PDA

View Full Version : மனதை மயக்கும் மதுர கானங்கள்



Pages : 1 2 [3] 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16

Gopal.s
18th June 2014, 07:30 PM
எப்படியெல்லாம் கட்சியையும், தலைவர்களையும் வளர்த்தார்கள்?!

வாசு,

இதுவாவது மற்றவர்கள் புகழ்ந்து பாடுவது போல அமைக்க பட்டதால் துளியாவது மன்னிக்கலாம். கூச்சமேயின்றி ,தன்னைத்தானே புகழ்ந்து பாடி வளர்த்து கொண்ட தமாஷும் ,இதை மக்கள் நம்பிய கூத்தும்..... ஹூம்....

Gopal.s
18th June 2014, 07:35 PM
பிள்ளையார் பிடிக்கச் சொன்னால் குரங்காகப் பிடித்து விட்டாயே நண்பா!
பாவி.ஒழுங்காக குரங்கு பிடிக்க சொல்லியிருந்தால் ,பிள்ளையாராய் வந்திருக்க சான்ஸ் உண்டே? இப்படி பண்ணி தொலைச்சிட்டியே???

mr_karthik
18th June 2014, 07:35 PM
இதனுடைய (மணிப்பயல்') பாதிப்பிலேயே 'தங்கதுரை' அதே 'மாஸ்டர்' சேகர் நடிக்க வெளிவந்தது. ஆனால் அது வண்ணப்படம் என்று நினைக்கிறேன்.

இதிலும் 'வாடா கண்ணே வெள்ளாடு... வாயிருந்தா சொல்லிவிடு (சூப்பர் பாட்டு)

அண்ணா புகழ் பாடும் பாடல் சௌகார் ஜானகி ( சுசீலாவின் குரலில்) பாடுவது போல வரும்

'காலமகள் பாதையிலே போடா கண்ணே போ'

இதில் 'அண்ணா' வைப் புகழ்ந்து இரண்டு வரிகள் வரும்.

அறிவுக் கண்ணைத் திறந்து வைத்தான் அழகு மொழியிலே
அவன் அறிஞனாகி உயர்ந்து நின்றான் இமயம் வரையிலே

ம்ம். எப்படியெல்லாம் கட்சியையும், தலைவர்களையும் வளர்த்தார்கள்?!

டியர் வாசு சார்,

மணிப்பயலை விட தங்கதுரைதான் முதலில் (1972) வந்தது. தங்கதுரை வண்ணப்படம். அது அ.தி.மு.க. படமென்றால் இது தி.க.படம். வசனம் ரத்தக்கண்ணீர் புகழ் திருவாரூர் தங்கராசு.

தங்கதுரையில் அண்ணா மட்டுமல்ல... பெரியார், காமராஜர் பற்றிய வரிகளும் சௌகார் பாடும் அதே பாடலில் இடம்பெற்றிருக்கும். அவர்களின் காட்சிகளும் இடம்பெற்றிருக்கும்.

படிப்பறிவு குறைந்தவன்தான் கொங்கு நாட்டிலே - அவன்
பகுத்தறிவை விதைத்து விட்டான் இந்த நாட்டிலே
ஏழையென பிறந்தவன்தான் பாண்டி நாட்டிலே - அவன்
ஏழைக்கெல்லாம் கல்வி தந்தான் பிறந்த நாட்டிலே.

vasudevan31355
18th June 2014, 07:52 PM
கார்த்திக் சார்,

மணிப்பயலில் மணியான பாடல்.

நான் ஆடினால்
ஒருவகை போதையில்
பலவகை மனிதரும்
கூடவே ஆடுவார்.

எனக்கு ரொம்பப் பிடித்த பாடல் சார். நல்ல பிரிண்ட்டில் பார்த்து ரசிப்போம்.

எனக்கொரு சந்தேகம்! டான்ஸர்களின் கால்கள் ஸ்லீவ்களை அணிந்துள்ளனவா இல்லையா? அவ்வளவு தத்ரூபமாகவா காலின் நிறத்துக்குத் தக்கவாறு ஷேப் கொஞ்சமும் மாறாமல் அப்படியே காட்டும்? ஒண்ணும் புரியலையே!

நடிகைகள் மட்டுமல்ல. விட்டலாச்சார்யாவின் மந்திர, தந்திரப் படங்களில் காந்தாராவும், ராமாராவும் கூட அப்படி ஆடை அணிந்திருப்பார்கள்.


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=2nRmdoCK7Ss

Richardsof
18th June 2014, 07:53 PM
வாசு,

இதுவாவது மற்றவர்கள் புகழ்ந்து பாடுவது போல அமைக்க பட்டதால் துளியாவது மன்னிக்கலாம். கூச்சமேயின்றி ,தன்னைத்தானே புகழ்ந்து பாடி வளர்த்து கொண்ட தமாஷும் ,இதை மக்கள் நம்பிய கூத்தும்..... ஹூம்....

:ashamed::ashamed::ashamed::ashamed:

vasudevan31355
18th June 2014, 07:55 PM
நன்றி கார்த்திக் சார்!

இதுவரை நான் 'மணிப்பயல்' தான் முன்னாடி வந்தது என்று நினைத்திருந்தேன். 'தங்கதுரை' வண்ணம் வேறு அல்லவா? என் சந்தேகத்துக்கு வாட்டமாக வேறு அமைந்து விட்டது.

நெடுநாள் சந்தேகத்தை தீர்த்து வைத்ததற்கு நன்றி!

Richardsof
18th June 2014, 08:07 PM
http://youtu.be/AywiUifGFJ4

mr_karthik
18th June 2014, 08:08 PM
நன்றி கார்த்திக் சார்!

இதுவரை நான் 'மணிப்பயல்' தான் முன்னாடி வந்தது என்று நினைத்திருந்தேன். 'தங்கதுரை' வண்ணம் வேறு அல்லவா? என் சந்தேகத்துக்கு வாட்டமாக வேறு அமைந்து விட்டது.

நெடுநாள் சந்தேகத்தை தீர்த்து வைத்ததற்கு நன்றி!

வாசு சார்,

இப்படித்தான் மக்கள் திலகத்தின் ரசிகர் ஒருவர் 'ஆயிரத்தில் ஒருவனை' விட 'நாடோடி'தான் முதலில் வந்தது என்றார். அதற்கு அவர் கொடுத்த இரண்டு காரணங்கள்...

1) அது சரோஜாதேவி, இதில் ஜெயலலிதா
2) அது கருப்பு வெள்ளை, இது கலர்

என்றார். எனக்கு தேதி சொல்லி விளக்க வாய்ப்பில்லை. மெல்லிசை மன்னரை துணைக்கழைத்தேன்.

நான் சொன்னேன், அது 'விஸ்வநாதன் ராமமூர்த்தி' இது 'எம்.எஸ்.விஸ்வநாதன் தனியாக' என்றேன். போய்விட்டார்.

Richardsof
18th June 2014, 08:14 PM
http://youtu.be/StUK5uoBw_Y

vasudevan31355
18th June 2014, 08:57 PM
வாசு சார்,

இப்படித்தான் மக்கள் திலகத்தின் ரசிகர் ஒருவர் 'ஆயிரத்தில் ஒருவனை' விட 'நாடோடி'தான் முதலில் வந்தது என்றார். அதற்கு அவர் கொடுத்த இரண்டு காரணங்கள்...

1) அது சரோஜாதேவி, இதில் ஜெயலலிதா
2) அது கருப்பு வெள்ளை, இது கலர்

என்றார். எனக்கு தேதி சொல்லி விளக்க வாய்ப்பில்லை. மெல்லிசை மன்னரை துணைக்கழைத்தேன்.

நான் சொன்னேன், அது 'விஸ்வநாதன் ராமமூர்த்தி' இது 'எம்.எஸ்.விஸ்வநாதன் தனியாக' என்றேன். போய்விட்டார்.

சூப்பர் நெத்தியடி கலக்கல் சார்.

chinnakkannan
18th June 2014, 09:15 PM
ஆட்சேபணை 1 – கார்த்திக் சார் லட்டு “லதா’ வென்றால் மெகா ஜெயந்தி சரிவரவில்லை “ஜெட்டு” ஜெயந்தி அல்லது சிட்டு(கொஞ்சம் ரொம்பப் பழைய!) ஜெயந்தி
ஆட்சேபணை 2 – வாசு சார் பாமா விஜயம் அந்தக் கடைசித் துள்ளல் மிடி பாட்டு ஸ்டில் போடாதது..பாட்டைப் போட்டாலும் ஓகே..

vasudevan31355
18th June 2014, 09:31 PM
இன்னொரு rare song

'பத்துமாத பந்தம்' படத்தின் கிட்டத்தட்ட குத்துப் பாட்டு ரேஞ்சில்

ரவியும், நிர்மலாவும் கலரில்.

ஆத்தூரு மாமா
போட்டாரு மசாலா
உப்புமில்லே
சப்புமில்லே
ஒண்ணுமே வேகவில்லே

என்று நிர்மலா ரவியைக் கிண்டலடிப்பார்.

பதிலுக்கு ரவி நிர்மலாவை வாங்கு வாங்குவென்று vanguvaar

சேத்தூரு மாமி
கூத்தாட வந்தாளாம்
முன்னும் இல்லே
பின்னும் இல்லே
ஒண்ணுமே ஆடவில்லே (என்னா நக்கலு! கொடுமைடா சாமி)

பாடலாசிரியருக்கு செம தில்லுதான்

நிர்மலா இந்தி மும்தாஜ் போல கொள்ளை அழகு.


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=3XrjM-a_wLk

vasudevan31355
18th June 2014, 09:43 PM
சின்னக் கண்ணன் சார்,

துள்ளலா அது! நினைத்தால் சிலிர்க்க வைக்கும் ஆட்டமான ஆட்டம் சார்.

காஞ்சனா முத்துராமனை பரிதாபமாக கொஞ்ச

இங்கேயோ

நாகேஷ் தீவிரவாதிக்கு தீனி போட ஜெயந்தி

எதற்கும் தயார். இங்கேயும் ராட்சஸி.

ஆடை மாறிய பாணி என்ன கிருஷ்ணய்யா...

பேய் ஆட்டம் முடிந்து ஓய்ந்ததும் பார்க்கணுமே!




http://www.youtube.com/watch?v=8AREdoy5rDQ&feature=player_detailpage

chinnakkannan
18th June 2014, 10:36 PM
வாசு சார்..வணக்கம் வந்தனம் நன்றி :)

மதுரைப் புலி(முரளி சார்) பார்த்துச் சூடு போட்டுக்கொள்ளும் மதுரைப் பூனையாக நான் சில மீள் பதிவு இடப் போகிறேனே :)

chinnakkannan
18th June 2014, 10:41 PM
(இந்த மீள்ப்திவில் – பா.பே வா வெகுசில தான் எழுதினேன்..புதிதாகவும் எழுத உள்ளேன்..இதுமுடித்ததும்..அன்பர்கள் உஷார்..)
பாட்டுப் பேச வா - 1
*-****************************
அப்துல்ரஹ்மான் கவிதை தான் முதலில் நினைவுக்கு வந்தது.. என்னவாக்கும் அது..

வானத்துச் சூரியன்
வர்ணங்களின் தலைவன்
அதனால் தான்
அந்திப் பொழுதினில்
அவன் சிதையின் அருகே
அத்தனை வர்ணங்களின்
அனுதாபக் கூட்டம்..!
*
வெகுசின்ன வயதில் படித்த இந்தக் கவிதை மனதில் பதிந்த காரணமும் உண்டு..ஒரு அந்திப் பொழுது..கல்லூரி லைப்ரரியில்கவிதைப் புத்தகத்தைவாங்கி பஸ்ஸில் வருகையில் கொய்ங்க் கொய்ங்க் என்று ஏதோ கஷ்டத்திலோ மன வருத்தத்திலோ சூரியன் மேல் திசையில் ஆற்றமாட்டாமல் சிவந்த கண்களுடன் பஸ்ஸின் வேகத்தோடு ஓடிக்கொண்டிருக்க வெளிச்சமும் குறைய பஸ்ஸில் கூட்டமும் கூடியிருக்க – நல்லவேளை ஜன்னலோரம் சீட் என நினைவு- புரட்டிப் புரட்டிப் படித்ததில் மனதைக் கவ்விய வரிகள் இவை..
ஆமா எதுக்காக..
*
காரணம் அந்தி..
அந்தின்னா என்னவாம்..கூகுளிட்டால் மாலை செவ்வானம் எக்ஸெட்ரா..
ஆக்சுவலாக செவ்வானம் என்பது சரி..
*
வைரமுத்து ப்ரிஸைஸ் ஆ ஒரு விளக்கம் தர்றார்..
இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதில் வந்துவிடு..
ஸோ பகலோட முடிவாரம்பிச்சு இரவோட ஆரம்பம்..
அதனாலத் தான் ஒரு பாட்டில இப்படி வருது.. (வாலியோ)
பொன் அந்தி மாலைப் பொழுது
பொங்கட்டும் இன்ப நினைவு..
*
ஒரு பாட்டில்காதலன் சொல்கிறான்.. அந்த செவ்வானம் மெல்ல மெல்ல இருள் சூழ ஆரம்பிக்க அப்ப பொதக்கடீர்னு நிலாவேற புறப்பட்டு வருதாம்..அது தான் காதலியாம்..
அழகைச் சுமந்து வரும் அழகரசி
ஆனந்தப் பூமுகம் அந்தியில் வந்திடும் சுந்தர நிலவோ?
அவளும் கோச்சுக்கிட்டு ஆன்ஸர் சொன்னது தெரியும் தானே

நாளும் நிலவது தேயுது மறையுது
நங்கை முகமென யாரதைச் சொன்னது? (கவிஞர் முத்துலிங்கம் என நினைக்கிறேன்)
*
இந்தஃ அந்தி நேரமும் கொஞ்சம் கஷ்டமான நேரம் போல..பாவம் ஒருத்தனுக்கு என்ன ஆச்சு..
அந்த நேரம் அந்தி நேரம் கண் பார்த்து
கந்தலாகி போன நேரம் ஏதோ ஆச்சே..!
*
ஃபேமஸ் பாட்டு என்னது அது..
அந்திமழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது..
*
(சூரியனோ மறையற நேரம்….அப்போ மழை பெய்யுது....கொஞ்சம் கொஞ்சமா டபக் டபக்குன்னு இருளரக்கி சூரியப் பழத்தை ஸ்வாஹா பண்ணிக்கிட்டிருக்கற நேரத்தில என்னாகும்.. வெளிச்சம் மங்கும்..அதுல ரெய்ன் ட்ராப் எப்படி இருக்கும்..மங்கலா இருக்கும்..அதுல முகம் தெரியுதுன்னா.. ஒருவேளை காதலியோட அவுட் ஆஃப் போகஸ் போட்டோ வச்சிருப்பானோ  )
*
அந்தின்னுபோட்டா சோன்னு மழை மாதிரி பாடல் நிறைய இருக்கு..
ஒரு சில..
கன்னி மயிலென்ன கண்டேன் உனை நானே அந்தி பகல் உனை நான் பார்க்கிறேன் ஆண்டவனை இதை தான் கேட்கிறேன்
*
அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே
*
அந்தி சாயற நேரம் மந்தாரச் செடி ஓரம்..
*
அந்திவரும் நேரம்
*
முன் அந்தி சாரல் நீ முன் ஜென்ம தேடல் நீ நான் தூங்கும் நேரத்தில் தொலை தூரத்தில்
*
அந்தி பொழுதில் தொடங்கும் அன்பு கவிதை அரங்கம் ....
அந்தி மழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம்
கடைசியா ஒரு பாட்டு..
*
அந்தி மயங்குற நேரத்திலே ஆத்தங்கரை ஓரத்திலே அத்தை மகள் ஏக்கத்திலே காத்திருப்பேன்
பாவம் தானில்லை..அந்தக் காதலன்…ம்ம் என்னவோ முன்னால் எழுதிப்பார்த்த ஒரு பழையகதையில்எழுதிப் பார்த்த வெண்பாவைக் கொஞ்சம் திருத்தி எழுதினால்..:
*
வான்பொதிகைத் தென்றலில் வட்டமிடும் சந்திரன்
தான்பறித்த பூக்களாம் தாரகைகள் - பின்புலத்தில்
சொல்லாமல் போய்மறைந்த சோகமெந்தன் காதலினால்
கொல்லாமல் கொல்லும் இரவு..

பாவம் அந்தக் காதலனை இரவு கொல்லும் தான்..!@
***

chinnakkannan
18th June 2014, 10:44 PM
பாட்டுப் பேச வா - 3
*-****************************
கைகேயி “யூ ஹாவ் டு கோ டு ஃபாரஸ்ட் மை பாய்” எனச் சொல்லிவிட ராமர் காட்டிற்குப் புறப்படுகிறார்.. அவர் புறப்படுவதை சோகத்துடனும் அழுகையுடனும் பார்க்கும் மக்கள் எப்படி இருக்கிறார்களாம்..
*
வால்மீகி ராமாயணத்தில் இவ்வாறு வருகிறது…
*
ஒரு பெரிய தாமரைக் குளம்..தண்ணீர் முழுதும் நிரம்பி இருக்கின்றது.. அங்கே சின்ன,பெரிய, நடுத்த மீன்களெல்லாம் கூட்டம்கூட்டமாய் வந்து அங்கு நிரம்பியிருக்கும் தாமரைத் தண்டுகளில் மோதுகின்றதாம்..அப்போர்து என்ன ஆச்சாம்.. குளத்திலிருந்து தண்ணீரெல்லாம் பலதிசையில் சிதறுகிறதாம்.. அது போல மக்களின் கண்ணீர் சிதறின.. என்கிறார் வால்மீகி..
*
சரி கம்பன் என்ன சொல்கிறார்..
*
ஆவும் அழுத அதன்கன்று அழுத;; அன்றலர்ந்த
..பூவும் அழுத;புனல்புள் அழுத கள் ஒழுகும்
காவும் அழுத: களிறு அழுத; கால்வயப்போர்
..மாவும் அழுத;- அம்மன்னவனை மானவே

ராமனுடைய பிரிவால் துன்பமுற்ற தசரதனைப் போல் பசுக்கள் அழுதன; பசுக்கள் ஈன்ற கன்றுகள் அழுதன;அப்போது மலர்ந்த பூக்கள் கூட அழுதன;யானைகளும் அழுதன\; காற்றின் வலிமை கொண்ட குதிரைகள் கூட அழுதன..
*
எனில் எதற்காக இவையெல்லாம்..ம்ம் கண்ணீர்.. இந்தக் காலத்துக் கவிஞன்(ம்க்கும்!  ) என்ன சொல்றான்..
*
உன்னதத்தில் பொங்குகின்ற உணர்விலே தான்வரும்
கண்ணீரும் தருமோர் காட்சி – திண்ணமாய்
நெஞ்சிலே பட்டவலி நேர்படக் கண்ணீராய்த்
துஞ்சுவதும் ஓர்காட்சி தான்….
*
உன்னதம்..மகிழ்ச்சியிலும் கண்ணீர் வரும்; சோகத்திலும் கண்ணீர் வரும்.. ஆமாம்..இதே
ஸிம்ப்பிளா திரைப்பாடலில் வந்துருக்கே..
*
சிரித்தாலும் கண்ணீர் வரும் அழுதாலும் கண்ணீர் வரும்
உறவினிலே சிரிப்பு வரும் பிரிவினிலே அழுகை வரும்..
சிரித்தாலும் அழுதாலும் சுகமாக அமைதி வரும்..
அதெப்படி அமைதி..ஆமாம் வாய்விட்டு சிரிச்சா மட்டுமில்லை வாய்விட்டு அழுதாலும் பாரம் குறையும்..மனசு பாரம் கொஞ்சம் குறையும்..
*
திரைப்பாடல்கள்ல பார்த்தா காதல் க்கு மட்டும் தான் கண்ணீர் குத்தகை எடுத்திருக்காங்க..
இந்தாள் என்ன சொல்றார்…
கண்ணோரம் காதல் வந்தால் கண்ணீரும் தித்திப்பாகும்
வேறுஒன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்
என்னோடு நீயும் வந்தால், எல்லாமே கையில் சேரும்
வேறுஒன்றும் தேவையில்லை, நீ மட்டும் போதும் போதும்
(காதலிக்கறப்ப இப்படித்தான் இருக்கும் குரு..கல்யாணம் ஆச்சுன்னா..ம்ம்பார்க்கலாம்!!)
*
இன்னொரு பொண்ணு..கண்ணனை நினச்சு தன்னோட கொழுக் மொழுக் உடம்பு உருக உருகபாடுது...
கண்ணன் முகத்தோற்றம் கண்டேன் கண்டவுடன் மாற்றம்கொண்டேன்
கண்டவுடன் ஏங்கி நின்றேன் கன்னிசிலையாக நின்றேன்
என்ன நினைந்தேனோ தன்னை மறந்தேனோ கண்ணீர் பெருகியதே..
கண்ணனைப்பார்த்துட்டாளாம்..பேச்சு வல்லை..மூச்சு மட்டும் ஓரிழையாய் வர எல்லாமே மறந்துபோகுது.. கண்ணுக்குள்ள இருந்து வாட்டர் டேங்க்ல தண்ணீர் ஜாஸ்தியா ஏறிச்சுன்னா கொட்டறாப்புல பொலபொலன்னு கண்ணீரா வருதாம்..ம்ம் இது ஆனந்தக் கண்ணீர் 
*
சமத்தா பொண்டாட்டியோட சந்தோஷமா இருக்க வந்த ஆள பொசுக்குன்னு கடத்திட்டுப் போய்டறாங்க தீவிர வாதிங்க..பாவம்..சின்னப் பொண்ணாச்சே .. என்ன கஷ்டப் படறாளோ..வாழ்க்கையோட ஆரம்பத்திலேயே இப்படி ஆச்சே..ம்ம்னு நினச்சு மனசுக்குள்ள தேடிப்பாக்கறது பாட்டா திரையில் வருது..
*
காதல் ரோஜாவே , எங்கே நீஎங்கே
கண்ணீர்வழியுதடி கண்ணே
: கண்ணுக்குள் நீ தான், கண்ணீரில் நீ தான்
ம்ம் நல்ல பாட்டுதேன்..
*
கண்ணீர்ங்கறது என்ன பிரிவின் வேதனை உள்ளத்தின் வலியை உடல் வெளிப்படுத்தும் முறை..அது வந்து ஒரு அழுகை போட்டுக்கிட்டா கொஞ்சம் ரிலாக்ஸீம் ஆகலாம்..இல்லியோ.
*
இங்க பாருங்க இந்தப் பையன் புலம்பறத.. அந்தக் கண்ணீர் கண்ணுக்குள்ளயே தங்கிடுதாம்..அதோட வெப்பம் கண்ணையே சுட்டுப்பொசுக்குதாம்...
*
விழியில்லை எனும்போது வழி கொடுத்தாய்
விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்
நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம்
சிந்தும் சந்தம் உந்தன் சொந்தம்
தத்திச்செல்லும் முத்து சிற்பம் கண்ணுக்குள்ளே கண்ணீர் வெப்பம்
இன்னும் என்ன நெஞ்சில் அச்சம் கண்ணில் மட்டும் ஜீவன் மிச்சம்
முல்லை பூவில் முள்ளும் உண்டோ கண்டு கொண்டும் இந்த வேஷம் என்ன
*
நல்ல சிச்சுவேஷ்னல் பாட்டு.. ஆனா ஹீரோயினா இன்னும் நல்லா ஆடத்தெரிந்த யாரையாவது போட்டிருக்கலாம்..
*
காதலில் சோகம்னா சிவாஜி தான் முதலில் கண் முன் வர்றார்.. கண்ணதாசன் வரி, டிஎம் எஸ் குரல், நடிகர் திலக நடிப்பு..ம்ம் மறக்க முடியுமா இந்தப் பாட்டை..
*
காதல் கிளிகள் பறந்த காலம்
கண்ணில் தெரியும் நெஞ்சம் உருகும்
கண்ணீர் கலங்கி கண்ணில் இறங்கி
நெஞ்சில் விழுந்தால் சொந்தம் புரியும்
*
ம்ம் ஒரே பாடல்..உள்ளத்தைக் கவ்வும்..
*
அட இந்தக் காலப் பாட்டிலும் வந்துருக்கே.. என்ன கொஞ்சம் வித்தியாசமாக.
*.
மார்கழித் திங்களல்லவா...
இதயம் இதயம் எரிகின்றதே இறங்கிய கண்ணீர் அணைக்கின்றதே
உள்ளங்கையில் ஒழுகும் நீர்போல் என்னுயிரும் கரைவதென்ன
இருவரும் ஒரு முறை காண்போமா இல்லை
நீ மட்டும் என்னுடல் காண்பாயா
**
நல்ல சாங் தானில்லை..
**
கடைசியா நம்மை விட்டுக் குறுகியகாலத்திலேயே பிரிந்த ஸ்வர்ணலதாவோட பாட்டு..

போறாளே பொன்னுத்தாயி பொல பொலவென்று கண்ணீர் விட்டு
தண்ணீரும் சோறும் தந்த மண்ணை விட்டு
பால் பீச்சும் மாட்ட விட்டு
பஞ்சாரத்து கோழியே விட்டு
போறாளே பொட்ட புள்ள ஊரை விட்டு
*
ம்ம் நிறையக் கண்ணீர் விட்டுட்டேன்னு நினைக்கறேன்..இன்னும் விடுபட்டுப் போயிருக்கும்.. நீங்கதான் இருக்கீங்களே..சொல்றதுக்கு..

chinnakkannan
18th June 2014, 10:48 PM
பாட்டுப்பேச வா - 5
****************


அதுல பாருங்கோ.. நம்மோட தமிழே - கன்னிப் பொண் (அம்மா கிட்ட கேட்டு பக்குவமா நிறைய சக்கரையைப் போட்டு) செஞ்ச காரட் அல்வாவாட்டமா
ஸ்வீட்ல் லாங்க்வேஜ் தான் இல்லியோ.. ஆனா அதுவே வெவ்வேற பகுதில்ல எப்படியெல்லாம் பேசறாங்க/பாடறாங்க..

அதே தாங்க.. இன்னிக்கு..

மொதல்ல நம்ம ஊர் மதுரை.. இந்த ஹீரோ என்ன சொல்றார்../ஜொள்றார்..

பொட்டுனா பொட்டு வச்சி வெட்டு வெட்டுனு வெட்டிபுட்டு..
பட்டுனு சேலைய கட்டி எட்டி வச்சி நடந்துகிட்டு..
கட்டுனா கட்டிபுட்டே நெஞ்சை கொஞ்சம் தட்டிபுட்டே..
வெட்டும் இரு கண்ணை வச்சி என்னை கட்டி போட்டுபுட்டே..

அந்தப் பொண்ணோட பதில்..

கட்டுறது உனக்கு மட்டும் தானா இந்த சிட்டும் கூட சிக்கியது ஏனா..
எப்போதோ விட்ட குறை மாமா அது இரு உசிரை கட்டுதையா தானா..
அது இப்போது வாட்டுதென்னை பாட்டு ஒன்னை அவிழ்த்துவிடு..

அப்புறம். என்ன செய்யணுமாம்.. அவங்க என்ன சொல்றாய்ங்கன்னு பாக்கலாமா...

.மெட்டுனா மெட்டு கட்டி இட்டு கட்டி பாடிகிட்டு..
கட்டுனா ராகம் என்னும் மாலை ஒன்னை கட்டிபுட்டு
சுத்தினா சுத்தி அதைஎன் கழுத்தில் போட்டுபிட்டே
ஒன்னை மட்டும் விட்டு பிட்டே..
தாலி கட்ட மறந்துபுட்டே..

ம்ம் எல்லாக் காதலிக்கும் நேச்சுரல்லா இருக்கின்ற கவலை தான்..அந்தக்காலத்தில!

*

இந்தப் பொண்ணோ செக்கச் செவப்பு. என்னவாம்... நேராவே பேசத் தெரியாது காதலன் கிட்ட.
(எல்லாக் காதலியும் அப்படித் தானோ?) பேசறதெல்லாம் ஒரே விடுகதைதான்.

வானத்திலே ஒரு கல் என்ன கல்
பூமியிலே ஒரு கல் என்ன கல்
அரிசியிலே ஒரு கல் என்ன கல்
வெற்றிலையில் ஒரு கல் என்ன கல்..

இப்படில்லாம் இந்தக்காலத்தில சொன்னா காதலன் அன்ஃப்ரண்ட் செஞ்சுட்டுப் போய்டுவான்..இவன் பாவம் அந்தக்காலத்து ஆசாமி..
பேந்தப்பேந்த ஆந்தையோட ப்ரதராட்டமா ஜோதிகாவோட ஒண்ணுவிட்ட ரிலேஷனாட்டமா முழிக்கிறான்..இந்தப் பொண்ணுக்கோ
சிரிப்பு பொத்துக்கிட்டு வருது. அவ பாடற்துல ஊர் பாஷயும் ஊரும் வருது.

பாரு பாரு பாரு இவரு பயந்துட்டாஹ பாரு
திரு திருன்னு முழிக்கறாரு திருனெல்வேலி ஆளு
அட வெவரங்கெட்ட ஆளு இப்போ விடையைச் சொல்றேன் கேளு

வானத்திலே ஒரு கல் கருக்கல்
பூமியிலே ஒரு கல் வழுக்கல்
அரிசியிலே ஒரு கல் புழுங்கல்
வெற்றிலையில் ஒரு கல் அழுகல்..

அச்சமில்லை அச்சமில்லையில் வரும் பாட்டு இது.

*

தூத்துக்குடி பாஷை.

முத்துக்குளீக்க வாரீகளா
மூச்சையடக்க வாரீகளா.. (தின்னவேலிக்கும் தூத்துக்குடிக்கும் ஒரு மெல்லிய வித்தியாசம் தான் உண்டு.பாஷையில்!)

அடி ஜின்ஜினாக்கடி ஜின் ஜின்னாக்கடி பாத்தீகளே நீங்களும்
அந்தச் சரசம் பண்ணிப் பாருங்க

ம்ம் மறக்க முடியாத பாடல்.

**

கருவாப்பையா கருவாப்பையா
கருவாச்சி கவுந்துபுட்டா மனசாச்ச தொலச்சுபுட்டா (பாஷையும் படமும் தூத்துக்குடி)

**

அப்ப சென்னப் பட்டினம்?

மச்சான் உன் நினப்பாலே நான் நாஸ்தா துண்ணு நாளாச்சு.
ஆயாக் கடை இடியாப்பம்னா
பாயாக்கறியும் நீ ஆச்சு
வா மச்சான் வா மச்சான்
வா வா மச்சான் ஒண்ணா சேர்ந்து
வாராவதிக்கே போகல்லாம்


ம்ம் மறக்க முடியுமா இந்தப் பாட்டை.

**

chinnakkannan
18th June 2014, 10:49 PM
கொஞ்சம் புதுப்பாட்டும்கலந்துடுத்து ஸாரி..மீள்பதிவுஇங்கு முற்றும்

இனி புத்தம் புதிதாய் பழையபாடல்களோடு பாட்டுப் பேச வா 2ம் பாகம் ஆரம்பிக்கப் பார்க்கிறேன் :)

Gopal.s
19th June 2014, 04:43 AM
Do you need ragam serial? If you guys are not serious ,i will come and participate in arattai.

Gopal.s
19th June 2014, 04:44 AM
கிருஷ்ணாஜி,

தூள் படத்தி கொண்டிருக்கிறீர்கள் .எனக்கு 100% பரிச்சயமான 60,70 களின் பாடல்களை பற்றி நீங்களெல்லாம் அரட்டை அடித்து விளையாட,வாசு என்னை ராகங்களில் முடக்கி விட்டாரே (இதை விடாதீர்கள் என்று)!!!திரியின் ஜீவனாய் உள்ளீர்கள் என்றால் மிகையில்லை.

கார்த்திக்-

உங்கள் பதிவுகள் nostalgia நினைவுகளை தூக்கி நிறுத்தி சொக்க வைக்கும்.
என்னை எழுத்தாளராக்கிய முன்னோடி பதிவாளராயிற்றே?

வாசு- உன் CONCEPT கொடி கட்டி பறந்து கொண்டிருக்கிறது.

சி.க- உங்கள் பதிவுகளின் வித்தியாச தரம்,இலக்கிய கணம்,மற்றும் நகைச்சுவை கனம் .... புது தொடருக்காக ஆவலுடன்....

Gopal.s
19th June 2014, 04:47 AM
8550/770= 11.10. பத்துக்கு மேலேயே வருது. கணக்கு கொஞ்சம் உதைக்கிறது. குறைந்தது பத்தும் சொல்வான்......

Richardsof
19th June 2014, 05:05 AM
1972 ல் வெளியான ராமன் தேடிய சீதைபடத்திற்கு மெல்லிசை மன்னரின் டைட்டில் இசை மிகவும் அருமையாக
இருந்தது .நல்லது கண்ணே பாடலை இசை வடிவில் தந்திருப்பார் .
http://youtu.be/ITPvlborXTU

Richardsof
19th June 2014, 05:09 AM
MELLISAI MANNARIN NAMNADU TITLE MUSIC

[http://youtu.be/Bn5AzC514yU

Richardsof
19th June 2014, 05:47 AM
மாறாதையா மாறாது
மனமும் குணமும் மாறாது
திட்டும் வாயை பூட்டி வச்சாலும்
திருடும் காலை கட்டி வச்சாலும்
தேடும் காதை திருகி வச்சாலும்
ஆடும் கண்களை அடக்கி வச்சாலும்
(மாறாதையா )

Gopal.s
19th June 2014, 05:52 AM
மாறாதையா மாறாது
மனமும் குணமும் மாறாது
திட்டும் வாயை பூட்டி வச்சாலும்
திருடும் காலை கட்டி வச்சாலும்
தேடும் காதை திருகி வச்சாலும்
ஆடும் கண்களை அடக்கி வச்சாலும்
(மாறாதையா )
:-D:???::smile2:

Gopal.s
19th June 2014, 05:54 AM
மனிதன் மாறி விட்டான்.(நன்கு கவனியுங்கள்)

Richardsof
19th June 2014, 06:00 AM
புலி வேஷம் போட்டவன்தான் பூனையை போல் மாறி வந்தான்
எலி வேட்டைக்கு நாள் வைத்து போராட வந்தான்
வெளி வேஷத்தை மோசத்தை பொய்யாக்க வந்தான்
வெளி வேஷத்தை மோசத்தை பொய்யாக்க வந்தான்
கம்பு சண்டை வம்பு சண்டை
கத்தி சண்டை குத்து சண்டை போட்டான் தனியாக
பத்து பேரு மத்தியிலே ஒருத்தனாக
சுத்திவந்து ஜெயிச்சான் முடிவாக

ஒரு நாள் கூத்துக்கு மீசையை வெச்சான் மேடையிலே
மறுநாள் பார்க்கையில் மாறி இருந்தான் ஜாடையிலே
ஆஹா மறுநாள் பார்க்கையில் மாறி இருந்தான் ஜாடையிலே

Richardsof
19th June 2014, 08:42 AM
THURSDAY SPECIAL
http://i62.tinypic.com/2wejmad.jpg
http://youtu.be/N1NzuUb4Hb4

gkrishna
19th June 2014, 09:57 AM
19/06/2014 காலை வணக்கம்
கோபால் சார்
உங்கள் வாழ்த்து எங்களுக்கு ஒரு பெரிய விருந்து (வாலிப விருந்து )
கொஞ்சம் அரட்டையாக தான் இருக்கிறது
ஆனால் நன்றாக பொழுது பொலர்கிரது பொழுது முடிகிறது
(பொழுது போகாதவர்கள் மட்டும் அல்ல பொழுது போததாவர்களும் என்று சகல கல வல்லவன் படத்திற்கு பார்த்த விளம்பரம் தான் நினைவிற்கு வருகிறது )
உங்கள் ராகா பற்றிய discussion உண்மையில் சூப்பர்
ராகத்தை பற்றிய அலசல் உங்கள் மீது மேலும் ஒரு மகுடம் சூடபடுகிறது
அதை தொடரலாம் என்பது எனுடைய தாழ்மையான எண்ணம்

chinnakannan sir
உங்கள் தமிழ் ஆட்சி மிரள வைகிறது
புரட்சிஆகவும் இருக்கிறது புதுமை ஆகவும் இருக்கிறது
தொடரவும்
அனுபவம் புதுமை ck இடம் கண்டேன்

chinnakkannan
19th June 2014, 10:01 AM
//உங்கள் ராகா பற்றிய discussion உண்மையில் சூப்பர்
ராகத்தை பற்றிய அலசல் உங்கள் மீது மேலும் ஒரு மகுடம் சூடபடுகிறது
அதை தொடரலாம் என்பது எனுடைய தாழ்மையான எண்ணம் // கோ..பா..ல்.. நான் இதை வழி மொழிகிறேன்..படித்துக் கொண்டு தெரிந்து கொண்டு தான் இருக்கிறேன்..அபெளட் ராகா..ஸோ கண்டின்யூ..அப்புறம் பாராட்டுக்கு நன்றி...:)

//உங்கள் தமிழ் ஆட்சி மிரள வைகிறது
புரட்சிஆகவும் இருக்கிறது புதுமை ஆகவும் இருக்கிறது
தொடரவும் // ஹையோ.. ரொம்ப பயமுறுத்திட்டேனா க்ருஷ்ணா சார்.. நன்றி..

gkrishna
19th June 2014, 10:25 AM
எஸ்வி சார்
திக்கு தெரியாத காட்டில் 1972

நெல்லை சென்ட்ரல் ரிலீஸ் சார்

ராம்குமார் films

கலாட்ட கல்யாணம்,வீட்டுக்கு வீடு,,சுமதி என் சுந்தரி என்று காமெடி மொவீஸ் ஆகவே எடுத்த banner
கடைசியாக எடுத்த படம் என்ன தெரியவில்லை

ஸ்ரீதர் டீம்- கேமரா பார்த்தீர்கள் என்றால் பாலச்சந்தரின் ஆஸ்தான லோகநாத் (கருப்பு வெள்ளை யாரை சொல்றது )

டைரக்டர் ன்.சி.சக்கரவர்த்தி - உத்தரவின்றி உள்ளே வா டைரக்டர்

எல்லா பாடல்களும் சூப்பர்

1.பூ பூ வ பறந்து போகும் பட்டு பூச்சி ஆக உனகு பள பள னு போட்டு இருபது யார் கொடுத்த சொக்க -ராஜேஸ்வரி

பட்டு சிவப்பா மூக்கு இருக்குற
பச்சை கிளியே பாரு - இந்த
பாப்பாவுக்கு பசி எடுக்குது
பழம் பறிச்சு போடு

இந்த சரணத்தில் விச்சுவின் ஒரு சோக சோலோ violin மனதை பிழியும்

2. பாலா சுசீல beautiful மெலடி
கேட்டதல்லாம் நான் தருவேன் என்னை நீ மறக்காதே

3.குளிர் அடிக்குதே கிட்ட வா கிட்ட வா
பாலா ஈஸ்வரி chorus
சு எ சு "எங்களுக்கும் காலம் வரும் சம்பாதிக்க நேரம் வரும் " பாடலை நினவு படுத்தும்

இந்த படத்தில் நான் அடிசயத்தது பேபி சுமதி யின் மிருகங்களுடன் கலந்த பயம் இல்லாத நடிப்பு

அதே போல் vkr நாகேஷ் போலீஸ் காமெடி கொஞ்சம் பேசப்பட்டது


NT படம் தவிர (அவர் கால கட்டத்தில் ) வேறு
எந்த படமும் சாந்தி கிரௌன் புவனேஸ்வரி theatres
combination இல் கிடையாது என்ற வாதத்தை உடைத்ததற்கு இந்த படமே ஒரு சாட்சி

gkrishna
19th June 2014, 11:14 AM
திக்கு தெரியாத காட்டில் இன்னொரு பாட்டு கூட உண்டு சார்
"ஆட்ட காரன் ஆடி காட்டுவான் பாட்டுக்காரன் பாடி காட்டுவான்"
என்று வரும்
பாலா ஈஸ்வரி
பாடலின் ஊடே வரும் வரிகள்
"சங்கர கிரிஜா வளைஞ்ச நெளிஞ்ச மயக்கும் வரும் அல்லவோ "

gkrishna
19th June 2014, 11:58 AM
எஸ்வி சார்
ராமன் தேடிய சீதை படமே கொஞ்சம் ரிச் ஆக இருக்கும்
ஈஸ்ட்மன் கலர்
ஜெயந்தி films என்று நினவு
காஷ்மீர் இல் எல்லாம் படம் எடுத்து இருப்பார்கள்
இதில் உள்ள பாடல்கள் எல்லாமே கொஞ்சம் different varieties

டைட்டில் மியூசிக் நீங்கள் சொன்னது போல் நல்லது கண்ணே பாடலை ஓட்டியது

இந்த படத்தில் நான் ரசித்த பாடல்
"என் உள்ளம் உந்தன் தான் அழகு " tms வித் ராட்சசி combination
அதிலும் அந்த
"தங்க கோபுரம் சின்ன தாமரை"
வண்ணம் (ஈஸ்வரியின் குசும்பு தெரியும் ) பாடுது
உன்னை தேடுது "

எல்லோரும் விரும்பும் பாடல் "திருவளர் செல்வியோ நான் தேடிய தலைவியோ " -

ஈஸ்வரியின்
"மச்சானா மாமவ யாரு இவரு
என்னை வைச்ச கண்ணு வாங்காமல் பாக்கிறாரு "

அதே போல் அசோகன் "நொண்டின்னு நினைச்சியா " என்று கூறி விட்டு wheel chair இலிருந்து எழுந்து MT உடன் ஜூடோ fight ஒன்று உண்டு
அதற்கு முன்னால் ஒரு பாட்டு வரும்
"படார் படார் " மீண்டும் ஈஸ்வரி TMS

MT இன் டிரஸ் செலேச்டின சூப்பர் ஆக இருக்கும்

mr_karthik
19th June 2014, 12:10 PM
டியர் சின்னக்கண்ணன் சார்,

ரொம்ப வித்தியாசமான முயற்சி, ரொம்ப அருமையாக உள்ளது. திரி பல்வேறு சுவைகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்ற தங்கள் ஆர்வமும் உழைப்பும் தெரிகிறது. தொடர்ந்து கலக்குங்கள். வாழ்த்துக்கள். (ஜெயந்திக்கு 'மெகா' என்று அடைமொழி கொடுத்தது அவரது சில 70 எம்.எம்.ஐட்டங்களுக்காக. ஜெயந்தியின் ஸ்பெஷாலிட்டியே அவரது மழலை பேச்சும், அவைக்களும்தானே).

