PDA

View Full Version : மனதை மயக்கும் மதுர கானங்கள்



Pages : 1 2 3 4 5 6 7 [8] 9 10 11 12 13 14 15 16

Gopal.s
14th July 2014, 10:37 AM
Krishnaji, How come you are thorough with lousy,mediocre 1970s and so ignorant on Great 1960s?

vasudevan31355
14th July 2014, 10:38 AM
வாசு சார்

மேலும் சில மறந்த முகங்களை (துணை) நினைவு கூற முடியுமா

ஜம்புகேசன் என்ற ஜம்பு (சுமதி என் சுந்தரி தேங்காயின் உதவியாளர் ஆக வருவார்,கலாட்ட கல்யாணம் சென்சஸ் அதிகாரி ) . இவர் நடிகை இலவரிசியின் தந்தை என்று நினைவு. இவர் போட்டோ கூட குமுதம் பத்திரிகையில் பார்த்த நினைவு

ராஜா படத்தில் முருகேச ஓதுவார் (சந்திரபாபு)இடம் குமரேச ஓதுவார் பற்றி விசாரிக்க ஒருவர வருவார்
தலை ஒரு மாதிரி மஞ்சள் மற்றும் சிகப்பு கலரில் இருக்கும் .இவர் தியாகம் படத்தில் "நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் உண்டு ' பாடலில்
பாலாஜி படத்தில் எல்லாம் பார்க்கலாம் .
அதே போல் மன்மத லீலை படத்தில் கமலுக்கு கவுன்சிலிங் செல்லும் டாக்டர் ஒருவர் அவரும் தியாகம் படத்தில் "நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் உண்டு ' பாடலில் வருவார் இருவரும் போட் சிப்பந்திகள் ஆக வருவார் [/quote]


எல்லாம் பின்னால் வருது சார்.

gkrishna
14th July 2014, 10:46 AM
Krishnaji, How come you are thorough with lousy,mediocre 1970s and so ignorant on Great 1960s?

மன்னிக்கணும் கோபால் சார்

1960 கூட எழுதலாம் .
ஜாம்பவான்கள் எல்லாம் 1960 எழுதும் போது நான் அடியார் (பாருங்க போர்ட்டர் பொன்னுசாமி டைரக்டர் ) கொஞ்சும் 1970 எழுதலாம்னு எழுதறேன் . 1960 இலும் என்னுடைய contribution நிச்சயம் உண்டு
சார் . நீங்கள் இவ்வளுவு தூரம் சொல்லும் போது
கொஞ்சும் ஹோம் வொர்க் செய்து எழுதறேன் ப்ளீஸ்

gkrishna
14th July 2014, 10:48 AM
எல்லாம் பின்னால் வருது சார்.

thanks vasu sir

vasudevan31355
14th July 2014, 11:03 AM
இன்றைய ஸ்பெஷல் (28)

http://www.inbaminge.com/t/u/Unarchigal/folder.jpg

'இன்றைய ஸ்பெஷல்' தொடரில் இதுவரை நான் எழுதிய பாடல்களில் என்னை மிக மிக disturb செய்த பாடல் இதுதான். இந்தப் பாடலின் வரிகளை டைப் செய்ய என்னால் இயலவில்லை. என்னையுமறியாமல் என் கண்களில் கண்ணீர் துளித்தது. இந்தப் பாடலின் வரிகளை பிழையில்லாமல் தர வேண்டும் என்று பலமுறை இந்தப் பாடலைப் பார்த்து, கேட்டு படத்தின் தலைப்பைப் போலவே மிகுந்த 'உணர்ச்சி' வசப்பட்டு விட்டேன் இப்பாடலின் இனிமையால்.

யாருமே கண்டு கொள்ளாத பொக்கிஷப் பாடல். இதயத்தையே கூறாக, துண்டு துண்டாகப் பிளந்து போட்டாலும் ஒவ்வொரு துண்டிலும் எதிரொலிக்கும் இந்தப் பாடலின் தாக்கத்தை அழிக்கவே முடியாது.

இப்படியெல்லாம் டியூன் போட முடியுமா என்று நான் இன்று வரை வியந்து வியந்து வாய் பிளக்கும் பாடல். அதே போல் இப்பாடலைக் கேட்கும் போதெல்லாம் அப்படியே பாறாங்கல்லைத் தூக்கி இதயத்தின் மீது வைத்தாற் போன்று ஒரு கன உணர்வு ஏன் என்னுள் ஏற்படுகிறது என்றே எனக்குப் புரியாது. கண்களில் அருவியாய் நீர் கொட்டும்.

இந்தப் பாடலுக்குதான் என்ன மகத்துவம்! என்ன சக்தி! என்ன ஒரு ஈர்ப்பு சக்தி!

இரு இள மனங்களின் சங்கமம். இரு இணைந்த உள்ளங்களின் உணர்ச்சிகளின் பிரதிபலிப்பு. இதில் என்ன ஆச்சர்யம்! சகஜம் தானே! ஆம்! சகஜம்தான். ஆனால் இங்கு கதையே வேறு.

அவளோ ஒரு விதவை. அவனோ அவள் வீட்டில் வேலை செய்யும் ஒரு சாதாரண வேலைக்காரன். அழகான அப்பாவி இளைஞன். விதவையின் அண்ணனோ பழைய பஞ்சாங்க பணக்காரன். யார் சொல்லியும் தன் தங்கைக்கு மறுமணம் செய்து வைக்க அவன் தயாரில்லை.

இளம் விதவையான அவள் தனிமைத் தீயில் வேகிறாள். விரகத் தீ வாட்ட வாடுகிறாள். வதங்குகிறாள். வேலைக்கார இளைஞனுடன் யதார்த்தமாகப் பழகுகிறாள். அவனுக்கு படிப்பு சொல்லித் தருகிறாள். அவனிடம் சைக்கிள் ஓட்ட கற்றுக் கொள்கிறாள்.

விதி இவர்களை ஒரு நாள் தனிமையில் இருக்க வைத்து விளையாடுகிறது. தெருக்கூத்து பார்க்க அவள் அண்ணனும், அண்ணியும் சென்று விட, அந்த இரவு நேரத்தில் பஞ்சாக அந்த இளம் கைம்பெண்ணும், நெருப்பாக அந்த வேலைக்கார இளைஞனும். பரண் மீது ஏறி பழைய பேப்பர்களை அடுக்குகிறாள். அந்த வாலிபனும் அவளுக்கு உதவி செய்கிறான். அவளை பரணிலிருந்து கைகொடுத்து இறக்குகிறான். பஞ்சும் நெருப்பும் பற்றிக் கொள்கிறது. இன்ப சுகங்களை கண்டே அறியாத அந்த இளம் கைம்பெண்ணும், வாலிப உணர்ச்சிகளின் உந்துதலில் இருக்கும் அந்த இளைஞனும் ஸ்பரிச உணர்ச்சிகளில் நிலை மறக்க, ஒரு வினாடியில் எல்லாம் பாழ் பட்டுப் போகிறது.

இது இந்தப் பாடலுக்கு முன்னால் வரும் சிச்சுவேஷன். அடுத்த நாள் அந்த மங்கை முன்தினம் நடந்த அந்த உணர்ச்சி பொங்கிய இரவை மறக்க முடியாமல் அவனுடன் கற்பனையில் உணர்ச்சிப் பெருக்கெடுத்து பாடுகிறாள். அந்தப் பாடல்தான் இன்றைய ஸ்பெஷலாக அமைந்து இந்த தொடருக்கே மணிமகுடப் பாடலாக அமைகிறது.

அந்த வேலைக்கார வாலிபன் காதல் இளவரசன் கமல். கைம்பெண் கவர்ச்சிப் பாவை எல்.காஞ்சனா, அண்ணன் எஸ்.வி.ராமதாஸ். அண்ணி சந்திரகாந்தா

http://i1.ytimg.com/vi/0yaOJzkCEUo/hqdefault.jpg

அப்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட படம். புதுமை இயக்குனர் ஆர்.சி.சக்தியும், கமலும் இணைந்து தந்த (கமல் இந்தப் படத்தின் உதவி இயக்குனர்) உணர்ச்சிமிகு காவியம். பத்திரிகைகள் பாராட்டிய படமும் கூட. மிகவும் குறைந்த செலவில் எடுக்கப்பட்ட படம். ஸ்ரீவித்யா விலைமாதாக நடித்திருந்தார். ஒரு விபச்சார ரெய்டில் ஓட்டலில் வேலை செய்யும் கமல் ஸ்ரீவித்யாவை போலீசிடம் சிக்க விடாமல் காப்பாற்றுவார் கமல். நன்றிக் கடனாக அனாதையான கமலை தம்பி போல் பாவித்து நடத்துவார் ஸ்ரீவித்யா. ஆனால் இளமை உணர்ச்சிகளின் வேகத்தில் ஸ்ரீவித்யா மேலேயே கைவைப்பார் கமல். அப்போது கமலிடம் வித்யா கோபமாக 'எட்றா கையை... கையை எடுடா" என்பார். அப்போது இந்த வசனம் மிகப் புகழ் பெற்றது.

பின் கமல் உணர்ச்சிக்கு அடிமைப்பட்டு தகாத உறவுகளால் வி.டி (venereal diseases) என்னும் பால்வினை நோய்க்கு ஆளாகி இறுதியில் இறந்து விடுவார்.

நல்ல படம். ஆனால் ஆபாச முத்திரை குத்தப்பட்டது. 'அடல்ட்ஸ் ஒன்லி' சர்டிபிகேட் பெற்ற படம் இது.

இசையமைப்பாளர் ஷியாமுக்கு இந்த பாட்டு ஒன்று போதும். மனிதர் நம் இதயங்களை உணர்ச்சிபூர்வமாக்கி விளையாடுவார். (ஷியாமின் பெரும்பான்மையான பாடல்கள் நெஞ்சத்தின் அடித்தளத்தில் ஊடுருவி நம்மை இனம் புரியா கலவரத்தில் மூழ்க வைத்து விடும். 'மழை தருமோ என் மேகம்' போல.) ஜானகி ஒழுங்காகப் பாடிய சில பாடல்களில் தலையாய பாடல் இது. எஸ்.பி.பி இந்தப் பாடலில் சிகரங்களின் உச்சிகளைத் தொடுவார்.

பட்டுக் கோட்டை தண்டபாணியின் வரிகளில் தமிழ் கொஞ்சி விளையாடும். இரு மனங்களின் உணர்வுகளை அவர் வார்த்தைகளில் வடித்திருக்கும் அழகே அழகு. மிக மிக அற்புதமான, பாடலின் காட்சியமைப்பிற்கு ஏற்ற வைர வரிகள். இவரும் மிகவும் போற்றப்பட வேண்டிய கவிஞரே!

படம்: உணர்ச்சிகள்

நடிகர்கள்: கமலஹாசன், ஸ்ரீவித்யா, எல்.காஞ்சனா, மேஜர், ராமதாஸ்.

பாடல் இயற்றியவர்.: பட்டுக்கோட்டை தண்டாயுத பாணி

இசை: ஷியாம்.

இயக்கம்: ஆர்.சி.சக்தி

http://s2.dmcdn.net/akek.jpg

ஹே ஹே லலல்லா ஹே ஹே லலல்லா
லலல்லலல்லா ஹா ஹா லலல்லலல்லா ஹே ஹே
லலல்லலல்லா ஹா ஹா லலல்லலல்லா ஹே ஹே
லலல்லலல்லா ஹா ஹா லலல்லலல்லா ஹே ஹே

லல்லல் லல்லல் லல்லலல்லல்
லல்லல் லல்லல் லல்லலல்லல்

நெஞ்சத்தில் போராடும் எண்ணங்கள்
நீங்காமல் நீ தந்த மோகம் அல்லவோ
கொஞ்சும் மொழி பேசும் பெண்மை ஒளி வீசி
வாழ்வினில் தேனாக நீ வர வேண்டும்.
வாட்டிடும் ஆசை தீர நீ தொட வேண்டும்
தாபத்தை நானே சொல்லவோ

நெஞ்சத்தில் ம் போராடும் எண்ணங்கள்
நீங்காமல் நீ தந்த மோகம் அல்லவோ
கொஞ்சும் மொழி பேசும் பெண்மை ஒளி வீச
வாழ்வினில் தேனாக நீ வர வேண்டும்.
வாட்டிடும் ஆசை தீர நீ தொட வேண்டும்
தாபத்தை நானே சொல்லவோ

கைமையின் தீயில் விழுந்திட்ட பூவும்
காளை என் மார்பில் குடியேறலாமோ
கனிவோடு காதல் கைதொட்ட வேளை
கல்யாண மேடை அலங்கரிக்காதோ
இதயத்தின் பாரம் இறங்கிடும் நேரம்
இருமனம் கூடும் உணர்ச்சியில் ஆடும்

வரும் வெள்ளமும் இளம் உள்ளமும்
ஒரே வேகமாய் ஓடாதோ
அதன் சங்கமம் பெரும் மங்கலம்
உயிர் கீதமாய் பாடாதோ

நெஞ்சத்தில் போராடும் எண்ணங்கள்
நீங்காமல் நீ தந்த மோகம் அல்லவோ
கொஞ்சும் மொழி பேசி பெண்மை ஒளி வீசி
வாழ்வினில் தேனாக நீ வர வேண்டும்.
வாட்டிடும் ஆசை தீர நீ தொட வேண்டும்


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=j_apwVK2TDk

Gopal.s
14th July 2014, 11:17 AM
வாசு,



அது என்ன ஒவ்வொரு முறையும் தற்பெருமை?யாராலும் கண்டு கொள்ள படாத என்று?நானே மூன்று முறை குறித்துள்ளேன் இதே திரியில். கோபாலால் மட்டுமே கண்டு கொள்ள பட்டது என்றாவது எழுது.

vasudevan31355
14th July 2014, 11:28 AM
வாசு,


அது என்ன ஒவ்வொரு முறையும் தற்பெருமை?யாராலும் கண்டு கொள்ள படாத என்று?நானே மூன்று முறை குறித்துள்ளேன் இதே திரியில். கோபாலால் மட்டுமே கண்டு கொள்ள பட்டது என்றாவது எழுது.


'யாராலும்' லிஸ்ட்டில் நீ சேர மாட்டே என்று உனக்கே தெரியல்லையே மர மண்டையே! எங்கே போய் முட்டிக் கொள்ள? கிருஷ்ணய்யா! :banghead:

vasudevan31355
14th July 2014, 11:29 AM
வாசு,

கோபாலால் மட்டுமே கண்டு கொள்ள பட்டது என்றாவது எழுது.

இதுக்கு என் தற்பெருமையே பெட்டெர். விடு! பாட்டை ரசிச்சியா? அத்த சொல்லு முதல்லே.

gkrishna
14th July 2014, 12:10 PM
[QUOTE=vasudevan31355;1147511]இன்றைய ஸ்பெஷல் (28)

அன்பு வாசு சார்
உணர்ச்சிகள் 1976 கால கட்டத்தில் வெளி வந்த நியூ wave movie
அப்ப puc சேர்ந்து இருந்தோம். இந்த படமும் (நெல்லை ரத்னாவில்) பார்த்து விட்டு இந்த பாடலை கேட்டு விட்டு எல்லோரும் hostel (st சேவியர் காலேஜ்) க்கு வந்து சேர்ந்து நான் dayscholar தான் ஆனாலும் நண்பர்கள் கூட சேர்ந்து சுற்றுவதால் இரவு படுக்கை மற்றும் காலை குளியல் (தாமிரபரணி) இரண்டும் தான் வீட்டில் மற்ற நேரம் எல்லாம் hostel தான். எப்படியாவது இந்த பாடலை மீண்டும் அடிகடி கேட்க வேண்டுமே என்ன செய்வது என்று எங்கள் நண்பர்கள் எல்லோருக்கும் இந்த பாடலின் மீது விருப்பம் ஏற்பட்டு tape ரெகார்டர் வந்த பொழுது கேசட் ரெகார்ட் செய்ய என்ன செய்வது என்று விவாதித்து இறுதியில் கரமனை (திருவனந்த புறம் அருகில்) மாணவர் ஒருவர் எப்படியாவது அவர் நண்பர் ஒருவர் மூலமாக ரெகார்ட் செய்து இதன் மலையாள version கிடைத்து அதை கேட்டு மகிழ்ந்தது
இந்த கால கட்டத்தில் ராசலீலை (மலையாள dubbing ) என்று ஒரு படம் கமல் ஜெயசுத நடித்து வெளிவந்த நினவு .அதுவும் இதுவும் ஒரே கதை
அதுவும் நெல்லை ஸ்ரீரத்னவில் வெளியானது .அது போன்று "தாகம் " என்று ஒரு படம் முத்துராமன் நந்திதா போஸ் நடித்து பாபு நந்தன்கோடு இயக்கியது அதுவும் இது போன்ற ஒரு படம்
நினைவலைகள்

16 வயதிலே கலைமணியின் வசனம்
'எதிர்காலம் கேள்விகுரியானாலும் கடந்த காலம் இனிமையான ராகமாலிகை அதற்கு மெருகு கூட்டிய
நெல்லை திரை அரங்குகள் அவ்வபோது சென்ற சுற்று வட்டார டுரிங் திரை அரங்குகள் ஆண்டு இறுதி விடுமுறையில் சென்ற மதுரை திருச்சி பண்டிசரி சென்னை திரை அரங்குகள் '

rajeshkrv
14th July 2014, 09:41 PM
உணர்ச்சிகள் தொகுப்பு அருமை..

உணர்ச்சிகளில் நடித்த லலிதா ஸ்ரீ’யின் பேட்டி இதோ



https://www.youtube.com/watch?v=f2zBPAlRsNw

rajeshkrv
14th July 2014, 09:47 PM
அமிர்தா டிவியின் இன்னால்தே தாராம் - ( நட்சத்திரங்கள் இன்று ) என்ற நிகழ்ச்சியை முடிந்தால் பாருங்கள்
அருமையான ஒன்று . பல நடிகர் நடிகைகள் இப்பொழுது நடிக்கவில்லை என்றாலும் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்ட நிலையில் அவர்கள் இன்று எப்படி உள்ளனர் அவர்களது இன்றைய பேட்டி என்று அருமையான நிகழ்ச்சி

பழைய நடிகை அம்பிகா ( கந்தன் கருணையில் அசோகனுக்கு மனைவி . மலையாளத்தில் புகழ்பெற்ற நாயகி பத்மினி சுகுமாரிக்கு சொந்தக்காரர்)


https://www.youtube.com/watch?v=KkHcBRSP4Po


அதே போல்
ஆடிய பாதங்கள் அம்பலத்தில் (பவானி)


https://www.youtube.com/watch?v=BWf7fBZ2SX8

vasudevan31355
14th July 2014, 10:16 PM
நன்றி ராஜேஷ்.

அபூர்வ பாடலாசிரியர்களை வெளிக் கொணர்ந்தாற்போல் பழைய அபூர்வ நடிகைகளையும் அவர்கள் பேட்டிகளையும் அளிக்கத் தொடங்கியிருப்பது மிகுந்த பாராட்டுக்குரியது. மனம்நிறை பாராட்டுக்கள். தொடரட்டும் உங்கள் சேவை.

vasudevan31355
14th July 2014, 10:23 PM
அம்பிகா

'தில்லானா மோகனாம்பாள்' படத்தில் மதன்பூர் சமஸ்தானத்தின் மகராணியாக, நம்பியாரின் ஜோடியாக வருவார்.

rajeshkrv
14th July 2014, 10:33 PM
அம்பிகா

'தில்லானா மோகனாம்பாள்' படத்தில் மதன்பூர் சமஸ்தானத்தின் மகராணியாக, நம்பியாரின் ஜோடியாக வருவார்.

yes .. she did few tamil movies but mainly in malayalam (paavam soga rolesa koduthu oru vazhi pannittanga )

beautiful composition by V.Dakshinamurthy PS with KJY
Ambika with Telugu actor Ramakrishna(actress Geethanjali's husband)


https://www.youtube.com/watch?v=9fY5cSpKjtw

vasudevan31355
14th July 2014, 10:34 PM
பவானி கொள்ளை அழகு.

நடிகர் திலகத்துடன் 'புண்ணிய பூமி' படத்தில் சேர்ந்து கலகலப்பூட்டுவார்.

'உழைக்கும் கரங்கள்' படத்தில் எம்ஜியாரை விரும்பி காதல் தோல்வி.
'கந்தனுக்கு மாலையிட்டாள்' சோகம்.

'அவள் ஒரு பச்சை குழந்தை' என்ற அபூர்வ படத்தின் ஹீரோயின்

rajeshkrv
14th July 2014, 10:37 PM
பவானி கொள்ளை அழகு.

நடிகர் திலகத்துடன் 'புண்ணிய பூமி' படத்தில் சேர்ந்து கலகலப்பூட்டுவார்.

'உழைக்கும் கரங்கள்' படத்தில் எம்ஜியாரை விரும்பி காதல் தோல்வி.
'கந்தனுக்கு மாலையிட்டாள்' சோகம்.

'அவள் ஒரு பச்சை குழந்தை' என்ற அபூர்வ படத்தின் ஹீரோயின்


yes bhavani was beautiful and grand daughter of veteran actress Rushyendramani.

she acted with all heroes at that time..
famous kannada song of bhavani & Rajnikanth (PS with SPB)


https://www.youtube.com/watch?v=kPRsqJQ6DRU

vasudevan31355
14th July 2014, 10:38 PM
first time i enjoyed. excellent song rajesh sir. thanks for Dakshina and you.

vasudevan31355
14th July 2014, 10:40 PM
yes bhavani was beautiful and grand daughter of veteran actress Rushyendramani.


rare news. thanks again.

rajeshkrv
14th July 2014, 10:40 PM
first time i enjoyed. excellent song rajesh sir. thanks for Dakshina and you.

enakkedhukkku.. ellam andha manahubavargalukku poi sera vendum .. dakshina, PS & KJY(Everytime i listen to this song .. it's just a different experience ... Nee tharum thazhampoo choodinilkam .... wow)

vasudevan31355
14th July 2014, 10:43 PM
Rushyendramani.

http://i1.ytimg.com/vi/tJ8aAjOwDYs/hqdefault.jpg

vasudevan31355
14th July 2014, 10:44 PM
good night sir.

rajeshkrv
14th July 2014, 10:46 PM
வாசு சார்
ருஷ்யேந்திரமணி அவர்கள் பற்றி முத்திரை பதித்த நடிகைகள் என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரை இதோ

முத்திரை பதித்த நடிகைகள் 10: ருஷ்யேந்திரமணி

பல கதாபாத்திரங்கள் நம் மனதில் நீங்கா இடம் பிடித்துவிடும் .. ஆம் படிக்காத மேதையில் ரங்காராவ் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
அப்படி ஒரு பாத்திரம் தான் மாயா பஜாரில் அபிமன்யுயின் தாயாக நடித்த ருஷ்யேந்திரமணி அவர்களையும் மறக்க முடியாது.

1917'ல் விஜயவாடாவில் பிறந்த இவர் சிறு வயதுமுதலே தெலுங்கு நாடகங்களில் நடித்தார், பின் கண்ணாம்பாவின் நாடக குழுவில் சேர்ந்து நடித்தார்.
அதன்பிறகு சில படங்களில் நாயகியாக, இரண்டாம் நாயகியாக நடித்தார். பின் பல கதாபாத்திரங்களில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல
மொழிகளில் நடித்து மக்களை கவர்ந்தார்.

அந்த காலத்தில் சில பட கம்பெனிகள் நடிகர்களை மாத சம்பளத்திற்கு வைத்திருந்தனர். குறிப்பாக விஜயா வாஹினி( நாகிரெட்டி சக்ரபாணி) பல நடிகர் நடிகைகளை
மாத சம்பளத்திற்கு வேலையில் வைத்திருந்தனர்.அவர்கள் தயாரிக்கும் படங்களில் நாயகன் நாயகி மாறுவர் ஆனால் இந்த நடிகர் நடிகையர் மாறுவதில்லை
ருஷ்யேந்திரமணி,சூரியபிரபா,சாரஙகபாணி,ரங்காராவ் .
ஆம் அப்படி விஜய வாஹினிபடங்களில் ஆஸ்தான நடிகையாக இருந்தார் ருஷ்யேந்திரமணி.

மாயாபஜாரில் கண்ணனின் தங்கை பாத்திரத்தில் நம்மை கவர்ந்தவர் இவர்.
மிஸ்ஸியம்மாவில் ரங்காராவின் மனைவியாக சாவித்திரியிடம் அன்பை பொழியும் தாயாக அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
அம்பிகாபதியில் குலோத்துங்க சோழனின் மனைவியாக தன் மகளின் காதலை எதிர்க்கும் தாயாக அருமையாக நடித்திருபார்.

எங்க வீட்டு பிள்ளையில் முரட்டு எம்.ஜி.ஆருக்கு அம்மாவாக அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

தாய்மொழி தெலுங்காக இருந்தாலும் தமிழை அழகாக உச்சரித்து நடிப்பதில் இவரும் கண்ணாம்பா சாவித்திரிக்கு சளைத்தவர் இல்லை.

தெலுங்கில் பல படத்தில் பல அருமையான கதாபாத்திரங்கள்,சொந்த குரலில் பாடுவதிலும் வல்லவராக திகழ்ந்தவர்.

தமிழில் குறைந்த படங்களே செய்தாலும் நான் பார்த்து மகிழ்ந்து வியந்த நடிகைகளில் இவரும் உண்டு.
150 படங்களுக்கு மேல் நடித்த இவர் முத்திரை பதித்த நடிகைகளில் இல்லாமல் இருப்பாரா என்ன.

இந்த தொடர் மூலம் இதுபோன்ற அருமையான நடிகைகளை நினைவு கூர்வதும் அவர்கள் திரையில் பதித்த முத்திரையையும்
முக நூலில் எடுத்து சொல்வதே என் நோக்கம்..

rajeshkrv
14th July 2014, 10:47 PM
good night sir.

குட் நைட்.

RAGHAVENDRA
14th July 2014, 10:55 PM
அதிசயமாக அல்லது அபூர்வமாக இணைய இணைப்பு இரவில் எப்போதாவது கிடைக்கிறது. விடலாமா...

வாசு சாருக்கு முதலில் கோடி நன்றிகள்.. உணர்ச்சிப் பெருக்கில் வார்த்தைகள் வரவில்லை உணர்ச்சிகரமான பதிவைப் பாராட்ட..

ஷ்யாம் மெல்லிசை மன்னரின் சிஷ்யரல்லவா... பாடல்களின் சிறப்பை சொல்லவும் வேண்டுமோ..

RAGHAVENDRA
14th July 2014, 10:55 PM
ராஜேஷ்
தங்களின் முகநூல் பதிவுகள் படிக்க மிகவும் சுவாரஸ்யமாகவும் பல புதிய தகவல்களைத் தருவதாகவும் உள்ளன. பாராட்டுக்கள்.

RAGHAVENDRA
14th July 2014, 10:59 PM
1970களின் பிற்பகுதி தமிழ்த் திரையுலக இசை வரலாற்றில் குறிப்பிடத் தக்கதாகும். பல புதிய இசையமைப்பாளர்கள் வந்த நேரம். அனைவருமே சிறப்பான பாடல்களைத் தந்திருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம். இவர்களில் தலையாயதாய் நின்று இன்று வரலாற்றில் தனக்கெனத் தனி இடம் பிடித்தது இளையாராஜாவின் வருகை. 1976 முதல் 1980 வரை வேறு எந்த இசையமைப்பாளர் பக்கமும் மக்கள் திரும்பாத அளவிற்கு மிகவும் பிரபலமாக விளங்கினார். அவருக்கென அன்று உருவான ரசிகர்களின் எண்ணிக்கை இன்று கோடிக்கணக்காய் நிலைத்திருப்பது பெரும் மகிழ்வூட்டும் விஷயம். பத்ரகாளி உறவாடும் நெஞ்சம் அவர் எனக்கே சொந்தம் நதியைத் தேடி வந்த கடல், லட்சுமி, பஞ்சமி பாடல்கள் இவரைப் புகழின் உச்சாணிக் கொம்பில் கொண்டு போய் நிரந்தரமாக வைத்து விட்டன.

அப்படிப்பட்ட காலகட்டத்தில் இளையராஜா இசையமைத்து சரத்பாபு ஜெயலலிதா நடித்த நதியைத் தேடி வந்த கடல் படத்திலிருந்து இந்தப் பாடலைப் பார்க்கவும் கேட்கவும் தவித்தது துடித்தது நெஞ்சம். இப்போது அந்த ஆசை நிறைவேறி விட்டது.

http://youtu.be/k8iyDV3Tk1M

RAGHAVENDRA
14th July 2014, 11:06 PM
இனிமை இதோ இதோ எனக் கூவி அழைக்கும் பாடல்.... கேட்டுக் கொண்டே இருக்கலாம். இளையராஜாவின் புகழுக்கு சான்றான இன்னொரு பாடல்.

அள்ளி வெச்ச மல்லிகையே..

http://youtu.be/hYIz6g1YCIg

நடிகை வனிதாவின் கணவர் கிருஷ்ணசந்திரனுடன் பி.சுசீலா பாடிய பாடல்

RAGHAVENDRA
14th July 2014, 11:08 PM
ஜெயச்சந்திரனின் இனிமையான குரலில் காலத்தால் அழிக்க முடியாத பாடல்.... இது முடிவல்ல... ஆரம்பம் தான்... இளையராஜாவின் புகழ்க் கிரீடத்தில் இன்னொரு வைரம்..

பாடி வா தென்றலே... ஒரு பூவைத் தாலாட்டவே...

http://youtu.be/F-MUX5i-rV8

RAGHAVENDRA
14th July 2014, 11:10 PM
இளையராஜாவின் குரலைப் பற்றி சிலருக்கு வேறு விதமான கருத்து இருந்திருக்கலாம்.. ஆனால் அதைப் போக்கும் இந்தப் பாடல்.. ஆரம்ப ஹம்மிங்கே நெஞ்சைத் தொடும் இனிய பாடல்...

மௌனமே நெஞ்சில் நாளும் நீ எழுதும்...

உறங்காத நினைவுகள் படத்தில் இப்பாடல் நம் நெஞ்சை ஊடுருவிச் செல்லும்

http://youtu.be/fuA11g8UnDI

RAGHAVENDRA
14th July 2014, 11:15 PM
வித்தியாசமான தாளக் கட்டுக்களில் நம்மை அசத்துவதில் சக்கரவர்த்தி மெல்லிசை மன்னர் விஸ்வநாதன். அவருக்கு அடுத்து இந்த மாதிரியான பரீட்சார்த்தமான முயற்சிகளில் வெற்றி கண்டவர் இளையராஜா. அதில் இனிமையும் உணர்ச்சியும் கலந்து தருவதிலும் அவர் வல்லவராய் விளங்கினார். அதற்கு ஒரு எடுத்துக்காட்டு இந்தப் பாடல். உறங்காத நினைவுகள் படம் இளையராஜாவின் சிறந்த படைப்புகளில் ஒன்று. அதற்கு கட்டியம் கூறுவது இந்த பாடல்... நறுமண மலர்களின் சுயம்வரமோ... பாடலின் இடையில் வரும் சோலோ வயலின் நம்மை என்னவோ செய்யும்... எஜ்.ஜானகியின் இசைப்புலமைக்கும் இப்பாடல் ஒரு சான்று.

http://youtu.be/SpDMsSMlYRE

RAGHAVENDRA
14th July 2014, 11:22 PM
இப்பாடல் கோபாலுக்கு அர்ப்பணம்

http://youtu.be/J1yRD-IOPlw

முற்றிலும் வித்தியாசமான பாணியில் அமைக்கப் பட்ட இப்பாடல் எஸ்.ஜானகியின் குரல் வளத்திற்கு சரியான சவாலாகும். இப்பாடலைத் தரவேற்றியவர் இளையராஜாவின் ரசிகராயிருக்கக் கூடும். பின்னணி ஹம்மிங்குடன் துவங்குகிறது. சற்றுப் பின் இதே ஹம்மிங் மேண்டலின் மற்றும் கிடாரின் ஒலியில் இடம் பெற, பின்னர் உரையாடலுக்கும் பின் எஸ்.ஜானகியின் குரலுடன் பாடல் துவங்கும் போது நம்மை அறியாமல் நாம் அந்தக் காட்சிக்குள்ளாகவே போய் விடுகிறோம்.

இப்படிப்பட்ட அருமையான பாடல் இப்படத்தில் ஹிட்டாகாமல் கண்ணா நீ எங்கே ஹிட்டானதை என்ன சொல்ல...

rajeshkrv
14th July 2014, 11:25 PM
adhe rusi kanda poonayil idhuvum miga chirandha paadal


https://www.youtube.com/watch?v=VpWFjTf7_b4

RAGHAVENDRA
14th July 2014, 11:27 PM
சந்தனமிட்டு சதிராடும் சூப்பர் பாடல். பாடுவதற்கு சிரமமான பாடல்...

RAGHAVENDRA
14th July 2014, 11:29 PM
மெலோடி என்ற வார்த்தைக்கு அர்த்தமாக இப்பாடலையும் சொல்லலாம்.

http://youtu.be/iDn8eZ02g5c

உரிமை படத்தில் ஜேசுதாஸ் எஸ்.ஜானகி குரல்களில் ஒலிக்கும் இப்பாடலைக் கேட்டுக் கொண்டே உறங்கச் செல்வோம்..

RAGHAVENDRA
14th July 2014, 11:36 PM
நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடக்கும் இளந்தென்றலை துணைக்கழைப்பதை கவியரசர் எழுதி படித்திருக்கிறோம். அதற்கு உருவம் கொடுத்தால் இப்படிப்பட்ட பாடல்களாய் வடிவம் பெறுமோ என எண்ணத் தோன்றும் மனதை மயக்கும் மதுர கானங்களின் அணிவகுப்பில் இதோ இளையராஜா காவிரியை நமக்கு துணைக்கு அனுப்புவதைக் கேளுங்கள்.. பாருங்கள்..

http://youtu.be/g-XHGuVNysI

RAGHAVENDRA
14th July 2014, 11:43 PM
சிந்து பைரவியின் சாயல் தெரிகிறது. என்ன ராகம் என்று கோபால் விளக்க வேண்டும். ஆனால் அதையெல்லாம் தாண்டி ஜானகியின் குரல் தங்களை பாதிக்கும் என்பது மட்டும் நிச்சயம்...

வழிமேல் விழியாய் எதிர்பார்த்திருந்தேன் வருவாய் மாமுகிலே..

அர்ச்சனைப் பூக்களில் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு மாணிக்கம்...

http://youtu.be/i_tI187qTO4

RAGHAVENDRA
14th July 2014, 11:49 PM
மெல்லிசை மன்னரின் மிகச் சிறப்பான பாடல்களையும் மீறி ஆராதனா யாதோன் கி பாராத் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா கேரவன் படங்களின் மூலம் தமிழ்நாட்டிலும் குக்கிராமங்கள் வரையில் ஊடுருவிய ஹிந்தித் திரைப்படப் பாடல்களையும் படங்களையும் அவற்றின் தாக்கத்தையும் மீறி அவற்றிலிருந்து மக்களை வெளியே கொண்டு வர மிகப் பெரிய சக்தி தேவைப்பட்டது. அப்போதைய தமிழ் ரசிகர்கள் மனதில் இது ஒரு லேசாக வருத்தத்தையும் தரத் தொடங்கியது. அந்த நேரத்தில் தோன்றிய இளையராஜா என்னும் இசை சாம்ராஜ்ஜியம் இங்கிருந்த ஹிந்தி ஆக்கிரமிப்பைத் தகர்த்தெறிந்து ஹிந்தி உலகிலேயும் புகுந்து தன் தாக்கத்தை ஏற்படுத்தியது மிகவும் மகிழ்ச்சியூட்டக் கூடிய விஷயமாகும்.

அப்படிப்பட்ட சூழல் ஏற்படக் காரணமாக இருந்த இளையராஜாவின் பாடல்களில் ஒன்று தான் எஸ்.பி.ஷைலஜா அறிமுகமான பொண்ணு ஊருக்கு புதுசு படத்தில் இடம் பெற்ற சோலைக்குயிலே..

http://youtu.be/cgG6Bf6naSc

RAGHAVENDRA
15th July 2014, 12:09 AM
நண்பர்களே,
நான் மிக நீண்ட நாட்களாகக் கேட்க ஆவலாயிருக்கும் பாடல் கங்கா யமுனா காவிரி திரைப்படத்தில் எஸ்.பி.பாலா எஸ்.ஜானகி அட்டகாசமாய் கலக்கியிருக்கும் கவ்வாலிப் பாடல், உமர் கய்யாம் எழுதி வைத்த கவிதை பாடல்..

இணையத்தில் தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை. வேறொர் நண்பர் மூலமாக வெளிநாடுகளில் தேடச் சொல்லியிருக்கிறேன். அது விரைவில் கிடைக்க வாய்ப்புள்ளது. இருந்தாலும் இணையத்தில் கிடைத்தால் இணைப்புத் தர கேட்டுக் கொள்கிறேன். அது வரை கேட்டு மகிழலாம்.

