PDA

View Full Version : மனதை மயக்கும் மதுர கானங்கள்



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 [11] 12 13 14 15 16

vasudevan31355
27th July 2014, 09:56 AM
ராஜேஷ் சார்/கிருஷ்ணா சார்/ராகவேதிரன் சார்/மது சார்/

'நினைத்ததை முடிப்பவன்' படத்தில் முற்றிலுமாக மறக்கடிக்கப் பட்ட பாட்டு. ஆனால் எனக்கு இந்தப் பாடல்தான் அந்தப் படத்தில் முதல் இடம்.

அடடா! இசையரசி நடத்தும் தனி ராஜாங்கம். அந்தக் குரலும், துடிதுடிப்பும், சுறுசுறுப்பும், வார்த்தை உச்சரிப்புகளும், தெளிவும்,

உலகின் முழுமையான ஒரே பாடகி.

'நீ தொட்டுப் பேசினால் தங்கமாகுவேன்
உந்தன் துணைவியாக்கினால் மாலையாகுவேன்
கொட்டிக் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுவேன்
கொட்டிக் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுவேன்
என்னை கொள்ளையடித்தால் என்ன சொல்லுவேன்
கொள்ளையடித்தால் என்ன சொல்லுவேன்'

'மெல்லிசை மன்னர்' இசை சாம்ராஜ்யம் நடத்துகிறார். ஆரம்ப மியூசிக் அமர்க்களம். படம் முழுதும் பல்வேறு இசைக்கருவிகளை வைத்து மனிதர் புகுந்து விளையாடுகிறார். இவருக்கா ஒன்றும் தெரியாது?!

எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது சார்.

இந்தப் பாடல் படத்தில் இல்லை என்று நினைக்கிறேன்.


http://www.youtube.com/watch?v=HTUcB7eKkL0&feature=player_detailpage

Richardsof
27th July 2014, 10:15 AM
மிக அருமையான நினைவூட்டல்

நன்றி வாசு சார் .

படத்தில் இடம் பெறாத பாடல் .

1972 துவக்கத்தில் விற்பனைக்கு வந்த எச் .எம் .வி இசைதட்டில் single play முதல் பாடல்
கண்ணை நம்பாதே .அடுத்த பாடல் நீ தொட்டு பேசினால் என்ற பாடலும் இடம் பெற்று இருந்தது .

அதே போல் உலகம் சுற்றும் வாலிபன் பட இசைதட்டில் இடம் பெற்ற பாடல் .

சுசீலா வின் குரலில் ''நினைக்கும் போது தனக்குள் சிரிக்கும் மாது '' -இனிமையான பாடல் .

இந்த இரண்டு பாடல்களும் படத்தில் இடம் பெறாதது ஒரு குறையே .

இருந்தாலும் அந்த பாடலை நினைவு படுத்திய உங்களுக்கு மீண்டும் நன்றி

vasudevan31355
27th July 2014, 10:54 AM
நன்றி வினோத் சார்.

நீங்கள் கூறியது உண்மை. 'நினைத்ததை முடிப்பவன்' ஓடியன் இசைத்தட்டில் கூட 'ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து' பாடலுக்குக் கீழே 'நீ தொட்டுப் பேசினால்' பாடல் விவரம் அளிக்கப்பட்டுள்ளது. எம்ஜிஆர் அவர்கள் திரியிலேயே இது பதிவிடப் பட்டுள்ளது. இப்போது நம் திரி நண்பர்கள் பார்வைக்கு.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Ninaithathai%20Mudipavan/1384503772_566474686_10-Gramophone-Record-of-Superhit-Tamil-songs-_zps999e110d.jpg

RAGHAVENDRA
27th July 2014, 11:50 AM
பொங்கும் பூம்புனல்

http://s.ecrater.com/stores/47612/485fa37b26a78_47612n.jpg

http://s.ecrater.com/stores/47612/485fa39fd0927_47612n.jpg

இன்றைக்கு நாம் கேட்க இருப்பது 1980ல் வெளி வந்த கீதா ஒரு செண்பகப் பூ திரைப்படத்திலிருந்து நெஞ்சை அள்ளிக் கொண்டு போகும் பாடல், கங்கைக் கரையில் விளைந்த கவிதை.

நம்ம கோபால் சார் சொல்லும் விதத்தில் வேண்டுமானால் கடுமை இருக்கலாம். ஆனால் சில விஷயங்களில் அவருடைய கருத்து சரியாக இருக்கும் அதற்கு இந்த பாடல் ஒரு உதாரணம். ஏனோ தெரியவில்லை, தமிழைக் கொலை செய்பவர்களை மெல்லிசை மன்னர் தொடர்ந்து தன் படங்களில் பயன் படுத்தியது ஜீரணிக்க முடியாத விஷயம். அதற்கு உதாரணம் இந்த பாடல். அருமையான பாடலில் வாணி ஜெயராம் அமர்க்களப் படுத்தி யிருப்பார். ஆனால் ஆண் குரல்.... மொழி உச்சரிப்பு .... நீங்களே கேட்டுப் பாருங்கள்... ஜாலி ஆபிரகாம் நல்ல பாடகர் தான்.. ஆனால் அவரை இன்னும் கொஞ்சம் உச்சரிப்பில் கவனம் செலுத்திப் பாட வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால் இந்தப் பாட்டு.... ஆஹா.. மெல்லிசை மன்னரின் மிகச் சிறந்த படைப்புகளில் இதுவும் ஒன்று.

கங்கைக் கரையில் விளைந்த கவிதை (http://www.inbaminge.com/t/g/Geetha%20Oru%20Senbagappoo/)

RAGHAVENDRA
27th July 2014, 12:01 PM
http://www.youtube.com/watch?v=dTwWw0IC6xE

முகம் தெரியாதவரோடு ஒரு கட்டத்தில் அறிமுகம் ஏற்படுகிறது. காலப்போக்கில் அது நட்பாக மாறி இறுதி வரை தொடர்கிறது. அந்த நட்பு தெய்வீகமாக உருவெடுக்கும் போது விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும் தியாக உள்ளமும் தானாகவே ஏற்பட்டு விடுகிறது. எந்தத் தடையும் அந்த நட்பை எதுவும் செய்து விடமுடியாது. தூக்குத்தூக்கி திரைப்படத்தில் இடம் பெற்ற வசனங்களில் கடைசியாக இடம் பெற்ற நீதி, உயிர்காப்பான் தோழன். அதையெல்லாம் எடுத்துச் சொல்லும் இந்தப் பாட்டு நம் ஒவ்வொருவருக்கும் பிடித்த பாடல் என்பதில் ஐயமில்லை. இந்தப் பாடலின் வரிகள் ஒவ்வொன்றும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப் பட வேண்டியவை. அந்த வரிகளுக்கு உயிர் கொடுத்திருப்பது கங்கை அமரனின் இசையும் எஸ்.பி.பாலா மலேசியா வாசுதேவன் குரல்களும்.

நெல்லிக்கனி திரைப்படத்தில் இடம் பெற்ற இப்பாடல் நமக்காக.

காணொளியைத் தரவேற்றிய நண்பருக்கு நமது உளமார்ந்த நன்றி.

vasudevan31355
27th July 2014, 12:29 PM
'தாயில்லாக் குழந்தை' தேவர் பிலிம்ஸ் படம். விஜயகுமார், ஜெயசித்ரா நடித்தது. இசை இன்னிசை வேந்தர்கள் இரட்டையர்கள்.

இதில் ஒரு இனிமையான பாடல்

நீர் மேகம் ஆனால் என்ன
நான் தோகை ஆன பின்னே
விரலாகி இசைத்தாலென்ன
நான் வீணையான பின்னே

நல்ல மெலடி டூயட். அருமையாக நல்ல தமிழில் எழுதப்பட்ட பாடல் வரிகள்.


https://www.youtube.com/watch?v=wT9wHXt-m4M&feature=player_detailpage

vasudevan31355
27th July 2014, 12:35 PM
'நெல்லிக்கனி' படத்தின் அருமையான நண்பர்கள் டூயட் பாடலுக்கு நன்றி ராகவேந்திரன் சார்.

இதே ஜோடி அதே நட்புடன் 'கடலோரம் வலை வீசு'வதைப் பாருங்கள். 'ஆனந்த ராகம்' படத்தில் இளையராஜாவின் இசையில்


http://www.youtube.com/watch?v=PB8s20sGTRo&feature=player_detailpage

vasudevan31355
27th July 2014, 03:12 PM
மிக அபூர்வமான பாடல்

வினோத் சார்,

நீங்கள் பதித்திருந்த 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்தில் இடம் பெறாத

'நினைக்கும் போது தனக்குள் சிரிக்கும் மாது'
அவள் என்ன நினைத்தாளோ
அதை சொல்ல மறுத்தாளோ'

சுசீலாவின் சொக்க வைக்கும் குரலில்.


http://www.inbaminge.com/t/u/Ulagam%20Sutrum%20Valiban/Ninaikkum%20Pothu%20Thanakkul.vid.html

mr_karthik
27th July 2014, 05:52 PM
ரமலான் ஸ்பெஷல் (1)

"எல்லோரும் கொண்டாடுவோம்" (பாவமன்னிப்பு)

இப்படத்தில் நடித்த நடிகர்திலகம் கூறுவார் "இப்படத்தைப் பார்க்கும் எனதருமை இஸ்லாமிய நண்பர்கள் வாழ்ந்தால் இந்த ரகீம் போல வாழ வேண்டும் என்று நினைக்கும் வண்ணம் மிகவும் சிரத்தையெடுத்து நடித்தேன்" என்று. அவரும் படக்குழுவினரும் பட்ட சிரத்தைக்கு சிறப்பாகவே பலன் கிடைத்தது. இன்றளவும் மத நல்லிணக்கத்துக்கு மாபெரும் எடுத்துக்காட்டாய் விளங்கி வருகிறது இந்த திரைக்காவியம். அதிலிருந்து இந்தப்பாடலை இஸ்லாமிய அன்பர்களுக்கு ஈத் பெருநாள் பரிசாய் அளிப்பதில் பெருமையடைகிறேன்.

எல்லோரும் கொண்டாடுவோம் எல்லோரும் கொண்டாடுவோம்
அல்லா(ஹ)வின் பெயரைச்சொல்லி நல்லோர்கள் வாழ்வை எண்ணி
எல்லோரும் கொண்டாடுவோம்

கல்லாகப்படுத்திருந்து களித்தவர் யாருமில்லே
கைகால்கள் ஓய்ந்தபின்னே துடிப்பதில் லாபமில்லே
வந்ததை வரவில் வைப்போம் செய்வதை செலவு செய்வோம்
இன்றுபோல் என்றும் இங்கே ஒன்றாய் கூடுவோம்
எல்லோரும் கொண்டாடுவோம் எல்லோரும் கொண்டாடுவோம்

கருப்புல வெளுப்புமில்லே கனவுக்கு உருவமில்லே
கடலுக்குள் பிரிவுமில்லை கடவுளில் பேதமில்லை
உடலுக்கு அன்னையென்போம் உரிமைக்கு தந்தையென்போம்
மண்ணிலே விண்ணைக்கண்டு ஒன்றாய்க்கூடுவோம்
எல்லோரும் கொண்டாடுவோம் எல்லோரும் கொண்டாடுவோம்

படைத்தவன் சேர்த்துத் தந்தான் வளர்த்தவன் பிரித்து வைத்தான்
எடுத்தவன் மறைத்துக்கொண்டான் கொடுத்தவன் தெருவில் நின்றான்
எடுத்தவர் கொடுக்கவைப்போம் கொடுத்தவர் எடுக்கவைப்போம்
இன்றுபோல் என்றும் இங்கே ஒன்றாய் கூடுவோம்

எல்லோரும் கொண்டாடுவோம் எல்லோரும் கொண்டாடுவோம்
அல்லா(ஹ)வின் பெயரைச்சொல்லி நல்லோர்கள் வாழ்வை எண்ணி
அல்லா(ஹ)வின் பெயரைச்சொல்லி நல்லோர்கள் வாழ்வை எண்ணி
எல்லோரும் கொண்டாடுவோம் எல்லோரும் கொண்டாடுவோம்
எல்லோரும் கொண்டாடுவோம்.

mr_karthik
27th July 2014, 05:56 PM
ரமலான் ஸ்பெஷல் (2)

'மேரா நாம் அப்துல்ரகுமான்' (சிரித்து வாழ வேண்டும்)

தான் எந்தவொரு கதாபாத்திரத்தில் நடித்தாலும் அதில் வரும் பாடல்கள் மூலம் நல்ல கருத்துக்களை எடுத்துச்சொல்வது மக்கள்திலகத்தின் வழக்கம். (அவரைப் பின்பற்றுவோர் அவற்றை கடைபிடிக்கிறார்களா என்பது வேறு விஷயம்). அந்த வகையில், தான் ஏற்றுநடித்த அப்துல் ரகுமான் கதாபாத்திரத்தின் மூலம் அவர்தரும் அருமையான பாடல். இப்பாடலை ஈத் பெருநாள் பரிசாக அளிப்பதில் பெருமையடைகிறேன்.

ஒன்றே சொல்வான் ஒன்றே செய்வான் அவனே அப்துல்ரகுமானாம்
ஆண்டான் இல்லை அடிமை இல்லை எனக்கு நானே எஜமானாம்
மேராநாம் அப்துல்ரகுமான் மேராநாம் அப்துல்ரகுமான்
மேராநாம் அப்துல்ரகுமான் மேராநாம் அப்துல்ரகுமான்

ஆடும் நேரத்தில் ஆடிப்பாடுங்கள் ஆனாலும் உழைத்தே வாழுங்கள்
வாழ்வில் நாட்டம் ஓய்வில் ஆட்டம் இரண்டும் உலகில் தேவை
ஆடும்போதும் நேர்மைவேண்டும் என்றோர் கொள்கை தேவை

மேராநாம் அப்துல்ரகுமான் மேராநாம் அப்துல்ரகுமான்
மேராநாம் அப்துல்ரகுமான் மேராநாம் அப்துல்ரகுமான்

யாரும் அறியாமல் செய்யும் தவறென்று ஏமாற்றும் நினைவை மாற்றுங்கள்
ஒன்றில் ஒன்றாய் உறைந்தே நின்றான் அவனே அறிவான் எல்லாம்
காலம் பார்த்து நேரம் பார்த்து அவனே தீர்ப்பு சொல்வான்

மேராநாம் அப்துல்ரகுமான் மேராநாம் அப்துல்ரகுமான்
மேராநாம் அப்துல்ரகுமான் மேராநாம் அப்துல்ரகுமான்

உலகம் ஒன்றாக எதிரே நின்றாலும் அஞ்சாமல் கருத்தை கூறுங்கள்
வந்தான் வாழ்ந்தான் போனான் என்றா உலகம் நினைக்க வேண்டும்
சொன்னான் செய்தான் என்றே நாளும் ஊரார் சொல்ல வேண்டும்

ஒன்றே சொல்வான் ஒன்றே செய்வான் அவனே அப்துல்ரகுமானாம்
ஆண்டான் இல்லை அடிமை இல்லை எனக்கு நானே எஜமானாம்
மேராநாம் அப்துல்ரகுமான் மேராநாம் அப்துல்ரகுமான்
மேராநாம் அப்துல்ரகுமான் மேராநாம் அப்துல்ரகுமான்...

mr_karthik
27th July 2014, 06:11 PM
ரமலான் ஸ்பெஷல் (3)

கலைஞர் கருணாநிதி எழுதிய 'வெள்ளிக்கிழமை' நாவல் அதே பெயரில் நடிகை ஜி.சகுந்தலா தயாரிக்க மக்கள்திலகம் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடிப்பதாக ஏற்பாடாகி, கைவிடப்பட்டு, அதன்பின் சுந்தர்லால் நகாதா தயாரிப்பில் மு.க.முத்து நடிக்க 'நெய்னா முகம்மது' என்ற பெயரில் உருவாவதாக தினத்தந்தியில் முழுப்பக்கம் விளம்பரம் வந்து அதுவும் நின்று போய், இறுதியாக கலைஞரின் குடும்ப நிறுவனமான அஞ்சுகம் பிக்சர்ஸ் தயாரிப்பில் 'அணையாவிளக்கு' என்ற பெயரில் ஒருவழியாக வெளியானது.

அதில் ஒரு பாடல் மு.க.முத்து சொந்தக்குரலில்...

நல்ல மனத்தில் குடியிருக்கும்
நாகூர் ஆண்டவா
மக்கள் நலத்தை நினைத்து உ(ன்)னை
நானும் வேண்டாவா?
யாரும் வருவார் யாரும் தொழுவார்
நாகூர் ஆண்டவர் சந்நிதியில்
நானும் ஒன்றே நீயும் ஒன்றே
நபிகள் நாயகம் முன்னிலையில்

நல்ல மனத்தில் குடியிருக்கும்
நாகூர் ஆண்டவா
மக்கள் நலத்தை நினைத்து உ(ன்)னை
நானும் வேண்டாவா?...

vasudevan31355
27th July 2014, 06:30 PM
டியர் கார்த்திக் சார்,

(சார்! நான் ... கட்டளைக்கெல்லாம் அடிபணிய மாட்டேன்)

பாவ மன்னிப்பு- எல்லோரும் கொண்டாடுவோம்
சிரித்து வாழ வேண்டும்- ஒன்றே சொல்வான் நன்றே செய்வான்

ரமலான் பாடல்கள் இரண்டும் மிகச் சிறப்பு.

இரு திலகங்களின் பாடல்களையும் பதித்து அழகாக பேலன்ஸ் செய்து விட்டீர்கள். (ஏன் நமக்கு வம்பு என்று.)

கூன் பிறையைத் தொழுதிடுவோம் (பின்னால் 'தொழுதிடுவோம்' 'போற்றிடுவோம்' என்று சென்ஸாரால் மாற்றப்பட்டது. ஏன் என்று தெரியவில்லை)

குர்-ஆனை ஓதிடுவோம்
மேன்மை மிகு மெக்காவின்
திசை நோக்கிப் பாடிடுவோம்
மேன்மை மிகு மெக்காவின்
திசை நோக்கிப் பாடிடுவோம்

'அணையா விளக்கு' படப் பாடல் அற்புதமான ஒன்று. அப்போதெல்லாம் திராவிட முன்னேற்ற கழக கச்சேரி மேடைகளில் இப்படத்தில் டேப் அடித்துப் பாடுவது போல மு.க.முத்து பிரச்சாரப் பாடல்களை அழகாகப் பாடுவாராம். அந்தப் ப்ராக்டிஸ் முத்துவுக்கு நன்றாகக் கை கொடுத்து இருக்கிறது. நன்றாகப் பாடியிருப்பார். அப்போதைய சூப்பர் ஹிட் பாடல் இது

ஆனால் அருமையான பாடலை இடையில் அரசியல் சாயம் பூசிக் கெடுத்து விட்டார்கள். முழுதும் நபி புகழ் பாடியிருந்தால் நாம் 'எல்லோரும் இன்னும் கொண்டாடி' இருப்போம்.

நீங்களும் அதற்கு மேல் அந்தப் பாடல் வரிகளில் வெறும் அரசியல்தான் கலந்திருக்கிறது என்பதால் பாடலின் முழு வரிகளைத் தராதது நன்றகப் புரிகிறது. அதுதான் கரெக்ட்டும் கூட.

அதை வேறு தந்து அப்புறம் நீயா நானா போட்டி வந்து 'இங்கே'யும் பதிவிட முடியாமல் செய்து விடப் போகிறார்கள்.

RAGHAVENDRA
28th July 2014, 07:25 AM
பொங்கும் பூம்புனல்

http://www.inbaminge.com/t/a/Avare%20En%20Deivam/folder.jpg

பி.பி.எஸ்-எல்.ஆர்.ஈஸ்வரி சேர்ந்து பாடிய சூப்பர் ஹிட் பாடல்களில் ஒன்றை இப்போது நீங்கள் கேட்க இருக்கிறீர்கள்.

1969ம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் அவரே என் தெய்வம். ஜெமினி கணேசன், முத்துராமன், விஜயகுமாரி மற்றும் பலர் நடித்தது. அழகே உனக்கு குணமிரண்டு என்ற இந்த பாடல் அவ்வப்போது சென்னை வானொலியிலும் அடிக்கடி இலங்கை வானொலியிலும் ஒலிபரப்பாகும்.

இப்படத்திற்காகப் பதியப் பட்ட கண்ணுக்குத் தெரியாத இந்த சுகம் பாடல் பின்னாளில் என் அண்ணன் படத்தில் பயன்படுத்தப் பட்டது என்று சொல்வார்கள்.

http://www.inbaminge.com/t/a/Avare%20En%20Deivam/

RAGHAVENDRA
28th July 2014, 07:34 AM
பொங்கும் பூம்புனல்

தொடர்வது... மெல்லிசை மன்னருக்கும் ரவிக்கும் காலத்தால் அழிக்க முடியாத புகழைத் தேடித் தந்த பாடல்களி்ல் ஒன்று. அவர்களுக்கு மட்டுமா பாடியவர்கள் பாடலாசிரியர் அனைவருக்கும் தான்.

நம் எல்லோர் மனதையும் கவர்ந்த உற்சாகமூட்டும் டூயட் பாடல்.. ட்ரம்பெட் கிடார் இரண்டும் இணைந்து பேங்கோஸின் பின்னணியில் பாடலைத்துவங்கும் சிறப்பே அலாதி.

நாமெல்லோரும் இந்த உலகத்தை விட்டு வேறு உலகத்தில் சஞ்சாரிக்க வைக்கும் பாடல்...

வா அந்த உலகத்தின் ஒரு பக்கம் இங்கே..

ஓடும் நதி திரைப்படத்திலிருந்து பாடகர் திலகம் இசையரசி இணையில்லா சிறப்பான குரல்களில்

http://www.inbaminge.com/t/o/Odum%20Nadhi/

RAGHAVENDRA
28th July 2014, 07:39 AM
பொங்கும் பூம்புனல்

இந்தப் பாடலைப் பற்றி நான் சொல்லித் தான் உங்களுக்குத் தெரிய வேண்டுமோ..

யாரடி வந்தார் என் எண்ணத்தைக் கொள்ள..

நீயும் நானும் படத்திலிருந்து ஈஸ்வரியின் குரலில்

http://www.raaga.com/player5/?id=204930&mode=100&rand=0.7289993101730943

பியானோவும் புல்லாங்குழலும் ட்ரம்பெட்டும் கிடாரும் ... ஆஹா.. தனி இசை ராஜாங்கமே நடக்கிறதே...

Richardsof
28th July 2014, 07:51 AM
http://www.youtube.com/watch?v=QouAboS9160

http://youtu.be/PVxTajKU25c

rajeshkrv
28th July 2014, 09:55 AM
பாடல்களின் தொகுப்பு அருமை
வாசு ஜி, கார்த்திக் ஜி,ராகவி ஜி அருமை அருமை..

இதோ ரமலானை முன்னிட்டு இன்னொரு அருமையான பாடல்


http://www.youtube.com/watch?v=9sLYn9WWXFw

gkrishna
28th July 2014, 10:31 AM
மிக அருமை வாசு அண்ணா
பல பாடல்கள் வெளியில் தெரிய வந்து உள்ளது இந்த திரியின் மூலமாக

'உலகம் சுற்றும் வாலிபனோடு பயணம் செய்தவள் நான்
ஒ மை லார்ட் ஒ மை ச்வீட் ' என்று ஒரு பாடல் கேட்ட நினைவு
கண்ணிய பாடகி பாடகர் திலகம் என்று நினைவு
இது எந்த படத்தில் நிச்சயமாக மக்கள் திலகம் படமாக இருக்க வேண்டும்

gkrishna
28th July 2014, 10:37 AM
அதே போல் இன்னொரு கேள்வி பட்ட தகவல்

'நெருங்கி நெருங்கி பழகும் போது ' மாமா இசை அமைத்து ஆனால் மெல்லிசை மன்னர் பெயரில் நேற்று இன்று நாளை படத்தில் இடம் பெற்றது என்று இந்த தகவல் எவ்வளுவு உண்மை என்று தெரியவில்லை

Richardsof
28th July 2014, 10:47 AM
1971ல் நடிகை ஜி . சகுந்தலா தயாரிக்க இருந்த ''வெள்ளிகிழமை '' படத்திற்காக இசைத்திலகம்
இசைத்த பாடல் ''நெருங்கி நெருங்கி '' பாடல் . சில காரணங்களால் அந்த பட தயாரிப்பு நின்று போனது . பின்னர் நடிகர் அசோகன் தயாரித்த நேற்று இன்று நாளை படத்தில் அந்த பாடல்
இடம் பெற்றது .
http://youtu.be/GL-Lkg8pt7E

gkrishna
28th July 2014, 10:57 AM
நன்றி எஸ்வி சார்
அதே போல் இந்த உசுவா பாடலை பற்றி தகவல் இருந்தால் சொல்லுங்கள்

http://i49.tinypic.com/2hozbs6.jpghttps://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcS6b7aeByzOCBMcX8k5qc1Y0524yVSiY jw6ESZPGmHHn7kudASBXQ

Gopal.s
28th July 2014, 11:16 AM
அனைத்து சகோதர உள்ளங்களுக்கும் எங்கள் இனிய ரமதான் வாழ்த்துக்கள். அந்த ஓரிறை உலகில் சாந்தியும் சமாதானமும் நிலவிட அருள் புரியுமாக. மனிதம் ,மதங்களை முந்தட்டும்.

madhu
28th July 2014, 11:16 AM
மிக அருமை வாசு அண்ணா
பல பாடல்கள் வெளியில் தெரிய வந்து உள்ளது இந்த திரியின் மூலமாக

'உலகம் சுற்றும் வாலிபனோடு பயணம் செய்தவள் நான்
ஒ மை லார்ட் ஒ மை ச்வீட் ' என்று ஒரு பாடல் கேட்ட நினைவு
கண்ணிய பாடகி பாடகர் திலகம் என்று நினைவு
இது எந்த படத்தில் நிச்சயமாக மக்கள் திலகம் படமாக இருக்க வேண்டும்

ஓ மை லவ்... ஓ மை ஸ்வீட் ஹார்ட்...
உலகம் சுற்றும் வாலிபனோடொரு பயணம் வந்தவள் நான்
உறவுப் பாடலை பாடவும் ஆடவும் உரிமை கொண்டவள் நான்

தெரிந்த வரையில் "உலகம் சுற்றும் வாலிபன்" படத்துக்காக உருவாக்கப்பட்டு இடம் பெறாத பாடல்.
அதே படத்தில் சுசீலா பாடிய " நினைக்கும்போது .. தனக்குள் சிரிக்கும் மாது" என்ற பாட்லும்
இடம் பெறவில்லை.

gkrishna
28th July 2014, 11:19 AM
ஓ மை லவ்... ஓ மை ஸ்வீட் ஹார்ட்...
உலகம் சுற்றும் வாலிபனோடொரு பயணம் வந்தவள் நான்
உறவுப் பாடலை பாடவும் ஆடவும் உரிமை கொண்டவள் நான்

தெரிந்த வரையில் "உலகம் சுற்றும் வாலிபன்" படத்துக்காக உருவாக்கப்பட்டு இடம் பெறாத பாடல்.
அதே படத்தில் சுசீலா பாடிய " நினைக்கும்போது .. தனக்குள் சிரிக்கும் மாது" என்ற பாட்லும்
இடம் பெறவில்லை.

மிக்க நன்றி மது சார்

Gopal.s
28th July 2014, 11:25 AM
ஏ.எல்.ராகவன் குறிப்பில் விட்டு போன எனது மற்றொரு பிரிய பாடல்.பாஞ்சாலி படத்தில் கே.வீ.மகாதேவன் இசையில் , ஏ.எல்.ராகவன் bass voice கொண்டு ஒரு gazal போல பாடியிருப்பார்.

கேளுங்க,கேளுங்க ,கேட்டுகிட்டே இருங்க.(ஒரு முறை பார்த்தாலே போதும்.ஆனால் பல முறை கேட்க வேண்டும்)

http://www.youtube.com/watch?v=9_eEkQQzoeA

Gopal.s
28th July 2014, 12:15 PM
எங்கள் செல்வி என்ற படம் 1960 இல் ஏ.என்.ஆர்-அஞ்சலி தேவி இணையில் வந்து ,சுமார் வெற்றி கண்டது. பாடல்கள் கே.வீ.மகாதேவன் .சூப்பர் ஹிட் ரகங்கள்.என்ன பேரு வைக்கலாம்,சில சில ஆண்டுகள் முன்னம், என்று நல்ல தரமான பாடல்கள்.

இந்த பாடல் பீ.சுசிலாவின் இளைய குரலில் ஒரு அழகு.(சொல்லத்தான் நினைக்கிறேன் முடியவில்லை.)

http://www.youtube.com/watch?v=qq6mqQ7_agU

gkrishna
28th July 2014, 12:42 PM
சம்பத் செல்வம் னு ஒரு இசை அமைப்பாளர்

இவர் ஓடங்கள்,துளசி (அடிகடி ராஜ் டிஜிட்டல் பிளஸ் சேனல் இந்த படத்தை ஒளி பரப்பும் ) போன்ற படங்களுக்கு இசை அமைத்தவர்

இந்த இசை அமைப்பாளர் குலதெய்வம் ராஜகோபால்க்கு ஏதாவது உறவா ? படித்த நினைவில் இருந்து எழும் கேள்வி

இந்த ஓடங்கள் படம் ஷபீக் என்ற சஞ்சய் என்ற வருன்ராஜ் என்ற நடிகர் நடித்து வெளிவந்தது 1986 .
பாலச்சந்தர் உதவி இயக்குனர் அமீர் ஜான் இயக்கம்
psv ஹரிஹரன் தயாரிப்பு

வைரமுத்துவின் வைர வரிகளில் பாலாவின் இனிய குரல்

'சந்தன பூவா சந்தன பூவா சம்மதம் கேக்க போரேன் போரேன் .
பங்குனி மாசம் பரிசம் போட வாரேன் வாரேன்
உனது உதட்டில் எனது உதடு கவிதைகள் தீட்டுமே
காமன் தேசம் கடிதம் போட்டு பாராட்டுமே '
http://www.youtube.com/watch?v=76EoBhPP7Ws

இந்த நடிகர் மலையாளத்தில் ஷபீக் என்ற பெயரில் அறிமுகம் ஆகி பின் சஞ்சய் என்ற பெயரில் ஓடங்கள் என்ற தமிழ் படத்தில் நடித்து
பிறகு 1992 கால கட்டத்தில் வருன் ராஜ் என்ற பெயரில் 'தூது போ செல்லகிளியே','கங்கை கரை பாட்டு '
போன்ற திரை படங்களில் மீண்டும் முயற்ச்சி செய்தார் என்று நினைவு


http://i1.ytimg.com/vi/7txJFrkyGPE/mqdefault.jpg
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcRR4ujA8a1Z9SQ_avWu07Hs4GHD1A8Mh hq6Nt6j8QkUrqiRHUmHhttp://tamilbites.com/wp-content/uploads/2012/11/Gangai-Karai-Pattu.jpg
http://www.inbaminge.com/t/o/Odangal/

Gopal.s
28th July 2014, 12:58 PM
இளைய ராஜாவுடன் பனி போர் (பனி என்ன ,நேரடி)உச்சத்தில் இருந்த போது ,வாய்ப்பில்லாமல் தவித்து டப்பிங் படங்களில் பணியாற்றி கொண்டிருந்த வைர முத்து, ஒரு தோதாக இசையமைப்பாளரை உருவாக்கி அவருடன் பயணிக்க எண்ணியதன் விளைவே சம்பத்-செல்வன்.(குலதெய்வம் ராஜகோபால் மகன்).ராதாரவியின் புண்ணியத்தில் வாய்ப்பு கை கூடினாலும்,எண்ணம் கை கூடவில்லை. ரோஜாவின் ராஜா திலிப் வரும் வரை காத்திருக்க வேண்டியதாயிற்று.

gkrishna
28th July 2014, 01:06 PM
இளைய ராஜாவுடன் பனி போர் (பனி என்ன ,நேரடி)உச்சத்தில் இருந்த போது ,வாய்ப்பில்லாமல் தவித்து டப்பிங் படங்களில் பணியாற்றி கொண்டிருந்த வைர முத்து, ஒரு தோதாக இசையமைப்பாளரை உருவாக்கி அவருடன் பயணிக்க எண்ணியதன் விளைவே சம்பத்-செல்வன்.(குலதெய்வம் ராஜகோபால் மகன்).ராதாரவியின் புண்ணியத்தில் வாய்ப்பு கை கூடினாலும்,எண்ணம் கை கூடவில்லை. ரோஜாவின் ராஜா திலிப் வரும் வரை காத்திருக்க வேண்டியதாயிற்று.