டியர் கோபால் சார்,

உங்களது ராகங்கள் பற்றிய ஆய்வு மிக நன்றாக உள்ளதே, ஏன் பிரேக் பண்ண நினைக்கிறீர்கள்?. தொடருங்கள். நமது திரி பாடல் சம்மந்தமான அனைத்து விவரங்களும் உள்ளடக்கியதாக இருக்கும் வகையில் தங்கள் ராக ஆராய்ச்சியும் அவசியமே. அதோடு நின்றுவிடாமல், அரட்டையிலும் பங்குபெறுங்கள்.

டியர் வினோத் சார்,

திக்குத்தெரியாத காட்டில் விளம்பரமும், 'குளிரடிக்குதே' பாடல் வீடியோவும் அட்டகாசம். பதிவிட்டமைக்கு நன்றி.

mr_karthik
19th June 2014, 12:20 PM
திக்கு தெரியாத காட்டில் 1972

NT படம் தவிர (அவர் கால கட்டத்தில் ) வேறு
எந்த படமும் சாந்தி கிரௌன் புவனேஸ்வரி theatres
combination இல் கிடையாது என்ற வாதத்தை உடைத்ததற்கு இந்த படமே ஒரு சாட்சி

டியர் கிருஷ்ணாஜி,

நடிகர்திலகம் கொடிகட்டிப்பறந்த காலத்திலேயே சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி சீரீஸில் பல வெளிப்படங்கள் ரிலீஸாகியுள்ளன.

அத்தை மகள், பொன்மகள் வந்தாள், எங்க பாட்டன் சொத்து, இன்னொரு ரவிச்சந்திரன் படம், இப்படி பல படங்கள்.

gkrishna
19th June 2014, 12:43 PM
வாசு சார்
நேற்று இரவு உங்களுடைய ஜெயந்தி கொட்டம்
பெக்கட்டி சிவராம் (ஜெயந்தியின் ஆத்துகாரர் ) காதில் விழுந்தது என்றால் ரெம்ப சந்தோஷ படுவார்
சத்யா மொவீஸ்
நான் ஆணைஇட்டால் "பிறந்த இடம் தேடி "
காவல் கரன் "நினைத்தேன் வந்தாய் "
ரிக்க்ஷாகரன் "அழகிய தமிழ் மகள் "
மணி பயல் "தங்க சிமிழ் போல் "
இதயக்கனி "புன்னைகையில் கோடி "
ராணுவ வீரன் "சொன்னால்தானே தெரியும்"
முன்றுமுகம் "தேவாமிர்தம் "
ஊர்கவலன் "மாசி மாசம் தான் சொல்லு "
தங்கமகன் "ராத்திரியில் பூத்து இருக்கும் "
கக்கி சட்டை "பட்டு கன்னம் தொட்டு கொள்ள "
காதல் பரிசு "காதல் மகராஜன் கவிதை பூ "
பாட்சா "அழகு நீ நடந்தால் நடை அழகு "
பாடல்கள் நினைவிற்கு வருகின்றன

நடுவில் சிவகுமாரை வைத்து "ஒரு வெள்ளாடு வேங்கை ஆகிறது "
என்று ஒரு படம் கூட எடுத்த நினவு

gkrishna
19th June 2014, 12:45 PM
கார்த்திக் சார்
உங்கள் தகவல்கள் மேலும் வலு சேர்கின்றன

Richardsof
19th June 2014, 12:50 PM
1971- SHOOTING SPOT- KASHMIR

RAMAN THEDIYA SEETHAI

http://i58.tinypic.com/29kt0yb.jpg

http://youtu.be/BWsX8Zsq6-o

mr_karthik
19th June 2014, 12:54 PM
திக்குத்தெரியாத காட்டில் படத்தில் முத்துராமன் - ஜெயலலிதா ஜோடிக்கு ஒரு டூயட் பாடல் உண்டு. படம் முழுவதும் காட்டிலேயே எடுக்கப்பட்ட இந்தப்படத்தில் இந்தக் கனவு பாடல் மட்டும் சென்னை மைலேடீஸ் பூங்காவில் எடுக்கப்பட்டிருக்கும்.

"கேட்டதெல்லாம் நான் தருவேன் எ(ன்)னை நீ மறக்காதே
காலமெல்லாம் நான் வருவேன் எ(ன்)னை நீ தடுக்காதே"

என்று துவங்கும் பாடல்...

mr_karthik
19th June 2014, 01:19 PM
வாசு சார்
நேற்று இரவு உங்களுடைய ஜெயந்தி கொட்டம்
பெக்கட்டி சிவராம் (ஜெயந்தியின் ஆத்துகாரர் ) காதில் விழுந்தது என்றால் ரெம்ப சந்தோஷ படுவார்


கிருஷ்ணாஜி,

நீங்கள் இன்னும் பழைய காலத்திலேயே இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். கணவர் 'பெக்கட்டி' சிவராவுடன் இருக்கும்போதே, தெலுங்கு நடிகர் கிரிபாபுவுடன் ஜெயந்திக்கு தொடர்பு ஏற்பட்டு, அதனால் கணவன் மனைவிக்கிடையே சண்டை வந்து, ஜெயந்தியின் சொத்துக்கள் அனைத்தையும் பிடுங்கிக்கொண்டு நள்ளிரவில் மகனோடு சேர்த்து ஜெயந்தியை விரட்டிவிட்டார் சிவராவ். பக்கத்து வீட்டிலிருந்த ஜேம்ஸ் வீட்டில் தஞ்சம் புகுந்து, மறுநாள் மகனையும் அழைத்துக்கொண்டு கிரிபாபுவிடம் போய்விட்டார் ஜெயந்தி.

சிறிது காலம் கிரிபாபுவுடன் வாழ்ந்து பின்னர் அவரையும் விட்டு விலகி பெங்களூருவில் இருந்தபோது, கல்லூரியில் படித்த தன் மகனின் நண்பனோடு காதல் ஏற்பட்டு அந்தப்பையனை மணந்து கொண்டார். (ஜெயந்தியை விட சுமார் 20 வயது சின்னவன், அந்தப்பையன்). பின்னர் அவனும் விலகிப்போக, தன் மகனோடும் மருமகளோடும் பெங்களூருவில் செட்டில் ஆகியிருக்கிறார் ஜெயந்தி. தற்போது வயது சுமார் 73...

gkrishna
19th June 2014, 01:38 PM
உச்சகட்டம் 1980

சூர்யா ஆர்ட் films

ராஜ்பரத் direction
இன்னிசை வேந்தர்கள் இசை
சரத்பாபு சுனித ராஜ்குமார் (ஸ்ரீப்ரிய),ars நடித்து வெளி வந்தது

ராஜ்பரத்க்கு இது முதல் படம்
படத்தில் direction கார்டு விழும்போது "கெட் இன் " என்ற டயலாக் உடன் "ராஜ் பரத் " என்று வரும்

திவாரி கேமரா (கார்த்திக் சார் உங்களுக்கு பிடிக்கும்)

இரண்டே பாட்டு தான்

1.பாலாவின் குரலில் குழுவினர் துணையுடன்
"சித்தர் கூட புத்தி மாறி தத்துவங்கள் சொல்லலாம் "
மெண்டல் hospital location பாடல்
ஷங்கர் கணேஷ் இன் கலந்து கட்டிய இசை அமைப்பு
violin drum தபேல என்று களேபரம் பண்ணி இருப்பார்
பாலாவின் ஒத்துஉழைப்பு நன்றக இருக்கும்
அதிலும் பாடலின் ஊடே
"நிறுத்து நான் ஏந்தும் தேன் கிண்ணம் வாழ்க " என்று பாடும் போது
ஒரு violin பீஸ் வரும்
2. இதழின் தென் பாண்டி முத்துகள் " மலேசிய வித் ஜானகி
(ராஜ்குமார் வித் சுனிதா ப்லஷ்பக்
SG இன் தபலா துண்டா தெரியும்

இது போக "saxophone மற்றும் drum உடன்" ஒரு 2 அல்லது 3 நிமடங்கள் ஒரு பீஸ் வரும்
SG இந்த பீஸ் ஐ பின்னாடி "பணம் பெண் பாசம் " படத்தில்
"கலை மாமணியே சுவை மாங்கனியே செந்தூர செவ்வானமே "
(ஜெயச்சந்திரன் வாணி கம்போவில் ) உபயோகித்து இருப்பார்கள்

படத்தில் ஹீரோக்கு (சரத்பாபு ) பாட்டு கிடையாது
anti ஹீரோ subject
நம்ம ARS க்கு நல்ல ரோல்

படம் செம ஹிட்

ஆனால் இதற்கு பிறகு ராஜ் பரத் எடுத்த எல்லா தமிழ் படங்களும்
"சொல்லாதே யாரும் கேட்டால்,சின்ன முள் பெரிய முள் ,
தொட்டால் சுடும்" எதுவுமே எடுபடவில்லை . ஆனால் தெலுகில் எடுத்த "புலி" சூப்பர் ஹிட் (சிரஞ்சீவி நடித்து வெளி வந்தது )

gkrishna
19th June 2014, 01:42 PM
கார்த்திக் சார்
ஜெயந்தி பற்றிய உங்கள் information அவ்வளுவும் கரெக்ட்
செம updation
நேற்று ck சார் கூட கன்னட சுந்தர் வித் பிரமிள ஜோஷி பற்றி ஒரு அப்டேட் கொடுத்து இருந்தார்
நம்ம டீம் எல்லாமே லேட்டஸ்ட் version

mr_karthik
19th June 2014, 01:47 PM
1972-ல் வெளியான பக்திப்படம் 'அன்னை வேளாங்கண்ணி' வண்ணத்தில் எடுக்கப்பட்டு எல்லோரது எண்ணத்தைக் கவர்ந்த படம். தேவரின் தெய்வம், துணைவன் போல கிருஸ்துவ பக்திப்படம். ஆனால் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் அழகாக உருவாக்கப்பட்டிருந்தது. தேவராஜன் இசையில் பாடல்கள் நன்றாக அமைந்திருந்தன

'நீலக்கடலின் ஓரத்தில் நீங்கா இன்ப காவியமாம்' அந்த ஆண்டின் சூப்பர் ஹிட் பாடல்களில் ஒன்று. டி.எம்.எஸ். கோரஸுடன் இணைந்து பாடியிருந்தார்.

'கடலலை தாலாட்டும் வேளாங்கண்ணி' என்ற பாடலும் கோரஸ் பாடல்தான்.

தன் சப்பாணி மகனின் கஷ்டத்தைப்போக்கி அவனுக்கு கால்கள் குணமாக பத்மினி (சுசீலா) பாடும் 'கருணை மழையே மேரி மாதா கண்கள் திறவாயோ' பாடல் நம் மனதைப் பிசையும். இந்தக்காட்சியில் மாஸ்டர் சேகர் நடிப்பு அபாரம். கால்களை மடக்கியபடி கைகளை ஊன்றி நக்கரித்து நக்கரித்து வரும்போது, ஒரு கட்டத்தில் மேலும் நகர முடியாமல் தூக்கச்சொல்லி அம்மாவிடம் கைநீட்டும் காட்சி கண்களில் நீர் கட்ட வைக்கும்.

ஜெமினிகணேஷ் - ஜெயலலிதா கனவு டூய்ட் 'வானமெனும் வீதியிலே, குளிர்வாடைஎனும் தேரினிலே ஓடிவரும் மேகங்களே கொஞ்சம் நில்லுங்கள்' பாடல் ஜேசுதாஸ் மாதுரி பாடியது.

நட்சத்திரக் கூட்டம் நிறைந்து மனதை நிறைவாக்கிய படம் 'அன்னை வேளாங்கண்ணி'...

chinnakkannan
19th June 2014, 02:28 PM
நன்றி கார்த்திக் சார் ஃபார் அப்டேட் அபெளட் அ,வே. இந்த வானமெனும் வீதியிலே எனக்கு ரொம்ப ப் பிடிக்கும்..தியேட்டரில் பார்த்த படம் ..மீனாட்சி என நினைக்கிறேன்..

பாராட்டுக்கும் நன்றி..

அப்புறம் ஜெயந்தி குறித்த தகவல்கள் நான் அறியாதது..அடடே.. இந்தக் கன்னி நதியோரம் இவ்ளோ இருக்கா..

chinnakkannan
19th June 2014, 02:31 PM
உச்சக்கட்டம் ஸ்ரீதேவியில் நன்றாக ஓடியது..மேபி 50 நாள்..அந்தக் கால விகடனில் கிருஷ்ணா சார்..ஏகத்துக்கு பில்டப் கொடுத்து 13 ரீலில் நல்ல படம் எனச் சொன்னதாலும் கூட.. ரொம்ப ஓஹோ இல்லாவிட்டாலும் ஓகே..ஒய்.ஜி.எம் சரத்பாபு,சுனிதா..என நினைவு..
அடுத்த படம் சொல்லாதே யாரும் கேட்டால் அதே ஸ்ரீதேவி தியேட்டர்..ரொம்ப எதிர்பார்த்துப் போய் ஏமாந்தது..ராஜ்பரத்தின் மற்ற எல்லாமும் சுமார் ரகம் அண்ட் மோர் வயலன்ஸ்.. நன்றிகிருஷ்ணா சார்..

vasudevan31355
19th June 2014, 03:00 PM
வணக்கம் கிருஷ்ணா சார்,

அனைத்தையும் அனுபவித்து படித்துக் கொண்டிருக்கிறேன்.

சும்மா கில்லி.

உங்கள் உச்சக்கட்டம் டாப்போ டாப். அருமயான அலசல்.

அப்போது இப்படத்தின் ரீரிகார்டிங் வேறு மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது.

ராஜ்பரத் தன் தனித்தன்மையை நிரூபணம் செய்து பின் வீணானார்.

vasudevan31355
19th June 2014, 03:11 PM
'உச்சக்கட்டம்' சுனிதா பரவாயில்லை. அந்த காலகட்டத்தில் ஒருமாதிரியான மலையாளப் படங்கள் வந்து கொண்டிருந்தன. wine and women என்ற ஆங்கிலப் பெயரிலேயே ஒரு மலையாளப் படம் வந்தது படு கவர்ச்சிகரமான காட்சிகளுடன். (ம்ம்.. கிருஷ்ணாஜி என்ன சொல்லப் போறாரோ!)

அதில் சுனிதா பிரதான பாத்திரத்தில் நடித்திருந்தார். மலையாள காமெடி ஆக்டர் ஜகதீ ஸ்ரீகுமார் சுனிதாவின் கணவராக மனைவியை சந்தேகப்படும் ரோலில் மதுவுக்கு அடிமையானவராக நடித்திருந்தார்.

இதழில் தென்பாண்டி முத்துக்கள் பாடலை வீடியோவாக பார்க்க முடியாவிட்டாலும் ஆடியோவாக கேட்கலாம். நன்றாகவே இருக்கிறது.


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=ZOqHeA3S0uY

gkrishna
19th June 2014, 03:12 PM
டியர் கார்த்திக் சார்
"அன்னை வேளாங்கண்ணி " தங்கப்பன் மாஸ்டர் எடுத்த ஒரு நல்ல படம்
கமல் கூட இந்த படத்தில் உதவி டைரக்டர் ஆக பணி புரிந்ததாக நினவு
பாடகி மாதுரி MD தேவராஜன் சார் வேலை செய்த எல்லா படத்திலும் ஒரு பாடல் பாடுவார் (லைக் குமார் வித் ஸ்வர்ணா) .
மாதுரியின் வாய்ஸ் கொஞ்சம் சைலஜா ஜாடையில் இருக்கும் (என்னுடய கணிப்பு may be wrong )

"வெள்ளி ரதங்கள் அழகு மேகம்
செல்லும் வீதி சிவந்த வானம்
பாவை நெஞ்சின் இளமை ராகம்
பாட வந்ததோ பருவ ராகம் "

பருவகாலத்தில் வந்த மிக இனிமையான பாடல்
இந்த பருவகாலம் 1974 ரிலீஸ் என்று நிநேகிறேன்
ஜுபிட்டர் ஆர்ட் films
ஏ.எஸ் பிரகாசம் வசனம்
பெர்னாண்டோ இன்னு ஒருத்தர் டைரக்ட் செய்தார் என்று நினவு

ஸ்ரீகாந்த் ,சுப்பையா,சசிகுமார்,சுதர்சன்,ரோஜாரமணி,பிரமீள,க மல் என்று ஒரு பெருங்கூட்டமே நடித்து இருக்கும் . கமல் தான் வில்லன் ஆக வருவர்

இந்த படத்தில் ஐய்யப்ப பாடல் ஒன்று கூட நினவு உண்டு
அப்ப எல்லாம் சபரி மலை சீசன் க்கு இந்த பாடல் தான் பாடுவார்கள்
பாடல் வரி மறந்து விட்டது

இவர்கள் குரலில் இன்னும் ஒரு பாடல் கேட்டு இருக்கிறேன்
"ப்ராநேசன் எங்கே பதில் சொல் " (வெள்ளி ரதங்கள் போன்றே )
என்ன படம் என்று தெரியவில்லை

vasudevan31355
19th June 2014, 03:23 PM
கிருஷ்ணா சார்,

'பருவகாலம்' படத்தில் வரும் அந்தப் பாடல் இதுதான்

சரணம் ஐயப்பா
சாமி சரணம் ஐயப்பா
சபரிமலைநாதா
சாமி சரணம் ஐயப்பா
சாமி சரணம்
ஐயப்பா சரணம்

பம்பா நதி தீர்த்தமாடி
உள்ளுறங்கும் ஆத்மஜோதி தன்னை உணர்த்தி

இப்படி வரும்.

ஏன்! வீடியோவாகவே கண்டு களியுங்களேன்.


http://www.youtube.com/watch?v=_labMNf5S4k&feature=player_detailpage

vasudevan31355
19th June 2014, 03:25 PM
'வெள்ளிரதங்கள்' சந்தோஷமாக ஒருமுறையும்

http://i1.ytimg.com/vi/aPE5z_M1r6M/hqdefault.jpg

சோகமாக ஒரு முறையும் வரும்.

http://i1.ytimg.com/vi/wI9JP9tF8oo/hqdefault.jpg

gkrishna
19th June 2014, 03:32 PM
வாசு சார்
நன்றிகள் "பள பள "

சரணம் யாப்பா பாடல் நான் ரொம்ப ரசித்த பாடல்
சார் நான் 1974 இலிருந்து சபரிமலை சென்று கொண்டு இருக்கிறேன்
அப்ப சபரி பஜனையில் இந்த பாட்டு தான் famous
ஜேசுதாஸ் இன் தரங்கனி,வீரமணி எல்லாம் பின்னாடி தான் famous

பருவகாலம் படத்தில் டைட்டில் பார்த்திங்கநா
கமல் பேர் இறுதியில் தான் வரும்

gkrishna
19th June 2014, 03:36 PM
இந்த படத்தில் எல்லோருமே ஸ்ரீகாந்த் தான் வில்லன் என்பார்கள்
இறுதியில் கமல் தான் culprit என்று தெரியும்

நெல்லை பர்வதியில் ரிலீஸ் சார்

gkrishna
19th June 2014, 04:06 PM
நீ ஒரு மகாராணி 1976

சூரியாலய
(விஜய சூரி combines மு சூரிய நாராயணன் என்று நெல்லை நகரசபை தலிவர் ,நெல்லை திரைப்பட விநியோகஸ்தர் தலைவர் ஆக இருந்தவர்

மிசா கால கட்டத்தில் நெல்லை போலிசால் நய்ய புடைக்கபட்டவர்

மறுபிறவி,வைரம்,தங்கத்திலே வைரம் போன்ற படங்களை தயாரித்தவர் .இந்த படைத்தை சூரியாலய என்ற banneril தயாரித்தார் )

ஜெய்ஷங்கர் சுஜாதா ஸ்ரீப்ரிய ,தேங்காய் என்று பெருங்கூட்டம்

இன்னிசை வேந்தர்கள் பின்னிஇருப்பார்கள்

பாலா வித் சுசீலா

ஆரம்ப ஹம்மிங் "ல ல்ல லா "
"அவள் ஒரு பச்சை குழந்தை பாடும் பறவை பருவம் 16 (யாரு ஸ்ரீப்ரியா)
அவன் ஒரு ராஜகுமாரன் (ஜெய்) அழகிய மாறன் வழிய பல்லாண்டு
காதல் கீதங்கள் கோயில் தீபங்கள் மேள தாளங்கள் வாழ்த்துது "

செம பாடல் சார்

saxophone பங்கோ drum ஜாலரை என்று பலவித வாத்யங்கள் உருளும்
ஸ்ரீப்ரியா செம cute கன்ன குழி துண்டா தெரியும்

2.நீ ஒரு மகாராணி நான் ஒரு மகாராஜன்
நேரம் சொல்லுது நெருங்க நெருங்க என்று
காலம் சொல்லுது தொடங்கு தொடங்கு என்று
ஒ ராணி ஒ ராணி

ஜேசுதாஸ் வித் சுசீலா beautiful டூயட்
அதிலும் ஒ ராணி என்று ஜேசு சொல்லும்போதும்
ஒ ராஜா என்று சுசில் சொல்லும்போதும் ஒரு சந்தோசம் தெரியும்

அபபறும் சுசீலாவின் சோலோ
"பல்லாண்டு காலம் நீ vazha வேண்டும் பல கோடி பாடல் நான் பாட வேண்டும்"

ஜெய் ஸ்ரீப்ரியவை லவ் பண்ணி விட்டு சுஜாதாவை கல்யாணம் செய்து கொண்டு ஸ்ரீப்ரியாவை மறக்க முடியாமல் (ஸ்ரிப்ரியாக்கு கிட்டத்தட்ட வில்லி கேரக்டர் ) இறுதியில் சுஜாதாவின்
அன்புக்கு அடிமை ஆவர்

vasudevan31355
19th June 2014, 04:35 PM
ரோஜாரமணி மலையாளத்தில் நடித்து வெளிவந்த 'செம்பருத்தி' (நடிகை ரோஜா நடித்தது அல்ல. செம்பருத்திக்கும் ரோஜாவுக்கும் அப்படி என்ன ராசியோ!) தமிழில் பருவகாலமாக நேரிடையாகவே தயாரிக்கப்பட்டது. தெலுங்கிலும் அப்படியே! 'கன்னிவயசு' என்ற பெயரில் வெளியானது.

http://upload.wikimedia.org/wikipedia/en/9/91/Chembarathi_film.jpg

http://3.bp.blogspot.com/-0Ph3I3xVlEk/UasWGDXCV7I/AAAAAAAAJE0/kQkyqHtyCjI/s1600/kanne-vayasu.png

மூன்றிலுமே ரோஜாரமணிதான் கதாநாயகி. தன்னுடைய 13ஆம் வயதில் இவர் 'செம்பருத்தி' படத்தில் நாயகியாகக் களமிறங்கி சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் அவார்டை இப்படத்திற்காக 1972 ஆம் ஆண்டு பெற்றார்.

தமிழில் குழந்தை நட்சத்திரமாக நன்கு அறிமுகமானவர்.

'இருமலர்கள்' படத்தில் நடிகர் திலகம் கல்லூரியில் படிக்கையில் தன்னை மோசம் செய்துவிட்டுப் போன காதலியை!? (பத்மினி) தன் திருமண வாழ்க்கைக்குப் பின் (மனைவி கே.ஆர்.விஜயா) சந்திக்க நேரிடும். (தான் முன்னால் உயிருக்குயிராகக் காதலித்த பத்மினி தன்னை ஏமாற்றி விட்டதாக சூழ்நிலை காரணமாக நடிகர் திலகம் தவறாக எண்ணி விடுவார்) தன் மகள் ரோஜாரமணியின் டீச்சரான பத்மினியை மீண்டும் எதிர்பாராமல் நீண்ட நாட்களுக்குப் பின் சந்தித்து, பின் பத்மினி வீட்டுக்கு சென்று, பத்மினி மேல் நெடுநாள் வைத்திருந்த தன் உள்ளக்குமுறலை ஆத்திரம் தொண்டை அடைக்க கொட்டித் தீர்ப்பாரே!

அப்போது தங்களுக்குள் நடக்கும் சம்பாஷணை தன் பிஞ்சு மகளான ரோஜாரமணிக்கு தெரியக்கூடாது என்று அதுவரை அங்கு நின்று கவனித்துக் கொண்டிருந்த ரோஜாரமணியை காரில் இருக்கும் தன்னுடைய சிகரெட் கேஸை எடுத்து வரச் சொல்லி அனுப்புவார்.

நடிகர் திலகம் பத்மினியை கடிந்து, கதறிக்கொண்டு இருக்கும் போதே (ஏன் இப்படிப் பட்ட மரம் மாதிரி நிக்கிறே?'... மறக்க முடியுமா என் தெய்வமே!!) இறுதியில் ரோஜாரமணி சீக்கிரமே அங்கு வந்து நடிகர் திலகத்திற்கும், பத்மினிக்கும் நடந்த உணர்ச்சிகரமான வாதப் பிரதிவாதங்களை எதேச்சையாகக் கேட்டு தன் தந்தையான நடிகர் திலகத்திற்கும், தன் டீச்சருக்கும் முன்னாலேயே ஏதோ தொடர்பிருக்கிறது என்று உணர்ந்து கொள்வார்.

அந்தக் காட்சியில் ரோஜாரமணி பிரதிபலிக்கும் முகபாவங்கள் வெகு அற்புதமாக இருக்கும். (உதட்டை சுழித்துக் காண்பிக்கும் அந்த சந்தேகப் பார்வை இன்னும் சூப்பர்) பின் காரில் நடிகர் திலகத்துடன் பேசாமல் அமர்ந்தபடி 'உம்' மென்று வருவதும் பின் நடிகர் திலகம் 'கீதா! நாம் உங்க டீச்சர் வீட்டுக்கு வந்தத பத்தி சம்பவங்களை அம்மாவிடம் (விஜயாவிடம்) சொல்லாதே" என்று சற்றே கடிந்து சொல்ல, 'என்னை பொய் சொல்ல சொல்றீங்களா?' என்று வெடுக்கென்று குத்துவதும், அதற்கப்புறம் வரும் காட்சிகளில் காட்டும் முறைப்பும், வெறுப்பும் ரோஜாரமணியை எப்போதும் மறக்க முடியாதபடி செய்து விட்டது.

பாடல் திரிக்கு சம்பந்தமில்லாவிட்டாலும் 'பருவகால' மங்கையை நினைவு படுத்தியதால் ஏற்பட்ட பாதிப்பு இந்தப் பதிவு.

அப்படியே எங்கள் குலதெய்வத்தையும் பூஜை செய்தாகி விட்டது.

gkrishna
19th June 2014, 04:35 PM
அவள் ஒரு பச்சை குழந்தை

வெரி வெரி யூத்புல் மற்றும் useful சாங்

நமபளையும் யூத் ஆ மாத்தும்

முதல் சரணத்தில்
பாலாவின் குரல்

"வாலை பருவம் கேட்டது கேள்வி
விடை தர இங்கே வந்தனள் தேவி
இளமையின் ரகசியம் எதுவென அறிந்தது நெஞ்சம் "

உடனே சுசீலா
"போகப் போக புரிவது என்ன
போதையில் ஏதோ வருவது என்ன
எனகன்னே அதிசயம் இதுவென விளக்கிடு கொஞ்சம் "
பின் பாலா
"இன்பத்தில் நீயும் நானும் ஊமை இல்லையோ "
உடனே சுசீலா
மிச்சங்கள் என்னென்ன நாளை என்று கூறவில்லையோ "

சுசீலாவின் பேஸ் வாய்ஸ்
"அவன் ஒரு ராஜகுமாரன் அழகிய மாறன் "

இரண்டாவது சரணம்
பாலா
"நீ இருக்கும் கண்ணில் நான் இருக்க வேண்டும்
கண்ணே கண்ணே என்னை ஏற்று கொள்வாயோ "
பின் சுசீலா
நினைவிருக்கும் நெஞ்சில் நானிருக்க வேண்டும்
நெஞ்சே நெஞ்சே என்னை அணைத்து கொள்வோயோ
பாலா
அச்சத்தை ஆசை வந்து வெல்ல கூடாதோ
சுசீலா
அம்மம்மா நாணத்தில் ஆடையிட்டு மூடக்கூடாதோ "

சுபெர்ப் lines

gkrishna
19th June 2014, 04:40 PM
வாசு சார்
ரோஜா ரமணி திடீர்னு காணமல் போனவர்கள் பட்டியலில் இடம் பெற்றார்
ஏன் என்று தெரியவில்லை
இரு மலர்கள் செம performance
1980 க்கு அபபறும் எதாவது தமிழ் படம் நடித்தார்களா
நாம் அலசிய இரு நிலவுகள் படத்தில் கிராமத்து பொண்ணாக வருவர்

vasudevan31355
19th June 2014, 04:45 PM
கிருஷ்ணா சார்,

http://i1.ytimg.com/vi/Zdg78yqoaBA/hqdefault.jpg

'அவள் ஒரு பச்சைக் குழந்தை' பாடலைப் பற்றிப் பதிவிட்டு 'அவள் ஒரு பச்சைக் குழந்தை'யை ஞாபகப்படுத்தி விட்டீர்களே!:)

vasudevan31355
19th June 2014, 04:56 PM
'அவள் ஒரு பச்சைக்குழந்தை' பவானி அழகு.

'மாலை இளமனதில் ஆசைதனை தூண்டியது அதிகாலை
அந்த நினைவில் தினம் ஆயிரம் கவிதைகள் பாடியது
மாலை'

மொட்டை செம கலக்கல். சுரேந்தர், நம்ம ஷோபா சந்திரசேகர்தானே?
விஜய் காலரை தூக்கி விட்டுக் கொள்ளலாம்.

அப்புறம்

'பொண்ணு பாக்க வந்தாரு மாப்பிள்ளை'

கேட்டிருக்கீகளா.?

'இளையராசாவ நினச்சு
இளச்சுப் போனேங்க தவிச்சு'

gkrishna
19th June 2014, 04:57 PM
vasu sir
நீ ஒரு மஹராணி தொடர்ச்சி என்று போட்டு இருக்க வேண்டும்
அவசரத்தில் டைப் செய்ய மறந்து விட்டேன்

gkrishna
19th June 2014, 04:59 PM
கரெக்ட் சார்
மொட்டை early மெலடி
சிலோன் ரேடியோ உபயம் செம ஹிட் பாடல்
விஜயகுமார் பவானி தானே சார் ஜோடி

gkrishna
19th June 2014, 05:05 PM
இது சந்திர சேகர் முதல் படம்
அபப அவர் பெயர் s a c சேகர் என்று thaan போஸ்டரில் பார்த்த நினவு
ஷோபா ஷீலா சுந்தர் சுரேந்தர் என்று நாலு பேர் பெயர் போட்டு மெல்லிசை குழு ஒன்று நடந்து வந்த நினவு
திருநெல்வேலியில் அரசு பொருட்காட்சியில் இவர்கள் நிகழ்ச்சி ஒன்று பார்த்த நினவு
இந்த ஷீலா ஷோபாவின் தங்கை - நடிகர் விதர்த் (கொஞ்சம் கண்ணு) இன் அன்னை இப்ப கூட விஷால் படத்தில் நண்பராக நடித்தார்
ஹீரோ ஆக போனி ஆகவில்லை

சுந்தர் என்ன ஆனார் என்று தெரியவில்லை

ஷீலாவின் அபபா v v நீலகண்டன்

vasudevan31355
19th June 2014, 05:05 PM
ஆமாம் சார் ஆமாம்! ஆனால் ரொம்ப ரொம்ப rare movie. கொஞ்சம் நெளியிற மாதிரி படம்.

vasudevan31355
19th June 2014, 05:09 PM
கிருஷ்ணா சார்,

எவ்ளோவ்...விஷயங்களை தெரிஞ்சி வச்சரிக்கீங்க அடிமுடி தொட முடியாதபடி.

நெஜம்மா நீங்க எங்களுக்குக் கெடச்ச கிப்ட்.

gkrishna
19th June 2014, 05:12 PM
கோபால் சார் சொன்ன மாதிரி உங்க எல்லோர் கூடவும் ஒரு நாள் பூராவும் அரட்டை அடிக்கணும் சார்

gkrishna
19th June 2014, 05:15 PM
வாசு சார் /கார்த்திக் சார்/முரளி சார்/ராகவேந்தர் சார்/தமிழருவி சி க /
பார்த்தசாரதி சார் மற்றும் பலர்

உங்கள் எல்லோரயும் விட நான் ஜுஜுபி சார் please

gkrishna
19th June 2014, 05:25 PM
வாசு சார்

ஜெயந்தி பற்றி நீங்கள் எழுதியது ரொம்ப humerous சார்

ஆபீஸ் இல் உட்கார்ந்து படிக்கும் போது விழுந்து விழுந்து (கீழே இல்லை)
சிரித்தேன்

இங்கே 2 லேடீஸ் இருக்கிறார்கள் என்னை வேறு ஒரு மாதிரி பார்த்தார்கள் என்னடா இவன் ஒரு லூசே பயல என்கிற மாதிரி

அவங்களுக்கு தெரியும்மா வாசு என்ற மேதையின் அறிவினை ஷேர் செய்து கொண்டு இருக்கிறேன்

vasudevan31355
19th June 2014, 05:28 PM
கிருஷ்ணா சார்

திக்குத் தெரியாத காட்டில் படத்தில எனக்கு ரொம்பப் பிடிச்ச பாட்டை விட்டுட்டீங்களோ அப்படின்னே நினச்சேன். அப்புறம் கெளப்பிட்டீங்க.

பாட்டுக்காரன் பாடிப் பார்க்கலாம்
ஆட்டக்காரன் ஆடிப் பார்க்கலாம்
நோட்டக்காரன் நோட்டம் பார்க்கலாம்
வா வா வாலிபமே

வனஜா கிரிஜா வளஞ்சா நெளிஞ்சா
மயக்கம் வருமல்லவோ

நம்மிடம் நவரச நாடகம் நடித்திடும் பெண் இல்லையோ
பெண்ணிடம் அதிசயக் காவியம் படித்திடும் கண் இல்லையோ

அதுவும் ஆரம்ப பாலாவின் ஹா ஹஹஹா ஹம்மிங் ஓஹோ!
கிராதகி கேட்கவே வேண்டாம்.

இப்போது என்ன சார் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்'? பெரிய சங்கம்?

அப்போதே நம்முடைய ஆட்கள் செய்து விட்டார்கள். 'வருத்தமில்லா வாலிபர் சங்கம்' இப்பாடல் முழுதும் ஏக ரகளை செய்யுமே!

மாலி, மூர்த்தி, காத்தாடி ராமமூர்த்தி, வி.எஸ்.கோபாலகிருஷ்ணன், சச்சு ரகளை


https://www.youtube.com/watch?v=KwgKMKtjSbM&feature=player_detailpage

Gopal.s
19th June 2014, 06:18 PM
ஆபீஸ் இல் இங்கே 2 லேடீஸ் இருக்கிறார்கள்



உங்களை ஆபீஸ் வந்து பார்க்கலாமா?

Gopal.s
19th June 2014, 06:47 PM
தொடர்கிறேன். அவ்வப்போது அரட்டையும் ,சீண்டல்களும் உண்டு.

Gopal.s
19th June 2014, 06:48 PM
ஆபேரி(கர்நாடக பெயர்)/பீம்ப்ளாஸ் (ஹிந்துஸ்தானி )

டி.எம்.எஸ் எவ்வளவுக்கெவ்வளவு நல்ல பாடல்களை தந்துள்ளாரோ ,அந்த அளவு சொதப்பியும் உள்ளார்.His voice is more enjoyable in Bass and baritone. high Octave(Tenor and counter tenor) with nasal tone is not at all bearable. His is a karvai not Birka sareeram and this is a limitation in some fine notes.

ஆனால் எனக்கு பிடித்த ஒரு பாடலை கேட்கும் போது ,ஆரம்பத்தில் தொண்டையை உருட்டி ஒரு பிர்க்கா கொடுப்பார்..பிறகு பூ என்று சொல்லும் போதே கட கட உருட்டல்.அப்படியே தென்றல் என்னை தடவி கொஞ்சுவது போல அந்த பாடல் இதம்.நடித்த ,படமாக்கிய விதத்திலும் மந்த மாருதம் தவழும்.ஊட்டி வரை உங்களை கூட்டி போக போவதில்லை.பூமாலையில் ஓர் மல்லிகை இப்போதே தயார்.

சகோதர ராகங்களான ஆபேரி ,பீம்ப்ளாஸ் ஒரே சாயல் கொண்ட கரகர ப்ரியா என்ற மேளகர்த்தா ராகத்தின் தத்து குழந்தை(மகாராஜன் உலகை ஆளாமல் போனது எனக்கு வருத்தமே.ஏன் கட் பண்ணினார்கள்?)

இந்த ராகத்தின் வசீகரம் சொல்லி மாளாது. cheers சொல்லி கிளாஸ் இடிபடாமல்,மாலை வேளையில் பீச் காற்றை தனியாக அல்லது ஒத்த நண்பர்களுடன் அனுபவிக்கும் சுகத்தை இந்த ராகம் நமக்கு தரும்.

என்னை கவர்ந்த மற்றவை.

வாராய் நீ வாராய்- மந்திரி குமாரி.
நாதம் என் ஜீவனே- காதல் ஓவியம்.
தேவதை போலொரு- கோபுர வாசலிலே.
கண்ணோடு காண்பதெல்லாம்-சரணம் மட்டும் ,பல்லவி வேறு.
சிங்கார வேலனே தேவா- கொஞ்சும் சலங்கை.
இசை தமிழ் நீ செய்த -திருவிளையாடல்.
நாளை இந்த வேளை பார்த்து- உயர்ந்த மனிதன்.
வசந்த கால கோலங்கள்-தியாகம்.
ராக்கம்மா கைய தட்டு- தளபதி.

vasudevan31355
19th June 2014, 07:08 PM
ரெண்டு லேடீஸ் என்பதால் ஒரே பதிவு ரெண்டாயிடுச்சா மகனே! அவ்வளவு வெறியா?