Gopal.s
15th July 2014, 05:36 AM
1950 களில் ராமநாதனின் கற்பனை வளம் மிக்க சுத்த இசையால் மட்டுமே ஜீவித்திருந்த தமிழ் சினிமா, மெல்லிசை புரட்சியை துவக்கியது 1961 முதல் 1965 முடிய. ஹிந்தியில் சங்கர்-ஜெய்கிஷன்,எஸ்.டீ .பர்மன் ,நவுஷத்,மதன் மோகன்,ரோஷன்,சலில் சௌதரி ,கல்யாண்ஜி-ஆனந்த்ஜி,ஓ .பீ.நய்யார் என்ற இத்தனை பேர்களுக்கும் இணையாக சவால் விட்டு அகில இந்திய அளவில் best composers என்று பெயர் பெற்ற ஜோடி ராமமூர்த்தி-விஸ்வநாதன் இரட்டையர். பிரிவின் பிறகு ஓரளவு பெருங்காய பண்டமாக 1969 வரை தள்ளிய தமிழ் பட மெல்லிசை 1970 முதல் 1976 வரை களபிரர்களின் இருண்ட காலமானது.தன்னுடைய பிரத்யேக, எந்த பாணியையும் சாராமல் நம் கர்நாடக,கிராமிய இசை,இசை கருவிகளை மட்டும் நம்பி ,இரட்டையர்களுக்கு இணையாக 1960 முதல் 1972 வரை நமது இசையை காப்பாற்றி கொண்டிருந்த கே.வீ.மகாதேவன் முழுசாக தெலுங்குக்கு தாவி விட ,வறண்டு கிடந்த நிலத்தில் பாலையூற்றாய் நம் ராஜா.



அவர் வந்த பிறகு ஹிந்தி இசையோ,இசையமைப்பாளர்களோ பேச படவே இல்லை.1976 முதல் 1992 வரை அவர் ராஜ்யமே. 1992 முதல் 2001 வரை அதை மேலெடுத்து சென்றவர் ,நான் திலீப் என்றே விளிக்க ஆசை படும் ரகுமான். அவரும் 2001 முதல் உலக மற்றும் ஹிந்தி படங்களுக்கு தாவி விட்டார்.



இளைய ராஜாவின் முத்துக்களை நினைவு கூர்ந்த ராகவேந்தர் சாருக்கு நன்றிகள்.



எதில் சாதித்தோம் ,எங்கே தவறினோம் என்று கணக்கு பார்ப்பது நாட்டுக்கும் ,வாழ்க்கைக்கும் அவசியமே.

venkkiram
15th July 2014, 07:48 AM
இளைய ராஜாவின் முத்துக்களை நினைவு கூர்ந்த ராகவேந்தர் சாருக்கு நன்றிகள்.

வழிமொழிகிறேன் நானும்.. நன்றிகள் திரு ராகவேந்தர்! எம்.எஸ்.வி, ராஜாவைப் பற்றி நிறைய பேசலாம். நேரம் கிடைக்கும்போது எட்டிப் பார்க்கிறேன்.

இப்போதைக்கு ஒன்றே ஒன்று. என்னை சிறார் வயதிலேயே வெகுவாக கவர்ந்த, இன்று வரை லயித்துக் கேட்கும் எம்.எஸ்.வியின் பாடல்கள் என வரும்போது "கங்கை யமுனை இன்றுதான் சங்கமம்" தனியிடம்தான். எவ்வளவு அழகான எளிதில் வசிகரிக்கும் மெட்டு. முதல் இரு அடிகள் ஒரே மாதிரி ராக அமைப்புடன் செல்ல, எதிர்பார்க்காத நேரத்தில் சட்டென "அங்கயற்கண் மங்கள நாயகி" என இன்னொரு திசையில் பயணிப்பது அதுவும் தாளக்கட்டை மாற்றாமலேயே.. யேசுதாசும் வாணிஜெயராமும் இரு வேறு வண்ணங்களாக மாறி எம்.எஸ்.வியின் ஓவியத்தை மெருகெற்றியிருப்பார்கள். காலம் தாண்டி நிற்கும் மெட்டு. வரிகளையே தேவையில்லை. சும்மாவே ஹம் செய்தாலே போதும்.. மனநிலை சாந்தப்படுத்தி ஆரோக்யமான நிலையை நோக்கி பயணிக்கும். காதல் ரசம் மெட்டிலும், வரிகளிலும் வழிந்தோடும். தமிழ்த் திரையிசையில் இன்பமான காதல்பாடல்களை தேர்ந்தெடுத்தால் கண்டிப்பாக இதையும் திணித்துவிடுவேன். எனது காலச் சக்கரத்தில் பசுமரத்தாணிபோல பதிந்துவிட்டப் பாடல். நான் எப்போதெல்லாம் அச்சக்கரத்தில் பின்னோக்கி பயணித்து நினைவுகளை அசைபோடுகிறேனோ, அப்போதெல்லாம் இப்பாடலும் மறக்காமல் ஒலிக்கிறது.

https://www.youtube.com/watch?v=blmm8EdNdM8

ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட பருவத்தில் அழகு மேலோங்கி நிற்கும். ஸ்ரீவித்யாவிற்கு இந்தக் காலக் கட்டம் என நினைக்கிறென்.

Gopal.s
15th July 2014, 08:05 AM
வழிமொழிகிறேன் நானும்..

இப்போதைக்கு ஒன்றே ஒன்று. என்னை சிறார் வயதிலேயே வெகுவாக கவர்ந்த, இன்று வரை லயித்துக் கேட்கும் எம்.எஸ்.வியின் பாடல்கள் என வரும்போது "கங்கை யமுனை இன்றுதான் சங்கமம்" தனியிடம்தான். எவ்வளவு அழகான எளிதில் வசிகரிக்கும் மெட்டு. முதல் இரு அடிகள் ஒரே மாதிரி ராக அமைப்புடன் செல்ல, எதிர்பார்க்காத நேரத்தில் சட்டென "அங்கயற்கண் மங்கள நாயகி" என இன்னொரு திசையில் பயணிப்பது அதுவும் தாளக்கட்டை மாற்றாமலேயே.. யேசுதாசும் வாணிஜெயராமும் இரு வேறு வண்ணங்களாக மாறி எம்.எஸ்.வியின் ஓவியத்தை மெருகெற்றியிருப்பார்கள். காலம் தாண்டி நிற்கும் மெட்டு. வரிகளையே தேவையில்லை.

மிக்க நன்றி வெங்கி ராம். கங்கை யமுனை,நினைவாலே சிலை செய்து,இரண்டும் என் எழுபதுகளின் தேர்வு கூட.



70 களில் டா டா டா என்று கூச்சலிட்டு கொண்டிருந்த டி.எம்.எஸ் ஒழிக்க பட்டு ,எஸ்.பீ.பீ ,யேசுதாஸ் இவர்களுக்கு நிறைய பாட்டுகள் ஒதுக்க பட்டிருந்தால் எம்.எஸ்.வீ இசை புது உயரங்களை தொட்டிருக்கும் சாத்திய கூறுகள் உண்டு. தமிழ் பாடல் உலகின் icon ஆக திகழ்ந்த டி.எம்.எஸ் 70 களில் அதன் யமனாக மாறினார். குரல்களில்,பாடும் முறையில் மாற்று இன்றி எதையும் இசையமைப்பாளர்களால் சாதிக்க முடியாது. ஓரளவாவது 70 முதல் 76 வரை தமிழ் பாடல்களை காப்பவை பொட்டு வைத்த முகமோ,தொடுவதென்ன,காதல் காதல் என்று பேச,மாதமோ ஆவணி,இயற்கை என்னும்,ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு,மங்கையரில் மகராணி .அவள் ஒரு நவரச,உன்னிடம் மயங்குகிறேன் அதிசய ராகம்,மனைவி அமைவதெல்லாம்,ஹலோ மை டியர், சுகந்தானா , முதலிய வெகு சிலவே.

புத்திசாலி இயக்குனர்களான ஸ்ரீதர், பாலசந்தர் போன்றோர் இதனாலேயே டி.எம்.எஸ் ஐ தவிர்த்தனர்.

rajeshkrv
15th July 2014, 08:22 AM
இன்றைய ஸ்பெஷல் (28)
ஜானகி ஒழுங்காகப் பாடிய சில பாடல்களில் தலையாய பாடல் இது.

100% agreed

Gopal.s
15th July 2014, 08:37 AM
எனக்கு மற்றொரு புரியாத புதிர் டி.எம்.எஸ் ,சுசிலாவை புத்திசாலிதனமாக தவிர்த்த (அவர்களுக்கு மாற்றே இது வரை அமையாதது வேறு விஷயம்)இளைய ராஜா ,அதே தலைமுறை சேர்ந்த இரண்டாம் நிலை பாடகி ஜானகியை அளவுக்கு மீறி பயன் படுத்தியது.



ஜானகி,தன்னுடைய மாற்று குரல் வளத்தால், நல்ல இரண்டாம் நிலை பாடகியாக (இவர் தகுதி அவ்வளவே)சில நல்ல பாடல்களை தந்ததை மறுக்க முடியாது.(1960-1970)



ஆனால் 80 களில் இவர் குரலை கேட்கும் போது ,ஒரு அறுபது வயது ஆண் கஷ்டப்பட்டு இளம் பெண் குரலில் மிமிக்ரி செய்வது போல கூச வைக்கும். நமக்கே தெரிந்த உண்மை இளையராஜாவிற்கு தெரியாமல் போனது ஏனோ? அப்போது சுஜாதா,சித்ரா இருவரும் உச்சத்தில்தானே இருந்தார்கள்?இவர்களை நிறைய பயன் படுத்தி இருந்தால்,ராஜாவின் உயரம் தொட்ட பாடல்களின் உயரமும்,இனிமையும் இன்னும் கூடி இருக்குமே?அப்படி என்ன ஜானகி பித்து?



இன்று ,நான் ஜானகியின் நல்ல முறையில் பாட பட்டதாக கருதும் காற்றில் எந்தன் கீதம், ஸ்ரேயா குரலில் கேட்கும் போதுதான் ,இழப்பின் வலி இன்னும் அதிகமாகிறது.



ஜானகி ,ராஜாவின் மைனஸ் ஆகவே அமைந்து விட்டார் என்றே சொல்ல வேண்டும்.

venkkiram
15th July 2014, 08:54 AM
ஜானகி பற்றிய அபிப்ராயங்கள் இத்திரியில் சற்று கடுமையான விமர்சனத் தொனியில் இருந்தாலும், என் பார்வையில் அவருக்கு ஈடாக யாரும் இல்லையென்பேன். எனக்கு சங்கீத அறிவு கிடையாது. ஆனால் குரல் வழி வெளிப்படும் உணர்வுகளின் அடிப்படையில் அடித்துச் சொல்லமுடியும். ஜானகிக்கு அடுத்தபடியாகவே மற்ற எல்லோரும். முதல் மரியாதையில் "ராசாவே ஒன்ன நம்பி". இப்பாடலை மட்டுமே ஜானகி பாடியிருந்தால் கூட, இந்த நூற்றாண்டின் ஆகச்சிறந்த குரல் எனச் சிலாகிப்பேன். குரல் மொழியில் பாலுவுக்கும் மூத்தவர்.

https://www.youtube.com/watch?v=3I5OBTUlIXk

நாதஸ்வர இசையை ஒத்த குரல் வடிவம். காலம் எனக்குக் கொடுத்த கொடை ஜானகியின் குரல்.

venkkiram
15th July 2014, 08:59 AM
எனக்கு மற்றொரு புரியாத புதிர் டி.எம்.எஸ் ,சுசிலாவை புத்திசாலிதனமாக தவிர்த்த (அவர்களுக்கு மாற்றே இது வரை அமையாதது வேறு விஷயம்)இளைய ராஜா ,அதே தலைமுறை சேர்ந்த இரண்டாம் நிலை பாடகி ஜானகியை அளவுக்கு மீறி பயன் படுத்தியது.

ஜானகி,தன்னுடைய மாற்று குரல் வளத்தால், நல்ல இரண்டாம் நிலை பாடகியாக (இவர் தகுதி அவ்வளவே)சில நல்ல பாடல்களை தந்ததை மறுக்க முடியாது.(1960-1970)

ஆனால் 80 களில் இவர் குரலை கேட்கும் போது ,ஒரு அறுபது வயது ஆண் கஷ்டப்பட்டு இளம் பெண் குரலில் மிமிக்ரி செய்வது போல கூச வைக்கும். நமக்கே தெரிந்த உண்மை இளையராஜாவிற்கு தெரியாமல் போனது ஏனோ? அப்போது சுஜாதா,சித்ரா இருவரும் உச்சத்தில்தானே இருந்தார்கள்?இவர்களை நிறைய பயன் படுத்தி இருந்தால்,ராஜாவின் உயரம் தொட்ட பாடல்களின் உயரமும்,இனிமையும் இன்னும் கூடி இருக்குமே?அப்படி என்ன ஜானகி பித்து?

இன்று ,நான் ஜானகியின் நல்ல முறையில் பாட பட்டதாக கருதும் காற்றில் எந்தன் கீதம், ஸ்ரேயா குரலில் கேட்கும் போதுதான் ,இழப்பின் வலி இன்னும் அதிகமாகிறது.

ஜானகி ,ராஜாவின் மைனஸ் ஆகவே அமைந்து விட்டார் என்றே சொல்ல வேண்டும்.

திரு கோபால் ஐயா. ஜானகி மீதான உங்களது விமர்சனங்களைப் பொறுத்தவரை எதிர்துருவத்தில் நிற்கிறேன். P_r எங்கிருந்தாலும் வரவும்.

vasudevan31355
15th July 2014, 09:02 AM
இன்று பெருந்தலைவரின் 112 வது பிறந்த நாள்.

http://1.bp.blogspot.com/-aPpAnskvOYg/TtILBCM0OFI/AAAAAAAAvC4/46zj8eiM5xg/s1600/Kamarajar+The+King+Maker+-+Very+Rare+Photo+Collection+Part+III+%25283%2529.j pg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/Kamarajar6.jpg

http://www.pkp.in/BlogImages/MGR/MGR_With_Kamaraj.jpg

Richardsof
15th July 2014, 09:03 AM
என்னுடைய அபிமான பாடகி ஜானகியின் குரல் தேனமுது . ரசிப்பு தன்மை இல்லாதவர்கள்
நிச்சயம் மற்றவர்களை கிண்டல் செய்வார்கள் . கோபாலுக்கு இன்று நேரம் சரியில்லை


http://youtu.be/RSICeyfMSO0.

vasudevan31355
15th July 2014, 09:04 AM
'ராணி'(14-7-2002)வார இதழ் அளித்த 'கர்மவீரரின் காலச்சுவடு' ஆவணம்.

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/rani_zpsd5677fb1.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/rani_zpsd5677fb1.jpg.html)

rajeshkrv
15th July 2014, 09:21 AM
எனக்கு மற்றொரு புரியாத புதிர் டி.எம்.எஸ் ,சுசிலாவை புத்திசாலிதனமாக தவிர்த்த (அவர்களுக்கு மாற்றே இது வரை அமையாதது வேறு விஷயம்)இளைய ராஜா ,அதே தலைமுறை சேர்ந்த இரண்டாம் நிலை பாடகி ஜானகியை அளவுக்கு மீறி பயன் படுத்தியது.



ஜானகி,தன்னுடைய மாற்று குரல் வளத்தால், நல்ல இரண்டாம் நிலை பாடகியாக (இவர் தகுதி அவ்வளவே)சில நல்ல பாடல்களை தந்ததை மறுக்க முடியாது.(1960-1970)



ஆனால் 80 களில் இவர் குரலை கேட்கும் போது ,ஒரு அறுபது வயது ஆண் கஷ்டப்பட்டு இளம் பெண் குரலில் மிமிக்ரி செய்வது போல கூச வைக்கும். நமக்கே தெரிந்த உண்மை இளையராஜாவிற்கு தெரியாமல் போனது ஏனோ? அப்போது சுஜாதா,சித்ரா இருவரும் உச்சத்தில்தானே இருந்தார்கள்?இவர்களை நிறைய பயன் படுத்தி இருந்தால்,ராஜாவின் உயரம் தொட்ட பாடல்களின் உயரமும்,இனிமையும் இன்னும் கூடி இருக்குமே?அப்படி என்ன ஜானகி பித்து?



இன்று ,நான் ஜானகியின் நல்ல முறையில் பாட பட்டதாக கருதும் காற்றில் எந்தன் கீதம், ஸ்ரேயா குரலில் கேட்கும் போதுதான் ,இழப்பின் வலி இன்னும் அதிகமாகிறது.



ஜானகி ,ராஜாவின் மைனஸ் ஆகவே அமைந்து விட்டார் என்றே சொல்ல வேண்டும்.

Raja TMS'ai thavirtha alavu suseelavai thavirkka villai nalla padalgalai vazhangiyullar.. yes overusage of JAnaki killed many songs of IR that is true.

rajeshkrv
15th July 2014, 09:23 AM
ok ok let's not make this thread like other threads ... let's forget the janaki matter and continue with the mesmerizing songs

at the same time opinion will always differ and that is reality

gkrishna
15th July 2014, 09:29 AM
[QUOTE=vasudevan31355;1147710]'ராணி'(14-7-2002)வார இதழ் அளித்த 'கர்மவீரரின் காலச்சுவடு' ஆவணம்.

அனைவருக்கும் காலை வணக்கம்

நேற்று மதியத்தில் இருந்து நமது திரி வேலை செய்யவில்லை.
இன்று காலையில் பார்த்தால் வேந்தர் சார்,ராஜேஷ் சார்,கோபால் சார்,வாசு சார்,venkiram சார் கலக்கல் காக் டைல்.

பெருந்தலைவர் காமராஜ் அவர்களின் பிறந்த தினத்தை நினவு கூர்ந்த வாசு சார் அவர்களுக்கு நன்றி .

தீடீர் னு ஒரு நினைவு சார்

கண்ணதாசன் இயற்றி ஒரு ஆல்பம் பெருந்தலைவர் பற்றி gramophone HMV ரெகார்ட் என்று நினைவு .

பாடகர் திலகம் குரலில் வரும் சார்

"சத்தியம்
சத்தியம் (chorus )
அன்னை தேசம் உலகமெங்கும் காமராஜர் சத்தியம்
அகிலமெங்கும் வாழவைக்கும் காமராஜர் தத்துவம்
புத்தன் ஏசு காந்தி மகான் ஏற்றி வைத்த தீபமே '

'தலைவர் காமராஜர் வாழ்க சமத்துவம் நிறைந்து காண '

இந்த பாடல்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதா

gkrishna
15th July 2014, 09:35 AM
அம்பிகா

'தில்லானா மோகனாம்பாள்' படத்தில் மதன்பூர் சமஸ்தானத்தின் மகராணியாக, நம்பியாரின் ஜோடியாக வருவார்.

வாசு சார்

நேற்று கேட்க மறந்த கேள்வி

மதன்பூர் ஆஷாலாத தேவி யார் என்று

இன்று விடை கிடைத்து விட்டது

வாவ் congrajulation வாசு (ஆஷாலாத தேவி குரல் )

அதே போன்று mr கிட்டா iyer யாரு சார்

gkrishna
15th July 2014, 09:40 AM
yes bhavani was beautiful and grand daughter of veteran actress Rushyendramani.

she acted with all heroes at that time..
famous kannada song of bhavani & Rajnikanth (PS with SPB)


https://www.youtube.com/watch?v=kPRsqJQ6DRU

சார் இந்த படம் சகோதர சவால் கன்னட படம் தானே
தமிழ் சகோதர சபதம் (டப்பிங் )

'காதலின் அடி உள்ள கனியே சுவையை தா ஆனந்தம் எங்கோ இழுக்குதே '
என்று வரும்

விஷ்ணுவர்தன் கவிதா இன்னொரு ஜோடி
பாலாவின் குரலில் ஒரு பாடல் ஒன்று உண்டு சார்
விஷ்ணுவர்தன் குதிரையில் தொப்பி போட்டு கொண்டு வந்து
கலக்குவார்

'உனக்காகவே நான் அல்லவோ
எனக்காகவே நீ அல்லவோ "

இதே போன்று 'கில்லாடி கிட்டு ' விஷ்ணுவர்தன்,ரஜினி நடித்து வந்த நினைவு

gkrishna
15th July 2014, 09:45 AM
ராஜேஷ் சார்
பழம் பெரும் நடிகை rushendramani பற்றி உங்கள் கட்டுரை அருமை
அவர் பேத்தி பவானி என்பது இது வரை அறியாத தகவல்
நன்றி சார்
விஷ்ணுவர்தன் பவானி நடித்து கள்ள குள்ள என்று ஒரு படம்
தமிழில் கள்ளனும் குள்ளனும் என்று டப் செய்து வெளி வந்தது
ksr தாஸ் இயக்கம்
சாஸ்திரி associates தயாரிப்பு

http://sim05.in.com/62/cafb36deca277af38d0c955f96ae86c3_pt_xl.jpg

gkrishna
15th July 2014, 09:48 AM
அதே போன்று குள்ளா குள்ளி என்று ஒரு கன்னட படம் 1980
கால கட்டத்தில் வெளி வந்தது . இந்த குள்ளனும் குள்ளியும் யாரு சார்

http://kannadamoviesinfo.files.wordpress.com/2013/03/kulla-kulli-1980.jpg?w=477&h=200

vasudevan31355
15th July 2014, 09:50 AM
ok ok let's not make this thread like other threads ... let's forget the janaki matter and continue with the mesmerizing songs


well said rajesh sir.

rajeshkrv
15th July 2014, 09:52 AM
அதே போன்று குள்ளா குள்ளி என்று ஒரு கன்னட படம் 1980
கால கட்டத்தில் வெளி வந்தது . இந்த குள்ளனும் குள்ளியும் யாரு சார்

http://kannadamoviesinfo.files.wordpress.com/2013/03/kulla-kulli-1980.jpg?w=477&h=200

it's Dwarakish (good comedian actor) and jaichitra

yes Sahodarara saval music by Satyam. it was dubbed in tamil .

vasudevan31355
15th July 2014, 10:01 AM
வணக்கம் கிருஷ்ணா சார்!

நேற்று நாம் கைபேசியில் உரையாடி மகிழ்ந்ததை என்னால் மறக்கவே இயலாது. 'இல்லாது போனா' இரவு முழுதும் அந்த இனிமையான ஒரு மணி நேரத்தை நினைத்து இன்புறுவதிலேயே செலவிட்டிருப்பேனா வயிற்றைப் பிடித்தபடி.

'ராயல் டைகர் ராமு' போல் நீ.............ள மலைகளுக்கிடையில் மறைந்து விட்டேன் யாராவது பார்த்தால் ஏதாவது நினைப்பார்கள் என்று.

vasudevan31355
15th July 2014, 10:04 AM
http://c.saavncdn.com/355/Kulla-Kulli-1980-500x500.jpg

vasudevan31355
15th July 2014, 10:08 AM
கிருஷ்ணா சார்!

பெரிய ஆள் சார் நீங்க. அங்கே ஒருத்தரு மொத்து வாங்கிகிட்டு இருக்கும் போது நைஸா சைக்கிள் கேப்ல 'கள்ளா குள்ளா', 'குள்ளா குள்ளி' போட்டுடீங்க. இல்லேன்னா இந்நேரம் 'அறம் பாடி' கேட்டிருப்பீங்க.

vasudevan31355
15th July 2014, 10:14 AM
'புண்ணியபூமி' திரைப்படத்தில் நடிகர் திலகத்துடன் பவானி சேர்ந்து ஆடும் பாடல்

'அடி மஞ்சத்தட்டு வேப்பிலை குங்குமமிட்டு'


http://www.youtube.com/watch?v=TmCVCYztElw&feature=player_detailpage

gkrishna
15th July 2014, 10:21 AM
வணக்கம் கிருஷ்ணா சார்!

நேற்று நாம் கைபேசியில் உரையாடி மகிழ்ந்ததை என்னால் மறக்கவே இயலாது. 'இல்லாது போனா' இரவு முழுதும் அந்த இனிமையான ஒரு மணி நேரத்தை நினைத்து இன்புறுவதிலேயே செலவிட்டிருப்பேனா வயிற்றைப் பிடித்தபடி.

'ராயல் டைகர் ராமு' போல் நீ.............ள மலைகளுக்கிடையில் மறைந்து விட்டேன் யாராவது பார்த்தால் ஏதாவது நினைப்பார்கள் என்று.

vasu sir

குள்ளன் துவாரகீஷ் ஓகே
குள்ளி எப்படி ஜெயசித்ரா (மன்னிக்கணும். ... எதிர்பதம் அல்லவோ வரவேண்டும் )

இதே மாதிரி Hosa Kalla Hale Kulla னு ஒரு படம் 1992 இல் வெளி வந்தது
குள்ளன் இதே நடிகர் துவாரகீஷ்

http://kannadamoviesinfo.files.wordpress.com/2013/09/hosa-kalla-hale-kulla-1992.jpg?w=477&h=200

gkrishna
15th July 2014, 10:23 AM
கிருஷ்ணா சார்!

பெரிய ஆள் சார் நீங்க. அங்கே ஒருத்தரு மொத்து வாங்கிகிட்டு இருக்கும் போது நைஸா சைக்கிள் கேப்ல 'கள்ளா குள்ளா', 'குள்ளா குள்ளி' போட்டுடீங்க. இல்லேன்னா இந்நேரம் 'அறம் பாடி' கேட்டிருப்பீங்க.

மிகவும் ரசித்தேன்

rajeshkrv
15th July 2014, 10:27 AM
தனிக்குடித்தனம் அருமையான நாடகம் படமானது
இதில் புஷ்பராகம், ஒரு அசடாட்டம் என் ஆம்படையான் பாடல்கள் பிரபலம்

அதில் இன்னொரு அருமையான பாடல் இதோ சுசீலாம்மா, வீரமணி,சாய்பாபா பாடிய நோக்கென்னடி தெரியும்

அருமை .. சுசீலாம்மா அடி தூள்


https://www.youtube.com/watch?v=2cY-TMsm20Y

gkrishna
15th July 2014, 10:29 AM
ok ok let's not make this thread like other threads ... let's forget the janaki matter and continue with the mesmerizing songs

well said rajesh sir.

நாம் இந்த திரியில் கலந்து இருப்பது எதற்காக ?
எல்லோரும் பெரியவரே

vasudevan31355
15th July 2014, 10:43 AM
http://i1.ytimg.com/vi/XlmR5fu0zyk/maxresdefault.jpg

நடிகர் திலகத்தின் 'அன்பு ' திரைப்படத்தின் ஆய்வை 12-12-2013 அன்று ஈகரை தமிழ்க் களஞ்சியம் இணயதளத்தில் நான் எழுதியிருந்தேன்.

அப்படத்தில் நாகரீக மோகம் கொண்ட நடுத்தர வயதுப் பெண்மணியாக, நடிகை ருஷ்யேந்திரமணி மிகச் சிறப்பாக நடித்து என் மனத்தைக் கவர்ந்தார்.

நடிகர் திலகம் புகழ் பாடும் கட்டுரை என்றாலும் நான் ருஷ்யேந்திரமணி அவர்களின் நடிப்பை பற்றிய குறிப்பை இந்த ஆய்வில் சொல்லாமல் விடவில்லை. சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை.

அதிலிருந்து ஒரு சிறிய பகுதி.

'விஜயாவாக எம்.ருஷ்யேந்திர மணி அருமையாக நடித்துள்ளார். பணக்கார கர்வம், அகந்தை, மகள் மீது பாசம், மகள் தன்னை மீறி வேறு திருமணம் செய்து கொண்டதற்கு கோபம், ரீட்டாவை தத்தெடுத்து அவள் கொடுமைகளைத் தாங்க மாட்டாமல் அவளிடம் கொண்ட ஆவேசம் என்று அமர்க்களமாகச் செய்திருக்கிறார்'.

இந்த ஆய்வை எழுதிவிட்டு நமது ராகவேந்திரன் சாரிடம் பேசும்போது எம்.ருஷ்யேந்திர மணி பற்றி, அவரது நடிப்புத் திறன் பற்றி பேசி மகிழ்ந்தது இப்போது நினைவுக்கு வருகிறது.

திறமையாளர்களை எக்காலத்திலும் மறக்கவே முடியாதே!

vasudevan31355
15th July 2014, 10:54 AM
'மாயா பஜார்' திரைப்படத்தில் ஜெமினியும், ருஷ்யேந்திரமணியும் தோன்றும் பாடல். அது மட்டுமல்ல.... குதிரைக் குளம்பொலி சத்தத்துடன் இணைந்த மனதை கொள்ளை கொள்ளும் கண்டசாலாவின் இசையில் சீர்காழியின் வெண்கலக் குரலில்

'பலே பலே தேவா! பாரோர் அறியார் உன் மாயா'


http://www.youtube.com/watch?v=XlmR5fu0zyk&feature=player_detailpage

vasudevan31355
15th July 2014, 11:03 AM
தனிக்குடித்தனம் அருமையான நாடகம் படமானது
இதில் புஷ்பராகம், ஒரு அசடாட்டம் என் ஆம்படையான் பாடல்கள் பிரபலம்



http://www.mayyam.com/talk/showthread.php?11002-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%A F%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%A E%95%E0%AE%B3%E0%AF%8D&p=1144222#post1144222

vasudevan31355
15th July 2014, 11:07 AM
'நோக்கும் நேக்கும் என்னடா தெரியும் வாண்டுப் பயலே'

'சொல்லேண்டா யார் இருக்கா'

super சுசீலா ராஜேஷ் சார்.

gkrishna
15th July 2014, 11:10 AM
பாலூட்டி வளர்த்த கிளி 1976
தேவராஜ் மோகன் இயக்கம்
விஜயகுமார் ஸ்ரீப்ரிய சுந்தர்ராஜன் நடித்து வெளிவந்த
கருப்பு வெள்ளை
இளைய ராஜா இசை (ராஜாவின் இரண்டு அல்லது 3வது படம் )

அவ்வளுவாக வெளியே தெரியாத பாடல்

https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcTFqZtDbLu1-Mal8Wt421VGwsawPcGee74B52K-C2SE0l-I0XBDdTWPMhohttps://lh3.ggpht.com/nGz6EFJVLiI78erEM8EMtpTicFRnQccBhkQ3LSGxVA0dp8-dMldY_ZE1wppbrIslomHnWsWW-Q

சுசீலா பாலா chorus குரல்களில்

படத்தில் மனோரமா என்று நினவு

எட்டு வகை திருமகளும் ஒட்டுமொத்தமாக
அரண்மனையில் குடி புகுந்தாள்
தெற்கு முகமாக நின்று வலது கால எடுத்து வைத்து
ஸ்ரீதேவி மனை புகுந்தாள்

யு ஆர் welcome

welcome

வாடியம்மா பொன்மகளே
வந்த இடம் நல்ல இடம்
ராணி மகள் ராணி அடி
வா வா வா வா

நதியோடும் கூந்தல் மதியொடு உலவ
வடிவேல் தேவி வருக
பதினாறு ஆண்டு ரதி தேவியாக
பனி மாலை சூடி வருக

தொட்டிலுக்குள் என்னை இட்டு என் அன்னை தாலாட்டினாள்
கட்டிலுக்குள் உன்னை வைத்து உன்னை நீராட்டினாள்

வாடியம்மா பொன்மகளே
வந்த இடம் நல்ல இடம்
ராணி மகள் ராணி அடி
வா வா வா வா

மணி மேடை போட்டு வலியோடு நானும் கிளி பெற்ற மகளே
மகாராஜன் வீடும் நம் வீடு தானே இனி ஏது வாழ்வில் கவலை

அத்தையம்மா கொஞ்சம் நில்லு பெண்ணுடன் நான் கொஞ்சட்டும்
அந்தி வரை நீயும் வந்தால் வேறு என்ன நான் சொல்லட்டும்

வாடியம்மா பொன்மகளே
வந்த இடம் நல்ல இடம்
ராணி மகள் ராணி அடி
வா வா வா வா

vasudevan31355
15th July 2014, 11:23 AM
இன்றைய ஸ்பெஷல் (29)

பெருந்தலைவர் பிறந்த நாள் ஸ்பெஷல்

இன்று மனிதப் புனிதரின் 112 வது பிறந்த நாள்.

'இன்றைய ஸ்பெஷலா'க மனிதர்களுள் மகுடமாய் ஜொலித்த நம் பெருந்தலைவரை நடிகர்களுள் மனிதனாய் ஜொலித்த நடிகர் திலகம் போற்றிப் புகழும் ஒரு பாடல். பொருத்தமாய் இருக்கும்தானே!

படம்: 'தாய்'.
பேனர்: பாபு மூவீஸ்
இசை: மெல்லிசை மன்னர்
பாடல்கள்: கவியரசர்
கதை வசனம்: எம்.எஸ்.சோலைமலை
ஒளிப்பதிவு: விட்டல்ராவ்
தயாரிப்பு: எஸ்.எஸ்.பிரகாஷ்,எஸ்.எஸ்.ராஜன்

'தாய்' (1974)திரைப்படத்தில் நடிகர் திலகமும்,ஜெயலலிதாவும் ஆடிப் பாடும் பெருந்தலைவர் புகழ் போற்றும் அற்புதமான பாடல்.

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/ThaainaadalavanthaaruMPG_000229693_zpsb08c93c1.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/ThaainaadalavanthaaruMPG_000229693_zpsb08c93c1.jpg .html)

அந்த கிராமத்திற்கு நல்லது செய்ய நினைத்து வந்திருக்கும் 'மேஜர்' சுந்தரராஜனைப் புகழ்ந்து கிராமத்து இளைஞர் நடிகர் திலகமும், அவர் காதலியாக வரும் ஜெயலலிதா மற்றும் ஊர் மக்கள் பாடுவது போல் வரும் இந்தப் பாடல் முழுக்க முழுக்க காமாராஜர் அவர்களை மனதில் கொண்டே எழுதப்பட்டது. வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை பெருந்தலைவரின் புகழை இப்பாடல் எடுத்துரைக்கிறது.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/erdtg-1.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/erdtg-1.jpg.html)

பெருந்தலைவரை தெய்வமாகப் போற்றிய நடிகர் திலகம் தன் படப் பாடல்களில் அம்மேதையின் புகழ் பாட மறந்ததேயில்லை. எவ்வித எதிர்பார்ப்புமின்றி, எவ்வித ஆதாயமும் தேடாமல் பெருந்தலைவரின் புகழை தன் பாடல்கள் மூலம் மக்கள் உணரச் செய்தார் அந்த நடிக மாமேதை

'பள்ளி சாலை தந்தவன் ஏழைத் தலைவனை தினமும் எண்ணுங்கள்'

என்று மக்களை எந்நாளும் நினைத்துப் பார்க்கச் சொன்ன தலைவரின் தன்னகரில்லா தொண்டன். அவரை மறக்காமல் மக்களுக்கு நினைவூட்டிய விசுவாசத் தொண்டன்.

'செடி மேல் படர்ந்த கொடிகளைப் போல
பெருந்தலைவரும் தொண்டரும் சேரலாம்
அவர் மடியினில் எதையும் மறைத்ததில்லை
இந்த மாநிலம் அவர் வசம் ஆகலாம்.
தியாகமும் சீலமும் தேசத்தை ஆளலாம்
தியாகமும் சேலமும் தேசத்தை ஆளலாம்'

என்று எட்டுத்திக்கும் தன் தலைவர் புகழை எதிரொலிக்க வைத்த ஏழைப் பங்காளனின் எளிமைத் தொண்டன்.

'சிவகாமி உமையவளே முத்துமாரி
உன் செல்வனுக்குக் காலம் உண்டு முத்துமாரி
மகராஜன் வாழ்கவென்று வாழ்த்துக் கூறி
இந்த மக்களெல்லாம் போற்ற வேண்டும் கோட்டை ஏறி'

என்று தீராத நம்பிக்கையோடு தீச்சட்டி கையில் ஏந்தி களிப்புற்றவன்.

அது உண்மையான பெருந்தலைவரின் மேல் அந்த உண்மையான மனிதனுக்கிருந்த இருந்த பக்தி, பாசம், மரியாதை.

தன் தலைவன் புகழ் பாடும் எங்கள் தலைவன்

இந்தப் பாடலை பெருந்தலைவரின் பிறந்தநாளில் முதன் முறையாக இணையத்தில் தரவேற்றி உங்கள் அனைவருக்கும் அளிப்பதில் பெருமையும், பேரானந்தமும், உவகையும் அடைகிறேன்.

நாடாள வந்தாரு நாடாரா வந்தாரு ஹேய்

நாடாள வந்தாரு நாடாரா வந்தாரு
ராஜாங்கம் கண்டாரம்மா
கல்லாமை கண்டாரு இல்லாமை தந்தாரு
கல்லூரி தந்தாரம்மா
அம்மம்மா கல்லூரி தந்தாரம்மா

நாடாள வந்தாரு நாடாரா வந்தாரு
ராஜாங்கம் கண்டாரம்மா
கல்லாமை கண்டாரு இல்லாமை தந்தாரு
கல்லூரி தந்தாரம்மா
அம்மம்மா கல்லூரி தந்தாரம்மா

பாண்டிய நாட்டுச் சீமையிலே
ஒரு பச்சைக் குழந்தை அழுததடி
பாலுக்காக அழவில்லை
அது படிப்புக்காக அழுததடி
மாடு மேய்க்கும் சிறுவனைக் கண்டு
மனதும் உடலும் பதைத்ததடி
வளரும் பிள்ளை தற்குறியானால்
வாழ்வது எப்படி என்றதடி

நாடாள வந்தாரு நாடாரா வந்தாரு
ராஜாங்கம் கண்டாரம்மா

பெற்ற தாயையும் மறந்ததடி
அது பிறந்த பொன்னாட்டை நினைத்ததடி
பெற்ற தாயையும் மறந்ததடி
அது பிறந்த பொன்னாட்டை நினைத்ததடி
உற்றார் உறவினர் யாரையும் மறந்து
உலகம் காக்கத் துணிந்ததடி

கல்யாணம் செய்யவும் எண்ணமில்லை
ஒரு காசுக்கும் பணத்துக்கும் ஆசையில்லை
எல்லார்க்கும் எல்லாமும் வேண்டுமென்றே
தினம் எண்ணுவதல்லால் ஏதுமில்லை

நாடாள வந்தாரு நாடாரா வந்தாரு
ராஜாங்கம் கண்டாரம்மா
கல்லாமை கண்டாரு இல்லாமை தந்தாரு
கல்லூரி தந்தாரம்மா
அம்மம்மா கல்லூரி தந்தாரம்மா

(கீழே வரும் பாடலின் பகுதி வானொலியின் ஒலிபரப்பில் கிடையாது. அதையும் சேர்த்தே வீடியோவில் அளித்துள்ளேன்).

