PDA

View Full Version : தேவை ஒரு இனிய தமிழ் பெயர்



rsubras
12th July 2013, 01:27 PM
Hi all, need your help for choosing a name for our GOD-blessed baby girl.....there are many fashioned, nice sounding, (having) good meaning words to choose from for a girl name, but most of them are derived from sanskrit or mixture of other languages, wanted to go for a pure tamil name that is simple, fashioned, unique, (with) a positive meaning, couldnt get much from the internet. Though there are sites that offer 5000+ names most of the names are old fashioned or derived from a repeated set of words (poo, tamizh, etc.,) names that impress us are either taken by acquaintances (ilakkia, venba, kavinaya etc.,) or used in a song / comic situation by Vairamuthu or Vivek (like angavai is a very good name, but made mockery of in Sivaji film, likewise usitha (in anniyan), poompavaai) . As of now have zeroed in on one name, niralya which is supposed to mean Orderly, but in the vast ocean of tamil literature, i expect there to be so many choices for me to choose from, need your help in finding one..... I feel, Even if not in a single tamil word, atleast suffixing with -tha -ya etc (if it makes sense) we can derive some words. do we have a set of sanga / ancient tamil words that would mean Healthy, happy, (make) cheerful, God blessed, Blessings for a long life etc., which could help me in formulating a good name

ajaybaskar
12th July 2013, 01:36 PM
Let me congratulate you first. Congrats. :)

ajaybaskar
12th July 2013, 01:53 PM
Check this out http://puretamilbabynames.wordpress.com/pure-tamil-baby-names-for-girls/

rsubras
12th July 2013, 02:24 PM
Thanks Ajay :),

Saw this url Ajay, mostly a repeating set of names than irukku.... something refreshing, stylish and new ippadi ethirpaarkiraen

pavalamani pragasam
12th July 2013, 02:42 PM
Ponmangai. Our former neighbour's little daughter's name - always appealed to me as a charming name.
Insuvai- my cousin's daughter(she is a doctor)
Thenral- my younger sister's granddaughter.

Congrats, subras!

RAGHAVENDRA
12th July 2013, 03:40 PM
நற்றினி - நல்லவள் இனியவள்

நெகிழினி - நெஞ்சம் நெகிழும் அன்பைத் தருபவள், இனியவள்

புவியினி - புவி முழுதும் அன்பால் தம் வசம் கொள்பவள் இனியவள்

priya32
13th July 2013, 12:23 AM
எழில்வதனா
கலாரஞ்சனி
யாழினி
கவிதாயினி

bis_mala
14th July 2013, 12:38 AM
Here I hv some for you. Our hubbers hv also come out with some great sounding names.


அவிர்மதி (குறள் 1117)
தூவிதா ( குறள் 1120)
பணிமொழி (குறள் 1121)
நுதல்யா (> திருநுதல் குறள் 1123)
அமர்க்கண்ணி (குறள் 1125)
ஏமிதா ( ஏமம் - குறள் 1131)
மலரன்னா (மலர்+அன்னை, மலர், குறள் 1142) Also like a malar
ஒப்பிடுக: தம் +அன்னை, தமன்னை, தமன்னா)
மலர்மதி
அரிதாமணி (குறள் 1153) அரிதாகும் மணி என்பதன் சுருக்கம்.
உய்வினி (>உய்வு) குறள்1174
பசந்தி ( குறள்1188) பச்சை நிறம் தோற்றம்
தந்தவள்
இது வசந்தி என்பதனோடு மயங்கி நிற்கும் பெயர்.

நனவிதா ( குறள்1219)

மாலிகா (மாலை, குறள்1221)
இது பழைய பெயர் போலாகிவிட்டது.

போதிதா (போது = அரும்பு) குறள்1227

குழலினி. குழலிகா. குறள் 1228

A good idea you started a thread....it paves the way for this effort to continue!


மாயா குறள் 1230 இது பழைய பெயர்/

bis_mala
14th July 2013, 12:39 AM
Here I hv some for you. Our hubbers hv also come out with some great sounding names.