Gopal.s
19th June 2014, 07:14 PM
சக்கரவாகம்.(கர்நாடக பெயர்)/ஆஹிர் பைரவ் (ஹிந்துஸ்தானி)

தமிழ் இசை சக்ரவர்த்தி சீர்காழி அவர்களின் மறக்க முடியாத ,ஒவ்வொரு தமிழனின் நெஞ்சிலும் ஒரு உலக தமிழ் நடிகன் மரண மூச்சை நினைவுறுத்தி தொண்டையில் முள் உருள செய்யும் அதிசய பாடல்.ஆரம்பம் எங்கேயோ பாட்டை கொண்டு நிறுத்தும். சரணம் சரஸாங்கி சாயல் என்று டி.கே.ராமமூர்த்தி விளக்கினார்.அவர் போட்ட பாடலல்லவா? அந்த அபிமானம். (குறுக்கே ஒரு இசை அரசியல் வந்து நாம ஏம்பா பேசி போரடிக்கணும் ,ஜனங்க பாட்டை கேட்கட்டும் என்று வெட்ட கண்ணதாசன் விழாவில் அந்த அடக்க திலகத்தின் சாயம் வெளுத்தது) "உள்ளத்தில் நல்ல உள்ளம் " விட்டு கொடுத்து ஒதுங்கி நின்றது.(சொந்தமில்லை என்பதாலோ என்னவோ இந்த காவியம் மறு வெளியீட்டில் சக்கை போடு போட்டு விழா எடுக்கும் போது கேரளா வல்லிசை வேந்தர் ஒதுங்கியே நின்றார்.)

சக்கரவாகம் ,ஆரம்பமே களை கட்டும் ரக ராகம்.உருக்கத்தை வார்த்து எடுத்து உருக வைத்து உலுக்கும்.இது ஒரு மேளகர்த்தா சம்பூரணமே .

என்னை கவர்ந்த மற்றவை.

மேகங்கள் என்னை தொட்டு போனதுண்டு-அமர்க்களம்.
கற்பனைக்கு மேனி தந்து காற்சலங்கை-பாட்டும் பரதமும்.
பிச்சாண்டி தனை கண்டு- கங்கா கௌரி.

Gopal.s
19th June 2014, 07:19 PM
ரெண்டு லேடீஸ் என்பதால் ஒரே பதிவு ரெண்டாயிடுச்சா மகனே! அவ்வளவு வெறியா?
ஆமா இல்லை?என்னை மறந்து உணர்ச்சி வச பட்டுட்டேன்.

vasudevan31355
19th June 2014, 07:22 PM
இன்றைய ஸ்பெஷல் (8)

மீண்டும் ஒரு அற்புதமான பாடல் (சற்றே வித்தியாசமான நடையில்)

'சமையல்காரன்' படத்தில். இயக்கம் திருமலை மகாலிங்கம்.

http://shakthi.fm/album-covers/ta/a89d6d0a/cover_m.jpg

மு.க.முத்து, 'வெண்ணிற ஆடை' நிர்மலா ஜோடி.

டி.எம்.எஸ், சுசீலா நடத்தும் ராஜாங்க அராஜகம்.

இப்பாடலின் சிறப்புக்கு இன்னொரு காரணம் 'வெண்ணிற ஆடை' நிர்மலாவின் அழகான, அருமையான முகபாவங்கள், அங்க அசைவுகள்.

'வெண்ணிற ஆடை' படத்தில் 'கழுக் மொழு' க்கென்று மெழுகு பொம்மை போல் ஸ்ரீகாந்துடன் 'சித்திரமே நில்லடி'யிலும், 'ஒருவன் காதலனி'லும் 'முழி முழி' என்று முழித்த நிர்மலா இப்பாடலில் நம் உள்ளங்களை தன் அற்புதமான மூவ்ஸ்களால் திருடிக் கொள்வார். ரொம்ப ஸ்லிம்மாக இருப்பார். தலையில் சூடிக் கொண்டிருக்கும் மல்லிகைப் பூச்சரம் தோள்களின் வழியே மார்பில் தவழ்ந்து மணக்கும் அழகோ அம்சமான அம்சம். பிரில் வைத்த ஜாக்கெட் வேறு ஜம்மென்று ஜமாய்க்கும்.

மு.க.முத்து அப்படியே எம்ஜியாரின் கார்பன் காப்பி என்று அவருக்கே தெரியும். இப்பாடலில் மு.க.முத்து திருதிருவென்று விழிப்பார்.

ஜெயிலில் இருந்து வந்த எம்.ஆர்.ராதா நம்மை 'உச்' கொட்ட வைப்பார். பாவம். பரிதாபம்.

இனி பாடல்

பாடல் முழுதும் 'வெண்ணிற ஆடை' பெண்ணுக்கு சமர்ப்பணம்.

நிர்மலா: உனக்கொரு விஷயம் தெரிவிக்கவோ?
அ ... உள்ளத்தின் ஆசையை அறிவிக்கவோ?

சொல்லவோ! என்னென்று சொல்லவோ!.... ஓ...ஓ......ஓஓ

பல்லாக்கு என் மேனி
பட்டத்து ராஜா நீ
பக்கம் வந்தாடவோ!

ம்...

பொன் மஞ்சம் என் நெஞ்சம் (அடடா! இரண்டே வார்த்தைகளில் ஒரு பெண்ணின் முக்கால்வாசி அழகும் அழகாக விளக்கப்பட்டு விட்டதே!)
பூவண்ணம் தேன் கிண்ணம்
சொந்தம் கொண்டாடவோ!

வா! வா! (செல்ல அழைப்பு)

உனக்கொரு விஷயம் தெரிவிக்கவோ?
அ...உள்ளத்தின் ஆசையை அறிவிக்கவோ?

சொல்லவோ! என்னென்று சொல்லவோ ஓ...ஓ......ஓஓஓ

(கொடி இடை விந்தைகள் புரியும்)

நிர்மலா: என் வாழ்வுக்கு நீதான் வெண்ணிலவோ?

முத்து: வெண்ணிலவுக்கு வானம் தான் உறவு

(காதலன் கொஞ்சம் பிகு பண்ணிக் கொள்கிறான். 'நீ இல்லம்மா என் உறவு...)

நிர்மலா: இந்தத் தாமரைப் பூ வந்து மலராதோ!

(என்ன அழகாக கைகளைத் தாமரைப் பூப்போல குவிக்கிறார் நிர்மலா!)

முத்து: அந்த சூரியன் சுடர் வந்து தழுவாதோ (இங்கேயும் சூரியனா!) (அப்படியே எம்ஜியார் கைகள் )

நிர்மலா: உடல் கொதிக்குது குளிர்ந்திட வழி சொல்லு

(பெண்ணின் தாபத்தை, தாகத்தை எப்படி எழுதியிருக்கிறார் பாடலாசிரியர்!)

முத்து: குளிர் நதியில் போய்க் கொஞ்சம் நீராடு (வழியும் சொல்லியாயிற்று)

நிர்மலா: நீ ஆசையில்லாத ஆண்மகனோ?

(அடப் போடா! இவ்வளவு கிட்ட கிட்ட நெருங்கி வருகிறேன். ஆத்துல போய்க் குளிக்க சொல்றியே! புரியலையா உனக்கு? மக்கு!மக்கு! கொஞ்சங்கூட 'இது' இல்லாம நீ பாட்டுக்கு ஓட்றியே! நீயெல்லாம் ஒரு ஆண் பிள்ளையா?) நிர்மலா சற்றே கோபத்துடன் முறைத்து கொஞ்சம் முரட்டுத்தனமாக முத்துவின் தோள்களை கைகளால் பற்றுவார்.

முத்து: உன் ஆசைக்குக் காரணம் நான்தானோ!

முத்து: உனக்கொரு விஷயம் தெரிவிக்கவோ?
அ...உள்ளத்தின் ஆசையை அறிவிக்கவோ?

சொல்லவோ! என்னென்று சொல்லவோ ஓ...ஓ......ஓஓஓ

முத்து: மாணிக்கம் வைடூர்யம்
ஆனிப்பொன் எல்லாம்
உன் அங்கம் என்றானதோ

பவழத்தின் பெட்டிக்குள்
தவழும் நல்முத்துக்கள் பற்கள்
என்றானதோ!

(கே.ஆர்.விஜயா கோவிச்சுக்கப் போறார்)

(வரும் இடையிசையில் நிர்மலா தோள்களைக் குலுக்கியபடி வலதும் இடதுமாக ஆடியபடி ஓடி வரும் அழகைக் காணக் கண்கோடி வேண்டும்)

முத்து: இந்த மைவிழி பாண்டியன் மீன்கொடியோ? (மீன் போன்ற கண்களைக் கொண்டவளாம்)

நிர்மலா: இளமீன் வந்து முகத்தினில் மிதப்பதுண்டோ! (போய்யா! உன் மீனை நீயே கட்டிக்கிட்டு அழுவு! என் கண்ணிரண்டுக்கு ஈடாகுமா உன் மீனு!)

(நிர்மலாவின் கண்கள் மீன்களைவிட ஜாலம் புரிவதை பார்த்துதான் நீங்கள் உணரவேண்டும். என்ன சுழல் சுழலுது இரு விழிகளும்! என்ன அழகான தலையாட்டல்!)

முத்து: இந்தப் புருவங்கள் சேரனின் வில்கொடியோ? (இதற்கு விளக்கம் தேவை இல்லை)

நிர்மலா: இதை வீர்கள் கைகளில் வளைப்பதுண்டோ! (வில்லை வளைக்கலாம் மகனே! என்னை நீ வளைக்க முடியுமா?)

(இந்தக் கொடியிடையாள் காதலன் கைகளில் வில்லாக வளைவாள்.
அதுமட்டுமல்லவே! இந்த 'வெண்ணிற ஆடை' அழகியின் இடது புருவம் அர்ச்சுனன் வில் போலே என்னமாய் வளைகின்றது! ஏறி ஏறி இறங்குகின்றது!)

முத்து: உன் எழில் நடை சோழனின் புலிக்கொடியோ?

(உடனே இந்த அம்மா... இல்லை இல்லை... இந்தக் கன்னி கொடியிடை அசைத்து அசைத்து நடந்தபடியே... என்ன ஒரு சுந்தர எழில் நடை! )

நிர்மலா: என் இனத்தவள் புலியையும் விரட்டலையோ?

( நீ என்னப்பா புலிக்கொடியைப் பற்றி என்னிடம் சொல்றது? என் பாட்டி முப்பாட்டி எல்லாம் உங்க தாத்தனுக்கு முன்னாடியே புலியை முறத்தாலே அடிச்சி விரட்டிட்டாங்கப்பா. ரொம்பத் துள்ளாதே!)

இப்போதும் இந்த 'வெகுளிப்பெண்' கைகள் அபிநயத்தில் 'இப்படியும் ஒரு பெண்' ணா? என்று ஆச்சர்யப்பட வைப்பார். 'அவளுக்கு நிகர் அவளே'!

முத்து: நீ ஆசை இல்லாத பெண்மகளோ! (இப்போது காதலன் டெர்ம் போல் இருக்கிறது)

அதற்கு யோசிக்காமல் இந்த அழகு தேவதையிடமிருந்து வரும் பதிலில் கொப்பளிக்கும் பெருமையையும், கர்வத்தையும் பாருங்கள்

நிர்மலா: உன் ஆசைக்குக் காரணம் என் அழகோ!

(நிர்மலா முகத்தில் தன் அழகைப் பற்றிய, அதிகம் வெளிக்காட்டிக் கொள்ளாத, என்ன ஒரு அலட்சிய கர்வம்! அதுவும் வாய்களை சற்றே குவித்து வாயசைப்பது வாட்டி எடுக்கிறது நம்மை)

இருவரும் சேர்ந்து: உனக்கொரு விஷயம் தெரிவிக்கவோ
உள்ளத்தின் ஆசையை அறிவிக்கவோ

சொல்லவோ! என்னென்று சொல்லவோ ஓ...ஓ......ஓஓ

முழுக்க முழுக்க நிர்மலா ஆக்கிரமிப்பு செய்த பாடல். என்னை நிர்மூலமாக்கிய பாடல்.

என் நெஞ்சம் மகிழ்ந்து பல நூறு தடவைகள் நான் கேட்டுக் கொண்டிருக்கின்ற, பார்த்துக் கொண்டிருக்கிற அட்டகாசமான பாடல். மெல்லிசை மன்னரைப் பற்றி ஒன்றுமே சொல்வதற்கில்லை. மெய்யாலுமே மெய் மறக்கச் செய்து விட்டார் நம்மை இந்தப் பாட்டிலே!


http://www.youtube.com/watch?v=Cly0BcV-hOs&feature=player_detailpage

mr_karthik
19th June 2014, 07:30 PM
// .(சொந்தமில்லை என்பதாலோ என்னவோ இந்த காவியம் மறு வெளியீட்டில் சக்கை போடு போட்டு விழா எடுக்கும் போது கேரளா வல்லிசை வேந்தர் ஒதுங்கியே நின்றார்.) //

ஒதுங்கவில்லை.

150-வது நாள் ஷீல்டுடன் கம்பீரமாக....

gkrishna
19th June 2014, 07:39 PM
வாசு சார்
ஒரு பாடலை இப்படி கூட ரசிக்க முடியுமா ரசித்து விளக்க முடியுமா
விளக்கி எங்களுக்கு புரிய வைக்கவும் முடியுமா

ஒரு புறம் ஸ்ரிங்காரம் மறு புறம் அசட்டுத்தனம்

என்னே உன் வர்ணிப்பு
பரிமெலழகர் எல்லாம் கற்று கொள்ள வேண்டிய விளக்கவுரை

Richardsof
19th June 2014, 07:53 PM
VASU SIR

AGAIN ISAI ARAKKI

http://youtu.be/31PghS_OwMQ

vasudevan31355
19th June 2014, 09:45 PM
சின்னக் கண்ணன் சார்

எங்கள் செல்லக்கண்ணன் நீங்கள். நீங்கள் பல நல்ல பாடல்கள் அடங்கிய தொகுப்பை (பாட்டுப் பேச வா) அருமைத் தமிழில் பதித்து (இடையிடையே தங்களுக்கே உரிய குறும்பு கலந்த நகைச்சுவையோடு) ரசிக்கத் தக்க வகையில் தொடராகத் தருவதற்கு என் அன்புப் பாராட்டுக்கள்.

vasudevan31355
19th June 2014, 09:47 PM
வினோத் சார்,

'திக்குத் தெரியாத காட்டில் ஆவண விளம்பரம் படு தெளிவு. சூப்பர்.

vasudevan31355
19th June 2014, 09:52 PM
கார்த்திக் சார்,

'ஜெயந்தியின் கணவர்கள்' பற்றி ஒரு தொலைக்காட்சி டிராமாவே தயாரிக்கலாம் போல் இருக்கிறதே!

எப்படி இம்மாதிரி விஷயங்களை ஞாபகம் வைத்து இருக்கிறீர்களோ!

வெரி ஷார்ப். உங்கள் அசாத்திய ஞாபக சக்திக்கு என் நன்றியுடன் கூடிய வாழ்த்துக்கள்.

vasudevan31355
19th June 2014, 10:07 PM
கோ,

உங்களது ராகங்கள் பற்றிய தொடரை வாசித்து வருகிறேன். ராகங்கள் பற்றிய அறிவு முற்றிலுமாக இல்லாததால் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும் நிச்சயம் உபயோகமான பதிவாக புரிந்தவர்களுக்கு இருக்கும் என்று மட்டும் புரிகிறது.

ராகங்கள் சம்பந்தமான நீங்கள் அளிக்கும் பாடல்களின் லிஸ்ட்டை ஆர்வத்துடன் விடாமல் துரத்துவேன்.

அதனால் நிறுத்துவதெல்லாம் வேண்டாம்.

நல்ல சரக்கிற்கு எப்போதுமே மவுஸ்தானே! (நம் நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன் போல)

vasudevan31355
19th June 2014, 10:27 PM
கார்த்திக் சார்,

https://i1.ytimg.com/vi/ymcmqoFHv7k/hqdefault.jpg

'அன்னை வேளாங்கண்ணி'யில் என் மனம் கவர்ந்த இன்னொரு பாடல் உண்டு.

தந்தானா தன தந்தானா
தந்தானா தன தந்தானா

தந்தானா... ஆ ஆஆஆஆ......

தண்ணீர் குளத்தருகே
அம்மா தரிசனம் தந்தாளாம்

அருமையான கோரஸுடன் கூடிய ஜேசுதாஸ், மாதுரியின் வளமான குரலில் ஒலிக்கும் இப்பாடல் ஒரு துள்ளிசைப் பாடல். மீனவர்கள் படகுகளில் செல்லும் காட்சிகளும், உழவர்கள் கதிர் அறுத்து நெல் மூட்டைகளை வண்டியில் ஏற்றுவதும், 'மறுபடி வயலை உழும் முன் ஸ்ரீவித்யாவை திருமணம் செய்வேன்' என்ற சிவக்குமாரின் உறுதியும், தன்னனம்பிக்கையும் (இளமையான சிவக்குமார், ஸ்ரீவித்யா), வைக்கோற் போர்களின் மேல் நின்று பாடும் கோஷ்டியனர் கூட்டமும், தென்னந்தோப்புகளும் மறக்கமுடியவில்லை சிறுவயதில் பார்த்ததிலிருந்தே.

பாடலின் நீளமும் அதிகம். இனிமையும் அதிகம். ஜி.தேவராஜனின் மலையாள வாடையையும் மீறி பாடல்கள் இதயத்தில் ஒளிந்து கொண்டு இன்றுவரை வெளிவர மறுக்கின்றன.

வேளாங்கண்ணி அன்னையை இசை வடிவில் மீண்டும் வெளிக்கொணர்ந்ததற்கு தங்களுக்கு நன்றி!

அடுத்து 'ஜீசஸ்' மேடம் பாட்டு பற்றி...

Gopal.s
20th June 2014, 04:04 AM
கல்யாணி .

65 ஆவது மேளகர்த்தா ராகமான இது மெல்லிசைக்கு இசைவான classic ,semi classic,Gazhal ,melody,folk ,என்று எல்லா ரக பாடல்களுக்கும் தோது. மனோரஞ்சித மலர் போல காதலென்றால் காதல்,பாசமேன்றால் பாசம்,குதூகலமென்றால் குதூகலம் என்று இந்த ராகத்தின் plasticity சொல்லி மாளாது.தமிழில் அதிக பட்ச மெல்லிசை ,இந்த ராகத்தில்தான் வந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

சிறு வயதில் ,நடிகர்திலகத்தின் பரம ரசிகரான எங்கள் அம்மா வழி தாத்தாவுடன் 1968 இல் இந்த படம் குடந்தை ஜுபிட்டர் திரையரங்கில் பார்த்தேன்.(எங்கள் குடும்பத்தில் அனைவருமே நடிகர்திலகத்தின் பக்தர்கள்).ஒரு அரச சபையில் நடன காட்சி. சரி. அந்த கால வழக்க படி நிரவல் காட்சி என்று அசுவாரஸ்யமாய் இருந்தேன்.(அப்போதெல்லாம் எவ்வளவு ரீல் என்று அடித்து கொள்வார்கள். ஒரு ரீல் கிட்டத்தட்ட 1000 அடி10 நிமிட படம்)ஆனால் பல திரை ஒன்றால் பின் ஒன்றாக விரிந்து ,ஒரு அற்புத நடன நடை. நடன மாதுவிடமிருந்து அல்ல. நடைக்கென்றே பிறந்த உலக நடிகனின் தாளத்தோடு இசைந்த சிருங்கார நடன நடை.இந்த பாடலை connoisseurs என்று சொல்ல படும் பல இசை மேதைகள் சிலாகித்து ,இதற்கு மேல் கல்யாணியில் என்ன சாதிக்க முடியும் என்று திரை இசை திலகத்தை போற்றி புகழ்ந்த பாடல் "மன்னவன் வந்தானடி தோழி".

அண்ணன் தங்கை பாசமென்றாலே உருக்கம் நிறைந்த demonstrative பாணியில் அமைந்த போது ,ஸ்ரீதர் அழகாக நட்போடு தங்கை மனதை உணரும் மென்மையான அண்ணனை காட்டிய அற்புத பாடல். கசல் (gazal )பாணியில் இரட்டையர் இசையமைப்பில் ,தமிழில் வந்த பாடல்களிலேயே சிறந்தவைகளில் ஒன்றாக நான் சிலாகிக்கும் பாடல்."இந்த மன்றத்தில் ஓடி வரும்". இந்த இடத்தில் இரட்டையர்களின் மேதைமையை நான் புகழ்ந்தே ஆக வேண்டும். ராஜா இசையமைப்பில் ராகங்களை சுலபமாக இனம் காணலாம்.இரட்டையர் இணைவில் அது மிக கடினம்.தமிழின் மிக மிக சிறந்த பாடல்களின் பொற்காலம் என்றால் விஸ்வநாதன்-ராமமூர்த்தி இணைவில் 60 முதல் 65 வரையே.

நாயகனை முழு படமும் ஊனமுற்றவராக சித்திரித்த ,நடிப்பில் இன்றும் எல்லோருக்கும் benchmark ஆக திகழும் பாக பிரிவினை படத்தில் (அடடா ,அந்த ஆரம்ப குதூகல நடனம்)இமேஜ் பாராது உலக நடிகன் எருமை ஏறிய folk wonder (வடக்கு சாயலில்)தாழையாம் பூ முடிச்சு.

பாரதியின் ஜனரஞ்சக தெரிந்த பாடல்கள் பல இருக்க ,அவரின் படு வித்யாசமான தனி பாடலான ,இன்றைய பேரரசுகளுக்கு அன்றே விட்ட சவாலான பாடல் நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே..இதை தேர்வு செய்து இசையமைத்த ஞானிக்கு எனது ஆத்மார்த்த நன்றிகள்.

இப்போது தெரிகிறதா இந்த ராகத்தின் வீச்சு.ஜனரஞ்சகம்.வித்தியாச range . அதுதான் கல்யாணி.

இந்த ராகத்தில் மற்ற சுவையான பாடல்களில் சில.(அத்தனையும் லிஸ்ட் போட முடியாது.)

துணிந்த பின் மனமே - தேவதாஸ்.
சிந்தனை செய் மனமே- அம்பிகாபதி.
முகத்தில் முகம் பார்க்கலாம்-தங்க பதுமை.
அத்திக்காய் காய் காய்- பலே பாண்டியா.
கண்ணன் வந்தான் -ராமு.
அடி என்னடி ராக்கம்மா- பட்டிக்காடா பட்டணமா.
இசை கேட்டால் புவி அசைந்தாடும்-தவ புதல்வன்.
வெள்ளை புறாவொன்று- புது கவிதை.
நதியிலாடும் பூ வனம்- காதல் ஓவியம்.
ஜனனி ஜனனி- தாய் மூகாம்பிகை.
அம்மா என்றழைக்காத- மன்னன்.
சுந்தரி கண்ணால் ஒரு சேதி- தளபதி.
உப்பு கருவாடு ஊற வைத்த சோறு-முதல்வன்.
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை-அங்காடி தெரு.

Richardsof
20th June 2014, 05:45 AM
அன்பு வழி படத்தில் இடம் பெற்ற இந்த பாடல்

நாணமில்லை உங்கள் கண்ணுக்கு ....பாடல்

விஜயலக்ஷ்மியின் நடிப்பு இந்த கிண்டல் பாடலில் அருமையாக இருக்கும் .
http://youtu.be/w1tnYCgOqIs

Richardsof
20th June 2014, 06:30 AM
http://youtu.be/i8AX0ju12vU

gkrishna
20th June 2014, 10:18 AM
"kalyani" meaning auspicious

கல்யாணியின் மேலும் சில பாடல்கள்
என்னை கவர்ந்தவை
1.வந்தாள் மகாலக்ஷ்மியே என் வீட்டில் என்றும் அவள் ஆட்சியே
குடி வாழ தனம் வாழ - உயெர்ந்த உள்ளம்
பாலாவின் அட்டகாசம்
அதிலும்
"நண்பா பெண் பாவை கண் வண்ணம்
கள்ளம் இல்லாத பூ வண்ணம்
சொந்தம் பந்தம் இல்லாமல் வந்ததது ஒரு வண்ணமயில்
வீடு வாசல் எல்லாமே மின்னுது மின்னுது பொன் வடிவில்
மயங்கினேன் ஆ
பின் ஸ்வரங்கள்

2."கலைவாணியே உனைத்தானே அழைத்தேன் " சிந்து பைரவி
அவரோகணம் இல்லாத ஒரு பாடல்

3."காற்றில் வரும் கீதமே கண்ணனை அழைதோயோ" -ஒரு நாள் ஒரு கனவு

gkrishna
20th June 2014, 11:16 AM
தமிழ் சினிமாவில் இந்த படம் ஒரு அங்கம் . 1980 கால கட்டத்திற்கு பிறகு பிறந்தவர்கள் கூட உண்மையில் தமிழ் சினிமா ஆர்வலர்களாக இருந்தால் இந்த படத்தை பார்க்காமல் இருக்க மாட்டார்கள்
வலைப்பூவில் இந்த படத்தை துவைச்சு காய போட்டவர்கள் நிறைய பேர்

இரண்டு அருமையான பாடல்கள் .
இரண்டுமே கதையை,கதா பாத்திரங்களை ஒட்டியே அமைந்து இருக்கும் .
நிறைய படங்களில் பாடல் காட்சி என்பது குட்டி இடைவேளை (short பிரேக்) ஆகவே இருக்கும் . ஆனால் இந்த படத்தின் இரண்டு பாடல்கள்
காட்சிக்கும் யாருமே சீட்டை விட்டு எழுந்து வெளியே செல்ல மாட்டார்கள் .அப்படி அனைவரையுமே கட்டி போட்ட பாடல்கள்

gkrishna
20th June 2014, 11:43 AM
ஒரு திரைப்பட பாடல் என்பதற்கு குறைந்த பட்சம் 5 பேர் தன்னுடைய பங்கை முழு அர்பணிப்புடன் செய்தால் ஓழிய அந்த பாடல் என்றும் சாகா வரம் பெற்ற பாடல் ஆக மாற முடியாது .
(அதற்காக நான் மற்றவர்களின் பங்கை ஒதுக்கிவிடவில்லை )
அந்த வரிசையில் இசை அமைப்பாளர்,பாடலாசிரியர்,பாடகர்,படத்தை இயக்கியவர் மற்றும் அந்த பாடலுக்கு வாய்அசைத்து நடித்த நடிகர்
ஆகிய 5 பெரும் ஜாம்பவான்கள் இணைந்து உருவாக்கிய
காதுகளுக்கு இனிமையாகவும்,எல்லோரும் புரிந்து கொள்வதற்கும் மேலும் எளிமையாகவும் உள்ள இந்த பாடல் சொர்க்கத்தில் இருந்து இசை அமைப்பாளர் மூலமாக ரசிகர்களாகிய நமக்கு வழங்கப்பட்ட கொடை என்றே சொல்லலாம்

இந்த பாடலை பற்றி நான் படித்த ஒரு விமர்சன கருத்து அப்படியே தருகிறேன்

"Like a fine piece of diamond jewellary that captures your attention and hides its intricacies, this song too has the captivating sparkle that shrouds its inner intricacies .. you really have to tear yourself away from the song to look into its inner beauty .. wherein you will find the vocal expression and amazing musical embellishments."

chinnakkannan
20th June 2014, 12:25 PM
வாசு சார் பாராட்டுக்கு நன்றி..

சின்ன வயசில் மதுரையில் என் வீட்டிலிருந்து இரண்டாவது வீடு அஞ்சு பொண் மாமி வீடு என்பார்க்ள்..பெயர்க்காரணம் புரிந்திருக்கும்..அந்த அ பொ மாமியின் கடைசிப் பெண் என்னை விட இரண்டுவயது மூத்தவர்..கொஞ்சம் புடலங்காய்க்குப்பாவாடை சட்டை தாவணி போட்டு காற்றிலாடும் மாமர இலைகளைப் போல அசைந்தாடி நடப்பார்..பக்கத்து வீட்டு செட்டியார் பையன்கள் வைத்த பெயர் நாட்டியக் குதிரை..அந்தப் பெண்ணின் இயற்பெயர் ம்ம் கல்யாணி.. கோபால் அவரை நினைவு கூற வைத்து விட்டார் :) நன்றி கல்யாணி ராகப் பாடல்களுக்கு கோபால கிருஷ்ணர்க்ளுக்கு..

chinnakkannan
20th June 2014, 12:26 PM
க்ருஷ்ணா சார்..அது என்னவாக்கும் பாட்டு

gkrishna
20th June 2014, 12:49 PM
பில்ட் up கொஞ்சம் ஜாஸ்தி இல்ல

gkrishna
20th June 2014, 12:50 PM
நிழல் நிஜமாகிறது 1978

கலாகேந்திர தயாரிப்பு
பாலசந்தர் டைரக்டர் அனந்து உதவி direction
ஆஸ்தான cameraman லோகநாத்
எடிட்டிங் கிட்டு
மேக்கப் சுந்தரமுர்த்தி (இவர் நிறைய படங்களில் நடித்தும் இருக்கிறார் )
இசை வேறு யார் நம்ம மெல்லிசை மன்னர் தான்

கமல், சுமித்ரா,ஷோபா,சரத்பாபு,அனுமந்து (அறிமுகம்) ,பாலகிருஷ்ண மௌலி,ஒரு விரல் கிருஷ்ணா ராவ் ,சுந்தரிபாய்,மனசாட்சி நடராஜன்

இப்படி 9 characters வைச்சு பாலச்சந்தர் உருவாக்கிய படம்

இது ஒரு தெலுகு ரீமேக் என்று சொல்பவர்களும் உண்டு .
"செலேகம்மா செப்பிண்டி1977"
(சங்கீதா சுமித்ரா ரோல்லிலும் ,ஸ்ரீப்ரிய ஷோபா ரோல்லிலும்
ரஜினிகாந்த் கமல் ரோல்லிலும் ,நாராயண ராவ் அனமந்து ரோல்லிலும்
வருவார்கள் சரத்பாபு ரோல் யாருக்கு என்று மறந்து விட்டது
ஆபீஸ் வேலை சமயத்தில் 1985-86 கால கட்டத்தில் கடப்பா வில் ஒரு டென்ட் திரை அரங்கில் பார்த்த நினவு )
மலையாள ரீமேக் என்று சொல்பவர்களும் உண்டு
(அடிமைகள் 1976 என்று நினைவு இந்த படம் பார்த்தது இல்லை.டைட்டில் கூட நினைவில் இருந்து எழுதுகிறேன் தவறாக இருந்தால் திருத்தி கொள்ள தயாராக இருக்கிறேன்)

தூக்கத்தில் எழுப்பி கேட்டாலும் சொல்லகூடிய பாத்திரங்களின் பெயர்கள்
சஞ்சீவி,திலகம்,இந்து,சலம் என்கிற வெங்கடாசலம் (இந்த சலம் என்ற பெயரை சுமித்ரா (இந்து) கூபிடுவதே தனி அழகு) ,செவிடன் என்கிற காசி,நாய்டு என்கிற மன்மத நாய்டு,பொன்னம்மா என்கிற புகையிலை கிழவி

location என்று எடுத்து கொண்டால் ஒரு தெரு (காலனி மாதிரி ) எல்லாம்
தனி தனி வீடுகள்

மிக கூர்மையான வசனங்கள்
எடுத்துக்காட்டிற்கு ஒன்று
மன்மத நாயுடு கொஞ்ச நாள் ஊரில் இருக்க மாட்டார்
அதற்குள் திலகம் சலத்திடம் தன பெண்மையை இழந்து கர்பமாகி இருப்பாள் . அதனால் பிரச்சனை ஆகி திலகம் வீட்டை விட்டு துரதபடுவாள் . ஊருக்கு வெளியே குடிசை போட்டு வாழ்ந்து கொண்டு இருப்பாள் அவளுக்கு செவிடன் காசி துணையாக இருப்பன்
ஊரிலிருந்து வந்தவுடன் நாய்டு சொல்லும் வசனம்
"கொஞ்ச நாள் ஊரில் இல்லை.எதாவது விசேஷம் உண்டா "
அதற்கு பக்கதுவீடுகரர் "திலகம் முழுகாம இருக்காளாம் "
உடனே நாய்டு "தெருவில் யாரு காரணம்னு பேசிகிறா "
அதற்கு பக்கதுவீடுகரர் "எல்லோரும் சஞ்சீவிதான் காரணம் " என்பார்
உடனடி reply from நாய்டு "நீ ஒன்னு சஞ்சீவினா இந்துனா முழுகாம இருக்கணும் "

மனதை மயக்கிய காட்சி அமைப்புகள் என்று ஒரு திரி ஆரம்பித்து அந்த திரியில் இந்த மாதிரி நிறைய எழுதலாம்

gkrishna
20th June 2014, 12:51 PM
இனி பாடலுக்கு செல்லலாம்

கம்பன் ஏமாந்தான் இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே
கற்பனை செய்தானே (ஹ ஹ) கம்பன் ஏமாந்தான்

கம்பன் ஏமாந்தான் இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே
கற்பனை செய்தானே (ஹ ஹ) கம்பன் ஏமாந்தான்

அம்பு விழி என்று ஏன் சொன்னான் அது பாய்வதினால்தானோ
அம்பு விழி என்று ஏன் சொன்னான் அது பாய்வதினால்தானோ
அவள் அருஞ்சுவை பால் என ஏன் சொன்னான் அது கொதிப்பதினால்தானோ
(கம்பன்)
தீபத்தின் ஜோதியில் திருக்குறள் படித்தால்
தீபத்தின் பெருமை அன்றோ
அந்த தீபத்தினால் ஒரு நெஞ்சத்தை எரித்தால்
தீபமும் பாவம் அன்றோ
(கம்பன்)
வள்ளுவன் இளங்கோ பாரதி என்றொரு வரிசையை நான் கண்டேன்
அந்த வரிசையில் உள்ளவர் மட்டுமல்ல அட நானும் ஏமாந்தேன்
ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாம் அடுப்படி வரைதானே
ஒரு ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால் அடங்குதல் முறை தானே
(கம்பன்)

எவ்வளவு எளிமையான வரிகள்,
மிக குறைந்த இசை கருவிகள் ,
பாடலை இரவு நேர effect இல் படமாக்கப்பட்ட விதம்
(மிக குறைந்த ஒளி அமைப்பு ) ,
ஒரு பங்களாவின் மொட்டை மாடி மற்றும் எதிர் வீட்டு ஜன்னல் மற்றும் அந்த வீட்டின் படுக்கை அறை (இது தான் இந்த பாடலின் location ),
காட்சியமைப்பை உள்வாங்கிய பாடகரின் குரல் ,
நடித்த நடிகரின் ஆரவாரமில்லாத அலட்டல் இல்லாத நடிப்பு
(casual என்று சொல்வார்களே பாடலின் இறுதியில் பேண்டை கழற்றி லுங்கிக்கு மாறும்விதம் மற்றும் கொடியில் பேன்ட்ஐ போடும் விதம்)

இந்த பாடலை வேதகாலம் தொட்டே வரும் பெண் சமுகத்தின் மீது உமிழும் ஆணாதிக்க சமுதாயத்தின் எச்சில் என்று குற்றம் சாட்டுபவர்களும் உண்டு

gkrishna
20th June 2014, 12:53 PM
ck சார்
என் தர்ம பத்தினியின் நாமகரணமும் அதே தான்

gkrishna
20th June 2014, 02:12 PM
இரண்டாவது பாடல்

இந்து கொஞ்சம் சண்டிராணி மாதிரி (அறிவாளி மனோரமா)
ஆரம்பித்தில் இருந்தே சஞ்சீவியை வெறுக்கிறாள்.
திலகம் கர்ப்பம் ஆனதற்கு சஞ்சீவி தான் காரணம் என்று
நினைக்கிறாள்.ஆனாலும் கொஞ்சம் கொஞ்சமா தன்னை (தன் மனதை) சஞ்சீவியிடம் இழக்கிறாள் .

பாலா மற்றும் வாணியின் குரல்

இலக்கணம் மாறுதோ ஒ ஒ (அருமையான தபேல இசை)
இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ
இதுவரை நடித்தது அது என்ன வேடம் இது என்ன பாடம்

முதல் சரணத்தில்
கவிஞரின் கவிதை ஊற்றாய் பொங்கி வருகிறது சஞ்சீவியின்
மன நிலையில்

கல்லான முல்லை, இன்றென்ன வாசம்
காற்றான ராகம்,ஏன் இந்த தாகம்
வெண்மேகம் அன்று, கார்மேகம் இன்று
யார் சொல்லி தந்தார் மழைக்காலம் என்று
மன்மதன் என்பவன் கண் திறந்தானோ
பெண்மை தந்தானோ
(இலக்கணம்)

கதாநாயகனை புரிந்து கொள்ளாத கதாநாயகியின் மன நிலையை
மிக எளிமையான அனுபவ மொழியில் விளக்கும் கவிஞர்


என் வாழ்க்கை நதியில் கரை ஒன்று கண்டேன்
உன் நெஞ்சில் ஏனோ கறை ஒன்று கண்டேன்
புரியாததாலே திரை போட்டு வைத்தேன்
திரை போட்ட போதும் அணை போட்டதில்லை
மறைத்திடும் திரைதனை விலக்கி வைப்பையோ
விளக்கி வைப்பாயோ

திலகம் மற்றும் செவிடன் இருவரையும் கொண்டு வருகிறார்

அலை ஒசையென்ன்,இடி ஒசைஎன்ன
எது வந்த போதும் நீ கேட்கவில்லை

அலை ஒசையென்ன்,இடி ஒசைஎன்ன
எது வந்த போதும் நீ கேட்கவில்லை

நிழலாக வந்து அருள் செய்யும் தெய்வம்
நிஜமாக வந்து எனை காக்க கண்டேன்
நீயெது நானெது ஏனிந்த சொந்தம் பூர்வஜன்ம பந்தம்

(இலக்கணம் )

மிக அருமையான காட்சி அமைப்பு
இந்துமதியின் படுக்கை அறை , monthly சீட் காலேண்டர்
பேன் காற்றினால் பறந்து அதன் பின்னே ஓட்டபட்டிருக்கும்
சஞ்சீவியின் இந்துவினால் கிழித்து போடப்பட்ட படத்தின் ஒட்டு படம் ,
திலகத்தின் குடிசை, காலை உதயத்தின் சூரிய ஓளி கீற்று ,
திலகம் குடிசை வீட்டின் வாசல் பெருக்கி கோலம் போடுவது
அதே நேரத்தில் இந்துவும் தன வீட்டில் வாசல் பெருக்கி கோலம் போடுவது , அப்போது சஞ்சீவி விஜய் ஸ்கூட்டர் இல் வந்து நிறுத்திய உடன் சந்ஜீவிக்க்காக கோலத்தை அழித்து பின் சஞ்சீவி அதை கண்டும் காணமல் செல்வது

சோப்பு முதல் சுபம் வரை நிஜமாகிய நிழல்

gkrishna
20th June 2014, 02:28 PM
நிழல் நிஜமாகிறது படத்தில்
சுமித்ரா நட்டுவாங்கத்துடன்
கமல் இன் ஒரு பெஸ்ட் பரத நாட்டிய முத்திரை ஒன்று 2 அல்லது 3 நிமிடங்கள் வரும்
இந்த காட்சி அமைப்பே ரொம்ப அருமையாக அமைந்து இருக்கும்
சலங்கை ஒலிக்கு முன்னோடி

parthasarathy
20th June 2014, 02:40 PM
ரோஜாரமணி மலையாளத்தில் நடித்து வெளிவந்த 'செம்பருத்தி' (நடிகை ரோஜா நடித்தது அல்ல. செம்பருத்திக்கும் ரோஜாவுக்கும் அப்படி என்ன ராசியோ!) தமிழில் பருவகாலமாக நேரிடையாகவே தயாரிக்கப்பட்டது. தெலுங்கிலும் அப்படியே! 'கன்னிவயசு' என்ற பெயரில் வெளியானது.


மூன்றிலுமே ரோஜாரமணிதான் கதாநாயகி. தன்னுடைய 13ஆம் வயதில் இவர் 'செம்பருத்தி' படத்தில் நாயகியாகக் களமிறங்கி சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் அவார்டை இப்படத்திற்காக 1972 ஆம் ஆண்டு பெற்றார்.

தமிழில் குழந்தை நட்சத்திரமாக நன்கு அறிமுகமானவர்.

'இருமலர்கள்' படத்தில் நடிகர் திலகம் கல்லூரியில் படிக்கையில் தன்னை மோசம் செய்துவிட்டுப் போன காதலியை!? (பத்மினி) தன் திருமண வாழ்க்கைக்குப் பின் (மனைவி கே.ஆர்.விஜயா) சந்திக்க நேரிடும். (தான் முன்னால் உயிருக்குயிராகக் காதலித்த பத்மினி தன்னை ஏமாற்றி விட்டதாக சூழ்நிலை காரணமாக நடிகர் திலகம் தவறாக எண்ணி விடுவார்) தன் மகள் ரோஜாரமணியின் டீச்சரான பத்மினியை மீண்டும் எதிர்பாராமல் நீண்ட நாட்களுக்குப் பின் சந்தித்து, பின் பத்மினி வீட்டுக்கு சென்று, பத்மினி மேல் நெடுநாள் வைத்திருந்த தன் உள்ளக்குமுறலை ஆத்திரம் தொண்டை அடைக்க கொட்டித் தீர்ப்பாரே!