மிக்க நன்றி கோபால் சார்
நிறைய நினைவலைகளில் நீந்தி கொண்டு இருக்கிறேன்
அதில் இருந்து கேள்விகள் எழுகின்றன
இதில் ராதா ரவி எங்கிருந்து வந்தார்

வைரமுத்து ராஜா நேரடி போர் இன்னும் தீரவில்லை
இன்று கூட அந்த அக்க போர் தொடர்கிறது
இயக்குனுர் சீனு ராமசாமி யுவன் வைரமுத்து ராஜா செய்திகள் தட்ஸ்தமிழ்.கம இல் படித்து இருப்பீர்கள் என நினைக்கிறன்

mr_karthik
28th July 2014, 01:13 PM
கோ,

அதென்ன ஒண்ணு புதுசு ஒண்ணு பழசு?.

ரோஜாவில் திலீப்தான் என்பதில் நீங்கள் பிடிவாதமாக இருக்கும்போது, வைரமுத்துவுடன் மோதியவர் இளையராஜா அல்ல, பண்ணைபுரம் ராசைய்யா...

Gopal.s
28th July 2014, 01:20 PM
கோ,

அதென்ன ஒண்ணு புதுசு ஒண்ணு பழசு?.

ரோஜாவில் திலீப்தான் என்பதில் நீங்கள் பிடிவாதமாக இருக்கும்போது, வைரமுத்துவுடன் மோதியவர் இளையராஜா அல்ல, பண்ணைபுரம் ராசைய்யா...
சரி.சரி.திருத்தி விடுகிறேன். ஞான தேசிகன் என்கிற ராசய்யா.

Gopal.s
28th July 2014, 01:24 PM
மிக்க நன்றி கோபால் சார்

இதில் ராதா ரவி எங்கிருந்து வந்தார்



First producer to give chance to Sampath-Selvan based on Recommendation by Vairamuthu.

mr_karthik
28th July 2014, 01:34 PM
கோ,

'சொல்லத்தான் நினைக்கிறேன் முடியவில்லை' பாடல் ரொம்பநாள் தேடிக்கொண்டிருந்த ஒன்று. அந்தப்படம் பார்த்ததில்லை. ஆனால் பாடல் இலங்கை வானொலியில் பயங்கர ஹிட். வரிகள் அத்தனை அர்த்தம் பொதிந்தவை.

இங்கே சொந்தபந்தங்களை விட்டு, குறிப்பாக இளம்மனைவியைப்பிரிந்து கிடைத்தற்கரிய இளமையை மலேசிய, சிங்கப்பூர் மற்றும் வளைகுடா நாடுகளில் காசுக்காக மலிவு விலையில் விற்றுக்கொண்டிருக்கும் பரிதாபத்துக்குரிய நம் சொந்தங்களுக்காக எழுதப்பட்ட வரிகள்...

"இன்று வரும் நாளை வரும்
சென்றாலும் திரும்பிவரும் செல்வம்
இளமை சென்று முதுமை வந்தால்
காதல் இசை பாடாது உள்ளம் - இதை
சொல்லத்தான் நினைக்கிறேன் முடியவில்லை"

gkrishna
28th July 2014, 01:58 PM
First producer to give chance to Sampath-Selvan based on Recommendation by Vairamuthu.

thanks gopal sir

gkrishna
28th July 2014, 03:36 PM
http://sim06.in.com/aaf0eb1d05d36a6533fa6e6e26701db0_m.jpghttps://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcRlhQFy8iLaLeqC4WIVbN6YFP0l3Y3tD l00xGjPm6OekTi9879n

A .V ரமணன் இன் musiano இசைகுழு 1970 1980 காலகட்டங்களில் மிகவும் பிரபலமான ஒன்று .
இதே போன்று மேலும் சில இசை குழுகள் காமேஷ் ராஜாமணி (இவரின் மோனிகா ஒ மை டார்லிங் கரவன் பாடல் மிகவும் பிரபலம் -நடிகை கமலா காமேஷ் இவரின் மனைவி); சிவராஜ் ஆனந்த் ; அபஸ்வரம் ராம்ஜி ஆகியோர் தலைமையில் இயங்கி வந்தன.
இவர்களுக்கு என்றே சில ரசிக கண்மணிகளும் இருந்தனர். மெல்லிசை கச்சேரி முடிந்த பிறகு அதை பற்றி பேசி மேலும் அடுத்த நாள் செய்தி தாள்களில் விமர்சனம் எல்லாம் எழுதும் அளவுக்கு மிகவும் பிரபலமாக இருந்தன. 1970 கால கட்டங்களில் வெளி வந்த ஹிந்தி தமிழ் படங்களின் பிரபலமான பாடல்களை எல்லாம் மேடை ஏற்றி கொண்டு இருந்தனர் .RD பர்மன்,ஷங்கர் ஜெய் கிஷன் ,மெல்லிசை மன்னர் போன்றோரின் பாடல்களை கூடுமானவரை அது போலவே வாசித்து நல்ல வருமானம் ஈட்டி வந்தனர் அதில் ரமணின் musiano குழு முன்னணி வகித்து வந்தது . மேடை நிகழ்சிகளில் இணைந்து பாடிய உமா அவர்கள் திரு ரமணனையே திருமணம் செய்து கொண்டு பின்னர் உமா ரமணன் ஆகி திரு ரமணன் உடன் இணைந்து பல பாடல்களை பாடுவார்கள் பின்னாட்களில் உமா ரமணன் அவர்கள் இளையராஜா இசையில் பல பிரபல சினிமா பாடல்களை பாடி உள்ளார்கள் .

என்னுடைய நல்ல நினவு ஒன்று பதினாறு வயதினிலே வந்த புதிதில் ஒரு மேடை நிகழ்ச்சியில் உமா ரமணன் அவர்கள் 'செந்தூர பூவே ' பாடலை ஒரு வெள்ளை நிற சேலை ஒன்று கட்டி கொண்டு பாடி கொண்டு இருந்தார்கள். அப்போது கேட்டு கொண்டு இருந்த ரசிகர்கள் 'வெள்ளை மயில் வெள்ளை மயில் ' என்று கூவி கொண்டு விசில் அடித்து கொண்டு இருந்தார்கள். அந்த பாடல் முடிந்த உடன் திரு ரமணன் அவர்கள் 'தயவு செய்து இப்படி behave செய்வதை நிறுத்துங்கள் . இப்போது பாடலை பாடியவர் என் மனைவி . 16 வயதினிலே படம் வந்து நிறைய பேரை கெடுத்து விட்டது '
என்று கூறினார்

பாடகர் திலகம் குரலுக்கு ஒரு பாடகர் வருவார். மற்றபடி ஸ்ரீநிவாஸ்,பாலா ,கிஷோர்,ரபி,ஜேசுதாஸ் போன்ற எல்லா பாடகர்களின் பாடல்களை ரமணன் அவர்களே பாடுவார் .
"தேகான ஹாய் ரே சோச்சனா " (धेकाना है रे सोचना ) பாடல் மிகவும் பிரபலமான பாடல் .கிஷோர் பாடுவது போலவே பாடுவார் .
ரசிகர்கள் once மோர் கேட்பது வழக்கம். அந்த கால கட்டங்களில் CD ,mp 3 ,USB என்று எல்லாம் இல்லாத போது இந்த இசை குழு நிகழ்சிகள் மிக சிறந்த பொழுது போக்கு ஆக இருந்தது

2000 கால கட்டங்களில் சன் தொலை காட்சியில் ரமணின் சப்த ஸ்வரங்கள் நிகழ்ச்சி மிகவும் பிரபலமான ஒன்று .

திரு AV ரமணன் அவர்கள் நீரோட்டம்,காதல் காதல் காதல்,சம்சாரம் என்பது வீணை போன்ற படங்களுக்கு இசை அமைத்தார் .மேலும் படங்களுக்கு இசை அமைத்தாரா என்று நினைவு இல்லை

நீரோட்டம் 1980 கால கட்டத்தில் வெளி வந்த விஜய்காந்த்,சத்யராஜ்,பஞ்சகல்யாணி புகழ் திருமுருகன் நடித்த படம்.
இந்த படத்தில் ரமணன் உமா ரமணன் உடன் இணைந்து பாடிய ஒரு பாடல் - சிலோன் ரேடியோ அடிகடி ஒளிபரப்பிய பாடல்

'ஆசை இருக்கு நெஞ்சுக்குள்ளே
அடிகடி துடிக்குதே ஏனோ தெரியலே
இது பருவ கால நினைவுகளின் பழக்கம் அல்லவா'

http://www.raaga.com/play/?id=374667

காதல் காதல் காதல் ரமணன் அவர்கள் ஹீரோஆக நடித்து தேசிய நடிகை தீபா கதாநாயகி என நினைவு இதயம் பேசுகிறது மணியன் தயாரிப்பு என நினைவு இதிலும் ஒரு பாடல் 'காதல் காதல் காதல் என்று கண்கள் சொன்னது என்ன " ரமணன் பாடியது பாடலின் இடையே தீபாவின் அழகை வர்ணித்து சில வசனங்கள் எல்லாம் வரும்

madhu
28th July 2014, 03:42 PM
GKrishna ji..

இதோ உங்களுக்காகவே ரமணன், தீபா நடிப்பில் ஏ.வி.ரமணன், உமா ரமணன் குரல்களில்.. "காதல் காதல் காதல் என்று கண்கள் சொல்வதென்ன"

http://youtu.be/Fhlxva2vbvQ

vasudevan31355
28th July 2014, 04:00 PM
இன்றைய ஸ்பெஷல் (41)

'அடிமைப் பெண்' திரைப்படத்தில் ஜெயலலிதா அவர்கள் பாடிய புகழ் பெற்ற பாடலான

http://i1.ytimg.com/vi/v_AsLwqY1Dw/0.jpg

அம்மா என்றால் அன்பு
அப்பா என்றால் அறிவு
ஆசான் என்றால் கல்வி
அவரே உலகில் தெய்வம்.

பாடலை அனைவருக்கும் தெரியும்.

இப்போது இன்றைய ஸ்பெஷலாக ஒலிக்கும் பாடல். 'இதிலென்ன ஸ்பெஷல்?... கேட்டுப் புளித்துப் போன பாடல்தானே' என்று யாரோ புலம்புவது போல் என் காதுகளுக்கு கேட்கிறது.

கண்டிப்பாக ஸ்பெஷல்தான்.

சில பேருக்கு தெரிந்திருக்கலாம். பல பேர் அறிய வாய்ப்பில்லை.

இந்தப் பாடலை நமது டி.எம்.சௌந்தரராஜன் அவர்களும் பாடி இருப்பதுத்தான் இன்றைய ஸ்பெஷலாக வருகிறது.

எம்ஜிஆர் அவர்களுக்காக பதிவு செய்யப்பட்ட பாடல். ஆனால் படத்தில் இப்பாடல் வராமல் ஜெயா பாடும் பாடல் காட்சியே இடம் பெற்றது.

கீழே நீங்கள் டி.எம்.சௌந்தரராஜன் அவர்கள் பாடிய 'அம்மா என்றால் அன்பு' பாடலைக் கேட்கலாம் 'தாயில்லாமல் நானில்லை... தானே எவரும் பிறந்ததில்லை'... பாடல் காட்சிக்கு பதிலாக.

ஜெயா பாடும் பாடலுக்கும், சௌந்தரராஜன் அவர்கள் பாடும் பாடலுக்கும் அவ்வளவு வித்தியாசம்.

http://i.ytimg.com/vi/6F3DsjWK-Ok/hqdefault.jpg

அம்மா என்றால் அன்பு
அப்பா என்றால் அறிவு
ஆசான் என்றால் கல்வி
அவரே உலகில் தெய்வம்

அம்மா என்றால் அன்பு
அப்பா என்றால் அறிவு
ஆசான் என்றால் கல்வி
அவரே உலகில் தெய்வம்

அன்னையைப் பிள்ளை
பிள்ளையை அன்னை
அம்மா என்றே அழைப்பதுண்டு
அன்பின் விளக்கம் பண்பின் முழக்கம்
அம்மா என்றொரு சொல்லில் உண்டு
பத்துத் திங்கள் மடி சுமப்பாள்
பிள்ளை பெற்றதும் துன்பத்தை மறப்பாள்
பத்தியம் இருந்து காப்பாள்
தன ரத்தத்தைப் பாலாக்கிக் கொடுப்பாள்

அம்மா என்றால் அன்பு
அப்பா என்றால் அறிவு
ஆசான் என்றால் கல்வி
அவரே உலகில் தெய்வம்

இயற்கை கொடுக்கும் செல்வத்தையெல்லாம்
பொதுவாய் வைத்திட வேண்டும்
இயற்கை கொடுக்கும் செல்வத்தையெல்லாம்
பொதுவாய் வைத்திட வேண்டும்
இல்லாதவர்க்கும் இருப்பவர் தமக்கும்
பகிர்ந்தே கொடுத்திட வேண்டும்.
ஒருவருக்காக மழை இல்லை
ஒருவருக்காக நிலவில்லை
வருவதெல்லாம் அனைவருக்கும்
வகுத்தே வைத்தால் வழக்கில்லை

அம்மா என்றால் அன்பு
அப்பா என்றால் அறிவு
ஆசான் என்றால் கல்வி
அவரே உலகில் தெய்வம்


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=45xYI3BuY7I

ஜெயா மேடம் பாடும் பாடல் இதோ.


http://www.youtube.com/watch?v=f0tsvDUlzzg&feature=player_detailpage

mr_karthik
28th July 2014, 04:01 PM
டியர் கிருஷ்ணாஜி,

70-களில் தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் இயங்கிய சில முக்கிய மேடை மெல்லிசைக்குழுக்கள் பற்றிய விவரங்களை தந்து கடந்த கால நினைவுகளை உசுப்பிவிட்டீர்கள். நீங்கள் சொன்னதுபோல அப்போது சேனல்கள், குறுந்தகடுகள் போன்றவை இல்லாததால் இம்மாதிரி மெல்லிசைக் குழுக்களுக்கு நல்ல வரவேற்பு. இவைகளோடு ஜேசுதாஸ்-சுஜாதா மெல்லிசைக் கச்சேரிகளும் அப்போது களைகட்டின.

ஏ.வி.ரமணன் குழுவுக்கு அப்போது நல்ல வரவேற்பு. அதை வைத்துத்தான் மன்மத லீலையில் 'நேற்றொரு மேனகை இன்றொரு ஊர்வசி' பாட மெல்லிசை மன்னர் வாய்ப்பளித்தார்.

ரமணன் பிற்காலத்தில் 'தமிழ்த்தாத்தா' என்ற டாக்குமென்ட்ரி சீரியலில் தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதைய்யராக நடித்தார். வேடப்போருத்தம் கனகச்சிதம். இந்த ரோலுக்கு முதலில் பரிசீலிக்கப்பட்டவர், மறைந்த ரகுவரன் அவர்கள்...

vasudevan31355
28th July 2014, 04:14 PM
கிருஷ்ணா சார்!

ஏ..வி.ரமணன் பதிவு அருமை. நான் கடலூர்காரன் ஆனதால் இங்கெல்லாம் லோக்கல் மெல்லிசைக் குழுக்களே அதிகம். ஆனால் கடலூர் பஸ் ஸ்டாண்ட் மாரியம்மன் கோவில் செடல் உற்சவ திருவிழாவிற்கு வருடாவருடம் ராட்சஸி வந்து மேடைக் கச்சேரி செய்து அமர்க்களப்படுத்தி விட்டுப் போய் விடுவார். 'ராஜபார்ட் ரங்கதுரை' உஷா நந்தினி மாதிரி மொத வரிசையில் நான் இருப்பேன் ஒவ்வொரு வருடமும். சும்மாவா வெறி பிடித்தது?

'ஆட்டக் கடிச்சான்... மாட்டக் கடிச்சான்', 'நான் ரோமாபுரி ராணி'

அப்படின்னு தொடையைத் தட்டி ராட்சஸி ஆரம்பிக்கும் போது கடலூரே சும்மா குலுங்கும் இரவு ஒரு மணிக்கு.

ஆஹா! இப்போது அப்படி ஒரே ஒரு வாய்ப்புக் கிட்டாதா?

gkrishna
28th July 2014, 04:15 PM
GKrishna ji..

இதோ உங்களுக்காகவே ரமணன், தீபா நடிப்பில் ஏ.வி.ரமணன், உமா ரமணன் குரல்களில்.. "காதல் காதல் காதல் என்று கண்கள் சொல்வதென்ன"

http://youtu.be/Fhlxva2vbvQ

மது சார்
மிக்க நன்றி
நான் தேடி கொண்டு இருந்த பாடல்
லட்டு வாக எனக்கு கொடுத்து விட்டீர்கள்
மீண்டும் ஒரு முறை நன்றி

mr_karthik
28th July 2014, 04:19 PM
டியர் வாசு சார்,

இன்றைய ஸ்பெஷலில் 'அம்மா என்றால் அன்பு' என்று படித்தவுடன், இது 'மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா' அவர்கள் பாடிய பாடல்தான் என்று நினைத்து நான்கூட ஆரம்பத்தில் சாதாரணமாகத்தான் படித்தேன். சிலவரிகள் படித்தபின்னர்தான் இது வேற அம்மா என்று தெரிந்தது.

உண்மையில் இதுநாள் வரையில் எனக்குத்தெரியாத தகவல் இது. இப்பாடலை இப்போதுதான் முதல்முறையாக கேட்கிறேன். ஏன் படத்தில் இடம்பெறவில்லை?. இடம்பெற்றால் தன்பாடலுக்கு மவுசு குறைய வாய்ப்புண்டு என்பது 'மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா' அவர்களின் கண்டிஷனா?.

அரிய தகவலுடன் கூடிய அற்புதப் பதிவு...

gkrishna
28th July 2014, 04:20 PM
இன்றைய ஸ்பெஷல் (41)


இப்போது இன்றைய ஸ்பெஷலாக ஒலிக்கும் பாடல். 'இதிலென்ன ஸ்பெஷல்?... கேட்டுப் புளித்துப் போன பாடல்தானே' என்று யாரோ புலம்புவது போல் என் காதுகளுக்கு கேட்கிறது.

கண்டிப்பாக ஸ்பெஷல்தான்.

சில பேருக்கு தெரிந்திருக்கலாம். பல பேர் அறிய வாய்ப்பில்லை.

இந்தப் பாடலை நமது டி.எம்.சௌந்தரராஜன் அவர்களும் பாடி இருப்பதுத்தான் இன்றைய ஸ்பெஷலாக வருகிறது.

எம்ஜிஆர் அவர்களுக்காக பதிவு செய்யப்பட்ட பாடல். ஆனால் படத்தில் இப்பாடல் வராமல் ஜெயா பாடும் பாடல் காட்சியே இடம் பெற்றது.


வாசு சார்
பாராட்ட வார்த்தைகளே இல்லை
என்ன ஒரு தகவல்
உண்மையில் நான் முதல் முறையாக கேட்கிறேன்
பாடகர் திலகம் பாடி
உங்கள் அர்பணிப்பு வேண்டாம் உபசார வார்த்தைகள்

gkrishna
28th July 2014, 04:22 PM
டியர் கிருஷ்ணாஜி,

70-களில் தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் இயங்கிய சில முக்கிய மேடை மெல்லிசைக்குழுக்கள் பற்றிய விவரங்களை தந்து கடந்த கால நினைவுகளை உசுப்பிவிட்டீர்கள். நீங்கள் சொன்னதுபோல அப்போது சேனல்கள், குறுந்தகடுகள் போன்றவை இல்லாததால் இம்மாதிரி மெல்லிசைக் குழுக்களுக்கு நல்ல வரவேற்பு. இவைகளோடு ஜேசுதாஸ்-சுஜாதா மெல்லிசைக் கச்சேரிகளும் அப்போது களைகட்டின.

ஏ.வி.ரமணன் குழுவுக்கு அப்போது நல்ல வரவேற்பு. அதை வைத்துத்தான் மன்மத லீலையில் 'நேற்றொரு மேனகை இன்றொரு ஊர்வசி' பாட மெல்லிசை மன்னர் வாய்ப்பளித்தார்.

ரமணன் பிற்காலத்தில் 'தமிழ்த்தாத்தா' என்ற டாக்குமென்ட்ரி சீரியலில் தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதைய்யராக நடித்தார். வேடப்போருத்தம் கனகச்சிதம். இந்த ரோலுக்கு முதலில் பரிசீலிக்கப்பட்டவர், மறைந்த ரகுவரன் அவர்கள்...

கார்த்திக் சார்
இறுதியில் ஒரு தகவல் தந்து உள்ளீர்கள் பாருங்கள் அது தான் சூப்பர்

vasudevan31355
28th July 2014, 04:26 PM
கார்த்திக் சார்
இறுதியில் ஒரு தகவல் தந்து உள்ளீர்கள் பாருங்கள் அது தான் சூப்பர்

yaa yaa yaa yaa

vasudevan31355
28th July 2014, 04:51 PM
கோ/ ராகவேந்திரன் சார்/ கிருஷ்ணா சார்/ கார்த்திக் சார் மற்றும் ராஜேஷ் சார்,

ஒரு மிக முக்கியமான பாடலைத் தருகிறேன். அமர்க்களம். ஈஸ்வரி பற்றி எழுதிவிட்டு ஒரு வித்தியாச பாடலைத் தராமல் போனால் எப்படி? நீங்கள் நிச்சயம் ரசிப்பீர்கள். நம் அருமை நண்பர்களும்தான்.

http://icdn.raaga.com/Catalog/CD/T/T0002257-no-cd.jpg

1968 -இல் வெளிவந்த 'நீயும் நானும்' ரவிச்சந்திரன், ராஜஸ்ரீ நடித்து வெளி வந்த படம். இசை எம்.எஸ். விஸ்வநாதன். இந்தக் கிராதகி இப்படத்தில் பாடிய ஒரு கதி கலங்க வைக்கும் பாடல். கார்த்திக் சார் கண்டிப்பாகக் கேட்டிருக்கக் கூடும்.

ஐயோ! ஐயோ! கேட்கிறேன்... கேட்கிறேன்... கேட்டுக் கொண்டே இருக்கிறேன்.

ஊஞ்சல் கட்டி ஆட்டட்டுமா
உருவைக் கொஞ்சம் மாற்றட்டுமா
பிள்ளை மனசு பெரிய வயசு
கண்ணால் உலகம் காட்டட்டுமா

டவுன்லோட் செய்து கண்டிப்பாக கேட்டுப் பாருங்கள். இரவு தூங்கினா மாதிரிதான்.

http://raagwap.com/download-220780/Oonjal%20Katti%20Aadattuma-Neeyum-Naanum.html

gkrishna
28th July 2014, 05:36 PM
கிருஷ்ணா சார்!

ஏ..வி.ரமணன் பதிவு அருமை. நான் கடலூர்காரன் ஆனதால் இங்கெல்லாம் லோக்கல் மெல்லிசைக் குழுக்களே அதிகம். ஆனால் கடலூர் பஸ் ஸ்டாண்ட் மாரியம்மன் கோவில் செடல் உற்சவ திருவிழாவிற்கு வருடாவருடம் ராட்சஸி வந்து மேடைக் கச்சேரி செய்து அமர்க்களப்படுத்தி விட்டுப் போய் விடுவார். 'ராஜபார்ட் ரங்கதுரை' உஷா நந்தினி மாதிரி மொத வரிசையில் நான் இருப்பேன் ஒவ்வொரு வருடமும். சும்மாவா வெறி பிடித்தது?

'ஆட்டக் கடிச்சான்... மாட்டக் கடிச்சான்', 'நான் ரோமாபுரி ராணி'

அப்படின்னு தொடையைத் தட்டி ராட்சஸி ஆரம்பிக்கும் போது கடலூரே சும்மா குலுங்கும் இரவு ஒரு மணிக்கு.

ஆஹா! இப்போது அப்படி ஒரே ஒரு வாய்ப்புக் கிட்டாதா?

வாசு சார்

திருநெல்வேலியிலும் இந்த கொட்டம் உண்டு .
வருடா வருடம் நெல்லையப்பர் காந்திமதி கேள்விப்பட்டு இருப்பீர்கள் கோயில் தேர் திரு விழாவின் போது அரசு பொருட் காட்சி நடைபெறும் .
அதே நேரத்தில் குற்றாலம் சீசன் வேறு எல்லாம் சேர்ந்து ஒரு திருவிழா கூட்டம் தான் .

தினசரி இரவு மேடை கச்சேரி, நாடகம் .உள்ளூர் வித்வான்கள் 'நெல்லை musiano ஆடர் கலை அரசன் பிரபாகர்' குழு ,ஜேசுதாஸ் எதிரொலி நெல்லை வாசுதேவன் குழு ,கண்டசாலா சீர்காழி எதிரொலி ஓவியர் வண்ண முத்து குழு, திருச்சி லோகநாதன் எதிரொலி நெல்லை கணபதி
இதற்கு நடுவில் மதுரை சோமு புகழ் தண்ணி வண்டி பாலு (இவருக்கு கூஜா நிறைய வடிசாராயம் வேண்டும் அப்ப தான் தொண்டையே திறக்கும் ஒரே பாட்டு மருத மலை மாமணியே திருப்பி திருப்பி பாடுவார் once மோர் கேட்க அவரோட அல்லக்கை 10 பேர் எல்லோருக்கும் தலைக்கு 10 ரூபாய்).

நடுவில் ஒரு நாள் சிலோன் லைலா இன்ப நடனம் (வயது வந்தவர்களுக்கு மட்டும் ஆனால் உள்ளே உட்கார்ந்து இருக்கிறவன் எல்லாம் தாளி நாளைக்கு போற கேஸ் ஆக இருக்கும் தனியாக ஒரு விசில் சத்தம் கேட்கும்.அது யாருன்னு பார்த்தீங்கன எங்க ஊர் சிவன் கோயில் பட்டர் தலையில் துண்டு கட்டி பெரிய தலைபா கொண்டு முகத்தை மறைத்து கொண்டு இருப்பார்.)

வைரம் கிருஷ்ணமுர்த்தி நாடகம்,நாடக காவலர் மனோகர் இன் சிசு பாலன்,இலங்கேஸ்வரன்,sv ராமதாஸ் இன் கில்லெர் நரசிம்ஹன் ,
ராதாவின் ரத்த கண்ணீர்,விவேகா பைன் ஆர்ட்ஸ் சோவின் 'சம்பவாமி யுகே யுகே,என்று தணியும் இந்த சுதந்திர தாகம் ',தில்லை ராகவனின் நாடகங்கள்,நம்ம தாலாட்டு ராஜபாண்டியன் ,சிவசூரியன் கரிகொல்ராஜ் nsk குழு நாடகங்கள்

இறுதி நாள் மெல்லிசை மன்னர் ஈஸ்வரி குழுவினர் தலைமையில் நட்சத்திர இரவு விடிய விடிய ஒரே கொண்டாட்டம் தான். ராட்சசி ஒரு கச்சேரியில் 'இளமை நிரந்த உலகம் இருக்கு' பாடல் பாடும் போது ஆடிய ஆட்டம் இருக்கே இன்னொருதரா இருந்தா ஆனை கால் வியாதி வந்து இருக்கும்.
கமல் ஆரம்ப காலத்தில் நிறைய தடவை வந்து டான்ஸ் எல்லாம் ஆடி இருக்கார். ஒரு தடவை அவர் ஆட மறுத்து அதனால் ரசிகர்கள் எல்லாம் கல்லை தூக்கி எறிந்து அவர் பதிலுக்கு 'நான் இனிமேல் திருநெல்வேலி பக்கமே வரமாட்டேன் ' என்று கூறி பாதியிலே நிகழ்சிகள் தடைபட்டது கூட உண்டு

எல்லாம் முடிந்து காலை 4 மணிக்கு நெல்லை dwaraka lodge என்று ஒன்று உண்டு .அங்கே தான் ஸ்டே. மறுநாள் மதியம் 1 மணிக்கு நெல்லை சேது லிங்க் எக்ஸ்பிரஸ் ஒன்று நெல்லை ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷன் இல் இருந்து கிளம்பி மறு நாள் காலை 10 மணிக்கு தான் சென்னை வரும் நாங்கள் கொஞ்சம் 10 பேர் tirunelveli ரயில்வே ஸ்டேஷன் சென்று அவர்களை எல்லாம் வழி அனுப்பி, கொஞ்சம் பணக்கார பசங்க வழிநடைக்கு செலவுக்கு பணம் எல்லாம் கொடுப்பாங்க (துணை நடிகைகளுக்கு மட்டும்) மீண்டும் அடுத்த நிகழ்ச்சிக்கு காத்து இருப்போம்

'என்ன சுகம் என்ன சுகம் '

https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTbeQayLy32aMG9blkESMBCqLhbCd4v5 H1-YDL3lIAT-Ub6Kil35whttps://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcR3VaPnLERXUQ-FvRGNXxnOVCmxWHwO8dFGGDltjhzsnVLPjMtw

http://www.youtube.com/watch?v=tdrhyQAZHqM

mr_karthik
28th July 2014, 06:21 PM
டியர் கிருஷ்ணாஜி,

தங்களின் 'மலரும் நினைவுகள்' அருமையோ அருமை, சுவையோ சுவை. நாங்களும் திருநெல்வேலி திருவிழா திடலில் இருப்பதாய் உணர்ந்தோம்.