பிறப்பினில் பச்சைத் தமிழனடி
அவர் பெரியவர் என்போம் நாங்களடி
கர்ம வீரனை தனா காந்தி என்று
அழைப்பார் இந்திய மக்களடி

அவரை அழைப்போம் வாங்களடி
ஓர் அரசை அமைப்போம் நாங்களடி
விருது கொடுத்து நகர்வலம் வருவோம்
வெற்றி முழக்கிடக் கூறுங்கடி
வெற்றி முழக்கிடக் கூறுங்கடி

முதன் முறையாக இணையத்தில்

https://www.youtube.com/watch?v=f5L1JrDz4lo&feature=player_detailpage

gkrishna
15th July 2014, 11:43 AM
[QUOTE=vasudevan31355;1147760]இன்றைய ஸ்பெஷல் (29)

பெருந்தலைவர் பிறந்த நாள் ஸ்பெஷல்

[SIZE=2][B][COLOR="blue"]இன்று மனிதப் புனிதரின் 112 வது பிறந்த நாள்.

வாசு சார்

தாய் பட பாடல் அருமை
உண்மையிலே இந்த பாட்டு நீங்கள் மட்டும் தான் இந்த திரியில் குறிப்பிட்டு உள்ளீர்கள் . நான் இது வரை படித்த பாடல்கள் சம்பந்தப்பட்ட வலை பதிவுகளில் பதியபடாத பதிவு இது .
நிச்சயம் இது புது வரவு .
NT நடித்த கருப்பு வெள்ளையில் தாய்,மனிதரில் மாணிக்கம் தவிர வேறு ஏதாவது படம் உண்டா 1974 கால கட்டத்திற்கு பிறகு

vasudevan31355
15th July 2014, 11:48 AM
NT நடித்த கருப்பு வெள்ளையில் தாய்,மனிதரில் மாணிக்கம் தவிர வேறு ஏதாவது படம் உண்டா 1974 கால கட்டத்திற்கு பிறகு

மனிதரில் மாணிக்கம் (7-12-1973)

தாய் (7-3-1974)

'தாய்'க்குப் பின் வண்ணம்தான்.:) வண்ணம் மட்டுமே.

Richardsof
15th July 2014, 12:15 PM
வாசு சார்

15.7.1972
http://i58.tinypic.com/2h4iyao.jpg
வேலூர் - அப்சரா அரங்கம்

காலை - 9 மணிக்கு ரசிகர் மன்ற சிறப்பு காட்சி .

கல்லூரி நண்பர்களுடன் [ எல்லா தரப்பு ரசிகர்களும் ] முதல் காட்சி பார்த்த நினைவுகள் .

எல்லோரும் ஜெயா ரசிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

முதல் காட்சி என்பதால் ரசிகர்களின் ஆராவாரங்கள் , விசில்கள் தூள் பறந்தன .

முதல் பாடல் - சுதந்திர பூமியில் பல வகை ...பாடல் காட்சியில் அரங்கமே அதிர்ந்தது .

வீரமென்னும் பாவை தன்னை கட்டி கொள்ளுங்கள் ....

பள்ளியறைக்குள் வந்த புள்ளி மயிலே .......

போன்ற இனிமையான பாடல்கள் .

ரசித்த அந்த இனிய நாட்கள் இன்றுடன் 42 ஆண்டுகள் முடிந்து விட்டது .

vasudevan31355
15th July 2014, 12:17 PM
ஷியாம் இசையில் என்னைக் கவர்ந்த இன்னொரு பாட்டு.

ஒரு டப்பாங்குத்து ரேஞ்சிற்கு என்னாலும் அட்டகாசமாக ஒரு பாடலைத் தர முடியும் என்று ஷ்யாம் நிருபித்த பாட்டு.

இனிமைக்கு வழக்கம் போல குறைவில்லைதான்.

'வா இந்தப் பக்கம்' படத்தில் 'இவள் தேவதை.... இதழ் மாதுளை' என்ற பாடல்.

நம்ம 'லூஸ்' பிரதாப் போத்தனும் (நான் சொல்லலப்பா... அல்லாருஞ் சொல்றது) உமாவும் நடித்திருப்பார்கள். உமாவின் தாயார் 'நாடகக் காவலர்' மனோகர் ட்ரூப்பில் பிரதான நடிகை. ராஜேஷ் சார் ஹெல்ப் ப்ளீஸ்.


ராஜேஷ் சார்,

வீடியோ கிடைக்குமா?

gkrishna
15th July 2014, 12:24 PM
மனிதரில் மாணிக்கம் (7-12-1973)

தாய் (7-3-1974)

'தாய்'க்குப் பின் வண்ணம்தான்.:) வண்ணம் மட்டுமே.

பதில் அருமை
வாசுவின் திறமை
திரியின் பெருமை


வாசு சார்

நேற்று ஆரூர் தாஸ் இன் ராணி சந்திரா பற்றிய ஒரு பதிவு தினத்தந்தி யில் வாசித்தேன். அதில் அவர், ராணி சந்திராவை அவர் தான் பத்ரகாளியில் கதாநாயகியாக அதுவும் முதல் தமிழ் படத்திலேயே கதாநாயகியாக அறிமுகம் செய்து வைத்ததாக SJ அடித்து உள்ளார் . பத்ரகாளி ரிலீஸ் 1976 ஆனால் ராணி சந்திரா 1975 கால கட்டத்திலேயே தேன் சிந்துதே வானம் கமல் இன் ஜோடியாக படத்தில் அறிமுகம் ஆன நினைவு .

இது பற்றி ஏதாவது தகவல் உண்டா . இதை பற்றி இந்த திரியில் கேள்வி கேட்கலாமா

அப்படியே தில்லான மோகனம்பாள் mr கிட்டா ஐயர் பற்றியும்

http://i1.ytimg.com/vi/qfyFbJO35-w/hqdefault.jpg
http://www.youtube.com/watch?v=zxj2dKGhvCs

vasudevan31355
15th July 2014, 12:26 PM
உண்மைதான் வினோத் சார். நன்றாக நினைவில் இருக்கிறது. முதல் பாதியில் அதம் பறந்த படம் இரண்டாவது பாதியில் ரசிகர்களை வதம் செய்து விட்டது.

இருந்தாலும் நடிகர் திலகத்தின் உழைப்பு அபாரம். குறிப்பாக சண்டைக் காட்சிகளில்.

இன்னொரு மறக்கவே முடியாத விஷயம். நடிகர் திலகத்திடம் இரண்டாவது முறையாக நேரிடையாக அறிமுகமாகி அவருடன் கைகுலுக்கி பேசி மகிழ்ந்தேன்.

ஏனென்றால் தர்மம் எங்கே படத்தில் சில காட்சிகளின் ஷூட்டிங் எங்கள் ஊரில் நடந்தது.

செத்து சுண்ணாம்பாகப் போனாலும் மறக்க முடியாத நினைவு.

நன்றி வினோத் சார் இனிமையான நினைவலைகளை நினைக்க வைத்து சிறகிட்டுப் பறக்க வைத்ததற்கு.

gkrishna
15th July 2014, 12:27 PM
esvee sir

15.7.1972 dharmam enge

super still and good remembrance

vasudevan31355
15th July 2014, 12:29 PM
கிருஷ்ணா சார்!

'தாயி'ன் பாராட்டிற்கு நன்றி!

நிஜமாகவே அபூர்வ பாடல் அளித்து எங்களையெல்லாம் 'பணால்' செய்து விட்டீர்கள்.

'வாடியம்மா பொன் மகளே'

ஈஸ்வரி டைப்பில் சுசீலாம்மா புகுந்து விளையாடுவார்கள்.

'பாலூட்டி வளர்த்த கிளி' அல்லவா! அதுதான் அந்த சுவை.

vasudevan31355
15th July 2014, 12:32 PM
பதில் அருமை
வாசுவின் திறமை
திரியின் பெருமை

இது என்ன கொடுமை:) கிருஷ்ணா சார்!

gkrishna
15th July 2014, 12:35 PM
உமாவும் நடித்திருப்பார்கள்.

வா இந்த பக்கம் உமா பின்னாட்களில் பின்னணி குரல் பேசுபவராக இருந்தார் என்றும் அவருடைய கணவர் கூட திரைப்படத்துறையில் பணி புரிபவர் என்றும் நினைவு

vasudevan31355
15th July 2014, 12:35 PM
இது பற்றி ஏதாவது தகவல் உண்டா . இதை பற்றி இந்த திரியில் கேள்வி கேட்கலாமா



பொன்னான உள்ளம் உன்னோடு இருக்க
கண்ணான கண்ணே பயம் வேண்டாம்:)

gkrishna
15th July 2014, 12:37 PM
'வாடியம்மா பொன் மகளே'

ஈஸ்வரி டைப்பில் சுசீலாம்மா புகுந்து விளையாடுவார்கள்.



இந்த பாட்டு விடியோ அல்லது ஆடியோ லிங்க் இருந்தால் கொஞ்சம்
சேர்த்து விடுங்கள் வாசு சார்

gkrishna
15th July 2014, 12:55 PM
http://i1.ytimg.com/vi/z-sqaS2V9rk/hqdefault.jpghttp://4.bp.blogspot.com/-xXgeUc2SjsE/T5kpS3z-9JI/AAAAAAAAAWc/UIXCyPS7XwU/s1600/nadu+iravil.jpg
http://raretfm.mayyam.com/pow07/images/naduiravil01.jpg

நடு இரவில் 1970 (சில வலைப்பூவில் 1966 என்று குறிப்பிட்டு உள்ளனர்)
வீணை s பாலச்சந்தர் இயக்கம்
மேஜர் சுந்தர்ராஜன்,சௌகார் ஜானகி,பண்டரி பாய், கோபாலகிருஷ்ணன்,v s ராகவன்,சோ,மாலி,சதன்,S.N.லக்ஷ்மி,வீணை எஸ் பாலச்சந்தர்
நடித்து வெளி வந்த கருப்பு வெள்ளை

அதிர்ச்சியூட்டும் முடிச்சுகள் இருந்தாலும் ரசிகர்களை மறுமுறை திரையரங்கத்திற்கு வரவழைக்கவும் படத்தின் வியாபர மதிப்பைக் கூட்டவும் கவர்ச்சி நடனங்களும் வலுவில் திணிக்கப்பட்ட பாடல், சண்டைக் காட்சிகளும் இருக்கும். அப்படியானக் காலக் கட்டத்தில் கவர்ச்சி நடனமோ , சண்டைக் காட்சிகளோ இல்லாமல் கதைக்கு தேவையான வெறும் இரண்டு பாடல்களுடன் வெளிவந்த படம் தான்

'நடு இரவில்'. `And then there were None (1945)` ஆங்கில படத்தின் ஈர்ப்பு

இந்த படத்தில் நம் பிரேம் ஆனந்த்(திரிசூலம்) நடித்த ஒரு நினவு
யாராவது உறுதி செய்தால் நன்று

இது தான் எஸ் பாலச்சந்தரின் இறுதி படம் இதற்கு பிறகு அவர் எதுவும் படம் எடுத்தாரா என்று நினைவு இல்லை

நல்ல suspense thriller

மேஜர் சுந்தரராஜனும் பண்டரி பாயும் கணவன் மனைவி .குடும்பத்தாரால் ஒதுக்கப்பட்டு தனியாக வாழ்வார்கள்
பண்டரி பாய் மன நோயாளி .மேஜர் சுந்தர்ராஜன் அவர்களுக்கு ரத்த புற்றுநோய். இன்னும் சிறிது நாட்களில் இறந்து விடுவார்
என்ற நிலையில் அவருடைய டாக்டர் ஆல் (s.balachander) உறவினர்கள் எல்லோரும் வரவழைக்கபடுவார்கள்.

யாருமே இல்லாமல் பியானாவில் தானாகவே இசை வாசிக்கப்படுதல், காற்றடித்து திரைச்சீலைகள் நகர்ந்து நிழலுருவங்கள் தெரிவது
என திகிலுடன் வந்திருக்கும் உறவினர்களுக்கு மாளிகை வாழ்வு ஆரம்பிக்கின்றது

ஒவ்வொருவாராக கொலை செய்யபடுவார்கள். கொலை செய்வது யார் .

இப்பொழுது இருக்கும் தொழில்நுட்பங்கள் போல் ஏதும் இல்லா காலக் கட்டங்களில் இருப்பதை வைத்து ஒரு நிறைவான படத்தைக் கொடுத்த வீணை எஸ்.பாலசந்தர் தமிழில் சிறந்த இயக்குனர்கள் பட்டியலில் உயர்ந்த இடத்தில் வைக்கப்பட வேண்டியவர்

சௌகார் ஜானகி பியானோ முன்னே அமர்ந்து கொண்டு வரும் ஒரு பாடல்
சுசீலாவின் குரலில் .
மேஜர் சுந்தர் கட்டிலில் படுத்து இருப்பார் .
வில்லன் சௌகாரை கத்தியால் குத்துவதற்கு பின்னாலே நிற்பான்


கண் கட்டும் ஜாடையிலே காவியம் கண்டேன்
அந்த காவியத்தில் சோகம் எனும் ஓவியம் கண்டேன்

வாடி போன முகத்திலே வனப்பு மாறவில்லை
வளர்மதி உன் பொன்னொலிஉம் இன்னும் தீரவில்லை
ஓடி போன காலம் உன்னை திரும்பி பார்கவில்லை
தேடி வந்த மங்கை என்னை திரும்பி பாரம்மா

கண் கட்டும் ஜாடையிலே காவியம் கண்டேன்
அந்த காவியத்தில் சோகம் எனும் ஓவியம் கண்டேன்

எண்ணி எண்ணி நெஞ்சினிலே எத்தனை நாள் நொந்தாய்
என்னவெல்லாம் கனவுகளை இதயத்திலே கண்டாய்
மண் மாதா மடி மீது மன்னர் தம் சேயும் முன்னே
மாபாவம் செய்தவரை மன்னிப்பாய் அம்மா

கண் கட்டும் ஜாடையிலே காவியம் கண்டேன்
அந்த காவியத்தில் சோகம் எனும் ஓவியம் கண்டேன்

http://www.youtube.com/watch?v=l8f2YdYi3Mo

http://www.youtube.com/watch?v=z-sqaS2V9rk

ராட்சசியின் குரலில்

2.நாலு பக்கம் ஏரி
நடுவினிலே தீவு
தீவுக்குள் ராஜா
ராஜக்கொரு ராணி

http://www.youtube.com/watch?v=gs1s0rRYZ-A

வாசு சார்

இந்த பாடல்களை கொஞ்சம் அலசுங்களேன் ப்ளீஸ்

vasudevan31355
15th July 2014, 01:09 PM
கிருஷ்ணா சார்,

அருமை!

நடுப்பகலில் பயமுறுத்தி விட்டீர்கள். குலை நடுங்க வைத்த படம்.

மதியம் வேலைக்குப் போய் மோட்டார்களை எல்லாம் அலசி விட்டு வந்து விடுகிறேன். நாளை பாடலை அலசுவோம்.

parthasarathy
15th July 2014, 02:52 PM
yes .. she did few tamil movies but mainly in malayalam (paavam soga rolesa koduthu oru vazhi pannittanga )

beautiful composition by V.Dakshinamurthy PS with KJY
Ambika with Telugu actor Ramakrishna(actress Geethanjali's husband)


https://www.youtube.com/watch?v=9fY5cSpKjtw

Rajesh,

Great going indeed!

BTW, is Geethanjali not Telugu Comedian Padmanabham's wife?

To my knowledge, two Telugu Comediennes marry Comedians - Relangi - started acting together with Girija (yes, lead lady of Manohara with NT) and eventually married her. Padmanabham followed suit - started acting together with Geethanjali and eventually married her. (they were lead pairs in Govulla Gobanna - original of En Annan, which was replicated in Tamil with Cho while Geetanjali acted again in the same role). Comedian turned character artiste Chalam married Oorvasi Saradha - this every body knows.

Regards,

R. Parthasarathy

gkrishna
15th July 2014, 03:20 PM
Rajesh,

Great going indeed!

BTW, is Geethanjali not Telugu Comedian Padmanabham's wife?

To my knowledge, two Telugu Comediennes marry Comedians - Relangi - started acting together with Girija (yes, lead lady of Manohara with NT) and eventually married her. Padmanabham followed suit - started acting together with Geethanjali and eventually married her. (they were lead pairs in Govulla Gobanna - original of En Annan, which was replicated in Tamil with Cho while Geetanjali acted again in the same role). Comedian turned character artiste Chalam married Oorvasi Saradha - this every body knows.

Regards,

R. Parthasarathy

dear sarathi sir

http://timesofindia.indiatimes.com/articleshow/819858783.cms?

here it is mentioned as actress geethanjali wife of actor ramakrishna

just for reference

gkrishna
15th July 2014, 05:33 PM
நண்பர்களே,
நான் மிக நீண்ட நாட்களாகக் கேட்க ஆவலாயிருக்கும் பாடல் கங்கா யமுனா காவிரி திரைப்படத்தில் எஸ்.பி.பாலா எஸ்.ஜானகி அட்டகாசமாய் கலக்கியிருக்கும் கவ்வாலிப் பாடல், உமர் கய்யாம் எழுதி வைத்த கவிதை பாடல்..

இணையத்தில் தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை. வேறொர் நண்பர் மூலமாக வெளிநாடுகளில் தேடச் சொல்லியிருக்கிறேன். அது விரைவில் கிடைக்க வாய்ப்புள்ளது. இருந்தாலும் இணையத்தில் கிடைத்தால் இணைப்புத் தர கேட்டுக் கொள்கிறேன். அது வரை கேட்டு மகிழலாம்.

இது தான் வேந்தர் சார்

உங்கள் பங்களிப்பை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை
நேற்று மதியம் முழுவதும் ஹப் கிடைக்கவில்லை .இரவு 11 மணிக்கு
நீங்கள் பதிவு போடுகிறீர்கள் என்றால் உங்கள் உழைப்பை பாராட்ட வார்த்தைகளே இல்லை . அதிலும் அபூர்வமான பாடல்களை எடுத்து நீங்கள் போடும் ஒவ்வொரு பாடலும் 70 இறுதி 80 ஆரம்பம் கால கட்டங்களை நினவு கூர்கிறது.

ஒரு சிறு வேண்டுகோள் . சில பாடல்கள் படம் பெயர் தெரியாமல் தேடி கண்டு பிடிக்க வேண்டி உள்ளது . ஆகையால் அந்த படத்தின் பெயரை சேர்த்து போட்டால் கொஞ்சம் எளிதாக இருக்கும் . இது வேண்டுகோள் தான்

கங்கா யமுனா காவேரி 1978
ஜெய் ஸ்ரீதேவி ஜோடி
k.சொர்ணம் இயக்கம்

இன்னும் போஸ்டர் கூட நினைவில் உள்ளது சார்
நெல்லை லக்ஷ்மி ரிலீஸ்

mr_karthik
15th July 2014, 07:35 PM
டியர் வாசு சார்,
உணர்ச்சிகள் பாடல் பற்றிய அலசல் மற்றும் விரிவாக்கம் மிகவும் அற்புதம். ராசலீலா மலையாளப்படத்தின் ரீமேக் என்றபோதிலும் முடிவு வித்தியாசமானது. ராசலீலாவில் கதாநாயகனை பண்ணையாரின் ஆட்கள் அடித்துக் கொல்வதுபோல முடிவிருக்கும். ஆனால் தமிழில் காம வசப்பட்ட நாயகன் பல இடங்களிலும் விலைமாதர்களிடம் கெட்டலைந்து சீரழிந்து சாவது போலிருக்கும். அவ்வாறு கெட்டலையும் காட்சிகள் சற்று ஓவராக அமைத்தால் 'ஏ' தரச்சான்றிதழ் வழங்கப்பட்டது.

அந்தக்காட்சிகளில் கமலைப்பார்க்க மிகவும் பரிதாபமாக இருக்கும். உணர்ச்சி வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் அவர் சீரழியும் காட்சிகள் அவர் மீது இரக்கத்தை வரவழைக்கும்.

கடற்கரையில் தனியே நிற்கும் படகிலிருந்து அவர் ‘வேலை முடிந்து’ வெளியே குதித்ததும் உள்ளேயிருந்து ஒரு விலைமகள் எழுந்து வரும் காட்சியிலும் சரி,
அடையாரில் ‘அந்த மாதிரி’ ஏரியாவின் குடிசைக்குள்ளிருந்து ஷுக்களை கையில் தூக்கியபடி வேகமாக வெளியேறும் காட்சியிலும் சரி,

பால்வினை (வி.டி.) நோயின் அறிகுறிகளாக அவர் உடம்பில் காணப்படும் வட்ட வட்டமான தழும்புகள் பற்றி ஸ்ரீவித்யா விசாரிக்கும்போதும் சரி,

ஆஸ்பத்திரியில் பால்வினை சிகிச்சைக்காக காத்திருக்கும்போது உள்ளே சிகிச்சை அளிக்கப்படுபவரின் அலறல் சத்தம் கேட்டு பயந்துபோய் சிகிச்சை பெறாமல் ஓடிவரும் காட்சியிலும் சரி

கமல் மீது பரிதாபமே ஏற்படும்.

விவரமறியா பருவத்தில் இளம் விதவையொருத்தியால் தூண்டப்பட்டு, குடிகாரி ஒருத்தியால் விசிறி விடப்பட்ட பருவகால உணர்ச்சிகள் கட்டுப்பாடில்லாமல் கொழுந்து விட்டு எரிந்ததால் வந்த வினை.

1976-ல் வெளியானபோது வண்ணாரப்பேட்டை பாண்டியன் தியேட்டரில் பார்த்தது. அப்புறம் பார்க்கவில்லை.

நல்ல பாடல் ஒன்றின் மூலம் பழைய நினைவுகளை ஊதிவிட்டீர்கள். மிக்க நன்றி...

mr_karthik
15th July 2014, 07:52 PM
டியர் வாசு சார்,

பெருந்தலைவரின் பிறந்த நாளுக்கு பொருத்தமான ஒரு பாடலை, இணையத்தில் முதன்முறையாக தரவேற்றி அளித்துள்ளீர்கள். வரிகள் ஒவ்வொன்றும் பெருந்தலைவரை நினைவூட்டுகின்றன.

யாராலும் கண்டுகொள்ளப்படாத (ஓ... கோபால் இருக்கிறாரோ) சரி பெரும்பாலோரால் கண்டுகொள்ளப்படாத பாடலைத் தரவேற்றி தந்ததற்கு பாராட்டுக்கள், நன்றிகள்...

mr_karthik
15th July 2014, 07:57 PM
தமிழ் திரைப்படங்களில் எத்தனையோ வகையான டூயட்டுகள் வந்துள்ளன. காதலன் காதலி டூயட் அல்லது கணவன் மனைவி டூயட்தான் என்றில்லை, அண்ணன் - தங்கை டூயட் (உம்: இந்த மன்றத்தில் ஓடிவரும்) அப்பா - மகள் டூயட் (உம்: அன்புள்ள அப்பா உங்கள் காதல் கதையை கேட்டால் தப்பா) இப்படி பல. ஆனால் சித்தப்பாவுக்கும் அண்ணன் மகளுக்கும் டூயட் வந்திருக்கிறதா?. எனக்குத்தெரிந்து இது ஒன்றுதான். மீண்டும் சொல்கிறேன், எனக்குத்தெரிந்து (ஒருவேளை தெரியாமல் ஏதாவது இருக்கலாம்).

கல்யாண ஊர்வலம் (1970)

நாகேஷ் கதாநாயகனாகவும், கே.ஆர்.விஜயா கதாநாயகியாகவும், மணிமாலா நாகேஷின் அண்ணன் மகளாகவும் நடித்த கருப்பு வெள்ளைப்படம். எஸ்.பி.பி.யும் ஜேசுதாஸும் திரையுலகில் மும்முரமாகி பி.பி.எஸ்.ஸை முற்றிலும் ஓரம் கட்டும் முன் ஜேசுதாஸ் தமிழில் அங்கொன்றும் இங்கொன்றுமாக பாடிக்கொண்டிருந்த நேரம். சரி இப்பாடலில் ஜேசுதாஸின் குரல் நாகேஷுக்கு பொருந்தியதா என்றால் நிச்சயமாக இல்லை. ஆனால் இசை தேவராஜன் ஆயிற்றே. யாருக்காக இருந்தாலும் ஜேசுதாசையும் மாதுரியையும்தானே கொண்டு வருவார். இதிலும் கொண்டுவந்து விட்டார்.

திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் தன் மணநாளை மனதில் எண்ணி மகிழ்ச்சியுடன் பாட, அவளுடைய சித்தப்பாவும் அந்த குதூகலத்தை எண்ணி பாடலைத் தொடர்வதாக அமைந்த பாடல்.

மாதுரி:
கூந்தலிலே நெய் தடவி
குளிர் விழியில் மைதடவி
காத்திருக்கும் கன்னிமகள்
காதல்மனம் ஒரு தேனருவி
புது மனையில் புகுந்து மணவறையில் கலந்திருக்க
கல்யாண ஊர்வலமோ..... கல்யாண ஊர்வலமோ.....

மாப்பிள்ளை நெஞ்சம் மஞ்சம் - அதில்
மங்கல சங்குகள் கொஞ்சும்
காதலி உள்ளம் வெள்ளம் -அதில்
காதலின் ஓடம் செல்லும்
கை வளையல் குலுங்கிவர கனவு கலந்துவர
கல்யாண ஊர்வலமோ..... கல்யாண ஊர்வலமோ.....

ஜேசுதாஸ்:
நெஞ்சமெனும் ஆலயத்தில்
நின்றதெல்லாம் என் அண்ணன் மகள்
என் மனதை தன்னுடனே
எடுத்துச்செல்வாள் அந்த அன்புமகள்
புது மனையில் புகுந்து மணவறையில் கலந்திருக்க
கல்யாண ஊர்வலமோ..... கல்யாண ஊர்வலமோ.....

ஆயிரம் காலத்தை கடந்து
விழி நீரினை கண்கள் மறந்து
அன்பெனும் வானத்தில் பறந்து
நீ வாழ்ந்திட வேண்டும் இருந்து
இளம்பருவ மழையில் இரு
புருவம் நனைந்து வர
கல்யாண நாள் வருமோ... கல்யாண நாள் வருமோ...

rajeshkrv
15th July 2014, 08:39 PM
தமிழ் திரைப்படங்களில் எத்தனையோ வகையான டூயட்டுகள் வந்துள்ளன. காதலன் காதலி டூயட் அல்லது கணவன் மனைவி டூயட்தான் என்றில்லை, அண்ணன் - தங்கை டூயட் (உம்: இந்த மன்றத்தில் ஓடிவரும்) அப்பா - மகள் டூயட் (உம்: அன்புள்ள அப்பா உங்கள் காதல் கதையை கேட்டால் தப்பா) இப்படி பல. ஆனால் சித்தப்பாவுக்கும் அண்ணன் மகளுக்கும் டூயட் வந்திருக்கிறதா?. எனக்குத்தெரிந்து இது ஒன்றுதான். மீண்டும் சொல்கிறேன், எனக்குத்தெரிந்து (ஒருவேளை தெரியாமல் ஏதாவது இருக்கலாம்).

கல்யாண ஊர்வலம் (1970)

நாகேஷ் கதாநாயகனாகவும், கே.ஆர்.விஜயா கதாநாயகியாகவும், மணிமாலா நாகேஷின் அண்ணன் மகளாகவும் நடித்த கருப்பு வெள்ளைப்படம். எஸ்.பி.பி.யும் ஜேசுதாஸும் திரையுலகில் மும்முரமாகி பி.பி.எஸ்.ஸை முற்றிலும் ஓரம் கட்டும் முன் ஜேசுதாஸ் தமிழில் அங்கொன்றும் இங்கொன்றுமாக பாடிக்கொண்டிருந்த நேரம். சரி இப்பாடலில் ஜேசுதாஸின் குரல் நாகேஷுக்கு பொருந்தியதா என்றால் நிச்சயமாக இல்லை. ஆனால் இசை தேவராஜன் ஆயிற்றே. யாருக்காக இருந்தாலும் ஜேசுதாசையும் மாதுரியையும்தானே கொண்டு வருவார். இதிலும் கொண்டுவந்து விட்டார்.

திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் தன் மணநாளை மனதில் எண்ணி மகிழ்ச்சியுடன் பாட, அவளுடைய சித்தப்பாவும் அந்த குதூகலத்தை எண்ணி பாடலைத் தொடர்வதாக அமைந்த பாடல்.

மாதுரி:
கூந்தலிலே நெய் தடவி
குளிர் விழியில் மைதடவி
காத்திருக்கும் கன்னிமகள்
காதல்மனம் ஒரு தேனருவி
புது மனையில் புகுந்து மணவறையில் கலந்திருக்க
கல்யாண ஊர்வலமோ..... கல்யாண ஊர்வலமோ.....

மாப்பிள்ளை நெஞ்சம் மஞ்சம் - அதில்
மங்கல சங்குகள் கொஞ்சும்
காதலி உள்ளம் வெள்ளம் -அதில்
காதலின் ஓடம் செல்லும்
கை வளையல் குலுங்கிவர கனவு கலந்துவர
கல்யாண ஊர்வலமோ..... கல்யாண ஊர்வலமோ.....

ஜேசுதாஸ்:
நெஞ்சமெனும் ஆலயத்தில்
நின்றதெல்லாம் என் அண்ணன் மகள்
என் மனதை தன்னுடனே
எடுத்துச்செல்வாள் அந்த அன்புமகள்
புது மனையில் புகுந்து மணவறையில் கலந்திருக்க
கல்யாண ஊர்வலமோ..... கல்யாண ஊர்வலமோ.....

ஆயிரம் காலத்தை கடந்து
விழி நீரினை கண்கள் மறந்து
அன்பெனும் வானத்தில் பறந்து
நீ வாழ்ந்திட வேண்டும் இருந்து
இளம்பருவ மழையில் இரு
புருவம் நனைந்து வர
கல்யாண நாள் வருமோ... கல்யாண நாள் வருமோ...



கார்த்திக் சார். ஜானகி மாதுரி மாதிரி கேட்டதா உங்களுக்கு .. பரவாயில்லை.....

இசை தேவராஜன் இல்லை ஆர்.பார்த்தசாரதி .
வரிகள் வாலி ஐயா அவர்கள்

மணிமாலா நல்ல அழகு நல்ல நடிகை .


இதில் இடம்பெற்ற இன்னுமொரு அழகான பாடல் இசையரசியின் குரலில்


http://www.youtube.com/watch?v=32ILVwLtBiM

rajeshkrv
15th July 2014, 08:41 PM
வா இந்த பக்கம் உமா பின்னாட்களில் பின்னணி குரல் பேசுபவராக இருந்தார் என்றும் அவருடைய கணவர் கூட திரைப்படத்துறையில் பணி புரிபவர் என்றும் நினைவு

உமா தொலைக்காட்சிகளிலும் திரைப்படங்களிலும் நடித்தவர். பின்னாளில் மருதகாசி ஐயாவின் மகன் மருதபரணியை திருமணம் செய்து கொண்டு
உமா பரணியானார் மீனாவிற்கு பல படங்களில் குரல் கொடுத்தவர் இவர்.

rajeshkrv
15th July 2014, 08:50 PM
ஷியாம் இசையில் என்னைக் கவர்ந்த இன்னொரு பாட்டு.

ஒரு டப்பாங்குத்து ரேஞ்சிற்கு என்னாலும் அட்டகாசமாக ஒரு பாடலைத் தர முடியும் என்று ஷ்யாம் நிருபித்த பாட்டு.

இனிமைக்கு வழக்கம் போல குறைவில்லைதான்.

'வா இந்தப் பக்கம்' படத்தில் 'இவள் தேவதை.... இதழ் மாதுளை' என்ற பாடல்.

நம்ம 'லூஸ்' பிரதாப் போத்தனும் (நான் சொல்லலப்பா... அல்லாருஞ் சொல்றது) உமாவும் நடித்திருப்பார்கள். உமாவின் தாயார் 'நாடகக் காவலர்' மனோகர் ட்ரூப்பில் பிரதான நடிகை. ராஜேஷ் சார் ஹெல்ப் ப்ளீஸ்.


ராஜேஷ் சார்,

வீடியோ கிடைக்குமா?

உமாவின் தாயார் டி.ஆர்.லதா .. பல தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பவர் , பல மொழி மாற்று படங்களுக்கு குரல் கொடுப்பவரும் கூட

வா இந்த பக்கம் வீடியோ கிடைக்கவில்லை . முயற்ச்சிக்கிறேன்

vasudevan31355
15th July 2014, 11:17 PM
'வா இந்தப் பக்கம்' உமா

http://www.hindu.com/thehindu/mp/2004/01/26/images/2004012601740301.jpghttps://i.ytimg.com/vi/7n54c-3R7SQ/mqdefault.jpg

vasudevan31355
15th July 2014, 11:32 PM
ராஜேஷ் சார்,

கண்ணில் தெரியும் கதைகள் படத்தில் ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு இசையமைப்பாளர்.

http://i1.ytimg.com/vi/SAxFIp4gkJ8/hqdefault.jpg

இதில்

நான் ஒன்ன நெனச்சேன்
நானொரு பொன்னோவியம் கண்டேன்

இரு பாடல்களும் செம ஹிட் என்பது ஊரறிந்த விஷயம்.

ஆனால் ஆடு மேய்த்துக் கொண்டே ஒரு பாடல்

'1,2,3,4,5,6 எல்லா ஆடும் இருக்குதான்னு எண்ணிப் பார்போம் வாடா'
என்றொரு பாடல் உண்டு. பாடியவர்கள், இசையமைப்பாளர் யாரென்று கூற இயலுமா? ரொம்ப நாளாக சந்தேகம்.

rajeshkrv
15th July 2014, 11:43 PM
i think the 1 2 3 song was composed by t.R.Pappa & sung by B.S.Sasirekha & chorus

rajeshkrv
16th July 2014, 06:32 AM
தாயை போல பிள்ளை நூலைப்போல சேலை 1959'ல் வெளியான படம்

இசை மகாதேவன் அவர்கள்

விலைமதிப்பில்லாத அருட்பெரும் கலையே .. என்ற அருமையான பாடல்
குரல்கள் இசையரசி மற்றும் சூலமங்கலம் ராஜலெக்*ஷ்மி

thayaipola pillai noola pola selai-vilai madhippilladha kalaye.mp3 (http://www.4shared.com/mp3/e4-v_2RQba/thayaipola_pillai_noola_pola_s.html)

RAGHAVENDRA
16th July 2014, 08:10 AM
பதிவுகளைப் பாராட்டிய ஒவ்வொரு அன்பு உள்ளத்திற்கும் என் மனமார்ந்த நன்றி. மின்னல் வேகம், ஜெட் வேகம் என்று வேகத்திற்கு உதாரணமாக மற்றவற்றைக் கூறுவதை விட இந்தத் திரியைக் கூறி விடலாம். தொடருங்கள்.

மிகவும் மகிழ்ச்சியோடு எனக்குத் தெரிந்து இணையத்தில் முதன் முதலாக,

மெல்லிசை மன்னரின் இசையில் எஸ்.பி.பாலாவும் எஸ்.ஜானகியும் இசை ராஜாங்கமே நடத்தியிருக்கும் என் மிகவும் விருப்பமான பாடலை உங்களுடன் பகிரந்து கொள்ள விரும்புகிறேன்.

கவ்வாலி டைப் பாடல் தான். இருந்தாலும் அதில் இந்த அளவிற்கு ஆளுமை தந்திருக்கும் மெல்லிசை மன்னரின் திறமையை எப்படி பாராட்டுவதென்றே தெரியவில்லை. பாடலில் எஸ்.பி.பாலாவின் குரலைக் கேட்கும் போதும் சங்கதிகளை அவர் தந்திருக்கும் விதத்தைப் பார்க்கும் போதும் எப்பேர்ப்பட்ட இசை வளத்தை இறைவன் அவருக்கு அளித்திருக்கிறான், எப்பேர்ப்பட்ட இசையமைப்பாளர் அவரை எவ்வளவு தூரம் பயன்படுத்தியிருக்கிறார் என்பது புரியும்.

முதன்முறை கேட்பவர்களுக்கு இந்தப் பாடல் பிடிக்க சற்று தாமதமாகலாம். ஆனால் மீண்டும் மீண்டும் கேட்டுப் பாருங்கள். இப்பாட்டின் மகத்துவம் புரியும்.