நடிகர் திலகம் பத்மினியை கடிந்து, கதறிக்கொண்டு இருக்கும் போதே (ஏன் இப்படிப் பட்ட மரம் மாதிரி நிக்கிறே?'... மறக்க முடியுமா என் தெய்வமே!!)

அப்படியே எங்கள் குலதெய்வத்தையும் பூஜை செய்தாகி விட்டது.

அதை விட, அதற்கு முன் டயலாக் "அந்தப் பணக்கார வாலிபன் - அவன் என்ன ஆனான்" அந்த நக்கலும் உடல் மொழியும்! தியேட்டர் இரண்டாகும் இடம் இதுவே அன்றோ!

நாங்களும் பூஜை பண்ணிட்டோமில்ல!

இரா. பார்த்தசாரதி

mr_karthik
20th June 2014, 04:51 PM
டியர் கிருஷ்ணாஜி,

பதிவுகள் அனைத்தும் டாப். ஒன்று இரண்டு என்றால் குறிப்பிட்டு சொல்ல முடியும் இருபது, இருபத்தைந்து பதிவுகளுக்கு சேர்த்து பொதுவாக ஒரு சபாஷ். மற்றவை தொட்டுக்காட்டிய பாடல்களாக இருந்தபோதிலும், விளக்கமாக எழுதிய 'நிழல் நிஜமாகிறது' பாடல்கள் இரண்டும் அருமை.

'இலக்கணம் மாறுதோ' பாடலுக்கு நானும் ஒரு பதிவு எழுதி, அதை பதிவிடலாம் என்று திரிக்கு வந்தால், அதே பாடலைப்பற்றி அருமையாக எழுதிவிட்டீர்கள். இருந்தாலும் நம்முடைய பதிவையும் இடுவோம் என்று பார்த்தால், பல விவரங்கள் ஒன்று போல அமைந்துள்ளன. மீறி பதிவிட்டால் 'அரைத்த மாவு' (ரிப்பீஈஈட்டு) ரேஞ்சுக்கு அமைந்துவிடும் என்பதால் பதிவை கைவிட்டேன்.

உடனே கே.பாலச்சந்தர் சாருக்கு போன் செய்து 'மன்மத லீலை'க்கு 99 வருட உரிமை வாங்கிவிட்டேன். இப்போது 'மன்மத லீலை' எனக்குச் சொந்தம். ஒவ்வொரு பாடலையும் தனித்தனி பதிவாக அலச விருப்பம். நன்றாயிருக்குமோ இல்லையோ படிக்க வேண்டியது மக்கள் தலையெழுத்து.

chinnakkannan
20th June 2014, 05:05 PM
க்ருஷ்ணா சார் ஷமிக்கணும் :)

//சோப்பு முதல் சுபம் வரை நிஜமாகிய நிழல்// உண்மை..எனக்க்கும் பிடித்த படம்..க்ளைமாக்ஸை விட்டு விட்டீர்களே..அழகிய க்ளைமேக்ஸ்.. குள்ள(பிஞ்சு) கத்திரிக்காய்க்குக் கண்ணாடி மாட்டினாற்போல் சுமி.. முட்டைக் கண் அந்த பட்டைக் கண்ணாடியில் முறைப்பதுவும் ஒரு அழகு.. சிகரெட் லைட்டரிடம்..உனக்கு அம்மாவின் பெட்ரூம் தான்கேக்குதா அல்லதுவேற என்னவோ வசனம்..கமல் சொல்லும் நையாண்டி நளினம்..வேக வேகமாய் கோலமிட்டுக்கொண்டிருந்த சுமி கமல் பைக்கைப் பார்த்ததும் டபக் டபக்கென கோலக்கோட்டை அழிப்பது..கமல் உள்ளே வராமல் திரும்பிச் செல்வது அப்புறம் ஷோபாவின் காய்கறி மூக்குக்கண்ணாடி.. இம்ம் இன்னும் நிறையச் சொல்லலாம்..

கார்த்திக் சார் க்ளாப் க்ளாப்.. (வேறொன்றுமில்லை மன்மதலீலையை வரவேற்க நாங்கள் ரெடி)

mr_karthik
20th June 2014, 05:06 PM
டியர் வாசு சார்,

எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராமல் 'சமையல்காரன்' படப்பாடலை பதிவிட்டு அசத்தி விட்டீர்கள். ஒவ்வொரு வரியும் மிக அருமை. என்ன ஒன்று, 'நிர்மலா புராணம்' கொஞ்சம் தூக்கலாக இருந்தது. (வீட்டம்மா இதையெல்லாம் படிப்பார்களா?). சரிதான், ஒண்ணுமில்லாத மொக்கை நடிகைகளுக்கெல்லாம் புராணம் பாடும்போது அழகான 'வெண்ணிறக்கொடியிடை' நிர்மலா பற்றி கொஞ்சம் தூக்கலாக எழுதுவது தப்பில்லை. ஜமாயுங்கள்.

நிஜமாகவே வீடியோவில் பார்க்க அழகாகவே இருக்கிறது. ஆனால் முத்துதான் நிம்மியின் நெளிவுகளுக்கு ஈடு கொடுக்க முடியாமல் தவிக்கிறார். அவரது சொந்தக்குரலில் 'சொந்தக்காரங்க எனக்கு ரொம்பப்பேருங்க' என்ற சராசரிப்பாடலும் படத்தில் உண்டு.

chinnakkannan
20th June 2014, 05:08 PM
சரி சரி..எனக்குக் காலில் அடிபட்ட காரணத்தினால் இப்போது மறுபடிஒரு மீள் பதிவு(ஹிஹி..புதிதா எழுதலை எனில் நொண்டிச்சாக்கு)

*

பாட்டுப் பேச வா - 4
*-****************************
ஒன்று என்றால் தனி..இரண்டு என்றால் ஜோடி.. மூன்று அதற்கு மேல் என்றால் என்னவாம்..
*
ஒரு குட்டிக் கவிதை (?!!)
*
நிலவெனும் நல்லாள் மெல்ல
.. நேர்படச் சிரித்து நிற்க
கலகல வென்ற ஓசை
..காதிலே தேனாய்ப் பாய
களவினை மனத்தில் தாங்கி
…கண்களைத் தார கைகள்
வளமுடன் சிமிட்டிப் பார்க்க
…வானிலிக் காட்சி அன்றோ...
*
மூன்றுக்கு மேல் என்றால் கூட்டம் தானே.. ம்ம் கரெக்ட்..கூட்டம் என்ற பாடல்கள் இருக்கிறதா என நினைத்தால் என் மனதில் வந்தது இரண்டு பாடல்கள் தான்.. ஆனால் தேடினால் கூட்டம் கூட்டமாய்க் கொட்டுகிறது பாடல்கள்- திரையிசைப் பாடல்கள்..
*
முதலில் மனதில் வந்தது ஒருஜொள் பாட்டு.. அது சரி ஜொள் என்றால் என்னவாம்..
ஜொள்ளெனப் பட்டது யாதெனில் யாதொன்றும்
வன்மை இலாத செயல்!
அப்படின்னு யாரோ சொல்லியிருக்காங்க.. 
*
அவன் துறு துறு இளைஞன்.. பின் என்ன…அவன் தொடர்வது இளம் பெண்களை.. என்ன பாடுகிறான்..
காதல் மலர் கூட்டம் ஒன்று
வீதி வழி போகும் என்று
யாரோ சொன்னார் யாரோ சொன்னார்

பாதம் முதல் கூந்தல் வரை
பால் வடியும் கிளிகள் என
பாதம் முதல் கூந்தல் வரை
பால் வடியும் கிளிகள் என
யாரோ சொன்னார் யாரோ சொன்னார்
*
ம்ம் சிவாஜி ப்ளஸ் ஜெயலலிதா அண்ட் கோ.. நல்ல வேகப் பாடல்..
*
கூட்டத்திலே யார் தான் கொடுத்து வைத்தவரோ
என் தோட்டத்திலே ஆடத் துணிந்து வந்தவரோ.. – இதுவும் மனதில் வந்தது..
*
ஒட்டுக்க எல்லாப் பெண்களையும் பார்த்துப் பாடினால் ஜொள் என்று சொல்லலாம்..ஆனால் தன் காதலியைப் பார்க்கும் போது இந்த ஆளுக்கு என்ன ஆகுது.. நட்சத்திரக் கூட்டம் லாம் வந்து அவன்கிட்ட மொய்க்குதாம்..கொஞ்சம் ஓவர் தான் இல்லை..
*
ஒரு சின்னத் தாமரை என் கண்ணில் பூத்ததே
அதன் மின்னல் வார்த்தைகள் என் உள்ளம் தேடி தைக்கின்றதே
இதை உண்மை என்பதா இல்லை பொய் தான் என்பதா
என் தேகம் முழுவதும் ஒரு விண்மீன் கூட்டம் மொய்க்கின்றதே
*
அப்புறம் தேடினால் வைரமுத்து அதிசயப்பட்ட பாடல்..
பூவிற்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்..(உண்மை தான்)
*
பாகம் பிரித்துதான் பக்குவமாய் உண்டிடும்
காகம் கருத்தை அறி..
*
கரெக்ட் தானே ..காக்கை என்ன செய்யறது.. ஏதாவது இரை கிடைத்தால் சிலோன் ரேடியோவில் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்வது போல தனது அப்பா அம்மா அப்பத்தா சித்தப்பா சித்தி பெரியம்மா மாமி என எல்லாரையும் கூவி அழைத்து ஒற்றுமையாய் உண்ணும் (ம்ம் என் கையில் இருக்கும் சாக்லேட் உங்களுக்குத் தரமாட்டேன்  )
*
இந்தப் பாட்டும் அஃதே..
*
ஒண்ணா இருக்கக் கத்துக்கணும் அந்த
உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்
காக்கா கூட்டத்த ப் பாருங்க அதுக்குக் கத்துக் கொடுத்தது யாருங்க..
*
அவர் சூப்பர் ஸ்டார்..அவரே இயந்திரமாய் நடிக்கிறார்..ஸோ என்ன பண்ணலாம்.. ரோபோக்கும் கூட்டமாம்..
ஆட்டோ ஆட்டோக்காரா - யே
ஆட்டோமேட்டிக் காரா
கூட்டம் கூட்டம் பாரு - உன்
ஆட்டோக்ராப்க்கா
*
ஏதாவது தப்பு நடந்தா மக்கள் கூட்டமே தண்டிக்கும் என்பது ஜன நாயக மரபு.. இந்தப் பொண்ணு என்ன சொல்றா..
கேட்டு ப் பார் கேட்டுப் பார்
கேட்டுப்பாரு கேள்விகள் நூறு
பாட்டுப் பாடு பாவை என்னோடு
கேட்டகேள்விக்கு பதிலில்லை என்றால்
கூட்டம் பார்த்து கும்பிடு போடு..
ம்ம் நல்ல பாட்டு..
*
அந்தக்காலத்தில மருதகாசி என்ன சொல்றார்..
சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா செல்லடா
குள்ள்நரிக் கூட்டம் வந்து குறுக்கிடும்
நல்லவர்க்குத் தொல்லை தந்து மடக்கிடும் - நீ
எள்ளளவும் பயங்கொண்டு மயங்காதேடா
எள்ளளவும் பயங்கொண்டு மயங்காதேடா - அவற்றை
எமனுலகு அனுப்பி வைக்கத் தயங்காதேடா
நல்லாத் தான் இருக்கு.. பட் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரமும் பார்ப்போமே..
*
திட்டம் போட்டு திருடுற கூட்டம்
திருடிக் கொண்டே இருக்குது - அதை
சட்டம் போட்டு தடுக்குற கூட்டம்
தடுத்துக் கொண்டே இருக்குது

*
இன்றளவுக்கும் உண்மை தானே..
*
அழகா வானத்தில பறவைகள் சென்ற் கொண்டிருக்கின்றன.. ஹலோ.. அப்படின்னு நாம கீழ இருந்து கூப்பிட்டா அதுக்குக் கேக்குமா என்ன..அதுக்குக் கேக்கும்னு நினைக்கறது தப்புதான்..அப்படி நினைச்சா – அதை எதுக்கு இந்தக் கவிஞர் கம்பேர் பண்ணியிருக்கார்..
*
அழைப்பதை கானல் நீராய், அறியாது பறவை கூட்டம்
தொடுவானம் போலே காதல், அழகான மாய தோற்றம்
*
ஸ்வர்ணலதா பாடின பாட்டு .. நான்கேட்டதில்லை..கேட்கணும்..
*
இன்னொரு அழகான டூயட்ல கொழுக் மொழுக் ஹீரோ கொஞ்சம் ஷார்ட்டான ஹீரோயினோட திடீர்னு ஒரு அழகான பாட்டுபாடிடுவாரு படத்துல..
*
தேவாதி தேவர் கூட்டம் துதி பாடும் தெய்வ ரூபம்
பாதாதி தேகமெங்கும் ஒளி வீசும் கோவில் தீபம்
வாடாத பாரிஜாதம் நடை போடும் வண்ண பாதம்
கேளாத வேணு காணம் கிளி பேச்சை கூட்டக் கூடும்
அடியாளின் ஜீவன் ஏறி அதிகாரம் செய்வதென்ன?
அலங்கார தேவ தேவி அவதாரம் செய்வதென்ன
இசை வீணை வாடுதோ இதமான கைகளில் மீட்ட
சுதியோடு சேருமோ சுகமான ராகமே காட்ட
*
மிலிட்டரில்லருந்து ஹீரோ லிவுல ஊருக்கு வர்ற்ச்சே நடுவில் நண்பர்களோட ஆடறார்..என்ன தான் பெரிய மேஜர் போஸ்ட்ல இருந்தாலும்.. தன்னடக்கம் ஜாஸ்தி.. தன்னையும் தன்னைச் சேர்ந்தவர்களையும் என்னவா வர்ணிக்கிறார்?
*
குட்டி புலி கூட்டம் வெட்ட வெளி ஆட்டம்
பல்லே பல்லே பட்டு தோட்டம்
சுத்தி மேக மூட்டம் லீவு விட்டா ஓட்டம்
சாலை எங்கும் சேலை தோட்டம்
*
*
பட்டாம் பூச்சிக் கூட்டமும், நண்பர் கூட்டமும் இன்னும் இருபாடல்களில்..
உந்தன் வார்த்தையில் எந்தன் கவிதைகள்
என்ன காரணம்...ஓ ஓ ஹோ
உந்தன் கண்களில் எந்தன் பார்வைகள்
என்ன காரணம்...ஓ ஓ ஹோ
ஒரு பட்டாம்பூச்சி கூட்டம்
என்னை என்னை மெல்ல மிரட்டுதே மிரட்டுதே
ஒரு சூறாவளிக்காற்று வந்து வந்து குடை பிடிக்குதே
ஓ...ஓ... ஹோ இதுதானோ காதல் கலவரம்
ஓ...ஓ... ஹோ உனக்குள்ளே என்ன நிலவரம்
ஓ...ஓ... ஹோ
*
பானுப்ரியா அகலக் கண்களோட ஆடும் நடனம்..
*
அகப்பட்ட இடம் தொட்டு கோவில் கட்ட நினைக்கிற
நண்பர் கூட்டம் இங்கே
நண்பர் கூட்டம் இங்கே
அட நான்முகன் தலையிலே போட்டது பொய் எழுத்து
நான் ரசிகனின் நெற்றியில் இடுவது கை எழுத்து
ரசனை வாழ்க ...ரசிகன் வாழ்க
ரசனை வாழ்க ...ரசிகன் வாழ்க


நாடோடி மன்னர்களே வணக்கம் வணக்கம்
*
கடைசியா (அப்பாடா முடிச்சுட்டான்யா..) ஒரு அழகானபாட்டோட இன்னிக்கு செஷன் கம்ப்ளீட் பண்ணலாமா..
*
மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் கூடலே ஓ மோகம் வந்ததோ
மோகம் வந்ததும் ஓ மௌனம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது
*
வருவான் காதல் தேவன் என்றும் காற்றும் கூர
வரட்டும் வாசல் தேடி இன்று காவல் மீற
வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்து பாட
ஒரு நாள் வண்ண மாலை சூட
வளர்த்தேன் ஆசை காதலை நெஞ்சமே பாட்டெழுது
அதில் நாயகன் பேரெழுது
*
கரைமேல் நானும் காற்று வாங்கி விண்ணை பார்க்க
கடல் மீன் கூட்டம் ஓடி வந்து
கண்ணை பார்க்க அடடா நானும்
மீனைப் போல கடலில் பாயத் தோணுமோ
அலைகள் வெள்ளி ஆடை போல
உடலின் மீது ஆடுமோ நெஞ்சமே பாட்டெழுது
அதில் நாயகன் பேரெழுது
*
ம்ம் இப்படி நிறைய பாட்டுக் கூட்டம் இங்கிருந்தாலும் கொஞ்சம் மிஸ் ஆகியிருக்கும்.. :)

gkrishna
20th June 2014, 05:31 PM
கார்த்திக் சார்
உங்கள் மன்மத லீலைக்கு காத்து இருக்கிறோம்
உலக உரிமை உங்களுக்கு தான்
நிழல் நிஜமாகிறது பற்றி நீங்களும் கொஞ்சம் எழுதுங்க சார்
நிச்சமயாக உங்கள் கருத்துகளில் ஒரு professionalisam இருக்கும்

சின்ன கண்ணன் சார்
எப்படி சார் பாடல்களை கோர்கீர்கள்
அசோகனின்
"சிந்திய முத்துகளை எண்ணவோ எண்ணிய முத்துகளை கோர்கவோ "
நினைவிற்கு வருகிறது

mr_karthik
20th June 2014, 05:36 PM
'கூட்டம்' பற்றிய இன்னொரு பாட்டு ( தலைவர் படத்தில்)

சட்டத்தின் பின்னால் நின்று சதிராடும் கூட்டம்
நிலைமாறி ஆடும் இந்த அதிகார ஆட்டம்
என்றைக்கும் மேலிடத்தில் இவர்மீது நோட்டம்
இப்போது புரியாது எதிர்காலம் காட்டும்

'என் மகன்' ராஜா...

gkrishna
20th June 2014, 05:42 PM
கார்த்திக் சார்

(அந்த 7 நாட்கள் பாக்யராஜ் பாணியில் )
நான் வாத்து

gkrishna
20th June 2014, 06:09 PM
ck சார்
நிழல் நிஜமாகிறது
உழக்கு சுமி கிட்ட கமல் என்ன திட்டு வாங்குவார் (பொடியன் பொடியன் )
கமல் அப்போது தான் வளர்ந்து வந்து கொண்டு இருந்த நேரம்
அந்த படத்தை rerelease இல் ஒரு தடவை 1990 கால கட்டம் என்று நினைக்கிறன் . தியேட்டரில் கமல் fans சுமியை இன்னது தான் இல்லை வாயில் வந்தபடி எல்லாம் போட்டு தாளித்து விட்டார்கள்

mr_karthik
20th June 2014, 06:41 PM
ck சார்
நிழல் நிஜமாகிறது
உழக்கு சுமி கிட்ட கமல் என்ன திட்டு வாங்குவார் (பொடியன் பொடியன் )
கமல் அப்போது தான் வளர்ந்து வந்து கொண்டு இருந்த நேரம்
அந்த படத்தை rerelease இல் ஒரு தடவை 1990 கால கட்டம் என்று நினைக்கிறன் . தியேட்டரில் கமல் fans சுமியை இன்னது தான் இல்லை வாயில் வந்தபடி எல்லாம் போட்டு தாளித்து விட்டார்கள்

அதுதான் ரசிகர்களின் 'நிழலை நிஜமென்று' நம்பும் தவறான மனோபாவம். சுமித்ரா என்ன செய்வார். கேரக்டர் அப்படி.

இவ்வளவு ஏன்?. அந்தமான் காதலியில் இத்துனூண்டு பேபி இந்திராவும், இமயத்தில் தம்மாத்தூண்டு மீராவும் நம் தலைவர் நடிகர்திலகத்தை திட்டுவதை விடவா சுமித்ரா எல்லாம் திட்டி விட்டார்?. (அப்பாடா, நானும் தலைவரை அவ்வப்போது இங்கு நினைவு கூர்கிறேன்)

Gopal.s
20th June 2014, 06:53 PM
கிருஷ்ணாஜி,

பாலச்சந்தரின் எனது இரு கண்களான நிழல் நிஜமாகிறது,மன்மத லீலை(karthik) இரண்டையும் பறி கொடுத்து சோகத்தில் திளைக்கிறேன்.

என்னால் மறக்க முடியாத இரு படங்கள்.(பிடித்த அல்ல மிக மிக பிடித்த)

மன்மத லீலை- மிட்லண்ட் தியேட்டரில் முதல் நாள் முதல் ஷோ. பின் வரிசையாக கமலா ,மிட்லண்ட் என்று பத்து நாட்கள் தொடர்ச்சியாக பார்த்ததும் இன்றி ,நண்பர்களிடம் ஒரு வரி வசனமோ,ரீ.ரெகார்டிங் கூட விடாமல் இந்த படத்தை பற்றியே ஒரு மாத பேச்சு. தமிழில் வந்ததிலேயே மிக மிக புத்திசாலிதனமான நகைசுவை கிளுகிளுப்பு.
கமலா தியேட்டரில் ஒரு எத்திராஜ் பெண் வந்து டிக்கெட் வேண்ட இருவருக்கும் அருகருகே சீட் கொடுத்த பிளாக் மகராஜனுக்கு நன்றி.முதல் முறை ஒரு அந்நிய பெண்ணுடன் சினிமா அனுபவம்.(பதினாறு வயதினிலே).படத்தின் நடுவே அந்த பெண் காலால் இடிக்க,காலை தள்ளி கொண்டேன். பிறகு இஸ் ...இஸ் என்று சிக்னல் கொடுத்து கையை எடுத்து தன் மேல் வைக்க.... படம் பார்ப்பதில் இடைஞ்சலா என்று கடுப்புதான் வந்தது.கையை உதறி எடுத்து கொண்டேன்.(முதல் அனுபவம் பாருங்கள்.இரண்டு ,மூன்றாவதை எழுதினால் moderator வந்து தூக்கி விடுவார்.

நிழல் நிஜமாகிறது- மாலை காட்சிக்கு நாங்கள் 30 பேர் பிளாக் புக்கிங் . எங்கள் ஏ.சி. டெக் கல்லூரியில் 50% வட இந்தியர்கள் என்பதால் ஹோலி கொண்டாடும் வழக்கம் உண்டு.(1978 என்று நினைவு)அந்த ஹோலி எல்லை மீறி ,ஹாஸ்டல் எதிரே இருந்த எங்கள் கல்லூரி staff quarters சென்று எனக்கு பிடித்த ஒரு பெண்ணுக்கு (பெயர் வேண்டாமே) பொட்டு வைக்கும் உரிமையை எடுத்து அத்து மீற , நிழல்கள் நிஜமாகிறது அன்று இரவு.(குழி குழியா இருக்கே,இட்லி தட்டா, இங்க பாருங்க செருப்பும் இல்லை ஷுவும் இல்லை ஒரு ரெண்டுங்கெட்டான்)மறுநாள் நிலைமை விபரீதம் .வார்டன் விசாரணைக்கு வந்து விட, அந்த பெண் சிவப்பா ,உயரமா,அழகா,தொங்கு மீசை வாலிபனொருவன் என்று போட்டு கொடுத்து விட (பாட்ஷாவில் அடித்தவருக்கு டாக்டர் செர்டிபிகேட் மாதிரி இருக்கில்லே?)பிறகென்ன ,கல்லூரியில் இருந்தா ,விடுதியில் இருந்தா எப்படி தூக்குவது என்று வார்டன் ,டெபுடி இருவரும் சீட்டு குலுக்கி போட்டு ,நல்ல வேளை ,விடுதியில் இருந்து மட்டும் மூன்று மாத வெளியேற்றம். அவதி.

mr_karthik
20th June 2014, 07:28 PM
டியர் கோபால்,

நிழல் நிஜமாகிறது, மன்மத லீலை இரண்டிலும் கே.வி.மகாதேவனோ, டி.கே.ராமமூர்த்தியோ இல்லையே, அப்படியிருக்க பறிகொடுத்ததில் ஏன் இவ்வளவு சோகம்.

இவ்விரண்டு படங்களைப்பற்றிய தங்கள் சொந்த அனுபவம் வெகு ஜோர். எத்திராஜ் மாணவியைப் பற்றி நீங்கள் சொன்னதை நம்பிட்டோம். தங்கள் பதிவு மன்மத லீலைக்கு நல்ல முன்னோட்டம். நானும் குளுகுளு மிட்லண்டில்தான் பார்த்தேன். வஞ்சனையில்லாமல் ஏ.சி.போடும் நல்ல தியேட்டர். முதல் வரிசையில் அமர்ந்து பார்த்தால் கூட உறுத்தாத தியேட்டர். தற்போது பாழடைந்து கிடப்பதாக ராகவேந்தர் சொன்னார்.

எப்போதும் நினைக்கும் பைத்தியக்கார, பேராசை நினைப்பு.., 'திடீர்னு காலசக்கரம் அப்படியே 50 வருடம் பின்னோக்கி சுழன்று, இறந்தவர்கள் எல்லாம் திரும்பவும் வந்தால் என்ன?'

Gopal.s
20th June 2014, 07:34 PM
50 களின் சிறந்த படங்கள்.(கோபால் விருப்பம்)

1951- ஓர் இரவு,சம்சாரம்,பாதாள பைரவி,மர்ம யோகி.

1952-பராசக்தி.

1953-ஒவ்வையார்.,தேவதாஸ்,மனம் போல் மாங்கல்யம்.

1954-அந்த நாள்,எதிர்பாராதது,கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி,கூண்டுக்கிளி,தூக்கு தூக்கி,மனோகரா,ரத்த கண்ணீர்,ராஜி என் கண்மணி,மலை கள்ளன்.

1955-மிஸ்ஸியம்மா,முதல் தேதி.

1956-அமர தீபம்,நானே ராஜா,பெண்ணின் பெருமை,ரங்கூன் ராதா,ராஜா ராணி.

1957- புதையல்,மக்களை பெற்ற மகராசி,மாயா பஜார்.

1958-அன்னையின் ஆணை,உத்தம புத்திரன்,சபாஷ் மீனா,வஞ்சி கோட்டை வாலிபன்,நாடோடி மன்னன்.

1959-கல்யாண பரிசு,பாக பிரிவினை,வீர பாண்டிய கட்ட பொம்மன்,சிவகங்கை சீமை.

1960-அடுத்த வீட்டு பெண்,இரும்பு திரை,களத்தூர் கண்ணம்மா,படிக்காத மேதை,தெய்வ பிறவி ,பாதை தெரியுது பார்.

50 களின் மிக சிறந்த பத்து.

1)அந்த நாள்.
2)பராசக்தி.
3)மிஸ்ஸியம்மா.
4)ரங்கூன் ராதா.
5)பாக பிரிவினை.
6)மலை கள்ளன்.
7)தேவதாஸ்.
8)உத்தம புத்திரன்.
9)வீர பாண்டிய கட்ட பொம்மன்.
10)ரத்த கண்ணீர்.

Gopal.s
20th June 2014, 07:59 PM
1960 களின் சிறந்த படங்கள்(Gopal Choice).

1961 -பாவ மன்னிப்பு,பாச மலர்,பாலும் பழமும்,கப்பலோட்டிய தமிழன்.

1962- அன்னை,ஆலய மணி,காத்திருந்த கண்கள்,சாரதா,சுமைதாங்கி,நெஞ்சில் ஓர் ஆலயம்,பலே பாண்டியா,படித்தால் மட்டும் போதுமா,பாசம்.

1963-இருவர் உள்ளம்,பார் மகளே பார்,பெரிய இடத்து பெண்,மணியோசை,கற்பகம்.

1964-கர்ணன்,ஆண்டவன் கட்டளை,கை கொடுத்த தெய்வம்,புதிய பறவை,கருப்பு பணம்,சர்வர் சுந்தரம்,பொம்மை,காதலிக்க நேரமில்லை,படகோட்டி.

1965-திருவிளையாடல்,எங்க வீட்டு பிள்ளை,ஆயிரத்தில் ஒருவன்,ஆசை முகம்,என்னதான் முடிவு,குழந்தையும் தெய்வமும்,வாழ்க்கை படகு,வெண்ணிற ஆடை,ஹலோ மிஸ்டர் ஜமிந்தார் ,நாணல்,நீர்க்குமிழி,உன்னை போல் ஒருவன்.இதய கமலம்.

1966- செல்வம்,தாயே உனக்காக,மோட்டார் சுந்தரம் பிள்ளை, ராமு,மெட்ராஸ் டு பாண்டிச்சேரி,மேஜர் சந்திரகாந்த்,யாருக்காக அழுதான்,வல்லவன் ஒருவன்.அன்பே வா.

1967-ஊட்டி வரை உறவு,இரு மலர்கள்,திருவருட்செல்வர்,நான்,பட்டணத்தில் பூதம், பாமா விஜயம்,ஆலயம்,சாது மிரண்டால்,கண் கண்ட தெய்வம்,அதே கண்கள்,மாய மோதிரம்.

1968-தில்லானா மோகனாம்பாள்,உயர்ந்த மனிதன்,கலாட்டா கல்யாணம்,குடியிருந்த கோயில்,எதிர் நீச்சல்,குழந்தைக்காக ,சக்கரம்,பணமா பாசமா,ஜீவநாம்சம்.

1969-தெய்வ மகன்,சிவந்த மண்,காவல் தெய்வம்,அடிமை பெண்,வா ராஜா வா,பூவா தலையா,இரு கோடுகள்,சாந்தி நிலையம்,துலாபாரம்,மன்னிப்பு,

1970-பாதுகாப்பு,வியட்நாம் வீடு,எங்கிருந்தோ வந்தாள் ,காவிய தலைவி,காலம் வெல்லும்,நடு இரவில்,நம்ம குழந்தைகள்,மாட்டுகார வேலன்.

மிக சிறந்த முதல் பத்து.

1)தில்லானா மோகனாம்பாள்
2)புதிய பறவை.
3)திருவிளையாடல்,
4)பாச மலர்.
5)நெஞ்சில் ஓர் ஆலயம்
6)காதலிக்க நேரமில்லை.
7)பாமா விஜயம்.
8)அன்பே வா
9)எங்க வீட்டு பிள்ளை.
10)வியட்நாம் வீடு.

Gopal.s
20th June 2014, 08:29 PM
70 களின் சிறந்த படங்கள்(கோபால் சாய்ஸ் )

1971- சுமதி என் சுந்தரி,சவாலே சமாளி,பாபு,புன்னகை,நூற்றுக்கு நூறு,மீண்டும் வாழ்வேன்,சபதம்,உத்தரவின்றி உள்ளே வா,ஆதிபராசக்தி.

1972-ராஜா,ஞான ஒளி ,பட்டிக்காடா பட்டணமா,வசந்த மாளிகை,நீதி,காசேதான் கடவுளடா,புகுந்த வீடு,மிஸ்டர் சம்பத்,வெள்ளி விழா,

1973-அரங்கேற்றம்,அலைகள்,உலகம் சுற்றும் வாலிபன்,கெளரவம்,சூரியகாந்தி,சொல்லத்தான் நினைக்கிறேன்,பொண்ணுக்கு தங்க மனசு,எங்கள் தங்க ராஜா,ராஜபார்ட் ரங்கதுரை..

1974-அவள் ஒரு தொடர்கதை,தாகம்,திக்கற்ற பார்வதி,நான் அவனில்லை,தங்க பதக்கம்,அக்கரை பச்சை.

1975-அபூர்வ ராகங்கள்,அவன்தான் மனிதன்,இதய கனி,பல்லாண்டு வாழ்க,உறவு சொல்ல ஒருவன்.

1976-அன்ன கிளி,உணர்ச்சிகள்,ஒ மஞ்சு,பத்ரகாளி,மன்மத லீலை,மூன்று முடிச்சு,ரோஜாவின் ராஜா.

1977-அவர்கள்,அவர் எனக்கே சொந்தம்,காயத்ரி,சில நேரங்களில் சில மனிதர்கள்,தீபம்,தூண்டில் மீன்,புவனா ஒரு கேள்வி குறி,16 வயதினிலே..

1978- அவள் அப்படித்தான்,இளமை ஊஞ்சலாடுகிறது,ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்,கிழக்கே போகும் ரயில்,சட்டம் என் கையில்,சிவப்பு ரோஜாக்கள்,நிழல் நிஜமாகிறது,தப்பு தாளங்கள்,முள்ளும் மலரும்,மனிதரில் இத்தனை நிறங்களா,ஜகன் மோகினி.

1979-இரு நிலவுகள்,அக்ரஹாரத்தில் கழுதை,அழியாத கோலங்கள்,உதிரி பூக்கள்,கல்யாண ராமன்,நினைத்தாலே இனிக்கும்,பசி,ரோசாப்பூ ரவிக்கைகாரி.

1980-நெஞ்சத்தை கிள்ளாதே,பூட்டாத பூட்டுக்கள்,கிராமத்து அத்தியாயம்,நிழல்கள்,மூடுபனி,உச்ச கட்டம்,ஒருதலை ராகம்,ஜானி,வறுமையின் நிறம் சிகப்பு.

70 களின் மிக சிறந்த பத்து.

1)அவள் அப்படித்தான்.
2)முள்ளும் மலரும்.
3)ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்.
4)16 வயதினிலே.
5)உதிரி பூக்கள்.
6)அழியாத கோலங்கள்.
7)நூற்றுக்கு நூறு.
8)மன்மத லீலை.
9)நான் அவனில்லை.
10)கெளரவம்.

Gopal.s
20th June 2014, 08:59 PM
80 களின் சிறந்த படங்கள்(கோபால் சாய்ஸ்)

1981-மௌன கீதங்கள்,அந்த ஏழு நாட்கள்,அலைகள் ஓய்வதில்லை,ஆறிலிருந்து அறுபது வரை,குடும்பம் ஒரு கதம்பம்,டிக் டிக் டிக்,47 நாட்கள்,நெற்றி கண்,தண்ணீர் தண்ணீர்,பன்னீர் புஷ்பங்கள்,பாலைவன சோலை,ராஜ பார்வை,மீண்டும் கோகிலா,தில்லுமுல்லு.

1982-ஏழாவது மனிதன்,எங்கேயோ கேட்ட குரல்,கோழி கூவுது,துணை,பரீட்சைக்கு நேரமாச்சு,பயணங்கள் முடிவதில்லை,மணல் கயிறு,மூன்றாம் பிறை,மூன்று முகம்,மெட்டி.

1983-இன்று நீ நாளை நான்,ஒரு இந்திய கனவு,ஒரு புல்லாங்குழல் அடுப்பு ஊதுகிறது,கண் சிவந்தால் மண் சிவக்கும்,முந்தானை முடிச்சு,மண் வாசனை,சலங்கை ஒலி .

1984-அச்சமில்லை அச்சமில்லை,நூறாவது நாள்,வாழ்க்கை,விதி,வைதேகி காத்திருந்தாள் ,சிறை.

1985-முதல் மரியாதை,ஆண் பாவம்,பூவே பூச்சூடவா,மயூரி,யார்,ஹேமாவின் காதலர்கள்,மீண்டும் ஒரு காதல் கதை,பகல் நிலவு.

1986-ஊமை விழிகள்,சம்சாரம் அது மின்சாரம்,புன்னகை மன்னன்,மௌன ராகம்,விக்ரம்,பாலைவன ரோஜாக்கள்.

1987-கடமை கண்ணியம் கட்டுப்பாடு,நாயகன்,பூவிழி வாசலிலே,பேசும் படம்,ரெட்டை வால் குருவி,வேதம் புதிது.

1988-அக்கினி நட்சத்திரம்,உன்னால் முடியும் தம்பி,கதாநாயகன்,சத்யா,மண மகளே வா,வீடு.

1989-அபூர்வ சகோதரர்கள்,அன்று பெய்த மழையில்,இதுதாண்டா போலிஸ்,கரகாட்டகாரன்,புதிய பாதை,புது புது அர்த்தங்கள்,வருஷம் 16,மாப்பிள்ளை,வெற்றி விழா.

1990-அஞ்சலி,அரங்கேற்ற வேளை ,உச்சி வெய்யில்,கிழக்கு வாசல்,கேளடி கண்மணி,த்யாகு,புரியாத புதிர்,புலன் விசாரணை,ராஜா கைய வச்சா,மைக்கேல் மதன காம ராஜன்.

80 களின் மிக சிறந்த பத்து.

1)முதல் மரியாதை.
2)நாயகன்.
3)ராஜ பார்வை.
4)பேசும் படம்.
5)அபூர்வ சகோதரர்கள்.
6)அக்கினி நட்சத்திரம்.
7)மீண்டும் ஒரு காதல் கதை.
8)தண்ணீர் தண்ணீர்
9)வீடு.
10)அந்த ஏழு நாட்கள்.

vasudevan31355
21st June 2014, 08:13 AM
அதை விட, அதற்கு முன் டயலாக் "அந்தப் பணக்கார வாலிபன் - அவன் என்ன ஆனான்" அந்த நக்கலும் உடல் மொழியும்! தியேட்டர் இரண்டாகும் இடம் இதுவே அன்றோ!

நாங்களும் பூஜை பண்ணிட்டோமில்ல!

இரா. பார்த்தசாரதி

பார்த்தசாரதி சார்,

ஏன் சார்? ஏன் சார் இப்படி? ஒரே ஒருவரி அதகள நடிப்பை சொல்லி இரவு தூக்கத்தைத் தொலைக்க வைத்து விட்டீர்களே! (தலையணை நனைந்த கதை வேறு)

அந்த வாயை, உதடுகளை, முகம் கொட்டும் ஆத்திரங்களை, வார்த்தைகளால் எரிக்கும் வன்மத்தை, வேதனை கலந்த நக்கல்களை, இவையனைத்தையும் ஒட்டுமொத்தமாகப் பிரதிபலிக்கும் அந்த உடல்வாகை, இந்த ஒரே ஒரு இமேஜை அப்லோட் செய்ததின் மூலம் தீர்த்துக் கொள்ள முடியாதுதான்.

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/o_zpsd7077c87.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/o_zpsd7077c87.jpg.html)

இருந்தாலும் திருப்பதி லட்டு பிரசாதத்தை முழுதாக தின்னுவதில் இருக்கும் ஆனந்தத்தைவிட, தந்தவர் கையிலிருந்து சிறிதே விண்டு எடுத்து, பக்தியுடன் வாயில் போட்டு, பகவானை தரிசித்த இன்பத்தை முழமையாக பெற்று அனுபவிப்பது போல நாம் பேரானந்தம் கொள்வோமே...

அதுபோல என் இறைவனின் அமுதக் கடலிலிருந்து ஒரே ஒரு தேன் சொட்டை பருகி மோட்சம் அடையும் திருப்திக்காக நான் தந்த என்னுடைய சிறு நேர்த்திக்கடன்.

அது சரி! இது இசைத் திரியாயிற்றே! ஏன்?.....

எங்கும் நிறைந்த பரம்பொருளாய் நீக்கமற நிறைந்திருப்பவனுக்கு எந்தத் திரியில் தீபம் ஏற்றி வழிபட்டாலென்ன!

கண்ணீர்ப் பெருக்குடன்
தெய்வத்தின் அசுர பக்தன்.

vasudevan31355
21st June 2014, 08:31 AM
'நிழல் நிஜமாகிற'தை நண்பர்கள் ஆளுக்கொரு பக்கமாக போட்டுத் தாக்கி விட்டார்களே!

'ஒரு ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால் அடங்குதல் முறைதானே'

வரிகளில்.

கமலின் எக்ஸ்பிரஷன் பிடித்த ஒன்று.

அப்பாடா! என் பங்குக்கு ஒன்று செய்தாகி விட்டது.