நீங்கள் சொன்ன நாடக சபாக்களெல்லாம் வெளியூர் போகும்போது மட்டும்தான் கோயில் திருவிழாக்களில் நாடகம் நடத்துவார்கள். சென்னையில் சபாக்களுக்கு மட்டும்தான். இதற்காக ஹைகோர்ட் ராஜாஅண்ணாமலை மன்றம், மைலாப்பூர் மியூசிக்அகாடமி, தி.நகர் வாணிமகால், திருவல்லிக்கேணி என.கே.டி.கலாமண்டபம் என்று நாங்கள் படையெடுக்க வேண்டும். ஆனால் எப்படியும் வருஷா வருஷம் பொருட்காட்சியில் இவர்கள் நாடகம் நடக்கும். தலைவரின் தங்கப்பதக்கம் கூட பொருட்காட்சியில் நடந்து இருக்கிறது.

நடிகர் அசோகனின் 'தர்மத்தின் கண்கள்' என்ற நாடகத்தின்போது, வசனத்தின் நடுவே அசோகன் ஏதோ தகாத வார்த்தை பேசியதற்காக கல்லெறி கூட வாங்கினார். சிலோன் லைலா ஒருமுறை ஆபாச நடனம் ஆடினார் என்பதால் அவருடைய ஆட்டத்துக்கு பொருட்காட்சியில் போலீஸ் அனுமதி கிடையாது. சி.ஐ.டி. சகுந்தலா, வெண்ணிற ஆடை நிர்மலா போன்றவர்களின் நடந்களும் நடந்திருக்கிறது.

பொருட்காட்சியின் இன்னொருபக்கம் வெள்ளை ஸ்க்ரீன் கட்டி, தியேட்டர்களில் போணியாகாத சில குப்பைப்படங்கள் தினம் ஒன்றாக திரையிடப்படும். இப்போது சென்னை பொருட்காட்சி எப்படியென்று தெரியவில்லை. மிஸ் பண்ணுகிறோம்...

RAGHAVENDRA
28th July 2014, 07:53 PM
வாசு சார்
அருமை... அடிமைப் பெண் திரைப்படத்தில் பதிவு செய்யப் பட்டு படத்தில் இடம் பெறாத இந்தப் பாடலைப் போல் ஏராளமான பாடல்கள் உள்ளன. படகோட்டி திரைப்படத்திலும் ஒரு பாடல் படத்தில் இடம் பெறவில்லை. ஏ.எல்.ராகவன் எல்.ஆர். ஈஸ்வரி பாடிய பாடல், பருவ கால ஏட்டினிலே என்று துவங்கும். நம்முடைய நடிகர் திலகம் நடித்த படங்களிலும் கூட இது போன்று சில பாடல்கள் படத்தில் இடம் பெறும் வாய்ப்பை இழந்துள்ளன.

இன்னும் சொல்லப் போனால் இதைப் பற்றியே ஒரு மினி தொடர் தாங்களே தொடங்கலாம்.

RAGHAVENDRA
28th July 2014, 07:54 PM
ஆஹா நீயும் நானும் ஒரே படத்தில் இன்றைக்கு இரண்டு பாடல்கள்.... யாரடி வந்தார் மற்றும் ஊஞ்சல் கட்டி ஆடட்டுமா... இரண்டுமே எப்போது கேட்டாலும் புதுமையாக மிளிருபவை. இவையன்றி ரவி பாடுவதாக வரும் தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல் மற்றும் யாரடி வந்தார் இவையும் உண்டு

gkrishna
28th July 2014, 07:56 PM
மிஸ் பண்ணுகிறோம்...

உண்மை கார்த்திக் சார்
கொஞ்சம் அல்ல நிறைய மிஸ் பண்ணுகிறோம் அல்லது பண்ணி விட்டோம் .

நீங்கள் தலைவர் என்றவுடன் நினைவுக்கு வருகிறது

1977-78 மக்கள் திலகம் அன்றைய முதல்வர் அவர் தலைமையில் பாளையங்கோட்டையில் பிரமாண்டமான நட்சத்திர இரவு.
நெல்லை ஜங்ஷன் பொருட்காட்சி மைதானம் அவ்வளவு பெரியது இல்லை என்பதால் பாளையங்கோட்டை ஜான் 'ஸ் காலேஜ் மைதானம் தான் பெரியது என்பதால் அங்கு ஏற்பாடு செய்து இருந்தார்கள்.

அப்போது கமல் ரஜினி போன்றோர் எல்லோரும் வளரும் கலைஞர்கள்.அவர்கள் எல்லாம் வந்தார்களா என்று நினைவும் இல்லை இரண்டாவது அவர்கள் எல்லோரும் நாடக நடிகர்கள் அல்ல .எனவே எல்லோருக்கும் பேசுவது அல்லது எதாவது பாடுவது என்றே பொழுதை போக்கி கொண்டு இருந்தார்கள். மேஜர் அவர்கள் ஒரு நாடகம் போட்டார் .சுமாராக இருந்தது. அந்த நட்சத்ர இரவு highlight என்னவென்றால் தலைவரின் சாம்ராட் அசோகன் ஓரங்க நாடகம் .வெளுத்து கட்டி விட்டார் . குரல்வளை நொறுங்கி முகம் எல்லாம் உணர்ச்சி குவியல் ஆகி இறுதியில் பௌத்த பிட்சுவின் காலடியில் தன தலை சாய்த்து அப்படியே விழுந்து விட்டார். தலைவரின் உணர்ச்சி மயமான நடிப்பை பாராட்டி அடுத்த நாள் தினத்தந்தி மாலை முரசு தினமலர் எல்லாம் ஒரே நடிகர் திலகம் மக்கள் திலகம் புகை படங்களாக நிரம்பி வழிந்தன
http://i1.ytimg.com/vi/vh1k-W_bkCg/hqdefault.jpg
http://www.youtube.com/watch?v=q929CuI7UZA

vasudevan31355
28th July 2014, 07:59 PM
கிருஷ்ணா சார்,

சின்ன மீனைப் போட்டு எப்படி பெரிய மீனைப் பிடித்தோம் பார்த்தீர்களா.
நெல்லை மேடைக் களேபரங்கள் நெஞ்சு புடைக்க சிரிக்க வைத்தன. குறும்பு.. அநியாத்துக்கு குறும்பு. நகைச்சுவை கொடி கட்டுகிறது. வாழ்த்துக்கள்.

vasudevan31355
28th July 2014, 08:02 PM
அந்த நட்சத்ர இரவு highlight என்னவென்றால் தலைவரின் சாம்ராட் அசோகன் ஓரங்க நாடகம் .வெளுத்து கட்டி விட்டார் . குரல்வளை நொறுங்கி முகம் எல்லாம் உணர்ச்சி குவியல் ஆகி இறுதியில் பௌத்த பிட்சுவின் காலடியில் தன தலை சாய்த்து அப்படியே விழுந்து விட்டார். தலைவரின் உணர்ச்சி மயமான நடிப்பை பாராட்டி அடுத்த நாள் தினத்தந்தி மாலை முரசு தினமலர் எல்லாம் ஒரே நடிகர் திலகம் மக்கள் திலகம் புகை படங்களாக நிரம்பி வழிந்தன


சிங்கமாச்சேப்பா அது சிங்கமாச்சே.

gkrishna
28th July 2014, 08:03 PM
கிருஷ்ணா சார்,

சின்ன மீனைப் போட்டு எப்படி பெரிய மீனைப் பிடித்தோம்.பார்த்தீர்களா.
நெல்லை மேடைக் களேபரங்கள் நெஞ்சு புடைக்க சிரிக்க வைத்தன. குறும்பு.. அநியாத்துக்கு குறும்பு. நகைச்சுவை கொடி கட்டுகிறது. வாழ்த்துக்கள்.

உண்மை வாசு சார்
நிறைய நினைவலைகள் நீந்துகின்றன
வாய்ப்புக்கு நன்றி

ஈஸ்வரியின் பாடல் கேட்டேன். பின்னி பெடல் என்பார்களே
அதுதான் ஈஸ்வரி.

gkrishna
28th July 2014, 08:09 PM
சிங்கமாச்சேப்பா அது சிங்கமாச்சே.

உண்மை வாசு சார்

எழுதும் போது நானே கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டேன்
அந்த நாடகம் இன்னும் என் கண்ணுக்குள்ளே அப்படியே இருக்கு சார்
ரோஜாவின் ராஜா திரை படத்தில் சாம்ராட் அசோகன் நாடகத்தை திரையில் தான் பார்த்து இருக்கிறோம். ஆனால் நேரில் பார்க்கும் வாய்ப்பு அன்றைய இரவு எங்களுக்கு கிடைத்தது . அடுத்த நாள் செய்தித்தாள் கட்டிங் எல்லாம் இருந்தால்
பம்மலர் சார் எஸ்வி சார் நீங்கள் யாரவது பதிவு போட்டால் தான் உண்டு

gkrishna
28th July 2014, 08:18 PM
இனிய ரமலான் நல்வாழ்த்துகள்
எங்கும் சகோதரத்துவம் விளங்கட்டும்

http://www.hindu.com/thehindu/gallery/sg/sg005.jpghttp://www.123telugu.com/content/wp-content/uploads/2012/06/Indira-Gandhi-with-Sivaji-G.jpghttp://www.oocities.org/vijayalakshmifilms/koondukili.jpghttp://tamil.oneindia.in/img/2013/08/02-mgr-sivaji-rajini-kamal2-600.jpg

உத்தமன் திரை படத்தில் இருந்து நடிகர் திலகம் அவர்கள்
அனார் சலீம்
'அனார் என்றால் மாதுளம் ஆசை கொண்ட மாதிடம்
சலீம் என்ற மன்னவன் சலாம் வைத்தான் உன்னிடம்
உண்மை காதல் காதல் காதல்
அந்த காதல் போயின் சாதல்'

http://www.youtube.com/watch?v=_4qQLyrynfs

rajeshkrv
28th July 2014, 08:42 PM
இசையரசியின் குரலில் எழுபதுகளில் பல இனிமையான மிகவும் பிரமாதமான பாடல்கள் வந்தன. அப்படி ஒன்றுதான் இது.
மது அண்ணா முகனூலில் மீண்டும் ஞாபகப்படுத்திய பாடல்

சங்கர் கணேஷ் இரட்டையரின் இசை.. அவர்கள் திரையில் தோன்றி வாத்தியங்களை வாசித்த பாடல்

சுஜாதா .. அற்புதமான நடிகை .. திரையில் பத்துபேரோடு நடித்தாலும் அவர்களை தன் நடிப்பால் சிறியவர்களாக்கி விடுவார்.

இதோ பல்லாண்டு காலம் நீ வாழ வேண்டும் ( நீ ஒரு மகராணி படப்பாடல்)


http://www.youtube.com/watch?v=4PbQHySUpx4

vasudevan31355
28th July 2014, 08:47 PM
அனைவருக்கும் இனிய ரமலான் பெருநாள் வாழ்த்துக்கள்
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/96257513_n8gmnSF_1406560410.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/96257513_n8gmnSF_1406560410.jpg.html)

vasudevan31355
28th July 2014, 08:56 PM
http://www.ramadaneidmubarak.com/wp-content/uploads/2014/06/Ramadan-2014-greetings-for-facebook.gif

vasudevan31355
28th July 2014, 08:58 PM
================



அதிலும் ஒலவே ஜீவன சாக்*ஷாத்காரா பாடல் இனிமையிலும் இனிமை(வாசுஜி கட்டாயம் கேட்டு பார்க்கவும்)



ராஜேஷ் சார்,

'சாக்ஷாத்காரா' கன்னடப் படத்தில் நாம் இசையரசி பாடிய 'ஒலவே ஜீவன சாக் ஷாத்காரா' பாடலை நீங்கள் பதித்து இப்போதுதான் முதன் முறையாக கேட்டு இன்புறுகிறேன். அற்புதம் சார். என்ன குரல் சார் அது!

ஆண்டவன் படைப்பின் அற்புதங்களில் ஒன்று நம் சுசீலாம்மாவின் குரல்.

கன்னடம் எனக்குத் தெரியாது. ஆனால் அவர்கள் தெளிவாக உச்சரிக்கும் விதத்தை உணர முடிகிறது. அழகான இயற்கை சூழ் இடங்களில் அற்புதமாகப் படமாக்கப் பட்டிருக்கிறது. ராஜ்குமாரும் நன்றாகவே இருக்கிறார். ஜமுனா சற்று முற்றிய வெண்டைக் காயாய் தெரிகிறார், நமது 'அன்புச் சகோதரர்களி'ல் வரும் மாலினி தேவி(?!) போல.

பாடலின் நடுவில் அக்பரும், மார்த்தாண்டனும் வயது முதிர்ந்தாலும் கம்பீரமாகத் தெரிகிறார்கள்.(பிருத்வியின் கம்பீரம் என்னைக் கவர்ந்த ஒன்று 'மொகலே ஆசம்' படத்தின் 'pyar kiya to darna kya ' பாடலின் உச்சத்தில் மதுபாலாவைப் பார்த்து கன்னக் கதுப்புகள் துடிக்க, பார்வையை எரிமலையாக்கி கொதிப்பாரே..வாவ்! இவரும், நடிகர் திலகமும் இணைந்து ஒரு படம் செய்திருக்கலாமே என்ற ஏக்கம் என்னுள் எப்போதுமே உண்டு.)

இயற்கை காட்சிகள் கண்களுக்கு ரம்மியம்.

எனக்கு இந்தப் பாடலைப் பார்த்துவிட்டு அப்படியே நடிகர் திலகம், வாணிஸ்ரீ தூள் பரத்தும் இதே சுசீலாம்மாவின் குரலில் ஒலிக்கும் 'பால் போலவே...நாளை இந்த வேலை பார்த்து ஓடி வா நிலா' ஞாபகம் வந்து 'உயர்ந்த மனிதனை'ப் பார்க்க தலைவர் போல்டருக்கு வேறு ஓடி விட்டேன். சிறந்த பின்னணிப் பாடகிக்கான (1969) தேசிய விருதைப் பெற்றுத் தந்த பாடலாயிற்றே

அற்புதமான பாடலை சுகமாக அனுபவிக்கத் தந்தற்கு நன்ற ராஜேஷ் சார்.

இது போல இன்னும் வேண்டும் நிறைய.

vasudevan31355
28th July 2014, 09:08 PM
இதோ பல்லாண்டு காலம் நீ வாழ வேண்டும் ( நீ ஒரு மகராணி படப்பாடல்)



ராஜேஷ் சார்

சூப்பர். அதுவும் பாடல் முடியும் போது சுஜாதா தூக்க மாத்திரைகளைப் விழுங்கி மயக்கத்தில் தள்ளாட அதற்கேற்றவாறு சற்றே தடுமாறிய குரலில் நிலவரம் புரியாமல் பாடும் இந்தப் பாடகியை என்ன சொல்வது.

Russellmai
28th July 2014, 09:35 PM
கிருஷ்ணாஜி சார்,
பாளையங்கோட்டையில் நடைபெற்ற பிரமாண்ட நட்சத்திர
இரவில் கலந்து கொள்ள வந்த நடிகர் திலகம்,நெல்லை பூர்ணகலா
திரையரங்கில் நடைபெற்று வந்த உத்தமன் திரைப்பட மாலைக்காட்சிக்கு
வந்திருந்து ரசிகர்களை மகிழ்வித்தார்.
அன்பு கோபு

rajeshkrv
28th July 2014, 09:43 PM
ராஜேஷ் சார்,

'சாக்ஷாத்காரா' கன்னடப் படத்தில் நாம் இசையரசி பாடிய 'ஒலவே ஜீவன சாக் ஷாத்காரா' பாடலை நீங்கள் பதித்து இப்போதுதான் முதன் முறையாக கேட்டு இன்புறுகிறேன். அற்புதம் சார். என்ன குரல் சார் அது!

ஆண்டவன் படைப்பின் அற்புதங்களில் ஒன்று நம் சுசீலாம்மாவின் குரல்.

கன்னடம் எனக்குத் தெரியாது. ஆனால் அவர்கள் தெளிவாக உச்சரிக்கும் விதத்தை உணர முடிகிறது. அழகான இயற்கை சூழ் இடங்களில் அற்புதமாகப் படமாக்கப் பட்டிருக்கிறது. ராஜ்குமாரும் நன்றாகவே இருக்கிறார். ஜமுனா சற்று முற்றிய வெண்டைக் காயாய் தெரிகிறார், நமது 'அன்புச் சகோதரர்களி'ல் வரும் மாலினி தேவி(?!) போல.

பாடலின் நடுவில் அக்பரும், மார்த்தாண்டனும் வயது முதிர்ந்தாலும் கம்பீரமாகத் தெரிகிறார்கள்.(பிருத்வியின் கம்பீரம் என்னைக் கவர்ந்த ஒன்று 'மொகலே ஆசம்' படத்தின் 'pyar kiya to darna kya ' பாடலின் உச்சத்தில் மதுபாலாவைப் பார்த்து கன்னக் கதுப்புகள் துடிக்க, பார்வையை எரிமலையாக்கி கொதிப்பாரே..வாவ்! இவரும், நடிகர் திலகமும் இணைந்து ஒரு படம் செய்திருக்கலாமே என்ற ஏக்கம் என்னுள் எப்போதுமே உண்டு.)

இயற்கை காட்சிகள் கண்களுக்கு ரம்மியம்.

எனக்கு இந்தப் பாடலைப் பார்த்துவிட்டு அப்படியே நடிகர் திலகம், வாணிஸ்ரீ தூள் பரத்தும் இதே சுசீலாம்மாவின் குரலில் ஒலிக்கும் 'பால் போலவே...நாளை இந்த வேலை பார்த்து ஓடி வா நிலா' ஞாபகம் வந்து 'உயர்ந்த மனிதனை'ப் பார்க்க தலைவர் போல்டருக்கு வேறு ஓடி விட்டேன். சிறந்த பின்னணிப் பாடகிக்கான (1969) தேசிய விருதைப் பெற்றுத் தந்த பாடலாயிற்றே

அற்புதமான பாடலை சுகமாக அனுபவிக்கத் தந்தற்கு நன்ற ராஜேஷ் சார்.

இது போல இன்னும் வேண்டும் நிறைய.

வாசு ஜி,
நாம் இருவரும் ரசிப்புத்தன்மை என்ற நேர்க்கோட்டில் இணைகிறோம் அய்யா.. அருமை அருமை.
பாடலை ரசித்ததோடு நில்லாமல் அதை எப்படி ரசித்தீர்கள், அதை ரசிக்கும் போது அதை சார்ந்த வேறு ஒரு பாடல் என அமர்க்களம் உங்கள் ரசிப்பு
பாராட்டுக்கள்

rajeshkrv
28th July 2014, 09:46 PM
ராஜேஷ் சார்

சூப்பர். அதுவும் பாடல் முடியும் போது சுஜாதா தூக்க மாத்திரைகளைப் விழுங்கி மயக்கத்தில் தள்ளாட அதற்கேற்றவாறு சற்றே தடுமாறிய குரலில் நிலவரம் புரியாமல் பாடும் இந்தப் பாடகியை என்ன சொல்வது.

ஆம் .. இப்படி பல பாடல்களில் நம்மை வியக்கத்தான் வைக்கிறார்.

vasudevan31355
28th July 2014, 09:52 PM
ராஜேஷ் சார்,

அதே போல 'டீச்சரம்மா' திரைப்படத்தில் சுசீலா பாடும் சுகமான பாடல். சிறுவயது முதற்கொண்டே என் நெஞ்சில் நிறைந்த ஒரு பாடல்.

டி.ஆர்.பாப்பாவின் இசையில் 'இசைக்குயில்' பாடுவது.

இசையோடு தெய்வம் வந்து விளையாடும் வீடு
இலையோடு தென்றல் வந்து அலைமோதும் காடு

மலர் தூவி மஞ்சம் வைத்து மணம் வீசும் நாடு
மழை வந்து காதல் செய்து உறவாடும் காடு.

சங்கம் கண்ட பாண்டிய நாட்டு மங்கை கூந்தல் போலே

பச்சை புல்லின் மேல் வந்து பனி என்னும் பாவை
இச்சை கொண்ட தாய் போலே முத்தம் சிந்தினாளே

சலசலக்கும் அருவியிலே
சங்கீதம் சங்கீதம்
தாய் விரித்த மடியினிலே
தழுவிச் செல்லும் சந்தோஷம்

'சந்தோஷம்... சந்தோஷம்... சந்தோஷம்'

என்று மூன்று முறை அவர் பாடும் அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. குரல் அமுதத்திலும் அமுதம்.

இரவில் கேட்க நிறைவான மன சாந்தி


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=KCdFi_bKgxk

rajeshkrv
28th July 2014, 10:08 PM
டீச்சரம்மாவின் மற்ற பாடல்கள் இந்த பாடலை கொஞ்சம் இருட்டடித்துவிட்டது இருந்தாலும் நீங்கள் தேடி தேடி தருவது மனதுக்கு என்னே இன்பம்..
நன்றி வாசு ஜி. ஆம் இந்த பாடல் அற்புதம், குரல் அற்புதம் எல்லாமே அற்புதம்

vasudevan31355
28th July 2014, 10:43 PM
கிருஷ்ணாஜி சார்,
பாளையங்கோட்டையில் நடைபெற்ற பிரமாண்ட நட்சத்திர
இரவில் கலந்து கொள்ள வந்த நடிகர் திலகம்,நெல்லை பூர்ணகலா
திரையரங்கில் நடைபெற்று வந்த உத்தமன் திரைப்பட மாலைக்காட்சிக்கு
வந்திருந்து ரசிகர்களை மகிழ்வித்தார்.
அன்பு கோபு

கோபு சார்

அரிய தகவலுக்கு நன்றி!

vasudevan31355
28th July 2014, 10:49 PM
ரமலான் பெருநாள் சிறப்புப் பாடல்

ஆதி கடவுள் ஒன்றேதான்
இதில் உயர்வு தாழ்வு கிடையாது.


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=fG42xgPoRqg

vasudevan31355
28th July 2014, 10:59 PM
வானுக்குத் தந்தை எவனோ
மண்ணுக்கு மூலம் எவனோ
யாவுக்கும் அவனே எல்லை
அவனுக்கும் தந்தை இல்லை
அல்லா பெற்ற பிள்ளைதானே யாரும்
அல்லா பெற்ற பிள்ளைதானே யாரும்


http://www.youtube.com/watch?v=DsdH9WR0Ub0&feature=player_detailpage

vasudevan31355
29th July 2014, 04:45 AM
இன்றைய ஸ்பெஷல் (41)

அனைவருக்கும் ரமலான் பெருநாள் நல் வாழ்த்துக்கள்

பொதுவாக பாவ மன்னிப்பு, சிரித்து வாழ வேண்டும், கிழக்கும் மேற்கும் சந்திக்கின்றன, முகம்மது பின் துக்ளக், அணையா விளக்கு படங்களில் இருந்துதான் ரம்ஜான் பண்டிகைக்குப் பாடல்கள் எடுப்போம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355007/naayakame.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355007/naayakame.jpg.html)

ஆனால் இன்று வேறு ஒரு படத்திலிருந்து முற்றிலும் நாம் மறந்த பாடலை பார்த்து, கேட்டு நபியின் ஆசி பெறுவோம்.

இன்றைய ஸ்பெஷலில் நபி நாயகத்தின் அருள் வேண்டும் அற்புதப் பாட்டு

இந்து முஸ்லீம் ஒற்றுமையை வேண்டும் கண்ணியமான பாட்டு

மெய் சிலிர்க்க வைக்கும் மறக்கவொண்ணா பாட்டு.

அப்போதே விஸ்வநாதன் ராமமூர்த்தியின் விஸ்வரூப பாட்டு

தஞ்சை ராமையாதாஸ் அவர்களின் மத நல்லிணக்கப் பாட்டு

எஸ்.சி.கிருஷ்ணன் (படத்தில் என்.சி கிருஷ்ணன் என்று தவறாக டைட்டிலில் போடுவார்கள்) அவர்கள் தம் இளங்குரலில் நாகூர் ஹனிபா,கோரஸ் கூட்டணியுடன் இணைந்து உச்சஸ்தாயில் ஒலிக்கும் உன்னதப் பாட்டு

என் இனிய முஸ்லீம் சகோதரர்களுக்கு நான் ரமலான் வாழ்த்துக்களுடன் அளிக்கும் வித்தியாசமான பாட்டு.

http://upload.wikimedia.org/wikipedia/en/d/db/Gulebagavali.jpg

ஆர்.ஆர்.பிச்சர்ஸ் தயாரித்த 'குலேபகாவலி' படத்தின் அற்புத பாட்டு.

நம் நாடி நரம்புகளெல்லாம் புகுந்து இனம் புரியா உணர்வைத் தோற்றுவிக்கும் என்றும் தோற்காத பாட்டு.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355007/2.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355007/2.jpg.html)

ஜெயமே பெறவே
ஜகமே புகழவே

நாயகமே! நபி நாயகமே!
நலமே அருள் நபி நாயகமே
நாயகமே! நபி நாயகமே!

நாடாளும் மன்னர் நீடூடி வாழ
நலமே அருள் நபி நாயகமே
நாடாளும் மன்னர் நீடூடி வாழ
நலமே அருள் நபி நாயகமே
நலமே அருள் நபி நாயகமே
நாயகமே! நபி நாயகமே!

இணையில்லாத எங்கள் பாதுஷா
பிறந்த இன்ப நாளிலே நாயகமே
நாயகமே! நபி நாயகமே!
இந்து முஸ்லீம் ஒற்றுமையோடு
இன்புற வேண்டும் நாயகமே!
நாயகமே! நபி நாயகமே!
நலமே அருள் நபி நாயகமே

அறியாமை இருள் நீங்கி இன்ப ஒளி
அடைய வேண்டும் நபி நாயகமே
நாயகமே! நபி நாயகமே!
அன்பின் இதயமே காணிக்கை செய்தோம்
அருள்தாரும் நபி நாயகமே
நாயகமே! நபி நாயகமே!
நலமே அருள் நபி நாயகமே
நாயகமே! நபி நாயகமே!
நாயகமே! நபி நாயகமே!

அல்லாஹூ அக்பர் அல்லாஹ்


https://www.youtube.com/watch?v=1QK9ArJ3DOg&feature=player_detailpage&list=PLnN_lUBtWgksaQY_Ougba963zgpVXCWhV

RAGHAVENDRA
29th July 2014, 07:33 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/ramzangrtgs2014_zps0402e0a6.jpg

gkrishna
29th July 2014, 09:43 AM
கிருஷ்ணாஜி சார்,
பாளையங்கோட்டையில் நடைபெற்ற பிரமாண்ட நட்சத்திர
இரவில் கலந்து கொள்ள வந்த நடிகர் திலகம்,நெல்லை பூர்ணகலா
திரையரங்கில் நடைபெற்று வந்த உத்தமன் திரைப்பட மாலைக்காட்சிக்கு
வந்திருந்து ரசிகர்களை மகிழ்வித்தார்.
அன்பு கோபு

கூடுதல் தகவல்களுக்கு நன்றி கோபு சார்
இந்த நட்சத்ர இரவு மேலும் பல நமது நெல்லை தகவல்கள் உங்கள் மூலமாக தெரிந்து கொள்ள ஆசை படுகிறேன்.
பூர்ணகல உத்தமன் மறக்கமுடியாத அனுபவம் .
படம் 51வது நாள் இறுதி நாள் என நினைவு
அன்று இரவு காட்சி 'தேவன் வந்தாண்டி ஒரு தீபம் கொண்டாடிகாதல் கொண்டானடி ' பாடல் ரசிகர்கள் once மோர் கேட்டு திரை அரங்கு operator
அதை மீண்டும் ஒளி பரப்பி lovely experience

RAGHAVENDRA
29th July 2014, 09:46 AM
பொங்கும் பூம்புனல்

மிக அபூர்வமாக ஒரு பாடல்
தண்ணீர் தண்ணீர் திரைப்படத்திலிருந்து மானத்திலே மீனிருக்க.. என்ற பாடல்..
இப்படத்தில் மேகம் கருக்குதடி பாடல் மிகவும் பிரபலம். அதே போல் மற்ற பாடல்கலிலும் மெல்லிசை மன்னரின் புலமையும் திறமையும் நிறைந்திருக்கும்.
இப்பாடல் மறக்க முடியாத பாடலாகும்.

http://www.youtube.com/watch?v=NLBrluuwU2Q

gkrishna
29th July 2014, 09:50 AM
டீச்சரம்மாவின் கண்ணிய பாடகியின் இனிய பாடலை நினைவு கூர்ந்ததற்கு நன்றி வாசு சார்

அதே போல் நீ ஒரு மகாராணி 'பல்லாண்டு காலம் நீ வாழ வேண்டும்'
எனக்கு மிகவும் பிடித்த சுசீலாவின் பாடல்களில் ஒன்று .சங்கர் கணேஷ் அவர்களின் ஒரு நல்ல இசைஅமைப்பு கோர்வை உள்ள பாடல் விடுதலை படத்தில் சந்திரபோஸ் இசை அமைப்பில் வந்த 'ராஜாவே ராஜா நீ தானே ராஜா' பாடல் கொஞ்சம் இந்த 'பல்லாண்டு காலம் நீ வாழ வேண்டும் ' பாடலை ஒத்து இருக்கும் என்ற நினைவு

நினைவு கூர்ந்த ராஜேஷ் அவர்களக்கும் வாசு சார் அவர்களுக்கும் நன்றி

gkrishna
29th July 2014, 09:54 AM
தண்ணீர் தண்ணீர் மிக அருமையான பாடலை நினைவு படுத்தி உள்ளீர்கள்

அருந்ததி விடுகதை போட்டு ஒரு பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது
அது இந்த படமா அல்லது அச்சமில்லை அச்சமில்லை யா ?
எனக்கு அடிகடி இந்த குழப்பம் ஏற்படும் மன்னிக்கவும்

mr_karthik
29th July 2014, 10:34 AM
தண்ணீர் தண்ணீர் மிக அருமையான பாடலை நினைவு படுத்தி உள்ளீர்கள்

அருந்ததி விடுகதை போட்டு ஒரு பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது
அது இந்த படமா அல்லது அச்சமில்லை அச்சமில்லை யா ?
எனக்கு அடிகடி இந்த குழப்பம் ஏற்படும் மன்னிக்கவும்

டியர் கிருஷ்ணாஜி,

'புதிரு போட வந்தேனே பொட்டப்புள்ளே' என்ற அந்தப்பாட்டு அச்சமில்லை அச்சமில்லை படத்தில் வி.எஸ்.நரசிம்மன் இசையில் வந்தது.

மகா போர் பாட்டு.

கள்ளக்குரல் பாடகி எஸ்.ஜானகி ஓவராக அலட்டிக்கொண்ட காலகட்டத்தில் வந்த பாடல். கேட்கும்போதெல்லாம் எரிச்சல் ஏற்படும்....

mr_karthik
29th July 2014, 11:04 AM
1977-78 மக்கள் திலகம் அன்றைய முதல்வர் அவர் தலைமையில் பாளையங்கோட்டையில் பிரமாண்டமான நட்சத்திர இரவு.
நெல்லை ஜங்ஷன் பொருட்காட்சி மைதானம் அவ்வளவு பெரியது இல்லை என்பதால் பாளையங்கோட்டை ஜான் 'ஸ் காலேஜ் மைதானம் தான் பெரியது என்பதால் அங்கு ஏற்பாடு செய்து இருந்தார்கள்.