அவிர்மதி (குறள் 1117)
தூவிதா ( குறள் 1120)
பணிமொழி (குறள் 1121)
நுதல்யா (> திருநுதல் குறள் 1123)
அமர்க்கண்ணி (குறள் 1125)
ஏமிதா ( ஏமம் - குறள் 1131)
மலரன்னா (மலர்+அன்னை, மலர், குறள் 1142) Also like a malar
ஒப்பிடுக: தம் +அன்னை, தமன்னை, தமன்னா)
மலர்மதி
அரிதாமணி (குறள் 1153) அரிதாகும் மணி என்பதன் சுருக்கம்.
உய்வினி (>உய்வு) குறள்1174
பசந்தி ( குறள்1188) பச்சை நிறம் தோற்றம்
தந்தவள்
இது வசந்தி என்பதனோடு மயங்கி நிற்கும் பெயர்.

நனவிதா ( குறள்1219)

மாலிகா (மாலை, குறள்1221)
இது பழைய பெயர் போலாகிவிட்டது.

போதிதா (போது = அரும்பு) குறள்1227

குழலினி. குழலிகா. குறள் 1228

A good idea you started a thread....it paves the way for this effort to continue!


மாயா குறள் 1230 இது பழைய பெயர்/

venkkiram
14th July 2013, 12:51 AM
வாழ்த்துக்கள் அன்பரே!

ஓவியா
நிறைமதி
கவின்மலர்
சுருதி
யாசவி
குழலி
பூங்கொடி
நங்கை
கலை

rsubras
15th July 2013, 11:24 AM
thanks to all kind hubbers, venkiram, mala, pavalamani akka and raghavendiran sir for your wishes and suggestions.... of the names suggested I liked many of the names suggested but romba pidichathu konjam irukku.. only thing is I wanted to have both a beautiful name and a wonderful meaning for that name :) I dont think I am expecting too much, since in sanskrit I heard of so much names....so athe maathiri thonmaiyana namma tamil language la ithuvarai naan kettathu, kattrathai vida niraya inimaiyana (both in sounding and in the meaning) words kandippa irukkum nu believe panraen

Another thing is enga ponnu konjam preterm ah piranthathala, she is still in NICU even after around a month, so wishing her well maathiri (either GOD's or recieving , or something that would mean happiness, delight, healthy etc.,) name irukkanum nu aasai padaren

I liked தூவிதா very much.... (is it Thuvitha or Dhuvitha??) தூவி means சிறகு, தூவிதா is சிறகு + தா right? idhai veru maathiri eppadi improvise pannalam? like something that would mean more like a request to GOD to succeed or give health something like that, and also there is a hindi or sanskrit equivalent for this dhuvidha is dilemma it seems, but dhuvitha (which i assume is the spelling) is mentioned as a girl baby name but the meaning is not given anywhere..should search for that as well.......

Next in line is அவிர்மதி which should be அவிர் + மதி bright moon correct ah ? Avir la vera combination try panni paarkalama? to give some meaning like Bright and beautiful அவிர் + Ani (beautiful) or அவிர்யா or something like this

கவின் is good......... but athukku கவின்யா than nalla irukkum ninaikkiran..........I thought of this, but my cousin's daughter's name is கவிநயா, this would sound like that..athanala vittutaen

நனவிதா is also very good, but the meaning in this kural's context is nanavu - which is reality...........so not much impressed by the meaning...and there is one word nana vitha used in vedic mantras and all I feel, not sure of the meaning

குழலினி - I like this name, but overruled by wife :)

நுதல்யா - Name is good....but meaning wise not impressed much....... நுதல் is forehead thaane?

I thought about நவில்யா , but Navil means "tell", "talk" right? or something to do with this....... so meaning wise not impressed again

To mala madam: I liked your approach very much, like taking words from Thirukkural and other such great tamil literatures which is exactly I wanted to do but could not do much for lack of sufficient knowledge in this :) Like you said in the other thread, name twisting can be done with any names, I wanted to be cautious only about some straight forward or blatant alter meaning by little twisting thatz all...... Like for eg. the name Rachana with an initial P, it becomes P.Rachana and could sound like Prachana (prachinai)..so antha maathiri......