விட்டு வைத்தால்தானே!

vasudevan31355
21st June 2014, 08:35 AM
டியர் வாசு சார்,

எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராமல் 'சமையல்காரன்' படப்பாடலை பதிவிட்டு அசத்தி விட்டீர்கள். ஒவ்வொரு வரியும் மிக அருமை. என்ன ஒன்று, 'நிர்மலா புராணம்' கொஞ்சம் தூக்கலாக இருந்தது. (வீட்டம்மா இதையெல்லாம் படிப்பார்களா?). சரிதான், ஒண்ணுமில்லாத மொக்கை நடிகைகளுக்கெல்லாம் புராணம் பாடும்போது அழகான 'வெண்ணிறக்கொடியிடை' நிர்மலா பற்றி கொஞ்சம் தூக்கலாக எழுதுவது தப்பில்லை. ஜமாயுங்கள்.

நிஜமாகவே வீடியோவில் பார்க்க அழகாகவே இருக்கிறது. ஆனால் முத்துதான் நிம்மியின் நெளிவுகளுக்கு ஈடு கொடுக்க முடியாமல் தவிக்கிறார். அவரது சொந்தக்குரலில் 'சொந்தக்காரங்க எனக்கு ரொம்பப்பேருங்க' என்ற சராசரிப்பாடலும் படத்தில் உண்டு.

நன்றி கார்த்திக் சார்.

பொதுவாகவே நிர்மலாவை சாதரணமாகத்தான் பிடிக்கும். இந்தப் பாடலில்தான்....ஹி...ஹி...

ம்ம். என்னவோ கேட்டீர்களே!

வீட்டமா அது இது என்று ஏதோ காதில் விழுந்ததே!

சரியா கேக்கலையே!

கொஞ்சம் அடி ஜாஸ்திதான். வ...லி...க்...கு...து...:)

vasudevan31355
21st June 2014, 08:50 AM
சென்னை வானொலி நிலையத்தில் அப்போதெல்லாம் மாலை 4 மணியிலிருந்து 5 மணி வரை ஞாயிற்றுக் கிழமைகளில் நேயர் விருப்பம் என்று போடுவார்கள்.

அதில் 'கம்பன் ஏமாந்தான்' பாடலுக்கு விருப்பப்பட்டு கேட்ட நேயர்கள் மிக அதிகம்.

எப்போது அந்தப் பாடலைப் போடுவார்கள் என்று தவம் கிடப்பேன்.

எந்தக் காலத்தில் பாலா நம்மை ஏமாற்றினார்?

vasudevan31355
21st June 2014, 08:53 AM
சட்டத்தின் பின்னால் நின்று சதிராடும் கூட்டம்
நிலைமாறி ஆடும் இந்த அதிகார ஆட்டம்
என்றைக்கும் மேலிடத்தில் இவர்மீது நோட்டம்
இப்போது புரியாது எதிர்காலம் காட்டும்



நஞ்சைக் கக்கும் நாகப் பாம்பு
வஞ்சம் வைத்தால் ஆறு வருஷம்
வீண் குற்றம் சொன்னால்
கார்த்திகேயர் நெஞ்சில் வைப்பார்
நூறு வருஷம்.

இந்த ரத்தத்தோடு பிறந்தது ரோஷமாகும்
அந்த ரோஷத்திலே நாம் இருவரும் ராஜநாகம்.

http://www.picgifs.com/graphics/s/snakes/graphics-snakes-105288.gif

ஸ்.....ஸ்......ஸ்......ஸ்.......8-)

vasudevan31355
21st June 2014, 08:57 AM
பிறகென்ன ,கல்லூரியில் இருந்தா ,விடுதியில் இருந்தா எப்படி தூக்குவது என்று வார்டன் ,டெபுடி இருவரும் சீட்டு குலுக்கி போட்டு ,நல்ல வேளை ,விடுதியில் இருந்து மட்டும் மூன்று மாத வெளியேற்றம். அவதி.

வார்டன் மூன்று மாதமாவது வெற்றி பெற்றாரே! இங்க தூக்க முடியல்லையே! அதே அவதி.

vasudevan31355
21st June 2014, 09:00 AM
1960 களின் சிறந்த படங்கள்(Gopal Choice).

மிக சிறந்த முதல் பத்து.

1)தில்லானா மோகனாம்பாள்
2)புதிய பறவை.
3)திருவிளையாடல்,
4)பாச மலர்.
5)நெஞ்சில் ஓர் ஆலயம்
6)காதலிக்க நேரமில்லை.
7)பாமா விஜயம்.
8)அன்பே வா
9)எங்க வீட்டு பிள்ளை.
10)வியட்நாம் வீடு.

என்னய்யா இது?!.... என்ன விளையாடுறீங்களா! ஏன்! தில்லானாவைத் தூக்கி கடைசியில் போடுறதுதானே!:banghead::banghead::banghead::banghea d::banghead::banghead::banghead::banghead::banghea d:

vasudevan31355
21st June 2014, 09:30 AM
வினோத் சாருடன் சமாதானமா போற மாதிரி தெரியுதே

Richardsof
21st June 2014, 10:26 AM
வாசு சார்

மக்கள் திலகத்தின் படங்களையும் பிடிக்கும் , என்று பட்டியலில் தன்னை அடையாளம் காட்டிய பிறகு கோபால் சாரை பிடிக்காமல் போகுமா ? உதட்டில் எரிச்சலை கொட்டினாலும் உள்ளத்தால்
மக்கள் திலகத்தை எண்ணி மகிழும் கோபால் என்றும் நண்பரே

Richardsof
21st June 2014, 10:30 AM
மாட்டுக்கார வேலன் படம் நம் கோபாலுக்கு மிகவும் பிடித்த படம் என்று அறிந்தேன் . அவருக்காக
இந்த பாடல் .
http://youtu.be/pUFun2Fqod8

gkrishna
21st June 2014, 11:41 AM
டியர் கோபால்ஜி
உங்களுடைய மன்மதலீலை நிழல் நிஜமாகிறது அனுபவங்கள் உண்மையில் கடந்த கால நினைவுகளை அசை போட வைத்தது
கார்த்திக் சார் சொன்னது போல் ஒரு 50 வருஷம் வேண்டாம் வேண்டாம் ஒரு 30 டு 40 வருஷம் மட்டும் திருப்பி கிடைத்தால் போதும் அப்ப இருந்த அதே டீம்மோட.
மன்மத லீலை படம் பாலச்சந்தரின் இரண்டாவது கலர் படம்
இதற்கு பிறகும் அவர் ப்ளாக் அண்ட் வைட் இல் படம் எடுத்தார்
குமுதம் விமர்சனம் இன்னும் நினைவில் இருக்கிறது "14 ரீல் கலர் பிலிம் வேஸ்ட் செய்து விட்டார்" என்று எழுதி இருந்தது. ஆனால் இந்த படம் ப்ளாக் அண்ட் வைட்இல் வந்து இருந்தால் இந்த ரீச் இருந்து இருக்குமா . பாலச்சந்தர் குறைந்த பட்சம் 10 வருஷம் ahead of பிலிம் makers என்று சொன்னால் மிகை ஆகாது
அந்த ஈஸ்வர iyer எங்கே போனார்
சிந்து பைரவியில் தர்பாரில் பார்த்த நினவு உண்டு

Gopal.s
21st June 2014, 11:59 AM
தலைவரே,

அத்தனை படங்களையும் (நான் பட்டியலிடாதவற்றையும் சேர்த்தே)பார்த்தவன் என்ற முறையில் ,அத்தனை வருடத்து நல்ல படங்கள் என்று நான் கருதுபவற்றை மனசாட்சியோடு பட்டியலிட்டேன்.அந்த படங்களில் சம்பந்த பட்டிருந்த நடிகர்களை எனக்கு பிடிக்க வேண்டிய அவசியமேயில்லை.பெருமைக்காக இல்லை. தகவலுக்காக... நான் பார்க்காத படங்களோ ,கேளாத பாடல்களோ,படிக்காத புத்தகங்களோ, இன்னும் வெளிவராதவை என்று அர்த்தம். 1984 வரை.

vasudevan31355
21st June 2014, 12:04 PM
http://img.youtube.com/vi/0Bsamz6fHP0/mqdefault.jpg பற்றிய கார்த்திக் சாரின் லீலைகளைப் படிக்க வெயிட் செய்து கொண்டிருக்கிறேன். அவருக்காக இதோ!

http://i1.ytimg.com/vi/IekjwOp_tSs/hqdefault.jpg

http://timesofindia.indiatimes.com/photo/14732754.cms

http://3.bp.blogspot.com/_2I2hYF2DQtI/TH6peNMKtLI/AAAAAAAACDY/YyO1hACO-DE/s1600/Manmadha+Leelai_Naadhamenum+Koyilile_tamilhitsongs .blogspot.com.mkv_thumbs_%5B2010.09.02_00.56.45%5D .jpg

http://i1.ytimg.com/vi/gbu0aLjoLOc/hqdefault.jpghttp://i1.ytimg.com/vi/7iUCo80uZhs/hqdefault.jpg

http://i1.ytimg.com/vi/C7zjghZCZ0E/hqdefault.jpghttp://i1.ytimg.com/vi/iNxlsnivK48/hqdefault.jpg

vasudevan31355
21st June 2014, 12:09 PM
கிருஷ்ணா சார்,

இது உங்களுக்காக.

http://t1.someimage.com/HbimpKK.jpg

http://4.bp.blogspot.com/-CBgQOcTZ758/UNLn_weDl9I/AAAAAAAACoI/UwZIBQSCfvE/s1600/P4e9B.jpg

நீங்கள் கேட்ட ஈஸ்வர ஐயர் (மாபாவி...சண்டாளா... மைண்ட் வாய்ஸை மறக்க முடியுமா) மேலே உள்ள படத்தில் இருக்கிறார் பாருங்கள். என்ன ஓகேயா?

vasudevan31355
21st June 2014, 12:12 PM
http://i1.ytimg.com/vi/07wCLi8bp8w/sddefault.jpg

vasudevan31355
21st June 2014, 12:13 PM
https://lh3.ggpht.com/hjhl2c3rj_-_bpnZG9jpHKCOtT1Qcq4N-gTCsU2p3W2r1UybVqm-RD9cAXhNtV4-K9nHPGlH24w

vasudevan31355
21st June 2014, 12:18 PM
http://cdn1.supergoodmovies.com/FilesFive/kb-to-do-manmadha-leelai-remake-7b070c85.jpg

Gopal.s
21st June 2014, 12:20 PM
மன்மத லீலையை பற்றி ஒரு பத்து நாள் தொடர் காலட்சேபம் நடத்த சொன்னாலும் தயார்.(கோவிலில் வேண்டாம்.பாவம் தொற்றி விடும்)
பாலசந்தர்,கமல்,லோகநாதன்,கிட்டு,விஸ்வநாதன் அனைவரின் மிக சிறந்த படங்களில் ஒன்று.

பாடல்களில் எனது முதல் தேர்வு சுகந்தானா, அடுத்து பட் பட் (ராதாரவி அறிமுகம்),மனைவி அமைவதெல்லாம்(கமல் fan சுற்றாததை பார்த்து ஆன் பண்ணும் அழகு),ஹலோ மி டியர் ராங் நம்பர் (இதை ஈஸ்வரையர் பாடி புலம்பும் இடம்),மன்மத லீலை (Title wonder ),நாதமெனும் என்று சங்கீத சம்மேளனம். ரீ- ரெகார்டிங் மட்டும் சும்மாவா? பரபரப்பான ஒய்.ஜி.பீ. ஒத்த தும்மல் பிடிபடும் இறுதியை நோக்கிய கட்டம்,தெபோ தெபோ ,ஆலத்தின் ருத்ரம் என்று அவர் அபூர்வ ராகங்கள்,மன்மத லீலை பின்னணி இசையில் காட்டிய நேர்த்தியை மற்ற படங்களிலும் காட்டி இருந்தால் ராஜாவை பீ.ஜி.எம் விஷயத்தில் கொண்டாடியே இருக்க மாட்டோம்.

situational காமெடி,dialogue காமெடி,ஸ்லாப்ஸ்டிக் காமெடி (கமல் மனைவியிடம்,நாதமெனும் கேசுடன் மாட்டும் கட்டம்),என்று தமிழில் வந்ததிலேயே புத்திசாலித்தனம்,திரை உத்தி,ரசிக்க கூடிய செக்ஸ் உத்திகள்,என்று ஒரு complete picture .ஆரம்பத்தில் ஈடுபாடு காட்டாத பாலச்சந்தர் இதில் மாட்ட காரணமான மறைந்த அனந்துவுக்கு நன்றி.(என் cousin பழக்கமானதால் 74 (அ )75 இல் marriage of the young stock broker பார்த்து இதை பாலுவிற்கு suggest செய்கிறேன்.ஆனால் யோசிக்கிறார். நல்லா வரும் அவர் ஸ்டைலுக்கு என்றார். அவர் வாய்க்கு சர்க்கரை. நல்லா வரவில்லை. மிக மிக மிக மிக மிக மிக மிக மிக நல்லாஆஆ வந்தது.

vasudevan31355
21st June 2014, 12:24 PM
sexual சம்பந்தப்பட்டது என்றாலே குஜாலாக ஒருத்தர் ஓடியாந்துடுவார். அப்படியே ஆர்வம் கொப்பளிக்கும்.

Gopal.s
21st June 2014, 12:28 PM
கிருஷ்ணாஜி,
உங்களுக்கு நூறு வயசு. மோகனம், பிருந்தாவன சாரங்கா இரண்டும் எனது அடுத்தடுத்த தேர்வாக நேற்று உட்கார்ந்தால் மோகனத்தின் கம்பன் மட்டுமல்ல நானும் ஏமாந்தேன்.பிருந்தாவன சாரங்காவின் இலக்கணத்தை (சுத்த சாரங்கா?)சொல்லலாம் என்று வந்தால்....சரி என்று பட்டியலில் அமர்ந்தேன்.

vasudevan31355
21st June 2014, 12:33 PM
இதுவும் ஒரு 'மன்மத லீலை'தான்.


http://3.bp.blogspot.com/-eZlDwdIuvhQ/UJj1jCECR9I/AAAAAAAADE0/SPzcYBgnuqk/s1600/Happy-Birthday-Kamal-Haasan-Biography+(4).jpg

mr_karthik
21st June 2014, 12:54 PM
மன்மத லீலை (1)

தமிழில் எந்தக்காலத்துக்கும் பொருந்தக் கூடிய சில அபூர்வ படங்கள் வருவதுண்டு. அவற்றில் ஒன்று இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் வழங்கிய மன்மத லீலை. இது நகைச்சுவை விரும்பிகளுக்கு நகைச்சுவைப் படமாகவும், செக்ஸ் விரும்பிகளுக்கு செக்ஸ் படமாகவும், இசை விரும்பிகளுக்கு இசைப்படமாகவும் காட்சி தரும். அந்த அளவுக்கு மூன்றையும் சரிவிகிதத்தில் கலந்து தந்திருந்தார். இதை அவர் நகைச்சுவைப் படமென்று சொல்லிக்கொண்டாலும் படத்தில் தூக்கலாக நின்றது செக்ஸ்தான். அதாவது கதாநாயகனின் செக்ஸ் வீக்னஸ். அது காட்சியமைப்புகளிலும் நன்றாகப் பிரதிபலித்தது. அதை அப்படியே தந்தால் விரசத்தின் எல்லையைத் தொட்டுவிடும் என்பதால், துணைக்கு நகைச்சுவையையும் இசையையும் இணைத்துக்கொண்டார். அதனால் விரசம் சற்று மட்டுப்படுத்தப்பட்டது என்பது உண்மை.

'இவ்வளவு மோசமான காட்சிகள் தேவையா?' என்று பட்டிமன்றம் நடத்த விடாமல், 'தேவைதான்' என்று மற்றவர்களே அவருக்காக வக்காலத்து வாங்கும் வண்ணம், வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல திணித்து விடுவாரே, அங்குதான் கே.பி.யின் வெற்றி அடங்கியிருக்கிறது. இப்படம் வந்தபோது கல்லூரி மாணவ மாணவியர் கூட்டம் தியேட்டரில் சொல்லி மாளாது. பத்துமுறைக்கு குறைவாகப் பார்த்த மாணவர்கள் குறைவு.

கதாநாயகன் மது (கமல்ஹாசன்) திருமணமானவன். ஆனால் பெண்பித்தன். மதுவைப்போல ரசனை கெட்டவன் இருக்க முடியாது. பின்னே?. மனைவி கோபுரங்கள் சாய்வதில்லை அருக்காணி போல இருந்தால் மற்ற அழகான பெண்களின்மீது மோகம் வருவதில் தப்பில்லை என்று சொல்லலாம் (அதுவும் தப்புதான், சும்மா ஒரு வாசகத்துக்கு). ஆனால் அழகான ரேகா (ஆலம்) மனைவியாக இருக்கும்போது கிளியோபாட்ராவே வந்தாலும் திரும்பிப் பார்க்கலாமா?. பார்க்கிறானே. ஆனால் இவனோ வத்தல் தொத்தலையெல்லாம் கூட பார்க்கிறானே. இவன் தன் வலையில் விழவைக்கும் பெண்களில் ஒருத்திகூட இவன் மனைவி அளவுக்கு அழகில்லை. அதற்கு அவன் வைத்துக்கொள்ளும் நொண்டிசாக்கு 'வீக்னஸ்'.

இந்த வீக்னஸுக்கு தீர்வு காண தியானம் செய்வது, சைக்கியாற்றிஸ்டை பார்ப்பது எல்லாம் வேஸ்ட். ஒரே மருந்து "உன் மனைவிக்கும் இந்த வீக்னஸ் இருந்தால் என்ன செய்வாய்?" என்று கேட்பதுதான்.

படத்தில் நாயகன் வலையில் வீழ்பவர்களாக ஜெயப்ரதா, ஜெயவிஜயா, ஒய்.விஜயா, வினோதினி, ரீனா என்று ஏகப்பட்ட புதுமுகங்கள் அறிமுகம். அத்தனையும் (அப்போதைக்கு) இளசுகள். ஆனால் ஒவ்வொருவருடனும் நாயகனுக்கு தொடர்பு ஏற்பட ஒவ்வொரு லாஜிக் வைத்திருக்கிறாரே இயக்குனர். அதுதான் கே.பி.யின் திறமை.

சரி, இது பாடல் திரி ரொம்ப வளர்க்க வேண்டாம் என்று நினைக்கிறேன். படத்துக்கு பக்க பலமாக பாடல்களும் இசையும் அமைய வேண்டும் என்று கண்ணதாசனிடமும், விஸ்வனாதனிடமும் இயக்குனர் சொல்லப்போக, இதுதான் சாக்கு என்று இருவரும் விஸ்வரூபம் எடுத்துவிட்டனர். பலன்?. பாடல்கள் அத்தனையும் தேன்குடங்கள்.

டைட்டில் பாடலில் கதாநாயகனின் குணாதிசயத்தை விளக்க வேண்டுமென்று நினைத்ததால், டைட்டில் பாடல் துண்டு துண்டாக கிட்டத்தட்ட இருபது நிமிடங்கள் வரை நீடிக்கிறது.

'மன்மத லீலை... மயக்குது ஆளை....' பாடல் ஒலிக்கும்போதெல்லாம் கதாநாயகனின் குதிரை பின்னோக்கி ஓடுகிறது. (ரிவர்ஸ் ஷாட் இல்லாத கே.பி.படம் ஏது?. சொல்லத்தான் நினைக்கிறேனில் பொங்கிய வழிந்த பால் மீண்டும் ரிவர்ஸில் பானைக்குள் போய் அடங்குவது, நினைத்தாலே இனிக்கும் படத்தில் சிகரெட்டிலிருந்து வெளியே விட்ட புகையை மீண்டும் ரஜினி சிகரெட் வழியே உள்ளிழுப்பது, அச்சமில்லை அச்சமில்லையில் கீழ்நோக்கி கொட்டும் அருவி, திடீரென்று மேல்நோக்கிப்போவது... இப்படி எல்லாப்படத்திலும் ஒன்று வைத்திருப்பார்).

எத்தனை கிண்ணத்தில் இட்டாலும் அவை
அத்தனையும் சுவை ஒன்றாகும்
எத்தனை பெண்களை தொட்டாலும் அவை
அத்தனையும் சுவை பேதமடா

நாயகன் தன் முடிவுகளுக்கு சொல்லிக்கொள்ளும் சப்பைக்கட்டு. (படம் பார்த்து பல ஆண்டுகளாகிவிட்டது, பாடல் வரிகளில் பிழையிருந்தால் திருத்துங்கள்)

ஆண்டவன் வாரிசு வேல்முருகன் அந்த
ஆதவன் வாரிசு வெண்ணிலவு
இன்னொரு வாரிசு வேண்டுமென்றே இந்த
மன்மதன் வாரிசு வந்து விட்டான்

டைட்டில் பாடலில் கதாநாயகன், நேயர் விருப்பம் கேட்கும் மாதவி என்ற பெண்ணை மடக்குவது, மோட்டார் சைக்கிள் விபத்தில் துணியை இழந்து நிற்கும் கண்ணகிக்கு (ஜெயப்ரதா) தன் உடைகளைக் கழற்றித்தந்து விட்டு, ஓப்பன் காரில் அண்டர்வேருடன் மௌண்ட் ரோட்டில் போவது என்று மது (கமல்) அதகளம் பண்ணியிருப்பார்.

(தொடரும்)

Gopal.s
21st June 2014, 12:54 PM
90களின் சிறந்த படங்கள்(கோபால் தேர்வு)

1991- சந்தியா ராகம்,அழகன்,இதயம்,கேப்டன் பிரபாகரன்,தளபதி,கோபுர வாசலிலே,மகாநதி,குணா,சின்ன தம்பி,சிகரம்.

1992-சின்ன கவுண்டர்,தேவர் மகன், நாங்கள்,மன்னன்,ரோஜா,சூரியன்.
1993-உழவன்,கேப்டன் மகள்,சின்ன மாப்பிள்ளை,தசரதன்,திருடா திருடா,கிழக்கு சீமையிலே,ஜென்டில் மேன் ,மறுபடியும்,புதிய முகம்.

1994-பம்பாய்,கருத்தம்மா,காதலன்,ஆனஸ்ட் ராஜ்,டூயட்,
நம்மவர் ,நாட்டாமை,மகாநதி, வியட்நாம் காலனி ,மகளிர் மட்டும்.

1995-ஆசை,இந்திரா,குருதி புனல்,சதி லீலாவதி,பாட்ஷா,மோக முள்,அவதாரம்.

1996-அவ்வை ஷண்முகி,இந்தியன்,உள்ளத்தை அள்ளி தா,காதல் கோட்டை,கோகுலத்தில் சீதை,பூவே உனக்காக,சிறை சாலை.

1997-இருவர்,மின்சார கனவு,காதலுக்கு மரியாதை,பாரதி கண்ணம்மா,சூரிய வம்சம்.

1998-உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்,காதல் மன்னன்,பூவேலி,ஜீன்ஸ்.

1999-அமர்க்களம்,சேது,படையப்பா,முதல்வன்,வாலி.

2000-அலை பாயுதே,கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்,கண்ணுக்குள் நிலவு,குஷி,தெனாலி,மல்லி,ரிதம்,வெற்றி கொடி கட்டு,வானத்தை போல.ஹே ராம்.

90 களின் சிறந்த பத்து

1)தேவர் மகன்.
2)மகாநதி.
3)மகளிர் மட்டும்.
4)அவதாரம்.
5)மோக முள்.
6)சேது.
7)மின்சார கனவு.
8)வாலி.
9)ஜென்டில் மேன்
10)ஆசை.

Gopal.s
21st June 2014, 12:56 PM
Sorry.karthik sir. I didnt see your post.I shouldnt have overlapped. Terribly sorry.

mr_karthik
21st June 2014, 01:00 PM
மன்மத லீலை (2)

'ஹலோ மைடியர் ராங் நம்பர்'

சேட்டனும் ராட்சசியும் (சங்கேத வார்த்தைகள் வேண்டாம் என்று சொன்ன நானே இப்படி ஆரம்பிக்கலாமா?.ஸாரி) ஜெசுதாஸும் எல்.ஆர்.ஈஸ்வரியும் இணைந்து பாடிய வெகு அபூர்வ பாடல்களில் ஒன்று. கேட்கும்போதே நம்மை எங்கோ வேறு உலகத்துக்கு அழைத்துச்செல்லும் மோகனராகம். (நிஜமாகவே ராகம் மோகனமா என்று தெரியாது. நமது ராக ஸ்பெஷலிஸ்ட் தெளிவு படுத்துவார்)

மது : ஹலோ
பார்கவி: ஹலோ
மது: ஹலோ மைடியர் ராங் நம்பர்
கேட்கவே உந்தன் குரல் சொர்க்கம்
நேரிலே பார்த்தால் என்ன வெட்கம்
கற்பனை ஓராயிரம்..ம்...ம்..ம்..ம்.
கற்பனை ஓராயிரம்
ஒரு முறை பார்த்தால் என்ன?

(அந்த 'என்ன'வில் என்னவொரு அழகான நடுக்கம். தாடிக்கார சேட்டா.. சூப்பர்)

பார்கவி: ஹலோ (ராட்சசியின் என்னவொரு ஹஸ்கி வாய்ஸ்)

மது: ஹலோ மைடியர் ராங் நம்பர்

பார்கவி:
கேட்பதில் தீரும் உங்கள் தாகம்
நேரிலே பார்த்தால் என்ன லாபம்
அற்புதம் ஏதும் இல்லை
அதிசயப் பெண்மை இல்லை.
(சொல்ல வந்ததை இலைமறைவு காயாக சொல்லும் கண்ணதாசன் இம்முறை ஓப்பனாகவே)
ஹலோ...

மெல்லிசை மன்னரின் அதி அற்புதமான இடையிசை. ஆஹா இதுபோல மனதை வருடும் இசை தர இன்னொருத்தன் பொறக்கணும்யா... மனசே ஜிவ்வுன்னு பறக்குது...

மது : காவிரியின் மீனோ
பார்கவி : நோ
மது : பூவிரியும் தேனோ
பார்கவி: நோ... நோ...
மது: தேவமகள்தானோ.. தேடிவரலாமோ
பார்கவி: பூவையெனைப்பார்த்தால் காதல் வரக்கூடும்
மது : ரியலி...?
பார்கவி: பூஜையறை பார்வை ஆசை தரக்கூடும்
மது; ஐ டோன்ட் மைண்ட்
கற்பனை ஓராயிரம்
ஒரு முறை பார்த்தால் என்ன?
பார்கவி : ஹலோ
மீண்டும் மெல்லிசை மன்னரின் வித்தியாசமான இடையிசை. ஆஹா இதுபோன்ற இசையை நான் கேட்டதேயில்லை (தாரை, தப்பட்டை எல்லாம் டெல்லி செவிடர்களுக்கு கேட்டுவிட்டது. உன் இனிய இசை இன்னும் அவர்களுக்கு கேட்கவில்லையே)

பார்கவி : உன்னிடத்தில் காதல்,.. உள்ளவர்கள் யாரோ
மது : என்னவென்று சொல்வேன்,.... உன்னையன்றி யாரோ
பார்கவி : வேலியுள்ள முல்லை.
மது : வேலிஎனக்கில்லை...
பார்கவி : பொறுமையுடன் இருங்கள்
மது: முதுமை வரும் வரையோ
ஹலோ மைடியர் ராங் நம்பர்..

என்ன அருமையான மனதை வருடும் இனிய கீதம். எனக்குப்பிடித்த இருபது பாடல்களில் இப்பாடலுக்கு சிறப்பிடம் உண்டு. ஜேசுதாஸும், ஈஸ்வரியும் நம்மை வேறு உலகத்துக்கு இட்டுச்செல்வார்கள். கூடவே கவியரசரும் மெல்லிசை மன்னரும்.

படம் வந்த காலகட்டத்தில் இப்பாடலை மேடையில் பாடாத இசைக்குழுக்களே கிடையாது. அந்த அளவுக்கு பாப்புலர். சமீபத்தில் கூட பொதிகையின் 'துள்ளாத மனமும் துள்ளும்' நிகழ்ச்சியில் ஜேசுதாசின் நிழல்போல பாடக்கூடிய கோவை ஜலீல் என்ற பாடகரும், தீபஷிகா என்ற பாடகியும் மிக அருமையாக இப்பாடலை பாடியிருந்தனர்.

என்னைப்பொருத்தவரை இப்பாடல் 'ஹலோ மைடியர் ரைட் நம்பர்'.

(தொடரும்)..

Gopal.s
21st June 2014, 01:06 PM
மன்மத லீலை (1)


'எத்தனை கிண்ணத்தில் இட்டாலும் அவை
அத்தனையும் சுவை ஒன்றாகும்
எத்தனை பெண்களை தொட்டாலும் அவை
அத்தனையும் சுவை பேதமடா

எத்தனை கிண்ணத்தில் இட்டாலும்
மது அத்தனையும் சுவை ஒன்றாகும்.
சித்திர கிண்ணத்தில் பேதமில்லை
உன் சிந்தையிலேதான் பேதமடா.

vasudevan31355
21st June 2014, 01:10 PM
ஹாஹஹஹாஹா ஹாஹஹஹாஹா ஹாஹஹஹாஹா

gkrishna
21st June 2014, 01:42 PM
கார்த்திக் சார்
ஐயோ ஐயோ ஐயோ
பின்னி பெடல் எடுத்து விட்டீர்கள்
உங்களின் லீலைக்கு எல்லையை இல்லை
ஹலோ மைடியர் வ்ரோங் நம்பர் மதுவந்தி-தர்மவதி
கோபால் சார் confirm செய்வார்
இந்த இரண்டு பாட்டும் கொஞ்சம் பாடல் வரிகளை கவனிங்க சார்
பல வித அர்த்தங்களை கொடுக்கும்
எடுத்துகாட்டு
எத்தனை கிண்ணத்தில் இட்டாலும் மது
அத்தனையும் சுவை ஓன்றாகும்
சித்திர கிண்ணத்தில் பேதம் இல்லை
உன் சிந்தனையில் தான் பேதம் அட

gkrishna
21st June 2014, 01:44 PM
பாடல்கள் அத்தனையும் தேன் குடங்கள் இல்லை சார்
அத்தனையும் மது குடங்கள் சார் மது குடங்கள்

gkrishna
21st June 2014, 01:47 PM
இன்னைக்கு நம்ம திரி செத்தது சார்
இந்த செத்தது ங்கிற வார்த்தை திருநெல்வேலியில் நன்றாக ஜீரணம் ஆகிவிட்டது என்பத்ருகு சொல்லும் வார்த்தை
ராஜா பட டைட்டில்கே கொடுத்த காசு செத்தது என்பார்கள்

gkrishna
21st June 2014, 01:52 PM
வேலியுள்ள முல்லை (பார்கவி ஏற்கனவே கல்யானமனவள்)

வேலி எனக்கில்லை (இந்த கேள்விக்கு நான் எப்பவுமே இல்லைனு தான் பதில் சொல்றது என்னா எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை)

பாட்டுக்கு நடுவில் அடிக்கும் அந்த ஜப்பான் பையனின்
கொட்டம்,ஹலம் அந்த பையனின் காதை திருகுவது

விச்சுவின் flute ,சாக்ஸ்,தபேல,violin பீஸ் எதை சொல்ல எதை விட

gkrishna
21st June 2014, 01:57 PM
ஜெயப்ரதா, ஜெயவிஜயா, ஒய்.விஜயா, வினோதினி, ரீனா

நம்ம மாதவி ஹேமா சௌத்ரியை (Mrs பிலிப்ஸ் போன வாரம் Mrs murphy ) விட்டீர்களே
முருக சரணம் முடிந்தால் வரவும்

அப்பறும் (வினோதினி,ரீன) இருவருமே ஒருவர்தான்
நீங்கள் சொல்ல வந்தது சுனந்தனி (கிளாப் கிளாப் )என்று நினெகிரன்

தயுவு செய்து குறையாக நினைத்து விடாதீர்கள்
அப்படியே படம் கண் முன்னாடி ஓடுது சார்

gkrishna
21st June 2014, 01:59 PM
வாசு சார்
மலை ஏத்துங்க சார்

இன்னும் 3 பாட்டு இருக்கே அவ்வளுவு சீக்கிரம் ஏறாது சார்

gkrishna
21st June 2014, 02:01 PM
பூஜையறை பார்வை ஆசை தரக்கூடும்

பூஜையறை பார்க்க ஆசை வரக்கூடும்

gkrishna
21st June 2014, 02:06 PM
மன்மத லீலை... மயக்குது ஆளை....'

தொடர்ச்சியாக
மந்திரம் போல சுழலுது காளை
மயக்கம் பிறக்க வைக்க உருண்டு திரண்டு நிற்கும் வடிவங்கள் உண்டு
எனக்கு எனக்கு என்று தனக்குள் நினைத்து கொண்டு தொடர்பவர் உண்டு

Richardsof
21st June 2014, 02:06 PM
மன்மதலீலை படத்தில் ஒரு காட்சியில் கமல் தன்னுடன் பணி புரியும் மேனேஜர் வீட்டிற்கு சென்றஅவருடைய மகளை சந்திக்க முடியாமல் போகும் போது '' எம்ஜிஆர் என் காரில்தான் உள்ளார் என்றுசொன்னவுடன் மறைந்திருந்த அந்த பெண் எம்ஜிஆரா ? என்று ஆச்சரியத்துடன் எங்கே என்று கேட்டு கொண்டு வெளியில் வரும் காட்சி சூப்பர்.

gkrishna
21st June 2014, 02:09 PM
சிரிக்கின்ற பெண்களை பார்கின்ற கண்ணுக்கு
அழைப்பது போல் ஒரு சித்த துடிப்பு
சிதம்பர ரகசியம் அறிந்து கொள்ள அவன் சாகசம் புரிவது என்ன நடிப்பு

இந்த சீன் படத்திலே பாருங்க
கமல் பென்சிலே கீழ போடுவார் எதிர்த்த சீட்ல செச்றேடரி

Gopal.s
21st June 2014, 02:23 PM
நல்ல விஷயங்களை ஜாலியாக பேசும் போது,குறுக்கே வந்து குறுக்கு புத்தியை காட்டி.... இடத்தை அலம்பி விடுங்கள்.

அந்த இடம் சூப்பராம் ...ரசனை பூஜ்யம் என்றாலும்,நாலு தெரிந்தவர்கள் பேசும் போது மூடி கொண்டாவது இருக்கலாம் இல்லை.எல்லாத்திலேயும் மூக்கை நீட்டி.....

gkrishna
21st June 2014, 02:49 PM
http://www.tamilmp3songslyrics.com/songpage/Manmatha-Leelai-Cinema-Film-Movie-Song-Lyrics-Hallo-My-Dear/2376

Richardsof
21st June 2014, 03:01 PM
உமக்கு பிடிக்கவில்லை என்றால்

உம்முடைய பதில் உமக்கே

Richardsof
21st June 2014, 03:05 PM
கோபால்

உமக்கு கல்கத்தா ஆசான் தான் சரி .உமது ஆணவத்தை அடக்க அவரால் மட்டுமே முடியும் .
நாகரீகம் தேவை .பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கு . அநாகரீகமாக எழதி உன் தரத்தை
கெடுத்து கொள்ளாதே . இதுவே கடைசியாக இருக்கட்டும் .

gkrishna
21st June 2014, 03:06 PM
அவர்கள் 1977

பாலச்சந்தரின் முக்கோண காதல் கதை அல்லது நான்கு கோண காதல் கதை ( வெரி rare outline )

முக்கோண காதல் கதையின் பிதாமகர் ஸ்ரீதர் படம் என்றால்
ஒரு பெண் அவள் வாழ்கையில் குறுக்கிடும் இரு ஆண்கள்
(கல்யாண பரிசு,நெஞ்சில் ஒரு ஆலயம்)
அல்லது
ஒரு ஆண் அவன் வாழ்கையில் குறிக்கிடும் இரு பெண்கள்
(அவளுக்கு என்று ஒரு மனம் (முத்துராமநை எதில் சேர்கிறது ) ,
இளமை ஊஞ்சல் ஆடுகிறது (இங்கு ரஜினி additional ))
என்று தான் இருக்கும் .
எனக்கு தெரிந்து ஒரு பெண்னின் வாழ்கையில் குறிக்கிடும்
3 ஆண்கள் என்ற வகையில் எடுக்கப்பட்ட ஒரு உணர்ச்சி மயமான முதல் காதல் காவியம் "அவர்கள்" என்றால் அது மிகையாகாது
இவ்வளுவுக்கும் இந்த படத்தில் பாலச்சந்தரின் வழக்கமான நகைச்சுவை கூட இருக்காது . (கமலின் சில வசனங்கள்
நகைச்சுவை ஆக இருந்தும் ) இந்த படத்தில் யாரவது நகைச்சுவை நடிகர்கள் என்று யாரவது உண்டா என்று நினைவில் இல்லை
ஆரம்பம் முதல் இறுதி வரை சீரியஸ்
ஆனால் பாலச்சந்தரின் புத்திசாலித்தனமான கதை சொல்லும் பாங்கை பாடல்கள் மற்றும் இசை மூலமாக கொண்டு சென்று இருப்பார்

சுஜாதா,
கமல் வித் வென்ட்ரிலொகுஇச பொம்மை (சதன்) இரு மலர்களில் நம்ம NT அறிமுகபடிதியது .பார்தீங்கள சிவாஜி இல்லாமல் தமிழ் சினிமா இல்லை ) ,
ரஜினி,
ரவிக்குமார்,
ரஜினியின் அம்மா லீலாவதி
இவ்வளுவு தான் மெயின் characters

குமரி பத்மினி,குட்டி பத்மினி ஒன்னு இரண்டு சீன் நினவு ,சுஜாதாவின் அபபா (கோகுல்நாதா அல்லது ramanamoorthyaa என்று நினவு இல்லை )
அதிலும் குட்டி பத்மினியின் "கல்யாணம் என்றால் நிறைய பேர் கூட பண்ணிக்கணும் கிரிக்கெட்க்கு கவாஸ்கர் நடிப்புக்கு சிவாஜி ..." famous வசனம் எப்போதும் நினைவில் உண்டு

அனு (சுஜாதா) சென்னையில் இருக்கும் போது பரணி(ரவிக்குமார்) யை லவ் செய்வர் . தீடீர் என்று அவர் தந்தைக்கு மும்பைக்கு மாறுதல் வருவதால் இவரும் சென்று விடுவார். அங்கிருந்து பரணிக்கு ஏகப்பட்ட கடிதங்கள் எழுதுவார் ஆனால் எதற்கும் பதில் வராது. இந்த நிலையில் அவர் தந்தையின் அலுவலக உடன் பணியாளர் ராமநாதனை (ரஜினி) திருமணம் செய்து கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் .
திருமணத்திற்கு பிறகு அனு தன கணவர் ராமநாதனிடம் தன்னுடைய முதல் காதலை பற்றி சொல்லி விடுவார்.அப்போது தான் ராமநாதனின் இன்னொரு முகம் அனுவிற்கு தெரிய வரும். அவர் ஒரு சட்டிஸ்ட்.
அன்றில்ருந்து அவருக்கு துன்பம் ஆரம்பமாகும் . இதற்கு நடுவில் குழந்தையும் பிறந்து கணவரிடமிருந்து விவாகரத்து வாங்கி கொண்டு
சென்னைக்கு திரும்பி விடுவார் .அங்கு வந்த பிறகு தான் தெரியும் தான் எழுதிய கடிதங்கள் எதுவும் தன முன்னாள் காதலன் கைகு கிடைக்க வில்லை. இதற்கு நடுவில் சென்னையில் அவரது அலுவலகத்தில் உடன் பணி புரியும் வெள்ளை மனம் கொண்ட ஜானி என்ற ஜனர்தனை சந்திப்பாள். அவரும் அனுவை விரும்புவார் . ஆனால் அவரால் தெரியமாக வெளியே சொல்ல முடியாது. இந்த நேரத்தில் முன்னாள் கணவர் ராமநாதனும் சென்னைக்கு அனு வேலை செய்யும் அலுவலகத்திற்கே அதிகாரியாக வந்து தான் திருந்தி விட்டதாகவும் தன்னை மீண்டும் எற்றுகொள்ளும்படியும் வேண்டுவார்.
அனுவின் மாமியார் (ராமநாதனின் தாயார்) ரும் அனுவின் வீட்டில் வந்து அனுவிற்கு உதவி ஆக (மாமியார் என்று சொல்லாமலே) தங்கி இருப்பார்
செம ட்விஸ்ட்

முடிவை வெள்ளி திரையில் காண்க

மன்னிக்கணும் சார் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு விட்டேன் (
உ சு வ அசோகன் மாதிரி ) கதையை சுருக்கமாக சொல்ல முடியவில்லை

இந்த படம் rerelease ஆனதாகவும் நினவு இல்லை

இனி பாடலை பாப்போம்

இந்த பாட்டு பார்தீங்கன்ன சுஜாதாவுக்கு உடம்பு சரியில்லாமல் போகும் போது 3 பேரும் சேர்ந்து ஹெல்ப் பண்ண வருவார்கள்
முன்னாள் காதலன் ரவிக்குமார், முன்னாள் கணவன் ரஜினி
இப்போதைய வடிகால் நண்பன் கமல் .