அந்த நட்சத்ர இரவு highlight என்னவென்றால் தலைவரின் சாம்ராட் அசோகன் ஓரங்க நாடகம் .வெளுத்து கட்டி விட்டார் . குரல்வளை நொறுங்கி முகம் எல்லாம் உணர்ச்சி குவியல் ஆகி இறுதியில் பௌத்த பிட்சுவின் காலடியில் தன தலை சாய்த்து அப்படியே விழுந்து விட்டார். தலைவரின் உணர்ச்சி மயமான நடிப்பை பாராட்டி அடுத்த நாள் தினத்தந்தி மாலை முரசு தினமலர் எல்லாம் ஒரே நடிகர் திலகம் மக்கள் திலகம் புகை படங்களாக நிரம்பி வழிந்தன


கிருஷ்ணாஜி சார்,
பாளையங்கோட்டையில் நடைபெற்ற பிரமாண்ட நட்சத்திர
இரவில் கலந்து கொள்ள வந்த நடிகர் திலகம்,நெல்லை பூர்ணகலா
திரையரங்கில் நடைபெற்று வந்த உத்தமன் திரைப்பட மாலைக்காட்சிக்கு
வந்திருந்து ரசிகர்களை மகிழ்வித்தார்.
அன்பு கோபு

டியர் கோபு சார்,

நடிகர்திலகம் பூர்ணகலா தியேட்டருக்கு வந்திருக்கலாம். ஆனால் அது 'உத்தமன்' படத்துக்குத்தானா?. ஏனென்றால், உத்தமன் வெளியானது 1976 மே மாதம். எம்,ஜி,ஆர். முதல்வரானது அதற்கு ஒரு வருடம் கழித்து. விழா நடந்தது அவர் முதல்வராகி சில மாதங்கள் கழித்து. கிருஷ்ணாஜி சொன்னதுபோல 1977-78 காலகட்டத்தில்.

mr_karthik
29th July 2014, 11:07 AM
டியர் வாசு சார்,

நீயும் நானும் படத்தில் ஈஸ்வரி பாடியிருந்த 'ஊஞ்சல் கட்டி ஆடட்டுமா உருவைக்கொஞ்சம் மாற்றட்டுமா' பாடல் அட்டகாசமான ஒன்று. அபூர்வங்களை தேடித்தேடி கொண்டுவந்து கொட்டுகிறீர்கள்.

சிலருக்கு மறந்திருக்கும் பாடல், பலருக்கு தெரியாதிருக்கும் பாடல். மக்கள் மத்தியில் பிரபலமாகாத காரணம் மீடியாக்கள் மட்டுமல்ல. பாடிய பாடகியும்தான். பின்னே?. இதையெல்லாம் பிரபலப்படுத்த வேண்டும் என்று ரசிகரான உங்களுக்கு இருக்கும் ஆர்வத்தில் ஒரு சதவீதம்கூட பாடியவருக்கு இல்லையே.

அப்படி இருந்திருந்தால், கையில் மைக் கிடைக்கும்போதெல்லாம் "காதோடுதான் நான் பாடுவேன்" மட்டுமே பாடிக்கொண்டிருக்க தோணுமா?...

gkrishna
29th July 2014, 11:07 AM
கார்த்திக் சார்
மிக்க நன்றி
எனக்கு எப்போதும் தண்ணீர் தண்ணீர் படத்திற்கும் அச்சமில்லை அச்சமில்லை படத்திற்கும் ஒரு குழப்பம் உண்டு
இரண்டுமே எங்கள் நெல்லையை அடிப்படையாக கொண்ட கதை
அதனால் தான் இந்த கேள்வி எழுந்தது .
மீண்டும் ஒரு முறை நன்றி

gkrishna
29th July 2014, 11:11 AM
டியர் கோபு சார்,

நடிகர்திலகம் பூர்ணகலா தியேட்டருக்கு வந்திருக்கலாம். ஆனால் அது 'உத்தமன்' படத்துக்குத்தானா?. ஏனென்றால், உத்தமன் வெளியானது 1976 மே மாதம். எம்,ஜி,ஆர். முதல்வரானது அதற்கு ஒரு வருடம் கழித்து. விழா நடந்தது அவர் முதல்வராகி சில மாதங்கள் கழித்து. கிருஷ்ணாஜி சொன்னதுபோல 1977-78 காலகட்டத்தில்.

கார்த்திக் சார்

உங்களை போன்றே எனக்கும் இந்த சந்தேகம் தோன்றியது திரு கோபு அவர்களின் பதில் கண்டு . இருந்தாலும் வருஷத்தை என்னால் உறுதியாக சொல்ல முடியவில்லை . ஆனால் அந்த நட்சத்ர இரவுக்கு மக்கள் திலகம் வந்த நினைவு உண்டு .
என்னிடம் ஆவணம் எதுவும் இல்லை இதை உறுதி செய்வதற்கு

mr_karthik
29th July 2014, 11:38 AM
டியர் வாசு சார்,

இன்றைய ஸ்பெஷல் தொடரில் 'ரமலான் சிறப்புப் பாடலாக' நீங்கள் அளித்த 'நாயகமே நபி நாயகமே நலமே அருள் நபி நாயகமே' பாடல் அருமையான ரமலான் பிரியாணி. சுவைத்து மகிழ்ந்தோம். இப்பாடல் நமது மீடியாக்களால் ரமலான், பக்ரீத், மிலாடி நபி, மொகரம் கொண்டாட்டங்களின்போது தேடிஎடுத்து ஒளிபரப்பப்படும்.

இப்படத்தை (குலேபகாவலி) படத்தை நான் பார்த்தது ஒரு வித்தியாச அனுபவம். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அம்மாபட்டினம் என்ற ஊரில் ஒரு நண்பனின் திருமணத்துக்கு சென்றிருந்தோம். மறுநாள் காலை திருமணம், முதல்நாள் மாலையே சென்றுவிட்டோம் (சென்னையிலிருந்து ரயில் வசதி அப்படி) . இரவு பொழுதை கழிக்க என்ன செய்வது என்று யோசித்தபோது, நண்பனின் கஸின் ஒருவர், பக்கத்தில் 'மணமேல்குடி' என்ற ஊரில் டூரிங்க் டாக்கீஸில் படம் பார்க்க அழைத்துச்சென்றார். அந்தப்படம்தான் 'குலேபகாவலி'. நாங்கள் பார்த்தபோது படம் வெளியாகி எப்படியும் 25 வருடம் ஆகியிருக்கலாம்.

ஆகா..., இந்த திரியின்மூலம் எவ்வளவு மலரும் நினைவுகள்...

gkrishna
29th July 2014, 11:47 AM
நான் நடிகர் திலகத்தை தனிமையில் சந்தித்தது நெல்லையில் 9 தடவை

1.1971 தேர்தல் கூட்டத்திற்கு நடிகர் திலகம் அவர்கள் நெல்லைக்கு வந்தபோது நடிகர் திலகத்தை வரவேற்று பின் நடிகர் திலகத்திற்கு யானை மாலை போட்ட நிகழ்ச்சி (இதன் போது சில மன கசப்பான சம்பவங்கள் எல்லாம் நடந்தது இப்போது அது எல்லாம் வேண்டாம் )

2.1971-72 கால கட்டத்தில் தேர்தல் தோல்விக்கு பிறகு நெல்லை ஜங்ஷன் இல் உள்ள ஹிந்து ஹை ஸ்கூல் மைதானத்தில் காங்கிரஸ் சிவாஜி மன்ற மாநாடு நிகழ்ச்சி என்று நினவு - 2 ரூபாய் அனுமதி சீட்டு என் தாயாருடன் சந்தித்தேன்

3.மன்னவன் வந்தானடி - மணிமுத்தார் அணை/மாஞ்சோலை யில் 'காதல் ராஜ்யம் எனது ' பாடல் காட்சியின் படபிடிப்பின் போது 2 தினங்கள் அவர் உடன் தங்கி இருந்தோம்

4.தங்கபதக்கம் 100 வது நாள் விழா நெல்லை சென்ட்ரல் திரை அரங்கு மாலை காட்சிக்கு நடிகர் திலகம் அவர்கள் வந்து அவர்களை நாங்கள் எல்லாம் பூ தூவி வரவேற்றோம் . திரு நவநீதன் என்பவர் நெல்லை மாவட்ட சிவாஜி மன்ற தலைவர் ஆக இருந்தார் .

6. தூத்துக்குடியில் ஒரு திருமணத்திற்கு 1976-77 அல்லது 77-78 கால கட்டம் என்று நினைவு . நாம் பிறந்த மண் திரைப்படம் வெளியாகி சரியாக போகாத போது நாங்கள் எல்லாம் அவரை சந்திக்க சிறப்பு பேருந்து ஒன்றை அமைத்து கொண்டு சென்றோம்.அப்போது அவர் கூறியது இன்னும் நினைவில் உண்டு 'சுந்தரத்திடம் (விஎட்னாம் வீடு) சொன்னேன் இந்த படம் இந்த கால கட்டத்திற்கு சரி வராது என்று கேட்கவில்லை'

7.1977 அண்ணா திராவிட முன்னெற்ற கழகம் இந்திரா காங்கிரஸ் கூட்டணீ நெல்லை வாகையடி முக்கு தேர்தல் பிரசார கூட்டம் ' நான் ஒரு இலை அண்ணன் mgr ஒரு இலை '

1978-80 கால கட்டத்திற்கு பிறகு காங்கிரஸ் சிவாஜி மன்ற ஊடல் ஆரம்பித்த .சென்னையில் புரசை குமரன் தாக்கப்பட்ட நிகழ்வு எங்களில் சிலருக்கு அச்சத்தை தோற்றுவித்து உடனே ஒதுங்கி விட்டோம்

8 ஆண்டுகள் நடிகர் திலகம் திரைப்படம் மட்டுமே பார்ப்பது கட்சி நிகழ்வுக்கு எல்லாம் செல்லாமல்

8..பின்னர் 1987-88 தமிழக முன்னெற்ற முன்னணி உதயம் ஆன பின் நெல்லை தச்சநல்லூர் என்ற இடத்திலும் பின் நெல்லை டவுன் வாகையடி முக்கு பொது கூட்டத்திலும்

9 . திரு RSK துரை என்று ஒருவர அம்பாசமுத்திரம் தேர்தலில் MLA ஆக போட்டி இட்டார் தமிழக முன்னெற்ற முன்னணி சார்பாக .அவரது திருமணத்திற்கு நடிகர் திலகம் வருகை தந்த போது

10. 1996-97 கால கட்டத்தில் சென்னைக்கு வந்த பிறகு நிறைய தடவை அவர் கலந்து கொண்ட கூட்டம் எதுவானாலும் சென்ற நினைவு . ஆனால் ஒரு பார்வையாளனாக வெகு தொலைவில் நின்று

நடிகர் திலகம் நெல்லை வருகை எனக்குள் தோற்றுவித்த மலரும் நினைவுகள் . இது இந்த திரிக்கு சம்பந்தம் இல்லை என்றால் திரு வாசு சார் அவர்களை நீக்கி விடுமாறு கேட்டு கொள்கிறேன்

Richardsof
29th July 2014, 12:20 PM
இனிய நண்பர் திரு வாசு சார்

இனிய நண்பர் திரு சி .எஸ். குமார் மூலம் சமீபத்தில் 1963 பொங்கல் அன்று வெளியான சினி டைரி கிடைத்தது . சில அருமையான தகவல்கள் இருந்தது . நண்பர்கள் பார்வைக்கு இங்கு பதிவிடுகிறேன் மதுர கீதத்திற்கும் இந்த
பழைய ஆவணத்திற்கும் சம்பந்தம் இல்லை .

கிருஷ்ணா சார் - உங்களூர் தகவல் உண்டு .

கார்த்திக் சார் - உங்கள் அபிமான அண்ணியின் பொங்கல் வாழ்த்தும் உண்டு .

பழைய அரங்குகள் பற்றிய இருக்கைகள் - வசூல் நிலவரமும் உண்டு .

http://i58.tinypic.com/2vxnev9.jpghttp://i58.tinypic.com/juess1.jpg

Richardsof
29th July 2014, 12:23 PM
unreleased movies
http://i61.tinypic.com/302nh1k.jpg

Richardsof
29th July 2014, 12:23 PM
http://i58.tinypic.com/23vdqgm.jpg

Gopal.s
29th July 2014, 12:30 PM
யாரடி வந்தார் பாட்டில் விஸ்வநாதன் விளையாட்டில் ராட்ஷஷி.அமர்க்களம். போனஸ் ஆக ஊஞ்சல் கட்டி ஆட்டட்டுமா வேறு.

ரங்க ராட்டினம் படத்திலேயே தங்க தொட்டில் பட்டு மெத்தை தாய் வீட்டிலே.

sirs,

This is on 3rd July'2014.

Richardsof
29th July 2014, 12:30 PM
http://i60.tinypic.com/2lc8t91.jpg
http://i58.tinypic.com/2ijrn6t.jpg

Richardsof
29th July 2014, 12:37 PM
http://i59.tinypic.com/2ytz3w8.jpg

Richardsof
29th July 2014, 12:37 PM
http://i61.tinypic.com/33l2rew.jpg

Richardsof
29th July 2014, 12:38 PM
http://i60.tinypic.com/idrb4k.jpg

Richardsof
29th July 2014, 12:39 PM
http://i61.tinypic.com/2lmqo01.jpg

mr_karthik
29th July 2014, 12:42 PM
நன்றி வினோத் சார்,

அபூர்வ ஆவணப் பதிவுகளை அளிப்பதில் எப்போதுமே வல்லவர் நீங்கள். இப்போதும் அப்படியே.

அண்ணியின் பொங்கல் வாழ்த்துப்பதிவு சூப்பர். அண்ணியின் படங்கள் அப்போது பெருவெற்றியாகி உச்சத்தில் இருந்த நேரம் அது...

Gopal.s
29th July 2014, 12:54 PM
1962 ரிப்போர்ட் பிரமாதம்.நன்றி எஸ்.வீ. 9.9.1961 இல் வெளியாகி 21.12.1961 அன்று நூறு நாள் கண்ட பாலும் பழமும் படமும் ,1962 வருட முடிவில் வெளியாகி ,1963 பிப்ரவரி மாதம் நூறு நாள் கண்ட ஆலயமணியும் விட பட்டது சரி.(1962 இல் நூறு நாள் கண்ட லிஸ்டில்.) பார்த்தால் பசி தீரும் எப்படி விட பட்டது? சென்னையில் மட்டும் நூறு நாள் லிஸ்டா?

gkrishna
29th July 2014, 01:07 PM
எஸ்வி சார்
மிக அற்புதமான அபூர்வமான பதிவு உங்கள் ஆவண பதிவு
நெல்லையில் 5 திரை அரங்குகள் மற்றும் சென்னை திரை அரங்குகள் பற்றி குறிப்பிட்டு உள்ளது மிக்க மகிழ்ச்சி
தொடர வேண்டும் உங்கள் பங்களிப்பு
என்றும் அன்புடன்
கிருஷ்ணா

Russellcaj
29th July 2014, 03:36 PM
Mr. Vasudevan

I am keenly watching this thread for all of your enjoyable description of every song, most of them are very rare, but excellent in quality.

The valuable efforts of yours and fellow hubbers Mr. Krishna, Mr. Rajesh, Mr. esvee, Mr. Karthik, Mr. Raghavndiran, Mr. Madhu and Mr. Gopal are very very nice and appreciable.

Your 'today special' songs are very very nice. Now I am learning more and more about old hidden songs.

Thanks to all and continue with same spirit.

stl

vasudevan31355
29th July 2014, 03:40 PM
கிருஷ்ணா சார்,

நடிகர் திலகத்தை நீங்கள் நெல்லையில் தனிமையில் சந்தித்த விவரங்களை எழுதி என் நினைவுகளைக் கிளறி விட்டீர்கள். அருமை.

எனக்கு அதில் நிறைய அனுபவம் உண்டு. சமயம் வாய்க்கும் போது கண்டிப்பாக புகைப்படங்களுடன் உங்கள் எல்லோருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.

vasudevan31355
29th July 2014, 03:43 PM
கிருஷ்ணா சார்,

'புதிரு போட போறாளாம் பொட்டப் புள்ள' ...' அச்சமில்லை அச்சமில்லை' படத்தில் அகல்யா என்ற நடிகை பாடுவதாக வரும். திருநெல்வேலி ஆள் முழிக்கிறாராம். நான் சொல்லல. ஜானகி சொல்றாங்க

ஆனா நான் சொல்றேன்.

அடி என்ன வேண்ணா கேளு
கிருஷ்ணா திருநெல்வேலி ஆளு.

vasudevan31355
29th July 2014, 03:44 PM
ராகவேந்திரன் சார்,

சபாஷ்! கையைக் கொடுங்கள். மிக அபூர்வமான ஒரு பாடல். நன்றாக நினைவிருக்கிறது தண்ணீர் தண்ணீர் வந்த புதிதில் 'மானத்திலே மீன் இருக்க' பாடலை அப்போதெல்லாம் என் வாய் முணுமுணுத்துக் கொண்டே இருக்கும். பின் காலப்போக்கில் கொஞ்சம் மறந்து விட்டது. இன்று நீங்கள் பதித்திருந்ததைப் பார்த்ததும் என்னையுமறியாமல் பாடலின் வரிகளை முன்கூட்டியே என் வாய்முணுமுணுக்க ஆரம்பித்து விட்டது. நெல்லைச் சீமை மொழிதான் எவ்வளவு இனிமை!

என்ன சொல்லுங்கள் ராகவேந்திரன் சார். நீங்கள் நீங்கள்தான். உங்கள் புண்ணியத்தில் மிக நீண்ட நாட்கள் சென்று இப்பாடலைக் கேட்டு மகிழ்ந்தேன். அருந்ததியும் டாப்.

vasudevan31355
29th July 2014, 03:52 PM
வினோத் சார்,

மீண்டும் ஒரு முறை 'ஆவண அரசர்' என்று நிரூபித்து இருக்கிறீர்கள். தமிழக தியேட்டர்கள் விவரங்கள் உள்ள அரிய ஆவணம் ஜோராக இருக்கிறது. 62-இல் வெளியான படங்களைப் பற்றிய தகவல்கள் அடங்கிய ஆவணமும் நன்று. நடிகர் திலகம் அமெரிக்காவுக்கு அழைக்கப்பட்டு கௌரவப்படுத்தப்பட்ட செய்தியைப் படிக்கும் போது போது (பல தடவை பல பத்திர்க்கைகளில் படித்திருந்தாலும் கூட) ஒரே நேரத்தில் சந்தோஷமும், துக்கமும் பெருகுவதைத் தடுக்க முடியவில்லை.

தேவிகா அவர்களின் பொங்கல் வாழ்த்தும், அவருடைய புகைப்படமும் ஓஹோ!

அருமையான ஆவணங்களுக்கு நன்றி!

vasudevan31355
29th July 2014, 03:59 PM
வினோத் சார்,

அற்புத, அரிய தகவல்கள் கொண்ட ஆவணங்கள்.. மீண்டும் ஒருமுறை 'ஆவண அரசர்' என்பதை நிரூபணம் செய்துள்ளீர்கள். தேவிகா அவர்களின் பொங்கல் வாழ்த்தும், அவர் புகைப்படமும் சூப்பர்.

நடிகர் திலகத்திற்கு கிடைத்த அமெரிக்க கௌரவம் குறித்த பதிவு பற்றி படிக்கும் போது (பல பத்திரிகைகளில் பல தடவைகள் படித்திருந்தாலும் கூட) ஒரே நேரத்தில் மகிழ்ச்சியும், துக்கமும் மனதில் ஏற்படுவதை உணரமுடிகிறது.

தமிழக தியேட்டர் விவரங்கள் பற்றிய ஆவண விவரங்கள் ஒரு அரிய பொக்கிஷம்.

நன்றி வினோத் சார்.

mr_karthik
29th July 2014, 04:00 PM
கிருஷ்ணா சார்,

நடிகர் திலகத்தை நீங்கள் நெல்லையில் தனிமையில் சந்தித்த விவரங்களை எழுதி என் நினைவுகளைக் கிளறி விட்டீர்கள். அருமை.

எனக்கு அதில் நிறைய அனுபவம் உண்டு. சமயம் வாய்க்கும் போது கண்டிப்பாக புகைப்படங்களுடன் உங்கள் எல்லோருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.

வாசு சார்,

அந்த அரிய வாய்ப்பு வெகு விரைவில் எங்களுக்கு கிடைக்க வேண்டும்...

gkrishna
29th July 2014, 04:21 PM
கிருஷ்ணா சார்,

நடிகர் திலகத்தை நீங்கள் நெல்லையில் தனிமையில் சந்தித்த விவரங்களை எழுதி என் நினைவுகளைக் கிளறி விட்டீர்கள். அருமை.

எனக்கு அதில் நிறைய அனுபவம் உண்டு. சமயம் வாய்க்கும் போது கண்டிப்பாக புகைப்படங்களுடன் உங்கள் எல்லோருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.

மிக்க மகிழ்ச்சி வாசு சார்

கார்த்திக் சார் உடன் சேர்ந்து நானும் உங்கள் அனுபவங்களுக்கு காத்து கொண்டு இருக்கிறேன்

gkrishna
29th July 2014, 04:24 PM
கிருஷ்ணா சார்,

'புதிரு போட போறாளாம் பொட்டப் புள்ள' ...' அச்சமில்லை அச்சமில்லை' படத்தில் அகல்யா என்ற நடிகை பாடுவதாக வரும். திருநெல்வேலி ஆள் முழிக்கிறாராம். நான் சொல்லல. ஜானகி சொல்றாங்க

ஆனா நான் சொல்றேன்.

அடி என்ன வேண்ணா கேளு
கிருஷ்ணா திருநெல்வேலி ஆளு.

நடிகை அகல்யா சரி
நான் தவறுதலாக நடிகை அருந்ததி என்று கூறி விட்டேன்
மன்னிக்கவும்

Richardsof
29th July 2014, 04:28 PM
1962- சினி டைரி பதிவினை பாராட்டிய எல்லா நண்பர்களுக்கும் எனது நன்றி .

இன்றைய ஸ்பெஷல் பாடல்கள் -எல்லாமே சூப்பர் .

vasudevan31355
29th July 2014, 04:40 PM
டியர் கார்த்திக் சார்,

பதிவுகளுக்கான தங்களது மனம் திறந்த பாராட்டுதல்களுக்கு நன்றி!

நமக்குள் இன்னொரு ஒற்றுமை. நானும் 'குலேபகாவலி' திரைப்படத்தை ஒரு டூரிங் டாக்கீஸில்தான் முதன் முதலாகப் பார்த்தேன். பின் கடலூர் துறைமுகம் 'கமர்' திரையரங்கில் ஓரிருமுறை பார்த்தேன்.

அப்போதே இன்றைய ஸ்பெஷலாக வந்த 'நாயகமே' பாடல் நங்கூரமாக என் நெஞ்சில் பாய்ந்து விட்டது. மேலும் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதி கடலூர் துறைமுகம். மசூதிகளும் நிறைய. கடலூரிலிருந்து கடற்கரை வழியாகப் பயணித்தோமானால் புதுச்சத்திரம், ஆலப்பாக்கம், முட்லூர், பரங்கிப்பேட்டை என்று பெரும்பாலும் முஸ்லீம் இன மக்களே அதிகம் இருப்பார்கள். தானுண்டு தன் வேலையுண்டு என்று அமைதியாக இருக்கும் மக்கள். மீன்பிடி தொழிலில் அதிக நாட்டம். மசூதிகளில் அதிகாலையில் ஒலிக்கும் முஸ்லீம் பாடல்கள். பெரும்பாலும் நாகூர் ஹனிபா அவர்கள்தாம் பாடியிருப்பார்.

'அல்லாவைத் தொழுதிடு முஸ்லீம் பெண்ணே'

'எங்கும் நிறைந்தவனே அல்லா அல்லா'

'பாத்திமா வாழ்ந்த முறை உனக்குத் தெரியுமா' (என்னுடைய பேவரேட்)

'அருள் மழை பொழிவாய் ரஹ்மானே'

'தூதர் முஹம்மது வாழும் மதீனா'

'இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை'

'உலக மக்கள் யாவருக்கும் உரிமையானவர்'

மறக்கவே முடியாத பாடல்கள்.

எதையோ தொடக்கி எங்கோ முடிக்கிறேன். ஆனால் நினைவுகள் தேன்தானே.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Dul9YWOWl5g

Russellmai
29th July 2014, 04:48 PM
கார்த்திக் சார்,
நெல்லை பூர்ணகலா திரையரங்கில் உத்தமன் திரைப்படம்
நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது ஒரு மாலைக்காட்சிக்கிடையே
நடிகர் திலகம் வந்து பேசி விட்டுச் சென்றார்.அந்தக் காட்சி எனது
பசுமையான நினைவில் உள்ளது.ஏனெனில் நடிகர் திலகத்தை மிக
அருகில் காண வாய்ப்பு அன்றுதான் எனக்கு கிடைத்தது.

vasudevan31355
29th July 2014, 04:51 PM
நடிகை அகல்யா சரி
நான் தவறுதலாக நடிகை அருந்ததி என்று கூறி விட்டேன்
மன்னிக்கவும்

இதுக்கெல்லாம் எதுக்கு சார் மன்னாப்பு?

mr_karthik
29th July 2014, 04:53 PM
டியர் வாசு சார்,

பலே....., நமது 'மனதை மயக்கும் மதுரகானங்கள்' திரியில் ரமலான் ஸ்பெஷலாக அருளிசைப்பாடகர் இசை முரசு நாகூர் ஹனீபா அவர்களின் வீடியோவும் இடம்பெற்றுவிட்டதே.

நீங்கள் பட்டியலிட்டிருக்கும் அவரது பாடல்கள் அனைத்துமே மிக அருமையானவை. அதிலும் 'இறைவனிடம் கையேந்துங்கள்' என்னுடைய ஆல்டைம் பேவரிட்....

vasudevan31355
29th July 2014, 05:00 PM
கிருஷ்ணா சார்.

அச்சமில்லாமல் புதிர் போட்ட அகல்யா இவர்தான்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/xzcvbn.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/xzcvbn.jpg.html)

vasudevan31355
29th July 2014, 05:03 PM
கார்த்திக் சார்,

உங்களுக்கு பிடித்த அருளிசைப் பாடகரின் 'இறைவனிடம் கையேந்துங்கள்'

இதோ


https://www.youtube.com/watch?v=gzMOsaT3Xkw&feature=player_detailpage

original audio


http://www.youtube.com/watch?v=o4f4Jh9tLAY&feature=player_detailpage

gkrishna
29th July 2014, 05:06 PM
டியர் கார்த்திக் சார்,


'அல்லாவைத் தொழுதிடு முஸ்லீம் பெண்ணே'

'எங்கும் நிறைந்தவனே அல்லா அல்லா'

'பாத்திமா வாழ்ந்த முறை உனக்குத் தெரியுமா' (என்னுடைய பேவரேட்)

'அருள் மழை பொழிவாய் ரஹ்மானே'

'தூதர் முஹம்மது வாழும் மதீனா'

'இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை'

'உலக மக்கள் யாவருக்கும் உரிமையானவர்'

மறக்கவே முடியாத பாடல்கள்.

எதையோ தொடக்கி எங்கோ முடிக்கிறேன். ஆனால் நினைவுகள் தேன்தானே.



வாசு சார்
காலை 6.15 முதல் 6.45 வரை வானொலியில் பக்திமலர் என்று ஒரு நிகழ்ச்சி .அதற்கு பிறகு செய்திகள்
பக்தி மலர் நிகழ்ச்சியில் அடிகடி கேட்கும் பாடல்கள்
'ஈச்ச மரத்து இன்ப சோலையில் நபி '
'நபிகளிடம் மறைந்து இருப்பது என்ன அன்பு அமைதி ஆக்கம் ''
'தமிழகத்து தர்க்ஹாகளை பார்த்து வருவோம் தூய வழி காட்ட சொல்லி கேட்டு வருவோம் '
'அல்லவை நாம் தொழுதால் துயர் இல்லாமல் போய் விடுமே '

அதே போல் கிறிஸ்துவ கீதங்கள்
'அய்யய்ய நான் வந்தேன் தேவ ஆட்டு குட்டி வந்தேன் தேவ ஆட்டு குட்டி வந்தேன் '
'அன்னையே ஆரோக்கிய அன்னையே '

எம்மதமும் சம்மதம் என்ற உங்கள் கருத்துக்கு நன்றி

vasudevan31355
29th July 2014, 05:11 PM
வாசு சார்

அதே போல் கிறிஸ்துவ கீதங்கள்
'அய்யய்ய நான் வந்தேன் தேவ ஆட்டு குட்டி வந்தேன் தேவ ஆட்டு குட்டி வந்தேன் '
'அன்னையே ஆரோக்கிய அன்னையே '

எம்மதமும் சம்மதம் என்ற உங்கள் கருத்துக்கு நன்றி

டிசெம்பரில் வைத்துக் கொள்வோம்.

gkrishna
29th July 2014, 05:19 PM
கிருஷ்ணா சார்.

அச்சமில்லாமல் புதிர் போட்ட அகல்யா இவர்தான்.



thanks vasu sir

http://3.bp.blogspot.com/-HtOtG6wt7GU/T-sW_1SwSsI/AAAAAAAABQ8/Qig_X_FaiJU/s1600/Agal+Vilakku+-+Tamil+MP3+Songs.jpg

படம் : அகல் விளக்கு
பாடியவர்கள் : S.P.ஷைலஜா & கே.ஜே.ஜேசுதாஸ்
இசை : இளையராஜா
வரிகள் : கங்கைஅமரன்

ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே
காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே
தினம் காண்பது தான் ஏனோ....

ஏதோ நினைவுகள்...

மார்பினில் நானும் மாறாமல் சேரும்
காலம் தான் வேண்டும்..ம..ம்ம்ம்
வான்வெளி எங்கும் என் காதல் கீதம்
பாடும் நாள் வேண்டும்..ம..ம்ம்ம்
தேவைகள் எல்லாம் தீராத நேரம்
தேவன் நீ வேண்டும்..ம்ம் தேடும் நாள் வேண்டும்..ம்ம்

ஏதோ நினைவுகள்..

நாடிய சொந்தம் நாம் காணும் பந்தம்
இன்பம் பேரின்பம்..ம..ம்ம்
நாளொரு வண்ணம் நாம் காணும் எண்ணம்
ஆஹா ஆனந்தம்..ம..ம்ம்
காற்றினில் செல்லும் என் காதல் எண்ணம்
எங்கும் எந்நாளும்..ம்ம் ஏக்கம் உள்ளாடும்..ம்ம்

ஏதோ நினைவுகள்..

http://www.youtube.com/watch?v=rD2U89lCOeo

vasudevan31355
29th July 2014, 05:21 PM
அழகான கானம். ஷைலஜாவின் கலக்கல்களில் ஒன்று, ஜென்ஸியை விடவும் 'கிறீச்' கம்மிதான். நன்றி கிருஷ்ணரே!