நீண்ட நாட்களாக நான் கேட்கத் துடித்த அந்தப் பாடல், நேற்று நான் குறிப்பிட்டது போல், கங்கா யமுனா காவிரி படத்திலிருந்து உமர் கயாம் எழுதி வைத்த கவிதை...

http://www.mediafire.com/listen/jv1b60hctdg33gv/Omarkhayyam.mp3

பதிவிறக்கம் செய்து கொள்வதற்காக கோப்பாக தரவேற்றப் பட்டுள்ளது. கேட்டு மகிழவும்.

vasudevan31355
16th July 2014, 10:05 AM
இன்றைய ஸ்பெஷல் (30)

'இன்றைய ஸ்பெஷலி'ல் ஒரு அழகான மெலடி டூயட். 'திருமாங்கல்யம்' படத்திலிருந்து.

http://4.bp.blogspot.com/-u6Ci4GmQABI/T5GvgF27k1I/AAAAAAAAAgo/iezD18O71JY/s320/thiru.png

ஜெயா மேடத்தின் நூறாவது படம். டி.ராமாநாயுடுவின் விஜயா சுரேஷ் கம்பைன்ஸ் தயாரிப்பு. வண்ணப்படம். முத்துராமன், சிவக்குமார், லக்ஷ்மி, மேஜர், நாகேஷ், ஸ்ரீகாந்த் நடித்திருந்தனர். ராமாநாயுடுவும் சில காட்சிகளில் நடித்திருந்தார். ராமா நாயுடுவின் படங்களில் தவறாமல் இடம் பெறும் சாந்தகுமாரியும் உண்டு. பாலாஜி வில்லன். லஷ்மி செம ஹாட். படம் ரொம்ப எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நல்ல குடும்பப் படமாய் இருந்தும், நிறைய செலவு செய்து எடுத்தும் சலிப்படையச் செய்யும் காட்சிகளின் நீளத்தால் பெற வேண்டிய வெற்றியைப் பெறாமல் போனது.

http://i1.ytimg.com/vi/XeoxquluHIY/maxresdefault.jpg

கதை - எத்தனபூடி சுலோச்சனாராணி. வசனம் - ஏ.எல்.நாராயணன்.

இசை 'மெல்லிசை மன்னர்'. காலம் மறக்க முடியாத அற்புத டூயட்டை ஜெயாவின் நூறாவது படத்திற்கு பரிசாகத் தந்திருக்கிறார்.

'சவாலே சமாளி' படத்தில் வரும் 'என்னடி மயக்கமா சொல்லடி ...வஞ்சி...அவனை வஞ்சி' டைப்பில் 'திருமாங்கல்யம் கொள்ளும் முறையில்லையோ' என்ற பாடல் ஒன்று உண்டு. ஜெயா சுசீலாவுடன் இணைந்து இதைப் பாடியிருப்பார் இல்லை இல்லை பேசியிருப்பார்.

இன்னொரு பாடலும் ஜெயா சொந்தக் குரலில் பாடியிருப்பார் 'உலகம் ஒருநாள் பிறந்தது... அது ஊமையாகவே இருந்தது'

லஷ்மி நண்பர்களுடன் 'பட்டிக்காடா பட்டணமா' படத்தில் முத்துச் சோலை' பாடலில் ஜெயா கலக்குவது போல கவர்ச்சியாகக் கூத்தடிக்கும் ''உலகம் நமது வீடென்று சொல்லுங்கள்... ஆனந்தம் பிரம்மானந்தம்' பாடல் ஈஸ்வரியின் இன்னொரு இனிய இம்சை.

'ஜனனம் ஒரு வழி... மரணம் பலவழி' என்ற பாடகர் திலகத்தின் டிரேட் மார்க் பாடல் ஒன்று உண்டு சோகத்துடன். (ஈமச் சடங்கு பாடல்)

http://i.ytimg.com/vi/BF0P9norphQ/0.jpg

படம் முழுக்க முழுக்க ஜெயலலிதா அவர்களின் ஆக்கிரமிப்பு. ஆனால் உடல் ஸ்லிம் குறைந்து பருமனாக தெரிவார். முகம் மட்டும் அப்படியே அழகு. ஸ்ரீகாந்த் ஜெயாவின் சகோதரனாக வருவார் வழக்கம் போல திருடனாக.

வின்சென்ட் இப்படத்தை இயக்கியிருந்தார்.

முத்துராமனுக்கும், ஜெயா மேடத்திற்கும் இந்த டூயட். வழக்கமாக காதல் காட்சிகளில் எனக்கென்ன என்று உணர்வில்லாமல் நிற்கும் முத்துராமன் இதில் கொஞ்சம் பரவாயில்லை. விதவித டிசைன் கொண்ட வண்ண வண்ண உடைகளில் டீசெண்ட் கடைபிடிக்கிறார்..

ஜெயா முழுக்க முழுக்க அழகான சேலைகளில் (ஒயிட் ரொம்ப அழகு) வந்து அசத்துகிறார். அழகான பூங்காவிலும், இயற்கை எழில்சூழ் பகுதிகளிலும் இப்பாடல் படமாக்கப்பட்டு கண்களையும், மனதையும் குளிர்விக்கிறது.

'பாடும் நிலா' பாலுவும், 'கண்ணியப் பாடகி' சுசீலாவும் மிக கண்ணியமாக கௌரவமாக இப்பாடலைப் பாடியிருப்பார்கள். இருவரும் இணைந்து கொடுத்த சூப்பர் ஹிட் காதல் பாடல்களில் இதுவும் மிக முக்கியமானது. நன்கு ஹிட் ஆன பாடல். இப்போது மீண்டும் நாம் ஞாபகப்படுத்தி மகிழ.

இனி பாடல் வரிகளுக்குள் நுழைந்து பின் பாடலை பார்த்து, கேட்டு களிக்கலாம்.

பொன்னான மனமெங்கு போகின்றது
சொல்லுங்கள் மேகங்களே

ஹே ஹே ஹே ஹே ஏ ஏ ம்...ம்

பொன்னான மனமெங்கு போகின்றது
சொல்லுங்கள் மேகங்களே
என் ஆசைக் கண்ணன்
நாள் பார்த்து வந்தான்
என் ஆசைக் கண்ணன்
நாள் பார்த்து வந்தான்
இங்கே வா தென்றலே
இங்கே வா தென்றலே

பொன்னான மனமெங்கு போகின்றது
சொல்லுங்கள் மேகங்களே

தாலி கட்டி வேலியிட்டு
தங்கத்துக்கு நான் கொடுத்தேன்
பந்தம்... அது சொந்தம்
தாலி கட்டி வெளியிட்டு
தங்கத்துக்கு நான் கொடுத்தேன்
பந்தம்...அது சொந்தம்

சொந்தமொன்று வந்த பின்னே
சொர்க்கம் ஒன்று கேட்கிறது
நெஞ்சம் அது மஞ்சம்

பொன்னான மனமெங்கு போகின்றது
சொல்லுங்கள் மேகங்களே

ஹே ஹே ஹே ஹே ஹா ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

எங்கோ ஒரு நாதம்
ஏதோ ஒரு ராகம்
எனக்குள்ளே கேட்கின்றது
அது ஆசைகள் தாளாமல்
நான் பாடும் கீதம்
என் உள்ளம் சொல்கின்றது

அன்று கோபம் கொண்டு
சிவந்த கன்னம்
நாணம் கொண்டு சிவந்ததென்ன
மானே சுகம்தானே
இன்று வேண்டுமென்று
எண்ணி விட்டேன்
வெட்கம் கொண்டு
மாறியது பெண்மை
அது உண்மை

பொன்னான மனமெங்கு போகின்றது
சொல்லுங்கள் மேகங்களே

(இனி வானொலியில் ஒலிக்காமல் திரையில் மட்டுமே ஒலி(ளி)க்கும் வரிகள்).

இதழின் நிறம் செம்மை
இரு கண்ணின் நிறம் வெண்மை
இடம் கொஞ்சம் மாறட்டுமே
அது தேனள்ளி தந்தாலும்
நான் உண்ண மாட்டேனோ
இதழ் கொஞ்சம் சேரட்டுமே

அம்புலியில் கட்டிலிட்டு
செம்பவள மெத்தையிட்டு
ஆடு விளையாடு

கம்பனுக்கு தூது சொல்லி
காவியங்கள் பாட வைப்பேன் இன்று
மனம் உண்டு

பொன்னான மனமெங்கு போகின்றது
சொல்லுங்கள் மேகங்களே

என் ஆசைக் கண்ணன்
நாள் பார்த்து வந்தான்
என் ஆசைக் கண்ணன்
நாள் பார்த்து வந்தான்
இங்கே வா தென்றலே
இங்கே வா தென்றலே

ஹாஹாஹா ஹா ஹா ஹா
ஹாஹாஹா ஹா ஹா ஹா
ம்ஹும்ஹும்


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=d2FvfV3oj10

gkrishna
16th July 2014, 10:14 AM
[QUOTE=mr_karthik;1147891]
கல்யாண ஊர்வலம் (1970)

super karthik sir

இந்த பாட்டின் இடையில்
மணிமால குரலில் சித்தப்பா என்று வருவது நல்ல நினவு
http://www.padangal.com/uploads/movies/405ce9d41b03c6de317805983a8a7f0a.jpg

vasudevan31355
16th July 2014, 10:23 AM
http://i1.ytimg.com/vi/tdOJ7w0gVk8/movieposter.jpg?v=5350f483

டியர் கார்த்திக் சார்,

தங்கள் பாராட்டுதல்களுக்கு நன்றி!

'கல்யாண ஊர்வம்' படத்தின் 'கூந்தலிலே நெய் தடவி' பாடலை எளிமையாக, அழகாக ஆய்வு செய்து வழங்கியதற்கு நன்றி! சித்தப்பா, அண்ணன் மகள் டூயட் விளக்கம் ரசனைக்குரிய தங்களின் புதிய கண்டுபிடிப்பு.

gkrishna
16th July 2014, 10:24 AM
திருமாங்கல்யம் அருமை
நெல்லை பூர்ணகல ரிலீஸ்
பாலாஜியின் அல்லக்கை ஆக ஸ்ரீகாந்த் வருவார் . அவர் அம்மா இறந்தது தெரியாமல் போலீசில் இருந்து தப்பிபதற்காக அவர் அம்மாவின் பிரேத உடலை (சினிமாவில் தான் ) சுமப்பது நல்ல நினைவு சார்

பயங்கர ரிச் movie ஆனால் ரீச் ஆகவில்லை மக்களிடம்

கலைச்செல்வி அம்மா அவர்களுக்கு விழா ஒன்று நடைபெற்றதாக நினவு உண்டு
பொம்மை மாத இதழில் நிறைய போட்டோ பார்த்த நினைவு

vasudevan31355
16th July 2014, 10:29 AM
கிருஷ்ணா சார்,

வணக்கம்.

நேற்று

கண் காட்டும் ஜாடையிலே 'கன் பைட்' கண்டேன்:)
அந்த காவியத்தில் விஜி, விஜயஸ்ரீ, ஜோதியைக் கண்டேன்.:)

vasudevan31355
16th July 2014, 10:31 AM
ரிச் ரீச். சாமியோவ். என்னா விளையாட்டு! மூச்!

gkrishna
16th July 2014, 10:42 AM
கிருஷ்ணா சார்,

வணக்கம்.

நேற்று

கண் காட்டும் ஜாடையிலே 'கன் பைட்' கண்டேன்:)
அந்த காவியத்தில் விஜி, விஜயஸ்ரீ, ஜோதியைக் கண்டேன்.:)



சார்
சத்யநாராயண ராமதாஸ் கூட்டம்
விஜயலலித குடிசையில் தூங்கும் போது அவரை rape செய்ய ட்ரை பண்ணுமே சார்
விஜயலலிதாவிற்கு ஏறி ஏறி இறங்குமே சார் மூச்சு

ஜோதி டான்ஸ் சூப்பர் சார்
சத்யநாராயண விற்கு நெஞ்சு வலி வந்து மாரடைப்பு வந்து செத்து போவார்

vasudevan31355
16th July 2014, 10:43 AM
1970-இல் வெளிவந்த 'ஏன்'? படத்தில் எனக்கு பிடித்த மிக அபூர்வமான பாடல்.

எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் இளைய குரல், தங்கக் குரல், குழைந்து குழைந்து குதூகலமூட்டும் இனிய குரலில் ஒலிக்கும் 'இறைவன் என்றொரு கவிஞன்' என்ற அருமையான பாடல். டி.ஆர். பாப்பாவின் இசை அமைப்பில் காலமெல்லாம் நம் நெஞ்சை வருடும் பாடல். ரவிச்சந்திரன், லஷ்மி ஆகியோர் நடித்த இப்படம் பெரிய ஹிட்டடிக்காமல் போனாலும் அற்புதமான பாடல்களால் நம் நெஞ்சில் நீங்கா இடம் பெறுகிறது. பல பேர் இப்பாடலை கேட்டு மறந்திருக்கலாம். அல்லது பாடலை நினைவில் நிறுத்தி படம் என்னவென்று தெரியாமல் குழம்பலாம். இப்போது குழப்பம் நீங்கி விடும். பாடலைக் கேட்டவுடன். மனதில் உள்ள குழப்பமும் நீங்கி விடும். அவ்வளவு அருமையான வரிகள். கவிஞன் என்ற வார்த்தைக்கு முழு அர்த்தத்ததை கற்பிக்கும் பாடல். இறைவன் முதல் மனிதன் வரை அற்புதமாக எடுத்துக் காட்டுகளுடன் அருமையான தத்துவங்களை அழகுற சொல்லியிருக்கிறார் இப்பாடலில் கவிஞர். வரிகளை கவனியுங்கள். அதற்கு மேல் நம் செல்ல டி.ஆர்.பாப்பாவின் இசையமைப்பை கவனியுங்கள்.

'இறைவன் என்றொரு கவிஞன்'
அவன் படைத்த கவிதை மனிதன்'

கண்களில் தொடங்கி
கண்களில் முடித்தான்

பெண்ணிடம் பிறந்ததை
பெண்ணிடம் கொடுத்தான்

மண்ணிலே நடந்ததை
மண்ணுக்கே அளித்தான்

வானத்தில் இருந்தே
கவிதையை முடித்தான்

அடடா! வார்த்தை விளையாட்டுகள் விளையாடும் காலத்தை வென்ற கவிஞனே! என்னே உன் சிறப்பு.

பாடலை ஒவ்வொரு வரியாக அனுபவித்து பாருங்கள்.

புரியும். மனம் தெளியும்.


http://www.youtube.com/watch?v=R5hj0T2Zvjo&feature=player_detailpage

gkrishna
16th July 2014, 10:52 AM
நேற்று இரவு சத்யா movies கன்னிப்பெண் 1969 பார்த்தேன் சார்
சன் லைப் தொல்லைகாட்சியில்

ஜெய்,வாணிஸ்ரீ,லக்ஷ்மி,நிர்மலா,சிவகுமார்,மனோகர்,செந ்தாமரை,சோ,தேங்காய்,சுருளி,சகுந்தலா ஜி,ராமசாமி VKR நடித்து இருந்தார்கள்

ஜெய் உதவி ஆய்வாளர். லக்ஷ்மி மாமா மகள் ஆனால் அவரை திருமணம் செய்யாமல் வாணிஸ்ரீயை மணந்து கொள்கிறார். லக்ஷ்மி கன்னி பெண் ஆகவே இருக்கிறார் . மனோகர் VKR ஐ ஏமாற்றி அவருடைய வைரத்தை அபகரித்து கொள்கிறார். ஜெய் எல்லோருயம்
பிடித்து ஜெயிலில் போட்டு இறுதியில் தங்க மடல் வாங்குகிறார்
சிவா நடுவில் ஜெயில்க்கு போகிறார் கொஞ்சம் கோர்வை இல்லாமல் இருந்தது ஒருவேளை dvd problem இருக்கலாம்

ஆனால் மெல்லிசை மன்னரின் இசை கலக்கல்

1.'ஒளி பிறந்த போது இங்கே உயிர்கள் பிறந்ததம்ம' tms ஈஸ்வரி குரலில்

2.'அடி ஏண்டி அசட்டு பெண்ணே உன் உள்ளத்தில் யாரடி கண்ணே '
சுசீலா ஈஸ்வரி குரல்களில் (சூப்பர் சாங் )

3.பௌர்னமி இரவில் பனி விழும் நிலவில்
கடற்கரை மணலில் '
பாலா ஜானகி குரல்களில்

gkrishna
16th July 2014, 10:53 AM
http://www.youtube.com/watch?v=psge_FCFjVA

http://www.youtube.com/watch?v=5fmUDC3gTQM

gkrishna
16th July 2014, 10:57 AM
பாடலை ஒவ்வொரு வரியாக அனுபவித்து பாருங்கள்.

புரியும். மனம் தெளியும்.



பாலா குரல் அருமை

வருவாயா வேல்முருகா என் மாளிகை வாசலிலே

சரளா பாடல் ஏன் படத்தில் தானே சார்

gkrishna
16th July 2014, 11:00 AM
கன் fight காஞ்சனா ராட்சசியின் பாடல்
பாடல்கள் புரட்சிதாசன்

http://www.youtube.com/watch?v=9xCAMp81jb4

vasudevan31355
16th July 2014, 11:04 AM
பாலா குரல் அருமை

வருவாயா வேல்முருகா என் மாளிகை வாசலிலே

சரளா பாடல் ஏன் படத்தில் தானே சார்

ஏன்? இந்த சந்தேகம் உங்களுக்கு கிருஷ்ணா சார்.
அதிலேயேதான். சூப்பர் சரளா.


'கண்ணன் எனக்கொரு பிள்ளை
நான் கன்னிதான் இன்னும் தாயாகவில்லை'

சூலமங்கலம் பாடும் இன்னொரு பாடல். 'ஏன்' படத்தில்.


http://www.youtube.com/watch?v=XM9aIhxNCDU&feature=player_detailpage

vasudevan31355
16th July 2014, 11:16 AM
கிருஷ்ணா சார்

'கன்னிப் பெண்' என்றாலே நம் மாதிரி இளசுகளுக்கு இனிமைதானே!

சார் உங்கள் மேல் ஒரு செல்லக் கோபம்.

'கன்னிப் பெண்' படத்தில் எனக்கு மிக மிகப் பிடித்த பாடலை விட்டு விட்டீர்களே! நான் உங்களை விட மாட்டேன். எப்படி மறக்கப் போயிற்று?

பாடகர் திலகம் பட்டை கிளப்பிய பாடல். எத்தனை முறை கேட்டாலும் எனக்கு அலுக்காது.

செம உற்சாகமான பாடல்.

இறைவன் எனக்கொரு உலகத்தைப் படைச்சி
இன்பத்தை குவிச்சு வச்சான்
அதில் இருப்பதையெல்லாம் ரசிப்பதற்காக
இளமையை படைச்சு வச்சான்.

மெல்லிசை மன்னரின் அந்த விசில் சப்தத்திற்கே கொடுத்த காசு செரித்து விடும் சார்.

'ஓடத்தின் மீது ஊர்வலம் போனால் உள்ளம் குளிராதோ'

வேண்டாம் சார்! இன்றைய ஸ்பெஷலில் எழுதிக் கொள்கிறேன்.

vasudevan31355
16th July 2014, 11:20 AM
'ஏன்' படத்தில் மிக அபூர்வமான இன்னொரு பாடல்.

சூலமங்கலம் ராஜலஷ்மி பாடும்

'கண்ணன் எனக்கொரு பிள்ளை
நான் கன்னிதான் இன்னும் தாயாக வில்லை'.


http://www.youtube.com/watch?v=XM9aIhxNCDU&feature=player_detailpage

gkrishna
16th July 2014, 11:29 AM
கிருஷ்ணா சார்
'கன்னிப் பெண்' என்றாலே நம் மாதிரி இளசுகளுக்கு இனிமைதானே!


:)

கன்னிப்பெண் இந்த பாடல் எழுத மறந்து விட்டேன்

இன்னொரு பாடல் கூட உண்டு

ஜெய் வாணிஸ்ரீ இருவரும் பாடுவார்கள்

'உன் அத்தைக்கு நம் மேல் ஒரு கண்ணு '
பாடகர் திலகம் சுசீலா குரல்களில்

vasudevan31355
16th July 2014, 11:44 AM
'உன் அத்தைக்கு ஒத்தக் கண்ணு இந்தப் பக்கம்தான்'

ஜி.சகுந்தலாவை கலாய்த்து ஜெய் வாணியிடம் பாடுவார்.

gkrishna
16th July 2014, 11:45 AM
வல்லவன் வருகிறான் 1979
மாடர்ன் theaters
R சுந்தரம் இயக்கம்
தெலுகு நடிகர் ராமகிருஷ்ண,ரீன,வெண்ணிற ஆடை மூர்த்தி ,
சிலோன் மனோகர் நடித்து வெளி வந்த james band படம்

https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcTw5PtuJmirNT6e0oKB5Pf_6OqUMYoZc EdVXJXRd9nI9RDFd-m9

ஆங்கிலத்தில் வெளி வந்த live and let die படத்தின் தழுவல்.

ராமகிருஷ்ணா rogermoor ஜாடையில் (ஜாடையில் மட்டும் தான்:) ) அப்படியே இருப்பார்

இந்த பாடல் அடிகடி சிலோன் ரேடியோவில் கேட்டிருக்கிறேன்

http://www.youtube.com/watch?v=JS2YFAc-rT4

gkrishna
16th July 2014, 12:11 PM
'உன் அத்தைக்கு ஒத்தக் கண்ணு இந்தப் பக்கம்தான்'

ஜி.சகுந்தலாவை கலாய்த்து ஜெய் வாணியிடம் பாடுவார்.

வாசு சார்

அலேக் அலேக்அலேக் :)

பாடல் வரிகளை அப்படியே கொடுத்து விட்டீர்கள்

vasudevan31355
16th July 2014, 12:27 PM
கிருஷ்ணா சார்


நந்தினியார் தேவி அமர்க்களம். இந்தப் பெண்மணி தெலுகுப் படவுலகை சேர்ந்தவர். கோஷ்டி நடனப் பெண்மணி. விட்டலாச்சார்யாவின் எல்லாப் படங்களிலும் வருவார் இங்கே சி.ஐ.டி.சகுந்தலா போல. அப்புறம் முன்னேறி தனியாக பாடலுக்கு ஆட ஆரம்பித்து விட்டார்.

ரொம்ப ரொம்ப ரேர் சாங் சார். கிருஷ்ணா சாரா கொக்கா! நான் நிறையக் கேட்டிருக்கிறேன். இப்போதும் இனிமையாகவே இருக்கிறது காப்பி அடித்தாலும்.

'வல்லவன் வருகிறான்' 1979 தீபாவளி ரிலீஸா சார்?

ராஜேஷ் மியூசிக் என்று தெரியும்.

ஒரு டான்ஸ் மியூசிக் போடுகிறேன் இப்படத்தில். நன்றாகவே ரசிக்கும்படி இருக்கிறது. சங்கர் கணேஷ் பாணியில்.


http://www.youtube.com/watch?v=biAnVbKiDDg&feature=player_detailpage

gkrishna
16th July 2014, 12:58 PM
'வல்லவன் வருகிறான்' 1979 தீபாவளி ரிலீஸா சார்?



yes sir

gkrishna
16th July 2014, 01:04 PM
[QUOTE=vasudevan31355;1148045]1970-இல் வெளிவந்த 'ஏன்'? படத்தில் எனக்கு பிடித்த மிக அபூர்வமான பாடல்.

ஏன் படத்தில் உள்ள பாடலின் முழு வரிகள்
நான் மிகவும் ரசித்தேன்

இறைவன் என்றொரு கவிஞன் ,
அவன் படைத்த கவிதை மனிதன் ,
அதில் அறிஞனும் மூடனும் உண்டு ,
ஆனால் தொடக்கமும் முடிவும் ஒன்று

கடவுளின் படைப்பிலே கவிதையும் உண்டு ,
காந்தியை போலவே காவியம் உண்டு ,
முடிவு விளங்காத தொடர்கதை உண்டு ,
முடிக்க வேண்டுமென்று முடிப்பதும் உண்டு

கண்களில் தொடங்கி கண்களில் முடித்தான் ,
பெண்ணிடம் பிறந்ததை பெண்ணிடம் கொடுத்தான் ,
மண்ணிலே நடந்ததை மண்ணுக்கே அளித்தான்
வானத்தில் இருந்தே கவிதை முடித்தான் ,

கருவில் இருந்தே கவிஞனின் பிறப்பு ,
காலத்தின் பரிசே கவிதையில் சிறப்பு ,
கற்பனை என்பது கடவுளின் படைப்பு ,
கடவுளை வென்றது கவிஞனின் நினைப்பு

mr_karthik
16th July 2014, 01:05 PM
டியர் வாசு சார்,

'மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா' அவர்களின் 100- வது படமான திருமாங்கல்யம் படத்தைப்பற்றியும் அதில் இடம்பெற்ற பல்வேறு பாடல்களை தொட்டுக்காட்டியதுடன், 'பொன்னான மனமெங்கு போகின்றது' பாடலை விரிவாக அலசியிருக்கிறீர்கள்.

திருமாங்கல்யம் நீங்கள் சொன்னதுபோல மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம். இதே நேரத்தில் வெளியான விஜயாவின் 100-வது படமான 'நத்தையில் முத்து'வும் கூட.

மக்கள் திலகத்துடன் அதிகப்படங்களில் நடித்த 'மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா' அவர்களுக்கும் சரி, நடிகர்திலகத்துடன் அதிகப்படங்களில் நடித்த கே.ஆர்.விஜயாவுக்கும் சரி, அவர்களது 100-வது படத்தில் திலகங்கள் இருவருமே இல்லையென்பது மட்டுமல்ல, இரண்டிலும் முத்துராமனே ஹீரோ. 'மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா' அவர்களின் முதல் படம் மற்றும் 100-வது படம் இரண்டிலுமே ஸ்ரீகாந்த் இடம்பெற்றிருந்தார் என்பது இன்னொரு விசேஷம்.

இப்பாடலில் இடம்பெற்ற பிரம்மாண்ட செட் இந்தி 'பிரேம் நகர்' (வசந்தமாளிகை ரீமேக்) படத்துக்காக போடப்பட்டது. நமது என் மகன் படத்தில் ஸ்னேகலதா ஆடும் 'சொல்லாதே சொல்லாதே' பாடல் படமாக்கப்பட்ட அதே செட். ஆனால் இப்படத்தில் 'மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா' அவர்கள் முத்துராமனுக்கு அக்கா போல இருப்பார். அவருக்கு 'யோகம் நல்ல யோகம்' என்ற தனிப்பாடலும் உண்டு (ஒரு திருமண ரிசப்ஷனில் பாடுவார்).

ஆனால் படத்தில் ஸ்கோர் தட்டிக்கொண்டு போனது லட்சுமிதான். ரொம்ப அசால்டான நடிப்பு. அப்பா மேஜர் அட்வைஸ் செய்துகொண்டிருக்கும்போது, அதை கவனியாது சிவகுமாரைப்பார்த்து குறும்பு செய்துகொண்டிருக்கும் இடம் அபாரம். அதுபோலவே இப்படத்தில் எனக்குப்பிடித்த 'உலகம் நமது வீடென்று சொல்லுங்க....ள்ள்ள்ள்ள்ள்ள்' பாடலும். இதெல்லாம் ராட்சசியால் மட்டுமே முடியும்.

ரிலீசானபோது சென்னை ஆனந்த் தியேட்டரில் பார்த்தது (இப்போது உமாபதி திருமண மண்டபம்). அதன்பின்னர் இரண்டு மூன்று முறை வீடியோவில் பார்த்ததுண்டு.

சிரத்தையெடுத்து பதித்ததற்கு பாராட்டுக்கள்...

gkrishna
16th July 2014, 01:09 PM
karthik sir

உங்கள் எழுத்துகளை படிக்கும் போது நீங்கள் அப்படியே அந்த கால கட்டத்திற்கு எங்களை அழைத்து சென்று விடுகிறீர்கள்

vasudevan31355
16th July 2014, 01:19 PM
டியர் கார்த்திக் சார்,

நான் எழுதியது ஒருபுறம் இருக்கட்டும். நீங்கள் பதிவுகளுக்கான மேலதிக தகவல்களை எவ்வளவு அழகாகப் பதிகிறீர்கள்! அதில் புறந்தள்ள முடியாத விஷயங்களே இருக்காது என்பது இன்னொரு தனிச் சிறப்பு. இது உங்களுக்கே உங்களுக்கே மட்டும் உரித்தான தனி ஸ்பெஷாலிட்டி. நன்றி சார்.

vasudevan31355
16th July 2014, 01:41 PM
டியர் கார்த்திக் சர்/கிருஷ்ணா சார்,

ராட்சஸி பாடிய மிக மிக அரிதான ஒரு பாடல். இலட்சிய நடிகரின் பிரச்சாரப் படமான 'இரட்டை மனிதன்' திரைப்படத்தில் இடம் பெற்ற ஒரு பாடல்.

http://i1.ytimg.com/vi/M3MdqunXcbE/maxresdefault.jpg

ஜெய்கணேஷை மயக்கி ஆடிப் பாடும் இந்த நடன நடிகை யாரென்று தெரியவில்லை. அமெர்சூர்த்தனமாக ஆடுகிறார். சரியாக ஆடவரவில்லை. ஆனால் ஒளிப்பதிவு நன்றாக இருக்கிறது. ஜெய்கணேஷ் கோட், கூலிங் கிளாசெல்லாம் போட்டு நிற்கிறார்.

எது எப்படிப் போனால் என்ன? ராட்சஸியின் தனி முத்திரை இப்பாடலிலும் பளிச்சிடுகிறது.

பாட்டின் முதல் வரி ராட்சஸிக்கு எவ்வளவு பொருத்தம்!

'நான் பாடப் பாட மயக்கம் வரும்'

இப்படிப் பாடினால் வராது பின்னே!


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=fMPRj2ypcx8

mr_karthik
16th July 2014, 01:48 PM
டியர் ராகவேந்தர் சார்,
கோபால் சார்,
ராஜேஷ் சார்,
கிருஷ்ணா சார்.....

ஒவ்வொருவரும் சும்மா ஜமாய்த்து தள்ளிவிட்டீர்கள். ஒன்றரை நாள் இணைப்பு கிடைக்கவில்லை. கிடைத்தபின் வந்து பார்த்தால் பதிவுகள் மழையாகப் பொழிந்து, பக்கங்கள் பல ஓடிவிட்டன.

ஒவ்வொரு தனிப்பதிவையும் பாராட்டுவதென்றால் அதற்கே சில நாட்கள் எடுக்கும் போல் தெரிகிறது. 'ஹோ'வென்று கொட்டும் மழையில் எந்த துளியைப் பாராட்டுவது?. ஆகவே இதையே உங்கள் அனைவரின் அனைத்துப் பதிவுகளுக்கும் ஒட்டுமொத்த பாராட்டாக கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அலசுங்கள்..., அசத்துங்கள்..., அதகளம் புரியுங்கள்....,
வாழ்த்துக்கள்...

mr_karthik
16th July 2014, 01:56 PM
டியர் வாசு சார்,

நீங்கள் தற்போது பதித்துள்ள 'இரட்டை மனிதன்' பாடல் காட்சிக்கான போஸைப் பார்த்துவிட்டு 'ஒருவர்' திரிக்கு திடீர் விஜயம் செய்ய வாய்ப்பிருக்கிறது. ..

vasudevan31355
16th July 2014, 02:13 PM
டியர் கார்த்திக் சார்,

யார் சார் அந்த குளத்து மீன்?:)

mr_karthik
16th July 2014, 02:30 PM
டியர் கார்த்திக் சார்,

யார் சார் அந்த குளத்து மீன்?:)

ஊரறிந்த ஐயருக்கு பூணூல் எதுக்கு..?.

Richardsof
16th July 2014, 03:12 PM
இனிய நண்பர் வாசு சார்

1970- பொங்கல் வெளியீடான ''ஏன் '' படத்தின் பாடல் பற்றிய உங்கள் அலசல்கள் பிரமாதம் .

ஆனந்த விகடன் - எழுதிய விமர்சனம் - உங்கள் பார்வைக்கு .

பாடல்களுக்காக இந்த படத்தை பார்த்தேன் .

http://i57.tinypic.com/15ygky.jpg

mr_karthik
16th July 2014, 03:39 PM
டியர் கிருஷ்ணா சார்,

தங்களின் 'நூல்வேலி' பட பாடல்களின் ஆய்வு நன்றாக இருந்தன. (இப்போது எழுதுகிறேன் என்றால் எவ்வளவு பின்தங்கி இருக்கிறேன் என்று தெரிந்து கொள்ளலாம்). இது 'ஆ நிமிஷம்' என்ற மலையாளப்படத்தின் ரீமேக். மலையாளம் கருப்புவெள்ளை. தமிழில் வண்ணம். சரிதா நடித்திருந்த ரோல் மலையாளத்தில் ஸ்ரீதேவி செய்திருந்தார்.

மவுண்ட் ரோடு அண்ணாசிலைக்கு எதிரில் இருந்த 'நியூ எல்பின்ஸ்டன்' என்ற தியேட்டரில் 'ஆ நிமிஷம்' ஓடியது. தியேட்டர் வாசலில் கவர்ச்சியான (வெறும் உள்ளாடையுடன்) ஸ்ரீதேவி கட்-அவுட் வைத்து அதன்மீது நிஜமான ஸ்கர்ட் அணிவித்திருந்தனர். காற்றில் ஸ்கர்ட் பறக்கும்போதெல்லாம் வாகன ஓட்டிகளின் கவனத்தை சிதைத்ததால் சில நாட்கள் கழிந்து காவல்துறையினர் அந்த கட்-அவுட்டை நீக்கும்படி உத்தரவிட்டனர்.

ஆ நிமிஷம் படத்தின் முடிவில் ஸ்ரீதேவி தற்கொலை செய்வதாக இருக்காது. அந்த தணிக்கை அதிகாரியான பெண்ணின் சிறுவயது மகள் கொலை செய்து விடுவதாக அமைந்திருக்கும். தமிழில் இயக்குனர் சிகரம் முடிவை மாற்றி, சரிதா தற்கொலை செய்துகொள்வதாக அமைத்து, முடிவில் "அவள் மரணத்தை மணந்தாள், மரணம் அவளை அவளை மன்னித்தது" என்று கார்டு போட்டார்.

நூல்வேலி சாந்தியில்தான் ரிலீசானது (ரிஷிமூலத்துக்கு முன்னதாக). சுமாராக ஓடியது. 'மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே' பாடலில் பாடல் வரிகள், பாடிய பாலமுரளி, நடித்தவர்கள் ஆகியோரைவிட அதிகம் கவர்ந்தது பி.எஸ்.லோகநாதனின் கேமரா விளையாட்டுத்தான். மூலைக்கொருவராக நிற்கும் அனைத்து பாத்திரங்களையும் மாறி மாறி கவர் பண்ணிய அழகு

கதை கொஞ்சம் விவகாரமானது. மகளைப்போல ஆதரித்த பெண்ணை சரத்பாபு 'ஒரு மாதிரியாக' அணுகுவது, அதற்கு அந்தப்பெண்ணும் ஒத்துப்போவது என்பதெல்லாம் ஜீரணிக்க முடியாததாக இருந்ததாக பாலச்சந்தர் அதிகம் விமர்சிக்கப்பட்டார்...

gkrishna
16th July 2014, 03:42 PM
ராட்சஸி பாடிய மிக மிக அரிதான ஒரு பாடல். இலட்சிய நடிகரின் பிரச்சாரப் படமான 'இரட்டை மனிதன்' திரைப்படத்தில் இடம் பெற்ற ஒரு பாடல்.

'நான் பாடப் பாட மயக்கம் வரும்'

இப்படிப் பாடினால் வராது பின்னே!

vasu sir
இரட்டை மனிதன் தில்லு முல்லு கதை என்று படித்த நினைவு
லதா :) வும் உண்டு என்று நினைவு
ஒரு tms பாட்டு நினைவில் உண்டு
இன்றைக்கு நான் பிறந்தேன் என்ற நன்மைக்கோ நான் பிறந்தேன்

SSR t ஷர்ட் எல்லாம் போட்டுண்டு ஒரு மாதிரி arm ஐ மடக்கிண்டு 15 வயசு குறைச்சு காட்ட பாப்பார் . ஆனால் முடியலீஈஈஎ

http://www.youtube.com/watch?v=KgbyRDoZ1BU

gkrishna
16th July 2014, 03:56 PM
டியர் கிருஷ்ணா சார்,

தங்களின் 'நூல்வேலி' பட பாடல்களின் ஆய்வு நன்றாக இருந்தன.
இது 'ஆ நிமிஷம்' என்ற மலையாளப்படத்தின் ரீமேக். மலையாளம் கருப்புவெள்ளை. தமிழில் வண்ணம். சரிதா நடித்திருந்த ரோல் மலையாளத்தில் ஸ்ரீதேவி செய்திருந்தார்.

கதை கொஞ்சம் விவகாரமானது. மகளைப்போல ஆதரித்த பெண்ணை சரத்பாபு 'ஒரு மாதிரியாக' அணுகுவது, அதற்கு அந்தப்பெண்ணும் ஒத்துப்போவது என்பதெல்லாம் ஜீரணிக்க முடியாததாக இருந்ததாக பாலச்சந்தர் அதிகம் விமர்சிக்கப்பட்டார்...

டியர் கார்த்திக் சார்

நீங்கள் லேட் என்றாலும் லேட்டஸ்ட் சார்
ஸ்ரீதேவி பற்றிய உங்கள் குறிப்பு எனக்கும் நினைவில் உள்ளது .
பகலில் ஒரு இரவு படத்திலும் ஸ்ரீதேவி குட்டை கௌன் அணிந்து கொண்டு 'இளமை எனும் பூங்காற்று பாடியது ஊர் பாட்டு " கலக்கி இருப்பார்
என் நண்பர் ஒருவர் காலேஜ் படிக்கும் போது அவர் தந்தையிடம் இந்த படம் பார்பதற்கு permission கேட்டு அவர் தந்தை அவரிடம் 'இந்த படத்தில் அப்படி என்ன இருக்கிறது' என்று கேட்டதற்கு அவர் 'ஸ்ரீதேவி கௌன் அணிந்து கொண்டு வருகிறார் காலேஜ் friends எல்லாம் பார்த்துட்டங்க
நானும் பார்க்கணும் ' என்று சொன்னதற்கு 'இப்ப தானே தெரியுது நீ ஏன் இவ்வளுவு arrear விழுது னு' என்று கலாய்தார்.