General Question : what would suffix of -தா -கா -சா -யா would do to words, oru normal, ordinary sounding word kooda intha suffix ah add panna, fashionable name aagidum ninaikkaren..... I would only want to make sure that I am not damaging the word or give a different (unpleasant) meaning to that word

pavalamani pragasam
16th July 2013, 07:53 AM
தவமணி
அருட்செல்வி
நறுமுகை
சிந்தனா
அருங்கனி

mexicomeat
16th July 2013, 06:38 PM
நளாயினி
வாசவி

bis_mala
17th July 2013, 01:40 AM
Hi rsubras


I liked தூவிதா very much.... (is it Thuvitha or Dhuvitha??) தூவி means சிறகு, தூவிதா is சிறகு + தா right? idhai veru maathiri eppadi improvise pannalam? like something that would mean more like a request to GOD to succeed or give health something like that, and also there is a hindi or sanskrit equivalent for this dhuvidha is dilemma it seems, but dhuvitha (which i assume is the spelling) is mentioned as a girl baby name but the meaning is not given anywhere..should search for that as well.......


தூவிகா (சிறகைக் காத்தருள் என்ற குறிப்புத் தோன்றுகிறது)


தூவினி (இனிச் சிறகுகள் வரும் , இனி அருள் தூவிடும் என்ற குறி)

தூவதி என்பதில் தூவி (சிறகு) இல்லாமல் ஆகிவிடுகிறது. தூயபெண் என்பது குறிப்பாக எழுகிறது. "வதி" என்ற பின்னொட்டுடன் முடிகிறது.

தூவியானி என்பதில் சிறகுகள் ஆன அல்லது அமைந்த பெண் என்பது தோன்றலாயிற்று. சிறகு +யானை என்று பொருள் இரட்டிக்கிறது. தெய்வ யானைக்குச் சிறகு முளைத்ததாகக் கற்பனையில் ஈடுபடலாம்.

தூவியா: இதைச் சுருக்கி தூவ்யா எனலாம்.

இதில் இன்னும்.........?



Our webpals here have also given great sounding names. Liking is more an act of subjectivity.

By the way, derivation of name suffixes:

-kaa < akkaa.
thA < Aththaa. appaththaa. thAi > thA.
mA < ammA.
yA < Ayaa.
ini = in+ii.
nA - annai, annA.
i - female suffix like pappaaththi, (chellAyi, mUkkAyi, kaNNAyi. Ay > Ayi)
and others.

bis_mala
17th July 2013, 02:35 AM
Similar sounding words will keep cropping up in other languages, some of these languages may even be unknown to you and me

Honey sounds like Chinese words : "Hun Nee" and the latter have been given to a Chinese girl as a name.

Arabic words: "al-hidaya" sounds like Sanskrit "hidayam" (heart). Hidaya has been given to a Malay girl as her name.

Arabic words: "Lidiyanatul" has been forged and spelt "Lydiyanatul" and in its shortened form, called as "Lydia" , sounds like an English name.

Aha! Nowadays, people want to have two bites at the cherry, have their names rooting in more than one language, one leg in their own language and the other in an international language if possible......Enjoy more. If your girl's name can be somewhat "internationalised", why worry about it?

Periasamy, an old fashioned name-chap, can also become Mr Perry! If a name affords such facility, why shy away?

Name is a device through which people can communicate with you happily.

"Kathiresan" is trying his best to "duplicate" it like Kathi, then "Cathy', forgetting or deliberately brushing aside that it sounds "kaththi" - knife!!

The hard fact of life is, one day you may have to go out of your own beautiful city or little village, be met by other communities, in building your economic standing.... who knows!

Names also can be "stolen", the moment you have a very nice sounding name for your girl, you may be surprised to hear about a fully grown-up taking a deed poll to change her name to that of your baby!! There is no property in a name.(That means others are free to copy.)