RAGHAVENDRA
29th July 2014, 05:37 PM
வினோத் சார்
அபூர்வ ஆவணங்களைத் தரவேற்றி நம் நினைவுகளை அந்நாளைக்கே அழைத்துச் செல்கிறீர்கள்.
தங்கள் பணியை மிகவும் பாராட்டுகிறேன். தொடருங்கள்.
அன்புடன்

RAGHAVENDRA
29th July 2014, 05:38 PM
வாசு சார்
நடிகர் திலகத்துடனான சந்திப்பை விட வாழ்க்கையில் நமக்கு சிறந்த அனுபவம் வேறேது வேண்டும். ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறோம்.

RAGHAVENDRA
29th July 2014, 05:40 PM
நாகூர் ஹனீஃபாவின் பாடல்கள் எல்லாமே எல்லோருக்குமே பிடிக்கும். சில பாடல்கள் 40, 50 ஆண்டுகளாக குழந்தைப் பருவமுதலே நம் நினைவில் தங்கி விடும்.

ஹனீஃபாவின் பாடல்களில் எனக்கு இதுவும் மிகவும் பிடித்த பாடல்

அல்லாவை நாம் தொழுதால்... இதை கிருஷ்ணா கூட சொல்லியிருக்கிறார். கேட்போமே..

http://www.youtube.com/watch?v=rVHxLnz03yQ

இந்த ஆல்பத்திற்கு இசை மெல்லிசை மன்னர் டி.கே.ஆர் என நினைவு. கோபால் சார் உறுதி செய்ய வேண்டும்.

gkrishna
29th July 2014, 05:50 PM
வாசு சார்

நாம் கடவுளின் தீர்ப்பு 1981 திரைப்படம் பற்றி அலசி விட்டோமோ
http://www.photofast.ca/files/products/1654.jpg

கோவர்தனம் இசையில்
விஜய் பாபு,ஸ்ரீகாந்த்,sangeetha நடித்து வந்தது

வாணி பாடகர் திலகம் குரல்களில்

'அன்பு தலைவன் காலடி சுவட்டில்
ஒன்று கலந்தால் என்ன தவறு
இன்ப முகத்தை நெஞ்சில் நிறுத்தி
எண்ணி மகிழ்ந்தால் என்ன தவறு '

வாணியின் குரலில்

'இன்று வரும் காற்றினிலே என்ன விஷேசம்
அது ஏந்தி வரும் வாசனையிலே என்ன விஷேசம்
இன்று வரும் காற்றினிலே என்ன விஷேசம்
அது ஏந்தி வரும் வாசனையிலே என்ன விஷேசம்
இளமை புதுமை தனிமை இனிமை'

http://www.inbaminge.com/t/k/Kadavulin%20Theerpu/

RAGHAVENDRA
29th July 2014, 05:53 PM
உள்ள(த்)தை அள்ளித்தா

நாகரீகம்... இதை வரையறுப்பது எப்படி... ஒவ்வொரு தலைமுறைக்கும் அதனுடைய அளவுகோல் வேறு படுகிறது. கருத்து வேறுபாடு உருவாகவும் சில சமயம் இல்லறத்திலேயே விரிசல் ஏற்படுவதற்கும் கூட இந்த நாகரீகம் ஒரு வகையில் காரணமாயிருக்கிறது. இதைப் பற்றி நடிகர் திலகத்தின் கருப்பு வெள்ளைக் காவியம் பட்டிக்காடா பட்டணமா மிகச் சிறப்பாக எடுத்துரைத்துள்ளது.

இந்த நாகரீகத்தின் அடிப்படையே ஜூபிடர் ஆர்ட் மூவீஸின் விஜயா படமாகும். நவநாகரீகத்தில் திளைக்கும் கதாநாயகன் ஜெய், லட்சுமியை மணக்கிறார். அவர்களுக்கு பிறக்கும் பெண் குழந்தை வளர்ந்து பெரியவளாகி - இதுவும் லட்சுமியே - நாகரீகத்தில் திளைக்கிறாள். மனப் போராட்டத்தில் தவிக்கிறார் ஜெய்.

படத்தின் தொடக்கத்தில் ஜெய்யின் பிறந்த நாளன்று தாத்தா மேஜர் சுந்தரராஜனுடன் நாகரீகத்தைப் பற்றிப் பாடலில் விவாதிக்கிறார் ஜெய்.

இதே போல் படத்தின் முடிவுக்கு முன்னர் வரும் ஒரு பாடல் காட்சியில் மகளின் நாகரீகப் போக்கை எண்ணி மனம் வருந்தி தாயார் லட்சுமி இறைவனை பிரார்த்திக்கிறார். இதே சமயம் மகள் லட்சுமியோ நாகரீகத்தின் மோகத்தில் பாடுகிறார்.

முதல் சூழ்நிலையில் ஜெய்க்காகப் பாடுபவர் எஸ்.பி.பாலா, தாத்தா மேஜருக்கு குரல் தந்தவர் கோவை சௌந்தர்ராஜன்.

இரண்டாம் சூழ்நிலையில் தாயார் லட்சுமிக்கு இசையரசியும், மகள் லட்சுமிக்கு மாதுரியும் குரல் தந்திருப்பார்கள்.

மிக மிக அபூர்வமாக இணையத்தில் முதன் முதலா எனவும் சொல்லலாம் என நினைக்கிறேன்.. இந்த இரு பாடல்களும் உங்களுக்காக..

நேற்று வேறு இன்று வேறு

http://www.mediafire.com/listen/53onmi46a2d73ke/NetruVeruIndruVeruVijaya.mp3

மலையரசி சக்தி மீனாட்சி

http://www.mediafire.com/listen/c5wb359tq0p4vhl/MalaiyarasiVijaya.mp3

gkrishna
29th July 2014, 05:56 PM
வாசு சார்
ஒரு சின்ன suggestion
நிறைய பாடல்கள் படங்கள் நிகழ்சிகள் பதிவிடபடுகின்றன
ஒரு index create செய்யலாமா
repeat ஆகாமல் இருப்பதற்கு

RAGHAVENDRA
29th July 2014, 06:10 PM
கிருஷ்ணாஜீ
அன்புத் தலைவன் காலடிச் சுவட்டில் மிகவும் அருமையான பாடல். என்றைக்கும் மனதில் இனிமையூட்டும் பாடல்

RAGHAVENDRA
29th July 2014, 06:12 PM
பிறந்த நாள் பாடல் ... ஈஸ்வரியின் குரலில் நமக்கு வாழ்த்து தரும் பாடல் என்றைக்கும் பொருந்தும்.. இன்றைக்கு பிறந்த நாள் கொண்டாடும் நண்பர்களுக்கு இந்தப் பாடல் மிகவும் பிடிக்கும் எனக் கூறலாம்.

மாளிகையில் மான் குட்டியின் திருநாளாம்..

அத்தை மகள் படத்திலிருந்து..

http://www.inbaminge.com/t/a/Athai%20Magal/

மேலே உள்ள இணைப்பில் ஈஸ்வரியின் சூப்பர் டூப்பர் பாடல் மெல்லிசை மன்னரின் இசையில் ...சொக்கய்யா சொக்கய்யா...

நம்மை சொக்கவைக்கும் குரல் சொக்க வைக்கும் பாடல்... இதையும் கேளுங்கள்..

பாடலின் நடுவில் வரும் ஹஸ்கி வாய்ஸ், கிடாருடன் நம்மை கிறங்க வைக்கும்.. தாளம்.... மிக மிக மிக ... வித்தியாசமாக இருக்கும்..

gkrishna
29th July 2014, 06:20 PM
பிறந்த நாள் பாடல் ... ஈஸ்வரியின் குரலில் நமக்கு வாழ்த்து தரும் பாடல் என்றைக்கும் பொருந்தும்.. இன்றைக்கு பிறந்த நாள் கொண்டாடும் நண்பர்களுக்கு இந்தப் பாடல் மிகவும் பிடிக்கும் எனக் கூறலாம்.

மாளிகையில் மான் குட்டியின் திருநாளாம்..

அத்தை மகள் படத்திலிருந்து..

ஈஸ்வரியின் சூப்பர் டூப்பர் பாடல் மெல்லிசை மன்னரின் இசையில் ...சொக்கய்யா சொக்கய்யா...

பாடலின் நடுவில் வரும் ஹஸ்கி வாய்ஸ், கிடாருடன் நம்மை கிறங்க வைக்கும்.. தாளம்.... மிக மிக மிக ... வித்தியாசமாக இருக்கும்..

வேந்தர் சார்
அத்தை மகள்
நான் ரசித்த பாடல்கள் சார்
நினவு ஊட்டலுக்கு நன்றி

Russellmai
29th July 2014, 06:24 PM
வாசு\இராகவேந்தர் சார்,
பாடல்கள்,பாடல் காணொளிகள்,புகைப்படங்கள்
ஆகியவற்றை இத்திரியில் இணைக்கும் வழிமுறைகளை விளக்க
வாய்ப்பிருந்தால் அதனை வழங்குமாறு வேண்டுகிறேன்.
அன்பு கோபு

vasudevan31355
29th July 2014, 06:38 PM
கலக்கல் ராகவேந்திரன் சார்.

'விஜயா' படத்தைப் பற்றியும், இப்படத்தின் பாடல்களைப் பற்றியும், லஷ்மியின் ஹொட்டேல் ( நன்றி நடிகர் திலகம்) பற்றியும் நாம் சில தின தினங்களுக்கு முன் செல்லி பேசி மகிழ்ந்தது நினைவுக்கு வருகிறது. அருமையான பாடல்கள்.

'நாகரீகம் என் தெய்வம்
புது நடனமே எந்தன் செல்வம்'

நியூவேவ் லஷ்மி அட்டகாசம்.

இப்பாடல் காட்சியில் நாகரீக மகள் லஷ்மியின் தோற்றம். (பிரத்யோகமாக நமது திரிக்கு மட்டும்)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/lashmi.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/lashmi.jpg.html)

Gopal.s
29th July 2014, 06:39 PM
Vasu,

Awaiting your memories on our Acting God in association with you. KCS,Ragavendhar and you are really lucky.

mr_karthik
29th July 2014, 07:01 PM
டியர் ராகவேந்தர் சார்,

'உள்ளத்தை அள்ளித்தா' என்ற சீரீஸில் நீங்கள் அள்ளித்தரும் ஒவ்வொரு பாடலும் அபூர்வமானவையே. ரொம்ப மெனக்கெட்டு தேடித்தேடி கொண்டுவருகிறீர்கள். நாங்க ரொம்ப ஈசியாக என்ஜாய் பண்ணிட்டு போயிடுறோம்.

நமது திரி அபூர்வ பாடல்களின் சேமிப்பு கிடங்காகி வருகிறது.

பாராட்டுக்கள்...

mr_karthik
29th July 2014, 07:04 PM
டியர் வாசு சார்,

நடிகர்திலகத்துடன் தங்கள் நேரடி சந்திப்பு அனுபவம் பற்றி அறியக் காத்திருப்போர் கியூ, நீளமாகத் தொடங்கிவிட்டது...

rajeshkrv
29th July 2014, 08:32 PM
மீண்டும் வருவதற்குள் பக்கங்கள் மள மளவென வளர்ந்துவிட்டது. அடேயப்பா கிருஷ்ணா ஜி, கார்த்திக் ஜி, வாசு ஜி, எஸ்.வி ஜி, ராகவ் ஜி என எல்லோரும் தூள் கிளப்பி விட்டீர்கள்.

வாசு ஜி கன்னட பாடலை நீங்கள் ரசித்தீர்கள் அதனால் இதோ இன்னொன்று .. இது விரகப்பாடால் ஆனால் விரசமில்லாத பாடல்
இதுவும் புட்டண்ணா - எம்.ரங்காராவ் கூட்டணியில் இசையரசியின் குரலில் அருமையான பாடல்

எடகல்லு குட்டத மேலே .. என்ற படம் . பாடல் நாட்டிற்காக சேவை செய்ய சென்றுள்ள கணவனை பிரிந்து வாடும் ஒரு பெண் பாடும் பாடலாக அமைந்த பாடல் .. விஜய நரசிம்மாவின் அற்புத வரிகள் .. எவ்வளவு அழகு.. இயற்கை ரம்மியம் (குடகு மலையில் படப்பிடிப்பு) ..


http://www.youtube.com/watch?v=6qBzZvMiYzQ

rajeshkrv
29th July 2014, 08:54 PM
சில நேரங்களில் ஒரே டியூனை இசையமைப்பாளர்கள் வேறு மொழிகளில் பயன்படுத்துவார்கள்

இதோ அப்படிப்பட்ட பாடல்

முதலில் எம்.எஸ்.வி .. கிருஷ்ண கானம் மிகவும் பிரபலம் அதிலும் இசையரசியின் குரலில் ஒலித்த “குருவாயூருக்கு வாருங்கள் “ பாடல் என்றுமே மறக்க முடியாத பாடல் அதுவும் அந்த “ நாராயண நாராயண ஹரி ஹரி நாராயண “ பேஷ்

அதே மெட்டை எம்.எஸ்.வி மலையாள “ராமு” ஆம் நம் ராமு படம் அங்கே பாபுமோன் என்ற பெயரில் வெளி வந்தது.
பிரேம் நசீர், ஜெயபாரதி , கரண் (ஆம் இப்பொழுது ஹீரோ வில்லனாக நடிக்கிறாரே அவரே தான்) நடித்தது.

இதோ வள்ளுவ நாட்டிலே புள்ளுவத்தி .. இசையரசியின் குரலில் குருவாயூருக்கு வாருங்கள் மெட்டில்


http://www.youtube.com/watch?v=yqSDYLhNvt8

இதே போல் இளையராஜா தனது பிரபல மெட்டான மாஞ்சோலை கிளிதானோ மான் தானோ ‘வை தெலுங்கில் வேறு ஒரு படத்திற்கு
டூயட்டாக மாற்றினார்
ஆம் பஞ்ச பூதாலு திரைப்படத்திற்காக இசையரசியும், பாலுவும் இசைத்த அற்புத பாடல் இதோ...;


http://www.youtube.com/watch?v=FTP91WBivO0

vasudevan31355
29th July 2014, 08:58 PM
நன்றி ராஜேஷ் சார்,

கரும்பு தின்னக் கூலியா? கன்னடக் கரும்பு. சுவைத்து விட்டு வருகிறேன்.

vasudevan31355
29th July 2014, 09:01 PM
ராஜேஷ் சார்,

'தென்னகத்து இசைக்குயிலை'ப் பற்றி எவ்வளவு புகழ்ந்தாலும் திருப்தி என்பதே ஏற்படாது. அவர் பாடிய சூப்பர் டூப்பர் ஹிட்டான பாடல்கள் தென்னக மொழிகளில் கணக்கிலடங்காது. வெகுஜன ரசனைக்குட்பட்ட பல பாடல்கள். சந்தையில் வெளிச்சம் காணாத, குடத்துக்குள் விளக்காகவே ஒளி வீசும் பாடல்களும் ஏராளம். முடிந்தமட்டும் நாம் அவைகளை வெளிக் கொணர்ந்து அந்த இசை மேதைக்கு புகழாரம் செய்வோம்.

அந்த வகையில் இன்று இரண்டு பாடல்கள்.

ஒன்று இன்று வினோத் சார் நிழற்படமாய்ப் பதித்த 'நினைப்பதற்கு நேரமில்லை' படத்திலிருந்து ஒரு மணியான பாடல். 'இன்றைய ஸ்பெஷலா'க வரவேண்டிய பாடல் ராஜேஷ் சாருக்காக 'இரவு ஸ்பெஷலா'கிப் போனது

அத்தான் கடிதம் நல்ல முத்து முத்து
ஆஹா என் அன்புமலர் கொத்து கொத்து
அத்தான் கடிதம் நல்ல முத்து முத்து
ஆஹா என் அன்புமலர் கொத்து கொத்து

அன்றொருநாள் அழகுடனே அருகினில் நின்றேனாம்
ஆசையுடன் அணைக்க வந்தால் ஆளைக் காணோமாம்.
அன்றொருநாள் அழகுடனே அருகினில் நின்றேனாம்
ஆசையுடன் அணைக்க வந்தால் ஆளைக் காணோமாம்.
இன்னொருநாள் என்னைக் கட்டி முத்தம் இட்டாராம்
எழுந்த பின்னே கனவதுவாய் இருக்கக் கண்டாராம்

அத்தான் கடிதம் நல்ல முத்து முத்து
ஆஹா என் அன்புமலர் கொத்து கொத்து

நீர்நிலையின் நெளிவினிலே என்னைக் கண்டாராம்
நெருங்கியதில் இறங்கினாலோ குளிர்ச்சி இல்லையாம்
நீர்நிலையின் நெளிவினிலே என்னைக் கண்டாராம்
நெருங்கியதில் இறங்கினாலோ குளிர்ச்சி இல்லையாம்
அதை விடுத்து நடந்த போது தொடர்ந்து சென்றேனாம்
ஆசையோடு அன்பே என்றான் யாரும் இல்லையாம்

அத்தான் கடிதம் நல்ல முத்து முத்து
ஆஹா என் அன்புமலர் கொத்து கொத்து

இரண்டுநாள் இருக்குதென்றெ ஏங்கி அழைக்கின்றார்
எண்ணத்தால் அன்புடனே என்னுள் நிற்கின்றார்
இரண்டுநாள் இருக்குதென்றெ ஏங்கி அழைக்கின்றார்
எண்ணத்தால் அன்புடனே என்னுள் நிற்கின்றார்

என்னைப் போலே அதிர்ஷ்டசாலி யார் இருக்கின்றார்
என்று வந்து காண்பேன் என்று எழுதி இருக்கின்றார்

அத்தான் கடிதம் நல்ல முத்து முத்து
ஆஹா அன்புமலர் கொத்து கொத்து
அத்தான் கடிதம் நல்ல முத்து முத்து
ஆஹா அன்புமலர் கொத்து கொத்து

சார்! கொன்னுட்டாங்க சார்... பின்னிட்டாங்க.. இன்னும் என்ன சொல்வது!

அத்தான் கடிதம் நல்ல முத்து முத்து
ஆஹா அன்புமலர் கொத்து கொத்து

அந்த இரண்டு வரிகளுடனேயே பயணிக்கும் அந்த 'டொம் டொம்' என்ற டேப் சப்தம் அமர்க்களமோ அமர்க்களம். அதுக்கே கொடுக்கும் காசு செரித்து விட்டது சார். திரும்ப எப்படா முதல் இரண்டு வரிகள் வரும் என்று மனம் ஏங்கும் சார். மாமா மகத்துவம்.

வரிகளைப் பார்த்தீர்களா?

'நீர்நிலையின் நெளிவினிலே என்னைக் கண்டாராம்'

ஒரு பெண்ணின் உடலமைப்பை அவள் உடலின் வளைவு நெளிவுகளை இந்தக் கவிஞன் ஒரே வரியில் பாமரனுக்கும் புரியும்படி அமர்க்களமாய் எழுதி உணர்த்தி விட்டானே.

இந்தக் குயில் இந்தப் பாட்டின் மூலம் நம் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொள்ளும் சார்.


http://www.youtube.com/watch?v=1b-0CNwMrlk&feature=player_detailpage

rajeshkrv
29th July 2014, 09:22 PM
வாசு சார் .. எனக்கு மிகவும் பிடித்த பாடல் .. காணொளி கிடைத்ததில் மகிழ்ச்சி.

அந்த முத்திற்கே முத்துக்களை கொட்டித்தரலாம்

vasudevan31355
29th July 2014, 09:26 PM
அடுத்த பாடல்

இன்னும் பிரமாதம்.

'என் கடமை' படத்தில் விஸ்வநாதன் ராமமூர்த்தியின் மயக்கும் இசையில் சுசீலா அவர்கள் பாடிய

'மீனே மீனே மீனம்மா
விழியைத் தொட்டது யாரம்மா
தானே வந்து தழுவிக் கொண்டு
சங்கதி சொன்னது யாரம்மா
சங்கதி சொன்னது யாரம்மா'

அடா! அடா! அடா!

பல்லவி முடிந்ததம் வரும் அந்த பேஸ் கிடார். சான்ஸே இல்லை.

அதுவும் ஒவ்வொரு முறையும் 'மீனே மீனே மீனம்மா' வை வெவ்வேறு விதமாக பாடி அசத்தும் விந்தை.

முதலில் படிப்படியாக உச்ச ஸ்தாயிக்கு கொண்டு செல்வார்
அப்புறம் அப்படியே அடக்கி வேறு மாதிரி சுருக்கிப் பாடுவார்.
இன்னொரு சமயம் வேறு மாதிரி.

நடுவில் வரும் அந்த 'ஹா ஹா ஹா' ஹம்மிங். ஜென்மம் சாபல்யமடைந்து விடும் சார்.

'தூக்கம் வராமல் தடுத்தவன் அவனம்மா
சொல்லடி சொல்லடி யாரம்மா'

அம்சம். அபிநய சரஸ்வதிக்கு வெகு பொருத்தமாய் பொருந்தும் இவர் குரல். அவரும் நன்றாகவே செய்திருப்பார்.


http://www.youtube.com/watch?v=Nr86B4RpR7o&feature=player_detailpage

rajeshkrv
29th July 2014, 09:29 PM
அய்யோ .. இசையரசியின் குரலும் அபி நயசரஸ்வதியின் குறும்பும் வேறேன்ன வேறேன்ன வேண்டும் ...மிகச்சிறந்த கூட்டணி இது தான் (என் டாப் பேவரிட்)

vasudevan31355
29th July 2014, 09:39 PM
//சில நேரங்களில் ஒரே டியூனை இசையமைப்பாளர்கள் வேறு மொழிகளில் பயன்படுத்துவார்கள்//

அருமை. ஆமாம். எப்படி ஒன்று விடாமல் இவ்வ்ளோவ் ஞாபகம் வைத்துள்ளீர்கள்? அதுவும் தமிழிலிருந்து பிற மொழிகள், நேரடி மாற்றம்,மொழி மாற்றுப் பாடல்கள் வரை. புகழ்ச்சிக்கு சொல்லவில்லை... நிஜமாகவே நீங்க ஒரு ஆச்சரியம் சார்.

vasudevan31355
29th July 2014, 10:02 PM
'Jagadeka Veerudu Atiloka Sundari'

ராஜேஷ் சார்,

மிகுந்த பொருட்செலவில் சிரஞ்சீவி ஸ்ரீதேவி நடித்த படம். நம் இளைய ராஜா இசை.

இதில் படத் துவக்கத்தில் ஸ்ரீதேவி 'காதல் தேவதை'யாய் (தமிழ் டப்பிங் பெயரும் அதுதான்) பூமியில் வந்திறங்க சிரஞ்சீவி அவரை பாலோ பண்ணுவார். அப்போது அருமையான ஒரு பாடல்.

பாலாவும், ஜானகியும் என்று நினைக்கிறேன்.

'அந்தாலலோ அஹோ மஹோதயம்
பூலோகமே நவோதயம்'

ரொம்ப இனிமையாய் இருக்கும் சார்.

தமிழிலும் அருமையாக கொடுத்திருப்பார்கள். தமிழுக்குத் தக்கவாறு சிறப்பான மொழி பெயர்ப்பு.


'கண்கண்டதோ எதோ மகோற்சவம்
பூலோகமே நல்லோவியம்
பூவும் பொன்போல் பொலிகின்ற நேர்த்தியோ
நெஞ்சில் என்ன கும்மாளம் காட்சியோ
இங்கே கண்டேன் அழகின் விலாசமே'.

தெலுங்கு பாடலைப் பார்ப்போம். ஸ்டுடியோவில் ஏக ரகளை செட்டெல்லாம் போட்டு பணத்தை பொரியாய் இறைத்து செலவு பண்ணியிருப்பார்கள். பாடல் நல்ல இனிமை



http://www.youtube.com/watch?v=g3MFxLZM87A&feature=player_detailpage

rajeshkrv
29th July 2014, 10:33 PM
வாசு இசையரசியின் பல மொழி பாடல்கள் கேட்பதால் வந்த விளைவு. பாராட்டும் அளவிற்கு ஒன்றும் இல்லை

ஜெகதேக வீருடு அதிரூப சுந்தரி என்று நினைக்கிறேன். ஆம் பாடல்கள் அனைத்தும் அருமை. நம்ம மதுர மரிக்கொழுந்து வாசமும் உண்டு


இதோ பெண்டியாலா லேசாக மாற்றம் செய்த நம் முத்துக்களோ கண்கள்


https://www.youtube.com/watch?v=ACg4jPy0w1s

vasudevan31355
29th July 2014, 10:46 PM
ஆமாம் ராஜேஷ் சார்.

இப்போதுதான் பார்க்கிறேன். மைசூர் பிருந்தாவனம் அட்டகாசமாய் இருக்கிறது. ஜமுனா ரொம்ப குண்டம்மாவாத் தெரிகிறார். ஏ.என்.ஆர் வழக்கம் போல் அதே ஸ்டைல். எப்படி ஆனால் என்ன? சுசீலாம்மாவின் குரல் எல்லாவற்றையும் மறக்கச் செய்து விடுமே.

vasudevan31355
29th July 2014, 10:50 PM
ராஜேஷ் சார் இந்தப் பாடலைப் பாருங்கள். பாலாவும், இசையரசியும் பாடுவார்கள்.

என்.டி.ஆரின் 'சிம்ஹ பாலுடு' படத்தில் அவரும், வாணிஸ்ரீயும் நம் 'வான் நிலா நிலா அல்ல' பாடலை 'ஓ..செலி சலி' என்று பாடுவதைப் பாருங்கள். திரும்ப அது 'சிம்மக் குரல்' என்று தமிழில் 'டப்' செய்யப்பட்டு மூலம் திரும்ப 'ஓர் கனி கனி' என்று நம்மகிட்டேயே எதிரொலித்தது. (நம் கிருஷ்ணா சாருக்கு ரொம்பப் பிடிக்கும் என்று நினைக்கிறேன்).

தெலுங்கில் இசையரசி அற்புதமாகப் பாடியிருக்கிறார். ஸோ.. 'வான் நிலா'வையும் விட்டு வைக்கவில்லை இசையரசி


http://www.youtube.com/watch?v=g1F2Oc80Svo&feature=player_detailpage

RAGHAVENDRA
29th July 2014, 10:53 PM
சில பாடல்களை கேட்கும் போது, ஆஹா.. எத்தனை நாளாச்சு இந்தப் பாட்டை என்று எண்ணி மனம் குதூகலித்தவாறே ரசிக்கத் தொடங்கி விடுவோம். அப்படி ஒரு பாடல், இசையரசி பாடிய இந்தப் பாடல். சங்கர் கணேஷ் இசையில் இசைக்குயிலின் குரலில் கண்ணருகே வெள்ளி நிலா ஏன் வராது?

http://www.youtube.com/watch?v=JC0CB-Jj8nY

vasudevan31355
29th July 2014, 10:55 PM
ஜெகதேக வீருடு அதிரூப சுந்தரி என்று நினைக்கிறேன். ஆம் பாடல்கள் அனைத்தும் அருமை. நம்ம மதுர மரிக்கொழுந்து வாசமும் உண்டு

'நமக்குள் ஏன் அன்பே அன்பே வாட்டம்... இங்கு நிக்காது சின்னப் பெண்ணின் ஆட்டம்' என்று நம்ம 'மதுர மரிக்கொழுந்து வாசம்' மீண்டும் மாறிப் போனது

RAGHAVENDRA
29th July 2014, 10:55 PM
இசையரசியின் குரலில் இது வானொலியில் ஒலிபரப்பிய போது கேட்டது. இப்போது மீண்டும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.

செல்வங்கள் ஓடி வந்தது...

டாக்டரம்மா படத்திலிருந்து மீண்டும்...

http://www.inbaminge.com/t/d/Doctoramma/

RAGHAVENDRA
29th July 2014, 11:00 PM
கிருஷ்ணாஜி விரும்பிய புதிய மனிதன் திரைப்படப் பாடல்..

நான் சொல்ல வந்தேன் கல்யாண சேதி..

ஜானகி ஸ்ரீராமனின் காதல் நாயகி அல்லவோ... இந்த வரிகளால் தான் இந்தப் பாடல் ஹிட்டாயிற்று...

உபயம்... வழக்கம் போல் சிலோன் ரேடியோதான்...

http://www.inbaminge.com/t/p/Puthiya%20Manithan/

vasudevan31355
29th July 2014, 11:00 PM
http://cdn.7static.com/static/img/sleeveart/00/034/730/0003473098_500.jpg

'நமக்குள் ஏன் அன்பே அன்பே வாட்டம்... இங்கு நிக்காது சின்னப் பெண்ணின் ஆட்டம்'

http://ie.7digital.com/artist/ilaiyaraaja-%281%29/release/kaadhal-devathai-original-motion-picture-soundtrack

vasudevan31355
29th July 2014, 11:01 PM
இசையரசியின் குரலில் இது வானொலியில் ஒலிபரப்பிய போது கேட்டது. இப்போது மீண்டும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.

செல்வங்கள் ஓடி வந்தது...

டாக்டரம்மா படத்திலிருந்து மீண்டும்...



அருமையான பாடல். காலையில் கூட கேட்டேன் ராகவேந்திரன் சார்.

RAGHAVENDRA
29th July 2014, 11:03 PM
சங்கர் கணேஷின் இசைப் புலமைக்கும் திறமைக்கும் உதாரணாய் விளங்கும் படங்களில் ஒன்று சொர்க்கத்தில் திருமணம்...

அதுவும் இந்தப் பாடல் பாடகர் திலகமும் இசையரசியும் போட்டி போட்டுக் கலக்கும் பாடல்...

நான் பாடினால் மயக்கம் வரும் என் பாடல் இனிமை தரும்.. இசையரசிக்கு பொருத்தமான வரிகள் அல்லவோ..

http://www.inbaminge.com/t/s/Sorgathil%20Thirumanam/

உடனே பாடகர் திலகம் விட்டு விடுவாரா என்ன.. அல்லது இந்த வரிகள் அவருக்கு மட்டும் பொருந்தாதா என்ன...

vasudevan31355
29th July 2014, 11:05 PM
'நான் சொல்ல வந்தேன் நலமான செய்தி
வைகாசி மாதம் கல்யாணத் தேதி

ஜா...னகி (பாலா இழுவை அருமை) ஸ்ரீராமனின்
காதல் நாயகி அல்லவோ'

ஐயோ! பட்டை கிளப்பும் பாடல்.

RAGHAVENDRA
29th July 2014, 11:08 PM
எம். பி. ஸ்ரீநிவாசன் இசையமைத்த பாடல்கள் என்றாலே தனிச் சிறப்பு உண்டு. ஒன்று கூட சோடை போனதில்லை. குறிப்பாக தாகம் படத்தில் இந்தப் பாடல் சென்னை வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பப்பட்டது. எம்.பி.எஸ்.வானொலிக் கலைஞர் என்பதாலோ என்னவோ சிலோன் ரேடியோவை நம் வானொலி நிலையம் முந்திக் கொண்டது. முத்துராமன் குரலும் இடையே ஒலிக்கும் இப்பாடல் மிகச் சிறப்பாக இருக்கும் காரணம் அதில் அவ்வப்போது இடம் பெறும் கோரஸ் குரல்கள். வீணையிசை நாதஸ்வரம் எல்லாம் சேர்ந்து நம்மை பரவசமூட்டும்.