நினைவலைகள்
http://www.malayalachalachithram.com/posters/774.jpg

gkrishna
16th July 2014, 04:17 PM
எஸ்வி சார்
நீங்கள் ஒரு ஆவண (ஆணவ அல்ல) திலகம் என்று சொன்னால் அது
மிகையாகாது.
உங்கள் ராஜஸ்ரீ படம்,வெளி வராத பாடல்கள் ,ஏன் திரை விமர்சனம்
எல்லாம் அருமை

Gopal.s
16th July 2014, 04:39 PM
பார்த்தசாரதி அருமையான ,வித்யாசமான இசையமைப்பாளர்.


இவருடைய அவன் பித்தனா "இறைவன் இருக்கின்றானா ", பால் மனம் படத்தின் "கன்னி ஒருத்தியிடம்" , நிலவுப்பெண் முகம் பார்க்க ,கல்யாண ஊர்வலம் படத்தின் கூந்தலிலே.

எல்லாமே வித்யாசம்.

vasudevan31355
16th July 2014, 06:10 PM
'பாகப் பிரிவினை' படம் 1959 இல் வெளியானது. பின் இந்தியில் 'கந்தன்' என்ற பெயரில் இந்தியில் 'நிறகுடம்' (1977)தயாரிக்கப்பட்டு மலையாளத்திலும் தயாரிக்கப்பட்டது.

நடிகர் திலகம் ஏற்றிருந்த பாத்திரத்தை மலையாளத்தில் கமல் ஏற்றிருந்தார். சரோஜாதேவி பாத்திரத்திற்கு நம்ம ஸ்ரீதேவி. பீம்சிங்கே மூன்று மொழிகளிலும் இயக்கம்.

'தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும்' பாடலை இப்போது மலையாளத்தில் பாருங்கள்.

'ஸ்வர்ணத்தினெந்தினு சாருகந்தம்
ராஜ ஹம்சங்கள்கெந்தினு பஞ்சவர்ணம்'

அதே சுசீலாவின் குரலில்.

'பாகப் பிரிவினை' படம் 1959 இல் வெளியானது. பின் இந்தியில் 'கந்தன்' என்ற பெயரில் இந்தியில் 'நிறகுடம்' (1977)தயாரிக்கப்பட்டு மலையாளத்திலும் தயாரிக்கப்பட்டது. நடிகர் திலகம் ஏற்றிருந்த பாத்திரத்தை மலையாளத்தில் கமல் ஏற்றிருந்தார். சரோஜாதேவி பாத்திரத்திற்கு நம்ம ஸ்ரீதேவி. பீம்சிங்கே மூன்று மொழிகளிலும் இயக்கம். 'தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும்' பாடலை இப்போது மலையாளத்தில் பாருங்கள். '

ஸ்வர்ணத்தினெந்தினு சாருகந்தம்
ராஜ ஹம்சங்கள்கெந்தினு பஞ்சவர்ணம்'

அதே சுசீலாவின் குரலில்


http://www.youtube.com/watch?v=zfxIrzWgnuQ&feature=player_detailpage

vasudevan31355
16th July 2014, 06:47 PM
http://3752ph102dgl405f3e3yvdrpili.wpengine.netdna-cdn.com/wp-content/uploads/2012/12/Gustav-Metzger.-Just-Relax..jpg

இயக்குனர் வரிசை (சி.வி.ராஜேந்திரன்)

தொடர்கிறது.....

'எல்லோருக்கும் காலம் வரும்... சம்பாதிக்க நேரம் வரும்' பாடல். (விரிவான அலசல்)

அன்பு கார்த்திக் சார் சந்தோஷமாக செய்ய எனக்கு ஒரு வேலையை அளித்திருந்தார்.

'சுமதி என் சுந்தரி' படத்தின் வெகு சிறந்த பொழுது போக்குப் பாடலான 'எல்லோருக்கும் காலம் வரும்... சம்பாதிக்க நேரம் வரும்' பாடலை ஜஸ்ட் ரிலாக்ஸில் எழுதச் சொல்லி. அவருக்கு நன்றி!

http://thumbnails103.imagebam.com/26605/dcd94e266041328.jpghttp://thumbnails105.imagebam.com/26605/1bd4d9266041329.jpg

என்றும் இளமையான, இளசான எவர்கிரீன் 'சுமதி என் சுந்தரி'. அத்தனை வயதினரையும் வசீகரித்த சுந்தரனும், சுந்தரியும்.

இளமைத் தேவன், சுந்தர வடிவனாக திராவிட மன்மதன் நடிகர் திலகம். இப்போது பூத்த ரோஜாவாக மேடம். நகைச்சுவையில் 'மிரட்டும்' டணால், புலி சுட்ட கதை சொல்லி ரீல் விடும் நாகேஷ், ('புலி 'லொள்ளு லொள்ளு'ன்னு ஒரே குலை') சுந்தரிக்குத் துணையாக சச்சு, பைனான்சியரிடம் பணம் பிடுங்கும் தயாரிப்பாளர் தேங்காய், சதா இயக்க யோசனையில் ஆழ்ந்து, ஆங்கிள் பார்த்துக் கொண்டே இருக்கும் டைரக்டர் கோபால கிருஷ்ணன்.

பொட்டு வைத்து கட்டி வைத்த குழலை கில்லியடித்துப் பாடிய 'பாடும் நிலா', 'லால்லா ஹாஹா ஹோ ஹோ' கோரஸ் ஹம்மிங் அளித்து அன்றைய நாட்டின் ஜனத்தொகையை பெருக்க உதவி செய்து, முத்திரை பதித்த பாடல்களைத் தந்து இப்போதும் முணுமுணுக்க வைக்கும் மெல்லிசை மன்னர், 'ஒருதரம் ஒரே தரம்' என்று தரம் மிக்க காதலை வரிகளை இன்னும் ஒரே ஒரு தரம்' என்று கேட்க வைத்த கவிஞன், ஊட்டி தேயிலை எஸ்டேட்டின் குளுமையை அப்படியே திரையரங்கில் பிரதிபலிக்கும் ஜெமினி வண்ணம், தன்னிகரில்லா ஒளிப்பதிவைத் தந்த தம்பு, வெட்கத்துடன் மன்மதனை ஆடச் செய்த சலீம், சோபியா லாரன் குளோசப் நிழற்படத்தில் தன் பெயரைப் போட்டு குதூகலித்துக் கொண்டு நம்மையும் குதூகலிக்க வைத்த சி.வி.ஆர்.

இளமை முத்துக்கள் அனைத்தும் ஒரு பேழைக்குள்.

அதுதான் சு.எ.சு.

சுமதி ஒரு புகழ் பெற்ற சினிமா நடிகை. ஆனால் சுதந்திரத்தைப் பறி கொடுத்தவள். நடிகை என்று அவளை உயர்த்தி தன்னுடன் நெருங்க விடாமல் பார்த்துக் கொள்கிறது சமூகம். கடைகண்ணிக்குப் போய் ஒரு கறிகாய் கூட வாங்க முடியாது அவளால். அவள் அழகைப் பார்க்க கூட்டம் சூழ்ந்து கொள்ளும். அவளுக்கு இயல்பாக மற்றவர்களைப் போல வாழ வேண்டும் என்ற தணியாத ஆசை. சுதந்திரமாக சுற்றித் திரிய எண்ணி அது முடியாமல் போன சூழ்நிலை சொகுசுக் கைதி சுமதி.

அவளை நாயகியாக வைத்து படம் எடுக்கும் நிறுவனம் பட யூனிட்டுடன் அவுட்டோர் ஷூட்டிங்கிற்கு டிரெயினில் புறப்படுகிறது. சுமதி பெரிய நடிகையாதலால் அவளுக்கு ரயிலில் முதல் வகுப்பு. அவளுடன் அவள் பணிப்பெண் மட்டுமே பயணிக்கிறாள்.

மூன்றாம் வகுப்புப் பெட்டியில் பட யூனிட். நடன இயக்குனர், துணை நடிகர் நடிகைகள், டெக்னீஷியன்ஸ் என்று ஒன்றாகக் சேர்ந்து பயணிக்கிறார்கள்.

இரவு வேளை. போரடித்து முதலாம் வகுப்புப் பெட்டியில் பொழுது போகாமல் அமர்ந்து இருக்கிறாள் சுமதி. பணிபெண்ணோ தூக்கம் போடத் தொடக்கி விட்டாள். பக்கத்து கம்பார்ட்மெண்ட்டில் பட யூனிட் ஆட்களின் உற்சாக கும்மாள சத்தம். சுமதிக்கு அவர்களுடன் சேர்ந்து பொழுது போக்க ஆசை. பணிப்பெண்ணை எழுப்பி அங்கு போகலாம் என்று கூறுகிறாள்,. பணிப்பெண்ணோ தூக்கக் கலக்கத்தில் 'நீங்கள் அங்கு போனால் கூட்டம் சேர்ந்து விடும் அம்மா' என்று 144 போட்டு தூக்கத்தை தொடர்கிறாள்.

http://img.youtube.com/vi/t4XvmeXwSRw/mqdefault.jpg

அங்கோ கூத்தும், கும்மாளமும், கொண்டாட்டமுமாய் இருக்கிறது. இரவு நேரம் பொழுது போக்கின் உச்சக் கொண்டாட்டத்தில் அமர்க்களமாகக் ஆரம்பமாகின்றது.

நீ நான் பெரியவன், சின்னவன் என்று வித்தியாசம் பாராமல் அனைவரும் ஆட்டம் போடுகின்றனர் இனிமையான ஒரு பாடலை ஆளாளுக்குப் பகிர்ந்தபடியே. கவலை என்பதே கிஞ்சித்தும் இல்லாமல் ஆடிப் பாடுகின்றனர்.

பொம்மை தலையில் இருக்கும் விக்கை (wig ) சீப்பால் வாரி அடுத்த நாள் ஷூட்டிங்கிற்கு ரெடி பண்ணி வைக்கும் உதவி மேக்-அப் மேன்.

காமெராவை அழகாக பிரஷ் போட்டு துடைத்து சுத்தம் பண்ணி வைக்கும் உதவியாளர்,

பக்கத்தில் நிற்கும் ஆளுடைய நாக்கில் எச்சில் தொட்டு பைனான்சியரின் பணத்தை 'விறுவிறு' என்று எண்ணும் ஜம்பு,

சீட்டுக்கட்டை கையில் பிடித்தபடி 'வெண்ணிற ஆடை' மூர்த்தி ஆட, உடன் 'ஜெக அழகி' ஜெயகுமாரி வயலட் கலரில் நீள் அங்கி போன்ற சட்டையும், ஸ்கை பளுவில் ஜீன்ஸ் டைப் பேண்ட்டும் போட்டு 'சிக்'கென்று 'கிக்' தர ஆரம்பிக்க, இந்தப் பாடல் படு ஸ்பீடாக ரயிலின் வேகத்தில் ரயிலிலேயே அமோகமாக களை கட்டத் துவங்கிவிடும்.

(ஜெயகுமாரிக்கு அந்த டிரஸ் கொள்ளை அழகு! ஸ்லிம் என்றால் அப்படி ஒரு ஸ்லிம். இவரிடம் எனக்குப் பிடித்ததே அலட்டல் இல்லாத அழகு, நடனம், நடிப்பு. தையா தக்கா என்று குதிக்க மாட்டார். அழகாக அளவுடன் ஆடுவார். உடம்பை எப்போதுமே கச்சிதமாக வைத்திருப்பார்)

'எல்லோருக்கும் காலம் வரும்
சம்பாதிக்க நேரம் வரும்
அதுவரை என்ன வழியோ'

உடன் ஆடும் துணை நடிகைகளின் அழகு அற்புதம். ஒருவர் நந்தினி. ('அழகு முகம் பழகு சுகம்' 'சொர்க்கம்' பட பாடல் புகழ்) அழகான ஒயிலான ஆட்டம். ஜம்புவின் அமர்க்களம், ,சண்டை போட்டுக் கொள்ளும் மூர்த்தி, நடன மாஸ்டர் இருவர் நடுவே முகம் காட்டி 'சண்டை கூடாது' என்று 'உஷ்' சப்தம் கொடுக்கும் ஜெய்குமாரியின் அழகு சமாதானம்,

நாட்டிய ஆசிரியரின் மெய்மறந்த உற்சாக நிலை ஆட்டத்தில் ரயில் பெட்டியின் கதவருகே வெளியே விழுந்து விடும் அளவிற்கு வந்து ஆடி, பின் சுதாரித்து 'காப்பத்துனே கடவுளே' என்று கும்பிட்டு ஓடிப் போகும் கூத்து,

'ஹேப்பி' ஸ்டைலில் கைதட்டி குதூகலிக்கும் ஜம்பு, மூர்த்தி, வெஸ் டெர்னோடு பரதம் சற்று கலந்து மாஸ்டருக்கு குரு வணக்கம் போடும் ஜெய்குமாரி,

சீட்டுக் கட்டில் ஷூட்டிங் கவலைகளை மறந்து நேரம் கழிக்கும் தேங்காய், மாலி, கோபாலகிருஷ்ணன், (சீட்டைப் போட்டுவிட்டு அடுத்த நொடி நாளைய ஷூட்டிங் பற்றிய யோசனையில் மூழ்கி விடுவார். அழகான கன்டின்யூடி)

ஜாலி பாடலிலேயே ஜெயகுமாரி குழுவினரின் அறிவுரை.

'நேரம் என்று ஒன்று வர வேண்டும் .அதிர்ஷ்டம் தானே வரும். திருப்பதி உண்டியல் போல் பணம் சேரும். இல்லாத உறவுகள் வந்து சேரும். புகழ்ச்சி சொல்லி பணத்துக்காக வட்டமடித்துக் கொண்டே இருக்கும்'

https://i1.ytimg.com/vi/uoPAwVuzm_k/mqdefault.jpg

அட்டைக் கத்தியை பேன்ட்டில் செருகி, சிறகுக் கிரீடம் அணிந்து குமாரி காபி குடிக்கும் வெண்ணிற ஆடை மூர்த்தி.

முதல் வகுப்புப் பெட்டியில் ஆங்கில இதழின் நடுப்பக்க நீச்சல் உடை அழகியை சுரத்தே இல்லாமல் பார்த்து சலித்து தூக்கிப் போடும் பரிதாப மேடம்,

தலையில் பெண் போல் முக்காடிட்டு அனைவருக்கும் காபி சப்ளை பண்ணும் நடன ஆசாமி. காபி ஜெயகுமாரி எடுக்க, கவனிக்காமல் சாசரை எடுத்து ஏமாறும் மூர்த்தி,

'அப்பாவிகள் வாழ்வு தப்பானது
அஞ்சாதவன் வாழ்வு தப்பாதது'

என்று அறிவுறுத்திப் பாடும் கோஷ்டி.

சிக்னல் கிடைக்காமல் ரயில் நிற்க, சந்தோஷக் கும்பலுடன் கலந்து குதூகலிக்க முடிவெடுக்கும் மேடம் கீழே இறங்கி செல்ல, எதிர்பாராவிதமாக ரயில் கிளம்பிவிட, இங்கேயும் ஏற முடியாமல் அங்கேயும் ஏற முடியாமல் மேடம் தவித்து நின்றுவிட, ரயில் போயே போய்விட....

இந்தப் பாட்டில் ஜெயா மேடத்தைக் காட்டும் போதும், ரயிலை வெளியே காட்டும் போதும் மக்கள் அங்கே அடிக்கும் கூத்தும், பாட்டும் ஒலி குறைந்து கேட்பது அட்டகாசம். ('நான் சத்தம் போட்டுதான் பாடுவேன்' போல)

செமை உற்சாகத் துள்ளல் பாட்டு. கவலைகளை இப்பாட்டில் நடிப்பவர்கள் மட்டும் மறக்கவில்லை அவர்களுடன் நாமும் ரயிலில் பயணித்து அவர்களுடனேயே ஆட்டம் போடுகிறோம். பாட்டும் பாடுகிறோம். மகிழ்வு கொள்கிறோம்.

அப்படி எடுக்கப்பட்ட அருமையான பாடல். ஏ.எல்.ராகவன், ஈஸ்வரி குரல்கள் கோஷ்டியினருடன் சேர்ந்து வாழ்நாள் மறக்க முடியாத உற்சாகப் பாடலாகி விட்டது.

எல்லோருக்கும் காலம் வரும்
சம்பாதிக்க நேரம் வரும்
வருவது எந்த வழியோ
அள்ளித்தர தெய்வம் உண்டு
பூட்டி வைக்கப் பெட்டி உண்டு
அதுவரை என்ன கதையோ

திறமையிலே எதுவும் இல்லை
நேரம் அதுதானே வரவேண்டும்

திருப்பதியின் உண்டியல் போல்
செல்வம் அது வீட்டில் உன்னை தேடும்

உண்டான பின் கோடி சொந்தம் வரும்

இல்லாததைத் சொல்லி வட்டமிடும்

தாளங்கள் மேளங்கள்
ஜால்ராக்கள் கூஜாக்கள்
பின்பாட்டுத்தான் பாடி பின்னே வரும்

மூச்சொன்று விட்டாலும் பேச்சென்று கைதட்டி
கொண்டாடும் கூட்டங்கள் தானே வரும்.

வாழ்வதற்கு இரண்டு வழி
நேர்மை அது தேவை சிலகாலம்

நேர்மையிலே பலனில்லையே
தேவை நிறைவேறும் வழி மாறும்

அப்பாவிகள் வாழ்வு தப்பானது

அஞ்சாதவன் வாழ்வு தப்பாதது

எப்போது வந்தாலும் தப்பாமல் கைப்பற்று
சந்தர்ப்பம் தான் என்றும் பொன்னானது

அப்போது தூங்காதே பின்னாலே ஏங்காதே
அதிர்ஷ்டத்தில் பங்குண்டு என்றாவது

எல்லோருக்கும் காலம் வரும்
சம்பாதிக்க நேரம் வரும்
வருவது எந்த வழியோ
அள்ளித்தர தெய்வம் உண்டு
பூட்டி வைக்கப் பெட்டி உண்டு
அதுவரை என்ன கதையோ

மெல்லிசை மன்னரைப் பற்றி எழுத வேண்டும் என்றால் பக்கம் பத்தாது.


http://www.youtube.com/watch?v=uoPAwVuzm_k&feature=player_detailpage

gkrishna
16th July 2014, 07:30 PM
[QUOTE=vasudevan31355;1148159]
இயக்குனர் வரிசை (சி.வி.ராஜேந்திரன்)

'எல்லோருக்கும் காலம் வரும்... சம்பாதிக்க நேரம் வரும்' பாடல். (விரிவான அலசல்)

வாசு சார்
சத்தம் போடும் மோட்டார் ஐ தான் பிரிச்சு மேவீங்கன்னு கேள்வி பட்டேன்
கட கட நம்ம சகுந்தலா அம்மா மாதிரி

சத்தமே போடாத ஒரு item டான்சர் ஜெயகுமாரி மேட்டர் பற்றி

jayakumari முகத்தில் ஒரு வெகுளி களை

http://i1.ytimg.com/vi/bH9xI4I2VS0/hqdefault.jpg

மெல்லிசை மன்னரின் rerecording
மேடம் கேபின் காட்டும் போது பாட்டு சத்தம் குறைந்து ஒலிப்பது
நம்ம 'போதுமோ இந்த இடம்' பாட்டு மாதிரி

எல்லோர்ருக்கும் காலம் வரும்
இப்ப உங்க காலம்
ஜமாயுங்க

gkrishna
16th July 2014, 07:39 PM
பாகப் பிரிவினை' படம் 1959 இல் வெளியானது. பின் இந்தியில் 'கந்தன்' என்ற பெயரில் இந்தியில் 'நிறகுடம்' (1977)தயாரிக்கப்பட்டு மலையாளத்திலும் தயாரிக்கப்பட்டது. நடிகர் திலகம் ஏற்றிருந்த பாத்திரத்தை மலையாளத்தில் கமல் ஏற்றிருந்தார். சரோஜாதேவி பாத்திரத்திற்கு நம்ம ஸ்ரீதேவி. பீம்சிங்கே மூன்று மொழிகளிலும் இயக்கம். 'தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும்' பாடலை இப்போது மலையாளத்தில் பாருங்கள். '
ஸ்வர்ணத்தினெந்தினு சாருகந்தம்
ராஜ ஹம்சங்கள்கெந்தினு பஞ்சவர்ணம்'


http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/d/d6/Nirakudumfilm.jpg/220px-Nirakudumfilm.jpg

இந்த படத்திற்கு இசை ஜெய விஜயா sir

gkrishna
16th July 2014, 08:10 PM
http://oldmalayalamcinema.files.wordpress.com/2011/11/jayan-in-karimbana.jpg?w=665http://www.metromatinee.com/movies/images/m3191/large/Angadi7056.jpghttp://i1.ytimg.com/vi/3FajiGSDATQ/hqdefault.jpg
அங்காடி 1980

ஜெயன் ,சீமை ,சுகுமாரன்(ப்ரித்விராஜ் அப்பா),ரெவிகுமார் (sumithra ex husband),சங்கராடி
போன்றோர் நடித்த மலையாள சலசித்திரம்
iv சசி இயக்கம்
படம் சூப்பர் டுபர் hit
ஜெயன் இந்த படத்தின் மூலம் உச்சிக்கு சென்று கோலிலக்கம் படம் மூலம் உண்மையிலே உச்சியில் இருந்து விழுந்து இறந்தார்
நம்ம ஷியாம் இசை

ஜேசுதாஸ் பாட்டு ஒன்னு சார்

1980 கால கட்டத்தில் கேரளா பூராவும் பட்டையை கிளப்பின பாட்டு


இந்த பாட்டுக்கு தான் படமே சார்

பாவாட வேணம் மேலாட வேணம்
பஞ்சார பணன்கிளிக்கு
இக்கன்டே கரலே உம்மன்டே பொருளே
முத்தனு நீ ஞம்மக்கு (p)
அல்லனே உம்மா பொல்லாப்பு வேண்டா

அய்யாயிரம் கொடுக்கம்
அதிநோப்பம் பணமவன்
மகராய் தன்னால்
நிக்காவு பொடிபொடிக்கம்
ஆயிஷாண்டே நிக்காவு பொடிபொடிக்கம்
ப ப ப …(ப )


http://www.youtube.com/watch?v=HnzDuo1DNoI

இதே மாதிரி இன்னொரு டூயட் சாங் சார்
கண்ணும் கண்ணும் தம்மில் தம்மில்
ஜேசுதாஸ் ஜானகி குரல்களில்

http://www.youtube.com/watch?v=SHXbNcvOVUM

rajeshkrv
16th July 2014, 08:24 PM
அங்காடியில் இன்னுமொரு அருமையான பாடல்

கன்னிபழுங்கே பொன்னின் கினாவே .. இசையரசியின் குரலில் (மாப்ள பாடல் வகை)


http://www.youtube.com/watch?v=Nr7jmYdgucI

Gopal.s
16th July 2014, 08:30 PM
ஆர்.பார்த்தசாரதி, இசையமைத்தவை 1957 முதல் 1970 வரை ஆறு படங்களே.பிறகு வெறுத்து போய் கல்யாண்ஜி -ஆனந்த்ஜி என்ற பிரபல ஹிந்தி இசையமைப்பாளர்கள் (இரட்டை)associate ஆக பணியாற்ற போய் விட்டார்.

என்ன வித்யாசமான இசையமைப்பு. அடடா ..நாம் கொடுத்து வைக்கவில்லை.(டா...டா....டா....கேட்டு கொண்டிருந்த இனமாயிற்றே?)

மகதல நாட்டு மேரி.

கல்யாண மண்டபம்- பூத்திருக்கும் விழிஎடுத்து மாலை தொடுக்க வா

அவன் பித்தனா- கிழக்கு வெளுத்ததடி, இறைவன் இருக்கின்றானா.

பால் மனம்- கன்னி ஒருத்தியிடம், நிலவுப்பெண் முகம் பார்க்க

அவரே என் தெய்வம்- அழகே உனக்கு துணையேது

கல்யாண ஊர்வலம்- கூந்தலிலே நெய் தடவி,எந்தன் உயிர் காதலன்.

rajeshkrv
16th July 2014, 08:34 PM
வாசுதேவன் சார்

பாகப்பிரிவிணை 4 மொழிகளிலும் உண்டு

தெலுங்கு மற்றும் கன்னடத்திலும்

4 மொழிகளிலும் இசையரசியே தங்கத்தில் ஒரு குறை இருந்தாலும் பாடலை இசைத்தார்

இதோ தெலுங்கு வடிவம் (கலிசி உண்டே கலது சுகம்)


http://www.youtube.com/watch?v=Rj1KRoMTzIg

கன்னடத்தில் (முரியத மனே)


http://www.youtube.com/watch?v=RPcFVeyrm4Q

rajeshkrv
16th July 2014, 08:37 PM
ஆர்.பார்த்தசாரதி, இசையமைத்தவை 1957 முதல் 1970 வரை ஆறு படங்களே.பிறகு வெறுத்து போய் கல்யாண்ஜி -ஆனந்த்ஜி என்ற பிரபல ஹிந்தி இசையமைப்பாளர்கள் (இரட்டை)associate ஆக பணியாற்ற போய் விட்டார்.

என்ன வித்யாசமான இசையமைப்பு. அடடா ..நாம் கொடுத்து வைக்கவில்லை.(டா...டா....டா....கேட்டு கொண்டிருந்த இனமாயிற்றே?)

மகதல நாட்டு மேரி.

கல்யாண மண்டபம்- பூத்திருக்கும் விழிஎடுத்து மாலை தொடுக்க வா

அவன் பித்தனா- கிழக்கு வெளுத்ததடி, இறைவன் இருக்கின்றானா.

பால் மனம்- கன்னி ஒருத்தியிடம், நிலவுப்பெண் முகம் பார்க்க

அவரே என் தெய்வம்- அழகே உனக்கு துணையேது

கல்யாண ஊர்வலம்- கூந்தலிலே நெய் தடவி,எந்தன் உயிர் காதலன்.

ஆம் கோபால் சார். அருமையான இசையமைப்பாளர் ...

Gopal.s
16th July 2014, 08:38 PM
இந்திரா என் செல்வம் என்ற ஊர் பேர் தெரியாத படத்தில் இப்படி ஒரு மெலடி மெட்டு.(மொட்டு)

https://www.youtube.com/watch?v=VdBb_BkDIVU

rajeshkrv
16th July 2014, 08:41 PM
நவரசத்திலகம் திரு முத்துராமன் நடித்த அவள் தந்த உறவு திரையில் ஒலித்த அருமையான பாடல்
இசையரசியுடன் முத்துராமனே(பேசிய)பாடிய பாடல்

manjal itta nilavaga_aval thantha uravu_ps& muthuraman.mp3 (http://www.4shared.com/mp3/gJbNOxgX/manjal_itta_nilavaga_aval_than.html)

vasudevan31355
16th July 2014, 08:48 PM
வாசுதேவன் சார்

பாகப்பிரிவிணை 4 மொழிகளிலும் உண்டு



yes rajesah sir.

vasudevan31355
16th July 2014, 08:49 PM
நவரசத்திலகம் திரு முத்துராமன் நடித்த அவள் தந்த உறவு திரையில் ஒலித்த அருமையான பாடல்
இசையரசியுடன் முத்துராமனே(பேசிய)பாடிய பாடல்

manjal itta nilavaga_aval thantha uravu_ps& muthuraman.mp3 (http://www.4shared.com/mp3/gJbNOxgX/manjal_itta_nilavaga_aval_than.html)

arumai! arumai!

Gopal.s
16th July 2014, 09:01 PM
Kalyana Mandapam By R.Parthasarathy

http://www.youtube.com/watch?v=62MQnWTQ810&feature=kp

rajeshkrv
16th July 2014, 09:33 PM
1957’ல் ஸ்ரீரஞ்சனி மற்றும் கிருஷ்ணகுமாரி நடித்த அக்கா செல்லெலு (அக்கா தங்கை)
தெலுங்கு மற்றும் தமிழில் வந்தது

பெண்டியாலாவின் இசையில் நாம் கேடு மகிழ்ந்த பாடல் இசையரசியின் குரலில் இன்ப முகமொன்று கண்டேன் பாடல்

அதில் இன்னுமொரு அழகான பாடல் (பக்தி என்ற பெயரில் மனிதர் செய்யும் அக்கிரமங்களை எடுத்துக்காட்டும் பாடல்


பார்த்தாயா மானிடனின் லீலையை(சூசாவா மானவலு லீலலு)

3417


ParthayaManidanin Ps-NanValarthaThangai.mp3 (http://www.4shared.com/mp3/14zvtI4B/ParthayaManidanin__Ps-NanValar.html)

Gopal.s
16th July 2014, 10:15 PM
சாரதா ஒரு அருமையான படம்.இயக்குனர் திலகத்தின் துணிச்சல் ,முதல் இயக்க வாய்ப்பிலேயே இம்மாதிரி ஒரு விவகாரமான கதை கருவை கையாண்டு கம்பி மேல் நடந்த விந்தை.வெற்றி மீது வெற்றிதான் .

திரையிசை திலகத்தின் அத்தனை பாடல்களும் அருமை என்றாலும்,யாரும் கண்டு கொள்ளாத இந்த பாடல் பாடகர் திலகத்தின் வசீகர குரலில்.

http://www.youtube.com/watch?v=KnpqIGE3-ok

rajeshkrv
16th July 2014, 10:33 PM
கோபால் சார் , சாரதா பாடல் பற்றிய உங்கள் கருத்து முற்றிலும் உண்மை

Gopal.s
16th July 2014, 10:35 PM
நண்பர் ஒருவர் வினோத கேள்வி கேட்டார்.ஒரு இசையமைப்பாளரின் ஒரே ஒரு பாடலை உங்கள் best தேர்வு செய்ய வேண்டும். அவர் பெரிய ஆளாக இருந்தாலும் ,சாதாரணமாக இருந்தாலும் என்று சவால் விட மகா கஷ்டமான பணிதான். இருந்தாலும் சமாளித்தேன்.பாருங்களேன்.

ஜி.ராமநாதன்- உன்னழகை கன்னியர்கள் (உத்தம புத்திரன்)

கே.வீ.மகாதேவன் -தூங்காத கண்ணென்று ஒன்று (குங்குமம்)

எஸ்.எம்.சுப்பையா நாயுடு-நீ எங்கே (மன்னிப்பு)

விஸ்வநாதன்-ராமமூர்த்தி-சொன்னது நீதானா (நெஞ்சில் ஓர் ஆலயம்)

ஏ.எம்.ராஜா - காவேரி ஓரம் (ஆடி பெருக்கு)

ராமமூர்த்தி- வசந்த காலம் வருமோ(மறக்க முடியுமா)

விஸ்வநாதன் - வெள்ளிக் கிண்ணந்தான் (உயர்ந்த மனிதன்)

சங்கர்-கணேஷ்- விடியும் மட்டும் பேசலாம்(நான் யார் தெரியுமா)

சுதர்சனம்- அன்னை என்பவள் நீதானா (அன்னை)

கோவர்த்தனம்-கண்ணில் கண்டதெல்லாம் (பட்டணத்தில் பூதம்)

டி.ஜி.லிங்கப்பா - காணா இன்பம் கனிந்ததேனோ(சபாஷ் மீனா)

வீ.குமார்- பறவைகள் சிறகினால் (நினைவில் நின்றவள்)

வேதா- என்னென்னவோ நான் நினைத்தேன் (அதே கண்கள்)

வெங்கடேஷ்- தொடுவதென்ன தென்றலோ (சபதம்)

விஜய பாஸ்கர் - மண மகளே உன் மணவறை (காலங்களில் அவள் வசந்தம்)

இளையராஜா- ஏ..பாடல் ஒன்று, ராகம் ஒன்று (பிரியா)

ஏ.ஆர்.ரகுமான்-வெண்ணிலவே...வெண்ணிலவே (மின்சார கனவு)

தேவா- என்னென்ன (நேருக்கு நேர்)

கார்த்திக் ராஜா - பார்த்து போ மாமா பார்த்து போ (நெறஞ்ச மனசு )

ரமேஷ் விநாயகம் -விழிகளின் அருகினில் (அழகிய தீயே)

யுவன் சங்கர் ராஜா -தீபிடிக்க தீ பிடிக்க (அறிந்தும் அறியாமலும்)

Gopal.s
16th July 2014, 10:38 PM
Kudos Karthik Raja .

http://www.youtube.com/watch?v=-1ceBw2ckd4

Gopal.s
16th July 2014, 10:51 PM
பழனியில் இரட்டையர்களின் இசையில் எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் என்றாலும் ,நடிகர்திலகம் யோசனை படி ,சிறிதே ஆசுவாச படுத்த பின்னிணைப்பான இந்த டூயட் பாடல் எனது பிடித்தத்தில் முதலிடம் இப்படத்தில்.(ullaththukulle)

http://www.tnsun.com/watch.php?vid=de36d3869

Murali Srinivas
17th July 2014, 01:11 AM
வாசு சார்,

தாய் பட பாடலுக்கு நன்றி! நன்றி! நன்றி!

அது போல சுமதி என் சுந்தரி எல்லோருக்கும் காலம் வரும் பாடலின் அலசலுக்கும் நன்றியோ நன்றி!

என்னதான் இருந்தாலும் நீங்கள் எத்தனை பாடல்களை அலசினாலும் நமது பாடல்கலைப் பற்றி நீங்கள் எழுதும்போது பதிவில் இருக்கும் ஜீவன் இருக்கிறதே அது தனி!

ஒரு sorry சொல்ல வேண்டும் என நினைக்கிறேன். தாய் பாடலுக்கு Dr.சிவா ஸ்டில் மிக பொருத்தமாக இருந்திருக்கும். நீங்களும் அதை பதிவேற்ற வேண்டும் என்று நினைத்திருப்பீர்கள். நமது நடிகர் திலகம் திரியில் பெருந்தலைவர் பற்றிய பதிவிற்கு நான் அதை எடுத்துக் கொண்டதால் நீங்கள் வேறு ஸ்டில் போட வேண்டி வந்ததோ என்று மனசு சங்கடப்பட்டது.

அடிக்கடி பங்கு கொள்ள முடியாவிட்டாலும் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள், கார்த்திக், கிருஷ்ணாஜி, கோபால் மற்றும் ராகவேந்தர் சாருக்கு நன்றி.

கார்த்திக்,

ஆ நிமிஷம்தானே பகலில் ஒரு இரவு. மலையாளத்திலும் தமிழிலும் I.V.சசியே இயக்கினார். நூல்வேலிக்கு அதற்கும் சம்பந்தமில்லை. AC tech-ல் படிக்கும் போது ஸ்ரீதேவியின் skirt அணிந்த கட் அவுட்டை பார்க்க கிண்டியிலிருந்து மவுண்ட் ரோடிற்கு தினசரி சென்ற 1950 முதல் 1980 வரை வெளியான அனைத்து படங்களையும் கரைத்துக் குடித்த சுந்தரராம கோபாலகிருஷ்ண சுவாமிகள் கூட ஈகார்யம் ஒர்காதது வல்லிய கஷ்டம்தன்னே!

அன்புடன்

Gopal.s
17th July 2014, 01:35 AM
எங்கு தேடியும் எனது சவாலுக்கு சவால் படத்தில் ராட்சசியின் இரு முத்துக்களை பதிவேற்ற முடியவில்லை. யாராவது உதவி ,ப்ளீஸ்.

பாடாத பாட்டு நான் பாட கேட்டு பூ போட்ட மஞ்சம்,நான் தேடும் நெஞ்சம்.

நான் ரோமாபுரி ராணி ,புது ரோஜா மலர் மேனி.

rajeshkrv
17th July 2014, 02:26 AM
கோபால் சார்
சவாலுக்கு சவால் பாடல்கள் இதோ

http://www.inbaminge.com/t/s/Savalukku%20Saval/

madhu
17th July 2014, 03:39 AM
ஆ நிமிஷம்தானே பகலில் ஒரு இரவு. மலையாளத்திலும் தமிழிலும் I.V.சசியே இயக்கினார். நூல்வேலிக்கு அதற்கும் சம்பந்தமில்லை.

அன்புடன்

முரளி சார்... ஆ நிமிஷம்தான் நூல்வேலி ....( படத்தின் முடிவில் மலையாளத்தில் ஸ்ரீதேவி கொலை செய்யப்படுவார்.. தமிழில் சரிதா தற்கொலை செய்து கொள்வார் என்று ஞாபகம் )

பகலில் ஒரு இரவு மலையாளத்தில் ஆலிங்கனம் என்ற பெயரில் ஸ்ரீதேவி நடித்து ஐ.வி.சசி டைரக்ஷனில் வெளிவந்ததாக நினைவு.

madhu
17th July 2014, 03:41 AM
ராஜேஷ் மற்றும் நண்பர்களே !

Lre பாடிய ஒரு பாடல் இணையத்தில் எங்கு தேடியும் சிக்கவில்லை. அருணகிரி நாதர் படத்தில் இடம் பெற்ற "அம்மா தெய்வம் ஆனதுமே தெய்வம் அம்மா ஆகிவிடும்" என்ற பாடல் எங்காவது இருந்தால் ஷேர் செய்யுங்களேன்.. ப்ளீஸ்..

