு ஜெ (வேறு யார் ஹீரோயின் தான்)+ ஒரு ஹீரோ ஜெ.. இந்தப் பாட்டை ஹோம் ஒர்க்கா வெச்சுக்கறேன் :)

வெங்கிராம்..வாங்க.. இந்த இருபறவைகள் பாட்டு கேட்க மட்டும் செய்திருக்கிறேன்.. முதன் முதலாக காதல் டூயட் பாட்டும் சரி.. படம் பார்த்ததில்லை காரணம் பல அவற்றுள் சில .. இந்த ஸ்டெப் கட்டிங்க் ஸ்டைலில் ஃபுல் சூட்டில் விஜயன் அப்புறம் குட்டி ஃபோட்டோவாய் ரத்தி போட்ட போஸ்டர் அப்புறம் ராதிகா..(கிபோர பார்த்த பயம் போகாத தருணம் அது..) எனில் பயம் கூட காரணமாய் இருக்கலாம் பார்க்காததற்கு..இருபறவைகள் பாட்டு கண்ணதாசன் என்று இன்று வரை தெரியாது..தாங்க்ஸ்..

ஜென்ஸி குரல் தான் கேட்கும் போது அந்தக் கால ரேடியோ ட்ராமா தான் நினைவுக்கு வரும்..

க்றீச்.. கதவிடுக்கில் மாட்டிக்கொண்ட எலியின் சப்தம் டடக் டக்.. (கதவைத் திறக்கறாங்களாம்..)

உணர்ச்சியே இல்லாத ஆண்குரல் : வாம்மா கல்பனா..அவனை ஹாஸ்பிடல்ல பார்த்தியாமா

உணர்ச்சியே இல்லாத பெண்குரல்: பார்த்தேன் மாமா..(கொக் கொக்..எனசத்தம் அழறாங்களாம்) அவர் ட்யூப்லாம் ஃபிக்ஸ்பண்ணி.. பாக்கவே கஷ்டமா இருக்குமாமா..

உ.இ.ஆ.கு.: வாம்மா நாம போய்ப் பார்க்கலாம்

மறுபடியும் கதவிடுக்கில் மாட்டிய எலியின் ஓலக் க்றீச் (கதவு திறந்து மூடுகிறது:)

இந்த க் கீச் வாய்ஸ் தான் ஜென்ஸி (ஒரு சின்னப் பதிவுக்கு இவ்ளோ உவமை அவசியமா கண்ணா) என்பதுஎனது அபிப்ராயம்..என் வானிலே ஒரே வெண்ணிலா கூட வேறு எவருக்காவது கொடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்..பாவம் நடுவில் குரல் போய்விட்டதாக ஒரு கட்டுரையில் படித்த நினைவு..இளையராஜா சான்ஸ் தரவில்லை எனக் கூறியிருந்ததுமாக நினைவு..

ஆனால் அந்தக் காலத்தில் இந்தப் பாட்டை ரேடியோவில் கேட்டிருக்கிறேன்..அடிக்கடி.. நன்றி..


தாலாட்டு உனக்காக நான் பாடினேன் கேட்டதில்லை கிருஷ்ணா ஜி.. கேட்கிறேன்..

madhu
17th September 2014, 12:36 PM
இன்றைய ஸ்பெஷலி'ல் ஒரு மாற்றத்திற்காக 'கங்கா கௌரி' (1973) திரைப்படப் பாடல்.
பிச்சை ஓடு நிரம்புவது எப்போது? சிவன் சாபம் தீருவது எப்போது?

லட்சுமியம்மா கண் திறந்து பார்த்தவுடன் எல்லாம் சரியாயிடும்.

http://youtu.be/hJ9hPhdB8V8

madhu
17th September 2014, 12:37 PM
மது ஜி

தகவலுக்கு நன்றி .

பாடகி அம்புலி பாடிய வேறு சில பாடல்கள் ஏதாவது நினைவு படுத்த முடியுமா

சில மலையாளப் பாடல்கள் நினைவுக்கு வருது. தமிழில் சட்டுனு ஞாபகம் வரலீங்கோ..

vasudevan31355
17th September 2014, 12:41 PM
'அனுராகசீமா' படத்தில் காந்தாராவும், கிருஷ்ண குமாரியும் பாடும் அற்புத டூயட்.