நீண்ட நாட்களுக்குப் பின் தாகம் திரைப்படத்திலிருந்து வானம் நமது தந்தை பாடலைக் கேட்போமா..

http://www.inbaminge.com/t/t/Thaagam/

RAGHAVENDRA
29th July 2014, 11:11 PM
நான் சொல்ல வந்தேன் ... வாசு சார் நீங்கள் முந்திக் கொண்டீர்கள் ...

பால் நிலவு நேரம் பார்க்க வில்லை யாரும்...

இந்தப் பாட்டைக் கேட்போமா...

http://www.inbaminge.com/t/a/Anbu%20Roja/

அன்பு ரோஜா படத்திலிருந்து இரவு வேளைக்கு சரியான பாடல்..

vasudevan31355
29th July 2014, 11:13 PM
'மனித இனத்தில் பிறப்பதற்கு?'

http://www.inbaminge.com/t/t/Thaagam/folder.jpg

முத்துராமன் கேள்விக் குரல்

RAGHAVENDRA
29th July 2014, 11:13 PM
இசையரசி பட்டையைக் கிளப்பும் பாடல்...

நீ இல்லாமல் நானில்லை.. நீரில்லாமல் மீனில்லை..

சங்கர் கணேஷின் சூப்பர் பின்னணி இசையில் கேட்கத் தெவிட்டாத பாடல்..

இதுவும் அன்பு ரோஜா படத்திலிருந்து தான்

http://www.inbaminge.com/t/a/Anbu%20Roja/

vasudevan31355
29th July 2014, 11:17 PM
அன்பு ரோஜா படத்திலிருந்து இரவு வேளைக்கு சரியான பாடல்..

:):):):):):):):)

rajeshkrv
29th July 2014, 11:26 PM
ஜமுனா குண்டா இருந்தாலும் அழகு... அதேபோல் சத்யபாமா பாத்திரத்தை அவரைத்தவிர யார் செய்தாலும் ஹும் ஹூம்

இதோ .. கிருஷ்ணதுலாபாரம் என்ற படத்தில் பெண்டியாலாவின் இசையில் இசையரசியின் கம்பீரமான பாடல்
ஜமுனாவின் அற்புதமான நடிப்பு..

மிரஜால கலடா .. என்னை விட்டு எங்கேடா போவாய் கண்ணா என கர்வத்தோடு பாடுவதாக அமைந்த பாடல் .. இதெல்லாம் தெலுங்கு பொக்கிஷங்கள்


https://www.youtube.com/watch?v=8FhCidIeXlc


https://www.youtube.com/watch?v=smseJ5meuio

rajeshkrv
29th July 2014, 11:29 PM
வாசு சார் .. ஓ செலி பாடல் அற்புதம்... ஆஹா ஓஹோ

அதே போல் ஹிந்தியில் மிகப்பெரிய ஹிட் பாடலான ஓ சாதி ரே வின் தெலுங்கு வடிவம்


https://www.youtube.com/watch?v=oprCDCVky64

RAGHAVENDRA
30th July 2014, 06:54 AM
பொங்கும் பூம்புனல்

நன்றாக வாழ வேண்டும்.. தமிழர் ஒன்றாக வாழ வேண்டும்... 60 ஆண்டுகளுக்கு முன் கே.என். தண்டாயுத பாணி பிள்ளை இசையமைத்து இதே நாளில் வெளியான நடிகர் திலகத்தின் உன்னத நடிப்பில் புதிய பரிமாணமாக வில்லன் வேடத்திலும் கொடி கட்டிப் பறந்த துளி விஷம் படத்தில் இடம் பெற்ற இப்பாடலின் வரிகள் பாடலாசிரியரின் கனவை பிரதிபலித்தது. இன்றும் இது கனவாகவே இருக்கிறது.. இப்பாடல் வரிகள் நனவாக வேண்டும் என்ப்தே நம் அனைவரின் விருப்பமாகும்.

http://www.youtube.com/watch?v=EZW9GegPiNY

RAGHAVENDRA
30th July 2014, 07:01 AM
பொங்கும் பூம்புனல்

அம்மா. இப்படத்தில் இடம் பெற்ற இப்பாடல் கிட்டத் தட்ட தினமும் சிலோன் ரேடியோவில் ஒலிபரப்பாகும்.

இது ரகசியம்... இதை யாரோடும் சொல்லக் கூடாது நீ... இதை நான் சொல்ல வில்லை.. இந்தப் பாடலின் பல்லவி..

http://www.youtube.com/watch?v=3Fd2ARd5Au0

குரல்கள் - டி.ஏ. மோதி, ஞானம்மா டேவிட்.

RAGHAVENDRA
30th July 2014, 07:04 AM
பொங்கும் பூம்புனல்

தாய் உள்ளம் திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் பூச்செண்டு நீ, பொன் வண்டு நான்.

ஹா..ஹா... ஹா...

டி.ஏ.மோதியும் ஜெயலக்ஷ்மியும் பாடும் இப்பாடல் நிச்சயம் நம் உள்ளங்களைக் கொள்ளை கொள்ளும்.

http://www.youtube.com/watch?v=wDJ8ZBeviBc

RAGHAVENDRA
30th July 2014, 07:08 AM
பொங்கும் பூம்புனல்

இசை மேதை ஜி.ராமநாதன் அவர்கள் வேற்று மொழி மெட்டினைப் பயன்படுத்த விரும்பாதவர். ஆனால் இந்தப் பாடலை இந்த மெட்டில் தான் வேண்டும் என படத்தயாரிப்பு சம்பந்தப்பட்டவர்கள் கூறி வற்புறுத்தி இடம் பெறச் செய்ததாக அந்த காலத்தில் பேச்சு உண்டு. ஆனால் இந்தப் பாடல் சூப்பர் ஹிட்டானதென்னமோ உண்மை. கல்யாணிக்குக் கல்யாணம் திரைப்படத்தில் இடம் பெற்ற இந்த மாநிலத்தைப் பாராய் மகனே பாடல் இசையரசிக்கும் பி.பி.எஸ்சுக்கும் நிலையான புகழைத் தந்த பாடல்களில் ஒன்று.

http://www.youtube.com/watch?v=5D5LBMaKjgM

பாடல் வரிகள் பட்டுக்கோட்டையார்

RAGHAVENDRA
30th July 2014, 07:11 AM
பொங்கும் பூம்புனல்

http://www.youtube.com/watch?v=V87vGSbKRGk

பொங்கும் பூம்புனலாய் என்றும் புதியதாக ஆங்கிலத்தில் FRESHNESS என்போமே அது போல் திகழும் பாடல். நடிகர் திலகத்தின் ஸ்டைலான தோற்றத்தில் மயக்க வைக்கும் இப்பாடல் பாடகர் திலகத்துடன் யூ.ஆர். ஜீவரத்னம் அவர்கள் பாடிய மறக்க வொண்ணா பாடல்.

இதைக் கேட்டும் தென்றல் வரவில்லையென்றால்..

.
.
.
.
.

என்ன பண்றது எங்கே வருகிறதோ அங்கே போக வேண்டியது தான் என்கிறீர்களா...

vasudevan31355
30th July 2014, 08:04 AM
பொங்கும் பூம்புனல் வரிசையில் நீங்கள் அளிக்கும் பாடல்கள் ஒவ்வொன்றும் முத்துக்கள் ராகவேந்திரன் சார். அற்புதம். காலை களை கட்டுகிறது.

vasudevan31355
30th July 2014, 08:07 AM
Mr. Vasudevan

I am keenly watching this thread for all of your enjoyable description of every song, most of them are very rare, but excellent in quality.

The valuable efforts of yours and fellow hubbers Mr. Krishna, Mr. Rajesh, Mr. esvee, Mr. Karthik, Mr. Raghavndiran, Mr. Madhu and Mr. Gopal are very very nice and appreciable.

Your 'today special' songs are very very nice. Now I am learning more and more about old hidden songs.

Thanks to all and continue with same spirit.

stl

மிக்க நன்றி ஸ்டெல்லா மேடம். தங்கள் மனம் நிறைந்த பாராட்டுகள் இன்னும் உற்சாகமாய் எங்களை ஊக்குவிக்கின்றன. தங்கள் ரசிப்புத்தன்மை பாராட்டுக்குரியது . அடிக்கடி பங்கு கொள்ளுங்கள்.

Richardsof
30th July 2014, 08:30 AM
VASU SIR

http://i57.tinypic.com/k9tn49.jpg

Richardsof
30th July 2014, 08:41 AM
http://i60.tinypic.com/4j121j.jpg

Richardsof
30th July 2014, 08:43 AM
OUR GREATEST OLDEN DAYS LOVER '' RADIO'' IN 1960'S

http://i61.tinypic.com/1zb88si.jpg

Richardsof
30th July 2014, 08:45 AM
http://i58.tinypic.com/2nv78lk.jpg

RAGHAVENDRA
30th July 2014, 08:53 AM
இசையமைப்பாளர் சம்பத் செல்வன் பற்றி சில பக்கங்களுக்கு முன் பதிவுகள் பரிமாறிக் கொள்ளப் பட்டன. அதன் தொடர்ச்சியாக.

சம்பத் செல்வன் என்பது இரண்டு பேர். இருவருமே குலதெய்வம் ராஜகோபால் அவர்களின் புதல்வர்கள். சம்பத் செல்வன் இருவருமே இணைந்து ஓடங்கள் படத்தில் அறிமுகமானார்கள். இதனைத் தொடர்ந்து துளசி படத்திற்கும் அவர்களையே தயாரிப்பாளர் இசையமைக்கப் பணித்தார்.

இன்னொரு படம் அவர்கள் பணிபுரிந்து கொண்டிருந்த போது சம்பத் அ செல்வன் இருவரில் ஒருவர் விபத்தில் காலமாகி விட்டார். இன்னொரு புதல்வர் அந்தப் படங்களை முடித்துக் கொடுத்தார்.

சில ஆண்டுகளுக்கு முன் அவரிடம் உரையாடிக்கொண்டிருந்த போது அவர் சொன்ன தகவல்

Richardsof
30th July 2014, 08:54 AM
http://youtu.be/wi-G7fvgZ7g

vasudevan31355
30th July 2014, 08:56 AM
இன்றைய ஸ்பெஷல் (42)

'துளி விஷம்' (30-07-1954) ஒரு நினைவுப் பாடல்.

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4199a.jpg

'துளி விஷம்' படத்தில் நடிகர் திலகத்தின் அட்டகாச முத்திரைகளோடு நம்மை மயக்கும் பாடல்.

சங்கீதம்- கே.என்.தண்டாயுதபாணி பிள்ளை

திரைக்கதை, வசனம், இயக்கம்: ஏ.எஸ்.ஏ.சாமி.

தயாரிப்பு-வி.எல்.நரசு

அரண்மனை நர்த்தகி அங்கயற்கண்ணி என்கிற அங்கா (பி.கே.சரஸ்வதி) தான் காதலித்து அதை மறுத்த சந்திரனைப் (கே.ஆர். ராமசாமி) பழி வாங்க நடிகர் திலகத்தை (கற்பக நாட்டு மன்னன் சூரியகாந்தன்) பயன்படுத்தி அவரைக் காதலிப்பதாக நடிக்கும் போது வரும் அந்த மறக்க முடியாத பாடல்

'என்னை அறியாமல் பெருகுது இன்பம்தான்'.

அங்கா நாட்டியமாட, ஒவ்வொரு வரிக்கும் நடிகர் திலகம் சேரில் அமர்ந்து கனிகளை உண்டபடி தரும் முகபாவங்களுக்கு கோடி கோடியாய்க் கொட்டிக் கொடுத்தாலும் ஈடாகாது. இரு தோள்பட்டைகளையும் முன் பக்கம் வெட்டி, வெட்டி அசைத்து, 'பருவம் நல்ல உருவம்' வரிகளின் போது தலையை ஒருமாதிரி ஆட்டி ரசிக்கும் அழகை எப்படி வர்ணிக்க முடியும்? பாட்டில் வரும் வரிகள் இவர் புகழ் பாடும் போது முகத்தில் காட்டும் அந்த பெருமை கலந்த சிரிப்பு, கிட்டாத கனி கிட்டி விட்டதே என்ற பூரிப்பு, வந்த காரியம் நிறைவேறாமல் போனால் கூட இந்த காரியம் நிறைவேறி விட்டதே என்ற பூரண திருப்தி என்று அமுத விருந்தை அழகாய்ப் படைக்கும் நேர்த்தி.

'துளி விஷம்' படத்தில் நடிகர் திலகத்தின் அட்டகாச முத்திரைகளோடு நம்மை மயக்கும் பாடல்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/VTS_02_2VOB_002366736.jpg

அறியாமல்
என்னை அறியாமல் பெருகுது இன்பம்தான்
என்னை அறியாமல் பெருகுது இன்பம்தான்
வசந்தமும் தென்றலும்
வசந்தமும் தென்றலும் இசைந்தது போல
என்னை அறியாமல் பெருகுது இன்பம்தான்

அழகு முகத்தில் குளிர்ந்த நிலவைக் கண்டேனே
பழகும் விதத்தில் பாயின் சுவையைக் கண்டேனே
பருவம் நல்ல உருவம் கண்டு பரவசம் கொண்டேனே
பருவம் நல்ல உருவம் கண்டு பரவசம் கொண்டேனே

என்னை அறியாமல் பெருகுது இன்பம்தான்
என்னை அறியாமல் பெருகுது இன்பம்தான்

கற்பனையில் கண்ட அற்புதமும் நீயே
கருத்தில் என்றும் நிறைந்திருக்கும் காதல் தெய்வம் நீயே
ஆ ஆ..................அ அஹ்ஹாஹ்ஹா லல்லலல்லலல்லலா
கற்பனையில் கண்ட அற்புதமும் நீயே
கருத்தில் என்றும் நிறைந்திருக்கும் காதல் தெய்வம் நீயே

மலர்க்கணைகள் தூவும் மன்மதனைப் போலே
மலர்க்கணைகள் தூவும் மன்மதனைப் போலே
பருவம் நல்ல உருவம் கண்டு பரவசம் கொண்டேனே
பருவம் நல்ல உருவம் கண்டு பரவசம் கொண்டேனே

மேற்கண்ட நான்கு வரிகளில் நடிகர் திலகத்தின் முகவெட்டுகளைக் கவனியுங்கள். (மவனே! ஒருத்தரும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது)

என்னை அறியாமல் பெருகுது இன்பம்தான்

லல்லல் லலலல்லா லாலலலல்லல்லா

வசந்தமும்

தென்றலும்

வசந்தமும் தென்றலும் இசைந்தது போல

என்னை அறியாமல் பெருகுது இன்பம்தான்

லல்லல் லலலல்லா லாலலலல்லல்லா


http://www.youtube.com/watch?feature=player_embedded&v=peD-t2sD6-Q

நடிகர் திலகம் பாகம் 11 திரியில் 'துளிவிஷம்' பற்றிய என்னுடைய விரிவான ஆய்வைப் படிக்க கீழே சொடுக்கவும்.

http://www.mayyam.com/talk/showthread.php?10385-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-11/page244

rajeshkrv
30th July 2014, 09:11 AM
ராகவ் ஜி, எஸ்.வி ஜி, வாசு ஜி அருமை அருமை .. பொங்கும் பூம்புனல் அருமை அருமை

வாசு சார் மிரஜால கலடா பாடலை கேளுங்கள் .. இசையரசி இசை ராஜாங்கமே நடத்துவார்.

--------------------

இளையராஜா ஆரம்ப காலங்களில் மிகவும் பிரமாதமான மெட்டுக்களை நமக்கு தந்தார்
அப்படி ஒரு பாடல் இதோ இசையரசியின் குரலில் சுஜாதாவின் அளவான அற்புத நடிப்பு


https://www.youtube.com/watch?v=q4oeYOBffNM

vasudevan31355
30th July 2014, 09:39 AM
நான் ரொம்ப ரசிக்கும் பாடல் ராஜேஷ் சார்.

vasudevan31355
30th July 2014, 09:42 AM
ராஜேஷ் சார்

அந்த சிறுமி நடிகை நித்யாதானே

vasudevan31355
30th July 2014, 09:51 AM
//இளையராஜா ஆரம்ப காலங்களில் மிகவும் பிரமாதமான மெட்டுக்களை நமக்கு தந்தார்//

ராஜேஷ் சார்,

'சுசீலா என்று சொல்லும் போதிலே
ஸ்வீட் வந்து பாயுது காதினிலே'

இந்தப் பாட்டு நம்மை வாழ்நாள் அடிமையாக்கிவிடும் சார்.

'தேனில் ஆடும் ரோஜா
பூந்தென்றல் ஆடக் கண்டேன்
என் நெஞ்சம் பொன்னூஞ்சல் ஆடக் கண்டேன்
இரு கண்ணில் எனை ஆளும் மணிவண்ணா
பல்லாண்டு பாடக் கண்டேன்
சொர்க்கத்தை உன்னாலே நேரில் கண்டேன்'

'அவர் எனக்கே சொந்தம்' திரைப்படத்தில் அதே இளையராஜா இசையில். இன்னிசை தேவதையின் இன்பக் குரலில்

என்ன மியூசிக்! என்ன பாடல்! என்ன இனிமை! என்ன குரல்! 'இளமை ஒய்.விஜயா.

அவ்வளவுதான். இன்றைய நாள் அம்பேல்.


http://www.youtube.com/watch?v=QnjozHHROOE&feature=player_detailpage

rajeshkrv
30th July 2014, 09:55 AM
வாசு ஜி
ஆம் நித்யாவே தான்.. தமிழை விட தெலுங்கில் சம்யுக்தா என்ற பெயரில் தூள் கிளப்பினார்.

தேனில் ஆடும் ரோஜா .. ரோஜா மட்டுமா குரலும் தானே தேனில் ஆடுகிறது . என்ன இனிமை என்ன அருமையான பாடல் ..

vasudevan31355
30th July 2014, 10:38 AM
சிவா சார்,

அம்சமான, 'மோட்டார் சுந்தரம் பிள்ளை' நூறு நாட்கள் ஓடிய விளம்பரத்தைப் பதித்து தூள் கிளப்பி விட்டீர்கள். தங்களுக்கு என் மகிழ்ச்சியான நன்றி இங்கிருந்தாலும், எங்கிருந்தாலும்.

vasudevan31355
30th July 2014, 11:41 AM
வினோத் சார்.

அட்டகாசம் போங்கள். எங்கள் கடலூரின் தியேட்டர் விவரங்கள் பற்றிய ஆவணம் பார்த்ததில் பெருமகிழ்ச்சி. அப்போது பாடலி, முத்தையா, நியூ சினிமா என்று 3 திரை அரங்குகளே இருந்தன. அப்புறம் வந்ததுதான் பாபு, (பின்னால் ரமேஷ் அப்புறம் பாலாஜி) கமலம், வேல்முருகன், கிருஷ்ணாலையா போன்றவை.

முத்தையா இட எண்ணிக்கை பார்த்தீகளா

அது முன்னால் மணிலா குடோனாக இருந்தது. இப்போது பாழடைந்து விட்டது. பாடலி குளோஸ்.

மிக்க நன்றி வினோத் சார்.

gkrishna
30th July 2014, 11:44 AM
ராஜேஷ் சார் இந்தப் பாடலைப் பாருங்கள். பாலாவும், இசையரசியும் பாடுவார்கள்.

என்.டி.ஆரின் 'சிம்ஹ பாலுடு' படத்தில் அவரும், வாணிஸ்ரீயும் நம் 'வான் நிலா நிலா அல்ல' பாடலை 'ஓ..செலி சலி' என்று பாடுவதைப் பாருங்கள். திரும்ப அது 'சிம்மக் குரல்' என்று தமிழில் 'டப்' செய்யப்பட்டு மூலம் திரும்ப 'ஓர் கனி கனி' என்று நம்மகிட்டேயே எதிரொலித்தது. (நம் கிருஷ்ணா சாருக்கு ரொம்பப் பிடிக்கும் என்று நினைக்கிறேன்).

தெலுங்கில் இசையரசி அற்புதமாகப் பாடியிருக்கிறார். ஸோ.. 'வான் நிலா'வையும் விட்டு வைக்கவில்லை இசையரசி



http://www.inkakinada.com/movie/movie_image/629/medium/DSCN0975.jpghttp://www.aptalkies.com/modules/gallery/galleries/Movies/Simha%20Baludu%20(1978)/covers/thumbs/Simha%20Baludu%20(1978)%20Audio%20EPLP%20Gramphone %20Record%20Covers_aptalkiesEF65CD-B6732E.jpg

சூப்பர் வாசு சார்

நேற்று இரவே படித்தேன் உடன் பதில் இட முடியவில்லை .
இன்று காலை கொஞ்சம் சொந்த அவசர ஜோலி வேறு ஒன்று இல்லை income டக்ஸ் certificate form 16 problem
income இருக்கோ இல்லையோ income tax உண்டு

அப்படியே அந்த 'சிம்ஹ பெல்லுடு' படத்தில் ஜெயமாலினி நடன பாடல்
'சன்ன ஜாஜுலோ' தமிழ் சிங்க நாதத்தில் 'என்ன போதையோ கன்னி போதையோ ' மீண்டும் இதே இசை கோர்வையில் 'சக்தி என்னடா உன் புத்தி என்னடா ' nadigar thilagam இமயம் திரை படத்தில்


http://www.youtube.com/watch?v=0GxbXUzmFSw

gkrishna
30th July 2014, 11:51 AM
//இளையராஜா ஆரம்ப காலங்களில் மிகவும் பிரமாதமான மெட்டுக்களை நமக்கு தந்தார்//

ராஜேஷ் சார்,

'சுசீலா என்று சொல்லும் போதிலே
ஸ்வீட் வந்து பாயுது காதினிலே'

இந்தப் பாட்டு நம்மை வாழ்நாள் அடிமையாக்கிவிடும் சார்.

'தேனில் ஆடும் ரோஜா
பூந்தென்றல் ஆடக் கண்டேன்
என் நெஞ்சம் பொன்னூஞ்சல் ஆடக் கண்டேன்
இரு கண்ணில் எனை ஆளும் மணிவண்ணா
பல்லாண்டு பாடக் கண்டேன்
சொர்க்கத்தை உன்னாலே நேரில் கண்டேன்'

'அவர் எனக்கே சொந்தம்' திரைப்படத்தில் அதே இளையராஜா இசையில். இன்னிசை தேவதையின் இன்பக் குரலில்

என்ன மியூசிக்! என்ன பாடல்! என்ன இனிமை! என்ன குரல்! 'இளமை ஒய்.விஜயா.



சுசீலா அம்மாவின் ஆல் டைம் favourite சாங் வாசு சார் ராஜேஷ் சார்

இந்த பாடலும் 'தேவன் திருச்சபை மலர்களே' இரண்டுமே கலந்து கட்டும் பாடல்

vasudevan31355
30th July 2014, 11:56 AM
//இன்று காலை கொஞ்சம் சொந்த அவசர ஜோலி வேறு ஒன்று இல்லை income டக்ஸ் certificate form 16 problem//

மத்தியானம் ஷிப்ட் போய் நான் படணும்.

Gopal.s
30th July 2014, 12:17 PM
அவர் எனக்கே சொந்தம் படத்தில் என்னுடைய பிடித்தம் "ஒரு வீடு இரு உள்ளம்".அருமையான படம்.

mr_karthik
30th July 2014, 12:24 PM
டியர் வாசு சார்,

இன்றைய ஸ்பெஷலாக வர நினைத்து இரவு ஸ்பெஷலாக மாறிவிட்ட 'அத்தான் கடிதம் நல்ல முத்து முத்து' (நினைப்பதற்கு நேரமில்லை) பாடல் பல பழைய நினைவுகளை கிளறிவிட்டது. மாமாவின் பாடல்கள் எப்போதும் ரிதம் செக்ஷனில் சற்று தூக்கலாக நிற்கும் என்பதற்கு இதுவும் ஒரு சான்று. இதுவும் இலங்கை வானொலி ஹிட் என்று ஒவ்வொருமுறையும் சொல்லத்தேவையில்லைஎன்பதால் தவிர்க்கிறேன்.

'இங்கு செய்யப்பட்டிருக்கும் பலகாரங்கள் அசல் நெய்யினால் செய்யப்பட்டவை அல்ல' என்று ஹோட்டல் முன் போர்டு போடுவதைப் போல 'இங்கு பதியப்படும் பாடல்கள் இலங்கை வானொலியால் பிரபலமானவை' என்று நமது திரியிலும் ஒரு போர்டு வைத்து விடலாம்.

இசையரசியின் இந்தப்பாடலைப்போல இன்னொரு அருமையான பாடல், 'மணப்பந்தல்' படத்தில், விஸ்வநாதன் வெளியில் உட்கார்ந்து வெற்றிலை போட்டுக்கொண்டிருக்கும்போது ராமமூர்த்தி மட்டும் ட்யூன் போட்ட (சில நண்பர்களை எதையெல்லாம் சொல்லி மகிழ்விக்க வேண்டியுள்ளது) இசையரசி அருமையாகப்பாடிய

உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன்
அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லிவிடாதே
எனக்கு மட்டும் எனக்கு மட்டும் சொந்தமல்லவா
எங்கள் இருவருக்கும் இயற்கை தந்த பந்தமல்லவா

இது ஈ.வி.சரோஜாவுக்காக பாடியது...
இதே படத்தில் சரோஜாதேவிக்காக பாடிய பாட்டு

ஒரே ராகம் ஒரே தாளம் ஒரேகானம் பாடுதம்மா

தவிர பி.பி.எஸ்ஸுடன் இணைந்து சரோஜாதேவி - எஸ்.எஸ்.ஆர். ஜோடிக்காக பாடிய சூப்பர் டூயட்...

பார்த்து பார்த்து நின்றதிலே பார்வையிழந்தேன் - நீ
பாடும் மொழி கேட்டதிலே வார்த்தையிழந்தேன்

இதுபோக அசோகனுக்கு ஒரு தத்துவப்பாடல், அதே பி.பி.எஸ் குரலில்

உடலுக்கு உயிர் காவல்
உலகுக்கு ஒளி காவல்

(வீடுவரை உறவு வரும்வரை இதுதான் அசோகனின் ஹிட் ஸாங்).

vasudevan31355
30th July 2014, 12:44 PM
அவர் எனக்கே சொந்தம் படத்தில் என்னுடைய பிடித்தம் "ஒரு வீடு இரு உள்ளம்".அருமையான படம்.

agree. but next to 'thenil aadum roja'.


http://www.youtube.com/watch?v=4RmHJPJxHh0&feature=player_detailpage

mr_karthik
30th July 2014, 12:44 PM
இயக்குனர் முக்தா சீனிவாசனும் ஒரு பாட்டு ராசிக்காரர். விஸ்வநாதன் ராமமூர்த்தி, அல்லது விஸ்வநாதன் தனியாக, அல்லது ராமமூர்த்தி தனியாக, அல்லது வி.குமார் என்று யார் போட்டாலும் பாடல்கள் அருமையாக அமைந்து விடும்.

அப்படி தேன்மழை படத்தில் டி.கே.ராமமூர்த்தி இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை, பி.பி.எஸ்ஸின் 'கள்ளப்பார்வை கண்ணுக்கு இன்பம்' உள்பட.

அதில் சுசீலாவின் குரலில் நம் மனதை அள்ளும் பாடல்..

'நெஞ்சே நீ போ சேதியைச்சொல்ல
நானும் வருவேன் மீதியைச்சொல்ல' ..

vasudevan31355
30th July 2014, 12:49 PM
நன்றி கார்த்திக் சார்.

http://www.photofast.ca/files/products/7767.jpg

'மணப்பந்தல்' பாடல்கள் விவரம் தந்ததற்கு நன்றி!

'உனக்கு மட்டும்' அருமையாக இருக்கும்.

ஆனால் 'உடலுக்கு உயிர்க் காவல்' எரிச்சலாக வரும். அசோகன் பாட்டிலைக் கையில் வைத்துக் கொண்டு படுத்துவார். கஷ்டம்டா சாமி.


http://www.youtube.com/watch?v=90JPFjyfIis&feature=player_detailpage

vasudevan31355
30th July 2014, 12:51 PM
அதில் சுசீலாவின் குரலில் நம் மனதை அள்ளும் பாடல்..

'நெஞ்சே நீ போ சேதியைச்சொல்ல
நானும் வருவேன் மீதியைச்சொல்ல' ..

http://www.inbaminge.com/t/t/Then%20Mazhai/folder.jpg


http://www.youtube.com/watch?v=VK4-okqTIx4&feature=player_detailpage

Gopal.s
30th July 2014, 01:10 PM
கார்த்திக் சொன்ன மாதிரி தேன் மழையின் சிறந்த பாடல் நெஞ்சே நீ போ. வித்யாசமான பாடல் விழியால் காதல் கடிதம். பிற நல்ல பாடல்கள் ஆரம்பமே இப்படித்தான்,கல்யாண சந்தையிலே.



ரொம்ப நாள் பாக்யலக்ஷ்மி இயக்குனர் முக்தா என்றே எண்ணி கொண்டிருந்தேன். பிறகுதான் அது வேறே ஸ்ரீனிவாசன் என்று தெரிந்தது. நிறைய நல்ல பாடல்கள். எல்லோரும் மாலை பொழுதின் ,காண வந்த காட்சியென்ன என்று தேர்ந்தெடுத்தாலும் எனது நம்பர் ஒன் காதலென்னும் வடிவம் கண்டேன் .



பால் நிலவு நேரம் பார்க்கவில்லை யாரும் ,இளமைஎன்னும் பூங்காற்று அதே ராகம் என்றாலும் பால் நிலவு better song .முத்து ராமனால் கெட்டது.

mr_karthik
30th July 2014, 01:14 PM
ஸ்டெல்லா அவர்களே,

பாராட்டுக்கு நன்றி. எப்போதாவது இப்படி வந்து நான்கு வரிகளில் பாராட்டிவிட்டு போய்விடுகிறீர்கள். அதன்பிறகு ஆளையே காணோம்.

பழைய தமிழ்ப்பாடல்களில் இவ்வளவு ஆர்வமாக இருக்கும் நீங்கள், உங்களுக்குப்பிடித்த தமிழ்ப்பாடல்கள் பற்றி தங்களுக்கு தெரிந்ததை எழுதலாமே, ஆங்கிலத்தில் இருந்தாலும் பரவாயில்லை...

mr_karthik
30th July 2014, 01:24 PM
டியர் வாசு சார்,

'உனக்கு மட்டும் உனக்கு மட்டும்', 'நெஞ்சே நீ போ' பாடல் வீடியோ காட்சிகளை உடனுக்குடன் 'சுடச்சுட' தந்ததற்கு நன்றி...

Richardsof
30th July 2014, 03:27 PM
புதுமை இயக்குனர் ஸ்ரீதரின் கல்யாண பரிசு படத்தின் பாடல் புத்தகம் .

நடித்தவர்களின் கையெழுத்துடன் பாடல் புத்தகம் .