இதில் யாரை தேர்ந்து எடுப்பது யாருடன் தன வாழ்கையை தொடர்வது

1.அங்கும் இங்கும் பாதை உண்டு
இன்று நீ எந்த பக்கம்
ஞாயிறுண்டு திங்கள் உண்டு
எந்த நாள் உந்தன் நாளோ

முதல் சரணம்

கல்லைக் கண்டாள் கனியைக் கண்டாள்
கல்லும் இன்று மெல்ல மெல்ல கனியும் மென்மை கண்டாள்
கதை எழுதி பழகிவிட்டாள் முடிக்கமட்டும் தெரியவில்லை
(அங்கும்)

இரண்டாவது சரணம்
கண்ணா என்றாள் முருகன் வந்தான்
முருகா என்றாள் கண்ணன் வந்தான்
எந்த தெய்வம் சொந்தம் என்று கூறி
பூஜை செய்வாள்
அவள் எழுதும் கவிதகளை விதி புகுந்தே திருத்துத்ம்மா
(அங்கும் )

சொந்த்ம் ஒன்று பந்தம் ஒன்று வெள்ளையுள்ள கிள்ளை ஒன்று
நடுவில் ஊஞ்சல் ஒன்று
தொடர்கதையா பழங்கதையா விடுகதையா
எது இன்று
(அங்கும்)


காட்சி அமைப்பு வெரி சிம்பிள் சார்
ஒரு வீடு கட்டில் சுஜாதா உடம்பு சரி இல்லாமல் படுத்து இருப்பாங்க
அசரீரி பாடல் ஆக ஒலிக்கும்

அனுபவ கவிஞரின் எளிமையான எல்லோருக்கும் புரியும் படியான
தன்னை என்றும் புத்திசாலி என்று காட்டி கொள்ளாத கவிதை நடை

அதை விட அடக்கி வாசிக்கும் மெல்லிசை மன்னர்

பாலாவின் மென்மையான குரல்

மீண்டும் வாராதோ அந்த நாட்கள்

gkrishna
21st June 2014, 03:11 PM
டியர் கோபால் சார்/எஸ்வி சார்

தாழ்மையான வேண்டுகோள்

நாம் எல்லோரும் நண்பர்களே
நமக்குள் எதற்கு பேதம்
திரி சூடு பிடித்துகொண்டு உள்ளது
இந்த நேரத்தில் இந்த சூடு வேண்டாமே ப்ளீஸ்

mr_karthik
21st June 2014, 03:12 PM
மன்மத லீலை தேரிழுக்க வடம்பிடிக்கும் வாசு, கோபால், கிருஷ்ணா, வினோத் அனைவருக்கும் நன்றி.

மன்மத லீலை (3)

'மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்'

பழைய பழமொழியொன்றையே (பழமொழியா சொல்வழக்கா) பாடலின் முதல் வரியாக்கிவிட்டார் கவிஞர். நேயர் விருப்பம் புகழ் மாதவியை (ஹேமா சௌத்ரி) தேடி வீட்டுக்குப்போன பின்புதான் மதுவுக்கு அவளது சோக வாழ்க்கையின் அவலம் தெரிகிறது. எம்.ஏ.படித்த மாதவிக்கு, ஹைஸ்கூலையே பார்த்திராத குடிகாரக்கணவன் வாய்த்திருக்கிறான் என்பது ஒன்று போதாதா அவளை மடக்கி வலையில் போட..?.

ரேடியோவிலேயே நேயர் விருப்பம் கேட்டு மகிழ்ந்து, அது மட்டுமே ஆறுதலாக வாழ்ந்துகொண்டிருக்கும் மாதவி, மதுவிடம் நேரில் நேயர் விருப்பம் கேட்க, மதுவிடமிருந்து வெளிப்படும் பாடல் இது... பாடலின் இடையில் விரும்பிகேட்ட நேயர்கள் பெயர்களை கமல் பட்டியலிடுவது கே.பி.டச். இருந்தாலும் அது அழகான இடையிசைக்கு இடைஞ்சல். அது சரி, கணவன் சரியில்லாத பெண்ணிடம் 'கணவன் அமைவதெல்லாம்' என்றுதானே பாட வேண்டும்?. மதுவுக்கு அருமையான மனைவியிருக்க, பாடல் அவனுடைய சொந்தக்கதை சோகக்கதை என்றும் சொல்ல முடியாது.

மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்
மனது மயங்கி என்ன
உனக்கும் வாழ்வு வரும்

இரவில் நிலவொன்று உண்டு
உறவினில் சுகமொன்று உண்டு
மனைவியின் கனவொன்று உண்டு
எனக்கது புரிந்தது இன்று

இந்தக்கட்டத்தில் மனைவி ரேகாவுக்கு போன்செய்து, தான் வர லேட்டாகும் என்று சொல்லிவிட்டு, 'மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்' என்ற பல்லவியைப் பாடி போனை வைக்க, அது தனக்காக பாடிய வரிகளென ரேகா தப்பாக நினைத்து மகிழ......, கே.பி.சார், கலாட்டா மன்னன்யா நீர்.

அடுத்த சரணத்தைத் துவங்குமுன், குடிகாரக்கனவனை ஒருவர் தூக்கிவந்து போட, மாதவியின் நிலை மதுவுக்கு நிதர்சனமாக தெரிகிறது. அதன் வெளிப்பாடான அடுத்த சரணம்....

பொருத்தம் உடலிலும் வேண்டும்
புரிந்தவன் துணையாக வேண்டும்
கணவனின் துணையோடுதானே
காமனை வென்றாக வேண்டும்

எவ்வளவு பெரிய உண்மையை எவ்வளவு நாசூக்காக சொல்லிவிட்டார் கவியரசர். காமனை வெல்ல கணவன் துணையில்லாவிட்டாவிட்டால் அவள் நாடுவது இரண்டுவழி. ஒன்று அடுத்தவன் துணையை நாடுவது (ஓடுவது), அல்லது நள்ளிரவில் குடம் குடமாக குளிர்ந்த நீரை தலையில் கொட்டிக்கொள்வது...

கவிஞன் கண்டாலே கவிதை
காண்பவர் கண்டாலே காதல்
அழகினைப்புரியாத பாவம்
அருகினில் இருந்தென்ன லாபம்

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.

ஜேசுதாஸின் மாஸ்ட்டர் பீஸ் பாடல்களில் ஒன்று, இப்பாடல். சரி சேட்டனின் வாழ்க்கையில் எப்படி ஒருமுறை தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தபோது அவர் சொன்னது. ஒருமுறை அவர் மகளிர் கல்லூரி விழாவுக்கு சிறப்பு விருந்திராக சென்றிருந்தபோது, அவர் டீ குடித்துவிட்டு வைத்த பிளாஸ்டிக் கப்பை ஒரு மாணவி நைசாக லபக்கி, டீக்கறையைக்கூட கழுவாமல் வைத்திருந்தாராம். ஜேசு மீது அவ்வளவு அட்டாச்மெண்ட். சரி அப்புறம் என்ன நடந்தது?. நல்லதுதான் நடந்தது. அந்த மாணவிதான் பிற்பாடு பாடகர் விஜய்ஜேசுதாஸின் அம்மா. நமக்கெல்லாம் மரியாதைக்குரிய அண்ணி. இந்தச் சம்பவத்தைச் சொல்லிவிட்டு தாசண்ணா பாடிய வரிகள் 'மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்' என்று தொடங்கி நாலு வரிகள்.

தாஸண்ணாவுக்கும் எனக்கும் என்ன அட்டாச்மெண்ட்?. கல்லூரியில் பாட்டுப்போட்டியில் தாஸண்ணாவின் பாடலைப்பாடி முதல் பரிசு பெற்றேன். பாடல் 'தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு'. என்னைப்பாராட்டிய விழாத்தலைவர் 'பையன் நல்லா பாடினான்' என்பதோடு நிறுத்தியிருக்கலாம். 'அப்படியே ஜேசுதாஸ் போலவே பாடினான்' என்று சொல்லித்தொலைத்தார். ஜேசுதாஸ் அவர்களுக்கு இதைவிட பெரிய அவமானம் இருக்க முடியாது.

சரி, இந்தப்பாடலின் முடிவு என்ன?. முதலில் மாதவியின் கணவன் மதுவுக்கு அடிமை, இப்போது மாதவியே 'மதுவுக்கு' அடிமை.

மாதவிக்கு பிறந்தநாள் வாழ்த்துச்சொல்ல பொக்கேயுடன் வரும் மது சர்ப்ரைஸாக அறையில் ஒளிந்துகொள்ள, அதே அறையில் வந்து மாதவி உடைமாற்ற, மது மாதவியை "முழுசாக" பார்த்துவிட தியேட்டரே அல்லோலகல்லோலம்தான்.

'காமாந்தகா, உன்னை இந்த உயரமான மாடியிலிருந்து கீழே தள்ளினால் என்ன' - ஈஸ்வர ஐயர் குரல்.

Gopal.s
21st June 2014, 03:15 PM
யாரை யார் ஒதுங்க சொல்வது? எங்களுடன் பங்கு பெற உங்கள் hidden agenda மூட்டை கட்டி விட்டு வாருங்கள். நாங்கள் இங்கு வந்து யார் பெயரையும் பிரசாரம் செய்யவில்லை. சங்கீதம் பற்றி ,பிடித்த விஷயங்கள் பற்றி எழுதி கொண்டிருக்கிறோம் .நண்பர்கள் வருத்த பட்டார்கள் ,எங்கு வந்தாலும் ஒரே விஷயத்தை எழுத உங்களுக்கே அலுக்கவில்லையா? நாங்கள் நாகரிகம் காக்கிறோம் என்றால் தொடர்ந்து இதையே செய்வீர்களா?வாசு சொல்லி கூட ,நீங்கள் மாறவில்லை என்பது வருத்தமே.யார் எழுதினால் உபயோகம் என்பது நண்பர்களுக்கு தெரியும்.

gkrishna
21st June 2014, 03:16 PM
sorry karthik sir
உங்கள் ப்ளாக் ஐ எதிர்பார்கவில்லை. என் உடையதை லோட செய்து விட்டேன் மன்னிக்க வேண்டுகிறேன்

Gopal.s
21st June 2014, 03:18 PM
மன்மத லீலை தேரிழுக்க வடம்பிடிக்கும் வாசு, கோபால், கிருஷ்ணா, வினோத் அனைவருக்கும் நன்றி.



????????????????????????????!!!!!!!!!!!!!!!!!!!!!! !!!!!!!!!!!!

Gopal.s
21st June 2014, 03:22 PM
கார்த்திக் சார்,

அவ வ்லாவிலே ,நாலாவது எலும்புக்கு கீழே பெரிய மச்சம்....

நேக்கு ரொம்ப அவசியம்?//

gkrishna
21st June 2014, 03:22 PM
மாதவியின் கணவன் மதுவுக்கு அடிமை, இப்போது மாதவியே 'மதுவுக்கு' அடிமை.

karthi sir

marvellous

கவிஞன் கண்டாலே கவிதை
காண்பவர் கண்டாலே காதல்
அழகினைப்புரியாத பாவம்
அருகினில் இருந்தென்ன லாபம்

இந்த சரணத்தில் தபெலவை விச்சு உருட்டுவார் தெரியுமா

Richardsof
21st June 2014, 03:27 PM
MY FAVORITE SONG IN MANMADHA LEELAI


http://youtu.be/9d5Ifa1O9S8

gkrishna
21st June 2014, 03:31 PM
கணவன் படிக்காத மேதையா இருந்தா பரவயில்லை
ஆனால் படிக்காத போதையா இருந்தால்

மதங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவன் அல்லவா இந்த mischevious மன்மதன்

Gopal.s
21st June 2014, 03:33 PM
கார்த்திக் ,

அன்னுடைய favourite தொங்கலில் விட்டாயிற்றா? நான் எழுதி விடுவேன். சீக்கிரம்.... சுகந்தானா சொல்லு கண்ணே?

gkrishna
21st June 2014, 03:33 PM
அந்த குடிகார கணவன் மனசாட்சி நடராஜன் தானே சார்

gkrishna
21st June 2014, 03:45 PM
"மாதவி கண்ணகி அருந்ததி பார்கவி "

ஏன்னா சதா சர்வகாலமும் பகவன் நமாவையே சொல்லிண்டுறுப்பெளே
ஒரே பொம்பனட்டி பேரானா சொல்றேள்
வேனும்ன வாத்யார் கூப்பிட்டு மந்திருசு விபூதி போட சொல்லட்டா

"மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் "

gkrishna
21st June 2014, 04:00 PM
"நினகறது உண்டா "

"எதை"

"என்னை பற்றி "

"டேபிள் உள்ள பிளாஸ்டிக் லெட்டர்ஸ் ஐ பாரு

ரேகா ரேகா ரேகா"

"மனமானது எந்தன் உள்ளம் தாயானது "

mr_karthik
21st June 2014, 04:17 PM
கார்த்திக் ,

அன்னுடைய favourite தொங்கலில் விட்டாயிற்றா? நான் எழுதி விடுவேன். சீக்கிரம்.... சுகந்தானா சொல்லு கண்ணே?

தொங்கலில் விடவில்லை. ஒவ்வொரு பாடலாக எழுதிக்கொண்டு வருகிறேன். இப்போது 'சுகந்தானா?. சொல்லு கண்ணே' பற்றி நீங்கள் எழுவதாகச் சொன்னதும் மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது. எழுதுங்கள். படிக்க ஆவலாக இருக்கிறோம்.

நீங்களும் எழுதுங்கள், நானும் எழுதுகிறேன்.

Gopal.s
21st June 2014, 04:33 PM
தொங்கலில் விடவில்லை. ஒவ்வொரு பாடலாக எழுதிக்கொண்டு வருகிறேன். இப்போது 'சுகந்தானா?. சொல்லு கண்ணே' பற்றி நீங்கள் எழுவதாகச் சொன்னதும் மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது. எழுதுங்கள். படிக்க ஆவலாக இருக்கிறோம்.

நீங்களும் எழுதுங்கள், நானும் எழுதுகிறேன்.

இன்னொரு ரசிப்பு தன்மையுள்ள பதிவர் எழுதி என்னுடைய பிரிய பாட்டை ரசிக்கும் சுகம் அலாதி. எழுத போவது வேறு கார்த்திக் ஆயிற்றே?காத்திருக்கிறேன்.

Gopal.s
21st June 2014, 04:54 PM
தமிழ் திரையுலகை ஆண்ட இசை திலகம். ஐம்பதுகளின் நால்வர் அணி சுப்பராமன்-ஜி.ராமநாதன்-கே.வீ.மகாதேவன்-ஏ.எம்.ராஜா தமிழ் இசைக்கு புது பாதை போட்ட trend setters .இவர்களை முன்னோடியாக கொண்டே ரெட்டையர் பல புது வித சோதனை முயற்சிகளில் ஈடு பட்டு அற்புத பாடல்களை தந்தனர். திரை இசை திலகம் கே.வீ.மகாதேவன் ,folk -classic இணைவில் புது பாதை போட்டவர்.(ஆரபியின் ஏரி கரை)

கே.வீ.மகாதேவன் அவர்களின் நினைவு நாள்.

Gopal.s
21st June 2014, 04:56 PM
திரை இசை திலகம் கே. வீ. மகாதேவன்-

தமிழ்,தெலுங்கு இரண்டு film industries கொண்டாடும் நபர்.

folk (மக்களை பெற்ற மகராசி ,குமுதம்) ,குத்து (வண்ணக்கிளி),classical based folk (முதலாளி), light classical (பாவை விளக்கு) ,ghazal(தொழிலாளி) ,classical (திருவிளையாடல்,சங்கராபரணம்) எல்லாவற்றிற்கும் trend -setter (50 களில் இருந்து).இவரை தன் குரு என்று சொல்லி கொண்டாடினார் மெல்லிசை மன்னர்(அவர் குரு என்று அழைதத மற்றையோர் ராம மூர்த்தி, சுப்பையா நாயுடு,நவஷாத்).

இவருடன் நடிகர் திலகம் பயணம் கூண்டு கிளி(1954 )யில் தொடங்கி, சிம்ம சொப்பனத்தில் (1984)முடிவுற்றது. இவர் மக்களை பெற்ற மகராசி, படிக்காத மேதை,பாவை விளக்கு,எல்லாம் உனக்காக,வளர்பிறை,வடிவுக்கு வளைகாப்பு,இருவர் உள்ளம்,குலமகள் ராதை,குங்குமம்,ரத்த திலகம,அன்னை இல்லம்,நவராத்திரி(100 வது NT படம்),செல்வம்,பேசும் தெய்வம்,பாலாடை,தில்லானா மோகனாம்பாள்,விளையாட்டு பிள்ளை,வியட்நாம் வீடு,எதிரொலி,அருணோதயம்,குலமா குணமா,வசந்த மாளிகை,எங்கள் தங்க ராஜா,சத்தியம்,உத்தமன்,சிம்ம சொப்பனம் என்ற சமூக படங்களுக்கும் , சம்பூர்ண ராமாயணம்,திருவிளையாடல்,மகாகவி காளிதாஸ்,சரஸ்வதி சபதம்,கந்தன் கருணை,திருவருட்செல்வர்,திருமால் பெருமை,ஹரி சந்திரா என்ற புராண படங்களுக்கும் நடிகர் திலகத்துக்காக கொடுத்துள்ளார்.

1963 , 1966 இரண்டு ஆண்டுகளில் NT க்காக அதிக படங்களுக்கு இசையமைத்தவர் ஆவார்.

கே.வீ.மகாதேவன் சாரிடம் உள்ள சிறப்பம்சங்கள்-

1) 95 % பாடல்களில், இந்திய பாரம்பரிய இசை கருவிகளை மட்டுமே உபயோக படுத்தி உள்ளார்.
2)90 % பாடல்கள் பாட்டு எழுதி இசை அமைக்க பெற்றவை. கண்ணதாசன் வார்த்தைகளில், ஒரு கட்டுரை எழுதி கொடுத்தாலும் இசை அமைக்கும் வல்லமை கொண்டவர்.
3) எடுத்து கொண்ட படத்துக்கு உரிய இசையை கொடுப்பார். இவரா அவரா என்றெல்லாம் பார்த்து இசையமைக்கும் வழக்கம் அறவே இல்லை.
4) improvised மியூசிக் கொடுத்திருக்கிறாரே தவிர , assembled arrangements பாணியில் பண்ணியதே இல்லை.சில ஹிந்தி பாடல்களை உபயோக படுத்தி இருந்தாலும்,பெரும்பாலும் அசலானவை. ஸ்பானிஷில் கொஞ்சம்,arabian இல் கொஞ்சம் என்று உருவியதே கிடையாது.
5) இவர் ஸ்டைல், இந்திய -வெஸ்டேர்ன் பாணி action படங்களுக்கு ஒத்து வராது. மற்ற படி எல்லா படங்களுக்கும் பொருந்துவார்.
6) இவர் 69 இல் இருந்து 80 வரை தெலுங்கில் பிஸி ஆக இருந்ததால் தமிழில் ஆர்வம் காட்டவில்லை.

என்னை கவர்ந்த பாடல்கள்-

சமூக படங்களில்-
சிட்டு குருவி சிட்டு குருவி, மணப்பாறை, போறவளே, ஆகா நம் ஆசை,ஏரி கரையின் மேலே , சீவி முடிச்சு,ஒரே ஒரு ஊரிலே,படித்ததினால்,ஆயிரம் கண் போதாது, வண்ண தமிழ்,காவியமா,ஆத்திலே தண்ணி வர,மாட்டுகார வேலா,வண்டி உருண்டோட,சித்தாடை கட்டிக்கிட்டு, மாமா மாமா மாமா,கல்யாணம்,கல்லிலே,என்னை விட்டு, மியாவ் மியாவ்,ஒருத்தி ஒருவனை,மெல்ல மெல்ல அருகில்,தட்டு தடுமாறி,கண்ணுக்குள்ளே,சிரித்து சிரித்து, ஹலோ ஹலோ,காட்டு ராணி, காட்டுக்குள்ளே,கட்டான,மலரும் கொடியும்,கங்கை கரை,கடவுள் மனிதனாக, யாரடி வந்தார்,காலம் என்னும் நதியினிலே, ராதே, இரவுக்கு ஆயிரம்,பகலிலே, உன்னை சொல்லி, கள்ள மலர், மயக்கம் எனது, தூங்காத கண்ணென்று(நிறைய பேர் லிஸ்டில் தமிழின் நம்பர் one ),பூந்தோட்ட, சின்னஞ்சிறிய,குங்குமம்,பறவைகள்,கண்ணெதிரே, இதய வீணை,கண்ணே கண்ணே, புத்தி சிகாமணி,நதிஎங்கே,அழகு சிரிக்கின்றது,ஏனழுதாய், பசுமை நிறைந்த, புத்தன் வந்த,தாழம் பூவே,பனி படர்ந்த,வாடை காற்றம்மா,மடி மீது,நடையா,எண்ணிரண்டு,மஞ்சள் முகமே,உன்னையறிந்தால்,சீட்டுக்கட்டு,வெள்ளிநிலா ,ஆண்ட வன், என்ன கொடுப்பாய்,கன்னத்தில் என்னடி, ஒரே முறைதான், நவராத்திரி, இரவினில், சொல்லவா,போட்டது,
ராஜாதி ராஜ மகா,அவளா சொன்னால்,என்னடி,ஒன்றா இரண்டா,எனக்காகவா,பட்டாடை,எங்கே ஆஹா எங்கே,அழகு தெய்வம்,நான் அனுப்புவது,இதய ஊஞ்சல்,பத்து மாதம்,பிள்ளை செல்வமே,நலம்தானா,மறைந்திருந்து,பாண்டியன் நானிருக்க,மழை முத்து ,கேளம்மா,உனக்கும் எனக்கும்,என்றும்,நல்ல நல்ல,எவரிடத்தும்,காதல் எந்தன் ,என்னம்மா,எலந்த பயம், அலேக்,மெல்ல,,மாறியது,சந்திப்போமா,காலமிது,சிரி ப்பேன ்,ஒரு பக்கம்,பூ வைத்த,நெஞ்சம் உண்டு,கடவுள் ஏன்,நீல நிறம்,ஆசையிருக்கு,பாலக்காட்டு,உன்கண்ணில்,தொட் டால், டிக் டிக்,பதினாறு வயதினிலே,ஏன் ஏன் ஏன் ,குடிமகனே,மயக்கம் என்ன,இரண்டு மனம,யாருக்காக,கல்யாண ஆசை,இரவுக்கும் பகலுக்கும்.

புராண,சரித்திர, படங்கள்-
நான் சொல்லியா தெரிய வேண்டும்? திருவிளையாடல் முதல் ஆதி பராசக்தி வரை.

Gopal.s
21st June 2014, 05:00 PM
Birth name Krishnankoil Venkatachalam Mahadevan
Also known as Mama
Born March 14, 1918
Nagercoil, Krishnancoil, Kanyakumari, Travancore
Origin Chennai, Tamil Nadu, India
Died 21 June 2001 (aged 82)
Chennai, Tamil Nadu, India
Genres Film score, Theatre
Occupations Music Director
Years active 1942–1992


National Film Award for Best Music Direction (1967) for Kandan Karunai (first recipient of the award)
Tamil Nadu State Film Award for Best Music Director (1969) for Adimai Penn
National Film Award for Best Music Direction (1980) for Sankarabharanam
Filmfare Best Music Director Award (Telugu) (1992) for Swathi Kiranam

Gopal.s
21st June 2014, 05:59 PM
2001-2010 என்னை கவர்ந்த படங்கள்.

ஆளவந்தான், டும் டும் டும், 12 b ,தில்,தினா,பாண்டவர் பூமி,பூவெல்லாம் உன் வாசம்,மின்னலே,மிடில் கிளாஸ் மாதவன்,கன்னத்தில் முத்தமிட்டால் ,சொல்ல மறந்த கதை,பஞ்ச தந்திரம்,பம்மல் கே சம்பந்தம்,ரமணா,இயற்கை,காக்க காக்க,காதல் கொண்டேன்,தூள்,பிதா மகன்,அழகிய தீயே,புது பேட்டை,7 ஜி ரெயின் போ காலனி,ரஜினி,பாரதி,பெரியார்,பாய்ஸ்,அந்நியன்,சிவாஜி, வரலாறு,கில்லி,சுப்ரமணிய புரம்,அறிந்தும் அறியாமலும்,எம்டன் மகன்,கஜினி,இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி,காதல்,வெய்யில்,பொல்லாதவன்,அன்பே சிவம்,விருமாண்டி,மொழி,ஒன்பது ரூபாய் நோட்டு,பள்ளி கூடம்,அஞ்சாதே,கனா கண்டேன்,பார்த்திபன் கனவு,பிரிவோம் சிந்திப்போம்,ரன்,சண்டை கோழி,உள்ளம் கேட்குமே,சாமி ,வசூல் ராஜா எம்.பீ.பீ.எஸ்.,கண்ட நாள் முதல்,சந்தோஷ் சுப்ரமணியம்,பொம்மலாட்டம்,பொய் சொல்ல போறோம்,அபியும் நானும்,பருத்தி வீரன்,அயன்,ஈ , வாரணம் ஆயிரம்,நாடோடிகள்,திரு திரு துரு துரு,உன்னை போல் ஒருவன்,ஆயிரத்தில் ஓருவன்,பேராண்மை ,பசங்க,வெண்ணிலா கபடி குழு,தமிழ் படம்,இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்,சென்னை-28,சரோஜா,அங்காடி தெரு,விண்ணை தாண்டி வருவாயா,நான் கடவுள்.

முதல் பத்து (2001-2010)

1)நான் கடவுள்
2)அஞ்சாதே
3)புது பேட்டை.
4)அன்பே சிவம்.
5)பொல்லாதவன்
6)பாய்ஸ்
7)காக்க காக்க
8)மொழி
9)காதல்.
10)வெய்யில்.

eehaiupehazij
21st June 2014, 06:01 PM
கோபால் சார். மனதை மயக்கும் மதுர கானங்களில் உங்களது சொற்சிலம்பங்களை ரசிக்க அழைத்தமைக்கு நன்றிகள். திரை இசைத்திலகத்தின் நினைவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வது எனக்கு மகிழ்வான தருணமே.

Gopal.s
21st June 2014, 06:57 PM
மோகனம்.

பெயரிலேயே மோகனம் சுமந்து நிற்கும் இந்த ராகம் நிஜத்திலேயே வசீகர மோகனம் கொண்டது. மனதை இதமாய் வருடி ,காற்றில் மிதக்க விடும் உணர்வை தரும் இதமான மெலடி சுமந்த சுலப மெல்லிசை ராகம்.

அல்லிரானியாய் நிற்கும் ஒரு முசுட்டு பெண்ணை(நண்பனின் தங்கை) டீசிங் செய்யும் துரு துரு இளைஞன், வீட்டின் எதிரில் மொட்டை மாடியில் பாடுவதாக (அதுவன் கம்பன் கண்ட சீதை படிக்கும் நாயகியை குறி வைத்து) வரும் பாடல் என்னை டீன்களில் பித்தாக்கிய ஒன்று. மெல்லிசை மன்னர் சகாப்தம் முடிந்தது என்று கொக்கரித்தவர்கள் வாயை fevicol போட்டு ஒட்டிய பாடல்."கம்பன் ஏமாந்தான் ".

அதிர்ஷ்டமில்லாத ஒரு அருமையான இசையமைப்பாளர் ஏ.எம்.ராஜா.இவரை மாதிரி ஒரு திறமைசாலி ,தமிழ் திரையுலகில் ஒதுங்கிய காரணம் சமரசமற்ற போக்கு.முன்கோபம்,திலகங்களின் ராஜ்யத்தில் டி.எம்.எஸ் ஐ ஒதுக்கியது (வயசான டி.எம்.எஸ் இன்னொரு இளையவரால் ஒழிக்க பட்டார்.),இவை அவரை அந்நிய படுத்தி விட்டது.நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் இவரை ஒதுக்கி, எம்.எஸ்.வீ - டி.கே.ஆர் அணுக பட்ட போது ,பெருந்தன்மையாக அனுமதி பெற வந்த எம்.எஸ்.வீ (உண்மையாகவே நல்ல குணம்)யுடன் இவர் சொன்னது. நான் தூக்கி போட்டதை யார் எடுத்தால் என்ன?இவரை அந்த குணம் தூக்கி போட்டு விட்டது. கல்யாண பரிசு,தேன் நிலவு, ஆடி பெருக்கு போதுமே. இவர் பெயரை இன்னும் 5000 ஆண்டுகள் சொல்ல? கர்நாடகம்,ஹிந்துஸ்தானி,வெஸ்டெர்ன் என்று இவர் தொட்டு சீராட்டிய பாணிகள் ,மற்றோருக்கு ராஜ பாட்டை போட்டன.தேன் நிலவில் "நிலவும் மலரும் பாடுது" நம்மையும் நிலவொளி -ஓடம் போக வைக்காதா?

கேமரா மேதை பிரசாத் எனக்கு உவப்பான ஒருவர். புதிய பறவை போதுமே? ரவி ,கே.ஆர்.விஜயா இணைவில் சூப்பர்-ஹிட் படமான இதய கமலத்தில்"மலர்கள் நனைத்தன பனியாலே" ,பிரசாத் அதிசய பட பிடிப்பில் பனியை துல்லியமாக காட்டுவது போல ,நம் மனதில் பனியின் குளுமையை கொடுக்கும் திரை இசை திலகத்தின் அதிசயமல்லவா?

எனக்கு பிடித்த பிற பாடல்கள் (மோகனம்)

அமுதை பொழியும் நிலவே- தங்க மலை ரகசியம்.
என்னை முதல் முதலாக பார்த்த போது -பூம்புகார்.
என்ன பார்வை உந்தன் பார்வை-காதலிக்க நேரமில்லை.
சங்கே முழங்கு- கலங்கரை விளக்கம்.
குழந்தையும் தெய்வமும்- குழந்தையும் தெய்வமும்.
தேன் மல்லி பூவே- தியாகம்.
நின்னுகோரி வர்ணம் வர்ணம்-அக்கினி நட்சத்திரம்.

vasudevan31355
21st June 2014, 10:51 PM
ஷிப்ட் முடிச்சிட்டு வந்து பார்த்தா யாரையும் காணோமே.

'மன்மத லீலை' முடிச்சுட்டு எல்லோரும் சீக்கிரம் தூங்கப் போயிட்டாங்க போலிருக்கு.:)

chinnakkannan
22nd June 2014, 12:09 AM
மன்மத லீலை பற்றி எல்லாரும் அலசி விட்டார்கள் இருப்பினும்..
நின் மதி வதனமும் நீள் விழியும் கண்டு
ரம்பா! ஸ்வாமி!
நின் மதி வதனமும் நீள் விழியும் கண்டு
என் மதி மயங்கினேன் மூன்று உலகிலும்
பாகவதரின் குரல்..ஆஹா..என்ன ஒரு கணீர்க்குரல ரொம்பப் பிடிக்கும்..ஓ தப்போ.. கொஞ்சம் கன்ஃப்யூஸ் ஆகிட்டேன்

*
மன்மத லீலை சினிப்ப்ரியா மினிப்ரியா என ரிலீஸாகி நல்ல ஓட்ட ம் ஓடி விமர்சனம் படித்து தூரம் என்பதால் போகாமல் பெருமூச்சு விட்டு இருந்த போழ்தில் அஹா.. ஒரு வெள்ளி அன்று சாந்தி தியேட்டரில் அல்லது தேவியா நினைவில்ல்லை ரிலீஸாக சனி மாலை போய்ப் பார்த்து சிரித்து வந்தது புகையாக நினைவில்..
9
இருந்தாலும் முதன் மு’றை பார்க்கும் போது என்னவோ கொஞ்சம் விட்டு விட்டு காட்சிகள் வருவது மாதிரி பிரமை..இப்பவும் உறுத்திக் கொண்டிருக்கும் கேள்விகள்.. நாதமெனும் கோவிலினிலே க்ளாப் க்ளாப் சொல்லும் யுவதியும் கண் தெரியாத மேஜரின்ன் மனைவியாக வருபவரும் சாயலில் ஒன்றாய் இருப்பது போன்ற பிரமை (,முருகா சரணம்)
*
ஆலம் இருந்தது சற்றே புதுமையாக இருந்தது..ஆனால் அந்தக் கட்டைக் குரல்..என்னங்க..என்னங்க நான் மோசம் போயிட்டேன் என்று சுகம் தானா சொல்லு கண்ணே முடிந்ததும் அழுகின்ற குரலின் கனம்…தாள முடியவிலலை..
*
பிஎம் அலையஸ் பெட்டிஷன் மாமா ஒய்.ஜி. மகேந்திரன்(இப்ப சோப்பு போடு), அவரது ரியல் லைஃப் அப்பா ஒய்.ஜி.பி (ரெண்டு தும்மல் ஒரு தும்மல்) ஓகே..
*
ஜெயப்ரதா புதுமுகம்..இளமை ஒல்லி ஆனால் பளீர் ரின் போட்ட சிரிப்பு.. எனக் கவர்ந்தார்..படக் படக் வசனங்கள் மனதைக் கவரும்..
*
அந்த ஹரிஹர சுப்ரமண்யன் அய்யர் ரோலில் வருபவர்.. அக்னி சாட்சியில் நடித்ததாக நினைவு..(அதுவும் கே.பி படம் தான்) பின் சிந்துபைரவி தர்பார் ராகம்..
*
மனைவியை ஏமாற்றிப் பல பெண்களுடன் இருப்பது தவறு எனச் சொல்லும் படத்தில் அதே எவ்வளவு தவறு செய்த கணவனையும் ஏற்று நடக்க வேண்டும் என்பது போல் க்ளைமாக்ஸ் அமைத்தது அப்போது இருந்த இளைஞனை (ஹி ஹி நான் தான்) உறுத்தியது நிஜம்..இப்போ.. ஹி ஹி..
*

vasudevan31355
22nd June 2014, 06:19 AM
கார்த்திக் சார், கிருஷ்ணா சார், கோபால், சின்னக்கண்ணன் சார் என்று 'மன்மத லீலை'யை உண்டு இல்லை என்று ஒரு வழி பண்ணி விட்டாரகள்.

கார்த்திக் சாரின் நடை கலக்கல். வெகு ஜனரஞ்சகம். சுவாரஸ்யமான சுவாரஸ்யம். இந்தப் பக்கம் கிருஷ்ணா சாரோ ஒரு வரி விடாமல் மனப்பாடம் செய்து வைத்து படத்தின் ஒவ்வொரு காட்சியையும் ரசித்து நம்மை ரசிக்க வைக்கிறார்.

vasudevan31355
22nd June 2014, 06:21 AM
கோபாலின் மகாதேவா மனமகிழல் செமையாக இருந்தது. மாமா செய்த மகோன்னதங்களை ஒன்றுகூட விட வில்லை. மாமா பிறந்தநாளில் இப்படி எவரும் அவரை நினைவு கூறவே முடியாது. யாரும் இவ்வளவு டைப் செய்யவும் முடியாது. அருமையான நினைவாஞ்சலி. உண்மையானதும் கூட. (சேமிப்புக் கிடங்கில் சேமித்து விட்டேன்)

நிஜமாகவே பாராட்டுக்கள்.

vasudevan31355
22nd June 2014, 06:22 AM
கிருஷ்ணா சார்!

இவ்வளவு அழகாக படத்தை கதையுடன் விமர்சனம் செய்து லீலைகள் புரிந்து தூள் பரத்துகிரீர்களே! நடிகர் திலகம் திரியில் நீங்கள் ஏன் அவரது படங்களை இப்படி அலசவில்லை (முன்பும் சரி! இப்பவும் சரி!) என்ற கேள்விதான் இப்போது என்னுள் முதன்மையாக நிற்கிறது. எவ்வளவு இழப்பு தெரியுமா எங்களுக்கு! இனிமே இந்தத் தப்பெல்லாம் பண்ணப் படாது. சரியா! (செல்லக் கடி)

vasudevan31355
22nd June 2014, 06:28 AM
மன்மத லீலையை அணுஅணுவாகப் படித்து ரசிக்கும் போது அதற்கு முன் எம் மன்னவர் புரிந்த மன்மத லீலைகளை 'திரும்பிப் பார்' க்காமல் இருக்க முடியவில்லை.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/22-5.jpg

vasudevan31355
22nd June 2014, 06:37 AM
முந்தாநாள் ஊருக்குப் போய்விட்டதால் இன்றைய ஸ்பெஷல் போட முடியவில்லை. நேற்று ரெடி பண்ணி வைத்து போடப் போகும் போது அருமை கார்த்திக் சார் அழகான 'மன்மத லீலை' யை கொண்டு வந்தார். கோபாலும் தொடர்ந்து நல்ல பதிவுதர, போட்டு குழப்ப மனம் வரவில்லை. நிறுத்தி விட்டேன். இன்றைய ஸ்பெஷலை இன்று தொடருவேன்.

vasudevan31355
22nd June 2014, 06:38 AM
'உத்தமபுருஷன்' படத்தில் பிரபுவும் பிளே-பாயாக நன்றாகப் பண்ணியிருந்தார். படமும் நன்றாகவே ஓடியது.

Gopal.s
22nd June 2014, 07:55 AM
பிரபுவின் ராஜா கைய வச்சா (சரியா போகாதது வருத்தமே),உத்தம புருஷன் (நல்ல ஹிட்) இரண்டுமே எனக்கு பிடிக்கும்.. டுபாக்கூர் ரோலில் ராஜா கைய வச்சா படத்தில் அவர் ,கவ்தமி இணைவில் கலக்கியிருப்பார். உத்தம புருஷன் படத்தில் காரில் பெண்களுக்கு லிப்ட் கொடுத்து கலாய்த்து மாடி கொள்ளும் சீன்.வாவ்!!!

நாசர் -மகளிர் மட்டும் சுமார்தான். பிரபுவிற்கு கொடுத்திருந்தால் இன்னும் நன்றாக பண்ணியிருப்பார்.

Gopal.s
22nd June 2014, 07:59 AM
நடிகர்திலகம் ,playboy என்றால் திரும்பி பார், இருவர் உள்ளம்,வசந்த மாளிகை. காமெடி playboy என்றால் இருவர் உள்ளம்.தெய்வ மகனில் கொஞ்சம் விஜய் ஆரம்பத்தில்.

(கொஞ்சமே கொஞ்சம் பெண்ணின் பெருமை,துளி விஷம்,உத்தம புத்திரன்,தீபம்,நல்லதொரு குடும்பம்,திரிசூலம்)

vasudevan31355
22nd June 2014, 08:06 AM
கிருஷ்ணா சார்,

அப்போதிலிருந்து இப்போது வரை அனுபவித்து பார்க்கும் படம்.

எல்லாவற்றையும் எழுதி விட்டீர்கள். நானும் ஏதோ ரசித்ததைக் கிறுக்குகிறேன்.

ரீனாவின் கண்ணடிக்கும் பழக்கத்திற்கு கமலிடம் அவர் அளிக்கும் பதில்.

'இது என்னுடைய வீக்னெஸ் சார்'

எது? கண்ணடிக்கிறதா?

நோ!நோ!கண் துடிக்கிறது.


'இந்த ஆபிஸ் கதவுக்கெல்லாம் ஒரு வீக்னெஸ். அப்பப்ப தொறந்துக்கும்'.

'இது ரசிக்கக் கூடிய வீக்னெஸ் இல்ல'.


