PDA

View Full Version : தோனியின் தவறான அணுகுமுறை! * ஸ்டீவ் வாக் கட



iqojoxifidoc
21st November 2012, 10:15 AM
தோனியின் தவறான அணுகுமுறை! * ஸ்டீவ் வாக் கடும் தாக்கு

டெஸ்ட் போட்டிகளில் முதல் நாளில் இருந்தே சுழலுக்கு ஒத்துழைக்கும் வகையில் ஆடுகளம் அமைக்க வேண்டும், என்று இந்திய கேப்டன் தோனி வலியுறுத்தினார். இதற்கு ஸ்டீவ் வாக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இங்கிலாந்துக்கு எதிரான ஆமதாபாத் டெஸ்டில் இந்திய அணி எளிதாக வெற்றி பெற்றது. ஆனாலும் ஆடுகளம் தொடர்பாக தோனி அதிருப்தி தெரிவித்தார். ஆரம்ப கட்டங்களில் சுழலுக்கு போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என குற்றம்சாட்டினார். இது குறித்து இவர் கூறுகையில்,ஆமதாபாத் ஆடுகளம் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு ஏற்ற வகையில் அமையவில்லை. வரும் போட்டிகளில் முதல் நாளில் இருந்தே சுழலுக்கு ஒத்துழைக்கும் வகையில் ஆடுகளம் அமைப்பார்கள் என நம்புகிறேன். ஆடுகளம் சுழலு<க்கு ஏற்றதாக இருந்தால், அதனை மேட்ச் ரெப்ரி கேள்வி கேட்க முடியாது என நினைக்கிறேன்,என்றார்.தோனியின் இந்த கருத்துக்கு ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இது குறித்து ஸ்டீவ் வாக் கூறியது:ஆடுகளத்தை சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக அமைக்க வேண்டும் என்ற தோனியின் கருத்து வியப்பு அளிக்கிறது. இது கிரிக்கெட்டுக்கு எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். இதனை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. உலகின் சிறந்த அணியாக இருக்க விரும்பினால், அனைத்து விதமான சூழ்நிலைகளையும் சமாளிக்க வேண்டும். மாறாக தங்களது ஆட்டத்துக்கு ஏற்றவிதத்தில் ஆடுகளத்தை அமைக்குமாறு கேட்பது சரியல்ல.நான் ஆஸ்திரேலிய அணிக்கு 57 போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளேன். ஒரு முறை கூட ஆடுகள பராமரிப்பாளரிடம் எத்தகைய ஆடுகளத்தில் விளையாடப் போகிறோம் என ஒரு வார்த்தை கூட கேட்டதில்லை.தற்போதைய இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு தான் அதிக வாய்ப்பு உள்ளது. சொந்த மண்ணில் இந்தியாவை வீழ்த்துவது எப்போதுமே கடினமான விஷயம். தவிர இளம் வீரர்களும் சிறப்பாக செயல்படுவது கூடுதல் பலம் சேர்க்கிறது. புஜாராவின் இரட்டை சதம், பிரக்யான் ஓஜாவின் விக்கெட் வேட்டை போன்றவை அணிக்கு உற்சாகம் அளிக்கும். ஆடுகளம் இந்திய அணிக்கு சாதகமாக இருப்பதால், டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றும் என நினைக்கிறேன்.இவ்வாறு ஸ்டீவ் வாக் கூறினார்.

iqojoxifidoc
21st November 2012, 10:17 AM
வாட்சன் விளையாடுவாரா * பாண்டிங் பதில்

அடிலெய்டு:முழு உடற்தகுதி இருந்தால் மட்டுமே அடிலெய்டில் நடக்கவுள்ள இரண்டாவது டெஸ்டில் ஆல்-ரவுண்டர் ஷேன் வாட்சன் விளையாட வேண்டும், என, முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.ஆஸ்திரேலியா சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்ட் டிரா ஆனது. ஆஸ்திரேலிய அணியின் துணைக் கேப்டன் ஷேன் வாட்சன், இடது கால் பகுதியில் காயமடைந்ததால், பிரிஸ்பேன் டெஸ்டில் விளையாடவில்லை. தற்போது காயம் குணமடைந்து வரும் நிலையில், அடிலெய்டில் நாளை துவங்கவுள்ள இரண்டாவது டெஸ்டில் இவர் பங்கேற்க வாய்ப்பு உள்ளது. ஒருவேளை இவர் விளையாடாத பட்சத்தில், ராப் குயினே மாற்று வீரராக களமிறங்குவார்.இதுகுறித்து முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியது: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது முன்னணி வீரர் வாட்சன் காயமடைந்திருப்பது பின்னடைவான விஷயம். ஆல்-ரவுண்டராக விளங்கும் இவர், முழு உடற்தகுதி இல்லாமல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவது நல்லதல்ல. வலைப்பயிற்சியின் போது பேட்டிங்கில் சிறப்பாக செயல்படும் இவரால், பீல்டிங் மற்றும் பவுலிங்கில் எதிர்பார்த்த அளவு செயல்பட முடியவில்லை. ஒருவேளை இவர், பேட்ஸ்மேனாக மட்டும் இருந்திருந்தால், 70 சதவீத உடற்தகுதி போதுமானது. இவர், தனது உடற்தகுதியை நிரூபிக்கும் பட்சத்தில், அடிலெய்டு டெஸ்டில் விளையாடுவார்.பிரிஸ்பேன் டெஸ்டில் டக்-அவுட் ஆனது ஏமாற்றம் அளிக்கிறது. இதன்மூலம் டெஸ்ட் அரங்கில் 6வது முறையாக தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக ரன் எதுவும் எடுக்காமல் வெளியேற நேரிட்டது. முக்கியமான கட்டத்தில் களமிறங்கியதால், துவக்கத்தில் இருந்து ரன் சேர்க்க முயற்சித்தேன். இதனால் விக்கெட்டை விரைவில் பறிகொடுத்தேன். இப்போட்டியில் செய்த தவறுகளை திருத்திக் கொண்டு, அடிலெய்டு டெஸ்டில் சாதிக்க முயற்சிப்பேன்.அடிலெய்டு மைதானத்தில் எனது முந்தைய செயல்பாடு திருப்தி அளிக்கிறது. இங்கு விளையாடிய 16 டெஸ்டில் 6 சதம் உட்பட 1723 ரன்கள் எடுத்துள்ளேன். கடந்த ஆண்டு இங்கு நடந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் இரட்டை சதம் அடித்தேன். எனவே தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு பாண்டிங் கூறினார்.