உண்மையிலே புதுமை . உங்கள் பார்வைக்கு .
http://i61.tinypic.com/28v87eo.jpghttp://i59.tinypic.com/1124pwj.jpghttp://i60.tinypic.com/208xukx.jpg

gkrishna
30th July 2014, 03:29 PM
முக்குறு மொனகல்லு 1994
சிரஞ்சீவி 3 வேடங்கள்,ரோஜா,ரம்யா கிருஷ்ணன்,நக்மா,ஸ்ரீவித்யா,ரங்கநாத் நடித்து வெளிவந்த தெலுகு படம்
தமிழில் அலெக்ஸ் பாண்டியன் என்ற பெயரில் டப் செய்து வெளியிடப்பட்டது .

https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcRk_kCK4dboVv0aUZAK6deiuu7k_yWoU zohlLZqnYrE1mzumiasfQhttp://3.bp.blogspot.com/-rM-EzBTzvR0/UUb-gcGcyrI/AAAAAAABZaw/YZ37xMccmT4/s1600/movieposter.jpg
கே ராகவேந்திர ராவ் இயக்கம்
வித்யா சாகர் இசை

chiru கலக்கி இருப்பார்

ரங்கநாத் ஸ்ரீவித்யா இருவரும் கணவன் மனைவி .ரங்கநாத் வழக்கம் போல் வில்லன் சரத் saxena வால் கொல்லபடுவார்.மூத்த மகன் சிரு ஸ்ரீவித்யாவிடமிருந்து பிரிந்து சென்று விடுவார் பிறகு ஸ்ரீவித்யா 2 குழந்தைகளை ஈன்றுஎடுப்பார். அது இரண்டும் சிரு தான் இதற்கும் அப்பா ரங்கநாத் தான் ஏன் என்றால் ரங்கநாத் இறக்கும் போது ஸ்ரீவித்யா கர்ப்பம் .இரண்டில் ஒன்று ஸ்ரீவித்யா இடம் வளரும் பின்னாட்களில் போலீஸ் அதிகாரியாக வரும் அதற்கு ஜோடி நக்மா .இன்னொரு சிரு கோயில் பூசாரியிடம் வளரும்.அது டான்ஸ் மாஸ்டர் அதற்கு ஜோடி ரம்யா கிருஷ்ணன் .மூத்த சிரு மார்க்கெட் ரவுடி அதற்கு ஜோடி ரோஜா

மூன்று சிருக்களும் எப்படி பின்னாட்களில் சேர்ந்து வில்லனை பழி வாங்குவார்கள் என்பது தான் கதை (டிபிகல் தெலுகு மசாலா )

(இங்கு சிரு என்பதை சிரஞ்சீவி என்று கொள்ளவும் )

பாடல்கள் ஒவ்வொன்றும் சூப்பர்
தெலுகு version 7 பாடல்கள் (6 பாடல்கள் பாலா சித்ரா ஒன்று மற்றும் மனோ சித்ரா )
தமிழ் டப் 6 பாடல்கள் எல்லா பாடல்களும் மனோ சித்ரா

ராஜசேகர ஆகலேனுரா என்று தெலுகு
'ராஜசேகர ஆசை தீர்கவா' என்று தமிழ் வார்த்தைகள் வரும்

http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=t0003820

http://www.youtube.com/watch?v=PNrX2ixqd3M

http://www.youtube.com/watch?v=Dh3mvp0UAY8

gkrishna
30th July 2014, 03:32 PM
சூப்பர் எஸ்வி சார் உண்மையில் புதுமை

Russellmai
30th July 2014, 05:05 PM
வினோத் சார்,
நெல்லையில் தற்போது ராயல் டாக்கீஸ்,பாலஸ்-டி-வேல்ஸ்,பார்வதி
டாக்கீஸ் ஆகியவை இல்லை.ஸ்ரீ ரத்னா டாக்கீஸ்,பாப்புலர் டாக்கீஸ்(கணேஷ்
என்ற பெயரில்)ஆகியவை உள்ளன.
கோபு

madhu
30th July 2014, 06:25 PM
அப்படி தேன்மழை படத்தில் டி.கே.ராமமூர்த்தி இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை, பி.பி.எஸ்ஸின் 'கள்ளப்பார்வை கண்ணுக்கு இன்பம்' உள்பட.

கார்த்திக் ஜி.. PBS and PS duet "கள்ளப்பார்வை கண்ணுக்கு இன்பம்" எங்களுக்கும் காலம் வரும் படத்தில் இல்லையோ ?

Gopal.s
30th July 2014, 06:27 PM
கார்த்திக் ஜி.. PBS and PS duet "கள்ளப்பார்வை கண்ணுக்கு இன்பம்" எங்களுக்கும் காலம் வரும் படத்தில் இல்லையோ ?

Yes.Madhu.You are correct.

Gopal.s
30th July 2014, 06:28 PM
http://www.thehindu.com/features/cinema/cinema-columns/manapandhal-1961/article5951258.ece

Gopal.s
30th July 2014, 06:39 PM
'
இசையரசியின் இந்தப்பாடலைப்போல இன்னொரு அருமையான பாடல், 'மணப்பந்தல்' படத்தில், விஸ்வநாதன் வெளியில் உட்கார்ந்து வெற்றிலை போட்டுக்கொண்டிருக்கும்போது ராமமூர்த்தி மட்டும் ட்யூன் போட்ட (சில நண்பர்களை எதையெல்லாம் சொல்லி மகிழ்விக்க வேண்டியுள்ளது) இசையரசி அருமையாகப்பாடிய ஹிட் ஸாங்.

அய்யய்யோ ,

இது அபாண்டம். நான் அப்படியெல்லாம் சொன்னால் மகிழ கூடியவனா என்ன?ராமண்ணாவிடம் கெஞ்சி கூத்தாடி ஜி.ராமநாதனிடம் இருந்து வாய்ப்பை பறிப்பது முதல், ராமமூர்த்தி போட்ட டியுனை ராமண்ணா விற்கு ஹார்மோனியத்தில் வாசித்து காட்டி , அவ்வப்போது நிரவலாக இரவில் பிள்ளைகள் கேட்டால் பயந்தலரும் கர்ண கடூரமான குரலில் பாட்டை சொல்லி, பதிவின் போது ரெண்டு மூங்கில் குச்சியை கையில் வைத்து , துரு துரு வென்று இருப்பவரை போய் ,வெத்திலை போட்டு கொண்டு சும்மா உட்கார்ந்திருப்பார் என்று சொன்னதை வன்மையாக கண்டிக்கிறேன்.

madhu
30th July 2014, 06:40 PM
எம். பி. ஸ்ரீநிவாசன் இசையமைத்த பாடல்கள் என்றாலே தனிச் சிறப்பு உண்டு. ஒன்று கூட சோடை போனதில்லை. குறிப்பாக தாகம் படத்தில் இந்தப் பாடல் சென்னை வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பப்பட்டது. எம்.பி.எஸ்.வானொலிக் கலைஞர் என்பதாலோ என்னவோ சிலோன் ரேடியோவை நம் வானொலி நிலையம் முந்திக் கொண்டது. முத்துராமன் குரலும் இடையே ஒலிக்கும் இப்பாடல் மிகச் சிறப்பாக இருக்கும் காரணம் அதில் அவ்வப்போது இடம் பெறும் கோரஸ் குரல்கள். வீணையிசை நாதஸ்வரம் எல்லாம் சேர்ந்து நம்மை பரவசமூட்டும்.

நீண்ட நாட்களுக்குப் பின் தாகம் திரைப்படத்திலிருந்து வானம் நமது தந்தை பாடலைக் கேட்போமா..



இதே படத்தில் இடம் பெற்ற "உருகிடும் வேளையிலும்" பாட்டை எங்கேயும் கண்டு பிடிக்க முடியவில்லை. ஜேசுதாஸின் விருத்தத்தைத் தொடர்ந்து எஸ்.ஜானகி பாடியிருப்பார். ஒரு பழைய திரியில் இந்த லிங்க் கிடைத்தது.

http://www.tfmpage.com/cgi-bin/stream.pl?url=http://www.dhool.com/sotd/urugidum.rm

mr_karthik
30th July 2014, 07:25 PM
ஆனால் 'உடலுக்கு உயிர்க் காவல்' எரிச்சலாக வரும். அசோகன் பாட்டிலைக் கையில் வைத்துக் கொண்டு படுத்துவார். கஷ்டம்டா சாமி.

இந்த ஆள் எந்தப்பாட்டைத்தான் உருப்படியாகச் செய்தார்.

எத்தனை நல்ல பாடல்கள் இவரிடம் போய் சீரழிவை சந்தித்தன என்று பெரிய பட்டியலே போடலாம்...

Gopal.s
30th July 2014, 07:44 PM
ஹிந்தோளம் .

உங்கள் அத்தை பெண் ,நீங்கள் வருவதறிந்து ,ஒளிந்து கொண்டு கொண்டு விளையாட்டு காட்டுகிறாள். நீங்கள் அவளிருக்குமிடம் தெரிந்து,பின்னால் சென்று ,காதை திருகி குதூகலிக்கிறீர்கள். அப்போது உங்கள் மனம் படும் இன்ப பாட்டை ராகமாக்கினால் ,அதுவே ஹிந்தோளம்.ஆரம்பம் முதல் உற்சாகமாய் களை கட்டும் ராகம்.

ரிஷப ,பஞ்சமம் இல்லாத ஐந்து சுரம் கொண்ட (ஸ க ம த நி ஸ , ஸ நி த ம க ஸ ) கொண்ட சுலப சமதள ராகம்.இது pentatonic scale என்பதால் ,இந்த ராகத்தின் சாயல் கொண்ட இசை ,சீனா,இந்தோனேசியா முதல் பல நாட்டு பாடல்களில் நான் கண்டதுண்டு.(மோகனமும் அப்படியே). வெஸ்டேர்ன் முதல் நமது பண்டைய பண்கள் வரை இந்த சாயல் கொண்ட ராகங்கள் உண்டு.இதன் மூலம் நட பைரவியா ,அனும தோடியா என்று இன்றும் பட்டி மன்றம் உண்டு.ஹிந்துஸ்தானி மால் கௌன்ஸ் இதன் சகோதரன்.

சிறு வயதில் ராமர் சம்பந்த பட்ட எந்த பண்டிகை வந்தாலும் ,ஒரு கால் மணி நேரம் ஒரே பாடலுக்கு போய் விடும். கொஞ்சம் கடுப்பாகவே இருந்தாலும் போக போக இந்த நீ(ஈ ஈ ஈ ஈ )ண்ட பாடலில் சுவை காண ஆரம்பித்தேன். லவகுசா என்ற படத்தில் "ஜகம் புகழும் புண்ய கதை "(நடுவில் வேறு ராகங்களும் வரும்).

அடுத்த வீட்டு பெண் என்ற அஞ்சலியின் நகைச்சுவை சூப்பர் ஹிட் படம். அவர் கணவர் ஆதி நாராயண ராவ் கொடுத்த பல சூப்பர் ஹிட் பாடல்கள். மூலம் என்னவோ கல்யாணம் பண்ணியும் பிரும்மசாரி பட playback knot தான் என்றாலும் ஜாலிதான்.அதில் டி.ஆர் .ராமசந்திரன் (தங்கவேலு குரலுடன்) பாட்டு வாத்யாருடன் மோதும் சின்ன பாட்டு. பாட்டு வாத்யார் அவசரத்தில் கவிகளும் கண் பாடி விடுவார். படோசன் இதன் remake ."கண்களும் கவி பாடுதே"

அப்போது தெலுங்கு பட வாசனையில் நிறைய தமிழ் படங்கள்.சென்னை ராஜதானி பொட்டி ஸ்ரீராமுலுவினால் பிரியாத காலம்.சில classic பாடல்கள் ராவ் களினால் சுசீலா குரலில் வளம் பெறும் .அப்படி என்னை கவர்ந்த இளம் சுசீலா குரல் பாடல் "அழைக்காதே நினைக்காதே".

இந்த ராகத்தில் மற்ற பாடல்கள்.

ராஜ சேகரா மோடி செய்யலாகுமா,ராஜ தந்த்ரி நீயடா

என்னை விட்டு ஓடி போக முடியுமா- குமுதம்.

மழை கொடுக்கும் கொடையும் ஒரு மூன்று மாதம்- கர்ணன்.

மனமே முருகனின் மயில் வாகனம்- M .S .பிள்ளை.

சிறு பொன்மணி அசையும் - கல்லுக்குள் ஈரம்.

பொத்தி வச்ச மல்லிக மொட்டு -மண் வாசனை.

மார்கழி பூவே மார்கழி பூவே- மே மாதம்.

madhu
30th July 2014, 08:00 PM
ஹிந்தோளம் ஒரு மென்மையான ராகம். அத்தை பெண் காதைக் கூட மிருதுவாகத்தான் திருகணும்...

"பஞ்ச சுரங்களே ஹிந்தோளம்.. அதில் பஞ்சமம் கலந்தால் சுருதி பேதம்" அப்படின்னு ஒரு சுசீலா பாட்டு கூட இருக்கு இல்லையா ?

மலேஷியா வாசுதேவன் குரலை மாற்றி சி.எஸ்.ஜெயராமன் மாதிரி பாடிய "ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே" பாட்டும் "சின்னப்பூவே மெல்லப் பேசு" படத்தில் வரும் "என்னடா காதல் இது" பாட்டும் கூட இதன் சாயல்தானே... Spb & ஜானகி சங்கராபரணத்தில் ( படத்தின் பேர்தான் ) பாடிய "சாமஜவரகமனா" சரிதானா ?.

பஜரே கோபாலம் என்ற பாடலைக் கேட்டுக்கொண்டு கண்ணை மூடினால் கோபால் வந்து இன்னும் விஷயங்கள் சொல்லுவாரோ ?

RAGHAVENDRA
30th July 2014, 09:01 PM
http://www.youtube.com/watch?v=EvPyaIAQ2io

இந்தப் பாடல் ஹிந்தோளம் தானே

rajeshkrv
30th July 2014, 09:10 PM
இந்த ஆள் எந்தப்பாட்டைத்தான் உருப்படியாகச் செய்தார்.

எத்தனை நல்ல பாடல்கள் இவரிடம் போய் சீரழிவை சந்தித்தன என்று பெரிய பட்டியலே போடலாம்...


Manapandhal in telugu was Intiki deepam illale (Sarojadevi & EV saroja repeated their roles while NTR played Asokan's role and JAggayya played SSr's role)

here is the same song but by NTR .. what a difference between NTR & Asokan...


https://www.youtube.com/watch?v=3mfhpVTOrJo

vasudevan31355
30th July 2014, 10:44 PM
ராஜேஷ் சார்,

மதியப் பணி இப்போதுதான் முடிந்தது. நல்ல பதிவுகளை தந்துள்ளீர்கள். நன்றி!

நம் ராஜாத்தி பாடக்கிக்கு வந்து விடுவோம்.

அதே 'என் கடமை' படத்தில் இன்னொரு அமர்க்களமான பாடல்.

'தேனோடும் தண்ணீரின் மீது
மீனோடு மீனாக ஆடு
செவ்வாழைக் கால்கள்
பொன்வண்டுக் கண்கள்
ஜில்லென்று நீராட ஆடு'

எவ்வளவு அழகாகப் பாடுகிறார். கோரஸ் அற்புதம். இசையும்தான். என் மனம் கவர்ந்த பாடல்.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=S7e7oEdIA_A

vasudevan31355
30th July 2014, 10:49 PM
இன்னொரு அற்புதமான பாடல் 'ஜிம்போ' படத்திலிருந்து. வெகு ஜோர். இளங்குருத்துக் குரல்.

'அவர் நினைவும் என் நினைவும் மாற்று ஒன்றாச்சு
ஜோருதான் ஜோரு நான் பார்த்து நின்றாச்சு'

இளமையான குரல். இளநீர் போல சுவை. தேன் லட்டுக் குரல்.


http://www.youtube.com/watch?v=reRmk-XUV6o&feature=player_detailpage

rajeshkrv
30th July 2014, 10:58 PM
Vasu ji,

AAm arumaiyana padalgal avar ninaivum, en nenju unnai agaladhuu my all time favourite
ippo kooda iphonela adhan kettukondirukkiren

vasudevan31355
30th July 2014, 11:03 PM
Vasu ji,

AAm arumaiyana padalgal avar ninaivum, en nenju unnai agaladhuu my all time favourite
ippo kooda iphonela adhan kettukondirukkiren

வாவ்...

vasudevan31355
30th July 2014, 11:04 PM
naanum kettukitte padukkiren. G.N Rajesh sir.

rajeshkrv
30th July 2014, 11:24 PM
Good Night Vasu ji. Andha JAmuna paatu ketteengala.... Romba kashtamana paatu ... PS summa pattaya kelappiruppaanga

vasudevan31355
31st July 2014, 05:21 AM
kandippa ketkiren rajesh sir.. athai vida enna velai? kettuttu soldren.

Richardsof
31st July 2014, 05:29 AM
நினைவில் நின்ற பசுமையான பல பாடல்கள் - இது வரை கேட்டிராத பாடல்கள் என்று திரியில்'' விரும்பி கேட்டவை ''

''நினைவூட்டல் பாடல்கள் ''- என்று நண்பர்கள் பதிவிடும் பாடல்களும் அதற்கான விளக்கமும் , உடனுக்குடன்

கருத்துக்கள் பரிமாற்றம் - பாட்டுக்கு பாட்டு என்று புதுமையாக திரி செல்வது மகிழ்ச்சி அளிக்கிறது .

என்னுடைய இன்றைய துவக்க பாடல் - என்கடமை படத்தில் இடம் பெற்ற இந்த பாடல்

''மீனே மீனே மீனம்மா ''- இசை அரசியின் குரலும் - மெல்லிசை மன்னர்களின் இசையும் மனதை கொள்ளை கொண்ட

பாடல் .
http://youtu.be/Nr86B4RpR7o

vasudevan31355
31st July 2014, 05:32 AM
இன்றைய ஸ்பெஷல் (43)

சிறு வயது முதற்கொண்டே ஆச்சார அனுஷ்டானங்களில், தெய்வ பக்தியில் ஊறிப் போய் இருக்கும் ஒரு பிராமண குடும்பப் பெண் திருமணம் ஆனாலும் தாம்பத்யத்தில் நாட்டமில்லாமல் குழந்தை போல நடந்து கொண்டு அவள் கணவனை அவளை அறியாமலேயே இம்சிக்கிறாள். கணவன் ஆசையுடன் நெருங்கும் போதெல்லாம் நெருப்பாய்க் கொதிக்கிறாள். தீட்டு, பூஜை புனஸ்காரம் என்று தட்டிக் கழிக்கிறாள்.

இதே போல இளமை உணர்ச்சிகளுடன் கனவு காணும் இன்னொருத்தி தாம்பத்யத்தில் அதிக விருப்பமில்லாத ஒரு ஓவியனை மணந்து விரகதாபத்தில் தவிக்கிறாள்.

பாதிக்கப்பட்ட இரு ஜோடிகளில் அங்கே கணவனும், இங்கே ஓவியன் மனைவியும் தங்கள் விரகதாபத்தை இப்பாடலின் வழியே பரிதாபமாக வெளிப்படுத்துகிறார்கள். .

http://udhayamgold.files.wordpress.com/2011/05/moham30varusham.jpg

ஆச்சார மனைவி பாத்திரத்தில் சுமித்ராவும், அவள் அன்புக்கு எங்கும் கணவனாக கமலும், செக்ஸ் நாட்டமில்லாத ஓவியன் ரோலில் விஜயகுமாரும், விரகதாபத்தில் துடிக்கும் அவர் மனைவியாக 'படாபட்' ஜெயலட்சுமியும் நடித்த அழகான ஓவியம் இந்த 'மோகம் முப்பது வருஷம்'. ஆனந்த விகடனில் வெளியாகி லட்சக் கணக்கான வாசகர்கள் படித்துப் பாராட்டிய கதை.

இப்படத்தைப் பற்றி நான் எழுதுவதை விட கீழ்க்காணும் லிங்கை சொடுக்குங்கள். முழு விவரமும் கிடைக்கும்.

http://udhayamgold.wordpress.com/2011/05/23/moham-muppathu-varusham/

விஜயபாஸ்கரின் அற்புதமான இசையில் பாலாவும், வாணிஜெயராமும் மிக மிக அற்புதமாகப் பாடும் அபூர்வமான ஒரு பாடல். அவ்வளவு இனிமை. ஓர் ஆண்மகனின் விரகதாப வெளிப்பாடுகளை பாலாவைத் தவிர இவ்வளவு நளினமாக யாராலும் தர முடியுமா என்பது சந்தேகமே.

வாணி ஜெயராமும் அற்புதம்.

ராஜேஷ் கூறுவது போல் விரகதாபங்களை விரசமில்லாமல் கண்ணியமாய் வெளிப்படுத்தும் பாடல்.

மிக அதிகமாக என்னைக் கவர்ந்த மத்தியக் காலப் பாடல்களில் இது முக்கியமானது.

http://i.ytimg.com/vi/c4uh5Jd4qvs/hqdefault.jpg

"ம்..சும்மா இருங்க தூக்கம் வருது ' (சுமித்ரா வெறுப்பு)

சங்கீதம் ராகங்கள் இல்லாமா
சந்தோஷம் சம்சாரம் இல்லாமலா
சங்கீதம் ராகங்கள் இல்லாமா
சந்தோஷம் சம்சாரம் இல்லாமலா

காதல்... மோகம்... இன்பம் (கிளி ரிப்பீட்டு)
புண்ணியமா புருஷார்த்தமா

சீதையிடம் ராமன் காணாததா
தேவியரின் வாழ்வில் இல்லாததா
ராதையிடம் கண்ணன் நாடாததா
ராசலீலை என்ன கூடாததா
உலகில் ஒரு பாகம்
உறவு கொள்ளும் தாகம்
புண்ணியமா புருஷார்த்தமா

சங்கீதம் ராகங்கள் இல்லாமா
சந்தோஷம் சம்சாரம் இல்லாமலா

சும்மா இரும்மா... don 't disturb me
அடடா... போய்த் தூங்கு (விஜயகுமாரின் நாடாமை பேச்சு)

என் மனதை நானேதான் சொல்வதா
ஏக்கமென்னவென்றே நான் சொல்வதா
ஓவியத்துப் பெண்மை உயிர் கொள்ளுமா
உறவு இல்லப் பெண்மை துயில் கொள்ளுமா
கூட்டறவு இன்பம்
கேட்டுப் பெறும் துன்பம்
புண்ணியமா புருஷார்த்தமா

சங்கீதம் ராகங்கள் இல்லாமா
சந்தோஷம் சம்சாரம் இல்லாமலா
காதல்... மோகம்... இன்பம்
புண்ணியமா புருஷார்த்தமா

ஆண்மனது இங்கே அனல் கொண்டது
அந்தரங்கம் எல்லாம் யார் சொல்வது

பெண் மனது இங்கே தணல் கொண்டது
தேங்கி விட்ட நாணம் தடை கொண்டது

நீந்தி வரும் வெள்ளம்
தாங்கிப் பெறும் உள்ளம்
புண்ணியமா புருஷார்த்தமா.
ம்..

சங்கீதம் ராகங்கள் இல்லாமா
சந்தோஷம் சம்சாரம் இல்லாமலா
காதல்... மோகம்... இன்பம்
புண்ணியமா புருஷார்த்தமா
ஹாங்...ஹூம். (பாலா சிணுங்கல்)


http://www.youtube.com/watch?v=c4uh5Jd4qvs&feature=player_detailpage

madhu
31st July 2014, 06:11 AM
அதே 'என் கடமை' படத்தில் இன்னொரு அமர்க்களமான பாடல்.

'தேனோடும் தண்ணீரின் மீது
மீனோடு மீனாக ஆடு
செவ்வாழைக் கால்கள்
பொன்வண்டுக் கண்கள்
ஜில்லென்று நீராட ஆடு'

எவ்வளவு அழகாகப் பாடுகிறார். கோரஸ் அற்புதம். இசையும்தான். என் மனம் கவர்ந்த பாடல்.
[/video]

இந்தப் பாடல் அனேகமாக குளத்தில் நாயகி தோழியருடன் பாடிக்கொண்டே நீராடும் காட்சிக்காக்
எழுதப்பட்டதாகத்தான் இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. காட்சி அமைப்புக்கும் பாடல்
வரிகளுக்கும் ஒத்துப் போகவில்லை. என்ன காரணமோ ? ( அந்த வருஷம் தண்ணீர்ப் பஞ்சம்
இருந்திருக்குமோ ? )

rajeshkrv
31st July 2014, 06:27 AM
கன்னட கதம்பம் தொடர்ச்சி
வாசு ஜி உங்களுக்காகவே....

அக்கமாதேவி என்ற பெண் கவி அவரது வரிகளை வீராங்கனை கிட்டூரு சென்னம்மா பாடுவதாக அமைந்த பாடல்
பி.ஆர்.பந்துலு அவர்களின் பத்மினி பிக்சர்ஸ் “கிட்டூரு சென்னம்மா” .. சென்னம்மா வேடத்தில் சரோஜாதேவி என்ன அழகு. பிரமாதமாக நடித்திருப்பார்
டி.ஜி.லிங்கப்பாவின் இசையில் இசையரசியின் குரலில் என்றுமே நம்மை மனம் மகிழ செய்யும் பாடல்
மெய் சிலிர்க்கும்

இதோ

http://www.youtube.com/watch?v=JLAtfq9iMmE

rajeshkrv
31st July 2014, 06:30 AM
சரோவின் இன்னொரு அருமையான பாடல்
மல்லமனா பாவடா ( நமது பெண்ணின் பெருமையின் கன்னட வடிவம் புட்டண்ணாவின் இயக்கம்) .. இசையரசியின் உருகும் குரலில் விஜயபாஸ்கரின் இசையில் இதோ


http://www.youtube.com/watch?v=MZO0KZQpSYo

vasudevan31355
31st July 2014, 06:39 AM
இந்தப் பாடல் அனேகமாக குளத்தில் நாயகி தோழியருடன் பாடிக்கொண்டே நீராடும் காட்சிக்காக்
எழுதப்பட்டதாகத்தான் இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. காட்சி அமைப்புக்கும் பாடல்
வரிகளுக்கும் ஒத்துப் போகவில்லை. என்ன காரணமோ ? ( அந்த வருஷம் தண்ணீர்ப் பஞ்சம்
இருந்திருக்குமோ ? )

மிகச் சரி! நானும் இதை அடிக்கடி நினைப்பதுண்டு. ஆனால் நீங்கள் எழுதியே விட்டீர்கள். பேஷ்.

vasudevan31355
31st July 2014, 06:43 AM
கன்னட கதம்பம் தொடர்ச்சி
வாசு ஜி உங்களுக்காகவே....


கண்டிப்பாக. மிக்க நன்றி! indru outdoor. Going to chennai for college admission for my son. Night vanthu anubaviththup paarkkiren. Again thanks a lot.

vasudevan31355
31st July 2014, 06:44 AM
( அந்த வருஷம் தண்ணீர்ப் பஞ்சம்
இருந்திருக்குமோ ? )

kurumbu :)

RAGHAVENDRA
31st July 2014, 07:01 AM
பொங்கும் பூம்புனல்

http://www.inbaminge.com/t/a/Aada%20Vantha%20Deivam/

நிலையாக என் நெஞ்சில் ஒளி வீசும் தீபம்...

ஆட வந்த தெய்வம் திரைப்படத்தில் இடம் பெற்ற இப்பாடல் இசையரசியின் இனிமையான குரல் வளத்திற்கு மற்றோர் சான்று...

பாடல் வரிகள் காதலின் மகத்துவத்தைக் கூறும் பாடல்...

RAGHAVENDRA
31st July 2014, 07:04 AM
பொங்கும் பூம்புனல்

ஏ.எம்.ராஜா இசையமைத்த பாடல்களில் சில சமயம் ஒரே மாதிரி இசையமைப்பில் இரண்டு அல்லது மூன்று பாடல்கள் வந்ததுண்டு. ஆனால் பாடலின் சிறப்பு மற்றும் குறைந்ததில்லை.

கல்யாண பரிசு படத்தில் ஆசையினாலே மனம் பாடலை நினைவூட்டும் இந்தப் பாடல் அன்புக்கோர் அண்ணி திரைப்படத்தில் இசையரசியின் குரலில் நெஞ்சைக் கொள்ளை கொள்ளும். கேளுங்கள்.. கேட்டு மெய்மறந்து விடுங்கள்..

தங்கத் தாமரை ஒன்று

http://www.inbaminge.com/t/a/Anbukkor%20Anni/

RAGHAVENDRA
31st July 2014, 07:08 AM
பொங்கும் பூம்புனல்

இந்த பெண்ணுக்கு பச்சை கலர் தான் பிடிக்குமாம். குழந்தை பச்சை சட்டை போடும் இந்த நாள் நல்ல நாளாம்...

கேளுங்களேன்..

அன்புக்கோர் அண்ணி படத்தில் இசையரசியின் மெய் மறக்க வைக்கும் பாடல் நம்மை உருக வைக்கும் பாடல்...

சிட்டு மொட்டு பாப்பா

http://www.inbaminge.com/t/a/Anbukkor%20Anni/

ஏ.எம்.ராஜா இசை

RAGHAVENDRA
31st July 2014, 07:11 AM
பொங்கும் பூம்புனல்

கோவிந்தராஜுலு நாயுடு தமிழ்த் திரையின் மிகச் சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவர். அதிகம் பேசப்படாத சிறந்த படைப்பாளிகளில் இவரும் ஒருவர். ஒரு நாள் முழுதும் ஒதுக்கி இவர் இசையமைத்த பாடல்களைப் பற்றி விவாதித்துக் கொண்டே இருக்கலாம்.

இன்றைய பாடல் ப்ரியா சுப்ரமணியத்தின் புண்ணியத்தால் இந்தத் தலைமுறையினரிடம் பரவலாக் சென்று சேர்ந்ததற்காக அவருக்குப் பாராட்டுக்கள்.

பாக்தாத் திருடன் திரைப்படத்தில் இடம் பெற்ற சொக்குதே மனம்.. உங்களுக்காக..

http://www.inbaminge.com/t/b/Baghdadh%20Thirudan/

RAGHAVENDRA
31st July 2014, 07:16 AM
பொங்கும் பூம்புனல்

இது நியாயமா...இது நியாயமா... என்னை மறந்து போகலாமா .. சரியாகுமா ... முறையாகுமா... என்னை வருந்த செய்யலாமா..

.... அட... நான் கேட்கவில்லை சார்..

ஜமுனா ராணி ஏ.எல்.ராகவனிடம் கேட்கிறார்...

விவரம் வேண்டுமா..

இருமனம் கலந்தால் திருணம் படத்திலிருந்து இப்பாடலைக் கேளுங்கள்...

http://www.inbaminge.com/t/i/Irumanam%20Kalanthal%20Thirumanam/

RAGHAVENDRA
31st July 2014, 07:19 AM
பொங்கும் பூம்புனல்

இந்த நாள் சந்தோஷமான நாள் ... ஜிக்கியுடன் சேர்ந்து நானும் தங்களுக்கு வாழ்த்துக் கூறுகிறேன்.

Happy jolly good day ... சுக வாழ்வு பொங்கும் நாளே..