ஜிக்கியும், பி.பி.ஸ்ரீநிவாசும் பாடும் நிஜமாகவே மனதை மயக்கும் மதுர கானம். ராஜன் நாகேந்திரா இசை மனதை மென்மையாக வருடுகிறது.


http://www.dailymotion.com/video/x11ydru_kanakadurga-pooja-mahima-songs-anuraagaseema-kantha-rao-krishna-kumari_music

gkrishna
17th September 2014, 12:45 PM
அருமை வாசு சார் மொழி புரியாவிடினும் இசை ரசிக்க வைக்கிறது

உயிரா மானமா வில் கிருஷ்ணகுமாரி கதாபாத்திரம் மிக நன்றாக அமைக்கப்பட்டு இருக்கும் .

vasudevan31355
17th September 2014, 12:46 PM
'அந்தரங்கம் நான் அறிவேன்'

சிந்தும் உங்கள் இளம் புன்னகைக்கு மதுஜி ரொம்ப தேங்க்ஸ்.

gkrishna
17th September 2014, 12:48 PM
இந்த கட்டுரை நடிகை ரோகினி (நடிகர் ரகுவரனின் மனைவி ) எழுதியது
சற்று சிந்திக்க வைத்த கட்டுரை

நடிகர் சங்கம் இருக்கும் ஹபிபுல்லா சாலைக்குப் போகும்போதெல்லாம் ஒரு பெரிய கல்யாண மண்டபம் தாண்டிப் போவோம். அந்தக் கல்யாண மண்டபம், நடிகர் திலகத்திற்குச் சமமாக மதிக்கப்பட்ட நடிகையர் திலகம் சாவித்திரி அவர்களின் வீடு என்றும் அங்கே செல்பவர்கள் குறைந்தது ஒரு டம்ளர் மோராவது குடிக்காமல் வெளியே வர முடியாது என்றும் சொல்லிக் கேள்விப்பட்ட துண்டு. சாவித்திரி என்னும் மாபெரும் நடிகை காரணமாகத்தான் நான் 10 வயதில் முதன் முதலில் விமானத்தில் பயணித்தேன். அதுவும் தனியாக.

ஹைதராபாத்தில் ‘செக்ரெட்டரி’ என்னும் தெலுங்குப் படத்தில் சாவித்திரியின் மகளாக நடிக்கப் போனேன். அந்த நேரத்தில் எங்கள் பெரியப்பா மகனின் திருமணம் விசாகப்பட்டி னத்தில் நடைபெறவிருந்தது. என் அப்பா என்னை யூனிட்டில் உள்ள ஹேர் டிரஸ்ஸரிடம் ஒப்படைத்துவிட்டுக் கல்யாணத்துக்குப் போய், படப்பிடிப்பு முடிவதற்கு முன்பு திரும்பி விடுவதாகத் திட்டம்.

அப்பா கிளம்பிப் போய்விட்டார். படப்பிடிப்புக்கான எல்லா ஏற்பாடுகளும் நடந்துகொண்டிருந்தன. எனக்கும் மற்ற குழந்தைகளுக்கும் மேக்கப் செய்து டிரெஸ்ஸெல்லாம் மாற்றிவிட்டார்கள். புது ஆடை அழுக்காகிவிடாமல் விளையாடச் சொல்லி எங்களுக்கு உத்தரவு. அது பற்றி எங்களுக்கு என்ன கவலை? நேரமாகிக் கொண்டே போனது. படப்பிடிப்பு தொடங்கவில்லை. ஏதோ ரகசியமாகப் பேசிக்கொண்டார்கள். சாவித்திரி அம்மாவால் நடக்கவே முடியவில்லையாம். தள்ளாடிக் கொண்டி ருக்கிறாராம். படப்பிடிப்பை ரத்து செய்வது தவிர வேறு வழியே இல்லையென்று சொல்லிக் கொண்டார்கள்.

மாலை நெருங்கும்போது படப்பிடிப்பு ஷெட்யூல் பிரேக் அப் என்று தீர்மானிக்கப்பட்டது. வந்தவர்கள் எல்லோரும் சென்னை திரும்புவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. அப்பொழுது தயாரிப்பாளர் டி. ராமாநாயுடு என்னை விமானத்தில் கொண்டுபோய் என் மாமாவின் வீட்டில் விடுவதற்கு ஏற்பாடு செய்தார். எனக்கு எல்லாம் புரிந்தும் புரியாமலும் இருந்தது. அப்பா வந்த பிறகு பெரியவர்கள் பேசிக்கொண்டதிலிருந்து விஷயத்தை ஒருவாறாகத் தெரிந்துகொண்டேன்.

பொருளாதாரச் சிக்கலில் இருந்த சாவித்திரி அம்மாவுக்கு உதவுவதற்காக அக்கினேனி நாகேஸ்வர ராவின் அக்கா வேடத்தில் நடிக்க அவரை ஒப்பந்தம் செய்தார்கள். ஆனால் சாவித்திரி அம்மா குடித்துவிட்டு வந்ததனால் படபிடிப்பு நடக்காமல் பெரும் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. இனி அந்த வேடத்தில் கிருஷ்ணகுமாரி நடிப்பார் என்று தெரிந்தது.

மற்றவர்கள் பிரமித்து அண்ணாந்து பார்க்கும் திறமை வாய்ந்தவர்கள் மிக எளிதாகப் புண்படக்கூடியவர்களாக இருக்கிறார்கள். தன்னை மீறிய இந்த விசால உலகை உணர்ந்து அதை அனைத்துக்கொள்ளாமல் தன் காயங்களுக்குள் மூழ்கிச் சில நேரங்களில் அதை விரும்பவும் செய்கிறார்கள். இந்த நிலை அவர்களின் நலம் விரும்பு பவர்களுக்கும் அவர்கள் ரசிகர்களுக்கும் மிகுந்த வேதனை அளிப்பதாக இருக்கும். அவர்களை அந்த வலியிலிருந்து மீட்டெடுப்பது மிகவும் கடினமான பாதை.