'பெண்ணுக்கு கல்யாணம்... கல்யாணம் ஆனவர் உங்ககிட்டே காட்டறதுக்கு என்ன?" என்று தன் பெண்ணின் போட்டோவை கமலிடம் நீட்டும் அய்யரின் பெண்ணின் படத்தை பார்க்கும்போதே, ஒரே நிமிஷத்தில் அவளை பெண் பார்த்து ,கல்யாணம் பண்ணி கொண்டு, ஆசீர்வாதம் வாங்கி,முதலிரவில் பழம் ஊட்டி அவளை அணைத்துக் கற்பனை செய்து கொள்ளும் அல்ப அரை நொடி நேரக் கற்பனை சுகம்

'எங்கெல்லாம் பெண்கள் ஆபத்தில இருக்காங்களோ அங்கெல்லாம் நான் தோன்றுவேன்' (ஜெயபிரதா மோட்டார் சைக்கிளில் ஆடைகள் மாட்டிக் கிழிந்து நிற்க, ஆடைகளைக் கழற்றிக் கொடுத்த கர்ண கிருஷ்ணன்)

'செக்ஸ் ஒரு பெரிய கடல். அதை முழுசா புரிஞ்சிக்குனம்னா ஒரு மனைவி போதாது'. (இது எப்படி இருக்கு)

பாவி. ஹியூமன் சைகாலஜி படத்தில் தெரியும் எலும்புக்கூட்டைக் கூட விட்டு வைக்காமல் அது ஆம்பள எலும்புக் கூடா பொம்பள எலும்புக் கூடா என்று பொம்பளை எலும்புக் கூட்டின் மண்டையோட்டில் பிகரை பொருத்தி பார்க்கும் கமலின் வியப்பான வீக்னெஸ். (இதுக்கு மேல எப்படி வீக்னெஸ் காண்பிக்கிறது)

'ex மேயர் மாப்பிள்ளை ஊர் மேயறான்' மகேந்திர மாமா வத்தி.

'பெண்கள்னா எனக்கு ஒரு ஈர்ப்பு, affection, அதீதமான ஈடுபாடு... அதான் என்னோட குணச்சித்திரம்' (குணச்சித்திரத்திற்கு என்னா ஒரு விளக்கம்)

மனோதத்துவ டாகடரிடம் கமல் ட்ரீட்மென்ட் எடுக்கும் போது அங்கு தூரத்தில் தெரியும் டாக்டரின் அசிஸ்டன்ட் பெண்ணை ஸ்க்ரீன் விளக்கி அடிக்கடி சைட் அடிப்பார்.

அந்தப் பெண் பிரவீணா பாக்கியராஜ்.

புருஷன் படிக்காத மேதையா இருந்தா பரவாயில்ல
படிக்காத போதையா இருந்தா (ஹேமாவிடம் கமலின் கரிசனம்)

ஒளிந்திருக்கும் ரூமுக்கு உள்ளேயே ஹேமா டிரஸ் மாற்றும் கதையை (மொட்டைமாடி வாட்டர் டேங்க் பாவ மன்னிப்பு) அய்யரிடம் சொல்லும் போது அய்யர் பதைபதைத்து 'அய்யயோ அப்புறம்! (என்னாச்சோ! இந்தப் படுபாவி என்ன பண்ணானோ) என்று அலற, கமல் அலட்டாமல் 'நீங்க ரொம்ப அவசரப்படுறீங்க' (அடுத்து நிகழ்ந்ததைக் கேட்க அய்யர் இவ்வளவு ஆவலாய் இருக்காரே) என்பாரே! இத்தனைக்கும் இருவர் முகமும் காட்டப்படாமல். நான் ரொம்ப ரசிச்ச இடம். கிரேஸி நினைவுக்கு வருவார்.

ராதாரவியை கடுப்பேற்ற கமலை ஜெயப்பிரதா ஹக் செய்து 'பொறாமை படறானா பாரு' என்பார்.

அதற்கு கமல் பதில்

'பொறாமை பத்தல'.

'நாதமென்னும் கோயிலிலே

இசையும்
எனக்கிசையும்.
தினம் என் மனம்தான்
அதில் அசையும்

மனதை அசைத்த பாடல்தான்.

சுகம்தானா
சொல்லு கண்ணே

அருமையான சுகானுபவம்.

இன்னும் நிறைய எழுதலாம். வித்தியாசமான ரசிக்கத் தகுந்த காட்சிகள். ஆனால் கோர்வையற்ற ரசமான வைரத் துண்டுகளின் இணைப்புகள்.

Gopal.s
22nd June 2014, 08:38 AM
பிருந்தாவன சாரங்கா.

சொந்தங்களுக்குள் காதல் எண்ணங்களை பரிமாறி கொள்வது,சொந்தங்களை சீராட்டுவது(குழந்தைகளையும் சேர்த்தே), காதலியிடம் உருகி நீதான் என் மனதில் என்று அழுத்தி சொல்வது ,இவற்றுக்கேன்றே ஒரு ராகம் உள்ளதா? உள்ளேன் ஐயா என்று உங்கள் முன் ஆஜர் ஆவது பிருந்தாவன சாரங்கா.

சிறு வயதில் மூன்று படங்கள் என்னை உலுக்கும்.இவ்வளவு வித்யாசமான கதை கரு, திரை கதை மற்றும் கலை மேதையின் நடிப்பு மூன்றிலும். படித்தால் மட்டும் போதுமா,ஆலய மணி,புதிய பறவை. முற்றிலும் வேறு பட்ட சிந்தனையில் புத்தம் புதிய நமக்கு பழகாத கதையமைப்பு கொண்டவை. இரண்டு இணை பிரியா சகோதரர்கள் (ஒன்று விட்ட) .ஒருவன் sophisticated படிக்காத வேட்டை காரன். மற்றவன் polished படித்த மென்மையான மனிதன். இருவரும் ஒருவருக்கு பார்த்த பெண்ணை மற்றவர் சென்று பார்த்து அங்கீகரிக்க ஏற்பாடு செய்து ,வந்த பிறகு எண்ணங்களை பரிமாறி கொள்ளும் மைல் கல் காட்சி.இதில் படித்தவனின் எண்ணம் திரிபு பட என் விழியில் நீ இருந்தாய் என அப்பாவி வேட்டை காரனும், உன் வடிவில் நான் இருந்தேன் என படித்த வக்கிரமும் பாடும் இந்த பாடலும் இன்றும் எல்லோராலும் நேசிக்க படும் அதிசயம்.டி.எம்.எஸ் ஒரு கட்டை குறைக்க,பீ.பீ.எஸ் ஒரு கட்டை ஏற்ற ,இந்த இரண்டு நேர்த்தியான பாடல் திலகங்களின் அபூர்வ சங்கமம்."பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை".

இருவர் மேல் எனக்கு அலாதி பற்று. இருவருமே அவரவர்க்கு உரிய அங்கீகாரம் பெறாத மேதை பால்கேக்கள். இருவரும் பெற வேண்டிய இடம் என் மனதில் நிஜமாகாத நிழலாகவே தொடர்கிறது. அடிமைகள், மற்றும் சிலகம்மா செப்பிந்தி என்சற படங்களை தழுவி இயக்குனர் சிகரம் தந்த நிழல் நிஜமாகிறது.ஈர்ப்பு நிறைந்த வசீகரம்.இரு துருவங்களாக கமல்,சுமித்ரா.love teasing concept வைத்து இதற்கு மேல் எதுவும் செய்ய இல்லை என்று பாலு-கமல்-சுமித்ரா கூட்டணி இறுதி செய்து விட்ட முத்திரை படம். தோதுவாய் சரத்-ஷோபா-ஆனந்து. உறுத்தாமல் மௌலி (suspect list லே கூட இல்லியா).ஒரு பாதிக்க பட்டு பெண்ணுக்கு காப்பளனான ஒருவன் தன் ஒரு முனை பட்ட தன்னலமற்ற அன்பால் அந்த பெண்ணின் மனதிலும், அல்லிராணி காதலில் விழுந்தாலும் புகை படர்ந்த சந்தேகத்தால் ,தன் காதலை தள்ளி வைத்து போடும் நாடகம். இரண்டையும் இணைத்து சொந்தங்களின் மன ஓட்டத்தை ,போராட்டத்தை சொன்ன மெல்லிசை மன்னர் தான் யார் என்று ஊருக்குணர்த்திய பாடல். "இலக்கணம் மாறுதோ,இலக்கியம் ஆனதோ".

70 களில் ,horny teen -ager (இன்றும் அப்படித்தான் .மனிதன் மாறவில்லை.அவன் மயக்கம் தீரவில்லை)ஆக நான் வலம் போது ,ஒரு பாடல்,அது படமாக்க பட்ட பரபரப்பான சூழ்நிலை,அற்புதமான இசை,நடித்தவர்களின் தோதுவான erotic Enactment &expressions என்று கிக் ஏற்றி படத்தின் வெற்றிக்கே துணை செய்தது.அந்த பாடல் "நாலு பக்கம் வேடருண்டு".

இந்த ராகத்தில் எனது மற்ற விருப்பங்கள்.

1)பூவரையும் பூங்கொடியே- இதயத்தில் நீ.
2)முத்து நகையே உன்னை- என் தம்பி.
3)சிங்கார கண்ணே உன் தேனூறும் சொல்லாலே-வீர பாண்டிய கட்டபொம்மன்.
4)இது குழந்தை பாடும் தாலாட்டு-ஒருதலை ராகம்.
5)நெஞ்சாங்கூட்டில்- டிஷ்யூம்.

Gopal.s
22nd June 2014, 08:45 AM
சனி,ஞாயிறு ஓவர் டைம் செய்தது எதற்காம். ஒரு வாரம் லீவ் சார் please ,Sanction . As my grand mother is sick ,so I request you to (as உம் so வும் சேர்ந்து வர கூடாதுடா அபிஷ்டு)

mr_karthik
22nd June 2014, 10:11 AM
நடிகர்திலகம் ,playboy என்றால் திரும்பி பார், இருவர் உள்ளம்,வசந்த மாளிகை. காமெடி playboy என்றால் இருவர் உள்ளம்.தெய்வ மகனில் கொஞ்சம் விஜய் ஆரம்பத்தில்.

(கொஞ்சமே கொஞ்சம் பெண்ணின் பெருமை,துளி விஷம்,உத்தம புத்திரன்,தீபம்,நல்லதொரு குடும்பம்,திரிசூலம்)

தெய்வமகன் விஜய்?. சும்மா ஒரு பாட்டுக்கு ஜெயலலிதாவை வெறுப்பேற்ற அப்படி நடிப்பார்.

சேர்க்க வேண்டிய இன்னொருவர் 'என்னைப்போல் ஒருவன்' சேகர்.

chinnakkannan
22nd June 2014, 10:56 AM
ஏன் தீபம்..ராஜா யுவ ராஜா??

vasudevan31355
22nd June 2014, 11:24 AM
இன்றைய ஸ்பெஷல் (10)

அன்று பிரபலமாய் ஒலித்த இன்னொரு சுறுசுறு பாடல். எல்லோர் நெஞ்சங்களிலும் குடிகொண்ட பாடல்.

'மழை மேகம்' படத்தில் அழகான ஒரு பாடல்

http://img.youtube.com/vi/RORk83QZVp0/mqdefault.jpg

அப்படி ஒரு படம் வந்தது பலருக்குத் தெரியாது. முத்துராமன், சாரதா இணை.

புலமைப்பித்தன் வரிகளுக்கு 'திரை இசைத் திலகம்' மியூசிக்.

யாரோ இளசுகள் ரெண்டு ஆடும் என்று நினைத்திருந்தால் கொஞ்சமும் எதிர்பாராமல் நம் முத்துராமனும், சாரதாவும் இளமை புத்துணர்ச்சியுடன் டூயட் பாடுகிறார்கள்.

முத்துராமன் பொதுவாக டூயட் பாடல்களில் 'எனக்கென்ன' என்று மசமசவென இருப்பார். இப்பாடலில் பரவாயில்லை. சாரதாவுடன் ஓடுகிறார்...துரத்துகிறார்... சாரதா நெஞ்சத்தில் வாசனை பிடிக்கிறார்.... குதிரையெல்லாம் ஓட்டி சாரதாவை ஓட்டுகிறார்.

நம் 'புவனேஷ்ஷ்.......வரி'க்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது. ஸ்ரீகாந்திடம் ஏமாந்து போய் கண்ணீர் விடத்தான் மிகப் பொருத்தமானவர்.

கே.வி.எம்மிடம் ஒரு குறை. அவரது வாத்தியக் கருவிகளின் இசையைக் மிக ஈஸியாக கண்டு பிடித்துவிடலாம். 'வாணிராணி' 'வசந்தமாளிகை' 'எங்கள் தங்க ராஜா' படப்பாடல்களின் இடையிசை நமக்கு அப்படியே ஞாபகத்திற்கு வருகிறது. மனிதர் மாற்றவே மாட்டார். ஆனால் டியூனில் மட்டும் ஏமாற்றவே மாட்டார்.

வழக்கமான அதே சமயம் துறுதுறுப்பான சுலீலா, பாலாவின் வளமையான குரல்களின் பின்னணியில்.

இனி பாடல் வரிகளில் சங்கமிப்போம்.

ஆகாய கங்கை இன்று மண்ணில் வந்தது
ஆனந்தத் தீர்த்தம் என்னை ஆடச் சொன்னது
உள்ளம் ரெண்டும் ஆடட்டும்
ஒன்றில் ஒன்று கூடட்டும்
ஆஹஹா.... அஹஹா ஆஹஹா... அஹஹா...ஆஹஹா....அஹஹஹாஹஹா.

ஆகாய கங்கை இன்று மண்ணில் வந்தது
ஆனந்தத் தீர்த்தம் என்னை ஆடச் சொன்னது
உள்ளம் ரெண்டும் ஆடட்டும்
ஒன்றில் ஒன்று கூடட்டும்
ஆஹஹா.... அஹஹா ஆஹஹா... அஹஹா...ஆஹஹா....அஹஹஹாஹஹா.

மின்னலில் அழகிய ஊஞ்சலை அமைத்து
மேகத்தில் இரவுக்கு பஞ்சணை விரித்து

மின்னலில் அழகிய ஊஞ்சலை அமைத்து
மேகத்தில் இரவுக்கு பஞ்சணை விரித்து

வானத்து மீன்களில் மல்லிகை தெளித்து
மன்மத மந்திரம் மயங்கிடப் படித்து

பாடம் சொல்லக் கூடாதோ
பார்வை ஒன்று போதாதோ

ஆகாய கங்கை இன்று மண்ணில் வந்தது
ஆனந்தத் தீர்த்தம் என்னை ஆடச் சொன்னது

எண்ணிரண்டு ஆண்டுகள் எழுதிய பாட்டு
என்னை உன் இடையென்னும் சிறையினில் பூட்டு

மங்கள இசை தரும் வீணையை மீட்டு
மாந்தளிர் மேனியில் குங்குமம் தீட்டு

மாலைத் தென்றல் தீயாக
காணும் இன்பம் நீராக

உள்ளம் ரெண்டும் ஆடட்டும்
ஒன்றில் ஒன்று கூடட்டும்
ஆஹஹா.... அஹஹா ஆஹஹா... அஹஹா...ஆஹஹா....அஹஹஹாஹஹா

ஆகாய கங்கை இன்று மண்ணில் வந்தது
ஆனந்தத் தீர்த்தம் என்னை ஆடச் சொன்னது
உள்ளம் ரெண்டும் ஆடட்டும்
ஒன்றில் ஒன்று கூடட்டும்
ஆஹஹா.... அஹஹா ஆஹஹா... அஹஹா...ஆஹஹா....அஹஹஹாஹஹா...ம்ம்ஹுஹும்...

பாடலில் பாலா பாடிக்கொண்டிருக்க அவரோடு சேர்ந்து சுசீலா ஹம்மிங்கில் இணைந்து இழைய, பின் சுசீலா பாட, அவரோடு சேர்ந்து பாலா ஹம்மிங் தர நாம் அனுபவிப்பது கோடைக்கால தென்றலின் சுகம்.

கிருஷ்ணா சார்,

'சிம்லா ஸ்பெஷல்' படத்தில் 'மெல்லிசை மன்னர்' இசையில் ஒலிக்கும்

'Look Love Me Dear
Lovely Figure
lasting colour
வெண்மேகமே ஓடிவா
என் உள்ளத்திலே வெள்ளிப்பனி அள்ளித்தெளி
சங்கீதமே பாடி வா'

பாடலின் டியூனும், 'ஆகாய கங்கை இன்று மண்ணில் வந்தது' பாட்டின் ஆரம்ப இசையும்' அப்படியே ஒன்றாக இருக்கும்.


மேல்கொண்டு எழுதினால் வம்பு வளப்பதற்கென்றே ஒரு கேஸ் அலைந்து கொண்டிருக்கிறது. அதற்கு தீனி போட்டாற்போன்று ஆகிவிடும்.

பாடலை ஒருமுறை பார்த்து விடலாமா!


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=RORk83QZVp0

vasudevan31355
22nd June 2014, 01:04 PM
மதுரகானங்களை வானொலியில் ரசிக்கும் மக்களின் நடிகர். (ரேடியோதானே)

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/IMG_zps9063c9fe.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/IMG_zps9063c9fe.jpg.html)

mr_karthik
22nd June 2014, 03:09 PM
மன்மத லீலை (4)

'நாதமென்னும் கோயிலிலே ஞான விளக்கேற்றி வைத்தேன்'

இதே பாலச்சந்தரின் படத்தில் வந்த 'ஏழு ஸ்வரங்களைத்' தொடர்ந்து வாணி ஜெயராமின் அதே மாதிரியான இன்னொரு மாஸ்ட்டர்பீஸ். அப்போது வாணியம்மா வாயிலிருந்து சிந்தியதெல்லாம் அமுதமாகவே வந்து விழுந்தது.

படத்தில் சுனந்தினி நன்றாகப் பாடக்கூடிய பாடகி. ஆனால் பாராட்டுவோர், சீராட்டுவோர் இல்லாமல் தவிப்பவள். அதனால் யாராவது ஒருத்தர் தன் பாடலைக்கேட்டு கைதட்டினால்கூட அதை பெரிதாக மதிப்பவள். இயல்புதானே. மன திருப்திக்காக பதிவுகள் இட்டாலும் அதை நாலுபேர் பாராட்டும்போது மனம் மகிழ்கிறது அல்லவா. ('ரசிகன் இல்லாத அழகும் கலையும் பெருமை கொள்ளாதம்மா' - நன்றி வாலி, டி.எம்.எஸ்., எம்.ஜி.ஆர்).

இவ்வளவு அழகாக இனிமையாகப் பாடக்கூடிய பாடகியை பாராட்ட யாருமில்லைஎன்பது ஆச்சரியமே. வெறுமனே காச் மூச்சென்று கத்திய சில மேற்கத்திய பாடகர்களுக்கு உலகமெங்கும் ரசிகர்கள் இருந்தார்களாமே. ஆனால் நம் நாட்டில் உண்மையான திறமையாளர்களை எவன் மதித்தான்?. அதுதான் இந்தப்பெண்ணுக்கும்.

அதனால்தான் பாராட்டிய ஒரே ரசிகன் மீது இவளுக்கு அவ்வளவு ஈர்ப்பு. அவளை சந்தித்ததற்கு மனைவியிடம் மது சொல்லும் காரணம் "சும்மா அவள் பாட்டைக்கேக்கிறதுக்கு அவ வீட்டுக்குப் போவேன், அவ்வளவுதான்". "ஒருத்திக்கு பாடிக்காட்ட போவீங்க, இன்னொருத்திக்கு பாட்டைக்கேட்க போவீங்க, அப்படித்தானே?".

அவள் பாட ஆரம்பித்ததும் வீட்டின் பெரிய ஹாலில் படிப்படியாக கூட்டம் வந்து நிறைவதும், பின்னர் படிப்படியாக கூட்டம் குறைந்து ஹால் காலியாகி அவள் முகம் வாடுவதுமான கற்பனை கே.பி.போன்றவர்களால் மட்டுமே சிந்திக்க முடியும்.

நாதமென்னும் கோயிலிலே
ஞான விளகேற்றி வைத்தேன்
ஏற்றிவைத்த விளக்கினிலே
எண்ணெய்விட நீ கிடைத்தாய்

எனக்குக் கிடைத்த ஒரே ரசிகன் நீ உன்னை விடுவதாக இல்லை. அடி பேதைப்பெண்ணே, கிடைத்த அந்த ஒரு ரசிகன் எதை ரசிப்பவன் என்று தெரிந்தால் உன் மனம் என்னாகும். நீ பாடும்போது உன் குரலில், உன் வார்த்தைகளில் உள்ள வளைவு நெளிவுகளை ரசிப்பவன் அல்ல, உன் உடலில் உள்ள வளைவு நெளிவுகளை ரசிப்பவன்.

இசையும்...... எனக்கிசையும்....
உன் மனம்தான் அதில் அசையும்
கரமும் உந்தன் சிரமும்
நீ அசைத்தாய் நான் இசைத்தேன்

நாதமென்னும் கோயிலிலே

இணையே எனக்கிலையே இங்கு
வெறும் கதையானது கலையே
விலையே சொல்லி உனையே நான்
அணைத்தேன் உயிர் பிழைத்தேன்
(கிருஷ்ணாஜி, வரிகள் சரிதானா?. பாட்டை கேட்டு ரொம்பநாள் ஆச்சு)

இறைவன் என ஒருவன் என்
இசையில் மயங்கிட வருவான்
ரசிகன் என்ற பெயரில்
அவன்தான் உன்னைக்கொடுத்தான்

நாதமென்னும் கோயிலிலே....

பாடலை ஏற்கெனவே நண்பர் வினோத் காணொளி வடிவத்தில் தந்து விட்டார். காண்போம் களிப்போம்.

Murali Srinivas
22nd June 2014, 04:14 PM
கார்த்திக் & கிருஷ்ணாஜி இருவரும் சேர்ந்து மன்மத லீலையை கலக்கோ கலக்கு என்று கலக்கி விட்டார்கள். வாசு சொன்னது போல் இது போன்ற வகை படங்களென்றால் வரிந்து கட்டிக் கொண்டு வரும் கோபாலும் சேர்ந்து கொள்ள அதகளம். [ஆமாம், ஒரு சந்தேகம். மதுர கானங்கள் திரிக்கும் சிறந்த தமிழ் படங்களின் லிஸ்டிற்கும் என்ன சம்பந்தம்]? கண்ணனும் வாசுவும் வேறு சேர்ந்து ஒரு வழி பண்ணி விட்டார்கள்.

இங்கே பலரும் குறிப்பிட்டது போல் நானும் இந்த படத்தை பல தடவை ரசித்தவன். படம் வெளியானது 1976 பிப்ரவரி 27 வெள்ளிக்கிழமை. மறுநாள் சனிக்கிழமை பள்ளி விடுமுறை. காலைக்காட்சி 10.30 மணிக்கு. நண்பர்கள் யாராலும் கூட வரமுடியவில்லை நகரின் மையப் பகுதியில் இருந்த வீட்டிலிருந்து பஸ் பிடித்து கலெக்டர் ஆபிஸ் பஸ் ஸ்டாண்டிற்கு போய் இறங்கி சினிப்ரியா அரங்கிற்கு போய் சேர்ந்தபோது தியேட்டர் ஹவுஸ் புல் ஆகி விட்டது. எவ்வளவு முயற்சித்தும் டிக்கெட் கிடைக்காமல் அதே complex-ல் இருக்கும் மினிப்ரியா அரங்கில் அன்றுதான் வெளியாகியிருந்த Crazy Boys of the Games படத்திற்கு போய்விட்டு வீட்டிற்கு போனேன்

அன்று மாலை லட்சுமி சுந்தரம் ஹாலில் ஏ,வி. ரமணனின் Musiano குழுவினரின் மெல்லிசை கச்சேரி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிக்கு சென்றிருந்த நாங்கள் [எங்கள் உறவினர் ஒருவரும் வந்திருந்தார்] நிகழ்ச்சி முடிந்ததும் ரமணன் அவர்களை சந்தித்து பேசிக் கொண்டிருந்தோம். கூட வந்திருந்த உறவினர் கர்நாடக சங்கீதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அங்கயற்கண்ணி சங்கீத சபா என்ற அமைப்பில் முக்கிய பொறுப்பில் இருந்தவர். அந்த சபாவிற்கு வேண்டி ஒரு மெல்லிசை கச்சேரி நடத்தி தர முடியுமா என்று ரமணனை கேட்டுக் கொண்டிருந்தார். அந்த சபாவின் சார்பில் இரண்டு வாரங்களுக்கு பிறகு கமல் அவர்களை வைத்து ஒரு நிகழ்ச்சி மதுரையில் ஏற்பாடு செய்திருப்பதையும் ரமணனிடம் கூற அவர் நிகழ்ச்சி பெரும் வெற்றி பெறும். காரணம் மன்மத லீலை பெரிய ஹிட் ஆக மாறும் என்று கூறனார். நேற்றொரு மேனகை பாடலை மன்மத லீலை படத்தில் பாடிய அவர் [அன்றைய நிகழ்ச்சியிலும் பாடினார்] படத்தை பார்த்து விட்டதாகவும் மிக நன்றாக வந்திருப்பதாகவும் குறிப்பிட்டார். இது படம் பார்க்கும் ஆவலை மேலும் தூண்டி விட்டது.

மறுநாள் ஞாயிறு மதியக் காட்சிக்கு போய் அடித்து பிடித்து டிக்கெட் வாங்கியாகி விட்டது. படம் ரொம்பவே ரசிக்கும்படியாக அமைந்திருந்தது. படத்தை அதன் பிறகு 4,5 முறை பார்த்தேன். ஏற்கனவே சொன்ன மாதிரி மார்ச் 14 ஞாயிறு அன்று அந்த சபா சார்பில் தமுக்கம் மைதானத்தில் கமல் கலந்துக் கொண்ட நிகழ்ச்சி நடைப்பெற்றது. உறவினருடன் கமல் தங்கியிருந்த பாண்டியன் ஹோட்டலுக்கு சென்று அவரை சந்தித்தது புகைப்படம் எடுத்துக் கொண்டது [எங்கே போனது என்றே தெரியவில்லை] அவர் " கமல்ஹாசன் - அன்பை வணங்குபவன்" என்று எழுதி கையெழுத்திட்டு கொடுத்தது எல்லாம் பசுமரத்தாணியாய் நினைவில் நிற்கிறது. விழாவில் ஜெமினி அவர்களும் கலந்து கொள்ளவிருந்ததால் போதிய காவல்துறையின் பாதுகாப்பு இருக்கிறதா என்று கமல் கேட்டதும் நிழலாடுகிறது. அன்றைய நாட்களில் ஏறும் மேடைதோறும் controversial ஆக பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தார் ஜெமினி. எனினும் அந்த நிகழ்ச்சி எந்த பிரச்சனையுமின்றி நடந்தது. ராங் நம்பர் Y.விஜயாவும், சுனந்தினியும் வந்திருந்தார்கள். எனக்கு முன்வரிசையில் இரண்டு பேரையும் இரண்டு பக்கம் இருத்திக் கொண்டு நடுவில் அமர்ந்து கைகளினால் விளையாட்டு காட்டிக் கொண்டிருந்தார் காதல் மன்னன்.

இனி படத்திற்கு வருவோம். படத்தின் பலமே குறும்பான இளமை கொப்புளிக்கும் வசனங்கள். அனைவரும் பிரித்து மேய்ந்து விட்டனர். அவர்கள் விட்டு வைத்தவற்றில் சில

இந்த பொண்ணை எப்படி பழக்கம்?

தொழில்முறையில்தான்.

உங்க தொழிலா அவ தொழிலா?

ஒருத்திக்கிட்டே பாட்டு பாடணும் ஒருத்திக்கிட்டே பாட்டு கேட்கணுமா

எல்லாம் ஒரு obligation தான்

முருகா சரணம்னா முடிந்தால் வரவும்னு அர்த்தம்

ஏம்ப்பா அவர் ஆட்டோவிலே எங்கே உட்கார்ந்து வந்தார்?

நீங்க உட்கார்ந்திருக்க மாதிரியே வலது பக்கம் ஓரத்திலே

அவ எங்கே உட்கார்ந்திருந்தா

அதே வலது பக்க ஓரத்திலே

எப்படிப்பா ஒரே இடத்திலே இரண்டு --------

இது என்ன கார் சீட்டிலே மல்லிகைப்பூ?

அது அந்த பத்மாவதியைதான் கேட்கணும்

யார் அது பத்மாவதி?

Mrs. வெங்கடாசலபதி!

சிரிக்காதீங்க வயிறு எரியுது

வயிறு எப்படி எரியும்? கன்னம்தானே எரியணும்

கன்னம் -- அப்போ நீங்க வந்தீங்களா?

மஞ்சளிலே வரலே மறைவா வந்தேன்

கண்ணாடி வீட்டுக்குள்ளே இருந்து என்ன செய்ய கூடாது தெரியுமா

இது தெரியாதா? கல்லெறியக் கூடாது

அதுதான் இல்லை! லைட்ஐ போட்டுக்கிட்டு கிஸ் பண்ணக்கூடாது ஏன்னா எல்லோரும் பார்பாங்களே

இப்படி டெலிபோனில் பாடினால் எல்லாரும் கேட்பாங்களே

பேர் என்ன உஷாவா?

இல்லை பார்கவி

நான் fan -ஐ கேட்டேன்

ஜப்பான், முன்னாடி நீ வேலை பார்த்த இடத்திலே உன்னை ஏண்டா வேலையை விட்டு துரத்தினாங்க?

அதுவா. ஒரு நாள் முதலாளியை பார்க்க ஒருத்தர் வந்தாரு. நான் போய் ஒரு ஆள் வந்திருக்கிறார்னு சொன்னேன், அப்படி சொல்லக் கூடாது மரியாதையா கஸ்டமர் வந்திருக்கிறார்னு சொல்லணும்னு சொன்னாங்க. மறுநாள் அவங்க சொன்னததான் சொன்னேன். என்னை வேலையை விட்டு துரத்திட்டாங்க

ஏன் என்ன ஆச்சு?

ஒருத்தர் வந்தாரு. நான் முதலாளி அம்மாகிட்டே போய் உங்க கஸ்டமர் வந்திருக்கிறார்னு சொன்னேன். அவ்வளவுதான்.

ஏன்னா எப்ப பார்த்தாலும் என் தலையெழுத்து என் கஷ்டம்னு சொல்லிண்டேயிருக்கேளே, நம்மனு சொல்லக் கூடாதா?

சொல்றேண்டி சொல்றேன். போய் நம்ம வேஷ்டியையும் நம்ம அண்டர்வேரையையும் எடுத்துண்டு வா.

ஏங்க இந்த பையனுக்கு உருப்படியா ஏதாவது சொல்லிக் கொடுங்களேன்

சொல்லிக் கொடுத்துட்டாப் போச்சு.

(சொல்லி விட்டு ஆலம் குளிக்க போக திரும்பி வரும் போது)

A பார் அனுபமா
B பார் பாமா
C பார் சந்திரா
D பார் தமயந்தி
E பார் எலிசபத்
F பார் பாத்திமா

S பார் செக்ஸ்
S E X - SEX

உடனே ஸீன் freeze ஆக, கதை வசனம் direction K. பாலச்சந்தர்.

மீண்டும் சந்திக்கிறேன்.

அன்புடன்

mr_karthik
22nd June 2014, 04:40 PM
மன்மத லீலை வெளிவந்த ஆண்டும் அதற்கு அடுத்த ஆண்டும், நிறைய கல்லூரிகளில், கோர்ஸ் முடிந்து செல்லும் சீனியர் பேட்ச்களின் சோஷியல் பிரேக்-அப் பார்ட்டிகளில் இந்தப்படமே திரையிடப்பட்டது. அதற்குக் காரணம் இளசுகள் என்ஜாய் பண்ணி கலாட்டா செய்ய நிறைய கிளு கிளு காட்சிகள், நகைச்சுவை இணைப்போடு. கிளுகிளுப்பான சில இடங்கள்.......

புதிய செக்ரடரிப்பெண் (ரீனா) எதிர்சீட்டில் இருக்க, வேண்டுமென்றே பென்சிலை கீழே போட்டு அதை எடுப்பது போல, மேஜைக்கு கீழே அவளது வெறும் கால்களை ரசிப்பது.

அதே பெண் நின்றுகொண்டு நோட்ஸ் எடுக்கும்போது, அவளை பிரா, ஜட்டியுடன் கற்பனை செய்வது.

மனைவி ரேகா ஜாக்கெட் அணியும்போது 'அட்டாக்' என்று சொல்லி திகைக்க வைத்து, அவள் பிராவுடன் நிற்பதை ரசிப்பது, பின்னர் தலையணை அடிவாங்குவது.

டாக்டருடன் பேசிக்கொண்டே உள்ளே குனிந்து வேலை செய்துகொண்டிருக்கும் டாக்டரின் பெண் அசிஸ்டென்ட்டை ரசிப்பது, அவளை அருகில் வரவழைக்க திடீரென்று கத்துவது.

பாடகியின் திறந்த முதுகைப்பார்த்து, முன்பக்கம் திரும்பச்சொல்வது, அவள் சேலையுடன் திரும்புவதைப்பார்த்து வழிவது.

தன்னைக்கைவிட்டவன் பொறாமைப்படும்படி தன்னைக் கட்டிக்கொள்ளச்சொல்லும் ஜெயப்ரதாவை, அதுதான் சாக்கு என்று, 'பொறாமை பத்தலை' என்று மீண்டும் கட்டிக்கொள்வது.

மோட்டார் சைக்கிள் விபத்தில் அடிபட்டுக்கிடக்கும் ஜெயப்ரதாவையும், ராதாரவியையும் நெருங்கும்போது, ஒரு கம்பத்தில் மாட்டியிருக்கும் கிழிந்த சேலையைக்கூட தூக்கிப்பார்ப்பது, அதன்மூலம் அவர் கேரக்டருக்கு இயக்குனர் இன்னும் வலு சேர்ப்பது.

Gopal.s
22nd June 2014, 06:30 PM
முரளி,

மதங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட mischievous மன்மதன் உங்களையும் ஈர்த்து ஓடி வர வைத்து விட்டான்.

நம் படங்களையும் இசையையும் பிரிக்கவே முடியாது.அதுதான் சம்பந்தம்.ஏதோ போகிறதென்று விடுவீர்களா,நோண்டி கொண்டு. அது சரி ,ரசித்தீர்களா?

chinnakkannan
22nd June 2014, 06:30 PM
முரளி சார் கார்த்திக் சார் ம்ம் மன்மத லீலை அலசல்கள் ப்ரமாதம்..

ஆனால் இந்தப் படத்தை ரிலீஸான போது எல்லாரும் போட்டுத் தாக்கியிருந்ததாக நினைவு..(இன்னொரு படம் நினைத்தாலே இனிக்கும்) இஸிண்ட் இட்?

Gopal.s
22nd June 2014, 06:33 PM
கார்த்திக்,

தூங்க விடாமல் பண்ணியதற்கு,இந்தியா வரும் போது என்னை நேரில் பார்த்து ஒரு strip தூக்க மாத்திரைக்கான காசை கொடுத்து விடவும்.(தாமரை நெஞ்சம் அளவு வேண்டாம்) அப்படியாவது நேரில் தரிசிக்கலாமே. பம்மலார் புத்தக வெளியீட்டு விழாவில் நேரில் சந்திப்பதாக சொன்ன ஞாபகம். எப்போ கை கூடுமோ?

Gopal.s
22nd June 2014, 06:38 PM
எஸ்.வீ சார்,

தாங்கள் வருத்த பட்டதாக நண்பர்கள் சொன்னார்கள். நான் சொன்ன கருத்து சரியென்றாலும் சொன்ன விதம் தவறு என்று அவர்கள் எடுத்துரைத்ததால்,நான் சொன்ன விதத்துக்காக தங்களிடம் மன்னிப்பை கோருகிறேன். தாங்கள் நிலை மறந்து ஒருமையில் விளித்தது ஒரு மூத்த சகோதரனின் உரிமையாய் எடுத்து ,நினைத்து மகிழ்கிறேன்.வருத்தம் எனக்கு இல்லை.

mr_karthik
22nd June 2014, 07:01 PM
நாங்கள் எத்தனை பதிவுகள் இட்டாலும் எங்கள் முரளி சார் பதிவு இல்லாமல் எதுவும் நிறைவடையாது. அந்த வகையில் 'மன்மத லீலை' பார்த்த அனுபவங்கள் பற்றியும், அப்படத்தின் ஸ்பெஷல் டயலாக் மற்றும் காட்சிகள் பற்றியும் மிக அழகாக அருமையாக பதிவிட்டு 'முரளி முரளிதான்' என்பதை மீண்டும் நிரூபித்து விட்டீர்கள்.

என்ன ஒன்று, இப்படிப்பட்ட அரிய பதிவுகளைப் பெற தவம் கிடக்க வேண்டியுள்ளது. அத்தி பூத்தாற்போல வருகிறீர்கள். வேலைப்பளு காரணமென்று நினைக்கிறோம். இருப்பினும் எங்களுக்கும் நேரம் ஒதுக்குவது மகிழ்ச்சியளிக்கிறது. நன்றி...

mr_karthik
22nd June 2014, 07:28 PM
டியர் வாசு சார்,

மழைமேகம் படத்தின் பாடல் இதுவரை பார்த்திராதது. நன்றாக இருந்தது. காணக்கிடைக்காத அபூர்வம்.

'மாமா' இசைபற்றி நீங்கள் சொன்னது அனைத்தும் சரியே. சாரதா இந்த மாதிரி பாடல்களிலும் நடித்திருக்கிறாரா என்பதும் ஆச்சரியமே.

அடுத்த அபூர்வம் என்னவோ...

vasudevan31355
22nd June 2014, 07:28 PM
நாங்கள் எத்தனை பதிவுகள் இட்டாலும் எங்கள் முரளி சார் பதிவு இல்லாமல் எதுவும் நிறைவடையாது. அந்த வகையில் 'மன்மத லீலை' பார்த்த அனுபவங்கள் பற்றியும், அப்படத்தின் ஸ்பெஷல் டயலாக் மற்றும் காட்சிகள் பற்றியும் மிக அழகாக அருமையாக பதிவிட்டு 'முரளி முரளிதான்' என்பதை மீண்டும் நிரூபித்து விட்டீர்கள்.

என்ன ஒன்று, இப்படிப்பட்ட அரிய பதிவுகளைப் பெற தவம் கிடக்க வேண்டியுள்ளது. அத்தி பூத்தாற்போல வருகிறீர்கள். வேலைப்பளு காரணமென்று நினைக்கிறோம். இருப்பினும் எங்களுக்கும் நேரம் ஒதுக்குவது மகிழ்ச்சியளிக்கிறது. நன்றி...

நிதர்சனமான உண்மை. அப்படியே வழிமொழிகிறேன்.

mr_karthik
22nd June 2014, 07:37 PM
கார்த்திக்,

தூங்க விடாமல் பண்ணியதற்கு,இந்தியா வரும் போது என்னை நேரில் பார்த்து ஒரு strip தூக்க மாத்திரைக்கான காசை கொடுத்து விடவும்.(தாமரை நெஞ்சம் அளவு வேண்டாம்)

டியர் கோபால்,

நான் இந்தியாவில்தான் இருக்கிறேன். கர்நாடகா இன்னும் தனி நாடு ஆகவில்லை. ஓ... நீங்கள் இந்தியா வரும்போதா..? ஓக்கே... ஓக்கே...

vasudevan31355
22nd June 2014, 07:48 PM
அன்பு கார்த்திக் சார்,

பாலச்சந்தரின் 'மன்மத லீலை' நகாசு வேலைகள் அத்தனையையும் பிட்டு பிட்டு வைத்து விட்டீர்கள். கிரீடம் வைத்தாற்போன்று நம் முரளி சாரும் அமர்க்களப்படுத்தி விட்டார்.

ரிலாக்ஸ் என்பதன் அர்த்தம் நன்றாகவே புரிகிறது.

தங்களின்

('ரசிகன் இல்லாத அழகும் கலையும் பெருமை கொள்ளாதம்மா' - நன்றி வாலி, டி.எம்.எஸ்., எம்.ஜி.ஆர்).

வரிகள் தங்களது உயரிய பெருந்தன்மையை எடுத்துக் காட்டுகின்றன.

தங்களின் 'நாதமென்னும் கோயிலிலே ஞான விளக்கேற்றி வைத்தேன்' மிக மிக ரசித்துப் படித்தேன். அடிக்கடி என் வாயில் வந்து மாட்டி அவஸ்தைப்படும் பாடல். வாணியின் இன்னொரு மாஸ்டர் பீஸ். இது போல அதிகம் கண்டு கொள்ளப் படாதவற்றை நாம் அனைவரும் வெளிக்கொணர்வோம். நீங்கள் அடிக்கடி கூறுவது போல் வாணி கூட தான் அளிக்கும் பேட்டிகளில் இத்தகைய தான் பாடிய அபூர்வ பாடல்களை நினைவு கூர்வதில்லை. மல்லிகை மணம் ஒன்றிலேயே திருப்தி அடைந்து கொள்வார். (ஆனால் நாம் நினைவில் கொண்டு பகிர்ந்துண்டு சந்தோஷப்படுகிறோம்.)