The globe is rotating faster than one may think. Be happy about emerging duplicates (or homonyms) in other languages. There are too many similar sounding words in world languages. Otherwise how do you think our Western linguists come out with the "Proto-world language" theory?


Note: This post does not refer to any real persons carrying the names cited and no offence is meant to anyone by these examples.

rsubras
17th July 2013, 12:17 PM
@ pavalamani

தவமணி is my amma's another name (avanga appa veetu side la koopidarathu)......... since she was born after many many years, thavamirunthu kidaitha maniyana pillai nu thavamani nu peru vachu koopiduvanga..

thanks mexicomeat, vaasavi is a good name..will consider that suggestion

rsubras
17th July 2013, 12:36 PM
@bis_mala

தூவிகா and தூவிதா both are good options....... unique, nice sounding, pure tamil name ... inga neenga koduthirukkara meaning also good...... (சிறகைக் காத்தருள்....)

actually, I am not very much obsessed with meanings in other languages......... but sanskrit naan perithum respect panna koodiya oru language, thatz why looking at the meaning if a derived version of that name is available in sanskrit

stumbled upon this name: விகிர்தா - a sweet name and seems like it denotes Lord Shiva in many shaiva literature and in general meaning GOD, seems like it is derived from Sanskrit

Another doubt..... will அருள் + நீ + தா would become அருணிதா? One another option that I had in mind was அருணிதா, Arunachalam is my Grandmother's name, Arunachalam also refers to Lord Siva, so athula irunthu Aruna va eduthu, athukku oru suffix thaa add panna, Arunitha nu kondu vanthu athai அருள் + நீ + தா ngra maathiriyum kondu vara mudiyuma nu yosichittu irunthaen..... (Another advantage of this word: in Sanskrit Arunita means Sun / Red as used in different context)

Well, naan romba yosichu confuse pannikarennu yaarum ninaikatheenga... vaikka porathu ennamo ore oru name than..........but this also gave me an opportunity to dig into old tamil words etc., and come up with more choices of pure sweet tamil words :) thatz why showing more interest.......

bis_mala
17th July 2013, 03:43 PM
அருள்+ நிதம் = அருணிதம் > அருணிதா (.நிதம் = everyday.)
தினமும் அருள் தருக என்பது பொருள்.

அருள்+நீ+தா = அருணீதா
இது நீ அருள் தருக என்பது.

அருள்+ நீதம் = அருணீதம் > அருணீதா. Grace and justice.

நீதம் = நீதி.

Can also mean in context:
1 nitam (nitamayati} , to choke , suffocate in skrt.

rajraj
18th July 2013, 07:43 AM
My choice: minnoLi

The song 'sonnadhai seidhida saahasamaa kiLiye kaNNan eninum....' has the line

'minnoLiye unadhu meni ......'

The song used to be popular in the 50s and earlier sung by G.N. Balasuramaniam and now by Sudha Ragunathan.

I named my house in Madras 'minnoLi' ! :)

bis_mala
18th July 2013, 10:12 AM
Hi rsubras,


உங்கள் ஐயப்பாடு உண்மையில் நீ என்பது குறுகி நி என்றாகுமா என்பது. இப்படிக் குறுகுதலுக்கு முன்னுதாரணங்கள் இல்லாமல் இல்லை.

பழம் + நீ என்பது பழநி > பழனி என்றாகிவிட்டது என்று சொற்சிந்தனையாளர் சிலர் கூறுகின்றபடியாலும்;

ஞான் + நீ = ஞாநீ >ஞானி என்று குறுகி, ஞானம் முதலிய சொற்கள் அதன்கணிருந்து தோன்றின என்று சிலர் கூறுகின்றபடியாலும்,

நீ என்பது சிலகால் "நி"எனக் குறுகியமைதலும் கூடும் என்று தோன்றுகின்றது.
*
நீ என்பது நின் என்று குறுகும் தன்மையுடைய சொல்தான். நீ + மனம் = நின் மனம்,

நினது மனம், நின்னுடைய மனம் என்று வேற்றுமைச் சொல்லுருபுகள் ஏற்கும்போதும் நீ என்பது குறுகியே அமையும்.