இவன் அவனே தான் படத்தில் இடம் பெற்ற இப்பாடல் இன்றைய தங்கிலீஷ் பாடல்களுக்கெல்லாம் முன்னோடியான பாடலாக இருக்குமோ...

http://www.inbaminge.com/t/i/Ivan%20Avanethaan/

Richardsof
31st July 2014, 08:24 AM
1962 - FLASH BACK- TAMIL MOVIES WITH DETAILS.
http://i61.tinypic.com/15d5mop.jpghttp://i57.tinypic.com/24qln2o.jpg

Richardsof
31st July 2014, 08:25 AM
http://i61.tinypic.com/6ss77l.jpg

Richardsof
31st July 2014, 08:27 AM
http://i59.tinypic.com/35d5h81.jpghttp://i57.tinypic.com/zlx45k.jpg

Gopal.s
31st July 2014, 08:31 AM
வாசு, ராஜேஷ் உரையாடல்கள் ரொம்ப ரொம்ப சுவாரஸ்யம். இருவருக்கும் நன்றிகள்.

rajeshkrv
31st July 2014, 08:47 AM
கோபால் ஜி,

நன்றி .. எங்க எல்லருக்கும் குரு நீங்களே ...

madhu
31st July 2014, 10:00 AM
பொங்கும் பூம்புனல்

இந்த பெண்ணுக்கு பச்சை கலர் தான் பிடிக்குமாம். குழந்தை பச்சை சட்டை போடும் இந்த நாள் நல்ல நாளாம்...

சிட்டு மொட்டு பாப்பா



ராகவ்ஜி... அது "சிட்டு முத்து பாப்பா.. பட்டுச் சட்டை போடு.. சிறந்த நாள் இதுவே..." என்று நினைக்கிறேன்...

( அந்தக் காலத்தில் எனக்காக என் கசின் சிஸ்டர் பாடியதாச்சே )

mr_karthik
31st July 2014, 10:46 AM
டியர் வினோத் சார்,

தாங்கள் தொடர்ந்து அளித்து வரும் ஆவணப்புதையல் அபாரம். 1962-ல் வெளியான அருமையான திரைக்காவியங்கள் பற்றிய பயனுள்ள தகவல்கள்.

கிடைத்தற்கரிய இத்தகைய ஆவணங்களை தொடர்ந்து அனைவருடனும் பகிர்ந்து வருவதற்கு நன்றி...

Gopal.s
31st July 2014, 10:50 AM
இன்று நீயா நானாவில் கலந்து கொள்ளும் சிவாஜி பக்தர்கள் முரளி ஸ்ரீநிவாஸ்,ராகவேந்தர்,பேரவை சந்திரசேகர்,கிருஷ்ணாஜி ஆகியோருக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள். நடிகர்திலகத்தின் புகழை ஓங்கி உலகுக்கு உரைத்து ,உண்மை தமிழர்கள் நாம் என்று நிருபியுங்கள்.

Gopal.s
31st July 2014, 10:54 AM
டியர் வினோத் சார்,

தாங்கள் தொடர்ந்து அளித்து வரும் ஆவணப்புதையல் அபாரம். 1962-ல் வெளியான அருமையான திரைக்காவியங்கள் பற்றிய பயனுள்ள தகவல்கள்.

கிடைத்தற்கரிய இத்தகைய ஆவணங்களை தொடர்ந்து அனைவருடனும் பகிர்ந்து வருவதற்கு நன்றி...

1962 இல் சூப்பர் ஹிட் படமாகி,அந்த வருட உச்ச பட்ச வசூல் பெற்று முதலிடம் வகித்த ஆலய மணி எங்கே?

mr_karthik
31st July 2014, 11:25 AM
டியர் ராகவேந்தர் சார்,

இசையரசியின் 'நிலையாக என் நெஞ்சில் ஒளி வீசும் தீபம் நீயே எந்நாளும் என் காதல் கீதம்' பாடல் என் மனதுக்கு ரொம்ப நெருக்கமான பாடல். சிறு வயது முதலே வானொலியில் கேட்டுக்கேட்டு மனபாடம் ஆன பாடல். சுசீலாவின் தேன்குரலில் இப்பாடலைக் கேட்கும்போதெல்லாம் என்னை மறந்து நின்றுவிடுவேன். குறிப்பாக இரண்டாவது சரணத்தில் 'அன்பே.... அன்பே..ஏ...ஏ...ஏ.....' என்று நீட்டும் அழகு.

முதலில் 'வீரக்கனல்' படத்தில் இந்தப்பாடல் என்று நினைத்திருந்தேன். பின்னர்தான் 'ஆடவந்த தெய்வம்' என்று தெரிந்தது.

நல்ல பாடலை நினைவூட்டியதற்கு மிக்க நன்றி சார்...

mr_karthik
31st July 2014, 11:44 AM
1962 இல் சூப்பர் ஹிட் படமாகி,அந்த வருட உச்ச பட்ச வசூல் பெற்று முதலிடம் வகித்த ஆலய மணி எங்கே?

அநேகமாக அடுத்த பக்கத்தில் இடம்பெற்றிருக்கும் என்றும், அந்த பக்கம் அடுத்து வெளியிடப்படும் என்றும் நினைக்கிறேன். ஏனென்றால் பட்டியலின் கடைசி பக்கத்தில் அந்த ஆண்டின் தீபாவளி வெளியீடுகள் (27.10.1962) ஐந்து படங்களோடு முடிந்துள்ளது. (ஆலயமணி 23.11.62). தொடர்ந்து அடுத்த பக்கத்தை வினோத் அடுத்து வெளியிடுவார் என்று நம்புகிறேன்.

இன்னொன்று கவனித்தீர்களா?. அந்தப்பட்டியலில் எந்தப்படமும் 100 நாட்கள் ஓடிய விவரமோ, வசூல் விவரமோ இல்லை. எனவே ஆலயமணி இடம்பெற்றிருந்தாலும் இந்த விவரங்கள் இருக்காது.

mr_karthik
31st July 2014, 11:55 AM
இன்று நீயா நானாவில் கலந்து கொள்ளும் சிவாஜி பக்தர்கள் முரளி ஸ்ரீநிவாஸ்,ராகவேந்தர்,பேரவை சந்திரசேகர்,கிருஷ்ணாஜி ஆகியோருக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள். நடிகர்திலகத்தின் புகழை ஓங்கி உலகுக்கு உரைத்து ,உண்மை தமிழர்கள் நாம் என்று நிருபியுங்கள்.

மனதுக்கு உற்சாகம் அளிக்கும் செய்திக்கு நன்றி கோபால்.

நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். உங்கள் வாதத்திறமையால், நடிகர்திலகத்தின் பல புதிய பரிமாணங்கள், மறைக்கப்பட்ட சாதனைகள், வஞ்சிக்கப்பட்ட அங்கீகாரங்கள் உலகின் பார்வைக்கு எட்டட்டும்.

நமது ஜாம்பவான்களின் குரல்களோடு கோபியின் குரலிலும் நம் திலகத்தின் பெருமைகளைக் கூறக் கேட்க ஆவலாக இருக்கிறோம்.

இந்த நிகழ்ச்சி எப்போது ஒளிபரப்பாகும் என்பதையறிந்து நமது திரிகளில் தெரியப்படுத்தினால், அனைவரும் மிஸ் பண்ணாமல் பார்த்து இன்புற ஏதுவாகும்...

Richardsof
31st July 2014, 12:04 PM
இனிய நண்பர் கார்த்திக் சார்

சினிமா டைரி - 1962

நவம்பர் - டிசம்பர் 1962 வெளியீடு படங்கள் பட்டியல் அந்த புத்தகத்தில் இடம் பெற வில்லை .

உங்களின் அன்பான பாராட்டுக்கு நன்றி .

Russellmai
31st July 2014, 05:38 PM
நீயா நானா-நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒவ்வொரு ஞாயிற்றுக்
கிழமை அன்றும் இரவு 9-00 மணிக்கு ஒளிபரப்பாகிறது
கோபு

gkrishna
31st July 2014, 06:00 PM
மனதுக்கு உற்சாகம் அளிக்கும் செய்திக்கு நன்றி கோபால்.

நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். உங்கள் வாதத்திறமையால், நடிகர்திலகத்தின் பல புதிய பரிமாணங்கள், மறைக்கப்பட்ட சாதனைகள், வஞ்சிக்கப்பட்ட அங்கீகாரங்கள் உலகின் பார்வைக்கு எட்டட்டும்.

நமது ஜாம்பவான்களின் குரல்களோடு கோபியின் குரலிலும் நம் திலகத்தின் பெருமைகளைக் கூறக் கேட்க ஆவலாக இருக்கிறோம்.

இந்த நிகழ்ச்சி எப்போது ஒளிபரப்பாகும் என்பதையறிந்து நமது திரிகளில் தெரியப்படுத்தினால், அனைவரும் மிஸ் பண்ணாமல் பார்த்து இன்புற ஏதுவாகும்...

மிக்க நன்றி கோபால் சார் கார்த்திக் சார்

madhu
31st July 2014, 06:23 PM
நீயா நானா நிகழ்ச்சியில் பங்கேற்கும் நண்பர்கள் அனைவருக்கும் உளம் நிறை நல்வாழ்த்துகள்.

Gopal.s
31st July 2014, 07:55 PM
சங்கராபரணம்.

ஒரு epic ,cult தெலுங்கு படத்தினால் இந்த ராகத்திற்கே ஒரு ப்ராபல்யம் .

ஆனால் இது உண்மையில் மும்மூர்த்திகள் உள்ளிட்ட அனைத்து சங்கீத மூர்த்திகளின் இஷ்ட ராகம். இஷ்டம் என்றால் அவ்வளவு இஷ்டத்துக்கு வளைக்கலாம்,நெளிக்கலாம்,விஸ்தாரமாக்கி,சோதனை செய்து ,புது புது பாட்டைகள் போடலாம்.

உங்களை பிரபுவாக எண்ணி,ஒரு இஸ்லாமிய மஞ்சத்தில் படுத்து,ஹுக்கா அருந்தி ,தேனை போன்ற மதுவை இதமாக அருந்தி ,ஒரு நெளிவு வளைவுள்ள மங்கையின் இதமான நடனத்தை மணிக்கணக்கில் பருகி,கண் சொக்கும் சுகத்தை நினையுங்கள். அதுதான் சங்கராபரணம்.

இதன் சமம் ஹிந்துஸ்தானியில் பிலாவல் என்றும்,மேற்கத்திய இசையில் C Major (Ionian Mode ) என்றும் மிக மிக அருகில் வருவது.
சம்பூரண மேளகர்த்தா ராகமான இது ,கல்யாணியின் சுத்த மத்யம உறவினர்.எக்கச்சக்க ஜன்ய குழந்தைகள். அத்தனை குழந்தைகளும் பிரபலம்.ஆரபி,அடானா,பிலஹரி,தேவகாந்தாரி,ஹம்சத்வ னி ,ககன குதூகலம்,சுத்த சாவேரி,பூர்ண சந்திரிகா,ஜனரஞ்சனி,கேதாரம்,குறிஞ்சி,நவரோஜ்,நாகத்வன ி என்று அப்பப்பா ......

இதன் ஸ்வரங்கள் சமமான இடைவெளி விட்டு பிரயோகம் ஆவதால்,இத்தனை விஷயங்களை நுழைக்கலாம்.கிரகபேதம் (ஸட்ஜமம் அடுத்தடுத்த வீட்டுக்கு)செய்தால் கரஹரபிரியா,ஹனுமதோடி,கல்யாணி,ஹரிகாம்போதி,நடபைர வி என்று பல ராகங்கள் விரியும்.

சங்கராபரணம் அளவு சோதனைகள் தாங்கும் ராகங்கள் தோடி,கரஹரபிரியா,கல்யாணி போன்ற சிலவே.

நடிகர்திலகத்தின் நடிப்பில் மிக சிறந்த படங்களில் ஒன்றாக எல்லோர் இதயத்திலும் பூஜிக்க படும் காவியம். வாலியும் ,மெல்லிசை மன்னரும், ஏ.வீ.எம், மேற்பார்வையில் உழைத்து உழைத்து வேலை செய்து இசையில் மெல்லிசை மன்னர்களின் அந்த நாளை நினைவு படுத்தினார்கள்.எல்லாவற்றுக்கும் மேல் தமிழில் இதுவரை அமைந்த எல்லாவற்றிலும் சிறந்த ஜோடி என பலரால் கொண்டாட படும் சிவாஜி-வாணிஸ்ரீ ஜோடியின் தமிழில் வந்த சிறந்த பாடல்களில் ஒன்றான "வெள்ளி கிண்ணந்தான் தங்க கைகளில் ".

நான் எம்.டெக் படிக்கும் போது ஹாஸ்டலில் ரெகார்ட் பிளேயர் உண்டு.திடீரென்று ஒரு நாள் காலை சிற்றுண்டிக்கு தயாராக கீழே வந்த போது ஒரு பாடல் என்னை மறந்து அதன் வசீகரத்தில்,composition புதுமையில்,பாடலின் வடிவத்தில் என்னை பறி கொடுத்து, மீண்டும் மீண்டும் வெறி வந்தது போல திருப்பி திருப்பி கேட்டு ,சிற்றுண்டி,வகுப்பு எல்லாம் மறந்து சொக்கி நின்றேன். அந்த படம் இளைய திலகத்தை முன்னணிக்கு கொண்டு வந்த கோழி கூவுது. பாடல்" பூவே இளைய பூவே ,வரம் தரும் வசந்தமே,"

இந்தோனேசியாவில் வேலை செய்த போது ஒரு அலுவலக விஷயமாய் கோவை வந்தேன். குமுதம் பத்திரிகையில் ஒரு article படித்ததிலிருந்து ,அந்த படத்தை பார்க்கும் மோகம் இருந்தது.முதல் நாள் காவேரி திரையரங்கில் நான் மட்டும் மேல் வகுப்பில்.(நண்பர்கள் நிர்தாட்சண்யமாய் வர மறுக்க)படம் பார்த்து உறைந்து போனேன். ஒரு சிறந்த இயக்குனர்,நல்ல நடிகருக்கு வாசல் திறந்து ஸ்லோ ஹிட் ஆன சேது. இளைய ராஜாவின் "மாலை என் வேதனை கூட்டுதடி".

இந்த ராகத்தில் பிற பாடல்கள்.

அங்கும் இங்கும் பாதை உண்டு - அவர்கள்.

தேனே தென்பாண்டி மீனே- உதய கீதம்.

மலையாள கரையோரம் - ராஜாதி ராஜா.

கண்மணி அன்போட காதலன்- குணா.

அப்படி பார்கறதுன்னா வேணாம் -அவன்.

அச்சம் அச்சம் இல்லை - இந்திரா .

சொன்னாலும் கேட்பதில்லை -காதல் வைரஸ் .

rajeshkrv
31st July 2014, 07:59 PM
கார்த்திக் ஜி , நிலையாக என் நெஞ்சில் பற்றிய உங்கள் கருத்துக்கள் அருமை....

நடிகர் திலகத்தின் ரசிகர்கள் நீயா நானா’வில் கலந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி... வாழ்த்துக்கள்

==============
ஜமுனா பாடல்களின் தொடர்ச்சி..

கடவுளின் குழந்தையில் இசையரசியின் குரலில் இதோ அற்புத பாடல்


https://www.youtube.com/watch?v=83ArtEGrRP4

rajeshkrv
31st July 2014, 08:05 PM
அதே கடவுளின் குழந்தையில் எனக்கு மிகவும் பிடித்த பி.பிஸ்ரீனிவாஸ் இசையரசியின் குரலில் ஜி.ராமனாதனின் மயக்கும் இசையில்
சின்ன சின்ன பூவே


https://www.youtube.com/watch?v=x-R8Z5NJtwI

RAGHAVENDRA
31st July 2014, 11:03 PM
டியர் கோபால் ஜி
சங்கராபரணம் ராகத்தை மட்டுமல்ல ஒவ்வொரு ராகத்தையும் மிக அழகாக தாங்கள் தருகின்றீர்கள். ஒவ்வொரு ராகத்தைப் பற்றியும் இங்குள்ளோர் அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் விளக்கும் போது பல புதிய விஷயங்கள் தெரிய வருகின்றன.

இனி வரும் காலங்களில் ஒரு ராகத்தை எடுத்துக் கொண்டு அதற்கு உதாரணமாய் தரும் பாடலில் அதனுடைய பிரயோகம், விசேஷங்கள், அந்த ராகத்திற்கும் அந்தப் பாடலின் தாளத்திற்கும் ஒத்துப் போகிறதா, அல்லது ஒரு குறிப்பிட்ட ராகத்திற்கு ஒரு குறிப்பிட்ட தாளம் தான் அமைக்க வேண்டுமா என்பது போன்ற அம்சங்களையும் விளக்கினால், இது எதிர்கால சந்ததயினருக்கு மிகவும் பயனுள்ளதாய் இருக்கும். எந்த கால கட்டமாயிருந்தாலும் அதில் படைப்பாளியின் ஆளுமையும் புலமையும் நிச்சயம் வேறு படும். அந்த வேறுபாட்டையும் விளக்கலாம்.

RAGHAVENDRA
31st July 2014, 11:06 PM
பொங்கும் பூம்புனல்

முன்பொரு பதிவில் கூறியிருந்தபடி, கோவிந்தராஜூலு நாயுடு என்ற இசையமைப்பாளரைப் பற்றி விரிவாக விவாதிக்க வேண்டும். சந்தர்ப்பம் வரும் போது அது நிச்சயம் இடம் பெறும்.

இப்போது அவர் இசையமைத்த இன்னொரு அருமையான பாடல், மாய மனிதன் திரைப்படத்தில் ஜிக்கி பாடிய தங்கத் தமிழ் மேனி சதிராடும் பருவம் என்ற பாடல். நெஞ்சை அள்ளிக் கொண்டு போகும் இனிமையான பாடல்.

http://www.inbaminge.com/t/m/Maaya%20Manithan/

RAGHAVENDRA
31st July 2014, 11:13 PM
பொங்கும் பூம்புனல்

பல ஆண்டுகளாக நெஞ்சில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கும் பாடல். அவன் அமரன் படத்தில் சீர்காழி கோவிந்தராஜன் ஏ.பி. கோமளா பாடி, டி.எம்.இப்ராஹிம் இசையமைத்தது. இதில் உள்ள சிறப்பு பாடி நடிக்கும் கே.ஆர்.ராமசாமிக்கு சீர்காழி அவர்கள் பின்னணி பாடியிருப்பதது தான்.

அதுமட்டுமல்ல இப்பாடல் தலாத் மஹமூத் மற்றும் இரண்டாம் முறை லதா ஆகியோர் பாடி டாக்ஸி டிரைவர் படத்தில் இடம் பெற்ற ஜாயேன் தூ ஜானே கஹா என்ற ஹிந்திப் பாடலின் மெட்டை ஒத்திருப்பதாகும்.

இசைக்கு மொழியேது.. கேட்டுக் கொண்டே இருக்கலாம் என நாம் எண்ணும் இனிமையான பாடல்களில் பட்டியலில் அவன் அமரன் வான் மதி நீ அறிவாய் பாடலுக்கு நிச்சயம் இடம் உண்டு

http://youtu.be/laQOlvRgRvw

RAGHAVENDRA
31st July 2014, 11:21 PM
பொங்கும் பூம்புனல்

சிங்கார சங்கீதமே திகட்டாத அமுதாகுமே..

இது உண்மை தானே...

நீலாவுக்கு நிறைஞ்ச மனசு படத்திலிருந்து திரை இசைத் திலகம் கே.வி.எம். இசையில் ஏ.ஜி.ரத்னாமாலா, ஜிக்கி, சூலமங்கலம் ராஜலக்ஷ்மி பாடிய பாடல்

http://www.inbaminge.com/t/n/Neelavukku%20Neranja%20Manasu/

RAGHAVENDRA
31st July 2014, 11:24 PM
பொங்கும் பூம்புனல்

சங்கீதம் மட்டுமா பரதமும் கூடத் தான் மனக்கவலையை ஆற்றும் மருந்து.. இப்பாடல் சொல்கிறதே..

நீலாவுக்கு நிறைஞ்ச மனசு திரைப்படத்தில் கே.வி.எம். இசையில் தெவிட்டாத இனிய பாடல்

http://www.inbaminge.com/t/n/Neelavukku%20Neranja%20Manasu/

RAGHAVENDRA
31st July 2014, 11:31 PM
பொங்கும் பூம்புனல்

எத்தனை தலைமுறைகளானால் என்ன, எத்தனை நூற்றாண்டுகளானால் என்ன .. . காதலின் கருவறை கண்கள் தானே... அந்தக் கண்கள் பிரசவிக்கும் குழந்தை தானே காதல்.. ஆனால் கண்கள் பிரசவிக்கும் காதல் என்னும் குழந்தை மட்டும் என்றுமே அதன் குழந்தைத் தன்மை மாறாமலே இருக்கும். அந்தக் குழந்தை காதலர்களின் உள்ளத்தில் என்றும் உவகை பொங்க வைத்துக் கொண்டே இருக்கும். இது தானே உலக நியதி.. இது தானே காதலின் நியதி...

மாங்கல்ய பாக்கியம் திரைப்படத்தில் சீர்காழி கோவிந்தராஜன் பி.சுசீலா பாடிய இனிமையான பாடல், ஜி.ராமநாதன் இசையில்... கேட்டு மகிழுங்கள்..

http://youtu.be/VGZoOwbMMhA

RAGHAVENDRA
31st July 2014, 11:45 PM
பொங்கும் பூம்புனல்

மோசம் போகாதே நீ மதி மோகம் வீணாக ...

மிகவும் அருமையான கருத்துள்ள இப்பாடல் இடம் பெற்ற படம் 1949ம் ஆண்டு வெளிவந்த நம்நாடு படமாகும்.

இசை ஜி. கோவிந்தராஜுலு நாயுடு

http://www.inbaminge.com/t/n/Nam%20Naadu%201949/

Gopal.s
1st August 2014, 03:37 AM
டியர் கோபால் ஜி
சங்கராபரணம் ராகத்தை மட்டுமல்ல ஒவ்வொரு ராகத்தையும் மிக அழகாக தாங்கள் தருகின்றீர்கள். ஒவ்வொரு ராகத்தைப் பற்றியும் இங்குள்ளோர் அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் விளக்கும் போது பல புதிய விஷயங்கள் தெரிய வருகின்றன.

இனி வரும் காலங்களில் ஒரு ராகத்தை எடுத்துக் கொண்டு அதற்கு உதாரணமாய் தரும் பாடலில் அதனுடைய பிரயோகம், விசேஷங்கள், அந்த ராகத்திற்கும் அந்தப் பாடலின் தாளத்திற்கும் ஒத்துப் போகிறதா, அல்லது ஒரு குறிப்பிட்ட ராகத்திற்கு ஒரு குறிப்பிட்ட தாளம் தான் அமைக்க வேண்டுமா என்பது போன்ற அம்சங்களையும் விளக்கினால், இது எதிர்கால சந்ததயினருக்கு மிகவும் பயனுள்ளதாய் இருக்கும். எந்த கால கட்டமாயிருந்தாலும் அதில் படைப்பாளியின் ஆளுமையும் புலமையும் நிச்சயம் வேறு படும். அந்த வேறுபாட்டையும் விளக்கலாம்.

ஒரே ராகத்தில் உருவானதாக சொல்ல பட்டாலும்,இவ்வளவு வேறுபாடுகள் எங்கிருந்து வருகின்றன?

இங்குதான் இசையமைப்பாளர்களின் மேதமை நிற்கிறது.(கீழ்கண்டவற்றை இசையின் தன்மை கெடாமல் மக்களின் ரசனையை அடிநாதமாய் பிடித்து அவர்களை கேட்ட உடனே அல்லது கேட்க கேட்க (acquired )அடிமை கொள்ள வேண்டும்)

1)ராகத்தின் tempo எனப்படும் metre மாற்றுவது.
2)சுருதி (Tonic )மாற்றி பாடலின் tone மாற்றுவது.
3)ஸ்வரங்களின் அணிவகுப்பில் விளையாடி,கமகம் (ornamentation ),கற்பனை (kalpana ) என்று ஒரு பிடி பிடிப்பது.
4)பல கலப்பு ராகங்கள் உருவாக்கி விளையாடுவது.
5)Musical arrangements மற்றும் interludes விளையாட்டுக்கள்.
6)தாளங்களில் மாற்றங்கள் மற்றும் புத்திசாலி கலப்படங்கள்.(rhythm Arrangement )

தாளங்களை(Clap ) பற்றி சுளுவாக சொல்லலாம்.

1)ஒரு தட்டு தொடையில் தட்டினால் அனுத்ருதம்(U ) ஒரு அக்ஷரம்..
2)ஒரு தட்டு தொடையில் தட்டி ,ஒரு வீச்சு காற்றில் வீசினால் த்ருதம் .(0) 2 அக்ஷரங்கள்.
3)ஒரு தட்டு தொடையில் தட்டி சுண்டு விரல்,மோதிர விரல்,நடு விரல் என்று கணக்காக்கி விளையாடுவது லகு(1) .(ஒரு தட்டு இரு விரல் என்றால் 3 அக்ஷர திச்ர ஜதி.ஒரு தட்டு மூன்று விரல் என்றால் சதுச்ர ஜதி 4 அக்ஷரம்.ஒரு தட்டு நான்கு விரல்கள் என்றால் கண்ட ஜதி 5 அக்ஷரங்கள்.ஒரு தட்டு 6 விரல்கள் என்றால் மிஸ்ர ஜதி 7 அக்ஷரங்கள். ஒரு தட்டு 8 விரல்கள் என்றால் சங்கீர்ண ஜதி 9 அக்ஷரங்கள் )
4)சதுஸ்ர ஜதி அடிப்படையில் 4 அக்ஷரங்கள் கொண்ட லகு என்று எடுத்து தாளங்களை அலசினால் சுலபம்..

ஆதி தாளம் என்பது 100(ஒரு தட்டு மூணு விரல் எண்ணி ஒரு தட்டு ஒரு வீச்சு ஒரு தட்டு ஒரு வீச்சு)- 8 அக்ஷரங்கள்.

ரூபக தாளம் என்பது U 0 (ஒரு தட்டு ஒரு வீச்சு ஒரு தட்டு)-3 அக்ஷரங்கள்.

மிஸ்ர சாப்பு என்பது ஒரு தட்டு இரண்டு விரல் ,ஒரு தட்டு ஒரு வீச்சு,ஒரு தட்டு ஒரு வீச்சு .7 அக்ஷரங்கள்.

இது மாதிரி நிறைய.

தாளத்தில் விளையாடி ஒவ்வொரு பாட்டுக்கும் புது மெருகு கொடுக்கலாம்.

இசை மிக சுலபம். கற்பனை வார்த்தைகளாக திரிந்து கெட்டு போகாமல் சுருதி சுரமாகவே பிறவியில் அமையுமென்றால்.

Richardsof
1st August 2014, 05:16 AM
பொய்க்கால் குதிரை - ஆட்டத்துடன் வந்த இந்த பாடல் மிகவும் எனக்கு பிடித்தது .

தாயின் மடியில் இடம் பெற்ற இந்த பாடல்



ராஜாத்தி காத்திருந்தா ரோஜாபோலே பூத்திருந்தா
ராஜாத்தி காத்திருந்தா ரோஜாபோலே பூத்திருந்தா
ராஜாவும் ஓடி வந்தான் ராகத்தோடே பாடி வந்தான்
ராஜாவும் ஓடி வந்தான் ராகத்தோடே பாடி வந்தான்
ராஜாத்தி காத்திருந்தா ரோஜாபோலே பூத்திருந்தா
ராஜாவும் ஓடி வந்தான் ராகத்தோடே பாடி வந்தான்
ஹா ஹா ஹாய்ய் !

மான் கொடுத்த* க*ண்க*ளுக்கு மை கொடுக்க* வா மாமா
ம*யக்க*த்தில் இருக்கையிலே கை கொடுக்க* வா மாமா
மான் கொடுத்த* க*ண்க*ளுக்கு மை கொடுக்க* வா மாமா
ம*யக்க*த்தில் இருக்கையிலே கை கொடுக்க* வா மாமா
காலங்கள் மாறிப் போகும் காதல் மட்டும் மாறுவதில்லை
வா மாமா வா மாமா வா மாமா வா மாமா !
வ*ர*லாமா வ*ர*லாமா வ*ர*லாமா வ*ர*லாமா ?
ராஜாத்தி காத்திருந்தா ரோஜாபோலே பூத்திருந்தா
ராஜாவும் ஓடி வந்தான் ராகத்தோடே பாடி வந்தான்
ஹா ஹா ஹாய்ய் !

சின்னப்பெண் வாச*லுக்கு சீர் எடுத்து வ*ர*லாமா
ஊரெல்லாம் போய் வ*ர*வே தேர் எடுத்து வ*ர*லாமா
சின்னப்பெண் வாச*லுக்கு சீர் எடுத்து வ*ர*லாமா
ஊரெல்லாம் போய் வ*ர*வே தேர் எடுத்து வ*ர*லாமா
காலங்கள் மாறிப் போகும் காதல் மட்டும் மாறுவதில்லை
வ*ர*லாமா வ*ர*லாமா வ*ர*லாமா வ*ர*லாமா ?
வா மாமா வா மாமா வா மாமா வா மாமா !
ராஜாத்தி காத்திருந்தா ரோஜாபோலே பூத்திருந்தா
ராஜாவும் ஓடி வந்தான் ராகத்தோடே பாடி வந்தான்
ஹா ஹா ஹாய்ய் !

ஆடியிலே அரும்பானேன் ஆவ*ணியில் ம*ல*ரானேன்
புர*ட்டாசி போன* பின்னே ஐப்ப*சியில் வா மாமா
ஆடியிலே அரும்பானேன் ஆவ*ணியில் ம*ல*ரானேன்
புர*ட்டாசி போன* பின்னே ஐப்ப*சியில் வா மாமா
காலங்கள் மாறிப் போகும் காதல் மட்டும் மாறுவதில்லை
வா மாமா வா மாமா வா மாமா வா மாமா !
வ*ர*லாமா வ*ர*லாமா வ*ர*லாமா வ*ர*லாமா ?
ராஜாத்தி காத்திருந்தா ரோஜாபோலே பூத்திருந்தா
ராஜாவும் ஓடி வந்தான் ராகத்தோடே பாடி வந்தான்
ஹா ஹா ஹாய்ய் !

நீ முடிச்ச கூந்த*த*லுக்கு பூ முடிக்க* வ*ருவேனே
நாள் பார்த்து ந*ல*ம் பார்த்து கை பிடிக்க* வ*ருவேனே
நீ முடிச்ச கூந்த*த*லுக்கு பூ முடிக்க* வ*ருவேனே
நாள் பார்த்து ந*ல*ம் பார்த்து கை பிடிக்க* வ*ருவேனே
காலங்கள் மாறிப் போகும் காதல் மட்டும் மாறுவதில்லை
ராஜாத்தி ராஜாத்தி ராஜாத்தி ராஜாத்தி !
ராஜாவே ராஜாவே ராஜாவே ராஜாவே !
ராஜாத்தி காத்திருந்தா ரோஜாபோலே பூத்திருந்தா
ராஜாவும் ஓடி வந்தான் ராகத்தோடே பாடி வந்தான்
ஹா ஹா ஹாய்ய்