RAGHAVENDRA
17th July 2014, 07:25 AM
ஆயிரத்தில் ஒருத்தி ... மெல்லிசை மாமணி குமாரின் இசையில் இனிமையான பாடல்

http://youtu.be/KU8oD0JgzXE

RAGHAVENDRA
17th July 2014, 07:35 AM
பொங்கும் பூம்புனல்

இந்த நிகழ்ச்சி சிலோன் ரேடியோவில் நம் ஒவ்வொருவரின் நெஞ்சிலும் பசுமரத்தாணி போல் பதிந்து விட்டது. பழைய அபூர்வமான இனிய பாடல்களைக் கேட்கும் போதெல்லாம் இது நம் நினைவில் நிழலாடும். இந்தத் தலைப்பிலேயே சிலோன் ரேடியோவில் நாம் கேட்டு மகிழ்ந்த இனிமையான பாடல்களை நினைவு கொள்வோமா?

தொடக்கமாக வீட்டுக்கு வந்த வரலட்சுமி திரைப்படத்திலிருந்து மதனோடே ரதி என்று தொடங்கும் பாடல். ஏ.எம்.ராஜா ஜிக்கி பாடிய இப்பாடல் நாகின் பட மெட்டில் அமைந்துள்ளது.

http://youtu.be/xdLjnRjdZfk

தரவேற்றிய நண்பர் மணிவண்ணனுக்கு நன்றி.

திருத்தம்.

இப்பாடலைப் பாடியவர் பி.சுசீலா, ஜிக்கியல்ல. தவறைச் சுட்டிக்காட்டிய நண்பர் ராஜேஷுக்கு நன்றி.

RAGHAVENDRA
17th July 2014, 07:40 AM
பொங்கும் பூம்புனல்

1940களில் பட்டி தொட்டி எங்கும் பிரபலமான பாடல். வைஜயந்திமாலாவின் தாயார் வசுந்தரா தேவியும் ரஞ்சனும் நடித்த இப்படம் சூப்பர் ஹிட். மங்கம்மா சபதம் படத்தில் இடம் பெற்ற இந்த பாடல் இன்றைக்கும் பல முதியவர்களின் நினைவுகளைத் தட்டி எழுப்பும். பியானோ மட்டுமே பிரதானமான இசைக்கருவியாய் ஒலிக்கும் இப்பாட்டைப் பாடியவர் பானுமதி என கேள்விப் பட்டிருக்கிறேன். அந்தக் காலத்திய பிரபல ஆங்கிலப் பாடலை நினைவூட்டும்.

http://youtu.be/smLTyd2cuLo

rajeshkrv
17th July 2014, 07:48 AM
பொங்கும் பூம்புனல்

இந்த நிகழ்ச்சி சிலோன் ரேடியோவில் நம் ஒவ்வொருவரின் நெஞ்சிலும் பசுமரத்தாணி போல் பதிந்து விட்டது. பழைய அபூர்வமான இனிய பாடல்களைக் கேட்கும் போதெல்லாம் இது நம் நினைவில் நிழலாடும். இந்தத் தலைப்பிலேயே சிலோன் ரேடியோவில் நாம் கேட்டு மகிழ்ந்த இனிமையான பாடல்களை நினைவு கொள்வோமா?

தொடக்கமாக வீட்டுக்கு வந்த வரலட்சுமி திரைப்படத்திலிருந்து மதனோடே ரதி என்று தொடங்கும் பாடல். ஏ.எம்.ராஜா ஜிக்கி பாடிய இப்பாடல் நாகின் பட மெட்டில் அமைந்துள்ளது.

http://youtu.be/xdLjnRjdZfk

தரவேற்றிய நண்பர் மணிவண்ணனுக்கு நன்றி

ராகவேந்திரா சார்
ஒலிக்கும் பெண் குரல் இசையரசியினுடையது.

RAGHAVENDRA
17th July 2014, 07:53 AM
நன்றி ராஜேஷ். திருத்தம் செய்யப் பட்டு விட்டது.

vasudevan31355
17th July 2014, 07:54 AM
முரளி சார்,

நன்றி!

நிச்சயமாக அப்படியெல்லாம் இல்லை சார். ஸ்டில்களா இல்லை? 'நாடாள வந்தாரு' பாடலுக்கு அந்தப் பாடலில் நடிகர் திலகம் தோன்றும் காட்சியின் ஸ்டில் பொருத்தமாக இருக்கும் என்பதனால் அதைப் பதிவிட்டேன்.
நீங்கள் தாரளமாக எந்த ஸ்டில்களையும் போடலாம். எங்கள் முரளி சாருக்கு இல்லாத ஸ்டில்களா?

RAGHAVENDRA
17th July 2014, 07:58 AM
உள்ள[த்]தை அள்ளித்தா

நம்மிடம் இருக்கும் பாடல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டு கேட்டு இன்புறுவதும் தனி இன்பம் தான். கங்கா யமுனா காவிரி உமர் கய்யாம் பாடலைத் தொடர்ந்து நண்பர்களுக்காக, இணையத்தில் கிடைக்காத பாடல்களை இங்கே பகிர்ந்து கொள்ள எண்ணுகிறேன். தங்கள் ஆதரவளிப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

தொடர்ச்சியாக

மதுர கீதம் திரைப்படத்தில் பாடகர் திலகம் குரலில் சந்திரபோஸின் இசையில் எஸ்.டி.பர்மனின் இசையமைப்பை நினைவூட்டும் தாளக் கட்டில் இனிமையான ஒரு பாடல்.

https://www.mediafire.com/?bg5zavjb8y9hit8

கேட்டு விட்டுத் தங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.

உமர் கய்யாம் எழுதி வைத்த கவிதை எப்படி இருந்தது யாராவது கேட்டவர்கள் சொல்லுங்களேன்

RAGHAVENDRA
17th July 2014, 08:01 AM
Madhu
Happy to see you here. Shall try to find the Arunagirinathar song if I am having

rajeshkrv
17th July 2014, 08:39 AM
உத்தம புத்திரன் திரையில் அனைத்து பாடல்களுமே அருமை.. பல பல கவிஞர்கள் இயற்றிய பாடல்கள் இடம்பெற்றன ..

முல்லை மலர் மேலே, உன்னழகை கன்னியர்கள் சொன்னதினாலே,யாரடி நீ மோகினி என அமர்க்கள பாடல்கள் .. அதே போல் இன்னுமொரு நாட்டிய பாடல்
லீலாவின் குரலில் “காத்திருப்பான் கமலக்கண்ணன் “ பாடல்

இதை எழுதியவர் டி.கே.சுந்தரவாத்தியார்.

இதோ என் கட்டுரை அவரைப்பற்றி

டி.கே.சுந்தரவாத்தியார்.

மக்கள் திலகம் திரு எம்.ஜி.ஆர் அறிமுகமான சதிலீலாவதி படத்திற்கு பாடல்கள் எழுதியது சுந்தரவாத்தியார் அவர்கள்.
தேயிலை தோட்டத்திலே பாரத சேய்க்ள், ராட்டினமே கதர் பூட்டினமே என்ற பாடல்கள் எல்லாம் மிக பிரபலம்.

கைச்சுவை மன்னன் திரு டி.ஆர் ராமசந்திரன் அவர்களுக்கு புகழ்தேடி தந்த சபாபதி படத்தை மறக்க முடியுமா
காளி.என்.ரத்னத்தின் நகைச்சுவையை மறக்க முடியுமா. இந்த திரையிலும் சுந்தரவாத்தியார் பாடல் இயற்றியுள்ளார்

அதே போல் அபிமன்யு,பிழைக்கும் வழி என பல படங்களில் பாடல்கள் எழுதியுள்ளார்.
பிழைக்கும் வழி படத்தின் கதை, பாடல்கள் இரண்டையும் எழுதியது இவரே.

இப்படி பல பாடல்கள் இவர் எழுதியிருந்தாலும் இன்றும் சுந்தரவாத்தியார் என்றால்
பளிச் என நம் நினைவில் வரும் பாடல் உத்தமபுத்திரன் படத்தில்
கானக்குயில் பி.லீலாவின் குரலில் ஒலித்த “காத்திருப்பான் கமல கண்ணன்” என்ற பாடல்தான்.
காரண்ம் ஜி.ராமனாத ஐயரின் இசை, லீலாவின் குரல், நாட்டியப்பேரொளியின் அபிநயம் என்று எல்லாமும் சேர்ந்து இந்த பாடலை
காலத்தால் அழியாப்பாடலாக்கியது என்றால் அது மிகையில்லை.

சுந்தரவாத்தியாரின் அழகுத்தமிழ் வரிகள் நம்மை கொள்ளை கொள்ளும் பாடல் இது.

தமிழ் திரையுலகில் இப்படியும் ஒரு பாடலாசிரியர் இருந்தார் என்பதை எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும்.


https://www.youtube.com/watch?v=Y76YxmaE7u8

vasudevan31355
17th July 2014, 09:54 AM
இன்றைய ஸ்பெஷல் (30)

பல அரிய பாடல்களை இத்திரியில் அளித்து வரும் அன்பு நண்பர் ராஜேஷ் அவர்களுக்கு இப்பாடலை மகிழ்ச்சியுடன் அளிக்கிறேன்.

இன்று ஒரு பழைய பாடல். ஆனால் இளமை மாறாமல் இன்றும் புதிதாகவே இருக்கிறது. பெரும்பாலும் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்றால் கோபால் சண்டைக்கு வருவார். இந்தப் பாடலை அவரே அறிந்திருக்க மாட்டார் என்று நினைக்கிறேன்.

http://www.yadsi.in/img/records/big/d79/891ab0.jpg

இந்தியில் 1958 இல் 'ஜிம்போ' என்றொரு படம் வந்தது. ஆசாத், சித்ரா நடித்திருந்த இப்படம் காட்டிலேயே எடுக்கப்பட்ட 'ஜங்கிள்' டைப் படம். ஆசாத் 'ஜிம்போ' என்ற காட்டு மனிதனாகவும், சித்ரா டார்ஜான் சுந்தரியாகவும் நடித்திருந்தனர். கேவா கலரில் எடுக்கப்பட்ட இப்படத்தை ஹோமி வாடியா தயாரித்து இயக்கியிருந்தார். சித்திரகுப்தா இசை அமைத்திருந்தார்.

'பசந்த்' பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த இப்படத்தின் பாடலகள் மிக, மிக இனிமையானவை.

இப்படத்தில் 'ஜிம்போ' ஆசாத்த்துடன் இணைந்து சித்ரா அழகான வனப்பகுதிகளில் சுற்றி பாடி வருவது போன்ற ஒரு அருமையான பாடல்.

'ஏ பியாதுனே கைஸே ஜாது' என்ற அந்தப் பாடலை ஆஷா போன்ஸ்லே அற்புதமாகப் பாடியிருந்தார்.

இந்தப் படம் தமிழில் மொழி மாற்றம் ஆனபோது இப்படத்தின் பாடல்களுக்கு நம் விஜயபாஸ்கர் இசை அமைத்திருந்தார்.

நான் மேற்குறிபிட்டுள்ள பாடலை தமிழில் கூவும் குயில், 'கண்ணியப் பாடகி' நம் சுசீலாம்மா பாடியிருந்தார்கள்.

இந்தியில் ஆஷா போன்ஸ்லே அற்புதமாகப் பாடியிருந்தார். அதுவும் ஒரிஜினல் வெர்ஷன். ஆனால் நம் 'தென்னகத்து இசைக்குயி'லோ ஒரிஜினலைவிட மிக அருமையாகப் பாடி இந்தப் பாடலை இமயத்தின் உச்சிக்கே கொண்டு சென்று விட்டது. ஆஷா இந்தியில் தடுமாறும் ஒரு சில இடங்களில் தமிழில் நம் சுசீலாம்மா படு அசால்ட்டாக வைப்ரேஷன்ஸ் தந்து இந்தப் பாடலை என்னுடைய அவருக்கான டாப் 10-இல் இடம் பெறச் செய்து விட்டார். இத்தனைக்கும் சுசீலா அவர்கள் அப்போதுதான் பிரபலமாகிக் கொண்டு வந்தார். ஆனால் மொழி உச்சரிப்பு! சான்ஸே இல்லை.

அந்த குரல் ஜாலத்தைக் கேளுங்கள். சாப்பாடு, தூக்கம் எதுவும் வேண்டாம். இசையோடு பின்னிப் பிணைந்து அவர் செய்யும் குரல் மேஜிக்கை என்னவென்று புகழ்வது. எப்பேற்பட்ட திறமைசாலி!. ஆனால் லதாவுக்கும், ஆஷாவுக்கும் கிடைத்த உலக அளவிலான அங்கீகாரம் தென்னகத்தில் இருந்ததனால் வழக்கம் போல கிடைக்காமல் போனது.

'என் நெஞ்சு உன்னை அகலாது'

என்பது முதலில் தொடங்கும் வரி. 'அகலாது' என்று அவர் உச்சரிக்கும் போது தமிழ் டப்பிங்கிற்கு ஏற்றவாறு அந்த 'து' என்று முடியும் போது அந்த எழுத்தை 'தூ'...........என்று உச்சரித்து இழுக்கும் அழகு சொர்க்கத்திற்கு இணையானது.

அகலாதூ.............தூ
முடியாதூ...........தூ

http://i1.ytimg.com/vi/k1blYVJeVKI/maxresdefault.jpg

இந்தப் பாடல் காட்சியும் அற்புதமாகப் படமாக்கப் பட்டிருக்கும். செம்மண் போர்வை போல கேவா கலரில் இருந்தாலும் அதில் பார்ப்பதே ஒரு தனி இன்பம்தான். அந்தக் காலத்துக்கே சென்று அப்படியே ஒன்றி விடுவது போல் ஒரு பிரமை.

அதே போல இந்திக்கு தகுந்த வார்த்தைகள் தமிழில் அழகாகக் கொடுத்திருப்பார்கள்.

'மத்தகஜத்தில் ஏறி குல மன்னர்களைப் போலே'

என்ற வரியில் யானையை மத்தகஜம் என்று குறிப்பிட்டு அழகாக வார்த்தைகளை போட்டிருப்பார்கள்.

என் வாழ்நாள் முழுதும் மறக்க இயலாத பாட்டு.

சுசீலா மிக மிக அழகான குரலில், இளமையான குரலில் பாடிய இப்பாடலைக் கேட்டுவிட்டு உங்கள் கருத்தைக் கூறுங்கள்.

என் நெஞ்சு உன்னை அகலாது (தூ......)
அன்பை அசைக்க முடியாது (தூ......)

ஆ ஆ ஆ ஆ

என் நெஞ்சு உன்னை அகலாது
அன்பை அசைக்க முடியாது

'அன்பை அசைக்க முடியாது' என்று பாடுகையில் 'அன்பை' உச்சரிக்கும் போது 'அன்' என்று உச்சரித்து இழுத்தவாறே 'பை' என்பதை சிறிது இடைவெளி விட்டு (அன்...பை) தருவார் பாருங்கள். வாவ்!

அருவியில் ஆடி நாமே
ஆனந்தம் காண்போமே
காதலின் இன்பத் தேனை
மகிழ்வாக அடைவோமே

உளந்தனில் என்றும் மீளா
ஆனந்தம் காண்போமே
காதலின் இன்பத் தேனை
மகிழ்வாக அடைவோமே
நம் வழியில் பூ விரிந்தே
நல்ல மணத்தைப் பரப்பும்

என் நெஞ்சு உன்னை அகலா (தூ ஊஊ ஊஊஊஊஊ)
அன்பை அசைக்க முடியாது

என் நெஞ்சு உன்னை அகலா (தூ ஊஊ ஊஊஊஊஊ)
அன்பை அசைக்க முடியாது

மிக மிக முக்கியமாக கவனியுங்கள். 'அகலாது' என்று பாடி முடித்தவுடன் அதியற்புதமாக 'து'வுடன் சேந்து ஒரு வைப்ரேஷன் கொடுப்பார். இந்தியில் ஆஷா போன்ஸ்லே இதே இடத்தைக் கோட்டை விடுவார்.

மத்தகஜத்தில் ஏறி குல
மன்னர்களைப் போலே
மெத்த நலங்கள் கொண்டே
பூங்கானகம் ஆள்வோமே

மத்தகஜத்தில் ஏறி குல
மன்னர்களைப் போலே
மெத்த நலங்கள் கொண்டே
பூங்கானகம் ஆள்வோமே

ஆரமுதே நீ எனையே
அள்ளி நிதம் பருகு

என் நெஞ்சு உன்னை அகலாது
அன்பை அசைக்க முடியாது


http://www.youtube.com/watch?v=vg0EvRqfO9M&feature=player_detailpage

gkrishna
17th July 2014, 10:00 AM
உள்ள[த்]தை அள்ளித்தா

நம்மிடம் இருக்கும் பாடல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டு கேட்டு இன்புறுவதும் தனி இன்பம் தான். கங்கா யமுனா காவிரி உமர் கய்யாம் பாடலைத் தொடர்ந்து நண்பர்களுக்காக, இணையத்தில் கிடைக்காத பாடல்களை இங்கே பகிர்ந்து கொள்ள எண்ணுகிறேன். தங்கள் ஆதரவளிப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

தொடர்ச்சியாக

மதுர கீதம் திரைப்படத்தில் பாடகர் திலகம் குரலில் சந்திரபோஸின் இசையில் எஸ்.டி.பர்மனின் இசையமைப்பை நினைவூட்டும் தாளக் கட்டில் இனிமையான ஒரு பாடல்.

https://www.mediafire.com/?bg5zavjb8y9hit8

கேட்டு விட்டுத் தங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.

உமர் கய்யாம் எழுதி வைத்த கவிதை எப்படி இருந்தது யாராவது கேட்டவர்கள் சொல்லுங்களேன்

dear vender sir

நான் ரசித்தேன்

இதே போல் ஒரு சிறு விண்ணப்பம்
மகாலட்சுமி என்று ஒரு படம்
ஜெய் சங்கீதா நடித்து வெளிவந்த பட்டு இயக்கம்
தெலுகு முத்துயால முக்கு என்று நினைவு
அதில் சுசீலா அவர்களின் 'ஆகாய குளத்தில் தாமரை மலரும் காலையிலே அதி காலையிலே' பாடலை ஏற்கனவே நமது
திரியில் குறிப்பிட்டு இருந்தேன் . அந்த பாடல் ஒலி அல்லது காட்சி வடிவம் கிடைக்கவில்லை . இருந்தால் உதவி செய்யவும்
அந்த படத்திலேயே பாலா குரலில் ஒரு பாடல் உண்டு
வரிகள் மறந்து விட்டன . மெல்லிசை மன்னர் இசை
இந்த பாடல் கிடைத்தாலும் பதிவேற்றவும்

gkrishna
17th July 2014, 10:08 AM
vasu sir

zimbo

bahoot பசந்த் hai

நிச்சயமாக எனக்கு இந்த பாட்டு இது முதல் தடைவை
தமிழ் version என்ன பெயர்

rajeshkrv
17th July 2014, 10:10 AM
வாசு சார் ஜிம்போ பாடலுக்கு நன்றி

கிருஷ்ணா சார்

இதோ நீங்கள் கேட்ட மகாலெட்சுமி படப்பாடல் (ஆம் முத்யால முக்குவின் தமிழ் வடிவம் ஜெய் மற்றும் சங்கீதா)

azhagiya kamalathil-mahalakshmi-ps.mp3 (http://www.4shared.com/mp3/tMTwZfux/azhagiya_kamalathil-mahalakshm.html)


ஜிம்போ தமிழிலும் ஜிம்போவே தான்
இதன் பின்னர் ஜிம்போ நகரப்பிரவேசம் அல்லது நகரத்தில் ஜிம்போ என்ற படமும் வந்தது.

gkrishna
17th July 2014, 10:16 AM
thanks rajesh sir

நகரத்தில் ஜிம்போ நினைவில் உள்ளது

vasudevan31355
17th July 2014, 10:21 AM
மயங்கும் உள்ளங்கள்
கலக்கும் வெள்ளங்கள்
அணைக்கும் தெய்வங்கள்
கொண்டாடும் தீபங்கள்

கிருஷ்ணா சார்/ ராஜேஷ் சார்.

ஜெயச்சந்திரனும், வாணியும் பாடும் இந்தப் பாடலும் மகாலஷ்மி படம்தானே?

gkrishna
17th July 2014, 10:23 AM
வாசு சார்

நமது திரியின் அருமை பெருமை

மது சார் ,ராஜேஷ் சார் போன்றோர் எல்லாம் மிக மிக சீனியர் hubbergal மற்றும் நீங்கள் எந்த பாடலை எந்த மொழியில் கேட்டாலும் அதை பற்றி தகவல் கொடுப்பவர்கள். அவர்கள் எல்லாம் இந்த திரியில் பங்கு கொள்ள ஆரம்பித்து விட்டார்கள் .
மென் மேலும் பல சாதனைகள் புரிய வாழ்த்துகள்

ராஜேஷ் சார் முத்துராமன் குரலில் உள்ள பேரும் புகழும் பாடலை குறிப்பிட்டு இருந்தார். இதே போல் ராஜ ராஜ சோழன் படத்தில் கூட ஒரு பாடல் நினைவில் உண்டு R முத்துராமன் துணை குரலுடன் என்று initial உடன் பாடல் கேட்ட நினைவு சிலோன் ரேடியோவில்

vasudevan31355
17th July 2014, 10:25 AM
கிருஷ்ணா சார்!

http://thebigindianpicture.com/wp-content/uploads/2013/01/zimbo-comes-to-town.jpg

vasudevan31355
17th July 2014, 10:30 AM
கிருஷ்ணா சார்!


http://www.youtube.com/watch?v=sGCDEuD8gm8&feature=player_detailpage

கத்துத்திரைக்கடல் சூழவனிக்கொரு
கண்மணி போன்றவனே
கற்பக நாடன் வியப்புறு மேன்மை
கணக்கில வாய்ந்தவனே

மூவுலகும் புகழ் சோழ பராந்தக வாழிய வாழியவே!

நடிகர் திலகத்தைப் புகழ்ந்து நவரசத் திலகம் பாடும் பேச்சுப் பாடல்.

vasudevan31355
17th July 2014, 10:39 AM
ராஜேஷ் சார்

http://www.inbaminge.com/t/i/Iru%20Veedugal/

'இரு வீடுகள்' படத்தில்

வசந்த பாடிய

'பொன்னான உள்ளம்
உன்னோடு இருக்க
கண்ணான கண்ணே
பயம் வேண்டாம்'

பாடல் உண்டா? படம் வெளி வந்ததா?

அப்படி இருந்தால் வீடியோ கிடைக்குமா? ஆடியோ உள்ளது.

இந்தப் பாடல் எனக்கு மிக மிக பிடித்தமான பாடல் சார். அவ்வளவு அருமையாக இருக்கும். நெஞ்சின் ஆழத்தில் ஊடுருவும் பாடல் சார்.

rajraj
17th July 2014, 10:44 AM
உமர் கய்யாம் எழுதி வைத்த கவிதை எப்படி இருந்தது யாராவது கேட்டவர்கள் சொல்லுங்களேன்

Raghavendra: I am not sure what you mean. Because I do not visit this thread. I took a peak because I saw "madhu" in the last column. If you meant 'Rubaiyat' of Omar Khayyam, two of his poems - veyyilketra nizhal uNdu and ezhudhi chellum vidhiyin kai- were used KaLvanin Kaadhali(1955), the movie version with Sivaji Ganesan in the lead. Those two are translations of ' Beneath the bow with a jug of wine' and 'Moving finger writes and having writ moves on'. Desikavinayakam PiLLai was the translator. I wrote about 'veyyiketra nizhal uNdu' in Thiraiyil Ilakkiyam series in TFMpage Magazine under the title 'vaname sorgam'. You might want to read it. Doon't know whether 'KaLvanin Kaadhali' was discussed.

gkrishna
17th July 2014, 10:44 AM
திரை கதம்பம்
வழங்குபவர் நெய்வேலி வாசு :)

இந்த ஆசாத் (ஜிம்போ) என்பது ஆசாத் பயில்வான் என்று ஒருவர் உண்டு
அவரா இவர் ?
ராமன் தேடிய சீதை படத்தில் நாகேஷ் இடம் அடி வாங்குவது போல் வருவார் , ராஜா படத்தில் ரங்கராவ் இரு பயில்வான்கள் சண்டை இடுவதை ரசிப்பது போல் காட்சியிலும் வருவார் பின்னாட்களில் நீங்கள் கேட்டவை திரைபடத்தில் மகேந்திரன்,வனிதா காமெடி காட்சியிலும் வருவார்

ஏன் நம்ம கன் fight காஞ்சனா வில் கூட வருவார்
கன் fight காஞ்சனா டைட்டில் கூட 'மற்றும் பல பயில்வான்கள்' :)
நடித்தது என்று இருக்கும்

gkrishna
17th July 2014, 10:57 AM
செல்ல பெண் 1969
k.krishnamurthy direction
மெல்லிசை மாமணி kumar இசை

'கண்ணே கொஞ்சம் பாரு
கல்யாண பெண்ணாய் ஜோரு'

பாடகர் திலகம், ராட்சசி குரல்களில்
ராட்சசி ஹம்மிங் சுபெர்ப் சார்

இது ரவி காஞ்சனா பாலாஜி என்று நெட் இல் உள்ளது
ஆனால் ஏவிஎம் ராஜன் புஷ்பலதா விளம்பர படம் பார்த்த நினைவு கூகுளில்

http://www.inbaminge.com/t/c/Chella%20Penn/

vasudevan31355
17th July 2014, 11:06 AM
ஆசாத் பயில்வான் என்று ஒருவர் உண்டு
ஏன் நம்ம கன் fight காஞ்சனா வில் கூட வருவார்
கன் fight காஞ்சனா டைட்டில் கூட 'மற்றும் பல பயில்வான்கள்' :)
நடித்தது என்று இருக்கும்

கிருஷ்ணா சார்

உங்களுக்காகவே என் டிவிடியில் இருந்து பிடித்தேன் உங்கள் ஆசாத் பயில்வானை நீங்கள் சொன்ன 'கன் பைட் காஞ்சனா'வில் இருந்து.

சாட்சாத் அந்த ஆசாத் வேற.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/GunFightKanjanaFullMovie-WatchFreeFullLengthTamilMovieOnline-YouTubemp4_001479480.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/GunFightKanjanaFullMovie-WatchFreeFullLengthTamilMovieOnline-YouTubemp4_001479480.jpg.html)

gkrishna
17th July 2014, 11:09 AM
http://cineplot.com/encyclopedia/wp-content/uploads/2011/05/azad-1.jpg

http://cineplot.com/encyclopedia/azad/

ஆசாத் இராணி பற்றி ஒரு சிறு குறிப்பு இந்த வலைப்பூவில் படித்தேன் உங்கள் பார்வைக்கு

gkrishna
17th July 2014, 11:13 AM
sorry vasu sir

படுத்தறேன் இல்ல
உங்களை கொஞ்சம் (கஷ்ட) :)

vasudevan31355
17th July 2014, 11:16 AM
ஏ.வி.எம்.ராஜன் புஷ்பலதா நடித்த 'செல்லப் பெண்' திரைப்படத்தில் கவிஞர் வாலி எழுதிய பாடல்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355005/index.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355005/index.jpg.html)

கண்ணே கொஞ்சம் பாரு
கனியா காயா கூறு
என் ஆசை நெஞ்சம்
காதல் மஞ்சம்
அன்பே அன்பே தஞ்சம்
ஹோஹோஹோ..ஹோ...ஓஹோஓஓ..

கண்ணான கண்ணன் தானோ
கண் ஜாடை எல்லாம் தேனோ
கண்ணான கண்ணன் தானோ
கண் ஜாடை எல்லாம் தேனோ
என் ஆசை நெஞ்சம்
காதல் மஞ்சம்
அன்பே அன்பே தஞ்சம்
என் ஆசை நெஞ்சம்
காதல் மஞ்சம்
அன்பே அன்பே தஞ்சம்
ஹாஹா ஹாஆ..ஹா...ஆ...ஹாஹாஆ...

அலங்கார சிலையே நீ அசைந்தாடி வா வா
நிலையான பரிசாக உனையே நீ தா தா
பருவமே கொஞ்ச கொஞ்ச
உருவமே கெஞ்ச கெஞ்ச
பருவமே கொஞ்ச கொஞ்ச
உருவமே கெஞ்ச கெஞ்ச
உறவாடி வந்தாலென்ன ஓடோடி வா
ஆஹா ! தாளம் போடு தாளம் போடு
தக்கத்திமி தானா
ஆஹா ! தாளம் போடு தாளம் போடு
தக்கத்திமி தா...னா
ஆஹா ! தாளம் போடு தாளம் போடு
தக்கத்திமி தானா
ஹஹ் ஹா ! தாளம் போடு தாளம் போடு
தக்கத்திமி தா...னா

கண்ணே கொஞ்சம் பாரு ஆஹா
கனியா காயா கூறு ஓஹோ
என் ஆசை நெஞ்சம்
காதல் மஞ்சம்
அன்பே அன்பே தஞ்சம்
ஹாஹா ஹாஆ..ஹா...ஆ...ஹாஹா

விழி பேசும் மொழி போதும்
விளையாட வா வா
பழங்காதல் சுகம் எல்லாம்
மயங்காமல் தா தா
பருவமே கொஞ்ச கொஞ்ச
உருவமே கெஞ்ச கெஞ்ச
பருவமே கொஞ்ச கொஞ்ச
உருவமே கெஞ்ச கெஞ்ச
உறவாடி வந்தாலென்ன ஓடோடி வா
ஆஹா ! தாளம் போடு தாளம் போடு
தக்கத்திமி தானா
ஆஹா ! தாளம் போடு தாளம் போடு
தக்கத்திமி தானா

கண்ணே கொஞ்சம் பாரு ஹெஹ்ஹெ
கனியா காயா கூறு ஹெஹ்ஹெ
என் ஆசை நெஞ்சம்
காதல் மஞ்சம்
அன்பே அன்பே தஞ்சம்
என் ஆசை நெஞ்சம்
காதல் மஞ்சம்
அன்பே அன்பே தஞ்சம்...

gkrishna
17th July 2014, 11:22 AM
சூப்பர் வாசு சார்
ஈஸ்வரி நக்கல் ஹம்மிங் எப்படி பாட்டில்
காட்சி வடிவம் கிடைக்கவில்லை நெட்டில்
நான் ரொம்ப ரசித்த பாடல் சார்

'கண்ணே கொஞ்சம் பாரு:)

gkrishna
17th July 2014, 11:25 AM
அதிலும் இந்த சரணம் சூப்பர் சார்

ஆஹா ! தாளம் போடு தாளம் போடு
தக்கத்திமி தானா
ஆஹா ! தாளம் போடு தாளம் போடு
தக்கத்திமி தானா (கொஞ்சம் base வாய்ஸ் )

gkrishna
17th July 2014, 11:59 AM
ராஜேஷ் சார்

'இரு வீடுகள்' படத்தில்

பாடல் உண்டா? படம் வெளி வந்ததா?

.


இந்த 'இரு வீடுகள்' விளம்பரம் ஒன்று பேசும்படம் பத்திரிகையில்
இரு கோடுகள் கால கட்டத்தில் பார்த்த நினைவு சார்

படம் வெளி வந்த நினைவு இல்லை

vasudevan31355
17th July 2014, 12:05 PM
1953 ஆம் ஆண்டு வெளியான ஹிந்தித் திரைப்படம் 'aah'.

http://i1.ytimg.com/vi/cBhLAV7iNU0/hqdefault.jpg

ராஜ்கபூர் ஹீரோவாக நடித்த இப்படம் தமிழ் டப் செய்யப்பட்ட போது 'அவன்' என்று பெயரிடப்பட்டது. இந்தியில் முகேஷ் பாடிய பாடலை தமிழில் ஏ.எம்.ராஜா அப்படியே அருமையாய் பாடி இருந்தார். சங்கர் ஜெய்கிஷன் இசையமைத்திருந்தார்கள்.

'மின்னல் போல் ஆகும் இந்த வாழ்க்கையே'

என்று தொடங்கும் பாடல். ராஜா குரலில் இந்தப் பாடல் அவ்வளவு இனிமை.

வண்டி ஓட்டியாக பாடியபடி வருபவர் யார் தெரியுமா?

ராஜ்கபூருக்கென்றே இந்தியில் பின்னணி பாடப் பிறந்த மயக்கும் குரலோன் முகேஷ் தான்.

http://myswar.com/static/img/artists/mukesh.jpghttp://www.singermukesh.com/friends/mukesh28.JPG


http://www.youtube.com/watch?v=jDIpi_Yb90g&feature=player_detailpage

gkrishna
17th July 2014, 01:26 PM
மலர்களிலே அவள் மல்லிகை 1979
இந்த படத்தின் கவர் ஆல்பம் நல்ல நினைவு
இது கங்கை அமரனின் முதல் படம்
மாஸ்டர் சேகர் சங்கீதா லாவண்யா நடித்து
இயக்கம் ஆனந்த் என்று இருக்கும்
V S சினி Creation
இந்த படம் எடுத்த மாதிரியும் தெரியலை வந்த மாதிரியும் தெரியலே

ஆனால் பாடல்கள் எல்லாமே ரொம்ப நல்லா இருக்கும்

நான் ரொம்ப ரசித்த பாட்டு சார்
மலேசிய வாசுதேவன் மற்றும் spb குரல்களில்
எது மலேசிய எது பாலா னு தெரியாது
வாலியின் அற்புத இளமை பாடல்
பயங்கர பாஸ்ட் பீட்

"நானும் நீயும் இன்று இளைஞன்
நாளை இந்த உலகில் தலைவன்
உள்ளம் இரண்டும் நெஞ்சை மிஞ்சும்
ப ப ப - '
சூப்பர் மேடை கச்சேரி பாடல்

இந்த பாட்டு வலையில் எங்கு தேடியும் கிடைக்கவில்லை

மற்ற பிற பாடல்கள்

ஜெயச்சந்திரன் சுசீலா குரல்களில் அற்புத மெலடி
கங்கை அமரனின்
"சிந்து நதியோரம் தென்றல் விளையாடும்
கண்ணன் வரவும் கன்னி உறவும் காதல் கீதம் பாடும்'
ஒரு ஹை பிட்ச் பாடல்

http://music.cooltoad.com/music/song.php?id=203155

ஜெயச்சந்திரன் ஜானகி குரல்களில்
கண்ணதாசனின்
'பூவே மல்லிகை பூவே , நெஞ்சில் போதை ஏறுதடி'

சுசீலாவின் மதி மயங்கும் பியானோ சேர்ந்த
'இசையினிலே ராகம் பல
நூறு இனிமை தரும் வயதோ பதினாறு '
இந்த பாட்டு பூவை செங்குட்டுவன் எழுதியது
சமீபத்தில் இவரை பார்த்தேன் கண்ணதாசன் விருது வழங்கும் விழாவில். வெரி சிம்பிள் மனிதர். பேசி கொண்டு இருந்தேன்

மலேசிய வாசுதேவன் பூரணி குரல்களில்
(இந்த பூரணி மற்றும் இந்திரானு ஒருவர் (அவர் எனக்கே சொந்தம் தேவன் திரு சபை மலர்களே) இவங்கள் எல்லாம் எங்க போனங்கன்னு தெரியல )
கங்கை அமரனின்
'வானம் பூ சிந்தட்டும் ,
என்றும் வாழ்வே பொன்னாகட்டும் '

மற்ற பாடல்கள் எந்த லின்க்ல இருக்கு தெரியலே

அவ்வளவும் சிலோன் ரேடியோ ஹிட் சார்

vasudevan31355
17th July 2014, 02:11 PM
கிருஷ்ணா சார்,

அபூர்வ பதிவு.

'மலர்களிலே அவள் மல்லிகை' நான் பார்த்ததில்லை சாவித்திரியைத் தவிர.:)

ஆனால் பாடல்கள் கேட்டதுண்டு. உங்கள் பதிவில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு வருத்தமாக தெரிகிறது. என்ன செய்வது சார்? அதுதான் தமிழ்நாடு.

'பூவே மல்லிகைப் பூவே' லிங்க் உங்களுக்காக இதோ.

http://mayuren.org/site/mayurengorg/1Tamil/Movie%20A%20-%20Z%20Collection/M/MALARGALILE%20AVAL%20MALLIGAI

gkrishna
17th July 2014, 02:32 PM
கிருஷ்ணா சார்,

'மலர்களிலே அவள் மல்லிகை' நான் பார்த்ததில்லை சாவித்திரியைத் தவிர.:)


வாசு சார்

நன்றி சார்
https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcRHodekxoWTVivRi_Uk2sACeKd4Rrkzf T6TeGn6Xw3fGL4281wq

vasudevan31355
17th July 2014, 02:39 PM
வாசு சார்

நன்றி சார்
https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcRHodekxoWTVivRi_Uk2sACeKd4Rrkzf T6TeGn6Xw3fGL4281wq

கிருஷ்ணா சார்,

ஐயோ! அய்யய்யய்யோ! ஐயோ:)

madhu
17th July 2014, 02:51 PM
மலர்களிலே அவள் மல்லிகை...

அந்தக் காலத்தில் ஆனந்த விகடனில் இந்துமதி எழுதிய தொடர்கதையும் "ஜெய்" சோப் விளம்பரத்தில் வந்த வாசகமும் சிலோன் ரேடியோவில் கேட்ட பாடல்களும்...... இதேதான்..