இவற்றை நோக்குமிடத்து, அருணீதா என்பதை அருணிதா என்று குறுக்கி அமைத்தலும் கூடுமென்றே முடிபு கூறலாம்.

குறிப்பு: பழனி என்பதும் ஞானி என்பதும் வேறுவிதமாகத் தோன்றினவென்பர் வேறு சிலர். அந்த வாதத்திற்குள் செல்லாமல், நீ என்ற்பாலது நி என்று குறுகக் கூடும் என்று ஆய்வாளர் கருதியுள்ளனர் என்பதையே முனி நிறுத்தி, உங்கள் ஐயத்திற்கு ஒருவாறு தெளிவு காணலாம்.

ஞான் = I. நான் என்பதன் சேர நாட்டு வழக்கு. I - self. You = nI = the greater self. This then appears to be the beginning of a ஞானி's conception.

மெய்ம்மேல் ஏறி நின்றும் தனித்து நின்றும் நெடிலாகிய உயிர்கள் குறுகுதல் பெருவழக்கு,

ஆ > அ அம் மரம்.
ஊ> உ உவன். ( உ +அன் )
ஏ > எ எம் மனிதன்.

இப்படியெல்லாம் குறுகித்தான் பல சொற்கள் அமைந்தன என்பர்.



Note: phrases in italics amended (typo)

rsubras
18th July 2013, 03:14 PM
So many thanks mala..... it really feels very nice to dig deep into tamil grammar and verses and come out with sweet words such as the ones many kind hubbers provided here. And you cleared so much of my doubts.......... For now we have shortlisted the following names

1. அருணிதா
2. தூவிதா or தூவிகா
3. நிரல்யா
4. விகிர்தா

looking to deep dive into sangam literatures further and come up with more options :D

Healthy nu meaning varugira maathiri some old tamil words? other than Arogyam, nalam etc., and tamil names for Goddesses, Lakshmi (other than thirumagal), Parvathi, Saraswathi, Kali

rsubras
22nd July 2013, 12:39 PM
Thanks mala (reply @ mala's post in another thread) :)

Can some one list out the words / names that would mean Health, God / Goddesses name in sanga / pure tamil , we are trying to zero in on அருணிதா, athu kooda ethavathu serkalam nu oru thought

rsubras
24th July 2013, 04:41 PM
Hi rsubras,


உங்கள் ஐயப்பாடு உண்மையில் நீ என்பது குறுகி நி என்றாகுமா என்பது. இப்படிக் குறுகுதலுக்கு முன்னுதாரணங்கள் இல்லாமல் இல்லை.

பழம் + நீ என்பது பழநி > பழனி என்றாகிவிட்டது என்று சொற்சிந்தனையாளர் சிலர் கூறுகின்றபடியாலும்;

ஞான் + நீ = ஞாநீ >ஞானி என்று குறுகி, ஞானம் முதலிய சொற்கள் அதன்கணிருந்து தோன்றின என்று சிலர் கூறுகின்றபடியாலும்,

நீ என்பது சிலகால் நீ எனக் குறுகியமைதலும் கூடும் என்று தோன்றுகின்றது.
*
நீ என்பது நின் என்று குறுகும் தன்மையுடைய சொல்தான். நீ + மனம் = நின் மனம்,

நினது மனம், நின்னுடைய மனம் என்று வேற்றுமைச் சொல்லுருபுகள் ஏற்கும்போதும் நீ என்பது குறுகியே அமையும்.

இவற்றை நோக்குமிடத்து, அருணீதா என்பதை அருணிதா என்று குறுக்கி அமைத்தலும் கூடுமென்றே முடிபு கூறலாம்.

குறிப்பு: பழனி என்பதும் ஞானி என்பதும் வேறுவிதமாகத் தோன்றினவென்பர் வேறு சிலர். அந்த வாதத்திற்குள் செல்லாமல், நீ என்ற்பாலது நி என்று குறுகக் கூடும் என்று ஆய்வாளர் கருதியுள்ளனர் என்பதையே முனி நிறுத்தி, உங்கள் ஐயத்திற்கு ஒருவாறு தெளிவு காணலாம்.