வாணியின் ஏராளமான பாடல்களை தங்களுக்காகவே தேடித் பிடிக்கிறேன். வாணி சந்தோஷப்படுவாரோ என்னவோ தெரியாது நீங்கள் மகிழ்ச்சி கொள்வீர்கள் என்பது திண்ணம்.

தங்களது 'மன்மதலீலை' முடிவுறாமல் தொடரட்டும். லீலைகளில் மூழ்க 24 மணி நேரமும் நான் (நாங்கள்) ரெடி.

நன்றி!

Gopal.s
22nd June 2014, 07:52 PM
டியர் வாசு சார்,


'மாமா' இசைபற்றி நீங்கள் சொன்னது அனைத்தும் சரியே.
அப்போ நான் சொல்லியதெல்லாம்?

vasudevan31355
22nd June 2014, 07:53 PM
முரளி,

மதங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட mischievous மன்மதன் உங்களையும் ஈர்த்து ஓடி வர வைத்து விட்டான்.



எப்படி மனம் நிறைய, வாய் நிறைய, கை நிறைய சந்தோஷத்துடன் ஒருத்தர் குதூகலிக்கிறார் பார்.

vasudevan31355
22nd June 2014, 07:55 PM
அப்போ நான் சொல்லியதெல்லாம்?

ஆரம்பிக்கிறாருயா ஆரம்பிக்கிறாரு.

vasudevan31355
22nd June 2014, 08:06 PM
கார்த்திக் சார்,

ஒன்றிரண்டு வார்த்தைகளைத் தவிர நாதமென்னும் கோவிலிலே பாடலைச் சரியாகத்தான் எழுதி உள்ளீர்கள். இப்போது முழுப்பாடல் வரிகள் நம் எல்லோருக்காகவும். நான் என்னென்ன வார்த்தைகளை விட்டிருக்கிறேனோ! கிருஷ்ணாவே துணை

http://s2.dmcdn.net/E61if/526x297-5nv.jpg

நாதமென்னும் கோவிலிலே
ஞான விளக்கேற்றி வைத்தேன்
ஏற்றி வைத்த விளக்கினிலே
எண்ணெய் விட நீ கிடைத்தாய்..

நாதமென்னும் கோவிலிலே ..

இசையும் எனக்கிசையும் - தினம்
என் மனம் தான் அதில் அசையும்
கரமும் உந்தன் சிரமும் - நீ
அசைத்தாய் நான் இசைத்தேன்

நாதமென்னும் கோவிலிலே ..

விலையே எனக்கிலையே - தினம்
வெறும் கதையானது கலையே
நிலையே சொல்லி உனையே - நான்
அழைத்தேன் உயிர் பிழைத்தேன்

நாதமென்னும் கோவிலிலே ..

இறைவன் என ஒருவன்
எனதிசையில் மயங்கிட வருவான்
ரசிகன் என்ற பெயரில் - இன்று
அவன் தான் உன்னைக் கொடுத்தான்

நாதமென்னும் கோவிலிலே ..

vasudevan31355
22nd June 2014, 08:20 PM
கார்த்திக் சார்

'மழை மேகத்' தை ரசித்ததற்கு நன்றி!

பக்கங்கள் பறந்தாலும் பதிவர்கள் முன்னால் போட்ட பதிவுகளை மறக்காமல் படித்து நினைவு வைத்துக் கொண்டு அவர்களைப் பாராட்டி உற்சாகப்படுத்துவதில் தங்களுக்கு இணை யாரும் இல்லை. (நான் கூட சில சமயங்களில் மறந்து விடுவதுண்டு அல்லது சோம்பலில் மூழ்கி விடுவதுண்டு)

நன்றி! அபூர்வங்கள் தொடரும் தங்களைப் போன்ற அன்பு ரசிக நெஞ்சங்களுக்காகவே!

vasudevan31355
22nd June 2014, 08:29 PM
முரளி சார்,

தங்களின் இன்னொரு ரசனை பரிணாமத்தைப் பார்த்து மறுபடியும் வியந்து போய் நிற்கிறேன்.

'மன்மத லீலை' பற்றிய சுவையான தகவல்களை அம்சமாகத் தந்துள்ளீர்கள். 'மன்மத லீலை' பதிவுகள் முழுமையடைந்தது தங்களால். அதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

(வி!)ரசமான படம். ஷார்ப்பான வசனங்கள். இனிமையான இசை. இளமையான கமல். ஏராளமான கிளுகிளு நாயகிகள். பஞ்ச் காமெடி.

ரசனை மிக்க பதிவர்கள். பிரமாத பதிவுகள். கலகலப்பை கூட்டிவிட்டது லீலை.

RAGHAVENDRA
22nd June 2014, 10:52 PM
உழைக்கும் கரங்கள் திரைப்படத்திற்காக தான் எழுதிய கந்தனுக்கு மாலையிட்டாள் பாடலுக்கு மெல்லிசை மன்னர் போட்ட பல மெட்டுக்களில் ஒன்று தனக்கு மிகவும் பிடித்ததாகவும் அந்த மெட்டில் அந்தப் பாட்டு பதிவாக வேண்டும் என்று தான் மிகவும் விரும்பியதாகவும் இன்று நடைபெற்ற எம்எஸ்விடைம்ஸ் காம் விழாவில் கவிஞர் முத்துலிங்கம் கூறினார். இறுதியில் அந்த மெட்டில் வேறொரு பாடல் இடம் பெற்று தமிழ்த்திரையுலகின் மிகப் பிரபலமான பாடலாக அமைந்தது எனக் கூறினார்.

அந்த மெட்டு ....

நாதமெனும் கோவிலிலே

chinnakkannan
22nd June 2014, 10:54 PM
ஆகாய கங்கை இன்று மண்ணில் வந்தது..எப்போதோ கேட்ட் பாடல்.. நன்றி வாசு சார்..சாரதா முத்துராமன் காம்பினேஷன் அறியாத ஒன்று..

chinnakkannan
22nd June 2014, 10:56 PM
//இறுதியில் அந்த மெட்டில் வேறொரு பாடல் இடம் பெற்று தமிழ்த்திரையுலகின் மிகப் பிரபலமான பாடலாக அமைந்தது எனக் கூறினார்.

அந்த மெட்டு ....

நாதமெனும் கோவிலிலே // ராகவேந்தர் சார் இது நான் அறியாத ஒன்று..வாவ்..

கந்தனுக்கு மாலையிட்டாளும் நல்ல பாட்டு..

vasudevan31355
23rd June 2014, 08:47 AM
இன்றைய ஸ்பெஷல் (11)

இன்றும் ஒரு அபூர்வ பாடல்

'மெல்லிசை மாமணி' குமார் அவர்களின் இசையில் மனதை மயிலிறகால் வருடும் ஒரு கிராமத்துப் பின்னணி பாடல். இனிமை என்றால் அப்படி ஒரு இனிமை.

http://tamilthiraipaadal.com/files/1976/Janaki_Sabatham/Janaki%20Sabatham.jpg

'ஜானகி' சபதம் (1976) படத்தில். (ஆர்.சாந்தாவின் தயாரிப்பில் 'அவினாசி' மணி எழுதி இயக்கிய இத்திரைப்படத்தில் கே.ஆர்.விஜயா, நிர்மலா, மனோரமா நடித்திருந்தனர்)

பழுத்த அனுபவம் மிக்க டி.எம்.எஸ், சுசீலா இளசுகளுக்காக இணைந்து பாடிய இனிமையான ராகம் கொண்ட பாடல்.

மாஸ்டர் சேகரும், ரோஜாரமணியும் கிராமத்து காதலர்களாக வயல் வரப்புகளில் ஆடிப்பாடும் காதல் டூயட்.

பால்ய வயது சேகர் பருவ வயது சேகராக அடி எடுத்து வைத்த சமயத்தில் (இதே வருடத்தில்தான் ஸ்ரீதரின் 'ஓ..மஞ்சு' திரைப்படத்தில் 'மாஸ்டர்' சேகர் கதாநாயகனாக அறிமுகம் செய்யப்பட்டார் என்று நினைக்கிறேன். கவிதாவும் இதில்தான் அறிமுகம்) அதே போல குழந்தையாக இருந்த ரோஜாரமணி 'பருவகாலம்' எய்திய 'வயசுப்பொண்ணு' ஆன சமயத்தில் இருவரையும் ஜோடி சேர்த்து எடுத்த பாடல்.

ஜோடி பொருத்தமாக இருப்பது போலவும் தோன்றுகிறது. இல்லாதது மாதிரியும் தெரிகிறது. சேகரை சின்னப் பையனாகவே பார்த்து பழக்கப்பட்டு விட்டதால் இப்பாடலில் வாலிபனாக பார்க்க ஒத்துவரவில்லை.(கவரிமானில் பரவாயில்லை) ரோஜாரமணி வழக்கம் போல். சேகர் கொஞ்சம் துறுதுறு. ஹீரோயின் அமைதி காக்கிறார்.

சேகருக்கு டி.எம்.எஸ்.வாய்ஸ். பொருந்தவே இல்லை. (இந்தக் காலக் கட்டத்தில் 'இளைஞர்களுக்கு பாடலா.... கூப்பிடு பாலாவை' என்றுதானே சொல்வார்கள்!) குமாருக்கு என்ன ஆயிற்று? 'பாடகர் திலகம்' எவ்வளவோ இளமையாக பாட முயன்றும் சேகருக்கு எடுபடவில்லை. ஆனால் இனிமையாக பாடி சௌந்தரராஜன் ஈடுகட்டி விடுகிறார்.

சுசீலா ஒரே வார்த்தையில் சொன்னால் அற்புதம்.

ஒரு தடவை கேளுங்கள். 'பரவாயில்லை' என்று சொல்லுவீர்கள். இரண்டு முறை கேட்டால் 'அருமை' என்று சொல்வீர்கள். குமாரின் அருமையான மெட்டில் அப்படியே நம் நெஞ்சை அள்ளிக்கொண்டு போகிறது இப்பாடல்.

எப்போதுமே இப்பாடலை 'நெனச்சா இனிக்குது'.

உன்னை நெனச்சா இனிக்குது (புல்லாங்குழல் இசை மறக்க முடியாதது)
அள்ளி அணைச்சா மணக்குது
ரொம்ப சுகமா இருக்குது
கண்ணே என் ராஜாத்தி
உன்னை நெனச்சா இனிக்குது
அள்ளி அணைச்சா மணக்குது

உன்னை நெனச்சா இனிக்குது
அள்ளி அணைச்சா மணக்குது
ரொம்ப சுகமா இருக்குது
உன்னை நெனச்சா இனிக்குது
அள்ளி அணைச்சா மணக்குது
கண்ணே ராஜாவே

உன்னை நெனச்சா இனிக்குது
அள்ளி அணைச்சா மணக்குது

(வயலின் கலக்கல்)

முல்லைப்பூ மல்லிப்பூ
முத்துப்பூ பிச்சிப்பூ
முன்னாலே வந்தாடுது

உள்ளாடும் ரோஜாப்பூ
உள்ளூர உள்ளூர
சந்தோஷ நீராடுது

முல்லைப்பூ மல்லிப்பூ
முத்துப்பூ பிச்சிப்பூ
முன்னாலே வந்தாடுது

முள்ளாடும் ரோஜாப்பூ
உள்ளூர உள்ளூர
சந்தோஷ நீராடுது

சிவப்பானது மாம்பழக் கன்னம்
உனக்காகவே மின்னுது இன்னும்

சிவப்பானது மாம்பழக் கன்னம்
உனக்காகவே மின்னுது இன்னும்

கொஞ்சம் வா

கொஞ்ச வா

முன்னம் வா

பின்ன வா

வாடியம்மா இனியென்ன வெட்கம்

உன்னை நெனச்சா இனிக்குது
அள்ளி அணைச்சா மணக்குது

சந்தனம் குங்குமம் மங்களம் கங்கணம் ('கங்கணம்' சுசீலா உச்சரிப்பு டாப்)
எப்போது நான் பார்ப்பது

சம்சாரம் கொண்டாட
பஞ்சாங்கம் நான் பார்ப்பேன்
அப்போது நீ கேட்பது

இனி நான் உன்னைப் பிரிவதுமில்லை
பிரிந்தால் உயிர் வாழ்வதும் இல்லை

இனி நான் உன்னைப் பிரிவதுமில்லை
பிரிந்தால் உயிர் வாழ்வதும் இல்லை

கொட்டட்டும் மேளங்கள்
கொஞ்சட்டும் உள்ளங்கள்
மனசுக்குள் விழுந்தது மாலை

உன்னை நெனச்சா இனிக்குது
அள்ளி அணைச்சா மணக்குது
ரொம்ப சுகமா இருக்குது
கண்ணே என் ராஜாத்தி

உன்னை நெனச்சா இனிக்குது (அஹ்ஹா)
அள்ளி அணைச்சா மணக்குது]


https://www.youtube.com/watch?v=MotNmO0cs-0&feature=player_detailpage

(இந்தப் படத்தில் 'இளமைக் கோயில் ஒன்று... இரண்டே தீபங்கள்' என்ற காலத்தை வென்ற பாடல் உண்டு. அது பற்றி பின்னால் வ(த)ருகிறேன்)

gkrishna
23rd June 2014, 09:55 AM
வாசு சார்/முரளி சார்/கார்த்தி சார்/தமிழருவி ck சார்/கோபால் சார்/வேந்தர் சார்/வினோத் சார்
(பொதுக்கூட்டம் நினைவிற்கு வருகிறது )
சொந்த வேலையாக ஒரு நாள் ஊரில் இல்லை . ஜோலி முடித்து வந்தால்
இங்கே சொலியெ எல்லோரும் பெருககிட்டங்க
மன்மத லீலைக்கு இவ்வளுவு (தீபம் படத்தில் சுருளி மனோரமாவிடம் சொல்வது போல் ) போஸ்ட் . எல்லாம் செம கலக்கல்
பாருங்க நம்ம வேந்தர் சார் வந்து ஒரு லேட்டஸ்ட் அப்டேட் ராத்திரி மெகா டிவியில் பார்த்த msv ப்ரோக்ராம் பற்றி கொடுத்துட்டு போறார்

இந்த நேரத்தில் திரு கார்த்திக் அவர்களிடம் மன்மத லீலை போஸ்ட்க்கு நடுவில் பாலசந்தர் இன் அவர்கள் படத்தில் இருந்து "அங்கும் இங்கும் பாதை கண்டு " பாடல் பற்றி ஒரு போஸ்ட் போட்டுட்டேன் . திரு கார்த்திக் என்னை ஷமிக்கணும் (நடிகர் திலகத்தின் படத்திற்கு மற்றுஒரு NT படமே போட்டியாக வருவது போல் )

வாசு சார் உங்கள் மழை மேகம் 1977
எ.எஸ் பிரகாசம் டைரக்டர் .
சாரதா அம்மா சொந்த படம்
முத்துராம் ஒரு ஜோடி . வெள்ளை சாரதா
நம்ம ஸ்ரீகாந்த் ஜோடி கருப்பு சாரதா (அவங்கள் தான் மழை மேகம் )

ஆகாய கங்கை இன்று மண்ணில் வந்தது
(நீங்கள் சொன்ன மாதிரி கொஞ்சம் வாணி ராணி ஜாடையில்
"முல்லை பூ பல்லக்கு போவது எங்கே honey மூன் முன் போகும் பாதை எங்கே " பாடலை நினவு படுத்தும்
இந்த படத்தில் இன்னொரு பாடல் நினவு உண்டு
"ஜானகி " குரலில் உடன் சௌந்தரராஜன் என்று நிநேகிறேன்

"சொக்கு போடி போட்டனாம் மச்சான் மச்சான்
சொன்னபடி கேட்க தானே வைச்சான் வைச்சான் "

ஒரு மாதிரி ஜோதியில் வந்து கலந்துட்டேன்

இன்னும் ஜானகி சபதம் பற்றி எழுதணும்
நிறைய சோலி இருக்கே 24 மணி நேரம் காண மாட்டேங்குது

vasudevan31355
23rd June 2014, 10:09 AM
வணக்கம்.

வாருங்கள் கிருஷ்ணா சார். 'மன்மத லீலை' முடிந்ததா?:)

vasudevan31355
23rd June 2014, 10:17 AM
கிருஷ்ணா சார்

மழை மேகத்தில் இன்னொரு பாடல். 'ஒரு கோடி சுகம் வந்தது' ஜானகி ஏ.எல்.ராகவன் இணைவில்.

நன்றாகவே இருக்கும்.

நீங்கள் போட்ட

'சொக்கு பொடி'யில் மாட்டிகிட்டேன். கரெக்ட்.

vasudevan31355
23rd June 2014, 10:21 AM
வாசு சார் உங்கள் மழை மேகம் 1977
எ.எஸ் பிரகாசம் டைரக்டர் .
சாரதா அம்மா சொந்த படம்
முத்துராம் ஒரு ஜோடி . வெள்ளை சாரதா
நம்ம ஸ்ரீகாந்த் ஜோடி கருப்பு சாரதா (அவங்கள் தான் மழை மேகம் )

கிருஷ்ணா சார்

நிஜமாகவே புள்ளி விவரப்http://www.corbett-national-park.co.in/Corbett_Tiger_Images/tiger_animated.gifசார் நீங்கள். ரொம்ப சாக்கிரதையாய் இருக்கணும் உங்ககிட்டே.:)

gkrishna
23rd June 2014, 10:21 AM
மன்மத லீலை அதுக்குள்ளே முடிஞ்சுருமா
இன்னும் இருக்கே

மது வீட்டிற்கு அருகில் அருந்ததி (ஜெயா விஜய) வீடு மாறி குடி வருவது
ரேகா (ஹலம்) ஜப்பான் பையன்ஐ விட்டு டென்னிஸ் பால் போட்டு
அதுதானா என்று விசாரிக்க சொல்வது
ஜப்பான் பையன்
"என்ன அதுதானா .தெருவில் எல்லோரும் கசமுசானு பேசிக்கிறாங்க "
ரேகா "எல்லோரும் பேசிக்கிறாங்களா அப்ப சரிதான் "
"என்ன சரி தான். என்னன்னு தான் சொல்லுங்களேன் "
"அது எல்லாம் உனக்கு தெரியாது நீ சின்ன பையன் "
"விபச்சாரினா எனக்கு தெரியாதுனா நினசீங்க ஆமா விபச்சாரின என்ன அர்த்தம் "
"அட பாவி சரி சரி இதுக்கு மேலே நீ தெரிஞ்சுக்க வேணாம் "

அன்று காலை மாடியில் அருந்ததி exercise செய்வது கமல் அதை வேடிக்கை பார்ப்பது பார்த்து கையை ஆட்டுவது உடனே அருந்ததி
அத்தான் என்று அழைப்பது

அன்று இரவில் மது வீட்டு கொலுவிற்கு அருந்ததி வருவது

வந்து "புன்னகை மன்னன் பூவிழி கண்ணன்" பாடலை பாடுவது

அப்போது கமல் திடீர் என்று வருவது

வந்தவுடன் அருந்ததி "அத்தான் என்ன அத்தான்" என்று பாடுவது

தெரு பெண்கள் எல்லோரும் சிரிப்பது
உடனே அருந்ததி வசனம்
"நான் பாடியதை கேட்ட சிரிச்சாங்க
இந்த தெருவில் எல்லா ஆண்களும் எனக்கு பழக்கம் .
ஆனால் ஒருத்தரை தவிர என்கிட்டே இந்த கிண்டல் வேண்டாம் "

அதை கேட்டு ரேகா மாடியில் கமலிடம்
(அப்போது கமல் கையில் mad என்ற magazine இருக்கும் - பாலச்சந்தர் technique )
"இன்னைக்கு கொலுவிற்கு எதிர் வீடு பெண் வந்தாள் ரொம்ப அசிங்கம் "
"எ னக்கே அசிங்கமாயிருக்கே உனக்கு இருக்காத " ??
"வந்தவள் ஒரு விஷயம் சொன்ன சிவா சிவா "
"என்ன விஷயம் "
"இந்த தெருவில் எல்லா ஆண்களும் எனக்கு பழக்கம் .
ஆனால் ஒருத்தரை தவிர சிவா சிவா "
"சிவா சிவா " இது கமல்
"அந்த ஒருத்தர் யாராயிருக்கும் சிவா சிவா அதை தெரிஞ்சுகலனே
எனக்கு மண்டையே வெடிச்சுரும் போல இருக்கே " - ரேகா
"எனக்கே மண்டை வெடிச்சுரும் போல இருக்கே உனக்கு இருக்காதா" -கமல்
"ஆ ஆ அந்த எதிர் வீடு கிருஷ்ணமுர்த்தி யாதான் இருக்கும் சுத்த கஞ்சன் கஞ்சன் " கமல்

ரேகா விஸ்வரூபம் எடுப்பது

கமல் "தப்பு தப்பா சொல்றேன் நான் தான் அந்த கஞ்சன் "

அப்ப மெல்லிசை மன்னரின் BGM chorus ஹம்மிங் அண்ட் தபேல

gkrishna
23rd June 2014, 10:23 AM
vasu sir
"ஒரு கோடி சுகம் " அந்த பாட்டு first நைட் பாட்டு என்று நினவு
கரெக்ட் ஆ சார்

gkrishna
23rd June 2014, 10:26 AM
சாரி வாசு சார்
மதுர கானங்கள்
திரியை மறுந்து விட்டேன்

gkrishna
23rd June 2014, 10:37 AM
வாசு சார்
இந்த ஜானகி சபதம் பாடலும் சிலோன் ரேடியோ ஹிட் சார்

இதே மாஸ்டர் சேகர் கவிதா ஜோடி னு நிநேகிறேன்
வித்யா மொவீஸ் பேரும் புகழும் முக்த ஸ்ரீனிவாசன் டைரக்டர்
1976 ரிலீஸ்

"அவளே என் காதலி " பாலா வித் வாணி குரல்கள்
மன்னரின் flute இசையுடன் தபேல இணைந்து இசைக்கும்

இதே படத்தில் ஜேசுதாஸ் சோலோ ஒன்னு உண்டு சார்
"தானே தனக்குள் ரசிகின்றாள்
தலை முழுகாமல் இருகின்றாள் "
முத்துராமன் சுஜாதா ஜோடி
இரண்டுமே சிலோன் ரேடியோ ஹிட் சார்

vasudevan31355
23rd June 2014, 10:38 AM
vasu sir
"ஒரு கோடி சுகம் " அந்த பாட்டு first நைட் பாட்டு என்று நினவு
கரெக்ட் ஆ சார்

சாரி சார். நானும் படம் பாக்கல. ஆனா காது வழியா கேட்டா :)அப்படித்தான் தெரியுது

vasudevan31355
23rd June 2014, 10:43 AM
கிருஷ்ணா சார்!

எண்ணப் பொருத்தம் என்னே பொருத்தம்!

நேற்று நைட் தான் இந்தப் பாடல் ஞாபகம் வராமல் யோசிச்சு யோசிச்சு மண்டை காய்ந்தேன்.

எனக்கு 'அவளே என் காதலி' பாட்டு ஞாபகம் வர்றதற்கு முன்னாலேயே அதே மாதிரி இருக்கும் 'பூங்கொடியே பூங்கொடியே பூவிருந்தால் தருவாயோ' ஞாபகத்திற்கு வந்திடும். அதான் குழப்பமே! தேங்க் யூ சார்.

சூப்பர் சார். இன்று இரவு நிம்மதியாகத் தூங்குவேன் (ஷிப்ட்டில்)

vasudevan31355
23rd June 2014, 10:46 AM
இன்னைக்கு என்ன 'மாஸ்டர்' சேகர் தினமா?

தெரிஞ்சோ தெரியாமலோ இந்தப் பையன் பாட்டா வருதே!


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=-_BsBGsQchk

vasudevan31355
23rd June 2014, 10:52 AM
கிருஷ்ணா சார்,

பாட்டுல நம்ம தொலைகாட்சி அம்மாவைப் பார்த்தீங்களா? ஆமாம்! கேக்கணும்னு நினைச்சேன்.

அந்த

'மஞ்சள் முகமே வருக'

பார்த்திருக்கீங்களா? தப்பா நினைக்காதீங்க சார். என்னென்ன பாட்டுன்னு பிட்டு பிட்டு வைப்பீங்களே! அதுக்காக கேட்டேன் சார். :)

gkrishna
23rd June 2014, 10:53 AM
உங்களுக்கு எப்படி சார் தூக்கம் வரும்
வித்தை உள்ளவனுக்கும் விசாரம் உள்ளவனுக்கும் (கௌவரம்)
நீங்கள் வித்தை உள்ளவர் சார்


ஒ மஞ்சு படத்தை பற்றி சொல்லி இருந்தீர்கள்
1976 இல் வெளிவந்த ஸ்ரீதர் படம் சார்
அடோலேச்சென்ட் வயதில் மாஸ்டர் சேகர் மற்றும் கவிதா (இதில் கவிதா பணக்கார விட்டு பெண் ) இருவரும் சென்னையில் இருந்து வீட்டுக்கு தெரியாமல் ரயில் ஏறி திருநெல்வேலி தென்காசி குற்றலாம் என்று எல்லாம் சென்று விட்டு இறுதியில் பிரிவது போல் கதை வரும்
ஜேசுதாஸ் பாடல் ஒன்று நினைவிற்கு வருகிறது
"உலகம் ஒரு கவிதை " மாஸ்டர் சேகர் போதையில் பாடுவது போல் வரும்
வாணியின் "சபலம் சலனம் மயக்கம் " போதை குரலில் வரும் பாடல்

மியூசிக் மன்னர் தானா சார்

gkrishna
23rd June 2014, 10:54 AM
தலை
இப்பதான் நினைச்சேன் (மஞ்சள் முகமே வருக )
ராம நாராயணன் காஜா (ராம் ரஹீம்) இருவரும் சேர்ந்து கதை எழுதிய படம் சார்

vasudevan31355
23rd June 2014, 10:55 AM
கிருஷ்ணா சார்,

'பேரும் புகழும்' படத்தில் இன்னொரு பாட்டு.

'நல்ல பேரோடு புகழ் பெற்ற பெண்மை'

பாலாவும், சுசீலாவும் பின்னுவார்களே!

gkrishna
23rd June 2014, 10:55 AM
10 நிமஷம் சார்
சின்ன வேலையை முடிச்சுட்டு வந்துடறேன் ப்ளீஸ்

vasudevan31355
23rd June 2014, 10:59 AM
மியூசிக் மன்னர் தானா சார்

மன்னரே தான் சார்.

வாணியின் "சபலம் சலனம் மயக்கம்" பாடலில் பைத்தியம் சார் எனக்கு.

என்னைவிட ராகவேந்திரன் சாருக்கு.

vasudevan31355
23rd June 2014, 10:59 AM
10 நிமஷம் சார்
சின்ன வேலையை முடிச்சுட்டு வந்துடறேன் ப்ளீஸ்

தாரளமாக சார். பொறுமையாய் வாருகள். அவசரம் வேண்டாம்.

gkrishna
23rd June 2014, 11:05 AM
பேரும் புகழும் கரெக்ட் சார்

மஞ்சள் முகமே வருக படம் கொஞ்சம் விரசம் கலந்த படம் என்று நினவு
சத்ய பிரியாவை கொஞ்சம் உரிசுருப்பங்க
பாட்டு நினைவுக்கு வரலே

அந்த ய.விஜய ஒரு பாட்டு ஒன்னு கிடார் எல்லாம் வைச்சுக்கிட்டு
வாணி குரலில்
"அண்ட காக்கை பறக்குதடி ஷோக்க
ஒன்னும் தெரியதா பாப்பா அவ கண்ணாலே போட்டாளம் தாப்பா "
என்று வரும் அந்த படம் என்ன படம் சார்

vasudevan31355
23rd June 2014, 11:11 AM
கண்ணகி, மாதவி, பார்கவி, அருந்ததி என்று அய்யர் படுக்கையில் புலம்ப,

அவர் தர்மபத்தினி

'ஏன்னா! பகவான் நாமமாவே சொல்லிண்டு இருக்கேளே!'

என்பார். ரகளை.

gkrishna
23rd June 2014, 11:16 AM
ஆசை 60 நாள்
விஜயகுமார் ஸ்ரீவித்யா
துரை direction
அந்த படத்தில் தானே இந்த பாடல்
"அண்ட காக்கை பறக்குதடி ஷோக்க
ஒன்னும் தெரியதா பாப்பா அவ கண்ணாலே போட்டாளம் தாப்பா "

vasudevan31355
23rd June 2014, 11:23 AM
'மஞ்சள் முகமே வருக' படம் கொஞ்சம் இல்ல சார்.... அதுக்கு மேலேயே சொல்லலாம்.

விஷயம் தெரியாம பக்கத்து வீட்டுக்காரம்மா எங்க வீட்டில சொல்லிட்டு என்னை கூப்பிட்டுட்டு போயிட்டாங்க. பக்குன்னு பத்திக்குற வயசு வேற. ஒன்னும் புரியல. மஞ்சள்ன்னு டைட்டில் இருக்கவே மகாலஷ்மி படம் வரும்னு நினைச்சுட்டாங்க போல் இருக்கு.:)

உள்ளே போய் பார்த்தா மஞ்சள் இல்ல. நீலம். அதுவும் ரொம்ப நீளம். பக்கத்து வீட்டுக்காரம்மா இப்படி திரும்பு இப்படி திரும்பு என்று ஆப்பரேடர் ரூம் பக்கம் என் கழுத்தைப் பிடித்துத் திருப்பியது நன்றாக நினைவிருக்கிறது. (பாவம்! அவுங்களும் எத்தனை முறைதான் கழுத்தைப் பிடித்து திருப்புவாங்க!) :)அதைவிட சத்யப்ரியா மிக நன்றாக நினைவிருக்கிறது.

mr_karthik
23rd June 2014, 11:33 AM
டியர் கிருஷ்ணாஜி,

'அவர்கள்' படத்தில் இடம்பெற்ற 'அங்கும் இங்கும் பாதை உண்டு' பாடல் பற்றிய பதிவும், அதற்க்கான சிச்சுவேஷன் விளக்கமும் நன்றாக இருந்தன. (மன்மத லீலைக்கிடையே பதித்ததற்காக வருத்தம் ஏன்?. எல்லாப்பாடல்களையும் அலசுவதர்க்க்காகத்தானே இந்த திரி?).

இப்பாடல் பற்றி ஒரு விசேஷம் உண்டு. பலர் பலமுறை சொன்னதுதான். நானும்கூட ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். கண்ணதாசன் பிறந்த நாள் விழாவில், மேடையிலேயே பாலச்சந்தர் சிச்சுவேஷன் சொல்லி, மேடையிலேயே கவிஞர் பாடல் இயற்றி, மேடையிலேயே மெல்லிசை மன்னர் மெட்டமைத்து, மேடையிலேயே எஸ்.பி.பி. பாடி அசத்திய பாடல் இது. பாடல் மிகச்சிறப்பாக அமைந்ததால், பாராட்டுவதற்கு பதிலாக 'இவர்கள் முன்கூட்டியே எல்லாம் ரெடி பண்ணிக்கொண்டு வந்துவிட்டு இப்போதுதான் புதிதாக செய்வதுபோல நடிக்கிறார்கள்' என்று பலர் சொன்னார்களாம்.

இப்படத்தின் மேலும் இரண்டு அருமையான பாடல்களான

'இப்படியோர் தாலாட்டு பாடவா, அதில்
அப்படியே என் கதையை கூறவா'

பாடலையும்

'ஜூனியர்... ஜூனியர்....
இருமனம் கொஞ்சும் திருமண வாழ்வில்
இடையினில் நீ ஏன் மயங்குகிறாய்'

பாடலையும் அலசுவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்...

gkrishna
23rd June 2014, 11:36 AM
நிச்சயம் கார்த்திக் சார்

gkrishna
23rd June 2014, 11:40 AM
1977 இல் முத்துராமன் ஜெயசித்ரா,அபர்ண நடித்து
s p முத்துராமன் டைரக்டர்
ஆளுக்கொரு ஆசை
கொஞ்சம் காமெடி கலந்த படம் ஈஸ்ட்மேன் கலர்
ஓரளவ ஓடிச்சுன்னு நினவு
இளையராஜா மியூசிக்
budget பத்மனபான் போல் வரும்

கொஞ்சம் ஜெயசித்ரா குண்டு ஜெயசித்ரவ மாறி கொண்டு இருந்த நேரம்

ஜேசுதாஸ் சுசீலா பேஸ் வாய்ஸ் சாங்
இளையராஜாவின் கிடார் கொஞ்சும்

இதய மழையில் நனைந்த கிளிகள்
புதிய நதியில் குளித்து குளித்து எழ வேண்டும்
உதயம் வரையில் அதிக கதைகள் உறவினில் பெற வேண்டும்

காதல் வரச்சொல்ல கால்கள் தடை சொல்ல
மௌனம் பிறக்கிறது
காவலோ வேலியோ யாரைத் தடுக்கிறது
ஏதோ புரியுது ஏதோ தெரியுது இன்பம் எழுகிறது
ஏக்கமோ தூக்கமோ கண்கள் தவிக்கிறது
மலர்ந்த நேரமே மயங்கத் தோன்றுமா
உணர்ந்த பின்னரே உறங்கத் தோன்றுமா

இதய மழையில் நனைந்த கிளிகள்
புதிய நதியில் குளித்து குளித்து எழ வேண்டும்
உதயம் வரையில் அதிக கதைகள் உறவினில் பெற வேண்டும்

மாறன் அரண்மணை மாடம் இரண்டிலும் தீபம் எரிவதென்ன
மாலையோ காலையோ மயக்கம் வருவதென்ன
வாசல் பளிங்குகள் ஆசை வெளிச்சத்தில் கோலம் இடுவதென்ன
வாடையோ தென்றலோ வசந்தம் தருவதென்ன
கனிந்த உள்ளமே இணைந்து கொண்டது
இருந்த நாணமே மறைந்து நின்றது

2. வாணி ஏக்க குரலில் ஒரு பாடல்
அபர்ணாவுக்கு
அந்த பாட்டை கேட்டு முத்துராமன் ஜெயசித்ராவுக்கு மூடு கிளம்பற மாதிரி

"மஞ்சள் அரைக்கும் போது மதில் ஏறி பார்த்த மச்சான்
பக்கத்தில் வந்தால் என்ன சொந்தம் காண
பல நாளா தூக்கம் இல்ல ஏக்கம் தீராதோ

உதடெல்லாம் செக்க செவக்க
வெத்தலைய போட்டுக்கொண்டேன்
வாங்கத்தான் ஆளைக்காணோமே
தங்கம் போல் மேனி எங்கும்
ஜவ்வாது பூசி வெச்சேன்
தழுவத்தான் நேரம் வரலியே

ஆளுக்கொரு ஆசை வெச்சு
அவரவர பிரிசும்வேச்சு
ஏக்கத்தை பங்கு வெச்சானே
தேகத்தில் வேகம் வெச்சு
வேகத்தில் போதை வெச்சு
விளையாடும் ஆள காணேனே

3.சௌந்தராஜன் குரலில் அசரீரி பாடல்
"கணக்கு பார்த்து காதல் வந்தது
கட்சிதமா ஜோடி சேர்ந்தது
ஒன்னும் ஒன்னும் ரண்டு "

இந்த படத்தில் ஒரு காமெடி நினவு உண்டு சார்
முத்துராமன் லீவு போட்டு ஜெயசித்ரவை ஆபீச்ல வந்து அவங்களையும் லீவ் போட்டு ஒரு மஜா பண்ணனும் நினைச்சு ஆனால் அவங்க 3 நாள் விலகு விலகு

vasudevan31355
23rd June 2014, 11:41 AM
ஆசை 60 நாள்
விஜயகுமார் ஸ்ரீவித்யா
துரை direction
அந்த படத்தில் தானே இந்த பாடல்
"அண்ட காக்கை பறக்குதடி ஷோக்க
ஒன்னும் தெரியதா பாப்பா அவ கண்ணாலே போட்டாளம் தாப்பா "

சார் எனக்கும் ஞாபகம் இருக்கு. நினைவுக்கு வரல்ல. யோசிப்போம்.

vasudevan31355
23rd June 2014, 11:47 AM
உங்களுக்கு எப்படி சார் தூக்கம் வரும்
வித்தை உள்ளவனுக்கும் விசாரம் உள்ளவனுக்கும் (கௌவரம்)
நீங்கள் வித்தை உள்ளவர் சார்



சார்!

நெம்ப ஓவர் சார்! ரஜினிகாந்துக்கு தெரிஞ்ச சட்டத்துல இதுக்கு என்ன தண்டனைன்னு தெரியல சார்.

vasudevan31355
23rd June 2014, 11:53 AM
இலக்கியக் காதலுக்கு
இங்கே வேலை இல்லை
எல்லாமே காவியம் இல்லை
கற்பனை உலகத்திலே
ஆசைகளும் இல்லை
கனவுக்கு வேலையும் இல்லை

நடுத்தர குடும்பத்துக்கு
பட்ஜெட் காலி இல்லை
வரவுக்கு மேல் செலவு வந்தால்
எந்நாளும் தொல்லை

சூப்பரா இருக்கும் சார். இல்லாமையின் இயலாமை நன்றகப் புரியும் சார்.

vasudevan31355
23rd June 2014, 11:56 AM
கிருஷ்ணா சார்!

ஜானகியின் 'வாழ்வென்னும் சொர்க்கத்தில்'?

gkrishna
23rd June 2014, 11:59 AM
கிரேட் வாசு சார் பாட்டை நிறைவு செய்ததற்கு
இந்த படத்தில் தேங்காய் கொஞ்சம் கலக்கி இருப்பார்

vasudevan31355
23rd June 2014, 12:00 PM
இதய மழையில் நனையும் கிளிகளின் பாடல். வீடியோ இல்லை பாட்டையாவது கேட்போம்.


http://www.youtube.com/watch?v=Cw1VA2S2TXQ&feature=player_detailpage

gkrishna
23rd June 2014, 12:01 PM
சார் சார் சார்
எழுத வந்தேன்
முடியல

gkrishna
23rd June 2014, 12:07 PM
http://www.dailymotion.com/video/xmwi0z_idhaya-mazhaiyil_creation

இந்த லின்க்லே விடியோ இருக்கு சார்
ப்ளீஸ் ட்ரை

vasudevan31355
23rd June 2014, 12:10 PM
vaaaav....super sir. kalakkitteenga. dailymotion பார்க்கணும் போலிருக்கு.:)

mr_karthik
23rd June 2014, 12:14 PM
டியர் வாசு சார்,

'ஜானகி சபதம்' படத்தில் சேகர் - ரோஜாரமணி பாடல் அலசல் நன்றாக இருந்தது. இரண்டும் அப்போதுதான் பருவத்தைத் தொட்ட வயது. அதனால் பள்ளிப்பிள்ளைகள் காதலிப்பது போலிருந்தது. நல்லதொரு குடும்பம் வந்தபோது பையன் கொஞ்சம் தேறிவிட்டான், தோற்றத்தில். நடிப்பில் எப்போதும் தேர்ச்சிதான். (படத்தில் ரவிச்சந்திரன் பெயரைக் குறிப்பிடாததற்கு உங்களுக்கு இருக்கிறது பாட்டு). தலைவரின் எங்க மாமா குழந்தைகள் கூட்டத்தில் இவ்விருவரும் இருப்பார்கள். 'சேகர் தினம்' இன்று தொடங்கவில்லை. நாம் தங்கதுரை, மணிப்பயல் பற்றிப் பேசிய அன்றே தொடங்கிவிட்டது.

மாணவன் படத்தில் இளம் கமலுக்காக டி.எம்.எஸ். 'விசிலடிச்சான் குஞ்சுகளா குஞ்சுகளா' பாடியபோதே உறுத்தியது. (இந்த மெட்டுதான் கானா உலகநாதனின் மஞ்சள் சட்டை, கருப்புக்கண்ணாடி பாடலுக்கு மூலம்)

நல்ல பாடல், நல்ல காட்சியமைப்பு. ஆய்வுக்கு நன்றி.

vasudevan31355
23rd June 2014, 12:41 PM
கார்த்திக் சார்!

உங்களுக்கு ஒன்னு தெரியுமோ! ரவிச்சந்திரன் பெயரை டைப் செய்துவிட்டு பின்னர் வேண்டுமென்றே டெலிட் செய்து விட்டேன் பார்ட்டி கண்டுபிடிக்கட்டுமே என்று. அதற்குள் நீங்கள் முந்திக் கொண்டு விட்டீர்கள். (ரவிச்சந்திரன் படத்தில் இருக்கிறாரா இல்லையா என்ற டவுட்டில் எடுத்ததற்கும் இதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று யுவர் ஆனர் உங்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன்) தப்ப முடியாதுடா சாமியோவ்.