இதோ ஒரு மூன்று பாடல்களுக்கான சுட்டி

http://www.inbaminge.com/t/m/Malargalilae%20Aval%20Malligai/

gkrishna
17th July 2014, 02:55 PM
1953 ஆம் ஆண்டு வெளியான ஹிந்தித் திரைப்படம் 'aah'.


http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/b/b8/Dharmatma.jpg/220px-Dharmatma.jpghttp://i1.ytimg.com/vi/IsaXfsaRjHk/hqdefault.jpghttp://dvdstore.erosentertainment.com/movfiles/movimg/imgd/Dharmatma_DVDIN.jpg

நல்ல பாடல் சார்
முகேஷ் னு சொன்ன உடனே வந்த நினைவு சார்
'கியா கூப் லகதி ஹோ படு சுந்தர் லடுக்கி ஹோ'
பெரோஸ் கான்,ஹேமா நடித்த தர்மாத்மா
சூப்பர் action movie
ஆப்கானிஸ்தான்ல் படமாக்கப்பட்ட முதல் ஹிந்தி திரை படம்
தயாரிப்பு இயக்கம் ஹீரோ இப்படி பல ஜோலிகள்
பெரோஸ் கான்க்கு நடுவில் ஹேமாவை வேறு காதலிக்கணும்

கல்யாண்ஜி ஆனந்த்ஜி இசை (தமிழ்நாட்டு இசை மேதை பார்த்தசாரதி இவர்ட்ட உதவியாளர் ஆக பணி புரிந்தார்
ஒருத்தர்க்கு வாயெல்லாம் :))

படத்தில் நிறைய இடங்களில் ஆப்கானிஸ்தான் இசை மற்றும் மேற்கத்திய இசை கலந்து கட்டும்

Feroz Khan,Hema Malini,Nazir Hussain,Premnath,Imtiaz Khan,Rekha,Farida Jalal,Ranjeet,Danny Denzongpa,Madan Puri,Iftekhar,Jeevan,Dara Singh

ஒரே நட்சித்திர பட்டாளம்

லெப்ட்ல ரேகா,ரைட்ல farida ஜலால்,சென்டர்ல ஹேமா செத்தது 45 பைசா


http://www.youtube.com/watch?v=u_6Kbs78lHc

http://www.youtube.com/watch?v=fXaRgv9wtZ0

vasudevan31355
17th July 2014, 02:58 PM
'தாய் மீது சத்தியம்' படத்தில் சங்கர் கணேஷ் இசையமைப்பில் சுசீலாவின் அருமையான குரலில் ஜெயமாலினியின் நடனத்திலே, மோகன்பாபுவின் விறைப்பிலே மனசை 'ஜில்லெண்டு' வைக்கும் ஒரு பாடல்

'உறவும் உண்டுபிரிவும் உண்டு உலகிலே
வரவும் உண்டு செலவும் உண்டு வாழ்விலே

நீயும் நானும் இங்கு வாழும் வாழ்க்கை
ஒரு கூட்டல் கணக்குதான்'


https://www.youtube.com/watch?v=TvM_62BEt6s&feature=player_detailpage

gkrishna
17th July 2014, 03:01 PM
மலர்களிலே அவள் மல்லிகை...


மது சார்
மிக்க நன்றி சார்
உங்களக்கு வேற dog போட்டோ (ஜாலி ஆக தான்):)
சார் இந்த திரை படத்தின் போட்டோ எதாவது கிடைக்குமா
சங்கீதா தலையில் ஒரு சிகப்பு ரோஜா ஒன்றை சூடி இருப்பார்
சைடு bose புடவை கட்டி கொண்டு ரொம்ப நல்ல இருக்கும்
தவறான எண்ணத்தில் எதுவும் எழுதவில்லை சார்

vasudevan31355
17th July 2014, 03:01 PM
//லெப்ட்ல ரேகா,ரைட்ல farida ஜலால்,சென்டர்ல ஹேமா செத்தது 45 பைசா//

http://images.smh.com.au/2012/04/30/3257499/vd-Obama-standup-408x264.jpg

ஆளுக்குப் 10 பைசா, முறுக்கு 5 பைசா, சைக்கிளுக்கு 10 பைசா

கூட்டிக் கழிச்சிப் பார்த்தா கணக்கு சரியா வருது சார்.

gkrishna
17th July 2014, 03:11 PM
//லெப்ட்ல ரேகா,ரைட்ல farida ஜலால்,சென்டர்ல ஹேமா செத்தது 45 பைசா//

ஆளுக்குப் 10 பைசா, முறுக்கு 5 பைசா, சைக்கிளுக்கு 10 பைசா

கூட்டிக் கழிச்சிப் பார்த்தா கணக்கு சரியா வருது சார்.

dear vasu sir

நம்ம CA படித்து இருக்கணும்

gkrishna
17th July 2014, 03:20 PM
'தாய் மீது சத்தியம்' படத்தில் சங்கர் கணேஷ் இசையமைப்பில் சுசீலாவின் அருமையான குரலில் ஜெயமாலினியின் நடனத்திலே, மோகன்பாபுவின் விறைப்பிலே மனசை 'ஜில்லெண்டு' வைக்கும் ஒரு பாடல்


வாசு சார்

இதே மாதிரி அன்னை ஒரு ஆலயம்
படத்தில் இளையராஜா இசைஅமைப்பில்
மோகன்பாபு (குரு சிங்காரிக்கு ஜே),ஜெயமாலினி
சுசீலாவின் ஹஸ்கி வாய்ஸ்

நிலவு நேரம் இரவு காயும்
வானிலே ஆயிரம் வெள்ளி
வாடுது மல்லிகைப் பள்ளி
இங்கே அவனை அழைத்தேன் வாரானோ ..ஹா நிலவு நேரம்
இரவு காயும்
பாட்டுக்கு நடுவில்
dr கல்யாண் குழுவினர் என நினைக்கிறன்
கலக்கல் orchestra



http://www.youtube.com/watch?v=tzKF1KLnpoE

vasudevan31355
17th July 2014, 05:32 PM
கிருஷ்ணா சார்!

அது இளைய ராஜாவின் மணிமகுடப் பாடல். ஆனால் 'இளமை என்னும் பூங்காற்று' 'ஓஹோ' வெனக் கொண்டாடப்பட்டது. 'நிலவு நேரம்' அந்த அளவிற்கு கண்டு கொள்ளப் படவே இல்லை நல்ல இசை ரசனை கொண்டவர்களைத் தவிர.

'இளமை எனும் பூங்காற்று' பாடப்படாத இசை மேடையே இல்லை. ஆனால் 'நிலவு நேரம் இரவு காயும்' பாடல் மேடைகளில் பாடப் பட்டுள்ளதா?

'இளமை' மிக அருமையான 'காம' மெலடி. ஆனால் 'நிலவு நேரம்' ஆர்ப்பாட்டம். அதற்கு இது எந்த வகையிலும் குறைந்தது இல்லை. என் தனிப்பட்ட ரசனையில் 'நிலவு'க்குத் தான் என் முதல் ஒட்டு.

இரண்டாவது சுசீலாவின் இன்னொரு பரிணாமம் மீண்டும் தெரிந்தது.

அதற்கெல்லாம் இப்போது நான் வரவில்லை. பழசே இன்னும் நிறைய கடல் மாதிரி இருக்கிறது. அதையெல்லாம் முடிப்போம். பிறகு இளையராஜா என்ற கடலில் மூழ்கலாம்.

gkrishna
17th July 2014, 05:50 PM
http://www.5eli.com/Lyrics/wp-content/uploads/2011/09/Anbukku-Oru-Annan.jpg

அன்புக்கோர் அண்ணன் 1970
ஜெமினி கணேசன்,ஜெய்சங்கர்,நிர்மலா,நாகேஷ் நடித்தது
பாடகர் திலகம்,சீர்காழி இசையில் ஒரு நல்ல நாட்டிய பாடல்
"தென் மதுரை வீதியிலே ஊர்வலம் போனாள்
அண்ணன் திருமால் அழைத்து வர கண்மணி மீனாள்
பொன் மலராம் தாமரையை கிள்ளி எடுத்தாள்'
சொக்கனுக்கு மைத்துனனோ ஒருவன் இருந்தான் '

http://www.inbaminge.com/t/a/Anbukku%20oru%20Annan/

இன்னொரு பாட்டு

பாலா ராட்சசி குரல்களில்

ஏய் டூயட் பாடலாமா?
ஸ்ஸ்ஸ்ஸ் இந்த நேரத்திலயா?
யாராவது பார்த்துட போறாங்க..ம்ம்ம்ஹாஆஆ

போகப் போக நல்லா இருக்கும் பொறுங்க
ஸ்ஸ் உடல் மீது கையை கொஞ்சம் எடுங்க
அக்கம் பக்கம் ஆளூ ரொம்ப விடுங்க

கோடி கோடி ஜோடி நம்மை போல உண்டடி
அதுக்கென்ன இப்போ
கோடு போட்டு காதல் செய்து வாழும் வாழ்வடி
அதில் என்ன தப்போ

எந்த வீட்டில் இந்த வேளை என்ன ராகமோ
அந்த ராகம் நாமும் பாட இந்த கோலமோ

போகப் போக நல்லா இருக்கும் பொறுங்க.. ம்ஹாஆ
ஸ்ஸ் உடல் மீது கையை கொஞ்சம் எடுங்க..ம் ஹாஆ
அக்கம் பக்கம் ஆளூ ரொம்ப விடுங்க.. ம் ஹாஆ

உலலலாஆஆஆயீ
ஆரிரரஓஒ .. உலலலாஆஆஆயீ
ஆரிரரஓஒ ...ஆரிரரஓஒ ..
உலலலாஆஆஆயீ...உலலலாஆஆஆயீ..

நல்ல நேரம் பார்த்து அந்த பிள்ளை சாடுது
நமக்கு வேளை எப்போ
என்னை மட்டும் கேள்வி கேட்டு என்ன ஆவது
நடக்கட்டும் இப்போ ம்ம்மாஆஆ

மாலை போட்டு மண்டி?? வீட்டில் கட்டில் போடுவோம்
மாதம் பத்து போன பின்பு தொட்டில் போடுவோம்

போகப் போக நல்லா இருக்கும் பொறுங்க..
ஸ்ஸ் உடல் மீது கையை கொஞ்சம் எடுங்க..
அக்கம் பக்கம் ஆளூ ரொம்ப விடுங்க..

இருட்டில் கூட உனது மேனி மினுமினுக்குது
மினுக்கட்டும் இப்போ
இதழ் இரண்டும் பார்த்து பார்த்து துடிதுடிக்குது
துடிக்கட்டும் இப்போ

காத்திருந்து வாங்கும் இன்பம் இனிமையானது
காதல் போட போட காதல் புனிதமானது

போகப் போக நல்லா இருக்கும் பொறுங்க
ஸ்ஸ் உடல் மீது கையை கொஞ்சம் எடுங்க
அக்கம் பக்கம் ஆளூ ரொம்ப விடுங்க

இதுக்கு ஆடியோ வீடியோ எதாவது உண்டா நிச்சயம் ராட்சசி பின்னி இருக்கணும் ஏன்னா வரியை கவனிங்க

vasudevan31355
17th July 2014, 06:12 PM
கிருஷ்ணா சார்,

ஒன்று கவனித்தீர்களா?

பிற்கால தேவரின் தண்டாயுதபாணி பிலிம்ஸ் படங்களில் ஈஸ்வரி பாடவே இல்லை. கிளப் டான்ஸ், மற்றும் கவர்ச்சி நடிகைகளுக்கான பாடல்களை இசையமைப்பாளர்கள் சுசீலாவையே பாட வைத்தனர். இரட்டையர்கள், இளையராஜா என்று. இது ஏன் என்று தெரியவில்லை. பின்னால் சுசீலாவையும் கழற்றிவிட்டு ஜெயமாலினிக்கு 'ராம் லஷ்மணில் 'வாலிபமே வா வா' என்று ஷைலஜாவைப் பாட வைத்தார் ராஜா.

பாருங்கள்

ஆட்டுக்கார அலமேலு - தேன்கூடு நல்ல தேன்கூடு

தாய் மீது சத்தியம் - நீயும் நானும் இங்கு வாழும் வாழ்க்கை ஒரு கூட்டல் கணக்குத்தான்

அஞ்சாத நெஞ்சங்கள் - தன்ன தானா தாளந்தானா தத்தி தத்தி ஆடத்தானா

அன்னை ஒரு ஆலயம் - நிலவு நேரம் இரவு காயும்

இது எல்லாம் சுசீலா.

இன்னும் இருக்கிறதா என்று தெரியவில்லை. நண்பர்கள் பகிரலாம்.

vasudevan31355
17th July 2014, 06:15 PM
கிருஷ்ணா சார்

'அன்புக்கோர் அண்ணன்' அலசல் நன்றாக இருந்தது. பலரும் மறந்து விட்ட ஒரு படம்.

இதில் இன்னொரு பாடல் உண்டு

அடி காதலி என்னைக் காதலி
என் காதலா இது காதலா

பாடகர் திலகமும், ராட்சஸியும் பாடியது.

ஆமாம். படத்தில் ஜெயா மேடம் இருக்கிறாரா என்ன?

vasudevan31355
17th July 2014, 06:21 PM
'அன்புக்கோர் அண்ணன்' படத்தில் 'அடியே ஒரு பேச்சுக்கு சொன்னேன்' என்ற அற்புதமான பாடலும் உண்டு.

நம் இரு பாடகிகளும் பாடும் பாடல் ஒன்று. மிக அருமையான கருத்தை உணர்த்தும் பாடல்.

'திருமணம் வேண்டாம்.... அண்ணனே போதும்' என்று சொல்லும் தோழியிடம் (சுசீலா) 'திருமணம் கொள்ளாமல் பெண் வாழ்வு சிறக்காது' என்று பதிலுக்கு வாதம் செய்யும் தோழி (ஈஸ்வரி)

(ஈஸ்வரி)

அடியேய் ஒரு பேச்சுக்கு சொன்னேன்
இது பெண்புத்திதானே!'
ஒரு நாயகன் முன்னே
நாம் நாயகிதானே

ஒரு பேச்சுக்கு சொன்னேன்
இது பெண்புத்திதானே!'
ஒரு நாயகன் முன்னே
நாம் நாயகிதானே

(சுசீலா)

தங்கை என்பதில் சொந்த உரிமை உண்டடி
தங்கை என்பதில் சொந்த உரிமை உண்டடி
இதில் தலைவி என்னும் பெயரில்
என்ன பெருமை உண்டடி
இதில் தலைவி என்னும் பெயரில்
என்ன பெருமை உண்டடி

அடியேய் ஒரு பேச்சுக்கு சொன்னேன்
இது பெண்புத்திதானே!'
ஒரு ஆடவன் வந்தால் நாம்
அடிமைகள்தானே

(ஈஸ்வரி)

தாயாரும் உன்னைப் போல்
தனியாக வாழ்ந்தால்
நீ ஏது உன் அண்ணன் உறவேதடி

(சுசீலா)

மாறாது உறவென்று அண்ணாவைப் பாடி
வாழ்ந்தாலே கல்யாண நினைவேதடி

(ஈஸ்வரி)

பெண்டாட்டி ஆனால்தான் கொண்டாட்டமே

(சுசீலா)

பல பெண்வாழ்வில் கல்யாணம் திண்டாட்டமே

அடியேய்... ஒரு பேச்சுக்கு சொன்னேன்
இது பெண்புத்திதானே!'
ஒரு ஆடவன் வந்தால் நாம்
அடிமைகள்தானே

(ஈஸ்வரி)

இன்பங்கள் சரிபாதி
துன்பங்கள் பாதி
கொண்டாடும் இல்வாழ்வு
குலவாழ்வடி

(சுசீலா)

இன்பங்கள் துன்பங்கள்
எங்கென்று தேடி
அங்கெல்லாம் நான்
போக முடியாதடி

(ஈஸ்வரி)

தள்ளாடும் காலத்தில் அறிவாயடி

(சுசீலா)

அதில் தாய் வீட்டு துணை போல துணை ஏதடி

(ஈஸ்வரி)

அடியே ஒரு பேச்சுக்கு சொன்னேன்
இது பெண்புத்திதானே!'
ஒரு நாயகன் முன்னே
நாம் நாயகிதானே

(ஈஸ்வரி)

ஆதாரம் நீயென்று அத்தானின் மார்பில்
நீராடும் நிலை போல நிலை ஏதடி

சுசீலா)

நீராடு நாம் சென்று போராட நேர்ந்தால்
வேரோடும் கண்ணீரில் முடிவேதடி

(ஈஸ்வரி)

கண்ணீரும் பெண் சொல்லும் கதைதானடி

(சுசீலா)

அது எந்நாளும் என் வாழ்வில் கிடையாதடி
அது எந்நாளும் என் வாழ்வில் கிடையாதடி

vasudevan31355
17th July 2014, 06:30 PM
இனிய நண்பர் வாசு சார்

1970- பொங்கல் வெளியீடான ''ஏன் '' படத்தின் பாடல் பற்றிய உங்கள் அலசல்கள் பிரமாதம் .

ஆனந்த விகடன் - எழுதிய விமர்சனம் - உங்கள் பார்வைக்கு .

பாடல்களுக்காக இந்த படத்தை பார்த்தேன் .



நன்றி வினோத் சார்.

ரொம்ப நாளாக இப்படத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். நீங்கள் விகடன் விமர்சனம் போட்டு விட்டீர்கள். படம் செம அறுவை மாதிரி விமர்சனம் பண்ணியிருக்கிறார்கள். இருந்தாலும் நீங்கள் சொன்னபடி பாடல்கள் லட்டு.

Richardsof
17th July 2014, 06:36 PM
http://youtu.be/euuJPl73gNk

mr_karthik
17th July 2014, 07:07 PM
டியர் வாசு சார்,

'ஜஸ்ட் ரிலாக்ஸ் இயக்குனர்கள்' வரிசையில் இளமை இயக்குனர் சி.வி.ராஜேந்திரன் அவர்களின் மற்றும் ஒரு அருமையான பாடலான 'எல்லோருக்கும் காலம் வரும்' பாடலை மிகச்சிறப்பாக ஆய்வு செய்து பதித்திருக்கிறீர்கள். எனது வேண்டுகோளை ஏற்று இப்பாடலை ஆய்வு செய்தமைக்கு மிக்க நன்றி.

பாடலில் இடம்பெறும் ஒவ்வொருவரையும், ஒவ்வொரு நிகழ்வையும், ஒவ்வொரு விஷயத்தையும் ஒன்று விடாமல் நினைவுக்குக் கொண்டுவந்து பதிவை சிறப்பாக்கியிருக்கிறீர்கள்.

நீங்கள் சொன்னதுபோல இந்தப்பாடலில் எல்லோருடைய ஆட்டத்தையும் கவனித்தாலும், முக்கால்வாசி கவனம் ஜெய்குமாரி மீதுதான். அவருடைய அலுங்காத நடனமும் அந்த உடையும் கொள்ளை அழகு. இத்தனைக்கும் உடலை முழுவதுமாக மூடிய உடை. அதிலேயே அவ்வளவு அழகு. குறிப்பாக அந்த கூரான மூக்கு, அழகிய சிரிக்கும் கண்கள், வெகுளித்தனமான முக அமைப்பு அனைத்தும் சேர்ந்து நம்மை கிறங்க வைக்கும்.

ஆனால் அவருடைய இன்றைய நிலையை நினைக்கையில் அவர்மீது கொண்ட அபிமானம் அனைத்தும் அனுதாபமாக மாறும். 'எப்படி இருந்தவர் இப்படி ஆகிவிட்டார்' என்ற ஆதங்கம் ஏற்படும். இத்தனைக்கும் ஓராண்டுக்கு முன் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, அவ்வளவாக முதிர்ச்சியோ, முகமாற்றமோ இல்லாமல் அதே பழைய கள்ளமில்லா முகமும், வெகுளித்தனமான பேச்சுமாகவே இருந்தார்.

அவருடைய வாழ்க்கை இப்படி தலைகீழாக மாறியதற்குக் காரணம் கதாசிரியரும் இயக்குனருமான ஒருவர். திரைப்படங்களில் சிறிய வேடங்களிலும், நடனக்காட்சிகளிலும் நடித்துக்கொண்டு, தன் கணவருடனும், குழந்தைகளுடனும் தானுண்டு தன் வாழ்க்கையுண்டு என்றிருந்தவரை துர்ப்போதனை செய்து வம்பில் இழுத்துவிட்டவர் பேராசிரியர் ஏ.எஸ்.பிரகாசம். தன்னிடம் அருமையான கதையிருப்பதாகவும், தன்னுடைய இயக்கத்தில் அதை படமாக தயாரித்து வெளியிட்டால் நன்றாக வெற்றியடையும் எனவும் ஜெய்குமாரியிடமும் அவரது கணவரிடமும் தூபம் போட்டு தயாரிப்பு துறையில் இறக்கிவிட்டார். இவர்களும் அதைநம்பி தயாரிப்பில் இறங்கி இருந்த மொத்தப்பணத்தையும் அதில் முதலீடு செய்தனர்.

(நமது நடிகர் நடிகையரிடம் ஒரு ஏமாற்றமான கணிப்பு இதுதான். சொந்தப்படம் எடுப்பவர்கள் எல்லாம் நடிகர்திலகமாகவும், மக்கள்திலகமாகவும், பாலாஜியாகவும் ஆகிவிட முடியாது. சொந்தப்படம் எடுத்து வெற்றியடைந்த நட்சத்திரங்கள் 10 சதவீதம் என்றால் தோற்றவர்கள் 90 சதவீதத்தினர். இதை அவர்கள் உணர்வதே இல்லை.)

பேராசிரியரின் கதை, வசனம், இயக்கத்தில் "முன்னொரு காலத்திலே" என்ற பெயரில் அந்தப்படம் படப்பிடிப்பு நடந்து வந்தது. ஜெய்குமாரியின் கணவர் நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர். சிங்கப்பூரில் தொழிலதிபர். சொந்தப்படம் காரணமாக சென்னையிலேயே தங்கியதால், சிங்கப்பூர் போக்குவரவு நின்றுபோனது. ஜெய்குமாரியும் தன் பணம் மொத்தத்தையும் அப்படத்தில் முடக்கியதுடன், வெளியிலும் கடன்பெற்று முதலீடு செய்தார். வெளிப்புறப் படப்பிடிப்புகளெல்லாம் நடந்தன.

இந்நிலையில் பாதிப்படம் முடிவடைந்த நிலையில் இயக்குனர் பிரகாசம் தன் சுயரூபத்தைக் காட்டினார். ஒழுங்காக ஷூட்டிங் நடத்துவதில்லை. வேறு படங்களை ஒப்புக்கொண்டுவிட்டு மாதக்கணக்கில் ஜெய்குமாரியின் படத்தைக் கிடப்பில் போட்டார். பின்னர் ஒரேயடியாக படப்பிடிப்பு நின்று போனது. கடன் கொடுத்தவர்களின் நெருக்குதல் காரணமாக வீடு, கார் என்று ஒவ்வொன்றாக இழந்தார் ஜெய்குமாரி. தயாரிப்பில் கவனம் சிதறியதால் மற்ற படங்களில் நடிக்கும் வாய்ப்புக்களும் கைநழுவிப் போயின. அப்படியும் கிடைத்த ஒன்றிரண்டு வாய்ப்புகளில் நடித்து குடும்பத்தை ஓட்டினார். ஆனாலும் சொந்தப்படத்தின் கடன்சுமை அழுத்த, வேறு வழியின்றி தயாரிப்பாளர்கள் சங்கத்திலும், இயக்குனர்கள் சங்கத்திலும் பேராசிரியர் ஏ.எஸ்.பிரகாசம் மீது ஜெய்குமாரி புகார் செய்தார்.

சங்கத்தினர் புகாரை விசாரித்து, இயக்குனர் பிரகாசத்தைக் கண்டித்து, உடனடியாக படத்தை முடித்துக் கொடுக்க உத்தரவிட்டனர். ஜெய்குமாரியும் அவர் கணவரும் கடன் வாங்கி மீண்டும் படப்பிடிப்புக்கு ஏற்பாடு செய்தனர். ஆனால் இரண்டு மூன்று முறை படப்பிடிப்புக்கு வந்ததோடு மீண்டும் முரண்டு பிடித்துக்கொண்டு படப்பிடிப்புக்கு வராமல் வேறு படங்களின் ஷூட்டிங்குக்கு சென்றுவிட்டார் பிரகாசம்.

மேற்கொண்டு படப்பிடிப்பு நடத்த பணத்துக்காக விநியோகஸ்தர்களை அணுக, ஏற்கெனவே இப்படத்தைப் பற்றிக்கேள்விப்பட்டிருந்த அவர்கள், படம் எடுக்கப்பட்டவரை போட்டுப்பார்த்தால்தான் பணம் தரமுடியுமென்று கூற, ஜெய்குமாரியும் தெரிந்தவர்களை வைத்து, லேபை அணுகி நெகட்டிவிலிருந்து ஒரு பாசிட்டிவ் பிரிண்ட் எடுத்து விநியோகஸ்தர்களுக்குப் போட்டுக்காட்ட, பிரகாசம் படம் எடுத்திருக்கும் லட்சணத்தைப் பார்த்த அவர்கள், படம் திருப்தியில்லையென்றும் அதனால் பணம் தரமுடியாதென்றும் கைவிரிக்க கடைசி நம்பிக்கையும் தகர்ந்து போனது. போட்ட பணம் அத்தனையும் படத்தில் முடங்கிப்போக வறுமையின் பிடியில் சிக்கினார்கள்.

தனியார் பள்ளிகளில் படித்த குழந்தைகள் கார்ப்பரேஷன் பள்ளிகளுக்கு மாற்றப்பட்டனர். இதற்கிடையே பேரிடியாக ஜெய்குமாரியின் கணவர் மறைந்தார். செய்வதறியாது தவித்து நின்ற ஜெய்குமாரிக்கு மேஜர் உள்ளிட்ட திரையுலகத்தினர் சிலர் சிறிது காலம் உதவினர். இத்தனைக்கும் காரணமான பேராசிரியர் ஏ.எஸ்.பிரகாசம் எதையுமே கண்டுகொள்ளவில்லை.

ஜெய்குமாரியின் சொந்தப்படமான "முன்னொரு காலத்திலே" கடைசி வரை வெளிவரவே இல்லை. அதில் போட்ட அத்தனை முதலீடும் நாசமானது. திரையுலக வாய்ப்புகளும் நின்று போனதால், சிறு வாடகை வீட்டில் நான்கு பெண்குழந்தைகளுடன் வசித்து வரும் ஜெய்குமாரி, ஸ்பென்சர் பிளாசா கட்டிடத்தில் அலுவலகங்களை கூட்டிப்பெருக்கி, தண்ணீர் எடுத்து வைக்கும் பணியாள் வேலை செய்து வருகிறார். முதல் பெண்ணுக்கு திருமணம் முடித்து விட்டார்.

சில மாதங்களுக்கு முன் நடிகை லட்சுமி நடத்திய 'கதையல்ல நிஜம்' நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜெய்குமாரி, தற்போது யாராவது திரைப்படங்களில் / சீரியல்களில் அம்மா ரோல் அல்லது ஏதாவது சிறு வேடம் கொடுத்தாலும் நடிக்கத்தயாராக இருப்பதாகவும், வாய்ப்பு தரும்படியும் வேண்டினார்.

அவரது வாழ்க்கைப்போராட்டத்தை படித்தபோது என் கண்களில் நீர் துளிர்த்தது..

vasudevan31355
17th July 2014, 07:52 PM
கார்த்திக் சார்,

ஜெய்குமாரியின் வாழ்க்கை உண்மையிலேயே நெஞ்சை உருக்குவதாக இருக்கிறது. வருத்தப்படுவதைத் தவிர வேறு என்ன பண்ண முடியும் நம்மால்?

rajeshkrv
17th July 2014, 08:24 PM
வாசு சார், கிருஷ்ணா, ராகவேந்திரா சார் மற்றும் கார்த்திக் சார். அலசல், கட்டுரை எல்லாமெ அருமை....

நேற்று ராகவேந்திரா சார் குறிப்பிட்ட வீட்டுக்கு வந்த வரலெட்சுமி படம் தெலுங்கில் 1957’ல் இறங்கிய “பாக்கியரேகா” என்ற படம்
பெண்டியாலா இசையில் ஒரு குறிப்பிட்ட பாடல் மிகவும் பிரபலம்... ஏழுமலையான் மகிமையை சொல்லும் சமயத்தில் நாயகனையும் சொல்வதுபோல் அமைந்த பாடல் இசையரசியின் குரலில் ...

தெலுங்கில் நீவுண்டேதா கொண்டபை நா சுவாமி


http://www.youtube.com/watch?v=-jwD6bXkQYw

தமிழில் என் உள்ளம் தன் சொந்தமே


https://www.youtube.com/watch?v=HyGVL_Xk6Uk

Gopal.s
18th July 2014, 04:00 AM
கார்த்திக்,

எங்கள் மனிதத்தை குலுக்கி ,கண்ணீர் விட வைத்து விட்டீர்கள்.இனிமேல் என்னுடைய பிரியமான ஜெயகுமாரியின் கவர்ச்சி நடனம் பார்க்கும் போது ,இந்த சோகம்தானே முந்தி நிற்கும்?

இது என் சிறு வயது நண்பன் ஒருவனை ஞாபக படுத்துகிறது.பஞ்சாமிர்தம் என்றால் மிக பிடித்தம் எனக்கு. திடீரென்று பஞ்சாமிர்தம் தொட்டியில் பழங்களை போட்டு ஆட்கள் அழுக்கு காலால் மிதிப்பார்கள் , நிறைய யானை கால் ஆசாமிகள்.என்பான். பிறகு பஞ்சமிர்தமாவது,ஒன்றாவது?

Gopal.s
18th July 2014, 04:55 AM
ஜமுனா ராணி.

நான் எல்.ஆர்.ஈஸ்வரியின் அக்கா பற்றி பேச போகிறேன். சுசிலாவும்,எல்.ஆர் .ஈஸ்வரியும் பாட்டுலகை ,அதன் பொற்காலத்தில் ஆக்கிரமிக்கு முன் கோலோச்சிய என் ஆதர்சங்கள் லீலாவும்,ஜமுனாராணியும். 1938 இல் பிறந்த ஜமுனா ,உண்மையில் வயதில் ,ராட்ஷசியின் அக்காவா என தெரியாது.ஆனால் பாடும் பாணிக்கு ,அக்காதான். எல்.ஆர்.ஈஸ்வரியின் western பாணி அதகளத்தை தவிர்த்தால் ,அவருடைய குத்து,மெலடி,காமெடி எல்லாமே ஜமுனாவை முன் நிறுத்தும்.ஜமுனாவின் மயக்கும் குரல் (ஈஸ்வரி கொஞ்சம் தடி hoarse ),பாடும் கொஞ்சல்,நெளிவு,இழுப்பு, என்று காதல்,கிராமிய,குத்து,கவர்ச்சி,விழா பாடல்கள்,சோகம்,கெஞ்சல் ,மெலடி அனைத்திலும் கலக்கி குலுக்கியவர்.திரௌபதி என்ற violin வித்வான் தாய். எட்டு வயதில் மகளை பாட்டு துறைக்கு தத்தம் செய்தார்.இவரிடம் மயங்கி உபயோகிக்காத இசையமைப்பாளரே இல்லை.சித்தூர் நகையா,பெண்டியாலா,தக்ஷிணா மூர்த்தி ,விஸ்வநாதன்-ராமமூர்த்தி,கே.வீ.மகாதேவன்,ஜி..ராமநாதன்,டிஜி..லிங் கப்பா,எஸ்.எம்.சுப்பைய்யா நாய்டு,வேதா,சுதர்சனம்,குமார்,இளையராஜா என்று முடிவற்ற லிஸ்ட். இவரின் தலை ரசிகர்களில் ஒருவனாக முன்னிலை படுத்துவதில் ,பெருமை அடைகிறேன். வாராய் என்று தோழிக்கு நாம் வரவேற்பு கொடுத்து,பாட்டொன்று கேட்கும் பாக்யத்தை குறைத்து கொண்டோம்.ஆனாலும் 1968 வரை ஹிட் பாடல்களை கொடுத்து பேச வைத்து கொண்டே இருந்தார்.இவர் குரலில் மயங்கிய இளையராஜா ,நாயகனில் நான் சிரித்தால் period song பாட பயன் படுத்தி வெற்றி கண்டார்.

இவர் பாடிய என் ஆதர்ச பாடல்கள்.

யாரடி நீ மோகினி.

நீயோ நானோ யார் நிலவே.

தாரா தாரா வந்தாரா

காளை வயசு கட்டான சைஸு .

பக்கத்திலே கன்னி பெண்ணிருக்கு

மாமா மாமா மாமா சிட்டு போல பெண்ணிருந்தா

பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன்

சிங்கார சோலையே

பார்த்தீரா ஐய்யா பார்த்தீரா

குங்கும பூவே கொஞ்சு புறாவே

படிக்க வேணும் புதிய பாடம் வாத்தியாரைய்யா

ஆதி மனிதன் காதலுக்கு பின் அடுத்த காதல் இதுதான்

அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே

தாங்காதம்மா தாங்காது சம்சாரம் தாங்காது

கண்ணுக்குள்ள ஒண்ணிருக்கு ஒண்ணுக்குள்ளே பொண்ணிருக்கு

கொஞ்சம் தள்ளிக்கணும் அங்கே நின்னுக்கணும்

மயக்கும் ரோஜா மை லேடி எனக்கு நீதான் சரி ஜோடி

அன்ன நடை சின்ன இடை எப்படி அழகு தெய்வம் பெண்களென்று சொல்லடி

நெஞ்சினிலே நினைவு முகம் நினைவிலும் கனவிலும் அழகு முகம்

எனக்காகவா நான் உனக்காகவா என்னை காணவா

ஒருநாள் உனை பாராதிருந்தால் உடம்பே நல்லால்லே
ஐயோ! மனசே நல்லால்லே'


ஆட்டுக்கு வாலை அளந்து வச்சவன் புத்திசாலி

அலேக் ...வாழை தண்டு போல உடம்பு அலேக்

புன்னகை மன்னன் பூவிழி கண்ணன்

நான் சிரித்தால் தீபாவளி .

என் நெஞ்சில் நிறைந்த அபூர்வ பாடகி ஜமுனா ராணிக்கு என் வணக்கங்கள் .

Gopal.s
18th July 2014, 04:59 AM
ஜமுனா ராணி

http://www.youtube.com/watch?v=lkDSwYJwj2I

http://www.youtube.com/watch?v=IA1s8rwx9R8

http://www.youtube.com/watch?v=G2B97RTcB3E

Gopal.s
18th July 2014, 05:52 AM
கானடா/தர்பாரி கானடா.

இரவின் மடியில் சொக்கி போய் ,இன்ப உணர்ச்சிகளின் எல்லைக்கே சென்று ,தூங்கவே மனசின்றி,மொட்டை மாடியில் ஆகாயத்தை வெறித்து,விகசித்து, வானவெளியில் நட்சத்திரங்களோடு உலவ வேண்டுமா? அடடா..... இதன் சுகமே அலாதி.

கானடா ராகம் பெரிய குடும்பங்களை தன்னுள் அடக்கியது ஆசாவரி மற்றும் காபி குடும்ப ராகங்களின் நெருங்கிய உறவினர். கர்நாடக
ராகமென்றாலும் ,ஹிந்துஸ்தானியில் கொண்டாட படுவது. கானடா கரஹரப்ரியாவின் ஜன்யம்.தர்பாரி கானடா ,நட பைரவியின் ஜன்யம்.ஆனாலும் நெருக்கமான ஒரே குடும்பம்.

தர்பாரி என்று பெயர் வர காரணமே,இதன் அழகில் சொக்கிய தான்சேன் ,இதில் பயிற்சி பெற்று ,அக்பர் தர்பாரில் பாடி,அனைவரையும் சொக்க வைத்தாராம்.நிறைய பயிற்சி எடுத்து பாட வேண்டிய கடினமான ராகங்கள் .

இந்த படம் இரட்டை வேடங்களை போட்டால் எப்படி நடிக்க வேண்டும் என்று உலக பள்ளிகளுக்கு பயிற்சி கொடுக்க வேண்டிய பாடம்.இதில் நடித்தவரே,என்னால் இப்போது அப்படி நடிக்க முடியுமா என்று வியந்த எனது அபிமான படம்.நடிகர்திலகத்தின் ஆக்ரமிப்பில் மற்றவை மறந்து போன இந்த படத்திலும் தனித்து தெரிந்த அழகிய பாடல் ,ஜி.ராமனாதனின் அபூர்வ சங்கதிகளில் மெருகேறிய "முல்லை மலர் மேலே".

அது பெரிய வெற்றி படமல்ல என்றாலும் ,அந்த தனித்த இயக்குன முன்னோடியின் குறிப்பிட வேண்டிய படம்.இரட்டையர்களின் பொற்காலத்தில் ,ஸ்ரீதரின் படமென்றால் கேட்கவும் வேண்டுமா?காந்தர்வ மணத்தில் கலக்கும் காதல் ஜோடிகளுக்கு ,காந்தர்வ கானத்தையே தந்தனர் விஸ்வநாதன்-ராமமூர்த்தி .பீ.பீ.எஸ்-ஜானகி இணைவில் அந்த உன்னத மெலடி "பொன்னென்பேன் சிறு பூவென்பேன்".

அந்த இசையமைப்பாளருக்கு ,ரோஜா கொடுத்து தமிழ் ரசிகர்கள் அடிமையான ரோஜா.அதில் பட்டியில் இருந்து வந்த கிராமிய நாயகியின் ,கண் பொத்தி, ஒரு அதிசய பனி உலகத்தை காட்டும் நனவான கனவுலக பாடல் "புது வெள்ளை மழை ".

கானடா/தபாரி கானடாவின் மற்றவை .

நாணி சிவந்தன மாதரார் கண்கள் -கர்ணன்.

அழகு தெய்வம் மெல்ல மெல்ல - பேசும் தெய்வம்.

மல்லிகை என் மன்னன் மயங்கும்- தீர்க்க சுமங்கலி.

பூமாலை வாங்கி வந்தார் -சிந்து பைரவி .