ஞான் = I. நான் என்பதன் சேர நாட்டு வழக்கு. I - self. You = nI = the greater self. This then appears to be the beginning of a ஞானி's conception.

மெய்ம்மேல் ஏறி நின்றும் தனித்து நின்றும் நெடிலாகிய உயிர்கள் குறுகுதல் பெருவழக்கு,

ஆ > அ அம் மரம்.
ஊ> உ உவன். ( உ +அன் )
ஏ > எ எம் மனிதன்.

இப்படியெல்லாம் குறுகித்தான் பல சொற்கள் அமைந்தன என்பர்.

Like in the above examples can

can நிரல் + வீயா become நிரல்வியா where வீ would become வி (like in the logic mentioned by you)

this is based on the assumption that

நிரல் = perfect or orderly
வீயா = wealth as mentioned in some tamil websites or nilaitha as in the kural, வீயா விழுமம் தரும்

1st meaning eduthukitta Perfect (Health nu vachikkalam) and Wealthy or 2nd meaning eduthukitta Always Perfect ippadi nu oru thinking....... not sure if I am going in the right direction or doing any grammatical error thereby tampering the word and the meaning. Looking for your guidance

bis_mala
24th July 2013, 07:52 PM
வீயா என்பது வியா என்று குறுகுவது கடினம்தான். அருள்வீரோ என்பது கவிதையில் அருள்விரோ என்று இடம்நோக்கிக் குறுகக்கூடும். (வீ > வி) உண்மையில் ஈர் இறுதி இர் ஆனது. இர் ஒரு தனி விகுதி என்றும் கூறலாம், இங்கு பொருந்தவில்லை.

விய என்பது வியத்தல் என்ற சொல்லின் பகுதி. வீதல் என்பது வேறு சொல்.

நிரல் + விய -> நிரல்வியா : வியத்தகு நிரல் உடையவள் என்பது பொருளாகக் கொள்ளலாம்.

வீதல் பொருள் வரவில்லை.

vItal 1. death; 2. poverty, வீயா - வீதல் என்பதன் எதிர்மறை வடிவம்.

வினைச்சொல் பகுதி "வீ" என்பது,

rsubras
25th July 2013, 12:26 PM
Thanks mala :), anegama God's grace, we will zero in on நிரல்யா அருணிதா (Niralya Arunitha) , will this name make sense? or will it look like a combination of two separate words without any connection

bis_mala
25th July 2013, 04:52 PM
Being in a multi racial Malaysia, I know that all races here are mesmerised by nice sounding names. If a name is foreign to them but sounds great, they would like to take it and recoin it to suit their own language and try to be able to say that the name has a meaning in their own language. You elicited these names from your own Tamiz field. In this connexion I should say that you have gone through a really worthwhile and rich exercise. I have to thank you for inviting me and others here to participate in it.

The names you selected are good. As words, they sound great and carry excellent meaning.

I wish you all the best. My wishes for your new arrival little girl and your lady and all other members.

Enjoy yourself.

Thank you.

venkkiram
25th July 2013, 05:01 PM
Finally mission accomplished. Wishing the kid all the best! By the way, one question? Is it mandatory to have 2 words in name? In future, the surname (last name also) will be participating in Schools, Colleges and Passports and all kind of forms and applications. To me, single word is opt and sweet!

19thmay
25th July 2013, 05:16 PM
Congrats! Enakku ponnu porandha "Iniya"-nu vaikalaam-nu irundhen.

rsubras
25th July 2013, 07:05 PM
@venkiram: yeah.......... enakkum athe pola rendu disjointed pera irukka poguthe nu oru dilemma irukkathan seiyyuthu......... but Arunitha ngra name mainly for Arun both for Arunachaleshwarar and for my grandmother whose name is Arunachala Vadivu. Niralya ngra name en wife, amma ivangalukku pidichirukkara peru.......... enakku Niralya nu thaniya illama vera serkkanume ninaichen... Niralya Lakshmi sounds good but Lakshmi is a sanskrit name... tamil equivalent ah na thirumagal ah add pannalam na athu avvalavu nice sounding ah iruntha maathiri thonalae...athunalathan............... ippa kooda niraya peru ungala polave feel pannina rendu name la onnai vittuduven........