சாவித்திரி அம்மா விஷயத்தில் நினைக்க, நினைக்க என்னை உறுத்திக்கொண்டிருக்கும் விஷயம் இதுதான். அக்கினேனி நாகேஸ்வர ராவுடன் ஜோடியாக எத்தனையோ வெற்றிப் படங்களில் சேர்ந்து நடித்தவர் அவர். ராசியான ஜோடி என்று பெயர்பெற்ற ஜோடி இது. வாழ்க்கையின் போக்கில் ஏற்பட்ட மாற்றத்தால் அதே நாகேஸ்வரராவுக்கு அக்காவாக நடிக்க வேண்டியுள்ளதே என்ற எண்ணம்தான் அவரை அப்படி நடந்துகொள்ளச் செய்ததோ என்று எனக்குத் தோன்றுகிறது.

http://www.nammachennai.in/img/January2012/599970d0-1806-490f-9ca7-0285498d45f4-rohini-75.jpghttp://www.nammachennai.in/img/March2012/c0faf2e2-ef1b-44a6-941f-15334243d669_savitri.jpg

vasudevan31355
17th September 2014, 12:54 PM
அருமை வாசு சார் மொழி புரியாவிடினும் இசை ரசிக்க வைக்கிறது

உயிரா மானமா வில் கிருஷ்ணகுமாரி கதாபாத்திரம் மிக நன்றாக அமைக்கப்பட்டு இருக்கும் .


அது எங்களூர் பெருமை பேசும் பாடல் இடம் பெற்ற படமாயிற்றே கிருஷ்ணாஜி!

நீங்கள் எமக்களித்த நெய்வேலி பெருமை கண்டு ....

நான் வேலை செய்யும் இடம் இதுதான் கிருஷ்ணாஜி. இரண்டாம் அனல் மின் நிலையம்.

மொத்தம் 7 யூனிட்டுகள். ஒவ்வொன்றும் 210 மெகாவாட் திறம் கொண்டது. 7 யூனிட்டுக்கும் சேர்த்து 1470 மெகாவாட்.

தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, பாண்டி முதலிய மாநிலங்களுக்கு மின்சாரம் சப்ளை ஆகிறது. 7 சிமினியும், 7 கூலிங் டவரும் இருப்பதைப் பாருங்கள். அப்புறம் பார்க்க வாருங்கள்.

http://static.panoramio.com/photos/large/46271653.jpg

gkrishna
17th September 2014, 12:57 PM
சகோதரி நடிகைகள்

சௌகார் ஜானகி - கிருஷ்ணகுமாரி

பண்டரிபாய் - மைனாவதி

அம்பிகா ராதா அவங்க தங்கை மல்லிகா

ராதிகா நிரோஷா

ராஜ்கோகிலா - ராஜ்மல்லிகா

இந்த மாதிரி சகோதரிகள் நடிகைகள் ஆனவங்க லிஸ்ட் உடனே எனக்கு நினைவு வந்தது

gkrishna
17th September 2014, 01:01 PM
நீங்கள் எமக்களித்த நெய்வேலி பெருமை கண்டு ....

நான் வேலை செய்யும் இடம் இதுதான் கிருஷ்ணாஜி. இரண்டாம் அனல் மின் நிலையம்.

மொத்தம் 7 யூனிட்டுகள். ஒவ்வொன்றும் 210 மெகாவாட் திறம் கொண்டது. 7 யூனிட்டுக்கும் சேர்த்து 1470 மெகாவாட்.

தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, பாண்டி முதலிய மாநிலங்களுக்கு மின்சாரம் சப்ளை ஆகிறது. 7 சிமினியும், 7 கூலிங் டவரும் இருப்பதைப் பாருங்கள். அப்புறம் பார்க்க வாருங்கள்.



அருமை புகைப்படம் (சிம்னி வழியாக புகை தானே வரும் :) )
வாசு சார்
நிச்சயம் உங்களை வீடு தேடி இனிய நட்பு நாடி வருவேன்

vasudevan31355
17th September 2014, 01:02 PM
கிருஷ்ணா சார்,

ரோகினி கட்டுரை நிறையவே சிந்திக்க வைக்கிறது.

குடியால் குடி கெட்ட நடிகையர் திலகம் தன் வாழ்நாளின் கடைசி கோமா நாட்களில்

http://cityrockz.com/wp-content/uploads/2010/02/Savithri-death-photo.jpg

vasudevan31355
17th September 2014, 01:04 PM
இவுங்க

http://www.thehindu.com/multimedia/dynamic/01285/03KIMP_OLDGOLD_1285216e.jpg

vasudevan31355
17th September 2014, 01:05 PM
இந்திரா - ராசி

சரிதா - விஜயா

சத்யசித்ரா - மாதுரி?