அலை பாயுதே கண்ணா- அலை பாயுதே.

சிவ சங்கரி சிவானந்த லஹரி -ஜகதல பிரதாபன்.

சின்னஞ்சிறிய வண்ண பறவை -குங்குமம்.

இசை மேடையில் இந்த வேளையில் -இளமை காலங்கள்.

மலரே மௌனமா - கர்ணா .

காற்றே என் வாசல் வந்தாய் -ரிதம்.

நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில் -கன்னத்தில் முத்தமிட்டால்

RAGHAVENDRA
18th July 2014, 07:13 AM
Raghavendra: I am not sure what you mean. Because I do not visit this thread. I took a peak because I saw "madhu" in the last column. If you meant 'Rubaiyat' of Omar Khayyam, two of his poems - veyyilketra nizhal uNdu and ezhudhi chellum vidhiyin kai- were used KaLvanin Kaadhali(1955), the movie version with Sivaji Ganesan in the lead. Those two are translations of ' Beneath the bow with a jug of wine' and 'Moving finger writes and having writ moves on'. Desikavinayakam PiLLai was the translator. I wrote about 'veyyiketra nizhal uNdu' in Thiraiyil Ilakkiyam series in TFMpage Magazine under the title 'vaname sorgam'. You might want to read it. Doon't know whether 'KaLvanin Kaadhali' was discussed.

Dear rajraj
Happy to read your posting with a wealth of info. Ezudhi chellum vidhiyin kaigal featured in the film Porter Kandham as a thogaiyara for the song "Varundadhe Maname" sung by Tiruchy Loganathan and composed by the duo MSV-TKR. I have read it.

Kalvanin Kadhali has not yet been discussed here. We would like to discuss at length on the literary aspects too which however, our friends have already started in one or two songs in this thread.

Please take part and share your valuable knowledge on songs and literature here too.

Of course, what I wrote in that line is connected to my earlier posting sharing a song from the Tamil film "Ganga Yamuna Kaviri" which has a song in qawwali type starting with the lines "Omar Khayyam Ezudhi Vaitha Kavidhai".

RAGHAVENDRA
18th July 2014, 07:15 AM
கோபால்
தெனாலிராமன் திரைப்படத்திற்காக பதிவு செய்யப் பட்ட தென்னவன் தாய் நாட்டு சிங்காரமே பாடலுக்கான இணைப்பு

http://www.pradosham.com/msv/1956%20-%20Thenali%20Raman/Thenali%20Raman-1956%20-%20ThennavanThaainattu-P.Leela-Kannadasan.mp3

RAGHAVENDRA
18th July 2014, 07:19 AM
வாசு சார் என்றைக்கும் தாங்கள் தரும் பாடல்களும் அவற்றிற்கான இணைப்புரையும் ஸ்பெஷல் தான். கிருஷ்ணா ஒவ்வொரு பாட்டையும் நினைவு கூரும் போது ஏராளமான தகவல்கள் கிடைக்கின்றன. கார்த்திக் சார் தரும் மேலதிக விவரங்கள், ராஜேஷின் அபூர்வமான தகவல்கள், மது, ராஜ்ராஜ் உள்பட பல சீனியர்கள் இத்திரியில் பங்கு பெறுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நீல் அவர்களின் அபூர்வ பாடல்கள் திரியினைப் போன்று இதுவும் வேகமாக மக்களை சென்றடைவது பாராட்டுக்குரியதாகும். ஒவ்வொருவரும் அளிக்கும் உழைப்பு மெச்சத் தக்கது.

தொடருங்கள் ...அனைவருக்கும் என் உளமார்ந்த பாராட்டுக்கள்

RAGHAVENDRA
18th July 2014, 07:28 AM
பொங்கும் பூம்புனல்

http://youtu.be/_9ql3Xo9-_U

அலைபோலத் தென்றல் மலர் மீதிலே விளையாடும் இன்பத்தைப் பாரும்...

மிகவும் இனிமையான பாடல். பி.பி.ஸ்ரீநிவாஸ் மற்றும் பி.சுசீலாவின் குரல்களில் அந்தக் காலத்தில் மட்டுமல்ல இந்தக் காலத்திலும் கூட ரசிக்கக் கூடிய பாடல்.

தோழன் திரைப்படத்தில் இடம் பெற்றது இப்பாடல் . 25.11.1960 அன்று வெளியான தோழன் திரைப்படத்திற்கு இசை ஜி.ராமநாதன் அவர்கள். தயாரிப்பு ஏ.திருவேங்கட முதலியார். இயக்கம் கே. வேம்பு. கதை சக்தி கிருஷ்ணசாமி. வசனம் சக்தி கிருஷ்ணசாமி, ஏ.வரதராஜன், கவி ஏ.எஸ்.ராஜகோபால். பாடல்கள் மருதகாசி, கண்ணதாசன்.
ஒளிப்பதிவு எம்.ஏ.ரகுமான். எடிட்டிங் சி.ஹெச்.வேங்கடேஷ்வர ராவ், டி.சுந்தரராஜன். கலை அங்கமுத்து நடனம் வேம்பட்டி சத்யம். ஸ்டில்ஸ் ஆர்.என்.நாகராஜ ராவ். விஜயா லேபரட்டரி.

நடிக நடிகையர் - மனோகர், அஞ்சலி தேவி, நரசிம்ம பாரதி, மாதுரி தேவி, என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் மற்றும் பலர்.

vasudevan31355
18th July 2014, 07:33 AM
ஜமுனா ராணி.

இயேசு நாதர் பேசினால் அவர் என்ன பேசுவார்

என் நெஞ்சில் நிறைந்த அபூர்வ பாடகி ஜமுனா ராணிக்கு என் வணக்கங்கள் .

அண்ணா!

இந்தப் பாட்டை பாடியது பி.வசந்தா அண்ணா! ராஜேஸ்வரி அல்ல.

'ஜினுக்கு ஜினுக்கு மேலே ஜினுக்குத்தான்
இங்கு ஒனக்கும் எனக்கும் மெல்ல கணக்குத்தான்
ஒருநாள் உனை பாராதிருந்தால் உடம்பே நல்லால்லே
ஐயோ! மனசே நல்லால்லே'

'தாயே உனக்காக' படத்தில், ஆர்மி கேம்ப்பில் எஸ்.எஸ்.ஆர் உள்ளிட்ட இராணுவ வீரர்கள் மத்தியில் சச்சு ஆடிப்பாடும் இந்தப் பாடலைத்தான் ஜமுனா ராணி பாடியிருந்தார். (எஸ்.எஸ்.ஆர் இந்தப் பாட்டில் பார்க்க இளமையாக, நன்றாக இருப்பார். நன்றாகவும் 'மஸ்த் கலந்தர்' (mast kalandar) ஆடியிருப்பார்.

RAGHAVENDRA
18th July 2014, 07:38 AM
பொங்கும் பூம்புனல்

http://youtu.be/yLhNd5oAEd8

நடிகர் திலகம் நடித்த நானே ராஜா திரைப்படம் பாடல்களுக்கு பிரசித்தி பெற்றது. குறிப்பாக சிலோன் ரேடியோவில். அதுவும் மேலே தரப்பட்டுள்ள பாடல் கேட்கும் ஒவ்வொருவரையும் மயக்கும் வல்லமை பெற்றது. சிந்து பாடும் தென்றல் வந்து இன்பம் பொங்க வீசும் போது அனுபவிக்க தயங்குவோமா என்ன.

இப்படத்திற்கு இசை டி.ஆர்.ராம்நாத். பாடியவர்கள் வி.என்.சுந்தரம் மற்றும் பி.லீலா. பாடல் காட்சியில் நடித்தவர்கள் முஸ்தஃபா மற்றும் ஸ்ரீரஞ்சனி. ஸ்டைல் மன்னன் கலக்கும் மந்த மாருதம் பாட்டை நாம் அனைவரும் அறிந்திருப்போம்.

மேலே தரப்பட்டுள்ள பாடல் படம் நெடுக்க பின்னணியில் புல்லாங்குழலில் ஒலித்துக் கொண்டே இருக்கும். அப்படியே நம்மை மறந்து சொக்கி விடுவோம்.

நானே ராஜா படத்தைப் பற்றிய கூடுதல் தகவல்களுக்கான இணைப்பு கீழே தரப்படுகிறது.

http://www.mayyam.com/talk/showthread.php?10239-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Filmography-News-and-Events&p=1019933&viewfull=1#post1019933

RAGHAVENDRA
18th July 2014, 07:42 AM
அது என்ன மாயமோ தெரியவில்லை.. எல்.ஆர். ஈஸ்வரி என்றால் அங்கு ஜமுனா ராணி என்பது எழுதப் படாத விதியோ....

பேசாமல் எல்.ஆர்.ஈஸ்வரி-ஜமுனா ராணி பாடல்களைப் பற்றி ஒரு பட்டிமன்றம் நடத்தலாம் போலிருக்கிறதே...

Gopal.s
18th July 2014, 08:00 AM
இரவு பணியின் தூக்க கலக்கம் மன்னிக்க பட கூடியதே. நான் ஜமுனா ராணி என்றால்,நண்பர் ராஜேஸ்வரிக்கு செல்கிறார். அது வசந்தாவே. ஒப்பு கொள்கிறேன்.

RAGHAVENDRA
18th July 2014, 08:11 AM
http://i1.ytimg.com/vi/kZbxUZYjePU/hqdefault.jpghttp://www.thehindu.com/multimedia/dynamic/00783/17MP_L_R__ESWARI_783525g.jpg

ஒரே அளவில் படம் கிடைக்கவில்லை.... அதான்...

Gopal.s
18th July 2014, 08:19 AM
ஒரே அளவில் படம் கிடைக்கவில்லை.... அதான்...
யாராவது கேட்டோமா? இந்த வம்புதானே வேணாங்கிறது.



போட்டோவில் எப்படி போனாலும் மனதளவில் சமத்துவமே இருவருக்கும்.

vasudevan31355
18th July 2014, 08:26 AM
இரவு பணியின் தூக்க கலக்கம் மன்னிக்க பட கூடியதே. நான் ஜமுனா ராணி என்றால்,நண்பர் ராஜேஸ்வரிக்கு செல்கிறார். அது வசந்தாவே. ஒப்பு கொள்கிறேன்.

வேண்டுமென்றே கண்டு பிடிப்பீர்களா என்றுதான் போட்டேன். பரவாயில்லை. உஷார்தான். (கீ.வி.மீ.ம.ஓ)

Gopal.s
18th July 2014, 08:33 AM
இன்னொரு சிறு தவறு. ஏ.எல்.ராகவன் பதிவில்.நானே திருத்தி விடுகிறேன். பார்த்தீரா பாடல் எஸ்.சி.கிருஷ்ணன். ஏ'எல் அல்ல.

Richardsof
18th July 2014, 09:37 AM
இனிய நண்பர் திரு கார்த்திக் சார்

நடிகை ஜெயகுமாரி பற்றிய பதிவு - மிகவும் மனதை நெருடியது . 1970 களில் பல படங்களில் சிறப்பாக நடன மாடி பெயர் பெற்றவர் . குறிப்பாக ரிக்ஷாக்காரன் - கெளரவம் பாடல் காட்சியில்
இவருடைய டான்ஸ் பிரபலம் .

2009ல் சென்னையில் நடைபெற்ற நாடோடி மன்னன் -விழாவில் இவரை பார்த்தேன் . அப்போது
எடுக்கப்பட்ட படங்கள் .
http://i62.tinypic.com/2drs1w2.jpghttp://i61.tinypic.com/zkpqf9.jpghttp://i60.tinypic.com/k0iixv.jpg

Gopal.s
18th July 2014, 09:43 AM
அதுதானே பார்த்தேன்.பிணம் தின்னி கழுகின் மூக்கு சும்மா வேர்க்காதே?

rajeshkrv
18th July 2014, 09:43 AM
ராகவேந்திரா சார், கோபால் மற்றும் வாசு சார். அருமை அருமை...


அதிகம் கேட்டிராத ஒரு பாடல்

இன்பமெல்லாம் தந்தருளும் ஏ தயா சாகரி .. அன்பே தெய்வம் திரையில் சாஸ்த்ரியின் இசையில் இசையரசியின் கானம்

கேட்க கேட்க தெவிட்டாத இன்பம்

inbamellamtandarulum-AnbeDeivam-PSusheela.mp3 (http://www.4shared.com/mp3/wSX8WVlX/inbamellamtandarulum-AnbeDeiva.html)

gkrishna
18th July 2014, 10:02 AM
சில மாதங்களுக்கு முன் நடிகை லட்சுமி நடத்திய 'கதையல்ல நிஜம்' நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜெய்குமாரி, தற்போது யாராவது திரைப்படங்களில் / சீரியல்களில் அம்மா ரோல் அல்லது ஏதாவது சிறு வேடம் கொடுத்தாலும் நடிக்கத்தயாராக இருப்பதாகவும், வாய்ப்பு தரும்படியும் வேண்டினார்.

அவரது வாழ்க்கைப்போராட்டத்தை படித்தபோது என் கண்களில் நீர் துளிர்த்தது..

டியர் கார்த்திக் சார்
ஜெயகுமாரி பற்றிய உங்கள் கட்டுரை பல நினைவலைகளை மீட்டு விட்டது . ஒரு 10 அல்லது 12 ஆண்டுகள் இருக்கும் என்று நினைவு அப்போது ஓல்ட் மகாபலிபுரம் ரோடு போடப்பட்டதாக நினைவு இல்லை பெருங்குடி செல்ல வேண்டும் என்றால் velacherry இல் இருந்து தான் கந்தன் சாவடி சென்று பெருங்குடி செல்வோம் . என்னுடைய அத்தை பையன் ஒருவர் அங்கே வீடு கட்டி க்ரஹபிரவேசம் செய்த போது அங்கே வீட்டு வேலைக்கு ஒரு பெண்மணி வந்து இருந்தார்.எனக்கு அந்த பெண்மணியை பார்த்துஉடன் எங்கையோ பார்த்து இருக்கிறோம் கொஞ்சம் சற்று குண்டாக இருந்தார். பிறகு தான் அவர்கள் திருமதி ஜெயகுமாரி என்று அறிந்தேன் . ஒரு 20 நிமிட நேரம் அவர்களுடன் பேசிக்கொண்டு இருந்தேன். அப்போது அவருடைய மூத்த பெண் MCA படித்து கொண்டு இருப்பதாக சொன்னார் . பழைய வாழ்கை எதையும் பற்றி பேசவில்லை .

நிழல் நிஜமாகியது

vasudevan31355
18th July 2014, 10:21 AM
இன்றைய ஸ்பெஷல் (31)

அந்தப் பெண் ரயில்வே ஸ்டேஷனில் தயிர் விற்பவள். அவள் விற்கும் பொருளைப் போலவே அவளும் 'தள தள'. அழகு திரண்டு வந்து ஜொலிக்கும் கிராமத்து தயிர்க்காரி. 'வெடுக் வெடுக்'கென்று கொஞ்சிப் பேசுவதில் தயிர்க்காரி இல்லை இல்லை கைகாரி.

அந்த மங்கைக்கு யார் மேல் ஆசை பாருங்கள். அந்த ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் மீது. ("இந்தத் தேக்கத்தை கட்டினாரே எஞ்சினியர்... அவர் இங்க வேலை செஞ்ச ஒரு சித்தாளைக் காதலிச்சாரு" என்று நாகேஷ் கைடாக 'தெய்வமகனி'ல் மேடத்திடம் அணைக்கட்டு சுற்றிக் காட்டும் போது சொல்வாரே! அது மாதிரி) ஸ்டேஷன் மாஸ்டரும் சும்மா சொலக் கூடாது... லேசான வயிறுடன், சுருள் முடியுடன் சும்மா 'ஜம்'மென்று தயிர்க்காரிக்கென்றே பிறந்தது போல வாட்ட சாட்டமாக ஜம்மென்று இருப்பார். ஆனல் அந்த ஸ்டேஷன் மாஸ்டரோ சிடுமூஞ்சி...முன்கோபி. அவள் ஸ்டேஷனில் தயிர் விற்கும் போது அவர் 'பிளாட்பாரத்தில் தயிர் விற்கக் கூடாது' என்று கண்டித்துக் கொண்டே இருப்பார். ஆனால் அவள் தயிர் விற்க வருவதே மாஸ்டரை லவ்ஸ் விடத்தானே! தங்கை வெளியில், படிக்க தனியே கஷ்டப்படும் அந்த மாஸ்டருக்கு எல்லா உதவியும் மாய்ஞ்சி மாய்ஞ்சி செய்பவள் அவள்தானே!

நம்ம ஸ்டேஷன் மாஸ்டரை சாதரணாமாக நினைக்காதீர்கள். கண்டிப்பு, கோபம், கறார் பேர்வழி. ஆனால் எல்லாம் வெளியில்தான். சாருக்கும் அம்மணி மேல் அப்படி ஒரு இதுதான். ஆனால் காட்டிக் கொள்ள மாட்டார். பிரஸ்டீஜ் பத்மநாபன் ஆயிற்றே!

ஒரு நாள் ஸ்டேஷன் மாஸ்டர் வேலைக்குப் போகும்போது யாரோ பின் தொடர்ந்து வருவது போல் பிரமை. பார்த்தால் தயிர்க்காரி 'தலுக் குலுக்' நடையில் தயிர்க் கூடையுடன் வேகமாக அவரைக் கடக்கிறாள்.

இந்த மனிதர் போறவள் போகட்டும் என்று சும்மா இருக்க வேண்டியதுதானே! அவளிடம் பொய்க் கோபமாய் 'ஏன் பின் தொடர்ந்து வருகிறாய்?' என்று வலுவில் பேச்சுக் கொடுக்கிறார். (உள்ளே மலை மலையாய் ஆசை இருக்கே!)

'ஏய்! ஏன் என் பின்னாடி வர்ற?'

'ம்..உங்க பின்னாடி வராம வேற யார் பின்னாடி போறதாம்'.. (கொஞ்சல்)

'எதுக்காக பின்னே மறைஞ்சி மறைஞ்சி வர்ற?'

'உங்க முன்னாடி......வெக்கமா இருக்கு'

'ஏன் என்னப் பார்த்து வெக்கப் படற நீநீ ... ?

'உங்களைப் பார்த்து வெக்கப்படாம வேற யாரப் பார்த்து வெக்கப்படுவேன்? (ஆத்தாடி!என்னா ஒரு ஏத்த இறக்கம் 'வெடுக் வெடுக்'குனு)

'ஆங்... நீ பேசறது எனக்கொண்ணும் பிடிக்கல'.

'நீங்க பேசறது எனக்குப் புடிக்குதுங்க. உங்களோட பேசினா பொழுது போறதே தெரியலீங்க'.

(இவர் பழித்துக் காட்டியபடி) அய்ய!..உங்க கூட பேசிக்கிட்டு இருக்கறதுதானே எங்க வேலை?

'வேலையும் முக்கியம்... இதுவும் முக்கியமுங்க' (அடிச்சா பாருங்க ஒரு அடி)

அவள் இரண்டு கைகளிலும் பச்சை குத்தியிருப்பதைப் பார்த்து கேட்கிறார் மாஸ்டர். ஒரு கையில் 'சிவனுடைய பச்சை' இன்னொரு கையில் 'ராமருடைய பச்சை' என்று கூறுகிறாள் அவள்.

இரண்டையும் சேர்த்துக் காட்டி 'சிவராமரு' என்று கூறி 'அய்யயோ பேரை சொலிட்டேனே' என்று வெட்கப்படுகிறாள்.

அப்போதான் நம்ம ஸ்டேஷன் மாஸ்டருக்கு தெரிகிறது

அட! அது நம்ம பேரு! (ஓ.. ..நம்ம பேரைத்தான் இப்படி நாசூக்கா பச்சை குத்தியிருக்கா)

அவளிடம் சும்மனாச்சுக்கும் கோபிக்கிறார்.

'சாமின்னு நெனச்சா கையில குத்திகிட்டு இருக்கே?'

'பின்னே உங்கள நெனச்சா குத்தினேன்?'

'ஆமாம்!'

அவளும்

'ஆமாமாம். அப்படித்தான் வச்சுக்கோங்களேன்'.

ஆற்றுப்பாலம், வயல்வெளி, நதியோரம் என்று அந்த உம்மணாமூஞ்சி மாஸ்டரை ஒரு இடம் விடாமல் துரத்தி, துரத்தி, கோபத்தை விடச் சொல்லி, அப்படியே தன் காதலையும் வெளிப்படுத்தி அப்படியே பாட ஆரம்பிக்கிறாள்.

ஸ்டேஷன் மாஸ்டரும், 'தள தள' தயிர்க்காரியும்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/anbukkarangallvob_001047840.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/anbukkarangallvob_001047840.jpg.html)

உங்கள் அழகென்ன அறிவென்ன
உங்கள் அழகென்ன அறிவென்ன
மனமென்ன குணமென்ன கோபம் வரலாமா
இரு கண்ணிருக்க கண்ணெதிரே பெண்ணிருக்க
பெண்ணெதிரே கொஞ்சம் வரலாமா
கோபம் வரலாமா கொஞ்சம் வரலாமா

காதளவு கண்கள்.. காலளவு கூந்தல்
பெண்ணழகு எங்கே வரும் எங்கே வரும்
அந்திப்பகல் துணையிருக்க
ஆருயிராய் நான் இருக்க
கோபங்கள் எங்கே வரும்
கோபங்கள் எங்கே வரும்

அழகென்ன அறிவென்ன
உங்கள் அழகென்ன அறிவென்ன
மனமென்ன குணமென்ன கோபம் வரலாமா
இரு கண்ணிருக்க கண்ணெதிரே பெண்ணிருக்க
பெண்ணெதிரே கொஞ்சம் வரலாமா

திங்களுக்குத் தங்கை
தென்றலுக்குத் தோழி
வஞ்சியிவள் வந்தேன் என்றாள்
வந்தேன் என்றாள்

திங்களுக்குத் தங்கை
தென்றலுக்குத் தோழி
வஞ்சியிவள் வந்தேன் என்றாள்
வந்தேன் என்றாள்

திங்களுக்குத் தங்கை
தென்றலுக்குத் தோழி
வஞ்சியிவள் வந்தேன் என்றாள்
வந்தேன் என்றாள்

முத்துநகை சிந்தி விழ
முந்தானை முந்திவிழ
ஆசைகள் தந்தேன் என்றாள்
ஆசைகள் தந்தேன் என்றாள்

அழகென்ன அறிவென்ன
உங்கள் அழகென்ன அறிவென்ன
மனமென்ன குணமென்ன கோபம் வரலாமா
இரு கண்ணிருக்க கண்ணெதிரே பெண்ணிருக்க
பெண்ணெதிரே கொஞ்சம் வரலாமா

ஆயிரத்தில் ஒன்று ஆணழகன் என்று
கன்னிமனம் இங்கே வரும் இங்கே வரும்
ஆயிரத்தில் ஒன்று ஆணழகன் என்று
கன்னிமனம் இங்கே வரும் இங்கே வரும்

கொத்து மலர் பூத்திருந்தும்
கொய்யாமல் காத்திருந்தால்
காலங்கள் சென்றே விடும்
காலங்கள் சென்றே விடும்

அழகென்ன அறிவென்ன
உங்கள் அழகென்ன அறிவென்ன
மனமென்ன குணமென்ன கோபம் வரலாமா
இரு கண்ணிருக்க கண்ணெதிரே பெண்ணிருக்க
பெண்ணெதிரே கொஞ்சம் வரலாமா
கோபம் வரலாமா கொஞ்சம் வரலாமா

என்று அந்த 'அன்புக் கரங்களி'ல் தவழ்கிறாள்.


https://www.youtube.com/watch?v=Owqb3x3KuNw&feature=player_detailpage

madhu
18th July 2014, 10:22 AM
அது என்ன மாயமோ தெரியவில்லை.. எல்.ஆர். ஈஸ்வரி என்றால் அங்கு ஜமுனா ராணி என்பது எழுதப் படாத விதியோ....

பேசாமல் எல்.ஆர்.ஈஸ்வரி-ஜமுனா ராணி பாடல்களைப் பற்றி ஒரு பட்டிமன்றம் நடத்தலாம் போலிருக்கிறதே...

இரண்டு இனிமையான குரல்களும் இணைந்து பாடிய பாடல்களைக் கேட்டாலே போதுமே

இதோ சாம்பிளுக்கு ஒண்ணு

படம் : மணி ஓசை

கட்டித்தங்க ராஜாவுக்கு காலை நேரம் கல்யாணம்


http://youtu.be/63bvfz9fAlw

rajeshkrv
18th July 2014, 10:25 AM
உங்கள் அழகென்ன அறிவென்ன .. என்ன அழ்கான பாடல்
என் தமிழ் ஆசான் வாலி ஐயாவின் நினைவு நாளான இன்று அவரது அருமையான பாடலை நினைவு கூர்ந்ததற்கு நன்றி

இரவு முடிந்துவிடும், ராமனுக்கே சீதை, காகிதத்தில் கப்பல் செய்து என எல்லாமே அருமையான முத்துக்கள்.

madhu
18th July 2014, 10:27 AM
ம்ம்... சரி.. இந்தப் பாடலில் எந்த வரிகளை எல்.ஆர்.ஈஸ்வரி பாடி இருக்கிறார், எந்த வரிகளை ஜமுனா ராணி பாடி இருக்கிறார் என்று கண்டு பிடிச்சு வச்சுக்குங்க..

படம் : வெகுளிப் பெண்

தித்திக்கின்றதா முத்தமிட்டது...??

http://youtu.be/Hvh2AhyVX-s

rajeshkrv
18th July 2014, 10:35 AM
ஆசையும் நேசமும் பாடலில் விக்கல் ஈஸ்வரி குரல் ஜமுனாராணி (ஈஸ்வரியே கூறியது)

vasudevan31355
18th July 2014, 10:38 AM
என் தமிழ் ஆசான் வாலி ஐயாவின் நினைவு நாளான இன்று அவரது அருமையான பாடலை நினைவு கூர்ந்ததற்கு நன்றி



நன்றி ராஜேஷ் சார்! அற்புதமாகக் கண்டு பிடித்து விட்டீர்களே!

vasudevan31355
18th July 2014, 10:39 AM
ஆசையும் நேசமும் பாடலில் விக்கல் ஈஸ்வரி குரல் ஜமுனாராணி (ஈஸ்வரியே கூறியது)

இதுவரை நான் கேள்விப்படாத தகவல். நன்றி ராஜேஷ் சார்.

vasudevan31355
18th July 2014, 10:41 AM
'சிவந்தமண்'ணின் அந்த சவுக்கடி சவுண்ட் ஈஸ்வரி தந்ததா?

பலரும் பலவிதமாகச் சொல்லுகின்றனர்.

vasudevan31355
18th July 2014, 10:51 AM
ம்ம்... சரி.. இந்தப் பாடலில் எந்த வரிகளை எல்.ஆர்.ஈஸ்வரி பாடி இருக்கிறார், எந்த வரிகளை ஜமுனா ராணி பாடி இருக்கிறார் என்று கண்டு பிடிச்சு வச்சுக்குங்க..

படம் : வெகுளிப் பெண்

தித்திக்கின்றதா முத்தமிட்டது...??



ரொம்பக் கஷ்டமாய் இருக்கிறது மது சார்.:confused2:

vasudevan31355
18th July 2014, 11:16 AM
டியர் ராகவேந்திரன் சார்,

'தோழன்' படத்தின்

'அலைபோலத் தென்றல் மலர் மீதிலே'

அற்புத பாடலைக் கேட்டு இன்புற்றேன்.

என்னிடம் இருந்த 'பேசும் படம்' இதழ்கள் சிலவற்றைப் புரட்டினேன். 1962 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இதழில் நீங்கள் குறிப்பிட்டிருந்த 'தோழன்' படத்தின் விளம்பரம் கிடைத்தது.

இந்த அரிய ஆவணம் தங்களுக்காகவும், நம் அன்பு நண்பர்களுக்காகவும் இப்போது நம் திரியில்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/ad2d93e2-096e-4a0a-a7ff-50337c11a0d7.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/ad2d93e2-096e-4a0a-a7ff-50337c11a0d7.jpg.html)

gkrishna
18th July 2014, 12:06 PM
அந்த வீட்டில் ஒரு கோவில்
ராதிகா சுதாகர் விஜயபாபு நடித்து இருக்கிறார்கள்
ஷங்கர் கணேஷ் இசை

இந்த படத்தின் கதை திரைகதை ஏதாவது தகவல் உண்டா வாசு சார்

http://www.5eli.com/Lyrics/wp-content/uploads/2011/10/Antha-Veetil-Oru-Kovil-225x300.jpg

பாடல்: ஆயிரம் ஜென்மங்கள்...ஆசைகள் ஊர்வலம்..
பின்னணி: பி.ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம்
----------------------------------------------------------------------

பாடல்: நெஞ்சம்தானே கேட்கிறேன்
பின்னணி: கே.ஜே.ஜேசுதாஸ்

http://www.inbaminge.com/t/a/Antha%20Veettil%20Oru%20Kovil/

vasudevan31355
18th July 2014, 12:18 PM
இல்லை கிருஷ்ணா சார்.

நானே இப்போதுதான் இந்தப் படத்தைப் பற்றிக் கேள்விப்படுகிறேன்.

gkrishna
18th July 2014, 12:30 PM
http://www.5eli.com/Lyrics/wp-content/uploads/2011/09/Thunive-Thozhan.jpghttp://i1.ytimg.com/vi/cm6IDJCW-7M/hqdefault.jpg

துணிவே தோழன் 1980
சிவகுமார் சத்யகல,கவர்ச்சி வில்லன் கே.கண்ணன் ஐயங்கார்
நடித்து வெளிவந்த
மாடர்ன் திடேர்ஸ் R சுந்தரம் இயக்கம்
இசை ராஜேஷ் (வல்லவன் வருகிறான் புகழ்)

ஜாலி ஆபிரகாம் சைலஜா குரல்களில்

'ராஜா உன்னை பார்தாலே போதும் '


http://www.youtube.com/watch?v=ge7FW8vBUrg

gkrishna
18th July 2014, 12:35 PM
இல்லை கிருஷ்ணா சார்.

நானே இப்போதுதான் இந்தப் படத்தைப் பற்றிக் கேள்விப்படுகிறேன்.

jayachandran vani song nalla irukku
netru thaan ketten

பார்த்தால் கடையநல்லூர் சினி ஆர்ட்ஸ் M A காஜா படம் மாதிரி தெரியுது

vasudevan31355
18th July 2014, 12:36 PM
கிருஷ்ணா சார்,

'வல்லவன் வருகிறான்' படத்தில் ஒரு அட்டகாசமான பாடல் ஒன்று ராஜேஷின் அட்டகாசமான மியூஸிக்கில்.

சும்மா பாலாவும், சசிரேகாவும் பின்னி எடுக்கிறார்கள்.

ராஜய்யா என் மேலே ஆசையா
கண்ணாலே பாரய்யா
சொன்னாலே கேளய்யா

அம்மம்மா ராஜம்மா
ராஜாத்தி கேளம்மா
ராஜாவைப் பாரம்மா
உனக்காக நானனம்மா
தட்டான் என்று நான் சொன்னால்

ஆயிரம் பொன்னல்லொ
அய்யா கையில் சாய்ந்தாலே
ஆனந்தம் உண்டல்லோ
மஞ்சள் ரதியும் நானானால்
மன்மதன் நானல்லோ
மழையும் காற்றும் சேர்ந்தாலே (நிஜமாகவே சும்மா ஜிலு ஜிலு என்று பாடுகிறார் பாலா)
ஜிலுஜிலு சுகமல்லோ

தாமரைப் பூப் போல் ஜொலித்தது
சந்தித்த போதே இழுத்தது
சாயந்திரம் வந்து விட்டால்
சரசம் நமக்குள்ளே

ராஜய்யா என் மேலே ஆசையா
கண்ணாலே பாரய்யா
சொன்னாலே கேளய்யா

அம்மம்மா ராஜம்மா
ராஜாத்தி கேளம்மா
ராஜாவைப் பாரம்மா
உனக்காக நானனம்மா

சித்திரம் போலே கண்ணாலே
சிரிக்கும் பெண்ணல்லோ
செவ்வந்திப் பூவின் இதழாலே
அழைக்கும் பெண்ணல்லோ
முத்திரை காட்டும் கையாலே
வளைக்கும் பெண்ணல்லோ
முகத்தை என்றும் ஆடையினால்
மறைக்கும் பெண்ணல்லோ

கண்ணுக்கு கண்ணே சுகம் சுகம்
ஆணுக்கு பொண்ணு பதம் பதம்
ஆசையெல்லாம் இருவருக்கே
ஆடடி ராஜாத்தி

ராஜய்யா என் மேலே ஆசையா
கண்ணாலே பாரய்யா
சொன்னாலே கேளய்யா

அம்மம்மா ராஜம்மா
ராஜாத்தி கேளம்மா
ராஜாவைப் பாரம்மா
உனக்காக நானனம்மா

பாலா பிரித்து மேய்கிறார். சசியும் நல்ல ஈடு. அருமையான பொருத்தம்.
இவர்கள் இணைந்து இன்னும் பல பாடல்களைப் பாடியிருக்கக் கூடாதா என்று ஏங்குகிறது மனம்.

நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்.

http://music.cooltoad.com/music/song.php?id=541061&PHPSESSID=

கேட்டால் விடவே மாட்டீர்கள் கிருஷ்ணா சார். நான் பலமுறை கேட்டு மகிழ்ந்தாகி விட்டது. கேட்டு விட்டு சொல்லுங்கள். வீடியோவில் பாதிப் பாடலுடன் கட்டாகி விடுகிறது. ஆனால் ஆடியோவில் முழுப் பாட்டும் அருமையாக இருக்கிறது.


http://www.youtube.com/watch?v=FsmuGOxFiAA&feature=player_detailpage

mr_karthik
18th July 2014, 01:33 PM
மிகக்குறைந்த நாட்களில், அவ்வளவாக பிரபலமாகாத திரியில், 2,000 பதிவுகள் என்னும் சாதனையை நிகழ்த்த காரணமாயிருந்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் நன்றி.

விரைவில் இன்னும் பல புதிய சாதனைகளைத் தொடர வாழ்த்துக்கள்...

vasudevan31355
18th July 2014, 01:41 PM
மௌனம் இங்கு நிம்மதி
மஞ்சம் ஒரு சந்நிதி
மங்கையின் அங்கங்கள் பூஜைக்காக

பணத்துக்காக படத்தில் மெல்லிசை மன்னரின் இசையில் ஒலிக்கும் பாட்டு.

சுசீலாவின் குரலில் ஜெயசித்ரா உரர்ரென்று இருக்கும் சிவக்குமாரை தேற்ற முயற்சிக்கும் பாடல்.


http://www.youtube.com/watch?v=2QlX22rM0Zc&feature=player_detailpage

mr_karthik
18th July 2014, 01:46 PM
ஸாரி, கோபால் சார்,

தங்களின் பஞ்சாமிர்தம் கதையைப் படித்தபின்தான் தோன்றுகிறது, ஜெய்குமாரியின் சோகக்கதையை பதித்து, பலரது கனவைக் கலைத்திருக்க வேண்டாமோ என்று.

(நண்பர் வினோத் அவர்களும் அந்தப் புகைப்படத்தை பதிக்காமல் இருந்திருக்கலாம்).

ராஜீவ்காந்தி கொலைசெய்யப்பட்டு சிதறுண்டு கிடக்கும் காட்சியைப் படமாகப்பார்த்த பின் அப்போது சிறுவயதினராக இருந்த ராகுலும் பிரியங்காவும் கூறினராம் "அந்தப்படத்தை எங்களிடம் காட்டாமல் இருந்திருக்கக் கூடாதா?. இதற்கு முன் எங்கள் தந்தையை நினைத்தால் அவரது அழகான சிரித்த முகம் நினைவு வரும். ஆனால் இப்போதோ அவரை நினைத்தால் அவர் உடல் சிதறுண்டு கிடக்கும் காட்சியே கண்ணில் தோன்றுகிறது".

இப்போது முடிவெடுத்து விட்டேன். இனி யாருடைய தற்கால நிலையையும் சொல்லி யாருடைய கனவையும் கலைக்கக்கூடாது என்று.

gkrishna
18th July 2014, 01:52 PM
கிருஷ்ணா சார்,

'வல்லவன் வருகிறான்' படத்தில் ஒரு அட்டகாசமான பாடல் ஒன்று ராஜேஷின் அட்டகாசமான மியூஸிக்கில்.

சும்மா பாலாவும், சசிரேகாவும் பின்னி எடுக்கிறார்கள்.

அம்மம்மா ராஜம்மா
ராஜாத்தி கேளம்மா
ராஜாவைப் பாரம்மா
உனக்காக நானனம்மா
தட்டான் என்று நான் சொன்னால்

பாலா பிரித்து மேய்கிறார். சசியும் நல்ல ஈடு. அருமையான பொருத்தம்.
இவர்கள் இணைந்து இன்னும் பல பாடல்களைப் பாடியிருக்கக் கூடாதா என்று ஏங்குகிறது மனம்.




வாசு சார்

இந்த பாட்டு சிலோன் ரேடியோ ஹிட் சார்
பாலாவின் எல்லா இத்யாதிகளையும் இந்த பாட்டில் பார்க்கலாம்

திரியின் 200வது பக்கத்திற்கு வாழ்த்துகள்
நீங்கள் மென்மேலும் சாதனை புரிய எல்லாம் வல்ல அந்த 'சிவா'
பெருமானை வேண்டுகிறேன்

வாழ்க வளர்க
http://giantsheadgrind.ca/wp-content/uploads/2014/04/200.jpg