@19thmay - Ungalukku Iniya thanthai peru vaazhthukkal :)

rsubras
25th July 2013, 07:07 PM
Being in a multi racial Malaysia, I know that all races here are mesmerised by nice sounding names. If a name is foreign to them but sounds great, they would like to take it and recoin it to suit their own language and try to be able to say that the name has a meaning in their own language. You elicited these names from your own Tamiz field. In this connexion I should say that you have gone through a really worthwhile and rich exercise. I have to thank you for inviting me and others here to participate in it.

The names you selected are good. As words, they sound great and carry excellent meaning.

I wish you all the best. My wishes for your new arrival little girl and your lady and all other members.

Enjoy yourself.

Thank you.


So much thanks Mala.... you really were very supportive and patient enough to answer my repeated questions :)

bis_mala
25th July 2013, 07:22 PM
Is it mandatory to have 2 words in name? In future, the surname (last name also) will be participating in Schools, Colleges and Passports and all kind of forms and applications.


அதாவது, நிரல்யா என்று ஒரே பெயராய் இடாமல், இன்னொரு பெயரும் இடுவதுபற்றிக் கேட்கிறீர்களா? உதாரணமாக

பூவினா நிரல்யா என்று வைத்து,

பிறப்புச் சான்றிதழில் " பூவினா நிரல்யா சுப்ரமணியன்" ( a total of 3 words) என்று போடுவதைப் பற்றிக் கேட்கிறீர்களா ?

சில குடும்பங்களில் இருபெயர் இடுவதுண்டு. தாய்வழிப்பாட்டி, தந்தைவழிப் பாட்டி என்று இருபாட்டிகளின் பெயரையும் பதித்தால் மிக்க மகிழ்வு பெறுவார்கள்.

In some other language groups:

Sometimes : (child name) (mother's surname) (father's surname) > becomes child's full name.

Among the Chinese, (surname) ( generation name) (child name)

for example

Chow Eng Lai
Chow Eng Hwai
Chow Eng Tai
Chow Eng Moy (a girl)
Chow Eng Loy

where Eng is generation name.

Chinese emperors seem to have introduced quite a lot of order in names and other things for their people.

bis_mala
25th July 2013, 07:41 PM
Hi rsubras

For your thank you messages, no mention, you are always welcome. It is our pleasure to be supportive of you.

rsubras
26th July 2013, 12:23 PM
வீயா என்பது வியா என்று குறுகுவது கடினம்தான். அருள்வீரோ என்பது கவிதையில் அருள்விரோ என்று இடம்நோக்கிக் குறுகக்கூடும். (வீ > வி) உண்மையில் ஈர் இறுதி இர் ஆனது. இர் ஒரு தனி விகுதி என்றும் கூறலாம், இங்கு பொருந்தவில்லை.

விய என்பது வியத்தல் என்ற சொல்லின் பகுதி. வீதல் என்பது வேறு சொல்.

நிரல் + விய -> நிரல்வியா : வியத்தகு நிரல் உடையவள் என்பது பொருளாகக் கொள்ளலாம்.

வீதல் பொருள் வரவில்லை.

vItal 1. death; 2. poverty, வீயா - வீதல் என்பதன் எதிர்மறை வடிவம்.

வினைச்சொல் பகுதி "வீ" என்பது,

mala, sudden ah innoru doubt, in tamil a suffix of யா generally gives the opposite meaning right? like theriyaa, ariyaa, puriyaa, Veeya as you have mentioned here..apadi irukkumbothu will Niralya would mean the opposite of Niral? Kindly execuse my ignorance in tamil grammar inspite of having 12 years of education in it :)

bis_mala
26th July 2013, 07:43 PM
Hi rsubras

நீங்கள் குறித்த சொற்களில் இறுதியில் யா என்ற எழுத்து வந்தாலும், இவற்றில் எதிர்மறைப் பொருள் தருவது உண்மையில் -யா அன்று. அந்த எதிர்ப்பொருளைப் பின் எந்த எழுத்து தருகிறது என்றால், - ஆ என்ற எழுத்தே யாகும்.

உதாரணம்:

ஓடாக் குதிரை - இங்கே -ஆ தானே உள்ளது.

இராமாயணம் இயற்றிக் கம்பன் இறவாப் புகழ் அடைந்தான்.

இங்கே -வா வந்துவிட்டது. இந்த -வா, உண்மையில் -ஆ தான். இது -வா ஆனதற்குக் காரணம், புணர்ச்சியில் வந்த வகர உடம்படு மெய்.

காணாப் பொன்னைத் தேடிச் செம்படவன் கடலுக்குச் சென்றான்.

இங்கே -ணா வந்துவிட்டதே!

வேண்டாப் பொருளைப் பிறருக்குக் கொடுப்பது தானமாகுமா?

இங்கே -டா வந்துவிட்டதே!

மற்றும் நிரல் என்பது பெயர்ச்சொல். இது கேள்வியாகும்போது, நிரலா? என்றுதான் வரும். நிரல்யா என்று வராது. நிரலுக்கு எதிராகச் சொல்லவேண்டுமானால், நிரலின்மை, நிரலன்மை, நிரலற்ற (பெயரெச்சம்), ( x நிரலுற்று - affirmative) என்று சொல்லலாமேயன்றி நிரல்யா என்று வருமாறில்லை.

இகர உயிரில் முடிந்தால், யகர உடம்படு மெய் வரும். அறியா, தெரியா, புரியா என்று. அறி, தெரி, புரி - இவற்றில் இறுதியில் நின்றது இகர உயிர்.

அகரத்தில் முடிந்தால் வகர உடம்படு மெய் தோன்றுமே!

இற > இறவா, பிற > பிறவா!
கற > கறவா ( கறவாப் பசு).

பிறவா வரம் தாரும் ..... பெம்மானே : இது தண்டபாணி தேசிகர் பாட்டு! கேட்டிருப்பீர்களே......

ஐயம் வேண்டாம்.


குறிப்பு

சரண்யா, அகல்யா, தன்யா முதலான பெயர்களும் நினைவுறுத்திக்கொள்ளத் தக்க வடிவங்கள்..

இங்கு யா என்பது ஆயா என்பதன் சிதைந்த வடிவமே

யாது, யாவை, யார், யா என்பன தனிச்சொற்களாய் (விகுதிகளாய் அல்லது சொல்லீறுகளாய் அல்லாமல்) வாக்கியத்தில் கேள்வியாகும்.

பெண்ணின் பெருந்தக்க யா உள? - குறள்

அதற்காக, யா வருமிடங்களெல்லாம் கேள்விகள் ஆகமாட்டா.

நிரல்யா என்ற பெயரில் எந்த இலக்கணக் குழப்படியும் இல்லை. எதிர்மறைக் கருத்து வெளிப்பாடு, கேள்வி போலிருத்தல் ஒன்றுமில்லை.
அதில் மனம் ஒன்றாவிட்டால், நீங்கள் குறிப்பிட்ட மற்ற பெயர்களுக்குத் தாவிவிடுங்கள். மேலும் வினாக்கள் இருந்தாலும் உரையாடலாம் Do not worry.

ArulprakasH
16th March 2015, 08:17 PM
நண்பர் ஒருவர் தன் பெண் குழந்தைக்கு த அல்லது உ எனத்தொடங்கும் தமிழ் பெயர் தேடிக்கொண்டுள்ளார். Need your help, please.

ArulprakasH
16th March 2015, 08:28 PM
Names suggested so far.

தமிழினி
தன்யா
தன்மதி
தமிழோவியம்